Saturday, June 1, 2013

"புனித லோஞ்சினஸ்"--"Saint lonjinus"

 "புனித லோஞ்சினஸ்"

மத்திய இத்தாலியில் அந்த மாந்துவா என்னும் ஊரில் அமைந்துள்ள அழகிய பெரும் ஏரி, அன்று என்றுமில்லா மக்கள் கூட்டத்தால் நிறம்பி வழிந்தது. யாவருக்கும் நிற்ககூட இடமில்லை. அவ்வளவு கூட்டம். காரணம் சில நிமிடங்களில் பரவிய ஒரு வதந்திதான். மழலை பேசும் ஒரு கைக்குழந்தையை அழைத்துக்கொண்டு காற்று வாங்கவும் பொழுது  போக்கவும் இந்த ஏரிக்கறைக்கு வந்திருந்தாள் ஒரு தாய் ஒருத்தி. அப்போது ஒரு ரோமை வீரன் கையில் ஒரு நீண்ட வேலுடன் அவள் கண்முன்னே தோன்றினான்..அவன் எங்கிருந்து
வந்தான் என்றே அவளுக்குத்தெரியவில்லை.
    இருப்பினும் அவள் ” ஐய்யா, தாங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்” என்றாள். வந்தவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் கண்களிலிருந்து திரளான கண்ணீர் பெருகியது. அவள் ” ஐய்யா, தங்களுக்கென்ன அவ்வளவு துக்கம்…ஏன் இப்படி அழுகின்றீர்கள்” என்றாள்..வந்தவனின் கண்களினின்று வழிந்த கண்ணீர் சற்று நேரத்தில் ஒரு அருவி ஆயிற்று.
அந்த அருவி இந்த மாந்துவா ஏரியில் சேர்ந்து அந்த ஏரியை நிறைத்தது. சற்று நேரத்தில் நடந்துவிட்ட இந்த அதிசயத்தைப்பார்த்த அப்பெண்மணி பெரும் திகிலுற்றாள். அந்த வீரனை திகிலோடு பார்த்தாள். அவன் ” அம்மணி…நான் இதே ஊரைச்சேர்ந்தவன் தான்..நான் பிறந்ததுமிங்குதான். வளர்ந்ததும் வாழ்ந்ததும் இங்குதான்..மரித்ததும் இங்குதான்..என்பெயர் லொஞ்சினுஸ்.. ஆண்டவறாகிய யேசுவை சிலுவையில் அடித்த பாவி நான்… இதோ இந்த ஈட்டியால் அவரைக்குத்திய பாவியும் நான் தான். ஆனல் அவர் இறந்த மூன்றாம் நாள்
உயிரோடு எழும்பினார்.. அதற்கு சாட்ச்சியும் நான் தான் ” என்று சொல்லியபடி காற்றில் கறைந்துபோனான்..அவள் கைகுழந்தை ” அம்மா…அதோ லொஞ்சினுஸ்..யேசுவோடு ” என்றது. அன்றிலிிருந்து அந்த குழந்தை தன் மழலையை விட்டுவிட்டு திருத்தமாகப்பேச ஆரம்பித்தது.
அந்த பெண்மணிக்கு தான் கண்டதை நம்புவதா…இல்லை கேட்டதை நம்புவதா.. இல்லை இதற்க்குசாட்ச்சியாக தன் குழந்த மழலையில் பேசியதை நம்புவதா என்று எதுவும் புறியாமல் அவளும் உறக்க அழுதாள். இவள் அழுவதைக்கண்ட மக்கள் காரணம் கேட்டபோது அவளும் சற்று முன் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தாள்..மக்கள் இந்த சம்பவத்தை நம்பினார்கள். காரணம்… திடீரென ஏற்பட்ட ஒரு நீரோடையும் ஏரியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கும். அதுமட்டுமல்ல…அந்த நீரோடையின் தண்ணீர் உப்பு கறித்தது.
அது லொஞ்சினூஸின் கண்னீர் ஓடை அல்லவா..ஆனால் ஏரியின் நீர் காலம் காலமாக நல்ல தண்ணீர் ஏரி..ஆனால் அதுவும் அன்று உப்பு கறித்தது. எல்லாம் அந்த லொஞ்சினூஸின்  கண்ணீரால் வந்த வினை.
    பிறகு அடுத்த நாள் அந்த ஏரி தன் பழைய நிலைக்கு திரும்பியது. அதன் சுவையும் நல்ல நீரானது.. அந்த மாந்துவா நகர மக்கள் இந்த நிகழ்ச்சியினால் மனம் கஸிந்து மீண்டும்  என்றாவது ஒரு நாள் லொஞ்சினூசை காண மாட்டோமா என்று ஒருவித ஏக்கத்தோடு தினமும் இந்த ஏரிக்கறைக்கு வருவதை வாடிக்கை ஆக்கிக்கொண்டார்கள். அவர்கள் நம்பிக்கையும் வீண் போகவில்லை..என்றாவது ஒருநாள் வீரன் ஒருவன் கையில் ஒரு வேலுடன் இந்த ஏரிக்கரையில் சில நிமிடத்தில் தோன்றி மறைவதை அனேகர் பார்த்திருக்கின்றார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அந்த மாந்துவா நகர ஏரியும் லொஞ்சினுஸ் ஏரி என்று பெயர் பெற்றது.
        அன்று ஜெருசலேம் அதோணிக்கோட்டையில் தன் பாசரையில் அமர்ந்திருந்தான் போஞ்சிபிலாத்தின் அரண்மனை அதிகாரி அபியத்தார்..அப்போது அவன் முன்பாக பவ்வியமாக மண்டியிட்டு ராணுவ வணக்கம் செய்தான் ஒரு ரோமை வீரன். ” சொல் காஷியுஸ்…உன் கண்தான் மாறு கண்ணே தவிர உன் புத்தி கூர்மையானது. அது வைத்த கண் மாறாது என்று எனக்குத்தெரியும்.. என்ன விஷயம்…பாஸ்காத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி…சந்தேகப்படும்படியான நிகழ்வுகளும் நபர்களும் ஏதேனும் உண்டா… விபரமாகச்சொல் ” என்றார் அபியத்தார்.
” எஜமான்…சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருகின்றன.. தங்கள் உத்திரவின்பேரில் நான் தலைமை குரு கைப்பாஸின் வீட்டிற்குச்சென்றேன். அங்கு எனக்கு ஒரு நண்பன் மூலம் அவர் வீட்டின் உள்ளே செல்வது எனக்கு சாத்தியம் ஆகியது. அங்கு நான்கண்ட காட்ச்சிகளும் நான் கேட்ட பேச்சுகளும் அப்படியே என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது “.
” காஷியுஸ்..நீ கண்ட காட்சிகளையும் கேட்ட பேச்சுகளையும் எனக்கு அப்படியே சொல் ” என்றார் அபியத்தார்.
” எஜமான்…யேசுவின் சீடர் இஸ்காரியோத்து நகரைச்சேர்ந்த யூதாஸ் என்பவர் தலைமைகுரு கைபாசிடமும் அவர் மாமனார் அன்னாஸிடம் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தர். பேச்சு அந்த கலிலேயா யூத ராபீயைப்பற்றி இருந்தது. கடைசியில் ஒரு வழியாக முப்பது வெள்ளிக்காசுக்கு யேசுவை காட்டிக்கொடுப்பதாக ஒத்துக்கொண்டான் அந்தப்பாவி.”
” அடப்பாவி மனுஷா… யேசுநாதர் எபேற்ப்பட்ட மனிதர்…எவ்வளவுபெரிய தீர்க்கதரிசி… நான் முதலாய் அவரது போதனையாலும் அவர் செய்த புதுமையினாலும் அவர் பேரில் பெரும் மதிப்பு வைத்திருக்கின்றேன்.. அவருக்கா இப்படிப்பட்ட ஒரு கதி…இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் காஷியுஸ் “
” ஏஜமான்… இந்த யேசுநாதரைப்பற்றி நானும் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கின்றேன். அவர் கடவுள் அவதாரம் என்றெல்லாம் மக்கள் பேசிக்கொள்வதை நானும் கேட்டிருக்கின்றேன். ஆனால் இவரால் தங்கள் செல்வாக்கு மக்கள் மத்தியிலிருந்து எடுபட்டு போய்விடும்..அவர் பெரிய மெசியா என்று ஆகிவிட்டால் மக்கள் அவர் பின்னே  போய்விடுவார்கள்..பிறகு ஆட்சி முதல் அதிகாரம் வரை தங்கள் கையைவிட்டுப்போய்விடும். தேவாலய வருமானமும் போய்விட்டல் பிறகு சோற்றுக்கு சிங்கி அடிக்க வேண்டுமே என்ற கவலையினாலும் பொறாமையினாலுமே இந்த தேவாலய குருக்கள் யேசுவை கொல்லத்துடிக்கின்றார்கள்..ஆனலும் இந்த யூதாசுக்கு புத்தி ஏன் இப்படிப்போய்விட்டது.? தன் எஜமானை போயும் போயும் முப்பது வெள்ளிக்கசுக்காவா காட்டிக்கொடுக்க வேண்டும். மனிதர் சுத்த ஈனப்பிறவி போலிருக்கின்றது…நானாக இருந்தால் குறைந்தது மூவாயிரம் தங்கக்காசுகள் கேட்டிருப்பேன். அந்த யூத ராபிக்கு விலை அதிகம் கேட்டிருக்க வேண்டும்.. அதைத்தரவும் அந்த தேவாலாய குருக்கள் சம்மதித்திருப்பார்கள்…அவர்களுக்கு என்ன விலை கொடுத்தாவது யேசுவின் உயிர் வேண்டும்.”
” சரி ,…பிறகு என்ன நடந்தது..”
” தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.. அதன்படி யூதாஸ் யேசுவைக்காட்டிக்கொடுக்க வேண்டுமெனவும் அதற்குக்கைமாறாக முப்பது வெள்ளிக்காசுகள்  பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் உறுதி செய்துகொண்டார்கள். அதற்கு அடையாளமாக தங்கள் அங்கியின் ஒரு பகுதியை தங்கள் குல வழக்கப்படி கிழித்துக்கொண்டர்கள்.இனி இருபுறத்தாரும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றிகொள்ளவேண்டும். இது கடவுள் மேல் ஆணை. என்று பேசிக்கொண்டார்கள் “
” சரி … இது எப்போது நிகழும். “
” எஜமான்..எனக்குத்தெரிந்து இது பாஸ்காப்பண்டிகைக்கு முன்பாகவே இருக்கும் என்று தோன்றுகின்றது.. யேசுநாதர் இந்த பாஸ்காப்பண்டிகைக்கு வருவார்.. அப்போது  அவரைப்பிடித்துவிடாலாம் என்று பேசிக்கொண்டிருந்ததாக என் நண்பன் தெரிவித்தான் “
” காசியுஸ்..அப்படியானால் . என் கணக்கு சரியாக இருந்தால் யேசுநாதரை பிடித்து விசாரணை நடத்தி கொல்ல உத்திரவிடப்படவேண்டுமானால் குறைந்தது மூன்று நாள்  தேவைப்படும்..இன்று புதன் கிழமை…இன்றிலிருந்து யூதாசையும் அவர் மற்ற சகாக்களையும் ஒரு கண் வைத்து ஒற்றாடல் செய்..மீதி காரியங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். ஜாக்கிரதை… ராத்திரி நேரத்தில் கண் சரியாகத்தெரியவில்லை என்று கோட்டை விட்டு விடாதே ” என்றார் அபியத்தார்..தனக்கு ஒற்ரைகண் என்பதை பச்சையாகவே சொல்லுகின்றார்
என்று காஷியசுக்கு தெரிந்திருந்தாலும் அவரை நேரடியாக எதிர்க்க அவனால் முடியாதே…அவன் பதவி அப்படி. அபியத்தார் பதவி அப்படி.. மற்றபடி வேறு யாரும் தன்னை இப்படி குறை கூறினால் நடப்பதே வேறு…இருப்பினும் அவனது நண்பர்கள் அவரன் பொட்டைக்கண்ணன் என்றும் மாறுகண்ணன் என்றும் அடிக்கடி கேலி செய்வதை  வாடிக்கையகக்கொண்டிருந்தனர். அந்த மாதிரியான நேரங்களில் அவனது கோபத்தை அன்று அவனிடம் மாட்டும் கைதிகளிடம் காட்டி அவர்களை ஒரு வழிஆக ஆக்கிவிடுவான்.
   ஆனால் அவனுக்கு அபியத்தாரிடாம் அன்று தன் கோபத்தை அடக்கிகொண்டு ” உத்தரவு எஜமான்” என்று அவரிடமிருந்து விடை பெற்றான் காஷியுஸ் என்னும் பொட்டைகண்ணன். அவர்கள் எதிர்பாத்தபடியே பெரிய வியாழன் இரவில் ஜெத்சேமெனித்தோட்டத்தில் யேசுநாதர் தன் சீடர்களுள் ஒருவரான யூதாஸால் முத்தமிட்டு காட்டிகொடுக்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ராயப்பர் தன் உடைவாளை உருவி கைப்பாஸின் தலைமைக்காவலனை வெட்டினார்..அப்போது அவன் விலகிக்கொள்ளவே அவன் காதில் வெட்டு விழுந்ததுல் அந்தக்காது வெட்டுப்பட்டு தரையில் விழுந்தது. அவன் பெயர் மால்க்குஸ். ஒரு வழியாக யேசுவை தலை குரு கைப்பாசின் அரண்மனைக்கு இழுத்துச்சென்றனர்.
    தன்னைப்படைத்த தேவாதி தேவனுக்கு ஏற்பட்ட கதியைக்கண்டு ஜெத்சமெனித்தோட்டத்தின் மரங்கள் பலமாக ஆடியபடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன .. ஜெத்ஸமெனி தோட்டத்தின் சுற்றுப்புற சுவரும் இளகியது. அதன்மீது இருந்த பாறை ஒன்றில் யேசுநாதர் தன் கையை வைத்து சற்று நேரம் நின்றார். இளகி இருந்த அந்தப்பாறை அப்படியே அவரது கையை தன்னில் ஒற்றிக்கொண்டது. இன்று வ்ரை யேசுவின் கை அச்சு அந்த பாறையில் இருக்கின்றது.
     கைப்பாஸின் அரண்மனையில் யேசுநாதர் விசாரணைகாக நின்றிந்தார்.. அப்போது ராயப்பர் யேசுவுக்கு நேரப்போகும் கதியைப்பார்க்க அவரும் அங்கு வந்திருந்தார். அப்போது  வேலைகாரபெண் ஒருத்தி ராயப்பரைப்பார்த்து ” நீயும் அந்த கலிலேயனுடன் இருந்தவன் தான்..உன் முகத்தைப்பார்த்தாலேயே தெரிகின்றது நீ ஒரு கலிலேயன் என்று” என்றாள். உடனே ராயப்பர் ” அம்மணி.. எனக்கு அந்த ஆளைத்தெரியாது… எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..நீ வேறு யாரையோ நினைத்துக்கொண்டு என்னை சொல்லுகின்றாய் ” என்றார். அப்போது தலைமைகுருவின் காது அறுபட்டவனான மல்குஸுவின் உறவினன். நம் பொட்டைக்கண்ணன் காஸியசுடன் சேர்ந்து கொண்டு ” யோவ் கலியேயா..இவனுக்கு வேண்டுமானால் கண் பொட்டையாக இருக்கலாம்.. ஆனால் எனக்கு நல்ல கண்தான்… உண்மையை சொல்…நீயும் அந்த கலிலேயனுடன் சுற்றிக்கொண்டிருந்தவன் தானே. உன்னை நாங்கள் தோட்டத்தில். அந்த ராபீயுடன் பார்க்கவில்லை.. நீ கூட மால்குஸை வெட்டவில்லை.. அந்த ராபீயும் அவனுக்கு காதை சொஸ்த்தமாக்கவில்லை… யாரிடம் விடுகிறாய் கதை. உண்மையை ஒத்துக்கொள் ” என்றான்..
      உடனே ராயப்பர் ” ஐய்யா.. உண்மையில் எனக்கு யேசுநாதர் யார் என்றே தெரியாது அந்த யேசு நாசமாகப்போக” என்று சபிக்கவும் ஆணையிடம் துவங்கினார். உடனே கோழி கூவிற்று..[ அந்த இடம் இன்று வரை கோழிகூவிய ஆலயம் [ காலிகந்து] எனபடுகின்றது the church of caliganth ].
பெரிய வியாழன் அன்று இராப்போஜன அறையில் யேசுவிடம் ராயப்பர் ” ஆண்டவரே உமக்காக நான் உயிர் விடவும் தயங்க மாட்டேன் என அதற்கு யேசு ” ராயப்பா.. நீ கோழி  இருமுறை கூவுமுன் மும்முறை மறுதலிப்பாய்” என்ற வார்த்தைகள் அவருக்கு ஞாபகத்தில் வந்தன. அவ்வளவுதான்.. தன் உயிர் மேல் உள்ள ஆசையால் அதை இழக்க விரும்பாமல்  தன் எஜமானை மறுதலிக்க முன்வந்ததைப்பற்றி ராயப்பர் மிகவும் மனம் வருந்தினார்.. தான் எப்பேர்ப்பட்ட கோழை என்பதை நினைத்து நினைத்து தன்மீதே அவருக்கு வெறுப்புவந்தது.
அப்போது தன் எஜமானும் தன் ஆண்டவருமாகிய யேசுநாதர் தன்னை நோக்கி பார்த்த பார்வையில் அவர் என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதை அவர் உணர்ந்துகொண்டார்..
” ராயப்பா.. இவ்வளவுதானா உன் வீரம்…என்னோடு மரிப்பதானால் கூட உனக்கு சம்மதம் என்று நேற்றுதானே சொன்னாய்.. இன்று உனக்கு என்ன வந்தது… மனிதனின் உடல்  பலஹீனமானதுதான்.. பாவம் நீ என்னதான் செய்வாய் என்று தன் முகத்தை திருப்பிக் கொண்டார்.. இது ராயப்பரை மேலும் துன்பத்திலாழ்த்தியது. உடனே அவர் அவ்விடம் விட்டு  அகன்றார்..வெளியில் சென்று அழுதார் அழுதார் அப்படி அழுதார். தன் அழுகை யாருக்கும் தெரியாவண்ணம் எவ்வளவோ அடக்கினாலும் அவரை மீறிக்கொண்டுவந்தது அந்த அழுகை..
    இந்த நேரம் பார்த்துதானா யேசுவின் தாய் மரியாள் யேசுநாதருக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்ள அவரிடம் வந்தார்.. அவவளவுதான் ராயப்பர்…தன்னை மீறி வந்த  அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் “ஓ” என்று அழுதுகொண்டே மாதாவின் காலில் விழுந்து ” அம்மா… என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா… என்னை மன்னித்துவிடுங்கள். நான் பெரும் கோழை ஆகிவிட்டேன்… தங்கள் மகனும் எஜமானுமாகிய என் யேசுநாதரை என்னால் கப்பாற்றத்தான் முடியவில்லை… ஆனால் அவரை மறுதலிக்கவும் செய்தேனே  அம்மா…தங்கள் முகத்தில் விழிக்கக்கூடவும் தங்களை அம்மா என்றழைக்கவும் நான் தகுதி இழந்து விட்டேன்…என்னை மன்னியுங்கள்…இந்த பாவியை மன்னியுங்கள்.. .நான் யூதாஸைவிட கேவலமாகிப்போனேன்….அவனாவது யேசுவை இவர் யேசுதான் என்று உறுதியாகக்கூறி அவரைகன்னத்தில் முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான்..
ஆனால் பாவி நானோ என் எஜமானை நான் அறியேன் என்று மறுதலித்ததுமல்லாமல் அவரை சபிக்கவும் செய்தேன் ஆணை இடவும் செய்தேனே… பாவி நான்..பாவி நான் என்று நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு அழுதார்..
   தன் மகனுக்கு நேர்ந்த கதி பற்றி அறிந்துகொள்ள வந்திருந்த தேவ தாயாருக்கு நம் ராயப்பரை சமாதானப்படுத்துவதர்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ” போதும் ராயப்பா… போதும்… இது எல்லாம் நடக்கத்தான் வேண்டும் என நாம் நன்றாக அறிவோம்… மனம் தெளிவயாக. எங்கே நம் மகன் … அவருக்கு என்னவாயிற்று என்று தன் மகனை கண்களாள் தேடினார்…
   அபோது காஷியுஸ் தன்நண்பனிடம் ” யார் இந்த பெண்மனி ” என்றான். அதற்க்கு அவன் ” அடே பொட்டைகண்ணா…உனக்கு இதுகூடவா தெரிய வில்லை.. அவர் தான் இதோ  கைது செய்யப்பட்டு வந்திருக்கும் யேசு என்னும் யூத ராபியின் தாயார் ” என்றார். தன் நண்பன் தன்னை அனைவர் முன்னிலையிலும் பொட்டைகண்னா என்று சொல்லுவது அவனை கோபம் கொள்ள் வைத்தது. இருப்பினும் தன் கண்டனத்தை அவனிடம் வெளிபடையாகவே கூறினான்..” இதோ பார் நண்பா.. பொதுவில் என் குறையை பற்றிப்பேசாதே..இத்துடன் உன் நட்ப்பைநிறுத்திக்கொள்.” என்றான்.. ஆனாலும் தன் குறையை நினைத்து தன்னை மிகவும் நொந்துகொண்டான்..
    ஒரு வழியாக யேசுநாதருக்கு.போஞ்சிபிலாத்தினால் சிலுவை சாவு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை நிறைவேற்ற ரோமை வீரர்கள் பொறுப்பு
ஏற்றுக்கொண்டார்கள். அபியதார் தலைமையில் காசியுஸ் யேசுவையும் அவரோடு இரு கள்வர்களும் கல்வாரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்..காஸியுஸும் அவனோடு மற்ற பல வீரர்களும் யேசுவை படுத்திய பாடு வார்த்தையில் சொல்ல முடியாது. காஷியுஸ் தனக்கு பொட்டைக்கண் என்பதால் பலர் மத்தியில் ஏற்பட்ட அவமானங்கள் எல்லாம் ஏதோ யேசுநாதரால் தான் ஏற்பட்டது என்றுநினைத்துக்கொண்டாற்போல் அவரை எவ்வளவு கொடுமைப்படுத்த முடியுமோ அவ்வளவு கொடுமைப்படுத்தினான். அவரை காலால் உதைத்தும்…அடித்தும் காறி உமிழ்ந்தும் கெட்ட வார்த்தைகளால் திட்டியும் வெகுவாக அவமானப்படுத்தினான்.அதில் தான் ஒருவித இன்பத்தையும் கண்டான்.. தன்னை பொட்டை கண்ணன் என்று சொல்லியவர்களை தான் பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு யேசுவை படாத பாடு படுத்திவிட்டான்.
” வளர்ப்பு சரி இல்லை “
     ஒரு வழியாக யேசு நாதருக்கு தன் தாயாரை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது அதற்கான ஒரு வாய்ப்பை தானே ஏற்படுத்திக்கொண்டார்.. அதற்காகவே அவர் சிலுவையை ஒருமுறை தன் மீதே போட்டுக்கொண்டு கீழே விழுந்தார்.. காஸியசும் மற்ற வீரர்களும் அவர் மீதிருந்த சிலுவையை தூக்குவதற்குள் தன் தயாரை சந்தித்தார். வலியாலும் வேதனையாலும் சோர்வுற்றிருந்த தன் மகனின் திருமுகத்தை தன் கரங்களால் அணைத்துக்கொண்டார் அவர் தாயார்..இருவரது கண்களினின்று கண்ணீர் பெருகியது. அப்போது.இந்த நிகழ்ச்சியாய் பார்த்துக்கொண்டிருந்த காஸியுஸ் ” அம்மா… இப்போது அழுது என்னம்மா பிரயோஜனம்.. அவனுக்கு சின்ன வயதிலிருந்தே நல்ல புத்தி சொல்லி வளர்த்திருந்தால் உனக்கும் இந்த நிலை வந்திருக்காது.. உன் மகனுக்கும் இந்த நிலை வந்திருக்காது.. இப்போது அழுது எந்த பிரையோஜனமும் இல்லை.. எழு.. எழு… இனிமேலாவது உன் எதிர்காலத்தை நல்ல விதமாக அமைத்துக்கொள்…ஒன்று பிள்ளைகளுக்கு சொல் புத்தி இருக்க வேண்டும் .அல்லது சொந்த புத்தியாவது இருக்கவேண்டும்.. இரண்டுமே இல்லையென்றால் இப்படி ஊரில் இவன்போல அடிபட்டு சாக வேண்டியதுதான். புத்தி இல்லாத பிள்ளைகளை பெற்றுவிட்டால் உன்போன்ற தாய்மர்களின் கதி அதோகதி தான்..பாவம் நீ என்ன செய்வாய்.. போய் ஆக வேண்டிய  காரிங்களைப்பார் .. யோவ் .. எழுந்திரைய்யா… நேரம் வேறு ஆகிக்கொண்டிருக்கின்றது” என்றான்
   காசியசின் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் யேசுவின் தாயாருக்கு நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல் ஆயிற்று.. என் வளர்ப்பு சரியில்லைய்யா. அடப்பாவி..நீயும் ஒரு தாய்க்குப் பிறந்தவனா.. என் மகன் யார் என்று தெரியுமா உனக்கு.. என்று பரிசுத்த தேவ தாயாரின் உள்ளம் குமுறிற்று. இதனால் மனம் நொந்து போன மரியாள் தனக்கு பின்னாலிருந்த தூணில் சாய்ந்தாள். தன் திருமகனின் நிலையாலும் தன் வளர்ப்பு சரிய்ில்லை என்ற காஸியஸின் வார்த்தையாலும் குத்துப்பட்ட தேவதாயாரின் நிலை கண்ட அந்த தூணும் மனம் இளகியதுபோல் தன்னை இளக்கிக்கொண்டு அவரது கரங்களை தன்னில் அச்சாக பதித்துக்கொண்டது. மேலும் யேசுவும் மாதாவும் நின்றிருந்த அந்த கல்பாவப்பட்ட தரையானது அவர்களின் பாதச்சுவடுகளை தன்னில் பதித்துக்கொண்டது..இன்றுவரை அவர்கள் பாதம் பதித்த அந்த அச்சுகளை இந்த தாய் மகன் சந்திப்பு நடந்த ஸ்த்தலத்தில் காணலாம்.
காஸியஸின் முறட்டுத்தனமான தாக்குதலால் நிலை குலைந்து போன யேசு நாதருக்கு இரு ரோமன் சிப்பாய்கள் உதவினர்.. அவர்கள் தண்ணீர் பருகும்போது பாக்குமட்டையில் செய்யப்பட்ட தம்ளரால் சற்றே தண்னீர் அள்ளி யேசுவை ஆகடியம் செய்வதுபோல் அவரிடம் குடிக்க கொடுத்தனர். அவர்களின் உள்ளத்தில் உள்ள நல்ல குணத்தை அறிந்துகொண்ட யேசுவும் அந்தநீரை வாங்கிப்பருகினார். பிறகு அவரை கொல்கோத்தாவுக்கு இழுத்துச்சென்று அவரையும் மற்றும் இரு கள்வர்களையும் சிலுவையில் அடித்துக்கொள்வதற்காக அதர்கான தயாரிப்பு வேலையில் ஈடு பட்டனர். அதுவரை அங்கிருந்த ஒரு குகையில் யெசுவை காவலில் வைத்தனர். காசியுஸ் யேசுநாதரின் கழுத்தில் கையை வைத்து கல்தா கொடுத்து அவர் புட்டத்தில் தன் காலால் எட்டி உதைத்து ” உள்ளே போங்கள் மஹா ராசா ” என்று கூறி காவலுக்கு இருவரை அமர்த்தினான். அன்றிலிருந்து இன்று வரை யேசுவுக்கு நேர்ந்த இந்த சடங்கு உலகம் முழுவதும் உள்ள பொலிஸ் ஸ்டேஸன் முதல் சிறைச்சாலை வரை அங்கே செல்லும் எல்லா கைதிகளுக்கும் தவறாது நடக்க ஆரம்பித்தது.
    சிலுவை நடப்படும் குழிகளும் சிலுவை மரங்களும் தயாரான பிறகு யேசுவை அழைத்து ” எஜமான்… சொர்க்கம் பரலோகம் பற்றி எத்தனை தடவை கூறி இருப்பீர்கள்… இப்போது அங்கே நிரந்தரமாக போகப்போகிறீர்கள்… வாருங்கள் மஹாப்பிரபூ ” என்று நக்கலாக அழைத்து அவரை சிலுவையில் அடிக்க கூட்டிச்சென்றான் காஸியுஸ். யேசுவை நிர்வாணமாக்கி அவரை சிலுவைமீது கிடத்தி அவரின் இடதுகையில் ஆணியால் அறைந்து அந்த கையை சிலுவையோடு பிணைத்தார்கள், யேசுவின் வலது கையை இழுத்து ஏற்கனவே
அடையாளமிட்ட இடத்தில் வைத்து ஆணி அடிக்கலாம் என்றால் அவரது இடதுகையில் ஆணியால் ஏற்பட்ட காயத்தால் அவரின் பல நரம்புகள் உள் இழுத்துக்கொண்டன. அதனால் லேசில் அவரது வலது கை நீளவில்லை. அப்போது காஸியுஸ் யேசுவின் வ்லது கையை பற்றி இழுத்தவனை ” அடே பரதேசிப்பயலே… ராத்திரி முழுசும் தண்ணீர் அடித்துவிட்டு
எவகூட படுத்துபுட்டு இப்பவந்து முக்கறே.. அடேய் சோதாப்பயலே…இப்படி இழுக்கனுண்டா என்று மிகவும் கொச்சையாக தரம்கெட்ட முறையில் பேசி யேசுவின் மணிக்கட்டை ஒரு  கயிற்றால் கட்டி தன் இடதுகாலை தரையில் ஊன்றி வலதுகாலால் யேசுவின் திரு மார்பில் உதைத்துக்கொண்டு இழுத்தான். அப்போது யேசுவின் வலது முழம்கைஎலும்பு ” மலுக்” என்னும் சப்த்தத்துடன் விலகியது. இதனால் அவரது வலது கையின் நரம்புமண்டலம் தன் கட்டுப்பாட்டை இழந்தது. ஒரு வழியாக யேசுவின் வலது கை அணியால் அடிக்கப்பட்டது. திருச்சிலுவை உயர்த்தப்பட்டபோது யேசுவின் வலது கை எந்த கட்டுப்பாட்டுக்கும் வராமல் ஆங்கில எழுத்தான ” L ” போல் ஆயிற்று.
      யேசுவின் திருச்சிலுவைப்பாடுகள் வார்த்தையில் சொல்லி மாளாது.            யேசுவுக்கான மரண நேரம் வந்ததும் அவர் சிலுவையில் மரணித்தார்.. அப்போது சூரியன் தன்னொளி கொடாது மறைந்து போனான். கிராணம் பீடித்தது. வானில் இடி இடித்தது. இந்த நிகழ்ச்சியைக்கண்ட மக்கள் அனைவரும் மிகுந்த திகிலுற்றனர். அதிகமாக திகில் கொண்டவ்ன் நம் காசியஸ் தான்.. இந்த யேசுவுக்கு தன்னால் எப்பேற்ப்பட்ட கொடுமைகள் ஏற்பட்டன..தான் இந்த யேசுவின் பேரில் ஏன் இவ்வளவு கொடுமையாய் நடந்துகொண்டோம்.. இதோ இவர் இப்போது மரணிக்கும்போது உலகமே ஆஞ்சி நடு நடுங்குகின்றனவே.. உண்மையிலேயே இவர் கடவுளின் திருமகன்தான். ஐய்யோ நான் என்ன செய்வேன்.. நான் பெரும் கொடுமைகாரனும் மிகுந்த பாவியும் ஆனேனே… ஆண்டவா என்னை மன்னியும். யேசுவே என்னை மன்னியும் என்று மிகுந்த மனஸ்த்தாபதோடு அழுது மன்றாடினான். இதேபோல அவனுடன் சேர்ந்துகொண்டு யேசுவை துன்புறுத்திய மற்ற இரு ரோமை வீரர்களும் அழுது மன்றாடினார்கள். ஆயிற்று… எல்லாம் நடந்து முடிந்துவிட்டது..உயிரோடு சிலுவையில் இருக்கும் அனைவரையும் கொல்லுங்கள் என்றார் அபியத்தார்.
யேசுவை அவர் உயிரோடிருகின்றரா என்று சோதித்தான் காஸியுஸ். ” எஜமான்.. யேசு மரித்துவிட்டார் ” என்றான்..” இருபினும் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்து ” என்றார் அபியத்தார். எனவே லொஞ்சினுஸ் தன் ஈட்டியால் யேசுவின் திரு மார்பில் குத்திதிறந்தான். அதன் வழியாக வெளியேறியது யேசுவின் உடலிலிருந்த மிச்ச ரத்தம். வெளியேறி காஸியஸின் கண்களில் பட்டது. அப்போதுதான் அந்த பேரதிசயமும் நடந்தது. ஒரு கண் பொட்டையான காஸியஸ் அந்த கண்ணில் பார்வை பெற்றான்.. அப்போதே அவன்
யேசுவின்பால் ஈர்க்கப்பட்டு மனமாற்றம் அடைந்தான்..மற்ற இரு கள்வர்களையும அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கக்கண்டு அவர்கள் கால்களை குண்டாந்தடியால் அடித்து  உடைத்துக்கொண்றார்கள். கொன்றுபோட்ட அந்த இரு கள்வர்களின் உடலையும் சிலுவையினின்று இறக்கி தெரு நாயை இழுத்துச்செல்வதுபோல இழுத்துக்கொண்டுபோய் அருகிலிருந்த நகர கோட்டை வாசலுக்கு சற்று தள்ளி அவசரம் அவசரமாக புதைத்தார்கள். அவர்களை ஏன் என்று கேட்க்க நாதி இல்லை. அவர்கள் உடலை கேட்டு வாங்கிச்செல்லவும் ஆட்க்கள் இல்லை.
      யேசுவின் திரு மரணம் நிறைவேறிய பிறகு அவரது உடல் அடக்கம் நடைபெற்றது. அவரது அடக்கத்திர்காக அவரது மரித்த திரு உடல் சிலுவையினின்று இறக்கப்பட்டது.  யேசுவின் மரித்த திருவுடலை மாதா தன் மடியில் போட்டுக்கொண்டு புலம்பித்தீர்த்தாள். அவரது திரு உடலினின்று வெளிப்பட்ட அனைத்து இரத்தக்காயங்களையும் மாதாவே தன் கரம் கொண்டு கழுவினாள். அதற்க்கு வேண்டிய தண்ணீரையும் கடற்காளானையும் காஸியுஸ் தன் கைப்பட கொண்டு வந்து கொடுத்தான்..பிறகு அவரது திரு உடலை கீழே கொண்டுவந்து ஒரு நீண்டகல் பலகையில் வைத்து யேசுவின் ஈமச்சடங்குக்கு தேவையான அனைத்துக்காரியங்களையும் செய்தார்கள். பிறகு யேசுநாதர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
    அப்போது ஒரு பெரும் பிரச்சனை எழுந்தது. யேசுநாதர் உயிரோடு இருந்த பொழுது அவர் இறந்த பின் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்று அவரது சிஷ்யகோடிகள்  கூறக்கேட்டோம் எனவே அவருடைய கல்லறைக்கு பலத்தகாவல் போடப்படவேண்டும் என்று யூத குருமார்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி காஸியுசின் தலைமையில் யேசுவின் கல்லறைக்கு பலத்த காவல் போடப்ப்பட்டது. யேசுவும் தான் கூறியபடியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்…இதற்க்கு காஸிய்ஸும் அவனோடு இருந்த மற்ற ரோமை வீரர்களும் சாட்ச்சியம் கூறினார்கள். யேசு உயிர்த்த செய்தியை அந்த நேரமே காஸியுஸ் ஓடிச்சென்று போந்திபிலாத்துவிடம் அறிவித்தான்.
” காஸியுஸ்… உண்மையைக்கூறு.. நீ ஒன்றும் குடித்திருக்க வில்லையே ?” என்றான் பிலாத்து.
” இல்லை எஜமான்…எனக்கும் குடிப்பழக்கம் உண்டுதான். ஆனால் யேசுவின் வார்த்தைகள் எந்த அளவு உண்மையானவை என்று அறியவே நான் விழித்திருந்து காவல் காத்தேன்.”
” சரி..அப்படியானால் நீ கண்டவற்றை அப்படியே எனக்கு விவரி ” என்றார் போஞ்சிபிலாத்து.
” என் எஜமானே… நேற்று இரவில் வானத்திலிருந்து இறங்கிவந்த வானவர் இருவர் மிகுந்த ஒளிப்பிரகாசத்தோடு எங்கள் கண்முன்னே தோன்றினார்கள்..அந்த ஒளி கண்கூசும்படி  இருந்தது. சற்றும் சிரமமின்றி சீல் செய்ய்யப்பட்டிருந்த அந்த பதிமூன்றடி விட்டமும் இரண்டடி அகலமும் கொண்ட அந்த வட்டக்கல்லை அப்புறப்படுத்தினர். அப்போது அந்த
கல்லறையினுள்ளே யேசு நாதர் மிகுந்த ஒளியுடனும் மாட்சிமையுடனும் எழுந்ததை நாங்கள் எங்கள் கண்ணாறக்கண்டோம். பின்னர் வானவர் மறைந்தனர். யேசுநாதரை சுற்றி இருந்த
கோடித்துணி கல்லறையினுள் இப்போதும் இருக்கின்றது ” என்றான். மிகுந்த ஆச்சர்யம் அடைந்தான் போஞ்சி பிலாத்து. ஆனால் இதை நம்ப மறுத்தனர் யூத சாஸ்த்திரிகள். யேசுவின் சீடர்கள் ரோமை வீரர்கள் தூங்கும்போது அவரது உடலை எடுத்துக்கொண்டு போய் அவர் உயிர்த்துவிட்டார் என்று கூறுவதாக கதைகட்டிவிட்டார்கள்…
    ஆனால் காஸியுசும் அவனுடன் இருந்த மற்ற ரோமை வீரர்களும் யேசு நாதர் உயிர்த்தெழுந்தார் என்பதர்க்கு சாட்சியமாக பொதுமக்கள் கூடுமிடங்களிலெல்லாம் போய் யேசுநாதர் உயிர்த்தார் அதர்க்கு நாங்கள் சாட்ச்சிகள் என்று உறக்கக்கூறினார்கள். இது யூத குருமார்களுக்கு மிகுந்த தர்ம சங்கடத்தையும் எரிச்சலையும் ஏற்ப்படுத்தியது.
    பரிசுத்த ஆவி திருவிழாவுக்குப்பிறகு இராயப்பர் கையால் சிலோவாம் குளத்தில் ஞானஸ்நானம் வாங்கிய முதல்மனிதர் காஸியஸ் தான். அவரோடு மற்ற இரு ரோமை வீரர்களும் திருமுழுக்கு பெற்றனர்.. ஞானஸ்நானம் பெற்றபிறகு காஸியுஸ் லொஞ்சினுஸ் என்று அழைக்கப்பட்டார்.
    ஜெருசலேமில் கிரிஸ்த்துவம் புற்றீசல் போல் வெகுவேகமாகப்பரவியது. இதைக்கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர் யூத மத குருமார்கள். இந்த யேசு நதரைக்கொல்வதன் மூலம் எல்லாப்பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்று பார்த்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் வெகு வேகமாக அல்லவா பரவுகின்றது.. எனவே ஜெருசலேமில் கிரிஸ்த்துவத்துக்கு தடை விதிக்கப்படுகின்றது.. இறந்த யேசு கிறிஸ்த்துவைப்பற்றி இனி யாரும் பொதுவில் பிரசங்கிக்கக்கூடாது என்றும் மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை
கிடைக்கும் என்றும் யூத மத குருக்கள் அறிவித்தார்கள்..ஆனால் யேசுநாதரைப்பற்ரிய எந்த தடையும் உடைக்கப்பட்டது.. இதர்க்குக்காரணம் அந்த இராயப்பரும் அவருடைய மற்ற அப்போஸ்த்தலர்களும் போதாக்குறைக்கு இந்த மூன்று ரோமை வீரர்களான காஸியசும் அவன் கூட்டாளிகளும் தான்.. யேசுவின் சீடர்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் காஸியஸையும் அவன் நண்பர்களையும் கதை முடிப்போம் என்று முடிவு செய்தார்கள். இதை அறியவந்த காசியசும் [ லொஞ்சினுஸ்] அவன் நண்பர்களும் இருவரும் தலைமறைவானார்கள்.
    தப்பிச்சென்ற லொஞ்சினுஸும் அவன் இரு நண்பர்களும் துருக்கியிலுள்ள கப்பதோக்கியாவுக்கு சென்று அங்கு யேசுவின் நற்செய்தியை பறை சாற்றினார்கள்.அனேகர் மனம் மாறி யேசுவை பின்பற்றினார்கள். [ சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் லொஞ்சினுஸ் பிறந்தது கப்பதோக்கியாவில்தான் என்றும் அதனால்தான் அவன் அங்கு சென்று தன் வேத போதக அலுவலை ஆரம்பித்தான் என்றும் கூறுகின்றார்கள்]. பிறகு லொஞ்சினுசும் அவ்ர் நண்பர்கள் இருவரும் இத்தாலியிலுள்ள மாந்துவா நகர் வந்து யேசுவின் நற்செய்தியை அறிவித்தனர்.
ஆனால் விதி இங்கும் அவர்களைத்துரத்தியது. லொஞ்சினுசும் அவர் நண்பர்கள் இருவரும் துறவரம் அடைந்து டீக்கன் அந்தஸ்த்தில் இருந்தனர். அவர்களின் தோற்றமே மாறிப்போய் இருந்தது. அந்த நகர மக்களுக்கு லொஞ்சினுசின் கதை தெரிந்திருக்க நியாயமில்லை.
    அந்த மாந்துவாநகர ஏரிக்கறையிலிருந்து சில காத தூரத்தில் தங்களுக்கென ஒரு குடிசையை அமைத்துக்கொண்டு விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தனர். தன் இரண்டு  நண்பர்களையும் மேலும் சற்று தூரத்தில் குடிசைபோட்டு அவர்களையும் தனியே வைத்து விவசாயம்போக மீதி நேரங்களில் வேத போதக அலுவலை மேற்கொண்டார் லொஞ்சினுஸ். இப்படியாக இரண்டு வருடம் கழிந்தது
இந்த இரண்டுவருட இடைவெளியில் ஜெருசலேமில் பெரும் மாற்றங்கள் நடந்தன. யேசுநாதரைப்பற்றிய பக்தி பல மதத்தவரிடையேயும் பல இனத்தவரிடேயும் பலத்த மாற்றத்தை  ஏற்படுத்தியது. இந்த மன மாற்றத்தின் விளைவாக கிரிஸ்த்துவம் வெகுவாக வளர்ச்சி அடைந்ததால் எப்படியும் அதை மேற்கொண்டு பரவவிடாமல் தடை செய்யும் முயற்ச்சியில்
ஈடுபட்டனர் யூத குலகுருக்கள்.
    . ஆனல் எவ்வளவுக்கெவ்வளவு தடுத்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு வீறு கொண்டு எழுந்தது கிரிஸ்த்துவம். கப்பதோர்க்கியாவிலிருந்து வந்த யூதர்கள் பலர் கிரிஸ்த்துவர்களாக மாறக்காரணம் லொஞ்சினுஸும் அவன் இருநண்பர்களும்தான் என்றும் மேலும் அவன் இப்போது இத்தாலியிலுள்ள மாந்துவாவில் இருகின்றான் என்று கேள்விபட்டதுமே தலைமை குருக்கள் அன்னாசுக்கும் கைப்பாசுக்கும் வயிற்றில் புளியைக்கறைத்தது. அவர்கள் கதையை முடித்துவிட்டுதான் மறுவேளை என்று பிலாத்துவை அணுகினர்.
அரசியலும் மதமும் கைகோர்த்துக்கொண்டால் அன்றி அந்த நாட்டில் அமைதியாக ஆட்சி செய்ய முடியாதென இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்தான் பிலாத்து. எனவே காஸியசும் அவன் நண்பர்கள் இருவரும் சரியான முறைப்படி ராணுவத்தில் இருந்து ஓய்வுபெறவில்லை… அவர்கள் ராணுவத்திலிருந்து ஓடிவிட்டனர் என்று காரணம் காட்டி அவர்கள் மூவரின் உயிருக்கும் உலை வைத்தனர். இதற்காக கொலைஞ்சர் மூவரை இத்தாலியிலுள்ள மாந்துவா நகருக்கு அனுப்பி அவர்கள் மூவரையும் தீர்த்துக்கட்ட அனுப்பினான் பிலாத்து. அந்த கொலைஞர்கள் மூவரும் மாந்துவா வந்து லொஞ்சினுஸிடமே காஸியசைப்பற்றி விசாரித்தனர்.
லொஞ்சினுஸ் தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல் தான் ஒரு துறவி என்றும் இன்னும்கூட சுற்று வட்டாரத்தில் சில துறவிகள் இருப்பதாகவும் கூறி அவர்களையும் அறிமுகம் செய்துவைத்தார்.. துறவிகள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நம்பிய அவர்கள் ஒரு மூன்று மாத காலம் அவர்களுடனே இருந்து தாங்கள் தேடிவந்த நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் ஜெருசலேம் செல்ல விரும்புவதாக கூறினார்கள். அப்போது லொஞ்சினுஸ் அவர்கள் வந்த காரியம் நிச்சயம் நிறைவேறும் எனக்கூறி தன்னை வெளிப்படுத்தினார்.
    வந்த வீரர்களுகு ஆச்சர்யமான ஆச்சர்யம் அடைந்தனர்..அவர்களும் மன மாற்றம் அடைந்தனர். ஆனால் அரசாங்க ஆணையை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்ததை முன்னிட்டு தங்கள் மனதை கல்லாக்கிகொண்டனர். லொஞ்சினுஸும் அவரின் இரு நண்பர்கள் தாங்கள் வேத சாட்சிமுடிபெற வேண்டும் எனவும் தங்கள் அரசாங்க ஆணையை  நிறைவேற்றிகொள்ள தடை ஏதும் இல்லை எனவும் தங்களையே அவர்களிடம் கையளித்தனர். அந்த மாந்துவா ஏரிக்கருகில் உள்ள மலையில் அவர்கள் மூவரையும் கூட்டிச்சென்று அவர்களின் தலையை வெட்டி அங்கேயே புதைத்தனர். ஆனல் லொஞ்சினுஸின் தலையை மட்டும் சாட்ச்சிக்காக அவர்கள் வேலினால் குத்தி அப்படியே ஜெருசலெம் கொண்டுவந்தனர்.
தேவாலய குருக்கள் அது லொஞ்சினுஸ் தலைதான் என்று உறுதிபடுத்திக்கொண்ட பின்னர் நகரின் சாக்கடை தேங்கும் ஒருஇடத்தில் போட்டுச்சென்றனர். லொஞ்சினுஸ் வேத சாட்ச்சியாக மரிப்பதற்க்குமுன் தான் கையோடு கொண்டுவந்திருந்த யேசுவின் திரு இரத்தம் அடங்கிய கடற்காளானை பாதுகாப்பாக தன் இல்லத்திலேயே ஒரு ஜாடியில் போட்டு மூடி புதைத்துவைத்திருந்தார். இதுபலநாள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆண்டவரின் சித்தப்படி புனித ஆந்திரேயர் கனவில் லொஞ்சினுஸ் தோன்றி யேசுவின் புனித இரத்தம் புதையுண்டிருக்கும் ஜாடி இருக்குமிடத்தை காண்பித்தார். புனித ஆந்திரேயர் பின்னர் அந்த இடத்தை தோண்டி அந்த புனிதபொருட்க்கள் அடங்கியுள்ள ஜாடியை எடுத்து அந்த மாந்துவா நகர மகளிடம் கொடுத்து லொஞ்சினுஸ்பற்றிய சரித்திரத்தையும் கூறினார்.
    லொஞ்சினுஸ் சரித்திரம் பற்றி அறிய வந்த பிறவியிலேயே குருடான மாந்துவா நகர் விதவைப்பெண் ஒருத்தி தன் ஒரே மகனுடன் கல்வாரி மலைக்கு வந்தாள்.. எப்படியாவது  லொஞ்சினுசுக்கு பார்வை கிடைத்ததுபோல ஆண்டவர் தனக்கும் பார்வை அளிப்பார் என்னும் விசுவாசத்தோடு கல்வாரி மலைக்கு வ்ந்தாள்.. ஆனால் அவளுக்கு அங்கு  விதிவிளையாடியது..அந்த குருட்டுப்பெண்ணின் பதினைந்து வயதுடைய ஒரே மகன் திடீரென இறந்தான்.. தனிமரமானாள் அந்த விதவை.. அந்த நேரத்தில் அவளுக்கு ஆறுதலாக துணைக்கு ஓடி வந்தார் லொஞ்சினுஸ். தன் தலை புதையுண்டு இருக்கும் இடத்தைக்காட்டி அதை அவளே எடுத்துக்கொடுத்தால் ஆண்டவராகிய யேசு அவளுக்கு பார்வைகொடுப்பது உறுதி என்று கூறி மறைந்துபோனார்.. அவளும் விடாமுயற்சியுடன் தனக்கு உதவ வந்தவர்களிடம் தன் கதையைகூற அவர்களும் உதவிக்கு வந்தனர்.. இந்தபெண் லொஞ்சினுஸ் கூறிய இடத்தை கண்டுபிடித்து அந்த சாக்கடையில் இறங்கினாள். அவள் கழுத்துவரை அமிழ்ந்து கைகளால் அவர் தலையை கண்டுபிடித்து அதை வெளியே கொண்டுவந்தாள்.. அவளுக்கு உடனே பார்வைகிடைத்தது. லொஞ்சினுஸ் கூறியபடியே அவளுக்கு நிகழ்ந்தது. ஆண்டவர் வாக்கு மாறாத தேவன் என்பது நிருபணம் ஆயிற்று.
   இந்த பிறவி குருட்டுப்பெண்ணுக்கு பார்வை கிடைத்ததும் மீண்டும் தன்னுடைய சொந்த ஊராகிய இந்த மாந்துவா நகருக்கு நம் லொஞ்சினுஸ் தலையை தன்னோடு கொண்டு வந்தாள். பலகாலம் அந்த தலை அவளுடைய பாதுகாப்பில்தான் இருந்தது. அவளுக்குப்பின் காலம் செல்லச்செல்ல யார் யார் கையிலெல்லாம் மாறி மாறி இப்போது ஜெர்மனியில்  இருக்கின்றது. ஆனாலு இது லொஞ்சினுஸ் தலைதான் என்று நிரூபிக்கக்கூடிய நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை. லொஞ்சிமுஸ் வாழ்ந்த காலத்தில் ஏழையாக இருந்தாரோ அல்லது வசதியானவராக இருந்தாரோ தெரியாது. ஆனால் இன்று அவரது கபாலத்தில் பொதித்துவைக்கப்பட்டுள்ள வைரங்களும் முத்துக்களும் கோடானகோடிபெறும். கொடுத்துவைத்தவர்தான் லொஜினுஸ்.அவரது கபாலம் தற்போது துன்ெஸ்ன்பெர்க்… ஜெர்மனியில் ஒரு ஆலயத்தில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு ஏறாள்மான பிறவிக்குருடர்கள் தங்களுக்கு கண்பார்வை வேண்டி திரு யாத்திரையாக வ்ந்து வேண்டிச்செல்கின்றனர்.
பிற்காலத்தில் இந்த மாந்துவா ஊரில் ஒரு மிகப்பெரிய ஆலயம் ஒன்று உருவாகியது. அந்தக்கோவிலின் அருளிக்கமாக யேசுவின் திரு இரத்தம் அடங்கிய கடற்காளான் வைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை அது பொதுமக்களின் பார்வைக்கு மிகுந்த ஆடம்பரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தைக்காண கானக்கண் கோடி வேண்டும்..
யேசுவின் மார்பைப்பிளந்த லொஞ்சினுசின் வேல் தற்போது ஹொஃப்பெர்க் அரண்மனை.. வியன்னாவில் உள்ளது. அந்த வேலானது இழுத்துவிட்டால் நீளக்கூடிய அமைப்பு உள்ளதாகவும் மும்முறை நீளத்தை மாற்றும் அமைப்புள்ளதும் ஆகும். தற்போது அதன் நடுவில் வெள்ளியால் ஒரு கவசம் செய்து அதன் மீது இது லொஞ்சினுள் ஈட்டி என்று எழுதி வைத்துள்ளார்கள்.

புனித லொஞ்சினுஸ் எங்களுக்காக வேண்டிகொள்ளும்.

அதோ எழுந்து வருகின்றவள் யார் ? -- II


அதோ எழுந்து வருகின்றவள் யார்.?- II

“வந்தான் சந்திரமுகி “. வானில் கண்ட தாயையும் சேயையும் அகஸ்டஸ் சீசருக்கு என்றுமே மறக்க முடியவில்லை. அந்த மாதரசியினுடைய முகம் எத்துனை அழிய தோற்றமுடியது. எத்துனை மாட்சி உடையது. எத்தனை தடவை நினைத்தாலும் திரும்பத்திரும்ப தன் மனக்கண்ணில் அவர்கள் தோன்றிகொண்டே இருந்தார்கள். இந்த உலகில் உள்ள அழகிகள் எத்தனை பேர் இருந்தாலும்
இதுவரை பிறந்தவர் முதல் இனிமேல் பிறக்கப்போகிறவர் வரை அனைவரும் அனிவகுத்து நின்றாலும் இந்த தெய்வப்பெண்ணின் காலடிக்குகூட ஈடாக மாட்டார்கள்.  எவ்விதமான இந்த உலகில் உள்ள எந்த மொழியினாலும் அவள் அழகிய தோற்றத்தை வார்த்தையாலோ உருவத்தினாலோ வர்ணிக்கமுடியாது.அப்படியோரு அழகு இந்தப்பெண் தெய்வதிற்கு.
அவள் அழகுக்கு ஈடாக அவள் ஆண் குழந்தையும் இருந்ததது. இந்த மனித குலத்தின் அழகை எல்லாம் ஒன்றாக சேர்த்து வடித்துவைத்த சிற்பம் போல் இருந்தது அந்தக்குழந்தை.
     அந்தக்குழந்தையோ தன் சின்னன்சிறு கரங்கலை நீட்டி அரசரை வா, வா என்று அழைத்துக்கொண்டே இருந்தது. அரசருக்கு அந்த குழந்தையை அப்படியே அள்ளியெடுத்து கொஞ்சி மகிழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் முடியவில்லை. அந்தப்பெண்ணையும் அவள் குழந்தையையும் சீசரால் மறக்கமுடியவில்லை. மறக்கவும் விரும்பவில்லை.தூக்கம் மறந்தார்.
உணவை மறந்தார். அரசை மறந்தார். மக்களை மறந்தார். மனைவியை மறந்தார். தன்னையே மறக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அந்த தாயும் சேயும் அவரது நினைவில் வந்துகொண்டே இருந்தார்கள்
        ஒருநாள் அரசர் சீசர் பொறுக்க முடியாத ஆசையில் தன் பிரதான மந்திரியை அழைத்து ஒரு வேண்டுகோள் விடுத்தார். “மந்திரி !. அந்தப் பெண்ணும் குழந்தையும் யாரென்று கண்டுபிடி. நான் அவர்களை மீண்டும் காண விரும்புகிறேன். என்றார்”. ” அரசே, வானில் தாங்கள் கண்ட மாயக்காட்சியை வைத்து அவர்களை எப்படிக்கண்டு பிடிப்பது. இருப்பினும் தங்களுடைய ஆவலை அரசகட்டளையாக ஏற்று அவர்களை கண்டுபிடிப்பேன்.
        தாங்கள் சற்றே நித்திரைகொள்ளுங்கள். தாங்கள் உறங்கி பல நாட்கள் ஆகின்றன. தாங்கள் உணவருந்தியும் பல காலம் ஆகிற்று, அதனால் தங்களுடைய உடலும் மெலிந்துவிட்டது. எப்படியும் அந்த மாதரசியைப்பற்றிய செய்தியுடன் உங்களை மறுபடியும் சந்திப்பேன்” என்று கூறிச்சென்றார்.
     அவர் பதிலில் சற்றே திருப்தி அடைந்த அரசர் சீசர் பல நாட்களுக்குப்பின் நன்றாக உண்டு உறங்கினார்.அவரது கனவிலும் அந்த மாதரசியின் உருவமும் அவள் குழந்தையின்  முகமுமே கணவாக வந்தது.
       ஆனால் அது அவரை வருத்தாத கணவாக இருந்தது. அதுவரை அரசருக்கு மட்டுமே பிடித்திருந்த கவலையானது அடுத்து மந்திரிக்கு பிடித்துவிட்டது.
அவர் தன் அவையிலுள்ள கிரேக்க, ரோம,யவன, சோராஸ்டிர, அரபிய, யூத மந்திரவாதிகள் அனைவரையும் அழைத்தான்.சீசர் வானில் கண்ட காட்சிகளை தன்னால் கூடுமானவரை விவரித்து அந்த மாதரசியைப்பற்றிய விபரங்காளை கண்டு அறியும்படி கூறி, அரசருக்கு தகுந்த பதிலை அளிப்பவர்களுக்கு தக்க சன்மானமும் உயர்ந்த பதவிகளையும் பட்டங்களையும் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
     எனவே மேற்கூறப்பட்ட மந்திரவாதிகள் அனைவருக்குள்ளும் பலத்த போட்டி ஏற்பட்டது. இம்முயற்ச்சியில் ஈடுபட்ட பல மந்திரவாதிகள் தங்கள் ,முயர்ச்சி தோல்வியில் முடிவதைக்கண்டு போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்கள்.
  ஆனால் ஒரு சொராஸ்டிர மந்திர வாதிக்கு ஒரு குறிப்பு கிடைத்தது. அவன் தன் மந்திர சக்தியால் இரு பொல்லாத ஆவிகைள் வரவழைத்தான். அவர்கள் நாக்கொன் என்றும் தாக்கொன் என்றும் பேர் பெற்றவர்கள்.
      அவர்களிடம் அந்த மந்திரவாதி மன்னர் சீசர் வானில் கண்ட தாயையும் சேயையும் பற்றி கூறி அவர்களை பற்றிய விபரங்களை மேலும்கூறும்படி கேட்டார்.அந்த பொல்லாத ஆவிகள் பயங்கரமாக அலறியபடியே கூறினார்கள். ” இவர்கள் பற்றி எங்களாள் எந்த பதிலும் கூற முடியாது”. என்று. ” ஏன் முடியாது?”
” எங்களுக்கு உத்தரவு இல்லை.” ” அப்படியானால் யார் இதற்க்கு பதில் கூற முடியும் ” ” எங்களுக்குத்தெரிந்து பேயல் செபூவால் மட்டுமே கூற முடியும். இனி மேலும் எங்களைத்தொந்திரவு செய்யாமல் விட்டுவிடு.
உணக்குப்புண்ணியமாகப் போகட்டும்”என்று அலறியபடியே மேலும் பேசாதபடி தங்கள் வாயை இறுக மூடிக்கொண்டன.” சரி, கடைசியாய் ஒரு கேள்வி. பேயல்சேபூவை யார் அழைக்கமுடியும் என்று சொல்.
உன்னை மேலும் தொந்திரவு செய்யாமல் விட்டுவிடுகிறேன்” என்றான் மந்திரவாதி. பேசாஅமடந்தைகளான அந்த பொல்லாத தீய ஆவிகள் வாய் திறந்து ஒரு யூத மந்திரவாதியின் பெயரைச்சொல்லிவிட்டு மீண்டும் பேசா மடந்தைகள் ஆயின.
    அந்த மந்திரவாதி எப்படியோ தேடிக்கண்டுபிடித்துவிட்டான் அந்த யூத மந்திரவாதியை. அவனிடம் விஷயங்களை கேட்டறிந்த யூத மந்திரவாதி இவ்வாறு கூறினான். ” ஐய்யா, இது சாதாரண விஷயம் அல்ல. இது உங்கள் கற்பனைக்குகூட எட்டாத விஷயம்.   அத்தோடு இது ஆபத்தான விஷயமும் கூட. இது உன்னால் ஆகாது. இதுவரையிலான உன் முயற்ச்சிகளுக்கு இதோ உன் சன்மானம்.நீ விலகிக்கொள். நான் மற்றதை பார்துக்கொள்கிறேன்.
   உன் உதவி எனக்கு எப்பொதாவது தேவைபட்டால் அவசியம் உன்னை தொடர்பு கொள்வேன். இப்பொது என்னை அந்த மந்திரியிடம் அழைத்துச்செல்” என்றான். யூத மந்திரவாதியிடம் அந்த மதி மந்திரி பல விஷயங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். பிறகு அவர் ” விஷயம் எவ்வளவு பயங்கரமானது என நான் அறிகிறேன். இருப்பினும் பரவாயில்லை. இதில் என் உயிர் போனாலும் சரி. உன் உயிர் போனாலும் சரி. நான் மன்னர் சீசருக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். இது அரச கட்டளை. போய் நீ பூஜையை ஆரம்பி. இதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் உன் கதி அதோகதி தான்.
   சீசரைப்பற்றி உனக்கு தெரியும் அல்லவா? அவரை ஏமாற்ற நினைகாதே பிறகு உன் தலை உனக்கு தறிக்காது. எக்சரிக்கை !. உன் சன்மானம் பற்றி உனக்கு கவலை வேண்டாம்.   உனக்கு நான் உறுதி அளிகிறேன். இனி நீ உன் கரியங்களை ஆரம்பிக்கலாம்”. என்றர்..
யூத மந்திரவாதி இவ்வாறு கூறினான்.”மந்திரியாரே, இது எனக்கு தொழில் மேல் ஏற்பட்டுள்ள சவால்.  என் உயிர் மேலும் எனக்கு ஆசை உண்டு, பணத்தின் மீதும் எனக்கு ஆசை உண்டு. ஆனால் பின்விளைவுகளுக்கு நீர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். எங்கள் குலத்தில் பேர் பெற்ற மந்திரவாதியாய் இருந்த மூதாட்டி ஒருவருக்கும் இதே போன்று ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அது எங்கள் எல்லோருக்கும் பெரும் அக்சுறுத்தலாகவும் இருந்தது.
     சவுல் என்னும் இஸ்ரேலிய அரசன் சாமுவேல் என்னும் இற்ந்துபோன தீர்க்கதரிசியை உயிருடன் எழுப்பச்சொன்னார். அதன் பின் விளைவு என்ன தெரியுமா?. உயிருடன் எழுப்பப்பட்ட சாமுவேல் தீர்க்கதரிசி சவுல் மன்னரை சபித்தார்.    அதன் விளைவாக சவுல் மன்னர் போர் களத்தில் உயிர் துறந்தார். இவ்விதமே உங்களுக்கும் நடக்கலாம். ஒன்று நீவிர், அல்லது உம் சீசர் மரிக்கலாம். நான் பின் விளைவுகளைக்கூறி விட்டேன். எனவே எதற்கும் மன்னரை கேட்டு சொல்லுங்கள்.”
    மந்திரிக்கும் நிலைமை ஒருவாறு புறிந்தது. இருப்பினும் பூஜையை ஆரம்பிக்க சொன்னார். யூத மந்திரவாதியும் எழுந்தான். தனக்கு உதவிக்கு அந்த சோராஷ்டிர மந்திரவாதியையும் சேர்த்துக்கொண்டான்.
   ஆரவாரமாக ஆரம்பித்தது பூஜை. பலவிதமான மணி ஓசைகளும்
அழகிய பெண்டிற்களின் அலங்கோலமான நடன அசைவுகளுடனும் ஆடல் பாடல்களுடனும் பலவிதமான மந்திர உச்சாடணங்களுடனும் பார்க்கவே பயங்கரமாக ஆரம்பித்தது அந்த பூஜை.பலவிதமான எண்ணிக்கையில் ஆடுகளும் மாடுகளும் மற்றும் பறவைகளும் பலியாக வெட்டப்பட்டு ஓடிய ரத்தம் ஒரு போர்க்களம் போல காட்சி அளித்தது.நடனமாடிய பெண்கள்
மது மயக்கத்தில் அறை குறை ஆடைகளுடன் காம இச்சையைத் தூண்டும் விதமாக நடனமாடினர்.
   யாகத் தீ பயங்கரமாக தன் தீ நாக்குகளைக்காட்டியது. அதிலிருந்து உச்சகட்டமாக
“ஹே ஹே என்றும் ஹோ ஹோ என்றும் ஒஹ் ஒஹ் என்றும் ஒஹோ ஒஹோ வென்றும் பயங்கர கூச்சள்களுடனும் கோர உருவத்துடனும் எழுந்து வந்தது ஒரு பயங்கர ஆவி.
   அதைக்கண்டவர் பயத்தால் அலறினர். நடனமாடிய நங்கைகள் மூர்ச்சை அடைந்தனர். அங்கு இருக்க பயந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.எங்கும் பயங்கர அமைதி நிலவியது.சற்று நேரத்தில் பயங்கர அலரலுடன் கிளர்ந்தெழுந்த அந்த ஆவி ஒரு முறட்டு உருவமுள்ள பெண்ணாக மாறியது. ஆனல் பேசியது.
      ஆண் குரலில். யூத மந்திரவாதி பேசினான் ” ஆவிகளின் தலைவா, வணக்கம். வந்தது யாரோ? தாங்கள் தானே மஹா பிரபூ” என்றான். அந்த ஆவியும் கூறிற்று. ” ஆம் நான் தான் ” என்றது. ” மஹ பிரபூ, தாங்கள் பெயர் என்னவோ?” என்றான் மந்திரவாதி. அந்த ஆவி ஒரு பயங்கர எக்கால ஒலியுடன் கூறியது ” நான் தான் சந்திரமுகி.” ” தலைவா சந்திரமுகி பெண்பால் அல்லவா? தாங்கள் ஆண் ஆயிற்றே.  மேலும் தாங்கள் ஆவிகளின் தலைவரும் அல்லவா?” அதற்கு சந்திரமுகி கூறினான் ” அடேய் மடையா, ஆவிகள் உலகில் இது தான் நடைமுறை. ஆண்களை அழிக்க பெண் உருவம் எடுப்போம்.
பெண்களை அழிக்க ஆண் உருவம் எடுப்போம். சரி, விஷயத்துக்கு வா. எதற்காக என்னை அழைத்தாய்? தக்க காரணம் இல்லை என்றால் உனக்கு உன் உயிர் தப்பாது.” என்றான்.
          சந்திரமுகி சொன்ன சொன்ன சொர்ணக்கதைகள்
    ” என் எஜமானே, தாங்களை அழைக்க அடியேனுக்கு தகுந்த காரணம் உண்டு”. என்று கூறி மன்னர் அகஸ்ட்டஸ் சீசருக்கு நேடிட்ட காட்சிகளையும் அந்த தாயையும் சேயையும் பற்றிய விபரங்களை பெறுவதற்காகவே தாங்களை அழைத்தேன்”. என்றான். அதற்கு சொர்ணமுகி கூறியதாவது.”என்னை அழைக்க தகுந்த காரணம் நீ கூறியதால் உன்னை மன்னித்தோம்.
     நீ தப்பித்தாய். உனக்கு என் அபயம் உண்டாகட்டும்.என் எதிரியைப்பற்றி என்னிடமே கேட்கிறாய். அவர்களைப்பற்றிய விபரங்களை கூற வேண்டியது காலத்தின் கட்டாயம். மன்னர் சாலமோன் கூறியபடி
    எதர்க்கும் ஒரு காலம் உண்டு. 
இன்பத்திற்கு ஒரு காலம் என்றால் துன்பத்திற்கும் ஒரு காலம் உண்டு. சிரிப்பதற்கு ஒரு காலம் என்றால் அழுவதர்க்கும் ஒரு காலம் உண்டு. இப்பொழுது எங்களுக்கு இது கஷ்ட்ட காலமே. உங்கள் சீசருக்கு மட்டும் என்னவாம். அவருக்கும் இது கஷ்ட்ட காலம் தான்.” என்றது.” சரி.
    இதற்கு மேல் இதைப்பற்றி உன்னிடம் பேச முடியாது. போய் உன் மன்னரை அழைத்து வா ” என்றான் சந்திரமுகி. மந்திரி முதலில் பயந்தாலும் பிறகு சுதாரித்து,” நான் மன்னரின் பிரதான மந்திரி. நீவிர் என்னிடமே பேசலாமே” என்றார். ஆனால் சந்திரமுகி ” அடேய் மடையா !. என்னை யாரென்று நினைத்துக்கொண்டாய்.  நான் ஆவிகளின் அரசன் பேயேல்செபூ. நான் எனக்கு சமமானவர்களிடம் மட்டும் தான் பேசுவேன். இதற்கு முன் கடைசியாய் பேசியது சவுல் மன்னரிடம் தான் புறிகிரதா? போய் மன்னரை அழைத்துவா ” என்றான். மன்னர் சீசரிடம் மந்திரி நிலைமையை விளக்கினார்.
    அவர் கௌரவம் கருதி முதலில் மறுத்தாலும் தான் வின்னில் கண்ட தாயையும் சேயையும் பற்றி அறிய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததை பற்றி பிறகு ஒப்புக்கொண்டார். மீண்டும்  ஒரு நாள் நட்சத்திரம் பார்த்து பூஜையை ஆரம்பித்தார்கள்.
     ஆர்ப்பாட்டமாக எழுந்து வந்தான் சந்திரமுகி. சீசர் அதிசயத்தார். அவர்கள் உரையாடல் பின்வருமாரு அமைந்த்தது. ” சந்திரமுகி,என் பிரச்சனை உனக்குப்புறிகிறதா?. அந்த பேரழகியான தாயையும் சேயையும் நான் மீண்டும் காண விரும்புகிறேன்.உன்னால் அவர்களைக்காட்ட முடியுமா?.”
    ” அக்ஸ்ட்டஸ் சீசர்,நீ என்ன கேட்கிறாய் என்று உனக்குப்புறியவில்லை. அவள் என் குல எதிரி.! அவள் குழந்தை எங்கள் ஜென்ம பகைவன். என்னிடமே வந்து என் எதிரிகளைக்காட்ட சொல்கிறாய். ”
    “என்ன ! அவர்கள் உன் குல சத்ருக்களா?. ஆச்யர்யமாக அல்லவா இருக்கிறது. அவர்களப்பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே !.அவர்களைப்பற்றி நீ மேலும் கூறுவாயாக.”
  அரசே நான் அவர்களைப்பற்றி கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எல்லாம் காலம் செய்யும் கோலம். நீ அவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் எங்களைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.”
” ஆ. உன் சொந்த கதையைப்பற்றியோ சோக கதைப்பற்றியோ நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.முதலில் நீ அவர்களைப்பற்றி கூறு. எனக்கு வேறு வேலை நிறைய இருக்கிரது. உன் கதையைப்பற்றி பிறகு ஒரு நாள் சமயம் கிடைக்கும்போது தெரிந்து கொள்வோம்.”
   ” சீசர், முதலில் உனக்குப் பொருமை வேண்டும்.நீ அரசியல் தெரிந்தவன். முதலில் உனக்கு உன்னைப்பற்றி தெரிய வேண்டும். பிறகு உன் எதிரி யார் என்று தெரிந்திருக்க வேண்டும். 
உனக்கு உன் பலமும் தெரிந்து உன் பலவீனமும் என்ன என்று தெரிந்து பிறகு உன் எதிரியின் பலமும் தெரிந்து பலவீனமும் தெரிந்து அதற்கு தகுந்தாற்போல் வியூகம் அமைத்தால் போர்களத்தில் உனக்கு வெற்றி நிச்சயம்.
உனக்கு உன் பலமும் தெரியாது, பலகீனமும் தெரியாது. உன் எதிரியின் பலமும் தெரியாது, பலகீனமும் தெரியாமல் போர்களம் சென்றால் உனக்கு தோல்வி நிச்சயம். நீ அடி முட்டாள். உன் உயிரும் அல்லாது உன் ராஜியமும் பறி போய்விடும்.அரசியலில் இந்த பால பாடம் கூடவா உனக்கு தெரியாமல் போயிற்று.
   இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கில்லாடிகள். எதிரிகளை எங்கு அடிக்கவேண்டும் எப்பொது அடிக்க வேண்டும் என்பதில் எங்களை அடித்துக்கொள்ள இந்த ஈரேழு உலத்திலும் யாரும் கிடையாது. எனவே முதலில் எங்களை பற்றி தெரிந்து கொண்டால் தான் பிறகு நீ அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும்.”" சரி அப்படியானால் உங்களைப் பற்றி சுருக்கமாக சொல்”
                “ஆரம்பம் ஆனது மண்ணுக்குள்ளே”
     அடுத்த நாள் பூஜையில் ஆடம்பரமாக எழுந்துவந்தான் சந்திரமுகி. அதி காலையிலேயே சீசரும் அளவுக்கதிகமான ஆர்வாகக் கோலாறினால் கதை கேட்க அரசபையிலே தயாறாக  இருந்தார். அரசாங்க வேலையை எல்லம் ஒதுக்கி தள்ளி வைக்கப்பட்டன.அந்த தெய்வத் தாயையும் சேயையும் பற்றி அறிந்துகொள்ள அவருக்கு இருந்த ஆர்வம் சொல்லி மாளாது.
    எனவே நேரத்தை வீணடிக்காது சந்திரமுகி வந்தவுடன் சீசரே ஆரம்பித்துவிட்டார். ” சந்திரமுகி முதலில் அந்த மாதரசியைப்பற்றி ஆரம்பிக்கலாமே” என்றார். சந்திரரமுகி உடனே கடுப்பாகிப்போனான்.” அதற்குள் என்னைய்யா அவசரம். காலையில் ஏன் என் வயிட்றேரிச்சலை கொட்டிகொள்கிரீர். அமைதியாக நிதானமாக கதையைகேளும்.” கன்னி மேரியின் வரலாற்றை தன் வாயாலையே சொல்லவேண்டிய நிலைமை ஆகிவிட்டதை நினைத்து அவனுக்கு அவ்வளவு எறிச்சல்.ஒருவாறு கதையை ஆரம்பித்தான்.
       அரசே, தமிழ் நாட்டில் ஒரு கிரிஸ்துவ பழம் பாடல் உண்டு. அதாவது ” வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லா தாயே,
சந்தோஷமாகப்பாடி உம் தாழ்ப்பணியவே.
பூலோகம் தோன்றும் முன்னே ஓ பூரண தாயே
மேலோனின் உள்ளம் தன்னில் நீர் வீற்றிருந்தாயே”
“சீசர், இந்தப் பாடல் அமரத்துவம் வாய்ந்தது. நீ பார்த்த அந்தப்பெண் இந்த உலகம் அனைத்தும் கடவுள் படைக்குமுன்பே அவர் மனதில் வீற்றிருந்தவள். அவ்வளவு பேறு பெற்றவள் இந்தப்பெண்.இந்தப்பாடலை இயற்றிய புண்ணியவான் யாரோ? அவருக்கு பரம பிதாவின் . அனுக்கிரஹம் இருந்தாலன்றி இந்தக்கருத்துள்ள பாடலை எழுதி இருக்க முடியாது. இனி இந்தப் பெண்ணைப்பற்றி பிறகு சொல்கிறேன். முதலில் கடவுள் எவ்வாறு மனிதனைப் படைத்தார் என்று தெரிந்து கொள்” என்றான் சந்திரமுகி. எல்லோரும் கதை கேட்க ஆயத்தமானார்கள்.
     ” அன்றொரு நாள் பரலோகத்தில் பிதாவாகிய சர்வேசுரன் பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனிடமும் சுதனாகிய சர்வேசுரனிடமும் தான் உலகையும் மனிதனையும் படைக்கவிரும்புவதாகவும், அதுவும் மனிதனை தன் சாயலாக படைக்கப்போவதாகவும் அது பற்றி உங்கள் கருத்து என்ன” என்று கேட்டார். அதற்கு பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன், பிதாவைப்பார்த்து,
    “தேவரீரே சுவாமி,இப்படி ஒரு எண்ணம் தங்களுக்கு வேண்டாம்.ஏனெனில் நாம் படைக்கப்போகும் மனிதன் நன்றி கெட்டவனாகி நம்மை எதிர்ப்பான்” என்று தம் ஞானத்தால் உணர்ந்து கூறினார்.அப்பொழுது சுதனாகிய சர்வேசுரன், “பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா சுவாமி, தேவரீர் அவ்வாறு கூற வேண்டாம். நாம் பிதாவின் திருச்சித்தத்தை நிறைவேற்றுவோம்.  அவ்வாறு மனிதன் நன்றி கெட்டுப்போனால், நாம் சுதனாகிய சர்வேசுரன் மனிதாவதாரம் எடுத்து உலகத்திற்கு சென்று நம் ரத்தத்தினால் அவன் பாவங்களைக்கழுவி அவன் பாவங்களை மன்னித்து அவனை நம் மக்களாக பரம பிதாவிடம் ஒப்புக்கொடுப்போம்.” என்றார். அப்படி சுதனாகிய சர்வேசுரன் மனிதாவதாரம் எடுக்கும் பட்சத்தில் அவருக்கு ஒரு தாய் வேண்டுமல்லவா?
அதற்காக தம் பரிசுத்த தனத்திற்கு ஒரு சிறிதும் பங்கமில்லாமல் ஒரு தாயை அவர் தேர்ந்துகொண்டர்.அந்த பெண்ணை பிதாவாகிய சர்வேசுரன் தம் புத்திரியாக
ஏற்றுக்கொண்டார். பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் அந்த பெண்ணை தன் பத்தினியாக ஏற்றார்.
    இந்த மூவரின் பரிசுத்த கூட்டுறவில் தோன்றியவள் தான் இந்தப்பெண். இன்னும் கூட இந்த உலகமும் படைக்கப்பட்டிருக்கவில்லை, அந்த பரிசுத்த புண்ணியவதியும் படைக்கப்பட்டிருக்கவில்லை.
     அப்போது கடவுளுக்கு 12 விலாச சம்மனசுகளின் சேனை இருந்தது. ஒவ்வொரு விலாசம் என்பது அளவருக்கப்படாத கோடான கோடி எண்ணிக்கையால் ஆனது.அப்பொது எங்கள் 12 விலாச சேனைகளின் தலைவனாக இருந்தவர் பெயர் லூசிபர். அந்தக்காலத்தில் நாங்கள் எங்கள் அழகைப்பற்றியும் வலிமைபற்றியும் திறமைபற்றியும் மேன்மைபற்றியும் வசதிவாய்ப்புகள் பற்றியும் மிகுந்த கர்வம் கொண்டிருந்தோம்.
   ஒரு நாள் கடவுள் எங்களை அழைத்து அவரது மனித உலக படைப்பின் திட்டத்தை பற்றி அறிவித்தார்.அவளவு தான், லூசிபரும் அவனுடன் 3 விலாச சம்மனசுகளும் ” அவர் கடவுளே ஆயினும் அவர் மனிதாவதாரம் எடுத்தால் அவரும் சரீரமுள்ள நரனே ஆவார். அப்படியிருக்க அவர் எங்களிலும் தாழ்ந்த நிலைக்குப்போகும் பட்சத்தில் நாங்கள் எப்படி அவரை கடவுளாக ஆராதிக்க முடியும் ? ஏன் ஆராதிக்க வேண்டும்? ” என்று திமிர்த்தனமாய் நினைத்தது தான் தாமதம்.எங்கள் என்னங்களை புறிந்துகொண்ட எல்லாம் வல்ல கடவுள் எங்களை உடனே சபித்துவிட்டார்.
     எங்கள் அழைகையும் வலிமைகளையும் பதவி பட்டங்களையும் உடனே பறித்துவிட்டார். எங்களுக்கு பேய்கள் என்றும் சாத்தான்கள் என்றும் பெயர் வந்தது. கண்டவர் யாவரும் அருவருத்து பயந்து ஓடும் அவலட்சனமான விகார உருவங்கள் எங்களுக்கு ஏற்பட்டது. கடவுள் நீதமுள்ள 9 விலாச சம்மனசுகளின் சேனைக்கும் தலைவனாக மிக்கேல் என்னும் அதிதூதரை நியமித்தார்.
    எங்களிலும் சிலர் மித வாதிகளாகவும் பலர் தீவிரவாதிகளாகவும் இன்னும் சிலர் அதி தீவிரவாதிகளாகவும் இருந்தனர். தீவிரவாதிகளையும் அதி தீவிரவாதிகளையும் உடனே நரகத்தின் அடி ஆழத்தில் போட்டு புதைத்து வைத்து எக்காரணத்தையும் முன்னிட்டு வெளியே வரக்கூடாதென கடுமையான கட்டளை கொடுத்தார்.லூசிபரையும் அவன் தலபதிகளையும் நரகத்தின் அடி ஆழத்தில் போட்டு புதைத்து வைத்துள்ளார்.
     எங்களைப்போன்ற சாதாரணமான சாத்தான்கள் உடனே ஆண்டவர் பாதத்தில் விழுந்து கதறி அழுது எங்களை மன்னிக்கும்படி வேண்டினோம்.எங்கள் மேல் இரக்கம் கோண்ட ஆண்டவர் எங்களுக்கு நரக தண்டனை கொடுத்திருந்தாலும் உலகம் படைக்கப்பட்டு மீண்டும் முடியும் வரை இந்த உலகிலேயே கெட்ட ஆவிகளாய் சுற்றிதிரிய அனுமதித்தார்.
    பிறகு ஆண்டவராகிய கடவுள் எங்களிடம் கூறியதாவது.” நாம் படைக்கும் மனிதன் நமது சாயலாகப்படைக்கப்படுவதாலும், நமது மூச்சுக்காற்றால் படைக்கப்படுவதாலும் அவன் நம் மகன் எனப்படுவான்.அவனை சோதிக்க வேண்டியது உம்முடைய பொறுப்பு.அவனை தொடவோ சாகடிக்கவோ உங்களுக்கு உரிமை கிடையாது.” என்றார். ” என்றோம்.
    அப்படியானால் எங்கள் பழைய வல்லமையை கொடுங்கள்.நாங்கள் செய்யும் மாயா ஜாலங்களால் அவனை மயக்கி அவனை எங்கள் வசம் ஈற்போம்”என்றோம். கடவுள் தம் மக்கள் எனப்படும் மனிதர் மேல் நம்பிக்கை வைத்து எங்கள் சவாலை யேற்றுக்கொண்டு எங்களுக்கு பழைய வல்லமைகளை கொடுதார். அன்றிலிருந்து ஆரம்பாயிற்று எங்கள் ஆட்டமும் அரசாங்கமும்.இனிமேல் உலகத்திலெங்கும் எப்பொதும் எங்கள் ஆட்சி தான்.
    அவர் படைக்கப்போகும் மனிதர்களை கெடுத்து குட்டிசுவராக்கி அவனை
நரகத்தில் சேர்ப்பதுதான் எங்கள் வேலையே !.அரசர் சீசரும் மந்திரிபிரதானிகளும் இந்த கதைகளைக்கேட்டு கொண்டு வந்தார்கள்.பிறகு என்ன நடந்தது என்றார் அரசர்.
    ஆண்டவர் பிற்பாடு வானம், பூமி,சூரியன் சந்திரன் விண்மீன்கள் கோள்கள் போன்ற யாவற்றையும் படைத்து இந்த பூமி மற்றும் பிற உயிர்கள் யாவும் வசிக்க தகுந்ததாக தகுந்த  ஏற்பாடுகள் எல்லாம் செய்தபிறகு மனிதனை படைக்க ஆரம்பித்தார்.நாங்களும் கடவுள் இந்த உலகில் எவ்வாறு மனிதனை படைக்கப் பொகின்றார் என்று பார்க்க ஆவல் கொண்டு அவர் அருகில் சென்று பார்த்தோம்.
     இங்கு நாங்கள் ஒரு விஷயத்தை சொல்ல மறந்து போனோம். எந்த வினாடியில் நாங்கள் சபிக்கப்பட்டோமோ அந்த விநாடி முதல் கடவுளின்
திருமுக தரிசனத்தை பார்க்கும் பாக்கியத்தை சுத்தமாக இழந்து போனோம்.அவரது பிரசன்னத்தை மட்டுமே அறிய முடியும் ஆனால் அவரது திருமுகத்தை எங்களால் பார்க்கவே  முடியது.இந்த விழயத்தில் மனிதர்கள் பாக்யவான்கள்.
    இந்த பூமியில் ஏதேன் தோட்டத்தில் அப்போது பரலோகம் இறங்கியிருந்தது. கடவுள் இந்த ஏதேன் தோாட்டதில் ஒரு கடினமான பாறையை தொடவே அது இளகி களி மண் போல் ஆனது. அவர் அதை பிசைந்து மனித உருவம் கொடுத்து தம் மூச்சுக்காற்றை அவன் நாசியில் ஊதி அவனை உயிர்ப்பித்தார். ஆண்டவர் ஆதாமைப்படைத்துவிட்டார். இந்த பூமியில் மனித இனம் தோன்றிவிட்டது.அவன் மனித ஜென்மம் ஆயினும் கடவுலின் மகன் என்னும் பேறு பெற்றதால் அவன் ஒளி வீசினான்.
   அவன் முகம் ஜொலித்தது. அவன் கண்கள் ஒளியால் மின்னின. ஒளி வெள்ளம் அவன் வாய்க்குள்ளும் பற்களினூடும் புகுந்து வெளி வந்தன. அவன் கடவுளைப்பார்த்து மிகவும் பிரம்மித்தான்.
    ஒரு மகன் தன் தந்தையுடன் அன்பு கூர்வதுபோல் அவன் ஆண்டவரின் மேல் சாய்ந்தான்.ஆண்டவரும் தன் செல்லப்பில்லையை அழைத்துக்கொண்டு கடல்கலையும் ஆறுகளையும் ஏறிகளையும் மலைகலையும் சுற்றிக்காண்பித்தார். அடடா…!… இந்த உலகம் பாவமே இல்லாத போது எத்தனை அழகாக இருந்தது தெரியுமா?. இன்றைய உலகில் இன்று மிக மிக அழகான சொர்கத்துக்கு இணையான என்று சொல்லும்படியான இடம் கூட அவர் படைத்த அன்றைய நாட்களில் மிக சாதாரணமாகத்தான் இருந்தது.கடவுலுடைய படைப்பில் அவர் எல்லாம்மே நல்லதென்று கண்டார்.
    அத்தகைய நீல நிற கடல்கலையும் பச்சை நிற புல்வெளிகளையும் மலைகளையும் மரங்களையும் செடி கொடிகளையும் இன்றைய மனித தன் கற்பனையில் கூட காண முடியாது. அவை எல்லாம்மே பரிசுத்தமாய் ஒளிர்ந்தன. ஆண்டவராகிய கடவுள் தான் படைத்த எல்லா படைப்புகளையும் அவனுக்கு காண்பித்து வர அவன் அவைகளுக்கு தன் புத்திக்கு ஏற்றபடி
பெயர் வைத்து அழைதான்.
     எல்லா ஜீவராசிகளும் ஆதாமுக்கு நண்பர்கள் ஆயின. இன்றைய கொடிய விலங்குகள் கூட அன்றைக்கு புல் பூண்டுகள் உண்டு வாழ்ந்து நட்பு பாராட்டின.
பகை என்ற வார்தைக்கு அப்போது பொருள் கிடையாது.இருப்பினும் ஆதாமுக்கு ஏதோ குறை அவன் முகத்தில் தோன்றியது.
  எல்லாம் சரிதான். எல்லாம் நன்றாகத்தன் இருக்கிறது. ஆனால் யாரும் என் போல் இல்லையே, அது தானே கஷ்டமாக இருக்கிறது என்று மனதில் ஏங்கினான்.இந்த ஏக்கம் மனிதருக்குமட்டும் அன்று. உலகில் உள்ள எல்ல உயிரினங்களுக்கும் ஏற்ற துணை வேண்டும்.
  கடவுளுக்கு இது தெரியாதா என்ன?. எனவே அவர் ஆதாமின் ஏக்கத்தை புறிந்து கொண்டார். அவனுக்கு ஆழந்த் தூக்கம் வரச்செய்து அவன் வலப்பக்க விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து அதனால் ஏற்பட்ட குழியை சதையால் மூடினார்.
            “வந்தாளே மகராசி.”
    நாங்களும் கடவுளின் அருகில் சென்று அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தோம்.அவரது உள்ளங்கையில் ஒரு சிறிய கைக்கு அடக்கமான அளவில் ஆதாமின் விலா எலும்பு காணப்பட்டது. ஆண்டவராகிய கடவுள் தம் உள்ளங்கை அளவே உள்ள ஆதாமின் விலா எலும்பை அதே அளவுள்ள ஒரு பெண்ணாக படைத்துவிட்டார். பிறகு அந்தப்பெண்ணை தரையில் வைத்தார்.
  நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த சிறிய பெண் சட சட வெண்று வளர்ந்து ஆதாம் அளவுள்ள பெண்ணாக வளர்ந்து விட்டாள். ஆண்டவர் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு வந்து ஆதாமிடம் கொடுதார்.
      இந்த இடத்தில் சந்திரமுகி கதையை சற்று நேரம் நிறுத்தினான். அரசரும் மந்திரிப்பிரதானிகளும் ஒருவரை ஒருவர் அர்த்த புஷ்டியுடன் பார்த்துக்கொண்டனர். அரசர் கேட்டார், ” ச்ந்திரமுகி, பெண் என்றால் தான் கதையே ஸ்வாரஸ்யம் அடைகிறது இல்லையா? மேலும் ஆணும் பெண்ணும் நிர்வாணமாக என்றால் கதையே சூடு பறக்கும் இல்லையா?” என்றர்.
      உடனே மந்திரி ” சந்திரமுகி, எனக்கொரு சந்தேகம். கடவுள் ஆதாமையும் ஏவாலையும் நிர்வாணமாகத்தானே படைத்தார். அவர்களுக்கு தொப்புல் இருந்ததா?” என்றார். சீசர் சற்றே நகைத்துக்கொண்டார். சந்திரமுகிக்கும் நகைப்பு வந்தது. ” உங்கள் புத்தியும் நோக்கமும் எனக்கு நன்றாகவே புரிகிறது. உங்களுக்கு கதை கேட்க்கும்போதே சல்லாப உண்ர்ச்சி ஏற்படுகிறது என்றால் நேரில் பார்த்த எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று தானே நீங்கள் நினைக்கிறிர்கள் ?
      இங்கு நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாதிரியான சமாச்சாரங்கள் எல்லாம் உலகத்தில் வாழும் சரீரம் உள்ள மனிதன் மற்றும் சகலவிதமான ஜீவராசிகளுக்கு மட்டுமே.
  ஆண் மற்றும் பெண் இனக்கவர்ச்சி தேவையான ஒன்று. ஆண்டவன் இந்த உலகில் எல்லா படைப்புகளிலும் ஆண் பெண் என பேதங்களை வைத்திருப்பதாலேதான் அதன் அதன் வாரிசுகள் தோன்றுகின்றன.
இது ஆண்டவன் கட்டளையாகும் இந்த உலகம் முடியும் வரை இது தொடர வேண்டும். ஆணோ பெண்ணோ உடல்வுறவுக்கு தகுதி இல்லமல் போனால் அந்த பிறவி வீண். ஆனால் எங்களைப்போன்ற ஆவிகளுக்கும் சரி, சம்மனசுகளுக்கும்சரி.  சரீரம் இல்லாததினால் எங்களுக்குள் இனக்கவர்ச்சி கிடையாது. இவர்களைப்பொருத்தவரையில் இது தேவையும் அல்ல. ஆவிகளும் சம்மனசுகளும் ஒவ்வொன்றும் தனித்தனி படைப்புகளே. பரலோக ராஜ்ஜியத்தில் இனவிருத்தி இல்லை. எல்லாம் இந்த பூலோகத்தோடு சரி. பரலோகத்தில் அனைத்தும் ஆண்டவருடைய ஐக்கியத்தில் உள்ளதால் ஆண்டவரைத்தவிர வேறு சிந்தனையே இருக்காது.
எனவே ஆவிகளாகிய எங்களுக்கு இந்த ..ஊ..லலல்லலா… போன்ற சமச்சாரங்களும் கிடையாது. ஐ லவ் யூ சொன்னாலே பாடல்களும் கிடையாது.”.என்றான் சந்திரமுகி. அப்பொது தளபதி கேட்டார், ” அப்படியானால் அந்த தொப்புல் சமாசரம்?” சந்திரமுகி நகைத்து கூறினான் ,” அடே மடையா, தாய் வயிறினின்று பிறக்கும் உயிர்களுக்குதான் தொப்புல் இருக்கும்.”
   சற்று நேரம் நகைப்பினூடே சென்றது. அரசரும் ஆர்வம் தாங்க மாட்டாதவறாய்,” பிறகு என்ன நடந்தது?” அப்போது ஆதாம் அவன் குகையினின்று வெளியே வந்தான். ஏவாளைப் பார்த்தான். இவள் தன் விலாவிலிருந்து எடுக்கப்பட்டவள் என்று உணர்ந்து அவளுக்கு ஏவாள் என்று பெயர் இட்டான். அப்போது கூட ஆதாம் அவளை தொடவே இல்லை.
    அந்த பரலோக மாட்சியுடன் ஆண்டவருடன் சேர்ந்துகொண்டு ஒரே ஒளிப்பிரவாகமாகவே அவர்கள் தோன்றினர். அந்த ஏதேன் தோட்டம் அப்போது பரலோகமாகவே இருந்தது..
               “ஞானப் பழம்”
   கடவுள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தம்முடைய பரலோக மட்சிமையை எல்லாம் சுற்றி காண்பித்து வந்தார். அங்கு ஒரு அழகிய நீரோடை வந்தது. அத்னூடே அவர்கள் செல்லும் போது அது அழகிய பூங்காவுக்கு இட்டுசென்றது.
அங்கு அவர்கள் ஒரு வினோத மரத்தை பார்த்தார்கள். அதன் பழங்கள் மிகவும் வித்யாசமாக இருந்தன. ஒன்றை சுற்றி நான்கு என்ற வகையில் பழங்கள் கொத்துகொத்தாய் இருந்தன. ஏறக்குறைய அவைகள் ஆப்பில் பழம் போன்றும்,அல்லது சற்றே முந்திரி பழம் போன்றும் அடுக்கு அடுக்காயும் கொத்து கொத்தாகவும் தோன்றின.
      மேலும் அவைகள் அழகுள்ளதாகவும் சுவைத்துப் பார்க்கத்தோண்றும் ஆவலை தூண்டுவதாகவும் இருந்தன. ஒவ்வொரு பழமும் அத்திப்பழம் போன்று சதைபற்று மிகுந்ததவும் செவ்வரி ஒடிய கோடுகள் மேலிருந்து கீழாய் ஓடி ஒரே சென்னிரமாய் காட்சி அளித்தன. அம்மரத்தின் இலைகள் சின்னன்சிறியதாய் அடுக்கடுக்காய் நிறைந்து இருந்தன.அவைகள் காண்போரை கண் சிமிட்டி அழைப்பது போல் இர்ருந்தன.
     ஒவ்வொரு இலையும் பிரகாசமாய் மின்னிக்கொண்டிருந்தன. நடுமரம் ஏறக்குறைய பேரீட்சம் பழ மரப் பட்டைகள் போலவும் தூரத்திலிருந்து பார்க்கும்போது மரத்தின் பரந்து விரிந்திருந்த மேற் பகுதியும் குறுகி இருந்த அடிப்பகுதியும் சேர்த்து ஒரு பிரமிடை தலை கீழாய் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
    ஆண்டவர் அவர்களை அழைத்து,” இதோ பாருங்கள், இந்த மரம் நன்மை தீமை அறிவிக்கும் ஞானப்பழ மரம். நீங்கள் இந்த ஏதேன் தோட்டத்தில் எந்த மரத்தின் பழத்தையும் உண்ணலாம். ஆனால் இந்த ஞானப்பழத்தை மட்டும் உண்ணக்கூடாது.  மீறி உண்டால் நீங்கள் சாகவே சாவீர்கள்” என்றார். பிறகு ஆண்டவர் அவர்களை வேறு இடங்களுக்கு அழைத்துக்கொண்டு போனார். பிறகு ஆதாமையும் ஏவாளையும் தனியே விட்டுசென்றார். போகும் முன் எங்களை நோக்கி நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அர்த்த புஷ்டியான சைகை மூலம் தெரிவித்தார். இவ்வளவு போதாதா எங்களுக்கு. ஆண்டவராகிய கடவுள் அவர்களை சோதிக்க அனுமதித்துவிட்டார் என்று நாங்கள் புரிந்துகொண்டோம்.
” விபரீத விளையாட்டு.”
      இனிமேல் நாங்கள் எங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான். பாம்பாக மாறி எங்கள் தலைவன் வந்தான். அப்போது பாம்பு எப்படி இருந்தது தெரியுமா? இப்போது நாம் காணும் பாம்பின் உருவம் இருந்தாலும் வாலுக்கு அருகில் பல்லிக்கு இருப்பது போல் இரண்டு கால்கள் இருந்தன.
    இந்தப்பாம்பு ஆதாமுக்கு எவ்வளவு நெருங்கி வந்தாலும் அவனை மசிய வைக்க முடியவில்லை. ஏனெனில் அவனது மனது சதா ஆண்டவரையே நினைத்துக் கொண்டிருந்தது. அவன் மனது ஆண்டவரை எப்பொதும் நினைத்துக்கொண்டிருந்ததாலும் அவன் ஆண்டவரின் மூச்சிக்காற்றினால் நேரிடையாகப் படைக்கப்பட்டிருந்ததாலும் இனிமேல் இவனை சுற்றி பயன் இல்லை என்று பாம்பு அவனை விட்டுவிட்டு ஏவாளை சுற்றி வர ஆரம்பித்தது.
    ஏவாள் ஆதாமின் சரீரத்திலிருந்து படைக்கப்பட்டவள் ஆகையால் இவள் சரீர இச்சைக்கு ஆட்ப்படக்கூடியவள் என்று எண்ணி அவளையே சுற்றி சுற்றி வந்தது.
     அவளும் இந்த வினோதமான பிராணியாக இருந்த பாம்பைப்பார்த்து அதனுடன் பழகினாள். பாம்பு அவளை தனியே அந்த ஞானப்பழ மரத்தடிக்கு அழைத்து சென்றது.
    ” ஏவாள் இந்தப் பழம் எவ்வளவு இனிமையனது தெரியுமா? சாப்பிட்டுதான் பாரேன்.” என்றான். அதற்க்கு அவள் ” எனக்கும் தான் ஆசை . ஆனால் கடவுள் தான் அதை உண்ண கூடாது என்று கட்டளை இட்டுள்ளாரே” என்றாள் அவள். பாம்பு நகைத்தது.
   “அட மடப் பெண்ணே, அவர் ஏன் ஆப்படி கூறினார் தெரியுமா? நீ இதைத்தின்றால் நீங்களும் கடவுள் போல் ஆகி அவருக்குப் போட்டியாய் வந்து விடக்கூடாது அல்லவா? அதற்காகத்தான்.” என்றது பாம்பு. “அப்படியானால் நாமும் கடவுள் ஆகிவிடலாமா? அதைத்தின்றால் நாங்கள் சாகவே சாவோம் என்றல்லவா கடவுள் கூறி உள்ளார்” என்றாள் அவள்.
     ” அடிப்பெண்ணே , சாவதென்றால் என்னவென்று உனக்குத்தெரியுமா? அது என்ன ஒரு இனிமையான அனுபவம் தெரியுமா?” என்றது பாம்பு நயவஞ்சகமாக. ” அப்படியா சொல்கிறாய்.  அப்படியானால் அதை தின்று பார்த்துவிட வேண்டியதுதான்.” என்று ஆதாமை அழைத்து பாம்பு தனக்கு கூறிய எல்லாவற்றையும் கூறினாள். அவனோ ” அடிப்பெண்ணே,நமக்கு கடவுள் கொடுத்த கட்டளையை தவிற வேறு வார்த்தை கிடையாது.
  சாவு என்றால் என்னவென்று உனக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது.ஆகவே நமக்கு வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு” என்றான் ஆதாம். ” போங்க அன்பே, உங்களுக்கு ஒன்றுமே தெரியாது.சொன்னாலும் புரியாது.
      உங்களுக்கு என் மேல் அன்பே கிடையாது” என்று அவன் கழுத்தை கட்டிகொண்டள். அந்த ஸ்பரிசம் கூட ஆதாமை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் விடாப்பிடியாக மிகவும் பிடிவாதமாக இச்சைக்கு ஆட்பட்டு அப்பழத்தை உண்ண கையை நீட்டி பழத்தைப்பறிக்க எத்தனித்தாள். அதற்கு தோதாக பாம்பும் சரசர என்று மரத்தின் மீது ஏறி அந்த பழமுள்ள கிளையை அவள் கைக்கு எட்டும்படி செய்தது.
” வினாசகாலே விபரீத புத்தி.”
    அதாவது மனிதனுக்கு கெட்ட காலம் என்னும் நேரம் வரும்பொழுது அவனது புத்தியும் அதற்குத்தகுந்தாற் போல் விபரீதமாக வேலை செய்கிறது.விதி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.அவள் ஞானப்பழத்தை பறித்தாள்…. அவளும் உண்டாள்….. ஆதாமையும் உண்ண வைத்தாள்….. அவனும் உண்டான்….. அவ்வளவு தான்….வந்தது வினை….. விளைந்தது விபரீதம்…. வானம் கிடுகிடித்தது…
பூமி அதிர்ந்தது…. உலகை இருள் கவ்விற்று…. ஆதாமும் ஏவாளும் தங்கள் உணர்வில் உடலில் ஏதேதோ மாற்றங்களை உண்ர்ந்தார்கள் .தாங்கள் ஒவ்வொருவரையும் ஒரு மெல்லிய போர்வை போல் மூடி இருந்த ஒளி வெள்ளம் விலகிச்செல்வதையும் சில்லென்ற காற்றும் குளிர் காற்றாய் வீசுவதாகவும் உணர்ந்த்தார்கள்.
    எப்போதும் இல்லாத குளிர் இப்போது ஏன் வீசுகிறது? “ஆ ஆ இதோ என் சரீரம் என் கண்களுக்கு தெரிகிறது.அதோ என் ஏவாள். அவள் ஏன் சட்றும் வெட்க்கமில்லமல் முழு நிர்வாணமாக நிற்கிறாள்.என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லையே .!. ஐய்யோ …ஆண்டவா எனக்கும் என் மனைவிக்கும் என்னவாயிற்று…… நாங்கள் நிர்வாணிகள்…. அடக்கடவுளே நாங்கள் மோசம் போய்விட்டோம்.  இத்தனைக்காலமும் இல்லாத வெட்க்க உணர்வு இப்போது எப்படி வந்தது. ஆஆ…. நாங்கள் பரிசுத்தத்தை இழந்துவிட்டோம்.பாவம் செய்துவிட்டோம் ஆண்டவன் கட்டளையை மீறி விட்டோம். இதோ இத்தனை காலமாய் எத்தனை அன்பாய் பழகிய சிங்கம் புலி கரடி யாவும் பயங்கரமாய் முறைக்கிண்றனவே, சீறுகின்றனவே ஐயகோ நான் என்ன செய்வேன்,
    எல்லாம் அந்தப் பாம்பால் வந்த வினை. அடிப்பாவி…. சண்டாளி…. அந்த பழத்தை தின்ன வேண்டாம் என்று சொன்னேனே கேட்டாயா?அட என் பேச்சைத்தான் கேட்க்கவில்லை, கடவுள் கட்டளையை மீற எப்படி உனக்கு தைரியம் வந்தது? ஆஹா … நான் எப்பேற்பட்ட நிர்மூடன்.வருங்கால சந்ததிகள் என்னை கேவலமாகப் பேசுவார்களே” என்று ஓலமிட்டு அழுதான்.என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது. எல்லாம் முடிந்து விட்டது. பழம் தின்ன பாவம் அவர்களை இனி சும்மா விடாது.
” பயங்கரம் இனிமேல்”
” ஆதாம் என் அன்பே, என் மீது கோபம் வேண்டாம். அந்தப் பாம்பின் பேச்சைக்கேட்டு ஏமாந்து போனேன். என்னை மன்னித்துவிடு.” என்று ஓ….வென்று பெரும் குரலெடுத்து அழுதாள்…அழுதாள்…. அழுதுகொண்டே யிருந்தாள். பின்பு அவள், ” ஆதாம் என் அன்பே, என்னை மன்னிக்க மாட்டாயா, இந்த உலகில் நீயும் நானும் தானே இருக்கின்றோம், எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். எனக்கு ஒரே பயமாய் இருக்கிறது.” என்றுதன் கணவன் ஆதாமை கட்டிபிடித்துக்கொண்டு அழுதாள்.
    ஆதாமுக்கு வந்ததே கோபம் . அது ஆத்திரமாக வெடித்தது. “ஆஆ, ஐய்யோ, அடிப்பாவி சண்டாளி, உன்னால் எல்லாம் இழந்தேன், அந்த சாத்தான் தானே உன்னை ஏமாறினான், அந்த சாதானையே போய் கட்டிக்கொண்டு அழு, என் முகத்திலேயே விழிக்கதே போ” என்று அவளை தள்ளி விட்டான்.
     அவள் பெரும் குரளெடுத்து அழுது புலம்பினாள். பெண் புத்தி பின் புத்தி ஆயிற்று. இத்தனையும் பார்த்துக்கொண்டிருந்த சாத்தான் யேதுமே அறியாத அப்பாவி போல் நின்றுகொடிருந்தான்.
     அதைப்பார்த்த ஏவாள் அவனை பொறிந்துதள்ளி விட்டாள். ” ஏன் ஐய்யா சாத்தானே, நாங்கள் உனக்கு என்னையா பாவம் செய்தோம்? எங்களை இப்படி நீ ஏமாற்றலாமா? இது நியாயமா? “என்றாள். கட கட என்று சிரித்தான் லூசிபேர்.பயங்கர தோற்றமுள்ள அரக்கனாய் உரு மாறினான்.
    ஆதாமும் ஏவாளும் அலறினார்கள்.” பெண்ணே என்னைக்கண்டு பயமா? இதோ பார் … நன்றாகபார். ஒரு காலத்தில் என் அழகென்ன? அறிவென்னா ? ஆற்றலென்ன?நான் வாழ்ந்த வாழ்க்கை என்ன? ஐய்யோ … இன்று என் நிலையை பர்த்தாயா ?.. எல்லாம் போயிற்று. எல்லாம் போயிற்று.
    எங்கள் இன்ப வாழ்க்கை போயிற்று. எங்கள் சொர்க்கம் போயிற்று…இப்போது பார்…எங்கள் வாழ்க்கையே நரகமாயிற்று. எங்கள் உலகமும் நரகமாயிற்று…இதற்க்கெல்லாம் யார் காரணம்? யாரால் வந்த வினை? எல்லாம் உங்களால் வந்த வினை. நீ…. நீங்கள் காரணம். இந்த மனித ஜென்மங்கள் காரணம். ஆண்டாண்டு காலமாய் கோடானுகோடி காலமாய் யுகம் யுகமாய் கடவுளோடு நாங்கள் சகல சௌபாக்கியங்களையும் அனுபவித்து வந்த எங்களுக்கு இன்றைய நிலை என்ன என்று தெரியுமா உங்களுக்கு?.அவலட்சணம், அருவருப்பு, அசிங்கம், அசூசி, இத்யாதி ..முடிவில்லாத நெருப்பு.
   அதற்க்குப்பழி வாங்கத்தான் உங்களை கடவுளிடமிருந்து பிரித்து உங்கள் பிறவியை சேர்ந்த யாவரையும் எங்கள் இடத்திற்கு கூட்டிசெல்லத்தான் இதனை நாடகமும் நடத்தினேன். இப்போது புரிகிறதா நான் யாரென்று?” என்று வெறிக்கூச்சல் போட்டு சிரித்தான் லூசிபெர். மீண்டும் “இந்த உலகதில் நாங்கள் யாவரையும் நிம்மதியாய் இருக்க விடப்போவதிலை.
   அதற்காக நாங்கள் எல்லா மாய வித்தைகளையும் செய்வோம்.எங்கள் பேச்சை நம்பும் எவரும் உருப்படவே முடியாது.அந்தக்கடவுள் மட்டும் இந்த வுலகத்திற்கு மனிதாவதாரம் எடுத்து வரட்டும். அப்போது வைத்துக்கொள்கிறேன் என் கட்சேரியை.”. என்றான்.
    மீண்டும் லூசிபேர் பாம்பாக மாறினான் .” ஐய்யோ அத்தான், எனக்கு பயமாக இருக்கிறது” என்று ஆதாமின் மார்பின் மீது சாய்ந்து மயக்கமுற்றாள்.அதற்கு லூசிபேர் ” ஆஹா பெண்ணே அதற்குள் பயந்தால் எப்படி? பயங்கரம் இனிமேல்தானே இருக்கிறது” என்றான்.
” படைத்தவனே எடுத்துக்கொண்டாண்டி மானே வளர்த்தவனே பறித்துக்கொண்டாண்டி”
இதற்குள் மாலை ஆயிற்று.அந்தி சாயும் நேரத்தில் ஆண்டவராகிய கடவுள் ஏதேன் தோட்டத்திற்குள் வந்து, ” ஆதாம்… ஆதாம்” எனறு அழைத்தார்…
   எப்போதும் தகப்பனைகண்ட மகன் போல் துள்ளி வரும் ஆதாம் பதிலே பேசவில்லை. ” ஆதாம் என் முன்னே வா” என்றார் ஆண்டவர்.
அதற்க்கு ஆதாம் ” ஆண்டவரே, எனக்கு.பயமாய் இருக்கிறது”…என்றான்.
” ஏன் ?”
” நாங்கள் நிர்வாணிகளாய் இருக்கின்றோம். எங்களுக்கு வெட்க்கமாய் இருக்கிறது”,
” நீங்கள் நிர்வாணிகளாய் இருப்பதாக உங்களுக்கு சொன்னது யார்”?
“ஆண்டவரே, நாங்கள் பாவம் செய்தோம்.”
” ஆ ஹா…நாம் உங்களுக்கு விலக்கியிருந்த ஞானப்பழத்தை உண்டீர்களா?”
” ஆம் “
” ஏன் உண்டாய்”
” ஆண்டவரே, தேவரீர் எனக்கு மனைவியாய் கொடுத்த ஏவாள் என்னை ஏமாற்றி கொடுத்துவிட்டாள். நானும் உண்டு விட்டேன்.”
” ஏவாளே .. நீ ஏன் இவ்வாறு செய்தாய்?”
” ஆண்டவரே. அந்த நயவஞ்சகப் பாம்பு என்னை நன்றாக ஏமாற்றி விட்டது”.
    பிறகு அந்த பயங்கரம் ஏற்ப்பட்டது. ஆண்டவராகிய கடவுள் ,” நாம் செய்யாதே என்று கட்டளையாக கொடுத்ததை நீங்கள் செய்தீர்கள். ஆகவே நீங்கள் எமக்கு கீழ்ப்படியாமை என்னும் பாவம் செய்தீர்கள்.எனவே கீழ்படியாமை என்னும் பாவமே உலகில் தோன்றும் எல்லா பாவங்களுக்கும் ஆதார பாவமாய் இருக்கும்.” அவர் மேலும் கூரினார் .
     ” ஆதாமே, நீ நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைத்து உன் மனைவி மக்களைக் காக்கக்கடவாய்”என்றும் ஏவாளை நோக்கி” நீ பிள்ளை பெறும்போது நாம் உன்னை கைவிட்டுவிடுவோம். நீ வேதனையோடு பிள்ளை பெறுவாய்” என்றார்.
   பிறகு பாம்பைப்பார்த்து “ஆ பொல்லாத பாம்பே, இதற்க்கெல்லாம் காரணம் நீ !. .எனவே மனிதர் முதல் மிருகம் வரை எல்லவற்றாலும் நீ வெறுக்கப்படுவாய்.நீ உன் வாள் நாள் முழுவதும் உன் வயிற்ராலேயே ஊர்ந்து செல்வாய்.” என்றார்.மேலும் அவர்” ஆதாம் ஏவாள் நீங்கள் நாம் உங்களுக்கு கொடுத்த கட்டளையை மீறி நமக்கு எதிராகபாவம் செய்ததால் நீங்கள் இந்த மன்னிலையே வாழ்ந்து மடியுங்கள். மன்னிலிருந்து வந்த நீங்கள் மன்னுக்கே திரும்பி செல்வீர்கள்.  நோவும் சாவும் உங்களை ஆட்சி செய்யும்.” என்றார். செய்த தவறுக்கு ஆண்டவரின் நீதி அவர்கள் மேல் பயங்கரமாக இறங்கியது, ஆண்டவர் மிகுந்த கோபமுற்று,ஆதாமையும் ஏவாளையும் சொர்கபுரியிலிருந்து உடனே வெளியேற உத்திரவிட்டார்.
      அவ்வளவு தான் !…நெருப்பு ஜுவாலையுடன்கூடிய பட்டயத்தால் ஒரு சம்மனசுஅவர்களை ஓட ஓட விரட்டியது. பரலோகம் ஏதேன் தோட்டத்தை விட்டு மேலே கிளம்பியது.ஆதாம் எதை எதையோ பிடித்துக்கொண்டு தன்னை சொர்கத்திலேயே நிலை நிறுத்திக்கொள்ளப் பார்த்தான்.ஆனால் அவன் கையில் பிடிபட்டது ஒரு ஆலிவ் மரக் கொப்பு தான். அதுவும் உடைந்து அவன் கையோடு வந்துவிட்டது. பரலோகம் மேலேறி சென்றுகொண்டே இருந்தது. ஆனால் பரலோகத்திலிருந்து பூலோகத்துக்கு கொண்டுவர அனுமதிக்கப்பட்டது அந்த உடைந்து போன ஆலிவ் மரக்கொப்பு மட்டுமே.
    ஆதாமும் ஏவாளும் பூமியில் ” தொப்பென” விழுந்தார்கள். அவர்கள் எழுந்து பார்த்தபோது பரலோகம் சூரியனைவிட மிகத்தொலைவில் ஏறிபோய் இருந்தது.ஆதாம் கொண்டுவந்திருந்த அந்த ஆலிவ் மரக்கொப்பு பூமியில் நிலைனின்று விட்டது. [அந்த இடமே இன்றைய ஆலிவ் மலை.ஜெத்செமனித்தோட்டம் இங்கு தான் உள்ளது.இங்குதான் யேசு நாதர் காட்டிகொடுக்கபட்டார்.இதைப்பற்றிய கதை பிறகு சொல்வேண்] அதுவரை கதை கேட்டுவந்த அகஸ்டஸ் சீசர், ” அடடா… எவ்வளவு சோகம்.. எவ்வளவு சோகம்” என்றார்.” அதற்கு சந்திரமுகி” அரசே ..கதை கேட்ட உங்களுக்கே இவ்வளவு சோகம் என்றால் அதை அனுபவித்துப்பார்த்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எவ்வளவு துன்பம் ஏற்பட்டிருக்கும்.” என்றான். சோகம் விலகாத சீசர் ” பிறகு என்ன நடந்தது?” என்றார்.
“உலகே மாயம் வாழ்வே மாயம்”
     அன்று லூசிபேர் கூறியது போல் உலகின் பயங்கரம் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புறிய ஆரம்பித்தது. இந்த உலகில் பரலோக பாக்கியம் இருந்த வரை ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பசி ஏது? பட்டினி ஏது. தாகமேது ? துன்பமேது?
மனித உடலின் உபத்திரங்களும் உற்பாதங்களும் அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அந்த பாக்கியம் பறி போன பிறகு மேற் சொன்ன யாவும் ஒவ்வொன்றாகப் புறிய ஆரம்பித்தது. இன்பம் என்றால் என்ன, துன்பம் என்றால் என்ன என்று அனுபவம் உணர்த்தியது. பசியும் தாகமும் அவர்களை ஓட ஓட விரட்டியது எத்தனை முறை கூக்குரலிட்டு அழுதாலும் பயனில்லை.ஆண்டவரே, ஆண்டவரே போதும் …போதும்.. எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இயன்ற மட்டும் அழுதும் புலம்பியும் மயங்கி மயங்கி சாய்ந்தார்கள்.
     இனி எவ்வளவு அழுதும் பயனில்லை.புலம்பியும் பயனில்லை.மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.ஆனது ஆகிவிட்டது.ஆதாமும் தன் மனைவி ஏவாளை மன்னித்து ஏற்றுக்கொண்டான் எல்லாம் கொஞ்ச நேரம் தான்.
     பிறகு வலி வருத்தம் நோவு என்று வரும்போது அவளை நன்றாக திட்டிதீர்ப்பான். அவர்கள் பசி தாகத்திற்க்கு எதை எதையோ தின்றார்கள். எதை எதையோ குடித்தார்கள். எப்படியோ வாழ்ந்தார்கள். அவ்ர்கள் நிலை கண்ட ஆண்டவரும் அவர்கள் மேல் மனமிரங்கி அவர்களுக்கு வாழும் முறையை கற்றுகொடுத்தார் ஆண்டவர் பேசுவதை மட்டுமே கேட்க்கமுடியும் ஆனால் அவரைப் பார்க்கமுடியவில்லை ஒருநாள் ஆதாம் துன்பத்தின் எல்லைக்கே சென்று விட்டான்.பழைய எண்ணங்களை அவனால் எப்படி மறக்க முடியும்.இழந்ததை நினைத்து நினைத்து தன் தலையை தான் இருந்த இடத்திலிருந்த ஒரு பாறையில் முட்டிக்கொண்டு முட்டிக்கொண்டு அழுதான்.அவன் தலையைச்சுற்றி ரத்தக்காயங்கள் ஏற்பட்டு ரத்தம் திரளாக வழிந்த்தோட ஆரம்பித்தது.
      முகமெல்லாம் ரத்தமயமானது.” ஆண்டவரே எனக்கு உலக வாழ்க்கை சலித்துவிட்டது.என்னை ஏன் ஐயா படைத்தீர்.? அறியாமையால் செய்த குற்றத்திற்கு இவ்வளவு கொடும் தண்டனையா? என் மேல் இரக்கமாய் இரும். என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்”. என்றுமீண்டும் மீண்டும் தன் தலையை அந்தப் பாறையில்முட்டிக்கொண்டு அழுதான்.
   அவன் அழும் குரல் பரலோகம் மட்டும் கேட்டது.ஆண்டவர் மனம் இரங்கினார். அவரது மாயக்கரங்களாள் அவனை தொட்டு குணமாக்கினார்.அவனைத் தேற்றி ” மகனே ஆதாம் மனம் தெளிவாயாக.உன் கூக்குரலைக்கேட்டோம். அஞ்சாதே. உன்னை மீட்க்க உனக்கு ஒரு மீட்பரை நாம் அனுப்புவோம்.உன் சந்ததிவழியாய் பிறக்கப் போகும் ஒருகன்னிப் பெண் ஒருத்தி மனிதக்கலப்பில்லாமல் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுப்பாள். அவரே உன் மீட்பர். விரைவில் அவர் வருவார். ” என்றார். அந்த நேரமே ஆதாம் மனம் தெளிந்து மனதில்
உறுதி பெற்றான் [ ஆதாம். தன் தலையை முட்டிக்கொண்டு அழுத இடம் தான் பிற்காலத்தில் யேசு நாதர் இரத்த வேர்வை வியர்த்த இடம் ஆனது. இந்த இடத்தில் தான் ஆண்டவராகிய கடவுள் மனித சந்ததியை மீட்க உறுதி கொடுத்த இடம் ஆனது. இந்த இடத்தில் உள்ள தேவாலயம் the church of all nations என்று அழைக்கப்படுகின்றது.]
    பிற்பாடு ஆதாம் தன் வம்சத்தில் பிறக்கப்போகும் பெண் குழந்தை மூலம் தனக்கு இழந்த சொர்கம் கிடைக்கும் என்று எண்ணி தன் காலத்தை ஓட்டினான். ஆனால் அங்கும் விதி விளையாடியது. அவனுக்கு பிறந்தது எல்லாமே ஆண் குழந்தைகள். ஆணும் பெண்ணுமாகப் பிறந்தன.
   ஆனால் தனியாக ஒரு பெண் குழ்ந்தை கூட அவர்களுக்கு பிறக்கவே இல்லை. சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டான் சந்திரமுகி. மீண்டும் சீசர் கேட்டார்,
   “அது சரி, அந்தப்பாம்புக்கு என்னவானது?’ அதற்க்கு சந்திரமுகி,” அரசே, நீர் உண்மையிலேயே கதையை ஆர்வமுடந்தான் கேட்கிறீர். சரித்திரம் தெரிந்துகொள்ள உமக்குள்ள ஆர்வத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்.” என்றான். மீண்டும் சந்திரமுகி விட்ட இடத்திலிருந்து கதையை ஆரம்பித்தான்.” கடவுள் பாம்பை நீ உன் காலமெல்லாம் உன் வயிற்றில் ஊர்ந்து வாழ்வாயாக.
  நீ அந்தப் பெண் ஏவாளை ஏமாற்றியதால் அவள் வித்துக்கும் உன் வித்துக்கும் பகைமை ஏற்படுத்துவோம். அவள் வித்திலிருந்து தோன்றும் ஒரு கன்னிப்பெண் மூலம் அவளுக்கு ஆண் கலப்பில்லாமல் தோன்றும் ஒரு ஆண் குழந்தை வழியே உலகில் மீட்பு உண்டாகும்.உன்னால் அந்த கன்னிப்பெண்ணை வெற்றி கொள்ள முடியாது.அவள் உன் தலையை நசுக்குவாள். நீயோ அவள் குதி காலை தீண்ட முற்படுவாய்.ஆனாலும் உனக்கு தோல்வியே உண்டாகும்.” என்றார்.அவ்வாறே ஆயிற்று. பாம்பாகிய சாத்தான் தன் வலிமையை இழக்க ஆரம்பித்தான். அதுவரை பாம்பிற்கு இருந்த பின்னங்கால் இரண்டும் மறைய ஆரம்பித்தது.கடைசியில் அது மறைந்தே போய்விட்டது. ஆண்டவர் கூறியபடியே பாம்பு தன் வயிற்றால் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.[தற்கால விஞ்ஞானிகள் இந்த நிகழ்ச்சியை பரிணாம வளர்ச்சி என்கிறார்கள்]
    மீண்டும் பேசினான் சந்திரமுகி,” அரசே, இப்போது நீர் வின்னில் காட்சியாக கண்ட அந்தப் பெண்ணும் அவள் குழந்தையும் யார் என்று புறிகிறதா?’ என்றான்.சீசருக்கும் கதை புறிந்ததால் ” ஓ, ஆது இந்தப்பெண் தானோ, அப்படியானல் இந்தப்பெண் தான் ஆதாமின் வாரிசாக வந்த கன்னிப் பெண்ணோ?
   இந்த குழந்தை தான் ஆண்கலப்பில்லாமல் பிறந்த அந்த தெய்வீக குழந்தையோ? புறிகிறது. புறிகிறது. அப்படியானல் அந்த தெய்வீகமான் கன்னிப்பெண்ணை பற்றியும் அவளது தெய்வீகமான குழந்தை பற்றியும் மேலும் அறிய ஆவல் அதிகமாக இருக்கிறது .மேலும் கதை சொல்லவேண்டுகிறேன்”. மன்னர் அகஸ்டஸ் மேலும் ஒரு விளக்கம் கேட்டார். ” சந்திரமுகி, ஆதாமும் ஏவாளும் அந்த ஏதேன் தோட்டத்தில் பரலோக பேரின்பத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?” அதர்க்கு சந்திரமுகி ” ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.
    அதுதான் இல்லை !..அவர்கள் அந்த ஏதேன் தோட்டத்தில் பரலோக பேரின்பத்தில் திளைத்து வாழ்ந்ததெல்லாம் ஒரே ஒரு நாள் தான்.” என்றான்.” என்ன? ஒரே ஒரு நாள் தானா”..!… ஆசர்யப்பட்டார் சீசர் ஆம் அரசே சொன்னல் உங்களாள் நம்பமுடியாது தான் ஆனால் அது தான் உண்மை.ஆண்டவன் சன்னிதியில் ஒரு நிமிடம் என்பது ஒரு ஆயிரம் வருடங்களுக்கு சமம். ஆனால் அவர்கள் அத்துனைகாலம் பரலோக பாக்கியத்தில் வாழ்ந்துவிட்டால் பிறகு பூலோக வாழ்க்கையில் ஈடுபடுத்த அவர்களை ஏமாற்ற முடியாது.
    எனவே ஆதாமும் ஏவாளும் பரலோகத்தின் முழு இன்பத்தையும் அனுபவிக்கும் முன்பே அவர்களை பூலோக வாழ்கையில் ஈடுபடுத்த ஆண்டவர் சித்தம் கொண்டார். அதனால் தான் ஆதாமை காலையில் படைத்தார்.
மதியம் ஏவாளை படைத்தார். மாலை அவர்களை சபித்தார்.இரவுக்குள் அவர்கள் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டனர். என்றான்.
    சந்திரமுகி மீண்டும் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் தேவ தாயாரின் அமல உற்பவத்தைபற்றி விரிவாக கூற ஆரம்பித்தான், அந்த கதையை நான் கேட்டு உங்களுக்கு மூன்று ரோஜாக்கள் என்ற பெயரில் சொல்லப்போகிறேன்.

அதோ எழுந்து வருகின்றவள் யார் ?



அதோ எழுந்து வருகின்றவள் யார்?

“சந்திரனைப்போல் அழகுள்ளவளாய், சூரியனைபோல் ஒளியுள்ளவளாய், பார்முனையில் அணிவகுத்து நிற்கும் படையைபோல் அக்சம்தருகிறவளாய், உதயகாலத்தைப்போல் அதோ எழுந்து வருகின்றவள் யார்?” என்ற கேள்வியே ஒரு செபமாய்மாறி தற்போது மரியன்னையின் சேனையினர் சொல்லும் சங்கிலிசெபமாய் நடைமுறையில் உள்ளது.
    இந்த செபம் எந்த மையக்கருத்தையொட்டி எழுதப்பட்டது என்ற விபரம் எனக்குத்தெரியாது.ஆனால் இந்த கேள்வியே ஒரு சங்கிலி செபமாய் மாறி மாதா பக்தர்களாள் சொல்லப்பட்டு வருகிறதள்ளவா? எனவே இந்த கேள்வியைக்கேட்டவர் யார்? இந்த கேள்வியின் பின்னனிதான் என்ன? ஓ…. அது ஒரு சரித்திர ஸ்வாரஸ்யமான நிகழ்ச்சி. இந்த கேள்வியைக்கேட்டவர் உலகமகா சக்கரவர்த்தி ரோமைராஜ பூபதி மஹா அகஸ்ட்டஸ் சீசர். கேள்வி கேட்கப்பட்ட நாள் அவரிலும் பெரிய உலகமகாச்சக்கரவர்த்தி யேசு கிருஸ்த்து பிறந்த அந்த அமைதி பொழியும் இரவில். இதற்கு மேல் உங்கள் பொறுமையை நான் சோதிக்க்க விரும்பவில்லை. சரி நேயர்களே, நாம் கதைக்குப்போவோமா?
     யேசுகிருஸ்த்து பிறந்த அந்த அமைதி பொழியும் இரவில் அவரது பிறப்பைப்பற்றிய நற்செய்தி முதன் முதலில் ஏழை எளியோர்க்கு அதுவும் ஆடு மாடு மேய்க்கும் எளிய குடும்பதைச் சேர்ந்த படிப்பறிவற்ற இடையர்களுக்கு சம்மனசுகளாள் ” உன்னதங்களிளே கடவுளுக்கு மாட்சிமை உண்டாவதாக.மன்னவர்களுக்கு அமைதி உண்டாவதாக” போன்ற முதல் கரொல் பாடல்களால் அறிவிக்கப்பட்டது. இந்த நற்செய்தி யேசு பிற்ந்த ப்ர்த்லஹெமில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. பலப்பல அரும்குறிகள் வானில் தோண்றின. அவரது வருகையை அறிவிக்கும் வால் நட்சத்திரம் தோன்றி உலகில் பேரரசர் பிறந்துள்ளார் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பை உலகம் முழுவதும் உல்ல வான சாஸ்த்திரிகள் கண்டு அவரவராது நாடுகளிள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். அன்று இரவு டிசம்பர் 24 ஆம்தேதி பேரரசர் அகஸ்டஸ் சீசருக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அடுத்த அதிகாலை நடைபெறயிருக்கும் குரு என்னும் ஜூபிடர் தெய்வத்திற்கு எழுப்பட்பட்ட ஒரு பேரதிசயமான கோயில் கும்பாபிஷேகதிற்கு ஆயத்தங்களை மேற்பார்வையிட்டபோது ஏதோ குறையிருபதாக அவரது உள் மனது கூறியது ஏனோ அவரது மனது அமைதியடையவில்லை. ” சரி, எதற்கும் மீண்டும் நேரிலேயே சென்று ஆய்வு செய்துவருவோம்” என்று உடனே அரசுருக்குறிய ஆடைகைள் அணிந்து இரதத்திலேறி புறப்பட்டுவிட்டார். குரு தேவன் ஜூபிடரின் சிலை ஒரு மிகப்பிரம்மாண்டமான பளிங்குச்சிலையாகும். ஒரே கல்லால் ஆன சுமார் 60 அடி உயரம் கொண்டது. ரோமைக்கு கிழக்கே உள்ள மலை உச்சியில் 23 மிகப்பிரம்மாண்டமான தூண்கள் தாங்கிநிற்க மேற்புரம் திறந்திறந்த பெரிய அரங்கின் உட்புறமாக அழகாக நின்றிருந்தது அந்த சிலை. எந்தக்குறையும் இல்லாமல் மிக்க அழகுடன் செதுக்கியிருந்தான் கிரேக்க சிற்பி. அரசரது திடீர் வருகையால் அந்த அரங்கமே அல்லோகல்லோகப்பட்டது. அரசரின் வருகையை எதிர்பாராத மந்திரிப்பிரதாணிகள், தளபதிகள், சிப்பாய்கள் அனைவரும் என்னவோ ஏதோவென்று கலங்கினார்கள். அரசரே நேரடியாக வந்து அந்த பிரம்மாண்டமான ஜுபிடரின் சிலையை உற்று உற்றுப்பார்த்தார். எந்தக்குறையும் தெரியவில்லை. தளபதியைப்பார்தப்பார்வையில் அவர்,” அரசே பாதுகாப்பில் எந்தக்குறையும் இல்லை” என்று பணிவாக பதில் அளித்தார். அப்பொதுதான் வானில் அந்த அறிய நிகழ்ச்சி ஆரம்பித்தது. ” உன்னதங்களிலே தேவனுக்கு மகிமை உண்டாவதாக”. என்னும் வானோர் பாடல் மிக மிக அழகாகவும் தெளிவாகவும் கேட்டது. தன் வாழ்நாளில் அரசர் சீசர் அப்படி ஒரு பாடலைக் கேட்டதில்லை. அவர்மட்டுமல்ல உலகில் எந்த ஒரு மானிடப்பிறவியும் முன் கேட்டறியாத பாடல் அது. மாட்சிமைமிக்க அர்த்தம் கொண்டது. அரசர் அகஸ்ட்டஸ் சீசர் மெய்மறந்தார் . அது மட்டுமல்ல. கிழக்கே கீழ் வானம் தொடங்கி மேற்கே அடிவானம் வரை மேகம் ஒளிர்ந்தது பல்லாயிரக்கணக்கான விண்மீண்கள் கூட்டம் கூட்டமாக வானில் வண்ணக்கோலங்கள் போட்டன.பிறகு அவைகள் வெளிர்நிறமாய் மாறி வெளிச்சம் வரவர பிரகாசமாக மாறி ஏதோ நாடக அரங்கம்போல் காட்சி அளித்தது. ஆனால் வானோர் பாடல் மட்டும் மிக மிக ரம்மியமாய் கேட்டுக்கொண்டேயிருந்தது. அரசர் அகஸ்டஸ் தன் கண்களை நம்ப முடுயாமல் தான் நினைவுடந்தான் இருக்கின்றோமா என்று அறிய தன்னை ஒரு முறை கிள்ளிப்பார்த்துக்கொண்டார். ” ஆம், ஆம். நினைவு நன்றாகத்தன் இருக்கிறது” என்று ஒரு முறை சொல்லியும் பார்த்துக்கொண்டர்.அப்படியானால் இது கனவு அல்ல, நனவு தான் என்று ஆமோதித்துக்கொள்ளவும் செய்தார். பிறகு மீண்டும் வானில் வண்ண ஜாலங்கள் தோன்றின.பலப்பல வாணவர் உருவங்கள் சிரிதும் பெரிதுமாய் தோன்றின. பெரும் பெரும் சம்மனசுகள் இறக்கை விரித்து பறப்பதுபோல் போன்றும் குழந்தைகள் இறக்கை முளைத்து பறப்பது போன்றும் காட்சிகள் தோன்றித்தோன்றி மறைந்தன. பிறகு ஒரே ஒளிப்பிரவாகம்.சம்மனசுகள் மறைந்து ஒரு அழகிய யுவதி அவள் கையில் ஒரு அழகிய ஆண் குழந்தையுடன் விஸ்வரூபமாய்த்தோன்றினாள்.கீழ் வானம் துவங்கி உச்சிவானம் மற்றும் அடி வானம்வரை அவரது திரு உருவம் தோன்றியது. “அவள் சூரியனை ஆடையாய் அணிந்திருந்தாள். அட… அவள் காலடியில் சந்திரன். அவள் சிரசைச்சுற்றி விண்மீண்கள். அவளது திருக்கரத்தில் அவளது ஆண் குழந்தை. அது என்ன ஒரு அழகிய ஆண் குழந்தை.அடடா…. இவர்களின் அழகைச்சொல்ல உலகில் எந்த ஒரு மொழியிலும் வார்த்தைகளே கிடையாது. தாயும் அழகு. பிள்ளையும் அழகு.மனித சரித்திரத்தில் இப்படியும் ஒருஅழகா? இந்ததேவதையின் அவதாரம் எந்தப்பரலோகத்தைச்சேர்ந்ததோ தெரியவில்லையே. நமக்கு மட்டும் இந்தப்ப்பெண் யார் என்று தெரிந்தால் இந்த குரு தேவன் ஜுபிடர் சிலைக்கு பதிலாக இந்தப்ப்பெண்மணியின் சிலையை பிரதிஸ்டை செய்துவிடுவோம். ஆனால் இந்தப்பெண்முகத்தை இதற்குமுன் பார்ததே இல்லையே. இந்த முகத்தை என்னவென்று வர்ணித்து அதை சிற்பியிடம் சொல்லி அந்தப்பெண்மனியின் சிலையை வடிக்கச்செய்யமுடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை” இவ்வாறாக அகஸ்டஸ் சீசர் எண்ணி எண்ணி மாய்ந்துபோனார். இருப்பினும் மீண்டும் மீண்டும் அந்த தாயையும் அவள் சேயையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே யிருந்தார் சீசர். அவர் பார்த்துக்கொண்டே இருக்கும்போதே அந்தக்காட்சி சிறிது சிறிதாய் மறைந்துகொண்டே வந்தது. கடைசியில் மறைந்தேபோய்விட்டது. மீண்டும் வானம் பழையபடி மாறி குளிர்ந்த காற்று வீசியதும் அரசருக்கு தன் உணர்வு வந்தது. அரசர் தன் பிரதாண்மந்திரியை அழைத்துக்கேட்டார் ” அந்தக்குழந்தையும் அந்தப்பெண்ணும் யார்?” என்று.” அரசே என்ன சொல்கின்றீர்கள்” என்று கேட்டார் மந்திரி. ” என்ன மந்திரி, வானில் தோன்றிய அந்த தெய்வீகப்பெண்ணையும் அந்தக்குழந்தையையும் நீங்கள் யாரும் பார்க்கவில்லையா?” என்றார் சீசர். மந்திரி பரிதாபமாக இவ்வாறக பதில் கூறினார். ” அரசே தாங்கள் வந்தது முதல் வானத்தையே அன்னார்ந்து பார்த்துக்கொண்டே இருந்தீர்கள். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் எங்களுக்குத்தான் ஒன்றுமே விளங்கவேயில்லை.” என்றார். அப்போதுதான் அரசருக்குப்புறிந்தது அந்தக்காட்சியைக்கண்டது தான் மட்டும் தானென்று. பிறகு ஏதோ சிந்தனையில் ஒரு உறுதியான முடிவு கண்டவராய் தளபதியைக்கூப்பிட்டார். தளபதி “அடியேன்” என்றார். அரசர் ” தளபதி, அந்த குரு தேவன் சிலையை உடைத்துவிடு” என்றார். “அரசே, அதற்கு அவசியம் இல்லாது போய்விட்டது. சற்று நேரத்திற்கு முன்பு வீசிய ஒரு அமானுஷ்யமான காற்றால் குரு தேவனின் சிலையும் அந்த மஹா மண்டபமும் டமார் டமார் என்ற சப்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கிவிட்டது. தாங்கள் ஏதெதோ பேசிக்கொண்டே வெகு தூரம் வந்துவிட்டீர்கள்.உங்களைப்பின்பற்றி நாங்களும் வந்துவிட்டதால் அனைவரும் தப்பித்தோம்” என்று கூறினார். பிரதம மந்திரி சீசரின் காலடியில் விழந்து ” அரசே, எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஏதோ நடக்ககூடாதது நடந்து விட்டது. ஏதோ தெய்வ குத்தம் போலும்” என்றார். அரசருக்கு ஒன்று புறிந்துவிட்டது. வானத்தில் அந்த தெய்வத்தாயும் சேயும் தோன்றிய அந்த நேரமே அந்த சிலையும் மஹா மண்டபமும் உடைந்து விழுந்து இருக்கவேண்டும் என்று கண்டு கொண்டார். அரசர் சீசருக்கு இந்த நிகழ்சி ஒரு துக்க காரியமாகவோ அல்லது துர்ச்சகுணமாகவோ தெரியவில்லை. அரசர் சீசர் தாம் விண்ணில் கண்ட காட்சியை தன் மந்திரிகளுக்கும் தளபதிக்கும் படைவீரர்களுக்கும் மிகவும் விபரமாகக்கூறினார். அந்த வர்ணனை பின்வரும் பாடலாய் மாறியது.
” சந்திரனைப்போல் அழகு வாய்ந்தவளாய் சூரியனைப்போல் ஒளிவுள்ளவளாய்
போர் முனையில் அணிவகுத்து நிற்கும் சேனையைப்போல்அச்சம் தருகிறவளாய்
உதயகாலத்தைப்போல் அதோ எழுந்து வருகின்றவள் யார்? “
   அடுத்தநாள் அரண்மனையில் ரோமைப்பேரரசர் அகஸ்டஸ் சீசர் தலைமையில் சபை கூடிற்று.மந்திரிப்ரதாணிகள் தளபதிகள், பிரபுக்கள், சீமாண்கள் மேலும் முக்கியப்பிரமுகர்கள் என அரசசபை களை கட்டி இருந்தது. அந்த நேரம் வீரன் ஒருவன் வந்து அரசரை வணங்கி நிற்க. அரசரின் கை அசைவில் அனுமதி கிடைக்க பிரதம மந்திரியிடம் அந்த ஒலையை ஒப்படைத்தான். ஓலையைப்படித்த மந்திரியின் மதி வதனம் புன்னகை பூக்க ஆரம்பித்தது.” ஓலையில் வந்துள்ள செய்தி நல்ல செய்திதான்போலும்” என்றர் சீசர். மந்திரி ” ஆம் அரசே ஓலையில் நல்ல செய்திதான் வந்திருக்கிறது .நேற்று இரவில் இடிந்து விழுந்த அந்த குருதேவனின் சிலையைப்பற்றிய ஒரு வர்தமானம் இதில் பதிவாகி இருக்கிறது. இதோ பாருங்கள்” என்றார். சீசரும் ஆச்சர்யம் அடைந்த்தவறாய் ” நல்லது,மந்திரியாரே, விஷயத்தை நீரே கூறும்” என்றார். “அரசே,தாங்கள் விண்ணில் கண்ட அந்த தெய்வத்தாயும் சேயும் வாழ்த்தபடுவார்களாக. அவர்களது திரு நாமமும் புகழகப்படுவதாக.தெய்வசங்கள்ப்பதால் உடைந்துபோன அந்த சிலையைப்பற்றிய கவலையை தாங்கள் விட்டுவிடுங்கள். தங்களுக்கு விருப்பம் இருந்தால் அந்த சிலையைப்பற்றிய வரலாற்றை கூறுகிறேன்” என்றார். அரசர் சீசர் மிகுந்த விருப்பத்துடன் அனுமதி அளித்தார். அந்த சிலையைப்பற்றிய விபரம் பின்வருமாறு. Image
    “அரசே, இது நடந்தது சுமார் 70 ஆண்டுகளுக்கும் முன்பாக.இந்த சிலையின் மூலக்கல் ஒரு அருமையான சலவைக்கள். இது க்ரேக்க நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை வடிக்க கைதேர்ந்த சிர்ப்பிகள் கிரேக்க நாட்டிலிருந்தே வரவழைக்கபட்டிருந்தனர். ஒரு நல்ல நாள் பார்த்து பூஜை புனஸ்க்காரங்கள் எல்லாம் நல்லபடியாக முடிந்து சிலை வடிக்க ஆரம்பித்தனர்.மிகுந்த அழகுள்ள சிற்ப்பமாக அது உருவாகி வந்தது. பல சிற்பிகள் ஒன்று சேர்ந்து சுமார் 60 அடி உயரம் உள்ள இந்த ஜுபிடர் சிலையை உருவாக்கி வந்தனர். மேலும் இதர்க்குத்தகுந்தார்ப்போல் ஒரு மஹா மண்டபம் 23 பெரிய தூண்கள் தாங்கி நிற்க மிகப்பிரண்டமாக உருவாக்கினர். அந்த மஹா மண்டபம் மிகுந்த கலையம்சத்துடன் ஒரு திறந்தவெளி அரங்கமாக அமைக்கப்பட்டது. ஆக இந்த குருதேவன் ஜுபிடரின் சிலை இந்த மஹா மண்டபத்தின் உட் பகுதியில் நிறுதப்பட்டு கிரேக்க யவண சிற்ப சாஸ்திரங்களுக்கு சவால் விடும்படியாக மிகப்பிரம்மாண்டமான ஒரு கலை அரங்கமாக உருவாக்கியிருந்தார்கள். ஒரு நல்ல நாளிள் இந்த குருதேவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய நாள்குறித்து அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. உங்களுக்கு முந்தைய ஜுலியஸ் சீசர் திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கினார். அந்த நாளிள் ஆயிரக்கணக்கான ஆடுகளும் மாடுகளும் குருதேவனுக்கு பலியாக கொடுக்கப்பட்டு இரத்த ஆறு ஓடிற்று. பல விதமான தங்க வைர ஆபரணங்கள் ஜுபிடர் தேவனுக்கு அணிவிக்கப்பட்டிருந்தன. அவைகள் அந்தப்பௌர்ணமி நிலவின் ஒளியிலும் தீவட்டிகளின் வெளிச்சதிலும் பெரும் நெருப்புத்துண்டங்களாய் ஜொலிஜொலித்தன. ஆயிட்று !முஹூர்த்த வேலை நெருங்கிற்று. தாறை தப்பட்டை துந்துபி மற்றும் எக்காள்ம் மேலும் பல விதமான வாத்தியங்களும் மந்திர முழக்கங்களும் ஏக காலத்தில் ஒங்கி ஒலித்தன கிரேக்க யவண நாட்டிய மங்கைகளின் கால்களில் கட்டியிருந்த சலங்கைகள் தாளத்திற்கு தக்கபபடி ஜல் ஜல் என்று குலுங்கிக்குலுங்கி ஆடியது இது பூலோகமா இல்லை இது இந்திர லோகமா என்று கேள்வியை எழுப்பியது. ஆனால் அவ்வேலையில் திடீரென ஒரு யூத்ப்பெண் குரல் நிறுத்து! நிறுத்து!. என்று அபஸ்வரமாக ஓங்கி ஒலித்தது. அவளுக்கு சந்தத்ம் வந்திருந்தது. அட முட்டாள் மக்களே. வரப்போகும் அழிவிற்கு.தப்பிக்கப்பாருங்கள். விரைவில் உடைந்து விழப்போகும் இந்த சிலைக்கு இத்தனை சிலவில் பூஜை புனஸ்க்கரம் தேவையா? எல்லாம் வீண் என்று முழங்கினாள். அவ்வளவுதான். அரங்கமே நிசப்தமானது. ஏதோ நடக்ககூடாதது நடந்துவிட்டது என்று மக்கள் அக்சப்பட்டனர். நடந்ததை அறிந்த தலைமை பூசாரி கோபத்தின் உச்சிக்கேசென்று விட்டார். பளார் பளார் என்று அந்தப்பெண்மனியின் கண்ணத்தில் மாற மாறி அறைந்தார். எங்கள் குலதெய்வம் ஜுபிடர். எங்களுக்கு அறிவிக்கததை புறவினத்தைச்சேர்ந்த இந்தப்பெண் என்னத்தை அறிவித்து விடப்போகிறள்.மக்களே இந்தக்குறிகாரியைக் கொல்லுங்கள் என்று உரக்க கத்தினார்.
   இந்தக்காலத்தைப்போலவே அந்தக்காலத்திலும் கோயில் பூஜாரிகளுக்கு அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கும் அதிகாரமும் இருந்தது. இருப்பினும் அரசாங்க அதிகாரிகள் குறி சொன்ன அந்த யூதப்பெண்ணை தனியே பாதுகாப்பாய் அழைத்துச்சென்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். இது பிற மதத்தவரின் சதியா அல்லது அரசாங்கதிற்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியா என்று அறிய முற்பட்டார்கள். அந்தப்பெண்மணியை விசாரணை என்ற பெயரில் மிகக்கடுமையாக அடித்து நொறுக்கித்தள்ளி விட்டார்கள்.”பெண்ணே,உன்னாள் தீர்க்க தரிசனம் கூறமுடியுமானால் இந்த குருதேவன் ஜுபிடரின் சிலை எப்போது உடைந்து விழும் என்று உறுதியாகக்கூறு என்று மீண்டும் மீண்டும் நையப்புடைத்தார்கள்.அந்த யூதப்பெண் மீண்டும் அவள் தெய்வத்திடம் அழுது புலம்பி மீளவும் தீர்க்கதரிசனம் கேட்டாள். அவள் வாயால் அவர்கள் தெய்வம் பேசிற்று.” அதாவது என்றைக்கு கன்னிப்பெண் ஒருத்தி ஆண் கலப்பின்றி ஆண் குழந்தை ஒன்றை பெற்றாள் என்று ரோமைராஜ பூபதிக்கு தெரிவிக்கப்படுமோ அன்றே இச்சிலை உடைந்து விழும்”. என்று பேசியது. இந்த வர்தமானங்களை எல்லாம் அரசாங்க அதிகாரிகள் தீர்க்கதரிசனம் கூரிய பெண்ணின் பெயர் உட்பட எழுதிவைத்திருக்கின்றார்கள். அது தான் இந்த ஓலை அரசே” என்றார். அரசர் சீசர் மிகுந்த ஆச்சர்யப்பட்டு ” மந்திரி, அந்த யூதப்பெண்ணின் பெயர் என்ன” என்று கேட்டார். “அரசே, தீர்க்கதரிசனம் கூறிய அந்த யூதப்பெண்ணின் பெயர் செல்சியா” என்றார்.அடுத்து அரசே சீசர் பேசினார். ” மந்திரி,வர்தமானங்களையும். காலச்சூல்நிலைகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது ” வானில் தோன்றிய அந்தப்பெண்மணி உண்மையில் மஹா பரிசுத்தவதி என்பதையும் அவள் ஆண்கலப்பில்லாமல் ஆண்குழந்தையொன்றைப்பெற்றுள்ளாள் என்பதையும் என்னாள் நம்ப முடிகின்றது. எனக்கு அந்த தெய்வீகப்பெண்ணைப்பற்றியும் அவள் ஆண்குழந்தையைப்பற்றியும் விபரமாக விரைவில் தெரிவிப்பாயாக” என்றார். ” அரசே, என்னால் கூடியமட்டும் விரைவில் உங்களுக்கு அவர்களைப்பற்றிய விபரங்களைக் கூறுவேன்” என்று சீசரிடமிருந்து விடைபெற்றார் அவருடைய அருமையான மதிமந்திரி.
  பின் குறிப்பு:- அரசர் அகஸ்ட்டஸ் சீசர் விரும்பியபடியே பிற்காலத்தில் கிரிஸ்துவர்கள் அந்த மலை உச்சியில் வீழ்ச்சிவுற்றிருந்த ஜுபிடரின் மஹா மண்டபம் இருந்த இடத்திலேயே அதே உயர்ந்த அந்த 23 தூண்களைக்கொண்டே மரியன்னைக்கு ஒரு மிகப்பெரிய அழகிய ஆலயம் அமைத்தார்கள்.அந்த கவின்மிகு ஆலயம் தூய மரியன்னைப்பேராலயம் என்னும் பெயர் பெற்றது. அனேக அதிசயங்களும் அற்புதங்களும் அங்கு நடைபெற்று வருகின்றன. கன்னிமரியின் பேராலயம் பார்க்கப்பார்க்க சலிக்காத பல அம்சங்களைக்கொண்டது. இங்கு ஒரு அழகிய நீரூற்றும் மந்திர சக்தி வாய்ந்த எண்ணை ஊற்றும் உள்ளது. பல வியாதிகள் இந்த மந்திரித்த எண்ணையால் குணமாகின்றன. ஆக, பேரரசர் அகஸ்ட்டஸ் சீசர்தான் யேசுநாதர் பிறந்த அன்றே அவரைப்பார்த்த முதல் மனிதர் என்னும் பட்டம் பெருகிறார். உலகமஹா சக்கரவர்தியை எங்கேயோ வேற்று நாட்டில் வேற்று கண்டத்தில் இருந்து கொண்டு அவரை சந்திக்கும் பேற்றை கடவுள் அகஸ்டஸ் சீசருக்குக்கொடுத்திருந்தார்.
     நேயர்கள் விரும்பினால் இன்னும் தொடருவேன் . உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன.

"திருச்சிலுவை"

” திருச்சிலுவை “
     உண்மையில் எனக்கு திருச்சிலுவையைபற்றிய கதையை கூறியவர் எந்தவிதமான கல்வி அறிவுமேயில்லாத ஒரு கோவில் வேலையாள்தான். அவர் கூறிய திருச்சிலுவை பற்றிய கதை எனக்கு பெரும் பிரம்மிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு அந்த கதையை அவரது தகப்பனார்தான் கூறினார் என்றார் அவர். செவிவழிச்செய்தியாய் அவர் கூறிய கதைகள் இக்காலத்தில்
எவ்வளவு உண்மை என்று நான் உணர்ந்து கொண்டேன். இன்டெர்னெட் வசதி உள்ள இக்காலத்தில் இக்கதைகள் எவ்வளவு வலிமைவாய்ந்தவை…. எவ்வளவு உண்மையானவை என்று நான் அறியவந்தபோது அக்காலத்திய cathechiasm என்னும் மறைக்கல்வி எப்படிப்பட்டது என்றும் அதைக்கற்றுக்கொடுத்தவர்களும் சரி அதைக்கற்றுக்கொண்டவர்களும் சரி எவ்வளவு ஆர்வமாக தங்கள் வாழ்க்கையில் பின்பற்றினார்கள்…. தங்கள் சந்ததியினருக்கும் கற்றுக்கொடுத்தார்கள் என்று நான் உணர்ந்தபோது மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.   நான்முதலாய்  அறிந்துகொண்ட சில வேதாகம கதைகளில் உள்ள உண்மைகள்… அதன் அர்த்தங்கள் இவற்றை என் மனைவிக்கும் என் பிள்ளைகளுக்கும் கூறுவேன். அவர்கள் எவ்வளவு தூரம்இவற்றை புறிந்துகொண்டார்களோ….அவர்தம் மக்களுக்கு சொல்லிக்கொடுப்பார்களோ நாம் அறிவோம் பராபரமே… என் தாயார் அடிக்கடி சொல்லுவதுபோலே எல்லாம் காலம் செய்யும் கோலம் என்று. இப்போது நானும் இப்படித்தான் அடிக்கடி புலம்புவதாக என் மனைவியும் கூறுகின்றாள்… எல்லாம் காலம் செய்யும் கோலம்…ஊம்…நான் கதையை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டேன்… சரி கதைக்குப்போவோமா…..
” திருச்சிலுவை மரம் இதோ…இதிலேதான் தொங்கியது..உலகத்தின் இரட்சண்யம் ” என்னும் பாடலை பரிசுத்தவாரத்தில் கேட்டிருப்போம். மற்றும்
” திவ்ய சேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் கூறுகின்றோம்… அதேனென்றால் இந்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர் ” என்று  அந்த பதினான்கு சிலுவைப்பாடுகளின் சந்திப்புகளிலும் நாம் தவறாது சிலுவையின் முன்பாக வணங்கி ஆராதிக்கின்றோம்.
நேலும் அந்த பனிரெண்டு அப்போஸ்த்தலர்களின் விசுவாச அறிக்கையில் ஒன்றாக ” இவர் போஞ்சிபிலாத்தின் அதிகாரத்தினாலே சிலுவையில் அறையுண்டு பாடுகள்பட்டு மரித்து அடக்கம்பன்னப்பட்டார் ” என்னும் மறை உண்மையை நாமும் விசுவாச அறிக்கையாக செபிக்கின்றோம். இவ்வளவு பெருமைகளையும் தன்னகத்தே கொண்டது இந்த திருச்சிலுவை..
அதனால்தான் பலர் மேலைநாடுகளிளும் நம் நாட்டிலும் இந்த சிலுவையை தம் பெயராகவே வைத்துக்கொண்டுள்ளார்கள்.
     ஆதியில் ஆதமும் ஏவாளும் எப்போது கடவுளின் கட்டளையை மீறி அந்த நன்மை தீமை அறியும் ஞானப்பழத்தை உண்டார்களோ அப்போதே கடவுளுக்கு எதிராக கீழ்படியாமை  என்னும் பாவம் செய்து கடவுளின் கோபாக்கினைக்கு ஆளானார்கள். அதனால் அவர்கள் அந்த ஏதேன் என்னும் சொர்க்கபுரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்..அதுவரை இந்த பூமியில்  நின்றுகொண்டிருந்த சொர்க்கமானது மேலே… மேலே… உயரே… உயரே… கிளம்பியது. கடவுளின் சாபத்திலிருந்து தப்பிக்க தன்னை எப்படியாவது சொர்கத்திலேயே நிலை
நிறுத்திக்கொள்ள ஆதாமும் எதை எதையாவது பற்றிக்கொண்டு அங்கேயே நிற்கப்பார்த்தான்.. அவன் கையில் கிடைத்தது ஒரு ஆலிவ்மரக்கிளை. ஆனால் என்ன ஒரு பரிதாபம்…அந்த ஆலிவ் மரக்கிளையும் உடைந்துபோய் அவன் கையோடே வந்துவிட….ஏவாளும் அவனும் அந்த ஆலிவ் மரக்கொப்புடன் பூமியில் தொப்பென வந்து விழுந்தார்கள்.
       .சொர்க்கபுரியிலிருந்து அவர்களோடு இந்த பூமிக்கு கொண்டுவர அனுமதிக்கப்பட்டது இந்த ஆலிவ் மரக்கிளை மட்டுமே.. இந்த ஆலிவ் மரக்கிளை பூமிலியே வேரூண்றிக்கொண்ட இடமே ஜெத்ஸ்மெனித் தோட்டம்..இந்த ஆலிவ் மலையில் தான் நம் ஆண்டவராகிய யேசுநாதர் இரத்த வியர்வை வேர்த்ததும் காட்டிக்கொடுகப்பட்டதும் இங்குதான் நடந்தது. ஆதிகாலத்தில் நடந்த முதல்
கொலையும் ஆம்.. ஆதாமின் மகன் மூத்தமகன் காயீன் தன்தம்பி ஆபேலை கொலை செய்த இடமும் இதே ஆலிவ் மலையில் தான்.[இதனால் இந்த இடம் மரணப்பள்ளத்தாக்கு  என்றும் ஜோசப்பாத் பள்ளத்தக்கு என்றும் அழைக்கப்படுகின்றது.]
       அதினால்தான் நம் ஆண்டவறாகிய யேசுநாதரும் இந்த ஆலிவ் மலையிலியிலிருந்தே நம்மை மீட்ப்பதற்கான  தன் பாடுகளை இங்கிருந்தே ஆரம்பித்தார். ஆதாம் செய்த ஒரு நல்ல காரியத்தையும் நான் இங்கு சொல்லியே ஆக வேண்டும்…ஆதாம் தான் உண்ட அந்த ஞானப்பழத்தின் கொட்டையை [விதையை] தன்னோடே வைத்திருந்தான். தன்னுடைய மரணத்தருவாயில் தன் மூன்றாவது மகன் சேத்துவிடம் தன் மரணித்தவுடன் அந்த ஞானப்பழத்தின் விதையை தன் வாயில் வைத்து தன்னோடே அதையும் சேர்த்து புதைத்துவிடுமாறு கூறி சத்தியமும் வாங்கிக்கொண்டான். ஆதாம் மரித்தவுடன் அவன் ஆசைபட்டபடியே அந்த ஞானப்பழத்தின் விதையும் அவன் வாயிலே
வைக்கப்பட்டு புதைத்தார்கள். பல நாட்க்களுக்குப்பிறகு ஆதாம் புதையுண்டபிறகு அந்த இடத்திலிருந்து ஒரு மரம் கிளம்பியது..இதன் வம்சாவளியிளிருந்து வந்தது தான் திருச்சிலுவை மரம்.. பிறகு பல நூற்றாண்டுகளுக்குப்பின்னர் ஆதாமின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு கல்வாரி மலையின் அடியில் ஒரு கல் பெட்டியில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.
           இப்படிச்செய்தது யார் … எந்த காலத்தில் என்று சரித்திரம் எனக்குத்தெரியவில்லை.. ஆனால் பிதாப்பிதாவாகிய முதுபெரும் தந்தை அபிரகாம் தன் மடியில் ஆதாமின் சில எலும்புகளை எப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருந்தார் என்று சரித்திரம் கூறுகின்றது. அதினால்தான் ஆண்டவராகிய நம் யேசுநாதரும் தன் சிலுவைமரணத்தை இந்த கல்வாரி மலைமலேயே
வைத்துக்கொண்டார் எனவும் சிலுவையின் பாடுகளின்போது வழிந்த அவரது திரு இரத்தம் பூமிபிளந்து கீழே இறங்கி ஆதாமின் எலும்புகளை நனைத்தது என்று திருச்சபையின் வேதபாரகர்கள் கூறுகின்றார்கள்.
    இதைப்பற்றிய வேறு ஒரு கதையும் உண்டு. ஆதாம் மரணிக்கும்போது தன் மகன் சேத்துவை அழைத்து மிக்கேல் சம்மனசானவரிடம் சென்று தனக்கு ஆன்மாவுக்கு சுகமளிக்கும் பரிசுத்த தைலத்தை பெற்று வருமாறு அனுப்பினார் எனவும் ஆனால் மிக்கேல் சம்மனசானவர் அதை தர மறுத்து அதற்குபதில் நன்மை தீமை மரத்தின் விதையை சேத்துவிடம் கொடுத்து
இதைக்கொண்டுபோய் உன் தகப்பனிடம் கொடுத்து அவர் இறந்த சமயம் அவர் வாயில் இந்த விதையை வைத்து அவரோடு புதைத்துவிடு என்று கட்டளையிட்டு தன்னிடம் அதை  கொடுத்ததாகவும் ஆதாம் இறந்தபின் சேத் சம்மனசானவர் கூறியபடியே செய்ததாகவும் பிர்காலத்தில் ஆதாமின் வாயிலிருந்து முளைத்த மரமே சிலுவை மரத்தின் தாய் மரமாகும் என்றும் ஒரு கதை உண்டு.
     உண்மையில் யேசுவின் பாடுகளின்போது உபயோக்ிக்கப்பட்ட திருச்சிலுவையானது இப்போது நாம் பார்க்கும் சிலுவையைப்போன்றது அல்ல. இப்போது நாம் பார்க்கும்  சிலுவையானது ரோமர்களின் வடிவமைப்பிலானது. யேசுவின் திருச்சிலுவை ஆங்கில ” Y ‘ வடிவிலானது. பேரரசர் தாவீதுராஜாவின் காலத்தில் தான் ஆண்டவருக்கு கோவில் கட்ட முயற்சிக்கையில் அவரது வீரர்கள் ஒரு நெடும் மரத்தைக்கொண்டுவந்திருந்தார்கள்.. ஆனால் அந்த நெடுமரம் அவர் கட்டப்போகும் ஆலயத்திற்கு அதன் அளவின்படி நீட்டவசத்திற்கு
குறைவாகவும் அகல வசத்திற்கு அதிகமாகவும் இருந்ததால் தாவீது ராஜா இந்த மரத்தைப்பற்றி அதை பயன்படுத்தமுடியாதபடி இருந்ததால் மிகவும் வருத்தமுற்றார். இருப்பினும்  தன் மகன் சாலமோனிடம் இதைபற்றிக்கூறி அவர் காலத்தில் எதர்க்காவது உபயோகப்படுத்திக்கொள்ளும்படி கூறினார். சாலமோன் பேரரசரும் தன் காலத்தில் அந்த மரத்தை எப்படியும்உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணி அதுவரை அந்த மரத்தை கெதரோன் நீரோடைமீது பாலமாக இருக்குபடி அதை போட்டுவைத்தார்.. அந்த மரம் அதற்கென  அளவெடுத்ததுபோல் மிகச்சரியாய் பொருந்தியது. இந்த பாலமானது ஜெருசலேம் தேவாலயத்தையும் நகரத்தையும் மரணப்பள்ளத்தாக்கு என்னும் ஜோசப்பாத் சமவெளியையும்  இணைத்ததால் மக்களும் பெரும் உபயோகமாக இருந்துவந்தது.
       இப்படி இருக்கையில் ஒருநாள் சாலமோன் பேரரசரைக்காணவிரும்பிய எத்தியோப்பியாவைச்சேர்ந்த ஷேபா என்னும் மஹாராணி தன் பரிவாரங்களுடன் ஜெருசலேம் வந்தார். இந்த கெதரோன் பள்ளத்தாக்கைகடக்க அந்த பாலத்தின் மீது போடப்பட்டிருந்த மரத்தில் கால் வைத்தவுடன் அவளுக்கு ஒரு காட்சி ஒன்று அருளப்பட்டது..அதாவது சாலமோன் காலத்திற்குப்பிறகு ஏறகுறைய பதினான்கு சந்ததிகளுக்குப்பிறகு தோன்றப்போகும் யேசுநாதர் இந்த உலகினரின் பாவங்களைப்போக்க இந்த மரத்தின் மீதே சிலுவையில்  அடிக்கப்படுவார்… இந்த சிலுவைமரத்தின் மீதே பாடுகள்பலபட்டு மரணிப்பார் என்றகாட்சி அவளுக்கு அருளப்பட்டதும் அவர் உடனே அந்த சிலுவை மரமாகப்போகும் அந்தப்பாலத்தின்
மீது முகம் குப்புற விழுந்து இஸ்ராயேல் தேவனை ஆராதித்தார். இந்த நிகழ்ச்சியைக்கண்ட சாலமோன் பேரரசர் ஷேபாவிடன் என்ன நடந்தது ?… ஏன் நீங்கள் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று காரணம் கேட்க அவரும் தான் கண்ட காட்சிகளைப்பற்றி விவரித்தார். சாலமோன் பேரரசரின் ஞானத்தால் கவரப்பட்ட ஷேபா மஹாராணி அரசர் சாலமோனை  திருமணம் செய்துகொண்டு மெனெலக் என்பவரைப்பெற்றார்…மீண்டும் தன் தாய் நாட்டிற்கு செல்லும் போது சாலமோன் தன் வம்சவிருத்திக்காக ஷேபா மஹாராணிமூலம் பிறந்த தன்  மகன் மெனெலெக் பொருட்டு ஏறாளமான அன்பளிப்புகளோடு ஆயிரம் வேளையாட்க்கள் மற்றும் கோவில் குருமார்கள் இவர்களையும் அனுப்பினார். இந்த எத்தியோப்பிய யூதர்கள்  வம்சாவளி இப்படித்தான் ஆரம்பித்தது. அவர்கள் கருப்பினத்தைச்சேர்ந்தவர்களாயினும் அவர்களும் யூதர்கள் தான் எனவே அவர்கள் கருப்பு யூதர்கள் என்று  அழைக்கப்படுவதாக ஒரு தகவல் உண்டு. [ஷேபா மஹாராணியின் வம்சாவளிகள் இஸ்ரேலில் தங்கியவர்கள் இன்றும் யேசுநாதர் சிலுவையில் மரித்த திருக்கல்லறைப்பேராலயத்தின் மேல் விதானத்தில் தங்களுக்கென ஒரு இடம் அமைத்துக்கொண்டு யேசுவை ஆராதிக்கின்றார்கள். அந்த திருக்கல்லறை பேராலயத்தில் அவர்களுக்கென் தனி ஆலயம் இல்லை
எனவே அந்த பேராலயத்தில் மேல் பகுதியில் தான் இன்றளவும் வசிக்கின்றார்கள்.]
     சாலமோனனின் ஞானம் உலகப்பிரச்சித்தம். சாலமோன் பேரரசரின் ஞானம் வெகுவாக வேலை செய்தது. பிற்பாடு பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு தோன்றப்போகும்  யேசுநாதருடைய சிலுவையின் மரணம் இந்த உலக மக்களிடையே எவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்….யேசுநாதருக்கு சிலுவைச்சாவை ஏற்ப்படுத்திய தன் இனத்தைச்சேர்ந்த யூத மக்களை உலகின் பிற இனத்தைச்சேர்ந்த மக்கள் எவ்வளவு தூரம் வெறுப்பார்கள் என்று உணர்ந்த பேரரசர் சாலமோன் அப்படி ஒரு சம்பவம் தன் இன மக்களுக்கு நேரக்கூடது
என்று எண்ணி அந்த சிலுவைமரமாகப்போகும் அந்தபால மரத்தை உடனே அகற்றி ஜெருசலேமில்லுள்ள பெத்சாய்தா திருக்குளத்தில் போட்டு மூழ்கடித்தார். பிற்பாடு இந்த சம்பவம்  யாருக்கும் தெரியாமலே போய்விட்டது. அதாவது சரித்திரத்தில் மறக்கடிக்கப்பட்டது. ஆனால் உண்மையை எவ்வளவு காலம் தான் மூடிவைக்கமுடியும்.
    ஆனால் இந்த பெத்சாய்தா திருக்குளத்தில் ஏற்கனவே ஒரு சம்பவமும் மூடிவைக்கப்பட்டிருந்தது. நெகேமியாவின் காலத்தில் பரிசுத்த நெருப்பும் தேவாலயத்தின் பரிசுத்தப்பாத்திரங்களும் அவற்றின் பரிசுத்தம் கருதியும் பாதுகாப்பு கருதியும் இத்திருக்குளத்தில் மூழ்கடிக்கப்பட்டு இருந்தது. அன்றிலிருந்துதான் இந்த திருக்குளத்தில் குறிபிட்ட
நாளில் முதலில் குதிக்கும் ஒரு நோயாளி அவன் எப்படிப்பட்ட நோயாளியானாலும் சம்மனசுகலால் குணப்படுத்தப்படுவான் என்ற ஐதீகம் இருந்துவந்தது.[ இந்த திருகுளத்தில் முப்பது ஆண்டுகளாக காத்திருந்த ஒரு திமிர்வாதக்காரனை யேசு நாதர் குணப்படுத்தினார்.]
ஆக காலம் நிறைவுற்றது… யேசுநாதர் இந்த பூவுலகிற்கு வந்து நம்மை மீட்க சித்தம் கொண்டார். இந்த காலகட்டத்தில் போஞ்சிபிலாத்து ரோமை ஆளுனராக பாலஸ்த்தீனம்  வந்தான். இந்த ஜெருசலேம் மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையைத்தீர்க்க ஒரு பெரும் திட்டம் தீட்டினான்.. அதன்படி சீலோவிலுள்ள ஜிபியோன் [ the great waters of gibion ] துவங்கி ஜெருசலேம் நகரிலுள்ள பெத்சாய்தா குளம் வரை நெடும் குழாய்கள் அமைக்கப்பட்டு இத்திருக்குளத்தின் மீது ஒரு பெரும் நீர்த்தேக்கமும் அமைக்கபட்டது. அதர்க்காக இந்த திருக்குளம்
தூர் வரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. அப்போது நெகேமியாவின் காலத்தில் மறைத்துவைக்கப்பட்ட பரிசுத்த பாத்திரங்களும் பரிசுத்த நெருப்பும் அணைக்கப்பட்ட மரத்துண்டுகளும் மேலும் சாலமோன் காலத்தில் பாலமாக உபயோகிக்கபட்ட நெடுமரமும் இந்த பெத்சாய்தா திருக்குளத்திலிருந்து ரோமர்களாள் வெளிக்கொண்டுவரப்பட்டன. ஆனால் அவர்கள் அவற்றின்
முக்கியத்துவம் பற்றி அறியாதததால் அவற்றை தேவாலயத்திலேயே போட்டு வைத்தனர். அந்த நெடு மரம் மீண்டும் அதே இடத்தில் பாலமாக உபயோகிக்கப்பட்டது.
     இதன் மீது கடைசியாக பயணித்தவர் யேசுநாதர் தான். பெரிய வியாழன் அன்று இராப்போஜனம் முடிந்த பிற்பாடு யேசுநாதர் தன் சீடர்களுடன் இந்த பாலத்தைக்கடந்துதான்  ஒலிவ மலைக்குபோனார். அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் ஜெருசலேம் நகர் வரும்போது இந்த மரப்பாலம் அகற்றப்பட்டு சிலுவைமரமாக தயார்படுத்தப்பட்டிருந்தது.
    யேசுநாதரின் சிலுவை மரமானது ஐந்து பாகங்களைகொண்டதாக திருக்கட்சியாளர் புனித காத்தரின் எம்மரிக் கூறுகின்றார். நெடுமரமும் நெகாமியாவின் பரிசுத்த நெருப்பு பற்றிய  மரமும் அவர் பாதம் தாங்கியாக பயன்பட்ட மரம்.. திருச்சிலுவையை பூமியில் நிலை நிருத்திய ஆப்புகள் மற்றும் அவரது குற்றச்சாட்டுகள் தாங்கிய ” இவன் யூதர்களின் அரசன் ” என்று
பொறிக்கப்பட்ட மரம் என்று பல பாகங்களைக்கொண்டது யேசுவின் சிலுவை மரம்.. யாவும் பரமபிதாவின் திருச்சித்தப்படியே அவர் தீர்மானம் செய்தபடியே மிகச்சரியாய் நடந்தது.
    ஜெருசலேமில் இன்றைய யூதர்களின் பார்லிமென்ட் knesset என்று அழைக்கப்படுகின்றது. இந்த கட்டிடத்தின் பின் பகுதியில் அமைந்துள்ளது தான் திருச்சிலுவை மடாலயம்.  கோட்டையோ.. இல்லை… அரண்மனையோ என்று வியக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.. இந்த மடாலயத்தின் சரித்திரப்படி இந்த கோவிலின் சுவர்களிள்  திருச்சிலுவையைப்பற்றிய சரித்திரம் வரையப்பட்டுள்ளது. அதாவது பிதாப்பிதா லோத் என்பவர் காலத்தில் சோதோம் குமாரோ பட்டிணங்கள் பாவத்தால் சபிக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டது. அந்த நிகழ்சியின்போது லோத்தின் மனைவி ஆர்வமிகுதியால் நகரம் தீப்பற்றி எரிவதைப்பார்த்தாள்.. அவர்களுக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி எக்காரணத்தை  முன்னிட்டும் என்ன நடக்கின்றது என்று திரும்பிப்பார்க்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. அதையும் மீறி அவள் திரும்பிப்பார்த்தால் அவள் சபிக்கப்பட்டு உப்புச்சிலையாக
மாறிப்போனாள். அவள் உப்புச்சிலையாய் மாறிய உருவம் இந்த நிகழ்சிக்கு இன்றளவும் சாட்சியாய் நின்றுகொண்டிருக்கிறது.
      அதர்க்குப்பிறகு லோத் குடிபோதையில் தன் இரு மகள்களுடனும் பாவம் செய்தான். இந்த நிகழ்சிக்குப்பிறகு லோத் தன் குற்ற உணர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டு  தன் சகோதரன் அபிரகாமிடம் பரிகாரம் தேடினான். அபிரகாம் மூன்று மரங்களை தன்னகத்தே கொண்ட ஒரே விதையை தன் சகோதரன் லோத்துவிடம் கொடுத்து அந்த விதையை நட்டு தன் பாவங்களுக்குப்பரிகாரமாக தினமும் ஜோர்டான் நதியிலிருந்து நீர் கொண்டுவந்து இந்த மரத்தை வளர்க்க வேண்டும் என்று கட்டளை இட்டார். இந்த மரமே சிலுவை மரமாகும்.
     அது சிடார், பைன், மற்றும் சைப்பிரஸ் ஆகிய மூன்று மரங்களின் சேர்க்கையிலான ஒரே மரமாகும். லோத்தும் தினமும் ஜோர்டான் நதியிலிருந்து நீர் கொண்டு வந்து இந்த சிலுவை மரத்தை வளர்த்தார். இந்த சிலுவை மரத்தை வளரவிடாதபடிக்கு சாத்தான் லோத்துவை பல விதங்களில் சோதித்தது. ஏனென்றால் உலக மக்களின் மீட்பு இந்த  மரத்திலிருந்தே வரும் என்று அதற்கு நன்றாகத்தெரிந்திருந்தது. ஆனால் லோத் அசரவில்லை. மிகுந்த சிரமப்பட்டே இந்த மரத்தை வளர்த்துவிட்டர்.
     இந்த மரத்திலிருந்து நெடு நெடு என்று வளர்ந்திருந்த இரு நீண்ட கொப்புகள் மோயீசன் காலத்தில் வெட்டப்பட்டு இஸ்ராயே தேவன் தங்கியிருந்த பரிசுத்தபெட்டகத்தை தூக்கிச்செல்லும் நெடும் கழிகளாக பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் சாலமோன் காலத்தில் இந்த மரம் பாலமாகப்பயன் படுத்தப்பட்டது. யேசுநாதர் காலத்தில் அவரது சிலுவையாக பயன்படுத்தப்பட்டது. அந்த பரிசுத்த மரத்தில் தான் நம் ஆண்டவராகிய தேவன் யேசுக்கிரிஸ்த்து கொடும் பாடுகள் பல பட்டு மரித்தார்… அந்த பரிசுத்த சிலுவை மரம் வளர்ந்த இடம் இப்போது ஒரு குழியாக இருக்கிறது. அதன் மீது ஒரு பலிபீடமும் உள்ளது. அதுதான் திருச்சிலுவை மடாலயம்.
     இந்த திருச்சிலுவை மடாலயம் ஜஸ்டீனிய அரசரால் பைசாந்தியர் காலத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கி.பி. 615 ஆம் ஆண்டில் பெர்சியர்களாள் துவம்ஸம்  செய்யப்பட்டது. மீண்டும் அரேபிய்ர்களால் கி.பி, 796ஆம் ஆண்டில் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த கொடும் நடவடிக்கையில் இந்த மடாலயத்தைச்சேர்ந்த ஏராளமான துறவிகள் கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள். கி.பி, 11..12 நூற்றாஅண்டுகளில் ஜியார்கியாவைச்சேர்ந்த துறவிகள் இந்த மடாலயத்தை சொந்தமாக்கிக்கொண்டார்கள்.
    சிலுவை யுத்த வீரர்கள் இந்த நாட்டில் இருந்தவரை இம்மடாலயத்துறவிகளுக்கு யாதொரு பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருந்தார்கள். கி.பி. 1267 ஆம் ஆண்டு சிலுவை  யுத்த வீரர்கள் இந்த நட்டைவிட்டு தத்தம் நாடுகளுக்கு திரும்பியபின்னர் இந்த நாடு மம்மலுக்கர்கள் கையில் மாறிப்போனது. அவர்கள் இந்த சிலுவை மர மடாலயத்தை  தனதாக்கிக்கொண்டார்கள். இந்த மடாலயத்தை மசூதியாக்கினார்கள். கி.பி. 17 ஆம் நூறாண்டில் இந்த மடாலயம் ஜியார்ஜியகள் கையிலிருந்து கீழை ரீதி திருச்ச்பையினரின்  கைகளுக்கு மாறிப்போனது.         அன்றிலிருந்து இன்று வரை இம்மடாலயம் இவர்கள் வசமே உள்ளது.
             இந்த நாட்டுக்கு திரு யாத்திரையாக வரும் கிரிஸ்த்துவர்கள் இந்த மடாலயத்தை அவசியம் பார்த்துச்செல்கின்றார்கள். ஆனால் பல பேர்களுக்கு இம்மடாலயத்தைப்பற்றி ஒன்றும் தெரியாமலேயே பார்க்காமல் சென்றுவிடுகிறார்கள். எதற்கும் ஒரு குடுப்பினை வேண்டும்என்பது இப்படித்தான் போலும்.
    திருச்சிலுவை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது.?. இதற்கும் ஒரு சரித்திரம் உண்டு.!.
ரோமை சக்கரவர்த்தி கான்ஸ்டண்டைன்.. இவரது தாயார் பெயர் ஹெலெனா.. கான்ஸ்டண்டைன் சக்கரவர்த்தி கி.பி.312. ஆம் ஆண்டு டைபர் நதி மீது அமைந்துள்ள மெல்வியன்  பாலத்தின் மீது இவரது விரோதியான மேக்ஸ்ன்டியஸ் சக்கரத்தியுடன் போரிட்டு ஜெயித்த பின்னர் ரோமை முழுவதர்க்கும் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். அன்று நடந்த போருக்கு
முன்னர் இரவு இவருக்கு காட்சி ஒன்று அருளப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் எசுபியஸ் இவ்வாறு கூறுகின்றார். ” அந்த இரவில் சக்கரவர்த்திக்கு காட்சி ஒன்று தோன்றியது.  அதில் வானம் திறக்கக்கண்டு சிலுவை ஒன்று தோன்றியது. மேலும் வானினின்ரு ஒரு குரல் மிகத்தெளிவாக கேட்டது..
      .இந்த சிலுவை அடையாளத்தைக்கொண்டு நாளை நீ  ஜெயிப்பாய்.” சக்கரவர்த்தி உடனே எழுந்து தன் அரச முத்திரையான பொன் கழுகை உடனே மாற்றி அதர்க்கு பதில் அரசாங்க சின்னமாக சிலுவையை வைத்தார். அடுத்த நாள்
நடந்த போரில் பெரும் வெற்றி கண்டார். பிறகு கிரிஸ்த்துவராக மாறினார்..
அரசரின் மன மாற்றத்திற்குப்பிறகு நாடு முழுவதும் மனம் மாறி கிரிஸ்த்துவ தேசமானது. பேரரசரின் தாயார் கிரிஸ்த்துவராக மாறியபின் யேசுநாதரின் புண்ணிய சேத்திரங்களை தரிசிக்கவேண்டி ஜெருசலேம் வந்தார். அங்கு அவருக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்த்து. யேசுநாதரின் மறைவுக்குப்பின் அவர் பாடுபட்ட இடங்கள் அனைத்தும் அதன் சுவடே  தெரியாதபடி ரோமர்கள் காதல் தேவதை வீனுஸுக்கும் ஜுபிடருக்குமாய் கோயில் கட்டியிருந்தனர்.
     யேசுநாதர் சிலுவையில் கொல்லப்பட்ட இடம் கூட அடையாளம் தெரியாதபடி
அமைந்திருந்தது வீனஸ் ஆலயம். யேசுநாதர் இறந்து ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டபடியால் யாருக்கும் அதைப்பற்றிய அறிவோ அக்கறையோ இல்லாமல்  போய்விட்டது. இந்த 80 வயது ஹெலெனா அரசி எப்படியும் யேசுநாதரின் கல்லறையைக்கண்டுபிடிதேதீர்வது என்று கங்கணம் கட்டிகொண்டு யார் யாரையோ விசாரித்துப்பார்த்தாள்.
    ஒருவழியாக அந்த நாட்டில் வசித்துவந்த ஒருவர் மூலம் ஒரு உருப்படியான தகவல் கிடைத்தது. அதாவது யூதாஸ் என்னும் ஒரு கிரிஸ்த்தவனுக்கே யேசுநாதரின் கல்லறைபற்றி தெரியும் என்றும் அவனைவிட்டால் வேறு யாருக்கும் திருச்சிலுவைபற்றியோ சிலுவையில் அடித்த இடம் பற்றியோ யாருக்கும் எதுவும் தெரியாது என்றும் கூறினார். அது போதாதோ
அரசி ஹெலெனாவுக்கு.. ஆடக்களை அனுப்ப அவர்களும் அவனை அலாக்காக தூக்கிவந்துவிட்டார்கள்.. ஆனால் மனிதர் எதர்க்கும் அசைந்துகொடுக்கவில்லை..அரசியும் அவனுக்கு காசை காட்டிப்பார்த்தார். கெஞ்சியும் பார்த்தார்…அழுதும் பார்த்தார்.. மனிதர் எதர்க்கும் பணியவில்லை.. சரி… இனிமேல் இவனிடம் கெஞ்சி எந்தபயனும் இல்லை என்று
கண்டு அவனை போலீஸ் முறையில் விசாரிக்க ஆரம்பித்தார். அப்போதும் யூதாஸ் திருச்சிலுவையை பற்றிய எந்த குறிப்பையும் தரவில்லை. சரி இந்த முறை இனி பயன் தராது என்று எண்ணி அவனை ஒரு கிணற்றில் இறக்கி மூழ்கடித்து ஏழு நாட்க்கள் பட்டினி போட்டார்.. மனிதர் வழிக்கு வந்தார்.
            திருச்சிலுவை உள்ள இடத்தையும் கல்வாரிமலையில் யேசுநாதர்
சிலுவையில் அறையுண்ட இடங்களையும் காட்டினார். ஒரு ஆச்சர்யம் பாருங்கள்…யேசுநாதரின் காலத்திய யூதாஸ் யேசுவை காட்டிக்கொடுத்து யேசுவை சிலுவை சாவுக்கு  உட்படுத்தினான். ஆனால் அதே யூதாஸ் பெயரைக்கொண்ட ஒருவன் அரசி ஹெலினா காலத்தில் யேசுவின் சிலுவையைக்கண்டெடுக்க உதவி செய்கின்றான். இதை என்னவென்று
சொல்லுவது.. எல்லாம் அவன் செயல். உடனே செயலில் இறங்கினார் ஹெலினா அரசி. கல்வாரியில் யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் அமைந்திருந்த ரோமர்கள் கட்டியிருந்த வீனஸ் மற்ரும் ஜுபிடர்
தெய்வங்களின் சிலைகளையும் கோயில்களையும் உடைத்தெறிந்தார். யூதாஸ் சொல்லியபடி பெரும் தண்ணீர்த்தொட்டியில் மூழ்கடிக்கப்பட்டிருந்த மூன்று சிலுவைகளையும்,  சிலுவையில் சுவாமியை அறையப்பயன் படுத்திய ஆணிகளையும் கண்டு எடுத்தார்கள்..யேசுநாதரை சிலுவையில் அடித்த இடத்தில் பெரும் ஆலயம் ஒன்றை அமைத்தார்
     அரசி ஹெலினா..சரி… இந்த மூன்று சிலுவையில் எது யேசுநாதரின் சிலுவை ?
இதர்க்காக மூன்று சிலுவைகளையும் அருகருகே வைத்தார்கள். அப்போது அந்த நாட்டில் ஜெருசலமில் மரித்துப்போய் இருந்த ஒரு வாலிபனின் சடலத்தை ஒவ்வொரு சிலுவையின்  மீதும் கிடத்தினார்கள். முதல் மற்றும் இரண்டாவது சிலுவையின்மீது கிடத்தியபோது ஒன்றும் நடக்கவில்லை… ஆனால் மூன்றாவது சிலுவையின் மீது அந்த வாலிபனின் சடலம் கிடத்தப்பட்டவுடனே அந்த வாலிபன் உயிர் பெற்றான்.. உடனே நிச்சயமாயிற்று … அது யேசு நாதரின் திருச்சிலுவை தான் என்று.. அந்த திருச்சிலுவை உடனே மற்ற  சிலுவைகளினின்று தனியே பிரிக்கப்பட்டது.
    மேலும் அந்த நாட்க்களில் ஜெருசலேம் நகரில் உயிர் போகும் நிலையிலிருந்த ஒரு மூதாட்டியை கொண்டுவந்து இந்த திருச்சிலுவையின் மீது கிடத்தினர். அவள் உடனே முழு  நற்சுகம் பெற்றார். அரசி ஹெலெனா அடைந்த மகழ்சிக்கு அளவே இல்லை. திருச்சிலுவை முற்றிலும் அது யேசுநாதருடையதுதான் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த திருச்சிலுவை கண்டுபிடிக்கபட்ட பின்னர் யூதாஸ் ஒரு நல்ல கிரிஸ்த்துவரானார். தன் பெயரை குரியாக்கோஸ் என்று மாற்றிக்கொண்டார்.. பிற்காலத்தில் ஜெருசலேமில் ஒரு பிஷெப் ஆக  உயர்த்தப்பட்டார்.
    பிற்பாடு அரசி ஹெலினா ரோம் சென்றார்.. போகும்போது திருச்சிலுவையின் இருபகுதிகளையும் யேசுவின் சில முள்முடிகளையும் யேசுவை அறையப்பயன் படுத்திய ஆணி களையும் தன்னுடன் ரோமுக்கு கொண்டு சென்றார்.. ஜெருசலேமிலிருந்து ஒரு கப்பல் நிறைய புண்ணிய பூமியின் மண்ணை எடுத்துக்கொண்டு போய் ஒருபெரும் ஆலயம் அமைத்து அதில் யேசுவின் குற்றச்சாட்டு எழுதப்பட்ட இவன் யூதர்களின் அரசன் என்ற பலகையும் திரு ஆணிகளும் நல்ல கள்ளனின் சிலுவையின் ஒரு பகுதியும் முள்முடியின் சில பகுதி களும், இன்றளவும் நாம் காணும் படி இந்த புனித சிலுவை ஆலயத்தில் {church of the holy cross jerusalamme. rome } வைத்துள்ளார்.
   ஆரம்பத்தில் அரசி ஹெலெனா யேசுவின் இந்த பரிசுத்தப் பொருட்க்களை தன் அரண்மனையின் ஒருபகுதியில் இருந்த தனி ஆலயத்தில்தான் வைத்திருந்தார். பிறகு பக்தி  முயற்சியும் புதுமைகளும் அதிகரிக்க அதிகரிக்க பக்தகோடிகளின் வருகையும் அதிகரிக்கவே அந்த சிற்றாலயத்தை பேராலயமாக மாற்ற வேண்டியதாயிற்று. பிறகு சில  வருடங்களுக்குப்பின்னர் பேரரசி ஹெலென இந்த பூவுலகிற்கு தான் வந்த வேலை முடிந்ததென்று தன் கண்களை மூடி மீளாத்துயில் கொண்டார்.
      அவரது சமாதி ரோமைக்கு வெளியில் வியா லாபிகான [via labicana ] என்னுமிடத்தில் உள்ளது. இவரது அர்ச்சிஸ்ட்ட பண்டங்கள் அடங்கிய பெரும் பெட்டி ஒன்று [ pio clamentine vatican museum]
பியோ க்லெமென்டின் வத்திக்கான் மியூஸியத்தில் உள்ளது.
” இவன் யூதர்களின் அரசன் ” நிரூபணம் ஆயிற்று. யேசுவின் சிலுவைசாவுக்கு இவன் யூதர்களின் அரசன் என்ற குற்றச்சாட்டை ஒரு பலகையில் நான்கு மொழிகளில்  பொறித்து வைத்தான் போஞ்சிபிலாத்து. அவன் எதை நினைத்து எழுதிவைத்தானோ என்னவோ ஆனால் அது மிகச்சரியாக பலித்தது. இந்த பாலஸ்தீன நாடு என்றுமே  நிம்மதியாக இருந்தது இல்லை போலும். அது பலகாலகட்டங்களிள் பல அரசுகளில் மாறி மாறி வீழ்ந்தது. இப்படி ஒரு முறை பெர்சியர்கள் கையில் வீழ்ந்த போது அவர்கள் பாலஸ்தீனத்தை கொள்ளையடித்துச்சென்று அதிலும் முக்கியமாக யேசுவின் திருச்சிலுவையை தூக்கிச்சென்றுவிட்டார்கள். இதனால் பெரிதும் மனம் வெறுப்புற்றார்கள்
கிரிஸ்த்துவர்கள்.
     அப்போதைய கிரிஸ்த்துவ பேரசராக இருந்த பைசாந்திய மன்னர் ஹிராக்ளிஸ் பெர்சிய மன்னர் கொர்சாவுடன் தனது சிலுவையின் கொடியுடனே போரிட்டு வெற்றி கண்டார். அத்தோடு அவர் யேசுவின் திருச்சிலுவையை மீட்டு பத்திரமாகவும் மிகவும் ஆடம்பரமாகவும் ஜெருசலேமுக்கு கொண்டு வந்தார். அதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல்  வந்த திருச்சிலுவையானது ஜெருசலேம் நுழை வாயிலில் வந்தபோது நகராமல் நின்றுவிட்டது. மன்னர் எவ்வளவு முயன்றும் திருச்சிலுவையை அசைக்ககூட முடியவில்லை. மன்னர்
வந்த தேர் குதிரைப்படை எதுவும் நகரக்கூட முடியவில்லை.
     இதர்க்கான காரணம் யாவருக்கும் புறியவில்லை. அப்போது மன்னருக்கு மட்டும் ஒரு அசிரீரீ கேட்டது போலும்.. இவன் யூதர்களின் அரசன்… என்ற குரலொலி அந்த  ஜெருசலேம் நகர் முழுவதும் எதிரொலிப்பதுப்போல் இருந்தது. இப்போது மன்னர் ஹிராக்க்ளிஸுக்கு விஷயம் புரிந்துவிட்டது. இந்த இஸ்ரேலிய நாட்டில் யேசுவே அரசர்… இவர் யூதர்களின் அரசன் என்ற ஒலி மன்னருக்கு மட்டும் தெளிவாகக்கேட்டது… இந்த நாட்டில் இவர் … யேசுநாதர் அரசர் என்றால் அப்புறம் நான் யார்…. இந்த நசரேத்தூர் யேசுவுக்கு முன்னால் நான் எம்மாத்திரம். அவருக்கும் முன்னால் நான் ஒன்றுமே இல்லை. அவர் இந்த பாலஸ்தீனத்திற்கு மட்டும் அரசரல்ல. இந்த உலகம் முழுவதையும் இந்த அண்ட சராசரங்களையும் படைத்த தேவாதி தேவன். இந்த வையகம் முழுவதற்கும் பேரரசர்…
     நான் அவருக்குமுன்னால் ஒரு சாதாரணமான பிரஜை..இந்த எண்ணம் வந்த உடன் அரசன் ஹிராக்ளியுஸ் தடாலென தேரிலிருந்து இறங்கினான்.. அரசருக்குறிய  மணிமுடி செங்கோல் ஆடம்பரமான அணிகலண், பாதரட்சைகள் அனைத்தையும் அகற்றினான். வெறும் காலுடன் யேசுவின் திருச்சிலுவையை தூக்கிக்கொண்டு ஜெருசலேம் நகர்  முழுக்க சுற்றிவந்து திருச்சிலுவையை அந்த கொல்கொத்தா மலையில் யேசுவின் திருக்கல்லறை பேராலயத்தில் கோவிலில் பத்திரமாக வைத்தான். திருச்சிலுவை மீண்டும் அதன்  இடத்தில் நிலைபெற்றது.
இப்படியாக ஒரு காலத்தில் அவமானத்தின் அடையாளமாக இருந்த சிலுவை வெற்றியின் அடையாளமாக பிறகு கருதப்பட்டது.
                      ” வானில் தோன்றிய சிலுவை.”
   இது கதை அல்ல. நிஜம். இந்த உண்மை நிகழ்ச்சி நடந்த இடம் ஜெருசலேம்.. நிகழ்ந்த ஆண்டு கி.பி. 351 மே மாதம் 7 ஆம் தேதி காலை ஒன்பது மணிமுதல்..
அதாவது புனித சிரில் என்பவர் மாக்ஸிமஸ் என்பவரை அடுத்து ஜெருசலேம் நகர ஆயராக பணி ஏற்ற போது அப்போது கொன்ஸ்டான்ட்டி நெப்பிள்ஸின் மன்னராக பதவி வகித்தவர்  புனித பெரிய கொன்ஸ்டான்ட்டி நேபிள்ஸின் மகன் கொன்ஸ்டான்டினுஸ் என்பவர்.
     அந்த ஆண்டின் புனித வாரத்திற்குப்பின் பெந்தகோஸ்த்தே திருவிழா அன்று ஜெருசலேம் நகரத்தில் பல விதமான அருங்குறிகளோடு வானில் ஒரு பெரும் சிலுவை அடையாளம்  தோன்றியது. ஏதோ பளிச்சென்று மின்னல் மின்னது போல அது தோன்றி மறையவில்லை..அன்றைய தினம் காலைப்பொழுதில் வானம் தெளிவாக இருக்க கண்டார்கள் அன்றைய  ஜெருசலெம் மக்கள்..வானில் ஒரு பெரும் சுடர் ஒன்று சூரியனை விட பிரகாசமாக தென்பட்டது. அது கொல்கொத்தா மலையிலிருந்து ஆரம்பித்து ஒலிவ மலை வரை சுமார் இரண்டு
மைல் தொலைவு வரை நீண்டது.. வெண் பிரகாசமான கதிர்கள் ஒன்று சேர்ந்தாற்போல் மிகத்தெளிவாக வானில் வரைந்தாற்போல் ஒரு பெரும் சிலுவை அடையாளம் தோன்றியது.
     பல மணி நேரம் அதன் சுடர்கள் வானில் நிலைபெற்று நின்றது..இதைக்கண்ட மக்கள் திகிலுற்றனர். கிரிஸ்த்துவர்கள், கிரிஸ்த்துவர்கள் அல்லாதோர், பயணிகள், வியாபாரிகள் என்று  பலதரப்பட்ட மக்கள் இந்த காட்சியைக்கண்டார்கள்.. மிகுந்த திக்பிரமையும் அக்சமும் அவர்களை ஆட்கொள்ளவே அனைவரும் தேவாலயத்திற்குச்சென்று யேசுவை வழிபட்டனர்.
கிரிஸ்த்துவர் அல்லாதோரும் யேசுவை வழிபட்டனர்.. முக்கியமாக யேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் பலரும் அவர் தம் மனதில் அச்சம் மேலிட யேசுவை மெசியாவாக ஏற்றுக்கொண்டு அவரை வழிபட்டனர்.
யேசுவின் மீது நம்பிக்கைகொண்டோ அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுற்று தேவாலயங்களில் ஆண்டவராகிய யேசுவுக்கு புகழ்ச்சியும் ஆராதனையும் செலுத்தினர். நன்றிப்பாக்களை பாடினர். அந்த நேரத்தில் அவர்கள் மனதில் நினைவுக்கு வந்த மத்தேயுவின் நாற்செய்தி 24.30 வாசகங்கள் தான்.
     ” பின்பு வானத்தில் மானிடமகன் வருகையின் அறிகுறி தோன்றும்.
    அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்ச்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின் மீது வருவார். இதைக்காணும் மண்ணுலகிலுல்ல எல்லாக்குலத்தவரும்  மாரடித்துப்புலம்புவர்.” அப்போது ஜெருசலேமின் அயராக இருந்த புனித சிரில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் பதிவு செய்து பேரரசர் கொன்ஸ்த்தாந்தினுஸுகு ஒரு கடிதமாக  அனுப்பினார்.
   இந்த வானில் தோன்றிய சிலுவையைப்பற்றி அக்காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்கள் சொசொமொன், தியோஃபனெஸ், யூடிகியுஸ், நைஸ் நகர ஜான், க்ல்ய்காஸ்  ஆகியோர் புனித சிரில் ஆயரின் கூற்றை ஆமோதிக்கின்றர்கள். மேலும் பலர் கிறிஸ்த்துவ மதாத்தை சாரதவர்களான் சாக்ரடீஸ், ஃபிலஸ்தொர்கியுஸ் போன்றவர்களும் கிரானிக்கல்ஸ்  அலெக்சாண்டிரியா என்ற அமைப்பும் கூட இந்த நிகழ்ச்சியை அக்கலத்திலேயே பதிவு செய்திருக்கின்றது.
         சரித்திர ஆசிரியர் ஃபிலொஸ்தொர்ஜியுஸ் இவ்வாறு எழுதுகிறார்.. ” இந்த ஆண்டின் பெந்தகோஸ்த்தே திருவிழா அன்று காலை ஏறக்குறைய ஒன்பது மணியிலிருந்து வானில் தோன்றிய பிரகாசமான சிலுவை அடையாளமானது கொல்கொத்தா என்னும் கல்வாரி மலைமுதல் ஆரம்பித்து ஏற்க்குறைய இரண்டு மைல் நீளத்திற்கு வியாபித்து ஒலிவ மலை வரை  நீண்டது. அதற்க்கேற்றார்போல் சிலுவையில் அகலமும் இருந்தது. இந்த புனித சிலுவையை சுற்றி ஒரு பெரும் ஒளிவட்டம் தோன்றியது. அது அந்த சிலுவைக்கு ஒரு பெரும் மணிமகுடம்
போல் விளங்கிற்று. இந்த ஒளிவட்டம் சிலுவையில் பாடுகள் பலபட்டு மரித்து உயிர்த்தெழுந்த யேசுவின் வெற்றியையும் அவரது கருணையையும் குறிப்பதாக நம்பப்படுகின்றது.  இந்த யூதர்கள் யேசுவைகண்டு பயங்தார்களோ இல்லையியோ ஆனால் அவர்களது அரசாங்க வீரர்கள் பயந்தனர் என்பது நிச்சயம். அந்த வீரர்கள் மட்டுமல்லாது மாமன்னன் கான்ஸ்டான்டினுஸ் இந்த யேசுவின் சிலுவையை தன் அரசாங்க இலைச்சினையாகக்கொண்ட சிலுவையின் அடையாளக்கொடியைகண்ட அவரது எதிரி அரசன் மக்னென்டியுஸும்
அவன் கூட்டாளிப்படையினரும் மிகுந்த அச்சப்பட்டனர். முதல் முறை மாமன்னன் கொன்ஸ்ட்டாண்டினுஸிடம் புறமுதுகு காட்டி ஓடிய மக்னென்டியுஸ் இரண்டாம் முறையும் அவரோடு போரில் ஏடுபட்டான். ஆனால் சிலுவையிஎன் அடையாளம் வெற்றியின் அடியாளம் என்று மாமன்னர் கொன்ஸ்ட்டான்டினுக்கு மிகத்தெளிவாக உணர்த்தப்பட்டதால் அவர் அந்த சிலுவை அடையாளமிட்ட கொடியாலேயே போரை ஆரம்பித்து மக்னென்டியுஸை இரண்டாம் முறையும் முறியடித்தார். எதிரி அரசன் மக்னென்டியுஸ் தோற்று [இன்றைய பிரான்ஸ்
தேசத்திலுள்ள லியோன் நகருக்கு] ஓடிப்போனான். சிலர் அவன் டைபர் நதியில் விழுந்து செத்தான் என்றும் கூறுவர். சிலுவையிஎன் அடையாளம் தோல்வியின் அடையாளமில்லை.
அது வெற்றியின் அடையாளம்.[ ஆதாரம். .ecclesiastical history..book III. chapter III..XXVI ]
இதே கருத்தைத்தான் அக்காலத்தில் வாழ்ந்த சாக்ரட்டீஸ் என்பவரும் கூறுகின்றார். இவர் வானில் தோன்றிய ஒளிவட்டத்தோடு சிலுவைஅடையாளத்தை சுற்றி ஒரு மா பெரும்
வர்ணஜாலமாக rainbow ஒன்று தோன்றியாதாகவும் கூறுகின்றார். மக்கள் மிகுந்த அச்சமுற்றனர்.. தேவாலயங்களுக்குச்சென்று யேசுகிரிஸ்த்துவை ஆராதித்தனர். யேசுவை நம்பாத யூதர்கள் பலரும் கூட யேசுவை தங்கள் மெசியாவாக ஏற்றுக்கொண்டதாகக்கூறுகின்றார்.
[ ஆதாரம்...ecclesiastical history..book IV chapterV.]