Sunday, December 22, 2013

" 300 வருடம் தூங்கியவர்கள்."



" 300 வருடம் தூங்கியவர்கள்."

" நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக்கெடுத்ததுடன் தானும் கெட்டான்.
சிலர் அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஸ்ட்டம் இல்லை என அலுத்துக்கொள்வார்..
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்...
சில பொருப்புள்ள பெரியோரின் தூக்கத்தினால்...
பல பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா." ..கவிஞர் கண்ணதாசன்.
இந்தப்பாடல் அமரத்துவம் வாய்ந்தது. எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது. இந்தப்பாடலைக்கேட்ட மாத்திரத்தில் யாருக்கும் தூக்கம் பறந்தோடிவிடும். அவ்வளவு உத்வேகமான பாடல் இது. ஆனால் இந்தப்பாடல் சுமார் 1700 வருடங்களுக்கு முன் வாழ்ந்து 300 வருடங்களாக தூங்கியவர்களுக்கு பொருந்தாது. காரணம் அவர்களை அவ்வளவு காலமும் தூங்க
வைத்தது கடவுள். இந்த மனித இயல்பையும் மீறி...உலக நியதியையும் மீறி... இயற்கையையின் விதியையும் மீறி ஒரு ஏழு பேர் சுமார் 300 ஆண்டுகளாய் அன்ன ஆகாரமில்லாமல் காற்றும் இல்லாமல் தூங்கினார்கள் என்றால் கடவுள் தன் வல்லமையை வெளிப்படுத்தும் பொருட்டே அவர்களை அவ்வளவு காலமும் தூங்க வைத்திருந்தார் என்றால் இதை நாம்
நம்பித்தான் ஆக வேண்டும்...இனி நாம் கதைக்கு செல்வோம்...
             அன்றைய கான்ஸ்டாண்டி நேபிள்ஸ் [ இன்றைய இஸ்தான்புல்..துருக்கி] சக்கரவர்த்தி தேசியன் தன் அரசாங்க விஷயமாக எப்பேஸுப்பட்டிணம் விஜயம் மேற்கொண்டுள்ளார்   என்றதுமே அந்த எப்பேஸுப்பட்டிணம் சிறந்த முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே செல்வ செழிப்பால் கொழித்திருந்த அந்தப்பட்டிணம் ரோமர்கள் ஆதிக்கத்தில் பெரும்   வெற்றித்திருநகராக திகழ்ந்தது.. கல்வி, கேள்வி.கலை.சுகாதாரம், மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம் அனைத்திலும் சிறந்து விளங்கிய அந்த துறைமுகப்பட்டிணமாகிய எப்பேசு
பட்டிணம் ரோமர்களுக்கு பெரும் பெருமைதேடித்தத்தது.
       கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடையில் வலியவந்த அதிகாரத்தை கைப்பற்றிய திராஜன்  தேசியுஸ் ராயன் தன் பெருமையை நிலை நாட்டும் பொருட்டு இந்த எப்பேசுப்பட்டிணத்தில் தன் கப்பலில் இருந்து இறங்கினான். பெரும் ஆரவாரமாக துறைமுகத்தில் இருந்த
சிப்பாய்களும் பொது மக்களும் அவனை வரவேற்றார்கள். எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்கள் வெள்ளம் அவன் மீது கொண்ட பாசத்தினால் வாழ்க... வாழ்க... தேசியுஸ் ராயன் வாழ்க...  ரோமர்கள் ஆதிக்கம் வாழ்க...காத்தியர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்து வெற்றி கொண்ட வீராதி வீரர் வாழ்க என்று பெரும் ஜெய கோஷங்கள் எழுப்பினார்கள்...ரோமைய சிப்பாய்களின்  ராணுவ அணி வகுப்புகளும்..இசை வெள்ளமும் காண்போரை மட்டுமல்லாது அரசன் தேசியுஸ் ராஜனையும் மகிழ்ச்சிகொள்ள வைத்தது. தன் இன்முகத்தால் எல்லப்பக்கமும்   சூழ்ந்திருந்த மக்களை கை அசைத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்துவந்த ராஜனுக்கு ஆங்காங்கே தெரிந்த சிலுவை அடையாளம் கொண்ட தேவாலயங்கள் அவன் முகத்தில் கவலை
ரேகையை தோற்றுவித்தன.
        காரணம் இல்லாமல் இல்லை. அவனுக்கு கிறிஸ்த்துவர்களை கண்டாலே பிடிக்காது..அவன் காலத்தில் அலை அலையாய் மக்கள் கிரிஸ்த்துவத்துக்கு மாறினார்கள். ரோமர்களுக்கு  அக்காலத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிர்ப்புகிளம்பி தனித்தனி நாடுகளாகப்பிறிந்து போகக்கூடிய சூழ்நிலை இருந்ததால் மக்களை ஒன்றுபடுத்தும் பொருட்டு தேவையான கடும்
நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய சூழ்நிலை இருந்ததது. இந்த நிலையில் கிறிஸ்த்துவம் ஒன்றுபோல் எல்லா நாடுகளிலும் அலைஅலையாய் பெருகவே எங்கே இவர்கள் எல்லாம்   ஒன்றுகூடி கிளர்ச்சி செய்து நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி அரசாங்கத்தை கவிழ்த்துவிடுவார்களோ என்ற பயம் காரணமே இல்லாமல் அவர்களுக்கு ஏற்பட்டது. கிறிஸ்த்துவத்தை அவர்கள்
சரியாக புறிந்துகொள்ளாததே அதற்குக்காரணம்..மீளவும் அரசாங்கப்பிரதிநிதிகள் நாடாளும் சக்கரவர்த்திகளுக்கு தவறான போதனைகளை தங்கள் சுய நலன்களுகாக போட்டுக் கொடுத்ததும் ஒரு காரணம். இதன் காரணமாக கிறிஸ்த்துவம் ரோமை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. எப்படியாவது எந்த விதத்திலாவது மக்கள் ஒருமித்த கருத்துகளுகாக ஒன்று  கூடாதிருக்க இப்படியும் ஒரு காரணம் சொல்லப்பட்டது. ரோமைய குடி உரிமைமக்கள் தங்கள் ராஜ விசுவாசத்தை காட்டவும் தங்கள் தெய்வங்களை மறவாதிருக்கவும் ரோமையின்
ஆதிக்கத்திலிருந்த மக்கள் அனைவரும் கட்டாயமாக சத்தியபிரமாணம் எடுக்க வலியுறுத்தப்பட்டார்கள். அரசனையும் தெய்வங்களையும் ஒன்றாக இணைத்து கடவுளுக்குறிய   மரியாதையும் ஆறாதனையும் செய்விக்க வற்புறுத்தப்பட்டார்கள்.. அதற்கு உடன்படாதோர்கள் ராஜ விசுவாசமற்றோர் என முத்திரைகுத்தப்பட்டு கொடுமையன மரணத்திற்கு தீர்வை
இடப்பட்டனர்.
          அன்றைய கான்ஸ்டாண்டினேபிள்ஸ் பட்டிணம் ரோமுக்கு வெளியே மிகவும் தொலை தூரத்தில் இருந்ததால் கிறிஸ்த்துவம் இங்கே வெகுவாகப்பரவி இருந்தது. அதன் ஆதிக்கத்தில் இருந்த எப்பேசு பட்டிணம் பல அப்போஸ்த்தலர்கள், புனித பால் மற்றும் புனித தெகீலா போன்றோரின் ஊழியத்தால் கிறிஸ்த்துவ மதம் மிகவும் செழிப்பாக பரவி இருந்தது. யேசுநாதரின்   தாயார், அவரது அன்புசீடர் புனித அருளப்பர், சுவிஷேஷகறான புனித லூக்கா ஆகியோரின் புனித கல்லரைகள் இந்த எப்பேசுஸ் பட்டிணத்தில் இருகின்றன. இதில் தேவ  தாயாரின் கல்லரை இங்கு இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் கடைசியாய் வாழ்ந்து மரித்த வீடு இங்கு உண்டு.
      இங்கு கிறிஸ்த்துவம் மிக ஆழமாக வேறூன்றியுள்ளதைக்கண்ட அரசன் திராஜன் தேசியன் மிகவும் கோபம் கொண்டான். தன் அரசாங்க அதிகாரிகள் அனைவரையும் ஒன்றுகூட்டி  சரியாக வசைபாடினான்.இந்த எஃபேசுப்பட்டிணத்தில் ரோமைய அரசாங்க ஆணை சரியாக அமுல்படுத்தாதன் காரணம் என்ன? என்?. என்று வார்த்தையில் வறுத்தெடுத்துவிட்டான்.  அவர்கள் சொன்ன பதில் அரசனை திடுக்கிட வைத்தது.. " அரசே இந்த எப்பேசுப்பட்டிணத்தின் இளவரசர்கள் என்னும் அளவிற்கு பெரும் அதிகாரமும் செல்வமும் கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த ஏழுபேர் கிறிஸ்த்துவமதத்தை பின்பற்றியதால் மக்கள் எல்லோரும் அவர்களிப் பின்னால் போய்விட்டர்கள்... மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீதிருந்த பயமும்   போய்விட்டது. பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்களே அனைவருமாக கிறிஸ்துவர்களாகிப்போனதால் அரசாங்கத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லாம் அந்த ஏழுபேர்களால்  வந்த வினை" என்றார்கள்..திராஜன் தேசியன் கண்கள் கோவைப்பழம்போல் சிவந்தன.." கூப்பிடு அந்த ஏழுபேர்களையும்... அவர்களை என்ன செய்கின்றேன் பார்" என்று கர்ஜித்தான்
     திராஜன் தேசியன். ராயனின் உத்திரவின்பேரில் அந்த சகோதரர் ஏழுபேரும் கைது செய்யப்பட்டு அரசன் முன் விசாரணைகாக நிறுத்தப்பட்டனர்.ஒவ்வொருவராக பெயர் சொல்ல  அழைக்கப்பட்டனர்.
" மேக்சிமியன் " " உள்ளேன் ஐய்யா"
" மால்க்குஸ் " " உள்ளேன் ஐய்யா"
" மார்ட்டின் " " உள்ளேன் ஐய்யா"
" செராபின்" " உள்ளேன் ஐய்யா"
" ஜான் " " உள்ளேன் ஐய்யா"
" டயோனிசு " " உள்ளேன் ஐய்யா"
"கான்ஸ்டன்டைன் " " உள்ளேன் ஐய்யா"
இந்த ஏழு பேரையும் ஏற இரங்கப்பார்த்தான் அரசன் தேசியன். அடுத்த கேள்வி " உங்களில் மூத்தவன் யார்?"
" ஐய்யா நான் தான் ... என் பெயர் மால்குஸ் " என்றான். அடுத்த கேள்வி " நீங்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளா?"
" இல்லை ஐய்யா... நானும் என் தம்பி மால்குசும் உடன் பிறந்தவர்கள்.. மற்றவர்கள் என் சித்தப்பா மற்றும் பெரியப்பா பிள்ளைகள்.."
" உன் தகப்பனார் யார்"
" ஐய்யா என் தகப்பனார் தான் இந்த ஊரின் ஆளுனர்.. அவர் இப்போது இல்லை . அவர் இறந்துவிட்டார். என் தாயாரும் இப்போது இல்லை" என்றான் மாக்சிமியன்.
" உங்களை நினைத்தால்தான் பாவமாக இருகின்றது..நான் உங்கள் மேல் மிகவும் கரிசனம் உடையவனாக இருகிறேன். நீங்கள் ஏன் கிறிஸ்த்துவர்களாக மாறினீர்கள்?"
" அரசே, கிறிஸ்த்துவம் என்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்டது. யேசுகிறிஸ்த்துவே அதன் கடவுள்...அவரே இந்த உலகைப்படைத்தவர்...வானமும் பூமியும் அவரது படைப்புகளே.இந்த
உலகிலும், நீரிலும் நிலத்திலும் வாழ்பவை, காண்பவை காணாதவை அனைத்தையும் படைத்தவர் அவரே...அவர் எங்களை அழைத்தார்.. அவரது அழைப்பை நாங்கள்   ஏற்றுக்கொண்டோம்."
" அரசே இந்த மாக்ஸிமியன் பேச்சில் வல்லவன்... இவனிடம் பேச்சுக்கொடுத்தால் நீங்கள் அவன் வயமாகிவிடுவீர்கள். இப்படித்தான் அவன் பல பேர்களை கிறிஸ்த்துவர்களாக  மாற்றிவிட்டான் . இவனிடம் பேச்சுக்கொடுப்பதை தவிர்ப்பது தங்களுக்கு நல்லது" என்றான் அரண்மனை திவான்.
மேலும் அரண்மனை திவானை பேச விடாமல் தன் கண் அசைவின் மூலம் தடுத்தார் மன்னர் தேசியன். " மாக்ஸிமியா... உனக்கு சரித்திரம் சரியாகத்தெரியவில்லை என நினைகிறேன்..உன் யேசுநாதர் எப்படி இறந்தார் தெரியுமா.? எங்கள் அகஸத்து ராயனின் பிரதிநிதியான ஆளுனர்
போஞ்சிபிலாத்து பாலஸ்த்தீனத்தில் பதவி வகித்தபோது அவரால்தான் யேசுநாதருக்கு சிலுவை சாவு என்னும் கேவலமான மரணம் விதிக்கப்பட்டது. அதன்படி அவரை சிலுவையில் அறைந்து கொண்றனர். போதாததற்கு அவர் கள்வர்களுள் ஒருவறாக எண்ணப்பட்டார்...இவர் எல்லாம் கடவுள் என்றால் நான் வணங்கும் அப்போல்லோ, ஜுபிடர் போன்ற தெய்வங்களை
எல்லாம் என்ன வென்று சொல்வது" என்றான் மன்னன் திராஜன் தேசியன்.
" அரசே தங்களிடம் வாதாடுவதாக தவறாக நினைக்க வேண்டாம்...தாங்கள் வணங்கும் அப்போல்லோ..ஜூபிடர்..வீனுஸ் போன்ற தெய்வங்கள் எல்லாம் உயிர் இல்லாத கிரஹங்கள்  இவற்றைப்படைத்ததே எம் யேசு கிறிஸ்த்துதான். அவர் கள்வர்களும் ஒருவறாக எண்ணப்படுவார்..அவர் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவார் என்பதை எல்லாம் யேசுநாதருக்கு
முன்பே 800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இசையாஸ் இறைவக்கினர் அவறைபற்றி எழுதிவைத்துவிட்டார். உங்கள் தெய்வங்களின் சிலைகள் எல்லாம் வெறும் கல்லும் மரமும்   ஆகும்.. இவை அனைத்தும் அக்கினியில் போடுவதற்கு மட்டுமே பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது. மேலும் எம் கடவுள் யேசுநாதர் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
இதற்கும் ஆதாரம் இருகின்றது. யேசுநாதர் மட்டும் சொன்னபடியே அவர் மரித்து மூன்றாம் நாள் உயிர்தெழாமல் இருந்திருந்தால் நாங்கள் அவரை நம்பியும் இருக்க மட்டோம்... கடவுளாகவும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டோம்" என்றான் மாக்ஸிமியன்.
       மாக்சிமியனின் இந்த நியாயங்களை ஏற்றுக்கொள்லவில்லை மன்னன் தேசியன்.." போதும் மாக்சிமியா...உன் பேச்சு அளவுகடந்து போகின்றது. இத்தோடு நிறுத்திக்கொள் உன்   பிரசங்கத்தை. எனக்கு ஒரே பதில் தான் தேவை...யேசுகிறிஸ்த்துவை விட்டுவிடுகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்..உன் தகப்பனார் வகித்த அந்த ஆளுனர் பதவி உனக்காக
காத்திருகிறது..உன் சகோதரர்களுக்கும் தகுதியான பதவியை நாம் தருவோம்...எனக்கு சாதகமான பதிலை இன்றே நீ தரவேண்டும் என்பது அவசியமல்ல..உன் தகப்பனார் வகித்த  பதவியை முன்னிட்டும் உன் பிறப்பின் குல கௌரவத்தை முன்னிட்டும், உங்கள் வாலிப வயதை முன்னிட்டும் நாம் உம்மை மன்னிகிறோம்...நாம் மூன்று நாள் அரசாங்க விஜயமாக
ஸ்மிர்னா நகர் போகவேண்டி இருப்பதால் நாம் திரும்பவந்து உம்மை பார்ப்போம்... ஆகவே இன்றுபோய் நாளை மறு நாள் திரும்ப வா...இப்போது நீவீர் அனைவரும் போகலாம்" என்றான்   மன்னன் தேசியன்.
      மாக்சிமியனுக்கு நாளை மறுநாள் என்ன நடக்கும் என்பது இப்போதே தெரிந்துவிட்டது. தன் வீட்டுக்கு வந்த அவன் தம் தம்பிகளை அழைத்து," சகோதரர்களே நாளை மறு நாள்  நம்முடைய இவ்வுலக வாழ்க்கை முடிந்துவிடும். அதன்பின் நாம் நித்திய பேரின்பவீட்டுக்கு சென்றுவிடுவோம்..அங்கு நம்முடைய இவ்வுலக செல்வங்கள் எதுவுமே பயன்படாது.. எனவே   நாம் இன்றே நம் செல்வங்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிடுவோம்..ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து நம் அனைவரையும் தன் வானக வீட்டிற்கு அழைத்து செல்வது
உறுதி.. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ". என்றான். அதற்கு சகோதரர் அனைவரும் ஒருமித்த குரலில் " அண்ணா, உன் முடிவே எங்கள் முடிவு..ஒன்றாகவே வாழ்ந்தோம் ஒன்றாகவே  சாவோம்...ஒன்றாகவே பரலோகத்துக்கு செல்வோம்... சாவு எப்படி வந்தால் என்ன..என்றைக்கோ ஒரு நாள் நாம் சாகத்தான் போகின்றோம்.. அதை நல்ல முறையில் யேசுவுக்காக
ஒப்புகொடுப்போம். வேதனையில் ஆண்டவரை சந்திப்பதும் அவருக்கு உகந்ததே... அவர் நமக்காக கடினமாக பாடுபட்டு மரிக்கவில்லையா? அவ்வாறே நாமும் மரிப்போம். இவ்வாறு  மரிப்பதை கடவுள் நமக்காக கொடுத்த பாக்கியம் என்று நம்பி அவருக்கு நன்றி செலுத்துவோம்... என்ன இருந்தாலும் கடினமான பாடுகள் என்று நினைக்கும்போது பயமாகத்தான்
இருகின்றது" என்றனர். மாக்சிமியன் அவர்களை அணைத்துக்கொண்டு " இனிமேல் எல்லாம் அவன் செயல்" என்றான்.
      அதன்படியே அவர்களுடைய சொத்துக்கள் எல்லாம் விற்று  ஏழைகளுக்கு கொடுத்தார்கள். விற்கமுடியாத சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு தானமாக கொடுத்தார்கள். அடுத்தநாள் வரை சாப்பிடவேண்டிய அளவுக்கு மட்டும் சில   வெள்ளிக்காசுகளை தங்களுடனே வைத்துக்க்கொண்டார்கள்.. இனிமேல் தங்குவதற்கு இடமிலை...ஊருக்கு வெளியே சீலியா என்னும் ஒரு மலை இருகிறது. அதில் ஒரு குகை   இருகின்றது. அந்த குகையில் யாரும் தங்குவதில்லை. ஒரு இரண்டு நாள் இரவும் பகலும் அங்கு தங்குவதால் யாருக்கும் நம் இருப்பிடம் தெரிந்துவிடப்போவதில்லை.. வாருங்கள்
போவோம் " என்றான் மாக்சிமியன். அந்த நாள் இரவு அங்கே கழிந்தது. அடுத்த நாள் காலை தன் தம்பி மால்குஸை ஊருக்குள் அனுப்பி சாப்பிட ரொட்டிகளை வாங்கி வர அனுப்பினான்   மாக்சிமியன்.
      அடுத்த நாள் ஆரம்பித்தது அக்கிரமம். அந்த எஃபேசு பட்டிணம் முழுவதும் இருந்த கிறிஸ்த்துவர்களை சல்லடைபோட்டு தேடிபிடித்து ஆளுனன் முன் விசாரணைகாக  நிறுத்தப்பட்டார்கள். யேசுவை மறுதளித்தவர்கள் உயிரோடும் அவர்கள் உடமையோடும் விடுவிக்கப்பட்டார்கள். மறுத்தவர்கள் கொடுமையாக சித்திரவதைபடுத்தப்பட்டு   கொல்லப்பட்டார்கள். எஃபேசுப்பட்டிணமே கதிகலங்கிப்போயிற்று. மக்களுக்கு பயம் வருவிக்கும் விதமாக பொதுமக்கள் கூடும் இடங்களிலேயே தண்டனை நிறைவேற்றப்பட்டது..
         கிறிஸ்த்துவர்களின் சடலங்கள் நாய்களும் நரிகளும் தின்னும் உணவாயிற்று. இது சுகாதாரக்கேடு என்பதால் சாதாரண குடிமக்களும் விடுவிக்கப்பட்ட கிறிஸ்த்துவர்களும் சடலங்களை  அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட வற்புறுத்தப்பட்டனர். இந்த காரியங்களை விடுவிக்கப்பட்ட கிறிஸ்த்துவர்கள் தங்கள் சகோதர கிறிஸ்த்துவனுக்கு செய்யும் தர்ம காரியமாக கருதி  விருப்பத்துடனே செய்தார்கள். இதைக்கண்ட மற்றவர்களும் இந்த கிறிஸ்த்துவர்களின் முன்மாதிரிகைகளைக்கண்டு "வாழ்வின் முடிவு எப்படி இருந்தால் என்ன...ஆனாலும் இவர்கள்  கடவுளின் மீது கொண்ட நம்பிக்கை அசைக்கமுடியாததாக இருந்தது..உண்மைக்கு சாட்ச்சியம் சொல்ல தங்கள் உயிரையும் பணையம் வைத்த இவர்கள் அல்லவா சுத்த வீரர்கள். இவர்கள் வணங்கும் தெய்வம்தான் உண்மையான தெய்வமாக இருக்க முடியும் " என்று அந்த சூழ்நிலையிலும் யேசுவை ஏற்றுக்கொண்டவர் அனேகர். இப்படியாக யேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டதினால் அடுத்த நாளே தாங்களே ஆளுநன் முன்பாக நேரில் ஆஜராகி தங்கள் விசுவாசத்தை அறிக்கை இட்டார்கள்.. அதன்பலனாக அவர்கள் அனைவரும் தெருவில்
சிலுவை மரணத்துக்கு ஆட்ப்படுத்தப்பட்டார்கள்.
      இவர்களையும் புதைக்க ஆள் இல்லமையால் ராணுவத்தைவிட்டு புதைக்க சொன்னார்கள். தாங்களே கொண்று தாங்களே புதைக்கவும் வேண்டும் என்னும் அவல நிலைக்கு ஆட்படுத்தப்பட்ட ராணுவத்தினர் வேறு வழி இல்லாமல் அந்த பிரதான சாலை நெடுகிலும் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு   குழிகளை வெட்டி அவர்கள் அனைவரையும் சாலையின் இருமருங்கிலும் போட்டுப்புதைத்தனர்.. இந்த கல்லரைகள் இன்றளவும் அன்று நடந்த கொடுமைகளுக்கு சாட்ச்சியாக இருகின்றன.நடந்தது என்னவோ கொடுமைதான் என்றாலும் ராணுவம் என்பது வேறு விஷயம்..கடுமையான போரில் முன்னனியில் நிற்கும் ராணுவ வீரணுக்கு மனசாட்சி என்பதே   இருக்காது. அவனைப்பொருத்தவரையில் எதிராளி அல்லது பகைவன் என்பவன் அழிக்கப்படவேண்டும் . அதாவது போரில் பகைவன் கொல்லப்பட வேண்டும்.. அப்போதுதான் நாடு
நிம்மதியாக இருக்க முடியும்..தங்களுடைய தொழில் நாட்டைப்பாதுகாப்பதும் எதிராளிகளை அழிப்பதும்தான்... ஆனால் இங்கே கொல்லப்படுபவர்கள் யார்..அப்பாவி மக்கள் அல்லவா?  இவர்களை நாம் ஏன் கொல்ல வேண்டும்?..இங்கு நடபது போர் அல்லவே? தலைவன் கட்டளைக்கு கீழ்படிவதைத்தவிர நமக்கு வேறு கடமை கிடையாதே...ஆனாலும் இது அக்கிரமம்..  அப்பாவி மக்களை கொல்வதில் என்ன நியாயம் இருகிறது? என்று நினைத்த பல ராணுவ வீரர்கள் இந்த வேத கலாபனை முடிந்த பின்னர் மனம் மாறி யேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
        இரண்டு நாட்க்களில் நடந்த கொடுமையான வேத கலாபணையில் பலரது மரணத்தை நேரில் கண்ட மால்குஸ் தன் சகோதரர்களிடம் சென்று நடந்த அந்த கொடுமைகளை எல்லாம்   ஒன்றுவிடாமல் விவரித்தான். இதைகேட்ட சகோதரர் அனைவர்களும் பெரும் திகிலுற்றனர். இருப்பினும் கடவுள் தங்கள் விசுவாசத்தைக்காக்கும் பொருட்டு கைகளை உயர்த்தி  ஜெபத்தில் ஏடுபட்டனர். அடுத்தநாள் நடைபெறப்போகும் நீதி விசாரணையில் மன்னன் திராஜன் தேசியன் முன்னிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் . என்ன பேச வேண்டும்  என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டனர். மிச்சம் மீதி இருந்த சிறிதளவே இருந்த ரொட்டிகளை அனைவரும் ஒன்றாகப்பங்கிட்டு உண்டனர்.. எல்லோரையும் உறக்கம்   ஆட்கொண்டது. கடவுள் அவர்கள் ஏழுபேரையும் மீளாத்துயிலில் ஆழ்த்தினார்.
அடுத்தநாள் தன் நீதி விசாரணைகாக அந்த ஏழுபேரையும் ஆஜர்படுத்தச்சொன்னான் மன்னன் தேசியன்..ஆனால் அவர்கல் யாவரையும் ஊரில் காணவில்லை என அவனுக்கு   அறிவிக்கப்பட்டது. பெரும் கோபம் கொண்டான் மன்னன் திராஜன். தான் குறிப்பாக சொல்லியும் அவர்களைக்காணாததால் எப்படியும் அவர்களை தேடிக்கழ்ண்டுபிடித்து தன்
முன்னர் கொண்டுவரும்படி ஆணையிட்டான். பெரும் படைவீரர்கள் கிளம்பி அவர்கள் ஏழு பேரையும் தேடிக்கண்டுபிடிக்க புறப்பட்டனர். ஊருக்குள் எங்கு தேடியும் அவர்களைக்காண வில்லை ஆகையால் நகருக்கு வெளியே தேடினர். அப்போது அவர்கள் பார்வையில் தென்பட்டது அந்த சீலியாமலை. அந்த சீலியா மலையில் இருந்த குகையில் அந்த ஏழு சகோதரர்களும்
தூங்கிக்கொண்டிருந்ததை கண்டனர் படை வீரர்கள்.. உடனே விஷயம் மன்னர் தேசியனுக்கு அறிவிக்கப்பட்டது. இவர்களைக்காணவிரும்பிய மன்னன் தேசியன் தானே படையோடு வந்த  பகலிலும் உறங்கிக்கொண்டிருந்த அந்த சகோதரர் ஏழு பேரையும் கண்ட மாத்திரத்தில் கடும் கோபம் கொண்டு," ஓ...நீங்கள் என்னிடமிருந்து தப்பித்து போக நினைத்தீர்களோ..ஆனால்
ஆண்டவன் உங்களை இன்று என் கையில் அல்லவா ஒப்படைத்துவிட்டான்..இனிமேல் அந்த யேசுநாதரே நேரில் வந்தாலும் உங்களை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது..அடேய்,  யார் அங்கே...இவர்களை அப்படியே உயிரோடு சமாதி ஆக்கி விடுங்கள்...ஜீவ சமாதி என்று இதற்குப்பெயர் " என்றான். உடனே அரசனின் ஆணை நிறைவேற்றப்பட்டது..
     இந்த அநீதியைகாண சகிக்காத தியோடர் மற்றும் ரூப்பஸ் என்னும் இரண்டு கிறிஸ்த்துவர்கள் உடனே ஒரு காரீயத்தால் ஆன பலகை தயார் செய்தார்கள்.அதில் இந்த ஏழு பேர்களின்   பெயர்கைள்யும் எழுதி அவர்கள் வேத சாட்ச்சிகளாய் மரித்தவிதமும் காலமும் அதில் பொறித்து அந்த கல்லறையில் சித்தால் போல வேலை செய்து யாரும் பார்காதபோது அந்த சுவற்றில்  இந்த காரீயத்தால் செய்த பலகையை எல்லோரும் சென்ற பிறகு பதித்துவைத்தார்கள்.
" வினாச காலே விபரீத புத்தி " அதாவது மனிதனுக்கு ஒரு கெட்டகாலம் என்று வரும்போது அவனது புத்தியும் அதற்குத்தகுந்தாற்போல் விபரீதமாக வேலை செய்து அவனை   அழிவுக்கு உள்ளாக்கும் என்பது ஒரு சமஸ்கிருத ஸ்லோகம். அதேபோல் மன்னன் திராஜன் தேசியன் இந்த எப்பேசுப்பட்டிணத்தில் தான் வந்த வேலை முடிவடைந்தது என்று தன்   தலைமை செயலகம் உள்ள ரோமுக்கு சென்றான்.அங்கு அவனுக்கு ஒரு பெரும் தலைவலி காத்திருந்தது. அதாவது இத்தாலிக்கு கிழக்கே உள்ள பால்கன் நாடுகளில் பல்கேரியாவிலுள்ள   அப்ரிட்டுஸ் என்னுமிடத்தில் காத்தியர்கள் எனப்படுபவர்களை அடக்க ஏற்பட்ட போரில் கலந்துகொள்ள திராஜன் தேசியனும் அவன் மகன் ஹெரேனியனும் பெரும் படையோடு
சென்றார்கள்..துரதிர்ஸ்ட்டவசமாக அந்தப்போரில் அவரது மகன் ஹெரேனியன் அம்பு பாய்ந்து கொல்லப்பட்டான். ஆனாலும் கலங்காத மன்னன் தேசியன் " அதனால் என்ன ...என் மகன்   ஒருவன் இறந்தான் என்றால் மொத்த சைனியமும் அழிந்ததாக அர்த்தமில்லை... எனவே அவனுகாக துக்கம் அனுஷ்டிக்க வேண்டாம்..ஆக வேண்டியதைப்பாருங்கள் என்றான்...
ஆனாலும் விதி அவர்களுக்கு எதிராக வேலை செய்தது. இல்லாவிட்டால் ரோமையர்படை அந்த டூனபே ஆற்றை போர்களமாக பயன்படுத்திக்கொள்ளுமா?.ரோமர்களின் மொத்த   சைனியமும் அந்த டுனபே ஆற்றின் சகதியில் மாட்டிக்கொண்டது. இந்த சந்தர்ப்பத்தை நன்றாகப்பயன்படுத்திக்கொண்ட எதிரிகளான காத்தியர்கள் ரோமர்களை பந்தாடிவிட்டனர்.
        அந்தப்போரில் மன்னன் திராஜன் தேசியன் மடிந்தான். சில சரித்திர ஆசிரியர்கள் இவை எல்லாம் திராஜன் தேசியனின் படைத்தளபதி த்ரிபோனியன் காலூஸென்பவன் செய்த  அப்பட்டமான சதி என்கிறார்கள்.
ரோமை பேரரசின் வரலாற்றில் போர்களத்தில் மடிந்த ஒரே அரசன் இந்த திராஜன் தேசியன் தான் என்ற பெருமையோடு அவன் சரித்திரம் முடிந்தது. அவனது ஆட்சிக்காலம்  கி.பி.249 ல் துவங்கி 251ல் இரண்டே ஆண்டுகளில் முடிந்தது என்றாலும் இந்த இரண்டு ஆண்டுகளில் அவனது அதிகாரத்துக்கு உட்பட்ட நாடுகளிள் கிறிஸ்த்துவர்கள் பட்ட   துன்பங்கள் வார்த்தையில் சொல்லி முடியாது. மன்னர் திராஜன் தேசியன் காலமானார் என்ற செய்தி வந்ததுமே இங்கு எப்பேசுப்பட்டிணத்தில் பெரும் சோகம் நிலவியது. மன்னர்
இப்போதுதானே வந்து போனார். அதற்குள் அவருக்கு இப்படியா ஒரு சோக முடிவு ஏற்பட வேண்டும் என்று அங்கிருந்த மக்கள் அவருக்காக துக்கம் கொண்டாடினார்கள்.
       அவர் நினைவாக ஊருக்கு மத்தியில் திராஜன் நீர்நிலை என்ற ஒரு ஞாபக சின்னம் எழுப்பினர். இப்போதும் எப்பேசில் அந்த மன்னர் திராஜன் நினைவிடம் சிதிலமாக உள்ளது.   கால சக்கரம் மிகவும் வேகமாக சுழன்றது... இதற்கு நடுவில் ரோமை பேரரசில் பல மான்னர்கள் முதல் பல சாதாரண மன்னர்கள் வரை தோன்றினர். ஒருவழியாக கான்ஸ்ட்டான்டி   நேபிள்ஸ் நகரில் ஒரு நல்ல மனிதர் அரசன் ஆனார் அவர்தான் அர்காடியன் எனப்பட்டவர்.. இவருக்கு ஒரு மகன் இருந்தார். இவர்தான் கிறிஸ்த்துவ உலகம் போற்றும் தியோடிசியன்   எனப்பட்டார். ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து இவரை வைத்து கிறிஸ்த்துவர்களுக்கு பெரும் சகாயம் பல செய்தார். ஆனால்   எக்காலத்தும் கிறிஸ்த்துவர்களுக்கு எதிரியாகிய சாத்தான்
இந்த நாட்டின் மக்களிடையே ஒரு பெரும் விஷக்கொள்கையை பரப்பினான்... அதாவது உயிர்த்தெழுதல் இல்லை. கடவுள் ஆதாமைப்படைத்ததுமுதல் உலகம் முடியும் வரை உள்ள   மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மடிந்துபோனால் மீண்டும் உயிர்தெழுவது இல்லை. எல்லாம் இந்த உலகத்தோடு முடிவடைந்து விடும்..ஆண்மா கடவுளிடம் சென்றுவிடும்..
உடல் இந்த உலகிலேயே தங்கி அழுகிப்போய் மண்ணோடு மண்ணாகிவிடும்..என்பதுதான் அந்த விஷக்கொள்கை. அந்த காலத்திலேயே இந்த தப்பான கொள்கையை திருச்சபை   மிகவும் வண்மையாக கண்டித்தது. அப்போஸ்த்தலர்களின் விசுவாச அறிக்கையில் " சரீர உத்தானத்தை விசுவாசிக்கிறேன், நித்திய ஜீவியத்தை விசுவாசிகிறேன்" என்னும் சத்திய
பிரமாணங்களை நம்புங்கள்.உங்கள் விசுவாச அறிக்கையை புதுப்பித்துக்கொள்ளுங்கள் என்றும் யேசு நாதரின் உயிர்ப்பையும் இறந்த லாசரின் உயிர்ப்பையும் விளக்கி உலகம் முடிந்த   பின் மறுபடியும் உயிர்ப்பு உண்டு. பொது தீர்வை நாளில் அனைவரும் உயிர்த்தெழுவர்..பின் ஆண்டவரின் இரண்டாம் வருகை இருக்கும் . பொதுத்தீர்வையின்போது ஆண்டவருகாக   மரித்தவர்களும் நல்ல ஆண்மாக்களும் மோட்ச்சம் போவது உறுதி...அக்கிரமிகளும் தீய ஆண்மாக்களும் நரகம் போவது உறுதி என்றும் தங்களுடைய கொள்கைகளை ஆணித்திரமாக   போதித்தார்கள்.
           இந்தக்காலத்தில் வாழ்ந்த ஸ்மிர்னாவை சேர்ந்த புனித பொலிகார்ப் என்னும் ஆயர், " ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவின் வேதனை நிறைந்த பாடுகளையும், அவரது மரணத்தையும்,   அவருடைய உயிர்ப்பையும், அவருடைய உத்தானத்தையும் விசுவாசிக்காதவர்கள் சாத்தானின் தலைச்சன் பிள்ளைகள்" என மிகவும் கடுமையாகவும் பிரசங்கித்தார். ஆனாலும் அந்த
தவறான போதனை என்னவோ மிகவும் வேகமாகவும் அதிகமாகவும் பரவியது.
      மன்னர் தியோடீசியன் இந்த தப்பறையான கொள்கை தன் ஆட்சிகாலத்தில் மிகவும் வேகமாக பரவி வருவதைக்குறித்து மிகவும் கவலைப்பட்டார்.
  " ஆண்டாவா...என் மக்களை   இந்த தவறான கொள்கையிலிருந்து காபாற்ற மாட்டாயா? இதற்குத்தகுதியான நபர் யார்? அவர் எங்கே இருகிறார்? தயவுசெய்து அவரையும் அவரது இருப்பிடத்தையும் காண்பியும்.
நான் அவரை வரவேற்க காத்திருக்கிறேன்" என்று மண்டியிட்டு அழுது மன்றாடினார்.. அவரது மன்றாட்டு கேட்க்கப்பட்டது. மன்னன் திராஜன் தேசியன் காலம் துவங்கி மன்னர்   தியோடீசியன் காலம் வரை சுமார் 300 வருடங்களாக இந்த எஃபேசுப்பட்டிணத்தின் வெளிப்பகுதியில் அமைந்திருந்த சீலியா மலையின் குகையில் மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்த அந்த ஏழு
சகோதரர்களையும் துயில் களைய ஆண்டவறாகிய யேசுநாதர் சித்தம் கொண்டார். அவரது சித்தப்படி அக்காலத்தில் இந்த மலையின் சொந்தக்காரனாகிய தாலியுஸ் என்பவர் இந்த   மலைப்பகுதியை பார்வையிட வந்தார். இந்த மலையில் இருந்த ஒரு குகை பலகாலமாக மூடப்பட்டிருப்பதைக்கண்டு அதிசயித்து இந்த வாயிலை நாம் திறந்தால் நம் ஆடு மாடுகளுக்கு   ஒரு நல்ல தங்குமிடம் கிடைக்கும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி அந்த குகையின் வாயில் திறக்கப்பட்டது. ஆனால் உள்ளே சென்று பார்க்க அவர் தவறினார்.  தன் வீட்டிற்கும் அவர் திரும்பி சென்றுவிட்டார்.
          இந்த சூழ்நிலையில் மீளாத்தியிலில் ஆழ்ந்திருந்த அந்த சகோதரர் ஏழு பேரும் உறக்கம் கலைந்து எழுந்தனர். அவர்களைப்பொருத்தவரையில் நேற்று தூங்கி இன்று எழுந்ததாகத்தான்   நினைத்தனர். காலையில் பசி எடுக்கவே பெரியவன் மாக்சிமியன் தன் தம்பி மால்குசை அழைத்து ஊருக்குள் சென்று சாப்பிட ரொட்டி வாங்கி வரும்படி பணித்தான். அதற்காக   தன்னிடமிருந்த ஒரு வெள்ளி தெனாரியம் என்னும் நாணயத்தை அவனிடம் கொடுத்தனுப்பினான். மால்குஸ் ஊருக்குள் செல்லும்போது பல ஆச்சரியங்கள் அவனுகாக   காத்துக்கொண்டிருந்தன. 300 வருட ஆட்சி மாற்றமும் ஊருக்குள் நிலவிய கிறிஸ்த்துவ மதமாற்றமும் அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. எங்கு நோக்கினும் கிறிஸ்த்துவ  மதச்சின்னமாகிய சிலுவை பொருத்திய வீடுகள், தேவாலயங்கள் என்று திரும்பிய பக்கம் எல்லாம் தோன்றவே தான் வந்திருப்பது எப்பேசுப்பட்டிணமா அல்லது வேறே எதேனும் பட்டிணமா என்று மால்குசுக்கு புறியவில்லை. 300 வருடமாக அவன் போட்டிருந்த ஆடைகள் முதலாய் நைந்துபோகவுமில்லை..நிறம் முதலாய் மங்கிப்போகவும் இல்லை..அவன் தோற்றம் முதலாய்  நேற்று தூங்கி இன்று எழுந்ததுபோல்தான் இருந்தது. ஆனால் எப்படியோ கடை வீதியில் நுழைந்தான். அந்த ஊர் மக்கள் இவனை ஒரு மாதிரியாகப்பார்த்தனர். தோற்றத்தில் இவன்   இந்த ஊர் காரன்போல் தெரிந்தாலும் அவன் அணிந்திருக்கும் ஆடைகள் மிகப்பழமையான காலத்தைச்சேர்ந்தது. இது எப்படி...ஒரு வேளை இவன் அயலூர்காரனா? என்றவகையில்
பார்த்தனர் . நம் மால்குஸ் இவர்களை அணுகி," ஐய்யா, இது எப்பேசுப்பட்டிணம் தானே " என்றான்..
       அவர்களும் ஆமாம் என்றனர்.மால்குஸ் அவர்களை விட்டு விலகி ஒரு ரொட்டிக்கடை  காரனை நோக்கி தனக்கு ஒரு ரொட்டி வேண்டும் என்று கேட்டு தன்னிடமிருந்த அந்த வெள்ளி தினாரியத்தை கொடுத்தான். ரொட்டிக்கடைக்காரன் அந்தக்காசையும் மால்குஸ்சையும்  மாறி மாறி பார்த்தான்.." ஐய்யா, நீர் எந்த ஊர்?" என்றான். " ஏன்...நான் இதே ஊர்காரன் தான்... இது எப்பேசுபட்டிணம்தானே" என்றான் மால்குஸ்.
ரொட்டிகடைகாரன்," ஐய்யா.. இது உம் காசுதானே?" என்றான். " ஆம்... இது என் காசுதான்...இதில் உமக்கு என்ன சந்தேகம் " என்றான் மால்குஸ்.
" ஐய்யா, உமக்கு இந்த காசுகள் எப்படிகிடைத்தது. எங்கிருந்து கிடைத்தது?"
" ஐய்யா,இது என்னுடைய காசுகள் தான். ரொட்டியைக்கொடு"
" இல்லை ஐய்யா..நீர் இந்த காசுகளை எங்கிருந்து கொண்டுவந்தீர் என்று சொல்லாதவரை உமக்கு ரொட்டி கிடைகாது."
" அதுதான் ஏன் என்று கேட்கிறேன்..உன் ரொட்டிக்கு இன்னும் அதிக விலை கொடுக்க வேண்டுமா...நேற்றுகூட நான் இந்த விலைக்குதானே வாங்கினேன்"
" ஐய்யா நீர் பேசுவது சுத்த பைத்தியக்காரத்தனம்...இந்த காசுகள் செல்லாதவை..முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை...ஆயினும் இன்றைக்கு இதற்கு விலை அதிகம்.உமக்கு  எதேனும் புதையல் கிதையல் கிடைத்ததா?"
" அட முட்டாளே..நீ என்ன பேசுகிறாய் என்று எனக்கு விளங்கவில்லை. நானும் இதே எப்பேசுப்பட்டிணத்தை சேர்ந்தவன் தான் .என் தந்தையார்தான் இந்த எப்பேசுவின் ஆளுநறாக   பணிபுறிந்தார். நேற்றுகூட மன்னர் திராஜன் தேசியன் எங்களை பார்த்து கிறிஸ்த்துவை கைவிட சொன்னார்.. அது எப்படி ஒரே நாளில் அவர் மனம் மாறிவிட்டார். கிறிஸ்த்துவன் என்று
சொன்னாலே கொன்றுபோடும் அவர் ஒரே நாளில் மனம் மாறியது யேசுநாதர் எவ்வளவு சக்தி உள்ள தேவன் என்பதைக்காட்டுகிறது. சரி சரி..உனக்கு எதற்கு இந்த கதை எல்லாம். எனக்கும் என் சகோதரர்கள் ஏழு பேருக்குமாக ஏழு ரொட்டி கொடு.பணம் போதவில்லை என்றால் மேலும் தினாரியம் தருவேன்" என்றான் மால்குஸ்.
      தலையில் அடித்துக்கொண்டான் ரொட்டிக்கடைக்காரன்..அடக்கடவுளே இப்படியும் பைத்தியக்காரன் உலகில் இருக்க முடியுமா என்று நினைத்தவனாக," ஐய்யா...நான் முட்டாள்   அல்ல..நீர்தான் முட்டாள்..உமக்குப்பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைகிறேன்.. மன்னன் திராஜன் தேசியன் இறந்து இன்றோடு சரியாக 372 வருடம் ஆகிறது. உம்மோடு
பேசிக்கொண்டிருந்தால் என் வியாபாரமும் போய்விடும் எனக்கும் பைத்தியம் பிடித்துவிடும் ..நீர் வேறு ஆளைப்பாரும் என்று அவனை அனுப்பிவிட கடையின் முன் ஒரு பெரும் கூட்டம்  கூடிவிட்டது.
      " பொறு...இவன் சொல்வதிலும் ஏதோ இருகின்றது. அவன் உடையும் அவன் வைத்திருக்கும் காசும் அதர்க்கு ஆதாரம்..இவனை நம் ஆளுனரிடம் ஒப்படைப்போம்..அவர் இவனை   விசாரிக்கட்டும் " என்றான்..இதற்கு எல்லோரும் ஒப்புக்கொள்ளவே மால்குஸ் ஆளுநனிடம் கொண்டு செல்லப்பட்டான்.." ஐய்யா...உங்களை நான் மிகவும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.  என்னை அங்கே கூட்டிப்போகாதீர்கள். அங்கே மன்னன் திராஜன் தேசியன் இருப்பான்..அவன் என்னையும் என் சகோதரர்கள் அனைவரையும் நிச்சயம் கொன்றுபோடுவான்...தயவு செய்து வேண்டாம்...என்னை அங்கே கொண்டு போகாதீர்கள் " என்று அலறினான்.ஆனால் யாரும் அவனை விடுவதாக இல்லை. ஒருவழியாக மால்குஸை ஆளுநரிடம்   ஒப்படைத்தார்கள்.
       ஆளுநர் அவனிடம் எவ்வளவோ தயவாய் நடந்துகொண்டாலும் மால்குஸ் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லியதால் மிகுந்த எரிச்சல் பட்டார். ஆனாலும் அவன் சொல்வதில் ஏதோ   உண்மை இருப்பதை புறிந்துகொண்டவராய் அப்போதைய ஆயராக இருந்த மரியானுக்கு செய்தி அனுப்பினார்.. இந்த ஆயர் அவர் காலத்திலேயே எப்பேசுப்பட்டினத்தில் புனிதராக   மதிக்கப்பட்டவர். அவரும் ஆளுநரை சந்திக்க வந்தார்.அவர் மால்குஸைப்பார்த்து," மகனே மால்குஸ்...நீ என்னிடம் உண்மையைதான் பேச வேண்டும்...புறிந்ததா.." என்றார்.
அதற்கு மால்குஸ், " ஆண்டவரே, என் தேவனே..நன் என் ஆண்டவறாகிய யேசுகிறிஸ்த்துவின் பேரிலும் அவரது திருத்தாயார் புனித கன்னி மரியாளின் பேரிலும் சத்தியம் செய்கிறேன். நான் சொல்வதெல்லாம் உண்மை " என்றான். அப்படியானால் உனக்கு இந்தக்காசு எங்கிருந்து கிடைத்தது என்று சொல்" என்றார். அதற்கு மால்குஸ்," ஆண்டவரே, இது எங்களுடைய   காசுதான். மன்னன் திராஜனின் கோபத்திற்கு ஆளாகமல் யேசுவை மறுதளிக்க விருப்பமும் இல்லாமல் இந்த உலக வாழ்கையை வெறுத்து எங்கள் சொத்துக்களை எல்லாம் விற்று   ஏழைகளுக்கு கொடுத்ததுபோக இரண்டு நாள் சாப்பட்டிற்கு போக மீதம் இன்னும் சில காசுகளும் என் சகோதரனிடம் இருகின்றன. வேண்டுமானால் வந்து பாருங்கள்" என்றான். அதற்கு
ஆயர் ," நீ சொல்வது உண்மையானால் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்... இல்லை என்றால் எங்களை எல்லாம் ஏமாற்றியதற்காக உன்னை சபிப்பேன்" என்றார்.
     இப்படியாக ஆயரோடும் அந்த நகர ஆளுநருடனும் மால்குஸ் உடனும் ஒரு பெரும் கூட்டம் அவனப்பின் தொடர்ந்து வந்தது. அந்த சீலியா மலையை அடைந்தபோது அந்த மலையின்   உரிமையாளன் தாலியுஸ் மிகுந்த ஆச்சரியப்பட்டு," ஆண்டவரே என் தேவனே...இந்த அடிமையின் இடத்திற்கு தேவரீர் வருகை எப்படிப்பட்டதோ" என்றான். அதற்கு ஆயர் மரியான்
," மகனே தாலியுஸ்.. இந்த மனிதனை இதற்கு முன்னோ பின்னோ பார்த்திருகிறாயா?" என்றார். இந்த ஏழு சகோதரர்களைப்பற்றி ஏதும் அறியாத தாலியுஸ்," ஆண்டவரே, என் தேவனே..  இவனை நாம் இதுவரை பார்த்ததே இல்லை" என்றார். அப்படியானால் இவன் எப்படி மிகச்சரியாக உன் தோட்டத்துக்கு வந்தான்...அவனைப்பின் தொடர்ந்து நாங்களும் வந்திருகிறோம்"   என்றார். தாலியுஸ் மிகுந்த ஆச்சரியப்பட்டு மால்குஸைப்பின் தொடர்ந்து அந்த உடைத்து திறக்கப்பட்ட குகைக்குள் பிரவேசித்தார்... அங்கே அவர்கள் கண்ட காட்சி அனைவரையும்
திடுக்கிட வைத்தது. தன்னுடைய மலையில் அதனுள் இருந்த மூடப்பட்ட குகையில் ஏழுபேர் வாழ்ந்ததெப்படி" என்றனர்.
       மூத்தவன் மாக்சிமியன்," தம்பி மால்குஸ்... வந்துவிட்டாயா...திராஜன் தேசியனைப்பார்த்தாயா...அவர் என்ன சொன்னார்...உன் உயிருக்கும் உடமைக்கு சேதம் ஒன்றுமில்லையே..  அனைவருக்கும் ரொட்டி வாங்கி வந்தாயா? கொண்டுவா ...பசிவந்துவிட்டது" என்றான்.இதற்குள் ஆயரும் ஆளுநனும் உள்ளே வந்துவிட்டனர். இந்த ஏழு பேரையும் பார்த்த மாத்திரத்தில்
ஆயர் என்ன நடந்தது என்று உடனே புறிந்து கொண்டார். ஆளுநர் வந்து," தம்பி ...நீங்கள் யார்..எத்தனை காலமாக நீங்கள் இங்கே வசிக்கிறீர்கள்..நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?" என்றான்.. அதற்கு மாக்சிமியன்," ஐய்யா.. நாங்கள் இதே எப்பேஸு பட்டிணத்தை சேர்ந்தவர்கள் தான்..திராஜன் தேசியன் ராயன் எங்களுக்கு மூன்று நாள் கெடு விதித்து யேசுவை விட்டு விடும்படியும் அரசனையும் அவர்தம் தெய்வங்களையும் ஆராதிக்கும்படியும் கட்டளை இட்டார். ஆனால் நாங்கள் ஏழுபேரும் எங்கள் யேசுவை மறுதளிக்க முடியாதென   கூறிவிட்டோம். மூன்றுநாள் கெடுமுடிய இன்னும் இரண்டு நாள் இருந்ததால் தம்பி மால்குஸை நகருக்குள் அனுப்பி நாங்கள் சாப்பிட ரொட்டி வாங்கிவர அனுப்பினோம்.. அன்று நாங்கள் உண்டு நேற்றுதான் கண் விழித்தோம். தம்பி மால்குஸும் அதற்குள் வந்து விட்டான்..வேறு என்ன விஷயம்?" என்றான். அதற்கு ஆளுநன்," தம்பி உன்னிடமிருக்கும் காசுகளை
என்னிடம் காண்பி" என்றான்.. மாக்சிமியனும் தன்னிடமிருந்த மீதி தெனேரிய காசுகளைக்கொடுத்தான்.
        இதற்குள்ளாக அந்த சுவற்றில் ரகசியமாக தியோடர் மற்றும் ரூப்பஸ்
ஆகியோரால் பதித்துவைக்கப்பட்ட அந்த காரீயத்தால் செய்துவைக்கப்பட்ட அவர்கள் பெயர்கொண்ட பலகை கண்டுபிடிக்கப்பட்டு அது ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இந்த   ஏழுபேர்களின் பெயரும் படிக்கப்பட்டு அவர்கள் சரிதையும் வாசிக்கப்பட்டு உண்மையை புரிந்துகொண்டார் ஆயர் மாரியான் அவர்களோ. இதைக்கண்ட ஆளுநர் மிகுந்த   ஆச்சரியப்பட்டு," தம்பி நீ சொல்வதை நாங்கள் நம்புகிறோம் என்று தடாலென அவர்கள் அனைவரின் கால்களில் விழுந்து வணங்கினார்...ஆயர் அவர்களும் கூட இந்த ஏழுபேர்களின்   முன்பாக விழுந்து " ஓ...கடவுள் அருளாள் உயிர்த்தெழுந்துள்ள மக்களே நீங்கள் பாக்கியவான்கள்...கடந்த 372 வருடம் அளவாக நீங்கள் தூங்கினீர்களோ அல்லது மரித்து   உயிர்த்தெழுந்தீர்கேளோ ..நாம் அறிவோம்...ஆண்டவனின் வல்லமையால் நீங்கள் உயிரோடு இருப்பது இறந்தபின் நித்திய ஜீவியத்திற்கு உடல் மீண்டும் உயிர்த்தெழும் என்பதற்கு
கடவுள் உங்களை சாட்ச்சியாக எழுப்பியுள்ளார். இதைத்தவிர வேறு சாட்ச்சியம் நமக்குத்தேவை இல்லை" என்றார்.
       கடவுள் ஒரு ஏழுபேரை இந்த எப்பேசுப்பட்டிணத்தில் 372 வருடம் அளவாக தூங்க வைத்து மீண்டும் உயிரோடு எழுப்பியுள்ளார் என்ற செய்தி அந்த எப்பேசுப்பட்டிணம் முழுவதும்   காட்டுத்தீபோல் பரவியது. கான்ஸ்டாண்டினேப்பிள்ல்ஸ் மன்னர் தியோடெசியனுக்கும் இந்த செய்தி அறிவிக்கப்பட்டது. இந்த சேதியைக்கேட்ட மாத்திரத்தில் மன்னர் " ஆண்டவறாகிய   யேசு கிறிஸ்த்துவின் திருநாமம் வாழ்த்தப்படுவதாக..அவரது திருத்தாயார் அன்னை மரியாளின் திரு நாமமும் வாழ்த்தப்படுவதாக..சரீர உத்தானத்தை விசுவாசிகிறேன்...நித்திய  ஜீவியத்தை விசுவாசிகிறேன் என்னும் விசுவாசப்பிரமாணங்கள் சத்தியமானவை என்பதை ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து நிரூபித்துவிட்டார்" என்றார். உடனே எப்பேசுப்பட்டினத்திற்கு
விரைந்து வந்தார்...பெருத்த ஆரவாரத்துடன் மன்னர் தியோடீசியன் வரவேற்கப்பட்டார்.. இதை எதையுமே மன்னர் கவனித்ததாக தெரியவில்லை... நேரே உயிர்த்தெழுந்த அந்த   சகோதரர் ஏழு பேரையும் சந்தித்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். மன்னர் அவர்கள் ஏழு பேரையும் வந்து சந்தித்த அடுத்தநாள் அந்த ஏழுபேரும் மீண்டும் மரணமடைந்தார்கள்.
       அது அந்த எப்பேசுப்பட்டிண மக்கள் அனைவருக்கும் மிகுந்த சோகமூட்டியது.  மன்னர் தியோடீசியனும் ஆளுநரும் ஆயரும் அடைந்த துக்கத்துக்கு அளவே இல்லை. இருப்பினும் ராஜ மரியாதையுடன் அந்த ஏழுபேரின் உடல்களும் அதே குகையில்   அடக்கம் செய்யப்பட்டன. மன்னர் தியோடீசியன் தன் அரண்மனை கஜானாவைத்திறந்து அளவிடமுடியாத அளவுக்கு தங்கமும் வெள்ளியும் கொண்டுவந்து அவர்கள் அனைவருக்கும்
தங்கத்தாலேயே பெட்டிகள் செய்ய விரும்பினார்.. ஆனால் கடவுள் சித்தம் வேறாக இருந்தது. அன்று இரவே அந்த சகோதரர்கள் ஏழுபேரும் அரசன் கனவில் தோன்றி தங்களுக்கு   தங்கமும் வெள்ளியும் வேண்டாம்..அவற்றை நாட்டின் முன்னேற்றதிற்காக பயன்படுத்துமாறும்...வெறுமனே சாதாரணமுறையில் மண்ணில் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனக்கூறி
மறைந்து போனார்கள். அன்றிலிருந்து மரணத்துக்குப்பின் சரீர உயிர்ப்பையும் உத்தானத்தையும் நித்திய ஜீவியத்தையும் மக்கள் விசுவாசித்தார்கள். தப்பறையான கொள்கை தகர்ந்து  போனது.
        இதே சரித்திர நிகழ்ச்சி இஸ்லாமியர்களின் புனித குரானிலும் சூரா18 ல் விவரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கூற்றுபடி இவர்களோடு இவர்கள் வளர்த்த ஒரு நாயும் துயில்கொண்டதா கவும் அவர்களோடு அதுவும் உயிர்த்தெழுந்ததாகவும் கூறப்படுகிறது. ஜோர்டானில் அவர்கள் குறிப்பிடும் இந்த ஏழு சகோதரர்களின் கதையில் வரும் அந்த குகைக்கல்லறையில்
ஒரு நாயின் எலும்புகூடும் உள்ளதாக கூறப்படுகிறது.
அருளப்பர்,11:25 ," உயிர்தெழுதலும் வாழ்வும் நானே..என்னிடம் நம்பிக்கைகொள்பவர் இறப்பினும் வாழ்வர்...உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் ". எஃபேசு பட்டிணத்தில் இந்த ஏழு சகோதரர்களின் மரணத்திற்குப்பிறகு இந்த சீலியா மலையின் பெயர் பையோஸ் மலை என்று பெயர்பெற்றது.. இன்று வரை
அதே பெயரோடு அழைக்கப்படுகிறது. இந்த சரித்திர நிகழ்ச்சி கி.பி.5 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு கிரேக்க மொழியிலிருந்து பல மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.
    இந்த  கதையின் மீதிருந்த விருப்பத்தால் பல நாடுகளில் இந்தக்கதை இங்குதான் நடந்தது என்றும் அந்தந்த ஊர்களின் பெயர்கள், நபர்களின் பெயர்கள் கூட மாற்றப்பட்டு நடைமுறையில்   புழங்கி வருகிறது..இதனால் சில நாடுகளில் இவர்கள் 300 வருடம் தூங்கினார்கள் என்கிறார்கள்..இன்னும் சில நாடுகளில் 180 ஆண்டுகள் தூங்கினார்கள் என்கிறார்கள்.
எப்படிப்பார்த்தாலும் 180 வருடம் என்றாலும் 300 வருடம் என்றாலும் 372 வருடம் என்றாலும் கால வித்தியாசம் மிக அதிகம்..300 ஆண்டுகள் மூடிய குகைக்குள் அன்ன ஆகாரம் இன்றி, நீரும் இன்றி, காற்றும் இன்றி தூங்கினார்கள் என்பது ஆண்டவனின் அருளே அன்றி வேறு இல்லை.

Monday, December 9, 2013

" நாக தேவன் கோயிலும் நரகத்தின் வாயிலும் "




                 " நாக தேவன் கோயிலும் நரகத்தின் வாயிலும் "
     கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியில் தன் உதவியாளர் கொண்டு வந்து கொடுத்த இரண்டு கல் சிற்பங்களையும் பார்த்த அந்த கிரேக்க புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஸ்டிராபோவுக்கு தலை சுற்றிப்போனது... காரணம் இல்லாமல் இல்லை. இந்த பகுதி முழுக்க பாம்பு சிலைகள் நிறைய கிடைத்திருந்தாலும் இதைப்போன்ற பாம்பு சிற்பத்தை அவர் இதுவரை பார்த்ததே   இல்லை.. அது ஒரு பறவை நாகம் போன்ற சிலை.. ஓநாய் போன்ற தலையும் அதன் கூறிய பற்களும் நீண்டு விறிந்திருந்த இறக்கைகளும் பாம்பு உடலும், நான்கு கால்களும் கொண்ட   ஒரு பறவை நாக சிற்பம் அதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில்லை. மற்றும் ஒரு சிலை.. இது முற்றிலும் வித்தியாசமானது. மூன்றுதலை நாய்..அதன் கோர முகமும், கூறிய பற்களும்
காண்போரை அதிற்சிக்குள்ளாக்கும்.
       இந்த இரண்டு சிலைகளையும் கையில் வைத்திருந்த அந்த ஆராய்ச்சியாளருக்கு லேசாக மயக்கம் வந்தது. அவரின் முதுகுத்தண்டின் ஆரம்பம் முதல் கடைசிவரை சில்லென்றார்போல்  ஒரு உணர்வு ஏற்பட்டது. அவரது உள்ளங்கையிலிருந்து ஒரு நரம்பு புடைத்துக்கொண்டே வந்தது. வெகு விரைவில் அந்த புடைத்த நரம்பு மூளையை தாக்கவே அவர் தான் காண்பது
கனவா அல்லது நனவா என்னும் நிலைக்கு ஆளானார். அவர் கண்ட காட்சி இதுதான்.
      அவர் கையிலிருந்த அரக்கப்பாம்பு சிற்பம் உயிர் பெற்று எழுந்தது...உடனே அது விஸ்வ ரூபம் எடுத்தது. வாயில் நெருப்பை கக்கிக்கொண்டு வானில் பறந்தது. மயில் அகவும்   என்பதற்கொப்ப அதன் குறல் இருந்தது. அதன் குறலொலி உலகம் முழுக்க எதிரொலித்தது. அதன் குறலைக்கேட்ட மக்கள் யாவரும் பயத்தால் கண்களை மூடிக்கொண்டு தலை குப்புற
விழுந்து " எகித்னா...எங்களை ஒன்றும் செய்யாதே... எகித்னா...உனக்கு என்ன வேண்டும் ..அவசியம் அதை நான் தந்துவிடுகிறேன்..எகித்னா... எங்களை ஒன்றும் செய்து விடாதே"   என்று மன்றாடி அழுவார்கள். ஒரு வழியாக அந்த அரக்கப்பாம்பு தன் சுய ரூபம் எடுத்து தன் வசிப்பிடமான ஒரு குகைக்கோயிலை அடைந்தது. அந்த குகை வாயிலில் ஒரு மூன்றுதலை
நாய் காவல் காத்துக்கொண்டிருந்தது. இந்த வினோதமான இரண்டு விலங்குகளும் அதனதன் ஆசனத்தில் அமர்ந்தன. கோயில் பூசாரி வந்து மாடுகளையும், கன்றுகளையும் பலி கொடுப்பார். அவருக்கு சன்நதம் வரும்போதெல்லாம் ஊர் மக்கள் வந்து தங்கள் எதிர்காலம் பற்றி குறி கேட்ப்பர். பூஜாரி சொல்லும் குறிப்புகள் மிகச்சரியாக இருக்கும்.
   அழகிய மனைவியை வைத்திருப்பவன் வந்து குறிகேட்டால் தொலைந்தான் அவன். பூஜாரி அவளை அடைய என்னென்ன எத்தனங்கள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வான். அவள் மறுத்தால்   பூஜாரி அவள் மீது களங்கம் கற்பித்து அந்த தெய்வங்களுக்கு பலியாக அந்த குகையினுள் தூக்கிப்போடச்செய்வான். அந்த குகைக்குள் வீழ்ந்தவர்கள் உயிரோடு எழுந்ததாக சரித்திரம்   இல்லை. தங்கள் குறைகளைக்களையவும் தங்கள் எதிர்காலத்தை நல்ல விதமாக அமைத்துக்கொள்ளவும் இந்த பூஜாரிகளுக்கு அள்ளிள்ளிக்கொடுத்தே போண்டியாகப்போனவர்கள்
அதிகம்.
     ஒரு காலக்கட்டத்தில் " ஆண்டவா எங்களை இந்த அரக்கப்பாம்பின் தொல்லையிலிருந்தும் இந்த பாழாய்ப்போன பூஜாரிகளின் தொல்லயிலிருந்தும் எங்களைக்காப்பாற்ற யாராவது
வரமாட்டார்களா " என்று ஏங்கி ஏங்கி தங்கள் கரங்களை உயர்த்தி கத்தி கதறி அழுதர்கள்.
      காட்சி விலகியபின்னர் ஆராய்ச்சியாளர் ஸ்டிராபோவுக்கு இப்போது எல்லாம் புறிந்து போயிற்று. " ஓஹோ.. அந்த பறவை நாகப்பாம்பின் நரக வாசல் எனப்படும் ப்ளூடோனிக்யக்கோயில்   இதுவாகத்தான் இருக்க வேண்டும் " என்று உறுதி செய்து, பாழடைந்த அந்த பெரும் மண்டபத்தின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த குகையின் வாயிலை முகர்ந்து பார்த்தார். அதன்   முகப்பில் பெரும் புகை மண்டலம் இருந்தது.. சகிக்கமுடியாதபடி கந்தகத்தின் நெடி வீசியது. இதை உறுதிப்படுத்தும்படி தன்னிடமிருந்த சில பட்ச்சிகளை அதனுள்ளே போட்டார்..
    என்ன துரதிர்ஷ்ட்டம்.. உள்ளே பறந்துபோன அந்த பட்சிகள் பறக்கமுடியாமல் சிறகடித்து சிறகடித்து அதுவும் முடியாமல் போகவே பொத்து பொத்தென கீழே விழுந்து செத்தன.
" ஆம்... சரித்திரம் கூறும் நரக வாசல் எனப்படும் ப்ளூட்டோனியக்கோயில் இதுதான் என்றார்.
        இந்தக்கதை ஆரம்பிக்கும்போது கலிலேயாக்கடற்கரையில் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது. அது கி.பி. 30 ஆம் வருடம். யேசுநாதர் என்னும் ஒரு யூத ராபி செய்யும் அருங்குறிளும்  அற்புதங்களும் மக்கள் மத்தியில் பெரும் பேச்சாக இருந்தது....அவர் அப்போதுதான் ஜோனாவின் மகன் சீமோனையும் அவர் தம்பி ஆந்திரேயரையும் தன் அப்போஸ்த்தலர்களாக தெரிந்து  கொண்டிருந்தார். இவர்கள் பெத்சாயித்தா பட்டிணத்தை சேர்ந்தவர்கள்...இதே ஊரைச்சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர் வீட்டுப்பிள்ளையான ஒரு அழகிய வாலிபனும் யேசுநாதரைக்காண
கலிலேயாவுக்கு வந்திருந்தார். ஒரு முப்பது வயதைக்காட்டும் முகமும் அழகிய கண்களும் தீர்க்கமான நாசியும் இவர் எதற்கும் லேசில் மசிய மாட்டாதவர் என்னும் தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில் யேசு நாதர் " பிலிப்பே...என்னை பின்பற்றி வா" என்றார். யேசுநாதரின் வசீகரிக்கும் முகமும் கண்களும் பிலிப்பை ஏதோ செய்தன. பதில் ஏதும் பேசவில்லை  பிலிப்பு. அந்த நேரமே பிலிப்பு யேசுநாதரை தன் எஜமானறாக ஏற்றுக்கொண்டார்..இந்த அழைப்பு தனக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பூர்வ ஜென்ம பந்தம் என்று நம்பினார்.
      இந்த உறவால் பிலிப்பு தன் நண்பன் நாத்தானியேலை யேசுநாதருக்கு அறிமுகப்படுத்தவேண்டி அவரை சந்தித்தார்..அப்போது நாத்தானியேல் " நசரேத்தூரிலிருந்து நல்ல செய்தி ஏதேனும் வரக்கூடுமோ " என்றார்.. அதற்கு பிலிப்பு " வந்து பாரும் " என்றார். பிலிப்பும் நாத்தனியேலும் யேசுநாதரைப்பற்றி பலவிஷயங்கள் பேசினர். உண்மையில் நாத்தானியே யேசுவின்
பால்ய சினேகிதர். இருவரும் யேசுவை சந்தித்தபோது யேசுநாதர்," இதோ ஒரு உண்மையான இஸ்ராயேலன்.. இவரிடத்தில் குறையொன்றும் நாம் கண்டதில்லை" என்று கூறினார்.
அதற்கு நாத்தானியேல் ," யேசுவே நீவீர் எம்மை கண்டுகொண்டது எப்படி? " என்றார். அதற்கு யேசு நாதர்," நாத்தானியேல் ..நீர் அத்தி மரத்தடியில் பிலிப்புவிடம் பேசும்போதே நாம் உம்மை கண்டு கொண்டோம் " என்றார். யேசுநாதர் நாத்தானியேலையும் தம் அப்போஸ்த்தலராக தேர்ந்துகொண்டார். யேசுவும், நாத்தானியேல் என்னும் பார்த்தலோமியோவும், பிலிப்பும்
இணை பிரியா தோழராகினர். கூடுமானவரை இவர்கள் மூவருக்கும் ஒத்தவயதே இருக்கும். காலம் மிகவும் வேகமாக சுழன்றது.
    ஒரு முறை யேசுநாதர் தாக்பா என்னுமிடத்தில் மலைப்பிரசங்கம் செய்தார். யேசுநாதரின் பல பிரசங்கங்களில் இந்த மலைப்பிரசங்கம் மிகவும் புகழ் பெற்றது. இப்படி ஒரு பிரசங்கத்தை உலகில் எந்த நாட்டிலும் எந்த மஹானும் செய்ததில்லை..நேரம்போனது தெரியாமல் மக்கள் யேசுவின் பேச்சில் மயங்கியபடியே கேட்டுக்கொண்டிருந்தனர். பிரசங்கம் முடிந்ததும் மக்களுக்கு
பசி வந்தது..யேசு," பிலிப்புவே இந்த மக்களுக்கு உணவுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்ய முடியுமா" என்றார். அதற்க்கு பிலிப்பு " ஆண்டவரே,, இவ்வளவு மக்களுக்கு எங்கிருந்து உணவு  கொடுக்க முடியும்..இரண்டு நூறு தெனாரியத்துக்கு ரொட்டி வாங்கினாலும் அனைவருக்கும் கொடுத்து கட்டுபடி ஆகாதே..மேலும் இவ்வளவு பேருக்கு எங்குபோய் ரொட்டி வாங்க
முடியும்" என்றார்..இருப்பினும் யேசுநாதர் அத்தனை பேரையும் பந்தி அமரச்செய்து உணவு பரிமாற ஏற்பாடு செய்யச்சொன்னார். கூட்டத்திடில் ஒரு பையனிடத்தில் கிடைத்த ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து தன் பரமபிதாவிடம் வேண்டி அங்கிருந்த ஐந்தாயிரம் பேருக்கும் வயிறார உணவு பரிமாறினார். மற்ற அப்போஸ்த்தலர்களை
பார்க்கிலும் பிலிப்பு யேசுநாதரை அதிகம் கவனிப்பார். யேசுநாதர் ஒவ்வொரு புதுமையை செய்யும் போதும் அவர் கண்களையும் கைகளையும் உயர்த்தி தன் பரலோக பிதாவிடம் மன்றாடுவதும் அந்த புதுமை நிறைவேறியபின் தாம் அவருக்கு நன்றி கூறுவதையும் பிலிப்பு கவனிக்கத்தவறுவது இல்லை.
ஒரு முறை யேசுநாதர் தன் அப்போஸ்த்தலர்களை அழைத்து அவர்களுக்கு சகல உறுதிளையும் சக்திகளையும் கொடுத்து," நீங்கள் இருவர் இருவறாகச்சென்று என் பெயறால் சகல   மனிதருக்கும் போதியுங்கள்...நோயாளிகளை குணமாக்குங்கள்.. என் பெயரால் பேய்களை ஓட்டுங்கள்...என்னில் விசுவாசம் கொள்பவனுக்கு அனைத்தும் கிடைக்கும்...என் தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்.. அதாவது ஓ நாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல " என்றார். இந்த வார்த்தைகளிலும் யேசுநாதர் என் தந்தை
என்னை அனுப்பியதுப்போல என்கின்றார். ஒரு நாளைக்கு அவர் தந்தையைப்பற்றி அவரிடமே கேட்டுவிடவேண்டியது தான் என்று மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டார் பிலிப்பு.
அதற்கான ஒரு சந்தர்ப்பமும் ஒருநாள் வந்தது. தன் சந்தேகத்தை பிலிப்பு யேசுவிடம் கேட்டேவிட்டார்.
" ஆண்டவரே... தேவறீர் என்னை மன்னிக்க வேண்டும்...நீங்கள் இரவில் எங்களோடு தங்குவதே இல்லை... எங்கேயாவது தனிமையில் சென்று இரவு முழுவதும் ஜெபித்துக்கொண்டே  இருகின்றீர்...பகலிலும் உறங்குவதே இல்லை..சற்று நேரம் ஓய்வு கொள்வதோடு சரி...நீங்கள் யாரிடம் ஜெபிக்கிறீர்..என்றார்..யேசுநாதர் பிலிப்புவைக்கூர்ந்து நோக்கினார்.
" பிலிப்புவே ..நான் வான்வீட்டிலிருக்கும் என் பரம தந்தையிடமே ஜெபிக்கிறேன்..இரவில் நான் ஜெபிப்பது அடுத்த நாளைக்கான பிரசங்கம் மற்றும் புதுமையைக்குறித்தும் அதற்க்கு   வேண்டிய காரியங்களைக்குறித்தும் என் பரமபிதாவிடம் மன்றாடுவேன்.. அவர் சொல்வதையே நானும் சொல்வேன்... அவர் செய்யச்சொல்வதையே நானும் செய்வேன்" என்றார்.
இத்தகைய பதிலால் திருப்த்தியடையாத பிலிப்பு," ஆண்டவரே..தேவறீர் அடிக்கடி எம் தந்தை எம் தந்தை என்று கூறுகிறீர். ஆனால் ஒரு நாளும் அவரைகாட்டியதில்லை..ஆகவே  தேவறீர் எங்களுக்கு உம் பரலோக தந்தையை காட்டியருளும்" என்றார்.
யேசுநாதர்," பிலிப்புவே...நீர் கேட்பது என்னவென்று உனக்கு விளங்கவில்லை போலும்.. வானகத்திலுள்ள என் பரம தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருகின்றோம்..
என்னை அறிபவன் என் தந்தையை அறிவான்..என்னைப்பார்கிறவன் என் தந்தையை பார்க்கிறான்..எனக்கு செவி கொடுகிறவன் என் பரம தந்தையின் குரலுக்கு செவி கொடுக்கிறான்..இதில் என் தந்தையை காட்டு என்று நீ கேட்பது எப்படி? இவ்வளவு காலமும் என்னோடு பழகி இருந்தும் இதை நீ புறிந்துகொள்ளாதது எப்படி" என்று அவர் மீது சற்றே
கடிந்துகொண்டார். இருப்பினும் பிலிப்புவுக்கு யேசுவின் இந்த பதில் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அது எப்படி இவர் அவருக்குள்ளும்...அவர் இவருக்குள்ளும் எப்படி..
. எப்படி..என்று மண்டையைக்குடைந்துகொண்டார்.
 ஆனால் இதற்கான பதில் பிலிப்புவுக்கு அப்போது விளங்கவில்லை. யேசுநாதர் இறந்து அவரும் பரலோகம் சென்று பரிசுத்த
ஆவியானவர் தேவ தாயார் மீதும் அப்போஸ்த்தலர்கள் மீதும் இறங்கிவந்து அவருடைய ஏழு வரங்களான ஞான்ம்,புத்தி,வல்லமை,அறிவு, திடம்,பக்தி,தெய்வபயம் அனைத்தும்  கிடைத்தபிறகு, பிலிப்புவுக்கு என்றில்லை...அப்போஸ்த்தலர்கள் அனைவருக்கும் தமதிரித்துவத்தின் ரகசியம் அனைத்தும் புறிந்தது..மோட்ச்சம் என்பதும் உலகம் என்பதும் நரகம்
என்பதும் என்னவென்று புரிந்தது.. படைப்பின் சத்துவங்கள் அனைத்தும் புரிந்தது...உடல் என்பது என்ன... ஆன்மா என்பது என்ன என்று அனைத்தும் திட்டவட்டமாக புரிந்தன.
படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக.. மனுவைபடைத்தான் தன்னை வணங்க என்பதும் இந்த உலகமெல்லாம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஆகும் வரை இந்த   படைப்புகள் அனைத்தும் அதனதன் வேலைகளை செவ்வனே தொடரும் என்பதும் புரிந்தது..தன்னால் படைக்கபட்ட மனிதன் சாத்தானின் சோதனையால் தோல்வியுற்று நித்திய
வாழ்வை இழந்துபோனான் என்றாலும் பரலோக பிதா இந்த மனித ஜென்மத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் அவனுக்கு நித்திய வாழ்வுகொடுக்கும்பொருட்டு தன் ஒரே பேரான   மகனை இந்த உலகத்தை மீட்க அனுப்பினார் என்றும் அப்படிவந்தவர்தான் யேசு என்னும் பெயரில் வந்த இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் என்றும் புரிந்துகொண்டார்கள்..
அப்படி அவர் இந்த உலகத்துக்கு வர மனித சந்ததிக்கு பிறவாமால் மூன்றாம் ஆளாகிய பரிசுத்த ஆவி என்னும் சர்வேசுரனின் வல்லமையால் கன்னிமரியினின்று பிறந்தார் என்றும் புரிந்துகொண்டார்கள்...
    இனி இந்த உலகில் தங்கள் பணி யேசுகிறிஸ்த்துவை உலகம் முழுவதற்கும் அறிவிக்கவேண்டியதுதான் என்றும் உணர்ந்துகொண்டார்கள்..
இந்த சூழ்நிலையில் ஒருநாள் பிலிப்பு சமாரியாவில் வேதபோதக அலுவலை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் ஆண்டவரின் ஆவியால் நிரப்பப்பட்டு ஜெருசலேமிலிருந்து காசா செல்லும் ராஜ பாட்டையில் எத்தியோப்பியா நாட்டின் காந்தைஸ் ராணியின் ஒரு அமைச்சனை சந்திக்கச்சொன்னார். அந்நேரமே பிலிப்பு அந்த ராஜபாட்டையில் தோன்றினார். அந்த
வழியே தன் அலுவலை முடித்துவிட்டு தேவாலையத்தையும் பார்த்துவிட்டு தன் தாய் நாடு திரும்ப காசா பட்டிணம் திரும்பிக்கொண்டிருந்த அந்த எத்தியோப்பிய அமைச்சர்   இசையாஸ் தீர்க்கதரிசியின் 53ஆம் பகுதியின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுருளை வாசித்துக்கொண்டிருந்தார். சில இடங்களில் அதன் பொருள் அவருக்கு விளங்கவில்லை. இந்த
நேரத்தில் அங்கு வந்துகொண்டிருந்த பிலிப்பு இந்த எத்தியோபிய அமைச்சரை சந்தித்து பேசினார். அவரும் பிலிப்புவை வரவேற்று தன் அருகில் அமர்த்திக்கொண்டார்..
    பிலிப்பு இசையாஸ் தீர்க்கதரிசியின் வசனங்களில் யேசுநாதரின் பாடுகளைப்பற்றியும் அப்போது அவர் எப்படி இருந்தார் என்றும் அவர் எப்படி இறந்தார் என்பதுபற்றியும் தான் கண்டதும் கேட்டதும்   இசையாஸ் பாடல்களில் எப்படி நிறேவேறியது என்றும் விளக்கினார். இந்த விளக்கங்களில் திருப்தியடைந்த அந்த எத்தியோப்பியன்," பிலிப்புவே..இதோ இங்கே தண்னீர் இருகின்றது..  நான் ஞாஸ்நானம் பெறுவதில் தடை என்ன என்றார்...
      பிலிப்புவும் அவர் விரும்பியபடியே அவருக்கு அங்கேயே ஞானஸ்நானம் கொடுத்தார். அந்த எத்தியோபிய மந்திரியின் வழியாக எத்தியோப்பியாவில் கிறிஸ்த்துவம் பரவியது.
       அந்த எத்தியோப்பிய மந்திரி ஞாஸ்நானம் பெற்ற இடம் இன்னும் இருக்கின்றது. [கி.பி.724 முதல் 728] வரை இப்பகுதியை திரு யாத்திரை மேற்கொண்ட வில்லிபால்ட் என்பவர் எழுதிய   பாலஸ்த்தீன பயணக்கட்டுரையில் இந்த இடத்தப்பற்றி குறிப்பிடும்போது அங்கு ஒரு பழங்கால தேவாலயம் இருந்ததாகவும் அது அக்காலத்தில் புகழ்பெற்ற மடபா வரைபடத்தில்   இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இன்று அந்த இடம் பெய்த்சூர் என்னுமிடத்திற்கருகில் ஐன் அல் திர்வா என்னும் இடத்தில் இருகின்றது. இந்த பெய்த்சூர் என்னுமிடம்தான்  குழந்தை யேசுவை சந்திக்க வந்த மூன்று ராஜாக்கள் கடைசியாக தங்கிய இடம்..அன்று ராஜ பாட்டையாக இருந்த இடம் இன்று ஒத்தையடிப்பாதையாக மாறிவிட்டது.
        இப்படியாக இந்த உலகம் முழுமைக்கும் யார் யார் எங்கெங்கு போக வேண்டும் என்பதற்காக தங்களுக்குள்ளே சீட்டு போட்டார்கள். நம் பிலிப்புவுக்கும் நாத்தானியேல் என்னும்   பார்த்தலோமியோவுக்கும் ஸ்மிர்னா பட்டிணத்திற்குப்போகும்படி வந்தது. அப்போது பேதுரு என்னும் ராயப்பர் கூறினார் ," யேசுவில் இனிய என் சகோதரர்களே...இன்று பிறியும் நாம்
மீண்டும் இந்த உலக வழ்வில் சந்திக்கப்போவதே இல்லை...யேசு நம்மை நம்மில் இருந்து ஆட்சி செய்வாறாக...அன்று யேசுநாதர் நம்மிடம் கூறியதை சற்றே ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்...என் பரலோக தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்... அதாவது ஓநாய்களின் மத்தியில் ஆட்டுக்குட்டிகளைப்போல...இதே வார்த்தைகளையே நானும் உங்களுக்குச்சொல்கிறேன்...யேசு என்னை உங்களுக்குத்தலைவராக ஏற்படுத்தியதால் அவரின் ஆசீர்வாதத்தையே நானும் உங்களுக்கு கொடுகிறேன்..
       பிலிப்புவே...பார்த்தலோமியோவே.. நீங்கள் போகும் தேசம் என்னவென்று உங்களுக்குத்தெரியுமா?...கொடுமையான மிலேச்சர்களும் சிலைவழிபாடு செய்பவர்களும் மலிந்த நாடு அது.  யூதர்களுக்கு தலை நகர் ஜெருசலேம் என்றால் சாத்தானின் தலை நகர் ஸ்மிர்னாவாகும்...சாத்தானை அதன் நரகக் குகை வாயிலிலேயே சந்திக்க யேசு உங்களை   தேர்ந்தெடுத்திருகிறார்.. அவரின் வல்லமையால் நீங்கள் சாத்தானை வெல்வது உறுதி. யேசுவுக்கு சாட்சிகளாக நீங்கள் திகழ்வீர்களாக... சென்று வாருங்கள்.." என்று அவர்களை
கட்டித்தழுவி முத்தமிட்டு அனுப்பினார். இப்படியாகவே அனைத்து அப்போஸ்த்தலர்களும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பிரியாவிடைகொடுத்து பிரிந்தனர்.
                     " ஸ்மிர்ணா என்னும் ஒரு பெரும் பட்டிணம்."
யேசு கிறிஸ்த்து மனிதாவதாரமாக இவ்வுலகிற்கு வருவதற்கு 133 ஆண்டுகளுக்கு முன்னே ரோமர்கள் இந்த நாட்டை கபளீகரம் செய்துகொண்டார்கள். தங்கள் ஆதிக்கத்தை   நிலைநாட்ட தங்களின் தெய்வங்களையும் தேவர்களையும் பற்றிய கதைகளை அவர்கள் பரப்பினர். தங்களுடைய தெய்வங்களின் கோயில்களையும் அரண்மனைகளையும் மஹால்களையும் கட்டினர். இன்றைக்கு இந்த பட்டிணம் துருக்கி தேசத்தின் தென் மேற்கில் உள்ளது. இன்று ஸ்மிர்ணா என்னும் பெயர் மாறி இஸ்மீர் என்று அழைக்கப்படுகிறது. இந்த பட்டிணம் துருக்கி   தேசத்தின் ஒரு மாநிலமாக உள்ளது.. இந்த மாநிலத்தின் ஒரு மாவட்டம் தான் எப்பேசுஸ் என்னும் பட்டிணம்.
      யேசு கிறிஸ்த்துவின் மறைவுக்குப்பிறகு ஜெருசலேமில் வேத
கலாபணை ஆரம்பித்த பொழுது யேசுவின் பிரியமான சீடரும், சுவிஷேஷகரும்,அப்போஸ்த்தலர்களுள் ஒருவருமான புனித ஜான் என்னும் அருளப்பர் யேசுவின் தாயாறாகிய புனித மரியாளை தன்னுடன் அழைத்துக்கொண்டு இந்த எப்பேசு பட்டிணத்துக்குதான் வந்தார். தேவ தாயார் இந்த எப்பேசுப்பட்டிணத்தில்தான் கடைசிக்காலம் வரை வாழ்ந்து மரித்து
கல்லறையில் அடக்கம் செய்ய்யப்பட்டதாக ஒரு சரித்திரம் சொல்லுகிறது. இப்போதும் இந்த எப்பேசு பட்டிணத்தில் தேவதாயார் கடைசியாய் வாழ்ந்து மரித்த வீடு உள்ளது.
  ஆண்டவறாகிய யேசுநாதர் இதையும் ஒரு அர்த்தத்தோடுதான் செய்திருகிறார் என்று சொல்லத்தோன்றுகிறது. இந்த ஸ்மிர்ணாப்பட்டிணம் சாத்தானின் தலை நகராக உள்ளதால் அதை அடக்க அதன்
ஜென்ம விரோதியான மரியாளின் சமாதியும் இங்கிருப்பது மிகவும் பொருத்தமானதாகவே உள்ளது. ஆதி ஆகமத்தில் கடவுள் பாம்பை சபிக்கும்போது ," கன்னி கருத்தாங்கி ஆண்மகவை  பெற்றெடுப்பாள்.. அவள் உன் தலையை நசுக்குவாள்..ஆனால் நீயோ அவளை ஜெயிக்க முற்படுவாய்..அவள் குதிகாலை தீண்ட முற்படுவாய். ஆனால் அது உன்னால் முடியாது..." என்னும் வேத வாக்கியங்களை நினைவுக்கு கொண்டு வாருங்கள்..ஆக தேவ தாயார் அங்கிருக்கும் வரை சாத்தானின் கொட்டமனைத்தும் அடக்கப்பட்டுவிடும்..அவன் தலை
தூக்கும்போதெல்லாம் தேவ தாயாரானவள் அவன் தலை தூக்காதபடி அவனை மிதித்துக்கொண்ட இருப்பார். ஆக சாத்தானின் தலை நகர் இங்கிருக்கிறது... மேலே சொன்ன நாக தேவனின் கோயிலும் நரகத்தின் வாயிலும் எங்கிருகின்றது?. அது இந்த எஃபேசுப்பட்டிணத்திலிருந்து அடுத்த மாகாணமான பைஜீரியாவிலிருக்கின்றது. எப்பேசுப்பட்டிணத்திலிருந்து
250 மைல் தொலைவில் கிழக்கே சென்றால் அங்கே இருக்கின்றது இந்த நாக தேவன் கோவிலும் நரகத்தின் வாசலும்.. இங்குதான் வந்தார்கள் நம் அப்போஸ்த்தலர்களான   நாத்தானியேலும், பிலிப்பும்.
                    " நாக தேவன் கோவிலும் நரகத்தின் வாசலும் "
     " ஓப்பியோர்மே" என்னும் பெயர் இந்த பட்டிணத்திற்குறியது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் தாங்கள் வழிபடும் பாம்புதேவனுக்கு ஓப்பியோர்மே என்பது பெயர். இந்தப்பட்டிணத்தில்  அனேக பாம்புக்கோயில்கள் இருந்தாலும் இந்த ஓப்பியோர்மே என்னும் பாம்புக்கோயில் பிரசித்தி பெற்றது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. நெருப்பை கக்கும் அரக்கப்பாம்பு இந்த
கோயிலின் கருவறையிலே இருக்கும். எப்போதாவது தன் அரக்கத்தன்மையோடு நெருப்பைக்கக்கிக்கொண்டு விசுவ ரூபம் எடுத்து வெளிவரும்...கண்ணில் பட்டோரை   கடித்துக்குதரும்...பலரை உயிரோடு விழுங்கும். திரும்பிச்செல்லும்போது நரக வாசல் எனப்படும் புளூட்டோனியக்குகைக்கோயிலில் போய் மறையும்.. மக்களுக்கு இந்த அரக்கப்பாம்பின்   மீது இருந்த பயம் நம் நாத்தானியேலும் ஃபிலிப்பும் வரும்வரை இருந்தது.
        பிலிப்புவுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்தார்கள். அதில் இரண்டு பெண்பிள்ளைகள் திருமணமே செய்துகொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டார்கள். கடைசிப்பெண் திருமணம் ஆனவர்..அவரும் தன்னை தேவ ஊழியத்துக்கு ஒப்படைத்துவிட்டார். எஃபேசில் வாழ்ந்து வந்தார். பிலிப்பின் சகோதரி மீரியம்
என்பவரும் பிலிப்பின் கூடவே வந்து தன்னையும் தேவ ஊழியத்துக்கு அர்ப்பணித்திருந்தார். இவர்கள் ஒரு கூட்டணியாய் இந்த பாம்புப்பட்டிணமாகிய ஓப்பியோர்மே நகரில் வந்து தங்கி
தங்களின் வல்லமையான் பிரசங்கத்தினாலும் செய்த அருங்குறிகளாலும் பலர் யேசுவை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களிள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்தாக்கீஸ் என்பவர்.
      அவர் தன் மனைவி மக்கள் அனைவருடனும் யேசுவை ஏற்றுக்கொண்டார். தன் வீட்டிலேயே நம் அப்போஸ்த்தலர் நாத்தானியேல் பிலிப்பு அவர் பிள்ளைகள் அவர் சகோதரி மீரியம் அனைவரையும் தங்க வைத்துக்கொண்டார். அவர்களின் ஊழியத்துக்கான அனைத்து தேவைகளையும் ஸ்த்தாக்கீஸே கவனித்துக்கொண்டார். எனவே கடவுளின் ஆசீர்வாதம் அவர் மீதும்   அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் ஏறாளமாக கிடைத்தது. பிலிப்பும் நாத்தானியேலும் செய்த அரும்குறிகளில் ஒன்று இறந்த மனிதன் ஒருவரை உயிர்த்தெழ வைத்தது என்று
ஒரு சரித்திரக்குரிப்பு கூறுகிறது. இதனால் சாத்தான் மிகுந்த கோபம் கொண்டான். நாத்தானியேலையும் பிலிப்புவையும் பழிவாங்க தக்க சந்தர்பத்திர்காக காத்திருந்தான்.
    ஒரு நாள் இந்த ஓப்பியோர்மே நகர ஆளூனனின் மனைவி நக்னோறா என்பவள் பிலிப்பின் வல்லமையான பிரசங்கத்தைக்கேட்டாள். பிரசங்கம் முடிந்ததும் அவள் தன்னை பிலிப்புவிடமும் நாத்தனியேலிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டாள். " ஐய்யா..நான் ஒரு எபிரேயப்பெண்..என் தந்தையார் பேசும் எபிரேய பாஷையிலேயே நீர் பேசுவதால்
நான் உம்மை என் தந்தையாகவே பாவிகிறேன்..எனக்கு பார்வைக்கோளாறும் பெண்களுக்கே உண்டான பல சொல்லமுடியாத நோய்களும் எனக்கு உண்டு. தாங்கள் எனக்காக ஜெபித்து  என் நோயிலிருந்து விடுதலைதர முடியும் என நம்புகிறேன்... தேவறீர் என் மீது இரக்கம் வைக்க வேண்டுகிறேன்" என்றாள்..பிலிப்பும் நாத்தானியேலும் அவளுக்காக ஜெபிக்க அப்போதே
முற்றிலும் குணமடைந்தாள் நக்னோறா. அவள் அடைந்த மகழ்சிக்கு அளவே இல்லை.ஆனால் நக்னோறாவின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. தன் மனைவி நக்னோறா குணமடைந்தது அவள் கணவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..அதுவும் இரவில் அவள் தனிமையில் ஜெபிக்கும்போது அவள் இருந்த அறை முழுவதும் ஒளி வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதைக்கண்ட ஆளுனன் தன் மனைவி தான் வணங்கும் நாக தேவனை வழிபடாமல் யேசு என்னும் புதிய தெய்வத்தை வணங்குவதை அவனால் சகித்துக்கொள்ள
முடியவில்லை. "யேசுவை நீ கும்பிடக்கூடாது.. நம் முன்னோர்கள் வணங்கிவந்த ஒர்பியோமே என்னும் நாக தேவனையே வணங்க வேண்டும்" என்று அவளுக்கு ஆணை யிட்டான்.
     இதனால் நக்னாறா அடைந்த துன்பம் வார்த்தையில் அடங்காது. இருப்பினும் தைரியமாக தன் கணவனிடம், " இவ்வளவு காலமும் நான் நீர் வணங்கிவந்த நாக தேவனைத்தானே   வணங்கி வந்தேன்..அவனால் எனக்கு குணம் கிடைத்ததா...இல்லையே... யேசு என்னும் தேவன் தானே எனக்கு குணம் அளித்தார்... அவரைக்கும்பிடுவதில் என்ன தவறு இருக்க
முடியும்... வேண்டுமானால் நீர் என் சவாலை ஏற்றுக்கொள்ளும்...இதுவரை நான் என் கண்ணால் ஏற்பட்ட துன்பத்தை உனக்குத்தருகிறேன்...உன் நாக தேவன் உனக்கு குணம் கொடுகிறாறா பார்ப்போம்...நீர் குணமானல் நான் யேசு என்னும் தெய்வத்தை கும்பிடுவதை நிறுத்திக்கொள்கிறேன் " என்றாள். சவாலை ஏற்றுக்கொண்டான் அவள் கணவன்.
     அதன்படி அவன் கண்களில் புறை நோயை ஏற்படுத்தினார் யேசு கிறிஸ்த்து.. அவள் கணவனுக்கு நாளுக்கு நாள் பார்வை குறைந்துகொண்டே வந்தது. இதைக்கண்டு பயந்த அவன்  தன் மனைவி நக்னோறாவின் தலை முடியை பற்றி இழுத்துவந்து ஸ்த்தாக்கியாஸ் வீட்டு முன்பாக வந்து," அடேய் பிலிப்பு,, பார்த்தலோமியோ...உங்களுக்கு தைரியமிருந்தால்  நாங்கள் வணங்கும் எங்கள் பாம்பு தெய்வமான் ஓப்பியோர்மே முன்னிலையில் உங்கள் சாமார்த்தியத்தை காட்டுங்கள்..சவாலில் தோற்றவர் கொல்லப்படவேண்டும் .நீவிர் ஜெயித்தால்  நானும் என் நாட்டு மக்களும் யேசுகிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் நாக தேவன் உங்களைத்தின்னாமல் விடமாட்டார். சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது உயிரை
விடப்போகிறீர்களா?" என்றான். அப்போது பிலிப்பும் நாத்தானியேலும் தாங்கள் சவாலை ஏற்றுக்கொள்வதாகக்கூறினார்கள்.
   அடுத்த நாள் காலை அந்த ஓர்பியோமே எனப்படும் நாக தேவன் ஆலயத்தில் சவாலை ஏற்றுக்கொள்ள காத்திருந்தனர் பிலிப்பும் பார்த்தலோமியோவும்..நாக தேவனின் பூஜாரிகள்  பூஜையை ஆரம்பித்தார்கள்.." ஓ...நாக தேவா வருக...ஓ ...ஓர்ப்பியோமே வருக...ஓ .ஏகித்னா தேவனே வருக வருக... விரைந்து வருக..வருகவே வருக..." பாடிக்கொண்டும்  ஆடிக்கொண்டும் தங்கள் நாக தேவனை போட்டியில் கலந்துகொள்ள அழைத்தார்கள்... அப்போது வானம் இருண்டது...அந்த நாக தேவனின் ஆலயத்திலிருந்து கரும்புகை வெளிவந்தது.
நாக தேவனின் கோயில் பூஜாரி சந்நதம் வந்து அலறினான்.." இதோ எல்லாம் வல்ல ஓப்பியோர்மே தேவன் வருகிறார்...சக்தியுள்ள ஏகித்னா தேவன் வருகிறார்..அனைவரும் விழுந்து  ஆராதியுங்கள் " என்று உடல் எல்லாம் நடுங்க ஆடிக்கொண்டே வந்தார். கொஞ்ச நேரத்தில் அந்த ஆலயத்திலிருந்த அத்தனை பாம்பு சிலைகளும் உயிர் பெற்று அசைந்தன. பொத்து
பொத்தென்று அவை கீழே விழுந்து ஊர்ந்து வந்தன. இதக்கண்ட மக்கள் மிகுந்த அச்சத்தால் ஆட்பட்டு " ஏகித்னா...எங்களை மன்னியும்..உன் வல்லமை அறியாத எங்களை   மன்னியும்..நாங்கள் வழி தப்பி யேசு என்னும் பிற தெய்வத்தை ஏற்றுக்கொண்டது பெரும் தவறு என்று உணறுகிறோம்..எங்களை மன்னித்துக்க்கொள்...மன்னித்துக்கொள்.. "
என்று அலறினர்.
அந்த நாக தேவனின் ஊர் முழுக்க இருந்த அத்தனை கோயில்களிலும் இருந்த பாம்பு சிலைகள் உயிர் பெற்று எழுந்தன. அவை அனைத்தும் பெரும் திரளாக வந்து மக்களை விரட்டிக்கொண்டு வந்தன. அந்த ஊர் மக்கள் முழுவதும் சுமார் 20000 பேர் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று அனைவரும் ஒரே கோரசாக " நாக தேவா எங்களைக்காப்பாற்று " என்று கதறியபடியே தங்கள் கைகளை உயர்த்தியபடி சரணாகதியாக இந்த நாக தேவனின் பெரிய கோயிலை அடைந்தார்கள். அந்த பெரியகோயிலின் முன்னே நின்றிருந்த நம்
ஃபிலிப்பும், பார்த்தலோமியோவும் யாருக்கும் பயப்பட்டாதாகவும் தெரியவில்லை..எதற்கும் பயப்பட்டாதாகவும் தெரிய வில்லை..கண்களை மூடினால் அது பயத்தின் அடையாளம் என்று  எதிரிகள் நினைப்பார்கள் என்று அவர்கள் கண்களைக்கூட மூடவில்லை... ஆனால் அவர்கள் யேசுவின் மீது கொண்ட பக்த்தியின் அடையாளமக சற்றே கண்களை மூடி" ஆண்டவரே
இரக்கமாயிரும்.கிரிஸ்த்துவே இரக்கமாயிரும்.உன் அடியோர் மீது உம் கருணை கண்களை திருப்பியருளும்..இந்த சவால் எனக்கும் சாத்தானுக்கும் அல்ல ..உமக்கும் சாத்தானுக்கே உண்டானது...இனிமேல் இது என் காரியம் அல்ல..நீரே பார்த்துக்கொள்ளும்" என்றார்..
       அடுத்து துவங்கியது சாத்தானின் ஆட்டம்.. அந்த நாக தேவனின் கருவறையிலிருந்து சிற்பமாக இருந்த அரக்கப்பாம்பு உயிர் பெற்று எழுந்து வந்தது. கோயிலை விட்டு  வெளிவரும்போது ஆண்களும் பெண்களும் பூஜாரிகளும் சாமிவந்து ஆடினர்கள்... அவர்கள் எழுப்பிய பெரும் சப்த்தம் காண்பவர் அனைவருக்கும் பெரும்   திகிலூட்டின..குழந்தைகள்பயத்தால் வீர் வீர் என கத்திக்கதறினர். வெளியே வந்த அரக்கப்பாம்பாகிய ஓர்பியோமே, " யார் இந்த பரதேசிகள் ?" என்றான்..
அதற்கு கோயில் தலைமை பூஜாரி, " மஹாப்பிரபூ...இந்த பரதேசிகள் பாலஸ்த்தீனத்திலிருந்து வந்தவர்கள்...உங்கள் வல்லமை தெரியாமல் உங்களை சவாலுக்கு அழைத்தவர்கள்..
யேசு என்னும் அன்னிய தெய்வத்தை இங்கே வந்து பிரசங்கிக்கிறார்கள்... நம்முடைய மக்கள் பலரும் இந்த மூடர்களை நம்பி அந்த யேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டார்கள்..
உமது வல்லமையால் நீர் யார் என இந்த உலகத்துக்கு காட்டும். வழி தப்பிப்போன நம் மக்களுக்கும் இந்த பரதேசிகளுக்கும் நல்ல பாடம் கொடுத்தருளும். நீர் ஜெயித்து இந்த பரதேசிகளை யும் இங்கு கிறிஸ்த்துவர்களாக மாறிப்போனவர்களையும் விழுங்கிவிடும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றான்.
அதற்கு நாக தேவன்," அப்படியா...பூஜாரி....கவலைப்படாதே...நாம் இவர்கள் அனைவரையும் அழித்து சங்காரம் செய்துவிடுவோம்" என்று வானுக்கும் பூமிக்குமாக எழுந்து நின்றான்.
      அவனது விஸ்வ ரூபத்தைக்கண்ட மக்கள் அனைவரும் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டனர். அனைவரையும் திகில் ஆட்க்கொண்டது.
" அடேய் மனிதப்பதரே...என்னிடமா உன் வேலையைகாட்டுகிறாய்...உன்னை என்ன செய்கிறாறேன் பார் " என்றபடி தன் வாயைத்திறந்துகொண்டு பிலிப்புவின் முன் நின்றான்
     ஏகித்னா என்னும் தேவன். விஸ்வ ரூபமெடுத்திருந்த ஏகித்னாவின் வாய் திறக்க திறக்க அது ஒரு குகைபோல் தோன்றியது.. வாயில் கந்தக நாற்றம் சகிக்கமுடியாததாக இருந்தது.
திடீரென வானில் ஒரு பெரும் ஆரவாரம் கேட்டது. பெரும் இடிச்சத்தம் பளீீரென்னும் மா பெரும் மின்னலுடன் கேட்டது. வானில் அதிதூதறாகியா அர்ச். மிக்கேல் சம்மனசு தோன்றினார்.
" பிலிப்புவே...பார்த்தலோமியுவே...இவனுக்கு அஞ்சாதீர்கள். இவனை நான் பார்த்துக்கொள்கிறேன்... இவனிடமிருந்து வெளிப்படும் விஷமும் ஊரில் தோன்றியுள்ள பாம்புகளிடமிருந்து   வெளிப்படும் மூச்சுக்காற்றுகளும் பொது மக்களை தாக்கதபடி நான்கு திசைகளுக்கும் சேர்த்து ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவின் பெயறால் சிலுவை அடையாளம் இடுங்கள்". என்றார்
பிலிப்புவின் சகோதரி மீரியமும் பிலிப்புவின் பிள்ளைகள் மூவரும் அந்த பெரும் கூட்டத்தினரிடையே சென்று எல்லா திசைகளுக்கும் சேர்த்து ஆண்டவறாகிய யேசுவின் பெயறால்  சிலுவை அடையாளமிட்டனர். அவ்வளவுதான்..ஊர் மக்களைச்சுற்றியுள்ள எல்லா பாம்புகளும் புஸ் புஸ் என்று சீறித்தள்ளின..ஆனால் அவற்றால் நகரக்கூட முடியவில்லை.
" அடேய் ஏகித்னா... உன் சாமார்த்தியத்தை என்னிடம் காட்டு..உன்னைச்சுற்றி ஆண்டவறாகிய யேசுவின் பெயரால் சிலுவை அடையாளமிடப்பட்டுள்ளது...நீ எங்கும் நகரக்கூட முடியாது. வா... என்னிடம் வா..." என்றார் அதிதூதறான மிக்கேல் சம்மனசானவர். சாத்தானாகிய ஏகித்னா என்றும் ஓர்பியோமே என்றும் அழைக்கப்பட்ட அந்த அரக்கப்பாம்பு எழுந்து நின்றது. அதுவரை பல்லி போல தரையில் ஊர்ந்து வந்த அந்த அரக்கப்பாம்பு தன் பின்னங்கால்கள் இரண்டையும் தரையில் ஊன்றிக்கொண்டு மனிதர் போல் நின்றுகொண்டு அதிதூதர் மிக்கேல் சம்மனசானவரிடம் போரிட எழுந்தான். ஆரம்பித்தது உக்கிரமான போர்.
ஃபிலிப்பும், பார்த்தலோமியோவும் ஆண்டவறாகிய யேசுக்கிறிஸ்த்துவை நோக்கி மன்றாடினர். " சாந்த்தூஸ்... சாந்த்தூஸ்..சாந்த்தூஸ்...தோமினே தேயுஸ் சாபாவோத்" அதாவது
பரிசுத்தர்...பரிசுத்தர்..,பரிசுத்தர்..
மூவுலகின் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தர்...
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன..
உன்னதங்களில் ஓசான்னா....
ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர்பெற்றவர்...
உன்னதங்களிலே ஓசான்னா...என்னும் திருப்பாடலை பாடிக்கொண்டிருந்தனர்...அது காற்றில் நிறைந்து எங்கும் எதிரொலித்தது. அந்த போரினால் எகித்த்னா தேவன் என்னும்
அரக்கப்பாம்பு விடும் மூச்சுக்காற்று பெரும் விஷமாய் காற்று மண்டலத்தை நிறைத்தது. அது மேக மண்டலத்தை கரு நிறமாய் மாற்றியது. ஆனால் அதிதூதரின் நெருப்பு கத்தியிலிருந்த   ஒரு ஓளி வெள்ளம் வந்து அதன் விஷத்தை முறியடித்து காற்று மண்டலத்தை சுத்தமாக்கியது. உடனே காற்று மண்டலம் கரு நிறத்திலிருந்து தூய வெண்ணிறமாக மாறியது.
இவர்களுகிடையே நடந்த போர் மக்களுக்கு இடியாகவும் மின்னலாகவும் தோன்றியது.. அடிக்கடி வானம் கறு நிறமாகவும் மீண்டும் வெண்ணிறமாகவும் மாறி மாறி தோன்றியது.
நடக்கும் இந்த உக்கிரமான போரில் ஏகித்னா என்னும் பாம்பு அரக்கனுக்கு தோல்விக்கான அறிகுறி தோன்றியது. அவன் இறக்கைகள் இரண்டும் வெட்டப்பட்டு பூமியில் விழுந்தன..
இதன் வேதனையால் பெரும் கூச்சல் எழுப்பினான் ஏகித்னா. அவன் உடம்பில் பல வெட்டுக்காயங்கள் தோன்றின. ஆங்காங்கே ரத்தம் பீறிட்டுக் கொட்டியது. அந்த ரத்தம் பூமியின்மீது  அவன் கோயில்களின் மீது பெரும் நெருப்புத்துண்டங்களாக விழுந்ததால் அந்த கோயில்கள் தீப்பிடித்து எரிந்தன. கடைசியாக ஒரு பெரும் மரணக்கூச்சல் எழுந்தது.
அதிதூதராகிய அர்ச். மிக்கேல் சம்மனசானவர், " அடேய் ஏகித்னா...இந்தப்பெயரில்தானே எம் மக்களை வஞ்சித்துவந்தாய்..இன்றோடு தொலைந்தாயடா நீ" என்று அந்த அரக்கப்பாம்பு தேவனாகிய ஏகித்னாவின் நெஞ்சில் தன் நெருப்பு பட்டயத்தால் ஆழமாக சொருகினார். அவ்வளவு தான்...மரணக்கூச்சலிட்டு சாய்ந்தான் ஏகித்னா என்னும் நாக தேவன்.
ஏகித்னா தேவனின் மரணக்கூச்சல், கேட்டவர்கள் அனைவரின் காதுகளையும் செவிடாக்கியது. கடைசியில் செத்து வீழ்ந்தான் ஏகித்னா..அவன் தரையில் விழுந்த போது சாதாரண நாகப்பாம்பு போன்ற தோற்றத்தோடு விழுந்தான்..சற்று நேரத்தில் அந்த பாம்பு உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோனது.. அத்துடனா போயிற்று... நகரில் தோன்றி இருந்த
அத்தனை பாம்புகளும் காற்றில் கறைந்து போயின. நரக வாசல் எனப்படும் அந்த ப்ளூட்டோனியக்கோயிலில் இருந்த அந்த மூன்று தலை நாயும் மரித்துப்போய் காற்றில் கறைந்து போனது.
" வெற்றி... வெற்றி...ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவுக்கே வெற்றி..ஆண்டவறாகிய யேசுவின் திரு நாமம் வாழ்த்தப்படுவதாக " என்று மக்கள் அனைவரும் வாழ்த்தொலி எழுப்பி ஆண்டவறாகிய யேசுவின் வெற்றியை கொண்டாடினார்கள்.அந்த பாம்பு நகரின் மக்கள் எல்லோரும் யேசுவின் வல்லமையை புரிந்துகொண்டார்கள். இந்த நேரத்தில் ஊருக்கு வெகு தொலைவிலிருந்த ஒரு எரிமலை வெடித்து சிதறியது. பெரும் அக்கினி குழம்புகள் சீறிப்பாய்ந்து வெளி வந்தன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டான் ஆளுனன்.
   " என் நாட்டு மக்களே...இந்தப்பரதேசிகள் ஏதோ மாய வித்தைகள் செய்து நம் பாம்புக்கடவுளை கொண்றுவிட்டார்கள்... இதனால் வெறுப்புற்ற நம் ஏகித்னா தேவன் நம்மைப்பழிவாங்க  அவர் இருப்பிடமான எரிமலையை தூண்டி விட்டுள்ளார்.. எனவே இந்த பரதேசி சாமியார்களை அடித்தே கொல்லுங்கள்... இந்த நாட்டிலுள்ள கிறிஸ்த்துவர்களைக்கொல்லுங்கள்..
இவர்களுக்கு புகலிடம் அளித்த அந்த ஸ்த்தாக்கியையும் அவன் குடும்பத்தையும் தீ வைத்துக்கொளுத்துங்கள் " என்றான்.
ஆளுனனின் மனைவி நக்னோரா பதறியடித்து எழுந்தாள்..." இல்லை...இது அநியாயம்...சவாலில் நீர் தோற்றுவிட்டீர். அதன்படி நீர் கொல்லப்பட வேண்டும்..ஆனாலும் இப்போதும்   ஒன்றும் காலம் கடந்து போய்விடவில்லை...நான் பிலிப்புவிடம் கேட்டு உனக்கு உயிர் பிச்சை வாங்கித்தருகிறேன்... மன்னிப்புக்கேட்டுக்கொள்." என்றாள். அதற்க்கு ஆளுனன்
" அடியே பாதகி...நீ என்ன எனக்கு உயிர் பிச்சை வாங்கித்தருவது...நான் அல்லவா அவர்களுக்கு பிச்சை போட வேண்டும்" என்றவனாய் " மக்களே இந்த பரதேசி சாமியார் இருவரையும்  அவன் குடும்பத்தாரையும் பிடித்துக்கட்டுங்கள்.. உயிர் போகும் வரை கல்லால் அடியுங்கள்" என்றான். அதுவரை யேசுவுக்கே புகழ் என்று வாழ்த்திய மக்கள் நன்றி மறந்து " கொல்லுங்கள் பிலிப்பையும் பார்த்தலோமியுவையும் " என்றார்கள். உடனே ஆரம்பித்தது கலவரம். கலகக்காரர்கள் ஸ்த்தாக்கியாவின் வீட்டை சூறையாடினார்கள்.. வீட்டிற்கு தீ வைத்தார்கள். வீடு  தீயால் முற்றிலுமாக கொழுந்து விட்டு எரிந்தது.. இப்படியாக பல கிறிஸ்த்துவர்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டு தீக்கிறையாக்கப்பட்டது.
பார்த்தலோமியோவும் பிலிப்பும் கைதியாக்கப்பட்டு அந்த பாம்புதேவன் கோயிலின் தூண்களோடு சேர்த்து கட்டப்பட்டார்கள். பிலிப்புவின் சகோதரி மானபங்கம் செய்யப்பட்டார்.
ஆனால் கடவுள் அவள் மீது இரக்கம்கொண்டு ஒரு பெரும் அக்கினி ஜுவாலையை அவள் மீது அனுப்பி மக்கள் யாவருக்கும் அவளது நிர்வானம் தெரியாதபடி பாதுகாத்தார்.
இந்த துரதிஸ்ட்டமான சம்பவங்களாள் மிகவும் பரிதவித்துப்போனாள் ஆளுனனின் மனைவி நக்னோரா...அப்போது ஆளுநனுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன..இதனால்   மேலும் கல்நெஞ்சனானன் ஆளுநன்..." மக்களே இந்த இரண்டு பரதேசி சாமியார்களையும் கல்லால் எரிந்து கொல்லுங்கள் " என்றான்.. மக்கள் புத்தி இழந்து நன்றி மறந்து அவர்கள்
இருவர் மீதும் கல்லால் எரிய ஆரம்பித்தனர். இந்த அக்கிரமத்தைக்கண்ட நக்னோரா," ஆண்டவர் மீது ஆணை..நீதியுள்ள சர்வேசுரன் உனக்கு கொடுமையான தண்டனை வழங்கட்டும்...  ஏற்கனவே நீர் என்னிடம் தோற்றதால் என் கண் நோய் உனக்கு உண்டானது...இப்போது அது முற்றிலுமாக உன்னை பாதிக்கட்டும். இந்த அப்பாவி மனிதர்கள் மீது வீனே கொலைபழி   சுமத்துகிறாய்..இதை அவர்கள் தெய்வம் ஒருபோதும் மன்னிக்காது. இப்போதும் கேட்கிறேன். அவர்களை விடுதலை செய்" என்றாள்.
" அடப்பைத்தியக்காரி... இவர்களை விடுதலை செய்தால் என்ன நடக்கும் தெரியுமோ? சவாலில் நான் தோற்றதர்காக நான் சாக வேண்டும்..எனக்கு இதில் உடன்பாடு இல்லை..   நான் வாழ வேண்டும்.. அதற்க்கு அவர்கள் சாக வேண்டும்" என்றான்..
கடுமையான் கல் வீச்சால் அப்போஸ்த்தலர்களாகிய பிலிப்பும் பார்த்தலோமியோவும் படுகாயமடைந்தனர். அப்போது பிலிப்பு தன் நண்பர் பார்த்தலோமியோவிடம் தங்கள் நாட்டு தாய்   பாஷையான எபிரேயத்தில், " பார்த்தலோமியோ... நான் நம் நண்பர் ஜானை [சுவிஷேஷகறாகிய அருளப்பரை] காண விரும்புகிறேன்" என்றார்.
அப்போது ஆளுனன்," என் மக்களே கல்லால் அடிப்பதை நிறுத்துங்கள்.. நம் நாக தேவனை கொண்ற இவர்களுக்கு கொடுமையான சிலுவை சாவை கொடுப்போம்" என்றான்.
அவன் மனைவி நக்னோரா பரிதவித்து " வேண்டாம்... வேண்டாம்.. இது அநீதி.. இது அக்கிரமம்..இந்த புண்ணியவான்களின் மீது இரக்கம் வையுங்கள்.. அவர்களைக்கொல்லாதீர்க்ள் "  என்று கதறி அழுதாள்.. ஆனால் யாரும் அவள் பேச்சை காதுகொடுத்து கேட்ப்பதாக இல்லை. வெறிபிடித்த மக்கள் கூட்டம் அவர்கள் இருவர் மீதும் பாய்ந்தது.. அப்போஸ்த்தலர்களாகிய
பிலிப்பும் பார்த்தலோமியோவும் நிர்வானமாக்கப்பட்டார்கள். அவர்களைக்கட்டிவைத்து அடித்த அந்த கல் தூணில் தலைகீழாக வைத்து பெரும் ஆணிகளால் அவர்கள் காலைத்துளைத்து  தூணோடு பிணைத்தார்கள். அவர்களின் பாரம் தாங்கும் படியாக அவர்களின் இருபக்கத்துடைகளிலும் பெரும் இரும்பு ஊக்குகளை செலுத்தி அவற்றையும் தூணோடு பிணைத்தார்கள்,.
   இந்த சூழ்நிலையில் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் அந்த வழியே வந்தார் சுவிஷேகரான அருளப்பர். நகரின் மத்தியில் பெரும் அமளிக்கிடையே மூன்று பேர்   துன்புருத்தப்படுவதுகண்டு மனம் இளகியவறாய் அங்கிருந்த மக்களிடம் " இங்கு என்ன நடக்கிறது.. யார் இவர்கள்? என்று கேட்டார். அந்த அளவுக்கு அவர்கள் அடையாளம் காண முடியாதபடி அடிபட்டிருந்தனர். அந்த மக்கள், " ஐய்யா ..உம்மைப்பார்த்தால் ஊருக்கு புதிதாய் தோன்றுகிறது..இவர்கள் வேதம் போதிக்க வந்த பரதேசிகள்..ஒருவர் பெயர் பிலிப்பு.. மற்றவர் பெயர் பார்த்தலோமியோ.. அந்தப்பெண் பிலிப்பின் சகோதரி மீரியம்..இவர்கள் நாங்கள் வழிபட்டுவந்த பாம்பு தேவனாகிய ஏகித்னாவை கொன்று போட்டதால் நாங்கள் அவரை  கொல்லும்படிக்கு தூணோடுதூணாக அறைந்துள்ளோம் " என்றனர்.
   அதற்கு அருளப்பர்," உங்கள் ஏகித்னா தேவன் உண்மையில் சக்த்தி உள்ளவர் என்றால் இவர்களை அல்லவா  கொண்றிருக்க வேண்டும்... மாறாக இவர்கள் உங்கள் தெய்வத்தை கொண்றதனால் இவர்கள் வணங்கும் தெய்வம் அல்லவா சக்தி வாய்ந்தது...தோல்வியை ஒப்புக்கொள்ளாமல்  ஜெயித்தவர்களை கொல்வது எந்த விதத்தில் நியாயம்?" என்றார். இத்தகைய பதிலால் திடுகிட்ட மக்கள், " அடேய் ...நீயும் இவர்களில் ஒருவனா...பிடித்துக்கட்டுங்கள் இவனையும்... சிலுவைச்சாவுக்கு இவனையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றனர். இந்த வர்த்தமானங்களைக்கேட்ட பிலிப்பும் பார்த்தலோமேயும் பெரிதும் கலங்கினர். இதற்கு மேலும் பொறுக்கமாட்டாத
பிலிப்பு," மதியீனர்கேள்...உங்களை நாங்கள் இந்த பெரும் அரக்கப்பாம்பின் கொடுமையிலிருந்து காப்பாற்றியது பெரும் தவறு.. நன்றி கொன்ற மக்கள் நீங்கள்.." என்றார்.
     இந்த அக்கிரமத்தைக்காண சகிக்காத நக்னோரா," பிலிப்புவே இந்த நன்றி மறந்த மக்களை சபித்து நரக அக்கினியில் தள்ளும்...இதற்கெல்லாம் காரணமான என் கணவனை நீதியுள்ள  சர்வேசுரன் அவரை நித்திய நரகத்தின் அடி ஆழத்தில் புதைக்கட்டும். இந்த மக்கள் ஒருவரையும் விடாதபடி பூமி பிளந்து விழுங்கும்படி சபியும்...சபியும் " என்று வயிறெரிந்து கூறினாள்.
அப்போது ஒருவன் அருளப்பரை கயிற்றால் கட்டினான்... உடனே வந்தது கோபம் பிலிப்புவுக்கு... தன்னை மறந்தார்...தான் யேசுவின் அப்போஸ்த்தலன் என்பதையும் மறந்தார். தன் கண்முன்னே தன் சகோதரி மானபங்கப்படுத்தப்பட்டாள்...தன்சகோதரன்போன்ற அப்போஸ்த்தலன் பார்த்தலோமியோ தன்னோடு அடித்து நொறுக்கப்பட்டார்... தன் எஜமானனும்
கடவுளுமாகிய யேசுவின் இனிய சகோதரனும் யேசுவின் தாயாரை சுமார் பதினெட்டு ஆண்டுகாலம் தன்னோடு வைத்துக்காப்பாற்றியவருமான அருளப்பனையும் அல்லவா இப்போது கொல்லப்பார்கிறார்கள்...முடியாது...இதை நான் அனுமதிக்க முடியாது.....இந்தப்பாவிகளை நான் சபிக்கிறேன்...என்னுள்ளே வாசம் செய்யும் என் ரட்ச்சகரே யேசுநாதா...உம் பெயரால்  நான் இந்த மக்களை சபிகிறேன்.. பூமி பிளந்து இந்த மக்கள் நரக அக்கினியில் மூழ்கட்டும்" என்றார். அவ்வளவுதான்... இடியான இடி இடித்தது...பளீர் பளீர் என்னும் மின்னல்கள்
வானில் தோன்றி மறைந்தன..அவர்கள் இருந்த பூமி டமேல்...டமேல் என்று பிளந்தது.. அந்த நாகதேவன்கோயில் முதல் நரகத்தின் வாசல் வரை பூமி பிளந்தது...இந்த அதிற்ச்சியில்   நாகதேவன் கோயில் முதல் நரக வாசல் எனப்படும் ப்ளூடோனியக்கோயில் வரை அந்த நகரில் இருந்த அத்தனை ரோமர்களின் தெய்வங்களின் கோயில்களும் டமேர் டமேர் என்ற பெரும்
சப்த்தத்தோடு கீழே இடிந்து விழுந்தன. எதிரிகள் அத்தனை பேரும் நரக நெருப்பில் அமிழ்தப்பட்டார்கள்.. விதிவிலக்காக அந்த நாட்டிலிருந்த பரிசுத்தர்களும் பத்தினிப்பெண்களும்  அவர்கள் கரங்களில் இருந்த குழந்தைகளும் யாதொரு சேதமுமின்றி அவர்கள் நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தார்கள். மற்ற இடங்களிலெல்லாம் பூமி பிளந்து நரக நெருப்பு   தெரிந்தது.
    அந்த நெருப்பினூடே ஓங்கி அழும் மனித குரல்கள் கேட்டன...பிலிப்புவே பார்த்தலோமியுவே எங்களை மன்னியும் ...எங்களை மன்னியும்..அறியாமல் செய்த பிழை இது..  யேசுவின் வல்லமையை உணர்ந்திருந்தும் அவரை மதியாமலும் ஏற்றுக்கொள்ளாமலும் இருந்தோம்...இப்போது எங்கள் பிழை உணருகிறோம்... எங்களை மன்னித்தருளும்.. என்று  கதறி அழுதனர்..
      அந்த நாளில் 85 வயதைக்கடந்த பிலிப்பு தன் கோபத்தை அடக்காமல் அந்த அக்கிரமிகளை தண்டிக்கும்படியாக யேசுவின்பெயரால் சபித்து அவர்கள் அனைவரையும் நராக நெருப்பில்  போட்டது அவர் வயதுக்கும் அவரின் அப்போஸ்த்தலிக்க வாழ்க்கைக்கும் பொருந்தாத செயல் என்று அருளப்பர் கூறினார். " பிலிப்புவே...நம் யேசுநாதர் நமக்கு இப்படியா படிப்பினை
கற்பித்தார். தீமை செய்தவனுக்கு நீரும் தீமை செய்யலாமோ..உமக்கும் அவர்களுக்கும் இப்போது என்ன வித்தியாசம்.. தனக்கு தீமை செய்தவனுக்கும் நன்மையே செய் என்றல்லவா நம்   யேசு சொல்லி இருகிறார். என்ன இருந்தாலும் நீர் செய்தது தவறு.. எனவே நீர் மீண்டும் யேசுவிடம் கேட்டு அவர்கள் ஆனைவரையும் நரக நெருப்பினின்று விடுதலைசெய்யச்சொல்லும்.
இதை உம்மைத்தவிர வேறு யாரும் செய்ய முடியாது..உடனே ஆரம்பியும்... யேசுவிடம் மன்றாடும்" என்றார். பிலிப்பு தன் பிழை உணர்ந்தார்.. அவர் கண்களில் கண்னீர் கரகர வென்று   வழிந்தோடியது.
    அப்போது நக்னோரா " பிலிப்புவே, நீர் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யும்... ஆனால் என் கணவரை மட்டும் நீர் மன்னிக்கவோ விடுதலை செய்யவோ கூடவே கூடாது" என்றாள்.
பிலிப்பு உடனே தன் வேண்டுதலை ஆரம்பித்தார்..தன் பாவத்தையும் இந்த அக்கிரமிகள் பாவத்தையும் மன்னிக்க மிகவும் உருக்கமாக வேண்டினார். அப்போது யேசுநாதர் அவருக்குதரிசனம் கொடுத்து," பிலிப்புவே, நீர் உம் தவறுகளை உணரும் பட்சத்தில் நானும் உம் மீதும் இந்த மக்களின் மீதும் இரங்குகிரேன். இதோ அவர்களை நரக நெருப்பினின்று விடுவிகிறேன்
என்று கூறி தன் சிலுவையை நரகத்தில் இறக்கினார். அது சிலுவையாய் இறங்கி ஒரு பெரும் ஏணியாக மாறியது. அதைப்பிடித்துக்க்கொண்ட மக்கள் அதன்வழியாக மேலே ஏறி வந்தார்கள். ஆனால் அப்படி வெளியே வராத ஒரு மனிதரும் இருந்தார் அவர்தான் நக்னோராவின் கணவன்.
   .நரக நெருப்பிலிருந்து வெளி வந்த மக்கள் அனைவரும் யேசுவின்
வல்லமையால் பெரும் அக்கினிக்குழம்பிலிருந்து விடுதலை ஆனதினால் யேசுவைப்பற்றி புகழ் பாடல் பாடிக்கொண்டே வந்தார்கள்.
மீண்டும் யேசுநாதர்," பிலிப்புவே...உம்கோபம் நியாயமானது என்றாலும் நமக்கு அதில் உடன்பாடு இல்லை..நீர் எம்கட்டளையை மீறிவிட்டீர்...உமக்கு தீமை செய்தவர்களை நீர் மன்னித்திருக்க வேண்டும். அதைவிடுத்து நீர் அவர்களை சபித்தீர்... அப்போஸ்த்தலர்களுக்கு நாம் கொடுத்துள்ள உறுதிமொழியின்படி நீர் பூலோகத்தில் எதைக்கட்டுவாயோ அதை
நாமும் பரலோகத்தில் கட்டுவோம்...நீர் எதெல்லாம் பூலோகத்தில் கட்டவிழ்ப்பீறோ அதெல்லாம் நாமும் பரலோகத்தில் கட்டவிழ்ப்போம் என்ற நியதியின்படி நீர் கேட்டுக்கொண்டதற் கொப்ப நாமும் அவர்களை நரகத்தில் போட வேண்டியதாயிற்று. நீர் கேட்டுக்கொண்டதால் இப்போது நானும் அவர்களை நரகத்திலிருந்து விடுதலை செய்ய்ய வேண்டியதாய் இருகிறது.
உன் கோபத்தினால் நரகத்திற்கு போனவர்கள் தலைமுடி கூட கருகாமலும் கட்டிய துணிகூட தீயாமலும் அவர்கள் மேனி கூட பொசுங்காமலும் நாம் அவர்களைக்காத்தோம்..
இதற்கு தண்டனையாக நீர் இறந்து நாற்பது நாள் வரை உன் ஆன்மா பரலோகத்தில் நுழைய முடியாது. அந்த நாற்பது நாளும் முடிந்து அடுத்த நாள் நாம் உம்மை எம்மோடு சேர்த்துக்கொள்வோம்..நீர் மரித்து புதையுண்ட இடத்தில் ஒரு திராட்சை செடி ஒன்று முளைக்கும்... அதன் கணிகளைப்பறித்து சாறு பிழிந்து நாற்பது நாளும் பலிபூசை நிறைவேற்று..
உன்னோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கும் நம் அப்போஸ்த்தலன் பார்த்தலோமியோ அர்மீனியா சென்று அங்கு நம் காரியங்கள் முடிந்து வேத சாட்ச்சியாக மரிப்பார்...உன் சகோதரி மீரியம் ஜோர்டான் நாட்டுக்கு சென்று நமக்காக சாட்சியமாக மரிப்பாள்...உம் புதல்வியரும் உம்முடைய இடத்திலேயே அடங்குவர்...உமக்குப்பின் உம் சீடர் தாக்கீஸை ஆயறாக நியமி " என்று கூறி மறைந்து போனார்...
யேசுநாதர் கூறியபடி பார்த்தலோமியோ சிலுவையினின்று இறக்கப்பட்டார். பிலிப்பின் சகோதரி மீரியமும் விடுவிக்கப்பட்டர். ஆனால் மக்கள் யாவரையும் பிலிப்பு தன் அருகில் நெருங்கவோ தன்னை தொடவோ அனுமதிக்கவில்லை.. தன்னை விடுதலை செய்ய மக்கள் விரும்பியும் அவர் இது யேசுவின் சித்தம் என்று கூறி சிலுவையினின்று இறக்கிவிட அனுமதிக்கவே இல்லை...சிலுவையிலே அவர் ஆறு நாட்க்கள் துன்பப்பட்டார்..ஏழாம் நாள் அவர் இறந்தார். அவரை கல்லறையில் நல்லடக்கம் செய்தனர்...
   அவர் இறந்த மூன்றாம் நாள் அவர் கல்லறையிலிருந்து ஒரு திராட்ச்சை கொடி ஒன்று கிளம்பியது...தடதடவென்று வளர்ந்து கனிகள் பல தந்தது.. அதன் சாற்றைவைத்தே நாற்பது நாளும் பலிபூசை நடத்தப்பட்டது.
அவர் இறந்த நாற்பது இரவும் பகலும் மக்கள் அவர் மீது வைத்த அன்பினாலும் நம்பிக்கையினாலும் தூங்காமல் விழித்திருந்து ஜெபம் செய்தபடியே இருந்தார்கள்.
அவர் இறந்த நார்பத்தொன்றாம் நாள் பிலிப்பு பார்த்தலோமியோவுக்கு தோன்றி தான் யேசுவோடு கலந்துவிட்டதாகக்கூறி மறைந்து போனார்.
பிலிப்பின் மக்கள் இருவர் வயோதிகம் காரணமாக மரித்து தந்தை பிலிப்பு அடங்கிய இடத்திலேயே அடங்கினர். அவரது மூன்றாவது மகள் எப்பேஸு பட்டிணத்தில் மரித்தார்..
சுவிஷேகரான் புனித அருளப்பர் வெகு முதிர்ந்த வயதில் எப்பேஸு பட்டிணத்தில் காலமானார்.. அவரது க்ல்லறை இன்றும் எஃபேசு பட்டிணத்தில் இருகின்றது.
பிலிப்பின்இந்த மூன்று பிள்ளைகளின் கல்லறை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை... பிலிப்பு கூறியபடியே பார்த்தலோமியோ தாக்கீஸுக்கு அந்த பாம்புபட்டிணத்தின் முதல் ஆயறாக அபிஷேகம் செய்தார்.
பிலிப்புவின் காலத்துக்கு முன்பே ரோமர்கள் இந்த நாக தேவன் ஆலயத்தோடு பல தேவர்களின் கோயில்கலையும் கட்டி இருந்ததால் அந்த ஊர் உன்னத நகர் எனப்பெயர் பெற்றது .
அதாவது ஹீரியோபொலிஸ் எனப்பட்டது.. பிலிப்புவின் கல்லறை இந்த ஹீலியோபொலிஸ் என்னும் இடத்தில் இருப்பதாக இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல ஆயர்களும்  பல வரலாற்று ஆசிரியர்களும் எழுதி வைத்திருகின்றார்கள். இந்த ஹீலியோபொலிஸ் நகரில் இருந்த எரிமலைகள் வெடித்து அடங்கிய சம்பவங்கள் பல உண்டு..அப்படியாக ரோமர்கள்
காலத்திலேயே கொதிநீர் ஊற்றுகள் பல இருந்தது..அவை பல மருத்துவ குணங்களைக்கொண்டதாக நம்பப்பட்டுவந்தது. இப்போதும் சில இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் உள்ளன.
..அடுக்கடுக்கான மடிப்பு மலைகள் போல அழகழகான வெண்மை சுண்ணாம்பு படிவங்களில் இந்த சுடு தண்னீர் உற்றுகள் வழிந்தோடி அற்புதமான காட்சி அமைப்பாக மாறியுள்ளன.   அவை அனைத்தும் மருத்துவ குணமுடையதாகையால் ரோமர்கள் காலத்திலிருந்து இன்றுவரை இங்கு சுற்றுலாப்பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது..
இந்த இடம் இப்போது பம்முகலே என அழைக்கப்படுகிறது..
ரோமர்கள் காலத்திலிருந்து மத்திய தரைகடலிலிருந்து எஃபேசுஸ் பட்டிணம் துவங்கி துருக்கியின் தென் கிழக்கிலுள்ள அனதோலியா பட்டிணம் வரை ஒரு ராஜபாட்டை போடப்பட்டது.  அது இந்த பைரேஜியா பட்டிணத்திலுள்ள ஹீலியோபோலிஸ் பட்டிணம் வழியே தான் சென்றது...இப்போதும் இந்த சாலை நடை முறையில் உள்ளது. இந்த சாலை வாழியே தான் புனித
சின்னப்பர் தன் இரண்டாம் வேத போதக அலுவலை ஆரம்பித்தார். வியாபார நிமித்தமாக துருக்கியின் தென் மேற்கிலுள்ள எஃபேசுஸ் பட்டிணமும் அதன் தென் கிழகிலுள்ள   கடற்கறை நகரமான அனதோலியாவும் தரை வழியே இணைக்கப்பட்டதால் ராஜ்ஜிய விரிவாக்கமும் வாணிக விரிவாக்கமும் ரோமர்களுக்கு மிகுந்த லாபத்தை தரும் கேந்திரப்பட்டிணமாக
விளங்கியது. இதனாலும் கிரிஸ்த்துவ மதம் அந்தப்பகுதியில் வேகமாகப்பரவியது.
பிலிப்பின் மரணத்திற்குப்பிறகு இந்த ஹீரியோபோலிஸ் பட்டிணம் பரிசுத்தர்களின் பட்டிணம் எனப்பெயர் பெற்றது.. அவ்வளவு வேத சாட்ச்சிகள் பலகால கட்டங்களில் இங்கு   அடக்கம் செய்யப்பட்டு இருகிறார்கள். கி.பி. 8 ஆம் நூற்ராண்டுக்குப்பிறகு இயற்கையின் சீற்றத்தால் பூமி அதிர்ச்சி உண்டாகி மொத்த ஹீலியோபோலிஸ் நகரமும் அடியோடு வீழ்ந்து போனது. அதற்குப்பிறகு இந்த ஹீலியோபோலிஸ் பட்டிணம் தழைக்கவே இல்லை. இந்த ஹீலியோபோலிஸ் என்னும் பட்டிணத்து இடிபாடுகளை உலக பாரம்பரிய சின்னங்களைப்பாதுகாக்கும் யுனெஸ்கோ நிருவணம் தன் பொருப்பில் எடுத்துக்கொண்டது, ஒரு வருடத்துக்கு 15 லட்ச்ம் சுற்றுலாப்பயணிகள் இந்த பட்டிணத்தையும் அதிலுள்ள புனித
பிலிப்பு அப்பொஸ்த்தருடைய கல்லறைகோயிலையும் தரிசித்து செல்கிறார்கள்.
முதல் நூற்றாண்டிலிருந்து இன்று வரை புனித பிலிப்பின் பக்திமட்டும் கிறிஸ்த்துவர்கள் மத்தியில் குறையவே இல்லை. இப்போதும் புனித பிலிப்பின் அருளிக்கங்கள் ரோமில் வத்திக்கானில் அப்போஸ்த்தலர்களுக்கான தேவாலயத்தில் ஊள்ளது. புனித பிலிப்புவே எங்களுகாக வேண்டிகொள்ளும். ஆமீன்.

Wednesday, December 4, 2013

" தலை கொடுத்தான் தலைவன் "



                                  " தலை கொடுத்தான் தலைவன் "

          அந்த அழகிய ஏட்ரியாட்டிக்கடல் அன்று என்றுமில்லா அழகோடு காணப்பட்டது. நூற்றுக்கணக்கான நாவாய்களும் சிறு சிறு மீன் பிடி படகுகளும் அந்த ஓர்டாண்டோ கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஏதோ சொர்க்கபுரிக்கு நம்மை அழைத்துச்செல்லும் ஒரு உணர்வை நமக்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடலின்   ஆழத்தையும் அதனுள்ளே வாழும் நீவாழ் உயிரினங்களையும் நம் சாதாரண கண்களாளேயே காணமுடியும். அதிலும் ஒரு இரண்டுகாத தூரம் படகில் சென்று பார்த்தால் அடடா....  கடவுள் இந்த உலகை எவ்வளவு அழகாக படைத்துள்ளார் என்று அவரது சிருஷ்டியை நாம் பாராட்டாமலிருக்க முடியாது.
      இத்தாலிநாட்டின் தென் கிழக்கு பகுதியில் ஏட்ரியாடிக்கடலின் ஒரு துறை முகப்பட்டிணம்தான் ஓர்டாண்டோ..இந்த பட்டிணத்திற்கென்று ஒரு அழகிய கோட்டை உண்டு. அழகிய பெண், அழகிய வீடு, அழகிய கோட்டை, அழகிய நாடு இவை அனைத்தும் மற்றவரை சொந்தம் கொண்டாட வைக்கும். இப்படியாக இந்த ஓர்டாண்டோ என்னும் அழகிய பட்டிணத்தையும்
சொந்தம் கொண்டாட பலர் முயற்சித்ததன் விளைவு....இந்தக்கோட்டையும் பட்டிணமும் பலர்பேர்களின் கைகளில் மாறி மாறி கி.பி.553 ல் அன்றைய பைசாந்தியர்களின் [துருக்கி] கையில்   வீழ்ந்தது.அவர்கள் கையிலும் அது சில காலம்தான் இருந்தது. பிறகு சார்சேனியர்கள் கைக்கு மாறியது. பிறகு அரகோனியர்கள் கைக்கு மாறியது. தாங்கள் இழந்த கோட்டையையும் செல்வாக்கையும் மீண்டும் இந்த கோட்டையில் நிலை நாட்ட துருக்கியர் என்னும் பைசாந்தியர் கி.பி. 1480 ஆம் ஆண்டு இந்த ஓர்டாண்டோ கோட்டைக்கைப்பற்ற ஒரு நெடும் போராட்டம்   நடத்தினர்.
      திடீரென வந்த பைச்சாந்திய ராணுவம் சுமார் 15000 பேர் ஏறக்குறைய 150 கப்பல்களில் வந்து இந்த நகரை முற்றுகை இட்டனர். பெர்சியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள் அக்காலத்தில்   பெரும் சாதனை புறிந்தன...அதன் முன்னால் எந்தக்கோட்டையும் நிலை நிற்க முடியாது. இத்தகைய பீரங்கிகளால் தன் தாக்குதலை ஆரம்பித்தான் பைசாந்திய தளபதி அஹமத் பாஷா.
           அந்த கோட்டைக்குள் இருக்கும் நகர மக்களுக்கு ஒரு அறிக்கை விடுத்தான்." இந்த ஓர்டாண்டோ மக்களே.. உங்களுக்கு இன்று ஒரு நாள் அவகாசம் தருகிறேன்...உயிர்மீது ஆசை   இருப்பவகள் என்னிடம் வந்து சரணாகதி அடைந்தால் பொது மன்னிப்புதரப்படும்..மறுத்தால் அனைவரும் கொல்லப்படுவீர்கள்.. " இந்த அறிவிப்பை பொது மக்கள் யாரும் அவ்வளவு
பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை..காரணம் ராணுவ உதவி கேட்டு ஓர்டன்டொ மன்னர் ஃப்ரன்சிஸ் லார்கோ நேப்பிள் மன்னர் ஃபெர்டினண்டோ என்பவருக்கு செய்தி அனுப்பி இருகிறார். எப்படியும் உதவி வந்துவிடும். இந்த பைசாந்திய ராணுவம் விரட்டி அடிக்கப்படும் என்று நம்பினார்கள். ஆனால் காலம் செல்லச்செல்ல எந்த உதவியும் வந்ததாக தெரியவில்லை.
           தளபதி அஹ்மத் பாஷா முதலில் சம்பிரதாயமாக ஒரு வீரனை அனுபினார்.. ஆனல் கோட்டைக்குள் இருந்தவர்கள் அவன் தலையை வெட்டி அனுப்பினர்..மீண்டும் ஒரு வாரம் கழித்து   மேலும் ஒரு வீரனை அனுப்பினான்.. அவனை வில்லால் குத்தி கொண்றனர் கோட்டை வாசிகள். இதனால் மிகுந்த கோப வெறிகொண்டான் அஹ்மத் பாஷா.. தன் படை வீரர்களுக்கு   தாக்குதலுக்கான உத்திரவை கொடுத்தான்..உடனே ஆரம்பமானது போர். பயங்கரமான பீரங்கித்தாக்குதல் ஆரம்பமானது. ஓர்டாண்ட்டோ கோட்டைக்கதவுகள் தகர்க்கப்பட்டன.
        கோட்டை பல இடங்களில் விரிசல் கண்டது..மேலும் மேலும் பீரங்கியின் தாக்குதலில் விரிசல் கண்ட கோட்டைகள் தகர்ந்து விழுந்தன. இந்த வழிகளிள் புகுந்தது பைசாந்திய ராணுவம்.  அவர்களை உள்ளே வரவிடாமல் கோட்டைகளின் மீதிருந்து கொதிக்கும் சுடு தண்னீரையும் கொதிக்கும் எண்ணைகளையும் அவர்கள் மீது ஊற்றி எதிரியின் முன்னேற்றத்தை தடுத்தனர்   கோட்டையின் விசுவாச வீரர்கள்.. ஆனால் கோட்டையிலிருந்த பல வீரர்கள் சத்தம் போடாமல் காணாமல் போய் இருந்தனர்..வெறும் ஐம்பது பேர்தான் தீரமாகப்ப்போரிட்டனர்.ஆனால் அவர்கள் எவ்வளவு நேரம்தான் தாக்குப்பிடிக்கமுடியும்..15000 பைசாந்திய ராணுவ வீரர்கள் எங்கே. ஐம்பது விசுவாச வீரர்கள் எங்கே..கொஞ்ச நேரத்தில் ஓர்டாண்டோ கோட்டை வீழ்ந்தது.. அதன்பிறகு ஆரம்பித்தது அட்டூழியம்..
                                                     முதல் பலி.
             ஓர்டாண்ட்டோ கோட்டை வீழ்ந்தது என்ற சேதி கிடைத்ததுமே அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் அனைவரும் கோட்டையினுள் ஒன்று கூடியினர். எங்கும் தப்புவதற்கு வழி இல்லை என்ற   நிலையில் கோட்டையினுள் இருந்த பேராலயத்திற்குள் வந்தனர். அங்கே ஏற்கனவே ஆர்ச் பிஷெப் ஸ்டெப்பேனோ அகிரிகொலோவும் மன்னர் ப்ரான்சிசும் மற்றும் பிஷெப் ஸ்டெப்பினோ பென்டினெல்லியும் மற்றும் அனேக குருக்களும் கன்னியர்களும் தங்கள் குருத்துவ உடையுடனும் கையில் சிலுவையும் வைத்துக்கொண்டு தங்கள் விதிக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
மேலும் அனேக பொதுமக்கள் பேராலயத்தின் முன் ஒன்று கூடியிருந்தனர். அன்றைய நாள் ஆகஸ்ட் 11.கி.பி.1480.
       சூறாவளி என அங்கு தன் குதிரைப்படையினருடன் கோட்டையினுள்ளே வந்தான் பைசாந்திய தளபதி அஹ்மத் பாஷா. ஒரே கேள்விதான் கேட்டான்..
" உங்களில் எத்தனை பேர் முஸ்லிமாக மாறுகிறீர்கள்"..யாவரும் மறுத்தனர்..அடுத்தபடியாக கட்டளை பிறந்தது..." கொல்லுங்கள் இவர்களை"... அவ்வளவுதான்.. வணக்கத்துகுறிய ஆர்ச் பிஷெப் தன்   ஆண்டவர் உடையுடனே கோயிலின் பீடத்திலேயே தலை வெட்டிக்கொல்லப்பட்டார். அரசன்முதல் கோயிலிலிருந்த குருக்கள், கன்னியர் யாவரும் இருகூறாக வெட்டிக்கொல்லப்பட்டனர்.
          கோயிலுக்கு வெளியே இருந்த கூட்டத்தில் கிழவர்கள், கிழவிகள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் பிரிக்கப்பட்டனர். முடியாதவர்கள் என்றும் பத்துவயதுக்குட்பட்டகுழந்தைகள் அனைவரும் தயவு தாட்ச்சண்யம் இன்றி வெட்டி கொல்லப்பட்டனர். வயது பெண்கள், சிறியவயது ஆண்கள் அனைவரும் அலபேனியாவுக்கு அடிமைகளாய் விற்கப்பட்டனர்..
ஒரு சரித்திர ஆறாய்ச்சியாளரின் கணக்குபடி ஏறக்குறைய 12000 பேர் கொல்லப்பட்டதாகவும் 5000 பேர் அடிமைகளாக விறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
         இந்த அட்டூழியத்தையும்நியாயப்படுத்துகிறார் அக்காலத்தில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர் இபின் கேமால் என்பவர். அக்கலத்தில் வாழ்ந்த மற்ற சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நடந்த இந்த யுத்தம் ஒன்றும் வித்தியாசமானது இல்லை... எல்லா அரசாங்கமும் நடத்தும் யுத்தம்போன்றதே...மக்களுக்கு பயம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே அப்பாவி மக்கள் பலர் இந்த அளவு
கொல்லப்பட்டிருகிறார்கள் என்றும், எழுதி வைத்திருகிறார்கள்.

         இந்த நிலையில் 813 பேர் அடங்கிய திடகாத்திரமான ஆண்கள் தனியே பிறிக்கப்பட்டனர். தளபதி அஹ்மத் பாஷா இவர்களிடம் வந்தான்.
" உண்மையில் உங்களைக்கொல்ல எனக்கு இஸ்ட்டம் இல்லை..உங்களுக்கு உயிர் வேண்டுமானால் முஸ்லிமாக மாறுங்கள்...இல்லையேல் சாகுங்கள்... எது வேண்டும்?" என்றான்..
           அப்போது ஒரு தையல் தொழிலாளி அன்டோனியோ பிரிமால்டி என்பவர்," என் நண்பர்களே..இதுவே தக்க தருணம்...நம் ஆண்டவறாகிய யேசு நம்மை இரட்சிக்க தன் உயிர் தந்து  நம்மை மீட்டுள்ளார்.. அது போல நாமும் நம் ஆண்மாவை காக்கும்படியாகவும்...நம் விசுவாசத்தை காக்கும்படியாகவும்...ஆண்டவருக்கு சாட்ச்சியாக மரிப்போம்." என்றார். உடனே பலத்த ஆரவாரம் உண்டானது. பலரும் கைதட்டி தங்கள் ஆதரவை அண்டோனியோ பிரிமால்டிக்கு தெரிவிதார்கள். இதனால் கடுப்பாகிப்போனான் தளபதி அஹ்மத் பாஷா..
" இதில் யார் அன்டோணியோ பிரிமால்டி" என்றான்.
"அது நான் தான் ஐய்யா" என்றார் அண்டோனியோ.
" நீ தான் இந்தக்கூட்டத்துக்கு தலைவனோ"
" நான் இந்த கூட்டத்துக்கு தலைவன் இல்லை.. அப்படி ஒரு எண்னமும் எனக்கு இல்லை"
" பரவாயில்லை அண்டோனியோ..இந்த கூட்டத்துக்கு நீயே தலைவனாக இரு" என்றான் தளபதி அஹ்மத் பாஷா. " சரி..நீங்கள் அனைவரும் கிறிஸ்த்துவை விடுத்து முஸ்லிமாக மாறும்  எண்ணத்தில் இல்லை... அப்படித்தானே?"
" ஆமாம்..நாங்கள் யாரும் முஸ்லிமாக மாற மாட்டோம்... எங்கள் கடவுளை மறுதளிக்க மாட்டோம்...மாட்டோம்...மாட்டோம்" என்று ஒரே குறலாய் கத்தினார்கள்.
      தளபதி அஹ்மத் பாஷாவின் கண்கள் கோபத்தால் கோவைப்பழம் போல் சிவந்தன.. இவர்களைக்கொண்டுபோய் அந்த மலையின் உச்சியில் வெட்டிக்கொல்லுங்கள்" என்றான்.
           இந்த துயரமாக சம்பவம் நடந்தது ஆகஸ்ட் 14.கி.பி.1480. இந்த அண்டோனியோவுடன் 813 ஆண்களும் கைகளிலும் கால்களிலும் கழுத்திலும் விலங்குபூட்டி அருகில் இருந்த  மினெர்வா என்னும் குன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். முதலில் பெயர் சொல்லி அழைக்கப்பட்டது அண்டோனியோ பிரிமால்டி..அவர் தான் முதல் பலியானார். அவரது தலை
முதலில் வெட்டப்பட்டது. உயிரற்ற அவரது உடல் மட்டும் திடீரென எழுந்து நின்றது. அதில் தான் ஆண்டவர் ஒரு பெரும் புதுமை செய்தார். உயிரற்ற அந்த உடலை யாராலும் கீழே தள்ள  முடியவில்லை. பத்துபேர் சேர்ந்துகூட அந்த உடலை அசைக்கக்கூட முடியவில்லை..".சரி ..இந்த உடலை கீழே தள்ளும் முயற்சியை கைவிடுங்கள். செத்த அந்த உடல் கீழே விழாவிட்டால்
ஒன்றும் நஷ்டமாகப்போவது ஒன்றுமில்லை.. அடுத்தவனைக்கூப்பிடு " என்றான் பாஷா..
           தனக்கு முன்னே பலியான அண்டோனியோவை ஆண்டவர் எவ்வளவுதூரம் உயர்த்தியுள்ளார்   என்றும் ஆண்டவறாகிய யேசுவின் பிரசன்னம் அருகிலேயே உள்ளது என்றும் உணர்ந்த மற்றவர்கள் மனதில் புதிய உற்சாகம் அடைந்தவர்களாய் அவரவர் பெயர் வாசிக்க வாசிக்க
அடுத்தடுத்து தலை வெட்டுண்டார்கள். இப்படியாக அந்த 813 ஆவது நபர் சாகும்வரை அந்தோணியோவின் தலை இல்லாத உடல் நின்று கொண்டே இருந்தது.. அந்த கடைசி நபரும்   தலை வெட்டுண்டு மரித்தபிறகுதான் அண்டோனியோவின் உயிரற்ற சடலம் கீழே விழுந்தது.
            இந்த நிகழ்ச்சியால் பெரிதும் கவரப்பட்டான் ஒரு பைசாந்திய வீரன்.. ஓட்டமான் துருக்கி ராணுவத்தில் ஒரு பெரும் அதிகாரியாகப்பணியாற்றிய அந்த அதிகாரியின் பெயர் பெர்சாபீ   என்பதாகும்.      தான் உடனே ஒரு சாட்ச்சியம் அளித்தான்.. இந்த வெறியாட்டத்தில் தான் கலந்துகொண்டதற்காக வெட்க்கப்படுவதாகவும் யேசு கிறிஸ்த்துவை கடவுளாக
ஏற்றுக்கொள்வதாகவும் அறிவிதான். இதற்காக அவருக்கும் அப்போதே மரண தண்டனை வழங்கப்பட்டது. கிறிஸ்த்துவுக்கு சாட்ச்சியாக முஸ்லீமாக இருந்த ஒரு ராணுவ வீரரும்  தன்னுயிர் தந்தது வியப்பான ஒரு செய்திதான். இந்த வெறியாட்டமெல்லாம் நடத்தி இந்த ஓர்டாண்டோ நகரைக்கைப்பற்றிய துருக்கி ராணுவ்ம் அதிக நாள் தன் கையில் வைத்திருக்க   முடியவில்லை.    அடுத்த ஆண்டே கி.பி.1481ல் நேப்பில்ஸ் மன்னர் ஃபெர்டினண்டின் மகன் ஆரகோனைச்சேர்ந்த அல்ஃபோன்சோவிடம் தோற்று ஓர்டாண்டோவை பறிகொடுத்தது.
            பிறகு பல கால கட்டங்களில் பலமுறை இந்த ஓர்டாண்டோ நகரைக்கைப்பற்ற பைசந்திய ராணுவம் முயன்றும் கடைசிவரை அது முடியாமலேயே போயிற்று..
         அல்போண்சா பிரிமால்டியும் அந்த 813 நபர்களும் தலை வெட்டுண்டு இறந்த அந்த மினெர்வா மலைமீது அவர்களின் ஞாபகமாக அந்த குன்றுக்கு வேத சாட்ச்சிகளின் குன்று   என்று பெயர் பெற்றது. அக்டோபர் 13.கி.பி.1481. வேத சாட்ச்சிகளான அண்டோனியோ மற்றும் அந்த 813 பேரின் சடலங்களும் அந்த ஓர்டாண்டோ   பேராலயத்தில் புதைக்கப்பட்டன. அதுவரை அந்த சடலங்கள் கெடாமல் அழுகாமல் அப்படியே இருந்தன. இதுவும் ஒரு பெரும் புதுமையே. பிறகு பலகாலம் கழித்து அவர்களின் புனித
அருளிக்கப்பொருட்கள் பல பட்டிணங்களுக்கும் அனுப்பப்பட்டன. ஜூலை 5.கி.பி.2007ல் பரிசுத்த பிதா பாப்பு 16 ஆம் ஆசீர்வாதப்பர் இவர்களுக்கு புனிதர் பட்டத்திற்கான ஏற்பாடுகள்  செய்தார். மே 12.கி.பி. 2013 ல் பரிசுத்தபிதா பாப்பு ஃப்ரான்சிஸ் இவர்கள் அனைவருக்கும் புனிதர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.

Sunday, December 1, 2013

" வீர மங்கை புனித யூலேலியா "





                                  " வீர மங்கை புனித யூலேலியா "
       திருச்சி மேலப்புதூரில் அமைந்துள்ள புனித ஆரோக்கியமாதா ஆலயத்தின் மேல் விதானத்தத்தில் வரையப்பட்டிருக்கும் வேத சாட்ச்சிகளின் சரித்திரங்களில் புனித யூலேலியாவின்  வரலாரும் ஒன்று...நம் புனிதை யூலேலியா கி.பி. 290ல் ஸ்பெயின் நகரில் மெரிடா பட்டிணத்தில் பிறந்திருக்க வேண்டும். தன் பதின்மூன்றாம் வயதிலேயே வேத சாட்ச்சி பட்டம்
பெற்றார்.
       இந்த காலக்கட்டத்தில் தியோக்குலேசியன் என்னும் கொடுங்கோலன் ரோமைய சர்வாதிகாரியாக ஆண்டு வந்தான்.. இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை தன் ஒருவனால் ஆள  முடியாதென தனக்குக்கீழ் மூன்று உதவியாளர்களை சீசர்களாக அமர்த்திக்கொண்டான். இப்படியாக போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஃபிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளை மாக்சிமியன்   என்னும் சீசர் தியோக்குலேசியன் சார்பாக ஆண்டுவந்தான்..
தியோக்குலேசிய மன்னனின் கொடுமையான குடி உறிமைச்சட்டம் கிறிஸ்த்துவர்களையும் யூதர்களையும் மிகவும்   கொடுமையாக பாதித்தது.
      அதன்படி ரோமின் ஆதிக்கத்துக்குட்பட்ட அனைத்து நாடுகளிலும் வசிக்கும் குடிமக்கள் யாராக இருந்தாலும் சரி...எத்துனை வயதுடையவர்களாக இருந்தாலும் சரி... அவர்கள் ஆனா லும் பெண்ணாலும்... கட்டாயம் அந்தந்த கால கட்டங்களில் நாட்டை ஆளும் ரோமைய மன்னரை கடவுளாக ஏற்றும் அவர்கள் வணங்கிவரும் ரோமைய தெய்வங்களுக்கு தூபம் மற்றும்
தீபாறாதனை காட்டவும் வேண்டும். வருடாவருடம் இந்த சடங்கை புதுப்பித்துக்கொள்ளவேண்டும் ..அப்போதுதன் அவர்கள் ரோமைய குடியுறிமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்..
மறுப்பவர்கள் அவர் யாறாக இருந்தாலும். அவர் சமூகத்தில் எத்தகைய அந்தஸ்த்துடையவர்களாக இருந்தபோதிலும் அவர்தம் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொடுமையான  தண்டனைகள் மூலம் கொல்லப்படுவர். கிறிஸ்த்துவ மதம் தடை செய்யப்படுகிறது.கிறிஸ்த்துவ மக்கள் அருவருக்கத்தக்கவர்..அவர்கள் கொல்லப்படவேண்டும்..
        நம் புனிதை வாழ்ந்த ஸ்பெயின் தேசத்தில் இருந்த மெரிடா பட்டிணம் ரோமர்களின் காலனியாக இருந்ததால் இங்கும் இந்த குடியுறிமைச்சட்டம் அமுல் படுத்தப்பட்டு  கிறிஸ்த்துவர்கள்பலர் வேட்டை நாய்கள் போல துரத்தித்துரத்தி பிடிக்கப்பட்டு கொடுமையாய் கொல்லப்பட்டனர். பல கிறிஸ்த்துவர்கள் பரிதாபமாக ரகசியமாக வாழ்ந்தார்கள். அப்போது
சீசர் மாக்சிமியன் சார்பாக மெரிடா பட்டிணத்தை ஆண்ட ஆளுனன் கல்பூர்னினன் என்னும் மனித அரக்கன். இவன் மனதில் கொஞ்சம்கூட மனித தன்மை இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை எனலாம்.. அவ்வளவு கொடுங்கோலன் அவன். இவன் காலத்தில் கிறிஸ்த்துவர்கள் பட்டு துன்பம் கொஞ்சம் நஞ்சம் அல்ல...ஒருநாள்...
         நம் புனிதை யூலேலியா தன் தாயின் அரவணைப்பில் தன்னை மறந்திருந்தாள்...அவள் தாயார்.." மகளே யூலேலியா...உன்னைக்காணும் போது என்னுள்ளம் பெரும் உவகை  கொள்கிறது. என்னால் உன் ஆண்மாவைகாண முடியாது...ஆனால் உன் முக அழகைக்காண முடியும்... எவ்வளவு அழகான முகம் உன்னுடையது..ஆனால் மகளே...உன் அழகே உன்
உயிருக்கு எமனாகவந்துவிடுமோ என்றுதான் நான் பயப்படுகிறேன் அம்மா.." என்று கண்ணீர் சிந்தினாள்.
" அம்மா... என்ன பேசுகிறீர்கள் நீங்கள்...நீங்களா இப்படிப்பேசுவது...எனக்கு இறை நம்பிக்கையும், பரிசுத்த ஆவியின் வல்லமையயும் பற்றி தினம்தினம் புத்தியாக சொல்லிகொடுத்த நீங்களா அம்மா இப்படி பயப்படுவது..நீங்கள் என்னை ஒரு கோழையாக வளர்க்கவில்லையே அம்மா.. என்னை தைரியசாலியாக அல்லவா வளர்த்திருக்கிறீர்கள்..நீங்கள் நாளைய
பொழுதை பற்றி ஏன் கவலைப்படுகிறீகள்...நாளை நிச்சயமற்றது..அதை கடவுள் பார்த்துக்கொள்வார்..பின் நாம் ஏன் அம்மா வீனிலே கவலைப்படவேண்டும்..இன்றைய கவலை   இன்றைக்குப்போதுமானது. நாளைய கவலையை அதுவே பார்த்துக்கொள்ளும் என்று நீங்கள் வாசித்ததில்லையோ" என்றாள்..யூலேலியா.
" மகளே யூலேலியா..நீ எத்தனை சாமார்த்தியமாக என்னை மடக்கினாலும் என் தாயுள்ளம் உனக்கு புறியாது..இன்று ஏனோ என் உள்ளம் அமைதி அடையவில்லை..ரோமைய வம்சா   வழிவந்த நாம் இன்றில்லை நாளை ...நாளையும் இல்லை மறு நாள்.. விரைவிலேயே ஆளுனன் கல்பூசியன் நம்மை அழைத்து ரோமைய குடியுறிமையை புதுப்பிக்க அழைப்பான்..அப்போது   நாம் மறுத்தால் நாம் நிச்சயம் கொல்லப்படுவோம்...நானும் உன் தகப்பனாரும் கொல்லப்படுவதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை...ஆனால் ஆளுனன் முன்பாக நீ
நிற்க வைக்கப்படும்போது... அவன் உன்னைப்பார்த்தால்...உனக்கு ஏற்படப்போகும் கதிபற்றி ....நினைத்தாலே பயமாக இருக்கிறது மகளே.." என்று கேவிக்கேவி அழுதாள் அவள் தாயார்.
      அந்த நேரம் கதவு பலமாக தட்டப்பட்டது..கதவைத்திறந்தால் ரோமைய வீரர்கள்.." என்ன விஷயம்" என்றாள் யூலேலியாவின் தாயார். " அம்மா..நாளை காலை பத்து மணி அளவில்  நம் ரோமையர் அரங்கத்தில் நீங்கள்..உங்கள் கணவர்...உங்கள் மகள்...யாவரும் அவசியம் வந்து உங்கள் ரோமைய குடி உரிமையை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம்...மறுக்கும்பட்ச்சத்தில் நீங்கள் அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிற்கவைக்கப்படுவீர்கள் " என்றனர்..
யூலேலியாவின் தாய் தன் மகளை அர்த்தபுஷ்ட்டியுடன் பார்த்துக்கொண்டாள்.." மகளே..நான் சொன்னதுசரியாகப்போயிற்றா..பின்னால் வரும் துன்பம் முன்பே தன் சாயலைக்காட்டி விடும் என்பதை சரியாகத்தான் சொல்லி இருகிறார்கள் நம் முன்னோர்கள்" என்றார். " சரி...நீங்கள் போகலாம் " என்று வந்த வீரர்களை அனுப்பிவிட்டு " மகளே யூலேலியா...என் மனது   சொன்னது சரியாகத்தான் போய்விட்டது...இனிமேல் தாமதிப்பதில் பிரையோஜனமில்லை... உடனே கிளம்பு... பார்சிலோனாவில் என் சகோதரன் வீட்டுக்குபோய் பிழைத்துக்கொள்...   எங்களைப்பற்றி கவலைப்படாதே...ஆண்டவன் அருள் இருந்தால் நிச்சயம் நாம் பரலோகத்தில் மறுபடியும் சந்திப்போம்" என்று தன் அன்பு மகளை கட்டிப்பிடித்துக்கொண்டு அவள்  கண்ணத்தில் மாறி மாறி முத்தமிட்டு வழி அனுப்பிவைத்தாள்.
      யூலேலேயா," அம்மா...நான் உன்னிடத்தில் பிறந்தேன்...உன்னிடத்தில் வளர்ந்தேன்...உன்னோடு மரிக்கவே விரும்புகிறேன்...ஏன் என்னை பிறிக்கிறீர்கள்?" என்றாள்.
" மகளே யூலேலியா..வேத சாட்சி முடி அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது...அது நீடித்த கொடிய வேதனை தரும் மரணம்..உன் போன்ற சிறிய பெண்களுக்கு அது இன்னும்   கொடியது..பலபேர் முன்னிலையில் மானபங்கம் ஏற்படும்..அந்த மனவலி உடல்வலியைவிட அதிகமானது..இதெல்லாம் உனக்கு வேண்டாம்..நீ உடனே கிளம்பு" என்று
துரிதப்படுத்தினாள். மகள் யூலேலியாவும் தாய் சொற்ப்படி கீழ்படிந்து அந்த இரவே பயணப்பட்டாள். கொடுமையான அந்த நாளும் அடுத்த நாளாக விடிந்தது.
             அந்த ரோமர்களின் காலனி நாடான மெரிடா பட்டிணத்தின் ஆம்பிதியேட்டர் எனப்படும் அரங்கம் பார்வையாளர்களாலும் ரோமைய குடி உரிமையை புதிப்பிக்கவேண்டியும் சத்திய   பிரமாணம் எடுக்க வந்த பெரும் கூட்டத்தால் நிறம்பி வழிந்தது.. பல கிறிஸ்த்துவர்கள் குடும்பம்குடும்பமாக வந்து ரோமைய தேவர்களுக்கும் தூபாறாதணை காட்டி தங்கள் கடவுளுக்கு
துரோகம் செய்து தங்கள் உயிரையும் உடமையையும் காத்துக்கொண்டார்கள். அடுத்த முறையாக வந்தது யூலேலெயாவின் பெற்றோர் பெயர்.
அந்த நேரத்தில் ஆளுநன் கல்பூர்னினன் தன் உதவியாளர்களிடன் தன் மனக்குறையை தெரிவித்துக்கொண்டான்." இன்றைக்கு நாள் ஒன்றும் சரி இல்லை போலும்...இன்றைக்கு   ஒரு கிறிஸ்த்துவன் கூட தம் வேதத்தை மறுக்கவே இல்லையே...நம் ரோமைய தேவர்களுக்கு ரத்தப்பசி அடங்கும் படியாக ஒரு கிறிஸ்த்துவன் கூட இன்றில்லாமல் போனது துரதிஸ்ட்டம்
தான் போ" என்றான்...இந்த நேரத்தில் தான் யூலேலியாவின் பெற்றோர் முறை வந்தது.. " ஓ...நீங்கள் தான் யூலேலியாவின் தாய் மற்றும் தகப்பனா ... எங்கே உம் மகள் அந்தக்கட்டழகி யூலேலியா..உன் குடும்பத்தைப்பற்றிய அனைத்து விபரமும் நான் அறிவேன் " என்றான் அந்தக்கிழவன்.
       இந்த விசாரணையை எதிர்பார்த்திருந்த அந்த பெற்றோருக்கு மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று நேயர்களுக்கு இப்போது புறிந்திருக்கும். அவர்கள் பதில் ஏதும் பேசவில்லை..
" உங்களை நான் பிறகு விசாரித்துக்கொள்கிறேன்...முதலில் எனக்கு யூலேலியா வேண்டும்... எங்கே யூலேலியா ?" என்று கர்ச்சித்தான் அந்தக்கொடியவன். அப்போது யாரும்  எதிர் பாராதவிதமக " ஐய்யா ஆளுநர் அவர்களே நான் இங்கே இருகிறேன்" என்ற பதில் வந்தது.. அது வேறு யாரும் அல்ல...நம் யூலேலியாவே தான்..
" அடிப்பாவி மகளே... உன்னை யார் இங்கு வரச்சொன்னது...ஐய்யோ..இனி உன்னைக்கடவுள் கூட காப்பாற்றமுடியாதே...அடிப்பாவி..என் வயிறு பற்றி எரிகிறதே.. அம்மா. மகளே..  யூலேலியா... என் அம்மா இப்படிச்செய்தாய்... இந்த கொடுமையைகாணவா நான் இன்னும் உயிரோடு இருக்கவேண்டும்.. ஐயோ ஆண்டவா என் மகளைக்காப்பாற்று" என்று அழுதாள்
      அவள் தாயார். ஆனால் ஆண்டவர் அவளைக்காப்பாற்ற அல்ல...நரபலி கொடுக்க அல்லவா அவளை மீண்டும் அழைத்துவந்துவிட்டார் என்று அப்போது அவளுக்கு புறிந்திருக்க  நியாயமில்லை. ஆதலால் மூர்ச்சை அடைந்தாள். இவளையும் அவள் கணவனையும் சிறையில் போடு ..அவர்களை நான் பிறகு பார்த்துக்கொள்கிறேன்" என்றான்
ஆளுனன் கல்பூர்னினன்.
" பெண்னே யூலேலியா... வந்து சபையில் உன் சத்தியப்பிரமாணத்தைக்கூறு.. பிறகு உன் பெற்றோரிடம் வாங்கிக்கொள்கிறன்." என்றான் ஆளுநன். யூலேலியா சபையினர் முன் வந்து நின்றாள். அரங்கத்தில் அமைதி நிலவியது.
        யூலேலியா," ஆளுநர் அவர்களே...கடவுளுக்குறியதை கடவுளுக்கு கொடு...சீசருக்குறியதை சீசருக்கு கொடு என்று எம் பெருமான் யேசுநாதரின் கூற்று படி நான் மன்னருக்குறிய   மரியாதையை மன்னருக்கு கொடுக்க நான் ஒருபோதும் மறுக்கவில்லை.. ஆனல் மன்னரை கடவுளகவும் ரோமைய தெய்வங்களை என் கடவுளாகவும் ஏற்க நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள
மாட்டேன்..இது ஒரே கடவுளை விசுவாசிகிறேன் என்னும் எம்மதத்தின் விசுவாசப்பிரமாணத்திற்கு எதிரானது. வானத்தையும் பூமியையும் படைத்த சர்வசுரன் நாமே ...நம்மைத்தவிர   வேறு கடவுள் உனக்கில்லாமல் போவதாக என்னும் கட்டளைக்கும் எதிறானது... ஆகவே நான் நீர் சொல்லும் சத்திய பிரமாணம் எடுக்கப்போவதில்லை." என்றாள்.
" ஆஹா..பெண்ணே...நீ ஒரு கிறிஸ்த்துவளா?" என்றான் ஆளுநன் கல்பூர்னினன்.
" ஆம்...நான்..ஒருகிறிஸ்த்துவள் தான்... கிறிஸ்த்துவள் என்பதில் பெருமைப்பட்டுக்கொள்கிறேன்" என்றாள் யூலேலியா.
" ஆஹா யூலேலியா..நேற்று உன்னைப்பற்றி அறிய வந்ததுமே என் உள்ளம் பேருவகை கொண்டது. உன் அழகு என்னை வசப்படுத்திவிட்டது..கிறிஸ்த்துவம் சபிக்கப்பட்ட ஒன்று...
நம் சாம்ராஜ்ஜியத்தில் அதுதடை செய்யப்பட்ட ஒன்று...துன்பம் நிறைந்த வாழ்க்கையை நீ ஏன் தேர்ந்துகொண்டாய்?.. உனக்கு அழகில்லையா... அறிவில்லையா..அல்லது   அந்தஸ்த்துதான் இல்லையா... இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை... நீ மட்டும் சரி என்று சொல்...நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்..அல்லது..என்னை  பிடிக்கவில்லையா என் மக்களில் யாரையாவது திருமணம் செய்து கொள். வாழ்க்கை வசதிகளை உயர்த்திக்கொள்..நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்.. அதைவிடுத்து  ஏன் ராஜ துரோகத்தை கட்டிக்கோண்டு வாழ்கையை இழக்க வேண்டும்.. அரசாங்க தண்டனையை ஏன் ஏற்க வேண்டும்... இதோ பார் காலையில் இருந்து பல கிறிஸ்த்துவர்கள் வந்து தங்கள் குடும்பம் குடும்பமாக வந்து அரசருக்கும் அவர்தம் ரோமைய தெய்வங்களுக்கும் பலியிட்டு தங்கள் ரோமை குடி உரியையை புதுப்பித்துக்கொண்டு போய்விட்டர்கள்... அவர்கள்
என்ன முட்டாள்களா?...நான் உனக்கு நல்ல புத்திதானே சொல்கிறேன்..அதை விடுத்து தடை செய்யப்பட்ட அந்த கொடுமையான கிறிஸ்த்துவ மதத்த்தை ஏன் பின்பற்ற வேண்டும்.  அப்படி என்னதான் அந்த மதத்தில் இருகின்றது" என்றான் ஆளுநன் கல்பூர்னினன்.
" ஆளுநர் அவர்களே...ஆடை இல்லாத மக்களிடையே ஆடை கட்டியவன் பைத்தியக்காரன் என்பதுபோல உம்மக்களுக்கும் கிறிஸ்த்துவத்துக்கும் வெகு தூரம்...விபச்சாரத்தையும்,   மேட்டிமையையும், சிலைவழிபாடு செய்வதையும் பெருமையாகக்கொண்டாடும் உங்களுக்கு கற்புள்ளவனாக இரு..மனத்தாழ்ச்சியுள்ளவனாக இரு..உன் அயலானை அன்பு செய்
போன்றவற்றை. வலியுருத்தினால் அது ஏற்கமுடியாத விஷயமாகவே தெரியும்..இதைப்பற்றி உம்மிடம் இப்போது பேசி பயன் இல்லை..இனி ஆக வேண்டியதைப்பாரும் " என்றாள் யூலேலியா.
" யூலேலியா.. போதும் உன் பிரசங்கம்... முடிவாக என்ன சொல்லுகிறாய்...எம் அரசருக்கும் எம் தெய்வங்களுக்கும் தூபாறாதனை காட்டப்போகிறாயா ..இல்லையா?" என்று கர்ச்சித்தான்.
" இல்லை... என்னால் முடியாது. என் கடவுளுக்கு என்னால் துரோகம் செய்ய்ய முடியாது.. மாக்சிமியனுக்கோ..தியோக்குலேசியனுக்கோ அல்லது உம் தெய்வங்களுக்கோ தூபாறாதனை   காட்ட முடியாது" என்றாள்.
          யூலேலியாவின் அழவின் மேல் காமுற்ற ஆளுநன் கல்பூர்னினன் சற்றே தன் கோபத்தை அடக்கி தணிந்த குறளில்," பெண்னே, யூலேலியா...நீ சொல்லும் ஒரு வார்த்தையில் உன்   வாழ்வு முடிந்துவிடும்...எனக்கு உன்மேல் மிகுந்த பரிவு உண்டு.. என் பேச்சுக்கு எதிர் பேச்சு இங்கில்லை...நீ கஷ்ட்டப்படவே வேண்டாம்... மற்றவர்களுக்கு கூட தெரியாமல் உன் சுட்டு
விரலால் சும்மா ஒரு தடவை அந்த உப்பை தொட்டு அந்த குரு தெய்வத்தின் மீது வீசு.. அது போதும் எனக்கு.. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறன்.. உன்னை மன்னித்து உன்   பெற்றோரையும் விடுவிகிறேன்..எனக்காக... ஒரு முறை... ஒரே ஒரு முறை செய்...போதும்..நீ சட்டத்திற்கு கீழ்படிந்துவிட்டாய் என்று உன்னை விட்டுவிடுகிறேன்... என் குரு  தெய்வத்தின் மீது ஆணை" என்று நயவஞகமாக பேசினான் ஆளுநன்.
          ஆளுநனின் மன ஓட்டத்தை நன்றகப்புறிந்துகொண்டாள யூலேலியா. எனவே தன் பேச்சில் மரியாதையை விடுத்து, " அடே நயவஞ்சகப்பூனையே, உன் எண்ணம் எனக்கு   நன்றாகப்புறிந்து விட்டது..உன் பேச்சில் உள்ள விஷம் எனக்குத்தெரியாதென்றா நினைத்தாய்..வயதில் சிறியவள் தானே..ஆசை காட்டினால் வளைந்து போவாள்...அதட்டிப்பார்த்தால்   அடங்கிப்போவாள் என்றுதானே நினைத்தாய்..புல்லனே பொசுங்கல் அல்ல நான்..கற்பு, மானம், அன்பு, பண்பு,பாசம்,தெய்வபயம் என்னும் சீரிய குணங்களால் வளர்க்கப்பட்டவள் நான்..இந்த உலகத்தின் மீது பற்றுள்ளவளுக்கு வேண்டுமானல் நீ நினைப்பதுபோல் உலகம் இனிக்கும்..ஆனால் என்போல் இருக்கும் பெண்ணுக்கு இந்த உலகம் ஒரு குப்பை..உன்   தங்கமும், வெள்ளியும், வைரமும் வைடூரியமும் வெறும் உப்புக்கல். உன் ஆட்சி அதிகாரம் அனைத்தும் ஒரே நாளில் மாறிப்போகும்... அப்போது உன் ஆட்டமும் அடங்கிப்போகும்... உன் மரியாதையும் நாறிப்போகும்..இந்த உலகின் மாயை அனைத்தையும் நான் அறிவேன்.. எனக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி இனி என்ன நடக்கும் என்பதை எனக்கு மிக   நன்றாககூறிவிட்டார்.. நடத்திக்கொள் உன் நாடகத்தை. எனக்கு இந்த உயிரின் மீதும் ஆசை இல்லை...இந்த உலகின் மீதும் ஆசை இல்லை " என்றாள்..
அத்தோடு மட்டுமல்ல...அந்த ரோமைய தெய்வத்தின் பீடத்தை எட்டி ஒரு உதைவிட்டாள்.. அது பத்தடி பறந்து சென்று விழுந்தது. மேலும் அங்கிருந்த பூஜைக்குறிய   ரொட்டிகளையும் பழக்கூடைகளையும் தூக்கி வீசி எறிந்தாள்..இதனால் மிகுந்த கடுப்புற்றான் ஆளுநன் கல்பூர்னினன்.
" இந்த சின்ன சிறுக்கி இத்தனை பேர் முன்னிலையிலும் என் மானத்தை வாங்கிவிட்டாள்...இவள் மானத்தை நான் வாங்காமல் விடப்போவதில்லை... அடே யாரங்கே  பிடித்துக்கட்டுங்கள் இவளை..இதுவரை யாரும் அனுபவித்திராத கொடிய வேதனைகளை இவள் மீது சுமத்துங்கள் " என்றான் ஆளுநன் கல்பூஎனினன். அளுநனின் உத்திரவுப்படி  அத்தனை பேர் முன்னிலையிலும் யூலேலியா நிர்வாணமாக்கப்பட்டாள்..
அப்போது அவள் பேசியது," அடேய் கிழட்டுப்பூனையே.. கல்பூர்னினா...இப்போதே என்னை நன்றாகப்பார்த்துக்கொள்...ஆண்டவனுக்கு என் கற்பை தத்தம் செய்திருக்கும் என்னை   அனைவர் முன்னியிலும் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தி இருகிறாய்..இதை என் மணாளன் யேசு ஒருபோதும் மறக்கப்போவதுமில்லை...உன்னை மன்னிக்கப்போவதுமில்லை.
அப்பாவி கிறிஸ்த்துவ ஆண்களையும் அபலைப்பெண்களையும் உன் அதிகாரத்தை பயன்படுத்தி செய்த கொடுமைகளுக்கு அவர் உன்னையும் உன் சீசர் மாக்ஸிமியனையும், அரசன் தியோக்குலேசியனையும் என்ன பாடு படுத்துவார் என்பதை பொருத்திருந்து பார். ஒருநாள் வரும். அந்த நாளில் நான் மாட்ச்சியையில் உயிர்த்தெழுவேன்..ஆனால் நீயோ நித்திய
வீழ்ச்சிக்கு உயிர்த்தெழுவாய்.. அன்றைக்கு உன் வாழ்க்கை எவ்வளவு பரிதாபத்துக்குறியதாக இருக்கும் என்பதை நன்றாக நினைவில் கொள். மிக்க வந்தனம்... நாம் மீண்டும்   அந்த நாளில் சந்திக்கலாம்.. எனவேதான் நான் சொன்னேன்... இப்போதே என்னை நன்றாகப்பார்த்துக்கொள்... என் முகத்தை உன் மூளையில் நன்றாகப்பதிந்து கொள்" என்றாள்.
        யூலேலியாவின் இத்தகைய வார்த்தைகளால் மிகுந்த கோபமுற்ற கல்பூர்னினன்," ஏன் இன்னும் தாமதம் ..நடக்கட்டும் நடக்கட்டும்..என் குரு தெய்வத்துக்கு ரத்த தாகம் அதிகரித்து  விட்டது..வீனே காலதாமதம் வேண்டாம்" என்றான். ஒரு பெரும் உருளை வடிவமான பேரல் கொண்டு வரப்பட்டது, அதனுள்ளே கத்திகளும் கண்ணாடிச்சில்லுகளும்
பொருத்தப்பட்டிருந்தன. இந்த உருளையினுள் யூலேலியா இறக்கப்பட்டாள்...அந்த ராஜ வீதியின் மேடான பகுதியில் இருந்து உருட்டிவிடப்பட்டாள். கத்திகளும்   கண்னாடிச்சில்லுகளும் அவள் உடலை சின்னாபின்னமாக்கின. இன்றுவரை அந்த வீதி யூலேலியா உருண்ட வீதி எனப்பெயர் பெற்றுள்ளது..
     இந்த சித்திரவதையால் நம் யூலேலியா  அடைந்த பாடுகள் எப்படி இருந்திருக்கும் என்று எண்னிப்பார்ப்போமாக. இந்த சித்திரவதியினால் மனம் திருப்தி அடையாத ஆளுநன் கல்பூர்னினன், " அவள் விலா எலும்புகள் எல்லாம்   தெரியும்மட்டும் அவள் சதைப்பகுதிகளை இரும்பு ஊக்குகளாலும் குறடுகளாலும் கிழித்தெறியுங்கள் " என்றான். அவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டது.. அவளது விலா எலும்புகள்   யாவும் நன்றாகத்தெரியும் வரை சதைகள் கிழிக்கப்பட்டன..
      இதனாலும் திருப்தி அடையாத கல்பூர்னினன் அவள் மார்பகத்தை அறிய உத்திரவிட்டான். அத்தனைபேர் முன்னியிலேயும்   அவள் மார்பகம் அறிந்தெடுக்கப்பட்டது.. இதனால் ஏற்பட்ட வேதனையியால் யூலேலியா வாயிலிருந்து முனகல் சப்தத்தோடு பரிசுத்த ஆவியைப்பற்றிய பாடல்களும் யேசுவைப்பற்றிய   புகழ்ப்பாடல்கள் பலவும் கேட்கப்பட்டது..
      இதனால் மேலும் கோபமுற்றான் ஆளுநன் கல்பூர்னினன். "அவளுக்கு இந்த தண்டனை போதாது. அறிந்த அவள் மார்பகபகுதிகளை தீயை வைத்து பொசுக்குங்கள் " என்றான்.
       அவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்போதும் அவளிடமிருந்து வேதனைக்குறளான" ஐயோ...அம்மா...போன்ற வார்த்தைகள் வராததைக்கண்ட ஆளுநன் கல்பூர்னினன்  மிகுந்த எரிச்சலுற்று, " என்ன பெண் இவள்...இவளுக்கு எப்படி இவ்வளவு வேதனைகளையும் தாங்க முடிகிறது...ஆம் தாங்க முடியாத வேதனைதரும் ஒரு விஷயமுய்ம் இருகிறது..   ஆம் அது சிலுவை தண்டனைதான்...அடடா.. இவ்வளவு நேரத்தில் இதை செய்திருந்தால் இந்நேரம் அவள் கத்தி, கதறி, " ஐய்யா... என்னை இறக்கி விடு சாமி" என்று கதறிக்கதறி கேட்டிருப்பாளே என்று நினைத்து அவளை சிலுவையில் அடிக்க உத்திரவிட்டான் அந்தப்பாவி மகராஜன்.
         ஒரு பெரும் X வடிவ சிலுவை மரம் கொண்டு வரப்பட்டது.. யூலேலியா சிலுவையில் அடிக்கப்பட்டாள்... ஆனால் மாலை வரை ஆனதுதான் மிச்சம்.. அவள் வாயிலிருந்து ஒரு முக்கலோ முனகலோ வெளிவரவில்லை.
         இதனால் மேலும் கடுப்பான கல்பூர்னினன் அவளை சிலுவையிலிருந்து இறக்கி அவள் தலைமட்டும் தீவைத்து எரியும்படி செய்தான்..அவள்
தலை நன்றாகப்பற்றி எரிந்தது.. ஆனாலும் அவள் சாகவில்லை. இதைகண்ட பல சிப்பாய்கள் அங்கிருக்கப்பயந்து ஓட்டம்பிடித்தார்கள்..இறுதியாக யூலேலியாவை எப்படியும் கொன்றே   தீர்வது என்று துணிந்த கல்பூர்னினன் அவள் தலையை வெட்ட ஆணை கொடுத்தான். பற்றி எரியும் நெருப்போடு அவள் சிரசு வெட்டப்பட்டது. அவள் கழுத்திலிருந்து ஒரு வெண்புறா
வெளியேறியதை அங்கு பார்வையாளராக அமர்ந்திருந்த மக்கள் அனைவரும் பார்த்தார்கள்...
          யூலேலியாவின் உயிர் ஒரு வெண்புறாவடிவில் அவள் உடலிலிருந்து பறந்து பரலோகம்   சென்றதை பார்த்த மக்கள் அனைவரும் யூலேலியாவின் மீதும் அவள் வணங்கிவந்த யேசுவின் மீதும் மிக்க பற்று கொண்டு அப்போதே தங்கள் விசுவாசத்துக்கு சாட்ச்சியம் கூறினார்கள்.
. கோதுமை மணி மண்னில் விழுந்து மடிந்தால் ஒழிய அது ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக பலன் தறாது என்பதும் வேதசட்சிகளின் ரத்தம் திருச்சபையின் சொத்து என்பதும்  நிரூபணமாக்கப்பட்ட உண்மைகள்.
         தன் முயற்சியில் சற்றும் மனம்தளறாத விக்ரமாதித்தியனைப்போல இத்தனை பாடுகளிலும் அசைக்கமுடியாத யேசுவின் சாட்சியதிற்காக தன்
உயிரை கொடுத்த யூலேலியாவின் திரு உடலையும் நாசமாக்க விரும்பினான் ஆளுநன் கல்பூர்னினன். தலை வெட்டப்பட்டு நிவாணமாகக்கிடந்த நம் புனிதை யூலேலியாவின்   உடலை யாரும் எடுத்துச்சென்று புதைக்கக்கூடாது எனவும் அவற்றை காக்கைகளும் கழுகுகளும் நாய்களும் நரிகளும் கடித்துத்தின்று நாசமாக்கவேண்டும் என்றும் ஆணையிட்டான்..
ஆனால் ஆண்டவராம் யேசு அவள் திரு உடல் மட்டிலும் ஒரு புதுமையை செய்தார்..திடீரென இறங்கியது கடும் மூடுபனி. அவளைச்சுற்றிமட்டும் படர்ந்து ஒரு போர்வைபோல்   அவளை மூடிக்கொண்டது..இப்படியாக மூன்று நாள்மட்டும் அந்த மூடுபனி இருந்ததால் பொதுமக்கள் யாரும் அவள் நிர்வாண உடலை காணமுடியாதபடி ஆயிற்று.
     மேலும் அங்கிருந்த   புறாக்கூட்டம் தங்கள் அம்சமான புனிதை யூலேலியாவின் திரு உடலை யாரும் நெருங்காதபடிக்கு அவள் அருகில் வருபவரை கொத்தி விரட்டின.. மூன்று நாளைக்குப்பிறகு அவள்
திரு உடல் புதுமையாய் வெள்ளை வெளேர் என்று மாறி பரலோக ஜோதியுடன் பிரகாசித்தது..கிறிஸ்த்துவமக்கள் ரகசியமாக அவள் திரு உடலை எடுத்துச்சென்று கல்லறையில்   பூச்சிதமாக அடக்கம் செய்தனர்.
      யூலேலியாவின் திரு உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகுதான் மூடுபனி விலகியதால் ஆளுநன் கல்பூர்னினனுக்கு யூலேலியாவின் சடலம் காணாமல் போய்விட்டதாக  அறிவிக்கப்பட்டது... தங்கள் விசுவாசத்தை யூலேலியாவின் பாடுகளால் புதுப்பித்துக்கொண்ட கிறிஸ்த்வர்கள் அனேகர் யூலேலியாவின் வழியே பாடுகள் பலபட்டு யேசுவுக்கு   சாட்சிகளாய் மரித்து பரலோக பிராப்த்தி அடைந்தார்கள். அவர்களுள் யூலேலியாவின் தாய் தந்தையரும் அடக்கம். யூலேலியா தியாக தீபமாக மரித்தது ஃபெப்ருவரி பனிரெண்டு.. கி.பி.303.
       புனிதை யூலேலியாவின் சடலம் ஸ்பெயின் தேசத்திலுள்ள ஓவிடோ என்னும் பட்டிணத்தில் வைக்கப்படதாகவும் அங்கு அவருக்கு ஒரு பெரிய ஆலயம் உண்டனாது   என்றும் அங்கு அவரது திருவிழா டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படுகின்றது என்றும் ஒரு சரித்திரம் உண்டு. புனித யூலேலியாவின் அருளிக்கம் அடங்கிய கல்லறை தற்போது
பார்சிலோனாவில் ஒரு பெரும் அழகிய மிகவும் பிரம்மாண்டமான தேவாலயத்தில் வைக்கப்பட்டிருகின்றது. கி.பி. 633 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை நம்  யூலேலியாவுக்கு புனிதர் பட்டம் அளித்து அவரை கௌரவித்துள்ளது. பழமை கிழக்கு ரீதி திருச்சபையும் இவருக்கு புனிதர் பட்டம் அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.
ஏறாளமான புதுமைகள் நம் புனிதை யூலேலியாவின் பக்தி முயற்சியின் பேரில் நடை பெற்றுவருகிறது..புனித யூலேலியா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமீன்..