Monday, December 9, 2019

“அவளுக்கென்று ஓர் மனம்.” பாகம் 1

 அவளுக்கென்று ஓர் மனம்.” பாகம் 1

“
சுவாமி வளர்ந்த இந்த நாசரேத் என்னும் சிற்றூருக்குத்தான் எத்தனை பெருமை.ஒன்றுமில்லாமையிலிருந்துதான் கடவுள் பெறும் சிறப்பான காரியங்களை செய்கின்றார். நாசரேத்தூரிலிருந்து சிறப்பான காரியங்கள் ஏதும் வருமோ? என்கின்றது வேதாகமம். அதாவது இந்த நாசரேத் என்னும் சிற்றூர் சரித்திர முக்கியத்துவம் ஏதும் இல்லாத ஒரு புறம்போக்கு இடம்.
ஆனால் இந்த ஊரில்தான் பிதாப்பிதா ஈசாக்குக்கு ரபேக்கா என்னும் பெண்ணை மணமுடித்தார்கள். அவள் எவ்வளவு பெரும் அழகி என்றால் பிதாப்பிதா ஈசாக்கு இவளைக்கண்ட மாத்திரத்தில் தன் தாயின் மரணத்தால் ஏற்பட்ட பெரும் துன்பத்தை மறந்தார். முதுபெரும் தந்தையும் பிதாப்பிதாவுமாகிய அபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு ஏற்ற ஒரு நல்ல  பெண்ணை தன் குலத்திலிருந்து கொண்டு வர தன் ஊழியக்காரர் ஆகிய எலியேசரை பணித்தார். அவரும் தம் ஆண்டவரின் கிருபையால் தன் எஜமானர் ஈசாக்குக்கு நல்ல பெண்ணை தேர்ந்தெடுத்து கொண்டுவருவதாக  தந்தை அபிரகாமின் தொடைமேல் அடித்து சத்தியம் செய்து கொடுத்து தன் பயணத்தை தொடர்ந்தார். எலியேசர் தன் பணியாளர்களுடனும் பயணம் செய்து வந்த ஒட்டகங்களுடனும் இந்த நாசரேத்துக்கு வரும்போது அவர்களுக்கு பெரும் தாகம் மூண்டது. “ ஆண்டவரே… நான் என் எஜமானருக்கு நல்ல பெண்ணை கொண்டுவருவதாக சத்தியம் செய்து கொடுத்து வந்துள்ளேன். அவள் யார் என எனக்கு காண்பியும். எனக்கும் என் பணியாளர்களுக்கும் என் ஒட்டகங்களுக்கும் யார் தண்ணீர் கொண்டுவந்து தருவார்களோ அவர்களே என் எஜமானருக்கு நல்ல மனவாட்டியாக அமைவார்களாக.. என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே அவர்கள் இந்த நாசரேத் என்னும் சிற்றூருக்கு வந்து அங்கிருந்த பொதுக்கிணற்றருகில் தங்கினர். அப்போது ஒரு பெண் இளமையின் சகல அம்சங்களோடு துள்ளிக்குதித்துக்கொண்டு குடத்துடன் வந்தாள். அவள் எலியேசரையும் அவருடன் வந்திருந்த ஊழியக்காரர்களையும் ஒட்டகங்களையும் கண்டு அவர்கள் பெரும் தாகத்துடன் இருப்பதைக்கண்டு,” ஐய்யா, தாங்கள் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பவர்போல் தோண்றுகின்றது, நீங்கள் யாத்திரீகர்கள் போன்று தோண்றுகின்றீர்கள். நீங்கள் யாராக இருந்தாலும் நான் உங்களுக்கும் உங்களுடன் வந்திருப்பவர்களுக்கும் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் தருவேன். என்றாள்.. இவளக்கண்ட எலியேசர்,” ஆஹா என் ஆண்டவரே… இவளே என் எஜமானருக்கு என்று நீர் காண்பிக்கும் மணவாட்டி.” என்று முடிவு செய்து அவளையே பெண் பேசி முடித்தார். அவள் பெயர்தான் ரபேக்கா. அந்த பொதுக்கிணறும் பேறு பெற்றதே.இந்த கிணற்றுக்கு ஏறக்குறைய அதாவது பிதாப்பிதா ஈசாக்கு காலம் முதல் இன்றுவரை சுமார் மூவாயிரம் ஆண்டு சரித்திரம் உண்டு.எப்போது இந்த கிணறு எப்போது தோண்டப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் இன்றுவரை அதில் தண்ணீர் உள்ளது.
 அந்தக்கிணறு இன்று வரை இருக்கின்றது. அதற்கு மரியாளின் கிணறு என்று பெயர். இந்த கிணற்றில் தேவ தாயார் தண்ணீர் எடுக்க வரும்போதுதான் அதிதூதர் கபிரியேல் சம்மனசானவர் தேவ தாயாருக்கு “அருள் நிறைந்த மரியே “என்று வாழ்த்தினார். ஆண்டவரையோ ஆண்டவருடைய தூதர்களையோ கண்டவர்கள் இறந்துவிடுவார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கை.
மோயீசன் சீனாய் மலையில் தன் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் எரியும் முட்சுடரில் ஆண்டவர் தோன்றியபோது தாம் அவரை பார்க்காமல் முகம் தரைமட்டும் தாழ்ந்து பணிந்து வணங்கினார். இப்படியாகவே எலியாஸ் தீர்க்கதரிசியானவர்  சீனாய் மலையில் ஆண்டவர் தம்மை கடந்துபோகையில் அவரைக்காண பயந்து தம்மை இரு பாறைகளுக்கு இடையே கிடத்திக்கொண்டார். அந்த பாறை சீனாய் மலையில் எலியாசின் குகையில் இன்றளவும் இருகின்றது.
இதே காரணத்தினால்தான் கபிரியேல் தேவ தூதர் தம்மை வாழ்த்தியபோது தேவதாயார் அச்சமடைந்து உடனே தன் இல்லதிற்கு சென்றதாகவும் அங்கே அவருடைய இல்லத்திலேயே மீண்டும் கபிரியேல் தூதன் தோன்றி தன் வாழ்த்துறைகளைக்கூறி ஆண்டவரின் சித்தத்தைக்கூறவே மரியாளும் ,” நான் ஆண்டவரின் அடிமை. அவருடைய சித்தத்தின்படியே எனக்கு ஆகக்கடவது” என்றார். அந்நேரமே தமதிருத்துவத்தின் மூன்றாம் ஆளாகிய பரிசுத்த ஆவியான சர்வேசுரன் தேவதாயாரின் மீது நிழலிட்டார் பரிசுத்த ஆவியாராகிய சர்வேசுரன் தேவத்தாயார்மீது இறங்கிவரும்போது மாதா மிகுந்த பக்தியினாலும் பெண்மைக்கே உறிய அச்சம், மடம், நாணம், பயிற்பு ஆகிய நான்கு வகை குணங்களாலும் ஆட்கொள்ளப்பட்டு மிகுந்த கீழ்படிதலுடனும் மிகுந்த தாழ்ச்சியுடனும் தம்மை கடவுளுடைய சித்தத்திற்கு அடிபணிந்து தம்மை கையளித்து அவர் முகம் காண முயற்சிக்காமல் தரைமட்டும் தாழ்ந்து வணங்கியபடி மண்டியிட்டு ஜெபிக்கும் மேரையாக இருந்தார்கள். அந்த நேரமே மாதாவும் கடவுளின் தாய் ஆனார்கள்.
 ஆக இந்த நாசரேத்து என்னும் ஊரில் இருக்கும் தேவத்தாயாரின் இல்லத்தில்தான் வார்த்தை ஆனவராகிய இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் மரியாளின் திருவயிற்றில் மனிதாவதாரம் எடுத்தார்.
    இதே காலகட்டத்தில் பிதாப்பிதா ஈசாக்கின் மனைவி ரபேக்கா என்னும் பெயருக்கு ஏற்றார்போல் இந்த நசரேத்தூரில் மீண்டும் ஒரு ரபேக்கா தோன்றினாள். அவள் வேத காலத்திய ரபேக்கா போலவேதான் இருந்திருப்பாள். அப்பேற்பட்ட அழகி அவள். அவளுடைய தகப்பனார் பெயர் எஸ்ரா.அவர் காலத்தில் அவர் ஒரு பெரும் வியாபாரி. ஆதலால் அவருக்கு  நாசரேத்தூரிலும் ஜெருசலேமிலும் பெரும் செல்வாக்கு இருந்தது. இந்த ரபேக்காவின் வீடு தேவத்தாயாரின் வீட்டருகேதான் இருந்தது. இந்த ரபேக்காவுக்கு எட்டு வயது ஆகும்போது இயேசுநாதருக்கு சுமார் பனிரெண்டு வயதாக இருந்திருக்கும். பனிரெண்டு வயது முடிந்துவிட்டால் ஆண்பிள்ளை வாலிபனாக கருதப்படுவான். எனவே இயேசுநாதர் தன்னுடைய முதல் பாஸ்கா சடங்கை நிறைவேற்ற இந்த பூவுலகில் இயேசுவின் தந்தையாக இருக்க பாக்கியம்பெற்ற புனித சூசையப்பர் முடிவு செய்தார். இயேசுநாதர் காலத்தில் பாஸ்கா பண்டிகை கொண்டாட கூடுமானவரை பெண்கள். சிலபல வசதிக்குறைவுகளை முன்னிட்டு ஜெருசலேமுக்கு வருவது கிடையாது. அது அவர்களுக்கு கடமையும் கிடையாது, கட்டளையும் கிடையாது. விருப்பப்பட்டவர்கள் அவரவர்கள் குடும்பத்துடன் வரலாம். தேவாலயத்தில் பெண்களுக்கான இடத்தில் ஆண்டவனை தொழுதுகொள்ளலாம். இப்படியாக திருக்குடும்பம் இயேசுநாதரின் முதல் பாஸ்கா பண்டிகை கொண்டாட ஜெருசலேம் புறப்பட்டது. இவர்களுடன் நசரேத்தூரை சேர்ந்த பல குடும்பங்கள் ஜெருசலேம் புறப்பட்டன. அவர்களுள் எஸ்ராவும் அவர்மகள் ரபேக்காவும் அடக்கம்.
இது ஜெருசலேம்.: வார்த்தையானவராகிய இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் இந்தபூவுலகில் மனிதாவதாரம் எடுத்துவந்து இந்த ஜெருசலேமை வந்து அடைந்த போது அவருக்கு எல்லாமே புதுமையானதாக இருந்தது. இயேசுவின் பாட்டி அன்னாம்மாவின் வீடு இதே ஜெருசலேமின் நடுவில் பெதெஸ்த்தா என்னும் அந்த ஆட்டுக்கிடாய் மண்டபத்தின் அருகில்தான் இருந்தது. இன்றுவரையும் நல்லவிதமாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றது.  இதே வீட்டில்தான் தேவதாயார் மரியம்மாள் பிறந்தார்கள். இதே வீட்டில்தான் தேவத்தாயாருக்கும் சூசையப்பருக்கும் திருமணம் நடந்தது. அத்தனை பாக்கியம் பெற்றது இந்த வீடு. [ இந்த பெதெஸ்த்தா குளத்தில்தான் பிற்காலத்தில்  இயேசுநாதர் முப்பது ஆண்டுகளாய் திமிர்வாத நோயால் அவதிப்பட்டவனை ,” எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ “ என்று சொல்லி குணமாக்கினார்.]
    இப்போதும் இதே வீட்டில்தான் திருக்குடும்பம் இயேசுவின் முதல் பாஸ்காப்பண்டிகையை கொண்டாட வந்து தங்கி இருந்தார்கள். அடுத்த நாள் தேவாலயத்தில் சூசையப்பர் இயேசுவுடன் ஆண்கள் பகுதியிலும் தேவத்தாயார் தனியாக பெண்கள் பகுதியிலும் சென்று ஆண்டவரை தொழுதார்கள். தேவத்தாயார் இனி தன் மகனை குழந்தை என்றோ சிறுவன் என்றோ நினைக்க முடியாது. ஏன் என்றால் அவர் இன்றிலிருந்து தேவாலயத்தின் விதிகளின்படி அவர் ஒரு வளர்ந்த இஸ்ரேலியன். இந்த நினைவால் மாதாவின் முகம் சற்றே துவண்டாலும் இனிமேல் தன் மகனை குழந்தையாக அல்லது சிறுவனாக காண்பது முடியாது என்பதால் ஏனோ அவர் கண்கள் கலங்கின. சூசையப்பர் தேவாலயத்தின் உள்ளே சென்று அங்குள்ள ஒரு குருவானவரிடாம் தாம் வந்திருக்கும் காரணத்தை கூறவே அவர் மீண்டும் உள்ளே சென்று வயது முதிர்ந்திருந்த பத்து வேத பாரகர்களை அழைத்து வந்தார். சூசையப்பர் இயேசுவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைகின்றார். அந்த முதிய வேதபாரகர்களுக்கு இயேசுவும் சூசையப்பரும் தலைவணங்கி மரியாதை செய்கின்றார்கள்.
    இவர்களுடைய மரியாதையை ஏற்றுக்கொண்ட அந்த முதிய வேத பாரகர்கள் அவரவர்களுடைய ஆசனங்களில் அமர்ந்தனர். சூசையப்பர் அவர்களுக்கு முகமன் கூறி வணங்கிவிட்டு,” ஐய்யா… இது என்மகன் இயேசு. வேதப்பிரமாணத்தின்படி இவனுக்கு பன்னிரெண்டு வருடங்கள் முடிந்து மேலும் மூன்று மாதங்களும் ஆகின்றது. இஸ்ரேலிய விதிகளின்படி இவன் இனிமேல் சிறுவன் அல்ல. நமது வேதப்பிரமாணத்தின்படி இவன் ஒழுக வேண்டும் என்பதற்காக நான் என் மகனை தயார் செய்திருக்கின்றேன். இனி இவன் மட்டில் எனக்குள்ள கடமை முடிந்து விடுகின்றது. இனிமேல் அவனுடைய நன்மை மற்றும் தீமையான காரியங்கள் அனைத்திற்க்கும் அவனே பொறுப்பு. நானும் என் மனைவி மேரியும் இவனை நம் இஸ்ரேலிய குல வழக்கப்படி சாஸ்த்திர சம்பிரதாயங்கள் ஒழங்குகள், விதிகள் யாவையும் தகுந்த முறையில்  விளக்கம்கூறி தயாரித்துள்ளதால் தாங்கள் அவனை பரிசோதித்து தீர்ப்புகூறி உங்களூக்கு நீதியாக தெரிந்தால் அவனை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். அந்த வேத பாரகர்களும் ,” நல்லது சூசை. நாங்கள் நியாமாக அவனை பரிசோதித்து அவனுக்கு நீதி வழங்கி ஆசீர்வதிப்போம் “ என்றார்கள்.
  குழந்தாய்…இங்கே வா… உன் பெயரென்ன?
  “ நான் நசரேத்தூரின் சூசையின் மகன் இயேசு.”
“ஓ… நீ நசரேதூரிலிருந்து வருகின்றாயா.. அப்படியானால் உனக்கு எழுத படிக்க தெரியுமா ?
ஆம் ஐய்யா..எனக்கு எழுத, படிக்க மட்டுமல்ல… அவற்றின் உட்பொருட்க்களின் அர்த்தத்தையும் என்னால் கண்டுணற முடியும்.
 “ நீ சொல்வதன் அர்த்தமென்ன?.எங்களுக்கு விளங்கவில்லை. நீதான் அதை விளக்கி சொல்ல வேண்டும்”
“ ஐய்யா….அழகிய ஒரு முத்தானது வெளியில் காணப்படாமல் அதன் அழகற்ற சிப்பியின் உட்பகுதியில் மறைந்திருப்பதுபோல வார்த்தையின் வெளித்தோற்றத்திற்குள் மறைந்திருகின்ற உருவகம் அல்லது அடையாளத்தின் பொருளையும் என்னால் கண்டுபிடிக்க முடியும் “
“ ஆஹா… என்ன ஒரு ஞானமான பதில்.இப்படி ஒரு பதிலை முதியோர் வாயில்கூட அபூர்வமாக எப்போதாவதாகவே நாங்கள் காண்கின்றோம். ஆனால் பாலகா உன் வாயிலிருந்து அதுவும் நசரேத்தூரிலிருந்து வந்திருக்கும் உன் வாயிலிருந்து இப்படி ஒரு பதிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.. பாலகா நீ உன் தந்தையை மகிமை படுத்துகின்றாய். அவர் நிச்சயமாக வேதாகமங்களை ஆழ்ந்து கற்றவறாகத்தான் இருக்க வேண்டும். வாழ்க உன் தந்தை சூசை.”
“ என் தந்தையினுடைய இருதயத்தில் மிகுதியான ஞானம் குடிகொண்டிருகின்றது.”
“ மகனே … உன்னிடம் நான் மூன்று சுருள்களைக்கொடுகின்றேன். அவற்றுள் தங்க நாடா கட்டிய சுருளை வாசி
“ ஐய்யா இது கடவுள் மோயீசனுக்கு சினாய் மலையில் கொடுத்த பத்துக்கட்டளைகள் “
 “ ஆம் இவைகள் பத்துக்கட்டளைகள்தான். அவற்றை இனி மனப்பாடமாக சொல் பார்க்கலாம்.”
இயேசு இந்த பத்துக்கட்டளைகளையும் அதன் விளக்கங்களையும் சொல்லும்போது அவர் சர்வ வல்லமையுள்ள ஒரு ஞனப்பிரசங்கியார் போல தன் குரளை உயர்த்தியும் தாழ்த்தியும் ஒரு பெரும் ஞானி பிரசங்கிப்பதுபோல் தோன்றினார். மேலும் சர்வேசுரன், ஆண்டவர் என்னும் வார்த்தைகள் வரும் இடங்களில் எல்லாம் தன் தலை தாழ்த்தி வணங்கினார். இதை கவனித்த ஒரு முதியவர்,” மகனே.. நீ ஏன் இவ்வாறு தலை வணங்குகின்றாய்.. ஆண்டவனின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் தலை வணங்க வேண்டுமென உனக்கு சொல்லிகொடுத்தது யார்?” என்று வினவினார். 
“ குருவே, இந்த உலகம் வானம், பூமி, மேகம் மேல் உலகம், கீழ்உலகம் அனைத்தையும் படைத்தவர் ஆண்டவர். அவருடைய நாமம் பரிசுத்தமானதே. எனவே அவருடைய பெயரை உச்சரிக்கும்போது அதற்கான மரியாதையை கொடுப்பது நமது கடமை. அரசனுக்கு முன்பாக தலைவணங்கும் நாம் கடவுளுக்கு முன்பாக தலை வணங்க   வேண்டாமோ? அரசன் இன்றிருப்பான்…. நாளை அவன் இறந்தால் அவன் தூசியாகிவிடுவான். ஆனால் நம்மைப்படைத்த ஆண்டவர் நித்தியமானவர்.  என்றென்றும் வாழ்பவர் . நம் ஊனக்கண்களுக்கு அவர் தோன்றுவதில்லையானாலும் நம் உள்ளக்கண்களுக்கு அவர் தோன்றக்கூடியவரே… எனவே அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொரு படைப்பும் அவரைபுகழ வேண்டியது நியாயமானதே.”
“ நன்று சொன்னாய் பிள்ளாய். சூசையே நீர் ஒரு ஞானமுள்ள மகனை பெற்றெடுத்திருகின்றீர். அவன் நாங்கள் மதிக்கும் ஒரு ராபிக்குறிய ஞானத்தைக்கொண்டிருகின்றான். அவனுடைய மேல்படிப்பிற்காக இங்கே ஜெருசலேமிலேயே விட்டுச்செல். நம்மிடையே வாழும் பெரும் ராபி கமாலியேல் இவனுக்கு நல்ல ஆசிரியராக இருப்பார். இவனுடைய தோற்றமும் ஞான முதிற்சியும் எதிர்காலத்தில் இவன் ஒரு பெரும் ஞான பண்டிதனாக ஆவான் என சாட்ச்சியம் கூறுகின்றன.”
வேறு ஒரு முதியவர் எழுந்து,” குழந்தாய் உன்னிடமிருந்து ஒரு ஞானமுள்ள பதிலை எதிர்பார்க்கிறேன். இந்த கேள்வி பெரும் ஞானிகளையும் தடுமாற வைக்கும். சாபாத் நாட்க்களில் எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது என்பது கட்டளை. நீ மட்டுமல்லாது உன் மகனோ மகளோ, உன் வீட்டு வேலைகாரனோகூட வேலை செய்யக்கூடாது. இதற்கு உன் கால்நடைகளும் விதிவிலக்கல்ல. ஆனால் சாபாத் நாளில் ஒரு கோழி முட்டை இட்டுவிட்டால் அல்லது உன் ஆடோ அல்லது மாடோ குட்டிபோட்டல் அதன் உதிரக்கனிகளை பயன்படுத்தலாமா? அது சரியானதாகுமா…அல்லது பாவமாகுமா?
“ ஐய்யா பெரியவரே…அநேக வேத பண்டிதர்கள்…ஷாமோய் என்பவர் உட்பட அவரும் இப்போதுவரை தேவாலயத்தில் இருகின்றார். ஒரு தவறான கருத்தையே கொண்டிருகின்றார் என்றே நான் நினைக்கின்றேன். சாபாத் நாளன்று பிறப்பிக்கப்படும் ஆடோ அல்லது மாடோ அல்லது எந்த ஒரு உயிரினமோ வேதப்பிரமாணத்திற்கு எதிரானது என்று.அவர்கள் நினைகின்றார்கள். மனிதனுக்கும் மிருகத்திற்கும் பிறப்பித்தல் போன்ற காரியங்களில் மிகுந்த வேறுபாடு உள்ளது. சாபாத் அன்று ஒரு குதிரையை வேலை வாங்கினால் அது பாவம். சவுக்கை கொண்டு அடித்து அதை வேலை செய்ய கட்டாயப்படுத்துகின்றேன். அது பாவம் அந்த பாவம் என்னை சேரும். ஆனால் சாபாத் நாளில் இடப்படும் ஒரு முட்டை அல்லது ஒரு மிருகத்தின் குட்டி எதுவும் கடவுளின் பார்வையில் குற்றமுள்ளவை அல்ல.”
“ அது எப்படி?. சாபாத் நாளில் செய்யப்படும் எல்லா வேலையும் பாவமாகுமே?”
“ பெரியவரே.. நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து ஆராய வேண்டும். கருத்தாங்கி பெற்றடுத்தல் என்பது ஒவ்வொரு சிருஷ்ட்டிக்கும் கொடுக்கப்பட்ட கட்டளை. தன் வயிற்றில் முற்றிய கருவை பிரசவிக்க நேரம் வந்தால் அவை பிரசவித்துவிடும். அவைகளுக்கு சாபாத் நாள் பற்றிய கட்டளை தெரியாது. கருத்தரித்தல் மற்றும் பிரசவித்தல் போன்றவை ஆண்டவருடைய சித்தத்தின்படியே நடகின்றன. இல்லாவிடில் மனிதருக்கு கடும் கோடையிலும் கடும் குளிரும் வேலை செய்ய முடியாத நாட்க்களில் பாலோ பால் பொருட்க்களோ, இறைச்சியோ கிடைக்காதபடி தடைசெய்யப்பட்டுவிடும். சாபாத் நாட்க்களில் பிறப்பிக்கப்பட்ட கால்நடைகள் ஆண்டவரின் பார்வையில் பரிசுத்தமானதே. ஏனென்றால் அவை கர்த்தரின் கட்டளைபடியே நடந்துகொள்கின்றது..
“ ஆஹா … என்ன ஞானமான பதில். இவனை நான் இனிமேல் பரிசோதிக்க மாட்டேன்.”
 வேறு ஒரு முதியவர் எழுந்து,” மகனே நீ உருவக அடயாளங்களை கண்டுபிடிக்க முடியும் என்று சொன்னாய் அல்லவா.. மிட்ராஷியத்தை சொல்லு”
இயேசு எந்த தயக்கமும் இல்லாமல் வேத பிரமானங்களையும் கட்டளைகளையும் ஒப்புவிகின்றார். அந்த கட்டளைகள் நடைமுறைக்கு ஒவ்வாதபடியினால் இறைமக்களால் அவற்றை பின்பற்ற முடியவில்லை”
  “ சரி..அந்த பச்சை நாடா கட்டியுள்ள சுருளை எடுத்து வாசி. அதன் உருவக அடையாளங்களையும் அதன் உட்பொருளையும் விளக்குவாயாக”
இயேசு வாசிகின்றார். அரசர் ஆகமம் நான்காம் புத்தகம்.அதிகாரம் 22. வசனம் 10. “ பின்னும் சாப்பான் அரசனை பார்த்து,எல்கியாஸ் குருவானவர் என்னிடத்தில் ஒரு புத்தகத்தை கொடுதார் என்றான். பின்பு அவன் அதை ராசாவுக்கு முன்பாக வாசித்தான். இராஜா கர்த்தருடைய நியாயப் பிரமாணத்தின்  வாக்கியங்களை கேட்டபோது தன் வஸ்த்திரங்களை கிழித்துக்கொண்டு”….
“ மகனே இன்னும் சற்று அப்பால்  அதில் வருகின்ற பெயர்களுக்கெல்லாம் அப்பால் வாசி.”
“ நீங்கள் போய் அகப்பட்ட புத்தகத்தின் வாக்கியங்கள் நிமித்தமாக என்னைபற்றியும் பிரஜையைபற்றியும் யூதா ஜனம் எல்லாத்தையும் குறித்தும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்.ஏனெனில் நமக்காகவே எழுதியிருக்கிற எல்லா வாக்கியங்களின்படி நடக்க நமது பிதாக்கள் இப்புத்தகத்தின் வாக்கியங்களுக்கு  செவிகொடாதபடியினாலேயன்றோ கர்த்தருடைய பெரும் கோபாக்கினியானது நமக்கு விரோதமாய் பற்றியெரிகின்றது என்றான்”
 “ அவ்வளவு போதும். இந்த நிகழ்வு பல நூற்றண்டுகளுக்கு முன் நடந்தது. இந்த பழைய சரித்திர நிகழ்ச்சியில் நீ என்ன உருவக அடையாளத்தை காண்கின்றாய்?”
“ எனக்கு இப்படித்தோன்றுகின்றது. கடவுள் நித்தியராய் இருகின்றார். நித்தியமாயிருப்பவருடன் காலத்தை தொடர்பு படுத்த முடியாது. நம் ஆன்மாவும் நித்தியமாய் இருக்கின்றது. எனவே கடவுளுக்கும் ஆத்துமாவுக்கும் உள்ள உறவும் நித்தியமானதே. ஆகவே அன்று  தண்டனைகுறியதாய் இருந்த ஒரு காரியம் அல்லது குற்றம் இப்போதும் தண்டனைகுறியதாகவே இருகின்றது. குற்றத்தின் விளைவு மாறாது.”
   “ கடவுளிடமிருந்து வருகின்ற ஞானம் இஸ்ராயேலிடம் இப்போது இல்லை. நாம் கடவுளிடமே ஞான வெளிச்சத்தை கேட்க்க வேண்டுமே அன்றி பரிதாபமான மனிதர்களிடம் இல்லை. நீதியும்  கடவுளுக்கு பிரமாணிக்கமும் இல்லாவிடில் வெளிச்சத்தை காண இயலாது. அதனாலேயே மனிதர்கள் பாவம் செய்கின்றார்கள். அவரும் தமது கோபத்தில் அவர்களை தண்டிக்கின்றார்.”
“ பைய்யா, இப்போது நம்மிடம் ஞானம் இல்லையா? 613 விதிமுறைகள் இருகின்றனவே.”
விதிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன.ஆனால் அவைகள் வெறும் வார்த்தைகளாய் இருக்கின்றன. அவற்றை நாம் அறிந்துள்ளோம் ஆனால் கடைபிடிப்பதில்லை..அதனாலேயே நாம் அவற்றோடு தொடர்பில்லாமல் இருகின்றோம். இதுதான் உருவக அடையாளம். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆண்டவரின் சித்தத்தை அறியும்படி அவரிடத்தில் விசாரிக்க வேண்டும். தன்மேல் அவருடைய கோபத்தை வருவிக்காதபடி அச்சித்தத்தின்படி நடக்க வேண்டும்.”
“ ஆஹா… நீ உத்தமமான குழந்தை. தந்திரமான கேள்வின் சூட்ச்சமம் கூட உன் கண்களுக்கு தப்பிக்கவில்லை. அவன் பதிலில் பதட்டம்கூட கொஞ்சமும் இல்லை. அத்தனை தெளிவு. அவனை மெய்யான  ஜெப ஆலயத்திற்கு கூட்டிச்செல்வோம்.”

 பிறகு ஒரு இஸ்ரேலிய இளைஞனுக்கான சடங்குகள் இயேசுவுக்கு நிகழ்த்தப்படுகின்றன. முதற்காரியமாக அவருடைய முடியை குட்டையாக வெட்டுகின்றார்கள். அவருடைய ஒரு சிகப்பு அங்கியைஅவருடைய இடையில் ஒரு நீண்ட பட்டியால் பலதடவை சுற்றி இறுக்குகின்றார்கள். அவருடைய நெற்றியிலும்,கையிலும் , மேற்சால்வையிலும் சின்ன தொங்கள்களை கட்டுகின்றார்கள். ஒருவித அமுக்கு பித்தான்களாள் அவற்றை பதிக்கின்றார்கள். பின்பு சங்கீதங்களை பாடுகின்றார்கள். பின்பு சூசையப்பர்  ஆண்டவருக்கு ஒரு நீண்ட வாழ்த்து ஜெபம் சொல்லி தன்மகன்மேல் எல்லா ஆசீர்வாதங்களும் வர மன்றாடுகின்றார். சடங்கு முடிந்தது. சூசையப்பர் தன்மகனுடன் வெளியே வருகின்றார். அங்கு ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி  நன்றிபலியாக அதை ஒப்புக்கொடுத்து  தங்கள் உறவினர்களுடன் சென்று கலந்துவிட்டார்.
   இப்போது இயேசு இனியும் ஒரு சிறுவன் அல்ல. அவர் இப்போது ஒரு இஸ்ரேலிய வாலிபன்...தன்மகன் இப்போது ஒரு இஸ்ரேலிய யூத வாலிபன் என்பதை  தேவத்தாயரால் நம்பமுடியவில்லை. அவரை பொறுத்தவரையில் அவருக்கு எத்தனை வயதானாலும் அவர் ஒரு குழந்தையே. ஆனால் இன்று ஒரு சிலமணி நேரங்களுக்குள் அவர் தோற்றமே முழுமையாக மாறிப்போனதெப்படி.” இந்த தோற்ற மாறுதலை மேலும் இரு கண்கள் திருட்டுத்தனமாய் ரசித்தன..ஓஓஓ… இந்தக்கண்கள் யாருக்கு சொந்தமானவையாக இருக்கலாம். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இப்படியாக இயேசுநாதரின் முதல் பாஸ்கா முற்றிலும் நல்ல விதமாக முடிந்தது. ஜெருசலேமுக்கு தாங்கள் வந்த காரியம் முடிந்துவிட்டது. எனவே திருக்குடும்பம் மீளவும் நாசரேத் செல்ல ஆயத்தப்பட்டது.
   திருக்குடும்பம் நாசரேத்திலிருந்து ஜெருசலெம் வரும்போது இயேசுநாதர் தன் தாயாரோடு சேர்ந்து வந்திருந்தார். அப்போது அவர் ஒரு சிறுவன். ஆனல் காட்ச்சி இன்று மாறிவிட்டது. அவர் நேற்றிலிருந்து வாலிபன் ஆகிவிட்டதால் அவர் திரும்பிப்போகையில் தன் தந்தை சூசையுடன் சேர்ந்து வரவேண்டும். இவ்வாறாக தேவத்தாயார் தன் பெண்கள் குழுவுடன் வரவும் சூசையப்பர் ஆண்கள் குழுவுடன் வரவும் தங்கள் மூட்டை முடுச்சுகளுடன் புறப்பட்டனர். ஆக சூசையும் மாதாவும் தங்கள் மகன் இயேசு யாருடன் சேர்ந்து வருகின்றார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. ஊர்போய்ச்சேரவேண்டிய ஆர்வம் இவர்களோடு வந்திருந்த பல குடும்பத்தினர்களுக்கும்  இருந்தபடியால் வழியில் பாடல்கள் பாடிக்கொண்டும் கதைகள் பேசிக்கொண்டும் சென்றுகொண்டே இருந்ததால் வழிப்பயணம் விரைவாயும் இருந்தது. சுகமாயும் இருந்தது. ஆனால் இவர்கள் சந்தோஷம் விரைவிலேயே துக்கமாக மாறிப்போகும் என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    இது மிக்மாஷ்:  ஒருநாள் வழிப்பயணம் முடிய வேண்டிய இடம் மிக்மாஷ் என்னும் பட்டிணம். வேத காலத்தில் மன்னர் சவுல் பிலிஸ்த்தியருடன் யுத்தம் செய்துகொண்டிருந்தார். அவர் மகன்  ஜோனத்தான் இந்த மிக்மாஷ் பள்ளத்தாக்கில் யுத்தம் செய்து கொண்டிருந்தான். எதிரிகள் பிலிஸ்த்தியர்கள் இங்கிருந்த பெரும் பள்ளத்தாக்கில் அக்கரையில் முஹாமிட்டிருந்தனர். எனவே ஜோனத்தான்  இந்த பெரும் பள்ளத்தாக்கை சுற்றிவராமல் கீழிருந்து மேலாக ஏறிசென்று பிலிஸ்த்தியர்களை சிதறடித்தான். அன்றைய போரில் ஜோனத்தானுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஜோனத்தானின் வீரம் பெரிதும் புகழ்ந்து பேசப்பட்டது.. இத்தகைய பெரும் போர் நடந்த பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் பெரும் நதி ஒன்று ஓடுகின்றது. அந்த நதிக்கு பீர் என்று பெயர். எனவே அந்த இடமும் அந்த பட்டிணமும் பீர் என்றே அழைக்கப்படுகின்றது. இங்குள்ள நீர் குடிப்பதற்கு பீர் என்னும் மதுவுக்கு ஒப்பான சுவை கொண்டிருந்ததால் அந்த பெயரையே இந்த நதிக்கு பெயராக வைத்திருந்தார்கள். இந்த இடத்தில் தண்ணீர் இருந்ததால் நாசரேத் திருயாத்திரீகர்கள் அன்று இரவு அங்கே தங்கிச்செல்ல முடிவுசெய்தார்கள். அப்போதுதான் மாதவுக்கும் சூசையப்பருக்கும் தங்கள் மகன் இயேசு அவர்களோடு வரவில்லை என்பது தெரியவந்தது.  இந்த நதியும் இந்த பள்ளத்தாக்கும் எவ்வளவு அபாயமானவே. ஒருவேளை தன் நண்பர்களுடன் வந்திருந்து இந்த பள்ளத்தாக்கில்  வழி மாறி சென்றுவிட்டாரோ …. அல்லது ஆர்வக்கோளாறினால் இந்த நதியில் இறங்கி நீச்சல் பழகி அடித்துச்செல்லப்பட்டுவிட்டரோ….எதற்கும் அவர் வயது தோழர்களிடம் விசாரிப்போம் “ இல்லவே இல்லை.. இயேசு எங்களோடு வரவே இல்லை “ என்றார்கள் அவருடைய நண்பர்கள்.   
   அவ்வளவுதான். மாதாவுக்கும் சூசையப்பருக்கும் பெரும் கவலை மூண்டது. அப்போது இரவு நேரம். பசியாவது தாகமாவது.தூக்கமாவது. உடனே  தன்மகனைத்தேடி மாதாவும் சூசையப்பரும்  தங்கள் பயணத்தை ஆரம்பித்து ஜெருசலேம் திரும்பினர். உடன்வந்த திருப்பயணிகள் அடுத்தநாள் காலை புறப்பட்டுச்செல்வோம் என்றனர். ஆனால் யாருடைய பேச்சும் சமாதானமும் அவர்கள் மனதை மாற்ற முடியவில்லை. அவர்கள் மீண்டும் ஜெருசலேமுக்கு தங்கள் பயணத்தை ஆரம்பித்துவிட்டார்கள். மீண்டும் அந்த இரவிலே பெரும் கரடு முறடான மலைப்பகுதியில் பயணம்.  இவர்களுக்கு வழித்துணையாகவும், ஆறுதல் சொல்லவும் இவர்களுடன் வந்தது ஒரு குடும்பம். அது எஸ்ராவும் அவர் மகள் ரபேக்காவும் தான்.
[ இயேசு தங்களுடன் வரவே இல்லை என்று கண்டு உணர்ந்த இந்த இடத்தில் கி.பி.4 ஆம் நூற்றாண்டில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த தேவாலயம் பின் நாட்க்களில் பூகம்பத்தாலும், போர்களினாலும் ,வேத கலாபனணகளாலும் இடிந்து மிகவும் சிதிலமாகப்போயிற்று. இன்று அவ்விடத்தை அடையாளம் காட்டுபவை அதன் இடிபாடுகளே. வெறும் அஸ்த்திவாரம்தன் இன்றளவும் அதற்கு சாட்ச்சியமாக உள்ளன. இந்த சிதிலமாகிப்போன தேவாலயத்தை சுற்றிலும் நவீன காலத்து கட்டிடங்கள் சூழ்ந்துள்ளது. ஆயினும் விஷயம் தெரிந்த திருயாதிரீகர்கள் இங்கு வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.]
   இங்கே ஜெருசலேமில்.:   முதல் நாள் காலையிலிருந்து மாலை வரை எப்படியோ பொழுது சென்றுவிட்டது. ஆனால் மாலையில் எங்கே யார் வீட்டில் தங்குவது.? ஆனால் இயேசுநாதர் கவலைப்படவில்லை.  தன் பரலோகத்தந்தை  தன்னை கைவிடமாட்டார் என்பது அவருடைய கணிப்பு. அப்போது ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தன்னைநோக்கி வருவது தெரிந்தது. வந்தவள்,” மகனே இயேசு… இங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றீர்? எங்கே உம் தாயும் தகப்பனும்?” என்று வினவினாள். இந்தப்பெண் யார்? நேயர்களுக்கு இந்தப்பெண்ணை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது.
    தேவத்தாயாரின் பெரியம்மாதான் எலிசபெதம்மாள். அவரது கணவர் சக்காரியாஸ். இவர்கள் யூதேயாவில் ஜுட்டா என்னும் பட்டிணத்தில் வசித்துவந்தார்கள். இவர்களுடைய மகன்தான் யோவான் ஸ்நானகர். பிதாப்பிதா சக்காரியாஸ் தலைமை குருவாக ஜெருசலேம் தேவாலயத்தில் பணிபுரிய வருடத்திற்கு இருமுறை வருவார். மேலும்  தேவாலயத்தில் அழைப்பு வரும்போதும் தன் உறவினர்களை பார்க்க வரும்போதும் ஜெருசலேமில் அவர்களுடைய உறவினர்கள் வீட்டில்தான் தங்குவார். சக்காரியாஸ் உறவினர் சீராக்கு. ஜெருசலேம் தேவாலயத்தில் தலைமைச்சங்க உறுப்பினர். மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். இவர் மனைவிதான் செராபிஸ் என்பவர். இவரது வீடு ஜெருசலெமில் யேசுவின் சிலுவையின் பாடுகளின் பாதையில் ஆறாம் ஸ்தலமாக இருகின்றது.
  இயேசுநாதர் தம் சிலுவையின் பாடுகளின்போது  இவரது வீட்டின் முன்னே பரிதவித்து வரும்போது அசுத்தமான இவர் முகத்தை செராபீஸ் துடைத்ததால் இயேசு அவருக்கு நன்றியாக தன் முகத்தை அவளது வெண் துணியில் பதித்து கொடுத்தார். அன்றிலிருந்து அவள் பெயர் வெரொணிக்கா என்றழைக்கப்படுகின்றது.
     இந்த வெரோணீக்கம்மாள்தான் இயேசுவை தன்வீட்டில் மூன்று நாள் அதாவது தேவத்தாயாரும் சூசையப்பரும் இயேசுவை கண்டடையும்வரை தன்வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டார்.
 இயேசு மூன்றாம் நாள் ஜெருசலேமில்.:  ஜெருசலேம் தேவாலயத்தில் பிரதான மஹாலில் மூன்று வேத சாஸ்த்திரீகர்களின் குழுக்கள் ஏதோ ஒரு முக்கியமான காரியத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். பாஸ்கா பண்டிகைக்கு வந்திருந்த யாத்திரீகளும் பெருமளவுக்கு கூட்டமாய் இவர்களின் தர்க்க வாதங்களை கேட்க்க ஆவலாய் அங்கே குழுமி இருந்தனர். இயேசுவின் காலத்தில் கமாலியேல் என்னும் வேத சாஸ்த்திரியாரும் அவருடைய ஆசிரியரான ஹில்லல் என்பவரும் ஒரு குழுவாகவும் எதிரணியில் ஷமோய் என்பவர் ஒரு குழுவாகவும் செயல்பட்டு தர்க்க வாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கட்டுக்கோப்பான சீடர் குழுவால் சூழப்பட்டுள்ள கமாலியேல் மெசியாவின் வருகையைப்பற்றி பேசுகின்றார். தானியேல் தீர்க்கதரிசனத்தை அடிப்படையாகக்கொண்டு மெசியா ஏற்கனவே பிறந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார், ஏனென்றால் தேவாலய புனரமைப்பின் கட்டளை பிறப்பிக்கப்பட்டதிலிருந்து தீர்க்க தரிசனம் கூறுகிற எழுபது வாரங்கள் சுமார் பத்து வருடங்களுக்கும் முன்பே முடிந்துபோயிற்று என்று கூறுகின்றார்.
   ஷாமேய் என்னும் வேத பண்டிதர் கமாலியேலின் கூற்றை மறுக்கின்றார். அவர்,” தேவாலயம் புனரமைக்கப்பட்டது உண்மையாயிருந்தால் இஸ்ராயேலின் அடிமைத்தனம் அதிகரித்துள்ளதே… தீர்க்கதரிசிகள்,” சமாதானத்தின் அரசர் ” என்றழைகின்ற மெசியா கொண்டு வருவதாயிருந்த சமாதானம் உலகத்தில் இப்போது இல்லையே. குறிப்பாக ஜெருசலேமில் அது இல்லை. பட்டிணம் எதிரிகளால் நசுக்கப்படுகின்றது. அவனுக்கு எவ்வளவு தைரியம் உள்ளதென்றால் தேவாலயத்தின் வளைவுகளுக்குள்ளே கூட தன் ஆதிக்கத்தை செலுத்துகின்றான். நாட்டின் விடுதலைக்காக எழும் எந்த புரட்ச்சியையும் ரோமர்கள் தங்கள் வாட்க்களால் வீழ்த்துகின்றார்கள். அந்தோணியா கோட்டையிலிருந்து அந்த ஆதிக்கம் நடக்கிறது” என்றார்.
    தாங்கள் சொல்வதுதான் சரி என்பதுபோல் வாதிப்பிரதிவாதங்கள் முடிவில்லாமல் நீளுகின்றனர். எல்லா பண்டிதர்களும் தாங்கள் கற்ற அறிவை வெளிக்காட்டுகின்றார்கள். அவர்கள் நோக்கம் எதிரியை வெல்வதல்ல. மற்றவர்கள் தங்களை பாராட்ட வேண்டுமென்பதிலேயே  குறியாக உள்ளார்கள். அப்போது யாரும் எதிர்பாராத வகையில்  விசுவாசிகளின் கூட்டத்திலிருந்து ஒருகுரல் மிகவும் தெளிவாக கேட்கிறது.” கமாலியேல் சொல்வதுதான் சரி”
 உடனே ஜனக்கூட்டத்திலும் அறிஞர்கள் கூட்டத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இடைமறித்துப்பேசியது யார்? என்னும் கேள்வியும் எழுந்தது. அப்போது யேசுநாதர் யாருக்கும் பயப்படாமல் “ அது நான்தான்” என்று சபைக்கு நடுவே வந்தார். அவருடைய கண்கள் அறிவொளியால் மின்னுகின்றன.
  “ இத்துனை பேர்கொண்ட சபையில் தலையிடும் நீ யார்?”
  “ வேதப்பிரமாணம் கூறுவதை நிறைவேற்ற வந்துள்ள இஸ்ராயேலின் ஒரு மகன்”
  “ மகனே … இங்கு வேதம் கற்ற பல பண்டிதர்கள் ஒரு கருத்துக்காக உரையாடிக்கொண்டிருக்கின்ரார்கள்.. அவர்களுக்கு நடுவே சிறுவன் உனக்கு வேலை இல்லை… நீ போகலாம்.” என்றார் ஷமோய்.
“ இல்லை. அவன் பேசட்டும். அவன் விஷயம் தெரியாமலா கமாலியேல் சொன்னது தான் சரி என்றான்.” தம்பி நீ சொல்ல வந்ததை சொல்லு “ என்றார் கமாலியேல்.
   “ உன் பெயர் என்ன?”
 “ என் பெயர்  நாசரேத்தின் இயேசு.”
 ஹில்லல் என்னும் வேத சாஸ்த்திரி இயேசுவை பார்த்து,” கமாலியேல் சொல்வதுதான் சரி என்றாய். நீ எதை முன்னிட்டு இவ்வளவு நிச்சயமாய் கூறுகின்றாய்?”
இயேசு கூறுகின்றார்,”   காலத்தையும், அடையாளங்களையும் பற்றி தவறக்கூடாத தீர்க்கதரிசனத்திலும் அது நிறைவேறிய காலத்தில் நடைபெற்ற அடையாளங்களியலும் என் காரணம் உள்ளது. செசார் ராயன் நம்மேல் ஆட்ச்சி செய்கின்றான் என்பது உண்மையே. ஆனால் அவ்வரசன்  தன் ராஜ்ஜியத்தின் குடிக்கணக்கு எடுக்க உத்திரவிடும் அளவுக்கு உலகமும் பாலஸ்தீனமும் அந்த எழுவது வாரங்களின் முடிவில் சமாதானத்தில் இருந்தன. அவருடைய ராஜ்ஜியத்தில் போர்களும் பாலஸ்தீனத்தில் குழப்பங்களும் இருந்திருந்தால் அப்படி கட்டளை இட்டிருக்க முடியாது. காலம் அப்படி நிறைவேறியதால் அதுபோல் மற்ற அறுபதிரண்டு மற்றும் கூட்டல் ஒன்று ஆகிய வாரங்களும் தேவாலய புணரமைப்பு முடிவு பெற்றதிலிருந்து பார்த்தால் நிறைவு பெறுகின்றன..  இதனால் மெசையாவானவர் அபிஷேகம் பெறவும் அவரை விரும்பாதவர்களுக்கு தீர்க்கதரிசனத்தின் மீதிப்பாகம் நிறைவேறவும் கூடுமாகிறது. இதை உங்களால் சந்தேகிக்க முடியுமா?. கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் கண்ட நட்ச்சத்திரம் உங்களுக்கு  நினைவில்லையா?. யூதாவின் பெத்லஹேம் வானத்தின் மேல் அது நின்றதல்லவா?. யாக்கோபிடமிருந்து தொடர்பாக வந்த  தீர்க்கதரிசனங்களும் காட்சிகளும் அந்த இடத்தை மெசியாவின் பிறப்பிடமாக குறித்துக்காட்டவில்லையா? மெசியாவானவர் யாக்கோபின் மகன் வழிப்பேரன் அல்லவா? அவர் தாவீதின் வழி வந்தவரல்லவா?. தாவீது பெத்லஹேமில் உள்ளவரல்லவா?. பாலாமை உங்களுக்கு நினைவில்லையா?. யாக்கோபிடமிருந்து ஒரு நட்சத்திரம் தோன்றும்… கீழ்த்திசை ஞானிகளுடைய பரிசுத்தமும் , விஸ்வாசமும் அவர்களுடைய கண்களையும் காதுகளையும் திறக்க அவர்கள் நட்ச்சத்திரத்தை கண்டு அதன் பெயர் மெசியா என்று அறிந்துகொண்டார்கள். அவர்கள் உலகில் இறங்கி வந்திருந்த ஒளியை ஆராதிக்க வந்தார்கள்.”
ஷாமோய்,”  நட்சத்திரம் தோன்றிய காலத்தில் பெத்லஹேம் என்னும் எப்பிரத்தாவில் மெசியா பிறந்தார் என்று நீ சொல்லுகின்றாயா?’
“ஆம்’
ஷாமோய் “ அப்படியானால் இப்போது மெசியாவானவர் இல்லை. பெத்லஹேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள எல்லா ஆண் குழந்தைகளையும்  இரண்டுவயதுக்கு உட்பட்டவர்களை ஏரோது கொன்றுவிட்டான் என்பது உனக்கு தெரியாதா?. வேதாகமங்களில் இவ்வளவு புத்திசாலியாக இருக்கிற நீ இதையும் தெரிந்திருக்க வேண்டும்.” ராமாவிலே ஒரு குரல் சப்தம் கேட்டது.அது ராக்கேல் தன் பிள்ளைகளுக்காக அழுவதாகும். மரித்த ராக்கேலின் கண்ணீர்களை சேகரித்த பெத்லஹேமின் பள்ளத்தாக்குகளும் குன்றுகளும்  கண்ணீர்களால் நிரப்பப்பட்டன. கொலைப்படுத்தப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளைப்பற்றி மீண்டும் அழுதார்கள். அவர்களில் நிச்சயமாக மெசியாவின் தாயாரும் இறந்திருப்பாள்.”
இயேசு,” மூப்பரே.. நீங்கள் சொல்லுவது சரி அல்ல. ராக்கேலின் அழுகை ஓசான்னாவாக மாறியது. எப்படி என்றால் ராக்கேல் தன் துயரத்தில் பெற்ற அங்கேயே புதிய ராக்கேல் [அன்னை மரியாள் ] பரமபிதாவின் பெஞ்சமீனை அவருடைய வலதுகரப் புதல்வனை கடவுளுடைய மக்களை தம் செங்கோலின் கீழ் சேகரித்து அவர்களை மிக அஞ்சத்தக்க அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முன்குறிக்கப்பட்டவரை உலகிற்கு கொடுத்திருக்கின்றாள்.”
ஷமோய்,” அவர் கொல்லப்பட்டுவிட்டால் அது எப்படி சாத்தியமாகும்?”
இயேசு “ எலியாசைப்பற்றி நீங்கள் வாசிக்கவில்லையா?. அவர் அக்கினி ரதத்தில் கொண்டு செல்லப்பட்டாரே?.அப்படியானால் ஆண்டவராகிய கடவுள் தமது ஜனங்களை இரட்சிப்பதற்காக தமது எம்மானுவேலை காப்பாற்றி இருக்க முடியாதா?. இஸ்ராயேலர் தங்கள் நாட்டை நோக்கி செல்லுகையில் கட்டாந்தரையில் நடக்கும்படியாக  மோயீஸ்ன முன்பாக செங்கடலை திறக்க செய்த அவர் தமது குமாரனை தம்முடைய கிரிஸ்த்துவை மனிதனின் கொடூரத்திலிருந்து காப்பாற்ற தம் சம்மனசுகளை அனுப்பியிருக்க முடியாதா? இதோ நான் கூறுகிறேன். கிறிஸ்த்துவானவர் உயிரோடு இருகின்றார். உங்கள் நடுவில் இருகின்றார். அவருடைய நேரம் வரும்போது தம் வல்லபத்தில் தம்மை காண்பிப்பார்.”
     இயேசுநாதர் இந்த வர்த்தமானங்களை கூறும்போது அவருடைய குரல் கூர்மையாகி ஆகாயத்தை நிரப்புகிறது. அவருடைய கண்கள் என்றுமில்லா பிரகாசத்துடன் காணப்படுகின்றன. கட்டளையிடுவதும், வாக்குறுதிகொடுப்பதும் போன்ற கை அசைவுகளை செய்கின்றார். தமது வலது கரத்தை நீட்டியும் தாழ்த்தியும் சத்தியபிரமாணம் செய்பவர்போல்  தோன்றுகின்றார். அவர் ஒரு பையன்தான். ஆனால் ஒரு மனிதனுக்குறிய தோரணையில் காணப்படுகின்றார்.
ஹில்லல்,” குழந்தாய் இவ்வார்த்தைகளை உனக்கு கற்பித்தது யார்?.
இயேசு,” கடவுளின் ஆவியானவர். எனக்கு மனித உபாத்தியாயர் என்று யாரும் இல்லை. இது உங்களுடன் என் வாயின் வழியாக பேசுகின்ற கடவுளின் வார்த்தையாகும்.”
ஹில்லல்.” எங்கள் பக்கத்தில் வா குழந்தாய்.எனக்கு மங்கிய பார்வைதான் உள்ளது. என் நம்பிக்கை உன்னுடைய விசுவாசத்தால் புதுப்பிக்கப்படட்டும். என்னுடைய ஆத்துமம் உன்னுடைய ஆத்துமத்தின் பிரகாசத்தினால் வெளிச்சம் பெறட்டும்.”
 அவர்கள் இயேசுவை கமாலியலுக்கும் ஹில்லலுக்கும் நடுவே அமரச்செய்து அவர் கையில் ஒரு சுருளை கொடுத்து அதன் வேத விளக்கத்தை கேட்கின்றார்கள்.
 இயேசு தெளிந்த குரளில் அதை வாசிக்கின்றார்.
   “ நமது ஜனமே ஆறுதலடையுங்கள். தேறுதல் கொள்ளுங்கள். ஜெருசலேமின் இருதயத்தோடு பேசி அதன் துன்பங்கள் ஒழிந்ததென்றும், அதன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றும்….திடப்படுத்துங்கள். கானகத்து குரல் சத்தத்தை கேளுங்கள். ஆண்டவருடைய பாதையை முஸ்தீப்பு செய்யுங்கள். அப்போது ஆண்டவருடைய மகிமை பிரசன்னமாகும்…இசையாஸ் (.40;1-3 )
ஷமோய்: “ நசரேயனே, இதோ பார். இங்கே ஒரு அடிமைத்தனத்தின் முடிவு பற்றி கூறப்படுகின்றது. ஆனால் நாம் இப்போது இருப்பதுபோல் வேறு எப்போதும் இருந்ததில்லை. மேலும் இங்கே ஒரு முன்னோடிபற்றி கூறப்படுகின்றது. அவர் எங்கே? நீ பேசுவது அபத்தம்.
யேசு,”  ஐய்யா… முன்னோடியாய் வந்தவருடைய எச்சரிப்பு வேறு யாரையும்விட உமக்கே கூறப்பட வேண்டும். அதாவது உமக்கும் உம்மை போன்றவர்களுக்கும். அல்லாவிடில் நீங்கள் ஆண்டவருடைய மகிமையை காண மாட்டீர்கள். அவருடைய வார்த்தையை கண்டுபிடிக்கவும் மாட்டீர்கள். ஏனென்றால் இழிமனமும், அகங்காரமும் பொய்யும் உங்கள் பார்வையையும் கேள்வியையும் தடை செய்துவிடும்.
   ஷமோய்: “ ஒரு போதகரிடம் இப்படிப்பேச எப்படித்துணிகிறாய்.?
இயேசு’” இப்படி நான் பேசுகிறேன். என் மரணம் மட்டும் இப்படியே பேசுவேன். ஏனென்றால் எனக்கு மேலாக ஆண்டவரின் காரியங்கள் இருக்கின்றன. சத்தியத்தின் மட்டில் சிநேகம் இருகின்றது. அவருடைய குமாரன் நான். மேலும் போதகரே…தீர்க்கதரிசிகளும் நானும் கூறுகின்ற அடிமைத்தனம் நீங்கள் நினைக்கின்ற ஒன்றல்ல. நீங்கள் சிந்திக்கின்ற அரசுரிமையும் நீங்கள் நினைகின்றபடி அல்ல. மாறாக மெசியாவின் பேறுபலன்களைக்கொண்டு கடவுளிடமிருந்து  மனிதனை பிரித்துவைகின்ற தீமையின் அடிமைத்தளத்திலிருந்து அவன் விடுவிக்கப்படுவான். எல்லா நுகத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டு நித்திய ராஜ்ஜியத்தின் பிரஜைகளாக ஆக்கப்பட்ட பிரஜைகளில் கிறிஸ்த்துவின் அடையாளம் இருக்கும். ஓ… தாவீதின் வீட்டாரே… உன்னிடம் பிறக்கும் தளிர் மரமாக வளர்ந்து  உலகம் முழுவதையும் மூடி மோட்சம் நோக்கி எழும்பும். அவர் முன்பாக  எல்லா தேசத்தாரும் தலை வணங்குவர். பரலோகத்திலும் பூமியிலுள்ள எல்லா நாவும் அவருடைய நாமத்தை புகழும். கடவுளின் அபிஷேகம் பெற்றவரின் முன்பாக எல்லோரும் தங்கள் முழங்கால்களை மடக்குவர். அவர் சமாதானப்பிரபு. வழிகாட்டுபவர். அவர் தம்மையே கொடுப்பதால் மனம் தளர்ந்துபோய் பசித்து களைத்திருக்கும் ஒவ்வொரு ஆன்மாவையும் மகிழ்ச்சியாலும் ஊட்ட உணவாலும் நிரப்புவார். பரலோகத்திற்கும் பூலோகத்துக்குமிடையே ஒர் உடன்படிக்கையை ஸ்தாபிப்பார். அது எகிப்த்திலிருந்து கடவுள் இஸ்ராயேலரை வெளியே கொண்டு வந்த போது மூப்பர்களுடன் செய்த உடன்படிக்கைபோன்று  இருக்காது. அதிலே அவர்கள் இன்னமும் ஊழியர்களாகவே நடத்தப்பட்டார்கள். ஆனால் இதிலே மீட்ப்பருடைய பேறுபலன்களைக்கொண்டு வரப்பிரசாதத்தை மீண்டும் கொடுத்து மனிதர்களின் ஆத்துமங்களிலே ஒரு மோட்ச்சத்துக் குறிய  பிதாத்துவம் கொடுக்கப்படும். அவர் மூலமாக எல்லா நல்ல மனிதரும் ஆண்டவரை அறிய வருவார்கள். அதன்பின் கடவுளுடைய பரிசுத்த ஸ்தலம் ஒருபோதும் உடைக்கப்பட்டு அழிக்கப்படாது.
ஷாமோய், ” அடேய் பையா…தேவ தூஷணம் பேசாதே. தானியேலை நினைத்துக்கொள். கிறீஸ்த்துவின் மரணத்திற்கு பிறகு ஜெருசலேம் தேவாலயமும் பட்டணமும் தூரத்திலிருந்து வரும் ஒரு சனத்தாலும் தலைவனாலும் அழிக்கப்படும் என்று. ஆனால் நீ கடவுளின் பரிசுத்த ஸ்தலம் அழிக்கப்படாது என்கிறாய். தீர்க்கதரிசிகளுக்கு மதிப்பு கொடு.”
இயேசு,” ஐய்யா பெரியவரே…இதோ நான் உமக்கு சொல்கிறேன். தீர்க்கதரிசிகளுக்கு மேலாக ஒருவர் இருகின்றார். அவரை நீர் அறியவில்லை. அறியவும் மாட்டீர். ஏனென்றால் நீர் அவரை அறிய விரும்பவில்லை. நான் கூறுவது உண்மை என்று சொல்கிறேன். உண்மையான பரிசுத்த ஸ்த்தலம் மரணத்திற்க்கு உட்படாது. அது தன்னை அர்ச்சிகிறவரைபோல நித்திய வாழ்க்கைக்கு எழும்பும். உலகத்தின் முடிவில் அது மோட்ச்சத்தில் வாழும்.”
ஹில்லல்: குழந்தாய் ஆக்ஹே சொல்கிறார்.. ஜனங்களால் எதிர்பார்க்கப்பட்டவர் வருவார். இந்த வீட்டின் மகிமை அப்போது பெரியதாயிருக்கும். இப்பிந்தியதன் மகிமை முந்தியதைவிட அதிகமாய் இருக்கும். என்று. ஒருவேளை அவர் சொல்வது நீ சொல்கிற பரிசுத்த ஸ்த்தலத்தை பற்றிதானோ.?’
  இயேசு,” ஆம் போதகரே.. அதுவே அவருடைய கருத்து. உம்முடைய நேர்மை உம்மை ஒளியை நோக்கி கூட்டி வருகின்றது. கிறிஸ்த்துவின் பலி நிறைவேறும்போது உமக்கு சமாதானம் வரும். ஏனென்றால் கெடுமதி இல்லாத இஸ்ராயேலன் நீர்.”
கமாலியேல்,” இயேசுவே…இதிலே நீர் என்னை தெளிவிக்க வேண்டும். அதாவது போரினால் இந்த மக்களுக்கு அழிவு வருகிறதாயிருந்தால் தீர்க்கதரிசிகள் கூறுகின்ற சமாதானம் வருமென்று நம்புவதெப்படி. எனக்கு தெளிவு தரும்படி கேட்கிறேன்.
  இயேசு,” ஆசிரியரே, கிறிஸ்த்து பிறந்த அந்த இரவில் அங்கிருந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்பது உமக்கு நினைவில்லையா?.சம்மனசுகள்,” நல்ல மனதுள்ளவர்களுக்கு சமாதானம் “ என்று பாடியதாக கூறினார்களே. ஆனால் இந்த ஜனத்திடம் நல்ல மனது இல்லை. அதனால் அதற்கு சமாதானம் இராது. இந்த ஜனம் தன் அரசனை, நீதிமானை, இரட்ச்சகரை ஒப்புக்கொள்ளாது.  ஏனென்றால் அவரை மனித அதிகாரமுள்ள அரசனாக அவர்கள் எதிர்பார்கிறார்கள். ஆனால் அவரோ  உள்ளங்களின் அரசராக இருகின்றார்.  கிரிஸ்த்துவானவர் போதிப்பதை  அவர்கள் விரும்ப மாட்டார்கள்.  அதனால் அவரை நேசிக்கவும் மாட்டார்கள்.  கிறிஸ்த்துவானவர் அவரது எதிரிகளை ரதங்களைக்கொண்டும் குதிரைகளைக்கொண்டும்  தோற்கடிக்க மாட்டார். ஆனால் அவர்  ஆண்டவருக்காக சிருஸ்டிக்கப்பட்ட மனித இதயத்தை நரகத்தில் சிறைப்படுத்த முயற்சி செய்யும் ஆன்மாவின் எதிரிகளை முறியடிப்பார். இஸ்ராயேல் அவரிடமிருந்து எதிர்பார்கின்ற வெற்றி இதுவல்ல. ஜெருசலேமே உன் அரசர் வேசரி மீதும் அதன் குட்டி மீதும் வருவார். வேசரிக்குட்டி அவருக்கு அதிக பிரமாணிக்கமாக இருக்கும். சத்தியத்தினுடையவும் ஜீவியத்தினுடைய வழிகளில் அவரை பின்செல்வதில் வேசரிக்குட்டி வேசரியை முந்திக்கொள்ளும். இஸ்றாயேலோ  தன் கெட்ட மனத்தால் தன் சமாதானத்தை இழக்கும். பல நூற்றாண்டுகள் துன்பப்படும். தன் அரசரையும் துன்பப்பட வைக்கும். அவரை இசையாஸ் கூறும் துயரத்தின் அரசராக்கும்”.
 ஷாமேஷ்,” நசரேயனே… உன் வாய் ஒரே சமயத்தில் பாலையும் தேவ தூஷணத்தையும் சுவைகிறதே. நீ சொல்…முன்னோடி எங்கே? அவரை நாம் எப்போது கொண்டிருந்தோம்?.
இயேசு,” முன்னோடி இருகின்றார். “ எனக்கு முன்பாக என் வழியை ஆயத்தம் செய்ய என் தூதனை அனுப்பப்போகிறேன். நீங்கள் தேடுகின்ற ஆண்டவர் திடீரென்று தன் ஆலயத்தில் நுழைவார். நீங்கள் ஆவலுடன் தேடுகின்ற உடன்படிக்கையின் சம்மனசு அவரே.” என்று மலாக்கியாஸ் தீர்க்கதரிசி சொல்லவில்லையா.? ஆகவே முன்னோடியாய் இருப்பவர் கிறிஸ்த்துவுக்கு உடனடியாக முன் செல்வார். கிறிஸ்த்து இருப்பதுபோல முன்னோடியும் ஏற்கனவே இருகின்றார். இந்த முன்னோடியை நீங்கள் பார்க்கும்போது  கிறிஸ்த்துவின் அலுவல்கள் துடங்குகின்றன என்று நீங்கள் சொல்லக்கூடும். உங்களுக்கு நான் சொல்லுகிறேன்”  கிறிஸ்த்துவானவர் இவ்வழியாக வரும்போது அனேகர் கண்களையும் அனேகர் காதுகளையும் திறப்பார். ஆனால் உங்களுடையவையும் உங்களைப்போன்றவர்களுடையவும் அவர் திறக்க மாட்டார்.  ஏனென்றால் உங்களுக்கு ஜீவியம் கொண்டு வருபவரை நீங்கள் கொண்று போடுவீர்கள்.
    ஆனால் இந்த தேவாலயத்தைவிட உயர்ந்ததும்,  பரிசுத்தத்திலும் பரிசுத்த ஸ்த்தலத்தில்  வைக்கப்பட்டிருகிற பேழையிலும் மேலாயிருப்பதும், கெருபீம்களால் தாங்கப்படுகிற  மகிமையிலும் மேலாயிருப்பதுமான  தமது அரியாசனத்தில்  தமது பீடத்தில் இரட்ச்சகர் அமரும்போது அவருடைய ஆயிரக்கணக்கான காயங்களிலிருந்து  கடவுளை கொலை செய்தவர்களுக்கு சாபமும் புற இனத்தாருக்கு ஜீவியமும் பாய்ந்து வழியும். ஏனென்றால் ஓ..போதகரே, நீர் இதை அறியவில்லை. அவர், “ நான் மீண்டும் கூறுகின்றேன். அவர் ஒரு மனித ராஜ்ஜியத்தின் அரசர் அல்ல. அவர் ஒரு ஞான ராஜ்ஜியத்தின் அரசர். அவருடைய பிரஜைகள் யாரென்றால் அவருக்காக தங்கள் உள்ளத்தில் மறுபிறப்படைய கற்றுக்கொள்கிறவர்களே ஆவர்.”
 இயேசுவின் இந்த வர்த்தமானங்களைக்கேட்ட ஷாமேயும் அவரது குழுவினரும் பெரும் கோபம் கொண்டனர். அவர்கள்,” இந்த நசரேயன் ஒரு சாத்தானாக இருகின்றான் “ என்றார்கள். ஆனால் கமாலியேலும், அவரது ஆசிரியர் ஹில்லலும் ஒரே குழுவாக ,” இல்லை இந்தக்குழந்தை கடவுளின் குழந்தை, கடவுளின் தீர்க்கதரிசி. குழந்தாய், நீ எங்களுடனே இரு.. நான் அறிந்துள்ளவைகளை என் முதிர் வயது உன்னுடைய அறிவுகுட்செலுத்தும். நீ கடவுளுடைய மக்களின் போதகனாய் இருப்பாய்.” என்றனர்.
 இயேசு,” இதோ நான் உமக்கு கூறுகின்றேன்… உம்மைப்போல் பலர் இருப்பார்களானால் இஸ்ராயேலுக்கு இரட்சிப்பு வரும். ஆனால் என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை. என் நேரம் வரும்போது நான் நான் என் உதடுகளாலும், என் இரத்தத்தினாலும் ஜெருசலேமுடன்  பேசுவேன். அப்போது ஜெருசலேமினால் கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளின் கதியே எனக்கும் ஏற்படும். ஆனால் என் உயிருக்கும் மேலாக ஆண்டவராகிய கடவுள் இருகின்றார். என்னை அவருடைய மகிமையின் இருக்கையாக்கும்படியாக அவருக்கு ஒரு பிரமாணிக்கமுள்ள ஊழியனாக என்னை கீழ்ப்படுத்துகிறேன். உலகத்தை அவர் கிறிஸ்த்துவின் பாதத்தில் ஒரு மணை ஆக்குவாரென காத்திருப்பேன். என்னுடைய தருணத்திற்காக காத்திருங்கள். இந்த கற்கள் என் குரலை மீண்டும் கேட்கும். அவை என் கடைசி வார்த்தையை கேட்டு அதிரும். அந்தக்குரளில் கடவுளையே கேட்டு அதினிமித்தம் விசுவாசிகிறவர்கள் பாக்கியவாங்கள். அவர்களுக்கு கிறிஸ்த்துவானவர் அந்த ராஜ்ஜியத்தை கொடுப்பார். அது பரலோகத்திற்குறிய அரசாகும்..அதனால் நான் கூறுகின்றேன்,” இதோ ஆண்டவரே, உமது சித்தத்தை நிறைவேற்ற வந்துள்ள ஊழியன் நான். அவருடைய அந்த சித்தம் நிறைவேறுவதாக. ஏனென்றால் அதை நிறைவேற்ற நான் ஆவலாய் இருகின்றேன்.”.
     இயேசு இவ்வார்த்தைகளை  கூறும்போது அவர் முகம் ஞான அர்வத்தால் எரிகின்றது,. மோட்ச்சத்தை  நோக்கியவாறு திரும்பி இருக்கின்றது. அவருடைய கரங்கள் விரிந்திருக்கின்றன. அப்போது அவர்,கமாலியேலை நோக்கி,” போதகரே… மனுமகனுக்காக நீர் தேடும் ஒரு அடையாளம் உமக்கு அருளப்படும். அது கிரிஸ்த்து உயர்த்தப்படும்போது நீவீர் அதை கண்டடைவீர்” என்றார்.
   அப்போது தேவத்தாயாரும் சூசையப்பரும் அந்த பெரிய மண்டபத்தில் கூடிய கூட்டத்தைக்கண்டு “ ஒருவேளை நம் மகன் இந்த மண்டபத்தில் இருக்கலாம் “ என்றார்.. ஆனால் ரபேக்கா,” அம்மா… இங்கே இருப்பது பெரும் மனிதர்கள் கூட்டம்… இந்த கூட்டத்தில் அவர் இருப்பதற்கு காரணமோ சாத்தியமோ இல்லை” என்றாள். அப்போதுதான் இயேசுநாதர் ,“ இந்தக்கற்கள் கூவும் “ என்று கூறினார். இதைக்கேட்ட மக்கள் கற்கள் கூவிற்றோ இல்லையோ பெரும் கூச்சலாக,” ஆஹா… எப்பேர்பட்ட பிரசங்கம். என்ன அருமையான வேத விளக்கம்,, என்ன அருமையான ஒரு சுய வெளிப்பாட்டு தீர்க்கதரிசனம்.. வாழ்க இயேசு” என்று ஆர்ப்பரித்தனர்.  இதைக்கேட்ட தேவத்தாயார்,” அது என் மகன்தான்… அது என்மகன்தான் “ என்று ஆனந்தக்கூச்சலிட்டுக்கொண்டு சபையின் நடுவே புகுந்து தன் மகனை அள்ளி எடுத்து,” என் மகனே.. ஏன் எங்களுக்கு இப்படி செய்தாய். நானும் உன் தந்தையும் மூன்று நாட்களாக உன்னைக்காணாது எவ்வளவு துன்பப்பட்டோம்.” என கண்ணீர் சொறிந்தார்கள். அதற்கு இயேசுநாதர்,” நான் என் பிதாவின் காரியங்களில் கருத்தாய் கடமையாய் இருக்க வேண்டாமோ?” என்றார். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ.
  மீண்டும் திருக்குடும்பம் நாஸரேத்தூர் புறப்பட்டது. அப்போது விடுபட்டுப்போனவர்களும் தாமதமாக வந்திருந்த நசரேத்தூர் குடும்பங்களும் மீண்டும் ஒன்று சேர்ந்து பயணப்பட்டனர். இப்போது இயேசுவுக்கு வழித்துணையாக வந்தது கானா ஊரைச்சேர்ந்த பார்த்தலேமொ நாத்தானியேல் என்னும் ஒரு வாலிபர்.இயேசுவுக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் மிகவும் அதிகம். இவர்கள்.  இருவரையும் அடிக்கடி நோட்டமிட்டபடி இருந்தது இருகண்கள். அவை ரபேக்காவுக்கு சொந்தமானவை. இதைக்கவனித்த நாத்தானியேல்,” இயேசுவே  அந்தப்பெண்ணை கவனிதீர்களா…எவ்வளவு அழகாக இருக்கின்றாள். அவளைக்கட்டிக்கொள்பவன் கொடுத்து வைத்தவனாகத்தான்  இருப்பான். அவள் கண்கள் அடிக்கடி உம்மைத்தானே பார்க்கின்றன.. அப்படி ஏதாவது எண்ணம் உமக்கு உண்டோ?”
    இயேசுநாதர் இவ்வளவு சினம் கொள்வார் என்பது நாத்தானியேலுக்கு தெரியாது. நாத்தானியேல்… நீ யாரிடம் பேசுகின்றாய் என்பதை தெரிந்து பேசு. உனக்கு மிகுந்த புலனடக்கம் தேவை. உன் கண்களுக்கு ஒரு கடிவாளம் போடு. கண்களே மனதின் ஜன்னல். இதன் வழியாகத்தான் சாத்தான் ஒவ்வொருடைய மனத்திலும் நுழைகின்றான். அவனுக்கு செவி சாய்ப்பவனை பல காம இச்சைகள் மற்றும் பல மாய தோற்றங்களூக்கு உட்படுத்துகின்றான். அதற்கு உடன்படுவோர் பாவம் செய்கின்றனர். அவன் பாவத்தை பழக்கமாக மாற்றுகின்றான். விரைவில் பாவம் என்பது அவனுக்கு மறுத்துபோய் சாதாரணமான் விஷயமாக மாறிவிடும். அவனை அந்த பாவத்திலிருந்து வெளியே வர விடாமல் தன் தந்திர மாயங்களாள் சிறைபிடிக்க வைப்பான். கடவுளைப்பற்றிய அச்சத்தை போக்குவான். பிறகு கடைசியாய் அவனை சாத்தான் தன் அம்சமாக மாற்றிவிடுவான். பிறகு அந்த மனிதனுக்கு ஈடேற்றம் என்பது துர்லபமே” என்றார். . அவரது பேச்சைக்கேட்ட நாத்தானியேல் அப்படியே ஆடிப்போய் விட்டார்.
  இல்லை இயேசு. இல்லை. என்னை மன்னியும். நான் ஏதோ விளையாட்டாக பேசப்போய் அது வினையாக மாறிவிட்டது.
 இயேசு,” நாத்தானியேல் ஆணுக்கும் சரி. பெண்ணுக்கும் சரி … மிகுந்த புலனடக்கம் தேவை. திருமண பந்தத்தில் மட்டுமே புலனின்பம் அனுமதிக்கப்படுகின்றது.. இந்த பரிசுத்த கூட்டுறவினாலேயே ஒரு புதிய மனித சந்ததி ஆசீர்வதிக்கப்பட்ட விதமாக உருவாக வேண்டும்.கடவுள் விரும்புவதும் இத்தகைய சந்ததிகளையே.” என்றார்.
   இயேசுவே, தயவு செய்து என்னை மன்னியும்.. நான் என்னை உணறுகின்றேன். என்னை மன்னியும் வேறு ஏதாவது பேசலாமே” என்றார் நாத்தானியேல்.  பிறகு பேசும் தலைப்பை மாற்ற விரும்பி,” கடவுள் செங்கடலை பிரித்தது எவ்வளவு பெரிய செயல்.” என்றார். அதற்கு இயேசு நாதர், “ நாத்தானியேல்.. கடவுள் செங்கடலை பிரித்தது வல்லமையான செயல்தான். ஆனால் அவருக்கும் கடினமான காரியமும் உண்டு.”
     கடவுளுக்கு கடினமான காரியமா? கடவுளுக்கும் முடியாத கடினமான காரியம் என்று உண்டோ? “
 “ ஆம். நாத்தானியேல்.செங்கடலை ஒரே வார்த்தையில் பிரித்த ஆண்டவருக்கு மனித மனங்களை பிரிப்பதுதான் மிகவும் கடினமான அல்லது முடியாத செயல்.”
 “ எனக்கு விளங்கவில்லை இயேசு..ஏன் அவரால் முடியாது?. சற்று விளக்கமாக கூறவும்.
“ மனிதனின் ஆன்மாவும் உடலும் சுத்த சுயாதீனமாக படைக்கப் பட்டிருப்பதுதான் அதற்கு காரணம். மனிதருடைய விருப்பு வெறுப்புகளில் கடவுளின் தலையீடு இருப்பதில்லை. மனிதன் நல்ல ஆத்துமமாக வாழ்ந்தால் அவனுக்கு மோட்ச்சமும் தீமை செய்து வாழ்ந்தால் அவனுக்கு நரகமும் நிச்சயம். அதினாலேயே  மனிதனாக பார்த்து ஆண்டவரே என்மேல் இரக்கமாயிரும் என்று கடவுளை நோக்கி அபயமிட்டால் கடவுளும் அவன்மீது இரங்கி அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வார். அவரை நோக்கி அபயமிடாத எந்த ஒரு ஆன்மாவையும் அவரால் காப்பாற்ற இயலாது. வீட்டுக்காரன் அழைக்காமல் எந்த ஒரு விருந்தாளியும் அவன் வீட்டினுள் பிரவேசிக்க முடியாது. புறிந்ததா?.        உன்னுடைய அனுமதியின்றி உன்னை படைத்த கடவுளுக்கு உன் அனுமதியின்றி உன்னை மீட்க்கவும் முடியாது. நீயாக உன் இதயக்கதவுகளை பூட்டிக்கொண்டால் உன்னைப்படைத்த கடவுள்கூட உன் இதயத்தில் பிரவேசிக்க முடியாது. உன் இதயக்கதவுகளைத்திறந்து இதய சுத்தியோடு கடவுளை அழைத்தல் மட்டுமே அவர் உன் இல்லத்திலும் சரி,உள்ளத்திலும் சரி அவரால் பிரவவேசிக்க முடியும்.”
“ புரிகிறது இயேசுவே..எகிப்த்தில் நைல் நதியை இரத்தமாக மாற்றியது எப்படி.?”
“ இந்த உலகமெல்லாம் படைத்தவர் கடவுள். அவராலேயே எல்லாமும் படைக்கப்பட்டன. அவருடைய ஒரு சொல்லுக்கு எல்லாமே கீழ்படிகின்றன. அவரால் இதைவிட மேலான காரியங்களைக்கூட செய்ய முடியும். தண்ணீரை இரத்தமாக மாற்றியதுபோல் தண்ணீரை  திராட்ச்சை ரசமாக மாற்றவும் அவரால் செய்ய முடியும். திராட்ச்சை ரசத்தை தன்னுடைய ரத்தமாகவும் அவரால் கூடும். நீ வேண்டுமானால் பார். இந்த இரண்டு புதுமைகளும் உன் வாழ்க்கையில் நிகழத்தான் போகின்றது. அதில் தண்ணீர் திராட்ச்சை ரசமாகும் புதுமை உன் திருமணத்திலும்  திராட்ச்சை ரசம் கடவுளின் இரத்தமாகும் புதுமை பிற்காலத்தில் நிகழும். இவை நிறை வேற்றப்படும்போது நீயும் என்னோடு இருப்பாய்.” என்றார். [ அவ்வாறே ஆயிற்று. கானா ஊர் மாப்பிள்ளயாக நாத்தானியேல் பார்த்தலேமுவின் திருமணத்தன்று அவர் தண்ணீரை திராட்ச்சை இரசமாக மாற்றினார். பிறகு பல வருடம் கழித்து பெரிய வியாழன் அன்று திராட்ச்சை இரசத்தை தன் இரத்தமாக மாற்றினார்..]
   மீண்டும் நாசரேத்தூரில்;- இயேசுநாதர் தன் தந்தை சூசையிடம் தச்சுத்தொழிலை நன்றாக கற்றுத்தேர்ந்தார். தாவீதின் குலத்தில் வந்திருந்தவராகிய சூசைக்கு கிரேக்கமொழியும், யாழும் சரளமாக கைவரும். அக்காலத்தில் ரோமர்கள்,கிரேக்கர்கள் மற்றும் எகிப்த்தியர்கள், அராபியர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்ததால் அவருக்கு பல மொழிகளில் பரீட்ச்சயம் இருந்தது.. இவை அத்தனைகளையும் இயேசுநாதரும் தன் தந்தையிடமே கற்றறிந்தார்.
     இயேசுநாதருக்கு பதினைந்து வயதாகும்போது அவரது பாட்டியார் அன்னம்மாள் மறைந்தார்கள். அவரது மறைவுக்குப்பிறகு அவர் வழியாக வந்த பல உதவிகள் திருக்குடும்பத்திற்கு கிடைக்காமல் போய்விட்டன. அன்னாம்மாளின் சொத்துக்கள் பலபகுதிகளாக பிரிக்கப்பட்டு கடைசியில் தேவத்தாயாருக்கான உரிமை சொத்தாக கிடைத்தது அவருடைய வீடு மட்டுமே. இந்த வீட்டுக்கும் ஒரு பிரச்சனை வந்தது. ரோமர்கள்  தங்களுடைய ராணுவம் செல்ல வசதியாக காஸா துறைமுகத்துக்கு ஒரு பெரும் சாலை போட்டனர். அந்த சாலைக்காக மாதாவின் வீட்டின் மூன்று அறைகள் இடிக்கப்பட்டன. இதற்கு நஷ்ட்ட ஈடும் கொடுக்கப்படவில்லை. யூதர்கள் அடிமைகள்தானே. எனவே அரசாங்க வேலைக்காக எடுக்கப்பட்ட நிலத்திற்கு நஸ்ட்ட ஈடு பெறமுடியவில்லை. தப்பித்தத்து சூசையப்பருடைய வீடும் தச்சுப்பட்டறையும்தான்.
[ இன்றைக்கும் மாதாவின் வீடும் சூசையப்பரின் தச்சுப்பட்டறையும் சேர்த்து ஒரே தேவாலயமாக கட்டி இருகின்றார்கள். இரண்டிற்கும் தனித்தனி வழிகள் இருகின்றன..]
 இதேசமயம் ரபேக்காவின் வீட்டில்: “ மகளே ரபேக்கா.நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்.. சற்று நேரம் என்னோடு பேசு.”
“ சரி அப்பா… சொல்லுங்கள்...
“ மகளே … நீ இப்போது வயதுக்கு வந்த பெரிய பெண். உனக்கு என்னுடைய கடமையை செய்ய வேண்டும்.உன்வயதை ஒத்த பெண்கள் எல்லோரும் கல்யானம் என்றாகி குழந்தை குட்டி என்று ஆகிவிட்டார்கள்.தாயில்லாமல் வளர்ந்த உனக்கு நான் மேலும் என்ன செய்ய முடியும். உனக்கு திருமணம் செய்துவிட்டால் இந்த கிழவன் சந்தோஷமாக கண்ணை மூடிவிடுவேன்.”
“ அப்பா.. எனக்கு திருமணத்திற்கு என்ன அவசரம். எனக்கு இதில் கொஞ்ஜம் கூட இஸ்ட்டம் இல்லை. உங்களுக்கு நான் பாரமாகிப்போய்விட்டேனா அப்பா?”
“ அப்படி இல்லை அம்மா.நான் வியாபாரத்தின் காரணமாக பல இடங்களுக்கும் செல்பவன். உன்னைத்தனியே விட்டுச்செல்லும் ஒவ்வொரு தடவையும் நான் தவிக்கும் தவிப்பு யாருக்கும் தெரியாது.”
“ நீங்கள் ஏன் அப்படி நினைத்து கொள்கின்றீர்கள். இதோ என் தாய்க்குத்தாயாக மரியாள் இருகின்றார்களே. என்னை அவர்கள் தன் மகள் போல் நடத்துகின்றார்கள். இவர்கள் இருக்கும்போது எனக்கு என்ன கவலை.”
“ அப்படி இல்லை அம்மா..ஒரு தந்தைக்குள்ள கடமை எனக்கு உண்டல்லவா… அதை நான் நிறைவேற்ற வேண்டாமோ.. அந்த கடமை உனக்கும்தான் இருக்கின்றது “
“ என்னப்பா அந்த கடமை”
“ ஓஓ. அதுவா.. கேள். இஸ்ராயேல் குமார்த்திகளே… கன்னிப்பெண்களே ..நீங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள். திருமணம் செய்துகொண்ட பெண்களே நீங்கள் அதிகமாக பிள்ளை பெற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் கடவுளுக்கும் இஸ்ராயேலுக்கும் சேவைசெய்ய முடியும்.”
“ நல்ல கட்டளை போங்கள் அப்பா..எதற்காக இந்த கட்டளை”
“ மகளே..நம்முடைய இனமும் சிறியது. நம்முடைய நாடும் சிறியது.. நம்மை சுற்றிலும் பகைவர் கூட்டம் எப்போது நம்மீது பாய்ந்து நம்மை அடிமைப்படுத்தவும் நம்முடைய சொத்துக்களை சூறையாடவும் நம் தேவாலயத்தை இடித்து அதை தீட்டுப்படுத்தவும் தயாராக இருகின்றது. இவற்றிலிருந்து நம்மை காக்க நமக்கு ஆட்பலம் வேண்டாமோ. அதற்கு அதிக மக்கள் செல்வம் வேண்டாமோ? அதற்காகத்தான் இப்படி ஒரு கட்டளை நமக்கு அவசியமாகிறது..”
“ அப்பா.. எனக்கும் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் எனக்கு எப்போது திருமணம் தேவையோ அப்போது நானே கேட்ப்பேன். அதுவரை பொறுங்கள்.”
“ சரி அம்மா..உன் இஸ்ட்டம் போலாகட்டும். அனால் அதிககாலம் எடுத்துக்கொள்ளாதே… என் நண்பர்கள் மத்தியில் எனக்கு பெரும் இக்கட்டாக இருக்கின்றது, அவர்களின் கேலிப்பேச்சு எனக்கு பெரும் தலைகுனிவாக இருகின்றது”
  தன் தந்தை சொல்வதில் உள்ள நியாயத்தை ரபேக்கா அறியாமல் இல்லை. ஆனால் நான் ஏன் இப்படி யாருக்காகவோ காத்திருக்க வேண்டும். என் மனத்தில் என்ன இருகின்றது.? கொஞ்ச நாட்க்களாக என் மனம் ஏன் இப்படி மாறிப்போனது.? என் மனது ஏன் இப்படி நிலை கொள்ளாமல் தவிக்கிறது..? இப்படி ரபேக்காவின் உள்மனத்தோடு அவள் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ளும்போது அவள் மனத்திறையில் ஓடியது இயேசுநாதரின் திரு உருவம். அன்று தேவலயத்தில் அவர் பேசிய பேச்சு. அப்பப்பப்பா… என்ன ஒளி…என்ன தேஜஸ்.. இந்த கற்கள் கூவும் என்ற வார்த்தையின்போது அவர் கண்கள் எப்படி மின்னின…அடடா… எப்படியான ஒரு தேவ புருஷர் அவர்..மணந்தால் அவரைதான் மணப்பேன் என்றாள் ரபேக்கா. இருக்கட்டும் ..அப்பா வந்ததும் அவரிடம் இதைப்பற்றிப்பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என்று நினைத்தவள் சற்றே கண்ணயர்ந்தாள்.
  ஆனால் கண்கள் உறக்கம் கொள்ள மறுத்தன. அவள் மனத்திரையில் இயேசுவின் திருமுகம் தோன்றிக்கொண்டே இருந்தது.. எவ்வளவு முயன்றும் அந்த உருவத்தை அவளால் மறக்க முடியவில்லை.   ஓஓஓஓ…இதுதான் காதல் என்பதா?… அடிப்போடி பைத்தியக்காரி.. உன் புத்தி ஏன் இப்படி நாணமின்றி போயிற்று என்று தன்னை திட்டிக்கொள்ளவும் செய்தாள். அடியே ரபேக்கா கொஞ்சம் பொறு வெளியூர் போயிருக்கும் அப்பா வரட்டும் வந்ததும் உனக்கு டும் டும் கொட்டிவிட்டுத்தான் மறு வேளை என்றது அவள் மனம். கன்னிப்பெண்னுக்கு காதல் வந்துவிட்டால் அவள் படும் அவஸ்த்தையை யாரிடம் சொல்ல முடியும்.? ஊமை கண்ட கனவு என்பது இப்படித்தானோ அடடா … என் நிலையும் ஊமை கண்ட கனவு போல் ஆயிற்றே என்று தன்னையே குறை சொல்லிக்கொண்டாள் ரபேக்கா.. தன் காதலை வெளிப்படுத்த தன் தந்தையின் வருகைக்காக காத்திருந்தாள் அவள்.
     ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்….பிறகு தெய்வம் என்பது ஏது?. பாவம் ரபேக்கா. அவள் காதலன் வீட்டில் ஒருபெரும் விபத்து ஏற்பட்டுவிட்டது. அது அவர்கள் வாழ்க்கையையும் தன் வாழ்க்கையையும் ஒரேடியாக புரட்டிப்போட்டுவிடும் என்று அப்போது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
   பட்ட காலிலே படும்.:- உள்ளூரில் வேலை இல்லாத சமயங்களில் இயேசு நாதரும் அவருடைய பூலோகத்தந்தை சூசையும் நாசரேத்தூரிலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள செப்போரிஸ் என்னும் ஊரில் வேலை தேடிச்செல்வது வழக்கம். இங்குதான் இயேசுநாதரின் பாட்டியார் அன்னம்மாவும் தாத்தா சுவக்கீனும் வாழ்ந்தார்க்ள்.
 [ இன்றளவும் அவர்களது வீடு ஒரு பெரும் தேவாலயமாக மாற்றப்பட்டு இருகின்றது.] இந்த ஊரில்தான் எரோதன் அந்திப்பாஸ் தன் பகுதியில் ஆட்ச்சி செய்துவந்தான். இன்றளவும் அவன் தலை நகரம் செழிப்புடனும் புராதன தூண்களுடனும் மிகவும் அழகான சாலைகளுமாய் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் சூசையப்பரும் இயேசும் வேலைதேடி வருவது வழக்கம். ஒரு பெரிய அரசாங்க கட்டிடப்பணி நடக்கையில் சூசைதான் தலைமை தச்சர். அவரது மேற்பார்வையில்தான் இந்த கட்டுமானப்பணி நடந்து வந்தது. காலையில் செப்போரிஸ் வந்தால் மாலையில் தான் நசரேத் செல்வது வழக்கம். இப்படி இருக்கையில் பாரம்தூக்கி ஒன்று பழுதாகி பாதியில் நின்றது. இதை கவனிக்கசென்ற சூசையப்பர்  சிலபல உத்திகளைக்கூறினார். ஆனால் அவை தவறாக புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. பாரம்தூக்கி தவறான முறையில் இயக்கப்பட்டதால் அதன் கயிறுகள் தளர்ந்து பாரம் கீழே வேகமாக விழுந்தது. சூசை கீழே  இருந்ததால் அந்த பாரம் அவரது தலையில் இடித்து பெரும் விபத்து ஏற்பட்டது .அவருக்கு ஏறாளமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மரியாளின் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார். யாராலும் அவருக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. இயேசுநாதருக்கும் இன்னும் அவரது நேரம் வரவில்லை ஆதலால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த விபத்தினால் மாதாவும் இயேசுவும் அடைந்த வேதனை வார்த்தையில் சொல்லி முடியாது. சூசையப்பருடைய நிலையோ இன்னும் மோசமானது. அவருக்கு அடிக்கடி நினைவு போவதும் வருவதுமாய் இருந்ததால் தன் மனைவி பாடும்பாடும் அவர் மகன் படும் பாடும் அவருக்கு மிகுந்த மன வேதனையை தந்தன. அவர் வார்த்தையால் ஒன்றும் சொல்ல முடியாதிருந்தாலும்  தான் அவர்களை புரிந்துகொண்டிருப்பதாக அடிக்கடி தன் கண்ணீர்களால் பதிலளித்தார். சமயங்களில் அவர் முகத்தில் புன் சிரிப்பு தவழும் அப்போது அவர் கண்கள் பிரகாசமாக மிளிரும்.
  சூசைக்கு எப்போதெல்லாம் நினைப்புவந்து அப்போதெல்லாம் மாதா அவரை அரவனணத்து அவருக்கு பாலும் பழமும் கொடுத்து அவரை தேற்றுவார். எப்போதெல்லாம் அவர் சாப்பிடுகின்றாறோ அப்போதெல்லாம் அவர்களும் சாப்பிடுவார்கள். எப்போது அவர் கண்ணயர்வாரோ அப்போது  அவர்களும் கண்ணயர்வார்கள். வரவர சூசையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது.
  இப்படியாக பல மாதங்கள் ஓடின. இந்த நிலையில் திருக்குடும்பத்துக்கு உதவியது நம் ரபேக்காதான். அவள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இந்த மனிதாபிமான உதவிகளை செய்தாள். இது மாதாவுக்கும் சூசைக்கும் இயேசுக்கும் தெரிந்தே இருந்தது.
சூசையின் மரணம்: - இந்த நிலையில் ஒரு நாள். சுவாமி இயேசுநாதர் சூசையின் தச்சுப்பட்டறையில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது மாதா இயேசுவிடம் வந்து “ மகனே அவருக்கு மிகவும் முடியாமல் போகின்றது… வந்து பாரும் “ என்றார்கள்.சூசையப்பர் பல தலையனைகளில் சாய்ந்தபடி படுத்திருகின்றார். அவர் மரனத்தருவாயில் இருகின்றார். அவருடைய இரத்தமற்ற வெளுத்த முகத்திலிருந்து அது நன்றாக தெரிகின்றது. கண்களில் உயிர் இல்லை. நெஞ்சு பதைபதைகின்றது. முழு உடலுமே சோர்ந்தும் தளர்ந்தும் இருகின்றது.
    மாதா அவருடைய படுக்கையின் இடது பக்கம் செல்கின்றர்கள். மாதா வெளிரிய அவருடைய கரத்தை தேய்த்து அவர் நெற்றியின்மேல் காணப்படும் வியர்வையை ஒரு சிறு துகிலால் துடைகின்றார்கள். அவருடைய  கண்களில் அரும்பும் கண்ணீர்த்துளிகளை ஒற்றி எடுத்து கொஞ்சம் வெள்ளை முந்திரி பழ சாற்றை ஒரு சிறு துகிலில் நனைத்து அவருடைய உதடுகளை நனைகிறார்கள்.
   இயேசு சூசையப்பருடைய வலது பக்கத்திற்க்கு வருகின்றார். துவண்ட அவரை நேராய்த்தூக்கி தலையனைகளையும் சரிசெய்த்து அவருடைய தலையில் தம் கையை வைத்து  அவரை தேற்றுகிறார். மாதா துக்கமிகுதியால் சத்தமில்லாமல் அழுகிறார்கள். அவருடைய இருண்ட நீல நிற ஆடை அவரது கண்ணீரால் நனைகிறது. சூசையப்பர் சற்று தேறி இயேசுவிடம் ஏதோ சொல்ல விரும்புகின்றார். தம் கடைசி துன்பத்தில் இயேசுவின் தெய்வீக தொடுதலின் உதவியை தேடுகின்றார்.
   இயேசு அவருடைய வலக்கையை பற்றி தம் முத்தத்தை அதில் பதிக்கிறார். சூசை மரியாளைத்தேடுகின்றார். அவரைப்பார்த்து புன்னகை செய்கின்றார். மாதா முழாங்காலிட்டு புன்னகை செய்ய முயல்கின்றார்கள். அவர்களால் கூடவில்லை. சூசை மாதாவை ஆசீர்வதிப்பதுபோல் தம் கரத்தை மாதாவின் சிரசின்மேல் வைக்கிறார். இப்போது அந்த வீட்டில் சூசையப்பரின் மூச்சுவிடும் சப்த்தம் மட்டுமே கேட்கின்றது. அவரால் தம் பத்தினியை பலவித வார்த்தைகளால் தேற்றுவதுபோல் தோன்றுகின்றது.. ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை. ஆனால் அவரது கண்கள் தம் பத்தினியின் உள்ளத்தோடு பேசின. அவை இவ்வாறுதான் இருந்திருக்கக்கூடும்.
“ என் ஆண்டவனின் தாயாரே…என் எஜமானியே, பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியே, இந்த அடிமையை உமக்கு சேவகனாகவும், ஊழியனாகவும், பாதுகாப்பாளனாகவும் உம் மதிப்பிற்குறிய கணவனாகவும் இருக்க நான் என்ன பாக்கியம் செய்தேன். நான் உம் கணவன் என்னும் சொல்லுக்கு முற்றிலும் தகுதியானவன் அல்ல. ஆனாலும் மோட்ச்சத்திலிருக்கும் நம் பரம பிதா எனக்கு இந்த கௌரவத்தை கொடுத்ததற்காக நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்..
  என் பத்தினியே நான் என் மனைவி மரியாள் என்பதைவிட  மரியாளின் கணவர் சூசை என்றழைக்கப்படுவதையே எனக்குறிய பக்கியமாக கருதுகிறேன்.
   அம்மணி. சர்வேசுரனின் தாயாரே,சர்வேசுரனின் மகளே,சர்வேசுரனின் பத்தினியே, திரியேக சர்வேசுரனின் ஒன்றிப்பில் இருக்கும் உங்களுக்கு    இந்த மனிதப்பிறவில் உமக்கு சற்றும் தகுதி இல்லாத கணவன் நான். உமக்கும் உம் திருமகனுக்கும் நான் என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் கடமைகளையும் நான் செவ்வனே செய்துள்ளதாக நினைகிறேன். என் கவனக்குறைவினாலோ அல்லது அஜாக்கிரதை யினாலோ ஏதேனும் என் கடமையில் தவறி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்தருளும்.”
    தம் பூவுலக பர்த்தா தம் மனதில் என்ன நினைகின்றார் என்பதை உணர்ந்துகொண்ட தேவத்தாயார்  அவரைத்தேற்றமுடியாமல் சப்த்தமில்லாமல் அழுதுகொண்டே இருந்தார். இந்த நிலையில்  சூசையப்பருக்கு பெருமூச்சு வாங்கியது. அவரைத்தேற்ற இயேசுநாதர் தாவீது அரசர் பாடிய பல சங்கீதங்களைக்கூறி அவருக்கு ஆறுதல் அளித்தார்.
 ஆண்டவரே நான் உமது பேரில் நம்பிக்கை வைத்திருப்பதால் என்னைக்காப்பாற்றும்.
 என் ஆலோசகரான ஆண்டவரை வாழ்த்துவேன்.
என்நேரமும் ஆண்டவர் என்முன்பாக இருகின்றார். ஏனெனில் நான் அசைக்கப்படாதபடிக்கு அவர் என் வலது பாரிசத்திலிருகின்றார்.
 ஆகையால் என் இருதயம் பூரித்தது. என் நாக்கு மகிழ்ந்தது. என் மாமிசமும் நம்பிக்கையில் இளைப்பாறும்.
 ஏனெனில் என் ஆத்துமத்தை பாதாளத்தில் விட்டுவிட மாட்டீர், உமது பரிசுத்தவான் அழிவை காண விடமாட்டீர்.
ஜீவியத்தின் மார்க்கங்களை எனக்கு தெரியப்படுத்தினீர். உம்முடைய முகத்தைக்காட்டி ஆனந்தத்தால் என்னை சம்பூர்ணமாக்கிவிடுவீர்.
 இப்போது சூசையப்பருக்கு மீண்டும் தெளிவு பிறக்கிறது. இயேசுவை உற்சாகமாகப்பார்த்து புன்முறுவல்கொண்டு அவர் விரல்களை இறுகப்பற்றுகின்றார். இயேசுவும் சற்றே குனிந்தபடியும் சிரித்தபடியும் அவருக்கு கேட்க்கும்படியாக இப்படி பேசுகின்றார்.
 .தலங்களின் ஆண்டவரே… உம்முடைய வாசஸ்த்தலங்கள்  எம்மாத்திரம் இன்பமாயிருகின்றன. என் ஆத்துமம் ஆண்டவருடைய ஆலய பிரஹாரங்களிலே பிரேமை கொண்டு சோர்ந்து போகின்றது.
 அடைக்கலான் குருவிக்கு கூடும் தகைவிலான் குருவிக்கு தன் குஞ்சுகளை வைக்க கூடுமுண்டு. என் ஆண்டவரே உமது பீடங்களை நோக்கி தாகமாய் இருகின்றேன்.
 ஆண்டவரே உமது வீட்டில் வாசம் பண்ணுகிறவர்கள் பாக்கியவாங்கள்,.
  உம்மால் சகாயம் பெறுகிற மனிதன் பாக்கியவான். ஆண்டவரே என் மன்றாட்டை கேட்டருளும். உமது கிறிஸ்த்துவின் முகத்தைபார்த்து உமது பார்வையை எங்கள் மேல் திருப்பியருளும்.
  ஆண்டவரே தேவரீர் உமது பூமியை ஆசீர்வதித்தீர். யாக்கோபுவை அவருடைய அடிமைத்தலத்திலிருந்து மீட்டீர்.
   ஆண்டவரே தேவரீர் உமது கிருபையை எங்களுக்கு காண்பியும். உமது இரட்சிப்பை எங்களுக்கு தாரும்.
  என்னிடத்தில் அவர் என்ன பேசப்போகின்றார் என்று கேட்ப்பேன். ஏனென்றால் சர்வேசுரனாகிய ஆண்டவர் தமது ஜனத்திற்கும் பரிசுத்தருக்கும் இருதயத்தில் மனம் திரும்புகிறவர்களுக்கும் கூறுவது சமாதானமே.
   ஏனெனில் நமது பூமியில் அவரது மகிமை விளங்கும்படியாக அவரது இரட்சண்யம் அவர்களுக்கு பயப்படுகிறவர்களுக்கு சமீபமாயிருகின்றது.
   ஏனெனில் ஆண்டவர் தமது ஆசீர்வாதத்தை தருவார். நமது பூமி தனது கனியை கொடுக்கும். நீதி அவருக்கு முன்பாக நடக்கும்.
   தந்தாய் நீங்கள்,.அந்த நேரத்தை கண்டுகொண்டீர்கள். அதற்காக நீங்கள் உழைத்தீர்கள். இந்த நேரத்தை உருவாக்குவதில் நீங்கள் ஒத்துழைதீர்கள்..ஆண்டவர் அதற்காக உங்களுக்கு சன்மானம் அளிப்பார்.
   ஆண்டவரே தாவீதையும் அவருடைய பெரிய சாந்தத்தையும் நினைத்தருளும். அவர் ஆண்டவருக்கு கொடுத்த பிரமாணிக்கத்தையும் யாக்கோபின் தேவனுக்கு செய்த பொருத்தனையையும் நினைவுகூறும். நான் ஆண்டவருக்கு ஒரு இடத்தையும் யாக்கோபின் தேவனுக்கு ஒரு கூடாரத்தையும் ஏற்படுத்துகிற வரையிலும் என்வீட்டின் வாசஸ்த்தலத்தில் நான் பிரவேசிப்பதில்லை. என் படுக்கையாகிய மஞ்சத்தில் நான் ஏறுவதுமில்லை. என் கண்களுக்கு நித்திரையையும் என் இமைகளுக்கு உறக்கத்தையையும் நான் கொடுப்பதில்லை.
  ஆண்டவரே உமது பரிசுத்த ஸ்தலம் விளங்கும் பேழையுடன் உமது இளைப்பாற்றி ஸ்தலத்தில் எழுந்தருளும்.
இப்போது மாதா பொருள் உணர்ந்து கண்ணீர் சிந்தி அழுகின்றார்கள்.
உமது ஆசாரியார்கள் நீதியை தரித்துக்கொள்ளட்டும்.
உமது பரிசுத்தவான் அகமகிழட்டும்.
உமது தாசனாகிய தாவீதினிமித்தம் உமது அபிஷேகருடைய முகத்தை எங்களுக்கு மறுக்காதேயும். ஆண்டவர் தாவீதுக்கு உண்மையான ஆணையிட்டார். அதற்கு பிரமாணிக்கமாயிருப்பார்.
  உமது கர்ப்பத்தின் கனியை உன் சிங்காதனத்தில் வைப்போம்.
ஏனென்றால் ஆண்டவர் சீயோனை தெரிந்துகொண்டார்.
  அவ்விடத்தில் தாவீதின் வல்லமையை ஓங்கப்பண்ணுவோம். நமது அபிஷேகருக்கு ஒரு தீபத்தை ஆயத்தம் பண்ணினோம்.
   தந்தையே, என்னுடையவும், என் தாயினுடையவும் நன்றியை உங்களுக்கு செலுத்துகிறேன். எனக்கு நீங்கள் நீதியுள்ள தந்தையாக இருந்தீர்கள். நித்திய பிதா உங்களை தமது கிறீஸ்த்துவுக்கும் தமது பேழைக்கும் காவலனாக தேர்ந்துகொண்டார். அவருக்காக ஆயத்தமாக்கப்பட்ட தீபம் நீங்கள். பரிசுத்த உதிரத்தின் கனியின் மீது நீங்கள் நேசமுள்ள இருதயத்துடன் இருந்தீர்கள். தந்தையே சமாதானத்தில் செல்லுங்கள். உங்கள் கைம்பென் உதவியற்றுப்போக மாட்டாள். அவர்கள் தனிமைபடாதிருக்க கடவுள் ஏற்பாடு செய்திருகின்றார். நான் உங்களுக்கு சொல்லுகின்றேன். உங்கள் இளைப்பாற்றிக்கு சமாதானத்துடன் செல்லுங்கள்.
   இப்போது இயேசு தன் பூலோக தந்தையாக இருக்கப்பட்ட சூசையப்பரை தம் கரங்களால் அள்ளி எடுத்து தம் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு தேற்றுகின்றார். சூசையின் கண்கள் மங்குகின்றன..அவரது உடல் குளிர்ந்துகொண்டு வருகின்றது. மீண்டும் இயேசு அவருக்கு கேட்க்கும்படியாக சற்றே உயர்ந்த குரளில்;
   சர்வேசுரனுக்கு பயப்படுகிறவனும் அவருடைய கற்பனைகளை விரும்புகின்றவனும் பாக்கியவான்கள்..
  அவனுடைய நீதித்தன்மை சதாகாலமும் நிற்கும்.அவனுடைய வல்லமை மகிமையோடு உயர்த்தப்படும்.
   தந்தையே… உங்களுக்கு அந்த மகிமை கிடைக்கும். உங்களுக்கு முன் சென்றுள்ள பிதாப்ப்பிதாக்களோடு உங்களையும் நான் கூட்டிச்செல்ல  சீக்கிரம் வருவேன். உங்களுக்காக காத்திருக்கிர மகிமைக்கு உங்களை கொண்டு செல்வேன்.என் வார்த்தையில் உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடைவதாக.
  உந்நதருடைய அடைக்கலத்தில் இருப்பவன் பரமண்டலத்தில் தேவனுடைய ஆதரவில் நிலைகொள்வான்.
   தந்தாய் நீங்கள் அங்கே வாழ்கிறீர்கள். அவர் வேடருடைய கண்ணிகளினின்றும் இடிசொல்லினின்றும் என்னை மீட்டார்.
  அவர் தம் புஜங்களால் உனக்கு நிழலிடுவார். அவருடைய சிறகுகளின் அடைக்கலத்தில் நீ இருப்பாய்.
    அவருடைய வாக்கின் சத்தியம் கேடயம்போல் உன்னை சூழ்ந்துகொள்ளும். இரவின் பயங்கரங்களுக்கு நீ அஞ்சமாட்டாய்..
    உனக்கு பொல்லாங்கு நேரிடாது. ஏனெனில் உனக்கு சகல வழிகளிலும் உன்னைகாக்கும்படி தமது தூதர்களுக்கு அவர் கட்டளை இட்டார்.
 உன் பாதங்கள் கல்லில் இடராதபடிக்கு அவர்கள் உன்னை தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
   விஷ நாகத்தின்மீதும் சர்ப்பத்தின் மேலும் நீ நடப்பாய்.  சிங்கக்குட்டியையும் பறவை நாகத்தையும் நீ மிதிப்பாய்.
   நீங்கள் ஆண்டவரின் பேரிலே நம்பிக்கை வைத்தபடியினால் என் தந்தையே  அவர் உங்களை விடுவிப்பதாகவும் காப்பதாகவும் உங்களுக்கு கூறுகின்றார்.
    நீங்கள் உங்கள் குரலை ஆண்டவரிடம் எழுப்பியதால் அவர் அதை கேட்பார். உங்கள் கடைசி துன்பத்தில் அவர் உங்களுடன் இருப்பார். உங்கள் வாழ்வுக்குப்பின்  அவர் உங்களை மகிமைப்படுத்துவார். இப்போது தமது இரட்சண்யத்தை அவர் உங்களுக்கு கண்பிகின்றார். இப்பொழுது உங்களை தேற்றுகிற இரட்சகரின் முகாந்திரமாக உங்களை மறு உலக வாழ்வில் நுழைய வைப்பார். இந்த இரட்ச்சகர், நான் திரும்பவும் சொல்லுகிறேன் அவர் சீக்கிரமாக வந்து உங்களை தன் தெய்வீக அரவணைப்பில் கொண்டு எல்லா பிதாப்பிதாக்களுடைய வரிசையில் முதன்மையாக கொண்டு செல்வார். அங்கே என் ஆசீர்வதிக்கப்பட்ட என் தந்தையாக  இருந்த கடவுளின் நீதிமானுக்கென இல்லிடம் ஆயத்தம் செய்யப்பட்டிருகின்றது.
தந்தையே , நீங்கள்  எனக்கு முன்பாகப்போய் பிதாப்பிதாக்களிடம் இரட்சகர் உலகத்தில் இருகின்றார். மோட்ச இராஜ்ஜியம் விரைவில் அவர்களுக்காக திறக்கப்படும் என்று அறிவியுங்கள். தந்தையே செல்லுங்கள். என்னுடைய ஆசீர்வாதம் உங்களுடன் வரக்கடவது “
  சூசையப்பரின் இறுதி நேரம் வந்துவிட்டது. திடீரென அவர் முகம் பிரகாசமானது. அவர் கண்கள் தம் பத்தினி மரியாளின் மீதும் இயேசுவின் மீதும் நிலையாக பதிக்கப்பட்டன. இதுதான் தம் பர்த்தா தன்னை பார்க்கும் கடைசி பார்வை என்பது மாதாவுக்கு புரிந்துவிட்டது.  அவர் தம் மகனின் முகத்தைப்பார்க்க  இயேசு ஆம் என்று தலை அசைத்தார். சூசையப்பர் தன் இடதுகரத்தை தன் பத்தினியின்  சிரசின்மீதும் வலதுகரத்தை இயேசுவின் கழுத்தை சுற்றியும் வைத்துக்கொண்டு தம் முகத்தை இயேசுவின் முகத்தோடு வைத்துக்கொள்ள இயேசு அவரை தன் மார்போடு அணைத்துக்கொண்டார். சற்று நேரத்தில் பிதாப்பிதா சூசையப்பரின் ஆவி இயேசுவோடு கலந்தது. ஆண்டவரின் ஐக்கியத்தில் மரிக்கும் மனிதன் பாக்கியவான். அவனிடத்தில் சாவு தன் கசப்பை இழந்துவிடுகின்றது. என்னதான் சூசையப்பர் அவருடைய வயோதிகத்தில் மரித்தாலும் அவர் மரியாளின் கணவர் அல்லவா?
  தேவத்தாயாரின் துயரத்தை வார்த்தைகளில் சொல்லி முடியாது. எல்லாம் அன்று, “ ஆகட்டும் “ என்று சொல்லிய வார்த்தையால் வந்த விளைவுகளே.  தன் கணவரின் மரணமும் பரம பிதாவின் சித்தமே  என்றவராய் மீண்டும் “ ஆகட்டும் சுவாமி. உமது திருவுளப்படியே எனக்கு ஆகட்டும்” என்றார். இந்த உலகில் தேவத்தாயார் போலும் அவர்திருமகன் இயேசு நாதர் போலும் துன்பத்தையே  இன்பமாய் ஏற்று வாழ்ந்தவர் யார்? எத்தனை பேர்.? ஒருவரும் இல்லை.
   பிதாப்பிதா சூசையப்பரின் ஈமச்சடங்குகளுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிளேயே அவர் உறவினர்கள் வந்திருந்தார்கள்.  சூசையப்பர் பெத்லஹேமை சேர்ந்தவர் ஆகையால் அவருடைய சொந்தங்களும் பந்தங்களும் பெத்லஹேமில் இருந்தார்கள். சூசையின் மரணத்திற்கு ஆள் அனுப்பி சொல்லி இருந்தும் அவர்களால் துக்கத்திர்கு வர இயலவில்லை. பிறகு துக்கம் விசாரிக்க மாதாவிடம் நாசரேத்தூருக்கு வந்திருந்தனர். இயேசுநாதரும் அவருடைய நெருங்கிய உறவினர்களும் மட்டுமே  சூசையப்பரின் அடக்கத்தில் இருந்தனர். இயேசுவே  தன் தந்தையாராகிய சூசையை நாசரேத்தில் அவருடைய  சொந்த வீட்டாருக்குரிய கல்லறையில் அடக்கம் செய்தார். ஒருவழியாக எல்லாம் முடிந்தன.
      தன் குடும்பத்தை காக்கவும் தன் சகோதரனின் (அல்ஃபேயுசின் ) குடும்பத்திற்குமாக சேர்த்து உழைத்த பெரிய ஜீவன் சூசையப்பரின் குடும்ப வருமானம் மிகவும் கீழே போயிற்று. சுத்தமாக நின்றே போயிற்று. இப்போது சம்பாதிக்ககூடிய ஒரே நபர் இயேசு மட்டுமே. இத்தனை பேரையும் அவர் சம்பாரித்து காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு இயேசுவின் தலையில் விழுந்தது. அவரும் தன்னால் முடிந்தவரை கடினமாகவே  உழைத்து சம்பாரித்தார். ஆனால் எவ்வளவு உழைத்தும் வருமானம் பற்றவில்லை. அவர் குடும்பத்தில் ஏழ்மை தலை விரித்தடியது.
இந்த நிலையில் ரபேக்காவின் வீட்டில் பூகம்பம் வெடித்தது. தன் மகள் திருமணமே வேண்டாம் என்பதற்கு காரணம என்ன? என்று அவள் தந்தை எஸ்ரா அவளிடம் நேரிலேயே கட்டுவிட்டார். எத்தனை நாள்தான் மடியில் இருக்கும் பூனையை மறைத்து வைக்க முடியும். ரபேக்கா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.
  “ ஆம் அப்பா… நான் ஒருவருக்காக காத்திருப்பது உண்மைதான். அவர்களுடைய வீட்டில் சூழ்நிலை சரி இல்லாதபடியினால் தான் நான் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. “
   “ சரி அம்மா. நீ விரும்பி ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை உனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கும்.  நீ விரும்பும் நபர் உனக்கு ஏதாவது வாக்கு கொடுத்திருகின்ராரா ? எவ்வளவு காலம் காத்திருக்க சொன்னார். அவர் யார் ? எந்த ஊர்? என்ன கோத்திரம் ?
“ நான் விரும்பும் நபர் உங்களுக்கு நன்றாகத்தெரிந்தவர் தான் அப்பா. தற்சமயம் அவரது வீட்டில் கஷ்ட்ட ஜீவனம் தான். அதனால் தான் நான் இவ்வளவு காலம் காத்திருகின்றேன்.?
 “ சரி அம்மா… ஆனது அயிற்று இப்போது சொல். அவர் யார்?
 “ அப்பா… கோபித்துக்கொள்ளாதீர்கள் அப்பா. நான் விரும்பும் அந்த நபர்  என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசியது இல்லை. நானும் அவரிடம் இதுபற்றி ஒருவார்த்தை கூட பேசியதில்லை. எல்லாம்  நானே என்னுள் வளர்த்துக்கொண்ட காதல். இந்த விஷயத்தில் அவருக்கு உடன்பாடு இருக்குமோ என்பதுகூட எனக்குத்தெரியாது.”
  “ சரி அம்மா.. உன் விஷயம் இவ்வளவுதூரம் போயிற்றா?  என்னம்மா பெண் நீ?. போனால் போகிறது…இப்போதாவது. சொல். அவர் யார்? அவர் பெயர் என்ன?”
  “ அப்பா கோபித்துக்கொள்ளாதீர்கள் அப்பா… அவர் பெயர் இயேசு.. அவர் தந்தையார் சூசை.. தாயார் மேரி என்னும் மரியாள் “…என்று தயங்கித் தயங்கி கூறினாள் ரபேக்கா.
 “ ரபேக்கா விஷயம் இதுதானா… எனக்கு இது சாதாரன விஷயமாச்சே. நீ மட்டும் இதை முன்பே சொல்லி இருந்தால் நான் உனக்கு எப்போதோ திருமணம் செய்து வைத்திருப்பேனே. இயேசு எவ்வளவு திறமையான பையன். உன் தேர்வு மிகவும் சரியானதே…நாளைக்கே மரியாளிடம் இதைபற்றி பேசி முடித்துவிடுகிறேன்.. என்னிடம் சொல்லிவிட்டாய் அல்லவா…இனிமேல் நீ எதைப்பற்றியும் கவலைப்படாமலிரு. விஷயம் முடிந்ததென்று நினைத்துக்கொள்..சந்தோஷமாக போய் சாப்பிட்டு தூங்கு. விடிந்ததும் மேரியை நான் சந்திகிறேன். “ என்றார் எஸ்ரா.அவருக்கும் இந்த சம்பந்தத்தில் சந்தோஷம் தான்.
  அவ்வளவுதான் ரபேக்காவுக்கு கண்களில் நட்ச்சத்திரக்கூட்டம் தோன்றியது. தான் ஆசைப்பட்ட வாழ்க்கை தனக்கு கிடைத்துவிட்டதென சந்தோஷத்தில் திளைத்துப்போனாள். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல என்றது அடுத்த நாள் பொழுது.
    அடுத்த நாள் எஸ்ரா மரியாளை சந்தித்தார். சூசையின் பிரிவால் வாடும் அவருக்கும் அவரது மகன் இயேசுவுக்கும் தங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். பிறகு தான் வந்த நோக்கத்தையும் கூறினார். இதைக்கேட்ட தேவத்தாயாருக்கு தூக்கி வாறிப்போட்டது. ஆனாலும் சுதாரித்துக்கொண்டு,” ஐய்யா…தங்கள் மனத்திலும் தங்கள் மகள் ,மனதிலும் இப்படி ஒரு எண்ணம் இருப்பதை நான் அறியவில்லை. ரபேக்காவை நான் என் மகள் போலத்தான் பாவித்து வந்தேனே தவிர அவளை மருமகளாக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் நான் என் மகனுக்கு மணமுடிக்க எண்ணவும் இல்லை. இப்போதுதான் நான் என் கணவரை இழந்து தனிமரமாக உள்ளேன். திருமணம் என்னும் பந்தத்தில் நான் என் மகனையும் இழக்கவும் விரும்பவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள். தங்கள் பெண்ணுக்கு வேறு ஒரு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து நல்ல விதமாக திருமணத்தை நடத்திவையுங்கள் “ என்றார்.
   தேவத்தாயாருடைய முடிவை அறிந்துகொண்ட எஸ்ரா,” அம்மா…உங்கள் சூழ்நிலை எனக்கு புரிகின்றது. சூசை இருந்திருந்தால் ஒருவேலை இந்த திருமணம் சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் என் மகள் மனநிலை  இப்போதுதான் எனக்கு தெரிய வந்தது.  என்னை மன்னித்துவிடம்மா… என் மகளையும் மன்னித்துவிடு. ஆனால் ஒருவிஷயம் மட்டும் உண்மை. இவ்வளவு காலமும் என்மகள் உங்களுடன் பழகியது எந்தஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல்தான். அவள் உங்களுடன் பழகியதும் தன் தாயில்லாத ஏக்கத்திற்காகத்தான். இந்த விஷயத்தில் நீங்கள் அவளை நம்பலாம். தன் மனதிற்குள்ளாகவே அவள் தன் காதலை வளர்த்துக் கொண்டாளே தவிர அவள் வேறெதும் நினைத்ததில்லை. இந்த விஷயம் உங்கள் மகனுக்குக்கூட தெரியாது. நான் தவறு ஏதேனும் செய்திருந்தால் என்னை மன்னித்து விடம்மா “ என்று புறப்பட்டுவிட்டார்.
தன் தகப்பன் வருவதைக்கண்டதும் ரபேக்கா துள்ளிக்குதித்துக்கொண்டு வந்தாள். “ என்ன அப்பா..நல்ல செய்திதானே ” என்று தன் தகப்பனை கட்டிக்கொண்ட்டாள். ஆனால் தன் அப்பாவின் முகம் வாடியிருக்கக்கண்டு மனம் பதைபதைத்தாள். “ சொல்லுங்கள் அப்பா… என்ன நடந்தது. போன விஷயம் காயா பழமா? என்றாள். எஸ்ரா தன்மகளிடம் நடந்ததைக்கூறி,” நீ இயேசுவை மறந்துவிடு “ என்றார். ரபேக்கா அடைந்த துன்பம் வார்த்தையில் சொல்லி முடியாது.
“ அப்பா என் திருமணம் அவருடன் நடக்க தடையாக இருப்பது அவர்களுடைய வறுமைதானே. அதை நான் போக்குகிறேன் என்று நீங்கள் சொல்லி இருக்கலாமே?”
“ ரபேக்கா… அவர்கள் மிகவும் உத்தமமானவர்கள். இந்தமாதிரியான ஆறுதலை அவர்கள் விரும்பமாட்டார்கள். எவ்வளவு ஏழையானாலும் அவர்கள் தன்மானம் விடமாட்டார்கள். என்ன இருந்தாலும் அவர்கள் தாவீதின் ராஜவம்சம் அல்லவா. அந்த இராஜரீக தோரணையிலிருந்து அவர்கள் ஒருபோதும் கீழிரங்க மாட்டார்கள். நான் இப்படி ஒரு வார்த்தையை அவர்களிடம் சொல்லி இருந்தால் என்னை அவர்கள் ஒரு நீச புழுவைப் போல் பார்த்திருப்பார்கள். இருப்பினும் அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருகின்றது.” என்றார்.
  “ அப்பா…எதற்கும் நான் இயேசுவை ஒருமுறை சந்தித்து என் உள்ளத்தில் உள்ளவைகளை சொல்லி என்னைத்திருமணம் செய்துகொள்ள கேட்க்கவா?
“ வேண்டாம் அம்மா….இது முறையாகாது. உனக்கு மதிப்பும் இருக்காது. அவர் தாய்மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர். தாய் வேண்டாம் என்றதை மகன் செய்வாறா.. நன்றாக யோசித்துப்பார். அவர் உன்னை உதாசீனம் செய்துவிட்டால் உன்னால் தாங்க முடியுமா ?”
  நீ குடும்பம் என்னும் சதுரங்கத்தில் ராஜாவுக்கு குறி வைகிறாய். அது அவ்வளவு  சுலபமல்ல. அது ஆபத்தும்கூட. ராஜாவை கைபிடிக்க தகுதி உள்ள ராணிக்குத்தான் உரிமையுண்டு. நீ விரும்பும் இயேசு தாவீதின் ராஜ வம்சத்தை சேர்ந்தவர் என்பதை மறவாதே. நீ அந்த ராஜ வம்சத்தை சேர்ந்தவள் அல்ல என்பதையும் மறவாதே.
   ஒரு விஷயம் சொல்கிறேன் கவனமாக கேட்டுக்கொள். பெண்கள் காதல் வயப்பட்டுவிட்டால் உன்னைப்போல் என்னைப்போல் அதை முறையாகத்தான் கையாளவேண்டும். முதலில் தன் காதலை தெரியப்படுத்த வேண்டியது ஆண்களே. முதலில் பெண் தன் காதலை ஒரு ஆணிடம் தெரியப்படுத்தினால் ஆண் அவளை மதிக்க மாட்டான். இதற்குமேல் நான் உன்னிடம் இதுபற்றி பேச விரும்பவில்லை. “
“ அப்பா… காதலிப்பது அவ்வளவு பெரிய பாவமா அல்லது குற்றமா. ? ”
“ ஆசைப்பட்டவனோடு வாழ நினைப்பது குற்றமல்ல. ஆனால் சம்பந்தப் பட்டவர் உன்னை மலிவாக நினைத்துவிடக்கூடாது அல்லவா. பிறகு அவன் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உன்னை சொல்லிக்காட்டுவார். குத்திக்காட்டுவார். அப்போது உனக்கு மானம் போவது உயிர் போவதுபோல் இருக்கும். இதுதான் உலகம். ஆகவே கடவுளை நம்பி உன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்ககொள்ளும் வழியைப்பார். கடவுள் உனக்கு ஒரு நல்ல மணாளனை அமைத்துக்கொடுப்பார்.”
   தான் ஆசை ஆசையாய் கட்டிய காதல் என்னும் மனக்கோட்டை தன் கண்முன்னே தகர்ந்து வீழ்வதைக்கண்ட ரபேக்கா அப்படியே ஒரு சுவற்றில் சாய்ந்துகொண்டு அழத்துவங்கினாள். அடுத்த நாள் ஒரு முடிவுக்கு வந்த அவள் தன் தகப்பனிடம்,” அப்பா…உங்களை நான் மிகவும் மனம் நோகச் செய்து விட்டேன்.. என்னை மன்னியுங்கள் அப்பா. நான் செய்த தவறுக்கு யாரையும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. இந்த மனதினால் நான் யாரை அதிகம் நேசித்தேனோ அவரை இன்றுமுதல் மனப்பூர்வமாக வெறுக்கிறேன். அப்போதுதான் என்னால் அவரை மறக்க முடியும். இன்னும் கொஞ்ச காலம் அவகாசம் கொடுங்கள் அப்பா…இயேசுவை நான் மனப்பூர்வமாக வெறுத்தபிறகு நானே உங்களிடம் எனக்கு திருமணம் செய்து தரும்படி மீண்டும் கேட்ப்பேன்” என்றாள்.
    பிறகு ரபேக்கா நாசரேத்தில் இருக்கப்பிடிக்காமல் ஜெருசலேம் சென்றாள். அவள் தகப்பன் அவளுக்கு ஜெருசலேம் தேவாலயத்தில் நல்ல பதவியிலுள்ள ஒரு அழகான பரிசேயனை அவளுக்கு கட்டிக்கொடுத்து தன் கண்னை மூடினார்.  கதை இத்துடன் முடிந்துவிடவில்லை..  











Thursday, September 5, 2019

“ இப்படியும் ஒரு குழந்தை யேசு “ “ Santo Bambino “


“ இப்படியும் ஒரு குழந்தை யேசு “ “ Santo Bambino “




 இந்த உலகில் இயேசுநாதர் மனிதனாக அவதரிக்கும்போது ரோமைய சாம்ராஜியத்தின் அதிபதியாக இருந்தவர் அகஸ்டஸ் சீசர் தான். இந்த சாம்ராஜிய மக்கள் தன்னை ஒரு கடவுளாக அங்கீகரிக்கபோகிறார்கள் என்று அவர் கேள்விப்பட்டபோது அவருக்கு மிகுந்த வருத்தம் உண்டாயிற்று. எனவே அவர் மக்களின் பிரதிநிதியாக இருந்த சிபில் என்பவளை அழைத்து இதுபற்றி விசாரித்தார். கடவுளின் கிருபையால் அவளுக்கு ஒரு தீர்க்கதரிசனம் கிடைத்தது.

   அதாவது காலங்களைக்கடந்தவரும் காலங்களுக்கு அதிபதியுமானவர் இங்கே இறங்கிவரப்போகின்றார். இந்த இடம் பரலோகத்தின் வாசல் எனப்படும். எனவே அவருக்கு இந்த அரகோலி மலையின்மீது ஒரு கோயிலும் அதிலே ஒரு பலி பீடமும் கட்டுவீராக என்று இறைவாக்கு உரைத்தாள். இதே நேரத்தில் மாமன்னர் அகஸ்டச் சீசர் ஒரு காட்ச்சி கண்டார். பரலோகம் திறந்தது. மஹா பிரகாசம் அங்கே தோன்ற ஒரு பெண் தன் இடது கையில் ஒரு ஆண் குழந்தையை வைத்திருந்தாள். அவள் தலையை சுற்றி ஒரு நட்சத்திரக்கூட்டமே இருந்தது.  அவர் எண்ணியவரையில் பன்னிரெண்டு நட்சத்திரங்கள் அவள் சிரசை சுற்றி நின்றிருந்தன. அவள் தன்  கால்களை சந்திரன் மீது வைத்திருந்தாள். அவள் சூரியனை தன் ஆடையாக அணிந்திருந்தாள். அப்போது வானினின்று ஒரு குரல் “ இதுவே ஆண்டவனின் இல்லம் “ என்றது. அத்துடன் காட்ச்சி முடிவு பெற்றது.  
     அரசர்  சிபில் என்னும் அந்த தீர்க்கதரிசினியை அழைத்து “யார் அந்தப்பெண்? அவள் கையிலுள்ள குழந்தை யார்? இதைப்பற்றி எனக்கு நீ அறிவிக்கவேண்டும். நான் கண்ட அந்த காட்ச்சியின்படி அந்த மாதுக்கு இந்த அரக்கொல்லி மலையின் மீது ஒரு ஆலயம் அமைப்பேன்.அந்த ஆலயத்தில் அவள் ஆண் குழந்தைக்கும் ஒரு பலிபீடம் அமைப்பேன். இந்த இடத்தை நான் அதற்காக தேர்ந்தெடுத்திருக்கின்றேன். என்றார். அதற்கு சிபில்,” அரசே.நீவீர் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த இடம் ஜுபிடர் தேவனுக்கு உறியது. இந்த ஆலயத்தின் அடியில்தான்  நம் நாட்டின் பொற்காசுகள் அச்சடிக்கப்படுகின்றன. இந்த ஜூபிடர் கோயிலை இடித்தால் மக்கள் கலவரத்தில் ஈடுபடுவார்கள்” என்றாள். அதற்கு சீசர்,” நான் சொன்னால் சொன்னதே.” என்றார். அவரது ஆணையின்படி மிகவும் அழகிய தேவாலயம் கட்டப்பட்டு அது தூய மரியாளின் பெயரால் “ The church of Santa Maria in Aracoeli “என்று அழைக்கப்பட்டு வருகின்றது.  இந்த தேவாலயம் அரக்கோலி என்னும் குன்றின் மீது கட்டப்பட்டுள்ளதால் இதைக்காண்பதற்கு 214 படிகள் மேலே ஏற வேண்டும். இப்போது கதைக்கு வருகின்றேன்.
   இந்த சரித்திர நிகழ்வு நடந்த வருடம் 15 ஆம் நூற்றாண்டு. அப்போது ஜெருசலேம் என்னும் புனித பூமியில் பல முக்கியமான தேவாலயங்கள் ஃபிரான்சீஸ்கன் துறவிகளால் நிர்வாகிக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்தன. ஒரு துறவி சுமார் ஒன்றரை அடி அளவிலான  ஒரு ஒலிவ மரக்கட்டையை ஒலிவ மலையில் அதாவது சுவாமி இரத்தவியர்வை வியர்த்ததும் அவரை காட்டிக்கொடுத்ததுமாகிய மலையில்  கண்டார். இந்த கட்டையை வைத்து என்ன சுரூபம் செய்யலாம் என்று அவர் நினைக்கும் போது அவர் மூளையில்  தோன்றியது குழந்தை இயேசுவின் உருவம்தான். பிறகு அவர் அந்த மரக்கட்டையில் குழந்தை யேசுவின் திருஉருவத்தை செதுக்கினார். அந்த ஒலிவ மரக்கட்டை சொரூபத்துக்கு உயிர் வந்ததுபோல சுருண்ட கேசமும் அழகிய கருவண்டு போன்ற கண்களும் சற்றே உப்பிய கண்ணங்களுமாயும் தீர்க்கமான நாசியும் அழகிய உதடுகளும் கொண்ட அந்த சொரூபத்தை பார்க்கும் யாவருக்கும் ஒரு கொழுக்மொழுக் குழந்தையைப்போல்  அதைத்தூக்கி கொஞ்சவேண்டும் என்னும் ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கும்.
   ஸ்ஒரே நாளில் இந்த உருவத்தை செய்து முடிப்பதற்குள் பொழுது இருட்டிவிட்டது.சிற்பிக்கும் தூக்கம் வந்துவிடவே அடுத்த நாள் இந்த சிலைக்கு என்னமாதிரியான் வர்ணம் கொடுத்தால் சுரூபம் தத்ரூபமாக இருக்கும் என்ற நினைவிலேயே தூங்கிப்போனார். அப்போது ஒரு சம்மனசானவர் வந்து அந்த குழந்தை இயேசுவின் திருவுருவத்துக்கு அழகான வர்ணம் பூசி அதை அப்படியே விட்டுச்சென்றார்.. அடுத்த நாள் தான் எப்படி இந்த குழந்தை இயேசுவின்  சொரூபத்துக்கு வர்ணம் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாரோ அதற்கும் மேலாக அதிரூபமாக இந்த சிற்பம் இருக்ககண்டு தன் சபையின் மடாதிபதியிடம் இதுபற்றிக்கூறினார். அவரும் வியந்து இது மனிதரால் செய்யப்பட்டும் கடவுளின் தூதரால் வர்ணம் பூசப்பட்டது என்பதை உணர்ந்து ரோமிலுள்ள தன் சபையின் மடாதிபதிக்கு தெரிவித்தார். அவர் அந்த சிலையை உடனே ரோமுக்கு தக்க பாதுகாப்புடன் அனுப்பிவைக்க கட்டளையிட்டார். அதன்படி இந்த அற்புத குழந்தை இயேசுவின் சொரூபம் கப்பலில் அனுப்பிக்கப்பட்டது. இந்த கப்பல் மத்தியதரைக் கடலை கடந்து இத்தாலியில் ரோமுக்கு பயணம் செய்யும்போது பல ஆபத்துகளை சந்தித்தது. கடலுக்கடியில் பெரும் பூகம்பமும் ஜலப்பிரலயமும் ஏற்பட்டது. எனவே கப்பலில் இருக்கும் வேண்டாத சாமான்களை எல்லாம் கடலில் தூக்கி எறியும்படி கப்பலின் தலைவன் உத்திரவிட்டான். இந்த உத்திரவுக்கு இந்த குழந்தை இயேசுவின் சொரூபமும் தப்பவில்லை..
   இங்கிருந்துதான் இந்த குழந்தை இயேசுவின் மகிமை வெளிப்பட்டது. கடலில் தூக்கி ஏறியப்பட்ட இந்த குழந்தை இயேசுவின் சொரூபம் படுத்தபடி இல்லாமல் நேராக எழுந்து நின்றது. அது கப்பலின் முன்னே மிகவும் கம்பீரமாக நின்றபடியே சென்றதைக்கண்ட அனைவரும்  பயத்தாலும் பெரும் உவகையினாலும் விவரிக்க முடியாத உணர்ச்சிகளை அடைந்தனர்.. இந்த பயணிகளின் கப்பலை மடக்கினால் நமக்கு பெரும் பணம் கிடைக்கும் என்ற நப்பாசையினால் இதைக்கொள்ளையடிக்க வந்தனர் கடற்கொள்ளையர்கள். அவ்வளவுதான் . அற்புத குழந்தை இயேசுவின் திருமுகம் இந்த கொள்ளையர்களைக்கண்டு  பயங்கரமாய் முறைத்தது. அதன் கண்கள் உக்கிரத்தால் சிவந்தன. கடலில் இந்த சூறாவளிக்காற்றில் ஒரு மரக்கட்டை பொம்மை தங்களை வெறித்து நோக்கும் பார்வையால் மிறண்டுபோனான் கொள்ளையர் தலைவன் . இருப்பினும் சற்றே தைரியத்தை  வரவழைத்துக்கொண்டு,” நான் எத்தனையோ போர்களை கண்டிருகின்றேன். யாரும் என் வாள் வீசுக்கு தப்பியதில்லை. இந்த மரக்கட்டை பொம்மை என்னை என்ன செய்துவிட முடியும். இந்த ஒல்லாந்தரை நீ யார் என்று நினைத்துக்கொண்டாய். ஆகவே வீரர்களே துணிந்து தாக்குங்கள்” என்று கட்டளை கொடுத்தான்.
(அக்காலத்தில் ஒல்லாந்தர் எனப்பட்டவன் கொடும் கடற்கொள்ளையனாய் விளங்கியவன். அவனது ஆதிக்கம் மத்திய தரைக்கடலின் எல்லையிலுள்ள எல்லா நாடுகளிலும் பரவி இருந்தது. அவன் பெயரைகேட்டாலே கடலாடிகளுக்கு சிம்ம சொப்பனம்தான். இவனுடைய பெயர் பல தூர தேசங்களிலும் பரவி இருந்ததால் பல கடற்கொள்ளையர்கள் பல நாடுகளில் இவன் பெயரை வைத்தே தங்களின் கொள்ளை தொழிலில் பல காலமாக ஈடுபட்டு வந்தனர்.)
  அடுத்த நொடியில் கப்பலின் கொடி மரங்கள் அனைத்தும் தீப்பற்றி எரியத்துவங்கின. தன் கப்பல்கள் அனைத்திலும் தீ… அதுவும் எவ்வித காரணமும் இன்றி. அந்தக்காலங்களில் கப்பல் படைகள் போரில் ஈடுபடும்போது அதன் கொடிமரம் தீபிடித்தால் பெரும் அபசகுணமாக கருதப்படும். எனவே கடற்கொள்ளையன் இவ்வாறு நினைத்தான்.
ஆஹா இது ஏதோ மரக்கட்டை பொம்மையே அல்ல. இது ஏதோ தெய்வீக சக்த்தி வாய்ந்த சொரூபம். இந்த ஒல்லாந்தர் பாரம்பரியத்தில் வந்த யாவருக்கும் பயம் என்பதே கிடையாது. ஆனால் எனக்கு இப்போது பயம் ஏற்படுகின்றது. இந்த தெய்வீக சக்தியை  எதிர்த்து போரிடுவது தற்கொலைக்கு சமம் என்று எண்ணியவனாய் தன் சகாக்களுடன் அப்படியே பின்வாங்கிசென்றான்.
    இதேபோல பல சொகுசுக்கப்பல்கள் வியாபார போட்டியின் நிமித்தம் இந்த கப்பலை இடித்து மோதும்படியாக இதை நெருங்கி வந்தன. அவர்களுக்கும் குழந்தை இயேசுவின் உக்கிரமான பார்வை செலுத்தப்பட்டு அவர்களும் பயந்து பின்வாங்கிச்சென்றனர். பிறகு கடலின் சூறாவளி யாவும் அமைதிப்படுத்தப்பட்டன. ஆனாலும் யாருக்கும் இந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை மீண்டும் கப்பலில் ஏற்ற துணிவு வரவில்லை. ஒருவழியாக இந்த கப்பல் லிவொமோ “ the shores of Livorno.” என்னும் இடத்தை அடைந்தது. இந்த கப்பலின் வருகைகாக காத்திருந்த ஒரு பிரான்சீஸ்கன் துறவி ஒருவர் கப்பல் வருவதற்கும் முன்பே இந்த குழந்தை இயேசுவின் சுரூபம் கறைக்கு வர அதை அவர் அப்படியே வாரி அணைத்து எடுத்துச்சென்றார்.
    இந்த குழந்தை இயேசுவின் திரு உருவம்  அன்று அகஸ்டஸ் சீசரின் காட்ச்சியில் கண்ட அதே உருவம்தான் என்பதற்கு பல புதுமைகள் சாட்ச்சியாய் இருந்தபடியால் இதை மேலே குறிப்பிட்ட அரக்கொல்லி மலையின் மீது அமைந்துள்ள சாந்தா மரியா பேராலயத்தில் வைத்தனர். ஒவ்வொரு கிறிஸ்த்துமஸ் பெரு விழாவின்போதும் இந்த சாந்தா மரியா பேராலையத்தில் இந்த குழந்தை இயேசுவின் சொரூபத்துக்கு பெரும் மகிமையும் விழாவும் கொண்டாட்டமும் களைகொட்டும். இந்த வைபோகம்  மூன்று ராஜாக்கள் திருவிழாவரை நிகழும். கிறிஸ்த்துமஸ் திருவிழாவின்போது இந்த அற்புத குழந்தை இயேசுவின்  சொரூபம் உச்சி முதல் பாதம் வரை மிகுந்த மகிமை பிரதாபத்துடன் பெரும் விலை உயர்ந்த தங்க நகைகளாலும் வைரங்களாலும் அலங்கரிக்கப்படும். அப்போது இந்த குழந்தை இயேசுவின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இருக்காது. அலங்கரிக்கப்பட்ட இந்த குழந்தை இயேசுவின் திருசொரூபம் ஒரு மூடு துகிலால் மூடப்பட்டு இந்த தேவாலயத்தின் இடதுபுறமுள்ள  பலிபீடத்தில் பரோக்கி முறையில் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிம்மாதனத்தில் வைக்கப்படும். பிறகு கிறிஸ்த்துமஸ் விழிப்பு பூசையின்போது வானோர் பாடல் பாடப்படும்போது குழந்தை இயேசுவின் மூடுதுகில் அகற்றப்பட்டு முழு உருவமும் மிகப்பிரமாண்டமாய் காட்ச்சி அளிக்கும்.  பெரும் திரளான ரோமைய மக்கள் தங்களுடைய குழந்தைகளுடன் வந்து இந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை தொட்டு முத்தமிட்டு ஆராதனை செலுத்துவர்.
        ஏனெனில்  குழந்தை இயேசு குழந்தைகளை மிகவும் விரும்புவார் என்றும் தம் மக்கள் குழந்தை இயேசுவுக்கு  நண்பர்களாய் விளங்க வேண்டும் என்றும் அவர்கள் குழந்தைகளூக்கு கற்றுக்கொடுப்பதால் அவர்கள் பிற்காலத்தில் நல்ல கிறிஸ்த்துவர்களாய் வாழ்வார்கள் என்பதும் அவர்களுடைய நம்பிக்கை. பிறகு இந்த குழந்த இயேசுவின் சொரூபம் கிறிஸ்த்துமஸ் ஜோடனையில் மாதாவின் மடியில் வைக்கப்படும். ஜோடனையில் வைக்கப்பட்டுள்ள சொரூபங்கள் அனைத்தும் ஒரு ஆள் உயரதிற்கு குறையாதிருக்கும். திருவிழா முடிந்ததும் மீண்டும் அதனுடைய அரியாசனத்தில் வைக்கப்பட்டு விடும். ஒவ்வொரு நாள் இரவிலும் இந்த சொரூபம் வெளியே எடுக்கப்பட்டு துணியால் சுற்றப்பட்டு இந்த ஆலயத்தின் பாதுகாவலர்களாகிய ஃபிரான்சீஸ்கன் துறவிகளின் மடாலயத்தில் வைக்கப்படும். இந்த அற்புத குழந்தை இயேசுவுக்கு உலகம் முழுவதிலிருந்தும் வரும் விண்ணப்பங்கள்  சேகரிக்கப்பட்டு அவை படிக்கப்படாமலே தீயால் எரிக்கப்பட்டுவிடும். அங்கு வந்திருக்கும் விண்ணப்பங்களை குழந்தை இயேசு படித்துக்கொள்வார் என்பது அவர்களுடைய நம்பிக்கை.தான் இதற்கு காரணம். அதி தீவிரமாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி இந்த குழந்தை இயேசுவிடம் வந்து அவரின் திருமுகத்தை உற்றுப்பார்க்கும் பக்தர்களுக்கு சில வேலைகளில் ஒரு குறிப்பு காட்டப்படுகிறதாம். அதாவது குழந்தை இயேசுவின் முகத்தில் அவரது திரு உதடுகள் சிகப்பு நிறத்திற்கு மாறினால் அவரது வேண்டுதல் நிறைவேற்றப்படுவது உறுதி  என்றும் மாறாக வெண்மை நிறமாக மாறினால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படமாட்டாது என்றும், அந்த காரியம் குழந்தை இயேசுவுக்கு பிடித்தமானதல்ல என்றும் அர்த்தம். இவ்வாறக பலருக்கும் நேர்ந்திருப்பதாக இங்கு வரும் பக்த்தர்கள் தெரிவிக்கின்றார்கள்.
    சாந்தா மரியா பேராலயம் ஒரு பெரும் கலைப்பொக்கிஷம். இந்த ஆலயம் பரலோகத்தின் வாசல். இந்த கோயிலில் நுழையும்போது யாவருக்கும் சொர்க்கத்தில் நுழைவதைப்போல ஒரு உணர்வு ஏற்படும். இந்த தேவாலயத்தின் அழகை வார்த்தைகளின் வர்ணிக்க முடியாது. அகஸ்ட்டஸ் சீசரின் படுக்கை அறையில் இருந்த ஒரு பெரும் தூண் இங்கே பல தூண்களோடு நிற்கின்றது. இப்படியாக பல தூண்கள் .ஒவ்வொன்றுக்கும் ஒரு சரித்திரம் உண்டு. இந்த தேவாலயத்தினுள் பல கல்லறை தளங்கள் பளிங்கினால் பாவப்பட்டுள்ளன. இந்த தேவாலயத்துள் ரோமில் கிறிஸ்த்துவத்தை ஆட்சி மதமாக அறிவித்த கான்ஸ்டன்டைன் மன்னருடைய தாயார் புனித ஹெலினாவின்  கல்லறையும் அடக்கம்.
    சாந்தா மரியா பேராலயத்தில் ஒரு செவ்வக வடிவ மரத்தில் வரையப்பட்டுள்ள துயரமான முகத்தோற்றத்துடன் கூடிய மாதாவின் திரு உருவப்படம் மிகவும் பிரசித்தி பெற்றது.கி.பி. 594ல் பெரிய கிரகோரியார் என்னும் பரிசுத்த பிதா இந்த படத்தை மிகுந்த ஆடம்பரமாக ரோமிலுள்ள பிரதான வீதிகளில் பவனியாக கொண்டுவந்தார். அ[ப்போது அந்த நகரில் பரவி இருந்த பிளேக் என்னும் கொடும் நோய் உடனே நின்றது. இந்த தேவாலயத்தின் மேல் விதானத்தில் தங்க இழைகளாலும் தங்க அடுக்குகளாலும் வரையப்பட்டுள்ள ஒரு பெரும் வரைபடம் அனைவராலும் பாராட்டப்படும். ஜெபமாலை மாதாவின் ஜெயம் என்னும்படியாக ஒட்டாமானிய சுல்தான் கடற்படைகளுக்கும் பாப்பரசரின் கிறிஸ்த்தவ கப்பற்படைகளுக்கும் லெபாந்த்தோ என்னும் இடத்தில் கடலில் நடந்த போரில் பாப்பரசருடைய கிறிஸ்த்துவ கப்பல்படைகள் வென்றன. இந்த வெற்றியின் நினைவாக வரையப்பட்டதுதான் அந்த மேல் விதானத்தில் வரையப்பட்டுள்ள ஜெபமாலை மாதாவின் ஜெயம் என்னும் படம். இந்த போரின் விளைவாக தாங்கள் கொண்டுவந்திருந்த தங்கங்களை வைத்தே இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. ஆக இந்த சாந்த மரியா பேராலயம் பரலோகத்தின் வாசல் என்றாலும் ஆண்டவருடைய பீடம் என்றாலும் மிகையாகாது.

Tuesday, September 11, 2018

“ இனிமேல் உன் பெயர் இரட்டைக்கனி எனப்படும் எபிராயீம்.”


“ இனிமேல் உன் பெயர் இரட்டைக்கனி எனப்படும் எபிராயீம்.”
“ அடேய் கருப்பா… உன் கதையை கேட்க கேட்க ஏதோ  ஒரு அழகிய கவிதையை கேட்பது போல் இருக்கிறது. எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதே இல்லை. இருந்தாலும் நேரம் போக வேண்டுமல்லவா… சொல் உன் கதையை கொஞ்சம் விலாவாரியாகத்தான் சொல்லேன்.”
 “ஆடப்போங்கப்பா… நானும் என் கதையை எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். சொல்லி சொல்லி எனக்கும் அலுத்துப்போய் விட்டது.”
“ அடப்பரவாயில்லை அப்பா.. பழைய நினைவுகள் ஒருபோதும் அலுப்பதுமில்லை. மறப்பதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவை நமக்கு நம் இளமையை மீட்டுத்தரும் அருமருந்தாக உதவுகின்றன. பசி வயிற்றைக்கிள்ளுமுன் அதை மறக்க உன் கதையை ஆரம்பி”
அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு தன் கதையை ஆரம்பித்தான்.
   நான் ஒரு ராஜ குமாரன்.அபிசீனியா ( இன்றைய எத்தியோபியா ) என் தாய் நாடு. என் நாடு ஒரு பொன்னான நாடு. இயற்கை அன்னை எங்கள் நாட்டுக்கு எல்லா வளங்களையும் அள்ளி அள்ளி கொடுத்திருந்தாள். எங்கும் தங்கம் மின்னின. வைரமும் வைடூரியமும் எங்கும் கொட்டிக்கிடந்தன. மாணிக்கமும் மரகதமும் எங்கள் குழந்தைகளின் விளையாட்டுக்கற்கள் ஆயின.
எங்கள் நாடு சூரிய பகவானால் மிகவும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததினால் எங்கள் மேனியும் தக தக என்று மின்னும் கருநிறத்திற்கு மாறின. இதனாலேயே நாங்கள் எத்தியோப்பிய கருப்பு என்னும் பட்டப்பெயர் வைத்து அழைக்கப்பட்டோம். இந்த நிறமே எங்களுக்கு பாது காப்பானதாகவும் ஆனது.
  ஆப்ரிக்க தேசங்கள் முழுவதும் கருப்பு நிறத்தவர் நிறைந்திருந்தாலும் எங்கள் நாட்டவரைப்போல் மின்னும் கருநிற தேகம் உடையவர்கள் உலகிலேயே யாரும் இல்லை. சூரிய பகவானின் உக்கிரமம் எங்களை மட்டுமின்றி எங்கள் நாட்டில் வாழும் மிருகங்களையும் விட்டு வைக்கவில்லை. எங்கள் நாட்டு மிருகங்கள் மிக்க வலிமை வாய்ந்தவை ஆயின. பாம்புகளும் தேள்களும் கொடும் விஷம் கொண்டவை ஆயின.ஆனாலும் அவைகள் எங்கள் நாட்டுக்கே ஒரு தனி அடையாளம் ஆயின. எங்கள் நாட்டில் விளையும் சாம்பிராணி மரங்களும் அதன் பிசின்களும் மிகுந்த வாசனை மிக்கவை.
 எங்கள் நாட்டு இளவரசிதான் ஷேபா நாட்டின் அரசியாகவும் இருந்தாள். எங்கள் நாட்டு சட்டப்படி அரசி திருமணம் செய்துகொண்டால் அவள் அரச பதவியை இழந்து விடுவாள். அவள் கணவன் அரசனாக வேண்டும். இப்படி இருக்கையில்  ஜெருசலேமில் மாபெரும் மன்னர் சாலமோனின் ஞானத்தைப்பற்றி எங்கள் நாட்டின் வெளி உறவு அமைச்சர் மூலம் அறிய வந்த எங்கள் ஷேபா நாட்டு அரசி அவருடைய ஞானத்தை பரிசோதிக்க விரும்பி ஜெருசலேம் சென்றார். அங்கே விதி விளையாடியது. என்னதான் மாமன்னர் சாலமோனுக்கு நூற்றுக்கணக்கான கட்டிய மனைவியர் இருந்தும் அவருக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது. இந்த சமயத்தில் எங்கள் ஷேபா நாட்டு அரசி அங்கே சென்றதும் மாமன்னர்  சாலமோன் அவளையும் திருமணம் செய்துகொண்டார்.
   அவருடைய வயிற்றில் முத்தாக விளைந்தான் இஸ்ராயேல் தேசத்தின் முதல் இளவரசன். மாமன்னர் சாலமோனின் யூத குலத்தின் ஒரே நேரடி வாரிசு ஒரு வெளி நாட்டுக்காரியின் வயிற்றில் உதித்தது பற்றி அவருடைய பட்டத்து ராணிகளுக்கு பெரும் வயிற்றேரிச்சலை கிளப்பியது. இது ஒரு சதியில் முடியலாம் என்று பயந்த எங்கள் ஷேபா நாட்டின் ராணி யூதேய சிங்கம் மாமன்னர் சாலமோனின் வாரிசை தன் வயிற்றில் தாங்கியபடி தன் நாடு திரும்பினாள். அவள் கணவர் மாமன்னர் சாலமோன் எங்கள் நாட்டு சட்டப்படி அரசராகவே மாமன்னர் சாலமோனின் மனைவி அவர் பெயராலே ஆட்சி செய்தார். அவள் வயிற்றில் பிறந்து வளர்ந்த யூத குல வாரிசு இந்த பூமியில் பிறந்தான். அவனுக்கு இப்னா ஹக்கீம் என பெயரிடப்பட்டது. தக்க வயது வந்ததும் அவனை  மாமன்னர் சாலமோன் தன் நாட்டுக்கு வரவழைத்து அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார். ஆனால் இளவரசர் இப்னா ஹக்கீம் தான் தாய் நாடு திரும்பும்போது தன் தந்தையார் ஜெருசலேமில் கட்டியிருந்த புகழ்வாய்ந்த தேவாலயத்திலிருந்த உடன்படிக்கை பெட்டகத்தை திருடிச்சென்றான். இதை அறிய வந்த மாமன்னர் சாலமோன் மிகுந்த விசனமுற்றார். இருப்பினும் தன் மகன் மீதுள்ள பாசத்தால் அங்கிருக்கும் இஸ்ரேலிய தேவனுக்கு பலி ஆராதணை செலுத்த நூற்றுக்கணக்கான  ஆலய குருக்களை எத்தியோப்பாவுக்கு அனுப்பினார். அவர்கள் எத்தியோப்பியர்களுடன் கலந்தனர். அவர்தம் வாரிசுகளுக்கு கருப்பு யூதர் என பெயரிடப்பட்டது.”
 “ அதெல்லாம் சரிதான்… உன் கதையை சொல்லப்பா கருப்பா” என்றான் ஒருவன்.
  “ இப்படிப்பட்ட அரச குலத்திலிருந்து வந்தவன் தான் நான். எனக்கென அழகிய மனைவியும் மக்களும் இருந்தனர். கருப்பு யூத குலத்திலிருந்த வந்திருந்த எனக்கு ஆண்டவன் கொடுத்திருந்த பத்து கட்டளைகளை அனுசரிக்க மிகுந்த விருப்பம் இருந்ததால் எனக்கு பிறன் மனைவியை விரும்பும் எண்ணதிற்கே இடமில்லாமல் போயிற்று. நான் எனக்கிருந்த அறிவினாலும் ஆற்றலினாலும் பெரும் வியாபாரி ஆனேன்.  என் நாட்டில் கிடைக்கும் தங்கம் வைரம் வைடூரியம் மரகதம் மற்றும் பெரும் யானைத்தந்தம், வாசனை திரவியங்கள் அரிய வகை மூலிகைகள் சாம்பிராணிகள் இவற்றை ஏற்றுமதி செய்தும், எங்கள் நாட்டில் கிடைக்காத முத்து பவளம் பட்டு துணிமணி வகைகள், தங்க வெள்ளி நகைகள் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தும் பெரும் பணம் சம்பாரித்தேன். என் சொந்தங்கள், பந்தங்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கியும் நல்ல ஊதியம் கொடுத்தும் பலவாறாக அவர்களை முன்னேற்றினேன்.
 ஆனால் என் வளர்ச்சி பிடிக்காத சிலர் என்னை கவிழ்க சதி செய்தனர்.   அடிமேல் அடியாய் அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் நான் மெல்ல மெல்ல மதுவுக்கு அடிமை ஆனேன்.  பிறகு மெல்ல மெல்ல பெண்களை நாடினேன். என்னிடமிருந்த பணத்தாலும் அதிகாரத்தாலும் கன்னியரை அடிமைப்படுத்தினேன். மெல்ல மெல்ல நான் ஒரு காம வெறிபிடித்த மனிதனானேன். என் எதிரிகள் தங்கள் எண்ணத்தில் ஜெயித்தார்கள். நான் அடியோடு தோற்றுப்போனேன். என் செல்வத்தை மட்டுமல்லாது என் மனைவி மக்கள் சொந்தங்கள் பந்தங்கள் அனைத்தையும் இழந்தேன். இப்போது எல்லோராலும் ஒதுக்கப்பட்டு இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என்றான் அந்த கருப்பன். பிறகு மாலை மாலையாய் கண்ணீர் சிந்தி பெரிதாய் அழத்துவங்கினான். அந்த இடத்திலிருந்த அனைவரும் சற்றே அமைதியாய் இருந்தனர்.
பிறகு அந்த கருப்பன்,” அடேய் வெள்ளையா நான் என் கதையை கூறிவிட்டேன்..  நீ உன் கதையை கூறு என்றான். வெள்ளையன் தன் கதையை சொல்ல ஆரம்பித்தான்.
  “ நண்பர்களே … என் கதையும் உன் கதை போன்றதுதான். ஆனால் சற்றே மாறுபட்டது. நான் உன்போல் அரச குலத்திலிருந்து வரவில்லை. ஆனாலும் ஒரு இளவரசனுக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங்களும் எனக்கு இருந்தது. எனக்கு எல்லாவிதமான போர்ப்பயிற்சியும் இருந்தது. என் வாள் வீச்சு எதிரியை நிலை குலைய வைக்கும். என் கடற்பயணங்களால் எனக்கு  கடலும் கடல் சார்ந்தவைகளும் நிலமும் அது சார்த்தவையும் பருவங்களும் அதன் சுழற்சிகளும் எனக்கு கற்றுத்தந்த பாடங்கள் மிக அதிகம். நான் ஒரு கடல் வாணிகன். எனக்கு இந்த மத்திய தரைக்கடல் ஓரங்களிலுள்ள அனைத்து நாடுகளும் அத்துபடி.  நான் பிறந்தது பொனீஷியாவில்.( இன்றைய லெபனான் ) இந்த பொனீஷியர்கள் கடல் வாணிபத்தில் கில்லாடிகள். இவர்களிடம் பல விதமான தொழில்கள் இருந்தாலும் மிகுந்த வருமானம் தரும் தொழில் சாயப்பட்டறைகள் தான். இவர்கள் கடல் வாழ் உயிரினங்கள் சில வெளிப்படுத்தும் சாயத்தால் சில வர்ண சேர்மங்களை சேர்த்து விதவிதமான வண்ணக்கலவைகளை துணிகளில் தோய்த்து அவைகளை தூர தூர தேசங்களில் விற்று மிகுந்த லாபம் பார்த்தனர். இந்த வண்ணக்கலவை ரகசியங்களை தகப்பன் மகனுக்கு கூட சொல்லிக்கொடுக்க விரும்பியது இல்லை.அவ்வளவு ரகசியமாக தங்கள் தொழில் ரகசியங்களை பாதுகாத்து வந்ததினால் இந்த பொனீஷிய நாடு பொருளாதாரத்தில் மிகவும் வளர்ந்துகொண்டே இருந்தது. நானும் இந்த வண்னக்கலவை ரகசியத்தை தெரிந்துகொள்ள எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். ஆனால் முடியவில்லை. பிறகு அந்த முயற்சியை கைவிட்டு இத்தகைய வண்ணத்துணிகளை பல நாடுகளூக்கு கொண்டு சென்று அவற்றை விற்று பெரும்பொருள் சம்பாரித்தேன். காலமும் காற்றும் ஒரே மாதிரி  செல்வதில்லை. எனக்கும் விதி சதி செய்தது. அது என் மைத்துனன் உருவில் வந்தது. பொதுவாக யூதர்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பி விடுவதில்லை. ஆனால் என் மைத்துனனே என்னை மோசம் செய்வான் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  என்னை மோசடி செய்ய அவன் பல முயற்சிகளை மேற்கொண்டான். கொஞ்ச நாளில் நான் மதுவுக்கு அடிமை ஆனேன். பிறகு எல்லா பணக்காரர்களூக்கும் ஏற்படும் பெண்கள் ஆசைக்கு நானும் அடிமை ஆனேன். கொஞ்ச காலத்தில் என் நிலைமை தலை கீழாய் மாறிப்போனது. எனக்கு வியாபாரத்தில் நாட்டம் இல்லாமல் போனதால் பெரும் நஸ்ட்டம் ஏற்பட  எனக்கு கூட்டாளிகளாய் இருந்தவர்களால் என் கடன் சுமை காரணமாக நான் என் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டேன். என் மனைவி மக்கள் கதி என்னவாயிற்று என்று எனக்குத்தெரியவில்லை. இது நடந்து இப்போது பத்து ஆண்டுகள் ஆயிற்று. இப்போது உங்கள் முன் நிற்கிறேன் ” என்றான் அந்த வெள்ளையன்
“ நீயாவது பரவாயில்லையப்பா… என் கதை இன்னும் மோசம் எனக்கும் இப்படி ஒரு நிலைமை வரும் என்று கனவிலும்கூட நான் நினைத்தது இல்லை. நான் ஒரு பெரும் கப்பல் வியாபாரி. வெனிஸ் என் பூர்வீகம். நாடு நாடாக நான் சென்று கப்பல் வியாபாரம் செய்ததினால் எனக்கு பெரும் செல்வம் உண்டாயிற்று. அதனால் ஏற்பட்ட மோசமான சகவாசத்தால் எனக்கு உடலில் வெண் புள்ளிகள் உண்டாயிற்று. நாளடைவில் அது மிகப்பெரிதாக என் உடல் முழுவதும் பரவி என் அடையாளத்தையே மாற்றிவிட்டது. இந்த பொனீஷியவில் நான் கால் வைத்தவுடன் இந்த கப்பல் துறைமுக அதிகாரி என்னை சிறையிலிட்டு என்னை பரிசோதித்து எனக்கு குஸ்ட்ட வியாதி இருப்பதாகவும் அதனால் என்னை நாடு கடத்துவதாகவும் கூறி என் கப்பலை பறிமுதல் செய்து அதை அதன் விலைமதிப்பில்லா  சரக்குகளுடன் நடுக்கடலில் எரித்துவிட்டான். நான் ஒரே நாளில் பிச்சைக்காரன் ஆனேன். என் வியாதி தெரிந்த அனேகர் என்னை கைவிட்டனர். துரத்தோ துரத்து என துரத்தினர். பல நாடுகளாய் நான் அலைந்து திரிந்து இப்போது உங்களுடன் இருகின்றேன்” என்றான் அவன்..
  இவர்கள் ஏதோ ஒரு உலக மஹா வட்ட மேஜை மா நாட்டில் தங்களின் சாகசங்களையும் வெற்றிகளையும் பெரும் விளக்கங்களுடன் சொல்லினர் என்று நேயர்கள் நினைத்துக்கொண்டீர்களா ?. அதுதான் இல்லை. அவர்கள் அனைவரும் ஒரு பத்து பேர் கொண்ட குழுவாய் வாழ்ந்த பெரும் குஸ்ட ரோகிகள். சரி நீ உன் கதையை சொல்… நீ உன் கதையை சொல் “ என்று அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் வீரப்பிரதாபங்களையும் தாங்கள் வீழ்ந்த கதை பற்றியும் தங்களுக்கு எப்படி இந்த பாழும் குஸ்ட வியாதி எப்படி வந்தது என்பது பற்றியும் தங்களுக்குள்ளே ஆறுதல் சொல்லிக் கொண்டும் நேரத்தை போக்கிக்கொண்டும், நமக்கும் ஒரு வாழ்வுகிடைத்தால் அதை எப்படி நல்ல முறையில் நிர்வாகிக்க வேண்டும் என்று ஆண்டிகள் மடம் கட்டிய கதையாய் அப்படியே தூங்கிப்போயினர்.  குஸ்ட நோயின் கொடுமையும் மக்களின் வெறுப்பும் அவமானமும் ஒருவாய் சோற்றுக்கும் நாயாய் பேயாய் அலைந்து திரிந்தவர்களுக்கு ஒரு திறந்த வெளி குகைதான் அவர்களுக்கு மெய்யாகவே சொர்க்கம் போல அடைக்கலம் கொடுத்தது.
     அவர்களுக்கு இருந்த பசிதாகம் அவர்களை தூங்க விடவில்லை. மீண்டும் எழுந்து அமர்ந்தார்கள். ஒருவன்,” நமக்கும் ஒரு வாழ்வு கிடைத்தால்… அதாவது தெய்வாதீனமாக கடவுளே நேரில் வந்து நமக்கு விமோட்ச்சனம் கொடுத்தால்…. நம் குஸ்ட நோயினின்று நம்மை விடுவித்தால்.. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் “ என்றான் உள்ளூர்கார குஸ்ட ரோகி. அடேய் மடையா…குஸ்டம் என்றால் உனக்கு என்ன தெரியுமா…அது ஆண்டவனின் சாபத்தால் வரும் நோய். இந்த நோய் கண்டவன் உருவிழந்து புண்களால் நிறைந்து மிகுந்த வலி வாதை பட்டு சாக வேண்டும்.இந்த வியாதிக்கு மருந்தில்லை. மரணம் மட்டுமே முடிவு” என்றான் வெள்ளையன்.” நண்பர்களை இதை நான் அறிவேன். ஆனாலும் நான் சொன்னபடி நடந்தால் அதாவது அப்படி ஒரு நன்மை நமக்கு ஏற்பட்டு விட்டால் நீங்கள் எல்லாம் என்ன செய்வீர்கள்?”
    அடப்போய்யா… அப்படி எல்லாம் ஒன்றும் நடந்து விடாது உன் வாக்கு மட்டும் பலித்துவிட்டால்… நான் மட்டும் மீண்டும் பழையபடி என் உடல் நலம் பெற்றுவிட்டால் ஆஹா … அதை நினைக்கும்போதே என் உடம்பு புல்லரிகின்றது…என்னை இந்த நிலைக்கு ஆளாக்கின அந்த பாவியை… அந்த துரோகியை கொண்று பழிக்குப்பழி தீர்த்துவிட்டுதான் நான் மறு வேலை பார்ப்பேன்” என்றனர் அந்த ஒன்பது குஸ்ட ரோகிகளும் ஒரே குரலாக..
“ இல்லை நண்பர்களே… நாம் நம் எதிரிகளை மன்னிப்போம்… நமக்கு வந்த துன்பம் நம் எதிரிக்குகூட வரக்கூடாது என்று நினைப்போம். நாம் யாரும் ஆண்டவனுக்கு எதிராக எந்த குற்றமோ.. பழிபாவமோ செய்யவில்லை.எனவே இந்த குஸ்ட்டம் ஆண்டவரின் சாபத்தா;ல் வரவில்லை …மாறாக நாம் நம்மனம் பொருந்தி செய்த பழிபாவத்தாலேயே வந்தது என்று ஏற்றுக்கொள்வோம்” என்றான் அந்த பத்தாவது நபரான உள்ளூர்கார குஷ்ட்ட ரோகி. அவன் பிறந்து வளர்ந்த ஊர் சமாரியா.
 “ நாம் அளவுக்கு மீறி நல்லவர்களாக இருந்ததுதான் நாம் செய்த குற்றம்.. என் நண்பர்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் நான் எவ்வளவோ செய்திருந்தும் அனைவரும் நம்மை கை விட்டனர்.ஏமாற்றினர். அரசியலும் வியாபாரமும் சுபாவத்தில் ஒன்றுதான். இரண்டுக்கும் பொதுவான நோக்கம் ஒன்றே.ஒன்றுதான். அது நாம் வளர வேண்டும் எதிரி சாக வேண்டும். என்பதே. இதைமட்டும் நான் அன்றே உணர்ந்திருந்தால் நமக்கு இந்த துன்பம் வந்தே இருந்திருக்காது என்றான் கருப்பன். சரி. நடந்து முடிந்த கதையை பற்றியோ  நிறைவேறாத ஆசைகளை பேசியோ பயன் இல்லை. நமக்கு மட்டும் நல்லது நடக்க வேண்டுமென விதி இருக்குமானால்…… சபிக்கப்பட்டவர்களாகிய நம்மால் மனிதரை நோக்கிபோக முடியாது. ஆண்டவனை நோக்கியே போக வேண்டும். பகவானுக்கு மட்டும் மனம் இருந்தால் அவரே நம்மை தேடிவருவார் என்றான் வெள்ளையன் விரக்தியாக. அவன் வாக்கு பலித்தது. அடுத்த நாள் இயேசுநாதர் அவர்கள் இருக்கும் குகைக்கு அருகில் வந்தார்.
   இயேசுநாதர் தங்கள் ஊர் வழியாக வருகின்றார் என்று அறிந்ததும் அந்த பட்டிணத்து வாசிகள் பெரும் கூட்டமாக சாலையில் கூடிவிட்டனர். இயேசுநாதர் தன் சீடர்களுடன் இங்கே வந்ததும் அந்த சமாரிய மக்கள்,” இயேசுவே… தாவீதின் குமாரனே எங்கள் மேல் இரக்கம் வையும். எங்களை ஆசீர்வதியும்… எங்களோடு பேசும்” என்றனர். ஆனால் இயேசுநாதர்..” இல்லை…நான் உங்களோடு பேச முடியாது. அதற்கு எனக்கு நேரம் இல்லை” என்றார். அப்போது ஒரு சிறுவன்  தன் தோட்டத்திலிருந்த சில மாதுளம் பழங்களை பறித்துவந்து இயேசுவிடம் கொடுத்து,” ஆண்டவரே எனக்கு உம்மிடம் கொடுக்க வேறு ஒன்றும் இல்லை. நாங்கள் பிறப்பால் தாழ்ந்தவர்கள். தாங்கள் உயர்ந்த ஜாதியை சேர்ந்தவர். ஆயினும் நான் உம்மை நேசிக்கிறேன். என் காணிக்கையை தயவாய் ஏற்றருளும் சுவாமி” என்றான்.
    அவனது அன்பில் தன்னை மறந்த இயேசுநாதர்,” மகனே…கடவுளுடைய படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை. எல்லாம் சாத்தானின் தூண்டுதலால் மனிதர்களே தங்களை தாங்களே பிரித்துக்கொண்டார்கள். கடவுள் தான் இந்த உலகை படைக்கும்போது எல்லாம் நல்லதெனவே கண்டார். சாத்தானின் சதியால் ஆதாம் பாவம் செய்தபிறகு எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது. நாடுகள் பிரிந்தன. அவற்றில் உள்ள மக்களும் பிரிந்தனர்.. இனத்தால் குணத்தால், நிறத்தால், பணத்தால் என்று எங்கும் பிரிவினையும் தவறான போதனையும் பரவியதால் உண்மை என்னவென்று மக்கள் கண்டறிய முடியாதபடி பேதம் முழுவீச்சில் பரவியது. ஆனாலும் ஒரு காலம் வரும். அப்போது எல்லா மக்களும் ஆண்டவனின் குழந்தைகள் என்னும் உண்மை கண்டறியப்படும். இதற்கு தேவையானது தன்னைப் படைத்த தேவனைப்பற்றிய அறிவும் அவர்மீது அன்பும் நம்பிக்கையும் விசுவாசமும் மட்டுமே. இதோ இந்த மாதுளை கனிகளைப்பார். இந்தக்கனியை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் அப்படியே கடித்து சாப்பிடுபவன் முட்டாள். அவன் இதை கடித்து சாப்பிட்டுவிட்டு இந்தக்கனி கசக்கிறது. இதைப்படைத்த கடவுளுக்கு அறிவே இல்லை என்பவனை கேடு சூழட்டும். ஆனால் துரதிர்ஸ்ட்ட வசமாக இப்படித்தான் பலர் கடவுளைப்பற்றிய  தெளிவான சிந்தனை இல்லாமலும் அவருடைய  ஞானத்தையும் ஆற்றலையும் உணராமலும் இருகின்றனர். இந்தக்கனியின் மேல் தோல் அதன் உள்ளே இருக்கும் மாணிக்க கற்கள் போன்ற விதைகளுக்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த சிவந்த நிறமும் ருசியும் என்னவாய் மனிதர்களை கவர்கின்றன.  இவற்றிலுள்ள கனிகளை பிரிக்கும் மெல்லிய சுவர் போன்ற ஒரு சவ்வு சிறிதே கசப்பானது ஆனாலும் அதுவும் ஒரு மருந்துதான். இந்த சிறிய மெல்லிய சவ்வை ஒரு சிறுமிகூட எளிதாக பிரித்துவிடமுடியும். இப்படித்தான் ஒரு காலத்தில் சகோதரர்களாக இருந்த யூதர்களும் சமாரியர்களும் பிற்காலத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுக்கு ஆளாயினர். ஒருவரை ஒருவர் மதிப்பதே இல்லை. ஆக பிரிவினையை களையுங்கள். அண்ணன் தம்பிகளாக சேர்ந்து வாழுங்கள் இந்த மாதுளை கனிகளைப்போல “ என்றார். இதற்குள்ளாக  இயேசுநாதர் தாங்கள் வாழும் அந்த ஒதுக்கப்பட்ட குகை அருகே வந்துவிட்டார் என்று அறிந்ததும் அந்த பத்து குஸ்ட ரோகிகளும்  தங்கள் குகையைவிட்டு வெளியே வந்து,” ஆண்டவரே , இயேசுவே..எங்கள் மேல் இரக்கமாயிரும் என்று கத்திக்கதறினர். இவர்களின் கூக்குரல் இயேசுவை அடைந்தது. அவர் அவர்களை நோக்கி ,” உங்களுக்கு என்ன வேண்டும் என்றார். ஆண்டவரே  எங்களுக்கு இந்த குஷ்டவியாதி குணமாக வேண்டும்” என்றனர். அதற்கு இயேசு,” நீங்கள் போய் உங்கள் தேவாலய குருக்களிடம் காண்பித்து சுத்திகரம் செய்துகொள்ளுங்கள்” என்று கூறி ஆசீர்வதிதார்.
   அந்த பத்து குஸ்ட்ட ரோகிகளும் தாங்கள் தேவாலயத்துக்கு செல்லும் வழியிலேயே  தாங்கள் குணப்படுத்தப்பட்டதை அறிந்து மிகுந்த சந்தோஷப்பட்டு தங்கள் வழியே சென்றனர். ஆனால் ஒருவன் மட்டுமே ஆண்டவறாகிய இயேசுவிடம் திரும்பி வந்தான். அவன் வேறு யாரும் அல்ல. அந்த உள்ளூர்கார சமாரியன் தான். அவன் ஆண்டவரின் முன்னிலையில் வந்து அவர் பாதங்களில் முகம் குப்புற விழுந்து,” ஆண்டவரே என் தேவனே உமக்கு என் தாழ்ந்த நமஸ்காரம். எனக்கு மறு வாழ்வுகொடுத்து என்னை மீண்டும் ஒரு மனிதனாக மாற்றி நல்ல உருகொடுத்த உமக்கு அனந்தகோடி நமஸ்காரமும் ஸ்த்தோத்திரமும் உண்டாகுக. உம்முடைய திரு நாமம் இந்த உலகத்திலும் பரலோகத்திலும் போற்றப்படுவதாக. உம்மை அனுப்பியவராகிய பிதாவானவர் போற்றி ஸ்துதிக்கப்படுவாராக.உம்முடைய இஸ்பிரீத்து சாந்துவின் திரு நாமமும் ஸ்துதிக்கப்படுவாராக. உம்மை பெற்றடுத்த உம் திருமாதாவின் திருநாமம் வாழ்தப்படுவதாக..என்று மிகவும் சப்த்தமாக வாழ்த்தினான்
    ஆனால் அங்கிருந்த மக்களும் அப்போஸ்த்தலர்களும் கூட ஒரு குஸ்ட்ட ரோகி ஆண்டவரின் திருமுன் சப்த்தமாக பேசுவதை ஆட்சேபித்தார்கள். ஆனால் அந்த சமாரியன் மேலும் உரத்தகுரலில்,” என் ஆண்டவர் எனக்கு செய்திருக்கின்ற மகத்தான காரியங்களைப்பற்றி நான் ஏன் பேசக்கூடது? அவரை நான் ஏன் வாழ்த்தக்கூடாது. என்னை ஏன் தடை செய்கின்றீர்கள்” என்றான்.
 “ நீ குணமடைந்துவிட்டாய் அல்லவா… அவரை உன் இதயத்தில் வைத்து அவரை வாழ்த்தி கணம் பண்ணு. அது போதும் “ என்றனர். ஆனால் அவனோ,” மாட்டேன் முடியாது. என்னால் அவரை மகிமைப்படுத்தாமல் இருக்கவே முடியாது. என்னுள் இருக்கும் இஸ்பிரீத்துவானவர் என்னில் இருந்து பேசுகின்றார்.என்னை இரட்ச்சித்து தேற்றுகிறவாகிய ஆண்டவரின் ஸ்த்துதிகளை நான் பாடுகிறேன். என்னைத்தடுக்க நீங்கள் யார்? என் உள்ளம் மகிழ்ந்து களி கூறுகின்றது.  நீங்களும் அவரை வாழ்த்தி ஸ்த்துதியுங்கள் “ என்றான் ஆண்டவரால் குணம் பெற்ற அந்த சமாரியன்.
   அப்போது இயேசுநாதர்,” போதும்… மனிதரே ..உம் விசுவாசம் உம்மை குணப்படுத்தியது. உம்மை இரட்சித்திருகின்றது. நீ பெற்றுக்கொண்ட இந்த ஞான ஒளியில் தொடர்ந்து முன்னேறு.  நீ உன் வழியே போகலாம் “ என்றார். அந்த சமாரியன் அவருக்கு நன்றி சொல்லி சிறிது தூரம் சென்றான். பிறகு மீண்டும் அவரிடம் திரும்பிவந்து,” ஆண்டவரே தேவரீரிடம் ஒரு விண்ணப்பம்” என்றான். “ என்னிடம் உனக்கு கொடுக்க ஒன்றுமில்லை.  இன்னும் சொல்லப்போனல்.. இப்போது எங்களிடம் உனக்கு கொடுக்க ஒரு ரொட்டித்துண்டு கூட இல்லை.” என்றார்.
 அந்த சமாரியன் அவர் திருமுன் மீண்டும் விழ்ந்து ” ஆண்டவரே தேவரீர் எனக்கு புது வாழ்வு கொடுத்திருகின்றீர். என்னுடைய குஸ்ட்டத்தின் நிமித்தம் என மூளை எல்லாம் அரித்துப்போய்விட்டது. இப்போது எனக்கு புது வலிமை புது யவ்வனம்.. புதிய ஞானம் என எல்லாம் புதிதாக இருக்க நான் காண்கின்றேன். என் பெயரே எனக்கு மறந்து போய்விட்டது. எனக்கு ஒரு புதிய பெயரை தாருங்கள் என்றான் அவன்.
 இயேசுநாதர் அவனிடம்,” மனிதா…. இந்த ஊரின் பெயர் என்ன?” என்றார். அவன் ,” ஆண்டவரே இந்த ஊரின் பெயர் எப்பிராயீம்” என்றான். இயேசுநாதர்,” மனிதா… இனிமேல் உன் பெயர் எப்பிராயீம் எனப்படுக. எப்பீராயீம் என்பதற்கு இரட்டைக்கனி என்பது பொருள். இப்போது உன் பெயருக்கான அர்த்தம் புறிந்ததா…உனக்கு கடவுள் இரட்டை ஆயுளை கொடுத்திருகின்றார். மீண்டும் ஒரு புது வாழ்வை கொடுத்திருகின்றார். உன்னில் இப்போது பழையது என ஒன்றுமே இல்லை. நீ புதிதாக பிறந்த பிறவி போல உருவெடுத்திருகின்றாய் அல்லவா..ஆகவே உனக்கு இந்த எப்பீராயீம் என்னும் பெயர் சரியான பொருத்தம் தான்…. சரி… நான் பத்து பேரை குனப்படுத்தவில்லையா..நீ மட்டும் தானே திரும்பிவந்து எனக்கு நன்றி கூறினாய்… மெய்யான தேவனை மகிமைப்படுத்தினாய்.. மற்ற ஒன்பது பேரும் எங்கே?” என்றார்.
         ஆண்டவரே அவர்கள்  தாங்கள் குணமடைந்ததும் மிகுந்த சந்தோசத்தினால் உங்களை மறந்து தத்தம் வழியே போய்விட்டார்கள். அவர்கள் எனக்குத்தெரிந்து தங்களுடைய பழைய வாழ்க்கையை தேடி போய்விட்டதாக நினைகின்றேன்” என்றான் அந்த சமாரியன். அப்போது இயேசுநாதர் சில வார்த்தைகளை முனுமுனுத்தார். அது,” இந்த மக்கள் தங்கள் நாவால் என்னை ஆண்டவரே  என் தேவனே என்மேல் இரக்கமாயிரும் என்று அழைகின்றார்கள். ஆனால் அவர்கள் இதயமோ என்னைவிட்டு வெகு தூரத்தில் இருக்கின்றது” என்றார். மீளவும் அவர் இந்த மீதி ஒன்பது பேரின்மீதும் நான் பரிதாபப்படுகின்றேன். தாங்கள் இழந்ததை மீண்டும் கைப்பற்ற அவர்கள் எடுக்கும் முயற்சி தேவையான ஒன்றுதான். ஆனால் அதை அடையும் வழியில் ஒரு நீதி நேர்மை இருக்க வேண்டும். ஆனால் பொதுவாக இவர்களுடைய முயற்சி பழி பாவத்தில் தான் முடியும்.”  இந்த நேரத்தில் இயேசுநாதர் சற்றே தன் கண்களை மூடி தியானித்தபின்,” அவர்களுடைய பிந்திய நிலைமை முந்தைய நிலைமையைவிட மோசமானதாக இருக்க காண்கிறேன் “ என்றார்.
  பிறகு ,” கடவுளிடம் அழுது அழுது பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும்  வரங்களையும் நேர்மையான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அந்த வரமே அவர்களுக்கு எதிராகத்திரும்பி அவர்களுக்கே அது சாபமாக முடியும் . ஆண்டவரின் அருள் என்பது நல்லோர் மீதும் தீயோர் மீதும் பொழியப்படும் மழையை போன்றது. அவரவர் அதை பயன்படுத்தும் விதத்தில்தான் அது வரமாகவோ அல்லது சாபமாகவோ அமையும். ஆயினும் நான் அவர்கள் ஒன்பது பேரின்மீதும் இன்னும் இரக்கம் உள்ளவராகவே இருகின்றேன்” என்றார். மேலும் ,” நான் அவர்களிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை.  ஆயினும் நன்றி நவிலல் ஒரு சிறந்த குணம். அது மனிதரால் மிகவும் விரும்பப்படுவது. மேலும் நன்றி நவிலல்பல நன்மைகளை பெற்றுத்தரும் என்பதை அவர்கள் ஏன் உணரவில்லை.?. நனறி மனிதனுக்கு மனிதனை மட்டுமல்லாது கடவுளையும் மனிதனையும் கூட இணைக்கிறது.” என்றார்.
  அந்த சமாரியன் ஆண்டவரின் திருப்பாதத்தில் வீழ்ந்து,”ஆண்டவரே… மீண்டும் ஒரு விண்ணப்பம்” என்றான். ஆண்டவர் ,”  எப்பிராயீம்…நீ நம்மிடம் வேண்டுவதென்ன?” என்றார்.
 “ ஆண்டவரே… என் தேவனே.. எனக்கு இந்த உலக வாழ்க்கை என்னவென்று புறிந்துவிட்டது. ஒருவன் கையில் காசும் பணமும் அதிகாரமும் சேர்ந்து கொண்டால் அவன் மீண்டும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியாது, அவன் சாத்தானுக்கு அடிமை ஆவதைத்தவிர அவனுக்கு வேறு வழி இல்லை. சாத்தானின் ஆயுதம் மூன்று. அவை மது மங்கை பணம். இந்த உலகில் உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் போர்களுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் இந்த மூன்றும் தான் காரணம். ஒன்று அவை தனித்தோ இரண்டாகவோ அல்லது மூன்றும் சேர்ந்தோ வரும் பட்ச்சத்தில் அதிலிருந்தே அனைத்து வகையான பாவங்களும் உற்பத்தி ஆகின்றன. இந்த உலகில் எந்த நாட்டிலும் இந்த மூன்று காரணிகள் இல்லாத அரசாங்கமும் கிடையாது, வியாபாரமும் கிடையாது. பணத்தை விரும்பாத மனிதனோ, பெண்னை விரும்பாத மனிதனோ, மதுவை விரும்பாத மனிதனோ இந்த உலகில் யாருமே இல்லை. வேண்டுமானால் இவற்றில் ஏதாவது ஒன்றை விரும்பாதவனாக இருப்பான். இது நான் கற்றுக்கொண்ட பாடம். மேலும் எனக்கு மனைவியோ அல்லது குழந்தை குட்டிகளோ எதுவும் கிடையாது. செல்வத்தின் மீதும் எனக்கு பற்று இல்லை. இந்த அடிமையை தேவரீர் ஏற்றுக்கொள்வீர்களா ?’ என்றான் அந்த சமாரியன்..இவனது கூற்றின் உண்மையை அறிந்துகொண்ட இயேசுநாதர், “எபிராயீம்….. எம்மை பின் செல்வதால் உனக்கு துன்பமே ஏற்படும். ஆனாலும் உனக்கு நான் ஒரு உறுதி அளிக்கிறேன். என் பரலோக இராஜ்ஜியத்தில் உனக்கும் ஒரு இடம் தர என்னால் முடியும். என்னை பின் செல். இராயப்பா.. இந்த மனிதரையும் நம்மோடு சேர்த்துக்கொள்” என்றார்.
   புதிதாகவந்து சேர்ந்துகொண்ட இந்த சமாரியனுக்கும் பரலோகத்தில் இடம் ஒதுக்கியதால் இயேசுநாதர் அவன் மீது எவ்வளவு அன்பும் இரக்கமும் கொண்டிருக்க வேண்டும் என்று உணர்ந்த இராயப்பர்,” இதோபார்  எபிராயீம் நான்தான் முதலாமவன். இயேசுநாதரின் முழு அன்பும் பாசமும் எனக்குத்தான் முதலில் இருக்க வேண்டும். தெரிந்ததா. இதோபார் பரலோகத்தின் திறவுகோல் என்னிடம்தான் இருகின்றது எச்சரிக்கை” என்றார். அதற்கு அந்த சமாரியன்,” என் எஜமானே ..தேவரீர் பெரிய மனதுவைத்து அந்த பரலோக வாசலின் உள்ளே என் ஒருகாலை மட்டும் வைக்க அனுமதி கொடுங்கள். எனக்கு அவ்வளவு இடம் போதும். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான் என்பது சரிதான் போலும் ” என்றான்.
   இவர்களின் சம்பாஷனையை கேட்ட இயேசுநாதர்,” இராயப்பா…அன்று ஒருநாள் இரவு அஞ்சாராக்குகையில் நாம் அனைவரும் என் தாயாருடன் தங்கி இருந்தபோது நான் சொன்னதை மறந்துவிட்டாயா? உன்னை என் திருச்சபையின் தலைவராகத்தான் நான் நியமித்திருந்தேன். ஆனால் என் நேசத்தாயாரை என் திருச்சபைக்கு பாதுகாவலியாக நியமிக்கிறேன் என்று நான் கூறியதை மறந்துவிட்டாயா”? ஒரு தாய்க்கு திருச்சபையில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அன்பு சமமாக இருக்க வேண்டும் அல்லவா. இதில் எபீராயீம் மீது உனக்கென்ன இவ்வளவு காய்ச்சல் “ என்றார்.   
     அவ்வளவுதான் இராயப்பர். “ ஆண்டவரே… தேவரீர்  என்னை முழுவதுமாக அறிவீர்.” என்றார். பிறகு அந்த சமாரிய ஊழியன் எப்பிராயீம் இடுப்பில் கைவைத்து நட்புடன் “ வாரும் என் தோழரே.. ஆண்டவரின் இராஜ்ஜியத்தில் நீரும் ஒரு பிரஜையாய் இரும்.” என்றார்.
   இந்த அஞ்சாரா குகையை பற்றிய ஒரு சிறு குறிப்பு. இது ஜோர்டான் நாட்டில் அஜ்ஜலோன் என்னும் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு குன்றுதான் அஞ்சாரா குன்று. இந்த குன்றின் உச்சியில் உள்ள ஒரு குகைதான் அஞ்சாராக்குகை எனப்படுகின்றது. இந்த குகைதான் தற்போது ஒரு தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீதுள்ள ஊரில்தான் தான் மா பெரும் தீர்க்கதரிசி எலியாஸ் பிறந்ததாக வரலாறு கூறுகின்றது.
  எலியாஸ்
தீர்க்கதரிசியின் நினைவாக இந்த இடத்தில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த தேவாலயம் இப்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. ஆனாலும் அங்கிருக்கும் ஞானஸ்நான தொட்டியும் அங்கே பதியவைக்கப்பட்டுள்ள அழகான மொசைக்கற்களும் இன்றளவும் காணக்கூடியவனாக உள்ளன. அவற்றில் புனித எலியாஸ் தீர்க்கதரிசியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
மேலும் மாமன்னர் தாவீது தன் மகன் அப்சலொமின் கலகத்தால்  ஜெருசலேமிலிருந்து தப்பி ஓடிவந்து இந்த மலையில் உள்ள  குகையில்தான் தஞ்சம் அடைந்தார் என்றும் ஒரு தகவல் உள்ளது. இந்த மலையின் மீதுள்ள அஞ்சாரா குகையில்தான் இயேசுநாதரும் அவரது தாயரும் அவர் தம் சீடர்களும் ஒருமுறை தங்கியிருந்ததாகவும் அங்கிருந்த இடத்தில்தான் தான் தன் நேசத்தாயாரை திருச்சபையின் பாதுகாவலியாக நியமித்ததாகவும் ஒரு தகவல் உண்டு. உண்மையில் இந்த அஜ்ஜலோன் மலைத்தொடரில் பல குகைகள் உள்ளன. இவற்றுள் பலவற்றில் இயேசுநாதர் அவ்வப்போது தங்கி இருந்தாலும் தன் நேசத்தாயரை தன் திருச்சபையின்  பாதுகாவலியாக நியமித்தது எந்த குகையில் என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் இந்த அஞ்சாரா குகையின் வரலாற்று சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அது இந்த குகையாகத்தான் இருக்கும் என்று நம்பத்தோன்றுகிறது. இது உண்மை என்பதுபோல் நடந்த ஒரு சம்பவம் வரலாற்று முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
  கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி  இங்குள்ள மாதா சுரூபத்தையும் அவரது பீடத்தையும் இங்குள்ள கன்னியரும் அவருடன் பணிபுரிந்த மூன்று உள்ளூர் வாசிகளும் சுத்தம் செய்யும்போது மாதாவின் முகம் உயிர் பெற்றதாகவும் அவரது கண் இமைகள் திறந்து மூடியதாகவும் சற்று நேரத்தில் அவரது கண்களிலிருந்து மனித இரத்தம் வடிந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் சாட்ச்சியம் கூறுகின்றனர்.  இந்த நிகழ்வைப்பற்றி பல உறுதியான மருத்துவ அறிக்கைகளும் தேவாலய பிதாப்பிதாக்களின் அறிக்கைகளும்  இந்த சம்பவம் உண்மை என்றே சாட்ச்சியம் கூறுகின்றன.
         இந்த தேவாலயமானது ஜெருசலேமின் பிதாப்பிதாக்களால் நிர்வாகிக்கப்படுகின்றது.  இந்த நிகழ்வை ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் உறுதிசெய்து ஒரு சிறந்த திரு யாத்திரை ஸ்தலமாக அங்கீகரித்திருகின்றது. இந்த அஞ்சாரா மலையிலுள்ள இந்த மாதா ஆலயம் மலைமேல் மாதா என்றழைக்கப்படுகின்றது. இந்த திருயாத்திரை ஸ்தலம் ஜோர்டான் தலை நகர் அம்மானி;லிருந்து  வடக்கே ஒன்றரை மணி நேரம் பயணித்தால் அடைந்துவிடலாம்..
மேலும்  அந்த பத்து குஸ்ட ரோகிகளின் வசித்துவந்த அந்த குகை இன்று தூய ஜார்ஜ் ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது இந்த தேவாலயம் கிரேக்க பழமை ரீதி திருச்சபையின் ஆதிக்கத்தில் இருகின்றது. இந்த குகை தேவாலயம் சமாரியாவில் எப்பீராயீம் என்னும் பட்டிணத்தில் புர்கீ என்னும் சிற்றூரில் அமைந்திருக்கின்றது. தற்போது இந்த குகை தேவாலயம் சிறந்த திரு யாத்திரை ஸ்தலமாக மாறிவிட்டது. இஸ்ராயேல் தலை நகர் ஜெருசலேமிலிருந்து சமாரியா நோக்கி வடக்காக சுமார் ஒன்றரை மணி நேரம் காரில் பயணித்தால் இந்த புர்கி என்னும் ஊர் வரும்
.