Tuesday, July 2, 2013

"ஆண்டவரே, தேவரீர் எங்கே போகிறீர்கள். ? [ DOMINE QUO VADIS ] "




"ஆண்டவரே, தேவரீர் எங்கே போகிறீர்கள். ? [ DOMINE QUO VADIS ] "
        இது நடந்தது கி.பி.64ல். ரோம் நகரில் அன்று அந்த அப்பியன் சாலையில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. ரோமைய மக்களின் மனதில் அச்சம் நிலவியது. என்ன செய்வோமோ என்று  அவர்கள் பரிதவித்து நின்றார்கள். அந்த பயத்தினால் பலர் நகரைவிட்டு ஓடவும் செய்தார்கள். எற்கனவே ரோம் நகர் பற்றி எரிந்து தங்கள் உடமைகளை எல்லாம் இழந்த பொதுமக்கள்
இப்போது உயிரைவிடவும் தயாகராக இல்லை. ஆகவே கூடுமானவரை தங்கள் குழந்தை குட்டிகளுடனும் மூட்டை முடிச்சுகளுடனும் ஓட்டமும் நடையுமாகவும் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் விதி அவர்களை விடவில்லை. அவர்களை ஓட ஓட விரட்டியது. ரோமானிய ராணுவத்தால் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும்
ஊருக்குள் திரும்ப அனுப்பப்பட்டார்கள். அதாவது மீண்டும் அடித்து உதைத்து அனுப்பப்பட்டார்கள்.
        ரோமை நகர் தீயால் எரிக்கப்பட்டதால் ஒரு விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கும் வரை யாரும் ஊரைவிட்டு வெளியேறக்கூடாது   என்றுகாரணம்காட்டி அனைவரையும் கைது செய்தது . உண்மையில் என்னதான் நடந்தது என்பதற்கு இந்த சம்பவம் நடந்ததை நேரில் பார்த்த டாக்டிகஸ் என்னும் வாலிபன் எழுதிய
ஒரு கடிதம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது. அந்த கடிதம் சொல்லும் விபரம் இது.
        " அன்று ஜுன் 16 ஆம் தேதி கி.பி.64 ஆம் வருடம் ரோமின் வத்திக்கான் குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள [CIRCUS MAXIMUS ] மரண விளையாட்டரங்கத்தின்   வெளிப்புறத்தில் அமைந்துள்ள ஏழை மக்களும் கிரிஸ்த்துவர்கள் எனப்படும் பாவப்பட்ட ஜென்மங்களும் அதிகம் வசித்துவந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீ ஏற்பட்டது. தீயை  அணைக்க முயன்ற பலர் தடுக்கப்பட்டனர். இதையும் மீறி தீயை அணைக்க முற்பட்டவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். எனக்குத்தெரிந்த சில ரோமை ராணுவ அதிகாரிகளும்  வீரர்களும் மாறுவேடத்தில் வந்து இந்த காரியத்தை செய்தனர். அணைந்து போன சில இடங்களும்கூட மீண்டும் தீப்பற்றி எரியத்துவங்கியது. சொல்லிவைத்தாற்போல் நகரத்தின் பல  இடங்களிலும் தீ மளமளவென்று பரவத்துவங்கியது. ஒரு அளவுக்கும்மேல் தீயைக்கட்டுப்படுத்தமுடியாமல் போகவே ரோம் நகரமே தீ பற்றி எரியத்துவங்கியது. இவ்விதமாக தீ ஒரு
வாரகாலம் அணையாமல் எரிந்தது.
         இன்றைய காலகட்டத்தில் ரோமை நகர் என்பது பதிநான்கு மாவட்டங்களைக்கொண்டது. ஆனால் தீ பரவாமல் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட மாவட்டங்கள் நான்கு மட்டுமே.
ரோமில் நீரோவின் அரண்மனையின் ஒரு பகுதிகூட தீயினால் நாசமாக்கப்பட்டது. இப்படி ஒரு கோரச்சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நீரோ மன்னன் ட்ராய் நகரம்
இப்படித்தான் எரிந்ததுபோலும் என்று சப்த்தமாகப்பாடிக்கொண்டு பிடில் வாசித்துக்கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன்.
அந்த மரண விளையாட்டரங்கம் நீள்வட்ட வடிவிலானது. அரசனின் குதிரைப்படை தேர்ப்படை இவற்றிற்கு வேகப்பரீட்ச்சை நடத்தவும் அவ்வப்போது தேர் மற்றும் ரதப்போட்டிகள்  நடத்தவும் ராணுவ வீரர்களுக்கிடையே விளையாட்டுப்போட்டிகள் நடத்தவும் அடிமைகளின் மல்யுத்தம் வீரவிளையட்டுப்போட்டிகள் நடத்தவும் இந்த விளையாட்டரங்கம்
பயன்படுத்தப்பட்டது. [ரோம் நகரில் வட்ட வடிவிலான ஒரு மரண விளையாட்டரங்கமும் இப்போதும் உள்ளது. அது கொலோசியம் என்றழைக்கப்படுகின்றது. இது போன்ற   பல கொலோசியங்கள் அக்காலத்தில் இத்தாலியில் பல இடங்களில் இருந்தன.]
       ஆனால் ரோமில் வத்திக்கான் மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த நீள்வட்ட வடிவிலான மரண விளையாட்டரங்கம் ரோமை மன்னர்களுக்கான பிரத்தியேகமானது. அதன் ஒரு அறைவட்டவடிவிலான ஆரம்பப்பகுதியில் ஒரு நெடும் கல் நடுநாயகமாக மிகவும் கம்பீரமாக நின்றிருந்தது. இந்த விளையாட்டரங்கத்தின் வெளிப்புறத்தில்
அமைக்கப்பட்டிருந்த கடைவீதிகள் அனைத்தும் தீயினால் சாம்பலாகி இருந்தன. அரங்கத்தின் கூறைபோன்ற அமைப்பு கூடாரமான முறையில் இருந்தது. அது முற்றிலும் எரிந்து   போனதால் அரங்கத்தின் உள் கட்டமைப்புகள் அனைத்தும் சாம்பலாகியது. எனவே அரங்கத்தின் உட்பகுதியில் தங்கி இருந்த வீரர்களும் அங்கிருந்த சிறையில் அடைபட்டிருந்த   அடிமைகளும் மற்போர் வீரகளும் மற்ற சாதாரண விளையாட்டு வீரர்களும் கொடுமையாக நெருப்பினால் வெந்து மடிந்து போனார்கள்.
     நடந்து முடிந்த காரியங்கள் அனைத்தையும் நான் கேள்விப்பட்டவரை இந்த தீ யாரோவால் வேண்டுமென்றே திட்டம்தீட்டி நடத்தி இருக்க வேண்டும். அது வேறு யாரும் அல்ல.  மன்னர் நீரோவே இக்காரியத்தை செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தமே இல்லாத ஏழைக்கிரிஸ்த்துவர்களை அடித்து உதைத்து கட்டாயப்படுத்தி நாங்கள்தான்  கொளுத்தினோம். நீரோமன்னருக்கு கிரிஸ்த்துவர்களை கண்டாலே பிடிக்காது. அதனால்தான் நாங்கள் கொளுத்தினோம் என்று வாக்குமூலம் கொடுப்பார்களா?.
மேலும் அங்கிருந்த கிரிஸ்த்துவ மக்களின் வசிப்பிடங்களை காலி செய்துவிட்டு அங்கு பிரம்மாண்டமான அரண்மனையோடு சேர்ந்த வணிகவளாகம் தான் கட்டுவார்களா ?"
     மன்னர் நீரோ நல்லவறாக இருக்கும்பட்சத்தில் கிரிஸ்தவர்களின் நிலங்களைப்பிடுங்கி அங்கு தங்க மாளிகை எனப்படும் டோமுஸ் ஆரா கட்டிடம் கட்ட ஏன் அவ்வளவு   ஆர்வம் காட்டவேண்டும்..இதற்க்கு அரசங்க பணம் தேவைப்பட்டதால் அதை செனட் ஏன் அங்கீகரிக்கவில்லை.?. என்ற ரீதியில் இக்கடிதம் அமைந்துள்ளது. இந்த பயங்கர தீ சம்பவம்
நடந்து முடிந்து மூன்று மாதங்களில் கிரிஸ்த்துவர்களுக்கு பிடித்தது சனியன். அது மிகவும் கோரமாக இருந்தது.
       நடந்து முடிந்த ரோமை தீ விபத்தினால் இறந்தவர் எத்தனைபேர்...சேதமடைந்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று துல்லியமாக ஆராய முடியாமல் செனட் சபை திணறியது.
உயிர் சேதமும் பொருட்சேதமும் கணக்கிடப்படமுடியாத அளவில் இருந்தது. இதற்கான காரண கர்த்தா யார் என ரோமைய செனட் சபை கண்டறிய முற்பட்ட வேலையில் சுதாரித்துக் கொண்டான் நீரோ மன்னன். எங்கே இந்த பழி தன் மீது வந்துவிடுவோமோ என்ற அச்சம் தன்னை ஆட்க்கொள்ளவே அதிலிருந்து தப்பிக்க இந்த பழியை கிரிஸ்த்துவர்கள் மீது சுமத்தினான். சிலர் மீது போடப்பட்ட இப்பழி ஒட்டுமொத்த கிரிஸ்த்துவர்கள் மீதும் விழுந்தது. கிரிஸ்த்தவர்களின் ராப்போஜனமும் அப்பம் பிட்க்கும் சடங்கும் யேசுவின் திரு இரத்த சடங்கும் வேறு மாதிரியான முறையில் தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டு கிரிஸ்த்துவர்கள் குழந்தைகளின் ரத்தம் குடிப்பவர்கள்....நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்றேல்லாம் தவறாக
சித்தரிக்கப்பட்டார்கள்.
      இதனால் கிரிஸ்த்துவர்கள் என்றாலேயே அஞ்சத்தக்கவர்கள், நம்பத்தகுந்தவர்கள் அல்லர். அரசியல் எதிரிகள் என்றபடி எல்லாம் அவர்கள் மீது பழி போடப்பட்டது. அதன் விளைவு..
கிரிஸ்த்துவர்கள் மீது மரண அடி விழுந்தது. உண்மையை கண்டுபிடிக்கின்றேன் பேர்வழி என்று கிரிஸ்த்துவர்களை பயங்கரமான ஆக்கினைகளுக்கு ஆட்படுத்தப்பட உத்திரவிட்டான்
மன்னன் நீரோ.
    நீரோ மன்னன்பதவிக்கு வரவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டியவள் அவனுடைய தாயார் அகரிப்பினா தான். இதர்காக அவள் செய்த காரியம் முறைப்படி பட்டதுக்கு வரவேண்டிய அவன் மூத்த சகோதரன் ப்ரிட்டானிகஸை விஷம் வைத்து கொண்றதுதான். ஆனால் விஷயம் வெளியே தெரியாமலிருக்க நீரோ செய்த காரியம் தன் தாயாரை வாளால் ஓட
ஓட வெட்டிக்கொண்றதுதான். அவன் தன் தாயார் தன் அரசாங்க அலுவலிலும் தன் சுய வாழ்க்கையிலும் அடிக்கடி தலையிட்டதால் அவளைக்கொண்றதாக ஒரு கதை  சொல்லப்படுகின்றது. நீரோ தன் பத்தொன்பதே வயது நிரம்பிய தன் மனைவி ஆக்டேவியா என்பவளை குழந்தை இல்லாத காரணம் காட்டி வெட்டிக்கொண்றான்.
        இவளை இப்படிக்கொண்றான் என்றாள் இன்னொரு மனைவியான போப்பினா என்பவள் நிறைமாத கர்ப்பினியாக இருக்கும்போது அவளை வயிற்றில் எட்டி உதைக்க அவள் குறை  பிரசவத்திலேயே இறந்தாள்.
பிற்பாடு அவள் சகோதரியை கல்யாணம் செய்துகொண்டான். அவனது நண்பர்கள் என்றில்லாமல் எதிரிகள் என்றில்லாமல் சந்தேகம் என்று வந்துவிட்டால்   அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் கொல்லப்படவேண்டும் என்ற வெறிபிடித்து அலைந்துவந்தான் மன்னன் நீரோ. பெருந்தீனி உண்னும் பழக்கமுடையவன். சமயங்களில் அரசாங்க
விருந்துகளில் பகல் பொழுதில் விருந்துக்கு உட்கார்ந்தானால் இரவு முடியும் வரைகூட எழுந்து செல்லமாட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இந்த நேரத்தில்தான் நீரோவின் மகள் தோம்னியா என்பவள் புனித போத்தினா என்னும் ஒரு புனிதையால் மனம்திருப்பப்பட்டு கிரிஸ்தவளாக மாறினாள். அவள் மட்டுமல்ல . அவள் அரண்மனையிலிருந்த சேடிப்பெண்கள் அனைவரும் மற்றும் சிறைக்காவலர்கள் வரை கிரிஸ்த்துவர்களாக மாறி இருந்தனர். இந்த புனித போத்தினா என்னும் பெண் வேறு யாரும் அல்ல.
     அன்று சமாரியாவில் யாக்கோபின் கிணற்றில் யேசுநாதருடன் சம்பாஷித்த தீனா என்னும் சமாரியப்பெண்ணை நேயர்கள் மறந்திருக்க முடியாது. யேசுநாதரால் மனம் மாறிய அவள்  தன் தவறான வாழ்க்கையை விட்டு விட்டு புனிதையாக மாறி வேதபோதகம் செய்த காரணத்தால் ரோமுக்கு நீரோவின் அரண்மனையில் விசாரணைகாக வந்திருந்தாள்.
   அவளுக்கு சிறைவாசம் கொடுக்கப்பட்டது. தினமும் அவளுடன் சேர்த்து அவள் குடும்பத்தினரான ஐந்து பெண்களையும் இரும்புத்தடிகளால் அவர்கள் கைகளையும் கால்களையும்   உடைக்க வேண்டும் அதுவும் நீரோவின் மகள் தோம்னியா முன்னியில் நடைபெறவேண்டும் என்பது நீரோவின் ஆணை. அவ்வாறே தண்டனை அவர்களுக்கு தோம்னியா முன்னியில்
நடைபெறும். ஆனால் அன்றிரவே யேசுநாதர் அவர்களுக்கு தோன்றி அவர்கள் அனைவரையும் குணப்படுத்திவிடுவார். இப்படியாக பல நாட்க்கள் சேர்ந்தார்போல் நடைபெறவே தோம்னியா ஆச்சரியப்பட்டு யேசுநாதரைப்பற்றி அறிந்துகொண்டாள். அந்த சமாரியப்பெண் தீனா அவளை கிரிஸ்த்துவளாக மாற்றினாள். இந்த அதிசயத்தைப்பார்த்த அரண்மனையில்
இருந்த அத்தனை சேடிப்பெண்களும் யேசுநாதரால் ஆட்கொள்ளப்பட்டு கிரிஸ்த்துவர்களாக மாறினர்.
      இதனால் கடுப்பாகிபோனான் மன்னன் நீரோ.. எனவே தன் மகள் என்றும் பாறாது அவளுடன் மனம்மாறிய தன் அரண்மனைப்பெண்கள் மற்றும் சிறைகாவலர்கள் உட்பட சுமார் நூறு பேர்களை நிர்வாணமாக்கி தன் அரண்மனை அந்தப்புறத்திலேயே சிலுவையில் அடித்ததும் அல்லாமல் உயிர்போகும் முன்பே அவர்கள் அனைவரையும் உயிரோடு கொளுத்தவும்
செய்தான். இத்தனை அக்கிரமங்களையும் தன்னுடைய நேரடி மேற்பார்வையிலேயே செய்தான்.
      இதனால் மிகவும் வருந்தினால் புனித போதினா.. எப்படியாவது புத்தி சொல்லி நீரோ மன்னனை மனம்திருப்பப்பார்த்தாள் புனித போதினா என்னும் அந்த சமாரியப்பெண். ஆனால்  சாத்தானை திருத்த முடியுமா... என்பதுபோல இவனை இனிமேலும் திருத்தமுடியாது என்று உணர்ந்த புனித போதினா நீரோ மன்னனை நேருக்கு நேராக சந்தித்து அவனை  எச்சரித்தாள்..ஆண்டவனின் கோபதிற்கு ஆளாகாதே என்றாள்...ஆனால் நீரோவா மசிபவன்.. எனவே கோபப்பட்ட போதினா, " நீரோ...நீ மனிதனே அல்ல.. மிருகம்..
அதிலும் ரத்த வெறி பிடித்த மிருகம்... ஆண்டவனின் கோபம் உன் மீது எப்படி இறங்கும் என்று நீ கூடிய சீக்கிரமே புறிந்துகொள்வாய்..அப்போது உனக்கு புத்தி சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள்....உன் வாழ்நாள் எண்ணப்படுகின்றது " என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். ஒரு ரோமைய சக்கரவர்த்திக்கு முன்னால் பேசவே பயப்படுவர் மக்கள்... ஆனால் இந்த பெண் அவன் முகத்தில் காறி உமிழ்ந்ததும் அல்லாமல் பேய் பிடித்தாற்போல் கடகடவென்று நகைத்தாள் என்றாள் அவளுக்கு எவ்வளவு நெஞ்சுறம் இருந்திருக்க வேண்டும்..
         அதற்கு அவளுக்கு கிடைத்தபரிசு அவளை தலைகீழாக ஒரு பாழும் கிணற்றில் தூக்கிப்போட்டார்கள்.. அவளுடைய எலும்புகள் எல்லாம் உடைந்து மூன்று நாள் கழித்து அந்த பாழும் கினற்றிலேயே மரித்தாள். சமாரியாவில் கிணற்றில் ஆரம்பித்த அவளது ஞான வாழ்க்கை ரோமில் பாழும் கிணற்றில் முடிந்தது.
         ஒரு பெண் நம்மைப்பார்த்து எச்சரிப்பதும் அல்லாமல் தன்னை காறி உமிழ்ந்ததை நீரோ மன்னன் எப்படி ஏற்றுக்கொள்வான். ? அவன் வக்கிர புத்தி வேகுவாக வேலை செய்தது.  இரு கிரிஸ்த்துவப்பெண்னுக்கு இவ்வளவு தைரியம் என்றால் இந்த கிரிஸ்த்துவ ஆண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்.... நம்முடைய ராஜ்ஜியத்தில் எத்தனைபேர் கிரிஸ்த்துவர்கள்..இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு நாள் நம்மை எதிர்த்தால் நம் கதி என்னவாகும்... ஆஹா....தவறு... தவறு... இவர்களை வளர விடக்கூடாது. இவர்கள் தலைதூக்கி  விட்டால் அப்புறம் இவர்களை கட்டுப்படுத்தமுடியாது... எனவே இதைத்தடுக்க ஒரே வழி.....இவர்கள் அனைவரையும் நம் நாட்டிலிருந்து அழிக்க வேண்டும்... எனவே கிரிஸ்த்துவர்கள் மீது தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும்...என்று உத்திரவிட்டான் மன்னான் நீரோ.
      இந்த நேரத்தில் தான் யேசுவின் தலைமை அப்போஸ்த்தலர் புனித பேதுரு எனப்படும் ராயப்பர் சிறைபிடிக்கப்படுவார் என்ற வதந்தி பரவியது. எனவே அவருடைய சிஸ்யர்கள்   ராயப்பரை சந்தித்து ரோமுக்கு வெளியே தப்பிச்செல்லும்படி மிகவும் கேட்டுக்கொண்டார்கள். ராயப்பரின் வழிகாட்டுதல் அவர்களுக்கு மிகவும் இன்றி அமையாததாக இருப்பதால் அவர்
உயிர் வாழ்வது அவசியம் எனவும் திருச்சபையின் தலைவருக்கு யாதொரு அபாயமும் நேரிடாதபடி காப்பது தங்களது கடமை என்பதாலும் அவர் உடனே ரோமை விட்டு  தப்பிச்செல்லும்படி மிகவும் கேட்டுக்கொள்ளப்பட்டார். எனவே ராயப்பரும் ரோமை விட்டு வெளியே செல்ல ஆயத்தமானார். இந்த வீயா அப்பீயா என்னும் சாலையில் அவர் வரும்போது யேசுநாதர் ஒரு சிலுவையோடு அவர் எதிரே வந்தார்.
" யேசுவின் பாதச்சுவடுகள்."
உடனே ராயப்பர் அவர் பாதம் பணிந்து " என் ஆண்டவரே, தேவரீரே ஸ்வாமி... தாங்கள் சிலுவையோடே எங்கே போகிறீர்கள் ?" என்றார்.
அப்போது யேசுநாதர், " என்ன செய்வது ராயப்பா...நீ இருந்து செய்ய வேண்டிய காரியத்தை நான் செய்ய வேண்டியதாக இருக்கின்றது. நீ பயந்தாங்கொள்ளியாக என் மக்களை விட்டுவிட்டு ஊரைவிட்டு ஓடுகின்றாய்...ஆனால் நான் அப்படி இருக்க முடியுமா..எனவேதான் நான் மறுபடியும் சிலுவையில் பாடுபட வத்திக்கான் செல்கிறேன்..நீ சென்று
பிழைத்துக்கொள்.. என்றார். ராயப்பருக்கு அப்படியே நெஞ்சில் முள் தைத்தது போல் ஆயிற்று. தன் பிழை உண்ர்ந்தார்..அப்போதுதான் அவர் கூறினார்..."ஆண்டவரே..நான் எப்படியாக  மரணிக்கவேண்டுமென்று தேவர்ீர் எனக்கு உண்ர்த்திவிட்டீர்.. உம் சித்தப்படியே எனக்கு ஆகட்டும் ஸ்வாமி...நான் கோழை அல்ல" என்றார். " இருப்பினும் ஆண்டவரே,...இதெல்லாம்
எதற்காக....ஏன் இவ்வளவு பாடுகள்..நாம் யாருக்கு என்ன கெடுதல் செய்தோம் " என்றார்.
அதற்கு யேசுநாதர், " ராயப்பா...உனக்கு இன்னுமா புறியவில்லை...சிலுவையில் நாம் எவ்வளவோ பாடுகளை பட்டோமே...நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம்.?.கோதுமை மணி மண்ணில் வீழ்ந்து மடிந்தாலோழிய அது ஒன்றுக்கு நூறாக...ஆயிரமாக பலன் தறாது என்பதை நீ அறியவில்லையா..? அப்படித்தான் இதுவும் " என்றார்.
     யேசுநாதர் ராயப்பரை சந்தித்த இடத்தில் இப்போதும் ஒரு ஆலயம் இருக்கின்றது. அது தான் கோ வாடிஸ் ஆலயம். அதாவது ஆண்டவரே எங்கே போகின்றீர். யேசுவின் பாதச்சுவடுகளை பளிங்குகல்லால் பிரதி எடுத்து வைத்து இருக்கின்றார்கள். இதன் மூலப்பிரதி இப்போதும் தூய செபஸ்த்தியார் ஆலயத்தில் இருக்கின்றது.
     ராயப்பர் தன் குடும்பத்தினரோடு கைது செய்யப்பட்டு மமர்தியன் சிறையில் அடைக்கப்பட்டார். பூமிக்கும் கீழே காற்றுகூட நுழையமுடியாதபடி கட்டப்பட்ட சிறைச்சாலை அது.  ஆனாலும் ராயப்பர் தன் கையால் தோண்டிய ஒரு நீறூற்றால் தினமும் அங்குள்ள கைதிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து பல சிறைக்கைதிகளை மனம்திருப்பினார். அந்த   சிறைச்சாலையே ஒரு தேவாலயமாக மாறிவிட்டது. இதனால் மேலும் கடுப்பானான் நீரோ மன்னன்.
அங்குள்ள எல்லாக்கைதிகளுமா கிரிஸ்த்துவர்கள் ஆகிவிட்டார்கள்.. என்ன அநீதி இது. இவ்வளவு கடுமையான தண்டனைகளைப்பார்த்தும் இந்த மக்களுக்கு பயம் வரவில்லையா...
அல்லது தண்டனை போதாதா... இவர்களை நான் சும்மா விடப்போவதில்லை.. முதலில் அந்த கடவுளின் மனிதர் எனப்படும் பேதுருவையும் அவன் குடும்பத்தாரையும் கொல்லுங்கள் ...
அதைப்பார்த்தாவது இந்த மக்களுக்கு புத்தி வரட்டும்.. தண்டனை மிகவும் கடுமையாக இருக்கட்டும் என்றான் மன்னன் நீரோ.
அதன்படி புனித பேதுருவின் மனைவி ஃபெப்ரோனியா பலிகொடுக்கப்பட அழைத்துவரப்பட்டார். பேதுருவின் கண்கள் நீரால் நனைந்தன.. " என் இனியவளே.. என்மனைவியே. ..நீ என்னைவிட்டு முன்னே போகின்றாய்...பயப்படாதே,,,என் தேவனும் என் எஜமானனுமான யேசுநாதர் எப்போதும் உன் முன்னே பிரசன்னமாக இருப்பார்.. இன்னும் கொஞ்ச நேரத்தில்   உன் ஆண்மாவை அவர் பெற்றுக்கொண்டு உன்னை நித்திய பேரின்பத்திற்கு கூட்டிச்செல்வார்.. நான் நாளைக்கு உன்னை பரலோகத்தில் சந்திப்பேன்" என்று விடைகொடுத்து   அனுப்பினார். பேதுருவின் மனைவி ஃபெப்ரோனியா சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்றும் தலை வெட்டி கொல்லப்பட்டார் என்றும் சில செய்திகள் சொல்லுகின்றன.
       ராயப்பரின் மகள் பெத்ரேசியாவுக்கு சம்பவித்தது. ராயப்பரின் மகள் பெத்ரேசியா திருமணமாகமலேயே இருந்தார்.. அவரது அழகுக்கு ஆசைப்பட்டான் ரோமை இளவரசன் ஒருவன்  ஆனால் அவனை திருமணம் செய்ய மறுத்து பட்டிணிப்போராட்டமே நடத்தினால் பெத்ரெசியா. இதற்காக ராயப்பர் அவளை உயர்ந்த ஒரு வீட்டில் யாரும் பார்க்கதபடி அவளை மறைத்து   வைத்தார். யேசுநாதரோடு தன் தகப்பனுக்கும் தன் குடும்பத்தில் அனைவருக்கும் இருந்த பரிச்சயமும் பாசமும் அவளுக்கு இந்த உலகத்தின்மீது நட்டம் இல்லாது போயிற்று. சமையலில்
கெட்டிக்காரியான இவள் செராபி எனப்படும் வெரோணிக்கம்மாளோடு சேர்ந்து சமைத்த யேசுவின் ராப்போஜனம் யேசுவால் மிகுந்த பாராட்டைப்பெற்றது. இந்த உலக வாழ்கையிலும்  திருமணத்திலும் பற்று இல்லாத அவள் நோன்பிருந்தே மரித்துப்போனாள் என்கிறது ஒரு சரித்திரம்.. இல்லை இல்லை... அவள் வேத சாட்சியாக மரித்தாள் என்கிறது ஒரு
சரிதை. அவளது கல்லரை வத்திகானில் இதே ராயப்பர் பேராலயத்தில் ஒரு பகுதியில் இருக்கின்றது. ஃப்ரான்ஸ் தேசத்தினரின் யாத்திரீகர்களுக்கான பாதுகாவளி என்னும் ஒரு பட்டம்  அவளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
       அடுத்த நாள் ராயப்பர் கொல்லப்பட சிறைக்கு வெளியே கூட்டிவரப்பட்டார். தன் மனைவி இறந்த இடத்திலேயே அவருக்கு சிலுவைச்சாவு தீர்மானிக்கப்பட்டது. அவரது விருப்பப்படியே  அவர் தலை கீழாக சிலுவையில் அடிக்கப்பட்டார். உன் வாழ்நாளின் கடசிக்காலத்தில் நீ உன் கைகளை விரித்துவைத்துக்கொள்வாய். உன் விருப்பத்திற்கு மாறாக உன்னைகட்டி
இழுத்துச்செல்வர் என்று அன்று யேசுவால் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறியது. அதனால் ஏற்பட்ட மரணம் மிகவும் கொடுமயானது. காலிலிருந்து இரத்தம் யாவும் தலைக்குவந்துவிடும். தலையிலுள்ள ஒவ்வொரு ரத்தக்குழாயும் அதிக ரத்தம் காரணமாகவும் அவை மீண்டும் மேலே கால்களுக்கு செல்லமுடியாததாலும் அதிக அழுத்தம் காரணமாக
கண்களிலிருந்து மூளைவரை உள்ள ரத்தக்குழாய்கள் வெடிக்கும். அப்போது ஏற்ப்படும் வலியும் வேதனையும் சொல்லமுடியாதவையாக இருக்கும். ரத்தம் அனைத்தும் நெஞ்சில்   தேங்குவதால் நுறை ஈரல் வீங்கி மூச்சு திணறல் ஏற்படும். மூளை கடைசி நிமிடம் வரை வேளை செய்வதால் உடலில் ஏற்பட்ட அனைத்து உபாதைகளையும் உணர்ந்து வேதனை   சொல்ல முடியாத அளவு இருக்கும்.. இத்தகைய அனைத்து வேதனையையும் அனுபவித்த அந்த எழுபது வயது முதியவறான புனித பேதுரு என்னும் ராயப்பர் சிலுவையில் மரித்தார்.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தது அந்த எகிப்த்திய தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட நெடும்கல். இந்த எகிப்த்திய நெடும் கல் பல வேத சாட்சிகளின் ரத்தம் கண்டது.
அதற்கு வாய் இருந்தால் அது அவர்களின் பாடுகளைப்பற்றி கதைகதையாக சொல்லும். இந்த கல்லுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.
" வத்திக்கானின் ஜெயஸ்தம்பம் "
இன்றைக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக திருக்குடும்பம் எகிப்த்து தேசம் சென்றார்கள் அல்லவா... அப்போது அவர்கள் ஹீலியோப்போலிஸ் என்னும் நகரில்
தங்கினார்கள். அந்த நகரம் அவர்கள் காலத்திலேயே நல்ல நிலையில் இருந்தது. அங்கு எகிப்திய பாரோ மன்னர்கள் தங்கள் வெற்றியின் நினைவாக சுமார் நூற்று ஐம்பது அடி உயரமும்
நூற்றுப்பத்து டன் எடையும் உள்ள ஒரு நெடும் கல்லை தங்கள் வெற்றியின் அடையாளமாக நிருத்தி இருந்தார்கள். அது யேசுநாதரின் காலத்திற்கு ஆயிரத்துஐனூறு ஆண்டுகளுக்கு முன்பே நிலை நிருத்தப்பட்டிருந்தது. எகிப்த்திய பேரரசு ரோமானியர்களால் அகஸ்ட்டஸ் சீசரால் அடிமைப்படுத்தப்பட்டபிறகு காமக்கிழத்தன் காலிகுலா காலத்தில் இந்த நெடும் கல் கப்பல்மூலம் ரோமுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நெடும்கல்லை இந்த ச்ர்கஸ் மக்ஸிமஸ் என்னும் இந்த நீள் வட்ட மரண விளையாட்டரங்கத்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள்.இந்த
விளையாட்டரங்கம் அந்தந்த காலங்களில் உள்ள பேரரசர்களின் நினைவாக அவர்கள் பெயராலேயே அழைக்கப்படும். மன்னன் நீரோவின் காலத்தில் நீரோ விளையாட்டரங்கம் [CIRCUS NERO] என்றழைக்கப்பட்டது.
தேர்ப்போட்டிகள் அனைத்தும் இந்த நெடுங்கல்லை சுற்றியே ஓடிவர வேண்டும். எகிப்த்தை வெற்றிகண்டதன் நினைவாக அங்கிருந்து கொண்டுவரப்பட்ட இந்த நெடுங்கல்லை ரோமர்களின் ஜெயஸ்த்தம்பம் என்று அழைத்தனர். ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட பிற்பாடு அவரின் சாம்பலை ஒரு உருண்டைவடிவிலான ஒரு பாத்திரத்தில் வைத்து அதை இந்த
ஜெயஸ்த்தம்பத்தின் மேலே பொருத்திவைத்தனர்.
      புனித பேதுரு எனப்படும் ராயப்பரின் மரணத்திற்குப்பின் அவரது சடலம் அவரது சீடர்களால் வத்திக்கான் மலைச்சரிவிலையே புதைக்கப்பட்டது. அந்த இடத்திலேயே   எழுந்ததுதான் இன்றைய வத்திக்கான் எனப்படும் ராயப்பரின் தலைமைப்பீடம். புனித ராயப்பரின் கல்லறைமீதே கட்டப்பட்டதுதான் ராயப்பர் பேராலயம்.புனித.பேதுருவின்   மரணத்திற்கும் ஆயிரக்கணக்கான கிரிஸ்த்துவர்களுக்கான கொடுமையான மரணத்திற்கும் சாட்ச்சியான அந்த நெடுங்கல் அப்படியே பெயர்த்து எடுத்துவரப்பட்டு இன்று புனித ராயப்பர்
தலைமைப்பீடத்தின் முன்பாக கம்பீரமாக நிற்கின்றது, அதன் ஒரு புறத்தில் இவ்வாறாக எழுதப்பட்டுள்ளது.
யேசுவே ஆண்டவர்... யேசுவே மெசியா...யேசுவே ரட்சகர்...யேசுவே கடவுள்.
யேசு காலங்களைப்பிறித்தவர்.... காலங்களைக்கடந்தவர்... இதை நினைவூட்டுவதுபோல இந்த வத்திக்கானின் ஜெய ஸ்தம்பம் காலம் காட்டும் கருவியாய் சூரிய கடிகாரமாய் இப்போதும்நிற்கிறது. அன்று ஜூலியஸ் சீசரின் அஸ்தி வைக்கப்பட்ட அந்த உருண்டைப்பாத்திரம் அகற்றப்பட்டு உலகத்துக்கே பேரரசராம் யேசுவின் சிலுவை அதற்குப்பதிலாய் இந்த
வத்திக்கானின் ஜெய ஸ்தம்பதின் மீது இப்போது பொருத்தப்பட்டுள்ளது. இந்த வத்திக்கான் ஜெயஸ்தம்பத்திற்க்கு வயது இப்போது சுமார் நான்காயிரம் ஆண்டுகள் என்றால் அது மிகையாகாது.
      " ராயப்பா... நீ ராயாக [ பாறையாக ] இருக்கின்றாய்..இந்த பாறையின் மேல் என் திருச்சபையைக்கட்டுவேன்..நரகத்தின் வாசல் அதை மேற்கொள்ளாது..." என்ற யேசுவின் வசனம் இங்கு பலிக்கின்றது. எனவே இந்த வத்திக்கானின் ஜெயஸ்த்தம்பத்தின் ஒரு புறத்தில் பேய் ஓட்டும் சடங்குகான ஒரு ஜெபமும் பொறித்துவைக்கப்பட்டுள்ளது.
" இதோ யூதாவின் ராஜ சிங்கம்...எதிரிகளே ஓடிப்போங்கள் " என்பதற்கொப்ப நான்கு சிங்கங்கள் இந்த ஜெயஸ்தம்பத்தின் மூலைகளில் அவற்றின் வால்கள் ஒன்றோடு ஒன்று   பின்னிக்கொண்டுள்ளபடி வடிவமைக்கப்பட்டுள்ளன.
இன்றைக்கும் நானூறுஆண்டுகளுக்கும் முன்பாக நிலை நிருத்தப்பட்ட இந்த வத்திக்கானின் ஜெயஸ்தம்பம் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். அது பல பேரரசுகளைப்பார்த்து விட்டது. ஆனால் அந்த பேரரசுகள் எல்லாம் இன்று பெயருக்கு மட்டுமே உள்ளன. ஆனால் ஆண்டவறாகிய யேசுவின் பேரரசுக்கு என்றும் அழிவில்லை. அது பேதுரு என்னும் பாறையின் மீது மிகவும் உறுதியாக ஆண்டவறாகிய யேசுவாலேயே கட்டப்பட்டுள்ளது. ஆண்டவறாகிய யேசுவின் ஆட்சிக்கு முடிவு ஏது.? அதற்கு முடிவு என்பதே இல்லை.
             கொடுங்கோலன் நீரோ ரோம் செனட் சபையால் கொலை மற்றும் கொள்ளை குற்றம் சாட்டப்பட்டான். இவன் மனித குலதிற்கே விரோதி என்றும் முத்திரை குத்தப்பட்டான். இதற்கு  பயந்த அவன் ஜுன் மாதம் ஒன்பதாம்தேதி கி.பி.68 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டான்.
        அவன் காலத்தில் கிரிஸ்த்தவர்கள் பட்ட வேதனை வார்த்ததைகளில் சொல்ல முடியாது. அவர்கள் மிருகங்களுக்கு இறையாக போடப்பட்டனர்
உயிரோடு கொளுத்தபொப்பட்டனர்.. இரவு நேரங்களிலில் நீரோவின் அரண்மணைக்கு வெளியே வெளிச்சம் வர கிரிஸ்த்துவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். கோதுமை மணி
மண்ணில் மடிந்தால் ஒழிய அது ஒன்றுக்கு பத்தாக நூறாக பலன் தறாது என்பது யேசுவின் வாக்கு. வேத சாட்சிகளின் ரத்தம் கிரிஸ்த்துவத்தின் வித்து. அன்று அவர்கள் சிந்திய ரத்தம் இன்றும் நாளையும் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக பலன் தரும். நீரோ மன்னனுடன் அவனுடைய ஜுலியோ க்லாடியன் வம்சமும் முடிவுக்கு வந்தது.
கிரிஸ்த்துவர்களின் நிலங்களைப்பிடுங்கி நீரோ மன்னன் கட்டிய தங்க மாளிகையும் உயர்ந்த வளாகங்களும் வெகு விரைவிலேயே தகர்ந்து விழுந்தன. கொடுங்கோலன் நீரோவின் கல்லறையும் பழுதுபட்டு கேட்ப்பாரும் இல்லாமல் பராமரிப்பாளரும் இல்லாமல் சிதிலமாகிப்போய்விட்டது. ஆனால் அவனால் அழித்துவிடவேண்டும் என்று கொல்லப்பட்ட
கிரிஸ்த்துவர்களின் கல்லறைகள் பல கொண்ட வத்திக்கான் இன்று உலகப்புகழ் பெற்றுவிட்டது. காரணம் அதில் வாசம் செய்பவர் யேசுவே. யேசுவுகாக இறந்தோர் கல்லறைகள் மீது கட்டப்பட்ட உயிருள்ள நகரம் இது.

Saturday, June 15, 2013

"வினை விதைத்தவனும் திணை விதைத்தவனும்"



"வினை விதைத்தவனும் திணை விதைத்தவனும்"

       சுவாமி ஏசு ராஜாவின் வாழ்க்கையில் பல அதிசய நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தாலும் அவை எல்லாமே விவிலியத்தில் சொல்லப்படவில்லை. எனக்குத்தெரிந்த சில ஸ்வாரஸ்யமான
நிகழ்வுகளை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஸ்வாமிக்கு அப்பொது வயது 33.அவரது வேத போதக அலுவலில் அவர் மிகத்தீவிரமாக ஈடுபட்டுகொண்டிருந்த நேரம் அது. அவர் தன்னுடைய அப்போஸ்தலர்களை அழைத்துக்கொண்டு தான் பிறந்த மண்ணைப் பார்க்க ஆவல் கொண்டு பெத்லஹேமுக்கு வந்தார்.அவரது காலத்தில் அவரது நாட்டில் அவரது காலடித்தடம் படாத இடமே இல்லை.அவர் வாழ்ந்த பல இடங்களுக்கும் அவர் பலமுறை சென்றிருந்தாலும் இந்த முறையே பெத்லஹேமுக்கு வருவது தன் வாழ்நாளில் கடைசி முறையாக இருக்குமென்று அவரது உள்மனதில் அவர் நன்றாகவே அறிந்திருந்தார். எனவே இந்த முறையில் பெத்லஹேமுக்கு வந்தபோது அவருக்கும் பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன.எல்லாம் அவன் செயல். பெத்லஹேமுக்கு நுழைகையில் வாழ்ந்துநொடித்த ஒருபெரியவரை பார்த்தார் யேசுநாதர். அவரும்யேசுநாதர் யார் என்று அறிந்துகொண்டவராய் தன்னால் இயன்றமட்டும் ஓடிச்சென்று அவரை எதிர்கொண்டு வரவேற்று அவர் காலில் விழுந்து " யேசுபெருமானே நீவீர் வாழ்க" என்று முகமன் கூறி வரவேற்றார். யேசுநாதரும் அவரை அள்ளி எடுத்து அணைத்து " ஐயா பெரியவரே, நீர் வாழ்க.இந்த தள்ளாத வயதிலும் உம் அன்பு எம்மை புல்லரியவைக்கின்றது. உம் அன்புக்கு நன்றி. பெத்லஹெய்மின் நுழைவாயிலில் உம் வீடு இருப்பதால் உம் வீட்டைத்தாண்டித்தானே யாவரும் ஊருக்குள் செல்லவேண்டும்.இந்த வரவேற்பு எல்லோருக்கும் கிடைத்தால் பயணிகள் யாவரும் உம்மை வாழ்த்துவார்களே என்றார்.அதற்கு அவர் " யேசுவே நான் என் நினைவு தெரிந்து என் குடும்ப வம்சாவழிகள் யாவரும் இபடியாகத்தான் செய்கிறொம். எங்கள் வீட்டைத்தாண்டித்தான் இந்த ஊருக்குள் யாவரும் செல்ல வேண்டியிருப்பதால் வெகு தொலைவிலிருந்துவரும் பயணிகள் யாவருமே என் வீட்டில்தான் தாகம் தணித்துச்செல்வர். இதை நாங்கள் பெரும் பேறாகக்கருதி என் காலம்வரை செய்துகொண்டுதான் இருக்கிறேன்.என் பிள்ளைகளும் இவ்வாறே செய்யவேண்டும் எனபழக்கப்படுத்தியிருக்கிறேன். தேவரீர் பெரியமனதுவைத்து என் வீட்டிற்குவந்து தாகம் தணித்துச்செல்ல மிகவும் வேண்டுகிறேன்". என்றார். ஆண்டவரும் மனம் உவந்து தன் சீடர்களுடன்.அவ்வீட்டிற்குள் வந்தார். அந்த வீடு பெரும் பேறு பெற்றது. அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் ஆண்டவர் யேசு ஏதோ தன்வீட்டிலிருப்பதைப்போன்று உணர்ந்தார். ஆண்டவர் யேசு பெரியவரை நோக்கி, ஐயா, தங்கள் மனைவி எங்கே? உங்கள் பிள்ளைகள் எங்கே?என்றார்.       அதற்குப்பெரியவர் நீண்ட பெருமூச்செறிந்து " யேசு பெருமானே என் பிள்ளைகள் வேலை விஷயமாக ஊருக்குள் போயிருக்கிறார்கள். என் மனைவியாதியின்நிமித்தம் வீட்டில் தனி அறையிலேயே இருக்கிறாள். விசேஷமாக அவள் ஆண்களைப்பார்க்க விரும்புவதில்லை. எல்லாம் அவள் திமிரால் வந்த வினை" என்றார்.யேசுநாதர் ஆச்சர்யமாக " என்ன வியாதி அவர்களுக்கு?" என்றார். பெரியவர் கூறினார் "பெரும்பாடு ஐயா பெரும்பாடு" என்றார். 32 வருடங்களாக அவளுக்கு இந்த உதிரப்போக்கு இருக்கிறது, பார்க்காத வைத்தியம் இல்லை. அவளுக்கு வைத்தியம்.பார்த்தே நாங்கள் வறியநிலைக்கு ஆளானோம்" என்றார்.
யேசுநாதர் மிகவும் வருத்தமுற்றவராய், "ஐயா, அவர்களைக்கூப்பிடுங்கள்" என்றார்.பெரியவர் உள்ளறைக்குச்சென்று தன் மனைவியை கைத்தாங்கலாக அழைத்துவந்தார்.
       அளவுக்குஅதிகமான இரத்தப்போக்கினால் அவள் மிகவும் மெலிந்து நடக்கவும் சக்தியற்றவளாய் கணவனின் துணையுடன் யேசுவின் பாதம்பணிந்தாள். சுவாமி அவள்மீது மிகவும் பரிவுகொண்டு "அம்மணி நீங்கள் குணம் பெறுவீர்களாக" என்றார். உடனே அவளுக்கு உதிரப்போக்கு குணமாகியது. அவள் அதிசயித்தாள். ஆனந்தக்கூத்தாடினாள். சுவாமியின் முகத்தை ஏறெடுத்து நோக்கினாள். அவள் கண்கள் ஆச்சர்யத்தினால் விரிந்தன." ஆம். ஆம். இதே கண்கள்தான். இதே முகம் தான்". என்றாள் மிக்க மகிழ்சியுடனே. அவள் கணவனுக்கு ஒன்றுமே புரியவில்லை."நீ இப்பொதுதானே யேசுவைப்பார்கிறாய். இதற்கு முன் யேசுவை நீ பார்த்தேயில்லையே" என்றார்..அதற்கு அவள் "ஆம். நான் இதற்குமுன் இவரைப்பார்த்தே  இல்லைதான். ஆனால் இவரது தாயாரைப்பார்திருக்கிறேன். அந்த மாதரசிக்குறிய அதே முகமும் அதே கண்களும் அதே தலைமுடியும்கூட இவருக்கும் இருக்கின்றன" என்றாள்.  " சுவாமி உங்களுக்கு நினைவில்லையா? இன்றைக்கு சுமார் 32 வருடங்களாக இருந்துவந்த இந்த பெரும்பாடு எனக்கு ஏன் ஏற்பட்டது தெரியுமா? எல்லாம் என் அகம்பாவதால் வந்த வினை என் திமிரால் வந்த வினை நீங்கள் மறந்திருக்கலாம்.ஆனால் நான் மறக்கவில்லை. அப்பா மகனே யேசுராஜா.நானும் உன் தாயாரும் ஒரே வயதுடையவர்கள்தான். இன்றைக்கு 32 வருடங்களுக்கு முன்பாக அன்று இதோ இருக்கிறாரே என் கணவர், அவரது வயதையொத்த அவரது பால்யசினேகிதர் யோசேப்பு என்ற பெரியவர் தன் இளவயது மனைவியை
என் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். அப்போது அந்த மாதரசி நிறைமாத கர்பிணியாக இருந்தார். அப்போது என் வீட்டில் ஏதோ விஷேஷம். அதிகமான கூட்டம் இருந்தது. மேலும் மக்கட்தொகை கணக்கெடுப்பிற்காக அதிதிகளாக வந்திருந்தவர்களும் அதிகம்பேர் இருந்தனர். அனைவரையும் நான் நன்றாகவே கவனித்தேன். இருப்பினும் எனது கணவரின் பால்ய
சினேகிதர் வந்திருக்கிறார் என்றதும் அவருக்கும் தனி அறை ஏற்பாடுசெய்துகொடுத்து அவர்களை கவனிக்க ஆட்களையும் ஏற்பாடு செய்துகொடுதேன். விருந்து முடிந்ததும் விருந்தினர் அனைவரும் சென்றபின் என் கணவருடன் அவரது நண்பரையும் அவரது மனைவியையும் மரியாதையின் நிமித்தம் சந்திக்கசென்றேன். அப்பப்பா.... அந்த மாதரசியின் முகசௌந்தர்யம் என்னை தடுமாற வைத்தது.
அவரது முகம் தெய்வீகமானது.அற்புதமான பேரழகானது. அவரைக்கண்டமாத்திரத்தில் அவரது காலடியில் வீழ்ந்தேன். அவரும் என்னை வாழ்த்தினார்.ஆசீர்வதித்தார். ஆனால் எனக்குள்  இருந்த தீய ஆவி எனக்குள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. என் கர்வமும் திமிரும் என் கண்முன்னே எழுந்தன. பெண்ணுக்குப்பெண்ணே அசரவைக்கும் பேரழகியான அந்த
மாதரசியை என் மனம் வெறுத்தது. எங்கே என் கணவர் என்னைவிட்டுவிட்டு அவர்பின்னே போய்விடுவாரோ என்று பயந்தேன். ஆகவே விடிந்ததும் அவர்களை வெளியேற்றுவதிலேயே  குறியாக இருந்தேன். மறுநாள் அவர்களை வெளியேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்த்தேன். அடுத்த நாள் அந்த மாதரசிக்கு பெத்லஹேமில் ஒரு குகையில் மாட்டுத்தொழுவத்தில்
ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக என் கணவர் கூாறினார்.   ஆனால் அந்தபெண்மணிமீது எனக்கிருந்த வர்மத்தினால் அவரையோ அவரது குழந்தையையோ அவரது   நண்பரையோ நான் பார்க்க விரும்பவில்லை. ஆனால் என் கணவர் அவர்களைப்பார்த்துவந்தார். நடந்துமுடிந்த என் செயல்களாள் என் கணவர் அடைந்த வருத்தம் வார்த்தையில் சொல்லி மாளாது" என்றார்.
     அடுத்து அவள் கணவர் பேசினார்." என் நண்பன் யோசேப்பு தன் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்வித்து பெயர் சூட்ட எனக்கு சொல்லியனுப்பினார். எனக்கு என் மனைவியுடன் சென்று பார்த்துவர ஆசைதான். ஆனால் அவள் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். நான் என் நிலையை யோசேப்பிடம் சொல்லி என்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
அவர் என்னை ஆதரவாக அணைத்துக்கொண்டு மீண்டும் என்னை தன் நண்பணாக ஏற்றுக்கொண்டார். யேசுபெருமானே சற்றுமுன்பு தாங்கள் என்னை அணைத்தபோது ஏற்பட்ட பரவசம் என் நண்பண் யோசேப்பு என்னை அணைப்பது போலவே ஏற்பட்டது.  பரிசுகள் கொடுத்து நண்பா யோசேப்பு உன் மகனை என்னிடம் சற்றுநேரம் கொடு என்றேன். அவரும்
மகிழ்வுடன் தன் மனைவியிடமிருந்து தன் குழந்தையை வாங்கி என்னிடம் கொடுதார். அப்பொது அந்த குழந்தை ஆடையின்றியிருந்தது.  என் கையிலேயே சிறுநீர் கழித்தது. நான் மிகுந்த பரவசமானேன்.அப்பொது நான் புதிதாய் வைத்திருந்த லினென் துணியினால் ஆன சிறிய துண்டினால் அந்த குழந்தையை சுற்றினேன்" என்றார். மீண்டும் அவர் மனைவி பேசினாள்." பிறகு என் வாழ்வில் விதி விளையாடியது. அந்த நாட்களில் நான் மிகுந்த அழகியாய் இருந்ததால் மிகுந்த கர்வமுள்ளவளாக மாறினேன். மிகுந்த திமிர் பிடித்தவளாக ஆனேன். யாரையும் மதிப்பதில்லை. எவரையும் எடுத்தெரிந்து பேசினேன். விளைவு?. என் செல்வம்.. என் சுற்றம்.. எல்லாம் என்னை விட்டுப்பிரிந்தது. யேசுவின் தாயாகிய மரியாளைப்பற்றி  உயர்வாக நினையாமல் எங்கே என் கணவர் என்னைவிட்டுவிட்டு அவர்பின்னே போய்விடுவாறோ என்று நினைத்த பாவத்திற்காக நீதியுள்ள ஆண்டவர் என்னை சபித்தார். பெரும்பாடு  என்னைப்பற்றிக்கொண்டது. என் வாழ்க்கையே சோகமாயிட்று. எனக்கு உலகமே வெறுத்துப்போயிற்று. ஐயா யேசு ராஜா தாங்கள் தங்கள் தாயார் முகம் பார்த்தும் தந்தையார் முகம் பார்த்தும்  என்னை தயவுசெய்து மன்னியுங்கள். இதோ நீங்களிப்பொது இருக்கும் இந்த அறையிலேயே உங்கள் தாயாரும் தந்தையாரும் தங்கியிருந்த்தார்கள்" என்றாள். ஸ்வாமி சற்றுநேரம்  மௌனமாயிருந்து அம்மணி, தாங்களும் தங்கள் கணவரும் என் தகப்பனாருக்கு பால்யசினேகிதர்கள் என்றுஅறியும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. என் தாயரையும் தந்தையாரையும் உங்கள் விருந்தினராக வைத்து கவனித்ததற்கு மிக்க நன்றி. ஐயா பெரியவரே, தாங்கள் என்னை குழந்தையாய் இருக்கையில் தூக்கிவைத்து கொஞ்சியதற்கும் நன்றி. இதற்கு நானும் உங்களுக்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டுமென்று கூறி தன் அங்கியில் கைவிட்டு ஒரு சிறிய துண்டை அவரிடம் கொடுத்தார். அது அந்த பெரியவர் அவருக்கு அவர் குழந்தையாய் இருக்கையில் கொடுத்த துண்டாகும். பெரியவர் அதிசயித்து ஸ்வாமி, தாங்கள் அதை உபயோகப்படுத்தவே இல்லையா? என்று கேட்டார்.    யேசுவும் அதற்க்கு மறுமொழியாக பெரியவரே இது அன்றிலிருந்து அப்படியே என்னிடமே இருக்கிறது என்றார். பெரியவர் அந்த துண்டை வாங்கி அப்படியே தன் கண்களிள் ஒற்றிக்கொண்டார்.
     யேசுநாதர் தன் நிர்வானத்தை மூட தான் குழந்தையாய் இருக்கையில் அந்த பெரியவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததுபோல அவருடைய மகனுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்.  அதாவது யேசுநாதர் சிலுவையில் நிர்வாணமாக அறையப்பட்டு உயிர்போகும் நிலையில் இருந்தார். தன் பரிசுத்த தாயார் முன்பாகவும் பரிசுத்த பெண்கள் பலர் முன்பாகவும் உலகத்தின்
முன்பாகவும் முழுநிர்வாணமாக வானுக்கும் பூமிக்கும் நடுவாக சிலுவையில் நின்றுகொண்டிருந்தார். அவரது பிறப்பு உறுப்பிலிருந்தும் புட்டங்களிலிிருந்தும் ஏற்கனவே பட்ட கசை  அடிகளாள் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. வலி ஒரு பக்கம் என்றால் அவமானம் ஒரு பக்கம். உயிர் போகும் வலியைவிட மானம் போகும் வலி ஒரு பக்கம். இதனால் அவரது  மனவலி மிகவும் அதிகமாயிற்று. அப்பொது அந்தப்பெரியவரின் ஒரு மகன் தான் புதிதாய் வாங்கி வந்திருந்த ஒரு பெரிய லினெந் துண்டை எடுதுக்கொண்டு கல்வாரிமலைமீது வேகமாய் ஏறிவந்துகொண்டிருந்தார். சுவாமி உயிர்போகும் நிலையில் கடைசியாய்ப்பார்த்தது தன் தாயாரைத்தான். .அதற்குமுன்பாக அந்த பெரியவரின் மகனைத்தான். பிறகு சுவாமி சிலுவையில் மரித்தார். அவர் மரித்தவுடனே இவர் யேசுவின் நிர்வாணத்தை அந்த சிலுவை மரத்தோடு சுற்றி மூடினார். அந்த பாக்கியம் அவருக்கு கிடைத்தது. பல வருடங்களுக்குப்பிறகு அவர் கிரிஸ்துவராக மாறி புனிதர் ஆனார்.
      பிறகு யேசுநாதர் தன் சீடர்களுடன் பெத்சூர் என்ற இடதிற்கு வந்தார். இந்த இடத்தில்தான் மூன்று ராஜாக்கள் சுவாமியைப்பார்க்க கடைசியாய் தங்கிய இடம்.இந்த  இடத்தில்தான் ஸ்வாமி குழந்தையாய் பிறந்தபோது ஆடு மேய்க்கும் இடையர்களும் வாழ்ந்தனர். அவர்களின் தலைவன் ,உப தலைவன் மற்றும் அவரவர் குடும்பங்களும் வாழ்ந்தன.
        சுவாமி கடைசிமுறையாய் இந்த ஊருக்கு வரும்போது அப்போதைய இடையர் கூட்டத்தலைவன் மற்றும் அவனது உறவினர்கள் பலரும் யேசுவைக்கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.  சுவாமி தன்னை குழந்தையாய் இருக்கும்போது வந்து சந்தித்த இடையர் தலைவன் சமாதிக்குச்சென்று அஞ்சலி செய்தார். அப்போது அங்கு ஒர் அதிசயம் நடந்து இருந்தது. கல்லரையை திறந்தபோது மூன்று வருடங்களுக்கு முன் இறந்து போயிருந்த அந்த இடையர் தலைவனின் சடலம் அழியாமலிருக்கக்கண்டனர். அப்போது சுமார் 45 வயது மதிக்கதக்க ஒருவன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தான். அவன் தன் வேலையை அப்படியே போட்டுவிட்டு யேசுவின் காலடியில் விழுந்து நமஸ்கரித்தான். யேசுவும் அவனை பரிவோடு எழுப்பி நலம் விசாரித்தார். அப்போது அவன் கூறினான். "யேசுவே தேவரீர் குழந்தையாய் அந்த பெத்லஹெய்ம் குகையில் தீனித்தொட்டியில் படுதிருந்தபோது தானும்10 வயது சிறுவனாக அவரை தன் தகப்பனாருடன் வந்து சந்தித்ததாக" நினைவுகூர்ந்தான். சுவாமி மிகவும் மகிழ்சியடைந்தார். யேசுவே தங்களுக்கு விருத்தசேதனம் செய்விக்கப்பட்டபோது தானும் அவ்விழாவில் கலந்துகொண்டதாகவும் அவரது தகப்பனார் யேசேப்பு தனக்கு ரொட்டிகளும் பழங்களும் உலர் பேரீட்சை பழங்களும் தேனும் இன்னும் பலவும் கொடுத்ததாகவும், மீண்டும் 3 ராஜக்கள் வந்து சென்றபோது தானும் அவன் தகப்பனாரும் அவர்களுக்கு சுமைதூக்கிகளாக உதவி செய்ததாகவும் அதனால் சந்தோஷமான அந்த 3 ராஜாக்களும் தனக்கும் தன் தகப்பனாருக்கும் சில தங்க க்காசுகளை கொடுத்ததாகவும் அவற்றை இன்றளவும் பத்திரப்ப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறி அந்த முக்கோணவடிவிலான தங்க காசுகளை அவரிடம் காண்பித்தான். யேசுநாதரும் மிகவும் ஸ்வாரஸ்யமாக இந்த கதையை கேட்கத்தொடங்கினார். மீண்டும் யேசுநாதரின் தாயாரும் தகப்பனாரும் இந்த விளைச்சள் நிலம் வழியே எகிப்த்துக்கு தப்பிச் செல்லும்போது ஏரோதின் ஆட்க்கள் அவர்களைப்பற்றி தன் தகப்பனாரிடம் விசாரித்ததாகவும் அதற்கு அவனது தகப்பனார் " நாங்கள் சோளம் விளைவிக்கும்போது ஒரு யூத வயோதிக தம்பதியரும் ஒரு கைக்குழந்தையும் இவ்வழியே வந்தார்கள். ஆனால் நீங்கள் இப்போது சோளம் அறுவடை நேரத்தில் வந்து விசாரிக்கிரீர்களே "என்று சொன்னபோது அந்தப்புதுமை நடந்தது. அன்று விதைக்கப்பட்ட அந்த சோளப்பயிர்கள் பார்க்கும்போதே தடதடவென்று வளர்ந்து அறுவடைக்கு தயாராய் நின்றது.  நாங்கள் அனைவரும் அதிசயித்துப் போனோம்." என்றான். யேசுநதரும் ஆர்வத்துடன் " பிறகு என்ன நடந்தது"? என்று ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார். அவன் கூறினான்  "யேசுவே,அன்றைய சேவகர்கள் "விதைப்பிற்கும் அறுவடைக்கும் ஆறு மாதம் இடைவெளி
நாம் தவறான ஆட்க்களை தேடுகிறோம் " யென்று பின்சென்றுவிட்டார்கள் என்று கூறினான்.யேசுநாதர் மகிழ்ந்து," நண்பா, உனக்கு என்ன வேண்டும்" என்றார். அவனும்" நண்பா யேசுவே எனக்கு உன் அன்பு எப்பொதும் வேண்டும், என் நிலம் நன்றாகத்தான் விளைகிறது.சோளம் தவிர வேறு எதுவும் விளைவதில்லை. நிலம் நிறைய கற்களாகவேஇருக்கிறது.எவ்வளவுமுயன்றும் வேலை.மாள முடியிவில்லை. இதுதான் கவலையாக இருக்கிறது" என்றான். யேசுவும் அந்த நிலத்தை ஆசீர்வதிக்கவே அந்த நிலத்திலிருந்த கற்கள் அனைத்தும்
பொடிப்பொடியாகி நல்ல மண்ணாக மாறியது. யேசுநாதர் ஆசீர்வாதம் பட்டாலே போதும். எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சமும் நல் நெஞ்சாக மாறிவிடும். இவனே தினை விதைத்தவன்.

       யேசுநாதர் தன் சீடர்களுடன் நல்ல வயலாக இருந்த ஒர் இடத்தில் பிரவேசித்தார். அந்த இடத்தின் சொந்தக்காரன் ஒரு கல் நெஞ்சன். அவனுக்கு யேசுநாதரைக் காண ஏனோ  பிடிக்கவில்லை.பிறவியிலேயே அவன் ஒரு தற்குறி. " நம் முன்னோர்கள் சொல்லாத எந்தக்கருத்தை யேசுநாதர் சொல்லிவிடப்போகிறார். அவர் தன்னை மெசியா என்றல்லவா சொல்லிக்
கொள்கிறார். இது தேவ தூஷணம் அல்லவா. இது தானே நமக்கு ஆகாத விஷயம். அவர் மட்டும் இந்தப்பக்கம் வரட்டும்.நன்றாக நான்கு கேள்விகள் கேட்காமல் அவரை விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்.அவனுக்கும் சுமார் 45 வயது இருக்கும்.அப்போது பார்துதான் யேசுநாதரும் அவன் வேலை செய்துகொண்டிருந்த நிலம் வந்து
கொண்டிருந்தார். அவனுக்கு கோபம் தலைக்குமேல் வந்துவிட்டது. தேவ தூஷணங்களைக்கக்கிக்கொண்டே யேசுவின் முன் வந்தான். "வாய்யா யேசு நாதா, நீ என்ன பெரிய மெசியா  என்ற நினைப்பா?" என்று ஏக வசனத்தில் அவரைத் திட்ட ஆரம்பித்துவிட்டான். யேசுநாதர் அவன் அறியமையை பெரிது படுத்தாமல் " நண்பா, உனக்கு என்ன வேண்டும்" என்றார்.
   அதற்கு அவன் " போய்யா உன் வேலையைப்பார்துக்கொண்டு போ. என்னை என்ன சபிக்கவா வந்தீர். உன் சாபம் எல்லாம் என்னிடம் ஒன்றும் பலிக்காது" என்று தூஷணம் கக்கினான்.
யேசுநாதரும் அமைதியாக" நண்பா,நீ என்ன செய்துகொண்டிருக்கிராய்?"என்றார். அவன் மிகுந்த கோபப்பட்டு "என்ன. பார்த்தால் தெரியவில்லையா?, விதைக்கறேன். ஐய்யா
விதைக்கிறேன். கற்களை விதைக்கிறேன்" என்று மிகவும் திமிறாகப்பேசினான். யேசுநாதரும் அமைதியாகச்சொன்னார். "உன் விருப்பப்படியே உனக்கு ஆகட்டும். விதை ஒன்று போட சுறை ஒன்று முளைக்காது. நீ கற்களைத்தானே விதைக்கிறாய். நீ கற்களையே அறுவடை செய்வாய்." என்று கூறி வருத்தத்துடன் சென்று விட்டார். அவ்வளவு தான். அவர் பார்வையிலிருந்து மறைந்த உடனே அவர் சொற்படியே ஆயிற்று. அவன் விதைத்த விதைகள் யாவும் கற்களாய் விளைந்தன. ஒன்றுக்கு நூறாய், ஆயிரமாய்,விளைந்தன. அவன் எதை விளைவித்தாலும் அவை அதே அளவுள்ள கற்களாகவே விளைந்ததால் அவன் நிலம் முழுக்க ஆழமாய் விளைந்து கொண்டே இருந்தது. அவன் விளை நிலம் முழுக்க கற்களாய் விளைந்ததால் விரைவிலேயேஅந்த நல்ல நிலம் யேசுவின் சாபத்தால் பாழ்பட்டுப்போய்விட்டது. எவ்வளவு பயங்கரம். அவன் நாடோடியாய் மாறினான். கடைசிவரை அவன் திருந்தவே இல்லை.
      யேசுநாதர் மேல் அவன் கொண்ட வர்மம் இன்னும் அதிகமாக ஆனது. யேசுநாதரை. எப்படியாவது பழி வாங்கிவிட வழி தேடினான். அவனுக்கும் ரோமானியர்களுக்கும் எப்படியோ பழக்கமாகி ஒரு சிப்பாயாக மாறினான். நாட்கள் பல சென்றன. அவனுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைதது. யேசுவை கசையால் அடிக்கும் ஆட்க்களிள் இவனும் ஒருவன் ஆனான். இப்போது அந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாய் பயன்படுதிக்கொண்டு தன் வர்மம் அனைதும் ஒன்றுகூட்டி அவரை அடிமேல் அடி அடித்தான். பிறகு முட்களாள் ஆன ஒரு முடியைப்பின்னி அவர் தலையில் சூடி யூதர்களின் ராஜாவே வாழ்க என்று ஒரு பிரம்பால் ஓங்கி அடித்தான். அவர் தலைமீது பட்ட. அந்த அடியில் ஒரு நீண்ட முள் யேசுவின் நெற்றியைக்கிழித்துக்கொண்டு அவரது கண்ணுக்கும் நாசிக்கும் இடையே "நச்" என்று இறங்கியது. கொடுமையான அடி அது. இந்த அடியால் பூலோகமே குலுங்கியது. பரலோகமும் கிடுகிடுத்தது,மோட்ச்ச வாசிகள் அனைகவும் ஸ்வாமிக்கு ஏற்பட்ட இந்த துன்பத்தைக்கண்டு கண்ணீர் சிந்தினர். இந்த அடியால் யேசுநாதர் பட்ட துண்பம் எப்பேற்பட்டது என்பதை வார்த்தையில் சொல்லி மாளாது.
       இந்த அடியினால் ஏற்பட்ட இரத்தப்பெருக்கு அவர் கண்களிள் இறங்கி அவரது வலது கண் ஒரு கோழி முட்டைஅளவு வீங்கிப்போய்விட்டது. கண் திறக்க முடியாத அளவு மூடிக்கொண்டது. தன் அடி அவர் சிரசில் சரியாகப்பட்டுவிட்டதா என்று சரிபார்க்க அவரது திரு முகத்தை தன் கைகளாள் திருப்பிப்பார்துக்கொண்டான். அவரது நெற்றியிலும்
கண்களிளும் குபு குபு என்று வழிந்த இரத்தசகதியைப்பார்தும் திருப்தியில்லாதவனாய் மீண்டும் வர்மம் அதிகமாகி அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். தன் பழி வாங்குதலை வெற்றிகரமாய் நிறைவேற்றிய திருப்தியில் தன் வீட்டிற்குச்சென்றான். எல்லாம் கொஞ்சம் கால அவகாசத்தில் முடிந்துவிட்டது. யேசுநாதர் இறந்தபின் இவன் நிலைமையும் மாறிவிட்டது.
      இவன் நிலை மட்டும் அல்ல அந்த நாட்டில் வாழ்ந்த பலரது நிலைமையும் மாறிவிட்டது. ஜெத்சமனி தோட்டத்திலிருந்து கல்வாரி மலையில் யேசு மரிக்கும்வரை யார் யார் யேசுநாதரை



தொட்டார்களோ அல்லது அடித்தார்களோ அவர்கள் அனைவரும் பிறகு யேசுவின் சாட்சிகளாய் மாறினர். அனைவரையும் யேசுநாதர் தடுத்தாட்க்கொண்டார். ஆனால் அவன் நிலம் மட்டும் மாறவே இல்லை. அது இன்றளவும் கல் விளைந்த பூமியாகவே, வினை விதைத்த பூமியாகவே நமக்கு சாட்சியமாக இன்றளவும் உள்ளது.

Thursday, June 13, 2013

" தூய பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா "










" தூய பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா "

     இவர்களை கார்த்தேஜ் நாட்டின் கிரிஸ்த்துவ வீராங்கணைகள் என்று சொல்லலாம்... அன்றைய கார்த்தேஜ் இன்றைய துனிஷியா என்றழைக்கப்படுகின்றது. இந்த துனிஷியா நாடு   ஆப்ரிக்கா கண்டத்தின் வட மத்திய பகுதியில் மத்திய தரைகடலின் ஒரத்தில் அமைந்துள்ள நாடுகளிள் ஒன்றாகும். மத்திய தரைகடலில் அமைந்துள்ள இத்தாலியைச்சேர்ந்த சிசிலி தீவை  நோக்கி தன் மூக்கை நீட்டினார்ப்போல் வடஆப்ரிக்க கண்டத்தில் மத்தியில் அமைந்துள்ள நாடு தான் இன்றைய துனிஷியா. எனவே மத்தியதரைகடலில் உள்ள சிசிலிக்கும் அன்றைய  கார்த்தேஜ் நாட்டிற்க்கும் கடல்வழித்தொடர்பு மிகவும் நெருக்கமாகவும் இருந்ததால் கடல்வழியே வியாபாரம் போக்குவரத்துகள் அதிகமாயின.
        பொனீஷியர்கள்...உண்மையில் பொனீஷியா என்று ஒரு நாடு கிடையாது.. வேத காலத்தில் மெசப்படோமியாவில் சுமேரியர்கள் இருந்தார்கள். பாபேல் கோபுரம் வீழ்ந்த பிற்பாடு அவர்கள்   பல திசைகளில் பல நாடுகளுக்குச்சென்று குடியேறினார்கள். இப்படி பல இனமாக மக்கள் பிறிந்தனர். அப்படிப்பிறிந்தவர்களில் ஒருவர் ஹேபர். இவர் பாலஸ்தீனம் எனப்படும் நாட்டிற்கு  குடியேறினர். அவர்மூலம் பரவிய பாஷை தான் ஹீப்ரூ.. அவர் மூலம் பரவிய இனம்தான் ஹீப்ரூக்கள்..இந்த ஹீப்ரூக்கள் பேசிய பாஷைதான் ஆதியிலே இருந்து பழக்கத்தில் இருந்து  வருகிறது. இந்த பாஷையில் தான் கடவுள் தன் மக்களுடன் பேசினார்..அதனால் இந்த பாஷை தேவனாகரி எனப்படுகின்றது.[ இந்தியாவிலும் இந்த பாஷை பல பகுதிகளில் பேசப்பட்டு  வந்தது.]. சுமேரியாவிலிருந்து கிளம்பியவர்களில் சிலர் செமிட்டியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இன்றைய லெபனானில் குடியேறினார்கள்..இவர்களும் பிறிந்து கானானியர்கள்  எனப்பட்டனர்.
       லெபனானியர்கள் கடல் வர்த்தகத்தில் கில்லாடிகள் ஆனார்கள். அந்த நாட்டில் விளைந்த ஈட்டி மரங்கள், தேக்கு மரங்கள், வாசனை திரவியங்கள், மருந்துப்பொருட்க்கள், திராட்சை  பழ ரசங்கள் கொட்டைகள் என்பன போன்ற பல பொருட்க்களாள் வெகு பணம் சம்பாரித்தார்கள். மத்திய தரைக்கடலின் ஓரத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் இவர்கள் வியாபாரம்
கொடிகட்டிப்பறந்தது. எகிப்த்தில் பல முக்கியமான பாரோ மன்னர்களின் சமாதிகளில் உள்ள உத்திரங்களும் அவர்தம் கோயில்களில் உள்ள உத்திரங்களூம் அவர்களுடைய   அரண்மனைகளில் உள்ள உத்திரங்கள் அனைத்தும் வாசனைமிகுந்த வைரம்பாய்ந்த மரங்கள். மர சாமாங்கள் அனைத்தும் இந்த லெபனான் நாட்டிலிருந்துதான் வந்தவை. எகிப்த்திய
பாரோ மன்னர் துத்தங்காமன் சமாதியில் ஊள்ள உத்திரங்களும் ஜோடனைப்பொருட்க்களும் நாற்காலிகளும் மேஜைகளும் இன்றளவும் வாசம் வீசுகின்றன... சாலமோன் மன்னர்கூட  தான் கட்டிய தேவாலயத்திற்கு தேவையான் மரங்களை லெபனானிலிருந்தே வரவழைத்தார்.
லெபனானின் கடல்பகுதியில் காணப்பட்ட ஒருவகை நத்தைகளிலிருந்து எடுக்கப்படும் சாயப்பொருளுக்கு பொனிஸ் என்று பெயர். இந்த சாயப்பொருளின் மூலப்பொருளைப்பற்றியோ  அதனுடைய கலவைகளின் சேர்மானம் பற்றியோ அக்காலத்தில் யாருக்கும் தெரியாது.. அவர்கள் அந்த தொழில் நுட்ப்பத்தை வெகு ரகசியமாக வைத்துக்கொண்டார்கள்..
         அது ஒருவிதமான கரும்சிகப்பு நிறமாகும்..இந்த சாயமேற்றப்பட்ட துணிகளுக்கு அக்காலத்தில் கிராக்கி அதிகம்.. அரசர்கள் மட்டுமே பயன்படுத்துமளவுக்கு அது விலை உயர்ந்ததாக   இருந்ததால் அது சட்டபூர்வமாகவே மாறியது. சாதாரண குடிமக்கள் அந்த நிற துணிகளைப்பயன்படுத்தக்கூடாது.
         ஆக பொனிஸ் என்ற வார்த்தையிலிருந்து அதை உற்பத்தி செய்யும் மக்களுக்கு பொனிசியர்கள் என்று பெயர் வந்தது. இவர்கள் வியாபார ஆதிக்கம் பிற்காலத்தில் அரசியல் ஆதிக்கம்  ஆயிற்று. இப்படியாக அன்றைய கார்த்தேஜ் நாடு பொனீசியர்கள் கையில் மாறியது.
                       ரோமர்கள் ஆதிக்கம்...
            .ரோமர்களின் சாம்ராஜ்ஜியம் விரிவடையத்துடங்கியது..அதனால் ரோமுக்கு கீழ் இருந்த சிசிலித்தீவுகளிலிருந்த பொனிசியர்களை முதல் புனிக் யுத்தத்தில் வெற்றிகண்டு அதையே  சாக்காக வைத்து கார்த்தேஜிலும் இரண்டாம் மூன்றாம் புனிக் யுத்தங்களில் கார்த்தேஜை முழுவதுமாக கைப்பற்றிக்கொண்டார்கள். இதற்கு ரோமர்கள் கொடுத்த   விலை அதிகம். கார்த்தேஜிய ராணுவத்தில் பழக்கப்படுத்தப்ட்ட ஆப்ரிக்க யானைகள் போரில் பயன்படுத்தப்பட்டன. இந்தவகை யானைகள் மிக மூர்க்கமானவைகள். ஆனால்   இந்திய யானைகளைப்போல் விசுவாசமானவைகள் அல்ல. தனக்கு ஆபத்து அல்லது துன்பம் என்று வரும்போது அவைகள் எஜமான் என்றும் பாராது. பகைவன் என்றும் பாராது..
        தன் எஜமானையும் திரும்பித்தாக்கும் குணம் கொண்டது. அத்தகைய நேரங்களில் அந்த யானைப்பாகன் தன் கையில் உள்ள வேலினால் அதன் மத்தகத்தைப்பிளந்து அந்த   மதம்பிடித்த யானையைக்கொன்று விடுவான். இல்லாவிடில் அந்த யானை தன் எஜமானனுக்கு விளைவிக்கும் சேதம் மிகவும் அதிகமாக இருக்கும். அது எதிரிக்கு மிகவும்
அனுகூலமாகிவிடும்
      மூன்றாம் புனிக் யுத்தம் ரோமர்களுக்கும் சரி கார்த்தேஜ் மக்களுக்கும் சரி வாழ்வா...சாவா... என்றபடி நடந்ததால் உயிர்ச்சேதம் இரு பக்கத்திலும் மிகவும் அதிகம்.   எனவே ரோமர்கள் கார்த்தஜை வேற்றிகண்ட பிறகு அந்த நாட்டு குடிமக்களை மிகவும் கொடுமையாய் நடத்தினர். கண்னில் தென்பட்ட ஆண்களை கண்ட இடத்தில்   வெட்டிப்போட்டனர். தெருத்தெருவாய்...வீடுவீடாய்ப்புகுந்து பெண்களை மானபங்கப்படுத்தினர்...ஆண்களையும் குழந்தைகளையும் கொண்றனர்... அல்லது அவர்களை   அடிமைப்படுத்தி கடலில் படகு செலுத்தவும் துடுப்பு வலிக்கவும் கொடும் வேலை வாங்கவும் பயன்படுத்தினர். [ பென் ஹர் படம் பார்த்தால் கப்பலில் துடுப்புவலிப்பவர் படும் பாடு   தெரியும். ] இந்த கார்த்தஜின் வெற்றியின் நினைவாக வெற்றித்தூண்கள் எனப்படும் ஜயஸ்தம்பங்களை நட்டார்கள். இந்த ஜயஸ்தம்பங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாய்   அறிவித்துள்ளது.
      ஒருவழியாக இந்த அக்கிரமங்கள் எல்லாம் ஒழிந்த பிற்பாடு இந்நகரை ரோமர்கள் தங்கள் சொந்த குடிமக்களைக்கொண்டு வந்து குடி அமைத்தினர். இப்படியாக பல நூற்றாண்டுகள்  கடந்தன. கிரிஸ்த்து பிறப்பதற்கு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ரோமையில் ஜூலியஸ் சீசர் பட்டத்திற்கு வந்தார்.. அவர் தன்னை முடிசூடா மன்னனாக அறிவித்துக்கொண்டார்.
ஆனால் ரோமை நாட்டு மக்கள் அவர் மேல் உள்ள பிரியத்தால் அவரை கடவுளாகவே பாவித்தனர். அரசாங்கமும் இதை சாக்காக வைத்துக்கொண்டு சீசரை அரசனாக மட்டுமின்றி  கடவுளாகவும் வணங்கவேண்டும் என்றும் அப்படிச்செய்ய மறுப்பவர்களை ராஜ துரோகம் சாட்டி கொடுமையாய் கொல்ல வேண்டும் எனவும் ஆணை வெளியிடப்பட்டது. இந்த ஆணை
ரோமை சாம்ராஜ்ஜியத்திற்குபட்ட அனைத்து நாடுகளிலும் அவசியம் பின்பற்றப்படவேண்டும் எனவும் அதற்கான அதிகாரம் அந்தந்த நாட்டை ஆளும் ரோமை ராஜப்பிரதிநிதிகளுக்கு  வழங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. கார்த்தேஜிலும் இந்த சட்டம் அமுல் படுத்தப்பட்டது.
       இந்த ரோமை அரசாங்க ஆணை கிரிஸ்த்துவர்கள் மத்தியிலும் யூதர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கர்த்தராகிய யேசு கிரிஸ்த்துவை அன்றி வேறு கடவுளை   நாங்கள் வழிபட மாட்டோம். சீசரை அரசராக ஏற்போம் ஆனால் கடவுளாக அவரை வழிபட மாட்டோம் என்று அரசாங்க ஆணையை எதிர்த்தார்கள். யூதர்கள் தங்கள் மூதாதையர்கள்
வணங்கிய இஸ்ராலிய கடவுளையன்றி வேறு கடவுளை வழிபட மாட்டோம் என்று யூதர்களும் இந்த அரசாங்க ஆணையை எதிர்த்தார்கள். ரோமை சாம்ராஜ்ஜியம் முழுவதும் இது   எதிரொலித்தது. எனவே ரோமை சம்ராஜ்ஜிய அதிபதி தன் ஆட்சிக்குட்பட்ட அனைத்து நாடுகளிலும் கிரிஸ்த்துவ மதமும் யூத மதமும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிதார்கள்.
         அதைத்தொடர்ந்து கார்த்தேஜிலும் வேத கலாபனை ஆரம்பித்தது.
கி.பி.202ல் ரோமையை ஆண்ட சக்கரவர்த்தி செப்டிமஸ் செவெருஸ் சிலையும் அவர்கள் தெய்வங்களான குரு என்னும்ஜுபிடர் மற்றும் அஸ்ட்டரோத் போன்று பல தெய்வச்சிலைகள்   கார்த்தேஜின் டவுன் ஹாலில் வைக்கப்பட்டன.
   கார்த்தேஜின் பிரஜைகள் அரசாங்க ஆணைப்படி குடும்பம் குடும்பமாக வந்து தங்கள் ராஜ விசுவாசத்தைக்காட்டவேண்டி அவைகளுக்கு வணக்கமும்
தூபாராதனையும் காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டனர். மறுத்தவர்கள் ஆக்கினைக்கு ஆட்படுத்தப்பட்டனர். இப்படியாக பெர்பேத்துவா குடும்பமும் வரவழைக்கப்பட்டனர். பிரச்சனை இங்கு ஆரம்பித்தது.
          பெர்பேத்துவா ரோமைய வம்ஸாவழியில் ஒரு உயர் குலத்தில் உதித்த பெண். இருபத்திரண்டு வயதான அவளுக்கு ஒருபால்குடி மறவா குழந்தையும் இருந்தது. அவளது தாயார்  கிரிஸ்துவர். ஆனால் தந்தை புறஜாதியார்.. கிரிஸ்த்துவை பின்பற்றாதவர். எனவே இந்த நாளிள் தன் மகளுக்கு என்ன நடக்கப்போகிறது என்று அவருக்கு மிக நன்றாகத்தெரிந்ததால்
அவர் மிகவும் கலக்க முற்றார்.எனவே அவர் கிரிஸ்த்துவை மிகவும் வெறுத்தார். மேலும் பெர்பேத்துவாவின் சகோதரன் சதுர்ஸும் கிரிஸ்த்துவை ஏற்றுக்கொண்டது அவருக்கு பெரும்  துன்பமானது. இந்த காலகட்டங்களில் பூர்வீக கிரிஸ்த்துவர்களைவிட புதிதாக மனம்மாறிய ஞானஸ்நானம் பெற காத்திருந்தவர்களின் நிலைதான் பெரும் மோசமாயிற்று.
       வேத விரோதிகளும் இப்படிப்பட்டவர்களையே குறிவைத்து பிடித்து ஆளுனர்களிடம் சேர்ப்பித்தனர்.   இப்படியாக பெர்பேத்துவா, அவள் அடிமைப்பெண் பெலிசித்தா மற்றும் ஆண் வேலைக்காரர் ரிவொகாட்டஸ், மற்றும் செகுண்டுலெஸ் மற்றும் பெர்பேத்துவாவின்   சகோதரர் சதுர்ஸ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு ஆளுனரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்கு முந்தின நாள் பெர்பேத்துவாவின் தகப்பனார் ரகசியமாக அவரை சிறையில்   சந்தித்தார். மகள்மேல் உள்ள பாச மிகுதியால், " மகளே... என் நேச மகளே.. பெர்பேத்துவா.. என் முதுமையை முன்னிட்டுக்கூட வேண்டாம்... உன் பால்குடி மறவாத உன் குழந்தையை  பார்...அதன்முகம் பார்த்து சொல்... நீ கிரிஸ்த்துவை விட்டுவிடுகிறேன் என்று சொல்...இன்றே உன்னை வெளியே கொண்டுவந்து விடுகிறேன்...இந்த வயதான காலத்தில்
எனக்கு இது எல்லாம் தேவையா...நீ இல்லாமல் நான் செத்துவிடுவேன் மகளே..எனக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்.. கிரிஸ்த்துவை விட்டுவிடு... அந்த மதம் மிகவும் கொடியது...   உலக இன்பங்களையும் மனித உறவுகளையும் பிறிக்கும் அந்த யேசு கிரிஸ்த்துவை விட்டுவிடு..." என்று அந்த பெரியவர் குமுறிக்குமுறி அழுதார்.
      ஆனால் பெர்பேத்துவா நிதானமாக கூறினாள், " அப்பா...நீங்கள் என்மேல் வைத்துள்ள பாச மிகுதியால் இவ்வாறு பேசுகிறீர்கள்...எனக்கு நீங்களோ என் குழந்தையோ ஒரு  பிரச்சனையே இல்லை..பிறப்பிப்பதும் இறக்கச்செய்வதும் ஆண்டவன் சித்தம்.. நீங்கள் யேசுவைப்பற்றி தெரிந்துகொண்டது தவறானது.. கிரிஸ்த்துவம் அன்பை போதிப்பது.. அதன்   நெறிமுறைகள் சுலபமானவை..நேர்மையானவை..இவற்றை அனுபவித்துப்பார்த்தால்தான் உணரமுடியும்..நான் யேசுவை தேர்ந்துகொள்ளவில்லை... யேசுதான் என்னை
தேர்ந்துகொண்டார் ...அவர் எனக்குள்ளாகவே இருக்கின்றார்... எனவே என்னால் அவரை மறுதளிக்கமுடியது...நீங்கள் போய்வாருங்கள்." என்றாள்..
அடுத்த நாள் விசாரணை ஆரம்பமானது.
            கார்தேஜின் ரோமை ஆளுனர் ஹிலாரியானுஸ் தன் அவையில் வீற்றிருந்தார்..முதலில் பெர்பேத்துவா அழைக்கப்பட்டாள். அப்போது அவளது தகப்பனார் அவளின் ஆண்   குழந்தையை அவளுக்கு தூக்கிக்காண்பித்து, ' மகளே..பெர்பேத்துவா...இக்குழந்தையை முன்னிட்டு யேசுவை மறுதலி.. ரோமை அதிபதிக்கு வணக்கமும் ஆராதனையும் செலுத்து"   என்றார்..
         விசாரணையின்போது அவள் தகப்பனார் குறுக்கிட்டது அவருக்குப்பிடிக்கவில்லை.. எனவே, " யாரது அங்கே...இந்தகிழவனை வெளியே துரத்தி நையப்புடையுங்கள் " என்றார்..
அந்தக்கிழவரை அப்படியே அலாக்காக தூக்கிவந்து வெளியே வைத்து கோலால் நையப்புடைத்தார்கள். அவர் அலறிய சப்த்தம் பெர்பேத்துவாவுக்கு மிக நன்றாகக்கேட்டது.. மிகுந்த  விசனமுற்றாள் பெர்பேத்துவா.
ஆளுனர் ஆரம்பித்தார், " சொல் பெர்பேத்துவா,... நம் சீசரை அரசனாகவும் கடவுளாகவும் ஆராதிப்பாயா ?.. நம் முன்னோர்களின் கடவுளான் ஜுபிடரையும் வீனஸையும்   ஆராதிப்பாயா?." என்றார். அதற்கு பெர்பேத்துவா " நான் சீசரை அரசராக ஏற்றுக்கொள்வேன்.. அதற்கான வணக்கமும் மரியாதையும் எனக்கு எப்போதும் உண்டு.. ஆனால் அவரை
நான் கடவுளாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்... வேறு கடவுளர்களுக்கு தூப ஆராதனையும் காட்ட மாட்டேன் " என்றாள்.
        ஆளுனர், " அப்படியானால் நீ ஒரு கிரிஸ்த்துவளோ ?" என்றார்.
பெர்பேத்துவா உடனடியாக, " ஆம். நான் ஒரு கிரிஸ்த்துவள் தான். " என்றாள்.
ஆளுனர் கோபமுற்று ," பெர்பேத்துவா,.... உன் குலப்பெருமையை முன்னிட்டும்... உன் வயோதிக தந்தையை முன்னிட்டும்... உன் குழந்தையை முன்னிட்டும்...உனக்கு ஒரு  வாய்ப்பு தருகின்றேன்...யேசு கிரிஸ்த்துவை விட்டுவிடுவதாக சத்தியம் செய்... நம் சீசரையும் நம் கடவுளர்களையும் அவமதிக்காதே.. உன் ராஜ விசுவாசத்தைக்காட்டு " என்றார்.
     அதற்கு பெர்பேத்துவா, " ஆளுனர் அவர்களே... நான் யேசுகிரிஸ்த்துவை மறுதலிக்க மாட்டேன்.. இது சத்தியம். " என்றாள்.
ஆளுனர் மிகுந்த கோபமுற்று, " பெர்பேத்துவா...நீ என்ன பேசுகிறாய்... யாரிடம் பேசுகிறாய் என்பதை மறந்துவிட்டாய்...இதற்கெல்லாம் என்ன தண்டனை தெரியுமா ?" என்றார்.
பெர்பேத்துவா, " ஆம்... தெரியும் " என்றாள்.
ஆளுனர் அன்றைய விசரணைக்காக வ்ந்திருந்த பெலிஸித்தம்மாள் மற்றும் முதலில் குறிப்பிட்ட மூன்று ஆண்களையும் விசாரிக்க அவர்களும் பெர்பேத்துவா கூறியபடியே   கூறினார்கள்.
ஆளுனர் உடனடியாகவே தீர்ப்பு கூறினார்..." உங்கள் மீது ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நம் சீசரையும் நம் கடவுளர்களையும் அவமதித்த  குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் கசையால் அடிப்பித்து மிருகங்களுகு இறையாகப்போட உத்திரவிடுகின்றேன்...பெலிஸித்தா தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதால்  அவள் குழந்தை பெற்ற பிறகு அவளுக்கும் இதே தண்டனை தரப்படுகின்றத்து.. நம் பேரரசரின் பிறந்த நாள் அடுத்தவாரம் வர இருப்பதால் அதைக்கொண்டாடும் வகையில்  அன்றைய தினத்தில் இவர்கள் தண்டனை நிறைவேற்ற உத்திரவிடுகின்றேன். அதுவரையில் அவர்கள் அனைவரையும் கடுங்காவலில் வைக்க உத்திரவிடுகின்றேன். "
               கொடும் சிறை....
    பெர்பேத்துவாவும் அவரது சகோதரர் சதுர்ஸும் பெலிசித்தம்மாவும் மற்றும் அவர்கள் ஆண் வேலைக்காரர்களும் பாதால சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் பெர்பேத்துவாவின்  தகப்பனாரும் ரகசிய உதவி குருக்களான தெர்ஸியுஸ் மற்றும் போம்பினுஸ் என்னும் இருவரும் புதென் என்னும் சிறைகாவலனை லஞ்சம் கொடுத்து கவனித்துக்கொண்டார்கள்.
உண்மையில் அந்த சிறைகாவலனும் ஒரு ரகசிய கிரிஸ்த்துவந்தான்..அவன் பெர்பேத்துவாவின் குழந்தைக்கு அவள் தண்டனைக்காலம் வரும்வரை பால் கொடுத்து  கவனித்துக்கொள்ளவும், அவர்கள் குடும்ப நண்பர்கள் அவர்களை சிறையில் ரகசியமாய் வந்து சந்திக்கவும் அனுமதி அளித்தான். அந்த சிறைகாவலனுக்கு பெர்பேத்துவாவின் மீது   அவ்வளவு மரியாதை இருந்தது. அவள் கடவுள் ஆசீர் பெற்றவள் என்றும் நம்பினான்.
      தண்டனைகாலம் வர இன்னும் மூன்று நாள் தான் இருந்தது. அப்போது பெர்பேத்துவாவின் சகோதரர் சதுர்ஸ் கூறியதாவது. " என் சகோதரி..கடவுள் உன்மட்டில் இருகின்றார்  என்பதை நான் விசுவசிக்கின்றேன்... உன் பக்திக்கு கடவுள் உனக்கு செவி மடுப்பார். எனவே நீ அவரிடம் நாம் விடுதலை ஆவோமா அல்லது சாவோமா.. சாவது என்றால் நாம்  எப்படி சாவோம் என்பதை எனக்கு ஆண்டவரிடம் கேட்டுச்செல் " என்றார். அதர்க்கு அவர், " நான் நாளை ஆண்டவரிடம் கேட்டு உனக்கு சொல்வேன் " என்றாள்.
            அப்போது பெலிசித்தாள் எஜமானி, " நீங்கள் எல்லோரும் என்னை விட்டுவிட்டு போகப்போகிறீர்களா?..நானும் உங்களோடே வர எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள் அம்மா...  நாம் அனைவரும் ஒன்றாகவே வாழ்ந்தோம்.. ஒன்றாகவே மரிப்போம்... ஒன்றாகவே பரலோகம் போவோம் அம்மா... என்மேல் இரக்கம் வைத்து தயவு செய்து எனக்காக மன்றாடுங்கள்..
எனக்கு வயிற்றில் எட்டு மாத குழந்தை இருப்பதால் எனக்கு உங்களுடன் வேத சாட்ச்சி முடி கிடைக்காமல் போய் விடுமோ என்று பயப்படுகிறேன் " என்று பெர்பேத்துவாவை   கட்டிக்கொண்டு அழுதாள். அனைவரும் பிரார்த்தனையில் ஈடு பட்டனர். அப்போது அவர்களின் வேண்டுதல் கேட்கப்பட்டதாக ஒரு அருங்குறி காட்டப்பட்டது. ஆம்.. அதிசயம்  எட்டுமாத கர்ப்பிணி பெலிசித்தாவுக்கு உடனடியாக பிரசவ வலி ஏற்பட்டது. சற்று நேரத்திற்குள் அவளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை குறைமாசமாக பிறந்தது. பிறந்த
குழந்தையை ஒரு கிரிஸ்த்துவ தம்பதியினர் தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொண்டனர். கடுமையான பிரசவ வலியினால் பெலிசித்தாள்.மிகவும் துயறுற்றாள்.. அப்போது சிறை அதிகாரி  புதென் கூறினார்..."பெலிஸித்தா..நீ இந்த வலிக்கே இவ்வளவு துன்பப்படுகின்றாயே.....நாளைக்கு மரண விளையாட்டரங்கத்தில் கொடிய விலங்குகளுக்கு உன்னை
இறையாகப்போடுவார்களே அப்போது நீ என்ன செய்யப்போகிறாய் ? என்றார்.. அதற்கு பெலிசித்தாள் " அதை கடவுள் பார்த்துக்கொள்வார்...எனென்றால் வாழ்வது நானல்ல...என்னில்  கிரிஸ்த்துதான் வாழ்கின்றார்... எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை." என்றாள். இந்த நேரத்தில் செகுண்டுலெஸ் என்னும் வேலையாள் இவர்களோடு வேத சாட்ச்சி முடி பெறாமல்
சிறையிலேயே மரித்தார்.
             அந்த இரவில் பெர்பேத்துவா ஒரு காட்சி ஒன்று கண்டாள். பழைய ஏற்பாட்டில் யாக்கோபு கண்ட ஏணிபோல் அது இருந்தது. அந்த ஏணி தங்கத்தால் செய்து பரலோகத்தையும்  பூலோகத்தையும் இணைத்தது. அந்த ஏணி மிகவும் குறுகலாக ஒருவர் மட்டும் ஏறும்படி இருந்தது. அந்த ஏணியின் இருபுறமும் இரும்பினால் செய்த பலவகையான ஈட்டி, வேல்,
கத்தி.குறடுகள், ஊக்குகள் போனறவை பொருத்திவைக்கப்பட்டிருந்தன. அஜாக்கிராதையாக ஏறும் எவரும் அவற்றால் சின்னபின்னமாக்கபடுவது உறுதி. ஏணியின் கால் பகுதியில்   ஒரு பெரும் ராஜநாகம் படமெடுத்து அந்த ஏணியில் யாரும் ஏறிவிடாதபடி காவல் காத்துக்கொண்டிருந்தது. அந்த ஏணியில் பெர்பேத்துவாவின் சகோதரன் சதுர்ஸ் மிக வேகமாக ஏறி
கடைசி படியில் கால் வைத்துக்கொண்டு " பெர்பேத்துவா...பார்த்து ஜாக்கிரதையாக மேலே ஏறிவா.. அந்த பெரிய பாம்பு  உன்னைக்கடித்துவிடாதபடி பார்த்துகொள்...நீ இங்கே வரும்வரை
நான் உனக்காக இங்கேயே காத்துக்கொண்டிருப்பேன் " என்றார்.. அதற்க்கு பெர்பேத்துவா, " சகோதரா...பயப்பட வேண்டாம்... கடவுள் மேல் ஆணையாக இந்த பாம்பு என்னை  ஒன்றும் செய்யாது..இதோ பார் நான் வருகிறேன் " என்று கூறியபடி அந்த ஏணியை அணுகினாள். உடனே அந்தப்பம்பு படுத்துக்கொள்ளவே பெர்பேத்துவா அதன் தலைமீதே
தன் காலை வைத்து ஏணியின் மீது ஏறினாள்...
       அந்த ஏணியின் உச்சி பரலோகத்தில் ஒரு அழகிய கிராமத்தில் இருந்தது... அங்கு ஏறாளமான கால் நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன. அங்கே ஒரு பெரியவர் நீண்ட தாடியுடன்  செம்மரி ஆடுகளிடமிருந்து பால் கறந்துகொண்டிருந்தார். அவளை திரும்பிப்பார்த்து, "  வா...மகளே..பெர்பேத்துவா...உன் வரவு நல் வரவாகுக... இதோ இந்த பாலைக்குடி " என்றர்.
     பெர்பேத்துவா தன் கைகள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு அந்த பாலை வாங்கிக்குடித்தாள்.. அது சொல்ல முடியாத இனிமையாயிருந்தது.. அப்போது அங்கிருந்த மற்றனைவரும்  " ஆமென் " என்றனர்.
அந்த சப்தத்தில் திடீரென கண் விழித்தாள் பெர்பேத்துவா..தன் நாவில் இன்னும் அந்த பாலின் இனிமையை அவள் உணர்ந்தாள்..அந்த இரவே தன் சகோதரன் சதுர்ஸை எழுப்பி,
" நாம் நாளைக்கு இந்த உலக வாழ்வை முடிக்கப்போகின்றோம்... நமக்கு பரலோகத்தில் வேத சாட்சி முடி காத்துக்கொண்டிருக்கின்றது" என்றாள்.
            " மரண விளையாட்டரங்கம்."
        இன்றைக்கும் பெர்பேத்துவா, பெலிசித்தாள், சதுர்ஸ், சதுராத்துஸ், ரிவோகாட்டஸ் ஆகிய ஐவரையும் கொண்ற அந்த மரண விளையாட்டரங்கம் இந்த கர்த்தேஜில் இருக்கின்றது.  இந்த விளையாட்டரங்கம் ஐந்த அடுக்கு பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கபட்டது. வட்டவடியான அந்த அரங்கத்தின் நடுவே ஒரு நெடும் கல் தூண் இன்றும்
உள்ளது. அதன் அருகே ஒரு நிலவரை. அதில் ஒரு பாதுகாப்பான அறை.. அடுத்தநாள் கொல்லப்படப்போகும் கைதிகள் அந்த அறையில்தான் தங்க வைக்கப்படுவார்கள். இந்த   அறையில் தான் பெர்பேத்துவாவும் பெலிஸித்தம்மாளும் மற்றும் அவள் சகோதரன் சதுர்ஸும், சதுர்னினும், ரிவோகாட்டஸும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
[ பலியாக்கப்படும் கைதிகளை அறிமுகப்படுத்தும்பொருட்டு அவர்கள் பெயரை சொல்லி அழைத்து பவனியாக வட்டவடிவில் சுற்றிவரச்செய்வார்கள். பலத்த கரகோஷங்களுடன்   அப்போதே ரசிகர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.. பிறகு மிருகங்களை பவனியாக கொண்டுவருவார்கள்..பிறகு அவைகளை கோபமூட்டுவதர்க்காக அவற்றை ஒன்றோடு  ஒன்றாக மோத விடுவார்கள். பிறகு கைதிகளை நடுவிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து வீரர்களை விட்டு கைதிகளை சாட்டையால் சுழற்றி அடி பிண்ணி எடுத்துவிடுவார்கள்.. அந்த   வெறியாட்டத்தில் குற்றவாளிகளின் ரத்தம் தெரிக்கும்.. இந்த ரத்த வாடைக்கு கொடிய வனவிலங்குகள் மோப்பம் பிடித்துக்கொண்டு சீறும்... சில கர்ஜிக்கும்.. அவற்றை அவிழ்த்து
விட்டால் அவ்வளவுதான்.. இதற்காகவே அந்த மிருகங்களை சில நேரம் பட்டினி போட்டு வைத்திருப்பர். குற்றவாளிகளை அந்த தூணிலிருந்து அவிழ்த்துவிட்டு மிருகங்களை   அவர்கள் மேல் ஏவி விடுவார்கள்.. பிறகு அவர்கள்கதி அதோ கதிதான். மிருகங்களிடமிருந்து தப்பிக்க கைதிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுவார்கள்..மிருகங்கள் அவர்களை
தாக்கி சின்னபின்னா படுத்தும்..அதைக்கண்டு ரசிகர்கள் சந்தோஷ மிகுதியால் வெறிகூச்சல் போடுவார்கள்.. இந்த சப்த்தத்தைக்கேட்க்கும்போது மிருகங்கள் இன்னும் கோபாவேசம்   கொண்டு வெறிகொண்டு தாக்க ஆரம்பிக்கும். இந்த பின்னனியை நினைவில்கொண்டு மேற்கொண்டு கதைக்குப்ப்போவோம் ]
           சீசரின் பிறந்த நாளில் நடக்கபோகும் கேளிக்கைகளை கண்டு ரஸிக்க ஏராளமான கூட்டம் இந்த மரண அரங்கத்தில் சேர்ந்தது. ஆளுனரும் பெரும்பொருப்பு வாய்ந்தவர்களும்   அவர்தம் இடத்தில் [பால்கணியில்] அமர்ந்திருந்தனர். ஆட்டம் ஆரம்பமாகியது. கைதிகளை அறிமுகப்படும்பொருட்டு அனைவரும் அரங்கத்தைச்சுற்றி வரச்செய்தார்கள். முதலில்   சதுர்ஸும் அவர் பிறகு சதுர்னினும், ரிவொகாட்டஸும் அவர்களுக்குப்பிறகு இடண்டு பெண்களான பெர்பேத்துவாவும் பெலிஸித்தம்மாவும் நடந்துவந்தார்க்ள்.
     அனைவரும் துனிக் துணியால் ஆன வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார்கள். குழந்தை பிறந்து மூன்று நாளே ஆகியிருந்த பெலிஸித்தாவுக்கு தாய்ப்பால் சுறந்துகொண்டே   இருந்தது. அது அவர் அனிந்திருந்த அங்கியை நனைத்தது. அந்த அரங்கத்திலிருந்த பலர் " யார் வருவது... அது பெர்பேத்துவாவும் பெலிசித்தம்மாவும் அவர் சகோதரர் சதுர்ஸுன்   அவர் வேலை ஆட்க்களும் தானே !
அடக்கடவுளே... இவர்களுக்கு ஏன் இந்தக்கஷ்டம்..அவர்கள் எப்பேர்பட்ட குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்.. அடடா.. .அவர்களுக்கா இந்த கதி... அடப்பாவமே என்று பலர்  வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை காட்டிக்கொண்டனர். ஆனல் பெர்பேத்துவாவும் பெலிசித்தம்மாளும் முகத்தில் கொஞ்சம் கூட கலவரத்தையோ,,,பயத்தையோ   காட்டவில்லை. ஏதோ தங்கள் சொந்த ஊரில் தாய் தகப்பனைக்காணப்போகும் ஒரு சந்தோஷத்தைக்காட்டினார்கள். ஆனால் இவற்றைப்பார்த்தவர்கள் தான் மிரண்டனர்..
     ஆளுனரின் பால்கணிக்கு கீழே அவர்கள் அனைவரும் வரும்போது சதுர்ஸ் " ஆளுனர் அவர்களே.. நீங்கள் தவறு செய்கிறீர்கள்.. ஒருபாவமும் அறியாத எங்களை வீணே கொலை  செய்கிறீர்கள்...இதெர்க்கெல்லாம் நீங்கள் ஆண்டவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் " என்றார்.. அதற்கு ஆளுனர் " இவர்களை சவுக்கால் அடியுங்கள் " என்றார்.
அவருக்குப்பாதுகாவலர்கள் அப்போதே அவர்கள் அனைவரையும் சவுக்கால் அடித்தனர். அரங்கை சுற்றிவந்ததும் அவர்கள் அனைவரையும் நடுத்தூணில் சேர்த்துக்கட்டி சவுக்கால்  வெளு வெளு என்று வெளுத்தனர். பெண்கள் இருவரையும் முகத்திலேயே அடித்தனர்.. அவர்கள் முகம் ரத்தக்களரி ஆனது.
அதர்க்குள் " அடிப்பதை நிறுத்துங்கள்.. அவர்கள் அடிவாங்கியே செத்துவிடப்போகிறார்கள்..அப்புறம் மிருகங்களுக்கு இறையாகப்போட முடியாமல் போய்விடும். அவர்களை  அவிழ்த்துவிட்டு மிருகங்களை திறந்துவிடுங்கள் " என்றார் ஆளுனர். ஒருவன் ஒரு பெரும் காட்டுப்பன்றியை சங்கிலி போட்டு கட்டியபடி அழைத்துவந்தான். முதலில் சதுர்ஸ் மீது
அந்த காட்டுப்பன்றியை ஏவி விட்டான்.. அது வெகு மூர்க்கமாக ஓடியது. அதைக்கட்டியிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு அந்த அரங்கத்தை சுற்றிவந்து வெறிகொண்டாற்போல்  சதுர்ஸை விட்டுவிட்டு அதை அழைத்துவந்தவன்மீது பாய்ந்து அவன் வயிற்றை குத்திக்கிழித்தது.. மூன்று நாட்களுக்குப்பிறகு அவன் செத்தான்.
   அடுத்துஒருபெரும் கரடியை சதுர்ஸ் மீது ஏவினர்.. அது அவரை முகர்ந்து பார்த்துவிட்டு மற்ற இரண்டு பேர் மீது பாய்ந்துவிட்டு ஓடிவிட்டது. அப்போது சிறைகாவலன் புதென்   பெர்பேத்துவாவின் சகோதரனாகிய சதுர்ஸைப்பர்த்து " இந்த முறை நீ தப்பிக்கமுடியாது... இந்த தடவை வரப்போவது ஒரு பெரும் சிருத்தை..இதர்காகவே அது இரண்டு நாட்க்களாக  பட்டினி போடப்பட்டுள்ளது என்றான்.. அதற்கு சதுர்ஸ்.." நான் விரும்பியதும் இதுவே...ஆண்டவரின் திருவுளமும் இதுவே." என்றார்.
       பாய்ந்து வந்த சிருத்தை சதுர்ஸை கடித்துக்குதறியது. போதாததற்கு அவர் கழுத்தின் பின்பகுதியில் கடித்து அவரை தரதர வென்று இழுத்துக்கொண்டு போய் சிறைகாவலன்   புதென் அருகில் போட்டுவிட்டு மற்றவர்களைத்தாக்க ஆரம்பித்தது. சதுர்னினும், ரிவோகாட்டஸும் கூட சிறுத்தையல் கடுமையாக தாக்கப்பட்டனர். சிருத்தை பெண்களான   பெர்பேத்துவாவையும் பெலிசித்தம்மாவையும் திரும்பிகூட பார்க்கவில்லை.. அவர்களைப்பொருத்தமட்டில் ஆண்டவன் சித்தம் வேறுமாதிரி இருந்தது. இந்த தருணத்தில் சதுர்ஸ்   சிறைகாவலனிடம் மெதுவாகப்பேசினார்... "புதென்.. இந்த கடும் பாடுகள் மற்றவர்கள் திருச்சபையின் சத்தியத்தில் நிலைபெற வேண்டும் எனபதற்காகவே... மனதில் திடம் கொள்...
என்னை மறவாதே..மீண்டும் சொர்கத்தில் சந்திப்போம்.. எங்கே உன் மோதிரம்... அதைக்கொடு நண்பா என்று கேட்டுவாங்கி தன் ரத்தத்தில் நினைத்துக்கொடுத்தார்.. அவன் அதை   வாங்கி தன் கண்களில் ஒற்றிக்கொண்டான். தன் வாழ்நாள் வரை அந்த மோதிரத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.
          ஆக சதுர்ஸ், சதுர்னின், ரிவோகாட்டஸ மூவரும் சிருத்தையால் குதறப்பட்டு ரத்த சகதியில் கிடந்தார்கள்..வேடிக்கை பார்க்கவந்தவர்கலில் ஒருவன்.." ஆஹா... என்ன காட்சி இது  ..பிரமாதம். இந்த மூன்று பேரும் ரத்த ஞானஸ்னானம் பெற்றுவிட்டார்களடா " என்று எகத்தாளமாகக்கூவினான்.. உண்மையில் இந்த வேத சாட்ச்சிகள் ஐந்து பேரும் அந்த முந்தைய
நாளில்தான் ஞானஸ்நானம் வாங்கி இருந்தனர்.
    அடுத்ததாகப்பெண்கள்..பெர்பேத்துவாவும் பெலிசித்தம்மாவும்..இந்த இரண்டு பெண்களும் எதர்க்கும் பயந்த மாதிரி தெரியவில்லை. பாய்ந்துவந்த அந்த முறட்டுக்காளையை  துணிவாகஎதிர்த்து நின்றார்கள்.. கொடூரமாக தாக்கியது அந்த முறட்டுக்காளை...இரண்டு பெண்களும் துவண்டு விழுந்தார்கள்..பெர்பேத்துவாவுக்கு முதுகில் விலா எலும்பு உடைந்தது.
இருப்பினும் மெதுவாக எழுந்து தரையில் உட்கார்ந்து தன் ஆடைகளை சரிசெய்துகொண்டு கலைந்திருந்த தன் கூந்தலை பின்னிக்கொண்டாள்.. வேத சாட்ச்சி முடி பெறப்போகும்  பெண்கள் கலைந்த கூந்தலாக இருக்கக்கூடாது என்பது மறபு. அவள் தரையில் ஊார்ந்தபடியே பெலிஸித்தாவை எழுப்பினாள். அம்மா... மாடு போய்விட்டது... . மெதுவாக எழுந்திரியுங்கள் என்றாள்..அப்போது நினைவுவந்த பெலிசித்தாள் " காளைமாடு ஏன் என்னை தாக்கவில்லை? என்றாள். அதற்கு பெர்பேத்துவா. .  . மாடு உங்களைக்குத்தி தூர விசிறியது உங்களுக்கு நினைவில்லையா? இதோ பாருங்கள் மாடு உங்களைக்குத்திய காயம்...இதோ உங்கள் கிழிந்த உடுப்பு. என்றாள்..ஒருவழியாக   பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு எழுந்து நின்றனர். இனிமேல் தாங்கள் உயிரோடிருப்பது இன்னும் சில நிடங்கள்தான் என்று உண்ர்ந்து பிறியாவிடையாக
ஒருவருக்கொருவர் அன்பினாலும் சமாதானத்தினாலும் முத்தமிட்டுக்கொண்டார்கள்.. உடனே எழுந்தது ஒரு பெரும் கூச்சல். " இதோ அவர்கள் இன்னும் சாக வில்லை... கொல்லுங்கள் அவர்களை"
       அடுத்த காட்ச்சியாக ஐந்து வீரர்கள் உருவிய கத்தியுடன் அரங்கினுள் நுழைந்தார்கள்...தரையில் குற்றுயிறாகக்கிடந்த சதுர்ஸ், சதுர்னின், ரிவோகாட்டஸ் ஆகிய மூவரையும்  இழுத்துக்கொண்டுவந்து நடுவிலிருந்த தூணோடு சேர்த்துகட்டினர். அந்த ஐந்து பேரையும் ஆளுக்கு ஒருவராக வெட்டிக்கொண்றனர். ஆனல் பெர்பேத்துவா முன்வந்தவன் போர்பயிற்சி
இல்லாதவன். அவன் அவளை கண்டபடி வெட்டினான்.. வெட்டு சரியாகப்படவில்லை.. அனாவசியமான வேதனையும் வலியும் தான் மிச்சமானது. முடிவாக பெர்பேத்துவா அவன்   வாளைப்பிடித்து தன் கழுத்தில் வைத்து " இப்போது குத்து" என்றாள்.. அவனும் தன் வலிமையான் கரத்தால் அந்த கத்தியை அவள் கழுத்தில் இறக்கினான். பெர்பேத்துவாவின்
ஆவி பிறிந்தது.
       அன்று பெர்பேத்துவாவின் காட்சிபடி முதலில் ஏணியில் ஏறியவர் அவள் சகோதரன் சதுர்ஸ்.. அவ்வாறே முதலில் இறந்தவர் சதுர்ஸ்.. கடைசியாய் இறந்தவர் பெர்பேத்துவா.
இந்த பெர்பேத்துவா,, பெலிஸித்தா..சதுர்ஸ்.. சதுர்னின்...ரிவொகாட்டஸ் ஆகியோர் இறந்ததும் அவர்கள் உடலை அவர்கள் பெற்றோர் பெற்றுக்கொண்டு தங்கள் சொந்த இடத்தில்   புதைத்தனர்.. பிற்பாடு அந்த இடத்தில் ஒரு தேவாலயம் ஒன்று கட்டினர்.. அந்த தேவாலயம் பசிலிக்கா மஜோரம் என்று இன்றுவரை அழைக்கப்படுகின்றது.. வெகு சாதாரணமாக
ஆயிரத்து எண்னூரு ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாலயம் இன்று பரிதாபமான நிலையில் இருக்கின்றது..இருபது அடி நிலவரைக்கு கீழே அவர்கள் ஐந்து பேருடைய கல்லரைகள்   உள்ளன. அந்த கல்லரைகளில் அவர்கள் பெயர்கள் பொறிக்கபட்டுள்ளன.

இப்போதும் மத்திய ஃப்ரன்ஸில் உள்ள வெர்ழோன் என்னும் ஊரில் நோத்திரிடொம் ஆலயத்தில் தூய பெர்பேத்துவாவின் சில எலும்புகளை அருளிக்கமாகக்கொண்ட ஒரு தேவாலயம் 

தூய பெர்பேத்துவாமற்றும் பெலிசித்தம்மவின் வேத சாட்சிமுடிபெற்ற திருவிழா மார்ச் மதம் 7 ஆம் தேதி வருகின்றது.
தூய பெர்பேத்துவா மற்றும் பெலிஸித்தம்மாளே எங்களுக்காக வேண்டிகொள்ளும்.


























இருகின்றது. அதிலுள்ள புனித பெர்பேத்துவாவின் சொரூபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

" தோணியப்பர் "








" தோணியப்பர் "

    நான் ஒரு முறை வேளாங்கண்ணி கோயிலுக்கு திருப்பயணம் சென்றபோது எனது நண்பர்களிள் ஒருவர் சீர்காழியில் ஒரு இந்துகோயிலுக்கு என்னை அழைத்துச்சென்றார். எனக்கும்  அந்த கோயிலைப்பார்க்க விருப்பம் இருந்தது. நான் கூடுமானவரை கலைச்சிறப்பு வாய்ந்த பல இந்து கோயில்களைப்பார்த்து இருக்கிறேன். அப்படியாக இந்த சீர்காழி கோயிலில்   விஷேசம் ஏதாவது இருந்தால் அதையும் பார்த்துவிடுவோமே என்று நானும் கோவிலுக்குள் சென்றேன். இந்த கோயிலில் தான் திருஞானசம்பந்தருக்கு பார்வதி தேவியார் ஞானப்பால்  கொடுத்து அந்த குழந்தையை ஆசீர்வதித்த இடம் என்றும் அது சம்பந்தமான கோயில் குளம் என்றும் பல இடங்களை எனக்கு என் நண்பன் காட்டினான். மேலும் இக்கோயிலின் கடவுள்  சிவபெருமான் என்றும் அவருக்கு தோணியப்பர் என்றும் சட்டநாதர் என்றும் பெயர் என்றும் கூறினார். எனக்கு தோணியப்பர் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று கேட்டேன்.அவர்
கூறிய கதை எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.
       அதவது பெரு ஊழிக்காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஒரு ஆணும் அவன் துணைவியும் ஒரு தோணியினால் உயிர் தப்பியதாகவும் அவர்கள் இந்த சீர்காழியில் தான்  தரைதட்டி வாழ்ந்து வந்ததாகவும் அதனால் இந்த கோயில் தெய்வத்திற்கு தோணியப்பர் என்று பெயர் வந்ததாகவும் கூறினார். இந்த நிகழ்வுபற்றிய ஒரு புடைப்பு சிற்பத்தையும் இந்த   கோயிலில் காட்டினார்கள்.அவர்கள் கூறிய அந்த பெரு வெள்ளம் ஏற்பட்ட காலம் ஏறக்குறைய நம் பழைய ஏற்பாட்டில் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் போன்றதே.
   இந்த சரித்திர நிகழ்வும் நோவாவின் பெட்டகம் போன்றதே என்னும் எண்ணம் என் மனதில் தோன்றியதும் எனக்கு நோவாவின் காலத்தில் என்ன நடந்தது என்று அறிய மிகவும்  ஆர்வம் ஏற்பட்டது. அது பற்றி திருகாட்சி வரம் பெற்ற அருட்சகோதரி காத்தரின் எம்மரிக் தன் ஞானதிருஷ்ட்டியில் கண்டு எழுதிய நோவாவின் காலத்தில் என்ன நடந்தது.   எப்படி நடந்தது என்று படிக்கப்படிக்க எனக்கு மிகுந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. இனி நம்முடைய தோணியப்பர் நோவாவைப்பார்ப்போம்.
      நோவாவைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது முன்னோர்களைப்பற்றிய ஒரு முன்னோட்டம் தேவைப்படுகின்றது. ஆதாமும் ஏவாளும் சொர்கபுரியிலிருந்து  வெளியேற்றப்பட்டபிறகு பூலோகத்தில் வாழத்துடங்கினர். அவர்களுக்கு காயீன் ஆபேல் என்று இரு மக்கள் பிறந்தனர். காயீன் மூத்தவன். ஆபேல் இளையவன். ஆபேல் கடவுளுக்கு  விருப்பப்பட்ட பிள்ளையாய் இருந்ததால் காயீனுக்கு தன் தம்பியின் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் அப்போது முறையே 150,, 140 வயது ஆகியிருந்தது. அவர்கள்  இருவருக்குமே பிள்ளைகள் என்றும் பேரப்பிள்ளைகள் என்றும் தனித்தனி குடும்பங்களும் இருந்தன. இந்த நிலையிலும் மூத்தவன் காயீனுக்கு தன் தம்பி ஆபேல் மீது பொறாமை   அதிகமாகி ஒருநாள் அவன் ஆலிவ் மலையில் தன் தம்பி மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தபோது ஒருபெரும் தடியால் அடித்துக்கொன்றான். இதனால் வெகுண்ட கடவுள் காயீனை
சபித்து தூர தேசத்திற்கு துரத்தினார். அவன் தன் மனைவி மக்களுடன் புரப்பட்டுச்சென்றான். காயீன் தன் தம்பிக்கு செய்த கொடும் செயலால் அவன் தன் மக்களாள் அடைந்த  அவமானம் கொஞ்சநஞ்சமல்ல. அனைவரும் அவனை வெறுத்தனர். கேவலப்படுத்தினர். இருப்பினும் தன் குல முதல்வன் என்ற முறையில் அவனை தலைவனாகவும் ஏற்றுக்கொண்டனர். காயீன் தான் வாழ்ந்த காஸ்பியன் கடல் பகுதியில் தன் மகன் ஏனோக்கின் பெயரால் ஒரு நகரை நிறுவினான். இந்த ஏனோக்கை ஆண்டவர் விரும்பியதால்
சொர்கத்திற்கு உயிரோடு எடுத்துக்கொண்டு போய்விட்டார்.[ இதே போல் எலியாஸ் தீர்க்கதரிசியையும் கடவுள் உயிரோடு எடுத்துக்கொண்டு போய்விட்டார். இவர்கள் இருவரும்  கடவுளின் ஆணைப்படி உலகம் முடியும் போது மீண்டும் இந்த உலகத்திற்கு கடவுளுக்கு சாட்சியாக வருவார்கள்]
காயீன் தன் தம்பிக்கு செய்த கொலைபாதகத்தால் இந்த பூமியும் அவனை வெறுத்தது. அவன் தொட்ட எதுவும் துலங்கவில்லை.விளைச்சலும் சரிவர அவனுக்கு கிடைக்கவில்லை.
    இதனால் வாழ்வில் வெறுப்புற்ற காயீன் கடவுளிடம் அழுது புலம்பினான். தன் கொடும் செயலுக்கு மன்னிப்பு வேண்டினான். கடவுள் அவன் மீது இரங்கி விளைச்சக்லை அவனுக்கு  கொடுத்தார். அதுவரை அவன் உயிவாழ சிலவகை மிருகங்களை கொன்று சாப்பிட அனுமதித்தார். இறைச்சி உண்ணும் பழக்கம் மனிதர்களிடையே இப்படித்தான் ஆரம்பித்தது.    கடைசிவரை காயீன் தன் தம்பிக்கு செய்த துரோகத்தால் பலராலும் அவமானப்படுத்தப்பட்டு வாழ்வில் வெறுப்புற்று மிகவும் துன்பமான முடிவை அடைந்தான்.
          மனிதரா..... அரக்கரா....ராட்சதர்களா....தேவகுமாரர்களா....
   காயீனின் மகன் ஏனோக்கின் வம்சாவழியில் வந்தவன் துபால்காயீன். இவனே பல அரும்பெரும் கலைகளின் தந்தை. இவனது வம்சாவழியில் வந்தவர்கள் உருவத்தில் பெரும்   ராட்சதர்கள் போல் விளங்கினார்கள். கடவுளால் சபிக்கப்பட்ட சாத்தான்கள்பல கடவுளின் அனுமதியின்பேரில் இவ்வுலகில் இந்த உலகம் முடியும்வரை சுற்றித்திரிந்து மனிதர்களை
சோதிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தன. அவைகள் இந்த கருங்கடல் பகுதியில் அக்காலத்தில் வாழ்ந்துவந்த காயீனின் சந்ததியினரை பீடித்துக்கொண்டு தங்களது மாய்மாலங்களை  செய்துவந்தன. ராட்சதர்கள் போல் உயர்ந்து வளர்ந்து வந்திருந்த துபால்காயினின் சந்ததியினர் இந்த சத்தான்களின் உதவியினால் மரங்களின் மேல் சரசரவென ஏறவும் மரத்திற்கு மரம்
தாவவும் மலைக்கு மலை தாவவும் சடுதியில் மறையவும் தாக்கவும் வல்லமை பெற்று விளங்கினர். மேலும் பில்லி சூனியம் மந்திரம் மாயம் போன்ற எல்லவிதமான தகிடுதத்தங்களும்  பித்தலாட்டங்களும் செய்து மக்களை அச்சுருத்திவந்தனர். ஆண்களின் நிலையைவிட பெண்களின் நிலை மிகவும் மோசமானது. பேய்களின் உதவியுடன் சகலவிதமான
துஸ்டத்தனங்களையும் வேசித்தனங்களையும் கொஞ்சமும் அருவருப்பில்லாமல் செய்துவந்தனர். ஆபாசமான நடனங்களும் அதற்குதகுந்த அசுசியானபாடல்களும்  பெரும் ராகமெடுத்துப்பாடி காண்போரை பாவத்தில் விழத்தாட்டினர். தங்களுக்குத்தோன்றியபடி எல்லாம் படங்கள் வரைந்து அதர்க்கு உருவமும் கொடுத்து அதையே கடவுள் என்று
அருவருப்பான சிலை வழிபாடு செய்து கடவுளின் கோபத்திற்கு ஆளாயினர். அதைவிட கொடுமை தங்கள் இஸ்டம் போல் படைத்துக்கொண்ட கடவுளர்களின் சிலைக்கு தலைச்சன்  ஆண் குழந்தைகளையும் மனவளம் குன்றிய மற்றும் அங்க ஈனமான குழந்தைகளையும் பலியாக இட்டனர். சாமிக்கு இரத்தப்பலி என்னும் சாக்கில் அக்கால  பில்லி சூனியக்காரர்களும் சூனியக்காரிகளும் தங்களுக்கு வேண்டாதவர்களையும் நரபலியாக கொண்றனர். மேலும் சாத்தான்களின் உதவியினால் மாயகண்ணாடிகளின் வழியே  தூர இடத்திலுள்ளவைகளைப்பார்த்து அவர்களின் மேல் திடீரென தாக்கி அவர்களை வெற்றிகொண்டு ஆண்களை அடிமைகளாக்கி பெண்களை வேசிகளாக்கி குழந்தைகளை பலி  கொடுத்து மஹா அக்கிரமங்களை செய்துவந்தார்கள். இந்த அக்கிரமத்தில்சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க உயர்ந்த கோட்டைகளையும் கட்டிக்கொண்டார்கள். தங்கள்
எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பெரிய பெரிய கட்டிடங்களையும் அரண்மணைகளையும் கட்டிக்கொண்டார்கள். அந்த அக்கிரமகாரர்களுக்கு புத்தி சொல்ல யாரும்
இல்லை. புத்தி சொன்னவர் கொல்லப்பட்டனர்.
       இந்த நிலையில் கடவுள் இந்த மனிதர்களை அழிக்க சித்தம் கொண்டார். இத்தகைய மனிதர்களிலும் நல்லவர் யாவரும் உண்டோ எனத்தேடினார். அவர் பார்வையில் ஏனோக்கின்   வம்சாவளியில் வந்த நோவா என்னும் மனிதர் தென்பட்டார். நோவா பார்த்துக்கொண்டிருகும்போதே ஒரு மேகத்தில் கடவுள் மனித உருவத்தில் அவருக்குத்தோன்றினார். நோவா  கடவுள் முன் முகம் குப்புற விழுந்து வணங்கினார். கடவுள் அவரிடம் தான் இந்த அரக்க குணம் கொண்ட மனிதர்களை அழிக்க சித்தம் கொண்டுள்ளதாகவும் பெரும் ஜலப்பிரளயம்  கொண்டு இந்த மிலேச்சர்களை அழிக்க விரும்புவதாகவும் அதனால் இந்த அபாயத்திலிருந்து நல்ல உள்ளம் கொண்ட மக்களை காக்கும்படிக்கு ஒரு பெரும் கப்பல் ஒன்று   செய்யும்படியும் குறிப்பிட்ட நாளில் தான் படைத்த எல்லாப்படைப்புகளையும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் சிலரையும் கப்பலில் ஏற்றி காப்பாற்றும்படியும் கூறினார்.
இதைகேட்ட நோவா மிகவும் மனம் வருந்தினார். அந்த பாவிகளான மக்களுக்காக அவர்களை மன்னிக்கும்படியும் மன்றாடினார். அவர் கடவுள் எப்படியும் இந்த மக்களை மன்னிப்பார்  என்ற நம்பிக்கையில் உடனே கப்பல் கட்ட ஆரம்பிக்கவில்லை. கடவுள் இரண்டாம்தடவையும் அவரை எச்சரித்தார். அப்போதும் நோவா காலம் தாழ்த்தினார். ஆனால் கடவுள் மூன்றாம்
தடவையும் எச்சரிக்கவே நோவா சுதாரித்துக்கொண்டு கப்பல் கட்டும் வேலையை ஆரம்பித்தார். இதற்காக அவர் தன் இருப்பிடத்தை சோரோஸ்ற்றும் என்னும் இடத்திற்கு   குடிபெயர்ந்தார்.அது ஒரு உயர்ந்த மலைமீது இருந்தது. கீழே பள்ளத்தாக்கில் ஊர் இருந்தது. கடவுளின் மூன்று முறை எக்சரிக்கைக்கும் இடைவெளியாக முப்பது ஆண்டுகள் கடந்து
விட்டதால் நோவே சேம், காம், எப்பேத்து என்னும் தன் மூன்று மக்களுடனும் கப்பல் கட்டும் வேலையை ஆரம்பித்துவிட்டார். அவர் ஏன் இப்படியோரு கப்பல் கட்டும் வேலையை  ஆரம்பித்துவிட்டார் என்று உள்ளூர் மக்கள் யாவருக்கும் தெரியாது. எனவே அந்த மிலேச்சர்கள் அவர்களை அடிக்கடி கிண்டலும் கேலியும் நையாண்டியும் செய்து சமயங்களில்  நையப்புடைத்தும் மகிழ்ந்தனர். கப்பல் கீழ்தலம் நடுத்தலம் மற்றும் மேல் தலம் என்று உயர்ந்துகொண்டே வந்தது.
       அப்போது ஒருநாள் மூன்று தேவர்கள் நோவாவை சந்திக்க வந்தார்கள். அவர்கள் நோவாவிடம் ஒரு பெட்டியைக்கொடுத்து அதை இந்த கப்பலில் பத்திரமாக வைக்கும்படி கூறி  மறைந்து போனார்கள் [மிகவும்பிற்காலத்தில் இந்த மூன்று தேவர்களும் மீண்டும் இந்த பூமியில் வந்து அபிரகாமை சந்தித்தனர்] நோவா அந்த பெட்டியைதிறந்துபார்த்தார். அதில்
ஒரு திராட்ச்சைக்கொத்துடன்கூடிய ஒரு கிளை ஒரு ஆப்பில் பழத்தில் செருகி வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு அழகிய கிண்ணம் தங்க நிறத்தில் பீடம் ஏதும் இல்லாமல் இரண்டு  கைப்பிடியுடனும் இருந்தது. அதில் ஒரு புறத்தில் படமெடுத்தாடும் ஒரு நாகப்பாம்பின் உருவமும் மறு புறத்தில் திராட்சைகணிகள் கொத்தாகவும் படம் வரையப்பட்டிருந்தன.
      நோவாவுக்கு அப்போது அந்த படங்களின் அர்த்தம் விளங்கவில்லை. மேலும் அந்தக்கிண்ணம் என்ன உலோகம் என்றும் தெரியவில்லை. மேலும் சிறிய அளவிலான் மூடியுடன் கூடிய  மூன்று தங்க சிமிழ்களும் இருந்தன. நோவே இவை யாவையும் மிகவும் பாதுகாபாக தன் வசம் வைத்துக்கொண்டார்.
       கடவுள் கட்டளையிட்டபடியே ஒரு கப்பல் கட்டும்பணியை மேற்கொண்ட நோவா முப்பது ஆண்டுகளாக அதர்க்கான தயாரிப்புகளை மேற்கொண்டார். மேலும் மூன்று   ஆண்டுகளில் அந்தப்பணியை முடித்தார்.இவ்விதமாகவே யேசுநாதரும் தன் வேதபோதக பணியை ஆரம்பிக்க முப்பது ஆண்டுகளாக தன்னை தயாரித்துக்கொண்டு மேலும் மூன்று  ஆண்டுகளில் தன் மீட்ப்புபணியை முடித்தார்.
         கப்பல் நல்லவிதமாக கட்டிமுடிக்கப்பட்டதும் நோவா நன்றிபலி ஒப்புகொடுத்தார். கடவுள் அவருக்குத்தோன்றி உலகின் நான்கு திசைகளின் சார்பாகவும் வடக்கு, தெற்கு,  கிழக்கு மேற்க்கு திசைகளிலிருந்தும் நடப்பன பறப்பன ஊர்வன போன்ற அனைத்து படைப்புகளின் மாதிரியாக ஆணும் பெண்னுமாக இரண்டிரண்டு ஜோடியாக குழலூதி அழைத்து
வரச்செய்தார், மிகவும் பெரிதான யானை, காண்டாமிருகம், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி போன்றவை கப்பலின் கீழ்பகுதியிலும் வனவிலங்குகளும் வீட்டு விலங்குகளும் தனிதனியே  பிரிக்கப்பட்டு நடுத்தலத்திலும் பாரமற்ற பறவைகள் போன்றவை மேல் தலத்திலும் வைக்கப்பட்டன.
    நோவாவின் மகன்களில் ஒருவன் எப்பொத்து. இவன் மகன் மோசொக்கு. இவனுக்கு தவறான வழியில் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் ஹோம். இவனுக்கும் இவன்  சுற்றத்தாருக்கும் பெருவெள்ளத்தால் ஏற்படும் அழிவை நினைத்த மோசோக்கு தன் ஒரு சகோதரனான துபாலிடம் தன் தவறை சொல்லி தன்னையும் தன் மகன் ஹோமையும்   தன் தகப்பன் நோவா சபிக்கமலும் கப்பலில் அனுமதிக்கும்படியும் பரிந்துறைக்க மிகவும் அழுது கேட்டுக்கொண்டான். துபாலும் தன் தந்தையிடம் எப்படியோ நயந்து பேசி ஹோம் தன்   மகன் என்று பொய் சொல்லி எப்படியோ நிலைமையை சமாளித்துக்கொண்டான். இப்படியாக புறவினத்தானாகா ஹோமும் கப்பலில் நுழைந்தான். அவனுக்கும் பலருக்கும் பால்  குடிக்கும்படியாக அக்காலத்தில் விளைந்துவந்த ஒருவிதமான விஷச்செடியும் கப்பலில் இடம்பெற்றது.     இவ்விதமாக அமுதும் விஷமும் ஒரே மன்னில் என்பதுபோல அந்த மூன்று
தேவர்கள் கொண்டுவந்திருந்த அமுதத்திற்கு ஒப்பான திராட்சைக்கொடியும் விஷத்திற்கொப்பான பால் கொடியும் இந்த பூமியில் வளரவேண்டி அந்தக்கப்பலில் சேர்ந்துகொண்டன.
       நோவாவின் மக்கள் மூன்று பேரும் அவர்தம் மக்கள் மூன்று பேரும் நோவாவின் மனைவியும் ஆக எட்டுபேர் மட்டுமே கப்பலில் அனுமதிக்கப்பட்டதாக புதிய ஏற்பாட்டில் இராயப்பரின்  மடலில் வாசிக்கலாம். ஆனால் தூளியில் போடப்பட்ட குழந்தைகள் முதல் என்பத்துஐந்து வயதுடையவர்கள் வரை மொத்தம் நூறு பேருக்கும் குறையாமல் அந்த கப்பலில் இருந்ததை   தன் திருக்காட்சியில் கடவுள் தனக்கு வெளிப்படுத்தியதாக சகோதரி காத்தரின் எம்மரிக் கூறுகின்றார்.
குறிபிட்ட நாளில் கடவுள் கப்பலின் அனைத்து வாயில்களையும் அடைக்க கட்டளையிட்டார். பிறகு நிகழ்ந்தது அந்த பயங்கரம்.வானத்தின் அனைத்து சத்துவங்களும்   அசைக்கப்பட்டன. பூமி கிடுகிடுத்தது. பாதாளத்தின் வாயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வானத்தில் இடி முழக்கம்   கேட்டுக்கொண்டே இருந்தது. கப்பலில் இருந்த வனவிலங்குகள் பயத்தால் பிளிறிக்கொண்டும் அலறிக்கொண்டும் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டன.
        அதுவரை நோவாவை பழித்துவந்தவர்கள் பயத்தால் நடுங்கினர். கொடுமையான மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கும் ஓடவும் முடியாது. எங்கும் ஒளியவும் முடியாது. கடவுளின்  தண்டனைத்தீர்ப்பு தங்கள் தலைமேல் பயங்கரமாக இறங்கியதை பாவிகள் உணர்ந்தார்கள். ஆனால் காலம் கடந்துவிட்டது. ஓடு.... ஓடு... மலைமேல் ஏறிப்போ என்னும் கூக்குரல்
பலர் வாயினின்று வந்தது. ஆனால் முடியவில்லை. அந்த கருங்கடல் நீரால் நிறம்பி வினாடிக்கு வினாடி உயர்ந்துகொண்டே அந்தது. மேலும் பலத்த அலை மேலெழுந்து கரை ஓரம்  தென்பட்ட யாவரையும் தன்னுள் இழுத்துப்போட்டுக்கொண்டது. பூலோகம் முழுவதும் கரும் மழைமேகத்தால் மூடிக்கொண்டதால் நடப்பது பகலா இரவா என்று அறியவே முடியாமற்
போனது. பளீர் பளீர் ர்ன்று அடித்த மின்னல்களின் ஒளி வெள்ளத்தில் கரைபுறண்டு ஓடும் வெள்ளப்பெருக்கில் அடியோடு சாய்ந்துவிழும் வானுயர்ந்த கட்டிடங்களும் கோட்டைகளும்  பொய்த்தேவர்களுக்கு எழுப்பிய கோயில்களும் தூள் தூளாகி பெருவெள்ளத்தில் கறைந்து போனது. ஆனால் இந்த நிகழ்வுகளைப்பர்க்க மனிதர்கள் யாவரும் உயிரோடு இருந்திருக்க
வாய்ப்பே இருந்திருக்க முடியாது. ஓயாமல் நிற்காமல் மழை நாற்பது இரவும் பகலும் பெய்துகொண்டே இருந்தது.
       ஒருவழியக கடவுள் வெள்ளப்பெருக்கை நிறுத்தினார். தரை காய்ந்ததும் கடவுளின் ஆணைகிடைத்து நோவாவும் அவர் மக்களும் கப்பலினின்று வெளியே வந்தனர். கடவுள்  மீண்டும் இந்த உலகை ஜலப்பிரளயத்தால் அழிப்பதில்லை என்று உறுதிகொடுத்து அதற்கு சாட்சியாக வானவில்லை ஏற்படுத்தினார். மீண்டும் உலகில் உயிர்கள் தோன்றின.
பயிர்பச்சைகள் செடி கொடிகள் மரங்கள் எல்லாம் செழித்துவளர்ந்து நல்லபலன் கொடுத்தன. தேவர்கள் மூவர் கொண்டுவந்துகொடுத்த திராட்சை செடியும் ஆப்பிளும் பலன்   கொடுத்தன.ஒருநாள் நோவா திராட்சை சாறு அதிகமாய் குடித்து தன் நிலை இழந்தான். இடுப்புத்துணி விலகியதுகூடத்தெரியாமல் போதையில் கிடந்தான். இதைக்கண்ட
அவர்மகன் காம் சற்றே நகைத்து தன் சகோதரர்களிடம் தன் தகப்பன் நிலைபற்றி கூறினான். அவர்கள் சேமும் எப்பொத்தும் தன் தகப்பனின் நிர்வானத்தை பார்க்காதபடிக்குவந்து   அவனை ஒரு போர்வையால் மூடினர்.
     போதை தெளிந்து எழுந்த நோவா நடந்தது அறிந்து கடும் சினம் கொண்டான். தன் நிர்வானத்தை கண்டு சிரித்த காமை கடுமையாக சபித்தான். தன் மற்ற சகோதரர்களுக்கு  காம் அடிமையாக சேவகம் செய்யவேண்டும் எனவும் அவர்கள் உறவினர்களோடு உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் கட்டளை இட்டான் இந்த சாபம் கடும் உஷ்ணமாக காம்  மீது இறங்கியது. அந்த உஷ்ணத்தால் அவன் முகம் கருகியது. நாளடைவில் முகத்திலிருந்த கருமை அவன் தேகம் முழுதும் பரவியது. அவன் முழுக்க முழுக்க கருமை நிறத்தவன்
ஆனான். நாளடைவில் அவன் சந்ததியினர் அனைவரும் கருமை நிறம் அடைந்தனர். இவ்விதமாகத்தான் உலகில் கருமை நிறமக்கள் தோண்றினர்.    உண்மையில் கடவுள் கருமை  நிறத்தில் எந்த மக்களையும் படைக்கவே இல்லை.
       நோவாவிடமிருந்த அந்த தேவர்கள் கொடுத்த கோப்பை அவர் இறந்ததும் அவர் மகன் சேம் வசம் வந்தது. சேம் வழியாக தந்தை ஆபிரகாம் வசம் வந்தது. அவரிடமிருந்தது   ஈசாக்கு வசம் வந்தது. அவரிடமிருந்து யாக்கோபு வசம் வந்தது. அவரிடமிருந்து அவர் மகன் யோசேப்பு வசம் வந்தது. பிறகு பலகாலம் கழித்து எருசலேம் கோயிலில் உடன்படிக்கைப் பேழையில் வந்தது. ஒருசம்மனசானவர் அதில் தேவ அமுதம் ஊற்றி தேவ தாயாராரின் தகப்பனாகிய சுவக்கீனுக்கு கொடுத்தார். அதில் பானம் பன்னியவர்கள் இதற்கு முன் தந்தை   அபிரகாம் மட்டுமே. அடுத்ததாக சுவக்கீன். அவருக்குப்பிறகு அவரது மகள் மேரியின் மகன் யேசுநாதர் மட்டுமே. யேசுநாதர் தன்னுடைய இராப்போஜனத்தின் போது   இந்த கோப்பையில் தான் திராட்சைப்பழ இரசத்தை தன் இரத்தமாக மாற்றினார். இந்தக்கோப்பை எருசலேம் தேவாலயத்திலிருந்து காணாமல் போய் பழம் பொருள் கடைக்குப்போனது.
இதைகண்ட அரிமத்தியா ஊராராகிய சூசைக்கண்டு அதை வாங்கி செராபீஸ் [பிற்காலத்தில் வெரோணிக்கா] என்னும் பெண்வசம் கொடுத்துவைத்திருந்தார். இவர் யேசுநாதருக்கு  மிகவும் நெருங்கிய உறவுக்காரி. பெரிய வியாழன் அன்று யேசுநாதருடன் இராப்போஜனம் தயாரிக்கும் பணியில் இவளும் இருந்ததால் இவள்வசம் இருந்த இந்தகோப்பையில் தான்  யேசுநாதர் திராட்சை இரசத்தை தன் இரத்தமாக மாற்றினார்.
           இராப்போஜனகுப்பியில் வரையப்பட்டிருந்த பாம்பு சாத்தானைக்குறிப்பதாகும். அவனது சோதனையால் தோற்றுப்போன ஆதாம் ஏவாள் செய்தபாவதோஷம் என்னும் விஷத்தை  முறிக்க யேசுநாதரின் இரத்தத்தால் மட்டுமே முடியும். எனவேதான் யேசுநாதர் திராட்சை இரசத்தை தன் ரத்தமாக இராப்போஜனத்தில் மாற்றினார். யேசுநாதர் திராட்சைக்கொடியின்   உவமையை சொன்ன இடமும் இங்குதான்."நானே திராட்சைச்செடி...நீங்கள் அதன் கொடிகள்...ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தல் அவர் மிகுந்த கனி தருவார்..என்னைவிட்டுப்பிறிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற பிரசங்கமும் இந்த இடத்திலையே நடந்தது. இந்த மஹாலில் பிற்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும்  என்று தெரிந்துதானோ என்னவோ தாவீது ராஜா இந்த மஹாலில் தூண்களின் இணைப்புகளில் திராட்சை செடிகளும் கொடிகளும் கொத்துக்கொத்தாய் பழங்களுமாய் இருக்கும்படியான
புடைப்பு சிற்பங்களை ஏற்படுத்திவைத்தார்.  இந்த மஹாலில் தான் தாவீது ராஜா உடன்படிக்கைபேழையை நெடுங்காலம் வைத்திருந்தார். இந்த மஹாலில் தான் தாவீது ராஜாவின்   சமாதியும் இருக்கின்றது. இந்த மஹாலின் மேல் மாடியில் தான் யேசுவின் உயிர்புக்குப்பிறகு பரிசுத்த ஆவியார் தேவ மாதாவின் மீதும் அப்போஸ்தலர்கள் மீதும் இறங்கி வந்தார்.
இத்தனை பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றது யேசுவின் இராப்போஜன மஹால். இதுதான் கடவுளின் சித்தம். இதை நிறை வேற்றவே அன்று நோவாவிடம் அந்த மூன்று   தேவ தூதர்களும் அந்த இரசக்குப்பியையும் திராட்சைக்கொடியையும் ஒப்படைத்தனர். யாவும் முன் குறிக்கப்பட்டவையே. முன் குறிக்கப்பட்டபடியே நடக்கவும் செய்யப்பட்டது.    இந்த இராப்போஜனத்திற்குப்பிறகு இந்த இரசக்குப்பி மீண்டும் காணாமல் போய்விட்டது. இராப்போஜனத்திற்கு இரண்டு அப்போஸ்த்தலர்களுக்கு ஒன்று வீதம் ஆறு இரசக்குப்பிகளும்   யேசுநாதருக்கு மட்டும் மேற்படி கூறப்பட்ட இரஸக்குப்பியும் பயன்படுத்தப்பட்டன. ஆறில் ஒரு இரசக்குப்பி தற்போது ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவில் உள்ள தேவாலயத்தில்
உள்ளது. மற்றவைபற்றி எனக்கு இன்னும் தெரியவில்லை.
    இந்த பெருவெள்ளம்பற்றிபழங்கால சுமேரியர்களின் கலை இலக்கியமான கில் காமேஷ் இவ்வாறு விவரிக்கிறது. அதாவது, என்லில் என்னும் கடவுள் இந்த உலக மக்களை  பூமியின் முகத்தினின்று அழிக்க விரும்புவதாகவும் இதை அறிந்துகொண்ட எங்கி என்னும் நல்ல கடவுள் அற்றஹாசிஸ் என்னும் சுமேர்ிய அரசினிடம் வரப்போகும்   பெருவெள்ளத்திலிருந்து அவனும் அவன் குடும்பத்தாரும் மற்றும் சகல ஜீவராசிகளுடனும் தப்பித்துச்செல்ல ஒரு பெரும் கப்பல் கட்டி அதில் தப்பிச்செல்ல உபாயம் சொன்னதாகவும்
அவ்வாறே அவர்கள் தப்பியதாகவும் கூறுகிறது. இந்த சரித்திரம் பற்றி நிப்பர் என்னும் பழங்கால ஆப்பு வடிவ எழுத்துகள் கொண்ட மண் பலகைகள் மூலம் அறியலாம். இந்த ஆப்பு வடிவ  எழுத்துக்கள் கொண்ட மண் படிவங்களின் காலம் சுமார் கி. மு. 1650.
           இந்த பெருவெள்ளம் பற்றி விஞ்ஞானம் கூறுவது என்ன?.
   சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன் நோவா காலத்திய மக்கள் கருங்கடல் பகுதியில்தான் வாழ்ந்துவந்தார்கள். அக்காலத்தில் கருங்கடல் நல்ல நீர் ஏரியாகத்தான் இருந்தது.   இயற்கையின் சீற்றத்தால் வடதுருவத்திலுள்ள பனிமலைகள் உருகவே உலகின் பெரும் சமுத்திரங்கள் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் மத்தியதரைக்கடலின் நீர்மட்டமும் உயர்ந்தது.
தயவு செய்து வரைபடத்தைப்பார்க்கவும்.துருக்கியையும் பல்கேரியாவையும் ஒரு குறுகிய நிலப்பரப்பு ஒரு ஜலசந்தி வழியே இணைக்கிறது. போஸ்போருஸ் என்ற தடுப்புப்பாறை அக்கால  கருங்கடல் ஏரியை பிரிக்கிறது. மத்தியதரைக்கடலின் அதிகரித்துவரும் நீர்மட்டத்தை தாக்குபிடிக்காத ஏஜியன் கடல் மர்மாரா கடலை வேகமாக நிரப்பியது. அந்த அழுத்தத்தை  தாக்குப்பிடிக்க முடியாத போஸ்போருஸ் தடுப்புப்பாறைகள் உடைந்ததால் அத்தனை வெள்ளமும் கருங்கடல் ஏரியை மிகவும் வேகமாக நிரப்பியது. இதன் வேகமும் தாக்கமும் எவ்வளவு   என்றால் நயாகரா நீர் வீழ்ச்சியைப்போல் 200 மடங்கு. இதனால் நல்ல நீர் ஏரியான கருங்கடல் ஏரி உப்பு நீர்க்கடலாக மாறியது. திடுதிப்பென ஏரி கடலானதால் ஏற்பட்ட பாதிப்பு எப்படி   இருக்கும் என்று நேயர்கள் உண்ர்ந்து கொள்ளலாம்.
     இந்த நோவா பயன் படுத்திய கப்பலை தற்போது கண்டுபிடுத்துள்ளதாக இன்டெர்னெட்டில் ஒரு விடியோ காட்சி விவரிக்கிறது. துருக்கியிலுள்ள அராரத் என்னும் பனிமலையில்  சுமார் 12000 அடி உயரத்தில் மரத்தால் ஆன ஒரு வீடு போன்ற அல்லது தெப்பம் போன்ற ஒன்றைக்கண்டு பிடித்துள்ளதாகவும் அதில் பல அறைகள் உள்ளதாகவும் அவர்கள்
பயன்படுத்திய தானியங்கள்கூட இன்னும் இருப்பதாககாட்டுகிறார்கள். இது 100% நிச்சயமாக நோவாவின் கப்பலே அன்றி வேறு ஏதாகவும் இங்கு இருக்க வாய்ப்புஇல்லை என்றும்

கூறுகிறார்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட சீன வேதபோதகர்கள்.