Sunday, August 19, 2018

“ சாட்சி சொன்ன சேவல்கள்.”


                   “ சாட்சி சொன்ன சேவல்கள்.” 

  

   அந்த மாலைப்பொழுது…சூரியன் மறைந்த நேரம்… முக்காடிட்ட இரண்டு பெண்கள் தங்கள் கண்களில் கண்ணீரை தேக்கிபடி யாரையோ சந்திக்கவேண்டிய அவசரத்தில் ஜெருசலேம் தேவாலயத்தை நோக்கி செல்லும் சாலையில் பயணிப்பதாக தெரிகிறது. அப்போது தேவாலயத்தில் இயேசுநாதர் தன்னுடைய புகழ்பெற்ற பிரசங்கத்தை முடிக்கும் நிலையில் இருந்தார்.” நானே ஒளியும் வழியும் சத்தியமுமாக இருகின்றேன். என்னை பின் செல்பவன் இருளில் நடவான். உயிரில் ஒளியை கொண்டிருப்பான். உங்கள் உயிர் வாழ ஜீவிய தண்ணீர் என்னிடம் உள்ளது. இந்த  தண்ணீரை குடிப்பவனுக்கு தாகம்  என்பதே இராது.” என்பது போன்ற பிரசங்கத்தை அவர் அப்போதுதான் முடித்திருந்தார். யேசுநாதரின் பிரசங்கம் முடித்த உடனே கூட்டம் கலைந்தது. அதைத்தொடர்ந்து யேசுநாதரும் ஜெருசலேம் வீதிகளில் நடக்கத்துவங்கினார். அப்போது மேற்சொன்ன இரண்டு பெண்களும் யேசுநாதரின் பாதம் பணிந்து,” போதகரே.. எங்கள் மேல் இரக்கம் வையும்.வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் இருந்தே வருகின்றன.என்பதை நாங்கள் நம்புகிறோம் விசுவாசிகிறோம்.” என்றனர். ” பெண்களே ..உங்களுக்கு சமாதானம். உங்களுக்கு என்ன வேண்டும்..நீங்கள் யார்…தயவுசெய்து  எழுந்திரியுங்கள் ” என்றார் இயேசுநாதர் கனிவோடு.  ஆண்டவரே, நீர் யாராக இருகின்றீர் என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம். எங்களை விட  எங்கள் கணவர்கள் நீர் யார் என்பதை மிகவும் நன்றாகவே அறிவார்கள். அவர்களை தேவரீர் பெரிய மனது வைத்து மன்னித்தேன் என்று ஒரு வார்த்தை சொல்லும்வரை நாங்கள் உம் பாதத்தைவிட்டு எழுந்திரிக்கப் போவதில்லை “ என்று அவரது பாதங்கள் முத்தி செய்தனர். எனக்கு நினைவு தெரிந்து நீங்கள் எந்த தவறும் செய்ததாக எனக்கு தோன்றவில்லை. ஆயினும் முதலில்  எழுந்திரியுங்கள்” என்று அவர்களை தேற்றி எழச்செய்தார். பின்னர் “ இப்போது சொல்லுங்கள்.நீங்கள் யார்?. உங்கள் கணவர் யார் யார்?” என்றார்.
  “ போதகரே. இந்த ஜெருசலேமில் இஸ்ரயேல் குலத்தில் பிறந்த பாவப்பட்ட பெண் ஜென்மங்கள் நாங்கள். கடவுள் ஏன் எங்களுக்கு இப்பேர்பட்ட ஒரு ஜென்மத்தை கொடுத்தார். எங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட கணவர்களை கொடுத்தார் என்று நாங்கள் மிகவும் மனமொடிந்து போய் இருகிறோம். எங்களுக்கு இந்த உலக வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டது. நாங்கள் நரகத்துக்கு பாத்திரவான்கள் ஆகிவிட்டோம்.என்று நினைக்கும்போது நாங்கள் பிறவாதிருந்தாலே நலமாயிருந்திருக்கும் என்று நினைக்க தோன்றுகின்றது.” என்று அழுதனர். “ பெண்களே. முதலில் நீங்கள் அழுவதை நிறுத்துங்கள். உங்கள் துன்பதிற்கு காரணம் என்ன.? யார்/ யார்? என்றார். “ ஆண்டவரே.. எங்கள் துன்பதிற்கு காரணம் எங்கள் கணவரே? என்றனர். “ சரி அவர்களைப்பற்றி சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு செய்த துன்பம் என்ன?.“ என்றார்.
    “ பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் “
இருவருள் ஒருத்தி பேச ஆரம்பித்தாள். ஆண்டவன் அருளில் எங்களுக்கு எந்த குறையும் இல்லை. போதும் போதும் என்னும் அளவுக்கு வீடுகளும் நிலங்களும் பழத்தோட்டங்களும் நகைளும் பணமுமாக எந்த விதமான செல்வங்களும் எங்களுக்கு குறைவில்லாமல் இருந்தன. எனக்கு மணமுடிக்கும் வயது வந்ததும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் என் தந்தை. அதற்கேற்றபடி நல்ல அழகும், சிவந்த நிறமும், இந்த தேவாலயத்தில் ஒரு பொறுப்பில் இருந்த ஒரு கணவான் என்னை பெண் பார்க்க வந்திருந்தார். அவரைப்பார்த்த மாத்திரத்தில் எனக்கு அவரை மிகவும் பிடித்துப்போயிற்று. அவருக்கும் என்னை பிடித்துப்போயிற்று. ஒரு நல்ல நாளில் எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் திருமண வாழ்க்கை கொஞ்ச நாட்க்களாக நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் சில காலங்களிலேயே அவருடைய சுய ரூபம் வெளிப்பட்டது. என் கணவர் ஒரு பெண் பித்தர் என்பதும் பெரும் பணப்பசி கொண்டவர் என்றும் பணத்திற்காகவே அவர் என்னை திருமணம் செய்துகொண்டார் என்பதும்  பாழும் பணத்திற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்றும் எனக்கு போகப்போக புறிந்தது. அப்போது கூட நான் அவரை நேசித்தேன். வாலிபத்தில் எல்லா ஆண்களின் குணமும் அப்படித்தான் இருக்கும்.  போகப்போக எல்லாம் சரி ஆகிவிடும்  என்று  எனக்கு  நான் சமாதானம் சொல்லிக்கொண்டேன். ஏரோதின் வைப்பாட்டி ஆக்ளே என்னும் வெளிநாட்டு விபச்சாரியிடம் தவறாக நடக்கப்போய் அவளிடம் மானம் மரியாதையை இழந்தது பற்றி நான் அறிய வந்தபோது என் மானமே பறிபோய்விட்டது. ஆனாலும் தேவாலயத்தில் ஒரு பதவியில் இருப்பவர் இறைமக்களால் மதிக்கப்படவேண்டியவர் இவ்வளவு தூரம் தாழ்ந்த கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பாக அவர் ஒரு பெண்ணை விரும்பி அது திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு அவரால் நிறுத்தப்பட்டுவிட்டது. அவள் ஏழையாக இருந்தாள் என்னும் ஒரே காரணத்திற்காக அவளை அவர் நிராகரித்தார். இத்தனைக்கும் அந்தப்பெண் ஜோஹான்னாவின் தாயார் அன்னாவும் இவருடைய தாயார் சீமோனின் மேரியும் பால்ய சினேகிதிகள். இருவருடைய சம்மதத்தின் பேரிலும் தான் அந்த நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் தடைபட்டதால் அந்த மணப்பென் ஜோஹன்னா மனம் உடைந்தாள். அது கடைசியில் அவளது உயிரைப்பறித்தது.  தன்னால் ஒரு அப்பாவி ஏழைப்பெண் வாழ்விழந்ததை பற்றியோ அவள் இன்னுயிர் பறிபோனதை பற்றியோ எதைப்பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் இந்த சம்பவத்தை மறைத்தே என்னை திருமணம் செய்துகொண்டார்.” என்றாள் அந்தப்பெண்.
“ சரி .முடிந்துபோனதைப்பற்றி இப்போது பேசி என்னவாகப்போகின்றது. திருமணம் என்பது அவரவர் விருப்பு வெறுப்பைப்பொறுத்தது. ஆனாலும் உன் கணவர் செய்தது முற்றிலும் தவறான காரியம்தான். மேற்கொண்டு என்ன ஆயிற்று.? அவர் உன்னை எவ்விதத்திலாவது கொடுமை படுத்தினாறா?”
“ போதகரே… அவர் செய்யும் அனைத்து காரியங்களும் என்னை பயமுறுத்துகின்றன. என்னால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. ஆனாலும் அவர் என் கணவர். அவரை நான் என் மனசாட்சிப்படி மிகவும் நேசிக்கிறேன். அவர் எனக்கு செய்த துரோகங்களை நான் மன்னிக்கிறேன். ஆனால் அவர் உமக்கு செய்யும் துரோகங்களைத்தான் என்னால் மன்னிக்க முடியவில்லை. அவர் தேவதுரோகம் செய்கின்றார். அவர் உம்மை கொல்ல தேடுகின்றவர்களுக்கு துணைபோகின்றார் என்று நான் தெரிந்துகொண்டேன். இதைப்பற்றி நான் அவரிடம் கேட்டால் அவர் என்மீது மிகவும் கோபம் கொள்கின்றார். எங்கே என் கணவர் தேவ சாபதிற்கு ஆளாகிவிடுவாரோ என்று நான் அஞ்சுகிறேன்.” என்றாள் அவள்.
  “ பெண்ணே . என்னை கொல்லத்தேடுபவர்கள் பலர் என்று நான் அறிவேன்.   உன் கணவரைப்பற்றிய உன் குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா.? கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்ப்பதும் பொய் என்பது நீ அறியாததா? வெறும் வாய் வார்த்தைகள் …ஹேஸ்யங்கள் எதுவும் சபையில் நிற்காது. சாட்சியங்கள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.. ஆனாலும் என்னை கொல்லத்துணியும் சதியில் உன் கணவனும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவன் யார் என்று அறிய நான் ஆசிகிறேன். உன் கணவணைப்பற்றி சொல்லு” என்றார் இயேசுநாதர்.
“ போதகரே..என் கணவர் உமக்கு மிகவும் பரிச்சயமானவர்தான். அதோ .அங்கே தூரத்தில் தெரிகின்றாரே அவர்தான்” என்று ஒருவனை சுட்டிக்காட்டினாள். அவள். அங்கே இவர்களைப்பற்றி கவனியாமல் தனியே போய்க்கொண்டிருந்தான் அவள் கணவன் யூதாஸ். “ ஓ… இவன்தான் உன் கணவனா?. நான் அப்போதே நினைத்தேன் “ என்றார். இயேசுநாதர். பிறகு அடுத்தவளைப்பார்த்து,” பெண்னே உன்னைப்பற்றி சொல்லு” என்றார்.
   “ நசரரேத்தூர் இயேசுவே…நானும் வசதியான ஒரு உயர்குலத்தில் பிறந்தவள்தான். என்னைப்போல் ஒரு துரதிஸ்ட்டம் பிடித்த பெண் இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது.” என்று ஆரம்பித்தாள் அவள்.   “ஏன்.. உனக்கென்ன அவ்வளவு துன்பம்” “ ஆண்டவரே நான் ஒரு கேடுகெட்ட பிறவி. என் பிறப்பைக்கண்டு நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்.” என் தகப்பன் ஒரு கொலைகாரன். என் கணவனும் ஒரு கொலைகாரன்.” என்று கூறி மிகவும் அழுதாள். இப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு சமுதாயத்தில் என்ன மரியாதை இருக்கப்போகிறது? என்றாள் அவள்.
“ பெண்ணே.. நீ ஒரு கொலைகார குடும்பத்திலிருந்தா வந்திருக்கின்றாய். உன் நிலை கண்டு நான் மிகவும் பரிதாபப்படுகின்றேன். சரி.. யார் அவர்கள்.?”
“ ஆண்டவரே… என் தந்தையார்தான் அன்னாஸ் எனப்படும் மூத்த முன்னாள் தலைமை குரு. அவர்தான் உம்மை கொல்லத்தேடும் முதல் கொலைகாரன். என்கணவர் கைபாஸ்தான் இப்போதைய தலைமை குரு. இவர்தான் உம்மை கொல்லத்தேடும் இரண்டாம் கொலைகாரன். இப்போது தெரிந்ததா நான் யாரென்று?”. அவர்கள் உம்மை கொல்லத்தேடுவதற்கு உண்மையான காரணம் நீர் யாரென்று உண்மையிலேயே அவர்கள் அறிந்திருப்பது தான். நீரே உண்மையான மெசியா. நீரே இந்த உலகை மீட்க வந்திருக்கும் சர்வேசுரனின் மனிதாவதாரம் என்று மிக சத்தியமாக அவர்கள் அறிந்திருப்பதுதான் உண்மையான காரணம்..போதகரே… லாசரின் உயிர்ப்பு எப்பேர்ப்பட்டது. இறந்து நான்கு நாட்க்களாகி, அழுகி, புழு வைத்து, நாற்றமடித்து,, நாறிப்போன அந்த லாசரின் சடலத்தை ஒரே வார்த்தையில் உயிர்த்தெழவைத்த இந்த புதுமையை இந்த பரந்த உலகத்தில் எந்த மனிதனாலும், எந்த தீர்க்கதரிசியாலும் செய்ய முடியாது. கடவுள் ஒருவரால் மட்டுமே இதை செய்திருக்க முடியும். அந்த கடவுள் மனித உருவில் வந்திருக்கும் நீரே என்பதை நாங்கள் அனைவரும் முழுமனதாக விசுவாசிகிறோம். இந்த கேடுகெட்ட மனிதர்களுக்கு  உம்முடைய  கடவுளின் தன்மையை நம்பவைக்க இதைவிட பெரிய புதுமையை உம்மால் இனிமேலும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. இந்த புதுமையை நம்பாதவன் இதைவிட பெரிய புதுமை எதை நீர் செய்தாலும் அதையும் நம்பமாட்டான்.
  லாசரின் உயிர்ப்புக்குப்பிறகு மிகவும் சாதாரண இந்த பெத்தானி வாசிகள் முதல் ஜெருசலேம் வாசிகள் வரை கல்வி கற்றோர் முதல் கல்வி அறிவே இல்லாதவர் வரை நீரே மெசியா என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அனைவரும் அறிந்திருப்பதால் வேத பண்டிதர்களாக இருப்பவர்களும் வேத பாடங்களையும் தீர்க்க தரிசனங்களையும் கரைத்து குடித்தவர்களூமான என் தந்தைக்கும் என் கணவருக்கும் இது தெரியாமலா இருக்கும்?. எங்கே உம்மை  மெசியாவாக ஏற்றுக்கொண்டால் . தங்கள் கௌரவம் பாதிக்கப்படும் தங்கள் வருமானம் வீழ்ந்துவிடும். தங்களைக்கண்டால் தரைமட்டும்க் தாழ்ந்து பணியும் மரியாதை இனி கிடைக்காது என்பன போன்ற காரணங்களால் அவர்கள் உம்மை எதிர்கிறார்கள்.தாங்களே உண்மையான இஸ்ராயேல் கடவுளின் வழிவந்த பிதாப்பிதாக்கள், யூத குலத்தை காக்கவந்த மெய்காவலர்கள் எனறு மார்தட்டிக்கொள்கின்றார்கள்.
 தேவரீர் லாசரை உயிர்பித்திருந்திருக்கவே கூடாது. அதனால் நீர் உம் உயிருக்கு இவ்வளவு விரைவில் உலை வைத்துக்கொண்டீர்…இப்போது என் நிலை புறிகிறதா உமக்கு. பாவி நான் என்ன செய்வேன் சுவாமி. நான் என் பெற்றொர் மீது கொண்ட பாசத்தாலும் என் கணவர் மீது கொண்ட பாசத்தாலும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறேன். தேவரீர் அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன். தேவனின் கோபமும் சாபமும் பொல்லாதது..மிகவும் கொடுமையானது இந்த தேவ கோபமும் சாபமும் என் கணவர் மீதும் என் தந்தையார் மீதும் கொடுமையாய் இறங்கும் ” என்றாள் அவள்.
“ பெண்னே..உன் நிலை மிகவும் பரிதாபமானது. நான் உன்மீது மிகவும் இரக்கமுள்ளவராக இருகின்றேன். உன் கணவர் மற்றும் உன் தந்தையார் மீது சுமத்தப்படும் தேவ கோபம் உன்மீது இறங்காது. உண்மை எதுவென தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ளாதவர் பொய்க்கு தூப ஆராதணை காட்டுகின்றனர். பொய்யிலே நிலைத்திருக்கவே விரும்புகின்றனர். அனைத்தையும் படைத்த கடவுள் உண்மையானவர். அவரது எதிரி சாத்தான் பொய்யன். .உண்மையை வெறுத்து பொய்யை ஆசிப்பவன் கடவுளை எதிர்கிறான். பகைக்கிறான். இதுவே தேவ துரோகம். நானே உண்மையும் ஒளியும் சத்தியமும் ஜீவியமுமாய் இருகின்றேன். நான் இந்த உலகத்தில் இருக்கும் வரை நான் இரக்கமுள்ளவராகவே இருகின்றேன். அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டு என்னிடம் சரணடையட்டும். நான் என் பிதாவின் சித்தப்படியே போக வேண்டியதாக இருக்கின்றது. நீ அவர்களுக்காக பரம பிதாவிடம் வேண்டிக்கோள். கடவுளின் சுபாவம் கோபம்கொள்ளும் ஒரு தகப்பனைப்போன்றது. ஆனால் அவரிடம் அன்பும் இரக்கமும் அபரிமிதமாக இருகின்றது என்பதை நம்புங்கள். உங்கள் கணவரின் துரோகத்தால் நான் சிந்தப்போகும் என் இரத்தம் அவர்களையும் இரட்சிக்கட்டும். நானும் உங்களுக்காக என் பரமபிதாவிடம் ஜெபிகிறேன்..நீங்கள் இருவரும் சமாதானமாக சென்று வாருங்கள் என்று அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்.
     இதே நாள் விளக்கு வைத்தபிறகு இயேசுநாதர் ஜெத்சேமனி தோட்டத்தில் தன் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். “ இராயப்பா..இதே கெதிரோன் சாலை வழியாக ஜெருசலேமுக்கு ஒரு நாள் நான் வருவேன். இப்போதுபோல் ஒரு ஏழையாக அல்ல. பெரும் மா மன்னராக, அரச பதவியில் வீற்றிருப்பவராக, இந்த உலகை நடுத்தீர்ப்பவராக..உண்மை கடவுளாக” என்றார். பிறகு இந்த இரவிலே நான் காட்டிக் கொடுக்கப்படுவேன். ஆயனை சிதறடிப்பேன். ஆடுகள் சிதறிப்போகும் என்பது எழுதப்பட்டு உள்ளபடியே நிகழும்.உங்களில் ஒருவன் என்னை காட்டிக்கொடுக்க போகின்றான் “ என்றார். அதற்கு இராயப்பர்,” ஆண்டவரே எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும் நான் உம்மைவிட்டு போகமாட்டேன். இதில் என் உயிரே போனாலும் சரி.. நான் உம்மைவிட்டு போகவே மாட்டேன்.” என்றார். “ இராயப்பா… இந்த இரவே சாத்தான் உன்னை புடைத்தெடுக்க என் பரம தந்தையிடம் அனுமதி பெற்றுவிட்டான். நானும் உங்களுக்காக நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க என் பரம பிதாவிடம் மன்றாடுகிறேன். இந்த இரவில் இருமுறை கோழி கூவு முன்பாக நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார். அப்படியே ஆயிற்று. அந்த பெரிய வியாழன் அன்று இரவில் ஜெத்செமெனி தோட்டத்தில் யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்தான்.
  இயேசுநாதர் கைப்பாஸின் அரண்மனையில் விசாரணைக்காக காத்திருக்கையில் இராயப்பர் அங்கே என்ன நடக்கின்றது என்று காண வந்திருந்தார். அப்போது ஒருத்தி,” உன்னைப்பார்த்தால் கலிலேயன்போல் தோன்றுகிறது. நீ அந்த இயேசுவின் சீடன் தானே” என்றாள். இராயப்பர்.” இல்லை அம்மா.. அது நான் அல்ல” என்றார். இன்னொருவன்,” தோட்டத்தில் உன்னை நான் அந்த ஆளோடு காணவில்லையா” என்றான். அதற்கு இரயப்பர் ,” நீ யாரையோ பார்த்துவிட்டு அவன் நான்தான் என கூறுகின்றாய்” என்றார். இப்போது இரண்டாம் முறையாக இயேசுவை மறுதளித்தார். மீண்டும் ஒருவன்,” உண்மையிலேயே நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவன்தான். அது உன்னைப்பார்த்தாலே தெரிகின்றது,” என்றான். அப்போது இராயப்பர்,” யார் அந்த இயேசு. அவரை எனக்கு தெரியவே தெரியாது. அவர் நாசமாகப்போக “ என்று சபிக்கவும் ஆணையிடவும் செய்தார்.  அப்போது கைப்பாசின் அரண்மனை வாசலில் இருந்த ஒரு செவல் கொக்கரக்கோ என இரண்டுமுறை கூவியது. அப்போது இயேசுநாதர் இராயப்பரை பார்த்தார். அந்த பார்வை அவருக்கு ஆயிரம் கதை சொல்லியது. இன்று மாலையில்தானே நீ என்னை மும்முறை மறுதலிப்பாய். அப்போது இருமுறை கோழி கூவும் என்று சொன்னேன் என்று சொல்லியது. இதை நினைத்துப்பார்த்த இராயப்பர் இனியும் அங்கிருக்க பிடிக்காமல் தான் இயேசுவை மறுதளித்தது பற்றி மிகவும் வருந்தி அழத்துவங்கினார்..
    அன்று மாலையி;ல் இயேசுநாதரை சந்தித்து வீடு திரும்பிய யூதாசின் மனைவிக்கு அந்த இரவில் தன் கணவன் இயேசுநாதரை காட்டிக் கொடுத்தது பற்றி எதுவும் தெரியாமல் உறங்கிப்போனாள். காலையில் எழுந்து நல்ல ஒரு விடலை கோழியை சமைத்தாள்.  இயேசுநாதரை காட்டிக்கொடுத்த யூதாஸ் அவருக்கு சிலுவை சாவு கொடுக்கப்பட்டது என்று கண்டு மிகவும் மனம் உடைந்தான். தான் வாங்கியிருந்த லஞ்சப்பணத்தை தேவாலய குருக்களிடம் வீசி எறிந்துவிட்டு தன் வீடு திரும்பினான். தன் மனைவியிடம் தான் செய்த துரோகசெயல்களை கூறி தான் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை கூறினான். அவன் மனைவி அவனிடம் தான் நேற்று மாலை இயேசுநாதரை சந்திதது பற்றி கூறினாள். இயேசுநாதர் இந்த உலகத்தில் இருக்கும்வரை அவரிடம் இரக்கம் உள்ளதால் அவரிடம் சென்று மன்னிப்புகேள். நீர் அவருக்கு செய்த துரோகத்துக்கு தண்டனையாக உன் ஆத்துமா நித்தியத்துக்கும் எரி நரகத்தில் தள்ளப்படுவதைவிட இப்போதே ஆண்டவரிடம் மன்னிப்பு பெற்றுக்கொள். எனவும் இன்னும் பல சமாதான வார்த்தைகளால் தேற்றியும் அவன் இயேசுநாதரை சந்திக்க. வற்புறுத்தினாள். ஆனால் அவன் காதில் எதுவும் ஏறவில்லை. அவன் இயேசுவின் இரக்கத்தை நம்பவில்லை. அவன் இதயம் முழுவதையும் சாத்தானும் அவனது தூதர்களும் ஆக்கிரமித்திருந்தார்கள்.  இயேசுநாதர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்து தன்னை தண்டிப்பார் என்பதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு தன்னுடைய தற்கொலை பற்றிய எண்ணத்தில் உறுதியாக இருந்தான். அவனது எண்ணத்தை மாற்ற விரும்பிய அவன் மனைவி, “ இதோ பாரும்.இயேசுநாதர் மீண்டும் உயிர்க்கப்போவது உண்மைதான். அவரிடம் இரக்கம் இருப்பதும் உண்மைதான் .இந்த விஷயத்தில் நான் மிக உறுதியாக இருகின்றேன் அதற்கு ஆதாரமாக நான் சமைத்துவைத்துள்ள இந்த கோழி சாட்ச்சியம் சொல்லட்டும். ஓ…சேவலே எனக்கு சாட்ச்சியம் கூறுவாயாக… இயேசுநாதர் மேல் ஆணை” என்றாள். அப்போது அவள் சமைத்து வைத்திருந்த அந்த கோழி உயிர் பெற்று எழுந்துவந்து “ கொக்கரக்கோ “ என்று இருமுறை கூவி மறைந்து போனது.
      இதைக்கண்ட யூதாசுக்கு தலை சுற்றிப்போனது. இயேசுநாதரின் உயிர்ப்புக்கு இறந்த கோழி சாட்ச்சியம் கூறுகின்றது. அப்படியானால் இயேசுநாதரின் உயிர்ப்பும் சர்வ நிச்சயம் என்று உணர்ந்தவனாக அவரது இரக்கத்தை நம்பாமல் போய் தூக்கு போட்டுக்கொண்டு செத்தான். இந்த கதை கிரேக்க ரீதி திருச்சபையில் சொல்லப்பட்டு வருகின்றது.
    இதைப்போல இன்னும் ஒரு கதை. இது கதை அல்ல நிஜம்.
    இந்த கதை எப்போது நடந்தது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த கதை நடந்தது நிஜம் என்கின்றது இந்த ஊரில் பொறித்து வைக்கப் பட்டுள்ள ஒரு சிலுவை. மேற்கு ஐரோப்பாவில் போர்த்துக்கல் தேசம் உள்ளது. இதில் பார்சிலோஸ் என்னும் ஒரு பட்டிணத்தில்தான் இந்த சிலுவை ஊரின் நடுப்பகுதியில் நிற்கின்றது. இனி கதைக்குப்போகலாம்.
      ஸ்பெயின் தேசத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்து புனித சந்தியாகப்பரின் பக்தி பரவியது. ஸ்பெயின் தேசத்தின் பாதுகாவலராக புனித பெரிய யாகப்பர் என்றழைக்கப்பட்ட சந்தியாகப்பரின் சமாதி அமைந்துள்ள  சந்தியாகு தெ கம்போஸ்த்தலா என்னும் ஊர் பெரும் திருயாத்திரை ஸ்தலமாக கருதப்படுகின்றது.. இந்த ஊருக்கு ஐரோப்பாவிலிருந்து  அக்காலத்திலிருந்தே பெரும்பாலான கிறிஸ்த்துவர்கள் திருயாத்திரை செல்வது வழக்கம். எனவே புனித சந்தியாகப்பருக்கு திருயாத்திரை செல்வோரின் பாதுகாவலர் என்னும் பட்டமும் உண்டு. இந்தனை பெருமை நிறைந்த இந்த சந்தியாகு தெ கம்போஸ்த்தலா என்னும் ஊருக்கு திருயாத்திரை செல்வதற்காக புனித சந்தியாகப்பரின் மேல் நம்பிக்கை வைத்து தனக்கு வழித்துணையாக நீரே வர வேண்டும் என்னும் வேண்டுதலையும் வைத்து தன் நடைபயணத்தை ஆரம்பித்தான் ஒரு கிறிஸ்த்துவன் பல நாட்க்கள் நடந்து பார்சிலோஸ் என்னும் பட்டிணத்தை அடைந்தான் அவன். இந்த பட்டிணத்தில் சில நாள் ஓய்வெடுக்க விரும்பி ஒரு விடுதியில் தங்கினான். ஆனால் அவனுக்கு இந்தப்பட்டிணம் ஒரு கொடும் பழியையும் மரண தண்டனையையும் தரும் என்பது அப்போது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
  இந்த பார்சிலோஸ் பட்டிணத்தில் ஒரு பெரும் பணக்காரன் இருந்தான். துரதிர்ஸ்ட்ட வசமாக அவனது வீட்டிலிருந்த பெரும்பாலான வெள்ளி தங்க நகைகளும் பணம் காசுகளும் யாராலோ கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. ஊரார் அனைவருக்கும் இந்த விஷயம்தெரிந்துவிட்டதால் இப்படிப்பட்ட கொள்ளைகாரனை கண்டுபிடிக்க ஆவலாக இருந்தார்கள். ஒருவழியாக கள்ளனை பிடித்துவிட்டார்கள். அவன் வேறு யாரும் அல்ல. நம் கதாநாயகன் தான். தான் சந்தியாகப்பரின் தேவாலயத்திற்க்கு செல்லவிருக்கும் ஒரு திருயாதிரீகன் என்றும் இந்த ஊருக்கு வந்து தங்கியிருக்கும் ஒரு வழிப்போக்கன் என்றும் தனக்கும் இந்த கொள்ளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது சந்தியாகப்பரின் மேல் சத்தியம் என்று எவ்வளவு சத்தியம் சொல்லியும் அந்த ஊர் மக்கள் அவனை நம்பாமல் நையப்புடைத்தார்கள். பொருளை பறிகொடுத்த அந்த ஊர் பணக்காரனோ அவனை அந்த நாட்டு அதிபதியிடம் ஒப்படைத்தான். அந்த அதிபதி அவனுக்கு மரண தண்டனை விதித்தான். தண்டனை நிறைவேற்று முன் அவனது கடைசி ஆசையை கேட்டனர். அவன் தன் கூற்றை நிரூபிக்க ஒரு கடைசி சந்தர்ப்பம் வேண்டும் எனவும் அதற்காக அந்த நாட்டு அதிபதியை பார்க்க ஒரு வாய்ப்பு வேண்டுமென கேட்டான். அவனுக்கு அந்த வாய்ப்பு அனுமதிக்கப்பட்டது. ஆனால் அங்கும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
     அவனை அதிபதி சந்திக்கும் வேளையில் அவர் பெரும் விருந்து ஒன்றில் அமர்ந்திருந்தார். அவர் முன்பாக பலவிதமான பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று கோழி வறுவல்.இதைக்கண்ட மாத்திரத்தில் அந்த அதிபதிக்கு வாயில் எச்சில் ஊறியயது. இருப்பினும் தன்னைக்காண வந்திருந்த அந்த தூக்கு தண்டனைக்கைதி பேச ஒரு நிமிடம் வாய்ப்பளித்தான். ஆனால் அவன் கூறியது எதையும் அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவனோ தான் மாசற்றவன் என்றும் தனக்கும் இந்த கொள்ளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தன் மரண தண்டனையை நீக்குமாறும் எவ்வளவோ மன்றாடினான். ஆனால் அந்த அதிபதி மிகுந்த எரிச்சலுற்று “ இந்த மரண தண்டனைக்கைதியை கொண்டுபோய் தூக்கிலிடுங்கள்.  பசி என்வயிற்றை பிடுங்கி எடுக்கின்றது “ என்று கோபத்துடன் கத்தினான். அப்போது அந்த கைதி,” நான் சந்தியாகப்பரின் பக்தன் என்பது உண்மையானால், நான் நிரபராதி என்று கூறும் என் சாட்சியம் உண்மையானால் நான் மரிக்கும்முன், நீர் உண்ணப்போகும் இந்த செத்த கோழி சாட்சியம் கூறட்டும் “ என்றான். அவனை ஊருக்கு நடுவில் உள்ள முச்சந்தியில் ஒரு குதிரையின்மேல் அமரவைத்து அவன் கழுத்தில் சுறுக்கு கயிரை மாட்டினர். தண்டனை நிறைவேறட்டும் என்னும் ஆணை கிடைத்ததும் வீரன் ஒருவன் அந்த குதிரையை சவுக்கால் ஒரு அடித்தான். அவ்வளவுதான். அந்த குதிரை வேகமாக ஓடிவிட்டது. கைதியின்  மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அடுத்த வினாடி விருந்தில் இருந்த  அந்த தட்டில் வைக்கப்பட்டிருந்த கோழி உயிர்பெற்றது. “ கொக்கரக்கோ” என்று உரத்தகுரலில் இருமுறை கூவிவிட்டு எங்கோ ஓடி மறைந்தது. இதைக்கண்ட ஆளூநன் மிகவும் பயந்து போனான். “ ஆஹா … நான் தவறு செய்துவிட்டேன். அநியாயமாக ஒரு நிரபராதிக்கு தூக்கு தண்டனை கொடுத்துவிட்டேன்… நிறுத்துங்கள்…நிறுத்துங்கள் “  என்று கூறிக்கொண்டே அந்த தூக்கு மேடைக்கு ஓடினான். அவனே அந்த கைதியை தாங்கி பிடித்துக் கொண்டு அவனை காப்பாற்றினான். நல்ல வேலையாக அந்த தூக்கு தண்டனை கைதிக்கு உயிர் இருந்தது. அந்த கைதி விடுவிக்கப்பட்டான். நடந்த சம்பவதிற்காக அந்த நாட்டு அதிபதி அவனிடம் மன்னிப்பு கோறினார். அதுமுதல் புனித சந்தியாகப்பர் இயேசுவின்  பெரும் வல்லமையான அப்போஸ்த்தலர் என்பதும் அவர் திருயாத்திரீகர்களின் பாதுகாவலர் என்பதும்  ஐரோப்பிய மக்களுடைய பெரும் நம்பிக்கை ஆனது. இந்த நம்பிக்கை உலகம் முழுவதும் பரவியது.
 இந்த நிகழ்ச்சி நடந்து பல காலம் கழித்து அந்த யாத்திரீகன் இதே பார்சிலோஸ் நகருக்கு மீண்டும் வர நேரிட்டது. தன் மரண தண்டனை பற்றிய காட்ச்சியை அந்த ஆளுநன் ஒரு சிலுவையில் பொறித்து அதே முச்சந்தியில் நிலை நாட்டி இருக்க கண்டான். மேலும் சேவல் சின்னத்தை போர்த்துகல் நாட்டின் தேசீய பறவையாக அறிவித்திருந்தான்...
    இப்படியாக சாட்ச்சி சொன்ன சேவல்கள் பல இருகின்றன. ஆனாலும் சரித்திரத்தில் சேவல்களைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கூற நான் விரும்புகிறேன்.
      சேவல் இல்லாமல் அதிர்ஸ்ட்டம் ஏது? .உங்களுக்கு அதிர்ஸ்ட்டம் வேண்டுமா.. உங்கள் வீட்டில் ஒரு சேவலின் படம் மாட்டி வையுங்கள்.பல நூற்றாண்டுகளாக சேவல் செழுமையின் அடையாளமாக இருகின்றது. சேவலின் கொக்கரக்கோ என்னும் சப்த்தம் அசுத்த ஆவிகளை விரட்டும். சேவல் ஆண் தன்மையின் அடையாளம்.  எதிபாராமல் ஒரு சேவல் உங்கள் வீட்டு சமையல் அறைக்கு வந்துவிட்டதா? சந்தோஷப்படுங்கள். அதிர்ஸ்ட்ட தேவதை உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டாள்.
     பெட்டைக்கோழி தாய்மையின் அடையாளம். இயேசுநாதர் தன் நற்செய்தியில் இந்த பெட்டைக்கோழிக்கும் ஒரு இடம் கொடுத்திருகின்றார். அதுதான் ஜெருசலேம் நகரின் அழிவைப்பற்றியது. தன்னை ஒரு தாய்க்கோழியாக பாவித்து,” ஜெருசலேமே..ஜெருசலேமே..பெட்டைகோழி தன் செட்டைக்குள் தன் குஞ்சுகளை அணைத்து காப்பதுபோல் நான் உன்னை காக்க வந்தேன். என்னும் வேத வசனத்தை நினைவு கூருங்கள்.  
  ஏதோ ஒரு காரியமாக வீட்டை விட்டு வெளியே போகின்றீர்களா ? உங்கள் எதிரே ஒரு சேவலோ அல்லது பெட்டையோ  தென்பட்டால் போகும் காரியம் வெற்றிதான். அது நல்ல சகுணம் எங்கின்றனர் மேல் நாட்டினர்.
 சேவலின் கொக்கரக்கோ என்னும் சப்த்தம் ஆண்டவரின் ஆசீரை கூவி அழைப்பதாக இருகின்றது. எழுந்திருங்கள். இருள் விலகிவிட்டது. அதிகாலையில் எழுந்து ஆண்டவரை தொழுங்கள். ஆண்டவருக்கு புதியதோர் பாடலை பாடுங்கள் . அல்லேலூயா என்று அது உங்களுக்கு உரக்கக்கூவி நினைவூட்டுகின்றது. இதற்காகவே அது இரவு முழுவதும் கவனமாக காத்திருகின்றது.
சேவல் திசைக்காட்டும் கருவியில் அமர்ந்திருக்கின்றது.
     தேவாலயங்களில் சேவல்…
 சேவல் ஒரு பலிப்பொருள். ஒருவிதத்தில் அது இயேசு நாதரை ஒத்திருகின்/றது. இயேசுநாதர் உலகின் பாவங்களை தன்மேல் சுமந்துகொண்டு தன்னையே பலி ஆக்கினார் அல்லவா… இப்படியாகத்தான் அக்காலத்தில் தங்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு சேவலை எடுத்து எனக்கு பதிலாக நீ மரணிக்க வேண்டும் என்று அதற்கு சொல்லி தன்தலைமீது அதை மூன்று முறை சுழற்றி அதை பலி கொடுப்பார்கள். திருச்சபையின் தலைவராக புனித இராயப்பர் இருகின்றார். அவர் பெயர் சொல்லுமிடம் எல்லாம் யாரும் இந்த சேவலை மறக்க முடியாது. எனவே அந்த சேவலுக்கு இராயப்பரின் கோழி என பெயரிடப்பட்டுள்ளது. பெரிய வியாழன் நிகழ்ச்சிகள் நினைவு கூறப்படும் அனைத்து கிறிஸ்த்துவ தேவாலயங்களின் உச்சியில் சிலுவையின் மீது இந்த கோழியின் சிற்பமும் வைத்திருக்கப்பட வேண்டுமென அக்காலத்திய பாப்புமார்கள் புனித சிங்கராயர் எனப்படும் லியோ மற்றும் நிக்கோலாஸ் போன்றவர்கள் வாய்மொழி உத்திரவுகள் போட்டதாக சில தகவல்கள் உண்டு. ஆனால் காலப்போக்கில் அந்த உத்திரவு மறைந்து போய்விட்டது.
    ஆனால் பரிசுத்த பிதா பாப்பு பெரிய கிரகோரியார் ஒரு சேவலின் படம் வரைந்து அதற்கு புனிதர்களுக்கு இடப்படும் ஒளிவட்டத்தையும் போட்டு பெரும் மதிப்பு கொடுத்திருகின்றார். அந்த படம் இன்னும் வத்திக்கானில் இருகின்றது.

 இன்றும்கூட ஜெருசலேமில் கைப்பாஸின் வீட்டின் மேற்கூறையில் சிலுவைக்கு மேலாக அங்கு நடந்த கோழிகூவிய சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஒரு சேவலின் சுரூபம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கைப்பாசின் வீட்டுக்கு சேவல் கூவிய தேவாலயம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 கொக்கரக்கோகோ….கொக்கரக்கோகோ…கொக்கரக்கோகோ..



Sunday, August 5, 2018

“ இரண்டு ஏதேன் தோட்டங்கள். ”



             “ இரண்டு ஏதேன் தோட்டங்கள். ”
       கிறிஸ்த்து பிறந்த வருடம்:. அந்த அமைதி பொழியும் இரவில் இந்த உலகத்தையும் ஈரேழு லோகங்களையும், அண்ட சராசரங்களையும் …” உண்டாகுக” என்னும் ஒரே வார்த்தையில் படைத்த சுதனாகிய சர்வேசுரன் மனிதாவதாரமாக ஒரு குழந்தையாக அந்த பெத்லஹேமின் மாட்டுக்குடிலில் அவதரித்திருந்தார். வானோர்களின் பாடல்களால் சாமக்காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்கள் தங்கள் குடும்பத்தாருடன் பிறந்திருக்கும் உலக இரட்ச்சகரை தரிசிக்க வந்திருந்தனர்.
இன்னும் யார் யாரோ வந்திருந்தனர். ஆனால் வந்திருந்தவர்களில் முக்கியமானவர்கள் கீழ்த்திசை நாடுகளை சேர்ந்த கஸ்பார் என்னும் கந்தப்ப ராசாவும் ( இவருடைய நாடு இந்தியாவில் தமிழ் நாடு ) மெல்கியோர் மற்றும் பல்த்தசார் ஆகியோரும் ஆவர். இவர்களில் வயதில் மூத்தவராகிய கந்தப்ப ராசா என்னும் கஸ்பார் ஓபீரின் சுத்த தங்க நாணயங்களைக்கொண்டு வந்திருந்தார். மற்றவர்கள் மிகவும் அரிதான மூலிகைகளையும் கடவுளுக்கே உறித்தான அபிசீனிய சாம்பிராணிகளையும் கொண்டு வந்திருந்தனர். தங்கம் அரசருக்கே உறித்தானது. சாம்பிராணி கடவுளுக்கு உறித்தானது. மிகவும் விஷேஷமாக இதன் சில சேர்மங்களைக்கொண்டு ரகசியமான முறையில் தயாரிக்கப்பட்ட தூபங்களையே மன்னர் சாலமோனும் அவருக்கு பின் வழிவந்தவர்களும்  ஜெருசலேம் தேவாலயத்தில் கடவுளுக்கு ஆராதனையாக காட்டினார்கள்.( மிகவும் அரிதான மூலிகைகளை உபயோகித்தே யேசு நாதரின்அடக்கமும் நிறைவேற்றப்பட்டது.)
 தோபித்து ஆகமம். 13..13 கூறுகிறது.   “ உலகின் எல்லைவரை உம் பேரொளி சுடர்க. தொலைவிலிருந்து பல நாடுகள் எருசலேமிடம் வரும். உலகின் எல்லா எல்லைகளிடமிருந்தும் மக்கள் உமது திருப்பெயர் விளங்கும் இடதிற்கு வருவார்கள். விண்ணக வேந்தருக்கு தம் கைகளில் காணிக்கை ஏந்தி வருவார்கள். எல்லா தலைமுறைகளும் உன்னில் மகிழ்ந்து பாடும். தெரிந்துகொள்ளப்பட்ட  நகரின் பெயர் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.”
  வார்த்தையாகிய தேவசுதனின் மனிதாவதாரத்தைக்கண்டு அவரை சாஸ்டாங்கமாக விழுந்து ஆராதித்து தாம் கொண்டு வந்திருந்த அன்பளிப்புகள் அனைத்தையும் மாதாவிடம் சமர்ப்பித்தனர். பிறகு தேவத்தாயாருக்கும் குழந்தை யேசுவுக்கும் வாழ்த்துகள் பல சொல்லியும் அவர்களிடம் ஆசீர்வாதங்கள் பல பெற்றுக்கொண்டும் தத்தம் தாய்நாடு திரும்பினர்.
 இந்த சரித்திர நிகழ்வு நடந்து சரியாக 32 வருடங்களுக்குப்பிறகு…. இயேசுநாதரும் அவருடைய சீடர்களும் சாக்கடலின் பகுதிகளில் நடந்து வருகின்றார்கள். அப்போது தீவிரவாதி எனப்பட்ட சீமோன் “ ஆண்டவரே இந்த பகுதிகள் எல்லாம் எனக்கு மிகவும் நன்றாகத்தெரியும். எனக்கு தொழு நோய் கண்டிருந்த போது மக்களின் பார்வையினின்று விலகி நான் இந்தப் பகுதியில்தான் வாழ்ந்து வந்தேன். இந்தபகுதியில் எங்கெங்கு குடிக்கும் நீர் கிடைக்கும், சாப்பிட தேன் எங்கு கிடைக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். தேவரீருடைய கிருபையால் நான் நலம் பெற்று உம் சீடர்களில் ஒருவனாக நான் உயர்த்தப்பட்டது அடியேன் செய்த பெரும் பாக்கியம் “ என்றார். அப்போது யூதாஸ் “ஆண்டவரே இந்த உப்புக்கடல் ஏன் இவ்வளவு அசுத்தமாகிப்போயிற்று. கடவுள் இதை படைக்கும்போதே இப்படித்தான் படைத்தாரா?” என்றான்.
   இல்லை யூதாஸ். கடவுள் இதைப்படைக்கும்போது எல்லாம் நன்றாகத்தான் படைத்தார். மிக்க அழகுள்ளதாகத்தான் படைத்தார். ஒரு காலத்தில் ஏதேன் தோட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இடம்தான் சரியான உதாரணம் என்பதுபோல் அழகிய தோட்டங்களும் ஆங்காங்கே நீறூற்றுகளும் பசும் புல்வெளிகளும் அழகான ஒரு பட்டிணமாய் இருந்ததுதான் இந்த சாக்கடல். காலப்போக்கில் மனிதன் பாவத்தில் மூழ்கித்திளைத்தபோது எல்லாம் தலை கீழாக மாறிப்போயின. இந்த உலகின் ஐம்பூதங்களும் இந்த இடத்தில் வெறியாட்டம் போட்டன. தேவகோபம் இந்த இடத்தில் இறங்கியதால் பூமி பிளந்து பாதாளம் வெளிப்பட்டது. அதிலிருந்து வெளியேறிய எண்னணகீள்கள் தீப்பற்றி எரியத்துவங்கின. நீர் நெருப்பு காற்று இடி மின்னல் என அனைத்து சத்துவங்களும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு இங்கே தங்களின் வெறியாட்டத்தை நடத்தியதால் இந்த இடம் பெரும் பள்ளமாகவே மாறிவிட்டது. ஏதேன் தோட்டத்திலிருந்து பாய்ந்து வந்திருந்த நதி இப்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தது விட்டது.. இப்போது வரும் ஜோர்தான் நதி இதில் வந்து முடிகிறது. இந்த சாக்கடலில் விழும் எந்த நீரும் மேலே ஆவியாகிப்போய்விடுவதால் இங்குள்ள நீர் எப்போதும் உப்பு நிறைந்ததாகவே இருக்கும். மேலும் இந்த ஜோர்தான் நதி நீர் இங்கு விழும் அளவைவிட இந்த ஏரியிலிருந்து சூரிய வெப்பத்தால் ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இந்த ஏரி எப்போதும் நிரம்புவதே இல்லை. எனவே அதன் உப்புத்தன்மை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருகின்றது.” என்றார்.
    “ ஆஹா ஆண்டவரே … அப்படியானால் இங்குள்ள அனைத்து நீரையும் வெளியேற்ற முடிந்தால் அடியில் தங்கியுள்ள அந்த பழைய நகரத்தை மீண்டும் காண முடியுமா?” என்றான் யூதாஸ்.
“நான் உனக்கு வாக்களிக்கிறேன் யூதாஸ். எந்தக்காலத்திலாவது மனிதன் இங்குள்ள நீர் அனைத்தையும் வெளியேற்றினால் ஆதாம் ஏவாள் காலம் துவங்கி ஒரு நூற்றாண்டுக்குப்பின்னர் இங்கே மக்கள் வாழ்ந்த பட்டிணங்களின் அடையாளத்தை நிச்சயம் பார்க்கலாம். இங்குள்ள உப்பும் சுண்ணாம்புச்சத்தும் ஜோர்தான் நதியின் மணல்களும் இந்த பட்டிணத்தின் வீடுகளின் மீது அடுக்குகளாகப்போர்த்தி வைத்திருப்பதால் அவை அழியாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளன.” என்றார் இயேசுநாதர்.“ ஆண்டவரே இந்த இடம் ஏதொ ஒரு நீதி அல்லது படிப்பினையை கற்பிப்பது போல் இல்லையா?’” என்றார் இராயப்பர்.
“ ஆம். உண்மைதான் இராயப்பா..இந்த உலகில் எத்தனையோ கடல்கள் இருந்தாலும் கடவுள் தாம் வசிப்பதற்க்கு ஏற்ற இடமாக இந்த கலிலேயாக்கடலைத்தான் தெரிந்துகொண்டார். காரணம் இல்லாமல் இல்லை. இந்த கலிலேயாக்கடலின் நீர் ஆதாரம் அதன் வடக்கே உள்ள பனிமேகம் சூழ்ந்த உயர்ந்த ஹெர்மாஸ் மலை. அதிலிருந்து இறங்கிவரும் நீர் கலிலேயாக்கடலில் கலக்கிறது. பின் அதன் வெளியேற்றமாக ஜோர்தான் நதி இறங்கிவருகின்றது. அது பாலஸ்தீனம் ஜோர்டான் நாடுகளுக்குள் பாய்ந்து அவற்றை வளமாக்கியபின் இங்கே சாக்கடலில் அசுத்த நீராக விழுகின்றது. அதில் விழுந்த நீர் அனைத்தும் சாக்கடலால் விழுங்கப்பட்டுவிடும். இதை எதற்க்கு ஒப்பிடலாம் என்றால் மோட்ச்சத்தில் கடவுள் படைத்த ஆன்மா இந்த உலகில் புதிதாய் பிறக்கும் ஒரு குழந்தையின் உடலில் செலுத்துவது போல ஹெர்மாஸ் மலையில் உருவாகும் நீர் பரிசுத்தமான புதிதாய் பிறந்த குழந்தையின் ஆன்மா போல கலிலேயாக்கடலில் கலக்கிறது. அது ஜோர்தான் நதிபோல அங்கிருந்து வெளியேறுகிறது. பல இடங்களில் அது பயணித்து அந்த இடங்களை வளமாக்கிய பிறகு வெற்று நீராக அது சாக்கடலில் விழுகின்றது. புதிதாக பிறந்த குழந்தை வளர்ந்து ஆளாகி பாவி ஆகி சபிக்கப்பட்டவனாகி பாதாளம் என்னும் நரகத்திற்குள் மூழ்குகின்றது.” என்றார் இயேசுநாதர்.
 அப்படியானால் ஆண்டவரே மனிதனுக்கு விமோச்சனமே இல்லையா “ என்றார் இராயப்பர்.
ஏன் இல்லை இராயப்பா. அதற்காகத்தானே நான் வந்திருகிறேன்.ஆண்டவரே உம்மில் நான் என் நம்பிக்கையை வைக்கிறேன். உம்மை நான் அன்பு செய்கிறேன். என்னை காத்து இரட்ச்சியும் என்று என்னை நோக்கி மன்றாடுபவர்களை நான் இரட்ச்சிக்கிறேன். நீ கலிலேயாக்கடலில் மூழ்கும்போது ஆண்டவரே என்னை காப்பாற்று என்று என்னை நோக்கி நீ கதறவில்லையா அப்படித்தான் இதுவும். உன் சம்மதம் இல்லாமல் உன்னைப்படைத்த உன் ஆண்டவருக்கு  உன் சம்மதம் இல்லாமல் உன்னை மீட்கவும் முடியாது. பாவத்தால் மூடிக்கொண்ட உன் இதயக்கதவுகளை நீயாகத்திறந்தால் அன்றி உன்னைப்படைத்த கடவுளால்கூட உன் இதயத்தில் பிரவேசிக்க இயலாது. நீயாக உன் உள்ளார்ந்த அன்பினால் என்னை அழைக்கும்போது உன் இல்லத்திலும் உன் உள்ளத்திலும் நாம் பிரவேசிக்க முடியும். ஆனாலும் ஒன்று நிச்சயம். இன்று மனிதனோ மிருகமோ அல்லது ஊர்வன பறப்பன ஆகிய எதுவுமோ வாழ முடியாத இந்த சாக்கடலும்கூட ஒரு காலத்தில் மாறிப்போகும். மேற்கூறிய அனைத்தும் வாழக்கூடிய தகுதி பெற்று செழிப்பான இடமாக மாறிப்போகும். இப்படித்தான் மனிதனுடைய வாழ்க்கையும். நல்லவன் கெட்டவனாவதும், கெட்டவன் நல்லவனாவதும் அவரவர் மனமாற்றத்தை பொறுத்ததே. அதுசரி நீ ஏன் சோகமாக இருகின்றாய் யூதாஸ்? உனக்கு ஏதாவது புறிந்ததா ” என்றார் இயேசுநாதர்.” புறிந்தது ஆண்டவரே ”. என்றான் யூதாஸ். பிறகு இந்தப்பேச்சை மாற்ற விரும்பி “ ஆண்டவரே நடந்து நடந்து எனக்கு கால்கள் வலிக்கிறது. எங்காவது நல்ல இடமாகப்பார்த்து தங்கினால் நன்றாக இருக்கும்” என்றான். “ சரி… இன்னும் அழியாமல் கடவுள் காப்பாற்றி வைத்துள்ள  சின்ன ஏதேன் தோட்டத்திற்கு செல்லலாம். வாருங்கள். அங்கே எனக்காக மூன்று ஜீவன்கள்  காத்துக்கொண்டிருகின்றார்கள்.” என்றார் இயேசுநாதர்.
 சின்ன ஏதேன் எனப்படும் எங்கேடி பட்டிணம்.
“ கடவுள் படைத்த ஏதேன் என்னும் சிங்கார வனம் இப்படித்தான் இருந்திருக்குமோ. ஆதாமும் ஏவாளும் இப்படிப்பட்ட தோட்டத்திலா வாழ்ந்தார்கள். அடடா … என்ன அழகு என்ன அழகு… இதன் உயர்ந்த மலைகளும் அதினின்று பொங்கி வழியும் நீர் வீழ்ச்சிகளும் எங்கும் பசுமையான பேரீச்சம் பழ சோலைகளும் திராட்சை பழ தோட்டங்களும் பூங்காக்களும் அடடா…இங்குள்ள மூலிகைகளும் வாசனை மரப்பிசின்களும் மனிதனின் சிந்தைகளை மயக்குவனவாக உள்ளன. இங்குள்ள மலை ஆடுகளும் நீண்ட கொம்பு உள்ள மான்களும் குரங்குகளும் அவற்றின் கூச்சல்களும் வண்டுகளும் அவற்றின் ரீங்காரமும் அழகிய பறவைகளும் அவற்றின் பாடல்களும் பாடலுக்கேற்ற தாளம்போல் அங்கு குதித்தாடும் நீர்  வீழ்ச்சிகளும் அடடா… எவ்வளவு பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கத்தூண்டும் அதிசய உலகம் இது.
மாமன்னர் சாலமோன் காலத்தில் அவர் தம் கருமை நிற காதல் அழகி எத்தியொப்பாவின் ஷெபா நாட்டு இளவரசியை மணமுடித்த பின்னர் இங்கேதான் தன்னுடைய வசந்த காலத்தை கழித்தார். இந்த இடத்தின் அழகை தன் மனைவியின் அழகோடு ஒப்பிட்டு அவர் பாடிய பாடல்கள்தான் உன்னத சங்கீதம் எனப்படுகின்றது.
 “ ஆம். கடவுள் படைத்திருந்த ஏதேன் தோட்டம் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாதிருந்தது. ஆனாலும் அதன் அழகையும் மகிமையும் மனிதன் ஒரு அளவுக்காவது புறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இந்த எங்கேடியை விட்டு வைத்திருக்கின்றார். வாருங்கள் இங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்துவிட்டு உணவு உண்டபின் ஊருக்குள் செல்வோம்” என்றார. இந்த நீர் வீழ்ச்சி இன்றளவும் இருகின்றது. தாவீதின் நீர் வீழ்ச்சி என்று இதற்குப்பெயர். இதைப்போல இன்னும் இரண்டு நீர் வீழ்ச்சிகள் சற்று தள்ளி தள்ளி இருகின்றன.
 இந்த தாவீது நீர் வீழ்ச்சியின் அருகில்தான் தாவீது அரசர் சவுல் மன்னருக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்தார்.. மேலும் இந்த உயர்ந்த மலைமேல் பல விதமான குகைகள் `பல இடங்களில் உள்ளன. தற்காப்புக்காக இந்த குகைகளில் அவர் அடிக்கடி தன் வசிப்பிடங்களை மாற்றிக்கொண்டிருப்பார். இந்த குகைகளுக்கு மேல் ஏறிசெல்வது மிகவும் கடினமான காரியம். அவர் தினமும்  பல தடவைகள் இந்த குகைகளுக்கு ஏறிச்செல்ல வேண்டியிருந்ததால் அவர் எவ்வளவு வலு உள்ளவராக இருந்திருக்க வேண்டும். ஒருமுறை சவுல் மன்னர் இந்த குகை ஒன்றில் தன் படைவீரர்களுடன் தங்கியிருந்த போது தாவீது யாரும் அறியாமல் அந்த குகையினுள் பிரவேசித்து சவுல் மன்னருடைய ஆடையின் விளிம்பை கத்தரித்து எடுத்துக்கொண்டு அவரது தண்ணீர் குவளையும் எடுத்துவந்தார். இது அவரது வீரத்தையும் தைரியத்தையும் எடுத்துரைக்கின்றது. இந்த நீர் வீழ்ச்சியிலிருந்து சில கிமி தூரம் பயணித்தால் பழைய எங்கெடி பட்டிணம் வரும்.
     இயேசுநாதர் தன் சீடர்களுடன் இந்த எங்கேடிப்பட்டிணத்திற்குள் பிரவேசித்தார் .மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடிவிட்டது. அங்கிருந்த ஒரு தேவாலயத்தினுள் இயேசு நாதர் பிரவேசிக்க அந்த தேவாலயத்தின் குருவானவர் அபிரஹாம் அவரை வரவேற்றார்.( இந்த தேவாலயத்தின் இடிபாடுகள் இன்றளவும் உள்ளன. அவற்றுள் ஒரு அழகிய சிக்கலான ஒரு மொசைக் தரையும் நல்ல நிலையில் உள்ளது. இந்த தேவாலயம் நிச்சயமாக யேசுநாதர் போதித்த தேவாலயம் என்று சொல்ல முடியாவிட்டாலும் இது முதல் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூறாண்டிரற்குள் இருக்கலாம் என்று தொல்லியல் துறை கூறுகின்றது.)
.” ஆவலுடன் நான் ஆண்டவருக்காக காத்திருந்தேன் அவரும் என்னை கனிவாக கண்ணோக்கினர். என் ஆண்டவரே உமது யோசனைகளில் உமக்கு சமமானவன் ஒருவனுமில்லை.  நீர் பலிகளையும் காணிக்கைகளையும் விரும்புவதில்லை. ஆனால் என் செவிகளை திறந்துள்ளீர்.. மஹா சபையில் உம்மைக்குறித்து எப்போதும் பிரசங்கித்தேன். உமது பிரமாணிக்கத்தையும் இரட்சண்ய கிருபையும் பற்றி பேசினேன். ஆண்டவரே உமது கிருபைகளை என்னைவிட்டு அகற்றி விடாதேயும் என்னும் சில தாவீதரசரின் சங்கீதங்களை பாடி அவர் இயேசுநாதரை வரவேற்றார். பிறகு,” ஆண்டவரே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எம் முன்னோர் பலர் உம்மை தரிசிக்க விரும்பியும் அவர்களாள் உம்மை காண முடியவில்லை. பூர்வீகத்தில்  எம்பிதாப்பிதாக்கள் அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு  ஆகியோர் கூட உம்மை  பார்க்க முடியவிலை ஆனால் நாங்கள் வாழும் இக்காலத்தில் நீர் வந்திருகின்றீர். ஆகவே நானும் இந்த எங்கேடி வாசிகளும் பேறு பெற்றோம். நான் என் மெசியாவை கண்டுகொண்டேன். நீர் என்னை இப்போதே வந்துவிடு என்று கூப்பிட்டாலும் நான் உடனே வந்துவிட சித்தமாயிருகின்றேன்” என்று கூறி அழுதார்.  அங்குள்ள  மக்கள் அந்த வயதான குருவை யேசுவுக்கு அறிமுகம் செய்துவைத்தனர்.
   இயேசு நாதர் அவரை அனைத்துகொண்டு,”சர்வேசுரனுடைய நீதியுள்ள முதிய ஊழியருக்கு சமாதானம்“என்றார். பிறகு“உங்களைப்பற்றிக்கூறுங்கள்.” என்றார். அந்த முதியவர்  பெரும் உணர்ச்சிப்பிழம்பால் தத்தளிக்க அங்கிருந்த மக்கள் அவரைபற்றி கூறினர். அவர் பெயர் அபிரஹாம் எனவும் அவரது மனைவியின் பெயர் கொலம்பா என்றும் அவரது மகள் எலிசா என்றும் அவரது மகன் எலிஷா என்றும் அவர்களுடடைய மகள் சில குழந்தைகளை பெற்ற பிறகு இறந்துவிட்டாள் என்றும் அவரது மகன் பத்துவயதாக இருக்கும்போதே எங்கோ காணாமல் போய்விட்டதாகவும் இத்தனை துன்பங்களௌம் போதாது என்பதுபோல் தங்கள் பேரக்குழந்தைகளும் தங்களோடு வைத்து பராமரிப்பது அவர்களுடைய வாழ்க்கையை மிகவும் சோகத்துக்கு உள்ளாக்கியது என்றும் இந்த  துன்பங்களுக்கு மேலும் துன்பம் சேர்ப்பதாக அவள் தன் கண்களையும்  இழந்ததாகவும் அனைத்துக்கும் மேலாக இந்த துன்பங்களை தாங்க முடியாமல் அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகவும் இத்தனை நிலைகளிலும் அவர் கடவுளின் மீதுள்ள விசுவாசத்தினால் இங்குள்ள தேவாலயத்தில் குருவாக இருப்பதாலும் நாங்கள் அவருடைய முன்மாதிரிகையை கண்டு பாவித்து அவரது பிரசங்கங்களை கேட்டு மகிழ்வதால் வரப்போகும் மெசியாவை அவருடன்  நாங்களும் தரிசிக்க  வேண்டும் என்னும் ஆவலால் உம்மைக்காண வந்தோம் என்றும் கூறினர்.
            இயேசுநாதர் மிகுந்த சந்தோஷப்பட்டு விசுவாசத்தைப்பற்றிய ஒரு நீண்ட பிரசங்கத்தை ஆரம்பித்தார். அப்போது அந்த முதியவர்,” ஆண்டவரே உம்முடைய  போதனையை கேட்க என் மனவி கொலம்பாவுக்கு அருள் செய்ய மாட்டீரா?” என்று கேட்டார். அதற்கு இயேசுநாதர்,” தந்தையே… விசுவாசத்தோடு கேட்கப்படும் எந்த மன்றாட்டுக்கும் கர்த்தர் மும்மடங்காக சம்பாவணை அளிப்பார் என்பதை நீர் முதலில் நம்ப வேண்டும்” என்றார். பிறகு “ தந்தையே  இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் நீர் என்ன விசுவாசிப்பதன் காரணம் என்ன?” என்றார். அதற்கு அந்த முதியவர்,” ஆண்டவர் நீரே நான் விசுவாசிக்கும் மெசியா என்பதை முப்பது வருடங்களுக்கு முன்பே அறிந்திருந்தேன். அப்போது எனக்கு வயது ஐம்பது. என் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. என் மகனுக்கு பத்துவயது. என்மனைவி கொலம்பா மிக்க அழகுள்ளவளாயும் நல்ல ஆரோக்கியமானவளாகவும் இருந்தாள். கொலம்பாவின் தாய்வழி சீதனமாகிய திராட்ச்சை தோட்டத்தில் வேலை செய்ய நான் என் மகன் எலிஷாவுடன் சென்றிருந்தேன். நீண்ட நேரம் வேலை செய்திருந்ததால் மிகவும் களைப்புற்றிருந்தபோது மாலையில் ஒரு பெரும் வாணிபர்கூட்டம் என் திராட்ச்சை தோட்டத்திற்குள் புகுந்தது.
   அவர்களுள் தலைவர் என்னிடம் வந்து,” ஐயா… நாங்கள் இந்த இரவு இங்கே தங்க வேண்டும் கூடாரம் அடிக்க இடம் தருவீர்களா? என்றார். அதற்கு நான் ,” ஐயா… ஊருக்குள் தங்குமிடங்கள் உள்ளன.” என்றேன். அவர்கள்,” இல்லை முடியாது நாங்கள் ஏரோது மன்னரால் தேடப்படுகின்றோம்.. நாங்கள் எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கப்பட்டால் கைது செய்யப்படுவோம். அவன் விரும்பினால் நாங்கள் எந்த இடத்திலும் வெட்டிக்கொலை செய்யப்படலாம். அது சாலையாக இருக்கலாம். அல்லது தோட்டமாக இருக்கலாம்.அவன் இராஜ்ஜியத்தில் எங்கு வேண்டுமானாலும் இது சாத்தியமாகக்கூடும்.
இந்த இடம் எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளதால் நாங்கள் இங்கே தங்க விரும்புகின்றோம். எங்களால் உங்களுக்கு ஏதேனும் நஷ்ட்டம் ஏற்பட்டால் அதற்கு நஸ்டஈடும் கட்டணம் ஏதும் உண்டானால் அதையும் தருவோம் “ என்றார். அதற்கு நான்,” ஐய்யா. எங்களுக்கு கட்டணமோ நஷ்ட ஈடோ எதுவும் தேவை இல்லை. முதலில் நீர் அனைவரும் யார்?. பெரிய ஏரோது ஏன் உங்களைத்தேடுகின்றார். அவருக்கு எதிராக நீங்கள் செய்த குற்றம் என்ன? என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள்” என்றேன்.
 அதற்கு அந்த முதலானோர் கூறியது. “ என் பெயர் கந்தப்பராசா எனப்படும் கஸ்பார். நான் தென் இந்தியாவில் தமிழ் நாட்டை சேர்ந்தவர். இவர் பல்த்தசார். இவர் மெசப்பதோமியாவில் பெர்சியாவையும், மெல்கியோர் அரேபியாவையும் சேர்ந்தவர்கள். நாங்கள் அரசர்கள் ஆயினும் வான சாஸ்த்திரிகளும் கூட. வானில் தெரிந்த வின்மீனைக்கண்டு அது உலகை ஆளப்போகும் மாபெரும் பேரரசர் பிறந்துள்ளார் எனக்கண்டு அவரை ஆராதிக்க அந்த வின்மீன் வழிகாட்டியபடி மூவரும் சேர்ந்து ஜெருசலேம் வந்தோம். ஜெருசலேம் மன்னர் பெரிய ஏறோதை சந்தித்து,” உலகையே ஆளப்போகின்ற அந்த குழந்தை எங்கே பிறந்துள்ளது” என்று கேட்டோம். ஆனால் அவர் எங்களை ,” நீங்கள் அவரை கண்டு பிடித்து ஆராதித்த பின்னர் என்னிடம் வந்து சொல்லுங்கள். நானும் அவரை பார்த்து  ஆராதிப்பேன் “ என்றான். ஆனால்  மன்னர் ஏறோதுக்கு அந்த குழந்தையை பிடிக்க வில்லை. தனக்கு போட்டியாக வந்த குழந்தையை கொல்ல நினைத்தான். எங்களை தந்திரமாக அனுப்பிவிட்டு அந்த குழந்தையை கொல்ல நினைத்தான்.
ஆனால் நாங்கள் கடவுளின் கிருபையால் அந்த குழந்தையை பெத்லஹேமில் கண்டு ஆராதித்தோம். நாங்கள் கொண்டு வந்திருந்த அன்பளிப்புகளை அவரது சார்பாக அவரது திருத்தாயார் தேவமாதாவிடம் சமர்ப்பித்து அவர்களிடம் ஆசீர்பெற்று திரும்பும் வேளையில் சம்மனசானவர் ஒருவர் எங்களிடம் அடுத்து நடக்கப்போவதைப்பற்றி பேசினார். அவர் ஏறோதின்  மனதில் குழந்தையை கொல்ல வேண்டும் என்னும் சதித்திட்டம் பற்றியும் இதிலிருந்து  தப்பிச்செல்லும் வழியையும் கூறியனார். அதன்படியே நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்றனர்.
நான் அவர்களிடம்,” ஐய்யா… இந்த எங்கேடி  பட்டிணம் பேறுபெற்றது. எங்கோ தொலைவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக்கடந்து வந்திருந்து எம் பெருமான் மெசியாவை கண்டு ஆராதித்த பேறு பெற்றவர்களை இந்த பட்டிணம் வரவேற்கிறது. என்னாலோ என் மகனினாலோ உம்மைப்பற்றிய எந்த தகவலையும் நாங்கள் வேறு யாவருக்கும் தெரியப்படுத்த மாட்டோம். இது என் மெசியாவின் மீது ஆணை” என்று வாக்கு கொடுத்தோம். அந்த நேரம் முதல் எனக்கும் பெத்லஹேம் சென்று உம்மை ஆராதிக்க வேண்டும் என்னும் ஆசை எழுந்தது.  என் ஆசைகளை அவர்களிடம் வெளிப்படுத்தினேன். ஆனால் அந்த முதிய அரசர் அதற்கு சம்மதிக்கவில்லை. அந்த திவ்ய குழந்தையை பற்றிய எந்த தகவலையும் அவர் எங்களிடம் கூறவில்ல. அது குழந்தை இயேசுவின் உயிருக்கு உலை வைத்ததாக ஆகிவிடும் என்பதால் அவர் மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல. அடுத்து நடக்கப்போகும் சில பயங்கரங்களைப்பற்றியும் கூறினார். ஜெருசலேமிலும் யூதேயா மற்றும் சமாரியா எங்கும் ஏறோதின் ஆதிக்கத்துக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் யேசுவின் நிமித்தம் அனேக குழந்தைகள் வெட்டி கொல்லப்படுவார்கள் என்றும் பெரும் கலவரம் நடக்கப்போகின்றதென்றும் அதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவார்கள் என்றும் கூறினார். ஆகவே இந்த நேரத்தில் நான் அங்கு செல்வது பெரும் ஆபத்தில் முடியும். என்னப்பற்றி விசாரிக்கும் பட்சத்தில் நீர் ஏதாவது உளரிக்கொட்டினால் அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் இந்த அழகிய எங்கேடி பட்டிண வாசிகளுக்கும் பெரும் ஆபத்தாக முடியும் என்பதால் இயேசுவைப்பற்றிய எந்த தகவலையும் அவர் என்னிடம் கூறவில்லை. ஆகவே  நாங்கள் இங்கே வந்து தங்கியதுபற்றி யாரேனும் விசாரித்தால் இந்த அழகிய சின்ன ஏதேன் எனப்படும் எங்கேடிப்பட்டிணத்தை பார்க்க சில வியாபாரிகள் வந்து போனதாக மட்டும் கூறிவிடு” என்றார்.
ஆனால் எங்களுக்கு ஒன்று மட்டும் உறுதியாக கூறினார். மெசியாவை காணவேண்டும் என்னும் உம் ஆசை நிறைவேற்றப்படும். நீயாகப்போய் அவரை சந்திக்க வேண்டாம் . மாறாக ஒரு நாள் அவராகவே உம்மை சந்திக்க வருவார் என்னும் உறுதிதான் அது. நானும் அந்த நாளுக்காகத்தான் விசுவாசத்துடனே காத்து வந்திருகின்றேன். அந்த நாள் இந்த நாள் தான் என்றும் நான் சந்திக்க விரும்பிய மெசியா நீர் தாம் என்றும் நான் நிச்சயமாக விசுவாசிகிறேன்.” என்றார் அவர்.
    யேசுநாதர் புன்னகைத்து தம் போதனையை ஆரம்பித்தார்.” விசுவாசத்தின் பலன் மிகப்பெரியது. கடவுள் இருகின்றார் என்பதை விசுவாசிப்பதிலிருந்து விசுவாசப்பிரமாணம் துவங்குகிறது. ஆதாம் பாவியாக இருந்தாலும் கடவுள் இருகின்றார்… அவரே நம்மை சிருஸ்டித்தார்… நான் அவரை கண்டிருக்கின்றன். அவரை நான் முழுதாக அறிந்திருகின்றேன் என்ற விசுவாச சத்தியம் அவரிடமிருந்து நமக்கு கிடைத்த பரம்பரை சொத்தாக இருகின்றது. தந்தை அபிரஹாம் விசுவாசித்ததினால் அவர் அடைந்த பேறுகள் எத்துணை.. அவைகள் எப்பேர்பட்ட மகிமையானவை என்பதை நீங்கள் அறிந்திருகின்றீர்கள் என்று ஆரம்பித்து வேதாகமத்தில் பல சரித்திர நிகழ்வுகளை அவர் தெரியப்படுத்தினார்  இறுதியாக விசுவாசத்தை தம்முள் உறுதியாக பற்றிக்கொண்டிருப்பவன் ஜீவியத்திற்கான வழியை தன்னகத்தே கொண்டிருகின்றான். ஆகவே  துன்பப்படுகின்றவர்கள் என்னிடம் வாருங்கள். ஜீவியத்தை விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்.  எவ்வித பயமுமின்றி என்னிடம் வாருங்கள். ஏனென்றால் நானே இரக்கமும் நேசமுமாக இருக்கின்றேன்.” என்றார்.
     அப்போது கூட்டத்திலிருந்த ஒரு வயோதிக ஸ்த்ரீ,”ஆண்டவரே…நீரும் உம்மை அனுப்பினவருமானவரும் ஸ்தோத்தரிக்கப்படுவீர்களாக. உம்மை சுமந்த திருஉதிரம் சகல பெண்களுடையவும் உதிரங்களிலெல்லாம் மேலானதாக இருப்பதாக. உம்மை பெற்ற உம் தாயின் திருநாமம் போற்றப்படுவதாக “என்று உரத்த சப்த்தமாக கூவினாள். அப்போது கூட்டத்தினர்.” ஆஹா புதுமை.. கொலம்பா பார்வை பெற்றுவிட்டாள். அவளது உன்மத்தமும் குணப்படுத்தப்பட்டுவிட்டது. ஆண்டவர் பெயரால் வந்திருப்பவர் ஆசீர் பெற்றவர்” என்று முழங்கியது. பிற்பாடு கூட்டம் கலைந்தது.
  அடுத்த நாள் இயேசுநாதர்  இந்த எங்கேடி பட்டிண வாசிகளிடம் விடைபெற்றார். அவருடன் அந்த பெரியவர் வெகுதூரம் வரை அவருடன் வந்துகொண்டே இருந்தார். அவர் யேசு நாதருடன் ஏதோ கேட்க வேண்டும் என்பதுபோல் தோன்றவே யேசுநாதர்,” பெரியவரே… நீர் ஏன் இன்னும் உம்மை வருத்திக்கொள்கிறீர். நீர் சென்று வரலாமே” என்றார். அதற்கு அவர்,” ஆண்டவரே… தேவரீர் எனக்கு எவ்வளவோ செய்திருகின்றீர். ஆனாலும் எனக்கு இன்னும் ஒரு வேண்டுதல் இருகின்றது. ஏற்கனவே நான் என் தகுதிக்கும் அதிகமாக பெற்றுவிட்ட பிறகும் மேலும் மேலும் உம்மிடம் கேட்பது நியாயமாகாது அல்லவா?” என்றார். அதற்கு ஆண்டவர்,” பரவா இல்லை. உமக்கு வேண்டுவதைக்கேளும்.” என்றார். ஆண்டவரே, தேவரீர் என் மகன் எலிஷாவை குணப்படுத்த வேண்டும். என் மகன் சிறுவயதிலேயே காணாமல் போய்விட்டான் என்பது உண்மை அல்ல. அவனுக்கு தொழு நோய் கண்டிருந்ததால் சமூகம் என்னையும் என் குடும்பத்தாரையும் தள்ளி வைத்துவிடும் என பயந்தே நான் அவனை மறைத்து வைத்திருகின்றேன். தேவரீர் அவன்மீதும் என் மீதும் இரக்கம் வைக்கும்படியாகவும் மன்னிக்கும்படியாகவும் உம்மை மன்றாடுகின்றேன்” என்று மிகவும் அழுதார். அதற்கு யேசுநாதர்,” பெரியவரே அனைத்தையும் நான் அறிவேன். கடந்த முப்பது வருடங்களாக உம் உள்ளக்குமுறலை நான் கேட்டு வந்திருகின்றேன். உன் மனைவி கொலம்பாவின் கண்ணீரையும் நான் கண்டு வந்திருகின்றேன். உம் மகன் எலிஷாவின் கதறலையும் நான் அறிவேன். கேட்காத எந்த ஒரு வரமும் அருளப்படாது. ஆனால் நாம் உம் மூவர் மட்டிலும் மிகுந்த தயவாயிருகின்றோம். உம்மகனை எங்கே பாதுகாத்து வைத்திருக்கின்றீர்?”
  “ ஆண்டவரே அந்த மலையின் உச்சியில் தாவீது அரசர் வசித்து வந்தார் அல்லவா அதுபோன்ற ஒரு குகையில்.” என்றார். பெரியவர். “ சரி அவனை கூப்பிடுங்கள் நான் அவனை  பார்க்க வேண்டும் “ என்றார்.இயேசுநாதர்.
“மகனே எலிஷா… இதோ யேசுநாதர் …நம் இரட்ச்சகர் வந்திருகின்றார். வெளியே வா…” என்று பலமாக கூவினார். அவர் பலமுறை கூவி அழைத்தும் பதில் வரவில்லை. தன் மகன் ஒருக்கால் வியாதியின் காரணமாக இறந்திருப்பானோ என்று நினைத்த பெரியவர் பலமாக அழத்துவங்கினார். “ பெரியவரே … நம்பிக்கை இழக்க வேண்டாம். மீண்டும் அவனை சப்தமாக கூப்பிடுங்கள். அவன் பசி மயக்கத்தில் இருகின்றான்” என்றார். இயேசு. பெரியவர் மீண்டும் பலமாக‘ எலிஷா பதில்கொடு ‘ இங்கே யேசு நாதர் உன்னை குணப்படுத்த வந்திருகின்றார். வெளியே வா” என்று கத்தினார்.அப்போது மிகவும் பஞ்சையாகிப்போன ஒரு மனித உருவம் வெளியே வந்தது.
 குஸ்டரோகத்தின் கொடுமையாலும் பசி தாகத்தினாலும் மிகவும் சோர்ந்தும் களைத்தும் பேசக்கூட முடியாமல் தன் கைகளை நீட்டி” அப்பா… நான் மரித்துக்கொண்டிருகிறேன். இனிமேல் எனக்கு நிரந்தர விடுதலை கிடைத்துவிடும். நீங்கள் போய்வாருங்கள் அப்பா “ என மெல்லியதாக பேசினான். இவன் நிலை கண்ட யேசுநாதர் அவன்மீது மிகுந்த பரிவுகொண்டு,” எலிஷா…நீ மரிக்க அல்ல… நீ குணப்படுத்தப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்காகவே நான் உன்னிடம் வந்திருகிறேன். உன் கைகளை என்னிடம் நீட்டு “ என்றார். எலிஷா தன் கைகளை நீட்டினான். அவன் கைகளைப்பற்ற யேசுநாதரும் அவனிருக்கும் இடத்திற்கு மேலே ஏறிச்சென்று அவன் விரல் நுனியை தொட்டு,” நான் விரும்புகிறேன்…நீ குணமாகு” என்றார். அந்த நேரமே எலிஷா குணமடைந்தான். அவன் தோற்றம் ஒரு நாற்பது வயது வாலிபன்போல் மாறியது. மகன் கீழே வந்ததும் தன் வயதையும் பொருட்படுத்தாமல் அவனை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க ஓடினார். ஆனால் ஆண்டவர் அவரை தடுத்து ,” மகன் மீதுள்ள பாசம் வேதப்பிரமாணத்தை மீறிவிடக்கூடாது.. அவனை வேதம் சொல்லும் முறைப்படி சுத்திகரித்து பிற்பாடு அவனோடு சந்தோஷமாக இரும்” என்று அவர்களுக்கு வாழ்த்துகூறி அவர்களிடமிருந்து விடை பெற்றார்.        விசுவாசத்தை கடைபிடிப்போரின் வேண்டுதல் ஒன்றுக்கு மூன்றாய் அவர்கள் கேட்பதற்கும் மேலாக சேர்த்துக்கொடுக்கப்படும்.
 இது ஆண்டவரின் அருள் வாக்கு.
பின் குறிப்பு:  ஒரு காலத்தில் ஆதாம் ஏவாள் வாழ்ந்து வந்த ஏதேன் தோட்டதிற்கு ஈடான தோட்டமாக இருந்த அக்காலத்திய சாக்கடல் பகுதி இப்போதுவரை உப்புக்கடலாகவே இருகின்றது. ஆனால் இந்த சாக்கடலைப்பற்றிய இயேசுநாதரின் தீர்க்கதரிசனம் நம்காலத்திலேயே கூடிய விரைவில் நிறைவேறப்போகின்றது.. ஏற்கனவே செத்த கடல் எனப்படும் சாக்கடல் மேலும் அழிவுறும் நிலையில் இருகின்றது. இன்னும் சில காலத்தில் அது முற்றிலும் வறண்டுவிடும் அபாயத்தில் உள்ளதால் இதைக்காபாற்ற இஸ்ரேயேலின் தென் திசை எல்லையாகிய ஏலாத்தில் செங்கடலிலிருந்து ஒரு பெரும் கால்வாய் வெட்டி அதை இந்த சாக்கடலில் இணைப்பார்கள். அப்போது இந்த சாக்கடலுக்கு நீர் வற்றாது கிடைத்துவிடும். பல மில்லியன் டாலர் பொருட்சிலவில் இத்திட்டம் ஆரம்பிக்கப்போவதால் இஸ்றேலும் ஜோர்டானும் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றி கைஎழுத்து போட்டிருகின்றார்கள். இத்திட்டம் நிறைவேறினால் சாக்கடலில் உயிரினம் பெருகும். மீன்வளம் அதிகரிக்கும். இந்த செத்த கடல் என்னும் பெயர் மாறி நல்ல கடல் என்னும் பெயர் பெறும்.அதன் எல்லை இந்த இரண்டாம் ஏதேன் எனப்படும் எங்கேடி பட்டிணம் வரை விரியும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.


Sunday, July 22, 2018

என்ரோகில் எனப்படும் சதி மலை.


என்ரோகில் எனப்படும் சதி மலை.



இஸ்ரேல் தேசத்தின் வரலாற்றில் இந்த என்ரோகில் என்னும் இந்த இடத்திற்கு ஒரு தனி சிறப்பான இடம் உண்டு. இந்த இடம் பல சதிகளைக்கண்டதால் இந்த இடமே சதிமலை எனப்படுகின்றது. காரனம் இல்லாமல் இல்லை. தாவீதரசரின் மகன் அப்சலோம் தன் தந்தைக்கு எதிராக கலகம் செய்ததினால் ஜோனத்தானும் அஹிமாசும் நாட்டுக்குள் நுழைய முடியவில்லை..  இருப்பினும் அவர்களைப்பற்றிய தகவல் அறியவேண்டி இருந்ததால் ஒரு பெண் உளவாளி தாவீது அரசரால் நியமிக்கப்பட்டிருந்தாள். அவள் வழியாகவே இவர்கள் என்ரோகில்லில்  தங்கியிருப்பது  கண்டறியப்பட்டது. இவளே தாவீதரசருக்கும் ஜோனத்தானுக்கும் தொடர்பாக இருந்தாள்.சில காலத்திற்குப்பிறகு  நடந்த போரின்போது அப்சலோம் கொல்லப்பட்டதால் தாவீதரசருக்குப்பிறகு அவருடைய சிம்மாசனம் யாருக்கு என்ற போட்டியில் அவரது வாரிசுகளில் ஒருவனாகிய அதோனிஜா கிளர்ந்தெழுந்தான். தனக்கு ஆதரவான அரச பிரதிநிதிகளை ஒன்றுகூட்டி தாவீதின் அடுத்த வாரிசு பதவி தனக்கே கிடைக்கும்படி கேட்டுக்கொண்டு ஒரு நாளில் பாம்புக்கல் என்னும் இடத்தில் ஒரு பெரும் விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்து ஒரு பெரும் பலியும் ஒப்புக்கொடுத்தான். அந்த இன்றளவும் சோஹிலாத் ( ZOHILATH ) என்றழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு நீரூற்றிற்க்கு நெஹெமியாவின் கிணறு என்றும்  மேரியின் நீரூற்று என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த விஷயம் உடனே தாவீதின் உளவாளியான அந்தப்பெண் வழியாக தாவீதரசருக்கு தெரியப்படுத்தப்பட்டது.  உடனே சுதாரித்துக்கொண்ட ராணி பெத்ஷீபா தாவீதரசருக்கு கொடுத்த நெருக்கடியில் அவர் உடனே சாலமோனுக்கு அந்த இரவிலேயே இளவரச பட்டம் சூட்டினார். உடனே அரச தோட்டத்தில் கிஹூன்  என்னும் நீறூற்றுக்கு அருகில் பிரம்மாண்டமான விதத்தில்ஒருபெரும் விருந்து நடந்தது. இளவரசர் சாலமோன் வாழ்க என்னும் வாழ்த்தொலி கேட்டது. அவ்வளவுதான். தனக்கு இளவரசு பட்டம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சந்தோஷமாக இருந்த  அதோனிஜாவின் எண்ணத்தில் மண் விழுந்தது. இப்படியாக இந்த என்ரோகில் அருகில் நடந்த அரச சதி முறியடிக்கப்பட்டது.
       இயேசுநாதரின் காலத்தில் இந்த என்ரோகில் என்னுமிடத்தில் சில ருசிகரமான சம்பவங்களும் நடைபெற்றன. அவற்றில் ஒன்றுதான் மரியாளின் கிணறு.  மிகப்பழமையான காலத்தில் இந்த கிணறு நெஹேமியாவின் கிணறு என்றும் யோபுவின் கிணறு என்றும் அழைக்கப்பட்டது.
தேவத்தாயார் தனது  பேறுகாலத்தில் பெத்லஹேம் நகருக்கு செல்ல வேண்டி நேர்ந்தது. இந்த நெஹேமியாவின் கிணற்றருகில் வந்த உடன் அவருக்கும் அவர் கணவர் யேசேப்புக்கும் மிகுந்த தாகம் ஏற்பட்டது. ஆனால் கிணறு ஆழமாக இருந்ததால் ஒரு கயிறு மற்றும் வாளி இல்லாமல் தண்ணீர் எடுக்க முடியாததால் யோசேப்பு அருகில் இருந்த ஒரு வீட்டில் தனக்கும் தன் நிறைமாத கர்பிணியான தன் மனைவிக்குமாக தண்ணீர் கேட்டார். ஆனால் அந்த வீட்டு எஜமானி அவரை கொடும் சொற்களால் துறத்தினாலள். ஆனால் அவள் மருமகள் அவருக்கு தயவாய் நடந்துகொண்டாள். அவருக்கு ஒரு கயிறும் வாளியும் தந்து உதவினாள். நடந்ததை அறிந்த தேவதாயார் மிகவும் வருந்தினார். தங்களால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பதிற்காக அந்த மருமகளிடம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு அவரிடமே அந்த வாளியையும் கயிற்றையும் கொடுத்துவிட்டு அதற்கு நன்றியும் கூறினார்.
    பிறகு கடவுளுக்கு தங்களுக்கு தண்ணீர் தாகம் தீர்க்க ஒரு வேண்டுதளையும் வைத்தார்.. அப்போது உடனே ஒரு பெரும் புதுமை நிகழ்ந்தது. பெரும் ஆழமாக இருந்த கிணற்றின் நீர் மட்டம் மளமளவென்று உயர்ந்தது. அது தரைமட்டம் வரை உயர்ந்தது. இந்த அதிசயத்தைக்கண்ட அந்த மருமகள் பெரும் ஆச்சர்யம் அடைந்து மாதாவின் கால்களை பிடித்துக்கொண்டு தன் மாமியாரை மன்னிக்கும்படியாக மன்றாடினாள். மாதாவும் தான் எதையும் மனதில் வைத்துக்கொள்ளவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் அவள் அழுவதை நிறுத்தவே இல்லை. இந்த  நிகழ்வு இன்றளவும் இங்குள்ள பாலஸ்தீனிய மக்களால் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றது. அதனால்தான் இந்த கிணறு மாதா மேரியின் கிணறு ( Virgin’s fountain…Ain Sitti Maryam ) என்று சொல்லப்பட்டு வருகின்றது. கதை இத்துடன் முடியவில்லை.
    இயேசுநாதரை சந்திக்க மூன்று அரசர்கள் பெத்லஹேமுக்கு வந்தார்கள் அல்லவா. அவர்கள் இந்த என்ரோகில் நகருக்கு வந்தபோது இங்கேதான் தங்கினார்கள். இந்த மாதாவின் கிணற்றருகில்தான் தங்கினார்கள். அந்த இரவு முழுவதும் அந்த மூன்று அரசர்களும் கடவுளை தொழுதுகொண்டே இருந்தனர். குழந்தை இயேசுவை கண்டு மீண்டும் தங்கள் தாய் நாடு திரும்பிச்செல்லும் வரை இந்தக்கிணற்றின் நீர் மட்டம் குறையவே இல்லை.
இயேசுநாதரின் மூன்றாம் வருட வேதபோதகத்தின்போது அவருடைய சீடன் யூதாஸ் தான் பொது நிதியிலிருந்து ஒதுக்கிவைத்திருந்த பணத்தில் இந்த இடத்தருகேதான் ஒரு நிலம் வாங்கி இருந்தான். இயேசுநாதரை காட்டிக்கொடுக்கும் சதி இந்த நிலத்திலிருந்துதான் உருவாகி இருந்தது. அன்றைய  தலைமை குருவாயிருந்த கைப்பாஸ் யூதாசை ரகசியமாக சந்தித்ததும் இங்கேதான். கைப்பாஸின் அடியாள் சீமோன் என்பவனும் யூதாசும் இந்த விஷயத்தில் நண்பர்கள் ஆயினர். இந்த சதிகாரர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்துக்கொள்வதும்  இந்த என்ரொகில் கிணற்றருகேதான்.
   ஆதிகாலத்தில் தாவீது ராஜாவின் காலத்தில் அவரை அகற்றிவிட்டு தானே அரசாளவேண்டுமென்ற ஆசையின் விளைவாக சதி தீட்டினான் அதோனிஜா. ஆனால் முடிவில் தன் சதி வெளிப்பட்டுவிட்டதால் அவன் கொல்லப்பட்டான்.
இதே நிலைதான் இப்போதும் ஏற்பட்டது. தாவீது அரசரின் வம்சாவளியில் வந்த யூதர்களின் அரசர் என்றழைக்கப்பட்ட யேசுநாதரை கொல்ல இப்போதும் இதே இடத்தில் மீண்டும்  ஒரு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. அதற்கான ஒரு ஒப்பந்தமும் போடப்படுகின்றது. முப்பது வெள்ளிக்காசுகளை கைபாஸிடமிருந்து யூதாஸ் பெற்றுக்கொண்டதும் இதே இடத்தில்தான்..
      என்ரோகெல் எனப்படும் இந்த இடம் ஜெருசலெமுக்கு தென் கிழக்கில் ஊருக்கு வெளியே அடுத்திருப்பதால் இரவில் ஜனசந்தடி என்பதே இராது என்பதினால் ரகசியமாக செய்யக்கூடிய வேலைகளுக்கு இந்த இடம் மிகவும் ஏற்றதாக அமைந்துவிட்டது. எனவேதான் யூதாஸ் தன் சதி வேலைகளுக்கு இந்த இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டான். யேசுநாதரின் மற்றைய சீடர்களுக்கு இவனைப்பற்றிய நடவடிக்கைகளை கண்டறிய முடியாமல் போனதற்கு இந்த இடமும் ஒரு காரணம். இந்த இடத்தில் யூதாசுக்கு சொந்தமாக ஒரு தோட்டம் இருப்பதும் யாருக்கும் தெரியாது. இந்த தோட்டத்தில் மிகவும் பெரிதான ஒரு பெரும் ஓக் மரமும் இருந்தது. அதற்கு பெரிதான எட்டு கிளைகளும் இருந்தன. யேசுநாதரைக்காட்டிக்கொடுத்த பிறகு யூதாசை அவன் மனது சும்மாவிடவில்லை. அதன் மனக்குத்துகளால் அவன் மிகவும் மனம் உடைந்தான்.இத்தனைக்கும் அவன் யேசுநாதரை அவரது சிலுவையின் பாடுகளின்போது இருமுறை சந்தித்தான்.அப்போதுகூட அவன் மனது மாறவில்லை. அவரது கனிவான பார்வைகூட அவனை மனம் மாறச்செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு சாத்தான் அவனை முற்றிலும் தன் வயப்படுத்தியிருந்தான். அவனுக்கு யாரையும் காணப்பிடிக்கவில்லை. ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் முடிவு வரை ஓடினான். எங்கு  ஓடியும் அவனுக்கு மனது சாந்தி அடையவில்லை. யேசுநாதரின் ராப்போஜன அறைக்குள்ளுமாக சென்றான். அங்கே தேவத்தயாரை சந்தித்தான். “ மகனே  என்னுடன் ஒரு நிமிடம் பேசு. உன் தாயாராக நாம் இருகின்றோம்.என்னை விட்டுப்போகாதே. மீண்டும் என் மகனிடம் திரும்பி போ. உனக்கு மனமிருந்தால் சொல். அவர் உன்னை மன்னிக்கும்படி நாம் பரிந்துரைப்போம் “ என்று அவன் மனது உருகும்படி பலவிதமான வார்த்தைகளால் அவனிடம் கூறினார். ஆனால் அனைத்தும் வீனாகின. அவன் அங்கிருந்து மீண்டும் ஓடத்துவங்கினான். ஓடி ஓடி அன் கால்கள் சலித்துப்போய் அவன் தோட்டத்திலிருந்த அந்த பெரிய ஓக் மரத்தின் கிளைகளில் ஒன்றில் தொக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இயேசுநாதரின் திரு உடல் மூன்று நாட்க்களாக கல்லறையில் இருந்ததென்றால் யூதாசின் உடலும் மூன்று நாட்க்களாக இந்த மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. அதனால் அவன் உடல் அழுகி பெருத்துப்போய் மிகுந்த துர்நாற்றத்துடனிருந்தது. முடிவில் அந்த சவத்தின் பாரம் தாங்காமல் பொத்தென்று கீழே விழந்தது. உடனே அவன் வயிறு வெடித்து அவன் குடல் குந்தாணிகள் எல்லாம் வெளியே வந்து பார்க்கவே பயங்கரமாகவும் அருவருப்பாகவும் இருந்தபடியால் யாரும் அதன் அருகிலே செல்லவே பயந்தனர். முடிவில் எப்படியோ அவன் உடல் எடுத்து செல்லப்பட்டு கெதரோன் பள்ளத்தாக்கில் உள்ள குயவன் நிலத்தில்  (akladhamaa)  எனப்படும் இரத்த நிலத்தில் உள்ள ஒரு குகையில் அடக்கம்  செய்யப்பட்டது. இப்போதும் இந்த இடத்தில் அவனது கல்லறை உள்ளது.      Saint Onuphrius. என்னும் ஒரு துறவியின் பெயரால் இந்த இடத்தில் ஒரு மடாலயம் உள்ளது
இயேசுநாதரின் மறைவுக்குப்பின் அவரது சகோதரன் முறையினரான புனித சின்ன யாகப்பர் ஜெருசலேமின் ஆயராக பதவி ஏற்றார். அப்போது நடந்த ஒரு வேதகலாபணையின்போது இவருக்கு யூதர்கள் கல்லால் அடித்துக்கொல்லும்படி உத்திரவிட்டனர். அதன்படி அவர் கல்லால் அடித்துக்கொல்லப்பட்டார். அவரது திரு உடலை ஊருக்கு வெளியே இழுத்துப்போட்டுச்சென்றனர்.  ஆனால் அவர் குற்றுயிராக இருந்ததை அவர்கள் அறியவில்லை. பலமணி நேரம் கழித்து அவர் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
 இரவில் அவர் தடுமாறி வரும்போது இந்த என்ரோகில் அருகில் அவர் காணப்பட்டார். அங்கே துணி துவைத்துக்கொட்ண்டிருந்த ஒருவன் இவர் மரண தண்டனை விதிக்கபட்ட ஒரு  கைதி எனக்கண்டு தான் துணித்துவைக்க வைத்திருந்த  ஒரு நீண்ட கழியால் அவரது கழுத்திலும் தலையிலும் அடிமேல் அடியாக அடித்ததினால் அவர் மரணமடைந்தார். அவரைப்பின்பற்றி வந்த அவரது சீடர்கள் அவரது உடலை கைப்பற்றி நல்ல விதமாக அடக்கம் செய்தனர். இப்போது அவரது கல்லறை ஜெருசலேமின் மத்தியப்பகுதியில் உள்ள  அர்மீனீயர்களின் ஆதிக்கத்தில் உள்ள மடாலயத்தில் உள்ளது.இதே மடாலயத்தில் அவரது கல்லறையின் அருகிலேயே புனித சந்தியாகப்பர் எனப்படும் பெரிய யாக்கோபுவின் சிரசு புதைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது மற்ற எலும்புகள் அருளிக்கங்கள் ஸ்பெயின் தேசத்தில் கம்போஸ்த்தலா என்னுமிடத்தில் உள்ள சந்தியாகப்பர் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
   இந்த என்ரோகில் நகருக்கு அருகில்தான் சிலுவான் என்னும் ஒரு ஊர் உள்ளது. இந்த ஊரில்தான் பழம்பெரும் தீர்க்கதரிசி இசையாஸ் சதியால் மனாசே என்னும் மன்னனால் இரண்டாகப்பிளந்து கொல்லப்பட்டார்.அவரது சமாதியும் இதே கெதிரோன் பள்ளத்தாக்கில் சாலமோன் மன்னருடைய எகிப்த்திய  இளவரசியின் கல்லறைக்கு கீழாக இருக்கின்றது. இப்போது அவரது சமாதி இந்த சிலொவான் நகரில் உள்ளது. அவர் கொல்லப்பட்ட இடத்தில் இப்போது ஒரு மசூதி உள்ளது  இன்றைக்குள்ள என்ரொகில் நகரம் மிகவும் ஜன சந்தடிமிக்க நகரமாக மாறிவிட்டது. பழைய சரித்திரங்களை மறக்கடிக்கும் அளவுக்கு முற்றிலும் நாகரீகமான நகரமாக மாறி உள்ளது.
இஸ்ராயேல் தேசத்தின் இந்த என்ரோகில் நகரில் இன்னும் என்னென்ன சதிகள் நடந்ததோ அது ஆண்டவருக்குத்தான் வெளிச்சம். முற்றும்..


Thursday, August 10, 2017

" இயேசுவின் சகோதரன்."




" இயேசுவின் சகோதரன்."

இந்த கதை நிகழ்ந்தது அன்னோ தோமினி எனப்படும் கிறிஸ்த்து பிறந்த வருடம்.அன்றைய ரோமைய சக்கரவர்த்தி அகஸ்த்து இராயனின் குடிக்கணக்கு ஆணையால் யூதர்கள் ரோமைய சாம்ராஜ்ஜியத்தின் எந்த நாட்டில் இருந்தலும் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று தங்களை ஆஜர் படுத்திக்கொள்ள வேண்டும்.ரோமையர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட தொலை தூரத்திலிருக்கும் யூதர்கள் தங்கள் பிறந்த தேசத்திலேயே ஆங்காங்கிருக்கும் தலைமை அதிகாரியிடம் தங்களின் குடி உரிமையை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
     தங்களைப்பற்றியவும் தங்கள் சொத்து பத்துக்களையும் பற்றிய அனைத்து விபரங்களையும் முறையாக தெரிவிக்க வேண்டும் என்னும் இந்த அரசாங்க ஆணைக்கு யாரும் விதி விலக்கு அல்ல. இந்த அரசாங்க ஆணைக்கு அடிபணிந்து நசரேத்தில் வசித்து வந்த சூசையும் தன் மனைவி மரியாளை அழைத்துக்கொண்டு தம் சொந்த ஊராகிய பெத்லஹேமுக்கு பயணம் மேற்கொண்டார்.அப்போது மாதா மரியாவுக்கு நிறைமாதம்.
மிகுந்த சிரமத்திற்கிடையே இந்த நெடும் பயணத்தை மேற்கொண்டனர்.
இதேபோல ஒரு தம்பதியினர் துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் எப்பேஸுப்பட்டிணத்திலிருந்து தங்கள் குடிக்கணக்கு சமர்பிக்க ஜெருசலேம் பயணம் மேற்கொண்டனர்.
" அன்பே... இந்த பயணத்தை தவிர்க்கவே முடியாதா.? நிறைமாதமாக இருக்கும் என்னால் இவ்வளவு தொலைவான பயணத்தை மேற்கொள்வது மிகவும் பயமாக இருகின்றது. கூடுமானால் நான் வரவில்லை.நீங்கள் மட்டும் போய்வரலாமே?" என்றாள் அவள்.
" இல்லை அன்பே நவோமி. இது அரசாங்க ஆணை மட்டும் அல்ல. இது தெய்வ கட்டளை என்றுகூட நான் நினைக்கிறேன்...நீ இது நாள் வரை ஜெருசலேம் போய்வந்தது கிடையாது அல்லவா. நம் சொந்த நாட்டையும், நம் பழைய
சொந்தங்களையும் அதைவிட நம் முன்னோகள் வழிபட்டுவந்த சாலமோன் பேரரசர் கட்டிய தேவாலயத்தையும் அதனுள்ளே உறையும் நம் முன்னோகள் வணங்கிவந்த தேவாதிதேவனாகிய இஸ்ராயேலின் தேவனையும் நாம் சென்று பார்த்து வணங்கி வரவேண்டும் என்பதும் என்னுடைய நீண்ட நாள் ஆசை. தாவீது ராஜாவின் ஊராகிய பெத்லஹேமில் எனக்கும் சில அசையா சொத்துக்கள் இருகின்றன.நானும் தாவீது ராஜாவின் பரம்பரையில் வந்தவந்தான்.எனக்கும் ஒரு இளவரசனுக்கு உள்ள எல்லா தகுதியும் உரிமையும் இருக்கின்றது. இந்த உரிமையை நாம் புதுப்பித்தே ஆக வேண்டும். அப்போதுதான் அவற்றை நாம் நமக்கு பிறக்கப்போகும் நம் மகனுக்கு மாற்றித்தர இயலும் அல்லவா. அது என் கடமையும் கூட.
அதற்காகவும் நாம் போய்த்தான் ஆக வேண்டும்.கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு கவலைப்படாமல் பயணத்தை துவங்கு. சீக்கிரம் தயாராகு" என்றான் அவள் கணவன்.
     சற்று நேரத்தில் ஒரு அழகிய அப்சரசாக அவன் முன்னே வந்து நின்றாள் அவன் மனைவி நவோமி.அவள் அழகிய மயங்கிய அவள் கணவன்," அன்பே நவோமி..உன் வயற்றில் இருப்பது யார்.? அது ஆணாக இருந்தால் அவனும்
என்னைப்போன்று தாவீது அரசின் பாரம்பரியத்தில் வந்திருக்கும் ஒரு இளவரசனாக இருப்பான்.பெண்ணாக இருந்தால் ?.
" இது என்ன கேள்வி.அது பெண்னாக இருந்தால் அவளும் ஒரு இளவரசியாகத்தான் இருப்பாள்."
" சரி. அது ஆணாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம். பெண்ணாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம்.?"
" எனக்கு மகன் பிறந்தால் அவனுக்கு ஆண்டவனின் அருள் என்னும் பெயரை வைக்கலாம்."
" சரி.. அது பெண்ணாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம்."
" ஓஓஓஓ... அதற்கு வாய்ப்பே இல்லை. எனக்கு ஒரு மகன் தான் பிறப்பான் என்று என் உள் மனது சொல்கின்றது. தவறி பெண்ணாக பிறந்துவிட்டால் அதற்கு ரபேக்கா என்னும் பெயர் வை. அவளைப்போன்ற ஒரு பெண்ணழகி இந்த இஸ்ராயேல் குலத்தில் யாரும் இதுவரை பிறந்ததில்லை."
" அன்பே உங்கள் இஸ்ட்டமே என் இஸ்டமும். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் அதற்கு ஆண்டவனின் அருள் என்றே பெயர் வைப்பேன். .பெண்ணாக பிறந்தால் அதற்கு ரபேக்கா என்னும் பெயரையே சூடுவேன். இது சத்தியம் என்றாள் நவோமி.
" அன்பே இது உனக்கு நிறைமாதம்.இங்கிருந்து ஜெருசலேம் செல்ல மூன்று நாள். அங்கே நம் வேலைகளை முடித்துவர ஒரு வாரம். மீண்டும் எப்பேசு திரும்பிவர ஒரு நான்கு நாள். எப்படியும் உனக்கு இந்த எப்பேசில்தான் பிரசவம். ஆண்டவன் சித்தப்படி எல்லாம் நடந்தால் நம் பெத்லஹேம் பயணம் ஒரு பெரும் வெற்றியாக இருக்கும். புறப்படு " என்றான் அவள் கணவன்.ஆனால் அவர்களுக்கு ஏற்படப்போகும் பயங்கரம் அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
. ஆண்டவன் சித்தம் வேறுமாதிரியாக இருந்தது.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ஆயிரக்கணக்காண யூதர்கள் தூர தூர தேசங்களிலிருந்து வந்து தங்கி தங்கள் குடிக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டி இருந்ததால் அந்த சிறிய பெத்லஹேம் கிராமம் அல்லோகல்லோகப்பட்டது.
     சூசையப்பர் தானும் தன் மனைவியும் தங்குவதற்கு ஒரு நல்ல இடமாக எவ்வளவு தேடியும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. தன் சொந்த ஊரில் அவருடைய சொந்தங்களும் பந்தங்களும் நண்பர்களும் எந்த உதவியும் தரமுடியாது என்று கை விரித்துவிட்ட நிலையில் அவர் மிகவும் தவித்துப்போனார். எனவே அவர் வேறு வழி இன்றி ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்திலிருந்த ஒரு குகையில் தங்கவேண்டியது அவசியம் ஆயிற்று. இந்த நிலையில் பெத்லஹேமின் மாட்டுக்குடிலில் தேவ தாயாருக்கு இயேசு நாதர் பிறந்தார். அவர் பிறந்து ஒரு சில நாட்களே ஆகியிருக்கும். ஒரு நாள் இரவில் அந்த குகையின் ஒரு மூலையில் தொப் என்னும் ஒரு சப்தமும் யாரோ வலி வேதனையில் முனகுவது போன்ற ஒரு சப்தமும் ஒரு குழந்தை அழும் சப்தமும் மாதாவுக்கு மிகத்தெளிவாக கேட்டது.
" என் அன்பரே, யாரோ இங்கே இருகிறார்கள். அவர்களுக்கு ஏதோ துன்பம் நேர்ந்தது போல் இருகின்றது. தயவு செய்து சிரமம் பாராமல் போய் பார்த்து வாருங்கள்" என்றார் மரியாள்.
    இந்த சப்தத்தை சூசையப்பரும் கேட்டிருந்ததால் அவரும் தீவட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு அடுத்த குகைக்கு போய் பார்த்தபோது அவருக்கு தலை சுற்றிப்போனது. ஒரு பச்சிளம் குழந்தையும் அதன் தாயும் மரண அவஸ்த்தை
பட்டுக்கொண்டிருந்தனர். அந்தப்பெண்ணால் பேச முடியாத அளவுக்கு நோய்வாய்பட்டிருந்தாள். தீவட்டியின் வெளிச்சத்தில் அவர்களை பார்த்த சூசையப்பர் அதிர்ச்சியுற்று," அடக்கடவுளே...இவளுக்கு குஸ்ட்ட நோய் பீடித்திருக்கின்றது.இந்த நிலையில் இவளை விட்டல் அவள் இன்றோ அல்லது நாளையோ இறப்பது உறுது. என்ன செய்யலாம் எனறு யோசித்தவராய் மீண்டும் தன் மனைவி மரியாளிடம் வந்தார்.
" மரியா.... இது என்ன கொடுமை. யாரோ ஒரு எபிரேய பெண். குழந்தையுடன் நோய்வாய்ப்பட்டிருகின்றாள். குஸ்ட்டம் போல் தோன்றுகிறது. அவள் நிலையும் அவள் குழந்தையும் நிலையும் மிகவும் பரிதாபம். அந்த குழந்தை இன்னும் சிலமணி நேரத்தில் இறப்பது உறுதி.அவள் குஸ்ட்ட ரோகி என்பதால் நாம் மிகவும் யோசிக்கிறேன்." என்றார்.
" அன்பரே... இந்த நேரத்தில் யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. அந்த குழந்தை உயிரோடிருக்கின்றது என்றால் அதை உடனே என்னிடம் எடுத்து வாருங்கள்.நான் பார்த்துக்கொள்கிறேன். அதன் தாயை நாளை பார்த்துக்கொள்ளலாம் ".என்றார்.
" மரியா... நீ விஷயம் தெரியாமல் பேசுகின்றாய். அந்தக்குழந்தையும் குஸ்ட்டம் என்றால்... நாம் தீட்டுப்படுவோம்.நம் குழந்தையும் தீட்டுப்படும்.. இந்த குற்றதிற்காக நீயும் நானும் வேதபாரகர்களால் தீர்வையிடப்பட்டு கல்லால் எறிந்து கொல்லப்படுவோம்..இது எல்லாம் நமக்கும் தேவையா?" என்றார் சூசையப்பர்.
" அன்பரே... அப்படியானால் நம் கண்முன்னே இரு உயிரை பலியாக்க சொல்கிறீர்களா. அவர்கள் கடவுளின் திருவுளப்படியே இங்கே கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களின் உயிருக்கு பாதுகாப்பளிக்க வேண்டியது நம் கடமை. இவர்களை இப்படியே சாகட்டும் என்று விட்டுவிடுவது பிறர் சினேகத்திற்க்கு எதிரான பாவம். இந்த விஷயத்தில் ஊர் உலகத்தைப்பற்றியோ வேத சாஸ்த்திரங்களைப்பற்றியோ நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அப்படி இந்த தாயையும் சேயையும்  தொட்டு காப்பாற்றிய பாவத்துக்கு நாம் ஆளானால் நம் உயிரே போனாலும் கடவுள் நமக்கு சன் மானம் அளிப்பார் என்பதில் நாம் தெளிவாக இருப்போம். முதலில் அந்த குழந்தையை என்னிடம் எடுத்து வாருங்கள். அதனை சுடு நீரில் குளிப்பாற்றி என்னிடம் எடுத்துவாருங்கள் அதற்கு உயிர்பால் கொடுக்க வேண்டும்.. சீக்கிரம் எடுத்துவாருங்கள்" என்றார் தேவ மாதா..தன் பத்தினியின் பிறர் சினேகத்தைப்பற்றி மிகவும் வியந்துபோன சூசையப்பர் அந்த வியாதி பீடித்திருந்த குழந்தையை தொட்டு எடுத்துவந்து அதைக்குளிப்பாட்டி தன் மனைவியிடம் கொடுக்க தேவத்தாயார் எந்தவிதமான அருவருப்பும் அடையாமல் அந்த குழந்தைக்கு இயேசுநாதருக்கு கொடுக்க வேண்டிய தன் தாய்ப்பாலை கொடுத்தார்.
    இதைப்பற்றி எதுவும் கவலைப்படாமல் இயேசு என்னும் அந்த குழந்தை தனக்கு பசியே இல்லை என்பதுபோல மிகவும் ஆர்ப்பாட்டமாக விளையாடிக்கொண்டிருந்தது. இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக அக்காலத்தில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கி.பி. 33.
இயேசு நாதரின் மூன்றாம் வருட வேதபோதகத்தின்போது பல ஆச்சரியமான சம்பவங்கள் நிகழ்ந்தேறின.இயேசுநாதர் ஜெருசலேம் தேவாலயத்தில் பிரசங்கித்தபின் சற்றே ஓய்வெடுக்க ஜனசந்தடியற்ற ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். அப்போது  அவரை சந்தித்துப்பேச சிறு கூட்டத்தோடு வந்த ஒரு முதியவர் வந்தார். " ராபி வாழ்க" என்றார். அதற்கு இயேசுநாதரும் ஆண்டவரின் சமாதானம் உம்மோடு இருப்பதாக " என்று கூறினார்." ராபி... என் குருநாதர் யோவான் ஸ்நானகர்  தங்களைப்பற்றி அனேக காரியங்கள் கூறியிருகின்றார். ஆனால் நான் கேட்டறிந்த அனேக காரியங்கள் எங்களுக்கு அச்சமூட்டுபவையாக இருகின்றன.தங்களுக்கு சித்தமானால் அவற்றைபற்றி உங்களிடம் தனியே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்." என்றார். இயேசுநாதரின் ஒரு பார்வையில் அனைவரும் அகன்றனர்." பெரியவரே இப்போது நீர் கூற நினைப்பதை என்னிடம் கூறலாம் " என்றார்.
" ராபீ... என் குருநாதர் எங்களை விரியன் பாம்பு குட்டிகளே என்றழைப்பார். அவருடைய வல்லமையான பிரசங்கங்களால் நாங்கள் மனம் மாறி உண்மையான தேவனை அறிந்துகொண்டோம். பாம்பாக இருந்த நாங்கள் இப்போது ஆண்டவர்க்கு பயனுள்ள பிறவிகளாக மாறிவிட்டோம். ஆனால் இப்போது பாம்புகள் எங்களிடம் இல்லை. அவை இப்போது உம் சீடர்களிடயே சில பேரிடம் நுழைந்துவிட்டன. அதோ அந்த செந்தாடிக்காரனை [ யூதாஸ் ] பார்த்தீர்களா.. அவனுடம் பேசுகிறானே ஒருவன். அவன் பெயர் மார்க்கு. இவன் வேறு யாரும் அல்ல. முன்பு ஒரு சமயம் கலிலேயாவில் பேய் பீடிக்கப்பட்டிருந்த மனிதன் ஒருவனின் அசுத்த ஆவிகளை விரட்டி அவைகளை இரண்டாயிரம் பன்றிக்கூட்டத்தில் செலுத்தி அவனை
காப்பாற்றினீரே... அவனேதான். அவன் மனம் திருந்தி நன்றாகத்தான் வாழ்ந்து வந்தான். ஆனால் காலப்போக்கில் காசுக்கு ஆசைப்பட்டு மனம் மாறி பழையபடியே அந்த அசுத்த ஆவிகளைவிட அதிக வல்லமையான ஆவிகளை தானே வலிய ஏற்றுக்கொண்டதினால் அவன் இப்போது ஏவல் பில்லி சூனியம் என தொழில் செய்து வருகின்றான்.சொல்லப்போனால் அவன் உயிருள்ள சாத்தான் ஆகிவிட்டான்.முன்பு ஊமையும் செவிடுமாயிருந்த சாத்தான்கள் இப்போது அவனுக்கு நிறைய பேசும் வல்லமைகளை கொடுத்திருகின்றன. அவன் பல விஷயங்களைப்பற்றி அதிகம் பேசுகிறான்.அவனிடம் தர்க்கம் செய்யும் எவனும் அவனிடம் தோற்பது உறுதி. தாங்கள் சொல்லியபடி அவன் பிந்திய நிலை முந்திய நிலையைவிட மோசமாயிற்று. இந்த செந்தாடிகாரனாகிய யூதாசும் இந்த பேய் மனிதனாகிய மார்க்கும் ஜெருசலேமில் தேவாலய பெரிய குரு கைப்பாஸின் வீட்டில் அடிக்கட்டி காணப்படுகின்றார்கள். இவர்கள் மட்டில் தேவரீர் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று நான் மிகவும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
     " பெரியவரே தங்கள் எச்சரிக்கைக்கு நன்றி.நான் என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும். நான் என்பிதாவின் சித்தப்படியே போக வேண்டி உள்ளது. நாம் ஆத்மாக்களை நேசிப்பவர் ஆதலால் என்னை விரும்பி அழைப்பவர்  உள்ளங்களில் நாம் பிரவேசிப்போம். சாத்தானை விரும்பி ஏற்றுக்கொள்பவர் இதயங்களில் அவன் பிரவேசிகிறான்.நாம் இருக்கும் இடாங்களில் சாத்தான் இருப்பதில்லை. இவன் இருக்கும் இடங்களில் நாம் இருப்பதில்லை. மனிதன் சுத்த சுயாதீனமாக படைக்கப்பட்டிருப்பதால் அவர்களின் சுய விருப்பங்களில் நாம் தலையிடுவதும் இல்லை. அவனவன் ஆத்துமங்களுக்கு அவனவனே அதிபதியாவான்.இப்போதும் மார்க்கும் யூதாசும் என்னுடைய நேரடிப்பார்வையில் இருந்தாலும் நாம்
அவர்கள் மட்டில் இரக்கம் மிக்கவறாகவே இருகின்றோம். என்னை சரணடையும் பட்சத்தில் அவர்களையும் இரட்சிக்கவே நாம் விரும்புகிறோம்." என்றார்.
" ஆண்டவரே...இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. அந்த செந்தாடிக்காரனை இப்போதே நீர் விலக்கிவிடுவது நல்லது.உமது உயிருக்கு அவனால்தான் ஆபத்து என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். நீவீர் உண்மையிலேயே அளவுக்கு மீறி நல்லவராகவும் இரக்கம் மிக்கவராகவும் இருப்பதால் மனிதர்கள் பலர் உம்மிடம் வேண்டி கொடைகளை பெற்றுக்கொண்ட பிறகு கரும்பை சுவைத்தபின் துப்பிவிடுவதுபோல் உம்மைவிட்டு போய்விடுகின்றார்கள். இன்னும் அவனை நீர் உம்முடன்
வைத்துக்கொண்டால் இனிமேல் உம்பாடு கஸ்ட்டம் தான்.உம்மை இனிமேல் அந்த பரலோக பிதாதான் காப்பாற்ற வேண்டும். நான் சென்று வருகின்றேன்" என்றார்.
" பெரியவரே..இவை அனைத்தையும் நான் அறிவேன்.மனிதர் அனைவருமே நன்றிகெட்டவர்கள்தான்.ஆனாலும் அவர்களையும் நான் நேசிக்கவே செய்கிறேன்.இந்த உலகத்தில் பிறந்த ஒரு சில மனிதரை தவிர என் பிதாவின் மனதைக்காயப்படுத்தாதவர்கள் யாருமே இல்லை." என்றார் இயேசுநாதர்.
       அப்போது ஒருவன்," ஆண்டவரே... நசரேத்தூர் இயேசுவே....என்மேல் இரக்கம் வையும் " என்றான். " ஆண்டவரே...உம்மைக்காண நான் வெகு தூரத்திலிருந்து வந்திருகின்றேன்.ஆண்டவரின் புண்ணியத்தில் எனக்கு செல்வத்திற்கு குறைவில்லை. ஆனால் எனக்கு பார்வை இல்லை.தேவரீர் எனக்கு பார்வை தர வேண்டுகிறேன்." என்றான்.
அவனை சற்றே உற்றுப்பார்த்த இயேசுநாதர்," என் சகோதரா... நீர் வேண்டியபடியே உனக்கு பார்வை உண்டாகட்டும்" என்றார்.அப்போதே அவன் பார்வை பெற்றான்.
" ஆண்டவரே...தேவரீர் உம் திருவாயால் என்னை சகோதரா என்றழைத்ததும் எனக்கு பார்வை தந்ததும் என்னை மிகுந்த பரவசத்தில் ஆழ்த்தியது. தேவரீருக்கு அனந்த கோடி நமஸ்காரம் உறித்தாகுக" என்றார்.
அன்று மாலை வேளையில் செல்வ செழிப்பான ஒரு பெண்ணும் அவளது உறவினர்களும் இயேசுவின் திருத்தாயாரை சந்தித்தனர். வந்திருந்த அந்தப்பெண் தேவதாயாரை சந்தித்த அக்கணமே," அருள் நிறைந்த மரியே வாழ்க, பெண்களுக்கும் ஆசி பெற்ற மாதரசியே வாழ்க " என்று முகமன்கூறி அவரது பாதங்களில் சாஸ்டாந்தமாக விழுந்தாள். அந்த நிலையிலே அவள் பரவசமாக ஆனந்தக்கண்ணீர் வடித்தாள்.
" பெண்னே யாரம்மா நீ... நீ ஏன் என் கால்களில் விழவேண்டும். நான் உனக்கு என்ன செய்தேன்.?" என்றார் தேவத்தாயார்.
" அம்மா... நீங்கள் என்னை மறந்து போனீர்களே அம்மா. இந்த நவோமியை.... எப்பேசுவின் நவோமியை மறந்துவிட்டீர்களா அம்மா?" என்று மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவளாக அவள் அழுதுகொண்டே இருந்தாள்.
" சகோதரி..என்னுடைய தினசரி வாழ்க்கையில் நான் எவ்வளவோ பேரை சந்திக்கிறேன்.அனைவரையும் நான் நினைவில் கொள்ள முடியாதல்லவா. உண்மையில் நீ யாரென்றே எனக்கு தெரியவில்லை. நீ யாரென்பதை தயவு செய்து எனக்கு ஞாபகப்படுத்து. முதலில் எழுந்திரு.பேசு" என்றார் தேவ தாயார்.
தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்ட எப்பேசுவின் நவோமி," அம்மா...தாவீதின் நட்ச்சதிரமே...மிகவும் இரக்கமுள்ள தாயாரே....தேவரீர் என்னை சகோதரி என்றழைத்தற்கு அனந்த கோடி நன்றி உறித்தாகுக. ஆனால் அத்தகைய ஒரு உறவுக்கு நான் தகுதியானவள் அல்ல.நான் உங்களையும் உங்கள் திருமகனையும் கடந்த முப்பத்து மூன்று வருடங்களாக தேடி வருகின்றேன்.ஆனால் உங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.தேவரீருடைய திருப்பெயரையும் தங்களின்
முகத்தோற்றத்தையும் தங்களின் திருமகனின் குழந்தை முகத்தையும் நான் ஒரு நாளும் மறந்ததில்லை. ஜெருசலேமிலிருந்து வந்திருந்த ஒரு மனிதரால் இயேசுநாதர் யார் என்று நான் கண்டுகொண்டேன்.அப்போதே நான் முடிவு செய்து விட்டேன்..தேவரீரும் உமது திருக்குமாரனும் நிச்சயம் உயிரோடு இருகின்றீர்கள் என்று. உங்களை நான் இறப்பதற்கு முன்பாக ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டுமென்று வெகுவாக ஆசைப்பட்டேன். உடனே எப்பேசிலிருந்து வந்துவிட்டேன். உம்மையும் உமது திருச்சுதனையும் காணும் பாக்கியம் பெற்றுவிட்டேன்." என்றாள்.
" என் அன்பு சகோதரியே ...நீ எப்பேசிலிருந்து வந்த நவோமியா...இப்போதுகூட என்னால் உன்னை நினைவுக்கு கொண்டு வர இயலவில்லை. சற்று விளக்கமாக கூறு" என்றார் தேவத்தாயார்..
ஒரு நீண்ட பெரு மூச்சுவிட்டு தன் கதையைகூறினாள் எப்பேசுவின் நவோமி.
" அம்மா...என் நேசத்தாயாரே... நான் எப்பேசு நகரை சேர்ந்தவள். நவோமி என்பது என் இயற்பெயர்.என் கணவர் பெத்லகேமில் யூத குலத்தை சேர்ந்தவர்.தாவீது அரசரின் பாரம்பரியத்தில் வந்தவர்.. தாவீது ராஜாவின் வம்சாவளியில் வந்த அவருக்கு ஒரு இளவரசருக்குறிய சட்டபூர்வமான எல்லா எல்லா உரிமையும் இருந்தது. அவருக்கென பெத்லஹேமில் உரிமைசொத்துக்கள் பல உண்டு.அகஸ்டஸ் சீசரின் ஆணைப்படி நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் இந்த பெத்லஹேம் பயணம் மேற்கொண்டோம். எப்படியும் பிரசவத்துக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் அதற்குள்ளாக திரும்பிவிடலாம் என்பது எங்கள் கணக்காக இருந்தது. ஆனால் எங்கள் கணக்கு தவறாகிப்போனது. கடற்பயணம் அவருக்கு
ஒத்துக்கொள்ளாததால் அவர் உடல் நலம் கெட்டது. பெத்லஹேம் சேர்ந்து எப்படியோ அவரது குடிக்கணக்குகளை சமர்ப்பித்துவிட்டு சொந்தங்களை சந்திக்கலாம் என்றபோது அங்கு எழுந்தது பிரச்சனை. எங்கிருந்தோ வந்தவன்
தாங்கள் இது நாள் வரை ஆண்டு அனுபவித்து வந்த தங்கள் சொத்தை கேட்கிறான் என்று அவர்மீது வர்மம் கொண்ட அவரது சொந்தங்கள் அவரை பகைத்து நையப்புடைத்தனர்.. என்னையும் அவ்வாறே செய்தனர்.
    இந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்த இருபது நாளில் என் கணவர் மிகவும் வாதைபட்டு இறந்தார். அவரை பெத்லஹேமிலேயே புதைத்தனர். பிறகு என்னை கைவிட்டனர். என்னை சகதியில் வீசினர். எனக்கும் என் குழந்தைக்குமாக தொற்று நோய் பீடித்தது. அதில் என் அழகிய ரூபமே மாறிப்போனது. என் குழந்தையும் என்னோடு சேர்ந்து துன்பப்பட்டது. என்னால் தாய்பால் கொடுக்க முடியாதபடி என்னுடைய துக்கத்தால் அது விஷமாக மாறிப்போனது. சில நாளில் அதுவும்
வற்றிப் போனது. இந்த நிலையில் நாங்கள் இறந்தால் அது வெளி உலகிற்கு தெரிந்தால் தங்கள் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்று எண்ணிய என் கணவரின் குடும்பத்தை சேர்ந்த சிலர் எங்களை குண்டுகட்டாக கட்டி ஊருக்கு வெளியே இருந்த பெத்லஹேம் குகையில் ஒரு இரவில் எங்கள் தூக்கிப்போட்டுச்சென்றனர். அப்போதுகூட அவர்கள் நீ இங்கே கிடந்து மரித்துப்போ... அதுதான் உனக்கும் நல்லது . எங்களுக்கும் நல்லது என்று கூறிச்சென்றனர். இந்த வார்த்தைகள் நாங்கள் பட்ட துன்பங்களை விட எங்களுக்கு அதிகதுன்பத்தை தந்தன. இஸ்ராயேலின் தேவனே இனிமேல் எனக்கும் என் குழந்தைக்கும் நீயே கதி என்று நான் வாய்விட்டே கதறினேன்.      நான் வணங்கும் இஸ்ராயேலின் தேவன் எங்களை கைவிடவில்லை. அவர் உங்கள் கணவரின் உருவில் வந்தார். என் குழந்தையை எடுத்து உங்களிடம் தந்தார். நீங்கள் உங்கள் குழந்தைக்கு தரவேண்டிய தாய்ப்பாலை அவனுக்கு புகட்டினீர்கள்.பிறகு என்னையும் கவனித்துக்கொண்டீர்கள்.
   இது எத்தகைய ஒரு ஆபத்தாயிருந்தது என்றால் நான் மட்டும் வேறு யார் மூலமாகவோ காணப்பட்டிருந்தால் என்னை குஸ்ட்ட ரோகி என்று சபித்து என்னையும் எனக்கு ஆதரவு தந்த உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் கல்லால் எறிந்தே கொண்றிருப்பார்கள்.உங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் என்னக்காப்பாற்றி குணப்படுத்தினீர்களே உங்களுக்கு நன்றி செலுத்த நான் எவ்வளவோ முயன்றேன். ஆனால் முடியவில்லை. உங்களை சந்திக்க எப்போதும் யார்யாரோ உங்கள் உறவினர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். தொலை தேசங்களிலிருந்து யார்யாரோ ராஜாக்கள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரிடமும் நீங்கள் என்னை பற்றி எதையுமே கூறவே இல்லை.இப்படியாக ரகசியமாக ஒரு மாதம் அளவாக என்னை காபாற்றியபின்பு ஒரு பை நிறைய தங்கக்காசுகளையும் விலை உயர்ந்த துணிகளையும் கொடுத்து என்னை எப்பேசுக்கு அனுப்பி வைத்தீர்கள்.அவைகள் குழந்தை இயேசுவைக்காண வந்திருந்த மூன்று ராஜாக்களின் காணீக்கைப்பொருட்க்கள் என்று நான் பிற்பாடு அறிந்துகொண்டேன்.எப்பேசு பட்டிணம் சென்ற நான் அங்கு என கணவரின் வியாபாரத்தை மீண்டும் துவங்கி நான் இப்போது பெரும் பணக்காரியாக இருகின்றேன்......
    என் கணவரின் உறவினர்களால் பெத்லஹேமில் நான் அடைந்த துன்பமும் அவமானமும் பெரிது என்பதால் என் உரிமையை நிலைநாட்ட நான் மீண்டும் பெத்லஹேம் வந்து என் கணவருக்கு சேர வேண்டிய சட்டபூர்வமான
சொத்துக்கள் அனைத்தையும் நான் பெற்றேன். அப்போதெல்லாம் அந்த பெத்லஹேம் குகைக்குசென்று என் பழைய நினைவுகளை புதுப்பித்துக்கொள்வேன். என்றாவது ஒருநாள் உங்களையும் உங்கள் திருக்குமாரனையும் நான் சந்திப்பேன் என்னும ஆவலை தினந்தோரும் வளர்த்துக்கொள்வேன்.ஆனால் பெத்லஹேம் நகரின் மாசில்லாக்குழந்தைகள் கொல்லப்பட்டபோது அதில் மடிந்தவர்களில் நீரும் உம் திருக்குமாரனும் உம் கணவரும் அடங்குவர் என்று நான் கேள்விப்பட்டபோது  என் இதயமே வெடித்துவிட்டது. ஆனாலும் என் உள்மனது மட்டும் இதை நம்ப மறுத்தது. இப்போதாவது என்னை உங்களால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிந்ததா அம்மா?" என்றாள் நவோமி.
" ஆம் சகோதரி நவோமி... இப்போது எல்லாம் எனக்கு நினைவுக்கு வருகின்றது.பெரிய ஏரோதின் ஆணையால் மாசில்லாக்குழந்தைகள் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் எங்களுக்கு முன்னதாகவே சம்மனசானவர் இதை அறிவித்ததினால் நாங்கள் எகிப்திற்கு தப்பிச்சென்றோம். பிறகு ஒன்பது வருடம் கழித்து எகிப்த்திலிருந்து திரும்பிவந்தபிறகு நாங்கள் நசரேத்தில் வசித்து வந்தோம். என் மகனுக்கு இருபத்து ஐந்து வயதாகும்போது நசரேத்தில் என் கணவர் சூசை காலமானார். அதனால்தான் நீ பெதலஹேமுக்கு வரும்போதெல்லாம் எங்களைக்காண முடியாமல் போனது. இப்போது உன் மகன் எங்கே... கூப்பிடு அவனை... அவனுக்கு என்ன பெயர் வைத்திருக்கின்றாய்?' என்றார் தேவ தாயார்.
" அம்மா... இதோ என்மகன். அருள். என் மகனே... இதோ உன்னை பாலூட்டி வளர்த்த தேவ தாயார். போய் அவரை வணங்கு... அம்மா... அவனுக்கு அவன் தந்தை விரும்பியபடியே ஆண்டவன் அருள் என்றே பெயர் வைத்திருகின்றேன்.நீங்கள் அவனுக்கு கொடுத்துவளர்த்த ஒவ்வொரு துளி தாய்ப்பாலுக்காவும் நான் நூறுமுறை ஆயிரம் முறை நன்றி செலுத்துகின்றேன்.எங்களுக்கு மீண்டும் உயிரும் கொடுத்து வாழ்வும் கொடுத்து காப்பாற்றிய உங்களுக்கு ஆயிரம் முறை நன்றி
கூறுகின்றேன். எங்கள் உயிரையே உங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்." என்றாள் நவோமி.
" நவோமி... அன்று நான் செய்தது எந்த தாயும் செய்யும் ஒரு சாதாரண காரியமே.இதை ஏன் நீ பெரிது படுத்துகின்றாய்?.ஆனாலும் எந்த தாயும் இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையில் உயிருக்கு போராடும் எந்த குழந்தைக்கும் தன் தாய்ப்பால் கொடுக்க மறுக்கக்கூடாது. சரி உன் மகன் எங்கே? கூப்பிடு அவனை. நான் அவனைக்காண விரும்புகின்றேன்" என்றார் தேவத்தாயார்.பிறகு தன்னைக்காணவந்த அருளைப்பார்த்து " மகனே .. அருள்.. இஸ்ராயேலின் பரிசுத்த தேவன் உன்னை ஆசீர் வதிப்பாராக.நீயும் என் மகனைப்போல் என்னவாக வளர்ந்திருக்கின்றாய் " என்று அவனை உச்சிமுகர்ந்து அவன் நெற்றியில் முத்தமிட்டார் தேவ தாயார்.
" அம்மா...உங்கள் திருக்குமாரன் எங்கே ?" என்றாள் நவோமி.
" மகனே .. என் இயேசுவே... இங்கே வா...இவர்கள் யார் என்று பார் " என்று தேவதாயார் அழைக்க " அம்மா.. இதோ வந்தேன் " என்று அவர் அருகிலே வந்தார் இயேசு நாதர்.
" அம்மா... நசரேத்தூர் இயேசுநாதர் உங்கள் மகனா... இவர்தான் அம்மா எனக்கு இன்று காலையில் பார்வை கொடுத்தவர்." என்றார் அருள்.
" சகோதரா... நான் எவ்வளவோ பேருக்கு ஏதேதோ செய்திருக்கின்றேன். நான் உனக்கு எப்போது பார்வை கொடுத்தேன்." என்றார் இயேசுநாதர்.
" இன்று காலையில் தான் ஆண்டவரே தேவரீர் எனக்கு பார்வை கொடுத்ததுமல்லாமல் என்னை சகோதரனே என்று அழைத்ததற்கு நான் நன்றி கூறுகின்றேன். ஆனால் நான் அதற்கு தகுதியானவன் அல்ல. ஒருமாதகாலம் நான் குழந்தையாய் இருந்தபோது உங்கள் நேசத்தாயார் எனக்கு உங்களுக்கு கொடுக்க வேண்டிய தாய்பாலை எனக்கு கொடுத்து காப்பாற்றினார்கள் என்பதற்காக நான் உங்களிடம் சகோதர உரிமை கேட்க மாட்டேன். நீவீர் உலக இரட்ச்சகர். உங்களுடைய தாயார் எங்களுக்கு செய்த உதவி மிகப்பெரிது. எங்களுக்கு இந்த உலகில் வாழும் உரிமையை மீண்டும் பெற்றுக்கொள்ள பெரும் உதவி புறிந்தார்கள். இதற்கு கைமாறாக நாங்கள் என்ன கொடுக்கப்போகிறோம்.இதோ எங்கள் உடமைகள்.இவை யாவையும்
தங்களுடைய சேவைக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள். எங்கள் உயிரையும் உமக்கே காணிக்கையாக தருகின்றோம். தயவு செய்து எங்களை ஏற்றுக்கொள்ளூம் " என்றார் அருள்.
" அம்மா... உங்கள் அருள் என்ன சொல்கிறான் பார்த்தீர்களா... இதில் உங்களுக்கு சம்மதமா?" என்றார். இயேசுநாதர்.
" சுவாமி... உமக்கே ஸ்த்தோத்திரம் உண்டாகக்கடவது. நானும் கணவனை இழந்தவள். உம் நேசத்தாயாரும் கணவரை இழந்தவர். எனக்கும் ஒரே ஆண் பிள்ளை. உம் நேசத்தாயாருக்கும் நீவீர் ஒரே பிள்ளை. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு சேர்ந்தே வாழ்வோமே" என்றாள் நவோமி.
" அம்மணி.. அதுதான் உங்கள் விருப்பமானால் வந்து என் தாயாருடன் சேர்ந்துகொள்ளுங்கள். அருள் வா என்னோடு..நீ இங்கு வரும் முன் என்ன செய்துகொண்டிருந்தாய்?" என்றார் இயேசு நாதர்.
" ஆண்டவரே நான் என் வியாபார நேரம் போக தேவாலயத்தில் ஊழியம் புறிந்துகொண்டிருந்தேன். வேத நூல்களை படிக்கமுடியாதபடி என் கண் பார்வை இழந்ததாலேயே நான் உம்மை நாடி வந்தேன். உம்மை கண்டுகொண்டேன்.பார்வை பெற்றேன்."
" நன்று என் சகோதரா... நீ மீண்டும் எப்பேசு சென்று என் வேதத்தை போதி. இப்போதல்ல. நான் பரமேறிய பிறகு" என்றார் இயேசுநாதர்.
இந்த சம்பாஷணங்களை கண்ட சிமோன் இராயப்பர்..ஆண்டவரே ..எங்கிருந்தோ வந்தவனை என் சகோதரா என்றழைத்தீர்கள்...இது எப்படி?" என்றார்.
"பிறர் ஸ்நேகத்தின் காரணமாக என் தாயார் செய்திருக்கும் ஆயிரக்கணக்கான காரியங்கள் வெளி உலகத்திற்கு தெரியாமலே மறைக்கப்பட்டுவிட்டன. இத்தகைய காரியங்கள் அவருடைய தாழ்ச்சியினால் பரலோக பிதாவுக்காக
ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதால் அவை மனிதர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுவிட்டன. ஏன் இராயப்பா... அருளை நான் சகோதரா என்றழைத்தது உனக்கு பொறாமையாக இருகின்றதா... அல்லது பிடிக்கவில்லையா?   ஒரு குழந்தையாக என்னோடு என் தாயின் ஸ்தனங்களில் பால் அருந்தியவனை நான் சகோதரா என்றல்லாமல் வேறு என்னவென்று அழைப்பது ?"
" ஆனாலும் ஆண்டவரே... இது தங்களுக்கே அதிகமாகத்தோன்றவில்லையா ?'' என்றார் இராயப்பர்..
" இராயப்பா... நான் உன்னிடம் ஒன்று ரகசியமாக சொல்ல வேண்டும். ஒரு நாள் வரும். அப்போது அப்போஸ்த்தலர்கள் நீங்கள் அனைவரும் என்னைப்பற்றி கொடுக்கும் சாட்ச்சியத்தை விட இவர் கொடுக்கும் சாட்ச்சியம் மிக அதிகமாக
" ஆண்டவரே... அருள் மட்டில் உங்கள் தீர்மானம் என்ன?"
" அவர் சாட்ச்சியத்தல் பெரும் உவகை கொள்ளும் என் பரலோகத்தந்தை மோட்சத்தில் தங்க இழை நூலால் நெய்யப்பட்ட பெரும் இரத்னாம்பரத்தால் அவரை மூடி கௌரவித்த்து பரலோகத்தில் வரவேற்பார்."
" ஆண்டவரே அப்படியானால் அவர் உம் சகோதரர் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.அவரை நாங்களும் எங்கள் சகோதரர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்கிறோம். வாழ்க அருள். " என்றார் இராயப்பர்..
பின் குறிப்பு : இந்த கதைக்கு ஆதாரம் தூத்துக்குடி ரோஸா மிஸ்டிக்கா பதிப்பகத்தாரால் வெளிடப்பட்டுள்ள மரியா வால்டோரொட்டாவின் கடவுள் மனிதன் காவியம் என்னும் புத்தகம் ஆறாம் பாகம் பக்கம் 682 முதல் 684 வரை.
ரோஸா மிஸ்டிக்கா பதிப்பகத்தாருக்கு என்னுடைய நன்றி உறித்தாகுக.
































."