" மகனே பாசில், உங்களுக்கு ஒரு
சமாதான யுகம் அருளப்படுகின்றது. ஆண்டவறாகிய யேசுநாதர்இந்தபைசாந்தியத்தை [ இன்றைய
துருக்கி ] தம் கைகளில் ஏற்றுக்கொண்டார். நம் மக்களாக ஏற்றுக்கொண்ட இந்த கப்பதோக்கிய கிறிஸ்த்துவர்களை ரோமைய சக்கரவர்த்தி ஜூலியன் காளிக்கு பலி கொடுப்பதாக வேண்டுதல் வைத்திருகிறான்...எங்களை இந்த கோர பலியிலிருந்து காப்பாற்றும் என்று நீர் வேண்டிக்கொண்டதால் ஆண்டவரும் மனமிறங்கி நம் ரெட்டைக்கத்தி வெள்ளை வீரன் மெர்கூ¡¢யை அனுப்பி ஜூலியனை சங்காரம் செய்ய வைத்திருகின்றார்.
நேற்றே நம் மெர்கூ¡¢யன் ஜூலியனை தன்
வேலால் குத்திக்கொண்றுவிட்டான்.
இனிமேல் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். நீங்கள் நமக்கும் நம் திருமகன்
யேசுநாதருக்கும் அன்பும் விசுவாசமுமாக இருக்கும் பட்சத்தில் இந்த சமாதான யுகம்
மேலும் நீடிக்கப்படும். நீங்கள் நன்றி மறந்தவர்கள் ஆனால் இந்த சமாதான யுகம் முடிந்ததும் துன்பகாலம் ஆரம்பிக்கும்" என்று அதாவது ஜூன் 26 கி.பி. 363ல் ஜூலியன் தன் பரம எதி¡¢ இரண்டாம் சாபூர் என்னும் பாரசீக மன்னனை பழிவாங்க மராங்கா என்னும்மிடத்தில் நடைபெற்ற போர்களத்தில் புனித மெர்கூ¡¢யன் என்னும் கப்பதோக்கிய வீரனால் வேலால் குத்துப்பட்டு இறந்த அந்த நாள் இரவில்
தன் தாசன் புனித பாசிலுக்கு அவர்தம் கனவில் தோன்றி கூறினார். இந்த மாதாவின் அருள் கிடைக்கப்பட்ட இடம் கப்பதோக்கியாவில் அமைந்திருக்கும் திதினியா என்னும்
மலை மீது. இந்த மலைமீது கோயில் கொண்டிருக்கும் நம் தேவ தாயார் இன்றளவும் திதினியா மாதா என்றழைக்கப்படுகின்றார். அன்று நம் திதினியா மாதா கொடுத்த வாக்குறுதி மிகச்சா¢யாக பலித்தது.
கிறிஸ்த்துவ
சாம்ராஜ்ஜியம் ரோமிலிருந்து ஆரம்பித்து இந்த பைசாந்தியம் என்னும் துருக்கி வரை மிக
வேகமாக பரவி வந்தது. ஆனால் பல கிறிஸ்த்துவ அரசர்கள் நன்றி மறந்தவர்கள் ஆனதால்
திதினியா மாதாவின் வாக்குப்படி அவர்களுக்கு அருளப்பட்டிருந்த சமாதான யுகமான ஆயிரம் வருடங்கள் மிக
வேகமாக ஓடிவிட்டபடியால் ஒரு பெரும் துன்ப காலம் அடுத்து அவர்கள் மீது இறங்கியது.
கி.பி. 4 ஆம்
நூற்றாண்டிலிருந்து கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை
ரோமைய கிறிஸ்த்துவ அரசர்களால் ஆளப்பட்டு வந்த பைசாந்தியம் மெதுவாக அவர்களின் கை
நழுவிப்போய்க்கொண்டிருந்தது. ஆம். இந்த பைசாந்தியத்தை ஓட்டாமான் துருக்கியர்கள் அதாவது முஸ்லீம்கள்
தன் வயப்படுத்திக்கொண்டார்கள். அங்கிருந்த கிறிஸ்த்துவர்களுக்கு அடுத்து வந்தது பெரும் துன்ப காலம்.
கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் அதாவது கி.பி.363ல் பேரரசி
ஹெலினாவின் மகன் முதலாம் காண்ஸ்டன்டைன் தன் இறுதிக்காலத்தில் தன் மரணப்படுக்கையில்தான்
ஞானஸ்னானமே பெற்றுக்கொண்டார். தான் நிறுவிய இந்த பைசாந்தியத்தை ஒரு பெரும் கிறிஸ்த்துவ சாம்ராஜ்ஜியமாக
அறிவித்தார். அன்றுமுதல் கி.பி.60ல் ரோமில் கொடுங்கோலன் நீரோ துவங்கி தியோக்குலேசியன் வரை நான்கு நூற்றாண்டுகளாக கிறிஸ்த்துவர்களை தொடர்ந்துவந்த வேதகலாபணைகள்
முடிவுக்கு வந்தன. ரோமைய சாம்ராஜ்ஜியத்திலிருந்து கிழக்கே பைசாந்தியம் வரை பரந்து
வி¡¢ந்திருந்த அந்த
ரோமைய பைசாந்திய பேரரசின் மாமன்னர் காண்ஸ்டாண்டைன் அறிவித்த மத சுதந்திரம் பல கிறிஸ்த்துவர்களின் வயிற்றில் பாலை
வார்த்தது.
யேசுநாதரால் ஸ்தாபிக்கப்பட்ட கிறிஸ்த்துவ சாம்ராஜ்ஜியத்தை தவிர உலகில் எந்த
பேரரசும் நிலையாக நின்றதில்லை. இப்படியாகத்தான் இந்த பைசாந்திய பேரரசும் சா¢ந்தது.. கி.பி. 1204 ஆம் ஆண்டு துவங்கி
பல பைசாந்திய கிறிஸ்த்துவ அரசர்களின் திறமை இன்மையால் இந்த சாம்ராஜ்ஜியம் சிதைந்து
போயிற்று. கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைபோல கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளில் இந்த பைசாந்திய பேரரசு இந்த இஸ்தான்புல் நகா¢ன் அரண்மணை வரைதான் என்னும் அளவிற்கு சுருங்கிப்போயிறு. இந்த காலகட்டத்தை
மிகச்சா¢யாக
பயன்படுத்திக்கொண்டார் இரண்டாம் மெஹ்மூத் என்னும் ஓட்டமான் அரசர். அவரது வீரமும் போர் வியூகங்களூம் அவர்களது மூர்க்கமான அதிரடித்தாக்குதல்களூம் அவருக்கு பல வெற்றிகளைத்தேடித்தந்தன.
தன்னுடைய அரசுக்கு பெரும் நெருக்கடி வரப்போவதை அறிந்தார் அப்போதைய பைசாந்திய மன்னர் பதினொன்றாம் காண்ஸ்டன்டைன். இந்த பெரும் வீரனாகிய மெஹ்மூத்துவை சமாளிக்க வேண்டுமானால் தமக்கு பெரும் போர் தளவாடங்களும் கப்பல்களூம் வீரர்களும் தேவை என்றுணர்ந்த அவர் ஆபத்துக்குப்பாவமில்லை என்று தன் அந்தரங்க கா¡¢யதா¢சியை ரோமுக்கு
அனுப்பி அப்போதைய பா¢சுத்த பிதா ஐந்தாம்
நிக்கோலாஸ் என்பவா¢டம் உதவி வேண்டி
அனுப்பினார். ரோமில் பா¢சுத்த பிதா ஐந்தாம்
நிக்கோலாஸ் கிழக்கிலிருந்த பைசாந்திய மன்னா¢ன் பிரதிநியாக வந்திருக்கும் அவரை அன்பாக வரவேற்றார்.
" மகனே...நம்மிடம் உதவி வேண்டி இவ்வளவு தூரம் கடல் தாண்டி வந்திருகின்றாய்.
நல்லது. ஆனால் நமக்கும் உங்களுக்கும் இதுவரை எந்த உறவும் இல்லாமல் போய் ஆயிரம்
வருடங்கள் ஆகிவிட்டது. மிகுந்த காலம் தாழ்த்தி வந்திருக்கும் உமக்கும் உம் நாட்டு பிரஜைகளுக்கும் நம் ஆசீர்
உண்டாகட்டும். என்னால் என்ன செய்ய முடியும் என்று நீர் நம்புகின்றாய்?" என்றார் பா¢சுத்த பிதா.
" பா¢சுத்தபிதா
அவர்களே.. உம்மால் எல்லாம் கூடும். தேவா£ர் ஒரு வார்த்தை சொன்னால் போதும். உம் தாசன் ஸ்பெயின் மாமன்னர் எங்களுக்கு தன்
படைகளை அனுப்பி எங்களை காத்து ரட்ஷிக்க முடியும். எங்களுக்கும் அவருக்கும் உறவு விட்டுப்போய் பல நூற்றாண்டுகளாகிறது.
ஒருகாலத்தில் இந்த பைசாந்தியமும் அவருடைய கையில் தானே இருந்தது. நீவீர் மனது
வைத்தால் அவரது மனத்தை மாற்ற முடியும்."
"மகனே... திருச்சபை
அதிகாரம் வேறு...உலகத்தின் அரசர்களின் அதிகாரம் வேறு. ஸ்பெயின் மாமன்னர் நம்மீது
அன்பும் மா¢யாதையும்
வைத்திருகின்றார் என்றாலும் அவரை நான் நிர்பந்திக்க முடியாது. ஆனாலும் என்னாலானதை நான் முயன்று பார்கின்றேன். ஒரு கிறிஸ்த்துவ சாம்ராஜ்ஜியம்
சிதைந்துபோய் முஸ்லீம்கள் கையில் வீழ்வதை நானும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இனி
எல்லாம் அவர் செயல் " என்று தன் கண்களை ஏறெடுத்து ஆகாயத்த்தை பார்த்தார். [ இந்த இடத்தில் நேயர்களுக்கு சில விஷயங்களை சொல்ல வேண்டியது அவசியமாகிறது. ரோமைய கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பல திருச்சபைகள் கி.பி.5 ஆம் நூற்றாண்டுகள் முதலிலிருந்தே பி¡¢ந்து போய்விட்டன. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பாடாலும் ஒரு
காரணம் மிகுந்த சுவாரசியமானது. அதுதான் யேசுநாதா¢ன் ஒற்றை சுபாவக்கொள்கை என்றும் அவரது இரட்டை சுபாவக்கொள்கை என்பதும்.
யேசுநாதா¢ன் ஒற்றை
சுபாவக்கொள்கை எனப்படுவது யேசுநாதர் கடவுளாக இருப்பவர். நம்மை ரடசிக்க வேண்டி இந்த
உலகிற்க்கு மனிதாவதாரமாக வந்தார். அவர் வந்த கா¡¢யம் முடிந்து சிலுவையில் மா¢த்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். உயிர்த்த நாற்பதாம் நாள் பரலோகத்திற்கு எழுந்தருளினார்.அங்கு அவர் மீண்டும் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனாகவே இருகின்றார். மீண்டும் அவர் மனிதனாக இல்லை என்பது ஒரு சில திருச்சபைகளின் கருத்து.
யேசுநாதா¢ன் இரட்டை
சுபாவக்கொள்கை எனப்படுவது யேசுநாதர் இறந்து உயிர்த்தெழுந்த பிறகும் அவர் கடவுளாகம்
இருகின்றார்.... மனிதனாகவும் இருகின்றார். இப்போதும் அவர் பரலோகத்திலும்
கடவுளாகவும் மனிதனாகவுமே இருகின்றார்
என்பதாகும். இந்த காரணங்களுகாகவே பல கீழ்த்திசை திருச்சபைகள் ரோமை கத்தோலிக்க
திருச்சபையிலிருந்து பிறிந்தன. அப்போதைய பைசாந்தியத்திலிருந்த கிரேக்க திருச்சபை கிழக்கு பழமை திருச்சபை போன்ற திருச்சபைகள் யேசுநாதா¢ன் ஒற்றை சுபாவக்கொள்கையை பின்பற்றியதால் அவை கி.பி.4 ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே பி¡¢ந்து போய்விட்டன. ]
பா¢சுத்த பிதா
நிக்கோலாஸின் பா¢ந்துரையால் அப்போதைய
ஸ்பெயின் மன்னர் அவரது வார்த்தைக்கு மதிப்புகொடுத்து பெயருக்கு நான்கு போர்
கப்பல்களையும் ஒரு 200 போர் வீரர்களையும்
இஸ்த்தான்புல்லுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த இஸ்தான்புல் நகரம் அமைந்திருக்கும் இடம் விசித்திரமானது. ஒருகாலத்தில்
இந்த இடம் ஆசியா மைனர் என்றும் அழைக்கப்பட்டது. காரணம் இல்லாமல் இல்லை. இந்த இடமே
ஆசியா கண்டத்தின் கடைசிபகுதி ஆகும். ஆசியா கண்டத்தையும் ஐரோப்பா கண்டத்தையும் ஒரு சிறிய ஜலசந்தி பிறிக்கிறது. இந்த சிறிய ஜலசந்தியின் அகலம் ஒரு சில நூறு
மீட்டர்களே. இந்த சிறிய ஜலசந்தியை கடந்து செல்லும் வேலையைத்தான் புனித கிறிஸ்டோபர் செய்து வந்தார் என்கிறது வரலாறு. இந்த ஜலசந்தியின் கிழக்கில் ஆசியாவும் மேற்கில் ஐரோப்பாவும் அமைந்துள்ளதால் ஐரோப்பா பகுதியில் ஆயிரக்கணக்கான கூடாரங்களை அமைத்து தகுந்த நேரத்தில் தாக்க தக்க சமயம் பார்த்து காத்திருந்தார் இரண்டாம் மெஹ்மூத். இதற்காக இங்கே தங்கி சுமார் ஆறு மாதங்களாக பல முன்னேற்பாடுகளை அவர் செய்யவேண்டியதாக இருந்தது. இந்த இஸ்தான்புல் நகரை இரண்டாகப்பிறிகின்றது ஒரு ஜலசந்தி. இந்த நதியின் இருகறைகளிலும் இத்தாலியர்களின் பல கோட்டைகள் இருகின்றன. எனவே இந்த இஸ்தான்புல் நகருக்கு எந்தப்பக்கத்திலும் கடல் சூழ்ந்திருப்பதால் அதற்கு எந்த விதத்திலும் அதாவது கிழக்கே ஆசியா பகுதியிலிருந்தும் மேற்கே ஐரோப்பியா நாடுகளிலிருந்தும் எந்தவிதமான உதவியும் வந்து விடாமலிருக்க் அனைத்து சாதகமான வழிகளையும் தன் கடற்படையால் அடைத்துவிட்டார். அப்படி ஏதேனும் கப்பல்கள் தங்ககொம்பு என்றழைக்கப்படும் இஸ்தான்புல் துறை முகத்துள் வந்தால் அவற்றை அதன் நுழை வாயிலிலேயே அழித்துவிட தன் கடற்படை தளபதிக்கு கண்டிபான உத்திரவு கொடுத்திருந்தார் இரண்டாம் மெஹ்மூத். இந்த சூழ்நிலையில்தான் ஸ்பெயின் மன்னரால் அனுப்பிவைக்கப்பட்ட நான்கு கப்பல்களும் இஸ்தான்புலில் உள்ள தங்ககொம்பு துறைமுகத்துள் பிரவேசித்தன. அதன் வழியில் ஏற்படுத்திவைக்கப்பட்டிருந்த அனைத்து கப்பல்களையும் இடித்தும் மோதியும் அவற்றிற்கு பெரும் சேதம்
ஏற்படுத்தியபடி தங்கக்கொம்பு துறைமுகத்தின் உள்ளே வந்தன.
தன் கடற்படைகளுக்கு ஏற்பட்ட சேதங்களையும் தன் ஆணையை மீறி எதி¡¢களின் நான்கு கப்பல்களும் தங்கக்கொம்பினுள் அனுமதித்தது தன்
கடற்படைத்தலைவனின் கையாலாகத்தனமே என்று கடும்கோபம் கொண்டான் மன்னன் இரண்டாம் மெஹ்மூத். தன் கடற்படைத்தளபதியை அழைத்து தன் கோபத்தை எல்லாம் அவன் மீது கொட்டித்தீர்த்தார். கடற்படைத்தலைவன் கூறிய எந்தவிதமான பதில்களாலும் திருப்த்தி அடையாத மன்னன் மெஹ்மூத் கடைசியில் அவனை உயிரோடு தோலை உறித்து மூன்று நாளாக
காயவைத்து பின் சிரச்சேதம் செய்தார் என்கிறது ஒருசா¢த்திர குறிப்பு.
இந்த இஸ்தான்புல் நகரை கைப்பற்றும் கடைசி முயற்சியாக மன்னன் மெஹ்மூத் ஒரு
தூதுவனை அப்போதைய பதினொன்றாம் காண்ஸ்டாண்டியனிடம் அனுப்பிவைத்தார். அதன்படி மூன்று
நாட்களின் மன்னர் கான்ஸ்டான்டைன் மன்னர் இரண்டாம் மெஹூமூதிடம் சரணடைந்துவிட வேண்டும். இல்லை என்றால் விளைவு மிகவும் கடினமாக இருக்கும். சரணடையும் பட்ச்சத்தில் மன்னரும் அவரது குடும்பமும் அவரது சுற்றங்களும் அவருக்கு தேவையான செல்வங்களுடன் நாட்டை விட்டு வெளியேற
அனுமதிக்கப்படுவர் எனவும் உறுதி அளிக்கப்படும். சரணடையும் கெடு இன்று முதல்
ஆரம்பமாகிறது என்றான் தூதுவன்.
இஸ்தான்புல் மன்னர்
கான்ஸ்டண்டைன் இன்னும் மேற்கு நாடுகளிலிருந்து தனக்கு உதவி வரும் என்று
எதிபார்த்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தனக்கு விடுக்கப்பட்ட
கெடு இன்றிலிருந்து ஆரம்பமாகிறது என்று அறிந்ததும் மன்னர் கான்ஸ்டண்டைன் கடும்கோபம் கொண்டார்.
" அடேய் தூதுவனே... என்னை என்னவென்று நினைத்துக்கொண்டாய். உயிர் பிழைக்க
இப்போதே ஓடிப்போய்விடு. யாருக்கு யார் கெடு விதிப்பது. உயிருக்கு பயந்து ஓடும் கோழை அல்ல நான். பெரும் வீர அரசப்பாரம்பா¢யத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். என் நாடே அழிந்தாலும் .நான் சரணடையப்போவதில்லை.
போய் உன் அரசனிடம் சொல்..
நான் வீர மரணம்
அடையவே விரும்புகின்றேன் என்று." என்றார். அந்த தூதுவன் வெளியேறியபின் விந்தையான ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியது.
வானிலிருந்து இறங்கியது ஒரு வெண்பஞ்சிகூட்டம். அது இஸ்தான்புல் நகரம்
முழுவதும்பரவியது. அன்றைய நாள் முழுவதும் அது கலையவே இல்லை. அடுத்த நாள்
முழுவதுமாக காணாமல் போய் இருந்தது.
அரசபையிலிருந்த ஒரு
பிதாப்பிதா " அரசே...கலைக்கோயில் ஹகியா சோஃபியாவிலிருந்து நானும் வேண்டுதல்
செய்தபடியே இருந்தேன். ஆனால் நம் வேண்டுதல் கேட்கப்படவே இல்லை என்றே எனக்குத்தோன்றுகிறது ". என்றார். மன்னர் காண்ஸ்டன்டைன் " பிதாப்பிதா அவர்களே இன்னும் இரண்டு நாளிள் என்ன
நடக்கப்போகின்றது என்று எனக்கு மிக மிக நன்றாகத்தொ¢யும். நான் தோற்பது உறுதி. ஆனாலும் நான் அரசன். நான் என் நாட்டை விட்டு
ஓடமுடியாது. உங்களுக்கு உயிர்மீது ஆசை இருந்தால் நீங்கள் இன்றே புறப்படலாம்"
என்றார்.
" மன்னா... என்னை என்னவென்று நினைத்துக்கொண்டாய்...இந்த கிழவனுக்கு உயிர்மீது
ஆசை இல்லை. நான் இன்னும் வாழ்ந்து என்ன சாதிக்கப்போகின்றேன். ஆனால் போர் என்று
வரும்போது அதன் பின் விளைவுகளை எண்ணிப்பார்த்தாயா? தோற்கப்போவது உறுதி என்றாகிவிட்டபின் உயிருக்கு
ஆசைப்படுவதில் அர்த்தமில்லை. இந்த நாட்டு மக்களை நினைத்தால்தான் மிகவும் அச்சமாக
இருகின்றது" என்றார் பிதாப்பிதா.
" பா¢சுத்த தந்தையே...
இனி எல்லாம் அவன் செயல்" என்றார் மன்னர். நான்காவது நாள் போர்
ஆரம்பமாகிவிட்டது. மன்னர் காண்ஸ்டன்டைனும் தன்னாலான அனைத்து தற்காப்பு
நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார். தன்னிடமிருந்த சுமார் 40000 போர்வீரர்களையும்
அவர் தகுந்த விதத்தில் தயார் படுத்தி வைத்திருந்தார். முஸ்லீம் மன்னர் தன்னுடன்
ஜைனேசா¢கள் எனப்படும்
அதிரடி முறட்டு வீரர்களை கோட்டைக்குள் அனுப்பினார். அரசனின் கோட்டைகள் கொத்தளங்கள் கோயில்கள் அனைத்தும் எனக்கு சொந்தம். மற்ற
அனைத்தும் உங்களுக்கு சொந்தம். மூன்றுநாள் வரை நீங்கள் கொள்ளை அடிப்பவை உங்களுக்கு
சொந்தம். அதுவரை நான் இந்த
இஸ்தான்புல்லுக்குள் நுழைய மாட்டேன்..சென்று வென்று வாருங்கள்" என்று தன்
சேனைகளை அனுப்பிவைத்தார் மன்னர் மெஹ்மூத். அதைத்தொடர்ந்து நடந்தது வெறியாட்டத்தின்
உச்சகட்டம்.
மன்னர் காண்ஸ்டன்டைன் தானே தெருவில்
இறங்கிப்போ¡¢ட்டார். அலைஅலையாய்
தொடர்ந்து வரும் ஜைனேசா¢களின் முன் அவரது
கத்திவீச்சு சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. சற்று நேரத்திற்குள் பெரும்
சுழற்காற்று வீசி அடங்கினது போல் மந்தி¡¢கள் அரசருடைய
தளபதிகள் என்றுமுக்கிய அரச பிரதிநிகள் அனைவரும் வெட்டிக்கொல்லப்பட்டனர். மன்னா¢ன் தலையையும் அவரது வீரமிக்க தளபதிகளின் தலைகலையும் வெட்டி அவற்றை இஸ்தான்புல் கோட்டையின் முன் குத்திவைத்தனர். கோட்டைகதவுகள் பீரங்கிகளின் உதவியால் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. நாடே சூறையாடப்பட்டது. ஸ்பெயினிலிருந்து வந்திருந்த அந்த நான்கு போர்கப்பல்களும் இனி இந்த நாட்டைக்காபாற்றவே முடியாது என்று அவசரம் அவசரமாக தப்பிச்சென்றன.
மன்னர் பதினொன்றாம் கான்ஸ்டன்டைன் வீழ்ந்தார் என்றாலும் அவரது விசுவாசமான
வீரர்கள் யாவரும் மனம்துவண்டுபோகாமல் மூர்க்கமாக போராடியதால் மன்னர் முகம்மதுவின்
ஜைனேசா¢கள் பலர் மாண்டனர். அந்த இஸ்தான்புல் நகா¢ன் தெருக்களில் ரத்த ஆறு ஓடியது. அது போஸ்பொருஸ் ஜலசந்தியில் கலக்க அந்த
ஜலசந்தி செங்கடல் போலாகியது. மனிதர்களின் வெட்டுப்பட்டு பிறிக்கப்பட்ட தலைகள் சீவிய பனம்போல் செக்கச்செவேர் என்று அந்க ஜலசந்தியில் மிதந்து சென்றதை பார்க்க சகிக்காத
காட்ச்சியாக இருந்தது. போ¡¢ன் முடிவு யாவரும்
எதிர்பார்த்ததுதான் என்றாலும் அவர்கள் காட்டிய வீரம் வரலாற்றுப்புகழ் மிக்கது.
சுமார் ஆயிரம் வருடங்களாக நிம்மதியாக வாழ்ந்த அந்த இஸ்தான்புல் கிறிஸ்த்துவர்கள்
போ¡¢ன் முடிவில் பெரும்
துன்பத்திற்கு ஆளானார்கள். இறந்தவர்கள் ஆண்களானாலும் பெண்களானாலும் கொடுத்துவைத்தவர்கள் என்று சொல்லும் அளவிற்கு உயிரோடு இருந்தவர்களின் நிலைமை மாறிப்போனது. ஒருகாலத்தில் அந்த
கிறிஸ்த்துவர்கள் வாழ்ந்த செல்வ செழிப்பு என்ன கௌரவம் என்ன... இன்று எல்லாம்
கனவுபோல் ஆனது..தாங்கள் வாழ்ந்த நாட்டிலேயே இளம்பெண்களும் கன்னிப்பெண்களும் விபச்சா¡¢களாக
விற்கப்பாட்டார்கள்.
ஆண்களின் நிலைமையோ
இன்னும் மோசம். அவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டு பல முஸ்லீம் நாடுகளுக்கு
அனுப்பிவைக்கப்பட்டார்கள். மிச்சம் மீதி இருந்த கிறிஸ்த்துவ பாவப்பட்ட
ஜென்மங்களுக்கு மன்னர் இரண்டாம் மெஹ்மூத்
உயிர் பிச்சை கொடுத்தார். அப்போதைய பிதாப்பிதாக்களுக்கு அவர்கள் மத குருமார்கள்
என்னும் விஷேஷமான சலுகை கொடுக்கப்பட்டு அவர்களை மா¢யாதையாக நடத்தினார். அவர்களுடைய தேவாலயங்களுக்கு பாதுகாப்பு அளித்தார்.
இந்த பிதாப்பிதாக்களின் பா¢ந்துரையால்
அப்போதிருந்த மிச்சம் மீதி கிறிஸ்த்துவர்கள் சங்காரம் செய்யப்படவில்லை. மாறாக
அவர்கள் மன்னருக்கு விசுவாசமாக வாழவும் முஸ்லீம்களாக மாறவும் உறுதி அளித்த்தன்போ¢ல் அவர்களுக்கு முதல்தர குடி உ¡¢மை வழங்கப்பட்டது. மாறாக அரசனுக்கு ராஜ விசுவாசமாக இருப்பதாகவும் ஆனால்
கிறிஸ்த்துவர்களாகவே இருப்போம் என்று கூறியதால் அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்பட்டனர். இப்படிப்பட்ட கிறிஸ்த்துவர்கள் அரசனுக்கு ஜிசியா வா¢யை கட்ட வேண்டும். அவர்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை அரசனிடம் கொடுத்துவிட
வேண்டும்.
இந்த கிறிஸ்த்துவ
குழந்தைகள் பிராயம் வந்ததும் ஜினேசா¢களாக மாற்றப்படுவர். அதாவது முறட்டு வீரர்களாக... அந்த பயிற்சிக்காலத்திலேயே
அவர்கள் முஸ்லீம்களாக மாற்றப்பட்டுவிடுவர். இந்த ஜைனேசா¢களுக்குபயிற்சியின்போது அனைத்துவிதமான கலைகளும்
கற்றுக்கொடுக்கப்படும். பயிற்ச்சியின் முடிவில் ஒவ்வொரு ஜினேசா¢யும் அரசனின் விசுவாச முஸ்லீம் வீரனாக மாறி இருப்பான். காலமான அந்த பைசாந்திய மன்னர் கொன்ஸ்டான்டைன் மன்னருக்கு
நேரடியாக எந்த வா¡¢சும் இல்லை. எனவே
அவர் தன்னுடைய நெருங்கிய உறவின் முறையாளர்களுடைய ஆண் பிள்ளைகளை தத்து எடுத்துவளர்த்திருந்தார். இத்தகைய ஆண்வா¡¢சுகள் பலரை பிதாபிதாக்கள் தங்களால் முடிந்தமட்டும்
காப்பாற்றினார்கள். இந்த ஆண் பிள்ளைகளை மன்னர் சுல்தான் மெஹ்மூத் தன்
நேரடிபார்வையில் வைத்துகொண்டு சிறந்த ஜைனா¢களாக வளர்த்தார். அவர்களுக்கு தக்க பிராயம் வந்ததும் அப்போது வயதில் மூத்தவனாக இருந்தவனை பால்கன் நாடுகளுக்கு ஆளூனராகவும் வயதில் சிறியவனாக இருந்தவனை மேஷிபாஷாவாகவும் மாற்றி கல்லிபோலிக்கு கடற்படை தளபதியாகவும் மாற்றினார்
என்கிறது ஒரு சா¢த்திரக்குறிப்பு.
கிறிஸ்த்துவ சாம்ராஜ்ஜியம் வீழ்ந்ததும் மன்னர் சுல்தான் இரண்டாம் மெஹ்மூது
இந்த பைசாந்தியத்தின் மஹா சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டார். பிறகு அவர் செய்த
முதல் கா¡¢யம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்த்துவ பேரரசர் ஜஸ்டீனியன் கட்டிய கலைக்கோவின் ஹகிய சோஃபியா என்னும்
தேவாலயத்தை மசூதியாக மாற்றியதுதான். அதில் ஒப்பற்ற கலைத்திறமையாக வரையப்பட்டிருந்த
யேசுநாதா¢ன் பல
சித்திரங்களையும் மேலும் பல கெரூபீம்களின் சித்திரங்களையும் அழித்து அவற்றின்மீது திருக்குரானின் வசனங்களை வரையச்செய்தான்.
பிறகு இந்த இஸ்தான்புல்லை தலைநகராக ஆக்கிக்கொண்டு தன் அரண்மனையையும் அங்கேயே
அமைத்துக்கொண்டார். பிறகு அச்சு அசப்பில் ஹகியா சோஃபியாவைபோலவே தோற்றமுடைய நீல மசூதியை கட்டினார். இதே நேரத்தில் வத்திக்கானில் பா¢சுத்த பிதா பாப்பு ஐந்தாம் நிக்கோலாஸ் மிகுந்த விசனத்துடன்
காணப்பட்டார். ஒரு கிறிஸ்த்துவ சாம்ராஜ்ஜியம் தனக்குத்தொ¢ந்து அழிந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அதைவிட அந்த சாம்ராஜ்ஜியத்தின் அழிவு நிச்சயம் என்று தனக்கு நன்றாக தொ¢ந்திருந்தும் தன்னால் அதைக்காப்பாற்ற முடியவில்லையே என்றும்
மிகவும் ஆதங்கப்பட்டார். அப்போதைக்கு அவர் தன் கைகளை பிசைந்துகொள்வதை தவிர வேறு எதையும் அவரால் செய்ய
முடியவில்லை. இருப்பினும் தன் ஆதிக்கத்துக்குட்பட்ட கிறிஸ்த்துவ மன்னர்களுக்கு தன்
தூதுவர்களை அனுப்பி அவர்களுக்குள் ஒற்றுமையாய் ஏற்படுத்தவும் எதிரே வரப்போகும் முஸ்லீம்களின் ஆதிக்கத்தையும்
சுட்டிக்காட்டி அவரவர் தத்தம் நாடுகளை சா¢யாக கவனித்துக்கொள்ளாவிட்டால் சுல்தானின் அடுத்த குறி அவர்கள் நாடுகள்தான் எனவும் முன்னறிவித்தார். அவர் வாக்கு
மிகச்சா¢யாக பலித்தது.
சக்கரவர்த்தி இரண்டாம் மெஹ்மூத் தன் அதிரடித்தாக்குதலால் பல ஐரோப்பிய நாடுகள் நிலை
குலைந்தன. வெகு விரைவிலேயே பால்கன் நாடுகளான் செர்பியா, ரோமானியா, க்¡£ஸ் போன்ற நாடுகள்
அவருக்கு அடிபணிந்தன. அவர் செல்லுமிடமெல்லாம் ஜெயதேவி அவரை அணைத்துக்கொண்டே சென்றாள்.
மத்திய தரைக்கடல் நாடுகளான எகிப்த்து, துனிஷியா,அல்ஜீ¡¢யா லிபியா வரையிலும் அவரது ஆதிக்கம் வி¡¢ந்தது. அவர்
செங்கடல் நாடுகளையும் விடவில்லை. இவரது வளர்ச்சியைக்கண்டு ஐரோப்பிய நாடுகள் பல
கலக்கமுற்றன. ஆனால் ஒரே பேரரசன் பல நூற்றாண்டுகாலம் வாழ்ந்துவிட முடியுமோ? இப்படியாக மே மாதம் 3 ஆம் தேதி 1481ல் சுல்தான் இரண்டாம் மெஹ்மூத் தன் 41 ஆம் வயதில் காலமானார். அவர் தன் எதி¡¢களால் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்கிறது ஒரு சா¢த்திரக்குறிப்பு. இருப்பினும் இந்த முஸ்லீம் பேரரசனின் திடீர் மரணம் பல ஐரோப்பிய
கிறிஸ்த்துவ மன்னர்களுக்கு விஷேஷமாக ஸ்பெயின் மன்னருக்கு மிகுந்த சந்தோஷத்தை
கொடுத்தது. ஆனால் அவர்களுடைய சந்தோஷம் அதிக காலம் நீடிக்கவில்லை.
அவாளுக்கு இவாள் என்ற கதையாக ஓட்டோமான் துருக்கியர்களின் வம்சாவளியில்
வந்தவர்கள் தானும் சா¢த்திரத்தில் தன்
பேர் விளங்கும்படி தன் தந்தை செய்ததைவிட தான் இன்னும் அதிகம் சாதிக்கவேண்டும் என்னும் ஆசையில் இன்னும் அதிக வெறியோடு தன் எதி¡¢களை பந்தாடினார்கள். அவர்களின் நோக்கம் எல்லாம் மேற்கு
நாடுகளாகிய ஐரோப்பா முழுவதிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தி இஸ்லாம் நாடுகளாக
மாற்ற வேண்டும் என்பதுதான். இவர்களது
நோக்கம் மேலை நாடுகளிலிருந்த கிறிஸ்த்துவ அரசர்களுக்கு தொ¢ந்திருந்தது என்றாலும் அவர்களிடையே ஒற்றுமை இல்லாததினாலும்
தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டதாலும் அவர்களை எதிர்க்கவேண்டும் என்ற அவசியம் கூட சில கிறிஸ்த்துவ மன்னர்களுக்கு அப்போது ஏற்படவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் ஒற்றுமை அவசியம் என்று உணரும்படி ஒரு சம்பவம் நடந்தது.
இஸ்தாஃன்புல்லில் அந்த டாப்காபி அரண்மனையில் மாமன்னர் இரண்டாம் சேலிம் தன்
அருமை மனைவியுடன் அப்போதைய அரசியல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மனைவி அவருக்கு
அழகிய கண்ணாடிக்குப்பிகளில்
மது பா¢மாறிக்கொண்டிருந்தார்.
மன்னர் சேலிம் எவ்வளவுதான் குடித்தாலும் நிதானம் தவறாதவர். இருப்பினும் அவரது
கவிதை உள்ளம் தன் மனைவியின் அழகை வர்ணிக்கத்துவங்கிவிட்டது. " அன்பே... எனக்கு
இப்போது நீ அழகா..... இல்லை இந்த வெனீஷிய கண்ணாடிகுப்பிகள் அழகா அல்லது இந்த
ஃபிரென்ச் ஒயின் அழகா ... எல்லாமே அழகுதான்... பளபளப்புதான் " என்றார் அவர். " அத்தான்...நான் என்ன அத்தனைஅழகாவா இருகின்றேன்...இந்த வெனீஷிய
கண்ணாடிகுப்பிகளுடன் என்னை ஏன் ஒப்பிட்டீர்கள்? "அன்பே... இந்த வெனீஷிய கண்ணாடிக்குப்பிகளைப்பார்த்தாயா...என்ன
நிறம்..என்ன உறுதி....இந்த மதுக்குப்பிகளிளுள்ள மதுவை இப்போது நான் பார்கிறேன்
அல்லவா... இப்படித்தான்....நீ இந்த மதுவை விழு¤ங்கும்போதும் அது உன் தொண்டைவரை தொ¢கின்றது என்றால் சும்மாவா... அதனால் தான் நான் உன்னை இந்த வெனீஷிய மதுக்குப்பிகளுடன்
ஒப்பிட்டேன்."
" ஹசூர்... நான் கேட்கிறேன் என்று என்னை தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். எனக்கு
அந்த வெனிஸ் நகரைப்பார்க்க வேண்டும்போல் இருகிறது. அது கடலில் மிதக்கும் நகரம்
என்றும் கேள்விப்பட்டிருகிறேன் "
" அன்பே நீ கேள்விப்பட்டது எல்லாம் சா¢தான்.. ஆனால் இப்போது நம்மால் அங்கு போக முடியாது. நமக்கும் வெனீஷியர்களுக்கும் நல்ல வியாபார ஒப்பந்தம் இருகிறது.... ஆனாஅல் அரசியல் என்று வரும்போது அதில் பல பிரச்சனைகள் இருகின்றன...நீ வெனீஷிய கண்ணாடிப்பாத்திரங்கள் வேண்டும் என்றால் விதவிதமான பாத்திரங்களை ஒரு
கப்பல் நிறைய நாளைக்கே கொண்டு வரச்செய்கிறேன்... ஆனால் நான் நினைப்பது வேறு... இப்போது மன்னர் இரண்டாம் செலிமின் கண்களில் ஆனந்த பரவசம்
தோன்றியது... அந்த கடலில் மிதக்கும் நகரம் வெனிஸ் அவர் மனக்கண் முன்னே
தோன்றியது... அங்குள்ள மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் அனைத்திலும் அல்லாவின் பிறைவடிவ கொடி பறப்பதுகண்டார்...
விஷேஷமாக அந்த பிரம்மாண்டமான தூய மார்க்கின் பேராலயம் கண்டார். அதன் உச்சியிலும் தங்களுடைய பிறைவடிவ கொடி பறப்பதை கண்டார்... ஆஹா.... ஆஹா.... நான் காண விரும்பியதை எல்லாம் கண்டுவிட்டேன்" என்றார்
மன்னர். " ஹசூர்...தாங்கள் எதை காண்கிறீர்கள்.... எனக்கு விளங்கும்படி கூறுங்கள்".
" சொல்கிறேன் என் உயிரே கேள்... நான் இந்த ஐரோப்பா முழுவதையும் அல்லாவின்
தேசமாக்க விரும்புகிறேன்.... ரோமை கைப்பற்றி அதன் கோட்டைகளிலும் அரண்மனைகளிலும்
எல்லாம்வல்ல நம் தெய்வம் அல்லாவின் பெயரால் அனைத்தையும் மாற்ற விரும்புகிறேன். ராயப்பர் தேவாலயத்தை இடித்து அல்லாவின் தேவாலயமாக மாற்றுவேன். இப்படியாக ஐரோப்பா முழுவதையும் அல்லாவுக்கு அர்ப்பணிப்பேன். இது எல்லாம் நிறைவேற்றியபின் உன்னை இந்த ஐரோப்பிய சக்கரவர்த்தினியாக வெனிஸ் நகருக்கு அழைத்துச்சென்று அப்போது காட்டுவேன். "
" அத்தான்.... கேட்கவே எனக்கு மனது புல்லா¢க்கிறது.... அப்படியானால் நான் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெதைவிட பொ¢ய சக்கரவர்த்தினி...அப்படித்தானே.. போரை உடனே ஆரம்பித்துவிட
வேண்டியது தானே."" அன்பே இங்கிலாந்து
மஹாராணியாருக்கும் நமக்கும் வியாபார விஷயமாக நல்ல ஒப்பந்தமும் அனுசரனையும்
இருகின்றது. அந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக நான் எவ்வளவோ
செய்திருகிறேன்...இருப்பினும் ஒரு போர் என்று வந்துவிட்டால் அவர்கள் போக்கு எப்படி மாறும் என்பதை காலம் தான்
கணிக்க வேண்டும். போர் ஆரம்பிக்க வேண்டும் என்றால்...அன்பே நீ விஷயம் தொ¢யாமல் பேசுகின்றாய்....அதற்கெல்லாம் காலம் நேரம் எல்லாம் கனிந்து வர வேண்டும். நமக்கு முதல் தடையாக இருப்பது இந்த மத்திய தரைக்கடல் தான். அதன் நடுவே அமைந்திருக்கும் மால்ட்டா தீவை நாம் கைப்பற்றிவிட்டால் பிறகு சைப்ரெஸ், கிறீட், நிகோஷியா, பாமகுஸ்த்தா போன்ற சிறிய தீவுகளை நாம் எளிதாக கைப்பற்றியபிறகு நமது கடற்படையை அங்கு நிறுத்துவதற்கும் வீரர்கள் ஓய்வெடுக்கவும் தேவையான் குடிநீர் உணவு போன்றவை சேகா¢த்துக்கொள்ளவும் வசதியாகப்போய்பிடும். எவ்வளவோ பொ¢ய நாடுகளை எல்லாம் நான் பந்தாடி இருகிறேன்...அதற்கு முன்
இந்த மால்த்தா ஒரு சுண்டைக்காய்.... ஆகவே எனது அடுத்த குறி மால்த்தாதான். "
கி.பி.1565. மாமன்னர் இரண்டாம்
செலிம் எந்த நேரத்தில் எனது அடுத்தகுறி மால்த்தாதான் என்று கூறினாரோ... அடுத்த சில
நாட்க்களில் மால்டா தீவின் அருகில் ஓட்டாமான் துருக்கியர்களின் கப்பல்படை அலை அலை என முன்னேறி வந்து சூழ்ந்தது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின்
கடாட்ச்சம் என்று ஒன்று இருகிறது. அதன்படி....சுண்டைக்காய் என நினைத்த அந்த சிறிய
மால்த்தாதீவு தன்னைக்காப்பது அதிதூதரான புனித மிக்கேல் சம்மனசானவர் என்பதை அந்த முஸ்லீம் மன்னருக்கு உணர்த்தியது.
புனித சின்னப்பர் பாலெஸ்தீனாவிலிருந்து நியாயம் தீர்க்கும்பொருட்டு ரோமைக்கு
செல்லும்போது வழியில் கப்பல் பழுதுபடவே அந்தக்கப்பல் இந்த மால்த்தா தீவில்தான்
தறைதட்டியது. இங்கு அவர் தங்கியிருந்த இடங்கள் மேலும் வேத சாட்ச்சியாக மா¢த்த பல புனிதர்களின் குடைவரை குகைகள் இன்றுவரை இங்கே உள்ளன. இந்த தீவில்
மூன்று கோட்டைகள் அமைந்துள்ளன. அவை புனித ஆஞ்சலோ கோட்டை, புனித எல்மாக் கோட்டை, புனித மிக்கேல்
சம்மனசானவர் கோட்டை.. இந்த மால்டாத்தீவின் அதிபதியாக புனித அருளப்பா¢ன் வீரர்கள் என்று பெயர் பெற்றிருந்த தலைமை கமாண்டர்
எனப்பட்ட தெ லா வலாத்தே என்னும் முதியவர். இந்த மால்த்தா தீவு அக்காலத்திய ஸ்பெயின் மன்னர்களுக்கு சொந்தமானதாக இருந்தது.
இந்த ஓட்டமானியர்களின் சுபாவம் தொ¢ந்திருந்த இந்த வல்லாத்தே கான்ஸ்டாண்டி நேப்பிள்சில் தனக்கு
நம்பிக்கையான உளவுப்படையை
வைத்திருந்ததால் துருக்கியர்களின் படைஎடுப்பு பற்றிய விபரங்கள் அவருக்கு ஏற்கனவே
தொ¢ந்திருந்ததால்
சிசிலியிலிருந்த ஸ்பெயின் கவர்னா¢டமும் அப்போதைய பா¢சுத்த பிதா பாப்புவிடமும் ராணுவதளவாட உதவிகள் கேட்டிருந்தார். இந்தப்படை எடுப்பின் அவசரத்துக்கு அவை
இன்னும் வந்து சேராததால் அவைவரும்வரை தங்கள் உயிரைக்கொடுத்தாவது இந்த மால்த்தா
தீவை காப்பது என முடிவெடுத்தார்.
ஆனால் மிக்கேல் சம்மனசானவர் இந்த முதியவர் வல்லாத்தேயின் உடலுக்குள்
புகுந்துகொண்டதுபோல அவர் வாளை சுழற்றியவிதமும் அவரது வேகமும் விவேகமும் அவர் ஒடு
சாதாரணமானவர் அல்ல என நிரூபித்தது.
என்னதான் மிகப்பொ¢ய கப்பல் படையே
ஆனாலும் கடலைவிட்டு தரைக்குவந்து சண்டைபோட்டு அந்த நாட்டை பிடித்தால்தான் வெற்றி
பெற்றதாக கருத முடியும். ஆகவே துருக்கிய வீரர்கள் கப்பலைவிட்டு இந்த மாத்தா தீவினுள் காலடி எடுத்துவைத்தார்கள். வெறும் 700 புனித அருளப்பா¢ன் வீரர்களும் சுமார் 4000 சாதாரண மால்த்தா
மக்களும் இந்த தீவைக்காக்க அந்த ராத்சத துருக்கியபடைகளுடன் ¨தா¢யமாக தெருவில் இறங்கி போ¡¢ட்டனர். வல்லாத்தேயின் அதிரடிதிட்டங்களால் பீரங்கிகள் தகுந்த முறையில்
பிரயோகிக்கப்பட்டு ஏராளமான துருக்கி வீரர்கள் பலியானார்கள். நூற்றுக்கணக்கான
கப்பல்கள் பீரங்கித்தாக்குதல்களுக்கு பலி ஆயின.
புனித எல்மாக்கோட்டையின் மதில் சுவர்கள் துருக்கியர்களின்
தாக்குதல்களால் பல இடங்களில் பெரும் வி¡¢சலும் துவாரங்களும் ஆனது. இந்த இடைவெளிகளிலும் பொ¢ய துவாரங்களின் வழியாகவும் துருக்கி வீரர்கள் திபு திபுவென கோட்டையினுள் நுழைந்தார்கள். எங்கெல்லாம் எதி¡¢யின் தாக்குதல் அதிகமாக இருகின்றதோ அங்கெல்லாம் நம் அந்த
முதியவர் வல்லாத்தே தோன்றுவார்.அவர் கையில் சுழலும் நீண்ட கத்தியாலும் அவரதுகைத்துப்பாக்கியாலும் பலர் வெட்டுண்டும் சுடப்பட்டும் பொத் பொதென கீழே விழுந்து உயிரைவிட்டனர். இவரக்கண்ட மாத்திரத்தில் வீரம் அனேக கிறிஸ்த்துவ வீரர்களையும் தொற்றிக்கொண்டதால் எதி¡¢களான துருக்கியர்களின் நிலை மிகவும் பா¢தாபத்துக்குறியதாக இருந்தது.
மேலும் துருக்கியர்களின் கடற்படையில் திராகுத் என்றும் முஸ்தபா பாஷா, என்றும் அலுக் அலி பாஷா என்றும் மூன்று கில்லாடிகளான
கடற்படை தளபதிகள் இருந்தாலும் அவர்களிடைய ஓற்றுமை இல்லாத காரணத்தால் அவர்கள் படைகளை மூன்றாகப்பி¡¢த்து தங்கள் இஸ்ட்டம்போல் செயல்பட்டதாலும் சுமார் 40 நாட்க்கள் மால்த்தாதீவில் முற்றுகை நீடித்ததாலும் நமக்கு
இந்த யுத்தத்தில் வெற்றியா தோல்வியா என நிர்ணயிக்க முடியாததாலும் துருக்கியவீரர்களிடைய பெரும் சோர்வு ஏற்பட்டது. மேலும் இந்த 40 நாட்க்களில்
தாங்கள் கொண்டு வந்திருந்த அத்தனை உணவும் பொருளும் தீர்ந்துவிட்டபடியாலும் குடிக்க
இருந்த குடி நீர் அனைத்தும் தீர்ந்துவிட்டபடியாலும்
தாகம் வறட்டி எடுக்கவே மாலத்தீவில் சென்று தண்ணீர் எடுக்கலாம் என்றால் அங்கிருந்த
நீர் நிலைகள் எல்லாம் விஷம் கலக்கப்பட்டிருந்தன். மேலும் இறந்துபோன கால் நடைகளின்
சடலங்களையும் தங்களால் கொல்லப்பட்ட துருக்கிவீரர்களின் சடலங்களையும் இதில் போட்டு வைத்ததால் அவை அழுகி நாற்றமெடுத்து குடலை பிடுங்கியது. தங்களுக்கு ஒரு சொட்டு
நீரோ உணவோ கிடைக்ககூடாதென இந்த முதியவர் வல்லாத்தே ஏற்கனவே தகுந்த முன் யோஜனைப்படி செயலாற்றி இருகிறார் என்று எண்ணி அந்த கோபத்தை எல்லாம் தங்கள் வீரத்தின் அடையாளமாக ஆங்காங்கே பிடிபட்ட டெம்ப்ளார் வீரர்கள் மீதும் மால்த்தா மக்கள் மீதும் காட்டி கொடுமையின் உச்சத்துக்கே போனார்கள். தங்களால்
கைப்பற்றப்பட்ட மாத்தா வீரர்களை கப்பலில் சிரச்சேதம் செய்து அதை படகுகளில் ஏற்றி
மீண்டும் மால்த்தா துறைமுகத்தில் போட்டார்கள்.
இதைக்கண்ட முதியவர் வல்லத்தேக்கு அளவுகடந்த கோபம் ஏற்பட்டது. கிறிஸ்த்துவ
முறைப்படியோ அல்லது மன சட்ச்சியின்படியோ இனி போ¡¢ட்டு பிரயோஜனம் இல்லை என முடிவுக்கு வந்த அவர் தங்களால் கைதியாக்கப்பட்ட அத்தனை துருக்கிய வீரர்களையும் சிரச்சேதம் செய்தார். அவர்களின் தலைகளை பீரங்கி வாயில் வைத்து அவற்றை வெடிக்கச்செய்தார். அவர் துருக்கியர்களின் கப்பல்களில் சிதைந்து விழவே துருகியர்கள் பழிக்குப்பழி வாங்க இந்த கிழவன் வல்லாத்தே இனி எதற்கும் துணிந்து விட்டான்.
இனிமேல் நம் நிலைமை படுமோசம் ஆகும் என்றனர். அதே நேரத்தில் கப்பல் தலைவன் திராகுத்
தலையில் குண்டடி பட்டு இறந்தது துருக்கியர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்பட்டது.
இந்த நிலையில் சிசிலியிலிருந்த ஸ்பெயின் மன்னர் ஐந்தாம் சார்லெஸ் பெயா¢ல் ஆண்டுவந்த அவரது வைஸ்ராய் ஆபத்து உதவியாக பல கப்பல்களை
அனுப்பினார். இந்த கப்பல்கள் வந்ததும் இனி போராடிப்பயனில்லை.... போராடும் மனநிலையில் நம் வீரர்களும் இல்லை என்றுணர்ந்த முஸ்தபா பாஷாவும் அலுக் அலியும் தங்கள் முற்றுகையை தோல்வியுடன் முடித்துக்கொண்டு துருக்கி திரும்பினர்.போகும்போது
அலுகலி " அடேய் கிறிஸ்த்துவர்களே இன்று எங்களிடமிருந்து தப்பித்துக்கொண்டோம் என நினைக்க வேண்டாம். ஒரு நாள் வரும் .. அப்போது வைத்துக்கொள்கிறேன் என் கச்சோ¢யை... அன்றைய நாளில் உங்கள் அனைவரையும் என் கைகளாளேயே கிழிப்பேன்... இது என் அல்லாவின் மேல்
ஆணை" என்றான். அவன் வாக்கு பலிக்க அவன் இன்னும் 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக ஆயிற்று.
இந்த முற்றுகையில் தங்கள் கடற்படையில் சுமார் 30000 போர் வீரர்களையும்150க்கும் மேற்பட்ட கப்பல்களையும் இழந்தனர். மால்த்தாவின் இந்த முதியவர் வல்லாத்தேயின் வீரத்தால்
காப்பாற்றப்பட்ட அதன் மக்கள் தங்கள் நன்றியின் நினைவாக இப்போதும் அதன் தலை நகருக்கு வல்லாத்தே என பெயர் சூட்டி இருமின்றனர். அடிபட்ட புலி
தப்பித்துக்கொண்டால் அது ஆட்கொல்லி ஆகிவிடும். அப்படியாக இந்த மால்த்தாவில்
புறமுதுகிட்டு ஓடிய ஓட்டமான் படைகள் சில காலம் கழித்து சைப்ரஸ் தீவை தாக்கி
தனதாக்கிக்கொண்டார்கள். இந்த சைப்ரஸ் தீவில் க்¡£ட்
என்னுமிடத்தில்தான் புனித ஆந்திரயர் வேதபோதகம் செய்யும்போது மிகவும் கொடுமையாக
கொல்லப்பட்டு வேத சாட்ச்சியாக மா¢த்தார். மேலும் இதே சைப்ரெச்ஸ் தீவில் தூய லாசர் தேவாலயம் ஒன்று இருகின்றது. இதில்தான் ஆண்டவராகிய யேசுநாதரால் உயிர்பிக்கப்பட்ட லாசர் பல நாடுகளில் வேதபோதகம் செய்தபிறகு இங்கே வந்து மீண்டும் மா¢த்து அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறை இங்குதான் இருகின்றது. இந்த சைப்ரஸ் தீவுக்கூட்டங்களுக்கு அருகில் உள்ள ஒரு தீவு தான் ஃபார்மகோஸ்தா.
கி.பி.1571... இந்த சைப்ரஸ் தீவும் அதன் அருகே அமைந்துள்ள பல தீவுகளும் வெனீஷியர்களுக்கு
சொந்தமானவை. சிசிலி, வெனிஸ் போன்றவை
ஸ்பைன் மன்னருக்கு காலனி நாடுகள். எனவே அந்தந்த நாடுகளிள் ஸ்பெயின் மன்னர்களின் கவர்னர்கள் ஆட்ச்சி நடத்துவார்கள். இப்படியாக இந்த ஃபொர்மகுஸ்த்தா தீவின் அன்றைய கவர்னராக மார்க் அந்தோணியோ ப்ரகடீனோ என்னும் முதியவர் அதிபர் ஆக இருந்தார். எழுபது வயதை கடந்துவிட்டார் என்றாலும் வீரம் அவரை
விட்டுப்போய்விடவில்லை என்பதை அவரது அனுபவம் உணர்த்தியது. ஓட்டாமானிய துருக்கியர்கள்
1565ல் மால்த்தாவை
கைப்பற்றமுடியாமல் போன ஆதங்கம் இப்போது அவர்களின் முகத்தில் நன்றாகத்தொ¢ந்தது. ஆ....
பழிக்குப்பழி....ரத்தத்துக்கு ரத்தம் என்னும் வார்த்தைகள் அவர்களிடையே அடிக்கடி
வந்தன. இந்த வெறியோடு இந்த ஃபார்மகோஸ்த்தா கோட்டையை
முற்றுகை இட்டனர். கோட்டையை தங்களுடைய பலமான பீரங்கிகளால்
தகர்த்தனர். இந்த தீவிலிருந்த மக்களும் டெம்ப்லார் வீரர்களும் தக்க பதிலடி
கொடுத்தனர். தினமும் ஆயிரக்கணக்கான் துருக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதிபர் ப்ரகடீனோ தனக்கு ஆபத்து உதவிப்படைகள் சிசிலியிலிருந்து வந்துவிடும் என்று பல்லைக்கடித்துக்கொண்டு
காத்திருந்தார். ஆனால் எந்த உதவியும் வரவில்லை. இனி நம் உயிர் உள்ளவரை போராடுவோம் என்று கோட்டைகதவுகள் நன்றாக பூட்டைப்போட்டு சாத்திக்கொண்டார். கடைசி குண்டு உள்ளவரை போராடிப்பார்த்துவிட்டோம் என்றும் சாப்பிட
ஒன்றுமில்லாமல் அங்கிருந்த கடைசி குதிரையையும் கொன்று சாப்பிட்டு விட்டோம் என்றும் இனி உண்ணவோ குடிக்கவோ ஒன்றுமில்லை என்னும் பட்சத்தில் கோட்டைக்கு வெளியே ஆயிரக்கணக்கான கூடாரங்களுக்கு மத்தியில் இருந்த துருக்கிய கமாண்டர் லாலா பாஷா வுக்கு சரணடைவதாக தூது அனுப்பினார். லாலா பாஷாவும் அவர் சரணடைவதை
ஏறுக்கொள்வதாகவும் அடுத்த நாள் கோட்டையைவிட்டு வெளியே வந்து தன்னை சந்திக்குமாறும்
தகவல் அனுப்பினார்.
இந்த வார்த்தையை
நம்பிய கவர்னர் ப்ரகடீனோ தன்னுடைய சில மெய்க்காப்பாளர்களை அழைத்துக்கொண்டு
கோட்டைக்காவல் அதிகா¡¢கள் சிலரை தன்னை பின்பற்றி வருமாரும் சொல்லி அனுப்பினார். ஆரம்பத்தில் துருக்கிய தளபதி லாலா பாஷா எதி¡¢ கவர்னரை நல்லபடியாக அனுமதித்தான். ப்ரகாடினோவின் வீரர்களும் அவர்கள்
சொத்துக்களும் ஏற்றிச்செல்ல 14 கப்பல்கள் தருவதாகவும், கோட்டைக்குள்
இருக்கும் வீரர்களுக்கும் பொதுமக்கள் யாவருக்கும் எவ்வித தொந்திரவும் கொடுக்கப்போவதில்லை எனவும் வாக்களித்தான்.
ஆனால் ஒரு துருக்கி வீரன் வந்து அவன் தளபதி லாலா பாஷாவிடம் காதில் ஒரு
விஷயத்தை போட்டு வைத்தான். அது பயங்கரமான பல விளைவுகளை ஏற்படுத்தியது. அந்த விஷயம்
அன்றுகாலை நடந்த ஒரு சண்டையில் தங்கள்
தளபதி லாலா பாஷாவின் மகன் கொல்லப்பட்டுவிட்டான் என்பதாகும். அவ்வளவுதான் பாஷா
கொடுங்கோலனாக மாறினான். சற்று நேரத்திற்கும் முன்புவரை மா¢யாதையாக நடத்தப்பட்ட கவர்னர் ப்ரகடீனோ அடுத்த நிமிடம் மிகக்கேவலமாக நடத்தப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டார். அவர் கண்முன்னே அவரது மெய்க்காப்பாளர்கள் அனைவரும் சிரச்சேதம் செய்யபட்டனர். இங்கு என்ன நடக்கின்றது என அறியாத கோட்டையிலிருந்த சிப்பாயிகள் சரணடைந்தபின் தப்பிச்செல்ல பாஷா அனுமதித்துவிட்டார் என அறிந்தபின் அவசரம் அவசரமாக வெளியே வந்தனர். அவர்கள் அனைவரும் கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் சற்று நகர்ந்ததும் அனைத்து வீரர்களும் ஆடைகள் களையப்பட்டு
கப்பலின் துடுப்புவலிக்கும் வேலைக்கு அமர்த்தபட்டனர். அதாவது அடிமைகள்
ஆக்கப்பட்டனர்.
இப்போது கோட்டையைக்காக்க வீரர்களுமில்லை தலைவனும் இல்லை என்பதால் துருக்கியவீரர்கள் கோட்டையினுள் புகுந்து தங்கள்
வேட்டையை ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து எங்கும் மரண ஓலம் கேட்டது. ஓட்டோமானிய
வீரர்கள் தங்கள் கோட்டைனுள் புகுந்துவிட்டதை அறிந்த பொதுமக்கள் நிலைமை மிகுந்த பா¢தாபத்துக்கு உள்ளானது. பல தாய்மார்கள் தங்கள் பெண்பிள்ளைகளை தாங்களே கத்தியால்
குத்திக்கொண்று தங்களையும் குத்திக்கொண்டு இறந்தனர். பலர் தன் பிள்ளைகளுடன் உயர்ந்த மாடிக்குசென்று அங்கிருந்து தலைகீழாக குதித்து உயிரைவிட்டனர். இப்படிப்பல நிகழ்வுகள். ஆனால் வயோதிகர்களும் இரண்டும் கெட்டான் வயதிலுள்ளோர்களின் நிலைமையும் மிகவும் பா¢தாபம். அவர்கள் எந்தெந்த கா¡¢யங்களுக்கு பயன்படுவார்கள் என்பதை தீர்மானித்தபின் மீதி
இருந்தவர்களை ஈவு இரக்கமின்றி கொண்று குவித்தார்கள்.
கவர்னர் ப்ரகடீனோ மிகவும் கேவலமான முறையில் நடத்தப்பட்டார். சாணம் நிறைந்தா
சாக்குப்பைகளை அவர்மீது சுமத்தி கழுதையை விரட்டுவதுபோல அவரை நடத்தினர் . ஒவொவொரு
முறையும் அவர் லாலா பாஷாவின்
கூடாரத்தின் முன்பாக வரும்போது அவர் தரையை முத்தமிட வேண்டும். அவர் கடுமையாக
அடிபட்டார். அவரைக்கேவலப்படும் விதத்தில் அவரது மூக்கும் காதும் அறுக்கப்பட்டது.
அங்கிருந்து வழியும் ரத்தத்தை நிறுத்த
பழுக்கக்காய்ச்சிய இரும்பு தடியால் சூடு போடபட்டது. மேலும் அவர் தலை கீழாக
தொங்கவிடப்பட்டு அவரது மேனி முழுவதும் தோல் உறிக்கப்பட்டது. அப்போது அவர்
ஆண்டவருக்கு ஸ்த்தோத்திர கீதம்
பாடிக்கொண்டிருந்தார் என்றனர் இந்த கொடுமைகளை பார்த்தவர்கள். இந்த
சித்திரவதைகளில் திருப்தி அடையாத துருக்கியர்கள் கடைசியில் அவரை கத்தியால்
அடிவயிற்றில் குத்திக்கொண்றனர்.
இந்த ஃபார்மகுஸ்த்தா தீவின் கவர்னருக்கும் அவர் வீரர்களுக்கும் அந்த தீவின்
மக்களுக்கும் நோ¢ட்ட கொடுமைகள் சா¢த்திரத்தில் மிகுந்த கறையை ஏற்படுத்தியதுமல்லாமல் இதுவே
முஸ்லீம்களை ஒடுக்க மேலை நாட்டு கிறிஸ்த்துவ மன்னர்களை ஒன்றிணைக்க அத்தியாவசியமான கா¡¢யமாக இருந்தது. இந்த மேலைநாட்டு கிறிஸ்த்துவ மன்னர்களை
ஒன்றிணைப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர் பா¢சுத்தபிதா பாப்பு ஐந்தாம் பையஸ் என்னும் பக்தி நாதர்.. அவர் தன்னுடைய கிறிஸ்த்துவ மக்களும் மன்னர்களும்
துருக்கியர்களின் கைக்குள் சிக்குண்டு அவமானப்பட்டு மடிவதை ஏற்கமுடியாமல்," நான் இந்த கொடுமையை என் ஆண்டவறாகிய யேசுநாதர் ஆசீரோடும் அவர் திருத்தாயார் என்றும் பா¢சுத்த கன்னிமா¢யாள் ஆசீரோடும் தடுத்து நிறுத்துவேன். அடேய்
ஓட்டமான்...விடமாட்டேன்...உன்னை விடமாட்டேன்.. உன் கொடுங்கோலை உடைப்பேன்...என் கிறிஸ்த்துவ நாடுகளில் உன் ஆதிக்கம் நுழைவதை இனி ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். இதோ உனக்கு எதிராய் நானும் ஆயுதம் எடுப்பேன். " என்றார். அவர்
எடுத்த ஆயுதம்தான் ஜெபமாலை.
பா¢சுத்த பிதா ஐந்தாம்
பக்திநாதர் மிகுந்த ஒழுக்கமானவர். கண்டிப்பும் நேர்மையும் வீரமும் அவரது பிறவி
குணங்கள். ஆனால் அவர்காலத்தில் திருச்சபையில் பல ஒழுங்கீனங்கள் நிறைந்திருந்தன.
கண்டிப்புக்கு பெயர்போன நம் பா¢சுத்த பிதா தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவற்றை அறவே
ஒழித்தார். இது திருச்சபையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. தான் பா¢சுத்தபிதாவா உயர்த்தப்பட்டிருந்தாலும் தான் அதுவரை பின்பற்றிவந்த தொமினிக்கன் சபை உடுப்பையே தான் பாப்புவாக
மாறியபின்பும் உடுத்திவந்தார். அப்போது அவருக்கு இருந்த முக்கிய எதி¡¢கள் இரண்டுபேர்தான் அவர்கள் பதித மதத்தினரும் இந்த
துருக்கிய மன்னர்களும்தான்.
ஜெபமாலை பக்தியை ஸ்தாபித்தது தூய தோமினிக்... ஆக அவர் சபையிலிருந்த வந்த நம் பா¢சுத்த பிதா
ஜெபமாலையை தம் கையில் ஆயுதமாக கொண்டது ஆச்சா¢யமானது அல்ல.
அந்தக்காலத்தில் ஹெக்டிக் எனப்படும் பி¡¢வினைவாதிகளால் ரோமன் கத்தோலிக்க திருச்சபை பல பி¡¢வினை சபைகளாக பிறிந்து போனது. இதை எதிர்க்க ஜெபமாலை மாதாவல்
மட்டுமே முடியும் என்பதாலும் தன்னுடைய மற்ற எதி¡¢யான ஓட்டமான் என்னும் வல்லமையான எதி¡¢யை எதிர்க்கவும்
இந்த ஜெபமாலை மாதாவால் மட்டுமே முடியும் என்று அவர் மிகவும் நம்பினார். இந்த
நம்பிக்கையில் அவர் ஐரோப்பாவில் உள்ள அனைத்து வல்லமையான மன்னர்களுக்கும் ஓட்டோமானால் துருக்கியர்களால் வரப்போகும் பேரழிவைப்பற்றியும் அவர்களிக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பெரும்
சேனை ஒன்று ஏற்படுத்தவும் அவர் தன்னுடைய விஷேதூதர்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பினார்.
ஆனால் திருச்சபையின் செல்லப்பிள்ளை என பெயர் பெற்றிருந்த ஃப்ரான்ஸ் இதற்கு
ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் ஓட்டமான் பேரரசருக்கு பல வலிமையான பீரங்கிகளை தயா¡¢த்து அனுப்புவது ஃப்ரான்ஸ் என்பதால்ங்களுக்குள்ள வியாபாரம்
கெட்டுப்போகும் என்றுகூறி அவர்கள் இந்த முயற்சிக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அடுத்து
இங்கிலாந்து. இங்கிலாந்து பேரரசி முதலாம் எலிசபெத்தை பா¢சுத்த பிதா மதத்தைவிட்டு தடை செய்திருந்தார். காரணம் அவர் திருச்சபைக்கு எதிரான பி¡¢வினை சபையை ஆதா¢ப்பதாலும் அவர்காலத்தில் ஏராளமான கத்தோலிக்க பிரஜைகளை அரசியல் பழிவாங்கும் பொருட்டு கொல்வதாலும் மதத்தைவிட்டு தள்ளி வைப்பதாக காரணம் கூறப்பட்டது. மேலும் மஹாராணி முதலாம் எலிசபெத் துருக்கி
மன்னருடன் வியாபாரக்கூட்டு வைத்திருப்பதால் அவரும் இந்த பா¢சுத்த பிதாவின்
நேசநாட்டு படைகளில் சேரமுடியாதென கூறப்பட்டது. இதேபோல வெனிஸ் அப்போதைய ஸ்பெயின் மன்னா¢ன் காலனி நாடாக இருந்தபோதும் வியாபார விஷயமாக துருக்கி
மன்னர் ஓட்டோமானுடன் வியாபார் ஒத்துழைப்பும் கூட்டும் இருப்பதால் தானும் இந்த பா¢சுத்தபிதாவின் நேச நாட்டுப்படையில் சேர முடியாதென
கூறபட்டது. பாப்பரசர் ஐந்தாம் பக்த்திநாதர் அப்படியே மனமொடிந்து போனார். வெனீஷிய
கப்பல்படையின் ஒத்துழுழைப்பு இல்லாவிடில் தன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடியும் என அவருக்கு மிக நன்றாகதொ¢ந்திருந்தது. ஆக இந்த பிரச்சனைக்கு என்னதான் வழி. மாதாவே ... என் நேச தாயாரே... உம் தாசனாகிய எனக்கு நீர் உதவ மாட்டாயோ என்றபடி தன் அங்கியினுள்
கைவிட்டு ஜெபமாலையை எடுத்து ஜெபித்துக்கொண்டே தன் இல்லம் நோக்கிவந்தபோது பளிச்சென
அவருக்கு ஒரு யோஜனை தோன்றியது. ஆம்... இந்த பிரச்சனைக்கு நான் ஒருவன் ஜெபிப்பதைவிட அனைத்து மக்களூம் ஜெபித்தால் பலன் நிச்சய்ம் என்பதால் தன்
ஆட்சிக்குட்பட்ட அனைத்து மக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அனைத்து விசுவாசிகளும்
அவருடைய கருத்து நிறைவேறவேண்டி ஒட்டுமொத்தமாக ஜெபிக்க கேட்டுக்கொண்டார். இந்த கா¡¢யத்துக்காக என் குருக்களே உங்கள் ஆத்மாக்களை தூய்மைப்படுத்திக்கொண்டு
ஜெபியுங்கள்..என் கன்னியர்களே உங்கள் ஆத்மாக்களை சுத்தமாக வைத்துக்கொண்டு எனக்காக ஜெபியுங்கள். என் விசுவாசிகளாகிய என் ஆடுகளே, என் கருத்துக்களுக்காக நம் கிறிஸ்த்துவ மக்களை இந்த ஓட்டோமானியர்களிடமிருந்து
காப்பாற்றி ரட்ச்சிக்க உங்கள் ஆன்மாக்களை சுத்தப்படுத்திக்கொண்டு ஜெபியுங்கள்... தினமும் ஜெபமாலை சொல்லுங்கள்...இந்த
ஜெபங்களை நம் பரலோக தாயாருக்கு மனமுவந்து ஒப்புக்கொடுங்கள். அசுத்த இதயத்தோடு
ஜெபிக்கப்படும் ஜெபம் நம் தேவ தாயாருக்கு ஏற்புடையதன்று " என்றார்.
இதற்கு நல்ல பலன் கிடைத்தது . வெனிஸ் நகர ஆளுனருக்கு தன்னைச்சுற்றி ஓட்டாமானின்
ஆட்கள் சூழ்ந்திருப்பதாக தோன்றியது. ஏற்கனவே தனக்கு அருகிலுள்ள குரோஷியா நாடு துருக்கியிடம் மாட்டிக்கொண்டது.. இனி அடுத்தது நாம்தான். எந்த நாடும் தனக்கு ஆதாயம் அல்லது அவசரம் என்னும்பட்சத்தில் தன்னுடைய கூட்டுறவு நிபந்தனைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிடும் எனவும் அவருக்கு நன்றாக புறிந்தது. இப்போது அவர் உடனடியாக அவசரமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனவே தன் ஸ்பெயின் மன்னருடன் ஆலோசனை செய்து இந்த ஒட்டோமானிய
துருக்கியர்களின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானால் பா¢சுத்தபிதா பாப்பு ஐந்தாம் பக்திநாதா¢ன் நேச படைகளுடன் சேர்ந்து துருக்கி பாஷாவை எதிர்க்க
வேண்டியதுதான் ஒரே வழி என்று புறிந்து. பா¢சுத்தபிதாவின் நேசப்படைகளோடு சேந்து துருக்கி பாஷாவை எதிர்க்க ஒப்புக்கொண்டார். இது பா¢சுத்த பிதாவை மிகவும் சந்தோஷப்பட வைத்தது. பிறகு கா¡¢யங்கள் மளமளவென நடந்தன.
இதற்குள்ளாக வெனீஷியர்கள் புதுப்புது ராணுவ யுக்த்திகள் கொண்ட புதுமையான
போர்க்கல்களை உருவாக்கி இருந்தார்கள். அந்த மிகப்பொ¢ய போர்க்கல்களின் முகப்பு கூராக இல்லாமல் பட்டையாக மாற்றப்பட்டிருந்தது.அந்த
முகப்பில் சக்திவாய்ந்த பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. அதாவது கப்பல் வேகமாக செல்லும்போதே முன்பக்கத்திலிருந்து பீரங்கிகளால் சுட்டுக்கொண்டே செல்லலாம். அக்கால
போர்க்கல்களில் இருபுறமும் பீரங்கிகள் பக்க வாட்டில் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தன. இதனால் கப்பலை திருப்பி எதி¡¢யை பக்கவாட்டிலிருந்து மட்டும்தான் சுட முடியும். இப்படியோரு நடை முறைதான்
அக்காலத்தில் இருந்தது. துருக்கியர்கள் பழங்கால முறைப்படியே கப்பலில் பழக்கப்பட்டிருந்தார்கள். மேலும் நவீனமாக்கப்பட்ட
துப்பாக்கிகள், சக்திவாய்ந்த வெடி
மருந்துகள், போர் யுக்த்திகள்
என காலத்திற்கேற்றபடி மாற்றப்பட்டு இவற்றின் வெற்றி போ¡¢ன்போதுதான் கவனிக்கப்படும் என்பதால் அடுத்த போ¡¢ன்போது இவற்றின் திறமையைபா¢சோதித்துப்பார்க்க நல்ல ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர்
வெனீஷிய கப்பல் படையினர். இதற்காக இவற்றை பிரயோகிக்க தகுதியான நன்கு பழக்கப்பட்ட வீ£ரர்களும், கில்லாடியான கடல்
மாலுமிகளும் சிறந்த தலைவர்களும் உருவாக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ஒரு கில்லாடியான ஒரு தலைவன் வந்து சேர்ந்தான்.
அவன் பெயர் ஆஸ்டி¡¢யாவைச்சேர்ந்த ஜான். நேயர்களுக்கு இந்த ஜானைப்பற்றி
அறிமுகம் செய்விப்பது சற்று அவசியம். எப்போதும் சி¡¢த்த முகமும், கலகல என்னும்
பேச்சும், அழகிய முகம், தீர்க்கமான நாசியும், அவன்பார்வையில் எதி¡¢ல் நிற்பவா¢ன் குணத்தையும், எதி¡¢யை ஒரே நொடியில்
எடைபோடும் தன்மையும், எந்தப்பெண்னையும்
நொடியில் வளைத்துப்போடும் வசீகரம்.... அடடா.... இவனைப்பற்றி மேலும் என்ன சொல்ல வேண்டும். " ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு....ஒரு கோல மயில் என் குடி இருப்பு...இசை பாடலிலே என் உயிர் துடிப்பு....நான் பார்ப்பதெல்லாம் அழகின் சி¡¢ப்பு.." என்ற கண்ணதாசனின் பாடல் வா¢கள் நம் ஜானுக்கு மிகவும் பொருந்தும். விழித்திருக்கும் எந்த நேரமும் இசையும் நடனமும் பாடலும், அத்துடன் மங்கையும்
மதுவும்... இவற்றிற்கு நடுவில்தான் நம் ஜான் எப்போதும் காணப்படுவான். என்ன
செய்வது... அவன் பிறப்பும் அப்படி.... வளர்ப்பும் அப்படி.. அவன் விதி அவனை அப்படி
இழுத்துச்சென்றது... ஆனால் கத்தி எடுத்துவிட்டால் மகராஜன் எப்படித்தான்
மாறுவானோ.... அடடா... அவன் கத்தி வீச்சை நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம்... இவன் கத்திச்சண்டு போடுகிறானா
அல்லது நடனமாடுகின்றானா என நிர்ணயிப்பது கடினம்...இத்துடன் இவன் கத்தி வீச்சின்
துல்லியம் மிகச்சா¢யாக இருக்கும் .
அதிலும் ஒரு நேர்மை, ஒழுங்கு இருக்கும். தப்பாட்டம் இவனிடம் ஒருபோதும்
இருந்ததில்லை. மேலும் நாட்டியத்தின்போதும் , சண்டையிடும்போதும் .. அவன் அடிக்கும் அந்தர் பல்ட்டி பெயர்
போனது. மிகச்சா¢யான் கால நிர்ணயம்.
எவ்வளவு உயிரத்திலிருந்து குதித்தாலும் பூனை போல துல்லியமாய் தரையின் மீது வந்து நிற்பான். இவனிடத்திலிருந்த ஒரு குறையே இவனது பிறப்புதான்.
கி.பி.1547 பிப்ரவா¢ மாதம் 24 ஆம் தேதி அப்போதைய ஸ்பெயின் மாமன்னர் ஐந்தாம் சார்லஸ் என்பவருக்கு முறைதவறிய
மகனாகப்பிறந்தவர்தான் நம் கதா நாயகன் டான் ஜான். பிறவியிலேயே படு சுட்டிப்பயலாக இருந்த இவன்மீது அவன் தந்தைக்கு மிகவும் பாசம் அதிகம். ஆனால் அவருக்கு சட்டபூர்வமாக பிறந்திருந்த
பிலிப்புக்கு இவனைக்கண்டாலே பிடிக்காது. ஆனால் தந்தை இவன் மீது எவ்வளவு அன்பு
வைத்திருகின்றார் என்று நன்றாகத்தொ¢ந்திருந்ததால் சற்று அடக்கி வாசித்தான். இவர்களுக்குள்ள
பூசல்கள் அவர்களின் தந்தைக்கு தொ¢ந்திருந்தாலும் அரசியல் தர்மப்படி யார் யாருக்கு என்ன செய்யவேண்டுமோ அவற்றை
சட்டபூரவமாக செய்துவைத்தார். தன் மக்கள் இருவருக்கும் ராணுவ முறைப்படி அனைத்து வகையான பயிற்சிகளும் நிறைவாக கொடுத்திருந்தாலும் நம் டான் ஜான் அனைத்திலும் முன்னனியில் இருந்தான்.
இது சகோதரர்கள் இருவருக்கும் அவ்வப்போது பெரும் எ¡¢ச்சலை ஏற்ப்படுத்தியது. ஆனாலும் டான் ஜான் தன் பிறப்பை
முன்னிட்டு எதையும் கண்டுகொள்ள மாட்டான். காலப்போக்கில் பிலிப்பு இரண்டாம் பிலிப்பு என்னும் பட்டப்பெயரோடு ஸ்பெயின் தேசத்தின் அரசபட்டதிற்கு வந்தான். அவன் தந்தை நம் டான் ஜானை ஆஸ்த்தி¡¢யாவுக்கு தன் கடற்படைத்தளபதியாக அமர்த்தினார். அது முதல் அவன் பெயர் ஆஸ்த்தி¡¢யாவின் ஜான் என்றானது.
இதற்குள்ளாக இவன் செய்த சாதனைகள் அளவிட முடியாதபடி இருந்தது. இந்த சமயத்தில்
தான் பா¢சுத்தபிதா பாப்பு
ஐந்தாம் பக்தி நாதா¢ன் நேச நாட்டுப்படைகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த நேச நாட்டுப்படையில் ஸ்பெயின் மன்னா¢ன் படைவீரர்களும் கப்பல்களும் அதிகம் பங்கு பெற்றதாலும், ஆஸ்த்தி¡¢யாவ்ன் ஜானுடைய வீரம் அதிகம் விமா¢சிக்கப்பட்டதாலும் இவனைவிட வயதிலும் அனுபவத்திலும் பல கடற்படைத்தளபதிகள் பல நாடுகளைச்சேர்ந்தவர்கள் இருந்தாலும் வீரத்திற்கும்
விவேகத்திற்க்கும் முதலிடத்திலிருந்த நம் ஜானுக்கே அனைத்து படையினருக்கும் ஒரே
தளபதி என்னும் பட்டம் கொடுத்தார் நம் பா¢சுத்தபிதா பாப்பு ஐந்தாம் பக்தி நாதர்.
இப்படியாக ஸ்பெயின் நாட்டு கடற்ப்படை போருக்கு தயாராக இருந்தது. தன் நாட்டு
வீரர்களை வழியனுப்ப அரசர் பிலிப்பு சம்பிரதாயப்படி தன் சகோதரனும் கடற்படை
தளபதியுமான டான் ஜானுக்கு ஒரு வழியனுப்பு விஷா ஏற்பாடு செய்திருந்தார். அரச சம்பிரதாயப்படி டான் ஜானும் மன்னர் முன்
மண்டியிட்டு ஆசீர் பெற்றார். தன் சகோதரனை முத்தமிடுவதுபோல குனிந்த மன்னர் இரண்டாம் பிலிப்பு, " நீடூழி வாழ்க என் தந்தைக்கு முறை தவறிப்பிறந்த மகனே...அனேகமாக நீ உயிரோடு திரும்பி வரமாட்டாய் என நினைகிறேன்...என்று அவன் காதில் மெதுவாகவும் பிறகு சப்தமாக ," வெற்றியோடு திரும்பி வருக... இந்த ஸ்பெயின் தேசத்திற்கு
பெருமை தேடித்தருக " என்றும் வாழ்த்தி அனுப்பினார். அப்போது அவர்
கண்களில் ஒருவிதமான கருமை தோன்றியதை டான் ஜான் கவனிக்கத்தவறவில்லை.
பிறகு ஜான் இந்த மாபெரும் கடற்படையை உருவாக்கிய பா¢சுத்தபிதா பாப்பரசரை நோ¢ல் சந்தித்து அவா¢டம் ஆசீர்
பெற்றான். இந்த ஆசீர் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை அவன் போர்க்களத்தில்
உணர்ந்தான். பா¢சுத்தபிதா பாப்பு
ஐந்தாம் பக்தி நாதர் ஏற்படுத்திய இந்த நேசப்படையில் 6 மிகப்பொ¢ய போர்க்கப்பல்களும் 206 சாதா போர்கப்பல்களும் மற்றும் பல சிறியரக நாவாய் என்னும் படகுகளும் சுமார் 80000 பேர் அனைத்து விதத்திலும் அதாவது மாலுமிகள், சிப்பாய்கள், துடுப்புவலிப்பவர், உயர் அதிகா¡¢கள் என அனைவரும் சேர்ந்திருந்தனர்.
வெனீசியர்கள் உருவாக்கியிருந்த மிகப்பொ¢ய கல்லீசேக்கள் எனப்படும் மிகப்பொ¢ய போர்க்கப்பல்கள் அக்காலத்தில் பெரும் ராட்ச்சத கப்பலாக கருதப்பட்டது. அக்காலத்தில் எவ்வளவு பொ¢ய ராட்ச்சத கப்பலானாலும் அது மனிதர்களின் சக்கதியால் அதாவது துடுப்பு
வலிப்பவர்களால் இயக்கப்பட்டது. இதற்கு கடுமையான உடல் வலிமை தேவை. எனவே போர்குற்றவாளிகள், போ¡¢ல் பிடிபட்டவர்கள், தேச விரோதிகள், கொடுங்கோண்மையால் சிறை சென்றவர்கள், கொலைகாரர்கள் , போக்கி¡¢கள், மஹாதுஷ்ட்டர்கள்
போன்ற மரணதண்டனை கைதிகள் ஆகியோர்களை அடிமைகளாக்கி இந்த துடுப்புவலிக்கும் வேலைக்கு அமர்த்திக்கொண்டார்கள். அக்காலத்தில் இந்த நடைமுறை அனேகமாக எல்லா சாம்ராஜ்ஜியங்களிலும் இருந்தது. அக்காலத்திய கடற்சண்டையில் வலிமையான போர்க்கப்பலின் முகப்பு கூராக
செய்யப்பட்டிருக்கும். அது வேகமாக எதி¡¢க்கப்பலின் மீது வந்து மோதும். இந்த மோதலில் அனேகமாக கப்பலின்
அடிப்பகுதியிலாரம்பித்து
எதி¡¢க்கப்பலின் மேல் தளம்வரை வி¡¢சல் அடையும் அல்லது பெருத்த அளவில் சேதம் இருக்கும். எனவே கப்பலின் கீழ்
தளத்தில் இருக்கும் துடுப்பு வலிப்பவர்கள் பலர் இறக்க நோ¢டும். அவர்கள் இறந்தால் கப்பலை இயக்க ஆளில்லாமல் கப்பல் நகர முடியால் ஆகிவிடும். மேலும்
தண்ணீர் கப்பலினுள் புகுந்து அது மூழ்க ஆரம்பிக்கும். கப்பலின் கீழ்
தலத்தில் இருக்கும் துடுப்பு வலிக்கும் அடிமைகளை அவர்கள் ஓடி விடாதபடிக்கு காலில் விலங்கு போட்டு வைத்திருப்பர். போர் என்று ஆரம்பிக்கும்போது இந்த பாவப்பட்ட அடிமைகளின் கால் விலங்குகள் சாதாரணமாக விலக்கப்படும். போ¡¢ல் இறந்த இந்த
அடிமைகளைத்தவிர மிச்சம் மீதி அடிமைகள் மீண்டும் விலங்கிடப்பட்டு பழைய வேலையை பார்க்க அமர்த்தப்படுவர்.
ஆனாலும் சில கடற்படைத்தளபதிகள் தாங்களோடு இந்த அடிமைகளும் சாகட்டும் என்று
அவர்களின் கால் விலங்குகளை விலக்குவதில்லை. ஆக அடிமைகளின் கால் விலங்குகள் அகற்றப்படுவதென்பது அந்த அடிமைகளின் தலைவிதியைப்பொருத்தது.
இந்த வெனீஷியர்களின் கல்லீசேக்களின் வலிமையிலும்
திறமையிலும் நம்பிக்கைக்கொண்ட நம் தளபதி டான் ஜான் முஸ்லீம்களின் கல்லெசேக்களைவிட
நம் கல்லீசேக்கள் தரத்திலும் வலிமையிஎலும் குறைந்து போய்விடவில்லை. இன்னும் சொல்லப்போனால் பலமடங்கு உயர்ந்துதான் இருகின்றது. ஆகவே வெற்றி நிச்சயமாக நம் பக்கம் வர ஒரே வழி இந்த ராட்ச்சத கப்பல்களை நாம் எதி¡¢யிடம் இழந்துபோய்விடாதபடி கவனமாக போர் முறையை அமைக்க வேண்டியது மிகவும் அவசியம். நேரடி மோதல் தேவை அற்றது. அதைவிட எதி¡¢யை தாக்கும்
தூரத்தில் வரச்செய்து அதன்மீது பீரங்கித்தாக்குதலை அதிகா¢த்தாலே போதும். மேலும் எந்த எதி¡¢க்கப்பலும் இந்த
ராட்ச்சத கப்பலை அனுகாதபடி தூரத்திலேயே வைத்துக்கொள்வதும் அவசியம் எனவும் அதற்கேற்றபடி தன் போர் வியூகங்களை அமைத்துக்கொண்டான்.
ஒருவழியாக ஸ்பெயின் தேசத்திலிருந்து அரச பாரம்பா¢யப்படி பார்சிலோனாவிலிருந்து ஒரு கப்பல் படை புறப்பட்டது.
இதேபோல் ரோமிலிருந்து பா¢சுத்தபிதாவின்
ஆசீரோடு ஒரு கப்பல்படையும், நேப்பிள்ஸ்
நாட்டின் கடற்படையும், டஸ்கனியின் கடற்படையும், ஜெனோவாவின் கப்பற்படையும், மேலும் பா¢சுத்தபிதாவின்
ஆட்ச்சிக்குட்பட்ட பகுதிகளிளிருந்து புறப்பட்ட கடற்படையும், சிசிலி நாட்டு கடற்படையும் , மால்ட்டாவின் கடற்படையும்மாக புறப்பட்டு சிசிலிக்கு கிழக்கிலுள்ள மெசினாவில்
காத்திருந்தன. இதே நேரத்தில் வெனிசிய கப்பல் படை ஒன்று மெசினாவில் வந்து
இவர்களுடன் சேர்ந்துகொண்டது. இத்தனை கப்பல் படை தளபதிகளும் நம் டான் ஜானை தங்கள் ஒரே தலைவனாக ஏற்றுக்கொண்டு பணிபு¡¢வதாகவும் பாப்பரசா¢ன் இந்த நேசப்படைக்கு தங்கள் உடல்,பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பதாகவும் விசுவாசப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள்.
இந்தனைப்பொ¢ய பதவிக்கு பா¢சுத்தபிதா தன்னை தளபதியாக ஏற்படுத்தியது தனக்கு மகிழ்ச்சியை
அளிப்பதானாலும் இதனால் பல அபிப்பிராய பேதங்கள் இருப்பது தனக்கும் தொ¢ந்திருந்ததாலேயே அவரவர்களுடைய நேரடியான சம்மதத்தப்பெற தான் விரும்பியதாக டான் ஜான் கூறினார். எனவே அனைத்து மன்னர்களுடைய கூட்டமைப்பின் கடற்படை தளபதிகளும் டான் ஜானை அவரவர்களுடைய ராணுவ முறைப்படி சல்யூட் செய்து அவருடைய கரத்தைப்பற்றி முத்தி செய்து தங்கள் கண்களில் ஒற்றிக்கொண்டார்கள்.
அன்றைய நாளிலேயே நம் டான் ஜான் தன்னுடைய படை நடத்தும் யுக்திகளையும்
முஸ்லீகளுடைய படை நடத்தும் யுக்திகளை விளக்கி அனைத்து உப தளபதிகளின் யோசனைகளையும்
காதுகொடுத்து கேட்டுக்கொண்டார்.
இத்துனை சிறிய வயதில் நம் பெரும்படைத்தளபதியாக வந்திருக்கும் டான் ஜானை பாப்பரசர் தம் அனைத்து நேசப்படைகளின் தளபதியாக அமர்தியது நியாயம்தான். அனுபவத்திற்கும் திறமைக்கும் வயது ஒரு பொருட்டல்ல என்றார் வயதில் மிகவும் மூத்தவறான
அகாஸ்டீனோ பார்பா¡¢கோ என்னும் வெனீஷிய
தளபதி. ஒரு வழியாக சிசிலித்தீவின் தெங்கிழக்கில் அமைந்திருக்கும் மெசினியா
துறைமுகத்திலிருந்து நம் டான் ஜான் தலைமையில் பாப்பரசா¢ன் நேச நாட்டுப்படைகள் தங்கள் பரம எதி¡¢யான ஓட்டோமான் கப்பல் படையை
தேடிக்கொண்டு மத்திய தரைக்கடலில் பயணித்தது. அது சைப்ரஸ்
தீவுகளில் ஒன்றான ஃபார்மகோஸ்த்தாவை சுற்றி வரும்போது அது துருக்கி லாலா காரா
பாஷாவினால் சங்காரம் செய்யப்பட்டபிறகு அந்த தீவு
கைவிடப்பட்டதென்றும் இப்போதைக்கு அங்கே துருக்கியப்படை ஏதும் இல்லை என அறிந்து மேலும் கிழக்காக சென்று தங்கள் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தார்கள்.
இதே நேரத்தில் துருக்கிபாஷாவின் ஒற்றாடல் துறை மூலம் தங்களை அழிக்க பா¢சுத்தபிதா பாப்பு ஐந்தாம் பக்த்தினாதர் ஏற்படுத்திய ஒரு
பெரும் கடற்படை தங்கள் கடற்படையை தேடி வருகின்றது என்ற செய்தி வந்தவுடன் பாஷாவின்
அவசர உத்திரவின் போ¢ல் அவரது கடற்படை
ஒன்று கொ¡¢ந்திய தீபகற்பத்தில் லெபாந்தோ துறை முகத்தில் காத்திருந்தது. ஏறக்குறைய 216 அதிகமான் வலிமை
வாய்ந்த பெரும் கப்பல்களும் 56 மத்திய தர கப்பல்களும் ஒருலட்சதிற்கும் மேற்பட்ட படை வீரர்களும் இங்கே
அணிவகுத்து நின்றிருந்தனர். கி.பி.1571 அக்டோபர் 7 ஆம் தேதி இந்த லெப்பாந்தோ துறைமுகத்தில் ஒரு செய்தி வந்தது. பல கப்பல்கள் இத்தீவை நோக்கி வருகின்றன என்று. உடனடியாக பெரும் உளவுப்படை ஒன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ராணுவ கப்பல்களுடன் இந்த வெனீஷிய கப்பல்களை வியாபாரக்கப்பல் என்று நினைத்து
அவற்றை கொள்ளையிட வந்தன. மற்ற கப்பல்களை நம் டான் ஜான் வெகு தூரம் தள்ளியே
நிறுத்தி வைத்திருந்தார்.
இந்தவெனீஷியகப்பல்களை நெருங்கும்போது அதன் வலிமை வாய்ந்த பீரங்கிகள் தங்கள்
தாக்குதலை உடனே ஆரம்பித்தன. அவற்றின் துல்லியமான் பீரங்கித்தாக்குதல்
துருக்கியர்களை மிரள வைத்தது. ஏற்குறைய ஐம்பது துருக்கிய
கப்பல்களும் நாசமாயின. அந்த புதிய ரக வெனீஷிய கப்பல்களின் தாக்குதலின் தரமும்
வலிமையும் பா¢சோதிக்கப்பட்டு
உறுதி செய்யப்பட்டது. தப்பிபிழைத்த மற்ற கப்பல்கள் லெபார்த்தோ துறைமுகத்துள்
நுழைந்தன.
கொள்ளையடிக்கச்சென்ற தன் கப்பல்கள் அனைத்தும் நாசமாக்கப்பட்ட விதம் எதி¡¢யின் வலிமையை பரைசாற்றியது சுல்தானின் கடற்படைத்தலைவன் முஸன்ஸேட் அலி பாஷாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. இருப்பினும் அல்லாவின் ஆசீர்வாதத்தால் இந்த எதி¡¢ப்படைகளை
நாசமாக்குவேன் என்று கர்ஜித்தபடி தன் படைகள் அனைத்தையும் லெபாந்தோ
துறைமுகத்தைவிட்டு வெளிய அழைத்துக் கொண்டு ஏறக்குறைய முப்பது கி.மி. தொலைவில் தன் பிறைவடிவ யுக்த வியூகப்படி நிறுத்திவைத்தான்.
அலி பாஷாவுக்கு எதிரே நம் டான் ஜான் தலைமையில் பா¢சுத்த பிதாவின் நேசப்படைகள் சிலுவை வடிவ வியூகத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ¡£யல் என்னும் போர்கப்பலில் நம் தளபதி டான் ஜான் தான் நடுவிலும் தனக்கு உதவியாக 62 போர்கப்பல்களும் தன்
படைகளுக்கு பின்னே 2 கல்லீசே எனப்படும்
ராட்ச்சத பீரங்கிக்கப்பல்களும் அவனுக்கு இடது கைப்பக்கத்தில் வெனீஷிய கப்பல்படை தளபதியாக அகஸ்டீனோ பார்பா¡¢கோவும் அவருக்கு உதவியாக 53 போர்க்கல்களும் 2 ராட்ச்சத பீரங்கி
கப்பல்களும் நிறுத்திவைக்கப்பட்டார்கள்.
மேலும் நம் டான் ஜானுக்கு வலப்பக்கத்தில் ஆந்தி¡¢யா தோ¡¢யா துணைப்படை
கமாண்டராகவும் அவருக்கு உதவியாக 53 போர்கப்பல்களும் 2 ராட்ச்சத
பீரங்கிகப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போர் ஆரம்பிக்கும் முன்பாக நம் டான் ஜான் ஒவ்வொரு கப்பலிலும் சென்று கீழ்கண்டவாறு பேசினான். " சகோதரர்களே.... நாம் நம் குடும்பத்தையும் விட்டு தேசத்தையும் விட்டு இவ்வளவு
தூரம் வந்திருப்பது இந்தப்போ¡¢ல் உயிரவிட அல்ல. ஜெயிப்பதற்காகவே. நமக்கு எதி¡¢களாகிய இந்த முஸ்லீம்களிடம் நம் நாடு, மானம் மா¢யாதை அனைத்தையும்
இழந்து வாழ்வதைவிட இறப்பது நமக்கு மேன்மை தரும். நம்முடைய குறிக்கோல் நம்
மானத்தையும் மா¢யாதையும் நம்
நாட்டின் மா¢யாதையும்
காப்பதற்காகவே. என்றோ ... எதற்கோ... எப்படியோ போகக்கூடிய இந்த உயிரை நம் நாட்டிற்காக அ¡¢ப்பணிப்போம்...கோழைகளுக்கு இங்கு இடமில்லை. அப்படி எவனாவது இங்கிருந்தால்
அல்லது எவனுக்காவது உயி¡¢ன்மேல் ஆசை
இருந்தால் அவன் இப்போதே ஓடிப்போகட்டும். நான் அனுமதிகிறேன்.
மேலும்
துடுப்புவலிக்கும் அடிமைகளைப்பார்த்து," என் நண்பர்களே... நான் இப்போதே உங்களுக்கு நிரந்தர விடுதலை அளிக்கிறேன்.
இப்போது கழட்டப்படும் உங்கள் விலங்குகள் மீண்டும் உங்கள் கால்களில் ஏறாது. இது என் ஆண்டவனின் மீதும் அவர்திருத்தாயார் என்றும் பா¢சுத்த கன்னிமா¢யின் மீதும் ஆணை.
இதற்க்கு பதிலாக நான் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்களுடைய தன்னலமற்ற சேவையே " என்றான். உடனே அனைத்து கப்பல்களிலுமிருந்த எல்லா அடிமைகளின் கால் விலங்குகளும் விடுவிக்கப்பட்டன. மேலும் அனைத்து அடிமைகளுக்கும் தற்காத்துக்கொள்ள ஒரு கத்தியும் தன் படைவீரர்கள் முதல் அடிமைகள் வரை அனைவருக்கும் ஒரு ஜெபமாலையும் கொடுக்கப்பட்டது. அனைத்து அடிமைகள் கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக நன்றிப்பெருக்கால் பெருகியது. விடுதலை என்னும் வார்த்தை அவர்கள் வாழ்வில் இல்லாமல் போகும் என்பதை வெகு காலமாய் உணர்ந்திருந்தவர்கள் அவர்கள்.. அடுத்து நம் அலிபாஷாவின் அணியில் என்ன நடக்கின்றது என்று
பார்ப்போம்.
நம் தளபதி டான் ஜானுக்கு எதிரே துருக்கியின் ஒட்டுமொத்த கடற்படையின் இணையற்ற தளபதியாக வீற்றிருந்தான் மெஸ்ஸின்ஸேட் அலி பாஷா. பிறந்ததுமுதலே கடலிலே வாழ்ந்து வந்தவரான அலிக்கு கடல் அனுபவத்தில் அவரை அடித்துக்கொள்ள ஆட்களே கிடையாது. இவரது அனுபவம், உடனடியாக போர்முறையைமாற்றும் திறமை, கத்தி வீச்சு, துப்பாக்கி சுடுதல் அனைத்திலும் அவருக்கு நிகர் அவரேதான். அப்போதைய ஓட்டோமான் சுல்தானின் நெருங்கிய உறவின் முறையினரானதால் அவரது திறமைக்கு உடனடி அங்கீகாரம் கிடைத்தது. அவர் சுல்தானின் அனைத்து கடற்படையின் சுப்¡£ம் கமாண்டரானார். இந்த அலிபாஷாவின் மேலும் அவரது விசுவாசத்தின் மீதும் கொண்டிருந்த அன்பின் அடையாளமாக பேரரசர் சுல்த்தான் அவர்கள் அலி பாஷாவுக்கு தனக்கென ஒரு செங்கோல் வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதி அளித்திருந்தார்.
நம் தளபதி டான் ஜானுக்கு எதிரே துருக்கியின் ஒட்டுமொத்த கடற்படையின் இணையற்ற தளபதியாக வீற்றிருந்தான் மெஸ்ஸின்ஸேட் அலி பாஷா. பிறந்ததுமுதலே கடலிலே வாழ்ந்து வந்தவரான அலிக்கு கடல் அனுபவத்தில் அவரை அடித்துக்கொள்ள ஆட்களே கிடையாது. இவரது அனுபவம், உடனடியாக போர்முறையைமாற்றும் திறமை, கத்தி வீச்சு, துப்பாக்கி சுடுதல் அனைத்திலும் அவருக்கு நிகர் அவரேதான். அப்போதைய ஓட்டோமான் சுல்தானின் நெருங்கிய உறவின் முறையினரானதால் அவரது திறமைக்கு உடனடி அங்கீகாரம் கிடைத்தது. அவர் சுல்தானின் அனைத்து கடற்படையின் சுப்¡£ம் கமாண்டரானார். இந்த அலிபாஷாவின் மேலும் அவரது விசுவாசத்தின் மீதும் கொண்டிருந்த அன்பின் அடையாளமாக பேரரசர் சுல்த்தான் அவர்கள் அலி பாஷாவுக்கு தனக்கென ஒரு செங்கோல் வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதி அளித்திருந்தார்.
இப்போது இந்த லெப்பார்ந்தோ போ¡¢ல் இவருக்கு உதவியாக 87 பொ¢ய போர்கப்பல்களும் 22 சாதாகப்பல்களும் இருந்தன. இவருக்கு வலதுபக்கப்படையில் மெஹமூத சிராக்கோவும்
அவருக்கு 62 பொ¢ய ராணுவக்கப்பல்களும்
22 சாதாகப்பல்களும்
இருந்தன. பாலைவனப்புயல் எனபெயர்பெற்றிந்ததால் இந்த மெஹ்மூத என்னும் கடற்படை
தளபதிக்கு சிராக்கோ என்னும் பட்டப்பெயரும் சேர்ந்துகொண்டதால் இவர் மெஹ்மூத சிராக்கோ என அழைக்கப்பட்டார். நடுவில் அலிபாஷாக்கு இடதுபுறம் உலுக் அலி ¡£ஸ் துணக்கமாண்டராக இருந்தார். அவருக்கு 61 பொ¢ய போர்க்கல்களும்32 சாதாக்கல்களும் இருந்தன.
எதிர் எதிர்அணியிலிருந்த உதவி
தளபதிகள் தத்தம் எதிர் அணியினரை பார்ப்பதும் அவரவர் திறமைகளை ஒப்பிட்டுக்கொள்வதுமாக
இருந்தனர். நம் தளபதி டான் ஜான் தனக்கும் தன் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இருந்த
தன் உதவி கமாண்டர்களுக்கும் அவரது படையினருக்கும் உதவும் பொருட்டு மேலும் சில
படைகளை அவரவர்களுக்கு பின்னே ஆபத்து உதவி படையை அமர்த்தி இருந்தார். இவர்கள் முன்னேறிச்சென்று தாக்கும் படையினர் ஆபத்திலிருக்கும் பட்ச்சத்தில் போர்க்களத்தில் இறங்கி போரை நடத்துவர்.
ஜான் போரை ஆரம்பிக்கும் முன் அனைவரும் ஜெபமாலை
சொல்லச்சொன்னார். அனைவரும் ஜெபமாலை சொல்லியபடியே இருந்தனர். இந்த நிலையில் அவன்
எதி அணியிலிருந்த அலி பாஷா தன் வீரர்களுக்கும் துடுப்புவலிக்கும் அடிமைகளுக்கு ஒரு உரை நிகழ்த்தினார். அதன்படி ," சுல்தானின் விசுவாசிகளான வீரர்கள் அனைவருக்கும் போ¡¢ல் இறக்கும் பட்ச்சதில் சொர்க்கத்தில் இடம் உண்டு. எல்லாம்
வல்ல அல்லா அவர்கள்
தம் எதி¡¢களை பழிவாங்க நமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் தந்துள்ளதால் அதை
சா¢யான விதத்தில்
பயன்படுத்தி எதி¡¢களுக்கு சா¢யான பாடம் புகட்டுவோம்." என்றும் துடுப்பு வலிக்கும்
அடிமைகளைப்பார்த்து, " அடிமைகளே, நான் உங்களுக்கு
ஒரு உறுதிமொழி தருகின்றேன்... அதன்படி இந்தப்போ¡¢ல் நாம் ஜெயித்தால் உங்கள் அனைவருக்கும் விடுதலை நிச்சயம் தருவேன். இது
அல்லாமேல் ஆணை" என்றார். அப்போது ஒரு அடிமை ," இவர் பேச்சை ஓடும் தண்ணீ¡¢ல்தான் எழுத வேண்டும்.." என்று முனுமுனுத்தான். அவ்ஃப்வளவுதான். அவன்
கழுத்தை அறுத்தான் ஒரு வீரன். பாஷா பேச்சுக்கு உன்னிடம் மறு பேச்சா வருகிறது... உனக்கு அவ்வளவு ¨தா¢யம் வந்து
விட்டதா....இரு...இரு... உங்களை கவனித்துக்கொள்கிறேன். நாங்கள் தோல்வி அடைந்தால்
நீங்க்ள் அனைவரும் எங்களுடனேயே ஜல சமாதி அடையுங்கள் " என்றான்.
ஜானுக்கு எதிர் அணியில் இருந்த அலிபாஷா தன்னோடு மோதப்போகும் தளபதி யார் என தன்
தொலை நோக்கியில் பார்த்தான். அவன் முகத்தில் ஒரு குறு நகை பிறந்தது." அரே
அல்லா... என்னை எதிர்க்க ஒரு 20 வயது பாலகன்தானா கிடைத்தான்.. இவன் வாயில் இன்னும் அவன் அம்மாவிடம் குடித்த
பால் தொ¢கிறது. இவனை
தலைவனாக்கிய அவன் மன்னன் நிச்சயம் ஒரு முட்டாளாகத்தான் இருக்க வேண்டும். இவனை நம்பி இவன் பின்னால் வந்த இந்த படை வீரர்களும் பெரும் முட்டாள்களாகத்தான் இருக்க
வேண்டும். இந்த சுண்டைக்காய் பையன் எல்லாம் எனக்கு போட்டியா. இருக்கட்டும்
இருக்கட்டும் .இந்த சுண்டைக்காய் பயலையும்இவன் சேனைகளையும் அரை நொடியில்
மூட்டைப்பூச்சியைப்போல் நசுக்கிப்போடுகிறேன் பார்." என்றான்.
பிறகு அவனுக்கு இடது புறம் இருந்த கப்பல்களில் முன்னணியில் இருந்த ஸ்பெயின்
நாட்டுக்கப்பல் கொடி மரத்தில் தேவ தாயா¡¢ன் திரு உருவம் பொறித்த [ கூடலூபே மாதா ] கொடி பறக்கக்கண்டு, " அந்த கொடியிலிருக்கும் பெண்மணி யார் ?" என்றார். படை வீரன் ஒருவன் முறைப்படி அவரை வணங்கி," ஹசூர். ..அது கிறிஸ்த்துவர்களின் கடவுளாகிய ஈஸா நபியின் தாயார் மா¢யம்" என்றான். பிறகு அலி பாஷா அந்த தேவ தாயா¡¢ன் பாதம் ஒன்று பிறைச்சந்திரன் மீதும் மற்ற ஒரு பாதம் ஒரு
மனித தலை மீதும் இருக்கக்கண்டு மேலும் அதை நன்றாகப்பார்க்க அதன் குவியத்தை கூர்மையாக்கிப்பார்த்தான்.
அப்போது அவன் கண்கள் ஆச்சர்யத்தால் வி¡¢ந்தன..." அரே அல்லா... இது என்ன சோதனை....அந்த பெண்மனியின் ஒரு பாதம்
உள்ளது என் தலைபோல் அல்லவா இருகின்றது" என்றான்.
இதை உறுதி செய்ய தன் துனைக்கமாண்டர் ஆஸ்மான் ¡£ய்ஸை அழைத்து ," கம்மாந்தான் [ கமாண்டர்]... அங்கு பறக்கும் கொடியில்
இருக்கும் பெண்மனியின் பாதம் ஒரு தலை மீது படிந்திருகின்றது. அது யார் தலை என பார்த்து சொல்" என்றார். கமாண்டர் ஆஸ்மான் ¡£ஸ் அதை பார்க்க தன் தொலைநோக்கியின் குவியத்தை இன்னும்
துல்லியமாக்கவே அங்கே தொ¢யும் தலை தன்னுடையதாக இருக்கக்கண்டு அதிசயித்து " ஹசூர்... அது என்
தலைதான் " என்றான். மீண்டும் அலி பாஷா தன் தொலைநோக்கியில் பார்க்க அங்கே அந்த
பெண்மணி தன் பாதத்தை வைத்திருப்பது தன் தலைதன் என கண்டு தன் உபதளபதியைப்பார்த்து, " கமாந்தான் ...அது உன் தலைதான்... சந்தேகமே இல்லை" என்றார். போர் துவங்குவதற்கான நேரம் வந்தது. அப்போது நன்பகல் மணி பன்னிரெண்டு. வானம்
வெளுத்து ஒரே நீல நிறமாக காட்சி அளித்தது.
அப்போது கடலில் ஒரு அதிசயம்
நடந்தது. ஒரு பெரும் காற்று இரு படைகளையும் கடலுக்குள் வேகமாக இழுத்துச்சென்றது...
சில நொடிகளில் இது நடந்து முடிந்ததும் கடல் பொ¢தாக இறைந்தது. அப்போது ஒரு பெண்மணியின் குரல் " இறையாதே " என்றது. உடனே கடல் இறைவது நின்றது. அப்போதைய வீசிய கடல் காற்றில் ஒரு பரலோக சுகந்தம் வீசியது. இதை ஜானும் அவனது அனைத்துப்படையினரும் உணர்ந்தார்கள்.
தங்கள் உடலுக்குள் ஏதோ ஒரு இனம்புறியாத புத்துணர்ச்சியால் புது உத்வேகம்
அடைந்ததையும் உணர்ந்தார்கள். ஆனால் அலையின் தாக்கம் அதிகா¢த்தது. அலிபாஷா
நின்றிருந்த கடல் பகுதியில் கடல் குமிழ்
குமிழாக தோன்றி சுற்றி சுற்றி
வந்ததால் கப்பலை நிலை நிறுத்தவே அடிமைகள் படாத பாடு பட்டனர்.
அவர்களை வேலைவாங்கி கப்பல்களை நிறுத்த அவர்களின் முதுகுகளில் துருக்கியர்களின் சவுக்குகள் கொடூரமாகத்தாக்கின. அடுத்து தான் யுத்தத்துக்கு தயார்.... சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்பதுபோல் டான் ஜான் அவனுக்கு வலப்பக்கத்திலிருந்த
கப்பிதானா என்னும் பெயர்கொண்ட கப்பலிலிருந்த கமாண்டர் கியோவான்னி அந்தி¡¢யா டோ¡¢யாவுக்கு ஆணை பிறப்பிக்கும் விதமாக வானத்தை நோக்கி தன் கைத்துப்பாக்கில் வெடித்து சமிக்கை கொடுத்தான்.
அதைத்தொடர்ந்த ஆந்திரேயா டோ¡¢யா தன் பீரங்கியால்
எதிர் அணியின் கப்பல் மீது ஒரு குண்டை
வீசினார். அது அவருக்கு எதிர்பக்கமிருந்த உலுக் அலியின் கப்பலிலிருந்த
நடுக்கம்பத்தை தாக்கியது. அதனால் அந்த கப்பலின் நடுக்கம்பம் " டமேர் "
என்னும் சப்தத்துடன் இரண்டாக ஒடிந்து விழுந்ததால் அதன்மீது பொருத்தப்பட்டிருந்த ஐந்து விளக்குகள் கொண்ட அமைப்பு கீழைவிழுந்ததும்
அதிலிருந்த எண்ணெய்கள் சிதறி சலேர் என தீப்பிடித்துக்கொண்டது.
போர்களத்தின் ஆரம்பத்தில் எதி¡¢யின் முதல் தாக்குலி லேயே தங்கள் நாட்டின் கப்பலிலிருந்த கொடிமரம் இரண்டாக
முறிந்ததைக்கண்ட உலுக் அலியும் அலி பாஷாவும் திடுக்கிட்டர்கள். பெரும்
துரதிர்ஸ்ட்டம் தங்களை நெருங்கி வருவதாகவும் இது கெட்ட சகுணம் எனவும் கூறிக்கொண்டார்கள். ஆனாலும் அலி பாஷா தொடர்ந்து " வீரர்களே ...நமக்கு எல்லாம் வல்ல நம் அல்லா அவர்கள் துணை இருப்பார்.... விரைவிலேயே இந்த
சைத்தான்களை வென்று விடுவோம்.... எவ்வளவோ படைகள் பலவற்றில் வெற்றி கண்ட நமக்கு அதோ நம் எதி¡¢யில் அணிதிரண்டிருக்கும் இந்த குட்டிச்சாத்தான்களையா வெற்றிகொள்ள முடியாது ? வீரத்துடன் போராடுங்கள்... முழங்கட்டும் பீரங்கிகள்... எதி¡¢யின் தாக்குதலுக்கு பதில் கொடுங்கள்" என்றார்.
அதைத்தொடர்ந்து எதிரணியிலிருந்து டாமேர் டமேர் என்னும் சப்தத்துடன் பல பீரங்கிக்குண்டுகள் இந்தப்பக்கம் வந்து விழுந்தன. அடுத்து ஆந்தி¡¢யா டோ¡¢யா மீண்டும் ஒரு பீரங்கி குண்டை வெடிக்கச்செய்தார். அது மிகச்சா¢யாக அலிபாஷாவின் தலைமைக்கப்பல் சுல்தானாவின் கொடிமரத்தை தாக்கியது. அது
தகர்ந்து அதனுடன் பிணைக்கப்பட்டிருந்த சந்திர பிறைக்கொடியை கீழே விழத்தாட்டியது.
இந்தக்கொடியைப்பற்றி நேயர்கள் தொ¢ந்துகொள்ள
வேண்டியது அவசியம். இந்த கொடியை முஹம்மது நபி அவர்கள் உபயோகித்தார் எனவும் இந்தக்கொடி காலம் காலமாய் இஸ்லாம் அரசர்களின் வம்சாவளியில் வந்தது எனவும் , இந்தக்கொடியை
தாங்கிச்சென்ற போர்க்களங்களில் யாவும் வெற்றியே அடைந்ததாகவும் இதன்கொடி முழுவதும்
சுத்த தங்க நூல்களாள் 28900 முறை அல்லாவின்
திரு நாமம் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் இதனைத்தொடர்ந்து அதன் மாதி¡¢கை கொடிகள் பல பிரதி எடுக்கப்பட்டு பல போர்களங்களின்
எடுத்துச்செல்லப்பட்டதாகம் கூறப்பட்டது. இத்தகைய ஒரு பெருமை வாய்ந்த சுல்தாங்களின்
கொடி கீழே வீழ்ந்தது அலிபாஷாவுக்கும்
அவர் படைத்தலைவர்களுக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. யாவும் வினாடி
நேங்களில் நிகழ்ந்து விட்டது. இனி அடுத்து நேரடித்தாக்குதல் தான்.
இந்த நேரத்தில் கடற்காற்று நம் நேசப்படைகளுக்கு சாதகமாக
வீசியது. அப்போது ஒரு பொ¢ய அலை நம்
நேசப்படைகலை உயரத்துக்கு தூக்கிச்சென்றது..
அங்கிருந்து பார்க்கும்போது எதி¡¢யின் படைகலங்கள் மிகத்துல்லியமாக
தோன்றியதால் பீரங்கிகளுக்கு தாக்க மிகச்சா¢யான கோணத்தை அளித்தது. அப்போது ஒரு பெண்மணியின் குரல்," மகனே... இப்போது போ " என்றது...அந்த நிலையிலே
நேசப்படையின் ஆறு ராட்ச்சத
பீரங்கிகளும் ஒரே நேரத்தில் இயங்கின. அவைகளின் தாக்குதல் இலக்குகள் மீது மிகச்சா¢யாக இருக்கவே எதி¡¢யின் பல கப்பல்கள் டமேர் .. டமேர் என வெடித்து சிதறியும் பல கப்பல்களில் தீ பற்றியும் பல கப்பல்களில் பெரும் ஓட்டைகளும் ஏற்படவே பல துருக்கியர்களின்
கப்பல்கள் திடீர் திடீர் என அந்த தென் கொ¡¢ந்திய கடல் நீ¡¢ல் மூழ்கின. கிறிஸ்த்துவப்படைகள் யாவும் சறுக்கிக்கொண்டே வரவும் முஸ்லீம் படைகள் யாவும் அவற்றை எதிர்கொள்ளவும் தீவிரமாக முனைகையில் ஒருபுறம் அமைதியாக தன் கா¡¢யத்தை நிறைவேற்ற வேகமாக கீழே இறங்கிவரும் கிறிஸ்த்துவர்களை கத்தி முனையிலும் துப்பாக்கி முனையிலும் வரவேற்க முஸ்லீம்கள் வெறிபிடித்த கொள்ளையர்போல் ஆய்...ஊய் என கத்திக்கொண்டும் அசுசீயான வார்த்தையால் துவேஷித்துக்கொண்டும் கையில் கிடைத்த அனைத்து விதமான தாரை தப்பட்டைகளாலும் சப்த்தமிட்டுக்கொண்டும் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் தயாராக இருந்தார்கள்.
கடல் அலையில் சறுக்கிக்கொண்டு
வந்த ஜான் மற்றும் அவன் இடது மற்றும் வலது புறப்படைகள் அவர்கள் எதி¡¢க்கப்பல்கள் மீது பயங்கரமாக மோதின. இத்தகைய மோதலாலும் குண்டடி பட்டதினாலும் இறுபுறமும் இடிபட்ட துருக்கிய கப்பல்களிலிருந்த துடுப்புவலிப்பவர்கள் பலர் பரலோக பிராப்த்தி அடைந்தனர். உடனடியாக பல அடிமைகள் மாற்றப்பட்டனர். அக்கால துருக்கிய கடற்படை யுத்தம் பெரும்பாலும் இப்படித்தான்
நடக்கும். தாக்குதலுக்கு உள்ளாகும் கப்பலை சுற்றி பல துருக்கி கப்பல்கள்
சூழ்ந்துகொள்ளும். பின் கடிபட்ட மானை பல சிங்கங்கள் சூழ்ந்துகொண்டு கடித்து குதறுவதைப்போல
அவர்கள் தாக்குதல் வேகமாகவும்
மூர்க்கமாகவும் இருக்கும். இப்படியொரு சூழ்நிலை தங்களுக்கு ஏற்படாதிருக்கும்படி
தனக்குப்பின்னாலிருக்கும் பீரங்கித்தாக்குதால் துருக்கியரை தடுமாற வைத்தான் டான் ஜான்.
இவனுடைய இந்த தாக்குதல் உத்தியை புறிந்துகொண்டார் அலி பாஷா. எனவே அவருக்கு வலப்பக்கத்திலிருந்த கமாண்டர் சிராக்கோவை அழைத்து அப்போதைய நிலையை விளக்கினார். அவரும் நிலைமையை புறிந்துகொண்டு தன் படை அனைத்தையும் தனக்கு அருகே இருக்கும் கடற்கறைப்பகுதிக்கு மெதுவாக நடத்தினார். இதை அறிந்த டான்
ஜான் தனக்கு இடப்பகுதி கமாண்டர் அகஸ்டீனோ பார்பா¡¢கோவை அழைத்து கடலின் ஓரத்துக்குச்செல்ல வேண்டாம் அங்கே
நமக்கு பாதுகாப்பில்லை. நம்மைவிட்டு வெகு தூரத்துக்கு செல்லவும் வேண்டாம். நாம்
சேர்ந்திருந்தால்தான் நமக்கு பலமும் பாதுகாப்பும் என்றார். துருக்கியர் கொடி
ஏற்றப்பட்ட கப்பல்கள் அனைத்தும் கல்லெசே எனப்படும் வெனீஷிய கப்பல்களிருந்த
ராட்ச்சத பீர்ரங்கியின் தக்குதலுக்கு உள்ளாயின.
அருகிலுள்ள
கடற்பகுதியிலிருந்தும் லெபார்த்தோ துறைமுகத்திலிருந்தும் வெடி மருந்துகள்
ஏற்றிவரும் அனைத்து துருக்கிகப்பல்களும் தாக்குதலுக்கு இலக்காகி இனிமேல்
ஒருகப்பல்கூட லெபார்த்தோ துறைமுகத்திலிருந்து வரமுடியாதபடி சதா கண்காணிக்கப்பட்டு வெடிகுண்டு வீசி அழிக்கப்பட்டன. இத்தகைய கப்பல்கள் தங்கள் நாட்டு கப்பல்களுக்கு ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் கொடுக்கும்போதும் அழிக்கப்படுவதால் அவை வெடித்து சிதறும்போது சேதம் அளவிட முடியாததாக இருந்தது. ஒவ்வொரு துருக்கிய கப்பலும் துல்லியமாக தாக்கப்படுவதால் இதிலிருந்து தப்பிக்க தங்கள் கப்பல்களை தன் எதி¡¢யின் கப்பல்களோடு அருகில் வைத்துக்கொள்ளச்செய்தான் அலி பாஷா.
இதனால் டான் ஜான் வெடிகுண்டுத்தாக்குதலை நிறுத்தச்செய்தான். இனிமேல்
நாய்ச்சண்டைதான் பயன் தரும் என அறிந்த அவன் தன் படை வீரர்களை அழைத்து " இரும்பு ஊக்குகளை வீசி எதி¡¢களின் கப்பல்களை நம்மோடு சேர்த்துக்கட்டுங்கள். இனி அவரவர்
திறமைக்குத்தகுந்தபடி எதி¡¢யை வாளாலும்
துப்பாக்கியாலும் கொல்லுங்கள். இனி கைச்சண்டைதான் வீரர்களே துணிவோடு போராடுங்கள்
தேவ தாயார் நம்மோடு உள்ளார்கள் " என்றான்.. அதைத்தொடர்ந்து மூண்டது பெரும்
யுத்தம். அவரவர்களுடைய வால் வீச்சையும் வேல் வீச்சையும் வில்வித்தையும்
காட்டினார்கள்.
இந்த இடத்தில் நம் கதா நாயகன் டான் ஜானின் வீரத்தைப்பற்றி நயர்கள் அவசியம்
அறிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நேசப்படைகளின் கப்பல்களும் துருக்கிய கப்பல்க ளோடு இரும்பு ஊக்குகள் கொண்டு பிணைக்கப்பட்டுவிட்டதால் எதி¡¢கள் இந்தக்கப்பல்களுக்கு வரவும் இந்த நேசப்படைகளின் வீரர்கள் எதி¡¢க்கப்பல்களுக்குள்
நுழையவும் வழி ஏற்படுத்தப்பட்டுவிடவே அவரவர் தங்கள் திறமையோடு போ¡¢ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். எனவே நம் டான் ஜான் தன் உதவி கமாண்டரைப்பார்த்து," யாரும்
என்னைப்பின்பற்றி வர வேண்டாம். இந்தப்போ¡¢ன் முதல் களப்பலியாக நான் போகிறேன். நான் திரும்பிவந்தால் உங்களோடு இணைந்து போ¡¢டுவேன்...இல்லை என்றால் நான் வீர சொர்க்கம் அடைந்துவிட்டதாக
நினைத்துக்க்கொள்ளுங்கள். எனக்குப்பின் என் ஸ்தானத்தில் நீ இருந்து படைகளை
நடத்து" என்றான்.
அடுத்த
வினாடி அவன் தன் சாகசத்தால் எதி¡¢ப்படை தளபதி அலி பாஷாவின்
முன் நின்றான். வழியில் அவனால் வெட்டுப்பட்டு இறந்தவர்கள் கணக்கில்லை. கைகால்களை
இழந்தவர்கள் கணக்கில் இல்லை. தன் இரு கத்திகளையும் சுழற்றிக் கொண்டே செல்லும் வேகத்தைக்கண்டு துருக்கிய தளபதி அலி பாஷா கூட எதி¡¢யின் வீரத்தை பாராட்டினான்.
ஆனாலும் ஜானின் உதவி கமாண்டர் தன் தலைவனை பி¡¢ந்து அதிக நேரம் இருக்காமால் தானும் அவனைப்பின் தொடர்ந்து எதி¡¢யின் கப்பல்களில்
இறங்கினான். அங்கு அவன் கண்ட காட்ச்சி.... தன் தலைவனை சுற்றி துருக்கிய வில்லாளிகள் அம்புதொடுப்பதையும் அவர்களின் அம்பு மழையை தன் வாள்
வீச்சால் தடுத்துக்கொண்டே அவர் அலிபாஷாவிடம் முன்னேறுவதையும் கண்டு பல வில்லாளிகளை இவர் பரலோகம் அனுப்பினார்.
அவர் எழுதி வைத்துள்ள ஒரு குறிப்பு இவ்வாறு சொல்கிறது. நான்
பார்த்துக்கொண்டிருக்கும் போதே தான் ஜான் சில நிமிடங்களில் எதி¡¢யின் கப்பலில்
தாவுவதைக்கண்டேன். அடுத்த சில நிமிடங்களில் நான் எண்ணியவரை பன்னிரெண்டுபேர்
அவரைத்தடுக்கும் முயற்சியில் அவரால் கொல்லப்பட்டனர். இதையும் மீறி அவர் அலிபாஷாவிடம் நெருங்கின போது நானும் என் வீரர்களுமாய் நுழைந்து அவரோடு சேர்ந்து கொண்டோம். அன்று அவர் காட்டிய
சாகசம் இந்த உலகில் வெகு சிலரே செய்திருக்கக்கூடும்." இந்த
போர் நேரடி யுத்தம் ஆனாதால் இந்த மாதி¡¢ச்சண்டையில்
துருக்கியர்களின் ஜைனோ¢ய
வீரர்கள் கை தேர்ந்தவர்கள். இவர்களின் வில்வித்தையைக்கண்டு அதிசயிக்காமல் யாரும்
இருக்க முடியாது. அவ்வளவு வேகம். அவ்வளவு துல்லியம். இவர்களின் வில் வித்தையினால் அனேக கிறிஸ்த்துவ வீரர்கள் பரலோக பிராப்த்தி அடைந்தார்கள். ஆனாலும் அக்காலத்தில் இந்த ஜைநோ¢களின் வில்லுக்கு மாற்றாக வெனெஷியர்கள் அர்பெக்கூ எனப்படும் நீண்ட துப்பாக்கியை கண்டு பிடித்திருந்தார்கள். இந்த அர்பெக்கூ
துப்பாக்கி இப்போது நடை முறையிலுள்ள ரைபிள் துப்பாக்கியின் முன்மாதி¡¢. இதன் தாக்கும் வேகமும்
அதிகம், துல்லியமும்
அதிகம். இத்தகைய அர்பெக்கூ எனப்படும் துப்பாக்கிகள் இந்த போர்க்களத்தில் பிரையோகிக்கப்பட்டு அதன் தாக்குதல் திறன் பா¢சோதிக்கப்பட்டது.
ஜைனோ¢ய வில்லாளிகளின்
வேகத்தைவைவிட இந்த துப்பாக்கித்தோட்டாக்களின் வலிமையும் அதிகம். வேகமும் அதிகம். எனவே துருக்கியர்களின் ஜைனோ¢யர்களின் வீரம் இந்த
அர்பெக்கூ துப்பாக்கிகளின் முன்னால் ஒன்றுமில்லாமல் போய் விடவே அவர்கள் ஒரு
துப்பாக்கி
வீரனை சமாளிக்க பல அம்புகளைப்போட வேண்டியிருந்ததால் அவர்கள் வெகு சீக்கிரத்திலேய தங்கள் அம்புகளை இழந்து வெறுமையாய் நின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஸ்பானியர்கள் முன்னோ¢ பல ஜைனோ¢யர்க¨ள் துப்பாக்கியால்
சுட்டுக்கொண்றார்கள்.
இதே நிலைதான் மொஹ்மது சிராக்கோவின் கப்பலிலும் நடந்தது. அவன் பாலைவன
புயல் அல்லவா அவன் கப்பலில் சுழன்று சுழன்று போராடி அனேக வெனீஷிய வீரர்களை பரலோக
பிராப்த்தி அடையச்செய்தான்.
இந்த
நிலையை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த முதிய வெனீஸிய தளபதி பார்பா¢கோ தானே துப்பாக்கியாலும்
நீண்ட வாளாலும் போ¡¢ட்டார்.
இந்த வயதிலும் அவர் ஒரு வாலிபனைப்போல் போ¡¢ட்டது துருக்கிய
தளபதி
மெஹ்மூது சிராக்கோவுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. இரு ...உன்னை ஒரு
கைபார்க்கிறேன்... இதோ உன்னிடம் வருகிறேன் என அவர் மீது பாய்ந்து வந்தான்.
கப்பலின் மேல்தளத்தில் பார்பா¡¢கோ தன்
யுத்த யுக்திகளை மாற்ற அடிக்கடி தன் தலைக்கவசங்களை அகற்றி உரத்த குரலில் உத்திரவிட வேண்டியதாக இருந்தது. அப்படி அவர் தன் தலைக்கவசத்தின் கண்மூடியை அகற்றும்போது எங்கிருந்தோ வந்த ஒரு அம்பு
அவர் கண்ணைத்தாக்கி மூளை வரை சென்றது. இதனால் அந்த முதியவர் பார்பா¡¢கோவைத்தூக்கிக்கொண்டு அவரது
தனி அறைக்கு கொண்டு சென்றனர். இதை அறிந்த டான் ஜான் உடனே விரைந்து அந்த முதியவரை
சந்தித்து ஆறுதல் கூறி இந்த முஹம்மது சிராக்கோவை தான் நிச்சயம் கொல்வேன் என சபதம்
செய்தான். இப்படியாக இந்த லெபார்த்தோ யுத்தம் மதியம் மூன்று மணி வரை யாருக்கு
வெற்றி. யாருக்குத்தோல்வி என்று நிர்ணயிக்க முடியாதபடி இருந்தது. ஆனல் அடுத்த மணித்துளி ஆரம்பிக்கும்போது காட்ச்சிகள் வெகு வேகமாய் மாறின.
இந்த வெனீஷிய துப்பாக்கிகள் பல மாய ஜாலத்தை புறிந்தன பல அதிரடி ஜைனோ¢கள்
கொல்லப்பட்டுவிட்டபடியாலும் அவர்களுக்கு வேண்டிய ஆபத்துதவிகள் வராதபடி தடை
செய்யபட்டுவிட்டதாலும் அலிபாஷவும்,
முஹம்மது சிராக்கோவும் உலுக் அலியும் மிகவும் தவித்துப்போனார்கள்.
இருப்பினும் வீரம் பொ¢தென
எதிர்த்து போராடினர். அப்போது யரும் எதிர்பாராதவிதமாக அவர்கள் கப்பலிலிருந்த பல
கிறிஸ்த்துவ அடிமைகள் திடீரென கலகத்தில் ஈடு பட்டனர். எதிர் அணியிலிருந்து போராடுபவர்கள் கிறிஸ்த்துவர்களே என்றறிந்த பிற்பாடு உயிருக்குத்துணிந்து இந்த போராட்டத்தில் இறங்கினர். எப்படியோ தப்பித்துக்கொண்ட ஒரு அடிமை அந்தக்கப்பலிலிருந்த அனைத்து அடிமைகளின் விலங்குகளை உடைத்து பலபோ¢ன் உயிரை காப்பாற்றியதால்
அவர்கள் அனைவரும் துருக்கிய வீரர்களை கையில் கிடைத்ததைக்கொண்டு தாக்கினர். தங்கள்
கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த அடிமைகள் விடுதலை பெற்றதுமல்லாமல் தங்களை எதிர்க்க துணிந்ததையும் கண்டு தன்னைச்சுற்றி தோல்வி இருள் பரவுவதைக்கண்டு
வேறுகப்பலுக்கு தாவி தன்னைகாப்பாறிக்கொள்ள எத்தனிக்கும்போது அதே கப்பலில் போராடிக்கொண்டிருந்த ஒரு ஸ்பானியவீரன் தன் ஆயுதமான ஒரு கோடா¡¢யை வீசி எறிந்தான் மெஹ்மது
சீராக்கோவின் மீது. அது மிகச்சா¢யாக அவன்
நெஞ்சைப்பிளந்து இன்னும் ஆழமாக உள்ளே என்றது. மெஹம்மது
சிராக்கோவின் உயிர் அடங்கியது என்றதும் அது டான் ஜானுக்கும் அந்த வெனீஷிய
தளபதிக்கும் முறைப்படி அறிவிக்கப்பட்டது. அந்த வெனீஷிய தலபதி நானே என் கையால் என் எதி¡¢யை கொல்ல நினைத்திருந்தேன்.
ஆனால் அது என்னால் கூடாமல் போயிற்று. ஆனாலும் நான் எங்கே என் எதி¡¢ சாகுமுன் நான் சாவேனோ என்று
பயந்திருந்தேன். ஆனால் என் காது குளிர என் எதி¡¢ செத்துவிட்டான் என்று கேட்ட பிறகு நான் இப்போது
நிம்மதியாக என் கண்ணை மூடுவேன் என்றார். அடுத்த சில நொடிகளில் அவரது ஆவி பி¡¢ந்தது.
முஹம்மது
சிராக்கோ இறந்தான் என்றதும் நடுப்பகுதியின் போர்களத்திலிருந்த அலிபாஷா தன் காதுகளை
நம்ப மறுத்தான். ஆனால் அவன் கண்கள் அவனை ஏமாற்ரவில்லை. மொஹ்மது சிராக்கோவின் தலைவெட்டப்பட்டு
நீண்ட ஈட்டியால் குத்தப்பட்டு மற்ற துருக்கி வீரர்களுக்கு ஆட்டி
ஆட்டிக்காட்டப்பட்டது. மேலும் மொஹ்மது சிராக்கோவின் கப்பலிலிருந்த
பிறைவடிவக்கொடி இறக்கப்பட்டு அதற்குபதி யேசுநாதா¢ன் சிலுவைக்கோடி
ஏற்றப்பட்டது. இந்த கொடியைகண்ட மாத்திரத்தில் கிறிஸ்த்துவப்படை வீரர்கள் பொ¢தும் ஆர்ப்பா¢த்தனர். இருப்பினும் வெற்றி
அடைய இன்னும் பலகாத தூரம் செல்ல வேண்டி இருகின்றது. ஆனால் இதைக்கண்ட
துருக்கி வீரர் பொ¢தும்
அஞ்சினர். அவர்களின் போராடும் குணத்தில் ஒரு தொய்வு காணப்பட்டது.
சிராக்கோ கப்பலில் அடிமைகள் போராடியதைப்போல நடுவில் அலிபாஷா
கப்பலிலும் ஏற்பட்டது. சுழன்று சுழன்று ஓடி ஆடிப்போராடிய நம் டான் ஜானைப்பார்த்து அலிபாஷா மிகுந்த ஆச்சா¢யம் அடைந்தார். இவனையா
நான் சுண்டைக்காய் பையன் என்றேன்... இல்லை... இவன் பயம் அறியான்..இவனிடம் மிகுந்த
எச்சா¢க்கையாய்
இருக்க வேண்டும் என்றான். யார் கண்பட்டதோ... சுழன்று போராடிய ஜானின் காலில் ஒரு அம்பு தைத்து
அவனை தடுமாறி விழ வைத்தது. வலி வேதனைகளைத்தாங்கிக்கொண்டு அந்த அம்பை பிடுங்கி
தன்னுடைய கைகுட்டையால் ரத்தம் வெளியேறுவதை தடுக்க அந்தக்காயத்தை இறுகக்கட்டினான்.
அப்போது அவனை நோக்கி இரு துப்பாக்கிகள் குறிவைப்பதைக்கண்டான். அவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. தன்னை எதிர்ப்பது யார்?... அவற்றுள் ஒரு
கைத்துப்பாக்கி அலி பாஷாவினுடையது...மற்றது....தன் தேசத்துவனான ஸ்பெயின் வீரனுடையது... அடக்கடவுளே...இது என்ன சோதனை... என் தேசத்தவனா என்னைக்கொல்ல துடிக்கிறான்... அலி பாஷா என் விரோதி...அவனை கோபப்படுவதில் நியாயமில்லை...ஆனால் இவன் என் தேசத்தவன்... என் உயிருக்கு குறி
வைக்கிறான் என்றால் இனி யாரை நம்புவது என்று தன் மனதில் பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தவன்
காதுகளில் இரு துப்பாக்கிகள் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டு ஒரு வினாடினேரம் அதிர்ந்துதான் போனான்.
அந்த இரண்டு துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சப்தத்தில் தன்னை
குறிபார்த்தவன் சுருண்டு விழுவதையும் மற்றவன் நெற்றியில் போட்டு வைத்தது போல
குண்டு பாய்ந்து அவன் நெற்றியிலிருந்து ரத்தம் குபுகுபு என்று
பாய்ந்து வருவதையும் கண்டான் நம் ஜான். அந்த நபர் யார்? அருகின் சென்று பார்த்தால்
அடடா... இது நம் துருக்கிய சுப்¡£ம்
கமாண்டர் அலிபாஷா அல்லவா என்றான் ஜான். உடனே அடிமை வீரன் ஒருவன் தன் கத்தியால்
அலிபாஷாவின் தலையை வெட்டினான்...வீரனே வேண்டாம்... என்றான் ஜான்... ஆனால் அதற்குள்
எல்லாம் முடிந்துவிட்டது. அந்த அடிமை வீரன் ஒரு பெரும் ஈட்டியால் அலிபாஷாவின்
தலையைக்குத்தி அதை உயரே
தூக்கி துருக்கிய வீரர்களிடம் காட்டினர்... இதைக்கண்ட துருக்கிய வீரர்கள் ," ஆஹா...இதோ
நம் தலைவா¢ன்
தலை... நாம் தோற்றுவிட்டோம்... என்றார்கள்.
அப்போது
அலிபாஷாவின் உதவி கமாண்டர் ஆஸ்மான் ¡£ஸ் இல்லை நாம் ஜெயிப்பது
உறுதி ¨தா¢யமாகப்போராடுங்கள் என்றான்.
தன் வீரர்களை உற்சாகப்படுத்த கொடிக்கம்பத்தில் ஏறவே அவர் தூரத்திலிருந்த வெனீஷியர்களின்
பீ£ரங்கிக்கு
இலக்கானார். அடுத்த வினாடி அவரது தலை வானத்தில் பறந்தது. இதைத்தொடர்ந்தது பெரும் வெற்றிக்கூச்சல்.
இந்த அமலியில் தன்னை கொல்ல குறிபார்த்த ஸ்பானிய
வீரனை தன்னுடைய தனி அறைக்குள் அவனை வைக்கச்செய்து உயிர்போகும் நிலையிலிருந்த அவனிடம் பேச்சுக்கொடுத்தார் டன் ஜான். "
இதோ பார் நண்பா...
நான் உன்னை மன்னிகிறேன்...உன்மீது எனக்கு கோபம் இல்லை... ஆனாலும் எனக்கு ஒரு உண்மை
தொ¢ய
வேண்டும்... என்னைக்கொல்ல வேண்டிய அவசியம் என்ன... நான் உனக்கு என்ன துரோகம்
செய்தேன்?" என்றான்.
அதற்க்கு அவன்," எஜமான்
...நீங்கள் நல்லவர் என நான் அறிவேன்.... ஆனால் நீங்கள் இவ்வளவு நல்லவராக
இருப்பீர்கள் என எனக்குத்தொ¢யாது
போயிற்று. நீங்கள் நாட்டுக்காக செய்யும் இந்த யுத்தத்தில் தோல்வியே எதிர்பார்க்கப்பட்டது...
ஆனால் உங்கள் வீரத்தைக்கண்ட நான் மனம் மாறினேன்... அதனால் உங்களைக்கொல்ல எனக்கு
கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் அனைத்தையும் நழுவ விட்டேன். ஆனால் நான் நாடு திரும்பினால் என்னை அனுப்பிய என் எஜமானுக்கு நான் என்ன பதில் சொல்வது. ஆகவே நான் என்னை அனுப்பிய என்
எஜமானா¢ன்
உத்திரவுப்படி... அரசாணைப்படி மனதை கல்லாக்கிக்கொண்டு உங்களைக் கொல்ல துணிந்தேன். இந்த நினைவிலேயே உங்களைக்கொல்லும் முயற்சியில் உங்கள் உயிருக்கு அலிபாஷா குறிவைப்பதை நான் பார்த்தபின்பும் என்னால் சும்மா நிற்க முடியாமல் வினாடி நேரத்தில் உங்கள் மீது
வைத்தகுறியை அலி பாஷா மீது மாற்றி அவரை சுட்டுக்கொண்றேன். அலி பாஷாவின் நெற்றியில்
பாய்ந்துள்ள தோட்டா என் துப்பாக்கியிலிருந்து வெளி வந்தது. என் துப்பாக்கியிலிருந்து வெடிக்கப்பட்டது தான். வேண்டுமானால் நீங்கள்
பா¢சோதித்துக்கொள்ளுங்கள்...
ஆனால் நான் உங்களை குறி பார்ப்பதை வேறு ஒருவன் பார்த்து என்னை சுட்டு விட்டான்.
என்றான்... அப்போது ஒரு ஸ்பானிய வீரன் அது நான் தான் என்றான்.
இப்போது
அவனுக்கு மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்கியது...இந்த நிலையிலும் டான் ஜான்," நண்பா...
கடைசியில் ஒரு கேள்வி... உன்னை அனுப்பியது யார்? அதை மட்டும் எனக்கு சொல்லிவிடு" என்றான். அப்போது
அந்த வீரன் ," என்
எஜமானே ...அது உங்கள்.... உங்கள் ... என்று சொன்னவன் அதற்கும்மேல் எதுவும் சொல்ல
முடியாமல் நாக்கு உள்ளே இழுத்துக்கொள்ளவே அப்படியே சிலவினாடிகளில் மா¢த்துப்போனான். அப்போது
ஜானுக்கு ஒரு விஷயம் புறிந்தது. தன்னை பி¡¢யாவிடை கொடுத்து அனுப்பும் போது தன் சகோதரன் இரண்டாம் பிலிப்பு
......நீ நிச்சயம் போர்க்களத்திலிருந்து திரும்பி வரமாட்டாய் என எனக்குத்தொ¢யும் என்று
சொன்னதன் அர்த்தம் இதுதானோ என்று யோசித்து யோசித்து மிகவும் குழம்பிப்போனான்.
அதற்குள்ளாக ஜானின் வலது பக்க அணிக்கு என்ன நேர்ந்தது என்று பார்ப்போம்.
ஜானுக்கு
வலது பக்கப்படைப்பி¡¢வின்
தளபதியாக ஆந்தி¡¢யா டோ¡¢யா இருந்தார். அவர்
பொருப்பில் 63 போர்கப்பல்களும்
2 ராட்ச்சத
பீரங்கிக்கப்பல்களும் இருந்தன இந்த லெபாந்த்தே போர் ஏக காலத்தில் தான் துவங்கியது.
போ¡¢ன்
போக்குபற்றியும் மேலை நாட்டவர்களின் போர் முறைபற்றியும் நங்கு அறிந்திருந்தான் உலுக் அலி. தன்னுடைய வாடிக்கையான போர் யுக்த்திகளை பயன்படுத்தி இதுவரை செய்துவந்து யுத்தத்தால் அதிக பயன் இல்லை என்றும் தங்களுடைய
வழக்கப்படியான தாக்குதலை மேற்கொண்ட சிராக்கோவும் தங்களுடைய பொ¢ய தளபதி அலிபாஷாவும்
தோல்வியே கண்டதால் தன்னுடைய போர் வியூகத்தை மாற்றி அமைத்தான் உலுக்
அலி.அதற்குள்ளாக ரோமானியர்களின் பீரங்கித்தாக்குதலால் தங்களுடைய பல பொ¢ய கப்பல்கள் பலவற்றையும்
இழந்திருந்ததாலும் தங்களுடைய துருக்கிய படைகள் ஒட்டு மொத்தமும்
அழிக்கப்படாமலிருக்கும் பொருட்டும் தன்னுடைய படையில் மிச்சம் மீதி இருந்த படைகளை தனக்கு இடப்புறம் இருந்த கடல்பகுதிக்கு வேகமாக இட்டுச்சென்றான். எதி¡¢ வேகமாக ஓடுகின்றான் என்பதை
அறிந்த டான் ஜான் இங்கு ஏதோ ஒன்று நடக்கின்றதை புறிந்துகொண்டு உலுக் அலியை பின் தொடர்ந்து சென்று போர் புறிய ஆரம்பித்தான். அதர்குள்ளாக தன்னுடைய ஆபத்துதவிப்படைகளை இவனை கவனித்துக்கொள்ளும்பொருட்டு அமர்த்தி தன் நடுப்பக்க படைகளோடு திரும்பி வந்தான்.
திரும்பி
வந்த உலுக் அலி ஏற்கனவே செய்து வைத்திருந்த முன்னேற்பாட்டின்படி பல நீச்சல்
வீரர்கள் ஆந்தி¡¢யா டோ¡¢யாவின்
கப்பல்களுக்கு அடியில் வெடிகுண்டு வைத்தும் பல கப்பல்களை இரும்பு சங்கிலிகளால்
கட்டியும் பிணைத்தார்கள். இதனால் வலப்பத்திலிருந்த பல பொ¢ய கப்பல்கள் பயங்கர
சப்த்தத்துடன் வெடித்து சிதறின. இந்த அதிர்ச்சியினால் ஏற்கனவே வெற்றிக்களிப்பில்
திளைத்திருந்த ரோமானிய வீரர்கள்
பொ¢தும்
சோகத்தில் மூழ்கினர். மீண்டும் கோபாவேசமாக திரும்பிவந்து தாக்குதல் நடத்துவதற்குள்
உலுக் அலி பின் வாங்கினான். அவனுடன் பல நல்ல கப்பல்களும் அதிலுள்ள வீரர்களுடனும்
துடுப்புவலிக்கும் கிறிஸ்த்துவ அடிமைகளும் உலுக் அலியோடு காண்ஸ்டான்ட்டி நேப்பிள்சுக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர். பிறகு ஜான் தலைமையில் மீண்டும் தோல்வி கண்ட துருக்கியரை அடக்கும் நிகழ்ச்சியில் பல ஜைனோ¢களும் துருக்கிய வீரர்களும்
கொல்லப்பட்டனர். அப்போது மாலை சுமார் ஐந்து மணி. ஜான் தலைமையிலான பா¢சுத்தபிதா பாப்பு ஐந்தாம் பக்தி
நாதா¢ன்
நேசப்படைகள் வெல்லவே முடியாதென்று ஒருகாலத்தில் கருதப்பட்ட ஓட்டோமான் சுல்தானின்
பெரும் கடற்படையை அறவே அழித்து வெற்றிகொண்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.
வீரர்கள் அனைவரும் ஆவே மா¢யா....சால்வே
ரெஜனா என்று தங்களுக்கு வெற்றி
அளித்த அந்த ஜெபமாலை தாயாருக்கு நன்றியாக திருப்பலி ஒன்று அப்போதே
ஒப்புகொடுத்தார்கள்.. இந்த போர் நடந்துகொண்டிருந்த சமயங்களிள் அனைத்து
போர்கப்பல்களிலும் அந்தந்த கப்பல்களிலுமிருந்த பாதி¡¢யார்கள் சிலுவையை தூக்கிக்கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தும்படி மேல் தளம் கீழ்தளம் என அனைத்து இடங்களிலும் சென்று வந்து கொண்டிருந்தார்கள். மேலும் பாவ சங்கீர்த்தனம் என்னும் அருட்சாதனமும் அந்த நேரத்திலும் கேட்கப்பட்டது.
இங்கு வெற்றி களிப்போடு வீரர்கள் எதி¡¢களை பந்தாடியபோது பா¢சுத்தபிதா தன்
அரண்மனையிலிருந்த கர்தினால்கள் சிலரோடு கணக்கு வழக்கு பார்த்து கொண்டு இருந்தார்.
அப்போது அவர் காதில் எழுந்து போய் ஜன்னலின் வெளியே பார் என்று ஒரு குரல் கேட்டது. பா¢சுத்த பிதா," நாம்
இப்போதைக்கு இந்த விவகாரங்களை சற்றே நிறுத்தி வைப்போம் " என்று ஜன்னலுக்கு
வெளியே போய் பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்ச்சி இதுதான்.
எங்கோ பல
ஆயிரம் மைல் தூரத்தில் தென்கொ¡¢ந்திய
கடல் நீ¡¢ல்
லெபார்த்தோ துறைமுகப்பட்டிணதிற்கு மேற்கே நடை பெற்ற அந்த முஸ்லீம் மன்னர்
ஓட்டோமான் துருக்கியர்களுடைன் நடைபெற்ற கடல் யுத்தத்தில் தன்னுடைய
நேசப்படைகள் பெரும் வெற்றி வாகை சூடிய காட்சியைதான் அவர் கண்டார்.. தன்
கைகளைத்தட்டி அவர் சந்தோஷத்தை கொண்டாடிய அவர்," டான் ஜானின் தலைமையில் நம் நேசப்படைகள் ஓட்டோமானிய
சுல்தானின் மிகப்பொ¢ய கடற்படையுடன் போ¡¢ட்டு வெற்றிவாகை சூடிவிட்டன
" என்றார். அடுத்து
போர்முடிந்த பின் வழக்கமாக நடைபெறும் பல சடங்குகள் நடைபெற்றன. போ¡¢ல் பிடிபட்ட பல கிறிஸ்த்துவ
அடிமைகள் சுமார் 12000 பேர்
தங்களுடைய விதி என்னவாகும் என கவலையோடு முட்டி போட்டுக்கொண்டு
காத்துக்கொண்டிருந்தனர். போ¡¢ல்
இவர்கள் தங்களுக்கு சாதகமாக செயல்பட்ட முறை டான் ஜான் அறியாததல்ல. இதற்காக பல
துடுப்புவலிக்கும் அடிமைகள் உயிர்த்தியாகம் செய்ததையும் அவன் அறியாமலில்லை.
இதற்காக அவர்கள் முதுகுத்தோல் அனைத்தும் உறிந்துபோகும் அளவுக்கு துருக்கியர்கள்
இவர்களை துன்பப்படுத்தி இருந்தும் இந்த கிறிஸ்த்துவ அடிமைகளை தங்கள் கிறிஸ்த்துவ
மன்னர்கள் வெற்றி பெறவேண்டும்
என்று தங்களுக்காக உயிர்த்தியாகம் செய்யும் அளவுக்கு துணிந்ததால்தான் தங்களுக்கு ஒரளவு வெற்றி சாத்தியமானது என்று டான் ஜான் மிகவும் நன்றாக உணர்ந்திருந்ததால் அத்தனை அடிமைகளையும் விடுதலை செய்தான். ஹோ வென சந்தோஷ கரகோஷங்கள் வானைப்பிளந்தது. மாலை ஐந்து மணி ஆயிற்று. வானில் ஒரு
பெரும் இடி இடித்தது. இயற்கையும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அது கருதப்பட்டது. அடுத்து அன்று இரவுக்குள் அனைத்துக்கடற்படையினரும் இந்த லெபார்த்தோ கோட்டையை கைப்பற்றி தங்கள் வசப்படுத்திக்கொண்டனர்.
சா¢யாக 21 நாட்க்கள் கழித்து பா¢சுத்த தந்தை பாப்பு ஐந்தாம்
பக்த்தி நாதருக்கு லெபார்த்தோ கோட்டை வீழ்ந்தது பற்றியும் துருக்கியர்களின்
கடற்படை நாசமாக்கப்பட்டதையும் முறைப்படி அறிவிக்கப்பட்டது. ஆனால் இங்கு ரோமிலும்
மேலும்பல ஐரோப்பிய நாடுகளிலும் தங்கள் வெற்றி விழாவை அவர்கள் வெற்றிபெற்ற அக்டோபர்
7 ஆம்
தேதியே கொண்டாடிவிட்டனர் என்று அறியவந்த அவர்கள் ஆச்சர்யத்தால் அப்படியே மலைத்துப்போயினர்.
பா¢சுத்த
பிதா ஐந்தாம் பக்திநாதர் இந்த வெற்றியை நம் தேவ தாயாருக்கு சமர்ப்பித்து தேவ
தாயாரை ஜெய ராக்கினி என்றழைத்தார். பா¢சுத்த பிதா பாப்பு பதினொன்றாம் க்ளமெண்ட் இந்த
லெபாந்தோ என்னுமிடத்தில்
ஜெபமாலை மாதவினால் கிடைத்த மாபெரும் வெற்றியை முன்னிட்டு அதே தேதியில் அவருக்கு விழா எடுக்கவும் ஜெய ராக்கினி என்னும் அவருடைய திருப்பெயரை ஜெபமாலை ராக்கினி என்றும்
அழைக்கப்பட
ஆணையிட்டார். அன்று முதலே ஜெபமாலை மாதாவின் திருநாள் வருடாவருடம் அக்டோபெர் 7 ஆம் தேதி என
கிறிஸ்த்துவர்களின் காலண்டர்களில் குறிப்பிடப்படுகின்றது.
ஸ்பெயின் நாட்டில் நம் கதா நாயகன் டான் ஜானுக்கு பெரும் வெற்றி விழா
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன்னர் இரண்டாம் பிலிப்பு இந்த விஷாவில் ஏனோ தானோ என்றே கலந்து கொண்டார். அவர்
கடைசிவரை டான் ஜானை நேருக்கு நேராக பார்ப்பதை ஏனோ தவிர்த்தார். ஆனால் பொது மக்கள்
தங்கள் நாட்டு தளபதியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடினர். அன்று முதல்
அவரை இளவரசர் டான்
ஜான்.... வாழ்க... துருக்கி மாமன்னர் சுல்த்தானை வெற்றிகொண்ட மா வீரர்...வாழ்க... என்றே கொண்டாடி அழைத்து மகிழ்ந்தனர். இந்த
லெபாந்தோ போர் நடைபெற்றபோது நடந்த சில நிகழ்ச்சிகள்..... நம்
கதாநாயகன் காலில் குண்டடி பட்டு வீழ்ந்த போது தன் தேசத்தவனாகிய ஒரு ஸ்பானிய வீரன்
தன்னை கொல்ல துப்பாக்கியால் சுட முயற்சிக்கையில் வேறு ஒரு ஸ்பானிய வீரன் அவனை
சுட்டுக்கொண்றான் அல்லவா...
அவனுடைய பெயர் மிகுவேல் செர்வாந்தஸ்... இந்த வீரன் டான் ஜானுடன் தோளோடு தோளாக
நின்று துருக்கியர்களை எதிர்த்து போ¡¢டும்போது அவனது இடது கை துருக்கியர்களால் வெட்டப்பட்டது. போர்முடிந்து
தன் தாய் நாடு திரும்பிதும் தன் வலது கையால் தன்னுடைய யுத்த அனுபவங்களை நகைச்சுவையோடு எழுதிய கதைதான் டான் குவ்க்ஸாட் எனப்படும் நாவல்.
ஒரு
ஸ்பானிய வீரன் மனம்வெறுத்துப்போய் தன் தாய் நாட்டுக்கப்பலின் கொடிமரத்தில் ஏறி
அங்கிருந்த சிலுவைக்கொடியை வெட்ட முயற்சிக்கையில் அவனிடமிருந்த அந்த கத்தி உடைந்து
பல பாகமாக கீழே விழுந்தது. போர் முடிந்து பல ஆண்டுகளாகி இந்தக்கத்தியை மீண்டும் தயா¡¢க்க அதை உலைக்களத்திலிட்டு
வேறு சில பாகங்களையும் பொருத்தி உலையிலிருந்து எடுக்கையில் அதிசயமாக
சேர்த்துவைக்கப்பட்ட பாகங்கள் உதிர்ந்து மீண்டும் பழைய மாதி¡¢யே ஆகியது. இந்த
லெபாந்தோ போ¡¢ன்போது
டான் ஜானின் பிரத்தியேக கப்பலான லா ¡£யலின் அச்சு அசலாக செய்யப்பட்டுள்ள மாதி¡¢க்கப்பல் ஒன்று இன்னும்
ஸ்பெயின் தேசத்திலுள்ள பார்சிலோனா கடல் அருங்காட்ச்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தளபதி
டான் ஜானின் அதிகாரா பூர்வமான ¡£யல்
என்னும் கப்பலிலிருந்த யேசுநாதா¢ன்
சிலுவைக்கொடி போ¡¢ன்போது
எதி¡¢யின்
கப்பலிலிருந்து சீறிப்பாய்ந்து வந்து தன் மீது விழாதபடிக்கு தன்னைதானே
சுற்றிக்கொண்டு அதன்
வீச்சிலிருந்து தப்பித்தது. இந்த அதிசய சிலுவைக்கொடி இன்றும் ஸ்பெயினில்
பார்சிலோனாவிலுள்ள ஒரு ஆலயத்தில் ஒரு ஓரத்திலுள்ள பீடத்தின் மேலாக வைக்கப்பட்டுள்ளது.
டான் ஜானின் வலப்பக்க படைகளின் கமாண்டராக பணியாற்றிய ஜியானந்தோ¢ய டோ¡¢யா என்னும் ஜெனீவா காரருக்கு
ஸ்பெயின் மன்னர் கொடுத்த ஒரு அன்பளிப்பு குடலோபே மாதாவின் ஒரு படம். இந்த லெபாந்தோ
போர் நடக்க 40 ஆண்டுகளுக்கு
முன் மெக்ஸிகோ நாட்டில் தேவ தாயார் காட்சி கொடுத்து அங்குள்ள ஆயருக்கு தானே கைப்பட
தன் படத்தை வரைந்து கொடுத்ததாகவும் அந்த ஆயர் உடனே அதைப்போல். மேலும்
நான்கு பிரதி எடுத்து அவற்றை மூலப்படத்தின் மீது ஒற்றி எடுத்து ஸ்பெயின்
மன்னருக்கு கிடைத்ததாகவும் அந்தப்படத்தை டோ¡¢யா தன்னுடன் லெபாந்தோ யுத்தத்துக்கு எடுத்துச்சென்றதாகவும் போர்
நிகழ்ந்த நாளில்
இந்த மாதா கொடியை தன்னுடைய கொடிக்கம்பத்தில் ஏற்றி வைத்ததாகவும் இதனாலேயே தனக்கு
வெற்றி கிடைத்ததாகவும் கூறினார். இப்போதும் லெபாந்தோ போ¡¢ன்போது டோ¡¢யாவால் உபயோகிக்கப்பட்ட அந்தக்கொடி
இப்போதும் இத்தாலியில் அவெட்டோ என்னும் ஊ¡¢ல் உள்ள சேன் ஸ்டிபெனோ
என்னும் ஆலயத்தில் உள்ளது.
இந்த லெபாந்தோ போ¡¢ன்போது
கைபற்றப்பட்ட துருக்கியர்களின் கப்பல் கொடிமரம் உடைந்து அதன் விளக்குகள்
பொருத்தப்பட்ட அமைப்பு கைபற்றப்பட்டு அது இப்போதும் ஸ்பெயின் தேசத்திலுள்ள குடலொபே மாதாவின்
தேவாலயத்தில் மேல் விதானத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ரோமில்
அரகோலியில் உள்ள சாந்த மா¢யா
தேவாலயத்தில் மேல் விதானத்தில் தங்க இழைகளாள் வரையப்பட்டுள்ள படங்கள் யாவும் இந்த
லெபார்த்தோ யுத்தத்தின்போது கைப்பற்றப்பட்ட கப்பல்களிலிருந்து கொண்டுவரப்பட்ட
தங்கங்களே. இத்தாலியில்
வெனிஸ் நகா¢லுள்ள
டாகி அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள ஒரு இஸ்லாமியக்கொடி இந்த லெபாந்தோ போ¡¢ன்போது தோற்கடிக்கப்பட்ட
ஒரு கப்பலிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒன்று. இத்தனை பெரும் வெற்றி
வீரனாகத்திகழ்ந்த நம் டான் ஜான் தன்னுடைய 27 ஆம் வயதிலேயே ஒரு விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மா¢த்ததுதான் சோகத்தின் உச்ச
கட்டம். அவரது கல்லறை இப்போதும் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. மஹா
சக்தி வாய்ந்த ஜெபமாலை மாதாவே பாவிகளாக இருக்கிற எங்களுக்காக வேண்டிகொள்ளும். ஆமேன்..