Tuesday, December 10, 2019

அவளுக்கென்று ஒர் மனம். பாகம். 2.


அவளுக்கென்று ஒர் மனம். பாகம். 2.
      அனேக வருடங்கள் நிமிடங்களாக ஓடிவிட்டன. இப்போது இயேசுநாதருக்கு 33 வயது. அவருடைய வேதபோதக அலுவலில் இது மூன்றாவது வருட முடிவு. இயேசுநாதரும் அவருடைய இந்த உலக வாழ்க்கை முடியப்போவதை உணர்ந்தார். இதற்கு காரணமாய் அமைந்தவன் யூதாஸ் என்னும் அப்போஸ்த்தலன்.
     பெத்தானியில் லாசரின் வீடு.;-“ லாசர்… என் நண்பா…நீ எனக்கும் என் அப்போஸ்த்தலர்களுக்கும் எவ்வளவோ உதவிகளை செய்திருக்கின்ராய். நான் உன்னிடம் தங்கி இருந்த நாட்க்களிலெல்லாம் நான் என் தாய் வீட்டில் இருந்த நினைவுகளோடே இருந்தேன். அவ்வளவு நன்றாக நீயும் உன் சகோதரிகள் மார்த்தாவும் மரியாவும் கவனித்துக்கொண்டீர்கள். இதே கருத்தையே என் அப்போஸ்த்தலர்களும் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக நான் உனக்கு நன்றி சொல்கின்றேன். ஆயினும் நான் உன்னிடம் மேலும் இரண்டு உதவிகளை கேட்க்கப்போகின்றேன். தவறாமல் நீ எனக்கு அதை வாக்களிக்க வேண்டும்.” என்றார் இயேசுநாதர்.
லாசர்,” ஆண்டவரே.. தேவரீர் என்னிடம் உதவி என்று கேட்க்கலாமோ… உத்திரவிடுங்கள் ஆண்டவரே.. அடியேன் செய்ய காத்திருகின்றேன். தேவரீருக்கு நான் எவ்வளவோ நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன். இதுவரை நான் உமக்கு செய்திருப்பது மிகவும் கொஞ்சமே…மிகவும்  சொற்பம்,. ஆனால் தேவரீர் எனக்கு செய்திருப்பது மிகவும் பெரிது. தேவரீர் எனக்கு மறு வாழ்க்கையை கொடுத்திருகின்றீர்…என் தங்கை மகதலேன் மரியாளை அவள் மேற்கொண்டிருந்த பாவ வாழ்க்கையிலிருந்து மீட்டு கொடுத்திருக்கின்றீர். இவை யாவும் எந்த மனிதராலும் எனக்கு செய்திருக்க முடியாத உதவிகள். ஆனால் தேவரீருக்கு நான் திருப்பி செய்திருக்கும் உபகாரம் என்ன?  ஒன்றுமில்லை. என்னை அண்டி வந்திருக்கும் உங்களை தங்க வைத்து சோறு போட்டிருகின்றேன். அவ்வளவே.” என்றார்.
 “ இருக்கலாம் லாசர். நானோ என் அப்போஸ்த்தலர்களோ உன்னுடன் உறவு கொண்டாடுவதற்கு நம்மிடையே எந்த உறவும் இல்லை. ஒட்டும் இல்லை. அப்படி இருக்கையில் நீ என்னை இவ்வளவு அதிகமாய் நேசித்து கவனித்துக்கொண்டதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.” என்றார் இயேசு. அப்போது இயேசுவின் சீடர்கள் அவரவர் வேலையை பார்ப்பதற்கு வெளியே செல்ல இயேசுவிடம் உத்திரவு பெற்றுக்கொண்டார்கள். அப்போது யூதாசும் வெளியே கிளம்பினான். அப்போது இயேசு அவனை நோக்கி,” யூதாஸ்….நீ எங்கே போகின்ராய்.. நான் உன்னிடம் சில விஷயங்களைப்ற்றி  பேச வேண்டும்.. சற்று நேரம் எனக்காக காத்திரு” என்றார். ஆனால் யூதாஸ் அவர் சொன்ன வார்த்தைகளை காதில் வாங்காமல் தன்போக்கில் போய்க்கொண்டிருந்தான்.
இயேசுநாதர் அதுவரை தன் கரங்களைப்பற்றி இருந்த லாசரின் கைகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு ,” யூதாஸ் … நில்..நீ இப்போது என்னோடு பேச வேண்டும்” என்றார். அப்போது யூதாஸ்,” மற்ற எல்லா அப்போஸ்த்தலர்களும் அவர் அவர் இஸ்ட்டப்படியே செல்கின்றனர். ஆனால் நான் போகும்போது மட்டும்…. எனக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு.. என் இஸ்ட்டப்படி நடக்க எனக்கு உரிமை கிடையாதா?” என்றான்.
“ யூதாஸ்.. நான் யாருக்கும் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை.அவர்கள் போவது என்ன காரியத்திற்கு என்று எனக்கு நன்றாகத்தெரியும். ஆனால் உன் விஷயம் அப்படி அல்ல. நீ எங்கே போகின்றாய். யாரை சந்திக்கப் போகின்ராய்… உன் தீர்மானம் என்ன.அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதுவரை எனக்கு நன்றாகத்தெரியும்… உனக்கு வரப்போகும் அபாயத்தைப்பற்றியும் நான் அறிவேன். அதிலிருந்து உன்னைக்காக்க வேண்டும் என்பதற்காகவே உன்னை எச்சரிக்க விரும்புகின்றேன்.”
“ உமக்குதான் எல்லாம் தெரியுமே.. பிறகு ஏன் என்னை கேட்கின்றீர்.? நான் ஜெருசலேமில் என் நண்பர்களை காணப்போகின்றேன்..”
“ அவர்கள் உனக்கு நண்பர்கள் அல்ல.. அவர்கள் உன்னை கொல்லப் போகும் சாத்தான்கள். நீ ஜெருசலேம் போகக்கூடாது. அதற்கு பதில் நீ எங்காவது போய் உன்னை காப்பாற்றிக்கொள். அது உனக்கு மிகுந்த நலமாக இருக்கும். உனக்கு நேரப்போகும் பழிபாவத்திலிருந்தும் உன்னை காப்பாற்றக் கூடியதாக இருக்கும்.”
“ ஆண்டவரே…எனக்கு என்னைப்பற்றி கவலை இல்லை. உம்மை பற்றிதான் எனக்கு கவலை. எனக்கு என்ன முடிவு ஏற்படப்போகின்றது என்பது எனக்கும் உமக்கு என்ன முடிவு நேரப்போகின்றது என்பது உமக்கும் மிகவும் நன்றாகவே தெரியும்..நான் ஏன் இந்த ஜெருசலேமை விட்டு போக வேண்டும். வேண்டுமானால் நீர் போய் எங்கேயாவது பிழைத்துக் கொள்ளும். சாவைக்கண்டு உமக்கு பயம் வந்துவிட்டதா? அதனால்தான் நீர் இப்படி பிதற்றுகின்றீர். ஆனால் என்னைப்பாரும்.. எனக்கு சாவைக்கண்டும் பயம் இல்லை. உம்மைக்கண்டும் பயம் இல்லை. ஒரு காலத்தில் உம்மைக்கண்டு பயந்தேன். உம் தெய்வீகத்தன்மையைக்கண்டு பயந்தேன். உம் உயர்ந்த போதனைகளால் மக்கள் பலர் மயங்கினர். அப்படித்தான் நானும் மயங்கி இருந்தேன். நல்ல வேளை நான் இப்போது விழித்துக்கொண்டேன். ஆனால் உம்முடைய மற்ற சீடர்கள்தான் இன்னும் மயக்கத்திலேயே இருகின்றனர். பாவம் அவர்கள். நீர் என்னையும் அவர்களோடு சேர்த்து ஏமாற்றி விட்டாய். உம்மை நம்பிவந்த அவர்கள் எல்லாவற்றையும் இழந்தனர். இருந்த எல்லாவற்றையும் உம்மால் துறந்தனர். இப்போது அவர்களிடம் ஒன்றும் இல்லை. அடுத்த ஒருவேளை சோற்றுக்கும் யாரிடமாவது கை ஏந்தும் நிலைமைக்கு அவர்களை ஆளாக்கிவிட்டீர்.. இப்போது உலகமே எங்களைக்கண்டு எள்ளி நகைக்கின்றது. உம்மால் உலகமே எங்களை பகைக்கின்றது. இனிமேல் எங்களுக்கு என்ன எதிர்காலம் இருகின்றது? இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் என் நண்பர்களிடம் போகின்றேன்… எனக்கு வழியை விடும்”
“ நண்பா..இதுதான் உன் இறுதியான முடிவா?.எனக்கு பதில் சொல்லிவிட்டு போ….நீ எடுத்திருக்கும் உன் முடிவால் உன் தந்தையை நோகச் செய்கின்றாய் …உன் நேசத்தாயருக்கு எவ்வளவு அவப்பெயரை ஏற்படுத்துகின்றாய் தெரியுமா?” நீ செய்ய இருக்கும் காரியம் இந்த உலகம் முடிவு வரைக்கும் பேசப்படும்.. இன்று நண்பர்களகவும் பெரும் உபகாரிகளாகவும் தோன்றும் யாவரும் நாளைக்கு உனக்கு எதிரிகளாக மாறுவர். அப்போவது வருந்தி பயன் இல்லை. இந்த உலகில் ஒளியானவர் இருக்கும்வரைதான் உனக்கு நல்வாழ்வு கிட்டும். நாளைக்கு அந்த ஒளி மறைந்துபோனால் நரக இருள் உன்னை ஆட்கொண்டுவிடும்.. அப்போது உன்னை காப்பாற்ற கூடியவன் யார்? இதை ஒருகணம் எண்ணிப்பார். நீ செய்யக்கூடிய காரியத்தால் நீ அடையக்கூடிய ஆதாயம் என்ன? உலகமே உன் கையில் அடங்குமோ. பணம் பட்டம் பதவி அனைத்தும் உன் வசமாகுமோ.  வசமாகலாம்.. நாளைக்கு அதுவே உனக்கு எதிராக திரும்பும். இதற்கெல்லாம் ஆசைப்பட்டவர்களின் கதி என்னவாகிப்போனது என்பதை சரித்திரம் உனக்கு சொல்லவில்லையா? என் நண்பா… நானே இந்த உலக இரட்ச்சகர். இதை நீ அறியாததல்ல. என் ஆண்டவரே நீர் என்னை இரட்ச்சியும் என்று ஒரு வார்த்தை சொல். எனக்கு அது போதும். உன் சம்மதம் இல்லாமல் நான் உன்னில் பிரவேசிக்க இயலாது. உன்னை இரட்ச்சிக்கவும் முடியாது “
“ இயேசுவே… உம்முடைய பசப்பு வார்த்தைக்கெல்லாம் இனி நான் செவி சாய்க்கப்போவதில்லை. என் தந்தையார் ஒரு பெரும் பாவி. அவருக்கு நரகம் தான். ஆனால் என் தாயார் ஒரு புண்ணியவதி. அவரை நினைத்தால்தான் எனக்கு கவலையாக இருகின்றது. ஆனாலும் நான் என் மனதில் கொண்டுள்ள காரியத்தை நான் நிறைவேற்றாமல் போகப்போவதில்லை.. என் நண்பர்கள் என்னை அழைக்கின்றார்கள்.”
“ யூதாஸ்… என் அன்பு சீடனே…நான் உன்னை நேசித்ததுபோல் வேறு எந்த சீடனையும் இவ்வளவு அதிகமாக நேசித்ததில்லை..ஒரு தாய்க்கு தன் நோஞ்சான் குழந்தையின்மீதுதான் பாசம் அதிகமாய் இருக்கும் அதுபோலவே அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கிய உன்னை அதிகமாக நேசித்தேன். இந்த உலக காரியங்களில் நீ வைத்திருக்கும் பற்றை நீக்கிவிட நானும் எவ்வளவோ முயன்றேன். இவைகளுக்கு நீ அடிமை ஆகிவிடக்கூடாது என்னும் காரணத்தினாலேயே உன்னை எப்போதும் என் கைகளுக்குள்ளாகவே வைத்திருந்தேன். ஆண்டவருடைய கரங்களுக்குள் இருப்பதுதான் சிறந்த பாதுகாப்பு. அதுதான் சர்வ சுதந்திரம். அவரின் பாதுகாப்பிலிருந்து வேளியே வரும் நபர் சாத்தானால் பீடிக்கப்படுவது உறுதி. காட்டில் விலங்கினங்களின் வாழ்க்கையைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? தாயிடமிருந்து பிரிந்து வந்துவிட்ட கன்றின் கதி என்னவாகும் தெரியுமா?. அதன் ஜீவியம் ஒரு இரவுகூட தாண்டாது. பல கொடிய மிருகங்களின் பார்வையில் அது பட்டுவிட்டல் அது தப்பிப்பதற்கான சாத்தியமே இருக்காது. இப்படித்தான் உன் கதியும் இருக்கப்போகின்றது.
           நீ என்னை தவறாக புறிந்துகொண்டாய்.  வீனே என்னை பகைகின்றாய். உன் தந்தை சீமோன்..நீ கூறியபடி அவர் ஒரு பாவிதான். நாட்டின் விடுதலைக்காக பணியாற்றிய ஒரு வீரன் அவர். இதனால் அவருக்கு ரோமை அரசு சிலுவைசாவு அளித்தது. அவர் கடவுளின் பரிவிரக்காத்தால் பாதாளங்களில் இருகின்றார். அவர் நரகதிற்கு பாத்திரவான் ஆகவில்லை. அதனால் தன்மகன் மீது மிகவும் கவலை கொண்டிருக்கின்றார். மனுமகனின் மரணத்திற்குப்பிறகு அவர் தன் மூதாதையர்களுடன் பரலோகம் செல்வார். அதுவரை அவருக்கு தன் மகன் நரகத்திற்கு பாத்திரவான் ஆனான் என்னும் துன்பத்தை கொடுத்துவிடாதே. இது பாதாளங்களில் அவர் அனுபவிக்கும் துன்பத்தை விட அதிக துன்பமாக இருக்கும்.” என்றார் இயேசு . ஆனால் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆயிற்று. எதுவும் அவன் காதில் ஏறாததுபோல் அவன் பாட்டுக்கு போய்கொண்டிருந்தான்.அவனைப்பிடித்திருந்த சனியன் அவனை தள்ளிக்கொண்டு போனான்.விதி யாரை விட்டது.
     யூதாஸ் இயேசு இவர்களின் சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்த லாசர்,” ஆண்டவரே இவன் தானே உம்மை காட்டிக்கொடுக்க போகின்றவன் “ என்றார்.
இயேசு,” நண்பா.. இதைப்பற்றி இப்போது பேசுவானேன்?. நான் உன்னிடம் கேட்ட இரண்டு உதவிகளைப்பற்றி பேசலாமே” என்றார்.
“ பேசலாம் ஆண்டவரே..தயவு செய்து என்னிடம் உங்களுக்குத்தேவையான எல்லாவற்றையும் கேளுங்கள். இரண்டு என்ன இரண்டாயிரம் கேட்டாலும் நான் உமக்கு செய்ய ஆயத்தமாக இருக்கின்றேன்.”
“ நன்றி லாசர்.நான் சொல்லியபடி நான் என் தாயை விட்டுப்பிரிய வேண்டிய வேளை வெகு சீக்கிரமே வரும் . அப்போது என் தாயை உன் அடைக்கலத்தில் விட்டுச்செல்ல விரும்புகின்றேன். ஆனால் அதற்கு முன் நான் வாதைகளின் ருசியை அனுபவிக்க வேண்டி வரும். யாவும் எழுதப்பட்டுள்ளபடியே நிகழும்.”
“ ஆண்டவரே.. இப்படி நிகழத்தான் வேண்டுமா? இதை மாற்ற உம்மால் கூடாதா? உமக்கு இப்படி நேர்வதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது.”
“ இல்லை.. இப்படி நிகழத்தான் வேண்டும்.அப்போதுதான் மனுமகன் இந்த உலகத்திற்க்கு எதற்காக வந்தாரோ அந்தக்காரியம் நிறைவேறும். யாவும் முன்குறித்தபடியே நிகழத்தான் வேண்டும்..இல்லாவிடில் இந்த உலகில் மனத குலதிற்கு இரட்சண்யம் என்பதே இராது “
 “ இது எப்போது நிகழும்?. எப்படி நிகழும்?” எங்கு நிகழும்?”
“ அது என் நண்பர்களிள் ஒருவனால் கொடுக்கப்படும் ஒரு முத்தத்திலிருந்து ஆரம்பிக்கும். அது வரும் பௌர்ணமி அன்று இரவில் நடு சாமத்தில் நிகழும். அதற்கும் முன் மனுமகன் ஜெருசலேமில்   யூதர்களின் அரசராக அங்கீகரிக்கப்படுவார். ஆண்டவரின் பெயரால் வ்ருபவர் ஆசீர் பெற்றவர் உன்னதங்களில் ஓசான்னா என்றெல்லாம் அவரை வாழ்த்துவார்கள். ஆனால் அதே வாயால் அவனைக்கொல்லும் அவனைக்கொல்லும் என்றுகூறி அவரை வசைபாடுவார்கள். அப்போது மனுமகன் இசையாஸ் தீர்க்கதரிசி கூறியபடி மிகுந்த அவமானப் படுத்தப்பட்டு அனைவராலும் இகழப்பட்டு சிலுவையில் அறையப்படுவார். மிகுந்த பாடுகள் பலபட்டு இறுதியாக அவர் மரணிப்பார்.”
“ வேண்டாம் ஆண்டவரே…இனிமேலும் என்னால் தாங்கவோ கேட்க்கவோ முடியாது. அந்த துரோகி யார் என்று சொல்லுங்கள். அவன் கதையை நான் முடித்துவிடுகின்றேன்.”
“ வேண்டாம் லாசர்..மனுமகன் வன்முறையை விரும்புவதில்லை. அன்பினால் சாதிக்க முடியாததை வன்முறையால் சாதிக்க முடியாது.என் மரணத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. என் பிதாவின் சித்தத்தை முறியடிக்க இந்த உலகில் எந்த அரசனாலோ அல்லது எவ்வளவு பெரிய போர்படையினாலோ முடியாது. இது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கை. அதுவும் என்பிதாவின் சித்தப்படியே நிகழ்ந்தது.என் மரணமும் அவர் சித்தப்படியே நிகழும்.இதில் எந்த மாற்றமும் நிகழ்த்த முடியாது.”
“ ஆண்டவரே நீ ஏன் எகிப்த்திற்கு தப்பிச்செல்ல கூடாது. சிறிய வயதில் எகிப்த்து தானே உமக்கு அடைக்கலம் கொடுத்தது?’
“ அப்போது எனக்கு சிறுவயது. என் நேரம் அப்போது எனக்கு வரவில்லை ஆதலால் நான் எகிப்த்துக்கு தேவ கட்டளைபடியே ஓடிப்போனேன். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. இப்போது என் நேரம் வந்துவிட்டது. இதற்கு நான் அடிபணிந்துதான் ஆக வேண்டும். உண்மைக்கு சாட்ச்சியம் கூறத்தானே நான் இந்த உலகதிற்கு வந்தேன். நான் சர்வேசுரனாக இருக்கும் பட்ச்சத்தில் உன் தாய் தந்தையற்கு கீழ்படிந்திரு என்று கட்டளை கொடுத்துவிட்டு இப்போது மனுவாக இருக்கும்  நான் என் பிதாவின் கட்டளையை மீறலாமோ”
 “ இப்போது நான் என்னதான் செய்வது.?”
 “ முதலில் நாம் வரவிருக்கும் பாஸ்காவை கொண்டாடி முடிப்போம். அதன்பிறகு எல்லாம் தான்னால் நடைபெறும்.”
“ நீங்கள் கேட்ட அந்த இரண்டு உதவிகள் யாவை?”
“ஓஓஓ.. என் அருமை நண்பா. நான் என் பாடுகளின்போது என் தாயார் எனக்கு ஆறுதல் அளிக்க என்னோடு இருக்க பரமபிதா சம்மதிக்கின்றார். இதனால் அவர் என்உடன் இரட்சகி எனப்படுவார். என் வாதைகளில் முழு அளவிலும் அவருக்கும் பங்கு உண்டு. ஏனென்றால் அன்று ஆண் பெண்ணோடு பாவம் செய்தான்.எனவே ஆண் இரட்சிக்கப்படுவது போன்று பெண்ணும் இரட்சிக்கப்பட வேண்டும். ஏவாள் என்னும் பெண்ணால் இந்த உலகில் பாவம் நுழைந்தது என்பதால் கடவுள் அவள் வழியாக வந்த மரியா என்னும் ஒரு கன்னிப்பெண்ணால் சாப விமோட்ச்சனதிற்க்கு வழிவகுத்து சாத்தானை நன்றாக பழிவாங்கினார். அவள் பெற்றெடுத்த ஆண்குழந்தை வழியாக இந்த உலகிற்கு இரட்சண்யம் வந்தது. என் வேதனையில்  எனக்கு ஆறுதல் அளிக்க என் தாயார் இருப்பதால் அவருடைய வேதனையில் அவருக்கு ஆறுதல் அளிக்க பெண்கள் தேவைப்படுகின்றார்கள். எனவே அவருக்கு ஆறுதல் அளிக்க உன் சகோதரிகள் மார்த்தாவையும் மரியாளையும் அவருடன் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். “
“ இதை நான் உவப்புடன் செய்வேன். நானும் அப்போது உம்முடன் வருவேன். உமக்கு தேவையான சகல உதவிகளையும் செய்வேன்.”
“ இல்லை.. என் பாடுகளின் நாட்க்களில் நீ ஜெருசலேம் வரக்கூடாது.”
“ஏன் ஆண்டவரே…என் சகோதரிகள் வரலாம்..நான் வரக்கூடாதோ? இது அநியாயம்.”
“ என் நண்பா… நான் கூறுவதை கவனமாக்கக்கேள். அந்த நாட்க்களில் ஜெருசலேம் மக்கள் முழுவது சாத்தானின் கைப்பாவை ஆக்கப்படுவர். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கூடமனம் மாறிப்போவார்கள். அதுவரை என்னை வாழ்த்தியவர்கள் என்னை கொல்லும்படி ஆர்ப்பரிப்பார்கள். அந்த நிலை உனக்கு நேரக்கூடாது என்பதால்தான் உன்னை ஜெருசலேம் வர வேண்டாம் என்று கூறுகின்றேன். ஆனால் உனக்கு வேறு வேலை கொடுக்கின்றேன்.  அந்த நாளின் இரவில் என் அப்போஸ்த்தலர்கள் அனைவரும் சிதறிப்போவார்கள். அவர்களை குறை சொல்லிப்பலனில்லை. யாவும் தீர்க்கதரிசனத்தின்படியே நிறைவேறும். என் மரணத்திற்குப்பின் ஆயனில்லா ஆடுகளைப்போல் சுற்றித்திரிந்து உன்னிடம் சரணமாக வந்தடைவார்கள். அப்போது நீ ஒரு தாயன்புள்ள இதயத்தோடு அவர்களை ஏற்றுக்கொண்டு என் சார்பாக அவர்களை மன்னித்து அவர்களை திடப்படுத்து. அவர்களுக்கு ஆறுதல் கொடு. அதற்கான அதிகாரத்தை நான் உனக்கு தருகிறேன். அதுவரை நீ பெதானியிலேயே தங்கி இரு.இது நான் உனக்கு கொடுக்கும் கட்டளைகூட.இறைவன் உனக்கு எல்லா ஆசீர்வாதங்களையும் தருவாராக.”
“ ஆண்டவரே.நீர் சொல்லும் எந்த அப்போஸ்த்தலனையும் நான் மன்னித்து ஏற்றுக்கொள்வேன். ஆனால் யூதாசை மட்டும் நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். அவனால்தானே இவ்வளவு வேதனைகளை நீர் அனுபவிப்பீர். அவன்மட்டும் என் கைகளில் கிடைத்தால் அவன் கழுத்தை அறுத்து விட்டுத்தான் நான் மறுவேலை பார்ப்பேன்.. நான் சுபாவத்தில் வன்முறையாளன் அல்ல. ஆனால் அவனை என்மனம் மிகவும் வெறுக்கின்றது. அவன் சீமோன் இல்லத்தில் என் சகோதரியை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தி இருக்கின்றான். இப்படிப்பட்ட ஒரு துரோகியை நான் மன்னிப்பதா? மாட்டேன்.. முடியாது.”
“ லாசார்..கடவுள் நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்தையும் கணக்கு பார்த்து தண்டிப்பார் என்றால் இந்த உலகில் விரல்விட்டு எண்னக்கூடிய அளவிலேயே மனிதர்கள் இருப்பார்கள். ஆனால் அவரிடம் மன்னிப்பு உள்ளது. இதேயே அவர் நம்மிடமும் எதிர்பார்கின்றார்.”
“ ஆண்டவரே தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள். அவனை நான் மன்னிக்க முடியாது.”
“ அப்படியானால் நான் இனிமேல் எந்த விதத்திலும் உன்வீட்டில் அடி எடுத்து வைக்க மாட்டேன். உன்னுடன் நானோ என் தாயாரோ என் அப்போஸ்த்தலரோ ஒருவரும் பழகாமல் உறவை முறித்துக் கொள்வோம்.சம்மதமா? “
“ வேண்டாம் ஆண்டவரே..தங்கள் வாயிலிருந்து இப்படி ஒரு சொல் எனக்கு வர வேண்டாம். தாங்கள் சொல்லியபடியே நான் செய்வேன்.”
“ சரி .இப்போது யூதாஸ் எங்கே செல்கிறான்.?”
“ வேறு எங்கே? கைப்பாசின் வீட்டுக்குத்தான். என்னை ஒரு முத்தமிட்டு காட்டிக்கொடுத்து ஒரு அடிமாட்டு விலைக்கு விற்கத்தான் அங்கே போகின்றான். தேவாலயத்தில் பலியாகப்போகும் ஒரு செம்மரி ஆட்டுக்குட்டியின் விலை முப்பது வெள்ளிக்காசுகள் .அவன் விற்பது இயேசு எனப்படும் இந்த செம்மரியைத்தான் “
“ ஆண்டவரே யூதாஸை தடுக்க முடியாதா?”
“ முடியாது. என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள யாவும் நிறைவேறியே ஆகவேண்டும். நான் வார்த்தையாகிய சுதனாகிய செர்வேசுரன். நான் இயேசு என்னும் பெயரில் மனிதாவதாரமாக வந்திருப்பதால் என்னைகொல்ல சாத்தானின் தலைவன் லூசிபரும் மனிதனான யூதாசிடம் வந்திறங்கி இருகின்றான். யூதாஸ் தன்னை முழுவதும் லூசிபரிடம் கையளித்துவிட்டான். எனவே என்னால் யூதாசை காப்பாற்ற முடியாது. இதற்காகத்தான் நான் அவனை என்னிடம் முற்றிலும் சரணாகதி அடைய சொன்னேன். ஆனால் அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.. எனவே நான் அவனில் பிரவேசித்து லூசிபரை வெளியேற்ற முடியவில்லை. ஒரு மனித இதயத்தில் ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது சாத்தான் இருக்க வேண்டும். நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்க முடியாது.. நான் ஒளியானவன்.அவன் இருளானவன். நான் இருக்குமிடம் பரிசுத்தமானது. அவன் இருக்குமிடம்  அசுத்தமானது. நான் இருக்குமிடம் சந்தோஷமாக இருக்கும். அவன் இருக்குமிடம் துக்கமாக இருக்கும். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்..ஆகவே மனிதார்களே நீங்கள் யாரை தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். சொல்லப்படாத ரகசியம் என்பது ஏதும் இல்லை.”
“ அப்படியானால் யூதாஸின் கதி என்னவாகும்?”
“ தேவாலயத்தின் தலைமை சங்க உறுப்பினர்கள் யூதாசை மூளை சலவை செய்வார்கள். இல்லாத அல்லது கொடுக்க இயலாத பதவிகளையும் பட்டங்களையும் அவனுக்கு கொடுப்பதாக அவனுக்கு வாக்களிப்பார்கள். இத்தகைய பெருமைகளைத்தான் அவன் முன்பே தேவாலயத்தில் எதிர்பார்த்தான். ஆனால் அவர்களுக்கு அப்போது அவன் தேவையாய் இல்லை. எனவே அவன் அதிலிருந்து வெளியேறி என்னிடம் வந்தடைந்தான். தலைமைச்சங்கத்தில் கிடைக்காத பெருமைகள் என்னிடம் கிடைக்குமென்று என்னிடம் வந்தான். என்னிடமும் அவன் எதிர்பார்த்து வந்தது கிடைக்காமல் போனதால் மீண்டும் அவர்களிடம் சரணாகதி அடைந்துவிட்டான். ஆனால் அவனுக்கு நேரப்போகும் கதிதான் மிகவும் பரிதாபமானது. ஒன்று அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறாவிட்டால் அல்லது அவர்களின் கடவுற்கொலை முடிந்துவிட்டால் அவனை கொண்று விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். அல்லது யூதாஸ் தான் தேடியது கிடைக்காத ஏமாற்றத்தில் தற்கொலை செய்து கொள்வான்.”
   இயேசுநாதர் சொல்லியபடியே அனைத்தும் நடந்தது. மூளைச்சலவை செய்யப்பட்ட யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுக்கும் எண்ணத்தில் உறுதியாய் இருந்தான். பெரிய வியாழன் அன்று கால் கழுவும் சடங்கில் இயேசு யூதாசின் கால்களையும் கழுவினார். அப்போது யூதாஸ் தன் கால்களை விசுக்கென்று இழுத்துக்கொள்ள அவன் வலதுகால் இயேசுவின் தாடையில் இடித்தது.. திடுக்கிட்டான் யூதாஸ்,”ஆண்டவரே இது தற்செயலாய் நிகழ்ந்தது. நான் வேண்டுமென்று செய்யவில்லை.” என்றான்.
“ பரவாயில்லை யூதாஸ். நீ வேண்டுமென்று செய்யவில்லைதான்.. ஆனாலும் அன்று இசையாஸ் கூறியபடி,” என்னோடு பந்தி அமர்பவனே எனக்கு எதிராக தன் குதிகாலை தூக்கினான்” என்பது நிறைவேற வேண்டுமல்லவா? அதனால்தான் இவ்வாறு நடந்தது” என்றார்.ஆனாலும் நீ தெரிந்தே செய்யப்போகும் காரியத்திற்கு நீ தெரியாமல் செய்த காரியம் அற்பமானதே.. மன்னிக்கக்கூடியதே” என்றார். பிறகு இயேசுநாதர் திவ்ய நற்கருணையை ஸ்தாபித்து, குருத்துவத்தையும் ஸ்தாபித்து தன் ஆயுளின் கடைசி பாஸ்க்காவையும் முடித்து வைத்தார். யூதாஸ் வெளியே கிளம்பினான். அப்போது இயேசுநாதர்,” யூதாஸ்…நீ செய்யப்போகும் காரியம் என்னவென்று உனக்கும் தெரியும் நான் செய்யப்போகும் காரியம் என்னவென்று எனக்கும் தெரியும்..ஆகவே நீ செய்ய வேண்டிய காரியத்தை விரைந்து செயலாற்று “ என்றார்.
   வெளியே சென்ற யூதாஸ் தன் நண்பர்களை சந்தித்துவிட்டு தன் வீடு சென்றான்.  யூதாசின் நண்பர்களில் ஒருவன் அவன் காதில் ஏதோ ஒன்றை கிசுகிசுத்தான். யூதாசின் மனத்தில் கலவரம் வெடித்தது. அவன் முகத்தில் கோப அலை வீசியது. எள்ளும் கொள்ளும் வெடித்தது. வீட்டினுள் நுழைந்த அவன் தன் மனைவியை,” அடியே ரபேக்கா..என்னை என்ன இளிச்சவாயன் என்று நினைத்துக் கொண்டாயா. உன் யோக்கியதை என்னவென்று எனக்கு தெரிந்துவிட்டது. இனிமேலும் என்னை நீ ஏமாற்ற முடியாது “ என்று கத்தினான்.
ஆதுவரை பொறுமையாக இருந்த ரபேக்கா,” இதோபாரும் மனிதா…இந்த இரவு நேரத்தில் நானும் மரியாதையாகத்தான் உம்மிடம் பேச வேண்டி இருக்கின்றது. என் யோக்கியதையில் என்ன குற்றம் கண்டு பிடித்தீர்.”
“ நீ வாலிபத்தில் நாசரேத்தில் ஒருவனை காதலித்தாயாமே? உன் குட்டு வெளிப்படுத்தப்பட்ட பிறகு அந்தக்கிழவன் உன்னை என் தலையில் கட்டிவைத்துவிட்டான். அவன் மட்டும் இப்போது உயிரோடு இருந்தால் அந்த கிழட்டு நாயை கொண்றுவிட்டுத்தான் மறுவேளை பார்த்திருப்பேன்.. உன் காதலன் யார்? இப்போதே உண்மையை சொல்லிவிடு”
ரபேக்கா இதற்கெல்லாம் பயப்படுவதுபோல் தெரியவில்லை.மிகவும் அலட்ச்சியமாக,” ஆமாம்… நான் என் வாலிபத்தில் ஒருவரை காதலித்தது உண்மைதான். அதற்கென்ன அவசரம் இப்போதுவரை. நான் என் மனதில் சுத்தமானவளாகவே இருக்கின்றேன். என் மடியில் கணமில்லை .அதனால் எனக்கு உம்மைக்கண்டு பயமில்லை.”
“ அடியே ரபேக்கா..இப்படிப்பேச உனக்கு என்ன தைரியம். நான் ஒருத்தனைக் காதலித்தேன் என்று உன் கணவனிடமே கூற உன் நாக்கு கூசவில்லை?”
“ இல்லை என் நாக்கோ அல்லது மனசோ எனக்கு கூசவில்லை. நான் வாலிபத்தில் காதலித்தது ஒருதலைகாதல். அது முற்றிலும் என் அறியாமையில் நடந்தது. அப்போது எனக்கு உலகம் புறியாத வயது. இத்தனைக்கும் நான் விரும்பிய அந்த வாலிபரை நான் ஒருதடவைகூட நேரில் சந்தித்து என் காதலை வெளிப்படுத்தியதில்லை. இந்தக்காதல் நிறைவேறாது என்று நான் அறிந்துகொண்டது முதலாய் நான் அந்த மனிதரை வெறுத்து ஒதுங்கிவிட்டேன். இதுதான் நடந்தது. இதை நம்புவதும் நம்பாததும் இனி உம்பாடு.”
“ அடியே பாதகி… சண்டாளி.. நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய். நீ மனதால் கெட்டுப்போன ஒரு விபச்சாரி. உன் அழகு என்னை மயக்கிவிட்டது. உன் பணம் என் கண்னை மறைத்துவிட்டது. என்போல் முட்டாள் இந்த உலகத்தில் யாருமில்லை இப்போது சொல் அவன் யார்?”
“ அவர் பெயரை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னை குற்றம் சாட்டும் நீர் முதலில் குற்றமற்றவராக இருக்க வேண்டும்.. ஆண் என்றால் பெண்ணும், பெண் என்றால் ஆணும் ஈர்க்கப்படுவது உலகின் நீதி. பருவத்தின் கோளாறு. நீ எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரன் என்பதும் பெண் என்றால்போதும் என்னும் அளவுக்கு நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு அலையும் பெண் பித்தர் நீர் என்பதும் எனக்கு தெரியாது என்று நினைத்துக்கொண்டீரோ. நான் ஒரு மரியாதைக்கு, கணவர் என்னும் மரியாதைக்கு கட்டுப்பட்டுக்கொண்டு இருகின்றேன். இல்லை என்றால் நான் எப்போதோ உம்மைவிட்டு விலகிப்போயிருப்பேன்”
“ அடியே ரபேக்கா… நான் அப்படித்தான். நீ உன் பனத்திமிரை என்னிடம் காட்டி என்னை மதிக்க மாட்டேன் என்கின்ராய். எங்கே என்னைவிட்டு விலகிப்போய்விடுவாயோ.? உன் காதலன் உன்னை அழைக்கின்றான் போலும்.அதுதான் உனக்கு தைரியம் வந்துவிட்டது. நீ போவதானால் போய்க்கொள். எனக்கு கவலை இல்லை. ஆனால் அவன் பெயரை மட்டும் எனக்கு சொல்லிவிட்டுப்போ”
“ அடப்பாவி மனிதா. உன்  நாக்கு அழுகிப்போகும். அவர் பெயரை தவறாக உச்சரித்தால் உன் திரேகம் முற்றிலும் அழுகிப்-போகும். நான் காதலித்தவர் மிகவும் உத்தமர். மிகவும் ஒழுக்க சீலர்.அவர் கடவுளின் அவதாரம் .அவ்வளவு பெருமைக்குறிய அவர் பெயரை உச்சரிப்பதற்குகூட நான் தகுதியானவள் அல்ல.”
“ ஓஓஓஓ… அப்படியா செய்தி. நீ அவர் பெயரை சொல்லவே வேண்டாம்.நானே கண்டுபிடித்துவிட்டேன்.. நீயும் நசரேத்தூர் காரி..அவரும் நசரேத்தூர் காரர். அவர் இயேசுநாதர் தானே?””
 “ஆமாம்.”
“ஆ நசரேத்தூர் இயேசுவே… அவள் காதலன் நீர்தானோ’ கடைசியில் நீர் என் அடிமடியிலேயே கை வைத்துவிட்டீரா. இதற்கு நான் பழிக்குப்பழி வாங்காமல் விடமாட்டேன்.”
“ இதோ பாரும் அன்பரே…வார்த்தையை அளந்து பேசும். நான் அந்த மகானிடம் ஒருதடவைகூட நேரில் சந்தித்து பேசியதில்லை. நடந்த தவறு முற்றிலும் என்னுடையது. இதில் அந்த மஹானை இழுப்பானேன். உமக்கு புத்தி இருந்தால் யோசித்துப்பாரும். ஆத்திரத்தில் அறிவிழந்து பேச வேண்டாம்.அது தேவ கோபத்தை வரவழைக்கும். அதை உம்மால் தாங்க இயலாது. ஆத்திரத்திலும் அவசரத்திலும் எடுக்கும் எந்த முடிவும் தவறாகத்தான் போகும். நிதானமாக யோசித்து செயல்படும்.”
 ஆனால் ஏற்கனவே சாத்தானின் பிடியில் சிக்கியிருந்த யூதாசுக்கு தன் மனைவியின் காதலுக்கு காரணமாயிருந்தவர் இயேசுதான் என்று தெரிந்ததும் அவர் மேல் மிகுந்த வர்மம் கொண்டான். அவரை காட்டிக்கொடுத்துவிட்டுத்தான் மறு வேலை பார்த்தான்.
   அதுவரை மிகுந்த வீராப்பும், தைரியமுமாக இருந்து இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசுக்கு இப்போது சாத்தான் வேறுமாதிரியான பாடத்தை போதித்தான். எனவே இப்போது யூதாஸ் வேறு மாதிரியான சுபாவத்துக்கு மாறினான். பயமும்,கோழைத்தனமும், அவ நம்பிக்கையும் கொண்ட மனிதன் ஆனான். தான் செய்தது என்ன பயங்கரமான பாவம் என்பதை உணர்ந்தவனாக,” ஐய்யோ நான் பெரும் பாவியானேனே ..மாசற்ற என் ஆண்டவரை முப்பது வெள்ளிகாசுக்கு அசைப்பட்டு நான் காட்டிக் கொடுத்தேனே. எனக்கு முப்பது வெள்ளிகாசு வேண்டும் என்று இயேசுவிடம் கேட்டிருந்தால் அவரே எனக்கு கொடுத்திருப்பாரே. எனக்கு மன்னிப்பே இல்லை “ என்று அங்கலாய்த்தான். அதுவரை நல்லவனாய் இருந்து சோதனைக்கு இடம்கொடுத்து ஒரு சாவான பாவத்தைக் கட்டிக்கொண்ட ஆத்மாவுக்கும் இத்தகைய ஒரு அங்கலாய்ப்புதான் ஏற்படும். இதுதான் சாத்தானின் தந்திரம். பிறகு இதே காரணத்தை காட்டிக்காட்டி அதன் பின் விளைவுகளை பூதாகரமாக காட்டி சாத்தான் அந்த ஆன்மாவை தன் ஆதிக்கத்தில் நீடித்து இருக்கச்செய்து நிலைமையை மேலும் மேலும் மோசமாக்குவான். இப்படியாகத்தான் யூதாசுக்கும் நடந்தது. இதிலிருந்து தப்பிக்க தற்கொலைக்கு முடிவெடுத்தான்.அன்றைய பெரிய வெள்ளிகிழமை இயேசுநாதருக்கும் யூதாசுக்குமாய் வெகு பயங்கரமாக விடிந்தது.தன் கணவனின் நோக்கத்திலும் தோற்றத்திலும் ஏற்பட்ட பெரும் மாறுதலை யூதாசின் மனைவி ரபேக்கா கவனிக்கத்தவறவில்லை.
” அன்பரே..நீர் என்னவானாலும் என் கணவர். உம்மிடம் வாதிட்டு எந்த பிரயோஜனம் இல்லை என்பது எனக்குத்தெரியும். சொல்லுங்கள் என்ன நடந்தது..உமக்கு என்மீது இருந்த ஆத்திரத்தினாலும் பணத்தாசையினாலும் இயேசுநாதரை காட்டிக்கொடுத்துவிட்டீர்..அப்படித்தானே…சொல்லுங்கள் என் அன்பரே.. சொல்லுங்கள்.”
“ என் அன்பே..உன் பரிசுத்தமான அன்பை புறிந்துகொள்ளாதபடி சாத்தான் என் புத்தியை மாற்றிவிட்டான். அதைவிட மோசம் என் பத்தினியை இந்த இயேசுநாதருடன் சம்பந்தப்படுத்தி என்னை வெறி ஏற்றிவிட்டன். ஆத்திரமும், கோபமும், கோழைத்தனமும், பேராசையும் இன்னும் எத்தனை எத்தனை வெறித்தனங்களும் சேர்ந்து என்னை வெறிகொள்ளச் செய்துவிட்டன.இத்தனை பேய்களும் என்னை ஆட்கொண்டுவிட்டபடியால் நான் மதி இழந்தேன். சாத்தானின் கைப்பாவை ஆனேன். முடிவில் என் ஆண்டவரை நான் முத்தமிட்டு காட்டிக்கொடுத்துவிட்டேன். ஐய்யோ பாவமே… என் பெரும்பாவமே… என்னைவிட்டு விலகிப்போ…என்னை தனியே விடு… என்னை கதிகலங்க வைக்காதே..”.என்று ஓஓஓவென்று அழுதான்.
 ஆனால் அவன் மனைவி ரபேக்கா,” அன்பரே..நீர் இதைச்செய்வீர் என எனக்கு மிகமிக நன்றாய் தெரியும். எப்படி எங்கிறீர்களா?’  தலைமை குரு கைப்பாஸின் மனைவியும் நானும் சிநேகிதிகள். அங்கு என்ன சதி நடக்கின்றது என்பது அவளுக்கு நன்றாய் தெரிந்திருந்ததால் அவள் என்னுடன் அந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வாள். என்ன இருந்தாலும் அவளும் நானும் உண்மையுள்ள இஸ்ரேலிய ஸ்த்ரீகள் அல்லவா. தங்கள் கணவர்கள் செய்யும் துரோகங்களை மன்னிக்கும்படி இயேசுநாதரிடமே வேண்டினோம். அவரும் தாம் எத்தகைய குற்றங்களையும் மன்னிப்பதாகவும் அவர்கள் செய்யும் பாவங்களை பரமபிதாவும் மன்னிக்கும்படி வேண்டுவதாகவும் கூறினார். ஆகவே என் அன்பரே ..நம்பிக்கை இழக்க வேண்டாம். என்னோடு வாரும்… நான் உம்மை இயேசுநாதரிடம் அழைத்துப்போகிறேன். அவரை சரணாகதி அடைந்தோரை அவர் ஏற்றுக்கொள்வார். அவரால் மன்னிக்கவே முடியாது என்னும் பாவம் எதுவுமே இல்லை. கவலைப்படாதீர்.. வாரும் என்னோடு” என்றாள்.
“ இல்லை.. என்னால் முடியாது..அவரால் என்னை மன்னிக்கவே முடியாது. எனக்கு தேவாலயத்தில் சில முக்கியமான வேலை இருக்கின்றது. அதை முடித்துவிட்டு வருகின்றேன் “
“ இல்லை அன்பரே…நீர் மிகவும் களைப்பாக இருகின்றீர். காலை உணவு முடித்துவிட்டு செல்லலாம். கோழி சமைத்து வைத்திருகின்றேன்.. இந்த கோழிக்கு இராயப்பர் கோழி என்று பெயராம். கைப்பாசின் மனைவி சொன்னாள். தகாத நேரத்தில் கூவியதால் அவள் இது ஏதோ கெட்ட சகுனம் என்று பயந்துபோய் என்னிடம் கொடுத்தனுப்பினாள். நானும் சமைத்துவிட்டேன். சாப்பிடும்.”
“ அன்பே ரபேக்கா… உன்னால் எப்படி என்னை மன்னிக்க முடிகின்றது… எப்படி என்னை நேசிக்க முடிகின்றது…நான் கொடுத்துவைத்தவன் தான். ஆனாலும் நான் தகுதியற்றவன். என்னை கைவிட்டுவிடு…நான் அனைவரிலும்  சபிக்கப்பட்டவன்..மனிதன் என்னும் பெயருக்கே நான் தகுதி இல்லாத பெரும்பாவி.. தயவு செய்து என்னை விட்டுப்போய்விடு. எனக்காக நரகம் தன் வாயை திறந்திருக்கின்றது. அதோ லூசிபர் தன் கைகளை விரித்து என்னை வா வா என்று கூப்பிடுகின்றான்.”
  “ அன்பரே திடன்கொள்ளுங்கள். நம்பிக்கை கொள்ளுங்கள். இது எல்லாம் அந்த லூசிபரின் மாயத்தோற்றம்.  இந்த நேரத்தில்தான் நாம் விழிப்பாய் இருக்க வேண்டும். இயேசு நாதரிடத்தில் மன்னிப்பு பெற வாருங்கள். அவரும் உம்மை மன்னிக்க சித்தமாய் இருகின்றார்.”
  “ இல்லை.. அவரால் என்னக்க முடியாது. நான் மனம்திரும்ப வேண்டுமெனவும் காட்டிக்கொடுத்து என் ஆன்மாவை நரகத்துக்கு பாத்திரவான் ஆளாக்காதபடிக்கும் எனக்கு எவ்வளவோ புத்தி கூறினார். ஆனால் நானோ அவர் பேச்சை எதுவுமே காதுகொடுத்து கேட்க்கவில்லை.. இப்போது அவர் என்னை எப்படி மன்னிப்பார். அவரிடத்தில் நான் இருந்தால் நான் அந்தப்பாவியை ஒருக்காலும் மன்னிக்கவே மாட்டேன்.”
“ இல்லை அன்பரே.. நமக்கும் இயேசுவுக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருகின்றது. நாம் மனிதர். ஆனால் அவர் அப்படியல்ல. அவர் கடவுளாகவும் மனிதனாகவும் இருக்கும் ஒரு மகான்.அவரிடம் மன்னிப்பு ஏறாளம் என்பது தாவீதரசரின் வாக்கு.”
“ ரபேக்கா … நீ விஷயம் தெரியாமல் பேசுகின்றாய்.. அவர் எழுதியுள்ளபடியே மரித்து மூன்றாம் நாள் உயிருடன் எழம்புவார். அவர் எழும்பிவந்து என்னை நரகத்தில் போடுவார்.”
ரபேக்காவுக்கும் இது தெரியும் . ஆனால் தன் கணவனின் தற்கொலை எண்ணத்தை மாற்ற விரும்பி “அவர் மரித்த மூன்றாம் நாள் உயிர்தெழ மாட்டார்..அவர் வந்தால்தானே உம்மை நரகத்தில் போடுவார். இதை மெய்ப்பிக்கவா. ஆஹா இராயப்பர் கோழியே..நீ இராயப்பருக்கு சாட்ச்சியம் கூறியது உண்மையானால்…இயேசுநாதர் உயிர்ப்பிப்பது உண்மையானால்  நீயும் உயிர்த்தெழுந்து வந்து எனக்கு சட்ச்சியம் சொல். இது இயேசுநாதர் மேல் ஆணை”  என்றாள் ரபேக்கா. அவ்வளவுதான். சமைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இராயப்பர் கோழி உயிர்பெற்றது..பிறகு மிகுந்த சப்த்தமாக கொக்கரக்கோ என்று மூன்று முறை கூவி எங்கோ  சென்று மறைந்தது.
இதைக்கண்ட யூதாஸ் மிகுந்த திகுலுற்றான். மிகுந்த அவநம்பிக்கைக்கு ஆட்பட்டான். இயேசுநாதர் என்னை மன்னிக்க மாட்டார் என்னைமன்னிக்க மாட்டர் என்று கூவிக்கொண்டே வெளியே ஓடினான். இனி நடக்கப் போவதெல்லாம் பகவான் செயலே என்றும் தன் கையால் ஆகக்கூடியது எதுவுமே இல்லை என்றறிந்த ரபேக்கா ” இயேசு ராஜா…என் கணவரை மன்னியும்.சாத்தானின் தலைவனும் உலகத்துப்பேய்கள் அனைத்தும் என் கணவரை ஆட்கொண்டபிறகு அவரால் என்னதான் செய்ய முடியும். ஆனாலும் அவரை நீர் அறிவீர். அவர்மேல் மிகுந்த இரக்கம் வைத்து அவரை மன்னியும் “என்று கண்ணீர் சிந்தினாள்.
   அப்போது முன்னாள் தலைமை குரு அன்னாஸுடைய மகளும் இந்நாள் தலைமை குருவுமாகிய கைப்பாஸின் மனைவியுமானவள் தலைதெறிக்க ஓடிவந்து, “ ரபேக்கா… மோசம் போனோம்.கடவுளின் மகனாகிய இயேசுவுக்கு தீர்ப்பளிக்க பிலாத்துவின் அரண்மனைக்கு கொண்டு போகின்றார்கள். நிச்சயமாக அவருக்கு சிலுவைசாவுதான் என்று என் கணவர் கூறினார்.. இயேசுவை காக்க என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. உன்னால் முடியுமானால் ஏதாவது செய். உன் கணவன் யூதாஸ் தலைமை சங்கத்தாரிடம் எவ்வளவோ வாதிட்டான். வாய் நிறைய சாபங்கள் கொடுத்தான். பிறகு வெளியே சென்றுவிட்டான். அவனுக்கு என்ன ஆனது என்று இதுவரை எனக்குத்தெரியாது .அடியே ரபேக்கா.. இப்போது உன் கணவரின் நிலையும் என் கணவரின் நிலையும் அச்சம்தரும் மிகுந்த சாபத்துக்குள்ளானது.” என்றாள்.
“ இயேசு நாதருக்கு சிலுவை சாவா..அது மிகவும் கொடிய மரணத்தை தருமே.மிகுந்த அவமானத்துக்கு உள்ளாக்குமே. உச்சம் தலைமுதல் உள்ளங்கால்வரை மிகுந்த வலி வேதனை தருமே… மாட்டேன்.. அவரை இந்த கதிக்கு ஆளாக்க விடமாட்டேன்.. என்னால் ஆனதை நான் செய்வேன்” என்று கூறியபடி பிலாத்துவின் அரண்மனை நோக்கி ஓடினாள்.
பிலாத்துவின் அரண்மனையில் :- இயேசுநாதரிடம் மரண தண்டனைக் கேதுவான குற்றம் ஒன்றுமில்லை எனக்கண்டு அப்போதைய ரோமானிய ஆளுநன் போஞ்சி பிலாத்து, இயேசுவைப்பற்றி உயர்ந்த நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்ததால் அவரை விடுவிக்க வழிவகை தேடினான். அவன் மனதில் பட்டது ஒரு உபாயம். அதாவது அவரை இரத்த விளாறாக அடித்தால் யூதர்கள் திருப்த்தி அடைந்து விடுவர்கள் என்றெண்ணி அவரை நாற்பது சாட்டைஅடிகொடுக்க கட்டளை பிறப்பித்தான்.
   இந்த சமயத்தில்  ப்ரிட்டோரியம் என்னும் பிலாத்துவின் அரண்மனையில் பிரவேசித்தாள்.ரபேக்கா.. இயேசுவுக்கு நாற்பது கசைஅடிகள் தண்டனையாக கொடுக்கப்பட்டதை அறிந்து இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டாள். இந்த கசை அடி சமாச்சாரங்கள் எல்லாம் கதைக்கு உதவாது என்றறிந்த ரபேக்கா அன்னாஸ் மற்றும் கைப்பாசின் உள்ளத்தில் இயேசுவுக்கு சிலுவை சாவு முடிவானதை தொடர்ந்து அவர்கள் பிலாத்துவை நெருக்குவார்கள் என்பதைத்தொடர்ந்து அவள் தன்மனதிலும் ஒரு முடிவெடுத்தாள். அது பயங்கரமான ஒரு முடிவாக இருந்தது. அந்த முடிவின் விளைவு இயேசுநாதரை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி அவரின் திரு இரத்தம் அனைத்தையும் வெளியேற்றியது.
   பிரிட்டோரியம் என்னும் அரண்மனையில் போஞ்சிபிலாத்துவின் கசைஅடி உத்திரவை பெற்றுக்கொண்ட அபியத்தார் எனும் அரண்மனை பாதுகாவலன் அவரை அருகில் உள்ள அந்தோணியா கோட்டைக்கு கூட்டிச்சென்றான். இந்த அந்தோணியா கோட்டையில்தான் இயேசுவுக்கு கசைஅடி தண்டனை நிறைவேறியதும் முள்முடி சூட்டப்பட்ட சம்பவமும் நடந்தது. இன்று இந்த அந்தோணியா கோட்டையை ஒரு தேவாலயமாக மாற்றி The Church of Flagilation என்று அழைகின்றார்கள்.
அந்தோணிக்கோட்டை தலைவனிடம் இயேசுவை ஒப்படைத்து,” கவனம்.. உங்களுடைய அடியில் கைதியின் உயிர் போய்விடக்கூடாது. அவன் உயிரோடு வேண்டும் எச்சரிக்கை” என்றான்.அபியத்தர்.
அதோணியா கோட்டைத்தலைவன்,” அடே.. ரூபஸ்…டைட்டஸ் உங்கள் இருவருக்கும் நல்ல வேலை வந்திருகின்றது. இதோ கைதி..இயேசுநாதர்.. இவருக்கு நாற்பது கசைஅடி கொடுங்கள். கவனம் உங்கள் அடியில் கைதியின் உயிர் போய்விடக்கூடாது. தெரிந்ததா.. போய் தண்டனையை நிறைவேற்றுங்கள்.” என்றான்.
 கைதி இயேசுநாதரை பெற்றுக்கொண்டனர் ரூபஸும் டைட்டஸும். அப்போது முக்காடிட்டபடி தன்னை மறைத்துக்கொண்டு தன் கைகள் இரண்டிலும் இரண்டு பண மூட்டைகளுடன் வந்தாள் ரபேக்கா. ரூபஸ் இதோ உனக்கு ஒன்று…டைட்டஸ் உனக்கு ஒன்று என்று அவர்களிடம் ரகசியமாக கொடுத்தாள்.
 “ அம்மணி.. இது எதற்காக?’
“ உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இயேசுநாதரை நீங்கள் இரத்த விளாறாக அடித்தே கொண்றுவிட வேண்டும். அதற்காகத்தான்.”
“ இவரையா? மஹான் எனப்பட்ட இந்த இயேசுநாதரையா? அப்படி என்னம்மா பகை உங்களுக்கும் இயேசுநாதருக்கும்?”
“ அது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்.. இருப்பினும் நீர் கேட்டதால் நான் சொல்லுகின்றேன். அவரால் என் வாழ்க்கை முற்றிலும் நாசமாகப்போயிற்று.போதுமா? போய் தண்டனையை நிறைவேற்று.
“அதற்கில்லை அம்மா. அரசாங்க சட்டம் கைதிக்கு நாற்பது கசைஅடிகள் தான் தர வேண்டும் என்கின்றது.” என்று இழுத்தான்.
“ ஆமாம்..நீயும் உன் சட்டமும்… இதற்குமுன் நீவீர் இப்படி செய்ததில்லையோ… நீங்கள் சட்டத்தை ஏமாற்றி எத்தனை பேரை அடித்தே கொண்று இருகின்றீர்கள்.. உங்களைப்பற்றி எனக்கு நன்றாகத்தெரியும். உன் அதிகாரி கேட்டால் அவன் பாதி தண்டனையிலேயே செத்துவிட்டான் என்று சொல். போய் வேலையைப்பார்.”
அவ்வளவுதான். அடுத்து நடந்ததுதான் பயங்கரம். இயேசுநாதருக்கு நிகழ்த்தப்பட்ட கசை அடி தண்டனை போல் இந்த உலகில் யாருக்கும் நடந்திருக்காது. இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டபோது தேவத்தாயாரும் இந்த கண்ணறாவிக்காட்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசுநாதர் உடலில் பட்ட பாடுகள் அனைத்தையும் தேவத்தாயார் தன் மனதில் அனுபவித்தார்கள். பாவம். அந்த மாதரசி. பிறகு இயேசு நாதருக்கு முள்முடி சூட்டப்பட்டு குற்றுயிராக கிடக்கும்போது அரண்மனைக்காவலன் அபியத்தார் வந்து இயேசுவை பெற்றுக்கொண்டான்.
“எச்சே ஹோமோ” 
குற்றுயிராய் நின்றிருக்கும்  இயேசுநாதரைக்கண்ட போஞ்சிபிலாத்தும் பதறிப்போனான். என்ன அநியாயம் இது. இவனை மனிதரைபோலவா அடித்திருக்கின்றீர்கள். அடப்பாவிகளா…எச்சே ஹோமோ என்று தன் அரச மொழியான லத்தீனில் கூறினான். அதற்கு இதோ மனிதன் என்று அர்த்தம். மீண்டும் விசாரனண. இயேசுநாதரை காப்பாற்ற போஞ்சி பிலாத்து எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இயேசுநாதரை விடுவித்தால் தன்பதவி பறிபோகும் என்றுணர்ந்த போஞ்சிபிலாத்து அவரை சிலுவையில் அடித்துக் கொண்றுவிட உத்திரவிட்டான்.  அவன் உத்திரவிட்ட இடம் பிலாத்துவின் அரண்மனைக்கு கீழே உள்ள நிலவறையில் கல்தளம் பாவப்பட்ட சமதலத்தில் உள்ளது. இந்த கல்தலம் பாவப்பட்ட இடம் தான் வேதாகமத்தில் கபாத்தா எனப்படுகின்றது. அங்கிருந்த நியாயாதிபதியின் ஆசனத்தில் இருந்தபடியேதான் பிலாத்து தன் தீர்ப்பை வாசித்தான்.
{ இந்த நியாய ஸ்த்தலத்திற்கும் ஒரு சரித்திரம் உண்டு. அதாவது இயேசுநாதர் ஆறுமாத குழந்தையாய் இருக்கையில் பெரிய ஏறோதின் சதியை சம்மனசானவர் திருக்குடும்பத்திற்கு கூறவே திருக்குடும்பமும் எகிப்த்துக்கு தப்பிச்சென்றது.. தன்னை சந்தித்த கீழ்த்திசை ஞானிகள் மீண்டும் தன்னை வந்து சந்தித்து மெசியாவைப்பற்றிய செய்திகள் கூறுவார்கள் என்று எதிர்பார்த்த பெரிய ஏறோது அவர்கள் மீண்டும் தன்னை வந்து சந்திக்காததுபற்றி பெரிதும் கவலை கொண்டான். ஆக மெசியா பெத்லஹேமில் பிறந்தது உறுதி அயிற்று. தனக்கு போட்டியாகவும் தன்னைவிடவும் பெரிய அரசராக தோன்றியுள்ள அரசரை மெசியாவை கொல்லத்தேடினான். எனவே தன் ஆட்ச்சிக்குட்பட்ட அனைத்து ஊர்களிலும் விஷேஷமாக பெத்லஹேமிலும் இரண்டு வயதுகுட்பட்ட ஆண் குழந்தைகளை கொல்ல உத்திரவிட்டான். அதன்படி இங்கு ஜெருசலேமிலும் மாசில்லாக்குழந்தைகளை கொல்ல உத்திரவு பிறந்தது. இந்த உத்திரவை அமுல்படுத்த அரசாங்கம் ஒரு தந்திரம் செய்தது. அதன்படி இரண்டு வயதுக்குட்பட்ட ஆண்குழந்தைகளுக்கு அழகுப்போட்டி வைக்கப்பட்டது. இதில் அனைத்து ஜெருசலேம் தாய்மார்களும் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். ஜெருசலேம் தாய்மார்களும் ஆசை ஆசையாய் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பரிசுகள் கிடைக்கும் என்று நம்பி தத்தம் குழந்தைகளுடன் வந்தனர். ஆனால் அங்கு நடக்கப்போகும் பயங்கரம் அப்போதைக்கு அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பிரிட்டோரியத்துக்கு உள்ளே வந்ததும் வந்திருந்த ஆண்குழந்தைகளை மட்டும் வாங்கிக்கொண்டு தாய்மார்களை வெளியே அரண்மனை சதுக்கத்தில் தனியே விட்டனர். குழந்தைகளை நிலவறைக்குள் கொண்டு சென்றதும் அவர்களை சப்த்தம் போடாமல் வாளால் குத்திக்கொண்றனர்.. உள்ளே போன தன் குழந்தை வெகுநேரம் ஆகியும் வரவில்லையே என்று நினைத்த ஒரு தாய் துணிந்து ரகசியமாக கீழே நிலவறைக்குள் வந்து பார்த்தபோதுதான் அவளுக்கு அங்கே நடந்திருக்கும் பயங்கரம் தெரிந்தது. உடனே அவள் போட்ட கூச்சலால் ஜெருசலேமே பரிதவித்தது. ஜெருசலேம் தாய்மார்கள் பலருக்கு தங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டதை தெரிந்துகொண்டதால் பைத்தியம் பிடித்தது. உள்ளே நிலவறையில் கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவரையும் அங்கேயே புதைத்தனர். அந்த சமாதியின் மீதுதான் யாருக்கும் தெரியாதபடி கல்தளம் பாவப்பட்டு அதன்மீதே பிலாத்துவின் நியாய ஆசனமும் வைக்கப்பட்டது. ஆக மாசில்லாத நம் ஆண்டவுக்கு தீர்வையிடப்பட்ட இடம் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் சுமார் நூற்றைம்பது மாசில்லா குழந்தைகளின். இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கப்பட்ட இடம் ஆகும் தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கியிருந்த சதுக்கத்தில் தான் இயேசுநாதரை கொல்லத்தேடிய கைப்பாசும் அவனுடைய சகாக்களும் அவனை சிலுவை அடியும் அவனை சிலுவையில் அடியும் என்று கத்தி கூச்சலிட்ட இடமாகும்.
  பிலாத்துவின் உத்திரவின்படி இயேசுநாதரும் அவருடன் மேலும் இரு கள்வர்களையும் சிலுவையில் அடித்து கொண்றுவிட உத்திரவை பெற்றுக்கொண்டான் நூற்றுவர் தலைவன் காஷியுஸ். என்னும் ரோமைய வீரன்.  இயேசுவின் பாடுகளின் ஸ்தலங்கள் மொத்தம் பதினான்கு. அதில் முதல்ஸ்தலம் இயேசுவை மரணத்திற்கு தீர்வை இடப்பட்டது. இங்குதான் இயேசுவும் மற்ற இரு கள்வர்களும் தங்களுடைய சிலுவையை பெற்றுக்கொண்டனர். இந்த இடம்தான் [ The Church of Condemnation ] என்றழைக்கப்படுகின்றது.
சிலுவையின் பாடுகளின் பயணம் ஆரம்பம் ஆகும்போது காஷியுஸ் கூறியதாவது,” பொது மக்களே. எச்சரிக்கை. மரண தண்டனை அடைந்த கைதிகளை தொடுவதோ அல்லது விடுவிப்பதோ ஏதேனும் முயற்சித்தால் அவர்களுக்கும் இதே கதிதான். தண்டனை நிறைவேற்றப்பட ஒத்துழைப்பு தாருங்கள். இல்லையானால் சட்டம் பாயும்” என்றான்.
 திருப்பாடுகளின் யாத்திரை ஆரம்பமாகி விட்டது. சிலுவையின்பாடுகளின்போது இயேசுநாதர் ஏழு முறை கீழே விழுந்ததாக திருக்காட்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஏழு முறை விழுந்தது ஏன் என்றால் தலையான பாவங்கள் ஏழு. அதாவது கீழ்படியாமை, ஆங்காரம், கோபம், மோகம், ரோகம், குரோதம், லோபித்தனம் ஆகிய தலையான பாவங்களுக்கு பரிகாரமாகவே சுவாமி ஏழுமுறை கீழே விழுந்தார்.
 இவற்றில் நான்காம் ஸ்தலமானது மிகவும் துக்கமானது. இந்த இடத்தில்தான் இயேசு தன் தாயாரை சந்திகின்றார். இதற்காகவே தன் சிலுவையோடு ஒருமுறை கீழே விழுந்தார். இயேசுவை எழுப்பிவிடும் நேரத்திற்குள்ளாக தன் தாயாரை சந்திக்க நேரம் கிடைத்தது.. மரிக்கப்போகும் தன் மகனுக்கு தாயார் ஆறுதல் சொல்வதா… அல்லது தன் துயரத்தால் இறந்துபோய்விடும் அளவுக்கு துக்கப்படும் தன் தாயாருக்கு மகன் ஆறுதல் சொல்வதா… என்ன பரிதாபம்…ஆனாலும் ஒருவருக்கொருவர் தத்தம் கண்களால் ஆறுதல் சொல்லிக்கொண்டனர். மகனே அன்று நான் ஆகட்டும் சுவாமி உம் சித்தப்படியே எனக்கு ஆகட்டும் என்று கூறியதால் நீ இந்த உலகுக்கு வந்தாய். இப்போதும் நான் சொல்கிறேன்…ஆகட்டும் சுவாமி.ஆகட்டும். உம் சித்தப்படியே எனக்கு ஆகட்டும். உம் கல்வாரிப்பயணம் வெற்றியாக அமையட்டும் என்று கண்னீர் வடித்தாள் தேவ அன்னை. இதைக்கண்ட நூற்றுவர் தலைவன் காஷியுஸ், “ இப்போது அழுது என்னம்மா பிரயோஜனம். நீ உன் பிள்ளையை நல்லபடியாக வளர்த்திருந்தால் இன்றைக்கு உனக்குதான் இப்படியொரு நிலைமை வந்திருக்குமா. இல்லை அவனுக்குத்தான் இப்படியோரு நிலைமை வந்திருக்குமா…வளர்ப்பு சரியில்லை” என்றான்.. இதைகேட்ட தேவதாயாருக்கு இருதயமே வெடித்துவிடும் போல் இருந்தது. எனக்கா பிள்ளையை வளர்க்கத்தெரியாது?.என் மகனை யார் என்று நினைத்துக்கொண்டாய்? அவர் யூத ராஜ சிங்கம். சிங்கம் அமைதியாக இருகின்றது என்று அதை சீண்டி பார்க்கின்றாயா? அவர் எழுந்தார் என்றால் அப்போது தெரியும் சேதி.. அட நாயே.. என்னையா சொல்கின்றாய்   வளர்ப்பு சரி இல்லை என்று…இவ்வாறு கேட்டுவிட வார்த்தைகள் அவர் வாய்வரை வந்துவிட்டன. ஆனால் அவர் தன்னை தாழ்ச்சியினிமித்தம் முழுமையாக அடக்கிகொண்டார். ஆனால் தன் தாயாரின் மனதில் என்ன இருகின்றது என்பதை அறிந்துகொண்ட இயேசுநாதர் நூற்றுவர் தலைவன் காஷியுஸை பார்த்த பார்வையில் அவனது சப்த்த நாடியும் அடங்கிப்போனது.
   இயேசுவைப்பற்றி நன்றாக அறிந்திருந்த காஷியுஸ் அதுமுதல் இயேசுவையும் அவரது திருத்தாயாரையும் மரியாதையாக நடத்த முற்பட்டான். பிறகு 5,6,7, ஸ்த்தலங்கள் கடந்து எட்டாம் ஸ்த்தலத்திற்கு இயேசு வந்திருந்தார்.
    இயேசுவை சிலுவை சாவினின்று தவிர்க்க முயன்று தோல்வியுற்ற யூதாஸின் மனைவி ரபேக்கா இந்த இடத்திற்கு வரவும் இயேசுநாதர் இந்த இடத்திற்கு வரவும் சரியாக இருந்தது. இயேசுவைக்கண்ட மாத்திரத்தில் அவர் முகத்தோற்றத்தைக்கண்ட ரபேக்காவும் அங்கு கூடியிருந்த ஜெருசலேம் பெண்களும் துக்க மிகுதியால் ஓஓஓஓவென்று வாய்விட்டே கதறினார்கள். அப்போது ரபேக்கா பலத்த சப்த்தமிட்டு இவ்வாறு புலம்பினாள். “ ஓஓஓ… மனித புத்திரர்களுக்குள்ளே அதிக சௌந்தர்யமுள்ளவரே  உமக்கா இந்த கதி. …
வலிமை வாய்ந்த அசூரை அடித்த செங்கோல் உம்முடையதல்லவா..அந்த வலிமை வாய்ந்த செங்கோலைப்பிடித்திருந்த உமது கரங்கள் இப்போது சிலுவையை பிடித்துள்ளதே…உமக்கா இந்த கதி…
என் நேசர் வெண்மையும் சிகப்புமாயிருந்து..ஆயிரம் பேர்களில் சிறந்தவர்.-அவர் சென்னி பத்தரைமாற்றுத்தங்கம் போல் விளங்கும்… அந்த அழகு எங்கே?...
அவர் தலை முடியோ பனங்குருத்துப்போல் அழகும் காகம்போல் கருமையாயும் இருக்கும்… அதில் இப்போது  முள்முடி அல்லவா சூட்டப்பட்டுள்ளது.. அந்த அழகு எங்கே?...
 அவர் கண்களோ பாலில் கழுவப்பட்டு மஹா நதிகளின் ஓரமாய் வாசம்பண்ணி மலை அருவி அருகே தங்கும் வெண்புறாவை நிகரும். அந்த அழகு எங்கே?
 அவர் கன்னங்களோ பரிமள வர்க்க பாத்திகள் போன்றவை.. இப்போது அவை அடிபட்டு அடிபட்டு கோரமாய் மாறிப்போனது ஏன்?.
அவர் உதடுகளோ தெளிந்த வெள்ளைப்போளத்தின் சாரத்தை வடியவிடும் லீலி மலர்கள் அவை எப்படி கிழிந்து போயின?
அவர் கரங்களோ சீராய் கடையப்பட்ட  சொக்கப்பச்சை பதித்த பொற்கரங்களேயாம்’ அவை இப்போது சக்த்தியிழந்து போனதெப்படி?’
அவர் மார்போ இந்திர நீல இரத்தினங்கள் பதித்த யானைத்தந்தமேயாம்.
 அவர் கால்களோ பசும்பொன் பாதங்களின்மேல் நிருத்தப்பட்ட பளிங்குத்தூணுக்கு ஒப்பானவை. அவை இப்போது சக்த்தி இழந்து தள்ளாடுவதேன்?”
அவர் முகத்தைக்கண்டால் லீபான் மலையை காண்பதுபோலும் அவர் நிற்கக்கண்டால் சிறந்த கேதுரு மரத்தை காண்பதுபோலும் இருக்குமே… அய்யோ என் ஆண்டவரின் தோற்றம் முற்றிலும் மாறிப்போனதெப்படி?’
 அவர் குரளோசை இனிமையானது. என் நேசர் முற்றிலும் விரும்பத்தக்கவரே . ஐய்யோ… ஐயையோ…என் நேசரின் குரல் முற்றிலும் அடங்கிப்போனது ஏன் என்று அழுது புலம்பித்தள்ளிவிட்டாள்.
அப்போது ஒரு பரிசேயன்,” அடியே ஜெருசலேம் குமார்த்திகளா…அவர் அழகை வர்ணித்தது போதும்.அவர் முழு நிர்வாணத்தையும் மலைமீது காணலாம். மேலே வந்து பாருங்கடி “ என்று கொச்சையாய் தூஷித்தான்.
  அப்போது இயேசுநாதர்,”ஜெருசலேம் பெண்களே..நீங்கள் இங்கிருக்க வேண்டாம்.கடவுள் கொலை செய்பவர் மத்தியில் நீங்கள் நிற்பதைவிட உங்கள் இல்லங்களுக்கு செல்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும். நீங்கள் எனக்காக அழவேண்டாம்..உங்கள் கணவர்களுக்காகவும் உங்கள் பிள்ளகளுக்காகவும் அழுங்கள். ஏனென்றால் இந்த நேரம் தண்டனை இல்லாமல் போகாது. பச்சை மரத்திற்கே இந்த கதி என்றால் பட்ட மரத்துக்கு என்ன ஆகும்? அந்நாளில் பிள்ளை இல்லாத தாய்மார்கள் பாக்கியவதிகள்.. அந்த நாளில் அழிபாட்டுக்குள் முதலில் விழுபவன் பாக்கியவான்.அவன் கொடுத்து வைத்தவன் என்று சொல்லப்படுவான். ஆகவே கொடுமை உங்கள் மேல் விழாதபடிக்கு உடனே வீடு திரும்புங்கள்.. உங்களை நான் ஆசீர்வதிக்கின்றேன். பரமபிதாவிடம் எனக்காக மன்றாடுங்கள் .போய் வாருங்கள்.” என்றார்.
   ஒருவழியாக இயேசு நாதரின் பாடுகளின் பயணம் கல்வாரி மலையில் முடிந்தது. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு சிலுவையும் அதனிடத்தில் நிலையாக நிறுத்தப்பட்டுவிட்டது. இயேசுவின் வலதுபக்கத்தில் ஒரு கள்வனும் இடதுபக்கத்தில் ஒரு கள்வனும் சிலுவையில் அறையப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுவிட்டனர். அப்போது ரபேக்கா நூற்றுவர் தலைவன் காஷியுஸிடம் வந்து தான் இயேசுவிடம் ஒருசில நிமிடங்கள் பேச உத்திரவு கேட்டாள். முதலில் மறுத்த அவன் பிறகு பெரிய மனது வைத்து அவளை இயேசுவிடம் போக அனுமதித்தான்.. ஆனால் அவள் மரணதண்டனை பெற்ற குற்றவாளியை  இயேசுவை.தொட அனுமதிக்கவில்லை.
 அப்போது ரபேக்கா,” ஆண்டவரே நீர் என்னையும் அறிவீர் என் கணவர் யூதாஸையும் அறிவீர்..எங்களை மன்னியும் சுவாமி.. எங்களை மன்னியும்.என் கணவர் உம்மை காட்டிக்கொடுத்த பாவத்துக்கு ஆளானார் என்றால் நான் …அவர் மனைவி… உம்மைக்கொல்லும் பாவத்துக்கு ஆளானேன். இப்படி கணவன் மனைவி இருவருமா தேவ மைந்தனைக் கொல்லும் குற்றத்துக்கு ஆளாக வேண்டும். என்ன அசிங்கமான பிறவி நாங்கள். அவர் செய்தது காட்டிக்கொடுத்த பாவம்.நான் செய்தது கொலைகுற்றம். உமக்கு இந்த சிலுவைச்சாவு வேண்டாம் என்றுதான் ஐய்யா நான் உம்மை சவுக்கால் அடித்தே கொண்றுவிட முயற்சித்தேன். அது உமக்கு எளிதான, வேதனை குறைவான சாவாக முடிந்திருக்கும் அது தோல்வியில் முடிந்தது. என் முயற்சி உம்மைப் பொறுத்தமட்டில் ஒரு கருணைக்கொலை போன்றதே. எங்களை மன்னித்தருளும் ஐய்யா.. என்று கதறினாள். 
 இதே நேரத்தில் யூதாஸ் தனக்கு எவ்வித மன ஆறுதலும் கிடைக்காமல் அலைந்து திரிந்து மிகுந்த அவ நம்பிக்கைக்கு ஆட்பட்டு கடைசியில் ஒரு மரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான். யூதாசின் மரணத்தை இயேசுநாதர் உடனே அறிந்துகொண்டார். ஆனால் யூதாசின் மனைவி ரபேக்காவுக்கு அவள் கணவன் இதே நேரத்தில் தற்கொலை செய்துகொண்டது தெரியாது.
ரபேக்காவை இயேசுநாதர் அறிவார் என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளமலும் அவளுக்கு ஆறுதல் சொல்லும்படியாகவும் அவளுக்கும் அவள் கணவன் யூதாசுக்கும், மற்றும் அவரை இம்சித்த அனைவருக்குமாகவும்’ சேர்த்து பொதுவாக,” பிதாவே…இவர்களை மன்னியும்..இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கின்றார்கள்… இவர்களை மன்னியும் “ என்றார்.
 காஷியுஸ்,” அம்மணி… போதும்…விலகிச்செல்லுங்கள் “ என்றான்.மிகுந்த துயரத்துடன் ரபேக்கா அங்கிருந்து அகன்றாள். சிலுவையின் அடியில் மாதாவுக்கு துணையாக பல பெண்கள் இருந்தாலும் அவர்களுள் இவளும் ஒருத்தியாக அவர்களுடன் கலந்து நின்றாள்.
    தன் மகனுடன் ரபேக்கா பேசிய அனைத்தையும் தேவத்தாயாரும் கேட்டார்கள். தன் மகனுடைய சொல்லொண்ணாத்துயருக்கு இவளா காரணம்? ரபேக்கா.. நீயா இப்படி செய்தாய்.?. உன்னால் அவர்பட்ட கசை அடிகளால் என் மகனின் மார்பும் முதுகும் ஏர் உழுத நிலம்போல் ஆயிற்றே.. இருக்கட்டும் ரபேக்கா இருக்கட்டும் இதுவும் அவர் சித்தம்தான் போலும்.அவர் சித்தப்படியே எனக்கு ஆகட்டும்.” என்றார். இதைக்கேட்ட ரபேக்கா தன்நெஞ்சு வெடித்துவிடும் போல் கதறி அழுதாள். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. என்னை மன்னித்துவிடுங்கள்…என்று மாதாவின் கால்களை கட்டிக்கொண்டு அழுதாள். அம்மா.என்னனைப்போல் பாவி இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. நாசரேத்தில் என்னை நீங்கள் பெற்ற மகள் போல் எவ்வளவோ காலம் ஊட்டி வளர்த்தீர்கள் அம்மா..அதை நான் மறக்கவில்லை. ஆனாலும் என் அறியாமையினால் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தேன்… இந்த பாவப்பட்ட பிறவியை மன்னித்துவிடுங்கள் அம்மா.. மன்னித்துவிடுங்கள்” என்று கதறிகொண்ட மூர்ச்சை ஆனாள் ரபேக்கா. அவள் கண் விழித்துப்பார்க்கும்போது இயேசுநாதர் மரித்துப்போய் இருந்தார்.
பிறகு இயேசுநாதரின் ஈமச்சடங்குகள் அனைத்தும் நல்ல விதமாய் முடிந்தன. ரபேக்கா இப்போது முற்றிலும் மாறிப்போய் இருந்தாள் ..தேவத்தாயாருக்கு ஆறுதலாக அவருடனே தன் காலத்தை கழிக்க முடிவு செய்தாள். இதற்காக தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று இராயப்பரிடம் கொடுத்துவிட்டு மாதாவுடனே தங்கிவிட்டாள்.
   தேவத்தாயாரும் அவளை மறுமணம் செய்துகொள்ளும்படி பலதடவை சொல்லிப்பார்த்துவிட்டார். ஆனால் அவள் கடைசிவரை சம்மதிக்கவே இல்லை..” போதும் அம்மா இந்த உலக வாழ்க்கை. நான் உங்கள் மகனை மணக்க விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. என் தந்தையின் விருப்பப்படி ஒருவனை திருமணம் செய்துகொண்டேன். அவனும் எனக்கு நிலைக்கவில்லை. [ யூதாஸ் தற்கொலை செய்துகொண்டான்.] பிள்ளையை பிடிக்கப்போய் அது குரங்காய் முடிந்தது என்பது போல் அது என்னைப் பொறுத்தமட்டில் மிகச்சரியாக அமைந்தது. உங்களுக்கு மறுமகள் ஆகவில்லையானாலும் மகளாக இருக்கவே இப்போது நான் ஆசைப்படுகிறேன் “என்றாள் ரபேக்கா.
“ ஆகட்டும் அம்மா.. ஆகட்டும். இதுவும் அவர் சித்தம்தான் போலும்.நீ நீடூழி வாழ்க என்றார் தேவத்தாயார். இயேசுநாதர் இறந்து சரியாக பதினைந்து வருடம் அளவாக மாதா இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டு அப்போஸ்த்தலர்களுக்கு ஆறுதல் சொல்வதும் அவர்களை தேற்றுவதும், சமயத்தில் போதிப்பதுமாக அவர்களுடைய ஜீவியம் கழிந்தது.தன் கடைசி வருடத்தில் ஜெருசலேமில் வேதகலாபணை ஆரம்பிக்கும் சூழ்நிலை இருந்ததால் பாதுகாப்பு கருதி தேவத்தாயாரை அவருடைய சீடர் அருளப்பர் அவரையும் அவருடனே தங்கி வாழ்ந்த பெண்களையும் இன்றைய துருக்கி நாட்டில் அமைந்திருக்கும் எப்பேசு பட்டிணத்தில் குடி அமர்த்தினார். இதில் ரபேக்காவும், மதலேன் மரியாளும், செராபி எனப்பட்ட வெரோணிக்காவும் அடக்கம். மாதாவுக்கு தனிவீடும் சற்று தள்ளி மதலேன் மரியாளூம் இன்னும் சற்று தள்ளி ரபேக்காவும் தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள். மாதாவுக்கு உதவிக்கு அவருடைய பெரியம்மா எலிசபெதம்மாளுடைய சகோதரி மாரா என்னும் பாட்டி அவருடனே ஒன்றாக வசித்துவந்தார்கள்.
இப்படி இருக்கையில் ஒருநாள். வெரோணிக்கம்மாள் தலைதெறிக்க ஓடிவந்து மகதலேன் மரியாளை அழைத்தாள். அவளும் ஓடிவந்து ரபேக்காவின் வீட்டுக்குள் வந்து பார்த்தாள்.  அவர்கள் அனைவருமே அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்கள். ரபேக்கா முழுவதுமாக இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். உடனே அவளுக்கு தண்ணீர் தெளித்து மூர்ச்சை தெளிவித்தார்கள்
.” என்ன நடந்தது ரபேக்கா சொல்… என்ன நடந்தது. “
“ இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. இது நானாக ஏற்படுத்திக்கொண்டது .எனக்கு நானே கொடுத்துக்கொண்ட தண்டனை.இது.”
“ அடிப்பாவி… என்னகாரியம் செய்தாய் சொல். இல்லை என்றால் உன்னை காப்பாற்றவே முடியாது. அவ்வளவு இரத்தப்பெருக்கு ஏற்பட்டுள்ளது “
“ யேசுநாதருக்கு சிலுவை சாவு முடிவான தீர்மானதாக இருந்ததால் அந்த அவமான வலிவேதனை தரும் கொடுமையான சிலுவைசாவை அடைவதை விட கசையடிகளால் ஏற்படும் மரணம் அவருக்கு வேதனையும் துன்பமும் குறைவானதாக இருக்கும் என்பதினாலேயே நான் அடியாட்க்களுக்கு அவரை அடித்தே கொண்றுவிட பணம் கொடுத்தேன். ஆனால் விதி வேறுவிதமாக வேலை செய்துவிட்டது. அவர் கசைஅடி மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சிலுவைச்சாவுக்கு கையளிக்கப் பட்டுவிட்டார். நான் எடுத்த தவறான முடிவால் அவர் பட்ட காயம் எத்தனை? சிந்திய இரத்தம் எத்துணை? வலிவேதன எத்தனை? எல்லா வேதனைகளும் அவருக்கு இருமடங்கு, மும்மடங்கு என்று அதிகரித்துவிட்டது. எல்லாம் என் அறியாமையினால் வந்த வினை. இதற்கு பிராய சித்தமாக நான் என்னை வருத்திக்கோள்ள ஆரம்பித்தேன்.
    ஆரம்பத்தில் நான் என்னை கசையால் அடித்தபோது வலி மிகவும் கடுமையாக இருந்தது. ஆனால் போகப்போக எனக்கு அது வலிக்கவே இல்லை. இன்னும் வலி வரவேண்டும் , இன்னும் இன்னும் என்று நான் என்னை அடித்துக்கொள்ளவே….ஒரு கட்டத்தில் அந்த அடிகளே எனக்கு இன்பமாயின. எனக்குள் வேதனையில்லாமல் ரத்தபோக்கு ஆரம்பிக்கவே மேலும் மேலும் எனக்கு வலிவேதனை வேண்டும் என்று என்னை மேலும் மேலும் கடுமையாக சவுக்கால் விளாசித்தள்ள ஆரம்பித்தேன். என் ஆண்டவர் இப்படித்தானே துடித்திருப்பார்… அலறி இருப்பார் என்று வேதனையை அதிகரிக்கும்படி மேலும் மேலும் துன்புற்றேன். இன்று இப்படி அகிவிட்டது.  அவள் கண்கள் சொறுகிகொள்ள ஆரம்பித்தன.”
“ அடிப்பாவி..இப்படியா உனக்கு தண்டனை கொடுத்துக்கொள்வது? இதெல்லாம் உனக்கு தேவையா. கடவுள் உனக்கு கொடுத்திருக்கும் துன்பம் போதாது என்றா இவ்வாறு செய்யத்துணிந்தாய். நீ கணவனை இழந்த துன்பத்தைவிடவா உனக்கு மேலும் ஒரு கொடும் துன்பம் வேண்டும்?”
இந்த சமயத்தில் தேவத்தாயாருக்கு விஷயம் தெரிந்து அவர்கள் ஓடோடி வந்து ரபேக்காவை தன் மடிமீது கிடத்திக்கொண்டார்கள். “ என் மகளே ரபேக்கா…இதோ நான் வந்திருகிறேன் பாரம்மா… ஏன் அம்மா இவ்வாறு செய்து கொண்டாய் ? உன் துன்பத்தில் உனக்கு துணைக்கு ஒரு தாய் இருகின்றாள் என்பதை ஏன் அம்மா மறந்துபோனாய்? “
“ அம்மா… எனக்கு என் கணவர் போல் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் எண்ணம் கிடையாது. என்னால் உம் திருமகனுக்கு ஏற்பட்ட வலி வேதனை எவ்வளவு என்பதை நான் தியானிக்காத நாளே இல்லை. இதற்கு பிராய சித்தமாகத்தான் நான் என்னை வருத்திக்கொள்ள ஆரம்பித்தேன். “
“ எவ்வளவு காலமாக இவ்வாறு செய்து வருகின்றாய்? என்னிடம் நீ ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் அப்போதே தடுத்திருப்பேனே”
“ அதனால் தானம்மா நான் உங்களிடம் சொல்லவில்லை. இயேசுநாதர் இறந்ததிலிருந்து அவர் உயிர்விட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இந்த பதினைந்து வருடங்களாக இப்படித்தானம்மா செய்து வருகின்றேன். அம்மா… நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்க்கலாமா அம்மா?’
“ கேள் ரபேக்கா… கேள்… நீ என்றாவது ஒருநாள் என்னிடம் இந்த கேள்வியை கேட்ப்பாய் என்று எனக்குத்தெரியும். தயங்காமல் கேள்.”
“ஏன் அம்மா உங்களுக்கு என்னைப்பிடிக்காமல் போயிற்று. நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எந்த குற்றமோ,பாவமோ செய்ததாக நினைவில்லை. நாங்கள் வேறு குலம் என்பதாலா… அல்லது. நான் உங்கள் மகனுக்கு தகுதியானவளாக இருக்க முடியாது என்பதாலா? உங்களுக்கு மருமளாக வர நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா… நீங்கள் மட்டும் என்னை உங்கள் மருமகளாக ஏற்றுக்கொண்டிருந்தீர்கள் என்றால் அவருக்குத்தான் இந்த நிலை வந்திருக்குமா? அல்லது உங்களுக்குத்தான் இந்த நிலை வந்திருக்குமா? பாருங்கள் . இப்போது எல்லாம் நாசமாகப்போயிற்று.”
“ மகளே ரபேக்கா…திருமண வாழ்க்கை என்பது குடத்திலிட்ட விளக்கு போன்றது. ஒரு சிறிய வட்டத்துக்குள் அது அடங்கிவிடும். ஆனால் என் மகன் யார்? அவர் தேவ சூரியன் அல்லா. இந்த உலகத்துக்கு அவர் ஞான ஒளி கொடுக்க மனிதாவதரமாக வந்த கடவுள் அல்லவா? இந்த இரகசியங்கள் எனக்கும் என் கணவருக்கும் மட்டுமே தெரிந்திருக்க கடவுள் அனுமதித்திருந்தார். காலம், நேரம் வரும்முன் அவரை இந்த உலகை மீட்க்க வந்த மெசியாவாக வெளிப்படுத்த  கடவுள் எனக்கு அனுமதிக்கவில்லை. அவரை உனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டிருந்தால் இந்த உலகத்துக்கு அவர் வந்த காரியமே முற்றுப் பெறாமல் அல்லவா போய் இருக்கும். அதனால் அன்று சம்பந்தம் பேச வந்திருந்த உன் தகப்பனாரை கடின மனதுடனே இது முடியாது என்று சொல்லி அனுப்பி வைத்த்டுவிட்டேன்.”
“ அம்மா… என்னைப்பொருத்த வரையிலும் ஒரு நாள் வாழ்க்கை என்றாலும் அது இயேசு போன்ற மஹானுடன் வாழ்ந்திருந்தால் அதுவே எனக்குப்போதும் என்றிருந்திருப்பேன். ஆனால் நான் இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசுக்கு அல்லவா வாழ்க்கைபட்டிருந்தேன். இதை நினைக்க நினைக்க எவ்வளவு வருத்தமும் வேதனையுமாய் அல்லா இருகின்றது. மேலும் நான் செய்த பாவம் என்னை ஈரேழு ஜென்மதிற்கும் அல்லவா என்னை வருத்திக்கொண்டிருக்கும்?”
“ இல்லை ரபேக்கா…நீ நினைப்பது தவறு. கடவுள் ஒன்றை வைத்து தான் மற்றொன்றை சரிப்படுத்துவார். உன் கணவன் உன்னை ஒருநாளாகக்கூட புறிந்து கொள்ளாதவனாக இருந்திருந்தான். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை அறிவான்.அதே போல் ஒவ்வொரு மனைவியும் தன் கணவனை அறிவாள். மனதை தேற்றிக்கொள்.. நீ நல்ல மனதுடன்தானே இயேசுவுக்கு அதிகமான கசைஅடி கொடுத்தாய். இதுவும் கடவுளின் சித்தமே. அவர் மரிக்கும்போது அவர் உடலில் ஒரு துளி இரத்தம் கூட இருக்கக்கூடாது என்பது அவரது சித்தம். மேலும் அவரின் ஒவ்வொருதுளி இரத்தமும் இந்த உலகில் எங்கோ இருக்கும் ஒரு பாவிக்கு மீட்பு தரும் அருமருந்தாக வெளிப்பட்டது. அதற்கு கடவுள் உன்னை தேர்ந்து கொண்டார். என் மகனுக்கு சிலுவை சாவை நிறைவேற்ற வந்த அந்த ரோமைய வீரன் காசியுஸை நினைத்துக்கொள். என் மகன் சிலுவையில் இறந்துவிட்டாரா எனக்கண்டறிய அவர் நெஞ்சில் ஈட்டியால் குத்தவில்லையா?. அப்போது அவரிடத்திலிருந்த கடைசி ஒருதுளி ரத்தமும் அவரது இதயத்திலிருந்து வெளிப்பட்டு காஸியுசுக்கு மனமாற்றத்தையும் அவன் கண்ணுக்கு பார்வையையும் தரவில்லையா? ..இப்போது அவன் ஒரு நல்ல கிரிஸ்துவன். காஷியுஸ் என்னும் அவன் பெயரை இராயப்பரிடம் ஞானஸ்நானம் பெற்று லொஞ்சினுஸ் என்று மாற்றிக்கொண்டான். இப்படியாக என்மகனுக்கு வேதனை தந்தவர்கள் அனைவருமே மனமாற்றம் அடைந்து நல்ல கிரிஸ்த்துவர்களாக மாறிவிட்டனர்.      எனவே அதைரியம் அடையாதே. வீணாக உன்னை வருத்திகொள்ளாதே”
“ஆம்மா…இப்போது நான் என்னை உணருகின்றேன்… இத்தனை வருடங்களாக என்னை வருத்திகொண்டிருந்த என் மனதுக்கு பதில் கிடைத்துவிட்டது. இனிமேல் நான் நிம்மதியாக மரிப்பேன்… எனக்கு கண் இருட்டிக்கொண்டு வருகின்றது.”
தேவத்தாயாரின் கண்களில் கண்ணீர் கறைபுறண்டு ஓடியது. “ மதலேன் . உடனே கொஞ்சம் உப்பும் சர்க்கரையும் கலந்து பானகமாக்கி கொண்டு வந்து இவள் வாயில் புகட்டு.”
   அந்த நேரத்தில் ரபேக்காவுக்கு ஜன்னி கண்டது. கைகால்கள் விலுக் விலுக் என்று இழுத்துக்கொண்ட்ன. அவள் பற்கள் படபட வென்று அடித்துக்கொண்டு சற்று நேரத்தில் கிட்டிக்கொண்டன. சற்று நேரத்தில் ஒரு அமைதி. ரபேக்கா இயல்புக்கு திரும்பினாள். பிறகு என்ன நினைத்துக் கொண்டாளோ மாதாவின் கழுத்தை தன் கரங்களால் இறுக கட்டிக்கொண்டாள். அவள் வாயிலிருந்து அம்மா என்னும் வார்த்தை சப்த்தமாக அரம்பித்து சப்த்தமில்லாமல் முடிந்தது. தேவத்தயார்  ரபேக்காவை கட்டியணைத்தபடியே, “ என் மகளே ரபேக்கா… எனக்கு பெண்குழந்தை இல்லாத குறையை போக்க வந்த என் மகளே.. போய்விட்டாயா அம்மா… நான் மீண்டும் தனிமரம் ஆனேனே … ஆண்டவரே இதுவும் உம் திருவுளமோ… அப்படியே ஆகட்டும் சுவாமி ” என்று நெஞ்சு வெடித்துவிடும்போல் கதறி அழுதார்.
ரபேக்கா மாபெரும் பாக்கியமான மரணத்தை அடைந்தாள். அவள் எப்பேசு நகரில் பேர் தெரியாத வரலாறு தெரியாத எத்தனையோ புனிதர்கள் கல்லறைகளில் ஒன்றில் மீளாத்துயிலில் இருகின்றாள்.
 என் குறிப்பு :  இயேசுநாதரின் இளமைப்பருவத்தில் என்னென்ன நடந்தது என்பதுபற்றி விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. அவர் தனது தாய் தந்தையர்க்கு கீழ்படிந்து நடந்து வந்தார் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் திருக்காட்ச்சி வரம்பெற்ற சகோதரி மரியா வால்டொர்டோ அவர்களின் கடவுள் மனிதன் காவியத்தில் அவர் தேவாலயத்தில் தன் பால்ய வயதில் என்னென்ன பேசினார் என்பது பற்றியும் தன் வேதபோதக அலுவலில் இயேசுநாதர் யூதாஸ் உடனான பேச்சு வார்த்தகளைப்பற்றியும் தெளிவாக கூறியுள்ளார்... இந்த கதைக்காக அவரது வர்த்தமானங்களை நான் உபயோகித்துக் கொண்டேன். அந்த புத்தகத்தில் கூட யூதாஸின் மனைவி பற்றி எந்த ஒரு தகவலையும் கூறவில்லை. ஆனால் அதிஸ்ட வசமாக உராந்தா என்னும் ஒரு வலைதலத்தில் இயேசுவின் பால்ய வயதில் என்னென்ன நடந்தது என்பதுபற்றியும் அப்போது ரபெக்கா என்னும் ஒரு பெண் அவரை காதலித்ததாகவும் ஆனால் அந்த காதல் நிறைவேற வில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வலைத்தலம் [ Web site ] எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதும் எனக்கு தெரியவில்லை. ஆனால் ரபேக்கா என்னும் கதா பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த கதாபாதிரத்தை நான் இந்த கதைக்கு உபயோகித்துக்கொண்டேன். ஆக இந்த ரபேக்கா என்னும் கதாபாத்திரம் முற்றிலும் எனது கற்பனையே. இது இப்படித்தான் நடைபெற்றிருக்கும் என்னும் ஒரு யூகத்தின் அடிப்படையில்தான் நான் ரபேக்காவின் கதையை வடிவமைத்தேன். அதற்கு எவ்வித சரித்திர ஆதாரமும் இல்லை.
   இந்த கதையை எழுதுவதற்கு எனக்கு ஆதாரமாக இருந்த கடவுள் மனிதன் காவியம் புத்தக வெளியீட்டாளர்களான தூத்துக்குடியில் அமைந்திருக்கும் [ Rosa Mystica ] மாதா அப்போஸ்த்தொலிக்க  சபையாருக்கும் உராந்தா வலைதலத்தில் வெளியீட்டாளர்களுக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..இந்த கதைக்கு சம்பந்தப்பட்ட படங்களை  நான் எடுத்துக்கொண்ட சம்பந்தப்பட்ட வலைத்தலங்களுக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.



Monday, December 9, 2019

“அவளுக்கென்று ஓர் மனம்.” பாகம் 1

 அவளுக்கென்று ஓர் மனம்.” பாகம் 1

சுவாமி வளர்ந்த இந்த நாசரேத் என்னும் சிற்றூருக்குத்தான் எத்தனை பெருமை.ஒன்றுமில்லாமையிலிருந்துதான் கடவுள் பெறும் சிறப்பான காரியங்களை செய்கின்றார். நாசரேத்தூரிலிருந்து சிறப்பான காரியங்கள் ஏதும் வருமோ? என்கின்றது வேதாகமம். அதாவது இந்த நாசரேத் என்னும் சிற்றூர் சரித்திர முக்கியத்துவம் ஏதும் இல்லாத ஒரு புறம்போக்கு இடம்.
ஆனால் இந்த ஊரில்தான் பிதாப்பிதா ஈசாக்குக்கு ரபேக்கா என்னும் பெண்ணை மணமுடித்தார்கள். அவள் எவ்வளவு பெரும் அழகி என்றால் பிதாப்பிதா ஈசாக்கு இவளைக்கண்ட மாத்திரத்தில் தன் தாயின் மரணத்தால் ஏற்பட்ட பெரும் துன்பத்தை மறந்தார். முதுபெரும் தந்தையும் பிதாப்பிதாவுமாகிய அபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு ஏற்ற ஒரு நல்ல  பெண்ணை தன் குலத்திலிருந்து கொண்டு வர தன் ஊழியக்காரர் ஆகிய எலியேசரை பணித்தார். அவரும் தம் ஆண்டவரின் கிருபையால் தன் எஜமானர் ஈசாக்குக்கு நல்ல பெண்ணை தேர்ந்தெடுத்து கொண்டுவருவதாக  தந்தை அபிரகாமின் தொடைமேல் அடித்து சத்தியம் செய்து கொடுத்து தன் பயணத்தை தொடர்ந்தார். எலியேசர் தன் பணியாளர்களுடனும் பயணம் செய்து வந்த ஒட்டகங்களுடனும் இந்த நாசரேத்துக்கு வரும்போது அவர்களுக்கு பெரும் தாகம் மூண்டது. “ ஆண்டவரே… நான் என் எஜமானருக்கு நல்ல பெண்ணை கொண்டுவருவதாக சத்தியம் செய்து கொடுத்து வந்துள்ளேன். அவள் யார் என எனக்கு காண்பியும். எனக்கும் என் பணியாளர்களுக்கும் என் ஒட்டகங்களுக்கும் யார் தண்ணீர் கொண்டுவந்து தருவார்களோ அவர்களே என் எஜமானருக்கு நல்ல மனவாட்டியாக அமைவார்களாக.. என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே அவர்கள் இந்த நாசரேத் என்னும் சிற்றூருக்கு வந்து அங்கிருந்த பொதுக்கிணற்றருகில் தங்கினர். அப்போது ஒரு பெண் இளமையின் சகல அம்சங்களோடு துள்ளிக்குதித்துக்கொண்டு குடத்துடன் வந்தாள். அவள் எலியேசரையும் அவருடன் வந்திருந்த ஊழியக்காரர்களையும் ஒட்டகங்களையும் கண்டு அவர்கள் பெரும் தாகத்துடன் இருப்பதைக்கண்டு,” ஐய்யா, தாங்கள் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பவர்போல் தோண்றுகின்றது, நீங்கள் யாத்திரீகர்கள் போன்று தோண்றுகின்றீர்கள். நீங்கள் யாராக இருந்தாலும் நான் உங்களுக்கும் உங்களுடன் வந்திருப்பவர்களுக்கும் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் தருவேன். என்றாள்.. இவளக்கண்ட எலியேசர்,” ஆஹா என் ஆண்டவரே… இவளே என் எஜமானருக்கு என்று நீர் காண்பிக்கும் மணவாட்டி.” என்று முடிவு செய்து அவளையே பெண் பேசி முடித்தார். அவள் பெயர்தான் ரபேக்கா. அந்த பொதுக்கிணறும் பேறு பெற்றதே.இந்த கிணற்றுக்கு ஏறக்குறைய அதாவது பிதாப்பிதா ஈசாக்கு காலம் முதல் இன்றுவரை சுமார் மூவாயிரம் ஆண்டு சரித்திரம் உண்டு.எப்போது இந்த கிணறு எப்போது தோண்டப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் இன்றுவரை அதில் தண்ணீர் உள்ளது.
 அந்தக்கிணறு இன்று வரை இருக்கின்றது. அதற்கு மரியாளின் கிணறு என்று பெயர். இந்த கிணற்றில் தேவ தாயார் தண்ணீர் எடுக்க வரும்போதுதான் அதிதூதர் கபிரியேல் சம்மனசானவர் தேவ தாயாருக்கு “அருள் நிறைந்த மரியே “என்று வாழ்த்தினார். ஆண்டவரையோ ஆண்டவருடைய தூதர்களையோ கண்டவர்கள் இறந்துவிடுவார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கை.
மோயீசன் சீனாய் மலையில் தன் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் எரியும் முட்சுடரில் ஆண்டவர் தோன்றியபோது தாம் அவரை பார்க்காமல் முகம் தரைமட்டும் தாழ்ந்து பணிந்து வணங்கினார். இப்படியாகவே எலியாஸ் தீர்க்கதரிசியானவர்  சீனாய் மலையில் ஆண்டவர் தம்மை கடந்துபோகையில் அவரைக்காண பயந்து தம்மை இரு பாறைகளுக்கு இடையே கிடத்திக்கொண்டார். அந்த பாறை சீனாய் மலையில் எலியாசின் குகையில் இன்றளவும் இருகின்றது.
இதே காரணத்தினால்தான் கபிரியேல் தேவ தூதர் தம்மை வாழ்த்தியபோது தேவதாயார் அச்சமடைந்து உடனே தன் இல்லதிற்கு சென்றதாகவும் அங்கே அவருடைய இல்லத்திலேயே மீண்டும் கபிரியேல் தூதன் தோன்றி தன் வாழ்த்துறைகளைக்கூறி ஆண்டவரின் சித்தத்தைக்கூறவே மரியாளும் ,” நான் ஆண்டவரின் அடிமை. அவருடைய சித்தத்தின்படியே எனக்கு ஆகக்கடவது” என்றார். அந்நேரமே தமதிருத்துவத்தின் மூன்றாம் ஆளாகிய பரிசுத்த ஆவியான சர்வேசுரன் தேவதாயாரின் மீது நிழலிட்டார் பரிசுத்த ஆவியாராகிய சர்வேசுரன் தேவத்தாயார்மீது இறங்கிவரும்போது மாதா மிகுந்த பக்தியினாலும் பெண்மைக்கே உறிய அச்சம், மடம், நாணம், பயிற்பு ஆகிய நான்கு வகை குணங்களாலும் ஆட்கொள்ளப்பட்டு மிகுந்த கீழ்படிதலுடனும் மிகுந்த தாழ்ச்சியுடனும் தம்மை கடவுளுடைய சித்தத்திற்கு அடிபணிந்து தம்மை கையளித்து அவர் முகம் காண முயற்சிக்காமல் தரைமட்டும் தாழ்ந்து வணங்கியபடி மண்டியிட்டு ஜெபிக்கும் மேரையாக இருந்தார்கள். அந்த நேரமே மாதாவும் கடவுளின் தாய் ஆனார்கள்.
 ஆக இந்த நாசரேத்து என்னும் ஊரில் இருக்கும் தேவத்தாயாரின் இல்லத்தில்தான் வார்த்தை ஆனவராகிய இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் மரியாளின் திருவயிற்றில் மனிதாவதாரம் எடுத்தார்.
    இதே காலகட்டத்தில் பிதாப்பிதா ஈசாக்கின் மனைவி ரபேக்கா என்னும் பெயருக்கு ஏற்றார்போல் இந்த நசரேத்தூரில் மீண்டும் ஒரு ரபேக்கா தோன்றினாள். அவள் வேத காலத்திய ரபேக்கா போலவேதான் இருந்திருப்பாள். அப்பேற்பட்ட அழகி அவள். அவளுடைய தகப்பனார் பெயர் எஸ்ரா.அவர் காலத்தில் அவர் ஒரு பெரும் வியாபாரி. ஆதலால் அவருக்கு  நாசரேத்தூரிலும் ஜெருசலேமிலும் பெரும் செல்வாக்கு இருந்தது. இந்த ரபேக்காவின் வீடு தேவத்தாயாரின் வீட்டருகேதான் இருந்தது. இந்த ரபேக்காவுக்கு எட்டு வயது ஆகும்போது இயேசுநாதருக்கு சுமார் பனிரெண்டு வயதாக இருந்திருக்கும். பனிரெண்டு வயது முடிந்துவிட்டால் ஆண்பிள்ளை வாலிபனாக கருதப்படுவான். எனவே இயேசுநாதர் தன்னுடைய முதல் பாஸ்கா சடங்கை நிறைவேற்ற இந்த பூவுலகில் இயேசுவின் தந்தையாக இருக்க பாக்கியம்பெற்ற புனித சூசையப்பர் முடிவு செய்தார். இயேசுநாதர் காலத்தில் பாஸ்கா பண்டிகை கொண்டாட கூடுமானவரை பெண்கள். சிலபல வசதிக்குறைவுகளை முன்னிட்டு ஜெருசலேமுக்கு வருவது கிடையாது. அது அவர்களுக்கு கடமையும் கிடையாது, கட்டளையும் கிடையாது. விருப்பப்பட்டவர்கள் அவரவர்கள் குடும்பத்துடன் வரலாம். தேவாலயத்தில் பெண்களுக்கான இடத்தில் ஆண்டவனை தொழுதுகொள்ளலாம். இப்படியாக திருக்குடும்பம் இயேசுநாதரின் முதல் பாஸ்கா பண்டிகை கொண்டாட ஜெருசலேம் புறப்பட்டது. இவர்களுடன் நசரேத்தூரை சேர்ந்த பல குடும்பங்கள் ஜெருசலேம் புறப்பட்டன. அவர்களுள் எஸ்ராவும் அவர்மகள் ரபேக்காவும் அடக்கம்.
இது ஜெருசலேம்.: வார்த்தையானவராகிய இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் இந்தபூவுலகில் மனிதாவதாரம் எடுத்துவந்து இந்த ஜெருசலேமை வந்து அடைந்த போது அவருக்கு எல்லாமே புதுமையானதாக இருந்தது. இயேசுவின் பாட்டி அன்னாம்மாவின் வீடு இதே ஜெருசலேமின் நடுவில் பெதெஸ்த்தா என்னும் அந்த ஆட்டுக்கிடாய் மண்டபத்தின் அருகில்தான் இருந்தது. இன்றுவரையும் நல்லவிதமாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றது.  இதே வீட்டில்தான் தேவதாயார் மரியம்மாள் பிறந்தார்கள். இதே வீட்டில்தான் தேவத்தாயாருக்கும் சூசையப்பருக்கும் திருமணம் நடந்தது. அத்தனை பாக்கியம் பெற்றது இந்த வீடு. [ இந்த பெதெஸ்த்தா குளத்தில்தான் பிற்காலத்தில்  இயேசுநாதர் முப்பது ஆண்டுகளாய் திமிர்வாத நோயால் அவதிப்பட்டவனை ,” எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ “ என்று சொல்லி குணமாக்கினார்.]
    இப்போதும் இதே வீட்டில்தான் திருக்குடும்பம் இயேசுவின் முதல் பாஸ்காப்பண்டிகையை கொண்டாட வந்து தங்கி இருந்தார்கள். அடுத்த நாள் தேவாலயத்தில் சூசையப்பர் இயேசுவுடன் ஆண்கள் பகுதியிலும் தேவத்தாயார் தனியாக பெண்கள் பகுதியிலும் சென்று ஆண்டவரை தொழுதார்கள். தேவத்தாயார் இனி தன் மகனை குழந்தை என்றோ சிறுவன் என்றோ நினைக்க முடியாது. ஏன் என்றால் அவர் இன்றிலிருந்து தேவாலயத்தின் விதிகளின்படி அவர் ஒரு வளர்ந்த இஸ்ரேலியன். இந்த நினைவால் மாதாவின் முகம் சற்றே துவண்டாலும் இனிமேல் தன் மகனை குழந்தையாக அல்லது சிறுவனாக காண்பது முடியாது என்பதால் ஏனோ அவர் கண்கள் கலங்கின. சூசையப்பர் தேவாலயத்தின் உள்ளே சென்று அங்குள்ள ஒரு குருவானவரிடாம் தாம் வந்திருக்கும் காரணத்தை கூறவே அவர் மீண்டும் உள்ளே சென்று வயது முதிர்ந்திருந்த பத்து வேத பாரகர்களை அழைத்து வந்தார். சூசையப்பர் இயேசுவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைகின்றார். அந்த முதிய வேதபாரகர்களுக்கு இயேசுவும் சூசையப்பரும் தலைவணங்கி மரியாதை செய்கின்றார்கள்.
    இவர்களுடைய மரியாதையை ஏற்றுக்கொண்ட அந்த முதிய வேத பாரகர்கள் அவரவர்களுடைய ஆசனங்களில் அமர்ந்தனர். சூசையப்பர் அவர்களுக்கு முகமன் கூறி வணங்கிவிட்டு,” ஐய்யா… இது என்மகன் இயேசு. வேதப்பிரமாணத்தின்படி இவனுக்கு பன்னிரெண்டு வருடங்கள் முடிந்து மேலும் மூன்று மாதங்களும் ஆகின்றது. இஸ்ரேலிய விதிகளின்படி இவன் இனிமேல் சிறுவன் அல்ல. நமது வேதப்பிரமாணத்தின்படி இவன் ஒழுக வேண்டும் என்பதற்காக நான் என் மகனை தயார் செய்திருக்கின்றேன். இனி இவன் மட்டில் எனக்குள்ள கடமை முடிந்து விடுகின்றது. இனிமேல் அவனுடைய நன்மை மற்றும் தீமையான காரியங்கள் அனைத்திற்க்கும் அவனே பொறுப்பு. நானும் என் மனைவி மேரியும் இவனை நம் இஸ்ரேலிய குல வழக்கப்படி சாஸ்த்திர சம்பிரதாயங்கள் ஒழங்குகள், விதிகள் யாவையும் தகுந்த முறையில்  விளக்கம்கூறி தயாரித்துள்ளதால் தாங்கள் அவனை பரிசோதித்து தீர்ப்புகூறி உங்களூக்கு நீதியாக தெரிந்தால் அவனை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். அந்த வேத பாரகர்களும் ,” நல்லது சூசை. நாங்கள் நியாமாக அவனை பரிசோதித்து அவனுக்கு நீதி வழங்கி ஆசீர்வதிப்போம் “ என்றார்கள்.
  குழந்தாய்…இங்கே வா… உன் பெயரென்ன?
  “ நான் நசரேத்தூரின் சூசையின் மகன் இயேசு.”
“ஓ… நீ நசரேதூரிலிருந்து வருகின்றாயா.. அப்படியானால் உனக்கு எழுத படிக்க தெரியுமா ?
ஆம் ஐய்யா..எனக்கு எழுத, படிக்க மட்டுமல்ல… அவற்றின் உட்பொருட்க்களின் அர்த்தத்தையும் என்னால் கண்டுணற முடியும்.
 “ நீ சொல்வதன் அர்த்தமென்ன?.எங்களுக்கு விளங்கவில்லை. நீதான் அதை விளக்கி சொல்ல வேண்டும்”
“ ஐய்யா….அழகிய ஒரு முத்தானது வெளியில் காணப்படாமல் அதன் அழகற்ற சிப்பியின் உட்பகுதியில் மறைந்திருப்பதுபோல வார்த்தையின் வெளித்தோற்றத்திற்குள் மறைந்திருகின்ற உருவகம் அல்லது அடையாளத்தின் பொருளையும் என்னால் கண்டுபிடிக்க முடியும் “
“ ஆஹா… என்ன ஒரு ஞானமான பதில்.இப்படி ஒரு பதிலை முதியோர் வாயில்கூட அபூர்வமாக எப்போதாவதாகவே நாங்கள் காண்கின்றோம். ஆனால் பாலகா உன் வாயிலிருந்து அதுவும் நசரேத்தூரிலிருந்து வந்திருக்கும் உன் வாயிலிருந்து இப்படி ஒரு பதிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.. பாலகா நீ உன் தந்தையை மகிமை படுத்துகின்றாய். அவர் நிச்சயமாக வேதாகமங்களை ஆழ்ந்து கற்றவறாகத்தான் இருக்க வேண்டும். வாழ்க உன் தந்தை சூசை.”
“ என் தந்தையினுடைய இருதயத்தில் மிகுதியான ஞானம் குடிகொண்டிருகின்றது.”
“ மகனே … உன்னிடம் நான் மூன்று சுருள்களைக்கொடுகின்றேன். அவற்றுள் தங்க நாடா கட்டிய சுருளை வாசி
“ ஐய்யா இது கடவுள் மோயீசனுக்கு சினாய் மலையில் கொடுத்த பத்துக்கட்டளைகள் “
 “ ஆம் இவைகள் பத்துக்கட்டளைகள்தான். அவற்றை இனி மனப்பாடமாக சொல் பார்க்கலாம்.”
இயேசு இந்த பத்துக்கட்டளைகளையும் அதன் விளக்கங்களையும் சொல்லும்போது அவர் சர்வ வல்லமையுள்ள ஒரு ஞனப்பிரசங்கியார் போல தன் குரளை உயர்த்தியும் தாழ்த்தியும் ஒரு பெரும் ஞானி பிரசங்கிப்பதுபோல் தோன்றினார். மேலும் சர்வேசுரன், ஆண்டவர் என்னும் வார்த்தைகள் வரும் இடங்களில் எல்லாம் தன் தலை தாழ்த்தி வணங்கினார். இதை கவனித்த ஒரு முதியவர்,” மகனே.. நீ ஏன் இவ்வாறு தலை வணங்குகின்றாய்.. ஆண்டவனின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் தலை வணங்க வேண்டுமென உனக்கு சொல்லிகொடுத்தது யார்?” என்று வினவினார். 
“ குருவே, இந்த உலகம் வானம், பூமி, மேகம் மேல் உலகம், கீழ்உலகம் அனைத்தையும் படைத்தவர் ஆண்டவர். அவருடைய நாமம் பரிசுத்தமானதே. எனவே அவருடைய பெயரை உச்சரிக்கும்போது அதற்கான மரியாதையை கொடுப்பது நமது கடமை. அரசனுக்கு முன்பாக தலைவணங்கும் நாம் கடவுளுக்கு முன்பாக தலை வணங்க   வேண்டாமோ? அரசன் இன்றிருப்பான்…. நாளை அவன் இறந்தால் அவன் தூசியாகிவிடுவான். ஆனால் நம்மைப்படைத்த ஆண்டவர் நித்தியமானவர்.  என்றென்றும் வாழ்பவர் . நம் ஊனக்கண்களுக்கு அவர் தோன்றுவதில்லையானாலும் நம் உள்ளக்கண்களுக்கு அவர் தோன்றக்கூடியவரே… எனவே அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொரு படைப்பும் அவரைபுகழ வேண்டியது நியாயமானதே.”
“ நன்று சொன்னாய் பிள்ளாய். சூசையே நீர் ஒரு ஞானமுள்ள மகனை பெற்றெடுத்திருகின்றீர். அவன் நாங்கள் மதிக்கும் ஒரு ராபிக்குறிய ஞானத்தைக்கொண்டிருகின்றான். அவனுடைய மேல்படிப்பிற்காக இங்கே ஜெருசலேமிலேயே விட்டுச்செல். நம்மிடையே வாழும் பெரும் ராபி கமாலியேல் இவனுக்கு நல்ல ஆசிரியராக இருப்பார். இவனுடைய தோற்றமும் ஞான முதிற்சியும் எதிர்காலத்தில் இவன் ஒரு பெரும் ஞான பண்டிதனாக ஆவான் என சாட்ச்சியம் கூறுகின்றன.”
வேறு ஒரு முதியவர் எழுந்து,” குழந்தாய் உன்னிடமிருந்து ஒரு ஞானமுள்ள பதிலை எதிர்பார்க்கிறேன். இந்த கேள்வி பெரும் ஞானிகளையும் தடுமாற வைக்கும். சாபாத் நாட்க்களில் எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது என்பது கட்டளை. நீ மட்டுமல்லாது உன் மகனோ மகளோ, உன் வீட்டு வேலைகாரனோகூட வேலை செய்யக்கூடாது. இதற்கு உன் கால்நடைகளும் விதிவிலக்கல்ல. ஆனால் சாபாத் நாளில் ஒரு கோழி முட்டை இட்டுவிட்டால் அல்லது உன் ஆடோ அல்லது மாடோ குட்டிபோட்டல் அதன் உதிரக்கனிகளை பயன்படுத்தலாமா? அது சரியானதாகுமா…அல்லது பாவமாகுமா?
“ ஐய்யா பெரியவரே…அநேக வேத பண்டிதர்கள்…ஷாமோய் என்பவர் உட்பட அவரும் இப்போதுவரை தேவாலயத்தில் இருகின்றார். ஒரு தவறான கருத்தையே கொண்டிருகின்றார் என்றே நான் நினைக்கின்றேன். சாபாத் நாளன்று பிறப்பிக்கப்படும் ஆடோ அல்லது மாடோ அல்லது எந்த ஒரு உயிரினமோ வேதப்பிரமாணத்திற்கு எதிரானது என்று.அவர்கள் நினைகின்றார்கள். மனிதனுக்கும் மிருகத்திற்கும் பிறப்பித்தல் போன்ற காரியங்களில் மிகுந்த வேறுபாடு உள்ளது. சாபாத் அன்று ஒரு குதிரையை வேலை வாங்கினால் அது பாவம். சவுக்கை கொண்டு அடித்து அதை வேலை செய்ய கட்டாயப்படுத்துகின்றேன். அது பாவம் அந்த பாவம் என்னை சேரும். ஆனால் சாபாத் நாளில் இடப்படும் ஒரு முட்டை அல்லது ஒரு மிருகத்தின் குட்டி எதுவும் கடவுளின் பார்வையில் குற்றமுள்ளவை அல்ல.”
“ அது எப்படி?. சாபாத் நாளில் செய்யப்படும் எல்லா வேலையும் பாவமாகுமே?”
“ பெரியவரே.. நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து ஆராய வேண்டும். கருத்தாங்கி பெற்றடுத்தல் என்பது ஒவ்வொரு சிருஷ்ட்டிக்கும் கொடுக்கப்பட்ட கட்டளை. தன் வயிற்றில் முற்றிய கருவை பிரசவிக்க நேரம் வந்தால் அவை பிரசவித்துவிடும். அவைகளுக்கு சாபாத் நாள் பற்றிய கட்டளை தெரியாது. கருத்தரித்தல் மற்றும் பிரசவித்தல் போன்றவை ஆண்டவருடைய சித்தத்தின்படியே நடகின்றன. இல்லாவிடில் மனிதருக்கு கடும் கோடையிலும் கடும் குளிரும் வேலை செய்ய முடியாத நாட்க்களில் பாலோ பால் பொருட்க்களோ, இறைச்சியோ கிடைக்காதபடி தடைசெய்யப்பட்டுவிடும். சாபாத் நாட்க்களில் பிறப்பிக்கப்பட்ட கால்நடைகள் ஆண்டவரின் பார்வையில் பரிசுத்தமானதே. ஏனென்றால் அவை கர்த்தரின் கட்டளைபடியே நடந்துகொள்கின்றது..
“ ஆஹா … என்ன ஞானமான பதில். இவனை நான் இனிமேல் பரிசோதிக்க மாட்டேன்.”
 வேறு ஒரு முதியவர் எழுந்து,” மகனே நீ உருவக அடயாளங்களை கண்டுபிடிக்க முடியும் என்று சொன்னாய் அல்லவா.. மிட்ராஷியத்தை சொல்லு”
இயேசு எந்த தயக்கமும் இல்லாமல் வேத பிரமானங்களையும் கட்டளைகளையும் ஒப்புவிகின்றார். அந்த கட்டளைகள் நடைமுறைக்கு ஒவ்வாதபடியினால் இறைமக்களால் அவற்றை பின்பற்ற முடியவில்லை”
  “ சரி..அந்த பச்சை நாடா கட்டியுள்ள சுருளை எடுத்து வாசி. அதன் உருவக அடையாளங்களையும் அதன் உட்பொருளையும் விளக்குவாயாக”
இயேசு வாசிகின்றார். அரசர் ஆகமம் நான்காம் புத்தகம்.அதிகாரம் 22. வசனம் 10. “ பின்னும் சாப்பான் அரசனை பார்த்து,எல்கியாஸ் குருவானவர் என்னிடத்தில் ஒரு புத்தகத்தை கொடுதார் என்றான். பின்பு அவன் அதை ராசாவுக்கு முன்பாக வாசித்தான். இராஜா கர்த்தருடைய நியாயப் பிரமாணத்தின்  வாக்கியங்களை கேட்டபோது தன் வஸ்த்திரங்களை கிழித்துக்கொண்டு”….
“ மகனே இன்னும் சற்று அப்பால்  அதில் வருகின்ற பெயர்களுக்கெல்லாம் அப்பால் வாசி.”
“ நீங்கள் போய் அகப்பட்ட புத்தகத்தின் வாக்கியங்கள் நிமித்தமாக என்னைபற்றியும் பிரஜையைபற்றியும் யூதா ஜனம் எல்லாத்தையும் குறித்தும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்.ஏனெனில் நமக்காகவே எழுதியிருக்கிற எல்லா வாக்கியங்களின்படி நடக்க நமது பிதாக்கள் இப்புத்தகத்தின் வாக்கியங்களுக்கு  செவிகொடாதபடியினாலேயன்றோ கர்த்தருடைய பெரும் கோபாக்கினியானது நமக்கு விரோதமாய் பற்றியெரிகின்றது என்றான்”
 “ அவ்வளவு போதும். இந்த நிகழ்வு பல நூற்றண்டுகளுக்கு முன் நடந்தது. இந்த பழைய சரித்திர நிகழ்ச்சியில் நீ என்ன உருவக அடையாளத்தை காண்கின்றாய்?”
“ எனக்கு இப்படித்தோன்றுகின்றது. கடவுள் நித்தியராய் இருகின்றார். நித்தியமாயிருப்பவருடன் காலத்தை தொடர்பு படுத்த முடியாது. நம் ஆன்மாவும் நித்தியமாய் இருக்கின்றது. எனவே கடவுளுக்கும் ஆத்துமாவுக்கும் உள்ள உறவும் நித்தியமானதே. ஆகவே அன்று  தண்டனைகுறியதாய் இருந்த ஒரு காரியம் அல்லது குற்றம் இப்போதும் தண்டனைகுறியதாகவே இருகின்றது. குற்றத்தின் விளைவு மாறாது.”
   “ கடவுளிடமிருந்து வருகின்ற ஞானம் இஸ்ராயேலிடம் இப்போது இல்லை. நாம் கடவுளிடமே ஞான வெளிச்சத்தை கேட்க்க வேண்டுமே அன்றி பரிதாபமான மனிதர்களிடம் இல்லை. நீதியும்  கடவுளுக்கு பிரமாணிக்கமும் இல்லாவிடில் வெளிச்சத்தை காண இயலாது. அதனாலேயே மனிதர்கள் பாவம் செய்கின்றார்கள். அவரும் தமது கோபத்தில் அவர்களை தண்டிக்கின்றார்.”
“ பைய்யா, இப்போது நம்மிடம் ஞானம் இல்லையா? 613 விதிமுறைகள் இருகின்றனவே.”
விதிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன.ஆனால் அவைகள் வெறும் வார்த்தைகளாய் இருக்கின்றன. அவற்றை நாம் அறிந்துள்ளோம் ஆனால் கடைபிடிப்பதில்லை..அதனாலேயே நாம் அவற்றோடு தொடர்பில்லாமல் இருகின்றோம். இதுதான் உருவக அடையாளம். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆண்டவரின் சித்தத்தை அறியும்படி அவரிடத்தில் விசாரிக்க வேண்டும். தன்மேல் அவருடைய கோபத்தை வருவிக்காதபடி அச்சித்தத்தின்படி நடக்க வேண்டும்.”
“ ஆஹா… நீ உத்தமமான குழந்தை. தந்திரமான கேள்வின் சூட்ச்சமம் கூட உன் கண்களுக்கு தப்பிக்கவில்லை. அவன் பதிலில் பதட்டம்கூட கொஞ்சமும் இல்லை. அத்தனை தெளிவு. அவனை மெய்யான  ஜெப ஆலயத்திற்கு கூட்டிச்செல்வோம்.”

 பிறகு ஒரு இஸ்ரேலிய இளைஞனுக்கான சடங்குகள் இயேசுவுக்கு நிகழ்த்தப்படுகின்றன. முதற்காரியமாக அவருடைய முடியை குட்டையாக வெட்டுகின்றார்கள். அவருடைய ஒரு சிகப்பு அங்கியைஅவருடைய இடையில் ஒரு நீண்ட பட்டியால் பலதடவை சுற்றி இறுக்குகின்றார்கள். அவருடைய நெற்றியிலும்,கையிலும் , மேற்சால்வையிலும் சின்ன தொங்கள்களை கட்டுகின்றார்கள். ஒருவித அமுக்கு பித்தான்களாள் அவற்றை பதிக்கின்றார்கள். பின்பு சங்கீதங்களை பாடுகின்றார்கள். பின்பு சூசையப்பர்  ஆண்டவருக்கு ஒரு நீண்ட வாழ்த்து ஜெபம் சொல்லி தன்மகன்மேல் எல்லா ஆசீர்வாதங்களும் வர மன்றாடுகின்றார். சடங்கு முடிந்தது. சூசையப்பர் தன்மகனுடன் வெளியே வருகின்றார். அங்கு ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி  நன்றிபலியாக அதை ஒப்புக்கொடுத்து  தங்கள் உறவினர்களுடன் சென்று கலந்துவிட்டார்.
   இப்போது இயேசு இனியும் ஒரு சிறுவன் அல்ல. அவர் இப்போது ஒரு இஸ்ரேலிய வாலிபன்...தன்மகன் இப்போது ஒரு இஸ்ரேலிய யூத வாலிபன் என்பதை  தேவத்தாயரால் நம்பமுடியவில்லை. அவரை பொறுத்தவரையில் அவருக்கு எத்தனை வயதானாலும் அவர் ஒரு குழந்தையே. ஆனால் இன்று ஒரு சிலமணி நேரங்களுக்குள் அவர் தோற்றமே முழுமையாக மாறிப்போனதெப்படி.” இந்த தோற்ற மாறுதலை மேலும் இரு கண்கள் திருட்டுத்தனமாய் ரசித்தன..ஓஓஓ… இந்தக்கண்கள் யாருக்கு சொந்தமானவையாக இருக்கலாம். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இப்படியாக இயேசுநாதரின் முதல் பாஸ்கா முற்றிலும் நல்ல விதமாக முடிந்தது. ஜெருசலேமுக்கு தாங்கள் வந்த காரியம் முடிந்துவிட்டது. எனவே திருக்குடும்பம் மீளவும் நாசரேத் செல்ல ஆயத்தப்பட்டது.
   திருக்குடும்பம் நாசரேத்திலிருந்து ஜெருசலெம் வரும்போது இயேசுநாதர் தன் தாயாரோடு சேர்ந்து வந்திருந்தார். அப்போது அவர் ஒரு சிறுவன். ஆனல் காட்ச்சி இன்று மாறிவிட்டது. அவர் நேற்றிலிருந்து வாலிபன் ஆகிவிட்டதால் அவர் திரும்பிப்போகையில் தன் தந்தை சூசையுடன் சேர்ந்து வரவேண்டும். இவ்வாறாக தேவத்தாயார் தன் பெண்கள் குழுவுடன் வரவும் சூசையப்பர் ஆண்கள் குழுவுடன் வரவும் தங்கள் மூட்டை முடுச்சுகளுடன் புறப்பட்டனர். ஆக சூசையும் மாதாவும் தங்கள் மகன் இயேசு யாருடன் சேர்ந்து வருகின்றார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. ஊர்போய்ச்சேரவேண்டிய ஆர்வம் இவர்களோடு வந்திருந்த பல குடும்பத்தினர்களுக்கும்  இருந்தபடியால் வழியில் பாடல்கள் பாடிக்கொண்டும் கதைகள் பேசிக்கொண்டும் சென்றுகொண்டே இருந்ததால் வழிப்பயணம் விரைவாயும் இருந்தது. சுகமாயும் இருந்தது. ஆனால் இவர்கள் சந்தோஷம் விரைவிலேயே துக்கமாக மாறிப்போகும் என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    இது மிக்மாஷ்:  ஒருநாள் வழிப்பயணம் முடிய வேண்டிய இடம் மிக்மாஷ் என்னும் பட்டிணம். வேத காலத்தில் மன்னர் சவுல் பிலிஸ்த்தியருடன் யுத்தம் செய்துகொண்டிருந்தார். அவர் மகன்  ஜோனத்தான் இந்த மிக்மாஷ் பள்ளத்தாக்கில் யுத்தம் செய்து கொண்டிருந்தான். எதிரிகள் பிலிஸ்த்தியர்கள் இங்கிருந்த பெரும் பள்ளத்தாக்கில் அக்கரையில் முஹாமிட்டிருந்தனர். எனவே ஜோனத்தான்  இந்த பெரும் பள்ளத்தாக்கை சுற்றிவராமல் கீழிருந்து மேலாக ஏறிசென்று பிலிஸ்த்தியர்களை சிதறடித்தான். அன்றைய போரில் ஜோனத்தானுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஜோனத்தானின் வீரம் பெரிதும் புகழ்ந்து பேசப்பட்டது.. இத்தகைய பெரும் போர் நடந்த பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் பெரும் நதி ஒன்று ஓடுகின்றது. அந்த நதிக்கு பீர் என்று பெயர். எனவே அந்த இடமும் அந்த பட்டிணமும் பீர் என்றே அழைக்கப்படுகின்றது. இங்குள்ள நீர் குடிப்பதற்கு பீர் என்னும் மதுவுக்கு ஒப்பான சுவை கொண்டிருந்ததால் அந்த பெயரையே இந்த நதிக்கு பெயராக வைத்திருந்தார்கள். இந்த இடத்தில் தண்ணீர் இருந்ததால் நாசரேத் திருயாத்திரீகர்கள் அன்று இரவு அங்கே தங்கிச்செல்ல முடிவுசெய்தார்கள். அப்போதுதான் மாதவுக்கும் சூசையப்பருக்கும் தங்கள் மகன் இயேசு அவர்களோடு வரவில்லை என்பது தெரியவந்தது.  இந்த நதியும் இந்த பள்ளத்தாக்கும் எவ்வளவு அபாயமானவே. ஒருவேளை தன் நண்பர்களுடன் வந்திருந்து இந்த பள்ளத்தாக்கில்  வழி மாறி சென்றுவிட்டாரோ …. அல்லது ஆர்வக்கோளாறினால் இந்த நதியில் இறங்கி நீச்சல் பழகி அடித்துச்செல்லப்பட்டுவிட்டரோ….எதற்கும் அவர் வயது தோழர்களிடம் விசாரிப்போம் “ இல்லவே இல்லை.. இயேசு எங்களோடு வரவே இல்லை “ என்றார்கள் அவருடைய நண்பர்கள்.   
   அவ்வளவுதான். மாதாவுக்கும் சூசையப்பருக்கும் பெரும் கவலை மூண்டது. அப்போது இரவு நேரம். பசியாவது தாகமாவது.தூக்கமாவது. உடனே  தன்மகனைத்தேடி மாதாவும் சூசையப்பரும்  தங்கள் பயணத்தை ஆரம்பித்து ஜெருசலேம் திரும்பினர். உடன்வந்த திருப்பயணிகள் அடுத்தநாள் காலை புறப்பட்டுச்செல்வோம் என்றனர். ஆனால் யாருடைய பேச்சும் சமாதானமும் அவர்கள் மனதை மாற்ற முடியவில்லை. அவர்கள் மீண்டும் ஜெருசலேமுக்கு தங்கள் பயணத்தை ஆரம்பித்துவிட்டார்கள். மீண்டும் அந்த இரவிலே பெரும் கரடு முறடான மலைப்பகுதியில் பயணம்.  இவர்களுக்கு வழித்துணையாகவும், ஆறுதல் சொல்லவும் இவர்களுடன் வந்தது ஒரு குடும்பம். அது எஸ்ராவும் அவர் மகள் ரபேக்காவும் தான்.
[ இயேசு தங்களுடன் வரவே இல்லை என்று கண்டு உணர்ந்த இந்த இடத்தில் கி.பி.4 ஆம் நூற்றாண்டில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த தேவாலயம் பின் நாட்க்களில் பூகம்பத்தாலும், போர்களினாலும் ,வேத கலாபனணகளாலும் இடிந்து மிகவும் சிதிலமாகப்போயிற்று. இன்று அவ்விடத்தை அடையாளம் காட்டுபவை அதன் இடிபாடுகளே. வெறும் அஸ்த்திவாரம்தன் இன்றளவும் அதற்கு சாட்ச்சியமாக உள்ளன. இந்த சிதிலமாகிப்போன தேவாலயத்தை சுற்றிலும் நவீன காலத்து கட்டிடங்கள் சூழ்ந்துள்ளது. ஆயினும் விஷயம் தெரிந்த திருயாதிரீகர்கள் இங்கு வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.]
   இங்கே ஜெருசலேமில்.:   முதல் நாள் காலையிலிருந்து மாலை வரை எப்படியோ பொழுது சென்றுவிட்டது. ஆனால் மாலையில் எங்கே யார் வீட்டில் தங்குவது.? ஆனால் இயேசுநாதர் கவலைப்படவில்லை.  தன் பரலோகத்தந்தை  தன்னை கைவிடமாட்டார் என்பது அவருடைய கணிப்பு. அப்போது ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தன்னைநோக்கி வருவது தெரிந்தது. வந்தவள்,” மகனே இயேசு… இங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றீர்? எங்கே உம் தாயும் தகப்பனும்?” என்று வினவினாள். இந்தப்பெண் யார்? நேயர்களுக்கு இந்தப்பெண்ணை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது.
    தேவத்தாயாரின் பெரியம்மாதான் எலிசபெதம்மாள். அவரது கணவர் சக்காரியாஸ். இவர்கள் யூதேயாவில் ஜுட்டா என்னும் பட்டிணத்தில் வசித்துவந்தார்கள். இவர்களுடைய மகன்தான் யோவான் ஸ்நானகர். பிதாப்பிதா சக்காரியாஸ் தலைமை குருவாக ஜெருசலேம் தேவாலயத்தில் பணிபுரிய வருடத்திற்கு இருமுறை வருவார். மேலும்  தேவாலயத்தில் அழைப்பு வரும்போதும் தன் உறவினர்களை பார்க்க வரும்போதும் ஜெருசலேமில் அவர்களுடைய உறவினர்கள் வீட்டில்தான் தங்குவார். சக்காரியாஸ் உறவினர் சீராக்கு. ஜெருசலேம் தேவாலயத்தில் தலைமைச்சங்க உறுப்பினர். மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். இவர் மனைவிதான் செராபிஸ் என்பவர். இவரது வீடு ஜெருசலெமில் யேசுவின் சிலுவையின் பாடுகளின் பாதையில் ஆறாம் ஸ்தலமாக இருகின்றது.
  இயேசுநாதர் தம் சிலுவையின் பாடுகளின்போது  இவரது வீட்டின் முன்னே பரிதவித்து வரும்போது அசுத்தமான இவர் முகத்தை செராபீஸ் துடைத்ததால் இயேசு அவருக்கு நன்றியாக தன் முகத்தை அவளது வெண் துணியில் பதித்து கொடுத்தார். அன்றிலிருந்து அவள் பெயர் வெரொணிக்கா என்றழைக்கப்படுகின்றது.
     இந்த வெரோணீக்கம்மாள்தான் இயேசுவை தன்வீட்டில் மூன்று நாள் அதாவது தேவத்தாயாரும் சூசையப்பரும் இயேசுவை கண்டடையும்வரை தன்வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டார்.
 இயேசு மூன்றாம் நாள் ஜெருசலேமில்.:  ஜெருசலேம் தேவாலயத்தில் பிரதான மஹாலில் மூன்று வேத சாஸ்த்திரீகர்களின் குழுக்கள் ஏதோ ஒரு முக்கியமான காரியத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். பாஸ்கா பண்டிகைக்கு வந்திருந்த யாத்திரீகளும் பெருமளவுக்கு கூட்டமாய் இவர்களின் தர்க்க வாதங்களை கேட்க்க ஆவலாய் அங்கே குழுமி இருந்தனர். இயேசுவின் காலத்தில் கமாலியேல் என்னும் வேத சாஸ்த்திரியாரும் அவருடைய ஆசிரியரான ஹில்லல் என்பவரும் ஒரு குழுவாகவும் எதிரணியில் ஷமோய் என்பவர் ஒரு குழுவாகவும் செயல்பட்டு தர்க்க வாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கட்டுக்கோப்பான சீடர் குழுவால் சூழப்பட்டுள்ள கமாலியேல் மெசியாவின் வருகையைப்பற்றி பேசுகின்றார். தானியேல் தீர்க்கதரிசனத்தை அடிப்படையாகக்கொண்டு மெசியா ஏற்கனவே பிறந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார், ஏனென்றால் தேவாலய புனரமைப்பின் கட்டளை பிறப்பிக்கப்பட்டதிலிருந்து தீர்க்க தரிசனம் கூறுகிற எழுபது வாரங்கள் சுமார் பத்து வருடங்களுக்கும் முன்பே முடிந்துபோயிற்று என்று கூறுகின்றார்.
   ஷாமேய் என்னும் வேத பண்டிதர் கமாலியேலின் கூற்றை மறுக்கின்றார். அவர்,” தேவாலயம் புனரமைக்கப்பட்டது உண்மையாயிருந்தால் இஸ்ராயேலின் அடிமைத்தனம் அதிகரித்துள்ளதே… தீர்க்கதரிசிகள்,” சமாதானத்தின் அரசர் ” என்றழைகின்ற மெசியா கொண்டு வருவதாயிருந்த சமாதானம் உலகத்தில் இப்போது இல்லையே. குறிப்பாக ஜெருசலேமில் அது இல்லை. பட்டிணம் எதிரிகளால் நசுக்கப்படுகின்றது. அவனுக்கு எவ்வளவு தைரியம் உள்ளதென்றால் தேவாலயத்தின் வளைவுகளுக்குள்ளே கூட தன் ஆதிக்கத்தை செலுத்துகின்றான். நாட்டின் விடுதலைக்காக எழும் எந்த புரட்ச்சியையும் ரோமர்கள் தங்கள் வாட்க்களால் வீழ்த்துகின்றார்கள். அந்தோணியா கோட்டையிலிருந்து அந்த ஆதிக்கம் நடக்கிறது” என்றார்.
    தாங்கள் சொல்வதுதான் சரி என்பதுபோல் வாதிப்பிரதிவாதங்கள் முடிவில்லாமல் நீளுகின்றனர். எல்லா பண்டிதர்களும் தாங்கள் கற்ற அறிவை வெளிக்காட்டுகின்றார்கள். அவர்கள் நோக்கம் எதிரியை வெல்வதல்ல. மற்றவர்கள் தங்களை பாராட்ட வேண்டுமென்பதிலேயே  குறியாக உள்ளார்கள். அப்போது யாரும் எதிர்பாராத வகையில்  விசுவாசிகளின் கூட்டத்திலிருந்து ஒருகுரல் மிகவும் தெளிவாக கேட்கிறது.” கமாலியேல் சொல்வதுதான் சரி”
 உடனே ஜனக்கூட்டத்திலும் அறிஞர்கள் கூட்டத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இடைமறித்துப்பேசியது யார்? என்னும் கேள்வியும் எழுந்தது. அப்போது யேசுநாதர் யாருக்கும் பயப்படாமல் “ அது நான்தான்” என்று சபைக்கு நடுவே வந்தார். அவருடைய கண்கள் அறிவொளியால் மின்னுகின்றன.
  “ இத்துனை பேர்கொண்ட சபையில் தலையிடும் நீ யார்?”
  “ வேதப்பிரமாணம் கூறுவதை நிறைவேற்ற வந்துள்ள இஸ்ராயேலின் ஒரு மகன்”
  “ மகனே … இங்கு வேதம் கற்ற பல பண்டிதர்கள் ஒரு கருத்துக்காக உரையாடிக்கொண்டிருக்கின்ரார்கள்.. அவர்களுக்கு நடுவே சிறுவன் உனக்கு வேலை இல்லை… நீ போகலாம்.” என்றார் ஷமோய்.
“ இல்லை. அவன் பேசட்டும். அவன் விஷயம் தெரியாமலா கமாலியேல் சொன்னது தான் சரி என்றான்.” தம்பி நீ சொல்ல வந்ததை சொல்லு “ என்றார் கமாலியேல்.
   “ உன் பெயர் என்ன?”
 “ என் பெயர்  நாசரேத்தின் இயேசு.”
 ஹில்லல் என்னும் வேத சாஸ்த்திரி இயேசுவை பார்த்து,” கமாலியேல் சொல்வதுதான் சரி என்றாய். நீ எதை முன்னிட்டு இவ்வளவு நிச்சயமாய் கூறுகின்றாய்?”
இயேசு கூறுகின்றார்,”   காலத்தையும், அடையாளங்களையும் பற்றி தவறக்கூடாத தீர்க்கதரிசனத்திலும் அது நிறைவேறிய காலத்தில் நடைபெற்ற அடையாளங்களியலும் என் காரணம் உள்ளது. செசார் ராயன் நம்மேல் ஆட்ச்சி செய்கின்றான் என்பது உண்மையே. ஆனால் அவ்வரசன்  தன் ராஜ்ஜியத்தின் குடிக்கணக்கு எடுக்க உத்திரவிடும் அளவுக்கு உலகமும் பாலஸ்தீனமும் அந்த எழுவது வாரங்களின் முடிவில் சமாதானத்தில் இருந்தன. அவருடைய ராஜ்ஜியத்தில் போர்களும் பாலஸ்தீனத்தில் குழப்பங்களும் இருந்திருந்தால் அப்படி கட்டளை இட்டிருக்க முடியாது. காலம் அப்படி நிறைவேறியதால் அதுபோல் மற்ற அறுபதிரண்டு மற்றும் கூட்டல் ஒன்று ஆகிய வாரங்களும் தேவாலய புணரமைப்பு முடிவு பெற்றதிலிருந்து பார்த்தால் நிறைவு பெறுகின்றன..  இதனால் மெசையாவானவர் அபிஷேகம் பெறவும் அவரை விரும்பாதவர்களுக்கு தீர்க்கதரிசனத்தின் மீதிப்பாகம் நிறைவேறவும் கூடுமாகிறது. இதை உங்களால் சந்தேகிக்க முடியுமா?. கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் கண்ட நட்ச்சத்திரம் உங்களுக்கு  நினைவில்லையா?. யூதாவின் பெத்லஹேம் வானத்தின் மேல் அது நின்றதல்லவா?. யாக்கோபிடமிருந்து தொடர்பாக வந்த  தீர்க்கதரிசனங்களும் காட்சிகளும் அந்த இடத்தை மெசியாவின் பிறப்பிடமாக குறித்துக்காட்டவில்லையா? மெசியாவானவர் யாக்கோபின் மகன் வழிப்பேரன் அல்லவா? அவர் தாவீதின் வழி வந்தவரல்லவா?. தாவீது பெத்லஹேமில் உள்ளவரல்லவா?. பாலாமை உங்களுக்கு நினைவில்லையா?. யாக்கோபிடமிருந்து ஒரு நட்சத்திரம் தோன்றும்… கீழ்த்திசை ஞானிகளுடைய பரிசுத்தமும் , விஸ்வாசமும் அவர்களுடைய கண்களையும் காதுகளையும் திறக்க அவர்கள் நட்ச்சத்திரத்தை கண்டு அதன் பெயர் மெசியா என்று அறிந்துகொண்டார்கள். அவர்கள் உலகில் இறங்கி வந்திருந்த ஒளியை ஆராதிக்க வந்தார்கள்.”
ஷாமோய்,”  நட்சத்திரம் தோன்றிய காலத்தில் பெத்லஹேம் என்னும் எப்பிரத்தாவில் மெசியா பிறந்தார் என்று நீ சொல்லுகின்றாயா?’
“ஆம்’
ஷாமோய் “ அப்படியானால் இப்போது மெசியாவானவர் இல்லை. பெத்லஹேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள எல்லா ஆண் குழந்தைகளையும்  இரண்டுவயதுக்கு உட்பட்டவர்களை ஏரோது கொன்றுவிட்டான் என்பது உனக்கு தெரியாதா?. வேதாகமங்களில் இவ்வளவு புத்திசாலியாக இருக்கிற நீ இதையும் தெரிந்திருக்க வேண்டும்.” ராமாவிலே ஒரு குரல் சப்தம் கேட்டது.அது ராக்கேல் தன் பிள்ளைகளுக்காக அழுவதாகும். மரித்த ராக்கேலின் கண்ணீர்களை சேகரித்த பெத்லஹேமின் பள்ளத்தாக்குகளும் குன்றுகளும்  கண்ணீர்களால் நிரப்பப்பட்டன. கொலைப்படுத்தப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளைப்பற்றி மீண்டும் அழுதார்கள். அவர்களில் நிச்சயமாக மெசியாவின் தாயாரும் இறந்திருப்பாள்.”
இயேசு,” மூப்பரே.. நீங்கள் சொல்லுவது சரி அல்ல. ராக்கேலின் அழுகை ஓசான்னாவாக மாறியது. எப்படி என்றால் ராக்கேல் தன் துயரத்தில் பெற்ற அங்கேயே புதிய ராக்கேல் [அன்னை மரியாள் ] பரமபிதாவின் பெஞ்சமீனை அவருடைய வலதுகரப் புதல்வனை கடவுளுடைய மக்களை தம் செங்கோலின் கீழ் சேகரித்து அவர்களை மிக அஞ்சத்தக்க அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முன்குறிக்கப்பட்டவரை உலகிற்கு கொடுத்திருக்கின்றாள்.”
ஷமோய்,” அவர் கொல்லப்பட்டுவிட்டால் அது எப்படி சாத்தியமாகும்?”
இயேசு “ எலியாசைப்பற்றி நீங்கள் வாசிக்கவில்லையா?. அவர் அக்கினி ரதத்தில் கொண்டு செல்லப்பட்டாரே?.அப்படியானால் ஆண்டவராகிய கடவுள் தமது ஜனங்களை இரட்சிப்பதற்காக தமது எம்மானுவேலை காப்பாற்றி இருக்க முடியாதா?. இஸ்ராயேலர் தங்கள் நாட்டை நோக்கி செல்லுகையில் கட்டாந்தரையில் நடக்கும்படியாக  மோயீஸ்ன முன்பாக செங்கடலை திறக்க செய்த அவர் தமது குமாரனை தம்முடைய கிரிஸ்த்துவை மனிதனின் கொடூரத்திலிருந்து காப்பாற்ற தம் சம்மனசுகளை அனுப்பியிருக்க முடியாதா? இதோ நான் கூறுகிறேன். கிறிஸ்த்துவானவர் உயிரோடு இருகின்றார். உங்கள் நடுவில் இருகின்றார். அவருடைய நேரம் வரும்போது தம் வல்லபத்தில் தம்மை காண்பிப்பார்.”
     இயேசுநாதர் இந்த வர்த்தமானங்களை கூறும்போது அவருடைய குரல் கூர்மையாகி ஆகாயத்தை நிரப்புகிறது. அவருடைய கண்கள் என்றுமில்லா பிரகாசத்துடன் காணப்படுகின்றன. கட்டளையிடுவதும், வாக்குறுதிகொடுப்பதும் போன்ற கை அசைவுகளை செய்கின்றார். தமது வலது கரத்தை நீட்டியும் தாழ்த்தியும் சத்தியபிரமாணம் செய்பவர்போல்  தோன்றுகின்றார். அவர் ஒரு பையன்தான். ஆனால் ஒரு மனிதனுக்குறிய தோரணையில் காணப்படுகின்றார்.
ஹில்லல்,” குழந்தாய் இவ்வார்த்தைகளை உனக்கு கற்பித்தது யார்?.
இயேசு,” கடவுளின் ஆவியானவர். எனக்கு மனித உபாத்தியாயர் என்று யாரும் இல்லை. இது உங்களுடன் என் வாயின் வழியாக பேசுகின்ற கடவுளின் வார்த்தையாகும்.”
ஹில்லல்.” எங்கள் பக்கத்தில் வா குழந்தாய்.எனக்கு மங்கிய பார்வைதான் உள்ளது. என் நம்பிக்கை உன்னுடைய விசுவாசத்தால் புதுப்பிக்கப்படட்டும். என்னுடைய ஆத்துமம் உன்னுடைய ஆத்துமத்தின் பிரகாசத்தினால் வெளிச்சம் பெறட்டும்.”
 அவர்கள் இயேசுவை கமாலியலுக்கும் ஹில்லலுக்கும் நடுவே அமரச்செய்து அவர் கையில் ஒரு சுருளை கொடுத்து அதன் வேத விளக்கத்தை கேட்கின்றார்கள்.
 இயேசு தெளிந்த குரளில் அதை வாசிக்கின்றார்.
   “ நமது ஜனமே ஆறுதலடையுங்கள். தேறுதல் கொள்ளுங்கள். ஜெருசலேமின் இருதயத்தோடு பேசி அதன் துன்பங்கள் ஒழிந்ததென்றும், அதன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றும்….திடப்படுத்துங்கள். கானகத்து குரல் சத்தத்தை கேளுங்கள். ஆண்டவருடைய பாதையை முஸ்தீப்பு செய்யுங்கள். அப்போது ஆண்டவருடைய மகிமை பிரசன்னமாகும்…இசையாஸ் (.40;1-3 )
ஷமோய்: “ நசரேயனே, இதோ பார். இங்கே ஒரு அடிமைத்தனத்தின் முடிவு பற்றி கூறப்படுகின்றது. ஆனால் நாம் இப்போது இருப்பதுபோல் வேறு எப்போதும் இருந்ததில்லை. மேலும் இங்கே ஒரு முன்னோடிபற்றி கூறப்படுகின்றது. அவர் எங்கே? நீ பேசுவது அபத்தம்.
யேசு,”  ஐய்யா… முன்னோடியாய் வந்தவருடைய எச்சரிப்பு வேறு யாரையும்விட உமக்கே கூறப்பட வேண்டும். அதாவது உமக்கும் உம்மை போன்றவர்களுக்கும். அல்லாவிடில் நீங்கள் ஆண்டவருடைய மகிமையை காண மாட்டீர்கள். அவருடைய வார்த்தையை கண்டுபிடிக்கவும் மாட்டீர்கள். ஏனென்றால் இழிமனமும், அகங்காரமும் பொய்யும் உங்கள் பார்வையையும் கேள்வியையும் தடை செய்துவிடும்.
   ஷமோய்: “ ஒரு போதகரிடம் இப்படிப்பேச எப்படித்துணிகிறாய்.?
இயேசு’” இப்படி நான் பேசுகிறேன். என் மரணம் மட்டும் இப்படியே பேசுவேன். ஏனென்றால் எனக்கு மேலாக ஆண்டவரின் காரியங்கள் இருக்கின்றன. சத்தியத்தின் மட்டில் சிநேகம் இருகின்றது. அவருடைய குமாரன் நான். மேலும் போதகரே…தீர்க்கதரிசிகளும் நானும் கூறுகின்ற அடிமைத்தனம் நீங்கள் நினைக்கின்ற ஒன்றல்ல. நீங்கள் சிந்திக்கின்ற அரசுரிமையும் நீங்கள் நினைகின்றபடி அல்ல. மாறாக மெசியாவின் பேறுபலன்களைக்கொண்டு கடவுளிடமிருந்து  மனிதனை பிரித்துவைகின்ற தீமையின் அடிமைத்தளத்திலிருந்து அவன் விடுவிக்கப்படுவான். எல்லா நுகத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டு நித்திய ராஜ்ஜியத்தின் பிரஜைகளாக ஆக்கப்பட்ட பிரஜைகளில் கிறிஸ்த்துவின் அடையாளம் இருக்கும். ஓ… தாவீதின் வீட்டாரே… உன்னிடம் பிறக்கும் தளிர் மரமாக வளர்ந்து  உலகம் முழுவதையும் மூடி மோட்சம் நோக்கி எழும்பும். அவர் முன்பாக  எல்லா தேசத்தாரும் தலை வணங்குவர். பரலோகத்திலும் பூமியிலுள்ள எல்லா நாவும் அவருடைய நாமத்தை புகழும். கடவுளின் அபிஷேகம் பெற்றவரின் முன்பாக எல்லோரும் தங்கள் முழங்கால்களை மடக்குவர். அவர் சமாதானப்பிரபு. வழிகாட்டுபவர். அவர் தம்மையே கொடுப்பதால் மனம் தளர்ந்துபோய் பசித்து களைத்திருக்கும் ஒவ்வொரு ஆன்மாவையும் மகிழ்ச்சியாலும் ஊட்ட உணவாலும் நிரப்புவார். பரலோகத்திற்கும் பூலோகத்துக்குமிடையே ஒர் உடன்படிக்கையை ஸ்தாபிப்பார். அது எகிப்த்திலிருந்து கடவுள் இஸ்ராயேலரை வெளியே கொண்டு வந்த போது மூப்பர்களுடன் செய்த உடன்படிக்கைபோன்று  இருக்காது. அதிலே அவர்கள் இன்னமும் ஊழியர்களாகவே நடத்தப்பட்டார்கள். ஆனால் இதிலே மீட்ப்பருடைய பேறுபலன்களைக்கொண்டு வரப்பிரசாதத்தை மீண்டும் கொடுத்து மனிதர்களின் ஆத்துமங்களிலே ஒரு மோட்ச்சத்துக் குறிய  பிதாத்துவம் கொடுக்கப்படும். அவர் மூலமாக எல்லா நல்ல மனிதரும் ஆண்டவரை அறிய வருவார்கள். அதன்பின் கடவுளுடைய பரிசுத்த ஸ்தலம் ஒருபோதும் உடைக்கப்பட்டு அழிக்கப்படாது.
ஷாமோய், ” அடேய் பையா…தேவ தூஷணம் பேசாதே. தானியேலை நினைத்துக்கொள். கிறீஸ்த்துவின் மரணத்திற்கு பிறகு ஜெருசலேம் தேவாலயமும் பட்டணமும் தூரத்திலிருந்து வரும் ஒரு சனத்தாலும் தலைவனாலும் அழிக்கப்படும் என்று. ஆனால் நீ கடவுளின் பரிசுத்த ஸ்தலம் அழிக்கப்படாது என்கிறாய். தீர்க்கதரிசிகளுக்கு மதிப்பு கொடு.”
இயேசு,” ஐய்யா பெரியவரே…இதோ நான் உமக்கு சொல்கிறேன். தீர்க்கதரிசிகளுக்கு மேலாக ஒருவர் இருகின்றார். அவரை நீர் அறியவில்லை. அறியவும் மாட்டீர். ஏனென்றால் நீர் அவரை அறிய விரும்பவில்லை. நான் கூறுவது உண்மை என்று சொல்கிறேன். உண்மையான பரிசுத்த ஸ்த்தலம் மரணத்திற்க்கு உட்படாது. அது தன்னை அர்ச்சிகிறவரைபோல நித்திய வாழ்க்கைக்கு எழும்பும். உலகத்தின் முடிவில் அது மோட்ச்சத்தில் வாழும்.”
ஹில்லல்: குழந்தாய் ஆக்ஹே சொல்கிறார்.. ஜனங்களால் எதிர்பார்க்கப்பட்டவர் வருவார். இந்த வீட்டின் மகிமை அப்போது பெரியதாயிருக்கும். இப்பிந்தியதன் மகிமை முந்தியதைவிட அதிகமாய் இருக்கும். என்று. ஒருவேளை அவர் சொல்வது நீ சொல்கிற பரிசுத்த ஸ்த்தலத்தை பற்றிதானோ.?’
  இயேசு,” ஆம் போதகரே.. அதுவே அவருடைய கருத்து. உம்முடைய நேர்மை உம்மை ஒளியை நோக்கி கூட்டி வருகின்றது. கிறிஸ்த்துவின் பலி நிறைவேறும்போது உமக்கு சமாதானம் வரும். ஏனென்றால் கெடுமதி இல்லாத இஸ்ராயேலன் நீர்.”
கமாலியேல்,” இயேசுவே…இதிலே நீர் என்னை தெளிவிக்க வேண்டும். அதாவது போரினால் இந்த மக்களுக்கு அழிவு வருகிறதாயிருந்தால் தீர்க்கதரிசிகள் கூறுகின்ற சமாதானம் வருமென்று நம்புவதெப்படி. எனக்கு தெளிவு தரும்படி கேட்கிறேன்.
  இயேசு,” ஆசிரியரே, கிறிஸ்த்து பிறந்த அந்த இரவில் அங்கிருந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்பது உமக்கு நினைவில்லையா?.சம்மனசுகள்,” நல்ல மனதுள்ளவர்களுக்கு சமாதானம் “ என்று பாடியதாக கூறினார்களே. ஆனால் இந்த ஜனத்திடம் நல்ல மனது இல்லை. அதனால் அதற்கு சமாதானம் இராது. இந்த ஜனம் தன் அரசனை, நீதிமானை, இரட்ச்சகரை ஒப்புக்கொள்ளாது.  ஏனென்றால் அவரை மனித அதிகாரமுள்ள அரசனாக அவர்கள் எதிர்பார்கிறார்கள். ஆனால் அவரோ  உள்ளங்களின் அரசராக இருகின்றார்.  கிரிஸ்த்துவானவர் போதிப்பதை  அவர்கள் விரும்ப மாட்டார்கள்.  அதனால் அவரை நேசிக்கவும் மாட்டார்கள்.  கிறிஸ்த்துவானவர் அவரது எதிரிகளை ரதங்களைக்கொண்டும் குதிரைகளைக்கொண்டும்  தோற்கடிக்க மாட்டார். ஆனால் அவர்  ஆண்டவருக்காக சிருஸ்டிக்கப்பட்ட மனித இதயத்தை நரகத்தில் சிறைப்படுத்த முயற்சி செய்யும் ஆன்மாவின் எதிரிகளை முறியடிப்பார். இஸ்ராயேல் அவரிடமிருந்து எதிர்பார்கின்ற வெற்றி இதுவல்ல. ஜெருசலேமே உன் அரசர் வேசரி மீதும் அதன் குட்டி மீதும் வருவார். வேசரிக்குட்டி அவருக்கு அதிக பிரமாணிக்கமாக இருக்கும். சத்தியத்தினுடையவும் ஜீவியத்தினுடைய வழிகளில் அவரை பின்செல்வதில் வேசரிக்குட்டி வேசரியை முந்திக்கொள்ளும். இஸ்றாயேலோ  தன் கெட்ட மனத்தால் தன் சமாதானத்தை இழக்கும். பல நூற்றாண்டுகள் துன்பப்படும். தன் அரசரையும் துன்பப்பட வைக்கும். அவரை இசையாஸ் கூறும் துயரத்தின் அரசராக்கும்”.
 ஷாமேஷ்,” நசரேயனே… உன் வாய் ஒரே சமயத்தில் பாலையும் தேவ தூஷணத்தையும் சுவைகிறதே. நீ சொல்…முன்னோடி எங்கே? அவரை நாம் எப்போது கொண்டிருந்தோம்?.
இயேசு,” முன்னோடி இருகின்றார். “ எனக்கு முன்பாக என் வழியை ஆயத்தம் செய்ய என் தூதனை அனுப்பப்போகிறேன். நீங்கள் தேடுகின்ற ஆண்டவர் திடீரென்று தன் ஆலயத்தில் நுழைவார். நீங்கள் ஆவலுடன் தேடுகின்ற உடன்படிக்கையின் சம்மனசு அவரே.” என்று மலாக்கியாஸ் தீர்க்கதரிசி சொல்லவில்லையா.? ஆகவே முன்னோடியாய் இருப்பவர் கிறிஸ்த்துவுக்கு உடனடியாக முன் செல்வார். கிறிஸ்த்து இருப்பதுபோல முன்னோடியும் ஏற்கனவே இருகின்றார். இந்த முன்னோடியை நீங்கள் பார்க்கும்போது  கிறிஸ்த்துவின் அலுவல்கள் துடங்குகின்றன என்று நீங்கள் சொல்லக்கூடும். உங்களுக்கு நான் சொல்லுகிறேன்”  கிறிஸ்த்துவானவர் இவ்வழியாக வரும்போது அனேகர் கண்களையும் அனேகர் காதுகளையும் திறப்பார். ஆனால் உங்களுடையவையும் உங்களைப்போன்றவர்களுடையவும் அவர் திறக்க மாட்டார்.  ஏனென்றால் உங்களுக்கு ஜீவியம் கொண்டு வருபவரை நீங்கள் கொண்று போடுவீர்கள்.
    ஆனால் இந்த தேவாலயத்தைவிட உயர்ந்ததும்,  பரிசுத்தத்திலும் பரிசுத்த ஸ்த்தலத்தில்  வைக்கப்பட்டிருகிற பேழையிலும் மேலாயிருப்பதும், கெருபீம்களால் தாங்கப்படுகிற  மகிமையிலும் மேலாயிருப்பதுமான  தமது அரியாசனத்தில்  தமது பீடத்தில் இரட்ச்சகர் அமரும்போது அவருடைய ஆயிரக்கணக்கான காயங்களிலிருந்து  கடவுளை கொலை செய்தவர்களுக்கு சாபமும் புற இனத்தாருக்கு ஜீவியமும் பாய்ந்து வழியும். ஏனென்றால் ஓ..போதகரே, நீர் இதை அறியவில்லை. அவர், “ நான் மீண்டும் கூறுகின்றேன். அவர் ஒரு மனித ராஜ்ஜியத்தின் அரசர் அல்ல. அவர் ஒரு ஞான ராஜ்ஜியத்தின் அரசர். அவருடைய பிரஜைகள் யாரென்றால் அவருக்காக தங்கள் உள்ளத்தில் மறுபிறப்படைய கற்றுக்கொள்கிறவர்களே ஆவர்.”
 இயேசுவின் இந்த வர்த்தமானங்களைக்கேட்ட ஷாமேயும் அவரது குழுவினரும் பெரும் கோபம் கொண்டனர். அவர்கள்,” இந்த நசரேயன் ஒரு சாத்தானாக இருகின்றான் “ என்றார்கள். ஆனால் கமாலியேலும், அவரது ஆசிரியர் ஹில்லலும் ஒரே குழுவாக ,” இல்லை இந்தக்குழந்தை கடவுளின் குழந்தை, கடவுளின் தீர்க்கதரிசி. குழந்தாய், நீ எங்களுடனே இரு.. நான் அறிந்துள்ளவைகளை என் முதிர் வயது உன்னுடைய அறிவுகுட்செலுத்தும். நீ கடவுளுடைய மக்களின் போதகனாய் இருப்பாய்.” என்றனர்.
 இயேசு,” இதோ நான் உமக்கு கூறுகின்றேன்… உம்மைப்போல் பலர் இருப்பார்களானால் இஸ்ராயேலுக்கு இரட்சிப்பு வரும். ஆனால் என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை. என் நேரம் வரும்போது நான் நான் என் உதடுகளாலும், என் இரத்தத்தினாலும் ஜெருசலேமுடன்  பேசுவேன். அப்போது ஜெருசலேமினால் கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளின் கதியே எனக்கும் ஏற்படும். ஆனால் என் உயிருக்கும் மேலாக ஆண்டவராகிய கடவுள் இருகின்றார். என்னை அவருடைய மகிமையின் இருக்கையாக்கும்படியாக அவருக்கு ஒரு பிரமாணிக்கமுள்ள ஊழியனாக என்னை கீழ்ப்படுத்துகிறேன். உலகத்தை அவர் கிறிஸ்த்துவின் பாதத்தில் ஒரு மணை ஆக்குவாரென காத்திருப்பேன். என்னுடைய தருணத்திற்காக காத்திருங்கள். இந்த கற்கள் என் குரலை மீண்டும் கேட்கும். அவை என் கடைசி வார்த்தையை கேட்டு அதிரும். அந்தக்குரளில் கடவுளையே கேட்டு அதினிமித்தம் விசுவாசிகிறவர்கள் பாக்கியவாங்கள். அவர்களுக்கு கிறிஸ்த்துவானவர் அந்த ராஜ்ஜியத்தை கொடுப்பார். அது பரலோகத்திற்குறிய அரசாகும்..அதனால் நான் கூறுகின்றேன்,” இதோ ஆண்டவரே, உமது சித்தத்தை நிறைவேற்ற வந்துள்ள ஊழியன் நான். அவருடைய அந்த சித்தம் நிறைவேறுவதாக. ஏனென்றால் அதை நிறைவேற்ற நான் ஆவலாய் இருகின்றேன்.”.
     இயேசு இவ்வார்த்தைகளை  கூறும்போது அவர் முகம் ஞான அர்வத்தால் எரிகின்றது,. மோட்ச்சத்தை  நோக்கியவாறு திரும்பி இருக்கின்றது. அவருடைய கரங்கள் விரிந்திருக்கின்றன. அப்போது அவர்,கமாலியேலை நோக்கி,” போதகரே… மனுமகனுக்காக நீர் தேடும் ஒரு அடையாளம் உமக்கு அருளப்படும். அது கிரிஸ்த்து உயர்த்தப்படும்போது நீவீர் அதை கண்டடைவீர்” என்றார்.
   அப்போது தேவத்தாயாரும் சூசையப்பரும் அந்த பெரிய மண்டபத்தில் கூடிய கூட்டத்தைக்கண்டு “ ஒருவேளை நம் மகன் இந்த மண்டபத்தில் இருக்கலாம் “ என்றார்.. ஆனால் ரபேக்கா,” அம்மா… இங்கே இருப்பது பெரும் மனிதர்கள் கூட்டம்… இந்த கூட்டத்தில் அவர் இருப்பதற்கு காரணமோ சாத்தியமோ இல்லை” என்றாள். அப்போதுதான் இயேசுநாதர் ,“ இந்தக்கற்கள் கூவும் “ என்று கூறினார். இதைக்கேட்ட மக்கள் கற்கள் கூவிற்றோ இல்லையோ பெரும் கூச்சலாக,” ஆஹா… எப்பேர்பட்ட பிரசங்கம். என்ன அருமையான வேத விளக்கம்,, என்ன அருமையான ஒரு சுய வெளிப்பாட்டு தீர்க்கதரிசனம்.. வாழ்க இயேசு” என்று ஆர்ப்பரித்தனர்.  இதைக்கேட்ட தேவத்தாயார்,” அது என் மகன்தான்… அது என்மகன்தான் “ என்று ஆனந்தக்கூச்சலிட்டுக்கொண்டு சபையின் நடுவே புகுந்து தன் மகனை அள்ளி எடுத்து,” என் மகனே.. ஏன் எங்களுக்கு இப்படி செய்தாய். நானும் உன் தந்தையும் மூன்று நாட்களாக உன்னைக்காணாது எவ்வளவு துன்பப்பட்டோம்.” என கண்ணீர் சொறிந்தார்கள். அதற்கு இயேசுநாதர்,” நான் என் பிதாவின் காரியங்களில் கருத்தாய் கடமையாய் இருக்க வேண்டாமோ?” என்றார். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ.
  மீண்டும் திருக்குடும்பம் நாஸரேத்தூர் புறப்பட்டது. அப்போது விடுபட்டுப்போனவர்களும் தாமதமாக வந்திருந்த நசரேத்தூர் குடும்பங்களும் மீண்டும் ஒன்று சேர்ந்து பயணப்பட்டனர். இப்போது இயேசுவுக்கு வழித்துணையாக வந்தது கானா ஊரைச்சேர்ந்த பார்த்தலேமொ நாத்தானியேல் என்னும் ஒரு வாலிபர்.இயேசுவுக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் மிகவும் அதிகம். இவர்கள்.  இருவரையும் அடிக்கடி நோட்டமிட்டபடி இருந்தது இருகண்கள். அவை ரபேக்காவுக்கு சொந்தமானவை. இதைக்கவனித்த நாத்தானியேல்,” இயேசுவே  அந்தப்பெண்ணை கவனிதீர்களா…எவ்வளவு அழகாக இருக்கின்றாள். அவளைக்கட்டிக்கொள்பவன் கொடுத்து வைத்தவனாகத்தான்  இருப்பான். அவள் கண்கள் அடிக்கடி உம்மைத்தானே பார்க்கின்றன.. அப்படி ஏதாவது எண்ணம் உமக்கு உண்டோ?”
    இயேசுநாதர் இவ்வளவு சினம் கொள்வார் என்பது நாத்தானியேலுக்கு தெரியாது. நாத்தானியேல்… நீ யாரிடம் பேசுகின்றாய் என்பதை தெரிந்து பேசு. உனக்கு மிகுந்த புலனடக்கம் தேவை. உன் கண்களுக்கு ஒரு கடிவாளம் போடு. கண்களே மனதின் ஜன்னல். இதன் வழியாகத்தான் சாத்தான் ஒவ்வொருடைய மனத்திலும் நுழைகின்றான். அவனுக்கு செவி சாய்ப்பவனை பல காம இச்சைகள் மற்றும் பல மாய தோற்றங்களூக்கு உட்படுத்துகின்றான். அதற்கு உடன்படுவோர் பாவம் செய்கின்றனர். அவன் பாவத்தை பழக்கமாக மாற்றுகின்றான். விரைவில் பாவம் என்பது அவனுக்கு மறுத்துபோய் சாதாரணமான் விஷயமாக மாறிவிடும். அவனை அந்த பாவத்திலிருந்து வெளியே வர விடாமல் தன் தந்திர மாயங்களாள் சிறைபிடிக்க வைப்பான். கடவுளைப்பற்றிய அச்சத்தை போக்குவான். பிறகு கடைசியாய் அவனை சாத்தான் தன் அம்சமாக மாற்றிவிடுவான். பிறகு அந்த மனிதனுக்கு ஈடேற்றம் என்பது துர்லபமே” என்றார். . அவரது பேச்சைக்கேட்ட நாத்தானியேல் அப்படியே ஆடிப்போய் விட்டார்.
  இல்லை இயேசு. இல்லை. என்னை மன்னியும். நான் ஏதோ விளையாட்டாக பேசப்போய் அது வினையாக மாறிவிட்டது.
 இயேசு,” நாத்தானியேல் ஆணுக்கும் சரி. பெண்ணுக்கும் சரி … மிகுந்த புலனடக்கம் தேவை. திருமண பந்தத்தில் மட்டுமே புலனின்பம் அனுமதிக்கப்படுகின்றது.. இந்த பரிசுத்த கூட்டுறவினாலேயே ஒரு புதிய மனித சந்ததி ஆசீர்வதிக்கப்பட்ட விதமாக உருவாக வேண்டும்.கடவுள் விரும்புவதும் இத்தகைய சந்ததிகளையே.” என்றார்.
   இயேசுவே, தயவு செய்து என்னை மன்னியும்.. நான் என்னை உணறுகின்றேன். என்னை மன்னியும் வேறு ஏதாவது பேசலாமே” என்றார் நாத்தானியேல்.  பிறகு பேசும் தலைப்பை மாற்ற விரும்பி,” கடவுள் செங்கடலை பிரித்தது எவ்வளவு பெரிய செயல்.” என்றார். அதற்கு இயேசு நாதர், “ நாத்தானியேல்.. கடவுள் செங்கடலை பிரித்தது வல்லமையான செயல்தான். ஆனால் அவருக்கும் கடினமான காரியமும் உண்டு.”
     கடவுளுக்கு கடினமான காரியமா? கடவுளுக்கும் முடியாத கடினமான காரியம் என்று உண்டோ? “
 “ ஆம். நாத்தானியேல்.செங்கடலை ஒரே வார்த்தையில் பிரித்த ஆண்டவருக்கு மனித மனங்களை பிரிப்பதுதான் மிகவும் கடினமான அல்லது முடியாத செயல்.”
 “ எனக்கு விளங்கவில்லை இயேசு..ஏன் அவரால் முடியாது?. சற்று விளக்கமாக கூறவும்.
“ மனிதனின் ஆன்மாவும் உடலும் சுத்த சுயாதீனமாக படைக்கப் பட்டிருப்பதுதான் அதற்கு காரணம். மனிதருடைய விருப்பு வெறுப்புகளில் கடவுளின் தலையீடு இருப்பதில்லை. மனிதன் நல்ல ஆத்துமமாக வாழ்ந்தால் அவனுக்கு மோட்ச்சமும் தீமை செய்து வாழ்ந்தால் அவனுக்கு நரகமும் நிச்சயம். அதினாலேயே  மனிதனாக பார்த்து ஆண்டவரே என்மேல் இரக்கமாயிரும் என்று கடவுளை நோக்கி அபயமிட்டால் கடவுளும் அவன்மீது இரங்கி அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வார். அவரை நோக்கி அபயமிடாத எந்த ஒரு ஆன்மாவையும் அவரால் காப்பாற்ற இயலாது. வீட்டுக்காரன் அழைக்காமல் எந்த ஒரு விருந்தாளியும் அவன் வீட்டினுள் பிரவேசிக்க முடியாது. புறிந்ததா?.        உன்னுடைய அனுமதியின்றி உன்னை படைத்த கடவுளுக்கு உன் அனுமதியின்றி உன்னை மீட்க்கவும் முடியாது. நீயாக உன் இதயக்கதவுகளை பூட்டிக்கொண்டால் உன்னைப்படைத்த கடவுள்கூட உன் இதயத்தில் பிரவேசிக்க முடியாது. உன் இதயக்கதவுகளைத்திறந்து இதய சுத்தியோடு கடவுளை அழைத்தல் மட்டுமே அவர் உன் இல்லத்திலும் சரி,உள்ளத்திலும் சரி அவரால் பிரவவேசிக்க முடியும்.”
“ புரிகிறது இயேசுவே..எகிப்த்தில் நைல் நதியை இரத்தமாக மாற்றியது எப்படி.?”
“ இந்த உலகமெல்லாம் படைத்தவர் கடவுள். அவராலேயே எல்லாமும் படைக்கப்பட்டன. அவருடைய ஒரு சொல்லுக்கு எல்லாமே கீழ்படிகின்றன. அவரால் இதைவிட மேலான காரியங்களைக்கூட செய்ய முடியும். தண்ணீரை இரத்தமாக மாற்றியதுபோல் தண்ணீரை  திராட்ச்சை ரசமாக மாற்றவும் அவரால் செய்ய முடியும். திராட்ச்சை ரசத்தை தன்னுடைய ரத்தமாகவும் அவரால் கூடும். நீ வேண்டுமானால் பார். இந்த இரண்டு புதுமைகளும் உன் வாழ்க்கையில் நிகழத்தான் போகின்றது. அதில் தண்ணீர் திராட்ச்சை ரசமாகும் புதுமை உன் திருமணத்திலும்  திராட்ச்சை ரசம் கடவுளின் இரத்தமாகும் புதுமை பிற்காலத்தில் நிகழும். இவை நிறை வேற்றப்படும்போது நீயும் என்னோடு இருப்பாய்.” என்றார். [ அவ்வாறே ஆயிற்று. கானா ஊர் மாப்பிள்ளயாக நாத்தானியேல் பார்த்தலேமுவின் திருமணத்தன்று அவர் தண்ணீரை திராட்ச்சை இரசமாக மாற்றினார். பிறகு பல வருடம் கழித்து பெரிய வியாழன் அன்று திராட்ச்சை இரசத்தை தன் இரத்தமாக மாற்றினார்..]
   மீண்டும் நாசரேத்தூரில்;- இயேசுநாதர் தன் தந்தை சூசையிடம் தச்சுத்தொழிலை நன்றாக கற்றுத்தேர்ந்தார். தாவீதின் குலத்தில் வந்திருந்தவராகிய சூசைக்கு கிரேக்கமொழியும், யாழும் சரளமாக கைவரும். அக்காலத்தில் ரோமர்கள்,கிரேக்கர்கள் மற்றும் எகிப்த்தியர்கள், அராபியர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்ததால் அவருக்கு பல மொழிகளில் பரீட்ச்சயம் இருந்தது.. இவை அத்தனைகளையும் இயேசுநாதரும் தன் தந்தையிடமே கற்றறிந்தார்.
     இயேசுநாதருக்கு பதினைந்து வயதாகும்போது அவரது பாட்டியார் அன்னம்மாள் மறைந்தார்கள். அவரது மறைவுக்குப்பிறகு அவர் வழியாக வந்த பல உதவிகள் திருக்குடும்பத்திற்கு கிடைக்காமல் போய்விட்டன. அன்னாம்மாளின் சொத்துக்கள் பலபகுதிகளாக பிரிக்கப்பட்டு கடைசியில் தேவத்தாயாருக்கான உரிமை சொத்தாக கிடைத்தது அவருடைய வீடு மட்டுமே. இந்த வீட்டுக்கும் ஒரு பிரச்சனை வந்தது. ரோமர்கள்  தங்களுடைய ராணுவம் செல்ல வசதியாக காஸா துறைமுகத்துக்கு ஒரு பெரும் சாலை போட்டனர். அந்த சாலைக்காக மாதாவின் வீட்டின் மூன்று அறைகள் இடிக்கப்பட்டன. இதற்கு நஷ்ட்ட ஈடும் கொடுக்கப்படவில்லை. யூதர்கள் அடிமைகள்தானே. எனவே அரசாங்க வேலைக்காக எடுக்கப்பட்ட நிலத்திற்கு நஸ்ட்ட ஈடு பெறமுடியவில்லை. தப்பித்தத்து சூசையப்பருடைய வீடும் தச்சுப்பட்டறையும்தான்.
[ இன்றைக்கும் மாதாவின் வீடும் சூசையப்பரின் தச்சுப்பட்டறையும் சேர்த்து ஒரே தேவாலயமாக கட்டி இருகின்றார்கள். இரண்டிற்கும் தனித்தனி வழிகள் இருகின்றன..]
 இதேசமயம் ரபேக்காவின் வீட்டில்: “ மகளே ரபேக்கா.நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்.. சற்று நேரம் என்னோடு பேசு.”
“ சரி அப்பா… சொல்லுங்கள்...
“ மகளே … நீ இப்போது வயதுக்கு வந்த பெரிய பெண். உனக்கு என்னுடைய கடமையை செய்ய வேண்டும்.உன்வயதை ஒத்த பெண்கள் எல்லோரும் கல்யானம் என்றாகி குழந்தை குட்டி என்று ஆகிவிட்டார்கள்.தாயில்லாமல் வளர்ந்த உனக்கு நான் மேலும் என்ன செய்ய முடியும். உனக்கு திருமணம் செய்துவிட்டால் இந்த கிழவன் சந்தோஷமாக கண்ணை மூடிவிடுவேன்.”
“ அப்பா.. எனக்கு திருமணத்திற்கு என்ன அவசரம். எனக்கு இதில் கொஞ்ஜம் கூட இஸ்ட்டம் இல்லை. உங்களுக்கு நான் பாரமாகிப்போய்விட்டேனா அப்பா?”
“ அப்படி இல்லை அம்மா.நான் வியாபாரத்தின் காரணமாக பல இடங்களுக்கும் செல்பவன். உன்னைத்தனியே விட்டுச்செல்லும் ஒவ்வொரு தடவையும் நான் தவிக்கும் தவிப்பு யாருக்கும் தெரியாது.”
“ நீங்கள் ஏன் அப்படி நினைத்து கொள்கின்றீர்கள். இதோ என் தாய்க்குத்தாயாக மரியாள் இருகின்றார்களே. என்னை அவர்கள் தன் மகள் போல் நடத்துகின்றார்கள். இவர்கள் இருக்கும்போது எனக்கு என்ன கவலை.”
“ அப்படி இல்லை அம்மா..ஒரு தந்தைக்குள்ள கடமை எனக்கு உண்டல்லவா… அதை நான் நிறைவேற்ற வேண்டாமோ.. அந்த கடமை உனக்கும்தான் இருக்கின்றது “
“ என்னப்பா அந்த கடமை”
“ ஓஓ. அதுவா.. கேள். இஸ்ராயேல் குமார்த்திகளே… கன்னிப்பெண்களே ..நீங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள். திருமணம் செய்துகொண்ட பெண்களே நீங்கள் அதிகமாக பிள்ளை பெற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் கடவுளுக்கும் இஸ்ராயேலுக்கும் சேவைசெய்ய முடியும்.”
“ நல்ல கட்டளை போங்கள் அப்பா..எதற்காக இந்த கட்டளை”
“ மகளே..நம்முடைய இனமும் சிறியது. நம்முடைய நாடும் சிறியது.. நம்மை சுற்றிலும் பகைவர் கூட்டம் எப்போது நம்மீது பாய்ந்து நம்மை அடிமைப்படுத்தவும் நம்முடைய சொத்துக்களை சூறையாடவும் நம் தேவாலயத்தை இடித்து அதை தீட்டுப்படுத்தவும் தயாராக இருகின்றது. இவற்றிலிருந்து நம்மை காக்க நமக்கு ஆட்பலம் வேண்டாமோ. அதற்கு அதிக மக்கள் செல்வம் வேண்டாமோ? அதற்காகத்தான் இப்படி ஒரு கட்டளை நமக்கு அவசியமாகிறது..”
“ அப்பா.. எனக்கும் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் எனக்கு எப்போது திருமணம் தேவையோ அப்போது நானே கேட்ப்பேன். அதுவரை பொறுங்கள்.”
“ சரி அம்மா..உன் இஸ்ட்டம் போலாகட்டும். அனால் அதிககாலம் எடுத்துக்கொள்ளாதே… என் நண்பர்கள் மத்தியில் எனக்கு பெரும் இக்கட்டாக இருக்கின்றது, அவர்களின் கேலிப்பேச்சு எனக்கு பெரும் தலைகுனிவாக இருகின்றது”
  தன் தந்தை சொல்வதில் உள்ள நியாயத்தை ரபேக்கா அறியாமல் இல்லை. ஆனால் நான் ஏன் இப்படி யாருக்காகவோ காத்திருக்க வேண்டும். என் மனத்தில் என்ன இருகின்றது.? கொஞ்ச நாட்க்களாக என் மனம் ஏன் இப்படி மாறிப்போனது.? என் மனது ஏன் இப்படி நிலை கொள்ளாமல் தவிக்கிறது..? இப்படி ரபேக்காவின் உள்மனத்தோடு அவள் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ளும்போது அவள் மனத்திறையில் ஓடியது இயேசுநாதரின் திரு உருவம். அன்று தேவலயத்தில் அவர் பேசிய பேச்சு. அப்பப்பப்பா… என்ன ஒளி…என்ன தேஜஸ்.. இந்த கற்கள் கூவும் என்ற வார்த்தையின்போது அவர் கண்கள் எப்படி மின்னின…அடடா… எப்படியான ஒரு தேவ புருஷர் அவர்..மணந்தால் அவரைதான் மணப்பேன் என்றாள் ரபேக்கா. இருக்கட்டும் ..அப்பா வந்ததும் அவரிடம் இதைப்பற்றிப்பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என்று நினைத்தவள் சற்றே கண்ணயர்ந்தாள்.
  ஆனால் கண்கள் உறக்கம் கொள்ள மறுத்தன. அவள் மனத்திரையில் இயேசுவின் திருமுகம் தோன்றிக்கொண்டே இருந்தது.. எவ்வளவு முயன்றும் அந்த உருவத்தை அவளால் மறக்க முடியவில்லை.   ஓஓஓஓ…இதுதான் காதல் என்பதா?… அடிப்போடி பைத்தியக்காரி.. உன் புத்தி ஏன் இப்படி நாணமின்றி போயிற்று என்று தன்னை திட்டிக்கொள்ளவும் செய்தாள். அடியே ரபேக்கா கொஞ்சம் பொறு வெளியூர் போயிருக்கும் அப்பா வரட்டும் வந்ததும் உனக்கு டும் டும் கொட்டிவிட்டுத்தான் மறு வேளை என்றது அவள் மனம். கன்னிப்பெண்னுக்கு காதல் வந்துவிட்டால் அவள் படும் அவஸ்த்தையை யாரிடம் சொல்ல முடியும்.? ஊமை கண்ட கனவு என்பது இப்படித்தானோ அடடா … என் நிலையும் ஊமை கண்ட கனவு போல் ஆயிற்றே என்று தன்னையே குறை சொல்லிக்கொண்டாள் ரபேக்கா.. தன் காதலை வெளிப்படுத்த தன் தந்தையின் வருகைக்காக காத்திருந்தாள் அவள்.
     ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்….பிறகு தெய்வம் என்பது ஏது?. பாவம் ரபேக்கா. அவள் காதலன் வீட்டில் ஒருபெரும் விபத்து ஏற்பட்டுவிட்டது. அது அவர்கள் வாழ்க்கையையும் தன் வாழ்க்கையையும் ஒரேடியாக புரட்டிப்போட்டுவிடும் என்று அப்போது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
   பட்ட காலிலே படும்.:- உள்ளூரில் வேலை இல்லாத சமயங்களில் இயேசு நாதரும் அவருடைய பூலோகத்தந்தை சூசையும் நாசரேத்தூரிலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள செப்போரிஸ் என்னும் ஊரில் வேலை தேடிச்செல்வது வழக்கம். இங்குதான் இயேசுநாதரின் பாட்டியார் அன்னம்மாவும் தாத்தா சுவக்கீனும் வாழ்ந்தார்க்ள்.
 [ இன்றளவும் அவர்களது வீடு ஒரு பெரும் தேவாலயமாக மாற்றப்பட்டு இருகின்றது.] இந்த ஊரில்தான் எரோதன் அந்திப்பாஸ் தன் பகுதியில் ஆட்ச்சி செய்துவந்தான். இன்றளவும் அவன் தலை நகரம் செழிப்புடனும் புராதன தூண்களுடனும் மிகவும் அழகான சாலைகளுமாய் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் சூசையப்பரும் இயேசும் வேலைதேடி வருவது வழக்கம். ஒரு பெரிய அரசாங்க கட்டிடப்பணி நடக்கையில் சூசைதான் தலைமை தச்சர். அவரது மேற்பார்வையில்தான் இந்த கட்டுமானப்பணி நடந்து வந்தது. காலையில் செப்போரிஸ் வந்தால் மாலையில் தான் நசரேத் செல்வது வழக்கம். இப்படி இருக்கையில் பாரம்தூக்கி ஒன்று பழுதாகி பாதியில் நின்றது. இதை கவனிக்கசென்ற சூசையப்பர்  சிலபல உத்திகளைக்கூறினார். ஆனால் அவை தவறாக புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. பாரம்தூக்கி தவறான முறையில் இயக்கப்பட்டதால் அதன் கயிறுகள் தளர்ந்து பாரம் கீழே வேகமாக விழுந்தது. சூசை கீழே  இருந்ததால் அந்த பாரம் அவரது தலையில் இடித்து பெரும் விபத்து ஏற்பட்டது .அவருக்கு ஏறாளமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மரியாளின் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார். யாராலும் அவருக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. இயேசுநாதருக்கும் இன்னும் அவரது நேரம் வரவில்லை ஆதலால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த விபத்தினால் மாதாவும் இயேசுவும் அடைந்த வேதனை வார்த்தையில் சொல்லி முடியாது. சூசையப்பருடைய நிலையோ இன்னும் மோசமானது. அவருக்கு அடிக்கடி நினைவு போவதும் வருவதுமாய் இருந்ததால் தன் மனைவி பாடும்பாடும் அவர் மகன் படும் பாடும் அவருக்கு மிகுந்த மன வேதனையை தந்தன. அவர் வார்த்தையால் ஒன்றும் சொல்ல முடியாதிருந்தாலும்  தான் அவர்களை புரிந்துகொண்டிருப்பதாக அடிக்கடி தன் கண்ணீர்களால் பதிலளித்தார். சமயங்களில் அவர் முகத்தில் புன் சிரிப்பு தவழும் அப்போது அவர் கண்கள் பிரகாசமாக மிளிரும்.
  சூசைக்கு எப்போதெல்லாம் நினைப்புவந்து அப்போதெல்லாம் மாதா அவரை அரவனணத்து அவருக்கு பாலும் பழமும் கொடுத்து அவரை தேற்றுவார். எப்போதெல்லாம் அவர் சாப்பிடுகின்றாறோ அப்போதெல்லாம் அவர்களும் சாப்பிடுவார்கள். எப்போது அவர் கண்ணயர்வாரோ அப்போது  அவர்களும் கண்ணயர்வார்கள். வரவர சூசையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது.
  இப்படியாக பல மாதங்கள் ஓடின. இந்த நிலையில் திருக்குடும்பத்துக்கு உதவியது நம் ரபேக்காதான். அவள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இந்த மனிதாபிமான உதவிகளை செய்தாள். இது மாதாவுக்கும் சூசைக்கும் இயேசுக்கும் தெரிந்தே இருந்தது.
சூசையின் மரணம்: - இந்த நிலையில் ஒரு நாள். சுவாமி இயேசுநாதர் சூசையின் தச்சுப்பட்டறையில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது மாதா இயேசுவிடம் வந்து “ மகனே அவருக்கு மிகவும் முடியாமல் போகின்றது… வந்து பாரும் “ என்றார்கள்.சூசையப்பர் பல தலையனைகளில் சாய்ந்தபடி படுத்திருகின்றார். அவர் மரனத்தருவாயில் இருகின்றார். அவருடைய இரத்தமற்ற வெளுத்த முகத்திலிருந்து அது நன்றாக தெரிகின்றது. கண்களில் உயிர் இல்லை. நெஞ்சு பதைபதைகின்றது. முழு உடலுமே சோர்ந்தும் தளர்ந்தும் இருகின்றது.
    மாதா அவருடைய படுக்கையின் இடது பக்கம் செல்கின்றர்கள். மாதா வெளிரிய அவருடைய கரத்தை தேய்த்து அவர் நெற்றியின்மேல் காணப்படும் வியர்வையை ஒரு சிறு துகிலால் துடைகின்றார்கள். அவருடைய  கண்களில் அரும்பும் கண்ணீர்த்துளிகளை ஒற்றி எடுத்து கொஞ்சம் வெள்ளை முந்திரி பழ சாற்றை ஒரு சிறு துகிலில் நனைத்து அவருடைய உதடுகளை நனைகிறார்கள்.
   இயேசு சூசையப்பருடைய வலது பக்கத்திற்க்கு வருகின்றார். துவண்ட அவரை நேராய்த்தூக்கி தலையனைகளையும் சரிசெய்த்து அவருடைய தலையில் தம் கையை வைத்து  அவரை தேற்றுகிறார். மாதா துக்கமிகுதியால் சத்தமில்லாமல் அழுகிறார்கள். அவருடைய இருண்ட நீல நிற ஆடை அவரது கண்ணீரால் நனைகிறது. சூசையப்பர் சற்று தேறி இயேசுவிடம் ஏதோ சொல்ல விரும்புகின்றார். தம் கடைசி துன்பத்தில் இயேசுவின் தெய்வீக தொடுதலின் உதவியை தேடுகின்றார்.
   இயேசு அவருடைய வலக்கையை பற்றி தம் முத்தத்தை அதில் பதிக்கிறார். சூசை மரியாளைத்தேடுகின்றார். அவரைப்பார்த்து புன்னகை செய்கின்றார். மாதா முழாங்காலிட்டு புன்னகை செய்ய முயல்கின்றார்கள். அவர்களால் கூடவில்லை. சூசை மாதாவை ஆசீர்வதிப்பதுபோல் தம் கரத்தை மாதாவின் சிரசின்மேல் வைக்கிறார். இப்போது அந்த வீட்டில் சூசையப்பரின் மூச்சுவிடும் சப்த்தம் மட்டுமே கேட்கின்றது. அவரால் தம் பத்தினியை பலவித வார்த்தைகளால் தேற்றுவதுபோல் தோன்றுகின்றது.. ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை. ஆனால் அவரது கண்கள் தம் பத்தினியின் உள்ளத்தோடு பேசின. அவை இவ்வாறுதான் இருந்திருக்கக்கூடும்.
“ என் ஆண்டவனின் தாயாரே…என் எஜமானியே, பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியே, இந்த அடிமையை உமக்கு சேவகனாகவும், ஊழியனாகவும், பாதுகாப்பாளனாகவும் உம் மதிப்பிற்குறிய கணவனாகவும் இருக்க நான் என்ன பாக்கியம் செய்தேன். நான் உம் கணவன் என்னும் சொல்லுக்கு முற்றிலும் தகுதியானவன் அல்ல. ஆனாலும் மோட்ச்சத்திலிருக்கும் நம் பரம பிதா எனக்கு இந்த கௌரவத்தை கொடுத்ததற்காக நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்..
  என் பத்தினியே நான் என் மனைவி மரியாள் என்பதைவிட  மரியாளின் கணவர் சூசை என்றழைக்கப்படுவதையே எனக்குறிய பக்கியமாக கருதுகிறேன்.
   அம்மணி. சர்வேசுரனின் தாயாரே,சர்வேசுரனின் மகளே,சர்வேசுரனின் பத்தினியே, திரியேக சர்வேசுரனின் ஒன்றிப்பில் இருக்கும் உங்களுக்கு    இந்த மனிதப்பிறவில் உமக்கு சற்றும் தகுதி இல்லாத கணவன் நான். உமக்கும் உம் திருமகனுக்கும் நான் என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் கடமைகளையும் நான் செவ்வனே செய்துள்ளதாக நினைகிறேன். என் கவனக்குறைவினாலோ அல்லது அஜாக்கிரதை யினாலோ ஏதேனும் என் கடமையில் தவறி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்தருளும்.”
    தம் பூவுலக பர்த்தா தம் மனதில் என்ன நினைகின்றார் என்பதை உணர்ந்துகொண்ட தேவத்தாயார்  அவரைத்தேற்றமுடியாமல் சப்த்தமில்லாமல் அழுதுகொண்டே இருந்தார். இந்த நிலையில்  சூசையப்பருக்கு பெருமூச்சு வாங்கியது. அவரைத்தேற்ற இயேசுநாதர் தாவீது அரசர் பாடிய பல சங்கீதங்களைக்கூறி அவருக்கு ஆறுதல் அளித்தார்.
 ஆண்டவரே நான் உமது பேரில் நம்பிக்கை வைத்திருப்பதால் என்னைக்காப்பாற்றும்.
 என் ஆலோசகரான ஆண்டவரை வாழ்த்துவேன்.
என்நேரமும் ஆண்டவர் என்முன்பாக இருகின்றார். ஏனெனில் நான் அசைக்கப்படாதபடிக்கு அவர் என் வலது பாரிசத்திலிருகின்றார்.
 ஆகையால் என் இருதயம் பூரித்தது. என் நாக்கு மகிழ்ந்தது. என் மாமிசமும் நம்பிக்கையில் இளைப்பாறும்.
 ஏனெனில் என் ஆத்துமத்தை பாதாளத்தில் விட்டுவிட மாட்டீர், உமது பரிசுத்தவான் அழிவை காண விடமாட்டீர்.
ஜீவியத்தின் மார்க்கங்களை எனக்கு தெரியப்படுத்தினீர். உம்முடைய முகத்தைக்காட்டி ஆனந்தத்தால் என்னை சம்பூர்ணமாக்கிவிடுவீர்.
 இப்போது சூசையப்பருக்கு மீண்டும் தெளிவு பிறக்கிறது. இயேசுவை உற்சாகமாகப்பார்த்து புன்முறுவல்கொண்டு அவர் விரல்களை இறுகப்பற்றுகின்றார். இயேசுவும் சற்றே குனிந்தபடியும் சிரித்தபடியும் அவருக்கு கேட்க்கும்படியாக இப்படி பேசுகின்றார்.
 .தலங்களின் ஆண்டவரே… உம்முடைய வாசஸ்த்தலங்கள்  எம்மாத்திரம் இன்பமாயிருகின்றன. என் ஆத்துமம் ஆண்டவருடைய ஆலய பிரஹாரங்களிலே பிரேமை கொண்டு சோர்ந்து போகின்றது.
 அடைக்கலான் குருவிக்கு கூடும் தகைவிலான் குருவிக்கு தன் குஞ்சுகளை வைக்க கூடுமுண்டு. என் ஆண்டவரே உமது பீடங்களை நோக்கி தாகமாய் இருகின்றேன்.
 ஆண்டவரே உமது வீட்டில் வாசம் பண்ணுகிறவர்கள் பாக்கியவாங்கள்,.
  உம்மால் சகாயம் பெறுகிற மனிதன் பாக்கியவான். ஆண்டவரே என் மன்றாட்டை கேட்டருளும். உமது கிறிஸ்த்துவின் முகத்தைபார்த்து உமது பார்வையை எங்கள் மேல் திருப்பியருளும்.
  ஆண்டவரே தேவரீர் உமது பூமியை ஆசீர்வதித்தீர். யாக்கோபுவை அவருடைய அடிமைத்தலத்திலிருந்து மீட்டீர்.
   ஆண்டவரே தேவரீர் உமது கிருபையை எங்களுக்கு காண்பியும். உமது இரட்சிப்பை எங்களுக்கு தாரும்.
  என்னிடத்தில் அவர் என்ன பேசப்போகின்றார் என்று கேட்ப்பேன். ஏனென்றால் சர்வேசுரனாகிய ஆண்டவர் தமது ஜனத்திற்கும் பரிசுத்தருக்கும் இருதயத்தில் மனம் திரும்புகிறவர்களுக்கும் கூறுவது சமாதானமே.
   ஏனெனில் நமது பூமியில் அவரது மகிமை விளங்கும்படியாக அவரது இரட்சண்யம் அவர்களுக்கு பயப்படுகிறவர்களுக்கு சமீபமாயிருகின்றது.
   ஏனெனில் ஆண்டவர் தமது ஆசீர்வாதத்தை தருவார். நமது பூமி தனது கனியை கொடுக்கும். நீதி அவருக்கு முன்பாக நடக்கும்.
   தந்தாய் நீங்கள்,.அந்த நேரத்தை கண்டுகொண்டீர்கள். அதற்காக நீங்கள் உழைத்தீர்கள். இந்த நேரத்தை உருவாக்குவதில் நீங்கள் ஒத்துழைதீர்கள்..ஆண்டவர் அதற்காக உங்களுக்கு சன்மானம் அளிப்பார்.
   ஆண்டவரே தாவீதையும் அவருடைய பெரிய சாந்தத்தையும் நினைத்தருளும். அவர் ஆண்டவருக்கு கொடுத்த பிரமாணிக்கத்தையும் யாக்கோபின் தேவனுக்கு செய்த பொருத்தனையையும் நினைவுகூறும். நான் ஆண்டவருக்கு ஒரு இடத்தையும் யாக்கோபின் தேவனுக்கு ஒரு கூடாரத்தையும் ஏற்படுத்துகிற வரையிலும் என்வீட்டின் வாசஸ்த்தலத்தில் நான் பிரவேசிப்பதில்லை. என் படுக்கையாகிய மஞ்சத்தில் நான் ஏறுவதுமில்லை. என் கண்களுக்கு நித்திரையையும் என் இமைகளுக்கு உறக்கத்தையையும் நான் கொடுப்பதில்லை.
  ஆண்டவரே உமது பரிசுத்த ஸ்தலம் விளங்கும் பேழையுடன் உமது இளைப்பாற்றி ஸ்தலத்தில் எழுந்தருளும்.
இப்போது மாதா பொருள் உணர்ந்து கண்ணீர் சிந்தி அழுகின்றார்கள்.
உமது ஆசாரியார்கள் நீதியை தரித்துக்கொள்ளட்டும்.
உமது பரிசுத்தவான் அகமகிழட்டும்.
உமது தாசனாகிய தாவீதினிமித்தம் உமது அபிஷேகருடைய முகத்தை எங்களுக்கு மறுக்காதேயும். ஆண்டவர் தாவீதுக்கு உண்மையான ஆணையிட்டார். அதற்கு பிரமாணிக்கமாயிருப்பார்.
  உமது கர்ப்பத்தின் கனியை உன் சிங்காதனத்தில் வைப்போம்.
ஏனென்றால் ஆண்டவர் சீயோனை தெரிந்துகொண்டார்.
  அவ்விடத்தில் தாவீதின் வல்லமையை ஓங்கப்பண்ணுவோம். நமது அபிஷேகருக்கு ஒரு தீபத்தை ஆயத்தம் பண்ணினோம்.
   தந்தையே, என்னுடையவும், என் தாயினுடையவும் நன்றியை உங்களுக்கு செலுத்துகிறேன். எனக்கு நீங்கள் நீதியுள்ள தந்தையாக இருந்தீர்கள். நித்திய பிதா உங்களை தமது கிறீஸ்த்துவுக்கும் தமது பேழைக்கும் காவலனாக தேர்ந்துகொண்டார். அவருக்காக ஆயத்தமாக்கப்பட்ட தீபம் நீங்கள். பரிசுத்த உதிரத்தின் கனியின் மீது நீங்கள் நேசமுள்ள இருதயத்துடன் இருந்தீர்கள். தந்தையே சமாதானத்தில் செல்லுங்கள். உங்கள் கைம்பென் உதவியற்றுப்போக மாட்டாள். அவர்கள் தனிமைபடாதிருக்க கடவுள் ஏற்பாடு செய்திருகின்றார். நான் உங்களுக்கு சொல்லுகின்றேன். உங்கள் இளைப்பாற்றிக்கு சமாதானத்துடன் செல்லுங்கள்.
   இப்போது இயேசு தன் பூலோக தந்தையாக இருக்கப்பட்ட சூசையப்பரை தம் கரங்களால் அள்ளி எடுத்து தம் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு தேற்றுகின்றார். சூசையின் கண்கள் மங்குகின்றன..அவரது உடல் குளிர்ந்துகொண்டு வருகின்றது. மீண்டும் இயேசு அவருக்கு கேட்க்கும்படியாக சற்றே உயர்ந்த குரளில்;
   சர்வேசுரனுக்கு பயப்படுகிறவனும் அவருடைய கற்பனைகளை விரும்புகின்றவனும் பாக்கியவான்கள்..
  அவனுடைய நீதித்தன்மை சதாகாலமும் நிற்கும்.அவனுடைய வல்லமை மகிமையோடு உயர்த்தப்படும்.
   தந்தையே… உங்களுக்கு அந்த மகிமை கிடைக்கும். உங்களுக்கு முன் சென்றுள்ள பிதாப்ப்பிதாக்களோடு உங்களையும் நான் கூட்டிச்செல்ல  சீக்கிரம் வருவேன். உங்களுக்காக காத்திருக்கிர மகிமைக்கு உங்களை கொண்டு செல்வேன்.என் வார்த்தையில் உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடைவதாக.
  உந்நதருடைய அடைக்கலத்தில் இருப்பவன் பரமண்டலத்தில் தேவனுடைய ஆதரவில் நிலைகொள்வான்.
   தந்தாய் நீங்கள் அங்கே வாழ்கிறீர்கள். அவர் வேடருடைய கண்ணிகளினின்றும் இடிசொல்லினின்றும் என்னை மீட்டார்.
  அவர் தம் புஜங்களால் உனக்கு நிழலிடுவார். அவருடைய சிறகுகளின் அடைக்கலத்தில் நீ இருப்பாய்.
    அவருடைய வாக்கின் சத்தியம் கேடயம்போல் உன்னை சூழ்ந்துகொள்ளும். இரவின் பயங்கரங்களுக்கு நீ அஞ்சமாட்டாய்..
    உனக்கு பொல்லாங்கு நேரிடாது. ஏனெனில் உனக்கு சகல வழிகளிலும் உன்னைகாக்கும்படி தமது தூதர்களுக்கு அவர் கட்டளை இட்டார்.
 உன் பாதங்கள் கல்லில் இடராதபடிக்கு அவர்கள் உன்னை தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
   விஷ நாகத்தின்மீதும் சர்ப்பத்தின் மேலும் நீ நடப்பாய்.  சிங்கக்குட்டியையும் பறவை நாகத்தையும் நீ மிதிப்பாய்.
   நீங்கள் ஆண்டவரின் பேரிலே நம்பிக்கை வைத்தபடியினால் என் தந்தையே  அவர் உங்களை விடுவிப்பதாகவும் காப்பதாகவும் உங்களுக்கு கூறுகின்றார்.
    நீங்கள் உங்கள் குரலை ஆண்டவரிடம் எழுப்பியதால் அவர் அதை கேட்பார். உங்கள் கடைசி துன்பத்தில் அவர் உங்களுடன் இருப்பார். உங்கள் வாழ்வுக்குப்பின்  அவர் உங்களை மகிமைப்படுத்துவார். இப்போது தமது இரட்சண்யத்தை அவர் உங்களுக்கு கண்பிகின்றார். இப்பொழுது உங்களை தேற்றுகிற இரட்சகரின் முகாந்திரமாக உங்களை மறு உலக வாழ்வில் நுழைய வைப்பார். இந்த இரட்ச்சகர், நான் திரும்பவும் சொல்லுகிறேன் அவர் சீக்கிரமாக வந்து உங்களை தன் தெய்வீக அரவணைப்பில் கொண்டு எல்லா பிதாப்பிதாக்களுடைய வரிசையில் முதன்மையாக கொண்டு செல்வார். அங்கே என் ஆசீர்வதிக்கப்பட்ட என் தந்தையாக  இருந்த கடவுளின் நீதிமானுக்கென இல்லிடம் ஆயத்தம் செய்யப்பட்டிருகின்றது.
தந்தையே , நீங்கள்  எனக்கு முன்பாகப்போய் பிதாப்பிதாக்களிடம் இரட்சகர் உலகத்தில் இருகின்றார். மோட்ச இராஜ்ஜியம் விரைவில் அவர்களுக்காக திறக்கப்படும் என்று அறிவியுங்கள். தந்தையே செல்லுங்கள். என்னுடைய ஆசீர்வாதம் உங்களுடன் வரக்கடவது “
  சூசையப்பரின் இறுதி நேரம் வந்துவிட்டது. திடீரென அவர் முகம் பிரகாசமானது. அவர் கண்கள் தம் பத்தினி மரியாளின் மீதும் இயேசுவின் மீதும் நிலையாக பதிக்கப்பட்டன. இதுதான் தம் பர்த்தா தன்னை பார்க்கும் கடைசி பார்வை என்பது மாதாவுக்கு புரிந்துவிட்டது.  அவர் தம் மகனின் முகத்தைப்பார்க்க  இயேசு ஆம் என்று தலை அசைத்தார். சூசையப்பர் தன் இடதுகரத்தை தன் பத்தினியின்  சிரசின்மீதும் வலதுகரத்தை இயேசுவின் கழுத்தை சுற்றியும் வைத்துக்கொண்டு தம் முகத்தை இயேசுவின் முகத்தோடு வைத்துக்கொள்ள இயேசு அவரை தன் மார்போடு அணைத்துக்கொண்டார். சற்று நேரத்தில் பிதாப்பிதா சூசையப்பரின் ஆவி இயேசுவோடு கலந்தது. ஆண்டவரின் ஐக்கியத்தில் மரிக்கும் மனிதன் பாக்கியவான். அவனிடத்தில் சாவு தன் கசப்பை இழந்துவிடுகின்றது. என்னதான் சூசையப்பர் அவருடைய வயோதிகத்தில் மரித்தாலும் அவர் மரியாளின் கணவர் அல்லவா?
  தேவத்தாயாரின் துயரத்தை வார்த்தைகளில் சொல்லி முடியாது. எல்லாம் அன்று, “ ஆகட்டும் “ என்று சொல்லிய வார்த்தையால் வந்த விளைவுகளே.  தன் கணவரின் மரணமும் பரம பிதாவின் சித்தமே  என்றவராய் மீண்டும் “ ஆகட்டும் சுவாமி. உமது திருவுளப்படியே எனக்கு ஆகட்டும்” என்றார். இந்த உலகில் தேவத்தாயார் போலும் அவர்திருமகன் இயேசு நாதர் போலும் துன்பத்தையே  இன்பமாய் ஏற்று வாழ்ந்தவர் யார்? எத்தனை பேர்.? ஒருவரும் இல்லை.
   பிதாப்பிதா சூசையப்பரின் ஈமச்சடங்குகளுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிளேயே அவர் உறவினர்கள் வந்திருந்தார்கள்.  சூசையப்பர் பெத்லஹேமை சேர்ந்தவர் ஆகையால் அவருடைய சொந்தங்களும் பந்தங்களும் பெத்லஹேமில் இருந்தார்கள். சூசையின் மரணத்திற்கு ஆள் அனுப்பி சொல்லி இருந்தும் அவர்களால் துக்கத்திர்கு வர இயலவில்லை. பிறகு துக்கம் விசாரிக்க மாதாவிடம் நாசரேத்தூருக்கு வந்திருந்தனர். இயேசுநாதரும் அவருடைய நெருங்கிய உறவினர்களும் மட்டுமே  சூசையப்பரின் அடக்கத்தில் இருந்தனர். இயேசுவே  தன் தந்தையாராகிய சூசையை நாசரேத்தில் அவருடைய  சொந்த வீட்டாருக்குரிய கல்லறையில் அடக்கம் செய்தார். ஒருவழியாக எல்லாம் முடிந்தன.
      தன் குடும்பத்தை காக்கவும் தன் சகோதரனின் (அல்ஃபேயுசின் ) குடும்பத்திற்குமாக சேர்த்து உழைத்த பெரிய ஜீவன் சூசையப்பரின் குடும்ப வருமானம் மிகவும் கீழே போயிற்று. சுத்தமாக நின்றே போயிற்று. இப்போது சம்பாதிக்ககூடிய ஒரே நபர் இயேசு மட்டுமே. இத்தனை பேரையும் அவர் சம்பாரித்து காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு இயேசுவின் தலையில் விழுந்தது. அவரும் தன்னால் முடிந்தவரை கடினமாகவே  உழைத்து சம்பாரித்தார். ஆனால் எவ்வளவு உழைத்தும் வருமானம் பற்றவில்லை. அவர் குடும்பத்தில் ஏழ்மை தலை விரித்தடியது.
இந்த நிலையில் ரபேக்காவின் வீட்டில் பூகம்பம் வெடித்தது. தன் மகள் திருமணமே வேண்டாம் என்பதற்கு காரணம என்ன? என்று அவள் தந்தை எஸ்ரா அவளிடம் நேரிலேயே கட்டுவிட்டார். எத்தனை நாள்தான் மடியில் இருக்கும் பூனையை மறைத்து வைக்க முடியும். ரபேக்கா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.
  “ ஆம் அப்பா… நான் ஒருவருக்காக காத்திருப்பது உண்மைதான். அவர்களுடைய வீட்டில் சூழ்நிலை சரி இல்லாதபடியினால் தான் நான் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. “
   “ சரி அம்மா. நீ விரும்பி ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை உனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கும்.  நீ விரும்பும் நபர் உனக்கு ஏதாவது வாக்கு கொடுத்திருகின்ராரா ? எவ்வளவு காலம் காத்திருக்க சொன்னார். அவர் யார் ? எந்த ஊர்? என்ன கோத்திரம் ?
“ நான் விரும்பும் நபர் உங்களுக்கு நன்றாகத்தெரிந்தவர் தான் அப்பா. தற்சமயம் அவரது வீட்டில் கஷ்ட்ட ஜீவனம் தான். அதனால் தான் நான் இவ்வளவு காலம் காத்திருகின்றேன்.?
 “ சரி அம்மா… ஆனது அயிற்று இப்போது சொல். அவர் யார்?
 “ அப்பா… கோபித்துக்கொள்ளாதீர்கள் அப்பா. நான் விரும்பும் அந்த நபர்  என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசியது இல்லை. நானும் அவரிடம் இதுபற்றி ஒருவார்த்தை கூட பேசியதில்லை. எல்லாம்  நானே என்னுள் வளர்த்துக்கொண்ட காதல். இந்த விஷயத்தில் அவருக்கு உடன்பாடு இருக்குமோ என்பதுகூட எனக்குத்தெரியாது.”
  “ சரி அம்மா.. உன் விஷயம் இவ்வளவுதூரம் போயிற்றா?  என்னம்மா பெண் நீ?. போனால் போகிறது…இப்போதாவது. சொல். அவர் யார்? அவர் பெயர் என்ன?”
  “ அப்பா கோபித்துக்கொள்ளாதீர்கள் அப்பா… அவர் பெயர் இயேசு.. அவர் தந்தையார் சூசை.. தாயார் மேரி என்னும் மரியாள் “…என்று தயங்கித் தயங்கி கூறினாள் ரபேக்கா.
 “ ரபேக்கா விஷயம் இதுதானா… எனக்கு இது சாதாரன விஷயமாச்சே. நீ மட்டும் இதை முன்பே சொல்லி இருந்தால் நான் உனக்கு எப்போதோ திருமணம் செய்து வைத்திருப்பேனே. இயேசு எவ்வளவு திறமையான பையன். உன் தேர்வு மிகவும் சரியானதே…நாளைக்கே மரியாளிடம் இதைபற்றி பேசி முடித்துவிடுகிறேன்.. என்னிடம் சொல்லிவிட்டாய் அல்லவா…இனிமேல் நீ எதைப்பற்றியும் கவலைப்படாமலிரு. விஷயம் முடிந்ததென்று நினைத்துக்கொள்..சந்தோஷமாக போய் சாப்பிட்டு தூங்கு. விடிந்ததும் மேரியை நான் சந்திகிறேன். “ என்றார் எஸ்ரா.அவருக்கும் இந்த சம்பந்தத்தில் சந்தோஷம் தான்.
  அவ்வளவுதான் ரபேக்காவுக்கு கண்களில் நட்ச்சத்திரக்கூட்டம் தோன்றியது. தான் ஆசைப்பட்ட வாழ்க்கை தனக்கு கிடைத்துவிட்டதென சந்தோஷத்தில் திளைத்துப்போனாள். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல என்றது அடுத்த நாள் பொழுது.
    அடுத்த நாள் எஸ்ரா மரியாளை சந்தித்தார். சூசையின் பிரிவால் வாடும் அவருக்கும் அவரது மகன் இயேசுவுக்கும் தங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். பிறகு தான் வந்த நோக்கத்தையும் கூறினார். இதைக்கேட்ட தேவத்தாயாருக்கு தூக்கி வாறிப்போட்டது. ஆனாலும் சுதாரித்துக்கொண்டு,” ஐய்யா…தங்கள் மனத்திலும் தங்கள் மகள் ,மனதிலும் இப்படி ஒரு எண்ணம் இருப்பதை நான் அறியவில்லை. ரபேக்காவை நான் என் மகள் போலத்தான் பாவித்து வந்தேனே தவிர அவளை மருமகளாக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் நான் என் மகனுக்கு மணமுடிக்க எண்ணவும் இல்லை. இப்போதுதான் நான் என் கணவரை இழந்து தனிமரமாக உள்ளேன். திருமணம் என்னும் பந்தத்தில் நான் என் மகனையும் இழக்கவும் விரும்பவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள். தங்கள் பெண்ணுக்கு வேறு ஒரு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து நல்ல விதமாக திருமணத்தை நடத்திவையுங்கள் “ என்றார்.
   தேவத்தாயாருடைய முடிவை அறிந்துகொண்ட எஸ்ரா,” அம்மா…உங்கள் சூழ்நிலை எனக்கு புரிகின்றது. சூசை இருந்திருந்தால் ஒருவேலை இந்த திருமணம் சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் என் மகள் மனநிலை  இப்போதுதான் எனக்கு தெரிய வந்தது.  என்னை மன்னித்துவிடம்மா… என் மகளையும் மன்னித்துவிடு. ஆனால் ஒருவிஷயம் மட்டும் உண்மை. இவ்வளவு காலமும் என்மகள் உங்களுடன் பழகியது எந்தஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல்தான். அவள் உங்களுடன் பழகியதும் தன் தாயில்லாத ஏக்கத்திற்காகத்தான். இந்த விஷயத்தில் நீங்கள் அவளை நம்பலாம். தன் மனதிற்குள்ளாகவே அவள் தன் காதலை வளர்த்துக் கொண்டாளே தவிர அவள் வேறெதும் நினைத்ததில்லை. இந்த விஷயம் உங்கள் மகனுக்குக்கூட தெரியாது. நான் தவறு ஏதேனும் செய்திருந்தால் என்னை மன்னித்து விடம்மா “ என்று புறப்பட்டுவிட்டார்.
தன் தகப்பன் வருவதைக்கண்டதும் ரபேக்கா துள்ளிக்குதித்துக்கொண்டு வந்தாள். “ என்ன அப்பா..நல்ல செய்திதானே ” என்று தன் தகப்பனை கட்டிக்கொண்ட்டாள். ஆனால் தன் அப்பாவின் முகம் வாடியிருக்கக்கண்டு மனம் பதைபதைத்தாள். “ சொல்லுங்கள் அப்பா… என்ன நடந்தது. போன விஷயம் காயா பழமா? என்றாள். எஸ்ரா தன்மகளிடம் நடந்ததைக்கூறி,” நீ இயேசுவை மறந்துவிடு “ என்றார். ரபேக்கா அடைந்த துன்பம் வார்த்தையில் சொல்லி முடியாது.
“ அப்பா என் திருமணம் அவருடன் நடக்க தடையாக இருப்பது அவர்களுடைய வறுமைதானே. அதை நான் போக்குகிறேன் என்று நீங்கள் சொல்லி இருக்கலாமே?”
“ ரபேக்கா… அவர்கள் மிகவும் உத்தமமானவர்கள். இந்தமாதிரியான ஆறுதலை அவர்கள் விரும்பமாட்டார்கள். எவ்வளவு ஏழையானாலும் அவர்கள் தன்மானம் விடமாட்டார்கள். என்ன இருந்தாலும் அவர்கள் தாவீதின் ராஜவம்சம் அல்லவா. அந்த இராஜரீக தோரணையிலிருந்து அவர்கள் ஒருபோதும் கீழிரங்க மாட்டார்கள். நான் இப்படி ஒரு வார்த்தையை அவர்களிடம் சொல்லி இருந்தால் என்னை அவர்கள் ஒரு நீச புழுவைப் போல் பார்த்திருப்பார்கள். இருப்பினும் அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருகின்றது.” என்றார்.
  “ அப்பா…எதற்கும் நான் இயேசுவை ஒருமுறை சந்தித்து என் உள்ளத்தில் உள்ளவைகளை சொல்லி என்னைத்திருமணம் செய்துகொள்ள கேட்க்கவா?
“ வேண்டாம் அம்மா….இது முறையாகாது. உனக்கு மதிப்பும் இருக்காது. அவர் தாய்மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர். தாய் வேண்டாம் என்றதை மகன் செய்வாறா.. நன்றாக யோசித்துப்பார். அவர் உன்னை உதாசீனம் செய்துவிட்டால் உன்னால் தாங்க முடியுமா ?”
  நீ குடும்பம் என்னும் சதுரங்கத்தில் ராஜாவுக்கு குறி வைகிறாய். அது அவ்வளவு  சுலபமல்ல. அது ஆபத்தும்கூட. ராஜாவை கைபிடிக்க தகுதி உள்ள ராணிக்குத்தான் உரிமையுண்டு. நீ விரும்பும் இயேசு தாவீதின் ராஜ வம்சத்தை சேர்ந்தவர் என்பதை மறவாதே. நீ அந்த ராஜ வம்சத்தை சேர்ந்தவள் அல்ல என்பதையும் மறவாதே.
   ஒரு விஷயம் சொல்கிறேன் கவனமாக கேட்டுக்கொள். பெண்கள் காதல் வயப்பட்டுவிட்டால் உன்னைப்போல் என்னைப்போல் அதை முறையாகத்தான் கையாளவேண்டும். முதலில் தன் காதலை தெரியப்படுத்த வேண்டியது ஆண்களே. முதலில் பெண் தன் காதலை ஒரு ஆணிடம் தெரியப்படுத்தினால் ஆண் அவளை மதிக்க மாட்டான். இதற்குமேல் நான் உன்னிடம் இதுபற்றி பேச விரும்பவில்லை. “
“ அப்பா… காதலிப்பது அவ்வளவு பெரிய பாவமா அல்லது குற்றமா. ? ”
“ ஆசைப்பட்டவனோடு வாழ நினைப்பது குற்றமல்ல. ஆனால் சம்பந்தப் பட்டவர் உன்னை மலிவாக நினைத்துவிடக்கூடாது அல்லவா. பிறகு அவன் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உன்னை சொல்லிக்காட்டுவார். குத்திக்காட்டுவார். அப்போது உனக்கு மானம் போவது உயிர் போவதுபோல் இருக்கும். இதுதான் உலகம். ஆகவே கடவுளை நம்பி உன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்ககொள்ளும் வழியைப்பார். கடவுள் உனக்கு ஒரு நல்ல மணாளனை அமைத்துக்கொடுப்பார்.”
   தான் ஆசை ஆசையாய் கட்டிய காதல் என்னும் மனக்கோட்டை தன் கண்முன்னே தகர்ந்து வீழ்வதைக்கண்ட ரபேக்கா அப்படியே ஒரு சுவற்றில் சாய்ந்துகொண்டு அழத்துவங்கினாள். அடுத்த நாள் ஒரு முடிவுக்கு வந்த அவள் தன் தகப்பனிடம்,” அப்பா…உங்களை நான் மிகவும் மனம் நோகச் செய்து விட்டேன்.. என்னை மன்னியுங்கள் அப்பா. நான் செய்த தவறுக்கு யாரையும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. இந்த மனதினால் நான் யாரை அதிகம் நேசித்தேனோ அவரை இன்றுமுதல் மனப்பூர்வமாக வெறுக்கிறேன். அப்போதுதான் என்னால் அவரை மறக்க முடியும். இன்னும் கொஞ்ச காலம் அவகாசம் கொடுங்கள் அப்பா…இயேசுவை நான் மனப்பூர்வமாக வெறுத்தபிறகு நானே உங்களிடம் எனக்கு திருமணம் செய்து தரும்படி மீண்டும் கேட்ப்பேன்” என்றாள்.
    பிறகு ரபேக்கா நாசரேத்தில் இருக்கப்பிடிக்காமல் ஜெருசலேம் சென்றாள். அவள் தகப்பன் அவளுக்கு ஜெருசலேம் தேவாலயத்தில் நல்ல பதவியிலுள்ள ஒரு அழகான பரிசேயனை அவளுக்கு கட்டிக்கொடுத்து தன் கண்னை மூடினார்.  கதை இத்துடன் முடிந்துவிடவில்லை..