Friday, October 21, 2016

" மீண்டும் மீண்டும் குளோரியா."




                                                 " மீண்டும் மீண்டும் குளோரியா."



       ஆஹா... நான் என்ன ஒரு தெய்வீகமான காட்ச்சி காண்கின்றேன்...அப்பா... அண்ணா... எல்லோரும் இங்கே ஓடி வாருங்கள்... ஓடி வாருங்கள் என்றான் அந்த பனிரெண்டு வயது இடையன். மார்கழி மாதத்தின் அந்த கடும் குளிரின்
தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் கால்நடைகளுக்கு சாமக்காவல் காத்துக்கொண்டிருந்த அந்த இடையர் கூட்டத்தில் ஆர்வக்கோளாரினால் அன்றைய இரவில் சாமக்காவலுக்கு தன் சகோதரர்களுக்கு உதவியாக வந்திருந்தான் ஜோனா என்னும் பையன். இந்த இரவிலே தான் ஆண்டவராகிய யேசுநாதர் எப்ராத்தா என்றழைக்கப்படும் பெதலஹேமில் மனிதாவதாரமாக பிறந்திருந்தார். உலகிற்கெல்லாம் இந்த நற்செய்தியை அறிவிக்க சம்மனசுகள் பாடிய வானோர் கீதம்  உலகமெல்லாம் எதிரொலித்தது. அன்றைய இரவில் சம்மனசுகள் இந்த கள்ளம் கபடமற்ற இடையர்களுக்குத்தான் முதன்முதலாக ஆண்டவரின் பிறப்பின் நற்செய்தியை அறிவிக்க வந்திருந்தனர். இவர்களைக்கண்ட லேவி என்னும் சிறுவன்  ஆனந்தக்கூச்சலிட்டான்.
    ஆனால் லேவி எழுப்பிய ஆனந்தக்கூச்சல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் என்னவோ ஏதோ என பதறினர். அங்கிருந்தவர்களுக்கு அங்கே என்ன நடக்கின்றது என்றே புறியவில்லை.வானத்தில் ஏதோ வட்டம்
வட்டமாக ஏதேதோ தோான்றுவதாக நினைத்தார்கள். அவர்களின் கண்களுக்கு அப்போது சம்மனசுகள் தெரியவில்லை. ஆனால் லேவியின் அப்பா நிதானமாக " அடேய் லேவி... பயப்படதே... நீ என்ன காண்கிறாய்... ஏதேனும் காட்டு விலங்குகளைக்கண்டாயா... அல்லது ஏதேனும் பேய் பிசாசுகளைக்கண்டாயா... பயப்படாதே... இதோ நாங்கள் உன்னிடம் வந்துகொண்டே இருகின்றோம் என்றார். பிறகு," இதற்குத்தான் பிள்ளையை சாமக்காவலுக்கு போக வேண்டாம் என்று சொன்னேன். கேட்டார்களா... எல்லாம் என் தலை எழுத்து " என தலையில் அடித்துக்கொண்டார்.பிறகு ஆபத்துதவிக்கென தன் கூட்டத்தாரை அழைக்கும் சங்கை எடுத்து ஊதினார். சுற்றுப்புறத்திலிருந்தவர்கள் உடனே பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.
        ஆனால வானத்தில் பெரும் வர்ணஜாலம் நிகழ்ந்துகொண்டிருந்ததை கண்டனர்.அந்த வர்ணஜாலங்களுக்கு நடுவே ஒரு வட்டவடிவமான ஏதோ ஒன்று வர வர பெரிதாகி ஒரு சம்மனசாக உருவெடுத்தது. அத்துடன் பல ஆயிரம் சம்மனசுகள் தங்கள் இறக்கைகளை விரித்துக்கொண்டு அவர்களுக்கு காட்ச்சியளித்தனர். அவற்றுள் ஒரு சம்மனசானவர் தம் திருவாய் மலர்ந்தார்.அப்போது லேவியின் தகப்பன்.," ஐய்யோ ...எல்லோரும் தரையில் முகம் பதியுங்கள்.சம்மனசைக்கண்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று நம் மூதாதையர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.. யாரும் அவர்களைப்பார்க்க வேண்டாம்" என்றார்.
     அப்போது அந்த சம்மனசானவர்," அஞ்சாதீர்கள்... இந்த உலகினருக்கும் உங்களுக்கும் ஒரு மாபெரும் நற்செய்தி கொண்டு வந்திருகின்றேன்.நான் தீமை செய்ய உங்களிடம் வரவில்லை.தீமையான செய்தியை சொல்லவும் நான் இங்கே வரவில்லை.மாறாக உங்களுக்கு நன்மை செய்யவும் நல்ல செய்தி சொல்லவுமே நான் அனுப்பப்பட்டிருகின்றேன்...உலக மீட்ப்பர் பிறந்துள்ளார். இதே பெத்லஹேமில் ஒரு மாட்டுக்குகைியில் பிறந்துள்ளார். யேசு பாலனை ஒரு கந்தைத்துணியால் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்க காண்பீர்கள். இதுவே நான் உங்களுக்கு காட்டும் அடையாளம். உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக என்று தங்களின் வானோர் பாடலை பாடும்போது பெரும் மரியாதையாக தங்களில் இறக்கைகளை தலைக்குமேல் ஒன்றாக சேர்த்துவைத்துக்க்கொண்டு தலையை குனிந்து சற்று நேரம் அசையாமல் நின்று பிறகு பூவுலகில் நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக... உம்மை புகழ்கின்றோம். ..வாழ்த்துகின்றோம்
என்று பாடிகொண்டே காற்றில் கறைந்துபோனார்கள்.
       தாங்கள் காண்பது கனவா அல்லது நனவா என்பதை அறியாத இடையர்கள் தாங்கள் காண்பதும் உணர்வதும் நிஜம் என்றறிந்தவர்களாய்," ஆம் ஆண்டவரின் சம்மனசுகள் சொல்லியபடியே உள்ளபடியே மெசியா பிறந்திருகின்றார்.நாம் சென்று அவரை இப்போதே கண்டு ஆராதிப்போம்..காலம் தாழ்த்த வேண்டாம். மற்ற மனிதர்களுக்கு கிடைக்காத பாக்கியம் முதலில் நமக்கு கிடைத்திருகின்றது. பெத்லஹேமில் அந்த குகையும் மாட்டுத்தொழுவமும் எங்கே இருகின்றது? யாருக்காவது தெரியுமோ ? " என்றார் இடையர் தலைவன். எனக்குத்தெரியும். நேற்றே நான் அவர்களைப்பார்த்துவிட்டேன். ஒரு வயதான தாத்தாவும் அவருடைய இளம் வயது அழகிய நிறைமாத கர்பிணிப்பெண்ணும் தங்க இடமில்லாமல்
இந்த பெத்லஹேம் முழுவதும் சுற்றி அலைந்து பார்த்துவிட்டார்கள். இவர்களை நான்தான் கண்டு அவர்கள் தங்குவதற்காக ஒரு குகையை காண்பித்தேன்.பாவம் அங்கு அவர்களுக்கு எந்த ஒரு வசதியும் இருக்காது. இப்போது நாம் என்ன  செய்யலாம்" என்றான் எலியஸ் என்னும் அந்த சிறுவன்.
           பரவாயில்லை..நல்ல காரியம் செய்தாய்.அனேகமாக இந்த தெய்வக்குழந்தை அவர்களுடையதாகத்தான் இருக்கும். நம்மிடம் உள்ள பால், பழம், உலர்ந்த திராட்ச்சை, தேன், தோல் பொருட்க்கள் அனைத்தையும் எடுத்து வாருங்கள். நமக்காக  பிறந்துள்ள அந்த தெய்வீக குழந்தையை காண நாம் வெறும் கையோடு எப்படிப்போக முடியும். இவை யாவும் அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்." என்றார் அந்த மூப்பன். அந்த இரவிலேயே அந்தப்பையன் வழிகாட்ட அனைவருமாக  அந்த குகைக்கு சென்று அங்கிருந்த ஒரு மாட்டு தொழுவத்தில் குழந்தை யேசுவைக்கண்டார்கள். வந்திருந்த அனைவரையும் சூசையப்பர் வரவேற்றார்.இருப்பினும் சம்பிரதாயமாக," ஐய்யா... தாங்கள் எல்லாம் யார் ?.யாரையாவது தேடிவந்தீர்களா?" என்றார்.
" ஐய்யா பெரியவரே...வானில் தோன்றிய சம்மனசுகள் அறிவித்தபடி நாங்கள் இங்கே பிறந்துள்ள உலக இரட்ச்சகரை காணவும் ஆராதிக்கவும் வந்திருகின்றோம்." என்றார் இடையர் தலைவன்.
" வாருங்கள் உள்ளே வாருங்கள்.இது என் மனைவி. இதோ உலக இரட்ச்சகர். என்று தன் குடும்பத்தை அறிமுகம் செய்துவைத்தார் சூசையப்பர். அவர்களுடன் வந்திருந்த பெண்களும் சிறுவர்களும் ," அம்மா... நீங்கள் மிகவும் அழகு... உங்கள்  குழந்தையும் அழகு. உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் உறித்தாகுக. உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏதோ எங்களாள் ஆன சிறு காணிக்கை என்று தாங்கள் கொண்டுவந்திருந்த அனைத்துப்பொருட்க்களையும் சுவாமியின் பாதத்தில் வைத்து வணங்கினர்.    தேவத்தாயார் அப்போதே பாடம் செய்யப்பட்டிருந்த ஒரு இளம் ஆட்டுக்குட்டியின் தோலை எடுத்து சுவாமிக்கு அணிவித்தார்கள். இதைக்கண்ட இடைகளும் அவர்கள் பிள்ளைகளும் சிரித்தார்கள்.
ஜோனா என்னும் ஒரு சிறுவன்" அம்மா ..உங்கள் குழந்தையின் கால் விரல்களை நாங்கள் தொட்டுப்பார்க்கலாமா?" என்றான்." ஓ...அதற்கென்ன.. உள்ளத்தில் குழந்தையாய் இருப்பவர்கள் அனைவருக்கும் நான் என் மகனைத்தருவேன் " என்று  அவருடைய குழந்தையை அவர்களிடமே கொடுத்துவிட்டார். அவர்கள் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை.பிள்ளைகளே... உங்கள் பெயர் என்ன?"
" அம்மா..நேற்று உங்களுக்கு வெள்ளாட்டின் பாலையும் கொடுத்து உங்களுக்கு தங்குவதற்கு இந்த குகையையும் காட்டினானே...இவன்தான் எலியாஸ்.
" ஓ... எலியாஸ்...நீ மிகவும் நல்லவன். ஆண்டவர் உனக்கு நல்ல சன்மானம் அளிப்பாராக..நீ எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்றார் தேவத்தாயார்.
" சொல்லுங்கள் அம்மா.. மெசியாவின் தாயானவருக்கு நான் எந்த உதவியையும் செய்ய தயாராக இருகின்றேன்."
" நீ உடனடியாக ஜுட்டாவிற்க்கு சென்று அங்குள்ள என் ஒன்றுவிட்ட பெரியம்மாவான எலிசபத்தம்மாளையும் அவர் கணவர் சக்காரியாசையும் சந்தித்து மேரிக்கு ஆண்குழந்தை பிறந்திருகின்றது. கூடுமானால் உடனே வாருங்கள்" என்று கூற  வேண்டும்."
" சரி அம்மா.. இதோ.. நான் நாளைக்கே புறப்படுகின்றேன். எனக்கு அவர்களை நன்றாகத்தெரியும். அங்கே நல்ல மேய்ச்சல் நிலம் இருப்பதால் எனக்கு அந்தப்பகுதிகள் மற்றும் அங்குள்ளவர்கள் அனைவரையும் நான் அறிவேன்" என்றான் எலியாஸ்
" சரி மற்றவர்கள் பெயர்கள் என்ன?
"என் பெயர் லேவி"
" என் பெயர் சாமுவேல்"
" என் பெயர் ஜோனா"
"என் பெயர் ஈசாக்கு"
"என் பெயர் தோபியாஸ்"
" என் பெயர் ஜோனத்தான்.
" என் பெயர் தானியேல்"
"என் பெயர் சிமியோன்"
" என் பெயர் அருளப்பன்"
" என் பெயர் யோசேப்பு... இவன் பெயர் பெஞ்சமீன்..நாங்கள் இரட்டைப்பிறவிகள்"
" அம்மா... எங்கள் அனைவரின் பெயர்களையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்வீர்களா... மறக்க மாட்டீர்களே... உங்கள் பிள்ளையிடமும் எங்களை அறிமுகப்படுத்துவீர்களா?" என்று அனைவரும் அவரிடம் கேட்டனர்.
அதற்கு மாதா," நம் உள்ளத்தில் பதிந்துள்ள யாதொருவர் பெயர்களையும் நாம் மறப்பதில்லை. இதோ இப்போதே நான் என் மகனிடம் உங்களை அறிமுகம் செய்துவைகிறேன் " என்று கூறி அவர்கள் ஒவ்வொருவரின் பெயர்களையும்
தனித்தனியே கூறிஅழைத்து தன் திவ்விய பாலனிடம் கூட்டிவந்து " மகனே... இது எலியாஸ்..இது...லேவி...இது... என்று ஒவ்வொருவராக அவரவர் பெயர் சொல்லி அனைவரையும் அறிமுகம் செய்துவைத்தார். குழந்தை யேசுவும் தன் மனதில்  அவர்களை பதிந்து வைத்துக்கொண்டதாக தன் கைகால்களை அசைத்து ஏதேதோ சப்த்தம் எழுப்பி தன் மகிழ்ச்சியையும் ஒப்புதலையும் தெரிவித்தார்.
       இந்த நிகழ்ச்சி நடந்து சரியாக முப்பது வருடம் ஓடிவிட்டது..ஒரு நாள் ஜெருசலேம் தேவாலயத்தில் தன் சீடர்களுடன் வந்திருந்தார் இயேசுநாதர். இந்த ஜெருசலெம் தேவாலயம் அந்த நாளில் பெரும் சந்தைக்கடையாக மாறி இருந்தது.
      தேவாலயத்தின் பெரும் பொறுப்பிலிருந்தவர்கள் அங்கிருந்த கடைகளை எல்லாம் பினாமிகள் பெயரில் எடுத்து கொள்ளை லாபம் பார்த்தனர். சீசரின் உருவம் பொறித்துள்ள அரசாங்க காசுகள் சிலை வழிபாட்டுக்கு சமம் என்பதால் அக்காசுகளை  தேவாலயத்தில் அவர்கள் பயன்படுத்துவதில்லை. எனவே அவர்கள் தேவாலயத்துக்கென புழங்குவதற்கு தனியாக காசுகளை அச்சிட்டு சீசரின் காசுகளுக்கும் தேவாலயத்தின் காசுகளுக்கும் ஒரு விகிதாச்சாரத்தை வைத்துக்கொண்டு இத்தகைய
பணப்பரிமாற்றத்திலும் பெரும் லாபம் பார்த்தனர். அதுவும் கோயில் திருநாட்க்கள் பாஸ்காப்பண்டிகை போன்ற விஷேஷ நாட்க்களில் இந்த விகிதாச்சாரத்தை தங்கள் இஷ்ட்டம்போல் ஏற்றி வைத்துக்கொண்டு தேவாலயத்துக்கு வரும்  திருயாத்திரீகர்களை மிகவும் கொள்ளை அடித்தனர். இதே போல கோயிலுக்கு பலிக்கென கொண்டுவரும் ஆடுகள் மாடுகள் பறவைகள் போன்றவற்றை வேண்டுமெனவே நிராகரித்து தங்களின் சொத்தை தொத்தல் வத்தல் ஆடுகளையும் மாடுகளையும் வெளியூர் யாத்திரீகர்கள் தலையில் கட்டி பெரும் மோசடியில் ஈடுபட்டனர்.இத்தகைய கால்நடைகள் பலியிட வரும்போது அங்குள்ள கோயில் நிர்வாகிகள் இவற்றை நிராகரித்து அவர்களையும் அவர்கள் பலிபொருட்க்களையும்  அங்கிருந்து வெளியேற்றிவிடவே அங்கிருந்து கூச்சல் ஆரம்பிக்கும். அவர்கள் மீண்டும் அவற்றை விற்ற வியாபரியிடம் வந்து பெரும் குறலெடுத்து முறையிடுவர். ஆனால் அந்த வியாபாரிகள் இவர்களை கண்டுகொள்ளாததுமட்டுமல்ல...
பெரும் வசவுகளையும் கொட்டி மிகுந்த அவமானத்துக்கு ஆளாக்குவார்கள்.     ஏழைகள் பாவம் அழுது புலம்புவர். மற்றவர் பாவம் அவர்களை சபித்தும் மண்னை வாறித்தூற்றியும் வசை பாடியும் செல்வர். இந்த நிலையில் ஒரு ஏழை வயோதிக விவசாயி தன் மனைவியுடன் காணிக்கை செலுத்த வந்திருந்தான்.
      தேவாலயத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஒரு தொத்தல் மாடு அவர் தலையில் கட்டப்பட்டிருந்தது. அந்தப்பலி மீண்டும் நிராகரிக்கப்படவே அவர் அதை விற்றவனிடம் வந்து அழுது புலம்பினார்.ஆனால் அவரது புலம்பல் யார் கண்ணிலும்  படவே இல்லை.அவர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு," இந்த அநியாயத்தை கேட்க்க யாரும் இல்லையா...சாலமோன் கட்டிய தேவாலயம் இப்படி கொள்ளைக்காரர்களின் கூடாரமாக மாறிப்போனதெப்படி. ஐயோ கடவுளே இதைக்கேட்க
நீ வரமாட்டாயா " என்று கதறினார். இவரின் கூப்பாடு யேசுநாதரின் காதுகளில் விழுந்தது." இதோ நான் வருகின்றேன்" என்றார். இந்த தொத்தல் மாட்டை விற்றவனிடம் வந்து ," வியாபாரியே...ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஒரு பலிப்பொருளை  நீ மோசடியாக அவருக்கு விற்றதால் அவருடைய காசுகளை நீ அவருக்கு திருப்பிக்கொடுக்க வேண்டும்" என்றார். அதற்கு அந்த வியாபாரி,"நீர் யார் இதைக்கேட்க?" என்றான். " நான் நீதியுள்ள ஒரு மனிதன்" என்றார் இயேசு.
       அப்போது தேவாலயத்தை சேர்ந்த சில போதகர்கள் இந்த வியாபாரிக்கு ஆதரவாக ," ஐய்யா நீர் யார் ? எங்கிருந்து வருகிறீர்? நீர் எந்த கோத்திரத்திலிருந்து வருகின்றீர்? நீர் எந்த அதிகாரத்தைக்கொண்டு போதிகின்றீர்?" என்றனர். அதற்கு இயேசு," நீங்கள் எந்த அதிகாரத்தைக்கொண்டு மக்களை கொள்ளை அடிகின்றீர்கள்?.நான் எங்கிருந்து வருகிறேன்? எந்த அதிகாரத்தைக்கொண்டு போதிக்கிறேன் என்று கேட்க்கப்படுகின்றது. அதற்கு என்பதில் இதுவே."நான் கடவுளின்
சாஸ்த்திரக்கூடத்திலிருந்து வருகிறேன்.வல்லமை உடையவராய் இருகின்றவர் நாமே. நான் எதையும் செய்ய முடியும். இந்த மெய்யான ஆலயத்தை இடித்து விடுங்கள். கடவுளுக்கு புகழ்ச்சியளிக்கும்படியாக அதை நான் கட்டி எழுப்புவேன்.
     இஸ்ராயலே கேள். தேவ ஊழியத்திற்கென் நியமிக்கபட்டுள்ள ஊழியனுக்கு கடவுளே உரிமை சொத்தாக இருகின்றார். அப்படியிருக்க இந்த குருக்களுக்கு ஏன் இவ்வளவு பொருளாசை ?.ஏன் அப்பாவிகளையும் யாத்திரீகர்களையும்
அநியாயமாக சுரண்டி கொள்ளை அடிகின்றீர்.?என் தந்தையின் இல்லிடத்தை நீீங்கள் கந்து வட்டிக்கடையாகவும் கொள்ளைக்கூட்ட சத்திரமாகவும் மாற்றிவிட்டீர்கள் என்று கூறி அங்கிருந்த சில கயிறுகளை எட்டுத்து அவற்றை ஒரு சாட்டையாகப்பின்னி அங்கிருந்த வியாபாரிகளை அடித்து துவைத்து வெளுத்து வாங்கிவிட்டார். அவர்கள் பயந்து அலறி ஓடினர். அனைத்துவிதமான வியாபாரப்பொருட்க்களும் சிதறி வீசப்பட்டன. இதைக்கண்ட பொதுமக்கள் பெரிதும் மகிழ்ந்தனர். ஆனால் ஓடிய வியாபாரி ஒருவன்," போதகரே ...இதற்கெல்லாம் நீர் ஒருநாள் ஒரு பெரும் விலை கொடுக்க போகின்றீர். இந்தக்கடைகள் எல்லாம் யாருடையது என்று எண்ணிக்கொண்டிருகின்றாய்....இவை தேவாலயத்தின் தலைமை சங்க உருப்பினர்களில் ஒருவரான டோரோஸுக்கு சொந்தமானது. அவரைப்பகைத்துக்கொண்டாய் அல்லவா...இனிமேல் தெரியும் உன் சங்கதி...நீர் அவ்வளவுதான்." என்றான். ஆனால் யேசுநாதர் இவற்றுக்கு எல்லாம் பயப்படுபவராக  இல்லை. ஆனால் அன்றிலிருந்து அவருக்கு ஒரு பெரும் எதிரியாக டோரோஸ் உருவெடுத்தான். இந்த டோரோஸ் ஜெருசலேம் தேவாலயத்தில் தன் பதவியை வைத்துக்கொண்டு பெரும் பணம் சம்பாதித்தான்.அவனுக்கு ஏறாளமான செல்வம்  இருந்தது.. அவ்வளவு செல்வம் இருந்தும் அவன் பெரும் கஞ்சனாக விளங்கினான்..
அவன் தேவாலயத்தின் திரைமறைவிலிருந்து செய்யும் பல காரியங்கள் உலகத்துக்கு இவனை நல்லவனாகவும் உத்தமனாகவும் காட்டும். ஆனால் உள்ளுக்குள் அவன் ஒரு பெரும் தீய சக்தியாக விளங்கினான். ஜெருசலேமில் இவனுக்கென  ஒரு பெரும் வீடும் இருந்தது. அது இன்றளவும் இருகின்றது. யேசுநாதர் எங்கே சென்று போதித்தாலும் அவரை கண்கானிக்கவும், அவரது பேச்சில் குற்றம் கண்டு பிடிக்கவும் அல்லது அவரை மட்டம் தட்டவும் சில பரிசேயர்களை இவன் அனுப்பிக்கொண்டே இருப்பான்...உண்மையில் டோரோஸுக்கு தன் வெளிவேடம் கலைந்துவிட்டதே... அதுவும் இந்த கலிலேய ராபியால். இவரை வளரவிட்டால் தன் கதியும் தன்போன்ற பல பரிசேயர்களின் கதியும் என்னாகும்? இவரை எப்படி பழிவாங்குவது என்று தன் மனதில் சதா திட்டமிட்டுக்கொண்டே இருந்தான்.காலம் நகர்ந்துகொண்டே இருந்தது.
    யேசுநாதர் தன் பால்ய சிநேகிதர்களைக்காண ஒரு முறை பெத்லஹேமுக்கு வந்தார். அங்கே அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்துக்கொண்டிருந்தன. இயேசுவின் பிறப்புக்குபின் மூன்று ராஜாக்கள் வந்து அவரை தரிசித்துச்சென்றபின்  பெரிய ஏரோதன் இயேசுநாதரைக்கண்டுபிடிக்க பெரும் முயற்சி செய்தும் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் பெரிதும் கலக்கமுற்றான்.எனவே தானே இதைக்கண்டுபிடிக்க பெத்லஹேமுக்கு வந்தான்.அவரைக்கண்டதாக தெரிவித்த  இடையர் கூட்டத்தினரை வரவழைத்து விசாரித்தான்.அவர்கள் அனைவரும் ஒரே குரலாக," வானோர் வாழ்த்துப்பாடியதை தாங்கள் கேட்டதாகவும் பிறகு அவர் தெரிவித்தபடியே அந்த மாட்டுக்குடிலில் குழந்தை இயேசுவையும் அவருடைய  தாயார் மரியாளையும் தந்தையார் சூசையும் கண்டதாகவும் மேலும் மூன்று ராஜாக்கள் வந்து அவரை தரிசுத்து சென்றதையும் விபரமாகக்கூறினார்கள்.
ஆனால் பெரிய ஏரோது கல்வி அறிவில்லாத இந்த இடையர்கள் குடித்துவிட்டு ஏதோ உளறுகின்றார்கள் என்று எண்ணி அவர்களை நையப்புடைத்தான்.ஆனால் அவர்கள் எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்கள் கண்டதையும் கேட்டதையும்  உண்மை என்று சாதித்தார்கள். இப்படியாக கிழட்டுக்குள்ள நரி என்றழைக்கப்பட்ட பெரிய ஏரோது மன்னனின் அடாவடியால் அங்கு வசித்திருந்த அத்தனை இடையர்களும் வேறுவேறு இடங்களுக்கு உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிப்போனார்கள்.ஏரோதனின் உள்ளம் மேலும் கடினப்பட்டது. இந்தக்குழந்தை மெசியா எங்கிருந்தாலும் அவரைக்கொல்வேன் என சூழுரைத்தான். அதன்படி மூன்று வயதுக்குட்பட்ட அத்தனை ஆண் குழந்தைகளையும் கொல்ல
உத்தரவிட்டான்.இதனால் நடந்தது பெரும்பயங்கரம். யூதேயா நாடு முழுவதும் இந்த மாசற்ற குழந்தைகளின் இரத்தத்தால் கழுவப்பட்டது. ஜெருசலேம் நகரில் அதோணிக்கோட்டையில்கூட பல நூற்றுக்கணக்கான குழந்தைககள் வரவழைக்கப்பட்டு வெட்டிக்கொல்லப்பட்டனர். அந்த
குழந்தைகளின் சடலங்களை அந்தக்கோட்டையினுள்ளே புதைத்தார்கள்.[ பிற்பாடு இதே இடத்தின் மீது தான் இயேசுநாதர் நிற்கவைக்கப்பட்டு சிலுவைச்சாவு என்னும் தண்டனையை பெற்றார்.] யார் யார் எல்லாம் இயேசுநாதருக்கு உதவி  செய்தார்களோ அத்தனை பேரும் மிகவும் கொடுமையான முறையில் வாதிக்கப்பட்டனர். யார் யார் வீட்டில் குழந்தைகள் கொல்லப்பட்டார்களோ அவர்களைக்காபாற்ற முயன்ற தாய்மார்கள் தந்தையர்கள் சகோதரர்கள் என பலரும்  கொல்லப்பட்டார்கள். இவ்விதமாக பெத்லஹேம் முழுவதும் கல்லறைகளால் நிரம்பியது. இந்த பின்னனியில்தான் இயேசுநாதர் பெத்லஹேம் வந்தார். தன் நண்பர்களான இடையர்களுக்காக வருந்தினார். அங்கே ஒரு சதுக்கத்தில் ஒரு பிரசங்கம்
நிகழ்த்தினார். அது இவ்வாறு இருந்தது.
" ராக்கேலின் கல்லறைக்கு மரியாதை செலுத்துவதற்காக நான் வெகு தொலைவிலிருந்து வந்திருகின்றேன். தொன்மையான ராக்கேலின் விம்மல்கள் மீண்டும் எழுப்பப்பட்டதையும் நான் கேட்டேன். விதவைகளாக்கப்பட்ட துயரம்,  அன்பான மனைவிமாரை இழந்த கணவர்களின் வேதனையில் யாக்கோபின் துயரம் கர்ஜிப்பதையும்  நான் கேட்டேன். உங்களுடன் நானும் அழுகின்றேன். என் சகோதரர்களே பெத்லஹெம் ஆசீர்வதிக்கப்பட்ட சிறிய நிலம். யூதாவின் நகரங்களில் மிகவும் சிறியது. ஆனால் கடவுளின் பார்வையில் அது மிகவும் பெரிது. அது இரட்ச்கருடைய தொட்டிலாயிருந்ததால் மிக்கேயாஸ் கூற்றுபடி அது சர்வேசுரனுடைய மகிமையும், அவருடைய நெருப்பும் அவருடைய மாம்சமெடுத்த  அன்பும் தங்கும் பேழையாகவும் இருக்க நியமிக்கப்பட்டிருந்ததால் சாத்தானுடைய பகையை எழுப்பிவிட்டது. உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்..நீ அவள் குதிங்கால தீண்ட முயல்வாய். ஆனால் அவள் உன் தலையை நசுக்குவாள் "என்று கடவுள் அறிவித்தார்.
ஒரு தாயின் குழந்தையை குறி வைக்கும் பகையைவிட பெரிய பகை வேறு என்ன உள்ளது.?. ஒரு ஸ்த்ரீயின் இருதயமே அவள் குழந்தைதானே.. இரட்ச்சகரின் தாயுடைய குதிங்காலைவிட அதிக பலமுள்ள குதிங்கால் வேறு எது.?. தோற்கடிக்கப்பட்ட சாத்தான் அவள் குதிங்காலை தீண்ட முடியாமல் தாய் மார்களின் இதயங்களை தீண்டுகிறான். இத்தனை குழந்தகளின் மரணமும் பெரும் துயரமாக இருப்பினும் பெத்லகேமே நீ மகிழ்வாய். இந்த மாசில்லா குழந்தைகளின்  இரத்தம் பிரகாசிக்கும் செங்கரு நீலப்பாதையை மெசியாவுக்கு தயாரித்துள்ளது. ஆகவே பெற்றொர்களே தாய்மார்களே...மெசியாவுக்காக நீங்கள் செய்திருக்கும் தியாகம் மிகவும் பெரிது. நம் நேசத்துக்குறியவர்களை கடவுளுக்காக
அர்ப்பணித்துள்ளோம் என்னும் அமைந்த உள்ளத்துடன் அமைதியாக வாழுங்கள். கடவுளின் ஆசீர்வாதம் என்றென்றும் உங்களுடன் இருப்பதாக.உங்களுக்கு சமாதானம உண்டாவதாக " என்றார்.
" அப்படியானால் அந்தக்குழந்தை நீர்தாமோ ?. எங்களின் இத்தனை அழிவுக்கும் துயரத்துக்கும் காரணம் நீர்தாமோ?' என்றனர். இயேசு மறுப்பேதும் கூறாமல் ஆம் ... அந்தக்குழந்தை நான் தான்" என்றார். அப்போது அந்தக்கூட்டத்துல்  ஒரு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
      ஒருத்தி " ஐய்யோ...நான் பெற்ற என் ஐந்து பிள்ளைகளையும் பலி கொடுத்தேன். எனக்கு இப்போது ஒன்றுகூட இல்லையே" என்று கதறினாள்.மற்றோருத்தி சரேலென தன் மார்பை திறந்து காட்டி," போதகரே இதோ பாரும்...வெட்டப்பட்ட என் மார்பை பாரும். இதிலே பால் குடித்துக்கொண்டிருந்த என் குழந்தையை சேவகன் ஒருவன் ஒரே வீச்சில் இருகூறாக வெட்டிக்கொண்றான்.... ஐயோ என் மகனே எல்லீஸ்... உன்னை நான் மீண்டும் எங்கே காண்பேன்" என்று கதறினாள். மிகுந்த புலனடக்கம் கொண்டவராகிய இயேசுநாதர் சரேலென தன் முகத்தை திருப்பி," பெண்ணே உன் துன்பம் பெரிது" என்றார்.
     வேறு ஒருத்தி," போதகரே..நான் என்ன செய்வேன். சேவகர் என் பிள்ளையை வெட்டுவதிலிருந்து தடுக்க என் கணவரும் என் மூன்று ஆண் பிள்ளைகளும் போராடினர். வீரர்களின் வாள் வீக்சில் நான் என் கணவரையும் என் மூன்று ஆண் பிள்ளைகளையும் பறிகொடுத்தேன். நீர் மெசியாவானால்... என் பிள்ளைகளையும் என் கணவரையும் உயிர்பிழைக்கச்செய்யும்" என்றாள். அப்போது இயேசு," பெண்னே ..உன் துன்பமும் பெரிது..என்னால் இப்போது ஒன்றும் செய்ய இயலாது.  மனுமகன் உயிர்த்தபின் நீங்கள் பறிகொடுத்த அத்தனை பேர்களையும் பரலோகத்தில் சம்மனசுகளாக மாற்றித்தருவேன். இது உறுதி " என்றார்.
     ஆனால் அவர் பேச்சை யாரும் நம்புவதாக இல்லை. மாறாக கலஹமே ஏற்பட்டது. " கலிலேயனே..போ அப்பாலே... எங்களை விட்டு போய்விடும்...உன்னால் நாங்கள் பட்ட துன்பம் போதும். நீர் எங்களுக்கு மேலும் மேலும் துன்பம் தர வேண்டாம்... போ இங்கிருந்து " என்றனர். வேறு வழியாக இயேசுநாதரும் அங்கிருந்து அகன்றார்.
       மிகவும் கனத்த இதயத்துடன் அங்கிருந்து சென்ற யேசுநாதரும் அவர் சீடர்களும் அன்றிரவு தங்குவதற்கு பெத்லஹேமில் வேறு இடமில்லாததால் யேசுநாதர் பிறந்த அந்த மாட்டுத்தொழுவத்திற்கே வந்தனர். அன்று அது இருந்த நிலையில்  யாரும் அதனுட்புகவே விரும்பவில்லை. ஆனால் அதற்கு மாறாக யேசுநாதர் மிகுந்த ஆசையுடன் அதனுட்சென்றார்." என் சகோதரர்களே...இதோ இந்த சிறிய குகையில்தான் நான் பிறந்தேன். இங்கிருக்கும் சாணங்களைக்கண்டு நீங்கள் அசூசி அடைய வேண்டாம். இவை என் தாயாரின் பாதச்சுவடுகளை இன்னமும் தங்கி இருகின்றன.இந்த பூமியில் நான் அவதரிக்க என் பிதாவின் ஆசீரையும் பரிசுத்த ஆவியின் வல்லமையையும் தன்னகத்தே கொண்டுள்ள என் தாயாரின்
அனைத்து ஆசீர்வாதங்களையும் அவள் பாதம் பதிந்த இந்த சாணங்கள் இன்னமும் தாங்கியுள்ளன. இந்த குகையின் மேல் கூடுகட்டியிருக்கும் சிலந்திப்பூச்சிகள் என்ன காரியம் செய்தன என்று உங்களுக்கு தெரியுமா?.
மூன்று ராஜாக்கள் என்னை வந்து சந்தித்து ஆராதித்து சென்றபிறகு தான் அந்த ஞானிகளால் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெரிய ஏறோதன் மிகுந்த கோபம் கொண்டான். தன் வீரர்களை அனுப்பி என்னைப்பற்றி விசாரிக்க இந்த குகைக்கு  அனுப்பினான். எனக்கு இந்த பூமியில் தகப்பனாக இருந்த சூசை குகையின் வாயிலின் நின்றுகொண்டர். என் தாயார் அருகில் உள்ள பால் குகைக்குள் சென்று தன்னை மறைத்துக்கொண்டார். ஆனால் இந்த சிலந்திப்பூச்சிககள் தங்கள்  வலைகளால் பின்னி நான் பிறந்திருந்த இந்த குகையை அதன் சுவடு முதலாய் தெரியாதபடி மூடிவிட்டன. வீரர்கள் என் தந்தையிடம் பேச்சுக்கொடுத்னர். தான் ஒரு ஏழை தச்சன்.. அதுவும் தான் பஞ்சத்துக்கு ஆண்டி என்றும் பரம்பரை ஆண்டி என்றும் தன் மனைவி வெளியே சென்றிருகின்றாள் என்றும் தன் ஜீவனம் மிகவும் கொடுமையானது என்றும் கூறினார். உள்ளே வந்த வீரர்கள் நான் இருந்த இடம் பெரும் சிலந்திக்கூடுகளால் நிறைந்திருந்ததைக்கண்டு, " இந்த இடத்தில் நீ தங்குமளவுக்கு அவ்வளவு ஏழையா...உன்மீது நாங்கள் பரிதாபப்படுகிறோம். இங்கு ஏதோ மெசியா பிறந்திருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளதாலேயே நாங்கள் வந்தோம்... இந்தப்பக்கம் மூன்று அரசர்கள்  வந்தார்களாமே..மெசியாவைக்கண்டார்களாமே...அவர்களைப்பற்றி உனக்கு ஏதும் தெரிந்தால் சொல் " என்றார்கள்.
    அதற்கு அவர்," ஐயா...நீங்களே கூறினீர்கள் இந்த இடம் சாதாரண மனிதர் முதலாய்கூட தங்குவதற்கு தகுதியில்லாத இடம் என்று. இங்கே வந்து யூதர்களின் அரசர் பிறப்பாரா..அவரை சந்திக்க மூன்று அரசர்கள் இங்கே வருவார்களா...
    எனக்கு அவர்களைப்பற்றி எதுவும் தெரியாது... கல்வி அறிவே இல்லாத என்னிடம்  அத்துனை பெரியவர்களை சந்திக்க எனக்கு ஏதாவது தகுதி இருகின்றதா...உங்களுக்கு கிடைத்த தகவல் தவறானது." என்றார். இதை நம்பிய ஏறோதின்  வீரர்களும் சென்று விட்டார்கள். ஆகவே இந்த சாதாரண சிலந்திகளும் என்னைக்காக்க அன்று பெரும் உதவி புறிந்தன. மேலும் இங்கே சுற்றித்திரியும் பல்லிகளைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள். அவை போடும் கீச்... கீச் என்னும் சப்த்தமே  எனக்கு முதல் தாலாட்டு பாடல்கள் ஆனது. ஆகவே இங்குள்ள யாவுமே அசுத்தமானது அல்ல. அவற்றை தொந்திரவு செய்ய வேண்டாம்.அவைகள் அனைத்துமே எனக்கு உதவி புறிந்ததால் அவைகள் யாவுமே புனிதமானவை ஆயின.
    இதோ இந்த இடத்தில்தான் என் நேசத்தாயார் என்னை தன் மடியில் கிடத்தி அமர்ந்திருந்தார். கீழிரங்கும் இந்தப்படிகள் வழியாகத்தான் மூன்று அரசர்களும் என்னை ஆராதிக்க வந்திருந்தனர். இந்தப்படிகள் துவங்கி நான் அமர்ந்திருந்த
இடம் வரை ஒரு பெரும் அழகிய இரத்தினக்கம்பளம் விரிக்கப்பட்டது.
இத்தனைபடிகளிலும் அந்த்க்கீழ்த்திசை ஞானிகள் ஒவ்வொருவரும் மண்டியிட்டபடியே என்னை வந்து சந்தித்தனர். அடிமைகள் பெரும்பெரும் பெட்டிகளில் கொண்டுவந்திருந்த பொன்மீரை தூபங்களை அந்த அரசர்கள் என்
நேசத்தாயாரிடம் சமர்ப்பித்தனர். அவற்றை என் தாயார் என் சார்பாக பெற்றுக்கொண்டார். அந்த மூன்று அரசர்கள் துவங்கி அடிமைகள் வரை யாவர் கரங்களிலும் நான் கொடுக்கப்பட்டேன். அன்று நான் பிறந்த போது அவை எப்படி  இருந்தனவோ அப்படியே இப்போதும் இந்த முப்பது வருடங்களுக்கு பின்னும் இன்று நான் வருமளவும் அதை அப்படியே பாதுகாத்து வைத்துள்ளார் என் பரலோக தந்தை" என்றார்.
        இந்த இடத்தின் பெருமையையும் மகிமையையும் உணர்ந்த யேசுவின் சீடர்கள் அவர் பிறந்த இடத்தையும் அந்த குகை முழுவதையுமே தங்கள் கால்களால் மண்டியிட்டபடியே சுற்றி வந்து ஆராதித்தனர்.  அடுத்த நாள் யேசுநாதர் பெய்த்சூர் என்னும் இடத்தை அடைந்தனர். இந்த இடத்தில் ஒரு சத்திரம் இருந்தது.அதன் சொந்தக்காரனிடம் இயேசுநாதர் பேச்சுக்கொடுத்தார்." ஐயா...நான் வெகு தொலைவிலிருந்து வருகின்றேன்.முப்பது
வருடங்களுக்கு முன் நான் இங்கிருந்தேன். ஆனால் என் தகப்பனாரின் பிழைப்பின் காரணமாக நாங்கள் எகிப்து சென்றோம். மீண்டும் இப்போதுதான் திரும்பி வருகின்றேன்... இங்கே வாழ்ந்த என் குடும்ப நண்பர்களைக்கணவந்தேன். அவர்களைப்பற்றி உமக்கு ஏதாவது தெரிந்தால் கூறு" என்றார்.
    அந்த விடுதியின் தலைவன்," ஐய்யா... என் பெயர் எசாக்கியா..எனக்கு அபார நுகரும் சக்த்தியும் ஞாபக சக்கிதியும் உண்டு. என்னிடம் வருபவர்கள் எத்தன்மையவர் என்பதை நான் உடனே கண்டு பிடித்து விடுவேன். அன்று சுமார் முப்பது  வருடங்களுக்கு முன் ஒரு வயோதிக ஏழை தச்சனும் அவரது இளம் வயது நிறைமாத கர்பிணியான மனைவியும் என்னிடம் தங்குமிடம் கேட்டு வந்திருந்தார்கள். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை என்பதினால் மட்டுமல்ல..உண்மையில்  என் விடுதியில் தங்க இடமில்லாததால் அனுப்பிவிட்டேன்.
      கடவுள் கிருபையில் அடுத்தவாரம் மூன்று ஞானிகள் என்னிடம் தங்குமிடம் கேட்டு வந்தார்கள். தாங்கள் கொண்டு வந்திருந்த பல விலை உய்ர்ந்த பரிசுப்பொருட்களை பாதுகாப்பாக வைக்க என்னிடம் தங்குமிடம் கேட்டார்கள். அப்போது  என்னிடம் அதிகமான தங்குமிடம் இருந்தது. சுமார் ஒருமாத காலத்திற்கு தங்க வேண்டியிருக்கும் எனவும் தங்களுடன் வந்திருக்கும் அனைவருக்கும் சாப்பாடு, பால் பொருட்க்கள், தோல் பொருட்க்கள் போன்ற அத்தியாவசியமான  பொருட்க்களை வாங்க அவ்வளவு பணத்தையும் என்னிடம் உடனே கொடுத்துவிட்டார்கள். என்னிடம் அப்போது அப்போது மூட்டை மூட்டையாக பணம் சேர்ந்தது.அவர்கள் மொத்தம் நூறு பேருக்கு குறையாது இருந்தனர். அடிமைகள்  என்றும் பாது காப்பு வீரர்கள் என்றும் அரசர்களின் உறவினர் என்றும் அவர்கள் இருந்தார்கள்.
       அடிமைகள் கூடாரங்கள் அமைத்தும் அவர்கள் வந்த குதிரைகள் மற்றும் ஒட்டகங்களுக்கு பாதுகாப்பாகவும் வெட்ட வெளியிலேயே தங்கிக்கொண்டார்கள். ஆனால் என்ன ஒரு துரதிர்ஸ்ட்டம் பாருங்கள். ஒருமாதம் தங்குவோம் என்று  சொன்னவர்கள் அடுத்த ஒன்றிரண்டு நாட்க்களிலேயே இடத்தை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டார்கள். இதனால் எனக்கு நஸ்ட்டம் ஒன்றுமில்லை. அவர்களால் எனக்கு நல்ல லாபம்தான்.அந்த மூன்று ஞானிகளும் எங்களுக்கும்
இங்குள்ளவர்களுக்கும் நிறைய பரிசுப்பொருட்க்கள் கொடுத்தார்கள்.
ஆனால் அவர்கள் இந்த சிற்றூருக்கு ஏன் வந்தார்கள். ஏன் உடனே சென்றுவிட்டார்கள் என்று எனக்குத்தெரியவில்லை. பெரிய ஏறோது மன்னர்கூட என்னை விசாரித்தார். மூன்று அரசர்கள் என்னிடம் வந்து தங்கினார்கள் என்று நான்  கூறினேன். ஆனால் அவர்கள் ஏன் உடனே சென்றுவிட்டார்கள் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை" என்றேன். ஒருக்கால் அவர்கள் வந்திருந்த காரியம் தோல்வியில் முடிந்திருக்கலாம். அல்லது தவறாக இடம் காட்டப்பட்டு  வந்திருக்கலாம் என்றேன். அதனால் பெரிய ஏரோது மிகவும் விசனமாக சென்றுவிட்டார்.அவரால் எனக்கு எந்த துன்பமும் ஏற்படவில்லை." என்றான்."
        ஐய்யா... இந்த வீட்டிலிருந்தவர்களுக்கு என்னவாயிற்று.. எனக்கு அவர்களை நன்றாக நினைவிருகின்றது " என்றார் இயேசுநாதர்.
" ஐய்யா... இந்த வீட்டிலிருந்தவள் அன்னா என்னும் பெண். நான் சொன்னேன் அல்லவா... அந்த முதியவரும் அவரது நிறைமாத மனைவியும் என்று. அந்தப்பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சில காலம் கழித்து அவர்கள்  அன்னாளின் வீட்டுக்கு வந்து தங்கினார்கள். ஏதோ அவசரமாக எகிப்த்து போக வேண்டுமென்றார்கள். வந்த அடுத்த நாளே அவர்கள் கிளம்பிபோய்விட்டார்கள். அன்னாளின் மூத்த மகள் அப்போது ஊரில் இல்லாததால் அவள்மட்டும் தப்பித்தாள்.
" ஏன் என்னவாயிற்று அவர்களுக்கு" என்றார் இயேசுநாதர்.
" என்னவாயிற்றா... உண்மையில் அந்த தச்சனின் குடும்பம் பெரும் துரதிஸ்ட்டம் பிடித்தாகத்தான் இருக்க வேண்டும்.அவர்கள் சென்ற அடுத்த நாளே ஏறோதின் ஆட்க்கள் வந்து அன்னாளை படுமோசமாக விசாரித்தார்கள். மெசியா என்னும்  ஒரு குழந்தைக்கும் அதன் பெற்றோர்களுக்கும் அன்னாள் அடைக்கலம் கொடுத்த குற்றதிற்காக அவளை அடித்து உதைத்து அதனால் ஏற்பட்ட அமளியால் அவள் குழந்தைகள் இரண்டையும் கொண்று பிறகு அன்னாளையும் கொண்று  இந்த வீட்டையும் தீக்கிரையாக்கி சென்றார்கள்" என்றான் அந்த விடுதிக்காரன் எசாக்கியா. இயேசுநாதர் வேறு எதையும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினார்.
" ஐய்யா கனவானே..நீங்கள் ஏதும் பேசாமல் சென்றால் எப்படி... நீரும் உமது ஆட்க்களும் தங்க விடுதியில் இடம் இருகின்றது... வேண்டுமா... இல்லை வேண்டாமா... ஏதாவது சொல்லிவிட்டு போகலாமே" என்றான் விடுதிக்காரன்.ஆனால்  அவனைப்பற்றி கவலைப்படாமல் இயேசுநாதர் கண்களில் இரண்டு நீர்த்துளி கசிய வெளியேறினார்.
" ஆண்டவரே..தாங்கள் தேடும் பால்ய நண்பர்கள் ஏரோதின் அடக்கு முறைக்கு பயந்து ஓடிவிட்டதால் இனிமேல் இந்த இடையர் வாழ்ந்த இடங்களில் அவர்களை தேடி பயன் இல்லை. எனக்குத்தெரிந்து ஹெப்ரோனின் சமவெளிகளிள்  கால்நடைகள் மேய்க்கும் ஒரு கூட்டம் உள்ளது. அவர்களை விசாரித்தால் ஒருக்கால் அவர்களைப்பற்றி ஏதாவது தகவல் கிடைக்கலாம் " என்றார் அருளப்பர் என்னும் சீடர். அவர் நினைத்தது சரியாகப்போயிற்று. மிகவும் வயதான வெண்தாடி வைத்திருந்த மூன்று இடையர்கள் அவர்களுக்கு தென்பட்டனர்.
" இது ஜெட்டா என்னும் நகரம்."
இது சற்றே உயர்ந்த மலைபிரதேசமும் கூட. இங்குதான் யோவான் ஸ்நானகர் பிறந்தார். யோவான் ஸ்நானகர் பிறந்த குகை இன்றளவும் இங்கு உள்ளது. அவருடைய தகப்பனார் சுவக்கீனும் தாயார் எலிசபெத் அம்மாளும் இங்கிருந்த ஒரு கல்  வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இந்த வீட்டில்தான் தேவத்தாயார் தன் பெரிய அம்மாவாகிய எலிசபெத்தம்மாளை அவர் முதிர்ந்த வயதில் கருத்தாங்கி இருகின்றார் என்று அறிந்து அவரை சந்தித்தார். மெக்னிபிகாத் என்னும் [ என் ஆன்மா  ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது என் மீட்ப்பராம் கடவுளிடம் என் மனம் மகிழ்கின்றது.. ஏனெனில் வல்லமையுள்ளவர் என்னில் அருட்பெரும் காரியங்கள் பல புறிந்தார்.இந்நாள் முதலாம் தலைமுறைகள் என்னை பேருடையாள் என சொல்லிடுமே... அவருடைய நாமம் புனிதமானது..] பாடலை தேவத்தாயார் இங்குதான் பாடினார்கள்.
      மூன்று இடையர்களையும் இயேசுநாதர் தன் பரிவாரங்களுடன் வந்து சந்தித்தார். இயேசுநதரை கண்ட மாத்திரத்தில் அவர் யார் என கண்டுகொண்ட ஒரு இடையர்," ஐய்யா... தாங்கள் உயர்குலத்திலிருந்து வந்துள்ளீர் எனவும் வெகு  தொலைவிலிருந்து வந்திருகின்றீர் எனவும் நான் அறிகிறேன்... தேவரீர் தாங்கள் யாரோ.. என்றார். அதற்கு இயேசுநாதர்," ஐய்யா...நான் கலிலேயாவிலிருந்து வருகிறேன்..நான் என் பால்ய நண்பர்களைத்தேடி வந்திருகின்றேன்" என்றார்.
அந்த முதிர்வயது இடையர்," ஐய்யா... என் நினைவு சரியாக இருந்தால்... ஆம் அவர்களும் கலிலேயாவிலிருந்து வந்ததாகத்தான் சொன்னார்கள்.ஒரு வயதான ஏழை தச்சர் ஒருவரும் அவருடைய இளம் வயதும் நிறைமாத கர்ப்பிணியுமான மனைவியும் குடிக்ககணக்கு ஒப்புவிக்க பெத்லஹேம் வந்திருந்தார்கள்.அவர்களுக்கு மாட்டுத்தொழுவத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தை அதன் தாயாரைவிட அழகாக இருந்தது. அந்தக்குழந்தைதான் உலக  இரட்ச்சகர் என வானோர் எங்களுக்குத்தோன்றி கூறினார்கள். அந்தக்காட்ச்சியையும் அந்தக்குழந்தையையும் நாங்கள் எங்கள் உயிர் உள்ளவரை மறக்க முடியாது. இப்போது இருந்தால் அந்தக்குழந்தைக்கு உங்கள் வயது இருக்கும்.உங்கள் சாயல் கூட அப்படித்தான் உள்ளது.. எல்லாம் பழங்கதை ஆயிற்று.மீண்டும் அந்தக்குழந்தையையும் அதன் தாயாரையும் நான் காண்பேனோ என்னும் ஆவலால் நான் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருகின்றேன்" என்றார் அவர்
" ஐயா பெரியவரே...நீர் கூறுவது முற்றிலும் உண்மை.உம் கூற்றுப்படி நீர் கண்ட அந்தக்குழந்தை நான் தான்.என் பெயர் எம்மானுவேல் எனப்படும் யேசு. உங்களைக்காணூம்படியாகத்தான் நான் தங்களைத்தேடி வந்திருகின்றேன்.
தங்கள் பெயர் என்ன" என்றார் இயேசுநாதர்.
" என் பகவானே ...நான் காண்பது உண்மையா...நீரே இஸ்ராயேலின் கடவுள்...நீரே இஸ்ராயேலின் ஆண்டவர். நீரே இஸ்ராயேலின் அரசர்.சம்மனசுகள் சொன்னதால் நாங்கள் நம்பினோம்.இந்த நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழந்ததில்லை.  எங்களுக்கு ஏரோதனால் ஏற்பட்ட அனைத்து துன்பங்களிலும் நாங்கள் மனம் தளரவில்லை. இன்னும் எவ்வளவு துயர் வந்தாலும் நாங்கள் மனம் தளரப்போவதில்லை. உம்மைகண்டுகொண்ட எங்கள் கண்கள் மீண்டும் பாக்கியம் பெற்றன. உங்கள் தாயார் நலமா? எங்களை மறக்க வேண்டாம் என நாங்கள் அன்று அவரைக்கேட்டுக்கொண்டோம்.. இன்னும் எங்களை அவர் தங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பாரோ தெரியவில்லை. அடுத்த முறை நீங்கள் அவரைபார்க்கும்போது இந்த
ஏழை எலியாசும்,லேவியும் யோசேப்பின் குமாரன் யேசேப்பும் அவரை மிகவும் நலம் விசாரித்ததாகக்கூறுங்கள் "என்றனர்.
" என் நண்பர்களே...நானோ என் தாயாரோ ..எங்கள் சித்தத்தில் உள்ள யாரையும் நாங்கள் மறப்பதில்லை. அவர் உங்கள் அனைவரையும் பற்றி அவ்வப்போது என்னிடம் பேசுவார்.அதனாலேயே நான் உங்கள் அனைவரையும் மீண்டும்  சந்தித்துப்பேச ஆவலாய் வந்துள்ளேன்... நீ எலியாஸ்... நீ லேவி...நீ யாரப்பா... உன் பெயர் எனக்கு நினைவில் இல்லையே"
" இவன் யோசேப்பின் மகன் யோசேப்பு. யோசேப்பு தன் பிள்ளைகளை ஏறோதின் கொடுமையிலிருந்து காப்பாற்றும்போது நடந்த சண்டையில் கொல்லப்பட்டுவிட்டான். அதில் தப்பியது இவன் மட்டுமே".
" யோசேப்பின் மகன் யோசேப்புவே... நீ என்னிடம் வா...உன் தகப்பனுக்குறிய முத்தத்தை நான் உனக்கு கொடுகின்றேன்.சமாதானத்தில் வாழ்வாயாக.நான் உனக்கு ஒரு உறுதிமொழி கொடுகின்றேன்.நான் என் உலக வாழ்க்கை முடிந்து
பரலோகம் சேர்ந்த பிறகு என் பரம தந்தையால் உலக இரட்ச்சகர் என்னும் மணிமுடியை சூடும்போது உன் தந்தையும் உன் சகோதரர்களும்," உலக ரட்ச்சகர் வாழ்க என ஆர்ப்பாட்டமாகவும் உற்ச்சாகமாகவும் குரலெழுப்புவார்கள். அதன்பிறகே வானோர்கள் தம் க்ளோரியா என்னும் வாழ்த்துப்பாடல்களைபாடுவார்கள் " என்றார் இயேசுநாதர்.
" அப்படியானால் என் மனைவி என் மக்கள்... அவர்கள் கதி என்ன மாசில்லாக்குழந்தைகளின் பலியில் நானும் என் மனைவியையும் பிள்ளைகளையும் இழந்தேன். இந்தப்பாவி அப்போது ஊரில் இல்லாத காரணத்தால் நான்மட்டுமே தப்பித்தேன்.
      என் மனைவி மக்களைக்காப்பாற்ற முடியாத நீசப்பாவி ஆனேன். நான் வாழ்ந்து என்ன பிரையோஜனம்..சுவாமி என்னை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும். ஆண்டவரே... நான் என் மனைவி மக்களை  இழந்ததைப்பற்றிக்கூட அதிகம் கவலைப்படவில்லை.ஆனால் உமக்கும் உம் தெய்வீகத்தாயாருக்கும் என்னகதி ஆனதோ என்றுதான் நான் அதிகம் கவலைப்பட்டேன். இதை தேவரீர் எவ்விதம் எடுத்துக்கொள்வீர்களோ எனக்குத்தெரியாது...
நான் உங்களை அவ்வளவுதூரம் நேசித்தேன் " என்றார் எலியாஸ் தேம்பித்தேம்பி அழுதபடி.
       "நான் உன்னை அறிவேன் எலியாஸ். நான் உனக்கு ஒரு சேதி சொல்ல விரும்புகின்றேன்.உமக்கு முன்பாக நான் போய்விடுவேன். யோசேப்புக்கு கொடுத்ததுபோல நான் உனக்கும் ஒரு உறுதி கொடுகின்றேன். இந்த உலகில் நான் பிறந்து  கண் திறந்த நாள் முதல் என்னக்காணவந்த முதல் மனிதருள் சிலரில் உன் முகமும் இருந்ததால் நான் மகிமையில் இறக்கும்போது கடைசியில் நான் காணும் சில முகங்களில் உன் முகமும் ஒன்றாக இருக்கும். உன் முகத்தை என் கண்களில் பதித்துக்கொண்டு அப்படியே பரலோகம் செல்வேன். நீயும் இந்த உலக வாழ்க்கையை முடிக்கும்போது மீண்டும் அந்த க்ளோரியா பாடலுடன் என்னுடன் வந்து ஐக்கியமாவாய். அப்போது அங்கே உன் மனைவியும் மக்களும் பரலோகத்தில்  சம்மனசுக்களாக இருப்பார்கள். மீண்டும் க்ளோரியா பாடலுடன் உன்னை வரவேற்பார்கள்." என்றார் இயேசு நாதர்.
" சரி மற்ற என் நண்பர்களைப்பற்றி கூறுங்கள். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருகின்றார்கள்.? என்ன செய்து கொண்டிருகிறார்கள்?"
" ஆண்டவரே..நண்பர் ஈசாக்கின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருகின்றது. ஏறோது ராஜாவின் விசாரணையின்போது நாங்கள் மோட்ச்ச வாசிகளைக்கண்டோம். சம்மனசுகளின் க்ளோரியா பாடலைக்கேட்டோம் என்று எவ்வளவோ சத்தியமாக கூறினாலும் நாங்கள் குடி வெறியில் உளருவதாக கூறினான். அப்போது ஈசாக்குக்கு வயது பத்து. இந்த வயதில் பால்குடிக்கும் குழந்தை சாராயம் குடிக்குமா...இதைக்கூட யோசிக்காமல் அவனை தன் கைப்பிரம்பால் அடித்த அடியில் பாவம்  அவன் இடுப்பு எலும்பு ஒடிந்துவிட்டது. அதுமுதல் அவனால் நேராக நிற்கக்கூட முடியவில்லை. வேலை எதுவும் செய்ய முடியாத அவனால் இந்த முப்பது வருடமளவாக இந்த ஜெட்டாவின் நாற்சந்தியில் பிழைப்புக்காக பிச்சை எடுகின்றான்.
அப்போதும் கூட அவன் தன்னிடம் பேசவரும் சிறு குழந்தைகளிடம் உங்கள் பிறப்பு பற்றியும் தான் கண்ட க்ளோரியா பாடல் எப்படி இருந்தது பற்றியும் கதைகதையாக கூறுவான். இயேசுவே உண்மையான மெசியா என்று சத்தியமே செய்வான்.  அவன் நிலைகண்ட நாங்கள் அடிக்கடி அவனை சந்தித்து அவனுக்கு ஆறுதல் கூறி உதவியும் செய்வதால் அவன் ஏதோ உயிர் பிழைத்திருகின்றான். இந்த நிலையிலும் அவன் தன்னுடைய விசுவாசத்தை இழக்காமல் உமக்கு சாட்ச்சியமாக  வாழ்ந்து வருகின்றான் " என்றனர்.
     " அப்படியானால் நான் அவனை உடனே சந்திக்க விரும்புகின்றேன். நான் வரும்முன் நீங்கள் போய் போதகர் அவனை காண விரும்புவதால் அவனை எழுந்து வரச்சொல்லுங்கள் " என்றார்.
    எலியாஸ் ஓடோடிச்சென்றான் ஈசாக்கிடம். " அடேய் ஈசாக்கு..உனக்கு ஒரு நல்ல செய்தி கொண்டுவந்திருகிறேன்... நாம் அன்று குழந்தையாய் கண்ட மெசியாவை இப்போது க்ண்டோம். உன்னை எழுந்து வரச்சொன்னார் "என்றான் அவன்.
     இந்த வார்த்தைகளைக்கேட்ட மாத்திரத்தில் அவனிடம் ஒரு புது தெம்பு காணப்பட்டது. அவன் உடனே வாரிச்சுருட்டி எழுந்தான்...நேராக நின்றான்..என் மெசியா எங்கே? எலியாஸ் உடனே சொல் அவர் எங்கே?" என்றான் ஈசாக்கு கடந்த முப்பது ஆண்டுகளாக இடுப்பு எலும்பு ஒடிந்து படுத்த படுக்கையாய் கிடந்தவன் ஆண்டவர் உன்னை எழுந்து வரச்சொன்னார் என்றதும் எழுந்து நின்றது எப்பேர்ப்பட்ட புதுமை. அதோ பார் ... ஆண்டவரே உன்னை நோக்கி வருகின்றார்.அதோ பார் என்றான் எலியாஸ். ஈசாக்கு ஆண்டவரைக்கண்ட மாத்திரத்தில் ஓடோடிச்சென்று யேசுவின் பாதம் பணிந்தான்." ஆண்டவரே நீங்கள் எனக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை தந்திருகின்றீர்கள்.இந்த வாழ்க்கையை நான் உமக்கே  அர்ப்பணிப்பேன்..நான் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்கள் " என்றான் ஈசாக்கு.
" ஈசாக்கு இவ்வளவு காலமும் நீ எனக்காக என்ன செய்து வந்தாயோ அதையே இனிமேலும் செய்... என்னைப்பற்றிய நற்செய்தியை அறிவி."
" ஆண்டவரே...நான் கல்வி அறிவு என்பது கொஞ்சமும் இல்லாதவன்..என் வார்த்தையை யார் கேட்பார்கள். இதுநாள் வரை நான் என்னைக்காணவந்த குழந்தைகளிடம் தான் உம்மைப்பற்றி போதித்தேன்."
" இனிமேல் பெரியவர்களிடம் போதி.உன்பேச்சை கேட்க விரும்பாதவர்களிடமும் நீ போதி..கேட்க செவி உள்ளவன் கேட்கக்கடவான். அதோ அந்த கற்களுக்கு போதி. அதோ அந்த கல்லறைகளுக்குள் உறங்குபவர்களுக்கு போதி.  வாழ்வோருக்கும் போதி..இறந்தோருக்கும்போதி. "" ஆண்டவரே இறந்தோர்களுக்குமா...இது சாத்தியப்படுமா?"
" ஏன் முடியாது..இறை வார்த்தையை கேட்க செவி இல்லாதவனுக்கும் செத்தவனுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஆண்டவரின் வார்த்தைகளை கேட்க மனதில்லாதவனும் ஆன்மாவை பொருத்தவரையில் செத்தவனே.சரி...மற்றவர்கள் என்ன  ஆனார்கள்?"
       " ஆண்டவரே நம் நண்பன் ஜோனா எல்திரலோன் பள்ளத்தாக்கில் ஒரு கொடும் பரிசேயனிடம் அடிமையாக வேலை செய்கிறான். அவன்பாடுதான் மிகவும் மோசமாக இருகின்றது. மற்றவர்கள் நல்ல நிலைமையில் இருகின்றார்கள் . ஆனால்  அவர்கள் வெகு தொலைவில் பணியாற்றுகின்றார்கள்."
" நன்றாக இருப்பவர்களைப்பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனாலும் நான் என் நண்பர்களை காணவே விரும்புகின்றன். அதற்கேற்ற வாய்ப்பு வெகு விரைவில் அவர்களுக்கும் அருளப்படும்... இப்போது நான் என் உறவினர்  எலிசபெத் அம்மாளும் பெரியவர் சுவக்கீனும் வசித்து வந்த வீட்டைக்காணவும் அவர்களின் சமாதியில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் ஆசிக்கிறேன்" என்றார் இயேசு நாதர்.
       "அவள் பெயர் ஆக்ளே "
" ஆண்டவரே .தேவரீர் தயவு செய்து அங்கே போக வேண்டாம்." என்றான் ஈசாக்கு.
ஏன் என்னைத்தடுகின்றாய் ஈசாக்கு."
" ஆண்டவரே சொல்லுவதற்கே எனக்கு நா கூசுகின்றது. பரிசுத்தரான சக்காரியாஸும் எலிஸபெத்தம்மாளும் வாழ்ந்ததும் யோவான் ஸ்நானகர் பிறந்ததுமான அந்த பாக்கியமான வீடு இப்போது விபச்சார விடுதியாய் மாறிவிட்டது. எலிஸபெத்தம்மாளும் சக்காரியாஸும் இறந்துபோய்விட்ட பிறகு அந்த வீட்டை அவர்கள் உறவினர் ஒருவர் தன் மேற்பார்வையில் வைத்திருந்தார். அந்த வீடு மற்றும் அவருடைய நிலபுலங்களிலிருந்து வந்த வருமானம் அனைத்தையும் யோவான் ஸ்நானகர் தர்மத்திற்கு செலவிட்டார். முப்பது வருடங்களுக்கு முன்பாக ஒரு நாள் பெரிய ஏறோது மூன்று வயதுக்குட்பட்ட மாசில்லாத ஆண்குழந்தைகள் அனைவரையும் கொல்ல உத்திரவிட்டான். இந்த உத்திரவு இங்கே ஜெட்டாவிலும்
அமுல்படுத்தப்படவே தகவல் அறிந்த சக்காரியாஸ் தன் மனைவியிடம் கூறி பிள்ளையை காப்பாற்றும்படிக்கு வீட்டுக்கு ஓடிவந்தார். ஆனால் அதற்குள்ளாக எலிசபெதம்மாள் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு யோவான் பிறந்த அந்த குகைக்குள் சென்றபோது வயதான சக்காரியாஸ் சற்றே பின் தங்கிவிட்டார். ஆனால் அதற்குள்ளாக காரியம் மிஞ்சிவிட்டது. பெரியவர் சக்காரியாஸ் தன் மனைவியின் கண்முன்பாகவே வெட்டிக்கொல்லப்பட்டார். அந்த குகையும்
இவர்களை உள் வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டது. அபாயம் விலகியபின்பே அந்த குகை திரும்பவும் திறந்தது. பிறகு பெரியவர் தன் வீட்டின் பின்புறமே உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டார்.
       இது நடந்து சில வருடங்களுக்குப்பின் யோவான் ஸ்நானகர் பரிசுத்த ஆவியின் அறிவுறுத்தல்படி பாலை வனத்துக்கு சென்றார். அவருடைய தாயார் இதே ஜெட்டாவில் யோவான் ஸ்நானகர் வளர்ந்த குகையில் தானும் தபசு செய்யும்போதே மரிக்கவே அவர் அங்கேயே புதைக்கப்பட்டார்.
       இப்போதுள்ள சின்ன ஏறோதன் இத்தாலியை சேர்ந்த ஒரு அழகான விபச்சாரியை இந்த புனிதமான வீட்டில் குடிவைத்திருகின்றான்.சின்ன ஏறோதன் தான் செய்யும் தவறை மறைக்க இந்த வீட்டைச்சுற்றிலும் பெரிய மதில் சுவர் கட்டிவிட்டான் இதற்கு இடையூறாக இருந்த அவர்கள் குடும்ப கல்லறையை உடைத்து அந்த கல்லறைகளிலிருந்த எலும்புகளை எல்லாம் வெளீயே எடுத்து வீசிவிட்டான்.இங்கே தோட்ட வேலை செய்த ஒருவன் மனது பொறுக்காமல் அவற்றை  பத்திரப்படுத்தி ஒரு கல் பெட்டியில் வைத்திருகின்றான்...இந்த விபச்சாரி ஆக்ளே அரசன் ஊரில் இல்லாதபோது தன் மனதை கவர்ந்தவர்களை இங்கே வரவழைத்துக்கொள்வாள். இந்த ஊர் முழுக்க அவளைபற்றிய பேச்சுதான்.எனவே தாங்கள்  தயவு செய்து அங்கே போக வேண்டாம்" என்றான் ஈசாக்கு.
இல்லை ஈசாக்கு நான் அங்கே போகத்தான் வேண்டும். தன்மனதில் குற்றமில்லாதவன் என்னுடன் வரட்டும். பெண்ணே கதவைத்திற... இங்கே நடப்பவைகளை ஊர் முழுவதும் பார்க்கட்டும் " என்றார் இயேசுநாதர்.
தான் இருக்கும் இடதிற்கு ஒரு போதகர் வருவதைகண்ட ஆக்ளே என்னும் பெண் அப்போது மிகக்குறைவான் ஆடைகளையே அணிந்திருந்தாள்.சற்றும் நானமின்றி," வரவேண்டும் . வரவேண்டும். இந்த ஏழை வீடு போதகர் வருகையால்  பெருமை பட வேண்டும்." என்றாள்.
    அப்போது யூதாஸ் இஸ்காரியோத்,"அட வெட்க்கம்கெட்ட பெட்டை நாயே...ஓடி ஒளிந்துகொள். வந்திருப்பவர் யார் என்று தெரியுமா உனக்கு. மரியாதையாக வழிவிடு" என்றான்.
   " இருக்கட்டுமே.. இந்த யூத ராபி யாராக இருந்தாலும் பரவாயில்லை.ஆள் மிகவும் அழகாக... மிகுந்த லட்ச்சணமாக இருகின்றார்..என்னிடம் வந்திருக்கும் பல ராபிகளும் இவர் வித்தியாசமானவராக தெரிகின்றார்..வாரும் ராபியே..உள்ளே வாரும்.. இங்கே வந்துவிட்டபிறகு வெட்க்கம் எதற்கு?" என்றாள் அவள்.
     அப்போது இயேசுநாதர் அவளைப்பார்த்த ஒரு பார்வையில் அவளது சர்வாங்கமே ஆடிப்போனது. அவரது கண்களிலிருந்து வந்திருந்த ஒரு ஒளி அவள் மூளை வரை சென்று தாக்கியது. வீட்டிற்குள் ஓடிச்சென்று மறைந்துகொண்டாள்.
      இயேசுநாதர் அவள் இல்லம் கடந்து சென்று தோட்டத்தில் முன்பு சக்காரியாசின் குடும்ப கல்லறை இருந்த இடத்திற்கு சென்று அவர்களின் ஆன்மாவோடு பேசினார். அப்போது சக்காரியாசின் எலும்புகள் அதிர்ந்தன.அவரோடு புதையுண்டிருந்த பல புண்ணிய ஆத்மாக்களின் எலும்புகளும் அதிர்ந்தன. இறந்தோர்களுக்கான அஞ்சலி முடிந்ததும் இயேசுநாதர் வீட்டைவிட்டு வெளியேறினார்.
   அப்போது ஆக்ளே என்னும் பெண் முழு உடை அணிந்து," போதகரே என்னை மன்னியும்...இந்த ஈனப்பிறவிக்கும் மன்னிப்பு கிடைக்குமா... நான் என் தவறை உணர்கிறேன். எதற்காக என் தாய் தகப்பன் எனக்கு ஆக்ளே என்னும் பெயர்
வைத்தார்களோ தெரியவில்லை..அப்படியே வாழ்கிறேன். ஆக்ளே என்றாள் எங்கள் நாட்டில் கேவலம் என்று அர்த்தம். உங்கள் பெயர் என்ன?" என்றாள்.
அதற்கு இயோயேசுநாதர் ," என் பெயர் இம்மானுவேல்... அதாவது இந்த உலகை இரட்சிகின்றவர் என்று அர்த்தம். பெண்ணே நான் உன்னை மன்னிகிறேன்.இனிமேலும் இப்படி வாழாதே" என்றார்.
     இதன்பிறகு யேசுநாதரும் அவரது சீடர்களும் அருகிலுள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்றார்கள். அப்போது அந்த தேவாலயத்தில் குருவாக பணிபுறிபவர்," நில்லும் ராபியே... அங்கேயே நில்லும்.நேராக ஆக்ளேயின் வீட்டிலிருந்துதானே வருகின்றீர். உமக்கு வெட்க்கமாக இல்லை. நீர் இந்த தேவாலயத்திற்கு நுழையும் தகுதியை இழந்துவிட்டீர்" என்றார். இயேசுநாதர் மிகுந்த வருத்தத்துடன் ," அது ஆக்ளேயின் வீடு அல்ல..அது என் முன்னோர் பெரிய குரு சக்காரியாஸின் வீடு " என்றார்.
"எதுவாக இருப்பினும் அது இப்போது சபிக்கப்பட்ட வீடு. ஆக்ளேயின் வேசித்தனத்தால் தீட்டுப்பட்ட வீடு. நீர் போகலாம் ' என்றார். இயேசுநாதரும் கனத்த இதயத்துடன் திரும்பி சென்றார்.
      சில நாட்க்கள் கழித்து இயேசுநாதர் தன் நண்பன் ஜோனாவைக்காண விரும்பினார்.அவன் எஸ்த்திரலோன் சமவெளியில் ஒரு பெரும் பணக்கார பரிசேயனிடம் அடிமையாக வேலை செய்து வருகின்றான் அவன் அந்த கஞ்சனிடம்  படும்பாடுகளைக்கேட்ட இயேசுநாதர் மிகவும் வருந்தினார். அப்போது அருளப்பர் ," ஆண்டவரே, இப்போது ஜோனாவை விடுங்கள். அவன் வெகு தூரத்திலிருகிறான். ஆனால் யோவான் ஸ்நானகரை காப்பாற்ற வேண்டும். ரகசியத்திலேயே  அவர் கதையை முடித்துவிட அங்கே மக்காறேயொஸ் கோட்டையில் சதி நடகின்றதாம் " என்றார்."
    அது இப்போதைக்கு நடாவாது... ஆனாலும் அவரை விடுவிப்பது நம்முடைய கடமை.யூதாஸ் இந்த விதத்தில் கெட்டிக்காரன்.எனவே யோவான் ஸ்நாபகரைக்காப்பாற்றும் பொருப்பை நான் அவனிடமே விடுகிறேன்" என்றார்.
" ஆண்டவரே இந்தக்காரியத்தை இந்த இஸ்காரியோத்து கச்சிதமாக முடிப்பான். இந்த மாதிரி காரியங்கள் எல்லாம் பணத்தால் மட்டுமே சாதிக்க முடியும். தற்சமயம் அவ்வளவு பணம் நம்மிடம் இல்லை " என்றான். அப்போது எலியாஸ் என்னும்  இடையன் ஒரு பெரும் மூட்டையுடன் அங்கு வந்து ஆண்டவரை வணங்கினான்.
" என்ன எலியாஸ்... என்ன சேதி" என்றார் இயேசுநாதர்.
" ஆண்டவரே... இவை ஆக்ளேயின் நகைகள். உங்களிடம் சேர்க்க சொல்லி அனுப்பினாள்."
" வேண்டாம்.. அவை தீய வழியில் சம்பாரித்த பொருட்க்கள். தீட்டுப்பட்டவைகள்.அவற்றை அவளிடமே திருப்பி கொடுத்துவிடு " என்றார் இராயப்பர். இயேசுநாதர் அவரைப்பார்த்த பார்வையில், " பெற்றுக்கொள் யூதாஸ். உன் காட்டில் நல்ல மழைதான்.அது நாய் விற்ற காசு. குறைக்கவா போகிறது " என்றார் இராயப்பர்.
" இல்லை இல்லை. அது தோல்விற்ற காசு. நாறவா போகின்றது " என்றான் யூதாஸ்.
" ஐய்யா... என்னை முழுமையாக பேச விடுங்கள். இவை ஆக்ளே தனியாகவோ தீய வழியிலோ சம்பாரித்த நகைகள் அல்ல. இவை அவளுடைய பெற்றோர் அவளுடைய திருமணதிற்காக சீதனமாக கொடுக்கப்பட்டவைகள். இவற்றை போதகர் தம் ஊழியத்துக்காக பயன்படுத்திக்கொள்ள கொடுத்துவிட்டாள். தயவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள்." என்றான் எலியாஸ். இந்த சம்பாஷனையில் கலந்துகொள்ள விரும்பாத இயேசுநாதர்," யூதாஸ்... நான் உன்னிடம் ஒரு காரியம் சொல்ல  வேண்டி இருகின்றது" என்றார்.
" சொல்லுங்கள் ஆண்டவரே... நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றான் யூதாஸ்.
" யூதாஸ் ...ஆக்ளே...உன்னைவிட நல்லவள். " இந்த வார்த்தை யூதாஸ் கண்னத்தில் இயேசுநாதர் பளார் என்று அறைந்த மாதிரி இருந்தது. யூதாஸ் வேறு வழியின்றி," ஆம் ஆண்டவரே..நீர் சொல்வது முற்றிலும் உண்மைதான்." என்றான்.
" யூதாஸ் யாரையும் தீர்பிடாதே.ஒரு நாளில் தீர்பிடுபவனும் தீர்வைபெற வேண்டி வரும். இப்போதைக்கு யோவான் ஸ்நானபகரை விடுவிக்க முயற்சிசெய்.நாம் இனி ஜோனாவை விடுவிக்க வழி செய்ய வேண்டும் .நாம் இப்போது பெத்தானி சென்று  லாசரை சந்திக்க வேண்டும்.
       பெதானியாவில் லாசர் யேசுநாதரை நல்ல விதமாக வரவேற்று உபசரித்தார்." நண்பா... நீர் எனக்கு ஒரு பெரும் சகாயம் செய்ய வேண்டும். அது உன் ஒருவனால் மட்டுமே முடியும்."
" உத்திரவிடுங்கள் ஆண்டவரே...நான் எதுவானாலும் உடனே செய்து முடிப்பேன். "
" என் பால்ய சினேகிதன் ஒருவன். அவன் பெயர் ஜோனா. பிழைப்பு தேடி சென்ற அவன் தற்சமயம் எஸ்திரலோன் சமவெளியில் உள்ள தோட்டத்தில் ஒரு கொடும் பரிசேயனிடம் அடிமையாக மாட்டிக்கொண்டான். அவனை விடுவிக்க  வேண்டும். நானாக போய் அவனிடம் பேசினால் அந்த பரிசேயன் அவனை விடுவிக்க மாட்டான். என் மேல் அவனுக்கு அவ்வளவு வர்மம் உண்டு. ஆகவே அவனை நீவீர் விலைக்கு வாங்கி என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்."
" ஆண்டவரே... இது எனக்கு பெரிய காரியம் அல்ல.பணம் ஒரு பிரச்சனை அல்ல. ஆனால் அவன் விலைக்கு கொடுக்க மறுத்துவிட்டால்?"
" பணம் பத்தும் செய்யும். அவனை பணத்தால் அடி. அது ஒன்றுக்கு மட்டும்தான் அவன் படிவான் ."
" சரி ஆண்டவரே... அந்த பரிசேயன் யார்? அவன் விலாசமென்ன?"
" அவன் பெயர் டோரோஸ்... ஜெருசலேம் தேவாலயத்தில் தலைமைச்சங்க உறுப்பினர்களும் அவனும் ஒருவன். பெரும் பணக்காரன்.தேவாலயத்தில் அமைந்துள்ள பல வியாபாரங்கள் அவனுக்கு சொந்தமானவை.நான் ஒருமுறை தேவாலய வியாபாரிகளை விரட்டியடித்தபோது அதில் அவன் பெரும் நஸ்ட்டம் அடைந்ததாக கேள்வி.அதனால் தான் அவனை நான் சந்திப்பதை விரும்பவில்லை. என் நிமித்தம் என் நண்பன் ஜோனாவை பழிவாங்ககுகிறான்."
" ஆண்டவரே அந்த டோரோஸ் ஒரு மோசமான பேர்வழி. பிடிவாதமும், கஞ்சத்தனமும், பணத்தாசையும் கொண்ட இரக்கமற்ற பிசாசின் மறுவடிவம் அவன். இருப்பினும் நான் முயன்று பார்கிறேன்." என்ற லாசர் விரைவில் எஸ்திரலோன் சென்று  அந்த பணக்கார கஞ்சன் டோரோசை சந்தித்தார்.
      தன்னைப்போல் ஒரு பெரும் பணக்காரனும் அரசாங்கத்தில் பெரும் இளவரசனாக கருதப்பட்டவனுமாகிய லாசர் என்னும் பிரபு தன்னை சந்திக்க வந்ததைப்பற்றி மிகுந்த சந்தோஷம் அடைந்தான் டோரோஸ். பல விதமான சம்பாஷணைகளுக்குப்பின் ஜோனாவைப்பற்றிய பேச்சை எடுத்தார் லாசர்.     இவர் ஏன் ஜோனா என்னும் அடிமையைப்பற்றி விசாரிக்க வேண்டும் என்று மிகுந்த யோசனையில் மூழ்கினான் டோரஸ். ஆனால் அவனால் இதற்கான காரணத்தை அறிய முடியவில்லை. கடைசியில் வாய்விட்டே கேட்டுவிட்டான்.ஜோனாவைப்பற்றி ஏன் விசாரிகிறீர்கள்?"
" ஒன்றுமில்லை.ஜோனாவின் சகோதரன் ஒருவன் ஈசாக்கு என்பவன் என்னிடம் அடிமையாய் வேலை செய்கின்றான். தன் கடைசிக்காலத்தில் தன் சகோதரனுடன் அவனுக்கு சேர்ந்து வாழ விருப்பம். நம்மிடம் பல காலமாக விசுவாசமாக வேலை  செய்கின்றானே...அவனுக்கு ஒரு சகாயம் செய்வோம் என்பதற்காகத்தான் கேட்டேன். அவனுக்காக நீங்கள் மனது வைக்க வேண்டும். நீங்கள் கேட்கும் விலையை கொடுத்துவிடுகிறேன்."
" நண்பரே.. நட்ப்புக்கு முன் விலை ஏது.?.தாங்கள் பெரும் இளவரசர். நான் தேவாலயத்தில் ஒரு சாதாரண ஊழியன். ஆனால் ஜோனா என்னிடம் இருக்கும் அடிமைகள் பலரும் அவன்தான் சுத்த மாணிக்கம். அவனை இழக்கத்தான் நான்  விரும்பவில்லை. இருப்பினும் தாங்கள் விரும்புவதால் நான் விட்டுக்கொடுகின்றேன். சமுதாயத்தில் எவ்வளவு பெரிய புள்ளி நீங்கள்.மேலும் வெகு தூரத்திலிருந்து வந்திருகின்றீர்கள்.அவன் ஒருவனுக்காகவா வந்திருகின்றீர்கள்.?"
" அவன் ஒருவனுக்காக மட்டும் நான் வரவில்லை. இந்த எஸ்திரலோன் சமவெளியில் நல்ல பழத்தோப்புகள் இருப்பதாக கேள்விப்பட்டேன். நல்ல விலைகொடுத்து வாங்கவும் வந்திருகின்றேன்."
டோரோஸின் குறுக்கு புத்தி வேறுவிதமாக வேலை செய்தது. தன்னிடம் உள்ள ஒன்றுக்கும் பெறாத தோட்டங்களை இந்த ஜோனாவை துருப்பு சீட்டாக பயன்படுத்தி விற்றால் என்ன? அவன் போட்ட திட்டமும் வேலை செய்தது.
ஆக லாசர் இயேசுவின் நண்பர் என்னும் முறையில் ஜோனாவை அடிமைத்தலையிலிருந்து விடுவிக்க ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டி இருந்தது. இதற்காகவே ஒன்றுக்கும் பெறாத ஒரு தோட்டத்தையும் அவர் வாங்க வேண்டி  இருந்தது. இதற்கான விடுதலைப்பத்திரமும் தோட்டத்தை விற்றதற்கான் பத்திரமும் கைமாற்றப்பட்டது. இறுதியில் இன்னும் ஒருமாதம் கழித்து அதாவது அடுத்த பௌர்ணமி நிலவின் நாளில் ஜோனாவையும் தோட்டத்தையும் ஒப்படைப்பதாக  ஒப்பந்தம் போடப்பட்டது.
        சரியாக அதே நாளில் இயேசுநாதர் தன் அப்போஸ்த்தலர்களுடன் டோரேஸின் வீட்டில் ஆஜர் ஆனார். இதை அந்த பணக்கார கஞ்சனான டோரோஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
" வரவேண்டும் வரவேண்டும்... இஸ்ராயேல் போற்றும் மஹா பெரிய ராபி இந்த ஏழையின் இல்லம் தேடி வந்தது என்பாக்கியம்" என்று புழுகினான். இயேசுநாதர் இதை அறியாதவரல்ல. தான் ஜோனாவை வாங்கியதற்கான மீட்ப்பு பத்திரத்தை அவனிடம் நீட்டி," என் ஜோனாவை என்னிடம் ஒப்படை " என்றார். " இருக்கட்டும் போதகரே...இன்னும் அறுவடை முடியவில்லை. முடிந்ததும் அவனை உம்மிடம் அனுப்பிவிடுகிறேன்" என்றான். ஆனால் உண்மையில் ஜோனா அடிபட்டு  அடிபட்டு உடல் எல்லாம் புண் வைத்து காய்ச்சலாகி சாகும் நிலையில் இருந்தான். அவன் சாப்பிட்டு பல நாள் ஆகியிருந்தது. அங்கே வேலை செய்யும் அடிமைகளோ அல்லது வேலை ஆட்க்களோ அவனுக்கு எதாவது எப்போவாவது கொஞ்சம் தீனி கொடுப்பார்கள்..இதை மறைத்து அவனை நாளைக்கு அனுப்புகிறேன்... நாளை மறு நாள் அனுப்புகிறேன் என்று வாய்கூசாமல் பொய் கூறினான் அந்தக்கஞ்சப்பிரபு டோரோஸ்.
" போதகரே நீர் நல்ல நேரத்தில்தான் வந்திருகின்றீர். இது சிற்றுண்டி நேரம்.நான் இப்போதுதான் சாப்பிட உட்கார்ந்தேன். தாங்களும் என்னுடன் அமரலாமே. நான் எல்லோருக்குமே இப்படி மரியாதை கொடுப்பதில்லை. தங்களைபோன்ற பெரிய ராபிகள், அரசாங்கத்தில் உயர் பொருப்பிலுள்ளவர்கள் இப்படிப்பட்டவர்களுடன்தான் நான் பழகுவேன்..பந்தி அமர்வேன். இங்கே என்னிடமிருப்பவைகள் எல்லாமே உயர் ரக மது வகைகளும் உயர்தர உணவுகளும் தான். இவறறைப்பரிமார
தங்கக்குப்பிகளும், தங்க கோப்பைகளும் தங்க பாத்திரங்களும் தங்க கரண்டிகளையும் தான் உபயோகிகிறேன். வேறு எதையும் நான் என் இடதுகையால் கூட தொடுவதில்லை. அட நான் பாட்டுக்கு பேசிக்கொண்டிருகிறேன். நீங்கள் அமர்ந்து  சாப்பிடுங்கள்" என்று தன் செல்வ செழிப்பையும், திமிரையும் காட்டினான்.
    ஆனால் இயேசுநாதர்,"நான் இங்கு வந்தது உன்னுடன் விருந்துண்ணவோ அல்லது மது குடிப்பதற்கோ அல்ல..என் ஜோனாவே என்னுடன் அனுப்பு ."
அடடா... நீங்கள் சாப்பிடாவிட்டால் பரவாயில்லை..நான் சாப்பிடுகிறேன்" என்று வீணே நேரத்தை வளர்த்தினான் டோரோஸ்.
     இனிமேல் இவனிடம் பேசிப்பயன் இல்லை என உணர்ந்த இயேசுநாதர்.தன் வார்த்தையில் மரியாதையாய் விடுத்து," டோரோஸ்..நான் என் நண்பனை விலை கொடுத்து வாங்கி இருகின்றேன். பெரும் விலைகொடுத்து அவனை
மீட்டிருகின்றேன். என்னுடன் விளையாடாதே..நீ என் நண்பனை என் நிமித்தமாக அளவுக்கு மீறி துன்புறுத்திவிட்டாய். .இப்போது அவன் சாகும் நிலையில் இருகின்றான். இருப்பினும் வாய்கூசாமால் என்னிடம் பொய் கூறி இருகின்றாய். இனிமேல் நான் உன்னுடன் பேச விரும்பவில்லை.. இராயப்பா...நீர் போய் என் நண்பன் ஜோனாவை தூக்கிக்கொண்டு வா...அடேய் டோரோஸ்..நீ என்னை வதைப்பதாக நினைத்துக்கொண்டு என் நண்பனை வதைத்ததால் உன்னை  தீர்வையிட என் பரலோக பிதாவை கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.
    இராயப்பர் யார் தயவையும் எதிர்பாராமல் டோரோஸின் தோட்டத்துக்குள் சென்று அங்கே அநாதையாக ஒரு கட்டிலில் தொங்கியபடி ஒரு மனிதன் இருக்கக்கண்டு அது ஜோனாவாகத்தான் இருக்க முடியும் என்றுணர்ந்து அவனை  அந்தக்கட்டிலோடு சேர்த்து தூக்கிக்கொண்டு வந்தார். அந்த தோட்டத்திலிருந்தவர்கள் " ஜோனா போய்வா.. ஆண்டவர் உனக்கு சமாதானம் அருள்வாராக " என்று அனுப்பி வைத்தனர். எப்படியோ " தங்களுடைய சக அடிமைக்கு ஒரு நல்ல  வாழ்வு கிடைத்தால் சரிதான் " என்று பேசிக்கொண்டனர்.
      இருப்பினும் டோரோஸ்," இயேசுநாதரே... நீர் அவனை தானே விலை கொடுத்து வாங்கியிருகிறீர். அவனை கட்டிலோடு கொண்டுபோவதால் அந்தக்கட்டிலுக்குரிய தொகை செலுத்தவில்லையே? என்றான்.அப்போதும் தன் கஞ்ச புத்தியை  காட்டினான்.ஆனால் இயேசுநாதர் அவனை ஒரு வெறுப்பான பார்வையால் பார்த்து " அவனுக்கு ஏற்கனவே அளவுக்கு மேல் விலை கொடுத்தாயிற்று " என்றார்." அடடா.. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி இன்னும் கொஞ்சம் பணம் கறக்கலாம்  என்றால் இந்த கலிலேய ராபி கொடாக்கண்டனாக அல்லவா இருகின்றார் " என்று அப்போதும் சாப்பிட்டுக்கொண்டே முனகிக்கொண்டான் டோரோஸ்.
      உயிர்போகும் நிலையிலிருந்த தன் நண்பன் ஜோனாவை ஒரு வண்டியை பிடித்து அவனை நசரேத்தூரிலுள்ள தன் தாயார் வீட்டுக்கு கூட்டிவந்தார் இயேசுநாதர். அவனை கட்டிலில் கிடத்தி அவசர உதவிகள் செய்த்து அவனுக்கு மீண்டும்  சுய நினைவை வரச்செய்தார்." நண்பா... ஜோனா... இப்போது உனக்கு நினைவுக்கு வருகின்றதா...நான் யார் என்று உனக்கு தெரிகின்றதா?" என்று நலம் விசாரித்தார்.
ஜோனா கண்விழித்து," நான் ஜோனா...நீங்கள்?" என்றான்.
" நண்பா.. உனக்கு என்னைத்தெரியவில்லையா..அன்று மாட்டுத்தொழுவத்தில் என்னைக்காண வந்தாயே அதே மெசியா நான் தான்... இதோ என் நேசத்தாயார் மரியாள்... அம்மா... இதோ நம் ஜோனா கண் விழித்துவிட்டான் . அவனோடு  பேசுங்கள்."
" ஜோனா...என் மகனே..நான் உன் தாயார் மரியாள். அன்று நீங்கள் எங்களை மறக்க மாட்டீர்களே என்றாயா... இப்போது உனக்கு நினைவுக்கு வருகின்றதா?" என்றார் தேவத்தாயார்.
" ஆ... அம்மா... இது நீங்களா...உங்கள் நேச மகன் ..மெசியா.. உலக இரட்ச்சகர்..நான் இறக்கும் முன் அவரையும் உங்களை பார்ப்பேன் என்று பல ஆண்டுகள் நம்பி இருந்தேன்.. காத்தும் இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. இனிமேல் நான் அமைதியாக போய்விடுவேன்."
" நண்பா ஜோனா..நீர் இருக்கும் நிலையில் அதிகம் பேச வேண்டாம்... உனக்கு என்ன வேண்டும்?"
" ஆண்டவரே..நான் இப்போது பேசவில்லையானால் வேறு எப்போது பேசப்போகிறேன்.உம்மொடு இருக்கும் இந்த நேரங்கள் உண்மையில் பாக்கியமானவை. உம்மையும் உம்முடைய நேசத்தாயாரையும் நான் மீண்டும் பார்த்துவிட்ட பிறகு  வேறு எதை க்கேட்க்கபோகின்றேன்..எனக்குத்தேவையானதென்று நான் எதையுமே நினைத்ததுமில்லை.விரும்பியதுமில்லை. என் மனதில் நான் அடிக்கடி நினைப்பதெல்லாம் என் ஆண்டவரே நீர் அன்று பிறந்திருந்தது போல... நான் அதே  நினைவுகளை என் துன்பங்களில் எப்போதும் நினைத்துக்கொள்வேன். அன்று நான் சிறுவனாக இருந்தபோது உம் நேசத்தாயாரிடம் உம் பிஞ்சிக்கால்களை தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் உம் நேசத்தாயார் உம்மையே முழுவதுமாய்  என் கரங்களில் கொடுத்துவிட்டார்கள். உம்முடைய அந்த தெய்வீக ஸ்பரிசத்தை நான் என் ஆயுள் உள்ளவரை மறந்ததில்லை. நான் கல்வி அறிவில்லா நிர் மூடன். மிகவும் தாழ்ந்த இடையர் குலத்தில் பிறந்தவன். எனக்குத்தெரிந்ததெல்லாம் ஆடுகளும் மாடுகளும் தான். நான் தேவரீருடைய கரங்களில் எப்போதும் ஒரு சிறிய ஆட்டுக்குட்டியாக இருக்கவே ஆசிக்கிறேன். இப்போதும் அதையே ஆசிக்கிறேன்..எனக்காக யாராவது அந்த க்ளோரியா பாடலை மீண்டும் பாடுவார்களா?" என்றான் ஜோனா.
    " என் நண்பா...நீ விரும்பியபடியே என் கைகளில் எப்போதும் அமர்ந்திருக்கும் ஆட்டுக்குட்டி நீயே ..நட்புக்கு ஜாதியும் மதமும் கல்வியும் செல்வமும் தேவையில்லை. உனக்கு இந்தப்பாடலும் காட்சியும்தான் ஆறுதல் அளிக்கும் என்றால் அதை  நான் அருளுகின்றேன். என் நாண்பா ஜோனா... எனக்காக நீ உயிர்கொடுக்கும் அளவுக்கு துன்பப்பட்டுவிட்டாய். இப்போது நீ படுத்திருகின்றாயே கட்டில் இது யாருடையது தெரியுமா.. அது என் தந்தையாகிய சூசையப்பருடைய கட்டில். இதே கட்டிலிலேயே அவர் பாக்கியமான மரணத்தை அடைந்தார். அப்போது நானும் என் நேசத்தாயாரும் அவருடனே இருந்தோம். இப்போதும் அதே சூழ்நிலையில் நீ இருகின்றாய்.அன்று நான் உன் கரங்களில் வீற்றிருந்தேன். இன்று நீ என்
கரங்களில் வீற்றிரு. வா... என் மார்பில் சாய்ந்துகொள். அமைதியில் இளைப்பாறு என்று ஜோனாவை தன் மார்போடு சாய்த்துக்கொண்டார். இயேசுநாதர்.
"அம்மா...நீங்கள் அந்த க்ளோரியாபாடலை ஆரம்பித்து வையுங்கள் " என்றார்.
தேவத்தாயார் தன் தேன்மதுரக்குறலில் க்ளோரியா என்னும் வானோர் பாடலை பாட ஆரம்பித்தார்கள்.
      அதனைத்தொடர்ந்து அந்த வீடு மறைந்தது. பரலோகம் தெரிந்தது. ஆயிரக்கணக்கான ... லட்ச்சக்கணக்கான வானோர்கள் அன்று இம்மானுவேல் பிறந்த அன்று பாடியது போலவே இப்போதும் தங்கள் இனிமையான குரலால்
பாடிக்கொண்டிருந்தனர். இந்தப்பாடல் முடிந்த போது எல்லாம் மீண்டும் பழையபடி தோன்றின. தேவத்தாயார் தன்குழந்தை இயேசுவுக்கு பாடிய அதே தாலாட்டுப்பாடலை இப்போது பாடினார்கள்..முடிவாக அவர் " என் மகனே கண் துயில்வாய் "  என்று பாடலை முடிக்கவும் ஜோனாவின் ஆவி பிரியவும் சரியாக இருந்தது. மாதாவின் கண்களிலும் இயேசுவின் கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது. .புனித சூசையப்பருக்கு கிடைத்த அதே பாக்கியமான மரணம்  இயேசுவின் நண்பர் ஜோனாவுக்கும் அருளப்பட்டது.
" என் நண்பா... நீ நட்புக்கு இலக்கணம்..தன் நண்பனுக்காக உயிரை கொடுப்பதைவிட மேலான அன்பு இந்த உலகத்தில் இல்லை என்பதற்கு உதாரணம் நீ. இந்த உலகில் என் நண்பர்கள் வறியவர்களாய் இருக்கலாம். ஆனால் அவர்கள்  பரலோக பொக்கிஷங்கள் அனைத்தையும் சுதந்தரித்துக்கொண்டவர்கள். எந்த லோகத்திலும் அவர்களே உண்மையான பணக்காரர்கள். என் நண்பர்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் அதுவே. என் நண்பர்களே என் ஆடுகள்..நானே நல்ல  ஆயன். தொலைந்துபோன என் ஆடுகளாகிய உங்களைத்தேடியே நான் வந்துள்ளேன் " என்றார் இயேசுநாதர்.
இத்துடன் இந்த கதையை நான் முடிக்க விரும்பவில்லை. மீண்டும் தொடரவே நான் விரும்புகின்றேன். அந்த பணக்கார கஞ்சன் டோரோஸுக்கு என்ன நேர்ந்தது என்பதை நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டாமோ? ஆகவே மீண்டும் தொடருகிறேன்.
     தன் நண்பன் ஜோனா இயேசுவுக்காக மரணம் மட்டும் சாட்ச்சியமாக வாழ்ந்திருந்தான். இயேசு தான் மெசியா... இதற்கு சாட்ச்சி நாங்கள். வானில் வான தூதர்களின் வாழ்த்துப்பாடலுடன் மெசியா பிறந்த செய்தியை கேட்டதும் நாங்கள் போய் அவரை சந்தித்தோம். அவரை சந்திக்க கீழ்த்திசை ஞானிகள் மூவர் வரக்கண்டும் அவர்கள் குழந்தை இயேசுவை ஆராதித்து அவருக்கும் தங்களுக்கும் தங்கக்க்காசுகளும் பல பரிசுப்பொருட்க்களையும் கொடுத்தார் என்றும் எத்தனை  தடவை சொன்னாலும் அத்துனை தடவையும் அதை மறுக்கும்படியாக சவுக்கடிகளால் விளாசினான் டோரோஸ். அந்த இயேசுநாதர் மெசியா அல்ல. உலக இரட்ச்சகர் அல்ல என்று சொல்லும்படியாக டோரோஸ் ஜோனாவை பல நாள் பட்டினி  போட்டான். ஆனால் தான் இயேசுநாதரை பழிவாங்கிய சந்தோஷத்தில் விருந்து நடத்தினான்.மது குடித்தான்.களியாட்டமும் நடத்தினான். ஆனால் அவர் மட்டில் வெறிபிடித்த சாத்தான் ஆனான்.
     ஜோனாவை விடுவிக்கும்போது இயேசுநாதரால் சபிக்கப்படாமல் அவரது பரலோக தந்தையால் சபிக்கப்பட்டான்.  அந்த சாபம் விரைவில் பலிக்கத்துவங்கியது. அவன் பழத்தோட்டங்கள் அனைத்தும் ஒருவகை பூஞ்சைக்காளான் தொற்றி பெரும் பாதிப்படைந்தது. அதிலிருந்து தோன்றிய புழுக்கள் அனைத்து தாவரங்களையும் தின்றன.
     பாதிப்புக்குள்ளான தோட்டங்களும் வயல்களும் பெரும் நாற்றத்துடன் அழுகின. செழிப்பான அவனுடைய நிலங்கள் அனைத்தும் களர் நிலங்கள் ஆயின. வெகு விரைவில் மிகவும் வறியவன் ஆனான் டோரோஸ். அவனை மதிப்பார் யாரும் இல்லை. இயேசுநாதர் கலிலேயாவில் போதித்து வருகின்றார் என்று கேள்விப்பட்ட டோரோஸ் அவரை சந்தித்தான். இயேசுநாதரை பணிந்து கெஞ்சி பேசியிருந்தால் ஒருக்கால் அவனுக்கும் மன்னிப்பு கிடைத்திருக்கும். ஆனால் அவரிடம்  மிகவும் திமிர்த்தனமாக பேசினான். தன் வறுமைக்கு காரணம் நீர்தான் என்று குற்றம் சாட்டினான். தன் மீது சாட்டப்பட்டுள்ள சாபத்தை குறைத்துக்கொள்ளலாமே என்றுதான் அவரைக்கேட்டான்.
     அவனிடத்தில் பணிவும் மரியாதையும் இல்லாததால் இயேசுநாதர் அவனிடமிருந்து முகத்தை திருப்பிக்கொண்டார். வெகு விரைவில் அவன் மரணமடைந்தான். அவனுடைய கல்லறை மேற்கு கலிலேயாவில் அமரான் என்னுமிடத்தில்  இருகின்றது. ஆனால் அங்கும் ஒரு பயங்கரம் ஏற்பட்டது. அந்த கல்லறையிலும் அவனுக்கு நிம்மதி இல்லை. ஓஓஓ என்னும் ஒரு அழுகை சப்த்தம் அந்தக்கல்லறையிலிருந்து அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தது.
      இந்த ஓலம் பலகாலம் கேட்டுக்கொண்டே இருந்ததால் அந்த வழியே போவோர் வருவோர் யாவரும் " பாவம் ...டோரோஸ் அழுகிறான்.அவனுக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும் ?"என்று கூறிச்சென்றனர்.பிறகு அந்தப்பாதையே மாற்றி வேறு  வழியாக பயணித்தார்கள்.
     இயேசுநாதர் தன் நண்பன் ஜோனாவின் முடிவையும் டோரோஸின் முடிவையும் ஒப்பிட்டு ஜோனா இறந்த பிறகு அவன் கடவுளாள் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் தந்தை அபிரஹாம் மடியில் கிடத்தப்பட்டிருந்ததாகவும் டோரோஸ் சபிக்கப்பட்டு நரகத்துக்கு தீர்வையிடப்பட்டாதாகவும் சித்தரித்து ஏழை லாஸரும் பணக்கார பெரும் தீனிக்காரன் என்னும் கதையை உவமானமாக பிரசங்கித்தார். ஆனால் இந்த இரு கதா பாத்திரங்களும் உண்மையானதே என்றும் அவர்களும் இயேசு
நாதருடன் வாழ்ந்தவர்கள் தான் என்பதும் நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    இயேசுநாதரின் இரண்டாம் வருட ஊழியத்தின்போது யோவான் ஸ்நானகர் மக்காரூஸ் அரண்மனையின் கீழ் சிறையில் தலைவெட்டிக்கொல்லப்பட்டார். அவருடைய சீடர்களால் அவரது திரு உடல் ரகசியமாக கொண்டு வரப்பட்டு ஜெட்டாவில் அவருடைய குடும்ப கல்லறையில் புதைக்கப்பட்டது. ஆக்ளே மனமாற்றம் அடைந்த பிறகு அவள் குடியிருந்த வீடு மீண்டும் யோவான் ஸ்நானகரின் உறவினர் பொறுப்பில் ஒப்படைக்கபட்டது. யோவானின் சிரசை ஏறோதியால் அபிகாயில் வாங்கிக்கொண்டு அதை ரகசியமாக மக்காருஸ் கோட்டையின் பாதாள சாக்கடையில் வீசிவிட்டாள். யோவானின் இந்த சிரசு பலகாலம் கழித்து கண்டுபிடிக்கபட்டு அவரது குடும்ப குடும்ப கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
         ஆனால் பல காலம் கழித்து அது யார் காலத்தில் என்று தெரியவில்லை.என்ன காரணத்திர்காக என்றும் தெரியவில்லை. மீண்டும் சக்காரியாஸ், எலிஸபெதம்மாள், யோவான் ஸ்நானநகர் ஆகியோருடைய எலும்புகள் ஜெட்டாவில்  அவருடைய குடும்ப கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு சமாரியாவிலுள்ள செபஸ்த்தே என்னுமிடத்தில் இந்த மூவருக்காகவும் கட்டப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்ய பட்டுள்ளது.
இந்தக்கல்லறைகளுக்கு பக்கத்தில்தான் பெரும் புகழ்வாய்ந்த தீர்க்கதரிசி எலிசேயுவின் கல்லறையும் இருகின்றது.தற்போது யோவான் ஸ்நானகரின் கல்லறையும் அவருடைய பெற்றோர்களின் கல்லறையும் சமாரியாவிலுள்ள செபஸ்த்தே என்னுமிடத்தில் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டில் ஒரு தர்க்காவாக உள்ளது.
    ஆண்டவரில் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று எழுதப்பட்டு இருகின்றது. அவர்களுடைய வாழ்வில் என்றென்றும் க்ளோரியா என்னும் வானோர் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
     இந்த கதையை நான் எழுத எனக்கு உதவியாக இருந்தது மரியா வால்டோரெட்டா எழுதிய இயேசு மனிதன் காவியம் என்னும் ஒரு நூல். இந்த கதையில் வரும் கதாபாதிரங்களை நான் இந்த கதைக்கு பயன்படுத்திக்கொண்டேன்.
    இயேசுவின் வாழ்கையில் நிகழ்ந்த, வேதாகமத்தில் சொல்லப்படாத பல்வேறு நிகழ்வுகளை நான் அறிந்துகொண்டதும் இவற்றை என் வாசகர்களுக்கு சொல்ல நான் விரும்பினேன். எனவே இந்த காவியத்தில் வரும் ஒரு சிறு பகுதியை என்னுடைய கதைக்கு பயன்படுத்திக்கொண்டேன். தூத்துக்குடி ரோசா மிஸ்திக்கா மாதா அப்போஸ்த்தலர்கள் சபையின் பதிப்பகத்தாருக்கு என் நன்றி உறித்தாகுக.






"