Saturday, June 21, 2014

" சைத்னயா என்னும் அதிசய சகாயமாதா "




" சைத்னயா என்னும் அதிசய சகாயமாதா "

       சைத்னயா என்னும் ஒரு ஊர் இன்றைய சிரியா என்னும் நாட்டில் தமஸ்க்கு நகரின் வடக்கில் சுமார் 18 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். வேத காலத்திற்கும் முற்பட்ட வரலாறு இந்த நகருக்கு உண்டு. சிரியா நாட்டிலுள்ள இந்த சைத்னயா நகரைப்பற்றி அந்த நாட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். சிரியா பழமைவாத
திருச்சபையின் ஆதிக்கத்தில் [ syrian orthodox church] இங்கிருக்கும் ஒரு மாதாகோயில் மிகவும் பழமை வாய்ந்தது. பல அதிசயங்கள் இந்த மாதாவின் பெயரால்  நடைபெற்றிருந்தாலும் சிலவருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் இந்த நகரிலுள்ள மாதா கோயில் உலகப்புகழ்பெற்றது. 
   இந்த சம்பவம் பற்றி நான் அறியவந்த  உடனேயே நானும் இதைப்பற்றி நம் உலகத்தமிழ் நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்பியே இந்த மாதாவைப்பற்றி அறிய வந்தேன். நான் சொல்லப்போகும் இந்த சம்பவம் சிலருக்கு  நம்பமுடியாமல் இருக்கலாம். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் என்கின்றது இந்த சம்பவத்தைப்பற்றிய செய்திகள். ஊடகங்களின் ஆதிக்கம் மிகுந்துள்ள இக்காலங்களில் எதையும்  மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது. ஆனாலும் தேவ தாயாரின் மகத்துவமும் அவரின் திருமகன் யேசு கிரிஸ்த்து நிகழ்த்திய அற்புதமும் இச்சம்பவத்தால் பெரிதும் சிலாகித்து பேசப்படுவதால் அதைப்பற்றி உலக கிறிஸ்த்துவ மக்கள் அறிந்துகொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. இனி இந்த சம்பவத்தை படித்தப்பிறகு அதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பத்தை பொருத்தது.
  அந்த நவீன சொகுசுக்காரான லிமோசின் அதிவேகத்தில் பறந்தது. டமாஸ்கஸ் விமான நிலயத்திலிருந்து வாடகைக்கு பிடிக்கப்பட்டிருந்த காரில் கணவன் மனைவி ஓட்டுனரைத்தவிர  வேறு யாரும் இல்லை. " டிரைவர்... நல்ல பாட்டாகப்போடு " என்றான் கணவன். டிரைவரும் நல்ல பாடல் ஒன்றைப்போட்டார். ஆனால் அந்த கணவானின் துணைவியாருக்கு ஏனோ அது பிடிக்காமல் போயிற்று. 
    " வேண்டாம் அந்த பாடலை நிறுத்துங்கள் " என்றாள் அவள். உடனே கணவனுக்கும் மனைவிக்கு பூசல் எழுந்தது.
    " ஏன் பாட்டை நிறுத்தனாய்?" என்றான் அவன்.
   " ஆமாம்..நான் இப்போதிருக்கும் மனநிலையில் அந்தப்பாட்டு ஒன்றுதான் குறைச்சலாக்கும் " என்றாள் அவள். இப்படியாக ஆரம்பித்த அந்த வாய் வார்த்தை பிறகு வாய்ச்சண்டையாக மாறியதால் நிலைமையை மாற்ற எண்ணினார் டிரைவர். " ஐய்யா..தங்களுக்குள் ஏதோ பிரச்சனை போல் தெரிகிறது..உங்கள் குடும்ப விவகாரங்களில் நான் தலை இடுவதற்கு  மன்னிக்கவும். ஆனால் உங்கள் பிரச்சனை என் வேலையில் நான் கவனமாக செயல்பட முடியாமல் செய்கின்றது. என்னுடைய சேவையில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள். நான் திருத்திக்கொள்கிறேன்" என்றான் அவன். 
    ஆனால் நிலைமையை உணர்ந்த அவள் கணவன்," ஐய்யா..நாங்கள் உம்முடைய சேவையில் குறை ஒன்றும் காண வில்லை. இது எங்கள் குடும்ப விவஹாரம். உம்மிடம் சொல்வதில் ஒன்றும் குறைந்துவிடாது. இருப்பினும் சொல்கிறேன்" என்று அவன் பிரச்சனையை ஒருவாறு கூற ஆரம்பித்தான்.
" ஐய்யா சவுதி அரேபியாவை சேர்ந்த எனக்கும் என் மனைவிக்கும் திருமணமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன.ஆனால் இதுவரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. நாங்கள்  பார்க்காத வைத்தியம் இல்லை. எங்களுக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர்கள் எங்களிடம் குறை ஏதும் இல்லை எனவும் கூறிவிட்டார்கள். இந்த பிரச்சனையால் என் குடும்பத்தில்  பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனது தாயார் என் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொள்ள கூறுகின்றார். ஆனால்  எனக்கு என் மனைவியை விவாகரத்து செய்ய மனம் இல்லை. அப்படி ஒரு நல்ல குணம் அவளுக்கு.. இது என் தாயாருக்கும் தெரியும். சரி... அவளை விவாகரத்து செய்ய வேண்டாம். அவள் நம்முடனே இருக்கட்டும். அவளை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஒரு திருமணம் செய்துகொள் என்கின்றார் என் தாயார். எனக்கு அதிலும் இஸ்ட்டம் இல்லை. சரி... வீட்டிலேயே இருப்பதைவிட வேறு எங்காவது சென்று சுற்றிப்பார்த்துவிட்டு வந்தால் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாகவும் ஒரு மாற்றமாகவும் இருக்குமே என்றுதான் இந்த சிரியா நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ளோம். வந்த இடத்தில் அவள் தன் அதிருப்த்தியை என்மீது காட்டுகின்றாள். அவ்வளவுதான்" என்றான் அவள் கணவன்.
   " அடடடே..விஷயம் அவ்வளவுதானா... பரவாயில்லை..நல்ல வேளையாக என்னிடம் கூறினீர்கள்...ஐயா..நானும் ஒரு முஸ்லீம்தான். ஆனால் இங்கிருக்கும்... அதோ தொலைவில்  தெரிகிறதே ஒரு மலை.. அதன் மேல் தெரிகிறதல்லவா ஒரு மாதா கோயில்... அதுதான் சைத்னயா மாதாகோயில். இங்கிருக்கும் மாதாக்கோயில் மிகவும் சக்தியுடையது.
பல அற்புதங்களும் அரும் செயல்களும் இங்கு வேத காலத்திலிருந்தே நடை பெற்று வந்திருகின்றன. இங்கிருக்கும் முஸ்லீம்களும் கூட இந்த சக்த்தி உடைய அன்னையை வணங்கி போற்றுகின்றார்கள். அவருடைய ஒரே மகன்தான் யேசுநாதர் என்னும் நபி. இந்த மலைக்கு செல்ல பல படிக்கட்டுகளை தாண்டி செல்லவேண்டும். அங்குள்ள கன்னிமாடத்தில் நல்ல  உபசரிப்பு இருக்கும். இவ்வளவு தூரம் படி ஏறிவந்திருக்கும் பக்தர்கள் யாவருக்கும் களைப்பு தீர பானமும் உண்ண உனவும் தந்து உபசரிகின்றனர். பிறகு அங்குள்ள தேவதாயாரின் படம் முன்பாக ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைத்து தங்களுக்கு வேண்டியதை நேர்ச்சி செய்கின்றார்கள். இங்கு வந்து வேண்டிச்செல்லும் யாவருக்கும் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளதால் இங்கு முஸ்லீம், கிறிஸ்த்துவர்,கிறிஸ்த்துவர் அல்லாதவர் என்ற பேதம் இங்கே இல்லை. அனைவரும் இந்த தாயாரின் பிள்ளைகளே என்பது
இங்குள்ளோர்களின் அசைக்க குடியாத நம்பிக்கை. எனவே நான் சொல்கிறேன் என்று நீங்கள் தப்பாக நினைக்காமல் நீங்களும் அங்கே சென்று ஒரு வேண்டுதல் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அந்த சக்தி உள்ள மாதா அவசியம் ஒரு குழந்தையை தருவாள் என்ற நம்பிக்கையோடு போய்வாருங்கள். நீங்கள் வரும்வரை நான் இங்கேயே இருப்பேன்...
போய்வாருங்கள்" என்றார் அந்த டிரைவர்.
   அந்த டிரைவரின் வார்த்தையில் ஏதோ ஒரு உண்மை இருப்பதாக உணர்ந்துகொண்ட அந்த முஸ்லீம் தம்பதிகள் மனமுவந்து அந்த மாதாக்கோயிலின் படிகளில் ஏறிச்சென்றனர். மேலே ஆலயத்துக்கு வந்ததும் அங்குள்ள மாதாசபை கன்னிகைகள் அவர்களை உபசரித்து பானமும் உண்ண ரொட்டியும் கொடுத்து உபசரித்தனர். பிறகு அங்குள்ள மாதாவின்  திருப்படத்தின்முன்பாக மனமுருகி பிரார்த்தித்தனர். அந்த படமானது யேசுவின்சீடரான புனித லூக்கா தன் கைப்படவே வரைந்த படமாகும் என்று கூறுகின்றனர்.
     இந்த படத்திற்கு வெள்ளிக்காப்பு செய்து மூடப்பட்டுள்ளது. மாதாவின் முகமும் அவரது திருமகனாகிய குழந்தை யேசுவின் முகம் மட்டுமே தெரியும் 
[சுவிசேஷகரான புனித லூக்கா தன் கைப்படவே வரைந்த மாதாவும் குழந்தை ஏசுவும் இருப்பது போன்ற சகாயமாதா படங்கள் மொத்தம் நான்கு எனவும் இது அவற்றுள் ஒன்று  எனவும்..நமது இந்தியாவில் சென்னையில் யேசுவின் அப்போஸ்த்தலராகிய புனித தோமையார் குத்திக்கொல்லப்பட்ட பரங்கி மலையில் இருப்பதும் அவற்றுள் ஒன்று எனவும்
கூறப்படுகின்றது.]
    தேவதாயாரின் திருச்சன்னதியில் மனமுறுகி பிரார்த்தனை செய்த அந்த சவுதி அரேபியாவைச்சேர்ந்த தம்பதிகளுக்கு அப்போதே மாதாவின் அருள் கிடைத்ததுபோன்ற ஒரு பிரேமை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து திருப்தி அடைந்த அவர்கள் மேற்கொண்டு தங்கள் சுற்றுலாவை தொடர இஸ்ட்டபடாமல் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிச்செல்ல விரும்பினர். விமான நிலயத்தில் அந்த டிரைவருக்கு வேண்டிய பணத்தை கொடுத்த அவள் கணவன்," ஐய்யா.. உங்கள் சேவைக்கு நன்றி... உங்கள் உதவியால் நாங்கள் அந்த சைத்னயா மாதா கோயிலை தரிசித்தோம். மன நிறைவோடே செல்கின்றோம். எங்கள் வேண்டுதல் கேட்க்கப்பட்டால் நான் மீண்டும் இந்த டமாஸ்கஸ் வந்து உங்களுக்கும் அந்த மாதாவுக்கும் என் நன்றி தெரிவிப்பேன். எனவே உங்களுக்கு அப்போது நான் திரும்பிவரும் பட்சத்தில் 20000 அமெரிக்க டாலரும் அந்த சைத்னயா மாதாவுக்கு 80000 அமெரிக்க டாலரும் வெகுமதியாக தருவேன். இது உறுதி.நன்றி.வணக்கம்" என்று கூறிச்சென்றான்.
தங்கள் தாய்நாடு வந்தடைந்த அந்த சவுதி அரேபிய தம்பதியர்களுக்கு வெகு விரைவிலேயே நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது. ஆம் அந்த பெண் தாய்மை அடைந்திருந்தாள். அந்த முஸ்லீம் தம்பதியினர் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை. அந்தப்பெண் தகுதியான ஒரு நாளில் அழகிய ஒரு ஆண் குழந்தையை பெற்றாள்.அந்த தம்பதியருக்கு இந்த உலகத்தின் அத்தனை செல்வங்களையும் தாங்கள் ஒரே நாளில் ஒரு குழந்தையை பெற்றதன் மூலம் அடைந்துவிட்டதாகவே நினைத்தனர். இப்போது அவள் கணவன் தான் நேந்துகொண்டதன்படி
தன் வேண்டுதலை செலுத்தும்படியாக மீண்டும் சிரியாவில் டமாஸ்கஸ் வந்து அந்த டிரைவரை சந்தித்தான். ஆனால் அந்த டிரைவரின் மனதில் சாத்தான் விஷவிதைகளை விதைத்தான்.
இங்கே தன்னிடம் வந்திருக்கும் இந்த சவுதி இளைஞன்... ஒரு பெரும் பணக்காரன். இவனைக்கொண்று போட்டால் நமக்கு மிகுந்த செல்வம் கிடைக்கும் " என்று எண்ணி தான் செய்யப்போகும் காரியத்துக்கு உதவியாக மேலும் இருவரை தன்னுடன் வரவழைத்தான். வந்திருப்பவர்கள் தன்னுடைய நண்பர்கள் என்றும் அவர்களும் சைத்னயா மாதாவுக்கு
வேண்டுதல் வைத்து அவர்களுடன் வருவார்கள் என்றும் இந்த சவுதி இளைஞனிடம் கூறினான். அவனும் மிகுந்த சந்தோஷப்பட்டு," நண்பா... இவர்கள் உனக்கு நண்பர்களானால் எனக்கும் நண்பர்களே... இவர்கள் என்னுடன் வருவதால் எனக்கும் சந்தோஷமே" என்றான். மேலும்," நண்பா... அன்று நான் சொன்னதுபோல் இந்தா உனக்கு 20000 அமெர்க்க டாலர்கள். உன் நண்பர்களுக்கும் 20000 டாலர்கள் என்று மொத்தம் 40000 அமெரிக்க டாலர்களாக அவர்களிடம் கொடுத்தான். 
   அந்த காசோடு திருப்த்தி அடையாத அவர்கள் அவனை தனியே வனாந்தரமான ஒரு இடத்திற்கு கூட்டிச்சென்று அவன் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்கள். அவன் தலை வேறு, கைகள் வேறு, கால்கள் வேறாக  வெட்டிப்பிரித்தார்கள். அத்தோடு நில்லாமல் இவனை இங்கேயே புதைத்தால் தெரிந்துவிடும் என்று எண்ணிய அவர்கள் அவனை ஒரு சாக்குமூட்டையில் கட்டி தங்கள் காரின் பின் டிக்கியில் வைத்து வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச்சென்று பாலைவனத்தில் புதைத்துவிட எடுத்துச்சென்றார்கள். அந்த சவுதி வாலிபனுடைய தங்கச்சங்கிலி, கைகடிகாரம், அவனிடமிருந்த அனைத்து அமெரிக்க டாலர்கள் ஆகிய அனைத்தையும் எடுதுக்கொண்டார்கள். வெகு தூரத்தில் சைத்னயா மாதாவின் மலைகோயில் தெரிந்தது.
   ஆனால் விதி வேறு விதமாக வேலை செய்தது. அதிவேகமாக சென்றுகொண்டிருந்த அந்த நவீன சொகுசுக்கார் அந்த பிரதான சாலையின் நடுவிலேயே சடக்கென நின்றது.அந்த டிரைவருக்கும் அவனுடன் வந்த மற்ற இருவருக்கும் இந்த கார் ஏன் நின்றது என தெரியவில்லை. சாதாரணமாக அந்தக்கார் பழுதடையவே அடையாது. இப்போது எப்படி
பழுதானது என அவர்கள் மண்டையை குடைந்துகொண்டார்கள். அப்போது வெகு வேகமாக பைக்கில் அவர்களைக்கடந்து சென்றான் ஒருவன். இவர்களின் சொகுசுக்கார் நடு ரோட்டில் பழுதடைந்து நிற்பதைக்கண்ட அவன் அங்கே நிறுத்தி அவர்களிடம்," ஏன் உங்கள் கார் நின்றுவிட்டது... உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா?" என்றான். ஆனால் அவர்கள் மூவரும் " நீ உன் வேலையை பார்த்துக்கொண்டு போ... உன் உதவி எங்களுக்குத்தேவை இல்லை " என்றனர்.
   இவர்களை பார்த்தமாத்திரத்தில் அவர்கள் முகம் போன போக்கைப்பார்த்த அந்த பைக்ஓட்டி இதில் ஏதோ பிரச்சனை இருகின்றது போலும் என நினைத்து திரும்பிச்சென்றான். போகும் முன்பாக அந்த சொகுசுக்காரின் பின் பானட்டிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தை கவனித்தான். பிறகு தன் பைக்கை ஓட்டிக்கொண்டு போனவன் அருகிலிருந்த போலிஸ் ஸ்டேஷனின் முறையிட்டான். அடுத்த ஐந்தாவது நிமிடம் டமாஸ்கஸ் போலீஸ் அந்த மூன்று பேரையும் கைது செய்தது. தாங்கள் இந்த டமாஸ்கஸ் போலீஸிடம் வகையாக மாட்டிக்கொண்டதை அறிந்த மூவரும் அதிருந்து போனார்கள். 
   போலீஸ் மிகவும் கடுமையாக," இந்த காரின் பின் பேனட்டைத்திற...ஏன் இங்கிருந்து ரத்தம் வருகின்றது?" என்றனர். வேறு வழி இல்லாத அந்த மூவரும் அந்த காரின் பின் பேன்ட்டை திறந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராதபடி ஒரு புதுமை நடந்திருந்தது.
   காரின் பின் பேனட்டிலிருந்து உயிரோடு திடீரென எழுந்தான் அந்த சவுதி அரேபிய இளைஞன்." அப்பாடா.. இப்போதுதான் குழந்தை யேசுநாதர் எனக்கு உயிர் கொடுத்தார். இந்த கார் டிரைவர்தான் என்னை கழுத்தை அறுத்து கொலை செய்தான். இவன் தான் என் தலையை அறுத்து துண்டித்தான். இவன்தான் என் கைகளை வெட்டித்துண்டித்தான்.
இவன்தான் என் கால்களை வெட்டித்துண்டித்தான். அதோ அந்த மலையில் இருக்கு சைத்னயா மாதாவும் அவர் திரு மகன் யேசுவும் வந்து எனக்கு உயிர் கொடுத்தார்கள். யேசுநாதர் என் தலையையும் கைகால்களையும் சேர்த்து தைத்து ஒட்டவைத்து எனக்கு உயிர்கொடுத்தார். இதோ பாருங்கள் எனக்கு கழுத்திலும் கை கால்களிலும் போடப்பட்ட
தையல்கள்" என்றான்.[ யேசுவுக்கே புகழ்]. அந்த கொலைகாரகள் மூவருக்கும் அப்போதே பைத்தியம் பிடித்திருந்தது. அந்த கொலைகாரர்களிடமிருந்து அந்த சவுதி வாலிபனுடைய அனைத்து பொருட்க்களும் பரிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்க்கள் யாவும் அந்தக்கொலைக்கு சாட்ச்சியமாயின. இதைப்பார்த்த அந்த டமாஸ்கஸ் போலீசாருக்கு இதை நம்புவதா என்றே புரியவில்லை. மேலும் அவனை அப்போதே உடனடியாக மருத்துவ ஆய்வுக்காக அனுப்பினர்கள். அவர்களும் அவனை நன்றாக ஆய்வுசெய்து " ஆம்...கொலை நடந்திருகின்றது. ஆனாலும் இவனுக்கு உயிர் வந்திருப்பது ஆச்சர்யமே... இதை இவனுடைய கழுத்திலிருக்கும் இணைப்புகளும் கைகால்களில் இருக்கும் இணைப்புகளும் நிரூபிகின்றன" என்றனர்.
     இதைத்தொடர்ந்து இந்த சவுதி இளைஞனுடைய உறவினர்கள் சிரியாவுக்கு வரவழைக்கப்பட்டு நடந்த செய்திகளை கேட்டறிந்தார்கள்.இந்த இளைஞனுக்கு நேர்ந்த அபாயமும் அவனுக்கு ஏற்பட்ட உயிர்ப்பையும் கேட்டறிந்த முஸ்லீம் சமுதாயமும் முஸ்லீம் உலக நாடுகளும் மிகவும் ஆச்சரியப்பட்டது. இந்த சவுதி இளைஞனுடைய பேட்டியை ரேடியோ, தொலைகாட்ச்சி, செய்தித்தாள்கள் மேலும் இன்டெர்னெட் போன்ற அனைத்து ஊடகங்களிலும் ஒலிபரப்பாகின.
      இன்றைய கால கட்டங்களில் ஊடகங்களின் ஆதிக்கம் பெருத்துவிட்ட இந்த நாட்களிலும் தலை வெட்டிக்கொல்லப்பட்ட ஒருவனை யேசுநாதர் உயிர்பித்திருகின்றார் என்று அறியவரும்போது வேத காலத்திலிருந்து நம்பப்பட்டுவரும் சரீர உத்தானத்தை விசுவாசிகிறேன்,நித்திய ஜீவியத்தை விசுவாசிகிறேன் என்னும் விசுவாசப்பிரமாணங்கள் எவ்வளவு வலிமையான நம்பிக்கையையும் வல்லமையான தீர்க்கதரிசங்களையும் வேதம் வெளிப்படுத்துகின்றது என்பதற்கு இந்த முஸ்லீம் வாலிபனுடைய உயிர்ப்பு ஒரு தகுந்த உதாரணமாகும்.
        மனிதனின் இறப்பு எத்தகையதாக இருந்தாலும் அவன் மரித்து எரித்து சாம்பலாக்கப்பட்டிருந்து தூசுவாக மாறியிருந்தாலும் யேசுநாதர் அவனையும் உயிபிக்க வல்லமையானா தேவன்  என்பதை இந்த உலகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சைத்னயாவில் கொல்லப்பட்ட அந்த சவுதி முஸ்லீம் வாலிபனுக்கு நடந்த இந்த புதுமை இக்காலத்தில் தேவயான  ஒன்றுதான்..
     கொலை செய்த அந்த மூவருக்கும் பைத்தியம் பிடித்திருப்பதுபற்றி போலீஸ், மற்றும் மருத்துவ அறிக்கையின்படி அவர்கள் மூவரும் மன நலன் குன்றியவர்களுகான சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பபட்டதாக ஒரு செய்திக்குறிப்பு கூறுகின்றது.
பத்து வருடங்களுக்குப்பின் அதாவது டிசெம்பெர் 2004 ல நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி இந்த சவுதி வாலிபன் பேசும்போது அப்போது தான் முஸ்லீம் ஆக இருந்தேன் என்றார்.
தற்போது அவரும் அவரது குடும்பத்தார் அனைவரும் கிறிஸ்த்துவர்களாக மாறினார்களா என்பதுபற்றி ஏதும் செய்தி இல்லை. இது அவரது பாதுகாப்பை முன்னிட்டு வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.
      சிரியா நாட்டில் டமஸ்கஸ் நகரில் ஒரு முஸ்லீம் வாலிபனுக்கு நேர்ந்த புதுமையப்பொருத்தவரை இது மாதாவுக்கும் யேசுவுக்கும் பெரும் புகழை தேடி தந்திருகின்றது என்றாலும் தற்போது அங்கு பெரும் அரசியல் மாற்றம் நடைபெற்றுவருவதால் தினசரி அங்கு நடக்கும் ராணுவ நடவடிக்கைகளிலும், உள் நாட்டுக்கலவரத்திலும் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்களாகிய கிறிஸ்த்துவர்கள் படும் பாடும், முஸ்லீம்கள் படும் பாடும் வார்த்தைகளில் சொல்லி முடியாது. 
     ஆனாலும் அங்கும் தேவ தாயாரும் அவரது திருமகனும் தங்களுடைய பிள்ளைகளான அனைவருக்கும் பெரும் சகாயம் செய்து தினமும் அங்கே பெருமளவு புதுமைகள் நிகழ்த்தி பல்லாயிர கணக்கானவர்களை காத்து ரட்ச்சித்து வருகின்றார்கள் என்பதே உண்மை. 
    சைத்னயா உண்மையில் மஹா சக்தி உள்ள அதிசய மாதா என்பது நிரூபணமான உண்மை. இனி இந்த சைத்னயா மாதாவைப்பற்றிய சரித்திரம் காண்போம்.
இந்த சரித்திரம் நடைபெற்றபோது காண்ஸ்டாண்டி நேபிள்ஸ் [ இன்றைய துருக்கி ] நாட்டை ஆண்ட மன்னன் ஜஸ்டீனியன். அவர் தன் ராஜ்ஜிய பரிபாலனம் பற்றியும் புனிதநகரான ஜெருசலேம் நகரை தரிசிக்கும்படியோ அல்லது அன்றைய பெர்சியா [இன்றைய ஈரான் ] நாட்டின்மீது படை எடுக்கும் மொருட்டோ இந்த சிரியா நகரத்தை சேர்ந்த டமாஸ்க்கசுக்குவரும்போது இந்த சைத்னயா நகரின் அருகில் முகாமிட்டிருந்தார். அப்போது அவருக்கும் அவரது சேனைவீரர்களுக்கும் கடும் தாகமும் களைப்பும் ஏற்படவே எங்காவது நல்ல தண்ணீர் ஊற்று இருக்குமோ என தேடிக்கண்டுபிடிக்க சொன்னார். அப்போது மன்னர் ஜஸ்ட்டீனியனுக்கு ஒரு நல்ல கலைமான் தென்பட்டது. அந்த கலைமானை தானே வேட்டையாடும் பொருட்டு மன்னன் ஜஸ்டீனியன் தன் வில் அம்பை எடுத்துக்கொண்டு அதைப்பின் தொடர்ந்து ஓடினார். அந்த கலைமான் அவரை வெகு தொலைவிற்கு கூட்டிச்சென்றது.
    பின் ஒரு இடத்தில் நின்றது. அந்த இடத்தில் நல்ல தெளிந்த நீரூற்றும் இருந்தது. மன்னன் ஜஸ்டீனியன் அந்த மானை வேட்டையாட தன் வில்லில் அம்பை தொடுத்தார். அப்போது ஒரு புதுமை நிகழ்ந்தது.
    அந்த அழகிய கலை மான் உடனே ஒரு அழகிய யுவதியக மாறியது. மேலும் வானில் வர்ணஜாலங்கள் தோன்றின. கண்கூசும்படியான ஒரு ஒளியும் தோன்றியது.. திடீரென அந்த அழகிய யுவதி மறைந்து ஒரு அழகிய தாயும் அவரது ஆண்குழந்தையும் இருப்பது போன்ற ஒரு ஓவியம் தோன்றியது. ஆனால் அந்த ஓவியத்தின் வலது கை உயிர்பெற்று
மன்னன் ஜஸ்டீனியனை நோக்கி, " மன்னா ஜஸ்டீனியா ... உன் வில்லையும் அம்பையும் கீழே போடு... நாமே சைத்னயா மாதா.. இதோ இந்த மலையில் வாசம் செய்கிறோம். இங்கிருந்துகொண்டு நாம் நம் மக்களை காப்போம். இங்கே நமக்கு ஒரு தேவாலயம் அமைப்பாயாக " என்றார். மன்னன் ஜஸ்டீனியன் திகைத்து அந்த இடத்திலேயே தேவதாயாருக்காக  ஒரு மாதா கோயிலைக்கட்ட ஆணையிட்டான். ஆனால் அந்த மலை சிகரத்தில் தேவதாயாருக்காக ஒரு தேவாலயம் கட்டும் அளவுக்கு இடமில்லே எனவும் அங்கு தேவாலயம் அமைக்க சாத்தியம் இல்லை என அவனது கட்டிடக்கலை நிபுணர்கள் கூறியதால் ஜஸ்டீனியன் பெரும் வருத்தமடைந்தான். இவ்விதமாக பல காலம் கடந்தது.
ஒரு நாள் மன்னன் ஜஸ்டீனியன் கனவில் தேவதாயாரானவள் தோன்றி தனக்கு ஏன் இன்னும் தேவாலயம் கட்டவில்லை என வருத்தம் தெரிவிததாள்.
    மன்னன் ஜஸ்டீனியன் அந்த மலையின் சிகரத்தில் தேவாலயம் கட்டும் அளவுக்கு வசதிகள் இல்லை.. எனவே தன்னால் அங்கு தேவாலயம் கட்ட முடியாமல் போயிற்று என்றான். ஆனால் தேவ தாயார் அங்கு அந்த மலையின்மீது தனக்கு ஒரு தேவாலயம் அமைக்க தகுதியான ஒரு வரைபடத்தை தானே வரைந்து கொடுத்தாள் எனவும் அதன்படியே அங்கே அவள் புகழ்பரவும்பொருட்டு சைத்தனயா மாதாவின் தேவாலயம் கட்டுவிக்கப்பட்டதாக இந்த தேவாலயத்தின் ஸ்தல புராணம் கூறுகின்றது. 
    இந்த தேவாலயத்தின் உட் புறத்தில் தேவதாயாரின் பலவிதமான வண்ணப்படங்கள் இருகின்றன. இதில் தேவதாயார் தன் திருமகன் பாலன் யேசுவை கையில் ஏந்திய வண்ணம் இருக்கும் ஒரு படம் மிகவும் புகழ் வாய்ந்ததும் சக்தி உடையதானதாகவும் இருப்பதாக கூறப்படுகின்றது. திரு யாத்திரிகர்களாக வரும் மாதாவின் பக்தர்கள் அனைவரும் இந்த தெய்வீக படத்தின் முன்பாகவே மண்டியிட்டு வணங்கி தங்களின் வேண்டுதலையையும் நேர்ச்சியையும் செலுத்துகின்றார்கள்.
 இந்த சைத்னயா அதிசய மாதாவின் திருப்படத்தைப்பற்றிய ஒரு சரித்திரம் பின்வருமாறு.
கி.பி. எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த எகிப்த்து நாட்டை சேர்ந்த துறவி தியோடொர் என்பவர் கிரேக்க நாட்டிற்கு செல்லும் வழியில் இந்த சைத்னயா மாதாவை தரிசித்து இங்கிருந்த கன்னிமாடத்தில் தங்கினார். அப்போது அங்கிருந்த சபைத்தலைவி புனித மரியா என்பவர் இந்த தியோடோர் என்னும் துறவியை நன்றாக உபசரித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்தார். அந்த துறவியும் இங்கிருந்து நேரே புனித பூமியான ஜெருசலேமை பார்த்துவிட்டு மீண்டும் கிரேக்க நாடு செல்ல உத்தேசித்திருப்பதாக கூறினார்.
    எனவே அந்த சபைத்தலைவி புனித மரியா அந்த துறவி தியோடரிடம் ஒரு வேண்டுதலை கேட்டார். அதாவது ஜெருசலேமில் இருந்து அவர் திரும்பி வரும்போது இந்த சைத்னயாவுக்கு திரும்பிவரவேண்டும் எனவும் அப்போது தனக்காக ஜெருசலேமிலிருந்து மாதாவும் அவர் திருமகன் யேசுவும் இருப்பது போன்ற அழகிய திருப்படம் தங்களுகாக வாங்கி வர  வேண்டுமெனவும் மிகவும் கேட்டுக்கொண்டார்.
    துறவி தியோடரும் தான் ஜெருசலேமிலிருந்து திரும்பிவரும்போது அவசியம் அவர் கேட்டுக்கொண்டபடி அந்த மாதாவின் திருப்படத்தை வாங்கிவருவதாக கூறினார். ஜெருசலேம்  சென்ற அந்த துறவி தியோடருக்கு அங்கே சைத்னயாவில் அந்த கன்னிகா ஸ்திரி கேட்டுக்கொண்டபடி தேவதாயாரின் படம் வாங்கி வரும் நினைப்பு இருந்தாலும் வேண்டுமெனவே  அதை தவறவிட்டவர்போல தன்வழியே திரும்பினார். ஆனால் அவர் சைத்னயா மாதாவால் ஆட்கொள்ளப்பட்டார்.
" தியோடொர் நீர் ஜெருசலேமில் ஏதேனும் தவறவிட்டு வந்துவிட்டீரா?" என்னும் குரல் அவருக்கு மிகவும் தெளிவாக கேட்டது. ஆனாலும் அவர் தன்பயணத்தை தொடர்ந்தார்.
" தியோடொர்..நீர் ஜெருசலேமில் நம் திருப்படத்தை வாங்கிவரும்படி அந்த சபைத்தலைவிக்கு வாக்கு கொடுத்திருந்திருந்தும் நீர் செய்யாமல் போவதேன்?" என்னும் குரல் மீண்டும் மிகவும் தெளிவாக தியோடோர் என்னும் துறவிக்கு கேட்டதால் அவர் பயந்து மீண்டும் ஜெருசலேம் வந்து அந்த சபைத்தலைவி மரியாள் கேட்டுக்கொண்டபடி மாதாவின் அழகிய திருப்படத்தை வாங்கிவந்து தன் பயணத்தை தொடர்ந்தார்.
இந்த திருப்படத்தை அவர் வேறு எங்கும் வைக்காமல் தன் கையாலேயே வைத்துக்கொள்ளும்போது அவர் ஒரு பாதுகாப்பை உணர்ந்தார். தேவதாயார் தன் தாசன் தியோடருக்கும் அவரது சீடர்களுக்கும் கள்வர்கள் தொல்லையிலிருந்து பாதுகாத்தார். மேலும் பல வனவிலங்குகளின் தொல்லையிலிருந்தும் தேவதாயார் இவர்கள் அனைவரையும் பாதுகாத்தார்.
இவை அனைத்தையும் உணர்ந்த தியோடர் என்னும் அந்த எகிப்திய துறவி அந்த திருப்படத்தை சைத்னயா தேவாலயத்தை சேர்ந்த கன்னியர் மடத்தலைவி மரியாளின் வசம் ஒப்புவிக்க மனம் வராமல் தானே வைத்துக்கொள்ள விரும்பினார். எனவே சைத்னயா ஊருக்கு செல்லாமல் அதை தவிர்த்து கடல்வழியே எகிப்த்து நாட்டுக்கு செல்ல விரும்பி  கப்பல் ஏறினார். ஆனால் தேவதாயார் விடவில்லை. இதனால் கடலில் எழுந்தது பெரும் புயல். கப்பலோட்டி இயற்கையை மீறி தன்னால் கப்பலை செலுத்த இயலவில்லை என மீண்டும்  கப்பலை துறைமுகம் திருப்பினான்.
    இதனால் பயந்துபோன தியோடொர் மீண்டும் சைத்னயா வந்தார். திரும்ப சைத்னயா வந்தும் அவருக்கு அந்த மடத்துதலைவியிடம் அந்த மாதாவின் திருப்படத்தை ஒப்படைக்க  மனம் வரவில்லை. எப்படியோ ஒரு நான்கு நாள் சைத்னயாவிலேயே தங்கி அந்த சபைத்தலைவியிடம் சொல்லிக்கொள்ளாமலேயே வெளியேறிவிட முடிவு செய்தார். ஆனால் அந்த  கன்னிமாட கதவு திறவாமல் பெரும் சுவர் ஒன்று எழும்பி அவரை தடை செய்தது. நடந்த அனைத்தும் மாதாவின் திருச்செயலே என எண்ணிய அந்த துறவி தன் தவறை உணர்ந்து  நடந்த யாவற்றையும் அந்த கன்னிமாடத்தலைவி புனித மரியாளிடம் சொல்லி மன்னிப்புக்கேட்டுக்கொண்டார். பிறகு அந்த தேவதாயாரின் திருப்படத்தை அவரிடம் ஒப்படைத்தார்.
    அன்றிலிருந்து அந்தப்படம் அங்கேயே நிலைகொண்டது. அந்த புனிதமான சைத்னயா மாதாவின் திருப்படம் யேசுநாதரின் சீடரும் சுவிசேஷகருமான புனித லூக்காவால்  வரையப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த புதுமையான திருப்படம் சைத்னயாவுக்கு வந்ததுமுதல் இந்த தேவாலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு கேட்டது கிடைத்தது.
சைத்னயா மாதாவை தரிசிக்க வரும் பக்தர்களின் காணிக்கையும் அதிகரித்தது. எனவே மாதாவின் அந்த திருப்படத்திற்கு பக்தர்கள் வெள்ளிக்காப்பு அணிவித்து மகிழ்ந்தார்கள்.
மேலும் பல வெள்ளி சொரூபங்களும் சிலுவைகளும் பக்தர்களின் காணிக்கையாக இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை இங்கே பக்தர்களுக்கு கிடைத்த வேண்டுதலுக்கு  சாட்ச்சியமாக நிற்கின்றன.
பைசாந்திய பேரரசனாகிய ஜஸ்டீனியன் கி.பி.547ல் சைனயாவில் இந்த தேவாலயத்தை கட்டுவித்தான். அந்த தேவாலயம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி தேவமாதா அமல உற்பவியாக இந்த பூ உலகில் அவதரிதத அந்த நாளிளேயே கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புகொடுக்கப்பட்டு அன்று முதல் ஒவொவொரு ஆண்டும்
செப்டெம்பேர் 8 ஆம்தேதி இந்த சைத்னயா மாதாவின் திரு நாளாக கொண்டாடபட்டு வருகின்றது.
       பதி மூன்றாம் நூற்றாண்டுகளிள் இந்த புனித சைத்னயா மலையின்மீது அமைந்துள்ள சைத்னயா மாதாவின் திரு உருவ படத்தை தரிசிக்க வந்திருந்த மெஜிஸ்டெர் தித்மார்  என்னும் ஒரு ஜெர்மானியர் இவ்வாறு கூறுகின்றார். " இந்த சைத்னா மாதாவின் மார்பு பகுதியிலிருந்து சுரந்துவரும் ஒரு வித எண்ணெய்யானது சகல விதமான வியாதிகளையும்
போக்கவல்லது" என்று தான் கண்டறிந்ததாக கூறுகின்றார். மேலும் இந்த காலகட்டங்களில் அதாவது செப்டெம்பெர் 1240 களில் எகிப்த்திய சுல்தானிடமிருந்து பெறப்பட்ட ஒரு  உத்திரவாதமனது இந்த சைத்னயா தேவாலயத்தை தரிசிக்க வரும் கிறிஸ்த்துவ பக்தர்களுக்கு முஸ்லீம்களால் யாதொரு துன்பமும் நேராதபடி காத்தது எனவும் கூறப்படுகின்றது.
பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த டெம்ப்லார் வீரர்கள் இந்த சைத்னயா தேவாலயதிற்கு வந்து இங்கே கிடைக்கும் இந்த புனித எண்ணெய்யை வாங்கிச்சென்று தங்களுடைய  தாய் நாட்டிற்கு கொண்டு சென்று தங்கள் தாய் நாட்டிலும் இந்த சைத்னயா மாதாவின் பக்தியை பரப்பினார்கள் என்கிறது ஒரு சரித்திர குறிப்பு.
      இப்போதும் இந்த ஆலயதிற்கு வரும் பக்தர்கள் இந்த சைத்னயா மாதாவின் முன் சாஸ்டாந்தமாக விழுந்து வணங்கியபின் அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கிண்ணத்திலிருந்து இந்த பரிசுத்த எண்ணெய்யை தொட்டு தங்கள் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டுக்கொண்டு தங்கள் வேண்டுதலையோ அல்லது நேர்ச்சியையோ ஆரம்பிகின்றார்கள். தங்கள்  வழிபாட்டுக்காரியம் முடிந்தபின் இங்குள்ள கன்னிகைகள் ஒரு பஞ்சினால் இந்த பரிசுத்த எண்ணெய்யை நனைத்து ஞாபக பொருளாக கொடுகின்றார்கள்.     அவரவர் கலாச்சாரத்தின்படி தேவையான பரிசுத்த எண்ணெய் அந்த மடத்து கன்னியர்களாள் வழங்கப்படுகின்றது. சிலர் தங்கள் வேண்டுதல் ஜெபித்து முடியும் வரை இந்த கிண்ணத்திலிருந்து இந்த பரிசுத்த எண்ணையை ஊற்றிகொண்டே இருப்பார்கள். இதற்காகவே இங்குள்ள கன்னிகைகள் இங்கு வரும் பக்தர்களின் வழக்கத்தை கேட்டு தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் அந்த  எண்ணையை வழங்கி வருகின்றார்கள்.
   ஹெலியனியர்களின் சகாப்த்தத்திலிருந்து சைத்னயா அமைதுள்ள இந்த மாகாணம் அபிலென் என அழைக்கப்பட்டது.. வேத காலத்தில் ஆதாமின் மகனான காயீனால் கொல்லப்பட்ட அவன் சகோதரன் ஆபேலின் கல்லறை இங்குதான் இந்த மாகாணத்திலேயே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த அபிலென் மாகாணத்தில் ஒரு குன்றின்மீது  ஆபேலின் பெயரால் கட்டபட்டுள்ள ஒரு மசூதியின் உள்ளே ஆபேலின் சமாதி அமைந்துள்ளது.
       மேலும் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் பூர்வீகத்தில் இந்த அபிலென் மாகாணத்தின் தலை நகரே இந்த சைத்னயாவாகத்தான் இருக்கும் என்றும் கருதுகிறார்கள். 
ஆக தேவதாயார் அவர்கள் ஒரு காரணத்தோடுதான் இந்த சைத்னயா என்னுமிடத்தை தான் வசிக்கும் இடமாக தேர்ந்து கொண்டார் போல் இருகின்றது. தேவதாயாரானவர் இந்த  சைத்னயா மலைமீது அமர்ந்தபடி இந்த நகரத்தையும் சிரியாவையும் அந்த லெபனான் நாட்டையும் பார்த்துக்கொண்டே இருப்பதுபோல தன் ஆலயத்தை இந்த உயரமான சைத்னயா  மலைமீது அமைத்துக்கொண்டு அனுதினமும் அருள்பாலித்துக்கொண்டே இருகின்றார் என்றால் அது மிகை ஆகாது.
   இந்த சைத்னயா மாதாவின் திருப்படத்தை பிரதி எடுத்தாற்போன்று பல இடங்களிலும் அவரது பக்தி முயற்சி பரப்ப பட்டது. இப்படியாக இந்த சைத்னயாமாதாக்கோயிலை கட்டுவித்த ஜஸ்டீனியன் மன்னன் ஆண்ட அந்த பைசாந்திய தேசத்திற்கு ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டது. கி.பி.910ல் ருஸ்யா தேசத்திலிருந்த வந்திருந்த ஒரு முறட்டு காட்டுமிராண்டிகள் இந்த  காண்ஸ்டாண்டி நேபிள்ஸ் நகரத்தை [ அன்றைய பைசாந்தியம் இன்றைய துருக்கி ] தங்கள் கப்பற்படைகளாள் சூழ்ந்துகொண்டு முற்றுகை இட்டனர். இந்த பைசாந்திய மக்கள் இந்த  முறட்டு ருஸ்ய காட்டுமிராண்டிகளிடமிருந்து தங்கள் தேசத்தை காக்கும்படியாக ப்ளாக்கர்னே என்னும் தேவாலயத்தில் அமைந்திருந்த இந்த சகாய மாதா படத்தின் முன்பாக  மனமுருகி வேண்டிக்கொண்டார்கள்.
    அப்போது பாலஸ்தீனத்திலிருந்து தோமையாரால் கொண்டுவரப்படிருந்த மாதாவின் இடுப்புக்கச்சையை இந்த கடற்கறையில் நனைத்தபோது ஒரு பெரும் அதிசயம் நிகழ்ந்தது.
கடல் உடனே ஆர்த்தெழுந்தது. பெரும் ஆழிப்பேரலைகள் பெரும் ஆர்ப்பாட்டமாக கிளர்ந்தெழுந்தன. எதிரிகளாகிய ருஸ்ய காட்டு மிராண்டிகளின் கடற்படை கப்பல்கள் கடலில் வெகு தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டன. அவர்களின் கடற்படை முழுவதுமாக கடலில் சிதறடிக்கப்பட்டதால் இந்த கான்ஸ்டாண்டி நேபிள்ஸ் மக்கள் [ பைசாந்தியர்கள் ] தேவதாயாரின்  இந்த சகயமாதா பக்த்தியினால் காப்பாற்றப்பட்டார்கள்.
இந்தியாவில் இந்த சைத்னயா மாதாவின் திருப்படம் சகாயமாதா என அழைக்கப்படுகின்றது. இரட்சகர் சபை சபை துறவிகளாள் இந்த சகாய மாதா பக்தி பரப்பப்பட்டு வருகின்றது.
உலகமெங்கும் இந்த சைத்னயா மாதாவின் திருப்படத்தை மாதிரியாக வைத்து வரையப்பட்டுள்ள படங்களும் பல நாடுகளில் பல அதிசயங்களை செய்து வந்துள்ளன. இன்றளவும் அந்தசைத்னயா எனப்படும் அதிசய சகாய மாதா தன்னை நாடி வரும் பக்த்தர்கள் அனைவருக்கும் இனம், மொழி, நாடு, கலாச்சாரம் அனைத்தையும் கடந்து அருள் பாலித்து வருகின்றார்.
சைத்னயா மாதா எனப்படும் அதிசய சகாய மாதாவே பாவிகளாய் இருகிற எங்களுக்காக இப்போதும் எப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிகொள்ளும். ஆமென்.









Wednesday, June 4, 2014

" கலைக்கோவில் ஹாகியா சோஃபியா "



" கலைக்கோவில் ஹாகியா சோஃபியா "

" அன்பே தியோடோரா...நான் உன்னைக்கண்ட நாள் முதல் நம் திருமணம் முடியும் வரை நான் எந்த நாளிலும் கண் உறங்கவில்லை. நினைவெல்லாம் நீயே நின்றாய். 
உணர்வெல்லாம் நீயே என்றான பின்... நான்தான் நீ.. நீ தான் நான் என்றான பின்பு ஊன் ஏது? உறக்கமேது?. கண் மூடவுமில்லை. கண் திறக்கவும் இல்லை. அடடா... இந்த காதல் வயப்பட்ட மனம் ஏன் இப்படி பிதற்றுகிறது. நான் பிதற்றுகிறேன் என்று தெரிந்திருந்தும் நான் பிதற்றுகிறேன்...இதுதான் காதலின் மகிமையோ.. இல்லை காதலின் உணர்வோ.. நான் விழித்திருகிறேனா இல்லை.. இல்லை..பிதற்றுகிறேனா... எதுவுமே புறியவில்லை." 
" என் எஜமானே...நீங்கள் பிதற்றவில்லை..உண்மையைத்தான் பேசுகிறீர்கள்... இதுதான் இருமனப்பட்டவர்கள் ஒரு மனப்பட்டால் ஆகும் நிலை. இதுதான் காதல்..இதுதான் 
புனிதம். இந்த அன்பு நம்பிக்கையின்மீது எற்படுத்தப்பட வேண்டும். அது விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும். இந்த அன்பு, நம்பிக்கை, விசுவாசம் இம்மூன்றும் ஒன்றுக்குள்
ஒன்றாய் பிணைந்திருக்கும் போதுதான் அது காதலோ அல்லது அன்போ அல்லது திருமணமோ வெற்றி அடைகிறது.. இவற்றுள் எதேனும் ஒன்று குறையும் பட்ச்சத்தில் அங்கே
தோல்வியும் பிரிவும் நிச்சயம் ஏற்படும். இது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை."
   " அன்பே தியோடரா.. நான் உன்னை முதன்முதலில் உன்னை எங்கே சந்தித்தேன் என்று உன்னால் கூற முடியுமா?"
    " முடியும் அத்தான். முடியும் . இவை எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள். மறக்கக்கூடாத அனுபவங்களும் கூட. ஒரு பெண்ணுக்கு காதல் வயப்பட்டதை மறக்க முடியுமா? அல்லது திருமண நாளைத்தான் மறக்க முடியுமா? ஒரு பெண் தன் பிறந்த நாளைக்கூட மறக்கலாம். பிறந்த வீட்டைக்கூட மறக்கலாம். ஆனால் அவள் காதல் 
வயப்பட்டதையோ..அல்லது கணவனோடு கை கோர்த்த நாளையோ தன் வாழ்வில் எப்படி மறக்க முடியும். அப்படி அவள் மறக்க நினைக்கிறாள் என்றால் அவள் தன் கடந்த காலத்தில் 
அவள் பட்ட துன்பங்களே அதற்குக்காரணமாக இருக்க வேண்டும் அதனாலேதான் அவள் அதை மறக்க நினைப்பாள். என் வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட கசப்பான அனுபவங்கள் 
எனக்கும் ஏற்பட்டிருந்தன. அவற்றை என்னால் மறக்கவே முடியவில்லை."
        " வேண்டாம் தியோடரா... அவற்றைப்பற்றி பேசவே வேண்டாம். உன்னைப்பெண் பார்க்கும்போது என் தாயார் அறியவந்த பல காரியங்கள் எனக்கும் அறிவிக்கப்பட்டன. அவை மிகவும் துன்பமயமானவை. நான் அவற்றைப்பற்றி பேசவே விரும்பவில்லை. இந்த நினைவுகள் நம் சந்தோஷ வாழ்க்கையை துன்பமயமாக மாற்றிவிடும்."
    " இல்லை அன்பே... நாம் அவற்றைப்பற்றி பேசித்தான் ஆக வேண்டும். சற்று முன்புதான் பேசினோமே... உண்மையான சந்தோஷமான குடும்ப வாழ்கைக்கு அன்பு, நம்பிக்கை, 
விசுவாசம் தேவை என்று. நம் குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் நீங்கள் என்னைப்பற்றி மிகவும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் 
தாயார் என்னைப்பற்றி என்ன கூறினார்கள்"
      " தியோடாரா... நீ தாழ்ந்த குலத்தில் பிறந்தவளாம். உன் தகப்பன் ஒரு கரடி பயில்வானாம். சர்க்கஸ் அரங்கத்தில் உங்குடும்பம் வித்தை காட்டி பிழைப்பு நடத்தியதாம். நீயும் உன் 
சகோதரிகளும் அரங்கத்தில் நாட்டியமாடி பிழைத்தீர்களாம். மொத்தத்தில் உன் குடும்பம் ஒரு சரி இல்லாத குடும்பம் என்றார்கள். மேலும் உனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் 
குழந்தையும் பிறந்ததாம். நான் ஏதோ உன் அழகில் மயங்கி உன்னைக்காதலித்த பாவத்திற்காக உன்னை எனக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாது என்றும் வேறு நல்ல அரச 
குடும்பத்தை சேர்ந்த அரசிளம் குமரியாக பார்த்து எனக்கு திருமணம் செய்து கொடுப்பதாகவும் சொன்னார்கள். நான் விடுவேனா என்னா.. ஒற்றை காலில் நின்று உன்னைக்கரம்
பிடித்தேனாக்கும்"
    " என் எஜமானே... நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. நீங்கள் ஒரு நல்ல அரசிளம் குமரியாக பார்த்து திருமணம் செய்திருந்தால் நான் உண்மையில் சந்தோஷப்பட்டிருப்பேன்.
ஆனால் நீங்கள் தான் என்னை துரத்தி துரத்திக்காதலித்தீர்கள். நான் எவ்வளவோ வேண்டாம் என்று சொல்லியும் என்னை காதலித்தீர்கள்.இதனால் நீங்கள் உங்கள் அன்பான 
பெற்றோரின் வேதனையைத்தான் சம்பாதித்தீர்கள். என்னைக கைப்பிடிப்பதற்காக அவர்களை துறந்தீர்கள். இது அவர்களுக்கு எவ்வளவு துன்பம் தந்திருக்கும் தெரியுமா?... 
என்னால்தானே இவ்வளவும்."
       " ஆம் அன்பே..உன்னை கரம் பிடிப்பதற்காக நான் எதை வேண்டுமானாலும் இழக்க சித்தமானேன். என் ராஜ்ஜியத்தையும் இழக்க சித்தமானேன். இந்த ஜஸ்டீனியன் ஒரு சாதாரண
தாழ்ந்த குலப்பெண்ணுக்காக இந்த பைசாந்திய யுவராஜா என்னும் அரச பட்டத்தையும் இழக்க சித்தம் கொண்டான் என்று சரித்திரம் சொல்லுமே என என் தந்தை மிகவும் வருந்தினார்.
இந்த எண்ணத்தோடே என் தந்தையின் உயிர் பிறிந்தது, அவரைத்தொடர்ந்து என் தாயும் காலமானார். உன்னைக்கரம்பிடிக்க நான் இந்த பைசாந்தியபேரரசின் சட்டத்தையே மாற்ற 
வேண்டி இருந்தது. பிறகே உன்னைக்கரம் பிடித்தேன். இதற்காக என் திருச்சபையையே நான் பகைத்தேன். ஏன்? உனக்காக. உனக்கு முன்னால் எனக்கு ஒன்றும் பெரிதல்ல.. உயிரும்
பெரிதல்ல. அதைவிட அதற்கும் மேலான என் மதமும் பெரிதல்ல. இந்த பைசாந்தியமும் எனக்கு பெரிதல்ல. இந்த உலகமும் எனக்கு பெரிதல்ல. நான் உன்னை அவ்வளவாக 
நேசிக்கிறேன். என் உடல்,பொருள், ஆவி அனைத்துமே இனி நீதான் தியோடொரா"
           " அன்பே ..எனக்கு இதெல்லாம் நன்றாக புறிகிறது..தெரிகிறது.. நீங்கள் என்மீது அன்புகொள்வதற்கு நான் என்ன அவ்வளவு பெரிய அழகியா? என்னிடத்தில் என்ன இருகிறது என்று என்னை இப்படி துரத்தித்துரத்தி காதலித்தீர்கள்? இதற்கெல்லாம் எனக்கு ஒரு தகுதியும் இல்லை. நான் ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தை சார்ந்தவள். அதுவும் மிகவும் தாழ்ந்த 
குலத்தில் உதித்தவள். எனக்கெல்லாம் இப்படி ஒரு வாழ்க்கை அமையும் என்று என் கற்பனையிலும் நான் நினைத்தவள் அல்ல.".
      " அப்படி சொல்லாதே என் மயிலே. யார் யாரிடத்தில் என்ன இருகின்றது என்று தெரிந்து வருவதல்ல காதல். அது உணர்வுபூர்வமானது. இதற்கு வரைமுறை எதுவும் கிடையாது.
உன்னை அந்த ஜவுளிகடையில் பார்த்தேன்... காதல் கொண்டேன். இதைத்தெரிந்த உன் தந்தை அத்தனை ஜவுளிகளையும் அன்று என் தலையில் கட்டிவிட்டான் போ..அன்று 
அவருக்கு நல்ல லாபம் தான். என்ன செய்வது. ஆண்களின் சபலத்தால் பொருளை இழகிறார்கள் என்பது உண்மைதான்."
       " அத்தான் அப்படி சொல்லாதீர்கள். வியாபரத்தின் சூட்ச்சியமே அதில் தான் அடங்கி இருகிறது. வியாபாரமும் ஒரு விதத்தில் அரசியல் போன்றதுதான். இருவருக்குமே ஒரே
நோக்கம்தான். வெற்றி பெற வேண்டும். வியாபாரத்தில் வெற்றிபெற்றால் லாபம். அரசியலில் வெற்றி பெற்றால் ராஜ்ஜிய விருத்தி. இரண்டிற்கும் ஒரே அடிப்படை எதிராளியின் மன 
ஓட்டங்களை புறிந்துகொள்வதில்தான் இருகின்றது. வியாபாரமோ அரசியலோ எதிலும் ஜெயிப்பதென்பது அவர்களின் தொலை நோக்கிலும் எதிரிகளின் மனதில் உள்ளவைகளை 
தீர்மானிப்பதிலும்தான் இருகிறது. இதன்படி திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நான் வியாபாரத்தில் ஈடுபட்டதால் யார் யார் மனதில் என்ன இருகின்றது என்பதை என்னால்
மிகச்சரியாக தீர்மானிக்க முடியும். என் கடந்த கால வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்கள் எனக்கு நிறைய உலக அனுபவங்களை கற்றுக்கொடுத்து இருகின்றது.
மேலும் எனக்கு கடவுளும் அப்படியொரு வல்லமையை கொடுத்திருகின்றார்." 
     " அப்படியா அன்பே தியோடரா.. உன் கடந்தகால வாழ்க்கையை மறந்துவிடு...நம் எதிர்காலத்தை யோசிப்போம். உன் அனுபவத்தில் நீ யார் மனதில் என்ன இருகின்றது என உணர முடியும் என கூறினாய் அல்லவா. அப்படியானால் என் உள் மனதில் என்ன இருகின்றது என கூறு பார்ப்போம்."
      " அரசே..இது சற்று கடினமான கேள்விதான். இருப்பினும் நான் முயன்று பார்கிறேன். நீங்கள் என்னை சற்றே உற்று நோக்குங்கள் " என்றாள் தியோடொரா.
    மன்னன் ஜஸ்டீனியன் அவள் பெரிதான கண்களை ஆவலுடன் உற்று நோக்கினாள்.. இருவர் கண்களும் கலந்தன. தியோடொராவின் கண்கள் மேலும் சற்றே விரிந்தன. 
     அவள் கண்களிள் பரலோகம் தெரிந்தது. மிகப்பெரிதான பரலோகத்தின் கோட்டைக்கதவுகள் திறக்கக்கண்டாள். மிகப்பெரும் பிரம்மாண்டமான ஒரு அரங்கம் தோன்றியது. அதன்
அரியாசனத்தில் யேசுநாதர் கொலுவீற்றிருக்கக்கண்டாள். யேசுநாதரின் பரிசுத்த தேவதாயார் தனக்கென இருந்த ஒரு அரியாசனத்தில் பாலன் யேசுவை தன் கரங்களில் ஏந்தி 
இருக்கக்கண்டாள். இதுபோன்ற ஒரு பெரும் பிரமாண்டமான ஒரு அழகிய தேவாலயத்தை அவள் தன் வாழ்நாளில் கண்டதே இல்லை. காட்ச்சி முடிந்தது.
       " என் அன்பே தியோடொரா... என் மனத்தில் என்ன இருகின்றது என்று நீ கண்டாய்?"
" என் மனதில் நான் கண்டதை அப்படியே சொல்கிறேன் அத்தான். நான் ஒரு மிகப்பெரும் பிரம்மாண்டமான தேவாலயத்தைக்கண்டேன். இந்த உலகில் அப்படிப்பட்ட ஒரு
தேவாலயத்தை இதுவரை யாரும் இப்படி கட்டியதில்லை என்று மக்கள் பலர் பேசிக்கொண்டதையும் கேட்டேன். அது ஒரு தங்க மயமான ஆலயம். இதற்கு நிகர் இந்த 
உலகத்தில் எதுவுமே இல்லை. மன்னர் சாலமோன் கட்டிய தேவாலயம் கூட இதற்கு முன்னால் ஒன்றும் இல்லை. நீங்கள் கூட மன்னர் சாலமோனைப்பார்த்து ,
     " மன்னா சாலமோன் நான் உம்மை ஜெயித்துவிட்டேன். நீர் கட்டிய தேவாலயத்தைவிட நான் கட்டிய தேவாலயம் மிகப்பெரிது.. அதி அற்புதமானது " என்று சொல்லக்கேட்டேன். அது இரண்டாயிரம்  ஆண்டுகள் நிலைத்திருக்கும்." என்றாள்.
   " அன்பே தியோடொரா... உண்மை...உண்மை... உண்மையிலும் உண்மை.. உன்மையிலேயே நீ பெரும் தீர்க்கதரிசினியாகத்தான் இருக்க வேண்டும். என் மனத்தில் தேவாலயம் 
கட்டவேண்டும் என்னும் ஒரு ஆசையை நான் நிறையவே வளர்த்திருந்தேன். ஆனால் அதை நீ எனக்கு ஒரு உருவம் கொடுத்துகாட்டிவிட்டாய். உன் திறமை மிகவும் பெரியது. 
உன்னை நான் மனைவியாக பெற்றதற்கு நான் அந்த யேசுநாதருக்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன். இனிமேல் எனக்கு என் கண்கள் தேவை இல்லை. நீயே எனக்கு கண்ணும் என் 
உயிருமாவாய். நீ நான் பெற்ற செல்வம்." என்று அவளை அணைத்துக்கொண்டு மனதார பாராட்டினான்.
     அப்போது ஒரு படைத்தளபதி வந்து அவர்கள் இருவரையும் பெளவியமாக வணங்கி நின்றான்.
" பெலிசாரியுஸ்.. நீர் தளபதி தானே..எத்தனை வருடங்களாக இந்தப்பதவியில் இருகின்றாய்?" என்றாள் தியோடொரா.
" அரசி...என்னை மன்னிக்க வேண்டுகிறேன்..நான் என்னம்மா தவறு செய்துவிட்டேன்?" என்றான் தளபதி பெலிசாரியுஸ்.
" பெலிசாரியுஸ்...நான் இப்போது அரசியும் அல்ல... மன்னர் யுவராஜாவும் அல்ல..அவர் இப்போது என்ன பதவியில் இருகின்றார்?" என்றாள் தியோடொரா மிகவும் கண்டிப்பான குரலில்.
" அம்மா... மன்னர் ஜஸ்டினியன் இப்போது பேரரசர்... தாங்கள் இப்போது பேரரசி" என்றான் தளபதி பெலிசாரியுஸ்.
" அப்படியானால் பேரரசருக்கு நீ தரும் மரியாதையின் லட்ச்சணம் இப்படித்தானா?"
" அம்மா... என்னை மன்னியுங்கள். மன்னியுங்கள். நானும் இளவரசருடன் பலகாலம் பழகிவிட்டதால் இப்படி பிழை நேர்ந்துவிட்டது. என்னை மன்னியுங்கள் அம்மா"
என்றான் தளபதி. 
" அப்படியானால் பேரரசருக்கும் பேரரசிக்கும் உறிய முறையில் வணக்கம் செலுத்து" என்றாள் தியோடரா.
தளபதி பெலிசாரியுஸ் உடனே தடாலென அவர்களின் முன்னே தலை தரையில் படும்படி வணங்கினான். 
" சரி... உனக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். இனிமேல் இந்த பைசாந்தியத்தியத்தின் அனைத்து பிரஜைகளும் அரசாங்கத்தில் செனட்டர் முதற்கொண்டு 
பைசாந்திய பேரரசின் அடிமட்ட பிரஜைவரை பேரரசரையும் பேரரசியையும் பார்த்த மாத்திரத்தில் தலை தரையில்படும்படியான வணக்கம் செலுத்தவேண்டுமென அனைவருக்கும்
தெரியப்படுத்து" என்று ஆணையிட்டாள் தியோடொரா. ஆணை உடனே அமுல்படுத்தப்பட்டது.         ஜஸ்டீனியனை பேரரசாக ஏற்றுக்கொண்ட மக்களுக்கு தியோடொராவை பேரரசியாக 
ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. ஏனென்றால் அவள் ஒரு அரச குலத்திலிருந்து வரவில்லை அல்லவா. இதனால் இந்த பைசாந்தியத்தின் அனைத்து மக்களும் பேரரசியான தியோடொராவின் மட்டில் எரிச்சல் பட்டனர். நேற்று வந்தவளுக்கு இத்தனை வாழ்வா என பொரிந்து தள்ளி விட்டனர். 
    ஆனாலும் என்ன செய்வது அவள் இப்போது பைசாந்திய பேரரசின் பேரரசி அல்லவா. இப்படி ஒரு எண்ணம் வந்ததும் ஒரு இளவரசன் மிகவும் எரிச்சல் பட்டான். அவன் தான் ஹிப்பாட்டியுஸ். இவன் பைசாந்தியத்தின் முன்னாள் பேரரசர் அனஸ்த்தாசியுஸ் 1 என்பவன் வழிவந்தவன். தன் பைசாந்தியம் தன் கையைவிட்டுப்போய் இப்போது  ஜஸ்டீனியனின் கைக்கு வந்தது பற்றி மிகுந்த வயிற்றெரிச்சல் கொண்டிருந்தான். தக்க சமயம் பார்த்து தன் ராஜ்ஜியத்தை கைப்பற்ற சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தான். 
     அதற்கான ஒரு வேளையும் வந்தது.
   பேரரசி தியோடொராவை மக்களும் அரசகுல பிரஜைகளும் பைசாந்திய பேரரசின் பேரரசியாக ஏற்றுக்கொள்ளாததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அந்தக்கால கிறிஸ்த்துவ 
மக்களிடையே இருவிதமான பிரிவினர் இருந்தனர். இவர்கள் இருவர்களுக்கிடையே தீராப்பிரச்சனை ஒன்று இருந்தது. 
      ஒரு பிரிவினர் monophysite christians என்றும் மற்றவர்  chaledonian christians என்று அழைக்கப்பட்டனர்.
    monophysite chiristians எனபட்டவர்கள் யேசுநாதர் உயிர்த்து பரலோகம் சென்றுவிட்ட பிறகு அவருக்கு தெய்வாம்சம் மட்டுமே உண்டு என்றும் அங்கு பரலோகத்தில் அவர் கடவுளாகவே ஒரே சுபாவத்தில் மட்டுமே இருகின்றார் என்றும் பரலோகத்தில் அவருக்கு மனித சுபாவம் இல்லை என்பதும் அவர்களது கருத்தாக இருந்தது. 
    chaledonian christians எனப்பட்டவர்கள் யேசுநாதர் உயிர்த்து பரலோகம் சென்றுவிட்ட பிறகு அங்கே அவர் கடவுளாகவும் இருகின்றா. மனிதனாகவும் இருகின்றார். யேசுநாதருக்கு
பரலோகத்திலும் பூலோகத்திலும் முழு கடவுளாகவும் முழு மனிதராகவும் இருவித சுபாவங்களை கொண்டிருகின்றார் என்பதை நம்புவர்கள். இப்படியாக அக்கால திருச்சபை
யேசுநாதரின் ஒற்றை சுபாவ திருச்சபை எனவும் யேசுநாதரின் இரட்டை சுபாவ திருச்சபை எனவும் பிரிந்து அவர்களுக்குள் என்றுமே தீராத பிரச்சனையாக இன்றளவும் இருகின்றது.
      துரதிர்ஸ்ட்டமாக பேரரசி தியோடொரா யேசுநாதரின் ஒற்றை சுபாவ திருச்சபையை சேர்ந்தவள். காரணம் அவள் பிழைப்புதேடி அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்தபோது
ஹெஸிபொலோஸ் என்னும் சிரியா தேசத்தை சேர்ந்த ஒரு சீமானுடன் வாழ்ந்துவந்தாள். அப்போது அவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. அவன் தியோடொராவுடன் ஒரு 
நான்கு வருடம் வாழ்ந்துவிட்டு அவளை கைவிட்டு சென்றுவிட்டான். தன்னிலை உணர்ந்த தியோடொரா அங்கே யேசுநாதருக்கு ஊழியம் செய்துவந்த ஒரு குழுவினரால் மனம்
திருந்தப்பெற்று ஒரு கிறிஸ்த்துவளாக மாறினாள். அதன்பிறகு அவள் தான் வாழ்ந்துவந்த தீய தவறான அனைத்து நடவடிக்கைகளையும் விட்டுவிட்டு மீண்டும் பிழைப்புதேடி 
தன் தாய் நாடான பைசாந்தியத்திற்கு [ இன்றைய துருக்கி] வந்து நெசவு தொழில் செய்துவந்து தன் வாழ்க்கையை ஓட்டினாள். 
   அப்போதுதான் அவளை இளவரசராக இருந்த ஜஸ்டீனியனன் சந்தித்து காதல் கொண்டார். அப்போது தியோடொரா அனுசரித்துவந்த திருச்சபையானது யேசுநாதரின் ஒற்றை சுபாவ கொள்கையுடைய திருச்சபை. ஆனால் மன்னர்  ஜஸ்டீனியன் பழகிவந்தது யேசுநாதரின் இரட்டை சுபாவ கொள்கை கொண்ட திருச்சபை. ஆனால் மன்னர் ஜஸ்டீனியன் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஆனால் அவர் தேசத்திலிருந்த மக்கள் இதைப்பற்றி மிகவும் கவலைபட்டனர்.
    மக்களின் இந்த மனநிலையை நன்றாக புறிந்துகொண்டான் ஹிப்பாடியுஸ். அந்த காலங்களில் சாகச விளையாட்டுகள் மக்களின் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன. 
அதில் விளையாடுபவர்கள் இரு குழுக்களாக பிரிந்துகொண்டு தங்களை அடையாளம் காணும்படிக்கு விதவிதமான சிகை அலங்காரங்களாலும் நீலம் மற்றும் பச்சை நிற சீருடைகளை  அணிந்துகொண்டும் வெறிபிடித்தார்போல் ஒருவரை ஒருவர் சாகசம் என்னும் பெயரில் தாக்கிக்கொள்வர். அத்தனாசியுஸ் மன்னரின் வழிவந்தவறான ஹிப்பாட்யுஸ் தான் இழந்த  பைசாந்தியத்த்தை மீண்டும் கைபற்றும்பொருட்டு இந்த நீல மற்றும் பச்சை அணி வீரர்களை ஆயுதம் ஏந்தச்செய்து ரகசியமாக கலகத்தை ஏற்பாடு செய்திருந்தான். 
    திடீரென ஒருநாள் மாலை கலகம் ஏற்பட்டது. விளையாட்டு என்று ஆரம்பித்த கலகம் ஒருபெரும் கலவரமாக மாறி அரங்கத்தை விட்டு வெளியே வந்து ஊர் முழுக்க திட்டமிட்டபடி பெருமளவில்  கொள்ளை, கொலை, தீவைப்பு என பெரும் அபாயமான கலவரமாக மாறியது. 
இந்த தீ வைப்பு கலவரத்தில் அப்போதிருந்த பனிரெண்டு அப்போஸ்த்தலர்களின் தேவாலயம் முழுவதும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த தேவாலயமும் பெரும் 
பொருட்ச்செலவில் மன்னன் ஜஸ்டீனியனினால் கட்டப்பட்டது.
     அது யேசுநாதருடைய பனினெரெண்டு அப்போஸ்த்தலர்களின் தேவாலயம் எனவும் பெயர் பெற்றிருந்தது. யேசுநாதரின் அந்த பனிரெண்டு அப்போஸ்த்தலர்களின் அருளிக்கங்களும் மிகவும் ஆடம்பரமாக எடுத்துவரப்பட்டு இங்கே மிகவும் பூச்சிதமாக வைத்து பெருமையாக கொண்டாடப்பட்டிருந்தது.  மேலும் அக்காலத்தில் இந்த கான்ஸ்டாண்ட்டி நேபிள்ஸ் தான் கிழக்கு ரோமை என பெயர் பெற்றிருந்ததால் ஐரோப்பாவில் பெயர் பெற்ற புனிதர்கள் பலரின் அருளிக்கங்களும் இங்கே பூச்சிதமாக கொண்டுவந்து மிகவும் மரியாதையாக வைக்கப்பட்டிருந்தன.
        ஆனால் இந்த தீவைப்புக்கலவரத்தினால் இந்த தேவாலயத்தியோலிருந்த பெரும் செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த தேவாலயத்திலிருந்த தங்க டோம் உருக்கப்பட்டு  அதுவும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அந்த பன்னிரெண்டு அப்போஸ்த்தலர்களின் தேவாலயம் முற்றிலும் கொள்ளையடிக்கப்பட்டதினால் அந்த தேவாலயம் பெரும் இடிபாடுகளாய் மாறிப்போனது. இன்று வரை அது அப்படியே இருகின்றது. இப்போதும் வெறும் தூண்களாகத்தான் நிற்கின்றது. பைசாந்தியர்களின் வரலாற்றில் இந்த கலவரம் நிகா கலகம் என பெயர் பெற்றது.
       மன்னர் ஜஸ்டீனியனுக்கும் தியோடாராவுக்கும் இது பெருத்த அவமானமாக போய்விட்டது. கலவரத்தை அடக்கமுடியவில்லை என மன்னனே ஒத்துக்கொள்ள வேண்டியதாகி
விட்டது. ஆனாலும் பேரரசி தியோடொரா இதனை ஒத்துக்கொள்ளவில்லை. 
     தளபதி பெலிசாரியுஸ் மன்னனிடம் வந்து தலை தரையில்படும்படி வணங்கி, " அரசே, தாங்களும் பேரரசியும் தலை நகரைவிட்டு ஓடிப்போய்விடுங்கள். உயிர் தப்பும் வழி 
திறந்துவைத்திருகிறேன். தயவுசெய்து என் பேச்சை கேளுங்கள். அவசரத்துக்கு பாவமில்லை. உங்களையும் அரசியையும் காப்பது என்கடமை அல்லவா. தயவு செய்து உடனே 
புறப்படுங்கள் " என்றான். 
    ஆனால் பேரரசி தியோடரா ஒப்புக்கொள்ளவில்லை.
" பெலிசாரியுஸ்...நீ எல்லாம் ஒரு வீரத்தளபதி என்று சொல்ல உனக்கு வெட்க்கமாக இல்லை..நாட்டைவிட்டு ஓடுவது ஒரு நல்ல மன்னனுக்கு அழகல்ல. நல்ல மன்னன் எனப்படுபவன் தன் நாட்டு மக்களுக்காக தானே போரில் ஈடுபட்டு வெற்றிகொள்ளும் வழியை பார்க்க வேண்டும். போரில் வெற்றி அல்லது வீர மரணம். இதுவே ஒரு நல்ல மன்னனுக்கு அடையாளம். அதைவிடுத்து கோழையாக ஓடச்சொல்லுகின்றாய். இப்போது நான் சொல்கிறேன் கேள். 
    நம் வீரர்களை திடப்படுத்து. நம் மன்னரின் ராஜரீக ஆடை செம்பழுப்பு. இதற்கு முன் நீலமும் 
நிற்கப்போவதில்லை. பச்சையையும் நிற்கப்போவதில்லை. போ... உன்னோடு நானும் வருகிறேன்...உன் எதிரில் தென்படும் எந்த கலஹக்காரனையும் கண்டம் துண்டமாக
வெட்டிப்போடு. யாருக்கும் பச்சாதாபம் காட்டாதே. போ" என்றாள். 
    அவ்வளவு தான் .. மஹாராணியின் வீரப்பேச்சால் கவரப்பட்ட அரசாங்கத்தின் விசுவாச ராணுவ வீரர்கள் ஆர்த்தெழுந்தனர். எதிரிகள் சுமார் முப்பதாயிரம் பேர் என்று ஒரு கணக்கு சொல்கின்றது. அனைவரும் கொல்லப்பட்டனர். கலகம் வெகு விரைவில் அடக்கப்பட்டது. இந்த கலகத்துக்கு  காரணமான ஹிபாடியுஸ் கண்டந்துண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டான். இந்த கலவரத்தை அடக்கிய மஹாராணி தியோடாராவை நாடே பிறகு புகழ்ந்தது.
       தியோடொரா மேற்கொண்ட சில அரசியல் முன்னேற்றங்கள் கான்ஸ்டாண்ட்டி நேபில்ஸ் நாடு முன்னேற பெரிதும் காரணமானது. நாட்டின் பாதுகாப்பிற்காக பல கோட்டைகள், 
அரண்மனைகள், பாலங்கள் நீர்த்தேக்கங்கள் அனைத்தும் வெகு விரைவில் கட்டப்பட்டன. வாணிப முன்னேற்றதிற்காக சாலைகளும் கடல் வழித்தடங்களும் விரிவுபடுத்தப்பட்டன.
எகிப்த்தில் அலெக்ஸாண்டிரியா துவங்கி தூரக்கிழக்கே சைனா வரை பட்டுச்சாலை எனப்படும் silk route இந்த கான்ஸ்டான்டி நேபில்ஸ் வழியே சென்றதால் வியாபாரம் பெருத்து பல 
கப்பல்கப்பலாய் காசை அள்ளிக்கொட்டியது. அன்றைய பைசாந்தியம் எனப்பட்ட இன்றைய துருக்கி செல்வ செழிப்பில் தழைத்தது.
      பேரரசி தியோடொரா தன் நாட்டில் கொண்டுவந்த அரசியல் சட்டங்கள் இன்றளவும் மிகவும் புகழ்ந்து பேசப்படுகின்றன. பேரரசி தியோடொராவின் வாழ்வில் ஏற்பட்ட பல கசப்பான 
அனுபவங்கள் தன்னைப்போல் பிற பெண்களுக்கும் ஏற்படக்கூடாது என விரும்பினாள். எனவே கொள்ளையைவிட கற்பழிப்பு கொடுமைகளுக்கு மிகவும் கடுமையாக தண்டனை
வழங்கினாள். பெற்ற தகப்பனோ அல்லது கணவனோ தன் குடும்ப பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினால் கடுமையான தண்டனையும் சிசுக்கொலைகளுக்கு கடுமையான 
தண்டனையும் வழங்கினாள். ஆதரவற்ற பெண்களுக்கும் கைவிடப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசாங்கத்தில் உதவி வழங்கினாள். இதனால் பேரரசி தியோடொரா 
மிக விரைவிலேயே பைசாந்திய நாட்டின் மஹாராணியாக அனைத்து பெண் பிரஜைகளாலும் மதிப்புமிக்க அரசியாக விளங்கினாள். 
       தன் மனைவிக்கு கிடைத்த மிகப்பிரமாண்டமான மதிப்பையும் மரியாதையையும் கண்ட பேரரசர் ஜஸ்டீனியன் அவளை மிகவும் மகிழ்ந்து கொண்டாடினான். ஒருநாள் தன் 
அந்தப்புரத்தில் தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தான்....
" அன்பே தியோடொரா..இந்த உலகத்திலேயே மிகப்பெரிதானது எது?"
"ஏன்? எவ்வளவோ காரியங்கள் பெரிதானவைகளாக இருகின்றன...காடுகள், மலைகள், ஆறுகள், கடல்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்."
" நான் கேட்ப்பது...இவை எல்லாவற்றிலும் பெரிதானது"
" ஐய்யா கோமகனாறே... நான் சாலமோன் ஞானி அல்ல...நீங்களே சொல்லிவிடுங்கள்"
" சரியாகத்தான் சொல்லிவிட்டாய்.. இந்த உலகத்திலேயே பெரிதானது ஞானம்."
" இந்த உலகம் என்றில்லாமல் இந்த அகில உலகம்... பரலோகம்..பூலோகம்.. அனைத்திலும் ஞானமே பெரிதானதாகும். அப்படித்தானே. அதற்கென்ன இப்போது"
" இந்த உலகினருக்கு இருக்கும் ஞானத்தைவிட கடவுளுக்கு இருக்கும் ஞானம் எப்பேற்பட்டதாக இருக்கும் ... அதைப்பறி நீ என்றைக்காவது நினைத்துப்பார்த்திருகின்றாயா?"
" அத்தான்...உங்களை நான் இப்போது நனறாக புறிந்துகொண்டுவிட்டேன். நாடு இப்போடு பொருளாதாரத்தில் நன்றாக முன்னேறிவிட்டது... நாடும் இப்போது அமைதியாக 
இருகின்றது. இப்போது உங்கள் மனதில் உள்ளபடி ஒரு பெரிய தேவாலயம் கட்டும் எண்ணம் நன்றாக வேரூன்றிட்டது . அப்படித்தானே...?"
" சரியாக சொல்லிவிடாய் தியோடொரா.. என் மனதில் உள்ளவற்றை நீ எப்படி மிகச்சரியாக கணித்தாய்?"
" நல்ல மனைவி கணவனின் எண்ன ஓட்டங்களை மிக நனறாக அறிவாள். மேலும் இதயத்தில் உள்ளவற்றைதானே வாய் பேசும். நீங்கள் ஆண்டவனுக்கு உயர்ந்ததோர் தேவாலயம் 
கட்டப்போகின்றீர்கள் என்றால் அதைக்கண்டு சந்தோஷப்படும் முதல் பெண் நானாகத்தான் இருப்பேன்.. அதற்கு இந்த தியோடொரா ஒருபோதும் தடையாக இருக்க மாட்டாள்."
" ஆமாம் தியோடொரா... எல்லாம்வல்ல நம் தேவனாகிய ஆண்டவருக்கு நான் கட்ட விரும்பும் தேவாலயம் அவரது ஞானத்தை பறை சாற்றுவதுபோல அனைத்து வித்தத்திலும் 
பிரம்மாண்டம் வெளிப்பட வேண்டும். அந்த தேவாலயத்தை பார்த்தமாத்திரத்திலேயே அதன் பிரமாண்டம் தெரிய வேண்டும். அதனால்தான் அந்த தேவலயத்திற்கு ஆண்டவனின் 
ஞானம் என்னும் பெயரையே வைக்கவும் விரும்புகிறேன். ."
   " அடேங்கப்பா... ஆலயம் கட்டக்கூட இல்லை.. அதற்குள் அதற்கு பெயர் சூட்டு விழாவும் நடைபெற்றுவிட்டது போல் இருகின்றதே. வரைபடம் எல்லாம் தயாரா?"
    " எல்லாம் என் மனதில் இருகின்றது. இதற்காக கிரேக்க நாட்டின் மில்லித்தஸ் நகரைச்சேர்ந்த இஸிதோர் என்னும் கட்டிடக்கலை நிபுனரையும் கணித மேதை அந்திமெய்யூவையும்
அழைத்திருகின்றேன். இவர்கள் இருவரும் என் மனதில் உள்ளபடி ஆண்டவனின் அழகிய தேவாலயத்தை வரைந்து கட்டிக்கொடுப்பார்கள் என நான் நம்புகிறேன்."
   "என் எஜமானே..உங்கள் காரியம் கைகூட எல்லாம் வல்ல நம் தேவனாகிய யேசு ஆண்டவர் அருள்புரிவாராக. உங்கள் மனதில் உள்ள தேவாலயத்தை அவர்கள் எப்படி 
புறிந்துகொள்வார்கள்?."
    " நான் அவர்களிடம் கூடுமானவரைவிளக்கி காண்பித்திருகின்றேன். பிறகு கடவுள் செயல்."
" என் எஜமானே உங்கள் தேவாலயம் இந்த உலகத்திலேயே இதுவரை இல்லாதபடி மிகப்பிரம்மாண்டமான தேவாலயமாக இருக்க வேண்டும். மிகப்பெரிய கதவுகள்,
மிகப்பெரிய அறைகள், மஹால்கள்.. மேல் விதானம் முழுக்க வட்டங்களும் அதற்குள்ளாக விசித்திர கணித விதிப்படி வரைந்த வளைவுகள், பின்னல்கள், கெரூபீம் எனப்படும் 
சம்மனசுக்கள் என்று பார்க்கவே மிகவும் அசத்தலாக இருக்கும். அப்படித்தானே அத்தான்."
    " ஆமாம்... ஆமாம்... என் உள்ளத்தில் உள்ளவைகளை நீ அப்படியே படம் பிடித்து காண்பித்துவிட்டாய். உன்னால் என் மனத்தில் உள்ளவைகளை எப்படி பார்க்க முடிகிறது என்று 
நான் அடிக்கடி யோசித்துப்பார்ப்பதுண்டு. உண்மையில் நீ கெட்டிக்காரிதான். நான் அந்த விதத்தில் மிகவும் அதிர்ஸ்ட்டக்காரன் தான். அதுசரி... அந்த கணித மேதையும், 
கட்டிடக்கலை நிபுணரும் எப்போது வருவார்களாம்?"
    " அத்தான்... என்னை மன்னிக்க வேண்டும். அவர்கள் நேற்றே நம் அரண்மனைக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் கொடுத்த வரைபடம் இப்போது என்னிடம் இருகின்றது. 
பார்கின்றீர்களா?"
   " அடிக்கள்ளி... அதைப்பார்த்துவிட்டுத்தான் என்னிடம் இப்படி வர்ணித்தாய் போலும். எங்கே கொண்டுவா அந்த வரைபடத்தை"
      தான் கட்டப்போகும் அந்த தேவாலயத்தின் வரைபடத்தை பார்த்த மாத்திரத்தில் மன்னன் ஜஸ்டீனியன் மிகவும் அசந்துபோனான். அந்த வரைபடம் அவன் மனத்தில் எழும்பிய 
தேவாலயத்தின் மாதிரியை போலவே அப்படியே அச்சு அசலாய் வரையப்பட்டிருந்தது.
     அடுத்த நாள் கட்டிடக்கலை நிபுணர் இசிதோரும் கணித மேதை அந்திமெய்யுவும் மன்னர் ஜஸ்டீனியனை அரண்மனையில் சந்தித்தார்கள். மன்னன் ஜஸ்டீனியன் அந்த இரு
நிபுணர்களையும் நன்றாக உபசரித்து அவர்களின் வரைபடத்தை வாயார புகழ்ந்தான்.
      " அரசே.. உண்மையில் உங்கள் புகழ்ச்சிக்கு நாங்கள் தகுதியே அல்ல. இதற்கு உறியவர் பேரரசி தியோடொராதான். இந்த கட்டிட அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று 
எங்களுக்கு விளக்கியவரும் அவர்தான். இதில் உள்ள முகப்பு, பிரமாண்டமான கதவமைப்பு, மேல் கும்பம் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்பன அவர் மனதிலும் தங்கள் 
மனத்திலும் எப்படி இருக்கின்றது என்பனவற்றை எங்களுக்கு தகுந்த வரைபடம் மூலம் விளக்கியவரும் அவரே. இந்த கட்டிட அமைப்பு இதுவரை யார் மனதிலும் தோன்றாத ஒரு 
அமைப்பு. இது கிரேக்கர்களின் கட்டிட அமைப்பு போலும் இல்லை. ரோமர்களின் கட்டிட அமைப்பு போலும் இல்லை. பைசாந்திய கட்டிட அமைப்பு போன்றும் இல்லை. இத்தகைய ஒரு
கட்டிட அமைப்பு தேவலோகத்தை சேர்ந்த யாராவது ஒரு சிற்பிக்கு மட்டுமே சாத்தியமாகும். இந்த கட்டிட அமைப்பு பூளோகமும்,பெளதீகமும், கணிதமும் சேர்ந்து அமைந்தாலால் ஒழிய
இது சாத்தியப்படாது. உண்மையில் இக்கட்டிடம் நல்ல விதமாக அமைந்தால் அது கடவுள் கிருபையே அன்றி வேறல்ல. இதைக்கட்ட மிகுந்த பொருட்செலவு தேவைப்படும். 
ஏறாளமானபேர் சேர்ந்தாற்போல் ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டும். தகுதியானவர்களை தேர்வு செய்து வேலைக்கு அமர்த்த வேண்டும்." .
      " ஐய்யா இசிதோரே... இந்த மாதிரி வேலை எல்லாம் தயவு செய்து என் தலைமேல் சுமத்தாதேயும். அவை உம் வேலை. தேவையான ஆட்க்களையும் தேவையான பொருட்க்களையும்  தெரிவு செய்ய வேண்டியது உம் பொருப்பும் அந்திமெய்யுவின் பொருப்பும். எந்தெந்த நாட்டில் என்னென்ன வினோதமான பொருட்க்கள் இருகின்றதோ, என்னென்ன நாட்டிலிருந்து  என்னென்ன பொருட்க்கள் அவசியமோ அவற்றை நீரே தெரிவு செய்யும். நீரே கொண்டு வாரும். அதற்கு நான் என்ன செய்யவேண்டுமோ அவற்றை நாம் தவறாது செய்வோம். அது பற்றி நீவிர் இருவரும் என்னை அணுக எப்போதும் உமக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. 
     இந்த தேவாலயம் எங்கே அமைய வேண்டுமென்பதையும் நீர் தெரிவு செய்யும். அது நம்
காண்ஸ்டாண்டி நேபிள்ஸ் [ இன்றைய துருக்கி. அதன் பழைய தலை நகர் இஸ்தான்புல்] நகரிலிருந்து வெகு தொலைவில் செல்ல நான் விரும்பவில்லை. என் தந்தையார் கட்டுவித்த 
யேசுவின் பனிரெண்டு அப்போஸ்த்தலர்கள் கோவிலின் அருகிலேயே இருந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்."
   " அரசே...நீர் கட்ட விரும்பும் தேவாலயம் உம் தந்தையார் கட்டுவித்த யேசுவின் பனிரெண்டு அப்போஸ்த்தலர்களின் தேவாலயத்தின் அருகிலேயே அமைக்கவே நாங்களும் 
விரும்புகின்றோம். காரணம் இந்த காண்ஸ்டாண்ட்டி நேபிள்ஸ் நகரம் அமைந்துள்ள இடம் இந்த உலகத்தின் பெளதீகத்தில் ஒரு விசித்திரமான இடமாகும். இந்த இடமே ஆசியா
கண்டத்தையும் ஐரோப்பா கண்டத்தையும் பிரிக்கின்றது. இந்த இரண்டு கண்டங்களும் ஒரு சிறிய போஸ்போருஸ் என்னும் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டாலும் இந்த இரு கண்டங்களின் 
அடித்தட்டுகளும் மிகவும் கடினமான பாறைப்படிவங்களாள் ஆனதால் இந்த இடத்தில் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஒரு தேவாலயம் கட்ட மிகவும் ஏற்றமான இடமாகும்.
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இந்த உலகின் கடைசிக்காலம் வரும் வரை இந்த தேவாலயம் நிலைத்து இருக்கும். இந்த தேவாலயம் இருக்கும் வரை தங்கள் பெயரும்
நிலைத்திருக்கும்." என்றார் இசிதோர் என்னும் கட்டிடக்கலை நிபுணர்.
   " ஐயா... இசிதோர்...நீங்கள் என்னை அளவுக்கதிகமாக புகழ்கிறீர்கள்... சரி இருக்கட்டும் .இந்த தேவாலயத்தை எப்படிகட்டுவதாக உத்தேசம் ?"
     " அரசே..இந்தக்கட்டிடத்தின் அடித்தளம் மிகவும் சக்த்தி உடைத்தானதாக இருக்கும். இந்த கட்டிடம் பல அடுக்குகளாக கட்டப்படுவதாலும் அதன்மீது ஒரு பெரும் அறைவட்ட கும்பம் 
கவிழ்த்து வைக்கப்படுவதாலும் அதன் மொத்த பாரத்தையும் தாங்க தகுந்த இடங்களில் தூண்கள் அமைப்பதும் அவசியம். இந்த தூண்களை நாம் இதற்காக வடிவமைக்க
போவதில்லை. அவை ஏற்கனவே உபயோகத்தில் உள்ள இடத்திலிருந்து கொண்டு வரப்படும். இதனால் அவற்றை வடிவமைக்கும் காலமும் சிலவும் மிச்சப்படும்." 
        " அப்படியானால் ரொம்பவும் வசதியாகப்போய்விட்டது. கையில் வெண்னையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்? அந்த தூண்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன."
     " அரசே தங்களுக்குத்தெரியாததல்ல. பொனீஷியாவில் ( இன்றைய லெபனான்) ரோமர்கள் கட்டிய கலைக்கோயில் ஒன்று உள்ளது. அது பால்பெக் தேவாலயம் என்றும் 
அழைக்கப்படுகிறது. ரோமர்கள் அக்காலத்தில் வழிபட்ட சூரினார் கலைக்கோயில் அது. அதற்கு 9000 ஆண்டு பாரம்பரியம் உண்டு. கிரேக்கர்களின் கடவுளர்களான சூரியன் வீனஸ் 
மற்றும் பால்பெக் என்னும் தெய்வங்களுக்காக எடுப்பிக்கப்பட்ட மிகச்சிறந்த கல் கோயில் என்றும் கலைக்கோயில் என்றும் அழைக்கப்படும். ஆனால் கிறிஸ்த்துவ மதம் மேற்கிலும்
கிழக்கிலும், வடக்கிலும்.தெற்கிலும் பரவ ஆரம்பித்த பிறகு இந்த பால்பெக் தேவாலயம் தன் மகிமை இழந்தது. யாரும் இக்கோயிலுக்கு வராமல போகவே இந்த கோயில் 
பாழ்பட்டுப்போய்விட்டது. அக்காலத்திலேயே இந்த கலைக்கோயில் முற்றுப்பெறாமலேயே போய்விட்டதால் பல ஒற்றைகல் தூண்கள் பல இன்றளவும் யாரும் உபயோகிக்காமலேயே 
உள்ளது. அவை ஒவ்வொன்றும் சுமார் 1000 டன் எடை இருக்கும். என்ன காரணத்தாலேயோ அது உபயோகிக்க முடியாமலேயே போய்விட்டதால் நமக்கு தேவையானால் அவற்றை
உபயோகித்துக்கொள்ளலாம். இந்த பொனீஷியாவிலுள்ல பால்பெக் கலைக்கோயில் இப்போதும் நம்முடைய ஆளுகைக்கு கீழே அடங்கி கிடக்கின்றபடியால் தங்களின் ஒரு வார்த்தை
போதும். நானே அவற்றை பெயர்த்து இங்கே கொண்டு வந்துவிடுவேன்."
     " சரி... அந்தக்கோயிலின் தூண்கள் நம் கட்டிட வரைபடத்திற்கு தகுந்தாற்போல் இருக்குமா?"
" அரசே... இதுகூடத்தெரியாமலா நான் இருப்பேன். அந்தக்கோயிலின் அனைத்து விபரங்களையும் நான் அறிவேன்.அந்த தூண்கள் ஒவ்வொன்றும் 60 அடி உயரம் உடையவை.
நான் அவற்றை உபயோகித்துக்கொள்ளும்படியே வரைபடம் தயாரித்திருகின்றேன். அப்படியும் இல்லை என்றால் அதற்குத்தகுந்தாற்போல் அஸ்த்திவாரத்தை அமைத்துக்கொண்டால் 
போகிறது. என்னைபொருத்தவரையில் இது ஒரு பிரச்சனையே இல்லை."
       " சரி மேலே அறைக்கோள வடிவில் கும்பம் எப்படி அமைக்கப்போகின்றீர்கள்?. என் தந்தையார் கட்டியதுபோல மரத்தால் விட்டம் ஏற்படுத்தி அதன்மீது அறைக்கோள கும்பம் அமைக்க நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். இப்படியான ஒரு அமைப்பினால் செய்தபடியால்தான் நிகா கலவரத்தில் அந்த பனிரெண்டு அப்போஸ்த்தலர்கள் தேவாலயம் தீக்கு இறையாகிப்போயிற்று. வேறு உபாயம் செய்து அந்த அறைக்கொள கும்பத்தை அமையுங்கள். இந்த தேவாலயகட்டு மானத்தில் எங்குமே மர வேலைபாடுகள் இல்லாதபடி கவனமாக  இருங்கள். எந்த விதத்திலும் நான் கட்டும் தேவாலயம் தீயினால் அழிவுறாதபடி இருக்க வேண்டும்."
" அரசே... மேலே அமைக்கப்படும் அறைக்கோளவடிவ கும்பம் மரத்தினால் முட்டுகொடுத்து நான் அமைக்கப்போவதில்லை. மாறாக வட்டவடிவ இரும்பு வளையங்களாள் 
இணைக்கப்பட்ட புதிய முறையில் செங்கற்களை உபயோகித்து நான் அமைப்பேன். ஆக இடமும் தெரிவு செய்து, அஸ்த்திவாரமும் போடப்பட்டு தூண்கள் அனைத்தும் தயார் 
நிலையில் கொண்டுவரப்பட்டு விட்டால் கட்டிடத்தை மளமளவென நான் கட்டிவிடுவேன். அதாவது ஒவ்வொன்றையும் எடுத்து எடுத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்குவது போல." 
என்று அந்த ஒட்டுமொத்த கட்டிடத்தின் மாதிரி உருவத்தை பிரித்து மீண்டும் அமைத்துக்காட்டினான் அந்த இசிதோர் என்னும் கட்டிடக்கலை நிபுணன்.
       அந்த தேவாலயத்தின் மாதிரி உருவத்தையும் அதை பிரித்து மீண்டும் அடுக்கிக்காட்டிய விதத்தையும் கண்ட மன்னன் ஜஸ்டீனியன் அப்படியே அசந்து போனான்.
    " அரசே ... தேவாலயம் எங்கே கட்ட நீங்கள் விரும்புகிறீர்கள்.?"
" இசிதோர்.. இதோ பாழ்பட்டுக்கிடக்கும் இந்த பனிரெண்டு அப்போஸ்த்தலர்களின் தேவாலயத்தின் அருகிலேயே நான் என் தேவாலயத்தை கட்ட விரும்புகிறேன். மேலும் என் 
அரண்மனையையும் இந்த தேவாலயத்தின் அருகிலேயே அமைக்கவும் விரும்புகிறேன். காலையில் எழுந்து யாருடைய தொந்திரவும் இல்லாமல் அரண்மனையிலிருந்து நானும் என் 
தியோடொராவும் நேரே தேவாலயத்திற்கு செல்லும்படியாக ஒரு வாயிலும் எனக்காக பிரத்தியோகமாக அமையுங்கள். ஒருகாலத்தில் நானும் இறந்து என் தியோடொராவும் இறந்து 
எங்களுக்கு வாரிசுகளும் இருக்குமானல் அனைவரும் இறந்த பிறகு இந்த தேவாலயத்திலேயே புதைக்கப்படவே நான் விரும்புகிறேன். இதற்கு ஆண்டவன் எனக்கு அருள வேண்டும்."
     " அரசே.. எப்போதோ நடக்கப்போகும் அந்த காரியங்களுக்காக இப்போதே ஏன் நீங்கள் ஆசைப்பட வேண்டும். ஒரு நல்ல நாள் பார்த்து பூமி பூஜை போட வேண்டும்."
" அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?"
   " அரசே இந்த தேவாலயம் மிகவும் விஷேஷமானதல்லவா. எனவே இதற்காக விஷேஷமான விதத்தில் புனித நீர் கொண்டுவரப்பட வேண்டும். வேதகாலத்தில் பிதாப்பிதா அபிரகாமின்
இரண்டாம் மனைவி ஆகாருக்கு ஆண்டவன் ஏற்படுத்திக்கொடுத்த அந்த ஜம்ஜம் நீறூற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு இந்த தேவாலய அஸ்த்திவாரம் 
போடப்படவேண்டும். அந்த ஜம்ஜம் நீரூற்றிலிருந்து எழுப்படும் இந்த தேவாலயத்தில் பல அதிசயங்கள் நடக்கும் என என் உள் மனது சொல்லுகின்றது. அதற்கு ஆவன செய்யுங்கள்
என் எஜமானே." என்றான் இசிதோர்.
     இசிதோர் என்னும் அந்த கட்டிடக்கலைஞன் கேட்டுக்கொண்ட்படியே ஆயிரம் ஒட்டகங்களில் தோல்பைகளில் நிரப்ப பட்ட ஜம்ஜம் என்னும் புனித நீர் கொண்டுவரப்பட்டு தேவாலய அஸ்த்திவாரம் தோண்டபட்டது. லெபனானிலிருந்து அந்த பால்பெக் எனப்படும் சூரியனார் தேவாலயத்திலிருந்த பல தூண்கள் பெயர்த்து அலாக்காக தூக்கி கப்பல்களில் 
ஏற்றப்பட்டு அன்றைய கான்ஸ்டாண்டி நேபிள்ஸ் [ இஸ்தான்புல் ] நகருக்கு கொண்டு வரப்பட்டன. பிரம்மாண்டமான ஹாகியா சோஃபியா எனப்படும் ஆண்டவனின் ஞானம் என்னும் பெயருடைய தேவாலயம் வானுயர எழும்பியது. 
          இதன் பிரம்மாண்டமான கட்டுமானத்தைப்பார்த்து யாருடைய கண்களும் பட்டுவிடக்கூடாதென மறைப்புக்கட்ட பட்டது. இருப்பினும் பொது மக்கள் யாரும் அந்த கட்டிட அமைப்பைப்பார்த்து ரசிக்கக்கூடாதென அதை உற்றுப்பார்க்கும் யாவரும் உடனே அங்கிருந்து அகற்றப்பட்டனர் என்கிறது ஒரு சரித்திரக்குறிப்பு.
      ஆனாலும் இந்த கட்டிடம் உடனே முடிவடைந்துவிடாதபடி இயற்கை சதி செய்தது. 
 பட்டு சாலை எனப்படும் சாலை வழியே சீனா தேசத்திலிருந்து வந்தது ஒருபெரும் துன்பம்.
வியாபாரிகளால் கொண்டுவரப்பட்டது பிளேக் என்னும் ஒரு கொடிய நோய். இந்த நோய் கண்டவர்கள் உடல் முழுவதும் கட்டிகள் தோன்றி அவை வெடித்து பரவும் ஒரு கொடிய வியாதி  அது. இந்த நோய் கண்டவர்கள் உடனே இறப்பதும் உறுதி. இதற்கு அக்காலத்தில் மருந்து கிடையாது. ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆவார்கள். இறந்தவர்களை புதைக்கவும்  யாரும் இல்லாதபடி மிகவும் வேகமாகப்பரவும் அவ்வியாதி. ஏறக்குறைய இவ்வியாதி ஐரோப்பா முழுவதும் பரவி ஆயிரக்கணக்கானோர்களை பலிவாங்கியது.
துருக்கி எனப்படும் அன்றைய பைசாந்திய பேரரசிலும் இவ்வியாதி வேகமாகப்பரவி பல்லாயிரக்காணக்கானோர்களை பலிவாங்கியதால் மன்னன் ஜஸ்டீனியன் கட்டிய தேவாலயம் 
பாதியிலேயே நின்றது. 
         மன்னன் ஜஸ்டீனியனுக்கும் இந்த பிளேக் நோய் தாக்கியது. அக்காலத்தில் இந்த நோய் புனித செபஸ்த்தியாரின் பாக்தி முயற்சியால் உடனடியாக தடுக்கப்பட்டது. இதனால் ஐயோப்பாவிலும் பைசாந்தியத்திலும் எகிப்த்திலும் செபஸ்த்தியாரின் பக்தி முயற்சி பரவியது.  மன்னன் ஜஸ்டீனியனும் புனித செபஸ்த்தியாரின் வேண்டுதலாலும் இந்த பிளேக் நோயினின்று பிழைத்துக்கொண்டார். ஆனாலும் அந்த நோயின் தாக்குதலால் ஏற்பட்ட காய்ச்சலால் பெரிதும் அவதியுற்றார். அந்த காய்ச்சலால் அவர்  ஏதேதோ பிதற்றினார். 
      அவர் வாயிலிருந்து சாந்த்தா சோபியா.. சாந்தா சோபியா... என்னும் வார்த்தை அடிக்கடி வந்துகொண்டிருந்தது. மேலும் பிஸ்த்திஸ், எல்பிஸ், அகாப்பே என்னும்  வார்த்தைகளும் வந்தன. ஆனால் பாவம் மன்னர் ஜஸ்டீனியனின் மனைவி தியோடோராவுக்குத்தான் ஒன்றுமே புறியவில்லை. ஆனாலும் தன் கணவரின் வாயிலிருந்து வந்த  ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக நினைவில் வைத்துக்கொண்டாள். பல நாள் கழித்து மன்னர் ஜஸ்டீனியனுக்கு காய்ச்சல் அகன்றது. மன்னர் முழு சுகம் பெற்றார் என்றாலும் ஒருவிதமான கடினமான தலை வலியால் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.
      ஒருநாள் தன் மனைவி தியோடொராவை அழைத்துக்கொண்டு தான் ஆசை ஆசையாக கட்டிவரும் தேவாலயத்தை காண விரும்பி அங்கே வந்தார். அதே நேரத்தில் அங்கே வந்தார்
கட்டிட கலை நிபுணர் இசிதோர். " அரசே தங்கள் வருகை நல் வரவாக வேண்டும். இனிமேல் நம் பைசாந்தியத்திற்கு நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது என்று நினைகிறேன். கடவுள் 
கிருபையில் தாங்கள் உயிர் பெற்று வந்து விட்டீர்கள். முதலில் அந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.. பாதியிலே நின்றுபோன இந்த தேவாலயம் மீண்டும் கட்ட ஆரம்பிக்க 
வேண்டும்." என்றார். 
      இதற்குள்ளாக மன்னர் ஜஸ்டீனியனும் அவர் மனைவி தியோடொராவும் இசிதோரும் அந்த தேவாலயத்தின் வடக்குபகுதியில் பாதியிலேயே நின்றுபோயிருந்த  ஒரு பெரும் தூணை நோக்கி வந்திருந்தனர். அப்போது அந்த தூணின்மீது யாரோ ஒரு துறவி சாய்ந்தபடி நின்றிருக்கக்கண்டனர். ஆனால் என்ன ஒரு ஆச்சரியம். இந்த மூன்று பேரும் 
பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த துறவி மறைந்துபோனார். இதைப்பற்றி இந்த மூன்றுபேரும் அதிசயித்துப்போனார்கள்.. 
      அப்போது தியோடோரா," அரசே, எனக்கு நனறாக நினைவுக்கு வருகின்றது.அந்த துறவி வேறு யாரும் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்துபோயிருந்த
புனித ஜியார்ஜ் தான் அவர். அவர் வாழும்போதே ஒரு மஹா புனிதராகவும் பெரும் வேத சாஸ்த்திரியுமாக விளங்கினார். அவர் உயிரோடிருக்கும்போதே பல அதிசயங்களையும் 
அற்புதங்களையும் செய்யும் வல்லமை பெற்றிருந்தார்.. அவர் இறந்தபின்பும் அவர் பல அற்புதங்களையும் செய்துவருவதாக நம்பப்படுகின்றது. வாருங்கள் அவர் நின்றுபோயிருந்த அந்த  இடத்தை போய் பார்க்கலாம்" என்றாள்.
      அந்த தூணில் புனித ஜார்ஜ் தன் கைகளை வைத்து சாய்ந்தபடி நின்றிருந்த இடத்தில் நீர்த்துளிகள் பெரும் வியர்வைபோல் நின்றுகொண்டிருந்தன. இசிதோர் ஆச்சர்யப்பட்டு
" இந்த நீர்த்துளிகள் எவ்வாறு இங்கே வந்தன. இதுவரை இந்த தூணிலோ அல்லது வேறு எந்த தூணிலும் இவ்வாறு நான் வேர்த்திருக்கக்காணவில்லையே?" என்றார். 
    ஆச்சரியப்படும்படி அந்த நீர்த்துளிகளை எவ்வளவு துடைத்தும் அவை மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் மட்டும் வந்துகொண்டே இருந்தன. மன்னர் ஜஸ்டீனியனும் ஆச்சரியப்பட்டு அந்த நீர்த்துளிகளை  தன் கைகளாள் துடைக்கவே உடனே அங்கே ஒரு புதுமை நடந்தது. மன்னர் ஜஸ்டீனியனுக்கு இருந்த தலைவலி உடனே நின்றது. 
  " ஆச்சரியம்... ஆச்சரியம்... புனித ஜார்ஜ் எனக்கு ஒரு புதுமை செய்துள்ளார். என் தலைவலி உடனே நின்றுவிட்டது" என கத்திப்பேசினார். இதை உறுதி செய்ய எண்ணிய தியோடொரா அந்த நீர்த்துளிகளைத்துடைக்கும்போது தன்மனதில் இவ்வாறு நினைத்துக்கொண்டாள். அன்று தன் கணவர் காய்ச்சலாய் இருக்கும்போது சாந்தா சோபியா,பிஸ்த்திஸ்,, எல்பிஸ், அகாப்பே என்னும் பெயர்களுக்குறியவர்  யாவர்?". உடனே அவள் அகக்கண்கள் திறக்கப்பட்டு அதில் புனித சோபியாவும் அவள் மூன்று பெண் பிள்ளைகளான பிஸ்த்திஸ், எல்பிஸ், மற்றும் அகாப்பே ஆகியோர் ஒருவினாடி தோன்றி மறைந்தார்கள். 
   உடனே தியோடொரா அகமகிழ்ந்து கூவினாள்." அரசே...இந்த தூண் உண்மையிலேயே புனித ஜார்ஜினால் புனிதமாக்கப்பட்டுள்ளது. எனக்கும் ஒரு அருங்குறி  தோன்றியது" என்றாள்.
    கட்டிடக்கலை நிபுணர் இசிதோர் அதிசயித்து இந்த நீர்த்துளிகளின் ரகசியத்தை சோதிக்க நினைத்து அந்த நீர்த்துளி தோன்றுமிடத்தில் ஒரு சிறிய துவாரம் செய்தார். உடனே அந்த 
நீர்துளி வருவது நின்றது. ஆனால் அதில் தன் கைவிரலை நுழைக்கும் யாவருக்கும் நீர்த்துளியின் குளிர்ச்சியை உணர்வதோடுமட்டுமல்லாது ஏதேனும் ஒருவிதத்தில் நலம் 
அடைகின்றனர். [ இந்த நிகழ்வு இன்றுவரை நடக்கிறது. இந்த தேவாலயத்தை தரிசிக்கவரும் யாவரும் இந்த துவாரத்தில் தங்கள் விரலைவிட்டு பார்க்காமல் செல்வதில்லை.இன்றும் 
இந்த இடம் சேதமடையாமல் இிருக்கும்பொருட்டு ஒரு வெண்கல தகடு போட்டு அடையாளமிட்டு வைத்திருகின்றார்கள் ]. மீண்டும் தேவாலயம் கட்டும் வேலைகள் ஆரம்பமாயின.
     ஒருநாள் இரவு தன் கணவனின் மார்பில் சாய்ந்துகொண்டு அரசி தியோடொரா பேச ஆரம்பித்தாள்.
" அத்தான் நான் உங்களுடன் சில விஷயங்கல் பற்றி பேச வேண்டும்."
" பேசு தியோடொரா பேசு. உன்னோடு எப்போது வேண்டுமானாலும் நான் பேச விரும்புவேன்."
" அத்தான்... அன்று நீங்கள் காய்ச்சலாக இருந்தபோது சாந்தா சோஃபியா, பிஸ்த்திஸ், எல்பிஸ், அகாப்பே என்ன்னும் பெயர் சொல்லி பேசினீர்கள். அவர்கள் எல்லாம் யார்?
தூக்கத்திலோ அல்லது கனவிலோ நீங்கள் கண்டவர்களா.?"
" ஓ... அவர்களா.. எனக்கு அவர்களை நன்றாக நினைவில் இருகின்றது. உண்மையில் நான் அன்று கனவும் கனவில்லை. உறக்கத்திலும் இல்லை. அவர்கள் என்னுடன் நேரில்
உரையாடினார்கள். அப்போது எனக்கு நல்ல உணர்வும் இருந்தது."
" அவர்கள் யார்?. எனக்கு சொல்லுங்கள். அதுவும் உங்களுக்கு இஸ்ட்டம் இருந்தால் சொல்லுங்கள். இல்லை என்றால் சொல்ல வேண்டம். அதனால் பரவாயில்லை."
" இல்லை அன்பே... நான் அன்று நேரில் கண்ட அவர்களைப்பற்றி நானும் உன்னிடம் பிரஸ்தாபித்துதான் இருக்க வேண்டும். எப்படியோ தவறிவிட்டது. இப்போது சொல்லுகிறேன் கேள்"
தியோடொராவின் கண்கள் ஆச்சரியத்தால் மேலும் விரிந்தன. ஏற்கனவே பெரிதான அவள் கண்கள் மேலும் பெரிதாகியது அவளது அழகுக்கு மேலும் அழகூட்டியது. அந்த இரவின் 
மெலிதான வெளிச்சத்தில் தன் காதல் மனைவியின் சௌந்தர்யத்தில் மூழ்கியிருந்த மன்னன் ஜஸ்டீனியன் அன்று ஒருநாள் தான் கண்ட ஒரு அழகிய மாதின் மூன்று பெண் 
குழந்தைகளின் நினைவு வந்தவுடன் தன் காதல் எண்ணங்களைவிடுத்து சற்றே எழுந்து அமர்ந்து ஏதோ மாய உலகுக்கு செல்வதுபோல் தன் கண்களை வெகு தூரத்துக்கு நோக்கினான்.
       " என் அன்பே தியோடொரா.. அன்று என்னுடன் பேசியவள் ஒரு விதவையான ஒரு தாய்..கி.பி.150 களில் ரோமாபுரியில் ஒரு பெரும் உயர் குலத்தில் பிறந்து வளர்ந்தவளான அவள்  பெயர் சோஃபியா. அவளுக்கு மூன்று பெண் குழந்தைகள். கிரேக்கத்தில் அவர்களது பெயர்கள் சோஃபியா என்பது ஆண்டவனின் ஞானம் என்றும், அவளது மூத்த பெண் பிஸ்த்திஸ்...அதாவது விசுவாசம் என்றும் அடுத்தவள் எல்பிஸ்.... அதாவது நம்பிக்கை என்றும் கடைக்குட்டி அகாபிஸ்... அதாவது தேவ சினேகம் என்று பெயர். மூத்தவளுக்கு வயது பனிரெண்டு,  அடுத்தவளுக்கு பத்து, கடைக்குட்டிக்கு எட்டுவயதும் ஆகி இருந்தது. 
     சோபியா தன் கணவனை இழந்தபின் வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தன் மூன்று  குழந்தைகளையும் அவர்கள் பெயருக்கு ஏற்றார்போல் கடவுளின் அன்பிலும், விசுவாசத்திலும் தெய்வபயத்திலும், கடவுளின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கையிலும் வளர்த்து வந்தாள். 
     அவளுடைய அழகிலும், தன் மூன்று பெண் குழந்தைகளின் அழகிலும் அந்த ரோமாபுரியில் சொக்கிப்போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்கள் நால்வரும் அவ்வளவு 
பேரழகிகள். ஆனால் தாய் சோஃபியாவுக்கு இந்த உலகின் ஆசாபாசங்களிள் நாட்டமில்லாமல் ஆண்டவறாகிய யேசுவின்மேல் மிகுந்த பாசமும் நேசமும் பக்த்தியும் கொண்டிருந்ததால்
தன் மூன்று பெண் குழந்தைகளையும் ஆண்டவாராம் யேசுநாதருக்கே தத்தம் செய்து வாழ்ந்துவந்தாள். 
      ஆனால் அவர்கள் வாழ்வில் விதி விளையாடியது. இவர்கள் காலத்தில் ரோமையை ஆண்ட மன்னன் ஏட்றியன். அவனுக்கு கிறிஸ்த்துவர்களை கண்டாலே பிடிக்காது. அப்போதைய 
சட்டப்படி கிறிஸ்த்துவ மதம் ரோமை சாம்ராஜ்ஜியோயம் முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. மன்னனையும் அவர்கள் வழிபட்ட ரோமைய மற்றும் கிரேக்க தெய்வங்களுக்கு தீப தூப  ஆராதனை காட்டும் மக்களுக்கே ரோமைய குடி உரிமை வழங்கப்பட்டதால் அதற்கு மறுக்கும் யாவருக்கும் மரண தண்டனையும், கொடும் சித்திரவதையும்,நாடு கடத்தலும், அவர்தம் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அந்த ரோமைய சட்டம் வழிவகுத்தது.
   தாய் சோஃபியா மற்ரும் அவள் மூன்று பெண் பிள்ளைகளான் விசுவாசம், நம்பிக்கை, தேவ சினேகம் ஆகியவர்களி அழகைப்பற்றியும் அவர்களது திரண்ட செல்வத்தையும் பற்றி
கேள்விப்பட்டான் அந்த ஊர் ஆளுநன் அந்தியோக்கு என்பவன். அவர்களை நேரில் வரவழைத்து தங்கள் ராஜவிசுவாசத்தை மெய்ப்பிக்க சொன்னான். ஆனால் தாய் சோஃபியாவும் 
அவளுடைய மூன்று பிள்ளைகளும் தங்களுடைய விசுவாசத்திற்கு சோதனை வந்ததென கண்டு தாங்கள் அரசனுக்கு உறிய மரியாதையை தருவதற்கு சம்மதிப்பதாகவும் ஆனால் 
மன்னனையோ அவர்களுடைய தெய்வங்களுக்கோ தீப தூப ஆராதனை காட்ட முடியாதென திட்டவட்டமாக கூறியதால் ஆளுநன் மிகுந்த கோபமுற்று அவர்களை அனைவரையும் 
அரசன் ஏற்றியனிடம் அனுப்பினான். 
    அரசன் ஏற்றியனின் முன்பாக விசாரணைக்கு வந்தனர் சோபியாவும் அவளது மூன்று பெண் பிள்ளைகளும். இவர்கள் அனைவரையும் கண்ட மன்னன் ஏற்றியன் அப்படியே அசந்து போனான். இருப்பினும் இந்த வழக்கை உடனே முடிக்காதபடிக்கு ஒரு நான்கு நாட்க்கள் தள்ளி வைத்தான்.  அதுவரை அவர்கள் நால்வரும் அரசாங்க காவலில் பல்லாடியா என்னும் ஒரு உயர்குடியில் வந்தவளின் பாதுகாப்பில் வைக்க சொன்னான். 
   இந்த நான்கு நாட்களிலும் தாய் சோஃபியா தன்  மூன்று பெண் பிள்ளைகளையும் மேலும் மேலும் புத்திசொல்லி தங்களுடைய கிறிஸ்த்துவ விசுவாசத்தில் நிலைபெற செய்தாள். இந்த நான்கு நாட்க்களிலும் ஒருசந்தி உபவாசமிருந்து தன் மூன்று பெண் குழந்தைகளுக்கும் நேரப்போகும் கதியை நினைத்து ஆண்டவறாம் யேசுநாதரிடம் மன்றாடி அடிக்கடி தன் நெற்றியிலும் தன் பிள்ளைகளீன் நெற்றியிலும் சிலுவை  அடையாளம் போட்டு ஒரு வினாடிகூட வீனாக்காமல் ஜெபித்திலேயே செலவிட்டாள்.
       இதைக்கண்ட பல்லாடியா என்னும் அந்த நல்ல மாதும் மனம் திரும்பி யேசுநாதரை கடவுளாக ஏற்றுக்கொண்டாள். அவள் இந்த நான்கு நாட்க்களிலும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சோபியாவுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் யாதொரு தொந்திரவும் ஏற்படாதபடி நன்றாக
கவனித்துக்கொண்டாள்.
      ஐந்தாம் நாள் விசாரணைக்காக இந்த நால்வரும் மன்னன் ஏட்றியனின் முன்பாக கொண்டுவரப்பட்டார்கள். இவர்கள் நால்வரும் அன்று தங்களுக்கு நடக்கப்போகும் அனைத்து 
கொடுமைகளையும் எதிர்பார்த்தே சென்றபடியாலும் ஆண்டவருடைய பாதுகாப்பிலும் சென்றபடியாலும் இவர்கள் ஏதோ அரசனுடைய விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் போல சென்றது  அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது.
     " பெண்ணே சோஃபியா...நம் ராஜ்ஜியத்தில் கிறிஸ்த்துவ மதம் தடை செய்திருப்பது உனக்கு தெரிந்திருந்தும் அதை நீயும் உன் மூன்று பெண் பிள்ளைகளும் ஏற்றுக்கொண்டு பழகி 
வருவது தேச துரோகம் என்று தெரியும் அல்லவா.? போனால் போகிறது. நாம் உங்களை உம் உயர் குலத்தை முன்னிட்டு மன்னித்தோம். இருப்பினும் ரோமைய சட்டப்படி நீ உன் 
மன்னனை கடவுளாக ஏற்று நம் ரோமைய தெய்வங்களுக்கும் மன்னருக்கும் தீப தூப ஆராதனை செலுத்து. அப்போது நாம் உங்கள் அனைவரையும் மன்னித்து உங்களுக்கு ரோமைய குடி உரிமையை மீண்டும் தருவோம். என்ன சொல்லுகின்றாய்.?"
    " மன்னிக்க வேண்டும் மன்னா... அரசர் என்ற முறையும் நானும் என் மூன்று பிள்ளைகளும் உமக்கு மரியாதை செய்வதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், உம்மை கடவுளாக
ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் ஆண்டவறாகிய யேசு நாதரை அல்லாமல் வேறு ஒருவரையும் நாங்கள் கடவுளாக ஏற்ற்றுக்கொள்ள மாட்டோம். இது உறுதி." என்றாள் சோஃபியா. 
   " ஆ...பெண்ணே.. உனக்கு இவ்வளவு திமிறா? எம்மை இந்த ரோமைய சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி என்னும் மரியாதையோ மதிப்பும் இல்லாமல் என்னை எடுத்தெரிந்தும் எதிர்த்தும் பேச உனக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியமும் திமிரும் ? இதற்கெல்லாம் நாம் உன்னை பழிவாங்குவேன். உனக்கு வேறுவிதமான தண்டனையை நான் தரப்போன்றேன். உன் 
மூன்று பிள்ளைகளுக்கும் நேரப்போகும் கதியை பார்த்துப்பார்த்து நீ வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டோம் என்று அணு அணுவாக சித்திரவதைப்பட்டு 
சாகப்போகிறாய். கூப்பிடுங்கள். இவளின் மூன்று பிள்ளைகளையும். அவர்கள் ஒவ்வொருவரையும் நான் தனித்தனியே விசாரிக்கப்போகின்றேன். " என்றான் மன்னன் ஏட்றியன். 
மூத்தவள் விசுவாசம் தனியே விசாரணைகாக அழைக்கப்பட்டாள். 
" பெண்ணே... உன் பெயரென்ன?"
" அரசே... என் பெயர் விசுவாசம்."
" என்ன... விசுவாசமா... இப்படி எல்லாம் கூட பெயர் வைப்பார்களா?"
" ஆம்...நான் என் ஆண்டவறாம் யேசுவின் பேரில் மிகுந்த விசுவாசமாக இருகின்றேன்."
" அப்படியானால் நாடாளும் என் மீது உனக்கு விசுவாசம் இல்லையோ?"
" இருகின்றது அரசே..நாடாளும் நீர் எம் மன்னவர் என்ற அளவில் எனக்கு உம் மீதும் விசுவாசம் இருகின்றது."
" அப்படியானால் நீ எம்மை ஏன் கடவுளாக ஏற்று தீப தூப ஆராதனை செலுத்த கூடாது. நாம் உம் மன்னன் அல்லவா? உனக்கு உணவும் இருக்க இடமும் உடுத்த உடையும் படுக்க 
இடமும் கொடுத்து உம்மையும் நாட்டையும் காக்கும் காவல் தெய்வம் அல்லவா நாம்?"
" அரசே... இந்த உலகை படைத்தது கடவுள். அவரே நமக்கு உயிரையும் உணவையும் வாழ்வையும் கொடுத்தவர். மன்னர் நாடாளும் உரிமை உள்ளவர். நீர் எம்மை படைக்கவில்லை. நீர் எமக்கு உயிரை கொடுக்க வில்லை. நீரும் அவரால் படைக்கபட்ட எம்மைப்போன்ற ஒருசாதாரண மானிடன் தான்.. உம்மை மன்னர் என்ற முறையில் உமக்கு நான் வணக்கமும் மரியாதையும் செலுத்த நான் கடமை பட்டவள். ஆனால் உம்மை கடவுளாக நான் ஒரு நாளும் வணங்க மாட்டேன். இது உறுதி."
    " ஆ...விசுவாசம்...நீயும் உன் தாய் போலவே என்னை அவமானப்படுத்திவிட்டாய். இதற்கான தண்டனையை நீ அடைந்தே தீர வேண்டும். நீ வயதுக்குவந்த பெண். மிக்க அழகுள்ள 
பெண். என்னை பகைத்துக்கொண்டதால் நீ இவை அனைத்தையும் இழந்து போவாய். என்ன சொல்லுகிறாய். எனக்கும் என் கடவுளர்களுக்கும் நீ தீப ஆராதனை செலுத்தப்போகிறாயா 
இல்லையா? இல்லை என்றால் இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்." என்றான் மன்னன் ஏட்றியன். 
    அப்போது விசுவாசம் தன் தாயை பார்த்தாள். அவள் தாயார் அவளை நோக்கி,
  " என் மகளே விசுவாசம்..நீ உன் விசுவாசத்தை இழந்துவிடாதே. நீ ஆண்டவராகிய யேசுவின் பத்தினியாக தத்தம் செய்யப்பட்டிருகின்றாய். நீ உன் பரலோக பர்த்தாவின் நிமித்தம் எதை எல்லாம் இழப்பயோ அவை எல்லாம் பரலோகத்தில் மாட்ச்சிமையுடன் சேர்த்து தரப்படும். ஆண்டவரும் தம் தன் பத்தினியாகிய உன்னை காத்து ரட்ச்சிப்பாறாக. ஆண்டவருக்கு விசுவாசமாக உன் வாழ்க்கையை அவருக்கு காணிக்கையாக நீ செலுத்தும் பட்சத்தில் அவர் உன்னை பரலோகத்தில் மிகுந்த கணம் பண்ணுவார். மோட்ச்சத்தில் உனக்கான வேத சாட்ச்சி முடியுடன் காத்துக்கொண்டிருகின்றார். சிறிது நேரமே நடக்கப்போகும் இந்த உலக சரீர கொடுமைகளுகாக அஞ்சாது பரலோக  பேரின்பத்தில் நிலையான வாழ்க்கையை நீ மேற்கொள்ளும்போது உன் தாயாரையும் நினைத்துக்கொள். உன் பரலோக பர்த்தாவிடம் எனக்காகவும் மன்றாடு...உன் சகோதரிகளுகாகவும்  மன்றாடு. எனவே என் மகளே விசுவாசம்... ஆண்டவரின்மட்டில் நீ கொண்ட விசுவாசம் பெரிதென நிரூபி. இந்த ஆக்கினைகளுக்கு அஞ்சாது நித்திய பேரின்ப பாக்கியத்தை  தேர்ந்தெடு. போய்வா என் மகளே விசுவாசம். மீண்டும் எல்லாம் வல்ல ஆண்டவரின் பரலோக வீட்டில் சந்திப்போம்" என்று விடைகொடுத்து அனுப்பினாள்.
     விசுவாசம் தான் தீப தூப ஆராதணைக்காட்ட நிர்ப்பந்திக்கப்பட்ட அந்த ரோமைய தேவதையான அர்த்திமிசின் முகத்தில் போகும் முன்பாக காரி உமிழ்ந்து அதை 
அவமானப்படுத்தினாள். விசுவாசத்தை நிர்வாணப்படுத்தி ஒரு கற்றூணில் கட்டிவைத்து கடுமையாக ரத்த விளாறுகளாய் அடித்தனர். அவள் முகம் முகல் கால் வரை அவள் அடிபடாத
இடமே இல்லை. இந்த கொடுமை எல்லாம் முடிந்த பின்னர். 
   அவள் தாயை நோக்கி ," உன் மகள் இப்போது என்ன பாடு படப்போகின்றாள் பார். இவளது அழகு இப்போது என் கையில்" என்று கூறி ஒருவன் அவளது மார்பகம் இரண்டையும் கத்தியால் அறுத்துப்போட்டான்.
          இதைக்கண்ட அவள் தாயார் தன் கண்களை அகல விரித்துக்கொண்டு 
"நான் ஒரு நாளும் இதற்காக அழப்போவதில்லை. என் மகளின் அழகு பரலோகத்தில் போற்றப்படும். இதற்காக நான் பெருமைப்படுகின்றேன்" என்றாள். 
   அப்போது அதிசயமாக  விசுவாசத்தின் மார்பகம் அறியப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வருவதற்குபதிலாக வெண்மையான திரவம் வடிந்தது. ஒரு கன்னிப்பெண்ணுக்கு நேர்ந்த இக்கதியைக்கண்ட  அங்கிருந்த மக்கள் பலர் " மன்னன் ஏட்றியனுக்கு ஏன் இப்படி புத்தி போயிற்று. இவள் உடலிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் இவள் தேவலோகத்தை சேர்ந்தவள் என காட்டுகின்றது. இவளை கடவுள் காப்பாற்றட்டும் ". என்று அவள் மட்டில் பரிதாப பட்டனர். 
   ஒரு பெரும் இரும்பு அடுப்பு செந்தனலின்மீது வைக்கப்பட்டு இரத்த சிகப்பாய் மாறி இருந்தது. விசுவாசம் அதன்மீது கிடத்தப்பட்டாள். சுமார் இரண்டு மணி  நேரம் அந்த சிவந்த எரியும் நெருப்புபோன்ற நெருப்புக்கட்டிலில் அவள் கிடத்தப்பட்டிருந்த போதிலும் அவளுக்கு ஒன்றுமே நேரவில்லை. 
   இதைகண்ட அந்த கொடுங்கோல மன்னன்  மிகவும் அதிசயப்பட்டான். இருப்பினும் அவளை எப்படியும் பணிய வைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு பெரும் கொதிகலன் கொண்டுவரப்பட்டது. அதில் எண்ணெய்யும் தாரும் நிரப்பட்டு கொதிக்க விடப்பட்டது.. நங்கு கொதிக்கவைக்கப்பட்டவுடன் அதன்மீது விசுவாசம் இறக்கப்பட்டாள். இவ்விதமாக அவள் எவ்வளவு நேரம் இருந்தும் தீயோ,  எண்னைய்யோ, உருகிய தாரோ அவளை ஒன்றும் செய்ய வில்லை. தன் முயற்சிகள் அனைத்தும் வீனானதைக்கண்ட மன்னன் ஏட்றியன் அவளது சிரசை வெட்ட ஆணை  கொடுத்தான். 
      சில நிமிட நேரம் கிடைத்த அவகாசத்தில் விசுவாசம் தன் தாயிடம் ஓடோடிவந்து, 
 " அம்மா...நான் ஜெயித்துவிட்டான். என் சகோதரிகளே நான் ஜெயித்துவிட்டேன்.
என்னை பின்பற்றி நீங்களும் விரைவில் வந்துவிடுவீர்கள். என் நம்பிக்கையே..என் தேவ சினேகமே...பயப்படாதீர்கள். ஆண்டவர் எனக்கு செய்த வல்லமையான 
செயல்களைக்கண்டீர்கள் அல்லவா... அவர் அதுபோல் உங்களுக்கும் செய்து நம்மை முடிவில்லாத பரலோகவான் வீட்டிற்கு அழைத்து செல்வார்...எனக்கு விடை கொடுங்கள். நான் 
பரலோகத்தில் நம் ஆண்டவராகிய யேசுநாதரோடு உங்களுக்காக காத்திருப்பேன்" என்று கூறி தன் தாயாரையும் தன் சகோதரிகளையும் கட்டி அணைத்து முத்தமிட்டாள்.
    சற்று நேரத்தில் வீரன் ஒருவனின் வாள் வானுக்கு உயர்ந்தது. அது விசுவாசத்தின் சிரசை கொய்தது. மன்னன் ஏட்றியன் விசுவாசத்தின் தலையை கொண்டுவந்து அவள் தாயாகிய 
சோஃபியாவிடம் கொடுத்து,
    " உன் முட்டாள்தனமான முடிவினால் உன் முதல் பெண்னை பலிகொடுத்துவிட்டாய். இனி இவ்வாறாக நடவாதபடிக்கு உன் இரண்டாம் மகளான  நம்பிக்கையை நல்ல புத்தி சொல்லி அனுப்பு. ஏற்கனவே நீ பெற்ற ஒரு பிள்ளையை இழந்துவிட்டாய் என்பதை மறந்து விடாதே..புத்திசாலித்தனமக நடந்துகொள்" என்றான்.
        தாய் சோஃபியா தன் இரண்டாம் மகளான நம்பிக்கையை கட்டி அணைத்து உச்சியில் முத்தமிட்டு அவள் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு," என் மகளே .. என் நம்பிக்கையே..
நீ ஆண்டவரின்மட்டில் நம்பிக்கை இழந்துவிடாதபடி எச்சரிக்கையாக நடந்துகொள். உன் மூத்தவள் விசுவாசம் இதோ ஆண்டவருடன் வான்வீட்டில் பிரவேசித்துள்ளாள். இந்த கொடும்
ஆக்கினைகளுக்கு நீ பயப்படாதே. நான் வேதனையுடனே உங்களை பெற்றேன். ஆனால் இப்போது மிகுந்த சந்தோஷத்துடன் உங்களை ஆண்டவருக்காக பலியாக
ஒப்புக்கொடுக்க போகிறேன். இதைவிட சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்லை. நீயும் உன் சகோதரியுடன் உன் பரலோக பர்த்தாவுடன் போய் சேர். அங்கே எனக்காகவும் உன் 
கடைசி தங்கைக்காகவும் காத்திரு. இதோ விரைவிலேயே நாங்களும் வந்து விடுவோம் ..கலங்காதே என் மகளே.. என் நம்பிக்கையே " என்று அவளுக்கு விடை கொடுத்து 
அனுப்பினாள். 
       மன்னன் ஏட்றியன்," என்ன நம்பிக்கையே.. உனக்கு உன் தாய் நல்ல புத்தி சொல்லி அனுப்பினாளா... என்ன சொல்லி அனுப்பி இருக்கிறாள். இதோ நம் ரோமைய தெய்வங்கள் 
உனக்காக காத்துக்கொண்டிருகின்றன. வா.. வந்து பலி செலுத்து.. " என்றான். 
" அரசே... என் தாய் எனக்கு நல்ல புத்தி சொல்லித்தான் அனுப்பி இருகின்றார்.நான் ஒரு நாளும் உன் துர் தெய்வங்களுக்கு கடவுளுகான பலி செலுத்த மாட்டேன். உன் துர் தெய்வங்கள் என் ரத்தம் குடிக்கவே காத்துக்கொண்டிருகின்றன. ஆனால் என் பரலோக பர்த்தா எனக்காக பரலோகத்தில் வேத சாட்ச்சிமுடியுடன் என் சகோதரி விசுவாசத்துடன் 
காத்துக்கொண்டிருகின்றதை நான் காண்கின்றேன்..உன்னால் என்னை ஒருபோதும் பணிய வைக்க முடியாது. உன்னால் முடிந்ததை செய்துகொள்." என்றாள்.
      ஒரு பத்துவயது சிறுமியை தன்னால் பணிய வைக்க முடியவில்லை என்றுணர்ந்த மன்னன் ஏட்றியன் கடும் சினம் கொண்டான். அதே கோபத்தோடு அவள் தாயிடம் வந்து,
" சோஃபியா ...நீ எல்லாம் ஒரு தாயா?..தான் பெற்ற பிள்ளைகளை ஒரு சாதாரண காரியத்திற்காக பலி கொடுக்க துணிந்த நீ எல்லாம் ஒரு தாயா? நீ பெரும் கொடுமைகாரி.. நீ பெரும் திமிர் பிடித்தவள். நீ கொண்ட பிடிவாததிற்கு மூன்று பிள்ளைகளை இழக்க வேண்டுமா?" என்றான்.
" அரசே.. என் தாயாரா திமிர் பிடித்தவள்...நீர்தான் திமிர் பிடித்தவன்... நீ ஒரு அற்ப மனிதன்..நீ உன்னைக்கடவுள் ஆக்கிக்கொண்டாய்...இது கடவுளுக்கு எதிறான பாவம் 
இல்லையா?.நீதானே பெரும் திமிர் பிடித்து அலைகின்றாய்...உன்னை கடவுள் என்கின்றாய்?. ஒரு அற்ப மனிதனை ஒரு பெரும் கடவுளாக ஆக்கிக்கொண்டு என்னை வணங்கு 
என்பது என்ன சாதாரண காரியமா?. உனக்கு வேண்டுமானால் அது சாதாரன காரியமாக இருக்கலாம்.. ஆனால் எங்களுக்கு அது மா பெரும் காரியம். கடவுள் ஒருவரே. அவரைத்தவிர 
வேறு தெய்வம் உனக்கிலாமல் போவதாக என்பது கடவுளே எங்களுக்கு கொடுத்துள்ள கட்டளை. அதை நாங்கள் ஒருபோதும் மீற முடியாது. இன்னும் ஏன் நேரத்தை வீனடித்துக்
கொண்டிருகிறாய். உன் காரியத்தை நிறைவேற்றிகொள்" என்றாள் சோஃபியாவின் இரண்டாம் மகள் நம்பிக்கை. 
    அப்படியே அவமானத்தால் விக்கித்துப்போனான் மன்னன் ஏட்றியன். இனிமேல் இவளை மாற்ற முடியாது என்றுணர்ந்த மன்னன் ஏட்றியன் இவளையும் மூத்தவள விசுவாசத்துக்கு
செய்தது போலவே அனைத்து கொடுமைகளையும் செய்ய ஆணை இட்டான். அவ்வாறே செய்யப்பட்டது. அவள் திரேகம் முழுவதும் ஆணிகளாலும் இரும்பு சீப்புகளாலும் குத்தி குதறி
கிழிக்கப்பட்டன. அவள் திரகத்திலிருந்து வழிந்த இரத்தம் பெரும் பரிமள சுகந்தம் வீசியது. அவள் பரிசுத்த ஆவியால் நிரம்பப்பெற்று," என் சரீரத்தை மேலும் கிழியுங்கள்.. உங்களால் 
எவ்வளவு முடியுமோ அவ்வளவும் கிழியுங்கள். ஆனால் என் விசுவாசத்தையும் என் ஆண்டவரின்மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் உங்களாள் சற்றும் அசைக்க முடியாது" என்றாள்.
    " ஓ பெண்ணே...உன் பெயர் நம்பிக்கைதானே...உன் யேசுநாதார் வந்து உன்னைகாப்பர் என நம்பிக்கொண்டு இருகின்றாயா.. வரட்டும் அவர் வந்து உன்னை எப்படிகாப்பாற்றுகின்றார் என்று நானும் பார்கின்றேன்... அடேய் ..யாரங்கே.. இவளைக்கொண்டு போய் கொதிக்கும் அந்த அண்டாவில் மூழ்கடியுங்கள் " என்றான் மன்னன் ஏட்றியன்.
       அவ்வாறே நம்பிக்கையை கொதிக்கும் ஒரு பெரிய அண்டாவில் மூழ்கடித்தார்கள். அளவுக்கதிகமான சூட்டினால் அந்த அண்டா திடீரென வெடித்து சிதறியது. அது மன்னன் 
ஏட்றியன் மேலும் சிதறியதால் மன்னன் ஏட்றியன் தன்னை காத்துக்கொள்ள தலைதெறிக்க ஓடினான். ஆனால் அருகிலிருந்த சில வீரர்கள் கொதிக்கும் அந்த நீரினாலும் 
நெருப்பினாலும் தாக்கப்பட்டு இறந்தனர். இதைகண்டு அட்டகாசமாக சிரித்தாள் நம்பிக்கை.
     " மன்னா...ஏட்றியா..தண்ணீர் நன்றாக கொதித்துவிட்டது போலும். அதுதான் தலை தெறிக்க ஓடுகிறாயோ... போதும் திரும்பி வா... உன்னால் என் சரீரத்தைமட்டுமே அழிக்க
இயலும் . ஆனால் என் ஆன்மாவை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் என்னை என்ன செய்வதாக உத்தேசம்... வா... வா... உன்னால் முடிந்ததை செய்துகொள்." என்றாள்.
    ஒரு பத்து வயது சிறுமிக்கு முன் தான் தலை தெறிக்க ஓடியதை நினைக்க நினைக்க மன்னன் ஏட்றியனுக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. இவளை மேலும் செய்வதற்கு
ஒன்றுமில்லை என நினைத்த மன்னன் அவளை தலையை வெட்ட ஆணை கொடுத்தான். இந்த சந்தர்பத்தில் தன் தாயாரிடம் ஆசீர் வாங்கிக்கொண்ட நம்பிக்கை தன் சகோதரியை 
கட்டி அணைத்து முத்தமிட்டு ,
  " என் தேவ சிநேகமே..ஆண்டவர் என்மட்டில் என்னென்ன செய்தாரோ அவை யாவையும் உன்மட்டிலும் செய்வார். இவர்களுகாக அஞ்சாதே. நம் இந்த  பூலோக பிரிவை நினைத்து வருந்தாதே...இன்றே நாம் அனைவரும் வான்வீட்டில் சந்திப்போம்... அம்மா..என் தேவ சிநேகம் எனக்கு விடை கொடுங்கள் " என்று விடைபெற்று கொலைஞர்களுக்கு முன்பாக தலை குனிந்து நின்றாள். அடுத்த வினாடி அவள் சிரசு வெட்டப்பட்டு அவள் வான் வீட்டிற்கு ஆண்டவறாகிய யேசுநாதரால் வேத சாட்ச்சி முடிசூடப்பட்டு அழைத்துக்கொள்ளப்பட்டாள்.
    அடுத்தவள் தேவ சிநேகம் விசாரணைகாக வரவழைக்கப்பட்டாள். எட்டு வயேதே நிரம்பிய தேவ சிநேகத்தை பார்த்ததும் மன்னன் ஏட்றியன் இவளிடம் மிகவும் பாசமாக 
நடந்துகொண்டான். " மகளே... உன் பெயர் தேவ சிநேகம்... அப்படித்தனே?" என்றான்.
" அரசே ... என் பெயர் தேவ சிநேகம் என்பது உண்மைதான். ஆனால் நான் உமக்கு மகளும் அல்ல. நீர் எனக்கு தகப்பனும் அல்ல. " என்றாள் தேவ சிநேகம்.
" ஏன்...நான் உன்னை மகள் என கூப்பிடக்கூடாதா?" .
" ஆம்... நீர் என்னை உம் மகள் என கூப்பிடக்கூடாது. நீர் என் உடன் பிறந்த சகோதரிகளை கொடுமையாக கொண்றவன். நீர் எப்படி எனக்கு தந்தையாக இருக்க முடியும்? ஒரு 
தகப்பன் தன் குழந்தைகளை கொல்வானா.? " 
" உன் தாய் சோஃபியா உங்களுக்கு தப்பான புத்தி சொல்லி வளர்த்துவிட்டதால்தான் நீ இப்படி பேசுகின்றாய். மற்றபடி நீ பயப்படும் அளவுக்கு நான் ஒன்றும் கொடுமையானவன் 
அல்ல. என்னை நம்பு" என்றான் ஏட்றியன்.
" அரசே... இந்த உலகில் என் தாயாரை அடுத்து நான் நம்புவது என் ஆண்டவறாம் என் யேசுவை மாத்திரமே.மற்ற மனிதர் யாவரும் நம்பிக்கைக்கு உறியவர் அல்லர்."
" குழந்தாய்...நீ அதிகம் பேசுகின்றாய்... நம் ரோமைய தெய்வங்களும் நம்பிக்கைகுரியவர்கள் தாம். நீ வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். அதோ அந்த அர்த்திமீஸ் தேவதைக்கு உன் 
பிஞ்சு கரங்களாள் ஒரு துளி உப்பை எடுத்து வீசு ..அது போதும் எனக்கு... உன்னை விடுதலை செய்து விடுவேன்" என்றான் மன்னன் ஏட்றியன். 
" மன்னா... உன் கபட நாடகம் எனக்கு புறிகிறது... என்னை என்ன ஞானம் இல்லாவள் என்றா நினைத்துக்கொண்டாய்?... என் தாயாரின் பெயரே ஆண்டவனின் ஞானம் என்பது
தான். அவருக்கு இருக்கும் ஞானம் எனக்கு இருக்காது என்றா நினைத்தாய். மதி கெட்டவனே. என் சகோதரிகளிடன் உன் கதை பலிக்கவில்லை...இவள் சிறுமிதானே ...இவளை 
ஆசை காட்டி மோசம் செய்து விடலாம் என்றுதானே நினைத்து என்னை மகளே என பாசம் காட்டி பேசினாய்.. இதற்கெல்லாம் மயங்குபவள் அல்ல இந்த தேவ சிநேகம். நான் என் 
சகோதரிகளின் பின்னே செல்ல விரும்புகின்றேன்.. வீனே காலம் தாழ்த்தாமல் என்னை பரலோகம் அனுப்பிவிடு." என்றாள் தேவ சிநேகம்.
" ஓ... தேவ சிநேகம்... உனக்கு அவ்வளவு விரைவில் மரணம் வந்துவிட நான் அனுமதிப்பேனா என்ன?. நீ ஒரு சாதாரண எட்டுவயது சிறுமிதானே என நான் எண்ணி உனக்கு பாசம் 
காட்டிப்பேசியது பெரும் தவறு. நீ பிஞ்சிலேயே விளைந்தவள். உனக்கு உன் மூத்த சகோதரிகளைவிட அதிக கடும் தண்டனை கொடுப்பேன். இவளை அந்த சக்கரத்தில் வைத்து
இவளை அணு அணுவாக சித்திரவதை செய்யுங்கள் என்றான் மன்னன்.
    அதைத்தொடர்ந்து அவளது இரண்டு கால்களும் தரையில் ஒரு ஆப்பு அடித்து இறக்கப்பட்டு அதில் கட்டப்பட்டன. அவள் கைகள் இரண்டும் ஒரு சக்கரத்தின் வெளி விளிம்பில் 
கட்டப்பட்டு சுழற்றப்பட்டன். இதனால் பூமியில் கட்டப்பட்ட கால்களிலிருந்து அவள் கைகள் வரை சர்வாங்கமும் இழுக்கப்பட்டதால் அவள் இணைப்புகள் அனைத்தும் கழன்றன. 
இதனால் ஏற்ப்பட்ட வேதனை வார்த்தையில் சொல்ல முடியாது. மேலும் அந்த இணைப்புகளோடு வயிறும் அனைத்து ஜவ்வுகளும் கிழிபட்டு இரத்தம் பல இடங்களிலிருந்து மள மள வென்று மழைகொட்டுவது போல கொட்ட ஆரம்பித்தது.
    " அடடா... அடேய் நிறுத்துங்கள்...பாவம் சிறுமி... ஓ...தேவ சிநேகம்... உனக்கு வலிக்கிறதா... இப்போதும் ஒன்றும் குடி முழுகிபோய்விடவில்லை... நீ வணங்கும் யேசுவை
விட்டுவிட்டு அந்த பெண் தெய்வம் அர்த்திமிஸ் வாழ்க என்று சொல்... இந்த கொடுமையான தண்டனைகளினின்று உன்னை விட்டு விடுகிறேன்" என்றான் மன்னன் ஏட்றியன்.
" அடேய் மன்னா ...நீயும் உன் தெய்வம் அர்த்திமிஸும் நாசமாகப்போவீர்களாக. அந்த அர்த்திமிஸ் நரகத்திலிருந்துகொண்டு உன்னை அழைக்கிறாள். நீயும் அங்கே ஒரு நாளைக்கு
போகத்தான் போகிறாய். உனக்கு புத்தி இருந்தால் நன்றாக ஒரு வினாடி யோசித்துப்பார்... நாங்கள் சகோதரிகள் விசுவாசம், நம்பிக்கை, தேவ ஸ்நேகம் அனைவரும் கடவுளின் 
பத்தினிகளாக தத்தம் செய்யப்பட்டிருகின்றோம் என்பது தெரிந்தும் எங்களை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தி, சித்திரவதை செய்து கொண்றிருகின்றாய்.. என்னையும் 
கொல்லப்போகிறாய். இதற்கெல்லாம் எம் பரலோக மணாளன் உன்னை எவ்விதம் பழிவாங்குவாங்கப்போகின்றார் என்று பொறுத்திருந்து பார். இப்போதும் காலம் கடந்து விடவில்லை.  நீ செய்த உன் தவறுகளுக்காக அவரிடம் இப்போதே மன்னிப்பு கேட்டுக்கொள்." என்றாள்.
    இத்தகைய பேச்சினால் அவமானப்பட்டான் மன்னன்.. ஆனால் அவனைப்பீடித்திருந்த அசுத்த ஆவிகள் அவனை யோசிக்க விடாமல் மேலும் மேலும் அவன் கோபத்தை தூண்டிவிட்டன. இதன் விளைவாக அவன் அவளை மேலும் ஆக்கினக்க்கு உள்ளாக்க உத்தரவிட்டான். அதன்படி அவள் கால்கள் துடை இடுககுகள் இரண்டிலும், தோள்பட்டை இடுக்குகள் இரண்டிலும் பெரும் அணிகள் செலுத்தப்பட்டு அவற்றைக்கொண்டு அவளை தூக்கிக்கொண்டு அந்த கோட்டையை வலம் வந்தார்கள். 
  இதனால் தேவ சிநேகம் அடைந்த அவமானமும் வேதனையும் வார்த்தையில் சொல்ல முடியாதபடி இருந்தது. பிறகு தேவ சிநேகத்தை தொப்பென தரையில் போட்ட்னர்.
மன்னன் ஏட்றியன் அவள் தாய் சோஃபியாவை அணுகி,
" பெண்னே சோஃபியா...பார்த்தாயா உன் பெண் படும் பாடுகளை...இப்போது உன் மனம் குளிர்ந்ததா? இல்லை இன்னும் அவளை துன்பப்பட வைக்கட்டுமா?" என்றான்.
   அதற்கு சோஃபியா," மன்னா... ஏன் என்னை கேட்கிறாய்...அவளிடம் கேட்டால் அவள் உன் மானத்தை வாங்கிவிடுவாள் என்னும் பயமா? போய் அவளிடமே கேட்டுக்கொள்" 
என்றாள்.
" ஆ... சோஃபியா...நீ எல்லாம் ஒரு தாயா...அல்லது பேயா...மகள் படும்பாடுகளைப்பற்றி உனக்கு கொஞ்சமும் மனது உறுத்தவில்லையா?" என்றான்.
" இல்லை மன்னா... என் மனம் கொஞ்சம் கூட உறுத்தவில்லை. என் மகள் வீர மரணம் அடைவது பற்றி நான் பேருவகை கொள்கிறேன். என் கடவுள் அவள் மட்டில் பெரும் வேலை 
செய்கிறார் என்பதை நான் காண்கிறேன் " என்றாள்.
இனிமேல் இவளிடம் பேசி அவமானப்படுவதைவிட இந்த சின்னபெண்ணை பணிய வைக்கும் வழியை பார்ப்போம் என அவளிடம் வந்து,
" தேவ சிநேகம்... அதோ பார் நரகம்..அதில் உன்னை நான் தூக்கி போடப்போகிறேன்" என்றான். அங்கு ஒரு பெரும் அக்கிணிக்குண்டம் தயாராக எரிந்துகொண்டிருந்தது.
" மன்னா... உனக்கு சிரமம் வேண்டாம் ... நானே போய்க்கொள்கிறேன் " எனறு கூறியபடி தரையில் உருண்டுகொண்டே போய் அந்த அக்கிணிக்குண்டத்தில் விழுந்தால். 
    உடனே தீ சுவாலை வானளாக உயந்து எரிந்தது. சில நிமிட நேரங்கள் வரை அங்கே என்ன நடக்கின்றது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சற்று நேரத்தில் தீ ஊடுருவிப்
பார்க்கும்படியாக தோன்றியது. தீ சுவாலையின் நடுவில் தேவ ஸ்நேகம் ஆண்டவரைப்போற்றி பாடிக்கொண்டிருந்ததை அனைவரும் பார்த்தார்கள். இவ்விதமாக பலமணி நேரம்
நடந்தது. தீ அவளை ஒன்றும் செய்யவில்லை என்று அறிந்த மன்னன் ஏட்றியன் தீயை அணைத்து அவளை வெளியே கொண்டுவர ஆணை இட்டான். அப்போது அவளது முகம் 
பரலோக காந்தியுடன் ஒளி வீசியது. இந்த தோற்றத்தில் நம் தேவ சிநேகத்தை கண்ட மன்னன் ஏட்றியன் கூட அஞ்சினான். 
      இருப்பினும் வீம்புடன் "இவளை சிரச்சேதம் செய்யுங்கள்" என்று ஆணை இட்டான்.
தன் மகளுக்கு நேரப்போகும் கதியை எதிர்பார்த்திருந்த அவள் தாயார் சோஃபியா ஓடிவந்து அவளைக்கட்டிப்பிடித்து அவள் முகத்தில் முத்தமிட்டு, " என் மகளே தேவ ஸ்நேகம் , நீ ஜெயித்துவிட்டாய். இன்னும் சிறிதுபாடுகள். உடனே நீ பரலோகம் சென்று விடுவாய். அங்கே உன் சகோதரிகளுடன் நம் ஆண்டவறாகிய யேசு  நாதர் உனக்கு வேத சட்ச்சி முடி சூடி உன்னை தன் பத்தினியாக ஏற்றுக்கொள்வார். அப்போது நீ என்னை மறவாதே" என்று அவள் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்தாள். 
      அவளிடமிருந்து தேவ சிநேகம் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டாள். உடனே அவள் சிரசு துண்டிக்கப்பட்டது.
     " பெண்ணே சோஃபியா...நானும் என் வாழ்நாளில் எத்தனையோ பேரை பார்த்திருகின்றேன். ஆனால் உன்போல ஒரு பேயை நான் பார்த்ததே இல்லை. அன்று ஜெருசலேம் நகரை நான் சங்காரம் செய்யும்போது எத்தனையோ யூத தாய் மார்கள் தங்கள் குழந்தைகளை காப்பாற்றும் பொருட்டு தங்கள் உயிரை கொடுத்தார்கள். அவர்கள் தான் தாய்மார்களுக்கு  இலக்கணம். ஆனால் நீ... யேசுநாதருக்காக உன் மூன்று பெண்குழந்தைகளையும் நான் துடிக்க துடிக்க கொல்லும்போதும் சிரிகின்றாய். நீ என்ன பெண்னா அல்லது பேயா.. . சீ..நீ எல்லாம் ஒரு பெண்.. நீ எல்லாம் ஒரு தாய்... உனக்கு வெட்க்கமாக இல்லை. இந்தா உன் பிள்ளைகளின் சடலங்கள்... போய் அவற்றைக்கட்டிக்கொண்டு அழு." என்று அவள் மூன்று பெண் பிள்ளைகளான விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் ஆகியோர்களின் இறந்த சடலங்களை அவளிடம் கொடுத்துவிட்டு அருவருப்பாக தன் முகத்தை காட்டிக்கொண்டு  மேலும் அவள் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.
    மன்னன் ஏட்ரியனின் இந்த மானக்கேடான பேச்சையும் நடத்தையும் தன் விசுவாசத்துக்கு வந்த  சோதனையாக தாய் சோஃபியா ஏற்றுக்கொண்டாள்.
" பிறகு என்ன நடந்தது " என்றாள் தியோடொரா.
" பிறகு நடந்தது தான் இன்னும் சோகம். தாய் சோஃபியா யேசுவுக்காக பலியாக கொடுக்கப்பட்ட தன் மூன்று பெண் பிள்ளைகளின் சடலங்களை தன் வீட்டுக்கு எடுத்துச்சென்று ஒரு 
ஆடம்பரமான சவப்பெட்டி தயார் செய்து அவற்றில் அந்த மூவரின் சடலங்களையும் போட்டு ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி அந்த ரோமின் நகரின் ஒரு மலைமீது ஒரு இடத்தில் மிக்க 
மரியாதையுடன் அடக்கம் செய்தாள். அவள் உறவினர்கள் எவ்வளவோ கூறியும் அவள் அந்த இடத்தைவிட்டு வரவே இல்லை. இவ்விதமாக மூன்று நாட்க்கள் கடந்தன. மூன்றாம்
நாள் தாய் சோஃபியா மரணமடைந்திருக்ககண்ட அவள் உறவினர்கள் அவளையும் அவள் பிள்ளைகளுடனே சேர்த்து புதைத்தார்கள்."
" அடடா..பெரும் சோகம்தான் போங்கள். பிறகு என்ன நடந்தது." என்றாள் தியோடொரா.
" ஆண்டவறாகிய யேசு நாதருக்காக தங்கள் உயிரைக்கொடுத்த அந்த மூன்று பெண்களான விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் ஆகியோருக்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபை 
வேத சாட்ச்சிகளுக்கான பட்டமும் புனிதர் பட்டமும் கொடுத்து கௌரவித்தது. அவர்கள் தாயாரான சோஃபியாவுக்கும் வேத சாட்ச்சிகளுக்கான பட்டமும் புனிதர் பட்டம் கொடுத்து
கெளரவித்தது. இத்தனைக்கும் அவர்களது தாயார் வேத சாட்ச்சியாக மரிக்கவில்லை..ஆனாலும் தன் பிள்ளைகள் பட்ட பாடுகள் அனைத்தையும் இவர் தன் மனத்தில் பட்டு அத்தனை  பாடுகளையும் இவரும் அனுபவித்தார் என்பதற்காக இவருக்கும் வேத சாட்ச்சி பட்டம் கொடுக்கப்பட்டது."
" அது நியாயாம் தானே அத்தான். தன் கண்முன்னே தன் மூன்று பிள்ளைகளும் அனுபவிக்கும் சித்திரவதைகளை பார்க்க எந்த தாய்க்குத்தான் மனம் வரும்? இவருக்கும் வேத 
சாட்ச்சிக்கான பட்டம் கொடுத்தது நியாயம் தான். இருந்தாலும் இத்தனை பாடுகளையும் கண்டு இந்த தாயார் எப்படித்தான் தாங்கிக்கொண்டார்களோ... உண்மையில் இவள்தான்
வீரத்தாய்... தெய்வத்தாய்.. என்று எத்தனை பட்டங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
" ஆமாம் தியோடொரா... அதுதான் மன்னன் ஏட்றியன் இந்த விதவைத்தாயாருக்கு கொடுத்த கொடும் தண்டனை."
" அது சரி... இத்தனை சரித்திரமும் உங்களுக்கு எப்படித்தெரிந்தது.?"
" அப்படிக்கேள் என் தியோடொரா... அன்று நான் காய்ச்சலாய் கிடக்கையில் சாந்தா சோஃபியா என்று பிதற்றியதாகக்கூறினாய் அல்லவா...அப்போது நடந்தது என்னவென்று கேள்.
அன்று அந்த வீரத்தாய் சோஃபியா தன் மூன்று பிள்ளைகளான விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் ஆகியோருடன் என் முன்னே தோன்றி தங்கள் வரலாற்றைக்கூறினார்கள்.
நான் கட்டும் தேவாலயம் நல்லவிதமாக கட்டிமுடிக்க தன் ஆசீர் அளிப்பதாகவும் கூறினார்கள். ஆண்டவனின் ஞானம் எனப்படும் தன் பெயரான சோஃபியாவை இந்த ஆலயத்திற்க்கு
வைக்கும்படியும் அதில் தன் மூன்று பெண் பிள்ளகளுக்கும் மூன்று தனித்தனி கவின்மாடங்களிள் அவர்கள் பெயர் விளங்கும்படி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள். 
அதனால்தான் கிரேக்கத்தில் பிஸ்தீஸ் என்னும் விசுவாசம், எல்பீஸ் என்னும் நம்பிக்கை, அகாப்பே என்னும் தேவ சிநினேகம் பெயர்கள் உனக்கும் கேட்டது."
" அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்" என்றால் தியோடொரா.
" அம்மா..புனிதமான உங்கள் பெயர் ஆண்டவனின் ஞானம் என்னும் என்பதையே கிரேக்க பாஷையில் சோஃபியா என்று அழைப்பதால் நானும் இந்தக்கோயில் கட்ட
நினைத்திருக்கும்போதே தீர்மானித்தேன். அதுவும் தேவ சித்தம்தான் போலும். இப்போது தாங்களே கேட்டுக்கொள்வதால் நான் கட்டும் இந்த புனித சோஃபியா என்னும்
ஹாகியா சோஃபியா தேவாலயத்தில் தலைப்பகுதியில் பிரதான மண்டபத்தை அடுத்திருக்கும் அறைக்கோள கவின்மாடம் நம் யேசுநாதரின் தாயாருக்காகவும் அதற்குக்கீழே
அமைந்திருக்கும் மூன்று அறைவட்ட கவின்மாடங்களும் தங்களின் மூன்று புதல்விகளான விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் ஆகியோருகாகவும் நாம் சமர்ப்பிகின்றோம்.
      பிதா,சுதன், பரிசுத்த ஆவி என்னும் திரி ஏக தேவனாம் ஆண்டவரில் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனுக்காகத்தான் நாம் இக்கலைக்கோவிலை அமைத்தோம். 
அந்த சுதனாகிய யேசுநாதருக்கு பத்தினிகளாக தங்களின் விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் ஆகிய மூன்று புதல்வியர்களுக்காக நாம் தனித்தனி கவின் மாடங்களை சமர்பிப்பதில் 
நாம் பெருமை அடைகின்றோம் " என்று உறுதி அளித்திருகின்றேன் என்றான் மன்னன் ஜஸ்டீனியன்.
" உண்மைதான் அத்தான்.. இந்தக்கலைக்கோவிலை தரிசிக்கவரும் பக்தர்கள் யாவரும் இவற்றைப்பற்றி அறியவந்தால் மிகவும் நலமாக இருக்கும். என்ன... எனக்கும் ஒரு மனக்குறை இருகின்றது." என்றாள் தியோடொரா.
" சொல் அன்பே..உனக்கு என்ன மனக்குறை... என்னிடம் தெரிவித்தால் நான் தீர்த்து வைக்க மாட்டேனா என்ன?"
" இந்த மனக்குறையை உங்களால் நிச்சயமாக தீர்த்து வைக்க முடியாது அத்தான்...அன்று உங்களுக்கு தோன்றிய அந்த புனித சோஃபியாவும் அவள் மூன்று பெண் குழந்தைகளும் 
எனக்கும் தோன்றியிருந்திருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்... ஆனாலும் நான் பாக்கிய சாலி... ஏனென்றால் அன்று ஒரு நாள் அந்த வியர்க்கும் தூணில் விரல்விட்டு
வேண்டும்போது நான் புனித சோஃபியா தாயாரையும் அவருடைய மூன்று மகள்களையும் ஒரு வினாடி நேரம் தரிசினையாக பார்த்திருகின்றேன்." என்றாள் தியோடொரா.
     புனித சோஃபியாவின் ஆசீர் அளித்தபடி அந்த புனிதமான பிரம்மாண்டமான புனித ஹாகியா சோஃபியா என்னும் கலைக்கோவில் உயர்ந்து எழுந்தது. கி.பி. 532ல் ஆரம்பிக்கப்பட்ட 
இந்தகவின்மிகு தேவாலயம் கி.பி. 537ல் முடிக்கப்பட்டு அதே வருடம் டிசெம்பர் மாதம் 25 ஆம் தேதி அபிஷேகம் செய்யப்பட்டது.
   இந்த கவின்மிகு தேவாலயத்தைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்லக்கூடுமானால் மஹா பிரம்மாண்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
    இன்றைக்கும் 1500 ஆண்டுகளாக காலத்தையும் கடந்து பல இடர்பாடுகளையும் கடந்து நிற்கும் இந்தக்கவின்மிகுதேவாலயம் பற்றிய சில சரித்திர நிகழ்வுகள்.
  இந்த தேவாலயம் கி.பி.537 முதல் 1204 வரை Eastern Orthodox சபையாரிடமும்
                                   கி.பி.1204 முதல்1261 வரை Roman catholic சபையாரிடமும்
                                   கி.பி.1261 முதல்1453 வரை Eastern Orthodox சபையாரிடமும்
                                  கி.பி.1453 முதல் 1931 வரை முஸ்லீம் அரசாங்கத்திடமும்
    கி.பி.1935 முதல் தற்போதுவரை முஸ்லீம் அரசாங்க அரும்பொருட்காட்ச்சியாகவும் இருந்து வருகின்றது. இன்றைய துருக்கி எனப்படும் அன்றைய காண்ஸ்டான்ட்டி நேபிள்ஸ் சாம்ராஜ்ஜியம் ஒட்டோமான் துருக்கி எனப்படும் முஸ்லின் மன்னரின் கையில் வீழ்ந்த பிறகு அவர்காலத்தில் இந்த ஹாகியா சோஃபியா என்னும்  தேவாலயம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது. அவர்காலத்தில் மசூதியின் சின்னமாக இதன் நாலா புறமும் மினாரட்களும் அமைக்கப்பட்டன. உள்ளே பல திருக்குரான் வாசகங்களும் பொறிக்கப்பட்டன. 
       அந்த ஹாகியா சோஃபியா தேவாலயத்திலிருந்த பல கிறிஸ்த்துவர்களின் புனித அருளிக்கங்களும் கல்லறைகளும் கூட அப்புறப்படுத்தப்பட்டன. இவற்றுள் முக்கியமானது 
ஜெருசலேமிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த யேசுநாதரைக்கட்டி அடித்த கற்றூணின் ஒரு பகுதி. அது இப்போது இஸ்தான்புல் நகரில் தூய ஜார்ஜ் தேவாலயத்தில் இருகின்றது.
       இந்த புனித சோஃபியா தேவாலயத்தின் மாதிரியைக்கொண்டே பல தேவாலயங்களும் மசூதிகளும் கட்டப்பட்டன. அவற்றுள் முக்கியமானது நீல மசூதி எனப்படுவது.கட்டிட 
அமைப்பில் நீல மசூதிக்கும் ஹாகியா சோஃபியாவுக்கும் அதிகம் வித்தியாசம் தெரியாது. ஆனால் அதனுள் அமைப்புகளில் அவற்றினுடைய வண்ண மொசைக் வேலைப்பாடுகளில் 
நிறைய வித்தியாசம் தெரியும். இந்த நீல மசூதி இந்த ஹாகியா சோஃபியா தேவாலயத்தின் எதிரில் சற்று தொலைவில் இருக்கின்றது.
  இந்த கவின்மிகு தேவாலயத்தின் பெயர் கொண்ட அந்த வீரத்தாய் புனித சோஃபியா பல்கேரியா நாட்டின் பாதுகாவலியாக இருகின்றார். புனித சோஃபியா மற்றும் அவளது மூன்று 
பெண் பிள்ளைகளான் விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் ஆகியோர்களின் அருளிக்கங்கள் தற்போது ரோமில் ஒரு தேவாலயத்தில் இருகின்றது. 
   
புனித சோஃபியா அம்மாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.