Saturday, October 31, 2015

" யார் இவர்.?......புனித டென்னிஸ்."




" யார் இவர்.?......புனித டென்னிஸ்." 
" நீ யார் ?
நீ எங்கிருந்து வந்தவன்?
உன் உற்றம் என்ன ? சுற்றம் என்ன.? கொற்றம் என்ன?
உன்னைப்பற்றித்தான் பல நூறு ஆண்டுகளுக்கும் முன்பே இசையாஸ் இறைவாக்கினர் தீர்க்கதரிசனம் கூறினாறோ?
உன்னைப்பற்றித்தான் யோவான் ஸ்நானகன் மெசியா என்றுரைத்தாரோ?
உன்னைபார்க்கத்தான் கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்தனரோ? அவர்கள் கொண்டுவந்த பொருட்கள் எல்லாம் ஒரு அரசனுக்குறியதாமே?
என் தந்தையிடமிருந்து அவர்கள் எப்படி தப்பிச்சென்றார்கள் ? என் தந்தையின் ஆணையை அவர்களுக்கு முன் கூட்டியே அறிவித்தது யார் ?
முப்பது வருடங்களுக்கு முன் என் தந்தையின் ஆணைப்படி மூன்று வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டபோது நீர் மட்டும் தப்பிச்சென்றதெப்படி? அப்போது உங்களுக்கு உதவிசெய்தது யார் யார்?
நீரும் உன் தாய் தந்தையரும் எகிப்திற்கு ஓடித்தப்பித்தீர்களாமே.... மீண்டும் என் ராஜ்ஜியத்திற்கு திரும்பி வந்து எனக்குத்தெரியாமல் முப்பத்து மூன்று வருடம் வாழ்ந்ததெப்படி ?
நீர் ஊமைகளை பேச வைக்கும் முடவர்களை நடக்க வைக்கவும் குருடர்களை பார்க்கவைக்குமான மந்திர தந்திரங்களை யாரிடம் கற்றீர்?
நீ இறந்த லாசரைக்கூட உயிர்ப்பித்தாயாமே....இந்தவிதமான பயங்கரமான மாய மந்திரங்களை நீர் எங்கிருந்து கற்றீர் ?
தீர்ஸாக்கோட்டையில் என்னால் சிறை வைக்கப்பட்டிருந்த அனேக கைதிகளை என் அனுமதி இன்றி பிணைத்தொகை கொடுத்து விடுவித்தாயாமே.... அவ்வளவு பணம் உனக்கு எங்கிருந்து வந்தது ? யார் கொடுத்தது ?
நீதான் யூதர்களின் ராஜாவோ ? சென்ற வாரம்கூட உம்முடைய சிஷ்யகோடிகள் உம்மை அரசருக்குறிய ஆடம்பரத்தோடு ஜெருசலேம் நகருக்குள் அழைத்து வந்தார்களாமே?
உன்னை அரசராகவும் அறிவித்து யூதர்களின் அரசே வாழ்க வாழ்க என ஜெய கோஷம் எழுப்பினறாமே? நான் இந்த யூதேயா முதற்கொண்டு கலிலேயாவரை அரசன். எனக்குத்தெரியாமல் எனக்கு எதிராக என்னுடைய நாட்டிலேயே நீர்  அரசனாக அறிவிக்கப்பட்டீரோ? இது தேச துரோகமாகவும் ராஜ துரோகமாகவும் கருதப்படும் அல்லவா ?. இதற்கு தண்டனை என்ன தெரியுமா? மரண தண்டனைதான் அதற்கு சரியான தண்டனை.
மேலும் பலபேர்கூடிருக்கும் சமயங்களில் என்னைப்பற்றி பேசும்போது நீர் எம்மை குள்ள நரி என்று அழைத்தாயாமே. நான் உன் அரசன்.. உன் அரசனை அவமரியாதையாகப்பேச உனக்கு என்ன தைரியம். இதற்கும் உனக்கு
மரண தண்டனை கொடுக்கலாம்.
" இதோ பாரும் யேசுவே...நீர் நல்லவர் என்றும் வல்லவர் என்றும் நான் அறிவேன். நீர் குற்றமற்றவர் என்றும் நான் அறிவேன்...உன்னை விடுவிக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு.. தண்டிக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு.
எனக்குள்ள ஒரு ரகசிய வியாதியிலிருந்து என்னை குணப்படுத்தும்... நான் உன்னை விடுதலை செய்வேன்...என்ன சொல்கிறீர். நீர் ஒரு கலிலேயன் என்பதாலும் என் ராஜ்ஜியதிற்குட்பட்ட ஒரு பிரஜை என்பதாலும் போஞ்சிப்பிலாத்து  உன்னை நியாயம் தீர்க்க என்னிடம் அனுப்பி இருகின்றான். நீர் என்னிடம் அனுசரனையாக நடந்துகொண்டால் உன்னை நான் விடுதலை செய்வேன். மேலும் உனக்கு நீ நினைத்துப்ப்பார்க்கவும் முடியாத அளவுக்கு பல பரிசுகளையும்
தருவேன். நீர் இந்த யூத சாமியார்களைப்பற்றியோ அல்லது தலைமை சங்கத்தைப்பற்றியோ எதற்கும் கவலைப்படாமல் உம் பிரசங்கங்களை நிகழ்த்திக்கொள்ள யாதொரு தடையும் நான் விதிக்கப்போவதில்லை. என் ரகசிய  வியாதியை குணப்படுத்திவிட்டு உம் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் வழியைப்பார். அதுதான் உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது" என்றான் அப்போதைய கலிலேய அரசனாக இருந்த எறோதன்.
         ஆனால் எறோதனின் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் கூடுமானவரை அவனைப்பார்ப்பதே பாவம் என்றவிதத்தில் அவனிடம் முகம் கூட கொடுக்காமல் தன் பார்வையை தரையில் பதித்தபடி இருந்தார் யேசுநாதர். ஏற்கனவே தண்ணீர்தொட்டி விவகாரத்தில் ஏறோதனுக்கும் போஞ்சி பிலாத்துக்கும் கடும் பகை இருந்ததால் அவனை சமாதானம் செய்வதெப்படி என்றிருந்த ஏறோதன் யேசுநாதரைப்பற்றிய போஞ்சிபிலாத்துவின் பரிந்துரைக்கடித்தில்  இருந்தபடியே அப்படியே அதை ஆமோதித்து யேசுநாதர்மீது கொலைக்குற்றத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லை... அவனை நீரே தீர்ப்பளித்துக்கொள்ளும் என்று மீண்டும் யேசுநாதரை போஞ்சிபிலாத்துவிடமே கையளித்தான்.
மீண்டும் போஞ்சி பிலாத்து யேசுநாதரை பலவிதமான கேள்விகளால் விசாரித்தான்.இறுதியாக.....
" இந்த நசரேத்தூர் யேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான்.
" அவனை சிலுவையில் அறையும்... சிலுவையில் அறையும்... சிலுவையில் அடித்துக்கொல்லும் " என்று அந்த யூத மக்கள் வெறிக்கூச்சலிட்டனர்.
" என்ன... உங்கள் அரசனை நான் சிலுவையில் அடிப்பதா? " என்றான் போஞ்சிபிலாத்து.
" இல்லை... இல்லை... யேசு எங்கள் அரசன் அல்ல... சீசரே எங்கள் அரசர்...யேசுவை சிலுவையில் அடித்துக்கொல்லும்... சீசர் வாழ்க" என்றனர் அந்த யூத மக்கள்.
" மக்களே... நன்றாக யோசித்து சொல்லுங்கள்... முன்பு நீங்கள்தான் சீசர் எங்கள் அரசர் இல்லை என்றீர்கள்....இப்போது எப்படி மாறினீர்கள் ? " என்றான் போஞ்சி பிலாத்து.
" சீசார்தான் இனிமேல் எங்கள் அரசர்.. சீசரின் அரசை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்... யேசுவை சிலுவையில் அறையும் ...அவனை சிலுவையில் அறைந்து கொல்லும் " என்று கொக்கரித்தனர் யூத மக்கள்.
வேறுவழியின்றி போஞ்சிபிலாத்து இனியும் இந்த யூத ராபியை காபாற்றமுடியாது என்னும் முடிவுக்கு வந்தவனாய் அவரை சிலுவையில் அறைந்து கொல்ல உத்திரவிட்டான்.போஞ்சிபிலாத்து தன் நியாயாசனத்தில் அமர்ந்து தன் வரலாற்றுபுகழ்பெற்ற அந்த நியாத்தீர்ப்பை வாசித்தான். " என் அருமை மக்களே...நான் அகஸ்ட்டஸ் சீசர் காலத்தில் இந்த யூதேயா நாட்டுக்கு அவரது அரசப்பிரதிநிதியாக ஆளுனர் பதவி ஏற்றேன். இந்த நாட்டில் நான் சீசரின் அரசை நிலை நாட்டாமல் என் சொந்த நாட்டுக்கு திரும்பிப்போக போவதில்லை என்னும் வைராக்கியத்துடந்தான் இந்த நாட்டுக்கே வந்தேன். ஆனால் பலபல சோதனைகளை நான் கடந்துவந்த பிற்பாடு இந்த நாட்டுமக்கள் இப்போது சீசரின் அரசை  ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொள்கிறார்கள். இப்போதைய ரோமைய சக்கரவர்த்தியாக பதவிவகிக்கும் க்ளாடியுஸ் திபேரியன் திரு நாமம் போற்றப்படுவதாக. அவரது சார்பாக நான் இந்த யூதேயா மக்களை என் சொந்த நாட்டு மக்களாக  அங்கீகரிக்கிறேன். ஆனால் துரதிர்ஸ்ட்டவசமாக இந்த யூத மக்களிடையே குழப்பத்தையும் கலகத்தையும் ஏற்படுத்திய இந்த நசரேத்தூர் யேசுவை நான் தீர்வையிடவேண்டிய கட்டாயத்தில் இருகிறேன். பேரரசர் திபேரிய ராயனின்  ஆட்சிக்குட்பட்ட இந்த யூதேயாவில் அமைதியும் நட்ப்பும் சமாதானமும் நிகழ வேண்டுமானால் தன்னையே மெசியாகவும் கடவுளின் அவதாரமாகவும் தன்னை யூதர்களின் அரசனாகவும் பிரகடனப்படுத்திக்கொண்ட இந்த நசரேத்தூர் யேசுவை
யூத திருச்சங்க தலைவர்களின் முடிவுபடி அவருக்கு சிலுவைதண்டனைதான் பொருத்தமாக இருக்கும் என யூத பொது மக்களும் கருதுவதால் அவர்களின் நியாயமான சட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும்  உட்பட்டு அவருக்கு சிலுவைச்சாவு ஒப்பளிக்கப்படுகின்றது.
    இந்த யூதேயாவின் ரோமைப்பிரதிநிதி என்னும் முறையில் நானும் ஆமோதித்து அவனை சிலுவையில் அறைந்து உயிர்போகும்மட்டும் தொங்கவிடவேண்டுமென உத்திரவிடுகின்றேன்" என்றான்.
      ஆனாலும் இந்த நசரேயனாகிய யேசுநாதரின் உயிருக்கு சத்தியமாக என்னால் ஆபத்து வராது என்று அவன் மனைவி க்ளாடியாவுக்கு கொடுத்திருந்த வாக்குறுதி இவ்வளவு விரைவில் பொய்யாகி காற்றோடு போகும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. எனவே  அவனுக்கு இரு விதங்களில் பெரும் தலை குனிவு ஏற்பட்டது.
      ஒன்று தன் மனைவிக்கு கொடுத்திருந்த யேசுநாதரைப்பற்றிய சத்தியம் காற்றில் பறந்தது. இரண்டாவது யேசுநாதர் உண்மையில் குற்றமற்றவர் என்று தனக்கு  நன்றாகத்தெரிந்திருந்தாலும் இந்த யூதர்களை திருப்திப்படுத்த வேண்டி அவருக்கு சிலுவைச்சாவு தண்டனையை அளித்திருந்ததாலும் தன் மன சாட்ச்சிக்கு பயந்தவனாய் அவரது இரத்தப்பழி தன்மீது விழுந்து விடாதபடிக்கு ஒரு பெரும் பாத்திரம் நிறைய தண்ணீர் கொண்டுவரச்செய்து தன் கைகளை கழுவிக்கொண்டான். ஆனாலும் தன் மனதில் ஏதோ நினைத்துக்கொண்டவனாக தன் அதிகாரச்சின்னமாகிய செங்கோலை இரண்டாக உடைத்து அதை யேசுநாதர் முன்பாக போட்டுவிட்டு தன்னால் ஆனது இவ்வளவுதான் என்று யேசுநாதருக்கு காண்பித்துவிட்டு தன் முகத்தை வேறுபுறமாக திருப்பிக்கொண்டான்.
 அன்று காலையில் அப்போது மணி சுமார் பத்து. ஏறக்குறைய சுமார் இரண்டுமணி நேரத்தில் கொடுமையான கல்வாரிப்பயணம் முடிந்தபிறகு யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு உயர்த்தி நிறுத்தப்பட்டார். அவரை மானபங்கப்பட்டுத்த வேண்டும் என்னும் நோக்கதிற்காக அவரை
முழு நிர்வாணமாகவே சிலுவையில் அறைந்தனர். தன் மகன் தன் முன்பாகவும் அங்கிருந்த பல பெண்களின் முன்பாகவும் உலகத்தின் முன்பாகவும் முழு நிர்வாணமாக சிலுவையில் அறையப்பட்டு உயர்த்தப்பட்டது அவரது தாயாருக்கு  எவ்வளவு மானபங்கமும் மனவேதனையையும் அளித்தது என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. ஆனாலும் ஆண்டவா... என்மகன் மீது மிகவும் மனமிறங்கும். இந்த உலகில் கற்பும் மானமும் பரிசுத்தமும் எவ்வளவு உயர்ந்தவை என்பதை
தன் வாழ்நாளில் உபதேசித்துவந்த என் மகனுக்கா இந்த கதியை தேவறீர் அனுமதித்தீர்...இது தேவரீருக்கு ஆகுமோ...அவர்மீது இரக்கம் வையும் என்று தன் கைகளை விரித்து வேண்டினார்.
  அப்போது அந்த புதுமை நடந்தது. எங்கிருந்தோ  ஓடிவந்தான் ஒரு இளைஞன். ஜோனத்தாசு என்னும் பெயர்கொண்ட அந்த இளைஞன் இந்த உலகில் யேசுநாதருக்கு தகப்பனாக அமர்த்தப்பட்டிருந்த பிதாப்பிதா யோசேப்பின் சகோதரில் ஒருவருடைய மகன். யேசுநாதருடைய சிலுவையோடு
அவருடைய இடுப்பின்பகுதியை சுற்றிக்கட்டினான். காவலுக்கிருந்த ரோமைய வீரர்கள் யோனத்தாஸை தடுக்க முற்படுமுன்பே இவன் யேசுநாதரின் நிர்வாணத்தை மூடினான். " ஐயா இந்த நீதிமானுக்கு இதை அனுமதியுங்கள். இன்னும் சற்று  நேரத்தில் மரிக்கப்போகும் இவருக்கு கருணை காட்டுங்கள் " என்று கூறி உடனே ஓடிவிட்டான். இப்படியாக யேசுவின் நிர்வாணம் மறைக்கப்பட்டு அவர் திருச்சிலுவையில் உயர்த்தப்பட்டார். அவரது தலைமாட்டில் " இவன் யூதர்களின் அரசன் " என்று எழுதப்பட்டிருந்த பலகை அவரது மரணத்திற்கான காரணமாக பொருத்தப்பட்டிருந்தது. அப்போது மணி சரியாகப்பண்ணிரெண்டு. இந்த அநியாயமான மரணதண்டனையை இயற்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுபோல
மிகப்பலமாய் ஒரு இடி இடித்து தன் கோபக்கண்டனையை காட்டியது. ஆச்சரியம் அப்போது மழைக்கான எந்த மேகமும் இல்லை. அதைவிட ஆச்சரியம்... திடீர் திடீரென ஜெருசலேம் முழுவதும் ஆலங்கட்டி மழை பெய்தது. இது என்ன இயற்கை வினோதம்... மேகமே இல்லாமல் எப்படி இடி இடித்தது..எப்படி ஆலங்கட்டி மழை பெய்தது என மக்கள் மிகவும் குழம்பிப்போயினர்.
   யேசுநாதர் திருச்சிலுவையில் அறையப்பட்டு, உயர்த்தப்பட்டு பூமியில் நிலைநிறுத்தப்பட்ட உடன் ஜெருசலேமில் பேரரசர் சாலமோனால் கட்டிவைக்கப்பட்டிருந்த பரிசுத்த தேவாலயத்தில் பாஸ்காத்திருநாளுக்காக பலி ஒப்புக்கொடுக்கப்படவேண்டிய நேரம் இதுவென அறிவிக்க தேவாலய ஊழியன் ஒருவன் அதற்கான இடத்திலிருந்து சம்பிரதாயமான முறைப்படி கொம்பு ஊதினான். உடனே பலி ஒப்புக்கொடுக்கப்படவேண்டிய கால் நடைகள் வரிசை வரிசையாக தேவாலயத்தின் முன்பாக கொண்டுவரப்பட்டு பலி ஒப்புக்கொடுக்கப்பட்டன. ஆனால் அன்றைய தினத்தில் பாஸ்காப்பலியாக உண்மையில் ஒப்புக்கொடுக்கப்பட்டவர் யேசுநாதரே என்பதை பல யூத மக்கள் அறிந்திருக்கவே இல்லை.
   இதற்குமேலும் வானில் தோன்றிய பல அதிசயங்கள் காண்பவர் மனதில் பெரும் கிலியையும் பயங்கரத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. யேசுநாதர் திருச்சிலுவையில் உயர்த்தப்பட்ட சற்று நேரத்தில் வானத்தில் பெரும் புகை மண்டலம்  தோன்றியது. செந்நிறமான அந்த புகைமூட்டம் ஏறக்குறைய உலகம் முழுவதையும் மூடுவதுபோல படர்ந்து விரிந்தது. இந்த உலகை இருள் கவ்விக்கொண்டு வந்தது. அதுவரை பளிச்சென்று தக தகவென சுழன்றுவந்த சூரியன் தன் ஒளியை  இழந்தான்.
      பூமியின் கிழக்கிலிருந்து மிகவும் வேகமாக வெளிகிளம்பினான் சந்திரன். அன்று முழு நிலவாயிருந்தது.அதாவது பௌர்ணமி. அந்த முழு சந்திரன் வேக வேகமாக வந்து ஒலிவ மலைக்கும் மேலாக வந்து நின்றது. சற்று நேரத்தில்
பழுக்காக்காய்ச்சிய தங்ககத்தாம்பாளம்போன்று சுழன்ற அந்த சந்திரன் மேலே ... உயரே கிளம்பி பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நின்றது. இந்த விசித்திரம் நடந்திருக்க கூடிய சாத்தியக்கூறே இல்லை... இப்படி ஒரு நிகழ்வு பௌர்ணமி
நாளில் நடக்கவே முடியாது. சூரியனும் தன்னொளி கொடாமல் சந்திரனும் சூரியனின் கதிர்களை தடுத்ததால் சற்றே கிடைத்துவந்த ஒளியும் தடைபெற்றதால் இந்த பூலோகம் இருண்டுகொண்டே வந்தது. இந்த இருட்டு மேலும் மேலும்  இருட்டை அதிகரித்தது.
      இந்த முழு சூரிய கிரஹணமே யேசுநாதரின் கொடிய மரணத்துக்கு சாட்ச்சியாக அமைந்தது. நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு நடைபெற்ற இந்த திடீர் இருட்டினால் உலகமே தடுமாறியது. கால்நடைகள் செய்வதறியாது திகைத்து கத்த  ஆரம்பித்தன. பறவை இனங்கள் அவசரம் அவசரமாக தத்தம் கூட்டிற்கு திரும்ப எத்தனித்தன. ஆனால் அவற்றிற்கு வழிதெரியாமல் போனதால் அந்த உயர்ந்த ஜெருசலெம் நகர மதில்களிலும் கட்டிடங்களின் மீதும் மோதி கீழே விழுந்தன.
பல மனிதர்கள் இந்த பட்ச்சிகளை தங்கள் கைகளிலேயே பிடிக்கும் அளவுக்கு அவைகள் தடுமாறின. ஆனால் ஜெருசலேம் நகர வாசிகள் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குறியதாய் அமைந்தது.
" இந்த யேசுவின் ரத்தப்பழி எங்கள் மீதும் எங்கள் தலைமுறை மக்கள் மீதும் விழட்டும் " என்று வெறிகூச்சல் போட்ட அந்த மக்களுக்கு தாங்கள் தங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரும் தவறு செய்துவிட்டோம் என்னும் பயங்கர உணர்வு  தலைதூக்கியதும் பலர் " ஓஓஓஓ " என்று கத்திக்கோண்டும்... ஆண்டவா... எங்களை மன்னித்துக்கொள்...ஏதும் புறியாமலும் யேசுநாதர் யார் என்றும் அறிந்துகொள்ளாமலும் செய்த பாவம் இது..எங்களை அந்த நசரேயாகிய யேசுநாதரின் ரத்தப்பழியினின்று காப்பாற்றி ரட்ச்சியும் என்று மாரடித்துப்புலம்பி அழுதார்கள்.
      அதுவரை வீராவேசமாக யேசுநாதரை வெறுத்துப்பேசிவந்த பரிசேயரும் சதுசேயரும் தேவாலயத்தின் தலைமைச்சங்க உறுப்பினர் பலரும் இயற்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரத்தை உணர்ந்தவர்களாய் " ஆம்... நாம் பெரும் தவறு செய்துவிட்டோம். எல்லாம் வல்ல இறைவா எங்களை இந்த பயங்கரத்திலிருந்து காப்பாற்று " என்று கல்வாரி மலையிலிருந்து இறங்கி தேவாலயத்தில் தஞ்சம்புக ஓடினார்கள். ஆனால் அங்கும் விதி அவர்களை துறத்தியது. ஆனால் தேவாலயத்தின் திரைச்சீலை  பயங்கரமாக ஆடி எப்போதும் தேவ சந்நிதியில் எரிந்துகொண்டிருக்கும் ஷெகினா குளோரி எனப்படும் தீச்சுவாலையை அணைத்தது. தேவாலயத்தை இருள் கவ்வியது. பாஸ்க்கா பலி ஒப்புக்கொடுக்க வந்திருந்த பலரும் இந்த தேவாலயத்தில்
ஏதோ நடக்கின்றது என்று உணர்ந்தவர்களாய் பலி செலுத்துவதையும் நிறுத்திவிட்டு தேவாலயத்தைவிட்டு வெளியேறினர். இதைக்கண்ட தலைமை குருக்கள் அன்னாஸும் கைப்பாஸும் தேவாலயத்தில் பலப்பல மனோராக்களைக்கொளுத்தி  [ 7 கால் மாட விளக்கு] இருளைப்போக்கி," மக்களே திரும்பி வாருங்கள். இப்போது தோன்றியுள்ள இருள் இயற்கையில் தோன்றும் ஒரு நிகழ்வுதான்... யாரும் பயப்பட வேண்டாம்... திரும்பிவாருங்கள் என்று தங்களை வீரப்புலிகளாக  காட்டிக்கொண்டாலும் தங்கள் உள் மனத்தில் எல்லாம் இந்த கலிலேயனால் வந்த வினை... அவருடைய ரத்தம் நம்மை பலி கேட்கிறது " என்று கூறிக்கொண்டார்கள். அவர்கள் தனியாக இருக்கப்பயந்து எப்போதும் கூட்டத்தோடு கூட்டமாகவே
பல இடங்களில் தென்பட்டார்கள். ஆனால் தலைமைக்குரு அன்னாஸ் தன் மன சாட்ச்சிக்குப்பயந்து தேவாலயத்தின் மூலை முடுக்குகளில் அவ்வப்போது மறைந்துகொள்வார்.
      இந்த இயற்கையின் பயங்கரம் ரோமர்களையும் விடவில்லை. போஞ்சிபிலாத்து தேவாலயத்தின் முக்கிய பிரமுகர்களை அழைத்து இதன் காரணம் கேட்டான். அவர்கள் இந்த நிகழ்வு இயற்கையில் தோன்றும் ஒரு சாதாரண நிகழ்வே தவிர வேறில்லை என்றனர். ஆனாலும் போஞ்சிபிலாத்தின் உள் மனது அவனை சும்ம விடவில்லை. போதாக்குறைக்கு சாதோக்கு என்னும் தலைமை சங்க உறுப்பினர் " போஞ்சி பிலாத்து அவர்களை... உண்மையில் நீங்கள் தான் குற்றவாளி . நீங்கள்தான் யேசுநாதரைக்கொல்ல உத்திரவிட்டவர்.... அவர் குற்றமற்றவர் என்று உங்களுக்கு நன்றாகத்தெரிந்திருந்தும் அவரை அநியாயமக சிலுவைசாவுக்கு கையளித்தீர்கள். இதோ பாருங்கள் இயற்கையும் அவருக்கு சான்று அளிக்கிறது." என்றார்.
  அதற்கு பிலாத்து," ஐயா சோதோக்கு அவர்களே... இவனை சிலுவையில் அறைந்து கொல்லும் என்று சொன்னது உம்முடைய மக்கள் தானே....நான் என்ன உங்கள் ஜாதிக்காரனா... அல்லது உங்கள் இனத்தவனா... அல்லது உங்கள் நாட்டினனா? நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள்.. அதனால் நான் கையளித்தேன். அவ்வளவுதான்... இதில் நான்தான் அவரைக்கொண்றேன் என்பதில் என்ன நியாயம் இருக்கப்போகின்றது?" என்றான். ஆனாலும் தன்னெஞ்சறிவது பொய்யற்க என்பதுபோல தன் மனசாட்ச்சிக்கு பயந்தவனாய் தன் மனைவி க்ளாடியாவை அழைத்து " யேசுநாதரின் இரத்தப்பழி என்மீது விழாதபடிக்கு நான் கையை கழுவிக்கொண்டேன் . என்றாலும் இதிலிருந்து நான் முற்றிலும் விடுவிக்க தன் நாட்டு ரோமைய தேவர்களுக்கும் கிரேக்க தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்து பலிகொடுக்க ஏற்பாடு செய் " என்று கேட்டுக்கொண்டான். இந்த நேரத்தில் தன்னை யாரும் வந்து தொந்திரவு செய்யாதபடிக்கு தன் அரண்மனை கதவை இறுக சாத்திக்கொண்டு தன் இஷ்ட தெய்வமான பான் கடவுளுக்கு பூஜையை ஆரம்பித்தான்.
        ஆனால் அவனுடைய இஸ்ட்ட தெய்வமான பான் என்னும் கிரேக்க தெய்வம் வாயே திறக்காதபடிக்கு அதன் நிலை மிகப்பரிதாபமாக மாறிப்போய் இருந்தது. பான் என்னும் கிரேக்க தெய்வம் மனித முகமும் ஆட்டுத்தலையும் இடுப்புவரை மனித உடலும் அவனுடைய கைகளும் கால்களும் ஆட்டினுடையதைப்போலவும் இருக்கும். யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட உடன் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்ததல்லவா ... அந்த நாளில் சூரியனுக்கு மிக அருகில் இருந்தது மேஷ ராசிக்கான நட்ச்சத்திரக்கூட்டம். [     இயேசுநாதர் ஒரு முறை தன் சிஷ்ய கோடிகளுடன் பிலிப்பு செசாரியாவிலுள்ள பனியாஸ் என்னும் ஊரில் குகைகள் பல கொண்டதும் அருவிகள் சூழ்ந்த இடமுமான இடத்தில் தன் தலைமை சீடரை ஒரு குகையின் வாயிலில் நிறுத்தி," இராயப்பா.... நீ ராயாய்...[ பாறையாய் ] இருமின்றாய் இந்தப்பாறையின்மீது என் திருச்சபையை கட்டுவேன்....நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளாது " என்றார். யேசுநாதர் எப்போது இந்த பனியாஸ் என்னும் இடத்திற்கு வந்தாரோ அப்போதே அங்கே கோயில்கொண்டிருந்த இந்த பான் என்னும் கிரேக்க தெய்வம் தன் சஹாக்களுடன் ஓடி மறைந்துவிட்டது.
   அன்றில்இருந்தே அதற்கான பூஜைகள் யாவும் அங்கே நடக்கவில்லை. பான் தெய்வம் அது சென்று வாழும் இடமாக இந்த மேஷ ராசிக்கூட்டத்தில் தன் அரியாசனத்தை அமைத்துக்கொண்டது. யேசுவின் சிலுவையின் பாடுகளின்போது அது  தன் சக்த்தியை முற்றிலுமாக இழந்தது.
     போஞ்சிபிலாத்தின் மனைவி க்ளாடியா தன் கணவனை அழைத்து," நான் நேற்று கண்ட கனவு பலித்துவிட்டது...இனிமேல் உம்முடைய நிலை மிகவும் மோசமாகும்... இப்படி ஒரு நிலை வரக்கூடாதென்றுதான் நான் இன்று காலையிலேயே உம்மை எச்சரித்தேன். அவருடைய உயிருக்கு உம்மால் எவ்வித அபாயமும் வராதென நீர் எனக்கு கூறியதால் நான் சமாதானமானேன். ஆனால் நீர் எனக்கு கொடுத்திருந்த சத்தியத்தை காற்றில் பறக்கவிட்டு அவரை சிலுவையில் அறைந்து  கொல்ல உத்திரவிட்டீர். அதன் பலனை இப்போதும் எப்போதும் அனுபவிப்பீர். இப்போது அவரது சாபம் உம்மை பிடித்தாட்டுகின்றது. இந்த பான் என்னும் கிரேக்க தெய்வம் உம்மை காப்பாற்றாது. நீர் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதான்
ஆக வேண்டும்" என்றாள். இருப்பினும் தன் கணவன்மீது யேசுநாதர் மிகவும் இரக்கம்காட்ட வேண்டும் என்று அழுது மன்றாடினாள். " ஆண்டவரே தேவரீர் என்கணவன் அறியாமல் செய்த இந்த பிழையை மன்னித்து அருள்வீராக என்று கல்வாரி  திசை நோக்கி கைஎடுத்து கும்பிட்டாள்.
      அவ்வாறே அந்த யெருசலேம் நகர மக்கள் பலரும் இயற்கையின் இந்த பயங்கர இருட்டினால் மிகவும் பயந்தவர்களாய் தங்கள் குடும்பத்தை சேர்ந்த பலரும் யேசுநாதர் யார் என்று அறியாமலும் புறியாமலும்
" யேசுநாதரின் இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் தலைமுறை மக்கள் மீதும் விழட்டும் " என்று யேசுநாதரின் இரத்தப்பலியை தங்கள் தலைமேல் போட்டுக்கொண்ட பாவத்தை, தாங்களே தங்கள் தலைமீது வருவித்துக்கொண்ட யேசுநாதரின்  ரத்தப்பழியை தேவரீர் மன்னித்து அருள வேண்டும் " என வாய்விட்டே அலறி மன்றாடினார்கள்.
    இந்த சூழ்நிலையை தன் சிலுவையில் இருந்த பார்த்த யேசுநாதரின் மனதில் பெரும் இரக்கம் காணப்பட்டது.
      அப்போதுதான் அவர் தன் சிலுவையின்பாடுகளின்போது கூறிய முதல் வார்த்தையாவது. " பிதாவே இவர்களை மன்னியும் . ஏனெனில் தாங்கள் செய்வது என்னவேன்று அறியாமல் செய்யும் இவர்கள் பாவங்களை மன்னியும் " என்றார்.
     யேசுநாதரோடு சிலுவையில் இரு கள்வர்களும் அறையப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள்.மூத்தவன் பெயர் கிஸ்தாஸ். இளையவன் பெயர் திஸ்மாஸ். இத்தாலியில் ரோமிலிருந்து வந்திருந்த ஒரு தாய் தன்  கணவனைக்கான ஜாப்பாவுக்கு தன் மகளுடன் வந்திருந்தாள். ஊர் சுற்றிப்பார்க்க வந்திருந்த அவர்களை கிஸ்தாஸும் திஸ்மாஸும் கடத்திச்சென்று அவர்களுடைய உடமைகளை கொள்ளை அடித்தார்கள். ஆனால் கிஸ்த்தாஸ் அந்த தாயையும் மகளையும் கற்பழித்து கொலை செய்தான். இதில் அவன் தம்பி திஸ்மாஸுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் நடந்து முடிந்துவிட்ட இந்த கொள்ளைக்கும், கொலைக்குமாக இருவரும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில்
வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் யேசுநாதரோடு இவர்கள் கதையையும் முடிக்கவேண்டுமென உத்திரவாகியது. இப்படியாகத்தான் யேசுநாதர் கள்வர்களுள் ஒருவராக கருதப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார் என்னும் தீர்க்கதரிசனம்  நிறைவேறியது.
    இந்த நிலையிலும் திமிர்பிடித்த அந்த கெட்ட கள்வன்," யேசுவே....நீர்மட்டும் கடவுளின் மகனானால் நீரும் சிலுவையிலிருந்து இறங்கிவந்து எங்களையும் இந்த கொடுமையான சிலுவையிலிருந்து இறக்கிவிடு" என்றான். இதைக்கேட்ட  அவன் தம்பியும் நல்ல கள்ளனுமான திஸ்மாஸ் ," அடே துஸ்ட்டா....உனக்கு அறிவில்லை...உனக்கு கடவுள் மீது பயம் இல்லாமல் போனது எப்படி?.. நீயும் நானும் இந்த நீசமான சிலுவை தண்டனை அடைந்திருப்பது நம் நடத்தைக்கேற்ற சரியான தண்டனைதான்... அவர் என்னடா பாவம் செய்தார். நான் சிறுவனாய் இருந்தபோது எனது வெண்குஸ்ட்டத்தை குணப்படுத்திய உத்தம சீலர் அவர். அவரால் குணம் பெற்றோர் எத்தனையோ பேர்... அவர் மட்டில்  தேவதூஷணம் கக்காதே...மஹாப்பிரபூ...பாவி எங்களை மன்னியும்..நீர் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கும்போது இந்த பாவியாகிய என்னையும் நினைவு கூர்ந்தருளும் " என்றான்.
 அப்போது யேசுநாதர் சிலுவையில் பேசிய இரண்டாவது  வார்த்தையாவது, " ஆமீன்... நான் இன்று உனக்கு சொல்லுகிறேன்... நீ இன்றே என்னோடு பரலோகத்தில் இருப்பாய் " என்றார்.
    இதே நேரத்தில் போஞ்சிபிலாத்தின் நிலைமை பரிதாபத்துக்குறியதாக மாறியது. தன் மனைவியும் தன்னை வெறுத்து, தான் வணங்கிவந்த பான் தெய்வமும் தன்னைகாப்பாற்ராது என்னும் நினைப்பில் தன் அரண்மனையின் ஒருபகுதியில்  இருந்த கபாத்தா என்னும் கல்தளத்தின்மீது போடப்பட்டிருந்த நியாஸ்தலத்தை உற்றுப்பார்த்தான். அது தன்னை நோக்கி நகைப்பதுபோல உணர்ந்தான். தன் மனைவியும், தன் நீதி ஆசனமும் தன்னை வெறுப்பதை புறிந்துகொண்டவனாய்  யேசுநாதரை கட்டிவைத்து அடித்த அந்த சிறைச்சாலையையும் ஒருமுறை சுற்றி வந்தான்.
     அங்கும் அவனுக்கு அவமானமே மிஞ்சியது. அங்கு வந்த தன் அருமை மனைவி க்ளாடியா என்ன அன்பரே... இன்னும் மிச்சம் மீதி என்ன இருகிறது
என்று பார்க்க வந்தீரோ ?" என்றாள். அந்த மஹான் யேசுநாதருக்கு செய்த கொடுமைகள் எவ்வளவு என்பதை பார்த்தீர்களா..?...அவர் சிந்திய ரத்தம் எவ்வளவு என்பதை பார்தீர்களா..? அவரை மனதர் என்ற ரூபத்தில் நீங்கள் பார்க்கவே இல்லை... ஒரு மிருகத்தை போலல்லவா அவரை நடத்தினீர்கள்...இதெற்கெல்லாம் காரணம் நீர் அல்லவா?" என்றாள்.
   போதும் க்ளாடியா... போதும்... இவ்விதமாக அவர் அடிபட்டால் இந்த யூதர்கள் பரிதாபப்பட்டு அவரை விட்டுவிடுவார்கள் என்னும் எண்ணத்தில்தான் அவரை நான் கசையால் அடிப்பிக்க உத்திரவிட்டேன்.... ஆனால் ரத்த வெறிபிடித்த அந்த யூதர் கூட்டம் அவரை விடுவதாக இல்லை. அவரைக்கொல்லும்வரை அவர்கள் ஓயவில்லை... இதற்கு நானும் ஒரு காரணம்  ஆகிவிட்டேன். ஆனாலும் யேசுநாதருக்கு நான் அதிகமாகவே கொடுமைகள் இழைத்துவிட்டேன்.... என்னை மன்னித்துவிடு. " என்றான் பிலாத்து.
       பிறகு மேலும் அங்கிருக்க பிடிக்காமல் தன் அரண்மனையைவிட்டு வெறியேறி யேசுநாதருக்கு  மேலும் என்ன நடக்கிறது என்று காண கொல்கொத்தா விறைந்தான். ஆனால் இயற்கையின் கோர காட்ச்சிகளால் மக்கள் மனம் மாறி யேசுநாதரின்மீது நம்பிக்கை கொண்டவர்களாய் கலஹத்தில் ஏடுபட்டனர். அப்போது அங்குவந்த அபியத்தார்
என்னும் படைத்தலைவன் போஞ்சிபிலாத்தை தடுத்து நிறுத்தி அவனை மீண்டும் அரண்மனைக்கு திரும்பி போகச்செய்து காவலை இரட்டிப்பாக்கி கலஹத்தை முறியடித்து ஜெருசலமில் அமைதியை நிலைநாட்டினான்.
      இந்த நேரத்தில் யேசுவின் தாயார் சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் தன் மகன் யேசுவைப்பார்த்து," மகனே...உம்மோடு என்னையும் சேர்த்து எடுத்துக்கொள்ளக்கூடாதோ.... பெற்ற என் மனம் தவிக்கிறதப்பா..." என்று பேசவும் நா வராமல் துக்க மிகுதியால் ஈனஸ்வரத்தில் பேசினார். இந்த துக்கமான நேரத்தில் அவரைத்தேற்ற நினைத்த யேசுநாதர் அவரிடம் பாசமாகப்பேசினால் அவர் உயிர் உடனே போய்விடும் என்று உணர்ந்தவராய்," பெண்ணே... இதோ உம் மகன் .. நம் அருளப்பன் பாவமென்பதையே அறியாதவன்..நீர் பெற்ற பிள்ளையைப்போல் உண்மையாகவே உம்மீது பாசமாகவும் அன்பாகவும் இருப்பான்" என்றார். இது சிலுவையில் யேசுநாதர் பேசிய மூன்றாவது வார்த்தை. பிறகு தன் சீடர் அருளப்பரை
நோக்கி ," அருளப்பா... இதோ உன் தாய் " என்றார். இதுவே யேசு நாதர் சிலுவையில் இருந்த போது பேசிய நான்காம் வார்த்தை. அந்த நேரமே அருளப்பர் என்னும் அவருடைய சீடர் யேசுநாதரின் தாயாரை தன் தாயாராக ஏற்றுக்கொண்டார்.
         தன் மகன் அனைவர் முன்னிலையிலும் தன்னை அம்மா என்று அழைக்காமல் பெண்ணே என்றழைத்தது ஏன்? என்று தேவ தாயார் தன்னையே கேட்டுக்கொண்டார். இந்த கேள்வியே அவரின் உயிரை காப்பாற்றியது.. இல்லாவிட்டால் அவர்  துக்க மிகுதியால் யேசுநாதருக்கு முன்பாகவே தன் இதயம் வெடித்து இறந்திருப்பார்.
[கடவுள் அன்று ஆதாமுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி உன் வம்சாவழியில் தோன்றும் ஒரு கன்னிப்பெண் வழியாக நம் ரட்ச்சகர் தோன்றி உன்னையும் உன் மனுக்குலத்தையும் ரட்ச்சிக்க வருவார்...அந்தப்பெண் சாத்தானின் தலையை நசுக்குவாள்... போன்ற இறை வசனங்களை நேயர்கள் நினைவுக்கு கொண்டு வரவேண்டும். தான் சுதானாகிய சர்வேசுரன்... இந்த உலகிற்கு மனித அவதாரம் எடுத்து வந்திருக்கும் யேசுநாதர்...அன்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கும் பெண் நீர்தாம் என்று தன் தாயாருக்கு அவர் பிறப்பின் ரகசியத்தை வெளிப்படுத்தவே அவர் தன் தாயாரை அம்மா என்று அழைக்காமல் " பெண்ணே " என்று அழைத்தார்.]
    பரமபிதாவின் சித்தப்படி இந்த உலக மக்கள் அனைவரின் மீட்ப்புக்காக தான் தனிமைப்படுத்தப்பட்டு இன்னும் பாடுகள் பல படவேண்டும் என்று யேசுநாதர் நன்றாக உணர்ந்திருந்தாலும் அவரது மனிதாவதாரத்தில் இத்தனை கொடிய
வேதனைகள் அவரை நெருக்கியதால் இந்த கொடிய பாடுகளே இந்த மனித பாவப்பட்ட ஜென்மங்களை மீட்க்கவும் அவர்களை பெலப்படுத்தவும் துணையாக நிற்கும் என்று அறிந்திருந்தாலும் தாங்கமுடியாத வேதனை அவரது வார்த்தையாக  அவர் வாயிலிருந்து வெளிப்பட்டது. அதுதான் அவர் பேசிய ஐந்தாம் வார்த்தை," ஏலி...ஏலி..லம்மா... சபத்தானி...என்பதாகும். அதாவது என் பிதாவே... ஏன் என்னைக்கை விட்டீர்." என்பதாகும்.
    இந்த துன்பமான வார்த்தைகளும்  பரிசேயர்களின் பரிகாசத்திற்கு உள்ளாயின." அடேய்... இவன் எலியாசைக்கூப்பிடுகின்றான் " என்றான் ஒருவன்... பொறு...எலியாஸ் வந்து இவனை காபாற்றுகின்றாறா பார்ப்போம் " என்றான் இன்னும் ஒரு பரிசேயன். இந்த நேரத்திலும் இந்த பரிசேயர்களின் பரிகாசம் யேசுநாதரின் தாயாருக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.
     இந்த சூழ்நிலையில் யூதேயா மற்றும் ஜோப்பா நகரைச்சேர்ந்த முப்பதுக்கும் குறையாத நீதிமான்கள் தத்தம் குதிரைகளில் இருந்தபடியே யேசுநாதருக்கு நேர்ந்த கதியைப்பார்த்து நெஞ்சு நெக்குண்டவர்களாய்," ஓ... ஜெருசலேமே...
மகத்துவமிக்க இஸ்ராயேலின் ஆண்டவர் குடியிருக்கும் தேவாலயமே... இங்கேயா இந்த அக்கிரமம் நடக்கின்றது?. மாசற்றவரும் நீதிமானும் போதகருமான யேசுநாதருக்கா நீ தீங்கிழைத்தாய்...நீ வீழ்ந்து போவாயாக...உன்னைச்சுற்றி பகைவர் வந்து உன்னை நெருப்பால் எரித்து சாம்பலாக்குவார்களாக" என்று சபித்து சென்றார்கள்.
     வலியும் வேதனையும் ஒருபுறம்... இந்த மனிதர்களின் நன்றிகெட்டத்தனம் மறுபுறம்...இந்த இரண்டு விஷயங்களும் யேசுவின் உடலையும் மனத்தையும்
வெகுவாக கொடுமைப்படுத்தின. இந்த நிலையில் அவர் ," நான் திராட்ச்சை ரசம் பிழியப்படிவது போல பிழியப்பட்டேன்... ஆயினும் இங்கு இனிமேல் ரசம் பிழியப்படாது... என்றார்.
[ இந்த இடத்தில் நேயர்கள் ஒருவிஷயத்தை அறிந்துகொள்ள வேண்டும். முன்னொரு காலத்தில் நோவாவின் புதல்வர்களுள் ஒருவர் ஜாபெத் என்பவர் இந்த கல்வாரி மலைமீது தன் குடும்பத்தை அமைத்து இந்த இடங்களின் சுற்றருகில் திராட்ச்சை பழ சாகுபடி செய்து வந்தார்... மிகுதியான பழங்களை ஒருவித புதுவிதமான சிலுவைபோன்ற பிழியும் கருவியால் பிழிந்து சாறு சேகரித்தார். இவ்விதமாகவே யேசுநாதரும் சிலுவையில் அறையப்பட்டு அவரது இரத்தம் அனைத்தும்  பிழியப்பட்டது. இந்த வரலாற்றை நினைவு கூர்ந்த யேசுநாதர் தம்மையும் இதேபோல் சிலுவையில் பிழியப்பட்டதாக ஒப்பு நோக்கினார்.]
   தன் சரீரத்திலுள்ள ரத்தம் அனைத்தும் வெளியேற்றப்பட்டுவிட்தால் தாகம் அவரை வாட்டி எடுத்தது. இருள் சூழ்ந்த இவ்வேளையில் தனக்கு தண்ணீர் கொடுப்பதை யாரும் ஆட்ச்சேபிக்க மாட்டார்கள். எனவே யேசுநாதர்," நான்
தாகமாயிருகிறேன் " என்றார்.ஆனாலும் அவருக்கு தண்ணீர் கொடுக்க யாரும் இல்லை. " எனக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுக்க உங்களுள் ஒருவருக்காவது மனம் வராமல் போனதேன்?... அருளப்பா..நீயும் என்னை மறந்து போனாயோ?"
என்றார்.
   அருளப்பர் தன் தவறை உடனே உணர்ந்துகொண்டவராய்.." ஆண்டவரே நான் மறந்து போனேன்..இதோ ஏற்பாடு செய்கிறேன் " என்றார். " என் நெருங்கிய நண்பரும் என்னை மறந்து போயினர்.. எனக்கு ஒருவாய் தண்ணீர் கொடுக்கவும் நாதி  இல்லை என்னும் மறை நூல் வாக்கு இவ்விதமாக நிறைவேறியது. யேசுவின் தாகத்தை உணந்துகொண்ட படைத்தலைவன் அபியத்தார் உடனே காடியை ஒரு கடற்பஞ்சால் நனைத்து அதை ஈசோப்பில் பொருத்தி அதை யேசுவின் வாய்க்கு  அருகில் வைக்க யேசுவும் அதை சுவைத்தார். இவ்விதமாக யேசுவின் சிலுவை மரணத்திற்க்கு முன்பாக அவருக்கு ஏற்பட்ட கொடிய தாகவேதனையை நீக்கிய பெருமை அபியதாரை சேர்ந்தது. " என் பெயரை சொல்லிக்கொண்டு வரும் யாருக்கும்
ஒரு வாய் தண்ணீர் கொடுப்பவனும் கை மாறு பெறாமல் போகமாட்டான் " என்பது யேசுவின் அருள் வாக்கு. அபியத்தார் புறவினத்தான். பிறப்பால் அரேபியன் ஆயினும் அவன் யேசுவுக்கே அவரது மரணத்தருவாயில் ஒருவாய் தாக சாந்தி  செய்ததால் அவன் பாக்கியவான் ஆனான்.
       இந்த நேரத்தில் ஏறக்குறைய மூன்று மணியளவில் சூரிய கிரகணம் முடிந்தது. மெள்ள மெள்ள இருள் விலக ஆரம்பித்தது. சந்திரன் வானத்திலிருந்து தொப்பென கீழே விழுவதுபோல வெகு வேகமாக பூமியை நோக்கி விரைந்துவந்தான். எங்கே பூமியின்மீது வந்து மோதிவிடுமோ என்னும் அச்சத்தில் ஜெருசலேம் மக்கள் பெரிதும் கூக்குறலிட்டு அழுது மன்றாடினர்கள், பலர் மார்பில் பிழை அறைந்து கொண்டார்கள். சந்திரனும் தான் பயணித்ட்து வந்த பாதையி விட்டு விலகி தன் பாதையில் சேர்ந்தான். இந்த இடைப்பட்ட நேரத்தில் பூமியின் ஆகர்ஷண சக்த்தியும் சந்திரனின் ஆகர்ஷண சக்த்தியும் நெருங்கியதன் பலனாக பூமியில் பல பாகங்களில் கடல் பொங்கியது. சற்று நேரத்தில் எல்லாம் சம நிலைக்கு வந்தது.
தான் சுவைத்த காடியின் வலிமையால் சற்றே நனைத்துக்கொண்ட நாவினால் ," என் நாவு பேசமுடியாமல் ஓயும்போது இறந்தோரின் நாவுகள் பேசத்துவங்கும் " என்றார். இந்த பேச்சும் பரிசேயரை பரிகாசம் செய்ய வைத்தது. " இவன் தேவ  தூஷணம் கக்குகிறான் " என்றனர். இறுதியாக யேசுநாதருக்கு மரணத்தின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. அவரது காயங்கள் அனைத்திலிருந்தும் வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. அவரது மார்பு வேகமாக படபடத்தது. தான் இந்த உலகத்துக்கு வந்த வேலை மிகவும் சரியாக முடிந்துவிட்டது என்று உணர்ந்தவராய் தன் சக்தி எல்லாம் ஒன்று கூட்டி," எல்லாம் முடிந்தது. என்றார். பின் உரத்தகுரலில்," பிதாவே... உம் கையில் என் ஆவியை ஒப்படைகின்றேன்" என்று கூறி  உயிர் நீத்தார்.
         அவர் தலை சாய்ந்தது. அவர் தன் சக்தியை எல்லாம் ஒன்றுகூட்டி மேற்கண்ட விதமாக சொல்லி உயிர் நீத்தாலும் அவர் கூறியவை நல்ல கள்ளனுக்கும் யேசுநாதருக்கும் இடையே நின்றுகொண்டிருந்த அவரது
நேசத்தாயாருக்கும் அவரது சீடர் அருளப்பருக்கும் கேட்க்குமளவே இருந்தாலும் அவரது வார்த்தைகள் எவ்வளவு வல்லமையாய் இருந்ததென்றால் அவரது கடைசி வார்த்தைகள் " தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைகிறேன்" என்ற  வார்த்தைகள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்குமாய் பல முறை எதிரொலித்தது. இந்த எதிரொலியால் இந்த உலகம் என்னும் பூலோகப்பந்து முதல் வான மண்டலத்திலுள்ள அனைத்து சத்துவங்களும் பலமுறை பலமாக அதிர்ந்தன. பல  கோள்களும் கிரகங்களும் தங்கள் பதையைவிட்டு விலகி வேறு வேறு பாதையில் சென்றதன் விளைவாக பல கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு அழிந்து போயின.
    யேசுநாதர் இறந்த உடனேயே ஏற்பட்ட பூமி அதிர்ச்சியால் அவரது சிலுவை நாட்டப்பட்டிருந்த இடத்திலிருந்து பாதாளம் வரை ஒரு பெரும் பிளவு ஏற்பட்டது. இந்த பிளவின் வழியே யேசுநாதரின் ஆன்மா ஒரு ஜோதி சுடரொளி போல பாதாளத்திற்குள் இறங்கியது. இதைப்போல் ஜெருசலேமில் பல இடங்களில் பூமி அதிர்ச்சியால் பெரும் பிளவுகளும், வெடிப்புகளும் தோன்றியதால் பல கட்டிடங்கள் தலை குப்புற விழுந்தன. ஜெருசலேம் தேவாலயமும் இதற்கு தப்பவில்லை.
       யேசுநாதர் இறப்பதர்க்கு சற்று முன்பாக வரலாற்றுப்புகழ்மிக்க இந்த தேவாலயத்தின் கருவரையிலிருந்து " வாருங்கள்... இனிமேல் நாம் இங்கிருக்க வேண்டிய அவசியமில்லை..இங்கிருக்க வேண்டியவர் போய்விட்டார்.. வாருங்கள்  வெளியேறுவோம் " என்னும் சம்மனசுகளின் குறல் ஒலி அப்போது அங்கே வேண்டுதல் செய்ய வந்திருந்த மக்களுக்கு மிகத்தெளிவாக கேட்டது. அதன்பிறகு தேவாலயம் தன் ஒளியை இழந்ததுமில்லாமல் மாட்சிமையையும் இழந்து வெறுமையாகியும் போயிற்று.
                இந்த தேவாலயத்தின் முகப்பில் இரு பெரும் தூண்கள் நின்றுகொண்டிருந்தன. அவை உட் பிரகாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. தேவாலயத்தின் கருவரைக்கு முன்பாக தொங்கவிடப்பட்டிருந்த பெரும் திரைச்சீலை இவற்றுடன் சேர்த்து  கட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்த பூமி அதிர்ச்சியின்போது ஒரு தூண் பெயர்ந்து விழவே அத்துடன் இணைக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் திரைச்சீலை டர் என்று இரண்டாக கிழிந்து தேவாலயத்தின் வலப்புறம் ஒன்றும் இடப்புறம் ஒன்றுமாக
கீழே விழுந்தன. இதனால் பொதுமக்களின் பார்வைக்கு விலக்கி வைக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் பரிசுத்த கருவரை அனைவரும் பார்க்கும் வண்ணமாக தெரிந்தது. தேவாலயத்தினுள்லே பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய  அறைகளும் வெளியே தெரிந்தன. சில இடங்களில் தேவாலயத்தின் மேல் விதானங்கள் சரிந்து விழுந்தது. பல இடங்களில் சுற்றுச்சுவர் உடைந்து விழுந்தது.
        இந்த அமலியில் பலரும் தலை தெரிக்க ஓடியதால் பல கட்டிடங்கள் அவர்கள் மீதே விழுந்ததால் இறந்தோர் எண்ணிக்கை பலமாக உயர்ந்தது.
தலைமை குரு கைபாஸின் அரண்மனையில் யேசுவைப்பற்றிய விசாரணை நடந்த இடமும் யேசுவின் தலைமை சீடர் இராயப்பர் யேசுவை மறுதளித்த இடமும் பூமி அதிர்ச்சிக்கு தப்பவில்லை. அந்த இடம் மிகப்பலமாய் சேததிற்கு உள்ளானது.
" என் நாவு பேச முடியாமல் ஓயும்போது இறந்தோரின் நாவுகள் பேசும் " என்னும் யேசுவின் தீர்க்க தரிசனம் மிகச்சரியாக பலித்தது. யேசுநாதர் இறந்தபின் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியினால் பழங்கால கல்லறைகள் பல வெடித்து சிதறின. அதிலிருந்து வெளிப்பட்டனர் பல பரிசுத்த ஆன்மாக்கள். அவர்கள் அவர்கள் இறந்த காலத்தில் என்னென்னவிதமான ஆடைகள் அணிந்திருந்தனரோ அதே ஆடைகளுடன் உயிர்த்தெழுந்தனர். அவர்கள் உடல் வெளிர் மஞ்சளாய் தோன்றியது.
     தங்கள் கால் பாதங்கள் தரையில் பாவாமல் ஜெருசலேம் நகர வீீதிகளில் பவனியாக வந்தார்கள். ஸ்நாபக அருளப்பர் மன்னன் ஏறோதன் முன் தோன்றினார். " அடேய் ஏறோது... நீ கொலைகாரன்... உனக்கும் யேசுநாதரின் கொலையில் பங்கு உண்டு " என்றார். இவரைக்கண்டும் அவரது குற்றச்சாட்டிலும் உண்மை இருப்பதைக்கண்டு பயந்து தன் ஆரண்மையில் எங்கோ சென்று ஒளிந்து கொண்டான்.
       தேவாலயத்தின் கருவறைக்கும் முன்பாக பரிசுத்தவான் சக்காரியா தோன்றினார்.  தன் மகன் புனித யோவான் ஸ்நானகரைக்கொண்றவர்களுக்கும் தேவாலயத்தில் தலைமை ஊழியராக பதவி வகித்துவந்த மற்றொரு சக்காரியாசையும் கொண்றவர்களுக்கும் ": ஐயோ கேடு... ஆண்டவனின் கோபம் அவர்கள் மீது இறங்கும் "
என்றார்.
      மேலும் குழந்தை யேசுவை தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட போது வாழ்ந்துவந்த சீமோன் என்பவரும் அவருக்கு முன் நூறு வருடங்களுக்கும் முன்பாக வாழ்ந்துவந்த அவருடைய முன்னோரான சிமோன் ஜுஸ்டஸ்  என்பவரும் தேவாலயத்தின் முகப்பில் தோன்றி யேசுவின் மனிதாவதாரத்திற்கு சாட்ச்சியம் கூறி அவரது கொலைக்கு கரணமானவர்களுக்கு " ஐயோ கேடு" என்றும் கூறினார்கள்.
        திடீரென தோன்றினார் ஜெரேமியாஸ் இறைவாக்கினர்...அவர்
தேவாலயத்தின் தலைமை அர்ச்சர்கரின் ஆசனத்தில் அமர்ந்து " இதோ ஆண்டவர் நமக்கு இதுவரை அறிவித்துவந்த பழைய சட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இனி இறைவனின் புதிய சட்டங்கள் ஆரம்பமாகும் " என்றார். இப்படியாக  ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர்த்தெழுந்து யேசுநாதரின் இறைத்தன்மைக்கும் மனித தன்மைக்கும் சாட்ச்சியங்கள் கூறியதால் இதைப்பார்த்து அவர்களின் சாட்ச்சியங்களைக்கேட்ட மக்கள் பலரும் யேசுநாதரை எதிர்த்தவர்களும் கூட  தங்கள் மார்பில் பிழை அறைந்து கொண்டு யேசுவின்மீது விசுவாசம் கொண்டார்கள். இதெற்கெல்லாம் காரணமான கைபாஸையும் அன்னாஸையும் ஒருமனதாக சபித்தார்கள். " அடேய் நிர் மூடா... உன்னால் அல்லவோ நாங்களும் யேசுவை
சிலுவை அறைந்த பாவத்திற்கு ஆளானோம். மாசற்ற அவரது ரத்தத்தை சிந்தவைத்த பாவத்திற்க்கும் ஆளானோம். உன்னைப்பின்பற்றியே " இவன் இரத்தப்பழி எங்கள் மீதும் எங்கள் தலை முறைமீதும் விழட்டும் என்று சொன்னோமே....  இந்த ரத்தப்பழியிலிருந்து யேசுநாதர் எங்களை காப்பாற்றுவாறாக... ஆனால் உனக்கும் உன் சந்நதிகளுக்கும் ஐய்யோ கேடு " என்று மண்ணை வாறி தூற்றி இறைத்தார்கள்.
      பலர் தாங்கள் செய்த பாவத்திற்க்கு பரிகாரமாக தங்கள் தலைமீது
தூசியையும் சாம்பலையும் அள்ளிப்போட்டுக்கொண்டார்கள். யேசுநாதா... அறியாமல் செய்த எம்பிழை பொறுத்து எங்களை காத்து இரட்சிப்பீராக " என்று மாரடித்துக்கொண்டும் அழுதுகொண்டும் தங்கள் இல்லம் நோக்கி நடந்தார்கள்.
அன்று மாலைக்குள்ளாகவே உயிர்த்தெழுந்த பரிசுத்த ஆன்மாக்கள் தங்களுடைய கல்லறைகளுக்கு திரும்பினர். பலர் தங்களுடைய கல்லறையை விட்டுவிட்டு வேறு வேறு இடங்களில் மறைந்தனர்.
       வானத்தின் சகல விதமான சத்துவங்களும் பலமாக அசைக்கப்பட்டதால் மேஷ ராசிக்கூட்டத்தில் தன்னை அரசானாக அறிவித்துக்கொண்டு அதன் சிங்காதனத்தில் அமர்ந்திருந்த பனியா என்னும் ஆட்டுக்கிடாத்தலையும் மனித உடலும்  கொண்டிருந்த கிரேக்கர்களின் தேவன் பனியா அவன் சகாக்களுடன் அவன் சிங்காதனத்திலிருந்து புறம்பே தள்ளப்பாட்டான். அவனும் அவன் சகாக்களும் பூமிக்கு வந்து தன்னுடைய இடமாகிய பனியாஸ் என்னும் இடத்திலுள்ள ஆலயத்தின் குகைகளில் புகுந்தார்கள். ஆனால் அப்போதுதான் யேசுநாதரின் ஆன்மா இந்த பூஉலகத்தின் பாதாளத்தில் இறங்கி இருந்தபடியால் அவனால் ஊள்ளே நுழைய முடியவில்லை.
   அவனை கபிரியேல் அதிதூதர் தடுக்கவே இந்த பனியா  தேவனுக்கும் கபிரியேல் அதிதூதருக்கும் பெரும் போர் மூண்டது. ஆனால் வெகு விரைவில் பனியா தேவன் கொல்லப்பட்டுவிட்டான். மிக்கேல் அதிதூதார் பாதாளத்திலிருந்த லூசிபேரை கொல்ல எத்தனிக்கையில் யேசுநாதரின் ஆன்மா அவரை தடுத்து, " பொறு...அவனை அழிக்காதே... இந்த பூலோகத்தில் அவனுக்கு இன்னும் வேலை இருகின்றது.. இன்னும் ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு அவன் இங்கேயே கிடக்கட்டும். அதுவரை அவனை இந்த இருண்ட  பாதாளத்தில் சிறை வை " என்றார். அதன்படியே லூசிபர் பாதாளத்தின் அடி ஆழத்தில் அமிழ்த்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்..
     யேசுநாதரின் ஆன்மா பாதாளங்களில் இறங்கிய நொடியில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியானது அங்கிருந்து கிளம்பி பூலோகத்தின் பல இடங்களுக்கும் வேகமாகப்பரவியது. இந்த அதிர்ச்சியினால் லெபனானுக்கும் கலிலேயாவுக்கும் இடையில்  இருந்த ஹெர்மான் என்னும் உயர்ந்த மலையின்மீது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் அந்த பனி மலையின் உயர்ந்த மலைமுகடுகளிலிருந்த பனிப்பாறைகள் நகர்ந்து பெரும் பனிச்சரிவை ஏற்படுத்தின. அதனைத்தொடர்ந்து அந்த கலிலேயாக்கடலில் ஏற்பட்டது பெரும் வெள்ளப்பெருக்கு. இந்த திடீர் வெள்ளப்பெருகினால் அந்த கடலின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ள பெரும் மலையின்மீது திடீர் திடீரென கடல் அலைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அந்த
பெரும் மலையும் அதன் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் பெரும் விரிசல் கண்டது. இதனால் அந்த மலையில் பல இடங்களில் பெரும் பிளவுகள் ஏற்படுத்தப்பட்டு கடல் நீர் குகைகள் ஏற்பட்டன. மேலும் பல இடங்களில்  அந்த மலையின் பாறைகள் நகர்ந்து அதன் போக்கே மாறிவிட்டன. இத்தகைய இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளை நாம் இன்றும் காணலாம்.
         இந்த கலிலேயாக்கடல் பொங்கியதால் அதன் வெள்ளப்பெருக்கு கெர்கீசாவில் அதிகம் தென்பட்டது. இந்த இடத்தில்தான் யேசுநாதரால் விரட்டப்பட்ட பல அசுத்த ஆவிகள் பன்றிக்கூட்டத்தில் புகுந்து இந்தக்கடலின் வெளிப்பகுதியில் புகுந்து அந்த இடத்தை பெரும் சதுப்பு நிலமாக மாற்றி இருந்தன. யேசுநாதரின் ஆன்மா பாதாளங்களில் இறங்கி இருந்த படியால் அந்த அசுத்த ஆவிகள் மீண்டும் அங்கிருக்க முடியாமல் வெளியே வந்து இந்த கலிலேயாக்கடலில் பெரும் கூக்குறலிட்டுக்கொண்டு கடலை தாறுமாறாக சிதறடித்துக்கொண்டு அதனுட்புகுந்தது காண்போர் மனதில் பெரும் பயங்கரத்தை ஏற்படுத்தியது.
    அடுத்தது கெராசிம்... இந்தப்பட்டிணத்தில் ஏற்பட்ட பயங்கரம் வார்த்தையில் சொல்ல முடியாததாக இருந்தது. பல உயர்ந்த கட்டிடங்கள் தலை கீழாக பெயர்ந்து விழுந்தன. பாஸ்காப்பண்டிகைக்கு எருசலேம் சென்றிருந்த பல பரிசேயர்கள்  யேசுவை பல முறை பல இடங்களில் எதிர்த்தவர்கள் பண்டிகை முடிந்து தங்கள் வீடுதிரும்புவதற்குள் அவர்கள் வீடுகள் தத்தம் பெண்டாட்டி பிள்ளைகளுடன் சேர்ந்து தகர்ந்து போயிருப்பதைக்கண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு  அழுதார்கள்.
       இதே போல பெய்த்சாயித்தா பட்டிணதிற்க்கும் நடந்தது." ஐய்யோ பெய்த்சாயித்தா...நீ வானம் மட்டும் உயிர்வாயோ...அல்லது தரைமட்டும் வீழ்வாயோ... உன்னிடத்தில் செய்திருந்த அருங்குறிகளை தீர், செடோன் போன்ற  இடங்களில் செய்திருந்தால் அங்கிருந்த மக்கள் இந்நேரம் கோணி உடுத்தி தங்கள் பாவப்பரிகாரம் செய்திருப்பார்கள்... ஆனால் உனக்கு ஐயோ கேடு " என்று யேசுநாதர் இந்த வணங்காக்கழுத்துள்ள மக்களை ஒரு முறை சபித்திருந்தார்.
    அந்த சாபம் இப்போது பலித்தது. அந்த பட்டிணத்தின் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் அனைத்தும் தலைகுப்புற கீழே விழுந்து தவிடு பொடி ஆனது. இந்த இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தவர்கள் பலர். " ஏது...ஏது... இவருடைய பேச்சு  மித மிஞ்சி போகிறது... நாம் உண்பதற்கு இவர் எவ்வாறு தன் சதையை எவ்வாறு கொடுக்கக்கூடும். நாம் குடிப்பதற்கு இவர் தன் ரத்தை எவ்வாறு கொடுக்க முடியும்.. அல்லது நம்மால்தான் இவருடைய சதையை உண்ணவோ அல்லது அவரது ரத்தத்தை குடிக்கவோ முடியுமோ... இது சரிப்பட்டு வராது " என்று அவர்மட்டில் இடறல் பட்டு அவரை விட்டுச்சென்ற அனேக சீடர்கள் இந்த பெய்த்சாய்த்தா பட்டிணத்தை சேர்ந்தவர்களே.     யேசுநாதரால் சபிக்கப்பட்ட இந்த பட்டிணம் இன்றுவரை அதன் இடிபாடுகளுடன் அப்படியே இருகின்றது.
       யேசுநாதரின் ஆன்மா பாதாளங்கள் இறங்கிபோது ஏற்பட்ட பூமி அதிர்ச்சி அவர் சொந்த ஊரான் நசரேத்திலும் ஏற்பட்டது. " ஆண்டவரின் ஆவி என் மேலே... ஏனெனில் அவர் என்ன அபிஷேகம் செய்துள்ளர் என்று பிரசங்கம் நிகழ்த்திய  தேவாலயம் பெரும் ஆட்டம் கண்டது. அதன் பெரும் தூண்கள் பல சரிந்து விழுந்தன.[ இப்போதும் அதன் இடிபாடுகளை நாம் காணலாம்.] இந்த ஊரின் பரிசேயர்கள் யேசுவை அளவுக்கு அதிகமாக எதிர்த்தனர். இதனாலேயே யேசுநாதர் மனம்  வெறுத்து தீர்க தரிசிகளுக்கு தன் சொந்த ஊரில் மதிப்பில்லை என்றார். இதனால் கோபம் கொண்ட அந்த பரிசேயர்கள் அவரை அருகில் உள்ள ஒரு குன்றிற்கு தள்ளிச்சென்று அவரை கொல்லப்பார்த்தார்கள். ஆனால் அவர் அவர்களிடமிருந்து மறைந்து போனார். அந்த மலையும் இப்போது பெரும் விரிசல் கண்டது.
     அடுத்து சமாரியாவின் தீர்சாக்கோட்டை. இந்தக்கோட்டையில் தான் யேசுநாதர் ஏரோதரசனால் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த பலரை பெரும் பிணைய தொகை கொடுத்து அவர்களை சட்ட ரீீதியாகவே விடுவித்தார்.  இந்தக்கோட்டையும் பெரும் விரிசல் கண்டது. அதன் பெரும் நுழைவு வாயில்கள் பெரும் சப்தத்தோடு கீழே விழுந்து அதன் மதில் சுவர்கள் யாவும் கீழே விழுந்து நொறுங்கின.
       யேசுநாதர் இறந்த போது ஏற்பட்ட பூமி அதிர்ச்சி ஆசியாவின் பல இடங்களிலும் உணரப்பட்டது. அவை காபூலில் கூட மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியது. எபேசுப்பட்டிணத்திலும் இன்னும் சற்றே தொலைவில் கிரீசிலும் அதன் தாக்கம் பெரும்  சேதத்தை ஏற்படுத்தியது.
      கிரீஸில் ரோமர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கிரேக்க தேவாலயங்கள் பெரும் விரிசல் கண்டு காலப்போக்கில் தலைகுப்புற விழுந்தன.
     இயேசுநாதர் இறந்த அன்று அதாவது கி.பி. 33 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி எப்பேசுப்பட்டிணத்தில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் டயோனிஸ் என்னும் வான சாஸ்த்திரியும் பொலிகார்ப் என்னும் வேத சாஸ்த்திரியும்  ஆவர்.
" ஐய்யா வான சாஸ்த்திரியாரே... இன்றைய தினத்தில் ஏற்பட்டுள்ள இந்த சூரிய கிரஹணத்தைப்பற்றி நீர் என்ன நினைகின்றீர்"
" ஐய்யா வேத சாஸ்த்திரியாரே...இந்த சூரிய கிரஹணத்தைப்பற்றி உம்முடைய வேத ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது"
" ஐய்யா வான சாஸ்த்திரியாரா... எனக்கு வேத ஆராய்ச்சியில் சிறிதே ஞானம் உண்டு. நான் மெய்ப்பொருளைப்பற்றியே ஆராய்ச்சி செய்கிறேன். ஆனால் எனக்கு மெய்ப்பொருளைப்பற்றிய ஆதார நூல்கள் இன்னும் கிடைக்கவில்லை.  எதையும் நம்ப முடியவில்லை. நம்புவதற்குத்தகுந்த ஆதாரங்களும் இல்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை."
" ஐய்யா வேத சாஸ்த்திரியாரே..எனக்கு வான சாஸ்த்திரங்கள் நன்றாகத்தெரியும். இன்று நடந்திருக்கும் சூரிய கிரஹணம் ஒரு முழு சூரிய கிரஹணம் என்றே சொல்லலாம். அதிலும் இன்றைய சூரிய கிரஹணம் போல இதுவரை என்றாவது  இதற்க்கு முன்னால் நடந்திருக்குமோ என்பதும் சந்தேகம் தான். நானும் இதற்கு முன்னால் முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் வானில் தோன்றிய ஒரு வால் நட்ச்சத்திரத்தை ஆராய்ந்திருகின்றேன். அதைத்தொடர்ந்து உலகில் ஒரு பெரும் சக்கரவர்த்தி தோன்றுவார் என்பது என் கணிப்பாக இருந்தது. அதே நேரத்தில் வானத்தில் ஒரு மாது கையில் ஒரு ஆண் குழந்தையை வைத்திருப்பதுபோல அன்றைய ரோமைய சக்கரவர்த்தி அகஸ்ட்டஸ் சீசர் பார்த்ததாக ஒரு
சரித்திரக்குறிப்பு சொல்லியதால் நானும் அதை நம்பினேன். என் கணிப்புபடி வானில் தோன்றிய அந்த மாதின் ஆண் குழந்தையே அகஸ்டஸ் சீசருக்குப்பிறகு உலகில் தோன்றிய உலகமஹா சக்கரவர்த்தியாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் இன்று தோன்றியுள்ள இந்த முழு சூரிய கிரஹணம் என்ன சேதியை கொண்டுவரும் என்பதும் போகப்போகத்தான் எனக்கு புறியும். காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை."
     ஆனால் இதே நேரத்தில் வானில் ஒரு பெரும் இருள் உண்டாயிற்று.
" ஐய்யா வான சாஸ்த்திரியாரே...இதென்ன திடீரென்று இருள் பரவுகின்றது. இப்போது மணி மாலை நான்குதானே ஆகிறது. இதற்கு காரணம் சொல்ல முடியுமோ?" என்றார் பொலிகார்ப் என்னும் வேத சாஸ்த்திரியார்.
" பொறும் பொலிகார்ப்...இது இயற்கையானதல்ல... அதோ கரும் மேகக்கூட்டம்போல் தென் மேற்கு திசையிலிருந்து வருவது என்னவாக இருக்கும்...கவனமாகப்பாரும். கண்களை கூர்மையாக வைத்துக்கொண்டு நடப்பதை பாரும் " என்றார்  டயோனிஸ்.
  அதே நேரத்தில் பெரும் கருமேகக்கூட்டம்போல வானில் சிறகடித்துப்பறந்து வந்தன அசுத்த ஆவிகள். பெரும் வௌவால்கள்...பெரும் ஆந்தைகள்போல வடிவமெடுத்து பெரும் கூச்சலிட்டுக்கொண்டு காண்போர் மனதில் பெரும் கிலியை  ஏற்படுத்திக்கொண்டு சூரியனின் செங்கதிர்களை மறைத்தபடி எங்கும் இருளைப்பரப்பிக்கொண்டு வந்தன. " தொலைந்தான் எங்கள் தலைவன் பான் என்னும் தேவன்...உயிருள்ள கடவுளாம் யேசுநாதரின் ஆணையின்படி கபிரியேல் என்னும்  வானதூதன் எம் தலைவனை கொன்றார்... உயிருள்ள ஆண்டவனின் சித்தப்படி மனிதாவதாரம் எடுத்துவந்த யேசுநாதர் இன்று இறந்தார். அவர் இறந்து பாதாளத்தில் இறங்கியதால் அங்கிருந்த எம் தலைவன் பனியாஸ் கொல்லப்பட்டார்...
யேசுநாதரின் கட்டளைப்படியே நாங்கள் இப்போது கடலில் மூழ்கப்போகிறோம்" என்று அலறியபடி வெகு வேகமாக வடக்குதிசை நோக்கி சென்றன. இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அத்தனை அசுத்த ஆவிகளும் அருகில் இருந்த கடற்கறைப்பட்டிணமான நிகேயா என்னுமிடத்தில் சரேலென கடலில் மூழ்கியதால் அந்த மத்திய தரைக்கடலில் பல ஆழிப்பேரலைகள் தோன்றி அருகிலிருந்த அத்தனை கடற்கரைகளையும் மிகுந்த சேதத்திற்குள்ளாக்கின.
      இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து எப்பேசுப்பட்டிணத்தில் பல கிரேக்க தேவாலயங்கள் யாரோ வெடி வைத்து தகர்த்தாற்போல் டமேர்.. டமேர்..என்னும் சத்தத்துடன் கீழே விழுந்து சிதறின. அவற்றுள் மிகுந்த சேதத்திற்கு உள்ளானது  அப்ரோடிசா என்னும் கிரேக்க தேவாலயம். இந்த தேவாலயத்தின் பெண் தெய்வம் ஆயிரம் மார்புடையாள் எனப்படும் காம தேவதை. மேலும் எப்பசுப்பட்டிணத்திலிருந்து வெகு தூரத்திலிருந்த நாக தேவனின் ஆலயம் இரண்டாகப்பிளந்தது.
     அதிலிருந்த நாக தேவன் என்னும் நெருப்பைகக்கும் அரக்கப்பாம்பு ஒன்று வெகு கோபாவேசமாக வெளிகிளம்பிவந்து வானில் வட்டமடித்தது.
இதைக்கண்ட டயோனிஸ் என்னும் வான சாஸ்த்திரியும் பொலிகார் என்னும் வேத சாஸ்த்திரியும் திடுக்கிட்டுப்போய், " ஆரம்பித்துவிட்டது... இனிமேல் எல்லாம் ஆரம்பமாகிவிடும்...இந்த அரக்கப்பாம்பு யாரைக்கண்டு பயந்ததோ நான் அறியேன்.. அது ஒருக்கால் அந்த யேசுநாதரைப்பார்த்து பயந்திருக்கலாம்...யாராவது வந்து இந்த அரக்கப்பாம்பின் கொட்டத்தை அடக்கி அதைக்கொல்லாவிட்டால் நமக்கு அழிவு நிச்சயம் " என்றார்.
" ஐய்யா வான சாஸ்த்திரியாரே..உமக்கு யேசுநாதரைப்பற்றி ஏதாவது தெரியுமா? இந்த அசுத்த ஆவிகள் யேசுநாதரைப்பற்றி கூறியதாலே நமக்கு அவர் பெயர் என்ன வென்று தெரிந்தது. இந்த அரக்கப்பாம்பின் தோன்றலும், பான் என்னும் பனியா  தேவனின் மரணமும் அசுத்த ஆவிகளின் வர்த்தமானங்களும் இயற்கையின் சீற்றமும் நமக்கு விடுக்கும் செய்தி யாது ? இதை நீவீர் உமது வான சாஸ்த்திரத்தை வைத்து எனக்கு விளக்க முடியுமோ?" என்றார் பொலிகார்ப்.
" பொலிகார்ப் அவர்களே... இயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த வித்தியாசமான நிகழ்வுகள் இந்த உலகிற்க்கு வந்துள்ள ஒரு பெரும் மகான் மறைந்ததை சுட்டிக்காட்டுகின்றன...அந்த மகான் தான் யேசுநாதர் என்று என்னால் கூறமுடியும்.  ஆனால் யேசுநாதர் யார் என்று என்னால் இப்போது கூற முடியாது. எனக்கு மட்டும் ஆண்டவன் மீண்டும் ஒரு மனிதப்பிறவி கொடுத்தால் நான் அப்போது நிச்சயமாக கூறுவேன் யேசுநாதர் யார் என்று" என்றார்.
[ யேசுநாதர் இறந்தபின் சில வருடங்களுக்குப்பிறகு யேசுநதரின் தாயார் மரியாவும் அவருடைய அன்புக்குறிய சீடர் சுவிஷேஷகரான யோவான் என்னும் அருளப்பரும் இந்த எப்பேசுப்பட்டிணத்தில் வந்து குடியேறினார்கள். ஆண்டவர் அருளால் வேத சாஸ்த்திரியான் பொலிகார்ப் யேசுநாதரைப்பற்றி அறிந்துகொண்டு யோவானின் சீடரானார். அவரது எண்பதாவது வயதில் ஸ்மிர்னா என்னும் பட்டணத்தில் யேசுநாதருக்கு சாட்ச்சியாக தன் உயிரை அர்ப்பணித்தார். அவரை உயிரோடு கொளுத்த கட்டளை பறந்தது. ஆனாலும் நெருப்பு அவரை ஒன்றும் செய்யவில்லை. எனவே தீநாக்குகளுக்கு உள்ளே இருந்த அவரை ஒரு நீண்ட வேலினால் குத்திக்கொண்றார்கள். அவரது உடலிலிருந்து புறப்பட்ட அவரது இரத்தம் அந்த  கொடும் தீயை அணைத்தது. அவரது ஆன்மா ஒரு வெண்புறா வடிவில் அவரது உடலிலிருந்து வெளியேறியதை கண்ட மக்கள் அனைவரும் யேசுவின்மீது நம்பிக்கை கொண்டு அவரை ஆண்டவறாக ஏற்றுக்கொண்டனர்.]
       ஆனால் வான சாஸ்த்திரியான டயோனிஸால் தன் காலத்தில் யேசுநாதரைப்பற்றி அறிந்துகொள்ள முடியாமல் போனது.    கிறிஸ்த்துவ புனிதர்களின் சரித்திரத்தில் பல டயோனிஸியர்கள் தோன்றி மறைந்து போனாலும் இப்போது யேசுநாதருக்கு சாட்ச்சியாக வாழ்ந்து மரித்த ஒரு டயோனிஸ் சரித்திரத்தில் மிகவும் புகழ் பெற்றார். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல அவர் தலைவெட்டப்பட்ட பிறகும் ஆண்டவருக்கு சாட்ச்சியம் கூறியதால் அவரது சாட்ச்சியம் அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
     கி.பி.33ல் யேசுநாதர் யார் என்று கூறுவேன் என்ற டயோனிஸின் ஆவி இவருக்குள் புகுந்துகொண்டதோ என்னவோ நாம் அறிவோம்.. ஆனால் கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பட்ட கால பகுதியில் தோன்றினார் டயோனிஸ் என்னும் ஒருவர். அவரது வாழ்க்கை யேசு கிறிஸ்த்துவுக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தது..
     கி.பி. 249 ஆம் ஆண்டு ரோமைய சக்கரவர்த்தியாக முடி சூடிக்கொண்டார் மாமன்னர் திராஜன் தேசியன். அவர் ஏற்கனவே ரோமைய செனட் அங்கத்தினராக இருந்ததால் அவருக்கு அரசியலும் தெரியும். ராணுவ தளபதியாக அவர் பல போர் முனைகளில் பங்கேற்றதால் அவருக்கு படை நடத்தவும் தெரியும். இவர்காலத்தில் ரோமிலும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஏன் பைசாந்தியத்திலும் ஆப்ரிக்காவின் வடக்கு பகுதிகளிலும்கூட கிறிஸ்த்துவம் நன்றாக வளர்ச்சி  அடைந்திருந்தது. இவர்களின் வளர்ச்சி பல சமயத்தினரிடையே பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியது. தங்களுடைய ரோமைய கிரேக்க தேவாலயங்களில் கூட்டம் குறைந்ததாலும், சமுதாயத்தில் தங்களுடைய மதிப்பும் மரியாதையும்
கண்ணியமும் குறைந்ததாலும் முக்கியமாக தங்கள் கோயில்களில் வருமானம் குறைந்ததாலும் பெரிதும் கவலைப்பட்டனர். இத்தகைய போக்கை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் மீண்டும் தங்களுடைய தெய்வங்களின் வீர தீர பராக்கிரமங்களை  அனைத்தையும் மக்களிடையே பரப்ப வேண்டும்.கிறிஸ்த்துவர்களின் தெய்வ வழிபாடுகளைப்பற்றி தயங்காமல் குறைகூற வேண்டும். என்பதையே முக்கிய நோக்கமாக கொண்டார்கள். இந்த நேரத்தில் மன்னர் தன்னுடைய ரோமைய கலை மற்றும் கலாச்சாரம் அனைத்தும் பழைய நிலைக்கே கொண்டு வரவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்ததால் இந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டர்கள்.
    கிறிஸ்த்துவர்களைப்பற்றி மாமன்னரிடம் பல தவறான  விஷயங்களை போட்டுக்கொடுத்தார்கள். மனனரின் பல நலத்திட்டங்கள் தோல்வியில் முடிந்ததற்கு காரணம் இந்த கிறிஸ்த்துவர்களே...இவர்கள் வணங்கும் தேவன் யேசுகிறிஸ்த்து நம் தெய்வங்களுக்கு எதிரி.. எனவே நம் தெய்வங்கள் உம் மீது
மிகுந்த கோபம் கொண்டிருப்பதால்தான் உம்முடைய அனைத்து நலத்திட்டங்களும் தோல்வியில் முடிகின்றன. இந்த கிறிஸ்த்துவர்கள் எதிலும் நம்பும்படியக இருக்க மாட்டார்கள். மேலும் ராஜ விசுவாசம் கொண்டிராதவர்கள்...நீவிர்  வேண்டுமானால் இந்த காரியங்களை சோதித்துப்பாரும். என்று தங்களால் முடிந்தவரை மன்னர் திராஜனுக்கு போட்டுக்கொடுத்தனர். அதன்படி மாமன்னர் திராஜன் தேசியன் ஒரு முடிவுக்கு வந்தார். அந்த முடிவு பல கிறிஸ்த்துவர்களின் உயிரை  காவு கேட்டது.
       மாமன்னர் திராஜன் தேசியன் கி. பி. 250 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி ஒரு அரசாணையை ஏற்படுத்தினார். அதன்படி மன்னரின் நலனுக்காகவும் நாட்டின் பல நன்மைகளுகாகவும் தங்கள் மூதாதையர்கள் வழிபட்டு வந்த தெய்வமான ஜுபிடருக்கு வேண்டுதல் வைத்திருப்பதாகவும் அதனால் ரோமைய சாம்ராஜ்ஜியத்திலுள்ள அதன் பிரஜைகள் யாவரும் ஜுபிடர் தெய்வத்திற்கும் மன்னரின் திரு உருவ சிலைக்கும் பலிகள் செலுத்தி தங்கள் ராஜ விசுவாசத்தை  எண்பிக்க வேண்டும். இதனை தன் சாம்ராஜ்ஜியத்திலுள்ள அனைத்து பிரஜைகளும் கட்டாயம் அந்தந்த பிராந்தியத்திலுள்ள அரசப்பிரதிநிதிகளின் முன்னால் குறிபிட்ட நாட்க்களில் நிறைவேற்றி அதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கை எழுத்திட்டால் தான் அவர்கள் ரோமைய ராஜ பிரஜைகளின் அந்தஸ்த்து பெற தகுதியானதாக கருதப்பட்டுவர். இந்த ஆணையை நிறைவேற்றாதவர்கள் மீது ராஜ துரோகம் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனையும் வழங்கப்படும் . மேலும்
அவர்கள் சமூகத்தில் எந்த அந்தஸ்த்தில் இருந்தாலும் அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கொடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவர். மேலும் நாடுகடத்தப்படவும் தண்டனை பெறுவர்.  இந்த அரசாணை உடனே அமுலுக்கு வருகின்றது. இந்த அரசானை அமுலுக்கு வந்த அடுத்த வினாடி முதல் ஏழாம் வேத கலாபணை ஆரம்பித்தது.
      கிறிஸ்த்துவர்களின் சரித்திர அட்டவணைப்படி ரோம் நகரில் மாமன்னனும் கொடுங்கோலனுமான நீரோ துவங்கிய முதல் வேத கலாபணை முதல் மா மன்னர் தியோக்குலேசியன் வரை பத்து வேத கலாபணைகள் சரித்திர புகழ்பெற்றுள்ளன.
    இவற்றுள் ரோமைய மாமன்னர் திராஜன் தேசியன் கி.பி. 250 ஆம் ஆண்டு ஆரம்பித்துவைத்த ஏழாவது வேத கலாபணை சட்ட ரீதியாகவே ஆரம்பிக்கப்பட்டு மிகக்கொடுமையாக நடத்தப்பட்டு பல கிறிஸ்த்துவ மக்களை பரலோகத்துக்கு  அனுப்பி வைத்தது. இந்த வேத கலாபாணை அதன் முந்திய ஆறு வேத கலாபணைகளையும்விட மிகவும் கொடியதாக அமைந்தது. இந்த அரசானையால் ரோமைய சாம்ராஜ்ஜியத்திற்குட்பட்ட அனைத்து நாடுகளிலும் வாழ்ந்துவந்த பல  கிறிஸ்த்துவர்களுக்கு வாழ்க்கை பறிபோனது. அவர்கள் யேசுகிறிஸ்த்துவின் நிமித்தம் அவருக்கு சாட்ச்சியாக கொடும் வேதனப்பட்டு உயிர் துறந்தார்கள். பலர் ஓடி ஒளிந்தார்கள். சாதாரண மக்கள்தான் என்றில்லை. பல குருக்களும்  கன்னியர்களும் திருச்சபையின் தலைவர்களும் கூட ஓடி ஒளிந்தார்கள். அக்காலத்தில் பெரும் வேத சாஸ்த்திரியாக கருதப்பட்ட சிப்ரியான் என்னும் மஹாதுறவியும் கூட ஓடி ஒளிந்ந்தார். ஆனால் பல பாப்புமார்கள் யேசுவுக்காக தங்கள்
விசுவாசத்தில் நிலைத்து நின்று தங்கள் உயிர் துறந்தார்கள். பரிசுத்த தந்தை புனித பாபியான் அவர்களில் ஒருவர். இப்படியாக சரித்திரித்திரத்தில் பல பேர்களை குறிப்பிடலாம்.
     ஆனால் நம்முடைய கதையில் இந்த வேத கலாபணை நடக்கும்போது அப்போதைய பரிசுத்த தந்தையாக இருந்தவர் ஃபாபியான் அவர்கள். இவர் பரிசுத்த பிதாவாக உயிர்த்தப்பட்டது ஒரு தற்செயலான நிகழ்ச்சியாகும். இத்தனைக்கும் இவர்  பரிசுத்த பிதாவிற்கான தேர்தலில் இவர் போட்டியிடவுமில்லை. இவர் பெயர் முன் மொழியப்படவுமில்லை. இவரைவிட பல அனுபவஸ்த்தர்களும் வேத சாஸ்த்திரிகளும் பரிசுத்த பிதாவுக்கான தேர்தலில் போட்டியிட முன்மொழியப்பட்டிருந்தனர்.
ஆனால் கடவுளின் சித்தம் வேறுமாதிரியாக இருந்தது. இந்த தேர்தல் நடைபெறும்போது வானினின்று இறங்கிவந்த ஒரு வெண்மை புறா நம் ஃபாபியன் தோள்மீது இறங்கியது. இது பரிசுத்த ஆவியின் செயலே என உணர்ந்த தேர்தல் குழு  தேர்தலை நிறுத்திவிட்டு இவரையே பரிசுத்த பிதாவாக தேர்ந்தெடுத்தார்கள் என்கின்றது ஒரு சரித்திரக்குறிப்பு.
      அப்போது பிரான்ஸ் தேசத்தில் வேத போதகம் செய்ய ஆயர்கள் இல்லை. எனவே இங்கு மேய்ப்புபணிக்காக அப்போதைய பரிசுத்த பிதா ஃபாபியான் அவர்கள் டென்னிஸ் என்னும் ஆயரை அழைத்தார். டென்னிஸ் ஆயார் இத்தாலியை சேர்ந்தவர். இவரைப்பற்றிய எந்த குறிப்பும் அறியப்படவில்லை. அவர் எங்கு பிறந்தார். அவரது பெற்றோர் யாவர்..எங்கு வளர்ந்தார். எப்போது ஆயர் ஆனார் போன்ற எந்த தகவலும் அறிந்துகொள்ள முடியவில்லை.
பரிசுத்த பிதா டென்னிஸை அழைத்து," டென்னிஸ்...உன்னோடு மேலும் சிலரை அழைத்துக்கொண்டு கால் [ஃப்ரான்ஸ்] தேசம் சென்று அங்கு ஆயராக பணிபுறிய சம்மதமா?" என்று கேட்டார்.
" பரிசுத்த பிதா அவர்களே...இது தேவரீருக்கு சித்தமானால் எனக்கும் சம்மதமே " என்றார் டென்னிஸ் ஆண்டகை.
பரிசுத்த பிதாவின் உத்திரவின்பேரில் நம் டென்னிஸ் என்னும் ஆயர் தன்னுடன் மேலும் ஆறு ஆயர்களை அழைத்துக்கொண்டு பிரான்ஸ் தேசம் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு பரிசுத்த பிதா ஃபாபியன் யேசு நாதருக்கு சாட்ச்சியாக  இறந்தார். இப்போதும் இவரது கல்லறை ரோமில் கலிஸ்த்தா குகையில் பாப்புமார்களுக்கான பகுதியில் இருகின்றது.
     அப்போதைய ஃப்ரான்ஸ் தேசம் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனவே மாமன்னர் திராஜன் தேசியனின் அரசாணை இங்கும் செல்லுபடி ஆயிற்று. இந்த அரசானையை வைத்துக்கொண்டு இந்த ஃபிரான்ஸ் தேசத்தின் ரோமைய  அரசபிரதிநிதியாக இருந்த ஆளுநன் பெஸ்சென்னியுஸ் சிசினியுஸ் மிகுந்த வெறி ஆட்டம் போட்டான். மக்கள் பலர் கிறிஸ்த்துவர்கள் ஆவதற்கே பயந்தனர். கிறிஸ்த்துவர்கள் ஆனால் அவர்களுக்கு அரசாங்கத்தால் ஏற்படும் கொடுமைகள் கண்முன்னே தோன்றி யேசுநாதரா.... வேண்டவே வேண்டாம் ...எங்களை ஆளை விடுங்களப்பா சாமி..என்றுகூறி ஓடி ஒளிந்தனர். எங்கோ ரகசியத்தில் இருந்த கிறிஸ்த்துவர்களும் உயிர் மீது இருந்த பற்றின் காரணமாகவும் யேசுநாதருக்காக சாட்ச்சியமாக அரசாங்கத்தின் முன்னே நான் கிறிஸ்த்துவன் என்று சொல்ல தைரியம் இல்லாததாலும் எங்கெங்கோ சென்று ரகசியமாக வாழ்ந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நம் டென்னிஸ் என்னும் ஆயர் தன் சகாக்களான மற்றும்  ஆறு ஆயர்களுடன் ஃப்ரான்ஸின் தலை நகரான பாரீஸுக்கு வந்தார். இவர்கள் வந்த கொஞ்ச காலத்திலேயே பல அதிசயங்கள் நடைபெற்றன. இவர்களின் பிரசங்கங்களாலும் நிகழ்த்திய புதுமைகளாலும் பல கிறிஸ்த்துவர்கள் தைரியமாக  யேசுநாதரை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்கள். இவர்களது தைரியம் மேலும் அனேகரை தைரியசாலிகளாக ஆக்கியது. இப்படியாக பாரீஸில் கிறிஸ்த்துவ மதம் தழைக்க ஆரம்பித்தது. இதைக்கண்ட ஆளுனன் சிசினியுஸ் திடுக்கிட்டான்.
" திடீரென இந்த மக்களிடையே யேசுநாதரைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது எப்படி? யாரால்? நான் இவ்வளவு கோரமான தண்டனைகள் விதித்து கிறிஸ்த்துவத்தை தடை செய்திருந்தும் இந்த மக்களுக்கு இன்னுமா புத்தி வரவில்லை. இருக்கட்டும்... இருக்கட்டும்.. இவர்களுக்கு நான் யார் என்று காட்டுகிறேன் பார் " என்றபடி இதற்கு காரணமான ஆயர் டென்னிஸையும் அவருடைய துணை ஆயர்கள் அனைவரையும் கைது செய்து வர ஆட்க்களை அனுப்பினான்.
      பிறகு என்ன நினைத்துக்கொண்டானோ தானே அவர்களைக்கைது செய்ய தன் வீரர்களுடன் புறப்பட்டான்.
     இந்த நேரத்தில் ஆயர் டென்னிஸின் இணைபிரியாத தோழர்களான ரஸ்டிக்கஸ் என்பவரும் எல்லூதுரியுஸ் என்பவரும் உள்ளூரில் இல்லை. எனவே அங்கு வந்திருந்த ஆளுனனின் வீரர்கள் ஆயர் டென்னிஸையும் அவருடைய  சகாக்களையும் கைது செய்ய வந்திருந்தார்கள். அப்போது ஆயர் டென்னிஸ் [ டயோனிஸியன் என்பதன் சுறுக்கமே டென்னிஸ் ] திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தார். அப்போது பிரசங்க நேரம்.
" பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமீன்.. என் ஆடுகளே..இந்த நாளிள் நான் உங்களுக்கு விடுக்கும் நற்செய்தி யாதெனில் கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை சுவைத்துப்பாருங்கள்... ஏனெனில் அவர் நல்லவர்...வல்லவர்... வாய்மை உள்ளவர்..அவரிடமிருந்தே எல்லாம் வருகின்றன.. அவரே நித்திய ஜீவனை கொடுக்கின்றவர்...அவரன்றி யாரும் பரலோகம் போய் சேர முடியாது..நானே வழியும் ஒளியும் உண்மையுமானவர்... நித்தியமுமானவர்... நான் அவரின்
தன்மைகள் பல சொல்வேன் " என்று ஆரம்பித்த உடன் " டயோனீஸியா... நிறுத்து உன் பிரசங்கத்தை " என்றது ஒரு அதிகாரக்குரல்.
     " ஓஓஓ... ஆளுனர் சிசினியுஸா.. ஐய்யா ஆளுனர் அவர்களே.. சற்று நேரம் அமைதியாக அமருங்கள்.. நான் என் பிரசங்கத்தை முடித்துவிட்டு வருகிறேன்."
" முடியாது டயோனேஸியா... முடியாது.. நான் இங்கு வந்தது அமைதியாக உன் பிரசங்கத்தை கேட்க்க அல்ல. உன்னை சிறைபிடிக்கவே வந்திருக்கின்றேன். நானே உனை சிறைபிடிக்க வந்திருப்பதால் அது உனக்கு பெருமை என நினைக்க  வேண்டாம். அடேய் வீரர்களை இந்த பரதேசியையும் அவன் சகாக்களையும் உடனே கைது செய்யுங்கள்" என்றான் ஆளுனன் சிசினியுஸ்..
" இல்லை ஆளூநரே அது எனக்குப்பெருமையும் இல்லை. சிறுமையும் இல்லை. ஒரு விதத்தில் நீவீர் என்னை அழைக்க வந்ததும் பொருத்தம் தான். நான் ஆண்டவரின் பிரதிநிதி.... நீவீர் ரோமை ராஜப்பிரதிநிதி. சரி ...பொறுங்கள்...
ஆளுனரே...சற்றே அமைதி காணுங்கள். நான் கடவுளின் பெயரால் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருகின்றேன். அதற்கு இடையூறு ஏற்பட்டுத்த வேண்டாம். இது கடவுளின் நேரம். மேலும் இது தேவாலயம். கடவுளின் வீடு.
இந்த புனிதமான நேரத்தில் புனிதமான இடத்தில் வீண் தகறாறு வேண்டாம். இந்த பலிபூசை முடிந்த பிற்பாடு நானே உன்னிடம் சரணடைவேன்" என்றார் ஆயர் டென்னிஸ்..
" அடேய் பரதேஸி...இப்போதே நான் உன்னை சிறை பிடிகிறேன். உன் சஹாக்களுடன் என்னோடு இப்போதே கிளம்பு..கடவுளின் பெயரை சொல்லி என்ன ஏமாற்றவா நினைத்தாய்.அதுதான் முடியாது.எனக்கு வந்த தகவலின்படி உன்னோடு மொத்தம் ஏழு பேர். இப்போது நீயும் உன் ஐந்து கூட்டாளியும் தானே இருகிறீர்கள். எங்கே அந்த மேலும் இருவர்.?" என்றான் ஆளுனன் சிசினியுஸ்.
"ஆளுனர் அவர்களே நாங்கள் மொத்தம் எழுவர் என்பது சரியானதுதான். மேலும் இருவர் ருஸ்டிகஸும், எல்லூதுரியுஸும் வெளியே சென்றுள்ளனர். இதில் மறைத்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை." என்றார் ஆயர் டென்னிஸ்.
" சரி அவர்கள் வந்ததும் நான் அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். இப்போது நடங்கள் சிறைச்சாலைக்கு " என்றான் ஆளுனன் சிசினியுஸ்.
" ஆளுநர் அவர்களே... சற்றே பொறுங்கள். நான் துவக்கிய பிரசங்கத்தை முடிக்கும் அளவுக்காவது அவகாசம் கொடுங்கள்." என்றார் ஆயர் டென்னிஸ்.
" அடேய் பரதேஸி.. எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை. உன் பிரசங்கத்தை முடிக்க நான் அவகாசம் தருவேன்.. இப்போது அல்ல..நீர் தலை வெட்டுண்டு செத்த பிறகு. அப்போது நீர் எவ்வளவு நேரம் வேண்டுமானால் உமது பிரசங்கத்தை  சொல்லிக்கொண்டே போகலாம். நான் அப்போது நிச்சயமாக தடை செய்ய மாட்டேன். ஹா... ஹா..ஹா" என்று கொக்கரித்தான் ஆளுனன் சிசினியுஸ்.
ஆயர் டென்னிஸ் தன்னுடைய பூசை உடையுடனேயும் தனது செங்கோலுடனேயும் அவரது சஹாக்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த நாள் அவரை சிறையில் சந்தித்தான் ஆளுநன் சிசினியுஸ்.
" என்ன ஆயரே....அரசாங்க விருந்து பலமா...பூஜைகள் நன்றாக நடந்தனவா?" என்றான் ஆளுனன் சிசினியுஸ் ஒருவித நயவஞ்சக சிரிப்புடன்.
" என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறைவு.... விருந்து பலமாகத்தான் நடந்தது... ஒரு குறைவும் இல்லை." என்றார் ஆயர் டென்னிஸ். உண்மையில் அந்த சிறைச்சாலையுல் ஆண்டவராகிய யேசுநாதர் ஆயர் டென்னிஸுக்கும் அவரது சஹாக்களுக்கும் வான் விருந்து கொண்டுவந்து தன் கையால் அவர்களுக்கு பறிமாறினார்.
" டென்னிஸ்... என்னிடம் விளையாட்டு வேண்டாம்...ஓடிப்போன உன் சஹாக்கள் இருவரும் வந்து சேரும்வரை உம்மையும் உன் கூட்டாளிகளையும் மிகவும் நன்றாக கவனித்துக்கொள்ள உத்திரவு இட்டு இருகிறேன்.. அது வரை உங்கள்  அனைவருக்கும் அரசாங்க கவனிப்பு அதிகமாகத்தான் இருக்கும் " என்று கூறி நகைத்துக்கொண்டே சென்றான் ஆளூனன் சிசினியுஸ்.
" ஆளுனர் அவர்களே...என் சீடர்கள் யாரும் உமக்குபயந்து ஓடிப்போகவில்லை. கடவுளின் காரியமாகத்தான் அவர்கள் ஊருக்கு வெளியே சென்றிருகிறார்கள்.. அவர்கள் மீண்டும் இங்கு திரும்பிவர வேண்டாம் என்பதுதான் என் ஆசை...  ஏனெனில் எங்களுக்குப்பின் அவர்கள் எம் வேலையை தொடங்க வேண்டாமோ " என்றார் ஆயர்.
" அடேய் டென்னிஸ்... உன் மனதில் இப்படியொரு எண்ணமோ?...விடுவேனோ நான்... என் ஆட்களைவிட்டு ஊர் முழுவதும் சல்லடைபோட்டு தேடச்சொல்லி இருகிறேன்.. அவர்களும் வந்து சேரட்டும் அப்புறம் பார் என் கச்சேரியை"
இப்படியாக ஒரு ஐந்து நாட்க்கள் கடந்தன. இந்த ஐந்து நாட்க்களில் ஆயர் டென்னிஸுக்கும் அவரது சஹாக்களுக்கும் பல கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டன.பலவிதமான சித்திரவதைகளால் ஆயரும் அவரது  சஹாக்களும் கொடும் துன்பதிற்கு ஆட்படுத்தப்பட்டார்கள். அதிலும் அவரது சஹாக்கள் காணாமல்போன ருஸ்டிக்கஸும் எல்லூதுரியுஸும் எங்கே போனார்கள் என்று கேட்டு கேட்டு அவர்களை வதைத்த பாடுகள் வார்த்தையில் சொல்லி  முடியாது. பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பிகளால் அவர்கள் காதுகளை குடைந்தெடுத்தார்கள் என்கிறது ஒரு சரித்திர குறிப்பு.   இப்படி இருக்கியில் காணாமல்போன அந்த இருவரும் ஆளுனன் சிசினியுஸிடம் சரணடைந்தார்கள். அவர்களையும்
சிறையில் அடைத்து இத்தனை நாளும் மற்றவர்களுக்கு செய்திருந்த அனைத்து சித்திரவதைகளையும் ஒரே நாளில் ருஸ்டிகஸுக்கும் எல்லூத்துரியுஸுக்கும் நிறைவேற்றினார்கள். அந்த இரவே ஆண்டவராகிய யேசுநாதர் அவர்களுக்குத் தோன்றி அவர்கள் அனைவருக்கும் தன் கரத்தால் வான் விருந்து பரிமாறி அவர்களைத்தேற்றினார். அடுத்த நாள் ஆயர் டென்னிஸுக்கும் அவர் சஹாக்கள் அனைவருக்கும் விடுதலை.... ஆம் இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை...
தலை நகர் பாரீஸில் அடுத்தநாள் காலை அரசாங்க அலுவல்கள் ஆரம்பித்து விசாரணை ஆரம்பித்தது. ஆளுநன் சிசினியுஸ்.
" ஆயர் டென்னிஸ் அவர்களே...உங்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தரப்படுகின்றது. உயிர்மீது ஆசை இருந்தால் யேசுநாதரை மறுதலித்து உயிர்பிச்சை பெற்றுக்கொள்ளும். என்ன சொல்லுகின்றீர் ? "
" ஆளுநர் அவர்களே..வானத்திலிருந்து உனக்கு அதிகாரம் கொடுத்திருந்தால் ஒழிய உமக்கு என்மீது அதிகாரம் இராது. இது யேசுநாதரின் வார்த்தை. இதே தேசத்தவனாகிய போஞ்சி பிலாத்து யேசுநாதரை நியாம் தீர்க்கும்போது கூறிய அதே வார்த்தை.நான் அதையேதான் உமக்கும் சொல்லுகிறேன். எனக்கு உயிர்மீது ஆசை இல்லை. ஒரு வினாடியில் கடந்துபோகும் எந்த வாதனைக்கும் நான் அஞ்சேன். நீர் உம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளலாம்."
" இதோபார் டென்னிஸ்..ரோமர்களின் ஆதிக்கத்திலிருக்கும் அத்தனை பிரஜைகளும் சீசரையும் அவர்தம் முன்னோர்கள் வழிபட்டுவந்த அத்தனை தெய்வங்களையும் கடவுளாக வணங்க வேண்டும் என்பது அரசாங்க ஆணை. இந்த அரசாங்க  ஆணையை மீறுவது ராஜ துரோகம். இதற்கு தண்டனை கொடிய மரண தண்டனை. உமக்கும் மரண தண்டனை காத்திருகின்றது. சீசரின் கட்டளைக்கு நீர் ஏன் தலை வணங்கவில்ல. அவர்தம் தெய்வங்களுக்கு ஏன் தூப ஆராதனை காட்ட மறுகிறாய்.? இது ரோமைய அரசனுக்கும் அவர்தம் தெய்வங்களுக்கும் செய்யப்படும் அவமானம் அல்லவா " என்று கர்ஜித்தான் ஆளுனன் சிசினியுஸ்.
" ஆளுநர் சிசினியுஸ் அவர்களே... நீவீர் ஒரு விஷயத்தை நன்றாக புறிந்துகொள்ள வேண்டும். ராஜ்ஜிய நிர்வாகங்கள் என்பது வேறு..கடவுளர்கள் காரியம் என்பதும் வேறு. சீசர் ஒரு மனிதர். அவர் பெயரை சொல்லிக்கொண்டு
ஆட்ச்சிப்பீடங்களிள் அமருபவர்கள் அனைவரும் தெய்வங்கள் அல்ல. அவர்கள் அனைவருமே நம்மைபோல் சாதாரண மனிதர்கள் தாம். அரசர்கள் என்னும் முறையில் அவருடைய பிரஜைகள் அனைவரும் அவருக்கு உறிய மரியதை கொடுப்பதில் எங்களுக்கு யாதொரு தடையும் இல்லை. ஆனால் மனிதரை கடவுளாகவோ... கடவுளால் படைக்கப்பட்ட உயிரற்ற கிரஹங்களை கடவுளாக வணங்கவோ அல்லது அதற்கு தூப தீப ஆராதனை செய்யவோ எங்களால் முடியாது. நம்மைத்தவிர வேறு தெய்வம் உமக்கு இல்லாமல் போவதாக என்னும் கடவுளுடைய கட்டளைப்படியே நாங்கள் வாழ்ந்து வருவதால் எங்களால் சீசருக்கோ அவர்தம் குலத்தெய்வங்களுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆராதனை செய்யப்போவதில்லை." என்றார் ஆயர் டென்னிஸ்.
        இப்படியே ஆயருடைய சஹாக்கள் அனைவரும் கூறியதால் அனைவருக்கும் தலைவெட்டிக்கொல்லும் தண்டனையை அளித்தான் ஆளுநன் சிசினியுஸ். அதன்படி ஆயர் டென்னிஸும் அவர்களுடைய சஹாக்களும் பாரீஸிலிருந்து  அருகிலுள்ள ஒரு குன்றிற்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அக்காலத்தில் அது மெர்கூரியன் மலை என பெயர் பெற்றிருந்தது. அந்த மலையின் உச்சியில் மெர்கூரியன் தெய்வத்திற்கும் மார்ஸ் என்னும் தெய்வதிற்கும் ஒரு கோயில் எழுப்பப்பட்டிருந்தது.
   இந்த மெர்கூரியன் மலைக்கும் ப்ரான்ஸின் தலை நகர் பாரீஸுக்கும் 10 கி.மி. தொலைவு இருந்தது. இந்த பத்து கி.மி. தொலைவு செல்லும் வரை ஆயர் டென்னிஸையும் அவர்களுடைய சஹாக்களையும் அடித்தும் உதைத்தும்
கேவலப்படுத்தியும் செய்த கொடுமைகளை வார்த்தைகளில் சொல்லி விளக்க முடியாது. ஒருவிதத்தில் இந்தப்பயணம் யேசுநாதரின் கல்வாரிப்பயணத்தை ஒத்திருந்தது. இத்தனை பாடுகளையும் ஆயரும் அவருடைய சஹாக்களும்
பொறுமையோடு யேசுநாதருக்கு ஒப்புக்கொடுத்து "ஆண்டவரே... இவர்கள் செய்யும் இந்த கொடுமைகளுக்கான பழியை தயவு செய்து இவர்கள் மீது சுமத்தாதேயும். ஏனெனில் இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கின்றார்கள்.  உம்முடைய சித்தப்படியே ஆகட்டும் " என்று வேண்டிக்கொண்டே சென்றார்கள். இந்த பயணத்தின்போது இந்த கொடுமையான காட்ச்சியை பார்க்க மக்கள் பெரும் வெள்ளமென திரண்டார்கள்.அவர்களுள் பல ரகசிய கிறிஸ்த்துவர்களும் அடக்கம்.
     ஒரு வழியாக ஆயர் டென்னிஸின் கல்வாரிப்பயணம் அந்த மெர்கூரியன் மலையின்மீது முடிந்தது. தன் அதிகாரத்தை பயன்படுத்தி எப்படியும் இந்த ஆயரையும் அவரது கூட்டாளிகளையும் தன் வலையில் வீழ்த்திவிட நினைத்த சாத்தான் போல ஆளுநன் சிசினியுஸ் தன் கடைசி முயற்சியாக," ஆயர் டென்னிஸ் அவர்களே," உமக்கும் எனக்கும் வேறு பகை இல்லை. வெறும் கொள்கையில்தான் பிரச்சனை. பேசாமல் பெயருக்கு ஒரு துளி உப்பையும் ஒரு துளி தேனையும் எடுத்து  அந்த மெர்கூரியன் சிலைமீது வீசிவிட்டு போய்விடவேண்டியதுதானே. இதில் என்ன கஸ்ட்டம் இருகின்றது. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீர் செய்ததைபோல மற்றவர்களும் செய்துவிட்டுப்ப்போகட்டும். உங்கள் அனைவருக்கும்  பிரஜா உரிமைபத்திரம் நான் கொடுத்துவிடுகிறேன். இந்தமாதிரி பிரச்சனைகள் எல்லாம் கொஞ்ச காலம்தான் இருக்கும். பிறகு எல்லாம் சரியாகிப்போய்விடும்.. நானே உங்களுக்கு உப்பையும் தேனையும் எடுத்துத்தரவா?" என்றான் ஆளுனன்
சிசினியுஸ்.
    இதுநேரம்வரை பொறுமையாகவும் மரியாதையாகவும் பேசிவந்த ஆயர் டென்னிஸ் தன் பேச்சில் மரியாதையை விடுத்து," அடேய் முட்டாள் ஆளுநனே, என்னை யார் என்று நினைத்துக்கொண்டாய். உயிருள்ள கடவுளும் உயிருள்ள மனிதனுமான யேசுநாதரின் பிரதிநிதி நான்... நான் நீரிலே [ திருமுழுக்கு ] பிறந்தேன்...நெருப்பில் [ உறுதிப்பூசுதல் ] வளர்ந்தேன்...ஆவியில் [ அபிஷேகம் பெற்று] வாழ்கிறேன். நான் பொய்த்தேவர்களுக்கும் துர் தேவதைகளுக்கும் ஒருக்காலும்
தீப தூப ஆராதனை காட்டப்போவதில்லை. என்னில் வாழ்பவர் யேசு கிறிஸ்த்துவே. அவரே எங்களை அபிஷேகமும் செய்திருக்கிறார். அடேநிர்மூடா... ஒன்றை நீ நன்றாகத்தெரிந்துகொள். எப்போது நானும் எம் சஹாக்களும் இந்த மலையில்  கால் பதித்தோமோ அப்போதே எம் ஆண்டவராகிய யேசு கிறிஸ்த்துவின் பிரசன்னம் இங்கே தோன்றக்கண்டோம். எப்போது யேசுநாதரின் பிரசன்னம் இங்கே தோன்றியதோ அப்போதே உம்முடைய துர்தேவதர்களான மார்சும், மெர்கூரியும்
இங்கிருந்து அலறிப்புடைத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள். இனி இந்த மலையில் அவர்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்காது. இங்கு மட்டுமல்ல..இனிமேல் இந்த தேசம் முழுவதும் ஆண்டவரின் பிரசன்னத்தால் நிரம்பி இருக்கும். இந்த நாடே  கிறிஸ்த்துவ தேசமாக மாறிப்போய்விடும். ஆனால் உன்பாடுதான் மிகவும் பரிதாபத்துக்குறியதாக மாறிப்போகும். கிறிஸ்த்துவ மக்களை அநியாயமாக கொண்று வதைக்கும் நீயும் உம் மன்னனும் வெகு விரைவிலேயே மாண்டு போவீர்கள்.  ஆனால் கிறிஸ்த்துவுக்காக உயிரிழக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வு உண்டு. என்பொருட்டு தன் உயிரை இழப்பவன் முடிவில்லா வாழ்வு பெருவான் என்பது ஆண்டவராகிய யேசுவின் அருள்வாக்கு. நீ உன் போகிலேயே போ...
நாங்கள் எம் போக்கிலேயே போகிறோம்...யேசுவின் திருநாம் வாழ்த்தப்படுவதாக" என்றார்.
     பொதுமக்கள் அனைவர் முன்னிலையிலும் ஆயர் டென்னிஸ் தன்னை மரியாதைக்குறைவாகவும் கண்ணியக்குறைவாகவும் பேசிவிட்டர் என்பதில் ஆளுநன் சிசினியுஸுக்கு அடங்காத கோபத்தை ஏற்பட்டுத்தியது. இந்த கோபத்தில் அவனிடத்திலிருந்து வந்தது அரசகட்டளை. " நம் அரசர் சீசருக்கும் நம் முன்னோர்கள் அனைவரின் தெய்வங்களான வீனுஸ், மெர்கூரி, அப்போல்லோ, மார்ஸ் போன்ற எந்த தெய்வங்களுக்கும் கடவுளர்களுக்கான தீப தூப ஆராதனை காட்ட  மறுக்கும் ஆயர் டென்னிஸ், ஆயர் ருஸ்டிக்கஸ்,ஆயர் எல்லூதுருயுஸ் மற்றும் அவரது அனைத்து ஆயர்களுக்கும் தலைவெட்டி கொல்லும் தண்டனையை நம் மாமன்னர் திராஜன் தேசியன் பெயரால் நான் கொடுகிறேன். மாமன்னர் சீசர் திராஜன்
தேசியுஸ் திரு நாமம் வாழ்த்தப்படுவதாக " என்றான்.
    பிறகு," ஆயர் டென்னிஸ் அவர்களே... நீவிர் எம் தெய்வங்களுக்கு பலி செலுத்தாவிட்டால் பரவாயில்லை. உமக்குபதில் எம் தெய்வத்திற்கு நானே பலி கொடுக்கிறேன். முதல்பலி நீவீர்தாம் " என்றான்.
   அதன்படி ஆயர் டென்னிஸின் தலை முதலில் வெட்டப்பட்டது. ஆனால் அந்த போர் வீரனின் கோடாலி வீச்சு சற்றே விலகியதால் அந்த வீச்சில் ஆயர் டென்னிஸின் சிரசின் உச்சியை மட்டும் வெட்டியது. இதனால் கடும்கோபம் கொண்டான் ஆளுநன் சிசினியுஸ்." அட நாயே..ஒரேவெட்டில் தலை துண்டாகி இருக்க வேண்டாமோ?... இது தெய்வக்குற்றம் ஆயிற்றே.சரி... பரவாயில்லை.. அடுத்தமுறை சரியாக உம் கோடாலியை வீசு. மீண்டும் தவறு செய்தால் அந்த கோடாலி உன்  தலைமீது இறங்கும் எச்சரிக்கை." என்றான். அதன்படி அந்த வீரன் தன் கோடாலியை மிகச்சரியாக ஆயர் டென்னிஸின் கழுத்தில் இறக்கினான். வெட்டு மிகச்சரியாக விழவே ஆயர் டென்னிஸின் தலை துண்டிக்கப்பட்டது.
   இப்படியாக எல்லா  ஆயர்களின் தலையும் துண்டிக்கப்பட்டது. தன் அரசாங்க ஆணையை மிகச்சரியாக நிறைவேற்றிய சந்தோஷத்தில் கடகடவென நகைத்தான் ஆளூநன் சிசினியுஸ். ஆனால் அவனது சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை. மிதமிஞ்சிய  சந்தோஷத்தில் மிகவும் திமிர்த்தனமாக பேசினான் ஆளுநன் சிசினியுஸ்.
" ஆயர் டென்னிஸ் அவர்களை... கடைசியில் யார் ஜெயித்தது என்று பார்த்தீர்களா?...நான் ஜெயித்தேன்... உம்முடைய யேசுநாதரால் என்னை ஜெயிக்க முடிந்ததா? அவர் உண்மையில் கடவுள் என்றால் உம்மை என்னிடமிருந்து காப்பாற்றி  இருக்க வேண்டாமோ.. இப்போது நீவீர் இறந்துவிட்டீரே...நான் அன்று சொன்னது போல் இனிமேல் நீர் உம்முடைய பிரசங்கத்தை நிகழ்த்திக்கொள்ளலாம். நான் தடை விதிக்கப்போவதில்லை. உம்முடைய பிரசங்கத்தை கேட்க்க விரும்பும் மக்கள் யாரையும்கூட நான் தடை செய்யப்போவதில்லை. இது உறுதி " என்றான்.
    ஏழு ஆயர்கள் ஒரே நாளீல் அதுவும் ஒரே சமயத்தில் தலை வெட்டுண்டு இறந்ததை பொது மக்களாள் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பலர் மார்பில் பிழை அறைந்துகொண்டார்கள். அப்போது யாரும் எதிர்பாராததொரு சம்பவம் புதுமையாய் நடந்தது. தலை வெட்டப்பட்ட ஆயர் உயிருடன் எழுந்தார். வெட்டப்பட்ட தன் தலையை தன் கரத்தில் ஏந்திக்கொண்டார்." யேசுவின் திருநாமம் வாழ்த்தப்படுவதாக" என்றார். இதைக்கண்ட மக்கள் அனைவரும் யேசுநாதர் இந்த ஆயர் டென்னிஸை புதுமையாய் உயிர்பெற்று எழச்செய்ததைக்கண்டு பெரும் மகிழ்ச்சிப்பெருக்கால் " ஆண்டவராகிய யேசுநாதரின் திரு நாமம் வாழ்த்தப்படுவதாக " என்று கூக்குரலிட்டனர். மக்களிடையே ஏற்பட்ட திடீர் ஆரவாரத்தைக்கண்ட  ஆளுநன் சிசினியுஸ் தான் காண்பது என்ன கனவா அல்ல நனவா என்றான். இது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு " ஆயர் டென்னிஸ் அவர்களே... இது நீங்கள் தானோ?" என்றான்.
     தலை வெட்டப்பட்ட நம் ஆயர் தம் கரங்களால் தன் தலையை ஏந்திக்கொண்டு," ஆளுநனே... நாம் ஆயர் டென்னிஸ்தான். சற்றுமுன் சொன்னாயே நான் தான் ஜெயித்தேன் என்று... இப்போது சொல் பார்க்கலாம் யார் ஜெயித்தார் என்று.  இந்த வெற்றி எம் ஆண்டவராம் யேசு கிறிஸ்த்துவினுடையது. தலை வெட்டப்பட்ட பிறகும் நாம் இப்போதும் வாழ்கிறோம். உயிருடனே இருகின்றோம். என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான் என்பது யேசுநாதரின் அருள்
வாக்கு. அதற்கு சாட்ச்சியாக இதோ நாம் இருகின்றோம். இதோ தலை தனியாக உடல் தனியாக இருப்பினும் நாம் உயிர் வழ்கிறோம்...இதைபோல் யாரேனும் இதற்கு முன் இப்படி எழுந்ததுண்டோ? எம்மை எழுப்பியவர் எம் ஆண்டவராகிய  யேசுநாதர். அவருக்கு சாட்ச்சியம் கூறவே ஆண்டவர் எம்மை எழுப்பியுள்ளார். இதோ எம் ஆண்டவரின் பெருமைகளையும் இயல்புகளையும் கூற அவர் எம்மை பணித்துள்ளார்..இதோ எம் சிரசின் உச்சிப்பகுதி சிதைக்கப்பட்ட பின்பும் எனக்கு  இன்னும் நினைவாற்றல் தெளிவாகவே உள்ளது.. கேட்க்க செவி உள்ளோரே நன்றாக கேளுங்கள்....இன்று நீங்கள் காணும் இந்த காட்ச்சியையும் நீங்கள் கேட்க்கப்போகும் வர்த்தமானங்களையும் கேட்க்க யேசுநாதர் காலத்திலிருந்து பலர்
விரும்பியும் அவர்களுக்கு கொடுத்துவைக்கவில்லை. ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
     இந்த நாளில் ஆண்டவரின் நற்செய்தியை கேட்க வந்திருக்கும் என் மக்களே...உங்கள் செவிகளை நன்றாக தீட்டி வைத்துக்கொள்ளுங்கள். இறந்த என்னை மீண்டும் உயிருடன் எழுப்பியதன்மூலம் ஆண்டவரின் அதியர்புதமான இந்த  புதுமையைம் காணும் உங்கள் கண்கள் பாக்கியம் பெற்றவை. இதோ புழுவுக்கும் புழுதிக்கும் சமமான என்னையும் உயர்த்தி "என் இறைத்தன்மையையும் மனித தன்மையும் இந்த மக்களீடம் கூறுவாயாக " என்று ஆண்டவராகிய யேசுநாதர்  என்னை பணிக்கின்றார். இதோ நான் ஆண்டவரின் தன்மைகளை போதிக்கிறேன்...என் ஆடுகளே... என்பின்னே வாருங்கள்... என் பிரசங்கத்தை கேளுங்கள்..ஆண்டவரின் திரு நாமம் வாழ்த்தப்படுவதாக...
      ஆயர் டென்னிஸ் வெட்டப்பட்ட தன் சிரசையும் சிதைக்கப்பட்ட அதன் உச்சிப்பகுதியையும் சேர்த்து தன் கரங்களில் ஏந்திக்கொண்டு அந்த மெர்கூரி மலையிலிருந்து கீழே இறங்கி நடக்கலானார்... மீண்டும் அவரது பிரசங்கம் தொடர்ந்தது.
" அளவுகடந்த ஞானமுள்ள ஆண்டவரே என் அரசே... உம் தீர்ப்புகள் அறிந்துகொள்ள எத்தனை ஆழமானவை. உம் வழிகள் எத்தனை மர்மமானவை... யாராலும் மேற்கொள்ள முடியாத என் கடவுளே.... தொடக்கமும் முடிவுமில்லா  நித்தியதிற்குமுள்ள என் தேவனே...
    உம் மேன்மையை அறிவார் யார்?. அற்புதமான உம் வேலைப்பாடுகளை அறிய தகுதியுடையோர் யார்?. அவற்றை படைத்தவர் நீரே என்று உமக்கு சொல்லக்கூடியவர் யார்?.
    ஏனெனில் நீரே அனைத்திற்கும் மேலானவர். நீரே கட்புலனாகாதவர்... எங்களின் மனம் உள் கொள்ள முடியாதவர். சீர் கெட்ட பயனில்லா புழுவும் உம் அடியேனுமான எனக்கு உன்னதமான உம் அருளையும் மறைபொருளையும்
வெளிப்படுத்த திருவுளம் கொண்ட என் அற்புத ஆண்டவரே.... நீர் போற்றப்படுவீராக... அனைதிற்கும் மேலான முடிவில்லா நித்திய பரம்பொருளை அதன் பண்புகளோடு புலனுணர்வு கொள்ளும் மாபெரும் பாக்கியத்தை நான் பெற்றேன்...
   அப்பரம்பொருள் மூன்று ஆட்களாகவும் ஒரே கடவுளாகவும் புரிந்துணர்வு பெறும் கூர்மதிபெற்று அவரை அவர் இருகின்றவாரே நான் காண்கின்றேன். அறிதல், கிரகித்தல், அன்புகூர்தல், என்னும் நிலைப்பாடுகளில் மூன்று ஆட்களாகவும்  நித்தியத்தில் ஒன்றுபட்டுள்ள அருள் நிலைப்பாட்டில் ஒருவராகவும் இருக்கக்காண்கின்றேன். இப்பரம்பொருளையே பிதா, சுதன், பரிசுத்த ஆவி என மூன்றாக காண்கின்றேன்.
    தொடக்கமில்லா பிதாவாகிய பரம்பொருள் உண்டாக்கப்பட்டவரோ, படைக்காப்பட்டவரோ, பிறப்பிக்கப்பட்டவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல. இப்பிதாவாகிய பரம்பொருளிடமிருந்து நித்தியத்திலும் உருகொடுக்கும் அவரின் பேராற்றலால் உருவானவரே சுதன்...
   இப்பிதாவாகிய நித்திய  பிதாவினின்றும் சுதனிடமிருந்தும் இயங்கும் தொடராற்றலே பரிசுத்த ஆவியாக உள்ளார்.
  இவர்களிடையே முதலோ முடிவோ, பெரியவர், சிறியவர் என்றோ வேறுபாடின்றி அனைத்திலும் நித்தியதிற்கும் சமமானவர்களாகவே உள்ளனர். இவர்கள் ஒரே பரம்பொருளாகவும் உருப்பொருளில் மூவராகவும் உள்ளனர்.     மூவரும் ஒருவரோடு ஒருவர் கலந்து ஒரு கருவாக பரம்பொருளாக இல்லை. அல்லது மூன்று கருப்பொருட்களாக தனித்தனியே பிரிந்து தனித்து நின்று மூன்று ஆட்களாகவும் இல்லை.
ஆயினும் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என தனித்தனியாகவே காணப்படுகின்றனர். எனினும் மகிமை, மாட்ச்சிமை, ஆற்றல், நித்தியம், ஞானம், பரிசுத்தம் என அனைத்து பண்புகளிலும் அளவற்ற ஒருவராகவே உள்ளார்.
   இவை அனைத்திலும் ஒவ்வொருவரும் தனித்திருந்தாலும் ஒருங்கிணைந்த நித்திய வல்லமையுள்ள ஒரே கடவுளாகிய பரம்பொருளாகவே திகழ்கின்றார்.
     மூவரில் ஒருவராகவும், ஒருவரில் மூவராகவும் விளங்கும் இம் மாபெரும் பரம்பொருளை உள்ளூர உய்த்துணர உயர்தனி சிறப்பு அறிவு அடியேனுக்கு இல்லை எனினும் இம்மாபெரும் பரம்பொருளை உள் உணர்ந்து அறிந்தறிய பேறு பெற்றேனே...
    பிதா சுதனையும் பரிசுத்த ஆவியையும், சுதன் பிதாவையும் பரிசுத்த ஆவியையும். பரிசுத்த ஆவி பிதாவையும் சுதனையும் முழுவதுமாக உணர்ந்து அறிகின்றனர். ஒருவரையொருவர் முழுவதுமாக உணர்ந்து அறிவதையும், பிரித்து உணரவும் இயலாத அன்பாலும், சம ஞானத்திலும் பண்பிலும் பரம்பொருளிலும் ஒன்றுபட்டு ஒரே மெய்யுங்கடவுளாக உள்ளதை மெய்யாகவே உணர்கிறேன்.
      குறைவற்ற நிறையழகும், அளவற்ற முழுமையும், ஒப்புயர்வற்ற நன்மைத்தனமும், காலம் கடந்த நித்தியமும், குறைபடா வலிமையும், நித்திய வாழ்வும், பழுதற்ற உண்மையும் கொண்டுள்ள இம்மூவரும் ஒருவரையொருவர் பற்றாமல் நிறப்பி  எங்கும் வியாபித்துள்ளனர்.    இவர்களின் சினேகத்திலும் அருள் இரக்கத்திலும் வேற்றுமை இல்லை. இவரின் ஞானம் அளப்பரியது. நீதியில் மேன்மையும் நேர்மையும் துலங்குகின்றது. சிந்தனையில் மறைவும், வார்த்தையில் உண்மையும் செயலில் பரிசுத்தமும் அளவில்லா வளமும் கொண்டுள்ளார்.
     இவருக்கு வான் வெளி பெறிதல்ல. எல்லைகள் தடை அல்ல. சித்தத்தில் மாற்றம் இல்லை. துன்பத்தில் துயறுமில்லை. காலத்தால் கட்டுப்பாடு இல்லை. அளவற்ற இப்பரம்பொருளை நான் காணும் பேறு பெற்றேன்.    இம்மாபெறும் காட்சி என் கண்ணினின்று மறையவுமில்லை. முழுவதும் முடியவும் இல்லை. நித்தியதிற்கும் மாறாத இப்பரம்பொருள் அனைத்திலும் மேலானது. முழுமையான பரிசுத்தம், நிலையான உண்மை,
    எல்லையில்லா நீளம் அகலம்,. உயரம், மகிமையும் அதன் காரணமும், சோர்வற்ற ஓய்விலும், அளப்பற்ற நன்மைத்தனமுமாக திகழ்கின்றார்.
உன்னதரான இவர் தான் தன்னிலே நிலையாயிருகின்றார்.
    நாம் பகுத்தறியும் திறன்படி இம்மூவரும் தம் முழுமையை ஆழ்ந்தறிய தாம் தாமே சித்தமானார். தாம்தாமே தம்மைத்தாமே பிளவில்லா இம் முழுமையை உய்த்துணரும் ஒரே சித்தத்தால் தம்மைத்தாமே தெளிவாக்குகின்றார். புரியாமையிலிருந்து புரிதலுக்கும், ஒன்றையொன்று வேறுபடுத்தி புரிந்துணரவும் அதன்காரணமாக பிளவொன்றை அறிந்து அதை தான் புரிந்தவறோடு அதற்குள்ள தொடர் உறவை  அறிந்துகொள்வது நம்முடைய அறிவின் இயல்பு. ஆனால் இது அவருக்கில்லை.
      ஒரே சித்தத்தால் இவர் அனைத்தையும் அறிகின்றார். ஒவ்வொன்றாக அல்லா. அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே நித்திய பரம்பொருளில் சித்தமாக இருகின்றது.
தொடக்கமும் முடிவில்லா இவை யாவும் ஒரே நித்திய ஞானமுமாய் துலங்குகின்றது.
இந்த தெய்வீக மெய் ஞானத்தை பிரிக்க முடியாத ஒரே முழுப்பொருளாய் நான் கண்டு உள் உணர்ந்தாலும் பலவாக காண்கின்றேன். இந்த தெய்வீக மெய் ஞானத்தை ஒவ்வொன்றாக அறிய ஒரே தருணத்தை பல தருணங்களாக சிதைவின்றி  பிரிவுபடுத்தி தனித்தனியே உணருகின்றேன்.
      ஒன்றை சார்ந்து மற்றொன்று உள்ளது. ஒன்றால் மற்றோன்று உருவாகின்றது. ஒன்றின் காரணமாக மற்றொன்றும், ஒன்றைக்குறித்து மற்றொன்றும் சித்தமாகாமலோ, சித்தத்தில் சேர்காமலோ இருப்பின் மற்றோன்றைக்குறித்து அவர் சித்தமாயிருக்க மாட்டார் என்றே என் தொடர் புரிந்துணர்வால் விளங்குகின்றது..
     இத்தகைய புரிந்துணர்வால் நித்திய பரம்பொருளாகிய கடவுள் தம்முடைய மெய்ஞானத்தில், சித்தத்தில் வெவ்வேறுபட்ட தருணங்களில் வெவ்வேறானவற்றை செய்ய சித்தமானார் என்று பொருளல்ல. மாறாக படைப்பு ஒவ்வொன்றும் ஒன்றை சார்ந்து மற்றோன்றும் ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒன்றைஒன்று தொடர்ந்தும் உள்ளன. படைப்பின் தன்மை மற்றும்  படைக்கப்பட்ட விதம் முதலியவற்றை தெளிவாக எளிதாக அறிந்துணர இவ்வாறு நாம் புரிந்துகொள்கிறோம்.
     படைப்பு ஒவ்வொன்றையும் தனித்துப்பார்த்து அதன் தன்மையை அறிய, நித்திய பிதாவின் சித்தம் இவ்வாறாக இருக்கலாம் என நாம்
தெளிவு பெறுகிறோம். படைப்பின் இவ்வொழுங்கு முறையை தனித்தனி தருணங்களாக நான் புறிந்துணர்கிறேன்.
      நித்திய பரம்பொருளாகிய கடவுள் தன்னுடைய நித்தியத்தை நிறைய பண்புகளோடும் விவரிக்க இயலாத தன் சுய விருப்பத்தோடும் வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறார். இந்த சுய வெளிப்பாடு முதன்மையானது. நித்தியத்தையும்  முழுமையையும் மாண்புமிக்க தன் பண்புகளின் ஆற்றலோடும் வெளிப்படுத்துவது சாலப்பொருத்தமாகும். இச்சுய வெளிப்பாடு தமது தாராளத்தையும், அளவில்லா இரக்கத்தையும், மாண்பையும், புனிதத்தையும் தன்னகத்தே கொண்ட வெளிப்பாடல்லவா.
     மேலெழும் தீச்சுவாலை, கீழ் இழுக்கும் ஈர்ப்பு சக்த்தி, சூரியனின் ஒளிகொடுக்கும் தன்மை இவையாவும் நாமறிந்த இயற்கை விதிகள். அதனினும் இயற்கையாக எதார்த்தமாக பரம்பொருளாக கடவுள் தன்னுடைய நித்தியத்தையும்,  மாண்பையும், இறையருளையும் தாம்தாமே வெளிப்படுத்துகின்றார். அளப்பறியா ஆழமுள்ள தன்னிறைவு, வரையரையற்ற பெருமையும் தன் சுய விருப்பால் தனக்குத்தானே அசைவாடுகின்றார். அதே வேளையில் இவையாவும் குறைவுபடாமல்
நிறைநிலையாய் நிற்கவும், தமக்குள்தாமே நிலையாற்றல் கொள்ளவும் அவர்தாமே சித்தமாயிருகிறார். நான் காணூம் இவ்வெளிப்பாடு புழுவுக்கு சமமான அடியேனை இரண்டு நிலைகளில் வெறுமைக்கு தள்ளுவதை உணர்கிறேன்.
1. தம் அருள் இரக்கத்தையும், தெய்வீகத்தையும் வெளிப்படுத்த அவர்தாமே கொண்டுள்ள அவசர உடனடி வேட்க்கையும் வலுவான சித்தமுமே.
2.. உள்ளுணர்ந்து சொல்லற்கறிய இவரின் நன்மைத்தனம், தகுதிக்கேற்றவாறு அதை பகிர்ந்தளிக்கும் நோக்கிலும், நன்மைத்தனத்தில் எல்லையின்மை, இருப்பினும் அவர் தன்னிழப்பினின்று அனைத்தையும் தன்னகத்தே
கொண்டுள்ளமையே.
   தம்மில் தாமே இயங்கும் இம்மாபெரும் ஆற்றலின் இயக்கத்தில் அவரின் மாட்ச்சிமையையும், மகிமையும், பரிசுத்தத்தையும் படைப்பின் ஒவ்வொரு கிரிகையோடும் முழுமையாக நித்தியதிற்கும் அளிக்க சித்தமாயிருகிறார்.
ஒவ்வொரு படைபிற்க்கும் அவர் அளிக்கும் கொடை மேலானது. அவர் அருளும் கொடையோ வான தூதர்கள் ஒருங்கே கொண்டுள்ள கொடைகளிலும் மேலானது.
   கடல் நீரின் துளிகளிலும், கடற்கரை மணல் துகள்களிலும், விண்மீன்கள்
கோள்களும் அவற்றில் நிறைந்துள்ள அனைத்திலும், நம் கற்பனைகொள்ள முடியாத அளவிலும் அதிகமாக உள்ளதே அவர் அருளும் கொடை. இவையாவும் ஒருங்கே பெற படைப்பனைத்தும் தடையின்றி தயாராகவும், தகுதியாகவும் இருக்க வேண்டுமே!...
       ஓ..பயங்கரமான பாவக்கறையே... சொல்லிலடங்கா இம்மாபெரும் பேற்றைபெற நீதானே தடையாக உள்ளாய்.!.
     அவரின் மாட்ச்சி ஒருபோதும் குறைவுபடாமல், அவரது மேன்மை மேன்மேலும் துலங்கவும் இம்மாபெரும் வெளிப்பாட்டுக்கு அவர்தாமே சித்தமானார். தம்மைத்தாமே வெளிப்படுத்த அவர்தாமே திருவுளம் கொண்டதால் அனைத்தையும் அவர்  அறிந்துள்ளார். தம் மாண்புகளாலும் மாட்ச்சியாலும் மகிமைபடுத்தப்படவே இம்மாபெரும் வெளிப்பாட்டுக்கு அவர் சித்தமானார்.
     இம்மாபெரும் வெளிப்பாட்டில் துலங்கும் ஒழுங்கு, சுய வெளிப்பாட்டின் இலக்கு எத்துணை மேன்மையானது. ஒழுங்கு முறையில் பரம்பொருளின் தன்மையும் அவரின் குண நலன்களும் துலங்குகின்றது. காரணமும் கருத்தும் ஒருங்கே  அமைந்துள்ளன. ஒவ்வொரு தருணமும் ஒன்றைஒன்று ஒத்தமைந்து வெளிப்படுவது மாபெரும் வியப்பே. இதே மாபெரும் தருணத்தில் தாம் மனு உருக்கொள்ள சித்தமுமாய் இருகின்றார்.
   இத்தெய்வீக மெய் ஞானத்தில் கிறிஸ்த்துவின் மனித  சாயலும் தெய்வீக சுபாவமும் கரு பெறுகின்றது. இதனினின்றே பிற மனித சாயலும் சுபாவமும் புலப்பட்டு புறப்படுகின்றன. மனித உடலும், உயிருள்ள ஆன்மாவும் இத்தருணத்தில்தானே நிர்மானித்து தீர்மானிக்கப்படுகின்றது.
    படைத்தவரை  அறியவும், அன்பு செய்யவும், வனங்கவும் கண்டுணரவும் செய்வதும் இத்தருணமே. சர்வ வல்லமையுள்ள இவர்தாமே தம் சாயலோடும், குணாதிசயங்களோடும் மனு உருகொள்ளும் கிறிஸ்த்துவில் நிறைந்திருகின்றார்.
" நீரோடைகள் இறைவனின் நகருக்கு மகிழ்ச்சி தருகின்றன" என தாவீதைப்போல் பாடி மகிழ்கின்றேன். கிறிஸ்த்து பெற இருக்கும் அருளும் மாட்ச்சியும் மகிமையும் இத்தருணத்தில் சித்தமாக இருகின்றது. மனு உரு கொள்ள தாம் தேர்ந்துகொள்ளும் தாயும் மஹா பரிசுத்த பாத்திரமுமான அன்னை மரியாவும் இதே தருனத்தில்தாமே சித்தமாயிருகின்றார்.    படைப்பனைத்திலும் முதன்மையாக பரம்பொருளின் சித்தத்தில் உள்ளாரே.!.
ஒப்புயர்வற்ற மேன்மையும், மகிமையும் நிறைந்து மனித உருகொள்ளும் கிறிஸ்த்துவை அவர் தாங்கும் பேறுபெற்றுள்ளார். தெய்வீக ஊற்று அவரில் நிறைந்துள்ளது. தெய்வீக ஊற்றால் நிரம்பப்பெற்றுள்ள இவர் இறைவனைத்தாங்கும்  மாண்பையும் மகிமையையும் தகுதியையும் பெற்றிருகின்றார்.
    இந்த தெய்வீக அறிவால் நான் பரவசமாகி என்னையே மறந்து நின்றேன். இம்மாபெரும் பாத்திரம் நித்தியத்தில் சித்தமாயிருகின்றது. இதைக்குறித்து நான் பேருவகை கொள்கிறேன்.
     விவரிக்க முடியாத இம்மாபெரும் பாத்திரத்தை நமக்காக சித்தம்கொண்ட பரம்பொருளில் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன். என் விசுவாசம் எனக்கு கற்பிக்கவில்லை எனில் நான் கண்டுணரும் இக்காட்ச்சியும் கற்பிக்காவிடில் நான் இதை விசுவாசிக்க இயலுமோ.!. மரியாளை பரம்பொருள் தாமே தம் நித்திய சித்தத்ததில் கொண்டுள்ளார். அவரின் நித்திய சித்தத்தில் இவர் நிறைந்துள்ளமையால் அதே நித்திய மாட்ச்சியிலும் உள்ளார்.
     இம்மாபெரும் தெய்வீக மறைபொருளை கண்டு  ஆனந்தக்கண்ணீர் வடிக்கின்றேன். மனிதர் அனைவருக்கும் இப்பெரும்பேறு இல்லையே என்று என் ஆன்மா கலங்கி வருந்துகின்றது. இதனினும் இன்னும் மேலானவை அறியப்படாமல் உள்ளன.
   கடவுளின் மாட்ச்சிமிக்க இப்பேழையைகண்டு மெய்மறந்தேன். இதை தம் சித்தத்தில் கொண்டவர் இதனினும் மேலானவரன்றோ?. படைப்பின் ஒவ்வொரு அங்கமும் படைத்தவரை பறைசாற்றுகின்றன. இவையாவற்றையும்விட மரியாள் மேலாக  பறைசாற்றுபவராக துலங்குகின்றார்.
மனுவுரு எடுக்கும் இவ்வுடன்பாட்டில் அன்னை மரியவுக்கு தூய்மையும் புனிதமும் அருளும் குறைவின்றி கொடுக்க சித்தமானார். தான் பிரவேசிக்க இருக்கும் இவ்வாலயதிற்கு அவரே அரணாக இருந்து காக்கின்றார். தனிச்சிறப்பும் அருளும்  அவரில் [ மரியாளுக்கு ] நிறைந்துள்ளது. இவர் வழியாக மனுக்குலம் பெறப்போகும் அருள்வரங்களும் கடவுளின் மகிமைக்கே. இக்கணத்தில் மனுவுரு எடுக்க இடாம் ஏற்பாடு செய்கின்றார். நித்திய வார்த்தை தங்க தக்கதோர் இடமாக மரியா உள்ளார்.
   இதன் பொருட்டே விண்ணும் ம்ண்ணும், விண்மீன்களும் மற்ற கோள்களும் உண்டாக்கப்பட்டன. மனு உரு கொள்ளும் யேசு இவை யாவற்றிற்கும் தலைவராகவும் அரசராகவும் இருகிறார். அவரின் அரசாட்ச்சிகு அனைத்தும் தயாராகின்றன.
மாட்ச்சியும் தூய்மையும் பொருந்திய வான தூதர்களை படைகிறார். அவர்களை மூன்று படிகளில் பனிரெண்டு குழுக்களாக பிரிக்கிறார். கடவுளை மகிமை படுத்தவும், அவரை அறிந்து அன்பு செய்யவும் அவர்களை பணிகிறார்.
மனு உரு கொள்ளும் யேசுவை மகிமை படுத்தவும் அவருக்கு பணிந்திருக்கவும் அன்னை மரியாவை தங்கள் அரசியாக ஏற்று மகிமைபடுத்தவும் பணிக்கிறார். யேசுவையும் மரியாவையும் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களை  தங்கள் கரத்தில் தாங்கிச்செல்லவும் பணிகிறார். யேசுவின் வழியாக அருளும் மாட்ச்சியும் அவரில் நிறைந்துள்ளது.
    கடவுள் யேசுவை வான தூதர்களுக்கும் அரசராகவும், வான தூதர்கள் யேசுவுக்கு பணிந்திருக்கவும் பணிக்கிறார். நன்மையே உருவான அவர் அனைத்து அருள் வரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளார். இதே கணத்தில் பரிசுத்த வான  தூதர்களினின்று கெடுமதிகொண்டு தவறிய வான தூதர்களையும் தனித்தனியே பிரிக்கிறார்.
      அனைத்தையும் அறிகின்ற பரம்பொருளான அவர் தன்னிறைவோடு அவர்களை அறிகின்றார். தமக்கு பணிந்திருப்போரையும் அகங்காரத்தால் தம்மை  ஏற்காதவர்களையும் நன்றே அறிகின்றார். தம் மாட்ச்சி துலங்கவும், தம்மை பணிவோருக்கு அருள் பாலிக்கவும் விண்ணுலகை படைகின்றார். பிற படைப்புகளுக்கு மண்ணுலகை படைகின்றார். அதன் ஆழத்தில் கெடுமதிகொண்ட  வானதூதர்களை சாத்தான்களாக அங்கே அனுப்புகின்றார்.
     கிறிஸ்த்துவுக்காக மக்கள் திறள் படைக்கப்பட்டது. கிறிஸ்த்து பரம்பொருளான கடவுளின் சித்தத்தில் ஏற்கனவே உருவாகிவிட்டார். அவரின் சாயலாகவும், பாவனையாகவுமே மனிதன் படைக்கப்பட வேண்டுமென சித்தமானார்.
    மனு உருகொள்ளும் யேசு கிறிஸ்த்து மனிதனாக இருப்பினும் தம் மாட்ச்சிமையில் மனிதர்களினும் மேலோங்கி அவர்களுக்கு தலைவராக இருகின்றார். ஒரு ஆண் ஒரு பெண் துவங்கி மனுக்குலம் முழுவதும் உருவாக்கப்பட சித்தமானார்.
[ இப்படியாக ஆதாம் படைக்கப்பட்ட போது அவனுக்கு முப்பத்து மூன்று வயதுடைய வாலிபனாகவும் அவனது தோற்றமும் அச்சு அசலாக யேசுநாதரைப்போலவும் இருந்தது. அவனுடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட ஏவாள் அச்சு  அசலாக மரியாளின் தோற்றம் உடையவளாகவும் பதினைந்து வயதுடைய மங்கையாகவுமே படைக்கப்பட்டாள்.]
தம் படைப்பின் இவ்வொழுங்கில் தாம் மனு உரு எடுக்கத்தேவையான தாயும் உள்ளார். மெசியாவாகிய யேசுவின் பொருட்டு அவருக்கு அருளும் கொடைகளும் முழுமையாக அருலப்படுகின்றன. அவர்கள் தாமே அவற்றுள் நிலை பெற வேண்டும்.
     மரியாவைத்தவிர்த்து ஆதாமும் அவன் வழியாக யாவரும் தவறத்தக்கவர்கள் எனவும் அறிந்திருகின்றார். தவறுக்கு பிராய சித்தமாக மனுவுறு எடுக்கும் மெசியா துன்பங்களை ஏற்க வேண்டும். தமது இரத்ததாலேயே மனிதருக்கு  இரட்ச்சிப்பு உண்டு. இரட்சிக்கப்படுவோர் அவரின் நீதிப்படி ஏற்றுக்கொள்ளப்படுவர். மனுக்குலத்தின் மீட்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை வாஞ்சையோடு எதிர் நோக்குவோர் இரட்சிக்கப்படுவர். இதுவே இறைசித்தம்.
   தன்னிச்சையாக பாவத்தில் விழவோ தவிர்க்கவோ மனிதருக்கு சுதந்திரம் உண்டு. இறையருளாலும், மெய் ஞானத்தாலும் எவ்வகை வாழ்வையும் சுதந்தரிக்க மனிதருக்கு உரிமை உண்டு. மனித சுதந்திரத்தில் கடவுளின் குறுக்கீடு இல்லை.
கடவுள் தன் அருளிரக்கத்தை யாருக்கும் தடை செய்யவும் இல்லை. அவருடைய சித்தம் மனிதருடைய இதயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்திற்கும் மேலான அவரை நாம் ஏற்று ஆராதிக்க அறியேன் என் யாரும் சொல்லவும்  முடியாது.
    அனைத்தையும் படைத்தவரும் இரட்ச்சிப்பவருமான பரம்பொருளான கடவுள் தம்மைத்தாமே வெளிப்படுத்த திருவுளம் கொண்டார்.
   அதனை அறிந்துகொள்வதில்தான் எத்தனை தாமதம்.
அளப்பறியா என் இறைவா..... உம் மேன்மையை கண்டுணர்ந்து உம் பெருமையை பறை சாற்ற நான் எம்மாத்திரம்.!. வான தூதர்களிலும் நான் மேலானவனல்ல. இம் மாபெரும் வெளிப்பாட்டைகான தூசியும் புழுதியும் போன்ற அடியேனுக்கு  தகுதியே இல்லை. உம் ஞானத்தையும் மாட்ச்சிமையையும் காண நான் எம் மாத்திரம் ?.உம் திருமுன் நான் என் ஒன்றுமில்லாமையை உணருகின்றேன்..இக்காட்சியைக்காண எனக்கு தகுதி இல்லையே எனினும் இதைக்காண நான் பேறு பெற்றேன்.
    ஆண்டவரே நீரே என்னை மிளிரச்செய்கின்றீர். நீரே என் பாதைக்கு விளக்கு. நான் எப்படி இருந்தேன்... இப்போது எப்படி இருகிறேன் என கண்டுகொண்டேன். இனி எப்படி இருக்கப்போகிறேன் என்பதுகுறித்து நான் அச்சம்
கொள்கிறேன். என் அரசே என் இறைவா... உம் திருமுக ஒளியால் என்னை நிறப்பி இம்மாபெரும் காட்ச்சியை கண்டு உணர்ந்துகொள்ள நீர்தாமே சித்தமானீர். என் மக்களே இதோ கடவுள் எனக்குகொடுத்த என் நேரம் முடியப்போகிறது " என்றார்.
     அவரைப்பின்பற்றி வந்த மக்கள் அனைவரும் ஆண்டவரின் புதுமையால் உயிர்பெற்றெழுந்த ஆயர் டென்னிஸ் அவர்கள் மீண்டும் இறக்கப்போகின்றார் என அறிந்து மிகுந்த விசனமுற்று, " எங்கள் மரியாதைக்குறிய ஆயர் அவர்களே  எங்களுக்கு நல்ல புத்தி கூறுங்கள் " என்று கேட்டனர்.
       அப்போது ஆயர்," என் ஆடுகளே... என் மக்களே...ஆண்டவரின் நீதிக்கு பயப்படுங்கள். ஆனால் அவரிடம் இரக்கம் நிறைவாய் உள்ளது. ஆண்டவரே தேவாரீர் என் மீது கோபம்  கொண்டால் உம் திருமுன் நிலை நிற்பவன் யார்... ஆனால் உம்மிடம் மன்னிப்பு உள்ளதால் பயபக்தியுடனே உம் தாழ் பணிந்தேன் என்று தாவீதரசர் பாடுவதைப்போல் அவரது இரக்கத்தை கெஞ்சி மன்றாடுங்கள். நம்முடைய கடவுள் சினம்  கொள்ள தாமதிப்பவர். நம் வாழ்நாள் வெகு விரைவில் முடிந்து போகும். தீயோரை முடிவில்லா அந்தகாரம் வெகு விரைவில் சூழ்ந்துகொள்ளும். ஆனால் ஆண்டவரால் மீட்புபெற்றவருக்கு அந்தகாரம் இராது. மாறாக முடிவில்லா ஞான ஒளியில்
அவர்கள் வாழ்வார்கள். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை... ஆண்டவரின் இரக்கத்தை கெஞ்சி மன்றாடுங்கள். எப்போது ஆண்டவராகிய யேசுநாதர் சிலுவையில் தன் தாயாரை " இதோ உன் தாய் " என்றாரோ அப்போது முதல் அவர் இந்த அகில உலகில் உள்ள மனிதர் அனைவருக்கும் தாயானார். கடவுளின் மிகுந்த இரக்கம் இவர்வழியாக மனிதருக்கு கிடைக்கிறது.. இவரே மோட்ச்ச விளக்கு. இந்த ஒளியை பயன்படுத்தி இந்த உலகின் அந்தகாரத்திலிருந்து தப்பிக்க உடனே  அவரை சரணடையுங்கள். யேசுநாதரின் தாய்ப்பாசம் அவர் வழியாக தன்னிடம் வருவோர்க்கு மிகுந்த சகாயத்தை ஏற்படுத்துகின்றது. யேசுநாதர் கடவுளும் மனிதருமாய் இருப்பதால் அவருடைய நேசத்தாயாருக்கு அவரிடம் எவ்வளவு செல்வாக்கு
இருகின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.  துரதிஸ்டவசமாக அந்தகாரத்தில் மூழ்கி இருக்கும் மக்கள் பலர் இவரையோ அவரது திருமகன் யேசுநாதரையோ அறிவதே இல்லை. அறிந்தாலும் அவர்கள் மட்டில் அன்பும், பாசமும், நம்பிக்கையும், விசுவாசமும் வைப்பதே இல்லை. தீர்வை நாளிள் இவர்களை கடவுள்," நான் உங்களை அறியேனே " என்பார். இறைமகன் யேசுநாதரை அன்றி வேறு யாராலும் கடவுளை அடையவே முடியாது. அவரே உண்மையும், வழியும், ஒளியும், சத்தியமும்,  ஜீவனுமாய் இருகின்றவர்.
மந்த புத்தியும்,மறதியும், அசட்டைத்தனமும், அலட்ச்சியமும் கொண்ட மக்களை சாத்தான் அந்தகாரத்துக்கு வெகு விரைவில் அழைத்துச்செல்கிறான். அவனுடைய தந்திர மாயங்களினின்று தப்பிக்கவும், யேசுநாதரை அடையவும் சுலபமான  ஒரு வழி அவருடைய திருத்தாயாரை சரணடைவதுதான். இவரை சரணடைந்தோரை பரலோகத்தில் சேர்க்க மோட்ச்சத்தில் இவருக்காகவே ஒரு வழியையும் யேசுநாதர் ஏற்படுத்தி இருகின்றார். இதனாலே இவரை பரலோகத்தின் வாசல்  என்கின்றனர் திருச்சபையின் வேதபாரகர்கள்.
ஆகவே என் மக்களே ... என் ஆடுகளே.. காலம் கனிந்திருக்கும்போதே உங்கள் தப்பிதமான வாழ்க்கையிலிருந்து திருத்திக்கொள்ளுங்கள். கடவுளை நம்புங்கள்... அவருடைய நேசத்தாயாரை சரணடையுங்கள். இதுவே ஆண்டவராகிய யேசு நாதரிடமிருந்து எனக்கு கொடுக்கப்பட்ட அவசர செய்தி... இதோ என் நேரம் முடிந்து விட்டது. என் கண்களை இருள் சூழ்கிறது. மீண்டும் மறு உலகில் சந்திப்போம் "
    இந்த பிரசங்கம் முடியும்போது ஆயர் டென்னிஸ் பாரீசிலுள்ள சேன் நதிக்கறையோரம் வந்திருந்தார். அந்த சேன் நதியில் தன் தலையை கழுவினார். மீண்டும் சிறிது தூரம் நடந்த சென்றபின் நின்று மீண்டும் இறந்தார். அவருக்கு அந்த இடத்திலேயே ஒரு கல்லறைகட்டி அதன்மீதே பிற்காலத்தில் ஒரு பெரும் தேவாலயம் அழகு மிளிர கட்டினார்கள். பிற்காலத்தில் ஃப்ரான்ஸ் நாட்டை ஆண்ட பல புகழ்வாய்ந்த அரசர்கள் தங்கள் கல்லறைகளை இந்த தேவாலயத்திலும் அதன்  சுற்றுப்புறங்களிலும் கட்டிக்கொண்டார்கள். பிரபல அரசர்கள் லூயிஸ் 15 மற்றும் லூயிஸ் 16 ஆகியோரின் கல்லறைகள் இந்த தேவாலயத்தினுள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன.
       பாரீஸில் புனித டென்னிஸ் தேவாலயம் உலகப்புகழ்பெற்றது.
அதன் அழகு இக்கால கட்டிடக்கலை நிபுணர்களுக்கு ஒரு பெரும் சவாலாக திகழ்கிறது. இத்தனைக்கும் இந்த தேவாலயத்தை கட்டும்போது வெறும் கைகளாலும், சாதாரணமாக கையாளப்பட்டுவந்த கைப்பொருட்க்களாலுமே இந்த  தேவாலயத்தை கட்டினார்கள்.
    கி.பி.451ல் ஹூனர்கள் என்னும் ஒரு முறட்டு மலை ஜாதியினர் அட்டில்லா என்பவனின் தலைமையில் ஐரோப்பா முழுவதையும் ஆட்டிப்படைத்தனர். இவர்கள் இவர்களின் படை எடுப்பை அறியவந்த ஃப்ரான்ஸ் நகர மக்கள் தங்கள்  இருப்பிடங்களை காலி செய்து நாட்டைவிட்டே ஓடலாயினர். ஆனால் அப்போது வாழ்ந்துவந்த ஜெனெவிவே என்னும் ஒரு பெண் தீர்க்கதரிசனம் கூறினாள்." என் நாட்டு மக்களே அட்டில்லா இந்த பாரீசில் நுழைய மாட்டான்.
நீங்கள் அச்சமின்றி மீண்டும் நகருக்குள் வாருங்கள்." அதன்படியே ஹூனர்கள் தலைவன் அட்டில்லா தன் பார்வையை ஃப்ரான்சின் தென்பக்கம் திருப்பிச்சென்றான். இந்தப்பெண் ஜெனெவிவே அப்போது பாரீசின் அரசனாக இருந்த க்ளோவிஸ் என்பவரை மனம்மாறச்செய்து ஒரு நல்ல கிறிஸ்த்துவ அரசனாக மாற்றினள். இந்த அரசனின் உதவியுடனும் மக்களின் ஒத்துழைப்புடனும் நம் ஆயர் டென்னிஸுடன் தலை வெட்டப்பட்ட மற்ற ஆயர்களுக்குமாக அந்த மலை உச்சியில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.
         தீர்க்கதரிசனம் கூறிய அந்தப்பெண் ஜெனெவிவேவை திருச்சபை மறக்காமல் அவளுக்கும் புனிதர் பட்டம் கொடுத்து கௌரவித்தது. பாரீஸ் நகர மக்கள் அவளுக்கு இந்த சேன் நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு பாலத்திற்கு அருகில் இவருடைய ஒரு திருவுருவச்சிலையை அமைத்திருகின்றார்கள். ஆயர் புனித டென்னிஸ் அவர்கள்தான் ஃபிரான்ஸ் தேசத்தில் கிறிஸ்த்துவ மதம் தழைக்க தன் உயிர் கொடுத்த முதல் வேத சாட்ச்சி. எனவே அவர் ஃப்ரான்ஸ் தேசத்தின் முதல்  அப்போஸ்த்தலர் என்றும் ஃப்ரான்ஸ் தேசத்தின் பாதுகாவலர் என்னும் பட்டமும் பெறுகின்றார். பாரீசில் புனித டென்னிஸ் தேவாலயமும் இந்த வேத சாட்ச்சிகளின் மலைமீது கல்லறை அமைக்கப்பட்டுள்ள ஆறு ஆயர்களுக்குமான தேவாலயங்களும்
புனித ஸ்தலங்கள் ஆயின.
     இந்த ஏழு ஆயர்களுக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் சரித்திரத்தில் ஆயர் புனித டென்னிஸ், ஆயர் புனித எல்லூதிரியுஸ், ஆயர் புனித ருஸ்டிகஸ் இவர்களுடைய பெயர்களே சரித்திரத்தில் நிலைபெற்றன.
ஆயர் புனித டென்னிஸ் அவர்களுடன் மேலும் நாற்பதுபேர் அவரது உதவியாளர்களாக இருந்ததாக கூறப்பட்டாலும் அவர்கள் பெயர்கள் நினவுகூறப்படவில்லை. நம் அன்புள்ள ஆயர் புனித டென்னிஸ் அவர்கள் புகழ் ஐரோப்பா முழுவதும்  பரவியது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியது.
      அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி கி.பி.250ஆண்டில் அவர்களின் தலைவெட்டப்பட்ட அந்த தினமே இந்த வேத சாட்ச்சிகளின் திருவிழாவாகவும் திருச்சபை கொண்டாடுகிறது. இவர்களின் சிரம் கொய்யப்பட்ட அந்த மெர்கூரியன் மலையில் மேலும் பல வேதசாட்ச்சிகள் கொல்லப்பட்டதால் அந்த மலை தற்போது தற்போது வேத சாட்ச்சிகளின் மலை எனவும் பெயர் பெற்றது.
நம் ஆயர் புனித டென்னிஸ் அவர்களுடன் வேத சாட்ச்சிகளாக மரித்த மேலும் ஆறு ஆயர்களும் ஆயர்கள் அல்ல .அவர்கள் ஆயருடைய உதவியாளர்களே என்றும் அவரோடு மரித்தவர்கள் ஐந்துபேர்தான் என்றும் சில பல திருச்சபைகள்  கூறினாலும் நம் ஆயருடைய சரித்திரம் உண்மையானதென்று அனைத்து திருச்சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
நம் ஆயர் தன் தலை வெட்டப்படுமுன் ஆளுனன் செலினியுஸிடம் உன் நிலையும் உன் அரசனின் நிலையும் வெகு சீக்கிரம் மாறிப்போகும் என்றார் அல்லவா... அப்படியே ஆயிற்று. கி.பி. 250ல் மாமன்னன் திராஜன் தேசியனால்
ஆரம்பிக்கப்பட்ட வேத கலாபணை கி.பி. 251ல் முடிவுக்கு வந்தது. காரணம் மாமன்னர் திராஜன் தேசியனும் அவன் மகன் ஹிரேனியுஸும் காத்தியர்களுக்கு எதிராக அர்பிடுஸ் என்னுமிடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டதுதான்.
        ஒரு வருடம் என்னும் காலக்கெடு குறைந்ததுதான் என்றாலும் கிறிஸ்த்துவர்களுக்கு எதிரான இந்த வேத கலாபணை மிகவும் கொடூரமானது.
அன்று யேசுநாதரை பார்த்து " யார் நீ ?" என்று ஏரோதன் கேட்ட கேள்விக்கு நம் ஆயர் புனித டென்னிஸின் பிரசங்கம் சரியான பதிலை கொடுத்தது. ஆம் அவரே நம்மை இரட்ஷிக்க இந்த பூவுலகுக்கு யேசுநாதராக மனிதாவதாரம்
எடுத்துவந்த பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன்.
     தன் தலை கொடுத்து யேசுநாதருக்கு சாட்ச்சி சொன்ன ஆயர் புனித டென்னிஸ் அவர்களே எங்களுக்காக வேண்டிகொள்ளும். ஆமென்.
     பின் குறிப்பு : திருச்சியில் மேலப்புதூரில் அமைந்திருக்கும் ஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் மேல் விதானத்தில் பல வேத சாட்ச்சிகளின் பாடுகள் பெரும் பெரும் சித்திரங்களாக வரையப்பட்டிருந்தன. அவற்றுள் தன் தலையை தன் கைகளில் ஏந்திக்கொண்டிருந்த ஆயர் புனித டென்னிஸின் சித்திரம் என்னை வெகுவாக கவர்ந்தது. இவரைப்பற்றி நான் எழுதலாம் என்றால் எனக்கு கிடைத்தது ஒரு சில வரிகளில் முடியும் அவரது சரித்திரம். அவர் தன் தலை வெட்டப்பட்டும்  பத்து கி.மி. அளவுக்கு அந்த வேத சாட்ச்சிகளின் மலை மீதிருந்து பிரசங்கித்துக்கொண்டே கீழே இறங்கிவந்து சேன் நதிக்கறையோரம் நின்று மீண்டும் இறந்தார் என்னும் செய்திதான். அவரது பிரசங்கம் என்னவாக இருந்திருக்கும் என்பது பற்றி எந்த செய்தியும் இல்லை. எனவே நான் பல நாட்க்கள் இந்த கதையை எழுத முடியாமலும் விட்டு விடலாம் என்றால் அதற்கும் முடியாமலும் நான் தவிர்த்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் எனக்குக்கிடைத்தது ஒரு புதையல். அது ஒரு  கருத்துப்புதையல். இஸ்பானியா தேசத்தில் வாழ்ந்த திருவெளிப்பாடு வரம்கொண்ட புனித அக்ரிதா அம்மாள் என்னும் கன்னிகா ஸ்த்ரீ எழுதிய The mystical city of God என்னும் புத்தகம். அதில் தம திருத்துவத்தின் தன்மைகள் என்னும்  பகுதி என்னை வெகுவாக கவர்ந்தது. ஆக.. அன்று ஆயர் புனித டென்னிஸ் தன் தலை வெட்டப்பட்ட இடத்திலிருந்து பத்து கி.மி. தூரமும் மலைமீதிருந்து கீழே இறங்கி வரும் வரை தமதிருத்துவத்தின் தன்மைகளையும் பாவ  விமோச்சனதிற்கான வழியுமே பிரசங்கித்திருப்பார் என்று கருதி இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். இந்த கட்டுரைக்கு இந்த மலைபிரசங்கத்தை...புனித தமதிருத்துவத்தின் தன்மைகளை எனக்கு தமிழில் மொழிபெயர்த்து கொடுத்தவர் எங்கள் நெய்வெலி நகரில் எங்களுக்கு  சிறந்த மன நல ஆலோசகராக பணியாற்றும் சங்.சக்காரியாஸ் அவர்களுக்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி உறித்தாகுக
மேலும் இக்கதை ஆரம்பிக்கும் பகுதியில் யார் நீ என்று கேள்வி கேட்ட ஏரோது மன்னன் துவங்கி யேசுவின் சிலுவை மரணத்திற்கு பின்பு வரை நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிந்துகொள்ள உதவியது திருகாட்ச்சி வரம் பெற்ற  புனித கன்னிகை காத்தரின் எம்மரிக் அவர்கள் எழுதிய The passion of Christ என்னும் புத்தகம். வேத சாட்ச்சிகளின் வரலாற்றை எழுதம் அளவுக்கு நான் பரிசுத்தவானும் அல்ல. பெரும் எழுத்தாளனும் அல்ல. என்றாலும் எனக்குள் ஏதோ ஒரு உந்துதல்..எனக்குத்தெரிந்த இந்த கதைகள் பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. எனவே உனக்குத்தெரிந்த கதைகளை எழுது. அது பலருக்கு தெரிந்தால் அது அவர்களுக்கு நலமாயிருக்கும் என்று என் மனதுக்குள் யாரோ சொல்லவது போல் ஒரு பிரேமை... அதனாலேயே நான் இக்கதைகளை எழுதுகிறேன்.