செப்டெம்பெர் 11 தினத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.. அது இந்த உலகின் வல்லரசான அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது அல் கோய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினம். ஆனால் வரலாற்றில் வேறு ஒரு செப்டெம்பெர் 11 தாக்குதல் நடத்தப்பட்டதை கிறிஸ்த்திவ வரலாற்றை அறிந்துகொண்ட வெகு சிலருக்கே தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. அதுதான் கி.பி. 1683 ஆம் ஆண்டு செப்டெம்பெர் 11 அன்று இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்த்துவ மன்னர்களுக்கும் எதிராக ஆஸ்திரியா தேசத்தின் தலை நகரான வியான்னாவில் நடத்தப்பட்ட போர் ஆகும்.
இந்த கதையைப்பற்றி கூற வேண்டுமானால் நேயர்கள் சில சரித்திர நிகழ்வுகளை அறிந்திருக்க வேண்டியது அவசியம். அன்றைய பைசாந்திய பேரரசு [இன்றைய துருக்கி ] காண்ஸ்டாண்டி நேபிள்ஸ் என்ற ரோமைய பேரரசர்களின் வல்லரசாக கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டு வந்தது. பிறகு இஸ்லாமியர்கள் இந்த காண்ஸ்டாண்டி நேபிள்ஸை வென்று இஸ்லாமிய பேரரசை தோற்றுவித்தார்கள். இந்த இஸ்லாமிய பேரரசுக்கு இஸ்தான்புல் தலை நகராக விளங்கியது.
இந்த இஸ்தான்புல் நகரில் தோப்காப்பி என்னும் அரண்மனையில் தங்கள் வாசஸ்த்தலத்தை அமைத்துக்கொண்டார்கள். இந்த தோப்காப்பி என்னும் அரண்மனையில் பல இஸ்லாமிய பேரரசர்கள் முடி சூட்டிக்கொண்டார்கள். ஒவ்வோரு இஸ்லாமிய ஓட்டோமானிய பேரரசர்களும் தங்களுடைய நாடுபிடிக்கும் பேராசைக்கு பல அன்னிய தேசத்தவர்களை அடிமையாக்கி அவர்களுடைய அரசுகளையும் தங்களுடையதாக்கிக்கொண்டு வன்முறையிலேயே தங்கள் மதத்தை பரப்பினர். அவர்களைப்பொருத்தவரையில் இஸ்லாமிய மதமே உண்மையானது... மற்றைய மதங்கள் யாவும் போலியானவை. அவர்கள் வணங்கும் தெய்வங்களும் போலியானவைகள். எனவே எங்களுடைய தெய்வங்களையே நீங்களும் வணங்க வேண்டும். எங்களுடைய மதத்தையே நீங்களும் பின்பற்ற வேண்டும் என்று தங்களால் பிடிக்கப்பட்ட நாட்டினரை வற்புறுத்தி மதம் மாறச்செய்தனர் என்பது சரித்திரம் நமக்கு காட்டும் உண்மை. இப்படியாக கி.பி. 1529ல் சுலைமான் [sulaimaan the magnificient ] என்னும் ஓட்டோமானிய மன்னர் இஸ்தான்புல்லில்லிருந்து ஒரு பெரும் படையை திரட்டிக்கொண்டு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றி அந்தந்த நாடுகளில் தங்களுடைய இஸ்லாமிய மதத்தை பரப்ப வேண்டுமென்னும்
நோக்கத்துடன் புறப்பட்டார். இந்த சூறாவலிப்பயணத்தில் அவர் கால்பட்ட இடங்களும் நாடுகளும் அவருக்கு அடிமைப்பட்டன. அவருடைய சூறாவளித்தாக்குதல் முன்பாக பெல்க்ரேட், அல்பேனியா, குரோஷியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி போன்ற நாடுகள் தலைகுப்புற நிலை தடுமாறி விழுந்தன.
அடுத்தது ஆஸ்த்திரியா. இந்த தேசத்தின் தலை நகர் வியன்னா. இந்த ஆஸ்த்திரியா தேசமே ஐரோப்பாவின் இதயம் போன்றது. ஆக இந்த நாட்டைக்கைப்பற்றிக்கொண்டால் முழு ஐரோப்பாவையும் எளிதாக வென்று
விடலாம் என்பது மாமன்னர் இரண்டாம் மெஹமூத்துவின் கணக்கு. ஆனால் அவரது கணக்கு இந்த நாட்டில் தவறாகிப்போனது. பல மாதங்களாக பல நாடுகளை வென்று போராடிபோராடி சோர்ந்துபோய் இருந்தனர் பைசாந்திய இஸ்லாமிய போர் வீரர்கள். மேலும் பருவ மழை மிகவும் தீவிரமடைந்து அந்த டூனபே என்னும் நதியின் நீர்மட்டத்தை மிகவும் உயர்த்தியது. நிற்காமல் பெய்யும் மழை, அசுர வேகத்தில் ஓடிவரும் டூனபே நதி, இந்த இரண்டு இயற்கை எதிரிகளை மன்னர் இரண்டாம் மெஹ்மூதால் வெற்றிகொள்ள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட சேதம் வார்த்தையில் சொல்ல முடியாததாக இருந்தது. தாங்கள் கொண்டுவந்திருந்த உணவுப்பொருட்க்களும், ஆடு மடுகளும், ஒட்டகங்களும், இந்த காட்டாறான டூனபே நதியில் அடித்து செல்லப்பட்டுவிட்டன.
கடும் பனியாலும்,வியாதியினாலும் உணவு பொருட்க்கள் கொள்முதல் செய்ய முடியாததாலும், மன்னர் முதல் அனைத்து சிப்பாய்கள் வரையிலும் மேலும் குதிரைகள் கோவேறு கழுதைகள். மிச்சம் மீதி இருந்த ஒட்டகங்கள் அனைத்தும் பட்டினகிடக்கவேண்டும் என்னும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதால் மன்னர் இரண்டாம் மெஹ்மூத் தன் படை எடுப்பை கைவிட வேண்டிய கட்டாயதிற்கு ஆளானார். இந்த ஆஸ்த்திரிய தேசத்தை அவரால் கைப்பற்ற முடியாமல் மீண்டும் இஸ்தான்புல் நகருக்கு திரும்பினார். இது அவருக்கு சொல்ல முடியாத வருத்தத்தை தந்தது. அவரைப்பொருத்தவரையில் எவ்வளவோ கிழக்கு ஐரோப்பிய நாடுகளை வென்றிருந்தாலும் தன்னால் இந்த சுண்டைக்காய் நாடான ஆஸ்த்திரியாவை
கைப்பற்ற முடியாமல் போனது பெருத்த அவமானமாக தோன்றியது. இருப்பினும் இதுவும் அல்லாவின் செயல் என்று தன்னை திருப்திப்படுத்திக்கொண்டார். ஆக முழு ஐரோப்பாவையும் தன்னால் வெற்றி கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் மாமன்னர் சுலைமான் தன் வாழ்நாளை முடித்தார்..
அவருக்குப்பின் வந்த பல இஸ்லாமிய ஓட்டோமானிய அரசர்களுக்கும் இதே கனவும் இருந்தது. ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளையும் வென்று அங்கு தங்களுடைய இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்து அல்லாவின் ஆட்ச்சியை பரப்ப வேண்டும் என்னும் ஆசையும் இருந்தது. இப்படியாக கிபி 1571ல் அப்போதைய பைசாந்திய பேரரசர் இரண்டாம் சேலிம் அவர்களுக்கு இத்தாலியின் வடக்கிழக்கில் இருக்கும் வெனிஸ் நகரை கைப்பற்ற வேண்டி கடல் வழியே வந்து சைப்ரஸ் பார்மகுஸ்த்தா ஆகிய தீவுகளை வென்றார். ஆனால் மால்த்தா தீவை பல நாள் முற்றுகை இட்டும் அது பணியாமல் கடுமையாக எதிர்த்தது. இந்த முற்றுகையில் ஓட்டோமானிய படையெடுப்பு பெரும் தோல்வியில் முடிந்தது. காரணம் பல நாட்க்களாக முற்றுகை இட்டும் எதிரி பணியவே இல்லை. தாங்கள் கொண்டுவந்திருந்த உணவும் தண்ணீரும் தீர்ந்துவிட்டன. உணவும் தண்ணீரும் தங்களுக்கு இந்த மத்திய தரைக்கடலில் கொஞ்மும் கிடைக்காதபடி மால்த்தாவின் அதிபதி வல்லாத்தே தடை செய்துவிட்டான். எனவே மால்த்தாவை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தன் படைகளை பின் வாங்கி மீண்டும் இஸ்தான்புல்லுக்கு திரும்பி சென்றது
அந்த இஸ்லாமிய படை. இந்த மால்த்தாவின் முற்றுகையும் சைப்ரஸ் மற்றும் பாமகுஸ்த்தா தீவின் அழிவும் பற்றிஅறிய வந்த அப்போதைய ஸ்பெயின் மன்னர்களுக்கும் நேப்பில்ஸ் மன்னர்களுக்கும் அப்போதைய பரிசுத்த பிதா பாப்பு ஐந்தாம் பயஸ் அவர்களுக்கும் பெரும்
அதிர்ச்சியை கொடுத்தது. அவர்கள் தங்களுக்குள்ளே ஒரு கூட்டுப்படையை அமைத்துக்கொண்டு ஒரு பெரும் கப்பல் படையை அனுப்பினர். இந்த நேசநாட்டுக்கூட்டுப்படை இஸ்லாமியரின் புகழ்பெற்ற ஓட்டோமானிய கடற்படையை தென்கொரிந்திய கடலில் சந்தித்தது.
சரித்திரத்தில் இந்த யுத்தம் லெபாந்தோ யுத்தம் என்றழைக்கப்படுகின்றது. மிகவும் வலிமை வாய்ந்த இஸ்லாமியரின் கடற்படையை அளவிலும் எண்ணிக்கையிலும் சிறிதான கிறிஸ்த்துவ நேசநாட்டுப்படைகள் ஆஸ்த்ரியா நாட்டைச்சேர்ந்த இருபதே வயது நிரம்பிய ஜான் என்னும் கடற்படைத்தளபதியின் தலைமையில் அக்டோபர் 7 ஆம் தேதி 1571 ல் ஜெபமாலை மாதாவின் அருளாலும் ஆசீராலும் வென்றது.
ஓட்டோமானிய மன்னரின் புகழ்வாய்ந்த கடற்படை இந்த லெபாந்தோ போரில் முற்றிலும் அழிக்கப்பட்டது. அதன் புகழ்வாய்ந்த தளபதிகளும் அதிரடி வீரர்களான ஜைனேசரிகளும் ராணுவ வீரர்களும் ஆக சுமார் 80000 பேர் இந்த போரில் கொல்லப்பட்டதாக ஒரு சரித்திர குறிப்பு கூறுகின்றது. இந்த லெபாந்தோ போரின் வெற்றியை பரிசுத்தபிதா பாப்பானவர் பதினோராம் க்ளமென்ட் அக்டோபர் 7 ஆம் தேதியை ஜெபமாலை மாதாவின் திருவிழாவாக அறிவித்தார்.[ இந்த ஜெபமாலை மாதாவின் வெற்றியை நான் ஜெபமாலை மாதாவின் ஜெயம் என்று எழுதி இருகின்றேன். இந்த கதையில் இந்த லெபாஃந்தோ போரைபற்றி விரிவாக எழுதி இருகின்றேன்]
ஆக கி.பி.1529.ல் ஆஸ்த்திரியாவில் ஏற்பட்ட தோல்வியும், கி.பி. 1571ல் லெப்பாந்தோவில் ஏற்பட்ட கடற்படையின் பெரும் தோல்வியும் இஸ்லாமிய ஓட்டோமானிய பேரரசர்களுக்கு தங்கள் மனதில் நீங்காத ஒரு காயத்தை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக கி.பி.1683ல் ஓட்டோமானிய பேரரசர் நான்காம் முகம்மதுவுக்கு மீண்டும் ஆஸ்த்திரியாவின் தலை நகரான வியன்னாவை கைப்பற்ற வேண்டும் என்ற எண்னம் தலை தூக்கியது..அவரது மனதில் பழிக்குப்பழி வாங்கவேண்டும். தங்கள் முன்னோர்களின் இந்த இரு தோல்விகளுக்கும் சேர்த்து வட்டியும் முதலுமாய் திருப்பிக்கொடுத்தே ஆக வேண்டும் இந்த ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றியே ஆக வேண்டும். ஆக கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை சீர்தூக்கிப்பார்த்து மீண்டும் அத்தகைய தவறுகள் கிஞ்சித்தும் நடவாதபடியும் தோல்வி என்பதையே தங்கள் மனதில் இருந்து அறவே அகற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்படுத்தினார்
பேரரசர் நான்காம் முகம்மது. இதற்காக தன் அரசாங்கத்தின் முதன்மை அதிகாரியும் முப்படைகளுக்கும் தளபதியுமான காரா முஸ்த்தபா பாஷாவை அழைத்தார் மா மன்னர் நான்காம் முகம்மது. The Grand Vizier அதாவது அரசாங்கத்தின் தலைமை முதன்மை அதிகாரி என்னும் பட்டத்துடன் முப்படைகளின் தளபதி என்னும் பட்டம் பெற்றிருந்த காரா முஸ்தபா பாஷாவின் பெற்றோர் அல்பேனியாவை சேர்ந்தவர்கள்.மெர்சிஃபோன்லூ
என்னும் நகரில் நம் காரா பாஷா பிறந்தார். தான் மணம்முடித்தது அக்காலத்திய கோபுரூலு என்னும் அரசகுலத்தில் என்பதாலும் அவரது வீரத்தாலும் சாகசத்தாலும் வெகு விரைவில் தளபதி அந்தஸ்த்துக்கு உயர்ந்தார். அரசாங்கத்தில் பல உயிர்ந்த பதவிகள வகித்துவந்த காரா பாஷா அவர்கள் விரைவிலேயே அரசாங்கத்தின் தலைமை அதிகாரியாக பட்டம் பெற்றார். மாமன்னர் நான்காம் மெஹ்மூதுவின் அழைப்பு வந்ததை தொடர்ந்து தன் பரிவாரங்களுடன் மன்னரை சந்திக்க அவர் வசித்துவந்த தாப் காபி அரண்மனைக்கு வந்தார்.மா மன்னர் நான்காம் மெஹ்மூத் தன் அரியணையில் வீற்றிருக்க அவரை சந்திக்க வந்திருந்த காரா பாஷா குதிரையிலிருந்து இறங்கி மாமன்னர் முன்பாக தரைமட்டும் தலை வணங்கி எழுந்து பின் மன்னர் முன்பாக சென்று பவ்வியமாக பணிந்து நின்றார்.
" வருக காரா பாஷா அவர்களே...வருக வருக. இந்த பைசாந்திய இஸ்லாமிய பேரரசின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் காரா பாஷாவை வரவேற்பதில் நாம் மிகுந்த சந்தோஷம் அடைகிறோம். நாம் உம்மை அழைத்த நோக்கம் நீர் அறியாததல்ல. நம் முன்னோர்கள் இதுவரை சாதிக்காததை நாம் சாதிக்க வேண்டும். ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் நாம் வெற்றிகொள்ள விரும்புகிறோம். இதற்கு முதலில் ஆஸ்த்திரியாவின் வியன்னா எனக்கு வேண்டும். ஐரோப்பாவின் இதயம் போன்றது இந்த வியன்னா. வியன்னாவை வென்றுவிட்டால் ரோமும் வீழ்ந்துவிடும். ரோம் வீழ்ந்துவிட்டால் ஒட்டுமொத்த கிறிஸ்த்துவ நாடுகளும் வீழ்ந்துவிடும். பிறகு ஐரோப்பா முழுவதிலும் இஸ்லாம் வியாபிக்கும். இந்த ஐரோப்பா முழுவதும் எங்கெல்லாம் கிறிஸ்த்துவ தேவாலயங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் அல்லாவின் மசூதி எழுப்பபடும். வாழ்க அல்லாவின் திரு நாமம்..இதை நீ செய்வாய் என நாம் நம்புகின்றோம். உம் வீரத்தின் மீதும் உம் ராஜ தந்திரங்களின் மீதும் நமக்கு நம்பிக்கை இருகின்றது..இந்த வியன்னாவின் வெற்றிக்காக நாம் என்ன விலையும் கொடுக்க தயாராக இருகின்றோம்.இந்த படை எடுப்புக்கு நாம் வரப்போவதில்லை. ஆனால் என் சார்பாக நீ செல்ல வேண்டும். இதற்காக இதோ எம் செங்கொலின் மாதிரி....
இந்த செங்கோலுக்கு எம் சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த யாவரும் தலை வணங்க வேண்டும்.. எம் வார்த்தையே உம் வார்த்தை. எம் கஜானாவின் சாவியையும் உமக்கு தருகின்றேன். உமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவையும் எடுத்துக்கொள். மாறாக நீர் எமக்கு தர வேண்டியது வியன்னாவின் வெற்றி. இத்தோடு நம் பாரம்பரிய பெருமைகுறிய அல்லாவின் திரு நாமம் எழுதப்பட்ட அந்த பச்சை நிற கொடியையும் எடுத்துச்செல். அதன் கண்ணியதிற்கு யாதொரு குறையும் ஏற்படக்கூடாது.
எல்லாம் வல்ல நம் அல்லா உனக்கு சகலத்திலும் வெற்றி அருள்வாறாக" என்றார்.மாமன்னர் நான்காம் மெஹமூத்.. மாமன்னரின் ஆணைப்படி ஒரு தங்கத்தட்டில் அவரது செங்கோலின் மாதிரியான ஒரு செங்கோல் கொண்டு வரப்பட்டது. காராபாஷா அதை பவ்வியமாக தன் கரங்களில் ஏற்றுக்கொண்டு தன் கண்களில் ஒற்றிக்கொண்டார். பின் மாமன்னருக்கு தன் முதுகைக்காட்டாமல் பின்புறமாகவே நடந்து தன் வீரர்களின் முன்னிலையில் நின்றார். பிறகு அவரிடம் ஒரு நீண்ட கழியில் சேர்த்துகட்டப்பட்ட அல்லாவின் திரு நாமம் எழுதப்பட்டிருந்த ஒரு பெரும் பச்சை நிறக்கொடி அவரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அப்போது காராபாஷாவின் வீரர்கள் மிகப்பெரும் கரகோஷம் எழுப்பினர்.
தான் இந்த துருக்கி தேசத்தின் தலை நகர் இஸ்தான்புல்லைவிட்டு புறப்படும் முன்பாக காரா பாஷா தன் அரண்மனையில் தன் இத்தாலிய காதல் மனைவியிடம் பிரியாவிடை பெற வந்திருந்தார்.
அப்போது அவள் " என் அன்பரே நான் உம்மிடம் சில வார்த்தைகளை மனம் விட்டு பேச விரும்புகின்றேன் " என்றாள்.
" சொல் பேகம் ... சொல்.... எதுவானாலும் சொல்." என்றார் காரா முஸ்தபா.
" என் அன்பரே... நான் நேற்று என் கனவில் உம்மைப்பற்றி சில பொல்லாத சொப்பனங்களைக்கண்டேன்...அதைப்பற்றியே உம்மிடம் நான் பேச விரும்புகின்றேன்.அதைப்பற்றி பேசினால் நீர் என் மீது கோபம் கொள்வீரோ எனவும் அஞ்சுகிறேன்."
" நீ எதைப்பற்றி வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம். நீ என் காதல் மனைவி அல்லவா. நான் என் மற்ற எல்லா மனைவியரையும் பார்க்க உன்மீது மிகவும் அதிகம் அன்பு வைத்திருகின்றேன். பேசு..."
" நீர் சொல்லும் அனைத்தும் உண்மை என எனக்கு தெரியும்...இந்த இஸ்தான்புல் நகரில் ஒருக்காலத்தில் ராஜ வம்சத்தில் பிறந்து வளர்ந்த என் முன்னோகள் அடிமைகள் ஆக்கப்பட்டபின் என் வாழ்கைக்கு நீர் ஒளி ஏற்றினீர்.அடிமைச்சந்தையில் என்னை விலைக்கு வாங்கி என் அழகுக்காக உம்முடைய மனைவி ஆக்கிக்கொண்டீர். இதனால் நான் எம் முன்னோர்கள் வணங்கிவந்த கிறிஸ்த்துவத்தை கைவிட வேண்டியதாகியது. நானும் முஸ்லீம் ஆனேன். நம்முடைய திருமணத்தின்
விளைவாக நமக்கு இப்போது பனெரெண்டு வயதில் ஒரு ஆண் மகனும் இருகின்றான். நான் உம் மீதும் என் மகன் மீதும் உயிரையே வைத்திருகின்றேன்.. இதை நீர் அறியாததல்ல......."
" அன்பே இது எல்லாம் பழங்கதை...கதை கேட்க இப்போது எனக்கு நேரமில்லை. ஏதோ சொப்பனம் கண்டதாக கூறினாய்.. அதைப்பற்றிக்கூறு ."
" நேற்று என் கனவில் ஈசா நபி வந்தார்..."
" நீ இப்போது முஸ்லீம்..நீ இன்னும் அந்த ஈசா நபியை கைவிடவில்லையா?"
" நான் என்று உம்முடைய மனைவியாக ஆனேனோ அன்றே அந்த ஈசா நபியை நான் கை விட்டு விட்டேன்.. ஆனால் அவர்தான் என்னை இன்னமும் கைவிடவில்லை போலிருகின்றது."
" ஏன்... அந்த ஈஸா நபிக்கு என்னவாம்... திரும்பவும் வந்து என்னை ஏற்றுக்கொள் என்றாறா?"
" இல்லை.... அவர் என் கனவில் வந்தது உம்மை காபாற்ற.... உமக்கு வரப்போகும் ஆபத்துக்களை சொல்லி உம்மை எச்சரித்துப்போகவே வந்ததாக அவர் என்னிடம் கூறினார்."
" சரி... விஷயத்தை சொல்.... எனக்கு நேரம் ஆகிறது."
" என் எஜமானரே... இன்னும் விடிவதற்கு பல ஜாமங்கள் இருகின்றன... என்னைபொறுத்தமட்டில் இதுவே நாம் சந்திக்கும் கடைசி இரவாக இருக்கும் என்று தோன்றுகிறது."
" பெண்ணே மோகத்துக்கும் காதலுக்கும் இது நேரமில்லை...என் கண்ணுக்கு எட்டியவரை இரண்டு லட்ச்சம் வீரர்கள் எனக்காக காத்துக்கொண்டிருகின்றார்கள். எதுவானாலும் சீகிரம் பேசி முடி"
" அன்பரே ... ஒரு மனைவிக்கு தன் கணவருடன் கழிக்கப்போகும் கடைசி இரவு இதுதான் என்று தெரிந்தபின் அவள் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் சற்றேனும் நினைத்துப்பார்த்ததுண்டா?."
" ஒரு அரச கட்டளைக்கு பணிந்து போர்க்களம் போகுமென்னை நீ கோழை ஆக்கப்பார்க்காதே. சீக்கிரம் நீ சொல்ல வேண்டியதை சொல்லு."
" அன்பரே...நீர் சுத்த வீரன் என்பதை நினைக்கும் போது என் ஆன்மா பேருவகை கொள்கிறது. ஆனால் ஈஸா நபியின் எச்சரிக்கை என்னை பயப்பட வைகிறது. நீர் போர்க்களத்தில் தனி ஆளாக அந்த பச்சை நிற அல்லாஹூ அவ்ர்களுடைய
கொடியை குதிரையின்மீது தூக்கிச்செல்லுகின்றீர்.. திடீரென ஆயிரக்கணக்கான அம்புகள் வானத்திலிருந்து பறந்துவந்து உம்மை தாக்குகின்றன.நீர் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கின்றதை நான் பார்த்தேன். இது கனவுதான் எனக்கண்டு மீண்டும் தூங்கினேன்... உம்மைச்சுற்றி ஆறு ஜைனேசரி வீரர்கள் உம்மை சுறுக்கு கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்வதையும் பார்த்தேன். அதன் பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை. ஈசா நபி என்னிடம் உன் கணவருக்கு இது நிகழக்கூடாதென்றால் அவரை போர்க்களம் அனுப்பாதே என்றும் கூறக்கேட்டேன். இதில் எது கனவு... எது நிஜம் என்று இப்போது வரை எனக்கு புறியவில்லை " என்றாள் அவள்.
" அடிபோடிப்பைத்தியக்காரி.. இதெல்லாம் வீண் பிரம்மை...இப்படி எதுவும் நடவாது...நீ வேண்டுமானால் பார் ... நான் இன்னும் மூன்றே மாதங்களில் இந்த ஐரோப்பா எங்கும் நம் பேரரசரின் வெற்றிக்கொடியை நாட்டிவிட்டு உன்முன்வந்து நிற்பேன் . எனக்கும் உன்னை போர்க்களத்தில் கூட என்னருகிலேயே வைத்துக்கொள்ள ஆசைதான்... ஆனால் நம் மகனை நீ கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள். ஒரு காலத்தில் அவன் எனக்கு பதில் இந்த வைசியர் பதவியை வகிக்க வேண்டியவன்."
" அதினால் தான் உம்முடைய மனைவியரையும் ஆயிரம் வைபாட்டியையும் போர்க்களத்துக்கூட அழைத்து செல்கிறீர்களாக்கும் . அவர்கள் எல்லாம் நேற்றே தயார் ஆகிவிட்டார்கள் ." என்றாள் சற்றே கோபத்துடன்.
சற்றே நகைத்துக்கொண்டார் காரா பாஷா. பொய்மையும் காதலுக்கு சுவைகூட்டுமென அவருக்கு அன்றுதான் தெரிந்தது போல அந்த நகைப்பு இருந்தது. இருப்பினும் " சரி...நான் சென்று வரட்டுமா?" என்றார்.
" இல்லை என் அன்பரே... இன்னும் கூட ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என என் மனம் துடிக்கிறது. அது ஈசா நபி எனக்கு கூறிய வார்த்தை... அது ஒருபோதும் பொய்காது."
" பெண்னே அது என்ன? தயங்காமல் சொல்."
" என் அன்பரே... நீர் போர்களம் செல்வது தவிர்க்க இயலாதது என்றாலும் உங்களுக்கும் போர்ககளத்தில் ஒரு சந்தர்ப்பம் அருளப்படும். நீங்கள் அதை மீறினால் நீங்களோ அல்லது உங்களுடன் போர்க்களம் வரும் உம்முடைய பத்தினிகளோ ஒருவர் கூட மீண்டும் இந்த இஸ்தான்புல் நகருக்கு திரும்பிவரப்போவதில்லை. இதுதான் ஈஸா நபியின் எச்சரிக்கை." என்றாள் காராபாஷாவின் இத்தாலிய மனைவி.
தன் இத்தாலிய காதல் மனைவியை அணைத்து முத்தமிட்டு தனக்கும் அவளுக்கும் பிறந்திருந்த தன்ஆண் வாரிசை அள்ளி அணைத்து அவன் கண்களில் முத்தமிட்டு விருட்டென வெளியேறினான் காராபாஷா.
என்னதான் அவன் ஒரு சுத்த வீரன் என்றாலும் தன் இத்தாலிய காதல் மனைவியின் எச்சரிக்கை அவன் மனதை சற்றே குழப்பியது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க தங்கள் சுலைமானிய மசூதிக்கு சென்று அங்கிருந்த தலைமை காஜியை அழைத்து தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தையை பற்றிக்கூறி தனக்கு அல்லா வெற்றிதரும்படிக்கு வேண்டுதல் செய்தான். அந்த தலைமை காஜி மிகவும் வயதானவர். கண்பார்வையும் இழந்தவர். அவர் இறை வேண்டுதல் செய்து பின் வருமாறு அறிவித்தார்.
" காரா பாஷா...உண்மையில் நான் போர் நடப்பதை பார்கிறேன்....இரு பக்கத்திலும் ஏறாளமான போர் வீரர்கள் யுத்தத்தில் மடிவதை பார்கிறேன். ரத்த ஆறு ஓடுகின்றது. ஆனால் உன் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் கூட
வெளியேறுவதை நான் பார்க்கவில்லை. ஆக உனக்கு போர்க்களத்தில் மரணம் இல்லை. தைரியமாகப்போய்வா "
தலைமை காஜியின் இத்தகைய தீர்க்க தரிசனத்தால் மனம் மிகவும் குளிர்ந்தான் காரா பாஷா.. அடுத்த நாள்... அண்டமெல்லாம் புழுதி பறக்க சுமார் மூன்று லட்ச்சம் போர் வீரர்கள் அந்த துருக்கிய பேரரசின் தலை நகராம் இஸ்தான்புல்லிலிருந்து ஜெய கோஷங்களை முழங்கிக்கொண்டு இடர்னே என்னும் பழைய துருக்கி சாம்ராஜ்ஜியத்தின் தலை நகரை அடைந்தனர். தன் கணவன் துவங்கி அந்த படைகளின் கடைசி வீரன் தன் பார்வையிலிருந்து மறையும் வரை தன் மகனுடன் கண்களில் கண்ணீர் கறைபுரண்டு ஓட மௌனமாக தன் விதியை நொந்துகொண்டு வீட்டிற்கும் செல்ல விரும்பாமல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கிறிஸ்த்துவ பேரரசன் ஜஸ்டீனியன் கட்டிய கிறிஸ்த்துவ தேவாலயமான ஹகியா சோஃபியா என்னும் கலைக்கோயிலை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
இதே நேரத்தில் வடக்கு இத்தாலியில் வெனிஸ் நகரத்தில் ஒரு தேவாலயத்தில்........
" ஆகவே மக்களே மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள். நற்கனி கொடாத மரங்கள் யாவும் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும். ஏற்கனவே அடி மரத்தில் கோடாரி வைக்கப்பட்டாகிவிட்டது. உங்கள் விசுவாசத்தை சோதிக்கவும் உங்களை நையப்புடைக்கவும் சாத்தான் அதிகாரம் பெற்றுவிட்டான். சோதனையில் விழுந்துவிடாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்களில் யார்மீது பாயலாம் என சாத்தான் கர்ஜிக்கும் சிங்கம் போல் அலைந்து கொண்டிருகின்றான்..ஆண்டவரின் அருளையும் இரக்கத்தையும் கெஞ்சி மன்றாடுங்கள்" என்று பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போதே ஒரு குருடன் ," ஃபாதர் மார்க்கோ...உங்களின் வல்லமையே வல்லமை... இதோ நான் பிறவியிலிருந்தே குருடனாக இருந்தேன்.. இப்போது எனக்கு
பார்வை வந்துவிட்டது. இதற்கு என்மனைவியே சாட்ச்சி " என்று உரக்க கத்தினான்.
உடனே அங்கே தேவாலயத்திலிருந்த அத்தனை கூட்டமும் ஆச்சரியத்தால் ஓஓஓ என ஆர்ப்பரித்தனர். உடனே மார்க்கோ என்னும் அந்த கப்புச்சீன் பாதிரியார் தன் பிரசங்கத்தை நிறுத்திவிட்டு ," அப்பா.... என்னிடம் வல்லமை ஒன்றும் கிடையது. எல்லாம் நம் யேசுநாதரின் வல்லமையே இதற்குக்காரணம்" என்றார். அப்போது ஒரு முடவன்வந்து
அவரது அங்கியின் ஒரு ஓரத்தை தன் கத்தியால் கிழித்துகொண்டு போய்விட்டான். அப்போது ஃபாதர் மார்க்கோ ," அப்பா... சற்றே நில்... அந்த அங்கியால் ஒரு புதுமையும் நடவாது. ஆண்டவராகிய யேசுநாதரின் வல்லமையால் மட்டுமே புதுமைகள் நடைபெறும். இந்த வெறும் அங்கிக்கு சக்தி ஒன்றும் இல்லை அப்பா.. இந்த கிழிசல் அங்கியோடு நான் எப்படி போவேன்...இந்த ஏழை கப்புச்சின் துறவியிடம் இருந்த ஒரு அங்கியையும் கிழித்துவிட்டாயே" என்றார்.
நேயர்களுக்கு ஃபாதர் மார்கோவை நான் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாக இருகின்றது. வெனிஸ் நகரத்தில் அவியனோ என்னும் ஊரில் கார்லோ டொமென்சியோ கிறிஸ்டோபோனி என்னும் இயற்பெயருடன் வாழ்ந்த இவர் கப்புசீன் சபையில் துறவியாக பட்டம் பெறும்போது வைத்துக்கொண்ட பெயர்தான் ஃபாதர் மார்கோ.. ஆக இவர் துறவி ஆக மாறியபிறகு ஆவியனோவை சேர்ந்த ஃபாதர் மார்கோ எனவே அழைக்கப்பட்டார். இவருடைய பக்தி முயற்சிக்கு ஆண்டவறாம்
யேசுநாதர் இவருக்கு புதுமைகள் செய்யும் வரத்தை அளித்திருந்தார். இவரும் புனித பதுவா அந்தோணியாரைப்போல ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் தோன்றியதாக ஒரு சபைக்குறிப்பு தெரிவிகின்றது.
ஒருமுறை இவர் கி.பி. 1676ல் பதிமூன்று வருடங்களாக படுத்த படுக்கையிலேயே வாழ்ந்துவந்த ஒரு கன்னிகா ஸ்த்ரீக்கு ஆசீர்வாதம் கொடுக்கையில் உடனடியாக அவர் எழுந்து உட்கார்ந்தார். பிறகு எழுந்து நடக்கலானார். இந்த புதுமையின்மூலம் அவர் இத்தாலி முழுக்க
புகழ் பெற்றார். மேலும் காலங்களையும் எதிர் வரப்போகும் ஆபத்துகளையும் அறிந்துகொள்ளும் ஆற்றலையும் ஆண்டவராகிய யேசுநாதர் இவருக்கு நிறையவே கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் பரீசுத்தபிதா பதினொன்றாம் இன்னொசென்ட் இவரை உடனடியாக ஆஸ்த்திரியாவின் தல நகர் வியன்னாவுக்கு போய் மன்னர் முதலாம் லியோபால்ட் அவர்களை சந்தித்து வரப்போகும் ஓட்டோமானியர்களின் படை எடுப்பிலிருந்து வியன்னாவை காப்பாற்ற சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும்படியாகவும் அவசியம் வியன்னாவுக்கு செல்லும்படியான உத்திரவை ஒரு பாதிரியார் ஃபாதர் மார்க்கோவிடம் சமர்பித்தார்.
இது வியன்னா....
ஐரோப்பாவில் வடக்கு இத்தாலிக்கும் மேலே ஆல்ப்ஸ் மலைகளுக்கு அப்பால் உள்ள ஒரு சிறிய நாடுதான் ஆஸ்த்திரியா. இதன் தலை நகர் வியன்னா. ஐரோப்பாவின் இதயம் போன்ற இந்த குட்டி நாட்டை கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ரோமர்கள் இந்நகரில் ஆட்சி அமைத்திருந்தனர். ஆஸ்த்திரியாவின் கிழக்கு பகுதி முழுவதும் மலை வாசஸ்த்தலங்கள். மேற்குப்பகுதி முழுவதும் சம தளங்கள். தலை நகரான வியன்னாவை சுற்றி டூனபே நதி ஓடுகின்றது. ஆஸ்த்திரியா தேசம் முழுவதையும் ஹேப்ஸ்பர்க் ராஜ குடும்பத்தினர் ஆண்டு வந்தனர். இவர்களின் ஆதிக்கத்தில் ஹுங்கேரியும் இருந்தது. [ கி.பி.1529 ல் ஓட்டோமானியர்கள் இந்த ஆஸ்த்திரியாவை கைப்பற்றும் முன்பாக ஒட்டுமொத்தமான ஹுங்கேரியையும்
பிடித்துக்கொண்டார்கள் . தலைனகர் வியன்னா ஒருவட்டவடிவிலான ஒரு நகர். உயிர்ந்த பீடபூமி. இதன் கோட்டையும் அதன் நட்ச்சத்திரவடிவிலான அரண்களும் மிகுந்த முன்யோசனையுடனும் பாதுகாப்பானதுமாக 14 ஆம்
நூற்றாண்டிலிருந்தே இருந்தது. இதனாலேயே 1529ல் ஓட்டோமானியர்கள் இந்த நகரை கைபற்றும் முயற்சியில் ஏறாளமான பீரங்கி குண்டுகளை பிரயோகித்தும் அதன் கோட்டை சுற்று அரண்களை உடைக்க முடியாமல் திணறினர் ]..
இந்த கதை ஆரம்பிக்கும் காலத்தில் அதாவது கி.பி. 1683.ல் ஆஸ்த்திரியா தேசத்தின் மன்னராக இருந்தவர் முதலாம் லியோபால் என்பவர். தன் முதல் மனைவிக்கு ஆண் வாரிசு இல்லாதால் மறு மணம் செய்து கொண்டார். மேலும் தன் முதல் மனைவிக்கு மார்பக புற்று நோய் கண்டிருந்ததால் உடல் வேதனையோடு சேர்த்து மன வேதனையும் அடைந்தார். இந்த நேரத்தில்தான் ஃபாதர் மார்க்கோ பரிசுத்த பிதா பாப்பு பதினொன்றாம் இன்னொகென்ட் அவர்களின் உத்திரவின் பேரில் மன்னர் முதலாம் லியோபாலை சந்திக்க அவரது அரண்மனைக்கு வந்திருந்தார். ஃபாதர் மார்கோவை மன்னர் லியோப்போல் நல்லவிதமாக வரவேற்றார். தன் அரண்மணையிலே தங்கிக்கொள்ள வேண்டினார். ஆனால் ஃபாதர் மார்கோ துறவிகள் மன்னருக்கு சமமாக அவருடன் சேர்ந்து உணவு அருந்தவோ அல்லது அரண்மனையில் தங்கவோ தங்கள் சபையில் அனுமதி இல்லை என்று நாசூக்காக மறுத்துவிட்டார். மார்பக புற்றுநோய் கண்டிருந்த மன்னர் லியோபாலின் முதல் மனைவியை சந்தித்து அவருக்காக வேண்டிக்கொண்டு ஆறுதல் பல கூறினார். நாளடைவில் அவர் குணமடைந்தார்.
இந்த சமயத்தில் மன்னர் லியோபாலுக்கும் போலந்து மன்னர் மூன்றாம் ஜான் சோபிஸ்க்கி என்பவருக்குமாக காராபாஷாவினால் எழுதி கொடுத்தனுப்பபட்ட இரு தூதுவர்கள் மன்னர் லியோபாலை சந்த்தனர். அவரை ஐரோப்பிய முறைப்படி வணங்கி அந்த கடிதத்தை அளித்தனர். அந்த கடிதத்தை கண்ட மன்னருக்கு முகம் சுறுங்கி கோபம் பொத்துக்கொண்டு வந்ததால் அவர் தன் ராஜவம்ச பிரதிநிதிகளிடம் கொடுத்து அந்த கடிதத்தை முழுவதும் படிக்க சொன்னார்.
அந்தக்கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
" கடவுள் மீது பக்தி இல்லாத நாய்களே...உங்களை தண்டிக்க எல்லாம்வல்ல அல்லா எங்களை தேர்ந்தெடுத்திருகின்றார். இப்போது நான் ஹுங்கேரிவரை வந்திருகின்றேன். விரைவில் ஆஸ்திரியா வருவேன். மரியாதையாக
சரணடைந்துவிடு. இல்லாவிடில் நடப்பதே வேறு...நான் உன் ராஜ வம்சத்தையே சுத்தமாக அழிப்பேன்.உயிர்ந்த மாட மாளிகைகளும் கூட கோபுரமாக சிறந்து விளங்கும் உன் வியன்னாவை தரைமட்டமாக்குவேன். அந்த உயர்ந்த முடியப்பர் தேவாலயத்தின் மீது அல்லாவின் கொடியை பறக்கவிட்டு அதை மசூதியாக்குவேன். என்னை வரவேற்க நீ உன் அரண்மனை வாசல்வரை வரவேண்டாம். நானே வந்து உன் தலையை வெட்டி அதை உன் கைகளில் வைப்பேன். இது அல்லாவின் மேல் ஆணை."- காரா பாஷா...மாமன்னர் நான்காம் சுல்த்தான் முகம்மது அவர்கள் சார்பில் என்று எழுதி கையழுத்து இடப்பட்டிருந்தது.
இந்தக்கடிதத்தை ஃபாதர் மார்க்கோவும் வாசித்துப்பார்த்தார். அப்போதுதான் அவர் தான் பரிசுத்தபிதா பாப்புவின் பரிந்துறையின்பேரில் மன்னரை சந்திக்க வந்த காரணத்தை கூறினார்.
" ஃபாதர் மார்க்கோ ..நான் இப்போது என்ன செய்ய வேண்டும்..காராபாஷா மிகப்பெரிய கொடுங்கோலன் என நான் அறிவேன். அவன் சொன்னத செய்யக்கூடியவன். கால அவகாசம் மிகவும் குறைவாக உள்ளது. நான் என்ன செய்வேன்" என்று புலம்பினார் மன்னர் லியோபால்.
" அரசே வீனே புலம்புவதை நிறுத்துங்கள். தைரியமாக செயல்பட வேண்டிய நேரமிது. நேற்றே நான் வானத்தில் தூமகேதுவை பார்த்தேன். அதன் தலைமீது பெரும் ரத்தக்கறை தோன்றியதையும் பார்த்தேன்.அது மேற்கிலிருந்து கிழக்காக சென்று மறைவதையும் கவனித்தேன்.. நம்முடைய நாட்டில் பெரும் ரத்த ஆறு ஓடப்போகின்றது. வரப்போகும் போரை தவிர்க்கவே முடியாது. உங்கள் உதவிக்கு நீங்கள் ஏன் போலந்து மன்னர் மூன்றாம் ஜாஃன் சோபிஸ்க்கியை அழைக்கக்கூடாது.?" என்றார் ஃபாதர் மார்கோ.
" முடியாது ஃபாதர் மார்கோ... முடியாது. எனக்கு அவரைக்கண்டாலே பிடிக்கவில்லை.. அவருக்கும் என்னைக்கண்டாலே பிடிக்கவில்லை.. அவர் என்னை மதிப்பதில்லை...எனவே நானும் அவரைய் மதிப்பதில்லை. அவர் ராஜ வம்சத்திலிருந்து மன்னராக வந்தவர் அல்லர். இதுதான் காரணம்."
" அரசே நான் சொல்கிறேன் என தப்பாக நினைக்க வேண்டாம்..இப்போது நிலைமை வேறு. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போலந்துக்கு இப்போது அவர்தான் அரசர். அவரது நாட்டு மக்களே அவரை மன்னராக
ஏற்றுக்கொண்டிருக்கும்போது நீங்கள் ஏற்றுக்கொண்டால் என்ன ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன?. இந்த நிலைமையில் ஆஸ்த்திரியாவுக்கும் போலந்துக்கும் ஏற்கனவே ஒரு நல்லெண்ண பாதுகாப்பு ஒப்பந்தம் இருகின்றது. அதன்படி ஆஸ்த்திரியாவின் தலைனகர் வியன்னாவுக்கு ஆபத்து என்றால் போலந்தின் தலை நகர் க்ராக்கோ உதவிக்கு வர வேண்டும். க்ராக்கோவுக்கு ஆபத்து என்றால் வியன்னா உதவிக்கு ஓடி வர வேண்டும். நல்ல வேலையாக இந்த நல்லெண்ன பாதுகாப்பு ஒப்பந்தம் இன்னும் உயிரோடு அமுலில் இருகின்றது. இப்போது இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி ஜான் சோபிஸ்க்கியை உதவிக்கு அழையுங்கள்."
" இல்லை ஃபாதர் மார்கோ... என்னால் என் தன் மானம் விட்டு அந்த திமிர்பிடித்த போலந்துக்காரனை என் உதவிக்கு அழைக்க என் மனம் ஒப்பவில்லை".
" அரசே சற்றே கோபம் கொள்ளாமல் இந்த துறவியின் பேச்சுக்கு செவி கொடுங்கள். உங்கள் சுயநலம்... சுய கௌரவம் இதை எல்லாம் விட்டுவிட்டு உங்கள் நாட்டு மக்களை சற்றே நினைத்துப்பாருங்கள்...மன்னர்கள் வாழ்வது மக்களை வாழவைக்க. உங்களது சுய கௌரவத்திற்காக உம் ராஜ வம்சத்தையும் உம் குடிமக்களையும் அந்த கிராதகன் காரா பாஷாவுக்கு பலி கொடுக்கப்போகின்றீரா? இது தேவையா ? ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை தயவு செய்து நினைவில் வையுங்கள். நம்மிடையே ஒற்றுமை இல்லாததினால் தான் நாம் ஏற்கனவே நம் கிறிஸ்த்துவ நாடுகளான கிழக்கு ஐரோப்பா முழுவதையும் இழந்துவிட்டோம். இன்னும் மேற்கு ஐரோப்பாவை அவனால் வெற்றிகொள்ள முடியாது என
நினைகிறீர்களா... நம்மிடையே ஒற்றுமை இல்லாவிடில் காரா பாஷா நம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் பிடிப்பது உறுதி.அதற்கு நம்முடைய வியன்னாதான் நுழைவு வாயில். நம்முடைய கிறிஸ்த்துவ ராஜ்ஜியங்களை பாதுகாக்க வேண்டுமானால் நாம் அனைவரும் சேர்ந்து இந்த இஸ்லாமிய எதிரியை ஒழித்தே ஆக வேண்டும். வியன்னா வீழ்ந்தால் ரோம் வீழ்ந்துவிடும் ரோம் வீழ்ந்தால் முழு ஐரோப்பவும் வீழ்ந்துவிடும். பிறகு உலகம் எங்கும் முஸ்லீம்களின் ஆட்சிதான் நடைபெறும். இதை தடுக்கும் வேலையைதான் இப்போது ஆண்டவறாம் யேசுநாதர் உனக்கு இப்போது கொடுத்திருகின்றார். நீர் உம் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும் .இப்போது உமக்கு நிலைமை புறியும் என்று
நினைகிறேன்" என்றார் பாதர் மர்கோ.
நீண்ட பெரும் கதையை கேட்ப்பதுபோல் மன்னர் லியோபால் கேட்டுக்கொண்டார் . உடனே தன் பயணத்தை ஆரம்பித்து அப்போதைய ஜெர்மானிய மன்னர் ஐந்தாம் சார்லஸிடம் உதவி கேட்க்கலானார். அவரும் தன்னுடைய கூட்டாளி நடுகளின் படையாகிய The holy nations of Germany திரட்டி உதவிக்கு அனுப்ப ஒத்துக்கொண்டார்.
இது ஹங்கேரி. ஹங்கேரியின் தலை நகர் புத்தா பெஸ்ட். ஜெர்மெனியில் கருப்பு காடுகளில் உற்பத்தியாகும் டூனபே என்னும் வற்றாத ஜீவ நதி ஆஸ்திரியாவில் வியன்னாவை சுற்றிக்கொண்டு ஹங்கேரியிலும் மற்ற ஐரோபிய நாடுகளிலுமாய் கிழக்கிலிருந்து மேற்கே ஓடி கடைசியில் கருங்கடலில் சங்கமித்து தன் பயணத்தை முடிகின்றது. ஹுங்கேரியில் இந்த டூனபே நதியில் இரு கரைகளிலும் அமைந்திருக்கும் இரு பட்டிணங்கள் தான் புத்தாவும் பெஸ்த்துவும். இந்த இரு நகரங்களையும் ஒரு பெரும் வலிமைவாய்ந்த இரும்புப்பாலம் ஒன்று இணைகின்றது..கி.பி. 1529. வியன்னாவில் ஓட்டோமானியர்களின் முதலாம் முற்றுகை தோல்வியில் முடிந்ததல்லவா அதற்கு முன்பாகவே அவர்கள் இந்த ஹுங்கேரியை கைப்பற்றி இருந்தனர். அவர்கள் காலத்தில் வடக்கு ஹுங்கேரி கத்தோலிக்கர்கள் வசமும் தெற்கு ஹுங்கேரி பதிதர்கள் வசமும் இருந்தது. ஒருகாலத்தில் இந்த ஒட்டுமொத்த ஹுங்கேரியும் ஆஸ்த்திரியாவை ஆண்டுவந்த ஹேப்ஸ்பெர்க் ராஜ வம்சத்தவர்களால் ஆளப்பட்டுவந்தது. ஆனால் சிலபல அரசியல் காரணங்களால் தெற்கு ஹுங்கேரி பதிதர் வசம் போய்விட்டது. அப்போது அதன் அரசியல் தலைவராக இருந்தவர் இம்ரி தொகொலி என்பவர். ஆஸ்த்திரிய தேசத்தின் அரசர் முதலாம் லியோபாலுக்கு பதிதர்களை கண்டாலே பிடிக்காது.எனவே அவர்களை அடக்கும் முயற்ச்சியில் அவருடைய ஹுங்கேரியில் பல எதிர்மறை விளைவுகளே நிகழ்ந்தன. இதனால் இப்போது மன்னர் முதலாம் லியோ பாலுக்கு இரண்டு எதிரிகள் உருவாயினர். ஒருவன் பதிதன். மற்றவன் முஸ்லீம். ஆக இந்த இரு எதிரிகளும் எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் அடிப்படையில் தோழர் ஆயினர். எனவே அவர்களும் தங்களுக்குள் ஒரு கூட்டணி ஏற்படுத்திகொண்டனர். அதன்படி ஆஸ்த்திரியாவின் தலை நகர் வியன்னா வீழ்ந்தால் வடக்கு ஹுங்கேரி இம்ரி தொகொல்லிக்கு வழங்கப்படும் .பிறகு அவர் காலம் முழுக்க முழு ஹுங்கேரிக்கும் அரசராக இருப்பார்...அதுவரை தெற்கு ஹுங்கேரிக்கு இம்ரி தொகொலி அரசாராக இருக்க தான் அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் இந்த வியன்னா வெற்றிக்கு இம்ரி தொகொலி தன்னுடைய சேனைகள் இன்னும் பிற அனைத்து உதவிகளையும் கொடுத்து உதவ வேண்டும் எனவும் தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
இஸ்லாமிய பைசாந்திய [ இன்றைய துருக்கி] பேரரசின் மாமன்னர் நான்காம் மெஹ்மூதுவின் ராஜப்பிரதிநிதி காரா பாஷாவே தன்னை ஹுங்கேரியின் அரசராக அங்கீகரித்ததை அறிந்த இம்ரி திகொலிக்கு தலை கால் புறியவில்ல. தான் முழு ஹுங்கேரிக்கும் அரசராக வேண்டும் என்னும் நோக்கம் இவ்வளவு விரைவில் நிறைவேறப்போகின்றது என்னும் சந்தோஷத்தில் இதற்கு நான் மேலும் என்ன செய்ய வேண்டும் என்றும் வினவினார் இம்ரி திகொலி.
" ஹுங்கேரியின் மன்னர் இம்ரி திகொலி நீர் இதற்காக எனக்கு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அரசியல் என்றாலே கொடுக்கல் வாங்கல் எல்லாம் சகஜம் தானே. எனவே நம் பேரரசர் சுல்த்தான் நான்காம் மெஹ்மதுவுக்கு பெயருக்கு ஒரு கப்பத்தொகை செலுத்திவிடுங்கள். நான் சொல்லி அவர் கேட்காமலா போய்விடுவார்... அப்படியே என்னையும் சற்று கவனித்துக்கொண்டால் போயிற்று... என்ன சரிதானே.... இப்போது சந்தோஷமா ?" என்று கண்ணடித்தார் காரா முஸ்த்தபா.
தான் முழு ஹுங்கேரிக்கும் மன்னராகப்போகும் சந்தோஷத்தில் அவர் கூறிய அனைத்திற்கும் பூம்பூம் மாடு போல தலை ஆட்டிக்கொண்டிருந்தார் இம்ரி தொகொலி.
இதோ டார்டார்கள்: அடுத்ததாக காற்றில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டு சுமார் 25000 குதிரை வீரர்களுடம் காரா பாஷாவை சந்திக்க வந்திருந்தார் டார்த்தார் என்னும் மலை வாசிகள் தலைவன். இந்த டார்டார்கள் எனப்படுபவர்கள் மங்கோலியாவிலிருந்து ஹுங்கேரிவரை படர்ந்திருந்த மலைவாழ் வீரர்கள். குதிரை வளர்ப்பதுதான் இவர்கள் தொழில். கிழக்கே மங்கோலியாவிலிருந்த வந்திருந்த ஜெங்கிஸ்கான் என்னும் தளபதி மேற்கே ஐரோப்பாவில் உள்ள ஹுங்கேரிவரை வெற்றிவாகை சூடிவிட்டு மீண்டும் மங்கோலியா சென்றான். ஆனால் அவனுடன் வந்திருந்த பல வீரர்கள் ஆங்காங்கே தங்கிவிட்டனர். ஜெங்கிஷ்கானின் வம்சாவளியியோல் வந்திருந்த இந்த முறட்டு வீரர்கள் டார்டார்கள் எனப்பட்டனர்.
பேரரசர் நான்காம் மெஹ்மூதுவின் படை எடுப்பை அறியவந்திருந்த இந்த டார்டார் தலைவன் தானாக வலிய வந்து காராபஷாவை சந்தித்து தன்னை கிரிமியா பட்டிணத்தின் கான் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு
அவர்களுடன் சேர்ந்து போராட தன்னையும் தன் வீரர்களுடன் சேர்த்துக்கொள்ளும்படி மிகவும் கேட்டுக்கொண்டான்.
காராபாஷாவின் கண்களில் ஒருவித ஆனந்த பரவசம் தோன்றியது. " அல்லாவின் கருணையே கருணை... இதோ இந்த ஆஸ்த்திரியர்களை அடக்க அல்லா எவ்வளவு பெரிய உதவிகளை நான் கேட்காமலேயே அனுப்புகிறார்...இன்ஷா அல்லா " என்றார்.
இதே நேரத்தில் வியன்னாவின் கிழக்குப்பகுதியில் ஒரு கிராமத்தில்.... ஒரு முஸ்லீம் பெண்ணை சில கிறிஸ்த்துவர்கள் தாக்கிக்கொல்ல முற்பட்டனர். அந்த நேரத்தில் இங்கு வந்த ஃபாதர் மார்கோ " நிறுத்துங்கள் இந்த அநியாயத்தை... ஒரு பெண்னை சில ஆண்கள் சேர்ந்து கொல்வதா? என்ன அக்கிரமம் இது. உத்தம கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்த நீங்கள் இந்த அக்கிரமமான காரியத்தை செய்யலாமா? என்றார்.
" இதோ பாருங்கள் ஃபாதர்... இது உங்களுக்கு தேவை இல்லாத வீண் வேலை. இவளுடைய ஆட்க்கள் சிலர் நேற்று எம் கிராமத்தில் புகுந்து நம் கிறிஸ்த்துவ பெண்களை தூக்கிச்சென்றுவிட்டார்கள். காப்பாற்றச்சென்ற நம் கிராமத்து ஆண்களை வெட்டிக்கொண்று போட்டு விட்டார்கள். ஆகவே இது பழிக்குப்பழி.."
" இருக்கலாம் ... ஆனாலும் இவள் என்ன செய்வாள் பாவம்... இவளுக்கு வாயும் பேச முடியாது... காதும் கேட்க்க இயலாது. பிறவியிலேயே ஊமையும் செவிடுமானவள்... நான் சொல்கிறேன் கேளுங்கள் இவளை கடவுளின் முகம் பார்த்து விட்டுவிடுங்கள். இவளையும் இவள் கணவன் அப்துல்லாவையும் நான் பலகாலம் அறிவேன்" என்றார் பாதர் மார்கோ. அதன்படி அந்த வாலிபர்கள் அவளை விட்டுச்சென்றார்கள்.
" அப்துல்லா...நீயும் நானும் பால்ய ஸ்னேகிதர்கள். இங்கு ஒரு பெரும் போர் நடைபெறப்போகின்றது.. எனவே நீ உன் மனைவை அழைத்துக்கொண்டு பாதுகாப்பான ஒரு இடத்திற்கு சென்றுவிடு.. மேலும் நீ என் சார்பாக காரா பாஷாவை சந்திக்க வேண்டுகிறேன்... நான் சொல்வதை அப்படியே அவரிடம் சொல்லு " என்றார் ஃபாதர் மார்க்கோ. அதன்படி அப்துல்லா காரா பாஷாவை சந்திக்க ஹங்கேரிக்கு சென்றார்.
ஹுங்கேரியில் ஆயிரக்கணக்கான கூடாரங்களின் மத்தியில் தளபதியும் சுல்த்தான் நான்காம் மெஹ்மதுவின் ராஜ தலைமை அலுவலனுமாகிய காரா பாஷாவின் கூடாரத்தை கண்டுபிடிப்பது அப்துல்லாவுக்கு ஒரு கடினமான காரியமாக இல்லை. ஆனால் அவரைசந்திக்க வாய்ப்புதான் கிடைக்கவில்லை. அவரது கூடார வாயிலில் காவலுக்கு இருந்த வீரர்கள் அப்துல்லாவை திட்டி பலமக வெளியே பிடித்து தள்ளினர். ஆனால் காராபாஷா அபயம் என்று அவன் அபயமிட்டதால் இந்த அமலியில் உள்ளே இருந்து வெளிய வந்தார் காராபாஷா." யார் என்னை அபயமிட்டது " என்று சீறினார் காராபாஷா.
" ஹசூர்... நான் அப்துல்லா... உங்கள் பால்ய நண்பர் ஃபாதர் மார்கோவின் நண்பர்... அவர் உங்களை பார்த்துவரும்படியும் போர் விஷயமாக உங்களிடம் சில விஷயங்களையும் அறிவிக்கும்படியும் என்னை அனுப்பியுள்ளார்." என்றார் அப்துல்லா.
" அடே முட்டாள். எனக்கு எந்த பாதிரியாரையும் தெரியாது. போர் நடைபெறப்போகும் சூழலில் நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. மரியாதையாக இங்கிருந்து ஓடிவிடு. என் நேரத்தை வீனடிக்காதே" என்று சீறினார் காரா பாஷா.
" ஹசூர்... என்னை மன்னியுங்கள். பாதர் மார்கோ என்பது அவர் துறவியானபின் வைத்துக்கொண்ட பெயர். கார்லோ டொமென்சியோ கிறிஸ்டியானி என்பது அவர் இயற்பெயர்.. இப்போது அவரை உங்களுக்கு நினைவுக்கு வரும் என நினைகிறேன். மேலும் அவர் இதையும் உங்களுக்கு கூறினார். நீங்கள் முப்பது வருடங்களுக்கு முன் வெனிஸ் நகரில் துறைமுகத்தில் பார்வையிடும்போது உங்கள் தலைக்கும்மேல் ஒரு பெரும் பாராங்கள் ஏற்றப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராமல் அதிக பாரத்தின் காரணமாக அதைதாங்கும் கயிறு அறுந்து விழும்போது. வினாடி நேரத்தில் ஒரு வாலிபன் வந்து உம்மை தள்ளி காப்பாற்றினார் அல்லவா... அவர்தான் இப்போது ஃபாதர் மார்க்கோவாக உள்ளார்." என்றார்.
" ஆம் அப்துல்லா...நீர் சொல்வது உண்மை..இப்போது எனக்கு ஞாபகம் வருகின்றது. அவர் எதற்காக என்னை பார்த்துவரும்படி சொன்னார்.?"
" ஹசூர்...இந்த நிகழ்ச்சியின்மூலம் நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனீர்கள் அதன் நினைவாக அவர் ஒரு தாயத்தையும் உங்களுக்கு அணிவித்ததையும் ஞாபகமூட்டச்சொன்னார்."
" ஆம்... அது இப்போதும் அவர் நினைவாக என் மார்பில் தொங்கிக்கொண்டிருகின்றது...மேலும் என்ன செய்தி."
" என் எஜமானரே... அவர் முடிந்தவரை போரை தவிர்க்க சொன்னார்.."
" ஆப்துல்லா... இதுவரை நீர் என்னைடம் பேசியது போதும்.. இனிமேல் யார் என்ன சொன்னாலும் நான் போரை நிறுத்த முடியாது. நீயும் ஒரு இஸ்லாமியன்.. ஆகவே நான் உன்னை நல்ல விதமாகவே அனுப்புகிறேன்... நீ வியன்னாவிலிருந்து தானே வருகின்றாய்..நீ ஏன் எனக்கும் அவர்களுக்கும் தூதுவனாக இருக்கக்கூடாது. நீ என் நண்பனின் நண்பன்... நீர் என்னுடனே இருந்துகொள்கிறீரா?"
" ஹசூர் அது நான் செய்த பாக்கியம்... தாங்கள் எனக்கு இடும் வேலை எதுவேண்டுமானாலும் அதை தயங்காமல் செய்வேன் " என்றார் அப்துல்லா...
அப்துல்லா காராபாஷவிடமிருந்து விடைபெற்று சென்றபின்பு காரா பாஷாதன் சேவகர்ளை அழைத்து இந்த அப்துல்லாமீது எதற்கும் ஒரு கண் வையுங்கள் என்றான்.
உஸ்ஸ்... இது ரகசியம்...
காரா பாஷாவின் கூட்டாளிகளுள் இருவர் இளவரசர்கள். அவர்கள் மால்தேவியா மற்றும் வலாக்கியா அரசை சேர்ந்தவர்கள். மாமன்னர் நான்காம் மெஹமூதின் படை எடுப்பில் இவர்கள் ராஜ்ஜியம் அவர் கையில் போய்
சேர்ந்தது என்றாலும் இவர்கள் அவருக்கு கப்பம்கட்டும் சிற்றரசர்கள் ஆனார்கள். இந்த வியன்னா படை எடுப்புக்கு தாங்களும் காரா பாஷாவிடம் போய் சேர்ந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஆனது. இந்த போரில் அவர்களுக்கு சுத்தமாக விருப்பமே இல்லை. இது அவர்களின் பேச்சில் தெரிந்தது. அவர்களின் கூடாரங்களில் இவர்கள் இவ்வாறாக பேசிக்கொண்டார்கள்.
" என்ன மால்தேவியரே... இந்தப்போரைப்பற்றி நீர் என்ன நினைகிறீர்.."
" வலாக்கியரே... இது போர் இல்லை. வெறும் அக்கப்போர்...இந்தப்போரில் நிர்ப்பந்தம் காரணமாகவே நாம் கலந்துகொள்ள வேண்டியதாயிறு...நீர் என்ன நினைகிறீர்?"
" இந்த காரா பாஷா நம் குலத்தவரை எவ்வளவு தூரம் அவமானப்பட்டுத்தி இருகின்றான் தெரியுமா? அதை நினைத்தால் எனக்கு ரத்தமே கொதிகிறது... என்ன செய்வது... நாம் குறு நில மன்னர்கள்... மா மன்னரும் சக்கரவர்த்தியுமானவரை எதிர்க்கமுடியுமா... அதனாலேயே நானும் போருக்கு கலந்துகொள்ள வேண்டியது ஆயிற்று. மாமன்னரின் பெயரை சொல்லிக்கொண்டு இந்த காரா பாஷா செய்யும் அட்டூழியங்கள் எவ்வளவு தெரியுமா..?" பேரரசரின் பெயரை சொல்லிக்கொண்டு இந்த காரா பாஷா அடித்த கொள்ளைகள் எவ்வளவு தெரியுமா...இதனாலேயே நாம் சோற்றுக்கும் வழி இல்லாமல் நம் குலப்பெயரையும் விட முடியாமல் இவர்கள பின்னாடியே சுற்றி ஓடிவரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டோம்.. இந்த காராபாஷா தன் பிடியை நம் மீது எப்போதுமே வைத்துக்கொள்ள வேண்டுமென நம் குலத்தவரை எத்துனை முறை அவமதித்தும் அடிக்கடி அவர்தம் பதவிகளையும் பறித்தும் இருகின்றான் தெரியுமா... இப்போதுகூட
இங்கே நாம் சந்தித்து பேசுவது தெரிந்தால் நம்மை கொல்லாமல் விடமாட்டான்..".பிறகு ரகசியமாக " போரில் நாம் இவனுக்கு சரியான் பாடம் புகட்டுவோம். பாம்பையும் கொல்லாமல்.... பாம்பை அடிக்கும் கோலும் நோகாமல் என்பதுபோல் நாம் காரா பாஷாவை நேரடியாக எதிர்காமல் அதே நேரம் அவருக்கு தோல்வியும் ஏற்படுத்த நாம் நம் படைகளை நடத்துவோம் " என்றார் வலாக்கியர். இந்த வியன்னா போரில் இவர்கள் போட்டுவைத்த திட்டம் எதிரிக்கு பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது.
சூழ்ந்தது போர் மேகம்:
வியன்னாவின் மன்னர் முதலாம் லியோ பால் தன் நாட்டுக்கு வந்துள்ள ஆபத்திலிருந்து காக்க ஜெர்மானிய நேசப்படைகளின் உதவிகேட்க சென்ற நேரம் அது. ஜூன் 14 கி.பி. 1683 காரா பாஷாவின் மூன்று லட்சம் வீரர்களும்
வாயுவேகத்திலும் ஒருவித கொலை வெறியோடும் வியன்னா நகரைசுற்றி வட்டமடித்து வந்து நிலைகொண்டனர். வட்டவடிவிலான அந்த வியன்னா நகரின் மதில் சுவரும் கோட்டையும் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நேரத்தில் கோட்டையையும் நகரையும் பாதுகாக்கும் பொறுப்பு இளவரசர். க்ராப் ஏர்ன்ஸ்ட் ருடீகர் வான் ஸ்டாஹெம்பெர்க்.என்பவரிடம் இருந்தது. அவரிடம் இருந்த மொத்த படையினர் 11000 பேர். அதுபோக தன்னார்வ தொண்டர்கள் 5000 பேர். இவர்களை வைத்துக்கொண்டுதான் மன்னர் லியோபால் வரும்வரை வியன்னாவை காப்பாறியே ஆக வேண்டும். ஆகவே தன்னுடைய சாமார்த்தியத்தாலும் கட்டுப்பாட்டினாலும் எதிரியை எதிர்கொள்ள அவரும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாக இருந்தது. இது ஒட்டுமொத்த வியன்னவினரின் வாழ்வா அல்லது சாவா என்னும் யுத்தமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் யாராவது தூங்கக்கண்டால் அந்த
இடத்திலேயே அவரை சுட்டுக்கொல்ல கோட்டை காவலர்களுக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். மேலும் யுத்தம் என்று வருமானால் வடக்கு சமவெளியிலிருந்துதான் நேரடி யுத்தம் வரும் என்பதும் அவர் கணக்கு. எனவே தன் நகர மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும் நகரை காலி செய்யும்படியும் கட்டளை கொடுத்தார். நகரம் காலியானதை தொடர்ந்து அங்கிருந்த வீடுகளை எல்லாம் தரைமட்டம் ஆக்கி எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வசதியாக எல்லா குப்பை மேடுகளையும் அகற்றச்செய்தார்.
இவரது சமயோஜித புத்தியை அறிந்த காரா பாஷா எதிரியாக இருந்தாலும் ருடீகரை பாராட்டவே செய்தான். இருப்பினும் இவருக்கு தான் சளைத்தவன் அல்ல என்பதுபோல் தன் வீரர்கள் விட்டு கோட்டைவரை எதிரியின் பீரங்கி
குண்டுகளிலிருந்தும் துப்பாக்கி குண்டுமழையிலிருந்தும் தன் வீரர்கள் தப்பித்துக்கொண்டு தாக்கவும் முன்னேரவும் பதுங்கு குழிகள் அமைத்தான். இதற்கு ஆட்க்கள் மிகவும் தேவை என்பதால் வியன்னா மக்கள் தங்கிருந்த
இடங்களுக்குச்சென்று சுமார் 40000 பொதுமக்களை கைதியாக்கி அவர்களை வைத்தே இந்த குழிவெட்டும் வேலைக்கு அமர்த்திக்கொண்டான். தன் படை வீரர்கள் தங்கவும் தன்னுடன் வந்திருந்த தன் மனைவியர் மற்றும் வைப்பாட்டிகள் தங்கவும் அந்த நகரைச்சுற்றி ஓடும் டூனபே நதிக்கறையில் சுமார் 15000 கூடாரங்களை அமைத்திருந்தான். தன் குடும்பங்களை சேர்ந்த அரச குல பெண்கள் தங்குவதற்கு வசதியாக 1500 கூடாரங்களையும் அமைத்தான். இவர்களுக்கு வேண்டிய தண்ணீர் வசதிகளையும் சிறப்பாக செய்திருந்தான். இதற்காக தங்களிடம் பிணைகைதிகளாக பிடிபட்டிருந்த வியன்னா பெண்களை அடிமைகள்போல் வேலை வாங்கினான்.
இந்த வியன்னாவாசிகளை பகலெல்லாம் வேலை வாங்கி இரவில் ஆடு மாடுகளைப்போல் பட்டியில் அடைத்து வைத்தான் காராபாஷா.
வியன்னா நகரை எல்லா பக்கத்திலிருந்தும் சூழ்ந்துகொண்டு கடுமையான முற்றுகை இட்டான் காரா பாஷா. இந்த கோட்டைக்கு வெளியிலிருந்து எந்த உதவியும் விஷேஷமாக உணவும், வெடி மருந்துகளும், மருத்துவ உதவிகளும் கிடைக்காதபடி முற்றிலுமாக தடை செய்தான்.
இதே நேரத்தில் ஃப்ரான்ஸ் தேசத்தில் அப்போது மன்னராக இருந்தவர் பதினான்காம் லூயிஸ் என்பவர். சிறந்த அரசியல் மதி நுட்ப்பம் கொண்டவர் எனவும் மிகுந்த கொடுமதி படைத்தவர் எனவும் பெயர் பெற்றிருந்தார். இந்த இஸ்லாமிய ஓட்டோமான்களின் வியன்னா படை எடுப்பின் மூலம் ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் கால் ஊன்றக்கூடிய சாதக பாதங்களை உணர்ந்த அப்போதைய பரிசுத்த பிதா பாப்பாண்டவர் பதினோராம் இன்னொசென்ட் அவர்கள் இந்த சூழ்நிலையை விளக்கி தன் ஆட்ச்சிக்கு உட்பட்ட எல்லா கிறிஸ்த்துவ மன்னர்களுக்கும் இதை தடுத்து நிறுத்தும்படியாகவும் அவர்களுக்குள்ளே சமாதான நல்லுறவை ஏற்படுத்தி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இந்த இஸ்லாமிய எதிரியை எதிர்க்க வேண்டும்
எனவும் ஒரு பெரும் கடிதத்தை எழுதி தன் விஷேஷ தூதுவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மன்னர்களிடம் அனுப்பினார்.
இப்படியாக பரிசுத்த பிதாவின் நுன்சியோ என்னும் விஷேஷ தூதர் மன்னர் பதினான்காம் லூயிஸிடம் வந்து சேர்ந்தார். ஆனால் மன்னர் பதினான்காம் லூயிஸ் பரிசுத்த பிதாவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக தனக்கும் இஸ்லாமிய ஓட்டோமான் சுல்தான்களிடம் வியாபாரக்கூட்டு உள்ளதால் தன் நாட்டில் வருமானம் பாதிக்கப்படும். ஆகவே பரிசுத்த பிதாவின் நேசப்படைகளுடன் கூட்டு சேர்ந்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க இயலாது என நேரடியாகவே அவர் அனுப்பிய தூதுவரிடம் கூறிவிட்டார். உண்மையில் மன்னர் லூயிஸுக்கு தன் அடிமனதில் இப்படியோரு ஆசை
இருந்தது. அதாவது இந்த ஓட்டோமான் சுல்த்தான் ஆஸ்த்திரியாவை பிடித்துக்கொண்டால் அது தனக்கும் ஒருவிதத்தில் நன்மையாக முடியும். அவர்கள் ஜெர்மனியின் கிழக்கில் இருக்கும் ஆஸ்த்திரியாவை பிடிக்கும் அதே சமயம் நாம் ஜெர்மனியில் இந்த ரைன் நதி ஓரங்களில் உள்ள நாடுகளைப்பிடித்துக்கொள்ள வேண்டும். எனவே சுல்த்தான் ஆஸ்த்திரியாவை நோக்கி படை எடுக்கும்போது அதர்க்கு போலந்திலிருந்து எந்த விதமான உதவியும் வரமுடியாதபடி செய்துவிட வேண்டும். போலந்தின் பாராளுமன்ற சட்டத்தின்படி நாட்டை ஆள்வது மன்னராகவே இருந்த போதிலும் ஒரு நாட்டின்மீது படை எடுக்க வேண்டுமானால் அந்த பாராளுமன்றம் கூட்டப்பட்டு மூன்றில் இரண்டு பங்கு அந்த காரியத்துக்காக ஓட்டு கிடைக்க வேண்டும். அப்போதுதான் போலந்தின் மன்னர் அந்த நாட்டின்மீது படை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படும். ஏற்கனவே போலந்துக்கும் ஆஸ்த்திரியாவுக்கும் சமாதான ஒப்பந்தம் அமுலில் இருப்பதால் போலந்து ஆஸ்த்திரியாவுக்கு
தன்படைகளை அனுப்பாமலிருக்கா அதன் பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு கணிசமான லஞ்சம் கொடுத்து ஓட்டெடுப்பு எடுக்கும்போது அதை தோற்றுப்போக செய்ய மன்னர் லூயி தன் போலந்தின் தூதுவரிடம் ஏறாளமாக பணம் கொடுத்தனுப்பி இருந்தார்.
இந்த விஷயத்தை வியன்னாவில் படைகளை அமர்த்தியிருந்த காரா பாஷாவுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்ததால் அவருக்கு வியன்னாவை காப்பாற்ற போலந்து நிச்சயம் உதவிக்கு வராது என மிக மிக நன்றாக
தெரிந்திருந்ததால் மனிதர் மிகவும் அமைதியாக தன் படையின் தாக்குதலை தாமதப்படுத்தினார்.
ஆனால் ஃப்ரான்ஸ் தேசத்திலிருந்த பரிசுத்தபிதாவின் நுன்சியோ எனப்படும் விஷேஷ தூதர் மன்னர் லூயிஸின் நோக்கங்களை எல்லாம் தெரிந்துகொண்டு அதை அப்படியே பரிசுத்த பிதாவிடம் தெரியப்படுத்திவிட்டார். இதை அப்படியே ஏற்றுக்கொண்ட பரிசுத்த பிதா அவரையே தன் நுன்சியோ எனப்படும் விஷே தூதுவராக போலந்துக்கு அனுப்பினார். அப்போது பரிசுத்த பிதா," நுன்சியோ... உனக்கு உலக விவகாரங்கள் அனைத்தும் தெரியும். இந்த இஸ்லாமியர்களிடமிருந்து நம் கத்தோலிக்க மன்னர்களின் நாடுகளைக்காக்கவும் நம் ஆண்டவராகிய யேசுவின்மீது நாம் கொண்ட விசுவாசத்தை காக்கவும் நடக்கப்போகும் போர் இது. இதில் நாம் தோற்றால் நம் கத்தோலிக்க நாடுகள் அனைத்தும் அழிந்து உலகம் முழுக்க
இஸ்லாமிய ஆட்ச்சி நடைபெறும். இதை நாம் எப்பாடு பட்டும் தடுத்தே ஆக வேண்டும். இதற்காக என்ன விலையும் கொடுக்க நாம் தயாராக இருகிறோம். ஆகவே நம் வத்திக்கான் செல்வங்கள் அனைத்தையும் இழந்தாலும் நாம் கவலைப்பட போவதில்லை.. போலந்தில் நம் கருத்துகளுக்காக ஓட்டெடுப்பில் நாம் வெற்றிபெறும்படிக்கு அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பேசி அவர்கள் மனதை மாற்றும்.. ஆண்டவர் உம்மோடு இருந்து உம்மை வழி நடத்துவறாக...போய்வா " என்றார்.
போலந்தில் அப்போதைய அதன் தலை நகர் க்ராக்கோவில் பரிசுத்தபிதாவின் நுன்ஸியோ எனப்படும் விஷேஷ தூதர் அதன் பார்லிமென்ட் உறுப்பினர்களிடம் தனித்தனியே பேசினார். அவர் பரிசுத்த பிதாவின் ஆசியோடு வந்திருப்பதால் அவர் குரலுக்கு அவர்கள் அனைவரும் செவி சாய்த்தனர். தாங்கள் வாங்கி இருக்கும் லஞ்சப்பணத்தால் யாரும் நரகத்திற்குப்போக சம்மதிக்கவில்லை. தங்களின் தவற்றை உணர்ந்து தங்களின் இந்த துரோக செயலால் கிறிஸ்த்துவ ராஜ்ஜியங்கள்
அனைத்தும் சரிந்துபோகும் என்னும் பாவத்தைக்கட்டிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க உறுப்பினர்கள் ஆதலால் பரிசுத்த பிதாவின் ஆசீர் அவர்களிடே இருக்கும்படி அதை கேட்டு
வாங்கிக்கொண்டார்கள். லூயிஸ் மன்னனின் லஞ்சப்பணம் செய்யாததை பரிசுத்த பிதாவின் ஆசீர்வாதம் செய்தது. ஓட்டெடுப்பில் தாங்கள் அனைவரும் ஒரே மனதாக போலந்து மன்னர் ஜான் சோபிஸ்க்கிக்கு ஆதரவாக ஓட்டுப்போடுவதாக சம்மதித்தனர். இந்த விவகாரம் காரா பாஷாவின் காதுகளுக்கு எட்டாதபடி ரகசியமாக வைத்துக்கொள்ளபட்டது.
இந்த வியன்னாவைகாக்க அதன் நேச நாடுகள் எதுவும் உதவிக்கு வராது என்று காரா பாஷாவுக்கு நிச்சயமாக தெரிந்துவிட்டதால் மனிதர் பெரும் மிதப்பில் இருந்தார். அவர் நினைத்திருந்தால் இந்த சுண்டைக்காய் நாடான ஆஸ்த்திரியாவின் தலை நகரான வியன்னாவை ஒரே நாளில் பிடித்திருக்க முடியும். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. காரணம் அவருக்கு வேண்டிய பீரங்கிகளும் வெடி மருந்துகளும் இன்னும் வந்து சேரவில்லை. இருக்கும் படையை வைத்தே அதன் கோட்டையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்திருக்கலாம். ஆனால் கடவுளின் எண்ணம் வேறு மாதிரியக இருந்ததால் காரா பாஷாவின் மூளையும் அதற்கு ஏற்றாற்போல் வேலை செய்தது. இந்த அழகிய வியன்னாவை சேதாரமே இல்லாமல்
அப்படியே கைப்பற்ற நினைத்தான். அதன் செல்வங்கள் அனைத்தையும் தானே கைப்பற்றிகொள்ள நினைத்தான். இப்படியாக தன் எண்ணம் ஈடேறும் வரை அமைதி காத்தான். யுத்தத்திற்கு வேண்டிய சகல முன்னேற்பாடுகளையும் மிகவும் கவனமாக செயல் படுத்தினான்.
லின்ஸ் அரண்மனை ஆஸ்த்திரியா:
ஆஸ்த்திரியா முழுக்க பல கவின்மிகு அரண்மனைகள் இருந்தாலும் சரித்திரத்தில் இந்த அரண்மனைக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. இந்த அரண்மனையில்தான் வியன்னாவின் தலை எழுத்தை
நிர்ணயிக்கக்கூடிய மன்னர்களின் மந்திர ஆலோசனை நடந்தது. ஆஸ்த்திரியாவின் மன்னர் லியோபால் தலைமை தாங்கினார். இந்த மன்னரின் அழைபின்பேரில் போலந்தின் மன்னர் மூன்றாம் ஜான் சோபிஸ்க்கியும் தன் மந்திரிப்பிரதானிகளுடனும் தளபதிகளுடனும் வந்திருந்தார். இந்த ஜெர்மானிய மன்னரான ஐந்தாம் சார்லஸின் நேச நாடுப்படைகளுக்கு யார் தலைமை தாங்குவது என்பதுதான் அன்றைய விவாதம். பலரும் பல கருத்துகளைக்கூறினர். ஆனால் அவர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஃபாதர் மார்க்கோ தன் சார்பாக போலந்து மன்னர் சோபிஸ்க்கியை முன் மொழிந்தார். ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரனம் அவர் ராஜ வம்சத்திலிருந்து மன்னராக வரவில்லை என ஒரு காரணம் சொல்லப்பட்டது.
நேரம் செல்லச்செல்ல பரிசுத்த பிதாவின் பிரதிநிதியாக வந்திருந்த ஃபாதர் மார்கோவுக்கு இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. முடிவாக தன் உரையை ஆரம்பித்தார். " ராஜ வம்சத்து பிரதிநிகளும்
மன்னர்களும் வீற்றிருக்கும் இந்த குழுமத்தில் முற்றும் துறந்த துறவியாக நானும் பரிசுத்த பிதாவின் பிரதிநியாக வந்திருப்பதால் தயவுசெய்து என் வார்த்தைக்கு சற்றே செவிகொடுங்கள். உங்களுக்குள் சச்சரவு வேண்டாம். போரை திறமையாக நடத்தக்கூடியவர் யார் என்பதுதான் இப்போது நம்முன் உள்ள கேள்வி. அதற்கு தகுதியும் திறமையும் உள்ள தலைவன் யார்? அவரைத்தேர்ந்தெடுப்பதற்குத்தான் இங்கு இருகின்றோமே தவிர நம்முடைய சுய கௌரவங்களைய் பற்றி பேச அல்ல. போலந்தின் மன்னர் சோபிஸ்கி பல போர்களை நடத்தி வெற்றிகண்டவர். இதற்காக மற்ற மன்னர்களின் திறமையை நான் குறைத்து மதிபபதாக தயவுசெய்து யாரும் எண்ண வேண்டாம். இந்த இஸ்லாமிய மன்னர்களின் போர் உத்திகளை நன்றாக
அறிந்தவர் அவர். அவரால் இந்த போரில் சிறப்பாக செயல்பட முடியும். இருப்பதோ குறைந்த கால அவகாசமும் சந்தர்ப்பமும். எதிரி சுதாரிப்பதற்குள் நாம் முந்திக்கொண்டே ஆக வேண்டும்.. இந்த போர் நம்முடைய சுய கௌரத்துவதிற்காக நடத்தப்படும் போர் அல்ல. நம்முடைய கிறிஸ்த்துவ மன்னர்களின் மாண்பை காக்கவும் யேசுகிறிஸ்த்துவின் மேல் நாம் கொண்டுள்ள விசுவாசத்தை காப்பாற்றவும் யேசுவுக்காக....அவரது மாட்ச்சிமைகாக நடத்தப்படும் போர் இது. ஆகவே நமக்குள்ள
வேற்றுமைகளை களைந்துவிட்டு ஒற்றுமையாக செயல்பட்டு இந்த நேச நாட்டு படைகளுக்கு அவரையே தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்." என்றாள். அவையில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின் ஃபாதர் மார்க்கோவின் ஆலோசனைக்கு அனைவரும் ஒத்துப்போவதாகவும் போலந்தின் மன்னர் மூன்றாம் சோபிஸ்கியே ஜெர்மனியின் மாமன்னர் ஐந்தாம் சார்லெஸின் நேசநாட்டுப்படைகளுக்கு தலைவறாக பொறுப்பு ஏற்க வேண்டுமெனவும் தாங்கள்
யாவரும் அவரது கட்டளைகளுக்கு கீழ்படிவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வாக்குறுதியும் வழங்கப்பட்டது. இப்போது போலந்தின் மன்னர் மூன்றாம் ஜான் சோபிஸ்கி தன் உரையை தொடங்குவார் என கேட்டுக்கொண்டதின்பேரில் சோபிஸ்கி தன் உரையை தொடர்ந்தார். வழக்கமான சம்பிரதாங்களிபடி ஆரம்பித்த அவர் தன் போர் உத்திகளை விவரித்தார். வியன்னாவின் வடக்கில் கெஹ்லாஹென் மலைகள் இருகின்றன. அதன் உச்சியில் சம தளம் இருகின்றது. இந்த மலையில் ஏறுவது சிரமமான காரியம் என்பதும் இங்கே இருந்து தாக்குதல் வர இயலாது என்பதும்
காரா பாஷா நினைத்திருப்பான். ஆகவே எதிரி எங்கிருந்து தாக்குதல் வறாது என நினைகிறானோ அங்கிருந்து தாக்குவது நிச்சயமான பலனைத்தரும். இந்த மலையின் உச்சியில் பீரங்கிபடையை நடத்துவதும் அங்கிருந்து எதிரியை அழிப்பதும் என்னுடைய வேலை. நல்ல வேலையாக மலையின் உச்சியிலிருந்து கீழேயே எதிரியின் படை அணிவகுப்பும் அவர்களது கூடாரங்கள்களும் இருகின்றன். மலையிலிருந்து மிகச்சரியாக பீரங்கிக்குண்டுகளின் வீச்சும் இருக்கும். மலைக்கு கீழே நம்முடைய படைகைள் எதிரியின் படைகளுக்குப்பின்னே நிறுத்துவோம். அவற்றை மூன்று பிரிவுகளாகப்பிரித்து எதிரியின் படைகளோடு நேரடி மோதலில் ஈடுபடுவோம்.
வியன்னா கோட்டைக்குள் இருக்கும் ஆஸ்த்திரிய வீரர்கள் இந்த சமயத்தில்
கோட்டைக்கு முன் உள்ள எதிரியின் வீரர்களோடு மோத விடுவோம். இந்த முறையில் நம் படைகளுக்கு நிச்சயம் வெற்றிகிடைக்கும் என்றார் சோபிஸ்கி. அவரது போர் அனுகு முறை அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது.
இதே நேரத்தில் காரா பாஷா தன் கூடாரத்தில் தன் தளபதிகளுடனும் உப தளபதிகளுடனும் மந்திர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தான்.யார் யார் தங்கள் படைகளுடன் எங்கெங்கு இருக்க வேண்டும் . தாக்குதல் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதுபற்றிய விவாதம் நடந்தது. அப்போது கிரிமியாவின் கான் என்ற டார்டார் தலைவன்," பெரு மதிப்புகுறிய தளபதி அவர்களே.. தாங்கள் ஒரு விஷயத்தை கவனிக்கவில்லை போல் இருக்கின்றது. நம்முடைய படைகள் நிலைகொண்டிருக்கும் இடம் இந்த கெஹ்லான்பெர்க் என்னும் மலைகளுக்கு அடியில். எதிரி அந்த மலையின் மீது ஏறிநின்றுகொண்டு தாக்குதல் நடத்தினால் நமக்கு பேரழிவு அல்லவா ஏற்படும் .இதை தாங்கள் கணிக்கவில்லையா அல்லது கவனிக்கவில்லையா?" என்றான்.
தன்னுடைய போர் உபாயங்களை இந்த கான் என்பவன் குறைகூறியதால் கடும்கோபம் கொண்டான் காரா பாஷா. " அடே அடி முட்டாள்... நீயா என்னை குறை கூறுவது. உன் மூக்குதான் சப்பை என்றால் உன் மூளையும் சப்பையாகத்தான் இருக்க வேண்டும். அந்த கெஹ்லான் மலை ஒரு வெற்று மலை. அதன் செங்குத்தான பாறைகளின் மீது மனிதரோ அல்லது விலங்குகளோ கூட ஏறுவது மிகவும் கடினமான காரியம்.. அப்படியிருக்க எந்த முட்டாளாவது மிகுந்த பிரையாசைப்பட்டு அந்த மலைமீது ஏறி நேரத்தையும் முயற்சியையும் வீனடிப்பானா? என்றான் காரா பாஷா. திமிர் அவன் தலையில் மிதமிஞ்சிக்கிடந்தது.
"அதற்கில்லை காராபாஷா அவர்களே... அப்படி ஏடாகூடமாக ஏதாவது நடந்துவிட்டால்? சோபிஸ்கி இந்த மலையின்மீதிலிருந்து தாக்க ஆரம்பித்துவிட்டால். போர் என்றால் அனைத்து சாதக பாதகங்களையும் அலசிப்பார்க்க வேண்டாமோ ? " என்றான் கான்.
அவ்வளவுதான். காராபாஷா மிகுந்த கோபத்துடன் " அடேய் அதிகப்பிரசங்கி... நான் சொல்வதை கேட்கத்தான் நீ இருகின்றாய்....நீ சொல்லி நான் கேட்க அல்ல... உன் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு. சோபிஸ்கி இப்போது ஒரு கிழட்டு சிங்கம். அவனால் இப்போது படுத்தால் எழுந்திரிக்க முடியாது. எழுந்தால் நடக்க முடியாத அளவுக்கு அவனுக்கு கிழடு தட்டி போயிருகின்றது. அவனாவது இந்த வெற்று மலையில் ஏறுவதாவது. அவன் இந்த போரை நடத்த இங்கே வரவே மாட்டான். போர்களத்தில் நீ என் பின்னே உன்
படைகளுடன் அணிவகுத்து நில். உன் உதவி தேவைப்படும்போது நான் கூப்பிடும்போது மட்டும் வந்தால் போதும்." என்றான் காரா பாஷா.
பிறகு " ஓ... வியன்னா... என் அழகுச்சிலையே.. இன்னும் இரண்டு நாளில் நான் உன்னை என்னுடையதாக்கிக்கொள்வேன்.. நீண்டு உயிர்ந்த உன் கோயில்களும் கவின்மிகு மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் என் வசமாகும்...இதோ நெடிதாக உயிர்ந்து நிற்கும் முடியப்பர் தேவாலயமே...உன் உச்சியில் எங்கள் அல்லாவின் கொடியை பறக்க விடுவேன்..இந்த தேவாலயத்தை அல்லாவின் மசூதியாக்கிக்கொள்வேன்...இந்த கோயில்களுக்கும் மாளிகைகளுக்கும் சேதம் ஏற்படாமல் உன்னை அடைவேன்..இன்னும் இரண்டு நாள் பொறுத்திறு..." என்று கூறிக்கொண்டான்.
இந்த மந்திர ஆலோசனையில் காரா பாஷா தன்னை அனைவர் முன்னியிலும் மட்டம் தட்டியது கானுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்பட்டுத்தியது. மேலும் தன்னையும் தன் படையினரையும் போர்களத்தில் முன்னே நிறுத்தினால் அது தனக்கும் தன் வீரர்களுக்கும் மிகுந்த பெருமையும் கௌரவமாகவும் இருக்கும். தங்களின் வீரத்தை நிரூபிக்க அது தக்க சந்தர்ப்பமாகவும் இருக்கும். ஆனால் தன்னை ஒரு ஒப்புக்கு சப்பாணியாக காரா பாஷா அவர் பின்னே நிறுத்தியது கானுக்கு மிகுந்த
அவமானமாகப்போய்விட்டது.
எனவே தன் சுய கௌரவத்துக்கு வேட்டு வைத்த காராபாஷாவை மனமாற சபித்தான். " காரா பாஷா ... என்னையா நீ அவமானப்படுத்தினாய்... இதற்காக நான் உன்னை பழிவாங்காமல் விட மாட்டேன். இந்த கான்களை நீ என்னவென்று நினைத்துக்கொண்டாய். வீரத்துக்குப்பெயர்போன எங்களை உன் முதுகுக்குப்பின்னேயா நிற்க வைத்தாய்.. உன் முதுகுக்குப்பின் இருந்து குத்துவது அந்த வியன்னாகாரன் அல்ல.. அது நானாகத்தான் இருக்கும்...இருக்கட்டும்.. பார்த்துக்கொள்கிறேன் ஒரு கை... போர் ஆரம்பிக்கட்டும்" என்று தன் மனதில் கறுவிக்கொண்டான் கான்.
செப்டெம்பெர் 10.கி.பி.1683.:
வியன்னாவில் தன் ஆசிரமத்தில் போரைபற்றிய பேச்சுகளில் கலந்துகொண்டிருந்தார் ஃபாதெர் மார்கோ... அப்போது அப்துல்லாவின் மனைவி வந்து இந்த ஆசிரமத்தின் கதவைத்தட்டினாள். பசியும் தாகமும் அவள் தெரிந்தது. அவளை வரவேற்று அவளுக்கு சில ரொட்டியும் பழங்களும் கொடுத்த ஃபாதர் மார்க்கோ," பெண்ணே.. இந்த யுத்த நேரத்தில் நீ ஏன் இங்கே வந்தாய்...இப்பேதே நீ போய் உன் கணவனுடன் சேர்ந்துகொள்..அதுதான் உனக்கு பாதுகாப்பு" என்றாள். ஆனால் அவளோ தன் கணவனை காண இயலவில்லை எனவும் அவனிடம் மீண்டும் செல்ல தனக்கு இஸ்ட்டம் இல்லை எனவும் தெரிவித்தாள்.
ஃபாதெர் மார்க்கோ," பெண்ணே... இது துறவிகள் வாழும் மடாலயம்... இங்கே பெண்கள் தங்க அனுமதி இல்லை." என்றார்.
ஆனால் அவளோ ஃபாதரின் கையைப்பிடித்து தன் வயிற்றில் வைத்து தான் இப்போது நிறைமாத கர்பிணி என்றும் தன் கணவன் அப்துல்லா இப்போது அவளை கண்டுகொள்வதில்லை எனவும் இந்த வியன்னாவிலேயே தங்கிக்கொள்ள அனுமதிக்குமாறும் கெஞ்சி அழுது மிகவும் கேட்டுக்கொண்டாள். ஆனால் ஒரு இஸ்லாமியப்பெண்னை இந்த வியன்னாக்காரர்கள் நிச்சயம் கொண்றுபோடுவார்கள் என்ற ஃபாதிரியார் மார்க்கோ அவளை எப்படியாவது அவள் கணவனுடன்
சேர்ந்துகொள்ள வற்புறுத்தி அனுப்பி வைத்தார். வியன்னாவின் கோட்டைக்கு வெளியே பாதுகாப்பாக கொண்டுவந்து விட்டார் ஃபாதர்.
ஆனால் வெளியே வந்த அவளை அவள் கணவன் அப்துல்லாவே கைது செய்து மற்றைய வியன்னாகாரர்காளை அடைத்துவைத்திருந்த பட்டியில் அவளையும் அடைத்து வைத்தான். அப்போது அவன் மனைவி தன் கணவன் அப்துல்லாவின் காலைக்கட்டிக்கொண்டு தன்னை அவனுடன் கூட்டிச்செல்ல அழுது மன்றாடினாள். ஆனால் அப்துல்லாவின் புதுப்பதவி மோகம் அவனை தலை கீழாக மாற்றி இருந்தது.. எனவே இந்த ஊமையும் செவிடுமான இந்தப்பெண் வேண்டாமென முடிவெடுத்திருந்தான்.
இரண்டுமாத கடினமான முற்றுகைக்கு பணியாத இந்த வியன்னாவை இனிமேலும் தாமதிக்க விரும்பாமல் அதை தாக்கி கைப்பற்றவேண்டும் வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டபிறகு காராபாஷா தன் தூதுவன் அப்துல்லாவை அழைத்தான்." அப்துல்லா... நீ வியன்னீர்களின் பாஷையை நீ நன்றாக பேசுவாய் அல்லவா... நீ ஒன்று செய்... வெண்மை நிற சமாதானக்கொடியை உன் கைகளில் ஏந்திச்செல்.. வியன்னா கோட்டையின் மாடங்களில் நிலைகொண்டிருக்கும் அதன் படை வீரர்களிடம் உடனே சரணடையுங்கள்... உங்கள் உயிரையும் ஆன்மாவையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என சொல்லிக்கொண்டே போ..நீ திரும்பி வந்த அடுத்த நாள்வரை எதிரிகளுக்கு கெடு வைத்திருக்கிறேன்." என்றான்.
அதன்படி அப்துல்லா ஒரு வெள்ளை கொடியை ஏந்திக்கொண்டுகாரா பாஷா சொல்லியபடியே வியன்னா நகரின் கோட்டைகளின் மாடங்களில் உள்ளவர்கள் கேட்க்கும்படியாக கத்திக்கொண்டே சென்றான்...
அப்போது அவன் ஃபாதர் மார்க்கோவையும் பார்த்துச்சென்றான். தன் தலைவன் தனக்கு இட்ட கட்டளைகளை சரியாக செய்த திருப்த்தியோடு காரா பாஷாவை சந்தித்தான் அப்துல்லா.
" என்ன அப்துல்லா... வியன்னாக்காரர்கள் அப்படியே கிலி பிடித்தாற்போல் இருகின்றார்களா... சரணடையும் எண்ணம் அவர்கள் முகத்தில் தெரிகின்றதா?" என்றான் காரா பாஷா.
" ஹசூர்... என்னை மன்னியுங்கள்... நான் பார்த்தவரை எந்த வியன்னாகாரர்களும் உங்கள் அறிவிப்பைக்கண்டு பயந்த மாதிரி தெரியவில்லை. அவர்கள் போருக்கு தயார் என்ற தோரணையில்தான் இருகின்றார்கள்".
" எப்படிச்சொல்கிறாய் அப்துல்லா...பயம் என்பது அவர்கள் முகத்தில் தெரியவில்லையா? எப்படி.... என்ன காரணம்... யார் காரணம்?"
" ஹசூர்...மீண்டும் என்னை மன்னியுங்கள்...இந்த ஃபாதர் மார்க்கோதான் அதற்கு காரணம்."
" ஃபாதர் மார்க்கோ ஒரு துறவி அவ்வளவுதான்... அவர் இந்த போரை நடத்த்க்கூடுமோ... அதுவும் என்னை ஜெயிக்க அவரால் கூடுமோ?"
" ஹசூர்...நீங்கள் ஃபாதர் மார்கோவை எளிதாக எடை போட்டுவிட்டீர்கள். அவருக்கு பல திறமைகள் இருகின்றன. வேத காலத்தில் எலிஜா தீர்க்கதரிசியைப்போல அவருக்கு ஞான திருஷ்டி வரம் உண்டு. அவர் நம்முடைய எண்ணங்களை எல்லாம் அறிவார். எனவே அதற்கேற்றார்போல் படை நடத்துவார்... இவை நான் உளவறிந்த உண்மைகள்."
" ஆஹா.... அப்படியா ... அப்துல்லா..நீ நேரே ஃபாதர் மார்க்கோவை உடனடியாக சந்தித்து நான் அவரை அவசியம் சந்திக்க வேண்டும் என கூறு... இந்த விஷயம் பரம ரகசியமாக இருக்க வேண்டும்.நாம் சந்திக்கும் இடம் கோட்டைக்கு
வெளியே இரவில் இரண்டாம் ஜாமத்தில்..அவர் உயிருக்கு நான் ஜவாப்தாரி." என்றான் காரா பாஷா.
அதன்படி காராபாஷாவை சந்தித்தார் ஃபாதர் மார்க்கோ.
" காராபாஷா அவர்களுக்கு இந்த ஏழைத்துறவி சலாம் கூறுகின்றான் "
" ஃபாதர் மார்க்கோவுக்கு இந்த காராபாஷாவும் சலாம் செய்கின்றான்...இன்ஷா அல்லா..."
" இன்ஷா அல்லா காரா பாஷா... தாங்கள் என்னை எதற்கு சந்திக்க விரும்பினீர்கள்?"
" ஒன்றுமில்லை.. தாங்கள் என்னுடைய பால்ய நண்பர்... ஒருகாலத்தில் என் உயிரை காத்தவர்.. இப்போது அந்த உதவிக்கு நான் பிரதி உபகாரம் செய்ய விரும்புகின்றேன்.நான் நாளை போரை ஆரம்பிக்கப்போகின்றேன்..அன்று என் உயிர்காத்த உங்களுக்கு பிரதி பலனாக நானும் உங்கள் உயிர் தப்ப ஒரு சந்தர்ப்பம் தருகிறேன்...இன்று இரவே நீங்களும் உங்கள் துறவிகள் பலரும் இந்த வியன்னாவை விட்டு ஓடிப்போங்கள். உங்கள் உயிருக்கு நான் பாதுகாப்பு தறுகின்றேன்.. இப்போதைக்கு நான் உங்களுக்கு இதுதான் செய்ய முடியும். இந்த உதவியோடு நம் நட்பும் ,உறவும் முடிந்துவிடும்."
" காரா பாஷா அவர்களை அன்று நான் பிரதிபலன் எதிர்பார்த்து அந்த உதவியை செய்யவில்லை...அது ஒரு மனிதாபிமான உதவி.அவ்வளவுதான். அதன்பிறகு நீங்கள் இந்த அளவுக்கு உயிர்வீர்கள் என்றோ நானும் ஒரு துறவியாக மாறுவேன் என்றோ அப்போது நாம் நினைத்துப்பார்த்திருக்க முடியாது"
" இல்லை ஃபாதார்... நான் இந்த அளவுக்கு உயிரவேண்டும் என்பதே அப்போதிலிருந்து என் வாழ்க்கையின் லட்ச்சியமாக இருந்தது. அது நிறைவேறிவிட்டது. இது அல்லாவின் விருப்பம்கூட. இப்போதும் கூட அல்லாவின் கட்டளைப்படிய இந்த போரை நடத்தப்போகின்றேன்..இதில் உங்களுக்கு துன்பம் வர வேண்டாம் என்றுதான் உங்களை எச்சரிக்கை செய்யவே உங்களை சந்திக்க விரும்பினேன்."
" மிக்க நன்றி காரா பாஷா... என் உயிரைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் உனக்கு நேரப்போகும் அழிவைப்பற்றிதான் நானும் கவலைப்படுகின்றேன். நீர் உம் அல்லாவின் கட்டளைப்படிதான் இந்த போரை நடத்தப்போவதாக கூறுவதால் நானும் என் யேசுநாதரின் கட்டளைப்படியே உன்னை எச்சரிக்கை செய்யவே விரும்புகின்றேன்...நீரும் உம் படையினரும் இந்த போரில் தோற்பது உறுதி. ஆகவே நேரத்தை வீணடிக்காமல் இப்போதே நீயும் உம் படையினரும் வந்த வழியே திரும்பிப்போய்விடும். உன் உயிருக்கு நான் பாதுகாப்பு தருகின்றேன்.. இது நான் வணங்கும் யேசுநாதர் மேல் ஆணை "
" இன்ஷா அல்லா ஃபாதர் மார்க்கோ... போய்வாரும் "
" இன்ஷா அல்லா காரா பாஷா ...நீரும் போய் வாரும்"
இந்த ஃபாதிரியாரை மிரட்டி பணிய வைக்கலாம் என்றால் அவர் என்னிலும் அதிகாரத்தொணியில் அல்லவா என்னிடம் பேசுகின்றார்... ஒரு துறவிக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது என்று நினைத்தவனாக காராபாஷா தன்
கூடாரத்திற்க்கு திரும்பிவந்தான்.அப்போது அதுவரை நிர்மால்யமாக இருந்த வானம் திடீரென இருண்டது. திடீரென இடி இடித்தது...மழையும் விடாது பெய்தது. இது என்ன அதிசயமாக இருகின்றது... இயற்க்கை எனக்கு எதிராக சதி செய்கின்றதே என்றான் காரா பாஷா.
அப்போது அவன் மனதில் மின்னல் கீற்றாய் ஒரு ஞாபகம் வந்தது. தன் இத்தாலிய மனைவி தன்னிடம் கடைசி இரவில் பேசும்போது போர்க்களத்தில் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அருளப்படும். அதை மீறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும். இது என் யேசுநாதர் எனக்கு சொல்லக்கேட்டேன் என்ற வார்த்தைகள் அவன் ஞாபகத்துக்கு வந்தன. எதற்கும் அஞ்சாத கராபாஷா கூட அன்று அஞ்சினான் .யேசுநாதரின் எச்சரிக்கை இந்த ஃபாதர் மார்க்கோ மூலமாக வந்ததோ எனவும் எண்ணினான் காரா பாஷா. ஆனாலும் எனக்கு அல்லாவே பெரியவர்.. அவர் எனக்கு இட்ட கட்டளைபடியே செய்வேன்... அல்லாஹோ அக்பர் என்று கூறிக்கொண்டான்.
செப்டெம்பெர் 11.கி.பி.1683.... ஆரம்பித்தது போர்.:
பெரும் வட்டத்துக்குள் பல முனைகள் கொண்ட நட்சத்திரம் போன்ற அமைப்பை கொண்டதுதான் வியன்னாக்கோட்டை. இரட்டை அடுக்கு பாதுகாப்புகொண்ட இந்தக்கோட்டையின் ஒவ்வொரு முனைபோன்ற அரணுக்கும் தனித்தனி பெயர் உண்டு. அடுத்தடுத்து உள்ள இரு அரண்களுக்குள்ள இடைவெளி குறைந்தது 12 மீட்டர் இருக்கும். ஆக ஏதாவது ஒரு அரண் இடிக்கப்பட்டால் எதிரிகள் இந்த பெரும் இடைவெளியை சுலபத்தில் பீரங்கியால் இடித்துவிட்டு கோட்டைக்குள் வந்துவிடுவர். இதில் இந்த இஸ்லாமிய ஜைனேரிகள் எனப்படும் அதிரடி விரவு சிப்பாய்களும் ராணுவத்தினரும் கை தேர்ந்தவர்கள்.
தன் கண்காணிப்பில் தன் படைகள் அனைத்தையும் வைத்திருந்த காரா பாஷா முதலில் பீரங்கித்தாக்குதலை தொடுக்க உத்தரவு கொடுத்தான். அதைதொடர்ந்து பெரும் பீரங்கிக்குண்டுகள் வியன்னாக்கோட்டையின் மீது அடுக்கடுக்காய் வீசப்பட்டன. அதைத்தொடர்ந்து காலாட்படையினர் வெட்டிவைத்திருந்த பதுங்குக்குழிகள் வழியே துருக்கிய வீரர்கள் முன்னேறினர்.
இவர்கள் முன்னேற்றத்தின் அசைவுகள் அனைத்தையும் தன் தொலைனோக்கியால் பார்த்த வியன்னாவின் கோட்டைக்காவலன் ருடீகர் வான் ஸடர்ஹெம்பெர்க் தன் தாக்குதலையும் பதிலுக்கு ஆரம்பித்தார். வியன்னா கோட்டையின் அரண்களின் மீதிலிருந்த பீரங்கிகளும் பதிலுக்கு நெருப்பை கக்கின. அவை நேராக பதுங்கு குழிகள் வழியே வரும் துருக்கிய வீரர்கள் மீது மிகச்சரியாக விழவே பலரும் சடுதியில் அல்லாவின் பாதம் சேர்ந்தன்ர். தன் படை வீரர்களுக்கு பெரும் அழிவை நேரப்போவதை உண்ர்ந்த காரா பாஷா தன் பீரங்கி பலத்தை அதிகரிக்க செய்தான். இதனால்
வியன்னாவின் கோட்டையில் பாதுகாப்புக்காக நின்றிருந்த வீரர்கள் பல படுகாயமுற்றும் பரலோக பிராப்தியும் அடைந்தனர்.
இந்த நேரத்தில் வலாக்கியரும் மால்தேவியரும் தங்கள் கைவரிசையை காட்டினர். பீரங்கித்தாக்குதலுக்கு இவர்கள்தான் பொறுப்பு ஏற்றிருந்ததால் காரா பாஷாவுக்கு சந்தேகம் எதுவும் ஏற்பட்டுவிடாதபடி பூனைக்கும் காவல் பாலுக்கும் தோழன் என்னும் விதமாக பல புஸ்வான வெடிகளை வீசினர். முன்னேற்பாட்டின்படி அவர்கள் செய்து வைத்திருந்த பல வெடிகள் நெருப்பை சீறிக்கொண்டு போகும் ஆனால் அதனால் பாதிப்பு ஏற்படுத்தாமல் புஸ்வானமாக போய்விடும். இப்படியே வெடித்துக்கொண்டிருந்தால் பாஷாவுக்கு தெரிந்துவிடும் என்பதற்காக அவ்வப்போது நிஜ வெடிகளையும் வீசினர். அவை வியன்னா வீரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இந்த புஸ்வான வெடிகள் கோட்டையின் மதில்களை உடைக்காமல்
வெறும், நெருப்பைமட்டுமே கக்கிக்கொண்டிருந்தது உண்மையில் எதிரிகள் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும் கால நேரத்தை நீட்டித்து அவர்கள் அவசர உதவிப்படைகள் திரும்பிவரும்வரை காத்திருக்கவுமே என்பது அந்த இரு இளவரசர்களான வல்தேக்கியருக்கும் மால்தேவியருக்கும் நோக்கமாக இருந்தது. ஆனால் காரா பாஷாவின் கடுமையான உத்திரவு காரணமாக பெரும் பெரும் பீரங்கி குண்டுகளை வியன்னாவின் கோட்டையின்மீது வீசவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டதால் இனிமேலும் தங்களுடைய நாடகத்தை அதிக நேரம் நீட்டிக்க முடியாதென அவர்களுக்கு புறிந்தது. எனவே மேலும் வலிமையான நிஜ பீரங்கித்தாக்குதலை ஆரம்பித்தனர்.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் உடையும் என்பதுபோல அனேக பீரங்கிகள் ஒரே இடத்தை நோக்கி வீசப்பட்டதால் அந்த பாதுகாப்பும் வலிமையுமாக கட்டப்பட்டிருந்த வியன்னா மதிலும் விரிசல் கண்டது. கடுமையான பீரங்கித்தாக்குதலால் பர்க் பேசின் எனப்படும் கோட்டையின் அரண் முற்றிலுமாக உடைந்து விழுந்தது.. மீண்டும் சர சரவென்னும் பீரங்கித்தாக்குதலால் பர்க் அரண் வீழ்ந்த சில நிட நேரங்களில் அதை ஒட்டி இருந்த மதில் சுவரும் தகர்ந்தது. இதைக்கண்ட துருக்கிய
வீரர்கள் பெரும் கூச்சலிட்டுக்கொண்டும் மதில் மீது தாவி ஏறும் முயற்ச்சியில் பல கை எறி குண்டுகளை வீசிக்கொண்டும் வில்லால் அம்புகள் எய்தியும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் எறும்புகள் செல்வதுபோல் சாரிசாரியக அந்த உடைந்த கோட்டையின் மதில்கள்மீது ஏறிவரலாயினர். ஆனால் வியன்னாக்கோட்டைவீரர்கள் இவர்களுக்கு சளைக்காமல் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டும் கொதிக்கும் எண்னையை ஊற்றியும் அவர்களை விரட்டினர். இந்த யுத்தத்தில் இரு அணியினருக்கும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. இப்படியே அன்று மாலை வேளை வரை யுத்தம் தொடர்ந்ததால் காரா பாஷா தன் வீரர்களை உடனே பின் வாங்கச்செய்தான்..
வியன்னா கோட்டை காவலன் ருடீகர் வான் ஸ்டார்ஹெம்பெர்க் கோட்டையின் சேதத்தை பார்வையிட்டு அன்றைய இரவோடிரவாக மணல் சாக்கு மூட்டைகளை பயன்படுத்தி ஒருவாறு அடைத்தார். ஆனாலும் பீரங்கியின் தாக்குதலுக்கு இவை எம்மாத்திரம்.. ஆனாலும் தங்களுடைய மன்னர் லியோபாலும் ஆதரவு உதவிப்படைகவும் வரும்வரை இந்த கோட்டையை காத்துநின்றே ஆக வேண்டும் ஆதலால் தன் வெடிமருந்து நிபுணனை அழைத்தான். மோஸ் எனப்படும் வியன்னா வெடிமருந்து கில்லாடிகள் வெடிமருந்துகளைப்பற்றிய நிபுணர்கள். அவர்களின் மோப்ப சக்தியால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிமருந்துகளை கண்டறியவும் அவைகளை செயலிழக்க செய்யவும் இவர்கள் கடுமையான பயிற்சி பெற்றவர்கள்.
இவர்களின் தலைவன் மைக்கேல் லாவிட்ஸ். " மைக்கேல் லாவிட்ஸ்... இந்த இடிபாடுகள் பீரங்கியால் மட்டுமே தகர்க்கப்படவில்லை..இவகள் எனக்குத்தெரிந்து பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டு சக்த்திமிகுந்த வெடிகுண்டுகளால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. எனவே மதிலுக்கு கீழே ரகசிய சுரங்கத்தில் இன்னும் ஏதேனும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்தால் அவைகளை செயலிழக்கச்செய் " என்றார்.
மைக்கேலுக்கும் அவரது உதவியாளர்களான மோஸ்களுக்கும் இரவு முழுவதும் வேலை இருந்தது. வியன்னாகோட்டையின் மதிகளுக்கிடையில் பல இடங்களில் ரகசியமாக துருக்கிய சாபர்களாலும் மைனர்களாலும் வைக்காப்பட்டிருந்த பல வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அவற்றை வெடிக்கமலிருக்க அதன் திரிகளை நீக்கிவிட்டனர். ஆனாலும் இன்னும் எங்காவது வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்குமோ என்னும் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.அவர்களது சந்தேகம் வீன்போகவில்லை.லோபஸ் பேசின் எனப்படும் பாதுகாப்பு அரணின் கீழே பூமிக்கு அடியில் பல பீப்பாய்வடிவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது வெடித்தால் அந்த லோபஸ் பேசின் தகர்ந்துவிடும். பிறகு எதிரிகள் உள்ளே நுழைந்து விடுவார்கள். எப்படியோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளறாத மைக்கேல் அந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வெடிகாத்திருக்கும்படி அவற்றை செயலிழக்க செய்துவிட்டான்.
இந்த செப்டெம்பெர் 11 அன்று இரவில் பல வேலைகள் மிக ரகசியமாக நிழ்ந்தன. வியன்னா கோட்டைக்காவலர் ருடீகர் தன் வெடி மருந்து நிபுணன் மைகேலை அழைத்து," மைக்கேல்... இந்த கோட்டையைக்காக்க நம்மால் ஆன அனைத்து காரியங்களையும் நாம் செய்துவிட்டோம். நாளைக்கு நாம் உண்ண உணவும் இல்லை குடி நீரும் இல்லை. நாளைக்கே நமக்கு கடைசி நாளாக இருக்கும் போல் தெரிகின்றது. இன்னும் ஒரே ஒரு சக்தி வாய்ந்த குண்டு இந்த கோட்டையின் மீது விழுந்தால் போதும். இந்த லோபஸ் பேசின் எனப்படும் அரண் வீழ்ந்துவிடும்..அதன் பின்விளைவுகளை எண்ணிப்பார்க்கவே எனக்கு கவலையாக இருகின்றது. நம்முடைய அரசரும் இன்னும் நாடு திரும்பவில்லை... இனி எல்லாம் கடவுள் செயல் " என்றார்.
அப்போது பெரும் ஆர்ப்பாட்டத்துடம் ஆஸ்த்திரியாவின் மன்னர் லியோபால் தன் பரிவாரங்களுடன் தன் கோட்டைக்கு வந்தார். மன்னர் வந்துவிட்டார் என்றதும் வியன்னாவின் கோட்டையிலிருந்த அத்தனை வீரர்களுக்கும் தேசபக்த்தி வெளிப்பட்ட்டது. வாழ்க மாமன்னர் முதலாம் லியோ பால் என்று தங்கள் குறளை உயர்த்தி கத்தி ஆர்ப்பரித்தனர். தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்த வெடிகுண்டுகளை வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
வியன்னா கோட்டையில் திடீரென ஏற்பட்ட மகிழ்ச்சி அர்ப்பாட்டத்தை கண்ட காரா பாஷா " ஓ... அந்த ஓடிப்போன மச்சான் திரும்பி வந்துவிட்டானா... இருக்கட்டும் ... இருக்கட்டும்... நாளைக்கே இந்த வியன்னா மக்களையும்
இந்தக்கோட்டையும் அதன் பயந்தாங்கொள்ளி மன்னன் லியோபாலையும் அழிக்காமல் விடமாட்டேன். அடேய் லியோபால்... நாளைக்கு நான் உன் கோட்டையில் நுழைந்து உன் தலையை வெட்டி உன் கையில் கொடுக்கவில்லை என் பெயர் காரா பாஷா இல்லை... விடியட்டும் ... விடியட்டும் என உறுமிக்கொண்டான்.
இதே இரவில் போலந்தின் மன்னர் ஜான் சோபீஸ்க்கி தன் பிரமாண்டமான ஹுஸ்ளார் எனப்படும அதிவேக குதிரப்படை வீரர்கள் 30000 பேருடனும் ஜெர்மானிய நேச நாட்டுப்படையினர் சுமார் 80000 பேருடனும் வியன்னாவை அடைந்தார். வியன்னாவின் கெஹெல்லான் மலைப்பகுதியை அடைந்த சோபீஸ்க்கி தன் பீரங்கிப்படையினருடன் தானும் சேர்ந்து அந்த செங்குத்தான் மலையின் மீது கடுமையான பல சிரமங்களை எல்லாம் கடந்து மலை உச்சியிலுள்ள சமவெளியை அடைந்தார். அங்கிருந்து பார்க்கும்போது கீழே உள்ள காரா பாஷாவின் படை வீரர்களின் அணிவகுப்பும் அவர்களது கூடாரங்களும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. தன்னுடைய ஹுஸ்ஸார் படையினரை காரா பாஷாவின் வலதுபுற சேனையை தாக்கும்படியாகவும் ஜெர்மானிய படைவீரர்களை காரா பாஷாவின் நடுப்பக்க சேனைகளை தாக்கும்படியாகவும் லோரைன் இளவரசரின் ராஜப்படைகள் காரா பாஷாவின் இடது பக்க சேனைகளை தாக்கும்படியாகவும் நிறுத்தி இருந்தார்.
தாக்குதலுக்கான நேரம் ஜான் சோபீஸ்க்கியின் உத்திரவு கிடைத்ததும் ஆரம்பிக்க வேண்டும் என உத்திரவிடப்பட்டிருந்தது. இந்த உத்திரவுக்கான அடையாளம் கெஹலான் மலையிலிருந்து பீரங்கித்தாக்குதல் அரம்பித்ததும் என்று கூறப்பட்டது.
போலந்தின் மாமன்னர் ஜான் சோபீஸ்க்கியின் பரிவாரங்கள் நீண்டு நெடிதாக வளர்ந்திருந்த அந்த கெஹலான் மலையில் ஏறிகொண்டிருகின்றார்கள் என்பதை கிரிமியாவின் கான் தன் மலை ஒற்றர்களாள் அறிந்திருந்தும் அவன் எதையுமே கண்டுகொள்ளவுமில்லை. அதைப்பற்றி காரா பாஷாவிடம் பிரஸ்த்தாபிக்கவும் இல்லை.
" அடே காரா பாஷா நீ என்னையா அவமனைப்படுத்தினாய்... நாளைக்கு காட்டுகிறேன் பார் நான் யாரென்று. உன்னை அழிக்க சரியான ஆள் மலையில்
ஏறிவிட்டான். நாளைக்கு அவன் வைக்கும் கச்சேரியில் நீயும் உன் துருக்கிய படைவீரரும் என்னவாகப்போகிறீர்கள் பார் ... பழிக்குப்பழி வாங்க உனக்கு மட்டும்தான் தெரியும் என நினைத்தாயோ... அந்தக்கலை எனக்கும் தெரியும் " என்று தன் மனதில் கூறிக்கோண்டான்.
வியன்னாவின் கோட்டைக்காவலன் ருடீகர் வான் ஸ்டார்ஹெம்பெர்க் தன் கோட்டையை காக்கும்பொருட்டும் அதன் வீரர்களைக்காக்கும் பொருட்டும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல தடுப்பு அரண்களை ஏற்படுத்தி இருந்தார். நேரடிப்போர் மூளக்கூடிய இடங்களில் இரும்பு உருண்டைகளில் பல முனை கொண்ட கூரான ஆணிகளை பொருத்தி அவற்றை ஆயிரக்கணக்கில் தரையில் போட்டு வைத்திருந்தார். எதிரிகளின் குதிரைப்படை இவற்றைக்கடக்காமல் இந்த கோட்டையின் பக்கம் வர முடியாது.. எனவே எந்தக்குதிரையாவது இந்த இரும்பு உருண்டைகளின் ஆணி மீது கால் பதித்தால் அந்தக்கால் முறிந்து அதன் வீரனுடன் கீழே விழுவதைத்தவிர வேறு வழி இல்லை. அந்த குதிரையின் கதியும்
அதன்மீது வந்து விழுந்த வீரனின் கதியும் அதோ கதிதான். இந்த ஆணிகளின் கூர்மையிலிருந்து தப்பித்தாலும் அவர் எழுவதற்குள் கோட்டையிலிருந்து சுடும் துப்பாக்கி வீரர்களின் தோட்டாக்களுக்கு தப்ப முடியாது. மேலும் பல அடுக்குகளாக தடுக்கப்பட்டிருக்கும் வேலிகளின் வரிசையை எந்தக்குதிரையும் தாண்ட முடியாது. தாண்டும்போது அந்த குதிரை வேல்களின் மீதே விழும்.
செப்டெம்பெர் 12.கி.பி.1683.. வரலாற்று புகழ்பெற்ற இந்த நாளும் விடிந்தது. இந்த நேரத்தில் அந்த கெஹெலான் மலை மீது மேகக்கூட்டம் படிந்திருந்தது. இந்த அதிகாலையில் அந்த மலைமீதிருந்த ஒரு பெரும் பாறையில் ஃபாதெர் மார்க்கோ வியன்னாவின் வெற்றிகாக பலிபூசை நடத்தினார் . அன்று அவர் நிகழ்த்திய பிரசங்கம் உலகப்புகழ்பெற்றது. அது இவ்வாறாக இருந்தது.
" என் மக்களே... நீங்கள் இன்று நிகழ்த்தும் யுத்தம் நம் சொந்த விருப்பத்திற்காக இல்லை. .நம் நாட்டுக்காகவும் இல்லை...ஆனால் இந்த யுத்தம் நம்முடைய விசுவாசத்தைக்காக்க ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவால் ஏற்படுத்தப்பட்டது.
இந்த யுத்தத்தால் நம்முடைய எதிரி முற்றிலும் ஆழிக்கப்படவேண்டும்...நம்முடைய கிறிஸ்த்துவின் மகத்துவம் இங்கு விளங்க வேண்டும்...அவரது ஆட்சி நம்முடைய கிறிஸ்த்துவ நாடுகளில் என்றேன்றும் விளங்க வேண்டுமானால் இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இன்று வியன்னா வீழ்ந்தால் நாளை ரோம் வீழ்ந்துவிடும்...நாளை ரோம் வீழ்ந்தால் ஐரோப்பா முழுவதும் இஸ்லாமியம் பரவும்....அவர்கள் கையில் நாம் என்றென்றும் அடிமைகளாய் வாழ்வதை
தவிர வேறு வழி இல்லை. ஏற்கனவே இஸ்லாமியர் கைப்பற்றியுள்ள நாடுகளிள் அங்கிருந்த கிறிஸ்த்துவர்கள் படும் பாடுகள் வார்த்தையில் சொல்ல முடியாத அளவுக்கு அவமானமும் வேதனையும் நிறைந்ததாக உள்ளது. இந்த இழிநிலை இனியும் உங்கள் சந்ததியினருக்கு தேவையா?.. உங்கள் பிள்ளைகள் நிம்மதியாகவும் மரியாதையாகவும் வாழ வேண்டாமா? அப்படியானால் இன்று நிகழ்த்தப்போகும் இந்த புனிதப்போரில் தோல்வியைப்பற்றி கவலைப்படாமல் ஆண்டவரின் பெயருக்கு
மகிமை விளங்கும்படியாக வீரத்துடன் போராடுங்கள். நீங்கள் இங்கு மடிந்தொழிய வரவில்லை... மாறாக உங்கள் எதிரியை அழிக்கவும் உங்கள் சந்ததியினருக்கு நிச்சயமான நல் வாழ்வு தரவுமே இங்கே வந்திருகிறீர்கள். எல்லாம் வல்ல நம் ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து உங்களோடிருந்து உங்களை வழி நடத்துவறாக. இதோ ஆண்டவரின் திருச்சிலுவை... எதிரிகளே ஓடிப்போங்கள் ...எதிரிகளே ஓடிப்போங்கள் " என்று முழங்கினார்.அவரது முழக்கம் கீழே படைகளுக்கு நடுவே இருந்த காரா பாஷாவுக்கு மிகத்தெளிவாக கேட்டது.
தன் தொலை நோக்கியால் ஃபாதர் மார்கோவின் குரல்வரும் திசையை நோக்கினான் காரா பாஷா. அதில் ஃபாதர் மார்கோ தன் கையிலிருந்த சிலுவையை உயிர்த்தி எதிரிகளே ஓடிப்போங்கள் என்றுகூறுவதை பார்க்க முடிந்தது. அவர் அருகிலே ஒரு பெரும் கொடி ஒன்று நாட்டப்பட்டிருந்தது. அதில் தேவ தாயார் தம் திருமகன் குழந்தை யேசுவை தம் இடது கையில் ஏந்தி இருப்பதும் தெரிந்தது. அப்போது அவன் பார்வைக்கு அந்த மாதாவின் திரு உருவம் உயிர் பெற்று எழுந்துவந்தது. தேவ மாதாவின் திருவுருவம் உயிர்பெற்று தம் முன்னே எழுந்துவருவதையும் அவர் தன் கண்முன்னே நின்றுகொண்டு,"காரா பாஷா... என் நாட்டு மக்களைவிட்டு ஓடிப்போ என்று கடும்கோபமாக அவரது வலதுகையை நீட்டி எச்சரித்ததையும் அப்போது அந்த மாதாவின் இடது கையிலிருந்த குழந்தை யேசு தன் கைகளை ஆட்டி ஆட்டி " இரு உனக்கு ஒரு பாடம் புகட்டாமல் நான் விடப்போவதில்லை " என்னும்விதமாய் எச்சரித்ததையும் கண்டு திடுகிட்டான் காரா பாஷா.
பிறகு " சே... இது எல்லாம் வீண் பிரமை " என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு " அடேய் மால்தேக்கியா...அந்த மலையின்மீது உன் பீரங்கியை திருப்பி ஒரு நான்கு அல்லது ஐந்து குண்டுகளைப்போடு " என்று கட்டளை இட்டான்.
அதன்படியே மால்தேக்கியனின் பீரங்கிகள் தங்கள் எரிகுண்டுகளை வீசின. அவை ஃபாதர் மார்க்கோவின் முன்னிலையில் விழுந்து வெடித்து சிதறின. ஃபாதேர் மார்க்கோ நினைவிழந்து சரிந்தார்.
" மால்தேக்கியா.. வலாக்கியா ...முழங்கட்டும் நம் பீரங்கிப்படைகள்...கோட்டைகளும் மதில்களும் தகர்ந்து வீழட்டும்... அல்லா கடவுள் பக்த்தி இல்லாத இந்த நாய்களுக்கு தக்க பாடம் தரட்டும். இன்றோடு ஒழிந்தது இந்த வியன்னா...." என்று உரக்க கத்தி தன் படை எடுப்பை ஆரம்பித்தான்.
அதைத்தொடர்ந்து காலாட்படைகளும் குதிரப்படைகளும் தங்கள் தாக்குதலை ஆரம்பித்தன. சகல முன்னேற்பாடுகளும் மிகச்சரியாகவே இருந்தாலும் காரா பாஷா தன் அனைத்து படைகளையும் சரி சமமாகப்பிரித்து முதல் பாதியை முன்னேறி தாக்காவும் பின் பாதியை ஆபத்து உதவிப்படையாகவும் வைத்திருந்தான்.துருக்கியரின் ஜைனேசரிப்படையினரும் ராணுவமும் பயங்கரமான சாகசங்களைக்காட்டின. ஆரம்பத்தில் பல குதிரை வீரர்களை இந்த போரில் காராபாஷா இழந்தாலும் அடுத்துவந்த விஷேஷ ராணுவம் எதிரியின் வேலாலான தடுப்புகளை அநாயாசமாக தாண்டி பல ஆஸ்த்திரிய வீரர்களைக்கொண்றனர். ஜைனேசரிகள் அக்காலத்தில் மிகச்சிறந்த வில்லாலிகள். அவரது துல்லியமான தாக்கும் திறன் இந்தப்போரில் பல ஆஸ்த்திரிய வீரர்களை பரலோகம் அனுப்பியது.
பகலவனின் முழு கதிர்களும் வெளிவரதுடங்கியதும் கெஹ்லான் மலை மீதிருந்த வெண்பனிகூட்டமும் விலகியது. இப்போது வியன்னாவின் போர்க்களம் பளிச்சென தெரிந்ததும் போலந்தின் மன்னர் ஜான் சோபீஸ்க்கி தன் பீரங்கித்தாக்குதலை ஆரம்பித்தார். அவரது பீரங்கித்தாக்குதலில் காராபாஷாவின் ஆபத்து உதவிப்படைகள் பல நாசமாயின. மேலும் அங்கிருந்து வந்த பீரங்கி குண்டுகள் காரா பாஷாவின் கூடாரங்களின் மீது விழவே அவன் தன் குடும்பத்தினரைக்காக்க வேகவேகமாக
தன் போர் முனையைவிட்டு தன் கூடாரங்களுக்கு திரும்ப வேண்டியதாயிற்று. திரும்பிவரும் காராபாஷாவை வரவேற்க ஜெர்மனியின் நடுப்படையும் லோரைன் இளவரசரின் ராஜப்படைகளும் வரவேற்றனர். பெரும்போர் மூண்டது.
மேலும் மேலும் அடுக்கடுக்கடுக்காக அந்த கெஹ்லான் மலையிலிருந்து பீரங்கி குண்டுகள் வீசப்படவே காரா பாஷாவின் அனைத்து கூடாரங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. காரா பாஷாவுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான். எந்த நேரத்திலும் எத்தகைய சூழ்நிலையிலும் தன் சுய புத்தியை இழக்காதவன் அன்று தன் சுய சிந்தனையை இழந்தான். " ஐய்யோ... என் மனைவிகள்.... என் மக்கள்.... என் செல்வங்கள்... அனைத்தும் தீக்கிறையாக்கப்படுகின்றனவே... அடேய் கான்....உடனே வா...இந்த மலைமீதிருக்கும் படையினரை சுற்றி வளைத்துக்கொல்லு " என்றான்.
ஆனால் கான் தன்வஞ்சத்தைக்காட்டினான்.." காரா பாஷா... அன்றே நான் இப்படி ஒரு நிலை வரும் என்று சொன்னேன்... நீர் கேட்க்கவில்லை... அன்று நீர் என் பேட்சை கேட்கவில்லை... இப்போது நான் உம் பேச்சை கேட்க்க மாட்டேன்.. இனி நான் உன்னுடன் சேர்ந்து போர் செய்யப்போவதில்லை... நான் போகிறேன்" என்றான். அவனைத்தொடர்ந்து அவனுடன் வந்திருந்த 25000 குதிரை வீரர்களும் போரில் ஈடுபடாமல் போர்களத்தைவிட்டு வெளியேறினர்.
" கான்... இது துரோகம்...நீ இப்படி மாறுவாய் என நான் நினைக்கவில்லை..." என்றான் காரா பாஷா..
" எது துரோகம் காரா பாஷா... நீ செய்யாத துரோகத்தைாயா இப்போது நான் செய்துவிட்டேன்... மாமன்னர் சுல்த்தானின் பெயரை சொல்லிக்கொண்டு நீ செய்யாத துரோகத்தையா நான் செய்துவிட்டேன்...நீ... அடிக்காத கொள்ளையா.... செய்யாத கொலையா...நீ உன் உறவினருக்கு துரோகம் செய்யாமலா இத்தனை பெரிய வைஸியர் பதவிக்கு வந்திருக்கிறாய்?' என்றபடியே கானும் அவனது வீரர்களும் வெளியேறினர்.
" நில் கான்... நான்மட்டும் இந்த போரில் ஜெயித்து வருவேன் என்று வைத்துக்கொள்... பிறகு உன்னை என்ன செய்கிறேன் பார் " என்றான் காரா பாஷா.
" நீ இந்தப்போரில் ஜெயிக்கவே முடியாது..இந்தப்போரில் நீ இறக்கப்போவது உறுதி " என்றான் கான்.
கானின் இந்த துரோகம் காரா பாஷாவை மிருகமாக்கியது. தன் ஒரு தளபதியை அழைத்து அவன் காதில் ஒரு ரகசிய உத்திரவை பிறப்பித்தான். அதன்படி அவன் பல சிப்பாய்களை அழைத்துக்கொண்டு பட்டியில் அடைத்து வைத்திருந்த அந்த 40000 வியன்னா நகர பணைய கைதிகளாக்கப்பட்டிருந்த பொதுமக்களை ஈவு இரக்கமில்லாமல் ஆண்கள் என்று இல்லாமல் பெண்கள் என்று இல்லாமல் குழந்தை என்று இல்லாமல் பெரியவர்கள் என்று இல்லாமல் கதறக்கதற வெட்டி சாய்த்து மாமிச குவியலாக்கிச்சென்றனர். சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சி மஹா கோரமானதாகவும் நியாயமற்ற செயலாகவும் வர்ணிக்கப்படுகிறது. காரா பாஷாவின் மனநிலையை ஒருவாறு மோப்பம் பிடித்திருந்த அப்துல்லா அதற்கு முன்தினமே தன் ஊமையும் செவிடும் நிறைமாத கர்பிணியுமான தன் மனைவியை அங்கிருந்த காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து விடுவித்துக்கொண்டதால் அவள் தப்பித்தாள்.
லோபல் பேஸின் எனப்படும் வியன்னா கோட்டை அரண் அடுத்தடுத்த பீரங்கித்தாக்குதலால் வீழ்ந்தது. இருப்பினும் அதன் வழியாக முன்னேறிவரும் ஜைனேசரி வீரர்களை ஆஸ்த்திரியா படை வீரர்கள் நேருக்கு நேர் எதிர்கொண்டனர்.
இந்த நேரத்தில் கெஹ்லான் மலைமீதிலிருந்த போலந்தின் மான்னர் ஜான் சோபீஸ்க்கியின் அசுர வேக ஹுஸ்ஸார் எனப்பட்ட குதிரைப்படையினர் அதிரடியாக காரா பாஷாவின் படை வீரர்களுடன் நேருக்கு நேராக மோதினர்.
போலந்தின் ஹுஸ்ஸார் என்னும் அதிரடி குதிரைப்படையினர் வேகத்துக்கும் அதிரடியான தாக்குதலுக்கும் அக்காலத்தில் பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் இடுப்பில் நீண்ட இறக்கைகள் இரண்டைக்கட்டிக்கொண்டு தங்கள் கைகளில் நீண்ட வேலால் தாக்குவார்கள். அவர்கள் வரும் வேகத்தில் அவர்கள் இடுப்பில் கட்டியிருக்கும் இறக்கைகள் ஒருவித வினோத ஒலி எழுப்பும். இந்த இறக்கைக்கட்டி குதிரைகளைப்பார்க்கும்போது எதிரிகளின் குதிரைகள் மிறளும். அவை பயந்து தாறுமாறாக எஜமானனின் கட்டளைக்கு பணியாமல் ஓடும். இந்த சூழ்நிலையில் இவர்களின் தாக்குதல் நடக்கும். இப்படியாக காரா பாஷாவின் பெரும் படை சிதறடிக்கப்பட்டது.
தனக்கு தோல்வி நிச்சயம் என்ற மன நிலைக்கு காரா பாஷா வந்ததும்
அவன் போர்க்களத்திலிருந்து மாயமாய் மறைந்தான். அடுத்து நடந்தது கோரத்தாண்டவம். போலந்தின் மன்னர் ஜான் சோபீஸ்க்கியும் அவர்களது ஹுஸ்ஸார் வீரர்களும் நடத்திய தாக்குதல் சரித்திரத்தில் மிகவும் பாராட்டிப்பேசப்பட்டது. இவர்களது தாக்குதலுக்கு பயந்து ஓடிய துருக்கியர்களின் பயங்கர வீரர்களான ஜைனேசரிகள் தப்பிக்க வழி இல்லாமல் வளைந்து செல்லும் அந்த டூனபே நதியில் பாய்ந்து ஓடும்போது அதன் சுழலில் அகப்பட்டு மடிந்து போனார்கள். அது போர்க்களத்தில் இறந்தவர்களை விட அதிகமானவர்கள் ஆகும்.
இந்தப்போரில் காரா பாஷாவுக்கு உதவியாகவும் மன்னர் லியோபாலுக்கு எதிரியாகவும் வந்திருந்த ஹங்கேரியின் மன்னன் இம்ரி திம்கோலி படுதோல்வி அடைந்ததால் அவரும் அவரது படை வீரர்களும் போர்களத்திலேயே கொல்லப்பட்டனர்.
மன்னர் லியோபால் போரில் படு தோல்வி அடைந்த காரா பாஷாவை தேடச்சொன்னார். அப்போது காரா பாஷா தனி ஆளாக தன் குதிரையில் அல்லாவின் திரு நாமம் எழுதப்பெற்றிருந்த அந்த பச்சைக்கொடியை ஏந்தியவராய் மன்னர் ஜான் ஸோபீஸ்க்கியை நோக்கி வந்துகொண்டிருந்தார். தன் துப்பாக்கி சுடும் தூரத்தில் வந்துகொண்டிருந்த அவரை " சுடுங்கள் அவனை " என்றார். அவ்வளவுதான்... நூற்றுக்கணக்கான தோட்டாக்கள் பாய சொத்தென செத்து விழுந்தான் காரா பாஷா.
போலந்து மன்னர் சோபீஸ்க்கி இந்த நாயை அப்பால் தூக்கிப்போடுங்கள் என்றார். அவன் சடலத்தை தூக்கும்போதுதான் தெரிந்தது அவன் காரா பாஷா இல்லை...அது அப்துல்லா என்பது..." அடச்சே.. அந்த நாய் நம்மை நன்றாக ஏமாற்றிவிட்டது ... இனிமேல் அவனை போர்க்களத்தில் தேடுவதில் பயனில்லை " என்றார் சோபீஸ்க்கி.
[ இஸ்த்தான்புல் நகரத்தில் காரா பாஷா தன் இத்தாலிய மனைவியிடம் பிரியாவிட பெற கடைசியாக சந்தித்த பொழுது அவள் கண்ட முதல் சொப்பனம் காரா பாஷா போர்க்களத்தில் அல்லாவின் திருநாமம் பொறிக்கப்பட்ட அந்த பாரம்பரிய பச்சை நிற கொடியை குதிரையில் தூக்கி வரும்போது ஆயிரம் அம்புகள் வானத்திலிருந்து அவர் மீது வந்து தைக்கவே அவர் இறப்பதாக கண்டதை ஒரு நல்ல யுக்தியாக காரா பாஷா இந்த சமயத்தில் தான் தப்பி ஓடுவதற்கு பயன்படுத்திக்கொண்டான்.. எனினும் காரா பாஷாவின் உடையில் அப்துல்லா இறந்தது ஒரு சதி என்றாலும் அவள் கண்ட முதல் சொப்பனம் பலிக்கத்தான் செய்தது.]
போலந்தின் மாமன்னர் சோபீஸ்க்கியை வாயார புகழ்ந்தார் அஸ்த்திரியா மன்னர் லியோபால். அதுவரை வர்மம் பாராட்டிவந்த மன்னர்கள் அதுமுதல் நட்பு பாராட்டி வரலாயினர். தங்களைக்காக்க வந்த உலக ரட்சகராக அவரை தலையில் தூக்கி வைத்து பாராட்டினர்.
உயிர் தப்பும் ஆசையிலும் தன் மனைவி மக்கள் வைப்பாட்டிகள் அவர்களுடைய செல்வங்கள் என அனைத்தையும் அள்ளிக்கொண்டு போகமுடியாமல் முடிந்தவரை திரட்டிக்கொண்டு ஓடலானார் காரா பாஷா. எனவே பாத்திர பண்டங்கள், துணிமணிகள் நகைகள் இவற்றில் எதை எடுப்பது எதை விடுவது எனத்தெரியாமல் அவசரம் அவசரமாக ஓட வேண்டி இருந்ததால் காரா பாஷா பல மனைவியரையும் வைபாட்டிகளையும் அவர்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு ஓடலானார் . இவர்கள் நிலை பரிதாபமாக மாறியது. அப்போதுதான் சமையல் செய்த உணவு வகைகள் போட்டுவைத்திருந்த மணம் வீசும் காஃபி, ரொட்டி அனைத்தும் பற்றி எரியும் கூடாரங்களில் சிதறிக்கிடந்தது.
போலந்தின் ஹுஸ்ஸார் என்னும் குதிரைப்படையினரின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்காத படைவீரர்கள் தங்கள் ஆயுதங்கள், பீரங்கிகள், வெடி மருந்துகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஓட்டம்பிடிக்கவே அந்த பொருட்கள் யாவும் மன்னர் சேபீஸ்கியின் கொள்ளைப்பொருள் ஆனது.
போரின் முடிவில் சுமார் 2000 ஜைனேரி வீரர்கள் கைதி ஆக்கப்பட்டனர். காரா பாஷாவின் மனைவியர் என்றும் வைப்பாட்டிகள் என்றும் பெண்கள் என்றும் குழந்தைகள் என்றும் சுமார் 1500 பேர் கைது செய்யப்பாட்டார்கள். இவர்கள்
அனைவரும் ஆஸ்த்திரியாவின் மன்னர் லியோபாலின் முன்பாக நீதி விசாரணைகாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
அந்த கெஹ்லான் மலைமீது காரா பாஷாவின் பீரங்கித்தாக்குதலில் சரிந்து விழுந்திருந்த ஃபாதர் மார்க்கோ தெய்வாதீனமக பிழைத்துக்கொண்டார். மன்னர் முன்னிலையில் நீதி விசாரணைக்காக காத்துக்கொண்டிரும் இந்த துருக்கிய நாட்டு படை வீரர்களுகாகவும் காரா பாஷாவுடைய குடும்ப பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் மிகவும் பரிந்து பேசினார்.
" ஃபாதர் மார்க்கோ... இந்தக்காரா பாஷா நமக்கு செய்திருக்கும் கொடுமைகளை நீங்கள் பார்த்திருகிறீர்கள்...இருந்துமா இவர்களுக்கு நாம் இரக்கம் காட்ட வேண்டும் என நினைகிறீர்கள்" என்றார் மன்னர் லியோபால்.
" ஆம் அரசே நீவீர் இவர்களுக்கு யேசு நாதரின் முகம் பார்த்து இரக்கம் காட்டத்தான் வேண்டும். பகைவனுக்கும் அன்பு செய் என்பதுதான் பரமன் யேசுவின் அருள் வாக்கு...இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்... இந்த போர் வீரர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள்... எஜமானின் கட்டளைக்கு கீழ்படிவதே இவர்களுடைய பணி. இந்த பெண்களும் குழந்தைகளும் என்ன செய்வார்கள் பாவம். உலகில் எந்தப்பெண்ணுக்கும் என்றுதான் முழு சுதந்திரம் இருந்தது. காரா பாஷாவுக்கு வாழ்க்கைபட்ட பாவத்தை தவிர இவர்கள் செய்த பாவம் என்ன? ஆகவே நீவீர் இவர்களை மன்னித்தே ஆக வேண்டும்...இதுதான் ஒரு நல்ல கிறிஸ்த்துவனுக்கு அழகு." என்றார்.
ஃபாதர் மார்க்கோவின் பரிந்துரையை மன்னர் லியோபால் ஏற்றார். போர்கைதிகள் ஆக்கப்பட்ட துருக்கிய வீரர்கள் காரா பாஷாவின் மனைவி மக்கள் என்ற அத்தனை பேரையும் மன்னித்து முழு சுதந்திரமாக அனுப்பிவிட்டார். அவர்கள் வியன்னவிலேயே தங்கிவிட்டார்கள் என்கிறது ஒரு சரித்திரக்குறிப்பு.
[ என் அன்பரே...நீர் ஈசா நபியின் எச்சரிக்கையை மீறினால் நீரோ அல்லது உம்முடைய மனைவியரோ அல்லது உம்முடைய வைப்பாட்டிகளோ ஒருத்தி கூட மீண்டும் இஸ்த்தான்பு நகருக்கு திரும்பி வரப்போவதில்லை என்று அன்று ஒருநாள் காரா பாஷாவின் இத்தாலிய மனைவி கூறிய அருள் வாக்கும் மிகச்சரியாக பலித்தது.]
தங்களைக்காக்கும் பணியில் போர்க்களத்தில் உயிரைவிட்ட அனைத்து நேச நாட்டு படைவீரர்களுக்கும் மன்னர் லியோபால் நன்றி தெரிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த வியன்னா போரில் அப்பாவியாகவும் நிராயுதபாணிகளாகவும் அநியாயமாக உயிரிழந்த தன் நாட்டு மக்கள் 40000 பேருக்கும் அஞ்சலி செலுத்தும்போது தன் மக்களை நினைத்து வாய்விட்டே கதறி அழுதார் மன்னர் லியோபால். [ பிறகு அவரது வருத்தம் எல்லாம் மிகுந்த கோபமாக திரும்பியது. ஹுங்கேரி மன்னன் இம்ரி திகோலி மீது. தனக்கு வெற்றிகிடைத்த அதே மனநிலையில் தனக்கு எதிரியாக மாறிப்போன அந்த பதிதனாகிய இம்ரி திகொலியையும் அவனது பதித கூட்டாளிகளையும் அடுத்த ஆண்டே ஓட ஓட விரட்டினர். பிறகு வடக்கு ஹுங்கேரியும் தெற்கு ஹுங்கேரியும் ஒன்றாக இணைக்கப்பட்டு முழு ஹுங்கேரியும் மன்னர் லியோபாலுக்கு முன்பிருந்தது போலவே சொந்தமானது. பிறகு அந்த பதித மக்களுடைய அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு
கத்தோலிக்கர்களுக்கு கொடுக்கப்பட்டது. பாவம் அந்த பதித மக்களுடைய வாழ்க்கை இந்த சூழ்நிலையில் மிகுந்த சோகமாக மாறியது.]
டிசம்பெர் 25.கி.பி.1683...பெல்கிரேட்..
வியன்னா போரின் முடிவைப்பற்றி காரா பாஷா இஸ்தான்புல்லில் பேரரசர் சுல்த்தான் முஹம்மது அவர்களுக்கு சம்பிரதாய முறைப்படி ஒரு தூதுவன் மூலம் தன்னிலை விளக்கம் அளித்தார். அந்த தூதுவனை பேரரசர் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் விளக்கமாக கூறும்படியாக கேட்டார். அவனும் காரா பாஷாவின் அனைத்து தகிடுதத்தங்கைள்யும், மாமன்னர் பெயரை சொல்லி அவர் அடித்த கொள்ளைகளையும் அவர் சேர்த்து வைத்த செல்வங்கள் பற்றியும் வியன்னா போரில் அவர் செய்த தவறுகள் பற்றியும், அவர் செய்த அநியாயமான கொலைகள் பற்றியும் நன்றாக போட்டுக்கொடுத்தான்.
இதனால் பேரரசர் சுல்த்தான் நான்காம் மெஹ்மூத் மிகுந்த அதிர்சச்சி அடைந்தார். அவரது கண்களில் கோபம் ரத்த சிகப்பாக தோன்றியது.
" சரி ...மற்றதெல்லாம் போகட்டும்... அந்த பச்சை நிற அல்லாவின் திரு நாமம் பொறிக்கப்பட்ட அந்தக்கொடி எங்கே? அது என்னவாயிற்று ?" என்றார் சுல்த்தான் அவர்கள்.
" அரசே ...காரா பாஷா இதிலும் தன் தில்லுமுள்ளுவை காட்டிவிட்டார்...தன்னை மறைத்துக்கொள்ள அப்துல்லா என்னும் ஒரு இஸ்லாமியனை அவருக்கு மாற்றாக காட்டி அவன் கையில் இந்த மதிப்பிற்குறிய அல்லாவின் கொடியை கொடுத்து தனி ஆளாக அவனை போர்க்களம் அனுப்பினார் காரா பாஷா. அவனை எதிரிகள் கொண்றுவிட்டு அந்த கொடியை அவர்கள் வைத்துக்கொண்டார்கள்.. இப்போது அந்தக்கொடி போலந்தின் மன்னர் ஜான் சோபீஸ்க்கியிடம் உள்ளது."
" ஆ... வேதனை...வேதனை..அந்தக்கொடிக்கு எந்த விதத்திலும் பங்கம் வரக்கூடாது என்பதை காரா பாஷாவிடம் கண்டிப்பாக நான் கூறி இருந்தும் அதை அவன் தவறாக பயன்படுத்திவிட்டான்...இது மன்னிக்க முடியாத குற்றம்... அவன் எனக்கு செய்திருக்கும் துரோகங்களைக்கூட நான் மன்னிக்க முடியும். ஆனால் அல்லாவின் திரு நாமம் பொறிக்கப்பட்டிருந்த அந்த பாரம்பரியம்கொடிக்கு அவமானம் வரச்செய்துவிட்டான் காரா பாஷா... இதை என்னால் மன்னிக்கவே முடியாது.
ஆக எனக்கும் நாம் வணங்கும் அல்லாவின் திரு நாமம் பொறிக்கப்பட்டுள்ள அந்த பாரம்பரிய பெருமை வாய்ந்த அந்தக்கொடிக்கும் துரோகம் செய்த காரா பாஷாவுக்கு நாம் மரண தண்டனை அளிக்கிறோம்...அவன் மரணத்துக்கு அவனது இத்தாலிய மனைவியும் அவனது மகனும் சாட்ச்சிகளாக இருப்பார்களாக. இந்த தண்டனை அவன் இருக்குமிடமான பெல்கிரேடிலேயே நடக்கட்டும். இது என் ஆனை....சுல்த்தான் நான்காம் மெஹ்மூது.
பேரரசர் சுல்த்தான் நான்காம் முஹம்மதுவின் மரண தண்டனைகான ஓலையுடனும் காரா பாஷாவின் இத்தாலிய மனைவியுடனும் அவரது மகனுடனும் ஒரு குழு பெல்கிரேட் நகரை அடைந்தது. இவர்களது வருகைகாக காரா பாஷா காத்திருந்தார். மன்னரின் மரன தண்டனைகான உத்திரவு அவருக்கு வாசித்து காட்டப்பட்டது.
காரா பாஷா ஒன்றும் பேசவில்லை. சோகம் அவரை ஆட்கொண்டது. தன்மனைவியுடனும் தன் மகனுடனும் பேச அவருக்கு சில நிமிட நேரம்
கொடுக்கப்பட்டது.
அவன் மனைவி," அன்பரே அன்று நான் கண்ட கனவு உண்மையாயிற்றே. அந்த கடைசி நேர அவகாசத்தையும் ஏன் புறக்கனித்தீர்கள்? "என்றாள்.
காரா பாஷா," அன்பே..நீ சொன்ன அனைத்தும் உண்மை ஆயிற்று. நானோ என் மனைவியருள் ஒருத்திகூட இஸ்தான்புல் மீண்டும் வர மாட்டீர்கள் என்று சொன்ன தீர்க்கதரிசனம் உண்மையாயிற்று...எல்லாம் என் தலை விதி " என்றான்.
பிறகு தன்மகனை அள்ளி எடுத்து அவனை கட்டி அணைத்து முத்தமிட்டான்.பிறகு தன் வீரர்களிடம்," ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து என் மகனையும் என் மனைவியையும் அப்பால் போக விடுங்கள். அவர்கள் முன்னால் நான் சாக விரும்பவில்லை" என்றான்.
அவர்கள், " முடியாது காரா பாஷா... அவர்களைத்தான் பேரரசர் சுல்த்தான் அவர்கள் உம்முடைய மரணத்திற்கு சாட்ச்சிகளாய் வைத்திருகிறார். இதை நாங்கள் மீற முடியாது" என்றனர்.
பிறகு சம்பிரதாய முறைப்படி காரா பாஷாவின் பதவி...பட்ட.ம்...அதிகாரம்... செல்வாக்கு... செல்வம்... அவரது பேட்டன் எனப்படும் செங்கோல் ... கஜானா சாவி...அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு .சாதாரண மனிதனாக நின்றார்.
சில நிமிடங்களில் ஒரு பட்டு கயிறு கொண்டு வரப்பட்டது. [ பேரரசர் அவர்களுக்கு துரோகம் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு அவர்களின் மரணத்திலும் கௌரவிக்கும் விதமாக பட்டு கயிற்றினால் சுறுக்கிட்டு கொல்வது அக்காலத்திய இஸ்லாமியர் வழக்கம்.]
தன்னுடைய வாழ்க்கையின் கடைசி வினாடிகளில் தான் சாதாரண மனிதனாக நின்றபோது வாழ்க்கையை வெறுத்துபோனார் காராபாஷா...இனிமேலும் என்ன இருகிறது...அந்த வியன்னா போரிலேயே நான் வீழ்ந்திருந்தால் எனக்கு எவ்வளவோ கௌரவமாக இருந்திருக்கும்.. ஆனால் நான் எல்லாவற்றையும் இழந்து போனேன்.. எனக்கு இந்த இழிவு சாவு நல்ல பரிசு தான்..அப்பா நான் சொல்கிறேன் என தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள் ...சுறுக்கை நல்ல விதமாக
போட்டுவிட்டீர்களா.. தவறாக சுறுக்குப்போட்டு பிறகு எதாவது ஏடாகூடம் ஆகிவிட்டால் அப்புறம் என்பாடு கஷ்ட்டம்தான் " என்று கூறி மனம்விட்டு நகைத்தார் காரா பாஷா. இதுதான் அவர் கடைசியாக பேசிய வார்த்தை.
துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும் என்பது அவரைபொறுத்தவரை உண்மையாகி போனது. தான் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்பதற்காக பல சதிச்செயல்கள், துரோகங்கள், கொலைபாதகங்கள் அனைத்தையும் செய்த காரா பாஷாவுக்கு கடவுள் சரியான தண்டனைதான் கொடுத்திருந்தார். அக்கிரமி தன் அக்கிரமத்தாலேயே சாவான் என்ற வேத வாக்கும் உண்மையானது . இந்த உலகில் யாருக்கும் நன்றி என்பது இராது...யாருக்கு எவ்வளவு உழைத்தாலும் நன்றி
என்பது கொஞ்சமும் இருக்காது. யாரையும் திருப்திபடுத்தவும் முடியாது.. அனைத்தும் வீண்... வீணிலும் வீண் என்னும் சங்கப்போதகனின் வாக்கும் உண்மையானது.
டிசெம்பெர் 25 .கி.பி. 1684ல் அன்று பரமன் இயேசு கிறிஸ்த்து இந்த பூ உலகில் மனிதராகஅவதரித்த அந்த நாளிலேயே பெல்கிரேடு நகரின் பிரதான சலையில் காரா பாஷாவின் கழுத்தில் பட்டு நூல் கயிற்றால் சுறுக்கிட்டு அவரது வலப்புறம் மூவர் இடப்புறம் மூவர் சேர்ந்து அவர் கழுத்தை பட்டுக்கயிறால் சுறுக்கை இழுத்து காரா பாஷாவை கொண்றனர். உயிரற்ற அவரது சடலம் தொப்பென கீழே விழுந்தது.
அன்று ஒரு நாள் வியன்னா போருக்கு புறப்படும்முன்னர் கணவனும் மனைவியுமாக அவர்கள் சந்தித்துக்கொண்ட கடைசி இரவில் அவனுடைய இத்தாலிய மனைவி கண்ட இரண்டாவது சொப்பனம் மிகச்சரியாக பலித்தது.
கி.பி. 1529ல் ஆரம்பித்து தோல்வியில் முடிந்த வியன்னாயுத்தம் மீண்டும் கி.பி.1683ல் ஆரம்பித்து மீண்டும் தோல்வியிலேயே முடிந்ததால் சுமார் 150 வருட கிறிஸ்த்துவ இஸ்லாமிய பிரச்சனை ஒரு நிரந்தரமான முடிவுக்கு வந்தது.
இந்த பிரச்சனை முடிந்ததும் அதுமுதல் எந்த ஒரு இஸ்லாமிய ஓட்டோமானிய மன்னரும் மீண்டும் ஐரோப்பாவில் கிறிஸ்த்துவ நாடுகள் மீது போர் தொடுக்கும் ஆசையை கைவிட்டனர். செப்டெம்பெர் 12 .கி.பி.1683ல் நடைபெற்ற வியன்னா யுத்தத்தில் வெற்றிபெற்ற போலந்து மன்னர் ஜான் சோபீஸ்க்கி , சரித்திரத்தில் ஜூலியஸ் சீசர் உதிர்த்த அதே சொற்களையே தானும் உதிர்த்தார். அவை," வீனி...வீதி ...தேயுஸ் வீசித்.." என்பதாகும். அதாவது நாங்கள் வந்தோம்..நாங்கள் பார்த்தோம்... இது ஆண்டவரின் வெற்றி " என்பதாகும்.
சரித்திரத்தில் இந்த போரின் முடிவு இஸ்லாமியர்களுக்கு ஒரு பலத்த அடியாக விழுந்தது... இந்த வெற்றியினால் புதிய உத்வேகம் எழுந்தது கிழக்கு ஐரோப்பாவில். அவை ஒவ்வொன்றாக ஓட்டாமானிய சுல்தான்களை எதிர்த்து அவர்களை பலமிழக்க செய்தனர். ஒரு காலத்தில் இந்த ஓட்டோமானிய சுல்தானியர்கள் எங்கிருந்து தங்கள் சாம்ராஜ்ஜியத்தை ஆரம்பித்தார்களோ அதே இடத்திற்கு மீண்டும் திரும்பிப்போக செய்தனர்.
மீண்டும் ஒரு சுவையான செய்தி. வியன்னா போரில் காரா பாஷா புறமுதுகிட்டு ஓடிய பொழுது கொதிக்கும் காஃபி அதன் பாத்திரத்திலேயே இருந்தது. இந்த சமயம் அங்கு வந்த ஃபாதெர் மார்க்கோ அதன் சுவையில் மயங்கி அதில் தேனையும் பாலையும் கலந்து அதை சுவை மிகு பானமாக மாற்றினார். இந்த காப்பி கலவைவை தயாரிக்கும் கடைகளை வியன்னா வாசிகள் அந்த பாதிரியாரின் நினைவாக கப்புசினோ என்றழைத்தனர். அதுமுதல்தான் வியன்னாவில் காஃபி அறிமுகம் ஆனது. உலகம் முழுக்க காப்புசினோ என்னும் கப்பி கடைகளும் தோன்றின.
ஃபாதர் மார்க்கோ தன் இறுதிக்காலத்தை உணர்ந்தார். ஆகஸ்ட் 13 கி.பி.1699ல் வியன்னாவில் காலமானார். இவருக்கு கி.பி. 2003 ல் பரிசுத்த பிதா பாப்பு புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் அருளாளர் பட்டம் கொடுத்து கௌரவித்தார்.