நாங்கள் சென்ற ஆண்டு புனிதப்பயணம் சென்றிருந்த போது ஜெரிக்கோ பட்டிணத்தை அடைந்தோம். இங்கிருந்துதான் இயேசுநாதர் நாற்பது நாட்க்கள் கடும் தவம் இருந்த சோதனை மலைக்கு செல்ல வேண்டும். இந்த சோதனைமலை அடுமின் மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இங்குள்ள ஒரு மலையின் உச்சியில்தான் இயேசுநாதர் தவமிருந்த ஒரு குகை இருகின்றது இந்த குகைக்கு செல்ல நடைவழி சாலையும் இருகின்றது. கேபில் கார் வசதியும் இருகின்றது. நாங்கள் கேபில் கார் வசதியை பயன்படுத்திக்கொண்டோம். இந்த கேபில் கார் செல்லும் வழியின் கீழ் பகுதியில்தான் பழைய ஏற்பாட்டில் ஜோசுவா காலத்திய பழைய ஜெரிக்கோ நகரம் மிகவும் சிதிலமாக உள்ளது. இந்த பழைய நகரில் இன்றளவும் புதைபொருள் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருகின்றன. இந்த பழைய ஜெரிக்கோ நகரில் மேலும் என்னென்ன இருகின்றன என்னும் ஆர்வத்தில் நாங்கள் வீடுவந்த பிறகு இன்டெர்னெடில் ஆராய்ந்தபோது இருகுளங்கள் என்னை கவர்ந்தது. இந்த குளங்களில்தான் மஹா ஏரோது என்னும் மன்னன் மக்கபேயர்களின் வம்சாவளியில் வந்த அலெக்சாண்டர் என்னும் ஒரு இளவரசனை தன் சூழ்ச்சியால் கொண்றான் என்று அறிய வந்தேன். அது முதல் மன்னர் ஏரோது பற்றியும் அவர் வம்சாவளியை பற்றியும் நான் அறியவந்த விஷயங்கள் பெரும் வியப்பை எனக்குள் ஏற்படுத்தியது. அதன் விளைவாக எழுந்ததுதான் இந்தக்கதை. இப்போதும் இந்தக்கதையில் வரும் கதா பாத்திரங்களும் அவர்களின் பெயர்களும் சம்பவ இடங்களும் அவை நேர்ந்த காலங்களும் சர்ச்சைக்குறியவையாகத்தான் தெரிகின்றன. காரணம் பல அரசர்களின் பெயர்கள் அவர் அவர்களின் தந்தைக்குறிய அல்லது அவர்களின் மூதாதையர்களின் பெயர்களை தாங்கி வருகின்றன. மேலும் சில சம்பவத்தின் காரண கர்த்தாக்களின் வம்சாவளியைப்பற்றிய எந்த குறிப்பும் எங்கும் காணப்படவில்லை.எனவே இது அவரோ அல்லது எவரோ என்னும்படியான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சில சரித்திர ஆராய்ச்சியாளர்களே ஒப்புக்கொள்கின்றார்கள். இருப்பினும் நான் எனக்கு தெரிந்த வரை இந்தக்கதையை எழுதியுள்ளேன். இதை கதை என்னும் ரீதியிலேயே நேயர்கள் படிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன். எதற்கும் சரித்திர சான்றுகள் இல்லை.ஆனாலும் இந்தக்கதையை படிக்கும் முன்னர் பழைய ஏற்பாட்டில் உள்ள மக்கபேயர்கள் சரிதையை படிக்க
வேண்டுமாகவும் கேட்டுக்கொள்கின்றேன். இனி கதைக்கு செல்வோம்
“அப்பா…எனக்கும்
நம் முன்னோர்கள் இதுமேயர்களின் சரித்திரம் கொஞ்சம் தெரியும் என்றாலும் அதை உங்கள் வாயால்
கேட்க்கும்போது எனது நாடி நரம்புகள் எல்லாம் புத்துயிர் பெறுகின்றது. எனவே மீண்டும்
அந்தக்கதைகளை எனக்கு சொல்லுங்கள் அப்பா “ என்றார் பிற்காலத்தில் பெரிய ஏரோது என்றும்
மஹா ஏரோது என்றும் அழைக்கப்பட்ட எரோது. இப்போது ஏரோதுவுக்கு இன்னும் மன்னர் பதவி வழங்கப்படவில்லை.
இஸ்ரேல் நாட்டிலிருக்கும் கலிலேய பகுதிக்கு அவர் ஆளுனர். அவ்வளவுதான். அப்போது அவருக்கு
வயது இருபத்தைந்து தான். அவருக்கும் ஒரு இதுமேய வம்சத்தில் வந்த டோரிஸ் என்னும் பெயருடைய
ஒரு இளவரசிக்கும் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. இந்த ஆண் குழந்தைக்கு தன் தகப்பனின் மேல் உள்ள பிரியத்தினாலும்
மரியாதையினாலும் அந்திப்பாத்தர் என்னும் பெயரையே சூட்டி இருந்தார் ஏரோது. .
“ என்
மகனே எரோது… உன் தகப்பனை யார் என்று நினைத்துக்கொண்டிருகின்றாய்.? இந்த அந்திப்பார்த்தர்.தான்
இந்த யூதேய மானிலத்தின் அதிபதி ஹிராக்கினர் அவர்களின் முதலமைச்சரும் நிதி அமைச்சரும்
சட்ட ஆலோசகரும் ராணுவ ஆலோசகரும் ஆன அந்திப்பார்த்தர் .இந்த யூதேய மானிலத்தின் அதிபதி
ஹீராக்கினர் தான் இந்த யூத மக்களின் அரசரும் யூத சங்கத்தின் தலைமை குருவும் ஆவார்.
இந்த யூதேய நாட்டில் அவர் வைத்ததுதான் சட்டம். அவரை மீறி வேறு யாரும் இல்லை.”
“ ஏன் அப்பா இல்லை. இவ்வளவு பெரிய
பதவிகளையும் பட்டங்களையும் வைத்திருக்கும் நீங்கள் இல்லையா. உங்கள் பதவியில் நான் மட்டும்
இருந்திருந்தால் எப்போதோ நான் இந்த யூதேய ராஜ்ஜியத்தை
கைப்பற்றி இருந்திருப்பேன்.”
“ மகனே ஏரோது, நான் மட்டும் இதை
யோசிக்காமல் இருந்திருப்பேன் என்று நினைக்கின்றாயா? இந்த காரியம் செய்வதற்கு நாம் பிறந்த
இந்த இதுமேயர் இனம் ஒரு தடையாக இருகின்றது. இந்த யூதேயா மாநிலத்தை ஆளவேண்டுமானால் நாம்
இந்த யூத இனத்தில் பிறந்திருக்க வேண்டும். நம் தாயாரும் தகப்பனாரும் இந்த யூத இரத்தித்தத்திலிருந்து
வந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட சுத்த யூத இரத்தத்தை கொண்டிருக்கும் ஒரு யூதன் தான்
இந்த நாட்டை ஆள முடியும். அதுவே யூத சட்டம். இந்த சட்டத்தை மீறி எவராலும் இந்த யூதேயா
மாநிலத்தின் அரசனாக வந்தால் அவனது ஆட்ச்சி வெகு விரைவில் கவிழ்க்கப்பட்டுவிடும். அவ்வளவு
பெரும் கலவரங்களும் தீராத போராட்டங்களும் இரத்தக்கலறிகளும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
பிறகு அந்த அரசனின் கதி அதோகதிதான். ஒரு காலத்தில் எனக்கும் இந்த யூதேய மாநிலத்தின்
அதிபதி ஆக வேண்டும் என்னும் ஆசை இருந்தது. அதனால்தான் நானும் என் முன்னோர்களும் யூத
மதத்திற்கு மதம் மாறினோம்.நீ பிறக்கும்போதே ஒரு யூதனாகத்தான் பிறந்தாய். ஆனால் உன்
தாய் சிப்ரோஸ் நபாட்டிய நாட்டின் இளவரசி. அவள் ஒரு யூதப்பெண் இல்லை. ஆகவே நீ ஒரு பாதி
யூதனாகவும் ஒரு பாதி இதுமேயனாகவும் பிறந்தாய். ஆகவே இந்த யூதேய நாட்டிற்கு அரசனாகும்
ஆசையை இத்துடன் விட்டுவிடு. மேலும் இந்த மாதிரி விஷயங்களைப்பற்றி பேச வேண்டுமானால்
என்னிடம் தனியாகத்தான் பேச வேண்டும். இந்த சுவர்களுக்கும் கேட்கின்ற காதுகள் இருக்கும்.மேலும்
.பகலில் பக்கம் பார்த்து பேசு. இரவில் அதுவும் பேசாதே என்கிறது ஒரு இந்திய பழ மொழி;
எச்சரிக்கை”
“ அப்பா…உங்களுக்கு இருந்த ஆசை
எனக்கும் இருகின்றது. இப்போது நேரம் காலம்
சரி இல்லை. ஒரு காலம் வரும் அப்போது நான் இந்த யூதேய இராஜ்ஜியத்தை ஆள்வேன். இந்த யூதர்களிடம்
நம் குலப்பெயரை முன்னிட்டு நானும் நம் முன்னோர்களும் எவ்வளவோ அவமானங்களை அடைந்து விட்டோம்.
எதற்காக இந்த யூதர்கள் நம்மை பகைகின்றார்கள். அவமதிகின்றார்கள்.?
“ மகனே ஏரோது. இந்த யூதர்களும்
இதுமேயர்களுக்கும் காலம் காலமாக் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு பகை. அதாவது நம்
முன்னோர்களூள் பிதாப்பிதா அபிரஹாம் அவர் மனைவி சாராள் இவர்களின் மகன் பிதாப்பிதா ஈசாக்கு
ரபேக்கா தம்பதியர்களுக்கு ஏசாயூ என்றும் யாக்கோபூ என்றும் இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தனர்.
மூத்தவன் ஏசாயூ, இளையவன் யாக்கோபு..இவர்களுள் யாக்கோபு தன் தாயாரின் துணையுடன் வயதான
தன் தகப்பன் ஈசாக்கின் பார்வையின்மையை பயன்படுத்தி தன் மூத்த அண்ணன் ஏசாயுவைப்போல்
வேடமிட்டு அவரிடமிருந்து எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டான்.. நடந்ததை அறிய
வந்த அண்ணன் ஏசாயு தன் தம்பி தன்னையும் தன் தகப்பனையும் ஏமாற்றி எல்லா ஆசீர்வாதங்களையும்
பெற்றுக்கொண்டதால் அவன்மீது பெரும் கோபம் கொண்டு அவனை கொண்றுவிட திட்டமிட்டான். இத
அறிந்த ரபேக்கா தன் மகன் யாக்கோபுவை தூரத்திலிருக்கும் மெசப்பட்டோமியாவுக்கு தன் சகோதரன்
லாபானிடம் யாக்கோபுவை அனுப்பி வைத்தாள்.. யக்கோபு அவன் தாய் மாமனை சந்தித்து அவர் மகள்
லீயா மற்றும் ராக்கேலையும் இன்னும் இரு பெண்களையும் மணந்துகொண்டு பன்னிரெண்டு ஆண் குழந்தைகளையும்
தீனா என்னும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இந்த யாக்கோபுவின் பண்ணிரெண்டு ஆண் பிள்ளைகளுக்கும் இந்த இஸ்ரேல் நாடு
பிரித்து கொடுக்கப்பட்டது. இந்த பண்ணிரெண்டு பேர்களை முன்னிட்டே இஸ்ரேலின் பன்னிரண்டு
கோத்திரமும் உருவாக்கப்பட்டது. இந்த யூதா கோத்திரத்தார்கள் தாங்கள் மட்டுமே கடவுளாள்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்பதற்காக மற்ற இனத்தாரை மதிப்பதில்லை.”
“ அப்பா … அப்படியானால் ஈசாக்கின்
மூத்த மகன் ஏசாயுவுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லையா?. கடவுள் அவனை மட்டும் ஏன் கைவிட்டுவிட்டார்.”
என்றார் ஏரோது.
“ இல்லை மகனே .. அப்படி அல்ல.
கடவுள் ஏசாயுவை கை விட்டு விடவில்லை. ஏசாயுவுக்கு இந்த ஏதோம் மாநிலம் கிடைத்தது. அவன்
அவன் மனைவி மக்கள் எல்லாம் இந்த ஏதோமிலேயே வாழ்ந்தார்கள். இவர்கள் வழிவந்தவர்கள்தான்
நாமும். அதனால்தான் இந்த யூதர்கள் நம்மையும் கேவலப்படுத்துகின்றார்கள்.” என்றார் ஏரோதுவின்
தந்தை அந்திப்பார்த்தர்.
“ அப்பா… நம்மிடம் அறிவும் இருகின்றது
ஆற்றலும் இருக்கின்றது.வீரமும் இருகின்றது . விவேகமும் இருகின்றது.இவை எல்லாம் இருந்தும்
நம்மால் ஏன் நமக்கென ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியவில்லை”?
“ மகனே ஏரோது இவை எல்லாம் நம்மிடம்
இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவை இருந்தும் பிரயோஜனமில்லை. ஏன் என்றால் இந்த ஏதோம்
மாநிலத்தில் பூகோல அமைப்பு அப்படி. வெறும் பெரும் மலைகள். எங்கும் குடிக்க தண்ணீர்
கிடைக்காது. வறண்ட மா நிலம். பேரூ பெத்த பேரு. தாகத்துக்கு நீலு லேது என்பது ஒரு பழ
மொழி. குடிக்கக்கூட தண்ணீர் இல்லாததால் இந்த இடத்தில் மக்கள் வசிக்க முடியாமல் போயிற்று.
எனவே எந்த ராஜ்ஜியமும் அங்கே நிலை நிற்க முடியாமல் போயிற்று. ஒருகாலத்தில் நம் முன்னோர்கள்
எப்படியோ அங்கே வாழ்ந்து வந்தார்கள். பிற்காலத்தில் எகிப்தியர்கள் இந்த ஏதோமை பிடித்துக்கொண்டார்கள்.
இந்த ஏதோமில் செப்பு சுரங்கத்தை கண்டுபிடித்தார்கள். இதனால் எகிப்த்தியர்கள் பெரும்
பொருள் சம்பாதித்தார்கள். அக்காலத்தில் செம்பு என்னும் உலோகம் புதிதாக இருந்ததால் அதன்பயன்பாடும்
அதிகமாக இருந்தது. அந்தக்காலத்திய தொழில் நுட்ப்பத்தை பயன்படுத்தி ஏராளமாக செப்பு பயன்பாட்டிற்கு
வழிவகுத்து பெரும் பொருள் சம்பாதித்தார்கள்.ஆனாலும் எகிப்த்தியர்கள் சில காலம் இங்கே வாழ்ந்தார்கள்..
தண்ணீர் இல்லாததால் அவர்களுக்கும் இங்கே வாழ முடியாமல் போயிற்று.
நம் முன்னோர்
பேரரசர் சாலமோன் இங்கு தன் செப்பு சுரங்கத்தை ஸ்தாபித்தார். எல்லாம் கொஞ்ச காலம் தான்.
பின் அவராலும் இங்கே நிலை நிற்க முடியவில்லை. பேசாமல் இடத்தை காலிசெய்துவிட்டு போய்விட்டார்.
ஆனால் இந்த இடத்தை தன் இராஜ்ஜியத்தின் தென்
மண்டலமாக மாற்றிக்கொண்டு ஏதோமின் வழியாக தன்
செங்கடல் வாணிக பகுதியாக மாற்றிக்கொண்டு பெரும் பொருள் சம்பாதித்தார்.. இன்றுவரை அவர்
பயான்படுத்திய செப்பு சுரங்கங்கள் இருகின்றன. அந்தக்காலத்திலேயே சில தனிப்பட்ட தொழில்
நிபுணர்கள் ரகசியமாக இந்த செப்பு சுரங்கங்களில் நுழைந்து ஏறாளமான செப்பு தனிமங்கள்
எடுத்துச்சென்று வெகு பணம் சம்பாரித்தார்கள்.
இந்த வறண்ட மலைப்பகுதியாக இருக்கும் ஏதோம் பகுதியில்
எந்த அரசாலும் ஒரு கோட்டையையோ ஒரு அரண்மனையையோ கட்டிக்கொண்டு நிலையாக ஆட்ச்சி செய்ய
முடியவில்லை.ஒரு கணம் நினைத்துப்பார். அரசன் இல்லாத நாடு, மக்கள் இல்லாத ஒரு நாடு கோட்டையோ
கொத்தளமோ அரண்மனையோ இல்லாத ஒரு நாடு… அந்த நாடோ அல்லது அரசாங்கமோ .எப்படி இருக்கும்?
இதனால் தான் நம் வீரமிக்க எதோமிய இனம் முன்னேர முடியாமல் போயிற்று.”
“ அப்படியானால் உங்களால் மட்டும் இத்தனை பெரிய பதவிக்கு எப்படி உயர்ந்து வர முடிந்தது.?”
“ மகனே ஏரோது… இத்தனை பெரிய பதவிகளும்
பட்டங்களும் எனக்கு ஒரே நாளில் சொருகிக்கிடந்தது சொத்தென விழ்ந்தது போல் என்னை தேடி
வந்ததென நினைத்தாயா?’ என் அரசியல் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் பட்ட அவமானங்கள்
கொஞ்சம், என்று நினைத்தாயா?. நான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் இழந்தது எவ்வளோ? அதெல்லாம்
உனக்கு தேவை இல்லாத விஷயம். உன்னை நீ என்போல் உயர்த்திக்கொள்ள உன்னால் முடியுமா? முடியும்.
உனக்கு மட்டும் உன்னை கட்டுப்படுத்திக்கொள்ள தெரிந்தால்…உன் கண்களை கழுகின் பார்வையைபோல்
கூர்மையாக்கிக்கொள்ள முடியுமா? முடியும். உன் நாசியை கழுதைப்புலியைப்போல் நுகர்ந்து உணர்ந்து பார்க்க
முடியுமா?. முடியும் உன் செவியை பாம்பின் செவியைபோல் கூர்ந்து உணர்ந்து கேட்க்க முடியுமா?
முடியும் உன்னால் புலிப்பாய்ச்சல் பாய முடியுமா? முடியும்…உன்னிடத்தில் சிங்கத்தின்
வலிமை இருக்க முடியுமா? முடியும் நீ என்னைப்போல் மாறினால். நான் இத்தனை விஷயங்களையும்
பெற்றிருகிறேன். நான் உன்னிடத்தில் என்னை காண்கிறேன். இதேபோல் என் தங்கை சலோமியிடமும்
காண்கிறேன். இத்தனை சிறிய வயதில் அவளுக்கு எத்தனை அரசியல் சாணக்கியத்தனம் என்று அவளை
நான் பலமுறை சோதித்து பார்த்திருகின்றேன்.
எனக்குப்பின் நீ…..உனக்குப்பின் என் தங்கை சலோமி. இதை உன் மனதில் நீ நன்றாகப்பதிய
வைத்துக்கொள்”. என்றார் எரோதின் தந்தை அந்திப்பார்த்தர்.
“ அப்பா நீங்கள் பாருங்கள்.உங்கள்
காலத்திலேயே நான் வெகு சீக்கிரத்திலேயே இந்த யூதேயாவின் அரசனாகிக்காட்டுகிறேன்.”
“ மகனே ஏரோது…உனக்கு மட்டும் எதிரிகளை
எடைபோடத்தெரிந்தால். காலங்களையும் நேரங்களையும் தீர்க்கமாக கணக்கிட தெரிந்தால் எதிரியை
எங்கு எப்போது எப்படி அடிக்க வேண்டும் என்று தெரிந்தால் எண்ணிய எண்ணங்களை செயல்படுத்திக்கொள்ள
வேண்டும் என்னும் வெறி உனக்குள் இருந்தால் இந்த உலகமே உன் காலடியில் வீழ்ந்து விடும்.இது
பொய் அல்ல . நிஜம். இதை நான் என் வாழ்க்கையில் நான் பல முறை கண்டிருகின்றேன். இதற்கு
நல்ல உதாரணம் கிரேக்கத்தை ஆண்ட மஹா அலெக்சாண்டர். அவருடைய வாழ்க்கை அல்ப ஆயுசாக இருக்கலாம்.
ஆனால் அவருடைய முப்பத்து மூன்று வயதிற்குள்
அவர் போல் சாதனை செய்தவர்கள் அவரைத்தவிர இந்த
உலகில் வேறு யாரும் இல்லை.”
“ அப்பா… அப்படி ஒரு காலம் எனக்கு
சீக்கிரமே வரப்போகின்றது. மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த யூதேயா நாட்டில் போர்
மேகங்கள் சூழ்ந்து வருவதை நீங்கள் காண்கின்றீர்களா? எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றது.
அல்லது அப்படிப்பட்ட ஒரு சூழலை நான் உருவாக்குவேன். போரின் முடிவை எனக்கு சாதகமாக்கிகொள்வேன்.”
“ மகனே ஏரோது.நீ சொல்வது எனக்கு
புறிகின்றது. இப்போது யூதேயாவின் அரசராகவும் தலைமை குருவாகவும் இருக்கும் ஹீராக்கினர்
தன் தம்பிக்கு பதவி தர மறுக்கின்றார். அவன் கிளர்ந்தெழுவான் அப்போது இந்த யூதேயாவில்
உள் நாட்டுக்கலகம் வெடிக்கும். அப்போது உன் திட்டம் நிறைவேறும். அப்படித்தானே? உன்
திட்டம் எனக்கு புறிந்து போயிற்று.”
“ ஆம் அப்பா… அப்படித்தான்.யூதேய ராஜ்ஜியத்தை மக்கபேயர்கள்
எனப்படும் ஹாஸ்மோனியர்கள் என்னும் வம்சா வழியினர் 200 ஆண்டுகளாக
ஆண்டு வருகின்றார்கள். ஜெரிக்கோவிலுள்ள அரண்மனைகளும் கோட்டைகளும் அவர்களாலேயே கட்டப்பட்டு
இருகின்றது. இந்த யூதேய மக்களை ஆள வேண்டுமானால் மிகுந்த மதி நுட்ப்பமும் மிகுந்த அரசியல்
சாணக்கியமும் மிகுந்த வலிமையும் தேவை. என்னைபொருத்த வரையில் இவையாவும் உங்கள் வம்சா
வழியில் வந்த எனக்கும் இருப்பதாக உணறுகின்றேன். நம் முன்னோர் பிதப்பிதா ஈசாக்கின் மூத்த
மகன் ஏசாயூ மிகுந்த வலிமை வாய்ந்தவர் என்பது வேதம் சொல்லும் உண்மை. ஆனால் அவருக்கு
மதி நுட்ப்பம் இல்லாததினால்தான் அவர் தம் சகோதரன் யாக்கோபினால் ஏமாற்றப்பட்டுவிட்டார்.
ஆனால் காலம் நமக்கு தந்த பாடம் சிறந்த அரசியல் சாணக்கியம் மற்றும் சிறந்த மதி நுட்ப்பம்.மிகுந்த
வலிமை ஆகியவை. முட்டாள் முட்டாளாகவே இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லாத ஒன்று அல்லவா?
இன்று அவர்கள் காலம் என்றால் நாளை நமக்கும் ஒரு காலம் வரும். அல்லது நான் காலத்தை எனக்காக
வரவைப்பேன்.”
“ மகனே ஏரோது, உன் எண்ணங்களையும்
தன்னம்பிக்கைகளையும் நான் பாராட்டுகின்றேன். ஆனால் ஒன்றை மட்டும் நன்றாக உன் நினைவில்
வைத்துக்கொள். மிகவும் நல்லவனாக இருந்துவிடாதே. அதே நேரத்தில் மிகவும் கொடியவனாகவும்
இருந்துவிடாதே. இதற்கு நல்ல உதாரணம் இந்த யூதேய நாட்டை கடைசியாக ஆண்ட மக்கபேய ( ஹாஸ்மோனிய
) இளவரசி சலோமி அலெக்சாண்டிரா மற்றும் அவள் இரண்டாம் கணவன் அலெக்சாண்டர். ஆகியோர்.
“ அவர்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
அப்பா” என்றார் ஏரோது.
“ மகனே ஏரோது இப்போது உனக்கு 25 வயதாகின்றது . இன்றைக்கும்
சுமார் எழுபத்தைந்து (75) ஆண்டுகளுக்கும் முன்னால்
இந்த யூதேயாவை ஆண்டுவந்தாள் ஒரு மக்கபேய இளவரசி. அவள் பெயர் சலோமி. மக்கபே என்றால்
சுத்தியல் அல்லது சம்மட்டி என்பது பொருள். போர்க்களத்தில் ஹாஸ்மோனிய வீரர்கள் மக்கபே
என்று ஒரு சேர கத்திக்கொண்டு ( நம்நாட்டில் வெற்றி வேல் வீர வேல் என்று போர்க்களங்களீல்
வீர தீர கூச்சல் போட்டுக்கொள்வது போல ) போர்க்களத்தில் புகுவார்கள். அவர்களது அடி சம்மட்டியில்
அடித்தாற்போல் இருக்குமாம். அது அவ்வளவு வல்லமையான அடியாகும். இந்த மக்கபேயர்களை ஹாஸ்மோனியர்கள்
என்றும் அழைப்பார்கள்.
இந்த
மக்கபேய இளவரசி சலோமி மிகுந்த அழகும் இளமையும் மிகுந்த நல்ல ஒழுக்கமும் மிகுந்த தெய்வ
பக்த்தியும் கொண்டிருந்த இளவரசியாக திகழ்ந்தாள். இவள் முதலாம் அரிஸ்டோபுலுஸ் என்னும்
யூதேய மன்னரை திருமணம் செய்திருந்தாள். ஆனால் மன்னர் பதவி அவரை ஆட்டிப்படைத்தது. தன்
தம்பிகள் இருவரை சிறையில் அடைத்தார். சில சகோதரர்களை கொண்றார். தேவாலய குருக்களையும்
பரிசேயர்களையும் அவமதித்தார். இதனால் வருத்தமுற்ற சலோமி பல பரிசேயர்களை பாதுகாக்க அவர்களை
ஊருக்கு வெளியே போய் தப்பித்துக்கொள்ள அனுமதித்தாள். இதை பயன்படுத்தி பல தேவாலய குருக்கள்
நகர்ப்புறங்களில் ஓடி ஒளிந்தார்கள். மொத்தத்தில் அவனுடைய ஆட்ச்சி மிகுந்த கொடுங்கோண்மையாகிப்போனதால்
அலெக்சாண்டர் யூதேய மக்கள் அனைவராலும் வெறுக்கப்[பட்டார். ஒரு நாள் அவருக்கும் முடிவுகாலம்
வந்தது. அவனுக்குப்பின் சலோமி மக்கபேய அரசுக்கட்டில் ஏறினாள். தன் கணவன் முதலாம் அரிஸ்டோபு;லுசுக்கு
வாரிசு இல்லாதனால் அவள் மறுமணம் செய்ய வேண்டியதாயிற்று. யூத முறைப்படி அவள்
யூதேய அரசியாக இருக்கும்போதே இறந்துபோன
தன் முதல்
கணவனின் சகோதரன் இரண்டாம் அலெக்ஸாண்டர் ஜென்னனியுஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டாள்.
சலோமியை
திருமணம் செய்துகொண்ட கொஞ்ச நாட்க்களிலேயே அவனுடைய சுய ரூபம் வெளிப்பட்டது. சலோமி பெயருக்குத்தான்
யூதேய அரசி. மற்றபடி அதிகாரம் எல்லாம் அவள் இரண்டாம் கணவனிடம் குவியத்துவங்கின. அதிலிருந்து
அவன் ஆட்டமும் தலைவிரித்தாடியது. தன் முதல் கணவன் முதலாம் அரிஸ்டோபலுஸ் செய்த அத்தனை
கொடுமைகளைவிட இவன் இன்னும் அதிகமாக செய்தான்.இவன் காலத்தில் ஜெருசலேம் தேவாலயம் மிகவும்
தீட்டாகிப்போனது. தேவாலய குருக்கள் மிகுந்த
அவமானப்படுத்தப்பட்டார்கள். பல குருக்களும் பரிசேயர்களும் சதுசேயர்களும் கொல்லப்பட்டனர்.நாட்டின்
உயர் குடிமக்கள் பலரும் ஒன்றுமறியா அப்பாவி மக்களும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
ஒருநாள் இந்த கொடியவன் சலோமியின் இரண்டாம் கணவன் அலெக்ஸாண்டர் ஜின்னேயுவுக்கும் ஒரு
முடிவு காலம் வந்தது, அவன் தன் மரணப்படுக்கையில் தன் மனைவி சலோமியை அழைத்து தான் இந்த யூதேய நாட்டு மக்களுக்கு செய்த கொடுமைகளுக்கு
மன்னிப்பு கேட்ப்பதாகவும் தேவாலயத்துக்கும் தேவாலய குருக்களுக்கும் பரிசேயர்களுக்கும்
சதுசெயர்களுக்கும் செய்த அனைத்து கொடுமைகளுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்ப்பதாகவும்
அதற்க்கு ஈடாக தன் அரண்மனை கஜானாவிலிருந்த அத்தனை செல்வங்களையும் பயன்படுத்திக்கொள்ள
அவளுக்கு அதிகாரம் அளிப்பதாகவும் கூறி மரணமடைந்தான். இப்போது இளவரசி சலோமிக்கு மீண்டும்
தன் செங்கொலும் அதிகாரமும் கைவந்தது. நாட்டை மிகவும் சிறப்பான முறையில் ஆண்டாள். மக்கள்
நிம்மதி பெருமூச்சுவிட்டனர். தேவாலயம் செழித்தது. தேவாலய குருக்களும் பரிசேயர்களும்
சதுசேயர்களும் கடவுளைப்புகழ்ந்து நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இதனால் சந்தோஷமான இஸ்ரேலிய
தேவன் அந்த நாட்டில் பெரும் செல்வ செழிப்பை ஏற்படுத்தினார். இந்த யூதேய நாட்டில் பொது
மக்களும் ஏழைகளும் பாதிக்காதபடி வெள்ளிக்கிழமை இரவுகளில் நன்றாக மழை பெய்யும். கோதுமை
எவ்வளவு செழித்தது என்றால் அதன் முத்துக்கள் அவரை விதை அளவுக்கு பெருத்திருக்கும்.
இவ்வாறே அனைத்து தாவரங்களும் அளவுக்கு மீறி செழிப்பாக காய்த்துக்குலுங்கின. இளவரசி
சலோமியின் ஆட்ச்சிக்காலம் மிகவும் சந்தோஷமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சலோமின் இரண்டாம்
கணவன் வழியாக அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. மூத்தவன் ஹிரேக்கினு இளையவன்
அரிஸ்டொபுலு. இவர்கள் வயதுக்கு வரும் வரை சலோமியின் ஆட்சிக்கு பாதகமில்லை. ஆனால் விதி
வேறு விதமாக வேலை செய்தது. அது சலோமியின் குமாரர்கள் மூலமாக வந்தது. இவளது ஆட்ச்சிக்காலத்தில்
அதிகாரம் தேவாலய குருவுக்கு மட்டுமே இருந்தது . அவரே அரசர் மற்றும் தேவாலயத்தில் பெரிய
குரு. இந்தப்பதவி மூத்தவன் ஹிரேக்கினருக்கு வழங்கப்பட்டது. இளையவன் அரிஸ்டோபுலு தனக்கு
அரசப்பதவி வேண்டுமெனவும் மூத்தவன் ஹிரேக்கினர் தேவாலயத்தில் பெரிய குரு பதவியில் இருக்கட்டும்
என்றர். ஆனால் மூத்தவர் ஹீராக்கினர் தனக்கே அரசப்பதவியும் பெரிய குரு பதவியும் வேண்டும்
என்றார். அரசி சலோமி தன் பிள்ளைகள் இருவரும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் தன் கண்ணெதிரே
சேர்ந்து வாழ வேண்டும் என்னும் எண்ணத்தில் ஜெரிக்கோவில் தன் கணவரின் அரண்மனைக்கு அருகிலேயே ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரு அரண்மனைகளை கட்டி வைத்தாள். அதில் அவர்களை
சமாதானமாக வாழவும் வேண்டிக்கொண்டாள். ஆனால் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை
அவர்கள் நெஞ்சில் நீரு பூத்த நெருப்பாக கணன்றுகொண்டே இருந்தது.
சகோதரர்
இருக்கும் இடையே எற்பட்ட வாரிசு உரிமைப்போர் பெரும் கலகத்தை ஏற்படுத்தியது. தன் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் இந்தப்போர் தங்கள் மக்கபேய வம்சத்தையே
அழித்துவிடும் என்பதை உணர்ந்த அரசி சலோமி செய்வதறியாமல் தவித்தாள். சரி ஆவது ஆகட்டும்
அவர்கள் குல வழக்கப்படி மூத்தவனுக்கே அதிகாரம் என்று முதலாமவன் ஹீராக்கினருக்கே பட்டம்
கொடுத்தாள். அதுதன் அவள் செய்த தவறு. அதிகாரம் தன் கைக்கு வந்ததும் அவர் முதலில் செய்த
காரியம் தனக்கு பதவிகொடுத்த தன் தாயாரை சிறையில் வைத்தது தான். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு
ஆளான அவள் சிறையிலேயே யூதேயர்களை ஆண்ட கடைசி மக்கபேய அல்லது ஹாஸ்மோனிய அரசியாகவே மரித்துப்போனாள்.
இவ்வாறு யூதேவை ஆண்ட நல்ல அரசி சலோமையின் ஆட்ச்சியையும் அவளுக்கு ஏற்பட்ட கதியையும்
அவள் இரண்டாம் கணவன் அலெகஸாண்டர் நடத்திய மிகுந்த
கொடுங்கோண்மையான் ஆட்ச்சியைப்பற்றியும் அவனுக்கு ஏற்பட்ட கதியையும் பற்றியும் கூறிய
அந்திப்பார்த்தர் கதையை சற்றே நிறுத்தினார்.
அப்போது
ஒரு வீரன் அந்திபார்த்தரை அணுகி அவருக்கு ராணுவ வணக்கம் செலுத்தினான். அந்திப்பார்த்தர் அவனிடன் “ வீரனே
வந்த காரியத்தை உடனே தெரிவி “ என்றார். வந்த வீரன் ,” ஐய்யா அரசர் உங்களை உடனே வரச்சொன்னார்
“ என்றான்.
அந்திப்பார்த்தர்
தன் மகன் ஏறோதை பார்த்த பார்வையில் அவர் புறிந்துகொண்டு.” அப்பா…. நான் சொல்லவில்லை…என்
காலம் ஆரம்பித்துவிட்டது இந்த யூதேயாவில் பெரும் போர்… வாரிசு உரிமைப்போர் ஆரம்பித்துவிட்டது.
இந்த ஹாஸ்மோனிய வம்சம் அழிந்து ஏரோதைய வம்சம் ஆரம்பமாகப்போகின்றது. அதாவது ஏறோதாகிய
நான் ஆரம்பித்து வைக்கப்போகிறேன் ” என்றார்.
முதல் பாகம் முற்றும்
இரண்டாம்
பாகம். வாரிசு உரிமை போர்கள்.
இந்த யூதேய நாட்டில் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும்
வாரிசு உரிமைப்போர் போல அக்காலத்தில் இந்த யூதெயாவை ஆண்ட ரோமைய சாம்ராஜ்ஜியத்திலும்
வாரிசு உரிமைப்போர் ஆரம்பித்திருந்தது. இந்த நிகழ்ச்சியை நாம் அறிந்திருப்பதும் அவசியம்.
இந்த யூதேயாவைப்பொருத்தமட்டிலும் ரோம் சாம்ராஜ்ஜியத்தை பொருத்தமட்டிலும் எகிப்த்து
சாம்ராஜ்ஜியத்தை பொறுத்தமட்டிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருப்பதால் மிகவும் சுருக்கமாக
அதைப்பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிருப்பது அவசியம்.
இந்த உலகம்
தோன்றியது முதல் இயேசுநாதர் காலம் வரை எத்தனையோ ஆட்ச்சியாளர்கள் தோன்றி இருக்கலாம்.
எத்தனையோ சாம் ராஜ்ஜியங்கள் தோன்றி இருக்கலாம். எத்தனையோ வீர புருஷர்கள் தோன்றி இருக்கலம்.
ஆனால் கிறிஸ்த்து பிறப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்குமுன் கிரேக்க சாம்ராஜ்ஜியத்தில்
தோன்றிய மஹா அலெக்ஸாண்டர் போலவும் கி.மு.50
ஆண்டுவாக்கில் ரோமைய சாம்ராஜ்ஜியத்தில் தோன்றிய ஜூலியுஸ் சீசர் போலவும், அவருடைய வீரத்தளபதி
மார்க் அந்தோணி போலவும், சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசர் போலவும் இதே கால கட்டத்தில்
எகிப்த்தை ஆண்ட கிளியோபாற்றா போலவும் பாலஸ்த்தீனத்தில் யூதேயாவை ஆண்ட மஹா ஏறோதை போலவும்
இந்த உலக சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் வெகு சிலரே. இதில் அலெக்ஸாண்டர் தவிர மேற்
கூறப்பட்ட சரித்திர கதா நாயகர்கள் இயேசுவின் கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஆதலால் அவர்களுக்கும்
இயேசுவின் சரித்திரத்தோடு தொடர்பு உள்ளதால் இவர்கள் பெயர்களும் உலக சரித்திரத்தில்
நீங்காத அமரத்துவம் பெற்றுவிட்டன. இயேசுவின் பிறப்புக்கு முன் இயேசுவின் பிறப்புக்கு
பின் என்று உலக வரலாற்று சரித்திர நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. இயேசுவே காலங்களுக்கு
அதிபதி. அவர் காலங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றாலும் அவர் இந்த பூமியில் மனிதனாக அவதாரமெடுத்த
நாளிலிருந்தே இந்த உலகத்தின் கடந்த காலம் நிகழ்காலம்
எதிர்காலம் என அனைத்தும் குறிப்பிடப்படுகின்றன.அல்லது
கணிக்கப்படுகின்றன.
இயேசு
கிறிஸ்த்து பிறப்பதற்கு சுமார் 100 வருடங்களில் ரோமில் ஜூலியுஸ் சீசர் தோன்றினார்.
அவருக்கு ஐம்பது வயதாவதற்குள் ரோமில் அவர் ஒரு பெரும் ராணுவ தளபதியாக மாறினார். அப்போது அவருக்கு வலது கரமாக விளங்கியவர் அவரது வீரத்தளபதி
மார்க் அந்தோணியும் சீசருக்கு இடது கரமாக விளங்கிய அவரது வீரத்தளபதி போம்பியும் ஆவர்.
சீசரின் வெற்றிகள் அனைத்திலும் அவருக்கு உறுதுணையாக விளங்கியவர்கள் இந்த இரு தளபதிகளும்
தான். இந்த இரு தளபதிகள் தவிர அவருக்கு மூன்றாவதாகவும் ஒரு தளபதி இருந்தார். அவர்தான்
மார்க்கஸ் லிசினியுஸ் க்ராசஸ். இந்த க்ரஸ்சஸ் உயர் குடியில் பிறந்த ஒரு பெரும் செல்வந்தர்.
ஜூலியுஸ் சீசரின் வளர்ச்சியில் இவருக்கும் ஒரு பெரும் பங்கு இருந்தது. சீசர், போம்ப்பி,
க்ராசஸ் இந்த மூவர் கூட்டணி முதல் மூவர் அணி என்று பெயர் பெற்றது. இந்த கூட்டணியினால்
இவர்கள் பெரும் பொருள் சம்பாரித்தனர். அதாவது காசுக்கு க்ராசஸ், கத்திக்கு போம்ப்பி,
புத்திக்கு சீசர் என்பதக இந்த கூட்டணி அமைந்து இருந்ததால். அவர்கள் அடைந்த வெற்றிகள்
அனைத்திற்கும் தகுந்த சன்மானமாக பல கோடி கோடிகள் பணம் கொட்டத்துவங்கின. உலகில் அரசாங்கம்
என்றாலே பல அட்டூழியங்கள், ஆட்ச்சி கவிழ்ப்புகள், அடுத்து கெடுத்தல், கொலைகள், கொள்ளைகள்
அனைத்தும் சகஜம். இவைகள் அனைத்திலும் இந்த மூவர் கூட்டணி ஜெகஜாலக்கில்லாடிகள் ஆயின.
இந்த மூவர் கூட்டணியின் போக்கு பல செனட் அங்கத்தினர்களுக்கு பெரும் திகிலை ஏற்படுத்தியது.
ஆனால் சீசரின் வெற்றிகள் மேலும் மேலும் அதிகரிக்கவே ரோமின் வளர்ச்சி பெரிதும் முன்னேற்றமடைந்ததால்
பல செனட் அங்கத்தினர்கள் சீசருக்கு ஆதரவாக திகழ்ந்தனர். ஆனால் பல செனட் அங்கத்தினர்கள்
சீசருக்கு எதிர்பாளர்களாகவும் மாறினர். காரணம் அவர்களுக்கு சீசரால் ஆதாயம் இல்லை. இன்னும்
மேலாக சீசர் செனட் அங்கத்தினர்களை மதிப்பதும் இல்லை..
எவ்வளவு
காலம்தான் இந்த கூட்டணி ஒன்று சேர்ந்திருக்க முடியும். அவரவருக்கு பேராசை,அவரவர்க்குள்ள
எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள், அவமானங்கள், இப்படியாக இந்த மூவர் கூட்டணியில் பிளவு
ஏற்படத்துவங்கியது. இந்தக்காலகட்டத்தில் காசுக்கும் கத்திக்கும் பகை உண்டானது அதாவது
காசுக்கு அதிபதி க்ராசஸுக்கும் கத்திக்கு அதிபதி போம்பிக்கும் சில பல பிரச்சனைகளில்
உரசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் கால் எனப்படும் ஃபிரான்ஸ் நாட்டில் ஒரு பெரும்
கலவரம் ஏற்படவே அதை அடக்க சீசர் ஒரு பெரும் படையுடன் கால் நாட்டுக்கு சென்றார். இந்த
காசுக்கும் கத்திக்கும் உள்ள விரிசலை நன்றாக அறிந்திருந்த சீசர் ரோமின் ஆட்சி பொறுப்பை
மார்க் அந்தோணியிடம் விட்டு சென்றுவிட்டார்.
இதே நேரம் எகிப்த்தில் வாரிசு உரிமைப்போர் ஏற்பட்டுவிட்டது… அங்கே என்ன நடக்கின்றது
என்று பார்ப்போம்.
வேத காலத்திலிருந்து அதாவது மோசேயின் காலத்திலிருந்து
எகிப்த்தை ஆண்ட மன்னர்கள் பாரோ என்றழைக்கப்பட்டனர். ஆனால் காலம் மாறியது . எகிப்த்தில்
பலப்பல ஆட்ச்சிகள் தோன்றி மறைந்தனர். கி.மு. 300 வாக்கில் வடக்கிலிருந்து வந்தான் ஒரு
கிரேக்க மன்னர் மஹா அலெக்சாண்டர் என்னும் பெயரோடு. அவனது படை எடுப்பால் பல சாம்ரஜ்ஜியங்கள்
அவன் காலடியில் வீழந்த்ன. இந்தியா வரை வெற்றிகண்டுவந்த அவன் தன் பார்வையை மேற்கில்
செலுத்தினான். கடைசியாக அவன் வென்ற சாம்ராஜ்ஜியம் எகிப்த்திய பேரரசு. தன் அரசை அங்கே
நிலைநாட்டிய அவன் தன் நாடு திரும்பினான். பாபிலோன் வந்த அவன் விஷக்காய்ச்சல் கண்டு
அங்கேயே இறந்தான். அவனது வம்சாவழியினர் கிரேக்க எகிப்த்திய கலப்பினத்தை தோற்றுவித்தனர்.
தங்களின் கிரேக்க இனத்தை மறைத்து தங்களையும் பாரோ என்னும் புனைபெயரோடு எகிப்த்தை ஆண்டு
வந்தனர். அதற்கு தாலமி வம்சம் என்று பெயராயிற்று. ஜூலியுஸ் சீசரின் ஆட்ச்சிக்காலத்தில்
எகிப்த்தை ஆண்டு வந்த மன்னர் 12 ஆம் தாலமி என்னும் மன்னர் . இவரது மகள் தான் ஏழாவது
கிளியோபாற்றா என்னும் ஒரு அழகி.
அர்சினோயி
என்னும் ஒரு அழகி.: கிளியோபாற்றாவைவிட அழகியும் புத்தி கூர்மையும் வீரத்திலும் சிறந்தவள்
நான்காம் அர்சினோயி எனப்பட்டவள். மன்னர் 12 அம் தாலமியின் வேறு ஒரு தாய்க்கு பிறந்தவள்
தான் இந்த அர்சினோயி. ஆனால் அவள் ஒரு ராஜவம்ச இளவரசிக்கு பிறக்கவில்லை என்பதால் அவள்
தகப்பன் 12 ஆம் தாலமி அவளுக்கு தன் ராஜ்ஜியத்தை
கொடுக்க விரும்பாமல் தன் ராஜகுல அரசிக்கு பிறந்த
கிளியோபாற்றாவுக்கும் அவள் இளைய சகோதரன் 13 ஆம் தாலமியுட்ன் இணைந்து ஆட்ச்சி செலுத்த
வேண்டும் என தன் ராஜ்ஜியத்தை கொடுத்தார். மேலும் ஆர்சினோயிக்கு ஆட்ச்சி கொடுத்தால்
நாடு தாங்காது என்றும் நினைத்திருக்கலாம்
இதனால்
வெகுண்டெழுந்தால் அர்சினோயி. மன்னரின் குடும்பத்திலும் அவரது அரசியலிலும் எழுந்தது
பெரும் கலவரம். எகிப்த்திய மன்னர் 12 ஆம் தாலமியை
அவரது சொந்த மகள் அர்சினோயி அடித்த அடியில் அவர் உயிருக்குப்பயந்து நாட்டைவிட்டு ஓட வேண்டியதாயிற்று. இந்த சம்பவம் நடந்த ஆண்டு
கி.மு.48 .அரசன்
இல்லாத நாட்டை இளவரசி அர்சினோயி பிடித்துக்கொண்டாள். பெயருக்கு தன் இளைய சகோதரனுக்கு
14
ஆம்
தாலமி என்னும் பாரோ பட்டத்தை கொடுத்து ஆட்ச்சியை தன்னிடமே வைத்துக்கொண்டாள். இதனால்
கிளியோபாற்றவும் அவளது இளைய சகோதரன் 13 ஆம் தாலமியும்
உயிர் தப்பி பிழைக்க அரண்மனையைவிட்டு ஓட வேண்டியதாயிற்று. தன்னுடைய இந்த அட்ச்சி மாற்றத்தை
ரோம் அங்கீகரிக்காது என்று அறிந்த அர்சினோயி தன் அந்தரங்கக்காவலனும் தனது வலதுகரமாக
விளங்கிய தளபதியும் அலியுமான போதினுஸ் என்பவனை அழைத்து கிளியோபாற்றாவின் இளைய சகோதரனை
13
ஆம்
தாலமியை அழைத்து வரச்செய்தாள். அவனுக்கு ஆட்ச்சி பீட அதிகாரத்தை தருவதாக ஆசை வர்த்தை
கூறி அவனை அவன் சகோதரி கிளியோபாற்றாவிடமிருந்து பிறித்துவிட்டாள். இப்போது கிளியோபாற்றாவின்
நிலை இன்னும் மோசமாகிப்போயிற்று. அவள் உயிருக்கு பயந்து அலெக்ஸாண்டிரியாவிலேயே மறைந்து
வாழ வேண்டியதாயிற்று. ஆனாலும் அவள் தன்னம்பிக்கை இழக்காமல் தனக்கும் ஒரு காலம் வரும்
அடியே ஆர்சினோயி யானைக்கு ஒரு கலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பதை நீ மறந்துவிட்டாய்.
அப்போது காட்டுகிறேன் பார் நான் யார் என்று என்று தனக்குள் சூலுரைத்துக்கொண்டாள். இப்படியாக
ஒரு தந்தைக்குப்பிறந்த இரு சகோதரிகள் கிளியோபாற்றாவும்.ஆர்சினோயியும் ஜென்மப்பகையாளிகளாக
மாறினார்கள். அதுமட்டுமல்லாது கிளியோபாற்றாவின் சொந்த சகோதரன் 13 ஆம் தாலமியும்
அவளுக்கு ஜென்மபகைவனாக மாறிப்போனான்.
ரோம். கி.பி.50: தான்
பெற்ற மகள் அர்சினோயினால் அடியும் உதையும் அவமானமும் பெற்ற எகிப்த்திய மன்னர் 12 ஆம் தாலமி
பெரும் பொருளுடன் எகிப்த்தைவிட்டு வெளியேறி கப்பல் ஏறி ரோமை வந்தடைந்தார். அப்போது
சீசரின் தளபதி போம்பியும் மார்க் அந்தோணியும் அவரை வரவேற்றனர் எகிப்த்திய மன்னர் தாலமி
தான் வந்த சேதியை சுருக்கமாக.சொன்னார் ரோம் தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டார்.. மார்க் அந்தோணி முதலில் இதற்கு ஒப்புகொள்ளவே இல்லை. ஆனால்
எகிப்த்திய மன்னரின் வேண்டுதலை தளபதி போம்பி ஏற்றுக்கொண்டார். இதற்குப்பின்னால் அவருக்கு
மன்னர் தாலமி கொண்டுவந்திருந்த பெரும் பொருள்களும், அன்பளிப்புகளும் பணமும் ( சுமார்
10000 தாலந்துகள் } கைமாற்றப்பட்டன என்றும் கேள்வி.” என்ன இருந்தாலும் எகிப்த்து நமக்கு
நட்ப்பு நாடு. அவர்களால் நமக்கு பிரச்சனை வராது. அப்படியே வந்தாலும் சீசர் அதை கவனித்துக்கொள்வார்.
ஆகவேதான் அவருக்கு அரசியல் தஞ்சம் அளிக்க நான் ஒப்புக்கொண்டேன்’ என்று பூசி மெழுகினார்
தளபதி போம்பி. இதே நேரத்தில் கிழக்கே பார்த்தியர்கள் ரோமுக்கு பிரச்சனை ஏற்படுத்துகின்றார்கள்
என்று காசுக்கு அதிபதி க்ராஸசுக்கு தகவல் வரவே அவர் ஒரு பெரும்படை திரட்டிக்கொண்டு
சிரியாவை சென்றடைந்தார். அங்கிருந்துகொண்டு பார்த்தியர்களை அடக்க படை எடுத்துக்கொண்டு
சென்றார். அந்தப்போரில் அவர் வீர மரணம் அடைந்தார்..
காசுக்கு
அதிபதி க்ராசஸ் வீரமரணம் அடைந்த சேதி தளபதி போம்பெய்க்கு ஒருவிதத்தில் ஆதாயமாக இருந்தது.
ஆனால் சீசருக்கு அது பேரிடியாக இருந்தது. இந்த நேரத்தை தளபதி போம்பி தனக்கு சாதகமாக
பயன்படுத்த நினைத்து பல செனட்டர்களை தனக்கு சாதகமாக்க திருப்பினார். பல செனட் அங்கத்தினர்களுக்கு
தளபதி மார்க் அந்தோணியை பிடிக்காது. காரணம் அவர் வீரர் மட்டுமல்ல. அவர் நேர்மையானவரும்
கூட..அவர் நேர்மைக்கு சோதனையாக ரோமில் ஒரு பிரச்சனை வந்தது. பல செனட் அங்கத்தினர்களின்
ஊழல்களால் ராணுவ பட்ஜெட் எகிரியது. இதனால் கோபமுற்றார் தளபதி மார்க் அந்தோணி. அவர்
அந்த ராணுவ பட்ஜெட்டை நிராகரித்தார். இதனால் அவர் பல செனட் அங்கத்தினர்களின் வயிற்றெரிச்சலை
கொட்டிக்கொண்டார். “ ஏது ஏது .. இந்த ஆள் நம்மை நாலுகாசு பார்க்க விடமாட்டான் போலிருகிகிறதே.
இந்த ஆளை வளரவிட்டால் அவன் நம்மை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டான். இந்த ஆள் நமக்கு சரிப்பட்டு வரமாட்டான். இவனை ஒழித்தே
ஆக வேண்டும்” என முடிவு செய்தனர். ஆனால் பல
செனட் அங்கத்தினர்கள் மார்க் அந்தோணியை ஆதரித்து அவருக்கு அனுசரனையாக நடந்துகொண்டனர்..
முதல் மூவர் கூட்டணியில் காசுக்கு அதிபதி க்ராசஸ் காலமாகிவிடவும் போம்பிக்கு சீசர்
ஆக வேண்டும் எண்ணம் வலுப்பெறவும் அவர் சீசரை பதவி இறக்கம் செய்ய துணிந்தார்.
தன்னிடம்
அதிதியாக வந்திருக்கும் எகிப்த்திய மன்னர் தாலமியை ஒருவருடம் வரை தங்களுடன் வைத்திருந்த
தளபதி போம்பி அவரை சிரியாவில் ரோமின் அளுனராக இருந்த கபினியுஸ் என்பவரின் மேற்பார்வையில்
மீண்டும் எகிப்த்துக்கு அனுப்பிவைத்தார். ரோமின் படைகளுடன் அர்சினோயின் படைகள் மோத
முடியாமல் விலகின. மன்னர் 12 ஆம் தாலமி மீண்டும் எகிப்த்தின்
மன்னர் ஆனார்.. ஆனல் கொஞ்ச நாட்களுக்குப்பிறகு அவர் மர்மமான முறையில் இறந்துபோனார்.
அவர் விஷம் வைத்துக்கொல்லப்பட்டார் என்றும் கேள்வி. இப்போது மறைந்த மன்னர் தாலமியுடைய
உயிலின்படி எகிப்த்தை கிளியோபாற்றாவும் அவளுடைய சொந்த சகோதரன் 13 ஆம் தாலமியும்
இணைந்து ஆட்ச்சிப்பொறுப்பை ஏற்றனர். கொஞ்ச காலத்தில் மீண்டும் கிளியோபாற்றா தன் சகோதரனிடமிருந்து
ஓரம்கட்டப்பட்டாள்.
மீண்டும்
ரோமில்.:தளபதி போம்பி தனக்கு சாதகமான பல செனட் அங்கத்தினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்ட
தைரியத்தில் கால் எனப்பட்ட ஃப்ரான்ஸில் இருந்த சீசருக்கு ஒரு அரசாங்க ஆணை அனுப்பினார்.
அதில் சீசர் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்களைக் குறித்து விசாரிக்க வேண்டுமெனவும் அதனால்
அவர் ரோமுக்கு வந்து நீதி விசாரணைக்கு உட்படவேண்டுமெனவும் குறிப்[பிட்டிருந்தர்.. இதனால்
மிகவும் கடுப்பாகிப்போனார் சீசர். தான் இந்த கால் பகுதிக்கு வந்திருந்த காரியத்தை மிகுந்த
வெற்றியாக முடித்துக்கொண்டு தன் படையுடன் ரோமுக்கு வந்தார். இந்த போம்பியை இரண்டில்
ஒன்று பார்த்துக்கொள்கிறென் என்றவர் தன் நண்பன் மார்க் அந்தோணியுடன் சேர்ந்துகொண்டு
போம்பியை எதிர்த்தார். சீசர் எவ்வளவு பெரிய சக்த்திவாய்ந்தவர் என்பதும் மார்க் அந்தோணி
எவ்வளவு பெரிய வீரன் என்பதும் போம்பிக்கு தெரியும் ஆதலால் இவர்களிடம் சண்டையிட்டு தோல்வி
காண விரும்பாமல் கிரீசுக்கு ஓடினார். அங்கும் அவருக்கு சீசரின் படையெடுப்பால் தோல்விகாணவே
அவர் தனக்கு நிச்சயம் எகிப்த்தில் அரசியல் தஞ்சம் கிடைக்கும். அங்கும் சீசர் வந்தால்
அவர் காலில் கையில் விழுந்து எப்படியும் உயிர்பிட்ச்சை பெற்றுக்கொள்லலாம் என்று நினைத்துப்பார்த்து
எகிப்த்துக்கு ஓடினார். அவர் நினைத்தபடி மன்னர்
12 ஆம் தாலமியின்
மகன் 13 ஆம் தாலமி
அவரை வரவேற்று தன் நாட்டில் தஞ்சம் அளித்தார்.
தளபதி
போம்பி எகிப்த்தில் தஞ்சம் அடைந்திருகின்றார் என்று கேள்விப்பட்ட சீசர் நேரே எகிப்த்துக்கு
தன் படைகளுடன் திரும்பினார். இதை அறிந்த அர்சினோயி அலெக்ஸாண்டிரியாவுக்கு திரும்பிவந்து
தன் ஒன்றுவிட்ட சகோதரன் 13 ஆம் தாலமியை சந்தித்தாள். அவர்கள்
இருவரும் சேர்ந்து தங்கள் குலதெய்வமாகிய சூரியனார் கடவுளிடம் குறிகேட்டபோது இந்த ரோமனால்
உனக்கு பெரும் கேடு வரப்போகின்றது என்ற பதில் வந்தது. அர்சினோயியும் அவள் படைகளும்
நைல் நதிகளின் ஓரங்களில் தங்கள் கப்பல் படைகளுடன் மறைந்துகொண்டனர். சீசர் தன்படைகளுடன்
எகிப்த்தில் பிரவேசித்தார். இதை அறிந்த இளவரசன் 13 ஆம் தாலமி
தான் ஆதரவளித்துள்ள ரோமைய தளபதி போம்பியினுடைய தலையை வெட்டி சீசருக்கு சமர்பித்து அவரது
ஆதரவை வேண்டினான். இதை சற்றும் எதிர்பாராத ஜூலியுஸ் சீசர் தாலமியை வெறுத்தார். என்ன
இருந்தாலும் தளபதி போம்பி என்னுடைய நண்பன். காலமும் நேரமும் அவனை எனக்கு எதிரியாக மாற்றிவிட்டது.
ஒரு ரோமின் தளபதியை இவன் எப்படிக்கொல்லலாம் என்று அவன் மேல் மிகுந்த கோபம். கொண்டார்.
இதை உணர்ந்த இளவரசன் தாலமி” என் எஜமனரே.. போம்பியை தேடித்தானே நீங்கள் இங்கே வந்திருகின்றீர்கள்.
இவன் இங்கே இருப்பது எனக்கும் நல்லதல்ல. உமக்கும் நல்லதல்ல. இவனை என் குல தெய்வங்களும்
விரும்பவில்லை.எனவே நீங்கள் செய்ய வேண்டிய வேலையை நான் செய்திருக்கின்றேன்.. தேவரீர்
என்மீது தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம் “ என்றான். ஆனாலும் சீசர் தன் மனதை மாற்றிக்கொள்ள
விரும்பவில்லை. இந்த நிலையில் ஜூலியுஸ் சீசரை ரகசியமாக சந்திக்க விரும்பினாள் கிளியோபாற்றா.
இதற்காக சீசருக்கு தங்குவதற்கு தேவையான எகிப்த்திய கம்பளங்களை அனுப்பும் வியாபாரிகளுடன்
அவளையும் ஒரு கம்பளத்தில் சுற்றி சீசரின் முன்பாக அவளை கொண்டுபோய் சேர்த்தனர். அவளைக்கண்ட
சீசர் வாய் பிளந்து அடடா… என்ன அழகு என்றார். இத்தனைக்கும் சீசருக்கு இதற்குமுன் மூன்று
முறை திருமணம் ஆகி இருந்தது .வயதும் ஐம்பதை கடந்திருந்தது. அவர் மூன்றாவது மனைவி கல்பூர்னினா
இன்னும் உயிரோடுதான் ரோமில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். ஆனால் கிளியோபாற்றாவுக்கோ
பதினேழு வயது தான் அப்போது. .என்ன இருந்தலும் சீசரின் அந்தரங்கம் வேறு. அரசியல் வேறு.
எனவே அவர் கிளியோபாற்றாவின் தரப்பு நியாங்களை கேட்டறிந்தார். அவளது தகப்பன் 12 அம் தாலமியில்
உயிலின்படி கிளியோபாற்றாவும் அவள் சகோதரன் 13 அம் தாலமியும்
சேர்ந்துதான் இந்த எகிப்த்தை ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தை உணர்ந்துகொண்ட
அவர் கிளியோபாற்றாவுக்குத்தான் எகிப்த்தை ஆள முழுதகுதி உள்ளதால் அவளது ஆட்ச்சியை தான்
அங்கீகரிப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து அவர் கிளியோபாற்றாவை தன்னுடை அங்கீகரிக்காத
மனைவியாக வைத்துக்கொண்டார். இவர்களின் கூட்டுறவில் கிளியோபாற்றாவின் வயிற்றில் சீசரின்
ஒரு வாரிசு உருவானது. அந்த ஆண் குழந்தைக்கு சீசாரியன் என்னும் பெயரையும் இட்டார்கள்.
இந்த
சூழ்நிலையில் தனக்கு எகிப்த்திய ஆட்ச்சிப்பொறுப்பு இனி நிலைக்காது என்றுணர்ந்த 13 ஆம் தாலமி
தன் ஒன்றுவிட்ட சகோதரி அர்சினோயியுடன் கூட்டாக சேர்ந்துகொண்டு சீசரை எதிர்க்க அலெக்சாண்டிரியாவை
முற்றுகை இட்டான். இந்த முற்றுகை மிகவும் கடினமாக இருந்தது. அரண்மனையை சுற்றி இருந்த
அனைத்துப்பகுதிகளிலும் சுவர் எழுப்பினாள் அர்சினோயி. மேலும் பல இடங்களில் கடல் நீர்
ஊருக்குள்ளே பரவும்படி வாய்க்கால்களை வெட்டிவிட்டாள்.. இதனால் அரண்மனைக்குள் கடல் நீர்
புகுந்துவிடவே குடிக்க தண்ணீர் இல்லாதபடி செய்தாள். இவளுடைய ராஜ தந்திரத்தை புரிந்துகொண்ட
சீசர் அர்சினோயி உண்மையிலேயே பயங்கரமானவள்தான் என்றார். அரண்மனைக்குள் சுண்ணாம்பு பகுதிகள்
இருக்கும் இடங்களில் கிணறுவெட்டி குடிக்கும் நீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனாலும்
இதே நிலையில் பல நாள் தாக்குப்பிடிக்க முடியாது என்றுணர்ந்த சீசர் அரண்மனையிலிருந்து தப்பி ஓடி தன் கப்பற்படைகளுடன் சேர்ந்துகொண்டார்.
இந்த
போரில் அர்சினோயி சீசருக்கு தண்ணீர் காட்டினாள் அவள் அடித்த அடியில் சீசரின் படைகள்
கதிகலங்கின. பல இடங்களில் சிதறடிக்கப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் அர்சினோயியின் குருவும்
அரசியல் ஆலோசனையாளரும் அவளுடைய அந்தரங்க பாதுகாவலனுமாகிய போதினுஸ்தான் என்றறிந்த ஜூலியுஸ்
சீசர் அவனை தன் கையாலேயே கொண்றார். இதே நேரத்தில் கிளியோபாற்றாவின் படைகள் அவளின் உடன்பிறந்த
சகோதரன் 13
ஆம்
தாலமியுடைய படைகளுடன் மோதவே அவன் போர்களத்தில் கொல்லப்பட்டுவிட்டான். போர் ஒரு முடிவுக்கு
வந்துவிடவே அர்சினோயி கைது செய்யப்பட்டாள். அர்சனோயி கைது செய்யப்பட்டு ரோமுக்கு கொண்டு
செல்லப்பட்டாள். சீசரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முடிவில் கொலைத்தண்டனை பெற்ற
கைதிகளை தூக்கில் போட்டு கொல்வதோடு அன்றைய நிகழ்ச்சி முடியும். அப்போது அர்சனோயியையும்
அழைத்து வந்தனர். ஆனால் சீசர் அவளது வீரத்தையும் மனோ திடத்தையும் மெச்சி அவளுக்கு உயிர்
பிச்சைகொடுத்து அவளை ரோமையர்கள் ஆளும் எஃபேசுப்பட்டிணத்தில் திறந்த வெளி சிறையில் பாதுகாப்பாக
வைத்திருந்தார்.
எப்பேசுப்பட்டிணத்தில் நிம்மதியாக காலம் கழித்துக்கொண்டிருந்த
அர்சினோயிக்கு நேரம் சரி இல்லாது போயிற்று. பிற்காலத்தில் எகிப்த்திய மஹாரணி கிளியோபாற்றா
மார்க் அந்தோணியை திருமணம் செய்துகொண்ட பிற்பாடு ஒரு சமயம் எஃபேசுவுக்கு வரவேண்டி இருந்தது.
அங்கே அர்டிமிஸ் தேவதையின் கோயிலில் அவள் தன் கணவன் மார்க் அந்தோணியுடன் வந்திருந்தபோது
அர்சினோயியை கண்டாள். அவ்வளவுதான் இந்த அரிசினோயி தன்னை எவ்வளவு தூரம் அவமானப்படுத்தினாள்.
தன்னை தெருத்தெருவாக அலையவிட்டாள் என்று எண்ணியவளாய்,” அடியே அர்சினோயி.. நீ இன்னுமா
உயிரோடு இருகின்றாய். .உன்னை என்ன செய்கின்றேன் பார் " என்று தன் கணவன் மார்க் அந்தோணியிடம்”
எனக்கு இவள் தலை இப்போதே வேண்டும் என்றாள்.” மர்க் அந்தோணியும் அவளிடம் என்ன ஏது என்று விசாரியாமல்
அப்போதே அவளைக்கொண்றான். இன்றும் அர்சினோயின் கல்லறை இந்த எப்பேசுப்பட்டிணத்தில் இருகின்றது..
அலெக்சாண்டிரியா பட்டிணத்தில் இருந்த கலங்கரை விளக்கம போல அது வடிவமைக்கப்பட்டு ஒரு
எண்கோண வடிவத்தில் ஒரு கோபுரம் போன்ற அமைப்புடன் அது கட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்போது
எல்லாம் சிதிலமாக்கப்பட்டு வெறும் கல்லறை மட்டும் இடிந்துபோய் இருகின்றது.
அவளது இளைய
சகோதரன் 14 ஆம் தாலமியின்
கதியும் அதோகதி ஆயிற்று. ஒரு சுபமுஹூர்த்த நாளில் ராணி கிளியோபாற்றா எகிப்த்தி முழு
அதிகாரம்கொண்ட மஹா ராணியாக முடி சூடிக்கொண்டாள்.
இந்த
நாளுக்குப்பிறகு சீசர் தன் நாடு திரும்பினார்.போகும் முன் ராணி கிளியோபாற்றாவை தன்
நாட்டுக்கு அரசாங்க விஜயமாக வரும்படி அழைப்பு விடுத்தார்.சீசரின் அழைப்பை எற்ற ராணி
கிளியோபாற்றா தன் மகனுடன் ரோமுக்கு சென்றாள். அங்கே சீசர் அவர்களுக்கு மிகவும் பிரம்மாண்டமான
வரவேற்பு கொடுத்தார். கிளியோபாற்றா அங்கே சில காலம் தங்கியிருந்தபோதுதான் ஜூலியுஸ்
சீசர் சதியால் கொல்லப்பட்டார். பிற்காலத்தில்
ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் எகிப்த்திய அரசாங்க விஷயங்களில் ரோமின் தலையீடும் அதிகரித்தது.
இதை ராணி கிளியோபாற்றா விரும்பவில்லை. எகிப்த்து ஒரு சுதந்திர நாடு. இந்த நாடு யார்
தயவிலும் இல்லை.என்று அதிரடியாக முழங்கினாள்.
சீசருக்கு பிறகு ரோமை யார் ஆள்வது என்பதில் மார்க் அந்தோணிக்கும் ஆக்டேவியன் என்னும் தளபதிக்கும்
போட்டி நிலவியது. இந்த ஆக்டேவியன் என்பவர் சீசரின் வளர்ப்புமகனாக தத்து எடுக்கப்பட்டு
வளர்ந்தவர். தனக்குப்பின் ஆக்டேவியன் தான் சீசர் பதவிக்கு வரவேண்டும் என்று சீசராலேயே
உயில் எழுதப்பட்டு அவரால் அடுத்த சீசராக அங்கீகரிக்கப்பட்டவர். மிகுந்த அரசியல் அனுபவமும்
வீரமும் கொண்டவர். இத்தனைக்கும் அவருக்கு வயது அப்போது 20 க்குள்தான்
இருந்தது. ஆக்டேவியன் தங்கை ஆக்டேவியாவை மார்க் அந்தோணிக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தர்.
இதனால் அவர்கள் இடையே ரத்த உறவும் ஏற்பட்டிருந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த
கருத்து வேறுபாடு எத்தனை இருந்தாலும் சீசரைக்கொண்றவர்கள் யார் யார் எனக்கண்டு பிடித்து
அனைவரையும் கொண்றனர். பிறகு தங்களுக்குள் அதிகாரப்போட்டி வேண்டாம் என்று ஒரு சமாதான
உடன்படிக்கைக்கு வந்தனர். அதன்படி ஆக்டேவியன் ரோமுக்கு மேற்கே உள்ள ரோம் சாம்ராஜ்ஜியத்தை
ஆள்வதென்றும் மார்க் அந்தோணி ரோமுக்கு கிழக்கே உள்ள ரோமை சாம்ராஜ்ஜியங்களை ஆள வேண்டும்
என்றும் தீர்மானித்தனர். அதன்படி மார்க் அந்தோணி தன் அதிகாரத்துக்குட்பட்ட கீழைய ரோமை
ராஜ்ஜியங்களை பார்த்துவர கிளம்பி துருக்கியில் சிரியா பகுதியில் தார்சுஸ் நகரில் தங்கி
இருந்தான்.
இதைக்கேள்விப்பட்ட
எகிப்த்திய மஹாராணி கிளியோபாற்றா மரியாதையின் நிமித்தமாக ரோமைய ராஜ பிரதிநியாக வந்திருக்கும்
மார்க் அந்தோணியை சந்திக்க அவளும் தார்சுஸ் நகருக்கு வந்திருந்தாள். இதுவே அவர்களுக்குள்
ஏற்பட்ட முதல் சந்திப்பு. இந்த சந்திப்பு நடந்த இடம் தார்சியுஸ் நகரத்தின் பிரதான வாயில்.
இந்த கோட்டையின் வாயில் இன்றளவும் இருகின்றது.
இந்த கோட்டையின் வாயில் இன்றளவும் இருகின்றது.
கிளியோபாற்றாவைக்கண்ட
மாத்திரத்தில் மார்க் அந்தோணிக்கு அவள் மேல் காதல் ஏற்பட்டுவிடவில்லை. அவள் தன் அரசியல்
குருவும் தலைவனுமாகிய ஜூலியுச் சீசரின் மனைவி என்பதும் அவர்களுக்கிடையே பிறந்த குழந்தைக்கு
தகப்பன் சீசர்தான் என்பதும் மர்க் அந்தோணிக்கு நன்றாகத்தெரிந்திருந்ததால் அவளை எகிப்தின்
ராணி என்ற முறையிலேயே வரவேற்று நன்றாக உபசரித்தான். இப்படியாக மார்க் அந்தோணியின் பதவியின்
நிமித்தமாக பல தேசங்களில் இருந்து மன்னர்களும் பிரபுக்களும் சமய குருமார்களும் வந்திருந்தர்கள்.
இப்படியாகத்தான்
யூதெயாவிலிருந்தும் ஒரு யூத சமய குருக்களின் கூட்டம் ஒன்று வந்து மஹா ஏறோதும் அவர்
சகோதரன் ப்பாஷேலும் செய்யும் அட்டகாசங்களையும் இதனால் ஏற்பட்ட கலவரத்தில் ரோமர்கள்
தங்கள் தலைமை முதலமைச்சரும் ஏறோதின் தந்தையுமாகிய அந்திப்பார்த்தர் கொல்லப்பட்டதையும்
இதற்காக நீதி விசாரணை தேவை என்றும் வேண்டினர். மார்க் அந்தோணியும் நீதி விசரணைக்கு
ஆணையிட்டார். அதன்படி மஹா ஏறோது மார்க் அந்தோணியை சந்தித்தார். அவர் நிறைய வெகுமதிகளைக்கொண்டு
வந்து மார்க் அந்தோணியிடம் சமர்பித்து நீதிவிசாரணைக்கு ஒத்துழைத்தார். இதனால் மகிழ்ந்துபோன
மார்க் அந்தோணி யூதேயாவை ஆளும் கவர்னராக பொறுப்பை கொடுத்தார். அவர் கொண்டுவந்திருந்த
பல பரிசுப்பொருட்க்களுள் ஜெரிக்கோவின் பேரீட்ச்சை பழங்களும் வாசனை திராவிங்களும்,சாம்பிராணிகளும்
நிறைய வெகுமதிகளும் அடக்கம்.
அன்றிரவு
கிளியோபாற்றாவை சந்தித்த மார்க் அந்தோணி பெரிய ஏரோதன் கொண்டுவந்து தனக்கு அளித்த அத்தனை
வெகுமதிகளையும் அவளிடம் கொடுத்தான்.ஜெரிக்கோவின் பேரீட்ச்சை பழங்களின் சுவையிலும் அதன்
வாசனை திரவியங்களின் நறுமணத்திலும் தன் மனதை பறிகொடுத்தாள் கிளியோபாற்றா.” அன்பரே நான்
திரும்பவும் என் நாட்டுக்குப்போகும்போது இவற்றைபோல நிறைய எனக்கு வேண்டும். கொடுக்க
முடியுமா “ என்று செல்லமாக கேட்டாள் எகிப்த்திய மஹாராணி..” எகிப்த்திய மஹாராணி கேட்டுவிட்ட
பிறகு நான் மறுக்க முடியாது. விடியட்டும். அதுவரை பொறுத்திருங்கள் “ என்றார் மார்க்
அந்தோணி.. அடுத்த நாள் மஹராணி கிளியோபாற்றா தன் நாட்டுக்கு புறப்படும்போது மார்க் அந்தோணி
அவளுக்கு ஒரு ஆச்சர்யம் கொடுத்தார்.அதன்படி யூதேய கவர்னர் பெறிய ஏறோது மார்க் அந்தோணியிடம்
ஒரு பத்திரத்தை கொடுத்தார். அது ஜெரிக்கோ பட்டிணத்தின் உரிமைப்பத்திரம். மார்க் அந்தோணி,”
மஹாராணி நீங்கள் ஜெரிக்கோவின் பேரீட்ச்சை பழங்களையும் அதன் வாசனை திரவியங்களையும்தானே
ஆசைப்பட்டீர்கள். இதோ அந்த ஜெரிக்கோ பட்டிணத்தின் உரிமைப்பத்திரம். இனிமேல் ஜெரிக்கோ
உங்களுடையது” என்றார். இப்படியாக சீசர் காலம் துவங்கி பல ரோமையருக்கே உரித்தான் பல
நகரங்கள் அரசுக்கள் என்று எகிப்த்திய மஹாராணி கிளியோபாற்றாவுக்கு தானமாக கிடைத்தது.
பெரிய ஏரோதுவுக்கு ஜெரிக்கோ பட்டிணத்தின்மீது ஒரு கண் இருந்ததால் மஹாராணி கிளியோ பாற்றாவிடாம்
பேசி ஜெரிக்கோபட்டிணத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு தீர்வை செலுத்தி வந்தார்.
மார்க்
அந்தோணி மீண்டும் ரோமுக்கு திரும்பி வந்தார்.
ஆக்டேவியன் அவரிடம் “ மைத்துனரே…எகிப்த்திய ராணி கிளியோப்பாவின் போக்கு மாறி
வருகின்றது. அவள் நம்மை மதிப்பதில்லை. ரோம் என்னுடையது என்கின்றாள். அவள் வயிற்றில்
பிறந்துள்ள குழந்தை சீசருடையது என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை. ஆனால் அதற்காக அவள்
ரோமை சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம்.?. அவள் என்ன சீசரை திருமணம் செய்துகொண்டா அவருக்கு
பிள்ளை பெற்றாள். ரோம் அவளுக்கு தானமாக கொடுத்திருந்த
நாடுகளுக்கு அவள் சொந்தம் கொண்டாடட்டும்.பரவாயில்லை. ஆனால் அந்த நாடுகள் நாம் சம்பாரித்தவை
அதற்கு அவள் தீர்வை கட்டினால்தான் அவள் நமக்கு அடங்கி இருகின்றாள் என்று அர்த்தம் இதற்கு
அவள் உடன்படாவிட்டாள் அவள் மீது போர் தோடுப்பதை தவிர வேறு வழி இல்லை.” என்றார் ஆக்டேவியன்.
ஆக்டேவியனுக்கு
இப்போது தன்பதவி ஆட்டம் கண்டுவிடுமோ என்ற அச்சம் அவனை ஆட்கொண்டது. காரணம் ஆக்டேவியன்
சீசரின் தத்துப்பிள்ளை. அவருடைய உயிலின்படி அவர் சீசருக்கு தத்து பிள்ளையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
ஆனால் எகிப்த்திய மஹாராணி கிளியோபாற்றாவின் மகன் சீசரியன் ஜூலியஸ் சீசரின் ரத்தத்துக்குப்
பிறந்தவன். இந்த காரணத்தால்தான் அக்டேவியன் கிளியோபாற்றாவை வெறுத்தான். இதற்காக மார்க்
அந்தோணியை எகிப்த்துக்கு அனுப்பி மஹாராணி கிளியோபாற்றாவை ரோமுக்கு அடங்கி நடக்கும்படி
செய்யவும் தங்கள் வழிக்கு அவளை கொண்டுவரவும் வற்புறுத்தினான். மார்க் அந்தோணியும் எகிப்த்துக்கு
பயணித்தார்.
எகிப்த்துக்கு
வந்த மார்க் அந்தோணியை மஹராணி கிளியோபாற்றா மிகவும் நன்றாக வரவேற்றாள். அவள் அழகிலும் உபசரிப்பிலும் மயங்கினார் மார்க் அந்தோணி.
எகிப்திய மஹாராணி கிளியோபாற்றா தன் சார்பாக மார்க்
அந்தோணிக்கு ஒரு மாபெரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தாள். இந்த வரவேற்பும் விருந்தும்
நைல் நதிக்கரையில் ஒரு சொகுசு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கப்பலில் மஹாராணி
கிளியோபாற்றா தன் அரியசனத்தில் மிகுந்த ஒய்யாரமாக வீற்றிருந்தாள். சம்பிரதாய முறைப்படி
சீசரின் பிரதிநிதியாக வந்திருக்கும் மார்க் அந்தோணி மஹாராணிக்கு தன் மரியாதையை செலுத்த
மண்டியிட்டார். அவர் எழுந்திருக்கும் போது கப்பல் ஆடவே நிலைதடுமாறி அவள் மடிமீதே விழுந்தார்.
மஹாராணீ கிளியோபாற்றா அவரை அப்படியே தாங்கிக்கொண்டாள். அவ்வளவுதான். மார்க் அந்தோணிக்கு
உலகமே சுற்றியது. அப்போது விழுந்தவர் தான். பிறகு அவர் அவள் மடியைவிட்டு எழுந்திரிக்கவே
இல்லை. அவளும் அவனை விடுவதாக இல்லை.
பிறகு அவள்
காலடியே சொர்க்கம் என்று எண்ணும்படியாக அவள்மீது காதல் இன்பத்தில் கரைகாணமுடியாத காமக்கடலில்
மூழ்கினார். ரோமால் அனுப்பப்பட்ட தான் எதற்காக இங்கு வந்தோமோ அதை மறந்தார். காலங்கள்
பல சென்றன.இதற்குள் கிளியோபாற்றா மார்க் அந்தோணிக்கு மூன்று பிள்ளைகளைப் பெற்றாள்.
இங்கு என்ன நடக்கின்றது என்று ரோமில் ஆக்டேவியனுக்கு தெரிவிக்கப்பட்டது. தன் நண்பனும்
மைத்துனனுமாகிய மார்க் அந்தோணி தனக்கும் தன் தங்கை ஆக்டேவியாவுக்கும் செய்த துரோகங்களை
அவரால் மன்னிக்க முடியவில்லை. எல்லாம் அந்த எகிப்திய சிறுக்கியால் வந்தவினை. நம் தளபதி
மார்க் அந்தோணியை மயக்கி கிழக்கு ரோமபுரி சாம்ராஜ்ஜியம் அனைத்தையும் வலைத்துப்போடப்பார்கின்றாள்.
நடக்குமா? அல்லது நான்தான் விட்டுவிடுவேனா? என்ன என்று மார்க் அந்தோணி மீதும் கிளியோபாற்றாமீதும்
இல்லாத பழிகளை எல்லாம் போட்டு ரோமின் செனட் அங்கத்தினர்களை எல்லாம் நம்பச்செய்துவிட்டன்.
எகிப்த்தின்மீது ரோம் படைஎடுத்து எகிப்த்தை ஒடுக்க ரோமின் செனட் தன் சம்மதத்தை தந்துவிட்டது.
இதன் விளைவு கி.மு. 30 ல் எகிப்திய
மஹாராணி கிளியோபாற்றாவுக்கும் ரோமைய தலைமை அரசப்பிரதிநிதியாகிய ஆக்டேவியனுக்கும் போர்
பிரகடனம் ஆகியது. மார்க் அந்தோணிக்கு போர் உபகரணங்கள் போர் சிலவுகள் மற்றும் போர் வீரர்கள்
என தேவைப்பட்ட அனைத்து உதவிகளி செய்தார் பெரிய எறோது. எல்லாம் தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள
வேண்டும் என்னும் எண்ணத்தில்தான்.
போர் ஆரம்பிக்கும் முன்பாக மார்க் அந்தோணியின்
ஒரு தளபதி, “ ஐய்யா… கான்சல் அவர்களே… தற்போது
கடற்காற்று நமக்கு சாதகமாக இல்லை. மேலும் நம்முடைய பல வீரர்களுக்கு மலேரியா காய்ச்சல்
கண்டுள்ளது. நீங்கள் தரைப்படையை நகர்த்துவதில் பெரும் கில்லாடி என நான் நன்கு அறிவேன்.
எனவே போரை நாம் தரையிலிருந்து ஆரம்பிப்போம். நம் எதிரியை கடலிலிருந்து தரைக்கு கொண்டுவர
நம்மிடம் நல்ல உபாயம் உள்ளது. இதோ ஆக்டேவியனின் தரைப்படை தளபதி க்ரேக்கத்திய அக்ரிப்பா
வேகமாக தரையில் வந்துகொண்டிருகின்றான் இந்த விஷயத்தில் நான் சொல்வதை நீங்கள் கேட்ப்பீர்கள்
என நம்புகிறேன்.” என்றான்.
ஆனால் இந்த தளபதியின் ஆலோசனையை மார்க் அந்தோணி
அப்படியே நிராகரித்தான். தனக்கு கடற்போரில் அவ்வளவாக அனுபவம் இல்லை என்பதை தன் தளபதி
சுட்டிக் காட்டுவதில் உள்ள நியாயத்தை உணராமல் தன்னாலும் கடற்போரில் ஜெயிக்க முடியும்
என்பதை நிரூபிக்க இந்தப்போரை தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக நினைத்து தன் காதல் தேவதை
கிளியோபாற்றாவுக்கு இந்த வெற்றியை பரிசாக கொடுப்பேன் என்று சூலுரைத்தான்.
எகிப்த்திய மஹாரணி கிளியோபாற்றாவுக்கும் ரோமுக்கும்
கடற்போர் அக்டியும் என்னும் இடத்தில் ஆரம்பித்தது. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
மார்க் அந்தோணியின் வீரமும் போர் வியூகமும் ஆக்டேவியனுக்கு சளைத்தவை அல்ல
இதை அடுத்து மார்க் அந்தோணியின் பெரும் கடற்படை
அந்த அக்டியும் கடற்பகுதியில் பெரும் வேகமாக கிளம்பியது. ஆனால் கடற்காற்று தனக்கு சாதகமாக
இல்லாததினால் அவன் வேகம் தடைபட்டது. இது எதிரி ஆக்டேவியனுக்கு பெரும் சாதகமாக அமைந்தது.
ஆக்டேவியனின் பெரும் கப்பல்களின் முன்பகுதி பெரும் கூரான அமைப்பை கொண்டிருந்தது. அவன்
வேகமாக மார்க் அந்தோணியின் கடற்படையோடு மோதினான். இதனால் மார்க் அந்தோணியின் பல பெரும்
போர்கப்பல்களின் துடுப்புகள் முறியவே அவைகள் இனி நகரவே முடியாதபடி நின்றன. ஆக்டேவியனின்
கடற்படை கப்பல்கள் மோதியதால் மார்க் அந்தோணியின் பல பெரும் கப்பல்கள் முறிந்து கடலில்
மூழ்கத்துவங்கின.
இதே நேரத்தில் கிளியோபாற்றா செய்த ஒரு சிறிய தவறு
போரின் போக்கையே மாற்றி விட்டது. தனக்கும் தன் எகிப்த்திய படைகளுக்கு எவ்வித சேதமும்
ஏற்படக்கூடாது என்னும் அடிப்படையில் கரையிலிருந்து சற்று தூரத்திலேயே தன் கடற்படையை
நிறுத்தி இருந்தாள் கிளியோபாற்றா. ஆனால் ஆக்டேவியன் தன் நாட்டை அதாவது எகிப்த்தை தாக்க
வந்துகொண்டிருகின்றான் என்னும் தகவலின் அடிப்படையில் தன் கடற்படையை பின்னுக்கு நகர்த்தியதுதான்
பெரிய தவறாகிப்போனது. சதுரங்க விளையாட்டில் ஒரு சிறிய நகர்த்தலும் பெரும் தோல்வியில்
முடியும் என்பதுபோல அரசியலிலும் போர்களத்திலும் அவ்வாறே ஆகிவிடும். மார்க் அந்தோணியால்
இந்த தவறான நகர்த்தலை சரிசெய்யவே முடியாதபடி சூழ்ந்துகொள்ளப்பட்டார். தனக்கு உதவியாக
எகிப்த்திய கப்பல்கள் வரவேண்டும் என்று சமிக்கை செய்தாலும் அவள் அவனுக்கு உதவிக்கு
வரமுடியாதபடி ஆக்டேவியனின் கடற்படையால் பின்னுக்கு தள்ளப்பட்டாள். தனக்கு எவ்வளவு பெரும்
போர்க்கப்பல்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஆக்டேவியனின் சிறு சிறு கப்பல்கள் சூழ்ந்துகொண்டு
எரியும் நெருப்பு கற்கலாலும் பெரும் மழை போல் அம்புகள் பெய்வதாலும் அதை அடுத்து அவர்களுடைய
நங்கூரம்போன்ற புதிய கண்டுபிடிப்பான ஆயுதத்தால் கப்பல்கள் மாட்டிக்கொண்டு ஒன்றோடு ஒன்று
மாட்டிக்கொண்டு நேருக்குநேர் என்னும் கடைசி பெரும்போர் மூண்டது.
அன்றுமட்டும்
மார்க் அந்தோணி தன் தளபதியின் பேச்சைக்கேட்டு அக்டியத்தில் கடற்போரை தவிர்த்து தரைப்போரில்
ஈடுபட்டிருந்தால் ரோமின் சரித்திரம் வேறுமாதிரி மாறி இருக்கும்.ஆனால் என்ன செய்வது.
விதியை மாற்ற முடியாது அல்லவா.
போரின்முடிவு படுதோல்வி என்றாகிவிட்டதால் மார்க்
அந்தோணியும் கிளியோபாற்றாவும் எகிப்த்து திரும்பினர். மீண்டும் ரோமிலிருந்து திரும்பிவந்த
ஆக்டேவியன் எகிப்த்தின் மீது படை எடுத்தார். அலெக்ஸாண்டிரியா முற்றுகை இடப்பட்டது.
ரோமின் படைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் எகிப்த்திய படைகள் பின்வாங்கின. மார்க் அந்தோணி
தனியே விடப்பட்டர்.
அக்டியத்திலும்
தோல்வி. அலெக்ஸாண்டிரியாவிலும் தோல்வி என்பதையும் தன் மைத்துனன் முன்பாக தலைகுணிய ஏற்பட்டதையும்
ஜீரணிக்கமுடியாத மார்க் அந்தோணி தன் வயிற்றில் தன் வாளை பாய்ச்சிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதேபோல் எகிப்த்திய மஹாராணி கிளியோபாற்றாவும் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ஒரு விஷப்பாம்பை
தன்னை கடிக்கும்படி செய்து தற்கொலை செய்துகொண்டாள்.. அவள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாள்
என்றும் ஒரு கதை உண்டு..
மார்க்
அந்தோணி சாகும் முன் தன் காதல் தேவதை கிளியோபாற்றாவும் தற்கொலை செய்துகொண்டாள் என்று
அறியவந்து தாங்கள் இறந்தபின் இருவரது உடலையும் சேர்த்தே அருகருகே புதைக்க வேண்டும்
என கேட்டுக்கொண்டு அதற்கான உயிலையும் எழுதி வைத்தான்.
மார்க்
அந்தோணியின் உயிலின்படி தன்னுடன் தன் காதல் தேவதை எகிப்த்து மஹாராணி கிளியோபாற்றாவின்
உடலையும் சேர்த்தே புதைக்கவேண்டும் என்பதற்கொப்ப அலெக்சாண்டிரியாவுக்கு அருகில் உள்ள
ஒரு எகிப்த்திய சூரியனார் தேவாலயத்தில் இருவரையும் சேர்த்தே அடக்கம் செய்தனர். அவர்களுடைய
அடக்கத்தை ஆக்டேவியன் தானே முன்னின்று மிக்க மரியாதையாக அடக்கம் செய்தார்.( இன்றுவரை
அலெக்ஸாண்டிரியாவின் அருகில் உள்ள சூரியனார் கோயிலில் மார்க் அந்தோணீயின் கல்லறையையும்
கிளியோபாற்றாவின் கல்லறையையும் தேடிக்கொண்ட இருகின்றார்கள். ஆனால் இன்னும் கிடைத்தபாடில்ல
)
ஆக்டேவியன்
எகிப்த்தை விட்டு புறப்படுமுன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு காரியத்தை செய்தான்.
அது என்னவென்றால் மஹாராணி கிளியோபாற்றாவுக்கும் ரோமைய ஜூலியுஸ் சீசருக்கும் பிறந்த
வாரிசான செசாரியனையும் மற்றும் கிலியோபாற்றவுக்கும் மார்க் அந்தோணிக்கும் பிறந்த மூன்று
குழந்தைகள் அலெக்ஸாண்டர் ஹீலியோஸ், இரண்டாம் கிளியோபாற்றா சீலின் மற்றும் தாலமி பிலடெல்பியுஸ்
ஆகிய அனைவரையும் கொண்று புதைத்துவிட்டுத்தான் மீண்டும் ரோமுக்கு திரும்பி சென்றான்.
இவர்களால் தன்பதவிக்கு மீண்டும் பிரச்சனை ஏதும் வந்துவிடக்கூடாது அல்லவா.அதற்காகத்தான்
இந்த படுகொலைகள்.
இதற்குப்பிறகு
ரோமில் ஆக்டேவின் அகஸ்ட்டஸ் சீசராக தன்னிகரில்லாத தலைவனாக ஆட்சி புறிந்தார். நேயர்கள்
இத்தகைய வரலாற்றுப்பின்னனியுடன் மீதிக்கதையை தொடர கேட்டுக்கொள்கிறேன்.
. முதல்பாகம்
தொடர்ச்சி.
அப்போது
ஒரு வீரன் அந்திபார்த்தரை அணுகி அவருக்கு ராணுவ
வணக்கம் செலுத்தினான். அந்திப்பார்த்தர் அவனிடன்
“ வீரனே வந்த காரியத்தை உடனே தெரிவி “ என்றார். வந்த வீரன் ,” ஐய்யா அரசர் உங்களை உடனே
வரச்சொன்னார் “ என்றான்.
அந்திப்பார்த்தர்
தன் மகன் ஏறோதை பார்த்த பார்வையில் அவர் புறிந்துகொண்டு.” அப்பா…. நான் சொல்லவில்லை…என்
காலம் ஆரம்பித்துவிட்டது இந்த யூதேயாவில் பெரும் போர்… வாரிசு உரிமைப்போர் ஆரம்பித்துவிட்டது.
இந்த ஹாஸ்மோனிய வம்சம் அழிந்து ஏரோதைய வம்சம் ஆரம்பமாகப்போகின்றது. அதாவது ஏறோதாகிய
நான் என் பேரில் எறோதிய வம்சத்தை ஆரம்பித்து வைக்கப்போகிறேன் ” என்றார்.
யூதேயாவின்
மன்னரும் தலைமை குருவுமாகிய ஹராக்கினர்,” வாருங்கள்..தலைமை அமைச்சரே. ஃபாஷேல் மற்றும்
ஏறோது அவர்களே…உங்களிடம் சில விஷயங்களை நான் மனம்விட்டுப்பேச விரும்புகிறேன்.என் தம்பி
அந்திகொன் எங்கே சென்றான் என்றே தெரியவில்லை.. அவன் காணாமல் போனதைப்பற்றி எனக்குள்
சில சந்தேகங்கள் இருகின்றன. அவனைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா.? மேலும் சமாரியாவிலும்
கலிலேயாவிலும் எனக்குத்தெரிந்தவர்கள் சிலர்
காணாமல் போய் இருகின்றார்கள். ஏறோது அவர்களைப்பற்றி உனக்கு எதாவது தெரியுமா ? இதைப்பறி
நான் நீதி விசாரணைக்கு நான் உத்திரவிட வேண்டும். என்ன சொல்லுகின்றீர்கள்.?” அதற்கு
அந்திப்பார்த்தரும் பாஷேலும் ஏறோதும்,” அரசே… எங்கள் குடும்பம் இந்த யூதேயாவின் முன்னேற்றத்திற்காக
உயிரையும் கொடுப்போம் என்றே வாழ்ந்து வருகின்றது. எங்கள் மேல் உமக்கு என்ன சந்தேகம்.?
நீர் எங்களைப்பற்றி நீதிவிசாரணைக்கு அழைப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அது
எங்கள் நேர்மையை சந்தேகிப்பதாக இருகின்றது. ஜூலியுஸ் சீசர் காலத்திலிருந்தே நாங்கள்
எங்கள் ராஜ விசுவாசத்தை பறைசாற்றிக்கொண்டுதான் வந்திருகின்றோம். சீசரின் ஆதிக்கத்திலிருக்கும் இந்த யூதேயாவில் சீசருக்கும்
யூதர்களின் அரசராகைய உங்களுக்கும் நாங்கள் என்றென்றும் ராஜ விசுவாசமுள்ளவர்களாகவே நாங்கள்
வாழ்வதால் நாங்கள் எந்தவிதமான நீதிவிசாரணையும் சந்திக்க தயார் “ என்றனர். அப்படியே
வாயடைத்துப்போனார் மன்னர் ஹைராக்கினர். இனிமேல் இவர்களிடத்தில் எந்தவிதமான நீதிவிசாரணயும்
எடுபடாது என்பவராய்,” இல்லை… உங்களுடைய வண்முறை மிதமிஞ்சிப்போவதாக தேவாலய பரிசேயர்களும்
சதுசேயர்களும் கூறுகின்றார்கள்… எனவேதான் நான் உங்களுடன் இதுபற்றி கேட்டேன்” என்றார்.
ஏறோதின்
முகத்தில் ஏள்ளும் கொள்ளும் வெடித்தது. இந்தக்கிழவனின் கதையை இப்போதே முடித்துவிடவா?
என்றார். ஆனால் அண்ணன் பாஷேலும் தந்தை அந்திப்பார்த்தரும் அவனை அடக்கினர். பொறு ஏறோது..
நமக்கு காலம் இன்னும் வரவில்லை. அதுவரை பொறுத்திரு” என்று அவரை அடக்கினர்.
ஏரோது எதிர்பார்த்தபடி அரசர் ஹீராக்கினர் சகோதரன்
அந்திக்கோன் திடீரென யூதேயாவின்மேல் படைஎடுத்து வந்தான். அவனுக்கு உதவியாக பார்த்திய
தேசத்து படைகள் வந்திருந்தன. பெரும் மூர்க்கமான போர்கள் மூண்டன. போரின் முடிவு எதிரிக்கு சாதகமாக முடிந்தது. இந்தப்போரில் ஏறோதின்
தந்தையும் சகோதரன் பாஷேலும் கொல்லப்பட்டுவிட்டனர். அரசர் ஹீராக்கினர் கைதுசெய்யபட்டு
சிறையில் அடைக்கபட்டார். ஏறோது இனிமேல் தன்னால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை என்பவராய்
உயிர்பிழைத்து தப்பித்து ரோமுக்கு உதவிகேட்க்க சென்றார்.
இந்த
போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளின் அந்திக்கோன் ஆட்ச்சி
பேய் ஆட்ச்சியாக இருந்தது. அந்த ஜெருசலேம் மக்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்க்ள்
தங்களுக்கு இப்படி ஒரு கதி வரும் என்று.அந்திக்கோன் ஆட்ச்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.
இந்த போரில் ரோமானியர்கள் தோல்வியுற்றது அவர்களுக்கு பெரும் தலைகுணிவை ஏற்படுத்தியது.
அப்போது கிழக்கத்திய ரோமையின் அதிபதியாக இருந்த மார்க் அந்தோணிக்கு இந்த தோல்வி பெரும்
சங்கடத்தை ஏற்படுத்தியது. பார்த்திய சாம்ராஜ்ஜியம் ரோமைக்கு எப்போதும் பரம வைரியான
தேசம். இவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு நம்ம
எதிர்க்கத்துணிந்த அந்திக்கோனை நான் என் கையாலேயே கொல்வேன் என சூலுரைத்தார். அவர் மனதில்
தளபதி போம்பி இந்த யூதேயாவை கைப்பற்றிய நிகழ்ச்சி படம் போல் ஓடியது. அவர் வெற்றிவீரராய்
ஜெருசலேம் பட்டிணத்தில் நுழைந்தபோது அப்போதைய ஜெருசலேம் தலைமைகுரு அவரை வரவேற்ற காட்ச்சி
அவர் மனதில் நிழலாய் ஓடியது. இப்படி கிடைத்த வெற்றியை அவ்வளவு சுலபத்தில் அந்திக்கோனிடம்
பறிகொடுத்துவிட அவர் விரும்பவில்லை. எனவே இந்த யூதர்களை அடக்க அவர்கள் கையாலேயே அவர்கள்
கண்களைக்குத்த அவர் தெர்ந்துகொண்ட ஒரு யூதன்தான் ஏறோது. இவனுடைய முறட்டுத்தனமும் அடக்கியாளும்
திறமையும் அரசியல் சாணக்கியமும் மார்க் அந்தோணியை வெகுவாக கவர்ந்தது. இந்த சூழ்நிலையில்தான்
ஏரோது ரோமுக்கு வந்தார். மார்க் அந்தோணி அவருக்கு யூதர்களின் அரசன் என்னும் பட்டத்தைக்கொடுத்து
ஏறாளமான ஆட்க்களையும் ஆயுதங்களையும் கொடுத்து ஜெருசலேமுக்கு அனுப்பிவைதார்.
ஜெருசலேமுக்கு
யூதர்களின் மன்னர் என்னும் பட்டத்தோடு வந்துசேர்ந்த
மன்னர் ஏறோது அப்போது ஆட்ச்சியிலிருந்த அந்திகோனை எதிர்க்க பேயாக மாறினார்.
பெரும் யுத்தம் மூண்டது. அது பெரும் ரத்தக்களரியாக மாறியது. விரோதி அந்திக்கோன் பிடிபட்டு
கைது செய்யப்பட்டான். அவனோடு அவன் மகனும் கைதுசெய்யபட்டான். ஜெருசலேம் தேவாலய தலைமை குருவும் அரசரும் ஆன ஹீராக்கினர்
சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் அவருடைய சகோதன் அந்திக்கோனால் கைகால்
வெட்டப்பட்டு பெரும் முடவராக இருந்தார். ஜெருசலேமில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
கைதுசெய்யப்பட்ட அந்திக்கோன் மார்க் அந்தோணியிடம் ஒப்புவிக்க ரோமுக்கு அவன் மகனுடன்
கொண்டுசெல்லப்பட்டான். ஆனால் அவன் மகன் கடல்பயணத்தின்போது எப்படியோ கடலில் குதித்து
தப்பிவிட்டான். ஆனால் அவன் தந்தை ரோமில் மார்க் அந்தோணியால் கொல்லப்பட்டுவிட்டான்.
இப்போது
ஏறோது மஹா ஏறோது என்னும் பெயரில் யூதேயாவின் யூத அரசராக முடிசூடப்பட்டுவிட்டார். முன்னாள்
பெரியகுரு ஹிர்கேனியர் முடமாகிப்போனதால் அவரால் தேவாலய பணிகளை நிறைவேற்ற ,முடியாது
என்பதால் பெரிய குருவின் பதவிக்கு தன் சொல்படி கேட்க்கும் ஒரு பொம்மை குருவாக ஆரோனின்
வழிவந்த அனனியாஸ் என்பவரை நியமித்தார். கொஞ்ச நாளில் முன்னாள் பெரியகுரு ஹிர்கேணியர்
மர்மமான முறையில் இறந்துபோனார்.
யூதமக்கள்
தங்களை ஆள ஒரு இதுமேயன் வழிவந்த ஏரோதை யூதனாகவோ அல்லது யூத அரசனாகவோ ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
ஆனால் இப்போது அவர் யூதேயவின் அரசர். தங்களை ஆளும் ரோமைய சாம்ராஜ்ஜியத்தின் முழு ஆசீர்
பெற்றவர் என்பதால் வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்..
தன்னை இந்த யூத மக்கள் ஒரு அரசனாகவோ அல்லது யூதனாகவோ ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்னும்
உண்மை ஏறோதுக்கும் தெரியாமலில்லை. இதனால் தான் இந்த யூதேயாவின் அரசன் என்னும் ஆணவம்
அவன் மனதில் நன்றாக தலை தூக்கியதால் யூதமக்களை ஒரு அடிமைபோல் நடத்தினான். ஆனாலும் இப்படியேயும்
மக்கள் விரும்பாத தன் ஆட்ச்சியை அதிக காலம் நடத்த முடியாது என்பதால் அவ்வப்போது சற்று
நீக்குப்போக்குடனும் நடந்துகொள்ள வேண்டியதாயிற்று. இதனால் மக்கள் மனம்குளிர பல அதிரடி
திட்டங்களால் யூத மக்களின் மனதில் இடம்பிடிக்க ஜெருசலேம் தேவாலயத்தை புணரமைத்தான்.
ஹெப்ரோனில் யூத பிதாப்பிதாக்களின் சமாதியை சிறப்பாக கட்டுவித்தான். இந்த சமாதியில்தான்
பிதாப்பிதாக்கள் அபிரஹாம், அவர் மகன் ஈசாக்கு, அவர் மகன்யாக்கோபு, அவர் மகன் யோசேப்பு
ஆகியோர் அடங்கி இருகின்றார்கள். இப்படி பல அதிரடியான மிகவும் சிறப்பான பல கட்டுமானங்களை
கட்டுவித்தார் மாமன்னர் ஏறோது.
இப்படியாக
இந்த யூத மக்களுடைய மனதில் தானும் நிலைநிற்க மேலும் என்னென்ன செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது
ஹாஸ்மெனிய ( மக்கபேய ) வம்சாவளிவந்த ஒரு அரசியிடமிருந்து ஒரு அழைப்பு.வந்தது. இந்த
இளவரசி அங்கயீனம் செய்யப்பட்ட பெரிய குரு ஹிர்கேனியருடிய மகள் அலெக்ஸாண்டிரா. சமாரியாவில்
மக்கபேயர்களால் கட்டப்பட்ட அலெக்ஸாண்டிரியா கோட்டை ஒன்றில் வசித்துவந்தாள். இவளுக்கு
ஒரு மகள். அவள் பெயர் மரியம்மே. இந்த மரியம்மேவின் அழகு அக்காலத்தில் மிகவும் பிரபல்யமாக
பேசப்பட்டது...அரசி அலெக்ஸாண்டிரா தன் வம்சத்தில் தன் மகள் மரியம்மேவுக்கு தகுந்த மாப்பிள்ளை
கிடைக்காததால் தான் யூத ராஜாவான ஏறோதுக்கு பெண்கொடுக்க சம்மதம் என்றும் ஒரு நாளில்
வந்து பெண் பார்க்க வரலாம் என்றும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏறோது ஏற்றுக்கொண்டார்.
ஒரு நாளில் அவர் சமாரியாவில் உள்ள அலெக்ஸாண்டிரா கோட்டைக்கு சென்று பெண் பார்த்தார்.
மரியம்மேயினுடைய அழகு அவரை கவர்ந்தது. மரியம்மேவுக்கு அப்போது பதிமூன்று அல்லது பதினாங்குதான்
இருக்கும். அப்போதெ அவர் தம் சம்மதத்தை தெரிவித்துவிட்டார்.. தனக்கு ஒரு மனைவியும்
ஒரு மகனும் இருப்பதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. இப்படி ஒரு திருமணத்தின்மூலம் தான்
ஆட்ச்சி செய்யும் யூதேயாவின் மக்கள் தன்னை முழுமனதுடன் ஒரு யூதனாகவும் ஒரு யூத அரசனாகவும்
ஏற்றுக்கொண்டால் போதும் என்னும் முடிவுக்கு அவர் ஏற்கனவே வந்துவிட்டார்.. பலதார விவாகம்
என்பது அக்காலத்தில் அரசர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சலுகை.. ஆனால் அந்த திருமணம் நடைபெறுவதில்
சில சிக்கல்கள் இருந்தன.
ஏறோதின்
பகைவன் அந்திக்கோன் ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டு மார்க் அந்தோணியால் கொல்லப்பட்டான்
அல்லவா… அவன் மகன் கடல்பயணத்தின்போது எப்படியோ தப்பிவிட்டான். அவன் இப்போது வெளிப்பட்டு
ஒரு பெரும்படையுடன் வந்து ஜெருசலேமை தாக்கினான். ஆனால் இப்போது அரசியல் நிலைமை வேறு.
மஹா ஏறோது இப்போது இப்போது யூதேயாவின் சக்த்திவாய்ந்த அரசர். ரோமர்களின் நம்பிக்கையான
தோழமை கொண்டிருப்பவர். அவரது படைபலம் மிகவும் அதிகம். இத்தகைய காரணங்களால் எதிரி கொல்லப்பட்டான்.
இதனால் மஹா ஏறோதின் அரசுமேலும் விரிந்தது. இப்போது அவரது அரசாங்கம் மாமன்னர் சாலமோனின்
ஆட்சிக்குட்பட அளவுக்கு விரிந்திருந்தது. இந்த கலவரங்கள் அடங்க மூன்று ஆண்டுகள் பிடித்தது.
இப்போது
மஹா ஏறொது மாமன்னர். தான் விரும்பியபடி அலெக்ஸாண்டிராவின் ஒரே மகளான பேரழகி மரியம்மேவை
திருமணம் செய்துகொண்டார். அப்போது ஏறோதுக்க்கு வயது 35. மரியம்மேவுக்கு
வயது 15..
இதற்காக
தன்னுடைய இதுமேய குலத்திலிருந்து பெண் கொண்டுவரப்பட்ட பட்டத்து ராணி டோரிஸ் என்பவளை
மணமுறிவு செய்து அவள் வயிற்றெரிச்சலை அதிகமாக கட்டிக்கொண்டார். பட்டத்து ராணி தன் மகன்
அந்திப்பார்த்தருடன் அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்டர்.
பெரிய
ஏறோது என்னும் யூதேய மன்னர் தான் கட்டிவந்த புதுமனைவி மரியம்மேவுடன் தான் ஆசையாக கட்டியிருந்த ஹெரோடியும் என்னும் மலைக்கோட்டையில்
குடிபுகுந்தார். இதே மலைக்கோட்டை ஹெரோடியத்தில் தன் சகோதரி சலோமியும் தன் தாயார் சிப்ரோஸ் ஆகியோரும் மரியம்மேயின் தாயார் அலெக்ஸாண்டிரவும்,
மற்றும் மரியம்மேயின் சகோதரன் அரிஸ்டொபுலுவும் சேர்ந்தே வாழ்ந்திருந்தனர். ஆரம்பத்தில்
எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இதற்குள் மரியம்மே இரண்டு ஆண் குழந்தகளுக்கு
தாய் ஆனாள். அவளுக்கும், அவள்தாய் அலெக்ஸாண்டிராவுக்கும் தங்கள் குல வழக்கப்படி வந்திருக்கும்
ஒரு மக்கபேயரே பெரிய குரு ஆக வேண்டும் என்னும் ஆசை இருந்தது. இதனால் அலெக்ஸாண்டிர தன்
மகள் மரியம்மேயை அவள் கணவரிடம் பெரிய குருவுக்குறிய பதவி தன் சகோதரனுக்கே கிடைக்க வேண்டும்
என்று கேட்டு அடிக்கடி நச்சரித்தாள்..என்ன இருந்தாலும் புது மனைவி. அதிலும் பேரழகி.
அவள்மீது ஏறோது தன் உயிரையே வைத்திருந்தான்.
எனவே அவள் சொல்வதைக்கேட்க ஒருவழியாக சம்மதித்தான்.
ஆனால் மனதிற்குள் இவள் சொல்படி இவள் சகோதரன் அரிஸ்டோபுலுவை பெரிய குரு பதவியில் அமர்த்தினால்
பிற்காலத்தில் அவன் நம்மை எதிர்த்தால் என்னவாகும் என்று யோசித்தான். இருப்பினும் தன்மனைவி
மரியம்மேவின் மேல் உள்ள பிரியத்தினால் அவள் சகோதரன் 17 வயதுடைய
அரிஸ்டோபுலுவை ஜெருசலேம் தேவாலயத்தின் தலைமைகுருவாக பதவியில் அமர்த்தினான். அப்போது
தன்னால் நியமிக்கப்பட்ட பொம்மை குரு அனனியாஸிடம் மெதுவாக அவர்காதில்,” கொஞ்சகாலம் பொறுத்திறு.
மீண்டும் உன்னை தலைமை குரு ஆக்குவேன் “ என்று உறுதியளித்தான்.
மரியம்மேயுடைய
சகோதரன் அரிஸ்டோபுலுவின்.பெரிய குருவின் பட்டமளிப்பு விழாவுக்கு ஏராளமான யூதேயர்கள்
ஜெருசலேமுக்கு வந்திருந்தார்கள். அரிஸ்டோபுலுவின் அழகும் உயர்ந்த உருவமும் ஆஜானுபான
தோற்றமும் அவனை ஒரு தேவ புருஷனாகவே காட்டியது. ஆஹா, இவரல்லவோ நம்மை ஆளக்கூடியவர். என்ன
அழகு.. என்ன அழகு. அவரது நிறமும் உயரமும் பருவமும் தேஜஸும் நம்மை கண் இமைக்காமல் பார்க்கத்தோன்றுகிறதே.
வாழ்க பெரிய குரு அரிஸ்டோபுலு.. வாழ்க நம் வரும்கால அரசர் அரிஸ்டோபுலு என்று புகழ்ந்துதள்ளினர்.
இந்த யூத மக்களுக்கு இவன்மீது இருக்கும் அன்பும் பக்த்தியும் இவனை ஒரு அரசனாக்க வைக்கும்
என்று அறிந்த பெரிய ஏறோதுவின் கண்கள் சிவந்தன. இதேபோல் அவன் தாய் சிப்ரோசுக்கும் எரோதுவின்
சகோதரி சலோமிக்கும் கோபத்தினால் கண்கள் சிவந்தன. அன்று இரவு ஏறோதுவும் அவன் தாயார்
சிப்ரோஸும் அவன் சகோதரி சலோமியும் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்படி “ அரிஸ்டோபுலுவை
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பதவி இறக்கம் செய்ய வேண்டும். இவன் தலை எடுத்தால்
நிச்சயம் நம் ஏறோது வம்சம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். மீண்டும் மக்கபேய
இனம் தலை தூக்கிவிடும் எனவே இவனை பதவி நீக்கம் செய் “என்று வற்புறுத்தினர். ஆனால் பெரிய
ஏறோது எதையும் பேசவில்லை.பிறகு வாய் திறந்து,”அரிஸ்டோபுலுவை இப்போது பதவி நீக்கம் செய்தால்
நாட்டில் பெரும் கலவரம் வெடிக்கும்..அவனுக்கு எவ்வளவு ஆதரவு உண்டு என்பதை பார்த்தீர்கள்
அல்லவா… இருக்கட்டும் இதற்கு வேறு வழி செய்கின்றேன் என்று அவர்கள் காதில் ரகசியமாக
ஏதோ முனுமுனுத்தான். இதைக்கேட்ட அவனது தாயார் சிப்ரோஸ் முகம் பூவாக மலர்ந்தது.
சதி ஆரம்பம்.: பெரியகுரு அரிஸ்டோபுலுவின் பதவி ஏற்பு விஷா முடிந்ததும்
அடுத்துவந்தது கூடாரத்திருவிழா. அதற்கடுத்து வந்தது பெரிய ஏரோதுவின் பிறந்த நாள் விழா.
இந்த பிறந்த நாள் விஷாவிற்கு ஏறாளமானபேர் அழைக்கப்பட்டிருந்தனர். விஷேஷ அழைப்பு பெரியகுரு
அரிஸ்டோபுலுவுக்கு. பெரியகுரு பதவி ஏற்பு விழாவிலிருந்து மன்னர் ஏறோதும் பெரிய குரு
அரிஸ்டோபுலுவும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். கூடுமானவரை இருவரும் சந்தோஷமாகவே காணப்பட்டனர்.
மாமனும் மைத்துனரும் இப்படி நகைச்சுவையாக பேசக்கூடியவர்கள் என்று அப்போது யாரும் நினைத்துக்கூட
பார்த்திருக்க மாட்டார்கள்.அவ்வளவு இயல்பாக இருந்தது அவர்களின் நடவடிக்கைகள். பெரிய
ஏறோது தன் பிறந்த நாள் விழாவை தான் அதிகமாக நேசிக்கும் ஜெரிக்கோவிலே நடத்த திட்டமிட்டிருந்தான்.
அதன்படி ஏறாளமான பேர் ஜெரிக்கோவில் கூடினர். ஆடல் பாடல் என்றும் பலவிதமான நிகழ்ச்சிகள்
வேடிக்கைகள் என்று ஜெரிக்கோவே விழாக்கோலம் பூண்டது. மதியம் விருந்து முடிந்தது. மாமனும்
மச்சானும் அதாவது மன்னர் எறோதும் அவன் மனைவியின்
சகோதரன் பெரியகுரு அரிஸ்டோபுலுவும் மிகவும் சந்தோஷமாகவே காணப்பட்டனர். மன்னர் பெரிய
ஏரோது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தான் குளத்தில் நீச்சல் அடிக்கபோவதாக கூறி அரிஸ்டோபுலுவையும் அழைத்தார். அவனும் நீச்சல் குளத்தில் இறங்கினார். எல்லோரும் பார்க்க
நீச்சல் போட்டியும் ஆரம்பமானது. பலரும் பலவிதமான நீச்சல் சாகசங்களை செய்துகாட்டினர்.
ஏறோதும் நன்றக நீச்சல் அடித்தார். மூச்சை அடக்கி சாகசம் செய்தார். இவ்வாறாகவே அரிஸ்டோபுலுவும்
நீரில் மூழ்கி மூச்சை அடக்கி சாகசம் செய்தார். ஆனால் இங்கு விதி விளையாடியது. நீச்சல்
குளத்தில் மூழ்கிய அரிஸ்டோபுலு வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. மாலைநேரம் வரையும்
களியாட்டங்கள் தொடர்ந்ததால் இங்கே நீச்சல் குளத்தில் என்ன நடந்தது என்பதுபற்றி யாருக்கும்
தெரியவில்லை.. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஏறோது மன்னர் வாயிலும் வயிற்றிலும்
அடித்துக்கொண்டு ஓ வென்று அழுதார். இருட்டிய பிறகே இறந்த அரிஸ்டோபுலுவின் உடல் வெளியே
கொண்டுவரப்பட்டது. ஜெரிக்கோவின் அரண்மனையில் அதுவரை குடிகொண்டிருந்த மகிழ்ச்சி ஆரவாரங்கள்
எல்லாம் பெரும் துக்கமாக மாறிப்போயின.” அடேய் அரிஸ்டோபுலு, உன்னை என் மகன்போல பாராட்டி
உனக்கு பெரிய குரு பதவி அளித்து உன்னை கௌரவித்தேனே… சாகக்கூடிய வயதா உனக்கு. யார் கண்பட்டதோ
தெரியவில்லையே. அடப்பாவி சண்டாளா… உனக்கேனடா இந்த கதி “ என்று சுவற்றில் முட்டிக்கொண்டு
அழுதார் மன்னர் ஏறோது.
எல்லாம்
துக்கமயமாக மாறிப்போன போது இருவர் கண்கள் மட்டும் ஏறோதுவை சந்தேகக்கண்கொண்டு பார்த்துக்கொண்டன. அவை அரிஸ்டோபுலுவின்
தாய் அலெக்ஸாண்டிராவும் அவர் மகள் மரியம்மேவும் தான். இதை ஏறோதும் கவணிக்கத்தவரவில்லை.
அடேய் ஏறோது… நீ… ஊரை ஏமாற்றலாம்… உலகத்தை ஏமாற்றலாம். ஆனால் என்னை ஏமாற்ற முடியாது.
உன் கண்களை நான் அறிவேன்… உன் எண்ணங்களை நான் அறிவேன். என் தந்தையும் பெரிய குருவுமான
ஹிராக்கினரை நீ தான் கொண்றாய். இப்போது என் மகனையும் நீ தான் கொண்றிருகின்ராய். இதற்கெல்லாம்
நான் உன்னை பழிக்குப்பழி வாங்காமல் விடமாட்டேன் இது சத்தியம் என்றாள்.” என்றாள்.
“ ஆஹா…
நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக் திட்டம் தீட்டினாலும் இந்தக்கிழவி மோப்பம் பிடித்துவிடுகின்றாள்.
அடுத்தது இவள்தான் என்குறி. இருக்கட்டும் இவளை நான் கவனித்துக்கொள்கின்றேன்” என்று
கருவிக்கொண்டே சென்றான். துக்க காரியங்கள் எல்லாம் முடிந்தபிறகு தன் மனைவி மரியம்மேயின்
தனி அறையில் பிரவேசித்தார் ஏறோது.ஆனால் பாம்பாக சீறினாள் மரியம்மே. “ எங்கே வந்தீர்கள்..இன்னும்
யார் யாரை எல்லாம் கொல்ல நினைத்திருகின்றீர்கள். உங்கள் ரத்த வெறி அடங்கிற்றா என்று
கேட்டு அவன் மானத்தை வாங்கினாள். முடிவாக இனிமேல் இந்த அறையில் நீங்கள் பிரவேசிக்கவே
கூடாது. நீங்கள் மானமுள்ள மனிதராக இருந்தால் இனிமேல் என்னை தொடாதீர்கள்” என்று அவரை
விரட்டி அடித்துவிட்டாள். தலை தொங்கிப்போய் வெளியே போனார் எறோது.
தன் மகனை
ஜெரிக்கோவில் நீச்சல் குளத்தில் ஏறோது கொண்றுவிட்டான் என்றறிய வந்த அலெக்ஸாண்டிரா ரகசியமாக
ஒரு ஓலை எழுதி தன் மகனின் சாவுக்கு நீதிவிசாரணை வேண்டும். தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
என்று கேட்டு அப்போது எகிப்திலிருந்த ராணி கிளியோபாற்றாவுக்கு அனுப்பிவைத்தாள். என்ன
இருந்தாலும் அலெக்ஸாண்டிரா ஒரு தாய் மட்டுமல்லாது ஒரு ராஜகுடும்பமான ஹாஸ்மேனிய அரச
வம்சாவளியை சேர்ந்தவளாகையாள் ராணி கிளியோபாற்றா அந்த கடிதத்திற்கு மதிப்பளித்து அதை
மார்க் அந்தோணியிடம் சேர்த்துவிட மார்க் அந்தோணியும் நீதிவிசாரணைக்கு உத்திரவு இட ஏறோது ரோமுக்கு புறப்பட வேண்டியதாயிற்று.
இனிமேல்
தன் மனைவியும் தன் மாமியாரும் தன்னை மதிக்கவே மாட்டார்கள் என்று உணர்ந்துகொண்டார் மன்னர்
ஏறோது. இந்த நிலையில் ஏறோதுவின் தாயார் சிப்ரோசுக்கும்
அவர் சம்மந்தி அம்மாள் அலெக்ஸாண்டிராவுக்கும் அடிக்கடி
முட்டல் மோதல் ஏற்பட்டது.
ஏறோதுவின்
தயார் அவரிடம்,” மகனே ஏறோது…. உன் பெண்டாட்டியையும் உன் மாமியாரையும் அடக்கிவை. அவர்கள்
பேச்சு மிகவும் எல்லை தண்டிப்போகிறது. சம்பந்தி என்னும் மரியாதை கொஞ்சம் கூட இல்லை.
மாமியார் என்னும் மரியாதையும் இல்லை. ஆனாலும் நீ உன் பெஞ்சாதிக்கு அதிகம்தான் இடம்
கொடுத்துவிட்டாய்” என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தாள்.. இது போதாததற்கு ஏறோதுவின் தங்கை
சலோமி கலங்கிய கண்களுடன் வந்து, “ அண்ணா…பார் அண்ணா உன் பெஞ்சாதியை. அவள் தம்பி செத்ததிலிருந்து
அவள் உன்னையும் மதிப்பதில்லை…. என்னையும் மதிப்பதில்லை. நம் அம்மாவையும் மதிப்பதில்லை.
மொத்தத்தில் அவள் நம் யாரையும் மதிப்பதில்லை. ஏன் என்றால் நாம் அவர்களை விட தாழ்ந்த
ஜாதியாம்.வேறு வழி இல்லாமல் பெண் கொடுத்துவிட்டர்களாம். இதைத்தான் அண்ணா என்னால் தாங்க
முடியவில்லை “ என்று அழுது தீர்த்தாள். இப்படிப்பட்ட பேச்சுகள் அடிக்கடி நேரவே கரைப்பார்
கரைத்தால் கல்லும் கரையும் என்பதுபோல் “ நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை. என்
மனைவி மிகவும் நல்லவள். அவளைப்பற்றி இனிமேல் யாரும் என்னிடம் எதுவும் பேசக்கூடாது.”
என்று கட்டளை இட்டான். ஆனால் அவன் தங்கை சலோமி லேசில் விடுவதாக இல்லை.
“ அடியே
மரியம்மே… என்னைவிட வயதில் சிறியவள் நீ நீ
எல்லாம் எனக்கு சமமா…உன் குலப்பெருமையை என்னிடமே காட்டுகிறாயா… விடமாட்டேன்… உன்னை
சும்மாவிடமட்டேன். உன்னை என் காலில் விழ வைப்பேன். நீ என் காலைப்பிடித்துக் கொண்டு
எனக்கு உயிர்பிச்சை தா என்று கேட்க்கும்வரை
உன்னை நான் விடமாட்டேன் “ என்று சூலுரைத்தாள். இத்தகைய
ஒரு சூழ்நிலையில் ஏறோதுவின் மனைவி மரியம்மேவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தர்கள்
அல்லவா. அவர்கள் இருவருக்குமே திருமண வயது வரவும் மூத்தவன் அலெக்ஸாண்டருக்கு கப்பதோக்கிய
மன்னரும் அந்த நாட்டினுடைய தலைமை குருவுமாகிய அர்கிலாவுஸ் அவர் மனைவி கிளைபெரியாவுக்கும்
பிறந்த மகள் கிளைபெரியாவுக்கும் திருமணம் நடை பெற்றது. இளையவன் அரிஸ்டொபுலுஸ். இவனுக்கு
ஏறோதுவின் தங்கை சலோமியின் மகள் பெர்னிஸ் என்பவளுக்கும் திருமணம் ஆகி இருந்தது.
நேயர்களுக்கு
ஏறோதுவின் தங்கை சலோமியை பற்றி சற்று அதிகம் கூற வேண்டி உள்ளது. சலோமி மிகுந்த அழகி
என்று சொல்ல முடியாதென்றாலும் அவளுக்கும் அழகு குறைவில்லாமல் இருந்தது. ஆனால் புத்தி
அவளுக்கு மிகவும் அதிகம். எதிராளியை பார்த்தமாத்திரத்தில் எடை போட்டுவிடக்கூடிய திறன்
அவளுக்கு இருந்தது. மொத்தத்தில் அவள் ஒரு மன்னருக்குறிய அத்தனை தகுதிகளையும் பெற்றிருந்தாள்.
இவளுக்கு அவளுடைய சகோதரன் ஏறோது தன் வம்சாவளியில் வந்திருந்த தனக்கு நெருங்கிய உறவுள்ள
ஜோசப் என்பவனை திருமணம் செய்து கொடுத்தான். இந்த ஜோசெப் நல்ல அழகும் அறிவும் உயர்ந்த
பதவியும் வகித்து வந்தான். இவர்களுடைய வாழ்க்கை நல்லவிதமாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
ஆனால் விதி விளையாட ஆரம்பித்தத்து.
மன்னர்
ஏறோது தன் மாமியார் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் நீதி விசாரணைக்காக மார்க் அந்தோணியால்
அழைக்கப்பட்டிருந்தார். அவர் ரோமுக்குப்போகும்போது தன் சார்பாக நாட்டை ஆள தன் சகோதரியின்
கணவர் ஜோசெப்பை அமர்த்தினார். போகும் முன் ஜோசெப்பை அழைத்து தன் மனைவி மரியம்மை நன்றாகப்பார்த்துக்கொள்ள
வேண்டுமெனவும், நல்ல விதமாக கவனித்துக்கொள்ள வேண்டும் எனவும், தன் உயிருக்கு மார்க்
அந்தோணியால் ஆபத்து நேரிட்டால் ரகசியமக தன் மனைவி மரியம்மேவை தீர்த்துக்கட்டிவிட வேண்டுமெனவும்
அவளை யாரும் அணுகாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டுகெனவும் ஆணையிட்டார் இந்த ஆனையை மிகவும் ரகசியமக பாதுகாக்க வேண்டும் எனவும்
சொல்லிவிட்டார். பிறகு ஏறோது நீதிவிசாரணைக்கு சென்றுவிட்டர். அவர் மார்க் அந்தோணியை
ரோமில் சந்தித்தார் என்று சிலரும் எப்பேசுக்கு சென்றார் என்று சிலரும் கீரீஸுக்கு சென்றார்.என்றும்
தங்கள் எதிரி பார்த்தியர்களை அடக்க அவர் சிரியாவில் தங்கி இருந்தார் எனவும் பலவாறு
சொல்லப்படுகின்றது. ஆரம்பத்தில் மரியம்மேவும் ஜோசெப்பும் மரியாதையாக பழகினார்கள் என்றாலும்
ஏறோது திரும்பிவர மிகுந்த காலதாமதம் ஆயிற்று. சுமர் மூன்று வருடங்கள் இவ்வாறு கழிந்தன.
இந்த இடைப்பட்ட காலத்தில் ஜோசெப்பும் மரியம்மேவும் மரியாதையாகவே பழகினர். ஆனால் சலோமி
இதை நம்ப மறுத்தாள்.அவளுக்கு தன் கணவரைபற்றியும் மரியம்மேவைப்பற்றியும் வெகு நன்றாக
தெரியும் என்றாலும் தான் போட்டிருந்த சபதத்தால் மரியம்மேவை வெல்ல இதுதான் தக்க சமயம்
என்று தன் அரசியல் சாணக்கியத்தை தவறாக பயன்படுத்தினாள்.
மார்க்
அந்தோணியை சந்தித்த ஏறோது தன் மைத்துனன் அர்ஸ்டோபுலு தலைமை குருவாக மிகக்குறைந்த வயதிலேயே
பதவிக்கு வர தான் தான் காரணமென்றும்,அவரது மரணம் தற்செயலான ஒரு துர்பாக்கியம் என்றும்
ஆனால் அவனைக்கொண்ற பழி தன் மீது விழுந்துவிட்டதாகவும் கூறினார். மார்க் அந்தோணியும்
ஏறோது தன் மைத்துனனுக்கு பதவிகொடுத்ததன்மூலம் ஹாஸ்மேனிய குலத்திற்கு கௌரவம் அளித்துள்ளதாகவும்
அவரைக்கொல்ல ஏறோதுக்கு அவசியமான காரணம் ஒன்றும் இல்லை என்றும் மாறாக இதுகொலைதான் என்று
நிரூபிக்க உறுதியான காரணங்களோ ஆதரங்களோ இல்லை என்பதால் அவரை விடுதலை செய்வதாகவும் கூறி
விடுதலை செய்தான். மேலும் அவருக்கு நிர்வாக திறனுக்காக மேலும் அதிகாரங்களை வழங்கினார்.
மன்னர் ஏறோதும் அவருக்கு விசுவாசமாக இருப்பதாக ரோமைய தெய்வங்களின் மீது சத்தியம் செய்துகொடுத்தார்.
பிறகு மார்க் அந்தோணிக்கு நிறைய அன்பளிப்புகளை வழங்கி கௌரவித்தர். ஏறோது தன் நாடு திரும்ப
மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆனது.
தன்
தாய் நாடு திரும்பிய மன்னர் ஏறோது தன் குடும்பம் இருக்கும் எரோதியம் என்னும் மலைக்கோட்டைக்குள்
பிரவேசிதார்.அவருக்கு அங்கு மிகசிறப்பான வரவேற்பு
அளிக்கப்பட்டது. தான் இல்லாத சமயத்தில் இங்கே என்னென்ன நடந்தது என்று தன் சகோதரி
சலோமியை விசாரித்தார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சலோமி
தன் கணவர் ஜோசெபுக்கும் மரியம்மேவுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாகவும் தானே இந்தக்கண்றாவிக்கூத்தை
தன் கண்கொண்டு பார்த்திருப்பதாகவும் நன்றாக போட்டுக்கொடுத்தாள். ஏறோது தன் மனைவி மரியம்மேவிடம்
இது பற்றி விசாரித்தபோது அவள் தங்களுக்குள் ஏற்பட்டிருப்பது ஒரு
சகோதரனுகுறிய மரியாதையான நட்புதான்.. வேறு எதுவும்
இல்லை. இது தன் குலதெய்வங்களின் மீது ஆணை என்றாள். இப்போது ஏறோதுவுக்கு யாரை நம்புவதென்று
தெரியவில்லை. எந்தப்பெண்ணாவது இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு தன் கணவன் உயிரை பணையம்
வைப்பாளா?. தன் கணவன் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டாய் வைக்கும் பட்ச்சத்தில் அவன்
கதி என்னவாகும் என்று சலோமிக்கு தெரியாமலா இருக்கும்? அப்படியானால் ஜோசப் தனக்கு துரோகம்
இழைத்துவிட்டனா? தன் மனைவியின் முகத்தில் எந்த ஒரு பதற்றமோ கவலையோ அல்லது பயமோ இல்லை.அப்படியானால்
சலோமி சொல்வதில் உண்மை எந்த அளவு இருக்கும் ? இவ்வாறு குழம்பிய ஏறோது தன் மனைவியை விட்டுவிட்டு
ஜோசெப்பை கொண்றான்.
இதே
கால கட்டத்தில் எகிப்துக்கு போறாத காலம் வந்துவிட்டது. அக்டியப்போரிலும் அலெக்ஸாண்டிரியா
போரிலும் தோல்வியுற்ற மார்க் அந்தோணி தற்கொலை செய்துகொள்ளவும் அவன் காதலை மறக்க இயலாத
கிளியோபாற்றா தானும் தற்கொலை செய்துகொள்ளவும் எகிப்த்தில் பெரும் சோகம் சூழ்ந்துகொண்டது. ஒரு காலத்தில் தனக்கு நண்பனாகவும் பிறகு மைத்துனர்
ஆகவும் இருந்த மார்க் அந்தோணி காலமாகியவுடன் ஆக்டேவியன் ரோமின் முழு அதிகாரம் பெற்ற
அகஸ்டஸ் சீசர் என்னும் பட்டத்தோடு ரோமின் சர்வாதிகாரியாக ஆட்சிப்பொறுப்பேற்றார்.
அகஸ்டஸ்
சீசர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் தனக்கு விசுவாசமுள்ள ராஜாக்கள் யார் யார்
என்பதை அறிய அனைவரையும் தன்னை வந்து சந்திக்க ஆணையிட்டான். யூதேய மன்னர் என்ற முறையில்
ஏறொதுவுக்கும் ஆணை வந்தது. அதன்படி ஏறோது அகஸ்டஸ் சீசரை சந்திக்க அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த
இடம் காலம் இவற்றை அனுசரித்து கிரீஸ் நாட்டிலுள்ள ரோட்ஸ் தீவுக்கு புறபட்டார். போகும்
முன் தன் மனைவிக்கும் அவள் தாயருக்கும் சமாரியாவில் சர்தபா மலையின்மேல் அமைந்துள்ள
அலேக்ஸாண்டிரியா கோட்டையில் குடித்தனம் வைத்தார். அதாவது வீட்டுக்காவலில் கண்கணிப்பு
சிறையில் தங்க வைத்தான். தங்கள் குடும்பத்தில் சலோமியையும் தன் தாயாரையும் மரியம்மாவின்
இரு புதல்வர்களான அலெக்ஸாண்டர் மற்றும் அவன் சகோதரன் அரிஸ்டொபுலு ஆகியோரின் குடும்பங்களை
தன் ஹெரோடியும் மலைக்கோட்டையில் குடித்தனம் வைத்தார். சம்பந்திகளுக்குள் தகறாறு ஏதும்
ஏற்பட்டுவிடக்கூடாது என்னும் நல்ல எண்ணத்திலேயே அவன் அவ்வாறு செய்தான்.
தன் நண்பனும்
ஒரு விதத்தில் தளபதியுமான சோஹிமுஸ் என்பவனை அழைத்து தன் மனைவியும் அவள் தாயாரையும்
நல்ல விதமாக பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தான் அகஸ்டஸ் சீசரால் கொல்லப்பட்டுவிட்டால்
தன் மனைவி மரியம்மேவை ரகசியத்தில் கொண்றுவிடவேண்டும் எனவும் ரகசியமாக ஆணையிட்டு சென்றான்.
அகஸ்டஸ்
சீசரும் ஏறோதும். கிரீஸ் நாட்டிலுள்ள ரோட்ஸ் தீவில் சந்தித்துக் கொண்டார்கள்.சம்பிரதாயமான
பேச்சுவார்த்தைகள் முடிந்தபின் அகஸ்டஸ் சீசர் வெளிப்படையாக சில கேள்விகளைக்கேட்டார்.
அது மன்னர் ஏறோதுவை அதிரச்செய்தது.
“ நீர்
ஏன் உன் மைத்துனர் அரிஸ்டோபுலுவை கொண்றீர்?”
“ அரசே,,,
நான் உண்மையில் அவரைக்கொல்லவில்லை. எனக்கு அதற்கு அவசியமும் இல்லை.அவர் என் மைத்துனர்.
அவரும் நானும் மாமன் மைத்துனர் என்னும் முறையில் நன்றாகவே பழகினோம்.உண்மையில் அவருடைய
இறப்பு எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுமேய வம்சத்தில் வந்த என்னை என் தந்தையார்
காலத்தில் யூதராக மதம் மாற்றம் செய்தனர். இதனால் நான் பாதி யூதனாகவும் பாதி இதுமேயனாகவும்
இருந்ததால் யூதெய மக்கள் என்னை அரசராக முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில்
அரிஸ்டோபுலு பெரிய குருவாக ஆனதும் அவர் சகோதரி மரியம்மே எனக்கு மனைவியானதும் யூத மக்களுக்கு
பிடித்திருந்தது. நீச்சல் குளத்தில் இருந்த பாசி செடி கொடி அவர் காலில் சுற்றிக்கொண்டதால்
அவர் மூச்சுத்திணறி இறந்து போனார். மாலை வேளைவரை அங்கிருந்த மக்கள் களியாட்டங்களில்
ஈடுபட்டதால் நீச்சல் குளத்தில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பிறகு அவர்
இல்லாததை நான்தான் கண்டுபிடித்தேன்.அங்கு இருந்த மக்கள் அனைவருமே நடந்த நிகழ்ச்சிக்கும்
எனக்கும். சாட்ச்சி “
மன்னர்
எறோதுவின் சாட்ச்சியம் வெகு தெளிவாக இருந்ததை அகஸ்டஸ் சீசர் கவனிக்க தவறவில்லை. ஆனாலும்
அவர் கோபம் முகத்தில் தெரிந்தது. “ இதே சாட்ச்சியத்தைதான் நீர் மார்க் அந்தோணியிடமும்
கூறினீர். அப்படித்தானே?”
ஆம் மஹா
பிரபு. அவரிடம் நான் என்ன விளக்கம் கொடுத்தேனோ அதை அப்படியே உங்களிடமும் கூறினேன்.”
“ சரி… உனக்கும் கிளியோபாற்றாவுக்கும் என்ன பிரச்சனை?”
“ மஹ பிரபு…எனக்கும் மஹாராணி கிளியோபாற்றாவுக்கு
நேரடியான எந்தப்பகையும் இல்லை. ஆனால் அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்பது எனக்குப்புறிந்தது.”
“ ஏன்… எப்படி….”
“ மஹாபிரபு…எங்களுடைய
ரகசிய உளவு பிரிவின் தகவல்படி நான் நடந்ததைக்கூற அனுமதிக்க வேண்டும் “
“ சரி சொல்லு.”
“ மஹாபிரபு உங்கள் நண்பரும் உங்கள் மைத்துனரும்
என் முன்னால் எஜமானுமாகிய மார்க் அந்தோணி அவருடைய குருநாதராகிய ஜூலியுச் சீசரை கொண்றவர்களை
பழிவாங்கினார். அது நீங்கள் அறியாததல்ல. சீசரின் எதிரிகள் அவருடைய நண்பர்களும் பகைவருமானவர்களே.
இந்த சூழ்ச்சியின் பின்னனியில் மறைந்த சீசரின் முன்னாள் தளபதி போம்பியும் இருந்தார்
எனக்கேள்வி. அந்தக்காலகட்டத்தில் யார் நல்லவர் யார் கெட்டவர் யார் சதிகாரர் என்றே கண்டுபிடிக்க
முடியாத சூழல் நிலவியது. ஆனால் நடந்திருந்த
உள்நாட்டு பிரச்சனைகளில் நான் மார்க் அந்தோணிக்கு உதவியால் தன் நாயகர் ஜூலியுஸ் சீசரிடைய
மரணத்திற்கு நானும் ஒரு விதத்தில் காரணம் என எகிப்த்திய மஹாராணி நினைத்ததாகவும் அதனலேயே
அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்றும் கேள்விப்பட்டேன். என் எஜமானரும் கீழ்த்திசை ரோமைய
தேசங்களுக்கு அதிபதியுமான மார்க் அந்தோணி எனக்கு சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு
கட்டளைகளே. அதன்படியே நான் அவருக்கு பலவிதங்களில் என் உள் நாட்டு பிரச்சனைகளையும் மீறி
உதவி இருகின்றேன்.”
“ சரி…அரேபிய மன்னருடன் உனக்கு என்ன பிரச்சனை?”
அவர் மீது ஏன் போர் தொடுத்தாய்.”
“ மஹா
பிரபு… நானாக வலியச்சென்று போர் தொடுக்கவில்லை.அது அவருக்கும் மார்க் அந்தோணிக்கும்
இடையே ஏற்பட்ட பிரச்சனை. இந்த பிரச்சனை போரில்
முடிந்தது. அவருக்கு உதவ நானும் போரில் இறங்க நேரிட்டது. போர் என்று வந்துவிட்டால்
நீயா நானா என்று பார்த்துவிட வேண்டியதுதான் இதுதானே போர் தர்மம். தன் கணவர் மார்க்
அந்தோணி எதிரிமீது போர் தொடுகிறார். ஆனால் அவர் மனைவி கிளியோபாற்றா அவருடைய எதிரிக்கு
பின்வாசல் வழியாக. உதவி செய்கின்றாள். இப்போதுதான் எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது அதாவது இந்தப்போரில் நான் கொல்லப்படவேண்டுமென மஹாராணி
விரும்பினார் என்று. இதனால் நான் தோல்வியுற்ற என் எதிரியை கொண்றேன். இது தவறா நீங்களே
சொல்லுங்கள்.”
“ நன்று சொன்னீர் ஏறோது. நான் உங்கள் சாட்ச்சியத்தை
ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு ஒரு விஷயம் புறியவில்லை. உங்களைக்கொல்ல நினைத்த கிளியோபாற்றாவை
நீங்கள் கொல்ல முற்பட்டதாக ஒரு தகவல் உண்டே. இதை மார்க் அந்தோணியே என்னிடம் கூறி வருத்தப்பட்டர்.”
“ மஹா பிரபு…
நான் உங்களிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் மார்க் அந்தோணியிடம் கூறியது முற்றிலும்
உண்மை. இந்த எகிப்த்திய அரசி கிளியோபாற்றாவினால் மார்க் அந்தோணிக்கு எப்பேர்பட்ட அவமானங்கள்
நடந்தன.எப்பேர்பட்ட ராஜ உறவுகளை அவர் தவிக்கவிட்டார். உங்கள் தங்கையின் வாழ்க்கை வீணாகிப்போனது.
ரோம் எப்பேற்பட்ட ஒரு தளபதியை ஒரு நல்ல தலைவனை
இழந்தது. எல்லாம் யாரால்.? இத்தனை சீர்கேட்டுக்கும் காரணமான அந்த எகிப்த்திய மஹாராணி கிளியோபாற்றாவை கழட்டிவிடு. அல்லது கொண்றுவிடு.
அல்லது அந்த காரியத்தை என்னிடம் விட்டுவிடு நான் பார்த்துக்கொள்கிறேன். இது எங்களுக்கு
நல்ல வாழ்வளிக்கும் ரோமை சாம்ராஜ்ஜியத்திற்கு நான் செய்யும் ஒரு தேசீய சேவையாக இருக்கட்டும்
என்றே நான் கூறியிருந்தேன் மார்க் அந்தோணிக்கும் தன் காதல் மனைவியின் கடந்த காலம் எப்படி
இருந்தது என நன்றாகத்தெரியும் என்றாலும் அவள் மீது அவர் கொண்டிருந்த கட்டுக்கடங்காத
காதல் அவர் கண்களை மறைத்ததால் அவர் நான் கூறிய எதையும் தன் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
இந்த உலகத்தில் எத்தனையோ அழகிகள்.அவரைத்திருமணம் செய்துகொள்ள தயாரக இருந்த நிலையில்
இந்த எகிப்த்திய கட்டழகி கிளியோபாற்றாவிடம் அவர் என்ன விஷேஷத்தை கண்டார் என்பது எனக்குத்தெரியவில்லை.இப்படி
நான் எதார்த்தமாக கூறிய காரியங்களை
மார்க் அந்தோணி அப்படியே தன் காதல் ராணிக்கு கூறிவிட்டதால்
எகிப்திய மஹாராணி கிளியோபாற்றாவுக்கு என்மீது கோபம். இதுதான் நடந்தது மன்னா”
“ மஹா ஏறோது அவர்களே நான் உங்களிடம் ஒரு விஷயத்தை
எதிர்பார்கிறேன். நீங்கள் என் நண்பர் மார்க் அந்தோணியிடம் காட்டிய அதே ராஜ விசுவாசத்தை
என்னிடமும் காட்டுவீரா… இதுவிஷயமாக எம் தெய்வங்களின் மீது சத்தியம் செய்து தர முடியுமா?”
மஹா பிரபு… இது அடியேன் செய்த பாக்கியம். எம் தெய்வங்களின்
மீதும் ரோமையர்களின் தெய்வங்களின் மீதும் நான் ஆணையிட்டு சொல்கிறேன்.. இந்த யூதேயர்களின்
மன்னராகிய நான் என் உயிர் உள்ளவரை என் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் ரோமைய சீசருக்கு
சமர்ப்பிகிறேன்.”
இத்தகைய
சம்பாஷணைகளால் மன்னர் அகஸ்டச் சீசர் மிகவும் திருப்தியானார். தன் மகிழ்ச்சியைக்காட்ட
மஹா ஏறோது என்னும் பட்டத்தையும் மேலும் பல அதிகாரங்களையும் அவருக்கு அளித்தார். சிலவருடங்களுக்கு
முன் மார்க் அந்தோணியால் பறிக்கப்பட்ட ஜெரிக்கோவையும் மீண்டும் அவருக்கே அளித்தார்.
இதனால் பெரிதும் மகிழ்ந்துபோன மன்னர் மஹா ஏறோது அகஸ்ட்டஸ் சீசருக்கு தன் அன்பளிப்பாக
பல வெகுமதிகளை அளித்தார். பிறகு மஹா ஏறோது தன் தாய் நாட்டுக்கு திரும்பி வந்தார். இதற்குள்
மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பிடித்தன.
தன் கணவரும் மன்னருமாகிய மஹா ஏறோது தன்னைக்காணவருகின்றார் என்று கேள்விப்பட்டதும் மஹாராணி மரியம்மேவுக்கு தலை சுற்றிப்போனது. இந்த கிழவன் நிச்சயம் அகஸ்டஸ் சீசரால் கொல்லபட்டுவிடுவார் என்று நினைத்திருந்த மரியம்மே இனிமேல் தன் நிலை என்ன ஆகுமோ என்று பெரும் கவலையில் மூழ்கினாள். மன்னர் தன்னிடம் ஆசையாக வந்த போது முகத்தை திருப்பிக் கொண்டாள். இது மஹா ஏறோதுவுக்கு பெரும் அவமானமாகப போய்விட்டது. தான் ஊரில் இல்லாதபோது அலெக்ஸாண்டிரியா கோட்டையில் என்னென்ன நடந்தது என்று தன் நண்பனும் தளபதியுமான சோஹிமுஸை கேட்டபோது அவன்,”
மன்னர் பெருமானே…. தாங்கள் சீசரால் கொல்லப்பட்டுவிட்டதாக எங்களுக்கு சேதி வந்தது. உடனே தங்கள் மாமியார் அலெக்ஸாண்டிரா அம்மையார் சமாரியாவிலுள்ள ரோமர் குடியிருப்புக்கு சென்று பாதுகாப்பு கேட்டார்கள்.அவர்கள் தங்களுக்குபதில் நாட்டை தன் வயப்படுத்திக்கொள்ள
ரோமரிடம் ஆதரவு கேட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். தங்கள் மனைவின் நிலை என்றும்போல்
தான் இருந்தது. அவரையாரும் சந்திக்க வரவில்லை.” என்றான்·
“ சோஹிமூஸ்
மரியம்மே என்னைபற்றி ஏதேனும் கூறினாளா?”
மன்னர்
பெருமானே நான் மரியாதையின் நிமித்தமாகத்தான் அவர்களிடம் பேசுவேன். நான் பேசியவரை அவர்களுக்கு
உங்கள் மீது கசப்பு உண்டு என்று கண்டுபிடித்தேன். வேறு எதுவும் எனக்குத்தெரியாது.”
எனக்கும்
என் மனைவிக்கும் உள்ள அந்தரங்கத்தை நீ எப்படி உணர்ந்துகொண்டாய்.. அப்படியானால் நீ அவளிடம்
எப்படி நடந்துகொண்டாய் என எனக்குப்புறிகின்றது என்று சொன்ன ஏரோது அக்கணமே தன் நண்பன்
என்றும் பாராமல் ஒருபாவமும் அறியாத சோஹிமூஸை அப்போதே வெட்டிக்கொண்றான். இதற்கிடையில்
ஏறோதின் தங்கை சலோமி தன்பங்குக்கு ஒருசதி செய்தாள். அதன்படி அரசருக்கு மதுபாணம் பரிமாறுபவனை
தன் கையால் வளைத்துப்போட்டு அவனுக்கு ஆசை பல காட்டி தன் வலையில் வீழ்த்தி மஹாராணி மரியம்மே
தன்னிடம் விஷம் கலந்த மதுபானத்தை கொடுத்து மஹாராஜாவுக்கு இதைக்கொடுக்கச்சொன்னார் என்று
அபாண்டமாக பழி சுமத்தினான்.
ஏற்கனவே தன் மனைவி தன்னை மதிப்பதில்லை என்றும் கணவன்
மனைவி உறவுக்கு சம்மதிப்பதில்ல எனவும் மரியம்மே தன்னை பழிவாங்கவும் தன்னை கொல்லவும்
துணிந்துவிட்டாள் என்று நம்பினான். ஏறோது ராஜா. இதேபோல் தன் மாமியார் தான் இல்லாதபோது
ரோமர்களிடம் அடைக்கலம் கேட்டு தன் ஆட்ச்சியை கவிழ்த்துவிட்டு தானே அரசியாகும் எண்ணத்தில்
இருந்தாள் என்றும் அறிந்து அவர்கள் இருவரையும் தீர்த்துகட்டிவிடும் எண்னதிற்கு வந்துவிட்டான்.
இதற்கு ஆதரவாக சலோமி தன் அண்ணனுக்கு நன்றாக தூபம் போட்டு அவன் கொலை வெறியை மேலும் மேலும்
தூண்டிவிட்டாள்.
ஒரு அரசகுமாரியை
அவள் தயாருடன் கொலைத்தண்டனைக்கு உட்படுத்த அப்போதைய சட்டப்படி அகஸ்டஸ் சீசருக்கு மனு
ஒன்றை அனுப்பினார். அகஸ்டஸ் சீசர் அவனுக்கு மறுமொழியாக இத்தகைய காரியங்களை ஒரு தீர்ப்பாயம்
அமைத்து அதன்படி நியாயம் வழங்குங்கள் என்று மறு மொழி கொடுத்தார். அதன்படி அலெக்ஸாண்டிரியா
கோட்டையில் ஒரு தீர்ப்பாயம் நடைபெற்றது. சலோமியின் சதியின்படி மரியம்மேவின் தாயாருக்கு
கொடுத்த அடியில் அவள் தன் மகள் மேல் பெரும் பழி சுமத்தினாள். ஆதாவது,” அடியே பாவி,
சண்டாளி நீ சொல்லித்தானே நான் ஆட்ச்சியை பிடிக்க ரோமர்களிடம் தூது போனேன்… நீ சொல்லித்தானே
நான் மன்னருக்கு விஷம் கொடுத்தேன்.. நீ சொல்லித்தானே
நான் ஜோசெப்பை உன்னிடம் பழகவிட்டேன். நீ சொல்லித்தானே சோஹிமுஸை உன்னிடம் பழகவிட்டேன்
.நீ நல்லவளாக இரு.. உன் கணவருக்கு துரோகம் செய்யாதே என நான் எவ்வளவோ கூறினேனே. இன்று
பார்த்தாயா… நாம் மாட்டிக்கொண்டோம். எல்லாம் உன்னால்தானே வந்தது. நீ பிறந்த ஹாஸ்மேனிய
குல கௌரவத்திற்கு கேடு விளைவித்துவிட்டாயே…நீ நன்றாக இருப்பாயோ “ என தன் தலையை விரித்துப்போட்டு
கதறினாள்.
மரியம்மேவால்
எதையுமே நம்ப முடியவில்லை. இந்த புனிதமான ஹாஸ்மேனிய குலத்தில் தன்னை பெற்று வளர்த்து
ஆளாக்கிய தன் தாயாரா இப்படி பேசுகின்றாள். உயிரிவிட மானமே பெரிதென்று தன்னை வளர்த்த
தன் தாயாரா இப்படி சாட்ச்சியம் கூறுகின்றாள். அடக்கடவுளே, இந்த உலகத்தில் யாரைத்தான்
நம்புவது?
அப்போது
ஏரோதின் தங்கை சலோமி வந்து அவள் காதில் ரகசியமாக,” இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை.
கால தாமதமும் ஆகிவிடவில்லை. நீ எங்களை எங்கள் தாழ்ந்த குலத்தை அவமதித்துப்பேசிய வார்த்தைகளுக்காக
என்னிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்.. என் அண்ணாரிடம் சொல்லி உனக்கும் உன் அம்மாவுக்குமாக
நான் பரிந்துபேசி உங்களுக்கு உயிர்பிட்ச்சை தருகிறேன். என்னிடம் மன்னிப்புக்கேள்” என்றாள்.
ஆனால்
மஹாராணி மரியம்மே அவளைப்பார்த்த பார்வையில் சலோமியின் சர்வாங்கமும் அடங்கிவிட்டது.
நான் புனிதமான உயர்குலமாகிய மக்கபேயர் எனப்படும் ஹாஸ்மேனிய குலத்திருந்து வந்தவள்.
என் உயிரே போனாலும் நான் செய்யாத குற்றங்களுக்காக மன்னிப்பு கேட்கப்போவதில்லை. அதற்கு
வேறு ஆளைப்பார் என முகத்தில் அறைந்தாற்போல் கூறினாள்
அதற்கு சலோமி உன் திமிர் இன்னும் அடங்கவில்லையா…
பார் உன் உயிர் போகப்போகின்றது” என்றாள்
“ மஹாராணி…
எல்லோருடைய சாட்ச்சியமும் கேட்கப்பட்டுவிட்டது. இதுவிஷயமாக தாங்கள் என்னகூறுகின்றீர்கள்”
என்று கேட்டார் தலைமை நீதிபதி.
“ கணம் கோர்ட்டார் அவர்களே.. நான் எதையும் சொல்ல
விரும்பவில்லை. என் கணவரே என்னை புறிந்துகொள்ளாத போது. அவரே என்னை ராஜ துரோக குற்றம்
சாட்டியபோது அவரே என்னை கொலைகுற்றவாளியாக சித்தரிக்கும்போது….
என்னைபெற்றவளே என்னை விபசாரிப்பட்டம் கட்டிவிட்டபோது இனிமேல் நான் என்ன சொல்லி இந்த
சபையோரை நம்பவைப்பேன்.நான் நம்பவைத்துதான் இனிமேல் என்ன ஆகப்போகின்றது. என் முடிவு
ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று அதற்கு தடையாக நான் நிற்கப்போவதில்லை. நடத்திக்கொள்ளுங்கள்
உங்கள் நாடகத்தை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.ஒரு நாள் உண்மை வெளி வரும்.அந்த நாளில்
நான் வணங்கும் இஸ்ரேலிய தேவன் நிச்சயமாக தீர்வை இடுவார். அப்போது தெரியும் நான் யாரென்று
“ என்று அதிரடியாக முழங்கினாள். அவளது முழக்கத்தைக்கேட்ட அனைவரும் அதிர்ந்தனர். ஆனாலும்
தீர்ப்பு என்று ஒன்றை கூறித்தானே ஆக வேண்டும். அதன்படி குற்றவாளிகளின் குற்றம் சந்தேகமில்லாமல்
நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக கூறினார் தலைமை நீதிபதி.
எந்த அலெக்ஸாண்டிரியா
கோட்டையில் மரியாம்மேவை ஏறோது பெண்பார்த்தாரோ…. எந்த அலெக்ஸாண்டிரியா கோட்டையில் இந்த
மரியம்மேவை திருமணம் செய்துகொண்டாரோ அதே அலெக்ஸாண்டிரியா கோட்டையில் இப்போது மரண தண்டனைக்கைதியாக
வெண்ணாடை உடுத்தி புன்முறுவல் பூத்தபடி நின்றிருந்தாள் மரியம்மே. அவள் முகத்தில் கவலையோ
கலங்கமோ, பயமோ ஏதும் இல்லை. பிறகு அவள் சிரம் கொய்யப்பட்டு இறந்தாள். இறந்தும் அவள்
முகத்தில் வலியோ வேதனையோ கலவரமோ கவலையோ ஏதும் இல்லை. ஆனால் இந்த அநியாயத்தை இயற்கையே
ஏற்றுக்கொள்ளாததுபோல் பயங்கரமாக இடி இடித்தது. நிலங்கள் அதிர்ந்தன. பூமி அதிர்ச்சி
உண்டானது. இந்த பூமி அதிர்ச்சியில் ஜெரிக்கோவில் ஹாஸ்மேனியர்கள் கட்டிவைத்திருந்த கோட்டைகள்
அனைத்தும் இடிந்து விழுந்தன. இது நடந்த வருடம் கி.மு.30
மரியம்மேவை பழிவாங்க ஏரோதும் சலோமியும் அவள் தாயார் அலெக்ஸாண்டிராவையே சாட்ச்சியமாக சேர்த்தனர். அவ்வாறு சாட்ச்சியமளித்தாள்
அவளுக்கு உயிர்பிட்ச்சை தருவதாகவும் இல்லை என்றால் அவளோடு தன்னையும் சேர்த்தே கொண்றுவிடுவதாக
பயமுறுத்தியதாலேயே அவள் அவ்வாறு சாட்ச்சியம் அளித்தாள். ஆனால் நயவஞ்சகமாக மரியம்மையின்
தாயாருக்கு உயிர்பிட்ச்சைதருவதாக வாக்களித்திருந்தும் அதை மீறினான் ஏறோது.
தன்
மகளுக்கு தானே எமனாகிப்போனதாக மரியம்மேயினுடைய தாயார் அலெக்ஸாண்டிரா
மனம் மிகவும் வெதும்பினாள். பிறகு அவளுக்கும் இதே அலெக்ஸாண்டிரா கோட்டையில் மன்னரைக்கொல்லும்
முயற்சியில் மரியம்மேயுடன் உடந்தையாக இருந்ததற்காக அவளுக்கும் இதே தண்டனை வழங்கப்பட்டது.
தாயும் மகளும் அருகருகே புதைக்கப்பட்டனர்.
தங்கள்
தாயும் பாட்டியும் கொல்லப்பட்டதை அறிந்த மரியம்மேவின் புதல்வர்கள் அலெக்ஸாண்டரும் அரிஸ்டொபுலுவும்
மிகுந்த துயரத்துக்கு ஆளாயினர். மூத்தவன் அலெக்ஸாண்டரின் மனைவி கப்பதோக்கிய அரசரும்
பெரிய குருவுமாகிய அர்க்கிலாவூஸ் மகள் கிளைபெரியாவுக்கும் திருமணம் நடந்திருந்தது அல்லவா.அலெக்ஸாண்டர்
தன் மனைவியை மிகவும் கொண்டாடினான். தன் மனைவி ஒரு உயர்தர அரச குடும்பத்தில் பிறந்து
வந்ததில் மிகுந்த கர்வம் கொண்டிருந்தான். ஆனால் அவனிடமிருந்த ஒரு கெட்ட பழக்கம் ஒன்றுக்கும்
மேற்பட்ட அலிகளை வைப்பாட்டிகளாக வைத்திருந்ததுதான். இதனால் அவன் தன் மனவியை நாடாதிருந்தது
அவளுக்கு மிகுந்த வேதனையான விஷயமாக இருந்தது. அதுமட்டுமல்ல அது அவர்கள் குடும்பத்துக்கு
மிகுந்த அவமானமாகவும் இருந்தது. இவன் விஷயம் இப்படி என்றால் அவன் தம்பி அரிஸ்டோபுலு
மன்னர் ஏறோதுவின் சகோதரி சலோமியின் மகள் பெர்னிஸ் என்பவளை திருமணம் செய்திருந்தான்
அல்லவா. அவன் அவன் மனைவியை மிகக்கேவலமாக நடத்தினான். அவர்கள் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த
ஒரு பெண்ணை திருமணம் செய்ததற்காக அவளை வெறுத்தான். தன் மூத்த சகோதரன் மனைவியைப்போல்
உயர்ந்த குல பெண்ணை கட்டாதது தான் வாழ்வில் செய்துவிட்ட மிகப்பெரிய தவறு என்று அடிக்கடி
குத்திக்காட்டுவான். இதனால் கோபமுற்ற பெர்னிஸ் தன் தாய் சலோமியிடம் அடிக்கடி வந்து
மூக்கை சிந்த மிகவும் கடுப்பாகிப்போனாள் சலோமி. எனவே தகுந்த சாட்ச்சியங்களை ஏற்படுத்தி
மரியம்மேவுக்கு செய்ததுபோலவே அவள் புத்திரர்கள் இருவருக்கும் மரண தண்டனை வாங்கித்தரும்
வரை அவள் ஓயவில்லை. அலெக்ஸாண்டரும் அரிஸ்டோபுலுவும் அதே அலெக்ஸாண்டிரியா கோட்டையில்
தூக்கிலிட்டுகொல்லப்பட்டனர். இது நடந்த வருடம் கி. மு.7 ஆம் ஆண்டு.
அவர்கள்
இருவரையும் அவர்தம் தாயாரின் கல்லறை அருகே புதைத்தனர். இவ்வாறு மக்கபேயர் எனப்படும் ஹாஸ்மேனிய அரசகுடும்பத்தை
சேர்ந்த அனைவரையும் கொண்றனர் சலோமியும் அவள் சகோதரன் மஹா ஏறோதும்.
ஆக இந்த
சலோமி தன் சபதத்தை நிறைவேற்ற தன் முதல் கணவனை பலி கொடுத்தாள். தன் மகள் பெர்னிஸின்
கணவனும் மரியம்மேவின் இரண்டாம் புத்திரனுமாகிய அரிஸ்டோபுலுவையும் தன் சதியால் தூக்கிலிட்டாள்.
தன் வாழ்க்கை சீரழிந்துபோவது பற்றியோ, தன் மகளின் வாழ்க்கை சீரழிந்து போவது பற்றியோ
அவள் கொஞ்சம்கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை.ஆக மொத்தத்தில் மக்கபேயர்கள் இனம் எவ்விதத்திலும்
தலை தூக்காதபடி செய்துவிட்ட பாவம் சலோமியையே சேரும்.
என்னதான்
தன் காதல் மனைவி மரியம்மேவை கொண்றுவிட்டபோதிலும் ஏறோதின் மனதில் வெறுமை பற்றிக்கொண்டிருந்தது.
அவளை மறக்க முடியாமல் அவள் உடலை பாடம் செய்து ஏழு வருடம் வைத்திருந்து பிறகே புதைத்தான்.
அதன்பிறகே அவன் பெற்ற அலெக்ஸாண்டரையும் அரிஸ்டோபுலுவையும் கொண்று புதைத்தான். பிறகு
தன் முதல் பட்டத்துராணி டோரிஸ் என்பவளை மீண்டும் அழைத்துவந்து தன் ஹெரோடியம் என்னும்
மலைக்கோட்டையிலேயே குடித்தனம் வைத்தான். இங்கும் ஒரு பிரச்சனை எழுந்தது.
தன் முதல்
கணவனை இழந்திருந்த ஏறோதுவின் சகோதரி சலோமி ஏரோதுவின் முதல் மனைவிக்கு பிறந்திருந்த
அந்திப்பாத்தருடன் மிகவும் நெருக்கமாக பழகினாள். இதை விரும்பாத மன்னர் ஏறோது தன் தங்கைக்கு
மீண்டும் திருமணம் செய்துவைக்க விரும்பினான். இதற்காக அவன் தெரிந்துகொண்ட மாப்பிள்ளை
கோஸ்டொபாரு என்னும் ஒரு இதுமேயன்..இவன் ஒரு யூதனாக மதம் மாற விரும்பவில்லை. மஹா ஏறோதுவின்
தயவால் இதுமேயா மாகாணத்தின் கவர்னராக ஆட்ச்சி பு/ரிந்து வந்தான். சலோமிக்கும் கோஸ்டோபாருக்கும்
திருமணம் ஆகி ஏழு ஆண்டுகளில் ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாக பெற்றுக்கொண்டனர். அந்தப்பெண்தான்
பெர்னிஸ் மற்றது மூன்றாம் அந்திப்பார்த்தர் எனப்படும் ஆண். சலோமியின் இரண்டாம் கணவண்
கோஸ்டோபாருவுக்கும் ஏறொதுவுக்கும் ஏதோ பிரச்சனை. அதனால் சலோமி தன் இரண்டாம் கணவருடன்
ஏழு ஆண்டுகள் வாழ்ந்தபின் அவனை விவாகரத்து
செய்துவிட்டாள். சலோமி கோஸ்டொபாருவை விவாக ரத்து செய்தவுடன் தன் சகோதரன் ஏறோதுவிடம்
அவள் இரண்டாம் கணவன் ஏறோதுவைக்கொல்ல சதிசெய்திருந்தான் என்று கூறிவிடவே கொஞ்சமும் தாட்சண்யம்
பாராமல் கோஸ்டொபாருவை கொண்றான் ஏறோது.
கி.மு. 20. மீண்டும்
சலோமிக்கு மூன்றாவதாக ஒரு திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளையின் பெயர் அலெக்சாஸ். சலோமிக்கு
இந்த மாபிள்ளையை பிடிக்கவில்லை என்றாலும் அவருடன் ஒரு பத்து வருடங்களுக்கும் மேலாக
வாழ்ந்து வந்தாள். இந்த மாப்பிள்ளை அலெக்சாஸுக்கு ஆயுசு கெட்டி போலும்.
சலோமியும்
அந்திப்பார்த்தரும் மிகவும் சகஜமாக பழகி இருந்த காலத்தில் பல விஷயங்களைப் பற்றி பேசியிருந்தனர்.
அவற்றில் ஒன்று ஏறோதுவின் பட்டத்து ராணி டோரிஸின் மகன் அந்திப்பார்த்தர்தான் தனக்குப்பின்
அடுத்த ஏறொதுவாக இந்த யூதேயா தேசத்தின் அரசராக பட்டத்துக்கு வரவேண்டும் என்று மஹா ஏறோதுவால்
அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவருடைய ஆயூசு மிகவும் கெட்டி என்பதால் தனக்கு அரசப்பட்டம்
கிடைக்க இன்னும் அதிக காலம் காத்திருக்க வேண்டும்.அதற்குள் தனக்கு ஆயுள் முடிந்துவிடும்.
பேசாமல் இந்த கிழவனின் கதையை முடித்துவிட வேண்டியதுதான் என்று விளையாட்டாக கூறியதுதான்
வினையாகப்போயிற்று. சதிகாரி சலோமின் குறுக்குபுத்தி இங்கும் வேலை செய்தது. இந்த உரையாடலை
தன் சகோதரன் மஹா ஏறோதுவின் காதுகளில் ரகசியமாகப்போட்டுவிட்டாள்.
எங்கே தன் மகன் தனக்கு எதிராக எழும்பி தன்னை கொண்றுவிடுவானோ என்று பயந்த ஏறோது தகுந்த
சட்ச்சியங்களை ஏற்படுத்தி தன் பட்டத்துராணி டோரிஸையும் அந்திப்பார்த்தரையும் கும்ரான்
மலைப்பகுதியில் யூதேயாவின் தெற்கு எல்லைக்கோட்டையாகிய ஹிர்கேனியாவில் சிறை வைத்தான்.
இதே ஹிர்கேனியா கோட்டையில்தான் அந்திப்பார்த்தர் ஆளுநராக பதவி வகித்தான். இப்போது இதே
கோட்டையில் ஆளுநர் பதவி பறிக்கப்பட்டு விசாரணைக்கைதியாக சிறைபடுத்தப்பட்டான். இந்த
ஹிர்கேணிய கோட்டைக்குள் சிறைப்படுத்தப்பட்டவர்கள் யாரும் உயிருடன் மீண்டும் திரும்பியதே
இல்லை..அக்காலத்திய மரபுப்படி ஏறோது மன்னர் தன் மகன் மீதே கொலைக்குற்றம் சாட்டியுள்ளதால்
ஒரு நீதி விசாரணை குழு ஒன்று அவர்கள் அளிக்கும் நீதியின்படியே தண்டனை வழங்கப்பட வேண்டும்
அதன்படி அப்போது அகஸ்டஸ் சீசரின் ஆளுனராக சிரியாவில் இருந்த பப்லியுஸ் குவின்டிலியுஸ்
வாருஸ் என்பவர் தலைமை நீதிபதியாக அமர்ந்தார். நீதிவிசாரணையில் அந்திப்பார்த்தர் தன்
தாயாருடன் தன் தந்தையை விஷம் வைத்துக்கொல்ல முயற்சித்ததாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும்
இந்த சதிக்கு ஆதாரமாக சலோமியிடம் அந்திப்பார்த்தர் பேசிய உரையாடல்கள் சமர்ப்பிக்கப்பட்டதால்
குற்றம் நிரூபிக்கப்பட்டது என்றும் அதனால் குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை வழங்குவதாகவும்
கூறினர். ஒரு காலத்தில் தன்னுடன் நெருக்கமாகப்பழகிய தன் சொந்த அத்தை சலோமியே தன்னை
கொல்ல தன் தகப்பனை தூண்டிவிட்டிருகின்றாள் என்று அறியவந்த அந்திப்பார்த்தர் தன்னையும்
தன் தாயையும் காப்பாற்ற இனி யாரும் இல்லை என உணர்ந்து இனி எல்லாம் அவன் செயல் என்றார்.
ஒரு வழியாக அகஸ்டச் சீசர் ஏரோதுவின் மூத்தமகன் அந்திப்பார்த்தருக்கும் அவன் தாயார்
டோரிஸுக்கும் மரண தண்டனை நிறைவேற்ற உத்திரவு வழங்கினார். அதன்படி அந்திப்பார்த்தரும்
அவன் தயார் டோரிஸும் அவர்கள் வசித்துவந்த ஹிர்கேணியா மலைக்கோட்டையிலேயே கொல்லப்பட்டு
புதைக்கப்பட்டனர். இந்த துயர சம்பவம் நடந்தது கி. மு. 4 ஆம் ஆண்டு. ( இவர்கள் மரித்த
ஐந்து நாட்க்களுக்குப்பிறகு மஹா ஏரோதும் மரித்தார். ஆனாலும் மஹா ஏரோதுவின் கடைசிக்காலம்
மஹா கொடியதாக இருந்தது.
யூதேயாவின்
மன்னர் மஹா ஏறோது தனக்கு முதல் மனைவியாகவும் பட்டத்து ராணியாகவும் இருந்த டோரிஸையும்
அவர் மூத்த மகன் அந்திப்பார்த்தரை கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கொன்று ஒழித்தான் என்று
கேள்விப்பட்டு அகஸ்டஸ் சீசர் மிகவும் வருந்தினார். அந்திப்பார்த்தரை பொருத்தமட்டில்
“ அவன் ஒரு பண்றியாக பிறந்திருந்தால் அவன் ஒருக்கால் உயிர் பிழைத்திருப்பான்.அவன் ஏறொதுவின்
மகனாக பிறந்ததுதான் அவன் செய்த குற்றம். ஏனென்றால் யூதர்கள் பண்றியை கொல்வதில்லை.)
என்றார்..
ஏறோது
யாராலும் புறிந்துகொள்ள முடியாத ஒரு புதிராகவே வாழ்ந்தார். எந்த நேரத்தில் அவர் என்ன
செய்வார் என்பது யாருக்கும் தெரியது.. தன் தனிப்பட்ட வாழ்க்கையை தவிர மற்ற அரசாங்க
காரியங்களில் மிகுந்த முன்யோசனையுடன் நடந்துகொள்வார். தனக்கோ தன் ஆட்ச்சிக்கோ எந்த
விதத்திலாவது அல்லது யார் மூலமாவது அச்சுறுத்தல் என்றல் அந்த நபரை கொண்று தீர்க்கும்வரை
அவர் தூங்க மாட்டார். இப்படி அவர் செய்த கொலைகளுக்கு கணக்கே இராது..
Anno Domini; கிறிஸ்த்து பிறந்த வருடம்.:
இப்படி இருக்கும்காலத்தில் இவருடைய தூக்கம் நிரந்தரமாக கலையுமாறு ஒரு செய்தி அவர்காதில்
வந்து விழுந்தது. அதுதான் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பு. தன்னைத்தேடிவந்த கீழ்த்திசை
ஞானிகள் மூவர் வந்து ஏறோதனை வணங்கி “ யூதர்களின் அரசர் எங்கே பிறந்திருகின்றார் “ என்று
கேட்டதுதான் தாமதம். அப்படியே கதிகலங்கிப்போனான் ஏறோது.
“ எனக்குப்போட்டியாக
இன்னொறு.யூத அரசனா? யார் அது? என்று அலறினான். இருப்பினும் அந்த புதிய அரசனைப்பற்றி
மேலும் அறிந்துகொள்ளும் ஆவலில் தன் அரசாங்க வான சாஸ்த்திரிகளை யும் வேத விற்பண்ணர்களையும்
அழைத்து இதுபற்றி கேட்டான். அவர்கள் யூதர்களின் அரசர் பெத்லஹேமில்தன் பிறப்பார் என்று
எழுதியிருகின்றது என்றனர். பிறகு ஏறோது நயவஞ்சகமாக மூன்று ஞானிகளிடம்,” நீங்கள் சென்று
பிறந்திருக்கும் புதிய யூத அரசரை கண்டு ஆராதித்தபின் மீண்டும் என்னிடம் வந்து அவரைப்பற்றி
எனக்கு தெரிவியுங்கள். நானும் சென்று அவரை ஆராதிப்பேன்.” என்றான். ஆனால் மூன்று ஞானிகளும்
புதிதாகப்பிறந்திருக்கும் யூதர்களின் அரசரை… மெசியாவை கண்டு தெண்டனிட்டு வணங்கி ஆராதித்து
கனவில் சம்மனசானவரால் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாக தத்தம் நாடுகளுக்கு திரும்பிச்சென்றனர்.ஆயிற்று..
ஆறுமாதங்கள் கழிந்துவிட்டன. புதிய யூத ராஜாவை சந்திக்கச்சென்ற மூன்று ஞானிகளும் தன்னிடம்
மீண்டும் திரும்பி வராததைக்கண்ட ஏறோது கடும்கோபம் கொண்டான். தன் புதிய விரோதியான புதிய
யூத அரசனைப்பற்றி எந்த அடிப்படைத்தடயமும் கிடைக்காமல் போனதால் மிகுந்த கடுப்புடன் தன்
ஆதிக்கத்துக்குட்பட்ட எல்லா இடங்களிலும் பெத்லஹேம் முதல் கலிலேயா வரை உள்ள மூன்று வயதுக்குட்பட்ட
அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல ஆணையிட்டான். அதன்படி எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆண்குழந்தைகள்
எல்லாம் ஈவு இரக்கமில்லாமல் கொல்லப்பட்டனர். தான் மிகவும் நீதியான அரசன் என்று காட்டிக்கொள்வதற்காக
தன்னுடைய மனைவிகளின் இரண்டு ஆண் குழந்தைகளையும் அவை இரண்டு வயதுக்குட்பட்டிருந்தனர்
என்னும் காரணத்துக்காக அவர்களையும் கொன்றான். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. எங்கே
இந்த ஆண் குழந்தைகள் வளர்ந்து வந்து தனக்கு போட்டியாக வந்துவிடுமோ என்னும் அச்சத்தின்
காரணாமாகவே அவன் அந்த குழந்தைகளை கொண்றான். மன்னர் ஏறோதுக்கு பத்துக்கும் மேற்பட்டோர்
மனைவியராய் இருந்தனர். பலர் வைப்பாட்டிகளாய் இருந்தனர். மேலும்பலர் காதல் அடிமைகளாய்
இருந்தனர். இதனால் அவர் பட்ட பாடு கொஞ்சமல்ல.
மன்னர்
ஏறோது மேலும் பல அட்டகாசங்களை செய்தார். தன்னை தன் நாட்டு மக்கள் எவ்வளவு தூரம் வெறுக்கின்றார்கள்
என்று.நன்றாகவே அறிவார். எனவே தன் சாவிலும் மன்னர் மக்களை அதிகமாக வேதனைபடுத்தினார்.
எனவே தன் சாவில் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்றுணர்ந்து அவர்களை துக்கப்படுத்தும்
விதமாக தன் நாட்டு மக்களில் ஒரு நாற்பது உயர் குடி யில் பிறந்தவர்களை குடும்பத்துடன்
கைது செய்து அவர்தம் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்தான். பிறகு அவர்களை சிறையில்
அடைத்து தன் மரண செய்தி அறிவிக்கப்பட்ட உடன் இவர்கள் அனைவரையும் கொண்றுவிட வேண்டும்
என கட்டளையிட்டிருந்தான். அப்போது ஊரே துக்கம் கொண்டடும் அல்லவா. இதுதான் அவருடைய குறுக்குப்புத்தி.
ஒரு வழியாக மன்னர் ஏறோதுவுக்கும் முடிவுகாலம் வந்தது.
மரியம்மே
இறந்தபிறகு பூமி அதிர்ச்சி ஏற்பட்டு ஜெரிக்கோ முதல் ஜெருசலேம் வரை ப்ல இடங்களில அரண்மனைகள்
கோட்டைகள் என பல பெரிய பெரிய கட்டுமானங்கள் இடிந்து வீழ்ந்தன. மன்னர் ஏறோது தான் அதிகம்
நேசித்த இந்த ஜெரிக்கோவின் அரண்மனைகளை மேலும் பல மாற்றங்களுடன் புதுப்பித்தார். இந்த
அரண்மனையிலேயே தன் கடைசிக்காலத்தை கழித்தார். தனக்கு வயதான காலத்தில் மிகவும் நோய்வாய்பட்டிருந்த
காலத்திலும் தன் தனி அறையில் தன் உத்திரவின்றி யார் பிரவேசித்தாலும் அவர்களை கத்தியால்
குத்திவிடுவார். அவர் சாகும் வரை அந்தக்கத்தி அவருடன் இருந்தது. மன்னரை நோய் பெரிதும்
வாட்டியது. நோய் இன்ன காரணத்தினால் வந்தது என்று யாராலும் கணிக்க முடியவில்லை. உடல்
நோயோடு மன நோயும் அவரை வாட்டியது. டோரிஸ் என்னை கொல்லாதே… அந்திப்பார்த்தர் என்னைக்கொல்லாதே…
அலெக்ஸாண்டர் என்னை விட்டுப்போய்விடு. அரிஸ்டோபுலு என் கழுத்தை நெறிக்காதே… அடியே என்
செல்லம் மரியம்மே… நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் தெரியுமா…என்னைக்கொல்லாதே… என்னை
பயமுறுத்தாதே என்று பலவிதமாக பிதற்றுவார் …அழுவார் .உறுமுவார்… பயங்கரமாக அலறுவார்..இப்படியாக
பலநாள் கடந்தது. ஆனால் உடல்வேதனை அவSரை வாட்டி எடுத்தது. வயிற்றில் ஏற்பட்ட கட்டி,
முதுகில் ஏற்பட்ட ராஜ பிளவை என்னும் கொடூரமான கட்டி …அதில்வடியும் சீழ்கள் மிகுந்த
நாற்றம் எடுக்கும்…யாரும் மன்னரை நெருங்க முடியாது. இவை எல்லாம் போக அவரது மர்மஸ்தானத்தில்
பால் வினை நோய் சகிக்க முடியாததாய் இருந்தது. ஆரம்பத்தில் சீழ் வடிந்த கட்டிகளிளிருந்து
பிறகு புழுக்கள் வெளிவரத்துவங்கின. இதனால் மன்னர் ஏறோது அடைந்த வேதனை வார்த்தையில்
சொலி முடியாததாக இருந்தது. மிகுந்த வேதனைக்கிடையே அவர் ஒரு நாள் மரித்துப்போனார். அவன்
புழுத்து செத்தான் என்கிறது வேதாகமம். தனக்குப்பின் தன் மகன் அர்க்கிலாவூஸ் இந்த யூதேய
நாட்டை ஆள வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார். அதுவரை தற்காலிக பொறுப்பு அதிகாரியாக
தன் சகோதரி சலோமியை நியமித்தார். மேலும் யார் யாருக்கு அரச பட்டம் அவர்கள் எங்கெங்கு
அவர்கள் ஆள வேண்டும் எனவும் உயில் எழுதி வைத்திருந்தார். மன்னர்
ஏறோதுவின் உயிலின்படி அவரது உடல் ஆடம்பரமாக ஜெரிக்கோ அரண்மனையிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு
ஜெருசலேமுக்கு அருகிலுள்ள ஹெரோதிய மலைக்கோட்டைக்கு பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு அங்கேயே
மஹா ஆடம்பரத்துடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த யூதேய மக்களுக்கு மன்னர் ஏறோதின் மரணம்
ஒருபோதும் துக்கமாக இருந்திருக்க முடியாது.
மனம்
மாறினாள் சலோமி : தன் தவறான வாழ்க்கையால் தன் சகோதரன் மஹா ஏறொதுவுக்கு எப்பேற்பட்ட
கொடிய மரணம் சம்பவித்தது என்று நினைத்தாளோ என்னவோ சலோமியின் இதயத்திலும் இரக்கம் சுரந்தது.
ஏறொதுவினால் சிறையில் அடைபட்டிருந்த அந்த நாற்பது பேரின் குடும்பங்களும் சட்டப்படி
ஏறோது மரித்தவுடன் கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சலோமியும் அவள் மூன்றாம் கணவன்
அலெக்ஸாஸும் சேர்ந்து தனக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அந்த படுகொலையை நிறுத்தி
அனைவரையும் விடுதலை செய்தனர்.
மஹா ஏறொதின்
உயிலின்படி அவரது மனைவிகளுள் ஒருத்தியான மால்தேஸ் என்னும் ஒரு சமாரிய இளவரசிக்கு பிறந்தவர்
தான் இந்த அர்கிலாவூஸ் ஏறோதின் முதல் மகன் அந்திப்பாஸ் கொல்லப்பட்டுவிட்டபடியால் அற்கிலாவூஸ்
யூதேயா சமாரியா இதுமேயா ஆகிய பகுதிகளின் ஒட்டுமொத்த அரசுக்கும் அதிபதி ஆனார். ஆனால்
இவரது கொடூர அரசாட்ச்சி அவன் தகப்பனையும் மிஞ்சியது.. இதனால் ரோமைய அதிபதியான அகஸ்டஸ்
சீசர் இவன் பதவியை பிடுங்கி இவனை கால் எனப்படும் ஃப்ரான்ஸ் நாட்டுக்கு அனுப்பிவிட்டர்.
அங்கேயே அவன் கதை முடிந்தது. கி.பி.9 ல் இயேசுவின்
எதிரிகளான ஏறோதும் அவர் மகன் அர்கிலாஸும் மறைந்தார்கள் என்று நிச்சயப்படுத்திக்கொண்ட
பிறகுதான் திருக்குடும்பம் எகிப்த்திலிருந்து திரும்பி நாஸரேத்தூர் வந்து தங்கினர்.
ஏறோது அந்திப்பாஸ். விவிலியத்தோடு மிகவும் சம்பந்தப்பட்டவன்.
நாடுகடத்தப்பட்ட ஏறோது அர்கிலாவூஸின் சகோதரன். இவன் தன் இளம் மனைவியும் நபாட்டிய தேசத்தின் இளவரசியுமான பாஷேலியை நேசித்து நல்லபடியாகத்தான்
ஆண்டு வந்தான்.ஆனால் இவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனையாக வந்தவள்தான் ஏறோதியால் என்னும்
ஒரு இளவரசி. இவள் வேறு யாரும் அல்ல. மஹா ஏறொதின் அழகிய மனைவி மரியம்மவுடைய இரண்டாவது
மகன் அரிஸ்டோபுலுவுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். அரிஸ்டோபுலுவின் மகன் தான்
ஏறோது முதலாம் அகரிப்பா. அகரிப்பாவின் இளைய சகோதரிதான் ஏறோதியாள்.இந்த ஏறோதியாளுக்கு
ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆகி விவாக ரத்தானவள். இவளுக்கு ஐந்து பெண்குழந்தைகள்.
இதில் மூத்தவள்தான் சலோமி.ஏறோது அந்திப்பாஸ் இந்த ஐந்து பிளைகள் பெற்ற ஏறோதியாளை (
இவளுக்கு அபிகாயில் என்றும் பெயர் ) மணக்க விரும்பி தன் அழகிய நபாட்டிய மனைவியான பாஷேலியை
மண முறிவு செய்தான். அவள் வேதனையுடன் தன் நபாட்டிய நாட்டுக்கு தன் தகப்பன் ஆரிட்டாஸிடம்
சென்றுவிட்டாள். ஏறோது அவளை சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் வீனாகிப்போனது.
இந்த
அபிகாயில் எனப்பட்ட ஏறோதியாள் ஏறொது அந்திப்பாசுக்கு ஒரு விதத்தில் சகோதரி உறவும் ஆகிறாள்.
மேலும் அவளது மூன்றாவது கணவணாக இருந்த ஏறொது பிலிப்பு என்னும் குறுநில மன்னனால் மணவிலக்கு
பெற்றிருந்தவள். இந்த ஏறோது ஃபிலிப்புவும் ஏறோது
அந்திப்ப்பாஸும் ஒரு தகப்பனுக்கும் அதாவது மஹா ஏறொதுவுக்கும் அவனுடைய வேறு வேறு தாய்க்கும் பிறந்தவர்கள் அதலால் அவர்கள் சகோதரர்கள்
ஆவர். ஆகவேதான் யோவான் ஸ்நானகர் இந்த அநீத விவாஹத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
ஒரு
கணவனுக்கு எத்தனை மனைவியர் இருந்தாலும் அந்த மனைவியர் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர்
சகோதரிகளே.. அவர்கள் பிள்ளைகள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களும் சகோதரிகளும்
ஆவர்.. இப்படித்தான் ஏறோதியாள் எனப்பட்ட அபிகாயில் தாய் வழியிலும் சகோதரி. முறையாகிறாள்.
மேலும்
அவளுடைய மூன்றம் கணவன் பிலிப்பு இன்னும் உயிரோடுதான் இருந்தான்.
யூத சங்கமும் இத்தகைய சகோதர உறவுமுறையுள்ள திருமணங்களை
ஏற்றுக்கொள்வதில்ல. இதனால் அபிகாயில் கோபமுற்று யோவான் ஸ்நானகரை சதியால் கொண்றாள்.
அது எவ்வாறு என்றால் மன்னர் ஏரோது அந்திப்பாஸ் தன் பிறந்த நாளை மக்காரூஸ் எனப்பட்ட
மலைக்கோட்டையில் கொண்டாடினான். இதே கோட்டையில்தான் ஏறோது அந்திப்பஸ் யோவான் ஸ்நானகரை
சிறை வைத்திருந்தான். ஏறோதியால் மகள் சலோமி அவனை மகிழ்விக்க நாட்டியம் ஆடினாள். இதனால்
பெரிதும் மகிழ்ந்த ஏறோது அந்திப்பாஸ் குடிபோதையில் சலோமிக்கு அவள் கேட்கும் எதையும்
தன் ராஜ்ஜியத்தில் பாதியே ஆனாலும் கொடுப்பதாக வாக்களித்தான். சலோமி தன் தாயார் அபிகாயிலிடம்
என்ன கேட்ப்பது என்று கேட்க்க அவள் “ யோவான் ஸ்நானகர் தலை கேள்” என்று பதிலளிக்க சலோமியும்
தனக்கு யோவான் ஸ்நானகரின் தலைதான் வேண்டுமென கேட்க்க மன்னர் பெரும் வருத்தத்துடன் அதற்கு
ஒப்புக்கொண்டான். அதன்படி யோவான் ஸ்நானகருடைய
சிரம் கொய்யப்பட்டு ஒரு தட்டில் வைத்து கொடுக்க அவள் அந்த சிரசை தன் தாய் அபிகாயிலிடம்
கொடுத்தாள். இதனுடைய பின் விளைவு உடனே தெரிய ஆரம்பித்தது.
இதற்கு
சில காலம் கழித்து இயேசுநாதரைப்பற்றிய விசாரணையும் ஆரம்பமானது. இயேசுநாதர் ஒரு கலிலேயர்
என்று அறியவந்த போஞ்சி பிலாத்து அப்போது ஜெருசலேமில் இருந்த ஏறோது அந்திப்பஸிடம் அவரை
விசாரித்து நியாயம் தீர்க்க அனுப்பினான். ஆனால் ஏறோது இயேசுவிடம் பல கேள்விகள் கேட்டும்
அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மேலும் தனக்கிருந்த்
ஒரு ரகசிய வியாதியை குணப்படுத்த வேண்டினான். அவரை விடுதலை செய்வதாக ஆசைவார்த்தை பல
கூறினான். ஆனால் இயேசு மசியவில்லை. இதனால் கோபமுற்ற ஏறொது அந்திப்பாஸ் இயேசுவை ஆகடியம்
பல செய்து மீண்டும் போஞ்சிபிலாத்துவிடம் அனுப்பிவைக்க அங்கு அவர் சிலுவை சாவை தண்டனையாக
பெ/ற்றார். இவ்விதமாக யோவான் ஸ்நாகருடைய சாவிலும் இயேசுநாதரின் சாவிலும் ஏரொது அந்திப்பாஸ்
பங்குபெற்றான்.
தன் மகள்
பாஷேலின் வாழ்க்கை பறிபோனதை தொடர்ந்து நபாட்டிய மன்னர் ஆரிட்டாஸ் ஏறோது அந்திப்பாஸ்மீது
போர் தொடுத்தார். இந்தப்போரில் ஏறோது பெரும் தோல்வி கண்டார்.
தன் தோல்வியின்போது தான் கட்டியிருந்த நாபாட்டிய
இளவரசி பஷேலியைப்பார்த்து,” அடிப்பாஷாலி… என்னை பழிவாங்கிவிட்டாயே பாவி” என்றான். அதற்கு
அவள் “ நீர் எனக்கு செய்ததுமட்டும் என்ன… துரோகம் இல்லையா. நீர் எனக்கு செய்ததற்கு
நான் உனக்கு செய்தது கொஞ்சம்தான்… போய்வா..போய் அந்த கிழவியோடேயே குடித்தனம் செய்துகொள்.
நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” என்றாள் பாஷாலி..
இந்தப்போரின்போது மஹா ஏறோது கட்டியிருந்த
மக்காரியுஸ் என்னும் மலைகோட்டை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. பிற்காலத்தில் யூதர்களின்
விடுதலைப்போரின்போது ரோமர்களின் படையால் மிச்சம் மீதி என எதையும் விட்டுவைக்காமல் முற்றிலும்
அழிக்கப்பட்டது. அந்த சிதிலமான மக்காரியூஸ் மலைக்கோட்டையில் இப்போது ஒன்றும் இல்லை.
இரண்டு கல் ;தூண்கள் மட்டுமே அந்த பிரம்மாண்டமான கோட்டைக்கு சாட்ச்சியமாய் நிற்கின்றது.
யோவான் ஸ்நானகர் தலை வெட்டப்பட்ட நிலவறை சிறை கூட எல்லாம் தகர்ந்துபோயிற்று
கூடிய விரைவில்
தன் ராஜ்ஜியமான கலிலேயாவையும் இழந்தார். இதெற்கெல்லாம் காரணம் ஏறோது அந்திப்பாஸின்
பெரியப்பா மகனாகிய ஏறோது அகிரிப்பா என்பவன். இவன் அபிகாயில் எனப்பட்ட ஏறோதியாளின் சொந்த
மூத்த அண்ணன். .தன் சகோதரன் ஏறொது அகிரிப்பாவின் முன்னேற்றத்துக்காண் காரணம் அவனுக்கு
அப்போதைய ரோமைய அதிபதி காலிகுலாவின் தோழமைதான் என்று கருதி அவனுக்குண்டான சகல உறிமையும்
தனக்கும் இருப்பதாக கூறி தானும் அவள் கணவன் ஏறோது அந்திப்பாஸும் சேர்ந்து ரோமுக்கு
பயணமானார்கள். ஆனால் ஏற்கனவே ஏறோது அகிரிப்பா தன் ஒன்றுவிட்ட சகோதரன் ஏறோது அந்திப்பாஸ்
மீது ராஜ துரோக வழக்குகளை சேர்த்திருப்பதால் ரோமைய மன்னர் காலிகுலா ஏறோது அந்திப்பாசை
கால் எனப்படும் ஃப்ரானாஸ் நாட்டுக்கு நாடு கடத்தினான். அங்கேயே அவர்கள் காலமானார்கள்.
இப்படி ஒரு சதிகாரக் குடும்பத்தைப்பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இது
போதும் இதற்கு மேலும் சொல்வது தேவையற்றது என நான் நினைகிறேன்..
மன்னர் மஹா ஏறோதும் அவர் மகன்
அர்கிலாவூசும் போட்ட வெறியாட்டங்களினால் ரோமர்கள்கூட அவர்களை வெறுத்தனர். இதனால் மன்னர் மஹா ஏறோதுவுக்குப்பிறகு
அவர் வழிவந்த அவருடைய வாரிசுகள் யாருக்கும் மன்னர் என்னும் பதவி கொடுக்க படவில்லை.
அந்த மன்னர் என்னும் தகுதி மஹா எரோதுவோடே போயிற்று. யூதேயா, ஸ்மாரியா,கலிலேயா பீரியா
இதுமேயா போன்ற மாகாணங்களின் முழு அதிகாரத்தையும்
ரோம் தன் கையில் வைத்துக்கொண்டது . ஆனால் யூதேயாவை தன் நேரடி ஆட்ச்சியில் அதன் ஆளுநராக
வருபவர் வைத்துக்கொள்வார். இப்படி இயேசுநாதர்
காலத்தில் ரோமின் அரசாங்க பிரதிநிதியாக வந்தவர் தான் போஞ்சி பிலாத்து. மற்றைய மாநிலங்களான
ஸ்மாரியா,கலிலேயா பீரியா இதுமேயா பகுதிகளை மஹா ஏரொதுவின் பிள்ளைகளுக்கு அவர் எழுதிவைத்துள்ளபடியே
பிரித்துக்கொடுத்து குறு நில மன்னர் ( நான்கில்
ஒரு பகுதி ) என்னும் அந்தஸ்த்தையே கொடுத்தனர். மஹா ஏறோதுவுக்குப்பின்னர் அவர் வழிவந்த
வாரிசுகளுக்கு நிர்வாக திறமை இல்லாததால் ஏறோதிய வம்ஸம் பெயர் சொல்லக்கூட ஆளில்லாமல்
மறைந்து போயிற்று.
முற்றும்.
-