“ அவள் பெயர் ஆக்ளே “இந்த கதையை எழுத ஆரம்பிக்கும் முன்னர் நான் நிறைய விஷயங்களை விளக்க வேண்டி உள்ளது. இதற்காக நாம் இயேசு பிறந்த காலத்து பெத்லஹெய்ம் குகையை பார்க்க செல்வோம். சுவாமி இயேசு ராஜா கால்நடைகளுக்கு தீவனம் வைக்கும் தொட்டியில் துணி ஒன்று போர்த்தப்பட்டு அதன்மீது கிடத்தி வைக்கபட்டுள்ளார். இப்போது குழந்தை இயேசுபிரானை பார்க்க இடையர்கூட்டம் வந்தது. அந்த கபடற்ற ஆன்மாக்களான இடையர்களை தேவதாயார் வரவேற்றார். “ அப்பா இந்த அம்அவர்களுக்கு தங்க சத்திரத்தில் இடம் கிடைக்காததால் மிகவும் தவித்துதான் போனார்கள். வேறு வழி இல்லாததால் நான்தான் இந்த இடத்தை அவர்களுக்கு காட்டினேன் “ என்றான் தேவதாயார் மிகுந்த மகிழ்சியுற்று ஆம் இவன் சொல்வது முற்றிலும் உண்மை. மகனே உன் பெயர் என்ன ? உனக்கு நான் நன்றி சொல்கிறேன். உன் பெயர் என்ன ?
“ அம்மா.. என்பெயர்
அபிரகாம். என் அப்பா பெயரும் அபிரகாம்தான். என்அப்பாதான் எங்கள் இடையர் கூட்டத்தின்
தலைவர் மற்றவர்கள் என் உறவினர். நாங்கள் சிறுவர்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் இவர்களை
உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் தயவு செய்து அறிமுகம் செய்து வையுங்கள்.. இவன் ஈசாக்கு…
இவன் யாக்கோபு என்று ஒவ்வொருவாரின் பெயரை சொல்ல சொல்ல மாதா தன் திருமகனின் காதில் அவரவரின்
பெயர்களை சொல்லிக்கொண்டே வந்தார். குழந்தை இயேசுவும் தனக்கு ஏதோ புறிந்ததுபோல தலையை
ஆட்டிக்கொண்டு தன் மகிழ்ச்சியை ஊஊஊ என்று கூறிக்கொண்டு ஆமோதித்தது. குழந்தை இயேசுவை
காண வந்த இடையர்கள் ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை.
அவரவர் சக்திகேற்ப பால்..பாற்கட்டி.ரொட்டிகள் பழங்கள் குழந்தைக்கு குளிரில் போர்திக்கொள்ள தோல் ஆடைகள் போன்றவற்றை கொண்டுவந்து அவற்றை மாதாவிடம் கொடுத்து” அம்மா… நாங்கள் பொருளாதாரத்திலும் பிறவியிலும் மிகவும் தாழ்ந்தவர்கள். தாங்களோ உயர்குடியில் வந்தவர்கள் எங்கள் தாழ்நிலை பாராமல் எங்கள் காணிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றனர். மாதா மிகவும் சந்தோஷப்பட்டு அவற்றை
ஏற்றுக்கொண்டு “
என் மக்களே
ஆண்டவன் படைப்பில் ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லை. நீங்கள் கொண்டுவந்த காணிக்கைகள் அனைத்தும் எங்களுக்கு தேவையானவைதான், சுத்த இதயத்துடன் கொடுக்கும் எந்த காணிக்கையையும் இறைவனும் ஏற்பார் “ என்றார்
அப்போது ஒரு சிறுவன் தன்னிடமிருந்த சில கூழாங்கற்களை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தான். அவற்றில் ஒரு கல் சிகப்புகல். இந்தக்கல்லின் அழகை பார்த்த தேவ தாயார் மகனே இந்தக்கல் உனக்கு ஏது? இது மிகுந்த விலைபெருமே.இந்த கல்லை நான் பத்திரமாக வைத்திருப்பேன். என் மகனுக்கு விளையாடும் பருவம் வந்ததும் அவனுக்கு கொடுப்பேன் “ என்றார் அப்போது அன்ட இடையர்கூட்ட தலைவர் அப்ரஹாம் “ அம்மா உங்கள்
குழந்தையை சற்று நேரம் என்னிடம் கொடுங்கள்.குழந்தையை சற்றுநேரம் தூக்கிவைத்து கொஞ்சி
மகிழ ஆசிக்கிறேன். “ என்றார் இந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகும் வரை நானும் உயிரோடு
இருக்க ஆசைப்படுகிறேன் ஆனால் இயற்கைக்கு மாறாக நான் வாழ முடியாது. என் முதுமை என்னை
அழைக்கிறது. ஆனாலும் ஒருநாள் இந்த குழந்தை என்னை தேடிவந்து என்னை பார்க்கும். அதுவரை
என் ஆன்மா சாந்தி அடையாது அவருக்காக காத்திருக்கும் “ என்றார்.
இந்த கல்லைப்பற்றிய ஒரு செவிவழி கதை உண்டு. இந்த கதையின் முடிவில் அதைபற்றி சொல்வேன்.
சுவாமிக்கு ஆறுமாதமாக
வயதிருக்கும். அப்போது குழந்தையை கொல்ல கொடுங்கொலன் மஹா ஏரோது தேடுகிறான் என சம்மனசு
எச்சரிக்கை வந்ததை அடுத்து உடனே திருக்குடும்பம் எகிப்த்துக்கு சென்றது. இந்த நிகழ்வை
அடுத்தது நிகழ்ந்தது பயங்கரம் எருசலேமிலும் பெத்லஹேமிலும் இரண்டு வயதுக் உட்பட்ட நூற்றுக்கணக்கான
ஆண் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தபடுகொலைகள் நடத்தபடுவதற்கு முன்னரே திருக்குடும்பம்
எகிப்த்திற்கு தப்பிச்சென்றுவிட்டது. குழந்தை இயேசுவுக்கு ஒன்பது வயது ஆகும்வரை திருக்குடும்பம் எகிப்த்திலேயே வழ்ந்து வந்தனர்.அதற்குள்ளாக பாலஸ்தீனத்தில்
அரசனாக இருந்த மஹா ஏரோது அவன் காலத்தில் செய்த அக்கிரமங்களுக்கு ஏற்ப கொடூரமான நோய்வாய்பட்டு
அவன் உயிரோடு இருக்கும்போதே அவன் உடலில் இருந்த புழுக்கள் அவனை அரித்துதின்றன.மிகுந்த
கொடூரமான் வேதனையுடன் அவன் மரித்தான் அடுத்ததாக மகா ஏறோதின் ஒருமகன் ஏறொது அர்கிலாவுஸ்
என்பவன் யூதேயாவின் அரசனாக ஆட்சிக்கு வந்தான். அவன் தன் தந்தையைவிட கொடூரமாக ஆட்சி
நடத்தினான். இந்த யூதேய நாட்டின் மண்டாலாதிபதியாக
இருந்த ரோமைய ஆட்ச்சியாளர் போஞ்சிபிலாத்து
அவன் ஆட்சியை பறித்து அப்போது கலிலேயா. சமாரியா பகுதிகளுக்கு சிற்றசனாக இருந்த
ஏரோது அந்திபாசுவிடம் ஒப்படைத்தனர். இப்போது ஏறொது அந்திப்பாஸ் யூதேயா, சமாரியா மற்றும்
கலிலேயா பகுதிகளுக்கு சிற்றரசன் ஆனான்.இருப்பினும் அவன் ரோமைய பேரரசுக்கு கட்டுப்பட்டு
நடக்க வேண்டியதாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் திருக்குடும்பம் எகிப்த்திலிருந்து
பாலஸ்தீனம் திரும்பினர்.மிக நீண்ட நடைப்பயணம் அது. நடைப்பயணம் சோர்வாக இருக்கும்போது
இயேசு அந்த இடையர் சிறுவன் கொடுத்த சிகப்பு கூழாங்கற்களை தூக்கிபோட்டு விளையாடிக்கொண்டே
வருவார். ஒருமுறை இயேசு அந்தக்கல்லை வேகமாக
மேலே தூக்கிப்போடவே அது கீழே விழாமல் மேலே மேலே சென்று வானிலேயே நின்றுகொண்டது.
அந்தக்கல் இன்றளவும் அங்கேயே நின்றுகொண்டிருக்கின்றது. காலங்கள் ஓடின. சுவாமி இயேசுராஜாவுக்கு இப்போது
வயது 32.
சுவாமி இயேசுவுக்கு தான் பிறந்த ஊராம் பெத்லஹெய்மை
பார்க்க ஆசை ஏற்படவே தன் பரிவாரங்களுடன் பெத்லஹெய்ம் வந்தார். அவர் தன் பால்ய சினேகிதர்களை
பார்க்க விரும்பினார். ஆனால் அங்கு யாருமே இல்லை. அவருடைய நண்பர்கள் அனைவரும் சிதருண்டு
போய் இருந்தனர். சரி இந்த இடையர்கூட்டம் வாழ்ந்த இடத்தை பார்த்து அங்கிருந்த மக்களிடம்
விசாரித்ததில் இடையர்தலைவர் அபிரஹாம் கல்லரையை கண்டுபிடித்தனர். இயேசு அந்தக்கல்லறையை
திறக்க சொன்னார். கல்லரை திறக்கப்படவே அதிலிருந்த அபிரகாம் உடல் அழுகிபோகாமல் இருந்ததை
கண்டனர்..அப்போது இயேசுநாதர் “ என் நண்பா நீர் ஆசைபட்டபடியே இதோ நான் வந்துவிட்டேன்.
நீர் இனிமேல் நித்தியத்தில் இளைப்பாருவாயாக. உனக்கு சமாதானம் உண்டாகட்டும் “ என்றார். ஆனால் ஒருபெரும் மக்கள்
கூட்டம் இயேசுவை சுற்றி வளைத்தது. இயேசுவே நசரேயனே இங்கிருந்து ஓடிப்போ. உன்னால் நாங்கள்
பட்ட கஸ்டங்களும் போதும். நஸ்டங்களும் பொதும். மேலும் எங்களுக்கு துண்பம் வருவிக்காதே..
போய்விடு “ என்றனர். காரணம் இதுதான்.சுவாமி பெத்லஹெய்ம் குகையில் பிறந்தது பற்றியோ
மூன்று அரசர்கள் வந்தது பற்றியோ திருகுடும்பம் எகிப்த்து தப்பிசென்றதுபற்றியோ உள்ளூர்
மக்களுக்கு உண்மையில் எதுவுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே விசாரணை என்ற பெயரில்
பெரிய ஏறொது பெரும் சித்திரவதையை அந்த பெத்லஹெய்ம் மக்களிடையே அவிழ்த்துவிட்டான். இந்த
கலவரத்தில் பல நூறு குழந்தைகள் கொல்லப்பட்டனர். அவற்றை காப்பாற்றபோன தாய் தந்தையரும்
கொல்லப்பட்டனர். பலரது வீடுகளும் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதற்கெல்லாம்
காரணம் இந்த இயேசுதான்.. எனவே இயேசுவை மிகுந்த அவமரியாதைக்கு உட்படுத்தினர். இயேசுவும்
கணத்த இதயத்துடன் தன் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறினார். ஆனாலும் தன் இடையர்குல நண்பர்களை சந்திக்க தீவிரமாக முயன்றார்.
வந்தது வந்துவிட்டோம் அருகிலுள்ள மலைநாடாகிய ஜெட்டாவில் யோவான் ஸ்நாபகர் வீட்டில் தன் சொந்த பந்தங்களை பார்த்துவருவோம் என்று யேசுநாதர்
மலைநாட்டுக்கு சென்றார் இந்த இடத்தில் நேயர்களுக்கு சில சரித்திர நிகழ்வுகள் சொல்ல
ஆசைப்படுகின்றேன்.
யோவான் ஸ்நாபகரின்
தாயார் எலிசபெதம்மாவும் மாதாவின் தாயார் அன்னம்மாவும்
ஒன்றுவிட்ட சகோதரிகள். எலிசபெதம்மாவின் தாயார் பெயர் இஸ்மேரியா. மரியாவின் தாயார் அன்னம்மாள்.
அன்னம்மாவின் தாயார் பெயர் எமரென்ஷியா. ஆக இஸ்மேரியாவும் எமெரென்ஷியாவும் எம்ரோணியம்மாள்
என்னும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள்
எலிசபெத்தம்மாள் மூத்தவர்.
வயது முதிர்ந்தவர். அன்னம்மாள் இளையவர். எலிசபெத்தம்மாவுக்கு ஆண்டவரின் கிருபையால்
தன் முதிர்ந்த வயதில் யோவான் ஸ்நாபக அருளப்பர்
பிறந்தார். யோவான் பிறந்த பொழுதுதான் மாசில்லா குழந்தைகள் படுகொலை சம்பவம் நடந்தது.
இப்படி ஒரு படுகொலையை மஹா ஏரோது திட்டமிட்டிருபதை
அறிந்த எலிசபெத்தம்மாளின் கணவர் சக்காரியாஸ்
தன் மனைவியை எச்சரிக்க ஜெருசலேமிலிருந்து
ஜெட்டாவிலுள்ள தன் வீட்டுக்கு ஓடோடி வந்தார். ஆனால் அதற்குள் விதிவிளையாடிவிட்டது. எலிஸபெத்தம்மாளின் கண்முன்னே அவர் கணவர் சக்காரியாஸ்
மஹா ஏறோதின் வீரர்களால் வெட்டி படுகொலை செய்யபட்டார். எலிஸபெத்தாம்மாவையும் அவர்குழந்தை
யோவானையும் அவர்கள் வசித்த குகை மூடிக்கொண்டது. அதனால் அவர்கள் இருவரும் உயிர் தப்பினர்.
குகை திறந்துகொண்டதும் எலிஸபெத்தம்மாள் தன்
கணவரை தன் வீட்டுத்தோட்டத்திலே புதைத்தார்.யோவான் ஸ்நாபருக்கு ஐந்து வயதாகும்போது பரிசுத்த ஆவியின் ஆணைப்படி எலிசபெத்தம்மாள்
தன் கு,மாரனை ஜெட்டாவில் பாலைநிலுத்திலுள்ள ஒரு குகையில் வைத்துவிட்டு தன் வீட்டிற்கு
திரும்பினார். யோவானை பரிசுத்த ஆவியானவர் வளர்த்தார். அந்த குகை இன்றளவும் ஒரு திரு
யாத்திரை ஸ்தலமாக இருகின்றது.(saint john, desert monastery ) என்றழைக்கப்படுகின்றது.
எலிசபெத்தம்மாளுக்கு தன் மகனை பார்க்க ஆசைவரும்போதெல்லாம் பாலைவனத்திலுள்ள அந்த குகைக்கு
சென்று தன் மகனை பார்த்துவருவார். இப்படியாக ஒருமுறை பார்க்கவந்தபோது எலிசபெத்தாமாள்
அங்கேயே மரித்தார்.அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரது அடக்கதிற்கு இயேசு,மரியாள்
மற்றும் சூசை ஆகியோர் எகிப்த்திலிருந்து வான்
வழியில் மேகங்களின்மீது அமர்ந்து வந்ததாகவும் நல்லடக்கம் முடிவுற்றதும் மீண்டும் எகிப்த்திற்கு வந்தபடியே சென்றுவிட்டதாகவும் சில கிழக்குரீதி திருச்சபபைகள் கூறுகின்றன.
சில காலம் கழித்து எலிசபெதம்மாளின் எலும்புகள் எடுக்கப்பட்டு ஜெட்டாவிலுள்ள
அவர்கள் வீட்டின் பின்புறமுள்ள குடும்ப கல்லறையில்
அவரது கணவர் சக்காரியாஸ் உடனே அடக்கம் செய்யப்பட்டது. பலகாலம் கழித்து தலைவெட்டப்பட்ட
யோவான் ஸ்நாபரின் உடலும் இதே கல்லரையில் அடக்கம் செய்யப்பட்டது. இத்தகைய காரணங்களுக்காகவும்,
தன் பால்ய சினேகிதர்களை தேடி கண்டுபிடிப்பதற்காகவும் இயேசு நாதர் ஜெட்டாவுக்கு வந்தார்.
ஜெட்டாவில் அவருக்கு பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் காத்துக்கொண்டிருந்தன. அங்கு ஒரு
ஆட்டு மந்தை மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த இயேசு நாதர் ஆவர்களை அணுகி பெத்லஹெய்மின்
இடையர்கள் அபிரகாம் ஈசாக்கு ஆகியோரைபற்றி விசாரித்தார். அந்த இடையர் கூட்ட தலைவன்,”
ராபி.. இது நீர்தானோ… நான் காண்பது கனவா அல்லது நனவா. அன்று நான் கண்ட குழந்தை இயேசு
நீர்தாமோ.நான் காணும் கண்கள் பாக்கியம் பெற்றன உம் அழகிய திருமுகமும் உம் தாயாரின்
திருமுகமும் ஒரே சாயலாகையால் உம்மை நான் எப்படி மறப்பேன். உம் கண்கள் ஒளிவிடும் நீலமணிக்கு
ஒப்பானவை. இந்தப்பார்வையின் வசீகரத்தை நான் எப்படி மறப்பேன் “ என்று கண்ணீர் சிந்தி
அழத்துவங்கினார். இயேசுநாதர் . ஆபிரகாமை கட்டித்தழுவிக்கொண்டு ஆறுதல் பலசொல்லி அவனைத்தேற்றினார்.
ஆண்டவரே உமது பால்ய நண்பர்கள் நாங்கள் பனிரெண்டு
பேர்.அவர்களைப்பற்றி பிறகு சொல்கிறேன். ஆனால் ஈசாக்கின் நிலைதான் மிகவும் பரிதாபாம்.
உம்திருக்குடும்பம் எகிப்த்துக்கு தப்பிச்சென்றதும் மஹா ஏறோதின் வீரர்கள் வந்து எங்கள் இடையர்கூட்டத்தை
விசாரணை என்னும்பெயரில் அடித்துதுவைத்தனர். இதில் பாவம் ஈசாக்கின் இடுப்பு எலும்பு
முறிந்து போயிற்று. இப்போது அவன் பிழைப்புக்காக ஜெட்டாவின் முச்சந்தியில் பிட்சை எடுக்கின்றான்
ஆண்டவரே. இந்த கொடுமையை நான் என்னவென்று சொல்வேன் ..ஆனாலும் பிச்சை இட வரும் பெண்களுக்கும்
குழந்தைகளுக்கும் அவ்வப்போது உம்மைபற்றியும் கதைகதையாக சொல்வான்.” இயேசுவின் கண்கள்
கண்ணீர் சொறிந்தன.
அடுத்துவந்தது கட்டளை
“ ஈசாக்கை என்னிடம் வரச்சொல்லுங்கள்”
“ஆண்டவரே அவன் நடக்க
முடியாதவன்”
|ஈசாக்கை என்னிடம்
வரச்சொல்லுங்கள்”
“ ஈசாக்கு… உன்னை இயேசுநாதர் எழுந்து வரச்சொல்லுகின்றார்
“ வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தான் ஈசாக்கு. அப்போதுகூட அவனுக்கு இடுப்பில் ஒட்டுத்துணிகூட
இல்லை. இந்த நாள் வரை அவனுக்கு அவ்வப்போது உணவூட்டி பராமரித்துவந்த அந்தப்பெண் தன் முக்காட்டால்
அவன் இடுப்பில் போர்த்தினாள். இந்த செயலுக்காக சுவாமி அவளுக்கு தன் நன்றிகலந்த பார்வையை
செலுத்தினார். அப்போதே அவளைப்பிடித்திருந்த தரித்திரம் அவளைவிட்டு அகன்றது.
“ ஆண்டவரே …உமக்கு
நன்றி சொல்லவோ அல்லது பிரதிபலன் செலுத்தவோ என்னிடத்தில் ஒன்றுமில்லை.இந்த ஏழையையும்
ஒருபொருட்டாக எண்ணி என்னைத்தேடிவந்து என்னை மீட்டீரே சுவாமி..உமக்காக என் இரத்தமெல்லாம்
சிந்தினாலும் போதாது. நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்.”
ஈசாக்கு… என் நண்பா..
நீ எனக்காக பட்ட துன்பம் எல்லாம் நான் அறிவேன். அந்த துன்ப நேரத்திலும் நீ என்னை மறாவாமல்
எனக்கு சாட்ச்சியாக வாழ்ந்தாய் அல்லவா. எனக்கு அது போதும் இப்படிப்பட்ட ஆன்மாக்களையே
நான் விரும்புகிறேன் தேடியும் வருகிறேன்.” ஆண்டவரே அடுத்தது எங்கே ?
“ இங்கே உள்ள என்
பெரிய பாட்டி அம்மா எலிஸபெத்தம்மாள் வீட்டுக்கு.”
“வேண்டாம் ஆண்டவரே..
தயவு செய்து அங்கே போகவேண்டாம் “
ஏன் என்னை அங்கே போக
வேண்டாம் என்கிறீர்கள். பெண்களிடையே பிறந்தவர்களுள் யோவானைப்பார்க்கிலும் பெரியவர்
வேறு யாரேனும் உளரோ? அப்பேற்பட்ட புண்ணியவானும் அவருடைய தாயார் புண்ணியவதி எலிசபெத்தம்மாளும்
ஆவருடைய தந்தையார் புண்ணியவான் பெரியகுரு சக்காரியாசும் துயில் கொள்ளும் இந்த வீட்டை
நான் பார்க்க ஆசைப்படுகிறேன். என்னை அழைத்துச்செல்லுங்கள்”
“ ஆண்டவரே வேண்டாம். முன்பு சொர்கத்துக்கு இணையான அந்த வீடு
இப்போது நரகத்துக்கு இணையாக தீட்டுபட்டுவிட்டது. எல்லாம் அந்த வேசியால் வந்த வினை.”
“ வேசியால் வந்த வினையா ? யார் அவள்? அவள் ஊர் என்ன
பேர் என்ன ? அருளப்பா (சுவிஷேஷகர் ) விளக்கமாக கூறு.”
“ ஆண்டவரே… ஒருசமயம்
தற்போதுள்ள பாலஸ்தீன அதிபதி ஏறோது அந்திபாஸ் ராஜாங்க விஷயமாக இத்தாலியிலுள்ள ரோமாபுரிக்கு
சென்றான். பொழுதுபோக்கிற்காக ரோமின் பட்டிணத்தை சுற்றிபார்க்கும்போது அங்குள்ள அடிமைசந்தை
அவன் கண்ணில் பட்டது.அங்கு அழகுப்பதுமையாய் இருந்த இந்த பெண்ணை பார்த்ததும் அவள் மேல்
இச்சை கொண்டு அவளை விலைக்கு வாங்கிக்கொண்டான். தன் நாடு திரும்போது இந்த பெண்ணையும்
தன்னுடனே கொண்டுவந்துவிட்டான்,அவனுக்கு ஏற்கனவே பல மனைவியர். எனவே இவளை யாருக்கும்
தெரியாமல் இருக்க ஜெட்டாவில் ஐன்கரீம் என்னுமிடத்திலுள்ள உங்கள் மூதாதையர் இல்லத்தில்
குடி அமர்த்தினான். அந்த வீட்டை யோவான் ஸ்னானகரின் உறவின் முறையான அருளப்பர் என்பவர்
பராமரித்து வந்தார். ஏறொதின் வைப்பாட்டிக்கு தன் வீட்டில் குடி யிருக்க அவர் மிகுந்த
ஆட்சேபம் தெரிவிக்கவே ஏறோதன் மிகுந்த சினம் கொண்டு அருளப்பரை அடி மேல் அடியாக அடித்து
துவைத்து வெளியே துறத்தி அவளை அங்கு குடியமர்த்தினான். அந்த பெண்ணை அந்த வீட்டிலிருந்த புண்ணிய ஆன்மாக்கள் பலவாறாக
துன்புறுத்தவே ஏறொதனிடம் தனக்கு வேறு வீடு கொடுக்கக்கேட்டாள். ஏறொதன் ராஜாங்க விஷயமாக
அடிக்கடி வெளியூர் செல்லவேண்டி இருந்ததால்
இவள் கோரிக்கையை தள்ளிப்போட்டு வந்தான். இவளது ஜென்ம புத்தி போகுமா… ஏரொதன் இல்லாத
காலங்களில் தன்னைசுற்றியுள்ள ஊர்களிலிருந்த பெரும் பணக்கார்களுக்கு அழைப்புவிடுத்து
அவர்களை தன் வலையில் போட்டுக்கொள்வாள். இவ்விதமாக பெரும் காசுபணம் சம்பாரித்தாள் ஆக்ளே.
“ அவள் பெயர் என்னா?
ஆவள் பெயர் ஆக்ளே.
ஆக்ளே என்றால் அவள் தாய் மொழியில் கேவலம்… அருவருப்பு”
“ அப்படியானால் நான் அந்தப்பெண்ணை அவசியம் சந்திக்க வேண்டும்.
“
: வேண்டாம் ஆண்டவரே…அவள் பெரும் கைகாரி..அவளால் மதியிழந்து,
மானம் இழந்து தன் செல்வம் அனைத்தும் இழந்துபோனவர் ஏறாளம அவள் வல்லவனையும் தட்டும் வழுக்குப்பாறை
போன்றவள் .வேண்டுமானால் நானும் வருகிறேன்
“ அருளப்பா என் சுயகௌரவத்திலும் கட்டுப்பாட்டிலும் உனக்கு நம்பிக்கை இல்லையா?
“ அப்படி இல்லை ஆண்டவரே. ஆக்ளே விஷயம் அப்படி அதனால்தான்….
“ சரி வா என்னோடு. ஆக்ளேயின் வீட்டு வாசலில் நிறுத்திகொள்.”
தன் வீட்டு வாசலில் காலையிலேயே இரண்டு வாலிபர்கள் வந்திருப்பதைகண்ட ஆக்ளே பெறிதும் மகிழ்ந்து வரவேற்றாள் ஆக்ளே. அருளப்பர் வெளியே நின்றுகொண்டார். இயேசுவைகண்ட ஆக்ளே,” வரவேண்டும் வரவேண்டும் இந்த அடிமைக்கு சந்தோஷம்.
தரவேண்டும். என்ன அழகு…. என்ன தேஜஸ்… அடடா இந்த நாட்டில் இப்படி ஒரு அவதார புருஷனை
நான் கண்டதே இல்லை. இன்றைக்கு நான் நரி முகத்தில்தான் விழித்திருக்க வேண்டும் “ என்றாள்.
தன் ஆடை குலைந்திருப்பதுபற்றியோ ஒரு யூத ராபியின் முன் நிற்பதுபற்றியோ அவள் கொஞ்சமும்
கவலைபட்டதாகவோ இல்லை வெட்க்கப்பட்டதாகவோ தெரியவில்லை.. அவள் இயேசுவை தொட முற்பட்டாள்.
“ விலகிச்செல் பெண்ணே “ என்றார் இயேசு அதட்டும் குறளில்..
“ ஐய்யா… இதுவும் நன்றாகத்தான் இருகின்றது. கோபத்திலும் நீர் அழகானவராகவே தெரிகின்றீர்.நானும்
என் அனுபவத்தில் எத்தனையோ பேரை பார்த்திருகின்றேன்.. ஆனால் யாரும் உம்மைபோல் இருந்ததில்லை..என்மனம்
உம்மை அடைய தவியாய் தவிக்கின்றது. வீணே நாடகம் வேண்டாம் “ என மஞ்சதிற்கு அழைத்தாள்.
இயேசுவின் நீலமணிக்கண்கள் ரத்த சிகப்பாய் மாறின.” விலகிப்போ அசுத்தமானவளே…
நான் என் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தவே வந்துள்ளேன்.. போ அப்பாலே “ என்று அவள்
உச்சந்தலையில் ஒரு தட்டு தட்டினார். அவ்வளவுதான். அவள் தலையில் ஆயிரம் இடிகள் விழுந்தது
போல் மயங்கி கீழே விழுந்தாள்.
இயேசுநாதர் ஆந்த வீட்டுத்தோட்டத்தில் ஒரு மண்டபம்
இடிந்திருபதைக்கண்டு அங்கிருந்த தோட்டக்காரனை விசாரித்தார்.
“ ராபி… அந்தக்கொடுமையை
நான் என்னவென்று சொல்வேன். இந்த வீட்டில் சில அசாதாரண காரியங்கள் நடப்பதாக இந்த வீட்டு
எஜமானி கூறியதை அடுத்து ஏறோதன் இந்த கல்லறைகளை
இடித்துதள்ளிவிட்டான். நான் மனம் பொறுக்காமல் அந்த புண்ணியவான்கள் எலும்புகளை எடுத்து அந்த கல் பெட்டியில் போட்டு வைத்திருகின்றேன்.
இவற்றை பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்துக்காப்பாற்றுங்கள் “ என்றான்
இப்படியாக யோவன் ஸ்நானகர். அவர்தந்தை சக்காரியாஸ்.தாயார் எலிசபெதம்மாள் ஆகியோரின் எலும்புகள் பிற்காலத்தில் மிகுந்த வணக்கத்துடன் எடுத்து செல்லபட்டு சமாரியாவிலுளா செபஸ்தே என்னுமிடத்தில் அடக்கம் செய்யபட்டன. முதுபெரும் இறைவாக்கியர் எலியாசின் கல்லறையும் இங்குதான் இருகின்றது.காலத்தின் கொடுமையால் இந்த கல்லறைகள் முஸ்லீம் தர்க்காவாக மாற்றப்பட்டுள்ளன.
சரி… இப்போது ஆக்ளேயை
ப்ற்றி கதைக்கு வருவோம்..இயேசுநாதரால் தலையில் தட்டப்பட்ட ஆக்ளே உடனே மூர்ச்சையானாள்.
அவளுக்கு சுய நினைவு வந்ததும் தன்னில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதை உணர்ந்ததாள்.
இதுநாள்வரை அவள் அறிந்திராத வெட்க்கம் மாணம் அச்சம் போண்ற பெண்மைக்கே உறித்தானா நான்கு
குணங்களையும் உணர்ந்தாள் அச்சமும் நாணமும் அவளை பிடுங்கித்தின்றன. உடனே உள் அறைக்கு
சென்று குளித்து தூய வெண்பணிபோன்ற ஆடைவுடுத்தி இத்தாலிய பளிங்குச்சிலைபோன்ற தோற்றத்துடன்
இயேசுவுக்காக காத்துக்கொண்டிருந்தாள்.
தன் மூதாதையர்களுக்கான அஞ்சலி முடிந்ததும் இயேசுநாதர் ஆக்ளேவின் முன்பாக
வந்துநின்றார். இப்போது ஆக்ளே இயேசுநாதரின் காலடியில் வீழ்ந்து கண்ணீர்பல சொறிந்தாள்.
இப்போது ஆக்ளே இயேசுவின் பாதங்களில் வீழ்ந்திருப்பதை இயேசுநாதர் தடை செய்யவில்லை.
‘ அம்மணி இனிமேலும் நீ பாவம் செய்யாதே. சமாதானத்தில் வாழ்வாயாக “ என்றார்.
இதற்குப்பிறகு ஆக்ளேயினுடைய வாழ்க்கை முற்றிலுமாக
மாறிபோயிற்று இயேசு இல்லாத வாழ்க்கை அவளுக்கு வெறுமையாகிபோயிற்று. ஒரு சில நாட்களுக்குபிறகு
ஆக்ளே யூதாசை கூப்பிட்டு ஆள் அனுப்பினாள். பரம சந்தோஷத்துடன்
அக்ளே வீட்டுக்கு பறந்தோடி வந்தான் யூதாஸ் அவனை வரவேற்ற ஆக்ளே, “ ஐய்யா யூதாஸ் அவர்களே
இந்த பை நிறைய தங்கக்காசுகளும் தங்க நகைகளும் உள்ளன.இவை என் தாயால் என் வாழ்கைக்கு
சீதனமாக கொடுக்கபட்டவை. நான் தவறான வழியில் சேர்த்த பொருட்களை நானே தானம் செய்துவிட்டேன், என் தாய் எனக்கு கொடுத்த இந்த தங்க
காசுமற்றும் நகைகளை இயேசுநாதரின் தர்ம செயல்களுக்கு கொடுக்கும்படி உம்மிடம் ஒப்படைக்கவே
உம்மை அழைத்தேன். ஏற்றுக்கொள்வீராக “ என்றாள்.
“ ஆக்ளே
நீ ஒரு விஷயத்தை யோசித்துப்பார். உனக்கு அபூர்வமான அழகும் ஏறாளமான செல்வமும் இருகின்றது.
நீ ஏன் ஒருவனை திருமணம் செய்துகொண்டு நல்ல ஒரு வாழ்க்கை வாழக்கூடாது. நீ சம்மதித்தால்
நானே உன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன் நீ என்ன சொல்கிறாய்? “ என்றான் யூதாஸ். யூதாசிடமிருந்து இப்படியொரு
பதில்வரும் என்று சற்றும் எதிர்பாராத ஆக்ளே,” ஐய்யா யூதாசே…என்னிடம் வரும் ஆண்களின்
கண்பார்வையை வைத்தே அவர்களின் நோக்கத்தையும் குணத்தையும் புறிந்துகொள்ளும் கலையை நன்றாக கற்றவள் நான். பெண்ணால் சாதிக்க கூடிய அனைத்து கலைகளையும் அறிந்தவள் நான். என் தாயார் எனக்கு என்ன
நோக்கதிற்காக ஆக்ளே என்று பெயர் வைத்தாளோ என் வாழ்க்கையும் அவ்வாறே கேவலமானதாக அமைந்துவிட்டது.
நானும் என் வயதில் எத்தனையோ ஆண்களைப்பார்த்துவிட்டேன் ஆனாலும் உம்மைப்போல் காசு ஆசைபிடித்தவனையோ
பெண்ணாசை பிடித்தவனையோ நான் பார்த்தது இல்லை.
நான் இயேசுநாதரை பார்த்து
இரண்டுநாள் கூட ஆகவில்லை. அதற்குள் நான் அவருடைய அடிமை ஆகிவிட்டேன் ஆனால் நீர் அவருடைய
சீடராய் அமைந்திருந்தும் உன்னை அவரால் புறிந்துகொள்ள முடியாதது எப்படி? அப்படியானால்
அவருக்கு உம்மால் ஏதோ பெரிய காரியம் ஆக வேண்டும். போய் அவருக்கு உத்தமமான சீடராக இருக்க
முயற்சி செய்யும் போய்வாரும்” என்றாள்.
இதற்குபிறகு ஆக்ளே சரித்திலிருந்து மறைந்து போனாள்.
அவளை எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. சில நேரங்களில் யூதேய பாலைவனங்களிலும்
சில நேரங்களில் எகிப்த்திய பாலைவனங்களிலும் வெண்ணாடை அணிந்த ஒருபெண் தன்னந்தனியே செல்வதை பலரும் பார்த்திருப்பதாக
பல கதைகள் நிலவி வருகின்றன.
ஆக்ளெ தன்னிடமிருந்து
மறைந்துகொண்டதை அறியவந்தான் ஏரோது.அதனால் அவன் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவே இல்லை.ஆகளேயை
மனம் மாற்றியது இயேசுநாதர்தான் என்று அறியவந்த ஏறோதன் தன் வைராக்கியத்தை காட்ட தக்க சமயத்துக்காக காத்திருந்தான்.அந்த சந்தர்பமும்
ஆவனுக்கு அமைந்தது.
இயேசுநாதர் போஞ்சிபிலாத்துவால் தீர்வையிடும்
முன்னர் அவர் கலிலேயன் என்பதால் அப்போது ஜெருசலேமில் முகாமிட்டிருந்த ஏரோதனிடம் விசாராணைக்கு அனுப்பினான்.
இப்போது இயேசுவின் உயிர் தன் கையில் என்பதை அவருக்குக்காட்ட “ இதோபாரும் ராபி நீர்
மஹாசக்தி படைத்துடுள்ள ராபி என்பதை நான் அறிவேன்.. எனக்கு ஒரெயொரு காரியம் மட்டும்
செய்யும் உன்னை விட்டுவிடுகிறேன்..என் ஆக்ளேவை என்னிடம் விட்டுவிடும். அவளுக்காக நான்
எதையும் செய்வேன்/ என்னை எதிற்க இந்த கலிலேயா சமரியா மற்றும் யுதேயாவில் எவனுக்கும்
தைரியம் இருந்ததில்லை;”என்றான். மேலும் பல கேள்விகளைக்கேட்டான் ஆனால் இயேசுநாதர் அவனுக்கு
பதில் ஏதும் கூறாதபடியினால் அவரை போஞ்சிபிலாத்துவிடம் திருப்பி அனுப்பிவிடவே இயேசுநாதருக்கு
சிலுவை மரணம் தீர்ப்பு ஆகியது. சுவாமி இயேசுராஜா தன்னை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைத்த
ஆகளேவுக்காகவும் தன் உயிரை பணயம் வைத்தார்.அவளுக்குமட்டுமல்லாது இந்த உலகில் பிறப்பெடுத்த
அனைத்து மனித ஜென்மங்களுக்காகவும் சாத்தானின்
அடிமைதலையிலிருந்து தம் மக்களை மீட்க்க தன் உயிரை பணையம் வைத்தார்.
நேயர்களுக்கு
அந்த சிகப்புக்கல் கதையை தொடர்கிறேன். ஸ்வாமி
இயேசுநாதரால் மேலே தூக்கி வீசப்பட்ட் அந்த சிகப்புக்கல் மேலே நிலைபெற்றுக்கொண்டு
ஒரு கிரகமாக நின்றது.
ஒருமுறை இயேசுநாதர் தன் சீடர்களுடன் பிலிப்பு
செசாரியாவுக்கு வந்தார். இங்குதான் இராயப்பரை ஒரு மாடத்தின் மேல் நிற்கவைத்து,” இராயப்பா…நீ
ராயாய் இருகின்றாய் இந்த பாறையின்மேல் என் திருச்சபையை கட்டுவேன்.நரகத்தின் வாசல்கள்
அதை மேற்கொள்ளாது” என்றார். அப்போது அதுவரை அந்த குகையில் வாழ்ந்துவந்த மனித தலையும்
ஆட்டுஉடம்பும் கொண்ட பான் என்னும் கிரேக்க தெய்வம் பாதாளங்களில் இறங்கியது. அதனால்
அன்று துவங்கி இன்றுவரை இந்த பான் என்னும் தெய்வத்திற்கு பூஜைகள் ஏதும் நடைபெறுவதில்லை.
பெரிய வெள்ளியன்று இயேசு சிலுவையில் மரிக்கவே அவருடைய
ஆன்மா பாதாளங்களில் இறங்கவே அங்கே தங்கியிருந்த பான்தேவதை இனிமேலும் அங்கிருக்க முடியாது
என்று பாதாளத்திலிருந்து வெளியேறி வான் வெளியிலிருந்த சிகப்புக்கல் கிரகத்தில் குடியேறியது.
ஈஸ்ட்டர் அன்று இயேசுநாதர் வெற்றி வீரராய் உயிர்த்தெழவே அண்ட வெளியிலும் இயேசு வெற்றிவீரராய்
பவனிவரவே அதிதூதரான புனித மிக்கேல் சம்மனசானவர் பான் தேவனை தன் வாளாள் ஒரே வீச்சில்
வெட்டிக்கொண்றார். அடுத்து அதிதூதரின் வாள் லூசிஃபேரின் மீது இறங்க உயர்த்தப்பட்டது.
அப்போது இயேசுநாதர்’” மிக்கேலே பொறும். லூசிபேர் என் பரமபிதாவிடம் இன்னும் இரண்டாயிரம்
ஆண்டு தவணை கேட்டிருகின்றான். பரமபிதாவும் அவன் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவனை
இப்போது விட்டுவிடும் “ என்றார்
சுவாமி இயேசுநாதர்
லூசிஃபேருக்கு தவணையாகக்கொடுத்த இரண்டாயிரம் ஆண்டுகள் முடிந்துவிட்டன. நாம் எந்த காலகட்டத்தில்
இருக்கின்றோம் என்பதை நேயர்கள் புறிந்துகொண்டால் சரிதான்.
இயேசுவின் பால்ய சினேகிதர்கள் பண்ணிரெண்டு பேர்கள்
அல்லவா. இந்த கதையை பொருத்தமட்டில் அவருடைய மூன்றுபேர்களின் கதைமட்டுமே இதுவரை சொல்லி
இருகிறேன். மீதி ஒன்பதுபேரின் கதையை சொல்வதற்கு இப்போது இடமில்லை. காலம் அனுமதித்தால்
மீதிபேர்களின் கதி என்னவாயிற்று என்பதைபற்றி பிறகு சொல்லுவேன்.
இயேசுவின் திரு நாமம் என்றென்றும்
வாழ்த்தப்படுவ்தாக,



%20(1).jpg)

%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.jpg)
