Tuesday, October 29, 2013

" நவம்பர் 2. உத்தரிகின்ற ஆண்மாக்கள் தினம்."




                     " நவம்பர் 2. உத்தரிகின்ற ஆண்மாக்கள் தினம்."

      இறந்தோர் வாழ்வில் ஒளி பெறுக... அவர் இறைவா உம்மில் வந்தடைக.... என்ற பாடல் இக்காலங்களில் பிரசித்தம். மண்ணில் பிறந்த யாவரும் என்றைகாவது ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும் இது விதி. ஆக மனிதன் இறந்துபோனால் அவன் எங்கே போகிறான்..நல்லவனாக இந்த உலகில் வாழ்ந்திருந்தால் அவன் மோட்சத்திற்கும், கெட்டவனாக வாழ்ந்திருந்தால்
நரகத்திற்கும் போகிறான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. உலகில் உள்ள எல்லா மதங்களும் அப்படித்தான் கூறுகின்றன..ஆனால் உலகில் நடைமுறையில் இந்த நல்லவன் கெட்டவனாக மட்டும் வாழ்ந்துவிடுவது கிடையாது. நல்லவனாகவும் இல்லை...கெட்டவனாகவும் இல்லை..என்ற பிரிவும் உலகில் உண்டு. நல்லவனாக இல்லை என்பதற்காக அவனை
கெட்டவன் என்றழைக்க முடியாது.. அதேபோல் கெட்டவனாகவும் இல்லை என்பதற்காக அவனை நல்லவன் என்றும் அழைக்க முடியாது.. இப்படி தவளையும் இல்லை..மீனும் இல்லை. இரண்டுக்கும் நடுவே தலைப்பிரட்டை வகையைச்சேர்ந்த மக்கள் தான் இன்று உலகில் அதிகம்.
அப்படியானால் இந்த தலைப்பிரட்டை வகையைச்சேர்ந்த மக்கள் இறந்துபோனால் அவர்கள் ஆண்மா இறந்தபின் எங்கே போகும் என்பது கேள்விகுறி.
      நல்லவன் என்பதற்காக கடவுள் அவனுக்கு மோட்ச்சபாக்கியம் கொடுப்பார்....
        கெட்டவன் என்பதற்காக கடவுள் அவனை நரகத்தில் போடுவார்...
ஒருவன் நல்லவன் இல்லை என்பதற்காக அவனை கடவுள் நரகத்தில் எப்படிப்போடுவார்? ...அவன்தான் கெட்டவன் இல்லையே?
         ஒருவன் கெட்டவன் இல்லை என்பதற்காக கடவுள் அவனை எப்படி சொர்கத்தில் சேர்ப்பார்...அவன்தான் நல்லவன் இல்லையே ? இந்த மாதிரியான் கேள்விகெல்லாம் நம்   திருச்சபையில் பதில் உண்டு. கடவுளாள் ஆகாத காரியம் ஒன்றுமில்லை...ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மை படைத்த கடவுளுக்கு நம்மை ஒன்றுமில்லாமல் போகச்செய்வதற்கு  எவ்வளவு நேரம் பிடிக்கும்..ஆனால் அவருடைய எண்னம் அதுவல்ல.. திருந்திய உள்ளத்தையே அவர் எதிர்பார்க்கின்றார். அதற்காக கடைசிவரை அதாவது ஒருவன் மரணம் வரை   அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுகின்றார்.
          புது நன்மை வாங்கும் பிள்ளைகள் சின்ன குறிப்பிடத்தில் இந்த கேள்வி பதிலை அவசியம் படித்திருப்பர். ஸ்வாமி யேசுநாதர் இறந்தபின்பு அவருடைய ஆத்மா எங்கே போனது?
         பதில்...ஆண்டவருடைய ஆண்மா அவர் இறந்தபின் பாதாளங்களிலே இறங்கி அங்கிருந்த பூண்ணியவான்களுக்கு மோட்ச்ச பாக்கியம் கொடுக்க போனது...  ஆக ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது ஆண்டவர் தீர்மானிக்ககூடிய ஒரு விஷயம்.. எனவே ஒருவன் நல்லவனும் இல்லை அதே நேரத்தில் அவன் கெட்டவனுமில்லை   போன்ற ஆண்மாக்களும் ஈடேற்றம் அடைய, அவர் நம் மீது வைத்த இரக்கபெருக்கத்தால் இந்த உலகில் வாழ்ந்தவரை, ஆண்மாவைகொல்லாமல் செய்த பாவங்களுக்கு மன்னிப்புபெறாமல்   இறந்த ஆண்மாக்கள் மோட்சகதி பெற கொடுத்த ஒரு நல்ல வாய்ப்புதான் உத்தரிக்கின்ற ஸ்தலம்.  இந்த உத்திரிகின்ற ஸ்தலம் இருகின்றதா என்ற கேள்விக்கு பதிலாக அனேக   சரித்திரங்கள் இருகின்றன.     ஆனால் குருக்களின் பாதுகாவலரான ஜான் மரிய வியான்னியின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
       ஜான் மரியவியான்னி பால சன்னியாசியாக இருக்கும்போது படிப்புக்கும் அவருக்கும் வெகு தூரம்..எந்த படிப்பும் அவருக்கு ஏறவில்லை. அக்கால குருமானவர்கள் தாங்கள் எந்த   தேசத்தவராக இருந்தபோதிலும், கட்டாயம் லத்தீன் பாஷை படித்தே ஆகவேண்டும்.. லத்தீன் பாஷையில் அவர் அ..ஆ ..இ.ஈ.. படிப்பதற்குள்ளே அவருக்கு பிராணன் போய்விட்டது.
      இப்படியாக அவருக்கு பலவருடகாலம் சோதனைகாலமகவே கடந்து போய்விட்டது.. இனி இவனை ஒப்பேற்றவே முடியாது என்று கருதிய ரெக்டர் இந்த பையன் நமக்கு வேண்டாம்  என்று அவருடைய பிஷப்புக்கு ஊழியம் செய்ய அனுப்பினார்..அவரோடே ஒரு கடிதம் இணைக்கப்பேற்று பிஷெப்பிடம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் வியான்னியைபற்றிய ரகசிய  அறிக்கையானது.. அந்த கடித்தத்தில் இவ்வாறாக குறிப்பிட்டிருந்தது.
" இவன் ஒரு உதவாக்கரை...படு முட்டாள்...எதற்கும் தகுதியற்றவன். இவனை எல்லாம் வைத்துக்கொண்டு திருச்சபை என்ன செய்யப்போகிறது. இந்தப்பையன் நம்மோடு   பலகாலம் வாழ்ந்துவிட்டதால் இவனை வீட்டுக்கு அனுப்பியும் பயன் இல்லை.. இவனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.."
             இந்த ரகசிய அறிக்கையைப்படித்த பிஷெப் மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.. பிரான்ஸ் தேசத்தில் இப்படியும் ஒரு குருமாணவரா...ஆண்டவர் சோதிக்கிறார்... சரி ஆண்டவர் இவன்மட்டில் என்னதீர்மானம் செய்திருக்கின்றார் என்பதை காலம்தான் தெரியப்படுத்தும் என்று தன்னை சமாதானம் செய்துகொண்டார். ஜான் மரிய வியான்னி கடவுள் பக்த்தியில்  மிகவும் சிறந்து விளங்கியதால் பலகாலங்களுக்குப்பிறகு, ஆயர் அவர்கள் பெரியமனது வைத்து போனால் போகிறதென்று வியான்னிக்கு குருவானவர் பட்டம் கொடுத்தார்.
         அன்றிலிருந்து அவரில் வெளிப்பட்டது ஆண்டவரின் திருவுளம். மரியவியான்னி அவர்கள் குருவானதும் மிகவும் சாதாரணமாக இருந்த அர்ஸ் என்ற ஒரு படு கிராமத்தில் ஒரு தாத்தா   சாமியாருக்கு உதவி குருவாக நியமனம் செய்யபட்டார்.. ஆண்டவருடைய வல்லமை அவரில் வெளிப்பட்டதால் அவர் காலங்களை அறியும் ஆற்றல் பெற்றார். அவர் இறந்த காலங்களை  பார்க்கும் வல்லமை பெற்றார்..மனிதர்களின் ஆண்மாக்களை ஊடுறுவிப்பார்க்கும் ஆற்றலை ஆண்டவர் அவருக்கு கொடுத்திருந்தார்...   அவரிடத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்பவன்  பொய் சொல்லவே முடியாது.    சொல்ல மறந்த பாவங்களை அவரே நினைபூட்டுவார்.. நீ இத்தகைய பாவங்களை இந்தந்த இடத்தில் இந்தந்த நேரத்தில் இன்னின்னவரோடு
செய்திருகின்றாய்.. ஒப்புக்கொள்கின்றாயா.. என்பார்..
        இத்தகைய பாவமன்னிப்பு பெற்றவர்களாள் ஜான் மரிய வியான்னி குயூர் டீ அர்ஸ் பட்டிணத்தில் புகழ் பெற்றார். இதனால் அவர் கூரியதாஸ் என்றும் அழைக்கப்பட்டார்.  இவரை சோதிக்க அந்த அர்ஸ் பட்டிணத்தை சேர்ந்த பேர் பெற்ற விபச்சாரி அவரை சந்திக்க வந்தாள்.. அப்போது அவர் பலிபூசை நடத்திக்கொண்டிருந்தார். பூசையை நிறுத்திவிட்டு   அவள் பெயரை சொல்லி "அங்கேயே நில்... உன் மாசுபட்ட பாதங்களோடும்,  ஆண்மாவோடும் இந்த ஆலயத்துக்குள் வறாதே" என்றார்.. அந்த விபச்சாரி பயந்து நடுங்கி தன்னை
மன்னிக்கும்படி மன்றாடினாள்... அவள் மேல் பரிவுகொண்ட வியான்னி பூசையை பாதியில் நிருத்திவிட்டு அவளுக்கு பாவ சங்கீர்த்தனம் கொடுக்க வந்தார்.
     பாவ சங்கீர்த்தனத்தின்போது அவள் வாயிலிருந்தும் அவள் முகத்திலிருந்த அத்தனை திறப்புகளிருந்தும் பெரும் பாம்புகளும் பெரும் நட்டுவாக்காளிகளும் விஷ ஜந்துக்களும் போன்ற   ரூபத்தில் அசுத்த ஆவி அவளிடமிருந்து வெளிப்பட்டது. இதைக்கண்ட பங்கு மக்கள் பெரும் திகிலுற்றனர். ஜான் மரிய வியான்னி பெரும் தீர்க்கதரிசி என்று போற்றினர்...
       ஒரு நாள் ஒரு பெண் தலைவிரிகோலமாக அவரிடம் அழுது
 கொண் டுவந்தாள்.. வியான்னியின் கால்களில் விழுந்து கதறி அழுதாள்.. அவளை சமாதானம் செய்வதற்குள்  வியான்னிக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. ஒரு வழியாக அவள் கூறினாள்," ஸ்வாமி... என் கணவர் பெரும் குடிகாரர்..குடிவெறியில் ஆற்றிலிருந்து கீழே குதித்து தற்கொலை
செய்துகொண்டார்.. அவர் நரகத்திற்குத்தான் போய் இருப்பார் என்று எல்லோரும் சொல்லுகின்றார்கள்..என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை... தயவு செய்து அவருக்கு என்ன   ஆயிற்று என்று சொல்லுங்கள்... நீங்கள் தான் காலத்தை அறியும் வல்லமை கொண்டவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள் " என்றார்..
       ஜான் மரிய வியான்னி கண்களை மூடி ஜெபித்தார். அப்போது அவர் கண்ட காட்ச்சியை அவளிடம் இவ்வாறு விவரித்தார். " மகளே, உன் கணவன் தற்கொலை செய்துகொண்டது   உண்மைதான்..இருப்பினும் அவன் சாகும் முன்பாக கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.. ஆற்றின் மீதுள்ள பாலத்திலேறி தண்ணீருக்குள் குதித்து மூழ்கும் முன்பாக அவன்
கடவுளின் மன்னைப்பை கேட்டதால் ஆண்டவரும் அவன் மீது இரங்கி அவனை மன்னித்ததுமல்லாமல் அவனை நரகத்திற்கு தீர்ப்பிடாமல் உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு தீர்வை இட்டு   உள்ளார். ஆகவே மகளே அவன் தற்கொலை செய்துகொண்டதால் நரகத்திற்கு பாத்திரவானாயினும் கடவுளின் மன்னிப்பு அவனுக்கு கிடைத்ததால் அவன் உத்திரிக்கின்ற
ஸ்த்தலத்திலிருந்து என்றாவது ஒரு நாள் மோட்ச்சபாக்கியம் பெருவான் என்ற நம்பிக்கையோடு உன் வீட்டிற்கு சமாதானமாய் போ " என்றார்.
      ஆக உத்திரிகின்ற ஸ்தலம் என்பது நமக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு பெரும் கொடை என்றும் கடவுள் நம் மீது கொண்ட இரக்கம் எவ்வளவு என்றும் நாம் உணர்வோமாக..
       இதே போல் நரகம் உண்டோ? உண்டு என்கிறது வியான்னியின் சரிதை.. பேர்பெற்ற ஜான் மரிய வியன்னி தூங்கும் போது அவர் மீது நரக நெருப்பை சாத்தான் வீசினான்.  அந்த நரக நெருப்பு அவரை தொடவில்லை.. ஆனால் அவருடைய கட்டில் எரிந்தது. ஜான் மரிய வியான்னி சாத்தனைப்பார்த்து, " சாத்தானே நரகம் உண்டு என்பதற்கு மக்கள்   நம்பும்படியாக நீ வந்ததுதான் வந்தாய்.. உன் கையை இந்த வீட்டின் நிலையில் வைத்துவிட்டுப்போ... நீ இங்கு வந்து போனாய் என்பதற்கு அது அத்தாட்சியாய் இருக்கட்டும்"
என்றார். சாத்தானும் அவருக்கு கீழ்படிந்து அவன் கையை அவர் வீட்டு நிலையில் வைத்துவிட்டுப்போனான்.. உடனே அந்த நிலை எரிந்தது. அந்த எரிந்த நிலைக்கதவு  இன்றளவும் கரிகட்டையாய் உள்ளது. அதை முகர்ந்துபார்ப்பவர்களுக்கு இன்றளவும் அந்த நரகத்தின் துர்நாற்றம் வீசும்.
         தாவீது ராஜா பாடிய பாடல் இவ்வாறாக உள்ளது. " ஆண்டவரே, நீர் எம் குறைகளைப்பாராட்டுவீராயீன் உம் திருமுன் நிலை நிற்க கூடுபவன் யார்? ஆனால் உம்மிடம் மன்னிப்பு   உள்ளதால் பயபக்தியுடனே உம் தாழ் பணிந்தேன்". இந்த மன்னிப்பின் வெளி அடையாளம்தான் இறந்த ஆண்மாக்களுக்கான உத்திரிகிற ஸ்தலம்.
       இந்த உலகம் இருக்கும் வரைதான் உத்தரிகிற ஸ்தலமும் இருக்கும்.. உலகம் முடிந்துபோனால் அதற்கு தேவை இருக்காது. எனவே அதுவும் முடிந்துபோகும்.. அதற்குப்பின்  இருவகை ஆண்மாக்கள் தன் இருப்பர். ஒன்று நல்லவர் .. மற்றவர் கெட்டவர்.. நல்ல ஆண்மாக்களுக்கு மோட்ஷமும், கெட்ட ஆண்மாக்களுக்கு நரகமும் தப்பாது கிடைக்கும்.  மோட்ச்சமும் நரகமும் நித்தியத்துக்கும் இருக்கும். அவற்றுக்கு முடிவு என்பதே இராது.



.

Saturday, October 5, 2013

" ஜேயல் என்னும் ஒரு வீரப்பெண்."



                                 " ஜேயல் என்னும் ஒரு வீரப்பெண்."
      யேசுநாதரின் காலத்திற்கு 1200 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலியர்களின் வரலாற்றில் அரசர்கள் எனப்படுபவர்கள் இல்லை. ஆண்டவரே அவர்களை தன் நேரடிப்பர்வையில் அவர்களுள் தோன்றிய நியாயதிபதிகள் வாயிலாக ஆண்டுவந்தார். அவர் சேனைகளின் ஆண்டவர் அல்லவா... எனவே அவர் தம் இனமாக தேர்ந்துகொள்ளப்பட்ட அந்த இஸ்ராயேல் மக்களை ஒரு துன்பமும் நேராதபடிக்கும் எதிரிகள் கையில் வீழாதபடிக்கும் ஒரு தகப்பன் தன் மக்களை காப்பதுபோல் காத்துவந்தார். ஆனால் அந்த இஸ்ராயேல் மக்கள் நன்றி மறந்து
தங்கள் தெய்வத்தை மறந்தததுமில்லாமல் அவருக்கு எதிறாக திரும்பி வேறு தெய்வங்களை வழிபடும்போது .....நம்மைத்தவிர வேறு தெய்வம் உனக்கில்லாமல் போவதாக என்னும்   கட்டளையை மீறும்போதெல்லாம் இஸ்ராயேல் தேவன் மிகுந்த கோபம் கொண்டு அவர்களை எதிரிகளிடம் ஒப்படைத்து நன்றாக நைய்யப்புடைத்து வதைபட வைத்துவிடுவார்..
. மீண்டும் அந்த இஸ்ராயேல் மக்கள் மனம்திரும்பி ஆண்டவரே இரக்கமாயிரும் எங்கள் பாவங்களை பொருத்தருளும் என்று மனம்வெதும்பி அழும்போது அவர்களுள் தோன்றும்   தீர்க்கதரிசிகள் வாயிலாக அவர்களை மன்னித்ததாக கூறி மீண்டும் அவர்களுக்கு விடுதலை அளிப்பார்.
      இப்படியாக இந்தக்கதை நடைபெறும்போது இஸ்ராயேல் மக்களின் நியாயதிபதியாக வாழ்ந்தவர் தெபோரா என்னும் ஒரு பெண் தீர்க்கதரிசி. அவர் ராமாவுக்கும் எப்பிராயீமுக்கும்  இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்துவந்தார். இவரது கணவரின் பெயர் லாப்பிடோத் எனப்படுபவர். அதாவது வெளிச்சம் எனப்படும் பெயர் கொண்டவர். இவர் சீலோ என்னுமிடத்தில்  ஆண்டவரின் கூடாரத்தில் எப்போதும் எரியும்படியாக எண்ணையும் தீவட்டியும் வைத்து காத்து வந்தவர். மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். இவர்கள் காலத்தில் இஸ்ராயேல் மக்கள்  தங்களின் கடவுளுக்கு ஆகாத பாவங்களான பிற தெய்வ வழிபாடு செய்பவர்களாகவும் மிகுந்த செல்வங்களுக்கு ஆசைப்பட்டும் உடல் இச்சைகளுக்கு ஆசைபட்டும் தங்களுக்கு  தோன்றியபடி எல்லாம் வேற்று தெய்வ உருவ வழிபாடு செய்து வந்த காரணத்தால் அவர்கள் தெய்வமான இஸ்ராயேல் தேவன் அவர்களை கடுமையாக சபித்து மிகவும் கொடுமையாக
தண்டிக்க அவர்களின் எதிரிகளான கானானியர்களிடம் ஒப்படைத்தார்.
அப்போது கானான் தேசத்தை ஆட்சி செய்துவந்த மன்னன் பெயர் ஜாபின். மன்னன் ஒரு கொடுங்கோலன் என்றால் அவன் தளபதி செசேரா அவனிலும் கொடும்கோலன்.
       இந்த ஜாபின் மன்னனும் அவன் தளபதி செசேராவும் இந்த இஸ்ரேல் மக்களுக்கு செய்த கொடுமைகளை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. இப்படியாக இந்த இஸ்ரேலிய மக்கள்  இந்தகொடுங்கோலர்கள் ஜாபினுடனும் சிசேராவுடனும் மாட்டிக்கொண்டு ஒரு இருபது ஆண்டுகள் கடும் வேதனையில் வாழ்ந்தார்கள். பிறகு வழக்கம்போல ஆண்டவரே இரக்கமாயிரும்...   எங்கள் பாவங்களை மன்னியும் என்று அழுது மன்றாடியதைக்கேட்ட அவர்கள் இஸ்ரேயேல் தேவன் அவர்களை மன்னிப்பதாகவும் இவர்களுக்கு விரைவில் சுபிக்க்ஷம் உண்டாககும் என
வாக்குறுதி அளித்தார். அவரது வாக்குறுதியின்படி தெபோரா என்னும் தீர்க்கதரிசினி எழுந்தாள்.
       இந்த தெபோரா என்னும் பெண் தீர்க்கதரிசிக்கென சொந்த வீடோ இடமோ இல்லை. ஒரு பேரீட்சை மரத்தடியில் அமர்வார்.. தன்னிடம் எதிர்காலம் பற்றிப்பேச வந்திருக்கும் இஸ்ராயேல்   மக்களுக்கு அவர்களின் எதிர்காலங்களின் பலன்களை எடுத்துரைப்பாள். மொத்தத்தில் இஸ்ராயேல் மக்கள் போற்றும் ஒரு சிறந்த நீதிபதியாய் விளங்கினாள். மக்களுக்கும் இவர் மீது  பெரும் மதிப்பும் நம்பிக்கையும் இருந்தது. இப்படி இருக்கையில் ஒருநாள் ஆண்டவரின் அருள் வாக்கு இவரில் இறங்கியது. அவர் தெபோராவின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலியர்களின்   தளபதியாய் விளங்கிய பாராக் என்பவரை அழைத்தார். அவர் அபினோயாம் என்பவரின் மகன்.
        " இதோ நாம் இந்நாளில் செசேராவை உம் கையில் ஒப்புவித்தோம்..நீ உடனே புறப்பட்டுச்சென்று அவனை வெல்வாயாக... இதோ நாம் உமக்கு முன்பாக அவனிடம் செல்வோம் " என்றார். தெபோரா பாராக்கை அழைத்து, " பாராக்... நம்மிடம் சிறந்த பத்தாயிரம் போர் வீரர்களை அழைத்துக்கொண்டு உடனே தானாத் என்னுமிடம் செல்வாயாக.. அங்கு உன் சார்பாக நம் சேனைகளின் ஆண்டவர் ஜாபினுக்கும் சசேராவுக்கும் எதிராக போரிடுவார்.. வெற்றி நமதே..உடனே புறப்ப்படு" என்றார்.
         இந்த கானானிய மன்னன் ஜாபின் அசீரியாவிலிருந்து வந்தவன். மிகுந்த போர் பயிற்சி பெற்றவன். அவன் தளபதியும் அவ்வாறே. அசூர் கோட்டையில் தங்கி இருந்தான்.  இவர்களிடம் அக்காலத்தில் 900 தேர்படையும் மிகப்பெரும் குதிரைப்படையும் எண்ணிறைந்த காலாட்ப்படையும் இருந்ததால் எந்த எதிரியும் இவர்கள் பேரைக்கேட்ட மாத்திரத்தில்   அஞ்சுவார்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்களை வெல்ல அக்காலத்தில் யாரும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு எதிரியுடன்தான் நம் பாராக் வெற்றிகொள்ள வேண்டும்.
தெபோராவிடம் அருள்வாக்கு கேட்ட பாராக் சற்றே அஞ்சினான். இருப்பினும் கடவுளின் அருள்வாக்கில் நம்பிக்கொண்ட அவன்" அம்மணி,...தற்போது நம்மிடம் ஒரு பத்தாயிரம் போர்  வீரர்தான் உண்டு. அவர்களை தபோர் மலையில் நிலை நிருத்தி வைத்திருக்கின்றேன். மேலும் படை வீரர் தேவை... என்னசெய்வது? " என்றான்.
         தெபோரா, " பாராக்.. ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்.. நம் சகோதர இனமான எஃப்ராயிம், மாக்கீம், சபுலோன், இசக்கார், நாப்தாலி இவர்களிடம் முடிந்தவரை உதவி கேள்... முடியவில்லை என்றால் பரவாய் இல்லை... ஆண்டவர் நம்மோடு இருக்கும்போது நீ ஏன் அஞ்சவேண்டும்?" என்றார். இருப்பினும் பாராக் ஆண்டவரின் மீது பாரத்த்தைப்போட்டுவிட்டு
தாபோர் மலையில் நிலை பெற்றிருந்த தன் வீரர்கள் பத்தாயிரம் பேரை சந்திக்க தாபோர் மலைக்கு சென்றார்.
[ நேயர்களும் இந்த தாபோர் மலை பற்றி சற்றே அறிந்துகொள்வது அவசியம்]
        ஒரு எரிமலை போல் தோற்றமுடைய நெடிதுயர்ந்த தபோர் மலை உண்மையில் ஒரு எரிமலையே அல்ல. ஏறக்குறைய 4300 கற்படிகள் போன்ற அமைப்பின் மேல் சமதளத்தில் அமைந்த  ஊர் தான் தாபோர். தரையிலிருந்து செங்குத்தாக இரண்டறை கி.மி. உயரம் உடையது. அக்காலத்தில் ஒன்று குதிரையின்மேல் பயணம் செய்து தபோர் மலைப்பட்டணத்தை அடையலாம்.
அல்லது கால் நடையாக சென்றும் அடையலாம். யேசுநாதரும் அவருடைய சீடர்களான ராயப்பர், அருளப்பர் அவர் சகோதரர் பெரிய யாகப்பரும் கால நடையாகத்தான் இந்த மலையை  ஏறி அடைந்தனர். வழியில் சாப்பிடவோ குடிக்கவோ எதையும் கொண்டு வர வேண்டாம் என யேசுநாதர் கண்டிப்பாக கூறிவிட்டார். அவர்களுக்குதேவையானவை அனைத்தும் அங்கே
அவர்களுக்கு கிடைக்கும் என்றார். ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் நடந்து மலை உச்சிக்கு சென்றனர். அங்கு பல குகைகள் இருந்தன. இந்த குகைகளில் மலாக்கியா தீர்க்கதரிசி.   எலியாஸ் தீர்க்கதரிசி தேவ குரு மெல்கிசதேக் போன்றவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். முதுபெரும் தந்தை அபிரஹாம் தேவகுரு மெல்கிசதேக்கை சந்தித்ததும் இங்குதான்.
இந்த குகைகளில் யேசுநாதர் சற்றே இளைப்பாறி தம் சீடர்களுக்கு போதித்ததும் செபித்ததும் நடந்தது. ஆயிற்று. இரவு பன்னிரெண்டு மணி ஆனது. அப்போதுதான் யேசுநாதர்   தான் யார் என்று காட்டவும் இந்த உலகிற்கு எதர்காக வந்தோம் என்று காட்டவும் மறு ரூபம் ஆனார்.
      அவரது முகமும் உருவமும் ஒளிர்ந்துகொண்டே போனது. அது கண்கூசும் அளவுக்கு ஒளிர்ந்ததால் அவருடைய சீடர்கள் மூவரும் தலைகுப்புற வீழ்ந்து அந்த ஒளியினூடே தோன்றிய  காட்சிகளைக்கண்டனர். வானம் திறந்தது...பரலோகம் தெரிந்தது. பரிசுத்த பரமபிதா ஒரு வயதானவர் தோற்றத்துடன் தோன்றினார். பரிசுத்த ஆவியானவர் ஒரு குழந்தையின்
முகத்தோடும் பறவையின் உடலோடும் தோன்றினார்.. பலவிதமான சம்மனசுகள் பலவிதமான தோற்றத்தோடு தோன்றினர்.. சிலர் வீரர்கள் போன்றும் பலர் இரக்கை விரித்தும் பலர்  தேவாலய குருக்கள் போலும் தோன்றினர். அவரவர் தங்களுக்குள்ள வல்லமையோடும் உருவங்களோடும் தோன்றவே ராயப்பர் மிகுந்த பரவசப்பட்டு " ஆண்டவரே இவர்கள் எல்லாம் யார்'   என்று கேட்டார். அப்போது யேசுநாதர் " இவர்கள் நம் ஊழியர்கள் " என்றார்.  அப்போது ராயப்பர் " ஆண்டவரே தேவறீர் அனுமதித்தால் நாங்களும் உங்களுக்கு எல்லாவிதமான   ஊழியமும் செய்வோமே" என்றார். அப்போது யேசுவின் முகம் இன்னும் அதிபிரகாசமானது.. சற்று நேரத்தில் அவரது திருமேனி ஊடுருவிப்பார்க்கும் தோற்றமுடையதானது.
பரலோகத்திலிருந்து வந்த ஒரு வல்லமையான ஒரு ஒளிக்கற்றை யேசுநாதரையும் அவருடைய மூன்று சீடர்களையும் சூழவே அவர்கள் அனைவரும் ஆனந்த பரவச நிலை   அடைந்தனர். அந்த நிலையில் அவர்கள் அனைவரும் அந்தரத்தில் எடுக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு காட்சி அருளப்பட்டது. மோசேயும் எலியாஸ் தீர்க்கதரிசியும்
யேசுநாதரோடு அலவளாவிக்கொண்டிருந்தனர். மோசே " ஆண்டவரே தேவரீருடைய மனிதாவதாரத்தில் மீண்டும் இஸ்ராயேல் மக்களை முன்பு எகிப்த்தில் பாரோன் அடிமைத்தனத்திலிருந்து மீட்டது போல இப்போதும் அவர்கள் பாவத்தனத்தலிருந்து மீட்டருளும் ஸ்வாமி " என்றார். அப்போது மனிதாவதாரமாக ஒரு உருவமும் வந்தது அது மலாக்கியா
தீர்க்கதரிசியினுடையது. அவர் மனிதாவதாரமாக இருந்தாலும் அவர் ஒரு சம்மனசைப்போல் காணப்பட்டார். ஆனால் அவர் ஒரு வார்த்தைகூட பேச வில்லை.
       இந்த காட்ச்சியினூடே யேசுநாதர் தன்பாடுகளைப்பற்றியும் தன்மரணம் பற்றியும் தன் உயிர்ப்பை பற்றியும் அறிவித்தார். இந்த காட்சிகள் முடியும் சமயத்தில் பரமபிதா தன் அன்பார்ந்த மகன் யேசுவைப்பற்றி சாட்ச்சியம் கூறினார் " இவரே என் அன்பார்ந்த மகன் ..இவரில் நான் பூரிப்படைகிறேன்... இவருக்கு செவி கொடுங்கள் " என்றார். இத்தகைய வார்த்தைகள்
அப்போஸ்த்தலர்களை பொருத்ததமட்டில் இனிமையான ஒரு குறளாகவும் மலையின் அடிவாரத்தில் வாழ்ந்த மக்களுக்கு இடி இடிப்பதைப்போன்றும் கேட்டது.
        பிறகு காட்சி முடிந்ததும் அப்போஸ்த்தலர்கள் தாங்கள் தரையில் இருக்கக்கண்டார்கள். அப்போது யேசுநாதர் அவர்களை தொட்டு " அஞசாதீர்கள்...மனுமகன் பாடுகள் பட்டு  உயிர்த்தெழும் வரை நீங்கள் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யாரிடமும் பேசக்கூடாது என கண்டிப்பாக கட்டளை இட்டார். அப்போது ராயப்பர் " ஆண்டவரே இந்த இடம்
எவ்வளவு அழகானது.. இந்த இடத்தில் தேவரீருக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைத்து இங்கேயே இருப்போம்" என்றார்.
       யேசுவின் மறுரூபம் முடிந்து அடுத்தநாள் காலையில் மலைக்கு கீழே அவர்கள் அனைவரும் இறங்கி வரும்போது அங்கே ஒரு பெரும் கூட்டம் கூடி நின்றுகொண்டிருந்தது. யேசுவை  சந்திக்கவும் அவரை சிக்கலில் மாட்டிவிட்டு வேடிக்கைபார்க்கவும் பரிசேயரும் சதுசேயரும் அங்கே கூடி இருந்தனர். யேசுவையும் அவருடைய மூன்று அப்போஸ்தலர்களையும் கண்ட
மாத்திரத்தில் அவர்கள் அனைவரும் திடுக்கிட்டனர். காரணம் நேற்று இரவு நடந்த மோட்ச்ச பாக்கிய பேரின்பம் அவர்கள் அனைவரின் தேஜஸையே மாற்றி இருந்தது. அது அடுத்த   நாள் காலைவரை குறையவில்லை.        அதைக்கண்ட பரிசேயரும் சதுசேயரும் பலரும் ஆண்டவரை விசுவாசித்து அவர் பின்னே செல்ல தங்களை தயார் படுத்திக்கொண்டனர்.
அப்போது யேசுநாதர் அவர்களை நோக்கி " இங்கே என்ன கூச்சல்... என்ன பிரச்சனை?" என்றார். அப்போது ஒருவர் " போதகரே,...இதோ இவன் என் மகன்...இவன் அசுத்த ஆவியால்  பீடிக்கப்பட்டுள்ளான்.. வயது பதினைந்து ஆகிறது...நன்றாகப்பேசிகொண்டிருந்த இவன் அசுத்த ஆவி பீடிக்கப்பட்டது முதல் இன்றுவரை பேசுவது இல்லை... அடிக்கடி மயங்கி விழுவதும் வலிப்பின்மிகுதியால் வாயில் நுறை தள்ளுவதும் பிறகு செத்தவன் போல் அகிவிடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. இவனால் நான் படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல..  தேவரீர் பெரிய மனதுவைத்து இவனுள் இருக்கும் அசுத்த ஆவியை விரட்டி என்மகனை என்னிடம் மீட்டுத்தர வேண்டும் ... இந்த ஊமைப்பேயை யாராலும் ஓட்ட முடியவில்லை.  உம் ஒருவரால் மட்டுமே முடியும் என்கிறேன் நான்...ஆனால் உம்மால் முடியாது என்கிறார்கள் இவர்கள்.. இதுபற்றித்தான் இங்கே கூச்சலும் குழப்பமும்" என்றார்.
      அதற்கு யேசுநாதார்,' என்னால் முடியும் என்பது உமக்கு எப்படித்தெரியும் " என்றார். அதற்கு அவர் " ஆண்டவரே உம் முகத்தைப்பார்த்தாலேயா நீர் உயிருள்ள கடவுளின் மகன் என்று  தெரியவில்லையா... உம்மால் முடியவில்லை என்றால் வேறு யாரால் முடியும்...நீர் என்மகனை பீடித்துள்ள அசுத்த ஆவியை விரட்ட வல்லவர் என்பதையும் நீர் உயிருள்ள கடவுளின் மகன்   என்பதையும் நான் விசுவாசிக்கிறேன் நம்புகிறேன்" என்றார். யேசுநாதர் மகிழ்ந்து அந்த வாலிபனின் கையைப்பிடித்து " இவனில் இருக்கும் அசுத்த ஆவியே ...இவனைவிட்டு வெளியே   போ.. மீண்டும் இவனுள் வறாதே" என்று கட்டளை பிறப்பித்தார். வாலிபன் உடனே மயங்கி விழுந்தான்.. அவன் வாயினின்று நுறை தள்ளியது. அவன் செத்தவன் போல் ஆனான்..
      உடனே பரிசேயர் சிலர் " இப்படி ஆகும் என்று எங்களுக்குத்தெரியும்..யேசுநாதர் பேயை ஓட்டுகிறேன் பேர்வழி என்று அதுமுடியாமல் போகவே பேய் அவனை அடித்து கொண்று
போட்டுவிட்டது. இந்த முட்டால் மக்களும் இந்த யேசுவை நம்பி அவர் பின்னே போய்க்கொண்டிருக்கின்றார்கள்... என்ன மடத்தனம் என்று சப்த்தமிட்டு யேசுநாதரை கடுமையாக   விமரிசித்தார்கள்.
    சற்று நேரத்தில் அந்த வாலிபன் எழுந்தான்.. அசுத்த ஆவி அவனைவிட்டு முற்றிலுமாக போய்விட்டு இருந்தது. அவன் பேசத்துவங்கினான்.. அவனும் அவனுடைய தகப்பனும்  யேசுவின் கால்களைக்கட்டிக்கொண்டு அழுது வணங்கினர். யேசுநாதர் அவர்களை தேற்றி அனுப்பினார். ஊமைப்பேயை ஓட்டுவது என்பது பேய் ஓட்டுபவர்களுக்கு மிகப்பெரிய சவால்.
     எனவே இந்த புதுமையைக்கண்ட பரிசேயர்பலரும் சதுசேயர் பலரும் யேசுவின் பின்னால் சென்று அவரின் சீடர்களாயினர்.
        அன்று ராயப்பர் விரும்பியபடியே ஆண்டவரின் மறுரூபம் நடந்த அந்த இடத்திலேயே ஃப்ரான்சிஸ்கன் துறவிகளால் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. அதில் மோசேக்கு ஒரு மாடமும்   நடுவில் யேசுவுக்கு ஒரு மாடமும் எலியாசுக்கு ஒரு மாடமுமாக மூன்று மாடங்கள் அமைத்து அந்தக்கோவில் கடப்பட்டுள்ளது.
       இந்த தாபோர் மலையில் ஆண்டவராகிய யேசுவின் மரு ரூபத்தின் போது அவரின் ரூபம் எப்படி இருக்கும் என்றும் அவரது இரண்டாம் வருகையின்போது பொதுதீர்வையின் நாளில்   அவர் எப்படி வருவார் என்பதையும் அவருக்கு முன் ஐநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த மலாக்கியா தீர்க்கதரிசி இவ்வாறு எடுத்துறைகின்றார்.
" இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார். அப்போது நீங்கள் தேடுகிற தலைவர் திடீரென தம் கோவிலுக்கு வருவார்.
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகின்றார்..என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளை தாங்கக்கூடியர் யார்?.
அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்.அவர் புடமிடுகிறவர் நெருப்பைப்போலும் சலவைத்தொழிலாளியின் சுவக்காரத்தைப்போலும் இருப்பார்.
அப்போது சூனியக்காரர்கள், விபச்சாரிகள் பொய்யாணை இடுபவர்கள், கூலிகாரருக்கு கூலி கொடுகாத வம்பர், கைம்பெண்னையும்,அனாதைகளையும், அன்னியர்களின் வழக்கை
புரட்டிப்போடுவோர், எனக்கு அஞ்சி நடக்காதோர்,ஆகிய அனைவருக்கும் எதிராக சான்று பகர்ந்து தண்டனைத்தீர்ப்பு வழங்க நான் விரைந்து வருவேன்"என்கிறார் படைகளின்   ஆண்டவர்.
        யேசுநாதருடைய மறு ரூபம் இந்த தாபோர் மலையில் தான் நடந்தது என்பதர்க்கு யேசுநாதர் ஒரு ஆதாரத்தை வைத்துவிட்டுபோய் இருகின்றார். அவரது மறு ரூபத்தின்போது   அவரது ரூபம் கோடி சூரியர்களைப்போல் ஒளிர்ந்தது. எங்கே ஒளி உள்ளதோ அங்கே வெப்பமும் இருக்கும்.. அந்த வெப்பம் எவ்வளவு என்றால் யேசுவின் பாதம் பதிந்த அந்த  கருங்கல் பாறை அதிக வெளிச்சம் காரணமாகவும் அதனால் ஏற்பட்ட வெப்பம் காரணமாகவும் வெண்மை நிறமான சலவைகல்லாக மாறிவிட்டது. இப்படியொரு மாற்றம் ஒரு கரும்கல்லில்  ஏற்படவேண்டுமானால் அங்கே வெப்பம் குறைந்தது 1000 டிகிரீ கென்டிக்ரேட் இருக்க வேண்டும். இந்த அளவு வெப்பம் ஏற்படும் பட்ச்சத்தில் அங்கே நின்றிருந்த மூன்று சீடர்களின்   கதி என்னவாகி இருக்கும். அவர்கள் எரிந்து சாம்பலாகி இருப்பர். ஆனால் எல்லாம் வல்ல தேவன் அந்த மூன்று சீடர்களையும் தன்னுடைய சொந்த வல்லமையால் அந்த
வெப்பத்திலிருந்து காத்தார். சற்றே யோசித்துப்பார்த்தால் ஆண்டவருடைய உருமாற்றத்தின்போது ஏற்பட்ட ஒளியினாலும் வெப்பத்தினாலும் தன் அன்பார்ந்த சீடர்கள்மூவரையும்   அவர்கள் இறவாமல் காத்ததே ஒரு பெரும் புதுமையாகும்.
             அந்த கருங்கல் சலவைக்கல்லாக மாறிய பாறையாக இருப்பதை இப்போதும் இந்த ஆண்டவருடைய மருரூபக்கோயிலுக்குள் பார்க்கலாம். அதை யாத்திரீகர்கள்   சுறண்டிக்கொண்டு போகாதிருக்கும்படி ஒரு பலகையால் மூடி வைத்திருக்கின்றார்கள். விஷயம் தெரிந்தவர்கள் அந்த பலகையை அகற்றி அந்த சலவைகல்லை பார்க்கலாம்.
       இந்த தாபோர் மலையில் நடைபெற்ற வேறுபல சரித்திர நிகழ்வுகள் இந்த கதைக்கு தேவை அற்றது. எனவே மீண்டும் நாம் கதைக்குப்போவோம்.
பாராக் இந்த தபோர் மலையில் நிலைபெற்றிருந்த தன் சேனையை சேர்ந்த பத்தாயிரம் வீரர்களுடன் தீர்க்கதரிசினி தெபொராவை சந்தித்தார். அவர்
 " அம்மணி, சேனைகளின் தேவனாகிய ஆண்டவர் உம்முடைய வாயால் பேசியதை நான் நம்புகிறேன்...விசுவாசிக்கிறேன்.. ஆயினும் நீரும் என்னுடன் போருக்கு வர விரும்புகிறேன்.அப்போது   எனக்குள் ஆண்டவர் உள்ளார் என்னும் நம்பிக்கை இன்னும் அதிகமாகும். ஆகவே தேவரீர் என்னுடன் போருக்கு வரவேண்டும். இல்லை என்றால் நான் போருக்கு வர மாட்டேன்"
என்றார்.
     அதற்கு தெபோரா " பாராக்... போருக்கு நான் உன்னுடன் வருவதைப்பற்றி எனக்கு கவலை ஒன்றுமில்லை.. ஆனால் நான் உன்னுடன் போருக்கு வந்தால் நீர் கஸ்ட்டப்பட்டு போரில்  வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி உன்னுடையதாக கருதப்படாது... மாறாக அது ஒரு பெண்ணுக்கே போய் சேரும்... என்ன சம்மதமா?" என்றார். அதற்கு பாராக் " அம்மணி.
இப்போதைக்கு நம் எதிரி போரில் அழிக்கப்படவேண்டும்... அந்த வெற்றி ஆணால் வந்தால் என்ன? பெண்ணால் வந்தால் என்ன? . எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை" என்றார்.
எனவே தெபோரா, " அப்படியானால் நான் உன்னோடு போருக்கு வர சம்மதம்" என்றார்.  எதிரிப்படையினரின் நடமாற்றத்தை கண்கானித்த கானானிய தளபதி செசெரா தன் போர் வியூகத்தை அதற்கேற்றபடி மாற்றி அமைத்தான்.ஆனால் சேனைகளின்  ஆண்டவர் தன் திறனைக்காண்பித்தார்.    அடுத்தநாள் நடக்கப்போகும் யுத்த களத்தில் கொடும் மழை பெய்தது. அருகிலிருந்த கிஷொன் நதி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.
கொடும் மழை பெய்ததால் யுத்தகளம் பெரும் சகதியால் மூழ்கியது. கானானிய தளபதி செசேரியா தடுமாறினான். அவனுடைய 900 பெரும் தேர்களின் சக்கரங்கள் சகதியில்  மாட்டிக்கொண்டதால் நகரமுடியாதபடி நின்றுகொண்டன. கிஷோன் நதி பெருக்கெடுத்து ஓடியதால் இக்கறையில் நிற்க வைக்கப்பட்டிருந்த குதிரைப்படைகளும் காலாட்ப்படையினரும்
நகரமுடியாதபடி மாட்டிக்கொண்டனர். தெபோரா பாராக்கைப்பார்த்து," ஆண்டவர் செசெராவையும் அவன் வீரர்களையும் உன்னிடம் கை அளித்துவிட்டார். போய் அவர்களை சங்காரம்   பண்ணு" என்றார். அவ்வளவுதான்...சகதியில் மாட்டிக்கொண்ட தேர்ப்படையினரும் குதிரைப்படையினரும் காலாட்படையினரும் பாராக்கின் பத்தாயிரம் வீரர்களிடம் மாட்டிக்கொண்டு  உயிரை விட்டனர். இருபது வருடப்பகையை பாராக் ஒரே நாளில் தீர்த்துவிட்டார்.
      போரின்போக்கு ஒரேடியாக மாறிவிட்டதைக்கவனித்த கானானியா தளபதி செசீரியா தன் தோல்வியை உணர்ந்தான். தன் தேரிலிருந்து இறங்கி உயிர்பிழைக்க காலால் ஓடினான்.  அப்போது அவன் கண்ணில் பட்டது ஒரு கேனியனான ஜேபர் என்பவனின் மனைவி ஜேயல் என்பவளின் கூடாரம்.ஆஹா.. நமக்கு நல்ல காலம்.. இந்த ஜேயலின் கணவர் ஜேபர்
மோயீசனின் மாமனார் ஜெத்ரோவின் வழி வந்தவர் அல்லவா... இந்த ஜேபருக்கும் நம் அரசர் ஜாபீனுக்கும் நல்ல பழக்கம் உண்டாயிற்றே... ஆகவே இந்த பெண் ஜேயல் கூடாரத்தில்   அவளிடம் தங்க அனுமதி கேட்போம்... ஆபத்துக்கு பாவம் இல்லை என்று ஜேயலை அனுகினான் செசெரியா. ஜேயலும் அவனை நல்ல விதமாக வரவேற்று தன் கூடாரத்தில்
அனுமதித்தாள். செசெரியா அவளை நோக்கி " பெண்ணே, நானிங்கு தங்கி இருக்கும் விஷயத்தை யாரிடமும் சொல்லாதே...யாரேனும் என்னைப்பற்றி விசாரித்தால் எனக்குத்தெரியாது  என்று கூறிவிடு... இப்போதைக்கு எனக்கு தாகமாய் இருகின்றது. எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடு" என்றான். அதற்கு ஜேயெல் " என் எஜமானே..நான் யாரிடமும்   உங்களைபற்றி கூறமாட்டேன்.. இது சத்தியம் " என்று கூறி அவனுக்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தாள். அவனை நாற்காலியில் அமரச்செய்து அவனை ஒரு போர்வையால் மூடினாள்.
         வெளியில் யாரேனும் வருகின்றனரா என்று பார்த்துக்கொண்டாள்.. அதற்குள்ளாக கொடுங்கோலன் செசேரியா குறட்டைவிட்டு தூங்கிவிட்டான். எத்தனையோ நாளாக வறாத தூக்கம்   அன்று அவனுக்கு வந்தது.
இருபதுவருடமாக தங்கள் இனத்தவரை நிம்மதியாக தூங்கவிடாது அக்கிரமம் மேல் அக்கிரமம் செய்த செசெராவை பழிவாங்க ஆண்டவர் இவனை தன்னிடம் அனுப்பிவைத்ததை  நினைத்து ஆண்டவரைப்போற்றினாள்.." ஆண்டவா இத்தருணத்தை நான் நல்ல விதமாக பயன்படுத்திக்கொள்ள எனக்கு கிருபை செய்யும்... செசேரியா என்னும் இந்த கானானிய
ராட்ச்சதனை கொன்று ஒழிக்க எனக்கு உடலிலும் மனதிலும் அருள் புரிவாயாக" என்று வேண்டிகொண்டவளாய் சத்தம் போடாமல் வெளியே சென்று ஒரு சுத்தியலையும் கூடாரத்தை  நிலைநிற்கச்செய்யும் இரும்பு ஆப்பு ஒன்றையும் எடுத்துவந்தாள். அந்த இரும்பு ஆப்பு ஆணியை செசேரியாவின் நெற்றிப்பொட்டில் வைத்து சுத்தியால் ஓங்கி அடித்தாள். அந்த இரும்பு
ஆப்பு ஆணி செசேரியாவின் ஒரு நெற்றிப்பொட்டில் புகுந்து மறு நெற்றிப்பொட்டு வழியாக வெளியே வந்துவிட்டது. ரத்தசகதியில் மடிந்தான் செசேரியா என்னும் கொடுங்கோலன்.
       சற்று நேரத்தில் அங்கு வந்தார் இஸ்ரேலிய தளபதி பாராக்." பெண்ணே ஜேயல்... இந்தப்பக்கமாக கானானிய தளபதி செசேரியா வந்தானா? " என்று வினவினார்.  அதற்கு ஜேயல் " தளபதி...உள்ளே வந்து பாரும் என்று கூடாரத்தின் உள்ளே பாராக்கை அழைத்துச்சென்று காண்பித்தாள்.. அங்கு செசேரியா தரையில் மாண்டுகிடப்பதையும்  அங்கு என்ன நடந்தது என்பதையும் அறிந்துகொண்டார்.. அன்று தெபோரா கூறியது உண்மை ஆயிற்று. போரில் எதிரியைக்கொண்ற ஜேயல் போற்றப்பட்டாள்.. அவளுடைய வெற்றி  இஸ்ரேலிய தேவனின் வெற்றியாக கருதப்பட்டது.   இந்த தாபோர் போர் முடிந்து மேலும் ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு அந்த இஸ்ரேல் மக்களுக்கு அமைதியும் சமாதானமுமான வாழ்க்கை
அருளப்பட்டது. தீர்க்கதரிசினி தெபோர இந்த வீரப்பெண் ஜேயலைப்பற்றியும் ஆண்டவரின் வெற்றியைப்பற்றியும் பாடிய பாடல் தெபோராவின் பாடல்கள் எனப்பட்டது.
" கானானிய மன்னர்கள் தானக்கில் மெகிதோ நீர் நிலைகளில் போரிட்டனர்...
தங்கள் பாதையிலிருந்து சீசீராவுடன் போரிட்டார்கள்....
கெசோன் ஆறு அவர்களை அடித்துச்சென்றது....பெருக்கெடுத்துவரும் ஆறே கீசோன் ஆறு...
என் உயிரே... வலிமையுடன் பீடு நடை போடு....
குதிரைகளின் குளம்புகள் நிலத்தை அதிரச்செய்கின்றன....
குதிரைகள் பாய்ந்து ஓடின...வேகமாக பாய்ந்து ஓடின....
மேரேசை சபியுங்கள்... என்கிறார் ஆண்டவரின் தூதர்...
அதில் வாழ்வோரை கடுமையாய் சபியுங்கள்....
ஏனெனெறால் அவர்கள் ஆண்டவருக்கு உதவ முன்வரவில்லை....
கேனியனான கேபேரின் மனைவி யாவேல் [ஜேயேல்]...
நீர் பெண்களுக்குள் பேறு பெற்றவள்.....
கூடாரம் வாழ் பெண்களுள் நீர் பேறு பெற்றவள்...
அவன் கேட்டதோ தண்ணீர்.....
இவள் கொடுத்ததோ பால்.....
அவள் உயர் தர கிண்ணத்தில் தயிர் கொண்டு வந்தாள்...
அவள் தன் கையை கூடார முளையில் வைத்தாள்...
அவள் வலக்கை தொழிலாளரின் சுத்தியலை பிடித்தது....
சீசாராவின் தலையில் அடித்தாள்...சிதைத்தாள்...
அவன் நெற்றிப்பொட்டினை அடித்தாள்..நொறுக்கினாள்...துளைத்தாள்..
அவன் சரிந்தான் விழுந்தான்...
அவள் காலடியில் அவன் சரிந்தான் ..விழுந்தான்....
அவன் விழுந்த இடத்திலேயே இறந்து கிடந்தான்...
இவ்வாறு ஆண்டவரே உம் எதிரிகள் அழியட்டும்...
உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன் கதிரவன்போல் வாழட்டும்...
பிற்காலத்தில் தெபோரா என்னும் பெண் தீர்க்கதரிசி இஸ்ராயேல் மக்களின் தாய் என்று போற்றப்பட்டார். இவரது சமாதி இஸ்ராயேலின் வடபகுதியில் காதெஷ் என்னும் ஊரில் உள்ளது.
பிறகு அந்த கானானிய மன்னன் கோட்டையாய் விளங்கிய அசூர் கோட்டை இஸ்ரேயேலர்களின் கோட்டையாய் விளங்கிற்று. மிகவும் பிற்காலத்தில் இந்த கோட்டையில் தான்   ஊதாரி மைந்தர்களின் கதை நடந்தது. இந்த அசூர் கோட்டையில் ஒரு முறை போதிக்க வந்த யேசுநாதர் இங்கு வாழ்ந்த ஒரு ஜமீந்தாரின் இரு பிள்ளைகளைப்பற்றிய கதையாக ஊதாரி மைந்தன் கதையை இப்பகுதிவாழ் மக்களுக்கு சொல்லவே இந்த கோட்டையைச்சேர்ந்த மக்கள் யேசுநாதரை பெரிதும் பாராட்டினார்கள்.