" நவம்பர் 2. உத்தரிகின்ற ஆண்மாக்கள் தினம்."
இறந்தோர் வாழ்வில் ஒளி பெறுக... அவர் இறைவா உம்மில் வந்தடைக.... என்ற பாடல் இக்காலங்களில் பிரசித்தம். மண்ணில் பிறந்த யாவரும் என்றைகாவது ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும் இது விதி. ஆக மனிதன் இறந்துபோனால் அவன் எங்கே போகிறான்..நல்லவனாக இந்த உலகில் வாழ்ந்திருந்தால் அவன் மோட்சத்திற்கும், கெட்டவனாக வாழ்ந்திருந்தால்
நரகத்திற்கும் போகிறான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. உலகில் உள்ள எல்லா மதங்களும் அப்படித்தான் கூறுகின்றன..ஆனால் உலகில் நடைமுறையில் இந்த நல்லவன் கெட்டவனாக மட்டும் வாழ்ந்துவிடுவது கிடையாது. நல்லவனாகவும் இல்லை...கெட்டவனாகவும் இல்லை..என்ற பிரிவும் உலகில் உண்டு. நல்லவனாக இல்லை என்பதற்காக அவனை
கெட்டவன் என்றழைக்க முடியாது.. அதேபோல் கெட்டவனாகவும் இல்லை என்பதற்காக அவனை நல்லவன் என்றும் அழைக்க முடியாது.. இப்படி தவளையும் இல்லை..மீனும் இல்லை. இரண்டுக்கும் நடுவே தலைப்பிரட்டை வகையைச்சேர்ந்த மக்கள் தான் இன்று உலகில் அதிகம்.
அப்படியானால் இந்த தலைப்பிரட்டை வகையைச்சேர்ந்த மக்கள் இறந்துபோனால் அவர்கள் ஆண்மா இறந்தபின் எங்கே போகும் என்பது கேள்விகுறி.
நல்லவன் என்பதற்காக கடவுள் அவனுக்கு மோட்ச்சபாக்கியம் கொடுப்பார்....
கெட்டவன் என்பதற்காக கடவுள் அவனை நரகத்தில் போடுவார்...
ஒருவன் நல்லவன் இல்லை என்பதற்காக அவனை கடவுள் நரகத்தில் எப்படிப்போடுவார்? ...அவன்தான் கெட்டவன் இல்லையே?
ஒருவன் கெட்டவன் இல்லை என்பதற்காக கடவுள் அவனை எப்படி சொர்கத்தில் சேர்ப்பார்...அவன்தான் நல்லவன் இல்லையே ? இந்த மாதிரியான் கேள்விகெல்லாம் நம் திருச்சபையில் பதில் உண்டு. கடவுளாள் ஆகாத காரியம் ஒன்றுமில்லை...ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மை படைத்த கடவுளுக்கு நம்மை ஒன்றுமில்லாமல் போகச்செய்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்..ஆனால் அவருடைய எண்னம் அதுவல்ல.. திருந்திய உள்ளத்தையே அவர் எதிர்பார்க்கின்றார். அதற்காக கடைசிவரை அதாவது ஒருவன் மரணம் வரை அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுகின்றார்.
புது நன்மை வாங்கும் பிள்ளைகள் சின்ன குறிப்பிடத்தில் இந்த கேள்வி பதிலை அவசியம் படித்திருப்பர். ஸ்வாமி யேசுநாதர் இறந்தபின்பு அவருடைய ஆத்மா எங்கே போனது?
பதில்...ஆண்டவருடைய ஆண்மா அவர் இறந்தபின் பாதாளங்களிலே இறங்கி அங்கிருந்த பூண்ணியவான்களுக்கு மோட்ச்ச பாக்கியம் கொடுக்க போனது... ஆக ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது ஆண்டவர் தீர்மானிக்ககூடிய ஒரு விஷயம்.. எனவே ஒருவன் நல்லவனும் இல்லை அதே நேரத்தில் அவன் கெட்டவனுமில்லை போன்ற ஆண்மாக்களும் ஈடேற்றம் அடைய, அவர் நம் மீது வைத்த இரக்கபெருக்கத்தால் இந்த உலகில் வாழ்ந்தவரை, ஆண்மாவைகொல்லாமல் செய்த பாவங்களுக்கு மன்னிப்புபெறாமல் இறந்த ஆண்மாக்கள் மோட்சகதி பெற கொடுத்த ஒரு நல்ல வாய்ப்புதான் உத்தரிக்கின்ற ஸ்தலம். இந்த உத்திரிகின்ற ஸ்தலம் இருகின்றதா என்ற கேள்விக்கு பதிலாக அனேக சரித்திரங்கள் இருகின்றன. ஆனால் குருக்களின் பாதுகாவலரான ஜான் மரிய வியான்னியின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
ஜான் மரியவியான்னி பால சன்னியாசியாக இருக்கும்போது படிப்புக்கும் அவருக்கும் வெகு தூரம்..எந்த படிப்பும் அவருக்கு ஏறவில்லை. அக்கால குருமானவர்கள் தாங்கள் எந்த தேசத்தவராக இருந்தபோதிலும், கட்டாயம் லத்தீன் பாஷை படித்தே ஆகவேண்டும்.. லத்தீன் பாஷையில் அவர் அ..ஆ ..இ.ஈ.. படிப்பதற்குள்ளே அவருக்கு பிராணன் போய்விட்டது.
இப்படியாக அவருக்கு பலவருடகாலம் சோதனைகாலமகவே கடந்து போய்விட்டது.. இனி இவனை ஒப்பேற்றவே முடியாது என்று கருதிய ரெக்டர் இந்த பையன் நமக்கு வேண்டாம் என்று அவருடைய பிஷப்புக்கு ஊழியம் செய்ய அனுப்பினார்..அவரோடே ஒரு கடிதம் இணைக்கப்பேற்று பிஷெப்பிடம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் வியான்னியைபற்றிய ரகசிய அறிக்கையானது.. அந்த கடித்தத்தில் இவ்வாறாக குறிப்பிட்டிருந்தது.
" இவன் ஒரு உதவாக்கரை...படு முட்டாள்...எதற்கும் தகுதியற்றவன். இவனை எல்லாம் வைத்துக்கொண்டு திருச்சபை என்ன செய்யப்போகிறது. இந்தப்பையன் நம்மோடு பலகாலம் வாழ்ந்துவிட்டதால் இவனை வீட்டுக்கு அனுப்பியும் பயன் இல்லை.. இவனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.."
இந்த ரகசிய அறிக்கையைப்படித்த பிஷெப் மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.. பிரான்ஸ் தேசத்தில் இப்படியும் ஒரு குருமாணவரா...ஆண்டவர் சோதிக்கிறார்... சரி ஆண்டவர் இவன்மட்டில் என்னதீர்மானம் செய்திருக்கின்றார் என்பதை காலம்தான் தெரியப்படுத்தும் என்று தன்னை சமாதானம் செய்துகொண்டார். ஜான் மரிய வியான்னி கடவுள் பக்த்தியில் மிகவும் சிறந்து விளங்கியதால் பலகாலங்களுக்குப்பிறகு, ஆயர் அவர்கள் பெரியமனது வைத்து போனால் போகிறதென்று வியான்னிக்கு குருவானவர் பட்டம் கொடுத்தார்.
அன்றிலிருந்து அவரில் வெளிப்பட்டது ஆண்டவரின் திருவுளம். மரியவியான்னி அவர்கள் குருவானதும் மிகவும் சாதாரணமாக இருந்த அர்ஸ் என்ற ஒரு படு கிராமத்தில் ஒரு தாத்தா சாமியாருக்கு உதவி குருவாக நியமனம் செய்யபட்டார்.. ஆண்டவருடைய வல்லமை அவரில் வெளிப்பட்டதால் அவர் காலங்களை அறியும் ஆற்றல் பெற்றார். அவர் இறந்த காலங்களை பார்க்கும் வல்லமை பெற்றார்..மனிதர்களின் ஆண்மாக்களை ஊடுறுவிப்பார்க்கும் ஆற்றலை ஆண்டவர் அவருக்கு கொடுத்திருந்தார்... அவரிடத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்பவன் பொய் சொல்லவே முடியாது. சொல்ல மறந்த பாவங்களை அவரே நினைபூட்டுவார்.. நீ இத்தகைய பாவங்களை இந்தந்த இடத்தில் இந்தந்த நேரத்தில் இன்னின்னவரோடு
செய்திருகின்றாய்.. ஒப்புக்கொள்கின்றாயா.. என்பார்..
இத்தகைய பாவமன்னிப்பு பெற்றவர்களாள் ஜான் மரிய வியான்னி குயூர் டீ அர்ஸ் பட்டிணத்தில் புகழ் பெற்றார். இதனால் அவர் கூரியதாஸ் என்றும் அழைக்கப்பட்டார். இவரை சோதிக்க அந்த அர்ஸ் பட்டிணத்தை சேர்ந்த பேர் பெற்ற விபச்சாரி அவரை சந்திக்க வந்தாள்.. அப்போது அவர் பலிபூசை நடத்திக்கொண்டிருந்தார். பூசையை நிறுத்திவிட்டு அவள் பெயரை சொல்லி "அங்கேயே நில்... உன் மாசுபட்ட பாதங்களோடும், ஆண்மாவோடும் இந்த ஆலயத்துக்குள் வறாதே" என்றார்.. அந்த விபச்சாரி பயந்து நடுங்கி தன்னை
மன்னிக்கும்படி மன்றாடினாள்... அவள் மேல் பரிவுகொண்ட வியான்னி பூசையை பாதியில் நிருத்திவிட்டு அவளுக்கு பாவ சங்கீர்த்தனம் கொடுக்க வந்தார்.
பாவ சங்கீர்த்தனத்தின்போது அவள் வாயிலிருந்தும் அவள் முகத்திலிருந்த அத்தனை திறப்புகளிருந்தும் பெரும் பாம்புகளும் பெரும் நட்டுவாக்காளிகளும் விஷ ஜந்துக்களும் போன்ற ரூபத்தில் அசுத்த ஆவி அவளிடமிருந்து வெளிப்பட்டது. இதைக்கண்ட பங்கு மக்கள் பெரும் திகிலுற்றனர். ஜான் மரிய வியான்னி பெரும் தீர்க்கதரிசி என்று போற்றினர்...
ஒரு நாள் ஒரு பெண் தலைவிரிகோலமாக அவரிடம் அழுது
கொண் டுவந்தாள்.. வியான்னியின் கால்களில் விழுந்து கதறி அழுதாள்.. அவளை சமாதானம் செய்வதற்குள் வியான்னிக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. ஒரு வழியாக அவள் கூறினாள்," ஸ்வாமி... என் கணவர் பெரும் குடிகாரர்..குடிவெறியில் ஆற்றிலிருந்து கீழே குதித்து தற்கொலை
செய்துகொண்டார்.. அவர் நரகத்திற்குத்தான் போய் இருப்பார் என்று எல்லோரும் சொல்லுகின்றார்கள்..என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை... தயவு செய்து அவருக்கு என்ன ஆயிற்று என்று சொல்லுங்கள்... நீங்கள் தான் காலத்தை அறியும் வல்லமை கொண்டவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள் " என்றார்..
ஜான் மரிய வியான்னி கண்களை மூடி ஜெபித்தார். அப்போது அவர் கண்ட காட்ச்சியை அவளிடம் இவ்வாறு விவரித்தார். " மகளே, உன் கணவன் தற்கொலை செய்துகொண்டது உண்மைதான்..இருப்பினும் அவன் சாகும் முன்பாக கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.. ஆற்றின் மீதுள்ள பாலத்திலேறி தண்ணீருக்குள் குதித்து மூழ்கும் முன்பாக அவன்
கடவுளின் மன்னைப்பை கேட்டதால் ஆண்டவரும் அவன் மீது இரங்கி அவனை மன்னித்ததுமல்லாமல் அவனை நரகத்திற்கு தீர்ப்பிடாமல் உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு தீர்வை இட்டு உள்ளார். ஆகவே மகளே அவன் தற்கொலை செய்துகொண்டதால் நரகத்திற்கு பாத்திரவானாயினும் கடவுளின் மன்னிப்பு அவனுக்கு கிடைத்ததால் அவன் உத்திரிக்கின்ற
ஸ்த்தலத்திலிருந்து என்றாவது ஒரு நாள் மோட்ச்சபாக்கியம் பெருவான் என்ற நம்பிக்கையோடு உன் வீட்டிற்கு சமாதானமாய் போ " என்றார்.
ஆக உத்திரிகின்ற ஸ்தலம் என்பது நமக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு பெரும் கொடை என்றும் கடவுள் நம் மீது கொண்ட இரக்கம் எவ்வளவு என்றும் நாம் உணர்வோமாக..
இதே போல் நரகம் உண்டோ? உண்டு என்கிறது வியான்னியின் சரிதை.. பேர்பெற்ற ஜான் மரிய வியன்னி தூங்கும் போது அவர் மீது நரக நெருப்பை சாத்தான் வீசினான். அந்த நரக நெருப்பு அவரை தொடவில்லை.. ஆனால் அவருடைய கட்டில் எரிந்தது. ஜான் மரிய வியான்னி சாத்தனைப்பார்த்து, " சாத்தானே நரகம் உண்டு என்பதற்கு மக்கள் நம்பும்படியாக நீ வந்ததுதான் வந்தாய்.. உன் கையை இந்த வீட்டின் நிலையில் வைத்துவிட்டுப்போ... நீ இங்கு வந்து போனாய் என்பதற்கு அது அத்தாட்சியாய் இருக்கட்டும்"
என்றார். சாத்தானும் அவருக்கு கீழ்படிந்து அவன் கையை அவர் வீட்டு நிலையில் வைத்துவிட்டுப்போனான்.. உடனே அந்த நிலை எரிந்தது. அந்த எரிந்த நிலைக்கதவு இன்றளவும் கரிகட்டையாய் உள்ளது. அதை முகர்ந்துபார்ப்பவர்களுக்கு இன்றளவும் அந்த நரகத்தின் துர்நாற்றம் வீசும்.
தாவீது ராஜா பாடிய பாடல் இவ்வாறாக உள்ளது. " ஆண்டவரே, நீர் எம் குறைகளைப்பாராட்டுவீராயீன் உம் திருமுன் நிலை நிற்க கூடுபவன் யார்? ஆனால் உம்மிடம் மன்னிப்பு உள்ளதால் பயபக்தியுடனே உம் தாழ் பணிந்தேன்". இந்த மன்னிப்பின் வெளி அடையாளம்தான் இறந்த ஆண்மாக்களுக்கான உத்திரிகிற ஸ்தலம்.
இந்த உலகம் இருக்கும் வரைதான் உத்தரிகிற ஸ்தலமும் இருக்கும்.. உலகம் முடிந்துபோனால் அதற்கு தேவை இருக்காது. எனவே அதுவும் முடிந்துபோகும்.. அதற்குப்பின் இருவகை ஆண்மாக்கள் தன் இருப்பர். ஒன்று நல்லவர் .. மற்றவர் கெட்டவர்.. நல்ல ஆண்மாக்களுக்கு மோட்ஷமும், கெட்ட ஆண்மாக்களுக்கு நரகமும் தப்பாது கிடைக்கும். மோட்ச்சமும் நரகமும் நித்தியத்துக்கும் இருக்கும். அவற்றுக்கு முடிவு என்பதே இராது.
No comments:
Post a Comment