Thursday, February 27, 2014

" ஞான சௌந்தரி என்னும் புனித கத்ரீனம்மாள் "




                          " ஞான சௌந்தரி என்னும் புனித கத்ரீனம்மாள் "

               அன்று ரோமர்களுக்கும் கார்தேஜியர்களுக்கும் நடைபெற்ற போரில் வெற்றியை நிர்ணயித்தது வீரன் ஒருவனால்தான் என்றால் அது மிகையாகாது. ஆம்....அந்த ரோமையன் போரில் செய்த சாதனை மகத்தானது. அவனைக்கண்ட மாத்திரத்தில் கார்த்தேஜியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்..ஒன்பது அடிக்கும் சற்றே குறைந்த உயரமும் அதற்கேற்ற
சரீரமும் கொண்ட அவன் நடந்து வருவது ஏதோ ஒரு நடமாடும் மாமிச மலை அசைந்து அசைந்து வருவது போன்ற தோற்றம் ஏற்படுத்தியது. கார்த்தேஜியர்கள் ரோமையர்களுக்கு  எதிரான போரில் பெரும் ஆப்ரிக்க காட்டு யானைகளை பயன்படுத்தினார்கள். அவைகளுடைய கெட்ட குணம் என்னவென்றால் தான் தாக்கப்படும்போது அவைகள் தங்களை
வளர்த்தவர்கள் மீதே பாயும். அப்போது அவைகள் விசுவாசத்தை மறந்துவிடும்.. அவைகள் இந்திய யானைகளைப்போல் விசுவாசம் அற்றவை. அவைகளை பழக்குவதும் கடினம்..எனவே   அவைகளை போரின்போது பயன்படுத்துவது தற்கொலைக்கு சமம்...அவைகளுக்கு காயம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.. அது போரின் போக்கையும் அவற்றை வழி
நடத்துபவரின் சாமார்த்தியத்தையும் பொருத்தது. இத்தகைய தந்திர உபாயங்களை அறிந்துகொண்ட ரோமையர்கள் அந்த ஆப்ரிக்க காட்டு யானைகளை அவர்களுக்கு எதிராக திருப்பி விடும்படி மிகவும் மூர்க்கமாக தாக்கினர்.. இதனால் கோபமுற்ற அந்த காட்டு யானைகள் வளர்த்தவர்கள் மீது திரும்பி தாக்கின. இப்படியாக ஜெயதேவி ரோமர்களின் பக்கம் தன்
பார்வையை திருப்பினாள்.
      இனி கார்தேஜியை காப்பாற்றவே முடியாது... தோல்வி நிச்சயம் என்றறிந்த கார்தேஜிய மன்னர் ஹன்னிபால் நாட்டைவிட்டு ஓட வேண்டியதாயிற்று. ரோமையர்களுக்கு கார்த்தேஜிய   போரில் வெற்றி நிச்சயம் என்றதும் நாட்டிற்குள் புகுந்து கண்ணில் பட்ட ஆண்கள் குழந்தைகள் முதியவர்கள் அனைவரையும் கொண்றனர். பெண்களை மானபங்கப்படுத்தினர். நாட்டை
சூறையாடினர். இந்தப்போரில் தங்களின் வெற்றிக்கு காரணமான அந்த மனித அரக்கனாக விளங்கிய வாலிபனை ரோம் மறக்கவில்லை..சாதாரண சிப்பாயாக இருந்தவனை நூற்றுவர்   தலைவனாக்கினர். அவன் இந்த போர்க்களத்தில் செய்த சாதனை அவன் வாழ்நாள் முழுவதும் பேசப்பட்டது. பின்னே இருக்காதா..போர்க்களத்தில் எமன் என்றும் போர் வியூகங்களை
வகுப்பதில் பெரும் கில்லாடியாக விளங்கியவனும் கருணை என்பதை கண்ணிலேகூட காட்டாத மஹா மூர்க்கன் என்று பெரும் பெயர் எடுத்திருந்த கார்த்தேஜிய மன்னர் ஹன்னிபால்ட்டின் போர் உபாயங்களை உடைத்தவனை.... அவருடைய ராணுவ அறிவை பதம்பார்த்தவனை.... ரோம் மறக்குமா என்ன... எனவே அடுத்து எகிப்த்தில் தங்களுடைய
அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துவந்த பெர்பர்களை அடக்க இவனது தலைமையில் ஒரு பெரும் படையை ரோம் அனுப்பியது.  எகிப்த்துவந்த சில நாட்க்களிலேயே அங்கிருந்த   பெர்பர்களை தன் கூறிய அறிவாலும் போர் உபாயங்களினாலும் கொடூர தாக்குதலினாலும் எதிரியை நிலைகுலைய வைத்தான் அந்த மனித உருகொண்ட அரக்கன். இப்போது அவன்
ரோமர்களின் எகிப்த்திய ராணுவ கமாண்டர்..அடுத்து மெசாப்படோமியா...
அப்போது மெசப்படோமியாவில் ரோமிய அரசாங்கப்பிரதிநிதியாக இருந்தவர் அலெஃஸாண்டெர் செவெருஸ் என்பவர்.
           .இவர் பெரும் குழப்பவாதி. எதிலும் தாமதமான முடிவுகளை
எடுப்பவர். அலமானி யுத்தத்தில் ரோமர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் நடந்த போரில் தன் வீரர்களுக்கு சம்பளமே கொடுக்காமல் போரை நடத்தியதால் அதிருப்த்தி அடைந்தனர் அவரது ராணுவத்தினர். இப்போது மெசப்படோமியாவிலும் இதே கதையை இவர் நடத்தியதால் நம் மனித அரக்கனாக விளங்கிய நம் கதாநாயகன் தலைமையில் ஒரு பெரும் கலவரம்
ஏற்படுத்தப்பட்டு அதில் அலெக்ஸாண்டர் செவெருஸ் கொல்லப்பட்டார்... நம் கதாநாயகன் சீசராக ஏற்படுத்தப்பட்டார். இதன் காரணமாக இவர் அப்போதைய ரோமைய   கான்ஸ்டாண்ட்டிய மஹா சக்கரவர்த்தியாக விளங்கிய தியோக்குலேசியனை சந்திக்க வேண்டியதாயிற்று.
      இந்த சந்திப்பு இன்றைய இத்தாலியின் வடக்கிலுள்ள மிலான் பட்டிணத்தில் நடந்தது. இவனைக்கண்ட மாத்திரத்தில் தியோக்குலேசியன் கூறினான்," அடேங்கப்பா... என்ன மனிதன் இவர்.. வேத காலத்தில் பிலியஸ்த்தியனான கோலியாத்தை விட இவன் உயரத்திலும் சரீரத்திலும் உயர்ந்தவனாகவும் அறிவில் சிறந்தவனாகவும் அல்லவா   தெரிகின்றார்... ரோமைய பேரரசுக்கு இத்தகைய ஒரு சீசர் தேவைதான்... இவரை நானும் சீசராகஅங்கீகரிக்கிறேன்..வாழ்க மன்னர் சீசர் மாக்சீமியன்" என்றார். அதைத்தொடர்ந்து பெரும்   குரல்கள் எழும்பின..." வாழ்க ...மாமன்னர் சீசர் மாக்சிமியன்...வாழ்க...வாழ்க" என்னும் கரகோஷங்கள் காதைப்பிளந்தன. பிறகு காலம் மாறியது. நம் சீசர் மாக்சிமியன் ரோமின்   சர்வாதிகாரியாக அகஸ்ட்டசாக அமர்ந்தார்.
           தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த நாடுகளுக்கு தன் அரசாங்க விஜயமாக கார்த்தேஜுக்கும் பின் எகிப்திற்கும் விஜயம் செய்தார்..ஒரு சாதாரண சிப்பாயாக இருந்து ஒரு   பேரரசனாக உயர்த்தப்பட்டபின் எகிப்த்திற்கு வருவதால் அவருக்கு மிகவும் விஷேஷமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. இந்த கால கட்டத்தில் எகிப்த்தின் வடக்குப்பகுதியில்
மத்தியதரைக்கடல் பகுதியில் பெரும் துறைமுகப்பட்டிணமாக விளங்கியது அலெக்ஸாண்டிரியா பட்டிணம். அந்த பட்டிணத்தின் ரோமை ஆளுநறாக பதவி வகித்தவர் காண்ஸ்டைன்   என்பவர். அவருக்கு பதினெட்டு வயதில் ஒரு அழகுப்பதுமை போல் பெண் ஒருத்தி இருந்தாள் டாரத்தி என்னும் பெயரோடு. அவளுக்கு கல்வியின் மீது இருந்த ஆர்வம் காரணமாக
அவள் அவள்வயதுக்குள் படிக்க வேண்டிய அனைத்து கல்விகளையும் கற்றிருந்தாள்.அரசியல், பூலோகம், கணிதம், வான சாஸ்த்திரம், மருத்துவம் அனைத்தும் அவளுக்கு அத்துபடி ஆனது. சாதாரணமாக அழகிருக்கும் பெண்களாகட்டும் அல்லது ஆண்களாக இருக்கட்டும் அழகோடு அறிவும் சங்கமிப்பது அபூர்வம். ஆனால் நம் டாரதிக்கு அனைத்தும் நிறைவாக
இருந்தது. அவள்தாயார் அவள் அழகைப்பற்றியும் அறிவைப்பற்றியும் மிகவும் பூரித்துப்போவாள். இருப்பினும் காலாகாலத்தில் இவளை திருமணத்தில் இணைத்துவிட மனதாக இருந்தார்.
           ஆனால் மகள் டாரத்தி ஒரே வார்த்தையில் தன் தாயாரை வாய் அடைத்துவிடுவாள். " அம்மா...நீ எனக்கு பார்க்கும் மாப்பிள்ளை என்னைவிட அழகிலும், அறிவிலும், குலம்   கோத்திரத்திலும், வசதி வாய்ப்புகளிலும் உயர்ந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் சொல்லு..நான் திருமணம் செய்துகொள்கிறேன்" என்பாள். ஆனால் இவள் போடும்   கட்டளைகளின்படி தன்னுடைய கண்ணுக்கெட்டிய சொந்தபந்தங்களில் யாருமே இல்லை. எனவே வேறு குலம் கோத்திரந்தில் தகுதியான மாப்பிள்ளையை பார்க்க ஆரம்பித்தாள்.
       நம் டாரத்தியின் தாயார் ரகசியத்தில் ஒரு கிறிஸ்த்துவள். எனவே இந்த மாப்பிள்ளை விஷயத்தில் தனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு உத்தமமான வயதான குருவை சந்தித்து  ஆலோசனை கேட்டார். அவர் யேசுநாதருடைய வாலிப வயதுடைய படம் ஒன்றை இவரிடம் கொடுத்து அவர் மகளுக்கு கொடுக்க சொன்னார். இந்த படத்தை பார்த்ததும் யேசுநாதர்  யார் என்றே அறிந்துகொள்ளாமல் அவர் அழகில் மயங்கி அவரை கல்யாணம் செய்துகொள்ள சம்மதித்தாள் டாரத்தி. மேலும் யேசுநாதர் சிறு குழந்தையாக தன் தாயாரோட் இருக்கும்   படமும் அவளிடம் கொடுக்கப்பட்டிருந்ததால் டாரத்தி," உன்மையில் என் மணாளனின் தாயார் எவ்வளவு அழகு...எனவேதான் அவரது திரு மகனும் அவ்வளவு அழகோடு இருகிறார்.
இவர்கள் இருவரது முகமும் குணமும் பார்க்கும்போதே தெரிகின்றது. மணந்தால் யேசுநாதரையே மணப்பேன்..இல்லையேல் இறப்பேன்..இது உறுதி " எனசபதம் எடுத்துக்கொண்டாள்.
          அன்று இரவு அவளுக்கு ஒரு கனவு ஒன்று காண நேர்ந்தது. அதில் தேவதாயாரானவர் தன் திருமகன் குழந்தை யேசுவை தன் கரங்களில் ஏந்திக்கொண்டு," மகனே பார்..நம் டாரத்தி  வந்திருகின்றாள்..நான் அவளை வரவேற்றிருகிறேன்...உனக்கு அவளை பிடித்திருகின்றதா..பார்.." என்றார். ஆனால் குழந்தை யேசு டாரத்தியை பார்க்க மனதில்லாமல் ," யாரம்மா இந்த
டாரத்தி..என்ன அசிங்கமாக இவள் இருகின்றாள்... இவள் எல்லாம் ஒரு அழகா...இவள் முக அழைவிட இவள் ஆன்மா மிகவும் அசிங்கமாக உள்ளது. அந்தரத்தில் அழுக்காறும்   கோபமும் திமிரும் இவளை ஆட்சி செய்கிறது.. இவள் குலமும் கோத்திரமும் நம்மைவிட மிகவும் தாழ்ந்திருகின்றது..வசதிவாய்ப்புகளில் இவளிடம் அப்படி என்ன கொட்டிக்கிடக்கிறது..  வெறும் தூசு. இவளை நான் பார்க்கவே விரும்பவில்லை... இவளை அப்பாலே போக சொல்லுங்கள்..ஞாஸ்நானத்தாலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தாலும் இவள் மீண்டும்   பிறக்கட்டும் நான் அப்போது பார்த்துக்கொள்கிறேன்..இப்போது இவளை போகச்சொல்லுங்கள்" என்றார்..     கனவு முடிந்தது...தன் உணர்வு திரும்ப பெற்றவளாய் தன் தாயாரிடம் தன்
கனவைப்பற்றி தெரிவித்தாள் டாரத்தி. அவளது தாயார் அவளை அழைத்துக்கொண்டு அந்த தூயவறான முதிய குருவானவரிடம் கூட்டிச்சென்றாள். அப்போதுதான் அந்த குருவானவர்   டாரத்திக்கு யேசுநாதர் யார் என்றும், அவரது மீட்ப்பின் திட்டத்தையும அவரது கடவுளின் தன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். அபோதே மனம் மாறினாள் டாரத்தி..
ரகசியத்தில் அவளுக்கு ஞாஸ்நானமும் புது நன்மையும் உறுதிப்பூசுதலும் கொடுக்கப்பட்டது. இப்போது அவளின் பெயர் காத்தரீன். அவள் கிறிஸ்த்துவிலும் பரிசுத்த ஆவியிலும் புது   வாழ்க்கையை ஆரம்பிக்கவே அவள் சொல்லமுடியாத அழகில் திகழ்ந்தாள்... ஏற்கனவே அறிவில் சிகரத்தை தொட்டிருந்தவளுக்கு பரிசுத்த ஆவியானவரின் ஏழு வரங்களான ஞானம்,
புத்தி,விமரிசை, அறிவு, திடம்,பக்தி, தெய்வபயம் ஆகிய வரங்கள் சேர்ந்துகொண்டதால் ஞான சௌந்தரியாகவும் அறிவில் ஞான சூரியனாகவும் திகழ்ந்தாள். அந்த இரவில்   யேசுநாதரைப்பற்றிய நினைவாக துயில்கொண்டாள். அன்று அவளுக்கு ஒரு கனவு ஏற்பட்டது. அன்று ஒருநாள் கனவு ஏற்பட்டதுபோலவே இன்றும் தேவதாயார் தன் திருமகன்
குழந்தை யேசுவை கையில் ஏந்திக்கொண்டு," மகனே பார்..யார் வந்திருக்கின்றாள் என்று பார்..நம் மகள் காத்தரீன் அல்லவா வந்திருகின்றாள்...அவளுக்கு உன்னை திருமணம்   செய்துகொள்ள வேண்டுமாம்..பார்" என்றார். அதற்கு யேசுநாதார், " வா காத்தரீன்..என் தாயார் எனக்கு நல்ல மணவாட்டியைதான் எனக்கு ஏற்பாடு செய்திருகிறார்கள். உன்னை எனக்கு  மிகவும் பிடித்து இருகிறது. உன் காலம் முடிந்ததும் என் வான்வீட்டில் நான் உன்னை திருமணம் செய்துகொள்வேன். அதுவரை இதை வைத்துக்கொள்" என்று தன் பிஞ்சு கரங்களால்  காத்தரீனின் கரங்களை பிடித்து அவள் கையில் தன் மோதிரம் ஒன்றை அணிவித்தார். கனவு கலைந்தது..
           அடுத்தநாள் காலையில் காத்தரீன் முகம் கழுவி துடைத்தபோது தன் கரத்தில் யேசுநாதர் கனவில் தனக்கு அணிவித்த மோதிரம் இப்போது தன் கரங்களில் இருக்கக்கண்டு   மிகுந்த ஆச்சரியப்பட்டாள்." ஓ...அப்படியானால் எனக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டது..இது யேசுநாதர் என் திருமண அடையாளமாக அணிவித்த கல்யாண மோதிரம்..நான்   மிகுந்த பாக்கியசாலி..நான் விரும்பிய யேசுநாதரை கணவனாக அடைந்துவிட்டேன்..இது எனக்கு உறுதியாகிவிட்டது " என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் தாயாரை அணுகி ," அம்மா. எனக்கு யேசுநாதருடன் நேற்றே திருமணம் நடந்துவிட்டது...இனிமேல் எனக்கு வேறு ஆடவனுடம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்னும் ஆசையை இத்துடன் நிறுத்திக்
கொள்" என்று கூறி தன் கல்யாண மோதிரத்தைக்காட்டினாள்..காத்தரீனின் தாயாருக்கு இதை நம்புவதா ...இல்லை நம்பாமல் இருப்பதா என்றே தெரியவில்லை. இத்தகைய ஒரு   மோதிரத்தை தன் வம்சாவழியில் யாரிடத்திலும் அவள் கண்டதில்லை. அவள் கூறும் செய்தியும் நம்பும்படியாகத்தான் இருக்கிறது.. இது எங்கு போய் முடியும் எப்படி முடியும் என்று   மிகவும் குழம்பிப்போனாள் அவள் தாயார். அடுத்த நாள் தன்மகளின் வாழ்நாள் இப்படி திசைமாறிப்போகும் என்று அந்த தாயாருக்கு தெரிந்திருக்க சற்றேனும் நியாயமில்லை...ஆம்.. அன்று விதி பலமாகத்தான் வேலை செய்தது.
      அந்த புகழ்பெற்ற அலெக்ஸாண்டிரியா துறைமுகப்பட்டிணதிற்கு வருகை தந்த பேரரசர் மாக்ஸிமியனை மிக்க ஆரவாரமாக வரவேற்றார் ஆளுனர் காண்ஸ்டைன். அந்த பெரிய உருவம்   கொண்ட மாமிச மலை என்றும் போர்க்களத்தில் மனித அரக்கன் என்றும் பேர் பெற்றிருந்த மாக்ஸிமியன் என்னும் ரோமைய சக்கரவர்த்தி வெகு ஆடம்பரமாக வந்தார்.. அந்த நெடிய
உருவம்கொண்ட சக்கரவர்த்திக்கு நாங்கள் மிகு நெருக்கமானவர்கள் என்று காட்டிக்கொள்ள பெரும் அரசியல்வாதிகளும் அவர்தம் அழகிய பெண்களும் அவருக்கு மிக நெருக்கமாக வர  அவரது நீண்ட நெடிய கரங்களால் அந்த அழகிய பெண்களை தழுவிக்கொண்டு மிகவும் சந்தோஷமாக நடந்துவந்தார் சக்கரவர்த்தி மாக்ஸிமியன். பேரரசர் மாக்ஸிமியனின் சிரியா தேசத்தை
சேர்ந்த பேரழகியான மனைவி அகஸ்த்தா என்றும் எத்ரோபியா என்றும் அழைக்கப்பட்ட மஹாராணியின் கண்களில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. தன் பார்வையாலேயே மற்ற   அரசவைப்பெண்களை வெளியேற்றினாள் அவள். ஆனால் என்ன செய்வது ..பேரரசரின் கைகளில் கட்டிக்கொள்ளப்பட்ட பெண்களின் நிலைமை அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்வது   போல் இல்லை. அவர்களுக்கு இஸ்ட்டம் இருக்கிறதோ இல்லையோ...இனிமேல் அவராக விட்டால் ஒழிய அவரிடமிருந்து மீள முடியாது.[ இப்படியாக பேரரசர் மாக்ஸிமியன் பல ரோமைய   செனட்டர்களின் வயிற்றெறிச்சலை கட்டிக்கொண்டதால் அதுவே மாக்ஸிமியனின் முடிவுக்கும் ஒரு காரணமாகப்போயிற்று.]
           அரசாங்க விருந்து எல்லாம் நல்லபடியாக முடிந்து மாலையில் களியாட்டம் ஆரம்பம் ஆனது.அந்த அலெக்ஸாண்டிரியா பட்டிணத்திலிருந்த ரோமையர்களின் விளையாட்டரங்கம்  பேரரசரின் வருகையால் மிகவும் களை கட்டிப்போயிருந்தது. போதாததற்கு மன்னர் மாக்ஸிமியனின் பிறந்த நாள் விழாவும் சேர்த்து கொண்டாடப்பட்டதால் கொண்டாட்டத்திற்கு
கேட்கவா வேண்டும். அந்த ஆப்ரிக்க தேசத்திலிருந்த ரோமையர் ஆதிக்கத்திலிருந்த அத்தனை நாடுகளின் அரசர்களும் அவர் தம் பிரதிநிதிகளும் பேரரசர் மாக்ஸிமியனின் பாதம்  பணிந்து கப்பம்கட்டி இன்னும் அரசருக்கு பிடிக்கும் தங்கம், வெள்ளி,முத்து, பவளம், வைரம், வைடூரியமென்று அனைத்துவிதமான பரிசுகளும்கொடுத்து அவரை
கௌரவப்படுத்திக்கொண்டு தங்கள் பதவிகளையும் பட்டங்களையும் காப்பாற்றிக்கொண்டும் அவற்றை புத்துப்பித்துக்கொள்ளவும் செய்தனர்...மன்னர் மாக்ஸிமியன் தன் வாழ்நாளில்   இப்படியொரு கொண்டாட்டத்ததையும் களியாட்டத்தையும் கண்டதே இல்லை என்ற அளவுக்கு மிகவும் சந்தோஷப்பட்டுப்போனார்..பெண்கள் விஷயத்தில் மன்னர் மாக்ஸிமியன் பெரிய   ஆள் என்பதால் எத்தனை எத்தனையோ காமக்களியட்டங்கள் நிறைந்த அசிங்க நடனங்கள் நடத்தமுடியுமோ அனைத்தும் மன்னர் முன்னிலையில் நடத்திக்காட்டப்படன.
         அடுத்ததாக ஆரம்பமானது பயங்கரம்.
     பல பராக்கிரமமான வீரர்கள் வீர விளையாட்டு என்னும் போர்வையில் ரத்த வெறியோடு மோதிக்கொண்டார்கள். தோற்ற வீரன் உயிரை இழக்க வேண்டும் என்பது விதி ஆதலால்   நடந்த வீர விளையாட்டுக்கள் பயங்கரத்தை உண்டுபண்ணின. அதில் எத்தனையோ நல்ல பராக்கிரம சாலிகள் தோற்று உயிர் இழந்தார்கள். ஜெயிக்க வேண்டும் என்னும் வெறியாலும்
தோற்றால் உயிர் தறிக்காது என்பதாலும் ஜெயிக்கும் முயற்சியில் பல சதிவேலைகள் நடந்தன. அந்தக்காலத்திலேயே பந்தயங்கள் கட்டப்பட்டு அதற்கேற்ப வீரர்களின் தலை எழுத்து  நிர்ணயிக்கப்பட்டன. இத்தகைய போட்டிகள் முடிந்ததும் மனிதனும் மிருகமும் என்னும் சாக்கில் பல வீர விளையாட்டுக்காரர்கள் அரங்கத்தில் நிராயுதபாணிகளாய் நிற்க வைக்கப்பட்டு  சிங்கம் புலி கரடிகளால் வேட்டையாடப்பட்டனர்.
        அடுத்தபடியாக அரசாங்க விரோதிகள் என்னும் போர்வையில் அனேக கிறிஸ்த்துவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நிராயுதபானியாய் அரங்கத்தின் நடுவில் நிற்க   வைக்கப்பட்டு இந்த சிங்கம் புலி, கரடிகளால் கடித்துக்குதறி மிகவும் கொடூரமாய் கொல்லப்பட்டனர். இதற்குள் மாலைநேரம் வரவே கடைசி காட்சி என்று அனேக பனைமரங்கள்
நடப்பட்டு அவற்றின் உச்சி மீது கிறிஸ்த்துவர்கள் கட்டப்பட்டு உயிரோடு சொக்கப்பனையாய் கொளுத்தப்பட்டனர்..இந்த அக்கிரமமத்தை காண சகிக்காத சாதாரண மக்கள் பலர்  " ஐய்யோ...இந்த அக்கிரமத்தை காண சகிக்கமுடியவில்லையே...ஐய்யோ கடவுளே...இந்த பாவப்பட்ட அப்பிராணி கிரிஸ்த்துவர்கள் செய்த பாவமென்ன...இந்த அநீதியைக்கேட்ட ஆளே
இல்லையா" என்று கதறி அழுதனர்..இருப்பினும் தங்கள் அழுகையை யாரேனும் கண்டால் தங்கள் கதியும் இப்படித்தான் ஆகும் என்பதால் கண்னீரை மறைத்து துடைத்துக்கொண்டனர்.
      அப்போது ஒரு பெண்," அடேய் மாக்ஸிமியா...நிறுத்து இந்த அநியாயத்தை" என்று கர்ஜித்தாள்.  இந்த கர்ஜனையில் பேரரசர் மாக்ஸிமியனின் சப்த நாடியும் ஒரு நிமிடம் அப்படியே நின்று போயிற்று. அரசனின் கோபம் அவன் கண்களில் ரத்த சிகப்பாக தெரிந்தது. தன் நிலையை  ஒரு வினாடியில் சுதாரித்துக்கொண்ட பேரரசன் மாக்ஸிமியன்," யாரது என் பேர் சொல்லி கூப்பிட்டது" என்று அவனும் கர்ஜித்தான். அவனுடைய கர்ஜனையில் அந்த அரங்கமே   குலுங்கியது. மக்கள் எல்லோரும் அடுத்து என்ன ஆகுமோ என்று பயத்தால் நடுங்கினர். மீண்டும் மாக்ஸிமியன்," யார் என்னை பெயர் சொல்லி கூப்பிட்டது.. பேர் சொல்லி கூப்பிட்ட தைரியம் செயலிலும் இருக்க வேண்டும்.. அதற்கு தைரியம் இருப்பவர் என் முன்னே வரட்டும்" என்றான்...அப்போது ," அது நான் தான் மாக்ஸிமியா " என்று சபை நடுவிலிருந்து  வெளிப்பட்டாள் கன்னி ஒருத்தி... அவள் வேறு யாரும் அல்ல. நம் அலெக்ஸாண்டிரியாவின் ஆளுநனின் மகள் டாரத்தி எனப்பட்ட காத்தரீன் தான்.
" பெண்ணே...நீ யார்... இத்தனை பேர் முன்னிலையில் உன் பேரரசனை பேர் சொல்லி அழைக்க உனக்கு என்ன தைரியம்" என்றான் மாக்சிமியன்.
" மாக்சிமியா...நீ தவறு செய்தவன்.. தவறு செய்தவனுக்கு மரியாதை கிடைக்காது..." என்றால் காத்தரீன்.
" பெண்ணே நீ ஏதோ முடிவோடுதான் இங்கே வந்திருகிறாய். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இத்தனை பேர் முன்னியிலையும் என்னை ஒரு பேரரசன் என்றும்   பாராது என்னை பெயர் சொல்லி அழைத்திருக்கிறாய்..சற்று முன் எத்தனை சிற்றரசர்கள், பேரரசர்கள் எல்லோரும் என் காலில் விழுந்து பணிந்தார்களே... எல்லாம் எதற்காக.. எல்லாம்   நான் எப்பேர்பட்ட பேரரசன் என்பதர்காக. என் முன்னிலையில் என் எதிரி கூட நிற்க அஞ்சுவான். ஆனால் நீ ஒரு பெண்ணாக இருந்தும் என்னை பேர் சொல்லி அழைத்துவிட்டாய். நீ மட்டும் ஒரு ஆணாக இருந்திருந்தால் இன்னேரம் உன்னை என் கையாலேயே ஒரே அடியில் அடித்தே கொன்றிருப்பேன்..உன் நல்ல நேரம் நீ பெண்ணாக இருந்துவிட்டாய்..அதுவும்
அழகிய பெண்னாக..உன் தோற்றமும் பொலிவும் நீ ஒரு அரச குமாரியாக இருக்கக்கூடும்..போகட்டும் உன்னை நான் மன்னித்தேன். உன் குற்றச்சாட்டு என்ன?"
" நீ ஒருபாவமும் அறியாத கிறிஸ்த்துவர்களை வீனாக வதைக்கிறாய். அவர்கள் செய்த குற்றம் என்ன?"
" பெண்ணே.. அவர்கள் கிறிஸ்த்துவர்களாகப்பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம். நம் ரோமைய சாம்ராஜ்ஜியத்தில் கிறிஸ்த்துவ மதம் தடை செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்த்துவை ஏற்றுக் கொள்பவர்கள் தேச துரோகிகள்..அவர்கள் ரோமைய அரசனையும் அவர்தம் தெய்வங்களையும் மதிக்காதவர்கள்..அவர்களுக்கு மரணதண்டனை காத்திருகிறது என்று தெரிந்தும்   கிறிஸ்த்துவர்கள் அதை ஏன் ஏற்றுக்கொள்கிறார்கள்?. அதுசரி... இதை எல்லாம் கேட்க நீ யார்? நீ ஒரு கிறிஸ்த்துவளா?"
"ஆம்...நான் ஒரு கிறிஸ்த்துவள். அரசே யாரும் கிறிஸ்த்துவர்களாகப்பிறப்பதில்லை. மாறாக கிறிஸ்த்துதான் அவர்களில் பிறக்கின்றார். கிறிஸ்த்துவம் என்பது ஒரு வாழும் முறை.
யேசுகிறிஸ்த்துவே அவர்களை அழைக்கிறார். அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று சொல்ல இந்த   உலகில் யாருக்கும் உரிமை இல்லை. கிறிஸ்த்துவத்தை ஏற்றுக்கொண்டால் உயிர் போகும் என்று தெரிந்திருந்தும் அதை ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றால் அது என்ன சாமானிய   காரியமா? சாகும் முன் ஒருவன் கொடுக்கும் வாக்குமூலம் உண்மையானது என்று கருதப்படும் அல்லவா..அப்படியே இந்த கிறிஸ்த்துவர்களும் உண்மைக்கு சாட்ச்சியம் கொடுக்க   தங்கள் இன்னுயிரை கொடுகின்றார்கள் என்றால் அந்த மதம் உண்மையானது என்றல்லவா கருதப்பட வேண்டும் . அதை விடுத்து அதை ஏன் தடை செய்ய வேண்டும்?"
" பெண்ணே நிறுத்து உன் பிரசங்கத்தை. அதை காதுகொடுத்து கேட்க நன் தயாராக இல்லை..உன் பூர்வீகம் என்ன..உன் தாய் தகப்பன் யார்?"
" மாக்ஸீமியா... அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயங்கள்.. இருப்பினும் நீ கேட்டுவிட்டதால் நான் பதில் சொல்கிறேன். என் பெற்றோர் இதோ கைகட்டி வாய் பொத்தி  நிற்கிறாரே ஆளுனர் காண்ஸ்டன்டைன் அவர்தான் என் தகப்பனார்...அவருக்கு அருகில் இருகிறாரே ...அவர்தான் என் தாயார்...பூர்வாசிரமத்தில் என் பெயர் டாரத்தி...இப்போது   காத்தரீன்..இப்போது நான் உலகமஹா பேரரசர் யேசுராஜாவின் பத்தினி..நாங்கள் ஆளப்பிறந்தவர்கள்..ரோமை சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தாரே ரோமுலுஸ்... அவருக்கு துணை  நின்றார்களே நூற்றுவர் எனப்படும் பத்ரீசியர்கள்... அவர்கள் வழிவந்த நாங்கள் உண்மையில் அரச குடும்ப வாரிசுகள்...உன்னைப்போல் குறுக்கு வழியில் வந்து ஆட்சியைப்பிடித்தவர்கள்
அல்ல.."
" பெண்னே..நீ என்னை மிகவும் அவமானப்படுத்துகிறாய்... அடேய்.. யாரங்கே ...இந்த திமிர் பிடித்த சிறுக்கியை கைது செய்து சிறையில் அடையுங்கள். நாள் முழுவது கட்டிவைத்து   உயிர் போகும் மட்டும் சவுக்கால் அடியுங்கள்.. இந்த மாக்ஸிமியனை இவள் என்னவென்று நினைத்துக்கொண்டாள்...நாளைக்கு காண்பிகிறேன் நான் யாரென்று" என்று உறுமினான்.
       அப்போது காத்திரீனின் தாயும் தகப்பனும் பேரரசன் மாக்ஸிமியனின் காலைப்பிடித்துக்கொண்டு கதறினர். " அரசர் பெருமானே... என் மகளுக்கு நிச்சயம் பைத்தியம்தான் பிடித்திருக்க   வேண்டும். ஏதோ வயதுக்கோளாறு... அவளை மன்னித்துவிடுங்கள்.. எங்களுக்குத்தெரிந்து அவளுக்கு திருமணமானதோ..கிறிஸ்த்துவள் ஆனதோ தெரியாது..எங்களுக்கு அந்த
யேசுநாதர் யார் என்றும் தெரியாது.. இவளுக்கு எப்படி புத்தி இப்படி போனது என்றும் தெரியது. என் மகளின் மனதைக்கெடுத்த அந்த யேசுநாதர் நாசமாகப்போக" என்று சபித்தார்.
     ஆனாலும் மாக்ஸிமியனின் கோபம் தணியாமல் அந்த ஆளுநரையும் அவர் மனைவியையும் தன் கால்களால் எட்டி உதைத்தான். " இரு..இரு..உங்களை நாளைக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன்" என்றுகூறி விருட்டென சென்றுவிட்டான். அந்த நாள் முழுவதும் அவன் அடைந்திருந்த பெருமையும் சிலாக்கியமும் சந்தோஷமும் அந்த மாலையில் மறைந்துபோய்
பெரும் அவமானத்தால் முகம் சிறுத்து கடுகடுவெனும் கரும்சிருத்தையைப்போல் உறுமிக்கொண்டே சென்றான் அந்தக்கொடுங்கோலன். அடுத்தநாள் விசாரணை ஆரம்பமானது.
" என்ன...அந்த சிறுக்கி சவுக்கடி வாங்கி செத்துப்போனாளா இல்லை இன்னும் உயிரோடு இருக்கின்றாளா " என்றான் மாக்ஸிமியன். "அரசே அவள் உயிரோடுதான் இருகின்றாள்"  என்று பதில் வந்தது. ரத்த விளாறுகளாய் அடிபட்டிருந்த காத்திரீனா அரசன் முன் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டாள்.
" என்ன பெண்ணே...ராத்திரி நன்றாக தூங்கினாயா...விருந்து பலம்தான் போலிருகிறது...அரசனை பகைத்துக்கொண்டால் விருந்து எப்படி இருக்கும் என்று தெரிந்துகொண்டாயா?"
" மாக்ஸீமியா... இதற்கெல்லாம் பயந்து நடுங்கும் கோழை அல்ல நான்..என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் என்னைக்கண்டு பயந்து ஓடுகிறாய்..உண்மையில் நீதான் கோழை."
" அடிப்பெண்னே...நானா கோழை...நான் கோழையாக இருந்துதான் இத்தனை பெரிய பதவிக்கு வந்திருகிறேனாக்கும்...ரோமை ராஜ்ஜியமும் இத்தனை பெரிதாக வளர்ந்திருக்குமாக்கும்..பெண்ணே... ஏனோ உன்னைக்கண்டு என்மனம் தவிகிறது..உன் மீது கோபம் கொள்ளவும் மாட்டேன் என்கிறது." என்றான் எகத்தாளமாக.
அவன் உள் மனதை புறிந்துகொண்ட காத்தரீன்," மாக்ஸீமியா... உன்னை நான் எச்சரிக்கிறேன்...நான் உலகமஹா பேரரசர் யேசுராஜாவின் பத்தினி.. இதோபார் எனக்கு அவர் அணிவித்த கல்யாண மோதிரம்...உலகமஹா பேரரசரின் பத்தியியுடன் உரையாடிக்கொண்டிறோம் என்னும் அச்சமும் மரியாதையும் உனக்கு இருக்கட்டும்" என்றாள்.
      ஒருவிதமான அதிகாரத்தோரணையுடன் பேசும் காத்ரீனாவிடம் இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உணர்வு அப்போது மாக்ஸீமியனுக்கும் ஏற்பட்டது. " பெண்னே காத்ரீனா..உனக்கு உன் தந்தை கூறியபடி பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும்.இல்லைஎன்றால் என்னிடம் இப்படிப்பேசுவாயா?. உன்னுடன் இனிமேல் எனக்கு பேச ஒன்றும்
இல்லை. உன் கேள்விகளுக்கு பதில் கூற என் சார்பாக என் மந்திரிப்பிரதாணிகள் உன்னுடன் பேசுவார்கள்...அவர்கள் உன்னை வாதில் வென்று உன்னை அவமானப்படுத்துவது   உறுதி.. நாளைக்கு ஆரம்பமாகும் என் கச்சேரி " என்றான்... அன்றும் காத்தரீன் சிறையில் அடைக்கப்பட்டு மஹா மூர்க்கமான தண்டனைகளுக்கு ஆட்ப்படுத்தப்பட்டாள்.
                 அடுத்த நாள் ஒரு ஐம்பது பேர் காத்தரீனுடன் வாதம் புறிய அரண்மனையில் காத்துக்கொண்டிருக்க காத்தரீன் மஹா கேவலமான முறையில் அடிபட்டு ரத்தவிளாறான  திரேகத்துடன் சபைக்கு அழைத்துவரப்பட்டாள். இருப்பினும் அவள் முகத்தில் சோர்வோ, துன்பமோ ஏதும் தென்படவில்லை. இதைக்கண்ட ஒரு அரண்மனை மருத்துவன் அவள்
மட்டில் மிகுந்த ஆச்சர்யப்பட்டான். வாக்குவாதம் ஆரம்பமனது. பலதரப்பட்ட கேள்விகள்...அந்த ஐம்பதுபேரும் ஐம்பதுவிதமான தலைப்புகளில் அவளை கேட்டு அவள் பதில்தர  முடியாதபடி இருக்கும்போது அவளை தகுந்த விதத்தில் அவமானப்படுத்தவேண்டும் என்ற கட்டளைபடி சவாலான கேள்விகளைக்கேட்டனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி  எதுவும் நடக்கவில்லை. அனைத்திற்கும் அவள் தக்கபடி பதிலளித்தாள்...பரிசுத்த ஆவியாரின் அனைத்துகொடைகளும் அவளிடம் குடிகொண்டிருந்ததால் அவளை எந்த   விதத்திலும் கேள்விகேட்டு மடக்கமுடியவில்லை. இப்போது காத்தரீன் முறை வந்தது... அவள் கேட்ட எந்தவிதமான கேள்விகளுக்கும் அந்த ஐம்பது பேரில் ஒருவருக்குகூட பதில்கூற  தெரியவில்லை. காத்தரீன் கேட்ட கேள்விகளுக்கு மாக்ஸீமியனின் மந்திரிகள் அனைவரும் பதில்கூறத்தெரியாத மாணவன் போல விழித்தனர். அவளது கேள்விகளால் பதில்கூற  முடியாதவர்களுக்கு காத்தரீன் தகுந்த முறையில் பதிலும் விளக்கமும் கொடுத்தாள். அவர்கள் அனைவரும் மிகவும் திகைத்துப்போய் இத்தகைய அறிவு இந்த சின்னப்பெண்ணுக்கு  எங்கிருந்து வந்தது..இத்தனை காலமும் நாம் முயன்று கற்றுக்கொண்டவைகள் எல்லாம் இந்த சின்னப்பெண்ணுக்கு முன்னால் ஒன்றும் இல்லை..ஆகவே பெண்ணே நீயே கூறுவாயாக... " உனக்கு இத்தனை வயதில் இந்த அறிவு எப்படி ஏற்பட்டது?" என்றனர். அப்போது காத்தரீன் அவர்களுக்கு யேசுவைப்பற்றியும் அவரது திருத்தாயார் தேவாமாதாவைப்பற்றியும், பரிசுத்தபிதா, பரிசுத்தசுதன், பரிசுத்த ஆவி ஆகிய இவர்களின் தமதிருத்துவ ரகசியம், யேசுநாதரின் மனிதாவதாரம், அவரது பாடுகள், அவரது உயிர்ப்பு, அவரது உத்தானம் ஆகியவற்றைப்பற்றியும் பரிசுத்த ஆவியாரின் திரு வருகைபற்றியும் எடுத்துறைத்தாள்.
      அப்போது மாக்ஸீமியன் அங்கு வரவே தன் மந்திரிகள் அவளிடம் வாதில் தோற்று அவமானம் அடைந்தனர் என்று அறிவிக்கப்படவே மிகவும் கோபம் கொண்டான் மாக்ஸீமியன்.  அடங்காத கோபத்துடன் தன் மந்திரிகளைப்பார்த்து," ஒரு பதினெட்டு வயது பெண்ணுக்கு இருக்கும் அறிவும் துணிச்சலும் உங்களீடம் இல்லாமல் போனதெப்படி? அப்படியானால்
நீங்கள் அறிவில் பிரகஸ்பதி என்று பட்டம் வாங்கியதெல்லாம் வெறும் பித்தலாட்டமோ ? இப்படியாகத்தான் இத்தனை காலமும் கழித்தீறோ? உங்கள் அறிவை நம்பி இவள் முன்னிலையில்  நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று உங்களை அனுப்பியதற்கு எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துள்ளீர்கள்... எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்" என்று உறுமினான்
மாக்ஸீமியன்.
    அப்போது அந்த மந்திரிகளில் ஒருவர் துணிவுடன், " பேரரசர் எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் எத்தனையோ மன்னர்களிடமும் சான்றோர்களீடமும் சொற்போரில்   எத்தனையோ முறை வெற்றி கண்டதுண்டு. எங்கும் யாரிடத்திலும் தோற்றதே இல்லை.. அதனாலேயே எங்களுக்கு பிரகஸ்பதி என்னும் பட்டமும் கிடைத்ததுண்டு. ஆனால்
இந்தப்பெண் சாதாரணமான மனுஷியே அல்ல. ஞானத்தின் அதிபதி இவள் நெற்றியில் குடிகொண்டுள்ளார். அவரது பரந்த அறிவு இந்த உலகம் என்றில்லாமல் அகில உலகிலும் ஆட்சி செலுத்தும். அவளை வெற்றிகொள்ள அந்த ஞான தேவனே நேரில் வந்தால் ஒழிய இவளை வேறு எந்த மனிதராலும் வெற்றி கொள்ளவே முடியாது. எங்களை மன்னிக்க வேண்டும் மஹா
பிரபூ" என்றனர்.
        தன் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டவர்கள் அவள் முன்னிலையில் அவமானமாக தோற்கடிக்கப்பட்டதால் தானே தோற்றதாகக்கருதினான் மாக்ஸீமியன். எனவே இந்த அவமானத்தை   தாங்காத மாக்ஸீமியன் அந்த ஐம்பது மந்திரிகளையும் பனைமரத்தில் கட்டிவைத்து உயிரோடு கொளுத்தச்சொன்னான். இருப்பினும் காத்தரீனின் பரிசுத்தமான அழகில் கவரப்பட்ட அவன்," பெண்ணே நான் உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன்...நான் உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன்... இந்த ரோமைய, பைசாந்திய எகிப்த்திய, மஹாராணியாக ஆக்குகிறேன்.என்னை ஏற்றுக்கொள்... அந்த யேசுகிறிஸ்த்துவை கைவிட்டுவிடு... ஒன்றும் அவசரம் வேண்டாம். உன்னை இந்த கடினமான சித்திரவதைகளினின்று விடுவித்து அழகு மிகு மஞ்சத்தில் உன்னை ஏற்றிவைத்து அழகு பார்ப்பேன்" என்றான் அந்த ராட்ச்சதன்.
      கொடும் கோபமடைந்தாள் காத்தரீன். " அடே முட்டாள் நாயே...என்னை யார் என்று நினைத்துக்கொண்டாய்...நான் இந்த அகில உலகத்தையும் இன்னும் என்னென்ன  உலகமெல்லாம் உண்டோ அத்தனை உலகத்தையும் படைத்து காத்து நடத்திவரும் யேசுநாதரின் பத்தினி நான்.. நீ போடும் பிச்சைகாசுக்கும் அற்ப பதவி சுகத்துக்காகவும் உன்பின்னே   சுற்றிவந்து தங்கள் உடலை விற்றுப்பிழைக்கும் இந்த அரசவைப்பெண்கள் போல் நானும் இருப்பேன் என்று என்னை அவ்வளவு சொல்ப்பமாக நினைத்துக்கொண்டாயோ. உன் பதவியும் பட்டமும் என் கால் தூசிக்கு சமம். நான் என் பரலோக பர்த்தாவை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை... நடத்திக்கொள் உன் நாடகத்தை" என்றாள்.
      தங்களைப்பற்றி தரக்குறைவாக பேசிய காத்தரீனாவை தங்கள் பலம்கொண்ட மட்டும் தங்கள் கைகளை நெருக்கி பிசைந்துகொண்டு அந்த அரசவைப்பெண்கள் தங்கள் வாழ்வைக்கெடுக்க வந்த இந்த
பெண் காத்தரீனா " நாசமாகப்போக " என்று சாபம் கொடுத்தார்கள்.
       இத்தகைய பதிலை சற்றும் எதிர்பாராத மன்னன் மாக்ஸீமியன் பெரும் கோபமுற்று, " இன்னும் ஏன் நிற்கிறீர்கள்... இந்த ஐம்பது நிர்மூடர்களையும் உடனே பனைமரத்தில் ஏற்றிவைத்துக்கொளுத்துங்கள் " என்றான்.
காத்தரீனாள் பரிசுத்த ஆவியிடம் மன்றாடி அவர்கள் ஒவ்வொருவர் மீதும் சிலுவை அடையாளமிட்டு மன்றாடவே அந்த ஐம்பதுபெரும் ஒரே குரலாக பரிசுத்த அவியானவரால் ஆசீர் நிறையப்பட்டு," பரிசுத்தர்...பரிசுத்தர்...பரிசுத்தர்...மூ உலகின் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தர்...யேசுவே ஆண்டவர்... யேசுவே இரண்டாமாளாகிய சர்வேசுரன்.. அவரே இந்த   உலகத்துக்கு மனிதாவதாரமாக வந்தவர்... பிதாவாகிய சர்வேசுரனை விசுவாசிகிறோம்...சுதனாகிய சர்வேசுரனை விசுவாசிக்கிறோம்...பரிசுத்த ஆவியகிய சர்வேசுரனை
விசுவாசிகிறோம்..தமதிருத்துவமாகிய ஏக சர்வேசுரனை விசுவாசிகிறோம் என்று மேலும் மேலும் பல விசுவாச சத்தியங்களை கூறிக்கொண்டிருக்கும்போதே பனைமரத்தில் கட்டப்பட்டு  அவர்கள் அனைவரும் உயிரோடு கொளுத்தப்பட்டனர். காத்தரீன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு மீண்டும் சித்திரவதை ஆரம்பமானது. அடுத்த நாள்....
      சில அரசாங்க விஷயங்களை முன்னிட்டு மாக்ஸிமியன் தொலைதூரம் செல்ல வேண்டி இருந்ததால் காத்தரீனை வந்து பார்த்துக்கொள்கிறேன்..அதுவரை சித்திரவதை தொடரட்டும்
என்று கூறிச்சென்றான். மாக்சீமியனை நேருக்கு நேராக பார்த்து கேள்விகள்பல கேட்ட அந்த அதிசயப்பெண் யார் என்றாள் மாக்ஸீமியனின் மனைவி அகஸ்த்தா. தன் கணவன் ஊரில்   இல்லாதபோது அரண்மனையில் சிறையில் வாடும் காத்திரீனாவை ராணுவ தளபதி போர்பைரி என்பவனுடன் சேர்ந்து சந்தித்தாள். காத்த்ரீனாவின் கொள்ளை அழகில் சொக்கிப்போனாள்
அவள். அவளிடம் உரையாடும்போது காத்தரீனுடைய முகம் பரலோக காந்தியால் சூழப்பட்டிருப்பதைக்கண்டார் அகஸ்த்தா. இதை தளபதி போர்பைரியும் கவனித்தான். அந்த   அரண்மனை சிறையில் இருந்த சுமார் இரு நூறு வீரர்களும் கண்டனர்..அந்த நேரமே காத்தரீன் அவர்கள் அனைவருக்கும் யேசுகிறிஸ்த்துவை போதித்து பரிசுத்த ஆவியின் வல்லமையால்
அனைவரையும் கிறிஸ்த்துவர்களாக மாறச்செய்தாள்.. அவர்கள் அனைவரும் யேசு கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்வதாக கூறினர். இதை மன்னன் மாக்ஸீமியன் முன்னிலையிலும் அறிக்கையிடுவதாக கூறினர். சில நாட்க்களில் மன்னன் மாக்ஸீமியன் தலை நகருக்கு திரும்ப வந்தான்.
அன்றைய நாள் காத்திரீனின் கடைசி நாளாக இருந்தது. அது நவம்பர் 25.கி.பி.305. அன்றைய விசாரணையில் வழக்கமான விசாரணைகள் வழக்கமான பதில்கள். முடிவில்   மாக்ஸிமியன் காத்தரீனை சக்கரத்தில் ஏற்றிகொல்லுங்கள் என்றான்.
    அப்போது அவன் மனைவி அகஸ்த்தா," அன்பரே வேண்டாம்...காத்தரீன் புனிதவதி..இதற்கு நானே சாட்ச்சி.. அவளது கடவுளின் வல்லமை அவளிடம் விளங்குகிறது..அந்த தேவாதிதேவனின் பத்தினியை ஒன்றும் செய்யாதீர்... கடவுளின் கோபாக்கினைக்கு நீர் உள்ளாக வேண்டாம் " என்றாள்.
கடும்கோபம் கொண்டான் மாக்ஸீமியன்.." ஆஹா...கடைசியில் அவள் உன்னிடமே அவள் வேலையைக்காட்டிவிட்டாளா..உன்னையும் கிறிஸ்த்துவளாக மாற்றிவிட்டாளா ...இப்படி  எத்தனை பேர் கிளம்பிவிட்டீர்கள்...உயிர்மீது ஆசை இல்லாதவர்கள் இந்த அரங்கத்தில் வந்து யேசுகிறிஸ்த்துவை கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லுங்கள்" என்று  கொக்கரித்தான். அப்போது அவன் மனைவி அகஸ்த்தா அவன் முன்னே வந்து " அன்பரே நான் முதலில் வருகிறேன்...நான் யேசு கிறிஸ்த்துவை கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன் "   என்றாள்.. அடுத்து அவன் தளபதி போர்பைரி வந்து," அரசே நான் யேசு கிறிஸ்த்துவை கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன்" என்றான்.. அடுத்தாக அந்த இரு நூறு சிறைச்சாலை வீரர்களும்
வந்து தாங்களும் யேசு கிறிஸ்த்துவை கடவுளாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்கள். அப்படியே வெலவெலத்துப்போனான் மன்னன் மாக்ஸிமியன்.. தன் மனைவி உட்பட தன்   அருமை தளபதி போர்பைரி உட்பட தன் ராணுவ வீரர்கள் பலர் உட்பட கிறிஸ்த்துர்கள்... அப்படியானால் இனி யாரை நம்புவது...இருப்பினும் " என் மனைவியையும் என் தளபதியையும்
என் வீரர்கள் பலரையும் கிறிஸ்த்துவர்களாக மாற்றிய அந்த யேசு கிறிஸ்த்துவை வெறுக்கிறேன்... இவர்களை மனம் மாற்றிய காத்தரீனை வெறுக்கிறேன்..இவர்கள் அனைவரும்   மரணத்தீர்வைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.. அதிலும் இதற்கெல்லாம் காரணமான அந்த சின்ன சிறுக்கி காத்தரீனை சக்கரத்தில் சுற்றி சித்திரவதைசெய்து கொள்ளுங்கள்" என்று   கூறிவிட்டு அரங்கத்தை விட்டு வெளியேற எத்தனித்தான்..
           அப்போது அவன் மகன் மாக்சென்டைன் அவன் தகப்பன் காலில் விழுந்து ," அப்பா...கோபம் வேண்டாம் அப்பா...சற்றே என் வார்த்தைக்கு செவி கொடுங்கள். என் அம்மாவுக்கு  உயிர் பிச்சை கொடுங்கள்... என்ன இருந்தாலும் அவர் என்னை பெற்றவர்... அவருக்கு உயிர் பிச்சை கொடுங்கள் " என்று தன் தகப்பனின் காலைக்கட்டிக்கொண்டு அழுதான்.   அப்போது மக்ஸீமியன்," மகனே மாக்சென்டைன்..முதலில் அழுவதை நிறுத்து..அழுவது அரசனுக்கு அழகல்ல. அவளுக்காக நீ கலங்காதே...ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள்... அவள்   உன் தாய் அல்ல. உனக்கும் எனக்கும் இவள் போனால் வேறு ஒருத்தி கிடைப்பாள். இதுதான் நமக்கு அழகு." என்றான். அப்படியே நிலை குலைந்து போனான் அவன் மகன் மாக்சென்டைன். அரச கட்டளை உடனே நிறைவேற்றப்பட்டது.
       மாமன்னன் மாக்ஸீமியனின் மனைவி அகஸ்த்தா, தளபதி போர்பைரி அவர்களுடைய ராணுவ வீரர்கள் இரு நூறு பேரின் தலைகளும் மன்னன் மாக்ஸீமியன் முன்னிலியிலேயே வெட்டப்பட்டன. தன் காதல் மனைவியும் அழகுப்பதுமையுமான அகஸ்த்தா தன் ஆணையினாலேயே தன் கண்முன்னே கொல்லப்படுவதைப்பற்றி மன்னன் மாக்ஸீமியன் கொஞ்சமும்
கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவன் கோபமெல்லாம் அந்த சின்னச்சிறுக்கி காத்தரீன் மீதே திரும்பியது. " இனிமேல் அவள் கதையை முடித்துவிட்டுத்தான் மறு வேலையை   பார்க்கப்போக வேண்டும் " என்றான் மாக்ஸீமியன். அடுத்துவந்தது காத்தரீன் முறை.
       அக்காலத்தில் ஒரு சித்திரவதை சாதனம்தான் சக்கரம்.. இதைப்பற்றி நேயர்களுக்கு சற்றே தெரிந்திருப்பது அவசியம்.
நம் ஊர் மாட்டு வண்டிச்சக்கரம் போல் ஒரு பெரும் சக்கரம் தயாரிக்கப்படும். அதன் ஆரக்கால்களும் வெளி விளிம்பும் கூராக்கப்பட்ட இரும்புப்பட்டயத்தால் செய்யப்பட்டிருக்கும்.  சக்கரத்தின் அச்சு பூமியில் நாட்டப்பட்டிருக்கும். தண்டனை பெற்றவர் இந்த சக்கரத்தின் மீது கிடத்தப்பட்டு கை. கால்களை கட்டிவைப்பர். பின் அந்த சக்கரம் சுழற்றப்படும்.
       தண்டணை நிறைவேற்றுபவர் தன் கைகளில் பெரும் குண்டாந்தடியோ அல்லது கத்தியோ அல்லது கோடாரியோ கொண்டு சுழற்றிவிடப்படும் மனிதரை ஓங்கி அடிப்பார். அடி எங்கு படுகிறதோ அந்த பகுதி வெட்டப்படும்..சீக்கிரமே உயிர் போவதென்பது அந்த நபரின் அதிர்ஸ்ட்டத்தை பொருத்தது. முதல் அடியிலேயே தலை வெட்டப்பட்டால்...மனிதர்
கொடுத்துவைத்தவர்.. மரணம் விரைவில் நடந்துவிடும். மாறாக அடி எங்கெங்கு படுகிறதோ அந்த பகுதியிலுள்ள பாகங்கள் வெட்டப்படு மனிதர் கொடுமையான வேதனைகள் அனுபவித்து இறுதியில் மரணமடைவார். இதிலும் சில சதி வேலைகள் நடக்கும்..பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படும் மனிதர்கள் சக்கரத்தை மிக மெதுவாக சுழலவிடுவார்கள்.
தன் விருப்பம் போல கைகள், கால்கள் என வெட்டிமுடித்து கடைசியில் தலைக்கு வருவார்கள். எப்படியும் தண்டனை பெற்றவர் கொடுமையான வாதனை நிறைந்த மரணத்தை   அடைவார்.
      இப்படியோரு மரணத்திற்குத்தான் காத்தரீன் தீர்வை இடப்பட்டார். அந்த சக்கரத்தின் மீது அவள் கிடத்தப்பட்டபோது ஒரு புதுமை நடந்தது. காத்தரீனின் காவல் சம்மனசு அந்த சக்கரத்தை சுக்கு நூறாக உடைத்துப்போட்டது. அந்த ஆரக்கால்களூம் வெளி விளிம்பும் சுழன்று சுற்றி நின்றுகொண்டு கைகொட்டி ஆகடியம் செய்து வேடிக்கப்பார்த்த பலரின் தலையை சீவியது. பலர் குற்றுயிறாய் கீழே விழுந்து துடித்தனர். பலர் கை கால் இழந்தனர். இதைக்கண்ட மக்கள் பலர் இந்த புதுமையைக்கண்டு அப்போதே யேசுநாதரை கடவுளாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் மன்னன் மாக்ஸீமியன் பெரும் கோபம் கொண்டான்... எப்படியும் காத்தரீனை கொன்றே ஆக வேண்டும் என ஆணையிட்டான். எனவே காத்தரீன்  சிரச்சேதத்திறகு ஆட்படுத்தப்பட்டாள். பெரும் வீரன் ஒருவனின் பெரும் வாள் வானுக்கு எழும்பியது. அதேபோல் காத்தரீனின் கண்களும் வானத்தைப்பார்த்தன. பின் தான்
வெட்டப்படுவதற்குத்தோதாக தலையை குனிந்துகொடுத்தாள். ஒரே வெட்டில் காத்தரீனின் தலை துண்டிக்கப்பட்டது.. அப்போதும் நடந்தது ஒரு பெரும் அதிசயம். வெட்டப்பட்ட அவள்  உடலிலிருந்து அவளது ரத்தம் சிகப்பு நிறத்துக்குப்பதிலாக வெண்மை நிறத்தில் ஓடியது. அரங்கத்திலிருந்த அத்தனை பெரும் கூட்டமும் இந்த அதிசயத்தைக்கண்டு காத்தரீன் ஒரு
தெய்வப்பெண்...அவன் ஒரு தேவதை.. அவள் நீடூழி வாழ்க என்று தங்களையும் மறந்து கூவினர்.
      இவ்வளவு நேரமும் ரத்த வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்த மன்னன் மாக்ஸீமியன் பெரும் வெட்கமடைந்தான்..இனம்புறியாத பெரும் அச்சமும் திகிலும் அவனை ஆட்கொள்ளவே   அவன் அரங்கத்தைவிட்டு சப்த்தம் போடாமல் வெளியேறினான்.
      அன்றைய இரவில் காத்தரீனுடைய காவல் சம்மனசு அவள் திரு உடலை அவள் சிரசுடன் சேர்த்து எடுத்துச்சென்று அக்காலத்தில் எவருமே நெருங்க பயப்படும் சீனாய் மலையின்  உச்சியிலிருந்த ஒரு பெரிய பலகைப்பாறையில் கிடத்தியது. அப்போதும் ஒரு புதுமை நடந்தது. கடினமான அந்த பலகைப்பாறையும் இளகி நம் காத்தரீனின் திரூஉடலின் சாயலை
தன்னில் பதிப்பித்துக்கொண்டது. பக்தி பரவசத்துடன் அதைக்காணவிரும்பும் யாவருக்கும் இன்றும் அந்த திருச்சாயல் தெரியும். சீனாய் மலையில் இருக்கும் இந்தப்பாறை மோயீசனுக்கு  கடவுள் பத்துக்கட்டளை கொடுத்த இடத்தின் அருகிலேயே உள்ளது. இந்த சீனாய் மலையைப்பற்றியும் சில விஷயங்கள் நேயர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
      ஏறகுறைய 2500 அடி உய்ரமுள்ள இந்த சீனாய் மலையின் உச்சியில்தான் மோயீசனுக்கு கடவுள் பத்துக்கட்டளை கொடுத்தார் என்கிறது யாத்திரை ஆகமம். எனவே இந்த மலையின் உச்சியில் ஒரு தேவாலயம் அதன் நினைவாக கட்டப்பட்டுள்ளது. அதற்கு அருகிலேயே முஸ்லிம்களும் இந்த நிகழ்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு மசூதியை
கட்டுவித்துள்ளார்கள். இந்த மலையின் ஒரு இடத்தில் எலியாஸ் தீர்க்கதரிசி பலகாலம் தங்கி இறைவனை கண்டடைந்தார். இந்த சீனை மலையின் அடிவாரத்தில்தான் மோசனுக்கு கடவுள் எரியும் முட்புதரில் காட்சிகொடுத்தார். அந்த எரியும் முட்புதரின் வாரிசாக இன்றும் அதே இடத்தில் அந்த முட்புதர் இருகின்றது. மோயீசனின் காலத்திலிருந்து இன்றும் அந்த முட்புதர் அழியாமலிருப்பதே ஒரு பெரும் அதிசயம் தான். அன்றிலிருந்து இன்று வரை ஆந்த முட்புதர்முன் செல்லும் பக்தர்கள் யாத்தெரீகர்கள் யாவரும் காலில் காலணிகள்   அணிவதில்லை. காரணம் கடவுளே அந்த இடத்தை," மோயீசா..நீ நிற்கும் இடம் பரிசுத்தமானது... எனவே நீ உன் காலணிகளை கழற்றிவிடு" என்றுகூறியதால் யாருக்கும் இங்கு காலணியுடன் செல்ல அனுமதி இல்லை. இந்த முட்புதர் போன்ற ஒரு செடி இந்த சீனாய் பாலைவனத்தில் எங்குமே இல்லை. அது ஒரு தனித்துவமானது. மேலும் இந்த முட்புதரிலிருந்து   பதியன்போடப்பட்ட செடியும் வேறெங்கும் வளருவதுமில்லை. உயிர் வாழ்வதும் இல்லை. இதே ஒரு பெரும் அதிசயம் தான்.
             இத்தகைய பரிசுத்தமான இடத்தில் காண்ஸ்டாண்டிய மன்னன் ஜஸ்டினியன் யேசுநாதரின் மறு ரூபமான நினைவாக ஒரு தேவாலயத்தை கி.பி.527லில் கட்டினார். இந்த கோயிலி லுள்ள ஒரு கல்வெட்டு ஜஸ்டீனியனும் அவர் மனைவி தியோடாராவும் இக்கோவிலைகட்டியதாக கூறுகின்றது. அவர் அந்த கோயிலுக்கு பயன்படுத்திய கதவுகள் இன்றளவும்
உபயோகத்தில் உள்ளன. இவருக்குப்பின் வந்த முஸ்லீம் மதத்தை தோற்றுவித்த முஹமது நபி இக்கோவிலையும் அங்கு வாழும் துறவிகளையும் மேலும் சீனாய் மலை மீது இருக்கும்
பத்துக்கட்டளைக்கோவிலுக்கும் இந்த இடங்களைக்காணவரும் பக்தர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதாக கொடுத்துள்ள உறுதிப்பத்திரமும் இன்றளவும் இந்த கோயிலில் இருக்கிறது.
   அடிக்கடி மலைக்கள்வர்களாள் இந்தக்கோயில் கொள்ளை அடிக்கப்படுவதை தடுக்க பெரும் கோட்டைமதில் அமைக்கப்பட்டுள்ளன. கி.பி. ஒன்பது அல்லது பத்து நூற்றாண்டுகளுக்குப்பின் நம் புனித காத்தரீன் பக்தி முயற்சி பரவ ஆரம்பித்த உடன் ஒரு வெளிப்படுத்துதல் மூலம் காத்தரீனின் சிரசும் அவரது பல எலும்புகளும் இந்த சீனாய் மலைமீது கண்டுபிடிக்கப்பட்டு அவை வெகு பூச்சிதமாக இந்த சீனாய் மலையின் கீழே உள்ள யேசுநாதரின் மறு ரூபக்கோயிலில் கொண்டுவந்து வைக்கப்பட்டன. அன்றிலிருந்து யேசுநாதர் தன் பத்தினியின் பெருமையை உலகம் தெரிந்துகொள்ள பல புதுமைகள் செய்தார்.
     எனவே இந்த முட்புதர் அமைந்துள்ள இந்த யேசுவின் மறு ரூபக்கோவில் புனித கத்தரீன் மடாலயம் என்று பெயர் பெற்றது. அவரது பக்த்தி முயற்சியை முன்னிட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அவருடைய அருளிக்கங்கள் பல கொண்டு செல்லப்பட்டன. இந்த காத்தரீன் மடாலயத்தில் இப்போதிருப்பது அவரது திரு சிரசும் அவரது கை எலும்பும் தான். இருப்பினும்
அவரது விரலில் அன்று யேசுநாதரால் அணிவிக்கப்பட்ட அந்த மோதிரம் இன்றளவும் நாம் காணும்வண்ணம் உள்ளது. அவரது கபாலத்தில் இன்னும் அவரது முடி அழியாமல் உள்ளது   பெரும் அதிசயம்தான்.
     இந்த காத்தரீன் மடாலயத்தில் யேசுநாதரின் மறு ரூபமும், ஸ்நாபக அருளப்பரின் மரணமும், நம் காத்தரீனின் படமும் அவசியம் காண வேண்டியவை. நம் காத்தரீனின் படத்தில்   காத்தரீன் ஒரு இளவரசி என்பதற்காக தலையில் அவருக்கு ஒரு கிரீடமும் அரச ஆடையும், அவர் பெரும் படிப்பாளி என்பதற்காக புத்தகங்களூம்,அவரைக்கொல்லப்பயன்படுதப்பட்ட  சக்கரமும், அவர் தலைவெட்டிக்கொல்லப்பட்டார் என்பதால் ஒரு கத்தியும் அவர் வேத சாட்ச்சியாய் மரணித்தார் என்பதற்காக ஒரு ஓலையும் அழகாக கி..பி. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே வரையப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே அந்த கொலைகருவியான சக்கரம் நம் புனிதையான காத்தரீன் பெயராலேயே காத்தரீன் சக்கரம் எனவும் பெயர் பெற்றது.
       நம் புனிதை கத்தரீனையும் தன் மனைவி அகஸ்த்தாவையும் அவருடைய படைத்தளபது போர்பைரியனையுமவனுடன் இருநூறு ராணுவ வீரர்களையும் தன் ஒரே கட்டளையால்   சிரச்சேதம் செய்த மன்னன் மாக்ஸீமியனின் கதி என்னவாயிற்று என்று நேயர்களுக்கு நான் அவசியம் கூறுவேன். மன்னன் தன் ராட்சத வலிமையால் பல போர்களில் வெற்றி அடைந்திருந்தாலும் அவனுக்கிருந்த அளவுக்கதிகமான காம இச்சை பல செனட்டர்களின் குடும்பங்களையும் அரச குடும்ப இளவரசிகளின் வாழ்கையையும் நாசமாக்கியது. மன்னன்  மாக்ஸீமியன் போர் தந்திர உபாயங்களில் சிறந்தவனானாலும் பொதுமக்களையும் அரசியலையும் சரியாக நிர்வகிக்க தெரியாதவன். எனவே மக்கள் இவனை ஓரம்கட்டினர். தானாக விருப்ப
ஓய்வு கொடுத்து தனக்கு பதில் தன் மகன் மாக்சென்டீனியனை சீசர் ஆக்கினான். அவன் மீதும் மக்கள் வெறுப்புற்றனர். இறுதியாக தகப்பன் மகன் இருவருடைய பதவிகளையும் பறித்து  அவர்களை தெருவில் ஓட ஓட துறத்தித்துறத்தி அவர்கள் இருவரையும் தலையை வெட்டிக்கொண்றதாக ஒரு சரித்திரம் கூறுகின்றது. மரம் எந்தப்பக்கம் சாய்ந்திருகின்றதோ
அந்தப்பக்கமே விழும்...மேலும் ஜீவியம் எப்படியோ மரணமும் அப்படியே என்ற கிறிஸ்த்துவ பழமொழி உண்மையாயிற்று.
          இந்த காத்தரீன் மடாலயத்தை சுற்றி சுற்றி பல மடாலயங்கள் அமைந்துள்ளன. அன்று மோசே தன் மக்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக கடவுளிடம் பேசும்போது கடவுள்   மோசேயை ஒரு பெரும் குன்று போன்ற பாறையைக்காட்டி அதை தடியால் ஒரு முறை அடிக்க சொன்னார். மோசையும் அந்தப்பாறையை அடிக்கவே அதிலிருந்து தண்ணீர் உடனே
வெளிப்பட்டது அந்த இடம் இன்றும் ஏழு கன்னியர் மடாலயம் எனப்படுகின்றது.
      மோசே பத்துகட்டளைகளை வாங்கி வருவதற்குள் நன்றிகொன்ற இஸ்ராயேலர்கள் தங்களுக்கென ஒரு பொன் கன்று செய்து வழிபடவே கோபமடைந்த சர்வேசுரன் அவர்கள் அனைவரையும் பூமி பிளந்து நரகத்தில் வீழ்த்திய இடமும் இங்கே அருகில் உள்ளது.
         பாரோமன்னனின் தண்டனைக்கு பயந்து தப்பிவந்த மோசே இந்த மலைஅடிவாரத்தில் சுற்றி வரும்போது ஜெத்ரோவின் ஏழுபெண்கள் கால்நடைகளை மேய்த்துவரும்போது   அவர்களிடம் வம்புசெய்த பிலிஸ்த்தியரை துரத்தி அந்த பெண்களுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டினார் அல்லவா.. அந்த ஏழு பெண்களில் செப்போரா என்பவளிடம் மயங்கி   அவளையே திருமணம் செய்துகொண்டார் மோசே. அவர்கள் சந்தித்துக்கொண்ட ஒரு குகையும் இந்த மலை அடிவாரத்திலேயே அந்த நீர் சுனையின் அருகிலேயே உள்ளது.   அந்த நீர் நிறைந்த சுனை இன்றளவும் நல்ல குடிநீராகவே உள்ளது. அந்த சுனை இந்த மலை அடிவாரத்திலேயே உள்ளது. இந்த இடங்கள் எல்லாம் அன்று மோசே காலத்தில் எப்படி
இருந்ததோ அப்படியே இன்றளவும் உள்ளது.
      யேசுநாதருக்காக மத்திய துருக்கியில் செபெஸ்த்தே என்னுமிடத்தில் நாற்பது வீரர்கள் பனிக்குளத்தில் மூழ்கடிக்கப்பட்டு அதிலும் மரணிக்காதவர்களை தலைவெட்டிக் கொள்ளப்பட்டனர். அவர்கள் நினைவாக நாற்பது வேத சாட்சிகள் மடாலயம் ஒன்றும் இங்கு அருகில் உள்ளது.
ஞான சௌந்தரியான புனித காத்தரீனம்மாவே எங்களுகாக வேண்டிக்கொள்ளும்.. ஆமென்.





























Saturday, February 1, 2014

" இரட்டைக்கத்தி வெள்ளை வீரன் புனித மெர்கூரியன்."



           " இரட்டைக்கத்தி வெள்ளை வீரன் புனித மெர்கூரியன்."

                 இது கதை அல்ல. நிஜம்.இந்த சரித்திர நிகழ்ச்சி கி.பி. 250 முதல் ஆரம்பமாகிறது . இந்தக்கதை மூன்று பேரரசுகளையும் அவைகளின் சக்கரவர்த்திகளையும் அவர்தம் ராஜ்ஜயங்களையும்  சுற்றி சுற்றி வரவேண்டி இருகிறது. இதில் ரோமைய சக்கரவர்த்திகள் இருவர். மற்றவர் பாரசீக சக்கரவர்த்தி. ஆகவே நாம் பைசாந்திய பேரரசு,ரோமைய பேரரசு மற்றும் பாரசீக பேரரசு என மூன்று பேரரசுகளையும் பார்த்துவரவேண்டி இருகிறது. இந்த மூன்று பேரரசுகளையும் அவர்தம் சக்கரவர்த்திகளையும் சந்தித்த பெருமை நம் கதா நாயகன் இரட்டைக்கத்தி வெள்ளை  வீரன் புனித மெர்கூரியனையே சேரும்.இப்போது கதைக்குள் செல்வோமா...
             அன்றைய ரோமைய பேரரசு மிகவும் பரந்து விரிந்து கடல்கடந்து பைசாந்தியம் [இன்றைய துருக்கி] வரை பரவி இருந்தது. மேலும் பைசாந்தியமும் பரந்து விரிந்ததால் ரோமிலிருந்து பைசாந்தியத்தை நிர்வகிக்க முடியாததால் ரோமையர்கள் தங்கள் தலைநகரான ரோமை ஒரு பிராந்திய நாடாகவும் தலைநகரை பைசாந்தியத்துக்கும் மாற்றினார்கள். இத்தாலியின்   வடக்குப்பகுதிக்கும் மேற்பட்ட நாடுகளான ஜெர்மனி ,பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளை நிர்வாகிக்க இத்தாலியின் வடக்கிலுள்ள மிலான் பட்டிணத்தை தலை நகராக  ஆக்கிக்கொண்டார்கள். எனவே ரோமைய சர்வாதிகாரிகள் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை கிழக்கிலும் மேற்கிலும் சரியாக நிர்வாகிக்க பைசாந்தியத்தை தங்களின் மத்திய தலை நகராக மாற்ற  வேண்டியதாக ஆயிற்று. இப்படியாக நவம்பெர் 3 கி.பி.361ல் ரோமை மற்றும் பைசாந்திய பேரரசுக்கு அதிபதியான ரோமைய சக்கரவர்த்தி ஜுலியன் அதன் தலை நகரான கான்ஸ்டாண்டி   நேபிள்ஸுக்கு [இன்றைய இஸ்த்தான்புல்] வந்தான். அவனது விஜயத்துக்கு முக்கியமான வேறு ஒரு காரணமும் இருந்தது. அதாவது தனக்கு எதிரியான பெர்சிய [ இன்றைய ஈரான்]
சக்கரவர்த்தி இரண்டாம் ஷாபூரை வென்று அவரது சாம்ராஜ்ஜியத்தை தன்னுடைய பைசாந்திய பேரரசுடன் இணைத்துக்கொள்ள வேண்டுமெனவும், மேலும் தனக்கு முந்திய ரோமைய   சக்கரவர்த்தியான தேசியன் மஹாராஜவை போரில் வென்று அவரை மிகவும் கேவலமாக அவமானப்படுத்திய முதலாம் ஷாபூரை அவரின் வாரிசான இரண்டாம் ஷாபூரை வென்று   அவரைப்பழிக்குப்பழி வாங்கவேண்டுமெனபதும் அவனது நீண்ட நாள் வைராக்கியமாக இருந்தது. இப்போது ரோமைய சக்கரவர்த்தி ஜுலியனைப்பற்றி சிறிது அறிந்துகொள்ளவேண்டியிருப்பது அவசியமாகிறது.
          அந்த பைசாந்திய பேரரசின் ராஜ வம்சமான கான்ஸ்டன்டைன் வம்சா வழியில் மே மாதம் கி.பி, 332 ஆம் ஆண்டில் ஜுலியுஸ் கான்ஸ்டான்டினுஸ் என்னும் ஒரு இளவரசருக்கு தலை நகரான கான்ஸ்டான்டி நேப்பிள்ஸில் பிறந்தவர்தான் நம் ஜுலியன். ஒரு நல்ல கிறிஸ்த்துவ ராஜ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தன் வாலிப பருவத்தில் தடம் மாறினார்.
இவரது பன்னிரண்டு வயதிலிருந்தே இயற்கையின் மேல் உள்ள பற்றுதலால் சரித்திரம் பூகோளம் வான சாஸ்த்திரம் போன்றவற்றிலும் மாயஜாலங்களில் மிகுந்த ஈடுபாடுகொண்டார்.
         ஆயினும் தன்னுடைய பள்ளிப்படிப்புகளின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவராய் விளங்கவே மேலும் தன்னுடைய அறிவை விருத்திசெய்துகொள்ள அந்த காலங்களில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய கிறிஸ்த்துவ மடாலயங்களில் சேர்க்கப்பட்டார். இதனால் இவர் வேத புத்தகங்களை கறைத்துக்குடித்தார். அப்போதே அவருக்கு மறையியல் அத்துபடி ஆனது. தன்னுடைய அரசாங்க அலுவலை முன்னிட்டும் அப்போதே அவருக்கு இருந்த மறைமுகமான அரசியல் போட்டியை முன்னிட்டும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டி கிரேக்க நாட்டிலுள்ள ஏதென்ஸில் மேலும் படிப்பதற்காக அனுப்பப்பட்டார். அங்கு பேறுபெற்ற புனிதர்களாகவும் அவர்கள் காலத்தில் பெரிய படிப்பாளிகளாய் விளங்கிய கிரகோரியார்
மற்றும் பாசில் இவர்களுடைய பரிச்சயம் ஏற்பட்டது. அது தொடர்ந்த நட்பாகவும் மாறியது.
           காலம் மாறியது. நம் ஜூலியன் தன் வாலிப வயதில் ரோமுக்கு மேற்குப்பிராந்திய தேசமாய் விளங்கிய ஃப்ரான்ஸ் தேசத்தின் சீசராக பதவி ஏற்றார். கி.பி.357ல் அர்ஜென்டோராட்டம்   என்னுமிடத்தில் அலமானியர்களுக்கும் ரோமர்களுக்கும் நடந்த யுத்தத்தில் அப்போதைய அகஸ்ட்டஸாக விளங்கிய கான்ஸ்டன்டைன் மன்னர் இறக்கவே நம் ஜூலியன் ரோமை மற்றும்   பைசாந்தியத்திற்கும் சேர்த்து பேரரசராக அதாவது அகஸ்ட்டசாக கி.பி.361ல் முடி சூடிகொண்டார். இதனால் அவர் மீண்டும் தன் தாய் நாடான கொன்ஸ்டாண்டினேப்பிள்ஸ் வர   வேண்டியதாக இருந்தது. இந்த பைசாந்தியத்திற்க்கு வந்ததிலிருந்து அவருக்கு பைசாச மோகம் பிடித்துக்கொண்டிருந்தது. அதாவது பேய் பிசாசுகள் பில்லி சூனியம் இவற்றின்பால்   மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இவருக்கு சிறுவயதிலிருந்த இந்த ஆர்வம் மீண்டும் தலை தூக்கியது. இதற்குக்காரணம் தன் பனிரெண்டாம் வயதில் ஒரு மாய ஜாலக்காரணாகிய மந்திரவாதியை தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டதுதான். தனக்கு தெரிந்த மாய வித்தையை அவன் நம் ஜூலியனுக்கு சொல்லிக்கொடுத்தான். ஒருமுறை நம் ஜூலியன்
மந்திரவாதி இல்லாதபோது ஒரு மாயஜாலத்தை தோற்றுவித்தார். அதன்படி ஏறாளமான ஆவிகள் அவர் முன்னே தோன்றின. அதனால் பயந்துபோன நம் ஜூலியன் தமக்குத்தெரிந்தபடி ஒரு சிலுவை அடையாளத்தை அவற்றின்மீது வரையவே நொடியில் அந்த மாய ஜால காட்ச்சிகள் மறைந்தன. இந்த நிகழ்ச்சிகளை ஜூலியன் மந்திரவாதியிடம் சொல்லவே அவன்   சிலுவைதான் நமக்கு எதிரி..கிறிஸ்த்துவர்கள்தான் நம் எதிரிகள். எனவே கிறிஸ்த்துவ நெறிகளைக்கடைபிடிக்காதே...என்பன போன்ற துர்புத்திகளாள் ஜூலியனின் மனதை மாற்றினான்.
       அன்றிலிருந்து அவனது ஆழமானதில் கிறிஸ்த்துவர்களின்மீது ஒரு இனம்புரியாது எதிர்ப்பு வளர்ந்தது.  இந்த பைசாந்திய பேரரசுக்கு பக்கத்து சாம்ராஜ்ஜியம்தான் சசானிய சாம்ராஜ்ஜியம். அதவது கிழக்கே அன்றைய பாரசீகம் ,மெசப்படோமியா,சோராஸ்ட்டிரம், இந்தியாவரையிலும் மேற்கே
எகிப்த்து, கார்த்தேஜ் வரையிலும் கூட இந்த சசானிய சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது. எனவே சிலைவழிபாடும் நரபலியிலிருந்து விலங்குகள் வரை பலிகொடுக்கும் கலாச்சாரமும் எங்கும்   வியாபித்திருந்தது. துர்க்கை என்றும், காளி என்றும் அழைக்கப்பட்ட துர்தேவதைகளின் வழிபாடு முக்கியமானதாக கருதப்பட்டது. மன்னர்கள் போர் என்று ஆரம்பித்துவிட்டால் துர்க்கை
வழிபாடு செய்து எருமைமாட்டை பலி கொடுப்பது வழக்கம். துர்க்கை ,காளி போன்ற தெய்வங்கள் வெற்றி கொடுக்கும் தெய்வங்களாக கருதப்பட்டனர்.
இத்தகைய கலாச்சாரங்கள் நம் ஜூலியன் சக்கரவர்த்திக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. தான் எண்ணியிருந்தபடி தன் முன்னோடிகளான திராஜன் தேசியன் என்னும் ரோமைய   சக்கரவர்த்தியை போரில் வென்று அவரைக்கைதியாக்கி மிகுந்த அவமானப்படுத்திய முதலாம் சாபூர் மன்னனின் வாரிசான இரண்டாம் சாபூரை வென்று அவரின் சாம்ராஜ்ஜியமான
சசானிய பேரரசை நம் பைசாந்திய பேரரசுடன் இணக்க வேண்டும். இதற்கு காளியின் ஆசீர்வாதம் தேவை எனவே காளி பூஜையை ஆரம்பி என தன் அர்ச்சகர்களுக்கு உத்திரவிட்டான்.
அதன்படி மிகுந்த உக்கிரத்துடன் ஆரம்பமானது காளி பூஜை. காளியின் சன்னதம் வந்து ஆடினான் பூஜாரி.
" டேய் நான் ஆத்தா காளி வந்திருக்கிறேன்... கேட்பதை கேட்டுக்கொள்"
" அம்மா...எனக்கு சாபூர் மன்னனின் உயிர் வேண்டும்... அவனை போரில் வென்று அவன் ராஜ்ஜியத்தை நான் என்னுடைய ராஜ்ஜியத்துடன் இணைக்க வேண்டும். இதுதான் என் ஆசை"
" அடேய்..நீ யார் என்பது எனக்குத்தெரியும்... நீ என் மகன் இல்லை..நீ என் மகனாக மாறு.. அப்போது நீ கேட்டதை நான் உனக்குத்தருவேன்"
" இப்போது நானும் உன் மகன் தானே...அதில் உனக்கு என்ன சந்தேகம்"
" இல்லை...நீ என் மகனாக இன்னும் மாறவில்லை. காரணம் நீ ஒரு கிறிஸ்த்துவன். ஒப்புக்கொள்கிறாயா"
" நான் பிறப்பால் ஒரு கிறிஸ்த்துவன் தான்.. ஆனால் அதை விட்டு வெளியேறி சரியாக இருபது வருடம் ஆகிறது."
" இல்லை...நீ கிறிஸ்த்துவன் இல்லை என்று சொல்லிக்கொள்ளலாம்.. ஆனாலும் உன் உள் மனதில் யேசு இருகிறார்.. அவர் உன்னைவிடுவதாக இல்லை"
" நான் யேசுவை விட்டும் அவர் என்னை விடமாட்டேன் என்றால் அதற்கு நான் என்ன செய்யட்டும்..நான் உன் மகனாக மாற என்ன செய்ய வேண்டும்?"
" எனக்கு நரபலி வேண்டும்... ஏறாளமான நரபலிகள் வேண்டும்..என் தாகம் தீர மனித ரத்தம் வேண்டும். ஏறாளமாக கிறிஸ்த்துவர்களின் ரத்தம் வேண்டும்..உன்னால் எனக்கு இதைத்தர முடியுமா... அப்படியானல் நான் உனக்கு சாபூரின் உயிரையும் அவன் தேசம் முழுவதையும் உனக்குத்தருவேன்."
" அம்மா.. இவை யாவும் எனக்கு மிகவும் சாதாரனமான விஷயங்கள்..உனக்கு இவை எப்போது வேண்டும்? "
" பொறு... கொஞ்சம் அமைதியாக இரு. நான் உன் ராஜ்ஜியத்தில் தங்க நல்ல இடமாக பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன். அதுவரை பொறுத்திரு"
பூஜை முடிந்தது...தன்னுடைய நோக்கங்களும் ஆசைகளும் விரைவிலேயே நிறைவேறப்போகின்றது என்னும் நப்பாசையால் தன் அரண்மனை திரும்பினான் ஜூலியன்.
காளிமாதாவின் பிரசன்னம் கேட்டு ஒரு பத்துநாள் வரை காத்திருந்தான் மன்னன் ஜூலியன். ஆனால் அவளிடமிருந்து எந்த பதிலும் வராததால் மிகுந்த கலக்கமுற்றான்.
ஜூலியன் மீண்டும் ஒரு எருமைமாட்டை பலிகொடுத்து காளியின் பிரசன்னத்தை கேட்டான். அப்போது அவள் அவன் முன் தோன்றி கூறியதாவது.
" ஜூலியன் நான் உனக்குகொடுத்த வாக்கிலிருந்து மீறமாட்டேன்"
" அம்மா...அப்படியானல் இத்தனை நாளாக ஏன் தாமதம்?"
" ஜூலியன் ... எல்லாம் உன் நண்பனால் வந்த வினைதான்"
" என் நண்பனால் வந்த வினையா..யார் என் நண்பன்.. அவனால் உனக்கு என்ன நேர்ந்தது... விளக்கமாக சொல்லவும்"
" நான் இந்த கப்பதோக்கியாவில் நல்ல வாசஸ்த்தலமாக தேடிப்போனேன்..எரிமலையின் தீக்குழம்புகளினால் உருவாக்கப்பட்டிருக்கும் உயிர்ந்த கூம்புபோன்ற அழகிய பாறைகள் நிரம்பிய அந்த கப்பதோக்கிய மலைப்பகுதிகளில் நான் ஏகாந்தமாக வாழ விரும்பி தேடிப்பார்க்கையில் அங்கு எங்கு திரும்பிப்பார்த்தாலும் இந்த கிறிஸ்த்துவர்கள் தங்கிக்கொண்டு அவற்றில் தங்கள் தேவனாகிய யேசுநாதருக்கு அழகிய ஆலயங்கள் பல ஏற்படுத்திக்கொண்டு இரவும் பகலும் ஜெபித்துக்கொண்டிருகிறார்கள்.. அவற்றில் ஒருவன் செய்யும் ஜெபம் என்னை மிகவும் பாடுபடுத்திவிட்டது"
" யார் அவன்?"
" அவன் தான் உன் பால்ய நண்பன் பாசில்.. அவன் இரவும் பகலும் செய்த ஜெபத்தால் என்னால் அங்கிருந்து மீண்டு வர முடிய வில்லை.. நல்ல வேளையாக அவன் ஜெபத்தை  நிறுத்தினானோ இல்லையோ நான் உன்னைக்காண ஓடோடி வந்துவிட்டேன் "
" சரி அம்மா...நான் அவனை பார்த்துக்கொள்கிறேன்...நான் சசானிய மன்னன் சாபூர் மீது எப்போது போரை ஆரம்பிக்க வேண்டும்?"
" காலம் தாழ்த்த வேண்டாம்...இன்னும் நான்கு நாட்க்களில் வரப்போகும் அம்மாவாசையில் உடனே ஆரம்பிக்கலாம். என் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு. மறந்துவிடாதே   எனக்கு கப்பதோக்கியாவில் நான் தங்குவதற்கு நல்ல வாசஸ்தலம் வேண்டும்...அங்குள்ள கிறிஸ்த்துவர்கள் ரத்தம் வேண்டும்..அவர்கள் எக்காரணம் கொண்டும் தப்பிபோக
அனுமதியாதே"
" சரி அம்மா...நான் பார்த்துக்கொள்கிறேன்... அடே பாசில் ..உன்னை...இரு உன்னை நான் வந்து பார்த்துக்கொள்கிறேன்."
அடுத்தநாள் காலையில் தன் மடத்தின்முற்றத்தில் பேரரசர் ஜூலியன் வந்து நிற்பதை சற்றும் எதிர்பார்க்கவில்ல புனித பாசில். பேரரசரின் விஜயத்தால் மிகவும் குழப்பமும் ஆச்சர்யமும்  அடைந்த அவர் மன்னனை தனக்குத்தெரிந்த முறையில் வெகு விமரிசையாக வறவேற்றார் புனித பாசில்.
" வர வேண்டும்... வரவேண்டும் ...பேரரசர் பெருமானே..இந்த ஏழையின் குடிசைக்கு மன்னரின் விஜயம் எத்தகையதோ?" என்றார் புனித பாசில்.
" பாசில்..நீர் நம்முடைய பழைய நண்பர் என்பதை மறந்துவிட்டீரோ?" என்றான் ஜூலியன்.
" இல்லை மன்னா...இல்லை... ஆனாலும் அப்படி சொல்லிக்கொள்ள எனக்குத்தகுதி இல்லை.. தாங்கள் இரு சாம்ராஜ்ஜிய அதிபதி...நான் ஒரு ஏழை துறவி.."
" பாசில்..நான் உன் இருப்பிடம் தேடி இவ்வளவு தூரம் வந்திருகிறேன்.. எனக்கு தாக சாந்தி ஏதும் செய்யக்கூடாதோ?"
" மன்னா.. மன்னிக்க வேண்டும்..பதட்டத்தில் மறந்துவிட்டேன்...இதோ உண்ண உணவும் குடிக்க தண்ணீரும் கொண்டு வருகின்றேன்" என்றவறாய் உள்ளே சென்று மூன்று   ரொட்டிகளையும் தண்ணீரையும் எடுத்துவந்தார்.. மன்னன் ஒன்றைப்பிட்டு சுவைத்துவிட்டு மீதியை தன்னுடைய நாய்களுக்குப்போட்டான். இதைக்கண்ட புனித பாசிலின் முகம்
வாடிவிட்டது. இருப்பினும் சுதாரித்துக்கொண்டு," மன்னருக்கு இந்த சாதாரண ரொட்டி பிடிக்கவில்லை போலிருகிறது. இந்த ஏழையின் குடிசையில் நாம் சாப்பிடும் உணவுதான் அது. அதைத்தான் நான் தாங்களுக்கு கொடுத்தேன்" என்றார். திடீரென கோபமடைந்தான் ரோமைய சக்கரவர்த்தியும் இந்த பைசாந்திய சக்கரவர்த்தியுமான ஜூலியன்.
" பாசில்..நான் இங்கு வந்திருப்பது உம்மை எச்சரித்துப்போகவே வந்தேன்..நம் பழைய ஸ்னேகத்தை மறந்துவிடு..இப்போது நான் உலக மகா சக்கரவர்த்தி. நீர் நமக்குகொடுத்த ரொட்டிகைள் என் நாய் கூட தின்னாது. அவற்றிற்கு ரத்தம் வேண்டும்... நான் ஆசையாக வளர்த்திருக்கும் சிங்கம், புலி, கரடி, சிருத்தைப்புலி ஆகியவற்றிற்க்கு ரத்தம் வேண்டும்.. மனித ரத்தம் வேண்டும்..அதுவும் கிறிஸ்த்துவ ரத்தம் வேண்டும்...நிறைய...நிறையாக...நீரும் உம் மடத்தாண்டிகளும் இந்த கப்பதோக்கியாவிலுள்ள கிறிஸ்த்துவர்கள் யாவரும்  இப்போது சிறைப்படுத்தப்படுகிறீர்கள்...நான் சசானிய மன்னன் இரண்டாம் சாபூரை வெற்றி கண்டு வந்த பின் உங்கள் அனைவரையும் வெட்டி நான் வணங்கும் காளிக்கு ரத்தாபிஷேகம் செய்கிறேன்.. அதுவரை நீங்கள் அனைவரும் இந்த கப்பதோக்கியாவைவிட்டு எங்கும் போகக்கூடாது...நீங்கள் அனைவரும் ஊரோடு சிறைவைக்கப்படுகிறீர்கள்" என்று   கூறி சரேலென தன் சாரட்டை திருப்பிக்கொண்டு பெரும் வேகத்தோடு கிளம்பினான். பெரும் திகிலடைந்தார்  
         புனித பாசில்.இருப்பினும் தன் சீடர்கள் சிலரை ஜுலியனை பின்
தொடர்ந்து சென்று போர் என்று ஏற்பட்டால் அவனது வெற்றிகளையும் தோல்விகளையும் தெரிந்துவர அனுப்பினார்.
        ஜூலியன் தன் பெரும்படைகளை பாரசீகத்தில் தன் எல்லைகளான யூபிரடீஸ் டைகிரீஸ் நதிகளைத்தாண்டிச்சென்றான். வெற்றி ஒன்றே நமது குறிக்கோள் என்பதால் தன் படை  வீரர்கள் ஒருக்கால் எங்கே தோற்றுவிடுவோமோ என்று பயந்து திரும்பி வந்துவிடாமலிருக்க தாங்கள் கடந்துவந்த அந்த நதிகளின் பாலங்களை உடைத்து தீக்கிரை ஆக்கினான்.
இப்போது ரோமனிய வீரர்கள் வேண்டும் என்றாலும் சரி வேண்டாம் என்றாலும் சரி தங்கள் எஜமானனுக்கக போரிடுகிறார்களோ இல்லையோ தங்கள் உயிரை காத்துக்கொள்ள தாங்கள்   கட்டாயம் போரிட்டே ஆக வேண்டும் என்னும் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். பல மாதங்களாக போர்...போர்...போர் என்று வீரர்கள் போராடிக்கொண்டிருந்ததால் களைத்து
சோர்வடைந்தார்கள்.பிராந்திய சிற்றரசன் ஏரிஸ் என்பவனுடன் செய்து வைத்திருந்த உடன்படிக்கையின்படி அவனும் உதவிக்கு வரவில்லை. அதேபோல் லோக்ஸியாஸ் என்பவனும்  வாக்களித்தபடி ஜூலியனின் உதவிக்கு வரவில்லை. அதாவது ஜூலியனின் உதவிக்கு வர முடியாதபடி சசானிய மன்னனால் தடை செய்யப்பட்டனர்.
         ஜூலியனும் அவனுடைய வீரர்களும் யுத்ததில் பெரும் சோர்வு அடைந்தார்கள். ஒரு யுத்தம் என்று வரும்போது சோதனையாக பல தடைகள் வருவது சகஜம்,தான் என்றாலும்   ஜூலியன் தன்னுடைய தான்தோன்றித்தனமான புத்தியால் அவசரப்பட்டு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு உணவுக்கு வேண்டிய வழியையோ... வேறு உதவிக்கு வேண்டிய   வழியையோ மன்னன் சாபூர் அடைத்துவிட்டான். ஆனாலும் ஜூலியன் தன்னுடைய வீரத்தாலும் சாமார்த்தியத்தாலும் சசானியர்களை பல இடங்களில் வெற்றி கண்டான். இந்த கால
கட்டத்தில் சசானிய மன்னன் தன் அறிவை மிகவும் பயன்படுத்தினான். அதன்படி தன்னுடைய சேனைகளை பல இடங்களில் தோல்விகாணச்செய்து தவறான திசையில் ஜூலியனை வெகுதூரம் தன்னுடைய ராஜ்ஜியத்தில் மலைப்பாலைவனத்திற்குள் இழுத்துக்கொண்டான். தங்களுடைய இலக்கான பெர்சியாவின் தலை நகர் திசிபோனுக்கு இன்னும் எவ்வளவு தூரம்...
ஆயினும் முன்னேறினான் ஜூலியன். ஜூலியனும் அவன் படை வீரர்கள் அனைவரும் வரும் வழியில் எந்த ஊரிலும் மக்கள் இல்லை..ஒரு ஆடோ...இல்லை மாடோ...இல்லை ஒரு   கோழியோ கூட கிடைக்காதபடி உள்ளூர் மக்கள் யாவரையும் உள்ளூரில் இல்லாதபடி மிகவும் சாமார்த்தியமாக ஏற்கனவே வெளியேற்றியிருந்தான் சசானிய மன்னன் சாபூர்.
            எங்கும் ஜூலியனுக்கு உண்ண உணவோ குடிக்க தண்ணீரோ கிடைக்காதபடி மிகவும் சாமார்த்தியமாக தடை செய்யபட்டதால் ரோமர்களின்பாடு மிகவும்   திண்டாட்டமாக போய்விட்டது. அந்த மலப்பாலைவனத்தில் ஊரும் தெரியாமல்...போகும் இடமும் தெரியாமல்.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த கொடுமைகள்...என்ற
எண்ணம் வந்ததும் ஜூலியன் தன் படைவீரர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் தன் படைகளை திரும்பவும் பைசாந்தியம் வர கட்டளை கொடுத்தான்.
                     " திதினியா மாதா " டிசம்பர். 2. அவரது திருவிழா.
     இந்த செய்தி நம் பாசிலுக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வளவுதான் ..இவன் திரும்பிவந்தால் நம் அனைத்து கிறிஸ்த்துவ மக்களுக்கும் ஆபத்து என்று உணர்ந்த அவர் தன் மடத்து சீடர்களோடும் அந்த கப்பதோக்கியாவிலுள்ள கிறிஸ்த்துவ மக்களுடனும் அங்கு திதினியா மலை மீது அமைந்திருந்த தேவமாதாவின் ஆலயத்துள் சென்று மூன்று நாட்க்களாக
ஜெப தபத்துடன் அந்த திதினியா மாதாவை சாஸ்ட்டாங்கமாக விழுந்து சரணடைந்து அவரது பாதுகாவலை வேண்டினார்கள்.
" அம்மா...திதினியா மாதாவே..பாவிகள் எங்களுக்காக மனமிரங்கும்...ஜூலியன் திரும்பி வந்தால் உம் பக்தர்களாகிய இந்த கப்பதோக்கியா மக்களும் நாங்களும் கொல்லப்படுவது  உறுதி. தேவரீர் பாவிகளுக்கு அடைக்கலம் அல்லவா... தேவரீர் கிறிஸ்த்துவர்களின் சகாயத்தாய் அல்லவா... எங்கள் மேல் மனமிரங்கும்... அந்த கொடியவன் நம் நாட்டிற்கு   பாரசீகத்திலிருந்து மீண்டும் திரும்பி வரவே வேண்டாம்...போர்க்களத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் அச்சமூட்டுவதாக இருகின்றன. தேவரீர் எங்களுக்கு பாதுகாப்பின் உறுதி
அளிக்காதவரை இந்தக்கோயிலை விட்டு நாங்கள் போகப்போவதில்லை.. நாங்கள் மடிவதானாலும் இந்தக்கோயிலிலேயே மடிகிறோம்... இது தேவரீருக்கு சம்மதமோ...எங்கள் மேல்   இரக்கமாய் இரும் அம்மா" என்று மக்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி கத்திக்கதறி அழுதனர். திதினியா மாதாவும் மனம் இரங்கினார். அன்று இரவு தன் தாசன் பாசிலுக்கு
ஒரு காட்சி அருளப்பட்டது.
தேவ தாயார் பரலோக பூலோக ராக்கினியாக பரலோகத்தில் வீற்றிருகின்றார். ஏறாளமான சம்மனசுக்கள் புடைசூழ அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு தேவ மண்டபத்தில் தேவதாயார்   வீற்றிருகின்றார்கள்..கோடானகோடி பரிசுத்தர்களும் காணப்படுகிறார்கள்.. அப்போது தேவ தாயார் தன் தேன் மதுரக்குறலில்," நம் தாசன் கப்பதோக்கியாவைச்சேர்ந்த அந்த வெள்ளை
வீரன் மெர்கூரி எங்கே?" என்கிறார்.
       பெரும் சேனைகள் அடங்கிய ஒரு போர் வீரர்கள் கூட்டத்திலிருந்து ஒரு வாலிபன் முன் வந்து," அம்மா... தேவதாயாரே... தேவரீரின் பாதக்கமலங்களுக்கு தங்கள் தாசன் மெர்கூரி வணக்கம் தெரிவிகிறான்" என்றார். அப்போது தேவ தாயார்," மெர்கூரி...நம் தாசன் பாசில் கேட்கிறான்..நீ போய் அவனுக்கு உதவு. பாரசீகத்தில் போர்களத்திலிருக்கும் நம் எதிரி
ஜூலியனை சங்காரம் செய்... அவன் நம்மையும் நம் திருமகனையும் பலவிதத்தில் நிந்தனை செய்திருகின்றான்.. அவனும் ஒரு கிறிஸ்த்தவன் என்பதற்காக நாம் இதுநாள் வரை   பொருத்தது போதும்..இனிமேல் அவன் திருந்தப்போவதில்லை..அவனால் நம் மக்கள் கொல்லபடுவது உறுதி..நீ போய் நாம் உனக்கு சொன்னதை நிறைவேற்று" என்றார். காட்சி முடிந்தது.
        அடுத்த நாள் பாசில் அந்த திதினியா மலை மீதிலிருந்து கீழே இறங்கி புனித மெர்கூரியனின் தேவாலயத்துக்குச்சென்றார்..புனித மெர்கூரியனின் கல்லரை அந்த தேவாலயத்தின் கீழே   உள்ளது. தேவாலயத்தினுள் அவருடைய சொரூபம் ஒரு ஈட்டியை தாங்கியபடி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆலய பீடத்தின் அருகில் வழக்கமாக பக்தர்களை பார்த்தபடி நேராக
இருக்கும் மாதாவின் சிலை இப்போது புனித மெர்கூரியனை பார்த்தபடி இருக்க இவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த ஈட்டி மறைந்தது. புனித பாசில் உடனே புனித  மெர்கூரியனின் கல்லறையை திறந்து பார்த்தார். அதில் புனித மெர்கூரியனின் சடலம் காணப்படவில்லை..
         பாரசீகத்தில் எங்கோ ஒரு இடத்தில் அந்த சசானிய மன்னன் இரண்டாம் சாபூர் மந்திராலோசனையில் இருந்தான். அவன் முன்னே பெரும் படை ஒன்று அணிவகுத்து   நின்றுகொண்டிருந்தது. எல்லோரும் பர்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு அழகிய வாலிபன் இரட்டைக்கத்தியுடனும் ஒரு பெரும் ஈட்டியுடனும் ஒரு குதிரையில் காற்றினும் கடுகி  அந்த சசானிய படையினரை ஊடுருவிகொண்டு பாய்ந்து சென்றான். மன்னன் சாபூர் " பிடியுங்கள் அந்த வீரனை" என்றான்.. ஆனால் காற்றை பிடிக்க முடியுமா?.. அதுபோல இந்த   வெள்ளை உடைதரித்திருந்த அந்த வெள்ளை நிற வீர வாலிபனை எத்தனை பேர் துரத்திச்சென்றாலும் அவனை பிடிக்கவே முடியவில்லை.. சற்று நேரத்தில் அவன் அனைவர்
கண்களிலிருந்தும் மறைந்து போனான்.
           இந்த வீரவாலிபனின் தோற்றத்தில் தன்னை மறந்த அந்த சசானிய மன்னன் சாபூர் " அடடா... என்ன அழகு... என்ன தேஜஸ்.. என்ன வேகம்.
. அவன் யாராக இருக்கலாம்.. அந்த வீர வாலிபன் முகம் எனக்குத்தெரிந்து ஸ்கைத்திய இனம் போல் தெரிகிரது. ஆனால் அவன் என்ன ஊர்.. என்ன பேர் என்று தெரியவில்லையே... நல்லது. அவனைபற்றி தெரிந்தவர் யாராவது இருந்தால் நலமாக இருக்கும்... பார்க்கலாம்... ஆனால் அவனைப்பார்த்தால் அவன் ஏதோ தேவ லோகத்தை சேர்ந்தவன்போல் அல்லவா
தெரிகின்றான். இவனைப்போன்ற சுத்த வீரர்கள் ஒரு பத்துபேர் என்னிடம் இருந்தால் போதும். இந்த ரோமைய சாம்ராஜ்ஜியத்தியும் அந்த பைசாந்திய சாம்ராஜ்ஜியத்தையும் நான் பத்தே நாளில் கைப்பற்றிவிடுவேன்" என்று தனக்குள்ளே பேசிக்கொண்டான்.
      ஜூலியனின் இந்த பாரசீக படை எடுப்பு வெற்றியா அல்லது தோல்வியா என்று கூறமுடியாதபடி பல இடங்களில் அவனுக்கு வெற்றியும் சில இடங்களில் தோல்வியும் ஏற்பட்டதால் மிகவும் வெறுத்துப்போனான். அடுத்தநாள் திடீரென போர்க்களத்தில் ஒரு பெரும் கூச்சல் எழுந்தது.
    " ஐய்யோ...நம் மன்னர் ஜூலியனை யாரோ ஈட்டியால் குத்திவிட்டார்கள் "
திடீரென ஏற்பட்ட இந்த அமலியால் போர்க்களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜூலியன் இறந்தான் என்னும் செய்தியும் வெகு வேகமாகப்பரவியது. இந்த செய்தியால் பெரும்   அச்சமும் கலவரமும் ரோமையரின் சேனையில் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பல வீரர்கள் ஆளைவிட்டல் போதுமடா சாமி என்று ஆளூக்கொரு பக்கமாக   பறந்தனர். ஆனாலும் சில விசுவாச வீரர்கள் ஜூலியனை தூக்கிகொண்டு தங்கள் ராஜ வைத்தியன் ஓரிபாஸ் என்பவனிடம் சேர்பித்தனர். அவன் அந்த ஆழமான காயத்தை   பரிசோதித்துவிட்டு, " எவனோ கை தேர்ந்த வீரன் தன்னுடைய வேலை ஜூலியனின் நெஞ்சில் குத்தி அது வயிற்றை எல்லாம் கிழித்துக்கொண்டு பின் இடுப்பு வெளியே வந்துவிடும்படி
குத்தி இருகிறான். ஆக அவனுடைய நோக்கம் ஜூலியன் எந்த வைத்தியத்தாலும் பிழைக்கக்கூடாது என்பதுதான்... இந்த நோக்கத்திற்காகவே அவன் இப்பேர்பட்ட குத்தை  குத்தியிருகிறான்.. ஜூலியன் பிழைப்பது அரிது. இருப்பினும் என்னால் முயன்றவரை முயற்சிக்கிறேன்" என்றான்.
                    கப்பதோக்கியாவில் அதே இரவில் தன் கடமைகளை எல்லாம் முடித்துவிட்ட திருப்த்தியில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நாம் புனித பாசில் ஒரு கனவு கண்டார். அதில் தேவ தாயாரானவர்," மகனே பாசில்...நம் எதிரி ஜூலியனை நம் தாசன் மெர்கூரி வேலால் குத்தி கொன்றுவிட்டான். இனிமேல் நம் மக்களுக்கு யாதொரு கவலையும் இல்லை...நீங்கள்
நிம்மதியாக இருக்கும் காலம் அடுத்து வரவிருகின்றது...நம் திருமகன் இந்த பைசாந்தியத்தை தம் கைகளில் ஏற்றுக்கொண்டார்..உங்களுக்கு ஒரு சமாதான யுகம் அருளப்படுகின்றது" என்றார்.. நம் பாசில் தான் காண்பது கனவா அல்லது நனவா என்பது புரியாமல் அந்த இரவே எழுந்துபோய் புனித மெர்கூரியின் தேவாலயம் சென்றார் .
       அங்கு அவருடைய சிலையிலிருந்த   ஈட்டியில் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. மேலும் அவர் கீழே இறங்கிப்போய் புனித மெர்கூரியின் கல்லறையை திறந்து பார்க்கவே அங்கு அவரது சடலம் காணப்பட்டது..இந்த   அதிசயத்தைக்கண்ட கிறிஸ்த்துவ மக்கள் பெரும் ஜெயக்கோஷம் எழுப்பினர். தேவ தாயாரையும் நம் புனித மெர்கூரியனையும் புகழ்ந்து கொண்டாடினர்... தேவ தாயார் கிறிஸ்த்துவர்களின்
சகாயத்தாயார் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆனது. விஷயம் அத்தோடு நிற்கவில்லை..
       சரியாக பதினைந்து நாட்கள் கழித்து நம் பாசிலால் அனுப்பபட்ட அவரது ஊழியன் லெபானியு பெர்சியாவின் போர்சூழலில் இருந்து பெரும்பரபரப்புடன் வந்தார். தன் எஜமான் பாசிலை   அனுகி தான் கண்டது கேட்டது அனைத்தையும் கீழ்கண்டவாறு விவரித்தார்.
" ராஜ வைத்தியன் ஓரிபாஸ் வேலால் குத்துப்பட்ட ஜூலியனின் உடலை பரிசோதித்துவிட்டு இவன் பிழைப்பது அரிது என்றும் தன்னல் கூடுமனவரை முயன்று பார்கிறேன் என்று  ஜூலியனின் வயிற்றைகிழித்து மெல்லிய மஞ்சல்தடவிய நூலால் அறுந்துபோயிருந்த அவரது குடல்களையும் வயிரையும் தைத்தார். ஏற்கனவே குத்துபட்ட வலியினாலும்
வேதனையினால் துடித்துக்கொண்டிருந்த ஜூலியன் இந்த சத்திர சிகிட்சையினால் மீண்டும் பெரும் வலி வேதனை அடைந்தான்.. அவன் கதறிய கதறல் பலகாததூரம் கேட்டது.  அவனுக்கு சத்திரசிகிட்சை செய்தும் பலனில்லை..திடீரென ரத்த வாந்தி எடுத்தான்.. அந்த ரத்தத்தை தன் கைகளில் பிடித்துக்கொண்ட அவன் வானை ஏறிட்டுப்பார்த்தான்.பிறகு
என்ன நினைத்துக்கொண்டானோ என்னவோ," கலிலேயனே...நீ கடைசியில் என்னை ஜெயித்துவிட்டாய்..ஜெயித்துவிட்டாய்" என்று அலறிக்கொண்டே இருந்தான். பிறகு ஜன்னி கண்டு இறந்தான்." என்றார்.
       " பிறகு என்ன நடந்தது?" என்றார் நம் புனித பாசில். லெபானியு மீண்டும் தொடர்ந்தார்.
ஜூலியன் இறந்துபோனான் என்ற செய்தி வெகு வேகமாகப்பரவியது..ரோமையரின் சேனை வீரர்கள் எதிரி அரசன் சாபூர் தங்களை நோக்கி வருகின்றான் என்று கேள்விப்பட்டதும்
பெரும் திகிலுற்று நாலா பக்கமும் சிதறி ஓடினர். ஆனாலும் விசுவாச வீரர்கள் ஜூலியனின் உடலை காத்தனர்..அவரது சிதைக்கு தீமூட்டி கடைசி காரியங்கள் செய்வதற்குள் சசானிய   வீரர்கள் வந்து ஜூலியனின் உடலைக்கைபற்றினர். தங்கள் அரசன் இரண்டாம் சாபூருக்கு ஜூலியனின் உடலைக்காட்டவேண்டி அவரது உடலிலுள்ள தோலை உறித்து அதை மஞ்சள்
மற்றும் உப்பு கலந்து பாடம் செய்து வைக்கோல் கன்றுக்குட்டி செய்வதுபோல் ஜூலியனின் உடலையும் வைக்கோலால் நிரப்பி ஒரு பொம்மைபோல் எடுத்துக்கொண்டு போய் தங்கள்  மன்னன் இரண்டாம் சாபூருக்கு " இதோ நம் எதிரி ... ரோமைய பைசாந்திய மா மன்னார் ஜூலிய சக்கரவர்த்தி" என்று மிகுந்த ஆரவாரமாக சென்று அவர்முன் சமர்ப்பித்தனர்.
சசானிய மன்னன் இரண்டாம் சாபூர் அந்த வைக்கோல் சக்கரவர்த்தியை தன் கைகளால்கூட தீண்டவில்லை.. " இந்த ரோமைய வைக்கோல் சக்கரவர்த்தியை கொண்டுபோய் தீக்கு   இரையாக்குங்கள்...இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல... இது வேறு யாருக்கோ கிடைத்த வெற்றி...நான் போர்க்களத்தில் இவனுடன் நேருக்கு நேராய் சண்டையிட்டு
வெற்றிகண்டிருந்தால் அது எனக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும் .ஆனால்..இவனைக்கொண்றவன் யார்? அது ஒருவேலை அந்த வெள்ளை வீரனாக இருக்குமோ ?.. இருப்பினும்  என் எதிரி ஒழிந்தான் என்பதில் எனக்கு திருப்தி தான்.. இந்த வெற்றி எனக்கு காளிமாதாவால் வந்ததா? அல்லது நீலிமாதாவல் வந்ததா என்பது எனக்குத்தெரியவில்லை.. ஆனல்
எனக்கு ஒன்று நிச்சயமாகத்தெரிகிறது..எனக்கு வெற்றிகொடுத்தது எந்த தேவியோ அல்லது மாதாவோ தெரியாது... அவரது பாதக்கமலங்களுக்கு இந்த இரண்டாம் சாபூர் அனேக   நமஸ்காரங்கள் தெரிவிகிறான்..அவரது திரு நாமம் யாதோ நாம் அறிவோம்... ஆனாலும் அவரது திருநாமம் வாழ்த்தப்படுவதாக" என்றான்.
" சரி...ஜூலியன் விஷயம் இருக்கட்டும்... நம் புனிதர் ெம்ர்கூரியனை நீ எங்காவது சந்தித்ததுண்டா?" என்றார் பாசில்.
" இல்லை சுவாமி..அவரை நேருக்கு நேராய் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.. ஆனாலும் அவரது வல்லமையான செயல்கள் ஒரு வினாடி நேரத்தில் எனக்கு  தோன்றியது என் பாக்கியம் "
" சரி.. அதைப்பற்றி விவரமாக கூறு" என்றார் பாசில். லெபானியு மீண்டும் தொடர்ந்தார்..
        கடும்போர் ஜூலியுனுக்கும் சசானிய மன்னர் இரண்டம் சாபூருக்கும் பாரசீகத்தின் வெளியே சமாரா [ the battle of samara] என்னுமிடத்தில் நடந்துகொண்டிருந்தது. ஒரு   பெரும்சுழற்காற்று வீசுவதுபோல் தோன்றியது. அப்போது மன்னர் ஜூலியன் தன் தலைகவசத்தோடும் மார்புக்கவசத்தோடும் தன் குதிரையின்மீது போரிட்டுக்கொண்டிருந்தார். அப்போது  தன்னை யாரோ அழைப்பது போல் இருக்கவே திரும்பிப்பார்த்தார். அந்த ஒரு வினாடியில் நடந்த நிகழ்சியை நான் காணும் பாக்கியம் பெற்றேன்.
       நம் புனிதர் மெர்கூரியன் தன் வெள்ளை  உடையில் தன் குதிரையின் மீது அமர்ந்தபடி இருக்கக்கண்டேன். தன் வாளை உருவி மன்னர் ஜூலியனின் தலைமீது ஓங்கி அடித்தார். இடிபோன்ற அந்த அடியில் அவனது
தலைகவசமும் மார்புக்கவசமும் தெரித்து கீழே விழுந்தன. அடுத்த வாள்வீச்சில் ஜூலியனின் குதிரை வீழ்ந்தது.. கீழே விழுந்த ஜூலியன் சுதாரித்து எழுந்துநின்றான். அப்போது   நம் புனிதர் மெர்கூரியன் தன் நீண்ட ஈட்டியால் அவனது நெஞ்சில் குத்தினார். அவர் குதிரையின் மீது நின்றுகொண்டு கீழே நின்றிருந்த ஜூலியனை அவனது மார்பில் குத்தியதால்
அந்த ஈட்டி அவனது மார்பில் நுழைந்து வயிற்றை எல்லம் கிழித்துக்கொண்டு பின் இடுப்பின் வழியே வெளியே வந்துவிட்டது. அவன் வாயிலும் நெஞ்சிலும் ரத்தம் குபு குபு என   கொட்டியது. பிறகு நம் புனிதர் மெர்கூரியன் மறைந்துபோனார்." என்றார்.
     அப்போது நம் புனிதர் பாசில் தேவ தாயார் தன்னிடம் ஜூலியனின் மரணம் குறித்த சேதி சொன்னபோது  அந்த நேரத்தையும் லெபானியு கூறிய செய்தியையும் அதன் நேரத்தையும் ஒப்பிட்டுப்பார்த்துக்க்கொண்டு அந்த நேரமே ஜூலியனை நம் புனிதர் மெர்கூரியன் கொன்ற நேரம் என்று
தெரிந்துகொண்டார்.ஆனாலும் ஜூலியன் குத்துப்பட்டு அடுத்த நாள் இரவுதான் இறந்தான். அதாவது 26 ஜூன் கி.பி 363. அவன் இறந்ததை நிச்சயப்படுத்திக்கொண்டுதான் அந்த   செய்தியை தேவ தாயார் நம் புனிதர் பாசிலுக்கு அந்த இரவிலேயே அறிவித்தார்.
            பிறப்பாலும் வளர்ப்பாலும் ஒரு கிறிஸ்த்துவனாக இருந்தவன் பேரரசனாகி கோடாரிக்காம்பாக மாறி நன்றி இல்லாமல் போனதுமல்லாமல் யேசுவை எதிர்க்கத்துணிந்தவனுக்கு பரிசாக  ஆண்டவர் அவனை அவன் இறந்தபின்பும் மிகவும் கேவலப்படுத்தினார். சாகும்போது கூட ஜூலியன் " கலிலேயனே கடைசியில் நீ என்னை ஜெயித்துவிட்டாய் " என தேவ தூஷணம்
கூறினான். அவன் இறந்தபின் சசானிய வீரர்கள் அவன் தோலை உறித்து வைக்கோல் பொம்மை செய்து அவனைக்கேவலப்படுத்தி தீ வைத்துக்கொளுத்தினார்கள்... தோல் உறிக்கப்பட்ட   அவன் உடல் காண சகிக்காதபடி மஹா அசிங்கமாக தோன்றியது.. மன்னர் என்னும் முறையில் கூட அவனை புதைப்பதற்கு அவனுடைய விசுவாச வீரர்களுக்கு நேரமோ அவகாசமோ   கிடைக்காததால் அவனை அவசரம் அவசரமாக புதைத்தனர்.     கொஞ்ச நாட்க்களில் அவன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தார்சியுஸ் நகரில் புதைக்கப்பட்டது. மீண்டும் அங்கிருந்து   அவனது எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு காண்ஸ்டாண்டி நேபிள்ஸ் நகரில் அப்போஸ்த்தலர்களின் ஆலயத்தில் ஒரு மூலையில் புதைக்கபட்டது.
     இதற்கு பெரும் எதிர்ப்பு அந்த ஆலய பிதாப்பிதாக்க்ளாள் எழுப்பப்பட்டது.
காரணம் ஜூலியன் யேசுவுக்கு விரோதி,,, அவனை எப்படி யேசுவின் புனித அப்போஸ்த்தலர்களின் தேவாலயத்தில் புதைக்கலாம் என்று பெரும் ஆர்ப்பாட்டத்தில்   ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பினால் அப்போதிருந்த காண்ஸ்டான்டிய மன்னர் ," என்ன இருந்தாலும் ஜூலியன் ஒரு காண்ஸ்டாண்டிய சக்கரவர்த்தி. இவரை இங்கே புதைக்கக்கூடாது
என்று சொல்ல இவர்களுக்கு உரிமை கிடையாது " என்று இந்த பிதாப்பிதாக்களை தன் இரும்புக்கரம் கொண்டு அடக்கவே பல துறவிகள் வதைபட்டு இறந்தனர்.
       ஜூலியன் கிறிஸ்த்துவ துறவிகளை செத்தும் கொன்றான். இவர்களின் எதிர்ப்பையும் மீறி அரசகுடும்பத்தை சேர்ந்தவர்களால் பெரும் சிபாரிசின்பேரில் அங்கே அடக்கப்பட்டான்..  இதற்கு விதியும் அனுமதிக்கவில்லை. திடீரென ஏற்பட்ட ஒரு பூகம்பத்தால் அந்த அப்போஸ்த்தலர்களின் ஆலயம் தகர்ந்தது..இவ்விதமாக பல கட்டிடங்கள் சரிந்தன. மீண்டும்   தேவாலயம் கட்டப்படும்போது அங்கிருந்த அரச கல்லரைகள் அப்புறப்படுத்தப்பட்டதால் அவர்களுடன் சேர்த்து இந்த ஜூலியனின் கல்லறையும் அகற்றப்பட்டது. இப்போது இஸ்தான்புல்
அருங்காட்சியகத்தின் முன்பாக தெருவில் ஜூலியன் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு பரிதாபம்... செத்தும் அவனுக்கு ஒரு நிரந்தர இடம் இல்லமல் போனது. அவனது   கல்லறையில் ஒரு பேரரசனுகுறிய ஆடம்பரமான நினைவுச்சின்னம் கூட இல்லை.
      இப்போது நாம் ஜூலியன் மாமன்னரைக்கொன்ற அந்த இரட்டைக்கத்தி வெள்ளை வீரன் புனித மெர்கூரியைப்பற்றி பார்ப்போம்.
     உலகம் உண்டானது முதல் உலகும் வரை யாருடைய வாழ்க்கை எவ்வாறு துவங்கும் எவ்வாறு முடியும்.. எப்படி... எங்கு.. எவ்விதம் திசை மாறும் என்பது யாருக்கும் தெரியாது.   ஆண்டவன் கிருபை இருந்தால் சாதாரணமானவன் அரசனாகலாம் ... அரசனானவன் ஆண்டி ஆகலாம்... கோழை வீரனாகலாம் ...வீரன் ஞானி ஆகலாம்...கோழையாகவுமாகலாம்..
      நாம் நாமாகா எப்போதும் அப்படியே இருக்கவும் முடியாது...இந்த உலகில் அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டே ஆக வேண்டும்... எதற்கும் ஆண்டவன் கிருபா கடாட்ச்சம் வேண்டும்.   யேசுநாதர் தன் கல்வாரிப்பயணத்தில் தன் தாயாரை சந்தித்த போது அவருக்கு ஆறுதலாக கூறிய வார்த்தைகளில் இதுவும் ஒன்று," நான் அனைத்தையும் புதியதென ஆக்குகிறேன்"
             இப்படியாகத்தான் ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து கப்பதோக்கியாவிலுள்ள எஸ்கென்டோவில் ஸ்கைய்த்திய இனத்தைச்சேர்ந்த யேர் எனப்பெயர்கொண்ட ஒரு ரோமானிய ராணுவ   அதிகாரியை சந்தித்தார். அப்போது அந்த ராணுவ அதிகாரி தன் தகப்பனாருடன் வேட்டை ஆடிக்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு கொடிய வனவிலங்கு அவரது தகப்பனைத்தாக்கியது.   இதில் யேர் எனப்படும் அந்த ராணுவ அதிகாரியும் அந்த மிருகத்தை தாக்கி தன் தகப்பனாரைக்காத்தார். அப்போது அவர் மயக்கமடைந்தார். அவர் மயக்கம் தெளிந்து பார்க்கும்பொழுது
யேசுநாதர் அவர் முன்னே ஒளிமயமாக நின்றுகொண்டிருக்கக்கண்டார். யேசுநாதர் அவரிடம் ," யேர்.. நாம் உம்மையும் உம் குடும்பத்தாரையும் நம் மக்களாக தேர்ந்துகொண்டோம்.  உம் மகன் மெர்கூரி நமக்கு நல்ல கனிதரும் மரமாக இருப்பான். அவனால் நாமும் எம்மால் அவனும் பெருமைப்படுத்தப்படுவோம். அந்த அளவுக்கு அவர் நமக்கு விசுவாசத்திற்கேற்ற   சாட்ச்சியாய் இருப்பார்." என்று கூறி மறைந்து போனார்.
        ஏற்கனவே ரோமர்களின் பலதெய்வ வழிபாடும் அதீதமான சடங்கு ஆச்சாரங்களும் நம் யேரை வெறுப்புக்குள்ளாக்கியிருந்ததால்
யேசுநாதரின் காட்சி அவர உடனே கிறிஸ்த்துவறாக மாறச்செய்தது. அன்று முதல் தன் யேர் என்னும் பெயரை நோவா என்றும் தன் மனைவியின் பெயரை சபீனா என்றும் பிலோபேதர்   என்னும் தன் மகனின் பெயரை மெர்கூரி என்றும் மாற்றிக்கொண்டார்..
       யேர் என்னும் ராணுவ தளபதி தான் ஒரு கிறிஸ்த்துவன் என்பதால் உடனே தன் பதவியை இழந்தார். அவரையும் அவரது மனைவியையும் குழந்தையையும் கயிற்றால் கட்டி கொடிய   வன விலங்குகள் முன்பாக போடப்பட்டனர்.. ஆனால் அந்த கொடிய வன விலங்குகள் அவர்களை ஒன்றும் செய்யவில்லை.
           எனவே அந்த பைசாந்திய இளவரசன் இந்த நிகழ்ச்சியால்
பெரிதும் கவரப்பட்டு யேரும் அவர் குடும்பத்தினரும் விடுதலை செய்யப்பட்டனர். " யேர் உன்னிடத்தில் ஏதோ ஒரு மா பெரும் சக்த்தி இருப்பதை நான் உணருகின்றன்...நீர் ஒரு மா பெரும் வீரன் என்பதையும் அறிகிறேன். உன்னிடமிருக்கும் சக்திகளைக்கொண்டு நம் எதிரிகளான பெர்பர்கள் எனப்படும் முறட்டு காட்டு வாசிகளை போரில் வெற்றிகொள்வாயாக..  உன் போன்ற வீரர்களின் சேவை நாட்டுக்குத்தேவை ..போருக்கு உடனே புறப்படுவாயாக" என்றான். யேர் எனப்பட்ட நோவா மீண்டும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
          அக்காலத்தில் பெர்பர்கள் எனப்படும் ஒரு முறட்டு காட்டு இனமக்கள் அன்றைய ஆப்ரிக்காவின் வடக்குப்பகுதிகளிளுள்ள மத்திய தரைக்கடல் ஓரத்திலுள்ள நாடுகள் அனைத்திலும்   பரவி இருந்தனர். அதாவது சஹரா பலைவனத்திலிருந்து கார்த்தேஜ், அல்ஜீரிய , மொராக்கோ, லிபியா வரையிலும் அவர்கள் பரவி இருந்தனர். இந்த கதை நடைபெற்ற கி.பி 250 களில்
ஐரோப்பாவில் பிரான்ஸ் ஸ்பைன், ஜெர்மனி ,ரோம் முதல் பைசாந்திய பேரரசு வரை அவர்கள் இனம் வியாபித்திருந்தது. இந்த நாடுகள் யாவும் ரோமை, மற்றும் பைசாந்திய பேரரசின்   ஆதிக்கத்தில் இருக்கும்போது இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தில் ஏதாவதொரு பகுதியில் அங்கிருந்த பெர்பர்கள் அவ்வப்போது ஆங்காங்கிருந்த ரோமர்களின் மீது படையெடுத்து வந்து
போரிட்டு வெற்றிகொள்வதுண்டு.
          இப்படியாக இந்த கதை நடைபெற்ற காலத்தில் பெர்பர்கள் எஸ்கென்டோவில் ரோமர்களைத்தாக்கினர். இந்த தாக்குதலை முறியடிக்கவே நம் யேர்   தலைமையில் ஒரு பெரும்படை எஸ்கெண்டோவிற்கு அனுப்பப்பட்டது.. ஆனால் நடைபெற்ற சண்டையில் நம் யேர் எனப்பட்ட நோவா கைதியாக்கப்பட்டு அங்கிருந்து வெகு தூரத்திலி
ருந்த பெர்பெர்களின் ஆதிக்கத்திலுள்ள நாட்டிற்கு கொண்டுபோகப்பட்டார்.ஒரு பதினேழு மாதங்கள் சிறைச்சாலையில் வாடினார். இதற்குள்ளாக ரோமர்கள் பெரும்படை ஒன்று பெர்பெர்களை அடக்கவே நம் யேர் விடுதலை செய்யப்பட்டார். தன் தாய் நாடாகிய பைசாந்தியத்திலுள்ள எஸ்கொண்டாவில் மீண்டும் தன் குடும்பத்தோடு சேர்ந்துகொண்டார்..   ஆனால் விரைவிலேயே அவர் மரணமடைந்தார்..அவரது மகன் ஃபிலோபேதர் என்பவர் தன் தந்தைக்குப்பதில் ராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டார். அப்போது அவர் பெயர் மெர்கூரி.
            இந்த கால கட்டத்தில் ரோமைக்கும் பைசாந்தியத்துக்கும் பேரரசராக விளங்கியவர் திராஜன் தேசியன் என்னும் ஒரு புறவினத்தான்.. அவனுக்கு கிறிஸ்த்துவர்கள் என்றாலே பிடிக்காது.  அந்த ஐரோப்பிய பெர்பர்கள் ரோமாபுரியை கைப்பற்ற வருகின்றார்கள் என்றதுமே மஹா சக்கரவர்த்தி திராஜன் தேசியன் தன் பெரும் ரோமைய படையைத்திரட்டிக்கொண்டு ரோமாபுரியை காக்க புறப்பட்டான். அவனோடு நம் மெர்கூரியும் பயணித்தார்.    பைசாந்தியத்திலிருந்து கடல் கடந்து ரோமை அடைந்தனர்..
       அங்கிருந்த பெரும் சைனியத்தையும் சேர்த்துக்கொண்டு   பெர்பெர்கள் மீது படைஎடுத்துச்சென்றால் மன்னர் திராஜன் தேசியனே பயப்படும் அளவுக்கு எதிரிகள் அலை அலையாய் பாய்ந்துவந்து ரோமர்களைத்தாக்கினர். அவர்களின் படை வலிமை கடல்போல் பெரிதாக காணப்பட்டது. எனவே திராஜன் தேசியன் தன் படைகளை மீண்டும் தன் பின்வாங்கினான். ஒரளவுக்கு இந்தப்போரைத்தவிர்த்து எதிரியுடன் சமாதானமாகப்போய் விடலாம் என்னும் முடிவுக்கும் வந்தான்.
    இந்த நிலையில் தேவ சேனாதிபதியாகிய அர்ச். மிக்கேல் சம்மனசானவர் நம் மெர்கூரிக்குத்தோன்றி," மெர்கூரி..நாம் தேவ சேனாதிபதி மிக்கேல் ..எம்மைக்கண்டு அஞ்ச   வேண்டாம்..நம் யேசுநாதர் தன் ஊழியத்திற்கு உம்மைத்தேர்ந்துகொண்டுள்ளார். இந்தப்போரை நீர் வழிநடத்தும் ஆற்றல் யேசுநாதரால் உமக்கு அருளப்படுகிறது. வெற்றி உமதே..  போர் முடிந்த பின்பு நீர் நம் ஆண்டவறாகிய யேசுவுக்கு உம் விசுவாசத்தைக்காட்ட வேண்டும். நம் ஆண்டவறாகிய தேவன் யேசுநாதர் உம்மை மேன்மை படுத்துவார். அவர் பொருட்டு நீர் அனேக பாடுகள் பட்டு அவருக்கு சாட்சியாய் மரிக்க வேண்டும். அத்தகைய நேரத்தில் நாம் உம்மோடு இருப்போம்..இதோ வெற்றியின் வாள்...இதை நீர் பெற்றுக்கொள்ளும்... நாம் சொன்ன காரியங்கள் அனைத்தையும் நீர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வெற்றியின் மாய்கையில் நீர் யேசுவை மறந்துவிட வேண்டாம்.  ஆண்டவர் உம்மோடு
இருப்பாராக... ஆமேன்" என்று தம் உடைவாளை தேவ சேனாதிபதி அர்ச். மிக்கேல் சம்மனசானவர் நம் மெர்கூரிக்கு கொடுத்தார். நம் மெர்கூரியும் மண்டியிட்டு அந்த உடைவாளை   மிகவும் பயபக்தியோடு பெற்றுக்கொண்டார். அப்போதே தேவ சேனாதிபதியின் மகிமை அவரிடம் புகுந்துகொண்டது.. அவரது முகமே மாறிவிட்டது. அவரும் ஒரு சம்மனசானவர் போல்   மாறினார். தன் குதிரையின் மீது அவர் ஏறவே அந்தக்குதிரையும் ஏதோ ஆவி தனக்குள் புகுந்துகொண்டதுபோல மிகவும் பயங்கரமாகக்கணைத்தது. பிறகு விருட்டென இறக்கைகட்டிபறந்ததுபோல் வெகுவேகமாக சென்றது.
          இப்போது ரோமைய சக்கரவர்த்தி திராஜன் தேசியன் தன் படைகைள் பின்னேர கட்டளைகொடுத்தான். அப்போது நம் மெர்கூரி அவர் முன்னே பணிந்து," மஹாப்பிரபு.. தயவு செய்து   தாங்கள் படைகளை பின்னேற கட்டளை கொடுக்க வேண்டாம்.. போரில் வெற்றி என்பது படைவீரர்களின் எண்ணிக்கையை மட்டும் பொருத்தது அல்ல. போராடும் வீரர்களின்
மன நிலையையும் அவர்களுடைய அர்ப்பண சேவையையும் பொருத்தது..தைரியமிருப்பவர்கள் என்பின்னே வரட்டும்.. நான் முன்னே போகிறேன்... வெற்றிநமதே " என்று மன்னரின்   உத்திரவையும் எதிர்பார்காமல் சடேரென கிளம்பிவிட்டான்.
        அதுவரை எதிரி பயந்து பின்வாங்குகிறான் என்று அலட்சியமாக இருந்த பெர்பர்கள் காற்றினும் கடுகி ஒரு ரோமையன் வருவதையும் அவன் கரங்களின் இரண்டு வாள்கள் சுழன்று  சுழன்று வருவதையும் கண்டு அவனை எதிர்க்க பாய்ந்து வந்தனர்... ஆரம்பித்தது உக்கிரமமான போர்.. மெர்கூரியின் வீரத்தால் கவரப்பட்ட ரோமனிய படைவீரர்கள் மிகுந்த உத்வேகம்
பெற்று அவரவர் யாருடைய உத்திரவையும் எதிர்பாராமல் " ஹேய் என்றும் ஹோவ் " என்றும் கத்திக்கொண்டு காற்றில் பறந்து வருவதுபோல் பறந்துவந்தார்கள்.
     பெர்பர்களின் தலைவன்  " ஆ...இதுவல்லவா போர்...இதுவல்லவா வீரம்..நாம் இத்தகைய வீரத்தை இந்த ரோமானியர்களிடம் இதுவரை கண்டதில்லையே....இருக்கட்டும் இருக்கட்டும் ...நம் படைவீரர்களுக்கும்
இம்மாதிரியான போர்பயிற்ச்சி தேவைதான்" என்றுகூறினான்.அன்று நடந்த போரின் பயங்கரத்தை வார்த்தையில் வர்ணிக்க முடியாது..
     போர்க்களத்தின் அந்த வெண்மணல் எல்லாம்   செம்மணல் ஆகியது. அன்றைய சூரியனின் தோற்றம் நம் மெர்கூரியனின் கோபாவேசமான முகம்போல் மாறி செக்கச்செவேல் என்று மாறியது. அந்த போர்க்களத்தில் அருகில் ஓடிய நதி   ரத்த சகதிகளால் நிறையப்பெற்றது. அந்த நதிகளில் குவிந்த மனிதத்தலைகளால் நீர் போவது தடைபட்டது..அந்த சூரியனின் செங்கதிர்களால் அந்த நதியிலிருந்த நீரும் செம்பவளமாக
மாறி அன்றைய உலகம் பெரும் நெருப்புத்துண்டமாய் காட்சி அளித்தது. மெர்கூரியன் செல்லும் திசை எல்லாம் அவனது இரண்டு கத்திகளும் சுழளும் வீச்சில் அவனது வலதுபுறமும்   இடது புறமும் இருந்த எதிரிகளின் தலைகள் சடசடவென வெட்டுண்டு நெற்கதிர்கள் போல் பறந்தன. இந்த வீரம் எல்லா ரோமைய வீர்களுக்கும் தொற்றிக்கொண்டதால் ரோமனிய
வீரர்கள் அனைவரும் ஏதோ வெறி பிடித்தவர்கள் போலும் ஆவியால் பீடிக்கப்பட்டவர்கள் போலும் சுழன்று சுழன்று போரிடவே எதிரிகளான பெர்பர்களின் தலைகள் கணக்கிலடங்காமல் கீழே விழுந்தன.
          இந்த இரட்டைக்கத்தி மாவீரனின் வாள்வீச்சில் தலைமட்டுமின்றி எதிரிகளின் கை கால்கள் என்றில்லாமல் அனைத்து பாகங்களும் கலைச்செடிகள்   வெட்டப்படுவனபோல் வெட்டப்பட்டன. இதைக்கண்ட பெர்பர்களின் தலைவனுக்கு தலை சுற்றிப்போனது. " .ஓ.ஓ.ஓ..இந்த ஒரு வீரனால் தான் இத்தனை பெரும் உத்வேகத்தை அவன்  சேனை வீரர்கள் பெறுகிறார்கள். இவனை முடித்துவிட்டால் இந்த ரோமானியர்களின் ஆட்டம் அடங்கிவிடும்..எனவே நண்பர்களே என் பின்னே நூறுபேர் வாருங்கள்... இந்த இரட்டை   வாள் வீரனை முடித்தால்தான் நாம் ரோமர்களை அடக்கமுடியும்..வாருங்கள் என் பின்னே என்று தன் நீண்ட கூரான வேலை எடுத்து நீட்டிக்கொண்டு நம் மெர்கூரியின் முன்னே   பாய்ந்தான். ஆனால் அது அத்தனை சுலபத்தில் முடிந்து விடக்கூடிய வேலையாக தெரியவில்லை.   மெர்கூரியின் குதிரையும் அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் ஆசீரால் நிறம்பியிருந்தது.   எனவே அது தன் மீது இருப்பவர் தேவாதிதேவனின் தேவ சேனாதிபதி அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் வாளைக்கொண்டு போராடும் மஹா பாக்கியவானாகிய மெர்கூரி என்பதை   உண்ர்ந்துகொண்டதாலோ என்னவோ அதுவும் பெரும் போர்களைக்கண்ட சூராதிசூரனாய் விளங்கிய அர்ச்.மிக்கேல் சம்மனசாவரே தன் மீது பயணிக்கிறார் எனபதாக உணர்ந்து அதுவும்   பல சாகசங்களைக்காட்டியது.
          பல சமயங்களில் அது எதிராளிகளை உதைத்தும் கடித்தும் மண்டியிட்டும் தன் கால்களை உயர்த்தியும் போர் உபாயங்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற வீரன்போல் அது நடந்து கொண்டது.  போர்க்களத்தில் நம் மெர்கூரி அந்தக்குதிரையின் லகானைப்பிடிக்கவே இல்லை. இந்த சூழ்நிலையில் எதிரிகளின் படைத்தளபதி தன் நீண்ட ஈட்டியை நீட்டியபடி மெர்கூரியை
தாக்கினான். இதைக்கண்ட மெர்கூரி அவரது இடது கையிலுள்ள வாளாள் அவனது ஈட்டியை திசை மாற்றினார். அது " க்ளங் " என்னும் சப்த்தத்துடன் தரையில் குத்தியது.   அடுத்த வினாடி மெர்கூரியின் குதிரை வானுக்கு எம்பியது. அது கீழே இறங்கும்போது மெர்கூரியின் வலதுகையிலிருந்த அர்ச் மிக்கேல் சம்மனசானவரின் வாள் பெர்பர்களின்   தலைவனின் தலையின்மீது நெடுக்குவசமாக இறங்கியது. அதன் தாக்கத்தால் அவன் தலைமுதல் கால்வரை குதிரையின் நடு இடுப்பு முதல் அடிவரை ஒரே வீச்சில் குதிரை வீரனுடன்   குதிரையுமாக இரு கூறுகளாக பிறிக்கப்படனர். இதைக்கண்ட பெர்பர்கள் அலறி அடித்து உயிர் பிழைத்தால் போதும் என்று தங்கள் கத்திகளையும், வேல், ஈட்டிகளையும் போட்டுவிட்டு   தலை தெறிக்கும்படியும், பின்னங்கால் பிடறியிலடிக்கும்படியும் ஓட்டம்பிடித்தனர்.  
        நம் மெர்கூரி அந்த நீண்ட கூரான ஈட்டியை பெர்பர்களின் வெற்றியின் அடையாளமாக தன்னுடனே    வைத்துக்கொண்டார்.
தன் கண்முன்னே நடந்த இந்த உக்கிரமமான போரை பார்த்த ரோமைய சக்கரவர்த்தி திராஜன் தேசியன் ஓடிவந்து அப்படியே நம் மெர்கூரியை கட்டிப்பிடித்துக்கொண்டான்.
"ஆஹா...நீயல்லவா வீரன்.. உன் தந்தையும் ஒரு மா பெரும் வீரன் தான்.. அப்பாவுக்குப்பிள்ளை தப்பாமல் பிறந்திருகிறாய்.. இப்பேர்பட்ட வீரர்களை கொண்ட ரோம சாம்ராஜ்ஜியம் அதன்
வீரர்களை மிகவும் பெரிய விதத்தில் கெளரவப்படுத்த விரும்புகிறது. எனவே நம் மெர்கூரியன் ரோமை சாம்ராஜ்ஜியத்தின் இளவரசானாக முடிசூட்டப்படுகின்றார் " என்று அப்போதே   அவர்தன் தலையில் ஒரு ஓலிவ் மரக்கிளையில் முடிசூட்டினார். தலைநகர் ரோமில் மாபெரும் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது..மக்கள் நம் புதிய இளவரசன் மெர்கூரியை மிகவும் புகழ்ந்து   கொண்டாடினார்கள்.. ரோமைய வீரர்கள் தங்களுக்கு முன்மாதிரிகையாக போர்க்களத்தில் தங்களுடன் எதிரிகளின் தலையை வெட்டிப்பந்தாடிய நம் மெர்கூரியை அவரவர்கள் தோளில்
தூக்கிக்கொண்டும் கைகொடுத்துக்கொண்டும் சிலர் அவரை கட்டி அணைத்தும் சிலர் அவரை நெஞ்சார கட்டியணைத்து முத்தமிட்டும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.
       சில ராஜ குடும்பத்து கன்னிப்பெண்கள் எப்படியாவது அந்த புதிய இளவரசனாக முடிசூட்டப்பட்ட அந்த இரட்டைக்கத்தி மாவீரனை தங்கள் வலையில் விழ வைக்க என்னென்னமோ  மாயா ஜாலங்களையும் செய்து பார்த்தும் மெர்கூரி இவர்களை திரும்பிகூட பார்க்கவில்லை. பலர் ரகசியமாக தூதுகூட விட்டுப்பார்த்து சலித்துவிட்டனர். எதற்கும் இவர் மசியவில்லை.
மெர்கூரியின் உள்ளமெல்லாம் தனக்கு இந்த வெற்றி அர்ச். மிக்கேல் சம்மனசானவர் வழியாக ஆண்டவறாகிய யேசு நாதர் கொடுத்த வெற்றி என்று அவரை தன் மனதாற   வாழ்த்திக்கொண்டே இருந்தார்.
       வெற்றி விழாவெல்லாம் ஒரு வழியாக முடிவுக்கு வரும் வேளையில் சாத்தான் தன் வேலையை ஆரம்பித்தான். அது ரோமனிய பேரரசர் திராஜன் தேசியன் வடிவில் வந்தது.  ஒருநாள் சக்கரவர்த்தி நம் இளவரசர் மெர்கூரியை அழைத்தார்.
    " மெர்கூரி..போர்களத்தில் உன் இரட்டைக்கத்தி வாள்வீச்சு மிகப்பிரமாதம்... இத்தகைய வாள் வீச்சை நீ எங்கே   கற்றுக்கொண்டாய்? உன் இனமான ஸ்கைத்தியர்கள் வாள் வீச்சிலும் வேல் வீச்சிலும் வல்லவர்கள் என்பது இந்த ரோமை சாம்ராஜ்ஜியத்திலும், அந்த பைசாந்தியத்திலும் மஹா பிரசித்தம்..
அது எவ்வளவுதூரம் உண்மை என்பதை நான் இந்த பெர்பர்கள் போரின்போது கண்னாறக்கண்டுகொண்டேன்..உண்மையிலேயே நீர் சுத்த வீரன் தான். உன்னைபெற்ற உன் தாய்   தந்தையர்களுக்கு இந்த ரோமையும் பைசாந்தியமும் மிகவும் நன்றி சொல்ல கடமைபட்டிருகிறது. இருப்பினும் ஒரு விஷயம் பாக்கி இருகின்றது..நமக்கு இத்தன் பெரிய வெற்றியைக்
கொடுத்த நம் ரோமைய தெய்வங்களுக்கு நன்றி பலி செலுத்த வேண்டாமோ.. அது நமது கடமை அல்லவா?. நாளை நல்ல நாள்..நாளைக்கு நன்றிபலி செலுத்த நம் ஜூபிடர் மற்றும்   அங்காரகனுக்கு உகந்த நாள்.. நாளைக்கு தயாராக இரு. " என்றார்.
         அப்போதைக்கு சர்வாதிகாரி தேசியனுக்கு ஊம் ஊம் என்று தலையாட்டிவிட்டு வந்தவனிடம் அர்ச் மிக்கேல்  சம்மனசானவர் தோன்றினார். " மெர்கூரி...கவலைப்படாதே..பயப்படாதே...நாம் எப்போதும் உம்முடனே இருகிறோம்...திராஜன் தேசியன் முன் பயப்படாமல் உனக்கு இந்த மா பெரும்  வெற்றியைக்கொடுத்தது உன் ஆண்டவறாகிய யேசுநாதர் என்று தைரியமாகக்கூறு...அவருக்கு உகந்த சாட்ச்சியமாக இரு..கர்த்தராகிய யேசுநாதர் உன்னை மிகவும் மேன்மை படுத்துவார்" என்று கூறி மறைந்து போனார்.
             மெர்கூரியன் தன்மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் அன்பும் வைத்திருந்த ரோமைய சர்வாதிகாரியான திராஜன் தேசியன் முன்னால் யேசுவைப்பற்றி சாட்ச்சியம் அளிக்க பயந்து ஒரிரு  நாட்கள் தள்ளிப்போட்டார்.. ஆனால் அரச கட்டளைக்கு தப்பி எத்தனை நாட்கள் ஒளிய முடியும். எனவே அர்ச். மிக்கேல் சம்மனசானவர் கூறிய வார்த்தைகளிள் நம்பிக்கை வைத்து  அடுத்த நாள் தேசியனை சந்தித்தார்.. அப்போது....
" மெர்கூரி..நம் உன்னை நம் ரோமைய தெய்வங்களுக்கு நன்றி பலி செலுத்தி அவர்களுக்கு தீப ஆராதனை காட்டச்சொல்லி உன்னை அழைத்தேனே... ஏன் தாமதம் செய்கிறாய்..  உன் பிரச்சனை என்ன." என்றான் ரோமைய சக்கரவர்த்தி திராஜன் தேசியன்.
" மா மன்னரே...என்னால் உங்கள் தெய்வங்களுக்கு பலியோ தீப ஆராதனையோ செய்ய்ய முடியாது.. என்னை மன்னிக்க வேண்டும் மஹா பிரபூ"
" என்னது உங்கள் தெய்வமா...நம் தெய்வம் என்று சொல்லு."
" இல்லை மஹாராஜா...ரோமைய தெய்வங்களை நான் வணங்குவதில்லை..எனக்கு கிடைத்த வெற்றி உங்கள் தெய்வத்தால் எனக்கு கிடைத்ததல்ல"
" பின் யாரால் கிடைத்ததாம்?"
" நான் அன்றாடும் வழிபடும் எம் தேவனாகிய யேசுகிறிஸ்த்துவே எம் தெய்வம்.. அவர்தான் எனக்கு இந்த வெற்றியைக்கொடுத்தார்."
" இதை உன் யேசுநாதரே உனக்கு சொன்னாறாக்கும்"
" ஆமாம்...மஹாப்பிரபூ"
" அடேய் மெர்கூரி..நீ யாரிடம் பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா?.. உன் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருகிறாய்? உனக்கு இந்த மாபெரும் வெற்றியைக்கொடுத்தது   நம் ஜூபிடர் என்னும் தெய்வமும் குரு என்னும் தெயவமும் மார்ஸ் எனப்படும் அங்காரகனும் தான் என்பதை மறவாதே"
" இல்லை மன்னா... என்னால் பொய் சொல்ல முடியாது...நான் சத்தியத்தையே சொல்லுகிறேன். எனக்கு இந்த போரில் வெற்றியைக்கொடுத்தது எம் தெய்வம் யேசு கிறிஸ்த்துவே"
" அப்படியானால் நீ ஒரு கிறிஸ்த்துவனா?"
" ஆம் அரசே...நான் கிறிஸ்த்துவன் என்பதில் பெருமை அடைகிறேன்."
" நீயும் உன் யேசு கிறிஸ்த்துவும் நாசமாகப்போக..உன்னை நான் நம்மவர் என்றல்லவா நினைத்திருந்தேன்..அதனால் அல்லவா உனக்கு பல பதவிகளையும் பட்டங்களையும்  கொடுத்தேன்.நீ நம்பிக்கை துரோகி.. நான் உனக்கு செய்ததெல்லாம் வீண்..இதெற்கெல்லாம் நீ எனக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்..இருந்தாலும் உன் வீரத்திற்காக
உன்னை மன்னித்தேன்.நீ யேசு கிறிஸ்த்துவை விட்டுவிடுவதாக வாக்களித்தால் நான் உன்னை மீண்டும் நம் இளவரசனாக ஏற்றுக்கொள்வேன்..மறுத்தால் உனக்கு கொடும்  சித்திரவதையும் கொடும் மரணமும் காத்திருக்கின்றது.. என்ன சொல்லுகிறாய்?"
" மஹாப்பிரபூ..நானொருக்காலும் என் ஆண்டவறாகிய யேசுநாதரை மறுதளியேன்"
அந்த சக்கரவர்த்தியின் முகம் கருத்தது. இப்போதே இவனுக்கு மரண தண்டனை கொடுத்தால் இவன் மீது பெரும் நம்பிக்கையும் மதிப்பும் அன்பும் வைத்திருக்கு தன்னுடைய ராணுவத்தினர் உடனே கலகத்தில் ஈடுபடுவார்கள் என்று நினைத்து ரகசியமாக இரவோடு இரவாக அவனை இரும்பு சங்கிலிகளாள் கட்டி அவனை கப்பலில் ஏற்றி   கப்பதோக்கியாவிலுள்ள செசாரியா என்னும் பட்டிணதிற்க்கு அனுப்பி அவனை வாதைகள் பல செய்து கடைசியில் தலைவெட்டிக்கொல்லும்படி ஆணை அனுப்பினான்.
             அடுத்த நாள் ராணுவத்தில் நம் மெர்கூரியை காணாததால் ராணுவத்தினருக்கு மெர்கூரி அரசாங்க விஷயமாக பைசாந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
       நம் மெர்கூரி செசாரியா வந்து சேர்ந்தவுடம் அவருக்கு வாதைகள் பல ஏற்பாடு செய்யப்பட்டது.
      முதல் நாள் அவருக்கு சாட்டைஅடி கொடுக்கப்பட்டு அவரது உடலிலுள்ள தோல்கள் அனைத்தும் உறித்து எடுக்கப்பட்டன. அன்று இரவு அர்ச். மிக்கேல் சம்மனசானவர்   அவருக்கு தோன்றி ஆறுதலாக அவரைத்தொடவே அவர் காயங்கள் அனைத்தும் ஆறி புதுத்தெம்பு பெற்றார்.
       அடுத்த நாள் அவருக்கு வேறொரு கொடும் தண்டனை காத்திருந்தது.
கிளைகள் நீக்கப்பட்ட இரு ஈச்சை மரங்கள் வில்போல் வளைக்கப்பட்டு அவைகள் விடுவிக்கப்பட்டால் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும்படி ஒரு அமைக்கப்பட்டது. அந்த ஈச்சை   மரங்களின் தலைப்பகுதில் கூரான ஆணிகளும் வெட்டும் கத்திகளும் பொருத்தப்பட்டிருந்தன.. நடுவில் உயரத்தில் நம் மெர்கூரி கட்டப்பட்டிருந்தார். அந்த வில் விசைகள்
விலக்கப்படவே அந்த இரு ஈச்சை மரங்களும் ஒன்றுக்கொன்று பலமாக மோதிக்கொண்டன. இரண்டிற்கும் நடுவே கட்டப்பட்டிருந்த நம் மெர்கூரி உச்சிமுதல் உள்ளங்கால் வரை பலமாக  அடிபட்டார். அவரது உடலில் வெட்டுப்படாத பாகங்களோ குத்தப்படாத பாகங்களோ இல்லை..எல்லாக்காயங்களிலிருந்து ரத்தம் பீரிட்டு அடித்தது.. கொடும் வேதனையில் ஆழ்ந்தார் நம்   மெர்கூரி.. ஆயினும் தன் வேதனைகளில் " ஆண்டவரே என் யேசுவே...என் வேதனைகளில் என்னைக்காத்தருளும்..இதன் பாவங்களை இவர்கள் மீது சுமத்தாதேயும் " என்று   வேண்டிக்கொண்டார்.
      அப்போது யேசுநாதர் அவருக்குத்தோன்றி," மகனே மெர்கூரி..நாளைக்கு உன் வேதனைகள் முடிந்துவிடும்..பரலோகத்தில் உனக்கு பெரும் வெகுமதியும் பாக்கியமும் காத்திருகிறது..  ஆகவே நீ யாருக்காகவும் எதற்காகவும் பயப்படாதே...நாம் உம்மோடு கடைசி வரையிலும் துணையாக நிற்பேன்" என்று கூறி மறைந்து போனார். அன்று இரவும் அர்ச். மிக்கேல்
சம்மனசானவர் வந்து நம் மெர்கூரியை தேற்றவே அவர் பூரண சுகம் பெற்றார்.
அடுத்த நாள் டிசம்பெர் 4 ஆம் தேதி கி.பி.250 ஆம் வருடம். நம் மெர்கூரி சிரச்சேதம் செய்யபட அழைத்து செல்லப்பட்டார். அப்போது யேசுநாதர் அவருக்கு முன்   நிற்பதைக்கண்டார் மெர்கூரி. தனக்காக யேசுநாதர் தனக்கு முன்னே நிற்பதைக்கண்ட மெர்கூரி பெரும் உவகை அடைந்து கொலைஞர்களிடம் சென்று தன்னை உடனே தலையை வெட்டும்படி மிகவும் கேட்டுக்கொண்டார். அவர்கள் ஆச்சர்யப்பட்டு, " என்ன மனிதர் இவர்..இவரிடம் பயம் என்பதே கிடையாது... சொர்கம் ஏதோ பக்கத்து ஊரிலிருப்பதை போல்
அல்லவா இவர் அங்கே போக ஆசைப்படுகிறார்..ஆனாலும் மனிதர் மிகவும் கெட்டிதான்" என்று அவர் மட்டில் வியந்தனர். ஆளுநன் வந்து அவர்மீது குற்றப்பத்திரிக்கையை படித்ததும்   மெர்கூரியனது தலை வெட்டப்பட்டது.   
      ரகசியமாக வெட்டப்பட்ட மெர்கூரியின் தண்டனை அம்பலத்துக்கு வர பல நாள் பிடித்தது. விஷயம் தெரிந்து கிறிஸ்த்துவர்கள் வந்து அவரது
உடலைப்புதைத்தனர்.. ஆனால் அவரது தலை மட்டும் காணாமல் போயிருந்தது.   நம் மெர்கூரியனுடைய நண்பர்கள் அவரது சிரசைக்கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்..வெகு நாளாக அதை தேடினார்கள். ஒரு காட்டுப்பகுதியில் தேடும்போது," நண்பா
மெர்கூரி... நீர் எங்கே இருகிறாய்?" என்றனர். அப்போது அவர் சிரசு வாய் திறந்து பேசியது.." நண்பர்களே நான் இங்கே இருகிறேன்" என்றது..அப்போது மேலும் இரண்டு நாள் கழித்து   குரல் வந்த திசையில் பார்த்தால் ஒரு பெரிய அதிசயம் அங்கே காத்திருந்தது. ஆம்.. ஒரு பெரிய ஓநாய் நம் மெர்கூரியனின் சிரசை தன் கால்களுக்கிடையே வைத்துக்கொண்டு அதை   காவல் காத்துக்கொண்டிருந்தது. அது மெர்கூரியின் சிரசுதான் என உறுதிப்படுத்த மீண்டும் " நண்பா...மெர்கூரி...நீர் எங்கே இருகிறாய்?" என்றனர்.. அப்போது அந்த ஓநாயின்   கால்களுகிடையே இருந்த அவரது சிரசு," நண்பர்களே நான் இங்கேதான் இருகிறேன்..ஓநாய் உங்களை ஒன்றும் செய்யாது..வாருங்கள் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் " என்றது.
     ஆண்டவரின் அருளாள் தன் சிரசு இருக்கும் இடத்தை காட்டியதால் அவரது நண்பர்கள் பேருவுவகை அடைந்தனர். ஓநாய் மெர்கூரியின் தலையை விட்டு விலகியது. நெடுநாள் பழகிய   நாய்க்குட்டிபோல அது அவர்களை பின் தொடர்ந்தது.. இத்தனை நாட்களும் அது உண்ணாமலும் குடியாமலும் கடவுளின் அருளாள் நம் புனித மெர்கூரியின் சிரசை பாதுகாத்து வந்தது...
இத்தனை நாட்களிலும் அந்த சிரசில் ரத்த வாடை இருந்தும் கடவுளின் ஆணைக்கு கீழ்படிந்து அது மெர்கூரியின் சிரசை பாதுகாத்தது என்றால் ஆண்டவரின் மகிமையை என்னவென்று  சொல்வது?.
      புனித மெர்கூரியின் சிரசும் அவரது உடலும் புதைக்கப்பட்டு வெகுகாலம் சென்றது..பிறகு அவரை உலகம் மறந்து போனது. மீண்டும் அவரது பக்தி முயற்சிய ஆரம்பமானது.
    அப்போது அவரது சமாதி இருந்த இடம் தெரியாமல் போனது. முதலாம் வேத கலாபனை முடிந்த பிறகு நம் மெர்கூரியன் ஒரு ஏழைக்கு தம்மை காண்பித்து தன் கல்லறை இருக்குமிடம்  கப்பதோக்கியா அரண்மனையிலிருந்து அரசனின் தோட்டத்திற்கு போகும் வழியிலிருந்து ஒரு பெரிய வீட்டின் பின்னால் இருப்பதைக்காட்டினார். அந்த ஏழை மனிதன் அங்கே
தோண்டிபார்க்கையில் அவரது அழியாத சரீரம் வெள்ளை வெளேர் என்று பனி மூடியதுபோல இருக்கக்கண்டனர். அந்த உடலிலிருந்து துர்நாற்றத்திற்கு பதிலாக பரிமள தைலத்தின்   வாசம் வீசுவதைக்கண்டு இந்த புனிதரின் பெருமையை வெகுவாக பாராட்டினர். அன்றிலிருந்து இந்த புனிதரின் பக்தி முயற்சியும் அந்த திதில்தா மாதாவின் பக்த்தியும் வெகு   வேகமாகப்பரவின.    
       ஒரு புதிய கல்லறையில் நம் புனிதர் மெர்கூரியின் சடலம் சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டு ஒரு தேவாலயமும் அதன்மீது கட்டப்பட்டது.   அந்த தேவாலயத்தில் மாதாவின் சொரூபமும் நம் புனிதர் மெர்கூரியின் சொரூபமும் வைக்கப்பட்டன. அவரது கையில் அந்த பெர்பெர்களை வென்ற அந்த ஈட்டியும் பொருத்தி  வைக்கப்பட்டது. இப்போது அந்த ஈட்டியை நம் புனிதர் மெர்கூரி எதற்காக நூறு வருடம் கழித்து பயன்படுத்தினார் என்பது நேயர்களுக்கு புறிந்திருக்கும்.
           அன்று பெர்பெர்களால் ரோமைய சர்வாதிகாரத்தை எதிர்த்து வீசப்பட்ட அந்த வேலை நம் புனிதர் மெர்கூரி தனதாக்கிக்கொண்டார். சரியாக 113 ஆண்டுகள் கழித்து இந்த ஈட்டிக்கு   வேலை வந்தது. கிறிஸ்த்துவர்களின் விரோதியான ஜூலியன் என்னும் ரோமைய சர்வாதிகாரியை தேவ தாயாரின் கட்டளைபடி நம் புனிதர் மெர்கூரியன் இதே வேலினால்
குத்திக்கொண்றார். ஆக இந்த ஈட்டி எந்த நோக்கத்திற்காக அன்று பெர்பர்களாள் எய்யப்பட்டதோ அது அதே நோக்கத்திற்காக மீண்டும் நம் புனிதர் மெர்கூரியால் எய்யப்பட்டு அதன் வேலை முடிந்தது. இந்த ஈட்டியின் மகிமையையும் பெருமையையும் என்னவென்று சொல்வது. அதைவிட அந்த ஈட்டியை பயன்படுத்திய நம் புனிதர் மெர்கூரியின் மகிமையும்
பெருமையும் என்னவென்று சொல்வது.
       இவரது பெருமையை நாம் உணர்கிறோமோ இல்லையோ... நம் புனிதர் போராடிய அவரது எதிரிகள் பெர்பெர்களின் நாடாகிய எகிப்த்திலும் கார்த்தேஜிலும், பைசாந்தியத்திலும் அவரது   பக்தி முயற்சி பெரிதும் பரவி மதிக்கப்படுகிறது. எகிப்த்தில் கெய்ரோ நகரில் நம் யேசுவின் திருக்குடும்பம் தங்கி இருந்த தொங்கும் தேவாலயத்திலும் இந்த இரட்டைகத்தி வெள்ளை
வீரனின் திரு உருவப்படம் காணப்படுகிறது.
      எகிப்த்திய காப்டிக் திருச்சபை அவரது திரு உருவம் தாங்கிய இரட்டைகத்தி வெள்ளை வீரன் மெர்கூரியின் படத்தோடு அவரது எலும்புகள் தாங்கிய சில அருளிக்கங்களை தங்கள்   நாட்டிலுள்ள புனித மெர்கூரியின் தேவாலயத்தில் வைத்து கொண்டாடி வருகின்ரார்கள். எங்கெல்லாம் புனித மெர்கூரியன் காட்சி கொடுத்தாரோ அங்கெல்லாம் அவர் இரட்டைக்கத்தி யுடனும் ஒரு குதிரையுடனும் வெள்ளை வெளேர் என்னும் பனிபோர்த்திய உடலுடனும் காட்சியளித்ததால் அவர் இரட்டைகத்தி வெள்ளை வீரன் என்று புகழப்படுகிரார்.
      தன்னுடைய கத்தியுடனும் அர்ச்.மிக்கேல் சம்மனசு கொடுத்த கத்தியுடனும் இவர் சித்தரிக்கப்படுவதால் இவர் அரபியில் அபு சீஃபீன் அதாவது இரட்டை கத்தி வைத்திருப்பவர் என்றே கூறப்படுகிறார்.
கி.பி. 224 ஆம் ஆண்டில் பிறந்த இவர் கி.பி.250 இறக்கும்போது இவருக்கு இருபத்தைந்து வயதே முடிந்திருந்தது. நம் புனிதருக்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு ரீதி திருச்சபையும் புனிதர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளன.
      நம் இரட்டைக்கத்தி வெள்ளை வீரன் புனித மெர்கூரியின் நாமம் புகழப்படுவதாக.
       அவரை மகிமைப்படுத்திய நம் தேவ அன்னை மரியாள் திதினா மாதா என புகழப்படுவாறாக.
      தேவ சேனாபதி புனித மிக்கேல் சம்மனசானவறால் நம் மெர்கூரி மாட்சிமை பெற்றதால் அர்ச்,மிக்கேல் சம்மனசானவரின் திருநாமம் புகழப்படுவதாக.
      எல்லா புகழும் இறைவனுக்கே எனப்படுவதால் எல்லாம் வல்ல யேசுவின் திரு நாமம் புகழப்படுவதாக. ஆமேன்.