Tuesday, July 28, 2015

" அவள் கண்ட கனவு."



    " அவள் கண்ட கனவு."

அந்த பௌர்ணமி நிலவின் குளிர்ச்சியிலும் தன் மனைவி க்ளாடியாவின்
மோகனாஸ்த்திரத்தினாலும் கட்டுண்டிருந்த போஞ்சி பிலாத்துவுக்கு விதியின் விளையாட்டு அன்றிலிருந்து ஆரம்பமாகிவிட்டது என்று தெரிந்திருக்க நியாயமில்லை. தன் மனைவி க்ளாடியா யவன நாட்டைச் சேர்ந்தவளாதளாலும் அவளது அழகில் மெய்மறந்திருந்ததாலும்
காதல் ஒழுக அழைத்தான் " யவன ராணி" என்று. " அரசே, நான் அப்படி ஒன்றும் அழகி அல்ல" என்றாள். அவனும் " அடிப்பெண்ணே, நீயா அழகியில்லை? இந்த குதிரை மூஞ்சிக்காரியை எவன் சொல்வான் அழகி இல்லை என்று. உன் புகழ் இந்த யவண தேசம் மட்டுமன்று ரோமிலும் பிரச்சித்தம் தானே" என்றான்.   அரசே என் முகம் என்ன குதிரை முகம் போல நீட்டமாகவா இருக்கின்றது. உங்கள் முகம் கூடத்தான் சற்று நீட்டமாகத்தானே இருக்கின்றது" ! என்றாள் க்ளாடியா.
 "அடிப்பெண்ணே , உனக்குத்தெரியாதா, பெண்களுக்கு அழகிய முகம் இருந்தால் அவளை குதிரை மூஞ்சிக்காரி என்று சொல்லுவார்கள். ஆண்களுக்கு குதிரை முகம் இருந்தால் அது அத்துனை நன்றாக இருக்காது.
வேண்டுமானால் கழுதை மூஞ்சிக்காரன் என்று அழைக்கலாம். ஆனால் என் விஷயத்தில் அப்படி இருப்பதும் ஒரு விதத்தில் லாபம் தான். சமயங்களில் மூஞ்சியை தொங்கபோட்டுக்கொள்ளும் போது அது இன்னும் சற்று நீண்டு தெரியும்" என்றான்.
  அதைக்கேட்டு அவளும் நகைத்தாள்.இந்த நகைப்பினூடே கடலும் கலந்துகொண்டது போல அதுவும் பலமாக இறைந்தது. அதுவரை க்ளாடியாவின் மோகனாஸ்த்திரதில் கட்டுண்டிருந்த போஞ்சி பிலாத்தும் அவன் மனைவி க்ளாடியாவும் இந்த கடலின் நகைப்பினைக் கேட்டு இந்த நகைப்பினூடே ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தார்கள்.
  சுதாரித்து எழுந்தாள் க்ளாடியா. அரசே ஒரு நிமிடம், இதோ வருகிறேன் என்று கடல் அலைகளை நோட்டமிட்டபடியே கடற்காற்றை தீர்கமாக சுவாசித்தாள்.பிறகு வானில் தோன்றிய முழு நிலவைப்பார்த்து ஏதோ புரிந்துகொண்டவள் போல் தலையை இருமுறை ஆட்டி எதையோ ஆமோதிக்கவும் செய்தாள்." யவண ராணி, நிலவு அப்படி என்னதான் சொல்லுகிறது.  எனக்குதான் ஒன்றுமே தெரியவில்லை." என்றான் பிலாத்துஸ். " அரசே, அபாயம் நெருங்குகிறது. தயவு செய்து கூப்பிடுங்கள் கடற்படைத்தளபதியை" என்றாள். " ஏன் , அப்படி என்ன
அபாயம் திடீரென்று. என்னிடம் சொல்ல மாட்டாயா?' என்றான் சற்றே கடினமாக
  " அரசே, பூரண பௌர்ணமி நிலவின் ஒளியில் மாற்றம் தெரிகிறது. கடல் அலையில் மாற்றம் தெரிகிறது காற்றில் உப்புப்படலம் அதிகம் தெரிகிறது" என்றாள் க்ளாடியா. " அடிப்பெண்ணே, உனக்கு மோன சாஸ்த்திரம் தான் தெரியும் என்று நினைத்திருந்தேன். உனக்கு வான சாஸ்த்திரமும் தெரியுமோ? " என்றான் பிலாத்துஸ். அவள் " அரசே எங்கள் அரச குலத்தைச்சேர்ந்த எல்லா கிரேக்க யவண பெண்களும் சரி, ஆண்களும் சரி கூடுமானவரை
எல்லாக்கலைகளும் கற்றிருப்பர். வாள் வீச்சு, வேல் வீச்சு, அரசியல், பில்லி சூனியம்,வான சாஸ்த்திரம், மருத்துவம் மனோதத்துவம் அனைத்தும் எங்களுக்கு பால பாடங்களாகும்.  இதனால் தான் என் சகோதரன் டைபீரியஸை தன் மருமகனாக ஆக்கிக்கொண்டார் அகஸ்டஸ் சீசர். இப்போது அவர் கீழை ரோம சாம்ராஜியத்தின் தளபதியாக்கும் "என்றாள் க்ளாடியா.
" அப்படியானால் அகஸ்ட்டஸ் சீசருக்குப்பிறகு அடுத்த சீசர் டைபீரியஸ் தான் போலும். அப்போது நான் அதிஸ்ட்டக்காரன் தான் போ" என்றான் பிலாத்து.
    " இல்லை அரசே இல்லை, ரோமை அரசுதான் என்று இல்லை, எல்லா தேசங்களிலும் விதியின் விளையாட்டுப்படியேதான் எல்லாம் நடக்கும். தனக்குப்பிறகு அடுத்த வாரிசு அகஸ்ட்டஸ் சீசர்தான் என்று ஜுலியஸ் சீசர் வாரிசுப்பத்திரம் வழங்கியிருந்தும் அவர் அரசியல் சதியால் கொல்லப்பட்டபிறகு அகஸ்ட்டஸ் சீசரால் உடனடியாகப் பட்டத்திற்கு வர முடிந்ததா?. இப்படித்தான் என் சகோதரன் டைபீரியஸுக்கும் நடக்கும்.அகஸ்ட்டஸ் சீசருக்குப்பிறகு என் சகோதரனால் உடனடியாகப்பட்டதிற்கு வர இயலாதபடி சூழ்ச்சியால் அரசியல் மாற்றங்கள் ஏற்படும்" என்றாள் க்ளாடியா.
" அதுசரி, இப்போது நமக்கு உடனடியாக ஆபத்து ஏற்பட்டுள்ளதா?" என்றான் பிலாத்து." இல்லை அரசே, உடனடி ஆபத்து இப்போது இல்லை.காலையில் பார்க்கலாம்" என்றாள் க்ளாடியா. ஆயிற்று.
 அடுத்த நாள் காலையும் ஒருவழியாய்ப்புலர்ந்தது. " கரை நெருங்க இன்னும் இரண்டு நாள் பயணம்" என்று அறிவித்தான் கப்பல்படைத்தலைவன். போஞ்சிபிலாத்து தன் மனைவியைப்பார்த்து சற்றே நகைத்து " உன் வான சாஸ்த்திரம் என்னாவாயிற்று" என்றான். அவள் " அரசே, நகைப்பிற்கு இது நேரமில்லை " என்றாள். சரியாக ஒருமணி நேரம் கழித்து அவசரம் அவசரமாக வந்தான் கப்பல் படைத்தலைவன். பிலாத்துவை உடனே சந்திக்க அனுமதி கேட்டான். அனுமதியும் கிடைத்தது.
" மஹாப்பிரபூ, தங்களிடம் சில விஷங்களைப்பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது."
" என்ன அப்படியொரு அவசியம் திடீரென்று "
" பிரபூ, வானில் பல தாறுமாறான அறிகுறிகள் தோன்றுகின்றன. கடலில் நீரோட்டம் மாறிவிட்டது. இன்னும் இரண்டு நாட்க்களில் கரை தோன்றும் என்ற என் கணிப்பு தவறாகிவிட்டது. இதோ பாருங்கள் கடற்புறாக்கள் திரும்பிச்செல்கின்றன. அவற்றில் சில திடீர் திடீரென செத்துவிழுகின்றன. அவற்றின் உடலில் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. எங்களைப்பொருத்தமட்டில் இது ஒரு மோசமான துற்சகுணம். தாறுமாறான காற்றினால் வானிலையே மாறிவிட்டது. இதனால் நமது பயணமும் தடைபடும் என்று தோன்றுகிறது. என் நாற்பது வருட கடல் அனுபவத்தில் இப்படியொரு விபரீதத்தை நான் கண்டதில்லை." என்றான் கடற்படைத்தலைவன். போஞ்சுபிலாத்து தன் மனைவி
க்ளாடியாவை ஒரு அர்த்தபுஷ்டியான பார்வை பார்த்தான்.
" நம்புகிறேன் க்ளாடியா, நம்புகிறேன். உங்கள் யவணர்களின் வான சாஸ்த்திரத்தின்படி நீ சரியாகத்தான் கணித்திருக்கின்றாய்.நானும் அபாயம் நெருங்குகின்றது என்றவுடன் ஏதோ பாலஸ்தீன கடற்படைதான் நம்மைத்தாக்க வருகின்றது என்று எதிர்பார்த்தேன்.ஆனால் அவர்களிடம் அப்படி ஒன்றும் பிரமாதமான கடற்படையே இல்லை என்று நம்
உளவுப்படை மிக நிச்சயமாய் தெரிவித்து விட்டது." என்றான் பிலாத்துஸ்.
" பிரபூ, ரோம சாம்ராஜ்ஜியத்தை இங்கு நிலை நிறுத்த நீங்களும் நானும் இங்கு வந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இங்கு நிலைமையே வேறு. சீசரை எதிர்க்கும் அரசு பாலஸ்த்தீனத்தில் இல்லை. மக்கள் தான் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதை அடக்கிவிடலாம். அங்கு இருக்கும் அரசன் ஏரோது நம் கைப்பாவை. அப்படி இருக்க நீங்கள் எந்த எதிரியை அரசனாக மதித்து அவனை எதிர்க்கப்போகிறீர்கள்"
" க்ளாடியா, உன் கேள்வியில் உள்ள நியாயம் எனக்குப்புறிகிறது. நான் அகஸ்ட்டஸ் சீசருக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்துதான் இந்த நாட்டிற்கே புறப்பட்டு வந்தேன்.  அது ஒரு விஷயதில் ரகசியமும் கூட. இப்போது நாம் இருக்கும் சூழ்நிலையில் அந்த விஷயத்தைப்பற்றி பிறகு பேசிக்கொள்வோம்" என்றான் பிலாத்துஸ்.
"பிரபூ, எதிரி கண்ணுக்குத்தெரியவில்லை. சற்று முன்பு வரை கடல் பொங்கியதை நீங்கள் கவனிக்கவில்லை. உங்களாள் அதை கவனிக்கமுடிந்ததா? ஆனால் கடலில் தோன்றும் குமிழ் குமிழான நீர்குமிழ்கள் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன. இதே போல் தான் உங்கள் எதிரி அரசனும். எதற்கும் பாலஸ்தீனம் சென்றால் தான் இதற்கு விடை கிடைக்கும்.நான் உங்களுடன் பாலஸ்தீனம் செல்லப்போகிறோம் என்றதுமே என் குல தெய்வங்களுக்கு பலி போட்டு பூஜை புனஸ்க்காரங்கள் எல்லாம் செய்வித்து எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ளகுறி கேட்டேன். ஆனல் எங்கள் குல தெய்வங்கள் கிரேக்கம் துவங்கி ரோம் வரை எந்த தெய்வமும் வாய் திறக்கவில்லை. எங்கள் குல தெய்வம் குரு என்னும் ஜுபிடர் தெய்வமும் கீழே விழுந்து உடைந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன. ஜுபிடர் தேவன் இன்று வரை வாய்மூடி மௌன விரதம்  மேற்கொண்டு அமைதி காக்கின்றார். போகட்டும். எகிப்த்திய தெய்வங்களிடம் குறி கேட்க்கலாம் என்று சூனியக்காரிகளிடம் கேட்டால் எகிப்தில் அலெக்ஸாண்டிரியா துவங்கி அஸ்வான் வரையுள்ள நைல் நதி ஓரங்களில் அமைந்துள்ள ரா, சூரியனார், அபுசிம்பல் போன்ற தெய்வங்கள் கூட மௌன விரதம் மேற்கொண்டு இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன என்று கூறுகின்றனர். ஆக நாம் சந்திக்கப்போவது உலக மகா சக்கரவர்த்தியையா இல்லை அந்த இஸ்ரேலிய தெய்வங்களையா? ஆனலும் எனக்கு நம்பிக்கை இருகின்றது. என் தாலி பாக்கியம் அத்தனை பலவீனமானதல்ல என்று. உங்களை ஜெயிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்று உங்கள் ஜாதகப்பலன் தெரிந்துதான் என் சகோதரன் டைபீரியஸ் உங்களை எனக்கு திருமணம் செய்துவைத்தார் " என்றாள் க்ளாடியா.
" அடிப்போடி பைத்தியக்காரி, எனக்கா எதிரிகள் இல்லை. என் அரசியல் சாணக்கியத்தால் ரத்தம் சிந்தியவர் எத்தனை பேர் என்று எனக்கு நினைக்ககூட நேரமில்லை. உனது தாலி பாக்கியம் பெரிது என்று நீ எப்படி நினைக்கலாம்" ? என்றான் பிலாத்து.
. " பிரபூ, உங்களுக்கு ஒரு உண்மையைச்சொன்னால் கோபப்பட மாட்டீர்களே," என்றாள் க்ளாடியா.
" க்ளாடியா, நீ என்னிடம் எப்போதுமே உண்மையையே பேச வேண்டும்.சீசரின் மனைவி சந்தேகதிற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்பது சீசருக்கு மட்டுமல்ல. எனக்கும் சேர்த்துதான். இப்போது நீ உண்மையைச்சொல். பயப்படாதே. எனக்கு எதிரி யார்?"
"பிரபூ, கோபப்பட வேண்டாம். உங்கள் ஜாதகப்பலன்படி உங்களுக்கு எதிரி வேறு யாரும் அல்ல. உங்களுக்கு எதிரி நீங்கள் தான். பிலாத்துவுக்கு தலை சுற்றியது. "இது உண்மையா  இல்லை பொய்யா அல்லது வேடிக்கைப்பேச்சா ! அன்பே, எங்கே மறுபடியும் சொல். எனக்கு எதிரி நான்தானா" . " ஆம் " என்றாள் அவள்.
   இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கடற்காற்று மிக வேகமாக வீச ஆரம்பித்தது. அரசே இனி நீங்கள் உள்ளே செல்லுங்கள். மற்றதை நான் பார்த்துகொள்கிறேன் என்று கடற்படைத்தலைவனை அழைத்தாள். கப்பல்களை ஒன்றுக்கொன்று சுதந்திரமாக செல்லும்படியும் சுழன்றடிக்கும் வாடைக்கெண்டல் காற்றில் அவை ஒன்றுக்கொன்று
மோதிக்கொள்ளாதபடி மிக அதிக இடைவெளி விட்டு பயணிக்கும்படியும், மிகுந்த புயலானால் சுக்கானை அதிகம் கட்டுப்படுத்த வேண்டாம் என்றும், உயிர் பிழைத்தால் செசாரியாவுக்கு வந்து சேரும்படியும் அடுக்கடுக்காய் கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டே சென்றாள் பிலாத்துவின் மனைவி.   இந்தப்பெண் அரசிக்கு இத்தனை கடல் அனுபவம்  எப்படி வந்தது என்று அதிசயித்துப்போனான் கடற்படைதளபதி. "இந்த வேளையிலும் இத்தனை அபாயத்திலும் இவளுக்கு எப்படி நிதானமாக செயல் பட முடிகிறது. முகத்தில்
கொஞ்சம் கூட ஒரு கலவரம் தெரியவில்லையே, என்ன பெண் இவள்" என்று தன் மனைவியின் சாமார்த்தியத்தில் மிகவும் அதிசயித்துப்போனான் பிலாத்து.
இயற்கை தன் வேலையைக்காட்டிற்று. கடலரசன் தன் கோபாவேசத்தைக்காட்டினான். டமேர் என்ற சப்த்தம் காதைப்பிளந்தது. இடி இடித்ததோ என்று நினைத்த பிலாத்து கடலை எட்டிப்பார்த்தான். தன் வாழ் நாளில் அப்படியொரு பயங்கரத்தை அவன் பார்த்ததே இல்லை. கடல் வெகு தூரத்திற்கு பிளந்து காணப்பட்டது. தொடர்ந்து தோன்றிய  மின்னலின் வெளிச்சத்தில் கடலின் பயங்கரம் தெரிந்தது. கடலின் வெடிப்பிலிருந்து தோன்றியது ஒரு பெரும் நெருப்பு ஜுவாலை.அது கடல் மட்டதிற்கு மேல் இரண்டு பனைமரம் உயரத்திற்க்கு எழும்பியது. அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவன் சேனையைச்சேர்ந்த ஒரு கப்பல் கடற்பிளவுக்குள் தலை கீழாய்ப் பாய்ந்தது. " ஹோ " என்ற மரணக்கூச்சல்
காதைப்பிளந்தது. எதர்க்கும் அஞ்சாத பிலாத்து கூட அன்று பயந்தான். இயற்கை கூட தனக்கு எதிராக கிளம்பிவிட்டதே என்று அறிந்து கடலின் பயங்கரத்தை உணர்ந்தவனாய் " இனி எல்லாம் கடவுள் செயல் " என்று கண்களை இறுக்க மூடினான். அப்போது அவன் கைகளைப்பற்றி உள்ளே இழுத்துப்போட்டு தன் மடியில் கிடத்திக்கொண்டாள் க்ளாடியா.
" க்ளாடியா என் அன்பே, இப்போது இதற்கு நேரமில்லை" என்றான் பிலாத்துஸ். "தெரியும் அன்பே எனக்கும் தெரியும். இப்போது இதற்கு இப்போது அவசரமும் இல்லை, அவசியமும் இல்லை. நீர் இத்தகைய காட்சிகளைப்பார்க்க வேண்டாம் என்று தான்" என்று அவன் கண்களைப்பொத்தினாள் க்ளாடியா. மயக்கம் அவனை ஆட் கொண்டத்து.
  கீழை வாடைக்கெண்டல் காற்றின் பயங்கர சுழர்ச்சியில் கப்பல் கிர் என்று சுற்ற ஆரம்பித்தது. தனக்கு தலை சுற்றும் நிலையிலும் தன் மனைவி க்ளாடியாவைப்பார்த்தான்
    பிலாத்துஸ். அந்த நிலையில் கூட அவள் தன் நிலை கலங்காது சுக்கானைப்பிடித்தபடி உறுதியாக நின்று கொண்டிருந்தாள் க்ளாடியா ப்ரோக்ளஸ். பிலாத்துவின் பார்வை மயங்கி சித்தமும் கலங்கி அவன் கண் விழித்துப் பார்த்த போது சரியாக ஒரு மாதம் முடிந்திருந்தது.

" கி. பி. 26. செசாரியா."
" போஞ்சு பிலாத்து, யூதேயாவின் ரோமைச்சக்கரவர்த்தியின் பிரதி நிதி, மண்டலாதிபதி." என்ற பெயர் தாங்கிய கல்வெட்டு அவன் தங்கி இருந்த அரண்மனையை அடையாளம் காட்டியதது. [ அந்த கல்வெட்டு இன்றளவும் உள்ளது.] அவரது அலுவலகத்தின் படைப்பிரிவுகளில் காஷியஸ் என்பவன் 10 பேர் தலைவனாகவும்,ரகசிய உளவுப்பிரிவு தலைவனாக
அபியத்தார் என்பவன் 100 பேர் தலைவனாகவும் யவணிக்கா என்னும் பெண் க்ரேக்க நாட்டில் பிறந்திருந்தும் ரோமைகுடி உரிமைபெற்றிருந்ததால் தன் காதல் மனைவி க்ளாடியாவின்  நம்பிக்கைக்குறிய தோழியனதாலும் தன்மனைவிக்கு மெய்க்காப்பளினியாகவும், க்ரேஸியா என்னும் பெண், பெண் உளவாளியாகவும் மற்றும் அரண்மனைக்கு  பெண்கள் பிரிவுக்கு தலைவியாகவும் நியமிதிருந்தான் பிலாத்துஸ்.
    போஞ்சிபிலாத்து ரோமை சக்கரவர்த்தியின் பிரதிநிதியாகப் பதவியெற்று கொஞ்ச நாள் வரை யாதொரு பிரச்சனையும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனல் அரசாங்கம் நல்லபடியாகப்போய்கொண்டிருந்தால் அது நல்ல அரசாங்கம் இல்லை. ஒன்று அரசன் முட்டாளாக இருக்கவேண்டும். அல்லது மக்கள்
முட்டாளாக இருக்கவேண்டும்.
" அமைதியான் கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்காது."
" நீ எத்தனை பேரலைகலைத்தாண்டி வந்திருக்கின்றாய் என்பது முக்கியமல்ல. கப்பல் கரைக்கு வந்து விட்டதா? "
" பிரச்சனைகளும் நாய் போன்றதே. நீ ஓடினால் அது உன்னைத்துரத்தும். நீ எதிர்த்தால் அது பின் வாங்கி ஓடிவிடும்."
இவ்வாறாக சோதனைகளும் பிரச்சனைகளும் மாறி மாறி வந்து நம்மை சிக்கவைக்கும்போதுதான் நாம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். உண்மையில் சோதனைகளும் பிரச்சனைகளும் நம்மை புடம்போட்டு வெற்றியடையச்செய்யவே உதவுகின்றன. இதனால்தான் கடவுள் நம்மை சாமார்த்திய சாலிகள் ஆக்கவே பிரச்சனைகளையும்  சோதனைகளையும் அனுப்புகிறார். இதை புரிந்துகொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். புரிந்துகொள்ளாதவர்கள் தோல்விகளைக்கண்டு பயந்து ஓடி ஒளிந்து  மேலும் மேலும் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு வெளிவரத்தெரியாமலும் முடியாமலும் தவித்துக்கொண்டு தரித்திரவனாகி நிர்ப்பாக்கியகதி அடைகிறார்கள்.
    இப்படியாக போஞ்சி பிலாத்துவுக்கும் சவால் விடும்படியாக அடுத்தடுத்து சோதனைகளும் பிரச்சனைகளும் வந்துகொண்டிருந்தது. மதம் இனம் அரசியல் கலாச்சாரம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ரூபங்களில் பிரச்சனைகளாக வந்தன. பிலாத்து இதற்கெல்லாம் அசருபவனா என்ன. பிலாத்துவே உன்பேர்தான் பிரச்சனையோ என்னும் விதமாக அவன் பிரச்சனைக்கே பிரச்சனையாக இருப்பவன். அரசியல் சாணக்கியன். ஆக இந்த உள்நாட்டுப்பிரச்சனைகளை தனது அரசியல் சாணக்கியத்துக்கு விடப்பட்ட
சவாலாக ஏற்றுக்கொண்டான். சரி. எந்த பிரச்சணையையும் ஒவ்வொன்றாக அனுகலாம். பார்த்துவிடலாம் ஒரு கை. என் தலைவன் அகஸ்ட்டஸ் சீசருக்கு சத்திய பிரமாணம்  செய்துகொடுத்துதான் இந்த நாட்டிற்கே வந்திருக்கின்றேன். இந்த நாட்டில் ரோமை சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டாமல் நான் விடப்போவதில்லை. அதற்கு நான் என்ன  விலையையும் கொடுக்க தயாராய் இருக்கின்றன். என் மனைவி க்ளாடியா இருக்கும் வரை எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்ல. அவளுக்கு நிகர் இந்த ஈரேழு
உலகத்திலும் யாரும் இல்ல என்று அந்த சூழ்நிலையிலும் அவளை பாராட்டவும் செய்தான். அந்த அளவுக்கு அவனுக்கு அவள் அனைத்திலும் பக்க பலமாய் இருந்தாள் க்ளாடியா.
அந்த நாள் இரவில் தன் மனைவி க்ளாடியாவுடன் பேசிக்கொண்டிருந்த பிலாத்து " அன்பே நாம் நாளைக்கு கலிலேயாவுக்கும் பிறகு பிலிப்பு செசாரியாவுக்கும்  அரசாங்க விஷயமாக போகப்போகிறோம். பிலிப்பு செசாரியாவில் பனியாஸ் என்னும் ஒரு இடம் இருக்கிறது. அங்கே உள்ள பனியாஸ் தேவதை மிகவும் சக்தி வாய்ந்ததாம். அங்கு போய் நம் எதிர்காலம் பற்றி குறி கேட்போம்" என்றான். க்ளாடியாவும் ஒரு சுற்றுலாத்தலம் காணப்போவதால் மிகுந்த சந்தோஷத்துடன் கிளம்பினாள். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத்துவங்கினாள்.

"நஸரேத்தூர்"

நசீரா என்னும் அரபுச்சொல்லின் திரிபுதான் நஸரேத்தூர். அழகிய ரோஜா என்னும் பெயர் பெற்ற இந்த ஊர் அக்காலத்தில் அதாவது யேசுநாதர் காலத்தில் வெறும் சிற்றூர்.  எதற்குமே முக்கியத்துவம் இல்லாத ஊர். நஸரேத்தூரிலிருந்து நல்ல செய்தி ஏதேனும் வரக்கூடுமோ என்று விவிலியத்திலிருந்துகூட ஒரு கேள்வி எழுந்ததுண்டு. அன்றைய
பாலஸ்த்தீனத்தின் வரைபடத்தில்கூட இடம் பெறாத சிற்றூர். திருக்குடும்பம் அங்கு வாழ்ந்ததால் மட்டுமே சரித்திரத்தில் இடம் பெற்றது. இங்கு உள்ள ஒரு சிறு குன்றின் உச்சியில் இருந்த ஒரு வீட்டில் தான் திருக்குடும்பம் வழ்ந்தது. சரியாக யேசுநாதருக்கு இருபத்து ஏழு வயதாகும்போது அவரது இவ்வுலகின் தந்தையாக இருக்கப்பேறு பெற்ற யோசேப்புக்கு இவ்வுலக வாழ்வு முடியும் தருவாயாக இருந்தது. இந்த என்பத்துஏழு வயதைக்கடந்த அந்த பிதாப்பிதாவுக்கு மரணத்தின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. உணவு இறங்கவில்லை. நா குழறியது. கண்கள் மங்கின. எப்போதும் படுத்த படுக்கையாகவே இருந்தார். தேவ தாயார் மரியாளும் அவரது திரு மகன் யேசுநாதரும் அவரது படுக்கை அருகிலேயே இருந்தனர்.
    யோசேப்பின் படுக்கை அருகில் ஒரு தட்டில் ரொட்டிகளும் பழங்களும் பாலும் தேனுமாக இருந்தன. எப்போதெல்லாம் யோசேப்புக்கு உணவு செல்லுமோ அப்போதெல்லாம் அவர்களும் சிறிது உண்டனர். யோசேப்பு தன் மகனை அருகில் அழைத்தார். யேசு மண்டியிட்டு அவரின் மார்பு பகுதியில் தன் கரங்களை வைத்து ஆதரவாய் அவரை அணைத்துக்கொண்டார்.
அன்னை மரியாள் தன் அன்பான பர்த்தாவின் தலையை தன் மடி மீது கிடத்திக்கொண்டார். யோசேப்பு தன் கரங்களை ஸ்வாமியின் திருசிரசில் வைத்து தடவிப்பார்த்துக்கொண்டார்.
   அவரால் பேசமுடியவில்லையே தவிர அவர் என்ன நினைக்கிறார் என்று யேசுவுக்கு புறிந்துவிட்டது. பிற்காலத்தில் தன் திருசிரசில் சூடப்போகும் முள்முடியை இப்போதே அவர் தன்  ஞானத்தால் உணர்ந்துகொண்டே இப்போது தடவிப்பார்க்கிறார் என்று அறிந்தவராய் கூறினார், " அப்பா, வேண்டாம் அப்பா. உங்களுக்கு அது தாங்காது. உங்களுக்கு இந்த காட்சிகள்
வேண்டாம் அப்பா. உங்களை நான் அதிகம் கஸ்ட்ப்படவிட மாட்டேன். இதுவரை நீங்கள் பட்ட கஸ்ட்டம் எல்லாம் போதும். உங்களை நான் அதிக காலம் காத்திருக்கவும் விடமாட்டேன். எனவே தயவு செய்து உங்கள் திருக்காட்சிகளை மறந்துவிடுங்கள்" என்று கூறினார்.
  யோசேப்பின் கண்களிள் கண்ணீர் பெருகியது. யேசுவுக்கும் அவரது திருத்தாயார் மரியாளுக்கும் கண்களில் நீர் ஆறாய் பெருகியது. இவ்வாறாக யேசுவின் தகப்பனாராக  இவ்வுலகில் தோன்றிய மஹாப்பரிசுத்தரும் பிதாப்பிதாக்களுக்கெல்லாம் பிதாப்பிதாவகிய யோசேப்பு பாக்கியமான மரணத்தை அடைந்தார். அவரது அடக்கதிற்கு விரல் விட்டு என்னும் அளவிலேயே உறவினர்கள் வந்திருந்தார்கள். மிகப்பழங்காலத்தில் பரலோகப்பிதாவாகிய சர்வேசுரனின் நண்பரான மோயீசனுடைய அடக்கத்தை கடவுள் தாமே முன்னின்று  செய்தார் என்றும் அவரது அடக்க சடங்குகளை மனிதர் யாவரும் காணவில்லை என்றும் வேதாகமத்தில் நாம் வாசித்ததுண்டு.     ஆனால் இரண்டாமளாகிய சுதானாகிய சர்வேசுரனின் மனிதாவதாரத்தில் யேசுவின் தந்தையாக அவதரிக்க பேறுபெற்ற யோசேப்பு என்னும் மனிதரின் மரணத்திற்கு ஈமச்சடங்குகளை அவரது மகனாக அவதரித்திருந்த சுதனாகிய  சர்வேசுரனே முன்னின்று நடத்தினார் என்றால் அவர் எப்பேற்பட்ட பேறு பெற்ற புனிதர் என்பதை நாம் எளிதாக உண்ர்ந்துகொள்ளலாம். அவரது சொந்த பந்தமெல்லாம் வெகு
தொலைவில் வசித்துவந்ததால் பிற்பாடு துக்கம் அனுசரிக்க வந்திருந்தார்கள்.
[ பிற்கால கிரிஸ்த்துவ்ர்கள் அவரது கல்லரையை தோண்டி அவரது அழியாத சரீரத்தை எடுத்துக்கொண்டு போய் அவரது சொந்த ஊரான் பெத்லஹேமுக்கு கொண்டு போய் ரகசியமாய்  புதைத்து வைத்துவிட்டார்கள். அவரது திரு சரீரம் இன்று வரை அழியாமல் உள்ளதாகவும் ஆண்டவரின் திருச்சித்தப்படி ஒரு நாள் வெளிக்கொண்டுவரப்படும் என்று  திருகாட்சியாளர் புனித காதரின் எம்மரிக் கூறுகிறார்கள்.] யேசுநாதரின் தந்தையார் இறந்து மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு யேசுநாதர் கலிலேயாவுக்கு சென்று தன் தாயாருடன் வசித்து தனது வேதபோதக அலுவலை ஆரம்பிக்கலானார்.


"கலிலேயாக்கடல்"

இது ஒரு நல்ல நீர்க்கடல் ஆகும். இதற்கு பல பெயர்கள் உண்டு. திபேரியாக்கடல் என்றும் கெனசரெத் கடல் என்றும் அழைப்பார்கள். அமுதும் விஷமும் ஒரே மன்னில்  என்பது போல் அன்றைய பாலஸ்தின [இன்றைய இஸ்ரேல் ] நாட்டில் நல்ல நீர்கடலாக இந்த கலிலேயா கடலும் விஷமாக சாக்கடலும் [உப்புக்கடல் ] உள்ளன. அண்ட சராசரங்களையும் ஈரேழு உலகங்களையும் கடல்களையும் சமுத்திரங்களையும் கடவுள் படைத்திருந்தாலும் தான் வசிப்பதற்கு ஏற்ற இடமாக இந்த கலிலேயாக்கடலையே தேர்ந்துகொண்டார். கலிலேயா நாட்டில் வடக்கில் சிரியா நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள பனி சூழ்ந்த ஹெப்ரான் மலைகளிலிருந்து அருவிகளாக இறங்கி வரும் நல்ல நீர்ச்சுனைகள் இந்த கலிலேயாக்கடலுக்கு வற்றாத நீர் ஆதாரமாகும். ஆக அந்தக்காலத்திலிருந்தே இந்த கலிலேயாக்கடல் நல்ல சுற்றுலாத்தலமாகவும் சிறந்த மீன் பிடி
துறைமுகமாகவும் இருந்ததால் மக்கள் கூட்டம் எப்போதும் இந்த கடலோரப்பகுதியில் இருந்ததால் ரோமர்களுக்கு நல்ல வரும்படி வரும் சுங்க இலாக்கா இங்கு செயல் பட்டது.
   போஞ்சிபிலாத்து இங்கு வந்தபோது அங்கு சுங்க அதிகாரியாகப்பணியில் இருந்தவர் லேவி என்ற மத்தேயு. இங்கு புழங்கும் பணப்புழக்கத்தைக்கண்ட போஞ்சிபிலாத்துவுக்கு கை  நன்றாக அரிக்க ஆரம்பித்தது.
மத்தேயுவை அழைத்து சுங்க வரியை மேலும் இரண்டு மடங்கு அதிகரிக்க உத்திரவு இட்டான். ஏற்கனவே ரோமை அரசாங்கத்திற்கு அடிமைப்பட்டிருந்த இந்த பாலஸ்தின நாட்டின் பராமரிப்புக்கு பணம் போதவில்லை. ஏற்கனவே அகஸ்ட்டஸ் சீசர் பண உதவியை நிறுத்திவிட்ட காரணத்தால் தேவையான நிதி ஆதாரங்களை உள் நாட்டிலையே ஏற்படுதிக்கொள்ள சீசர் பிலாத்துவுக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். எனவே பிலாத்துவும் இத்தகைய நடவடிக்கையை எடுக்கவேண்டி இருந்தது. அதற்கு மத்தேயு " ஐய்யா,  ஏற்கனவே எம் நாட்டு மக்கள் வரிச்சுமையால் மிகவும் அதிகம் துன்புறுகிறார்கள். மேலும் வரிச்சுமையை இரட்டிப்பாக்கினால் மக்கள் என்ன செய்வர்கள் பாவம். ஏற்கனவே எங்களை மக்கள் வெறுக்கிறார்கள். சமுதாயத்தில் எங்களுக்கு மதிப்பும் இல்லை. மரியாதையும் இல்லை. மீண்டும் எங்களுக்கு கௌரவமும் மரியாதையும் வேண்டுமானால் வரியையை  குறைக்கவேண்டும் ஐய்யா" என்றார்.
பிலாத்து, " மத்தேயு, நீ எனக்கு புத்தி சொல்லவேண்டாம். உனக்கு மரியாதை குறைவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அரசாங்க கஜானா காலி.
அதை சரி செய்ய வேண்டும். காலியான கஜானாவை வைத்துக்கொண்டு என்னை என்ன செய்யச்சொல்கிறாய். போய் வேலையைப்பார். உமக்குப் பதவி வேண்டாமானால் நீர் வேலையை ராஜினாமா செய்து விட்டுப்போகலாம்." என்றான். மத்தேயு பணிந்துகொண்டு தன் நிலையை நொந்துகொண்டு சுங்கவரியை இரட்டிப்பாக்கினார். இதன் பின் விளைவு அடுத்த வாரமே தெரிய ஆரம்பித்தது. வறிய நிலையிலிருந்த மக்களும் எளிய வியாபாரிகளும் கொதித்து எழுந்தார்கள். வரி கொடா இயக்கம் முதல் அடங்கமறு தீவிரவாதம் போன்ற போராட்டங்கள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்தன. இந்த போராட்டங்களை பிலாத்து இரும்புக்கரம் கொண்டு அடக்க ஆரம்பித்தான். பிறகு நாட்டில் எதுவுமே நடக்காதது போல்  தன் மனைவி க்ளாடியவை அழைத்துக்கொண்டு பனியாஸ் என்னும் தேவதையின் கோயிலுக்கு சென்றான்.
     பனியாஸ் என்னும் தேவதையின் ஆலயம் பிலிப்பு செசேரியாவுக்கு வடகிழக்கில் உயர்ந்த மலையில் அமைந்துள்ளது. பிலாத்துவின் காலத்தில் இந்த பகுதியை ஆண்ட அரசன் ஏரோது பிலிப்பு. அவன் ரோமருக்கு தன் விசுவாசத்தை காட்டிகொள்ள இந்த இடத்தை பிலிப்பு செசேரியா என்று மாற்றிக்கொண்டான். ஹெர்மான் மலையிலிருந்து வரும் ஒரு நதி பூமிக்கு அடியில் சுமார் 15 மைல் தொலைவிற்கு ஒடி பிறகு பனியாஸ் நதி என்று பெயர் பெற்று. இந்த பனியாஸ் ஆலயத்தின் குகை வழியே வந்து மீண்டும் பனியாஸ் என்னும் நதியாக ஒடுகிறது. மலையில் இயற்கை கொஞ்சும் பசுமையான குளு குளு வசதியுடன் கூடிய இயற்கையான சுற்றுலாத்தலமாக இன்றளவும் விளங்குகிறது. ஆங்காங்கே நீரூற்றுகள், மலைகள் கோயில்கள் என்று இருப்பதால அந்தக்காலத்திலிருந்தும் இந்தக்காலத்திலும் இங்கு சுற்றுலாப்பயணிகளுக்கு குறைவே இருக்காது.
[பிற்காலத்தில் யேசுநாதர் இந்த இடத்திலுள்ள குகையின் முகப்பில் உள்ள பாறையில் இராயப்பரை நிற்கவைத்து "இராயப்பா, நீ இராயாய் இருக்கிறாய், இந்தப் பாறையின் மேல்  என் திருச்சபையைக்கட்டுவேன்.நரகத்தின் வாசல் அதை மேற்கொள்ளாது. நீ பூலோகத்தில் எதைகட்டுவாயோ அது பரலோகத்திலும் கட்டப்படும். நீ பூலோகத்தில் எதெல்லாம்
கட்டவிழ்க்கிறாயோ அதெல்லாம் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்றார். கலிலேயாவில் ஒருமுறை யேசுநாதர் தன் பிரசங்கத்தை முடித்துவிட்டு புறப்படும்போது திராளான  மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டது. அப்போது யேசுநாதர் திடீரென" யார் என்னைத்தொட்டது" என்றார். இராயப்பர் "ஆண்டவரே இவ்வளவு கூட்டத்தில் யார்
என்னைத்தொட்டது என்று கேட்கிறீர்களே, யார் என்று குறிப்பிட்டுசொல்ல முடியாத அளவு மக்கள்கூட்டம் உள்ளதே" என்றார். அப்போது யேசுநாதர் " பலர் என்னை சூழ்ந்திருக்கலாம், பலர் என்னைத்தொட்டு இருக்கலாம். ஆனால் யாரோ ஒருவர் என்னைத் தொட்டதும் குணமடைந்துள்ளார். என்னிடத்திலிருந்து சக்தி வெளிப்பட்டு அவர் குணம்  அடைந்துள்ளார். அவர் யார் என்றார்?"
     அப்போது ஒரு பெண் " போதகரே, அது நான் தான். ஆண்டாண்டுகாலமாய் பெரும்பாடு என்னும் நோயினல் நான் அவதிப்பட்டு வந்தேன். உம்மைப்பட்டு கேள்விபட்டு உம் அங்கியைத்தொட்டாலே போதும் நான் குணமடைவேன் என்று விசுவாசித்து உம்மைத்தொட்டேன். உடனே குணம் பெற்றேன். என்னை
மன்னியுங்கள்." என்று அவர் பாதம் பணிந்தாள். அவள் இந்த பனியாஸ் என்னும் ஊரைச்சேர்ந்தவள் . ஆதலால் இந்த செய்தி பனியாஸ் முழுவதும் உடனே பரவியது.
         குணமடைந்த பெண் ஒன்றும் சாதாரணமானவள் அல்ல. பெரும் பணக்காரி. அவள் பெயர் எனூயீ. கணவனை இழந்தவள். இவளுடைய சகோதரியின் பெயர் லீயா. அவள்  எப்போதும் ஆண்டவரின் திரு நாமத்தை ஓய்வின்றி சொல்லிக்கொண்டே இருப்பவள். தன் சகோதரி எனூயீ பெரும்பாட்டினின்று குணமடைந்ததும் ஏற்பட்ட மகிழ்சிப்பெருக்கினாள்
"ஆண்டவரே, உம்மைத்தாங்கிய வயிரும் உமக்கு பாலூட்டிய மார்பகமும் பேறு பெற்றவையாகும்" என்றாள். அதற்கு யேசுநாதர் "ஆனால் கடவுளுடைய வார்த்தைகளைகேட்டு அதன்படி  நடப்பவர் அதைவிட பேறு பெற்றவர்களே" என்றார். தான் குணமானதன் பொருட்டு யேசுவுக்கு தன் நன்றியைத்தெரிவிக்க ஏராளமான தான தருமங்களைச்செய்தாள். பிற்காலத்தில்
யேசுவின் சீடர்கள் இந்த பனியாஸ் கிராமத்தில் இந்த பெண்னின் உதவியுடன் ஒரு தேவாலயம் ஒன்றைக்கட்டினர்கள். ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களால் இந்ததேவாலயமும் சிதிலமாயிற்று. அவை இன்றளவும் இந்த பெண்னின் நினைவோடு சாட்சியாய் நிற்கின்றன. எனவே இந்த இடம் இக்கால கிரிஸ்த்தவர்களுக்கும் புனித யாத்திரை
ஸ்தலமாகும்.]
   இந்த மலையும் அருவியும் புனிதமானது என்பதால் அன்றிலிருந்தே யாரும் கோயில் பகுதியில் நதியில் குளிக்கவோ நடக்கவோ கூடாது. இந்த மலையில் குடியிருந்த பனியாஸ் தேவதைக்கு பலி கொடுப்பது ஒரு வித்தியாசமான காரியமாகும். இந்த தேவதையிடம் குறி கேட்கவேண்டுமானால் நரபலி கொடுக்கப்பட வேண்டும். நரபலி என்பது அந்த இடத்தில் வெட்டிக்கொடுக்கபடுவதில்லை. மாறாக பலி கொடுக்கபடவேண்டிய நபரை பூஜை ஆரம்பிக்கும்போது உயிருடன் இந்த நதியின் நீர்சுழலில் தூக்கிப்போடுவார்கள்.  அந்த நபர் சுழலில் அகப்பட்டு எங்கு போய் மறைகிறார் என்று யாருக்கும் தெரியாது. பலி கொடுக்கப்பட்ட நபரின் ரத்தம் அந்த இடத்தில் வெளிப்பட்டால் பலி  ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அர்த்தம். இவ்விதமான நடைமுறை அந்தக்காலத்தில் இருந்ததால் பிலாத்துவும் அவன் மனைவி க்ளாடியாவும் இந்த இடத்திற்குவந்து  வேண்டுதல் வைத்து நரபலி கொடுத்தனர். இதற்காக அரசாங்கத்தால் கொலை தண்டணை பெற்றவர்கள் சிலரை ஏற்கனவே பிலாத்து ஏற்பாடு செய்திருந்தான். ஒன்று, இரண்டு,
மூன்று என்று நரபலிகள் கொடுத்தும் பனியாஸ் தேவதை வாயைத்திறக்கவே இல்லை. இதனால் வருத்தமுற்ற க்ளாடியா தன் கணவனுக்கு இனிமேல் அதிகம் ஆபத்து ஏற்படுமோ  என்று பயந்தவளாக தன் பயணத்தை முடித்துக்கொண்டு தன் அரசாங்க இல்லமான செசாரியாவுக்கு மீண்டும் பயணமானாள்.
     ஒருநாள்.....பிலாத்து தன் அரண்மனை அதிகாரியான அபியதாரை அழைத்தான். "அபியதார் நாட்டில் என்ன சிறப்பு செய்தி" என்று வினவினான். "பிரபூ, நாட்டில் பல  அதிசய செய்திகள் உள்ளன".என்றான்.
"சரி, ஒவ்வொன்றாகச் சொல்"
" பிரபூ, இந்த கலிலேயாவில் ஒரு யூத ராபி நிகழ்த்தும் போதனைகளும் அற்புதங்களும் வார்த்தையில் சொல்லி முடியாது. எந்த நேரமும் மக்கள் கூட்டம் அவர் பின்னே சுற்றுகிறது. மிகுந்த மந்திர சக்தி அவரிடம் இருகிறது. ஒரே வார்த்தையில் பேய்களை ஓட்டுகிறார். முடவர் நடக்கின்றனர். குருடர்கள் பார்க்கின்றனர். எந்தவிதமான நோய்களும் அவர்  தொட்டவுடனே குணமடைகின்றன. எனக்குத்தெரிந்து இந்த காலத்தில் இப்படியொரு சக்தியுள்ள மனிதர் யாருமில்லை." என்றான் அபியதார்.
" ஆச்சர்யமாகதான் உள்ளது அபியதார்.அவரை நீ பார்த்திருக்கிறாயா? அவர் பெயர் என்ன?'
"அவர் பெயர் யேசு. யூதேயாவிலுள்ள பெத்லஹேமில் பிறந்து, கலிலேயாவிலுள்ள நசரேத்தூரில் வாழ்ந்து தற்போது கப்பர்நஹூமில் நம்முடைய சுங்க அதிகாரி லேவியின் வீட்டில் தான் வசித்து வருகிறார். பிரபூ, ஒரு விஷயத்தை நான் உங்களுடைய கவனத்துக்கு கொண்டுவருகிறேன். இந்த யேசு நாதருடைய போதனையால் கவரப்பட்ட நம் சுங்க அதிகாரி லேவி
தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அவர் இந்த உலக வாழ்க்கையை வெறுத்துவிட்டு யேசுவின் சீடராக மாறிவிட்டார். தற்போது அவருடைய பெயர் மத்தேயூ. அவர்  மட்டுமல்ல, பலர் இப்படி மாறிவருகிறார்கள். படித்தவர் முதற்கொண்டு பாமரர் வரை செல்வந்தர் முதற்கொண்டு ஏழைகள் வரை இந்த உலக வாழ்க்கையை வெறுத்து அவர்பின்னே போய்கொண்டே இருக்கின்றார்கள். இதனால் பாரம்பரிய கோயில் குருக்களும் சட்ட வல்லுனர்களும் கதி கலங்கிப்போய் இருகின்றார்கள். அவருடைய போதனையில் ஏதேனும் குற்றம் கண்டுபிடிக்கமுடியாமலும் அவரை எதிற்கமுடியாமலும் இந்த பரிசேயர்களும் சதுசேயர்களும் படும் பாடு வார்த்தையில் சொல்லி மாளாது." என்றான் அபியதார்.
   இவர்கள் பேசிகொண்டிருக்கும்போதே சற்றே எட்டிப்பார்த்தாள் பிலாத்துவின் மனைவி க்ளாடியா. இதை கவனித்த பிலாத்து, " க்ளாடியா, அரசாங்க காரியமாக நான்  பேசிக்கொண்டிருக்கிறேன். என்ன அவசரம்." என்றான்.
" பிரபூ, உங்கள் அரசங்க காரியங்களில் நான் ஒரு போதும் தலையிட மாட்டேன். இந்தப்பக்கம் வந்தேன்,ஏதோ யூத ராபியைப்பற்றி பேசிகொண்டிருந்தீர்கள்.மற்றபடி வேறு ஒன்றும் இல்லை."
" ஆ.... பார்த்தாயா.. நானும் ஒரு விஷயத்தை மறந்துவிட்டேன். நாம் கூட அன்று கப்பலில் இந்த யூத தெய்வங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம் இல்லை. உனக்கும் இந்த  விஷயங்கள் ஆர்வமாகத்தான் இருக்கும் . வா... இப்படி உட்கார். அபியதார் நீ அந்த யூத ராபி யேசுவைப்பற்றி மேலும் கூறு" என்றான் பிலத்து.
"பிரபூ, யேசு நாதர் எவ்வளவோ புதுமைகள் செய்திருந்தாலும் நான் கண்டஒரு புதுமை என்னை திகைக்க வைத்தது. மிகவும் சூம்பிப்போய் இருந்த கைகளைவுடைய ஒருவனை பரிசேயர்கள் யேசுவிடம் அழைத்து வந்தார்கள். பெயருக்கு ஒரு சிறிய கை அவனுடைய வலது புயத்தில் ஒட்டிகொண்டிருந்தது. அந்த மனிதரைப்பார்க்கவே வினோதமாக இருந்தது.
அவன் பெரும் பாவி என்றும் கூறினார்கள். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. யேசுவும் அவனிடம் வந்து “ நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்க அவனும் “  ராபி எனக்கு என் வலது கை சூம்பி இருக்கிறது. எனக்கு என் கை சரியாக வேண்டும் “  என்றான். யேசுவும் அவரது வலக்கையால் அவனது சூம்பிய வலது கையை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக இழுத்தார். அந்த கை அவர் இழுக்க இழுக்க வளர்ந்து கொண்டே வந்தது. அவனுக்கு வலியே இல்லை. ஆனால் ஆச்சர்யம், அவனது விரல்கள் மற்றும் கரங்கள் அவனது இடக்கைபோலவே வளர்ந்துகொண்டே வந்து தேவையான அளவு வளர்ந்ததும்நின்று கொண்டன. பார்த்தவர்கள் அனைவரும் திக் பிரமை கொண்டவர்களைப்போல் வாய் அடைத்து நின்றனர். நான் பார்த்தவரையில் சில செடி கொடிகள் தான் ஒரு நாளைக்கு சில அங்குலமே வளரும். ஆனால் இந்த சூம்பிய கையை
உடையவனுக்கு ஒரே நாளில் இரண்டு முழ நீளம் அதுவும் வலியே இல்லாமல் வளர்ந்தது என்றால் இந்த கலிலேய ராபி எப்பேற்பட்ட வல்லமையுள்ள மனிதராக இருக்க முடியும் என்று எனக்கு ஒரே ஆச்சர்யமாகப்போய்விட்டது" என்றான் அபியதார்.

" தண்ணீர்..... தண்ணீர்."

இந்த புதுமையைக்கேட்டதும் க்ளாடியாவுக்கு முகமெல்லாம் ஒளிர்ந்தது. அவளுக்கும் மனதில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இந்த யூத ராபி மட்டும் மனது வைத்தால் நமது  மகன் பிலோவுக்கும் சூம்பிய கால்கள் குணமாகும்.. அவரை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்று நினைத்தவளாய் தன் கணவனிடம் இது பற்றி பேசவிரும்பினாள். அப்போது வீரன் ஒருவன் வந்து அபியதாரிடம் சிலவிஷயங்களை தெரிவித்தன். "அபியதார் என்ன விஷயம்" என்று கேட்டான் பிலாத்து. " பிரபூ, ஜெருசலேமில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் கலகத்தில் ஈடுபடுவார்கள் போலே தெரிகிறது. இந்த விஷயத்தில் ஏரோதரசரின் பங்கும் இருப்பதாகத்தெரிகிறது. தாங்கள் எச்சரிக்கையாக செயல் பட வேண்டும். நாம் உடனே ஜெருசலெம் போக வேண்டும்" என்றான் அபியதார். " சரி அபியதார். ஜெருசலெம் பயணத்திற்கு. ஆவன செய், நம் படைகளை நடத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே தெரிவி. நான் உடனே ஏரோதன் அந்திப்பாசை சந்திக்கவேண்டும். ஏற்பாடுகளை ரகசியமகவும் உடனடியாகவும் செய். ஏரோதனிடம் இங்கேயே நான் பேச வேண்டும். அவனை வைத்து தான் நான் இந்த பிரச்சனையை முடிக்க வேண்டும்.நீ போகலாம்" என்றான்.
  க்ளாடியாவுக்கு இந்த சமயத்தில் யேசுவை சந்திக்க பிலாத்துவிடம் அனுமதி கேட்ப்பது சரியான காரியமாகப்படவில்லை. அப்போது பிலாத்து " நீ என்ன நினைக்கிறாய் க்ளாடியா" என்றான். க்ளாடியா, பிரபூ, நீங்கள் எதைப்பற்றி
கேட்கிறீர்கள் என்று எனக்குப்புறியவில்லை" என்றாள்." க்ளாடியா, உனக்கா புறியவில்லை. இப்போது தண்ணீர்பஞ்ச பிரச்சனை திடீரென்று எப்படி கிளம்பியது என்று உனக்கு புறியவில்லையா, ஆனால் எனக்குப்புறிந்துவிட்டது." என்றான் பிலாத்து. அப்படியானால் அதை எனக்கும் புறிய வையுங்கள் என்றாள் க்ளாடியா.
"க்ளாடியா இந்த ஏரோதன் அந்திப்பாஸ் இருக்கிறானே அவன் மஹாபெரும் துஸ்ட்டன். தன் அண்ணன் ஏரோது பிலிப்புவின் மனைவியாய் இருந்த அபிகாயிலை அவன்  விலக்கிவிடவே இவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். இந்த திருமணத்தில் பல தடைகள் ஏற்பட்டன. யூதேயாவில் வாழும் யோவான் என்னும் ஒரு பரிசுத்த துறவியும் சற்று முன்னர் பேசினோமே கலிலேய ராபி யேசுவும் மற்றும் யூதமத குருக்களும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காரணம் இந்த அபிகாயில் ஏரோதன் அந்திப்பாஸுகு ஒருவிதத்தில் ரத்த உறவுள்ள சகோதரி முறை ஆகிறாள். இதனால் வெறுப்புற்ற ஏரோதன் அந்திப்பாஸ் யோவான் துறவியையும் அவரது சீடர்களையும் சிறையில் அடைத்து வைத்து உள்ளான். தன்னை எதிர்ப்பவர்களை எச்சரிக்க யோவான் சீடர்களில் பலரை சிரச்சேதம் செய்விக்கவே கலகம் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதை திசை திருப்பவே
இப்போது ஜெருசலேமில் தண்ணீர் பிரச்சனையை கிளப்பிவிட்டிருக்கிறான். எனவே இந்த பிரச்சனையை அவனை வைத்தே முடிக்க வேண்டும்.இப்போது உனக்கு சூழ்நிலை  உனக்குப்புறியும் என்று நினைக்கிரேன்" என்றான் பிலாத்து. " சரி, பிரச்சனையை எப்படி கையாளப்போகிறீர்கள் ?" என்றாள் க்ளாடியா. பிலாத்து அவள் காதில் சிலவிஷயங்களை கிசுகிசுத்தான். அவை அவளுக்கும் நல்ல யோசனையாகத்தான் பட்டது. ஆனால் நடந்ததென்னவோ எல்லாம் தலைகீழாய் முடிந்தது.!!!!!!.

" கி.பி. 32."
    அன்று செசாரியா அரண்மனையில் கொலு வீற்றிருந்தான் பிலாத்து. அன்றைய சிறப்பு விருந்தினராக வந்திருந்தான் ஏரோது அந்திப்பாஸ்.சம்பிரதாயமான வரவேற்ப்புகள் முடிந்ததும் பேச்சுவார்த்தையும் ஆரம்பமானது. ஜெருசலேமில் தண்ணீர் பிரச்சனை பற்றி பேச்சு வார்த்தை ஆரம்பமானது.
" பொஞ்சிபிலாத்து மஹாப்பிரபூ அவர்களே, ஜெருசலேமில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க என்னிடம் ஒரு நல்ல திட்டம் ஒன்று உள்ளது. ஜெருசலேமிற்க்கு மேற்கே உள்ள  ஜிபியோனிலிருந்து குழாய்கள் மூலம் நகருக்கு தண்ணீர் கொண்டு வ்ர முடியும். ஜிபியோன் உயர்ந்த இடத்திலும் ஜெருசலேம் தாழ்ந்த இடத்திலும் இருப்பதால் தண்ணீர் மிகவும்
சுலபமாக வந்துவிடும். என்ன செலவு தான் கொஞ்சம் அதிகம் ஆகும். அதை ரோமை ஆளுனர் மனதுவைத்தால் செலவைப்பற்றி கவலைப்படாமல் திட்டத்தை ஆரம்பித்துவிடலாம்" என்று ஆரம்பித்தான் ஏரோது.  
     போஞ்சிபிலாத்து உடனே முகத்தைக்கடுமையாக வைத்துக்கொண்டான்." செலவைப்பற்றி எனக்கு என்ன கவலை?.திட்டம் உங்களுக்கானது. அதன்
பலனும் உங்களுக்கானதே. எனவே செலவும் உங்களுடையதே. என்னிடம் ஒரு த்ராக்மா காசுகூட கிடையாது. ரோமை அரசாங்கம் செலவு செய்து இந்த திட்டத்தை நிறைவேற்றும் என்று கனவு கூட காணாதீர்கள். இந்த திட்டத்தை நிறைவேற்ற எனக்கும் ஆசைதான். என்னுடைய காலத்தில் இந்த ஜெருசலேம் மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு திட்டம் நடந்தது  என்று சரித்திரம் கூறுமனால் எனக்கும் சந்தோஷம்தான். இந்த திட்டம் நடந்தேற சாத்தியக்கூறுகளை திட்டமிடுங்கள். முடித்துவைக்ககூடிய உபாயங்களை நான் கூறுகிறேன்" என்றான் பிலாத்து. ஏரோதன் அந்திப்பாஸ் உடனே செயலில் இறங்கினான். திட்டத்திற்கான வரைபடம் மற்றும் செலவினங்களுக்கான சாத்தியக்கூறுகள் என்று அப்படியே  தயாராகக்கொண்டுவந்திருந்தான். அடுத்த பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்கப்பட்டு இடம் ஜெருசலேமிலுள்ள ஆளுனர் மாளிகை என்றும் குறிப்பிடப்பட்டது.

"அதொணிக்கோட்டை"
அகஸ்ட்டஸ் சீசரின் நண்பன் மார்க் அந்தொணியின் நினைவாக ஜெருசலேமில் பெரிய ஏரோதினால் கட்டப்பட்ட கோட்டையே பிற்காலத்தில் அதொணிக்கோட்டை என்று  அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக்கோட்டையின் உள் மண்டபத்தில்தான் யேசுநாதர் பிறந்த கொஞ்ச நாட்களில் மாசில்லாக்குழந்தைகள் சுமார் 150 பேர் கொல்லப்பட்டு அங்கேயே
புதைக்கவும்பட்டனர்.ஒரு குழந்தையின் சடலம் கூட அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை.இந்த கொடிய சம்பவம் நடந்தபோது பல தாய்மார்களுக்கு பைத்தியம்  பிடித்திருந்தது. அழகிய ஆண் குழந்தைகள் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட இருப்பதாகவும் கண்டிப்பாக அனைத்து ஆண் குழந்தைகளையுடைய  தாய்மார்களும் கலந்துகொள்ளவேண்டும், இது அரச கட்டளை என்று அறிவிக்கபட்டதை முன்னிட்டு பல தாய் மார்கள் தங்கள் பால்குடிக்கும் குழந்தைகள் முதல் மூன்று வயதுள்ள குழந்தைகள் வரை அலங்கரித்துக்கொண்டு இந்த மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்திருந்தனர். பாவம், அவர்களுக்கு அங்கே பெரும் துக்கம் காத்துக்கொண்டிருந்தது தெரிந்திருக்கவில்லை.  
       குழந்தைகளை மட்டும் உள்ளே அழைத்துச்சென்று ஈவு இரக்கமின்றி குழந்தைகள் கதறக்கதற குத்தியும் வெட்டியும் கழுத்தை அறுத்தும் கொண்றனர். தன் குழந்தை உள்ளே சென்று வெகு நேரம் அயிற்றே என்று சந்தேகப்பட்ட ஒரு தாய் காவலையும் மீறி உள்ளே எட்டிப்பர்த்தவள்தான். ஐய்யோ என்று அலறினாள். அவ்வளவுதான்.  விஷயம் மற்ற எல்லாத்தாய்மார்களுக்கும் தெரிந்து அலறிப்புலம்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜெருசலேமே அலறியது. பெரும் கலகம் மூண்டது. ஆனால் கலகம் அடக்கப்பட்டுவிட்டது.
    இந்த சந்தடிசாக்கில் பெரிய ஏரோதின் ஒரு மனைவிக்குப்பிறந்திருந்த ஒரு ஆண் பையனையையும் கொண்றனர். பெரிய ஏரோது இந்த பையனைப்பற்றி கூறுகையில் இவன் ஆண் மகனாக பிறந்தது இவன் செய்த குற்றம். அவன் ஒரு பன்றியாய்ப்பிறந்திருந்தால் அவன் பிழைத்திருப்பான்.[ யூதர்கள் பன்றிகறியை உண்பதில்லை] என்று தன் அநீதியான கொலையை நியாயப்படுத்தினான்.ஆனால் உண்மை என்னவென்றால் எங்கே இவன் வளர்ந்து பெரியவனாகி தன்னை கொன்றுவிடுவானோ என்ற அக்சமே காரணம். என்ன செய்வது மன்னன் பெரிய ஏரோதின் குணம் அப்படி. அவன் யாரையும் நம்பமாட்டான். தன் பட்டத்து ராணியையும் அவள் இரண்டு மகன்களையும் கூட ராஜத்துரோக குற்றம் சாட்டி  கொண்றவன். இந்த மாசில்லாக்குழந்தைகளை கொண்று சரியாக முப்பத்தி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டிருந்தது.
        இந்தக்கோட்டையை ஒட்டிய ஒரு அரண்மணையில் தான் பொஞ்சிபிலாத்து தங்கி இருந்தான். ரோமை கவர்னர்கள் ஜெருசலேமுக்கு வரும்போதெல்லாம் இந்தஅரண்மணையில் தான் தங்குவார்கள். இந்த அரண்மனையில் தான் தண்ணீர்பிரச்சனையை முடிக்க போஞ்சிபிலாத்து கோயில் நிர்வாகிகளையும், சட்ட வல்லுனர்களையும், மன்னர் ஏரோது அந்திப்பாஸ் முதலானவர்களையும் கூட்டி இருந்தான். பேச்சுவார்த்தை ஆரம்பமானது. போஞ்சிபிலாத்து கூறினான், " இந்த தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனைதான்.தீர்த்துவைக்கக்கூடிய சாதகபாதகங்களும் சுலபமானவையாகவே உள்ளன. ஆனல் நிதி நிலைமைதான் பிரச்சனை. தற்சமயம் ரோமை அரசாங்கத்திடம் பணம் இல்லை.நம்மிடையே உள்ள நிதி ஆதரங்களே போதுமானவையாக உள்ளன.உங்களுடைய கோவில் நிதியை வைத்தே இதை முடித்துவிடலாம். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்" என்றான்.
     அன்றைய தலைமை குருவான கைப்பாசுக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இருப்பினும் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிகொள்ளாமல் " ரோமை ஆளுனர் அவர்களே, கோவில் நிதி என்பது கடவுளுடையதாகும். அதை ஆண்டவன் காரியத்துக்காகத்தான் செலவிட வேண்டும். அரசாங்க காரியத்துக்காக அரசாங்கப் பணம்
தான் செலவிட வேண்டும்.இது தங்களுக்கு தெரியாததல்ல. மேலும் அரசாங்கப்பணத்தை நாங்கள் ஆலயப்பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பது எங்களுடைய நடைமுறை  பழக்கம். அரசாங்கங்கள் மாறக்கூடியது. அவர்களுடைய முத்திரை சிலைவழிபாட்டுக்கு சமம் என்பதாலேயே நாங்கள் எங்கள் கோவில் காரியத்திற்காக தனியாக நாணயம் வைத்துக்
கொண்டுள்ளோம். இந்தப்பணத்தை நாங்கள் ஒருபோதும் அரசாங்கத்துக்கு தர மாட்டோம்" என்றார்.
     போஞ்சி பிலாத்துவுக்கு கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற ஆரம்பித்தது. தன்  பேச்சுக்கு எதிர்ப்பா?. பார்த்துக்கொள்கிறேன் இந்த கோவில் பூஜாரியை என்று நினைதவனாக " தெரியும் கைப்பாஸ். எனக்கு உன்னையும் தெரியும் உங்கள் கோவில் நிர்வாகமும் தெரியும். அங்கு நடக்கும் ஊழலும் தெரியும். நீர் இந்த தலைமை பூஜாரிப்பதவிக்கு வரவேண்டி என்னென்ன தகிடுதத்தங்களை செய்தாய் என்றும் தெரியும். எனக்கு முன் இங்கு ரோமை ஆளுனராக இருந்த வலேரியன் எனக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். அவர் போட்ட பதவிப்பிச்சையில் தான் நீ இன்னமும் உட்கார்ந்துகொண்டிருக்கிறாய். என்ன
சரிதானே. உன் பேச்சில் கொஞ்சம் பயமும் மரியாதையும் இருக்கட்டும். இல்லை... நீர் நாளைமுதல் பதவியில் இருக்கமுடியாது" என்றான் பிலாத்து.
அப்படியே அடங்கிப்போனார் கைப்பாஸ் என்ற தலைமை குரு. மேலும் பிலாத்துஸ் கூறியதாவது, "கைப்பாஸ், நீர் என்னகூறினீர்.....அரசாங்கம் மாறக்கூடியது என்றுதானே  கூறினீர். எங்கள் ரோமை அரசாங்கம் உங்களை விட்டு ஒருநாளும் மாறக்கூடியது அல்ல. அது காலாகாலத்திற்கும் இங்கேயே நிலைபெற்று உங்களை ஆட்சி செய்யும்.இந்த ரோமை அரசை இந்த நாட்டில் நிலை நிறுத்தத்தான் அகஸ்ட்டஸ் சீசர் என்னை இங்கு அனுப்பி இருக்கின்றார். அவருடைய அரசை இந்த நாட்டில் நிலை நிருத்தாமல் நான் இந்த
நாட்டை விட்டுப்போகப்போவதில்லை. இதற்காக என்ன விலையும் நான்கொடுக்கத்தயங்க மாட்டேன் என்று அவருக்கு சத்தியம் செய்து கொடுத்து விட்டுத்தான் நான் இந்த  நாட்டிற்கே வந்திருக்கிறேன். எனவே உங்கள் வாயாலேயே சீசர்தான் எங்கள் அரசர், அவரது அரசுதான் எங்களுக்கு வேண்டும், சீசரைத்தவிர வேறு அரசர் எங்களுக்கு இல்லை
என்று நீரும் உம் மக்களும் சொல்லும் வரை நான் உங்களை விடப் போவதில்லை, இது சீசர் மேல் ஆணை" என்றான்.
     போஞ்சு பிலாத்துவின் ஆணவப்பேச்சால் அவமானப்பட்ட தலைமைகுரு கைப்பாஸின் நிலைமை அறிந்த ஏரோதன் அந்திப்பாஸ் கொதித்துப்போனான். ஆனால் கோபப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டால் தன் பதவி ஆட்டம் கண்டுவிடும். பிலாத்துவை எதிர்த்தால் அது ரோமை சக்கரவர்த்தி சீசரையே எதிர்ப்பதர்க்கு சமம் என்று உணர்ந்தவனாய் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிகொள்ளாமல் "அரசே, ஆளுனர் அவர்களே, சற்றே அமைதிகாக்க வேண்டுகிறேன். தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம். தலைமை குரு அவரது கருத்துகளைமட்டுமே கூறினர். கோவில் நிதியை நான் வாங்கித்தருகிறேன். அதர்க்கான அரசாங்கப்பணத்தை நான் மாற்றித்தருகிறேன். இந்த நிதியை அரசாங்க கடன் பத்திரமாக
நீங்கள் அனுமதிக்கவேண்டும். திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நாம் இந்த கோவில் கடனை அடைத்துவிடலாம். ஆக இந்த நிதி விஷயத்தையும் தண்ணீர் பிரச்சனையையும்  நீங்கள் என்னுடைய பொறுப்பில் விட்டுவிடுங்கள். எல்லா விஷயங்களையும் நானே முன்னின்று செய்துமுடிக்கிறேன். என்னை நம்பி அதற்கான அங்கீகாரத்தை தாங்கள் எனக்கு தாருங்கள்". என்றான் ஏரோது    அந்திப்பாஸ்.
     இதைத்தான் எதிர்பார்த்தான் போஞ்சிப்பிலாத்துஸ். அதர்க்கான அனைத்து அதிகாரங்களையும் ஏரோதுக்கு கொடுத்துவிட்டு தன்
பிரச்சனையையும் வேலையும் ஏரோதிடம் கொடுத்துவிட்டு தான் ஜெருசலேமுக்கு வந்தவேலை முடிந்ததென்று கலிலேயாவுக்கு தன் மனைவியை அழைத்துக்கொண்டு சென்று விட்டான்.ஆனால் ஏரோதன் அந்திப்பாஸின் குறுக்குபுத்தி வேறு விதமாக திட்டமிட்டது. இருப்பினும் தண்ணீர் பிரச்சனையையும் தீர்க்க வேண்டும், போஞ்சிபிலாத்துவையும் பழி தீர்க்க வேண்டும் என்று திட்டமிட்டவனாய் தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தான். தன் திட்டதை நிறைவேற்ற தலைமை பொறியாளனை அழைத்து அவன் காதில் ரகசியமாய் சில உத்திரவுகளையும் பிறப்பித்தான்.
" பெத்ஸாய்தா திருக்குளம்".
     இந்த பெத்ஸாய்தா திருக்குளம் பல சரித்திர நிகழ்வுகளைக்கொண்டது. மிகப்பழங்காலத்தில் நெகேமியாவின் காலத்தில் ஆண்டவருடைய பரிசுத்த நெருப்பும், தேவாலயத்தின் பரிசுத்த பாத்திரங்களும் இந்த திருக்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டன. அந்த நிகழ்வுக்குப்பிறகுதான் இந்த திருக்குளத்தில் பல நோய்கள் குணமாகியது. புகழ்வாய்ந்த சாலமோன் பேரரசர் காலத்தில் தேவாலயத்தின் உபயோகத்திற்கான நெடிய மரம் உபயோகமற்று இருந்ததால் அதை அவர் ஜெருசலேமையும் கெதரோன் பள்ளத்தாக்கையும் இணைக்கும் பாலமாக போட்டு வைத்திருந்தார். எத்தியோப்பாவை சேர்ந்த ஷேபா என்னும் மஹாராணி சாலமோனின் ஞானத்தைப்பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்க ஜெருசலேம் வந்தாள். அப்போது இந்த கெதரோன் பாலத்தைக்கடக்க அதன்மீது தன் காலை வைத்தவுடன் அவள் ஒரு காட்சி கண்டாள். பிற்காலத்தில் யேசுநாதர் இந்த மரத்தையே தன் சிலுவையாக சுமந்து அதலேயே
மரிப்பதாகக்கண்டாள். எனவே அவள் இது கடவுளின் மனிதாவதாரதில் அவரை கொல்ல பயன் படப்போகிறது என்று உணர்ந்தவளாய் உடனே சாஸ்ட்டாங்கமாக பணிந்து வணங்கி நமஸ்க்கரித்தாள். இதனால் பிற்கால யூதமக்களை உலகமக்கள் எவ்வளவு தூரம் வெறுப்பார்கள் என்று சாலமோன் தன் ஞானத்தால் உணர்ந்து உடனே அந்த மரத்தை இந்த  பெத்ஸாய்த்தா திருக்குளத்தில் மூழ்கடித்து சரித்திரத்தில் மறக்கும்படி செய்தார். இதனால் இந்த பெத்ஸாய்தா திருக்குளம் மீண்டும் புனிதமானது. ஆனால் யேசுநாதர் காலத்தில் ரோமானியர்கள் இந்த திருக்குளத்தை சுத்தம் செய்யும்போது இந்த நெடும்மரத்தையும், நெகேமியாவின் பரிசுத்த நெருப்புபற்றிய மரக்கட்டைகளையும் மற்றும் பரிசுத்த பாத்திரங்களையும்
வெளிகொண்டுவந்து தேவாலய பொருட்காளாக கொடுத்துவிட்டார்கள். அந்த நெடுமரம் மீண்டும் பழையபடியே கெதரோன் பாலமாக பயன்படுத்தப்பட்டது.[ திருச்சிலுவையைபற்றி பல பெரும் கதைகள் உண்டு. அவைகளைப்பற்றி பிற்பாடு நான் கதையாக சொல்ல விரும்புகிறேன்]
இந்த பெத்ஸாய்தா திருக்குளத்திலிருந்து ஜெருசலமிற்கு வடமேற்கில் உள்ள கிபியோன் [ the great waters of gibeon] வரை குழாய்கள் எடுத்துச்செல்லப்பட்டன.அதற்கு ஆதாரதானமாக பல இடங்களில் தாங்கும் தூண்களும் அமைக்கப்பட்டன. கிபியோன் உயர்ந்த இடத்தில் உள்ளதால் அங்கிருந்து தண்ணீர் சுலபமாக வந்து இந்த பெத்ஸாய்தா
திருக்குளத்தில்வந்து சேரும்படியான ஒரு அமைப்பும் ஒரு நீர்த்தேக்கத்தொட்டியும் அமைக்கப்பட்டு திறப்புவிழாவுக்கு நாளும் குறிக்கப்பட்டு போஞ்சிபிலாத்துவின் தலைமையில்
திறக்கப்படப்போவதாக அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு வினியோகமும் செய்யப்பட்டன. அந்த நாள் சரித்திரத்தில் ஒரு மறக்கமுடியாத நாளாகவும் மாறியது. ஆம்... அந்தநாள் ஏரோதன் அந்திப்பாஸின் பிறந்த நாள். தன் பிறந்த நாளிள் தன்னால் திறப்பு விழாவிற்கு வரமுடியாதென்றும் அதர்க்காக ரோமை ஆளுனர் திறப்புவிழாவை தள்ளிப்போட வேண்டாம் எனவும் ஏரோது பிலாத்துவை மிகவும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிலாத்துவும் தன் தலைமையில் இந்த திறப்புவிழாவை நடத்த ஒப்புக்கொண்டான்.
இந்த நாளில் விதி விளையாடியது.
" மன்னன் ஏரோதின் பிறந்த நாள்"
     அன்று மக்காவுஸ் கோட்டையில் அமர்க்களமாக நடந்தது மன்னன் ஏரோதின் பிறந்த நாள் விழா. அந்த அரைவட்டவடிவில் அமைக்கப்பட்டிருந்த கொலுமண்டபத்தில் மன்னன் ஏரோது தனது மந்திரிகள் புடை சூழ அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் இனம்புரியாத மகிழ்ச்சியும் வெற்றிக்களிப்பும் குடிகொண்டிருந்தது, வாழ்த்துப்பாடல்களும்,வாத்திய
கோஷ்ட்டிகளும் காதைப்பிளந்தன. அடுத்து ஆரம்பமனது குழந்தைகளின் நாட்டியம். அடுத்தது குமரிப்பெண்களும் ஆண்களும் கை கோர்த்துக்கொண்டு நடணமாடினர்.  மிக்க மரியாதையுடனே நாட்டியம் ஆடினர். நேரம் ஆக ஆக மரியாதையக ஆடிய நடணம் ஆபாசமாக மாறியது. சற்று நேரத்தில் அரசரும் மற்றவர்களும் குடி வெறிக்கு ஆட்பட்டனர்.
     அப்போது ஏரோதியாள் அபிகாயிலின் மூத்த மகள் சலோமி தனியாக நடனமாடினள். அவளது நடனத்தில் தன் நிலை மறந்தான் ஏரோது. அதிகம் சந்தோஷப்படாதே. சந்தோஷத்தில் சத்தியம் பண்ணாதே என்ற முதுமொழிக்கு எவ்வளவு வலிமை உள்ளது என்பதை ஏரோது விரைவிலே உணர்ந்தான்
         அவளது நடனத்திற்குப் பரிசாக அவள் விரும்பிய எதையும் கொடுப்பதாகவும் அது தன் ராஜ்ஜியத்தில் பாதியானாலும் உடனே தருவதாகவும் வாக்களித்தான். சலோமி சிறுமியானதால் அவள் எதைக்கேட்ப்பது என்று தன் தாய் அபிகாயிலைக்கேட்டாள். இந்த சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்த அபிகாயில் யோவான் ஸ்நாபக அருளபரின்
தலையைக்கேட்கச்சொன்னாள். அவளும் அரசன் ஏரோதிடம் யோவான் ஸ்நாபக அருளப்பரின் தலையைக்கேட்டாள். அரசன் தான் கொடுத்திருந்த வாக்குறுதியைப்பற்றி மிகவும்  கலங்கினான். இருப்பினும் தன் வாக்குறுதியின்படி யோவானின் தலையை கொண்டுவரும்படி ஆணையிட்டான். அவனது ஆணையின் படி யோவான் ஸ்நானகருடைய தலை  வெட்டப்பட்டது. அதே நேரத்தில் ஜெருசலேமில் பிலாத்து தண்ணீர்த்தொட்டி திறப்புவிழாவுக்கான நாடாவை வெட்டினான்.
   "ஹோ" என்றது கூடி இருந்த மக்களின் கர கோஷம். அவர்களின் கைத்தட்டல்களும் வாழ்த்தொலிகளும் அடங்க பல நிமிட நேரங்கள் ஆனது. ஆனல் அம்மக்களின் மகிழ்ச்சி சில நிமிடங்களில் துக்கமாக மாறிப்போனது. அந்த பெரிய  நீர்த்தேக்கத்தொட்டி நீர் நிறைந்ததும் பாரம் தாங்காமல் டமார் என்ற பெரும் சப்தத்துடன் விழுந்து உடைந்து சிதறியது. நீர்த்தேக்கத்தொட்டியின் அடியில் நின்றவர்கள், காவலுக்கு
நின்றுகொண்டிருந்த ரோமானிய வீரர்கள் என்று சுமார்  தொன்னூறு பேர் மரித்தனர்.  பலர் காயமடைந்தனர். இந்த அமைப்பைக்கட்டிய பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் யாவரும் அடிபடவில்லை. அவர்கள் முன்னேற்பாட்டின்படியே கிபியோனுக்கு மேலே  உள்ள சிலொவில் தங்கிகொண்டிருந்தனர். இவர்களைப்பிடித்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்தான் பிலாத்து. அவர்கள் கூறிய தகவல் பிலாத்துவை திடுக்கிட வைத்தது.
     அரசன் ஏரோதின் உத்திரவுப்படியே அஸ்த்திவாரம் சரி இல்லாத அமைப்புடன் கட்டுமானம் இருக்கவேண்டும் எனவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சரித்திரத்தில் பிலாத்துவுக்கு  கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் எனவும் ஏரோதின் ஆணையின் படியே தாங்கள் செயல் பட்டதாகவும் தெரிவித்தார்கள். இதனால் கடும் கோபம் கொண்டான் பிலாத்து.
அன்றிலிருந்து பிலாத்துவும் ஏரோதும் எதிரிகளாயினர். இந்த நிகழ்சிக்குப்பழி வாங்க மக்கள் மீது மும்மடங்கு வரி விதித்தான். அவ்வளவு தான். ஜெருசலேம் நகரம் முழுவதும்  கலவரம் பரவியது.
    காலோஸ் என்னும் ஊரைச்சேர்ந்த எசேக்கியா என்பவரின் மகனான யூதாஸ் என்பவன் தலைமையில் கிளம்பியது ஒரு புரட்சிப்படை. இந்த கலவரத்தில்
ஜெருசலேமிலும் கலிலேயாவிளுள்ள செப்போரிஸிலும் ரோமானிய சிப்பாய்கள் பலர் உயிர் இழந்தனர். இந்த கலவரத்தில் ரோமானியர்களின் படைக்கலண்கள் பலவும் பெரும் செல்வமும் யூதாஸினால் கொள்ளையிடப்பட்டது. வெறி கொண்டான் பிலாத்துஸ். இந்த யூத மக்களுக்கு ஒரு பாடம் புகட்ட நினைத்தான். அதற்கு ஒரு வாய்ப்பு சரியாக அமைந்தது.
யூதாஸும் அவன் தோழர்களும் ஜெருசலேம் தேவாலயத்திற்கு வழிபாட்டிற்காக வந்ததாக ஒரு செய்தி கிடைத்ததை முன்னிட்டு பல ரோமானிய வீரர்களை மாற்று உடையில்  ஆயுதபாணிகளாய் யாத்திரிகர்கள் போன்று தேவாலத்திற்குள் போகச்செய்தான். நிராயுதபாணிகளாய் வந்திருந்த யூதாஸின் ஆட்க்கள் பலரை கொண்று தன் பழி தீர்த்துக்கொண்டான் போஞ்சி பிலாத்து.
   தலைவன் யூதாஸும் மடிந்தான், யூதாஸின் படையைச்சேர்ந்த சுமார் இருபத்தைந்து பேர் அவனுடன் மரணமடைந்தனர்.இவர்களோடு சேர்ந்து பல அப்பாவி பயணிகளும் திருயாத்திரை மேற்கொண்டு வந்திருந்த பலதரப்பட்ட மக்கள் பலரும் மடிந்தனர். இந்த கலவரம் சுமார் ஒருமணி நேரம் நடந்தது. சம்பந்தப்பட்ட ரோமை வீரர்கள்  அதோணிக்கோட்டையில் பிலாத்துவின் பாதுகாப்பில் ஒளிந்துகொண்டார்கள். ஒருவழியாக இந்த கலவரம் போஞ்சி பிலாத்துவினால் அடக்கப்பட்டது.
  இந்த தண்ணீர்த்தொட்டி விபத்து நடந்த போது யேசு நாதர் பெத்தானியாவில் லாஸர் வீட்டில்தான் தங்கி இருந்தார். இந்த விபத்தைப்பற்றி கேள்விபட்டதும் அவர்  ஜெருசலேமுக்கு ஓடோடி வந்தார். விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர் அனைவரும் மிகுந்த ஏழைகள் என்றும் அப்பாவிகள் என்றும் ஜெருசலேமில் தினக்கூலி செய்பவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலோர் ஜெருசலேமில் ஏழைகள் வசிக்கும் ஓபோல் என்னுமிடத்தை சேர்ந்தவர்கள் என்று அறிந்து சிலரை உயிர்பித்தார். பலரை
குணமாக்கினார்.இந்த புதுமையின் மூலம் ஜெருசலேமில் அவர் மிகவும் பிரபலமானார். இந்த புதுமையைபற்றி போஞ்சி பிலாத்தும் அறிய வந்தான்.  அவன் ம்னைவி க்ளாடியா  இந்த சமயத்தில் யேசுவை சந்திக்க ஆவல் கொண்டாள். ஆனால் அதர்க்குள் கலவரம் மூண்டதால் இந்த சமயமும் அவரை சந்திக்க முடியாமல் போனது. பிலாத்து மீண்டும்  கலிலேயாவிலுள்ள செசேரியவுக்கு தன் அரண்மனை நோக்கி பயணமானான்
         இந்த தண்ணீர் தொட்டி விபத்துக்குப்பிறகு யேசுநாதர் ஏரோது அந்திப்பாஸை குள்ள நரி என்று அழைத்தார். அவனைப்பற்றி விசாரிக்கும்போதெல்லாம் அந்த குள்ள நரி ஏரோதன் எப்படி இருக்கிறான் என்றே அழைப்பார். யேசுநாதரைப்பற்றி ஏரோது விசாரிக்கும்போதெல்லாம் அவனுடைய ஒற்றர்கள் தன்னை அவர் குள்ள நரி என்றே அழைக்கிறார் என்று
யேசுவைப்பற்றி போட்டுக்கொடுத்தனர். இதனால் யேசுவின் மீது ஏரோதன் மிகுந்த வர்மம் கொண்டிருந்தான். இருப்பினும் மக்கள் அவர் மீது கொண்டிருந்த மரியாதையின் நிமித்தம் தன்னால் இப்போது எதுவும் செய்ய முடியததைப்பற்றி மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டான்.
      இதே நேரத்தில் போஞ்சிபிலாத்துவும் தன் அரண்மனை அதிகாரி அபியதாரை அழைத்து யேசு நாதரைப்பற்றி கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான். அபியதார்  எல்லாக்கேள்விகளுக்கும் சேர்த்து பின் வரும்பதிலாகக்கூறினான். "இந்த யேசுநாதர் என்னும் யூத ராபிக்கு தன் சொந்த ஊரான நஸரேத்தூரில் வரவேற்பு கிடைக்காததால் அந்த
ஊரை விட்டுவிட்டு தன் தாயாருடன் கலிலேயாவில் தம் சகோதரர் உறவுடைய லேவி என்னும் மத்தேயு என்னும் வரி தண்டல் செய்பவரின் வீட்டில் குடிபுகுந்தார். இந்த ஊரில்  அவருடைய போதனைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததால் அவரை கலிலேயனாகிய யேசு என்று மக்கள் அழைக்கிறார்கள்.இந்த யூத ராபிக்கு உடன் பிறந்த சகோதரர் என்று
யாரும் இல்லை. ஆனால் அவரது தாயார் வழிவந்த சிற்றன்னை மற்றும் பெறிய அன்னை பிள்ளைகள் பலர் உண்டு. பெரிய யாக்கோபு,யோவான், சிறிய யாக்கோபு, யூதா ததேயூ, சீமொன்  என்று சகோதரர் முறையில் பலர் உண்டு.   இவர்கள் அனைவரும் இறந்த யோவான் ஸ்நானகரின் சீடர்களாக இருந்து பிறகு யேசுவின் சீடர்களாக மாறினர். இந்த யேசுவின் போதனைகள்
நம்முடைய ரோமை அரசுக்கு எப்போதுமே தலைவலியாய் இருக்க முடியாது என்பதை நான் உறுதியாய் கூறமுடியும். எப்போதுமே நம்முடைய ஒற்றர்கள் இவருடைய போதனைகளை கண்காணித்தபடியே இருக்கவேண்டி நான் கண்டிப்பான உத்திரவு இட்டுள்ளபடியால் அவ்ரது ஒவ்வொரு வார்த்தைகளையும் நான் உன்னிப்பாக காது கொடுத்துக்கேட்டுக்கொண்டே
இருக்கிறேன்.
   ஒருமுறை அரசுக்கு வரிகொடா இயக்கம் நடந்தபோது யேசுநாதர் இதை வன்மையாக கண்டித்தார். அரசனுக்கு உறியதை அரசுக்கும் கடவுளுக்கு உறியதை கடவுளுக்கும் கொடுக்க வேண்டும் என்று ஒரு செசார் நாணயத்தை உதாரணமாகக்காட்டி புத்தி கூறினார்.ஒரு முறை ஜெரிக்கோ பாலைவனத்தில் பிரபல கொள்ளையன் பரபாஸ் யேசுவை சந்தித்து அவருடைய பக்த கோடிகளுடன் தன்னுடைய கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு இந்த ரோமையரை நாட்டைவிட்டே துரத்த வேண்டும் எனவும் அதர்க்கு அவருடைய ஆதரவு வேண்டும் எனவும்கேட்டுக்கொண்டான். அதற்கு யேசு நாதர், " இதோ பார் பரபாஸ், நீ கொள்ளையன். நான் மதவாதி. நமக்கும் உனக்கும் வெகு தூரம். உன் எண்ணங்கள் என் எண்ணங்கள் அல்ல. என் அரசு இந்த உலகைச்சார்ந்ததும் அல்ல. என் அரசு பரலோகத்தைச்சார்ந்தது. ஆகவே நீ மனம் திருந்தி உன் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல மனிதனாக வாழ்வாயாக. நீ  சென்று வருவாயாக " என்று அவனை அனுப்பிவிட்டார். ஆனால் இந்த யூத ராபியால் யூத மதவாதிகளுக்கும் யூத சட்ட வல்லுனர்களுக்கும் தான் பெரிய தலைவலியாக இருக்கிறது.
    நாம் அவர்களுடைய மதத்தை சேராதவர்களாய் இருந்தும் அவருடைய பேச்சில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களுக்கு அவர் பேசுவதும், போதிப்பதும் நியாயம் என்று தெரிந்திருந்தும் அவற்றை ஏற்றுக்கொள்ள மனதில்லமல் இருக்கிறார்கள் என்றால் காரணம் யேசுவின் போதனைகள் புதுமையாய் இருப்பது மட்டுமின்றி ஒருவித
அதிகாரத்தோடு இருப்பதால் இந்த தச்சன் மகன் நமக்கு புத்திசொல்வதா ? இந்த நசரேத்தூரானுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு ஞானம் என்ற பொறாமையும் வயிற்றெரிச்சலும் தான் காரணம்.
   இவ்வளவு வர்த்தமானங்களையும் கேட்டுவந்த பிலாத்து," சரி அபியதார். இருப்பினும், இந்த யூத ராபி அரசியலுக்கும் வர முயர்ச்சித்தால் மக்களே புறிந்துகொண்டு காலப்போக்கில் உணர்ந்துகொண்டு அவரைக்கைவிட்டு விடுவார்கள். உலகில் உள்ள எல்லா அரசியல் வாதிகளின் நிலைதான் அவருக்கும் ஏற்படும். எனவே அதைப்பற்றி நான் அதிகம் கவலைப்படப்
போவதில்லை. எதர்க்கும் அவர் மீதும் அவர் சீடர்கள் மீதும் ஒரு கண் வை " என்றான் பிலாத்துஸ்.
          அந்தப்புரத்தில் பிலாத்துவின் மனைவி க்ளாடியா தன் தோழி யவணிக்காவை அழைத்தாள். " அடியே யவணிக்கா, இந்த யேசு நாதரை நீ பார்த்திருக்கிறாயா? அவர் பல அதிசயங்களை நிகழ்த்துகிறார் என்று கேள்விபட்டேன்" என்றாள். " ஆம் மஹாராணி, நான் அவரை பார்த்திருக்கிறேன்.சாந்த சோரூபியான அவரது தாயரையும் நான்  பார்த்திருக்கிறேன். மனித குலத்தில் தோன்றிய பெண்களில் அவரைப்போன்ற ஒரு சர்வ லட்சணமும் பொருந்திய மாட்சிமையான தோற்றமுள்ள பெண்ணரசி அவர்.  பார்த்த மாத்திரத்தில் கை எடுத்துக்கும்பிடத்தோன்றும் முகத்தோற்றம் உடையவர் அவர். பெண்கள் பிரிவில் நான் பாதுகாப்பை முன்னிட்டும் உளவை முன்னிட்டும் நான் அந்த  பெண்கள் கூட்டத்தில் பல நாள் இருந்திருக்கிறேன். அப்போது நான் அவர்களில் பலரை அறிந்துகொண்டேன். நான் அறிந்துகொண்டவர்களுள் மதலேன் மரியாள் என்னும் பெண்ணும் ஒருவர். அவள் போன்ற ஒரு திமிர் பிடித்த பெண்னை நான் பார்த்ததே இல்லை. அவள் மிகுந்த கர்வி. அதற்கு காரணமும் உண்டு. அவள் பேரழகு மிகுந்தவள். நெடிய உருவமும் அதற்கேற்ற சரீரமும் உடையவள். மிகப்பெரிய பணக்காரி. மகதலாவில் அவளுக்கென்று ஒரு கோட்டையே உண்டு. அவளது தாயார் ஒரு யூதப்பெண். தகப்பன் ஒரு எகிப்திய
தனவான். இந்த தம்பதியர்களுக்கு மொத்தம் பதினைந்து குழந்தைகள் பிறந்தனர். ஆனால் இப்போதிருப்பது ஐந்து பேர் மட்டுமே. லாசர் என்பவர் அவரின் மூத்த சகோதரர்..
    பெத்தானியாவில் அவருக்கென்று ஒரு பெரிய அரண்மனையும், ஒரு கோட்டையும் உண்டு. மேலும் தீர்ஸாவிலும் ஜெருசலேமிலும் மற்றும் பல இடங்களிலும் பல  அரண்மனைகளும் கோட்டைகளும் அவருக்கு சொந்தமானவைகள். அவ்ருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும். நீண்ட உயரமும் மதிப்பிற்குறிய தோற்றமும் உடையவர்.கூடுமானவரையிலும்
அமைதியானவர். இவருக்குப்பல வருட வயது வித்தியாசத்தில் மரியா என்ற ஒரு சகோதரி உண்டு. திருமணமாகாமலேயே வாழ்ந்துவிட்டார். எப்போதும் கடவுள் பக்தியிலேயே  வாழ்ந்து வரும் இவருக்கு உலக வாழ்க்கையில் விருப்பம் இல்லாது போயிற்று. பேரழகியான இவருக்கு இவ்வுலக வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டதால் இந்த யூத ராபி யேசு நாதரைக்
கொண்டு மனம்மாற்றிவிட முயற்சித்தனர். ஆனால் அவர் இவரிடத்தில் ஒரு குறையும் இல்லை எனவும் அவளை அவள்போக்கிலேயே விட்டுவிடும்படியும் கூறிவிட்டர்.. இந்த மரியாள் என்னும் பெண் மிகுந்த அவசியம் ஏற்பட்டாலன்றி தன் சகோதரன் லாஸரிடமும் தன் வேலைக்காரியுடனும் மேலும் திருமணமான தன் இளைய சகோதரி மார்த்தாவுடனும்கூட பேசுவதில்லை. ஆனால் இவர்களிடத்தில் மிகுந்த பாசம் கொண்டவள். இந்த மர்த்தாவைவிட ஐந்து வயது சிறியவள் தான் மதலேன் மரியாள். தன் சகோதர சகோதரிகளைவிட வித்தியசமான குண நலன்களைக்கொண்டவள். அவர்கள் அனைவரைவிடவும் அழகானவள். பிறவியிலேயே தன் அழகின் மேல் மிகுந்த நாட்டம் கொண்டவள். கடவுள் பத்தி என்பது கொஞ்சமும் கிடையாது. இவளது தாயாரின் மறைவுக்குப்பிறகு அவளது வளர்ப்புத்தாயார் இவளை மேலும் கெடுத்தாள். தன் இஷ்ட்டம் போல் வாழ வேண்டி மகதலாக்கோட்டைக்கு குடிபுகுந்தாள். இவளது அழகுக்கும் அறிவுக்கும் செல்வத்துக்கும் ஆசைப்பட்ட பல இளவரசர்கள் இவளைக்கல்யாணம் செய்துகொள்ள வரிசையில் வந்தார்கள். ஆனால் இவள் மசிந்து கொடுக்கவே இல்லை. இவல் மேல் பரிதாபம் கொண்ட இவளது சகோதரி மார்த்தாள் இவளை யேசுநாதரிடம் அழைத்துச்சென்றாள். அப்போது யேசுநாதர் கடாரா என்னுமிடத்தில் [ இப்போது இந்த இடம் ஜோர்தான் நாட்டில் இள்ளது] போதித்துக்கொண்டிருந்தார். இந்த இடத்தில் நடைபெற்ற போதனைகளால் மதலேன் மரியாள் மனமாற்றம் அடைந்தாள்.
   யேசுநாதர் ஒரே நாளில் இவளை மனம் மாற்றிவிடவில்லை. வேறு வேறு தினங்களில் இவளிடமிருந்த பொல்லாத பேய்கள் பலவற்றை இவர் அவளிடமிருந்து வெளியேற்றினார். அந்த பொல்லாத பேய்கள் இவளிடமிருந்து கரும் புகை வடிவத்தில் வெளியேறுவதைக்கண்ட பலர் மிரண்டுதான் போயினர்". இதைக்கேட்ட க்ளாடியா, " யவணிக்கா நீ கூறும்
சம்பவங்கள் அச்சர்யமாகத்தான் இருக்கின்றன. பேய்களின் உபத்திரங்கள் பயங்கரமானவை என்று நான் அறிந்திருக்கிறேன். நீ பார்த்திருக்கின்றாய் போலிருக்கின்றதே, உனக்குத் தெரிந்த சம்பவங்களைக்கூறு, அதுவும் இந்த யூத ராபி யேசு பற்றி இருக்கவேண்டும்" என்றாள். " ஆம் அரசி, நான் பொல்லாத பேய்களின் அட்டகாசங்களைப் பார்த்திருக்கின்றேன்..
அதுவும் கெர்கீஸா பட்டிணத்தில் நடந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது. ஒரு முறை யேசுநாதர் தன் சீடர்களுடன் கலிலேயாக்கடலைக்கடந்து கெர்கீஸா பட்டிணத்திற்க்கு போக விரும்பினார். அவரது சீடர்கள் கூட "போதகரே நாம் அங்கு போகத்தான் வேண்டுமா? அங்கே தெக்காப்போலிஸ் நகரச்சேர்ந்த இரு ஆண்களுக்கு பேய் பிடித்து அந்தப்பக்கம்  வருவோர் போவோர் அனைவரையும் தாக்குகின்றனர். எனவே யாருமே அங்கு போவதை தவிர்க்கின்றனர். நாமும் அங்கு போகத்தான் வேண்டுமோ " என்று கேட்டனர். யேசுநாதரும்அங்கு போகவே விரும்பினார்.
" கெர்கீஸாவில் பயங்கரம்"
       கெர்கீஸா ஒரு பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாத ஒரு குன்றின் மீதுள்ள பட்டிணம். சாராயம் காய்ச்சுவதும் பன்றி மேய்ப்பதும் தான் இங்கு பிரதான தொழில். மலையின் சரிவில் உள்ள சதுப்பு நிலத்தில் விளையும் ஒரு வித விஷச்செடியின் சாறு இங்கு தயாரிக்கப்படும் சாராயத்தில் கலக்கப்படுவதால் இந்த சாராயத்திற்கு போதையும் அதிகம். கிராக்கியும் அதிகம். யேசுநாதர் இங்கு வந்தபோது பொல்லாத பேய் பிடித்திருந்த இருவர் வந்து யேசுவைத்தாக்க வந்தனர். ஆனால் அவரைப்பார்த்தமத்தில் அவர்களிடத்தில் இருந்த பேய்கள் அவர் யார்  என்று கண்டுகொண்டு அவரைப்பணிந்து," நசரேத்தூர் யேசுவே, நீர் யார் என நாங்கள் அறிவோம், எங்களை மீண்டும் நரகத்தில் தள்ளிவிடவேண்டாம். நாங்கள் பெரும் படை அளவில் இவர்களோடு வாழ்ந்துவருகிறோம். எங்கள் மேல் இரக்கம் வைத்து எங்களை இந்தப்பன்றிக்கூட்டத்தில் போக அனுமதிக்க வேண்டுகிறோம் " என்றன. யேசுநாதரும் அனுமதி அளித்தார்.
      சற்று நேரத்தில் அந்த பயங்கரம் நடந்தது. அந்த இரு மனிதர்களும் பேய்பிடித்து அலறிக்கொண்டு ஓடினர். பெரும் சாராய ஊரல்கள் நிறைந்திருந்த மிகப்பெரிய கொள்கலங்களை சர்வ சாதாரணமாய் கவிழ்த்துப்போட்டனர். அங்கு வேலை செய்துவந்த தொழிலாளர்கள் அலறிபுடைத்துக்கொண்டு ஓடிப்போனார்கள். ஆரம்பத்தில் வண்டுகளின் ரீங்காரம் போல் கேட்ட
ஆவிகளின் ஒலியானது போகப்போக எரிச்சல் தரும் கூச்சலாக மாறியது. அங்கிருந்த பன்றிகூட்டத்தில் பேய்கள் நுழைந்ததால் பன்றிகளுக்குப்பேய் பீடித்தது.அவைகள் எழுப்பிய ஓலம் பெரும் மரண ஓலமாக மாறியது. பன்றிகள் ஒன்றுக்கொன்று தாக்கிக்கொள்ள ஆரம்பித்தன. பன்றிகள் மூர்க்கம்கொண்டால் என்னவாகும் என்பது அப்போதுதான் மனிதர்கள்
பார்த்தார்கள். அடேங்கப்பா.... எவ்வளவு பயங்கரம். ஒரே ரத்தக்களரிதான் போங்கள். ஒன்றை ஒன்று கடித்துக்கொண்டும் தாக்கிகொண்டும் மூர்க்க வெறியோடு மோதிக்கொள்ளும்போது யாராவது மனிதர்கள் அங்கிருந்தால் அவர்கள் நிலைமை என்னவாகும் தெரியுமா? அவன் சுக்கு நூறாக கிழிக்கப்பட்டிருப்பான்.அத்தனைபேய்களும் சுமார் இரண்டாயிரம் இருக்கும்,
அந்த மலைச்சரிவில் இருந்து இறங்கி கலிலேயாக்கடலின் வெளியற்றப்பகுதியில் விழுந்து மடிந்து போயின. பேய் நீங்கியபிறகு அந்த இரண்டு மனிதர்களும் யேசுவின் காலடியில் பிறகு வந்து விழுந்தனர். பிறகு அவரது சீடர்களாக மாறினர்." என்று முடித்தாள் யவணிக்கா.[ இன்றும் இந்த நிகழ்ச்சியின் நினைவாக் ஒரு பழங்கால தேவாலயம் the church of swines
என்று சிதிலமாக உள்ளது] சற்று நேரம் வரை அமைதியாக கழிந்தது. "யவணிக்கா, யேசுநாதரைப்பற்றி மேலும் கூறு. அவர் முடவர்களையும் நடக்கவைக்கின்றார் என்று கேள்வப்பட்டேன்" என்றாள் க்ளாடியா.
      அட்டரோத் என்னுமிடத்தில் யூதர்களுகான ஒரு தேவாலயம் இருந்தது. இந்த தேவாலயத்தை நிர்வாகித்த ஒரு யூதர் ஒரு பரிசேயர். அவருக்கு இடுப்புக்கு கீழ் பிறவியிலிருந்தே ஊனம். இதனால் அவர் பலரது கிண்டல்களுக்கும் நையாண்டிகளுக்கும் ஆளானார்.  இந்த நிலையில் இதே ஊரைச்சேர்ந்த ஒரு பெண் அதேபோன்று அவளது இடுப்புக்குகீழே
ஊனமாகி இருந்தாள். அவள் சாத்தானால் பீடிக்கப்பட்டு சுமார் பதினெட்டு ஆண்டுகளாக பெரும் உபத்திரவம் அடைந்து வந்தாள். அவள் மிகவும் குனிந்துகொண்டு தன் கைகளைக்கொண்டு நடந்து வரலானாள். இந்த ஊருக்கு யேசுநாதர் வந்திருந்த பொழுது இந்த தேவாலயத்தில் போதிக்கத்துவங்கினார். அன்றைய போதனை நாமானின் தொழு நோய் குணமானதைப்பற்றி இருந்தது. போதனை முடிந்தபிறகு பெண்கள் பகுதியில் இருந்த இந்த முடமான பெண்ணைப்பார்த்தர். அவளது பிள்ளைகள் அவளை யேசுவிடம் அழைத்து
வந்தனர். அவள் நிலை கண்ட யேசுநாதர் அவள் மீது இரக்கம் கொண்டு அவள் இடுப்பு பகுதியில் தொட்டு நிமிர்த்தினார். அவள் உடனே குணமடைந்தாள்.    பதினெட்டு வருடமாய் இருந்துவந்த அவளது ஊனம் வினாடிகளில் குணமானது. பெரும் மகிழ்ச்சி கொண்ட அவள் " போதகரே, இஸ்ரேலியர்களின் தேவன் வாழ்த்தப்பெறுவாறாக" என்று வாழ்த்தினாள். எல்லோருமே மகிழ்ச்சியாக இருந்த போது ஊனமான கோயில் குரு கோபம் கொண்டு யேசுவை வார்த்தையால் வறுத்தெடுத்தார்.
 “ ராபீ, இன்று ஓய்வு நாள், வேலை செய்யவும் புதுமை செய்யவும் எத்தனையோ நாட்களை ஆண்டவர் கொடுத்திருக்க இன்று ஓய்வு நாளில் நீர் குணமளிக்கலாமோ “ என்று அவரது புதுமையை பாராட்டாமல் குறை கூறினார். யேசுநாதர் " வெளி வேடக்காரரே. ஓய்வு நாளில் உம் ஆடோ மாடோ குளத்தில் விழுந்தால் நீர் தூக்கிவிடமாட்டீரோ. என்ன மனிதரைய்யா
நீங்கள். பதினெட்டு ஆண்டுகளாய் சாத்தானின் பிடியிலிருந்த இவளை நான் குணமாக்கியது குற்றமோ? இவளும் தந்தை அபிராகாமின் பிள்ளை தானே. குணமாக்குவதற்கு  நாள் நட்ச்சத்திரம் என்ன வேண்டிகிடக்கின்றது ? என்று அந்தப் பரிசேயர்களை கடிந்துகொண்டார். ஆனால் குற்றமற்ற மக்கள் ஆண்டவரைப்புகழ்ந்து கொண்டே சென்றனர். அந்த  ஊனமான கோவில் குருவும் யேசுநாதரைப் பணிந்து தன்னையும் குணமாக்கும்படி கேட்டிருந்தால் அவரும் அவரை குணப்படுத்தி இருப்பார். ஆனால் விதி யாரை விட்டது. எல்லாம் அவரவர் தலை எழுத்துபடிதான் நடக்கும் போல் இருக்கிறது. எண்ணம் போல் வாழ்வு என்பது இப்படித்தான் போலும்" என்றாள் யவணிக்கா.
       பெரும் பிரமையில் மூழ்கி இருந்தாள் க்ளாடியா. தன் மகனும் மட்டும் இன்று இங்கிருந்தால்! ! நான் எப்படியாவது இந்த யூத ராபி யேசுவின் காலடியில் வீழ்ந்து " போதகரே நீர்  ஆண்டவன் அருள் பெற்றவர் என்பதை நான் நம்புகிறேன். என் மகன் பிலோவுக்கு நீர் குணமளிக்கமுடியும் என்றும் நான் நம்புகிறேன். தயவு செய்து என் மகனின் கால்களுக்கு  நடமாடும் சக்தி தா...என்று கண்ணீர்விட்டு அழுது மன்றாடிக்கேட்டிருப்பேன். ஆனால் விதி தடுக்கிறது. என் மகனும் இங்கில்லை. நானும் அவரை சந்திக்கவே முடியவில்லையே  என்று மனம் மிகவும் வருந்தினாள்.அவளது கண்களிள் கண்ணீர் பெருகியது. அப்போது அங்கே வந்தான் பிலாத்து. அவளது கண்களிள் கண்ணீரைக்கண்டதும் திடுக்கிட்டான். "என் அன்பே க்ளாடியா, உன் கண்களிள் கண்ணீர் வரக்காரணம் என்ன?" என்று வினவினன்." பிரபூ, நம் மகன் பிலோவை மறந்துவிட்டீர்களா? அவனுக்கு இடுப்புக்கு கீழ் விளங்காது என்பதையும் மறந்துவிட்டீர்களா? இந்த யூத ராபி யேசு நாதர் மட்டும் மனது வைத்தால் அவனுக்கு எல்லாம் சரியாகிப்போய்விடும். தயவு செய்து நான் அவரை சந்திக்க  அனுமதியளியுங்கள். நான் அவரது காலில் விழுந்தாவது அவனுக்காக மன்றாடி அவனை குணமாக்கும்படி மன்றாடுவேன். தயவு செய்து என்னை அனுமதியுங்கள்" என்று தன் கணவனை மிகவும் கேட்டுக்கொண்டாள்.
   " என் அன்பே க்ளாடியா, நானும் அந்த யூத ராபி யேசு நாதரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் என் நிலையைப்பற்றி சற்றே எண்ணிப்பார். நாம் நாடாளும் அரசப்பிரதி நிதி. நீ என் மனைவி. நம் கௌரவம் விடுத்து அந்த ராபியை சந்திப்பதை நான் விரும்பவில்லை. மேலும் நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் அவர் யூதர்களுக்காக மட்டுமே வந்திருப்பதாக கூறியுள்ளார். அதனால் தான் என் மனம் நீ அவரை சந்திப்பதை விரும்பவில்லை. யவணிக்கா, நீ அந்த நயீம் நகரப்பெண் லாயிஸ் என்பவளுக்கு என்ன நேர்ந்தது
என்பதை க்ளாடியாவிடம் சொல்லு" என்றான்.

"லாயிஸ் என்னும் நாய்"

   நஸரேத்தூருக்குப்பக்கத்தில் உள்ள ஊர் தான் நயீம் என்னும் சிற்றூர்.[ இந்த ஊரில் தான் மார்ஷெல் என்னும் பெயர் கொண்ட சிறுவன் ஒரு விதவைப்பெண்ணுக்கு மகனாக பிறந்து தன் பனிரெண்டாம் வயதில் நோயுற்று மரித்தான். யேசு நாதர் அவனை உயிர்பித்தார். இந்த சம்பவம் நடைபெறும் முன் பின் வரப்போகும் சம்பவம் நடைபெற்றது]
   இந்த ஊரில் லாயிஸ் என்னும் ஒரு பெரும் பணக்காரி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு சாபியா என்றும் அத்தாலியா என்று இரண்டு வயதுக்கு வந்த மகள்கள் இருந்தார்கள். நல்ல அழகிகள் என்றாலும் அவர்களுக்கும் ஒரு குறை இருந்தது. அவர்கள் இருவருக்கும் கொடும் பேய்கள் பீடித்திருந்தன.வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளுக்கு பேய் பிடித்திருப்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த லாயிஸ் என்னும் பெண் பெரும் பணக்காரியானதால் தன் பிள்ளைகளை பராமரிக்க தகுதியான
பெண் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தாள். எல்லா நேரங்களிலும் இந்த பெண் பிள்ளைகள் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஆனல் பேய்களின் ஆரவரம் ஆரம்பிக்கும்போது நிலைமை மோசமாகப்போகும். தன்னைத்தானே நிர்வாணப்படுத்திக்கொண்டும் அடித்துக்கொண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வார்கள். வீடு முழுவதும் ரத்தக்களறிதான்.
மேலும் அந்த ஏழு நாட்க்களில் நிலைமை இன்னும் மோசம். வீட்டில் யாரும் இருக்கமுடியாது. காரணமின்றி அடிதடியும் ரத்தக்களறியும் தினமும் இதே பாடுதான் என்றால் அந்த தாயின்  நிலைமை எவ்வளவு பரிதாபத்திற்குறியது. எனவே அந்த தாய் லாயிஸ் என்பவள் யேசு நாதரைப்பற்றி கேள்விப்பட்டு அவரிடம் தன் பிள்ளைகளுக்கு பேய்களின் பிடியிலிருந்து விடுதலை கிடைக்கும்படி வேண்டிக்கொள்ள கப்பர்நாஹூமுக்கு வந்தாள். ஆனால் யேசு நாதர் அவளைக்கண்டுகொள்ளவே இல்லை. அவளும் பல நாட்கள் அவர் பின்னே சுற்றினாள்.
    ஒரு முறை யேசுநாதர் மீர்ஸா என்னும் ஊருக்கு வந்தாள். நயீமிலிருந்து இந்த மீர்ஸாப்பட்டிணம் அந்தக்காலமுறைப்படி ஒன்பது மணி நேரம் நடைப்பயணம். இந்த ஊரிலிருந்த மக்கள் யேசுவிடம் வந்து தங்கள் துன்பமான வாழ்க்கை பற்றியும் அதிலிருந்து விடுதலை கிடைக்க வழி சொல்லுமாறும் கேட்டனர். இந்த மீர்ஸாப்பட்டினத்தில் சதுப்பு நிலம் அதிகம்.
இங்குள்ள நிலங்கள் பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் சொந்தமானவை. தோல் பதனிடும் தொழில் இங்கு நடைபெற்றதால் மிகக்குறைந்த கூலியில் சமாரியர்கள் கிடைத்ததால் அவர்களுக்கு வசதியும் வாய்ப்பும் அதிகரித்தது. ஆனால் கூலி வேலை செய்த சமாரியர்களின் நிலைமை மிகவும் மோசமானது. வறுமைக்கு சதுப்பு நிலத்தில் வேலை செய்வதால் நோய்  அவர்களை வாட்டியது. இந்த நிலைமையைதான் அவர்கள் யேசுநாதரிடம் சொல்லி தாங்கள் வளமாக வாழ வழி கேட்டனர். அப்போது தான் யேசுநாதர் அவர்களுக்கு தாலந்து உவமையை கூறினார். "ஐந்து தாலந்து பெற்றவன் தன் திறமையை பயன்படுத்தி மேலும் ஐந்து சம்பாரித்தான்.இப்படியே இரண்டு தாலந்து பெற்றவனும் மேலும் இரண்டு தாலந்து சம்பாரித்தான்.
ஆனால் ஒரு தாலந்து பெற்றவன் அதை மூடி மறைத்து புதைத்து வைத்தான். இந்தஒரு தாலந்து பெற்றவர்கள் நீங்கள் தான். உங்கள் திறமைக்கும் உழைப்பிற்கும் ஏற்ற இடத்தில் போய் வேலை செய்து உங்கள் நிலையை உயர்த்திக்கொள்ளுங்கள்" என்றார். இந்த போதனையால் உத்வேகம் பெற்ற சமாரியர்கள் அனைவரும் இந்த சதுப்பு நிலத்தில் தோல் பதனிடும்
வேலையை விட்டு வேறு இடங்களுக்கு வேலை தேடிச்சென்றுவிடவே இங்கு வேலை செய்ய ஆட்க்கள் கிடைக்காமல் பரிசேயர்களும் சதுசேயர்களும் கடும் அதிருப்தி அடைந்து யேசுநாதர் மீது கடும் கோபமுற்றனர். யேசுநாதரின் இந்த தாலந்து போதனையால் கவரப்பட்டான் அருகிலுள்ள இஸ்காரியோத்து என்னும் ஊரைச்சேர்ந்த யூதாஸ் என்பவன். எப்படியோ யேசுநாதரின் சீடராக மாறி தன் நிலையை உயர்த்திக்கொண்டான். எல்லாம் விதி.
இந்த மீர்ஸாப்பட்டிணத்திற்க்கும் யேசுவோடு பயணித்தாள் நம் பரிதாபத்திற்குறிய லாயிஸ் என்னும் பெண். அவளுடன் கூட வந்திருந்த பல பெண்கள் லாயிஸைப்பார்த்து,
" யேசுவைப்பார்த்து, ராபீ, என் மக்கள் மீது இரக்கம் வையும் என்று கதறு, அவர் உன்னைப்பார்க்கும் போது அவரிடம் உன் பிரச்சனையைப்பற்றி கூறு" என்றனர். ஆனால் லாயிஸ் " நான் யேசுவைப்பார்த்து ராபீ, என் மக்கள் மேல் இரக்கம் வையும் என்று கேட்க்க மாட்டேன். அவர் என் மீது இரக்கம் வைத்தால் என் மக்கள் மீதும் இரக்கம் வைப்பார், ஆகவே  நான் யேசுவிடம் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும் என்றுதான் கேட்பேன் என்றாள். அப்போது அவரது சீடர்களும் இவளைப்பற்றி யேசுவிடம் " ஆண்டவரே, இந்தப்பெண் நம்மோடு பல நாட்கள் சுற்றி வருகிறாள். அவளது பிரச்சனை என்னவென்று கேட்கலாமே, இல்லை என்றால் அவளை அனுப்பிவிடலாமே. பாவம் அவள் பல நாட்கள் நம்மோடே சுற்றி சுற்றி வருகின்றாளே" என்றனர். அவர்களது பரிந்துறையை ஏற்றார் யேசுநாதர். லாயிஸ் அவர் பாதம் பணிந்து தன் மீது இரக்கம்வைக்கும்படியும் தன் பெண் பிள்ளைகள் நிலைபற்றி கூறி அவர்களை அந்த கொடும்பேய்களின் பிடியிலிருந்து விடுவிக்கும்படியும் கூறி கதறி அழுதாள். அப்போது யேசுநாதர் " பெண்ணே,நீ செய்த பாவங்களே உன் பிள்ளைகளின் துன்பத்திற்கு காரணம். ஒப்புக்கொள்கிறாயா?" என்றார். அவளும் ஆண்டவரே," நான் ஒப்புக்கொள்கிறேன். என் தவறான நடத்தையே என் பிள்ளைகளை தாக்குகின்றன. இவர்கள் இருவரும் சாபியாவும் அத்தாலியாவும் எனக்கு முறைதவறிய வாழ்க்கையின் விளைவாகப்பிறந்தவர்கள் தான். ஆனாலும் என் பிள்ளைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.  இவர்களுக்காவே நான் வாழ்கிறேன். என் மீதும் என் பிள்ளைகள் மீதும் தேவரீர் இரக்கம் வைத்து அவர்களை காப்பாற்றும்படிக்கு தேவரீரை நான் மிகவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று  அவர் காலைக்கட்டிகொண்டு கதறி அழுதார்.   அப்போது யேசுநாதர்," நான் என் குல மக்களை[ யூதர்களை] உய்விக்கவே வந்திருகிறேன். எஜமான் தன் பிள்ளைகளை பசியாறவிட்டபிறகு, தன் வேலையாட்கள், பிறகு தன் நாய் மற்றும்பட்ச்சிகள் இவற்றிற்கு உணவு அளித்தபிறகு தான் மற்றவர்களை கவனிக்கமுடியும்" என்று கூறினார் . அப்போது லாயிஸ் தன்னை அவர் நாய் என்று ஒப்பிட்டதையும் பொருட்படுத்தாமல், ஆண்டவரே, தேவரீர் என்னை நாய் என்று அழைத்தாலும் சரி, பேய் என்று அழைத்தாலும் சரி, நான் உங்களிடம் என்  மக்களுக்கு நல்ல வரம் வாங்காமல் போக மாட்டேன். இதற்காக நான் எத்தனைக்காலமும் உங்கள் பின்னாலேயே சுற்றி வருவேன். நீங்கள் என்னை இப்போது போகச்சொன்னலும் போகிறேன். எப்போது வரச்சொன்னாலும் வருவேன்.ஆனால் உங்களிடமிருந்து நான் நல்ல ஆசீர்வாதம் வாங்காமல் மட்டும் போகவே மாட்டேன்" என்றாள்.
       இதைகேட்ட யேசுநாதர் ஒரு வினாடி அதிர்ந்துதான் போனார். " அடடடடா!!! எப்பேற்பட்ட விசுவாசம். என் சொந்த மக்களிடம் கூட இப்படிப்பட்ட ஒரு விசுவாசத்தை நான் கண்டதே இல்லை. அம்மா, நீர் போகலாம். உன் பிள்ளைகள் சாபியாவும் அத்தாலியாவும் இந்த நேரமே பசாசின் கோரப்பிடியிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். நீர் வேண்டுமானால் பார்,
நீர் வீடு போய் சேருமுன் அவர்களே உம்மை எதிர்கொண்டு வரவேற்பார்கள்" என்றார். இந்த யேசுநாதர் சற்று முன்னர் தன்னை நாய் என்று ஒப்பிட்டார். இப்போது என்னை அம்மா  என்று அழைக்கிறார். என்ன மனிதர் இவர். ஆனாலும் அவர் பேச்சில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று நினைத்தவளாய் யேசுநாதருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தன் வீடு
நோக்கி நடந்தாள்.
   அவளுக்கு யேசுநாதர் சொல்லியபடியே தன் இரு மக்களும் குணமடைந்து தன்னை வரவேற்க எதிர்கொண்டு வந்திருந்தனர். அவர்களைக்கட்டிக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தாள்" என்று கூறி முடித்தாள் யவணிக்கா. இப்போது குறுக்கிட்டான் பிலாத்துஸ்." யேசு நாதர் பிற இனத்து பெண்ணான லாயிஸ் என்னும் பெண்ணை நாயாக மதித்து பிறகு குணப்படுத்தினாலும், உன்னையும் அவர் அவ்வாறு நினைக்கக்கூடாது அல்லவா. இதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். எனவே உனக்கு யேசுநாதரை  சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே இதுபற்றி நீ என்னிடம் இனிமேல் பேச வேண்டாம்" என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான் பிலாத்துஸ். அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்து விட்டாள் க்ளாடியா. தன் சப்பானி மகன் பிலோவுக்கு கால்கள் குணமாகும் என்ற நம்பிக்கையை அறவே இழந்து போனாள் க்ளாடியா.

"கி.பி.33."

கால தேவன் மிகக்கொடுமையானவன். அவன் யாருக்கும் கருணை காட்டுவதில்லை. சிரிப்பதர்க்கு ஒரு கால மென்றாள் அழுவதர்க்கும் ஒரு காலம் உண்டு. இன்பத்துக்கு ஒரு காலமென்றால் துன்பத்துக்கும் ஒரு காலமுண்டு என்று சாலமோன் ஞானி கூறியபடி யேசுநாதருக்கும் இந்த நியதி பொருந்தியது. யேசுநாதர் துன்பப்பட வேண்டிய காலம் வந்தேவிட்டது. யூதாஸ் இஸ்க்காரியோத் என்னும் யேஸுவின் சீடனை இதற்காக ஆசைவார்த்தை காட்டி தங்கள் பக்கம் இழுத்தனர் யூத குருமார்கள். இருபது வெள்ளிக்காசுகளுக்கு தன்  எஜமானை காட்டிக்கொடுக்க ஒப்புக்கொண்டான் துரோகி யூதாஸ். அக்கால முறைப்படி ஒரு அடிமையை விலைக்கு வாங்கவேண்டுமானால் கூட முப்பது வெள்ளிக்காசுகள் குறைந்தபட்சம் கொடுக்கப்பட வேண்டும்.  ஆனால் யேசுவின் உயிருக்கு அடிமையின் விலைக்கு விலை பேசி ஒப்பந்தமும் போட்டனர். இப்படியாகவும் அவரை கேவலப்படுத்தினர். அதற்கு அடையாளமாக தலைமைகுருவின் தூதனும் யூதாஸும் தங்கள் ஆடையின் ஒரு பகுதியை கிழித்துக்கொண்டார்கள். இனிமேல் சத்தியம் காப்பாற்றப்பட வேண்டும். எனவே தூதன்
தன் ஊழியன் மால்குஸ் என்பவனை அழைத்து , " மால்குஸ், இந்த துரோகியை கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொள். காசை வாங்கிக்கொண்டு இவன் ஓடிப்போய்விடாதபடி  இவனை உன் கண்களுக்குள் வைத்துக்கொள். விரோதி என்பவன் கண்ணுக்கு முன் தெரிபவன். ஆனால் துரோகி என்பவன் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் நம்மோடே இருப்பவன் இவன் யேசுவோடே இருந்துகொண்டு அவர் உப்பைத்தின்றுவிட்டு அவருக்கே துரோகம் நினைக்கிறான். அதனால் தான் விரோதிகளை நம்பலாம், மன்னிக்கலாம். ஆனால் துரோகிகளை நம்பவும் கூடாது, அவர்களை மன்னிக்கவும் கூடாது. எனவே நிலைமை புரிந்து விழிப்பாக இரு. அதன்படி நடந்து . வேறு ஆட்களை தயார் செய்து,  ஒரு சிலுவை மரத்தை வெட்ட ஏற்படு செய்துகொள்" என்றான்.
   இப்படியாக யேசுநாதர் தன் சொந்த சீடராகிய யூதாஸ் இஸ்காரியோத் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்படவேண்டி நியாயத் தீர்ப்புக்காக போஞ்சி பிலாத்துவின் அரண்மனையில் விசாரணைக்காக கொண்டுவரப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு வயது  முப்பத்துமூன்றுவருடமும் மூன்று மாதமும் ஆகியிருந்தது.
  காலை எட்டு மணி.இவ்வளவு சீக்கிரமக எந்த குற்றவாளிக்காக விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அப்படி என்ன அவசரம் வேண்டிக்கிடக்கிறது இந்த யூதமத குருமார்களுக்கு என்று யோசித்தவனாய் தன் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான் போஞ்சிபிலாத்து என்னும் ரோமை ஆளுனன். பெரும் ஆரவாரத்தோடும் ஆர்ப்பாட்டத்தோடும் அமலியோடும் ஒரு கைதியை அடித்தும் இழுத்தும் ஏளனப்படுத்தியும் கொண்டுவந்திருந்தனர் கலகக்காரர்கள். கூடவே வந்திருந்தனர் அன்னாஸ், கைப்பாஸ் மற்றும் கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பலரும். அந்தக்கைதிதான் ஊர் உலகம் போற்றிய யேசுநாதர் என்னும் மஹான் என்று அறியவந்த பிலாத்துவுக்கு முகம் சுண்டிவிட்டது.
    தன் மனைவியும் தானும் ஒரு காலத்தில் யாரை சந்திக்கவேண்டி விரும்பினோமோ அவர் தன்முன்னிலையில் இன்று விசரணைக்கைதியாய் கொண்டுவரப்பட்டுள்ளார் என்பதை  பிலாத்துவால் நம்ப முடியவில்லை. தண்டனை வழங்கும் முன்பே ஒரு கைதியை இப்படியா அடித்துக்கேவலப்படுத்துவது என்று மனம் வருந்தியவனாய் தலைமை குருவைப்பார்த்து " நான் நீதி வழங்கும் முன்பே கைதியை அடித்தே கொண்று விடுவீர்கள் போல் இருக்கிறதே ?. அப்படி என்னைய்யா உங்களுக்கு அவசரம். இவர் செய்த குற்றம் என்ன?" என்றான்.
"அடேய், இவனை முதலில் நீதி மன்றத்தில் பிலாத்துவின் முன் நிறுத்துங்கள்" என்றனர். தலைமை குருக்கள். யேசுநாதரை பளிங்குதளம் போடப்பட்டிருந்த படிகளின் வழியே  இழுத்துக்கொண்டு போய் பிலாத்துவின் முன் நிறுத்தினர். தலைமைகுருக்களும் மற்ற குருக்களும் நீதிமன்ற வளாகத்தில் வெளியே நின்றுகொண்டனர். போஞ்சி பிலாத்து பிற ஜாதியான் மட்டுமின்றி சிலை வழிபாடு செய்பவன் என்பதால் அவனிருக்கும் இடத்தில் நிற்பதே தீட்டு என்பதாலும் பாஸ்கா திருவிழாவிற்காக தாங்கள் தீட்டுப்படாதிருக்க
வெளியே நிற்பதாகவும் கூறிக்கொண்டனர். அப்போது ஒரு வயது முதிர்ந்த ஒரு நீதிமான் " சரியாகச்சொன்னீர்கள்.கைப்பாஸ் அவர்களே, சரியாகத்தான் சொன்னீர்ககள்.இந்த நீதி மன்ற வளாகத்திற்க்குள் வரவேண்டியவர் வந்துவிட்டார். ஏனென்றால் அதர்க்கான தகுதி அவருக்கு மட்டும் தான் இருக்கிறது. இவர் இன்று வருவார் என்று தெரிந்து தான்  முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பல மாசில்லாத குழந்தைகள் தங்கள் ரத்தத்தால் இந்த நீதி மன்றத்தைக்கழுவிவிட்டனர். அவற்றுள் என் குழந்தைகள் இருவரும் அடக்கம்.  உங்களுக்கு உள்ளே நுழைய தகுதி இல்லை " என்று சத்தம் போட்டு யேசுவின் மாசற்ற தன்மைக்கு சாட்ச்சியம் அளித்தார்.
     தலைமை குரு கைப்பாஸுக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க," யார் இந்தக் கிழவன் என்று முனுமுனுத்தார்.. "அவர்தான் சோதாக்கு. சங்க உறுப்பினர் ஒபேதியானின் ஒன்றுவிட்ட சகோதரர்" என்றனர். "யார் அந்த ஒபேதியான்?" " சரொபீஸ் [ பிற்பாடு வெரோணிக்கா எனப்பட்டவள்] கணவர்" என்றனர். "சரி, சரி,
அவர்களைப்பிறகு நன் ஒரு கை பார்த்துக்கொள்கிறேன். முதலில் இந்த நசரேயனின் கதை முடியட்டும்" என்று தன் பற்களை நற, நற என்று கடித்துக்கொண்டார் கைப்பாஸ்.
"ஆளுனர் அவர்களே, இவன் குற்றம் செய்யாமலிருந்தால் நாங்கள் ஏன் உம்மிடம் இவனை கொண்டுவர வேண்டும்?" என்றார் கைப்பாஸ்.
" அப்படியானால் இவரை நீங்களே தீர்ப்பளித்துக்கொள்ளுங்கள்.பிற்பாடு நான் எதற்கு?" என்று கடுப்பைக்காட்டினான் பிலாத்து.
" எங்களுக்குண்டான சட்டத்தின் படி எவனையும் கொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை. அது உங்களீடம் தான் இருக்கிறது" என்றார் கைப்பாஸ்
இந்த நிலையில் யேசுவின் விரோதிகள்" அடடடா, இது என்னபெரும் தர்ம சங்கடமாய் போயிற்று. காலா காலத்தில் ஆளுனன் தண்டனை கொடுத்துவிட்டால் இந்த யேசுவை சிலுவையில் அடித்துவிட்டு நாளைய பொழுதில் பாஸ்க்கா பண்டிகையில் நல்ல பலிகொடுத்துவிட்டு ஒரு கட்டுகட்டலாம் என்று பார்த்தாள்....மனிதன் அசைந்துகொடுக்க மாட்டேன்
என்கிறானே, ஊஹூம்,இது சரிப்பட்டுவராது என்று அலுத்துக்கொண்டார்கள். அந்த கலஹக்காரர்களுக்கு யேசுவே அந்த பாஸ்க்காப்பலியாக ஒப்புகொடுக்கப்படப்போகிறவர் என்று தெரிந்திருக்கவில்லை.
இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் என்ன செய்தால் சரிப்பட்டுவரும் என்று முன்பே தீர்மானித்தபடி மூன்றுகொடும் குற்றச்சாட்டுகளை யேசுவின் மீது சுமத்தினார்கள்.இந்த  குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாக பத்து பத்துபேராக ஏற்பாடு செய்திருந்தனர்.
" சரி, ஒவ்வொரு குற்றச்சாட்டாக கூறுங்கள்" என்றான் பிலாத்து.
" கணம் ஆளுனர் அவர்களே,இந்த யேசு என்னும் கொடியவன்,பாமர மக்களை தன் சொல் வன்மையால் மயக்கி தான் சொல்வதை கேட்க்கும் தலையாட்டி பொம்மைகளாய்  மாற்றிவிட்டான். ஒரு ரகசிய கூட்டத்தை சேர்த்துக்கொண்டு, உங்களுக்கும் அதாவது ரோமை அரசாங்கத்திற்கும் எங்களுக்கும் வரிகொடா இயக்கம் என்றும் தீவிரவாததிற்கும்  அடிகோல் இட்டான். பல சமயங்களில் இவன் மறைந்துபோவான். திடீரென வெளிப்படுவான். இவன் சிஷ்ய கோடிகளுடன் இவன் செய்யும் சித்து வேலைகளால் படிக்கதவர்களுடன்
சேர்ந்து படித்தவர்களும் கலகத்தில் ஈடு படுகின்றனர். எங்களைசேர்ந்த சில மதகுருமார்களும் இவனுடன் சேர்ந்துகொண்டுள்ளது கவலை அளிக்கும் விஷயமாகும். இதனால் அரசியலிலும் மதத்திலும் பெரும் கலவரம் மூண்டுள்ளது. பொது அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவனது போதனையில் அவனது சதையைத்தின்று ரத்தத்தைக்
குடிக்காதவர்களுக்கு சொர்கக்தில் இடமில்லை என்பது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயம்..இதோ அதர்க்கான சாட்சிகள் என்று ஒரு பத்து பேரை நிறுத்தினர். அவர்களும் ஆம். அம். நாங்கள் இந்த போதனைகளை கேட்டோம். அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மையே என்றனர்.
" கட கட" என்று சிரித்தான் பிலாத்து. "ஐய்யா கோவில் பூஜாரிகளே, உங்கள் மனப்போக்கை நான் நன்றாக அறிவேன். இவன் அரசங்கத்திற்கெதிராக சதி செய்தான் என்பதை நான் நம்பத்தயாராக இல்லை. சீசருக்கு உறியதை சீசருக்கும் கடவுளுக்கு உறியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்று அவன் கூறியதையும் நான் நன்றாக அறிவேன். அரசுக்கு விரோதமாக சதி செய்தான் என்பதற்கு ஆதாரம் போதுமானதாக இல்லை. அவரது அரசு இந்த உலகைச்சார்ந்தது அல்ல என்பதை நமது அரசின் உளவுப்பிரிவு சரியாக கூறியுள்ளதால் இந்த குற்றச்சாட்டையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஓய்வு நாளில் குணமாக்கி கோவில் சட்டத்தை மீறினார் என்பதும் ஏற்கத்தக்கது அல்ல. அவரது சதையைத்தின்று ரத்தத்தை குடிக்காதவனுக்கு சொர்க்கம் இல்லை என்பது நம்புவதும் நம்பாததும் அவரவர் தனிப்பட்ட விஷயம். அதன் உள் அர்த்தம் எனக்குப்புறியவில்லை. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புறிகிறது. நீங்கள் தான் அவன் சதையைத்தின்று அவன் ரத்தத்தை குடிக்க விரும்புகிறீர்கள் என்பது உங்கள் முகத்தைப்பார்த்தாலேயே தெரிகின்றது. உங்களுக்கு சொர்க்கப் ப்ராப்த்தம் சர்வ நிச்சயம்" என்று கிண்டலடித்தான் பிலாத்து.
" ஆளுனர் அவர்களே, இவன் பெரும்படையைத்திரட்டிக்கொண்டு, பெரும் ஆரவாரமாக ஜெருசலேம் தேவாலயத்திற்குள் நுழைந்தான்.  .ஓசான்னா,ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவர் என்றும் தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்றும் தன்னை உலக ரட்சகர் என்றும் உலகின் மீட்ப்பர் என்றும். மெசியா என்றும் தன்னை அழைக்க ஆட்களை அமர்த்தி  தன்னை வரப்போகும் யூதகுல அரசராகவும் அறிவித்துக்கொண்டான். இப்போது கூட பிலாத்து மசிந்துகொடுக்கவிலை.
" அரசே இந்த மூன்றாவது குற்றச்சாட்டை நன்றாகக்கேளுங்கள். இவன் தன்னை யூதர்களின் அரசன் என்று பிரகடனப்படுத்திக்கொண்டான்
  " இப்போது பிலாத்து கொஞ்சம் அசைந்து கொடுத்தான். போஞ்சி பிலாத்து தனது மதம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் என்றாலும் மூட நம்பிக்கைகளிலும் திளைத்தவன். அவன் பால
பாடங்களில் இந்த உலகைச்சுற்றி தேவ குமாரர்கள் உலாவுவதாகவும் அவர்களில் ஒருவர் யேசுவாக அவதரித்து இருக்கலாம் என்றும்நம்பினான். இந்த யூத மத நம்பிக்கையின்படி ஒரு அரசர் யூத குலத்தில் தோன்றுவார் என்றும் அவர் உலகை மீட்பதற்கு வழிகோலுவார் என்றும் நம்பினான். அகஸ்ட்டஸ் சீசர் கண்டபடி வானில் தோன்றிய குழந்தை
இந்த யேசுவாக இருக்கமுடியுமோ? அப்படியானால் கிழக்கிலிருந்து வந்திருந்த மூன்று அரசர்கள் சந்தித்தது இந்த யூத அரசக்குழந்தையை தானோ. அப்படியானால்  இந்த யேசு தான் அந்த தெய்வீகக்குழந்தையோ? என்ற கேள்விகள் அடுக்கடுக்காய் அவன் சிந்தையில் தோன்றின. பிலாத்து யேசுவின் முகத்தை உற்று நோக்கினான். இந்த முகம் ஒரு அரசகுலத்தை சேர்ந்ததாக தோன்றவில்லையே?. இவர் ஒரு ஏழை தச்சனுக்கு மகனாகப் பிறந்தவர் என்று நிச்சயமாக எனக்குத்தெரிகிறது. ஆனால் இவர் மீதான குற்றசாட்டு
கடுமையாக அல்லவா இருக்கின்றது. எதர்க்கும் இவரை தனியே அழைத்து விசாரித்தால் எல்லாம் தெரிந்துவிடப்போகிறது என்று நினைத்தவனாய் யேசுவை தன் அரண்மனைக்கு தனியே அழைத்து விசாரிக்கவிரும்பினான். விசாரணை அவனது தனி அறையில் நடைபெற்றது.
"நீர் யூத ராபி என்று எனக்குத்தெரியும். ஆனால் உம் மீது உள்ள குற்றாச்சட்டுகள் உம்மை மரண தண்டனைக்கு இட்டுசெல்லக்கூடியதாக அல்லவா இருக்கிறது. நீர் யூதர்களின் அரசனா? என்றான் பிலாத்து. அப்போது யேசுவின் முகம் ஒருவித தெய்வீக ஒளியால் சூழப்பட்டிருப்பதைகண்டு மிகுந்த ஆச்சர்யப்பட்டான்.
" நீராக இதைகேட்கிறீறா அல்லது மற்றவர்கள் சொல்லக்கேட்டு இதைகேட்கிறீற்களா? " என்றார் யேசு நாதர்.
" இப்படியும் ஒரு குற்றவாளி தன்னிடம் பேச முடியுமா என்று ஆச்சர்யப்பட்ட போஞ்சி பிலாத்து " நான் என்ன யூதனா?, உம் மக்களும் , உம்குலத்து தலைமை குருக்களும் தானே உம்மை சிலுவை சாவுக்கு தீர்ப்பளிக்கும்படிக்கு என்னிடம் கொண்டுவந்திருகிறார்கள். அந்த அளவுக்கு நீர் என்ன காரியம் செய்தீர்.?" என்றான் பிலாத்து.
" என்னுடைய ரசு இந்த உலகைச்சார்ந்தது அன்று. என் அரசு இவ்வுலகைச்சார்ந்தது என்றால் என் ஊழியர்கள் என்னை உம்மிடமோ அல்லது இந்த யூதர்களிடமோ கையளிக்காதபடி போராடி இருப்பார்கள் அல்லவா? ஆனலும் என் அரசு வெகு தொலைவில் இல்லை." என்றார் யேசுநாதர்.
" அப்படியானால் நீர் யூதர்களின் அரசன் தானோ? " என்று தன் தொனியில் சற்றே கடுமையைக் காட்டிப் பேசினான் பிலாத்து.
"நான் யூதர்களின் அரசன் என்று நீரே சொல்லுகிறீர். இதர்காகவே நான் பிறந்தேன். இதர்காகவே நான் வளர்ந்தேன்.உண்மைக்கு சாட்ச்சியம் கொடுக்கவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். உண்மைக்கு செவிகொடுத்துக்கேட்க்கும் எவரும் என் குரலைக்கேட்ப்பர்."என்றார் யேசுநாதர்.
   பிலாத்து இந்த இடத்தில் சற்றே குழம்பினான். இருப்பினும் " உண்மையா....அப்படிஎன்றால் அது என்ன?" என்று வினவினான். தன் மனதுக்குள் இவர் மீது ராஜ துரோக குற்றம் சாற்றப்பட்டுள்ளது. சீசருக்கு எதிரான எந்த குற்றமும் இவரிடத்திலில்லை. யேசுநாதரின் மஹத்தான முகத்தோற்றம் அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்ததாலும் அவருடைய
பதில்கள் வெளிப்படையாக இருந்ததாலும் இவர் சிலுவை சாவுக்கு ஏதுவான எந்த குற்றமும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்த பிலாத்து தன் மேல் தலத்திலிருந்து  கீழே இருந்த கலகக்காரர்களைப்பார்த்து, " இவரிடத்தில் எந்த குற்றமும் நான் காணவில்லை" என்றான். அப்போது தலைமை குருவும் மற்றவர்களும் பெரும் கூச்சலுடன் யேசுவைப்பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக்கூறிக்கொண்டே கலகத்தில் ஈடு பட்டனர்
" இதோ பார். இந்த கலகக்காரர்கள் உன்னைப்பற்றி அடுக்கடுக்காய் கூறும் குற்றச்சட்டுகளைப்பற்றி நீர் என்ன கூறுகிறீர்?" என்று கேட்க யேசு பதில் ஏதும் கூறவில்லை.
" இதோ பாரும், இந்த குற்றச்சாடுகளுக்கு என்ன பதில்?.... என்னிடம் பேசமாட்டீரா?" என்று மீண்டும் சற்று கடினமாக கேட்க யேசு மீண்டும் மௌனமானார். பிலாத்தும்  ஒரு தெளிவான முடிவுடன் மீண்டும் கலகக்காரர்களைபார்த்து " இவரிடத்தில் நான் எந்தக்குற்றமும் காணவில்லை" என்றான்
உடனே பெரும் கூச்சல் ஆரம்பமானது. " என்னைய்யா சொல்லுகிறீர்? இவரிடத்தில் குற்றமில்லைய்யா? அரசாங்கத்திற்க்கு எதிராகவும், எம் மதத்திற்க்கு எதிராகவும் மக்களை தூண்டிவிட்டது குற்றமில்லைய்யா? படித்தவர்களையும் பாமரர்களையும் முட்டாள்கள் ஆக்கியது குற்றமில்லைய்யா? தவறான மதபோதனையினால் மக்களைப்பிறித்தது
குற்றமில்லையா? இவனது போதனையால் தன் சொந்த புத்தி இழந்தவர்கள் இந்த யூதேயாவில் மட்டுமல்லாமல் கலிலேயாவிலும் ஏராளமானோர் உண்டு. எல்லாம் இந்த கலிலேயனால் வந்த வினை. இது எல்லாம் குற்றம் இல்லை என்கின்றீர். இது நியாயமா? என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர்.
"இவன் கலிலேயன்" என்ற வார்த்தை பிலாத்துவை சற்று சிந்திக்கவைத்தது. எனவே " இவன் கலிலேயனா" என்று மீண்டும் கேட்டான் பிலாத்து.
" ஆம் இவன் கலிலேயன் தான். இவன் பெற்றோர் வசித்தது நஸரேத்தூரில். தற்போது இவன் வசிப்பதும் கப்பர்நாஹூமில் தான்" என்றனர்.
" இவன் கலிலேயன் என்றால் அவன் ஏரோது அந்திப்பாஸ் ஆட்சிக்கு உட்பட்டவன்.அவரும் இப்போது ஜெருசலேமில்தான் இருப்பத்தால் அவரது குடிமகனை அவரே நியாயம் தீர்க்கட்டும். இப்போதும் சொல்கிறேன் நான் இவரிடத்தில் எந்த குற்றமும் காணவில்லை" என்றான். ஒரு விதத்தில் இந்த நீதிமானின் பிரச்சனையில் நாம் சம்பந்தப்படவில்லை.
இனி அவர் பாடு மற்றும் ஏரோதன் பாடு என்று தன் மனதில் சொல்லிக்கொண்டான். அப்போது சேவகன் ஒருவன் ஒரு துண்டு சீட்டை பிலாத்துவிடம் கொண்டு வந்து கொடுத்து இதை தங்கள் மனைவி இதை உங்களிடம் கொடுக்கச்சொன்னார்கள் என்றான். அதில் "அந்த மஹான் யூத ராபி விஷயத்தில் நீர் தலையிட வேண்டாம். அவர் பொருட்டு
நான் நேற்றைய கனவில் மிகவும் துன்பமுற்றேன் என்று எழுதி இருந்தது.
"இந்த ஆளுநன் பிலாத்து சரியான முட்டாள். இந்த கலிலேயன் கதை இப்போதே முடிந்துவிடும் என்று நினைத்தால் அவன் அவனை ஏரோதிடம் அனுப்பிவிட்டான். என்ன கொடுமையடா இது" என்று சலித்தவர்களாய் அந்த கோபத்தை எல்லாம் யேசுவின் மீது காட்டி, அவரை நைய்யப்புடைத்துக்கொண்டே ஜெருசலேமில் முகாமிட்டிருந்த ஏரோதிடம்
சேர்ந்தனர்.
"பிலாத்துவும் அவன் மனைவி க்ளாடியாவும்"
"அன்பே க்ளாடியா, இந்த யூத ராபி விஷயத்தில் நான் சரியான முடிவு தான் எடுத்திருந்தேன். அவர் குற்றமற்றவர். நிரபராதி என்றும் நான் அறிவேன். இந்த மக்களும் யூத  குருமார்களும் அவர்மீது கொண்ட வர்மத்தாலும் பொறாமையினாலும் தான் அவர் மீது சிலுவைச்சாவை சுமத்துகிறார்கள் என்றும் அறிவேன்.எப்படியும் அவரை நான் விடுதலை செய்து
விடலாம் என்று இருந்த சமயத்தில் அவர் கலிலேயன் என்பதால் அவரை ஏரோதிட்ம் அனுப்பிவிட்டேன். நீ வேண்டுமானால் பார். ஏரோதன் கூட என் பரிந்துரைக்கடிதம் கண்டவுடன் அவரை விடுதலை செய்துவிடுவார். அதுசரி... நீ ஏதோ அந்த யூத ராபி யேசுவின் விஷயத்தில் தலையிடவேண்டாம் . அவர் பொருட்டு நீ கனவில் துன்புற்றதாக எழுதி இருந்தாயே.....
அப்படி நீ துன்புறுமாறு என்ன கனவு கண்டாய்? சொல்....க்ளாடியா.... சொல் "
அவளிடமிருந்து நீண்ட பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. சொல்கிறேன் அத்தான் சொல்கிறேன். அதை சொன்னால் தான் என் மனமும் அமைதியடையும் என்று தன் அன்புக்கணவன் பிலாத்துவின் மார்பில் சாய்ந்துகொண்டு அவள் கண்ட கனவை விவரிக்களானாள்.
" வானம் திறக்கக்கண்டேன்..வான தூதன் ஒருவன் வெளிவரக்கண்டேன்.
பரிசுத்தப்பெண்ணொருத்தி பதுமையாய் நிற்கக்கண்டேன்.
அன்னையே வாழ்க..அமல உற்பவியே வாழ்க..ஆண்டவன் அருள் பெற்றவள் நீரே என்று வானவன் வாழ்த்தக்கேட்டேன்.
அஞ்சினாள் அந்தப்பெண். அமைதிப்படுத்தினான் வான தூதன்.
வந்த செய்தி சொல்கிறேன் அம்மா..ஆண்டவன் உம்மிடம் மகனாக எழுந்தருள உம் சம்மதம் வேண்டுமம்மா என்று கேட்கக் கண்டேன்.
ஆண்டவன் சித்தம் அதுவனால் அவருக்கு தாயாக நானும் தயார் என்று அவள் சம்மதம் கூறக்கேட்டேன்.
பரிசுத்த ஆவி என்னும் தேவன் அவளிடம் இறங்கிவரக் கண்டேன். தேவனின் தாயாக அவள் மாறக்கண்டேன்.
இஸ்ரேலிய கடவுளர் பிதா என்னும் தேவன் அவளை தன் மகள் என்றும்
சுதன் என்னும் தேவன் அவளை தன் தாய் எனவும்
பரிசுத்த ஆவி என்னும் தேவன் அவளை தன் பத்தினி எனவும் கூறக்கேட்டேன்.
காலம் நிறைவுற்றது. ஆண்டவன் மனிதனாய் அவதரிக்க இந்தப்பூவுலகே மகிழ்ந்து கொண்டாடு என்று எக்காளம் ஒலிக்கக்கேட்டான்.
வானோர் மடைதிறந்த வெள்ளம்போல் பெருகி இப்பூமி எங்கும் வாழ்த்தொலி முழங்கக்கேட்டேன். உன்னதங்களிலே ஓசான்னா!!!ஓசான்னா!!!! இனி எங்கும்ஜெயமே
ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே என்னும் துதிப்படலால் உலகம் மகிழ்ந்து களிகூறக்கண்டேன்.
எப்ரேத்தா என்னும் பெத்லஹெமில் ஆண்டவன் மனிதாவதாரம் எடுத்திருக்கக்கண்டேன்.
கீழ்த்திசை ஞானிகள் மூவர் "இதோ ..ஆண்டவன்..மனிதாவதாரம் எடுத்துவந்த ஆண்டவராகிய தேவன்... ஆண்டவரே போற்றி.. தேவனே போற்றி. இஸ்ராயேல் ஆண்டவே போற்றி.. போற்றி. யூதர்களின் அரசே போற்றி.. போற்றி... இதோ எம் காணிக்கை என்று தெண்டனிட்டு வணங்கி ஆராதிக்கக்கண்டேன்.
யூதகுல முறைப்படி தலைச்சன் மகன் ஆண்டவன் சொத்து எனவே தேவாலயத்தில் அவர் காணிக்கையாய் ஒப்புகொடுக்கக்கண்டேன்.
சிமியோன் என்னும் குலகுரு" ஆஹா.... கண்டேன்.. கண்டேன்..கண்டறியாதன கண்டேன்... என் கடவுளைக்கண்டேன். இதோ இவர் தான் உலகத்தை உய்விக்க வந்திருக்கும் கடவுளின் அவதாரம் என்று அக மகிழ்ந்து கூறக்கண்டேன்.
ஆண்டவன் ஆணைப்படி அவர் தம் தாய் தந்தையுடன் எகிப்திற்கு ஓடிப்போகக் கண்டேன்.
ஜெருசலேமில் அரசன் ஆணையால் மாசில்லாக்குழந்தைகள் நூற்றுக்கணக்கில் மடியக்கண்டேன்.
இவர் பாதம் பட்டதும் எகிப்திய தெய்வங்கள் பதறியடித்து பாலைவனத்தில் மறையக்கண்டேன்.
பொய்தேவர்கள் மறைந்ததால் மெய்த்தேவனின் ஆசீர் எகிப்தில் நிறையக்கண்டேன்.
பாலைவனம் சோலை நிலமாக மாறக்கண்டேன்.
கொடுங்கோலன் மறைந்தான். மீண்டும் இஸ்ராயேல் வருக என்னும் தெய்வ வாக்கு ஒலிக்கக்கேட்டேன்.
அவர் நஸரேயன் எனவும் கலிலேயன் எனவும் அழைக்கப்படுவார் என்னும் தெய்வ வாக்கு பலிக்கக்கண்டேன்.
இதோ உலகின் பாவங்களைப் போக்கவந்த செம்மறி ஆட்டுக்குட்டி என்னும் ஒரு குரலொலி பாலையில் ஒலிக்கக்கேட்டேன்.
இந்த செம்மறியின் செந்நீரே இந்த உலகின் பாவங்களைப்போக்கும் பன்னீர். எனவே இவரது ரத்தம் சிந்தப்படவேண்டும்.சிலுவை மரத்தில்கொல்லப்படவேண்டும்.
ஆண்டவன் சித்தமிது. யாராலும் மீறமுடியாது என்று தேவர்கள் முழங்கக்கேட்டேன்.
அவர் நன்றாக அடிபடுவார்..அடித்து நொறுக்கப்படுவார்...மிதிபடுவார். கண்டவர் வாயில் கடிபடுவார்..அவர் மனிதனாக மதிக்கப்பட மாட்டார்.. ரத்தமெல்லாம் சிந்தி மரணிப்பார்
... இது வேத வாக்கு.....இதைதடுக்க நீ யார்? என்று கேள்விகள் பல கேட்கக்கண்டேன்.......
தான் கண்ட கனவைப்பற்றி தன் கணவனிடம் விவரிக்க விவரிக்க போஞ்சிபிலாத்து அடைந்த ஆச்சர்யம் அளவிடமுடியாததாக இருந்தது. விசாரணையின்போது  தான் கேட்ட கேள்விகளுக்கு அந்த யூத ராபி யேசு அளித்த பதிலும் பதிலளித்தவிதமும் தோரணையும் விளக்கமும் அப்போதைக்கு அவனுக்கு புறியவில்லையேதவிர இப்போது
அவனுக்கு இந்த யேசுவைபற்றி ஏதோ புறிந்தது போலே இருந்தது. விசும்பி அழும் தன் மனைவியைத்தேற்ற ஆறுதலாக அவள் கரம் பற்றி " அன்பே க்ளாடியா, பயப்படாதே, நான் இருக்கிறேன்.அந்த யூத ராபி குற்றமற்றவர் என்று எனக்குத்தெரியும். இதைபற்றி தெளிவாகவும் சபையில் நான் கூறி இருக்கிறேன். அவரது உயிருக்கு என்னால் அபாயம் ஏற்படாது.நம்
தேவர்களின் சாட்சியாக நான் உனக்கு சத்தியம் செய்கிறேன். அவரை நான் நிச்சயம் விடுதலை செய்வேன். என்னை நம்பு" என்றான்.
" இல்லை அத்தான். நீங்கள் எனக்கு எவ்வளவு ஆறுதல் கூறினாலும் என் மனம் அமைதி அடையமாட்டேன் என்கிறது" என்றாள் க்ளாடியா.
" ஓ..... உனக்கு என்மீது இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. அப்படித்தானே. அப்படியானால் இதோ என் முத்திரை மோதிரம். இதை நீ அணிந்துகொள். நான் உனக்கு செய்து கொடுத்துள்ள சத்தியத்திற்கு இது ஆதாரமாக இருக்கும்.போதுமா?." என்றான் பிலாத்து.
" யேசுவும் ஏரோதும்"
" குற்றம் சாட்டப்பட்டு உம்மிடம் நான் அனுப்பிவுள்ள இந்த கலிலேயனாகிய யேசு என்னும் யூத ராபியிடம் நான் விசாரித்தவரையில் எந்த குற்றமும் காணவில்லை.
இந்த யூத ராபி உம் ஆதிக்கத்திற்பட்ட கலியேயாவைச்சேர்ந்தவராதலால் உம்மிடம் அனுப்பியுள்ளேன். இனி நீரே விசாரித்து தீர்ப்பளித்துக்கொள்ள விரும்புகிறேன். போஞ்சி பிலாத்து."
இந்த கடிதம் கண்டவுடன் ஏறோது அந்திப்பாஸ் மிக்க மகிழ்ச்சி கொண்டான். இந்ததண்ணீர் தொட்டி விவகாரத்தினாலும் அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கலவரத்தாலும் இந்த ரோமை ஆளுனருக்கும் தனக்கு கடும் பகை ஏற்பட்டு ஒராண்டு ஆகப்போகின்றது. இதுவரை ஏதும் பேச்சுவார்த்தை கிடையாதது. அவரை எந்த விதத்தில் சமாதானப்படுத்துவது
என்று தெரியாமலிருந்தது ஏறோதனுக்கு. ஆஹா.... ஒரு நல்ல சந்தர்ப்பம் இந்த யேசுவால் ஏற்பட்டுள்ளது. இதை சரியானபடி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலும் தன் ராஜ்ஜியத்துக்குட்பட்ட பிரஜையாக யேசுநாதர் இருந்தும் தான் அவரைப்பற்றி கேள்விப்படிருகிறோமே தவிர நேரில் பார்த்ததே இல்லை. அவரது சக்தியுள்ள போதனையால் பலர்  அடைந்த மனமாற்றங்களும் உடல் நலன்களும் அவனது நினைவுக்கு வரவே, அவரை சந்திக்கப்போகிறோம் என்ற நினைப்பே அவனுக்கு மகிழ்ச்சியைத்தந்தது. வரட்டும்..அவரது மேதாவிலாசம் என்னவென்றுதான் பார்த்துவிடுவோம். இவரைப்பற்றி அந்த யோவான் ஸ்நானகர் எவ்வளவோ கூறிவுள்ளார்.வரட்டும் வரட்டும்....என்று அவரது வருகைக்காக ஏறோதன்
காத்துக்கொண்டிருந்தான் அவனது ஜெருசலொம் அரண்மனையில். அது பிலாத்துவின் அரண்மனைக்கு சற்றே தொலைவில் இருந்தது.
யேசுநாதரை பின்முறியாகக்கட்டி மஹா கேவலமான முறையில் அவனது சபையில் கொண்டு வந்து நிறுத்தினர் ரோமை வீரர்கள். யேசுவின் நிலை கண்ட கொடுங்கோலன் ஏறோதன் கூட சற்றே திடுக்கிட்டான். தன் கண்டனத்தை கடுமையாக தெரிவித்து, யேசுவை சுத்தமாக தன் முன்னே நிறுத்தக் கட்டளையிட்டான். ஒரு பேசின் நிறைய தண்ணீர் கொண்டுவந்து அவரது முகத்தை கழுவித்துடைத்தனர்.அந்த அளவுக்கு அவரது திருமுகம் அசுத்தம் அடைந்திருந்தது.
    இவரிடத்தில் நான் ஒரு குற்றமும் காணவில்லை என்ற பிலாத்துவின் நிருபத்தால் திருப்தியடைந்த ஏறோது யேசுவை நல்லவிதமாகவே நடத்த முற்பட்டான்.அவர் மிகவும்  தளர்ந்து சோர்ந்து காணப்பட்டதால் ஒரு கிண்ணம் நிறைய திராட்சைப்பழ ரசம் கொடுக்க அவர் தன் முகம் திருப்பிக்கொண்டர். இது ஏறோதுக்கு அவமரியாதையாகப்பட்டதால் உடனே சினம் கொண்டான்.இது தான் தக்க தருணம் என்றுணர்ந்த தலைமை குரு கைப்பாஸ், " அரசே, கொலைக்குற்றம் சாட்டப்பட்டவனுக்கு மாலை மரியாதை செய்யாத குறையாக நீர் நடந்து கொள்கிறீர். ஆனால் அவனோ உம்மை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன் என்கிறான். நீர் கொடுத்த கிண்ணத்தையும் ஏற்கவில்லை. அவ்வளவு திமிர் அவனுக்கு." என்று தங்களது அதிருப்தியை காட்டிக்கொண்டனர்.
  ஏறோதனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சி கொப்பளிக்க ஆரம்பித்தது. எரியும் கொள்ளியில் எண்ணை வார்த்தார்கள் மதத்தலைவர்கள். இருப்பினும் ஏறோது தன் கோபத்தை அடக்கிக்கொண்டு அவரிடம் பலப்பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.
" இதோ பாரும் யேசுவே, நீர் எப்பேற்பட்ட மஹான் என்றும் எவ்வளவு வல்லமையுள்ள ராபி என்றும் அறிவேன். நீர் போதித்த போதனைகள் நியாமானவை என்றும் அறிவேன்.
நீர் செய்த புதுமைகளும் அற்புதங்களும் வேறு யாவராலும் செய்ய்ய முடியாது என்றும் அறிவேன். என்னிடம் உண்மையே பேசவேண்டும். என் கேள்விகளுக்கு பதில் கூறு.
நீ யார்?
நீ எங்கிருந்து வந்தவன்?
நீ யூதர்களின் அரசனோ?
உன்னைப்பற்றித்தான் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனம் கூறப்பட்டதோ?
உன்னைபற்றித்தான் யோவான் ஸ்நானகன் மெசியா என்றாறோ?
உன்னைப்பார்க்கத்தான் கீழ் திசையிலிருந்து மூன்று ஞானிகள் வந்தனரோ? அவர்கள் கொண்டுவந்த பரிசுகள் எல்லாம் ஒரு அரசனுக்குறியதாமே !!!.
என் தந்தையிடமிருந்து அவர்கள் எப்படி தப்பிச்சென்றார்கள்?
என் தந்தையின் ஆணைப்படி மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்ட போது நீர் மட்டும் தப்பியதெப்படி?
என் தந்தையின் ஆணையை முன்கூட்டியே உங்களுக்கு வெளிப்படுத்தியது யார்?
நீங்கள் எகிப்த்திற்கு ஓடி தப்பித்தீர்களாமே, மீண்டும் என் நாட்டிற்கு வந்து எங்களுக்கு தெரியாமல் வாழ்ந்தது எப்படி?
தீர்ஸாக்கோட்டையில் என்னால் கைதியாக்கப்பட்டவர்களை என் அனுமதியின்றி நீர் விடுவித்ததெப்படி?
அவர்கள்பட்ட கடனைஎல்லாம் அடைக்க பண உதவி செய்தது யார்? எப்படி? எப்போது.?
நீர் இறந்தவர்களை உயிர்ப்பிக்கவும், முடவரை நடப்பிக்கவும் ஊமையரை பேச வைக்கவும், குருடரைப்பார்க்கவைக்கவும் என்னவிதமான மந்திர தந்திரங்களை பிரயோகிக்கிறீர்?
நீர் இந்த வல்லமைகளை யாரிடம் கற்றீர்?
இவ்வளவு கேள்விகளுகும் யேசு நாதர் பதிலேதும் கூறவில்லை. அவர் ஏறோதனை பார்க்கவும் விரும்பாமல் தன் கண்களைத்தாழ்த்திகொண்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார். மீண்டும் ஏறோது, " நீர் என்னிடம் பதில் ஏதும் பேசமாட்டாயா? நான் விரும்பினால் உன்னை விடுதலையாக்க முடியும் என்று உனக்குத்தெரியதா? நான் வேண்டுமானால் தீயவனாக இருக்கலாம்.. முறை தவறிய வாழ்க்கை மேற்கொண்டவனாக இருக்கலாம். இதர்க்காக அந்த யோவான் ஸ்நானகரைக்கூட நான் கொண்று இருகிறேன். ஆனால் உம்மட்டில்
மட்டும் நான் ஏனோ கருணை கொண்டவனாக இருக்கிறேன். அதுதான் ஏன் என்று எனக்கும் புறியவில்லை. சரி. பேசும் .... என் கேள்விகளுக்குப்பதில் சொல்லும் ." என்றான்  ஏறோதன்.
   இந்த சமயத்தில் யேசுவின் விரோதிகள் ," அரசே இவன் எப்படிப்பேசுவான்?. இவன் பல சமயங்களிள் உம்மைப்பலர் முன்னில்லையில் "குள்ள நரி என்றே அழைப்பான். உம்மை ஒரு அரசன் என்று இவன் மதிப்பதே இல்லை. இவனுக்கு நீர் கருனை காட்ட வேண்டுமா? அதர்க்கெல்லாம் இவனுக்கு தகுதியே இல்லை.இவன் செய்த சதிவேலையெல்லாம்
உமக்குத்தெரியாது. உம் அரசைக்கவிழ்த்து, தன் அரசாங்கத்தை ரகசியமாக அமைத்துவருகிறான். உம்மைப்போன்ற வெகுளி இந்த உலகத்தில் யாருமில்லை!!!. நீர் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிறீர், ஆனால் இவனும் இவனது கோஷ்ட்டியினரும் போனவாரம் கூட ஜெருசலேமில் இவனை அரசனாக்கப்பார்த்தார்கள். யேசுவே வாழ்க...தாவீதின் மகனே
வாழ்க...யூதர்களின் அரசே வாழ்க....ஓசான்னா.... ஆண்டவரின் அருள் பெற்றவர் நீரே வாழ்க என்று கோஷமிட்டுகொண்டு ஆர்ப்பாட்டமாக ஜெருசலேம் நுழைந்தார்கள். ஏதோ நாங்கள் உஷாறாக செயல்பட்டதால் இவனது சித்து வேலைகளை எல்லாம் முறியடித்து இவனைக்கைது செய்து விட்டோம். நீர் என்னடாவென்றால் அவனது மாய்மாலத்தில்  மயங்கி விட்டதுபோல் அவன் மீது கருணை காட்டுவதாக்கூறுகிறீர். நீர் உமது பதவி பறிபோவதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட்டது போல தெரியவில்லை. இனி உம் அரசை நம் இஸ்ராயேல் தேவன் தான் காப்பாற்ற வேண்டும் " என்று மிகவும் நன்றாகப் போட்டுக்கொடுத்தனர்.
   அவ்வளவுதான். அவர்கள் போட்டுக்கொடுத்தது மிகவும் நன்றாக வேலை செய்தது. கடும் கோபம் கொண்டான் ஏறோது. இருபினும் யேசுவால் ஒரு காரியம் அவனுக்கு நடக்க வேண்டி இருந்தது. அவனுக்கு ஒருவிதமான ரகசிய வியாதி இருந்தது. எனவே அவரிடம் நெருங்கி வந்து, " யேசுவே, நமக்கும் உமக்கும் ஒரு ரகசியம் இருக்கட்டும். எனக்கு ஏதோ ரகசிய வியாதி உள்ளது. செதில் செதிலாக வருகிறது. நீர் மட்டும் என்னை குணப்படுத்தினால் நான் உன்னை விடுதலை செய்துவிடுகிறேன். நீர் வேண்டுமானால் பார்... உனக்கு
தேவையான அனைத்து உதவிகளையும் நீர் எதிர்பார்ப்பதர்க்கும் மேலாக செய்வேன். தயவு செய்து எனக்காக ஒரு புதுமையை செய். உனக்கு புண்ணியமகப்போகட்டும்" என்று மிகவும் தாழ்ந்தும் பேசினான். அவர் ஒரு வார்த்தைகூட பேசாதிருப்பது கண்டு பிறகு எரிச்சலுற்றான். இனிமேல் இவரிடத்தில் பேசிப்பயனில்லை என்று உணர்ந்தவனாக மரியாதையை  விடுத்து, " யோவ் யேசுவே, பேசைய்யா.... ஏதாவது பேசைய்யா....பேச மாட்டாயா.... அடடடா.. எதையாவது பேசித்தொலையும். என்று அளவுக்கதிகமாக கத்திப்பேச ஆரம்பித்தான். இருப்பினும் இவர் யோவான் ஸ்நானகரால் பெரிதும் பாராட்டப்பட்டவர் என்றும் அவரைகொண்றதர்க்கு இவர் ஏதாவது ஏடாகூடமாய் சபித்து தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தான் ஒரு புறம். தன் கோபத்தைகாட்டி இவர் மீது கொலைகுற்றம் சாட்டி தீர்ப்பளித்தால் அது பிலாத்துவின் தீர்ப்புக்கு எதிறாய் அமையும். அது மீண்டும் பிலாத்துவுக்கு எதிறாக அமைந்து அவனாலும் தன் அரசுக்கு பங்கம் ஏற்படுமே என்று பயந்தவனாக தன் தீர்ப்பை இவ்வாறாக கூறினான்." இவன் நல்லவனே...இவன் மீது நானும் ஒரு குற்றமும் காணவில்லை.நான் பிலாத்துவின் தீர்ப்பை ஆமோதிக்கிறேன்" என்று மீண்டும் பிலாத்துவுக்கு ஒருகடிதம் எழுதி யேசுவை மீண்டும் பிலாத்துவிடம் அனுப்பினன்.
    அப்போது அவன் " யேசுவே, நான் உனக்கு ந்ல்லது செய்யவேண்டும் என் நினைத்திருந்தேன். ஆனால் நீ என்னைப்புறக்கனித்துவிட்டாய். இதன் பலனை நீ விரைவிலேயே அனுபவிப்பாய்..ஆடு யாரை நம்பும். கசாப்புபோடுபவனைத்தான் நம்பும். போ... போ..இந்த சாமியார்கள் உன்னை சிலுவை சாவுக்கு ஆளாக்கப்போகிறார்கள். நேற்றே சிலுவைமரம் வெட்டபட்டு சிலுவையும் தயாராகிவிட்டது. விதி யாரை விட்டது.. போ... போ... அடேய் யாரங்கே... இந்த நிர்மூடனை இழுத்துச்செல்லுங்கள். பிலாத்துவிடமே கொண்டுபோங்கள்" என்று கத்தினான்.
தலையில் அடித்துக்கொண்டார்கள் கைப்பாசும் மற்ற குருக்களும். "இந்த ரோமை ஆளுனன் பிலாத்து ஒரு மூடன் என்றால் இந்த ஏறோது ஒரு அடிமுட்டாள். காரியம் கை கூடிவரும்போது கெடுத்துவிட்டான். இவன் நினைத்திருந்தால் யேசுவை சிலுவையில் அடிக்க உத்திரவிட்டிருக்கலாம். நாமும் வந்தோமா...காரியத்தை முடித்தோமா என்று  போயிருக்கலாம். இந்த நிர்மூடர்களை நினைத்தால் அப்படியே பற்றிக்கொண்டு வருகிறது. என்ன செய்வது. அதிகாரம் அவர்கள் கையில் அல்லவா இருக்கின்றது" என்று
முனுமுனுத்துக்கொண்டே சென்றார்கள்.
   மீண்டும் யேசுநாதரை தன்னிடமே ஏறோதன் அனுப்பிவிட்டதால் பிலாத்து விதியை நினைத்து அலுத்துக்கொண்டான்.இந்த யூத குருக்களையும் கலகக்காரர்களையும் திருப்திப்படுத்த யேசுவை கசையால் நன்றாக அடித்தால் அவரது ரத்த விளாறான காயங்களைக்கண்டு அவரை விட்டுவிடுவர்கள் என்று நினைத்து அவரை கசையால் அடிப்பிக்க ஆணையிட்டான். யேசுவும் கற்றூணில் கட்டுண்டு அடிபட்டார். அவரது உடலில் அடிபடாத இடமே இல்லை. ஏறக்குறைய முக்கால்மணி நேரம் இந்த வெறியாட்டம்
நடந்தது. இதன் உச்ச கட்டமாக கொடும் முட்க்களால் ஆன ஒரு கொடி பின்னப்பட்டு ஒரு கிரீடம் செய்யப்பட்டு அவரது திரு சிரசில் சூடப்பட்டது.அதாவது அவரது தலையில் ஓங்கி அடித்து இறக்கப்பட்டது.
             "எச்சே ஹோமோ" "இதோ மனிதன்"
கற்றூணில் கண்டபடி அடிபட்ட யேசுவைப்பார்த்து பிலாத்துவும் பரிதாபப்பட்டான். அவனது பரிதாபம் வார்த்தையாகவும் வெளிப்பட்டது. "எச்சே ஹோமோ" என்று தன் லத்தீன் பாஷையில் கூவினான். அதாவது இதோ மனிதன் என்று மனித ஜென்மத்திற்கான இலக்கணமே இல்லாத அளவில் அடிபட்ட யேசுவின் திரேகத்தைப்பார்த்து இவ்வாறு கூவினான்.
பாஸ்காப்பண்டிகைப்பரிசாக அரசாங்கம் ஒரு கைதியை விடுவிப்பது வழக்கம். பிலாத்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யேசுவை விடுவிக்க எண்ணி " மக்களே, உங்களுக்கு நான் யாரை விடுதலை செய்ய வேண்டும். பயங்கரவாதி பரபாஸையா அல்லது யூதர்களின் அரசானாகிய யேசுகிரிஸ்த்துவையா?"என்றான். கலகக்கரர்கள் ஏற்கணவே தூண்டிவிட்டபடி
" பரபாஸை விடுதலை செய்....பரபாஸை விடுதலை செய்.." என்று கூறி கலவரத்தில் ஈடுபட்டர்கள்.
" அப்படியானால் உங்கள் யூதரின் அரசனாகிய யேசுவை நான் என்ன செய்யட்டும்" என்றான் பிலாத்து.
"அவனை சிலுவையில் அடியுங்கள்... சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்" என்றனர் கலககாரர்கள்.
"என்ன..உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைவதா?"என்றான் பிலாத்து.
"யேசு எங்களுக்கு அரசன் அல்ல.. சீசர்தான் எங்களுக்கு அரசர்.. சீசரைத்தவிர வேறு அரசர் எங்களுக்கு வேண்டாம்.சீசரைத்தவிர வேறு அரசர் எங்களுக்கு வேண்டவே வேண்டாம்"
" என்ன சொன்னீர்கள்.. யேசுதானே யூதர்களின் அரசன்.. சீசர் உங்கள் அரசர் அல்லவே என்று நீங்கள் தானே முன்பு கலகத்தில் ஈடு பட்டீர்கள். இப்போது எப்படி சொல்லுகிறீர்கள்."
" எங்களுக்கு இனி சீசர்தான் அரசர். நாங்கள் சீசரை எங்கள் அரசராக முழுமனதாக ஏற்றுக்கொள்கிறோம்" என்றனர் கலகக்காரகள்.
" தீர்மானமாகச்சொல்லுங்கள். யூதர்களின் அரசனாகிய யேசுவை நான் என்ன செய்யட்டும்?" என்றான் பிலாத்து.
" அவனை சிலுவையில் அடித்துக்கொல்லுங்கள். சீசர்தன் இனி எங்களுக்கு அரசர்.... இனிமேலும் நீர் இவனை விடுதலை செய்தால் நீர் சீசருக்கு நண்பராக இருக்க முடியாது. உமக்கு ரோமை ஆளுனர் என்ற பதவியும் நிலைக்காது" என்றனர் கலகக்காரர்கள்.
ஒரு நிமிடம் கதி கலங்கித்தான் போனான் பிலாத்து.  நீதி நேர்மை என்று பார்த்தால் இவர்கள் நம் பதவிக்கே வேட்டு வைத்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று நினைதவனாய் ஒருபேசின் தண்ணீர் எடுத்து தன் கையை நன்றாக கழுவினான்." இந்த நீதிமானின் ரத்தப்பழி என்மீது விழவேண்டாம் . இவன் மட்டில் நான் குற்றமற்றாவன்" என்றான் பிலாத்து.
" இவன் மீதுள்ள ரத்தப்பழி எங்கள் மீதும் எங்கள் சந்ததி மேலும் விழட்டும். நீ அவனை சிலுவையில் அறைய உத்திரவிடு" என்றனர் மக்கள்.
" நான் இந்த நாட்டில் சீசரின் ஆட்சியை நிலை நாட்டத்தான் சீசருக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்தேன். இந்த நசரேயனாகிய யேசுகிரிஸ்த்துவை சிலுவையில்  காவுகொடுப்பதன் மூலம் தான் அது நடக்கவேண்டும் என்பது விதியானால் அது அவ்வாறே நடக்கட்டும் என்று யேசுவை சிலுவையில் அறைய உத்திரவிட்டான். அந்த நியாயத்தீர்ப்பு இவ்வாறு எழுதப்பட்டு ரோமை சக்கரவர்த்திக்கும் பிரதி எடுத்து அனுப்பட்டது.
"நசரேயனாகிய யேசு ஒரு பாவமும் அறியாதவர்.சிலுவைசாவுக்கு உட்படுத்தும் அளவுக்கு ஒரு குற்றமும் அவரிடத்தில் காணப்படவில்லை .யூதேயாவில் அமைதியை  நிலைநாட்ட வேண்டியும் நம் ரோமை ராஜ்ஜியத்தின் ஆட்சியை இங்கு நிலை நாட்டவும் அவருக்கு அவரது சொந்த மக்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி சிலுவைச்சாவு அளிக்கபட்டது."
"இது அநியாயமான தீர்ப்பு"
என்னதான் கைப்பாசுக்கும் அன்னாஸுக்கும் மற்றும் கோவில் குருக்களுக்கும் கலகக்கரர்களுக்கும் பல மக்களுக்கும் இந்த தீர்ப்பு பெரும் மகிழ்வைத்தந்தாலும் நியாயமான மக்களுக்கும் சாதாரணமக்களுக்கும் சில நியாயமான கோவில் குருக்களுக்கும் இந்த தீர்ப்பு அநியாயமான தீர்ப்பாகப் பட்டது. பலர் பெரும் குரலெடுத்து " இது அநியாயமான தீர்ப்பு, இது
அநியாயமான தீர்ப்பு" என்று கூக்குரலிட்டனர்,பலர் மண்னை வாறித்தூற்றினர். ஆனால் இவர்கள் குரல் கலகக்காரர்களின் பெரும் கூக்குரல்களால் அடக்கபட்டுவிட்டது.
நியாயவான்களின் குரல்கள் எடுபடவில்லை. ஆனால் மனம் நொந்துபோன ஒரு வழிப்போக்கன் ஒரு பச்சைநிறக்கல் தென்படவே அதில் தன் உள்ளக்குமுறளை இவ்வாறு எழுதி வைத்தான். " இது அநியாயமான தீர்ப்பு. க்ளாடியா நீ இதில் தலையிடு. தீர்ப்பை மாற்றி எழுது. Judex injustus...Claudia Procles " இந்தக்கல் இன்றளவும் அந்த கபாத்தா என்னும்  நியாயத்தீர்வை நடந்த மண்டபத்தின் பின்புறத்தில் உள்ளதாம். ஆனால் யாருக்கும் இதைப்பற்றிய விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
போஞ்சி பிலாத்துவின் ஆணைப்படி யேசுநாதரும் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். நடந்த நிகழ்சிகளால் பெரிதும் வருந்தினாள் க்ளாடியா. தன் அன்புக்கணவன் தனக்கு யேசுவைகொல்வதில்லை என்று சத்தியன் செய்திருந்து அதற்கு அடையாளமாகக்கொடுத்திருந்த முத்திரை மோதிரத்தை அவனிடமே திருப்பிக்கொடுத்தாள். குற்ற உணர்வில் தலை தாழ்த்திக்கொண்டான் பிலாத்து. மெதுவாக ஆரம்பித்தாள் க்ளாடியா.
" அரசே, நான் என் கனவின் ஒரு பாதியைத்தான் உங்களிடம் அப்போது கூறினேன். இப்போது பிற்பாதியைக் கூறுகிறேன், தயவு செய்து கேளுங்கள்,
" அன்று வானம் திறந்து வான தூதன் வெளிவரக்கண்டேன்.
இன்று பூமி பிளந்து மரித்த ஆன்மாக்கள் பலர் உயிருடன் கல்லரையைவிட்டு வெளிவரக்கண்டேன்.
நல்ல ஆத்மாக்கள் பலர் பரலோகம் போய்ச்சேரக்கண்டேன்.
இந்த புண்ணிய பூமி கலவர பூமியாய் மாறக்கண்டேன்.
உம்முடைய பதவியும் பட்டமும் பறி போகக்கண்டேன்.
ஆயிரம் ஆத்மாக்கள் உம்மை துறத்தக்கண்டேன்.
மலைமீது நீர் ஓடி ஒளியக்கண்டேன்
அங்கும் விதி உம்மை துறத்தக் கண்டேன்
பைத்தியம் பிடித்து நீர் மலையினின்று வீழ்ந்து மரிக்கக்கண்டேன்.
ஐய்யோ என்று நான் அலறிச்சாய்ந்தேன்
இதோ ...இதோ நான் வந்தேன் அம்மா என்று என்மகன் என்னைத்தாங்கக்கண்டேன்."

"அத்தான் என் கனவின் முற்பகுதி மிகத்துல்லியமாய் நடைபெற்றுள்ளது. பிற்பகுதியும் நடக்கும் என்று என் மனது சொல்லுகிறது. என்ன செய்வேன். ஐய்யோ யேசு நாதா... என் கணவன் பிழை பொறுத்து அவரை மன்னியும்" என்று கதறி அழுதாள் க்ளாடியா.
" கனவு பலித்தது."
யேசுநதர் அப்போது தான் சிலுவையில் மரித்திருந்தார். அப்போது சூரியன் மறைய காரிருள் கொடுமையாய் சூழ்ந்திருந்தது. இனம்புறியாத பேய்க்காற்று ஓஓஓ என்றும் ஊஊஊஊ... என்றும் ஊத ஒரு பயங்கரமான ஒரு சூழ்நிலை உருவானது. இது சதிகாரர்களின் மிகத்துரோகமான கொடும்செயல் என்று இயற்கை தன் சீற்றத்தை எல்லாம் ஒன்று சேர்த்தாற்போல் பலமாக டமேர்....டமேர்... என்று இடியாயிடித்து தன் கோபக்கண்டனத்தை காட்டியது. பறவைகளும் புல்லினங்களும் செய்வதறியாது தாறுமாறாய் பறந்தன.
டமேர் என்ற சப்த்தம் காதைப்பிளந்தது. யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டிருந்த கல்வாரி மலை அவரது சிலுவை நாட்டப்பட்டிருந்த குழியின் அடியிலிருந்து தொடங்கி பூமி வரை பிளந்தது. யேசுவின் திரு உடலிலிருந்து வழிந்தோடிய அவரது திரு ரத்தம் அந்தப்பிளவு வழியே இறங்கி கீழே ஆழத்தில் புதையுண்டிருந்த ஆதாமின் எலும்புகளை நனைத்தது.
[ கல்வாரிமலையின் அடியில் தான் ஆதாம் கல்லரை இருந்தது என்பதற்கு ஆதாரம் உண்டு. ஒருமுறை எலிசேயுஸ் தீக்கதரிசி இங்கு தவம் செய்தபொழுது ஒரு கல்பெட்டியில்  ஒரு எலும்புக்கூட்டைக்கண்டு அதன் கபாலத்தை தொட்டு எடுத்தார். அப்போது ஒரு வானதூதன் உடனே தோன்றி " எலிசேயுஸ்....அது ஆதாமின் மண்டை ஓடு. அதைத்தொடாதே" என்று கூறி மறைந்தார். அதன் பிறகு தான் இந்த இடமே கபால மலை என்று அழைக்கப்பட்டதாக ஒரு சரித்திரம் உண்டு].
மேலும் ஒரு அதிசயம் நடந்தது. ஆதாம் காலம் துவங்கி யேசுநாதர் மரணம் வரை வாழ்ந்த பல புண்ணியவான்கள் உயிர் பெற்று எழுந்தார்கள். அவர்கள் மரணிக்கும்போது  போடப்பட்டிருந்த துணிகளோடே ஜெருசலேம் நகர வீதிகளிள் பவணியாக வந்தார்கள். அவர்கள் பாதங்கள் பூமியில் படவே இல்லை. யோவான் ஸ்நனகர் எழுந்து ஏரோதனுக்கு முன்
தோன்றி கட கட என நகைத்தார். அவன் அச்சம் மேற்பட ஜெருசலேம் தெருக்களிள் தலை தெறிக்க ஒடினான். பின் தன் கோட்டையில் எங்கேயோ ஒளிந்து கொண்டான்.
இவ்விதமே தேவாலயத்தின் பரிசுத்த குருக்கள் பலர் சிமியியோன், சக்காரியாஸ் போன்றவர்கள் தோன்றினார்கள்.[ இந்த சக்காரியாஸ் என்ற குருவைத்தான் மன்னன் ஏரோது தேவாலயத்தின் வளாகத்திலேயே வெட்டிக்கொண்றான். அவரின் பணியிடத்தில் தன் இரு மகன்களையும் பணியில் அமர்த்தினான். அவர்கள் தேவாலயத்தின் வருமானத்தில்
நன்றாக செழித்தார்கள்]. தேவாலயத்தின் திரைச்சீலை டர்...டர்... என்று இரண்டாகக்கிழிந்தது. தலைமைக்குரு அன்னாஸும் கைப்பாசும் திகிலுற்றனர். சிறிது நேரத்தில் எல்லாம்  இயல்பான் வாழ்க்கைக்கு திரும்பின. உயிரோடு தோன்றிய ஆண்மாக்கள் மீண்டும் கல்லறைக்கே திரும்பினர். தானாக திறந்த கல்லறைகள் மீண்டும் தானாகவே மூடிக்கொண்டன.இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்த அபியதார் இவர் உன்மையிலையே இவர் கடவுளின் திருமகன் தான் என்று சாட்ச்சியம் கூறினார்.

" கி. பி. 37 "
யேசுநாதர் மரித்த மூன்று வருடங்களுக்குப்பின் பிலாத்து அடியோடு மாறிப்போனான். பெரும் கொடுங்கோல் ஆட்சி புரிந்தான். பெரும் கலவரம் யூதேயா முழுவதும் வெடித்தது. அது சமாரியா மற்றும் கலிலேயா எங்கும் பரவியது. மன்னன் எரோதுவுக்கும் பிரச்சனை பெரிதானது. அவனது மாமனார் தன் மகளை ஏரோதன் விலக்கிவைத்து அந்தக்கிழவி
அபிகாயிலை திருமணம் செய்து கொண்டதால் தக்க சமயம் பார்த்து பழி வாங்கினான்.நாபாடியா நாட்டுக்கும் ஏரோதனுக்கும் ஒரு எல்லைப்பிரச்சனையை சாக்காக வைத்து பெரும் போர்
மூட்டினன். இதில் ஏரோதனுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. முடிவில் தோல்வி அடைந்தான். இந்த சமயம்பார்த்து அவன் உறவினன் ஏரோது அகரிப்பா அப்போதைய ரோமைய சக்கரவர்த்தியான காமக்கிழத்தன் கலிகுலாவிடம் ஏரோதன் அந்திப்பாஸைப்பற்றி ராஜ துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி அவன் பதவியைப்பரித்தான். ஏரோது அந்திப்பாஸை  அப்போதைய கால் என்னும் [இப்போதைய பிரான்ஸ்] நாட்டுக்கு நாடு கடத்தினான். அங்கு அவன் எப்போது செத்தான்... எப்படி செத்தான்... என்பது பற்றிய விபரம் தெரியவில்லை.
அவன் மனைவி அபிகாயிலும் அவள் மகள் சலோமியும் பனி சூழ்ந்த ஒரு மலையில் படகுப்பயணம் செய்யும் போது சலோமியின் தலைமுடி தொங்கிக்கொண்டிருந்த பனிக்கட்டிகளில்  சிக்கிகொண்டது. ஆனால் படகு போய்கொண்டே இருந்ததால் சலோமியின் கழுத்து அறுபட்டு அவலமாக செத்தாள். யோவான் ஸ்நானகர் அவளைப்பழி வாங்கிவிட்டதாக அபிகாயில்
அலறினாள்.
போஞ்சி பிலாத்தும் சமாரியர்கள் மீது கொண்ட அடக்கு முறையில் பலரைக்கொண்றதால் அவனும் ரோமைநாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டு அவன் மீது குற்றம் சாட்டப்பட்டு பதவி பறிக்கப்பட்டான். பிறகு அவன் கால் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டான். அவனால் பலவிதத்திலும் பழிவாங்கப்பட்டவர்கள் அங்கு அவனை கொல்ல முற்பட்டனர். பிலாத்துவின்
சொத்துக்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு நிற்கதியாக விடப்பட்டான். எனவே அவமானம் தாங்காமல் ஒரு மலை மீது ஏறி அங்கிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டான்.
பிலாத்துவின் மனைவி க்ளாடியா தன் நாட்டிற்கு சென்று தன் மகனுடன் வாழ விரும்பி ரோமுக்கு சென்று கப்பலிலிருந்து இறங்கி வரும்போது அவள் மகன் பிலோ தன் சப்பாணிக்கால்கள் குணமாகி அவன் தாயை வரவேற்க துறைமுகத்தில் காத்துக்கொண்டிருந்தான். யேசு என்னும் ஒரு யூத ராபி தன் அறையில் பிரவேசித்து " மகனே பிலோ எழுந்து நட" என்று தன் கையை நீட்டி தூக்கிவிட்டதாகவும் அதனால் அவன் உடனே குணம் அடைந்ததாகவும் கூறினான். க்ளாடியா பிற்காலத்தில் ஒரு கிரிஸ்த்துவளாக மாறினாள்.
அவள் கண்ட கனவு அட்சரம் பிசகாமல் நிறைவேறியது.

1 comment:

  1. nano titanium by babyliss pro - TitaniumArt
    nano titanium is a graphite oxide ford ecosport titanium (3-D-molecule) element, which is ion chrome vs titanium one titanium ore terraria of the most popular components of metal titanium build oxide (TOCs). As titanium wood stoves such, this oxide is

    ReplyDelete