அவளுக்கென்று ஒர்
மனம். பாகம். 2.
அனேக வருடங்கள் நிமிடங்களாக ஓடிவிட்டன. இப்போது
இயேசுநாதருக்கு 33 வயது. அவருடைய வேதபோதக அலுவலில் இது மூன்றாவது வருட முடிவு. இயேசுநாதரும்
அவருடைய இந்த உலக வாழ்க்கை முடியப்போவதை உணர்ந்தார். இதற்கு காரணமாய் அமைந்தவன் யூதாஸ்
என்னும் அப்போஸ்த்தலன்.
பெத்தானியில் லாசரின் வீடு.;-“ லாசர்… என் நண்பா…நீ
எனக்கும் என் அப்போஸ்த்தலர்களுக்கும் எவ்வளவோ உதவிகளை செய்திருக்கின்ராய். நான் உன்னிடம்
தங்கி இருந்த நாட்க்களிலெல்லாம் நான் என் தாய் வீட்டில் இருந்த நினைவுகளோடே இருந்தேன்.
அவ்வளவு நன்றாக நீயும் உன் சகோதரிகள் மார்த்தாவும் மரியாவும் கவனித்துக்கொண்டீர்கள்.
இதே கருத்தையே என் அப்போஸ்த்தலர்களும் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக நான் உனக்கு
நன்றி சொல்கின்றேன். ஆயினும் நான் உன்னிடம் மேலும் இரண்டு உதவிகளை கேட்க்கப்போகின்றேன்.
தவறாமல் நீ எனக்கு அதை வாக்களிக்க வேண்டும்.” என்றார் இயேசுநாதர்.
லாசர்,” ஆண்டவரே..
தேவரீர் என்னிடம் உதவி என்று கேட்க்கலாமோ… உத்திரவிடுங்கள் ஆண்டவரே.. அடியேன் செய்ய
காத்திருகின்றேன். தேவரீருக்கு நான் எவ்வளவோ நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன். இதுவரை
நான் உமக்கு செய்திருப்பது மிகவும் கொஞ்சமே…மிகவும் சொற்பம்,. ஆனால் தேவரீர் எனக்கு செய்திருப்பது மிகவும்
பெரிது. தேவரீர் எனக்கு மறு வாழ்க்கையை கொடுத்திருகின்றீர்…என் தங்கை மகதலேன் மரியாளை
அவள் மேற்கொண்டிருந்த பாவ வாழ்க்கையிலிருந்து மீட்டு கொடுத்திருக்கின்றீர். இவை யாவும்
எந்த மனிதராலும் எனக்கு செய்திருக்க முடியாத உதவிகள். ஆனால் தேவரீருக்கு நான் திருப்பி
செய்திருக்கும் உபகாரம் என்ன? ஒன்றுமில்லை.
என்னை அண்டி வந்திருக்கும் உங்களை தங்க வைத்து சோறு போட்டிருகின்றேன். அவ்வளவே.” என்றார்.
“ இருக்கலாம் லாசர். நானோ என் அப்போஸ்த்தலர்களோ உன்னுடன்
உறவு கொண்டாடுவதற்கு நம்மிடையே எந்த உறவும் இல்லை. ஒட்டும் இல்லை. அப்படி இருக்கையில்
நீ என்னை இவ்வளவு அதிகமாய் நேசித்து கவனித்துக்கொண்டதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.”
என்றார் இயேசு. அப்போது இயேசுவின் சீடர்கள் அவரவர் வேலையை பார்ப்பதற்கு வெளியே செல்ல
இயேசுவிடம் உத்திரவு பெற்றுக்கொண்டார்கள். அப்போது யூதாசும் வெளியே கிளம்பினான். அப்போது
இயேசு அவனை நோக்கி,” யூதாஸ்….நீ எங்கே போகின்ராய்.. நான் உன்னிடம் சில விஷயங்களைப்ற்றி பேச வேண்டும்.. சற்று நேரம் எனக்காக காத்திரு” என்றார்.
ஆனால் யூதாஸ் அவர் சொன்ன வார்த்தைகளை காதில் வாங்காமல் தன்போக்கில் போய்க்கொண்டிருந்தான்.
இயேசுநாதர் அதுவரை
தன் கரங்களைப்பற்றி இருந்த லாசரின் கைகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு ,” யூதாஸ்
… நில்..நீ இப்போது என்னோடு பேச வேண்டும்” என்றார். அப்போது யூதாஸ்,” மற்ற எல்லா அப்போஸ்த்தலர்களும்
அவர் அவர் இஸ்ட்டப்படியே செல்கின்றனர். ஆனால் நான் போகும்போது மட்டும்…. எனக்கு மட்டும்
ஏன் கட்டுப்பாடு.. என் இஸ்ட்டப்படி நடக்க எனக்கு உரிமை கிடையாதா?” என்றான்.
“ யூதாஸ்.. நான்
யாருக்கும் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை.அவர்கள் போவது என்ன காரியத்திற்கு என்று
எனக்கு நன்றாகத்தெரியும். ஆனால் உன் விஷயம் அப்படி அல்ல. நீ எங்கே போகின்றாய். யாரை
சந்திக்கப் போகின்ராய்… உன் தீர்மானம் என்ன.அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதுவரை
எனக்கு நன்றாகத்தெரியும்… உனக்கு வரப்போகும் அபாயத்தைப்பற்றியும் நான் அறிவேன். அதிலிருந்து
உன்னைக்காக்க வேண்டும் என்பதற்காகவே உன்னை எச்சரிக்க விரும்புகின்றேன்.”
“ உமக்குதான் எல்லாம்
தெரியுமே.. பிறகு ஏன் என்னை கேட்கின்றீர்.? நான் ஜெருசலேமில் என் நண்பர்களை காணப்போகின்றேன்..”
“ அவர்கள் உனக்கு
நண்பர்கள் அல்ல.. அவர்கள் உன்னை கொல்லப் போகும் சாத்தான்கள். நீ ஜெருசலேம் போகக்கூடாது.
அதற்கு பதில் நீ எங்காவது போய் உன்னை காப்பாற்றிக்கொள். அது உனக்கு மிகுந்த நலமாக இருக்கும்.
உனக்கு நேரப்போகும் பழிபாவத்திலிருந்தும் உன்னை காப்பாற்றக் கூடியதாக இருக்கும்.”
“ ஆண்டவரே…எனக்கு
என்னைப்பற்றி கவலை இல்லை. உம்மை பற்றிதான் எனக்கு கவலை. எனக்கு என்ன முடிவு ஏற்படப்போகின்றது
என்பது எனக்கும் உமக்கு என்ன முடிவு நேரப்போகின்றது என்பது உமக்கும் மிகவும் நன்றாகவே
தெரியும்..நான் ஏன் இந்த ஜெருசலேமை விட்டு போக வேண்டும். வேண்டுமானால் நீர் போய் எங்கேயாவது
பிழைத்துக் கொள்ளும். சாவைக்கண்டு உமக்கு பயம் வந்துவிட்டதா? அதனால்தான் நீர் இப்படி
பிதற்றுகின்றீர். ஆனால் என்னைப்பாரும்.. எனக்கு சாவைக்கண்டும் பயம் இல்லை. உம்மைக்கண்டும்
பயம் இல்லை. ஒரு காலத்தில் உம்மைக்கண்டு பயந்தேன். உம் தெய்வீகத்தன்மையைக்கண்டு பயந்தேன்.
உம் உயர்ந்த போதனைகளால் மக்கள் பலர் மயங்கினர். அப்படித்தான் நானும் மயங்கி இருந்தேன்.
நல்ல வேளை நான் இப்போது விழித்துக்கொண்டேன். ஆனால் உம்முடைய மற்ற சீடர்கள்தான் இன்னும்
மயக்கத்திலேயே இருகின்றனர். பாவம் அவர்கள். நீர் என்னையும் அவர்களோடு சேர்த்து ஏமாற்றி
விட்டாய். உம்மை நம்பிவந்த அவர்கள் எல்லாவற்றையும் இழந்தனர். இருந்த எல்லாவற்றையும்
உம்மால் துறந்தனர். இப்போது அவர்களிடம் ஒன்றும் இல்லை. அடுத்த ஒருவேளை சோற்றுக்கும்
யாரிடமாவது கை ஏந்தும் நிலைமைக்கு அவர்களை ஆளாக்கிவிட்டீர்.. இப்போது உலகமே எங்களைக்கண்டு
எள்ளி நகைக்கின்றது. உம்மால் உலகமே எங்களை பகைக்கின்றது. இனிமேல் எங்களுக்கு என்ன எதிர்காலம்
இருகின்றது? இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் என் நண்பர்களிடம் போகின்றேன்… எனக்கு
வழியை விடும்”
“ நண்பா..இதுதான்
உன் இறுதியான முடிவா?.எனக்கு பதில் சொல்லிவிட்டு போ….நீ எடுத்திருக்கும் உன் முடிவால்
உன் தந்தையை நோகச் செய்கின்றாய் …உன் நேசத்தாயருக்கு எவ்வளவு அவப்பெயரை ஏற்படுத்துகின்றாய்
தெரியுமா?” நீ செய்ய இருக்கும் காரியம் இந்த உலகம் முடிவு வரைக்கும் பேசப்படும்.. இன்று
நண்பர்களகவும் பெரும் உபகாரிகளாகவும் தோன்றும் யாவரும் நாளைக்கு உனக்கு எதிரிகளாக மாறுவர்.
அப்போவது வருந்தி பயன் இல்லை. இந்த உலகில் ஒளியானவர் இருக்கும்வரைதான் உனக்கு நல்வாழ்வு
கிட்டும். நாளைக்கு அந்த ஒளி மறைந்துபோனால் நரக இருள் உன்னை ஆட்கொண்டுவிடும்.. அப்போது
உன்னை காப்பாற்ற கூடியவன் யார்? இதை ஒருகணம் எண்ணிப்பார். நீ செய்யக்கூடிய காரியத்தால்
நீ அடையக்கூடிய ஆதாயம் என்ன? உலகமே உன் கையில் அடங்குமோ. பணம் பட்டம் பதவி அனைத்தும்
உன் வசமாகுமோ. வசமாகலாம்.. நாளைக்கு அதுவே
உனக்கு எதிராக திரும்பும். இதற்கெல்லாம் ஆசைப்பட்டவர்களின் கதி என்னவாகிப்போனது என்பதை
சரித்திரம் உனக்கு சொல்லவில்லையா? என் நண்பா… நானே இந்த உலக இரட்ச்சகர். இதை நீ அறியாததல்ல.
என் ஆண்டவரே நீர் என்னை இரட்ச்சியும் என்று ஒரு வார்த்தை சொல். எனக்கு அது போதும்.
உன் சம்மதம் இல்லாமல் நான் உன்னில் பிரவேசிக்க இயலாது. உன்னை இரட்ச்சிக்கவும் முடியாது
“
“ இயேசுவே… உம்முடைய
பசப்பு வார்த்தைக்கெல்லாம் இனி நான் செவி சாய்க்கப்போவதில்லை. என் தந்தையார் ஒரு பெரும்
பாவி. அவருக்கு நரகம் தான். ஆனால் என் தாயார் ஒரு புண்ணியவதி. அவரை நினைத்தால்தான்
எனக்கு கவலையாக இருகின்றது. ஆனாலும் நான் என் மனதில் கொண்டுள்ள காரியத்தை நான் நிறைவேற்றாமல்
போகப்போவதில்லை.. என் நண்பர்கள் என்னை அழைக்கின்றார்கள்.”
“ யூதாஸ்… என்
அன்பு சீடனே…நான் உன்னை நேசித்ததுபோல் வேறு எந்த சீடனையும் இவ்வளவு அதிகமாக நேசித்ததில்லை..ஒரு
தாய்க்கு தன் நோஞ்சான் குழந்தையின்மீதுதான் பாசம் அதிகமாய் இருக்கும் அதுபோலவே அன்புக்கும்
ஆதரவுக்கும் ஏங்கிய உன்னை அதிகமாக நேசித்தேன். இந்த உலக காரியங்களில் நீ வைத்திருக்கும்
பற்றை நீக்கிவிட நானும் எவ்வளவோ முயன்றேன். இவைகளுக்கு நீ அடிமை ஆகிவிடக்கூடாது என்னும்
காரணத்தினாலேயே உன்னை எப்போதும் என் கைகளுக்குள்ளாகவே வைத்திருந்தேன். ஆண்டவருடைய கரங்களுக்குள்
இருப்பதுதான் சிறந்த பாதுகாப்பு. அதுதான் சர்வ சுதந்திரம். அவரின் பாதுகாப்பிலிருந்து
வேளியே வரும் நபர் சாத்தானால் பீடிக்கப்படுவது உறுதி. காட்டில் விலங்கினங்களின் வாழ்க்கையைப்பற்றி
உனக்கு ஏதாவது தெரியுமா? தாயிடமிருந்து பிரிந்து வந்துவிட்ட கன்றின் கதி என்னவாகும்
தெரியுமா?. அதன் ஜீவியம் ஒரு இரவுகூட தாண்டாது. பல கொடிய மிருகங்களின் பார்வையில் அது
பட்டுவிட்டல் அது தப்பிப்பதற்கான சாத்தியமே இருக்காது. இப்படித்தான் உன் கதியும் இருக்கப்போகின்றது.
நீ என்னை தவறாக புறிந்துகொண்டாய். வீனே என்னை பகைகின்றாய். உன் தந்தை சீமோன்..நீ கூறியபடி
அவர் ஒரு பாவிதான். நாட்டின் விடுதலைக்காக பணியாற்றிய ஒரு வீரன் அவர். இதனால் அவருக்கு
ரோமை அரசு சிலுவைசாவு அளித்தது. அவர் கடவுளின் பரிவிரக்காத்தால் பாதாளங்களில் இருகின்றார்.
அவர் நரகதிற்கு பாத்திரவான் ஆகவில்லை. அதனால் தன்மகன் மீது மிகவும் கவலை கொண்டிருக்கின்றார்.
மனுமகனின் மரணத்திற்குப்பிறகு அவர் தன் மூதாதையர்களுடன் பரலோகம் செல்வார். அதுவரை அவருக்கு
தன் மகன் நரகத்திற்கு பாத்திரவான் ஆனான் என்னும் துன்பத்தை கொடுத்துவிடாதே. இது பாதாளங்களில்
அவர் அனுபவிக்கும் துன்பத்தை விட அதிக துன்பமாக இருக்கும்.” என்றார் இயேசு . ஆனால்
எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆயிற்று. எதுவும் அவன் காதில் ஏறாததுபோல் அவன்
பாட்டுக்கு போய்கொண்டிருந்தான்.அவனைப்பிடித்திருந்த சனியன் அவனை தள்ளிக்கொண்டு போனான்.விதி
யாரை விட்டது.
யூதாஸ் இயேசு இவர்களின் சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்த
லாசர்,” ஆண்டவரே இவன் தானே உம்மை காட்டிக்கொடுக்க போகின்றவன் “ என்றார்.
இயேசு,” நண்பா..
இதைப்பற்றி இப்போது பேசுவானேன்?. நான் உன்னிடம் கேட்ட இரண்டு உதவிகளைப்பற்றி பேசலாமே”
என்றார்.
“ பேசலாம் ஆண்டவரே..தயவு
செய்து என்னிடம் உங்களுக்குத்தேவையான எல்லாவற்றையும் கேளுங்கள். இரண்டு என்ன இரண்டாயிரம்
கேட்டாலும் நான் உமக்கு செய்ய ஆயத்தமாக இருக்கின்றேன்.”
“ நன்றி லாசர்.நான்
சொல்லியபடி நான் என் தாயை விட்டுப்பிரிய வேண்டிய வேளை வெகு சீக்கிரமே வரும் . அப்போது
என் தாயை உன் அடைக்கலத்தில் விட்டுச்செல்ல விரும்புகின்றேன். ஆனால் அதற்கு முன் நான்
வாதைகளின் ருசியை அனுபவிக்க வேண்டி வரும். யாவும் எழுதப்பட்டுள்ளபடியே நிகழும்.”
“ ஆண்டவரே.. இப்படி
நிகழத்தான் வேண்டுமா? இதை மாற்ற உம்மால் கூடாதா? உமக்கு இப்படி நேர்வதை என்னால் ஏற்றுக்கொள்ள
இயலாது.”
“ இல்லை.. இப்படி
நிகழத்தான் வேண்டும்.அப்போதுதான் மனுமகன் இந்த உலகத்திற்க்கு எதற்காக வந்தாரோ அந்தக்காரியம்
நிறைவேறும். யாவும் முன்குறித்தபடியே நிகழத்தான் வேண்டும்..இல்லாவிடில் இந்த உலகில்
மனத குலதிற்கு இரட்சண்யம் என்பதே இராது “
“ இது எப்போது நிகழும்?. எப்படி நிகழும்?” எங்கு
நிகழும்?”
“ அது என் நண்பர்களிள்
ஒருவனால் கொடுக்கப்படும் ஒரு முத்தத்திலிருந்து ஆரம்பிக்கும். அது வரும் பௌர்ணமி அன்று
இரவில் நடு சாமத்தில் நிகழும். அதற்கும் முன் மனுமகன் ஜெருசலேமில் யூதர்களின் அரசராக அங்கீகரிக்கப்படுவார். ஆண்டவரின்
பெயரால் வ்ருபவர் ஆசீர் பெற்றவர் உன்னதங்களில் ஓசான்னா என்றெல்லாம் அவரை வாழ்த்துவார்கள்.
ஆனால் அதே வாயால் அவனைக்கொல்லும் அவனைக்கொல்லும் என்றுகூறி அவரை வசைபாடுவார்கள். அப்போது
மனுமகன் இசையாஸ் தீர்க்கதரிசி கூறியபடி மிகுந்த அவமானப் படுத்தப்பட்டு அனைவராலும் இகழப்பட்டு
சிலுவையில் அறையப்படுவார். மிகுந்த பாடுகள் பலபட்டு இறுதியாக அவர் மரணிப்பார்.”
“ வேண்டாம் ஆண்டவரே…இனிமேலும்
என்னால் தாங்கவோ கேட்க்கவோ முடியாது. அந்த துரோகி யார் என்று சொல்லுங்கள். அவன் கதையை
நான் முடித்துவிடுகின்றேன்.”
“ வேண்டாம் லாசர்..மனுமகன்
வன்முறையை விரும்புவதில்லை. அன்பினால் சாதிக்க முடியாததை வன்முறையால் சாதிக்க முடியாது.என்
மரணத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. என் பிதாவின் சித்தத்தை முறியடிக்க இந்த
உலகில் எந்த அரசனாலோ அல்லது எவ்வளவு பெரிய போர்படையினாலோ முடியாது. இது நான் விரும்பி
ஏற்றுக்கொண்ட வாழ்க்கை. அதுவும் என்பிதாவின் சித்தப்படியே நிகழ்ந்தது.என் மரணமும் அவர்
சித்தப்படியே நிகழும்.இதில் எந்த மாற்றமும் நிகழ்த்த முடியாது.”
“ ஆண்டவரே நீ ஏன்
எகிப்த்திற்கு தப்பிச்செல்ல கூடாது. சிறிய வயதில் எகிப்த்து தானே உமக்கு அடைக்கலம்
கொடுத்தது?’
“ அப்போது எனக்கு
சிறுவயது. என் நேரம் அப்போது எனக்கு வரவில்லை ஆதலால் நான் எகிப்த்துக்கு தேவ கட்டளைபடியே
ஓடிப்போனேன். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. இப்போது என் நேரம் வந்துவிட்டது.
இதற்கு நான் அடிபணிந்துதான் ஆக வேண்டும். உண்மைக்கு சாட்ச்சியம் கூறத்தானே நான் இந்த
உலகதிற்கு வந்தேன். நான் சர்வேசுரனாக இருக்கும் பட்ச்சத்தில் உன் தாய் தந்தையற்கு கீழ்படிந்திரு
என்று கட்டளை கொடுத்துவிட்டு இப்போது மனுவாக இருக்கும் நான் என் பிதாவின் கட்டளையை மீறலாமோ”
“ இப்போது நான் என்னதான் செய்வது.?”
“ முதலில் நாம் வரவிருக்கும் பாஸ்காவை கொண்டாடி முடிப்போம்.
அதன்பிறகு எல்லாம் தான்னால் நடைபெறும்.”
“ நீங்கள் கேட்ட
அந்த இரண்டு உதவிகள் யாவை?”
“ஓஓஓ.. என் அருமை
நண்பா. நான் என் பாடுகளின்போது என் தாயார் எனக்கு ஆறுதல் அளிக்க என்னோடு இருக்க பரமபிதா
சம்மதிக்கின்றார். இதனால் அவர் என்உடன் இரட்சகி எனப்படுவார். என் வாதைகளில் முழு அளவிலும்
அவருக்கும் பங்கு உண்டு. ஏனென்றால் அன்று ஆண் பெண்ணோடு பாவம் செய்தான்.எனவே ஆண் இரட்சிக்கப்படுவது
போன்று பெண்ணும் இரட்சிக்கப்பட வேண்டும். ஏவாள் என்னும் பெண்ணால் இந்த உலகில் பாவம்
நுழைந்தது என்பதால் கடவுள் அவள் வழியாக வந்த மரியா என்னும் ஒரு கன்னிப்பெண்ணால் சாப
விமோட்ச்சனதிற்க்கு வழிவகுத்து சாத்தானை நன்றாக பழிவாங்கினார். அவள் பெற்றெடுத்த ஆண்குழந்தை
வழியாக இந்த உலகிற்கு இரட்சண்யம் வந்தது. என் வேதனையில் எனக்கு ஆறுதல் அளிக்க என் தாயார் இருப்பதால் அவருடைய
வேதனையில் அவருக்கு ஆறுதல் அளிக்க பெண்கள் தேவைப்படுகின்றார்கள். எனவே அவருக்கு ஆறுதல்
அளிக்க உன் சகோதரிகள் மார்த்தாவையும் மரியாளையும் அவருடன் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
“
“ இதை நான் உவப்புடன்
செய்வேன். நானும் அப்போது உம்முடன் வருவேன். உமக்கு தேவையான சகல உதவிகளையும் செய்வேன்.”
“ இல்லை.. என்
பாடுகளின் நாட்க்களில் நீ ஜெருசலேம் வரக்கூடாது.”
“ஏன் ஆண்டவரே…என்
சகோதரிகள் வரலாம்..நான் வரக்கூடாதோ? இது அநியாயம்.”
“ என் நண்பா… நான்
கூறுவதை கவனமாக்கக்கேள். அந்த நாட்க்களில் ஜெருசலேம் மக்கள் முழுவது சாத்தானின் கைப்பாவை
ஆக்கப்படுவர். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கூடமனம் மாறிப்போவார்கள். அதுவரை என்னை வாழ்த்தியவர்கள்
என்னை கொல்லும்படி ஆர்ப்பரிப்பார்கள். அந்த நிலை உனக்கு நேரக்கூடாது என்பதால்தான் உன்னை
ஜெருசலேம் வர வேண்டாம் என்று கூறுகின்றேன். ஆனால் உனக்கு வேறு வேலை கொடுக்கின்றேன். அந்த நாளின் இரவில் என் அப்போஸ்த்தலர்கள் அனைவரும்
சிதறிப்போவார்கள். அவர்களை குறை சொல்லிப்பலனில்லை. யாவும் தீர்க்கதரிசனத்தின்படியே
நிறைவேறும். என் மரணத்திற்குப்பின் ஆயனில்லா ஆடுகளைப்போல் சுற்றித்திரிந்து உன்னிடம்
சரணமாக வந்தடைவார்கள். அப்போது நீ ஒரு தாயன்புள்ள இதயத்தோடு அவர்களை ஏற்றுக்கொண்டு
என் சார்பாக அவர்களை மன்னித்து அவர்களை திடப்படுத்து. அவர்களுக்கு ஆறுதல் கொடு. அதற்கான
அதிகாரத்தை நான் உனக்கு தருகிறேன். அதுவரை நீ பெதானியிலேயே தங்கி இரு.இது நான் உனக்கு
கொடுக்கும் கட்டளைகூட.இறைவன் உனக்கு எல்லா ஆசீர்வாதங்களையும் தருவாராக.”
“ ஆண்டவரே.நீர்
சொல்லும் எந்த அப்போஸ்த்தலனையும் நான் மன்னித்து ஏற்றுக்கொள்வேன். ஆனால் யூதாசை மட்டும்
நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். அவனால்தானே இவ்வளவு வேதனைகளை நீர் அனுபவிப்பீர். அவன்மட்டும்
என் கைகளில் கிடைத்தால் அவன் கழுத்தை அறுத்து விட்டுத்தான் நான் மறுவேலை பார்ப்பேன்..
நான் சுபாவத்தில் வன்முறையாளன் அல்ல. ஆனால் அவனை என்மனம் மிகவும் வெறுக்கின்றது. அவன்
சீமோன் இல்லத்தில் என் சகோதரியை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தி இருக்கின்றான். இப்படிப்பட்ட
ஒரு துரோகியை நான் மன்னிப்பதா? மாட்டேன்.. முடியாது.”
“ லாசார்..கடவுள்
நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்தையும் கணக்கு பார்த்து தண்டிப்பார் என்றால் இந்த உலகில்
விரல்விட்டு எண்னக்கூடிய அளவிலேயே மனிதர்கள் இருப்பார்கள். ஆனால் அவரிடம் மன்னிப்பு
உள்ளது. இதேயே அவர் நம்மிடமும் எதிர்பார்கின்றார்.”
“ ஆண்டவரே தயவு
செய்து என்னை வற்புறுத்தாதீர்கள். அவனை நான் மன்னிக்க முடியாது.”
“ அப்படியானால்
நான் இனிமேல் எந்த விதத்திலும் உன்வீட்டில் அடி எடுத்து வைக்க மாட்டேன். உன்னுடன் நானோ
என் தாயாரோ என் அப்போஸ்த்தலரோ ஒருவரும் பழகாமல் உறவை முறித்துக் கொள்வோம்.சம்மதமா?
“
“ வேண்டாம் ஆண்டவரே..தங்கள்
வாயிலிருந்து இப்படி ஒரு சொல் எனக்கு வர வேண்டாம். தாங்கள் சொல்லியபடியே நான் செய்வேன்.”
“ சரி .இப்போது
யூதாஸ் எங்கே செல்கிறான்.?”
“ வேறு எங்கே?
கைப்பாசின் வீட்டுக்குத்தான். என்னை ஒரு முத்தமிட்டு காட்டிக்கொடுத்து ஒரு அடிமாட்டு
விலைக்கு விற்கத்தான் அங்கே போகின்றான். தேவாலயத்தில் பலியாகப்போகும் ஒரு செம்மரி ஆட்டுக்குட்டியின்
விலை முப்பது வெள்ளிக்காசுகள் .அவன் விற்பது இயேசு எனப்படும் இந்த செம்மரியைத்தான்
“
“ ஆண்டவரே யூதாஸை
தடுக்க முடியாதா?”
“ முடியாது. என்னைப்பற்றி
எழுதப்பட்டுள்ள யாவும் நிறைவேறியே ஆகவேண்டும். நான் வார்த்தையாகிய சுதனாகிய செர்வேசுரன்.
நான் இயேசு என்னும் பெயரில் மனிதாவதாரமாக வந்திருப்பதால் என்னைகொல்ல சாத்தானின் தலைவன்
லூசிபரும் மனிதனான யூதாசிடம் வந்திறங்கி இருகின்றான். யூதாஸ் தன்னை முழுவதும் லூசிபரிடம்
கையளித்துவிட்டான். எனவே என்னால் யூதாசை காப்பாற்ற முடியாது. இதற்காகத்தான் நான் அவனை
என்னிடம் முற்றிலும் சரணாகதி அடைய சொன்னேன். ஆனால் அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.. எனவே
நான் அவனில் பிரவேசித்து லூசிபரை வெளியேற்ற முடியவில்லை. ஒரு மனித இதயத்தில் ஒன்று
நான் இருக்க வேண்டும் அல்லது சாத்தான் இருக்க வேண்டும். நாங்கள் இருவரும் ஒரே இடத்தில்
இருக்க முடியாது.. நான் ஒளியானவன்.அவன் இருளானவன். நான் இருக்குமிடம் பரிசுத்தமானது.
அவன் இருக்குமிடம் அசுத்தமானது. நான் இருக்குமிடம்
சந்தோஷமாக இருக்கும். அவன் இருக்குமிடம் துக்கமாக இருக்கும். அங்கே அழுகையும் பற்கடிப்பும்
இருக்கும்..ஆகவே மனிதார்களே நீங்கள் யாரை தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
சொல்லப்படாத ரகசியம் என்பது ஏதும் இல்லை.”
“ அப்படியானால்
யூதாஸின் கதி என்னவாகும்?”
“ தேவாலயத்தின்
தலைமை சங்க உறுப்பினர்கள் யூதாசை மூளை சலவை செய்வார்கள். இல்லாத அல்லது கொடுக்க இயலாத
பதவிகளையும் பட்டங்களையும் அவனுக்கு கொடுப்பதாக அவனுக்கு வாக்களிப்பார்கள். இத்தகைய
பெருமைகளைத்தான் அவன் முன்பே தேவாலயத்தில் எதிர்பார்த்தான். ஆனால் அவர்களுக்கு அப்போது
அவன் தேவையாய் இல்லை. எனவே அவன் அதிலிருந்து வெளியேறி என்னிடம் வந்தடைந்தான். தலைமைச்சங்கத்தில்
கிடைக்காத பெருமைகள் என்னிடம் கிடைக்குமென்று என்னிடம் வந்தான். என்னிடமும் அவன் எதிர்பார்த்து
வந்தது கிடைக்காமல் போனதால் மீண்டும் அவர்களிடம் சரணாகதி அடைந்துவிட்டான். ஆனால் அவனுக்கு
நேரப்போகும் கதிதான் மிகவும் பரிதாபமானது. ஒன்று அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறாவிட்டால்
அல்லது அவர்களின் கடவுற்கொலை முடிந்துவிட்டால் அவனை கொண்று விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.
அல்லது யூதாஸ் தான் தேடியது கிடைக்காத ஏமாற்றத்தில் தற்கொலை செய்து கொள்வான்.”
இயேசுநாதர் சொல்லியபடியே அனைத்தும் நடந்தது. மூளைச்சலவை
செய்யப்பட்ட யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுக்கும் எண்ணத்தில் உறுதியாய் இருந்தான். பெரிய
வியாழன் அன்று கால் கழுவும் சடங்கில் இயேசு யூதாசின் கால்களையும் கழுவினார். அப்போது
யூதாஸ் தன் கால்களை விசுக்கென்று இழுத்துக்கொள்ள அவன் வலதுகால் இயேசுவின் தாடையில்
இடித்தது.. திடுக்கிட்டான் யூதாஸ்,”ஆண்டவரே இது தற்செயலாய் நிகழ்ந்தது. நான் வேண்டுமென்று
செய்யவில்லை.” என்றான்.
“ பரவாயில்லை யூதாஸ்.
நீ வேண்டுமென்று செய்யவில்லைதான்.. ஆனாலும் அன்று இசையாஸ் கூறியபடி,” என்னோடு பந்தி
அமர்பவனே எனக்கு எதிராக தன் குதிகாலை தூக்கினான்” என்பது நிறைவேற வேண்டுமல்லவா? அதனால்தான்
இவ்வாறு நடந்தது” என்றார்.ஆனாலும் நீ தெரிந்தே செய்யப்போகும் காரியத்திற்கு நீ தெரியாமல்
செய்த காரியம் அற்பமானதே.. மன்னிக்கக்கூடியதே” என்றார். பிறகு இயேசுநாதர் திவ்ய நற்கருணையை
ஸ்தாபித்து, குருத்துவத்தையும் ஸ்தாபித்து தன் ஆயுளின் கடைசி பாஸ்க்காவையும் முடித்து
வைத்தார். யூதாஸ் வெளியே கிளம்பினான். அப்போது இயேசுநாதர்,” யூதாஸ்…நீ செய்யப்போகும்
காரியம் என்னவென்று உனக்கும் தெரியும் நான் செய்யப்போகும் காரியம் என்னவென்று எனக்கும்
தெரியும்..ஆகவே நீ செய்ய வேண்டிய காரியத்தை விரைந்து செயலாற்று “ என்றார்.
வெளியே சென்ற யூதாஸ் தன் நண்பர்களை சந்தித்துவிட்டு
தன் வீடு சென்றான். யூதாசின் நண்பர்களில் ஒருவன்
அவன் காதில் ஏதோ ஒன்றை கிசுகிசுத்தான். யூதாசின் மனத்தில் கலவரம் வெடித்தது. அவன் முகத்தில்
கோப அலை வீசியது. எள்ளும் கொள்ளும் வெடித்தது. வீட்டினுள் நுழைந்த அவன் தன் மனைவியை,”
அடியே ரபேக்கா..என்னை என்ன இளிச்சவாயன் என்று நினைத்துக் கொண்டாயா. உன் யோக்கியதை என்னவென்று
எனக்கு தெரிந்துவிட்டது. இனிமேலும் என்னை நீ ஏமாற்ற முடியாது “ என்று கத்தினான்.
ஆதுவரை பொறுமையாக
இருந்த ரபேக்கா,” இதோபாரும் மனிதா…இந்த இரவு நேரத்தில் நானும் மரியாதையாகத்தான் உம்மிடம்
பேச வேண்டி இருக்கின்றது. என் யோக்கியதையில் என்ன குற்றம் கண்டு பிடித்தீர்.”
“ நீ வாலிபத்தில்
நாசரேத்தில் ஒருவனை காதலித்தாயாமே? உன் குட்டு வெளிப்படுத்தப்பட்ட பிறகு அந்தக்கிழவன்
உன்னை என் தலையில் கட்டிவைத்துவிட்டான். அவன் மட்டும் இப்போது உயிரோடு இருந்தால் அந்த
கிழட்டு நாயை கொண்றுவிட்டுத்தான் மறுவேளை பார்த்திருப்பேன்.. உன் காதலன் யார்? இப்போதே
உண்மையை சொல்லிவிடு”
ரபேக்கா இதற்கெல்லாம்
பயப்படுவதுபோல் தெரியவில்லை.மிகவும் அலட்ச்சியமாக,” ஆமாம்… நான் என் வாலிபத்தில் ஒருவரை
காதலித்தது உண்மைதான். அதற்கென்ன அவசரம் இப்போதுவரை. நான் என் மனதில் சுத்தமானவளாகவே
இருக்கின்றேன். என் மடியில் கணமில்லை .அதனால் எனக்கு உம்மைக்கண்டு பயமில்லை.”
“ அடியே ரபேக்கா..இப்படிப்பேச
உனக்கு என்ன தைரியம். நான் ஒருத்தனைக் காதலித்தேன் என்று உன் கணவனிடமே கூற உன் நாக்கு
கூசவில்லை?”
“ இல்லை என் நாக்கோ
அல்லது மனசோ எனக்கு கூசவில்லை. நான் வாலிபத்தில் காதலித்தது ஒருதலைகாதல். அது முற்றிலும்
என் அறியாமையில் நடந்தது. அப்போது எனக்கு உலகம் புறியாத வயது. இத்தனைக்கும் நான் விரும்பிய
அந்த வாலிபரை நான் ஒருதடவைகூட நேரில் சந்தித்து என் காதலை வெளிப்படுத்தியதில்லை. இந்தக்காதல்
நிறைவேறாது என்று நான் அறிந்துகொண்டது முதலாய் நான் அந்த மனிதரை வெறுத்து ஒதுங்கிவிட்டேன்.
இதுதான் நடந்தது. இதை நம்புவதும் நம்பாததும் இனி உம்பாடு.”
“ அடியே பாதகி…
சண்டாளி.. நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய். நீ மனதால் கெட்டுப்போன ஒரு விபச்சாரி.
உன் அழகு என்னை மயக்கிவிட்டது. உன் பணம் என் கண்னை மறைத்துவிட்டது. என்போல் முட்டாள்
இந்த உலகத்தில் யாருமில்லை இப்போது சொல் அவன் யார்?”
“ அவர் பெயரை சொல்ல
வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னை குற்றம் சாட்டும் நீர் முதலில் குற்றமற்றவராக இருக்க
வேண்டும்.. ஆண் என்றால் பெண்ணும், பெண் என்றால் ஆணும் ஈர்க்கப்படுவது உலகின் நீதி.
பருவத்தின் கோளாறு. நீ எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரன் என்பதும் பெண் என்றால்போதும் என்னும்
அளவுக்கு நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு அலையும் பெண் பித்தர் நீர் என்பதும் எனக்கு
தெரியாது என்று நினைத்துக்கொண்டீரோ. நான் ஒரு மரியாதைக்கு, கணவர் என்னும் மரியாதைக்கு
கட்டுப்பட்டுக்கொண்டு இருகின்றேன். இல்லை என்றால் நான் எப்போதோ உம்மைவிட்டு விலகிப்போயிருப்பேன்”
“ அடியே ரபேக்கா…
நான் அப்படித்தான். நீ உன் பனத்திமிரை என்னிடம் காட்டி என்னை மதிக்க மாட்டேன் என்கின்ராய்.
எங்கே என்னைவிட்டு விலகிப்போய்விடுவாயோ.? உன் காதலன் உன்னை அழைக்கின்றான் போலும்.அதுதான்
உனக்கு தைரியம் வந்துவிட்டது. நீ போவதானால் போய்க்கொள். எனக்கு கவலை இல்லை. ஆனால் அவன்
பெயரை மட்டும் எனக்கு சொல்லிவிட்டுப்போ”
“ அடப்பாவி மனிதா.
உன் நாக்கு அழுகிப்போகும். அவர் பெயரை தவறாக
உச்சரித்தால் உன் திரேகம் முற்றிலும் அழுகிப்-போகும். நான் காதலித்தவர் மிகவும் உத்தமர்.
மிகவும் ஒழுக்க சீலர்.அவர் கடவுளின் அவதாரம் .அவ்வளவு பெருமைக்குறிய அவர் பெயரை உச்சரிப்பதற்குகூட
நான் தகுதியானவள் அல்ல.”
“ ஓஓஓஓ… அப்படியா
செய்தி. நீ அவர் பெயரை சொல்லவே வேண்டாம்.நானே கண்டுபிடித்துவிட்டேன்.. நீயும் நசரேத்தூர்
காரி..அவரும் நசரேத்தூர் காரர். அவர் இயேசுநாதர் தானே?””
“ஆமாம்.”
“ஆ நசரேத்தூர்
இயேசுவே… அவள் காதலன் நீர்தானோ’ கடைசியில் நீர் என் அடிமடியிலேயே கை வைத்துவிட்டீரா.
இதற்கு நான் பழிக்குப்பழி வாங்காமல் விடமாட்டேன்.”
“ இதோ பாரும் அன்பரே…வார்த்தையை
அளந்து பேசும். நான் அந்த மகானிடம் ஒருதடவைகூட நேரில் சந்தித்து பேசியதில்லை. நடந்த
தவறு முற்றிலும் என்னுடையது. இதில் அந்த மஹானை இழுப்பானேன். உமக்கு புத்தி இருந்தால்
யோசித்துப்பாரும். ஆத்திரத்தில் அறிவிழந்து பேச வேண்டாம்.அது தேவ கோபத்தை வரவழைக்கும்.
அதை உம்மால் தாங்க இயலாது. ஆத்திரத்திலும் அவசரத்திலும் எடுக்கும் எந்த முடிவும் தவறாகத்தான்
போகும். நிதானமாக யோசித்து செயல்படும்.”
ஆனால் ஏற்கனவே சாத்தானின் பிடியில் சிக்கியிருந்த
யூதாசுக்கு தன் மனைவியின் காதலுக்கு காரணமாயிருந்தவர் இயேசுதான் என்று தெரிந்ததும்
அவர் மேல் மிகுந்த வர்மம் கொண்டான். அவரை காட்டிக்கொடுத்துவிட்டுத்தான் மறு வேலை பார்த்தான்.
அதுவரை மிகுந்த வீராப்பும், தைரியமுமாக இருந்து
இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசுக்கு இப்போது சாத்தான் வேறுமாதிரியான பாடத்தை போதித்தான்.
எனவே இப்போது யூதாஸ் வேறு மாதிரியான சுபாவத்துக்கு மாறினான். பயமும்,கோழைத்தனமும்,
அவ நம்பிக்கையும் கொண்ட மனிதன் ஆனான். தான் செய்தது என்ன பயங்கரமான பாவம் என்பதை உணர்ந்தவனாக,”
ஐய்யோ நான் பெரும் பாவியானேனே ..மாசற்ற என் ஆண்டவரை முப்பது வெள்ளிகாசுக்கு அசைப்பட்டு
நான் காட்டிக் கொடுத்தேனே. எனக்கு முப்பது வெள்ளிகாசு வேண்டும் என்று இயேசுவிடம் கேட்டிருந்தால்
அவரே எனக்கு கொடுத்திருப்பாரே. எனக்கு மன்னிப்பே இல்லை “ என்று அங்கலாய்த்தான். அதுவரை
நல்லவனாய் இருந்து சோதனைக்கு இடம்கொடுத்து ஒரு சாவான பாவத்தைக் கட்டிக்கொண்ட ஆத்மாவுக்கும்
இத்தகைய ஒரு அங்கலாய்ப்புதான் ஏற்படும். இதுதான் சாத்தானின் தந்திரம். பிறகு இதே காரணத்தை
காட்டிக்காட்டி அதன் பின் விளைவுகளை பூதாகரமாக காட்டி சாத்தான் அந்த ஆன்மாவை தன் ஆதிக்கத்தில்
நீடித்து இருக்கச்செய்து நிலைமையை மேலும் மேலும் மோசமாக்குவான். இப்படியாகத்தான் யூதாசுக்கும்
நடந்தது. இதிலிருந்து தப்பிக்க தற்கொலைக்கு முடிவெடுத்தான்.அன்றைய பெரிய வெள்ளிகிழமை
இயேசுநாதருக்கும் யூதாசுக்குமாய் வெகு பயங்கரமாக விடிந்தது.தன் கணவனின் நோக்கத்திலும்
தோற்றத்திலும் ஏற்பட்ட பெரும் மாறுதலை யூதாசின் மனைவி ரபேக்கா கவனிக்கத்தவறவில்லை.
” அன்பரே..நீர்
என்னவானாலும் என் கணவர். உம்மிடம் வாதிட்டு எந்த பிரயோஜனம் இல்லை என்பது எனக்குத்தெரியும்.
சொல்லுங்கள் என்ன நடந்தது..உமக்கு என்மீது இருந்த ஆத்திரத்தினாலும் பணத்தாசையினாலும்
இயேசுநாதரை காட்டிக்கொடுத்துவிட்டீர்..அப்படித்தானே…சொல்லுங்கள் என் அன்பரே.. சொல்லுங்கள்.”
“ என் அன்பே..உன்
பரிசுத்தமான அன்பை புறிந்துகொள்ளாதபடி சாத்தான் என் புத்தியை மாற்றிவிட்டான். அதைவிட
மோசம் என் பத்தினியை இந்த இயேசுநாதருடன் சம்பந்தப்படுத்தி என்னை வெறி ஏற்றிவிட்டன்.
ஆத்திரமும், கோபமும், கோழைத்தனமும், பேராசையும் இன்னும் எத்தனை எத்தனை வெறித்தனங்களும்
சேர்ந்து என்னை வெறிகொள்ளச் செய்துவிட்டன.இத்தனை பேய்களும் என்னை ஆட்கொண்டுவிட்டபடியால்
நான் மதி இழந்தேன். சாத்தானின் கைப்பாவை ஆனேன். முடிவில் என் ஆண்டவரை நான் முத்தமிட்டு
காட்டிக்கொடுத்துவிட்டேன். ஐய்யோ பாவமே… என் பெரும்பாவமே… என்னைவிட்டு விலகிப்போ…என்னை
தனியே விடு… என்னை கதிகலங்க வைக்காதே..”.என்று ஓஓஓவென்று அழுதான்.
ஆனால் அவன் மனைவி ரபேக்கா,” அன்பரே..நீர் இதைச்செய்வீர்
என எனக்கு மிகமிக நன்றாய் தெரியும். எப்படி எங்கிறீர்களா?’ தலைமை குரு கைப்பாஸின் மனைவியும் நானும் சிநேகிதிகள்.
அங்கு என்ன சதி நடக்கின்றது என்பது அவளுக்கு நன்றாய் தெரிந்திருந்ததால் அவள் என்னுடன்
அந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வாள். என்ன இருந்தாலும் அவளும் நானும் உண்மையுள்ள இஸ்ரேலிய
ஸ்த்ரீகள் அல்லவா. தங்கள் கணவர்கள் செய்யும் துரோகங்களை மன்னிக்கும்படி இயேசுநாதரிடமே
வேண்டினோம். அவரும் தாம் எத்தகைய குற்றங்களையும் மன்னிப்பதாகவும் அவர்கள் செய்யும்
பாவங்களை பரமபிதாவும் மன்னிக்கும்படி வேண்டுவதாகவும் கூறினார். ஆகவே என் அன்பரே ..நம்பிக்கை
இழக்க வேண்டாம். என்னோடு வாரும்… நான் உம்மை இயேசுநாதரிடம் அழைத்துப்போகிறேன். அவரை
சரணாகதி அடைந்தோரை அவர் ஏற்றுக்கொள்வார். அவரால் மன்னிக்கவே முடியாது என்னும் பாவம்
எதுவுமே இல்லை. கவலைப்படாதீர்.. வாரும் என்னோடு” என்றாள்.
“ இல்லை.. என்னால்
முடியாது..அவரால் என்னை மன்னிக்கவே முடியாது. எனக்கு தேவாலயத்தில் சில முக்கியமான வேலை
இருக்கின்றது. அதை முடித்துவிட்டு வருகின்றேன் “
“ இல்லை அன்பரே…நீர்
மிகவும் களைப்பாக இருகின்றீர். காலை உணவு முடித்துவிட்டு செல்லலாம். கோழி சமைத்து வைத்திருகின்றேன்..
இந்த கோழிக்கு இராயப்பர் கோழி என்று பெயராம். கைப்பாசின் மனைவி சொன்னாள். தகாத நேரத்தில்
கூவியதால் அவள் இது ஏதோ கெட்ட சகுனம் என்று பயந்துபோய் என்னிடம் கொடுத்தனுப்பினாள்.
நானும் சமைத்துவிட்டேன். சாப்பிடும்.”
“ அன்பே ரபேக்கா…
உன்னால் எப்படி என்னை மன்னிக்க முடிகின்றது… எப்படி என்னை நேசிக்க முடிகின்றது…நான்
கொடுத்துவைத்தவன் தான். ஆனாலும் நான் தகுதியற்றவன். என்னை கைவிட்டுவிடு…நான் அனைவரிலும் சபிக்கப்பட்டவன்..மனிதன் என்னும் பெயருக்கே நான்
தகுதி இல்லாத பெரும்பாவி.. தயவு செய்து என்னை விட்டுப்போய்விடு. எனக்காக நரகம் தன்
வாயை திறந்திருக்கின்றது. அதோ லூசிபர் தன் கைகளை விரித்து என்னை வா வா என்று கூப்பிடுகின்றான்.”
“ அன்பரே திடன்கொள்ளுங்கள். நம்பிக்கை கொள்ளுங்கள்.
இது எல்லாம் அந்த லூசிபரின் மாயத்தோற்றம்.
இந்த நேரத்தில்தான் நாம் விழிப்பாய் இருக்க வேண்டும். இயேசு நாதரிடத்தில் மன்னிப்பு
பெற வாருங்கள். அவரும் உம்மை மன்னிக்க சித்தமாய் இருகின்றார்.”
“ இல்லை.. அவரால் என்னக்க முடியாது. நான் மனம்திரும்ப
வேண்டுமெனவும் காட்டிக்கொடுத்து என் ஆன்மாவை நரகத்துக்கு பாத்திரவான் ஆளாக்காதபடிக்கும்
எனக்கு எவ்வளவோ புத்தி கூறினார். ஆனால் நானோ அவர் பேச்சை எதுவுமே காதுகொடுத்து கேட்க்கவில்லை..
இப்போது அவர் என்னை எப்படி மன்னிப்பார். அவரிடத்தில் நான் இருந்தால் நான் அந்தப்பாவியை
ஒருக்காலும் மன்னிக்கவே மாட்டேன்.”
“ இல்லை அன்பரே..
நமக்கும் இயேசுவுக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருகின்றது. நாம் மனிதர். ஆனால் அவர் அப்படியல்ல.
அவர் கடவுளாகவும் மனிதனாகவும் இருக்கும் ஒரு மகான்.அவரிடம் மன்னிப்பு ஏறாளம் என்பது
தாவீதரசரின் வாக்கு.”
“ ரபேக்கா … நீ
விஷயம் தெரியாமல் பேசுகின்றாய்.. அவர் எழுதியுள்ளபடியே மரித்து மூன்றாம் நாள் உயிருடன்
எழம்புவார். அவர் எழும்பிவந்து என்னை நரகத்தில் போடுவார்.”
ரபேக்காவுக்கும்
இது தெரியும் . ஆனால் தன் கணவனின் தற்கொலை எண்ணத்தை மாற்ற விரும்பி “அவர் மரித்த மூன்றாம்
நாள் உயிர்தெழ மாட்டார்..அவர் வந்தால்தானே உம்மை நரகத்தில் போடுவார். இதை மெய்ப்பிக்கவா.
ஆஹா இராயப்பர் கோழியே..நீ இராயப்பருக்கு சாட்ச்சியம் கூறியது உண்மையானால்…இயேசுநாதர்
உயிர்ப்பிப்பது உண்மையானால் நீயும் உயிர்த்தெழுந்து
வந்து எனக்கு சட்ச்சியம் சொல். இது இயேசுநாதர் மேல் ஆணை” என்றாள் ரபேக்கா. அவ்வளவுதான். சமைத்து வைக்கப்பட்டிருந்த
அந்த இராயப்பர் கோழி உயிர்பெற்றது..பிறகு மிகுந்த சப்த்தமாக கொக்கரக்கோ என்று மூன்று
முறை கூவி எங்கோ சென்று மறைந்தது.
இதைக்கண்ட யூதாஸ்
மிகுந்த திகுலுற்றான். மிகுந்த அவநம்பிக்கைக்கு ஆட்பட்டான். இயேசுநாதர் என்னை மன்னிக்க
மாட்டார் என்னைமன்னிக்க மாட்டர் என்று கூவிக்கொண்டே வெளியே ஓடினான். இனி நடக்கப் போவதெல்லாம்
பகவான் செயலே என்றும் தன் கையால் ஆகக்கூடியது எதுவுமே இல்லை என்றறிந்த ரபேக்கா ” இயேசு
ராஜா…என் கணவரை மன்னியும்.சாத்தானின் தலைவனும் உலகத்துப்பேய்கள் அனைத்தும் என் கணவரை
ஆட்கொண்டபிறகு அவரால் என்னதான் செய்ய முடியும். ஆனாலும் அவரை நீர் அறிவீர். அவர்மேல்
மிகுந்த இரக்கம் வைத்து அவரை மன்னியும் “என்று கண்ணீர் சிந்தினாள்.
அப்போது முன்னாள் தலைமை குரு அன்னாஸுடைய மகளும்
இந்நாள் தலைமை குருவுமாகிய கைப்பாஸின் மனைவியுமானவள் தலைதெறிக்க ஓடிவந்து, “ ரபேக்கா…
மோசம் போனோம்.கடவுளின் மகனாகிய இயேசுவுக்கு தீர்ப்பளிக்க பிலாத்துவின் அரண்மனைக்கு
கொண்டு போகின்றார்கள். நிச்சயமாக அவருக்கு சிலுவைசாவுதான் என்று என் கணவர் கூறினார்..
இயேசுவை காக்க என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. உன்னால் முடியுமானால் ஏதாவது செய்.
உன் கணவன் யூதாஸ் தலைமை சங்கத்தாரிடம் எவ்வளவோ வாதிட்டான். வாய் நிறைய சாபங்கள் கொடுத்தான்.
பிறகு வெளியே சென்றுவிட்டான். அவனுக்கு என்ன ஆனது என்று இதுவரை எனக்குத்தெரியாது .அடியே
ரபேக்கா.. இப்போது உன் கணவரின் நிலையும் என் கணவரின் நிலையும் அச்சம்தரும் மிகுந்த
சாபத்துக்குள்ளானது.” என்றாள்.
“ இயேசு நாதருக்கு
சிலுவை சாவா..அது மிகவும் கொடிய மரணத்தை தருமே.மிகுந்த அவமானத்துக்கு உள்ளாக்குமே.
உச்சம் தலைமுதல் உள்ளங்கால்வரை மிகுந்த வலி வேதனை தருமே… மாட்டேன்.. அவரை இந்த கதிக்கு
ஆளாக்க விடமாட்டேன்.. என்னால் ஆனதை நான் செய்வேன்” என்று கூறியபடி பிலாத்துவின் அரண்மனை
நோக்கி ஓடினாள்.
பிலாத்துவின் அரண்மனையில்
:- இயேசுநாதரிடம் மரண தண்டனைக் கேதுவான குற்றம் ஒன்றுமில்லை எனக்கண்டு அப்போதைய ரோமானிய
ஆளுநன் போஞ்சி பிலாத்து, இயேசுவைப்பற்றி உயர்ந்த நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்ததால்
அவரை விடுவிக்க வழிவகை தேடினான். அவன் மனதில் பட்டது ஒரு உபாயம். அதாவது அவரை இரத்த
விளாறாக அடித்தால் யூதர்கள் திருப்த்தி அடைந்து விடுவர்கள் என்றெண்ணி அவரை நாற்பது
சாட்டைஅடிகொடுக்க கட்டளை பிறப்பித்தான்.
இந்த சமயத்தில் ப்ரிட்டோரியம் என்னும் பிலாத்துவின் அரண்மனையில்
பிரவேசித்தாள்.ரபேக்கா.. இயேசுவுக்கு நாற்பது கசைஅடிகள் தண்டனையாக கொடுக்கப்பட்டதை
அறிந்து இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டாள். இந்த கசை அடி சமாச்சாரங்கள்
எல்லாம் கதைக்கு உதவாது என்றறிந்த ரபேக்கா அன்னாஸ் மற்றும் கைப்பாசின் உள்ளத்தில் இயேசுவுக்கு
சிலுவை சாவு முடிவானதை தொடர்ந்து அவர்கள் பிலாத்துவை நெருக்குவார்கள் என்பதைத்தொடர்ந்து
அவள் தன்மனதிலும் ஒரு முடிவெடுத்தாள். அது பயங்கரமான ஒரு முடிவாக இருந்தது. அந்த முடிவின்
விளைவு இயேசுநாதரை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி அவரின் திரு இரத்தம் அனைத்தையும் வெளியேற்றியது.
பிரிட்டோரியம் என்னும் அரண்மனையில் போஞ்சிபிலாத்துவின்
கசைஅடி உத்திரவை பெற்றுக்கொண்ட அபியத்தார் எனும் அரண்மனை பாதுகாவலன் அவரை அருகில் உள்ள
அந்தோணியா கோட்டைக்கு கூட்டிச்சென்றான். இந்த அந்தோணியா கோட்டையில்தான் இயேசுவுக்கு
கசைஅடி தண்டனை நிறைவேறியதும் முள்முடி சூட்டப்பட்ட சம்பவமும் நடந்தது. இன்று இந்த அந்தோணியா
கோட்டையை ஒரு தேவாலயமாக மாற்றி The Church of Flagilation என்று அழைகின்றார்கள்.
அந்தோணிக்கோட்டை
தலைவனிடம் இயேசுவை ஒப்படைத்து,” கவனம்.. உங்களுடைய அடியில் கைதியின் உயிர் போய்விடக்கூடாது.
அவன் உயிரோடு வேண்டும் எச்சரிக்கை” என்றான்.அபியத்தர்.
அதோணியா கோட்டைத்தலைவன்,”
அடே.. ரூபஸ்…டைட்டஸ் உங்கள் இருவருக்கும் நல்ல வேலை வந்திருகின்றது. இதோ கைதி..இயேசுநாதர்..
இவருக்கு நாற்பது கசைஅடி கொடுங்கள். கவனம் உங்கள் அடியில் கைதியின் உயிர் போய்விடக்கூடாது.
தெரிந்ததா.. போய் தண்டனையை நிறைவேற்றுங்கள்.” என்றான்.
கைதி இயேசுநாதரை பெற்றுக்கொண்டனர் ரூபஸும் டைட்டஸும்.
அப்போது முக்காடிட்டபடி தன்னை மறைத்துக்கொண்டு தன் கைகள் இரண்டிலும் இரண்டு பண மூட்டைகளுடன்
வந்தாள் ரபேக்கா. ரூபஸ் இதோ உனக்கு ஒன்று…டைட்டஸ் உனக்கு ஒன்று என்று அவர்களிடம் ரகசியமாக
கொடுத்தாள்.
“ அம்மணி.. இது எதற்காக?’
“ உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட
இயேசுநாதரை நீங்கள் இரத்த விளாறாக அடித்தே கொண்றுவிட வேண்டும். அதற்காகத்தான்.”
“ இவரையா? மஹான்
எனப்பட்ட இந்த இயேசுநாதரையா? அப்படி என்னம்மா பகை உங்களுக்கும் இயேசுநாதருக்கும்?”
“ அது உங்களுக்கு
தேவை இல்லாத விஷயம்.. இருப்பினும் நீர் கேட்டதால் நான் சொல்லுகின்றேன். அவரால் என்
வாழ்க்கை முற்றிலும் நாசமாகப்போயிற்று.போதுமா? போய் தண்டனையை நிறைவேற்று.
“அதற்கில்லை அம்மா.
அரசாங்க சட்டம் கைதிக்கு நாற்பது கசைஅடிகள் தான் தர வேண்டும் என்கின்றது.” என்று இழுத்தான்.
“ ஆமாம்..நீயும்
உன் சட்டமும்… இதற்குமுன் நீவீர் இப்படி செய்ததில்லையோ… நீங்கள் சட்டத்தை ஏமாற்றி எத்தனை
பேரை அடித்தே கொண்று இருகின்றீர்கள்.. உங்களைப்பற்றி எனக்கு நன்றாகத்தெரியும். உன்
அதிகாரி கேட்டால் அவன் பாதி தண்டனையிலேயே செத்துவிட்டான் என்று சொல். போய் வேலையைப்பார்.”
அவ்வளவுதான். அடுத்து
நடந்ததுதான் பயங்கரம். இயேசுநாதருக்கு நிகழ்த்தப்பட்ட கசை அடி தண்டனை போல் இந்த உலகில்
யாருக்கும் நடந்திருக்காது. இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டபோது தேவத்தாயாரும் இந்த கண்ணறாவிக்காட்ச்சியை
பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசுநாதர் உடலில் பட்ட பாடுகள் அனைத்தையும் தேவத்தாயார்
தன் மனதில் அனுபவித்தார்கள். பாவம். அந்த மாதரசி. பிறகு இயேசு நாதருக்கு முள்முடி சூட்டப்பட்டு
குற்றுயிராக கிடக்கும்போது அரண்மனைக்காவலன் அபியத்தார் வந்து இயேசுவை பெற்றுக்கொண்டான்.
குற்றுயிராய் நின்றிருக்கும் இயேசுநாதரைக்கண்ட போஞ்சிபிலாத்தும் பதறிப்போனான்.
என்ன அநியாயம் இது. இவனை மனிதரைபோலவா அடித்திருக்கின்றீர்கள். அடப்பாவிகளா…எச்சே ஹோமோ
என்று தன் அரச மொழியான லத்தீனில் கூறினான். அதற்கு இதோ மனிதன் என்று அர்த்தம். மீண்டும்
விசாரனண. இயேசுநாதரை காப்பாற்ற போஞ்சி பிலாத்து எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில்
முடிந்தன. இயேசுநாதரை விடுவித்தால் தன்பதவி பறிபோகும் என்றுணர்ந்த போஞ்சிபிலாத்து அவரை
சிலுவையில் அடித்துக் கொண்றுவிட உத்திரவிட்டான்.
அவன் உத்திரவிட்ட இடம் பிலாத்துவின் அரண்மனைக்கு கீழே உள்ள நிலவறையில் கல்தளம்
பாவப்பட்ட சமதலத்தில் உள்ளது. இந்த கல்தலம் பாவப்பட்ட இடம் தான் வேதாகமத்தில் கபாத்தா
எனப்படுகின்றது. அங்கிருந்த நியாயாதிபதியின் ஆசனத்தில் இருந்தபடியேதான் பிலாத்து தன்
தீர்ப்பை வாசித்தான்.
{ இந்த நியாய ஸ்த்தலத்திற்கும்
ஒரு சரித்திரம் உண்டு. அதாவது இயேசுநாதர் ஆறுமாத குழந்தையாய் இருக்கையில் பெரிய ஏறோதின்
சதியை சம்மனசானவர் திருக்குடும்பத்திற்கு கூறவே திருக்குடும்பமும் எகிப்த்துக்கு தப்பிச்சென்றது..
தன்னை சந்தித்த கீழ்த்திசை ஞானிகள் மீண்டும் தன்னை வந்து சந்தித்து மெசியாவைப்பற்றிய
செய்திகள் கூறுவார்கள் என்று எதிர்பார்த்த பெரிய ஏறோது அவர்கள் மீண்டும் தன்னை வந்து
சந்திக்காததுபற்றி பெரிதும் கவலை கொண்டான். ஆக மெசியா பெத்லஹேமில் பிறந்தது உறுதி அயிற்று.
தனக்கு போட்டியாகவும் தன்னைவிடவும் பெரிய அரசராக தோன்றியுள்ள அரசரை மெசியாவை கொல்லத்தேடினான்.
எனவே தன் ஆட்ச்சிக்குட்பட்ட அனைத்து ஊர்களிலும் விஷேஷமாக பெத்லஹேமிலும் இரண்டு வயதுகுட்பட்ட
ஆண் குழந்தைகளை கொல்ல உத்திரவிட்டான். அதன்படி இங்கு ஜெருசலேமிலும் மாசில்லாக்குழந்தைகளை
கொல்ல உத்திரவு பிறந்தது. இந்த உத்திரவை அமுல்படுத்த அரசாங்கம் ஒரு தந்திரம் செய்தது.
அதன்படி இரண்டு வயதுக்குட்பட்ட ஆண்குழந்தைகளுக்கு அழகுப்போட்டி வைக்கப்பட்டது. இதில்
அனைத்து ஜெருசலேம் தாய்மார்களும் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். ஜெருசலேம் தாய்மார்களும்
ஆசை ஆசையாய் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பரிசுகள் கிடைக்கும் என்று நம்பி தத்தம் குழந்தைகளுடன்
வந்தனர். ஆனால் அங்கு நடக்கப்போகும் பயங்கரம் அப்போதைக்கு அவர்களுக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. இந்த பிரிட்டோரியத்துக்கு உள்ளே வந்ததும் வந்திருந்த ஆண்குழந்தைகளை மட்டும்
வாங்கிக்கொண்டு தாய்மார்களை வெளியே அரண்மனை சதுக்கத்தில் தனியே விட்டனர். குழந்தைகளை
நிலவறைக்குள் கொண்டு சென்றதும் அவர்களை சப்த்தம் போடாமல் வாளால் குத்திக்கொண்றனர்..
உள்ளே போன தன் குழந்தை வெகுநேரம் ஆகியும் வரவில்லையே என்று நினைத்த ஒரு தாய் துணிந்து
ரகசியமாக கீழே நிலவறைக்குள் வந்து பார்த்தபோதுதான் அவளுக்கு அங்கே நடந்திருக்கும் பயங்கரம்
தெரிந்தது. உடனே அவள் போட்ட கூச்சலால் ஜெருசலேமே பரிதவித்தது. ஜெருசலேம் தாய்மார்கள்
பலருக்கு தங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டதை தெரிந்துகொண்டதால் பைத்தியம் பிடித்தது.
உள்ளே நிலவறையில் கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவரையும் அங்கேயே புதைத்தனர். அந்த சமாதியின்
மீதுதான் யாருக்கும் தெரியாதபடி கல்தளம் பாவப்பட்டு அதன்மீதே பிலாத்துவின் நியாய ஆசனமும்
வைக்கப்பட்டது. ஆக மாசில்லாத நம் ஆண்டவுக்கு தீர்வையிடப்பட்ட இடம் முப்பத்து மூன்று
ஆண்டுகளுக்கு முன் சுமார் நூற்றைம்பது மாசில்லா குழந்தைகளின். இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கப்பட்ட
இடம் ஆகும் தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கியிருந்த சதுக்கத்தில்
தான் இயேசுநாதரை கொல்லத்தேடிய கைப்பாசும் அவனுடைய சகாக்களும் அவனை சிலுவை அடியும் அவனை
சிலுவையில் அடியும் என்று கத்தி கூச்சலிட்ட இடமாகும்.
பிலாத்துவின் உத்திரவின்படி இயேசுநாதரும் அவருடன்
மேலும் இரு கள்வர்களையும் சிலுவையில் அடித்து கொண்றுவிட உத்திரவை பெற்றுக்கொண்டான்
நூற்றுவர் தலைவன் காஷியுஸ். என்னும் ரோமைய வீரன்.
இயேசுவின் பாடுகளின் ஸ்தலங்கள் மொத்தம் பதினான்கு. அதில் முதல்ஸ்தலம் இயேசுவை
மரணத்திற்கு தீர்வை இடப்பட்டது. இங்குதான் இயேசுவும் மற்ற இரு கள்வர்களும் தங்களுடைய
சிலுவையை பெற்றுக்கொண்டனர். இந்த இடம்தான் [ The Church of Condemnation ] என்றழைக்கப்படுகின்றது.
சிலுவையின் பாடுகளின்
பயணம் ஆரம்பம் ஆகும்போது காஷியுஸ் கூறியதாவது,” பொது மக்களே. எச்சரிக்கை. மரண தண்டனை
அடைந்த கைதிகளை தொடுவதோ அல்லது விடுவிப்பதோ ஏதேனும் முயற்சித்தால் அவர்களுக்கும் இதே
கதிதான். தண்டனை நிறைவேற்றப்பட ஒத்துழைப்பு தாருங்கள். இல்லையானால் சட்டம் பாயும்”
என்றான்.
திருப்பாடுகளின் யாத்திரை ஆரம்பமாகி விட்டது. சிலுவையின்பாடுகளின்போது
இயேசுநாதர் ஏழு முறை கீழே விழுந்ததாக
திருக்காட்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஏழு முறை விழுந்தது ஏன் என்றால் தலையான
பாவங்கள் ஏழு. அதாவது கீழ்படியாமை, ஆங்காரம், கோபம், மோகம், ரோகம், குரோதம், லோபித்தனம்
ஆகிய தலையான பாவங்களுக்கு பரிகாரமாகவே சுவாமி ஏழுமுறை கீழே விழுந்தார்.
இவற்றில் நான்காம் ஸ்தலமானது மிகவும் துக்கமானது.
இந்த இடத்தில்தான் இயேசு தன் தாயாரை சந்திகின்றார். இதற்காகவே தன் சிலுவையோடு ஒருமுறை
கீழே விழுந்தார். இயேசுவை எழுப்பிவிடும் நேரத்திற்குள்ளாக தன் தாயாரை சந்திக்க நேரம்
கிடைத்தது.. மரிக்கப்போகும் தன் மகனுக்கு தாயார் ஆறுதல் சொல்வதா… அல்லது தன் துயரத்தால்
இறந்துபோய்விடும் அளவுக்கு துக்கப்படும் தன் தாயாருக்கு மகன் ஆறுதல் சொல்வதா… என்ன
பரிதாபம்…ஆனாலும் ஒருவருக்கொருவர் தத்தம் கண்களால் ஆறுதல் சொல்லிக்கொண்டனர். மகனே அன்று
நான் ஆகட்டும் சுவாமி உம் சித்தப்படியே எனக்கு ஆகட்டும் என்று கூறியதால் நீ இந்த உலகுக்கு
வந்தாய். இப்போதும் நான் சொல்கிறேன்…ஆகட்டும் சுவாமி.ஆகட்டும். உம் சித்தப்படியே எனக்கு
ஆகட்டும். உம் கல்வாரிப்பயணம் வெற்றியாக அமையட்டும் என்று கண்னீர் வடித்தாள் தேவ அன்னை.
இதைக்கண்ட நூற்றுவர் தலைவன் காஷியுஸ், “ இப்போது அழுது என்னம்மா பிரயோஜனம். நீ உன்
பிள்ளையை நல்லபடியாக வளர்த்திருந்தால் இன்றைக்கு உனக்குதான் இப்படியொரு நிலைமை வந்திருக்குமா.
இல்லை அவனுக்குத்தான் இப்படியோரு நிலைமை வந்திருக்குமா…வளர்ப்பு சரியில்லை” என்றான்..
இதைகேட்ட தேவதாயாருக்கு இருதயமே வெடித்துவிடும் போல் இருந்தது. எனக்கா பிள்ளையை வளர்க்கத்தெரியாது?.என்
மகனை யார் என்று நினைத்துக்கொண்டாய்? அவர் யூத ராஜ சிங்கம். சிங்கம் அமைதியாக இருகின்றது
என்று அதை சீண்டி பார்க்கின்றாயா? அவர் எழுந்தார் என்றால் அப்போது தெரியும் சேதி..
அட நாயே.. என்னையா சொல்கின்றாய் வளர்ப்பு
சரி இல்லை என்று…இவ்வாறு கேட்டுவிட வார்த்தைகள் அவர் வாய்வரை வந்துவிட்டன. ஆனால் அவர்
தன்னை தாழ்ச்சியினிமித்தம் முழுமையாக அடக்கிகொண்டார். ஆனால் தன் தாயாரின் மனதில் என்ன
இருகின்றது என்பதை அறிந்துகொண்ட இயேசுநாதர் நூற்றுவர் தலைவன் காஷியுஸை பார்த்த பார்வையில்
அவனது சப்த்த நாடியும் அடங்கிப்போனது.
இயேசுவைப்பற்றி நன்றாக அறிந்திருந்த காஷியுஸ் அதுமுதல்
இயேசுவையும் அவரது திருத்தாயாரையும் மரியாதையாக நடத்த முற்பட்டான். பிறகு 5,6,7, ஸ்த்தலங்கள் கடந்து எட்டாம் ஸ்த்தலத்திற்கு
இயேசு வந்திருந்தார்.
இயேசுவை சிலுவை சாவினின்று தவிர்க்க முயன்று தோல்வியுற்ற
யூதாஸின் மனைவி ரபேக்கா இந்த இடத்திற்கு வரவும் இயேசுநாதர் இந்த இடத்திற்கு வரவும்
சரியாக இருந்தது. இயேசுவைக்கண்ட மாத்திரத்தில் அவர் முகத்தோற்றத்தைக்கண்ட ரபேக்காவும்
அங்கு கூடியிருந்த ஜெருசலேம் பெண்களும் துக்க மிகுதியால் ஓஓஓஓவென்று வாய்விட்டே கதறினார்கள்.
அப்போது ரபேக்கா பலத்த சப்த்தமிட்டு இவ்வாறு புலம்பினாள். “ ஓஓஓ… மனித புத்திரர்களுக்குள்ளே
அதிக சௌந்தர்யமுள்ளவரே உமக்கா இந்த கதி. …
வலிமை வாய்ந்த
அசூரை அடித்த செங்கோல் உம்முடையதல்லவா..அந்த வலிமை வாய்ந்த செங்கோலைப்பிடித்திருந்த
உமது கரங்கள் இப்போது சிலுவையை பிடித்துள்ளதே…உமக்கா இந்த கதி…
என் நேசர் வெண்மையும்
சிகப்புமாயிருந்து..ஆயிரம் பேர்களில் சிறந்தவர்.-அவர் சென்னி பத்தரைமாற்றுத்தங்கம்
போல் விளங்கும்… அந்த அழகு எங்கே?...
அவர் தலை முடியோ
பனங்குருத்துப்போல் அழகும் காகம்போல் கருமையாயும் இருக்கும்… அதில் இப்போது முள்முடி அல்லவா சூட்டப்பட்டுள்ளது.. அந்த அழகு
எங்கே?...
அவர் கண்களோ பாலில் கழுவப்பட்டு மஹா நதிகளின் ஓரமாய்
வாசம்பண்ணி மலை அருவி அருகே தங்கும் வெண்புறாவை நிகரும். அந்த அழகு எங்கே?
அவர் கன்னங்களோ பரிமள வர்க்க பாத்திகள் போன்றவை..
இப்போது அவை அடிபட்டு அடிபட்டு கோரமாய் மாறிப்போனது ஏன்?.
அவர் உதடுகளோ தெளிந்த
வெள்ளைப்போளத்தின் சாரத்தை வடியவிடும் லீலி மலர்கள் அவை எப்படி கிழிந்து போயின?
அவர் கரங்களோ சீராய்
கடையப்பட்ட சொக்கப்பச்சை பதித்த பொற்கரங்களேயாம்’
அவை இப்போது சக்த்தியிழந்து போனதெப்படி?’
அவர் மார்போ இந்திர
நீல இரத்தினங்கள் பதித்த யானைத்தந்தமேயாம்.
அவர் கால்களோ பசும்பொன் பாதங்களின்மேல் நிருத்தப்பட்ட
பளிங்குத்தூணுக்கு ஒப்பானவை. அவை இப்போது சக்த்தி இழந்து தள்ளாடுவதேன்?”
அவர் முகத்தைக்கண்டால்
லீபான் மலையை காண்பதுபோலும் அவர் நிற்கக்கண்டால் சிறந்த கேதுரு மரத்தை காண்பதுபோலும்
இருக்குமே… அய்யோ என் ஆண்டவரின் தோற்றம் முற்றிலும் மாறிப்போனதெப்படி?’
அவர் குரளோசை இனிமையானது. என் நேசர் முற்றிலும் விரும்பத்தக்கவரே
. ஐய்யோ… ஐயையோ…என் நேசரின் குரல் முற்றிலும் அடங்கிப்போனது ஏன் என்று அழுது புலம்பித்தள்ளிவிட்டாள்.
அப்போது ஒரு பரிசேயன்,”
அடியே ஜெருசலேம் குமார்த்திகளா…அவர் அழகை வர்ணித்தது போதும்.அவர் முழு நிர்வாணத்தையும்
மலைமீது காணலாம். மேலே வந்து பாருங்கடி “ என்று கொச்சையாய் தூஷித்தான்.
அப்போது இயேசுநாதர்,”ஜெருசலேம் பெண்களே..நீங்கள்
இங்கிருக்க வேண்டாம்.கடவுள் கொலை செய்பவர் மத்தியில் நீங்கள் நிற்பதைவிட உங்கள் இல்லங்களுக்கு
செல்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும். நீங்கள் எனக்காக அழவேண்டாம்..உங்கள் கணவர்களுக்காகவும்
உங்கள் பிள்ளகளுக்காகவும் அழுங்கள். ஏனென்றால் இந்த நேரம் தண்டனை இல்லாமல் போகாது.
பச்சை மரத்திற்கே இந்த கதி என்றால் பட்ட மரத்துக்கு என்ன ஆகும்? அந்நாளில் பிள்ளை இல்லாத
தாய்மார்கள் பாக்கியவதிகள்.. அந்த நாளில் அழிபாட்டுக்குள் முதலில் விழுபவன் பாக்கியவான்.அவன்
கொடுத்து வைத்தவன் என்று சொல்லப்படுவான். ஆகவே கொடுமை உங்கள் மேல் விழாதபடிக்கு உடனே
வீடு திரும்புங்கள்.. உங்களை நான் ஆசீர்வதிக்கின்றேன். பரமபிதாவிடம் எனக்காக மன்றாடுங்கள்
.போய் வாருங்கள்.” என்றார்.
ஒருவழியாக இயேசு நாதரின் பாடுகளின் பயணம் கல்வாரி
மலையில் முடிந்தது. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு சிலுவையும் அதனிடத்தில் நிலையாக
நிறுத்தப்பட்டுவிட்டது. இயேசுவின் வலதுபக்கத்தில் ஒரு கள்வனும் இடதுபக்கத்தில் ஒரு
கள்வனும் சிலுவையில் அறையப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுவிட்டனர். அப்போது ரபேக்கா நூற்றுவர்
தலைவன் காஷியுஸிடம் வந்து தான் இயேசுவிடம் ஒருசில நிமிடங்கள் பேச உத்திரவு கேட்டாள்.
முதலில் மறுத்த அவன் பிறகு பெரிய மனது வைத்து அவளை இயேசுவிடம் போக அனுமதித்தான்.. ஆனால்
அவள் மரணதண்டனை பெற்ற குற்றவாளியை இயேசுவை.தொட
அனுமதிக்கவில்லை.
அப்போது ரபேக்கா,” ஆண்டவரே நீர் என்னையும் அறிவீர்
என் கணவர் யூதாஸையும் அறிவீர்..எங்களை மன்னியும் சுவாமி.. எங்களை மன்னியும்.என் கணவர்
உம்மை காட்டிக்கொடுத்த பாவத்துக்கு ஆளானார் என்றால் நான் …அவர் மனைவி… உம்மைக்கொல்லும்
பாவத்துக்கு ஆளானேன். இப்படி கணவன் மனைவி இருவருமா தேவ மைந்தனைக் கொல்லும் குற்றத்துக்கு
ஆளாக வேண்டும். என்ன அசிங்கமான பிறவி நாங்கள். அவர் செய்தது காட்டிக்கொடுத்த பாவம்.நான்
செய்தது கொலைகுற்றம். உமக்கு இந்த சிலுவைச்சாவு வேண்டாம் என்றுதான் ஐய்யா நான் உம்மை
சவுக்கால் அடித்தே கொண்றுவிட முயற்சித்தேன். அது உமக்கு எளிதான, வேதனை குறைவான சாவாக
முடிந்திருக்கும் அது தோல்வியில் முடிந்தது. என் முயற்சி உம்மைப் பொறுத்தமட்டில் ஒரு
கருணைக்கொலை போன்றதே. எங்களை மன்னித்தருளும் ஐய்யா.. என்று கதறினாள்.
இதே நேரத்தில் யூதாஸ் தனக்கு எவ்வித மன ஆறுதலும்
கிடைக்காமல் அலைந்து திரிந்து மிகுந்த அவ நம்பிக்கைக்கு ஆட்பட்டு கடைசியில் ஒரு மரத்தில்
தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான். யூதாசின் மரணத்தை இயேசுநாதர் உடனே அறிந்துகொண்டார்.
ஆனால் யூதாசின் மனைவி ரபேக்காவுக்கு அவள் கணவன் இதே நேரத்தில் தற்கொலை செய்துகொண்டது
தெரியாது.
ரபேக்காவை இயேசுநாதர்
அறிவார் என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளமலும் அவளுக்கு ஆறுதல் சொல்லும்படியாகவும் அவளுக்கும்
அவள் கணவன் யூதாசுக்கும், மற்றும் அவரை இம்சித்த அனைவருக்குமாகவும்’ சேர்த்து பொதுவாக,”
பிதாவே…இவர்களை மன்னியும்..இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கின்றார்கள்… இவர்களை
மன்னியும் “ என்றார்.
காஷியுஸ்,” அம்மணி… போதும்…விலகிச்செல்லுங்கள் “
என்றான்.மிகுந்த துயரத்துடன் ரபேக்கா அங்கிருந்து அகன்றாள். சிலுவையின் அடியில் மாதாவுக்கு
துணையாக பல பெண்கள் இருந்தாலும் அவர்களுள் இவளும் ஒருத்தியாக அவர்களுடன் கலந்து நின்றாள்.
தன் மகனுடன் ரபேக்கா பேசிய அனைத்தையும் தேவத்தாயாரும்
கேட்டார்கள். தன் மகனுடைய சொல்லொண்ணாத்துயருக்கு இவளா காரணம்? ரபேக்கா.. நீயா இப்படி
செய்தாய்.?. உன்னால் அவர்பட்ட கசை அடிகளால் என் மகனின் மார்பும் முதுகும் ஏர் உழுத
நிலம்போல் ஆயிற்றே.. இருக்கட்டும் ரபேக்கா இருக்கட்டும் இதுவும் அவர் சித்தம்தான் போலும்.அவர்
சித்தப்படியே எனக்கு ஆகட்டும்.” என்றார். இதைக்கேட்ட ரபேக்கா தன்நெஞ்சு வெடித்துவிடும்
போல் கதறி அழுதாள். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. என்னை மன்னித்துவிடுங்கள்…என்று
மாதாவின் கால்களை கட்டிக்கொண்டு அழுதாள். அம்மா.என்னனைப்போல் பாவி இந்த உலகத்தில் யாரும்
இருக்க முடியாது. நாசரேத்தில் என்னை நீங்கள் பெற்ற மகள் போல் எவ்வளவோ காலம் ஊட்டி வளர்த்தீர்கள்
அம்மா..அதை நான் மறக்கவில்லை. ஆனாலும் என் அறியாமையினால் உண்ட வீட்டுக்கு இரண்டகம்
செய்தேன்… இந்த பாவப்பட்ட பிறவியை மன்னித்துவிடுங்கள் அம்மா.. மன்னித்துவிடுங்கள்”
என்று கதறிகொண்ட மூர்ச்சை ஆனாள் ரபேக்கா. அவள் கண் விழித்துப்பார்க்கும்போது இயேசுநாதர்
மரித்துப்போய் இருந்தார்.
பிறகு இயேசுநாதரின்
ஈமச்சடங்குகள் அனைத்தும் நல்ல விதமாய் முடிந்தன. ரபேக்கா இப்போது முற்றிலும் மாறிப்போய்
இருந்தாள் ..தேவத்தாயாருக்கு ஆறுதலாக அவருடனே தன் காலத்தை கழிக்க முடிவு செய்தாள்.
இதற்காக தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று இராயப்பரிடம் கொடுத்துவிட்டு மாதாவுடனே
தங்கிவிட்டாள்.
தேவத்தாயாரும் அவளை மறுமணம் செய்துகொள்ளும்படி
பலதடவை சொல்லிப்பார்த்துவிட்டார். ஆனால் அவள் கடைசிவரை சம்மதிக்கவே இல்லை..” போதும்
அம்மா இந்த உலக வாழ்க்கை. நான் உங்கள் மகனை மணக்க விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை.
என் தந்தையின் விருப்பப்படி ஒருவனை திருமணம் செய்துகொண்டேன். அவனும் எனக்கு நிலைக்கவில்லை.
[ யூதாஸ் தற்கொலை செய்துகொண்டான்.] பிள்ளையை பிடிக்கப்போய் அது குரங்காய் முடிந்தது
என்பது போல் அது என்னைப் பொறுத்தமட்டில் மிகச்சரியாக அமைந்தது. உங்களுக்கு மறுமகள்
ஆகவில்லையானாலும் மகளாக இருக்கவே இப்போது நான் ஆசைப்படுகிறேன் “என்றாள் ரபேக்கா.
“ ஆகட்டும் அம்மா..
ஆகட்டும். இதுவும் அவர் சித்தம்தான் போலும்.நீ நீடூழி வாழ்க என்றார் தேவத்தாயார். இயேசுநாதர்
இறந்து சரியாக பதினைந்து வருடம் அளவாக மாதா இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டு அப்போஸ்த்தலர்களுக்கு
ஆறுதல் சொல்வதும் அவர்களை தேற்றுவதும், சமயத்தில் போதிப்பதுமாக அவர்களுடைய ஜீவியம்
கழிந்தது.தன் கடைசி வருடத்தில் ஜெருசலேமில் வேதகலாபணை ஆரம்பிக்கும் சூழ்நிலை இருந்ததால்
பாதுகாப்பு கருதி தேவத்தாயாரை அவருடைய சீடர் அருளப்பர் அவரையும் அவருடனே தங்கி வாழ்ந்த
பெண்களையும் இன்றைய துருக்கி நாட்டில் அமைந்திருக்கும் எப்பேசு பட்டிணத்தில் குடி அமர்த்தினார்.
இதில் ரபேக்காவும், மதலேன் மரியாளும், செராபி எனப்பட்ட வெரோணிக்காவும் அடக்கம். மாதாவுக்கு
தனிவீடும் சற்று தள்ளி மதலேன் மரியாளூம் இன்னும் சற்று தள்ளி ரபேக்காவும் தனித்தனியே
வாழ்ந்து வந்தார்கள். மாதாவுக்கு உதவிக்கு அவருடைய பெரியம்மா எலிசபெதம்மாளுடைய சகோதரி
மாரா என்னும் பாட்டி அவருடனே ஒன்றாக வசித்துவந்தார்கள்.
இப்படி இருக்கையில்
ஒருநாள். வெரோணிக்கம்மாள் தலைதெறிக்க ஓடிவந்து மகதலேன் மரியாளை அழைத்தாள். அவளும் ஓடிவந்து
ரபேக்காவின் வீட்டுக்குள் வந்து பார்த்தாள்.
அவர்கள் அனைவருமே அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்கள். ரபேக்கா முழுவதுமாக
இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். உடனே அவளுக்கு தண்ணீர் தெளித்து மூர்ச்சை தெளிவித்தார்கள்
.” என்ன நடந்தது
ரபேக்கா சொல்… என்ன நடந்தது. “
“ இது ஒன்றும்
எனக்கு புதிதல்ல. இது நானாக ஏற்படுத்திக்கொண்டது .எனக்கு நானே கொடுத்துக்கொண்ட தண்டனை.இது.”
“ அடிப்பாவி… என்னகாரியம்
செய்தாய் சொல். இல்லை என்றால் உன்னை காப்பாற்றவே முடியாது. அவ்வளவு இரத்தப்பெருக்கு
ஏற்பட்டுள்ளது “
“ யேசுநாதருக்கு
சிலுவை சாவு முடிவான தீர்மானதாக இருந்ததால் அந்த அவமான வலிவேதனை தரும் கொடுமையான சிலுவைசாவை
அடைவதை விட கசையடிகளால் ஏற்படும் மரணம் அவருக்கு வேதனையும் துன்பமும் குறைவானதாக இருக்கும்
என்பதினாலேயே நான் அடியாட்க்களுக்கு அவரை அடித்தே கொண்றுவிட பணம் கொடுத்தேன். ஆனால்
விதி வேறுவிதமாக வேலை செய்துவிட்டது. அவர் கசைஅடி மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டு
சிலுவைச்சாவுக்கு கையளிக்கப் பட்டுவிட்டார். நான் எடுத்த தவறான முடிவால் அவர் பட்ட
காயம் எத்தனை? சிந்திய இரத்தம் எத்துணை? வலிவேதன எத்தனை? எல்லா வேதனைகளும் அவருக்கு
இருமடங்கு, மும்மடங்கு என்று அதிகரித்துவிட்டது. எல்லாம் என் அறியாமையினால் வந்த வினை.
இதற்கு பிராய சித்தமாக நான் என்னை வருத்திக்கோள்ள ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில் நான் என்னை கசையால் அடித்தபோது வலி
மிகவும் கடுமையாக இருந்தது. ஆனால் போகப்போக எனக்கு அது வலிக்கவே இல்லை. இன்னும் வலி
வரவேண்டும் , இன்னும் இன்னும் என்று நான் என்னை அடித்துக்கொள்ளவே….ஒரு கட்டத்தில் அந்த
அடிகளே எனக்கு இன்பமாயின. எனக்குள் வேதனையில்லாமல் ரத்தபோக்கு ஆரம்பிக்கவே மேலும் மேலும்
எனக்கு வலிவேதனை வேண்டும் என்று என்னை மேலும் மேலும் கடுமையாக சவுக்கால் விளாசித்தள்ள
ஆரம்பித்தேன். என் ஆண்டவர் இப்படித்தானே துடித்திருப்பார்… அலறி இருப்பார் என்று வேதனையை
அதிகரிக்கும்படி மேலும் மேலும் துன்புற்றேன். இன்று இப்படி அகிவிட்டது. அவள் கண்கள் சொறுகிகொள்ள ஆரம்பித்தன.”
“ அடிப்பாவி..இப்படியா
உனக்கு தண்டனை கொடுத்துக்கொள்வது? இதெல்லாம் உனக்கு தேவையா. கடவுள் உனக்கு கொடுத்திருக்கும்
துன்பம் போதாது என்றா இவ்வாறு செய்யத்துணிந்தாய். நீ கணவனை இழந்த துன்பத்தைவிடவா உனக்கு
மேலும் ஒரு கொடும் துன்பம் வேண்டும்?”
இந்த சமயத்தில்
தேவத்தாயாருக்கு விஷயம் தெரிந்து அவர்கள் ஓடோடி வந்து ரபேக்காவை தன் மடிமீது கிடத்திக்கொண்டார்கள்.
“ என் மகளே ரபேக்கா…இதோ நான் வந்திருகிறேன் பாரம்மா… ஏன் அம்மா இவ்வாறு செய்து கொண்டாய்
? உன் துன்பத்தில் உனக்கு துணைக்கு ஒரு தாய் இருகின்றாள் என்பதை ஏன் அம்மா மறந்துபோனாய்?
“
“ அம்மா… எனக்கு
என் கணவர் போல் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் எண்ணம் கிடையாது. என்னால் உம் திருமகனுக்கு
ஏற்பட்ட வலி வேதனை எவ்வளவு என்பதை நான் தியானிக்காத நாளே இல்லை. இதற்கு பிராய சித்தமாகத்தான்
நான் என்னை வருத்திக்கொள்ள ஆரம்பித்தேன். “
“ எவ்வளவு காலமாக
இவ்வாறு செய்து வருகின்றாய்? என்னிடம் நீ ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் அப்போதே
தடுத்திருப்பேனே”
“ அதனால் தானம்மா
நான் உங்களிடம் சொல்லவில்லை. இயேசுநாதர் இறந்ததிலிருந்து அவர் உயிர்விட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்
இந்த பதினைந்து வருடங்களாக இப்படித்தானம்மா செய்து வருகின்றேன். அம்மா… நான் உங்களிடம்
ஒரு விஷயம் கேட்க்கலாமா அம்மா?’
“ கேள் ரபேக்கா…
கேள்… நீ என்றாவது ஒருநாள் என்னிடம் இந்த கேள்வியை கேட்ப்பாய் என்று எனக்குத்தெரியும்.
தயங்காமல் கேள்.”
“ஏன் அம்மா உங்களுக்கு
என்னைப்பிடிக்காமல் போயிற்று. நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எந்த குற்றமோ,பாவமோ
செய்ததாக நினைவில்லை. நாங்கள் வேறு குலம் என்பதாலா… அல்லது. நான் உங்கள் மகனுக்கு தகுதியானவளாக
இருக்க முடியாது என்பதாலா? உங்களுக்கு மருமளாக வர நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா…
நீங்கள் மட்டும் என்னை உங்கள் மருமகளாக ஏற்றுக்கொண்டிருந்தீர்கள் என்றால் அவருக்குத்தான்
இந்த நிலை வந்திருக்குமா? அல்லது உங்களுக்குத்தான் இந்த நிலை வந்திருக்குமா? பாருங்கள்
. இப்போது எல்லாம் நாசமாகப்போயிற்று.”
“ மகளே ரபேக்கா…திருமண
வாழ்க்கை என்பது குடத்திலிட்ட விளக்கு போன்றது. ஒரு சிறிய வட்டத்துக்குள் அது அடங்கிவிடும்.
ஆனால் என் மகன் யார்? அவர் தேவ சூரியன் அல்லா. இந்த உலகத்துக்கு அவர் ஞான ஒளி கொடுக்க
மனிதாவதரமாக வந்த கடவுள் அல்லவா? இந்த இரகசியங்கள் எனக்கும் என் கணவருக்கும் மட்டுமே
தெரிந்திருக்க கடவுள் அனுமதித்திருந்தார். காலம், நேரம் வரும்முன் அவரை இந்த உலகை மீட்க்க
வந்த மெசியாவாக வெளிப்படுத்த கடவுள் எனக்கு
அனுமதிக்கவில்லை. அவரை உனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டிருந்தால் இந்த உலகத்துக்கு
அவர் வந்த காரியமே முற்றுப் பெறாமல் அல்லவா போய் இருக்கும். அதனால் அன்று சம்பந்தம்
பேச வந்திருந்த உன் தகப்பனாரை கடின மனதுடனே இது முடியாது என்று சொல்லி அனுப்பி வைத்த்டுவிட்டேன்.”
“ அம்மா… என்னைப்பொருத்த
வரையிலும் ஒரு நாள் வாழ்க்கை என்றாலும் அது இயேசு போன்ற மஹானுடன் வாழ்ந்திருந்தால்
அதுவே எனக்குப்போதும் என்றிருந்திருப்பேன். ஆனால் நான் இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசுக்கு
அல்லவா வாழ்க்கைபட்டிருந்தேன். இதை நினைக்க நினைக்க எவ்வளவு வருத்தமும் வேதனையுமாய்
அல்லா இருகின்றது. மேலும் நான் செய்த பாவம் என்னை ஈரேழு ஜென்மதிற்கும் அல்லவா என்னை
வருத்திக்கொண்டிருக்கும்?”
“ இல்லை ரபேக்கா…நீ
நினைப்பது தவறு. கடவுள் ஒன்றை வைத்து தான் மற்றொன்றை சரிப்படுத்துவார். உன் கணவன் உன்னை
ஒருநாளாகக்கூட புறிந்து கொள்ளாதவனாக இருந்திருந்தான். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை
அறிவான்.அதே போல் ஒவ்வொரு மனைவியும் தன் கணவனை அறிவாள். மனதை தேற்றிக்கொள்.. நீ நல்ல
மனதுடன்தானே இயேசுவுக்கு அதிகமான கசைஅடி கொடுத்தாய். இதுவும் கடவுளின் சித்தமே. அவர்
மரிக்கும்போது அவர் உடலில் ஒரு துளி இரத்தம் கூட இருக்கக்கூடாது என்பது அவரது சித்தம்.
மேலும் அவரின் ஒவ்வொருதுளி இரத்தமும் இந்த உலகில் எங்கோ இருக்கும் ஒரு பாவிக்கு மீட்பு
தரும் அருமருந்தாக வெளிப்பட்டது. அதற்கு கடவுள் உன்னை தேர்ந்து கொண்டார். என் மகனுக்கு
சிலுவை சாவை நிறைவேற்ற வந்த அந்த ரோமைய வீரன் காசியுஸை நினைத்துக்கொள். என் மகன் சிலுவையில்
இறந்துவிட்டாரா எனக்கண்டறிய அவர் நெஞ்சில் ஈட்டியால் குத்தவில்லையா?. அப்போது அவரிடத்திலிருந்த
கடைசி ஒருதுளி ரத்தமும் அவரது இதயத்திலிருந்து வெளிப்பட்டு காஸியுசுக்கு மனமாற்றத்தையும்
அவன் கண்ணுக்கு பார்வையையும் தரவில்லையா? ..இப்போது அவன் ஒரு நல்ல கிரிஸ்துவன். காஷியுஸ்
என்னும் அவன் பெயரை இராயப்பரிடம் ஞானஸ்நானம் பெற்று லொஞ்சினுஸ் என்று மாற்றிக்கொண்டான்.
இப்படியாக என்மகனுக்கு வேதனை தந்தவர்கள் அனைவருமே மனமாற்றம் அடைந்து நல்ல கிரிஸ்த்துவர்களாக
மாறிவிட்டனர். எனவே அதைரியம் அடையாதே.
வீணாக உன்னை வருத்திகொள்ளாதே”
“ஆம்மா…இப்போது
நான் என்னை உணருகின்றேன்… இத்தனை வருடங்களாக என்னை வருத்திகொண்டிருந்த என் மனதுக்கு
பதில் கிடைத்துவிட்டது. இனிமேல் நான் நிம்மதியாக மரிப்பேன்… எனக்கு கண் இருட்டிக்கொண்டு
வருகின்றது.”
தேவத்தாயாரின்
கண்களில் கண்ணீர் கறைபுறண்டு ஓடியது. “ மதலேன் . உடனே கொஞ்சம் உப்பும் சர்க்கரையும்
கலந்து பானகமாக்கி கொண்டு வந்து இவள் வாயில் புகட்டு.”
அந்த நேரத்தில் ரபேக்காவுக்கு ஜன்னி கண்டது. கைகால்கள்
விலுக் விலுக் என்று இழுத்துக்கொண்ட்ன. அவள் பற்கள் படபட வென்று அடித்துக்கொண்டு சற்று
நேரத்தில் கிட்டிக்கொண்டன. சற்று நேரத்தில் ஒரு அமைதி. ரபேக்கா இயல்புக்கு திரும்பினாள்.
பிறகு என்ன நினைத்துக் கொண்டாளோ மாதாவின் கழுத்தை தன் கரங்களால் இறுக கட்டிக்கொண்டாள்.
அவள் வாயிலிருந்து அம்மா என்னும் வார்த்தை சப்த்தமாக அரம்பித்து சப்த்தமில்லாமல் முடிந்தது.
தேவத்தயார் ரபேக்காவை கட்டியணைத்தபடியே, “
என் மகளே ரபேக்கா… எனக்கு பெண்குழந்தை இல்லாத குறையை போக்க வந்த என் மகளே.. போய்விட்டாயா
அம்மா… நான் மீண்டும் தனிமரம் ஆனேனே … ஆண்டவரே இதுவும் உம் திருவுளமோ… அப்படியே ஆகட்டும்
சுவாமி ” என்று நெஞ்சு வெடித்துவிடும்போல் கதறி அழுதார்.
ரபேக்கா மாபெரும்
பாக்கியமான மரணத்தை அடைந்தாள். அவள் எப்பேசு நகரில் பேர் தெரியாத வரலாறு தெரியாத எத்தனையோ
புனிதர்கள் கல்லறைகளில் ஒன்றில் மீளாத்துயிலில் இருகின்றாள்.
என் குறிப்பு : இயேசுநாதரின் இளமைப்பருவத்தில் என்னென்ன நடந்தது
என்பதுபற்றி விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. அவர் தனது தாய் தந்தையர்க்கு கீழ்படிந்து
நடந்து வந்தார் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் திருக்காட்ச்சி வரம்பெற்ற சகோதரி மரியா
வால்டொர்டோ அவர்களின் கடவுள் மனிதன் காவியத்தில் அவர் தேவாலயத்தில் தன் பால்ய வயதில்
என்னென்ன பேசினார் என்பது பற்றியும் தன் வேதபோதக அலுவலில் இயேசுநாதர் யூதாஸ் உடனான
பேச்சு வார்த்தகளைப்பற்றியும் தெளிவாக கூறியுள்ளார்... இந்த கதைக்காக அவரது வர்த்தமானங்களை
நான் உபயோகித்துக் கொண்டேன். அந்த புத்தகத்தில் கூட யூதாஸின் மனைவி பற்றி எந்த ஒரு
தகவலையும் கூறவில்லை. ஆனால் அதிஸ்ட வசமாக உராந்தா என்னும் ஒரு வலைதலத்தில் இயேசுவின்
பால்ய வயதில் என்னென்ன நடந்தது என்பதுபற்றியும் அப்போது ரபெக்கா என்னும் ஒரு பெண் அவரை
காதலித்ததாகவும் ஆனால் அந்த காதல் நிறைவேற வில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த
வலைத்தலம் [ Web site
] எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதும் எனக்கு தெரியவில்லை. ஆனால் ரபேக்கா
என்னும் கதா பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த கதாபாதிரத்தை நான் இந்த கதைக்கு
உபயோகித்துக்கொண்டேன். ஆக இந்த ரபேக்கா என்னும் கதாபாத்திரம் முற்றிலும் எனது கற்பனையே.
இது இப்படித்தான் நடைபெற்றிருக்கும் என்னும் ஒரு யூகத்தின் அடிப்படையில்தான் நான் ரபேக்காவின்
கதையை வடிவமைத்தேன். அதற்கு எவ்வித சரித்திர ஆதாரமும் இல்லை.
இந்த கதையை
எழுதுவதற்கு எனக்கு ஆதாரமாக இருந்த கடவுள் மனிதன் காவியம் புத்தக வெளியீட்டாளர்களான
தூத்துக்குடியில் அமைந்திருக்கும் [ Rosa Mystica ] மாதா அப்போஸ்த்தொலிக்க சபையாருக்கும் உராந்தா வலைதலத்தில் வெளியீட்டாளர்களுக்கும்
நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..இந்த கதைக்கு சம்பந்தப்பட்ட படங்களை நான் எடுத்துக்கொண்ட சம்பந்தப்பட்ட வலைத்தலங்களுக்கும்
நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
No comments:
Post a Comment