நாளை என்பது என்ன
இயேசுநாதர் வேதாகம சுருளை படித்து முடித்துவிட்டு அதை தேவாலய தலைவரிடம் கொடுத்தார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவன் ,” இதோ இஸ்ராயேலை ஆளப்போகும் அரசர்.. வாக்களிக்கப்பட்டவர், நம் ஜனங்களை ஒன்றாக கூட்டிசேர்ப்பவர் “ என்று கட்டியம் கூறினான்.
இயேசுநாதர் தம் கரங்களை விரித்து கூட்டத்தினரை அமைதிப்படுத்தி தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
“ உங்களை அர்ச்சிக்க வந்தவர் எழுந்துவிட்டார். அவர் இந்த அலுவலுக்காக தம்மையே தயாரித்து தம் இல்லத்தின் மறைவிலிர்ருந்து வெளியே வந்துவிட்டார். அவர் உங்களுக்கு சுத்திகரிப்பின் முன்மாதிரிகை காட்டும்படியாக தம்மை சுத்திகரம் செய்துகொண்டார். தேவாலத்திலிருகிற வலியவர்களுடனும் கடவுளுடைய பிரஜைகளுடனும் தம் ஸ்தானத்தை உறுதி செய்துகொண்டார். அவர் இப்போது உங்கள் நடுவில் இருகின்றார். அது நானே. புகைபடர்ந்த மனங்களுடனும், அமைதியற்ற இதயங்களுடனும் உங்களுள் சிலர் எண்ணுவதையும் எதிர்பார்ப்பதையும் போல்ல. எதிர் காலத்தில் தான் அரசனாக இருக்கப்போவதும் உங்களை அழைக்கப்போவதுமான இராஜ்ஜியம் அதைவிட அதிகம் பெரியதுமாகும்.
இஸ்ராயேலே… மற்றேல்லா ஜனங்களுக்குள்ளும் முன்னே உன்னை நான் அழைக்கிறேன்.ஏனென்றால் இந்நேரத்தின் வாக்குறுதியையும் உங்கள் பிதாக்களின் பிதாக்களிடத்தில் நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள். ஆனால் அவருடைய இராஜ்ஜியம் ஆயுதம் அணிந்த கும்பல்களாலோ அல்லது காட்டுத்தனமான இரத்தம் சிந்துதலாலோ ஏற்படுத்தப்படாது. பலவந்தக்காரரும், மக்கலை அடக்கி ஆள்பவர்களும், ஆங்காரிகளும், கோபக்கார்களும், காய்மகாரர்களும், இச்சைப்படுவோரும்,, பொருளாசைகாரரும் அதில் நுழைய மாட்டார்கள். மாறாக நல்லவர்களும், சாந்தமுள்ளவர்களும், பொருமை உள்ளவர்களும், கடவுளையும், தங்கள் அயலாலரையும் நேசிகிறவர்கள் மட்டுமே அதில் அனுமதிக்கப்படுவார்கள்….
இஸ்ராயேலே… புற எதிரிகளுடன் நீ சண்டையிடும்படி கேட்க்கப்பட்வில்லை. உங்கள் அக எதிரிகளோடு சண்டையிடுங்கள். உங்கள் எலோருடைய இருதயங்களிலும் இருக்கின்ற எதிரிகளுக்கு எதிராகவே சண்டையிடுங்கள். ஆயிரமாயிரமான உங்கள் பிள்ளைகளின் இருதயங்களில் இருக்கிற எதிரிகளுக்கு எதிராகவே போரிடுங்கள் .நாளை… கடவுள் உங்களை ஒன்றுகூட்டி சேகரிக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், என் ஜனங்களே யாராலும் தோற்கடிக்கப்பட முடியாதது உங்கள் இராஜ்ஜியம். அதை உங்கள் எதிரிகள் தோற்கடிக்கவோ அதன்மேல் படைஎடுக்கவோ, நசுக்கிவிடவோ முடியாது என்று ஆண்டவர் உங்களிடம் கூறும்படி விரும்பினால் உங்கள் எல்லோர் இதயங்களிளும் இருக்கின்ற பாவம் என்னும் தடையை அகற்றுங்கள்.
இஸ்ராயேலே கேள். நாளை… அது எந்த நாள்.ஒரு ஆண்டு… அல்லது ஒருமாத காலத்தில் வருவதா?. அதை துருவி அறிய விரும்ப வேண்டாம். குற்றமுள்ள மந்திரவாதத்தை போன்ற வழிகளால் எதிர்காலத்தை ஆய்ந்தறியும் தவறான ஆசைக்கு இடமளிக்க வேண்டாம். காலங்களின் இரகசியத்தை நித்திய கடவுளுக்கு விட்டுவிடுங்கள். நாளை… இன்று மாலைக்குப்பின் வரும் காலையில் இன்று இரவுக்குப்பின் சேவல்கூறும் நேரத்தில் எழும் காலையில் வந்து உண்மையான தபசினால் சுத்திகரமடையுங்கள்.
இஸ்ராயேலே கேள்… மன்னிப்படையும்படியாகவும் தேவனின் இராஜ்ஜியத்துக்கு ஆயத்தம் அடையும்படியாகவும் பச்சாதாபப்படுங்கள். பாவம் என்னும் தடுப்பை உங்களிடமிருந்து அகற்றுங்கள். ஒவ்வொருவனிடமும் தன் தன் பாவத்தடை இருகின்றது. நித்திய இரட்ச்சண்யத்திற்கான பத்துக்கற்பணைகளுக்கு எதிரான பாவம் ஒவ்வொருவனிடத்திலும் இருகின்றது. நேர்மையுடன் உங்கள் மனசாட்ச்சியை சோதித்து பாருங்கள். அப்போது உங்கள் தவறுகளை கண்டுகொள்வீர்கள். உண்மையான தாழ்ச்சியுடன் மனஸ்தாபப்படுங்கள். நீங்கள் கட்டாயமாக மனம் திரும்ப வேண்டும். உங்கள் வாயால் மட்டுமல்ல. உங்களால் கடவுளை பரிகசிக்கவோ அல்லது ஏமாற்றவோ முடியாது. நீங்கள் வாழும் முறைகளை மாற்றக்கூடிய உறுதியான மனதோடு தேவனுடைய சத்தியதிற்கு திரும்பிவரும் வகையில் மனஸ்தாபப்படுங்கள். மோட்ச்ச ராஜ்ஜியம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்ரது. அதுவே நாளை…
இஸ்ராயேலே கேள்…நாளையா என்று நீங்கள் கேட்க்கலாம். ஓஓஓஓ…. கடவுளின் நேரம் எப்போதுமே சீக்கிரத்தில் வருகின்ற நாளை தான். பிதாப்பிதாக்களின் வாழ்நாளைப்போல நீண்ட வாழ்வின் இறுதியில் வந்தாலும் அது அப்படித்தான். நீங்கள் கணக்கிடுகின்ற நாள், மாதம், வருடம்,நூற்றாண்டு என்பதெல்லாம் உங்களை உயிருடன் வைத்திருகின்ற நித்திய இஸ்பிரீத்துவின் இருதய துடிப்புகள்தான். உங்கள் ஆன்மாக்கள் நித்தியமானவை. ஆதலால் நீங்களும் உங்கள் ஆன்மாக்களுக்கு உங்கள் சிருஸ்ட்டிகர் கொள்வதுபோன்ற கால அளவையே கொள்ளவேண்டும். ஆகையால் நீங்கள் நாளை என்பது என் மரணத்தின் நாள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் விசுவாசம் உடையவருக்கு அது மரணமல்ல. அது எதிர்பார்த்திருக்கும் இளைப்பாற்றி. மெசையா வந்து மோட்ச்ச கதவை திறக்கும்படி அவருக்காக காத்திருத்தல் ஆகும்.
இஸ்ராயேலே கேள்… இதோ நான் உங்களுக்கு கூறுகிறேன். இங்கே இருகிறவர்களில் இருபதேழு பேர் மாத்திரமே இறந்து அப்படி காத்திருப்பீஎர்கள். மீதிப்பேர் தங்கள் மரணத்திற்க்கு முன்பே நியாயத்தீர்ப்படைவார்கள். அவர்களுடைய மரணம் எந்த தாமதமும் இல்லாமல் ஒன்றில் கடவுளிடம் செல்வதாக இருக்கும். அல்லது சாத்தானிடம் செல்வதாக இருக்கும். ஏனென்றால் மெசையா வந்துவிட்டர். அவர் உங்கள் நடுவில் இருகின்றார். உங்களுக்கு சுவிசேசத்தை கொடுப்பதற்காக உங்களுகு சத்தியத்தை போதித்து உங்களை மோட்ச்சத்தில் பாதுகாப்பதற்காக உங்களை அழைக்கிறார்.
இஸ்ராயலே என் ஜனமே கேள்…. தவம் செய்யுங்கள். மோட்ச இராஜ்ஜியத்தின் நாளைய தினம் அருகில் இருகின்றது. நீங்கள் நித்திய நாளை சொந்தம் ஆக்கிக்கொள்ளும்படியாக நீங்கள் தூய்மையாய் இருப்பதை அந்த நாள் காண்பதாக. சமாதானம் உங்களோடு இருப்பதாக.”
இஸ்ராயேலே கேள்…உங்கள் ஆங்காரத்திற்காகவும்….உலகப்பிரகாரமாய் உங்களை ஒரு தேசம் என்று நீங்கள் கருதியதற்காகவும் யாவே உங்களை தண்டித்திருகின்றார். ஆனால் அவர் உங்களை எவ்வளவு நேசிகின்றார்… உங்களுடன் எவ்வளவு பொருமையாய் இருகின்றார். மற்ற யாவரையும் விட உங்களிடம் அப்படி இருகின்றார். தன் மெசியாவான இரட்ச்சகரை உங்களுக்கு தந்திருகிறார். நீங்கள் அவருக்கு செவிகொடுத்து கடவுளின் கோபத்தின் நேரத்திற்கு முன்பே காப்பாற்றும்படியாகத்தான் அவர் பொருமையாக இருகின்றார். நீங்கள் இனிமேலும் பாவிகளாய் இருக்க அவர் விரும்பவில்லை.. அவர் கடந்துபோகின்ற உலக காரியங்களில் உங்களை தண்டித்து அந்தக்காயம் உங்கள் ஆத்துமாக்களை குணப்படுத்தவில்லை, மாறாக அது உங்களை மேலும் மந்தமாக்குகின்றது என்று அவர் கண்டதினால் அதற்குமேல் உங்களுக்கு வேறு தண்டனையை அனுப்பாமல் உங்களுக்கு இரட்சண்யத்தை தருகின்றார். உங்களை குணப்படுத்துகின்ற உங்களை இரட்ச்சிகிற உங்களுடன் பேசுகின்ற என்னை உங்களுக்கு அனுப்பி இருகின்றார்.
இயேசுநாதர் இவ்வாறு பிரசிங்கித்துக்கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்கள் இருப்பதுபோல இயேசுநாதரின் போதகத்தில் குற்றம் குறை காணும் நோக்கில் சில பரிசேயர்கள் அவர் மட்டில் எரிச்சல் பட்டுக்கொணார்கள். இவர் தன்னை மெசியா என்றும் நம்மை இரட்ச்சிக்க வந்த இரட்ச்சகர் என்றும் கூறுகின்றாரே இதென்ன போதனை.. இது நிச்சயமாக தவறான போதனை தான் என்று முனுமுனுத்தனர்.
ஒருவன் துணிந்து எழுந்து,” இதுவரை இஸ்ராயேலுக்கு வந்த எந்த தீர்க்கதரிசியும் உம்மைப்போல் தன்னை கடவுளீன் பிரதிநிதி என்று துணிந்து கூறவில்லை.ஆனால்…நீர் யார்?...இப்படிப்பேசுகின்ற நீர் யாருடைய ஆணையின் மேல் பேசுகின்றீர்.? என்றான்.
‘” நான் என்னைப்பற்றிக்கூறுவதை தீர்க்கதரிசிகள் தங்களைப்பற்றிக்கூற முடியவில்லை. நான் யார்.?. நான் எதிர்பார்க்கப்பட்டவர். வாக்களிக்கப்பட்டவர். இரட்ச்சகர்.அவருடைய முன்னோடியாகிய யோவான் ஸ்நானகர் சொன்னதை நீங்கள் ஏற்கனவே கேட்டி இருக்கின்றீர்கள்.” ஆண்டவருடைய வழியை ஆயத்தம் செய்யுங்கள். இதோ ஆண்டவறகிய கடவுள் வ்ருகின்றார். அவர் உண்மையான பாஸ்காவின் செம்மறியாக இருந்தாலும் ஓர் ஆயனைப்போல் தம் மந்தைக்கு உணவளிப்பார்.. உங்களில் அனேகம் பேர் அந்த வார்த்தைகளை முன்னோடியிடமிருந்து கேட்டீர்கள். மேலும் வான மண்டலங்கள் ஒளியால் மிளிர அந்த ஒளி ஒரு புறாவின் வடிவில் இறங்குவதை அவர்கள் கண்டார்கள். நான் யார் என அந்தக்குரலையும் கேட்டார்கள். நன் யாருடைய ஆணையின் மேல் பேசுகின்றேன்? இருக்கின்றவரும் என்னை அனுப்புகிறவருமான அவருடைய ஆணையின்மேல் பேசுகின்றேன்..”
“ நீர் இப்படி சொல்லுகின்றீர். ஆனால் நீர் ஒரு பொய்யனாகவோ அல்லது கனவு காண்பவனாக கூட இருக்கலாம் அல்லவா?. உம்முடைய வார்த்தைகள் புனிதமானவைகளகத்தான் இருகின்ரன. ஆனால் சில சமயங்களில் சாத்தான் புனித்தல் பூசப்பட்ட ஏமாற்று வார்த்தைகளை மக்களை ஏமாற்றுவதற்காக உபயோகிகிறானே. உம்மை நாங்கள் அறியவில்லை?”
“ நான் இந்த உலகத்தின் பிரகாரமாக தாவீதின் கோத்திரத்தில் சூசையினுடைய யேசு. நான் பெத்லஹேம் என்னும் எப்பிரத்தாவில் வாக்களித்தபடியே பிறந்தேன். நாசரேத்தில் வாழ்ந்ததால். நசரேயன் என்று அழைக்கப்படுகின்றேன். கடவுள் பிரகாரமாக நான் அவருடைய தூதுவன். என்னைப்பற்றி என்னுடைய சீடர்கள் அறிந்திருகின்றார்கள்.”
“ ஓஓஒ. அவர்களா… அவர்கள் தாங்கள் சொல்வதை அல்லது நீர் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்ததை சொல்ல முடியும்.. இந்த சாட்சியத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள் முடியாது “
“ அப்படியானால் என்னை அறியாத அல்லது என்னை நேசியாத இன்னொருவன் சொல்லுவான் நான் யாரென்று இங்கிருகின்ற ஜனங்களுள் ஒருவனை கூப்பிடுகின்றேன். சற்று பொறு”
இயேசுநாதர் அங்கிருக்கும் பெரும் கூட்டத்தை பார்க்கின்றார். இந்த கூட்டத்தில் பலருக்கு இந்த விவாதம் எரிச்சலாகவும் சிலருக்கு மிகுந்த ஆர்வமாகவும் இருந்ததால் கூட்டம் இரண்டாக பிரிகின்றது. சிலர் இயேசுநாதருக்கு ஆதரவாகவும் சிலர் அவருக்கு எதிராகவும் பேச ஆரம்பித்தனர்.
இயேசு கூட்டத்திலிருந்த ஒருவனைப்பார்த்து, “ அக்கேயுஸ்.. இங்கே வா..இது என் கட்டளை” என்றார்.
அப்போது கூட்டத்தில் ஒரு பரபரப்பு காணப்படுகின்றது. ஒரு மனிதன் எழுந்து வருவதற்கு ஒரு வழி விடப்படுகின்றது. அந்த மனிதன் உடல் முழுவதும் நடுங்குகின்றான். ஒரு ஸ்த்ரீ அவனை தாங்கி வருகின்றாள். அவள் அந்த மனிதனுடைய தாயாக இருக்கக்கூடும். இயேசு தன்னிடம் கேள்வி கேட்டவனை பார்த்து…” மனிதா… இந்த மனிதனை உமக்கு தெரியுமா”? என்றார்.
அந்த மனிதன்” ஓஓஓஓ. இவனை எங்களுக்கு நன்றாகத்தெரியுமே… இவன் இந்த கப்பர்னாஹூம் ஊரை சேர்ந்த மலாக்கியின் மகன் அக்கேயுஸ். இவனை ஒரு அசுத்த ஆவி பீடித்திருகின்றது. திடீர் வலிப்புகளால் அவனை வாதிக்கின்றது.”
இயேசுநாதர்,” இந்த மனிதனுக்கும் எனக்கும் எந்த விதத்திலேயாவது தொடர்பு இருந்தென்றோ அல்லது இருக்கின்றது என்றோ உங்களாள் கூற முடியுமா? இந்த மனிதன் என்னிடம் சில நிமிட நேரமாவது பேசி இருகின்றான் என்று யாராவது கூற முடியுமா “
“ இல்லை.. இல்லை.. இந்த மனிதன் அரைப்புத்தி உடையவன். எங்களுக்குத்தெரிந்து அவன் யாரிடமும் பேசுவதில்லை. அவன் வீட்டைவிட்டு வெளியே வருவதும் இல்லை. உம்மையும் அவனையும் சேர்த்து வைத்து நாங்கள் யாரும் பார்த்ததுமில்லை “.
“ அப்படியானால் அந்த மனிதனை என் முன்னே கொண்டு வாருங்கள்.
அந்த மனிதனுடன் வந்த ஸ்த்ரீ அவனை தள்ளிக்கொண்டும், இழுத்துக்கொண்டும் வருகின்றாள்… அவனோ மேலும் மேலும் நடுங்குகின்றான். அப்போது ஜெப ஆலயத்தலைவன் இயேசுவிடம்,” ராபி.. ஜாக்கிரதை… இந்த மனிதனை அசுத்த ஆவி பீடிக்கும்போது அவனை மிகவும் வாதிக்கும். அப்போது அவன் தன்னை சுற்றி இருப்பவர்களை மிகுந்த ஆக்ரோஷத்தோடு தாக்குவான். கடிப்பான்… குதறுவான்..பெரும் காயங்களை ஏற்படுத்துவான் .. எனவே அவன் மட்டில் மிகுந்த கவனம் தேவை “ என்றார்.
இயேசுநாதர் தன்னிடம் நேருக்கு நேராக நிற்கும் அந்த மனிதனைப்பார்த்து,” அக்கேயுஸ்… நான் யார் என்று நீ சாட்ச்சியம் கூறுவாயாக” என்றார்.
அக்கேயுஸ் என்னும் அந்த மனிதன் யாரோ தன் வாயை கட்டவிழ்த்து விட்டதுபோல முக்கினான் … முனகினான். அழுதான்… ஆர்பாட்டம் செய்தான்.பிறகு பெரும் குரலெடுத்து ,”நாசரேத்தூர் இயேசு… எங்களுக்கும் உமக்கும் என்ன இருக்கின்றது. எதற்காக எங்களை வாதைப்படுத்த வந்திருகின்றீர். பரலோக பூலோக ஆண்டவராயிருகின்ற நீர் எதற்காக எங்களை அழிக்க விரும்புகின்றீர். நீர் யாரென எங்களுக்குத்தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர். மானிட சரீரமுள்ள யாரும் உம்மைவிட பெரியவன் இல்லை. ஏனென்றால் உம்முடைய இந்த மானிட சரீரத்தில் நித்திய ஜெய சீலருடைய ஆவி உள்ளடக்கபட்டிருகின்றது.ஏற்கனவே நீர் எங்களை வென்றுவிட்டீர்”
“ போதும்… இனிமேல் நீ பேச வேண்டாம். அமைதியாய் இரு. இந்த மனிதனைவிட்டு வெளியேறும்படி நான் உனக்கு கட்டளையிடுகின்றேன். “
அவ்வளவுதான். அக்கேயுஸ் என்னும் அந்த மனிதனை பீடித்திருந்த அந்த அசுத்த ஆவி அவனைவிட்டு வெளியேறியது. அப்போது அந்த மனிதனுக்கு நூதனமான வலிப்புகள் ஏற்படுகின்றன. பெரும் ஊளைச்சத்தத்துடன் அவனை படாதபாடு படுத்திவிட்டுத்தான் அவனைவீட்டு நீங்கியது.
இயேசுநாதர் தன்னிடம் கேள்விகேட்ட அந்த பரிசேயனைப்பார்த்து ,” அக்கேயுஸின் சாட்ச்சியத்தை கேட்டாயல்லவா… இப்போது என்ன சொல்லுகின்றாய்.?” என்றார்.
அந்த பரிசேயனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டவனாய் தன் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அனைவர்முன்னிலையிலும் தான் அவமானமாக தோற்றவனைப்போல் அந்த கூட்டத்திலிருந்து வெளியேறினான். இயேசுநாதருக்கு முன்னால் தன்னால் எதுவும் பேசமுடியாததைக்கண்டு வேறுவழியின்றி தன் பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டும் தன்தோள்களை ஆட்டிக்கொண்டும் தேவாலயத்தைவிட்டு வெளியேறினான்.
தன்னிடமிருந்த அசுத்த ஆவி வெளியேறியதைக்கண்ட அக்கேயுஸ் ஏதோ புதுப்பலம் பெற்றவனைப்போல நின்றுகொண்டிருந்த அவன் தடாலென இயேசுநாதரின் கால்களில் விழுந்து கண்ணீர் மிகவும் பெருக்கி, “ நன்றி இயேசுவே… நன்றி இயேசுவே என்று அவர் பாதங்களில் அனேக முத்தி செய்துகொண்டே இருந்தான். இயேசுநாதர் அவனை தூக்கிவிட்டு,” அக்கேயுஸ்… இனிமேலும் நல்லவனாக இரு … போய் உன் வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொள் “ என்று வாழ்த்தி அவனை அனுப்பினார். பிறகு அங்கிருந்த அனேகருக்கு அனேக நன்மைகள் செய்து வாழ்த்தி அனுப்பினார். இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு இயேசு நாதரின் புகழ் மேலும் அதிகமாக பரவியது.
என் குறிப்பு.: இந்த கதையை நான் வாசித்ததுமே இந்த சம்பவம் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. இதைப்போல் ஏறாளமான சம்பவங்களை நான் இந்த புத்தகத்தில் வாசித்திருகின்றேன்.
இயேசுநாதரின் நாளை என்பது என்ன என்னும் வசனம் கவனிக்கத்தக்கது. அன்று அவர் சொன்ன வார்த்தை இன்றுவரை மிகவும் பொருந்தமாக இருகின்றது. நாளை நாம் இருப்போமா என்னும் காலகட் டதில் நாம் இருகின்ரோம். வேதாகமத்தில் சொல்லியபடி இந்த சாபம் ( கொரானா) யாராலே எப்படி வந்து என்பதை ஆறாய்வது வீண்வேலை. அதற்குப்பதில் இந்த சாபத்திலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள நம்மை நாம் சுத்திகரம் செய்துகொள்வோம் நாம் விடும் ஒவ்வொரு மூச்சுக்காற்றும் பரிசுத்த ஆவி நமக்கு கொடுத்த மிகப்பெரும் கொடை. இந்தக்கொடை நீடித்திருக்க வேண்டுமானால் நாம் நம்மிடையே இருக்கும் பாவம் என்னும் தடையை அகற்றுவோம். மீண்டும் கடவுளுடம் ஒப்புறவு ஆவோம்.
தூத்துக்குடி ரோசா மிஸ்டிகா பதிப்பகத்தாரின் வெளியீடான கடவுள் மனிதன் காவியம் என்னும் இந்த புத்தகம் பத்து புத்தகங்கள் கொண்டது. அனைத்தும் தங்ககுடம் புதையலாக கிடைத்து போன்ற பரவசம் படிப்போர் உள்ளத்தில் ஏற்படும். பதிப்பகத்தாருக்கு நன்றி.ஒவ்வொரு கிரிஸ்த்துவன் வீட்டிலும் பைபிளுக்கு அடுத்தபடியாக இருக்க வேண்டிய ஒரு புத்தக தொகுப்பு.கடவுள் மனிதன் காவியம்.
No comments:
Post a Comment