Thursday, May 30, 2013

"யேசுவுக்கு ஒரு கடிதமும்", "யேசு எழுதிய கடிதமும்"

"யேசுவுக்கு ஒரு கடிதமும்"

"யேசு எழுதிய கடிதமும்"

” யேசுவுக்கு ஒரு கடிதமும்” ” யேசு எழுதிய கடிதமும் “
   என்னது..? யேசு கடிதம் எழுதினாறா ? அவருடைய வாழ்க்கையில் இப்படியொரு சம்பவமா.. பைபிளில் இப்படி ஒரு சம்பவம் குறிப்பிடப்படவில்லையே….என்று நேயர்கள் கேட்ப்பது எனக்குப்புறிகிறது. என்னுடைய கதைகள் இதுவரை நேயர்களுக்கு தெரியாத … விவிலியத்தில் சொல்லப்படாத சம்பவங்களை உங்களுக்கு சொல்ல வேண்டும் என்பதுபற்றியே இருக்கும்.. எனக்கு கிடைத்த சில சரித்திர ஆதாரங்களைக்கொண்டு என்னால் இயன்றமட்டும் உங்களுக்கு சொல்ல வேண்டும் என்ற ஆவலில்  நான் கதைக்கான கருவை தேடிப்பார்க்கையில் எனக்கு கிடைத்தது இந்த யேசுவுக்கு ஒரு கடிதமும் யேசு எழுதிய கடிதமும் என்ற கரு. சரித்திர ஆசிரியர்கள் ஆம்….இது உண்மைதான்
.. எடெசா என்னும் நாட்டைச்சேர்ந்த அப்கார் என்ற மன்னன் யேசுவைப்பற்றிக்கேள்விபட்டு தன் நோய் குணமாகும்படி யேசுவுக்கு கடிதம் ஒன்று எழுதினான் என்றும் அதற்கு யேசு  பதில் கடிதம் எழுதினார் என்றும் ஒப்புக்கொள்கின்றர்கள். எது எப்படியோ நமக்கு வேண்டியது யேசுவைப்பற்றிய செய்திகளே…கதைக்குப்போவோமா….சுவையான செய்திகள்
பல காத்துக்கொண்டிருக்கின்றன.
    இன்றைய துருக்கியில் வட மேற்குப்பகுதியில் எடேசா என்றொரு நாடு உள்ளது. யேசுநாதர் காலத்தில் இந்த நாட்டை ஆண்ட அரசர் பெயர் அப்கார். ஓரளவுக்கு வயது முதிர்ந்தவர். அவருக்கும் ஒரு பெரும் மனக்குறை இருந்தது.. அவருக்கு தீராத குட்ட நோய் இருந்தது. அந்தக்காலத்தில் இந்த நோய்க்கு மருந்து இல்லை. மேலும் குட்டனோய் பட்டவர்  ஆண்டவனால் சபிக்கப்பட்டவரே என்னும் ஒரு எண்ணம் நிலவியதால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டு சமுதாயதிலிருந்தே ஒதுக்கிவைக்கப்படும் ஒரு கொடுமையான
நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அரசனானாலும் சரி… ஆண்டியானாலும் சரி… இந்த கொடுமைக்கு யாரும் விதிவிலக்கல்ல. அரசர் அப்கார் அடைந்த துன்பத்திற்க்கு அளவே இல்லை..
    தன் நிலைக்கு யாரும் மனம் இறங்கி இந்த கொடுமையான நோயினின்று விடுவிக்கமுடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. அப்பேர்பட்ட ஒரு வைத்தியனை நான்  ஆண்டவணாகக்கருத மாட்டேனா… இந்த உலகில் அப்படியொரு வைத்தியர் இருக்கின்றாரா..அவர் யாராக இருக்கமுடியும்… அவர் எங்கே இருக்கின்றார்.. நாம் அவரை இந்த  ஜென்மத்தில் பார்க்கமுடியுமா..என்றெல்லாம் அங்கலாய்க்கத்துடங்கினர்.
      இந்த சூழ்நிலையில் யாத்திரீகர்கள் மூலமாகவும் அரசாங்க தூதுவர்கள் மூலமாகவும் யேசுவைப்பற்றிய பல செய்திகள் அரசர் அப்காருக்கு கிடைத்தன. அதாவது யேசு என்னும்  யூத ராபி ஒருவர் பாலஸ்த்தீன நாட்டில் தோன்றி இருப்பதாகவும் அவர் ஜெபித்தால் தீராத வியாதிகள் எதுவும் உடனே குணமடைவதாகவும் இறந்தவரைக்கூட அவர்  உயிர்ப்பித்திருப்பதாகவும் பிறவிகுருடு கூட பார்வை பெற்றதாகவும் சப்பாணிகள் கூட நடந்திருப்பதாகவும் சமீபத்தில் கூட பத்து குட்ட நோயாளிகள் ஒரே நாளில் குணமடைந்திருப்பதகவும்
அவரால் முடியாதது என்பது ஒன்றுமே இல்லை என்றும் அரசர் அப்கார் அறிய வந்தார்.
     அவர் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை. மேலும் அவர் யேசுவைப்பற்றிய வேறு  செய்திகளையும் அறிய வந்தபோது மிகவும் கலக்கமுற்றார். அதாவது இந்த யூத ராபி யேசுவுக்கு அவரது இனத்தைச்சேர்ந்த தேவாலய குருக்கலால் அவரது உயிருக்கு ஆபத்து என்றும் மிகவிரைவில் அவர் கொல்லப்படுவார் என்ற பேச்சு அடிபடுவதாகவும் அரசர் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமுற்றார். எனவே யேசுநாதரைக்காப்ப்ற்றும்படிக்கு அவரை தன் நாட்டிற்க்கு  அழைக்கவும் தன் நோயினின்று விடுதலை அடையவும் அவரை மன்றாடி அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் இப்படியாக எழுதப்பட்டது.
” பாலஸ்த்தீனத்தில் ஜெருசலேமில் தோன்றியிருக்கும் தேவ மருத்துவர் யேசுநாதர் அவர்களுக்கு எடேசாவைச்சேர்ந்த அப்கார் ஒக்காமாவாகிய நான் அன்புடன் எழுதிக்கொள்வது.
அன்புள்ள ஐய்யா,
தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.. தாங்கள் நூறாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன்.
தாங்கள் தேவ வைத்தியர் என்றும் உங்கள் வைத்தியதிற்க்கு மருந்தோ, மாத்திரையோ.மூலிகைகளோ, கிழங்குகளோ உபயோகிப்பதில்லை என்றும் தங்களின் ஒரு வார்த்தை ஒன்றாலேயே நோய்களை குணமாக்குகின்றீர்கள் எனவும் அசுத்த ஆவியால் பீடிக்கப்பட்டிருப்பவர்களையும் சாபத்தால் பீடிகப்பட்டவர்களையும் உன்மத்தம் பீடித்திருப்பவர்களையும் கூட உம் ஒரு வார்த்தையாலேயே விடுவிக்கின்றீர் எனவும்
பிறவிகுருடரை பார்க்கவும் பிறவி சப்பாணிகளை நடக்கவும் பிறவி ஊமைகளை பேசவும் பிறவி செவிடரை கேட்டவும் கூட உம் ஒரு வார்த்தையாலேயே குணமாக்குகிறீர் எனவும்
நீர் மரித்தவரைக்கூட உம் ஒரே வார்த்தையால் உயிர்ப்பித்திருகின்றீர் எனவும்
சமீபத்தில் கூட பத்து குட்டனோய் பீடித்திருப்பவரை உம் ஒரு வார்த்தையால் ஒரே நாளில் குணமாக்கினீர் எனவும் அறிய வந்துள்ளேன்.
உம்மைப்பற்றிய செய்திகளை நான் அறிய வந்தபோது இரண்டு விதமாக நான் உம்மைப்பற்றி நினைக்கின்றேன்.
ஒன்று நீர் வானினின்று இறங்கி வந்துள்ள தேவ மருத்துவர்.
இரண்டு நீர் உயிருள்ள ஆண்டவனின் மறு அவதாரமாக வந்திருக்கும் அவருடைய மகன்.
இப்படியாகத்தான் நான் உம்மைப்பற்றி நினைக்கிறேன்… நம்புகிறேன்..விசுவாசம் கொள்கிறேன்.
நீர் செய்த புதுமைகள் அனைத்தையும் நான் அறிய வந்த பிறகு நானும் உம்மிடம் ஒரு விண்ணப்பம் வைக்கின்றேன்.. தேவரீரால் இது கூடாத காரியமல்ல..
   தேவரீர் மனமிறங்கி உம் அடியானாகிய எனக்கு வந்திருக்கும் இந்த பொல்லாத குட்ட நோயிலிருந்து என்னை குணமாக்கி தூய்மைப்படுத்த உம்மை மன்றாடிக்கேட்டுக்கொள்கிறேன்..
. மேலும் உமக்கு உம் குலத்தவரே உமக்கு எதிரிகள் என்றும் உம் பகைவர்கள் உம்மை கொல்லத்தேடுகிறார்கள் எனவும் அதுவும் கொடுமையான் சிலுவைச்சாவுக்கு உட்படுத்தப் போகிறாகள் எனவும் கேள்விப்படும் போது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது. தங்களுக்கு இப்படியோரு முடிவு ஏற்பட இந்த அப்கார் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டான்.
ஆகவே தாங்கள் தங்கள் சீடர்களுடன் என் நாட்டிற்கு வந்துவிடுங்கள்.. என் நாட்டிற்கு வந்து உங்கள் போதனைகளை சொல்லுங்கள். என் நாட்டு மக்களை மனம்திருப்புங்கள்.
     என் நாட்டு மக்களின் தீராத வியாதிகளை குணப்படுத்துங்கள் என்று மிகவும் தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
என் நாடு பரப்பளவில் சிறிதே ஆயினும் அழகுள்ளது, நீங்களும் நானும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இங்கு வாழ முடியும். மீண்டும் உங்களை என் நாட்டுக்கு வந்து என்னையும் என் நாட்டு மக்களையும் ஆசீர்வதிக்கும்படி மிகவும் மன்றாடிக்கேட்டுக்கொள்கிறேன்…
நன்றி…. வணக்கம் பல…
இப்படிக்கு
அப்கார் ஒக்காமா.
     இந்த கடிதத்தை அரசர் அப்கார் தன் அரண்மனை காரியஸ்த்தன் ஹென்னான் என்பவனிடம் கொடுத்து தகுந்த மரியாதையுடன் யேசுவிடம் சேர்ப்பிக்கச்சொன்னார். ஹென்னானும் அந்த கடிதத்தை யேசுவிடம் தகுந்த மரியாதையும் சேர்பித்தான். அந்த கடிதத்தைப்பெற்றுக்கொண்ட யேசுநாதர் அதன் சாராம்ஸங்களைப் படித்துவிட்டு தானும் தன் கைப்பட அரசர் அப்காருக்கு பதில் கடிதம் எழுதிக்கொடுத்தார். சரித்திர ஆசிரியர் எசுபியஸ் அந்த கடிதம் யேசுநாதரால் தன் கை படவே எழுதப்பட்டது என்று உறுதியாக கூறுகின்றார்.
யேசு எழுதிய கடிதம் இவ்வாறு இருந்தது.
” நீவிர் நம்மைக்காணாமலேயே நம்மைப்பற்றி விசுவாசம் கொண்டமைக்கும் நம்பிக்கைகொண்டமைக்கும் மிகவும் சந்தோஷமடைந்தோம்..
ஏனெனில் நம்மைப்பற்றி வேத நூலில் இப்படியாகத்தான் எழுதப்பட்டிருக்கின்றது,…..
எம்மைகண்டவர் நம் மீது நம்பிக்கை கொள்வதில்லை,
எம்மைக்காணாதவர் நம் மீது நம்பிக்கை கொள்கின்றனர்…
ஆனால் நீவீர் நம்மைகாணாமலேயே நம் மீது நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டுள்ளதால் நீவிர் விரும்பியபடியே உமக்கு ஆக நாம் ஆசீர்வதிகின்றோம்.
நீவீர் வேண்டிக்கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாமும் உம் தேசம் வருவோம்…..ஆனால் இப்போதல்ல… நாம் இந்த பூலோக வாழ்க்கையில் எம் தந்தை எமக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றியபின்
விண்னரசில் எம் தந்தையின் மாட்சிமையில் வீற்றிருக்கும்போது உம்மை
நினைவில் கொள்வோம்…உம்மையும் உம் நாட்டு மக்களையும் நாம் சந்தித்து
அவர்களை எம் மக்களாக்கிக்கொள்வோம்..
அப்போது நம் அரசும் நம் மக்களும் யாராலும் வெற்றிகொள்ளாதபடி பாதுகாக்கப்படும்.
நம்மால் அனுப்பப்படும் நம் ஊழியக்காரர் ஒருவரால் உமக்கு முற்றிலும் புது வாழ்வு உண்டாகும். உமக்கு ஆசீர்… உமக்கு சமாதானம் உண்டாகட்டும்..
இப்படிக்கு
யேசுநாதர்.
[ இந்த கடித்தைப்பற்றி மேலும் சில வரலாற்று ஆசிரியர்கள் யேசுநாதரும் அப்காரும் சம்பத்தப்பட்ட நிகழ்வுகள் உண்மையானதே.. ஆனால் யேசுநாதர் தன் கைப்பட இக்கடிதத்தை எழுதினார் என்பதர்க்கு தகுந்த ஆதாரம் இல்லை... நம்பும்படியாகவும் இல்லை.. யேசுநாதர் சொல்ல அவருடைய சீடர்களோ அல்லது அந்த ஊழியக்காரன் ஹென்னானோ தான் இக்கடிதத்தை எழுதி இருக்கக்கூடும்.. ஏனென்றால் அந்த ஊழியன் ஹென்னான் ஒரு சித்திரக்காரன். பிற்காலத்தில் அவன் யேசுநாதரை படமாக வரைந்தவன். அவன் ஏற்கனவே
யேசுநாதரை நேரில் பார்த்திருக்கின்றான் அல்லவா ...என்று கூறுகின்றார்கள்.] சரி… மீண்டும் என்ன நடந்தது என்று பார்ப்போம்…
    யேசுநாதர் இந்தக்கடிதத்தை அந்த ஊழியக்கரன் ஹென்னானிடம் கொடுத்து,
” நல்ல ஊழியனே, உன்னை எம்மிடம் அனுப்பிய உன் எஜமானிடம் இக்கடிதத்தை சேர்ப்பாயாக. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று அவரிடம் கூறுவாயாக…உம் எஜமானுக்கும் அவர் நாட்டு மக்களுக்கும் நாம் ஆசீர் வழங்குவதாகக்கூறு ” என்று அக்கடிதத்தை அவனிடம் கொடுத்தனுப்பினார்..படம்
   பிறகு யேஸுநாதர் ஒரு துண்டால் தம் முகத்தை துடைக்க அவரது திருமுகம் அந்த துண்டில் பதிந்தது. அந்த துண்டை அந்த ஊழியனிடம் கொடுத்து அவன் எஜமானனை அந்த துண்டால் முகம் துடைக்க அவர் முற்றிலும் குணமாவார் என்றும் கூறி தன் கடிததையும் அந்த துண்டையும் பத்திரமாக அவன் எஜமானன் அப்கார் மகாராஜாவிடம் சேர்ப்பிக்க  சொன்னார்.
     யேசுநாதரும் மரித்து…..பரலோகம் சேர்ந்த பிற்பாடு அன்று அக்பார் ராஜாவுக்கு வாக்குக்கொடுத்தபடி எடெசா மன்னர் அப்காரை நினைவுகூர்ந்தார்.
தம் தாசனாம் யூதாததேயூவையும் திதீமு என்னும் நம் தோமையாரையும் எடெசாவுக்கு அனுப்பினார்.  யேசுவின் முகம்பதித்த துண்டைப்பெற்றுக்கொண்ட அப்கார் மன்னர் அந்த துண்டால் தம் முகம்புதைக்க அப்போது அந்த பேரதிசயம் நடந்தது. அப்கார் மன்னர் உடனே தன் குட்ட நோயிலிருந்து முற்றிலுமாக குணமடைந்ததை உணர்ந்தார். எடெசா மன்னர் அப்கார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. யேசுநாதர் தனக்கு கொடுத்த நன்மைத்தனத்திற்கு பிரதிபலனாக தன்னை கிரிஸ்த்துவராக மாற்றிக்கொண்டார்.. தன் நாட்டுமக்களையும் கிரிஸ்த்துவ மக்களாக மாற்றினார்.. தன் நாட்டையும்
கிரிஸ்த்துவ தேசமாக மாற்றினார். இவ்விதமாக எடெசா நாடு முதல் கிரிஸ்த்துவ நாடாக அறிவிக்கப்பட்டது.
  ஆக யேசுநாதர் வாக்குமாறாத தேவன் என்பது இந்த எடெசாப்பட்டிணத்தின் சரித்திர நிகழ்வுகளின் மூலம் நிரூபணம் ஆகிறது.
இந்த எடெசா நாட்டைப்பற்றிய சில செய்திகள் பின் வருமாறு.
இந்த எடெசா நாட்டில் அர்மீனியர்கள் அதிக அளவில் குடியேறி கிரிஸ்துவை பின்பற்றியதால் இந்த நாடு அர்மீனிய மெசபோடோமியா என்று அழைக்கப்பட்டது.
இந்த ஏடேசா நாட்டில் தோமையார் கொஞ்ச நாட்க்கள் வேதபோதக அலுவலில் இருந்தபோது யேசுவை குழந்தையாய் இருக்கையில் அவரை சந்திக்கவந்த கீழ்த்திசை ஞானிகளில் மூவரில் இருவரை சந்தித்தாக ஒரு சரித்திரம் உண்டு. யேசுநாதர் உயிரோடு இருந்த காலத்தில் அவர் மரிப்பதர்க்கும் முன்பாக அரேபியாவில் அந்த இரண்டு  ஞானிகளையும் அவர் சந்தித்ததாகவும் ஒரு சரித்திரம் உண்டு. அந்த மூன்று ஞானிகளில் வயதில் சிறியவறான செயிர் என்பவர் முதலிலேயே நோய்கண்டு யேசுநாதர் அவர்களை சந்திக்கும் முன்பே இறந்துவிட்டார். அந்த மூவரில் வயதில் மூத்தவறான தியோக்கினோ என்பவரும் மென்சூர் என்பவரும் யேசுநாதர் இறந்தபின்பும் பலகாலம்
அரேபியாவில் வாழ்ந்தனர். அதனால்தான் தோமையருக்கும் அவர்கள் இருவரையும் எடெசாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
     நம் நாட்டில் நம் தோமையார் இறந்தபிற்பாடு மையிலாப்பூரில் அடக்கம் செய்யபட்டார் அல்லவா. கி.பி.232 ஆம் ஆண்டு அவரது சமாதி தோண்டப்பட்டு
அவரது எலும்புகள் ரோமாபுரிக்கு கொண்டு செல்லப்படும்போது தரை மார்க்கமாக கொண்டுசெல்லப்பட்டது. அப்போது பல இடற்பாடுகளை தாண்டி கொண்டு செல்லப்பட்டது. அப்போது இந்த எடெசாப்பட்டிணத்தில் தான் பலகாலம் புதைத்து வைக்கப்பட்டது,
   மிகவும் பிற்காலத்தில் அரேபியாவில் மரித்த செயிர், மென்சூர் மற்றும் தியொக்கினோ என்னும் மூன்று கீழ்த்திசை ஞானிகளின் சடலங்களை
இந்த எடெசாப்பட்டிணத்திற்கு  கொண்டுவந்து மீண்டும் புதைத்ததாகவும் அந்த சமாதிகள் பலகாலம் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கபட்டு இருந்ததாகவும் ஒரு சரித்திரம் சொல்லுகின்றது.
    பலகாலம் கழித்து இந்த எடெசாப்பட்டிணத்திலிருந்த மூன்று ஞானிகளின் எலும்புகளும் ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு ஜெர்மனியில் கொலோன் என்னும் பட்டிணத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இன்றுவரை அவை அங்கு தான் இருப்பதாகவும் ஒரு சரித்திரம் உண்டு.
      இதே போல் பல காலங்களுக்குப்பிறகு இந்த எடெசாப்பட்டிணத்திலிருந்து தோமையாரின் எலும்புகள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு இத்தாலியில் அப்ருசி மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு ஒர்டானோ என்னுமிடத்தில் உள்ள தேவாலயத்தில் தோமையாருக்கு ஒரு சமாதி இருப்பதாகவும் ஒரு சரித்திரம் உண்டு.
     இந்த எடெசாப்பட்டிணத்தில் யேசுநாதரின் முகம் பதிந்த துண்டு அர்மீனியர்களுக்கு பெரும் பொக்கிஷமாக கருதப்படுகின்றது. இந்த துண்டும் வெரோணிக்காவின் யேசுவின்  முகம் பதிந்த துண்டும் தூரின் பட்டிணத்தில் யேசுவின் கோடித்துணியில் பதிந்துள்ள அவரதுதிரு உருவம்பதித்த துணியும் யேசு இப்படித்தான் இருந்தார் என்று நமக்கு அவரது உருவத்தை காட்டுகின்றன.   இந்த மூன்று துணிகளிலும் பதிந்துள்ள யேசுவின் திருமுகம் ஒரே சாயலால் ஆனது என்று விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பதால் இந்த புதுமைகள்
யாவும் யேசுவின் திரு உருவத்திற்கு ஒரு நம்பகத்தன்மைக்கொடுக்கின்றன.
மேலும் இந்த எடேசாவின் பரிசுத்த துண்டில் உள்ள யேசுவின் திருமுகம் மனிதரால் வரையப்பட்டவை அல்ல என்று கீழைரீதி திருச்சபை அறிவித்துள்ளது.
    இந்த பரிசுத்த துண்டினால் குணமடைந்த எடேசா மன்னர் அப்கார் மன்னருக்கு கீழை ரீதி திருச்சபை அவருக்கு புனிதர் பட்டமும் கொடுத்துள்ளது.
அர்மீனிய அரசாங்கம் இந்த எடெசாமன்னரின் உருவம் பொரித்த கரன்ஸியை வெளியிட்டுள்ளது. அந்த ரூபாய் நோட்டில் எடெசா மன்னர் யேசுவின் முகம் புதைத்த துண்டை சுட்டிக்காட்டுவதாக அச்சிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment