உண்மையில் எனக்கு திருச்சிலுவையைபற்றிய கதையை கூறியவர் எந்தவிதமான கல்வி அறிவுமேயில்லாத ஒரு கோவில் வேலையாள்தான். அவர் கூறிய திருச்சிலுவை பற்றிய கதை எனக்கு பெரும் பிரம்மிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு அந்த கதையை அவரது தகப்பனார்தான் கூறினார் என்றார் அவர். செவிவழிச்செய்தியாய் அவர் கூறிய கதைகள் இக்காலத்தில்
எவ்வளவு உண்மை என்று நான் உணர்ந்து கொண்டேன். இன்டெர்னெட் வசதி உள்ள இக்காலத்தில் இக்கதைகள் எவ்வளவு வலிமைவாய்ந்தவை…. எவ்வளவு உண்மையானவை என்று நான் அறியவந்தபோது அக்காலத்திய cathechiasm என்னும் மறைக்கல்வி எப்படிப்பட்டது என்றும் அதைக்கற்றுக்கொடுத்தவர்களும் சரி அதைக்கற்றுக்கொண்டவர்களும் சரி எவ்வளவு ஆர்வமாக தங்கள் வாழ்க்கையில் பின்பற்றினார்கள்…. தங்கள் சந்ததியினருக்கும் கற்றுக்கொடுத்தார்கள் என்று நான் உணர்ந்தபோது மிகவும் ஆச்சர்யப்பட்டேன். நான்முதலாய் அறிந்துகொண்ட சில வேதாகம கதைகளில் உள்ள உண்மைகள்… அதன் அர்த்தங்கள் இவற்றை என் மனைவிக்கும் என் பிள்ளைகளுக்கும் கூறுவேன். அவர்கள் எவ்வளவு தூரம்இவற்றை புறிந்துகொண்டார்களோ….அவர்தம் மக்களுக்கு சொல்லிக்கொடுப்பார்களோ நாம் அறிவோம் பராபரமே… என் தாயார் அடிக்கடி சொல்லுவதுபோலே எல்லாம் காலம் செய்யும் கோலம் என்று. இப்போது நானும் இப்படித்தான் அடிக்கடி புலம்புவதாக என் மனைவியும் கூறுகின்றாள்… எல்லாம் காலம் செய்யும் கோலம்…ஊம்…நான் கதையை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டேன்… சரி கதைக்குப்போவோமா…..
” திருச்சிலுவை மரம் இதோ…இதிலேதான் தொங்கியது..உலகத்தின் இரட்சண்யம் ” என்னும் பாடலை பரிசுத்தவாரத்தில் கேட்டிருப்போம். மற்றும்
” திவ்ய சேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் கூறுகின்றோம்… அதேனென்றால் இந்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர் ” என்று அந்த பதினான்கு சிலுவைப்பாடுகளின் சந்திப்புகளிலும் நாம் தவறாது சிலுவையின் முன்பாக வணங்கி ஆராதிக்கின்றோம்.
நேலும் அந்த பனிரெண்டு அப்போஸ்த்தலர்களின் விசுவாச அறிக்கையில் ஒன்றாக ” இவர் போஞ்சிபிலாத்தின் அதிகாரத்தினாலே சிலுவையில் அறையுண்டு பாடுகள்பட்டு மரித்து அடக்கம்பன்னப்பட்டார் ” என்னும் மறை உண்மையை நாமும் விசுவாச அறிக்கையாக செபிக்கின்றோம். இவ்வளவு பெருமைகளையும் தன்னகத்தே கொண்டது இந்த திருச்சிலுவை..
அதனால்தான் பலர் மேலைநாடுகளிளும் நம் நாட்டிலும் இந்த சிலுவையை தம் பெயராகவே வைத்துக்கொண்டுள்ளார்கள்.
ஆதியில் ஆதமும் ஏவாளும் எப்போது கடவுளின் கட்டளையை மீறி அந்த நன்மை தீமை அறியும் ஞானப்பழத்தை உண்டார்களோ அப்போதே கடவுளுக்கு எதிராக கீழ்படியாமை என்னும் பாவம் செய்து கடவுளின் கோபாக்கினைக்கு ஆளானார்கள். அதனால் அவர்கள் அந்த ஏதேன் என்னும் சொர்க்கபுரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்..அதுவரை இந்த பூமியில் நின்றுகொண்டிருந்த சொர்க்கமானது மேலே… மேலே… உயரே… உயரே… கிளம்பியது. கடவுளின் சாபத்திலிருந்து தப்பிக்க தன்னை எப்படியாவது சொர்கத்திலேயே நிலை
நிறுத்திக்கொள்ள ஆதாமும் எதை எதையாவது பற்றிக்கொண்டு அங்கேயே நிற்கப்பார்த்தான்.. அவன் கையில் கிடைத்தது ஒரு ஆலிவ்மரக்கிளை. ஆனால் என்ன ஒரு பரிதாபம்…அந்த ஆலிவ் மரக்கிளையும் உடைந்துபோய் அவன் கையோடே வந்துவிட….ஏவாளும் அவனும் அந்த ஆலிவ் மரக்கொப்புடன் பூமியில் தொப்பென வந்து விழுந்தார்கள்.
.சொர்க்கபுரியிலிருந்து அவர்களோடு இந்த பூமிக்கு கொண்டுவர அனுமதிக்கப்பட்டது இந்த ஆலிவ் மரக்கிளை மட்டுமே.. இந்த ஆலிவ் மரக்கிளை பூமிலியே வேரூண்றிக்கொண்ட இடமே ஜெத்ஸ்மெனித் தோட்டம்..இந்த ஆலிவ் மலையில் தான் நம் ஆண்டவராகிய யேசுநாதர் இரத்த வியர்வை வேர்த்ததும் காட்டிக்கொடுகப்பட்டதும் இங்குதான் நடந்தது. ஆதிகாலத்தில் நடந்த முதல்
கொலையும் ஆம்.. ஆதாமின் மகன் மூத்தமகன் காயீன் தன்தம்பி ஆபேலை கொலை செய்த இடமும் இதே ஆலிவ் மலையில் தான்.[இதனால் இந்த இடம் மரணப்பள்ளத்தாக்கு என்றும் ஜோசப்பாத் பள்ளத்தக்கு என்றும் அழைக்கப்படுகின்றது.]
அதினால்தான் நம் ஆண்டவறாகிய யேசுநாதரும் இந்த ஆலிவ் மலையிலியிலிருந்தே நம்மை மீட்ப்பதற்கான தன் பாடுகளை இங்கிருந்தே ஆரம்பித்தார். ஆதாம் செய்த ஒரு நல்ல காரியத்தையும் நான் இங்கு சொல்லியே ஆக வேண்டும்…ஆதாம் தான் உண்ட அந்த ஞானப்பழத்தின் கொட்டையை [விதையை] தன்னோடே வைத்திருந்தான். தன்னுடைய மரணத்தருவாயில் தன் மூன்றாவது மகன் சேத்துவிடம் தன் மரணித்தவுடன் அந்த ஞானப்பழத்தின் விதையை தன் வாயில் வைத்து தன்னோடே அதையும் சேர்த்து புதைத்துவிடுமாறு கூறி சத்தியமும் வாங்கிக்கொண்டான். ஆதாம் மரித்தவுடன் அவன் ஆசைபட்டபடியே அந்த ஞானப்பழத்தின் விதையும் அவன் வாயிலே
வைக்கப்பட்டு புதைத்தார்கள். பல நாட்க்களுக்குப்பிறகு ஆதாம் புதையுண்டபிறகு அந்த இடத்திலிருந்து ஒரு மரம் கிளம்பியது..இதன் வம்சாவளியிளிருந்து வந்தது தான் திருச்சிலுவை மரம்.. பிறகு பல நூற்றாண்டுகளுக்குப்பின்னர் ஆதாமின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு கல்வாரி மலையின் அடியில் ஒரு கல் பெட்டியில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.
இப்படிச்செய்தது யார் … எந்த காலத்தில் என்று சரித்திரம் எனக்குத்தெரியவில்லை.. ஆனால் பிதாப்பிதாவாகிய முதுபெரும் தந்தை அபிரகாம் தன் மடியில் ஆதாமின் சில எலும்புகளை எப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருந்தார் என்று சரித்திரம் கூறுகின்றது. அதினால்தான் ஆண்டவராகிய நம் யேசுநாதரும் தன் சிலுவைமரணத்தை இந்த கல்வாரி மலைமலேயே
வைத்துக்கொண்டார் எனவும் சிலுவையின் பாடுகளின்போது வழிந்த அவரது திரு இரத்தம் பூமிபிளந்து கீழே இறங்கி ஆதாமின் எலும்புகளை நனைத்தது என்று திருச்சபையின் வேதபாரகர்கள் கூறுகின்றார்கள்.
இதைப்பற்றிய வேறு ஒரு கதையும் உண்டு. ஆதாம் மரணிக்கும்போது தன் மகன் சேத்துவை அழைத்து மிக்கேல் சம்மனசானவரிடம் சென்று தனக்கு ஆன்மாவுக்கு சுகமளிக்கும் பரிசுத்த தைலத்தை பெற்று வருமாறு அனுப்பினார் எனவும் ஆனால் மிக்கேல் சம்மனசானவர் அதை தர மறுத்து அதற்குபதில் நன்மை தீமை மரத்தின் விதையை சேத்துவிடம் கொடுத்து
இதைக்கொண்டுபோய் உன் தகப்பனிடம் கொடுத்து அவர் இறந்த சமயம் அவர் வாயில் இந்த விதையை வைத்து அவரோடு புதைத்துவிடு என்று கட்டளையிட்டு தன்னிடம் அதை கொடுத்ததாகவும் ஆதாம் இறந்தபின் சேத் சம்மனசானவர் கூறியபடியே செய்ததாகவும் பிர்காலத்தில் ஆதாமின் வாயிலிருந்து முளைத்த மரமே சிலுவை மரத்தின் தாய் மரமாகும் என்றும் ஒரு கதை உண்டு.
உண்மையில் யேசுவின் பாடுகளின்போது உபயோக்ிக்கப்பட்ட திருச்சிலுவையானது இப்போது நாம் பார்க்கும் சிலுவையைப்போன்றது அல்ல. இப்போது நாம் பார்க்கும் சிலுவையானது ரோமர்களின் வடிவமைப்பிலானது. யேசுவின் திருச்சிலுவை ஆங்கில ” Y ‘ வடிவிலானது. பேரரசர் தாவீதுராஜாவின் காலத்தில் தான் ஆண்டவருக்கு கோவில் கட்ட முயற்சிக்கையில் அவரது வீரர்கள் ஒரு நெடும் மரத்தைக்கொண்டுவந்திருந்தார்கள்.. ஆனால் அந்த நெடுமரம் அவர் கட்டப்போகும் ஆலயத்திற்கு அதன் அளவின்படி நீட்டவசத்திற்கு
குறைவாகவும் அகல வசத்திற்கு அதிகமாகவும் இருந்ததால் தாவீது ராஜா இந்த மரத்தைப்பற்றி அதை பயன்படுத்தமுடியாதபடி இருந்ததால் மிகவும் வருத்தமுற்றார். இருப்பினும் தன் மகன் சாலமோனிடம் இதைபற்றிக்கூறி அவர் காலத்தில் எதர்க்காவது உபயோகப்படுத்திக்கொள்ளும்படி கூறினார். சாலமோன் பேரரசரும் தன் காலத்தில் அந்த மரத்தை எப்படியும்உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணி அதுவரை அந்த மரத்தை கெதரோன் நீரோடைமீது பாலமாக இருக்குபடி அதை போட்டுவைத்தார்.. அந்த மரம் அதற்கென அளவெடுத்ததுபோல் மிகச்சரியாய் பொருந்தியது. இந்த பாலமானது ஜெருசலேம் தேவாலயத்தையும் நகரத்தையும் மரணப்பள்ளத்தாக்கு என்னும் ஜோசப்பாத் சமவெளியையும் இணைத்ததால் மக்களும் பெரும் உபயோகமாக இருந்துவந்தது.
இப்படி இருக்கையில் ஒருநாள் சாலமோன் பேரரசரைக்காணவிரும்பிய எத்தியோப்பியாவைச்சேர்ந்த ஷேபா என்னும் மஹாராணி தன் பரிவாரங்களுடன் ஜெருசலேம் வந்தார். இந்த கெதரோன் பள்ளத்தாக்கைகடக்க அந்த பாலத்தின் மீது போடப்பட்டிருந்த மரத்தில் கால் வைத்தவுடன் அவளுக்கு ஒரு காட்சி ஒன்று அருளப்பட்டது..அதாவது சாலமோன் காலத்திற்குப்பிறகு ஏறகுறைய பதினான்கு சந்ததிகளுக்குப்பிறகு தோன்றப்போகும் யேசுநாதர் இந்த உலகினரின் பாவங்களைப்போக்க இந்த மரத்தின் மீதே சிலுவையில் அடிக்கப்படுவார்… இந்த சிலுவைமரத்தின் மீதே பாடுகள்பலபட்டு மரணிப்பார் என்றகாட்சி அவளுக்கு அருளப்பட்டதும் அவர் உடனே அந்த சிலுவை மரமாகப்போகும் அந்தப்பாலத்தின்
மீது முகம் குப்புற விழுந்து இஸ்ராயேல் தேவனை ஆராதித்தார். இந்த நிகழ்ச்சியைக்கண்ட சாலமோன் பேரரசர் ஷேபாவிடன் என்ன நடந்தது ?… ஏன் நீங்கள் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று காரணம் கேட்க அவரும் தான் கண்ட காட்சிகளைப்பற்றி விவரித்தார். சாலமோன் பேரரசரின் ஞானத்தால் கவரப்பட்ட ஷேபா மஹாராணி அரசர் சாலமோனை திருமணம் செய்துகொண்டு மெனெலக் என்பவரைப்பெற்றார்…மீண்டும் தன் தாய் நாட்டிற்கு செல்லும் போது சாலமோன் தன் வம்சவிருத்திக்காக ஷேபா மஹாராணிமூலம் பிறந்த தன் மகன் மெனெலெக் பொருட்டு ஏறாளமான அன்பளிப்புகளோடு ஆயிரம் வேளையாட்க்கள் மற்றும் கோவில் குருமார்கள் இவர்களையும் அனுப்பினார். இந்த எத்தியோப்பிய யூதர்கள் வம்சாவளி இப்படித்தான் ஆரம்பித்தது. அவர்கள் கருப்பினத்தைச்சேர்ந்தவர்களாயினும் அவர்களும் யூதர்கள் தான் எனவே அவர்கள் கருப்பு யூதர்கள் என்று அழைக்கப்படுவதாக ஒரு தகவல் உண்டு. [ஷேபா மஹாராணியின் வம்சாவளிகள் இஸ்ரேலில் தங்கியவர்கள் இன்றும் யேசுநாதர் சிலுவையில் மரித்த திருக்கல்லறைப்பேராலயத்தின் மேல் விதானத்தில் தங்களுக்கென ஒரு இடம் அமைத்துக்கொண்டு யேசுவை ஆராதிக்கின்றார்கள். அந்த திருக்கல்லறை பேராலயத்தில் அவர்களுக்கென் தனி ஆலயம் இல்லை
எனவே அந்த பேராலயத்தில் மேல் பகுதியில் தான் இன்றளவும் வசிக்கின்றார்கள்.]
சாலமோனனின் ஞானம் உலகப்பிரச்சித்தம். சாலமோன் பேரரசரின் ஞானம் வெகுவாக வேலை செய்தது. பிற்பாடு பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு தோன்றப்போகும் யேசுநாதருடைய சிலுவையின் மரணம் இந்த உலக மக்களிடையே எவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்….யேசுநாதருக்கு சிலுவைச்சாவை ஏற்ப்படுத்திய தன் இனத்தைச்சேர்ந்த யூத மக்களை உலகின் பிற இனத்தைச்சேர்ந்த மக்கள் எவ்வளவு தூரம் வெறுப்பார்கள் என்று உணர்ந்த பேரரசர் சாலமோன் அப்படி ஒரு சம்பவம் தன் இன மக்களுக்கு நேரக்கூடது
என்று எண்ணி அந்த சிலுவைமரமாகப்போகும் அந்தபால மரத்தை உடனே அகற்றி ஜெருசலேமில்லுள்ள பெத்சாய்தா திருக்குளத்தில் போட்டு மூழ்கடித்தார். பிற்பாடு இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமலே போய்விட்டது. அதாவது சரித்திரத்தில் மறக்கடிக்கப்பட்டது. ஆனால் உண்மையை எவ்வளவு காலம் தான் மூடிவைக்கமுடியும்.
ஆனால் இந்த பெத்சாய்தா திருக்குளத்தில் ஏற்கனவே ஒரு சம்பவமும் மூடிவைக்கப்பட்டிருந்தது. நெகேமியாவின் காலத்தில் பரிசுத்த நெருப்பும் தேவாலயத்தின் பரிசுத்தப்பாத்திரங்களும் அவற்றின் பரிசுத்தம் கருதியும் பாதுகாப்பு கருதியும் இத்திருக்குளத்தில் மூழ்கடிக்கப்பட்டு இருந்தது. அன்றிலிருந்துதான் இந்த திருக்குளத்தில் குறிபிட்ட
நாளில் முதலில் குதிக்கும் ஒரு நோயாளி அவன் எப்படிப்பட்ட நோயாளியானாலும் சம்மனசுகலால் குணப்படுத்தப்படுவான் என்ற ஐதீகம் இருந்துவந்தது.[ இந்த திருகுளத்தில் முப்பது ஆண்டுகளாக காத்திருந்த ஒரு திமிர்வாதக்காரனை யேசு நாதர் குணப்படுத்தினார்.]
ஆக காலம் நிறைவுற்றது… யேசுநாதர் இந்த பூவுலகிற்கு வந்து நம்மை மீட்க சித்தம் கொண்டார். இந்த காலகட்டத்தில் போஞ்சிபிலாத்து ரோமை ஆளுனராக பாலஸ்த்தீனம் வந்தான். இந்த ஜெருசலேம் மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையைத்தீர்க்க ஒரு பெரும் திட்டம் தீட்டினான்.. அதன்படி சீலோவிலுள்ள ஜிபியோன் [ the great waters of gibion ] துவங்கி ஜெருசலேம் நகரிலுள்ள பெத்சாய்தா குளம் வரை நெடும் குழாய்கள் அமைக்கப்பட்டு இத்திருக்குளத்தின் மீது ஒரு பெரும் நீர்த்தேக்கமும் அமைக்கபட்டது. அதர்க்காக இந்த திருக்குளம்
தூர் வரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. அப்போது நெகேமியாவின் காலத்தில் மறைத்துவைக்கப்பட்ட பரிசுத்த பாத்திரங்களும் பரிசுத்த நெருப்பும் அணைக்கப்பட்ட மரத்துண்டுகளும் மேலும் சாலமோன் காலத்தில் பாலமாக உபயோகிக்கபட்ட நெடுமரமும் இந்த பெத்சாய்தா திருக்குளத்திலிருந்து ரோமர்களாள் வெளிக்கொண்டுவரப்பட்டன. ஆனால் அவர்கள் அவற்றின்
முக்கியத்துவம் பற்றி அறியாதததால் அவற்றை தேவாலயத்திலேயே போட்டு வைத்தனர். அந்த நெடு மரம் மீண்டும் அதே இடத்தில் பாலமாக உபயோகிக்கப்பட்டது.
இதன் மீது கடைசியாக பயணித்தவர் யேசுநாதர் தான். பெரிய வியாழன் அன்று இராப்போஜனம் முடிந்த பிற்பாடு யேசுநாதர் தன் சீடர்களுடன் இந்த பாலத்தைக்கடந்துதான் ஒலிவ மலைக்குபோனார். அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் ஜெருசலேம் நகர் வரும்போது இந்த மரப்பாலம் அகற்றப்பட்டு சிலுவைமரமாக தயார்படுத்தப்பட்டிருந்தது.
யேசுநாதரின் சிலுவை மரமானது ஐந்து பாகங்களைகொண்டதாக திருக்கட்சியாளர் புனித காத்தரின் எம்மரிக் கூறுகின்றார். நெடுமரமும் நெகாமியாவின் பரிசுத்த நெருப்பு பற்றிய மரமும் அவர் பாதம் தாங்கியாக பயன்பட்ட மரம்.. திருச்சிலுவையை பூமியில் நிலை நிருத்திய ஆப்புகள் மற்றும் அவரது குற்றச்சாட்டுகள் தாங்கிய ” இவன் யூதர்களின் அரசன் ” என்று
பொறிக்கப்பட்ட மரம் என்று பல பாகங்களைக்கொண்டது யேசுவின் சிலுவை மரம்.. யாவும் பரமபிதாவின் திருச்சித்தப்படியே அவர் தீர்மானம் செய்தபடியே மிகச்சரியாய் நடந்தது.
ஜெருசலேமில் இன்றைய யூதர்களின் பார்லிமென்ட் knesset என்று அழைக்கப்படுகின்றது. இந்த கட்டிடத்தின் பின் பகுதியில் அமைந்துள்ளது தான் திருச்சிலுவை மடாலயம். கோட்டையோ.. இல்லை… அரண்மனையோ என்று வியக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.. இந்த மடாலயத்தின் சரித்திரப்படி இந்த கோவிலின் சுவர்களிள் திருச்சிலுவையைப்பற்றிய சரித்திரம் வரையப்பட்டுள்ளது. அதாவது பிதாப்பிதா லோத் என்பவர் காலத்தில் சோதோம் குமாரோ பட்டிணங்கள் பாவத்தால் சபிக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டது. அந்த நிகழ்சியின்போது லோத்தின் மனைவி ஆர்வமிகுதியால் நகரம் தீப்பற்றி எரிவதைப்பார்த்தாள்.. அவர்களுக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி எக்காரணத்தை முன்னிட்டும் என்ன நடக்கின்றது என்று திரும்பிப்பார்க்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. அதையும் மீறி அவள் திரும்பிப்பார்த்தால் அவள் சபிக்கப்பட்டு உப்புச்சிலையாக
மாறிப்போனாள். அவள் உப்புச்சிலையாய் மாறிய உருவம் இந்த நிகழ்சிக்கு இன்றளவும் சாட்சியாய் நின்றுகொண்டிருக்கிறது.
அதர்க்குப்பிறகு லோத் குடிபோதையில் தன் இரு மகள்களுடனும் பாவம் செய்தான். இந்த நிகழ்சிக்குப்பிறகு லோத் தன் குற்ற உணர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டு தன் சகோதரன் அபிரகாமிடம் பரிகாரம் தேடினான். அபிரகாம் மூன்று மரங்களை தன்னகத்தே கொண்ட ஒரே விதையை தன் சகோதரன் லோத்துவிடம் கொடுத்து அந்த விதையை நட்டு தன் பாவங்களுக்குப்பரிகாரமாக தினமும் ஜோர்டான் நதியிலிருந்து நீர் கொண்டுவந்து இந்த மரத்தை வளர்க்க வேண்டும் என்று கட்டளை இட்டார். இந்த மரமே சிலுவை மரமாகும்.
அது சிடார், பைன், மற்றும் சைப்பிரஸ் ஆகிய மூன்று மரங்களின் சேர்க்கையிலான ஒரே மரமாகும். லோத்தும் தினமும் ஜோர்டான் நதியிலிருந்து நீர் கொண்டு வந்து இந்த சிலுவை மரத்தை வளர்த்தார். இந்த சிலுவை மரத்தை வளரவிடாதபடிக்கு சாத்தான் லோத்துவை பல விதங்களில் சோதித்தது. ஏனென்றால் உலக மக்களின் மீட்பு இந்த மரத்திலிருந்தே வரும் என்று அதற்கு நன்றாகத்தெரிந்திருந்தது. ஆனால் லோத் அசரவில்லை. மிகுந்த சிரமப்பட்டே இந்த மரத்தை வளர்த்துவிட்டர்.
இந்த மரத்திலிருந்து நெடு நெடு என்று வளர்ந்திருந்த இரு நீண்ட கொப்புகள் மோயீசன் காலத்தில் வெட்டப்பட்டு இஸ்ராயே தேவன் தங்கியிருந்த பரிசுத்தபெட்டகத்தை தூக்கிச்செல்லும் நெடும் கழிகளாக பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் சாலமோன் காலத்தில் இந்த மரம் பாலமாகப்பயன் படுத்தப்பட்டது. யேசுநாதர் காலத்தில் அவரது சிலுவையாக பயன்படுத்தப்பட்டது. அந்த பரிசுத்த மரத்தில் தான் நம் ஆண்டவராகிய தேவன் யேசுக்கிரிஸ்த்து கொடும் பாடுகள் பல பட்டு மரித்தார்… அந்த பரிசுத்த சிலுவை மரம் வளர்ந்த இடம் இப்போது ஒரு குழியாக இருக்கிறது. அதன் மீது ஒரு பலிபீடமும் உள்ளது. அதுதான் திருச்சிலுவை மடாலயம்.
இந்த திருச்சிலுவை மடாலயம் ஜஸ்டீனிய அரசரால் பைசாந்தியர் காலத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கி.பி. 615 ஆம் ஆண்டில் பெர்சியர்களாள் துவம்ஸம் செய்யப்பட்டது. மீண்டும் அரேபிய்ர்களால் கி.பி, 796ஆம் ஆண்டில் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த கொடும் நடவடிக்கையில் இந்த மடாலயத்தைச்சேர்ந்த ஏராளமான துறவிகள் கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள். கி.பி, 11..12 நூற்றாஅண்டுகளில் ஜியார்கியாவைச்சேர்ந்த துறவிகள் இந்த மடாலயத்தை சொந்தமாக்கிக்கொண்டார்கள்.
சிலுவை யுத்த வீரர்கள் இந்த நாட்டில் இருந்தவரை இம்மடாலயத்துறவிகளுக்கு யாதொரு பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருந்தார்கள். கி.பி. 1267 ஆம் ஆண்டு சிலுவை யுத்த வீரர்கள் இந்த நட்டைவிட்டு தத்தம் நாடுகளுக்கு திரும்பியபின்னர் இந்த நாடு மம்மலுக்கர்கள் கையில் மாறிப்போனது. அவர்கள் இந்த சிலுவை மர மடாலயத்தை தனதாக்கிக்கொண்டார்கள். இந்த மடாலயத்தை மசூதியாக்கினார்கள். கி.பி. 17 ஆம் நூறாண்டில் இந்த மடாலயம் ஜியார்ஜியகள் கையிலிருந்து கீழை ரீதி திருச்ச்பையினரின் கைகளுக்கு மாறிப்போனது. அன்றிலிருந்து இன்று வரை இம்மடாலயம் இவர்கள் வசமே உள்ளது.
இந்த நாட்டுக்கு திரு யாத்திரையாக வரும் கிரிஸ்த்துவர்கள் இந்த மடாலயத்தை அவசியம் பார்த்துச்செல்கின்றார்கள். ஆனால் பல பேர்களுக்கு இம்மடாலயத்தைப்பற்றி ஒன்றும் தெரியாமலேயே பார்க்காமல் சென்றுவிடுகிறார்கள். எதற்கும் ஒரு குடுப்பினை வேண்டும்என்பது இப்படித்தான் போலும்.
திருச்சிலுவை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது.?. இதற்கும் ஒரு சரித்திரம் உண்டு.!.
ரோமை சக்கரவர்த்தி கான்ஸ்டண்டைன்.. இவரது தாயார் பெயர் ஹெலெனா.. கான்ஸ்டண்டைன் சக்கரவர்த்தி கி.பி.312. ஆம் ஆண்டு டைபர் நதி மீது அமைந்துள்ள மெல்வியன் பாலத்தின் மீது இவரது விரோதியான மேக்ஸ்ன்டியஸ் சக்கரத்தியுடன் போரிட்டு ஜெயித்த பின்னர் ரோமை முழுவதர்க்கும் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். அன்று நடந்த போருக்கு
முன்னர் இரவு இவருக்கு காட்சி ஒன்று அருளப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் எசுபியஸ் இவ்வாறு கூறுகின்றார். ” அந்த இரவில் சக்கரவர்த்திக்கு காட்சி ஒன்று தோன்றியது. அதில் வானம் திறக்கக்கண்டு சிலுவை ஒன்று தோன்றியது. மேலும் வானினின்ரு ஒரு குரல் மிகத்தெளிவாக கேட்டது..
.இந்த சிலுவை அடையாளத்தைக்கொண்டு நாளை நீ ஜெயிப்பாய்.” சக்கரவர்த்தி உடனே எழுந்து தன் அரச முத்திரையான பொன் கழுகை உடனே மாற்றி அதர்க்கு பதில் அரசாங்க சின்னமாக சிலுவையை வைத்தார். அடுத்த நாள்
நடந்த போரில் பெரும் வெற்றி கண்டார். பிறகு கிரிஸ்த்துவராக மாறினார்..
அரசரின் மன மாற்றத்திற்குப்பிறகு நாடு முழுவதும் மனம் மாறி கிரிஸ்த்துவ தேசமானது. பேரரசரின் தாயார் கிரிஸ்த்துவராக மாறியபின் யேசுநாதரின் புண்ணிய சேத்திரங்களை தரிசிக்கவேண்டி ஜெருசலேம் வந்தார். அங்கு அவருக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்த்து. யேசுநாதரின் மறைவுக்குப்பின் அவர் பாடுபட்ட இடங்கள் அனைத்தும் அதன் சுவடே தெரியாதபடி ரோமர்கள் காதல் தேவதை வீனுஸுக்கும் ஜுபிடருக்குமாய் கோயில் கட்டியிருந்தனர்.
யேசுநாதர் சிலுவையில் கொல்லப்பட்ட இடம் கூட அடையாளம் தெரியாதபடி
அமைந்திருந்தது வீனஸ் ஆலயம். யேசுநாதர் இறந்து ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டபடியால் யாருக்கும் அதைப்பற்றிய அறிவோ அக்கறையோ இல்லாமல் போய்விட்டது. இந்த 80 வயது ஹெலெனா அரசி எப்படியும் யேசுநாதரின் கல்லறையைக்கண்டுபிடிதேதீர்வது என்று கங்கணம் கட்டிகொண்டு யார் யாரையோ விசாரித்துப்பார்த்தாள்.
ஒருவழியாக அந்த நாட்டில் வசித்துவந்த ஒருவர் மூலம் ஒரு உருப்படியான தகவல் கிடைத்தது. அதாவது யூதாஸ் என்னும் ஒரு கிரிஸ்த்தவனுக்கே யேசுநாதரின் கல்லறைபற்றி தெரியும் என்றும் அவனைவிட்டால் வேறு யாருக்கும் திருச்சிலுவைபற்றியோ சிலுவையில் அடித்த இடம் பற்றியோ யாருக்கும் எதுவும் தெரியாது என்றும் கூறினார். அது போதாதோ
அரசி ஹெலெனாவுக்கு.. ஆடக்களை அனுப்ப அவர்களும் அவனை அலாக்காக தூக்கிவந்துவிட்டார்கள்.. ஆனால் மனிதர் எதர்க்கும் அசைந்துகொடுக்கவில்லை..அரசியும் அவனுக்கு காசை காட்டிப்பார்த்தார். கெஞ்சியும் பார்த்தார்…அழுதும் பார்த்தார்.. மனிதர் எதர்க்கும் பணியவில்லை.. சரி… இனிமேல் இவனிடம் கெஞ்சி எந்தபயனும் இல்லை என்று
கண்டு அவனை போலீஸ் முறையில் விசாரிக்க ஆரம்பித்தார். அப்போதும் யூதாஸ் திருச்சிலுவையை பற்றிய எந்த குறிப்பையும் தரவில்லை. சரி இந்த முறை இனி பயன் தராது என்று எண்ணி அவனை ஒரு கிணற்றில் இறக்கி மூழ்கடித்து ஏழு நாட்க்கள் பட்டினி போட்டார்.. மனிதர் வழிக்கு வந்தார்.
திருச்சிலுவை உள்ள இடத்தையும் கல்வாரிமலையில் யேசுநாதர்
சிலுவையில் அறையுண்ட இடங்களையும் காட்டினார். ஒரு ஆச்சர்யம் பாருங்கள்…யேசுநாதரின் காலத்திய யூதாஸ் யேசுவை காட்டிக்கொடுத்து யேசுவை சிலுவை சாவுக்கு உட்படுத்தினான். ஆனால் அதே யூதாஸ் பெயரைக்கொண்ட ஒருவன் அரசி ஹெலினா காலத்தில் யேசுவின் சிலுவையைக்கண்டெடுக்க உதவி செய்கின்றான். இதை என்னவென்று
சொல்லுவது.. எல்லாம் அவன் செயல். உடனே செயலில் இறங்கினார் ஹெலினா அரசி. கல்வாரியில் யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் அமைந்திருந்த ரோமர்கள் கட்டியிருந்த வீனஸ் மற்ரும் ஜுபிடர்
தெய்வங்களின் சிலைகளையும் கோயில்களையும் உடைத்தெறிந்தார். யூதாஸ் சொல்லியபடி பெரும் தண்ணீர்த்தொட்டியில் மூழ்கடிக்கப்பட்டிருந்த மூன்று சிலுவைகளையும், சிலுவையில் சுவாமியை அறையப்பயன் படுத்திய ஆணிகளையும் கண்டு எடுத்தார்கள்..யேசுநாதரை சிலுவையில் அடித்த இடத்தில் பெரும் ஆலயம் ஒன்றை அமைத்தார்
அரசி ஹெலினா..சரி… இந்த மூன்று சிலுவையில் எது யேசுநாதரின் சிலுவை ?
இதர்க்காக மூன்று சிலுவைகளையும் அருகருகே வைத்தார்கள். அப்போது அந்த நாட்டில் ஜெருசலமில் மரித்துப்போய் இருந்த ஒரு வாலிபனின் சடலத்தை ஒவ்வொரு சிலுவையின் மீதும் கிடத்தினார்கள். முதல் மற்றும் இரண்டாவது சிலுவையின்மீது கிடத்தியபோது ஒன்றும் நடக்கவில்லை… ஆனால் மூன்றாவது சிலுவையின் மீது அந்த வாலிபனின் சடலம் கிடத்தப்பட்டவுடனே அந்த வாலிபன் உயிர் பெற்றான்.. உடனே நிச்சயமாயிற்று … அது யேசு நாதரின் திருச்சிலுவை தான் என்று.. அந்த திருச்சிலுவை உடனே மற்ற சிலுவைகளினின்று தனியே பிரிக்கப்பட்டது.
மேலும் அந்த நாட்க்களில் ஜெருசலேம் நகரில் உயிர் போகும் நிலையிலிருந்த ஒரு மூதாட்டியை கொண்டுவந்து இந்த திருச்சிலுவையின் மீது கிடத்தினர். அவள் உடனே முழு நற்சுகம் பெற்றார். அரசி ஹெலெனா அடைந்த மகழ்சிக்கு அளவே இல்லை. திருச்சிலுவை முற்றிலும் அது யேசுநாதருடையதுதான் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த திருச்சிலுவை கண்டுபிடிக்கபட்ட பின்னர் யூதாஸ் ஒரு நல்ல கிரிஸ்த்துவரானார். தன் பெயரை குரியாக்கோஸ் என்று மாற்றிக்கொண்டார்.. பிற்காலத்தில் ஜெருசலேமில் ஒரு பிஷெப் ஆக உயர்த்தப்பட்டார்.
பிற்பாடு அரசி ஹெலினா ரோம் சென்றார்.. போகும்போது திருச்சிலுவையின் இருபகுதிகளையும் யேசுவின் சில முள்முடிகளையும் யேசுவை அறையப்பயன் படுத்திய ஆணி களையும் தன்னுடன் ரோமுக்கு கொண்டு சென்றார்.. ஜெருசலேமிலிருந்து ஒரு கப்பல் நிறைய புண்ணிய பூமியின் மண்ணை எடுத்துக்கொண்டு போய் ஒருபெரும் ஆலயம் அமைத்து அதில் யேசுவின் குற்றச்சாட்டு எழுதப்பட்ட இவன் யூதர்களின் அரசன் என்ற பலகையும் திரு ஆணிகளும் நல்ல கள்ளனின் சிலுவையின் ஒரு பகுதியும் முள்முடியின் சில பகுதி களும், இன்றளவும் நாம் காணும் படி இந்த புனித சிலுவை ஆலயத்தில் {church of the holy cross jerusalamme. rome } வைத்துள்ளார்.
ஆரம்பத்தில் அரசி ஹெலெனா யேசுவின் இந்த பரிசுத்தப் பொருட்க்களை தன் அரண்மனையின் ஒருபகுதியில் இருந்த தனி ஆலயத்தில்தான் வைத்திருந்தார். பிறகு பக்தி முயற்சியும் புதுமைகளும் அதிகரிக்க அதிகரிக்க பக்தகோடிகளின் வருகையும் அதிகரிக்கவே அந்த சிற்றாலயத்தை பேராலயமாக மாற்ற வேண்டியதாயிற்று. பிறகு சில வருடங்களுக்குப்பின்னர் பேரரசி ஹெலென இந்த பூவுலகிற்கு தான் வந்த வேலை முடிந்ததென்று தன் கண்களை மூடி மீளாத்துயில் கொண்டார்.
அவரது சமாதி ரோமைக்கு வெளியில் வியா லாபிகான [via labicana ] என்னுமிடத்தில் உள்ளது. இவரது அர்ச்சிஸ்ட்ட பண்டங்கள் அடங்கிய பெரும் பெட்டி ஒன்று [ pio clamentine vatican museum]
பியோ க்லெமென்டின் வத்திக்கான் மியூஸியத்தில் உள்ளது.
” இவன் யூதர்களின் அரசன் ” நிரூபணம் ஆயிற்று. யேசுவின் சிலுவைசாவுக்கு இவன் யூதர்களின் அரசன் என்ற குற்றச்சாட்டை ஒரு பலகையில் நான்கு மொழிகளில் பொறித்து வைத்தான் போஞ்சிபிலாத்து. அவன் எதை நினைத்து எழுதிவைத்தானோ என்னவோ ஆனால் அது மிகச்சரியாக பலித்தது. இந்த பாலஸ்தீன நாடு என்றுமே நிம்மதியாக இருந்தது இல்லை போலும். அது பலகாலகட்டங்களிள் பல அரசுகளில் மாறி மாறி வீழ்ந்தது. இப்படி ஒரு முறை பெர்சியர்கள் கையில் வீழ்ந்த போது அவர்கள் பாலஸ்தீனத்தை கொள்ளையடித்துச்சென்று அதிலும் முக்கியமாக யேசுவின் திருச்சிலுவையை தூக்கிச்சென்றுவிட்டார்கள். இதனால் பெரிதும் மனம் வெறுப்புற்றார்கள்
கிரிஸ்த்துவர்கள்.
அப்போதைய கிரிஸ்த்துவ பேரசராக இருந்த பைசாந்திய மன்னர் ஹிராக்ளிஸ் பெர்சிய மன்னர் கொர்சாவுடன் தனது சிலுவையின் கொடியுடனே போரிட்டு வெற்றி கண்டார். அத்தோடு அவர் யேசுவின் திருச்சிலுவையை மீட்டு பத்திரமாகவும் மிகவும் ஆடம்பரமாகவும் ஜெருசலேமுக்கு கொண்டு வந்தார். அதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்த திருச்சிலுவையானது ஜெருசலேம் நுழை வாயிலில் வந்தபோது நகராமல் நின்றுவிட்டது. மன்னர் எவ்வளவு முயன்றும் திருச்சிலுவையை அசைக்ககூட முடியவில்லை. மன்னர்
வந்த தேர் குதிரைப்படை எதுவும் நகரக்கூட முடியவில்லை.
இதர்க்கான காரணம் யாவருக்கும் புறியவில்லை. அப்போது மன்னருக்கு மட்டும் ஒரு அசிரீரீ கேட்டது போலும்.. இவன் யூதர்களின் அரசன்… என்ற குரலொலி அந்த ஜெருசலேம் நகர் முழுவதும் எதிரொலிப்பதுப்போல் இருந்தது. இப்போது மன்னர் ஹிராக்க்ளிஸுக்கு விஷயம் புரிந்துவிட்டது. இந்த இஸ்ரேலிய நாட்டில் யேசுவே அரசர்… இவர் யூதர்களின் அரசன் என்ற ஒலி மன்னருக்கு மட்டும் தெளிவாகக்கேட்டது… இந்த நாட்டில் இவர் … யேசுநாதர் அரசர் என்றால் அப்புறம் நான் யார்…. இந்த நசரேத்தூர் யேசுவுக்கு முன்னால் நான் எம்மாத்திரம். அவருக்கும் முன்னால் நான் ஒன்றுமே இல்லை. அவர் இந்த பாலஸ்தீனத்திற்கு மட்டும் அரசரல்ல. இந்த உலகம் முழுவதையும் இந்த அண்ட சராசரங்களையும் படைத்த தேவாதி தேவன். இந்த வையகம் முழுவதற்கும் பேரரசர்…
நான் அவருக்குமுன்னால் ஒரு சாதாரணமான பிரஜை..இந்த எண்ணம் வந்த உடன் அரசன் ஹிராக்ளியுஸ் தடாலென தேரிலிருந்து இறங்கினான்.. அரசருக்குறிய மணிமுடி செங்கோல் ஆடம்பரமான அணிகலண், பாதரட்சைகள் அனைத்தையும் அகற்றினான். வெறும் காலுடன் யேசுவின் திருச்சிலுவையை தூக்கிக்கொண்டு ஜெருசலேம் நகர் முழுக்க சுற்றிவந்து திருச்சிலுவையை அந்த கொல்கொத்தா மலையில் யேசுவின் திருக்கல்லறை பேராலயத்தில் கோவிலில் பத்திரமாக வைத்தான். திருச்சிலுவை மீண்டும் அதன் இடத்தில் நிலைபெற்றது.
இப்படியாக ஒரு காலத்தில் அவமானத்தின் அடையாளமாக இருந்த சிலுவை வெற்றியின் அடையாளமாக பிறகு கருதப்பட்டது.
” வானில் தோன்றிய சிலுவை.”
இது கதை அல்ல. நிஜம். இந்த உண்மை நிகழ்ச்சி நடந்த இடம் ஜெருசலேம்.. நிகழ்ந்த ஆண்டு கி.பி. 351 மே மாதம் 7 ஆம் தேதி காலை ஒன்பது மணிமுதல்..
அதாவது புனித சிரில் என்பவர் மாக்ஸிமஸ் என்பவரை அடுத்து ஜெருசலேம் நகர ஆயராக பணி ஏற்ற போது அப்போது கொன்ஸ்டான்ட்டி நெப்பிள்ஸின் மன்னராக பதவி வகித்தவர் புனித பெரிய கொன்ஸ்டான்ட்டி நேபிள்ஸின் மகன் கொன்ஸ்டான்டினுஸ் என்பவர்.
அந்த ஆண்டின் புனித வாரத்திற்குப்பின் பெந்தகோஸ்த்தே திருவிழா அன்று ஜெருசலேம் நகரத்தில் பல விதமான அருங்குறிகளோடு வானில் ஒரு பெரும் சிலுவை அடையாளம் தோன்றியது. ஏதோ பளிச்சென்று மின்னல் மின்னது போல அது தோன்றி மறையவில்லை..அன்றைய தினம் காலைப்பொழுதில் வானம் தெளிவாக இருக்க கண்டார்கள் அன்றைய ஜெருசலெம் மக்கள்..வானில் ஒரு பெரும் சுடர் ஒன்று சூரியனை விட பிரகாசமாக தென்பட்டது. அது கொல்கொத்தா மலையிலிருந்து ஆரம்பித்து ஒலிவ மலை வரை சுமார் இரண்டு
மைல் தொலைவு வரை நீண்டது.. வெண் பிரகாசமான கதிர்கள் ஒன்று சேர்ந்தாற்போல் மிகத்தெளிவாக வானில் வரைந்தாற்போல் ஒரு பெரும் சிலுவை அடையாளம் தோன்றியது.
பல மணி நேரம் அதன் சுடர்கள் வானில் நிலைபெற்று நின்றது..இதைக்கண்ட மக்கள் திகிலுற்றனர். கிரிஸ்த்துவர்கள், கிரிஸ்த்துவர்கள் அல்லாதோர், பயணிகள், வியாபாரிகள் என்று பலதரப்பட்ட மக்கள் இந்த காட்சியைக்கண்டார்கள்.. மிகுந்த திக்பிரமையும் அக்சமும் அவர்களை ஆட்கொள்ளவே அனைவரும் தேவாலயத்திற்குச்சென்று யேசுவை வழிபட்டனர்.
கிரிஸ்த்துவர் அல்லாதோரும் யேசுவை வழிபட்டனர்.. முக்கியமாக யேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் பலரும் அவர் தம் மனதில் அச்சம் மேலிட யேசுவை மெசியாவாக ஏற்றுக்கொண்டு அவரை வழிபட்டனர்.
யேசுவின் மீது நம்பிக்கைகொண்டோ அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுற்று தேவாலயங்களில் ஆண்டவராகிய யேசுவுக்கு புகழ்ச்சியும் ஆராதனையும் செலுத்தினர். நன்றிப்பாக்களை பாடினர். அந்த நேரத்தில் அவர்கள் மனதில் நினைவுக்கு வந்த மத்தேயுவின் நாற்செய்தி 24.30 வாசகங்கள் தான்.
” பின்பு வானத்தில் மானிடமகன் வருகையின் அறிகுறி தோன்றும்.
அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்ச்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின் மீது வருவார். இதைக்காணும் மண்ணுலகிலுல்ல எல்லாக்குலத்தவரும் மாரடித்துப்புலம்புவர்.” அப்போது ஜெருசலேமின் அயராக இருந்த புனித சிரில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் பதிவு செய்து பேரரசர் கொன்ஸ்த்தாந்தினுஸுகு ஒரு கடிதமாக அனுப்பினார்.
இந்த வானில் தோன்றிய சிலுவையைப்பற்றி அக்காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்கள் சொசொமொன், தியோஃபனெஸ், யூடிகியுஸ், நைஸ் நகர ஜான், க்ல்ய்காஸ் ஆகியோர் புனித சிரில் ஆயரின் கூற்றை ஆமோதிக்கின்றர்கள். மேலும் பலர் கிறிஸ்த்துவ மதாத்தை சாரதவர்களான் சாக்ரடீஸ், ஃபிலஸ்தொர்கியுஸ் போன்றவர்களும் கிரானிக்கல்ஸ் அலெக்சாண்டிரியா என்ற அமைப்பும் கூட இந்த நிகழ்ச்சியை அக்கலத்திலேயே பதிவு செய்திருக்கின்றது.
சரித்திர ஆசிரியர் ஃபிலொஸ்தொர்ஜியுஸ் இவ்வாறு எழுதுகிறார்.. ” இந்த ஆண்டின் பெந்தகோஸ்த்தே திருவிழா அன்று காலை ஏறக்குறைய ஒன்பது மணியிலிருந்து வானில் தோன்றிய பிரகாசமான சிலுவை அடையாளமானது கொல்கொத்தா என்னும் கல்வாரி மலைமுதல் ஆரம்பித்து ஏற்க்குறைய இரண்டு மைல் நீளத்திற்கு வியாபித்து ஒலிவ மலை வரை நீண்டது. அதற்க்கேற்றார்போல் சிலுவையில் அகலமும் இருந்தது. இந்த புனித சிலுவையை சுற்றி ஒரு பெரும் ஒளிவட்டம் தோன்றியது. அது அந்த சிலுவைக்கு ஒரு பெரும் மணிமகுடம்
போல் விளங்கிற்று. இந்த ஒளிவட்டம் சிலுவையில் பாடுகள் பலபட்டு மரித்து உயிர்த்தெழுந்த யேசுவின் வெற்றியையும் அவரது கருணையையும் குறிப்பதாக நம்பப்படுகின்றது. இந்த யூதர்கள் யேசுவைகண்டு பயங்தார்களோ இல்லையியோ ஆனால் அவர்களது அரசாங்க வீரர்கள் பயந்தனர் என்பது நிச்சயம். அந்த வீரர்கள் மட்டுமல்லாது மாமன்னன் கான்ஸ்டான்டினுஸ் இந்த யேசுவின் சிலுவையை தன் அரசாங்க இலைச்சினையாகக்கொண்ட சிலுவையின் அடையாளக்கொடியைகண்ட அவரது எதிரி அரசன் மக்னென்டியுஸும்
அவன் கூட்டாளிப்படையினரும் மிகுந்த அச்சப்பட்டனர். முதல் முறை மாமன்னன் கொன்ஸ்ட்டாண்டினுஸிடம் புறமுதுகு காட்டி ஓடிய மக்னென்டியுஸ் இரண்டாம் முறையும் அவரோடு போரில் ஏடுபட்டான். ஆனால் சிலுவையிஎன் அடையாளம் வெற்றியின் அடியாளம் என்று மாமன்னர் கொன்ஸ்ட்டான்டினுக்கு மிகத்தெளிவாக உணர்த்தப்பட்டதால் அவர் அந்த சிலுவை அடையாளமிட்ட கொடியாலேயே போரை ஆரம்பித்து மக்னென்டியுஸை இரண்டாம் முறையும் முறியடித்தார். எதிரி அரசன் மக்னென்டியுஸ் தோற்று [இன்றைய பிரான்ஸ்
தேசத்திலுள்ள லியோன் நகருக்கு] ஓடிப்போனான். சிலர் அவன் டைபர் நதியில் விழுந்து செத்தான் என்றும் கூறுவர். சிலுவையிஎன் அடையாளம் தோல்வியின் அடையாளமில்லை.
அது வெற்றியின் அடையாளம்.[ ஆதாரம். .ecclesiastical history..book III. chapter III..XXVI ]
இதே கருத்தைத்தான் அக்காலத்தில் வாழ்ந்த சாக்ரட்டீஸ் என்பவரும் கூறுகின்றார். இவர் வானில் தோன்றிய ஒளிவட்டத்தோடு சிலுவைஅடையாளத்தை சுற்றி ஒரு மா பெரும்
வர்ணஜாலமாக rainbow ஒன்று தோன்றியாதாகவும் கூறுகின்றார். மக்கள் மிகுந்த அச்சமுற்றனர்.. தேவாலயங்களுக்குச்சென்று யேசுகிரிஸ்த்துவை ஆராதித்தனர். யேசுவை நம்பாத யூதர்கள் பலரும் கூட யேசுவை தங்கள் மெசியாவாக ஏற்றுக்கொண்டதாகக்கூறுகின்றார்.
[ ஆதாரம்...ecclesiastical history..book IV chapterV.]
No comments:
Post a Comment