Tuesday, September 3, 2013

" அந்த நாற்பது பேர். "



                                                         " அந்த நாற்பது பேர். "
                                                 
         பெத்லஹேமில் மாதாவின் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளை பெத்லஹேம் நாட்டுப்புறக்கதைகளில் நான் வாசிக்க நேர்ந்த போது ஒரு நாற்பது பேரைப்பற்றியும்  ருஸ்யாவில் நடந்த ஒரு சம்பவத்தில் யேசுவை மறுதலிக்க மறுத்த ஒரு நாற்பது பேரைப்பற்றியும் நான் வாசித்த நிகழ்ச்சிகளை நேயர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
     மக்கள் தொகை கணக்கு எடுக்கவேண்டிய காரணத்தால் சூசையப்பர் தன் மனைவி மரியாள் நிறைமாத கர்பிணியாக இருக்கும்போது அவரைக்கூட்டிக்கொண்டு தன் சொந்த   ஊராகிய பெத்லஹேமுக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் அவர் பெத்தானியா வழியாக தன் மனைவியுடன் வந்தார். பசியும் தாகமும் அவர்களை வாட்டி
எடுத்தது. கையில் கொண்டுவந்திருந்த சாப்பாடும் பழங்களும் தண்ணீர் பைகளும் ஏற்கனவே காலியாகிவிட்டன. இருப்பினும் பெதானியா ஊர் சற்று தூரத்தில் தென்பட்டதால்  உற்சாகமடைந்த அவர்கள் விரைவில் போய் சேர்ந்துவிடலாம் என்றால் தாகமும் பசியும் களைப்பும் மாதாவை வாட்டவே சற்ரே தூரத்தில் தென்பட்ட ஒரு அத்தி மரத்தின் நிழலில்  அமர்ந்தனர். தன் கணவர் சூசை அந்த மரத்தில் ஏதேனும் அத்திபழங்கள் இருந்தால் தன் நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவிக்கு பறித்துகொடுக்கலாம் என்று பல விதத்திலும்   முயன்று பார்த்தார். ஆனால் என்ன ஒரு ஏமாற்றம்.. அவர் கண்களில் ஒரு பூவோ.. பிஞ்சோ..காயோ கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றம் அடைந்த அவர் தன் மனைவியை   அழைத்துக்கொண்டு பெத்தானி நகர் அடைந்து தங்கள் தாகம் தணித்து அந்த ஊரில் தங்கி அடுத்த நாள் பெத்லஹேம் அடைய திட்டமிட்டிருந்தார்.
[ இந்த நிகழ்ச்சியைப்பற்றி மாதவும் சூசையப்பரும் தன் திருமகன் யேசுநாதரிடம் பிற்காலத்தில் சொல்லி மிகவும் வருத்தப்பட்டனர். தன் அன்பான பர்த்தா தன் தாகம் தணிக்க  வேண்டியும் பசி தீர்க்க வேண்டியும் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை தன் திருமகனிடன் சொல்லும்போது மாதாகின் கண்கள் கலங்கின.   சோதனையாக யேசுநாதரும் அவரது
சீடர்களும் முப்பதுவருடம் கழித்து இதே அத்தி மரத்தடியில் வரும்போது யேசுநாதருக்கும் பசி தாகம் வந்தது. அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த அத்திமரத்தில் ஒரு பூவோ  காயோ கணியோ அவருக்கு கிடைக்கவில்லை.அப்போது இந்த அத்திமரத்தைப்பற்றி தன் தாயாரும் தகப்பனாரும் கூறிய நிகழ்வுகள் அவருக்கு நினைவுக்கு வந்தன. மிகுந்த
விசனமுற்ற அவர் இந்த அத்தி மரத்தால் தான் தன் தாய் வயிற்றிலிருக்கும்போது தன் தாயாருக்கோ தன் தந்தையாருக்கோ பிரையோஜனப்படவில்லை ...இப்போது தனக்கும்   பிரயோஜனப்படவில்லை.. இந்த வழியில் போவோர் வருவோர் யாருக்கும் பிரையோஜனம் இல்லை...இந்த அத்தி மரம் இனிமேல் இருந்தென்ன போய் என்ன... இந்த அத்தி மரத்தால்   யாருக்கும் பிரையோஜனமில்லாததால் " இந்த அத்தி மரமே நீ பட்டு ஒழிந்து போகக்கடவாய் " என்று சபித்த மாத்திரத்தில் அந்த அத்திமரம் உடனே பட்டுப்போனது. காலையில்   ஜெருசலேம் செல்லும்போது உயிருடன் இருந்த அந்த அத்திமரம் மாலை திரும்பிவருவதற்குள் பட்டுப்போனதெப்படி என்று யேசுவின் அப்போஸ்த்தலர்கள் மிகவும் வியந்து   மலைத்துப்போயினர்.]
           மீண்டும் நடைப்பயணம் ஆரம்பித்தனர் மாதாவும் சூசையப்பரும்...ஒருவழியாக பெத்சூர் என்னும் ஊரை அடைந்தனர். இங்கிருந்து பெத்லஹேம் ஒரு மைல் தூரம் இருக்கும்.  இந்த ஊரில்தான் இடையர்கள் தங்கள் காலநடைகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். இனிமேலும் தன்னால் ஒரு அடிகூட எடுத்துவைக்கமுடியாது என்ற நிலையில் மாதா அருகில்   உள்ள ஒரு பாறையில் சற்றே அமர்ந்து ஓய்வு எடுத்தார்.. அந்தப்பாறை காத்தீஸ்மா என்று அழைக்கப்படுகின்றது.. அதாவது மாதா அமர்ந்த இடம் என்று அதற்க்குப்பொருள்.
      அதற்குள் சூசையப்பர் தன் தோல் பையை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மக்களிடம் சென்று தன் மனைவிக்கு குடிக்க கொஞ்ச்ம் தண்ணீர் கேட்டார்..ஆனால் அவருக்கு அங்கு  ஏமாற்றமே மிஞ்சியது.. வயது முதிர்ந்திருந்த ஒரு பெண் சூசையைக்கண்டு எரிச்சலுற்றாள்.." எங்கிருந்தைய்யா வந்து விடுகிறீர்கள்..யார் வந்தாலும் போனாலும் எங்களுக்கு  இதே பிரச்சனைதான்... தண்ணீர்.. தண்ணீர் ..த்ண்ணீர்...உங்களைப்போன்றவர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுத்தே எங்களுக்கு முடியவில்லை. கிணறு நூறு அடிக்கு மேல் அழம்...
இதில் நாங்களும் குடித்து எங்கள் கால்நடைகளுக்கும் கொடுத்து.... அடடா சாமி... முடியவில்லையப்பா..எங்களிடம் உமக்கு கொடுக்க தண்ணீர் இல்லை..போய் வாரும்.". என்று  ஏதோ பிச்சைகாரனை விரட்டுவதுபோல் சூசையை விரட்டினாள் அந்த மூதாட்டி.
     சூசையின் முகம் உடனே வாடிவிட்டது. வெறும் கையால் தன் மனைவியை எப்படிப்போய் பார்ப்பது என்று கலங்கினார் அவர். அப்போது அந்த மூதாட்டியின் மருமகள் சூசையை  கிணற்ருக்கு வாருங்கள் என்று சாடையாய் கூப்பிட்டாள்... சூசை தன் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த கிணற்ருக்குப்போனார்.. அது ஒரு தரைமட்டமான கிணறு.
குறைந்தபட்சம் நூறு அடி ஆழம் இருக்கும்.. ஏதோ அடியில் பாறையில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது.. ஆனால் சோதனையாக அந்தகிணற்றில் நீர் எடுக்க கயிறோ வாளியோ  இல்லை. அப்போது சூசை தன் மனைவி மரியாளிடம் " மரியா... இந்த மக்களின் மனமும் இந்த கிணறு போலத்தான் இருக்கின்றது. இந்த மக்களின் மனதில் அன்பில்லாமையால்
இந்த கிணற்று பாறை போல் கல்லாகிப்போயிற்று... ஆனாலும் சிலரும் இருகின்றார்கள்...இந்தகிணற்றுத்தண்ணீர்போல.. அதோ பார்.. அந்த வீட்டின் மருமகள் நமக்கு உதவ  கயிரும் வாளியும் கொண்டு வருகின்றாள் " என்றார். நடந்த நிகழ்ச்சிகளை மாதா அறிந்து மிகுந்த விசனமுற்றாள்..இருப்பினும்தன் கணவரைப்பார்த்து " என் பர்த்தாவே...உமக்கு  நேர்ந்த அவமானத்தால் என் நெஞ்சு மிகுந்த விசனமுறுகின்றது. இனிமேல் நமக்கு அவர்கள் உதவி தேவை இல்லை... நம் கடவுள் நமக்கு உதவுவார் " என்று மண்டியிட்டு தன்
கைகளை உயர்த்தி மன்றாடவே உடனே ஒரு புதுமை நடந்தது.
           தரைமட்டத்திலிருந்து கீழே ஆழத்திலிருந்த கிணற்றுதண்ணீர் வேகவேகமாக சுரந்தது...மடமடவென நீர் மட்டம் உயர்ந்தது. சில வினாடிகளில் கிணற்றுத்தண்னீர்   தரைமட்டதிற்கு வந்து விட்டது. தேவமாதா தன் கைகளை பயன்படுத்தி வேண்டியமட்டும் தண்ணீர்பருகி தங்கள் தாகம் தணித்தனர்..கயிரும் வாளியும் கொண்டுவந்த அந்த மருமகள்  நடந்த புதுமையைக்கண்டு அஞ்சி நடுங்கினாள். தன் மாமியார் எவ்வளவுபெரும் தவறு செய்துவிட்டாள்... இந்த மாதரசி எப்பேற்பட்டவறோ... இந்த மனிதர்... அவர் கணவர் .  .எப்பேற்பட்ட புனிதர்...இவரையா என் மாமியார் விரட்டியடித்தார்... ஐய்யோ கடவுளே... இனி என்னென்னவெல்லாம் நடக்குமோ...இந்த பாவத்திற்கு பரிகாரமேது...அம்மணி...
தாயாரே... மாதாவே... எங்களை மன்னியும்...தயவு செய்து தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம்....தாங்கள் யார் என்று தெரியாமல் செய்த பிழை இது..கடும் உழைப்பினாலும்.  .வயோதிகத்தினாலும் நேர்ந்த பிழை இது...அம்மணி... தாங்கள் தங்கள் வயிற்றினுள் இருக்கும் பிள்ளையை நினைத்துப் பார்த்து எங்களை மன்னிக்க வேண்டும் அம்மா...
என்று மாதாவின் கால்களைக்கட்டிக்கொண்டு அழுது புலம்பினாள். அவள் மீது பரிவுகொண்ட தேவ மாதா " பெண்ணே... எமக்கு யார்மீதும் வருத்தமில்லை...இருப்பினும்   அன்பென்னும் புண்ணியத்தை உன் மாமியாருக்கு கற்றுக்கொடு..பசியும் தாகமும் இந்த உலகில் எவ்வளவு கொடுமையான விஷயங்கள் என்பதை நாம் அறிவோம்..
இந்த புண்ணியத்தின்மட்டில் அதிகம் ஆர்வம் கொள்வீர்களாக" என்றார். அப்போது அந்தப்பெண் " அம்மா...தேவரீர் எங்களுக்கு ஒரு வரம் தரவேண்டும்... தங்களுக்கு எம்மீது கோபம்   இல்லை என்பதற்கு ஆதாரமாக எங்களுக்கு அந்த வரம் இருக்க வேண்டும்" என்றாள்.. தேவ தாயரும் " உம் விருப்பம் எதுவோ அது உனக்கு அருளப்படும் " என்றார்.
அப்போது அந்தப்பெண் " அம்மா...நாங்கள் இன்றுபோல் என்றும் இருக்க வேண்டும் " என்றாள்..
        தேவ தாயாரும் " உன் விருப்பப்படியே ஆகட்டும்." என்றார்.. அப்படியே ஆயிற்று.. இந்த வரம் கேட்டபோது அந்த கிணற்றுக்கு சொந்தக்காரியான மாமியார் மருமகள் சேர்ந்த   குடும்பத்தினர் மொத்தம் நாற்பதுபேர்.இருந்தனர்..சொன்னால் நம்ப மாட்டீர்கள்...மாதாவின் காலத்திலிருந்து இன்று வரை அந்தக்குடும்பத்தில் எப்போதும் நாற்பதுபேர் மட்டுமே இருப்பர்.
             ஒன்றுகூட கூடுவதும் இல்லை..குறைவதுமில்லை..
தரைமட்டத்திலிருந்த கிணற்றுத்தண்ணீர் மூன்று ராஜாக்கள் வந்து இந்த கிணற்றருகே தங்கி இளைப்பாறி மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச்செல்லும் வரை  தரைமட்டத்திலேயே இருந்தது. இப்போதும் அந்தக்கிணறு இருகின்றது. மாதா அமர்ந்த அந்தப்பாறையும் " காத்தீஸ்மா" இன்றும் இருகின்றது...

                                         " இன்னும் ஒரு நாற்பது பேர் ".
       இந்த சம்பவம் நடந்தது ருச்சியாவில் சபாஸ்தே என்னுமிடத்தில் கி.பி. 313 ஆம் ஆண்டில். காண்ஸ்ட்டான்டி நேப்பிள்ஸ் மன்னர் தம் ஆட்சிக்குட்பட்ட ரோமை சாம்ராஜியத்தில்  கிரிஸ்த்துவை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை என்றும் அரசாங்க ஆணை பிறப்பித்தார். இந்த
அரசாங்க ஆணையால் பலரும் தங்களுக்கு விருப்பமான கடவுளர்களை வழிபட சுதந்திரம் கிடைத்ததால் கிரிஸ்த்துவர்களும் மற்ற மதத்தினரும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.
        இந்த சூழ்நிலையில் கான்ஸ்டாண்டி நேபில்ஸ் மன்னரின் முன்னால் கூட்டாளியான லிசினியுஸ் என்பவன் அவரை எதிர்த்து தனியே பிரிந்தான் . தன் ஆட்சிக்குட்பட்ட நாட்டில்  கிரிஸ்த்துவ மதத்தை தடை செய்தான். கிரிஸ்த்துவை பின்பற்றுவர்களை கடுமையாக வதைத்தான். தன் நாட்டு மக்களுக்கு சரியான புத்தி புகட்ட எண்ணி கிரிஸ்த்துவை மறுதளிக்க
மறுத்த ஒரு நாற்பது போர் வீரர்களை தனியே பிரித்து கடுமையான ஆக்கினைக்கு உட்படுத்த கட்டளை இட்டான்.
        இதற்காக செபஸ்தே என்னுமிடத்திலிருந்த ஒரு பனி மூடிய ஏரியை தேர்ந்தெடுத்தான்.. அதன் அருகில் ஒரு பெரும் தனல் அடுப்புகொண்ட ஒரு வீட்டையும் நிர்மானித்தான்.  கிரிஸ்த்துவை மறுதளிக்க விரும்புவரை காப்பாற்றும் படிக்கு தனல் அடுப்பு எப்போதும் எரியும்படி அமைக்கப்பட்டிருந்தது,. இந்த பனிமூடிய ஏரியில் அந்த யேசுவின்பால் பக்தியும் பற்றும்   கொண்ட அந்த நாற்பது வீரர்களை நிர்வாணமாக்கி அந்த பனிமூடிய ஏறியில் இறக்கினர். அவர்களும் மிகுந்த நெஞ்சு உரத்துடன் யேசுகிரிஸ்த்துவின் பாடல்களைப்பாடிக்கொண்டே
அந்த பனிமூடிய ஏறியில் இரங்கினர். ஒரு முழு இரவு கழிந்தது.
[ நேயர்களுக்கு பனிமூடிய ஏரியிலோ குளத்திலோ மனிதன் வீழ்ந்தால் என்னவாகும் என்பதுபற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மனித உடம்பு ஒருகுறிப்பிட்ட அளவு  உஷ்ணத்தையோ அல்லது குளிரையோ தாங்கும்படியாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் குளிரும் பட்சத்தில் சளிபிடிக்கும்.. இன்னும் உறைந்தால் உடல் ஜன்னி   காணும்...இதற்குள் அந்த பாவப்பட்ட மனிதன் இறந்துவிடவேண்டும். இல்லாவிட்டால் அவன் நிலை அந்தோ பரிதாபம்... பின் பிடறியிலிருந்து ஆசனவாய்வரை யாரோ கத்திபோட்டு   கிழித்தாற்போல உடல் பிளவுபடும். அந்த பிளவு வழியே செல்லும் பனி ஆயிரம் ஊசிகொண்டு குத்துவதுபோல் குத்தும்.. மிகுந்த வலியும் வேதனையும் அவனை ஆட்கொள்ளும்..  .பின் மரணம் ஏற்படும்.   ஒருமனிதனை பனியினால் சாகிறாயா அல்லது நெருப்பினால் சாகிறாயா என்று கேட்டால் அவன் நெருப்பில் சாவதை தேர்ந்தெடுப்பது அவனுக்கு நலமாய்   இருக்கும். நெருப்பினால் ஏற்படும் மரணம் கொடுமையானது என்றாலும் எல்லாம் சில வினாடிகளில் முடிந்துவிடும். ஆனால் பனியால் ஏற்படும் மரணம் மிகக்கொடுமையானது.
அது பலமணி நேரம் மனிதனை வாதித்துக்கொல்லும்.]
       இந்த சூழ்நிலையில் ஒரு மனிதன் வாதனைகளை தாங்க முடியாமல் அந்த பனி ஏரியிலிருந்து வெளியே வந்தான்.. ஆனால் வெளிவந்த மாத்திரத்தில் பனிக்காற்றால்   விறைத்துப்போய் மரணித்தான். அவனைப்பற்றி கடும் மனதுகொண்ட அந்த வாதிப்பவன் கூட வருந்தினான். அவனை தனல் அடுப்புள்ள வீட்டில் கொண்டுபோய் வைத்துப்பார்த்தும்   பயன் இல்லை..இந்த சூழ்நிலையில் அந்த வாதிப்பவன் வானில் ஒரு காட்சிகண்டான்.
          வானம் திறந்தது...பரலோகம் தெரிந்தது.. நாற்பது வானவர் அவர்தம் கரங்களில் அழகான மணிமுடி கொண்டுவந்தனர். யேசுநாதர் அவர்களை வழி அனுப்பி அவர்கள் திரும்பி   வரும்வரை காத்திருப்பதாகவும் அதுவரை வானம் திறந்து பரலோக காட்சி தெரியும் என்றும் கூறக்கேட்டான். ஒரு பெரும் பரலோக ஒளி அந்த செபஸ்தே ஏரியை மூடியது .
அந்த பரலோக ஜோதியால் பனிஏரி உஷ்ணமானது..அது அடுத்தநாள் காலைவரை தொடர்ந்தது.
       இந்த பரலோக ஒளியையும் அதன் சுகந்தத்தையும் சம்மனசுகளின் காட்ச்சியையும் கண்ட அந்த கல்மனது கொண்ட வாதிப்பவன் தன்னை மறந்தான்.. தனக்கும் குடும்பம் இருப்பதை   மறந்தான்... இந்த உலகை மறந்தான்... எல்லாவற்றையும் மறந்தான்...இந்த பரலோக வாழ்க்கைக்கும் முன் இந்த உலகின் மாட்சிமை ஒன்றுமில்லை என்று உண்ர்ந்தான்..
அவன் வாய் உறக்கக்கூறியது.. இனிமேல் நான் கிரிஸ்த்துவன்... கிரிஸ்த்துவே என் அரசர்... யேசு கிரிஸ்த்துவே என் மீட்ப்பர் என்று கூறிக்கொண்டு தன் ஆடைகளை  களைந்துகொண்டு நிர்வாணமாக அந்தப்பனி ஏரியில் இரங்கினான்.    இந்த விபரம் மன்னன் லிசினியுஸுக்கு தெரிவிக்கப்பட்டது. பெரும் கோபம் கொண்டான் லிசினியுஸ்.
       குற்றுயிரும் குலை உயிருமாய் இருந்த அந்த நாற்பது வீரர்களையும் பனி ஏரியிலிருந்து வெளியே எடுத்தான். அவர்கள் அனைவரையும் மிகவும் கடின மனம் கொண்ட வாதிப்போர்களிடம்   ஒப்படைத்தான். அவர்கள் அந்த நாற்பதுபேரையும் சம்மட்டிகொண்டு அவர்கள் எலும்புகளை எல்லாம் அடித்து உடைத்து அப்படியே நெருப்பில் தூக்கிப்போட்டு அவர்கள் அனைவரையும்
சாம்பலாக்கி அந்த பனி ஏரியில் கலந்தனர்.
     சற்று நேரத்தில் அந்த நாற்பது சம்மனசுகளும் அவர்கள் கொண்டுவந்திருந்த மணிமுடிகளை அந்த நாற்பது வீரர்களுக்கும் வேத சாட்சி முடியாக சூட்டி பரலோக பாக்கியத்தில்   சேர்த்தனர்.  கடைசி நேரத்தில் அந்த கல்மனது கொண்ட வாதிப்பவன் கூட மனம் மாறி வேத சாட்சிமுடிபெற்றான்..
அவன் ஞாஸ்நானம் வாங்கவில்லை...புதுநன்மை வாங்கவில்லை...பரிசுத்தா ஆவியை பெறவில்லை... அவன் செய்தது எல்லாம் யேசுகிரிஸ்த்துவை ஆண்டவறாக.. கடவுளாக.. மீட்ப்பறாக ஏற்றுக்கொண்டதாக அறிக்கை இட்டதுதான். வேதசாட்சி பட்டம் என்பது யார் யாருக்கு அருளப்படுமோ அவர்களுக்கு மட்டுமே அது அருளப்படும்..








No comments:

Post a Comment