Monday, November 4, 2013

" வீரமங்கை புனித ஆகத்தா "




                                                         " வீரமங்கை புனித ஆகத்தா "
      ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3,4,5 தேதிகள் வந்துவிட்டால் சிசிலியிலுள்ள காட்டானியா ஊர் மக்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். இந்த மூன்று நாளும் ஊர் திருவிழாதான்.
காரணம் இந்த தீவின் பாதுகாவலி புனித ஆகத்தம்மாள் வேத சாட்ச்சியாக மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் இதே காட்டானியாவில் தான். இந்த வீரப்பெண் புனித ஆகத்தம்மாளின்
பாடுகளை வார்த்தையில் சொல்லி முடியாது. பதினைந்தே வயது நிரம்பிய ஒரு சிறிய கன்னிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் வேறு யாருக்கும் நடந்திருக்க முடியாது. தன்னுடைய  வேதனை நிறைந்த பாடுகளிளும் தான் யேசுவின் மீது கொண்ட விசுவசாசத்தின் நிமித்தமாகவும் அவள் அந்நாட்டை ஆண்ட ஆளுனன் குவின்ட்டஸை கேட்ட நியாயமான கேள்விகள்  அவளை வீரப்பெண்னாகவும் வேத சாட்ச்சியாகவும் ஆக்கியது.
           திருச்சியில் நல்லாயன் ஆலயத்தின் மேல் விதானத்தில் வரையப்பட்டிருக்கும் வேத சாட்ச்சிகளைப்பற்றிய சித்திரங்கள் என்னில் பல வேத சாட்ச்சிகளைப்பற்றி அறிந்துகொள்ளும்
எண்ணத்தை தூண்டியது. அதன்படி பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா, ஆகத்தம்மாள், நீரோ மற்றும் தியொக்லேசியன் மன்னர்களின் கொடுங்கோல் ஆட்ச்சியில் அக்கால  கிரிஸ்த்து வேத சாட்ச்சிகளாய் மரித்தவர்கள் மரித்தவிதங்கள் ஆகியவை எனக்குள் பல சரித்திர கதா பாத்திரங்களை அறிந்துகொள்ளத்தூண்டியது. எனவே நான் அறிந்துகொண்ட சில வேத சாட்ச்சிகளைப்பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்...அப்படி நான் அறிந்த கொண்ட புனிதர்களிள் ஒருவர்தான் புனித ஆகத்தம்மாள்....
        புனித ஆகத்தம்மாள் பதினைந்தே வயதில் அதாவது பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி கி.பி. 251 ஆம் வருடம் வேத சாட்ச்சி ஆனாள். அவள் ஒரு உயர் குடியில் பிறந்தவர், பெரும்
செல்வந்தர் என்று மட்டும் அறிய முடிந்தே தவிர அவர் தாய் தந்தையரை பற்றியோ அவரது உடன் பிறந்தவரைப்பற்றியோ எந்த ஒரு விஷயமும் அறிந்துகொள்ள முடியவில்லை.
அக்காலத்தில் ரோமை ஆண்ட சக்கரவர்த்தி திராஜன் தேசியுஸ் என்பவன்.. கி.பி. 60 களில் ரோமை ஆண்ட நீரோ மன்னன் கொண்டுவந்த ஒரு அவசர சட்டம் கிரிஸ்த்துவர்களை
வெகுவாகப்பாதித்தது. கிரிஸ்த்துவர்கள் என்றால் அருவருக்கத்தத்தக்கவர்கள்...நம்பமுடியாதவர்கள்...சமூகத்திலிருந்தே அகற்றப்படவேண்டியவர்கள் போன்ற காரணங்களுக்காக  அந்த சட்டம் சுமார் எட்டு நூற்றாண்டுகளாக அமுலில் இருந்தது.  நீரோவுக்குப்பின் வந்த சர்வாதிகாரிகள் இந்த சட்டத்துக்கு அவ்வப்போது உயிர் கொடுத்துக்கொண்டே வந்ததால் அந்த கொடும் சட்டம் ரோமை ஆதிக்கத்துக்கு உட்பட்ட சகல நாடுகளிலும் கிரிஸ்த்துவர்களின் ரத்தத்தை காவு கேட்டது.
       இப்படியாக திராஜன் தேசியுஸும் இந்த சட்டத்துக்கு உயிர் கொடுத்ததால் அவன் காலத்திலும் வேதகலாபனை இத்தாலியில் ஆரம்பித்தது. இந்த சட்டம் என்ன சொல்லுகிறது..
ரோமை சாம்ராஜிய அதிபதிகள் கடவுளின் அவதாரம்...ரோமர்களின் கடவுளர்களான வீனஸ் ஜுபிடர் போன்ற தெய்வங்களுக்கு இணையாக வணங்கப்பட வேண்டியவர்கள்..மன்னரது
ஆட்ச்சியை அங்கீகரிக்கவும் மன்னரை கடவுளாக ஏற்றுக்கொண்டு ஆராதிக்கவும் அவர்கள் குல தெய்வங்களுக்கு தீப ஆராதனை காட்டவும் தங்களுடைய ரோமை அதிபதிகளுக்கும்
அவர்தம் தேவர்களுக்கும் ராஜ விசுவாசத்தை காட்டவும் இந்த சட்டம் நிர்ப்பந்திகின்றது. இந்த சட்டத்தை நிறைவேற்றாதவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவும் அவர்தம் குடி
உரிமையை ரத்து செய்யவும் அவர்தம் சொத்துக்களை பிடுங்கவும் கடைசியாய் மரணதீர்வைக்கும் வகை செய்கின்றது.
        ஆகத்தா என்னும் பெண்ணும் அவள் தோழிகள் சிலரும் சிசிலி நாட்டில் தோன்றிய வேத கலாபனையிலிருந்து தப்பிக்க மால்ட்டா தீவை அடைந்தனர். அங்கு கி.பி. 60ல் தன்   விசாரணைக்காக ரோம் செல்லும் வழியில் கப்பல் உடைந்துவிடவே அதிலிருந்து புனித சின்னப்பர் இந்த தீவில் தான் தங்கினார். இங்கிருந்த குகை ஒன்றில் அவர் தங்கி இருந்தார்.   இதே குகையில்தான் ஆகத்தாவும் அவள் தோழிகளும் தங்கினர். அங்கிருந்துகொண்டே அந்த இடத்திலிருந்த சிறிய குழந்தைகளுக்கும் வாலிப பெண்களுக்கும் கிரிஸ்த்துவை   போதித்தாள். ஆனால் ஆகத்தாவை பிடித்த சனியன் இங்கும் அவளை துரத்தவே அவள் மீண்டும் தன் தாய் நாடு திரும்பினாள்.. சிசிலியில் அவள் கப்பலிலிருந்து இறங்கும்போதே
கைது செய்யப்பட்டாள். மால்ட்டா தீவில் .அவள் வந்து தங்கியிருந்த குகை இப்போதும் ஆகத்தா..மற்றும் புனித சின்னப்பர் பெயரால் அழைக்கப்படுகிறது.. ஆகத்தாவைப்பற்றிய
ஓவியங்களும் இந்த குகையில் சுவர் ஓவியங்களாக தீட்டபட்டுள்ளன. மால்டா தீவில் நடைபெற்ற வேதகலாபணையின்போது கொல்லப்பட்ட அனேக வேத சாட்ச்சிகளின் கல்லறைகள்  இந்த குகையில் இப்போதும் உள்ளன.
       ரோமை ராயனின் சட்டத்தால் கிரிஸ்த்துவர்களும் யூதர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒரே கடவுளை விசுவாசிகிறேன் என்ற விசுவாச அறிக்கை மேற்படி  சட்டத்தை மீறச்சொன்னது. இந்த சூழ்நிலையில் தான் சிசிலியில் உள்ள காட்டானா நகரில் வாழ்ந்துவந்த நம் ஆகத்தா திராஜன் தேசியுஸ் சிலைக்கும் அவர்கள் குல  தெய்வங்களுக்கும் தீபாராதணை காட்ட முடியாதென்று மறுக்கவே   அந்த காட்டானா நகர அதிபதி குவிண்ட்டனஸ் முன்பாக விசாரணைக்காக நிறுத்தப்பட்டிருந்தாள்.  விசாரணை ஆரம்பமானது.
      ஆகத்தாவின் குலத்திற்கு மிகவும் கீழ்பட்ட குலத்திலிருந்து வந்திருந்தவனான காட்டானா ஆளுனன் குவிண்ட்டனஸ் ஆகத்தாவைப்பார்த்த மாத்திரத்தில் அவள் அழகின் மேல்
காமுற்றான். இத்தனைக்கும் அவள் வயதுக்கும் ஆளுனன் வயதுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. தாத்தா பேத்தி அவ்வளவு வயது வித்தியாசம். ஆனால் காமத்துக்குதான்
வயது வித்தியாசம் என்பதே இல்லையே...ஆளுனன் மனது வைத்துவிட்டால் அது யாராக இருந்தால் என்ன...அதிகாரம் கையில் இருகிறது அல்லவா...இவளை சுலபத்தில் பணிய
வைத்துவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டான் ஆளுனன் குவின்ட்டணஸ்.
"
பெண்ணே ஆகத்தா...முதலில் நீ யாரிடம் பேசுகின்றோம்... என்ன பேசுகின்றோம்....என்பதை உணர்ந்து என்னிடம் பேச வேண்டும்...நம் சாம்ராஜ்ஜிய அதிபதி திராஜன் தேசியுஸ்
அவர்களுக்கும் ரோமை குல தெய்வங்களுக்கும் நீ ஏன் தீபராதணை காட்டவில்லை...இதன் விளைவு என்னவென்று உனக்குத்தெரியுமா? "
"
தெரியும் ஆளுனர் அவர்களே...தெரிந்துதான் நான் தீபராதனை காட்ட மறுக்கிறேன்"
"
பெண்ணே ...நீயும் மதிப்புக்குறிய உயர் குலத்தில் வந்துள்ள ரோமை பிரஜை என்பதை மறந்துபோனாயோ...ரோமை அதிபதிக்கு உன் ராஜ விசுவாசத்தை காட்ட வேண்டாமோ...
ரோமை குடிவுரிமைச்சட்டம் அதைத்தானே சொல்லுகின்றது... நீ ஏன் சட்டத்தை மீறுகின்றாய்? "
"
ஆளுனர் அவர்களே... ரோமை சாம்ராஜிய அதிபதி என்ற முறையில் ரோமை பிரஜைகள் அவருக்காக வணக்கமும் மரியாதையும் செய்ய வேண்டும் என்பதில் எந்த குற்றமுமில்லை..
குறையும் இல்லை.. நானும் சட்டத்தை மதிக்கின்ற வகையில் அவருக்குறிய வணக்கத்தையும் மரியாதையையும் அளிக்க விரும்புகின்றேன்.. ஆனால் ரோமை சக்கரவர்த்தியை
கடவுளாக ஏற்று மதித்து அவருக்கு தீபாராதணை காட்ட என்னால் முடியாது.. எங்களைப்பொருத்த வரையில் கடவுள் ஒருவரே... அவரே யேசு கிரிஸ்த்து.. அவருக்கு மட்டுமே நான் கடவுளாக மதித்து தீபாராதணை காட்டுவேனே அன்றி அரசனுக்கு கடவுளாக தீபாராதணை காட்டவே மாட்டேன்..  இது என்னுடைய உறுதியான முடிவும் இறுதியான முடிவும் " என்றாள்..
      ஆளுனன் குவிண்ட்டனஸ் மிகுந்த கோபம் கொண்டான்.. ஆயினும் அவள் மீதுள்ள காதலாலும் காமத்தாலும் சற்றே நிதானித்து தண்டனையை மாற்றி அமைக்கவும் காலம்
தாழ்த்தவும் சித்தம் கொண்டான். எனவே ஆகத்தாவை அக்காலத்தில் பேர்பெற்ற விபச்சாரியான அப்போர்டிசிய என்பவளிடம் ஒப்படைத்து தன் எண்னத்தை அவளிடம் கூறி  ஆகத்தாவை எந்த வழியிலாவது ஆசைவார்த்தை காட்டியாவது அல்லது மிரட்டியாவது பணிய வைத்து தன்னிடத்தில் முப்பது நாட்க்களுக்குள் அனுப்பிவிடவேண்டுமென  கட்டளையிட்டான். அந்த விபச்சாரி அபோர்டிசியாவுக்கு ஒன்பது பெண்கள்.. அந்த ஒன்பது பெண்களையும் தன் தவறான போதனையால் இவ்வுலக செல்வங்களுக்கும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவும் அரசாங்க அதிகாரிகளிடத்தில் தன் செல்வாக்கை நிலை நாட்டிக்கொள்ளவும் பேர்பெற்ற விபச்சாரிகளாக மாற்றினாள்.
      அப்போர்டிசியாவும் அவள் ஒன்பது பிள்ளைகளும் ஆகத்தாவுக்கு உலக இன்பங்களையும் இச்சைகளையும் செல்வங்களையும் அரசாங்கத்தின் அதிகாரத்தையும் பற்றி வானுயர
புகழ்ந்து கூறி அவள் மனது வைத்தால் ஆளுனன் குவின்ட்டனஸ் அவளை திருமணம் செய்துகொள்வதாகவும் அவளை ராணிபோல் வைத்துக்காப்பாற்றுவான் என்றும் மறுத்தால்
கடின உபாதைககளை சுமத்தி வேதனைமிகுந்த மரணத்தை ஏற்படுத்துவான் என்றும் ஆசை காட்டியும் பயத்தை ஏற்படுத்தியும் பல விதத்தில் புத்திகூறினர். ஆனால் ஆகத்தா எதையும்
காதுகொடுத்து கேட்க்கவும் இல்லை...அவள் பயமுறுத்தலுக்கு அடிபணியவும் இல்லை. அதற்குப்பதிலாக ஆகத்தா இவ்வாறு கூறினாள்.
      "
நீர் என்னிடத்தில் எவ்வளவு புத்திகூறினாலும் என்மனதில் எதுவும் ஏற்காது...இந்த உலக செல்வங்கள் அதிகாரங்கள் எல்லாம் என் யேசுநாதரைப்பொருத்தவரையில் வெறும் குப்பை..
பரலோக ராஜ்ஜியத்தின் மகிமைக்கு முன்னால் உன் செல்வமும் வைரமும் வெறும் குப்பை...இந்த உலக இன்பங்கள் உடல் சுகம் அனைத்தும் வீண்...நொடியில் மறைந்து
போகக்கூடியவை... மாறாக பரலோக செல்வமும் பரலோக இன்பமும் மட்டுமே நிரந்தரம்... அழிந்து போகும் இந்த உலக வாழ்க்கையை நம்பி நித்திய வாழ்வை புறக்கணிக்க என்னால்
முடியாது.. ஏன் என்றால் என்னில் வாழ்பவர் யேசு கிரிஸ்த்துவே.. என்னில் பேசுவதும் யேசு நாதரே...ஆகவே நீ போய் உன் ஆளுனன் குவிண்ட்டனஸை அழைத்து என்னை அவரிடம்
ஒப்படை... என்னை என் நாதர் யேசுவிடம் சேர்க்க அவரால் மட்டுமே முடியும்.. போய் அவரிடம் ஆக வேண்டிய காரியங்களை கச்சிதமாய் நிறைவேற்றச்சொல்" என்றாள்.
       அப்ரோடிசியா இந்தப்பெண் ஆகத்தாவைப்பற்றி மிகவும் வியந்து போனாள்..." இப்படியும் இந்த உலகத்தில் மனிதர் உண்டோ...ஆசைக்கும் அச்சுருத்தலுக்கும் அடிபணியா
ஆண்மாக்களும் இருக்கமுடியுமோ.. இந்தப்பெண்ணுக்கும் எனக்கும் எவ்வளவு வித்தியாசம்... அவள் உயிருள்ள சம்மனசு... சரீரம் கொண்ட சம்மனசு...இவள் வாழ்கையையா நான்
பாழாக்க வந்தேன்..நல்ல வேளை இவள் என் வழியாய் கற்பிழக்கவில்லை... கடவுள் காப்பாற்றினார்... இல்லை என்றால் அந்த சாபமும் என் தலைமேல் விழுந்திருக்கும்...
ஏற்கனவே நான் பெற்ற ஒன்பது பெண்களையும் விபச்சாரிகளாக்கிவிட்டேன்...கடவுளே என்னை மன்னிப்பாயா... இந்த மாதரசி ஆகத்தாவை கொடியவன் குவிண்ட்டனஸிடமிருந்து
காப்பாற்று" என்று வேண்டிக்கொண்டு ஆளுனன் குவிண்ட்டனஸை சந்தித்து இவ்வாறு கூறினாள்.
      "
அரசே என்னை முதலில் மன்னியுங்கள்... என் உயிருக்கும் என் மக்கள் உயிருக்கும் அபயம் கொடுங்கள்.. நானும் என் ஒன்பது பிள்ளைகளும் ஆகத்தாவை எவ்வளவோ புத்தி
சொல்லி பார்த்துவிட்டோம்.. அவள் மசியவே இல்லை...இரும்பை வளைத்து விடலாம்..உருக்கிவிடலாம் ஆனால் ஆகத்தாவை மாற்றமுடியவில்லை. அவள் தான் கொண்ட நிலையில்  உறுதியாய் இருகின்றாள்...அவளிடம் பயம் என்பதே கிடையாது..அவளுக்கு இந்த உலகத்தில் உயிர் வாழ வேண்டும் என்னும் ஆசையும் கிடையாது. அவள் இந்த உலக
செல்வங்களையும் இன்பங்களையும் குப்பையாய் மதிகின்றாள்.. அவளை பணிய வைக்கவே என்னாலும் முடியவில்லை... உன்னாலும் பணிய வைக்க முடியாது " என்றாள்.
              இதைக்கேட்ட ஆளுனன் குவிண்ட்டனஸ் மிகவும் வெகுண்டான்..".அடியே அப்ரோடிசியா...உன்னால் முடியவில்லை என்றால் என்னாலும் முடியாது என்றா சொன்னாய்...
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதை நீ அறியாயோ... நாளைக்குப்பார் என் கட்ச்சேரியை " என்றான்.
            அடுத்தநாள் விசாரணை ஆரம்பமானது ஆளுனன் பேசினான்." ஆகத்தா,...உன் குலப்பெருமையை முன்னிட்டும் உன் வாலிப வயதை முன்னிட்டும் மீண்டும் உனக்கு ஒரு வாய்ப்பு  தருகின்றேன்...இப்படியொரு வாய்ப்பை நான் யாருக்கும் இதுவரை தந்ததில்லை.. என்ன சொல்கிறாய்? திராஜன் தேசியுஸ் மஹாராஜாவுக்கும் நம் ரோமை தேவர்களுக்கும் தீபாராதனை  காட்டி உன் ரோமை குடி உரிமையை புதுப்பித்துக்கொள்கிறாயா...அல்லது கொடிய மரணத்தை தழுவுகின்றாயா? பதில் சொல்...."
        ஆகத்தா பேசினாள், " ஆளுனர் அவர்களே,..நான் என் நிலையில் இருந்து மாறப்போவதில்லை... அன்று சொன்ன அதே பதிலைத்தான் இன்றும் இப்போதும் எப்போதும் சொல்வேன்... ரோமை மஹாராஜாவுக்கோ அவர்தம் தெய்வங்களுக்கோ நான் ஒருபோதும் கடவுளுகுறிய தீபாராதனை காட்டப்போவதில்லை..இது சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்.."
ஆளுனன், " அப்படியானால் நான் என் தீர்ப்பை அறிவிக்கின்றேன்.. இவள் நம் ரோமை ராஜ பூபதியையும்நம்முடைய ரோமை தெய்வங்களையும் கடவுளாக ஏற்று தீப ஆராதனை
காட்டுவதாக சொல்லும் வரை கசைஅடி கொடுங்கள்... சித்திரவதை செய்யுங்கள்... ஆனால் கொண்றுவிடாதீர்கள்... அவள் எனக்குத்தேவை " என்றான்.
       உடனே சித்திரவதை ஆரம்பமானது...அந்த ஆளுனன் கோட்டையின் நிலவறையில் ஒரு மரம் நடப்பட்டிருந்தது.. அவள் கைகள் இரண்டையும் இழுத்து சிலுவையில் அறைவதுபோல்
கட்டினர்..பலமாக பல சவுக்கடிகள் கொடுக்கப்பட்டன...அவள் விலாப்பகுதியின் இருபுறமும் இரும்பு ஊக்குகள் செலுத்தப்பட்டு இருபுறமும் இழுத்தனர்.. இதனால் அவள் விலா
எலும்புகள் தெரியும் வரை சதை கிழிக்கப்பட்டது. ஏராளமான ரத்த்ம் வெளியேறியதால் ஆகத்தா மூர்ச்சையானாள்... அன்றைய சித்திரவதை அப்போதைக்கு முடிந்தது.
          அடுத்தநாள் விசாரணையிலும் அதே கேள்விகள் அதே பதில்கள்..இதனால் மிகவும் கடுப்பானான் ஆளுனன் குவிண்ட்டனஸ்..அவளது மார்பகத்தை அரிந்துவிட உத்திரவிட்டான்.
ஆளுனனின் உள் எண்ண ஓட்டத்தை இப்போது நன்றாகப்புறிந்துகொண்டாள் ஆகத்தா..அவள் பேசியதாவது,
"
அட கிழட்டுப்பூனையே,...நீ என்னை அடைய வேண்டுமென்பதற்காகவே இந்த அரசாங்க ஆணையை பயன்படுத்துகின்றாய்... இனிமேல் உனக்கு மரியாதை எதற்கு...
என் மார்பகத்தை அரிய நீ கட்டளையிட்டது எதற்காக...நீ என் மார்பை அரிய கட்டளையிட்டது என்னை பழிவாங்குவதர்காகவே...புலையனும் செய்யத்துணியாத காரியத்தை நீ துணிந்து
செய்கிறாய்..அந்த உறுப்பின் மகிமையை நீ அறியாயோ... நீ உன் தாய் வயிற்றிலிருந்து வெளிவந்தபின் உனக்கு உன் தாய் உயிர்பால் கொடுத்தது அங்கிருந்துதான்.
நான் கன்னிப்பெண் என்றும் பாராது.என் மார்பை சிதைப்பதன் மூலம் பெண்மையை கேவலப்படுத்துகிறாய்.. தாய்மையை கேவலப்படுத்துகின்றாய்.. உன் தாய்க்கு இவ்விதம் செய்வாயோ.. உன் மனைவிக்கு இவ்விதம் செய்வாயோ... உன் பிள்ளைகளுக்கு இவ்விதம் செய்வாயோ.. நீதியுள்ள சர்வேசுரன் உனக்கு என்ன தண்டனை கொடுப்பார் என்பதை நீ பொருத்திருந்து  பார்... என் எஜமானும் என் கடவுளுமான யேசுக்கிரிஸ்த்து உன்னைகேட்டுக்கொள்ளட்டும்.   நிறைவேற்ரிக்கொள் உன் ஆசையை" என்றாள்.. அப்போது அவள் முகம் ஒரு வினாடி பரலோக  காந்தியால் ஒளிர்ந்தது.
       தண்டனை உடனே ஆரம்பமானது...மார்பகத்தை அரிய கத்தியை உபயோகித்தால் வேதனை உடனே முடிந்துவிடும் என்பதற்காகவும் அவள் நீடித்த வேதனை அடைய வேண்டும்   என்பதர்காகவும் இரண்டு இரும்பு குறடுகள் கொண்டுவரப்பட்டன. ஆகத்தாவின் மார்பக சதைத்திரட்ச்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக இந்த இரும்பு குறடுகளால் பற்றி வெட்டிவெட்டி  எடுத்தனர். இனிமேலும் அங்கே பிடுங்குவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் அவளை தனிச்சிறையில் அடைத்தனர்..அவளுக்கு உணவோ, தண்ணீரோ, மருந்தோ, களிம்போ  எந்த மருத்துவ உதவியுமோ யாரும் கொண்டுவந்து தரக்கூடாது என கண்டிப்பான உத்திரவும் பிறப்பிக்கப்பட்டது.
             கடும் வேதணையினாலும் ஏறாள்மான இரத்தப்போக்கினாலும் ஆகத்தா மரணிக்கும் நிலையில் இருந்தாள்.. அப்போது சிறைகதவு திறக்கப்பட்டது...வயோதிகர் ஒருவர் உள்ளே வந்தார்.  " ஆகத்தா... எழுந்திரு..என்றார்".
ஆகத்தா எழுந்து பெரியவரே நீர் யார்? என்றாள்.
அவர்," அம்மா...நான் யார் என்பது இப்போது முக்கியமல்ல.. என் எஜமான் உனக்கு மருத்துவம் பார்க்க என்னை அனுப்பியுள்ளார்...இந்த மருந்துகளை உன் காயங்களில் பூச என்னை
அனுமதி" என்றார்.
     ஆகத்தா" பெரியவரே நான் மனிதர்களிடம் வைத்தியம் பார்ப்பது ஒரு வேத சட்சிக்கு அழகல்ல...நான் வேதனையில் என் தேவனை சந்திக்கவே ஆசைப்படுகின்றேன்.. அப்படி இருக்க
எனக்கு வைத்தியம் எதற்கு..   வேத சாட்சி முடி பெருபவர்கள் வேதனையில்தானே கடவுளுக்கு சாட்ச்சிகளாய் இருக்க முடியும்...எனக்கு மனிதர்களின் ஆறுதலோ வைத்தியமோ தேவை
இல்லை. ஆகவே பெரியவரே நீங்கள் போகலாம் " என்றாள்..
     அப்போது பெரியவர், " என் மகளே ஆகத்தா...உன் விசுவாசம் பெரிது...நான் என்னை இப்போது வெளிப்படுத்திக்கொள்கிறேன்...நான் தான் நீ வணங்கும் யேசுகிரிஸ்த்துவின் தலைமை  அப்போஸ்த்தலன் பேதுரு எனப்படும் இராயப்பன்...யேசுநாதர் தான் என்னை உன்னிடம் அனுப்பியுள்ளார்...நாளை நீ இன்னும் அதிகம் பாடுகள் அனுபவிக்கவேண்டும்...நாளை8க்கே நீ  பரலோகத்தில் வான்வீட்டில் யேசுவோடு இருப்பாய்...அதற்கு நீ இப்போது தெம்போடு இருக்கவேண்டும்... எனவே யேசுநாதர் என்னிடம் கொடுத்தனுப்பிய இந்த மருந்தால் நான்   உன்னை பூசுகிறேன்... நீ உடனே குணம் அடைவாயாக" என்று அவள் காயப்பட்ட இடங்களில் தைலம் பூச அவள் உடனே குணமடைந்தாள்.. இராயப்பரும் அவளுக்கு முன்பாகவே  மறைந்து போனார்.. ஆகத்தாவுக்கு யேசுவின் புதுமையால் அவள் காயங்கள் எல்லாம் ஆறி புதிய மார்பகம் தோன்றியது.
             ஆகத்தாவுக்கு காயங்கள் எல்லாம் ஆறி மீண்டும் புதுமையாய் மார்பகம் தோன்றியதைக்கண்ட ஆளுனன் குவிண்ட்டனஸ் அடங்காத கோபம் கொண்டான்.. தனக்குக்கிடைகாத   ஆகத்தா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாதென முடிவு செய்தான்.. அடுத்தநாளும் அதே விசாரணை... அதே பதில்.. இந்த முறை ஆகத்தாவை கொடும் அக்கினியால் தள்ளி  கொல்லப்பட வேண்டும் எனவும் புதிதாக தோன்றிய அவள் மார்பகம் மீண்டும் தீயினால் சுட்டு பின் கொல்லப்படவேண்டுமெனவும் ஆணையிடப்பட்டது...
          சதிகாரர்கள் ஆகத்தாவை நிர்வாணப்படுத்தி தீப்பந்தங்களால் அவள் இரண்டு மார்பகங்களையும் சுட்டுப்பொசுக்கினர்...கடும் வெப்பத்தினால் அவை வெந்து நீராகி வடிந்துபோனது.
     பிறகு அவள் கைகளும் கால்களும் இரும்பு சங்கிலிகலால் கட்டப்பட்டு ஒரு பெரும் அக்கினிப்படுக்கையில் வைக்கப்பட்டாள்...அவள் உடல் தீயினால் புழுபோல் துடித்தது.... இந்த
அக்கிரமத்தைகண்ட இயற்கையும் தன் கோப கண்டனத்தை காட்டியது.. அந்த தீவிலிருந்த எட்னா எரிமலை வெடித்தது... பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த அதிர்ச்சியில் அந்த பாதாள்
அறையின் மேல் சுவர் மற்றும் அரண்மனை ஆகியவை உடைந்து விழுந்தன. ஒரு பெரும் சுவர் பொதேரென்று சிலுவான் என்பவன் மீது விழுந்தது.. அவதான் ஆளுனன்
குவிண்ட்டனஸின் வலதுகரம்போன்று செயல்பட்டவன்...ஆகத்தாவின் இத்தனை கொடுமைகளிலும் அவனுக்கும் பங்கு உண்டு. இடிந்து விழுந்த சுவர் இந்த கொடியவன் சிலுவனின் மீது விழுந்தது. அவன் நசுங்கி செத்தான்.
        ஆளுனன் குவிண்ட்டனஸின் கொடுங்கோல் ஆட்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழுந்தனர்... மக்களின் கோபாவேசத்தைக்கண்ட ஆளுனன் நாட்டை விட்டே ஓடிப்போனான்.
ஆனால் மக்கள் அவனை விடுவதாக இல்லை.. நடுத்தெருவில் அவனை இழுத்துப்போட்டு வெட்டிக்கொண்றனர்.
     அக்கினிப்படுக்கையிலிருந்து மக்கள் ஆகத்தாவை காப்பாற்றினர்.. ஆனால் காலம் கடந்துவிட்டது...ஆகத்தா வேத சாட்ச்சியாக மரித்துப்போனாள்..அன்றையதினம் பிப்ரவரி மாதம்
ஐந்தாம் தேதி கி.பி.251 ஆம் வருடம்..
           வீர மங்கை ஆகத்தாவுக்கு நல்லடக்கதிற்கான ஏற்பாடுகள் நடந்தன.. அப்போது " விலகுங்கள்...விலகுங்கள்... எங்கள் ஆகத்தாவை நாங்கள் தான் புதைப்போம் என்று ஒரு பத்து
அல்லது பதினைந்து வீர வாலிபர்கள் வந்தார்கள்.. அவர்கள் அணிந்திருந்த உடைகள் அந்த காட்டானியா நகர மக்கள் அறிந்திராதது. வந்திருந்த வாலிபர்கள் அனைவரும் ஆகத்தாவின்
ராஜ பரம்பரை வாரிசுகள் என்று நினைத்துக்கொண்டார்கள். Mentem sanctam, spontaneam, honorem deo dedit et patri liberationem fecit; அதாாவது கடவுளுக்கு விருப்பமான  ஆகத்தா தன் எண்னம் சொல் செயல் அகியற்றின் மூலம் அனைத்திலும் பரிசுத்தமாக விளங்கியவள் என்பதால் அவள் வழியாய் கேட்ப்பதெல்லாம் நிறைவேறும் என்ற வாசகம் கல்லில்  பொறிக்கப்பட்டு ஆகத்தாவின் தலைமாட்டில் வைக்கப்பட்டு அவளை சகல ஆடம்பரதோடும், மரியாதையோடும், பூச்சிதமாக கல்லறையில் வைத்து அடக்கம் செய்தனர்.
      ஆகத்தா கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு அவளை புதைப்பதர்க்காக வந்திருந்த அந்த வாலிபர் கூட்டம் யார் கண்ணிலும் காணாமல் போனதால் வந்த அந்த வாலிபர்கள்  அனைவரும் அவள் அடக்கத்திர்காக கடவுளால் அனுப்பப்பட்ட சம்மனசுகளே என்று அந்த காட்டானியா ஊர் மக்கள் புறிந்துகொண்டார்கள். அன்றிலிருந்து ஆரம்பமானது ஆகத்தாவின்  பக்தி முயற்சி...ஆகத்தாவின் கல்லறையில் மன்றாடுபவர்களுக்கு கடவுள் கேட்டதை அருளினார். ஆண்டவருக்காக மரிகின்றவர்கள் பாக்கியவான்கள் என்பது உண்மையாயிற்று..
      ஆகத்தாவின் பேரும் புகழும் பார் எங்கும் பரவ ஆரம்பித்தது..அவளுக்கு ரோமை கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டம் அளித்து கௌரவப்படுத்தியது. அவளது கல்லறையின் மீது ஒரு  பெரும் தேவாலயம் கட்டப்பட்டது. அவரது அருளிக்கம் சுமார் 40,000 பவுண்டு எடையுள்ள ஒரு வெள்ளிப்பேளை செய்து அதனுள் வைக்கப்பட்டு அவளது தேர் பவனி  ஆரம்பமாகும்..இத்தனை பெரிய தேரை வடம் பிடித்து இழுக்க சுமார் 4000 பேர் கூடுவர். பல்லயிரக்கணக்கானோர். பார்வையாளர்கள். உலகிலேயே தேர் திருவிழாவுக்கு அதிகம்பேர் கூடும் இடங்களில் இந்த சிசிலி நாட்டிலுள்ள காட்டானியா பட்டிணத்தில் புனித ஆகத்தம்மாவின் தேர்த்திருவிழாவுக்கு கூடும் கூட்டம் மூன்றாம் இடத்தை பிடிக்கின்றது.
       இப்போதும் புனித ஆகத்தம்மாளின் பாடுகள் பட்ட அந்த சிறைச்சாலை இருகின்றது. அதில் அவள் கட்டுண்டு சாட்டையால் அடிபட்ட இடத்தில் அவள் நின்றிருந்த பாதம் படிந்த   இடத்தையும் அவள் மார்பகம் அரிந்தநிலையில் அவள் நின்றிருந்த இடத்தில் அவளது பாதம்பதிந்திருக்கும் இடத்தையும் பார்க்க முடியும்.
புனித ஆகத்தம்மாளே, பாவிகளாய் இருகிற எங்களுகாக எப்போதும் வேண்டிகொள்ளும்..ஆமீன்.



No comments:

Post a Comment