Sunday, April 6, 2014

" வீரத்தளபதி புனித செபஸ்த்தியார்."




" வீரத்தளபதி புனித செபஸ்த்தியார்."

கி.பி.680. ரோம்.
அந்த நாளிள் ரோமாபுரிப்பட்டிணத்தின் கடற்கறையில் சரக்குகள் ஏற்றுவதிலும் இறக்குவதிலும் தொழிலாளிகள் மிகவும் சுறுசுறுப்புடன் வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஒரு எகிப்த்தியக்கப்பலிலிருந்து கோதுமை மூட்டைகள் மிகவும் வேக வேகமாக இறக்கப்பட்டு கொண்டிருந்தன. அந்த கப்பலிலிருந்த பெருச்சாலிகள் பல பெரும்
கூச்சலிட்டுக்கொண்டு கப்பலைவிட்டு ரோமாபுரி துறைமுகத்துக்கு ஒரே பாய்ச்சலாக ஓடிக்கொண்டிருந்தன. அக்காலத்தில் இது ஒரு சாதாரண விஷயம்தான் என்று யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அன்றைய நாளில் இந்த மாபெரும் ரோமாபுரிப்பட்டிணத்திற்கு பெரும் அபாயாம் ஏற்படப்போகிறது என்று அப்போதைய மக்களுக்கு தெரிந்திருக்க
நியாயமில்லை.
        இந்த துறைமுகத்தை வேடிக்கைபார்க்க தன் பத்துவயது மகனுடன் வந்திருந்தான் ஒரு வழிப்போக்கன் ஒருவன். வேகமாக ஓடிவரும் இந்த பெருச்சாலிக்கூட்டத்தை கண்ட அந்த மகனுக்கு லேசாக பயம் தொற்றிக்கொண்டது. ஒரு ஆச்சரியம்...வேகமாக வந்த ஒரு பெருச்சாலி இந்த பையன் அருகில்வந்து சற்று நேரம் அவனையே பார்த்தது. பின் மயங்கி விழுந்தது.
         இந்த பையன் மயங்கிய அந்த எலியை அதன் வாலைப்பிடித்து தூக்கினான்..அவன் கண்களில் ஒரு பரபரப்பு தோன்றியது. அந்த எலியின் உடலில் அடி வயிற்றில் ஒரு கொப்புளம் தோன்றியது. நிமிடங்களில் அதன் கால்துடைகள், கழுத்துப்பகுதிகள் என கொப்புளங்கள் சடசடவென தோன்றின. சற்று நேரத்தில் அந்த கொப்புளங்கள் மிகப்பெரிதாகி வெடித்தன.
இதேபோன்ற கொப்புளங்கள் அந்தப்பையனுக்கும் தோன்றின. அந்த எலிக்கு ஆனது போலவே அந்தப்பையனின் உடலெங்கும் கொப்புளங்கள் தோன்றின. பையன் வலியாலும் பெரும் காய்ச்சலாலும் அலரினான். உடனே அந்தப்பையனின் தகப்பனுக்கும் அதே போன்ற கொப்புளங்கள் தோன்றின. நிமிட நேரங்களில் இவர்களின் உருமாற்றத்தைக்கண்ட பொதுமக்களுக்கு
இது என்ன வியாதி என தெரியாமலும் அவர்களுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே நகர்ந்தனர்.
        இதே போன்றநிலை அநத ரோமாபுரி மக்கள் பலருக்கு நிமிடங்களில் பரவியது. அந்த ஊரிலிருந்த வயோதிக மருத்துவன் ஒருவருக்கு இது என்ன வியாதி என்று புறிந்துவிட்டது. உடனே அலறினான் அவன்," மக்களே, உயிர் பிழைக்க ஓடுங்கள்..ரோமாபுரிக்கு பிளேக் நோய் வந்துவிட்டது. இந்த ரோமாபுரியைவிட்டு ஓடிப்போங்கள்... ஓடிப்போங்கள் " என்று
ஓடிக்கொண்டே அந்த ரோம் நகரின் பிரதான சாலையில் ஓடினான். ஆனால் அந்த ரோமைய மக்களுக்கு இந்தக்கிழவன் ஏன் எப்படி ஓடுகிறான்..அவனுக்கு .ஏதாவது பைத்தியம்  பிடித்துவிட்டதா என அறிந்துகொள்ள முடியவில்லை..
அனால் காலம் கடந்துவிட்டது...பிளேக் என்னும் கொள்ளை நோய் ரோம் நகரை பிடித்துக்கொண்டது..அக்காலத்தில் இந்த பிளேக் என்ற நோய்க்கு மருந்து ஒன்றும் கண்டு பிடிக்கப்படவில்லை. இதன் பயங்கரத்தை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை புதைக்கவும் ஆளின்றி தெருவில் கிடந்து மேலும்
நோய்க்கிருமிகளை பரப்பிக்கொண்டிருந்தது. ஒரு நாளில் குறைந்தது ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை இந்த நோயால் இறந்தனர். ரோம் பட்டிணமே காலியானது.
     இந்த காலகட்டத்தில் கிறிஸ்த்துவ பாதிரியார்களும் பக்தர்களும் செய்த சேவைகள் வார்த்தையில் சொல்லி முடியாது. உயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் சேவை செய்தனர். பிறர் அன்பு என்பதற்கு அர்த்தம் அந்த பிளேக் நோயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்போதுதான் புரிந்தது.  அவர்கள் இறந்தசடலங்களை ஆழ குழிதோண்டிப்புதைத்தனர். இந்த சேவையின்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டு மரித்த கிறிஸ்த்துவர்கள் அனேகம்பேர். இருப்பினும் புனித   செபஸ்த்தியார் பேரில் பக்திவைத்து அவருக்கு வேண்டுதல் வைத்து இந்த சேவையில் ஈடுபட்டுவந்தனர். புனித செபஸ்த்தியாரும் இந்த ரோமை மக்கள் மீது மனம் இறங்கி
ஆண்டவனிடம் பிரார்த்தித்தார். புனித செபஸ்த்தியாரின் வேண்டுதல் கேட்கப்பட்டது. ஒரேநாளில் ரோமிலிருந்த அந்த கொள்ளை நோய் ஆண்டவறாகிய யேசுகிறிஸ்த்துவின் கிருபையால் மறைந்தது.     அன்றிலிருந்து புனித செபஸ்த்தியாரிடம் கேட்கும் அனைத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கிறிஸ்த்துவர்களிடையே ஏற்பட்டது. மேலும் ரோமன்
கத்தோலிக்க திருச்சபை புனித செபஸ்த்தியாரை கொள்ளை நோயிலிருந்து காக்கும் பாதுகாவலர் எனவும் அறிவித்தது.
          கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் மிலான் பட்டிணத்தில் வாழ்ந்துவந்த
பெரும் வேதபாரகரான புனித அகுஸ்த்தினார் அவர்காலத்திலேயே புனித செபஸ்த்தியார் பெரும் வல்லமையான புனிதராக விளங்கினார் என்று கூறுகிறார்.இந்த கொள்ளை நோய் ஜஸ்டினீயன் கொள்ளை நோய் என சரித்திர ஆசிரியர்களாள் கூறப்படுகின்றது.  அப்போது காண்ஸ்டான்ட்டி நேபிள்ஸ் [இன்றைய துருக்கி] நாட்டை ஆண்டுவந்தவர் ஜஸ்டினீனியன் என்னும் ஒரு கிரிஸ்த்துவ மஹா ராஜா. இவர் காலத்தில்தான் உலக மஹா
அதிசயமான ஹகியா சொஃபியா என்னும் அழகிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் சதுரமான கட்டிட அமைப்புகளின்மீது அறைக்கோள கும்பங்கள் கவிழ்த்தார்போன்ற அமைப்பும் அதைசுற்றி அழகிய உயர்ந்த மினாரெட்கள் எனப்படும் கோபுரங்களும் அமைக்கப்பட்டு காண்போர் மனதை கொள்ளைகொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சதுரமும்
அதன்மீது அறைக்கோள கும்பமும் என்பது கட்டிடக்கலைக்கு ஒரு மிகப்பெரிய சவால். இத்தகைய ஒரு அமைப்பு அக்கால கட்டிடக்கலையில் இல்லை. எனவே இந்த கவின்மிகு தேவாலயத்திற்கு கணிதமும் பௌதீகமும் பெருமளவு உதவின. இந்த தேவாலயத்தின் உள்ளே அழகிய மொசைக் வேலைப்பாடுகள் யேசுநாதரைப்பற்றியும் அவரது திருத்தாயார்
மரியாளைப்பற்றியும் வரையப்பட்டிருந்தன. ஆக மொத்தத்தில் இந்த ஹகிய சோபியா தேவாலயம் அன்றைய காலகட்டத்தில் அதாவது கி.பி. 600களில் உலகமஹா அதிசயங்களின் ஒன்றாகக்கருதப்பட்டது.
              ஆனால் இதை சாதிக்க ஜுஸ்டீனிய மஹாராஜாவுக்கு பெரும் சோதனைகள் பல காத்துக்கொண்டிருந்தன. இந்த தேவாலயம் கட்டும்போது சீனா தேசத்திலிருந்தது வந்தது ஒரு பெரும் அச்சுருத்தல். சீனாவிலிருந்து பைசாந்தியம், எகிப்த்து வரை [ இன்றைய துருக்கி] பட்டு சாலை silk route எனப்பட்ட சாலைவழியே வந்தது ஒரு பெரும் கொள்ளை நோய்.
அதன் பெயர்தான் பிளேக். பாதிக்கப்பட்ட நபர் இரண்டு மணி நேரத்துக்குள் அந்த நோாயால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு மிகுந்த துன்பமான மரணத்தை அடைவார். இந்த கொள்ளை  நோய் வியாபார விஷயமாகவும், சுற்றுலா மற்றும் வியாபார விஷயமாக செல்லும் அனைத்து பயணிகள் வழியாக ருஸ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மத்தியதரைகடல்
நாடுகளான எகிப்த்து, கார்த்தேஜ், அல்ஜீரியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் வழியாகவும் மிகவும் வேகமாகப்பரவி அக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக்கொள்ளை கொண்டதாலே இந்த நோயை கொள்ளை நோய் என அழைத்தனர்.
      இந்த நோயால் ஜஸ்டீனிய மன்னனும் பாதிக்கப்பட்டார். ஆனாலும் அவர் உயிர் பிழைத்துக்கொண்டார்.. எனவே அந்த நோய் அவர் காலக்கட்டத்தில் பரவியதாலும் அந்த நோயிலிருந்து   அவர் பிழைத்துக்கொண்டதாலும் அந்த பிளேக் நோயுக்கு ஜஸ்டினீயன் பிளேக் என பெயர் பெற்றது. இத்தனைக்கும் இந்த நோய் பரவ மூல காரணம் எலிகளும் , எலிகொசு எனப்பட்ட
ஒருவகை கொசுவும்தான். இந்த எலிகொசுவால் பரப்பட்ட இந்த நோய் ஒருவிதத்தில் ரோமைய சாம்ராஜ்ஜியமே வீழ்ச்சியடைய காரணமாக இருந்தது.
" வந்தான் தியோக்குலேசியன்."
      இந்த கொள்ளை நோய்களைப்பற்றி எதுவுமே தெரியாத காலம் அது. இந்தக்கால கட்டத்திலும் ரோமில் இந்த நோய் பரவ ஆரம்பித்தது. அது தினமும் ஐயாயிரம் முதல் பத்தாயிரம்  பேர்வேதம் இறந்தனர். இதில் அப்போது ரோமை ஆண்டுவந்த மார்க்கஸ் ஆருலஸ் எனபவரின் சகோதரன் அந்தோணியோவும் இறந்ததால் அந்த பிளேக் நோய்க்கு அந்தோனியோ பிளேக்  என பெயர் பெற்றது. இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டான் அவனுக்குப்பின் வந்த வலேரியன் தியோக்குலேசியன் என்னும் ஒரு சர்வாதிகாரி.. அவனுக்கு
கிறிஸ்த்துவர்கள் என்றாலே பிடிக்காது. இத்தனைக்கும் வலேரியன் தியோக்குலேசியன் பிறப்பிலேயே ஒரு கிறிஸ்த்துவன். தனக்கு அடுத்தடுத்து தோல்விகள் ஏற்பட்டதால் அவனுடைய  அடிவருடிகள் ஒட்டுமொத்த பழிகளையும் கிறிஸ்த்துவர்கள் மீதே போட்டனர். கிறிஸ்த்துவர்கள் பலர் உயிர்த்தியாகங்கள் பல செய்தும் அருங்குறிகள் பல செய்தும் கிறிஸ்த்துவ மதத்தை   பரப்பிவந்தனர். எனவே ஐரோப்பாவிலும் பைசாந்தியத்திலும், ஆசிய நாடுகளில் பலவற்றிலும் கிறிஸ்த்துவம் வேகமாக பரவி வந்ததால். அந்தந்த நாடுகளில் வாழ்ந்துவந்த மதகுமார்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டனர். தங்கள் செல்வாக்கையும் வருமானத்தையும் இதனால் அவர்கள் இழக்க நேரிட்டது. இதை மீட்க இந்த கிறிஸ்த்துவ மதம் பரவுவதை தடை செய்ய
என்னென்ன முயற்சிகள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தனர். அவர்கள் செய்த முய்ற்சிகளில் ஒன்றுதான் வதந்தி பரப்புதல்.
இதனால் எந்தெந்த நாடுகளில் கொள்ளை நோய் தோன்றுகிறதோ....போடு பழியை கிறிஸ்த்துவர்கள் மேல்,
எந்தெந்த நாடுகளில் மழை பெய்யவில்லையோ... போடு பழியை கிறிஸ்த்துவர்கள் மேல்,
எந்தெந்த நாடுகளில் வெள்ளம் பெருகி இயற்கையால் பாதிப்புகள் ஏற்படுகின்றதோ...போடு பழியை கிறிஸ்த்துவர்கள் மேல்,
எந்தெந்த நாடுகளில் போரில் தோல்வி ஏற்படுகிறதோ....போடு பழியை கிறிஸ்த்துவர்கள் மேல்,
இப்படியாக அந்தந்த நாடுகளில் உள்ள உள்ளூர் தெய்வங்களின் கோபாக்கினை எனவும் தங்கள் தெய்வங்கள் இந்த கிறிஸ்த்துவாலும் அந்த கிறிஸ்த்துவ மக்களின்   மதமாற்றத்தாலும் தங்களின் மதிப்பை இழந்ததால் பெரும் கோபம் கொண்டு இந்ததகைய நோயையும் இயற்கை சாபங்களையும் ஏற்படுத்துவதாகவும் கூறினார்கள்.
     இதற்கு மக்களின் பெரும் மூட நம்பிக்கைகளையும் அந்தந்த தெய்வங்களின் மீதிருந்த பயத்தையும் பயன்படுத்திக்கொண்டார்கள். எனவே அன்று ரோமில் ஏற்பட்ட அந்த   அந்தோணியோ கொள்ளை நோயும் தங்களின் கிரேக்க ரோமானிய தெய்வங்களின் கோபத்தால் வருவிக்கப்பட்டவை என்று வதந்தி பரப்பினர். இதை வலேரியன் தியோக்குலேசியனும் ஒப்புக்கொண்டான். அதை ஏற்றுக்கொள்ளவும் செய்தான்.
   வலேரியன் தியோக்குலேசியன் அக்கால கட்டத்தில் ரோமைய பேரரசுக்கும் பைசாந்திய பேரரசுக்கும் ஒரே சர்வாதிகாரியாக விளங்கினான். எனவே ஒரே அரசாங்க ஆணையில் அவன் ஆட்சி அதிகாரத்துகுட்பட்ட அனைத்து நாடுகளிலும் கிறிஸ்த்துவமதத்தை தடை செய்தான். ரோமைய சர்வாதிகளை கடவுளாகவும் தான் வணங்கிவந்த ரோமைய தெய்வங்களையும் கடவுளாகவும் ஏற்று அதற்கு தீப தூப ஆராதணை செலுத்துபவர்களுக்குத்தான் தன் ராஜ்ஜியத்தில் குடி உரிமை வழங்கப்படும் எனவும் ஒரு அரசாங்க ஆணை
பிறப்பித்தான்.இதற்கு உடன்பட மறுப்பவர்கள் மீது ராஜ துரோகம் குற்றம் சாட்டப்பட்டு அவர்தம் சொத்துக்கள் பரிமுதல் செய்யப்படவும் அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிகவும்   கொடுமையான முறையில் தண்டிக்கப்படவும் கொல்லப்படவும் அந்த அரசாங்க ஆணை வழிவகை செய்கிறது. இந்த சட்டம் அவன் ஆட்சிக்குட்பட்ட அனைத்து நாடுகளிலும்
அமுல்படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான கிறிஸ்த்துவர்களின் உயிரை காவு கேட்டது. கிறிஸ்த்துவர்கள் என்றாலே நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்னும் ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.
        ஆனாலும் ஆண்டவராகிய யேசுநாதர் தனக்கு சாட்ச்சியாகவும் தான் ஏற்படுத்திய மதம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காகவும்,தன்னுடைய கிறிஸ்த்துவர்கள் உண்மையானவர்கள்..நம்பத்தகுந்தவர்கள் என்பதை அவர்களின் வாழ்விலும் சாவிலும் வாழ்ந்து நிரூபித்து காட்டும்படியாகவும் தன்னுடைய மக்கள் யேசுவுக்காக தன் இன்னுயிரையும்  அளித்து அவருக்கு சாட்ச்சியமாக வாழ்ந்து மரிக்கவும் சித்தம் கொண்டார்..தன் நண்பனுக்காக உயிரை கொடுப்பதுதான் உயர்ந்த அன்பு. உயர்ந்த சாட்ச்சியமும் கூட.
       எனவே இந்த கொடுங்கோலன் தியோக்குலேசியன் ஏற்படுத்திய வேதகலாபனையில் தான் கடவுள் என்பதை நிரூபிக்க அனேக வேத சாட்ச்சிகளை ஏற்படுத்தினார். அவர்களில்   ஒருவர்தான் தூய செபஸ்த்தியார். புனித செபஸ்த்தியாருடைய வாழ்கை வரலாறு பல எண்ணிலடங்கா வேத சாட்ச்சிகளுடைய வாழ்கையோடு பின்னிப்பிணைந்து வரும். எனவே
அவரை மட்டும் தனியே பிரித்து அவரது வாழ்கையை மட்டும் சொல்வது என்பது மிகவும் சிரமம். அதற்கு பெரிய புத்தகமே தேவைப்படும். பங்கிராஸ் அல்லது பூர்வீக திருச்சபையின்  விருத்தாந்தம் என்னும் பழைய புத்தகம் அக்காலத்தில் அதாவது தியோக்குலேசியன் காலத்தில் செபஸ்த்தியாரும் அப்போது அவரோடு சம்பந்தப்பட்ட அனேக கிறிஸ்த்துவ வேத சாட்ச்சிகளின் பாடுகளையும் உயிர்த்தியாகங்களையும் அறிந்துகொள்ள உபயோகமாக இருக்கும். அவரது வாழ்கையில் சில பகுதிகளைமட்டும் நான் வாசகர்களுக்கு சொல்லுவேன்.
      அன்றைய கால் எனப்பட்ட இன்றைய பிரான்ஸ் தேசத்தில் நார்பொன்னே என்னும் ஊரில் நம் செபஸ்த்தியார் பிறந்தார். ஆனால் அவரது பெற்றோர் இத்தாலியிலுள்ள மிலான்   பட்டிணத்தில் அவரை வளர்த்தனர். கல்வி, கேள்வி,கலை, வீரவிளையாட்டுகளில் அவை இணையற்றவராகத்திகழ்ந்தார். அதுவும் வீர விளையாட்டு என்றால் அவருக்கு உயிர். இதன்
காரணமாக அவர் இத்தாலியின் ராணுவத்தில் சேர்ந்தார். அப்போதைய சீசராக இருந்தவர் கைரன் எனப்பட்டவர். நம் செபஸ்த்தியாரின் சாதுர்யத்தை கணித்த அவர் தன்னுடைய அரண்மனை மெய்க்காப்பாளராக நம் செபஸ்த்தியாரை நியமித்தார். மன்னர் கைரனுக்கு பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் சபலம் அதிகம் போலும். அதனால் தன் தளபதிகளில் ஒருவரின்   அழகிய மனைவியை தன்னுடையதாக்கிக்கொண்டார். இத்தனைக்கும் மன்னர் கைரனுக்கு அப்போதே சட்ட ரீதியான மனைவிகள் ஒன்பது பேர் இருந்தனர். இருந்தாலும் மன்னருக்கு ஆசை அடங்க வில்லை. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றாலும் அந்த தளபதிக்கு தன்மனைவியை அரசர் கைரன் வைத்துக்கொண்டான் என்பதில் பெரும் வயிற்றேரிச்சல்   ஏற்பட்டது. இதனால் மன்னன் தன்னைக்கொல்ல எப்போதும் தன் மீதும் ஒரு கண் வைத்திருப்பான் என்று நன்றாகப்புறிந்தது.
    அவன் எதிர்பார்த்தது போலவே மன்னர் கைரன் எதிரிகள் நாட்டின் மரோவா நதிக்கரையில் நடந்த போருக்கு இந்த தளபதியை முன் நிருத்தினான். அதாவது தாவீது ராஜா ஊரியாசின் மனையை தான் அடைந்ததற்காக அவனை போரின் முன்னிலையில் வைத்திருந்தது போல. ஆனால் இந்த தளபதி தன்னை கொல்லவே அரசன் கைரன் இங்கே கொண்டு   வந்திருகிறான் என்பதை புறிந்துகொண்டு அவன் முந்திக்கொண்டு போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது தானே தன் அரசன கைரனை குத்திக்கொண்றான்.
      ஆனால் சாமார்த்தியமாக மன்னர் கைரன் போரில் வீரமரணம் அடைந்துவிட்டார் என்று புகழ்பரப்பிவிட்டான்.  இப்போது எதிரி நாட்டில் ரோமைய அரசன் இல்லாமல் படை நடத்த முடியாது என்பதால் அந்த சூழ்நிலையில் போரில் ஒரு வீரத்தளபதியாக விளங்கிய தியோக்குலேசியனை உடனே   ரோமைய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதி ஆக்கினர் ரோமைய போர்ப்படை வீரர்கள். " சொருகிக்கிடந்தது சொத்தென விழுந்தாற்போல " அடித்தது அதிஸ்ட்டம் தளபதி தியோக்குலேசியனுக்கு. உண்மையில் தளபதி தியோக்குலேசியனுக்கு ரோமைய செனட் [மந்திரி] பிரதாணிகளை அரசியல் சதுரங்கத்தில் ஜெயிப்பது வெகு கடினம் என்பதும் அவர்களின் முன்பாக அரசியலில் தன் சாமார்த்தியம் அவ்வளாக பலிக்காது என நன்றாகத்தெரிந்திருந்தாலும்," சரி இந்த அரசியல் சதுரங்கத்தையும் கொஞ்சம் விளையாடித்தான் பார்ப்போமே" என்று
அவனும் இந்த ரோமைய சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொண்டான்.
          இவனை பிறகு வேறு வழி இல்லாமல் ரோமைய செனட் சபையும் அங்கீகரிக்கவே ரோமைய சாம்ராஜ்ஜியத்திற்கும் அன்றைய பைசாந்திய பேரரசுக்கும் சேர்த்து ஒரே அரசனாக அதாவது அகஸ்ட்டசாக " காயுஸ் ஆரேலியுஸ் வலேரியுஸ் டியோக்லேதானியுஸ் அகஸ்ட்டுஸ் '' என்ற பெயரோடு கி.பி.245ல் முடிசூடிக்கொண்டான். அன்றிலிருந்து அவன்
ஆதிக்கத்திற்குட்பட்ட அனைத்து நாடுகளிலும் வாழ்ந்துவந்த கிறிஸ்த்துவர்களுக்கு பிடித்தது ஏழரை நாட்டுச்சனியன். கி.பி.303 முதல் கி.பி.311 வரை அவன் ஆண்ட காலங்களில் அவனால் ஏற்படுத்தப்பட்ட வேத கலாபணையில் கொல்லப்பட்ட கிறிஸ்த்துவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை.
            நம் செபஸ்த்தியார் மாமன்னன் தியோக்குலேசியனின் மெய்க்காப்பாளராகவும் அவனுடைய அரண்மனையின் அதிகாரியாகவும் அவருடைய நம்பிக்கைக்கு தகுந்தவிதத்தில் அனைத்து விதத்திலும் உற்ற நண்பனாகவும் சிறந்துவிளங்கினார். அவரது அழகும் வாலிப வயதும் அவரது வீர தீர சாகசமும் தியோக்குலேசியனின் சகோதரனாகவும் இணை
அரசனாகவும் பொருப்புவகித்த மாக்சிமியனுக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. இவர்கள் இருவருக்கும் செபஸ்த்தியார் சகல விதத்திலும் விசுவாசமாகவும் உற்ற நண்பறாக விளங்கினார். எனவே அன்றைய ரோமைய அரசாங்க நிர்வாகத்தில் எல்லா பொருப்புகளிலும் அவருக்கு மதிப்பு இருந்தது. விஷேஷமாக அன்றைய " மரண விளையாட்டரங்கம் கொலோசியும் " என்னும் கலை அரங்கத்தையும் சிறைச்சாலையையும் தன் நேரடி நிர்வாகத்தில் வைத்திருந்தார். இத்தகைய பொருப்புள்ள அதிகாரம் அவருக்கு இருந்ததால் எந்த நேரமும் அரண்மனைக்கு செல்லவும் சிறைச்சாலையை மேற்பார்வையிடவும் அவருக்கு எளிதான காரியமாயிற்று.
செபஸ்த்தியார் ஒரு கிறிஸ்த்துவர் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். இதை இவர் யாருக்கும் எப்போதும் வெளிப்படுத்தவே இல்லை. அப்போது அதற்கு அவசியமும்   இல்லை. ஆண்டவராகிய யேசுநாதர் இவரை தன்னுடைய காரியங்களுக்காக பயன்படுத்த வேண்டி இந்த பதவியை அவருக்கு கொடுத்திருந்தார். தியோக்குலேசியன் காலத்தில் ரோமில்
வேத கலாபணை உச்சகட்டத்தை அடைந்தது. எனவே அவனால் மரணத்திற்கு தீர்வையிடப்பட்டவர்கள் இவருடைய நிர்வாகத்தின் கீழ் இருந்த ஒரு சிறைச்சாலை அதிகாரியிடம்  இருந்ததால் தான் அவர்களை சந்திக்கவும் ரகசியமாக புத்தி சொல்லவும் வேண்டிய உதவிகளை செய்யவும் அவர்களின் பாடுகளின்போது அவர்கள் வேதத்தில் நிலைத்திருக்கும்படியாக
ஜெபிக்கவும் அனேக முறை சிறைச்சாலைக்கு சென்று தன் அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்து தேவைகளையும் செய்து முடிப்பார். 
     இப்படி இருக்கையில் சோதனையாக மூன்று   வாலிபர்கள் பங்கிராஸ் என்றும் நேரி என்றும் அக்கில்லாவென்றும் கிறிஸ்த்துவர்கள் என்னும் ஒரே காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களில் பங்கிராஸ்
என்பவரைப்பற்றி சிறிதளவே அறியமுடிந்தது. மற்ற இருவரும் அவரது நண்பர்கள் தான். ஆனால் இந்த மூவரும் நல்ல வீரர்கள்.
பங்கிராஸ் பைஜீரியாவைச்சேர்ந்த சினந்தா என்னும் ஒரு ஊரில் கி.பி. 289ல் ஒரு நல்ல கிறிஸ்த்துவ தம்பதிகளுக்கு பிறந்தார். தந்தை பெயர் கிளியோனியன் என்றும் லாரண்ஸ் என்றும் கூறப்படுகின்றது. தாயார் பெயர் கிரியாதா எனப்படும். பங்கிறாஸைப்பெற்ற வேளையிலேயே அவர் தாயார் இறந்து போனார். பங்கிராஸுக்கு எட்டு வயதாகும் போது அவரது
தந்தையார் வேதசாட்ச்சியாக இறந்து போனார். அவர் பெரும் வீரனாக இருந்தவர். மற்போரில் அவருக்கு நிகர் அவரேதான். எனவே அவரை மற்போரின்போது யாரும் ஜெயிக்க முடியததால் கொடிய மிருகங்களுக்கு இறையாகப்போட்டனர். பங்கிராஸ் அவரது உறவினர் டியோனீசியன் என்பவரால் வளர்க்கப்பெற்றார். அவரது மனைவி அவரை நல்ல கிறிஸ்த்துவ
ஜீவியத்தில் வளர்த்தார்.பங்கிராஸ் பள்ளியில் படிக்கும்போதே அவரது ஆசிரியர் காஸியான் என்பவரால் மேலும் நல்ல கிறிஸ்த்துவனாக மாற்றினார்.   ஒரு முறை ஆசிரியர் காஸியான் மாணவர்களிடம் உண்மை என்றால் என்ன? பொய் என்றால் என்ன? யாராவது விளக்கம் கொடுக்க முடியுமோ?" என்றார்.
மாணவர்கள் யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை. ஆனல் பங்கிராஸ் எழுந்தான். " ஐய்யா .. எனக்கு விடை தெரியும் " என்றார்.
ஆசிரியர் திகைத்து " அப்படியானால் நீ பதில் கூறு" என்றார். பங்கிராஸ் ஆரம்பித்தான்.
" கடவுள் என்பவர் ஒருவரே என்பது உண்மை.
அவர் மூன்று ஆட்களாக இருகின்றார் என்பது உண்மை.
அவர்கள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என பெயர் கொண்டுள்ளார்கள் என்பது உண்மை.
அந்த மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் கொண்டவர்கள் என்பதும் உண்மை.
அந்த மூன்று ஆட்க்களும் சேர்ந்துதான் பரிசுத்த தம திருத்துவம் என்பதும் உண்மை
இந்த பரிசுத்த தமதிருத்துவத்தின் சித்தப்படியே இந்த உலகத்தையும் இந்த அண்ட சராசரங்களையும் படைத்தார்கள் என்பதும் உண்மை.
இந்த மூன்று பேரில் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் பரிசுத்தஆவியாரின் வல்லமையால் புனித கன்னி மரியிடம் மனிதாவதாரமாக யேசுநாதர் என்னும் பெயரோடு இந்த உலகத்தில் பிறந்தார் என்பது உண்மை.
அவர் போஞ்சிபிலாத்திடம் தான் உண்மைக்கு சாட்சியம் கூறவே இந்த உலகத்துக்கு வந்ததாக கூறியது உண்மை.
அவர் போஞ்சிபிலாத்தின் அதிகாரத்தால் சிலுவை அறையப்பட்டு பாடுகள் பலபட்டு மரித்தார் என்பது உண்மை.
யேசுநாதர் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மை.
அவர் உயிர்த்த நாற்பதாம் நாள் பரலோகத்துக்கு ஆரோபணமானார் என்பது உண்மை.
யேசுநாதர் பரலோகத்துக்கு சென்றபிறகு பரிசுத்த ஆவியார் அவரது சீடர்கள் மீதும் தேவ தாயார் மீதும் அக்கினி நாக்கு ரூபமாக இறங்கியது உண்மை.
இந்த உலகில் படைக்கப்பட்ட மக்கள் இறந்தபின் நல்லோர்கள் எல்லோரும் மோட்சதிற்கும் தீயோர் எல்லோரும் நரகத்திற்கும் செல்வார்கள் என்பதும் உண்மை.
இதைத்தவிர இந்த உலகில் நாம் காணும் காட்சிகள் யாவும் மாயத்தோற்றமே. அவைகள் யாவுமே பொய்...
இந்த அண்ட சராசரங்களை ஆள்வதாகக்கூறும் தேவர்கள் எனப்படுபவர்களும் அவர்களைப்பற்றிய புராணங்களும் பொய்."
இத்தகைய விளக்கத்தால் பங்கிராசின் தோழன் கோர்வீனன் என்பவன் மிகுந்த கோபம் கொண்டான். அவன் பிறதெய்வங்களியும் விக்கிரக ஆராதணை செய்யும்   பெற்றோர்களுக்கு பிறந்தவன் ஆகையால் தாங்கள் வணங்கும் தெய்வங்கள் பொய் என்று பழித்துக்கூறிய பங்கிராஸ் மீது கடும் சினம் கொண்டான். ஆனால் ஆசிரியர் காசியான்  பங்கிராஸை தனியே அழைத்து ," நீ இன்னும் அரசியலையும் காலத்தையும் சரியாக புறிந்துகொள்ளவில்லை. கிறிஸ்த்துவர்களுக்கு அபாயம் கத்திருகின்றது. அந்த கோர்வீனனிடம்
நீ எச்சரிக்கையாக நடந்துகொள். அவனிடமிருந்து விலகியே இரு" என்றார்.    ஆசிரியர் தன்னைப்பற்றி பங்கிராஸிடம் நன்றாக போட்டுக்கொடுத்துவிட்டர் என்று தெரியவந்த அந்த முரடன் கோர்வீனன் ஆசிரியர் காஸியன் மீது பகைகொண்டான்.
        வேத விரோதியாக மாறி ஆசிரியர் காஸியானைக்கொன்றான். தியோக்குலேசியன் கிறிஸ்த்துவர்களை காட்டி கொடுப்பவர்களுக்கு மிகுந்த சன்மானம் அளித்தான். எனவே பணம் காசுக்கும் அரசியல் ஆதாயத்துக்கும் ஆசைப்பட்டு கோர்வீனன், புல்வியன், தேர்த்துல்லியன் ஆகியோர் அக்காலத்தில் கிறிஸ்த்துவர்களை காட்டிக்கொடுத்து பெரும் காசுபணம்
சம்பாரித்தார்கள். இவர்களின் சதியால் பங்கிராஸும் அவரது நண்பர்களான நேரியும் அக்கில்லாவும் காட்டிக்கொடுக்கப்பட்டு அந்த மரண விளையாட்டரங்கத்தில் சிறையில்   அடைக்கப்பட்டனர். அடுத்தன் நாள் விசாரணை ஆரம்பமானது. தியோக்குலேசியன் அந்த மூன்று பேரையும் அழைத்தான்.
" பங்கிராஸ், நேரி, அக்கில்லா...நீங்கள் மூவரும் நல்ல அழகும், வீரமும் நிரம்பிய வாலிப விடலைகள்..உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை..நாம் நம் நாட்டில் கிறிஸ்த்துவ மதத்தை தடை செய்திருப்பது தெரிந்திருந்தும் ஏன் அந்த கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டீர்கள்... போனது போகட்டும். உங்களின் வாலிப வயதை முன்னிட்டு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம்   தருகிறேன். உங்களது வாலிபமும் வீரமும் என்னை சற்றே நிதானிக்க வைக்கிறது.. உங்களைபோன்ற வாலிப வீரர்களின் சேவை நமக்குத்தேவை. நீங்கள் எம் ராணுவத்தில் சேர்ந்தால் உங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை நாம் ஏற்படுத்தி தருவோம்.நல்ல பதவி தருவோம். நல்ல சம்பளம் தருவோம். அழகிய பெண்களாக உங்களூக்கு மணமுடித்து தருவோம். என்ன
சொல்லுகிறீர்கள்..வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.அதைவிடுத்து யாரோ ஒரு யூத ராபியின் பின்னே ஏன் செல்ல வேண்டும்? உங்களுக்கு  என்ன அழகில்லைய்யா...அறிவில்லையா...வீரமில்லையா...ஏன் உங்களையும் ஏமாற்றிக்கொண்டு....உங்கள் தாய்தகப்பனின் வயிற்றெறிச்சலையும் கட்டிக்கொண்டு... என்ன பிரையோஜனம்...சற்றே நிதானியுங்கள். உருப்படும் வழியைப்பாருங்கள் " என்றான்.
அதற்கு மூவரும்," ஐய்யா...நீர் எங்களுக்கு எத்தகைய வாக்குறுதிகளைக்க்கொடுத்தாலும் நாங்கள் எங்கள் ஆண்டவறாகிய இயேசுநாதரை விட்டு விலகப்போவதில்லை.நீங்கள் எங்களுக்கு இந்த உலகையே தூக்கி சன்மானமாக கொடுத்தாலும் எங்கள் ஆன்மாவை இழந்து நரகத்தில்வீழ விரும்பவில்லை. நாங்கள் எங்கள் ஆண்டவறாகிய யேசுநாதருக்கு   சாட்ச்சியாகவே வாழவோ மரிக்கவோ விரும்புகிறோம். இதற்கு சன்மானமாக எங்கள் ஆண்டவறாகிய யேசுநாதர் எங்களை பரலோகத்தில் கணம் பண்ணுவார். அந்த சன்மானம் நீங்கள்
கொடுக்கும் இந்த உலக சன்மானத்தைவிட அதிகம் மதிப்பு வாய்ந்தது" என்றனர். 
   அரசன் தியோக்குலேசியன் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்தது. இந்த மூன்று வாலிபர்களிடமும் தான் நன்றாக அவமானப்பட்டுவிட்டதாக உணர்ந்தான். எனவே கோபமாக, " இந்த திமிர் பிடித்த மூன்று வாலிபர்களையும் சிங்கங்களுக்கு இறையாகப்போடுங்கள்" என்றான்.
மேலும் கோபமாக செபஸ்த்தியாரிடம் திரும்பி," செபஸ்த்தியான்..இந்த திமிர்பிடித்த வாலிபர்களைப்பார்த்தாயா...அந்த கொலோசியத்தில் இவர்கள் மூவரையும் சிங்கங்களுக்கு இறையாகபோடு.. அதற்காக அவற்றை ஒரு இரண்டு நாள் பட்டினி போடு..இந்த மூன்று நாய்களையும் அதுவரை பட்டினிபோடு" என்று கோபாவேசமாக கூறிச்சென்றான்.
அந்த மரண விளையாட்டரங்க சிறையில் நம் செபஸ்த்தியார் இந்த மூன்று வாலிபர்களையும் சந்தித்தார்.அவர்களுடைய விசுவாசத்தை பாராட்டினார். அவர்களுக்கு என்ன தேவை என்றார். அவர்கள் தாங்கள் சாவதற்கு முன் ஒரு முறை திவ்ய நற்கருணையை பெற ஆசைப்படுவதாக கூறினர். செபஸ்த்தியார் அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.
கொடுங்கோலன் நீரோவின் ஆட்ச்சிக்காலம் துவங்கி அவனுக்குப்பின் வந்த ரோமைய சர்வாதிகளாள் யேசுநாதருக்கு சாட்சிகளாக கொல்லப்பட்ட பல கிறிஸ்த்துவர்களை ரகசியமாக  பூமிக்கடியில் சுரங்கம் அமைத்து புதைத்து வந்தனர். அங்கேயே பல பரிசுத்தபிதாப்பிதாக்களும் மேற்றிறாணியார்களும் குருக்களும் சாதாரண மக்களும் சந்தித்துக்கொண்டு பலிபூசை
நிறைவேற்றிவந்தனர். இத்தகைய ரகசிய சுரங்கங்களில் அவசரத்துக்கு தப்பிச்செல்ல பல வழிகளும் இருந்தன. மரணத்தீர்வையிடப்பட்டு கொலைக்களத்துக்கு போகும் முன் திவிய   நற்கருணை கேட்க்கும் கிறிஸ்த்துவர்களுக்கு ரகசியமாக சில உதவி குருக்கள் துணிச்சலாக திவ்ய நற்கருணையை எடுத்துக்கொண்டு செல்வர்.அது தற்கொலைக்கு சமமான ஒரு முயற்சி. வேத விரோதிகளிடம் மாட்டிக்கொண்டால் கொல்லப்படுவர். எனவே இதற்குத்துணிந்துதான் அவர்களும் செல்ல வேண்டும். இருப்பினும் சில குருக்கள் இதை ஒரு கடமையாகவும்  தியாக மனப்பான்மையுடனும் செய்து வந்தனர். 
        சோதனையாக அன்று அந்த மூன்று வாலிப வீரர்களுக்கும் திவ்ய நற்கருணை கொண்டு செல்ல யாரும் இல்லை. அப்போதிருந்த
குருவானவர் பொலிகார்ப் இந்த நல்ல காரியத்திற்கு யார் முன் வருகிறீர்கள் என்றார்.ஆனால் யாரும் உயிருக்குப்பயந்து முன் வரவில்லை.
" தார்சியுஸ் என்றொரு பிள்ளை ".
ஆனால் முன்வந்தான் ஒரு பனிரெண்டு வயது பையன். அவன் பெயர் தார்சியுஸ். அனாதையாக பிறந்த அவனை அருமையாக வளர்த்தாள் ஒரு பெண்.நல்ல கிறிஸ்த்துவ  ஜீவியத்தில் அவனும் வளர்ந்தான். இவனை தன் சேவைக்கு பயன்படுத்தி அவனை கணம் பண்ண விரும்பினார் ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து. அவனை இந்த சேவைக்கு
அழைத்தார். அவனும் மனமுவந்து பெரும் சவாலான இந்த சேவைக்கு தன்னை அர்ப்பணித்தான். குருவானவர் பொலிகார்ப்," மகனே தார்சியுஸ்..நீ என்ன செய்யப்போகிறாய் என்று தெரியுமா உனக்கு.. நீ யாரை உன் இதயத்தில் சுமந்து செல்லப்போகிறாய் என தெரியுமா உனக்கு? " என்றார்.
அதற்கு தார்சியுஸ்," சுவாமி...நான் என் இதயத்தில் என் ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவை சுமந்து செல்லப்போகிறேன் என்று தெரியும் " என்றான்.
அதற்கு குருவானவர் பொலிகார்ப்," மகனே தார்சியுஸ்...இந்த வேலையின் முக்கியத்துவம் என்ன என்று தெரியுமா?" என்றார்.
அதற்கு தார்சியுஸ்," சுவாமி..நாளைக்கு சிங்கங்களுக்கு இறையாகப்போகும் பங்கிராஸ், நேரி, அக்கில்லா ஆகியோருக்கு நான் தெய்வீக உணவைக்கொண்டு செல்லப்போகிறேன்..  வேத சாட்ச்சிகளாக மரிக்கப்போகும் அவர்களுக்கு வான் விருந்து கொண்டு சொல்லும் பாக்கியத்தை கடவுள் எனக்கு கொடுப்பாராக" என்றான்.
குருவானவர் பொலிகார்ப்," மகனே தார்சியுஸ்..இந்த வான்விருந்து குருவானவர்களும் திருச்சபை அதிகாரிகளும் மட்டுமே தொட தகுதிவாய்ந்தது. நீயோ சிறுவன்..ஆபத்துக்குப்பாவமில்லை என்றாலும் உன்னை நம்பி இந்த காரியத்தை ஒப்படைக்க எனக்கு மனமும் வரஇல்லை.. துணிவும் வரவில்லை. நீ இன்னும் விளையாட்டு பிள்ளையாகத்தான்
எனக்குத்தோன்றுகிறாய்" என்றார்.
அதற்கு தார்சியுஸ்," சுவாமி..நான் முழு மனதுடனேயே இந்த காரியத்தில் ஈடுபட சம்மதிக்கிறேன். என் ஆண்டவரை என் நெஞ்சில் சுமந்து செல்ல நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். நான் சிறுவன் என்பதால் யாருக்கும் என்மீது சந்தேகம் வறாது. என்னை நம்பி இந்த காரியத்தை ஒப்படையுங்கள்..என் உயிரே போனாலும் இந்த வான்விருந்தை வேறு
யாரிடமும் கொடுக்க மாட்டேன். இது என் ஆண்டவர் யேசுநாதர் மேல் ஆணை... தயவு செய்து என்னை நம்பி திவ்ய நன்மையை ஒப்படையுங்கள். நான் இந்த வான்விருந்தை அந்த மூவரிடமும் எப்பாடுபட்டாவது சேர்த்துவிடுவேன். என் ஆண்டவராகிய யேசுநாதர் என்னிடம் இருக்கும் வரை நான் யாருக்கும் அஞ்சப்போவதில்லை. " என்றான். இந்த சிறுவனின்
ஆர்வத்தையும் மன உறுதியையும் கண்ட குருவானவர் பொலிகார்ப் ஒரு வெள்ளி சிமிழில் மூன்று திவ்ய நற்கருணைகளை ஒரு பட்டுத்துணியால் சுற்றி," மகனே தார்சியுஸ், உன்னை நம்பி நம் ஆண்டவரை உன்னிடம் ஒப்படைக்கிறேன். உன் பேச்சு ஒரு வீரனுக்குறியதைப்போல இருகின்றது" என்று மேலும் பல புத்திமதி சொல்லி அவனிடம் கொடுத்தனுப்பினார்.
அவனிடம் விதி வேலை செய்ய ஆரம்பித்தது.
         சிறுவன் தார்சியுஸ் தன்மீது ஒரு போர்வைபோர்த்திக்கொண்டு வலக்கையால் அந்த நற்கருணை சிமிழை பிடித்துக்கொண்டு அந்த ரகசிய கல்லறக்குகையிலிருந்து வெளியே வந்து   அப்பியன் சாலைவழியே வந்தான். சற்றுநேரம்தான் நடந்திருப்பான். அதற்குள் தார்சியுஸின் பள்ளிக்கூட நண்பர்கள் சிலர் அவனைப்பார்த்து ," அடே தார்சியுஸ்...எங்கே இந்தப்பக்கம்...
என்ன போர்வை போர்த்திக்கொண்டு வருகிறாய்... உடம்பு எதுவும் சரி இல்லையா...பரவாயில்லை.. சற்று நேரம் எங்களுடன் விளையாடினால் ஜுரம் பறந்து போய்விடும்...வா...வா..  என்றனர். 
     ஆனால் தார்சியுஸ்... இல்லை...நான் வரமாட்டேன்.. எனக்கு உடம்பு சரி இல்லைதான்..ஆனாலும் எனக்கு வேறு வேலை இருகிறது...நான் இப்போது விளையாட வர மாட்டேன்... என்னை தொந்திரவு செய்யாதீர்கள் என்றான்.. ஆனால் அந்த குறும்புக்கார பிள்ளைகள் அவனை விடுவதாக இல்லை.
" அடேய் தார்சியுஸ்.. என்னடா பிகு பண்ணுகிறாய்...இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை..பள்ளிக்கூடம் விடுமுறைதானே... அப்படி என்ன உனக்கு முக்கியமான வேலை... நேற்று   வாத்தியார் வீட்டுப்பாடம்கூட அதிகம் கொடுக்க வில்லையே.. அப்புறம் என்ன வேலை... வாட என்றால்... பெரிதாக... என்னவோ பெரிய வேலை இருகிறதாம்... என்று அவன் கையைப்பிடித்து இழுத்தான் ஒருவன். ஆனால் தார்சியுஸ் தன் கையை நெஞ்சிலிருந்து எடுப்பதாக இல்லை. " டேய் என்னால் இப்போது வர முடியாது என்றால் முடியாதுதான்.. ஏன் என்னை தொந்திரவு செய்கிறீர்கள்... என்னை விட்டு விடுங்கள். என்னை போகவிடுங்கள் " என்றான் தார்சியுஸ்.
" டேய் பசங்களா...தார்சியுஸ் எதையோ நம்மிடமிருந்து மறைக்கிறான்... அதை பிடுங்குங்கள்... அது என்ன என்று பார்த்துவிடுவோம்" என்றான் ஒருவன்.
" இல்லை... நான் எதையும் மறைக்கவில்லை... அது என்னுடைய பொருள்.. அதை நான் யாருக்கும் கொடுக்கவும் மாட்டேன். காண்பிக்கவும் மாட்டேன்"
" டேய்... இவன் நம்மிடம் எதையோ மறைகின்றான் என்றால் அதை எங்கிருந்தோ திருடிக்கொண்டுதான் வந்திருக்க வேண்டும்...அது என்னவென்று பார்த்துவிடுவோம்..பிடுங்குங்கள்"
" இல்லை... நான் எதையும் திருடவில்லை...அது ஒரு முக்கியமான ஒருபொருள்..அதை நான் என்னவென்று உங்களிடம் காட்டப்போவதில்லை. என் உயிரே போனாலும் அதை நான்  உங்களீடம் காட்ட மாட்டேன்."
தார்சியுஸ் மறுக்க மறுக்க அது என்னவென்று பார்த்துவிடவேண்டும் என்னும் ஆர்வம் அந்த கொடும் துஸ்டப்பிள்ளைகளுக்கு ஏற்பட்டதால் அவனை அடித்து உதைத்து   அவனிடமிருந்து பிடுங்க எத்தனித்தார்கள். ஆனால் தார்சியுஸ் " என் உயிரே போனாலும் என் யேசுவை உங்களிடம் தரமாட்டடேன் " என்றதால் அவன் நண்பர்களுக்கு அப்போதுதான்   தார்சியுஸ் ஒரு கிறிஸ்த்துவன் என்னும் உண்மை தெரிய வந்தது. உடனே கடும் கோபம் கொண்டான் ஒரு மாணவன்... தார்சியுஸ் நீ ஒரு கிறிஸ்த்துவனா... அப்படியானால் உன்னை
கொன்றாலும் தப்பில்லை..டேய்...நண்பர்களே ..இவனை நையப்புடையுங்கள்...இவனைக்கொன்றாலும் தப்பில்லை. நம் தியோக்குலேசிய மஹா ராஜாவுக்கு ஒரு கிறிஸ்த்துவனை  கொன்றால் தகுந்த சன்மானம் கொடுப்பதாக கூறியிருக்கிறார்...வாருங்கள் இவனைக்கொன்றுபோடுவோம்." என சொல்லி அருகிலிருந்த கற்களை எடுத்து அவன் கழுத்திலும் முதுகிலும் தலையிலுமாக அடிக்கவே தார்சியுஸ் மயங்கிச்சாய்ந்தான்.. ஆனாலும் தார்சியுஸ் அவன் நெஞ்சிலிருந்து அந்த நற்கருணைச்சிமிழை பற்றியிருந்த அவன் கையை எடுக்கவே இல்லை.
        அப்போது ஆஜானபாகுவாய் வந்தான் ஒரு ரோமைய வீரன். " அடேய் பசங்களா... ஒரு சின்னப்பையனை ஏன் இப்படிபோட்டு அடிகிறீர்கள்?" என்று கூவிகொண்டே வந்து   மயங்கிச்சாயும் தார்சியுஸை அப்படியே தன் கரங்களிள் தாங்கிக்கொண்டான். மற்ற துஷ்ட்டப்பிள்ளைகள் எல்லோரும் அப்போது ஓடிபோனார்கள்.
      அப்போது அணையப்போகும் மெழுகு வர்த்தி கொஞ்ச நேரம் பிரகாசமாக எரிவதைப்போல கொஞ்சம் உணர்வு வந்தது தார்சியுஸுக்கு.." ஐய்யா.. தாங்கள் யார்.." தம்பி.. என் பெயர் குவிண்தனன்..நான் ஒரு ரகசிய கிறிஸ்த்துவன். செபஸ்த்தியாரின் சீடன். நான் உன்னை அடிக்கடி அந்த கலிஸ்த்தா ரகசிய குகையில் பார்த்திருக்கிறேன். என்னை நம்பு.. என்னால் உனக்கு யாதொரு துன்பமும் வறாது." என்றான்.
" ஐய்யா...மிக்க வந்தனம். உங்களை நானும் அடிக்கடி அந்த கலிஸ்த்தா ரகசிய குகையில் பார்த்திருகிறேன்..நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்... என்னை அந்த கலிஸ்த்தா  ரகசிய குகைக்கு கொண்டு போய் சேர்த்துவிடுங்கள். குருவானவர் எனக்கு கொடுத்த அந்த வேலையை என்னால் செய்யமுடிய வில்லை. அதனால் அவர் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு உயிர் இருக்குமானால் அவரிடம் நான் எனக்கு கொடுத்த காரியத்தை செய்ய முடியாததற்கு நான் நேரிலேயே மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால் நான் இறப்பது உறுதி. வேறு யாரை வைத்தாவது அந்த காரியத்தை முடிக்க சொல்லுங்கள். என் யேசுவை நான் என் நெஞ்சிலையேதான் வைத்திருகிறேன்.வேறு யாரிடமும் அவரை நான் ஒப்படைக்க மாட்டேன்.. என்னை குரு பொலிகார்ப்பிடம் கொண்டுபோங்கள்... சீக்கிரம்..." என்று சொல்லி உயிர் நீத்தான்.
    தன் மகனை ஒத்த ஒரு சிறுவன் யேசுகிறிஸ்த்துவை சுமந்துகொண்டு தன் கரங்களிளேயே உயிர் நீத்தது அந்த வீரன் குவிந்தணனுக்கு மிகுந்த துயரத்தை வரவழைத்தது. தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அந்த ரகசிய கலிஸ்த்தா குகையை அடைந்து சிறுவன் தார்சையுஸை குருவானவர் பொலிகார்ப்பிடம் ஒப்படைத்தான் அவன்.
         சற்று முன்னர் தான் அனுப்பிய அந்த சிறுவன் தார்சியுஸ் தற்போது பிணமாக திரும்பிவந்ததை கண்ட குருவானவர் பொலிகார்ப் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார், மிகுந்த துயரமடைந்த  அவர் கவனமாக அவன் வலதுகையை நகர்த்தி அந்த திவிய நற்கருணை சிமிழை எடுத்தார். அதற்கு எவ்விதமான சேதாரமும் ஏற்படாததைக்கண்ட அவர்," மகனே தார்சியுஸ்,நீ மிகுந்த
பேர் பெற்றாயடா...நீ யார் பெற்ற பிள்ளையோ...அந்த பெற்றோர் வாழ்த்தப்பெறுவார்களாக. உன் நெஞ்சிலேயே யேசுவை சுமந்து அவருக்காக நீ உயிர் விட்டாயோ...நீ... பாக்கியவான்.. உன் பெயர் இந்த உலகம் உள்ள வரை பேசப்படும்...நீதான் சுத்த வீரன்...நானோ கோழை... இந்த காரியத்தை நான் செய்திருக்க வேண்டும்.நான் கோழையாகிப்போனேனே. அப்பா..
உனக்கு கிடைந்த இந்த வேத சாட்ச்சி முடி எனக்கல்லவா கிடைத்திருக்க வேண்டும்...நான் பாவியாகிப்போனேனே அப்பா...நான் பெரும் கோழை ஆகிப்போனேனே... தார்சியுஸ்  என்னை மன்னித்துவிடு. " என்று பலவாறு அவனைப்போற்றியும் தன்னை தூற்றியும் அழுதார். 
     அப்போது ஒரு பெரும் பணக்காரப்பெண் ஒருத்தி அழுதுகொண்டே வந்து
மரித்துப்போய் இருந்த தார்சியுஸை அணைத்துக்கொண்டு பிரலாபித்து அழுதாள்." மகனே தார்சியுஸ்... எனக்கு பிள்ளை இல்லாத குறையை தீர்க்க எனக்கு மகனாக வந்தாயே...  இன்று நான் உன்னை இழந்து போனேனே... ஆண்டவன் எனக்கு உன்னை கொடுத்து இப்போது எடுத்துக்கொண்டாரே " என்று பலவாறு சொல்லி அழுதாள். அவள்தான்  தார்சியுஸை எடுத்து வளர்த்தவள்.
     அப்போது எங்கிருந்தோ வந்தார் ஒரு இளம் குரு." சுவாமி.... என்னை மன்னியுங்கள்..வெளியே ஊருக்குள் கலகம் ஏற்பட்டுள்ளதால் நான் பதுங்கிபதுங்கி என் உயிரை காப்பாற்றி  வரவேண்டியதாயிற்று." என்றார். பிறகு மரித்துப்போயிருந்த நம் தார்சியுஸைப்பார்த்து," சுவாமி...இது தார்சியுஸ் அல்லவா...என்னவாயிற்று?" என்றார். அதற்கு பொலிகார்ப்," தம்பி,
இவன் உனக்கும் எனக்கும் புத்தி சொல்லிப்போயிருக்கிறான். உனக்கும் எனக்கும் உயிர் மேல் ஆசை இருந்ததால் நம் கடமையை தவறவிட்டோம். ஆனால் இவனுக்கு உயிர் மேல்   ஆசை இல்லாததால் நாம் செய்ய வேண்டிய வேலையை அவன் செய்து தன் உயிரை தியாகம் செய்திருகிறான். இது விஷயமாக நீயும் நானும் வெட்க்கப்பட வேண்டும்..போய் ஆக
வேண்டிய வேலையைப்பார்...சிறையில் இருக்கும் பங்கிராசுக்கும் அவன் நண்பர்களுக்கும் போய் இந்த திவ்ய நற்கருணையை நீ கொண்டுபோய் கொடுகிறாயா...அல்லது நான் போய்  கொடுத்துவரட்டுமா? என்றார்.
     .அப்போது அந்த இளம்குருவானவர் ஒரு சிறு பையனுக்கு இருந்த தைரியம் தனக்கில்லாமல் போனதே என்று வருந்தி மனதில் ஒரு உத்வேகம் பெற்றவறாய்," சுவாமி ..என்னை மன்னியுங்கள். உன்மையில் தார்சியுஸின் மரணம் எனக்கு ஒரு பாடத்தை கொடுத்துள்ளது..என்ன தியாகம் நான் செய்தாவது இந்த நற்கருணையை சிறையில் வாடும் அந்த
மூவருக்கும் கொடுப்பேன்...எனக்கு உத்தரவு அளியுங்கள்... ஒரே ஒரு விண்ணப்பம்... வேத சாட்ச்சியாய் மரித்திருக்கும் நம் தார்சியுசின் துக்கபூசையை நான் செய்து அவன் ஈமக்காரியங்களை முடிக்கும் பாக்கியத்தையாவது எனக்கு கொடுங்கள்" என்றார். வேத சாட்ஷியாக மரித்திருந்த நம் தார்சியுஸின் திரு உடல் புனித செசீலியம்மாளின் கல்லறைக்கு   அருகிலேயே புதைக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க திருச்சபை நம் தார்சியுஸுக்கு புனிதர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது. புது நன்மை வாங்கும் பிள்ளைகளுக்கு பாதுகாவலர்  என்னும் பட்டமும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பிற்கால கிறிஸ்த்துவர்கள் புனித தார்சியுஸின் தேவாலயம் ஒன்றைக்கட்டி அவரது எலும்புகளை அதில் வைத்திருகிறார்கள்.  தார்சியுஸ் முகம் மிகுந்த வேதனையுடன் மரித்திருப்பதை போன்ற தோற்றமுடைய ஒரு சலவைக்கல் சிற்பம் அந்த கோயிலின் பலிபீடத்தில் வைக்கப்பட்டிருகிறது. அந்த சிலையை
செய்த சிற்பியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.புது நன்மை என்றில்லாமல் யேசுவை தங்கள் இதயத்தில் வாங்கி பாதுகாக்கும் அனைவருமே தார்சியுஸ் அம்சம் தான்.   அவர்களுக்கு தினமும் புது நன்மைதான். தார்சியுஸ் செய்த பாக்கியம் அப்படி.
      தார்சியுஸின் ஈமக்காரியங்கள் முடித்து தாமதமாக அரண்மனைக்கு வந்த குவிந்தணன் தளபதி செபஸ்த்தியாரை பார்த்து தாமதத்திற்கான காரணத்தை ரகசியமாக கூறினான்.  அன்று புதிதாக சிறைக்கு வந்திருக்கும் மார்க்கு மற்றும் மார்சலீன் என்னும் இரட்டைப்பிள்ளைகள் விசாரணை இருப்பதால் அவர்களுக்கான காவல் குவிந்தணனுக்கு கொடுக்கப்பட்டது.
ஆயினும் சக்கரவர்த்தி தியோக்குலேசியன் வெளியூர் சென்றிருப்பதால் விசாரணை தள்ளிப்போனது. அதனால் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த நாள். சக்கரவர்த்தி தியோக்குலேசியனுக்கு பதில் அன்று அவரது சகோதரன் மாக்ஸிமியன் சீசராக கொலோசியம் என்னும் விளையாட்டரங்கத்துக்கு வந்திருந்தார். ஏற்கனவே  மரணத்தீர்வை இடப்பட்டிருந்த பங்கிராஸும்,நேரியும்,அக்கிலாவும் மரண விளையாட்டரங்கதிற்கு வர அழைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் வரும் வழிதெரிந்த பங்கிராஸின் வளர்ப்புத்தாயார் பங்கிராஸ் வரும்போது சப்த்தமாக," மகனே பங்கிராஸ்...இந்த சிமிழை அணிந்துகொள்..இதனுள் உன் தந்தையார் வேத சாட்ச்சியாக மரிக்கும்போது சிந்திய ரத்தம் தோய்த்த பஞ்சு இருகின்றது. மனம் கலங்காதே. இப்போது நடைபெறப்போகும் வீர விளையாட்டில் கலந்துகொள்ளாதே..வன்முறை வேண்டாம்...நீ வேதசாட்ச்சியாக மரிக்கும் பாக்கியம் பெற்றுள்ளாய். உன்னால் மற்றவர்கள் யாவரும் ரத்தம் சிந்த வேண்டாம்... வீரனாக... கடவுளுக்காக உன் ரத்தம் சிந்து...ஆண்டவறாம் நம் யேசுநாதர் உன்னை இப்போதே வான்
வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவார்..பயப்படாதே" என்று ஒரு சிமிழை அவர்மீது வீசினாள். பங்கிராஸ் அதைப்பெற்றுக்கொண்டு தன் கழுத்தில் அணிந்துகொண்டார். அடுத்தது ஆரம்பமானது பயங்கரம்.
            சீசர் மாக்ஸிமியன் தன் ஆசனத்திலிருந்து எழுந்தான்." என் அருமை ரோமை மக்களே... இன்று பெரும் விளையாட்டு நடைபெறப்போகின்றது. வீரர்கள் பங்கிராஸ், நேரி, அக்கில்லா  ஆகியோர்கள் சுத்த வாள் வீச்சு வீரர்கள்.. கிறிஸ்த்துவர்கள் என்னும் காரணத்திற்காக மரணத்தீர்வை இடப்பட்டிருந்தாலும் நான் இவர்களுக்கு ஒரு சலுகை தரப்போகிறேன். இவர்கள்  என் வாள் வீரர்களை போரில் வென்றால் இவர்களுக்கு நான் உயிர் பிச்சை தருவேன்...போரில் தோற்றவன் கொல்லப்பட வேண்டும்..ஆகவே வாழ்வா சாவா என்ற அளவில் உங்கள்   வீரம் வெளிப்படட்டும். வாழ்க தியோக்குலேசியன்.. ஆரம்பமகட்டும் போர் " என்று சொல்லி அமர்ந்தான். பெரும் ஆர்ப்பாட்டத்துடன் மூன்று ரோமைய வீரர்கள் அரங்கத்தினுள்
வந்தார்கள்.பங்கிராஸ், நேரி, அக்கில்லா ஆகிய மூவரிடமும் போராட வாள் கொடுக்கப்பட்டது. அப்போது பங்கிராஸ்," அரசே...போராட நாங்கள் விரும்பவில்லை..நீங்கள் எங்களுக்கு கொடுத்த மரண தண்டனையை நிறைவேற்றிக்கொள்ளலாம்..நாங்கள் தயாராகவே இருக்கிறோம் " என்று கூறி தங்களிடம் கொடுக்கப்பட்ட வாட்களை வீசி எறிந்தனர்.
     மக்கள் இத்தனை பேர் முன்னிலையிலும் தன்னுடைய பேச்சுக்கு மரியாதை இல்லாமல் போனதால் பங்கிராஸ் பேரிலும் மற்ற இருவர் பேரிலும் கடும் கொண்டான் மாக்ஸிமியன்.
" அடே நன்றி கெட்ட நாய்களே..நான் உங்களுக்கு சலுகை காட்டியது தவறுதான். செபஸ்த்தியான்...இவர்கள் மீது சிங்கங்களை ஏவி விடு... இவர்கள் சாவதைப்பார்த்து நாம் சந்தோஷப்படுவோம்" என்றன். அப்போது ஏற்கனவே இரண்டு நாள் பட்டிணிப்போடப்பட்டு வந்த கொடிய வன விலங்குகளான சிங்கங்களும் சிறுத்தைப்புலிகளும் அரங்கத்தில்  அவிழ்த்துவிடப்பட்டன. பெரும் கோபாவேசத்தோடு அரங்கத்தினுள் வந்த அவைகள் இந்த மூவர் முன்பாகவும் வந்து அமைதியாக நின்றுகொண்டன. மக்கள் யாவரும் இந்த
அதிசயத்தைப்பார்த்து வியந்து போயினர். பங்கிராஸ் செபிக்க ஆரம்பித்தார். அவர் ஜெபிக்க ஜெபிக்க அந்த சிறுத்தைப்புலிகளுக்கு ஆவேசம் வந்தது. அவர் ஜெபித்துமுடித்ததும்  மிகுந்த உக்கிரத்துடன் நேரி மீதும் அக்கில்லா மீதும் பாய்ந்து அவர்கள் கடித்துக்குதறி சின்னாபின்னமாக்கின. அவர்கள் இருவரும் வேத சாட்ச்சியாக மரித்துப்போனார்கள்.
     ஆனால் எந்த மிருகமும் பங்கிராசை தொடவில்லை. இந்த அதிசயம்பற்றி பலர் பங்கிராஸை வாழ்த்தினார்கள்.. ஆனால் மன்னன் மாக்ஸிமியனுக்கு அப்படியே பற்றிகொண்டு வந்தது.   அடேய் யாரங்கே... சிங்கம் அவனை தின்னாவிட்டால் என்ன... நான் அவனைக்கொன்று போடுவேன். போய் அவன் தலையைவெட்டி கொன்று போடுங்கள்" என்றான்..
அதன்படிய வீரர்கள் அரங்கினுள் வந்து பங்கிராசின் தலையை வெட்டிக்கொன்றுபோட்டார்கள். பங்கிராஸ் வேத சாட்ச்சியாக மரித்துப்போனார்.
      சீசர் மாக்ஸிமியன் பங்கிராஸ் தலைவெட்டிக்கொல்லப்பட்டதும் மிகவும் ஆர்ப்பாட்டமாக சிரித்தான்." பார்த்தாயா பங்கிராஸ். நான் இவனுக்கு உயிர் பிச்சை கொடுத்தேன். ஆனால்   அவன் தன் சாவை அவனே வரவழைத்துக்கொண்டான். இப்படியும் சில பைத்தியக்காரர்கள் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஊம் ...விதி என்று ஒன்று
இருக்கிறதல்லவா..எல்லாம் அப்படித்தான் நடக்கும்...என்ன செய்வது அவன் தலை எழுத்து அப்படி என்றால் அதை யாரால் மாற்ற முடியும்" என்று கட கட வென்று நகைத்தான்.
      அரசன் முன்னே செபஸ்த்தியார் பெயருக்குத்தான் நகைத்தாரே தவிர அவர் உள்ளமோ பெரும் துக்கத்தில் ஆழ்ந்தது. இந்த மாவீரர்களான பங்கிராஸும் நேரியும் அக்கில்லாவும் எப்பேர்ப்பட்ட வீரர்கள். எத்தனை சிறிய வயது வாலிபர்கள்.. தன் மீது எத்தன பாசமும் நேசமும் கொண்டவர்கள். தன்னால் அவர்களை காபாற்ற முடியாமல் போய்விட்டதே. ஆண்டவர் அவர்களை எடுத்துக்கொண்டார் " என மௌனமாக அழுதார். அந்த மௌனமான அழுகை அவரையும் அறியாமல் அவர் கண்களில் இரு முத்துகளாக வெளிப்பட்டது.
இதை வேறு யாரும் கவனிக்கவில்லை என்றாலும் இரு கண்கள் இதை கவனித்துக்கொண்டுதான் இருந்தன. அவை புல்வியன் என்னும் ஒரு வேத விரோதிக்கு சொந்தமானவை.
   தியோக்குலேசியனுக்கு அந்தரங்க ஒற்றனான புல்வியனுக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை, பங்கிராஸ் மரணத்திற்கு செபஸ்த்தியார் என் அழ வேண்டும்?. அவர் பார்காத வீரவிளையாட்டா..இல்லை அவர் பார்க்காத போர்க்களமா?..அதற்கெல்லாம் கலங்காத செபஸ்த்தியார் இவர்களின் மரணத்திற்கு ஏன் துக்கம் அடைய வேண்டும்? அப்படியானால்...அப்படியானால்...செபஸ்த்தியார் ரகசியத்தில் ஒரு கிறிஸ்த்துவறா...அடக்கடவுளே ...இது என்ன சோதனை... என் கண்கள் என்னை மோசம் செய்கின்றதா... இதை எப்படி மெய்படுத்துவது?..பொறு மனமே பொறு...அடேய் செபஸ்த்தியான்...தியோக்குலேசியன் அரண்மனையில் நீ தளபதி என்னும் பொருப்பில் இருந்துகொண்டு என்னை நீ
எத்தனைதடவை அவமானப்படுத்தி இருகிறாய்...இதற்கெல்லாம் நீ எனக்கு பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை..அப்போது நான் வைத்துக்கொள்கிறேன் என்   கச்சேரியை " என்று கூட்டத்தில் மறைந்து போனான்.
    ரகசிய கிறிஸ்த்துவர்கள் வேத சாட்சிகளாய் இறந்துபோன பங்கிராஸ், நேரி, அக்கில்லா ஆகிய மூவரின் உடலையும் ரோமைய வீரர்களுக்கு ரகசியமாக பணம் காசு கொடுத்து   பெற்றுக்கொண்டு ரகசியமான ஒரு கல்லறைகுகையில் புதைத்தார்கள். பங்கிராஸ், நேரி, அக்கில்லா ஆகிய மூவரும் புனிதர்களாக அறிவிக்கபட்டார்கள். புனித பங்கிராஸின் கல்லரை மீது   அவருக்கு ஒரு தேவாலயம் எழுப்பட்டுள்ளது.
" மார்க்கு, மார்சலீன் என்னும் இரட்டைப்பிரவிகள்."
திரங்குள்ளியன், மார்த்தினா என்னும் வயோதிக தம்பதிகளுக்கு இரட்டைபிள்ளைகளாக பிறந்தவர்கள் தான் மார்க்கு மற்றும் மார்சலீன் என்பவர்கள். இந்த இருவர்களுக்கும் திருமணம் ஆகி பிள்ளைகுட்டிகளுடன் வாழ்ந்து வந்தார்கள். யேசுநாதரின் போதனைகளின் மீது இருந்த ஆர்வத்தால் தாங்களும் கிறிஸ்த்துவர்கள் ஆக முடிவு செய்திருந்தனர். ஆனால் இதற்கு
அவர்கள் பெற்றோரும் மனைவி மக்களும் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இவர்கள் இருவரும் கிறிஸ்த்துவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு தியோக்குலேசியனால் சிறையில்   வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் பெற்றோர்களான திரங்குள்ளியனும் அவர் மனைவி மார்த்தினாவும் சிறையில் இருந்த மார்க்கையும் மார்சலீனையும் சந்தித்து அழுது
மன்றாடி கிறிஸ்த்துவர்களாக மாற வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
மார்க், மார்சலீன் தகப்பனார் திரங்குள்ளியன்," என் மக்களே...எனக்கு இந்த வயோதிக காலத்தில் நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்..நீங்கள்   இருவரும் பெற்றோர்களுக்கு செய்யும் நன்றிக்கடன் இதுதானா. உங்கைள் இழந்து நான் மீதி நாட்க்களை எப்படி கழிப்பேன்?.மீதி காலமெல்லாம் வெறும் துன்பமும் கண்ணீரும் தான்   வாழ்க்கையாகும் என்றால் இந்த தள்ளாத வயதில் நான் எப்படித்தாங்குவேன். இதற்குபதில் நான் இறந்துபோவதே எனக்கு நல்லது. அதற்கு ஏதாவது வழி இருந்தால் எனக்கு பதில்   சொல்லிவிட்டுப்போங்கள். எனக்குத்தோண்டிய கல்லறைக்குழியில் எனக்கு முன்னே என் கையாலேயே உங்களை போட்டு புதைக்கப் போகிறேன் என்னும் கொடுமை இந்த உலகில் வேறு  எந்த தகப்ப்பனுக்கும் வரக்கூடாது.. என் மக்களே எனக்கு பதில் சொல்லுங்கள்" என்று அழுதது.மிகவும் பரிதாபத்துக்குறியதாக இருந்தது.
அடுத்து அவர்கள் தாயார் மார்த்தினா பேசினாள்.
" என் மக்களே மார்க்கு.மார்சலீன்..நம் மதத்தில் இல்லாத எதைக்கண்டு யேசுவைப்பின்பற்ற நினைகிறீர்கள். தாய் தகப்பனையையும், கட்டிய மனைவியையும்,பெற்ற பிள்ளைகளையும்   அப்படியே தவிக்கவிட்டுவிட்டு என் பின்னாடியே வா என்றா அவர் கூறினார். இல்லை.இல்லை..அவர் ஒருக்காலும் இவ்வாறு கூறி இருக்க மாட்டார்.. அவரது கூற்றை நீங்கள் தான்
தவறாக புறிந்திருக்க வேண்டும். தாயையும் தகப்பனையும் கணம் பண்ணு என்றுதான் அவர் கூறியிருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது. நீதிபதி உங்களுக்கு தேசாந்திர தண்டனை  கொடுத்தால் நான் நீங்கள் எங்கே போனாலும் வந்து உங்களை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன். எதிரிகள் உங்கள் இருவரையும் கடத்திக்கொண்டு வேற்று நாட்டுக்கு வெதூரம்
கொண்டு சென்றிருந்தாலும் நான் தேடிகண்டுபிடித்து உங்களை மீட்டு வந்துவிடுவேன்.. ஆனால் உலகத்தில் வேறு எந்த தாய்க்கும் நேராத கொடுமை அல்லவா எனக்கு வந்திருகிறது.  நான் பெற்ற மக்களே அரசனிடம் என் தலைவெட்டிக்கொல் என்கிறார்களே...இது என்ன கொடுமை..என் மக்களே என்மீது மனமிரங்குங்கள் " என்று அழுதாள்.
அடுத்து அவர்கள் மனைவியர்கள்," ஐய்யா...நீங்கள் இந்த முடிவை எடுப்பதற்கு காரணம் என்ன?. எங்கள் அன்பில் என்ன குறை கண்டீர்கள்? அல்லது எங்கள் சேவையில் என்ன   குறை கண்டீர்கள். இரவும் பகலும் ஒவ்வொரு வினாடியும் நாங்கள் உங்கள் மீது உயிரைவைத்து உங்களுக்கு விசுவாசமான சேவை செய்ய வில்லையா? பிள்ளைகள் பெற்றுக்கொடுக்கவில்லையா? அல்லது உங்களை எந்த விதத்திலாவது சந்தோஷமாக வைக்கவில்லையா? எங்களிடத்தில் என்ன குறை கண்டீர்கள்? எங்களுக்கு பதில் சொல்லுங்கள். அட எங்களை  விடுங்கள்..உங்கள் பிள்ளைகளின் முகத்தைப்பாருங்கள். நாளைக்கு எங்களின் தகப்பன் எங்கே என்று கேட்டால் நங்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்வது. தகப்பன் இல்லாத  பிள்ளைகள் தறுதலையாகிப்போகாதா? தகப்பன் இல்லாத பிள்ளைகளுக்கு ஞானமும், அறிவும், வீரமும் எங்கிருந்து வரும்? இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டுப்போங்கள்" என்று  தங்கள் கைப்பிள்ளைகளை தூக்கிக்காண்பித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து மத மாற்றத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம் என மிகவும் கேட்டுக்கொண்டனர்.
இவர்கள் இம்சை தாங்காத மார்க்கும் மார்சலீனும் மனமிறங்கி தாங்கள் மதமாற்றம் அடையப்போவதில்லை என தெரிவித்தனர். அடுத்த நாள் தியோக்குலேசியன் முன்பாக   நடைபெற்ற விசாரணையில் மார்க்கும் மார்சலீனும் இன்னும் கிறிஸ்த்துவர்கள் ஆகாதது நிரூபிக்கப்பட்டதால் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும் தன் அரண்மனை
சிறை அதிகாரி நிக்கோஸ்த்துருவின் பாதுகாப்புக்கைதியாக வைக்கபட வேண்டுமெனவும் ஒரு குறிப்பிட்ட நாளில் அரசனுக்கும் ரோமைய தெய்வங்களுக்கும் தூபாராதணை காட்டி தன்   விசுவாசத்தை நிரூபிக்க வேண்டுமெனவும் உத்திரவிடப்பட்டதால் அவர்கள் இருவரும் அரண்மனை சிறை அதிகாரி நிக்கோஸ்த்துருவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்.
          இந்த விஷயம் செபஸ்த்தியாரின் அந்தரங்க ஒற்றன் குவிண்ட்டணனுக்கு தெரியவரவே அவன் உடனடியாக அந்த செய்தியை செபஸ்த்தியாரின் காதில் போட்டுவைத்தான்.  செபஸ்த்தியாரும் சிறை அதிகாரி நிக்கோஸ்த்துருவின் மூலம் அவரது பாதுகாப்பிலிருந்த மார்க் மற்றும் மார்சலீனை சந்தித்தார். அப்போது அவர்களின் குடும்பத்தைச்சேர்ந்த அனைவரும் அங்கிருந்தனர்.   செபஸ்த்தியார் பேச ஆரம்பித்தார்." வீர வாலிபர்களே... உங்கள் வீரம் வீனாகிப்போனதெப்படி?. இந்த உலகத்தின் மாய்கையில் நீங்கள் மாய்ந்து போனீர்களோ?  நீங்கள் இந்த உலகத்தை எல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும் உங்கள் ஆன்மாவை இழந்துபோனால் அதனால் வரும் பயன் என்ன? முடிவில்லா நரகம் காத்திருக்கிறதல்லவா?"
என்று சொல்லும்போதே அந்த இரட்டையர்களின் இளம் மனைவியர்கள் அவரை இடைமறித்து," ஐய்யா செபஸ்த்தியாரே... நிறுத்தும் உம் பிரசங்கத்தை. இப்போதுதான் நங்கள் எங்கள்  கணவரை ஏதேதோ கூறி ஒப்பேற்றி வைத்திருகிறோம்...நீர் வந்து அதை கெடுத்துவிடாதீர். உமக்கு கோடிப்புண்ணியமாக போகட்டும். எங்கள் கணவர்களை மீண்டும் மாற்றிவிடாதீர்.  உம்மைப்போல் நான்கு பேர் இருந்தால் போதும். வேண்டாம் ..நீர் ஒருவரே போதும். எங்கள்களைப்போன்ற இளம்பெண்களின் கதி அதோ கதிதான்.நீர் போய் வரலாம்" என்றாள்.
      அப்போது செபஸ்த்தியார்," பெண்களே..உங்கள் நிலை எமக்கு புறிகிறது. சாத்தானின் அஸ்த்திரம் உம் வழியாய் வருகிறது. மார்க்...மார்செலீன்...சாத்தானின் சோதனைக்கு உட்படாதபடி ஆண்டவரின் வார்த்தையின் மீது நம்பிக்கைகொள்ளுங்கள். தங்களின் உயிரை காப்பாற்ற நினைப்பவன் அதை இழந்துபோவான். ஆனால் ஆண்டவருக்காக அதை
இழப்பவன் முடிவில்லா வாழ்வு பெருவான். இந்த உலகத்தின் துன்பம் கொஞ்சம் தான். அந்த துன்பமும் கொஞ்ச நேரம்தான். ஆனால் ஆண்டவருகாக தங்கள் உயிரை இழப்பவர்கள்  பாக்கியவான்கள் என்று வேதம் சொல்லுகிறது. அதன் பலனும் பெரிது. முடிவில்லாத பேரின்பம் அவர்களுகாக காத்திருகின்றது. இந்த கொஞ்ச நேர துன்பததை மிகப்பெரிதாக
சாத்தான் நமக்கு காட்டுகிறான். அவன் மாயக்கவர்ச்சியால் நம்மைக்கட்டுகிறான். ஆனால் ஆண்டவருடைய வார்த்தை நம்மை அவனுடைய கண்ணியிலிருந்து காக்கும். ஆண்டவருடைய வல்லமையால் நாம் ஜெயிக்கும் போது அதே கண்ணியில் அவன் சிக்கிக்கொள்வான். இந்த உலகில் நம்மை துன்பத்துக்கு உள்ளாக்கும் சாத்தான் முடிவில்லாதபடி
துன்புறுத்தப்படுவான். பெண்களே... அவர்களைத்தடுக்காதீர்கள்... அவர்கள் நமக்கு முன்பே சென்று மோட்ச்ச ராஜ்ஜியத்தில் நமக்கு தகுதியான ஒரு இடத்தை நமக்காக ஏற்பாடு செய்யவே அவர்கள் செல்கிறார்கள். இந்த உலகத்தில் பிறந்த யாவரும் என்றோ ஒருநாள் நிச்சயம் இறந்தே ஆக வேண்டும். பிறந்த அன்றே மனிதன் சாவதில்லையா...வளர்ந்தபின்
சாவதில்லையா. நோய் நொடி வந்து மனிதர் சாவதில்லையா..இந்த உலகில் எந்த மனிதருக்குத்தான் இத்தனைநாள் வாழ்வோம் என்னும் உத்திரவாதம் கொடுக்கப்பட்டிருகின்றது.
          என்றோ ஒரு நாள்...எப்போதோ ஒருநாள் சாவு நிச்சயம் என்னும்போது அதை ஆண்டவருக்கு சாட்சியாக சாவது பயனுள்ளது அல்லவா? அதன் உன்னதமும் மாட்ச்சிமையும்   எப்படிப்பட்டது என்பதை வார்த்தையில் சொல்ல இயலுமோ?" என்றார். அப்போது அவர் முகம் பரலோக காந்தியால் ஒளிர்ந்தது. அனைவரும் அவரது பிரசங்கத்தில் ஆழ்ந்து போயினர்.
அப்போது ஏழு சம்மனசானவர்கள் தோன்றி ஒரு பரலோக போர்வையால் செபஸ்த்தியாரை மூடவே அவரது முழு உடலும் சொல்லமுடியாத அளவு வெண்மையான பரலோக ஒளி  வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தது. அப்போது அந்த ஏழு சம்மனசானவர்களும் ஒரே குரலில் "செபஸ்த்தியார் நம்மவரே" என்றனர். சற்று நேரத்தில் இந்த பரலோக மாட்ச்சிமை விலகியது.
சம்மனசுகளும் மறைந்தனர் இந்த காட்சியைக்கண்ட யாவரும் மனதில் திடம் பெற்றனர். இந்த உலகத்தின் அநித்தியத்தை உண்ர்ந்தனர். அவர்கள் அனைவரும் ஆண்டவறாகிய   யேசுகிறிஸ்த்துவை உணர்ந்து ஏற்றுக்கொண்டனர். அந்தப்பெண்கள் அனைவரும் ஒரே குரலில்," ஐய்யா செபஸ்த்தியாரே....நீர் உயிருள்ள சம்மனசு என நாங்கள் உணர்ந்து
கொண்டோம்" என்றனர்.
" ஸோயீ என்னும் ஒரு பெண் "
அந்த சிறை அதிகாரி நிகோஸ்த்துருவின் மனைவிதான் ஸோயீ எனப்படும் பெண். அவளுக்கு முகத்தில் பக்கவாத நோய் தோன்றி ஆறு வருடங்களாக நாக்கு தடித்து உள்ளுக்குள்ளும் இழுத்துக்கொண்டு சாப்பிடவும் முடியாமல், பேசவும் முடியாமல் மிகுந்த வலிவேதனையால் கஸ்ட்டப்பட்டுக்கொண்டிருந்தாள். அவள் செபஸ்த்தியாருடைய
வல்லமையை உணர்ந்தவளாக அவரது காலில் விழுந்து தனக்காக யேசுவிடம் மன்றாடி மீண்டும் தனக்கு பேசும் வல்லமையை மீட்டுக்கொடுக்கும்படி தனக்குத்தெரிந்தபடி எல்லாம்   சைகை மூலம் அவருக்கு உணர்த்தி மிகவும் அழுது கேட்டுக்கொண்டாள். அப்போது செபஸ்த்தியார் அவள் மீது இரக்கம் கொண்டு யேசுவிடம் மன்றாடினார்.
" ஆண்டவறாகிய யேசுகிறிஸ்த்துவின் வல்லமையால்,
நான் அவருடைய சீடன் என்பது உண்மையானால்,
என்னைப்பற்றி தேவரீர் சொன்ன வாக்குகள் உண்மையானால்,
அன்று தேவரீரால் ஊமையாக்கப்பட்ட சக்காரியாசுக்கு பேச்சு வல்லமைகொடுத்து மீண்டும் அவரை பேச வைத்தது உண்மையானால்.
இன்றுவரை ஊமையாக்கப்பட்டிருக்கும் இந்த ஸோயீ எனப்படும் பெண்ணுக்கும் தேவரீர் மனமிறங்கி அவள் வாயைத்திறந்து மீண்டும் அவளை பேச வைப்பீராக " என்றார்.
அவ்வளவுதான்... அன்று வரை ஊமையாக்கப்பட்டிருந்த ஸோயீ எனப்படும் அந்தப்பெண் மீண்டும் வாய் திறந்து பேசினாள்..
" ஆண்டவரின் திரு நாமம் வாழ்த்தப்படுவதாக. ஆண்டவர் நம் செபஸ்த்தியாரை ஒரு வல்லமையான் ஊழியர் என நிரூபித்துவிட்டார். அவரின் வல்லமையான புதுமையை நம்புவோர்  பாக்கியவான்கள். அவரது வல்லமையான வார்த்தைகளை கேட்ப்பவர்களும் பாக்கியவான்கள். இதோ...ஆண்டவனின் தூதர் என்முன்னே தோன்றி ஒரு புத்தகத்தை காட்டினார்.
        அதில் நம் செபஸ்த்தியார் பேசிய அத்தனை வார்த்தைகளும் தங்க எழுத்துகளாக அதில் எழுதியிருக்க கண்டேன் " என்று சாட்ச்சியம் கூறினாள். இந்த புதுமையைக்கண்ட   ஸோயியின் கணவன் நிக்கோஸ்த்துரு தடாலென நம் செபஸ்த்தியாரில் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்குமாறும் தனக்கும் தன் மனைவிக்கும் ஞானஸ்நானம் உடனே கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் தன் பாதுகாப்பிலுள்ள அத்தனை சிறைகைதிகளின் விலங்குகளையும் உடைத்து அவர்களை சுதந்திரமாக போகும்படி கூறினார்.
       ஆனால் அந்த விடுதலையாக்கப்பட்ட கைதிகள் அனைவரும் தாங்களும் யேசுவை ஏற்றுக்கொள்வதாகவும் அவருக்கு சாட்ச்சிகளாய் அந்த சிறையிலேயே உயிரைவிட சித்தமாக  இருப்பதாகவும் கூறினர். அவர்கள் மொத்தம் 64 பேர் என்று ஒரு கணக்கு இருப்பதாக ஒரு சரித்திரம் உள்ளது.
நடந்த சம்பவங்களையும் ஸோயிக்கு ஏற்பட்ட புதுமையையும் அவள் கணவன் நிக்கோஸ்த்துவுவின் மனமாற்றத்தையும் கண்ட மார்க்கும் மார்சலீனும் மனதில் திடம் பெற்றவர்களாய்  தாங்கள் இனிமேல் ஒருபோதும் யேசுவை மறுதளிக்க மட்டோம் என்றும் வேத விசுவாசத்தில் நிலைபெற்று வேத சாட்ச்சியாக மரிக்கப்போவதாகவும் உறுதியாகக்கூறினார்கள்.
அதேபோல் மார்க்கு, மார்சலீன் தந்தை திரங்குளியனும் தாய் மார்த்தீனாவும் தாங்கள் தங்களின் மக்களின் வேத சாட்ச்சியான மரணத்திற்கு ஒப்புக்கொள்வதாகவும் கூறினர்.
        அப்படியாகவே மார்க்கு, மார்சலீன் ஆகியோரின் மனைவியரும் அழுதுகொண்டே அவர்கள் கணவர்களின் வேதசாட்ச்சியான மரணத்திற்று அவர்களை முழுமனதுடன்  கையளிப்பதாக கூறினர். மனமாற்றமடைந்த மார்க் மார்சலீன் சகோதரர்களின் தந்தையார் திரங்குள்ளியனுக்கு கால்கள் இரண்டும் வீங்கிப்போய் ரணமாகி இருந்தது. திரங்குள்ளியன்
மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த சிறைக்கைதிகள் 64 பேர்களுக்கும் பொலிகார் குருவானவர் ஞானஸ்நானம் கொடுத்தார். அப்போது திரங்குள்ளினன் மீது  ஆண்டவரின் ஆசீர் இறங்கி அவர் கால்களில் இருந்த புண்கள் உடனே பூரண குணம் அடைந்தது.
      இந்த புதுமை அந்த சிறைகாவலன் நிகோஸ்த்துரு மூலம் அந்த நகரத்தின் கொத்தவால் அந்தஸ்த்துள்ள அதிகாரியாக இருந்த குரோமொசியன் என்பவருக்கு தெரியவந்தது.   அவர் உடனே செபஸ்த்தியாரையும் குருவானவர் பொலிகார்ப்பையும் சந்திக்க விரும்பினார். வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு படுத்தபடியே இருந்ததால் முதுகுப்பகுதி
முழுவதும் படுக்கைப்புண்கள் ஏற்பட்டு அதில் புழுக்களும் மொய்த்து மனிதரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
" ஐய்யா செபஸ்த்தியாரே..என் நிலையைப்பார்த்தீரா.. என்மீது மனமிரங்கி ஸோயீக்கு குணமளித்ததுபோலவும் அந்த திரங்குள்ளியனுக்கு கால் புண்கள் குணமாக்கியதுபோலும் என்னையும் குணப்படுத்தும். உம்மால் முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருகிறது. என்மீது மனமிரங்கும் ஐய்யா" என்று கண்ணீர் மல்க கேட்டார் குரோமொசியன்.
" ஐய்யா...குரோமொசியன்...உம்மை குணப்படுத்த வேண்டியது நானல்ல. நான் வணங்கும் யேசு கிறிஸ்த்துவே குணமளிக்கவும் அற்புதங்கள் செய்யவும் வல்லவர்.அவரை நீர் ஆண்டவறாகிய கடவுளாக ஏற்றுக்கொள்வதாக நீர் அறிக்கையிட்டால் உமக்கு அவர் குணமளிப்பார்." என்றார் செபஸ்த்தியார்.
" சரி ஐய்யா..நான் யேசுநாதரை என் ஆண்டவறாகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொள்கிறேன்."
" அப்படியானால் முதலில் நீர் ஞானஸ்நானம் பெற வேண்டும். மேலும் செய்யக்கூடிய காரியம் ஒன்றும் இருகின்றது. அது உமக்கு வருத்தம் அளிக்கக்கூடிய காரியம்"
" ஐய்யா செபஸ்த்தியாரே...நான் குணமாகும் பொருட்டு நீர் செய்ய சொல்லும் காரியங்கள் அனைத்தையும் நான் தங்குதடை இல்லாமல் செய்வேன்"
" அப்படியானால் நீர் இதுநாள்வரை வணங்கிவந்த அந்த ரோமைய கிரேக்க தெய்வங்களின் உருவச்சிலைகளை உடைத்துப்போடும்"
" அப்படியே செய்வேன்..அடேய் ஊழியர்களே.. இந்த சாமிசிலைகளை எல்லாம் உடைத்துப்போடுங்கள் " என்றார் குரொமோசியன்.
ஆனால் அவரது ஊழியர்கள் அந்த சாமிசிலைகளை உடைத்துப்போட மறுத்தனர். எங்கே தெய்வ குற்றம் ஏதேனும் தங்கள் மீது வந்து தாங்கள் அந்த தெய்வங்களால் பழிவாஙகப்பட்டு  விடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு. அதனால் செபஸ்த்தியரும் குருவானவர் பொலிகார்ப்புமே அந்த சிலைகளை எல்லாம் உடைத்துப்போட்டனர். அவை சுமார் 200 இருக்கும்.
ஆனாலும் குரோமோசியனுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு தடை ஏற்பட்டது. அப்போது செபஸ்த்தியாருக்கு ஒரு காட்சி அருளப்பட்டது. அதில் இந்த அதிகாரி குரொமோசியன் வீட்டின் நிலவறையில் ஒரு பெரும் ரகசிய அறை தங்கதகடுகள் வேயப்பட்டு அதனுள்ளே ஒரு கிரேக்க தெய்வம் இருப்பது காணப்பட்டது.
" குரொமோசியன் அவர்களே..இனியும் பொய் எதற்கு. நீர் உண்மையில் எம் ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவை மனப்பூர்வமாக கடவுளாக ஏற்றுக்கொள்ள உமக்கு மனம்வரவில்லை. அப்படித்தானே. பிறகு உமக்கு எப்படி ஞாஸ்நானம் கொடுக்க முடியும்? உமக்கு குணமும் அளிக்க முடியும். நீர் எம் கடவுளின் வல்லமையை சோதித்துப்பார்கிறீர். நீர் உம்
வீட்டின் கீழ் நிலவறையில் தங்க காப்பு செய்து தங்க விக்கிரஹத்தை பதுக்கி வைத்திருப்பது ஏன்?" என்றார் செபஸ்த்தியார்கோபமாக.
" செபஸ்த்தியார் அவர்களே... தயவு செய்து கோபம் கொள்ளாதீர்கள். பழக்க தோஷத்தால் அந்த தெய்வங்களை விடமுடியவில்லை. வீட்டிற்கு கீழே நிலவறையில் அந்த தங்க   தகடுகள் வேய்ந்த அந்த தங்க விக்கிரஹங்களை நான் உங்களிடம் சொல்லாமல் மறைத்தது தவறுதான். என்னை மன்னியுங்கள். நீர் கும்பிடும் தேவன் வல்லமையானது என்பதை நான்
உணர்கிறேன். மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன் ஐய்யா...தயவு செய்து எனக்கு ஞானஸ்நானம் கொடுத்து என்னை குணப்படுத்துங்கள்... அந்த தங்க விக்கிரஹங்களை நான் உருக்கிவிடுகிறேன்" என்றார். ஆனால் அவர் மகன் திபுர்த்தியன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
" செபஸ்த்தியார் அவர்களே...என் தந்தையார் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்வதுபற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் இதற்காக இந்த தங்க விக்கிரஹங்களை உருக்குவதற்கு நான் ஒருபோதும் சம்மதிக்கவே மாட்டேன். என் தாத்தா..அவருடைய தாத்தா காலம்முதல் இவை என் வீட்டிலேயே இருகின்றன. எனக்கு யேசுநாதரை கடவுளாக ஏற்றுக்கொள்ள இஸ்ட்டமில்லை." என்றான்.
" அடேய் திபுர்த்தியா... என் மகனே..உன் தகப்பன் நான் சொல்வதைக்கேள். யேசுநாதர் எப்பேர்பட்ட வல்லமையான கடவுள். இந்த செபஸ்த்தியார் எவ்வளவு வல்லமையான  ஆண்டவரின் தூதர்...என்பதை அவர் செய்த புதுமைகள் நிரூபிகின்றன. நம் முன்னோர்கள் வழிபட்டு வந்த கடவுளர்களாள் எனக்கு வந்த இந்த நோய் குணமாக்க முடிந்ததா?. இதுநாள் வரை இல்லையே..என் கண்முன்னே ஸோயீ, அந்த இரட்டையர்களின் தகப்பனார் திரங்குள்ளினன் ஆகியோர் ஒரே நொடியில் குனமாயினரே..இதை நீ நம்புகிறாயோ இல்லையோ நான் நம்புகிறேன். உனக்கு யேசுநாதரை கடவுளாக ஏற்றுக்கொள்ள மனமில்லையானால் போ..அதற்காக என்னைத்தடுக்காதே." என்றார்.
அதற்கு திபுர்த்தினன்," அப்பா... எனக்கு நம் தெய்வங்களின் மீது பாசமும் உண்டு. மதிப்பும் உண்டு.பயமும் உண்டு. பக்தியும் உண்டு. ஆனால் உங்கள் மீது எனக்கு இன்னும் பாசமும் பக்தியும் உண்டு ஆகவே நீர் நம்பியபடியே...நீர் குணமாகும்பொருட்டு இந்த தங்க விக்கிரஹங்களை உருக்க நான் சம்மதிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த தங்க
விக்கிரஹங்களை உருக்கிய பிறகும் உமக்கு இந்த செபஸ்த்தியாரால் குணமளிக்க முடிவில்லையானால் அவரையும் அதோ நிற்கிறாரே ஒரு பாதிரியார் அவரையும் சேர்த்து அந்த உலைக்கலனில் போட்டு கொன்றுவிடுவேன்.. என்ன செபஸ்த்தியாரே. சம்மதமா..சவாலை ஏற்றுக்கொள்கிறீரா?" என்றான்.
" தம்பி திபுர்த்தியா..நீ உன் தந்தையின் மீது வைத்திருக்கும் பாசம் பெரிது. சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன்..சவாலில் நான் தோற்று நீ வெற்றிகொண்டால் நீ விரும்பியபடியே என்னையும் அந்த பாதிரியார் பொலிகார்ப்பையும் அந்த உலைக்கலனில் நீ தூக்கிப்போடு. ஆனால் சவாலில் நான் ஜெயித்து நீ தோற்றுவிட்டால் நீ என்ன செய்வாய்.?" என்றார்
செபஸ்த்தியார்.
" ஐயா செபஸ்த்தியாரே. சவாலில் நீர் ஜெயித்து என் தந்தையார் குனமாகிப்போனால் நான் நீர் வணங்கும் யேசுகிறிஸ்த்துவை என் கடவுளாக ஏற்றுக்கொள்வேன்... இது நான் வணங்கும் எம் தெய்வங்கள் மீது ஆணை" என்றான் திபுர்த்தியன். அவ்வாறே அந்த வீட்டின் மீழே இருந்த நிலவரையில் இருந்த அத்தனை த்ங்கத்தகடுகளும் அந்த தங்கச்சிலையும்கூட
உருக்கப்பட்டன். அப்போது ஒரு சம்மனசானவர் தோன்றி திபுர்த்தியனின் தந்தையை நோக்கி," குரோமோசியனே...நீ முற்றிலும் குணமடைந்து விட்டதாக ஆண்டவறாகிய யேசுநாதர் கூறுகின்றார்" என்றார். அப்போது குரோமோசீயன் தன் பக்கவாதம் நீங்கி தன் முதுகிலிருந்த படுக்கைப்புண்கள் அனைத்தும் ஆறி முற்றிலும் குணமாகிவிட்டிருந்ததைக்கண்டான்.
உடனே குரொமோசீயன் தன் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து அந்த சம்மனசானவரின் கால்களைகட்டிப்பிடித்து முத்தமிட மண்டியிட்டான். ஆனால் சம்மனசானவர்,
" குரொமோசியா... வேண்டாம். நீ இன்னும் ஞாஸ்நானம் பெறவில்லை " என்று கூறி மறைந்து போனார். நடந்த இந்த புதுமையையும் சம்மனசானவரின் தோற்றத்தையும் கண்ட  குரொமோசீனியனின் மகன் திபுர்தினன் உடனே செபஸ்த்தியாரின் பாதம் பணிந்து, செபஸ்த்தியாரே..என்னை மன்னியுங்கள்... நான் அறியாமல் உங்களை ஏதேதோ பேசிவிட்டேன்.  நீர் வணங்கும் உம்முடைய கடவுளும் உண்மையான தெய்வம்..நீரும் அந்த வல்லமையான ஆண்டவரின் உண்மையான வல்லமையான ஊழியன் என்பதை நான் நம்புகிறேன். என்னை மன்னித்து என்னையும் உம் சீடறாக ஏற்றுக்கொள்ளும். இனிமேல் இந்த உருக்கப்பட்ட தங்கப்பாளங்கள் எங்களுக்கு தேவையற்றவை.இவற்றை என்ன செய்யலாம்.? என்றான். " திபுர்த்தியா நீ மனம் மாறிய போதும். நீயே இவற்றை எல்லாம் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிடு" என்றார் செபஸ்த்தியார். அன்றே குரொமோசீயனின் ஊழியர்களும்   அந்த நகரத்திலிருந்த பலரும் ஏறக்குறைய நான்காயிரம்பேர் செபஸ்த்தியார் கையாலும் அந்த குருவானவர் பொலிகார் கையாலும் ஞாஸ்நானம் பெற்றனர்.
      அப்போது இத்தாலியின் தென்பகுதியிலிருந்த காம்பாணியா பட்டிணத்திலும் வேத கலாபனை மிகுந்த உச்சத்தில் இருந்ததால் அங்கே பணியாற்ற செபஸ்த்தியாரை அனுப்புவதா  அல்லது குரு பொலிகார்ப்பை அனுப்புவதா என ஒரு சர்ச்சை எழுந்தது. அப்போது ரோமாபுரியில் ஆயராகவும் பரிசுத்த பிதா பாப்புவாகவும் இருந்த காலுஸ் என்பவரின் முடிவு
ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி செபஸ்த்தியார் ரோமிலேயே இருக்க வேண்டுமெனவும் அவரது பதவியின்மூலம் அனேக கிறிஸ்தவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும்   பெற முடியும் எனவும் குருவானவர் பொலிகார்ப்பை காம்பாணியாவுக்கு அனுப்பலாம் என்றும் தெரிவித்தார். மேலும் திரங்குள்ளியனை குருவாகவும் அவரது இரட்டைபிள்ளைகளான
மார்க் மற்றும் மார்செலீனை ஆகியோரை உதவி குருக்களாக அதாவது தியாக்கோன்களாக அங்கீகரித்தார்.
        இனிமேல் நாம் பொலிகார்ப்பை காணமுடியாது. அவர் தன் 85 ஆம் வயதில் ஸ்மிர்னாவில் [ இன்றைய துருக்கியில் உள்ள இஸ்மீர் ]ஆயராக பணியாற்றி முடிவில் உயிரோடு எரிக்கப்பட்டு வேத சாட்ச்சியாக மரித்தார்.
எந்த நாடகத்திற்கும் ஒரு முடிவுவேண்டும் அல்லவா. அப்படியாகவே செபஸ்த்தியாரால் மனமாற்றம் அடைந்து யேசுவுக்காக உயிர்த்தியாகம் செய்தவர் பலர்.
          அந்த சிறை அதிகாரி நிக்கோஸ்த்துருவும் அவன் மனைவி ஸோயீயும் தேவனின் ஊழியத்தில் மிகுந்த அக்கரைகாட்டினர். இது தியோக்குலேசியனின் அந்தரங்க ஓற்றனாகிய புல்வியனின் கண்களை உறுத்தியது. நிக்கோஸ்த்துருவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மரணத்தீர்ப்பிடபட்ட பல கிறிஸ்த்துவக்கைதிகளை இவர் விடுதலை செய்துவிட்டார்
என் புல்வியன் அறிந்து கடும்கோபம் கொண்டான். தன்னால் காட்டிக்கொடுக்கப்பட்டு தியோக்குலேசிய மஹாராஜாவால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை இவர் எப்படி விடுதலை செய்தான் என்று விஷயத்தை அப்படியே மன்னரிடம் நன்றாக போட்டுக்கொடுக்கவே மன்னன் சிறைச்சாலை கணக்கன் க்ளாடியஸை அழைத்து கணக்கு கேட்டான்.
         இந்த கணக்கன் க்ளாடியுஸும் ஒரு ரகசிய கிறிஸ்த்துவன். ஆகையால் முடிந்தவரை சிறை அதிகாரி நிகோஸ்த்துருவை காட்டிக்கொடுக்க மனமில்லாமல் காணாமல் போன பல   கைதிகளின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கணக்கு ஒப்புவித்தான். இருப்பினும் ஒரு சந்தேகத்தில் மன்னன் நிக்கோஸ்த்துருவை நேருக்கு நேர்," உம் நிர்வாகத்தின் மீது  எமக்கு வந்த செய்தியின்படி நீர் அனேக கிறிஸ்த்துவர்களை விடுதலை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் கணக்கன் சரியான கணக்கு வைத்திருகின்றான்.  அப்படியானால் எமக்கு வந்த செய்தி தவறானதக இருக்க வேண்டும். ஆனால் எமக்கு செய்தி கொடுத்திருப்பவர் சரியான தகவலைத்தான் கொடுத்திருப்பதாக சாதிக்கிறார். இப்போது இதில் எது உண்மை என தெரிய வேண்டும். உண்மையை சொல்லும். என்ன நடந்தது?" என்றார். நிக்கோஸ்த்துரு மௌனம் சாதித்தார். மன்னன் தியோக்குலேசியன்
" நிக்கோஸ்த்துரு....ஏன் மௌனம் சாதிக்கிறீர்...உம் மௌனம் எனக்குள் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது...உண்மையை சொல்லும்...நீர் யார்?" என்றான்.
    மீண்டும் மௌனம் சாதித்தார் நிக்கோஸ்த்துரு. மன்னன் தியோக்குலேசியன் மிகவும் கடுப்பானான். அதனால் ," நிக்கோஸ்த்துரு...இப்போது எனக்கு எல்லாம் புறிந்துவிட்டது.  நீர் ஒரு கிறிஸ்த்துவனோ?. கிறிஸ்த்துவர்கள் பொய் சொல்வதில்லை என எமக்குத்தெரியும்..நீர் ஒரு கிறிஸ்த்துவன்தானே?" என்றான்.
        நிக்கோஸ்த்துருவின் கண்கள் கண்ணீர்துளி தென்பட்டது. இருப்பினும் தைரியமாக," ஆம் மஹாராஜா..நான் ஒரு கிறிஸ்த்துவன்தான் " என்றார்.
மன்னன் தியோக்குலேசியன் ," நான் சந்தேகப்பட்டது சரியாகத்தான் போய்விட்டது. அப்படியானால் இந்த கணக்கனின் கணக்கும் தவறாகத்தான் இருக்க முடியும். அடேய்  கணக்கா க்ளாடியுஸ்...நீயும் ஒரு கிறிஸ்த்துவனா?"
கணக்கன் க்ளாடியுஸ் மறு பேச்சு ஒன்றும் பேசாமல்," அரசே மன்னிக்க வேண்டும். நானும் ஒரு கிறிஸ்த்துவன் தான்" என்றான்.
மன்னன் தியோக்குலேசியன் கடும்கோபம் கொண்டு," அடடா.... என் ராஜ்ஜியத்தில் பாதிப்பேர் கிறிஸ்த்துவர்களாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறதே.இது எப்படி நடந்தது.  இவ்வளவு கடுமையான தண்டனை கொடுத்தும் இவர்களால் எப்படி கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்ள முடிகிறது. தவறு எங்கே நடக்கிறது. அடேய் புல்வியா இந்த நிகோஸ்த்துருவின்
குடும்பத்தாரையும் இந்த கணக்கன் குடுக்பத்தாரையும் உடனே கைது செய். இவர்களுக்கு நாம் கடுமையான தண்டனை கொடுப்போம்" என்றான்.
" ஸோயீ மறைந்தாள்"
அதன்படி நிகோஸ்த்துருவின் மனைவி ஸோயீயை தேடினர். அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் சோயீயோ ரகசிய சுரங்கத்தில் யேசுவின் தலைமை சீடராகிய   புனித பேதுருவின் சமாதிமுன் அமைதியாக மண்டியிட்டு வேண்டிக்கொண்டிருந்தாள். அவளுக்கு தன் கணவனுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி தெரிந்திருக்க வில்லை.
     திடீரென வந்த பகைவர்கூட்டம் அவளை சுற்றிநின்று அவளை கைது செய்து ஆளுநன் வீட்டில் நிறுத்தியது. ஆளுநன் அவளை அரசருக்கும் ரோமானிய தெய்வங்களுக்கும்  தீப தூப ஆராதணை காட்டச்சொன்னான். அவள் மறுக்கவே உடனே அவளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அவளை ஊருக்கு வெளியில் டைபர் நதிக்கரையின் ஓரத்தில் வளர்ந்திருந்த ஒரு பெரிய மரத்தின் கிளையில் அவளது நீண்ட கூந்தலாலேயே கட்டித்தொங்கவிட்டனர். அவளுக்கு பாதங்களுக்கு கீழ் நெருப்பு எரியவிட்டு நிதானமாக தீ பரவும்படி
செய்து அவளை துடிக்கத்துடிக்க... கொஞ்சம் கொஞ்சமாக.... தீய்த்து தீய்த்து..... கொன்றனர். ஸோயீ வேத சாட்ச்சியாக மரித்துப்போனாள். ஸோயீயின் உடல் முற்றிலும் கருகும்வரை அவள் தலைமயிர் எரியாமல் அந்த மரத்தில் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. பிறகு அதுவும் கருகி அவளது முழு உடலும் அந்த தீமூட்டிய சிதையில் விழுந்தது. அவளது உடலை அந்த டைபர் நதியில் வீசி சென்றுவிட்டனர். சோயீயினுடைய கணவர் நிக்கோஸ்த்துரு பிறகு தலைவெட்டிக்கொல்லப்பட்டார். அவரும் வேதசாட்சியாக
மரணமடைந்தார்.அவரது உடலும் அந்த டைபர் நதியிலேயே வீசப்பட்டன.
சிறைச்சாலையின் கணக்கன் க்ளாடியுஸ் அவர் சகோதரன் விக்டோரியன் மற்றும் அவர் மகன் சிம்போரியன் ஆகியோர் தங்கள் எஜமான் நிக்கொஸ்த்துருவின் தலை வெட்டப்பட்ட உடலையும் அவர் மனைவி ஸோயீயினுடைய உடலையும் அந்த டைபர் நதிக்கரையில் எங்கேனும் ஒதுங்கி இருகின்றதா என தேடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு
வந்தான் புல்வியன். அவர்கள் மூவரையும் கைது செய்து மன்னன் முன்பாக நிறுத்தினான். மன்னனின் விசாரணைக்குப்பின் அவர்கள் மூவரையும் ஊருக்கு வெளியே அழைத்துச்சென்று பாரமான பெரிய கற்களை அவர்களின் கழுத்தில் கட்டி அந்த ரோமையர்களின் கடலில் வெகு தூரத்தில் அவர்களை கடலின் ஆழத்தில் அமிழ்த்தினர்.
   பிறகு அவர்கள் உடல் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்விதமாக அந்த மூன்று பேரும் வேத சாட்ச்சி முடி பெற்றனர்.
ஸோயீயும் அவள் கணவர் நிகோஸ்த்துருவும் வேதசாட்ச்சியாக மரித்தனர் என்று கேள்விபட்ட அந்த வயதான திரங்குள்ளினன் மிகவும் அழுது புலம்பினார்." ஐயோ அம்மா...நீ எங்களை விட்டு போய்விடாயே அம்மா..இந்த நாள் எங்களுக்கும் வரும் என்று எங்களுக்கு முன்னே சென்று பரலோகத்தில் எங்களுக்காக இடம்பிடிக்க போனாயோ" என்று அழுதார்.
புல்வியனின் கழுகுப்பார்வையில் இந் வயதானவரும் அவருடைய இரட்டைப்பிறவிகளான மார்க்கும் மார்செலீனும் தப்பவில்லை. இந்த மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகாக மன்னன் தியோக்குலேசியன் முன்பாக நிறுத்தப்பட்டனர். திரங்குள்ளியனுக்கு கல்லால் எறிந்துகொல்லப்படவும் மார்க்கு, மார்செலீன் ஆகிய இருவருக்கும் கடும் சித்திரவதை
செய்யப்பட்டு கொல்லப்படவேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி வயதான குரு திரங்குள்ளினன் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார். அவரது இரட்டைப்பிள்ளைகள் தியாக்கோன்கள் இருவரும் மிகுந்த சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர். பிறகு கோட்டை சுவரில் இருவரின் கால்களிலும் ஆணிகளால் அடித்து அவர்கள் தலைகீழாக
தொங்கவிடப்பட்டனர்.
        அடுத்தநாள் காலை வரை இவர்கள் இப்படியே இருந்தனர். அடுத்தநாள் ரோமானிய சிப்பாய்கள் காவல்காரர்களை மாற்றியபொழுதும் இவர்கள் இருவரும் உயிரோடு இருக்கக்கண்டு தங்களின் ஈட்டி எறியும் பயிற்சிக்காக இவர்கள் உடலை அவர்கள் உயிரோடிருக்கும்போதே பயன்படுத்திக்கொண்டனர். மார்க் மற்றும் மார்சலீன் உடல்கள் பலரது ஈட்டிகளால் எய்து குத்தப்பட்டன. அவர்களின் உடல் முழுவதும் முள்ளம்பன்றிக்கு முள் இருப்பதுபோல பல ஈட்டிகளால் குத்தப்பட்டு மேலும் குத்துவதற்கு இடமில்லை எனக்கண்டு தங்கள் பயிற்சியை
நிறுத்தும்போது அவர்களின் உடலில் உயிர் இருக்கவில்லை. அவர்கள் இருவரும் வேத சாட்ச்சிகளாக மரித்துப்போய் இருந்தனர்.இவர்களின் சடலங்களை ரகசிய கிறிஸ்த்துவர்கள் எடுத்துச்சென்று புனிதர்களான ராயப்பர், சின்னப்பர்களின் ரகசிய கல்லறைகளுக்கு அருகிலேயே புதைத்தனர். இந்த இரட்டையகளின் நினைவாக அவர்களின் கல்லறையின் மேல்
விதானத்தில் அவர்களின் திரு உருவங்களையும் அவர்களது பெயர்களையும் அவர்கள் யேசுவோடு இருப்பதுபோல் வரைந்து வைத்தனர். இப்போதும் இந்த கல்லறையில் இந்த பழங்கால சித்திரம் இருகின்றது. ஆனால் பிற்கால கிறிஸ்த்துவர்கள் இந்த கல்லறைகளில் இருந்த இவர்களின் எலும்புகளை எடுத்துச்சென்று தனியாக அவர்களின் பெயரில் தேவாலயம்
கட்டி [ the church of sancti cosmae damiano rome] அதில் அருளிக்கமாக வைத்திருகின்றார்கள்.
" திபுர்த்தினன் மறைந்தான்."
கொத்தவால் குரோமோசியன் மகன் திபுர்த்தினன் தன் சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டான் எனத்தெரிந்ததும் புல்வியன் அவனைத்தேடி ஒருவழியாக அவனை பிடித்து ஆளுனன் பாபியான் என்பனிடம் ஒப்படைத்தான். அந்த ஆளூநன் பாபியான்," தம்பி திபுர்த்தினா.. உனக்கு ஏன் இந்த வீன் வேலை. நீ நல்ல வாலிபன்.நீ சம்மதித்தால் நானே உனக்கு நல்ல பெண் ஏற்பாடு செய்து தருவேன். வேண்டாம்... அந்த யேசுவை விட்டுவிடு..நான் உனக்கு ஒரு நல்ல வாழ்கையை ஏற்படுத்தி தருவேன். என்ன
சொல்லுகிறாய். இதோ உப்பும் தேனும் இருகிறது.நம் ராஜனுக்கு தீப தூப ஆராதணை செய்துவிட்டு இந்த உப்பையும் தேனையும் அந்த ஜுபிடர் தெய்வத்தின் மீது வீசு.. அவர் உனக்கு  நல்ல புத்தியும் நல்ல எதிர்காலத்தையும் காட்டுவாறக" என்றான். அதற்கு திபுர்த்தியன்," ஐய்யா பெரியவரே...உம்முடைய புத்தி எதுவும் என் காதில் ஏறாது. நான் பார்க்காத காசு பணமா..அல்லது நான் பார்க்காத வாழ்க்கையா... எல்லாம் வீன்.இந்த உலக வாழ்க்கை எனக்கு புறிந்துவிட்டது. உலகமெல்லாம் ஆதாயமாகிகொண்டாலும் நான் என் ஆண்டவறாகிய கடவுளை கைவிட்டால் என் ஆண்மா முடிவில்லா ஆக்கினைக்கு அல்லவா போகும். அதைப்பார்க்க நீங்கள் எனக்கு கொடுக்கப்போகும் ஆக்கினை கொஞ்சம்தான், அதுவும் சீக்கிரம்   முடிந்துவிடும்... எனவே காலத்தை கடத்தாமல் எனக்கு தண்டனை தருவீறாக. நான் என் பரலோக பிதாவை பார்க்க ஆசிக்கிறேன்." என்றான் " சரி .இவனைக்கொண்டுபோய் அந்த எரியும் நெருப்பில் போடுங்கள்" என்றான் பாபியான் என்னும் அந்தப்பாவி ஆளுநன்.
        ஆளுநன் பாபியான் ஆணைப்படி பெரும் அக்கினிக்குண்டம் தயாரானது. தியோபுர்த்தியனோடு தண்டணை பெற்ற பலர் அந்த அக்கினிக்குண்டத்தில் வீசி எறிந்து உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அடுத்தது திபுர்த்தியான் முறை. ஆளுநன் பாபியான் திமிராக," தம்பி போ..உன் ஆண்டவர் யேசு நாதர் உன்னைகாப்பற்றுவாறா என்று பார்க்கலாம்..உனக்கு முன் சென்றவர்கள் கதி என்னவாயிற்று என்று நீ பார்த்தாயல்லவா...போ " என்றான். அப்போது திபுர்த்தியான்," ஆளுனரே..நான் தீயில் எரிவதோ...இல்லை உயிரோடு வருவதோ அது   ஆண்டவறாகிய யேசுவின் சித்தம்... யேசுவே உம் சித்தப்படிய எனக்கு ஆகட்டும் என்று சொல்லி தன் மீது சிலுவை அடையாளமிட்டு அந்த எரியும் பெரும் அக்கினிக்குண்டத்தின் மீதும் சிலுவை அடையாளம் வரைந்தான். யேசுவுக்கே புகழ்...யேசுவுக்கே மகிமை என்று சொல்லிக்கொண்டே திபுர்த்தியன் அந்த அக்கினிக்குண்டத்தில் பிரவேசித்தான். அப்போது தீ இன்னும்  வானளவாக உயர்ந்து எரிந்தது. திபுர்த்தியன் எல்லோர் கண்களினின்றும் மறைந்தான்.     இதைப்பார்த்துக்கொண்டிருந்த மக்கள் எல்லோரும் " ஹோ...ஹோ"என் தங்களை மறந்து கூவினர்.  மீண்டும் தீ நாக்குகள் தங்கள் பழைய நிலைக்கு வந்தன. திபுர்த்தியன் யாதொரு சேதமும் இல்லாமல் தோன்றினான். அவனுக்கோ அவனது உடைகளுக்கோகூட எவ்விதமான
சேதாரமும் இல்லை. அவன் தலை மயிர்கள் கூட கருகக்கூட இல்லை. சுற்றி நின்று வேடிக்கை பர்த்துக்கொண்டிருந்த மக்கள் எல்லோரும் பிரம்மித்து தங்களை மறந்து கூவினர்," யேசுவே ஆண்டவர், யேசுவே கடவுள்" என்றனர். " யேசுவின் திரு நாமம் வாழ்த்தப்படுவதாக" என்று பாடிக்கொண்டே அக்கினிக்குண்டத்திலிருந்து வெளியே வந்தான் திபுர்த்தினன்.
      " ஆளுநரே..இப்போது என்ன சொல்லுகின்றீர். என் கடவுளாகிய ஆண்டவர் எனக்காக..உனக்காக...தான் எப்பேப்பட்ட வல்லமையான தேவன் என்று நிரூபித்திருகின்றார் பார்த்தாயா?  எனக்கு முன்னே அக்கினிக்குண்டத்தில் வீசப்பட்டவர் யாரும் உயிரோடு இருந்தார்களா... அவர்கள் எல்லோரும் சாம்பலாக அல்லவா போயினர்..ஆண்டவே என்னை மட்டும் இந்த
கொடுமையான தீயிலிருந்து காப்பாற்றியது தானே உண்மையான வல்லமையான கடவுள் என்பதை நிருபணம் செய்வதற்காகவே அன்றி வேறு காரணம் இல்லை. புறிந்துகொள்" என்றான். ஆனால் ஆளுநன் பாபியான். அவன் இதற்கெல்லாம் மசியாத பெரும்பாவி." அடேய் திபுர்த்தினா... உன் கடவுள் உனக்கு ஏதோ தந்திரம் மந்திரம் சொல்லிக்கொடுத்திருப்பார்.
அதைப்பயன்படுத்தி நீயும் தீயினிடமிருந்து தப்பித்துக்கொண்டாய். விஷயம் அவ்வளவுதான்" என்றான். ஆளுநனின் இத்தகைய பதிலால் கடும்கோபமுற்றான் திபுர்த்தினன்.
" அடக்கிழட்டுபூனையே...என் கடவுள் எவ்வளவு பெரிய வல்லமையான செயல் ஒன்று புரிந்திருகிறார். அதை நம்பாமல் அவரையா கேலி பேசுகின்றாய். என் ஆண்டவறாகிய யேசு உனக்கு சரியான புத்தி புகட்டுவாறாக" என்றான். தன்னை இத்தனை பெரிய மக்கள் கூட்டத்தின் முன்னிலியிலும் "அடக்கிழட்டுப்பூனையே" என்று திபுர்த்தினன் கூறியது அந்த
கிழவன் ஆளுநன் பாபியானுக்கு மிகுந்த கோபத்தை வரவழைத்தது. அந்தக்கோபத்தோடு கத்தினான்," இந்த மந்திரவாதி திபுர்த்தியனை தலையை வெட்டிக்கொல்லுங்கள்"   என்றான். இப்படியாக திபுர்த்தினன் தலை வெட்டிக்கொல்லப்பட்டு வேத சாட்ச்சியாக மரித்தார்.
" செபஸ்த்தியாரின் இறுதி நாள். ஜனவரி 20. கி.பி.288. "
கொடுங்கோலன் தியோக்குலேசியனும் அவன் சகோதரன் மாக்சிமியனும் அன்று அவர்கள் அரண்மனை கொலு மண்டபத்தில் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தனர். "தம்பி நாம்   எவ்வளவு தான் முயன்றாலும் இந்த கிறிஸ்த்துவர்களின் வேரை முற்றிலுமாக அகற்றமுடியவில்லை பார்த்தாயா. இதைப்பற்றி நீ என்ன நினைகிறாய்?." என்றான். அதற்கு மாக்ஸிமியன்
" அண்ணா..காரணம் வெகு சாதரணம். அந்த வேர் நமக்குள்ளேயே மிகவும் ஊடுறுவிவிட்டது. அதைக்கண்டுபிடிப்பதுதான் மிகவும் கடினம். ஒன்று போனால் ஒன்று முளைப்பதற்க்கு காரணமும் அதுதான். ஆணிவேர் என்பது எங்கு இருகின்றது என்பதைக்கண்டுபிடித்துவிட்டால் அதை அழிப்பது சுலபம். ஆனால் ஆணிவேரும் பல இடங்களில் பலமக பரவிவிட்டது
தான் நம்முடைய தோல்விக்கு காரணம். இதுதான் ஆணிவேர் என்பது இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை."
" தம்பி...கிறிஸ்த்துவர்களின் தலைவர் என்பவர் பாப்புமார்கள் எனப்படுவர்.. இப்போது பாப்புவாக இருப்பவர் காலுஸ் என்பவர்.தற்போது அவரும் தலைமறைவாகிவிட்டார் என்பதும் கேள்வி. அவரும் அவருடைய உதவியாளர்களும் ரகசிய சுரங்கமாகிய கலிஸ்த்தா குகையில் மறந்து வாழ்ந்து வருவதாகவும் பல கிறிஸ்த்துவர்கள் அங்கு மறைந்து தங்களுடைய பலி  பூசைகளை நிறைவேற்றிக்கொள்வதாகவும் கேள்வி. ஆனால் சமீபகாலமாக அங்கு யாரும் வருவதில்லை எனவும் அவர்கள் ரகசிய கூட்டம் கூட கூடுவதில்லை எனவும் புல்வியன்  சொல்கிறான்.. இவர்கள் எல்லோரும் எங்கேதான் போய் மறைந்துவிட்டார்கள்? அடேய் புல்வியா ... நீ எங்கேயடா போய்த்தொலைந்தாய்?" என்றான்.
" எஜமான்...இதோ வந்துவிட்டேன் எஜமான் " என்று பவ்வியமாக தியோக்குலேசியன் முன்பாக கைகட்டி வாய் பொத்தி நின்றான் புல்வியன்.
" புல்வியா... என் நம்பிக்கைகுரிய ஊழியனே..இன்றைக்கு என்ன விஷேஷமான சேதி.: என்றான் தியோக்குலேசியன்.
" எஜமான் நிறைய சேதி உண்டு..அதிலும் விஷேஷமான செய்தி பல உண்டு...ஆனால் சொல்வதற்குத்தான் பயமாக இருகின்றது" என்று பெரிய பீடிகையுடன் ஆரம்பித்தான் புல்வியன்.
" அடே தடியா.. என்னிடம் சொல்ல உனக்கு என்ன அச்சம். பரவாயில்லை. தைரியமாகச்சொல்" என்றான் தியோக்குலேசியன்.
" எஜமான் இந்த செய்தி தங்களுக்கு கோபத்தை மூட்டலாம்.. என் உயிருக்கு நீங்கள் உத்திரவாதம் தருவதானால் நான் கொண்டுவந்திருக்கும் செய்தியை சொல்லுவேன்" என்றான்   புல்வியன்.
" அடேய் குண்டோதரா..அப்படி என்ன அது அவ்வளவு முக்கியமான செய்தி. உன் உயிருக்கு நான் உத்திரவாதம் தருகிறேன் சொல்" என்றான் தியோக்குலேசியன்.
இத்தகைய உத்திரவாதத்தால் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்ட புல்வியன்," அரசே... என்னைத்தப்பாக நினைத்துக்கொள்ள வேண்டாம் இந்த விஷயம் தங்கள் உயிர் நண்பர் செபஸ்த்தியாரைப்பற்றியது. இதை என் வாயால் நான் எப்படிச்சொல்வேன் " என்றான்.
தியோக்குலேசியன் கண்களில் கோபம் லேசாக தெரிய ஆரம்பித்தது. " மடையா...யாரைப்பற்றி வேண்டுமானாலும் சொல். எனக்கு வேண்டியது செய்தி. அவ்வளவுதான். என் பொருமையை சோதிக்காமல் சொல்ல வேண்டியதை விரைவாக சொல்" என்றான்.
        புல்வியன் மீண்டும் தன் வாயில் எச்சிலை விழுங்கிக்கொண்டு," எஜமான். மீண்டும் என்னை மன்னிக்க வேண்டும் . தாங்கள் கிறிஸ்த்துவர்களின் ஆணிவே எங்கிருகிறது என்று பேசிக்கொண்டிருந்தீர்கள் அல்லவா...அந்த ஆணிவேர்களின் ஒன்றுதான் நம் செபஸ்த்தியார்" என்றான்.
" அடேய் புல்வியா...நீ என்ன சொன்னாய்...என் செபஸ்த்தியான் எனக்கு துரோகியா..நீ என் தலையில் இடியை இறக்கிவிட்டாயடா..அடேய் நம்பிக்கை துரோகி. என் நண்பன்   செபஸ்த்தியானைப்பற்றிச்சொல்ல உனக்கு எப்படியடா மனம் வந்தது?" என்று கோபாவசத்தோடு எழுந்துவந்து புல்வியன் நெஞ்சில் எட்டி ஒரு உதை விட்டான் தியோக்குலேசியன்.
    அந்த உதையில் புல்வியன் தன் பருத்தசரீரத்தோடு சுருண்டு விழுந்தான்.. அப்படியே அந்தப்படிக்கட்டுகளில் உருண்டு உருண்டு வந்து கீழே விழுந்தான். அப்படியும் தன் கோபம்  தணியாத தியோக்குலேசியன் தன் அருகிலிருந்த வீரன்சிலையிலிருந்த வேலை உறுவி தடதடவென படிகட்டுககளில் கீழே இறங்கி தன் இடது காலை புல்வியன் நெஞ்சில் ஊன்றி வலது கையிலிருந்த வேலை ஓங்கினான். அப்போது புல்வியன்," அரசே..தாங்கள் எனக்கு உயிருக்கு பாதுகாப்பு அளித்ததாலேயே நான் எனக்குத்தெரிந்த உண்மையை சொன்னேன்"  என்று தியோக்குலேசியனின் காலைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டான்.
" அடேய் புல்வியா... உனக்கு உடம்பு பெருத்த அளவுக்கு உன் மூளை வளரவில்லை. அதனாலேயே துணிந்து என் நண்பனைப்பற்றி தீயது கூறினாய்.. என் நண்பன் செபஸ்த்தியான் எப்ப்பேர்ப்பட்டவன் தெரியுமா. இடியே என்மீது இறங்கினாலும் துணிந்துவந்து அதை தன் தலையில் தாங்குவான். அவனா எனக்குத்துரோகி? உன் புத்தி ஏன் இப்படி பிசகிப்போயிற்று?"
" அரசே ... இந்த செய்தி உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்..கோபம் கொள்ளவும் வைக்கும் என்று எனக்கு தெரிந்தே இருந்தது. ஆனாலும் உண்மையை மறைக்க எனக்கு துணிவு வரவில்லை. ஆனால் இந்த செபஸ்த்தியான் உங்களிடமிருந்து எத்தனை பெரும் ரகசியங்களை ம்றைத்திருகிறான் தெரியுமா? ..காரணம் அவன் ஒரு ரகசிய கிறிஸ்த்துவன்" என்றான் புல்வியன்.
" அடே புல்வியா...நீ எல்லாம் ஏன் இப்படி மாறிப்போனாய்... உனக்கு பதவி வேண்டுமானால் நேரே நீ என்னிடம் கேட்டிருக்கலாம். அதற்காக என் உயிர் நண்பனும் என் நம்பிக்கைகுறிய ஊழியனுமாகிய என் செபஸ்த்தியானை இப்படி குற்றம் சாட்டி அவமானப்படுத்தலாமா. மீண்டும் ஒரு முறை சொல்... என் செபஸ்த்தியான் என் நம்பிக்குறியவன் இல்லையா? " என்றான்
தியோக்குலேசியன்.
" அரசே... தங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அதோ நிற்கிறானே செபஸ்த்தியான்... அவனிடமே கேட்டுப்பாருங்களேன்... அவன் என்னதான் சொல்லுகிறான் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்" என்றான் புல்வியன்.
            தன் நிலையில் கலக்கமுற்றான் மன்னன் தியோக்குலேசியன். தன் அந்தரங்க ஒற்றன் இதுவரை கூறிவந்த செய்திகள் எதுவும் பொய்யானதில்லை. அப்படியிருக்க இந்த செய்தி மட்டும் ஏன் உண்மையாய் இருக்கக்கூடாது என்று உணர்ந்தவனாக," அடேய் புல்வியா..இன்று நாள் நல்லநாள் என்று நினைத்துக்கொள். என் செபஸ்த்தியான் மட்டும் இது பொய் என்று கூறட்டும். அப்புறம் தெரியும் சேதி. செபஸ்த்தியானைப்பற்றி நீ சொன்ன செய்தி மட்டும் பொய்யானதென்றால் இந்த வேலாலேயே நான் உன்னை ஆயிரம் முறை குத்தி உன் உடலை காக்கைகளுக்கு போட்டுவிடுவேன்... இரு உன்னை பிறகு வந்து பேசிக்கொள்கிறேன் " என்று செபஸ்த்தியாரிடம் திரும்பினான்.
" செபஸ்த்தியான்... என் உயிர் நண்பா..நீ சொல்லும் ஒரு பதிலில் உன் வாழ்க்கை முடிந்துவிடும். நீ உண்மையை தான் பேசுவாய் என்பது எனக்குத்தெரியும்...நீ என் நண்பனா.. எதிரியா?" என்றான். . செபஸ்த்தியாரின் முகம் அப்போது கல்லால் செதுக்கப்பட்டது போல் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாததுபோல் இருந்தது.
" செபஸ்த்தியான் ... பேசு செபஸ்த்தியான்..பேசு... இந்த அற்ப நாய் புல்வியன் சொன்னது பொய் என்று கூறு.. அவனை நான் இப்போதே கண்டம் துண்டமாய்
வெட்டிப்போடுகிறேன். உன்னையும் என்னையும் பிறிக்க நினைக்கும் அந்த நாய் இருந்தால் என்ன செத்தால் என்ன... சொல் செபஸ்த்தியான்... உண்மையை சொல்... நீ ஒரு கிறிஸ்த்துவனா?" என்றான் தியோக்குலேசியன். அப்போது செபஸ்த்தியாரின் திருமுகம் ஒரு வினாடி பரலோக ஒளியால் சூழப்பட்டு ஒளிர்ந்தது.
" மன்னா...தியோக்குலேசிய மஹா பிரபூ...நான் சொல்வது உண்மை...புல்வியன் சொன்னதும் உண்மை..நான் ஒரு கிறிஸ்த்துவன்" என்றார் செபஸ்த்தியார்.
தியோக்குலேசியனுக்கு அப்படியே தலையில் இடி இறங்கினாற்போல் ஆனது. மாக்ஸியமியனுக்கும் இது பேரிடியாக இருந்தது.
" இல்லை.. செபஸ்த்தியான்... நீ பொய் சொல்கிறாய்..நீ என்னிடம் விளையாடவில்லையே? என்றான் மாக்ஸிமியன்.
" இல்லை அரசே... என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் என்றுமே தங்களிடம் விளையாடியதில்லை." என்றார் செபஸ்த்தியார்.
" செபஸ்த்தியான்...இந்த உலகத்தில் இனி யாரை நம்ப வேண்டும் என்றே புறியவில்லை. குள்ளன், குறுங்கழுத்தன், நெஞ்சில் மயிரில்லாதவன், சொல்லும்போதே சிரிப்பவன், சொல்லும் முன்பே அழுபவள், இவர்களை நம்பக்கூடாது என்கிறது ஒரு ராணுவ பழமொழி. இந்த இலக்கணத்தில் எதிலுமே நீ சேராதவன்..நீ அழகன்,உயர்ந்தவன், உயர்ந்த குலத்தில் பிறந்தவன்,
சிறந்த பண்பில் வளர்ந்தவன், பெரும் வீரன். உன்னை நம்பாமல் இனி யாரை நம்புவேன். நான் உன்னை எப்போதும் நம்புவேன்..ஆனாலும் நீ ஏன் என்னிடம் நீ ஒரு கிறிஸ்த்துவன்  என்று இதுவரை கூறவில்லை" என்றான் தியோக்குலேசியன்.
" அரசே...நீங்கள் என்னிடம் என்றாவது ஒரு நாள் நீ ஒரு கிறிஸ்த்துவனா என்று கேட்டதுண்டா...இல்லையே... எனவே அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லாமல்  போயிற்று."
" சரி.. நீ நான் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல். பாப்பு காலுஸ் எங்கே? அவருடைய பக்தர்கள் எங்கே. நம்முடைய அரண்மையிலும் படையிலும் எத்தனை பேர் கிறிஸ்த்துவர்கள்?" என்றான் மன்னன் தியோக்குலேசியன்.
" அரசே...மன்னிக்க வேண்டும். நீங்கள் என்னைப்பற்றி கேட்டீர்கள். அதற்கு நானும் பதிலளித்துவிட்டேன். அதைத்தவிர மற்ற கேள்விகளுக்கு என்னிடமிருந்து பதில்வறாது."
"செபஸ்த்தியான்..நீ இதுவரை என் நண்பன்.. இப்போது என் குல விரோதி. ஆனாலும் உன் குணத்தை பற்றியும் நடத்தை பற்றியும் எமக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. உம்முடைய பழைய நட்பை முன்னிட்டு நான் உன்னை மன்னிக்கிறேன். உன் வீரத்தை முன்னிட்டு மேலும் உனக்கு பதவிகளும் தருவேன். எனக்கு வேண்டியது ஒரே ஒரு வார்த்தை.  அதுதான் நான் யேசுவை விட்டுவிடுகிறேன் என்னும் ஒரு வார்த்தை. அதை மட்டும் எனக்காக ஒரே ஒரு முறை சொல். நம் பழைய நட்ப்பை புதுப்பிப்பிப்போம்." என்றான்
தியோக்குலேசியன்.
" அரசே...நீர் நான் என் யேசுவின் மீது கொண்டிருக்கும் விசுவாசத்தை விலை பேசுகிறீர்.. என் வீரத்தை விலை பேசுகின்றீர். நான் உம்முடைய எந்த பரிசையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இதோ என் கண்முன்னே என் ஆண்டவர் யேசுநாதர் தோன்றுகின்றார். இனி என் நேரம் இந்த பூமியில் சில மணிகளே என்றார்..
" செபஸ்த்தியான்.. போ...உன் யேசுநாதரிடமே போ..இது நாள் வரை நாம் நண்பர்களாய் இருந்தோம்...இப்போது விரோதிகளாய் மாறிவிட்டோம். இதற்கெல்லாம் காரணம் நானில்லை.. நீதான்... என் உப்பைத்தின்று எனக்கே துரோகம் செய்துவிட்டாய்..அதன்பலனை நீ சீக்கிரமே அனுபவிப்பாய்" என்றான் தியோக்குலேசியன்.
" அரசே...நீர் என்னை தவறாக நினைக்கிறீர்...நான் அனுதினமும் வணங்கும் என் யேசுநாதரிடம் என் மன்னனும் என் நண்பனுமகிய தியோக்குலேசியனும் அவர் சகோதரன் மாக்ஸிமியனும், எம் நாட்டு மக்களும் இந்த உலகிலுள்ள அனைத்து மக்களும் என்றும் நலமாக வாழ வேண்டும் என்றே நான் வணங்கிவந்தேன். நாம் கொண்ட கொள்கையில் வேண்டுமானால் பிரிந்திருந்தோமே தவிர நட்ப்பிலும் விசுவாசத்திலும் நான் உமக்கு என்றுமே விரோதமாக நினைத்ததில்லை..இருப்பினும் நீரும் என்றாவது ஒரு நாள் யேசுவிடம்   திரும்பிவர என் ஆண்டவர் அருள் புரிவாறாக " என்றார்.
தியோக்குலேசியனின் மனம் இப்போது மாறிவிட்டது. அதுவரை நண்பர்களானவர்கள் இப்போது கடும் விரோதிகளாக மாறியதால்," கோத்திராத்து..இந்த ஸ்நேக துரோகியை கைதுசெய்து சிறையில் அடை" என்றான்.இந்த கோத்திராத்து என்பவன் அரண்மையில் பணியாற்றிய ஒரு அதிகாரி.. அவனும் ரகசியத்தில் ஒரு கிரிஸ்த்துவன் ஆகையால் அவர்
செபஸ்த்தியாரின் பேரில் வைத்த ஒரு பக்தியின் நிமித்தமும் அவர் தன்னுடைய விசுவாசத்திற்கும் மரியாதைக்குரிய எஜமான் என்ற முறையில் அவரைக்கைது செய்ய மறுத்தான்.
      அப்போது அந்த ரகசிய ஒற்றன் புல்வியன்," அரசே ...கோத்திராத்து எப்படி செபஸ்த்தியாரைக்கைது செய்வான்.. அவனும் ஒரு ரகசிய கிறிஸ்த்துவனாயிற்றே? " என்றான்.
இதனால் கடும் கோபம் கொண்டான் தியோக்குலேசியன்.." அடடா.... கிறிஸ்த்துவர்கள்...கிறிஸ்த்துவர்கள்....கிறிஸ்த்துவர்கள்... எங்கு பார்த்தாலும் கிறிஸ்த்துவர்கள். என் அரண்மனையில் இன்னும் யார் யார்தான் கிறிஸ்த்துவர்கள்... அடேய் புல்வியா... நம் அரண்மனையில் இருக்கும் கிறிஸ்த்துவர்கள் யார் யார் என கண்டுபிடி.. போ.." என்றான்.
அப்போது தியோக்குலேசியனின் அரண்மனை அதிகாரி காஸ்த்துலுஸ் என்பவ்ர் தென்படவே," காஸ்த்துலுஸ்.. செபஸ்த்தியாரையும் அவருடைய விசுவச ஊழியன் கோத்திராத்தையும்  கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றான். அப்போது காஸ்த்துலுஸ் ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்.
" காஸ்த்துலுஸ்... உன் போலவே எனக்கும் செபஸ்த்தியான் இப்படி மாறிப்போவான் என்பதில் நம்பிக்கை இல்லைதான். ஆனாலும் அவன் நம்பிக்கை துரோகி ஆகிவிட்டான். நேரத்தை  வீனடிக்காமல் அவனை கொண்டுபோய் சிறையில் அடை" என்றான் தியோக்குலேசியன். காஸ்த்துலுஸ் ஒரு வினாடி செபஸ்த்தியாரையே பார்த்தார். அந்த பார்வையில் செபஸ்த்தியார்
" காஸ்த்துலு... என்னை அப்படிப்பார்த்து உன்னை நீ யார் என்று காட்டிக்கொள்ளாதே" என்றபடி இருக்கவே தன் கீழ் உள்ள ஒரு சேவகனைப்பார்த்து," குவிந்தனா..செபஸ்த்தியாரை கைதுசெய்" என்றார். இந்த குவிந்தணன் தான் தார்சியுஸ் என்னும் சிறுவன் திவிய நற்கருணையை கொண்டு செல்லும் வழியில் தன் சினேகிதர்களாள் அடிபட்டு சாகும்போது
அவனை குரு பொலிகார்ப்பிடம் கொண்டு சேர்த்தவன்.
அப்போது தியோக்குலேசியன்," குவிந்தனா.. இந்த துரோகி கோத்திராத்தை சவுக்கால் அடித்தே கொல்.. இன்னும் நம் அரண்மனையில் யார் யார் கிறிஸ்த்துவர்கள் என்பது அவனுக்குத்தான் தெரியும்... அவனிடமிருந்து எல்லா விபரங்களையும் கேட்டு தெரிந்துகொள்" என்றான். அப்போது குவிந்தனன் செபஸ்த்தியாரை பார்க்க அவர் தன் பார்வையை வேறு
பக்கம் திருப்பிக்கொண்டார். குவிந்தனனும் காஸ்த்துலுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
மன்னன் தியோக்குலேசியன் தன் தம்பி மாக்ஸிமியனுடன் சேர்ந்து ஆலோசித்தான். இந்த செபஸ்த்தியான் நம்முடைய அரண்மையிலும் ராணுவத்திலும் பேர்பெற்றவர் ஆகையால் பொதுவில் அவருக்கு தண்டனை கொடுத்தால் அது பெரும் கலகத்தில் முடியும் . எனவே அவரை ரகசியத்தில் தான் கொல்ல வேண்டும் என முடிவு செய்தனர்.
     அப்போது தியோக்குலேசியன்,' யாரங்கே...கூப்பிடு அந்த அக்காபியனை" என்றான். அந்த அக்காபியன் என்பவன் வில்வித்தையில் பெரிய வீரன். மௌரித்தானா..அதாவது ஆப்ரிக்காவின் வட மேற்க்ப்பகுதியான மொராக்கோ பகுதியை சேர்ந்தவன். அவனும் அவனுடைய வீரர்களும் நம் செபஸ்த்தியாரின் ராணுவத்தில் பணிபுறிந்தவர்கள்.
செபஸ்த்தியாரின் பேரில் மிகுந்த விசுவானவர்கள். அக்காபியன் வந்து தியோக்குலேசியனை வணங்கினான்.
" அக்காபியா இன்று மாலை சூரியன் மறைந்ததும் நமக்கு துரோகியாகிப்போன ஒருவனை நான் உன்னிடம் ஒப்புவிப்பேன். அவனை நீ ஊருக்கு வெளியே கொண்டுபோய்  அம்பால் அடித்தே கொல்ல வேண்டும் . அவன் அதிக நேரம் வேதனைப்பட்டு சாக வேண்டும். எனவே அவன் உயிர் நிலைகளில் நீ அம்பு போடக்கூடாது.. அவன் துடித்து துடித்தே சாக வேண்டும். உன் வில் வித்தையை நீ இதில் காட்டு" என்றான். அக்காபியனும் " சரி எஜமான். நீங்கள் சொல்லியபடியே நான் அவ்னைக்கொல்வேன். இது என் வில்வித்தையின்
மீது ஆணை" என்றான். அதன்படியே இருட்டியதும் செபஸ்த்தியார் முகத்தை ஒரு துணியால்மூடி அக்காபியனிடம் ஒப்படைத்தனர். அவர் யாரும் அறியப்படாமல் ஊருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டார்.
குவிந்தனன் கோத்திராத்தை இழுத்துக்கொண்டு அரண்மனை சிறைச்சாலையை அடைந்தான். கோத்திராத்தை ஒரு தூணில் கட்டிவைத்து," என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் எஜமான்... எனக்கு வேறு வழி தெரியவில்லை." என்றான். அதற்கு கோத்திராத்து," குவிந்தனா...இது கடவுள் சித்தம்..இதற்காக நீ கவலைப்படாதே... என் கவலை எல்லாம் என்
எஜமானன் செபஸ்த்தியாருக்கு என்ன ஆயிற்றோ என்பதுதான்" என்றார். கோத்திராத்துக்கு வேதனை ஆரம்பமானது. அரசனின் ஆணைப்படியே குவிந்தனன்," அடேய்  கோத்திராத்து... சொல்... நம் அரண்மனையில் யார் யார் கிறிஸ்த்தவர்கள் என்று சொல். சொல். என்று அடி விளாசித்தள்ளினான். ஆனால் அவன் ஆன்மா அழுதது.
      என்ன இருந்தாலும் ஒரு சக கிறிஸ்த்துவனை தானே அடித்துக்கொல்வது என்பது எவ்வளவு பெரிய கொடுமையடா சாமி ...யேசுவே என்னை மன்னியும் என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டே அடி விளாசினான். ஆனால் சாகும்வரை கோத்திராத்து தன்னுடன் வேலை பார்ப்பவருள் யார் யார் கிறிஸ்த்துவர் என்பதை கடைசிவரை சொல்லாமலேயே
வேத சாட்ச்சியாக உயிர் துறந்தார்.
         மாலைவேளையில் தன் வேலை முடிந்ததென அரண்மனை அதிகாரி காஸ்த்துலு தன் வீட்டிற்கு சென்றார். அங்கே தன் மனைவி ஐரீன் என்பவர் அவரை வரவேற்றாள். " ஐரீன்..இன்று அரண்மனையில் என்னென்னமோ விஷேஷங்கள் நடந்துவிட்டன. செபஸ்த்தியார் பிடிபட்டார். கோத்திராத்து பிடிபட்டார். எனக்கு மனதெல்லாம் வலிகிறது என்றார்.
" அன்பரே..இதெல்லாம் நாம் எதிர் பார்த்ததுதானே.. அதுசரி .நம் பாப்பு காலுஸ் எப்படி இருகிறார். அவருடைய சீடர்களும் நம் சகோதரகளும் எப்படி இருகிறார்கள்?" என்றாள் ஐரீன்.
" ஐரீன் சப்தமாக பேசாதே..நாடு இன்று இருக்கும் நிலையில் இந்த சுவற்றுக்கும் கேட்கிற காதிருக்கும். பகலில் பக்கம் பார்த்துப்பேசு. இரவில் அதுவும் பேசாதே என்பதை நினைவில் கொள். அனேகமாக இந்த இரண்டம் ஜாமத்தில் செபஸ்த்தியார் கொல்லப்பட்டுவிடுவார்.அவர் அபாக்கியனிடம் ஒப்படைக்கப்பட்டிருகிறார். இனிமேல் அவரை காபாற்ற முடியாது.
ஆனால் ஒன்று செய்யலாம். அவரது இறந்த உடலைப்பெற்று ரகசியமாக அந்த கலிஸ்த்தா குகையில் புதைக்கலாம். எதற்கும் நீ இந்த பை நிறைய தங்கக்காசுகளை எடுத்துக்கொண்டு போ..செபஸ்த்தியாரின் இறந்த உடலை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்... எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருகிறது.. நீ என்னப்பற்றி கவலைப்படாமல் நான் உனக்கு
சொன்னதை செய். நான் நாளைக்கு பிறகு வருகிறேன்" என்று சொல்லி சென்றவர்தான். .அதற்குப்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை. அவர் வீட்டிலிருந்து வெளியே வரும்போது புல்வியன் ஆட்களாள் கைது செய்யப்பட்டார். இவரது பேச்சை ஒட்டுக்கேட்ட புல்வியன் உடனே ஆட்களை அனுப்பி அரண்மனையில் ஒரு ரகசிய அறையில்   காஸ்த்துலுவின் பாதுகாப்பில் தங்கியிருந்த பாப்பு காலுஸையும் அவருடைய சீடர்களையும் கைது செய்தனர்.
      தன்னுடைய வேத விரோதியான பாப்பு காலூஸையும் அவருடைய சீடர்கள் பலரையும் மற்றும் கிறிஸ்த்ட்துவர்கள் பலரையும் தன்னுடைய அரண்மனையிலேயே தனக்குத்தெரியாமல் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்த குற்றத்திற்காகவும் அரண்மனை அதிகாரி காஸ்த்துலுவும் ஒரு கிறிஸ்த்துவர் என்பதற்காகவும் அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்ட்படது.
        அதன்படி அவர் உயிரோடு பூமியில் புதைக்கப்பட்டார். அவரது மரணம் மிகவும் கொடுமையானதாக இருந்தது. முதலில் கழுத்துவரை அவர் பூமியில் புதைக்கப்பட்டார். அவர் கொடுமையாக கொல்லப்பட வேண்டுமென அவரது கழுத்தின் பின்புறமும் மற்றும் அவரது கழுத்தின் வலப்புறமும் இடப்புறமும் இருந்த கழுத்து நரம்புகள் அறுக்கப்பட்டன. இப்படிச்செய்தால் தலையை இந்தப்பக்கமோ அந்தப்பக்கமோ ஆட்ட முடியாது. எந்த நிலையிலும் ஒரு வினாடிகூட ஓய்வு என்பதே கிடைக்காது. இந்த நிலையிலேயே அவர் மாலை
வரை சாகாமல் துடித்துக்கொண்டே இருந்தார். மாலை ஆனதும் அவரது கழுத்துக்கு பின்புறமாக ஒரு அடி ஆழத்தில் குழி ஒன்று வெட்டப்பட்டு அவர் தலையை பின்புறமாக அழுத்தி மண்ணைப்போட்டு மூடிவிட்டனர். இவ்விதமாக அவர் யேசுவுக்காக கொடிய வாதைபட்டு வேதசாட்சியாக மரித்தார்.
பரிசுத்த பிதா காலூசும் அவருடைய உதவியாளர்களும் சிறை பிடிக்கப்பட்டு அந்த மரண விளையாட்டரங்கம் எனப்படும் கொலோசியத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசுத்த பிதா காலூஸ் தலை வெட்டிக்கொல்லப்பட்டார். அவருடைய ஊழியர் அனைவரும் ஒட்டு மொத்தமாக சிங்கங்களுக்கும் கொடிய காட்டு விலங்குகளுக்கும் இறையாக
போடப்பட்டனர். இவ்விதமாக செபஸ்த்தியாரோடு சம்பந்தப்பட்ட அனைவரும் வேத சாட்சி முடி பெற்றனர். 
      கடைசியாக செபஸ்த்தியார்.
    தன்னிடம் ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்ட நபர் யாராக இருக்கக்கூடும் என அந்த வில்வித்தைகாரன் அக்காபியனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. அது யாராக இருந்தால் என்ன?  தன்னுடைய கடமை அந்த ராஜ துரோகியை அம்பு எய்து கொல்ல வேண்டும் என்பதே. அதை சரியாக செய்ய வேண்டும் என்னும் இத்தகைய எண்ணத்தோடு அந்த மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு ஊாருக்கு வெளியே சென்றான். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் தன்னுடன் வந்த ஆட்களுடன் முக்காடிட்டு அழைத்துவந்த அந்த நபரை இறக்கினர். அவரது முகக்கட்டுகளை அவிழ்த்தபிறகுதான் தெரிந்தது அந்த ராஜ துரோகி தன் மதிப்பிற்கும் மரியாதைக்கும் அன்பிற்கும் உறிய செபஸ்த்தியார் என்று. அப்படியே அச்சத்தில் உறைந்து போனான் அக்காபியன்." எஜமான்.... தாங்களா அந்த ராஜ துரோகி. என்னால் நம்பவேமுடியவில்லையே " என்று அவர் கால்களில் விழுந்து அழுதான். செபஸ்த்தியார் அவனை அணைத்து," அக்காபியா... இது ராஜ கட்டளை... மேலும் இது கடவுளின் சித்தமும் கூட...நீ மனம் கலங்காமல் உன் கடமையை நிறைவேற்றுவாயாக. அன்புக்கும் பாசத்துக்கும்  இது நேரம் அல்ல. அதற்கான இடமும் இது அல்ல. சீக்கிரம் . நேரம் ஆகிறது." என்றார்.
      செபஸ்த்தியாரின் இந்த பதிலால் மனம் தெளிந்தான் அக்காபியன். அவரை நிர்வாணப்படுத்தி அருகில் இருந்த ஒரு பட்டுப்போன கள்ளி மரத்தில் அவரது இரு கைகளையும் விரித்ததுபோல் கட்டினான். செபஸ்த்தியாரின் வாயிலிருந்து " தேவன் ஸ்துதிக்கப்படுவாறாக... அவரது திரு நாமம் ஸ்துதிக்கப்படுவதாக... என்றபடி பாடிக்கொண்டே இருந்தது.
அக்காபியனும் அவனது வீரர்களும் வரிசையாக நின்றுகொண்டு மள மளவென அம்புகள் போட்டனர். தியோக்குலேசியன் கூறியிருந்தபடி அவரது உயிர்நிலைகளில் அம்பு போட வில்லை. மாறாக பல அம்புகள் அவரது மார்பிலும் கைகளிலும் கால்களிலும் போடப்பட்டன. அவரது வாயில் பாடல் நின்றது. அப்போது அக்காபியன் ," போதும் நிறுத்துங்கள்.
போதுமான அம்புகள் போடப்பட்டுவிட்டன. இனி அவர் இறந்துவிடுவார். இதோ அவர் நினைவு மங்குவதால் அவரது வாயிலிருந்து பாடல் கூட நின்றுவிட்டது" என்றான்.
      உண்மையில் அப்போது செபஸ்த்தியாருக்கு நினைவு மங்க ஆரம்பித்தது. அப்போது அவரது கண்களுக்குள் ஒரு காட்ச்சி ஒன்று அவருக்கு அருளப்பட்டது. யேசுநாதர் திருக்குடும்ப  சகிதமாக அதாவது யேசுநாதர் சிறு குழந்தையாகவும் தேவதாயார், சூசையப்பருடனும், ஒரு இடையனுடனும் மேலும் அலெக்ஸாண்டிரியா தேசத்தை சேர்ந்த கத்தரீனம்மாளுடனும்
காட்ச்சி கொடுத்தார். இந்த காட்ச்சி முடிந்ததும் மேலும் ஒரு புதுமை நடந்தது.
செபஸ்த்தியாரை கட்டி வைத்து அம்பை எய்தபோது ஏறாளமான ரத்தம் அவருடைய காயத்திலிருந்து வெளிப்பட்டது. அந்த ரத்தம் அந்த பட்டுப்போன கள்ளி மரத்தை நனைத்தபோது அந்த பட்டுப்போன கள்ளி மரத்துக்கு உயிர் வந்தது. சடசடவென அதற்கு இலைகளும் பூக்களும் தோன்றின. இயற்கையிலேயே வெண்ணிறமாக தோன்றும் இந்த மரத்தின் பூக்கள் அப்போதும் வெண்ணிறமாக பூத்து திடீரென செந்நிறமாக உருமாறியது. அதிலிருந்து அந்த மரத்தின் வாரிசுகளின் பூக்களும் செந்நிறமாகவே தோன்றின.
          இந்த அதிசயத்தைக்கண்ட அந்த அக்காபியனும் அவன் வீரர்களும் " உண்மையில் நம் செபஸ்த்தியார் கடவுள் அருள் பெற்றவர்தான்" எனக்கூறினர். அப்போது காஸ்த்துலுஸின்   மனைவி ஐரீனம்மாள் அங்கே வந்தார். குற்றுயிராகக்கிடக்கும் செபஸ்த்தியாரை இறந்துவிட்டதாகக்கருதி தான் கொண்டுவந்திருந்த தங்கக்காசுகளை அந்த அக்காபியனிடம் கொடுக்க
அவனும் அதை சந்தோஷமாக பெற்றுக்கொண்டு செபஸ்த்தியாரின் உடலை அவரிடம் ஒப்படைத்தான். மீண்டும் அரண்மனைக்கு வந்து அடுத்தநாள் தியோக்குலேசியனிடம் தான் செபஸ்த்தியாரைக்கொன்று சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டதாக கூறினான்.
      ஆனால் தன் வீட்டுக்கு செபஸ்த்தியாரின் உடலக்கொண்டுவந்து அம்பினால் ஏற்பட்ட காயங்களை கழுவும்போது செபஸ்த்தியாருக்கு இன்னும் உயிர் இருக்கக்கண்டார் ஐரீனம்மாள். அந்த நேரத்திலேயே ஒரு வைத்தியனை அழைத்து அவரை பரிசோதித்தபோது அவருக்கு உயிர் இருக்கக்கண்டு அந்த வைத்தியனும் அதிசயித்துபோனான். எனவே தேவையான பச்சிலைகளாள் அவரது காயங்களை துடைத்துக்கழுவி மருந்திட்டு அவருக்கு சீரான மூச்சு திரும்பும் வரை மருத்துவன் நல்ல வைத்தியம் பார்த்தான். இந்த விஷயத்தை
ரகசியமாக வைக்கும்படியும் தேவையான போது மீண்டும் வந்து வைத்தியம் பார்ப்பதாகவும் அந்த வைத்தியன் கூறிச்சென்றான். பலநாள் நம் செபஸ்த்தியார் இந்த ஐரீனம்மாள் இல்லத்திலேயே தங்கி இருந்தார்.    அவருக்கு காயங்கள் எல்லாம் ஆறி எழுந்து நடக்க பல நாள் பிடித்தது.
ஒரு வழியாக செபஸ்த்தியார் எழுந்து நடக்க ஆரம்பித்தார். திடீரென ஒரு நாள் ஐரீனம்மாளிடம் சொல்லிக்கொண்டு வெளியே போக ஆரம்பித்தார். அப்போது ஐரீனம்மாள்,
" செபஸ்த்தியாரே...நான் சொல்லுகிறேன் என்று நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். கடவுள் உங்களுக்கு மீண்டும் உயிரைக்கொடுத்தது உங்கள் சேவை பலருக்கும் தேவை.  கடவுளுக்கும் தேவை என்பதற்காகத்தான். நீங்கள் இப்போது வெளியே சென்றால் மீண்டும் தியோக்குலேசியனால் சிறை பிடிக்கப்படுவது உறுதி. இதெல்லாம் தேவையா. உங்கள்   சேவை தொடரவேண்டும். ஒன்று உங்கள் சொந்த ஊராகிய மிலான் பட்டிணம் போய் அங்கே உங்கள் ஊழியத்தை துவங்குங்கள். அல்லது அந்த குரு பொலிகார்ப் சென்றுள்ள   காம்பாணியா பட்டிணம் போங்கள். உங்களுக்கு எங்குதான் வரவேற்பிருக்காது?. தயவுசெய்து எனவே என்பேச்சை கேளுங்கள். வெளியே செல்லாதீர்கள்" என்றாள்.
          ஆனால் செபஸ்த்தியார், " அம்மணி...இத்தனைநாள் நீங்கள் என்னைகாப்பாற்றி பாதுகாத்ததற்கு மிக்க நன்றி. ஆனால் கடவுள் எனக்கு அறிவித்ததை நான் தியோக்குலேசியனுக்கு   அறிவித்தே ஆக வேண்டும். தயவு செய்து என்னைத்தடுக்காதீர்கள்" என்றார். விதி வலிதாகிப்போனது.
அந்த நாளில் [ ஜனவரி 20. கி.பி.288 ] மன்னன் தியோக்குலேசியன் தன் அரண்மனையில் கொலு வீற்றிருந்தான். ஏறாளமான ராஜாங்கப்பிரதிநிதிகள் புடைசூழ தர்பார் மண்டபம்   களைகட்டிருந்தது. திடீரென ஒரு குரல் மிகவும் கம்பீரமாக ஒலித்தது. " தியோக்குலேசியா..உன் நாட்க்கள் எண்னப்படுகின்றன. மனம் திரும்பி யேசுநாதரை மீண்டும் ஏற்றுக்கொள்.  ஒரு பாவமும் அறியாத அப்பாவி கிறிஸ்த்துவர்களை வீனே ஆக்கினைக்கு உட்ப்படுத்தாதே. ஆண்டவறாகிய யேசுநாதர் உன்மீது மிகக்கடினமான மனதுடையவறாக இருகின்றார்.  அவருடைய கோபாக்கினைக்கு ஆளாக்காதே.. அவருடைய நீடிய பொருமையை சோதிக்காதே " என்றார் செபஸ்த்தியார். கொலு மண்டபமே அப்படியே ஆடிப்போனது.
          மன்னன் தியோக்குலேசியனை அச்சம் ஆட்க்கொண்டது. அவனும் ஒரு நிமிடம் அப்படியே ஆடித்தான் போனான். இருப்பினும் சுதாரித்துக்கொண்டு," யாரது.?" என்றான்.
அப்போது செபஸ்த்தியார் அவன் முன்னே வந்து ," நான் தான். உன்னால் கொல்லப்பட்ட செபஸ்த்தியான் நான் தான். " என்றார்.
அதற்கு தியோக்குலேசியன்" அடப்பாவி...நீ இன்னும் சாகவில்லையா.. அல்லது பேயாக வந்து என்னைகொல்லப்பார்கிறாயா.?" என்றான்.
" இல்லை. நான் பேயாக வரவில்லை. மீண்டும் மனிதனாகவே மறு பிறவி எடுத்து வந்திருகிறேன்.. என் ஆண்டவறாகிய யேசு நாதரின் கட்டளைப்படி
நான் உன்னை எச்சரித்துப்போகவே வந்திருகிறேன்" என்றார்.
" அப்படியானால் நீ இன்னும் சாகவில்லையா ?" என்றான் தியோக்குலேசியன்.
" நான் தான் சொன்னேனே. நான் மறு பிறவி எடுத்துதான் வந்திருகிறேன்" என்றார் செபஸ்த்தியார்.
மன்னன் தியோக்குலேசியன் தன்நிலைக்கு வர சில வினாடிகள் பிடித்தது. அவனுடைய திமிர் அவனுக்கு கண்முன்னே தோன்றியது. மீண்டும் உரத்த குரலில் " யாரங்கே.  கூப்பிடு அந்த அக்காபியனை... வீரர்களே...இந்த செபஸ்த்தியானை தெருநாயை அடித்துக்கொல்வதுபோல் என் கண்முன்னே அடித்தே கொல்லுங்கள் " என்றான். உடனே வீரர்கள் வந்து செபஸ்த்தியாரை கைது செய்தனர். அதறகுள்ளாக அக்காபியனையும் அழைத்து வந்திருந்தார்கள்.
" அக்காபியா.. நீ ஏதோ உன் வில்வித்தையின்மீது ஆணை. இவன் நீடித்த வேதனையில் சாகும்வரை அம்பு போடுவேன் என்று சொன்னாயே..உன் தொழில் லட்ச்சணம் இதுதானா?"
" எஜமான்.. என் தொழில் தர்மத்தின் மீது ஆணையாக இப்போதும் சொல்கிறேன்... நான் என் வேலையை சரியாகத்தான் செய்தேன். ஆனால் இவன் எப்படி உயிர் பிழைத்தான் என்பது எனக்குத்தெரியாது. நான் நீங்கள் சொல்லியபடியேதான் செய்தேன்.. இவன் நீடிய வேதனையில் சாக வேண்டுமென நீங்கள் கூறியபடி இவன் உயிர் நிலைகளிள் அம்பு போட
வேண்டாம் என நீங்கள் தானே சொன்னீர்கள்.. என்னை என் போக்கில் விட்டிருந்தால் என் வேலை கச்சிதமாக சுலபமாக முடிந்திருக்கும். ஆனாலும் இவன் மரணமடைந்தான் என்று நிச்சயப்படுத்திகொண்டுதான் நாங்கள் அவன் சடலத்தை போட்டுவிட்டு வந்தோம். அவன் மரணத்தில் அவனைக்கொல்ல பயன்படுத்திய அந்த பட்டுப்போன கள்ளி மரம் கூட உயிர்
பெற்று வந்தது. அதன் வெண்ணிற பூக்கள் கூட சிவந்த நிறமாக மாறிப்போனது. இதெல்லாம் உண்மையா இல்லை பொய்யா என நீங்களே வந்து பாருங்கள். ஆக தவறு என்மீது   இல்லை எஜமான் " என்றான் அக்காபியன்.
    அக்காபியனின் பதிலைக்கேட்ட மன்னன் தியோக்குலேசியனுக்கு அப்படியே தலை சுற்றிப்போனது. இருப்பினும் மிகுந்த கோபாவேசமாக," இன்னும் ஏன் வேடிக்கைப்பார்த்து  கொண்டிருகிறீர்கள். இவனை தெரு நாயை அடித்துக்கொல்வதுபோல் இவனை மண்டையில் அடித்துக்கொல்லுங்கள். இந்த முறையும் இவன் தப்பிவிட்க்கூடாது" என்றான்.
வீரர்கள் ஆளுக்கொரு குண்டாந்தடியை எடுத்துக்கொண்டு வந்தனர். தியோக்குலேசியன் சொன்னபடியே செபஸ்த்தியாரின் தலையிலேயே அடிமேல் அடியாய் அடித்தனர்.
     முதல் அடியிலேயே செபஸ்த்தியாரின் மண்டை உடைந்தது. அடுத்தடுத்த அடிகளாள் அவர் மூளை சிதறி ரத்தம் குபுகுபு என கொட்டியது. அவரது கபாலம் நொறுங்கி முகமே இல்லாத அளவுக்கு மாறிப்போய் மரணமடைந்தார் நம் செபஸ்த்தியார். மற்ற வேத சாட்ச்சிகளைப்போல் அல்லாமல் நம் செபஸ்த்தியார் இரட்டை வேத சாட்ச்சி முடி பெற்றார்.
வீரர்களின் வெறி ஆட்டமெல்லாம் அடங்கியவுடன் அவரது சடலத்தை ஊருக்குள் இருந்த பொதுவான சாக்கடையில் போட்டு அவரை அவமானப்படுத்தினர். அந்த நாள் இரவில்  செபஸ்த்தியார் பெரும் பத்தியுள்ள ஒரு விதவையான லூசினா என்னும் பெண்ணுக்கு தரிசனம் கொடுத்து தன்னுடைய சரீரம் அந்த பாழும் சாக்கடையில் இருப்பதாகவும் அதை
எடுத்துவந்து நல்லவிதமாக அடக்கம் செய்யும்படியும் கூறினார். அந்த விதவைப்பெண் வேறு யாரும் அல்ல. நம் பங்கிராசின் வளர்ப்புத்தாயார்தான் அவர். லூயிசா அம்மாவும்   செபஸ்த்தியார் தனக்கு கூறியபடி பக்தியுள்ள சில கிறிஸ்த்துவர்களின் உதவியுடன் அவரது சரீரத்தை கண்டெடுத்து அவரை அந்த கலிஸ்த்தா குகையில் புதைத்தார்கள்.
பிற்கால கிறிஸ்த்துவர்கள் செபஸ்த்தியாருக்கு அவர் கல்லறைமீதே ஒரு அழகிய தேவாலயத்தைக்கட்டி உள்ளார்கள். அங்கு அவரது அருளிக்கமாக சில எலும்புகளும் அவரைகொல்ல பயன்படுத்திய ஒரு அம்பும் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டவறாகிய யேசுவின் வல்லமையுள்ள நல்ல ஊழியனாக வாழ்ந்து வேத சாட்ச்சியான செபஸ்த்தியாரின் பக்தி முயற்சி உலகில்   பல இடங்களிலும் பரவி உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் போர் வீரர்களுக்கும் இவர் பாதுகாவலர். சாத்தானுக்கும், கொள்ளை நோய்களுக்கும் இவர் பகைவர். உலகம் முழுக்க ஏழைகள் கைவிடப்பட்டவர்களின் மத்தியில் கடவுள் இவரை அவர்களுடைய பாதுகாவலராக இவரை நியமித்திருக்கிறார். எனவே கிறிஸ்த்துவர்கள்
மத்தியில் இவரைத்தெரியாதவர்கள் இருக்கவே முடியாது ரோமன் கத்தோலிக்க திருச்சபை இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது.
வலேரியன் தியோக்குலேசியனின் கொடுங்கொல் ஆட்ச்சியின்போது கொல்லப்பட்ட கிறிஸ்த்துவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. தீயவன் தன் தீவினையால் கொல்லப்பட வேண்டும் என்பது ஆண்டவன் சித்தமல்ல. ஆனால் அவனும் மனம் திரும்பவேண்டும் என்பதே ஆண்டவனின் சித்தம். எனவே இந்த தீயவனும் கொடுங்கோலனுமான
தியோக்குலேசியனையும் மனம் திருப்ப ஆண்டவறாகிய யேசுநாதர் சித்தம் கொண்டார். இதற்கு தியோக்குலேசியனின் மனைவி ப்ரிஸ்க்காவை தயார் படுத்தினார். தியோக்குலேசியன்   பதவியில் இருந்தபோது அவனால் ஏற்படுத்தப்பட்ட வேதகலாபனையின்போது அநுதினமும் கொல்லப்படும் கிறிஸ்த்துவர்களின் நிலைகண்டு பிரிஸ்க்காவின் இதயம்பட்டபாடு அந்த
யேசுநாதருக்கே வெளிச்சம். அவள் யார் வழியாக எவ்வளவு பேருக்கு என்னென்ன உதவிகள் செய்தாள் என்பதும் யாருக்கும் தெரியாதபடி சரித்திலிருந்து மறைந்துபோயிற்று. ஆனாலும் அவள் தன் நிலையில் உறுதியாக இருந்து தன் கணவன் மனம்மாற வேண்டும் என ரகசியத்தில் தன் அரண்மனையிலேயே ஜெபித்துவந்தாள். தானும் ஒரு ரகசிய கிறிஸ்த்துவள்
என்பதை அவள் கடைசிவரை காப்பாற்றிவந்தாள். ஆனாலும் ஆண்டவராகிய யேசுநாதர் பிரிஸ்க்கவையும் மாட்சிமை படுத்த விரும்பினார். அதற்கான ஒரு வாய்ப்பும் வந்தது..
       புனித செபஸ்த்தியாரைப்போலவே பெரும் ராணுவ வீரனாக விளங்கிய புனிதரான ஜார்ஜ் வேத கலாபனையின்போது கைது செய்யப்பட்டார்.[ ஒரு வெள்ளைக்குதிரையில் ஒரு ராணுவ வீரன் ஒர் பெரும் ராட்ச்சத அரக்க உருவம்கொண்ட விலங்கோடு ஒரு படம் இருகிறதல்லவா... அவர்தான் புனித ஜார்ஜ்.] அவர் தன் விசுவாசத்தை கைவிடாததால்   தலைவெட்டிக்கொல்லும்படி ஆணை பிறப்பித்தான் தியோக்குலேசியன். அப்போது தியோக்குலேசியனின் மனைவி ப்ரிஸ்க்கா தானே அந்த மரண அரங்கத்தில் இறங்கி சென்று புனித ஜார்ஜியிடம் தன் கணவனை மன்னிக்கும்படி அவர் முன் மண்டியிட்டு மன்றாடினாள். இதனால் கடும்கோபம் கொண்டான் பிரிஸ்க்காவின் கணவனான தியோக்குலேசியன்.
பொதுவில் அதுவும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் தன் மனைவி தன் மானத்தை வாங்கிவிட்டாள் என உள்ளம் குமுறினான். அதன் விளைவாக பிறிஸ்க்காவை தான் கட்டிய மனைவி என்றும் பாராது கைது செய்து அந்த மரண அரங்கத்திலேயே பிரிஸ்க்காவை தன் ரோமைய தெய்வங்களுக்கு தூப ஆராதனை காட்ட கட்டளையிட்டான். 
    பிரிஸ்கா   அதற்கு மறுக்கவே அவளுக்கும் புனித ஜார்ஜிக்குமாக தலைவெட்டிக்கொல்லும்படியான தண்டனை கொடுக்கப்பட்டது. இருவருக்கும் தலைவெட்டி கொல்லப்பட்டார்கள் என்றும்
ஒரு சரித்திரம் சொல்கிறது. ஆனால் பிரிஸ்கா தலைவெட்டிக்கொல்லப்படாமல் அந்த மரண அரங்கத்தில் இயற்கையான முறையில் இறந்தார் என்றும் புனித ஜார்ஜ் மட்டும் தலைவெட்டிக்கொல்லப்பட்டார் என்றும் ஒரு சரித்திரம் சொல்கிறது. பிரிஸ்காவை ரோமின் அலெக்ஸாண்டிரா என்றும் அழைப்பார்கள்
     பல காலங்களுக்குப்ப்பிறகு தியோக்குலேசியனின் மனைவி பிரிஸ்காவின் வேண்டுதல் கேட்கப்பட்டது.
தியோக்குலேசியனும் மனம் மாறி ஒரு காலத்தில் தானும் ஒரு கிறிஸ்த்துவன் என்னும் ஞாபகம் வந்து முழுமனத்தோடு யேசு நாதரை மீண்டும் ஏற்றுக்கொண்டான். அவன் பதவியிலிருந்து ஓய்வு பெற்று தற்போதுள்ள குரோசியா நாட்டில் தன் மீதி நாட்க்களை தன் தோட்டத்தில் காய்கறிகளைப்பயிரிட்டு வாழ்ந்து அமைதியாக மரணமடைந்தான். இல்லை
இல்லை ... அவன் தற்கொலை செய்துகொண்டு இறந்தான் என்றும் ஒரு சரித்திரம் சொல்லுகிறது. ஆனால் ஒரு கொடுங்கோலனையும் மனம்திருப்ப அவனுடைய மனைவியால் மட்டும் என்பதை இந்த உலகம் புறிந்துகொள்ள வேண்டும். இதற்கு பொருமையும், விடாமுயற்சியும் கடவுளின் அனுக்கிரஹமும் அவசியம். ஒரு பெண் நினைத்தால் ஆகாத காரியம்
ஒன்றுமில்லை.
இதைப்போலவே தியோக்குலேசியனின் அந்தரங்க ஒற்றர்களான் புல்வியனும் தேர்த்துள்ளியனும் தங்களால் கொல்லப்பட்ட கிறிஸ்த்தவர்களின் எண்னிக்கையை நினைத்து மலைத்துப்போயினர். தங்களிடம் அவர்களை காட்டிக்கொடுத்ததால் கிடைத்த செல்வங்களை வைத்துக்கொண்டு அவர்களால் சந்தோஷமாக வாழமுடியவில்லை. இவர்களையும் யேசுநாதர்  தடுத்தாட்கொண்டார் சவுலை பவுல் ஆக்கியதுபோல. இந்த இருவரும் தங்கள் செல்வங்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு சந்நியாசிகளாக மாறிப்போயினர்.
         பின் குறிப்பு.:       அன்புள்ள நேயர்களே... செபஸ்த்தியாருடைய சரிதை மிகப்பெரிது. இங்கு எல்லாவற்றையும் என்னால் சொல்ல முடியவில்லை. அதற்கு எனக்கு தகுதியும் இல்லை. இந்த சரித்திரத்தில் பல கதா பாத்திரங்களை என்னால் கூற முடியவில்லை. புனித பபியோலா, புனித ஆக்னெஸ், புனித லாரென்ஸ், புனித பிலோமினம்மாள் ஆகியோர்களின்
வாழ்க்கையும் புனித செபஸ்த்தியாரோடும் தியோக்குலேசியனின் வாழ்க்கையோடும் சம்பந்த பட்டவைகள்தான் இவர்களைப்பற்றி எல்லாம் எழுத வேண்டுமானால் ஒவ்வொருவரைப்பற்றியும் தனி தனி புத்தகங்கள் போடும் அளவுக்கு சரித்திரம் உள்ளது. எனக்கு கிடைத்த சில சரித்திர குறிப்புகளை வைத்தே என்னால் இக்கதையை எழுத முடிந்தது. ஏதேனும் பிழை இருப்பின் என்னை மன்னிக்கவேண்டுமென மிகவும் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.
புனித செபஸ்த்தியரே பாவிகளாக இருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

















No comments:

Post a Comment