" வீரப்பெண் புனித கிறிஸ்டினா "
ஜூலை 24 தேதி வந்துவிட்டால் மத்திய இத்தாலியில் இந்த டஸ்கனி நகரத்தில் உள்ள போல்செனா மக்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஆம் அன்றுதான் நம் புனித கிறிஸ்டினா வேத சாட்ச்சியாக மரித்ததினம். இந்த திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நாம் பாஸ்கா திரு விழாவைகொண்டாடுவதைப்போல அந்த ஊர் மக்கள் இந்த சிறுமி புனித
கிறிஸ்ட்டினா வேத சாட்ச்சியாக மரித்த விதத்தை டஸ்கனியில் பல இடங்களில் பலபேர் பல நாடகங்களாக நடத்திக்காட்டி தங்கள் பக்த்தியை வெளிப்படுத்துகிறார்கள்.இவை இந்தப்பெண் வேத சாட்ச்சி பட்ட பாடுகளுக்கு அந்த ஊர் மக்கள் அவள்மீது கொண்ட ஒரு பக்தியையும் மரியாதையையும் அங்கீகாரத்தையும் அன்பையையும் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது.
" தேர் ஏது? சிலை ஏது? திரு நாள் ஏது? தெய்வத்தையே மனிதர் எல்லாம் மறந்த போது..ஊர் ஏது...உறவேது உற்றார் ஏது? உறவெல்லாம் பகையாக மாறும்போது." கவிஞர் கண்ணதாசன். இந்த உலகில் எந்த உறவும் மாறிப்போகலாம். அதனால் எந்த பாதிப்பும் அதிகம் இருக்காது. ஆனால் பெற்ற தாய் தகப்பன் உறவு பகையாகிப்போனால் அதன் பாதிப்பை வார்த்தையில் சொல்லி மாளாது. நம் புனிதை கிறிஸ்டினாவுக்கும் இத்தகைய பாதிப்புதான் ஏற்பட்டது. அதன் பின் விளைவுகள் வார்த்தையில் விவரிக்கமுடியாதபடி பயங்கர விளைவுகளை ஏற்படுத்தின. அவளது தாயாரைப்பற்றியோ அல்லது அவளது உடன் பிறப்புகளைப்பற்றியோஅல்லது இயற்பெயரைப்பற்றியோ ஏதும் அறிய முடியவில்லை. ஆனால் அவளது தகப்பனைப்பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. அவளது தகப்பன் பெயர் அர்பன். உண்மையில் அவன் ஒரு அர்ப்பன். அவன் ஒரு உயர் குடியில் பிறந்திருந்தாலும் அவன் கிறிஸ்த்துவர்களை அதிகம் வெறுத்தான். தன்னை கிறிஸ்த்துவர்களின் ஜென்ம விரோதி என அறிவித்துக்கொண்டான். அந்த டஸ்கனி நகரத்தில் உள்ள டையர் என்னும் பட்டிணத்தின் அதிபதியாக அவன் பொருப்பு வகித்ததால் அவனுக்கு வானளாவிய அதிகாரம் இருந்தது. கி.பி.இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் ரோமைய சக்கரவர்த்தி தியோக்குலேசியனின் ஆணைப்படி கிறிஸ்த்துவர்களைக்கொல்லவும் அவர்களது சொத்துக்களை கைபற்றவும் அவனுக்கு அதிகாரம் இருந்ததால் இந்த அதிகாரத்தை தன் இஸ்ட்டம்போல பயன்படுத்தி அனேக கிறிஸ்த்துவர்களின் உயிரையும் அவர்தம் சொத்துக்களையும் பறித்தான்..
" படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக ...மனுவைப்படைத்தான் தன்னை வணங்க"... ஆனால் காலம் செல்ல செல்ல மனிதனின் ஆசைக்கும் பேராசைக்கும் அளவேஇல்லாமல் போனதால் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடைவெளி அதிகமாகபோய்க்கொண்டே இருந்தது. மனிதனுக்கு இன்பம் ஒன்றே குறிக்கோலாக இருந்தது. அதை அடைய அவன் எதை இழக்கவும் தயாராக ஆனான். உலகம்,பணம், பெண், பொருள், மது இவற்றிற்கு அடிமையாகி அதை அடைய மனிதன் எத்தகைய பாவ துரோகத்தையும் செய்யத்துணிந்தான். எனவே இத்தகைய இன்பங்களை அளிக்கும் தெய்வங்களை மனிதன் நாடிப்போனான். அவற்றையே தெய்வமாகவும் கொண்டாடினான். படைத்தவன் யார் என்றே மறந்துபோனான். இதற்காகவே கடவுள் தன்னை மனிதன் மறந்துவிடாதபடிக்கும் நன்றி மறந்த இந்த மனித ஜென்மங்களை மீட்டெடுக்கவும் இந்த உலகில் யேசுவாக அவதரித்து தானே இந்த உலகையும் வான மண்டலங்களையும் படைத்த சர்வ வல்லமையான தேவன் என அறிவித்துக்கொள்ள வேண்டியதாக ஆயிற்று. ஆனாலும் மனித இதயம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதற்காக கடவுள் தனக்கு வேண்டிய மனிதர்களை இந்த உலகத்துக்கு தனக்கு சாட்ச்சியாக வாழ அனுப்பி இவரே உண்மையான கடவுள் என அறிவித்து அதற்காக தங்கள் உயிரையே பலியாக ஒப்புக்கொடுத்து யேசுநாதர்போல பாடுகள் பல பட்டு மரித்து பரலோக பிராப்த்தி அடைந்தார்கள். அப்படியாக யேசுநாதருக்கு சாட்ச்சியாக வழ்ந்து பாடுகள் பலபட்டு வேதசாட்சியாக மரித்த பலருள் ஒருத்திதான் கிறிஸ்ட்டினா.
இந்த டஸ்கனி நகரத்தின் டையர் நகரத்தின் அதிபதியாக பொருப்பில் இருந்த அர்பனுக்கு தனக்கும் தன் குலத்தவர்களான அனிச்சியர்களுக்கும் வாழ்வும் வசதியும் அளித்து காத்துவரும் ரோமைய , கிரேக்க தெய்வங்களான அப்போல்லோமீதும் , ஜூபிடர் தெய்வங்களின்மீதும் காதல் தெய்வமான வீனஸ் தேவதையின் மீதும் பெரும் பக்தி இருந்தது. தனக்கும் தங்கள் ரோமைய மக்களுக்கும் பாது காப்ப்பாளர்களான அப்போல்லோ, ஜூபிடர் இவர்களுக்கும் மேற்பட்ட தெய்வங்கள் இருகின்றார்களா? என கேள்விகள் பல கேட்டான். " ஆம்... இருகின்றார். அவர்தான் எல்லாம் வல்ல யேசுநாதர் என பதில் கூறினர் கிறிஸ்த்துவர்கள். அவ்வளவுதான்..அவர்கள் கிறிஸ்த்துவர்கள் என்னும் ஒரே காரணத்திற்காக அவர்களை பிடித்துசிறையில் அடைத்து கொடுமையாக தண்டித்தான் அர்பன்.
ஒருநாள் தன் ஒன்பது வயது மகளை தன்னுடனே சிறைச்சாலைக்கு கூட்டிச்சென்றான் அர்பன். தனக்குப்ப்பின் இந்தப்பதவிக்கு வரும் ஒரு அரசனுக்கு தன் மகளைக்கட்டிக்கொடுக்க வேண்டும் அல்லது தன் குலதெய்வங்களான அப்போல்லோ, மற்றும் ஜூபிடருடைய கோயில் பூசாரிணியாக தன் மகளை ஆக்கிவிட வேண்டும். இதற்கு இப்போதிலிருந்தே தங்கள் கடவுள் மீது பக்திவரும்படிக்கும் இந்த கிறிஸ்த்துவர்களின் மீது வெறுப்பு வரும்படிக்கும் அவளுக்கு புத்திமதி கூறி வளர்க்க வேண்டும் என மனதில் கூறிக்கொண்டான். சிறுமியும் ஆர்வமாக தங்கள் தெய்வங்களின் கதைகளையும் இந்த கிறிஸ்த்துவர்களைப்பற்றியும் தன் தகப்பனிடம் கேட்டு வளரத்துடங்கினாள். அப்போது அந்த சிறைச்சாலையில் அடிபடும் கிறிஸ்த்துவர்களை அவள் உற்று நோக்கினாள். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவரும் அவளை உற்று நோக்கினார். சலேரென விழுந்தது அவருக்கு ஒரு சவுக்கடி." அடேய்கிழவா... அரசிளம் குமரி என்னும் மரியாதை இல்லாமல் அந்த பெண்னை உற்று நோக்குவதேன்..அவளை உற்று நோக்கியதற்காக அவளிடம் மன்னிப்புக்கேள்" என்றான் அந்த சிறைக்காவலன்.அந்த சவுக்கடி பட்ட இடத்திலிருந்து அவருக்கு ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. இருப்பினும் அந்த கிழவனார்,"ஐய்யா, நான் என்ன தவறு செய்துவிட்டேன். என் பேத்தியை போன்ற அந்த சிறுமியை உற்று நோக்கியது குற்றமா?" என்றார். மீண்டும் அவருக்கு விழுந்தது ஒரு சவுக்கடி." அடேய் கிழவா...எதிர்த்தா பேசுகிறாய்...அரசிளம் குமரிக்கு வணக்கம் செலுத்து" என்றான் அவன்.
அப்போது அந்த கிழவனார் அந்த சிறுமிக்கு தன் அன்பான வணக்கம் கூறினார். சிறுமியும் அவர் தந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தானும் வணக்கம் தெரிவிதாள். உடனே அவள் தகப்பன்," மகளே... நீ அந்த கிறிஸ்த்துவ கிழவனுக்கு வணக்கம் தெரிவிக்க கூடாது. அவர்கள் நம்மை விடத்தாழ்ந்தவர்கள். வெறுப்புக்குறியவர்கள். அவர்கள் நம் குல விரோதிகள்..அவர்கள் நம் தெய்வங்களை குறைகூறுபவர்கள்... அவர்களோடு பேசாதே" என்றான்..இவ்விதமாக தினமும் நடந்தது. அந்த சிறுமியின் மனதில் அந்த கிழவனாரின் அமைதியான முகம் அடிக்கடி வந்துகொண்டே இருந்தது. இந்த தாத்தாவும் சரி... இந்த கிறிஸ்த்துவர்களும் சரி.. இவர்களின் வேதனையில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. எப்படி இவர்களாள் துன்பத்திலும் சிரிக்க முடிகிறது. என்பன போன்ற கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தன. அதற்கும் அவளுக்கு ஒரு நாள் விடை கிடைத்தது. அந்த தாத்தாவுடன் சில நிமிட நேரம் அவள் தனியே உரையாட அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சில நிமிட நேரத்தில் அவளிடம் பேசியவர் யேசுநாதரே... அந்த சில நிமிட நேரத்தில் அவள் யேசுநாதரை முற்றிலும் அறிந்துகொண்டாள்.
அன்று இரவில் அவளிடம் ஒரு சம்மனசானவர் வந்தார்.." பெண்னே கிறிஸ்டினா...இனிமேல் நீ இவ்விதமாகத்தான் அழைக்கப்பட வேண்டும் . இதுதான் யேசுநாதர் உனக்கு கொடுத்துள்ள் பெயர்.. இன்று முதல் நீ யேசுவுக்கானவள்..நீ அவருக்கு சாட்ச்சியாக வாழ வேண்டும்..அவர் உன்னில் வல்லமையான செயல்கள் பல செய்யப்போகின்றார். இன்றுமுதல் உனக்கு ஞானம் அருளப்படுகின்றது. நீ யேசுவைப்பற்றி அறிந்துகொண்டவைகளே உனக்குப்போதும். மற்றவை எல்லாம் என்னவென்று நீ அறிந்துகொள்ளக்கடவாய்.." என்று கூறி மறைந்து போனார். சம்மனசானவர் கூறியபடியே நம் கிறிஸ்டினாவுக்கு இந்த உலகைப்பற்றிய சகல ஞானமும் கைவந்தது. யேசுநாதரைப்பற்றிய ஞானம் அதைவிட அளவுகடந்ததாக இருந்தது.
தன் மகளின் வாழ்க்கையில் பல நடவடிக்கைகள் அடியோடு மாறிப்போனதை கவனித்தான் கிறிஸ்டினாவின் தந்தை அர்பன். இருப்பினும் தன் மகள் பருவம் அடைந்ததால் இந்த ஞானம் வந்திருக்கும் என்றவனாய் தன் மனதை தேற்றிக்கொண்டான். அப்போது நம் கிறிஸ்டினாவுக்கு பதினொன்று அல்லது பனிரெண்டு வயதுக்குள்தான் இருக்கும். நம் கிறிஸ்டினாவுக்கும் கடவுளுக்கு சாட்ச்சியம் அளிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வந்தது. தன் மகள் தன் ரோமைய கிரேக்க கடவுளர்களுக்கு விசுவாசமாக இருகின்றாளா என்பதை சோதித்துப்பார்க்க அர்பன் அவளை அப்போலோவின் தேவாலயத்துக்கு அழைத்துச்சென்றான்.
" மகளே..இதோ நம் மூதாதையர்களான அனிச்சியர்கள் வழிபட்டு வந்த நம் தெய்வம் அப்போல்லோ...இதற்கு தீப தூப ஆராதனை செலுத்து" என்றான்.
" அப்பா..நான் சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்.. இந்த அப்போல்லோ தெய்வம் வெறும் கட்டுக்கதை. நம் முன்னோர்கள் இந்த அண்ட சராசரங்களையும், பரலோகம், பூலோகம் அனைத்தையும், இந்த மனிதர்கள் முதற்கொண்டு உயிர்வாழ்வன அனைத்தையும் படைத்த உண்மையான தேவனை யார் என அறியாமல் வணங்கிவந்த காரணத்தால் நாமும் வணங்க வேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்? இந்த உலகத்தில் யேசுநாதர் வந்தபிறகு அனைத்தையும் வெட்டவெளிச்சமாக அவர் அறிவித்து போயிருகிறார். அவரே உண்மையான தெய்வம். இதை கிறிஸ்த்துவர்கள் அறிந்து ஏற்றுக்கொள்வதால் அவர்கள் சொல்வதை இந்த உலகம் ஏற்றுக்கொள்வதில்லை. யேசுநாதரை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாததால் அவரை பின்பற்றும் கிறிஸ்த்துவர்களையும் இந்த உலகம் ஏற்றுக்கொள்வதில்லை. இதனால்தான் அவர்கள் தங்கள் உயிரையும்கொடுத்து உண்மைக்கு சாட்ச்சியம் அளிக்கிறார்கள். ஆடை இல்லாத மனிதர்களிடையே கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பதுபோலத்தான் இந்த கிறிஸ்த்துவர்களின் நிலையும். நானும் யேசுக்கிறிஸ்த்துவை என் கடவுளாகவும் என் எஜமானாகவும் என் பர்த்தாவாகவும் ஏற்றுக்கொண்ட காரணத்தால் நான் இந்த கட்டுக்கதை தெய்வத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு தீப தூப ஆராதனை எதுவும் காட்டவும் மாட்டேன் " என்றாள் கிறிஸ்டினா.
" ஓஓஓ...என் மகளே நீயும் கிறிஸ்த்துவளாக மாறிவிட்டாயா? இதன் விளைவு என்னவென்று உனக்கு தெரியுமா?" என்றான் அர்பன் என்னும் அவளது தகப்பன்.
" தெரியும் அப்பா... எனக்கு இதன் பின் விளைவு என்னவாகும் என்பது எனக்கு மிகமிக நன்றாகவே தெரியும். உண்மைக்கு பாசபந்தம் கிடையாது. உண்மை உண்மையாகவே இருக்க வேண்டும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல."
" என் மகளே..வேண்டாம் அம்மா..இந்த யேசுநாதர் உன்னையும் என்னையும் பிரித்துவிடுவார். பேசாமல் நான் சொல்வதைக்கேள்.. என் வயதான காலத்தில் எனக்கு இப்படி ஒரு சோதனையா? வேண்டாம் மகளே ... அந்த கிறிஸ்த்துவ மதத்தை விட்டுவிடு. நம் அனிச்சியர் குலத்தில் இதுவரை யாரும் இப்படி மாறியதில்லை. உனக்கு மட்டும் ஏன் இப்படி புத்தி மாறிப்போயிற்று?. உன் தகப்பனின் வார்த்தைக்கு மதிப்புகொடு...நான் ஊருக்கெல்லாம் ராஜா...எல்லோருக்கும் என்னைக்கண்டால் ஒரு பயமும் மரியாதையும் இருகிறது. நான் ஊருக்கெல்லாம் புத்திசொல்லிவிட்டு என்மகளே தவறான வழியில் போகின்றாள் என்றால் இந்த ஊரும் உலகமும் என்னைப்பற்றி என்ன நினைக்கும்... என் மரியாதை என்னவாகும் ...இதைப்பற்றி எல்லாம் நீ என்றாவது நினைத்துப்பார்த்தாயா?"
" அப்பா..உங்களுக்கு மரியாதைக்குறைவாக நான் என்றுமே நினைக்கவும் மாட்டேன் ..நடக்கவும் மாட்டேன்..நீங்களும் என்னைப்போல் யேசுநாதரை ஏற்றுக்கொண்டால் யேசுநாதர் நம்மை ஏன் பிரிக்கப்போகின்றார்?. இந்த உலகம் தரும் மரியாதை என்றும் நிலைத்திருக்கப்போவதில்லை. மரியாதை அன்பின்மீது வெளிப்பட வேண்டும். பயத்தின் மீதிருந்து அல்ல. அப்படி பயத்தின்மீதிருந்து மரியாதை வெளிப்பட்டால் அது போலியானதாக இருக்கும். அப்படியொரு மரியாதை நமக்கு எதற்கு? நம்மை முன்விட்டு பின்னே புறம்பேசும் மரியாதை நமக்கு வேண்டாம் அப்பா...உங்களுக்கு இந்தப்பதவி இருக்கும்வரைதான் அந்த போலியான மரியாதை இருக்கும். நீங்கள் பதவியை விட்டு இறங்கிவிட்டால் பிறகு உங்களை மனிதர் என்றல்ல... ஒரு தெருநாய்கூட சீண்டாது. இதுதான் உலகம். ஆனால் உண்மையான அன்பிருக்கும்பட்ச்சத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைத்தே தீரும். நம் அனிச்சியர் குலத்தில் யாரும் இதுபோல் மாறியதில்லை என்று கூறினீர்கள். கற்காலத்தில் நம் முன்னோர்கள் நிர்வாணிகளாய் இருந்தார்கள் என்பதற்காக நாமும்
இப்போது நிர்வாணமாகவா இருகிறோம். காலத்திற்குத்தகுந்தாற்போல் நாம் மாறவில்லையா. அதுபோலத்தான் அப்பா இதுவும். யேசுநாதர் காலத்தை பிறித்தவர்.அவர் போதனையும் அவர் வழிகாட்டுதலும்தான் உலகம் முடியும் வரை சரியாகத்தான் இருக்கும். மேலும் அவர் இப்படியாகத்தான் பிறப்பார். இப்படியாகத்தான் வளர்வார். இப்படியாகத்தான் மரணிப்பார் என்று அவருக்கு 800 ஆண்டுகளுக்கும் முன்பே இசையாஸ் என்னும் தீர்க்கதரிசி மிகச்சரியாய் கூறியிருப்பதால் யேசுநதரை கடவுள் என்று சொல்வதற்கு வேறு காரணம் வேண்டுமோ?. யேசுநாதர் மட்டும் சிலுவையில் அடிக்கப்பட்டு பாடுகள் பலபட்டு மரித்து உயிர்தெழாவிட்டால் நனோ மற்ற கிறிஸ்த்துவர்களோ அவரை கடவுள் என்று ஏற்றுக்கொண்டிருக்க மாட்டோம். இதற்கு வேறு சாட்ச்சியமும் தேவை இல்லை.
தன்மகள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்று அர்பனுக்கு தெரிந்திருந்தாலும் தன் பிறவிக்குணத்தால் மகள் என்றும் பாராது அவளை கடுமையான வார்த்தையால் வறுத்தெடுத்துவிட்டான். இருப்பினும் பெற்ற பாசத்தால் இனி அவளை மனம் மாற்ற முடியாது என முடிவுசெய்து அவள் போக்கிலேயே போய் அவளை எப்படியாவது தன்பக்கம் சாய்த்து விடவேண்டுமென முடிவு செய்து அவளை நன்றாக அலங்கரித்து தனி அறையில் அவளை வைத்து அந்த அறைமுழுக்க தங்க வைர நகைகளாள் ஜொலிக்கும்படி செய்தான்.
தன் குலதெய்வங்களின் தங்கச்சிலைகளை அந்த அறைமுழுவதும் பரப்பிவைத்தான். தன் மகள் வாலிப வயதை அடைந்துவிட்ட காரணத்தால் இந்த உலக வழக்கப்படி நகைகள்மீதும் அழகிய துணிகள் மீதும் அவளுக்கு நாட்டம் இருக்கும் என அவன் நினைத்தான். அவன் நினைத்ததுபடியே கிறிஸ்டியும் அழகிய ஆடைகள் அணிந்துகொண்டாள். அத்தனை நகைகளையும் அவள் அணிந்துகொண்டு பவனி வந்தாள்." நாம் நினைத்தது சரி... நம் மகள் மனம் மாறிவிட்டாள்" என அவள் தகப்பன் அர்பனும் மனம் மகிழ்ந்துபோனான். கிறிஸ்ட்டியை அவள் மனம்போன போக்கில் கொஞ்சநாள் சுதந்திரமாக விட்டான். ஆனால் எல்லாம் கொஞ்ச நாள் தான். அவள் அறை முழுக்க இருந்த அத்தனை தங்க வைர நகைகள் அனைத்தும் மாயமாய் மறைந்துபோனது. அவள் அறையில் இருந்த அத்தனை தங்க வைர சிலைகள் அனைத்தும் காணாமல் மறைந்துபோய் இருந்தது. அவள் அணிந்திருந்த அத்தனை உயர்தர ஆடைகள் அனைத்தும் காணாமல் போய் இருந்தது.
கிறிஸ்டினாவை சந்திக்க வந்த அவள் தகப்பனுக்கு இந்தனை பெரிய செல்வங்களும் காணாமல் போன விபரம் தெரிய வந்த போது பெரிதும் வருந்தினான். தன் மகளை அழைத்து," மகளே ... என்ன நடந்தது..இத்தனைசெல்வங்களும் காணாமல் போன விபரத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்தது ஏன்?" என்றான்.
" அப்பா... இத்தனை செல்வங்களும் ஒன்றும் காணாமல் போய்விடவில்லை. யாரும் திருடிக்கொண்டும் போய்விடவில்லை. நானாகத்தான் அவற்றை ஏழைகளுக்கு தானம் செய்து விட்டேன்...இத்தனை செல்வங்களையும் நீங்கள் என்னுடைய சொந்த உபயோகத்துக்காகத்தானே கொடுத்தீர்கள். அவைகள் என்னுடைய உறிமை சொத்துக்கள் தானே.?. எனவேதான் அவற்றை இல்லாத கிறிஸ்த்துவ ஏழை எளியவர்களுக்கு தானம் செய்துவிட்டேன்." என்றாள் கிறிஸ்டீனா.
" மகளே... இவ்வளவு சொத்துக்களையும் நான் சேர்க்க எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா.. அதற்கு எவ்வளவுகாலம் பிடித்தது தெரியுமா? எல்லாவற்றையும் வீனடித்துவிட்டாயே மகளே"
" அப்பா...மகளே கிறிஸ்டீனா என்று என்னை பெயர் சொல்லி கூப்பிடுங்கள். அதுதான் என் பரலோக பர்த்தா எனக்கு வைத்த பெயர்."
" யேசுகிறிஸ்த்துவே எனக்கு ஜென்ம விரோதி என்றாகிவிட்ட பிறகு அவரது பெயரை தாங்கி நிற்கும் உன்னை அந்த பெயர் சொல்லி கூப்பிட எனக்கு இஸ்ட்டம் இல்லை. பெற்ற தகப்பனிடமே எனக்கு திருட்டுகல்யாணம் ஆகிவிட்டது என்று கூற உனக்கு வெட்க்கமாக இல்லை. உனக்கு திருமணத்திற்கு சீராக கொடுக்க வேண்டிய அனைத்து சீதனப்
பொருட்க்களையும் இல்லாத ஏழை கிறிஸ்த்துவர்களுக்கு தானமாக வழங்கிவிட்டேன் என்று கூற உனக்கு எப்படி மனது வந்தது.? பெற்ற மகளிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம் என உன்னை சுதந்திரமாக உலவ விட்டதற்கு நீ எனக்கு காட்டும் நன்றிக்கடன் இதுதானா? என் என் குலத்தில் யாரையாவது விரும்பியிருந்திருந்தால் சந்தோஷமாக அவனை உனக்கு கட்டி வைத்திருப்பேன்.. ஆனால் நீ என் ஜென்ம விரோதியை அல்லவா திருமணம் செய்துகொண்டதாக கூறுகின்றாய்.. இதை நான் எப்படி ஏற்றுக்கொள்வது...முடியாது... முடியாது... உன்னையும் அந்த யேசுகிறிஸ்த்துவையும் என்னால் ஒருபோதும் மன்னிக்க முடியாது.. மயிலே மயிலே என்றால் இறகு போடுமா... போடாது... அது இறகு போடாது... ஆனால் அதை இறகு போட வைக்கிறேன். இன்று முதல் நீ எனக்கு மகளும் இல்லை... நான் உனக்கு தகப்பனும் இல்லை... நீயாக அந்த யேசுகிறிஸ்த்துவை விட்டுவிடுகிறேன்... என்னை மன்னியும் என்று சொல்லும்வரை நான் உன்னை விடப்போவதில்லை...நீ என்னை உன் தந்தையாகத்தானே இதுவரை பார்த்திருகிறாய்... ஆனால் நான் ஒரு கொடூர அரசன் என்பதை நீ இனிமேல்தான் பார்கப்போகின்றாய்... அடேய் யாரங்கே... இவளைப்பிடித்து சிறையில் போடுங்கள்" என்றான் அர்பன்.
" அப்பா...நீங்கள் ஒரு உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் எனக்கு கொடுத்தப்பொருள் அனைத்தும் அந்த கிறிஸ்த்துவர்களிடமிருந்து கொள்ளை அடித்தவைகள் தான். எனவேதான் அவற்றை நான் அவர்களுக்கே திருப்பிக்கொடுத்தேன். அதுதானே நியாயம். உங்களுக்கு அன்பு என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா..அதை என் யேசுகிறிஸ்த்துவிடமிருந்துகற்றுக்கொள்ளுங்கள்.இல்லாத ஒருவனுக்கு செய்யும் எந்த உதவியும் அது ஆண்டவனுக்கே செய்ததாகும் என்று அவர் கூறுகின்றார். என் பெயரை சொல்லிவரும் எவருக்கும் ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் எவரும் என்னிடமிருந்து ஒருபோதும் கைமாறு பெறாமல் போக மாட்டான் என்றும் கூறி இருகின்றார். நீங்கள் என்னையோ அல்லது என் நேச பர்த்தாவாகிய என் யேசுவையோ ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் விருப்பம். ஆனால் என்னிடமிருந்து மட்டும் உங்களாள் என் நாதராம் யேசுவை பிறிக்கவே முடியாது.இது என் யேசுநாதர் மேல் ஆணை... உங்களாள் முடிந்தால் செய்துகொள்ளுங்கள்" என்றாள் கிறிஸ்டி. அன்றிலிருந்து ஆரம்பமானது அவளது துன்பம்.
இதுவரை கிறிஸ்டினாவை மகளே என பாசமாக அழைத்துவந்த அவளது தகப்பன் அர்பன்," பெண்ணே.... நீ எனக்கு துரோகம் செய்யவில்லை. எம் தெய்வங்களுக்கு துரோகம் செய்துவிட்டாய். எனவே எம் தேவர்களின் சாபம் எல்லாம் உன்மீது இறங்கட்டும். அவர்களது கோபமெல்லாம் உன்மீது இறங்கட்டும்..அடேய் யாரங்கே... இந்தப்பெண்னை அம்மணமாக்கி இவள் உச்சந்தலைமுதல் உள்ளங்ககால்வரை சவுக்கால் அடித்து அவள் தோலை உறியுங்கள்" என்றான் அந்த அர்ப்பன். ஆசையாய் பெற்று வளர்த்த தகப்பனே அவளுக்கு ஜென்ம சத்துருவாகிப்போனால் அந்த விதியை என்னவென்று சொல்வது. அவ்விதமே அவனது ஆணை நிறைவேற்றப்பட்டது. அவள் திரேகமெல்லாம் ரத்த விளாறுகளாகிப்போனது. இதைக்கண்டும் திருப்ப்திபடாத அவளது தகப்பன் " அடேய்... இவளது முதுகிலும் மார்பிலும் இரும்பு ஊக்குகளை செலுத்தி அந்த காயங்களை பெரிதாக்குங்கள் . நான் நாளை வந்து இவளைப்பார்த்துக்கொள்கிறேன் " என்றான். அடுத்தநாள் வந்தது. அவளது திரேகத்தில் இன்னும் முழுமையாக அடிபடாத இடங்களைப்பார்த்து பெரிதும் கோபம் கொண்டான் அர்பன். அவள் திரேகங்களின் மீது இரும்பு சீப்புகளாள் அந்த தோலை வழித்து எடுக்க ஆணை பிறப்பித்தான்.
அவள் திரேகம் முழுவதிலும் இருந்த அத்தனை தோல்களும் முழுமையாக மிகவும் கொடூரமான முறையில் வழித்துவழித்து எடுக்கப்பட்டது. அந்த சிறைக்காவலர் பலர் இந்த அநியாயத்தைக்கண்டு பெரிதும் கலங்கினர். இந்த தோல் உறிக்கப்படும் வேதனையிலும் அவள் முகம் மலர்ந்தே காணப்பட்டது. வேதனையின் சுவடே அவள் முகத்தில் தெரியவில்லை. அவள் வாய் சில யேசுவின் ஜெய கீர்த்தனைகளை முனுமுனுத்துக்கொண்டிருந்தது. இதைக்கண்ட அவள் தகப்பன்," ஆஹா... உனக்கு வலிக்கவில்லையா..அடேய் இவள் வாயிலிருந்து வலிவேதனை வருமளவும் அவள் சதையை கிழியுங்கள் " என்றான். அவ்வாறே அவளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போதும் அவள் வாயிலிருந்து ஒரு முக்கலோ ஒரு முனகளோ வெளி வரவில்லை.எல்லாம் வல்ல இறைவன் அவளுக்கு வேதனைகளை தாங்கும் வல்லமையை தந்திருந்தார். அன்றிரவு அவளது சிறையில் ஒரு சம்மனசானவர் கிறிஸ்டியை சந்தித்தார். அவளைத்தொட்டு குணப்படுத்தி," கிறிஸ்டி, ஆண்டவறாம் யேசுகிறிஸ்த்துவின் பத்தினியே..ஆண்டவர் உன்மட்டில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ளார். நாளை நீ இன்னும் அதிக பாடுகள் படவேண்டி இருக்கும் ஆனால் கலங்காதே. ஆண்டவர் உன்னோடு இருப்பார். அந்த பாடுகளை நீ தாங்கும் வல்லமையை உனக்கு தருவார்.கலங்காதே" என்று கூறி மறைந்து போனார்.
அடுத்தநாள். நேற்று இரவே கிறிஸ்ட்டி ஆச்சர்யமான முறையில் குணமடைந்துவிட்டாள் என வாயில் காவலன் அர்பனுக்கு தெரிவித்ததால் அவன் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தான். " பெண்ணே..நீ என்ன மந்திர தந்திரங்களை செய்து உன்னை குணமாக்கிக்கொண்டாலும் இன்று என் கையில் நீ சாவது திண்ணம். இந்த சக்கரம் உனக்காகவே
உருவாக்கப்பட்டிருகிறது. அடேய் இவளை அந்த சக்கரத்தின் வெளி விளிம்பில் கட்டுங்கள் " என்றான். அவ்வாறே கிறிஸ்டினா அந்த சக்கரத்தின் வெளி விளிம்பில் நிர்வாணமாக்கப்பட்டு கட்டப்பட்டாள். பெற்ற தகப்பனே தன் மகளை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துவது எந்த நாட்டிலாவது நடந்திருக்குமா என்பது கேள்விகுறிதான். ஆனால் இந்த அக்கிரமம் நடந்தது.
கிறிஸ்டினாவின் உடம்பின்மீது தீப்பற்றி எரியக்கூடிய எண்னை பூசபட்டது. அந்த சக்கரத்தின் அடியில் தீ மூட்டப்பட்டது. அந்த சக்கரம் மெதுவாக அவளது மேனி தீயில் பரவும்படி சுழற்றப்பட்டது. தீ அவளது மேனியை எவ்வளௌ நேரம் சுட்டாலும் அவளுக்கு யாதொரு தீங்கும் நேராதபடி அவளைக்காத்தார் யேசுநாதர்.இந்த நேரத்தில் கிறிஸ்டினாவின் நாவு ஆண்டவரின் ஜெபகீர்த்தனைகளை எவ்வளவு சப்தமாக பாடமுடியுமோ அவ்வளவு சப்த்தமாக பாடியது. இந்த தண்டனையை நிறைவேற்றிய சிறைகாவலர்களின் கண்களிள் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது. ஆனால் அவளைப்பெற்ற தகப்பனோ வாயடைத்துப்போய் கல்லுளி மங்கனாக நின்றுகொண்டிருந்தான். இவ்விதமாக மாலைவரை அவள் தீயில் வாட்டப்பட்டும் தீ அவளை ஒன்றும் செய்யவில்லை. அன்றைய இரவில் கிறிஸ்டி அந்த சிறைச்சாலையில் பாதாள அறையில் அடைக்கப்பட்டாள். அந்த பாதாளாறையில் அவளது கழுத்தில் ஒரு பெரும் எந்திரக்கல் ஒன்று பிணைக்கப்பட்டு அவள் அதன்மீது நிற்க வைக்கப்பட்டாள். அந்த இரவு முழுவது கிறிஸ்டி அந்த எந்திரக்கல்லின்மீதே நிற்க வைக்கப்பட்டாள். ஆண்டவறாம் யேசுநாதர் அந்த கல்லின்மீது கிறிஸ்டியின் இரு பாதத்தின் சுவடுகளையும் பதிக்கச்செய்தார்.[ இன்றும் அந்தக்கல் கிறிஸ்டி அதன்மீது நின்றாள் என்பதற்கு சாட்ச்சியாக இருகின்றது].
தீ தன் மகளை ஒன்றும் செய்யவில்லை என்பதை நேரில் பார்த்திருந்தும் திருந்தாத அவளது தகப்பன் அர்பன் ஆண்டவறாகிய யேசுவின் அளவில்லாத வல்லமையையும் தயையையும் உணர மனதில்லாதவனாய் எப்படியும் இன்று அவளை கொன்றே தீர வேண்டும் என்னும் வெறியில் அந்த பாதாள அறையிலிருந்து கிறிஸ்டியை அந்த எந்திரக்கல்லை தூக்கியபடியே வெளி வரச்செய்தான். படகு ஒன்றை ஏற்பாடு செய்து அவளையும் அந்த எந்திரக்கல்லையும் அதில் ஏற்றி," பெண்ணே போய்வா..அனேகமாக இதுதன் நாம் சந்திக்குக்கும் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று கூறி அவளை அந்த போல்செனா என்னும் ஊரிலிருந்த ஆழமான ஏரியில் உயிரோடு அமிழ்த்தச்செய்தான். தண்டனை அவ்வாறே நிறைவேற்றப்பட்டது. சிறைக்காவலர்கள் கிறிஸ்டியை அந்த ஏரியின் ஆழமான பகுதிக்கு அழைத்துச்சென்று அந்த பாரமான எந்திரக்கல்லோடு அமிழ்த்தினர்.
கிறிஸ்டி அந்த போல்செனா ஏரியில் மூழ்கிப்போனாள். ஆனால் அன்று சிறையில் கிறிஸ்டியை அந்த சிறையில் சந்தித்த ஆண்டவரின் தூதன் அந்த போல்சேனா ஏரியில் இறங்கி கிறிஸ்டியை அந்த எந்திரக்கல்லுடன் வெளியே எடுத்துப்போட்டு மாலைவரை அவளை ரகசியமாக பாதுகாத்தார். இரவானதும் கிறிஸ்டி தன் தகப்பனை அவனது படுக்கை அறையில் சந்தித்தாள்.
" அப்பா...நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் என் நாதராம் யேசுவை என்னிடமிருந்து பிரிக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.. என்னை எவ்வளவோ சித்திரவதை செய்திருந்தும் அவரது வல்லமையால் நான் காபாற்றப்படவில்லையா.? இன்றுகூட நீங்கள் என்னை அந்த பாரமான எந்திரக்கல்லுடன் அந்த போல்சேனா ஏரியில் அமிழ்த்தி கொல்லவில்லையா.. ஆனால் ஆண்டவறாம் யேசுநாதர் என்னை காபாற்றினார். இப்போதும் அந்த எந்திரக்கல் அந்த போல்சேனா ஏரியின் கரையிலேதான் இருக்கிறது.இன்னும் ஏன் பிடிவாதம்?. ஆண்டவராம் யேசுவிடம் சரணடையுங்கள். அவரை கடவுளாக ஏற்றுக்கொள்ளுங்கள்.. அவரும் உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார். இதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்." என்றாள்.
ஆனால் அவள் தகப்பனோ இன்னும் பிடிவாதமாக ," அடிப்பெண்ணே...நீ இன்னும் சாகவில்லையா...நானாவது உன் யேசுவிடம் சரணடைவதாவது...அதற்கு வேறு ஆளைப்பார். எவனாவது கிறிஸ்த்துவன் அகப்பட்டால் அவனிடம் போய் இந்த கதையை கூறு... அடிப்பெண்ணே ...உன் மந்திரஜாலம் அனைத்தும் என் ஜூபிடர் தெய்வத்திடம் பலிக்காது.உன்னைக்கொல்லாமல் நான் விட மாட்டேன்... அடேய் யாரங்கே ...இந்த சிறுக்கியை பிடித்து சிறையில் அடையுங்கள் நாளைக்கு இவளை நான் கொல்லாமல் விடப்போவதில்லை... இது என் தெய்வம் ஜூபிடரின்மேல் ஆணை" என்றான். கிறிஸ்டி சிறையில் அடைக்கப்பட்டாள். அந்த இரவில் தன் அறையில் தன்னந்தனியாக ஏதேதோ பிதற்றிக்கொண்டிருந்தான் கிறிஸ்டியின் தகப்பன் அர்பன்." எல்லாம் வல்ல ஜூபிடர் தெய்வமே..ஏன் இன்னும் மௌனம்.. உம் கையிலுள்ள அந்த இடி ஆயுதத்தை அந்த யேசுவின்மேல் ஏய்ய வேண்டியது தானே...ஏன் உனக்கு தயக்கம். இதோ இப்போதே அந்த இடியை யேசுவின் மீது இறக்கு.. இறக்கு எனகத்தினான்...கத்திக்கொண்டே இருந்தான்.. இப்படியாகவே அவன் தூங்கிப்போனான்.அனால் அவன் தூங்கியவன் அப்படியே நிரந்தரமாக தூங்கிப்போனான். அடுத்த நாள் அவனை என்ன செய்தும் அவனை எழுப்பவே
முடியவில்லை. கண்கள் பிதுங்கி அவன் முகம் கோரமாகி மூக்கிலும் வாயிலும் ரத்தம் கக்கி இறந்துகிடந்தான்.
" விடாது கருப்பு"
தன் தகப்பன் அனாதையாக அவலமாக இறந்து போனான் என்பதை அறிந்த கிறிஸ்டினா மிகவும் வருந்தினாள். என்ன இருந்தாலும் அவன் அவளை பெற்ற தகப்பனல்லவா. " அப்பா..நீங்கள்.துர்மரணம் அடைந்து போனீர்களே அப்பா... யேசுநாதரை சரணடைந்திருந்தால் உங்களுக்கு இப்படி நேர்ந்திராதே. அவர் உங்களுக்கு தன் வல்லமையையும் அளவில்லாத தயையையும் காட்டி இருந்திருந்தும் அதை நீங்கள் ஏற்காமல் போனீர்களே. அவருடைய அளவில்லாத இரக்கத்தை வீனடித்துவிட்டீர்களே. அவர் நீங்கள் உணரவும் திருந்தவும் பலமுறை வாய்ப்புக்கொடுத்திருந்தும் அதை வீனே தவற விட்டு விட்டீர்களே.. நீங்கள் உலகமெல்லாம் ஆதாயமாக அடைந்திருந்தாலும் உங்கள் ஆத்துமாவை இழந்து முடிவில்லா துயரத்தை தேர்ந்துகொண்டீர்களே...நீங்கள் முடிவில்லா நரகத்துக்கு அல்லவா பாத்திரவான் ஆனீர்களே.. ஐயோ அப்பா... என மிகவும் அழுது புலம்பினாள்.
தன் தகப்பனோடு தன்னுடைய துன்பம் விலகிவிடும் என் நினைத்தவளுக்கு அடுத்து வந்தது பேராபத்து. விடாது கருப்பு என்பதுபோல அடுத்தடுத்துவந்தது பேராபாயம் .
ஆம்... ஆளுநன் அர்பன் மறைந்தான் என்றதும் அந்தப்பதவிக்கு வந்தான் ஒரு அயோக்கியன். அவன் பெயர் தியோ. அவன் பெயருக்கு தகுந்தாற்போல் பெரும் தீயவனாக விளங்கினான். தன் பேராசையாலும் தன் சுய நலனுக்காகவும் முந்தைய ஆளுநன் அர்பனைவிட அதிக உக்கிரமமாக கிறிஸ்த்துவர்களை தாக்கினான். இதற்காக தன் முந்தைய
ஆளுநன் அர்பனின் மகள் என்றும் பாராது கிறிஸ்டி ஒரு கிறிஸ்த்துவள் என்னும் ஒரே காரணத்துக்காக மீண்டும் அவளை சிறையில் அடைத்தான் தியோ. அடுத்தநாள் அவள் விசாரணைகாக ஆளுநன் முன்பாக நிறுத்தப்பட்டாள்.
" ஓஓஓ... பெண்ணே... நீதான் கிறிஸ்டியா..நீ உன் தந்தை என்றும் பாராது அவரை சபித்ததினால் தான் அவர் மரணமடைந்தார் என நான் சொல்ல கேள்விபட்டேன். உண்மையா?"
" ஆளுநரே... வீண் பேச்சு வேண்டாம்...நீர் என்னிடம் வேண்டுவது என்ன?"
" ஓ..பெண்ணே.. கிறிஸ்டினா...உனக்கு என்ன அழகு இல்லையா? அல்லது அறிவு இல்லையா? நீ ஏன் செத்த அந்த யேசுவை விடமாட்டேன் என்கிறாய். அவர் என்ன ஆவியாக வந்து உன்னை பிடித்துக்கொண்டாறா? பிறகு எப்படி இந்த கிறிஸ்த்துவர்கள் அவர் மீது இவ்வளவு பற்று கொள்கிறார்கள்? என் கேள்விக்கு தகுந்த விளக்கம் கொடுப்பாயா?" என்றான் தீயா.
" ஆளுநரே.. உம்மை நான் எச்சரிகிறேன். உம் பேச்சில் உள்ள கபடம் எமக்கு புறியாமல் இல்லை. நான் சொன்னாலும் நீர் அதை ஏற்றுக்கொள்ளவும் போவதில்லை. நீர் என்னை என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளலாம். ஏற்கனவே என் தந்தையார் இதில் தோல்வி கண்டுவிட்டார். உன்னால் முடிந்ததை செய்துகொள்" என்றாள் கிறிஸ்டி.
" ஓ பெண்ணே..நீ கோபப்பட்டாலும் அதிலும் ஒரு அழகு இருகின்றது." என்றவன் திடீரென கடுப்பாகி ," ஆனால் ஒன்றை நன்றாக நினைவில் கொள். நான் உன் தந்தை அர்பன் போன்றவன் அல்ல. உன் தந்தை உனக்கு கொடுத்த தண்டனையைபோல் பலமடங்கு கடுமையான தண்டனையை நான் உனக்கு கொடுப்பேன். இருப்பினும் என் மனதிலும் ஈரம் இருகின்றது என்பதை மற்றவர்களுக்கும் புறியவைக்க வேண்டும் என்பதற்காக உனக்கும் ஒரு சந்தர்ப்பம் தருகிறன். மன்னிப்பு கேட்டுக்கொள். எம் முன்னோர் வணங்கும் தெய்வங்களுக்கு தூப தீப சாம்பிராணி காட்டு" என்றான் தீயா.
" அடே அடி முட்டாள்... நான் என்னைப்பெற்ற தந்தையிடமே மன்னிப்பும் கேட்டதில்லை.. உயிர் பிச்சையும் கேட்டதில்லை. எனக்கு உயிர் வாழவேண்டும் என்னும் ஆசையும் இல்லை. இதற்காகவா உன்னிடம் நான் மன்னிப்புக்கேட்ப்பேன். போய் வேலையை பார்" என்றாள் கிறிஸ்டி.
ஒரு பனிரெண்டு வயதுப்பெண் தன்னிடம் பணிந்து போகாமல் இத்தனை பேர் முன்னியிலும் தன்னை அவமானப்படுத்திவிட்டள் என்றுணர்ந்த ஆளுநன் தீயா," அடிப்பெண்னே.. உன்னை என்ன செய்கிறேன் பார்" என்றவனாக "அவளை கொதிக்கும் என்னைக்கொப்பறையில் தூக்கிப்போடுங்கள் " என்று ஆணை இட்டான். தண்டனை உடனே நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒரு பெரும் எண்ணை கொப்பறை தயார் செய்யப்பட்டது. அதில் தாரும் எண்னையும் ஊற்றப்பட்டு நன்றாக கொதிக்க விடப்பட்டது.
சிறைச்சாலை வீரர்கள் நம் கிறிஸ்டினாவை அதில் போட தூக்கி வந்தார்கள். அப்போது கிறிஸ்டி," வீரர்களே... இப்போது எனக்கு நன்றாக நினைவுக்கு வருகின்றது. இப்படித்தான் ஒரு வருடத்துக்கும் முன்பாக நான் ஞானஸ்நானம் பெறும்போது என்னை தண்னீரில் அமிழ்ந்தினார்கள்." என்றாள். பிறகு தன் மீதும் அந்த கொதிக்கும் எண்னை கொப்பறையின்மீதும் சிலுவை அடையாளம் வரைந்து," ஆண்டவரே... யேசுகிறிஸ்த்துவே...நீரே எமக்குத்துதுணை... இனிமேல் எல்லாம் உம் சித்தப்படியே எனக்கு ஆகட்டும் " என்றாள். பிறகு வீரர்கள் நம் கிறிஸ்டியை அந்த கொதிக்கும் எண்னைகொப்பறையில் தூக்கிப்போட்டார்கள்.. உடனே தீ நாலா பக்கமும் கொழுந்து விட்டு எரிந்தது.
அந்த கொதிக்கும் எண்னைக்கொப்பறையில் என்ன நடக்கிறது என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அதிலிருந்து தெரித்த எண்ணையும் நெருப்பும் அருகிலிருந்த காவலாளிகள் மீது பட்டு அவர்களில் பலர் துடித்துதுடித்து செத்தார்கள். அவர்களைப்பற்றிய தீ அருகிலிருந்தவர்களையும் பற்றி எரித்துக்கொண்றது. தீயின் ஜுவாலைகள் அடங்கியபிறகு நம் கிறுஸ்டி கொதிக்கும் அந்த எண்னைக்கொப்பறையில் எவ்வித சேதமும் அடையாமல் ஜெபித்துக்கொண்டிருந்ததை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் கண்டு, " கிறிஸ்டி வாழ்க...கிறிஸ்டி வணங்கும் தெய்வமே உண்மையான தெய்வம்... அந்த தெய்வம் வாழ்க " என ஜெய கோஷம் எழுப்பினர். ஆளுநன் தீயா வெட்கி தலை குனிந்தான். கிறிஸ்டியின் ஆடைகூட தீயால் சேதமுறாமல் ஆண்டவறாகிய யேசு நாதர் அவளைக்காத்தார். மக்கள் அனைவரும் ஜெயகோஷத்துடன் கிறிஸ்டியை வரவேற்பதைக்கண்ட ஆளுநன் வெகுண்டு அவர்கள் அத்தனை பேரையும் கைது செய்தான். கொதிக்கும் எண்ணைக்கொப்பறையிலிருந்து வெளிவந்த கிறிஸ்டியை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தான் அந்தக்காதகன் தீயா.
அடுத்த நாள். ஒரு பெரும் திறந்த வெளி மண்டபத்தில் நடு நாயகமாக நிற்கவைக்கப்பட்டிருந்தது அப்போல்லோ தேவனின் பிரம்மாண்டமான சலவைகல் சிற்பம். ஏறாளமான மக்கள் அந்த அரங்கத்தில் இருந்த கல் மேடைகளில் அமர்ந்திருந்தார்கள். ஆளுநன் தீயா தனக்கே உறித்தான ஆசனத்தில் அமர்ந்திருந்தான். பல கிறிஸ்த்துவர்கள் தங்களுக்கு விசுவாச பிரமாணம் எடுக்க வேண்டி அங்கே கைதியாக நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள். கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டு அந்த அபோல்லோ தெய்வத்திற்கு சாம்பிராணி காட்டாதவர்கள் அப்போதே அங்கேயே அந்த அப்போல்லோ தெய்வத்திற்கு பலியாக தலை வெட்டிக்கொல்லப்பட்டார்கள். அன்று கொண்டுவரப்பட்டிருந்த அனேகமாக எல்லா கிறிஸ்த்துவர்களும் தலை வெட்டிக்கொல்லப்பட்டபிறகு கடைசி முறையாக கொண்டு வரப்பட்டது நம் கிறிஸ்டினாதான். கிறிஸ்டி வந்ததும் அந்த அரங்கத்திலிருந்த மக்கள் அனைவரும் " ஹோ...ஹோ...ஹோ" என கூச்சல் எழுப்பினர்.
அப்போது ஆளுநன் தீயா," என்ன பெண்னே கிறிஸ்டி. உனக்கு முன்னே சென்ற அத்தனை கிறிஸ்த்துவர்களின் கதியைப்பார்த்தாயா....என்ன பயமாக இருகிறதா.? இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை.அந்த அப்போல்லோ தெய்வத்திற்க்கு சாம்பிராணி காட்டி உயிர்பிச்சை பெற்றுக்கொள் " என்றான்.
அபோது கிறிஸ்டியின் முகம் பயங்கரமாக கோபாவேசம் கண்டது." அடேய் முட்டாள் தீயா... உன் தயவு எனக்குத்தேவை இல்லை. எனக்கு முன்னே சென்றவர்கள் இதோ வீர மரணம் அடைந்து எல்லாம் வல்ல என் தேவனுக்கு முன்பே நிற்கிறதைக்காண்கிறேன். இதோ அவர்கள் சிரசில் எம் தேவன் யேசுநாதர் வேத சாட்ச்சிகளுக்கான மணிமுடியை சூடுவதையும் காண்கிறேன். என்ன சொன்னாய்... பயம் எனக்கா... பயம் எனக்கில்லை. அதோ தன் சுய ரூபத்தைக்கண்டால் இந்த மக்கள் தன்னை வெறுத்து ஓடிவிடுவார்கள்
என அந்த அப்போல்லோ சிலைக்குள்ளே ஒளிந்துகிடகிறானே சாத்தான் அவனுக்குத்தான் பயம். இதோ நான் ஆணையிடுகிறேன். எல்லாம் வல்ல என் தேவனாகிய யேசுநாதர்மேல் ஆணை. இந்த அப்போல்லோ சிலைகுள் ஒளிந்துகிடக்கும் சாத்தானே வா வெளியே.. உன் சுய ரூபத்தைக்காட்டு... இத்தனை ஆண்கள் பெண்கள் முன்னியிலும் அம்மணமாக நிற்கும் அபொல்லோ சிலையே உனக்கு வெட்க்கமாக இல்லை. ஒழிந்து போ " என்று அதன்மீது யேசுவின் சிலுவை அடையாளம் வரைந்தாள் கிறிஸ்டி. அவ்வளவுதான்.
அந்த அம்மணமான அப்போல்லோ சிலை உயிர் பெற்று எழுந்தது. அத்தனை பேர் முன்னியிலும் தான் அம்மணமாக நின்றதை உணர்ந்ததோ என்னவோ அப்படியே சடேரென திரும்பியது . அந்த திருப்பத்தால் அதன் அடி பீடம் உடைந்து டமேர் என்னும் பெரும் சப்த்தத்துடம் ஆயிரம் சுக்கலாக தெறித்து விழுந்தது அந்த அப்போல்லோ சிலை. இந்த அதிசயத்தைக்கண்ட மக்கள் பெரும் கூச்சலிட்டுக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். திடீரென எங்கிருந்தோ வந்தது ஒரு பெரும் இடி. அது மிகச்சரியாக அந்த தீய ஆளுநன் தீயாவின் மீதே இறங்கியது. அந்த இடியால் அவன் தீய்ந்து உருகுலைந்து செத்தான்.
அப்போது மேலும் ஒரு பயங்கரம் நிகழ்ந்தது. அந்த பிரம்மாண்டமான அப்போல்லோ சிலை ஆயிரம் சுக்கலாக விழுந்து அதன் தூசுகள் வானில் எழும்பவே அதைத்தொடர்ந்து வானில் ஒரு பெரும் கரும் புகை மண்டலம் எழுந்தது. அந்த கரும்புகை மண்டலம் ஒன்றாக கூடி ஒரு பெரும் அரக்கப்பாம்பாக மாறி நெருப்பைக்கக்கிக்கொண்டு பெரும் கூச்சலிட்டுக்கொண்டு வானில் சென்று மறைந்தது. இந்த பயங்கரத்தைக்கண்ட மக்கள் எல்லோரும் " கிறிஸ்டினா வாழ்க.. கிறிஸ்டினா வாழ்க..நீர் வணங்கும் தெய்வமே உண்மையான தெய்வம் " என்று ஜெயகோஷம் எழுப்பினர். தாங்கள் கண்ட அந்த பயங்கர காட்ச்சிகளான அரக்கப்பாம்பின் தோற்றமும் நீண்டு நெடிதுயர்ந்த அந்த அப்போல்லோ தேவனின் நிர்வாண சிலை சுக்கு நூறாக தெறித்து விழுந்த விதமும் மனித அர்க்கனாக வாழ்ந்த தீயாவின் கோர மரணமும் மக்கள் மனதில் பெரும் பயங்கரத்தை ஏற்படுத்தின. மேலும் ஆண்டவறாகிய யேசுநாதரின் வல்லமையையும் பரிசுத்தவதி கிறிஸ்டினாவின் பக்த்தியும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்ததால் அந்த டஸ்கனி பட்டிணத்தின் மக்கள் பலர் அப்போதே தங்கள் இல்லம் சென்று தங்கள் இல்லங்களில் இருந்த அன்னிய தெய்வங்களின் சிலைகளை சுக்கு நூறாக உடைத்துபோட்டுவிட்டு ஆண்டவறாகிய யேசுநாதரை கடவுளாக ஏற்றுக்கொண்டனர். இப்படியாக சில காலம் எல்லாம் நல்லபடியாகதான் சென்றது அடுத்த ஆளுநன் வரும் வரை.
" மீண்டும் விடாது கருப்பு"
சில காலம் கழித்து அந்த டஸ்கனி பட்டிணதின் ஆளுநறாக பதவி ஏற்றான் ஒரு கொடியவன். அவன் பெயர் ஜூலியன். அவன் தன் முன்னால் ஆளுநர்களின் முடிவைப்பார்த்து பெரும் திகிலுற்றான் என்றாலும் தான் அந்த ஆளுநர்களைப்போல நடந்துகொள்ளாவிட்டால் தான் இந்த கிறிஸ்த்துவர்களிடம் தோற்றதுபோல் ஆகிவிடும் என்றும் அதனால் இந்த நகர மக்கள் தன்னை மதிக்காமல் போய்விடுவார்கள் என்று எண்ணி தான் அவர்களின் முன்னாள் ஆளுநர்களைவிட இன்னும் கடுமையாய் நடந்துகொள்ள வேண்டும் என்னும் முடிவுக்கு வந்தான். அதைத்தொடர்ந்து மீண்டும் ஆரம்பித்தது வேதகலாபணை. இந்த முறை நம் கிறிஸ்டினாவை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தான் ஆளுநன் ஜூலியன்.
இந்த முறை நம் கிறிஸ்டினாவுக்கு முன்னைவிட அதிகமான கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்த ஜூலியன் அவளை பெரும் அக்கினிக்குண்டத்தில் இறக்கினான். கிறிஸ்டினா தன் பரலோக பர்த்தாவாம் யேசுநாதரை வேண்டிக்கொண்டு அந்த பெரும் அக்கினிக்குண்டத்தின்மீதும் தன்மீதும் யேசுவின் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டு இறங்கிவிட்டாள். இவ்விதமாக அவள் அந்த அக்கினிக்குண்டத்தில் ஐந்து நாட்கள் அளவாக யேசுநாதரின் ஜெபகீர்த்தனைகளை பாடிக்கொண்டிருந்தாள். அந்த அக்கினி அவளை ஒன்றும் செய்யவில்லை. இதைக்கண்ட ஆளுநன் அஞ்சி அவளை அந்த அக்கினிக்குண்டத்திலிருந்து வெளியேற்றினான். ஆனால் அவனை வெறியேற்றினான் ஒரு மந்திரவாதி. இந்த கிறிஸ்டீனா ஒரு பெரும் மந்திரவாதி என்றும் அவளை தன் மந்திர சக்த்தியால் தான் அடக்கிவிடமுடியும் என்றும் அவளை தன்னிடம் ஒப்படைத்தால் அவளை அடக்கிகாட்டுவதாகவும் கூறினான்.
அந்த மந்திரவாதியின் பேச்சைக்கேட்ட அந்த ஆளுநன் ஜூலியன் அவன் சொற்படி கிரிஸ்டியை ஒரு தனிமை சிறையில் அடைத்தான்.அந்த மந்திரவாதியும் அவனது மந்திரசக்த்தியை உபயோகித்து பலவிதமான நச்சுப்பாம்புகளையும் நட்டுவாக்காளிகளையும் அவள் மீது ஏவினான். ஆனால் கிறிஸ்டினாவின் ஜெபத்தின் முன்னால் அந்த விஷப்பாம்புகளும் விஷஜந்துக்களும் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் வெறுப்புற்ற அந்த மந்திரவாதி கிறிஸ்டினாவின் ஜெபமே இதற்குக்காரணம் என்றுணர்ந்து அவளது நாவை வெட்டினான். ஆனாலும் கிறிஸ்டீனா தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தாள். கடைசியாக கிறிஸ்டீனா தன் பரலோக பர்த்தாவிடம் தனக்கு இந்த உலக வாழ்க்கையை முடித்து பரலோக பாக்கியம் அளிக்கும்படி மன்றாடினாள். அவளது வேண்டுதல் கேட்கப்பட்டது.
அதன்படி கிறிஸ்டீனா ஒரு திறந்த வெளியில் அமைக்கப்பட்ட ஒரு மரத்தோடு பிணைக்கப்பட்டாள். கிறிஸ்டீனாவை அம்பால் அடித்துக்கொல்லும்படி உத்திரவிடப்பட்டது. பல அம்புகள் அவள்மீது எய்யப்பட்டன. அதில் ஒரு அம்பு அவள் இதயத்தை துளைத்தது. பெரும் இரத்தப்பெருக்குஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நம் கிறிஸ்டீனா மயங்கினாள். சற்று நேரத்தில் அவளது ஆண்மா பரலோகப்பிராப்த்தி அடைந்தது. ஆண்டவறாகிய யேசுநாதர் தன் விசுவாசமான பத்தினியை தன் பரலோக வீட்டிற்கு அழைத்துச்சென்று வேத சாட்ச்சி முடி அணிவித்தார். இது நடந்தது கி.பி.300 ஜூலை 24 ஆம் தேதி.
கிறிஸ்டீனாவின் பெற்ற தகப்பன் உட்பட மூன்று ஆளுநர்கள் கிறிஸ்டீனாவின் விசுவாசத்தை அசைத்துப்பார்த்தும் அவர்களாள் முடியாமல் போனது. அக்காலத்தில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அவளுக்கு புனிதர் பட்டம் கொடுத்து கௌரவித்தது. நம் புனிதை கிறிஸ்டீனாவின் திரு உருவம் வத்திக்கான் அரண்மனையின் முகப்பில் அமைக்கப்பட்டிருக்கும் 140 புனிதர்களின் சிலைகளில் ஒருவராக இவரையும் வைத்திருகின்றது.
அக்கால கிறிஸ்த்துவர்கள் நம் கிறிஸ்டீனாவின் திருவுடலை ஒரு சலவைகல் பெட்டியில் போட்டு பூச்சிதமாக அடக்கம் செய்தார்கள். புனித கிறிஸ்டீனாவின் கழுத்தில் கட்டப்பட்ட அவள் பாதம் இரண்டும் பதிந்துள்ள அந்த பெரும் எந்திரக்கல்லும் அவளுடன் அடக்கம் செய்யப்பட்டு இருந்தது. அவளைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்லறை பலகாலங்களுக்குப்பிறகு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு இப்போதும் பெரும் ஆடம்பரமாக போற்றப்பட்டு டஸ்கனியில் உள்ள அந்த போல்சேனா நகரில் உள்ளது.
நம் புனிதை கிறிஸ்டீனாவின் கல்லறை அமைந்துள்ள இடத்தில் அவள் பாதம் இரண்டும் பதிந்துள்ள அந்த எந்திரக்கல் வக்கப்பட்டிருக்கும் இடத்திலுள்ள பலிபீடத்தில் கி.பி.1263ல் பரேகு நகரத்திலிருந்து வந்திருந்த பீட்டர் என்னும் ஒரு பாதிரியாருக்கு பலிபீசை செய்யும் போது அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது இந்த திவிய நற்கருணையில் யேசுநாதர் உண்மையிலேயே ஆத்மா சரீரத்துடன் இருகின்றாறா என்னும் சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அந்த பூசையின் எழுந்தேற்றத்தின்போது அவரது கையிலிருந்த திவிய நர்கருணையிலிருந்து மள மளவென யேசுநாதரின் ரத்தம் கொட்டி வழிந்தோடியது. அது அவர் கையின்மீதும் அவர் அணிந்திருந்த அங்கியின் மீதும் பலிபீடத்தின் மீதிருந்த துணிகளின்மீதும் அதையும் மீறி அந்த பலிபீடத்தின் சலவைக்கல்லின்மீதும் வழிந்தோடியது அன்று சிந்திய யேசுவின் திரு ரத்தம் தோய்ந்த அந்த ஆடைகளும் அந்த பலிபீடத்தின் சலவைகல்லும் இன்றுவரை உள்ளது. சுவாமி யேசுநாதர் செய்த இந்தப்புதுமையால் நம் புனிதை கிறிஸ்டியின் கல்லறை கோயிலுக்கு பெரும் மகிமை ஏற்பட்டது. நம் புனிதை கிறிஸ்டினாவின் கல்லறைக்கோயிலுக்கு வரும் திருயாத்திரிகர்கள் அவளது சமாதியையும் அவளது பாதம் பதிந்த அந்த எந்திரக்கல் அடங்கியுள்ள அந்த பலி பீடத்தையும் ஸ்வாமி யேசுநாதர் ரத்தம் சிந்திய அந்த சலவைக்கல் பீடத்தையும் அவசியம் பார்த்துச்செல்கின்றார்கள். தற்போது இந்த சலவைக்கல் பீடத்திலிருந்த அந்த சலவைகல்லை பெயர்த்து எடுத்து டஸ்கனியில் உள்ள ஒவிடோ என்னுமிடத்தில் உள்ள அழகிய திவ்ய நற்கருணைக்கோவிலில் வைத்திருகிறார்கள்.
புனித கிறிஸ்டெனாவின் சில அருளிக்கங்கள் இப்போதும் சிசிலியிலுள்ள பலிர்மோ கத்தீற்றலிலும் அவரது கபாலம் மிலான் பட்டிணத்திலும் உள்ளது.
புனித கிறிஸ்டீனம்மாவே எங்களுக்காக வேண்டிகொள்ளும். ஆமென்.
No comments:
Post a Comment