" புனித
தோமையார் எழுப்பிய
அதிசய
மணல்
மாதா ஆலயம்
" .2.
" மூன்று
ராஜாக்கள்."
[ நேயர்களுக்கு இந்த இடத்தில் மூன்று ராஜாக்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. யேசுநாதர் பிறந்த உடன் அவரை சந்திக்க வந்த மூன்று ராஜாக்களில் மிகவும் வயதானவரும் மிகவும் தொலைவிலிருந்து வந்தவருமான அரசரின் பெயர் காஸ்பார். இவர் இந்தியாவிலிருந்து வந்தவர். இவருக்கு இந்தியாவில் தென்பாண்டி நாடும் அடுத்து இலங்காவில் யாழ்பாணமும் இவரது ராஜ்ஜியங்களாகும். அன்றைய தென்பாண்டி நாடு எனப்படுவது திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரிவரை பரவி இருந்தது. தென் பாண்டி நாட்டிலும் யாழ்பாணத்திலும் இவருக்கு பெரிய கந்தப்பராசா என்றும் இவருடைய இளைய சகோதரர் சின்ன கந்தப்ப ராஜா என்றும் அழைத்தனர். கந்தப்ப ராசா எனப்படுவது கிரேக்கத்திய பாஷையில் கந்த்பார் என்றாகி பிறகு கஸ்பார் என மருவி விட்டது.
மூன்று ராஜாக்களீல் மிகவும் இளம் வயதினராக இருந்தவர் பெயர் செயீர்.. இவர் யேசுநாதர் தன் 33 ஆம் வயதில் அரேபியாவுக்கு வந்து இந்த மூன்று ராஜாக்களையும் சந்திக்க வரும் முன்பே இறந்துவிட்டார். இவருக்கு பல்த்தசார் என்றும் ஒரு பெயர் உண்டு.
அடுத்தவர். மெல்கியோர். யேசுநாதர் தன் கடைசி வருட வேத போத அலுவலில் அரேபியாவுக்கு வந்தபோது இந்த மெல்கியோர் என்னும் ராஜாவையும் காஸ்பார் என்னும் வயதான ராஜவையும் சந்தித்ததாக திருக்காட்ச்சியாளர் புனித காத்தரின் எம்மரிக் என்னும் கன்னிகா ஸ்த்ரீ கூறுகின்றார். யேசுநாதரை சந்தித்த பிறகு இந்த இரண்டு ராஜாக்களும் தத்தம் நாடுகளுக்கு திரும்பி விட்டனர்.
இந்த மூன்று ராஜாக்களான கஸ்பார், மெல்கியோர், பல்த்தசார் என்பவர்களுக்கு வேறு வேறு கால கட்டங்களில் வேறு வேறு பெயர்களும் சூட்டப்பட்டன. இத்தகைய பெயர்கள் அவர்களுடைய குணாதிசயங்களை வைத்தே அவர்களுக்கு சூட்டப்பட்டுள்ளதாக புனித காத்தரின் எம்மரிக் கூறுகின்றார்.
கஸ்பார் என்றால் இவர் அன்போடு செல்கின்றவர் என்றும்,
மெல்க்கியோர் என்றால் அவர் தேடும் காரியங்களில் நிதானமாக செல்பவர் என்றும் பல்த்தஸார் என்றால் அவர் தேடும் கடவுள் சம்பந்தப்பட்ட காரியங்களில் உடனடியாக முடிவுகளை எடுப்பவர் என்றும் பொருள்படும். மேலும் தானியேல் 5 ஆகமத்தில் பல்ஷெஷார் என்பது ஈரானியர்களின் பெயர்களாக வருகின்றது. இவர் ஈரானை சேர்ந்த சோராஸ்ட்டிரராக இருக்கக்கூடும். இரானியர்களும் சோராஸ்ட்டிரர்களும் நெருப்பையும், சூரிய சந்திர, நட்ச்சத்திர கூட்டங்களையும் வழிபடுபவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேற்கூறிய இந்த மூன்று ராஜாக்களின் பெயர்களும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்புவரை அறிந்திருக்கப்பட வில்லை. இந்த மூன்று ராஜாக்களின் பக்தி ஆரம்பித்த பிறகே இத்தகைய பெயர்கள் இந்த மூன்று ராஜாக்களூக்கு இத்தாலியர்களாள் சூட்டப்பட்டது.
மேலும் இவர்கள் அப்பேலியுஸ், அமாரியுஸ் , டமாஸ்க்கஸ் என்று கிரேக்க பாஷையிலும் கல்கலாத், மல்கலாத்,சராத்தின் என்று எபிரேய பாஷையிலும் அழைக்கப்படுகின்றனர்.]
மன்னர் மெல்க்கியோர் அக்காலத்தில் அரேபியா முதல் இந்தியா வரையிலான தேசங்களுக்கு மன்னராக இருந்தார். நம் தோமையாரும் ஹப்பானும் இந்த தக்ஷச்சீலம் துறைமுகப்பட்டிணத்திற்கு வந்த போது கடற்கறையிலிருந்து தலை நகரம் வரை பெரும் விழாக்கோலம் பூண்டிருந்தது. காரணம் மன்னர் மெல்க்கியோருடைய ஒரே மகளுக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இந்த விழாவுக்கு பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். உள் நாட்டுத்தலைவர்கள் முதல் யாரும் அறியாத பரதேசிவரை அனைவருமே இந்த மன்னருடைய திருமண வை போகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். தென் பாண்டி நாட்டின் கந்தப்பராஜாவின் பிரதிநிதியாக நம் ஹெப்பானும் கலந்து கொண்டதினால் அவருக்கும் நம் தோமையாருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. நம் தோமையாரை பொறுத்தவரையில் அவர் யாருமே அறியதவர். எனவே அவர் தனியே சென்று ஒரு இடத்தில் சாய்வாகவும் ஓய்வாகவும் அமர்ந்துகொண்டார்.
விருந்துக்கு முன்பாக இசையும் நடனமும் நடைபெற்றது. ஒரு எபிரேயப்பெண் தன் புல்லாங்குழலினால் அழகான ஒரு எபிரேயப்பாடலை வாசித்தால். நம் தோமையாரும் ஒரு யூதர் அல்லவா... எனவே அவரும் அவளது குழலின் இசைக்குத்தக்கபடி ஒர் அழகான எபிரேயப்பாடலை பாடினார். அந்தப்பாடல் ஆண்டவர்மீது அழகாக ஒரு வாழ்த்துப்பாடலாக அமைந்தது. என்ன பாடுகின்றோம் என்று தோமையாருக்கும் என்ன வாசிக்கிரோம் என்று அந்தப்பெண்ணுக்கு மட்டுமே தெரியும்.
இந்த சந்தர்ப்பத்தில் விருந்து பரிமாறுபவன் ஒருவன் வந்து தன் கரங்கள் இரண்டையும் விரித்துக்கொண்டும் அசைந்தாடிக்கொண்டும் தோமையாரின்மீது சற்றும் மரியாதையின்றி அவரை தட்டிச்சென்றான். அவனைப்பொருத்தவரை அவர் யாரோ ஒரு பரதேசி. போனவன் போனவன்தான் அவன் மீண்டும் உள்ளே வரவே இல்லை. அப்போது தோமையார் தம் எபிரேய பாஷையில் " போ...போ..என்னைத்தட்டிய உன் கையை ஒரு நாய்தான் உள்ளே கொண்டுவரும் " என்று பாடினார். இதைக்கவனித்த அந்த எபிரேயப்பெண் திடுக்கிட்டாள். தன் வாசிப்பை நிறுத்திவிட்டு அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று கவலையோடு தனியே சென்று அமர்ந்துவிட்டாள். சற்று நேரத்தில் நடந்தது அந்த பயங்கரம்.
தோமையாரை தட்டிச்சென்றவன் தனியே ஒரு இடத்திற்கு ஓய்வுக்கு போனான். அங்கே ஒரு பெரும் கரடி அவனுக்காக காத்திருந்தது. அங்கே வந்தவனை ஒரே பாய்ச்சலில் கடித்துக்குதறி அவனை கைவேறு கால்வேறாக சிதைத்துப்போட்டு கொண்றது. பின் ஓடிவிட்டது. அங்கே வந்த ஒரு நாய் அந்த மனிதனுடைய ஒரு கையை கெளவிச்சென்று விருந்து மண்டபத்தில் போட்டது.
அது தோமையாரை தட்டிச்சென்றவனின் கை. தன் மகளின் திருமண நாளில் தன் சிப்பந்தி ஒருவன் ஒரு கரடியால் கொல்லப்பட்டுவிட்டதால் கல்யாண மண்டபமே அல்லோகல்லோகப்பட்டது.
மன்னர் மெல்க்கியோருக்கு இது மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியது. இது எப்படி நடந்தது என்று அறிய வந்த மன்னர் நம் தோமையாரை தனியே அழைத்துச்சென்றார். அவர் காலடியியில் வீழ்ந்து " ஐய்யா.... தாங்கள் யார் ..தாங்கள் பெரும் தவ சீலர் என்பதை நான் உணருகிறேன்... தயவுசெய்து தாங்கள் யார் என எங்களுக்கு தெரிவியுங்கள்" என்றார்.
" ஐயா மன்னர் பெருமானே... நான் பாலஸ்த்தீனாவை சேர்ந்தவன். யேசுநாதர் என் எஜமான். என் ஆண்டவரும் அவரே...என் கடவுளும் அவரே. இந்தியாவை என் ஆண்டவர் தெரிந்துகொண்டதால் அவரது அரசைப்பரப்ப நான் ஹெப்பானுடன் செல்கின்றேன். என் தலைவனும் என் எஜமானுமாகிய யேசுநாதர் பிறந்திருந்தபோது அவரை சந்திக்க வந்த மூன்று ஞானிகளுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவும் அவர்தம் நாடுகளிள் யேசுவின் இறை அரசை பரப்பவும் இயேசுநாதரால் எனக்கு அதிகாரமும் கட்டளையும் கொடுக்கப்பட்டிருகின்றது." என்றார்.
" என் ஆண்டவரே என் தேவனே...நீர் யூதேயாவின் சிங்கமாகிய யேசுநாதரின் சீடரோ? ஆஹா... நான் பேறு பெற்றவன்... இந்த யூதாவின் சிங்கம் பெத்லகேமில் குகையில் மாட்டுக்கொட்டகையில் குழந்தையாய் பிறந்திருந்தபோது அவரை ஆராதிக்க கிழக்கிலிருந்து மூன்று ஞானிகள் வந்தார்கள் அல்லவா... அவர்களில் அடியேனும் ஒருவன். செயீர் என்றும் பல்த்தசார் என்றும் அழைக்கப்பட்ட அந்த சோராஸ்டிர மன்னர் இரண்டு வருடம் முன்பே இறந்துவிட்டார். காஸ்பார் என்றும் தியோகினோ என்றும் அழைக்கப்படும் கந்தப்பராசா என்னும் மன்னர் தம் நெடு வயதிலும் இன்னும்
தென்பாண்டி நாட்டில் உயிரோடே இருகின்றர். ஆஹா என் ஆண்டவரின் சகோதரரும் அவரின் அப்போஸ்த்தலருமான தோமையாரை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தயவு செய்து என்னையும் என் மகளையும் அவளது கணவரையும் வாழ்த்தி ஆசீர்வதியுங்கள் " என்றார்.
" மன்னர் மெல்கியோர் அவர்களே...தாங்களும் என் ஆண்டவராகிய யேசுநாதரை காணவந்த மூன்று ராஜாக்களில் ஒருவர் என்று அறியும் போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அப்படியானால் நாம் உம்முடைய நாட்டில் யேசுநாதரைப்பற்றிய போதனையை அறிவிப்பதில் எந்த தடையும் இருக்காது எனவும் நம்புகிறேன். என்கடமை யேசுநாதரின் அரசை நான் போகும் இடங்களில் எல்லாம் அறிவிப்பதுதான். கேட்க்க செவி உள்ளோர் கேட்க்கட்டுமே " என்றார்.
" எம் நாட்டில் நம் தலைவராம் யேசுநாதரின் அரசை போதிப்பதில் யாதொரு தடையும் இல்லை. இருப்பினும் இந்த துக்க காரியம் முடித்து நம் மகளின் திருமண வைபோகம் எல்லாம் நல்ல விதமாய் முடியட்டும் " என்றார் மெல்கியோர்.
அதன்படியே கரடி தாக்கி கொண்றவனின் சடலம் அவனுடைய அங்க ஈனமாகிய கை கால்களை எல்லாம் சேர்த்து ஒன்றாக்கப்பட்டது. அப்போது தோமையார் அந்த சடலத்திற்காக நம் ஆண்டவராகிய யேசுநாதரிடம் மன்றாடத்துவங்கி அவன்மீது பரிசுத்த சிலுவை அடையாளம் வரைந்தார். உடனே அந்தப்புதுமை நடந்தது. கரடி தாக்கி அங்க ஈனமாகி செத்தவன் உயிர் பெற்றான்.
இதைக்கண்ட யாவரும் பெரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். அவனை உயிர்பித்த ஆண்டவராம் யேசுவுக்கு அனைவரும் நன்றி செலுத்தினர். பின் தோமையார் மணமக்களை ஆசீர்வதித்தார். ஆனால் ஒரு நிபந்கனை விதித்தார். மணமக்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுத்த கன்னித்தன்மை அனுசரிக்க வேண்டும் என்பதே அது. கடவுள் நிகழ்த்திய புதுமையின் மகிமையைக்கண்ட மணமக்கள் மிகவும் சந்தோஷமாக இதற்கு ஒப்புக்கொண்டார்கள். அக்காலத்தில் பாலஸ்த்தீனாவில் எஸ்ஸீனியர்கள் என்று ஒரு பரிசுத்தவான்களின் கூட்டம் இருந்தது. புதிதாக மணமுடித்த தம்பதிகள் கூட தாம்பத்தியம் வைத்துக்கொள்ளாமல் சுத்த கருத்துடன் தங்கள் கன்னித்தன்மையை கடவுளிடம் ஒப்புக்கொடுத்து குறிப்பிட்ட காலம் வரை அங்கே தவமிருப்பார்கள். இதில் விஷேஷம் என்னவேன்றால்
கணவனும் மனைவியும் சேர்ந்தே அங்கே தவமிருப்பர். கடவுள் திருமுன் அவ்வளவு புலனடக்கமும், சுத்த கட்டுப்பாடும், அவ்வளவு தவ மனவலிமையும் அவர்களுக்கு இருந்ததே அதற்கு காரணம்.
இந்த கடின மனவலிமையை இத்தகைய தவ முயற்சியின் பலனாக பெற்றுக்கொண்டவர்களை எந்த சாத்தானாலும் அசைக்கமுடியாது. கானாவூர் கல்யாண மாப்பிள்ளை புனித நாத்தானியேல் பார்த்தலேமு தம்பதிகள் கூட திருமணம் முடிந்தவுடன் மூன்று ஆண்டுகாலம் சுத்த கன்னித்தன்மையுடன் தவமிருந்தார்கள் என்பது சரித்திரம் நமக்கு காட்டும் உண்மை.
மெல்க்கியோரின் மகளும் அவள் கணவரும் தோமையாரிடம் ஞாஸ்நானம் பெற்றுக்கொண்டனர். இப்போது மெல்கியோரின் மகள் பெலாஜியா என்றும் அவளது கணவர் டென்னிஸ் என்றும் ஞாஸ்நானப்பெயர் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அவரது மன்னரும் தகப்பனாருமாகிய மெல்க்கியோர் அப்போது ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவருடன் குழந்தை யேசுவை ஆராதிக்க வந்திருந்த இந்திய மன்னர் கந்தப்பராசா என்னும் தியோகினோ இன்னும் உயிருடன் இருப்பதால் அவரோடு தானும் சேர்ந்து ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதாக தெரிவிதார். பின் தன் நாட்டு மக்கள் அனைவரோடும் சேர்ந்து தோமையாரை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார்.
" இது சிலோன் "
பெத்லஹேமில் பிறந்திருந்த குழந்தை இயேசுவைக்காண வந்திருந்த மூன்று அரசர்களுல் ஒருவர் கஸ்பார் என்பவர் ஆவார். இவர் அக்காலத்தில் சிலொனில் அமைந்திருக்கும் யாழ்பானத்திற்கும் தமிழ் நாட்டிலுள்ள மானவீர நாட்டிற்கும் அரசராக விளங்கினார். மான வீர நாடு என்பது அக்காலத்தில் மதுரை பேரரசை ஆண்ட உக்கிரம பெருவழுதி என்னும் மன்னனுடைய தென்பாண்டி சிற்றரசு ஆகும். இந்த மான வீர நாடு என்பது திருச்செந்தூரிலிருந்து உவரி செல்லும் சாலையில் 39 கி.மி. தொலைவில் உள்ளது. இங்கேதான் காஸ்பார் என்னும் கந்தப்பராஜாவினுடைய அரசு இருந்தது.
இந்த கந்தப்ப ராஜா சிலோனில் பெரிய பெருமாள் என்றும் அவரது இளைய சகோதரர் சின்ன பெருமாள் என்றும் அழைப்பட்டிருந்தனர். குழந்தை இயேசுவை சந்திக்க வந்திருந்த மூன்று ராஜாக்களில் இந்த கந்தப்ப ராஜா என்னும் கஸ்பாரும் ஒருவர். இந்த மூன்று அரசார்களுள் மிகவும் தூர தேசத்திலிருந்து வந்தவர் இவர்தான் என சரித்திரம் கூறுகின்றது. நாற்புறமும் கடலால் சூழப்பட்டுள்ள ஒரு தீவிலிருந்து இவர் வந்தார் என திருக்காட்ச்சியாளர் புனித காத்தரின் எம்மரிக் என்னும் கன்னிகா ஸ்த்ரீ கூறுகின்றார். சிலோன் தீவானது அதன் வடக்கு கிழக்கில் வங்காள விரிகுடாக்கடலாலும் தெற்கிலும் மேற்கிலும் இந்து மஹா சமுத்திரத்தாலும் சூழப்பட்டுள்ள ஒரு தீவாகும். இத்தகைய ஒரு பின்னனியோடு திருப்பாடல் 72-8-11 வரை தியானிப்போம்.
" ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்ச்சி செலுத்துவார். பேராற்றலிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.
பாலைவெளி வாழ்வோர் அவர் முன் குனிந்து வணங்குவர். அவர் எதிரிகள் மண்ணை நக்குவர்.
தார்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளை கொண்டு வருவர்கள்.
சேபாவிலும் சேபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளை கொண்டு வருவார்கள்.
எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவர். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்."
இதில் செபா நாடு எனப்படுவது இன்றைய எத்தியோப்பியா நாடு என்றும் இன்னும் சிலர் அது சவுதி அரேபிலுள்ள யேமன் நாட்டுக்கு அருகில் உள்ள நாடு என்றும் கூறுகின்றனர். .இரண்டுமே பாலைவன நாடுகள் இந்த எத்தியோப்பா அக்காலத்தில் அபிசீனியா என்றும் அழைக்கப்பட்டது. இந்த எத்தியோப்பியா நாட்டில் சாம்பிராணிக்காடுகள் அதிகம். மேலும் வாசனை திரவியங்களுக்கும் தங்கம் வைரம் வைடூரியம் என நவரத்தினங்களுக்கும் பெயர் பெற்றது. மாமன்னர் சாலமோனை காணவந்திருந்த சேபா ராணி இந்த நாட்டை சேர்ந்தவர்தான். தென் திசைகளின் ராணி என்று யேசுநாதராலேயே பாராட்டப்பட்டவர் இவர்தான். [ தென் திசைகளின் ராணி எழுந்துவந்து கண்டணம் செய்வாள். இதோ சாலமோனைக்காட்டிலும் பெரியவர் இங்கே இருகின்றார் என்னும் வசனங்களை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.] ஆக சாலமோன் பேரரசரின் திருப்பாடல்கள் யேசுவின் பிறப்பையும் மூன்று ராஜாக்களின் வருகையையும் இயேசு பிறப்பதற்க்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே அவர் எவ்வளவு துல்லியமாக கூறியிருகின்றார் என்பது அவரது ஞானத்தை பறைசாற்றுகின்றது. நல்லது. மீண்டும் நாம் கதைக்கு வருவோம்.
" உவரி துறைமுகம்."
அக்கால தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அடுத்தபடியாக சிறந்து விளங்கிய துறைமுகம் உவரி. இந்த கடற்கறை உவரியிலிருந்து கந்தப்பராஜாவின் அரண்மனையும் கோட்டையும் அமைந்திருந்த கணக்கன் குடியிருப்பு வழியாக மேற்கே பல மைல் தூரத்திற்கு அக்காலத்தே நம்பியாறு என்னும் ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது. இந்த நதியின் வழியாகவே தோமையாரும் அவர் எஜமானன் ஹெப்பானும் கணக்கன் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தனர். அரசருடைய அனைத்து துறைகளுக்கான தலைமை செயலகம் இந்த இடத்தில் அமைந்திருந்ததால்தான் இந்த இடத்திற்கு கணக்கன் குடியிருப்பு என பெயர் வந்தது. இவர்கள் வந்து சேர்ந்த சமயம் கஸ்பார் என்னும் பெயர்கொண்ட அரசர் கந்தப்ப ராசா அங்கே இருந்தார். அரசரை அவருடைய காரியதரிசியும் அமைச்சருமான ஹெப்பான் முறைப்படி வணங்கினார். அவர் நம் தோமையாரை இவ்விதமாக அரசருக்கு அறிமுகப்படுத்தினார்.
" எங்கள் பெருமதிப்புக்குறிய அரசே, இவர் பெயர் திதிமூ எனப்படும் தோமையார். இவரை உம்முடைய நண்பராகிய யேசுநாதர் தங்களுக்கு 20 தினாரியத்துக்கு விற்று விட்டதாக என்னிடம் கூறினார்.
இவரது வயதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இவருக்கு அனைத்து கலைகளும் தெரியும். சிறந்த தச்சர், சிறந்த கட்டுமான நிபுணர், சிறந்த மருத்துவர். இப்படி இவருக்கு பல கலைகள் தெரியும். எனவே உங்களுடைய காரியங்களுக்கு இவர் நன்றாக உதவுவார் என்று யேசுநாதர் என்னும் கணவான் என்னிடம் கூறியதாலேயே இவரை நான் உங்களிடம் கொண்டு வந்திருகிறேன்.
இதோ இந்த அடிமையை உங்களிடம் விற்றதற்கான பத்திரம்." என்றார்.
இதைக்கேட்ட மன்னர் கஸ்பார் ஒருபுறம் மகிழ்ந்தாலும் மறுபுறம் வேதனைப்பட்டார். அவர் தோமையாரை நோக்கி," ஐய்யா... தோமையாரே..உம்மை இங்கே கொண்டு வந்து சேர்ப்பதற்காகவே எம்
தலைவர் யேசுநாதார் உம்மை என்னிடம் அடிமையாக விற்று இருகின்றார். நான் யேசுநாதர் குழந்தையாக பிறந்திருந்தபோது அந்த மாட்டுத் தொழுவத்திலவரை ஆராதிக்க வந்திருந்த மூன்று ராஜாக்களில் ஒருவனாக இருந்தேன். உலகையே படைத்த அந்த கடவுள் இந்த உலகத்தில் மனிதாவதாரம் எடுத்து வந்த அந்த தெய்வீக காட்ச்சியைக்கண்டேன். அவருடைய அப்போஸ்த்தலரா நீங்கள். கேட்க்கவே என் மனதில் ஆனந்தப்பரவசம் தோன்றுகின்றது. என் ஆன்மா பேருருவகை கொண்டுள்ளது. இப்போது அவர் எங்கே இருகின்றார்?. .எப்படி இருகின்றார். நான் கடைசியாக அவரை சந்தித்தது அரேபியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான். அப்போது அவர் எப்படி இருந்தார் தெரியுமா.?. என்ன கனிவான முகம்.. எத்துனை ஆஜானுபாகுவமான திரேகம்.. நான் இறப்பதற்கு முன்னால் அவரை எப்படியாவது சந்தித்துவிட விரும்பினேன். ஆனால் என் வயோதிகம் என்னை தடை செய்கிறது. அடடா ...நான் என் ஆண்டவரின் தோழரை வரவேற்காமல் நான் ஏதேதோ பேசிக்கொண்டிருகின்றேன் " என்றார்.
அப்போது ஹெப்பான் அவரது அரசிரடம்," அரசே...தோமையார் உம்முடைய அடிமை " என்றார். இதைக்கேட்ட கஸ்ப்பார் என்னும் கந்தப்பராசா, இருக்கட்டும் . எங்கே கொடு அந்த அடிமை விற்ற பத்திரம்.?" எனறார். ஹெப்பானிடம் அந்த பத்திரத்தை வாங்கிப்படித்த அரசர் கஸ்பார். ஆம் ... இது என் தலைவனும் ஆண்டவருமான யேசுகிறிஸ்த்துவின் கை எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று வாங்கி அதை தம் கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு அவர் ," ஐய்யா தோமையாரே... தங்கள் இன்று முதல் அடிமை இல்லை...நீவீர் எம் எஜமானரின் ஊழியர் அல்லவா... இன்மேல் தாங்கள் எம் நண்பர்.... ஆமாம்...தாங்கள் பல தொழில் வல்லுனர் என்று ஹெப்பான் சொல்லக்கேட்டு மிக்க மகிழ்ச்சி.. உங்களுக்கு என்னென்ன தொழில்கள் தெரியும்? என்றார்.
அதற்கு தோமையார்," அரசே... உமக்கு என்னுடைய வந்தனம்..நான் அரண்மனை கட்டுவேன், கப்பல் கட்டுவேன்... தேர்கள் கட்டுவேன்...நான் பெரும் சித்திரக்காரன், மருத்துவன் இப்படியாக ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு பல தொழில்கள் தெரியும்" என்றார்.
இதைக்கேட்டு மகிழ்ந்த மன்னர் கந்தப்ப ராசா," அடடா... நான் இப்படிப்பட்ட ஒரு தொழில் நிபுணனை அல்லவா தேடிக்கொண்டிருந்தேன்...அடேயப்பா ஹெப்பான் எனக்கு நல்ல ஒரு வேலையாளாகத்தான் தேடிக்கொண்டு வந்திருக்கிறாய்" என்று ஹெப்பானை பாராட்டவும் செய்தார். பிறகு," தோமையாரே... எனக்கு வெகு நாட்க்களாக இந்த கணக்கன் குடியிருப்பில் பெரியதொரு அரண்மனை கட்ட வேண்டும் என்று ஒரு ஆசை. என் உள் மனத்தில் ஒரு பிரும்மாண்டமான ஒரு அரண்மனை சதா தோன்றிக் கொண்டே இருகின்றது. அதைப்போல உன்னால் கட்ட முடியுமா?" என்றார்.
அவரை சற்று நேரம் உற்று நோக்கிய தோமையார்," அரசே இது ஒரு பெரிய காரியம் அல்ல.. உங்கள் மனத்தில் உள்ள அரண்மனை இப்படியாகத்தானே இருகின்றது ?" என்று அங்கேயே ஒரு குச்சியை எடுத்து அங்கிருந்த மணலில் ஒரு வரைபடம் தயாரித்து அதை அவரிடம் வி ளக்கினார். இந்த வரைபடத்தையும் அதன் அமைப்பையும் கண்ட மன்னர் கந்தப்ப ராசா," ஆஹா... அற்புதம்... இதைப்போலவேதான் நான் மனதில் ஒரு அரண்மனையை கட்ட விரும்பினே..இதை உம்மால் எப்படி அறிய முடிந்தது?" என்றார்.
" அரசே... தங்களைப்போலுள்ள அரசர்கள் இப்படித்தான் ஆசைப்படுவார்கள் என்பது எனக்குத்தெரியும்... ஆனாலும் நான் இதுவரை எந்த அரசர்களிடமும் இப்படி ஒரு வரைபடத்தை தயாரித்துக்கொடுத்ததில்லை" என்றார் தோமையார்.
" ஆம்...நான் கட்டும் இந்த அரண்மனைப்போல் வேறொன்று இருக்கக்கூடாது. இதற்கு ஆக வேண்டிய செலவு எவ்வளவு... என்னென்ன பொருட்க்கள் வேண்டும் என்பனவற்றை எனக்கு விபரமாக கூறுங்கள் சிலவைப்பற்றி கவலைப்பட வேண்டாம்..." என்றார் மன்னர் கந்தப்ப ராசா.
தோமையார்," அன்று மாலையில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது யேசுநாதர் அவர் முன் தோன்றி," தோமையே... நாளைக்கு காலையில் இந்த ராஜாவையும் இந்த ஊர் மக்களையும் நான்
காண விரும்புகின்றேன். நாளைக்கு நான் ஒரு பெரும் அதிசயம் உன்வழியாக செய்யப்போகின்றேன். அதற்காக இந்த இடத்தில் இத்தனை மணிக்கு மக்கள் அனைவரையும் மன்னருடன் ஆஜர் படுத்து " என்று சொல்லி மறைந்தார்.
இதன்படியே மன்னர் முதல் மக்கள் அனைவரும் யேசுநாதர் சொல்லிய இடத்திற்கு வந்தனர். பெரும் கூட்டம் கூடிவிட்டது. அப்போது தோமையார்," என் அன்பார்ந்த கந்தப்ப ராசாவே..இந்நாட்டு மக்களே... இந்த இடத்தில் என் ஆண்டவ்ரும் என் கடவுளுமாகிய யேசு நாதர் இப்போது ஒரு பெரும் அதிசயம் செய்யப்போகின்றார். இதைக்காணூம் உங்கள் கண்கள் பேறு பெற்றவை" என்றார்.
அப்போது அங்கிருந்த மக்கள் ஒரு பெரும் முட்புதருக்கு அடியில் ஒரு வாலிபன் இறந்திருக்கக்கண்டனர். அவன் கொடும் விஷப்பாம்பினால் கடிபட்டு இறந்திருக்க வேண்டும். அவன் திரேகம் முழுவதும் நீலம் பாரித்திருந்தது.
அப்போது தோமையார்," மக்களே இவனைப்பாருங்கள்.. இவன் கொடும் விஷ நாகம் தீண்டி இறந்திருக்கின்றான். அப்படியானால் இவனைக்கடித்த அந்த ராஜ நாகமும் இங்கேதான் இருக்க வேண்டும் என்றார். அப்போது அவனைத்தீண்டிய ராஜ நாகம் மெதுவாக அதன் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்தது. மக்கள் அனைவரும் அவர்கள் ஆயுளில் இப்படிப்பட்ட ஒரு நாகப்பாம்பை பார்த்திருக்க மாட்டார்கள். எனவே அதைக்கண்ட மாத்திரத்தில் பயந்து அலறி ஓட்டமெடுத்தனர். அப்போது தோமையார்," மக்களே பயப்படாதீர்கள். அது உங்களை ஒன்றும் செய்யாதபடிக்கு நான் மந்திரம் செய்து அதன் வாயைக்கட்டுவேன். எல்லோரும் இங்கே வாருங்கள்" என்றார். மக்கள் அனைவரும் அவர் பின்னே வந்து சேர்ந்தனர். அவர் பின்பு அந்த ராஜநாகத்தை பார்த்து," பாம்பே...நீ யார் என எனக்குத்தெரியும்.என் ஆண்டவரின் மீது ஆணை. எனக்கு பதில் கூறு... ஏன் இவனை தீண்டினாய்?" என்றார்.
அப்போது அந்தப்பாம்பு," இவன் என்னை வழிபடும் ஒரு பெண்ணோடு இச்சைகொண்டு பாவம் செய்தான். அதனால் நான் அவனைக்கொண்றேன்" என்றது.
" சரி.. இப்போது நான் என் ஆண்டவராகிய யேசுவின் பெயரால் உனக்கு கட்டளையிடுகின்றேன்...இவன் விஷத்தை வெளியே எடு" என்றார்.
அப்போது அந்தப்பாம்பு அவனைக்கடித்த இடத்திலிருந்து விஷத்தை உறிஞ்சி எடுத்தது. முழுவிஷத்தையும் எடுத்தபின் அந்த விஷம் தனக்கு ஏறி அந்தப்பாம்பு செத்தது.
மீண்டும் தோமையார், " அந்த இளைஞனுக்காக யேசுவிடம் மன்றாடினார். அப்போது யாரும் அதிசயிக்கும்படியாக அந்தப்புதுமை நிகழ்ந்தது. ராஜநாகம் தீண்டி இறந்த வாலிபன் மீண்டும் உயிர் பெற்றான்.
அவனை நோக்கி தோமையார்," இளைஞனே, நீ ஏன் அந்தப்பெண்ணுடன் பாவம் புறிந்தாய்.?" என்றார்.
அவன் ," என் ஆண்டவரே...நான் நானாக பாவம் செய்யவில்லை. அந்தப்பாம்பு அந்தப்பெண்ணுடம் சேரும்படியாக எனக்கு இச்சையை தூண்டியது. அதனால் நான் பாவத்தில் வீழ்ந்தேன். உடனே அது என்னை கடித்துவிட்டது. என்னை மன்னியும்." என்றான்.
" இளைஞனே.. இதுதான் சாத்தானின் தந்திரம். முதலில் அது இச்சையை தூண்டும். காரியம் முடிந்ததும் அது தன் வேலையை காட்டிவிடும். சரி.. இனிமேலும் பாவம் செய்யாதே...கவனமாக இரு" என்றார். அப்போது அந்த இளைஞன்," ஐய்யா... நான் உயிர்த்தெழுந்ததும் உம்முடன் ஒரு வெண்ணாடை அணிந்த ஒரு தாடிக்காரர் ஒருவர் உம்முடன் இருப்பதைப்பார்த்தேன். ஆனால் அவர் இப்போது இல்லை. அவர் யார்?" என்றான். அதற்கு தோமையார், "இளைஞனே... அவரே உனக்கு உயிர் அளித்தவர்..அவர்தான் யேசுகிறிஸ்த்து. அவரே இந்த அகில உலகையும் படைத்தவர்."
நம்முடைய மன்னர் கஸ்பார் அவர்கள் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கும் முன்னால் இந்த அகில உலகையே ஆள வந்துள்ள மாமன்னர் பெத்லஹேமில் பிறந்துள்ளார். இதோ இப்போது தோன்றியுள்ள வால் நட்ச்சத்திரம் அவரது பிறப்பை கூறுகின்றது என்று அவரை சந்திக்க சென்றார். அவர் கடவுளுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபித்து தன் முப்பத்து மூன்றாம் வயதில் சிலுவையில் அறையுண்டு பாடுகள் பல பட்டு மரணமடைந்தார். அவரது சீடர்கள் இந்த உலகின் பல பாகங்களுக்கும் சென்று அவரது இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க சென்றுள்ளார்கள். அவர்களில் ஒருவன் தான் நான்... இப்போது இந்த நாட்டில் யேசு கிறிஸ்த்துவின் அரசை போதிக்க வந்திருகின்றேன். என்றார்.
இந்த புதுமையைக்கண்ட மக்கள் எல்லோரும் யேசுநாதரையும் அவருடைய அப்போஸ்த்தலர் தோமையாரையும் வாயாரப்புகழ்ந்து சென்றனர். பலர் அப்போதே யேசுநாதர் மேலும் தோமையார் மேலும் பெரும் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டனர். மன்னர் கந்தப்ப ராசா சிங்கராயர் எனப்படும் லியோ என்னும் ஞானஸ்நானப்பெயர் பெற்றார். இப்படியாகப்பல நாட்க்கள் கடந்தன.
மன்னர் கந்தப்ப ராசா இலங்கையில் தன்னுடைய ராஜாங்கமாகிய யாழ்பானத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. எனவே தன் சகோதரன் சின்ன பெருமாளை அழைத்து தன்னுடைய கருவூலத்தின் சாவியை ஒப்படைத்து அதில் எப்போதெல்லாம் தோமையார் அரசருக்கு அரண்மனை கட்ட பணம் கேட்கின்றாரோ அப்போதெல்லாம் தவறாமல் பணம் கொடுக்கும்படி கட்டளையிட்டுச்சென்றார். இப்படியாக பல காலம் சென்றன. தோமையார் கணக்கில் அரசாங்க கணக்கிலிருந்து பெரும் பணம் அரண்மனைகட்ட செலவாகியிருந்தது. ஆனால் தோமையார் அங்கே கணக்கன் குடியிருப்பில் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்கவில்லை. இதனால் கணக்கன் குடியிருப்பின் சின்ன அரசர் எனப்படும் சின்ன கந்தப்பராசா முழுவதும் கவலை அடைந்தார். தான் கொடுக்கும் அரசாங்கப்பணம் எல்லாம் எங்கே போகின்றன என்பது பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். இருப்பினும் தான் ஒரு நாள் தோமையாரிடம் வாய்விட்டே தன் கவலையை வெளியிட்டார்.
அப்போது தோமையார்," உம் சகோதரருக்கான அரண்மனை மிகப்பிரம் மாண்டமாய் அமைந்து வருகின்றது " என்றும் சீக்கிரமே அது முடிந்து விடும் என்றும் அப்போது அதை அவருக்கு காட்டுவதாகவும் கூறினார். ஆனால் உள்ளபடியே தோமையார் கணக்கன் குடியிருப்பில் ஒரு செங்கல்லைக்கூட தூக்கி வைக்கவில்லை. அங்கு அரண்மனை கட்டுவதற்காக வாங்கிய பணத்தை எல்லாம் புதிதாக மனம் மாறிய கிறிஸ்த்துவர்களின் முன்னேற்றதிற்காகவும் பல இடங்களில் தேவாலயம் கட்டுவதற்காகவுமே செலவிட்டிருந்தார். தன் சகோதரர் பெரிய பெருமாள் எனப்படும் கந்தப்ப ராசாவை இந்த தோமையார் நன்றாக ஏமாற்றுவதாக உணர்ந்த சின்ன பெருமாள் நிலைமையை விளக்கி பெரிய பெருமாள் எனப்படும் கந்தப்ப ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதி அதில் யேசுநாதரின் சீடர் எனப்படும்
தோமையார் அவரை நன்றாக ஏமாற்றுவதாகவும் அவரே வந்து நிலைமையை நேரில் பார்த்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் கேட்டுக்கொண்டார். தன் சகோதரன் சின்ன பெருமாள் எழுதியிருந்த நிரூபத்தை பார்த்து விஷையம் அறிந்துகொண்ட பெரிய கந்தப்ப ராஜ மிகவும் வருந்தினார். என்னதான் யேசுநாதர் மீதும் அவரது அன்புசீடர் தோமையார் மேலும் அவருக்கு பெரிதும் நம்பிக்கையும் விசுவாசமும் அன்பும் இருந்தாலும் அரசாங்கம் காசு பணம் என்று வரும்போதும் தாம் ஏமாற்றப்படுகின்றோம் என்று அறியவரும் போதும் யாருடைய மனமும் மாறிவிடும்.
இப்படியாகத்தான் தன் சகோதரனின் நிரூபத்தைக்கண்ட கந்தப்பராசர் மனதில் அமைதி குறைந்தது. இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும் என்ற கந்தப்ப ராசர் தானே நேரில் வந்து விசாரிப்பதாக மறுகடிதத்தின் மூலம் அறிவித்தார். தன் ராஜ்ஜிய பரிபாலனங்களாய் எல்லாம் யாழ்பானத்தில் முடித்துவிட்ட கந்தப்பராசர் மீண்டும் தென்பாண்டி நாடாகிய கணக்கன் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தார்.
கணக்கன் குடியிருப்புக்கு வந்து சேர்ந்த பெரிய கந்தப்ப ராசாவுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. அங்கே ஒரு செங்கல் வரிசை கூட அடுக்கி வைக்கப்பட்டிருக்காதது கண்டு மிகுந்த வருத்தம் அடைந்தார். ஆயினும் அவர் யேசுநாதரின் மீது வைத்திருக்கும் பற்றின் காரணமாக தோமையாரிடம்," ஐய்யா... தாங்கள் எனக்காக பெரும் அரண்மனை ஒன்று கட்டியிருப்பதாக கூறினீர். ஆனால் எனக்கு ஏமாற்றம் அடையும்படியாக இங்கு ஒரு செங்கல் வரிசைகூட நீர் கட்டவில்லையே.. எங்கே என் அரண்மனை ? என் பணம் எல்லாம் வீணாயிற்றா ? " என்றார்.
" அண்ணா... இந்த தோமையார் உம்மையும் என்னையும் நன்றாக ஏமாற்றி விட்டார். அரண்மனை கட்ட கொடுத்த செல்வம் எல்லாம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை.. நான் உம் மீது வைத்திருந்த பக்த்தியினால் தான் இது வரை பொறுத்திருந்தேன். இந்த மோசக்காரனை நன்றாக அடித்து உதைத்து விசாரியுங்கள். அப்போது தான் இது அவருக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பெரும் பாடமாக இருக்கும்" என்றான்.
அப்போது தோமையார்," நண்பா... அமைதி அடைவாயாக. நீங்கள் கொடுத்த பணத்திற்கும் மேலாக நான் உழைத்து பெரும் அரண்மனை கட்டியிருகின்றேன். அதை நீயே பார் " என்றார்.
அப்போது சின்ன பெருமாள் எனப்படும் கந்தர்ப்பராஜாவின் சகோதரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சடுதியில் இறந்தான். தன் சகோதரனின் திடீர் மரணம் குறித்து மன்னர் மிகுந்த விசனம் அடைந்தாலும் தோமையார் பேரில் பெரிதும் கலங்கம் கூறியதாலேயே தன் சகோதரனுக்கு மரணம் சம்பவித்தது என்றுணர்ந்த பெரிய கந்தப்ப ராசா மிகுந்த துக்கத்துக்கு ஆட்பட்டு தோமையாரின் பாதம் பணிந்தார்.
" என் ஆண்டவரின் அன்பு சீடராகிய தோமையாரே, என் சகோதரன் மேல் மிகவும் இரக்கமாயிரும். அவன் அறியாமால் பிழை ஏதும் செய்திருந்தால் அவனை மன்னியும். அவன் சார்பாக நானும் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து அவனுக்கு உயிர் பிச்சை தாருங்கள். இது தங்களால் முடியதது அல்ல. அன்று பாம்பு கடித்து செத்தவனை தேவரீர் உயிர்பிக்கவில்லையா. என் சகோதரன் அறியாமல் செய்த பிழை எதுவாயினும் அவனை மன்னித்து உயிர் பிழைக்க செய்யும் " என்று மன்றாடினார்.
" கந்தப்பரே... எமக்கு உம்மேல் வருத்தம் ஏதும் இல்லை. இது யேசுநாதரின் கட்டளை. யாவும் அவர் விருப்பப்படியே நடை பெறுகின்றது. இறந்ததாக கூறப்படும் உம் இளைய சகோதரன் சின்ன பெருமாள் இப்போது உயிருடன் வருவான்... சின்ன கந்தப்பா.... உயிருடன் மீண்டும் எழுந்து வா....வந்து நீ கண்ட காட்ச்சிகளை விளக்கு. இது யேசுநாதர் மேல் ஆனை. " என்றார் தோமையார்.
அப்போது சின்ன கந்தப்பர் என்றும் சின்ன பெருமாள் என்றும் அழைக்கப்பட்ட கந்தப்பரின் இளைய சகோதரர் மீண்டும் உயிர்பெற்று எழுந்து வந்தார். எழுந்து வந்த சின்ன பெருமால் நேரே வந்து தோமையாரின் பாதம் பணிந்து, " யேசுநாதரின் நண்பராகிய தோமையாரே.. நீர் மிகவும் வல்லமையானவர். யேசுநாதரிடத்தில் உமக்கு மிகுந்த செல்வாக்கு உண்டென்பதை நான் நேரிலேயே பார்த்துவிட்டேன். நான் கண்ணால் கண்டதையும் காதால் கேட்டதைவும் வைத்தே தங்களை நான் சந்தேகப்பட்டு என் சகோதரரிடம் முறையிட்டேன். ஆனால் தேவரீர் பரலோகத்தில் ஒரு மா பெரும் அரண்மனை கட்டியிருப்பதை நான் நேரிலேயே பார்த்துவிட்டேன். அடடா... அது எப்பேர்ப்பட்ட ஒரு அரண்மனை. இந்த பூலோகத்தில் இதைப்போல அழகம் பிரம்மாண்டமுமாய் உள்ள ஒரு அரண்மனையை யாராலும் கட்ட முடியாது. அதன் சுவர்கள் எல்லாம் தங்கத்தகடுகளால் மூடப்பட்டிருகின்றன. மேல் விதானங்கள் எல்லாம் பெரும் சித்திரங்களால் அழகு செய்யப்பட்டுள்ளன.
எங்கும் வைரமும் வைடூரியங்களாலும் அழகு செய்யப்பட்டுள்ளன. அதன் சித்திர மண்டபத்தில் தங்களின் பெருமளவு படம் மிகவும் அழகாக வரையப்பட்டு இருகின்றது. என்னுடைய படமும் கூட அங்கிருக்கக் கண்டேன். தாங்கள் குழந்தை யேசுவை ஆராதிப்பது போன்ற படமும் அங்கிருக்கக்கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன். இப்போதும் யேசுநாதர் இந்த விஷயங்களை எல்லாம் உங்களிடம் கூறவே என்னை மீண்டும் உயிர்பெறச்செய்து உங்களிடம் அனுப்பியுள்ளார். என்னை நம்புங்கள். உங்களுக்கு இந்த பரலோக அரண்மனை பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. இந்த பூலோகத்தில் எனக்கு சேரவேண்டிய அனைத்து சொத்து சுதந்தரங்களை எல்லாம் தேவரீர் தாங்களே வைத்துக்கொள்ளுங்கள். அந்த பரலோக அரண்மனையை மட்டும் எனக்கு எழுதிக்கொடுத்து விடுங்கள் " என்றார்.
தன் சகோதரன் சின்ன பெருமாள் உயிர் பெற்று எழுந்ததையும் அவனது பரலோக காட்ச்சிகளையும் நேரில் கேட்ட பெரிய பெருமாள் எனப்படும் கந்தப்பராசர் பெரிதும் மனம் மகிழ்ந்தார்.
அன்றிலிருந்து தோமையார் மேலும் யேசுநாதர் மேலும் அந்த கணக்கன் குடியிருப்பு மக்கள் பெரிதும் பக்த்தி விசுவாசம் கொண்டனர். பலரும் கிறிஸ்த்துவர்களாய் மாறினார்கள். அந்த கணக்கன் குடியிருப்பே எடேசா நாடுபோல ஒரு கிறிஸ்த்துவ ராஜ்ஜியமாக மாறியது. தோமையார் எங்கெங்கு சென்றாரோ அங்கெல்லாம் அவரது நாமாமும் யேசுநாதருடைய திருநாமமும் வாழ்த்தப்பட்டது.
அவர் சென்ற இடமெல்லாம் பெரும் புதுமைகள் பல நிகழ்த்தப்பட்டது. தென்பாண்டி நாட்டின் பல பகுதிகளில் மக்கள் கிரிஸ்த்துவர்களாக மாறினார்கள்.
மன்னர் கஸ்பார் என்னும் கந்தப்பராசருக்கு ஒரு குறை ஏற்பட்டது. தனக்கு வயதாகிவிட்டதாலும் தம் நாட்டு மக்களுக்கு தாம் பெற்றுக்கொண்ட ஞான வெளிச்சத்தை பரப்ப வேண்டுமானாலும் இந்த தமிழ்நாட்டில் காலா காலத்துக்கும் கிறிஸ்த்துவின் ஞான ஒளி பரப்பட வேண்டுமானால் இந்த மக்களுக்கு கல்வியோடு ஞான உபதேசமும் அவசியம் என்றுணர்ந்த அவர் தோமையாரிடம் ஒரு பெரும் வேண்டுகோல் வைத்தார். அதன்படி கிறிஸ்த்துவத்தின் அனைத்து வேத சாராம்சங்களையும் ஒரு நூலாக தமிழில் இயற்றித்தருமாறு கேட்டுக்கொண்டார். தோமையாரும் இதற்கு உடன்பட்டார்.
தோமையாருக்கு தமிழில் எழுதும் அளவுக்கு பாண்டித்தியம் இருந்ததா என்பது பெரும் கேள்விக்குறி. இதற்கு விடை எளிது. கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை. பரிசுத்த ஆவியின் வரத்தின்படி இந்த உலகத்தின் எத்தகைய பாஷையும் அறிந்துகொள்ளவும் பேசவும் எழுதவும் கூடிய ஆற்றல் அவருக்கும் அதேபோல யேசுநாதரின் அனைத்து அப்போஸ்த்தலர்களுக்கும் இருந்தது என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள். அதன்படி தோமையார் வேதாகமத்தின் அனைத்து சாராம்சங்களையும் கொண்ட வேத நூலை எழுதினார். இதுவே திருக்குறளுக்கு முன்னோடி என போற்றப்படுகின்றது.
திருக்குறள் அகர முதல் என்று கடவுள் வாழ்த்தை ஆரம்பிகின்றது. வேதாகமம் ஆதியிலே வார்த்தை இருந்தது என்று ஆரம்பிகின்றது. மேலும் கடவுள் தன்மை பற்றி வேதம் அகரமும் நகரமும் நானே என்று கூறுகின்றது. இப்படியாக பல விஷயங்களை கூறலாம். திரு வள்ளுவரும் தோமையாரும் சம காலத்தவர் என்பது மட்டுமல்ல. அவர்கள் வாழ்ந்ததும் மைலாப்பூரில்தான் என்பது சரித்திரம்.
இந்த வேத நூலை அகஸ்த்திய முனிவர் அங்கீகரித்தார் என்பதும் வியப்புகுறிய செய்தி.இதைப்பற்றி கூற வேண்டுமானால் பெரும் கட்டுரை ஒன்று எழுத வேண்டியிருக்கும்.
இந்தக்கால கட்டத்தில் தக்ஷசீலத்திலிருந்து மெல்கியோரும் அவரது மகளும் மறு மகனும் தோமையாரைக்காண இந்த கணக்கன் குடியிருப்புக்கு வந்தனர். ஆக நம் தோமையார் உயிருடனிருக்கும்போதே யேசுவை முழந்தையாய் இருந்த போது அவரை சந்திக்க வந்திருந்த இரண்டு ஞானிகளையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். அவ்வளது பாக்கியம் பெற்றது
இந்த கணக்கன் குடியிருப்பு. இரண்டு ஞானிகளும் மீண்டும் ஒருவரை யொருவர் தோமையாருடன் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தனர். மன்னர் மெல்கியோர் தன்னுடைய நண்பர் கஸ்பார் எனப்படும் கந்தப்பர் ஏற்கனவே தோமையாரிடம் ஞனஸ்நானம் வாங்கிவிட்டார் என்றறிந்து இப்போது தான் மட்டும் அவரிடம் ஞனஸ்நானம் வாங்கிக்கொள்ள விரும்பினார்.
மன்னர் மெல்கியொர் தோமையார் கைகளால் லியாண்டர் என்று ஞானஸ்நானப்பெயர் பெற்றுக்கொண்டு தன்னுடைய நாடு சென்று அரசப்பதவியை துறந்து ஒரு குருவாக மாறி கிறிஸ்த்துவின் வேத
போதக அலுவலை மேற்கொண்டார். சில காலம் கழித்து அவர் இறந்தார். ஆனால் டென்னிஸ் என்று பெயர் பெற்றிருந்த அவரது மறுமகன் அந்திரோபோலிஸ் எனப்படும் நாட்டின் ஆயராக உயர்த்தப்பட்டார். அவரது மனைவியும் மாமன்னர் மெல்கியோரின் மகளுமான பெலாஜியா தானும் இல்லற வாழ்க்கையை துறந்து துறவர வாழ்க்கையை மேற்கொண்டார். அவர்களின் திருமண நாளில் அவர்கள் தோமையாருக்கு கொடுத்திருந்த வாக்கின்படியே அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையை மேற்கொள்ளாமல் துறவர வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். அந்த நாட்டில் சில காலம்
கழித்து நிகழ்ந்த வேத கலாபணையில் பெலாஜியா வேத சாட்ச்சியாக கொல்லப்பட்டார். இதனால் அவர் பார்த்தியா தேசத்தின் முதல் கன்னிப்பெண் வேத சாட்ச்சியாக கருதப்படுகிறார்.
தோமையாருடைய வாழ்க்கையிலிருந்து யேசுநாதருடைய வாழ்க்கையையோ அல்லது அவரது நேசத்தாயாரது வாழ்க்கையையோ தனித்தனியே பிரிக்க முடியாதபடி ஒன்றுக்குள் ஒன்றாக பின்னிப் பிணைந்திருந்தது. இதற்கும் காரணம் உண்டு. அதாவது தோமையார் யேசுநாதருடைய நெருங்கிய உறவினர் என்பது மட்டுமல்ல. யேசுநாதர் மேலும் அவரது நேசத்தாயார் மேலும் தோமையார் கொண்டிருந்த குழந்தைத்தனமான அன்பும் பாசமுமே இந்த உறுதியான உறவுக்கு காரணமாக அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது. இதனால்தான் யேசுநாதர் தன் உயிர்ப்பிக்குப்பிறகு தோமையாரை கௌரவிக்க எண்ணி தம் உயிர்ப்பு எத்தனை உண்மையானது என்பதை நிரூபிக்கவும் அவரது உயிர்ப்பின்மீது பிற்கால சந்ததியினராகிய நமக்கும் இத்தகைய ஒரு சந்தேகம் வராதபடிக்கும் இந்த சந்தேகத்தை தோமையாருக்கு வரச்செய்தார். ஆகவேதான் தோமையார் தன் சக அப்போஸ்த்தலர்கள் அனைவரும் யேசுநாதரைக்கண்டோம் என்று கூறிய போதிலும் தான் மட்டும்," நம்ப மாட்டேன்... அவருடைய பாடுபட்ட கரங்களில் என் கைகளை விட்டுப்பார்த்தால் ஒழிய நான் நம்ப மாட்டேன்" என்று கூறினார்.
அதன்படியே யேசுநாதரும் தன் கரங்களிலும் மார்பிலும் தான் பாடுபட்ட காயங்களில் தோமையாரின் கரங்களை செலுத்தி தன் உயிர்பை பரிசோதிக்க சொன்னார். இப்படியாக யேசுநாதர் தன் நேசத்தாயாரின் மரணத்திற்குப்பிறகு அவர் தன்னுடைய ஆத்ம சரீரத்துடனே பரலோகத்திற்க்கு ஆரோபணமானார் என்னும் திருச்சபை சத்தியத்திற்கும் ஆதாரமாக இதே தோமையாரையே இதற்கும் சாட்ச்சியமாக வைக்க சித்தம் கொண்டார். இதற்கு ஏற்றாற்போல் தேவத்தாயாரின் மரணமும் சமீபத்திலிருந்தது.
தேவத்தாயாரின் ஜனனமும் சரி, அவரது மரணமும் சரி எங்கு நிகழ்ந்தது என்பதும் எப்போது நிகழ்ந்தது என்பதும் எப்படி நிகழ்ந்தது என்பதும் இன்றைக்கும் பெரும் சர்ச்சைக்குறியதான ஒரு விஷயம். காரணம் பலவிதமான சந்தேகங்களும் விளக்கங்களும் பலவிதமான திருச்சபைகளில் கூறப்படுகின்றன. ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபை பாரம்பரிய கருத்துகளூக்கு பெரும் மதிப்பு கொடுத்துவருவதாலும் அதற்குறிய திருச்சபை வரலாறு என்ற ஒன்றை பின்பற்றுவதாலும் தன் கருத்தில் அது இன்று வரை உறுதியாக உள்ளது. அதன்படி தேவத்தாயார் பிறந்தது ஜெருசலேமில் அன்னம்மாள் வீட்டில்தான் என்பதும் அவரது மரணமும் ஜெருசலேமில் நிகழ்ந்ததாகவும் ஜெருசலேமிலேயே அவரது கல்லறை இன்றுவரை உள்ளதாகவும் கூறுகின்றது. அதன்படி ஜெருசலேமில் தேவதாயார் பிறந்த வீடாக அவரது தாயார் அன்னம்மாள் வீடும் தேவத்தாயார் ஜெருசலேமில் கடைசியாக வாழ்ந்து மரித்ததும் சீயோன் மலையில் அமைந்துள்ள ஒரு வீடு என்பதும் [ the church of dormition] இன்றளவும் நம்பப்பட்டு வரும் ஒரு உண்மை. ஆனால் ஜெர்மனியில் வாழ்ந்துவந்த 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அன்னி மேரி காத்தரின் எம்மரிக் என்னும் புனித கன்னிகா ஸ்த்ரீயின் காட்ச்சி வரங்களின்படி தேவத்தாயார் பிறந்தது கார்மேல் மலையில்தான் என்றும் அங்கு அப்போது அன்னம்மாளின் கோடை வாசஸ்த்தலமாக விளங்கி வந்த ஒரு வீட்டில்தான் என்பதும் அவர் கி.மு.14ல் பிறந்தார் எனவும் அவரது மரணம் எப்பேசுப்பட்டிணத்தில் கி.பி.48 ல் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் கூறுகின்றார்.
தேவத்தாயார் எப்படி எப்பேசு வந்தர். ஏன் அங்கே சென்றார் ...எப்படி அவர் இறந்தார்... எப்படி அவர் மோட்ச்சதிற்க்கு ஆத்ம சரீரத்துடன் மோட்ச்சதிற்க்கு ஆரோபணம் ஆனார். அவரது மரணத்திற்கு அப்போஸ்த்தலர்கள் எப்படி எங்கிருந்து வந்து சேர்ந்தார்கள் என்பது எல்லாம் மிகவும் ஆச்சரியமான காரியங்கள். இதைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு இதோ.
யேசுநாதரின் உயிர்ப்பு முடிந்து பரிசுத்த ஆவியாரின் வருகைக்குப்பின் ஜெருசலேமில் பெரும் வேத கலாபணை ஏற்பட்டது. இத்தகைய கால கட்டங்களில் தேவதாயரின் பெரும் சேவையும் அவரது ஆலோசனையும் யேசுநாதரின் சீடர்களுக்கு பெரிதும் தேவையாக இருந்தது. எனவே யேசுவின் சீடர் புனித சுவிஷேகரான அருளப்பர் தேவ தாயாருக்கு பாதுகாவலாக இருக்கும் பொருட்டு அவரையும் அவரது உறவினர்களையும் எப்பேசு பட்டிணத்திற்கு கொண்டு சென்றார். அப்போது எப்பேசில் கிறிஸ்த்துவம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. எனவே அங்கே வேத கலாபணை தோன்றவில்லை.
எப்போது எல்லாம் ஜெருசலேமில் அமைதி ஏற்படுமோ அப்போதெல்லாம் தேவதாயாரை அழைத்துக்கொண்டு அருளப்பர் அங்கே சென்றுவிடுவார். இப்படியாக மாதா ஜெருசலேமிலும் எப்பேசிலும் வாழ்ந்து வந்தார்கள். ஜெருசலேமில் சீயோன் மலைமீது அமைந்திருந்த லாசருக்கு சொந்தமான ஒருவீட்டில் தங்கியிருந்த போதே அவருக்கு மரணம் நெருங்கிவிட்டதாக தோன்றியது. அவரது இஸ்ட்டப்படியே ஒலிவமலையின் ஒரு சரிவில் அவருக்கு ஒரு கல்லறை ஒன்று அமைக்கப்பட்டது. இதை சில ஆட்க்களின் துணை கொண்டு புனித பிலவேந்திரர் வெட்டினார். ஆனால் மாதா
பிழைத்துக்கொடார்கள். இந்த நிகழ்வு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது. அவர் பிழைத்துக்கொண்டது வரலாற்றில் மாறிவிட்டது. அவர் மீண்டும் எப்பட்டிணதிற்க்கு சென்றுவிட்டார். அங்கே பதினெட்டு மாதங்களுக்கு பிறகு நோயுற்றார். இந்த கால கட்டங்களில் அருளப்பர் ஜெருசலெம் வருவதும் அப்போஸ்த்தலர்கள் மாதாவை வந்து சந்திப்பதுமாக இருந்தனர். பிறகு மாதா நன்றாக உடல் நலம் தேறிவிட்டார் என்று அறிந்து அவரவர்கள் வேதபோதக அலுவலை கவனிக்க சென்றுவிட்டார்கள். ஆனால் மாதாவின் விருப்பப்படி தன் மரணதிற்கு முன்பாக தன் பிள்ளைகளை ஒத்த அனைத்து அப்போஸ்த்தலர்களையும் சந்திக்க ஆர்வமாயிருப்பதை உணர்ந்த யேசுநாதர் அனைவருக்கும் தன் நேசத்தாயாரை வந்து கடைசி முறையாக சந்திக்க சம்மனசானவர்களை அனுப்பி உத்திரவு அனுப்பினார்.
இந்த உத்திரவை பெற்றுக்கொண்ட சம்மனசானவர் ஒருவர் நம் தமிழ்நாட்டிலிருக்கும் கணக்கண்குடியிருப்பில் ஒரு ஓலை குடிசையில் ஜெபம் செய்துகொண்டிருந்த தோமையாரை சந்தித்தார்.
" ஐய்யா தோமையாரே... கடவுளின் அருள் பெற்றுள்ள உமக்கு ஆண்டவரின் ஊழியன் நான் நல் வாழ்த்துக்களும் சமாதானமும் தெரிவித்துக் கொள்கிறேன். நம் ஆண்டவரின் தாயார் தற்போது தன் கடைசிகாலத்தில் இருப்பதால் நீர் உடனே புறப்பட்டு அவரை சந்திக்க ஆயத்தம் செய்வீராக. இதோ உமக்கு உதவ ஆண்டவர் என்னை பணித்துள்ளார்." என்றார். உடனே நம் தோமையார் தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு பயணப்பட்டுவிட்டார். நம்பியாற்றில் அவர் படகு ஏறியது தான் அவருக்கு தெரிந்தது. சற்று நேரத்தில் அவர் வங்காளத்தையும் தாண்டி சீனாவையும் தாண்டி, மங்கோலியாவையும் தாண்டிச்சென்றார். மங்கோலியாவில் தார்த்தார் இனத்தை சேர்ந்த ஒருவனை மனம் திருப்பி தன்னுடன் சேர்த்துக்கொண்டார். மேலும் அவரது பயணம் ருஸ்யவையும் தாண்டிச்சென்றது. யேசுநாதருடைய ஞான ஒளியை கிழக்கு ஆசிய நாடுகளில் பரப்ப வேண்டும் என்னும் பெரும் ஆர்வக்கோளாறினால் தேவத்தாயாரின் மரணம் சமீபத்திலிருப்பதையும் மறந்து மேலும்
மேலும் அதிக நாடுகளுக்கு போய்க்கொண்டே இருந்தார்.
நம் தோமையாரைப்போன்றே மற்ற அப்போஸ்த்தலர்களுக்கும் அழைப்பு சென்றது. அப்போது இராயப்பரும் மத்தியாசும் அந்தியோக்கியாவில் தேவனுடைய ஊழியத்தில் இருந்தார்கள். இவர்கள் நகரத்தில் விடுதிகளில் தங்கியிராமல் பயணப்படும் இடங்களில் எல்லாம் சாலையின் ஓரங்களிலும் அந்தந்த நகர கோட்டையின் சுவர் ஓரங்களில் தங்கிக்கொண்டார்கள். இந்த இடங்களிலேயே சம்மனசானவர் இவர்களை சந்தித்து மாதாவின் அந்திம காலம் நெருங்கிவிட்டதால் உடனே எஃபேசு பட்டிணம் செல்லும்படியும் வழியில் ஆந்திரேயரை சந்திக்கவும் கூறினர். அப்போது ஆந்திரேயர்
ஜெருசலேமிலிருந்து எப்பேசு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். இவர்கள் மூவரும் வழியில் சந்துக்கொண்டு எப்ஃபேசுப்ப்ட்டிணம் வந்து சேர்ந்தனர். இவ்வளவு தொலைவையும் அவர்கள் நடந்தே வந்தாலும் ஒருவித இயற்கைக்கு மீறிய அமானுஷ்யமான சக்த்தியுடன் நடந்தே வந்தனர். வழியில் தெருவில் இவரகளை எந்த மக்களும் சந்தித்தாலும் அவர்களுக்கு அது தெரியவில்லை.
இப்படியாகவே பெரிய யாகப்பர் தன் சிஸ்யகோடிகள் சிலருடன் ஸ்பெயின் தேசத்திலிருந்து ஜெருசலேம் வந்து யோப்பாவில் தங்கியிருந்தார். இங்குதான் அவருக்கு சம்மனசானவர் தோன்றி மாதாவின் அந்திம காரியங்களுக்கு வரச்சொல்லி கூறினார். அவரும் இவ்வாறே எப்பேசு வந்து சேர்ந்தார். இந்த நிகழ்வில் சில திருச்சபையை சேர்தவர்களுக்கு மாற்று கருத்துகள் உள்ளன. அதாவது பெரிய யாகப்பர் என்றும் பெரிய யாக்கோபு என்றும் பிற்காலத்தில் சந்தியாகப்பர் என்றும் அழைக்கபட்ட யேசுவின் அப்போஸ்த்தலர் யாகோபு தேவத்தாயார் இறப்பதற்க்கு முன்பாகவே ஏரோது அரசனால் ஜெருசலேமில் தலைவெட்டிக்கொல்லப்பட்டுவிட்டார் என்று கூறுகிறார்கள்.
யேசுநாதர் இறந்த பிற்பாடு தேவத்தாயாரை தன் பொருப்பில் ஏற்றுக்கொண்ட சுவிஷேஷகரான அருளப்பர் கூடுமானவரை எப்பேசில் இருப்பதும் அவ்வப்போது ஜெருசலேம் வருவதும் செல்வதுமாக இருப்பார். தேவத்தாயாருக்கு அந்திம நேரம் நெருங்கிவந்துவிட்டது என்று சம்மனசானவர் இவரிடம் தெரிவித்தபோது இவர் ஜெரிக்கோவின் வெளிப்பகுதியில் தான் இருந்தார். எனவே அவர் உடனே எப்பேஸில் மாதாவின் வீட்டுக்கு ஓடோடிச்சென்று அவரை கவனித்துக்கொண்டார்.
அப்போஸ்த்தலர் பிலிப்பு அப்போது எகிப்த்தில் வேத போதகம் செய்து கொண்டு வந்தார். அவருக்கு இவ்விதமாகவே அழைப்பு சென்றது. அவரும் அவரது தோழரும் எகிப்த்திலிருந்தே நடந்தே எப்பேசுக்கு வந்து சேர்ந்தனர். அப்போஸ்தலர் பார்த்தலோமியோ நாத்தானியேல் என்னும் கானா ஊர் கல்யாண மாப்பிள்ளை அப்போது செங்கடலுக்கு அப்பால் ஆசியாவின் பகுதியியான பாலைவன நாட்டில் வேத போதக அலுவல் பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் நடந்தேதான் எப்பேசு வந்தடைந்தார்.
அப்போஸ்த்தலர்களுள் சின்ன யாகப்பர் யேசுநாதரைப்போலவே தோற்றமுடையவர். எனவேதான் இவரை யேசுநாதருடைய சகோதரர் என்றே கூறிவந்தனர். இவரும் இந்த அழைப்பு வரும்போது ஜெருசலேமிலிருந்து எப்பேசுக்கு நடந்தே வந்து சேர்ந்தார். இவர் யேசுவின் மீது மிகவும் அன்புகொண்டவர். இவர் நின்ற, நடந்த, படுத்த நேரங்களைவிட இவர் மண்டியிட்டு ஜெபித்த நேரங்களே அதிகம் ஆனதால் இவருடைய கால் முட்டிகள் ஒட்டகத்தை போல தேய்ந்தும் காய்த்தும் இருக்கும்.
அப்போஸ்த்தலர் சிமியோனும், யூதா ததேயுஸும் அப்போது பெர்சியா என்றழைக்கப்பட்ட பாரசீகத்தில் மேய்ப்பு பணி செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இந்த அழைப்பு போனதால் அவர்களும் அங்கிருந்தே நடந்தே வந்தனர். சிமியோன் தன் மகன் ஜான் மார்க்குடான் வந்திருந்தார். இந்த ஜான் மார்க் என்பவர்தான் யேசுநாதரின் இராப்போஜனத்திற்கான் ஆடுகளை தயாரித்து விருந்துக்கு ஏற்பாடு செய்தவர். இவர்கள் அனைவரும் தேவதாயாரின் மரணத்திற்கு முந்திய நாளைக்கே எப்பேசுபட்டிணதிற்கு வந்துவிட்டார்கள். ஆக கடைசிவரை வராதவர் நம் தோமையார்
மட்டுமே. இதுவும் தேவ சித்தப்படியே நடந்தது.
தேவ தாயாரை சந்திக்க வந்திருந்த யேசுநாதரின் சீடர்கள் அனைவரும் யூத முறைப்படி தத்தம் கைகால்களை கழுவி சுத்தம் செய்துகொண்ட பிறகு நம் தேவத்தாயாரை சந்தித்தனர். தான் பெற்ற பிள்ளைகள்போல் அதிக பாசத்துடன் அவர்களை நேசித்த நம் தேவத்தாயார் பெரிதும் மனம் மகிழ்ந்தார். இருப்பினும் தான் அவர்களை விட்டு பிரியும் நேரம் சமீபத்திலிருப்பதை உணர்ந்த அவர் மிகவும் வருத்தமுற்றார். அவர் கண்கள் நம் தோமையாரைத்தேடின. ஆனால் அவர் இன்னும் வந்து சேரவில்லை என்று அறிந்த அவர் " இதுவும் அவர் செயல்... அவர் இஸ்ட்டப்படியே ஆகட்டும் " என்றார். பின் இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தன் தாய்மைக் குறிய பாசத்துடன் அணைத்து அவர்தம் சிரசுகளில் முத்தமிட்டு ஆசீர் வழங்கினார். சற்று நேரத்தில் மயங்கி வீழ்ந்தார்.
தேவத்தாயாரின் பெரிய அன்னை எலிசபெத்தம்மாளின் இளைய சகோதரி ரோடா..இந்த ரோடாவுக்கும் அடுத்த சகோதரி மாரா எனப்பட்டவர். இவர்தான் தேவத்தாயார் குழந்தையாய் பிறந்திருந்த போது அவரைக்கையில் தாங்கிக்கொண்டவர். அன்று முதல் அவர் தேவத்தாயாருக்கு எல்லா விதத்திலும் உதவிக்கு வந்திருந்தவர். அவருக்கு இப்போது வயது தொன்னூறு.
இப்போதும் நம் நேசத்தாயாருக்கு பணிவிடை செய்ய அவருடனே தம் காலமெல்லாம் தங்கி இருந்தார். மாதாவுக்கு மூச்சு தெளிய வைத்து அவருக்கு பழ ரஸம் புகட்டினார். இதனால் சற்று தெளிந்த மாதா சற்று நேரம் அமர்ந்தார்.
இந்த நேரத்தில் இயேசுவின் தலைமை அப்போஸ்த்தலர் ராயப்பர் அவருக்கு அவஸ்த்தை பூசுதல் கொடுத்தார். பின் அவர்நிலை தெளிந்திருப்பதைக்கண்டு அவர் உடல் நலத்திற்காக ஒரு திருப்பலி நிறைவேற்றினார். மாதா யேசுவின் திரு உடலை வாங்கிக்கொண்டதும் மீண்டும் மூர்ச்சை ஆனார். அவருக்கு பலி பூசையின் ஆசீர் வழங்கினார் இராயப்பர். அதற்குள் மாதாவின் முகம் தெளிவானது.
அது அணையப்போகும் மெழுகு திரியின் பிரகாசத்தைப்போன்றிருந்தது.
தன்னை சுற்றி இருக்கும் அனைத்து பெண்களையும், மீண்டும் இராயப்பர் துவங்கி அங்கிருந்த அனைத்து அப்போஸ்த்தலர்களையும் அவர்களுடன் வந்திருந்த மற்ற அனைவரையும் கடைசியாக ஒருமுறை பார்த்த மாதாவின் கண்கள் பரலோகத்தை மேல்நோக்கி பார்த்தன. அவற்றுள் ஒரு ஆனந்த பரவசம் தோன்றியது. அவரது திருமுகம் ஒருவித பரலோக ஒளியால் ஒளிர்ந்து அவர் படுத்திருந்த அறை முழுவதும் பிரகாசித்தது. அப்போது மதியம் மணி மூன்று. அதாவது அவரது திருமகன் யேசுநாதர் சிலுவையில் மரித்த அதே நேரம். இந்த நேரத்தில் அனைவரும் பார்க்கும்படியாக அந்த அறையின் மேல் விதானம் மறைந்தது. வானம் தெரிந்தது. சந்திர நட்ச்சத்திரக்கூட்டம் தெரிந்தது. பரலோகம் தெரிந்தது. பிதாவும் சுதனும் பரிசுத்த ஆவியானவருமாகிய திரியேக சர்வேசுரன் தோன்றினர். பரலோகத்தின் அனைத்து விதமான சம்மனசுகளும் ஆனந்தப்பபாடலுடன் மாதாவை வரவேற்க ஆவலுடன் காத்திருந்தனர். அப்போது அந்த புதுமை நடந்தது.
மாதாவுக்கு முகத்தில் முத்து முத்தாக வியர்வை தோன்றியது. மாரா பாட்டி அவர் திருமுகத்தை தன் கையிலிருந்த ஒரு வெள்ளைத்துணியால் ஒற்றி எடுத்தாள். மாதா தன் கைகள் இரண்டையும் குவித்து அனைவருக்கும் ஸ்த்தோத்திரம் செய்வது போல தோன்றினார். அவரது திருமார்பு படபடத்தது. அவரது திருமுகம் அவரது இளமைக்காலத்தில் இருந்தது போலவும் பளிங்கு போலவும் மாறியது. அவரது திருவதனத்தில் அழகிய ஒரு புன் சிரிப்பு தோன்றியது. திடீரென எல்லாம் அமைதியானது.
அவரது திரு உடல் வானத்துக்கு எழும்பியது. வானத்திலேயே அவரது உயிர் பிறிந்தது. அப்படியே அவர் பரலோகத்துக்கு சென்றிருக்க முடியும். ஆனால் அவர் இந்த உலகத்திலேயே இறந்தார் என்பதற்காகவும் இந்த பூமியிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார் என்பதற்காகவும் உண்மையான நம்பத்தகுந்த சாட்ச்சியங்கள் வேண்டும் என்பதற்காகவும் ஆதாரமாக இறந்த அவரது திரு உடலை இந்த பூலோகத்துக்கு கொண்டுவர ஆண்டவர் சித்தமானார். எனவே நான்கு சம்மனசுக்களில் இருவர் மாதாவின் திருஉடலை தாங்கிக்கொண்டு அவரை அவரது வீட்டின் படுக்கையில் கிடத்தினர். அதே நேரம் மற்ற இரு சம்மனசுக்கள் அவரது ஆன்மாவை தாங்கிக்கொண்டு பரலோகத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அவரது ஆன்மாவின் தோற்றம் மாதா தன் இருகரங்களையும் விரித்துக்கொண்டு தன் திருமகனை பரலோக மாட்ச்சியுடன் சந்திக்கப்போகும் ஆவலாய் உள்ளது போல் தோன்றியது. அவரது திருமகன் யேசுநாதர் அவரது திருத்தாயாரின் ஆன்மாவை பெற்றுக்கொண்டார். அவரது ஆன்மாவை பரலோக பூலோக இராக்கினியாக அவருக்கே உறிய சிம்மாசனத்தில் அமர்த்தி அவரது கையில் அதற்கு அடையாளமாக ஒரு செங்கோலையும் ஒப்படைத்தார். அப்போது பரலோகத்தில் பெரும் வாழ்த்துப்பாடலும் பெரும் ஆரவாரமான வாழ்த்தொலிகளும் எழுந்து அது உலகின் நாற்திசையிலும் எதிரொலித்தது.
இத்தனைக்காட்ச்சிகளையும் அங்கிருந்த அப்போஸ்த்தலர்கள் கண்டு தேவத்தாயாரின் திரு உடலுக்கு முன்பாக வணங்கினர். சில அப்போஸ்த்தலர்கள் இத்தகைய பரலோக காட்ச்சிகளைக்கண்டு
தரைமட்டும் தாழ்ந்து முகம் குப்புற வீழ்ந்து வணங்கினர். அதுவரை நிசப்த்தமாக இருந்த அறை மாதாவின் பெரிய தாயார் மாராவின் அழுகையால் துக்கத்தின் உச்சத்தை அடைந்தது." என் மகளே எங்களை விட்டு போய்விட்டாயா அம்மா... இந்த துன்பமான கண்ணீர் கணவாயினின்று உன் ஆன்மாவுக்கு விடுதலை கிடைத்துவிட்டதோ... பாவிகளாகிய எங்களைவிட்டு போய்விட்டாயா அம்மா... என் மகளே... என் மகளே " என்று மாரடித்து புலம்பினார். இவ்விதமாக எல்லா அப்போஸ்த்தலர்களுமே மனதுவிட்டு புலம்பினாலும் இராயப்பர் தன் துக்கத்தை கட்டுப்படுத்திக்கொண்டு," என்
சகோதர சகோதரிகளே... மாதா... நம்மை விட்டு பிறிந்து போய்விட்டாலும் அவர்கள் இப்போது மோட்ச்சத்தில் தன் மகனுடன் சேர்ந்து விட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நமக்கு இது ஒருவிதத்தில் துன்பமானாலும் ஒருவிதத்தில் நமக்கு ஆறுதலும் தேறுதலுமான விஷயம். எனவே துன்பத்தினால் அழுவதைவிட அவர் பரலோகத்தில் இருகின்றார் என்று மகிழ்வோம். நாமும் ஒரு நாள் அங்கே செல்வோம் என்பது சத்தியமான உண்மை. இனிமேல் ஆக வேண்டியதை பார்ப்போம்." என்றார்.
[ யேசுவுக்குப்பின் சிலுவைப்பாதையின் பக்தியை முதன்முதலாக ஆரம்பித்து வைத்தது அவருடைய நேசத்தாயார்தான். தேவத்தாயார் உயிருடன் இருந்த போது இந்த எப்பேசுப்பட்டிணத்தில் தன் வீட்டுப்பின்பகுதியில் தன் மகனின் பாடுகளின் நினைவாக பல சிலுவைப்பாடு ஸ்தலங்களை ஏற்படுத்தினார். அவற்றின் தூரங்கள் கூட கூடுமானவரை ஜெருசலேமில் இருக்கும்
சிலுவைப்பாடுகளின் தொலைவே இருக்கும். மாதா ஜெருசலேமில் இருந்தவரை தன் மகன் பாடுபட்ட திவ்ய ஸ்தலங்களை அனுதினமும் தரிசித்து தியானித்து வந்ததால் அவற்றின் தூரங்களை தன் நினைவில் வைத்துக்கொண்டு தன் கால் பாதங்களின் எண்ணிக்கையின்படி அவற்றை குறித்து வைத்துக்கொண்டார்.
இங்கு எப்பேசுப்பட்டிணத்திலும் இந்த புல் புல் மலையில் இன்னும்கூட சில ஸ்தலங்களை நாம் பார்க்கலாம். கடைசி ஸ்தலமாக தன் மகனின் இறந்த நினைவாக ஒரு சிறிய குகையை குறித்து வைத்துக்கொண்டார். இந்த குகைக்கும் கீழே யாரோ குடைந்து வைத்தாற்போலிருந்த ஒரு சிறிய குகையைதான் மாதாவின் திரு உடலை நல்லடக்கம் செய்ய தேர்ந்தெடுத்தனர்.]
அங்கிருந்த பரிசுத்தப்பெண்கள் அனைவரும் மாதாவுக்காக மாரடித்துப்புலம்பினர். பிறகு அவருக்கான ஈமச்சடங்குகளை செய்ய அவரைக்குளிப்பாட்டினர். மாதாவின் பெரிய தாயார் மாரா இத்தனை
காரியங்களையும் தன் கையாலேயே செய்யும் பேறு பெற்றார். மாரா பாட்டி தன் கரங்களால் மாதாவின் திருக்கேசத்தை ஒரு கற்றையாக வெட்டி எடுத்து தனது பெரும் பொக்கிஷமாக வைத்துக்கொண்டார்.
[அக்காலத்தில் பரிசுத்தவதியான பெண்கள் இறந்துவிட்ட பிறகு அவர்களது ஞாபகச்சின்னமாக அவர்களுடைய கேசத்தை வெட்டி எடுத்துக்கொள்வது வழக்கம்..இப்படியாகத்தான் முது பெரும் தந்தை அபிரஹாமின் மனைவி சாராளின் திருக்கேசமும் வெட்டி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதி மாதாவின் தாயார் அன்னம்மாளிடம் இருந்தது.]
மாதாவின் திரு உடலுக்கு யேசுநாதருக்கு செய்தது போலவே அனைத்து விதமான வாசனை திரவியங்களையும் பூசி அரியவகை மூலிகைகளைாயும் அவரது உடம்பின் மேல் வைத்து பின் கடைசி முறையாக அவரது திருமுகத்தை அனைவரும் காணும்படி செய்து பின்மூடினர். ஒரு கனத்த ஒரு புதிய கம்பளியால் அவரது திரு உடலை சுற்றி பின் இருகக்கட்டி யூத முறைப்படி அவரது திரு உடலை மிகவும் பூச்சிதமாக ஒரு இறந்த குழந்தையை தூக்கிச்செல்வது போல அனைத்து அப்போஸ்த்தலர்களும் தூக்கிச்சென்றனர்.
மாதாவின் வீட்டிலிருந்து ஒரு அரைமணி நேர நடை பயணத்தில் அந்த புல்புல் மலையின் அடிப்பகுதியில் இருந்த ஒரு குகையில் அவரை வைத்தனர்.
இப்போதுவரை கூட தோமையார் இன்னும் வரவில்லை. அதற்குள்ளாக இந்த குகையின் வாசலை வெளிப்புறமாக துருத்திக்கொண்டிருந்த சில கற்களை அடித்து உடைத்து வழி உண்டாக்கினர்.
இதற்குள்ளாக இருட்டிவிட்டது. தீப்பந்தங்களின் உதவியுடன் அந்த குகையை சீராக்கி வழி உண்டாக்கி மாதாவின் திரு உடலை மிகவும் பூச்சிதமாக அடக்கம் செய்தனர். பின் குகையின் வாசலில் குழி உண்டாக்கி பல விதமான பூச்செடிகளை அதில் நட்டு தண்ணீர்விட்டு குகையின் வாயிலை மூடினர். பிறகு மாதாவுக்குறிய அனைத்து ஈமச்சடங்குகளும் முடிந்த பிறகு பக்தி பரவசத்தால் மாதாவுக்கும் அவரது திருமகன் யேசுநாதருக்கும் ஸ்த்தோத்திரப்பாடல்களை பாடிக்கொண்டே மாதாவின் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வானத்தில் பல வர்ணஜாலங்கள் தோன்றின.
அப்போஸ்த்தலர்கள் இந்த நிகழ்ச்சிகளைப்பார்த்து மிகவும் வியப்புற்று ," மாதாவின் வருகையால் மோட்ச்சத்தில் பெரும் விழா கொண்டாடப் படுகின்றது.. அதனால்தான் வானத்தில் இந்த வர்ண ஜாலங்கள் நடை பெறுகின்றன " என்றனர்.
ஆனால் உண்மையில் நடந்தது வேறு. வேறு வேறு ஒளி வட்டங்களால் வானத்தில் வர்ணஜாலம் ஏற்பட்டது உண்மைதான். அவற்றுள் நடு ஒளி வட்டத்தில் யேசுநாதர் தன் நேசத்தாயாரின் ஆன்மாவை மீண்டும் இந்த உலகிற்கு கொண்டு வந்தார். மாதாவின் ஆன்மா அவருடைய திரு உடலுடன் கலந்து மீண்டும் அவர் உயிர்பெற்றார். அப்போது அவரது சரீரம் பெரும் ஜோதிப்பிழம்பாக தோன்றியது. அவரது தோற்றத்தை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. உயிர்த்தெழுந்த நம் அன்னை மிகவும் பிரகாசமாக மேலே எழுந்து மீண்டும் தன் திருமகன் யேசுநாதருடன் இணைந்து இரண்டாம் ஒளிவட்டத்துல் சேர்ந்தார். மூன்றாம் ஒளி வட்டத்தில் ஆயிரக்கணக்கான சம்மனசுகள் யேசு மரியாயுடன் சேர்ந்து அனைவருமாக பரலோகம் சென்ற உடன் இந்த வர்ண ஜாலங்கள் யாவும் மறைந்தன. மீண்டும் வானம் நட்ச்சத்திர சந்திரனால் நிரம்பி பழையபடி தோன்றியது.
ஏறக்குறைய விடியும்முன் காலைப்பொழுதில் நம் தோமையார் அவசரம் அவசரமாக மாதாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தோமையாருடன் அவரால் மனம் திருப்பப்பட்ட மங்கோலியனும் அவருடன் கூட வந்திருந்தான். இது உண்மையில் தோமையார் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணப்பட்டிருந்தார் என்பதற்கு ஆதாரமாக இருந்தது. ஆனால் தான் வந்து சேர்வதற்குள் மாதாவின் அந்திமக்காரியங்கள் அனைத்தும் முடிந்துபோய்விட்டன என்றறிந்த தோமையார் மிகுந்த விசனமடைந்தார். தான் மாதாவின் திருமுகத்தை பார்த்து பதின்மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
அவர் மறைவதற்குள் மீண்டும் ஒருமுறையவது தான் பார்த்துவிடவேண்டும் என்று எவ்வளவோ ஆசைப்பட்டிருந்தார். ஆனால் தனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே...தன்னைத்தவிர எல்லா அப்போஸ்த்தலர்களும் மாதாவை தரிசித்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டார்கள் என்றறிந்ததும் மிகவும் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார். மேலும் இந்த இரவிலேயே அவரை தான் பார்த்தே ஆகவேண்டும் என்ற அவரது நியாயமான ஆசைக்கு எல்லா அப்போஸ்த்தலர்களும் உடன்பட்டார்கள். எனவே அப்போழுதே அனைவரும் கையில் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு அந்த புல்புல் மலையின் அடிவாரத்தில் இருந்த மாதாவின் கல்லறை உள்ள குகைக்கு சென்றனர். மீண்டும் கல்லறை திறக்கப்பட்டு பார்க்கும்போது அங்கே மாதாவின் திரு உடல் இல்லை. அவரது திருச்சரீரத்தின் மீது சுற்றி வைக்கப்பட்டிருந்த கோடித்துணியும் அதன்மீது சுற்றி கட்டப்பட்டிருந்த கணத்த சாக்கு துணியும் மட்டுமே இருந்தததைக்கண்டார்கள். அப்போது எல்லோரும் கேட்க்கும் வண்ணமாக வானோர் பாடல் கேட்டது.
தேவத்தாயாரின் மரணத்துக்கும் அவரது
அடக்கத்துக்கும் சாட்ச்சிகளாய்
இருந்த அப்போஸ்த்தலர்கள் அனைவரும் வானில் தோன்றிய வர்ண
ஜாலங்கள் மாதாவின் உயிர்த்தெழுதலையும் அவர் பரலோகம் சென்றதையும் அங்கே
பரலோக
பூலோக
இராக்கினியாக
முடிசூட்டப்பட்டு இருப்பதையும் வேத சத்தியமாக அறிவித்தார்கள். [ நேயர்களுக்கு இந்த இடத்தில் மூன்று ராஜாக்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. யேசுநாதர் பிறந்த உடன் அவரை சந்திக்க வந்த மூன்று ராஜாக்களில் மிகவும் வயதானவரும் மிகவும் தொலைவிலிருந்து வந்தவருமான அரசரின் பெயர் காஸ்பார். இவர் இந்தியாவிலிருந்து வந்தவர். இவருக்கு இந்தியாவில் தென்பாண்டி நாடும் அடுத்து இலங்காவில் யாழ்பாணமும் இவரது ராஜ்ஜியங்களாகும். அன்றைய தென்பாண்டி நாடு எனப்படுவது திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரிவரை பரவி இருந்தது. தென் பாண்டி நாட்டிலும் யாழ்பாணத்திலும் இவருக்கு பெரிய கந்தப்பராசா என்றும் இவருடைய இளைய சகோதரர் சின்ன கந்தப்ப ராஜா என்றும் அழைத்தனர். கந்தப்ப ராசா எனப்படுவது கிரேக்கத்திய பாஷையில் கந்த்பார் என்றாகி பிறகு கஸ்பார் என மருவி விட்டது.

எப்பேசுப்பட்டிணத்தில் மாதாவை அடக்கம் செய்யப்பட்ட கல்லறை குகை இன்று நாம் பார்க்க முடியாமல் மறைந்து போய்விட்டது. இதன் காரணத்தை கடவுள் மட்டுமே அறிவார். மாதா குடியிருந்த அவரது வீடு இன்று பெரும் திருயாத்திரை ஸ்த்தலமாக உள்ளது. பரிசுத்த பிதா ஆறாம் சின்னப்பர், பரிசுத்த தந்தை இரண்டாம் ஜான்பால், பரிசுத்த தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஆகியோர் சென்று வணங்கி ஆசீர்வதித்த மாதாவின் வீடு ஆயிரக்கணக்கான மக்கள் தினம்தினம் வந்து பார்த்து செல்லும் ஒரு அழகிய திருயாத்திரை ஸ்த்தலமாகும். இந்த வீட்டினறுகே மாதாவின் திரு நீறூற்று உள்ளது. இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தன் திருக்காட்ச்சியில் கண்டு எழுதிய புனித காத்தரின் எம்மரிக் எப்பேசுப்பட்டிணத்தில் அமைந்துள்ள மாதாவின் கல்லறை எதிர்காலத்தில் ஒருகாலத்தில் கடவுளின் சித்தப்படி மீண்டும் வெளிக்காட்டப்படும் என்று கூறுகின்றார். மாதா இந்த உலகை விட்டுப் போகும்போது அவருக்கு வயது அறுபத்து நான்கு. யேசுநாதர் இறந்த பிறகு அவரது நேசத்தாயார் ஜெருசலேம் சீயோனில் மூன்று வருடங்களும் பெத்தானியில் லாசர் வீட்டில் மூன்று வருடங்களும் எபேஸுப்பட்டிணத்தில் ஒன்பது வருடங்களுமாக வாழ்ந்து வந்தார்கள்.
மாதாவின் மரணத்திற்குப்பிறகு நம் தோமையார் கி.பி. 52ல் மீண்டும் இந்தியா வந்தார். கேரளாவிலும் மீண்டும் தமிழ்நாட்டிலும் தம் வேதபோதக அலுவலை தொடரலானார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் புதுமைகள் பல ஆற்றி தேவாலயங்கள் பல எழுப்பி அவற்றிற்கு தேவத்தாயாரின் பெயரையே சூடினார். அதினாலேயே எல்லா கிறிஸ்த்துவ தேவாலயங்களும் மாதா கோயில் என்றே பெயர் பெற்றன. கடைசியில் பரங்கி மலையில் மண்டியிட்டு ஜெபித்துக்கொண்டிருக்கும்போது வேத விரோதி ஒருவனால் வேலால் குத்தப்பட்டு வேத சாட்ச்சியாய் மறைந்தார். ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட கிறிஸ்த்துவம் என்னும் விருட்ச்சம் பலமாக வேரூண்றி பல நற்கணிகளைத்தந்தன. அவை மேலும் பெருகி ஒன்றுக்கு நூறாய் ஆயிரமாய், லட்ச்சக்க்கணக்கில் பெருகின.
கோதுமை மணி
மண்ணில் விழுந்து மடிந்தால்தான் அவை ஒன்றுக்கு நூறாய்
பலன்தரும் என்னும் யேசுநாதரின் வாக்கு
மிகச்சரியாக பலித்தது.
அப்போஸ்த்தலராகிய தோமையாரின் சேவைகளையும் அவர் பயணங்களையும் அவர் ஆற்றிய புதுமைகளையும் இன்னும் இன்னுமாய் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் அதற்கு ஒரு தனி புத்தகமே போட வேண்டும். ஆனால் நம்முடைய நோக்கம் இந்த கணக்கன் குடியிருப்பில் என்ன நடந்தது என்பது பற்றித்தான்.
தமிழ்நாட்டில் இந்த கணக்கன் குடியிருப்பில் எல்லாம் நல்லபடியாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் இங்கு சாத்தான் தன் வேலையை காட்டினான். அவன் வழியாக மாதாவின் மகிமை வெளிப்பட வேண்டி இருந்தது.
இந்த உலகம் தினமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. மாற்றங்கள் நிகழத்தான் வேண்டும். இப்படியாக இந்தியாவிலும் பெரும் மாற்றங்கள் நடந்தன. அதன்படி கி.பி.பதின்மூற்றாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டது. இதன்பயனாக நூலாடைக்கு தேவையான பருத்தியின் உபயோகம் அதிகரித்தது. இதைக்கொள்முதல் செய்ய வந்திருந்த ஆங்கிலேயர் இந்தியாவில் தங்கி வியாபாரம் செய்ய தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அப்போதிருந்த ஆர்காடு நவாபிடம் அனுமதி கேடனர். அப்போது நவாப் பெரும் கடன் சுமையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.
இதிலிருந்து மீள அவர் ஆங்கிலேயரின் உதவியை நாடினார். அவருக்கு தேவையான பணம் பொருள் ஆகிய உதவி செய்த ஆங்கிலேயர் அதற்குறிய வட்டி தொகையை ஆர்காட்டு நவாபின் ஆட்சிக்குட்பட்ட அனைத்து சிற்ரரசர்களிடமும் வரி வட்டி கிஸ்த்தி என்று பெரும் தொகையை வசூலித்தனர். இறுதியாக தமிழ் நாட்டை மட்டும் அல்லாது முழு இந்தியாவையும் கைப்பற்றினர்.
இப்படியாக உலகம் முழுவதையும் கைப்பற்றினர். அதாவது ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.
இப்படியாகத்தான் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த ஸ்பெயின், போர்த்துகீசியர்கள், பிரென்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோர் இந்தியாவை மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக தங்களது வியாபாரத்தையும் அல்லாது அவர்களது வியாபார கேந்திரங்களாக இருந்த நாடுகளையும் அவரவர் தம் சக்த்திக்கேற்ப பிடித்துக்கொண்டார்கள்.
இந்த ஐரோப்பிய விபாரிகள் செய்த நல்ல காரியங்கள் பலவற்றுள் ஒன்று தங்கள் காலனி நாடுகளில் யேசுநாதரின் ஞான ஒளியை பரப்பியதுதான்.
உலக நாடுகள் முழுவதையும் கடல் பயணம் இணைத்தது. பல சுற்றுலாப்பயணிகள் உலகம் முழுவதையும் சுற்றி வந்தனர். இப்படியாக இத்தாலியை சேர்ந்த மர்கோ போலோ என்னும் ஒரு மாலுமி
கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் அதாவது 1292 மற்றும் 93 ஆம் ஆண்டுகளில் இந்த சொக்கன் [கணக்கன்] குடியிருப்புக்கு வந்தார். இங்கு தோமையாரால் கட்டப்பட்டிருந்த தேவாலயத்தை தான் தரிசித்ததாகவும் இங்குள்ள கிறிஸ்த்துவ மக்கள் தங்கள் வியாதிகள் குணமடைய இந்தக்கோயிலின் அருகிலுள்ள செம்மண்ண எடுத்து தங்கள் உடலில் பூசிக்கொள்வதன் மூலம் அதிசயமான முறையில் அவர்கள் குணமடைவதாகவும் அவரது பயணக்குறிப்பில் கூறுகின்றார்.
இப்படியாக நம் தோமையாரால் ஞான ஒளி பெற்ற கணக்கன்குடியிருப்பு கி.பி.15 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் கொய்லோனை தலைமையாக கொண்ட போர்த்துகீசியர்களின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. கணக்கன் குடியிருப்பில் போர்த்துகீஸியர்களின் ஆளுனர் ஒருவரின் மேற்பார்வையில் நிர்வாகம் இயங்கி வந்தது. இதே கால கட்டங்களில் டெல்லி சுல்தாங்களின் நிர்வாாகத்தாலும் ஐரோப்பியர்களின் ஆட்ச்சி மாற்றங்களாலும் அக்கால கிறிஸ்த்துவர்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த சொக்கன் குடியிருப்பில் அமைந்திருந்த தோமையார் கட்டிய கோயிலும்
அவர்களுடைய தாக்குதலால் சிதிலமாகிப்போனது. கி.பி.1325ல் ஒரு சனிக்கிழமையில் தொக்கு விளையை சேர்ந்த ஆகத்து மரியாயி என்னும் ஒரு மரியாளின் பக்தனுக்கு ஒரு காட்ச்சி தோன்றியது.
அதன்படி கணக்கன் குடியிருப்பில் தோமையாரால் கட்டப்பட்ட மாதாவின் கோயிலை புதுப்பிக்க வேண்டும் எனவும் அதுவும் தோமையார் கட்டிய அந்த தேவாலயத்தின் அஸ்த்திவாரத்தின்மீதே அது மீண்டும் கட்டப்படவேண்டும் எனவும் அவருக்கு அறிவுருத்தப்பட்டது. இந்த ஆகத்து மரியான் என்பவர் டெல்லி சுல்தான் ஆட்ச்சியில் ஒரு பெரும் அதிகாரியாக இருந்தவர். அப்போது தமிழ் நாட்டில் பாண்டியர்களின் ஆட்ச்சியில் இருந்த இந்த கணக்கன் குடியிருப்பில் தான் காட்ச்சி கண்டது போலவே அன்று தோமையார் கட்டிய தேவாலயத்தின் அஸ்த்திவாரத்தின்மீதே மீண்டும் ஒரு தேவாலயம்
எழுப்பி அதை தேவதாயாரின் பெயருக்கு அர்ப்பணம் செய்தார்.
போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கத்தில் தென்பாண்டி கடற்கரைப்பட்டிணங்கள் யாவும் வந்தன. இந்தக்கால கட்டங்களில் அதாவது கி.பி.1542 முதல் 1544 வரை புனித பிரான்சீஸ் சவேரியார் போர்த்துக்கல்லிலிருந்து கோவா வந்து பின் கடற்கறைப்பட்டிங்களில் எல்லாம் வேதம் போதித்து இங்கே கணக்கன் குடியிருப்புக்கும் வந்தார்.
இந்த கணக்கன் குடியிருப்பில் சவேரியார் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு தன் வேதபோதக அலுவலை அருகருகே அமைதுள்ள கடற்பட்டிணங்களில் செய்துவந்தார். புனித சவேரியாருக்கு
அந்தோணி மிராண்டா என்றும் அகஸ்டின் பினா என்றும் இரண்டு வாலிப உதவியாளர்கள் எப்போதுமே அவருடன் இருந்து வந்தார்கள். ஒரு நாள் இந்த கணக்கன் குடியிருப்பில் புனித சவேரியார் அவரது இல்லத்திலும் மற்ற இரு உதவியாளர்கள் தனி குடிசையிலும் தங்கியிருந்தபோது ஒரு விஷ நாகம் அந்தோணியை தீண்டியது. அந்த இரவில் இதை அறியாத இருவரும் அப்படியே தூங்கிப்போனார்கள். அடுத்த நாள் காலையில் அந்தோணியை அகஸ்டின் எழுப்பும்போது அவன் எழுந்திருக்கவே இல்லை. பாயை சுற்றி எடுத்தபோதுதான் அங்கே அவனைத்தீண்டியது ஒரு விஷ பாம்பு என்பது தெரிந்தது.
அகஸ்டீன் அலறியடித்துக்கொண்டு ஓடி புனித சவேரியாரிடம் வந்து நடந்ததைக்கூறினான். அவர் வந்து பார்த்து அவனுடைய கடிவாயில் தன் எச்சிலை தடவி யேசுவின் திரு நாமத்தால் அவனை எழுந்திருக்க கூறினார். உடனே அந்த புதுமை நடந்தது. செத்தவன்போலிருந்த அந்தோணி உடனே உயிர் பெற்றது போல் எழுந்தான். மக்கள் அனைவரின் புனித சவேரியாரின் புதுமையால் மகிழ்ந்து அவர் மீதும் யேசுவின்மீதும் பெரும் விசுவாசமும் நம்பிக்கையும் வைத்தனர். இப்போது நாம் காணும்படியாக இருக்கும் மணல் மாதா ஆலயத்தின் பெரும்பகுதிகள் இவராலேயே செய்யப்பட்டன. ஆலயத்தின் நடுவில் அமைதிருக்கும் மணல் மாதாவின் வலப்புறத்தில் புனித ஃப்ரான்சீஸ் அசீசியாரும் மாதாவின் இடப்புறத்தில் புனித லயொலா இஞ்ஞாசியாருடைய சொரூபங்களையும் அமைத்தவர் இவரே. இந்த ஆலயத்தின் உட்புறங்களையும் வெளிப்புறத்தையும் போர்த்துக்கீசிய பாணியில் வடிவமைத்தவரும் இவரே.
இந்த கணக்கன் குடியிருப்பு என்னும் மான வீர நாடு தோமையாரால் மனமாற்றம் செய்யப்பட்டுவந்த பாண்டி நாட்டு சிற்றரசர்களாள் ஆளப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் இதை ஆண்ட மன்னர்கள் அனைவரும் கிறிஸ்த்துவர்களே. மற்றைய சிற்றசர்கள் பெரும்பாலும் இந்துக்களே. எத்தனையோ ஆட்ச்சி மாற்றங்கள் டெல்லியிலிருந்தும் விஜய நகர மன்னர்களிடமிருந்தும், போர்த்துக்கீசியர்களிடமிருந்தும் வந்திருந்தாலும் இந்த கணக்கன் குடியிருப்பு என்னும் தன்பாண்டி நாட்டின் அரசர்கள் மட்டும் கிறிஸ்த்துவர்களாய் அமைந்ததுதான் பெரும் புதுமை. இந்த கால சூழ்நிலையில் இந்த கணக்கன் குடியிருப்பு என்னும் மான வீர நாட்டை ஆண்ட குறுநில மன்னர் ஆகத்து உதவி பாண்டியன். இவன் ஆகத்து மரியான் என்னும் ஒரு டெல்லி சுல்தானின் அதிகாரத்திலிருந்த போதுதான் இந்த கணக்கன் குடியிருப்பில் தோமையார் கட்டிய மரியாயின் திரு நாமம் கொண்ட கோயிலை புதுப்பித்தவர். இவருடைய வம்சா வழியில் வந்தவர்தான் இந்த
ஆகத்து உதவி பாண்டியன். ஆகத்து என்னும் பெயர் ஆகத்தம்மாள் என்னும் புனிதையின் திரு நாமத்திலிருந்து வந்தது.
புனித ஆகத்தம்மாள் இத்தாலியின் தென் பகுதியில் சிசிலித்தீவில் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த போது வேத விரோதிகளால் பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாகி கடைசியில் தீயிலிட்டு கொல்லப்பட்டதால் வேத சாட்ச்சியாக மரித்தவர். செசிலித்தீவுக்கப்பால் எட்னா எரிமலை இருகின்றது. இது பல முறை வெடித்து தன் கொடுமையான தீப்பிழம்புகளால் சிசிலித்தீவை நாசமாக்கும். இப்படியாக ஒருமுறை இந்த எட்னா எரிமலை வெடித்தபோது அதன் கொடுமையிலிருந்து தங்களைக்காக்க இந்த சிசிலித்தீவின் மக்கள் புனித ஆகத்தம்மாளின் ஒரு ஆடையை ஒரு
கொடியாக உபயோகித்து தங்களை இந்த கொடும் எட்னா எரிமலை குழம்பிலிருந்து தங்களை காக்கும்படியாக மன்றாடவே அந்த வேண்டுதல் கேட்க்கப்பட்டது. எட்னா எரிமலை உடனே அணைந்தது. அதிலிருந்து புனித ஆகத்தம்மாள் தீயிலிருந்து தங்களை காப்பவர் என்னும் நம்பிக்கை அவரது பக்த்தர்களுக்கு ஏற்பட்டது.
இந்த ஆகத்து என்னும் பெயர் கொண்ட பல சிற்றரசர்கள் இந்த பகுதியில் ஆண்டுவந்தது இந்த புனிதையின்மேல் கொண்டிருந்த பக்த்தியினால் தான்.இந்த ஆகத்து உதவிப்பாண்டியனுக்கு துறவிப்பாண்டியன் என்றொரு பெயரும் உண்டு. காரணம் அவன் நீதி தவறாத மன்னன் என்னும் பெயர் பெற்றிருந்ததினால்தான் அவனுக்கு துறவிப்பாண்டியன் என்னும் பெயர் ஏற்பட்டது.
இந்த நேர்மையான மன்னனுக்கும் ஒரு சோதனை வந்தது. இந்த மன்னனது தவறாத நீதியால் பலபேருக்கு நிம்மதி இழந்து போனது. இந்த மன்னனது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் ஆட்ச்சி மாற்றத்தால் பலபல போர்கள் பல இடங்களில் நிகழ்ந்தது. இந்த மன்னரது ஆட்ச்சிக்காலத்தில் மான வீர நாடு என்னும் கணக்கன் குடியிருப்பு போர்த்துக்கீசியர்வசம் போய்
சேர்ந்ததால் அவர்களுடைய உடன்படிக்கையின்படி போருக்கு ஆட்க்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏர் பிடிக்கத்தெரிந்த விவசாயிகள் பலரை பெயருக்கு சில வாள் பயிற்ச்சிகளை சொல்லிக்கொடுத்து போர் முனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த
ஒரு சூழ்நிலையில் கணக்கன் குடியிருப்பில் அழகுப்பதுமையாக
விளங்கினாள் யேசு
மரியாயீ என்னும்
ஒரு இளம்பெண்.
பூர்வீகத்திலேயே கிறிஸ்த்துவளான இந்தப்பெண்ணுக்கு தேவத்தாயார் மீதும் அவருடைய திருக்குமாரனாகிய இயேசுநாதர் பேரிலும் பெரும் பக்த்தி இருந்தது. இந்த பக்த்தி நிறைந்த பெண்னைக்கண்ட பலர் அவளது கரம் பிடிக்க போட்டிபோட்டனர். இவர்களில் அப்போதைய போர்த்துக்கீசிய உயரதிகாரியாக விளங்கிய ஒரு பெரிய மனிதரின் மகன் வீரபாண்டியணும் ஒருவன். இந்த வீரபாண்டியனுக்கு யேசுமரியாயின் மேல் பெரும் காதலே ஏற்பட்டுவிட்டது. ஆசை வெட்க்கம் அறியாது என்பதுபோல ஒருநாள் யேசுமரியாயை தனியே சந்தித்து தன் காதலை வெளிப்படுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியாக கேட்டே விட்டான். ஆனால் யேசு மரியாயி தான் ஒரு பூர்வீக கிறிஸ்த்துவள் என்றும் இந்துவான அவனை தன்னால் திருமணம் செய்துகொள்ள முடியாதெனவும் திட்டவட்டமாக கூறிவிட்டால். அவளது பதிலால் திருப்த்தியடையாத வீரபாண்டியன் அவளை எப்படியும் வற்புறுத்தியாவது திருமணம் செய்துகொள்வேன் என்று சூழுரைத்தான்.
இதனால் பயந்த யேசுமரியாயீ இந்த விஷயத்தை தன்னுடைய தாயாரிடம் கூறவே அவள் இதில் தவறான முடிவெடுத்தால் அது மிகப்பெரிய ஆபத்தில் முடிந்துவிடும் என்றுணர்ந்து உடனடியாக தன்னுடைய உறவுக்காரனாக சூசை என்பவனுக்கு காதும் காதும் வைத்தாற் போல பேசி முடித்து திருமணத்தையும் நடத்திவிட்டாள். இதனால் அதிர்ச்சி அடைந்த வீர பாண்டியன் அவளை எப்படியும் அடைந்தே தீர்வது என்று முடிவுகட்டி அதற்க்கு தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்க்கொண்டிருந்தான். அதற்கேற்றார்போல் ஒரு நல்ல சந்தர்ப்பம் அவனுக்கு அமைந்தது.
சூசை யேசு மரியாயீனுடைய திருமண வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் விதி அவர்களை பிறிக்க நினைத்தது. போர்த்துக்கீசிய சேனைக்கு உதவ உடனே ஆட்க்களை அனுப்புமாறு கவர்னரிடமிருந்து உத்திரவு வரவே ஆகத்து உதவிப்பாண்டியன் தன்னுடைய நாட்டிலிருந்த விவசாயிகளை போர்முனைக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. இந்த சந்தர்ப்பத்தில் வீர பாண்டியன் தன் தகப்பனின் செல்வாக்கை பயன்பட்டுத்தி யேசுமரியாயின் கணவன் சூசையை போர்த்துக்கீஸிய சேனையுடன் அனுப்பினான். தாவீது ராஜ பெத்சீபாவை அடைய அவள் கணவன் ஊரியாசை போர்முனைக்கு அனுப்பி கொண்றது போல வீரபாண்டியனும் யேசுமரியாயை அடைய அவள் கணவன் சூசையை போருக்கு அனுப்பி கொண்றான். இந்த கொலையை தன் அரசியல்
சாணக்கியத்தால் அப்படியே மறைத்து விட்டான். இந்த சந்தர்ப்பத்தில் இயேசுமரியாயை அணுகினால் தன் குட்டு வெளிப்பட்டுவிடும் என்று எண்ணி தன் ஆசையை சிலகாலம் கட்டுப்படுத்திகொண்டான்.
போர்முனையில் யேசுமரியாயின் கணவன் கொல்லப்பட்டுவிட்டான் என்ற செய்தியால் அவள் அடைந்த வேதனை வார்த்தையில் சொல்லி முடியாது. திருமணமான சில காலத்திலேயே தான் விதவை ஆனது எப்பேர்ப்பட்ட கொடுமை... இனி மீதி காலத்தை எப்படிவாழ்வது என்று மனம் மிகவும் வெறுத்துப்போனால். ஆனால் அவளது தாய்தான் அவளுக்கு எல்லாமுமாக இருந்து அவளை கவனித்துக்கொண்டாள். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. குட்டிச்சாத்தான் மெல்ல எட்டிப்பார்த்தான் என்பது போல வீரபாண்டியான் மெதுவாக யேசுமரியாயாய் அணுகினான்.
மீண்டும் தன் காதலை ஏற்றுக்கொள்ள நிர்பந்தித்தான்.
யேசு மரியாயீ தன் நிலையை தன் தாயிடம் சொல்லி அழுது புலம்பினாள். அவளது தாயார் வீரபாண்டியனை எச்சரித்தாள். மீண்டும் மீண்டும் இவ்வாறு வந்து தொந்திரவு கொடுத்தால் அரசனிடம் சொல்லி அவன்மேல் நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டினால். அரசன் நல்லவன் மட்டுமல்லாது பெரும் நியாயாதிபதி. அவன் நடவடிக்கை எடுத்தால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்த வீரபாண்டியன் தன் தகப்பாரிடம் தன் காதலை வெளிப்படுத்தி அவரது பதவியை பயன்படுத்தி இதற்கு ஏதாவது செய்ய மன்றாடினான்.
அவன் தந்தைக்கு உள்மனதில் இந்த கணக்கன் குடியிருப்பின் கோட்டை அதிகாரி என்னும் தன் நிலையை உயர்த்திக்கொள்ள ஒரு பேராவல் இருந்தது. அதன்படி இந்த துறவிப்பாண்டியனை கவிழ்த்துவிட்டு அவனுக்கு பதில் தான் இந்த மான வீர நாடு என்னும் கணக்கன் குடியிருப்புக்கு அரசனாக வேண்டும் என்று நினைத்தான். ஆக தீயோர் இருவர் உள்ளத்திலும் சாத்தான் புகுந்து ஒரு பெரும் சதியை ஏற்படுத்தினான்.
அதன்படி ஒன்று தன் மகனின் காதலை ஏற்க மறுத்த யேசுமரியாயி தன் மகனை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வேண்டும். அல்லது அவளை சதியால் நடத்தை கெட்டவள் என்று நம்ப வைத்து அவளை கொல்ல வேண்டும். மற்றது மன்னன் அநீதியாக தீர்ப்பு கொடுத்தான் என்று மன்னர் மீது பழிபோட்டு அவரது அரசை கவிழ்த்துவிட்டு தான் அரசனாக வேண்டும் என்றும் பேசி வைத்துக்கொண்டனர். இதற்கான சதி ஆலோசனைக்கு சில பேரை ஏற்படுத்திக்கொண்டனர்.
இந்த சதி ஆலோசனையை நிறைவேற்ற தக்கதொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான் வீரபாண்டியன். தன் மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்ற கவலையும் இந்த வீரபாண்டியனால் இனிமேல் தன் மகளுக்கு என்னென்ன எல்லாம் நடக்கப்போகுமோ என்று சதா கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவள் தாயாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவள் மரணமடைந்தாள்.
பாவம் இயேசு மரியாயீ. அவள் மீண்டும் திக்கற்றவள் ஆனாள். அவளுக்கு இனிமேல் யார் துணை?. தோமையாரால் ஸ்தாபிக்கப்பட்ட அந்த விண்ணரசி மாதாவே இனிமேல் என்னை காப்பீராக என்று அவள் பாதம் சரனடைந்தாள். பிழைப்புக்கு அவள் தாயார் செய்து வந்த சுகாதாரப்பணியை மேற்கொண்டாள். வீரபாண்டியன் அவ்வப்போது அவளிடம் வந்து சில்மிஷம் செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் பொது இடம் என்றும் பாராது அவளிடம் தகாத முறையில் பேச ஆரம்பித்த அவனை தன் கரத்தால் பளார் என்று அறைந்தாள். ஒரு பெண்ணிடம் பொதுவில் அனைவர் முன்னியிலும் தான் அறை வாங்கியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. " இரு... இரு... உன்னை என்ன செய்கிறேன் பார் " என்று உருமிய அவன் தன் சதி வேலையை ஆரம்பித்தான்.
பொதுவில் தான் வீரபாண்டியனை அறைந்தது பற்றியும் இனிமேல் அவனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது பற்றியும் பெரும் கவலையில் மூழ்கிய அவள் விண்ணரசி மாதாவே தேவரீர் என்மீது இரக்கமாயிரும் என்று மன்றாடினாள். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதுபோல மாதாவும் அவளுக்கு உதவ சம்மதித்தாள். இந்த கணக்கன் குடியிருப்புக்கு அருகில் ஒரு பெரும் ஏரி உள்ளது. அது இன்றளவும் இருகின்றது. இந்த ஏரியின் கரைகளில் உள்ள பெரும் மரக்கிளைகளில் இனப்பெருக்கத்துக்காக நாரைக்கூட்டங்கள் எப்போதும் வந்து இருக்கும். எனவே இந்த ஊருக்கே நாரையூர் என்ற பெயரும் உண்டு.
மாதாவின் புதுமையால் அதி காலையில் இந்த நாரை கொக்குகள் அதிக அளவு மீன்களை தங்கள் வாயில் பிடித்து வந்து யேசு மரியாயீ வீட்டின் முன்பாக போட்டுச்செல்லும். அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்ய எழும்பிவந்த இயேசு மரியாயீ தன் வீட்டு முன்பாக கொட்டிக்கிடக்கும் மீன்களைக்கண்டு பெரும் பிரம்மிப்படைந்தாள். தினமும் இவ்வாறு நடக்கவே இந்த செயல் மாதாவின் புதுமையாலேயே நடக்கின்றன என்றுணர்ந்து மாதாவுக்கு நன்றி சொல்லி வந்தாள். அவள் இந்த மீன்களை தான் உண்டது போக மீதமானவற்றை விற்றும் சிலவற்றை ஏழைகளுக்கு தானாமாகவும்
வழங்கி வந்தாள். இதனால் அவளது வாழ்வு வளமானது. இவளது இளமை பருவ செழிப்பும் அவள் அடைந்து வரும் செல்வ செழிப்பும் பலபேருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது. அவள் இரவில் நெடுநேரம் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஜெபம் செய்து வேண்டிவருவதும் அவள் மீது பலபேருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி வந்தது. ஊருக்குள் இது சலசலப்படியும் ஏற்படுத்தியது.
எல்லாம் வீர பாண்டியன் ஏற்படுத்தி வைத்த சதி. அது யேசுமரியாயின் உயிருக்கு உலை வைத்தது. யேசு மரியாயீ ஒரு நடத்தை கெட்டவள். அவளுக்கு ரகசியத்தில் ஒரு கள்ளக்காதலன் இருகின்றான்.
அவன் இரவில் அவளுடன் வெகு நேரம் சல்லாபிகிறாள்.அந்த ரகசிய காதலனே இரவில் ஏரியில் மீன் பிடித்து அவளது வருமானத்துக்கு வழி செய்கிறான் என்றெல்லாம் கதைகட்டி விட்டார்கள்.
இத்தகைய சதியின் பின்புறம் இருந்த வீர பாண்டியன் அவளை சந்தித்து தன் காதலை யேசுமரியாயீ ஏற்றுக்கொண்டாள் தான் அவளை மன்னித்து அவளை திருமணம் செய்துகொள்வதாகவும் அவள் இதற்கு மறுத்தால் அவள் நீதி விசாரனையை சந்திக்க வேண்டும். அதன்படி அவள் கொல்லப்பட வேண்டும் என்றும் மிரட்டினான். ஆனால் குணவதியான யேசுமரியாயீ இந்த மிரட்டலுக்கு பணியவில்லை. தன்மீது கொலை பழி போட்டால் கூட தான் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் இவன் தன் மீது மானம்கெட்ட விபச்சாரி என்னும் பட்டத்தை அல்லவா சுமத்தப்போகிறான். இதற்கு பயந்து இவனை திருமணம் செய்துகொண்டால் தன் வாழ்க்கை மிகவும் நாசமாகப்போய்விடும் என்று நினைத்தவள்," அடேய் அற்பப்பதரே... என்னை நீ என்ன நினைத்துக்கொண்டாய். நான் நீ ஆட்டி வைக்கும் பொம்மை அல்ல. நான் நெருப்பு..நான் மாதாவின் பெண். என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது... நீதியுள்ள அரசனும் நீதியுள்ள என் ஆண்டவரும் இருக்கும்போது உன்னால் என்னை என்ன செய்ய முடியும்... உன்னால் முடிந்ததை செய்துகொள்?" என்றாள். வெட்க்கி தலை குணிந்தான் வீரபாண்டியன். ஆனாலும் அவன் வீராப்பு அவனை விடவில்லை. அவளை பழிவாங்க நினைத்தவனாய் அவளைக்கைது செய்து மன்னர் துறவிப்பாண்டியன் முன் நீதி விசாரணைக்காக நிறுத்தினான்.
மன்னர் துறவிப்பாண்டியனுக்கு வீர பாண்டியன் யார் என்பதும் யேசுமரியாயீ யார் என்பதும் மிகவும் நன்றாகத்தெரியும். ஆனால் நீதி, நேர்மை,. விசாரணை என்று வரும்போது சாட்ச்சிகளும் ஆதாரங்களுமே எடுபடும். அதைப் பொருத்தே நீதி அமையும். விசாரணை ஆரம்பித்தது. வீரபாண்டியன் பேசினான்.
" மன்னர் பெருமானே ... இங்கே குற்றம் சாட்டபபட்டுள்ள யேசு மரியாயீ என்னும் பெண் ஒரு நடத்தை கெட்டவள். இவள் அழகை ஆதாரமாக வைத்து இரகசிய வாலிபன் ஒருவனை தன் வீட்டில் இரவில் யாரும் அறியாத வேளையில் வரவழைக்கிறாள். அவனே இவளுக்கு இரவில் மீன் பிடித்து கொண்டு வந்து கொட்டுகிறான்... இப்படியே நகரத்தில் இவள் யார் யாரை எல்லாம் அழைகின்றாள் என்று தெரியவில்லை. இதற்காக நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு நாள் என்னையே அழைத்தாள். நான் மறுத்துவிட்டேன். இவள் என்னிடமே தன் வேலையை காட்டியதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னை திருமணம் செய்துகொள்ள கேட்டிருந்தால் கூட நான் உடன்பட்டிருப்பேன். ஆனால் இவள் என்னை உறவுக்கு அழைத்ததைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இதற்கு வேறு சாட்ச்சிகள் தேவையில்லை." என்றான்.
" பெண்ணே யேசு மரியாயீ...இந்த வீரபாண்டியனின் குற்றச்சாட்டிற்க்கு நீ என்ன மறுமொழி கூறுகிறாய் ?" என்றார் துறவிப்பாண்டியன்.
" அரசே...நான் குற்றமற்றவள்...வேசித்தொழில் செய்து பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் தாயார் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. மானம் இழந்து வாழ்வதைவிட மரணமே எனக்கு மேல் என்னும் பாரம்பரியத்தில் நான் பிறந்து வளர்ந்தவள்." என்றாள் யேசு மரியாயீ.
" அரசே எனக்கு ஒரு வார்த்தை கூற அனுமதியுங்கள். யாருமே விபச்சாரியாகவோ.... தீயவராகவோ அல்லது நல்லவராகவோ பிறப்பது இல்லை. எல்லாம் வளர்ப்பின்படியே வாழ்க்கையும் அமைகிறது "
என்றான் வீர பாண்டியன்.
" பெண்ணே ..உன் பக்க நியாயத்தை நீ கூறலாம்" என்றார் மன்னர் துறவிப்பாண்டியன். யேசு மரியாயீ குற்றமற்றவள் என்பது அவருக்கு நன்றாக தெரிந்ததல் அவள் தன் பக்க நியாயத்தை கூற மேலும் சந்தர்ப்பம் அளித்தார்.
" அரசே... நான் யாருமற்ற அநாதை... இந்த உலகில் எனக்கு சொந்தம் என்று சொல்லக்கொள்ளவோ அல்லது எனக்கு உதவி செய்யவோ யாருமே இல்லாத ஒரு தனி மரம் நான். நான் என்பக்க நியாயத்தை கூறினாலும் என்மீது அநுதாப்படவோ அல்லது எனக்காக பரிந்து பேசவோ யாருமில்லாத போது என் நியாயத்தை யார் கேட்ப்பார் ?" என்றாள் யேசு மரியாயீ.
" பெண்ணே..உன்பக்க நியாயத்தை நான் கேட்கிறேன் கூறு " என்றார் துறவிப்பாண்டியன்.
" என்பக்க நியாயத்தைக்கேட்க்க அரசர் இருகின்றார் என்னும் தைரியத்த்தில் நான் கூறுகிறேன்... அரசே .. இதோ இருக்கும் வீர பாண்டியன் என்மீது காதல் கொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ள என்னை நிர்பந்தித்தான். மறுத்தால் என் வாழ்க்கையை சீரழித்துவிடுவதாக மிரட்டினான். நான் மறுத்ததால் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியிருகின்றான்."
" அரசே இது அபாண்டம்...நான் இருக்கும் அந்தஸ்த்திற்கு எனக்கு பெண்கொடுக்க ராஜ குமாரிகள் பலர் காத்துக்கொண்டிருக்க நான் இந்த பிச்சைக்காரிக்கா ஆசைப்படுவேன்... தன் இழி செயலை மறைக்க இவள் என்மீதே பழி போடுகின்றாள். மோசக்காரி..இவளுக்கு என்மீதே பழிபோட என்ன தைரியமிருக்க வேண்டும்... நானாவது இவளை காதலிப்பதாவது " என்று சீறினான் வீரபாண்டியன்.
வீரபாண்டியனைப்பற்றி நன்கு அறிந்திருந்த மன்னர் துறவிப்பாண்டியன் சற்றே நகைத்து," வீர பாண்டியா...சற்று நேரம் பேசாமல் இரு.. உன்முறை வரும்போது உன் நியாயத்தை நான் அவசியம் கேட்பேன்" என்றார். பிறகு," பெண்ணே...இதற்கு ஏதேனும் ஆதாரம் இருகின்றதா.. வீரபாண்டியன் சமூகத்தில் பெரும் அந்தஸ்த்தில் இருப்பவர். பெரியோர் மீது அவதூறு கூறுதல் கூடாது" என்றார்.
" அரசே... நான் உண்மையைத்தான் சொன்னேன்... யார் மீதும் அவதூறு கூற எனக்கு விருப்பம் இல்லை... மீண்டும் நான் சொல்லிக்கொள்வது நான் குற்றமற்றவள் என்பதே"
" அப்படியானால் வீர பாண்டியா... நீ சொல்வதெல்லாம் உண்மை என்பதற்கு என்ன சாட்ச்சிகள் உண்டு " என்றார் மன்னர் துறவிப்பாண்டியன்.
இத்தகைய சூழ்நிலையில் யார் யார் என்னென்ன சட்ச்சியம் கூறவெண்டும் என்று படிப்பித்திருந்தபடியே சாட்ச்சியங்கள் கூறப்பட்டன. அதன்படி மன்னர்," பெண்னே... நீ இரவில் யாரும் அறியாத வேளையில் யாருடன் பேசிக்கொண்டிருந்தாய்?" என்றார்.
" அரசே... நான் இரவில் வெகு நேரம் என் ஆண்டவராகிய யேசு நாதருடனே பேசிக்கொண்டிருப்பேன்." என்றாள் இயேசு மரியாயீ.
இதைக்கேட்ட மன்னர் துறவிப்பாண்டியன் வியந்து," அப்படியானால் பெண்ணே... இவ்வாறு தினமும் நடக்கின்றதா?" என்றார் ஆச்சர்யத்துடன்.
" ஆம் அரசே.. இவ்வாறுதான் தினமும் நடகின்றது... என் இயேசுநாதர் என்னோடு வெகு நேரம் உரையாடுவார்." என்றாள்.
இதைக்கேட்ட மன்னர் மிகவும் ஆச்சரியப்பட்டு தன் மனதில்," ஆஹா... என்ன பக்தியுள்ள பெண் இவள்." என்று கூறிக்கொண்டார். மீண்டும்," அப்படியானால் உன் ஜீவனத்துக்கு நீ என்னதான் செய்கின்றாய் ?" என்றார்.
" அரசே ...அரசாங்கத்தில் என் தாயாருக்கு கொடுக்கப்பட்ட சுகாதார அலுவலையே நானும் செய்து வருகின்றேன்...மீதி என் நேசத்தாயார் மரியாவால் அனுப்பப்படும் நாரைகளாள் எனக்கு மீன்கள் கிடைகின்றன. " என்றாள் இயேசு மரியாயீ.
இதைக்கேட்ட அரசர் மிகவும் வியந்து தன் மனத்துள்," என்ன உத்தமமான பெண் இவள்" என்று சொல்லிக்கொண்டாள். ஆனால் அதே நேரத்தில் வீரபாண்டியன், " அரசே இவள் கூறுவது அத்தனையும் பொய். இவள் பேச்சை நம்பவேண்டாம். இவள் உங்களை நம்ப வைக்க ஏதேதோ கதைகள் சொல்லி வருகின்றாள். தாங்கள் எதையும் நம்பவேண்டாம்... நான் இவள் கூறுவது எல்லாம் பொய் என்று நிரூபிக்க எத்தனையோ சாட்ச்சியங்களை உம் முன் வைத்திருகிறேன். நீவீர் தீர விசாரித்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டுகிறேன்" என்றான்.
" பெண்ணே... வீர பாண்டியனின் குற்றச்சாட்டுக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருகின்றன. இந்த ஊரில் பாதிப்பேர் உனக்கு எதிராக குற்றம் சாட்டுகின்றார்கள். உன்பக்க நியாயத்துக்கு நீ என்ன ஆதாரம் வைத்திருகின்றாய் " என்றார் மன்னர்.
" அரசே ... என் பேச்சுக்கு நானே ஆதாரம்.. உண்மையே எனது சாட்ச்சியம். என்பக்க நியாயத்தை நிரூபிக்க என் வாக்கு மூலமே எனது ஆதாரம். இதைத்தவிர என்னிடம் வேரொன்றுமில்லை."
"பெண்ணே... இது நீதி மன்றம்...இங்கு வழக்குக்கு தேவையானவை சாட்ச்சியமும் ஆதாரங்களுமே.. இவைகளை வைத்தே தீர்ப்பு வழங்க முடியும். இந்த கணக்கன் குடியிருப்பு மக்களில் முக்கால் வாசீப்பேர் உனக்கு எதிராக சாட்ச்சியம் கூறிதை நீ கேட்க்கவில்லையோ?" என்றார் மன்னர் துறவிப்பாண்டியன்.
" அரசே ... எனக்கு எதிராக இந்த ஊரே சாட்சி கூறினாலும் நான் கவலைப்படப்போவதில்லை. ஆனால் நீவீர் துறவிப்பாண்டியன் எனப்பெயர் பெற்றவர்...உம்முடைய நீதி வழுவாது... தவறாது என்று பெயர் பெற்றவர்...இந்த நீதி ஆசனத்தில் அமருபவர் கடவுளுக்கு சமமானவர். அந்த நம்பிக்கையில் நான் கேட்கிறேன்...நான் குற்றமற்றவள் என்று நீவீர் நம்புகின்றீரா?" என்றாள் இயேசு மரியாயீ.
இத்தகைய ஒரு திடீர்த்தாக்குதலால் அப்படியே ஆடிப்போய் விட்டார் மன்னர் துறவிப்பாண்டியன். இருப்பினும் தன்னை சுதாரித்துக்கொண்ட மன்னர்," பெண்ணே... உன்பக்கத்தில் ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும் எனக்கு வேண்டியது ஆதாரம்..சாட்ச்சியம். உன்னை பொருத்தமட்டில் அது ஒன்றும் இல்லை. எனவே உன்னைப்பொருத்தமட்டில் நான் நீ குற்றவாளி என்றே
கருதவேண்டி இருகின்றது." என்றார்.
இப்போது தன் நிலையை அறிந்துகொண்டாள் இயேசு மரியாயீ.. அடுத்து தனக்கு ஆகப்போகும் கதியையும் அறிந்துகொண்டாள். இனிமேல் பேசிப்பயனில்லை. எப்படி வாதாடியும் பயனில்லை... எல்லாம் முடிந்து விட்டது என்றறிந்தவளாய்," அரசே... தன்னெஞ்சறிவது பொய்யற்க. இதற்கு உமக்கு பொருள் தெரிந்தால் நடத்திக்கொள்ளும் உம் நாடகத்தை. நியாயத்தை நிலை நாட்ட கையாலாகாத மன்னன் நீர் என எதிர்காலம் உம்மை பழிக்கட்டும் " என்றாள்.
மன்னர் துறவிப்பாண்டியனின் கண்களில் அப்படியே ஒரு சொட்டு கண்ணீர் அரும்பி வழிந்தது. அவர் மனத்தில்," பெண்ணே...நீ உத்தமி...நீ குற்றமற்றவள்..ஆனாலும் உன்னைக்காப்பாற்ற என்னால் முடியவில்லை... என்னை மன்னித்துவிடு"என்றார்.
தங்கள் திட்டப்படி மன்னர் படிந்துவிட்டார் என்றுணர்ந்த வீரபாண்டியன்," அரசே...விபச்சாரிப்பட்டம் பெற்ற பெண்ணுக்கு என்ன தண்டனை தர வேண்டுமோ அந்த தண்டனையை அவளுக்கு தாருங்கள்... இந்த கணக்கன் குடியிருப்பில் இத்தகைய தண்டனை கொடுத்து வெகுகாலம் ஆகின்றது. இவளுக்கு கொடுக்கப்படும் தண்டனை எதிர்கால சந்ததியினருக்கு பெரும் பாடமாக இருக்க வேண்டும் " என்றான்.
" அடேய் வீர பாண்டியா... என் நீதியில் நீ தலையிடாதே..என்ன செய்வது.. காலமும் நேரமும் உனக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இனி நடப்பது நடக்கட்டும். எல்லாம் அவன் செயல்" என்று அவனை பார்த்து சீறினார். பிறகு தன் நீதி விசாரணையின் தீர்ப்பை வாசித்தார். அது இப்படியாக இருந்தது.
" இயேசுமரியாயின் பக்க நியாயத்தையும் வீர பாண்டியணின் நியாயத்தையும் நாம் கேட்டோம். இயேசு மரியாயியின் வாக்குமூலத்தின்படி அவள் கூற்றை நிரூபிக்க யாதொரு ஆதாரமும் இல்லை.
அவள் தினசரி இரவில் இயேசுநாதரிடம்தான் பேசிவந்தாள் என்னும் கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அவள் கூற்றும் நம்பும்படியாகவும் இல்லை. இந்த ஊர் மக்கள் பலபேர் அவள் அவளுடைய கள்ளக்காதலனுடன் இரவில் தனித்து பேசுவதை கேட்டிருப்பதாக கூறுவதை இந்த நீதி மன்றம் ஏற்றுக்கொள்கிறது. நாரையூரின் கொக்குகள் மீன் பிடித்து வந்து அவளுக்கு உதவி செய்கின்றன என்பதும் நம்பும்படியாக இல்லை. இதற்கும் ஆதாரம் கொடுக்கப்படவில்லை. எனவே நாம் இந்தப்பெண் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியாக நம்பவேண்டி இருக்கின்றது.
எனவே இந்த நீதிமன்றம் இயேசுமரியாயை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கின்றது. எனவே இத்தகைய குற்றவாளிகளுக்கு காலம்காலமாக கடைபிடித்துவரும் நடைவிளக்கு என்னும் தண்டனையை யேசுமரியாயிக்கு அளிக்கின்றது. அதுவும் இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் இன்றே இந்த தண்டனையை நிறைவேற்ற நாம் உத்திரவிடுகின்றோம்" என்றார் மன்னர் துறவிப்பாண்டியன்.
இந்த தண்டனைத்தீர்ப்பை கேட்ட வீர பாண்டியன் மிகவும் மகிழ்ந்தான். அவனோடு சேர்ந்து அவனால் அமர்த்தப்பட்டிருந்த சாட்ச்சிகளும் மகிழ்ந்தனர். ஆனால் அழுதவர்கள் பலர் இருக்கத்தான் செய்தனர். அவர்களுள் மன்னரும் ஒருவர். கைகள் கட்டப்பட்ட நிலையில் இயேசுமரியாயீ வெளியே கொண்டு வரப்பட்டாள். அவளைக்கண்ட வீரபாண்டியன்," அடியே இயேசு மரியாயீ... இப்போது என்ன சொல்கிறாய்... இந்த வீர பாண்டியனை யார் என்று நினைத்துக்கொண்டாய்... அன்று என்னை கண்ணத்தில் அறைந்தாயே. ..நினைவிருகின்றதா... இப்போது அதற்க்கு பழிக்குப்பழி...இப்போது
உன் உயிர் என் கையில்...உன்னை என்னவெல்லாம் செய்யப்போகின்றேன் பார்... உன் மானத்தை வாங்கப்போகின்றேன்... உன் திரேகத்தில் உன் நாடி நரம்பெல்லாம் பற்றி எரிய வைக்கப்போகின்றேன் ..என்னப்பகைத்துக் கொண்டால் என்னவாகும் என்பதற்கு உனக்கு நேரப்போகும் கொடுமையான சாவு மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகட்டும் " என்றான்.
ஆனால் யேசு மரியாயீ இதற்கெல்லாம் பயந்தவளாகத்தெரியவில்லை. அசிங்கத்தை மிதித்து அருவறுப்படைந்த பெண்போல் அரசனையும் வீர பாண்டியனையும் பார்த்தாள்.
" அரசே நீரெல்லாம் ஒரு மன்னர்...பெரும் நீதிபதி...உமக்கு பெண்டாட்டியும் இல்லை... பிள்ளைகுட்டியும் இல்லை..உமக்கு எதற்கு பதவி ஆசை.. உம்முடைய பதவியை காப்பாற்றிக்கொள்ளத்தானே நீர் என்பக்க நியாயத்தையும் பாராமல் என்னை பலிகொடுத்தீர்...வெட்க்கமாக இல்லை...இனிமேல் உமக்கு எதற்கு மன்னர் என்னும் பதவியும் பட்டமும்.. உம்முடைய பதவியும் பட்டமும் நாசமாகப்போகட்டும்...தவறான தீர்ப்பு கொடுத்த இந்த நாடு மண்மேடாகப்போகட்டும்... என்னையும் என் கடவுளையும் அருவருப்பாக பேசியதாக கூறிய இந்த நாடு சபிக்கப்படட்டும்...
இந்த ஊரும் மக்களும் நாசமாகப்போகட்டும்...நான் என் கணவனுடே மட்டுமே வாழ்ந்தது உண்மையானால்... நான் என் ஆண்டவராகிய இயேசுவை மட்டுமே வழிபட்டு வந்தேனென்பது உண்மையானால்... நான் என் நேசத்தாயார் மரியாளின் அன்பான குமார்த்தி என்பது உண்மையானால்... அவரது சொல்லுக்கிணங்க இந்த நாரைக்கூட்டங்கள் எனக்கு உணவாக மீன்களை கொண்டுன் வந்தது உண்மையானால்.... என் வாக்கு பலிக்கட்டும்... இந்த நாளிலே இந்த நாடு மண்மாறி பொழியட்டும் " என்று மண்ணை வாறித்தூற்றினாள்.. ஆம் ... இவையாவும் உண்மை என வானம் இடி இடித்தது... அப்போதே இருட்டி வர ஆரம்பித்தது. அப்போதே அவளது சாபம் பலிக்க ஆரம்பித்ததைக்கண்ட மக்கள் சிலர்," இயேசு மரியாயீ...நீ குற்றமற்றவள். இதோ உன் சாபம் பலிக்க ஆரம்பித்து விட்டது. குற்றமற்ற நாங்கள் என்ன செய்வோம்... எங்களை மன்னிக்க மாட்டாயா... எங்களுக்கு உயிர் பிச்சை அளிக்க மாட்டாயா?" என்று அழுதனர்.
அப்போது யேசுமரியாயீ," எனக்கு சாட்ச்சி சொல்ல வராமல் நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள்?" என்றாள்.
" தவறுதான் அம்மா...தவறுதான்... எங்களை மன்னித்துவிடு... நாங்கள் அனைவரும் பாவப்பட்ட ஜென்மங்கள்... வீர பாண்டியனின் அடக்கு முறைக்கு முன்னால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போதும் எங்கள் பிள்ளக்குட்டிகளின் எதிர்காலம் கருதி எங்களை மன்னித்து விடம்மா... இயேசுநாதரின் முகம் பார்த்தும் மாதாவின் முகம் பார்த்தும் எங்களை மன்னித்து விடம்மா... எங்களுக்கும் எங்கள் சந்ததியினருக்கும் உயிர் பிச்சை கொடம்மா " என்று கதறினர். அவர்கள் மீது மிகவும் பரிவு கொண்ட இயேசுமரியாயீ," சரி...எல்லோரும் ஓடிப்போம்...ஓடிப்போம்... எதையும்
கையில் எடுத்துக்கொள்ளாமல் உங்கள் பிள்ளைக்குட்டிகளை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு இப்போதே ஓடிப்போம் ஓடிப்போம்" என்றாள். அந்த வினாடியே அவர்கள் அனைவரும் இந்த கணக்கன் குடியிருப்பிலிருந்து ஓடிப்போயினர். அடுத்து நடந்தது பயங்கரம்.
அரசாங்க ஆணைப்படி ஊர் தண்டோராக்காரன் தன் உயர்ந்த குரலில் யேசு மரியாயீக்கு நடந்த தீர்ப்பை வாசித்துக்கொண்டு அடுத்து நடக்கப்போகும் கொலைத்தண்டணை நிறைவேற்றத்துக்கு ஊர் மக்களை அழைத்தான். யேசு மரியாயை மொட்டை அடித்து முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவளை அவமானப்படுத்தும் விதத்தில் அவளை ஒரு கழுதையின்மீது ஏற்றிவைத்து அவளுக்கு செருப்பு மாலையும் எருக்கு மாலையும் அணிவித்தனர். தண்டோராக்காரன் அவளை அழைத்துச்செல்லும் இடங்களிலெல்லாம் அவள் பெரும் விபச்சாரி என்னும் பட்டத்தை கூறிவந்தான்.
அவளைப்பற்றி அறியாத பெண்கள் பலர் அவளை காறி உமிழ்ந்தனர். சிலர் செறுப்பை அவள் மீது வீசி எறிந்தனர். அவள் ஊர் முழுக்க சுற்றிவந்ததும் மாதாக்கோயில் முன்னிலையில் அவளை நிற்கவைத்தனர். " அம்மா தேவத்தாயாரே...இனிமேல் எனக்கு நீயே எல்லாம். யேசுவும் மரியாயியும் என்னைக்காப்பீராக" என்றாள். அவள் உச்சந்தலையில் கூரான ஒரு உளியாள் அவள் சிரசின் உச்சியை அடித்து உடைத்தனர். உடனே அதிலிருந்து ஏறாளமான இரத்தம் வெளியேறியது. ஒரு நீண்ட ஒரு திரியை அவள் சிரசின் உச்சியில் மூளையின் உள்ளே செலுத்தி அந்த துவாரத்தில் விளக்கு
எரிக்கும் எண்ணையை ஊற்றினர்.
அடுத்து நிகழ்ந்ததுதான் பயங்கரத்தின் உச்சக்கட்டம். எண்ணையில் நனைக்கப்பட்டிருந்த அந்த திரியை தீ வைத்துக்கொளுத்தினர். அந்த தீ பரபரவென்னும் சப்த்தத்தோடு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. சில நிமிடங்களில் இயேசுமரியாயின் சிரசின் உச்சி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அவள் திரகம் எல்லாம் வலிப்பு வந்தாற்போல் குலுங்கியது. அவள் கண்கள் நிலைகுத்தின.
ஆவேசமாக பார்க்கும் ஒரு பெண்ணைப்போல் அவள் கண்கள் வெளியே வந்தன. வீரபாண்டியன் அவள் மீது மேலும் எண்ணையை ஊற்றினான். அது அவள் திரகத்தில் பட்ட இடமெல்லாம் பற்றி எரிய ஆரம்பித்தது. அவளது சிரசு பெரும் தீப்பந்தம் போல மாறி திகுதிகு என தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த நிலையை காண சகிக்காத பலர் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். அப்போது வீரபாண்டியன்," நில்லுங்கள்...இவள் முழுவதும் எரியும் வரை பார்த்துச்செல்லுங்கள்... இவளது மானக்கேட்டை பார்த்துச்செல்லுங்கள்" என்றான்.
ஆனால் ஆண்டவராகிய யேசுநாதர் அவள் மானம் யாரும் காணாதபடி அவளைக்காத்தார். சுழண்றடித்து வந்த காற்றால் அவள் திரேகம் எல்லாம் பற்றி எரிய அவளது மானாம் காக்கப்பட்டது.
இத்தனை வேதனைகளிலும் அவளிடமிருந்து சிறு முனகல் மட்டுமே வந்தது. நெருப்பு பற்றி எரிவோர் எழுப்பும் மரண ஓலம் பெரிதாகவும் இருக்கும். பரிதாபமாகவும் இருக்கும். ஆனால் நம் யேசுமரியாயீக்கு இவ்வாறு நிகழாமல் இயற்கைக்கு மாறாக சிறு சிறு விம்மல்களும் விசும்பல்களும் மட்டுமே கேட்டது. கடைசியாக " டொப்" என்னும் ஒரு சப்த்தத்துடன் அவளது கபாலம் வெடித்தது. அதனுள் தீப்பற்றி எரியும் விதமாய் பறந்து வந்துது நெருப்பு சதைத்துண்டு ஒன்று. அது அந்த தேவாலயத்தில் இருந்த விண்ணரசி மாதாவின் சொரூபத்திற்கும் முன்னாள் அணைத்து வைக்கப்பட்டிருந்த தீவட்டி விளக்கை பற்ற வைத்தது. அத்துடன் யேசுமரியாயின் ஆன்மா பிரிந்தது. அவள் உடல் இன்னும் பற்றி எரிந்து கொண்டே இருந்தது.
இதற்குள்ளாக சிலர் ," ஐயோ ஆபத்து... ஆபத்து...இந்த நகரத்தின்மீது பெரும் மணற்புயல் வீசுகின்றது. ஓடிப்போங்கள் ... ஓடிப்போங்கள்" என்று ஒரு அலறல் கேட்டது. வானத்தில் பெரும் மணற்கூட்டம் ஒரு பெரும்படை வருவதுபோல் அனைவர் மீதும் வீசியது. சுழன்று சுழன்று அடித்த சூரை காற்றுடன் மணற்புயலும் சேர்ந்துகொண்டதால் எது, யார்?, எங்கே என்று காணமுடியாமல் பெரும் பயங்கரம் வந்து தங்களை சூழ்ந்துகொண்டதை கண்ட மக்கள் ," யேசு மரியாயீ எங்களை மன்னியும் என்று கதறினர். ஆனால் விதி வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது. அது தன் வினையை நடத்தி முடிக்கும்வரை விடாது. தெய்வம் நின்று கொல்லும் என்பது அப்போது தான் அந்த மக்களுக்கு புறிய ஆரம்பித்தது. ஆனால் என்ன செய்வது. காலம் கடந்துவிட்டது. இந்த கணக்கன் குடியிருப்பு முழுவதும் அந்த மணற்காற்றால் சூழப்பட்டுவிட்டது. அரசன்முதல் ஆண்டிவரை யாரும் தப்பிக்க முடியவில்லை. அரண்மனை முதல்; தேவாலயம் வரை எல்லாம் மண்ணுக்குள் மூழ்க ஆரம்பித்தன.
யேசுமரியாயின் சாபத்திற்க்கு இந்த விண்னரசி மாதா ஆலயமும் தப்பவில்லை. ஆனால் யேசு மரியாயின் ஆன்மா ஏற்றிவைத்த அந்த தீவட்டி விளக்கு அந்த தேவாலயம் முழுவதும் மூழ்கிப்போகும் வரை எரிந்து கொண்டேதான் இருந்தது. இப்படியாக தோமையாரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த கணக்கன் குடியிருப்பின் விண்ணரசி மாதா தேவாலயம், தோமையாரால் கட்டப்பட்ட முதல் தேவாலயம், சுமார் 1649 ஆண்டுகளாக கிறிஸ்த்துவின் ஞான ஒளியை வீசிக்கொண்டிருந்த தேவாலயம் இந்த மண்ணுக்குள் மூழ்கிபோனது. ஆம்... அன்றைய தினம்... யேசு மரியாயிக்கு தண்டனைத்தீர்ப்பு வழங்கப்பட்ட தினம் அந்த வருடத்திய அதாவது கி.பி.1649 பெரிய வெள்ளிக்கிழமை. அன்றுதான் யேசுமரியாயி தீப்பிழம்பாய் உயிர் நீத்ததினம். இந்த நாளிலேயே இந்த கணக்கன் குடியிருப்பும் இந்த ஊரும், இந்த பரிசுத்த தேவாலயமும் மண்ணுக்குள் புதைந்தது. இந்த துறவிப்பாண்டியனின் தவறான தீர்ப்பால் இந்த கணக்கன் குடியிருப்பும் வீழ்ந்தது. அன்று பாண்டியனின் ஒருவனால் கண்ணகியின் கணவன் கோவலன் கொலை செய்யப்பட்டான். கண்ணகியின் சாபத்தால் மதுரை தீப்பற்றி எரிந்தது. இன்று யேசு மரியாயி எரிந்து இந்த கணக்கன் குடியிருப்பு மண்ணில் புதைந்தது.
ஆனால் சரித்திரம் அத்துடன் முடிந்துவிடவில்லை. யேசுநாதரால் ஸ்தாபிக்கப்பட்ட அவரது அரசுக்கு என்றும் அழிவே இல்லை... அதற்கு முடிவு என்பதே இல்லை என்கிறது இந்த ஊரின் சரித்திரம்.
ஆம் இந்த ஊரில் கோயில் கொண்டு விளங்கும் விண்னரசி மாதா தான் இன்னும் இந்த ஊரிலே இன்னும் இருகின்றேன் என்று நமக்கு ஆதார பூர்வமாக நிரூபித்து வருகின்றாள்... இது உண்மைதான்... இல்லை என்றால் இந்த மண்மேட்டுக்கு அடியில் சுமார் 150 வருடங்களாக புதையுண்டிருந்த தேவாலாயம் மீண்டும் வெளியே தோன்றியிருக்க முடியுமா?. முடியும் என்கின்றது இந்த ஊரின் சரித்திரம்.
யேசுமரியாயின் சாபத்தினால் மண்ணுக்குள் புதையுண்ட இந்த கணக்கன் குடியிருப்பைபற்றி மக்கள் யாவரும் மறந்து போயினர். இந்த செம்மண் மேடாகிப்போன இந்த கணக்கன் குடியிருப்பின் அடையாளம் முதலாய் மாறிப்போய் மறந்தும் போனது. சாபத்தால் பீடிக்கப்பட்ட இந்தா ஊரில் மக்கள் யாவரும் இருக்க முடியாதபடி ஆயிற்று. நாய்களும் நரிகளும் கோட்டான்களும் குடியிருக்கும் இடமாகிப்போனது. உலக சரித்திரத்தில் மண்ணுக்குள் புதையுண்ட நினைவே பட்டிணம் போலவும் பாபிலோன் பட்டிணம் போலானது இந்த கணக்கன் குடியிருப்பு. எல்லாம் சாபத்தினால் வந்த வினை.
ஆனால் நினைவே பட்டிணம் போலல்லாது.... பாபிலோன் பட்டிணம் போலல்லாவது.... இந்த கணக்கன் குடியிருப்பில் கோயில் கொண்டிருக்கும் விண்ணரசி மாதா தான் இன்னும் இங்கே இருகின்றேன் என்று உலகிற்கு காட்டினாள். பாபிலோனும் நினைவேயும் மண்ணுக்குள் போனவை போனவைதான். அவை மீண்டும் வெளிக்கொணரப்படாவே இல்லை. ஆனால் இந்த கணக்கன் குடியிருப்பிலிருந்து மாதா மண்ணிலிருந்து 150 ஆண்டுகளுக்குப்பிறகு வெளியே வந்தாள். ஆம் ... நினைத்தாலே நெஞ்சு சிலிர்க்கும் ஒரு இனிய சம்பவம் கி.பி.1799ல் நிகழ்ந்தது. இதே வருடம்
செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி. அதாவது மாதா அமல உற்பவியாக பிறந்த தினம். இந்த உலகத்திற்கு தன் தாய் வயிற்றிலிருந்து பிறந்த இதே தினத்தையே இந்த கணக்கன் குடியிருப்பில் தான் புதையுண்ட மண்ணிலிருந்து தன்னை வெளி உலகத்துக்கு காட்டிக்கொள்ள மாதா தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
இந்த மண்மூடிப்போயிருந்த கணக்கன் குடியிருப்பில் செப்டம்பர் 8 ஆம்தேதி 1799ல் தன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான் சவரியப்பன் என்னும் ஒரு இடையன். அப்போது ஒரு இடத்தில் ஏதோ ஒன்று தன் காலை இடறவே அது என்ன என்று பார்த்தான் அவன். தன்னை இடறியது ஒரு சிலுவை என்றறிந்த அந்த இடையன் ஆச்சரியத்தால் மூழ்கி உடனே வடக்கன்குளம் பங்கு சாமியாரை அணுகி விஷயத்தை கூறினான். இந்த கணக்கன் குடியிருப்பின் வரலாறு தெரிந்த அவர் உடனே தம் குழுவினருடன் இந்த கணக்கன் குடியிருப்புக்கு விரைந்து வந்தனர். இது உண்மையில்
மாதாவின் செயலே என்றுணர்ந்த அவர்கள் ஒரு மாதம் அளவாய் அங்கிருந்த அவ்வளவு மண்னையும் அள்ளி வெளியே எடுத்தனர். கடைசியில் மாதா 7 ஆம் தேதி அக்டோபர் மாதம் தன் திருமுகம் காட்டிணாள்.
அதுவரை இயேசு மரியாயின் ஆன்மா ஏற்றிவைத்திருந்த அந்த தீவட்டி விளக்கு எரிந்து கொண்டிருந்ததைக்கண்ட அவர்கள் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போயினர். சுமார் 150 ஆண்டுகளாய் இந்த மண்ணுக்குள்ளிருந்த இந்த தீவட்டி விளக்கு எண்னையும் இல்லாமல்... காற்றும் இல்லாமல் மாதாவுக்கு முன்னால் எரிந்துகொண்டிருந்தது எவ்வளவு பெரும் புதுமை. அது மாதா அங்கே மண்ணில் புதையுண்டிருந்தாலும் தான் இன்னும் அங்கே இருந்துகொண்டே அருள் பாலித்து வந்திருக்கின்றாள் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும். ஆச்சரியத்துக்குறிய மாதா என்பது
இப்படித்தானோ?.. பிறகு காரியங்கள் அனைத்தும் மள மளவென்று நடந்தன. இப்போது நாம் காணும் இந்த அதிசய மணல் மாதாவின் தேவாலயம் இப்படியாகத்தான் வெளிக்கொண்டுவரப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக அருள்பாலித்து வருகின்றாள். இந்த உலகின் பேரரசுகள் முதலாய் சரித்திரத்தில் இல்லாதபடி மறைந்து போய் விட்டன. ஆனால் ஆண்டவராகிய யேசு கிறிஸ்த்துவினால் ஸ்தாபிக்கப்பட்டு வந்திருக்கும் நம் கிறிஸ்த்துவ ஜோதி இந்த உலகம் முடியும் மட்டும் தொடர்ந்து ஒளீ வீசிக்கொண்டே இருக்கும். அவரது அரசுக்கு முடிவென்பதே இருக்காது.
இந்த கணக்கன் குடியிருப்பு மண்ணில் மூழ்கிப்போய்விட்ட பிறகு இப்போது இருப்பது சொக்கான் குடியிருப்பு மட்டுமே. இந்த ஊரின் தேவாலயத்திற்க்கு நாங்கள் எங்கள் குடும்பத்தோடு சென்றிருந்தபோது இந்த மண்ணில் கால் வைத்த உடன் ஒரு பெரும் சோகமும் அமைதியும் எங்களை ஆட்க்கொண்டதை எங்களால் உணர முடிந்தது. ஆனாலும் இந்த புண்ணிய பூமி யேசு நாதரின் நெருங்கிய சகோதரரும் அப்போஸ்த்தலருமாகிய தோமையாரால் ஸ்தாபிக்கப்பட்ட இடம் என்றும் அவர் ஆரம்பித்து வைத்த கிறிஸ்த்துவின் அரசு இங்கிருந்தே ஒளி வீச ஆரம்பித்து இன்னும்
ஒளி வீசிக்கொண்டிருகின்றது என்பதும் இங்கிருந்துகொண்டு அவரது நேசத்தாயார் செய்து வரும் அரும்பெரும் புதுமைகள் எப்பேர்பட்டவை என்றறியும்போது மனது பெரும் அக்களிப்பு அடைகின்றது.
எப்பேர்ப்பட்ட புண்ணிய பூமி இது. இது இந்தியாவில்...தமிழகத்திலுள்ள அனைத்து கிறிஸ்த்துவ தேவாலயங்களுக்கும் தாய். இங்கிருந்தே அனைத்து தேவாலயங்களும் தோன்றின.
இதற்கு இணையான புண்ணிய பூமி நம் தமிழகத்தில் வேறெங்கும் உண்டோ... இல்லை...இல்லை... இல்லவே இல்லை.
இந்த கணக்கன் குடியிருப்பில் குடிகொண்டிருக்கும் விண்னரசி அன்னையின் ஆலயம் பற்றியும் இந்த ஊரின் சரித்திரம் பற்றியும் முறையான சரித்திர சான்று சென்னை ஆவணக்காப்பகத்தில் இல்லாமல் போனதுதான் துரதிர்ஸ்ட்டம். காரணம். இந்த பகுதியை நிர்வாகித்த பாதிரியார்கள் போர்த்துக்கீசியர்களும் அவர்களுக்கு பின்வந்த பிரென்சுக்காரர்களும் தான். அவர்களிடமிருந்த சில சரித்திரக்குறிப்புகள் மட்டுமே இந்த இடத்தைப்பற்றிய சரித்திரத்தை அறிய உதவின. மேலே சொல்லப்பட்ட யேசு மரியாயினுடைய வரலாற்றுக்கும் முறையான ஆவணங்கள் இல்லை.
எல்லாம் பாரம்பரியம் பாரம்பரியமாக சொல்லப்பட்டு வந்த சரித்திரம் தான். ஆனால் அது கதை அல்ல. நிஜம்.
The End.

No comments:
Post a Comment