Monday, December 12, 2016

" புனித தோமையார் எழுப்பிய அதிசய மணல் மாதா ஆலயம் "


" புனித தோமையார்  எழுப்பிய  அதிசய  மணல் மாதா  ஆலயம் "

    ஆனாலும் இந்த அதிசய மணல் மாதா கோயில் கொண்டிருக்கும் கணக்கன் குடியிருப்பு என்னும் ஊருக்குத்தான் எத்தனை வரலாற்று சிறப்புகள் உள்ளன. கி.பி. முதலாம்  நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே  இந்த  கணக்கன் குடியிருப்புதான் தென் பாண்டி மன்னர்களின் தலை நகராக இருந்தது  என்பது ஆச்சரியமான விஷயம் அல்லவா. அன்றைய அரசாங்கத்தின்  தலைமை செயலகம்  இந்த  ஊரில் இருந்ததினால் தான் இந்த ஊருக்கே கணக்கன் குடியிருப்பு  என்னும்  பெயர்  வைக்கபட்டிருந்தது. யேசுவின் அப்போஸ்த்தலராகிய  புனித  தோமையார்  இந்த  ஊருக்கு வந்து வேதம் போதித்து அவர் காலத்திலேயே  இந்த தென்பாண்டி மண்டலம்  முழுவதையும் மனம் மாறச்செய்தார்  என்பது  வரலாற்று  உண்மை.
   இந்த காலக்கட்டத்தில்தான்  குழந்தை  யேசுவை  காண  வந்த  மூன்று ராஜாகளில்  ஒருவரான  கஸ்பார்  என்னும் மன்னர்  இதே  கணக்கன் குடியிருப்பை  தலை  நகராகக்கொண்டு ஆட்சி செய்து வந்தவர்தான் என்பதும் இந்த கணக்கன் குடியிருப்பில்தான்  இந்தியாவில்  அதுவும்  நம் தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக  கிறிஸ்த்துவ  தேவாலயம்  அதுவும் தோமையாரின்  புனிதமான  கரங்களால்  கட்டி எழுப்பி  அபிஷேகம் செய்யப்பட்டது  என்பதும்  வரலாற்று  உண்மை.
   இதே கால கட்டத்தில் தான் மூன்று  ராஜாக்களில் ஒருவரான  மெல்கியோர் தன் மகளுடனும் மறு மகனுடனும்  இதே கணக்கன்  குடியிருப்பில்  வந்து தோமையாரை  சந்தித்தார். ஆக  இதே கணக்கன் குடியிருப்பில் தான் தோமையாரும் மூன்று ராஜாக்களில்  இருவரான  மெல்கியோரும்  கஸ்பாரும் சந்தித்துக்கொண்டனர். . மேலும்  இதே  கணக்கன்  குடியிருப்பில்தான்  புனித தோமையார்  வேதாகமத்தின் சாராம்சங்கள் அடங்கிய  தெய்வ நூலை எழுதினார். இந்த நூல்  திருவள்ளுவர்  எழுதிய  திருக்குறளுக்கு முன்னோடியானது  என்று  கூறப்படுகின்றது.  இத்தகைய  பெரும் வரலாற்றுச்சிறப்புகள் மிக்க  இந்த கணக்கன்  குடியிருப்பு  என்னும் தென்பாண்டி நாடு  ஒரு  விதவைப்பெண்ணின்  சாபத்தினால்  மண்மாறி பொழிந்து  அழிவுற்றது  என்பது  வரலாற்று  உண்மையாயினும்  இங்கு தான் இருந்து அருள்பாலித்தது  உண்மை  என்னும்  விதத்தில்  மீண்டும் பூமியிலிருந்து  200  வருடங்களுக்குப்பின்  வெளிக்காட்டி  இப்போதும்  தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு  அருள்பாலித்து  வருவதும்  உண்மை  என்பதும் நமக்கு  ஆறுதலும்  சந்தோஷமுமான செய்தி.
   ஆக  இந்த  கணக்கன்  குடியிருப்பில்  அருள்பாலித்துவரும்  நம் மாதா கோயிலுக்கு 2000 வருட  சரித்திரம்  உண்டு  என்பதும்  இன்னும்  எப்போதும் நமக்கு  அருள் பாலித்து  வருவாள்  என்பதும்  நமது  அசைக்க முடியாத நம்பிக்கை. நல்லது. நாம் வரலாற்றுக்குட்சென்று  இங்கு  என்ன  நடந்தது என்பதை விரிவாகப்பார்க்கலாம்.
உண்மையில்  நம் புனித தோமையாருக்கு  இந்தியா வர விருப்பம்  இருந்ததா என்றால்  இல்லை  என்றே  துணிந்து கூறலாம். யேசுநாதர்  தன்  33 ஆம் வயதில்  இறந்து  பரலோகம்  சேர்ந்த  பிறபாடு  அப்போஸ்தலர்கள் அனைவரும் ஒன்றுகூடி  தங்களின்  விசுவாச அறிக்கையை  தயாரித்தனர். முதலில்  புனித இராயப்பர்  பரலோகத்தையும்  பூலோகத்தையும் விசுவாசிகிறேன்  என்று  ஆரம்பித்து  வைக்க  மற்றைய  அப்போஸ்த்தலர்கள் ஒவ்வொருவரும்  ஒவ்வொரு  விசுவாச அறிக்கையாக  வெளியிட்டனர். அதன்படி  புனித தோமையார்  ஐந்தாவது  வேத  சத்தியமாக  யேசுநாதரின் ஆன்மா பாதாளங்களில்  இறங்கி  மூன்றாம்  நாள்  மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்  என்று  விசுவாச  அறிக்கையை  வெளியிட்டார். பிறகு அப்போஸ்த்தலர்கள்  அனைவரும்  தத்தம்  விசுவாச அறிக்கையை
அறிக்கையிட்டபின்  யார்  யார் எந்தெந்த  நாடுகளுக்கு  போய்  வேத போதகம் செய்ய வேண்டும் என சீட்டுப்போட்டுப்பார்த்தனர். அப்போது  நம்  புனித தோமையருக்கு  இந்தியா  செல்ல சீட்டு விழுந்தது.
  இதை யேசுவின் தலைமை  சீடர் புனித இராயப்பர்  இப்படியாக  அறிவித்தார்.
" நம் அன்புள்ள சகோதரன் தோமை இந்தியா செல்ல ஆண்டவர் விரும்புகின்றார். அங்கு சென்று குழந்தை யேசுவை ஆராதிக்க  வந்திருந்த மூன்று  ராஜாக்களையும் சந்தித்து  அவர்களுக்கு ஞாஸ்நானம் கொடுத்து அவர்களையும்  அவர்களுடைய  ராஜ்ஜியங்களையும்  அவர்தம்  மக்களையும் அசீர்வதித்து  அவர்கள்  அனைவரையும்  கிறிஸ்த்துவின்  மக்களாக ஆக்குவார். நம்  சகோதரருக்கு  நாம்  அனைவரும்  நம்முடைய வாழ்த்துக்களையும்  பிரியாவிடையும்  கொடுப்போமாக " என்றார். உடனே  நம் புனித  தோமையாரின்  முகம்  வாடிவிட்டது.
இவரது  வாடிய  முகத்தைக்கண்ட  புனித  ராயப்பர்," சகோதரரே...ஏன்  உமது முகம்  வாட்டமாக  இருகின்றது.. ஆண்டவரின்  அழைப்பின் பேரில்  உமது தீர்மானம்  என்ன?." என்றார்.
அதற்கு புனித தோமையார்," சகோதரரே..இந்த அழைப்பின்பேரில்  எனக்கு இஷ்ட்டமில்லை. நான்  அவ்வளவு  தூரம்  போக  எனது  வயது  பெரும் அச்சுருத்தலாக  உள்ளது. இந்தியா  என்பது  இந்த பூ உலகின் கடைக்கோடியில்  அல்லவா  இருகின்றது. எனக்குப்பதில்  வேறு  யாராவது இள வயதினரை  தேர்ந்தெடுப்பது  நல்லது." என்றார்.
அதற்கு  புனித  ராயப்பர், " சகோதரரே... நான்  கடவுளின்  திருவுளத்தை வெளிப்படுத்திவிட்டேன். அவரது  திருவுளத்தை  மாற்ற  நான் யார்?. உமக்கு விருப்பமானால் நீர் நம் யேசுநாதரிடமே  கேட்டுகொள்ளலாமே" என்றார்.
" சகோதரரே..உண்மையில்  எனக்கு  இந்த  பயணத்தில்  ஆர்வமில்லை. நான் இங்கேயே  இருந்துகொண்டு  எனது  திருத்தொண்டை பார்த்து கொள்கின்றேன் .எனக்கு  இந்த  ஜெருசலேமையும்  உங்களையும்  நமது நேசத்தாயார்  மரியாளையும்  பிரிந்து  எங்கோ  இருக்கும்  இந்தியாவுக்கு செல்ல மனம்  வரவில்லை... தயவு செய்து என்னை  மன்னியுங்கள் " என்றார் தோமையார்.
" ஐய்யா...சகோதரரே...உம்மை  இந்தியாவுக்கு  செல்ல  பணித்தது  நான் அல்ல. இது தேவ கட்டளை. இதற்கு  கீழ்படிவதும்  மறுப்பதும்  உம்முடைய காரியம். இதற்கு மேல்  நான்  சொல்வதற்கு ஒன்றுமில்லை." என்றார் புனித ராயப்பர்.
மிகுந்த மன வாட்டத்துடன்  தன் ஜெபத்தில்  ஈடுபட்டிருந்த  தோமையாரிடம் தோன்றினார்  நம் யேசுநாதர்.
" என் அன்பான தோமையே...உமக்கு நம் ஆசீரும்  சமாதானமும் உண்டாவதாக " என்று வாழ்த்தினார்  யேசுநாதர்.
" என் ஆண்டவரே  என் தேவனே...உம்மைக்காணும்  உம் அடியானின் கண்கள் பேறு பெற்றன. "
" ஆயினும் ஆண்டவனின் வார்த்தைகளை  கேட்டு,  விசுவாசித்து  அதன்படி நடப்பவன் அனைத்திலும்  பேறுபெற்றவனே  என்பது  உமக்கு தெரியாதா?. எம் தீர்மானத்தில்  உமக்கென்ன கஷ்ட்டம்.?"
" ஆண்டவரே...தேவரீர்  என்னை மன்னிக்க  வேண்டுகிறேன். எனது வயதாகிவிட்டதால்  எனக்குள் அப்படி ஒரு பிரமை. எனக்கு  பதில்  வேறு ஒரு இளம் வயதினரை  தேவரீர்  தெர்ந்தெடுத்துக்கொள்ளக்கூடாதா?."
" என் சேவைக்கென வந்துவிட்ட பிறகு  உம் விருப்பு  வெறுப்பை  பற்றி  நீர் கவலை  கொள்ளலாமா?. எம் சேவைக்கு  வயது  ஒரு தடை  அல்ல. தேவை ஆண்டவனின்  திருசித்ததிற்கு  கீழ்படியும்  நல்ல  மனது  மட்டுமே. கலப்பையில்  கை வைத்த பிறகு  திரும்பிப்பார்ப்பவன்  அடி முட்டாள். இவ்வளவு  பெரிய  நிலத்தை நாம் எப்படி தனி ஒருவனாக  உழுது  முடிக்க முடியும்  என்று  நினைத்தாலே  போதும். சோர்வு  என்னும்  சாத்தான் வந்து அவனை பற்றிக்கொள்ளும். பிறகு அவன்  வந்து  எங்கே  எப்போது  அந்த வயலை உழுது முடிப்பான். அதற்கு பதில்  இது  என் வயல். இதை நான் நன்றாக உழுது  செப்பனிட்டு எருவிட்டு பயிரை  விதைப்பேன். அவை  நன்றாக விளைந்து  என்  குடும்பதிற்கு  ஒன்றுக்கு நூறாய்  ஆயிரமாய்  நல்ல பலனளிக்கும்  என்று  எண்ணினாலே  போதும், உற்சாகம்  என்னும் சம்மனசு வந்து  அவனை  பற்றிக்கொள்ளும். பிறகு  அவன்  இன்னும் அதிக ஆர்வத்தோடு  உழைப்பான். தேவ காரியமும்  ஆன்ம  காரியங்களும் அப்படியே. ஆர்வத்துடனும்  உற்சாகத்துடனும்  உழைக்கும்  நல்ல ஊழியனைப்பார்த்து  அவன் எஜமான்," நன்று உழியனே..நன்று..சிறு சிறு காரியங்களிலும்  நீ  கவனமுடனும், நேர்மையுடனும், ஒழுங்காக  செய்வதால் பெரிய பெரிய காரியங்களிலும்  நீ ஒழுங்காகச்செய்வாய். எனவே  நீ  உன் எஜமானுடைய  சிந்தையில்  எப்போதும்  இருகின்றாய். உம் தேவை அனைத்தையும்  இந்த எஜமானன்  அறிந்து  உனக்கு  அதிகமே  செய்வான் என்பதை நீ  உணரவில்லையா  தோமையே " என்றார்.
" என்னை  மன்னியுங்கள்  எஜமானே. எனக்கு  உண்மையில்  இந்த ஜெருசலேமையும்  உம்  நேசத்தாயாரையும்  விட்டு  பிரிய  மனமில்லை."
" நான்  உன்னை மிகவும்  உயர்ந்த  நிலைக்கு கொண்டு செல்ல ஆசிக்கிறேன். இந்தியாவின் அப்போஸ்த்தலன் என்னும் பெரும்பேற்றை  கொடுக்கவும் ஆசித்திருகின்றேன். ஆனால் நீ  அந்த  ஆசீர்வாதம்  எனக்கு  வேண்டாம் என்கின்றாய். இது  என்ன  சிறுபிள்ளத்தனமாக  இருகின்றது. ஆண்டவரின் நேரமும்  அழைப்பும்  என்பது  வந்துவிட்டால்.... தாயாவது... தாரமாவது... தந்தையாவது...தங்கையாவது...பிள்ளையாவது...உறவாவது...சொத்து பற்று,நிலம் நீச்சு அனைத்தையும்  விட்டுவிட்டு  வந்துவிட  வேண்டும்  என்பது  நீர் அறியாததா?... என் பொருட்டு அனைத்தையும்  இழப்பவன் மோட்சத்தில்  அனைத்தையும்  பெற்றுக்கொண்டு  முடிவில்லா  வாழ்வில் நிலைத்திருப்பன்  என்பதை  நீ அறியாயோ ?"
" அறிவேன் ஆண்டவரே... அறிவேன்... அனைத்தையும்  நானும் அறிவேன்.. ஆயினும் என் மனதுக்குள்  ஒரு  சிறிய  ஆசை. தங்களின்  திவ்ய  தாயாரை  என் மரணத்திற்க்கும் முன்பாக பார்ப்பேனா  என்னும் ஆசைதான் அது."
" சரி... உன் ஆசை நிறைவேற்றப்படும். தோமையே  நீ  இருமுறை  இந்திய பயணம்  மேற்கொள்ளுவாய். உம் முதற்பயணம்  முடியும்போது  எம் நேசத்தாயார்  மரணிப்பார். அப்போது  உமக்கும்  அழைப்பு  அனுப்பப்படும். அதன்பிறகு  இரண்டாம்  பயணம்  மேற்கொண்டு  நம் காரியங்கள் முடிவடையும்போது  நீர்  வேத சாட்சி  முடிபெற்று  இந்தியாவின் அப்போஸ்த்தலர்  என்னும்  பெயர்  பெறுவீர் "
" ஆண்டவரே  எம்  தேவனே... உம் சித்தப்படியே  எனக்கு  ஆகட்டும் . எனக்கு உத்திரவிடுங்கள்  எஜமானே" என்றார்.
யேசுநாதரின் திருக்காட்சி  முடிந்ததும்  தம்  நினைவுக்கு  வந்த  தோமையார் தம்மையே  தேற்றிக்கொண்டு  அமைதியாக  தம் சிந்தையில்  மூழ்கினார். அப்போது  மூன்றாண்டுகளுக்கு  முன்பாக  தாம் யார் என்பதும்  தமக்கும் யேசுநாதருக்கும்  என்ன  உறவென்பதும்  பற்றிய  நினைவுகளில் மூழ்கிப்போனார்.
  இந்த  நிகழ்ச்சி  நடந்தது  சமாரியாவில்  உள்ள  தோத்தாயீன்  என்னும்  ஒரு சிற்றூரில். இந்த  ஊருக்கு பல சிறப்புகள் உள்ளது. இந்த  ஊரில் தான் பிதாப்பிதா  ஈசாக்கின்  இளைய  மகன் யாக்கோபு என்னும் பிதாப்பிதாவும் அவரது  பனிரெண்டு பிள்ளைகளும்  வாழ்ந்தார்கள். இந்த ஊரில்தான் யாக்கோபின்  மகன்  யோசெப்பு  அவரது  சகோதரர்களால்  கிணற்றில் வீசபட்டார்.  இதே  ஊரிலிருந்துதான்  யோசேப்பு  எகிப்த்திய  வியாபாரிகளிடம் அடிமையாக  விற்கப்பட்டு  எகிப்திற்கு  கொண்டு  செல்லப்பட்டார்.[ இப்போதும்  இந்த இடமும்  கிணறும் திரு யாத்திரை ஸ்தலமாக இருகின்றது].
இந்த  தோத்தாயீன்  என்னும்  ஊரில்  யேசு நாதரின்  தந்தையாக இருக்கப்பேறுபெற்ற  சூசையப்பரின்  நெருங்கிய  உறவினராகிய  சலோமி என்னும் ஒரு பெண் வாழ்ந்து வந்தாள்.அவரது கணவர் இஸக்கார்  என்பவர் ஒரு பெரும் மர வியாபாரி. மிகுந்த  செல்வம்  உடையவர். தன்னுடைய வியாபாரத்தின்  நிமித்தம்  தம்மிடம்  வரும் வியாபாரிகளுக்கும்  அவர்களுடன்  வந்திருக்கும்  அவர்களுடைய   உதவியாளர்களுக்கும்  அடிமைகளுக்கும்  ஒட்டகங்கள்  மற்றும்  கால்நடைகளுக்கும் தங்குமிடங்களும்  உணவும்  தந்து உபசரிப்பார். இவருக்கும்  ஒரு  குறை இருந்தது. காலம்போன காலத்தில்  மூலம் வந்து  குறுக்கிட்டாற்போல என்னும்  முதுமொழிக்கேற்ப  சலோமியின்  கணவர் இஸக்காரும்  இந்த வியாதியின்  நிமித்தம் மிகவும் கஸ்ட்டப்பட்டார். கடைசியில்  படுத்த படுக்கையாகிவிட்டார்.இந்த  சமயத்தில்  இந்த ஊருக்கு  யேசுநாதர் வந்திருந்தார். சலோமியும் அவரை தன் இல்லத்திற்கு எழுந்தருளி வரச்செய்து அவரை  மிகவும்  அன்பாக  வரவேற்றார். சலோமியின்  கணவர்  இஸக்காரின்  நிலை கண்ட  யேசுநாதர்  மிகுந்த வருத்தமடைந்து  அவரை அப்போதே தொட்டு குணமாக்கினார். இதனால் மிகுந்த சந்தோஷம்  அடைந்த அவர் தன் இல்லத்தில்  யேசுநாதர்  பலகாலம்  தங்கியிருக்க வேண்டினார். யேசுநாதரும் சம்மதித்து  அங்கே  சில நாள்  தங்கினார்.அவரது மனக்கண்ணில்  எங்கோ தொலைவில்  கில்போவா  என்னுமிடத்திலிருந்து  தோமையாரும்  அவரது சகோதாரர்  அடாயும்  தத்தம் வணிக  குழுக்களுடன்   தோத்தாயீனுக்கு வருவது  தெரிந்தது. அவரை  சந்தித்து  அவரை  தடுத்தாட்க்கொள்ளவே யேசுநாதர்  இந்த தோத்தாயீனில்  தங்கியிருக்க  விரும்பினார். ஒருவழியாக தோமையாரும்  அவரது  சகோதரரும்  தோத்தாயீன்  வந்து  யேசுநாதர்
தங்கியிருக்கும்  வீட்டிற்கு  வந்தனர். அவ்வீட்டின்  எஜமான்  சலோமியின் கணவர்  அவர்களை  அன்புடன்  வரவேற்றார். அவர்  யேசுநாதரை தோமையாருக்கு அறிமுகம் செய்துவைத்தார். யேசுநாதர் ஒரு பெரும்  யூத ராபி  என்றும் அவர் பெரும்பெரும் காரியங்கள்  செய்து  மக்களிடம்  மிகுந்த செல்வாக்கு  பெற்றிருகிறார்  என்பதும் அவரே  பெரும் இறைவாக்கினர்  என்றும் யூத மக்களை காக்க வந்த மெசியா  என்றும் பலவாறு கேள்விப்பட்டிருந்தாலும்  தாம் இன்னும் இதுவரை அவரை  பார்த்திராததால் இந்த சந்திப்பில்  தோமையார்  மிகுந்த சந்தோஷமடைந்தார்.
" ராபீ... உங்களைப்பார்த்ததில்  நான்  மிகுந்த  மகிழ்ச்சி  அடைகிறேன்." என்றார் தோமையார்.
" என் சகோதரா...என்னைப்பற்றி  நீர்  அறிந்திருப்பது பற்றி  நானும் மகிழ்கிறேன்.உன் மனைவி  சிப்போரா  நலமா?" என்றார்  யேசுநாதர்.
" போதகரே  நீர்  உண்மையில் ஒரு பெரும் இறைவாக்கினர்  என்பது உண்மைதான். இல்லாவிட்டால்  என்  மனைவியின்  பெயரை  நீர்  எவ்வாறு அறிந்திருக்க  முடியும்.?  நான்  எவ்விடத்திலும்  என்  குடும்பத்தைப்பற்றி பிரஸ்தாபித்ததே  இல்லை.என்  மனைவியை  நான்  எங்கும்  கூட்டிச்சென்றதும் இல்லை. நான்  வியாபாரியாவதால்  நான்  தூர தேசங்கள்  பலவற்றிற்கு செல்ல  நேரிடுவதால் அவளை  பாதுகாப்பாக  நான்  வைத்த  பிறகே  நான் செல்ல முடியும். மேலும்  என்னை  தேவரீர்  என்  சகோதரா  என்றழைத்தது எனக்கு  பெரும்  மகிழ்ச்சியை  கொடுக்கின்றது.  உண்மையில்  நான்  அவ்வாறு இருந்தால்  நான்  பேறு  பெற்றவனே " என்றார் தோமையர்.
" திதீமூ  என்னும்  தோமையே...உண்மையில்   நீ  என்னுடைய  சகோதரன் தான். என்னுடைய   தாயின்  பர்த்தாவாகிய  சூசையப்பரின்  தகப்பனார்  எலியாக்கீம். அவருடைய   மனைவியின்   பெயர்  ரோவாசூசையப்பரின்  தந்தையின் சகோதரர்   டியோபேன். என் தந்தை  சூசையின்  தகப்பனார்  எலியாக்கீம்  இறந்த பிறகு  அவரது  மனைவி  ரோவா  விதவை  ஆனார். சூசையின்  பெரியப்பா  டியோபேன்   விதவையான  ரோவாவை  மறுமணம் செய்துகொண்டார். ஆக  இந்த  டியோஃபேன், ரோவா தம்பதிகளுக்கு பிறந்தவன் தான்  நீ. இப்போது சொல் நீ என் சகோதரன் தானா அல்லது இல்லையா " என்றார் யேசுநாதர்.
" என் யேசுவே  நீர் சொல்வது  அனைத்தும்  உண்மை...நீர்  அனைத்தையும் அறிந்திருகின்றீர். நான்  உண்மையிலேயே  உமது  சகோதரனாக  இருக்க பேறுபெற்றவனே. என் மனைவியை  தேவரீர்  எவ்வாறு அறிந்துகொண்டீர்?."
" தோமையே. உன்னை அறிந்திருக்கும்  நாம் உம் குடும்பத்தை  அறிந்திருக்க முடியாதா?. உன் மனைவி  சிப்போறாவை  அவள்  குழந்தையாக இருக்கும்போதே  நாம் அறிவோம். அவளும் என் நேசத்தாய்  மரியாளூம் பால்ய  சிநேகிதிகள். என் நேசத்தாயார் மரியாள் தன்னுடைய  நான்கு  வயதில் எருசலேம்  தேவாலயத்தில்  காணிக்கையாக  ஒப்புக்கொடுக்கப்பட்டது போலவே  சிப்போராவும்  அவளது  பெற்றோரால்  தேவாலயத்தில் காணிக்கையாக  ஒப்புக்கொடுக்கப்பட்டவள் தான். சிலகாலம்  கழித்து  அவளது பெற்றோர்கள்  இறந்துபோன  பிற்பாடு அவள் அனாதை ஆனாள்.இவளோடு
சேர்ந்து  எருசலேம்  தேவாலயத்தில்  இருந்த  ஏழு  பெண்களும்  அனாதை ஆனார்கள். ஆனால்  என்னுடைய  தாயார்  இவர்களை  கைவிட வில்லை. அவர்களுடைய  தாயார்  அன்னம்மாள் தன் மகளுக்கு  திருமண  வயது வந்ததும் தாய் தந்தையர்கள்  இல்லாத  இவர்களையும்  தன்  மகளோடு சேர்த்து செப்போரிசில் உள்ள தன் இல்லத்திற்கு கூட்டிவந்து  தன் மக்கள் போல வளர்த்து வந்தாள். பிறகு என் தாயாருக்கு தெய்வ சித்தப்படியே திருமணம்  ஆகியது. இவ்வாறே  அன்னம்மாள்  வளர்த்துவந்த  சில பெண்களுக்கும்  திருமணம்  ஆகியது. சில  பெண்கள்  திருமணமே  வேண்டாம் என்று வாழ்ந்து வந்தார்கள். இதில் ஒரு பெண்ணான சிப்போராவைத்தான்  நீ திருமணம் செய்து கொண்டாய். இப்போது  புறிகிறதா  நம்முடைய  உறவின் முறை " என்றார்  யேசுநாதர்.
" என் ஆண்டவரே  என் தேவனே...என் மேல்  இரக்கமாயிரும். தேவரீர்  என்னை தடுத்தாட்க்கொள்வீரா? தங்களின்  சேவையில்  என்னையும் சேர்த்துக்கொள்வீரா?" என்றார்  தோமையார்.
" தோமையே... அஞ்சாதே... நீ  இங்கு வருவாய்  என தெரிந்துதான்  இந்த தோத்தாயீனில்  நான்  சில  காலம்  தங்கியிருந்தேன்.உனக்காக  நான் காத்துக்கொண்டும்  இருந்தேன். நீயும் என்னை பின்செல் "
அடுத்த  வினாடியே  தோமையார் " என் ஆண்டவரே  என் தேவனே  இதோ...நான் உம் அழைப்பை  ஏற்றுக்கொள்கிறேன். உம்மை  நான் கண்டடைந்தபின்  எனக்கு  உலகம்  ஒன்றுமில்லை  என்றாகிவிட்டது..இதோ உம்மை  பின்  செல்ல  நான்  தயார்." என்றார்.
பிறகு  தன்  சகோதரன்  அடாயை  அழைத்து," என் அன்புள்ள  தம்பி... நான் இனிமேல்  உனக்கு  சகோதரன்  அல்ல. யேசுநாதர்தான்  எனக்கு  எல்லாம் என்றாகிவிட்டபடியால்  என்  சொத்துக்கள்  அனைத்தையும்  இனிமேல்  நீயே ஆண்டு  அனுபவித்துக்கொள். என் மனைவி  சிப்போராவை  என்  ஆண்டவரின் நேசத்தாயார்  மரியாளிடமே  மீண்டும்  சேர்த்துவிடு. இனிமேல்  எனக்கு எதைப்பற்றியும்   கவலை  இல்லை. நான்  போய் வருகிறேன்...நீயும் போய்வா.." என்று கூறி தன் சகோதன் அடாயை  இறுக கட்டி  அணைத்து பாசத்தோடு  முத்தமிட்டு  பிரியா விடை  கொடுத்தார்.
ஆனால் அவரது சகோதரன் அடாய்  அவரை விடுவதாக  இல்லை." என் அன்புள்ள  சகோதரா.. எனக்கு  விபரம்  தெரிந்தது  முதல்  தேவரீர்  எனக்கு தாயும்  தகப்பனும்  சகோதரனுமாக  இருந்து வந்திருகின்றீர்கள். நீங்கள் இல்லாத  உலகம்  எனக்கு  தேவை  இல்லை. நீங்கள்  யேசுநாதருக்கு  சீடர் என்றால்  நானும்  உமக்கு  சீடனாக  இருந்துகொள்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.  நம்முடைய  இந்த  செல்வங்கள்  அனைத்தையும்  நாம் இப்போதே யேசுநாதர் காலடியில் வைத்து அவரது  சேவைக்காக அர்ப்பணிப்போம். தயவு செய்து  மறுக்காமல்  என்னை  உமது  சீடராக ஏற்றுக்கொள்ளுங்கள். என்னை  தள்ளிவிடாதீர்கள்" என்று  தோமையாரில் கால்கள்  இரண்டையும்  கட்டிப்பிடித்துக்கொண்டு  அழுதார்  அடாய்  என்னும் தோமையாரின்  சகோதரன்.
தோமையாரும்  அவரது  சகோதரர்  அடாய்யும்  யேசுநாதரின்  பாதம் பணீந்தார்கள். இத்தனை  செல்வங்களையும்  தர்மத்திற்காக  யேசுநாதரின் பாதத்தில்  சமர்ப்பித்ததைக்கண்ட  யூதாஸ், " அடேங்கப்பா.... எத்துணை செல்வம்... எத்துணை  ஒட்டகங்கள்.  எத்துணை  அடிமைகள். என்று வாயை பிளந்தான். இருப்பினும் என்ன மனிதர்கள் இவர்கள், ஆனாலும்  இவர்களுக்கு மனது  பெரிதுதான்." என்று தன் மனதில்  சொல்லிக்கொண்டான். யேசுநாதர் தன்னிடம்  ஒப்படைக்கப்பட்ட  அடிமைகள்  அனைவரையும்  விடுதலை செய்து  அனுப்பிவிட்டார்.
மேற்கூறிய இத்தனை சம்பவங்களையும் தன் மனத்தில் அசைபோட்டுக்கொண்டிருந்த தோமையார் ," இனிமேல் என் எஜமான் யேசுநாதர் விட்ட வழி " என்றுகூறி இந்தியா செல்ல தன் பயண
ஏற்பாட்டை கவனிக்கலானார். புறப்படும் முன் மறக்காமல் தன் எஜமானரும் தன் ஆண்டவரின் தாயுமான மரியாவை கடைசி முறையாக சந்தித்து ஆசீர்பெற விரும்பினார். தேவ தாயாரைக்கண்ட மாத்திரத்தில் அவர் பாதம்பணிந்த  தோமையார்," அம்மா... தேவரீர் என் நேசத்தாயார். உண்மையில் தேவரீரும் எனக்கு தாயாரின் முறையே ஆவீர். இது தாங்கள் அறியாதது அல்ல. இன்று சந்திக்கும் நாம் இனிமேல் மீண்டும்
சந்திப்போம் என நான் நினைக்க முடியாது. இந்திய தேசம் உலகின் மறு கோடியில் இருப்பதாக நாம் அறிகிறோம். என் ஆண்டவரும் என் தேவனும் என்னோடு எப்போதும் இருகின்றார் என்னும்  தைரியத்தினாலேயே  நான் அங்கே போய் அவருக்கு சாட்சியாக வாழ்வேன். ஆயினும் தங்களையும் இந்த நாட்டையும் என் அருமை சகோதர அப்போஸ்த்தலர்களையும் நமக்கு
அன்பானவர்களையும் நிரந்தரமாக பிரியவேண்டும் என்று அறியும்போதுதான் பிரிவு என்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை நான் உணர்கிறேன். என் எஜமானும் என் ஆண்டவராகிய  யேசுநாதரும் இருக்கும்வரை எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர் மறைந்த பிறகு எங்களுக்கு தாயும் ஆசானுமாக தாங்கள் இருந்தபோது கூட நான் எவ்விதமான துன்பமும் அனுபவித்தது இல்லை. என் அருமை மனைவி சிப்போறாவை நான் உங்கள் பாதுகாப்பில் வைத்துப்போவதுகூட எனக்கு துன்பமாகப்படவில்லை. ஆனால் உங்களை நான் நிரந்தரமாக பிரியவேண்டியிருப்பது பற்றி
தான் நான் உண்மையில் வருந்துகிறேன். தேவரீர் எனக்கு ஆறுதலும் தேறுதலும் கூறி என்னை ஆசீர்வதித்து வழியனுப்ப வேண்டி கேட்டுக்கொள்கிறேன்." என்று துயரம் மிகுதியால் தேம்பித்தேம்பி
அழுதார் தோமையார்.
" என் மகன் தோமையே... அழாதே. என் மகன் அடிக்கடி உன்னைப்பற்றி சொல்வார்,"
" அம்மா...உங்கள் மகன் என்னைப்பற்றி அப்படி என்னதான் சொல்லி இருகின்றார்?"
" தோமையே...நீ ..உருவத்தில்தான் உயரமாக இருக்கின்றாயே தவிர உள்ளத்தில் நீ ஒரு குழந்தை என உன்னைப்பற்றி என்மகன் அடிக்கடி என்னிடம் சொல்லி இருகின்றார். அது உண்மைதான்  என்று இப்போது தெரிகின்றது. ஆயினும் பிரிவு என்பதும் அதுவும் நிரந்தரபிரிவு என்பதும் இந்த உலகத்தில் மிகவும் கொடுமையான விஷயம். அன்று தேவாலயத்தில் என் மகன் குழந்தை யேசுவை  காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும்போது சிமியோன் என்னும் தீர்க்கதரிசி கூறிய வார்த்தைகள் எவ்வளவு கொடுமையான விஷயங்கள் என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. என்மகன் யேசுவை
நான் நிரந்தரமாக இழக்கப்போகிறேன் என்று எனக்கு எப்போது தெரிய ஆரம்பித்ததோ.அப்போதே நான் துன்பங்களைத்தாங்க தயாராக ஆகிவிட்டேன். உன்னால் கூடுமானால் இதை நீ உணர்ந்து பார். தன் அன்பான கணவர் தன் கண்முன்னே இறந்துபோக எந்தப்பெண் சம்மதிப்பாள்...ஆனால் நான் சம்மதித்தேன். ஏன் கடவுளின் திருவுளம் நிறைவேறியே ஆக வேண்டும். ஆகவே நானும்  ஆகட்டும் என்று சம்மதித்தேன். நான் விரும்பியிருந்தால் என் மகன் யேசுநாதர் அவருக்கு ஆயுளை நீட்டித்திருக்க மாட்டாரா? அல்லது அவரை இறந்து போகத்தான் அனுமதித்திருப்பாரா... நன்றாக சிந்தித்துப்பார். என் அன்பான பர்த்தா வயது சென்றவர் என்ற காரணத்தினால் மட்டுமல்ல அவருக்கு மரணம் நேர்ந்தது. அவர் தேவைக்கு மேல் எனக்காகவும் என் நேச யேசுவுக்காகவும் சேவை செய்துவிட்டார். அவருக்கு இனிமேல் ஓய்வு தேவை என உணர்ந்தே அவருக்கு மரணம் அருளப்பட்டிருந்தது. மேலும் சிந்தித்துப்பார்...ஒரு முப்பத்துமூன்று வாலிப மகனை என் கண்முன்னே
நான் சிலுவை மரணத்தில் பலிகொடுக்க வேண்டும் என்பதை என்மகனே எனக்கு சொல்லி பிரியாவிடை கேட்டபோது என்மனம் என்ன பாடுபட்டிருக்க வேண்டும் என்பதை நீ சற்றேனும் உணர்ந்து பார். ஆயினும் இதை நான் செய்தே ஆக வேண்டும். இந்த மனுக்குலத்தை மீட்டெடுக்க இதைவிட வேறுவழியே இல்லை என்று என் மகனே என்னிடம் சொல்லி தான் கல்வாரி நோக்கி சென்றபோது  என் மனத்தை கல்லாக்கிக்கொண்டு அப்போதும்கூட அவருக்கு ஆகட்டும் என்றே சொல்லி வழி அனுப்பி வைத்தேன். இன்று இதே காரியத்துக்காக என் மகனின் சேவைக்காக உன்னையும் வழி அனுப்ப ஆகட்டும் என்றே நான் சொல்ல வேண்டியதாக இருகின்றது. இதோ இன்றும் அதே உள்ளத்தோடு நான் உன்னையும் வழி அனுப்பி வைக்கிறேன். மகனே உன் தியாகம் பெரிது. நீ உன்  அன்பான மனைவி செப்போறாவை என்னிடம் விட்டு செல்கின்றாய். என் மகனின் ஊழியத்துக்காக உன் திருமண வாழ்க்கையையும் பலி ஆக்குகின்றாய். ஆயினும் ஒன்று மட்டும் நிச்சயம். நாம் இந்த உலக வாழ்க்கை முடிந்த பிறகு நம் பரலோக வாழ்க்கையில் என்மகன் உனக்கும் உன் மனைவிக்கும் தக்க கைமாறு அளிப்பார் என்பதுமட்டும் உறுதி. இதோ நான் என் கையாலேயே நெய்த ஒரு அங்கி.  இத்தோடு என் மகனின் முள்முடி துண்டுகள் மூன்று. என் மகன் குழந்தையாய் இருந்த போது அணிந்திருந்த உடையின் ஒரு பகுதி.. மேலும் அவரின் பாடுகளின் இரத்தக்காயங்கள் பதிந்திருந்த
அங்கியின் சிறு பகுதி. இவற்றை இந்த பெட்டியில் போட்டு எடுத்துச்செல். இது உனக்கு என் மகன் எப்போதும் உன்னுடன் இருகின்றார் என்பதை நினைவு படுத்தும். மேலும் என் ஞாபகமாய் நான் உனக்கு கொடுக்கும் என் இடுப்புக்கயிறு. இவற்றை நம் நினைவாக நீ எங்கெங்கு சென்றாலும் உன்னுடனே வைத்துக்கொள். என் ஆசீர் உனக்கு எப்போதும் இருக்கும் சென்றுவா " என்று கூறி தன் மகனை முத்தமிடுவதுபோல தோமையாருக்கும் முத்தமிட்டு அவரை வழியனுபி வைத்தார்.
[ ஒருகாலத்தில் நம் சென்னையில் தோமையாரின் மயிலை பேராலயத்தில் இருந்த இந்த மாதாவின் இடுப்புக்கயிறு இப்போது உக்ரைன் நாட்டின் ருஸ்யாவின் பழமைரீதி திருச்சபையில் இருகின்றது.  இப்போதும் அது சிரியாவின் பழமை ரீதி திருச்சபை வசம் இருப்பதாக ஒரு செய்தி உள்ளது. மாதாவின் இந்த இடுப்புக்கயிரை வைத்துக்கொண்டுதான் தோமையார் மயிலையில் அப்போது தரைதட்டி நின்ற ஒரு பெரிய மரத்தை கட்டி இழுத்துவந்தார் என்பதும் அந்த மரத்தின் ஒரு துண்டுதான் இப்போதும் மயிலை பேராலயத்தில் பின்பகுதியில் கல்தூணாக நின்றுகொண்டிருகின்றது என்பதும்
வரலாற்று உண்மை. இதைப்பற்றிய புடைப்பு சித்திரம் மயிலை பேராலயத்தின் அருங்காட்சியகத்தில் இருகின்றது.]
" அம்மா... என் அன்பான தேவனின் நேசத்தாயாரே...இந்த உலகில் நான் இனி உங்களை காணூம் பாக்கியம் பெறுவேனா ?"
" இல்லை தோமையே. இந்த உலகில் இதுவே நாம் சந்திக்கும் கடைசி சந்திப்பாக இருக்கும். என் அந்திம கரியங்களுக்கு உமக்கும் அழைப்பு அனுப்பப்படும். ஆனால் என் மகனின் சித்தம் வேறுமாதிரியாக இருக்கும். அதை நானிப்போது கூற விரும்பவில்லை. மீண்டும் நாம் மோட்சத்தில் சந்திப்போம். இப்போது அமைதியாக சென்று வாரும் "
நம் நேசத்தாயாரிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்ட நம் தோமையார் மிகவும் கணத்த இதயத்தோடு இந்தியா செல்ல தாயார் ஆனார்.
" ஜாபா துறைமுகம் இஸ்ராயேல் "
இன்றைக்கும் இந்த ஜாஃபா துறைமுகம் இஸ்ரேல் நாட்டில் அதே பெயரோடு இருக்கின்றது. இந்த துறைமுகத்துக்கு கிறிஸ்த்து பிறப்பதற்கு முன்பிருந்தே இதே பெயரோடு இருப்பது ஆச்சரியமே.
இந்த துறைமுகம் ஆழமில்லாதது ஆகையால் வெளி நாட்டுக்கு செல்லும் கப்பல்கள் அனைத்தும் கடலிலிருந்து வெகு தூரத்துக்கு அப்பால் நிறுத்தப்பட்டுவிடும். அங்கிருந்து துறைமுகத்துக்கு  வரவோ அல்லது வெளிநாடு செல்லவோ சிறு சிறு படகுகள் மூலமே சென்று கப்பல் ஏற வேண்டும்.
மத்திய தரைக்கடல் நாடுகளிலுள்ள அனைத்து துறைமுகப்பட்டிணங்களுக்கும் ஆப்ரிக்கா, ஐரோப்பா, துருக்கி ஆகிய நாடுகளூக்கு இங்கிருந்தே கப்பல் ஏற வேண்டும். இந்த துறைமுகத்தில் கப்பல்  ஏற ஒரு கணவான் காத்துக்கொண்டிருந்தார்.
அவர் பெயர் ஹப்பான். பிறப்பால் யூதர் ஆனாலும் யேசு கிறிஸ்த்துவை நன்றாக அறிந்திருந்தார். ஆனாலும் இவர் தென் இந்தியாவிலுள்ள தென்பாண்டி நாட்டின் அரசராக இருந்த கந்தப்பராஜாவுக்கு வெளி உறவு மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்ததால் வியாபார விஷயமாக இவர் பலநாடுகளூக்கு செல்ல வேண்டியிருந்ததால் இந்த துறைமுகத்தில் அடுத்த கப்பலுக்காக
காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர சந்திக்க மிடுக்காக உடை அணிந்திருந்த ஒரு கணவான் அவரை சந்திக்க வந்தார்.
ஹப்பானை சந்திக்க வந்திருந்த கணவான் தன்னை ஒரு வியாபாரியாக அறிமுகப்படுத்திக்கொண்டார். தன்னுடைய ஒரு அடிமையை தான் அவருடைய எஜமான் கந்தப்பராஜாவுக்கு ஒரு இருபது  வெள்ளிக்காசுகளுக்கு  விற்றுவிட்டதாகவும் அவரையும் தங்களுடன் இந்தியா அழைத்துச்சென்று கந்தப்ப ராஜாவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டு அதற்கான ஒப்பந்த பத்திரத்தையும் இந்த வியாபாரத்திற்கு ஆதாரமாக காட்டினார். இதைக்கண்ட ஹப்பான்," நல்லது கணவானே, ஒப்பந்தப்பத்திரம் சரியாக இருகின்றது. அடிமை எங்கே.".என்றார்.
" தோமையே, அங்கே என்ன செய்துகொண்டிருகின்றாய்... வா இங்கே..." என்றார்.
" என் எஜமானே.. இதோ வந்தேன்.. தங்கள் சித்தம் என்னவோ?" என்றார் தோமையார். அழைத்தது யார் என்பது தோமையாருக்கு நன்றாகத்தெரிந்திருந்ததால் மேற்கொண்டு அறிமுகம் தேவை இல்லை.
" என் தோமையே... நான் ஏற்கனவே உனக்கு சொல்லிவிட்டேன். உன்னை இந்தியாவிலுள்ள கந்தப்ப ராஜாவுக்கு இருபது வெள்ளிக்காசுகளுக்கு விற்றுவிட்டேன். இந்த வியாபாரியோடு இந்தியா செல். அங்கு உன்னுடன் நான் இருப்பேன். இதோ அந்த இருபது வெள்ளிக்காசுகள். இதை உன் சிலவுக்கு வைத்துக்கொள். கப்பலில் உனக்கு இது தேவைப்படும்."
" என் எஜமானே.. அடிமை நான் இதோ சித்தமானேன். நான் எங்கு சென்றாலும் தேவரீர் என்னுடன் இருப்பதாக எனக்கு தேவரீர் வாக்குகொடுத்திருப்பதால் நானும் அதை நம்பி இவருடன் போகிறேன். தங்கள் சித்தம் என் பாக்கியம். எனக்கு விடைகொடுங்கள் என் எஜமானே" என்றார் தோமையார்.
" ஐய்யா வியாபாரியே.. என் அடிமையை நன்றாக வைத்துக்கொள். இவன் பல வித்தைகள் தெரிந்தவன். நல்ல அனுபவஸ்த்தன். இவனுக்கு அதிகம் துன்பம் கொடுக்காமல் வேலை வாங்கினால் இவன் வயதையும் மீறி அதிகம் வேலை செய்வான். இவன் தொழில் திறமையைக்கண்டு நானே பலமுறை ஆச்சரியப்பட்டிருகின்றேன். ஆனால் என்ன செய்வது. என் நண்பர் கந்தப்ப ராசாவின் வேண்டுதலை என்னால் தட்ட முடியவில்லை. அதனாலேயே நான் இவனை உன்னிடம் அனுப்ப வேண்டியதாக இருகின்றது. என் நண்பரை நான் அதிகம் விசாரித்ததாக சொல். " என்றார்  அந்த கணவான் உருவில் வந்திருந்த யேசுநாதர்.
இந்த சம்பாஷணையில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக நினைத்த ஹப்பான் தோமையை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தான்.
" அடிமையே.. உன் பெயர் தோமா... அப்படித்தானே. உன் தோற்றத்தைப்பார்த்தால் நீ எப்படி அடிமை ஆனாய் என்பது பற்றி எனக்கு சந்தேகம் உள்ளது. இவர் உன் எஜமானன் தானா ?. உண்மையை
சொல்." என்றார் ஹப்பான்.
" ஐயா நீர் சொல்வதும் என்னைப்பற்றி சந்தேகப்படுவதும் முற்றிலும் உண்மை. நானும் ஒருகாலத்தில் நூற்றுக்கும் மேலாக ஒட்டகம் வைத்தும் அடிமைகளை வைத்தும் வியாபாரம் செய்துவந்ததும்  உண்மை. ஆனால் விதி என்னை விடவில்லை. என் செல்வங்கள் அனைத்தும் ஒரே நாளில் கொள்ளை அடிக்கப்பட்டன. என் ஒட்டகங்கள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. என் அடிமைகள் அனைவரும் கள்வர்களால் பிடிபட்டு எகிப்திய சந்தையில் விற்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். எனக்கு மிஞ்சியது என் மனைவி மட்டுமே. என் கடன் இம்சைக்காக அவளையும் நான்  இதோ அந்த கணவானுக்கு விற்றுவிட்டேன். அவரது தாயார் என் மனைவியை தன் மகள் போல வைத்துக்கொண்டாடி வருகின்றார். என் கடன் இம்சைகாக நானும் என்னையே அவரிடன் அடிமையாக விற்றுவிட்டேன். எஜமான் என்றால் அவர்தான். அவரைப்போல் வேறு ஒரு நல்ல எஜமானனை இந்த உலகில் காண முடியாது." என்றார் தோமையார்.
" அப்படியானால் நீர் சொல்வது அனைத்தும் உண்மை. அப்படித்தானே? உன்னை நானும் நம்புகின்றேன் தோமையே. உமக்கு என்னென்ன தொழில்கள் தெரியும். நீ என் அரசருக்கு எந்தெந்த விதத்தில் உதவுவாய் என்பதுபற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும்."
" ஐயா... எனக்கு தெரியாத தொழில்கள் இல்லை. நான் ஒரு சித்திரக்காரன், நான் ஒரு வியாபாரி, நானொரு தச்சன், நான் ஒரு கட்டிடக்கலை நிபுணன்,நான் ஒரு ராஜ வைத்தியன்,மாந்திரீகன்,இன்னும் பல தொழில்கள் தெரியும்"
" ஆஹா... எனக்கு இப்படிப்பட்ட ஒரு தொழிலாளிதான் தேவை. என் அரசர் கந்தப்ப ராசாவுக்கு ஒரு பெரும் அரண்மனை கட்ட வேண்டும். அதற்காகத்தான் நான் லெபனான் செல்ல உத்தேசித்திருந்தேன். நம் மாமன்னர் சாலமோன்கூட தன் மனதுப்படி தேவாலயம் கட்ட லெபனானிலிருந்துதான் அதற்கான மரங்களையும் தொழிலாளிகளையும் வரவழைத்தார்.. நானும்
இப்படிப்பட்ட மரங்களையும் தொழிலாளிகளையும் அழைத்துவர லெபனான் செல்வதாக உத்தேசித்திருந்தேன். அதன்பிறகே இந்தியா செல்ல வேண்டும். இருப்பினும் நீ என்னுடன் வருவதால் எனக்கு சிரமம் குறையும். அப்படித்தானே.?"
" தங்கள் சித்தப்படியே எனக்கு ஆகட்டும் எஜமான்."
இவர்களின் சம்பாஷணையில் தலையிட விரும்பாத யேசுநாதர் அங்கிருந்து சென்று மறைந்துவிட்டார்..
இந்த சம்பாஷணையின்போது வெளிநாடு செல்லும் கப்பல் ஒன்று புறப்படத்தாயாராக இருப்பதாக சங்கு ஊதப்பட்டது. அதைத்தொடர்ந்து தோமையாரும் ஹப்பானும் படகில் ஏறி கப்பலை  அடைந்தனர். கப்பல் தலைவன் தன் உதவியாளனை அழைத்து," பொறு... அதோ ஒரு தோணியில் இன்னும் ஒருவர் வருகின்றார்.. அவரும் வரட்டும் " என்றான். தோணியில் வந்த நபர் கப்பலில் ஏறி தோமையாரைக்கண்டு," அண்ணா ..என் உயிரே...என்னைவிட்டு தாங்கள் மட்டும் செல்லலாமா...நான் உங்கள் நிழல் அல்லவா?... தங்கள் அடிமை நான் அல்லவா... என்னைவிட்டுப்பிரிய
உங்களுக்கு எப்படி மனது வந்தது.?" என்றார் தோமையாரின் அன்புத்தம்பி அடாய்.
     கப்பல் உடனே புறப்பட்டுவிட்டது. வெகு விரைவில் வேகம் எடுத்து கடலுக்குள் அது வெகு தூரம் சென்றுவிட்டது. கப்பலின் தலைவன்வந்து, " கடைசியாக கப்பலில் ஏறிவந்தது யார் ?" என்றான்.
உடனே தோமையார்," கப்பல் தலைவரே ... இது என் தம்பிதான்...அவசரத்தில் வந்துவிட்டான்.." என்றார்.
" அது கிடக்கட்டும்.... இவருக்கு கப்பல் கட்டணம், சாப்பாடு, தங்குமிடம் ஆகிய சிலவுகளை யார் கொடுப்பது ?" என்றான்.
" இதோ .. என் எஜமான் எனக்குக்கொடுத்த இருபது வெள்ளிக்காசுகள்... இதைப்பெற்றுக்கொள்ளுங்கள்." என்றார் தோமையார். " இந்த இருபது காசுககள் நீயே வைத்துக்கொள். கப்பலில் இது உன்  செலவுகளுக்கு போதுமானதாக இருக்கும் " என்று யேசுநாதர் கூறியதன் அர்த்தம் இதற்குத்தான் என்பது அப்போதுதான் தோமையாருக்கு புறிந்தது.
தோமையே," எல்லாகாசுகளையும் சிலவழித்துவிட்டாயே. மீதி பயணங்களுக்கு என்ன செய்யப்போகின்றாய் ?" என்றார் ஹெப்பான்.
" ஐயா என் எஜமானனே... எனக்கு இனிமேல் என்ன கவலை.? எங்களுக்காக சிலவு செய்ய நீர் இருகின்றீர். உம்மிடம் பணம் காசு ஏறாளம் இருகின்றது. எங்கள் சிலவுகளையும் சேர்த்து உம்முடைய  பயணக்கணக்கில் எழுதிக்கொள்ள வேண்டியது தானே " என்றார் தோமையார்.
" அடடே ..அது சரிதான் போங்கள்...இருப்பினும் இது நியாயமாகுமோ" என்றார் ஹெப்பான்.
" ஐய்யா... கவலையை விடுங்கள். நாம் இந்த கப்பலில் இருக்குமட்டும் நமக்கு சாப்பாடும் தங்குமிடமும் கிடைக்கும். கப்பலிலிருந்து இற்ங்கிவிட்டால் நம்முடைய தங்கும் இடங்களுக்காகவும்  சாப்பாட்டு சிலவுகளையும் என் பழைய எஜமான் பார்த்துக்கொள்வார்..அவருக்கு உலகம் முழுவதும் ஆட்கள் இருகின்றார்கள். கவலையை விடுங்கள்." என்றார் தோமையார்.
சிலநாட்க்கள் கடல் பயணத்தில் கப்பல் லெபனான் துறைமுகத்தை அடைந்தது.
" ஐய்யா தோமையே, நீரும் உம் அன்புத்தம்பியும் என்னுடன் இறங்கி வாருங்கள். நம் பயணம் முடிந்தது." என்றார் ஹெப்பான்.
" இல்லை என் எஜமானரே... நம் பயணம் இன்னும் முடியவில்லை. சொல்லப்போனால் இனிமேல்தான் ஆரம்பிக்க போகின்றது." என்றார் தோமையர்.
" தோமையே... உமக்கு ஒன்றும் சித்தப்பிரமை இல்லையே.? இந்த நாட்டில்தான் நாம் எம் மன்னருக்கு அரண்மனை கட்ட தேவையான மரங்களை கொள்முதல் செய்யவேண்டும் என்பதை ஏற்கனவே  சொல்லியிருகின்றேன்... மறந்து விட்டீரா?"
" இல்லை எஜமான். நான் எதையுமே மறக்க வில்லை. ஆனால் இங்கு மரங்கள் வாங்குவது தேவையற்றது. இங்கிருந்து மரங்களை வாங்கி அவற்றை சரக்கு கப்பலில் ஏற்றினால் அவை மத்திய தரைக்கடலிலிருந்து அட்லாஸ் மலைகளைக்கடந்து [ ஜிப்ரால்டர் ஜலசந்தி] முழு ஆப்ரிக்கா கண்டத்தையும் சுற்றிக்கொண்டு இந்தியா அடைய குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம்..
ஒருக்கால் அந்தக்கப்பல் பாதுகாப்பு இல்லாவிட்டால் கடலில் மூழ்கியும் போகலாம். அப்புறம் அவை உம் நாடு வந்து சேராது. இத்தனை சவால்களையும் தாண்டி அது உம்முடைய நாட்டுக்கு  வந்து சேரும் என்பது சாத்தியமே இல்லை. ஆகவே நான் சொல்வதைக்கேளும். இந்த மரங்கள் பிரச்சனையை என்னிடமே விட்டுவிடும். அவற்றை நான் உம்முடைய  நாட்டிலேயே  வாங்கிக்கொள்ளலாம். உம்முடைய நாட்டில் கேரளாவில் நமக்கு வேண்டிய மரம் கிடைக்கும். மேலும் கேரளாவில் கைதேர்ந்த தச்சு தொழிளாளர்கள் இருகின்றார்கள். நான் அவர்களை தேர்ந்தெடுத்துக்கொள்வேன். இது பற்றி நான் ஏற்கனவே என் பழைய எஜமானரிடம் பிரஸ்த்தாபித்திருகின்றேன் ." என்றார் தோமையார்..
" அப்படியானால் நான் இந்தப்பயணம் மேற்கொண்டது வீண் வேலையும் வெட்டிவேலையும் தானோ ?" என்றார் ஹப்பான்.
" இல்லை என் எஜமானரே... யாவும் ஆண்டவணின் சித்தப்படியே நடை பெறுகின்றன."
" யாவும் ஆண்டவனின் சித்தப்படியே நடைபெறுகின்றதா....இதைப்பற்றி நீர் உம் பழைய எஜமானரிடம் ஏற்கனவே பிரஸ்தாபித்திருகின்றீரா? இது எப்படி சாத்தியமாகும். எம்மைபற்றியும் எம்  அரசரின் நோக்கம் பற்றியும் நீரும் உம் பழைய எஜமானரும் அறிந்தது எப்படி?. உம்முடைய பேச்சும் செயலும் நோக்கமும்....என்னால் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. தயவுசெய்து  உண்மையை சொல்லும். நீர் யார்.?. உம்முடைய பழைய எஜமானர் யார்.? நீரும் ஒரு யூதர்... நானும் ஒரு யூதன். நமக்குள் ஒளிமறைவு வேண்டாம்... தயவு செய்து உண்மையை ஒன்றும் மறைக்காமல்
சொல்லும்" என்றார் ஹெப்பான்.
இனிமேலும் இந்த நாடகத்தை நீட்டிப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று உணர்ந்த தோமையார் தான் யார் என்பது பற்றியும் தன் பழைய எஜமானர் யார் என்பது பற்றியும் ஹெப்பானிடம்  அழகாக விவரித்தார். ஏற்கனவே யேசுநாதர் யார் என்பது பற்றி அறிந்திருந்த ஹெப்பான் மிகவும் மகிழ்ச்சியுற்று தோமையாரின் பாதம் பணிந்தார். தன்னையும் அவருடைய சீடராக ஏற்றுக்கொள்ள மிகவும் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டார். மேலும் இந்த வேத போதக அலுவலுக்காக தன்னால் கூடுமானவரை எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார்.
" சரி...தோமையே நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்.?"
" மீண்டும் இதே கப்பலில் ஏறி சிரியா செல்ல வேண்டும்."
" சிரியாவில் நமக்கென்ன வேலை இருகின்றது.?"
" சிரியாவின் ஆதிக்கத்தில் உள்ள எடேசாப்பட்டிணதிற்கு செல்ல வேண்டும்"
" எடேசாவில் என்ன வேலை.?"
" எடேசாவின் மன்னர் அக்பார் ஒக்காமாவிற்கு நம் ஆண்டவராகிய யேசுநாதர் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் ".
" அது என்ன வாக்குறுதி " என்றார் ஹப்பான்.
" என் எஜமானே...கப்பல் நாளைக்குத்தான் புறப்படப்போகின்றது. அதற்குள் எடேசா மன்னருக்கு என்ன நேர்ந்தது என்பதுபற்றி கூறுகிறேன் கேளும் " என்றார் தோமையார்.
" சரி தோமையாரே. கதை இருக்கட்டும். இப்போது எனக்கு சில விபரங்கள் தேவைப்படுகின்றது. அவை ஒருக்கால் உமக்கு தெரிந்திருக்கும் என நினைகிறேன். நீவீர் பெரும் வியாபாரி ஆயிற்றே.. இந்த லெபனானியர்கள் பெரும் கடல் வியாபரிகள் ஆனது எப்படி?. இந்த லெபனான் தேசத்தை ஏன் பொனீசியா என்றழைகின்றார்கள்?"
" என் எஜமானரே...இந்த நாடு என்னவோ லெபனான் தான். ஆனால் இந்த மக்களையும் இந்த கடல் வியாபாரிகளையும் பொனீஷியர்கள் என்றழைக்க காரணமும் உண்டு. இந்த நாட்டின் முக்கிய  தொழிலே வண்ணங்கள் தயாரிப்பதும் அவற்றை உபயோகித்து துணிகளில் பதிப்பதும் தான். அதனால் தான் இந்த நாடு முழுவதும் சாயப்பட்டறைகள் அதிகம் இருகின்றன. இவர்கள்தான் முதன்  முதலாக செம்பழுப்பு சாயத்தை கண்டு பிடித்திருந்தார்கள். பல காலம் அளவாக இந்த வண்ணக்கலவைகளின் சேர்மானத்தை அவர்கள் யாவருக்கும் சொல்லிக்கொடுக்காததால் பாரம்பரியப்படி  தலைமுறை தலைமுறையாக அவர்களே தயாரித்துக்கொண்டு உலகின் பல நாடுகளுக்கும் எடுத்துச்சென்று கடல் வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாரித்தார்கள். இந்த செம்பழுப்பு சாயங்கள் மிக அதிக அளவு விலை உள்ளதால் சாதாரண மக்களுக்கு வாங்க முடியாமல் போனது. மேலும், இது அரசர்களிடையே இந்த செம்பழுப்பு நிற ஆடைகள் பெரும் கௌரவத்துக்குறிய அடையாளமாகவும்  கருதப்பட்டதால் அரச குடும்பத்தை தவிர மற்றவர்கள் இந்த நிற ஆடைகளை உடுத்த தடையும் விதிக்கப்பட்டது. இப்படித்தான் இந்த லெபனானியர்கள் பெரும் கடல் [கொள்ளை]வியாபாரிகளாக உலகின் பல நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு பெற்றனர்." என்றார் தோமையார்.
" ஐய்யா தோமையே... நான் கேட்ட கேள்விக்கு நீவீர் இன்னும் சரியான பதிலை சொல்ல வில்லையே? இந்த லெபனான் நாட்டிற்கு பொனீஷியா என்று எப்படி பெயர் வந்தது.? " என்றார் ஹெப்பான்.
" என் எஜமானரே...இந்த லெபனான் நாட்டிற்கு சொந்த மக்கள் யார் என்று எனக்கு தெரிய வில்லை. வேத காலத்தில் நோவாவுக்கு ஹாம், ஷேம், ஜாபெத் என மூன்று பிள்ளைகள் இருந்தனர். ஒருமுறை தந்தை நோவா குடிவெறியில் நிதானமிழந்து நிர்வாணமாக படுத்திருக்க அதைக்கண்ட ஹேம் சிரித்தான். ஆனால் ஷேமும் ஜாபேத்தும் தங்கள் தகப்பனின் நிர்வாணத்தை பாராமல் திரும்பி  நின்றபடியாக ஒரு போர்வை துணியால் அவரது நிர்வாணத்தை மூடினார்கள். நடந்ததை அறிந்த தந்தை நோவா பெரிதும் வருந்தி தன்னைக்கண்டு சிரித்த ஹேமை சபித்தார். அன்றிலிருந்து சாபம்
அவனைப்பற்றிக்கொண்டது. அவன் ஆப்ரிக்காவின் கானா நாட்டிற்கு தப்பிச்சென்றான். அங்கிருந்தும் அவனால் அவன் தந்தையின் சாபத்திலிருந்து விடமுடியவில்லை. அந்த சாபத்தின் காரணமாக அவன் திரேகம் கருமைநிறம் அடைந்தது,.அதிலிருந்து அவன் சந்ததி முழுவதும் கருநிறமாகியது. ஜபேத்தின் மகன் துபால்ட். மிகவும் அரிதான பல கலைகளுக்கு இவன் தந்தை. துபால்ட்டின்  குடும்பத்தினருக்கும் அவனது சகோதரரான மோசோக்கு குடும்பத்தாருக்கும் நல்ல நட்ப்பு இருந்தது. ஆனால் இவர்களது குடும்பத்தாருக்கும் நோவாவின் குடும்பத்தாருக்கும் சரிப்பட்டு வரவில்லை.
எனவே துபால்ட்டும் மோசோக்கும் இதுபற்றி நோவாவிடம் தாங்கள் தனித்து போய்வாழ்வதாகவும் எந்தப்பக்கம் தாங்கள் செல்ல வேண்டும் எனவும் கேட்டார்கள். அப்போது நோவா லெலெபனானுக்கு சென்று வாழும்படி கூறினார். இப்படித்தான் லெபனானில் மூத்த குடிமக்கள் தோன்றினர்.
ஆனால் மிகவும் பிற்காலத்தில் என்று மெசப்போட்டோமியாவில் இருந்த சுமேரியாவில் பாபேல் கோபுரம் கட்டுவது கடவுளாள் தடை செய்யப்பட்டதோ அப்போது அங்கிருந்து வந்த சில இனத்தவர்கள்தான் இந்த லெபனான் நாட்டில் வந்து குடியேறி அங்கிருந்த உள்ளூர் மக்களை துரத்திவிட்டு இந்த நாட்டை கைப்பற்றிக்கொண்டார்கள். பிறகு பல காலம் கழித்து இங்கிருந்த சில
மீனவர்களால் சில அறியவகை நத்தைகளையும் மெல்லுடலி எண்கால் பிராணிகளையும் சிலவகை மீன்கள் வகைகளையும் ஆராய்ந்து அவற்றிலிருந்து வெளிப்படும் ஒருவித சாயத்தை கண்டுபிடித்து
பெரும் வியாபாரிகள் ஆனார்கள். இந்த நத்தை வகைகளுக்கு பொனீசியா என்று பெயர். அந்தக்காலத்தில் இவர்களைத்தவிர வேறு யாருக்கும் இந்த வண்ணக்கலவை ரகசியம்  தெரியாததால் இவர்களை பொனீசியர்கள் என்றே அழைத்தனர். உண்மையில் பொனீசியா என்று ஒரு நாடே கிடையாது. அவர்கள் பேசும் மொழியும் பொனீஷியா அல்ல. ஆனால் இந்த லெபனானியர்களை உலகத்தவர்கள் பொனீசியர்கள் என்றே அழைத்ததால் இவர்களுக்கு இந்த உலக சரித்திரத்தில் பொனீஷியர்கள் என்னும் பெயரே நிலைத்துவிட்டது." என்றார் தோமையார்.
" ஐய்யா தோமையே...பாபேல் கோபுரம் கட்டுவது எவ்வாறு தடை செய்யப்பட்டது?" என்றார் ஹென்னான்.
" என் எஜமானே... சமயம் வரும்போது அது ஏன் கட்டப்பட்டது என்றும் எவ்வாறு அழிவுற்றது என்பதையும் நான் தவறாது கூறுவேன்" என்றார் தோமையார்.
" சரி ... அப்படியானால் எடேசா மன்னருக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி இப்போது கூறுங்கள் " என்றார் ஹெப்பான்.
" இது எடேசா....."
எடேசாப்பட்டிணம் சிரியா நாட்டிலிருந்து அதன் வடகிழக்கில் அமைந்துள்ள ஒரு அழகிய பட்டிணம். இதன் அரசர் பெயர் அக்பார் ஒக்காமா என்பதாகும். எதற்கும் குறையே இல்லாதிருந்த அரசர்  அக்பாருக்கும் ஒரு குறை வந்து சேர்ந்தது. அதுதான் தொழு நோய். தன் வாழ்நாளின் கடைசிக்காலத்திலா இந்த கொடிய நோய் தனக்கு வந்து சேரவேண்டுமென்று மன்னருக்கு பெரும் துன்பம்
ஏற்பட்டது. யேசுநாதர் வாழ்ந்த காலத்தில் இந்த நோய் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ஒரு கொடிய சாபம் என்றே கருதப்பட்டது. எந்த மருந்தும் மாத்திரைகளும் இந்த நோயை குணப்படுத்தாது.  இந்த நோய் கண்டவரை குடும்பத்திலிருந்தே தனியே பிறித்து ஊருக்கு புறம்பே தள்ளி வைப்பார்கள். இந்த நோய் கண்டவர் சமுதாயத்தில் எந்த உயர் அந்தஸ்த்திலிருந்தாலும் அவருக்கும் இதே கதிதான். இதனால் மன்னர் அக்பார் அடைந்த மனத்துன்பமும் உடல் துன்பமும் அளவிட முடியாததாக இருந்தது. யாராவது கடவுள் அருள் பெற்றவர் வந்து தன் நோயை குணப்படுத்தினால்
அன்றி தனக்கு விமோசனம் இல்லை என்று உணர்ந்த அவர் யார் முகத்திலும் விழிக்க பிடிக்காமல் அரசாங்க அலுவலைக்கூட கவனிக்க முடியாமல் அரண்மனையிலேயே தங்கி விடுவார். ஆனால்  எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி தலை மறைவு வாழ்க்கை நடத்த முடியும்.? ஆண்டவா என்னை காப்பாற்ற மாட்டாயா என்று அழுது அழுது நாட்களை கழித்தார்.
இப்படி இருக்கும் போது பாலஸ்த்தீனா நாட்டில் யேசுநாதர் என்னும் ஒரு யூத ராபி ஒருவர் தோன்றியுள்ளதாகவும் அவர்தான் கடவுளின் அவதாரம் எனவும் அவர் தன்னை மெசியா என்று  அறிவித்துக்கொள்வதாகவும் அவரது போதனைகள் புது விதமாக இருப்பதாகவும் அதுவும் ஒருவித அதிகாரத்தோடு இருப்பதாகவும் அவர் சொன்ன ஒரு வார்த்தையில் குருடர்கள் கண் பார்வை
பெறுவதாகவும், செவிடர் காது கேட்பதாகவும், ஊமைகள் வாய் பேச முடிவதாகவும், மேலும் எந்த விதமான பேய்களும் இவருடைய அதிகாரத்தில் ஒரே வார்த்தையில் அலறி ஓடிவிடுவதாகவும், இறந்தவர் உயிர் பெற்று எழுவதாகவும், இவர் வல்லமையால் தொழு நோாய்கள் கூட குணமாவதாகவும், வெகு சமீபத்தில்கூட இவரது புதுமையால் ஒரே வார்த்தையில் பத்து தொழு நோயாளிகள்  பூரண குணம் பெற்றதாகவும் கேள்விப்பட்டார்  எடேசா மன்னர்  அக்பார்  ஒக்காமா. அவ்வளவுதான் மனிதர் துள்ளிக்குதித்துவிட்டார். தனக்கு விமோச்சனமே வந்துவிட்டது என்பதுபோல் அகமகிழ்ந்தார்.
ஆனால் அவர் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. இவ்வளவு நல்ல மனிதரான அந்த யூதராபிக்கு எருசலேம் தேவாலய பெரிய குருக்களும் பரிசேயர்களும் பெரும் அச்சுருத்தலாக மாறி  அவரைக்கொல்ல தேடுகின்றார்கள் என்று கேள்விப்பட்டதும் மன்னர் அக்பார் ஒக்காமா பெரும் துன்பம் அடைந்தார். எனவே அவர் உயிருடன் இருக்கும்போதே அவரைக்கெஞ்சி மன்றாடி தன் நோயிலிருந்து குணமாக்க ஏதாவது செய்ய வேண்டும். அவரை தன் நாட்டுக்கு வரவழைத்துவிட்டால்? தன் நாட்டில் அவர் சர்வ சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால்...இதற்காக அவரையே தன்
நாட்டின் அரசராகக்கூட ஆக்கிவிட தான் தயார். தான் இந்த கொடும் தொழுநோயிலிருந்து குணமானால் போதும் என்று எண்ணியவராய் யேசுநாதருக்கு ஒரு நிருபம் எழுதினார். அந்தக்கடிதம் இவ்வாறாக இருந்தது.
"என் உயிரினும் மேலான யேசுநாதர் என்னும் யூத ராபிக்கு சிரியாவின் எடேசாவிலுள்ள அக்பார் ஒக்காமா என்னும் சிற்றரசன் அனேக நமஸ்காரங்களும் வாழ்த்துகளும் கூறி எழுதும் மடல்.
தாங்கள் சொர்கத்திலிருந்து எழுந்துவந்த கடவுளின் அவதாரம் என்று நான் கேள்விப்படுகின்றேன். நம்புகின்றேன். விசுவாசிகிறேன்.
தாங்கள் சொல்லும் ஒரு வார்த்தையில் இறந்தவர் உயிர் பெறுவதாகவும், ஊமைகள் பேசுவதாகவும், செவிடர் கேட்பதாகவும், குருடர் பார்வை பெறுவதாகவும், உடல் ஊனமுற்றோர் குணமடைவதாகவும், அசுத்த ஆவி பீடித்தோர் உடனே குணமடைவதாகவும் கேள்விப்படும்போது இவ்வுலகில் மீண்டும் கடவுள் தோன்றியுள்ளார் என்பதத்தவிர வேறு ஒன்றும் கூறுவதற்கில்லை.
    மேலும் தங்களுடைய ஒரே வாத்தையால் ஒரே சமயத்தில் பத்து தொழு நோயாளிகள் உடனே குணமடைந்ததாக நான் அறியவந்தேன். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேலும்  இத்தகைய  காரியங்களுக்கு தேவரீர்  எவ்விதமான மருந்தோ, மாத்திரையோ, மூலிகைகளோ, பச்சிலைகளோ  உபயோகிப்பதில்லை என்றும் கேள்விப்படும்போது  தேவரீர் எவ்வளவு  வல்லமையுள்ள மகத்தான தீர்க்கதரியாகவும்  ராபியாகவும் இருக்கக்கூடும் என்பதை என்னால்  உணர்ந்து கொள்ள முடிகிறது. அப்படியானால்  தாங்கள் கடவுளின் அவதாரம் என்னும்  கருத்தில்
எனக்கு  மாற்றுக்கருத்து  இல்லை. நான் இதுவரை  உங்களைப்பற்றி கேள்விப்பட்டு தான் இருந்து  வந்திருகின்றேனே  தவிர  தங்களை நான் இன்னும் பார்த்ததே இல்லை. தங்களைப்பார்க்க எனக்கு  ஆவல் மிகுதியாக உள்ளது. ஆனால் எனக்குள்ள குறை  தங்களைப்பார்க்கும் பாக்கியத்தை  தடை செய்கின்றது. தேவரீர் என்னை பொறுத்தருள வேண்டும். என் குறையே  என் தொழு நோய் தான்.  இந்த நோயிலிருந்து  நான் விடுதலை  பெறவே விரும்புகின்றேன். இந்த நோயை தாங்கள் ஒருவரால் மட்டுமே  குணப்படுத்த முடியும் என்று  நான் ஆணித்தரமாக  நம்புகின்றேன். விசுவாசிக்கின்றேன். தாங்கள்  என்மீது  இரக்கம்  வைத்து என் வியாதியினின்று  என்னை குணப்படுத்தும்படி  மிகவும் தாழ்மையுடன்  மன்றாடுகின்றேன்.
நான் தங்களைப்பற்றி  கேள்விப்படும்  சில விஷயங்களும்  எனக்கு  மிகுந்த துன்பமாக  உள்ளது. தங்களது  நல்ல  சேவைகள் பல இருப்பினும் தங்களுக்கும்  விரோதிகள்  எழுந்து  தங்களை  கொல்ல பார்கின்றார்களாமே, தங்களுக்கு இத்தகைய  தொந்தரவு வேண்டாம். உங்களுக்கு  வேண்டிய அனைத்து  பாதுகாப்புகளும்  நான்  ஏற்படுத்தித்தருகின்றேன். தாங்கள்  என் நாட்டிற்க்கு  வந்து  தங்கள்  வேத போதக அலுவலை  தொடரலாமே. தங்களின் மதத்தை  என் நாட்டில்  போதிக்கலாமே. என் ராஜ்ஜியத்தை  தங்கள் ராஜ்ஜியமாக  மாற்றிக்கொள்ளலாமே. இவ்வாறாக  எல்லாம்  நடை பெற்றால் நானும்  என் நாட்டு மக்களும்  உண்மையில் பாக்கியவான்கள்  ஆவோம். தேவரீரை  என்  இருகரம் கூப்பி என் நாட்டுக்கு வருக வருக  என இதயபூர்வமாக  வரவேற்பதில்  நான் பெருமை கொள்கிறேன்.  இப்படிக்கு
தங்கள்  வருகையையும்  ஆசீர்வாதத்தையும்  எதிர்நோக்கும்  அன்பன்
அக்பார் ஒக்காமா. எடேசா.
இந்தக்கடிதத்தை  தன் வெளி உறவு  அமைச்சனும்  தன்  காரியதரிசியுமான ஹென்னானிடம்  கொடுத்து  அதை  யேசுநாதரிடம்  நேரிலேயே கொடுத்துவிடும்படி  அனுப்பினார்  எடேசா  மன்னர் அக்பார் ஒக்காமா." என்றார்  தோமையார்.
" பிறகு என்ன நடந்தது " என்றார் ஹப்பான்.
" எடேசா மன்னர் அக்பார் ஒக்காமாவிடமிருந்து  கடிதத்தை  பெற்றுக்கொண்ட ஹென்னான்  நேரே  ஜோர்டான்  வந்தான். அங்கே  கடாரா  என்னுமிடத்தில் யேசுநாதரை  சந்தித்து  அவரை  வணங்கி, பணிந்து  பவ்வியமாக  அவரிடம்  தன் எஜமானரின்  குறையை  சொல்லி  அவர்  கொடுத்தனுப்பிய  கடிதத்தை சமர்ப்பித்தான். கடிதத்தத்தை  படித்த யேசுநாதர், " நண்பா, உன் நாட்டு மன்னருக்கும்  அவர்  மக்களுக்கும்  என்  ஆசீர்வாதம்  எப்போதும்  உண்டு. அவர்  விரும்பியவாறே  அவருக்கு  குணம்  அளிப்போம்.. ஆனால்  நான்  என் நாட்டையும்  என்  மக்களையும்  விட்டு  இப்போது வர இயலாது. நான் என் பரலோக  தந்தை  எனக்கு கொடுத்திருக்கும்  அலுவல் முடியாமல்  என்னால் எங்கும்  செல்ல முடியாது. ஆயினும்  நாம்  பரலோகம் சேர்ந்த பிறகு  என் சீடர் ஒருவரை  அனுப்புவேன். அவர் வந்து  என் சார்பாக உங்கள்  அனைவரையும் அசீர்வதித்து  நம் மக்களாக  உங்கள் அனைவரையும்  அங்கீகரிப்பார். ஆகவே நீர்  போய்  இந்த  துண்டால் அவரது  முகத்தை  துடைக்க சொல் .  அவர் உடனே  குணமடைவார். கண்டு  விசுவாசிப்போரைவிட  காணாமலேயே விசுவாசிப்போர்  பேறு பெற்றோர். நாம் யார் என்று அறியாமலேயும், நம்மை காணாமலேயும், நம்மீது  அன்பும்  நம்பிக்கையும்   விசுவாசமும் கொண்ட அவருக்கு  நம் பாராட்டும் ஆசீரும்  எப்போதும் உண்டு. " என்றுகூறி  ஒரு துண்டால்  அவரது  திருமுகத்தை  துடைத்தார்.
உடனே  அவரது  திருமுகம்  அந்த துண்டில் அச்சாக பதிந்தது. அந்தத்துண்டோடு  யேசுநாதர் தன் கைப்படவே  அக்பர்  ஒக்காமாவுக்கு  ஒரு கடிதம்  எழுதி  அதை  எடேசா மன்னரிடம்  சேர்க்கக்கூறினார். அந்தக்கடிதத்தில்  அந்தக்காரியதரிசி  ஹென்னானிடம்  யேசுநாதர்  கூறிய அனைத்தும்  பதிவாகியிருந்தது." என்றார்  தோமையார்.
" பிறகு என்ன நடந்தது " என்றார் ஹப்பான் ஆவல் மிகுதியால்.
" யேசுநாதரின் கடிதத்தையும்  அவர் முகம்  பதிந்த  துண்டையும்  தன்னுடன் எடுத்துச்சென்ற  ஹென்னான்  எங்கும்  நிற்காமல் தன் எஜமானனும்  எடேசா நாட்டு மன்னருமான அக்பர் ஒக்காமாவை  சந்தித்து  அவரிடம்  அவற்றை ஒப்படைத்தார்.
" அந்தத்துண்டை  அவர்  தரைமட்டும்  பணிந்து  வாங்கிக்கொண்டு  அந்த யேசுநாதரின்  முகத்தை  தன்  முகத்தில் ஒற்றிக்கொண்டார். அப்போது  அந்த புதுமை நடந்தது. தன்முகத்தை  யேசுநாதரின்   திருமுகம்  பதித்த  அந்த துண்டால்  பதித்த  மாத்திரத்தில்  எடேசா  மன்னரின்  தொழு நோய் அவரைவிட்டு  நீங்கியது. மன்னர் அக்பர்  ஒக்காமா அடைந்த  மகிழ்சிக்கு அளவே  இல்லை. " வாழ்க எம்  பெருமான் யேசுநாதர். அவரது  திருநாமம் என்றென்றும்  வாழ்த்தப்படக்கடவது  என்று  முழங்கினார். அவரோடு  அவரது எடேசா  தேசம்  முழுவதும்  ஆண்டவராகிய  யேசுநாதரை  வாழ்த்தியது." என்றார்  தோமையார்.
" அடேயப்பா... நம்பமுடியத்தாக  அல்லவா  இருகின்றது. இது  எப்படி சாத்தியமாகும்? யேசுநாதர்  எங்கேயோ  இருக்கா  எடேசா  மன்னர்  எங்கேயோ இருக்க  இந்த புதுமை  நடக்க  எப்படி சாத்தியமாகும் ?" என்றார்  ஹப்பான்.
" என் எஜமானே...ஆண்டவரின்  கிருபை  கடாட்ச்சம்  கிடைக்க  நேரம் நாழியோ  அல்லது  தூரமோ  எதுவுமே ஒரு  தடையாகாது. தேவை  நல்ல மனமும்  தீர்க்கமான  விசுவாசமும்  மட்டுமே. என்  ஆண்டவர்  யேசுநாதர்  உயிருடன்  இருக்கும்போதே  அவரை  ஆசீர்வதித்தார். அவரும் குணமடைந்தார். இப்போது எம்மை அனுப்பி  எடேசா  திருநாட்டை  அவர் சார்பாக  ஆசீர்வதித்து  அந்த  நாட்டு மக்கள் அனைவரையும்  தன்னுடைய மக்களாக  ஏற்றுக்கொள்ள  விரும்புகின்றார். இதற்காகத்தான்  நம்மை இப்போது  அனுப்புகின்றார். புறிந்ததா? இது  என் ஆண்டவரின்  ஆணை. அவர்தம்   காரியங்களை  நிறைவேற்றிக்கொள்ள  யாரை தெரிந்து கொள்கிறாரோ  அவர்  அந்த பணியை  ஏற்றுக்கொண்டே  ஆக வேண்டும்." என்றார்  தோமையார்.
ஆண்டவரின்  திருவுளத்தை புறிந்துகொண்ட  ஹப்பான் மிகுந்த சந்தோஷமாக தன் பயணத்தை தொடரலானார்.
அடுத்த சில நாட்களில் கப்பல் சிரியாவின் தலை நகரான  டமாஸ்கஸ் துறைமுகத்தை  அடைந்தது. வேத காலத்திலிருந்தே  இன்றளவும்  அதே பெயருடன்  விளங்கும்  பல பட்டிணங்களுல்  சிரியாவும் ஒன்று. இந்த சிரியாவின்  தலை நகரம் டமாஸ்கஸ்  இருக்கும்  இடம்  ஒரு  செங்குத்தான மலையின்  அடிவாரத்தில். இந்த  மலைக்கு சைத்னயா  என்று  பெயர். தோமையாரும்  அவர்  சகோதரர்  அடாய்யும்  அவர்களின்  எஜமான் ஹப்பானும்  துறைமுகத்திலிருந்து  இறங்கி  ஒரு  விடுதியில்  தங்கி  அடுத்த நாள்  எடேசா  செல்ல தீர்மானித்தார்கள். அடுத்த நாள் ஆளுக்கு  ஒரு குதிரையை  வாங்கிக்கொண்டு  எடேசா  பயணம் மேற்கொண்டார்கள். அப்போது  ஒரு அழகிய  மான்  இவர்களுக்கு  முன்பே  தென்பட்டது. தோமையார்  அதிசயத்து  அந்த மானை பின் தொடர்ந்தார். அது மிகவும்  வேகமாக  சைத்னயா மலையின் மீது ஏறியது. அதை விரட்டிச்சென்ற தோமையாரும்  அந்த மலையின்மீது  ஏறினார். மலை உச்சிக்குச்சென்ற  மான் ஒரு அழகிய யுவதியாக மாறியது. அது அசப்பில் தேவத்தாயார்  போலவே இருந்தது. பின் மறைந்துவிட்டது. பின்தொடர்ந்து  வந்த அடாயும் ஹப்பானும் யாதொன்றையும்  பார்க்காமல்  இந்த  மலைமீது தோமையார்  ஏன்  இவ்வளவு  அவசரமாக   ஏறிவந்தார்  என்று காரனம்  கேட்க்க  அவர்  இந்த இடத்தை என் எஜமானரின் தாயார் மரியாள்  தன்னுடைய  இருப்பிடமாக தேர்ந்துகொண்டார்கள். அதை  எனக்கு  காட்டத்தான்  இங்கே  அழைத்து  வந்தார்கள். சரி நாம் போவோம் வாருங்கள். இந்த  இடம் மிகவும் புனிதமான இடம்  என்பதை  காலம்  நமக்கு  உணர்த்தும் " என்றார்  தோமையார்.
[ சைத்னயா மாதா:. இந்த இடத்தில் நேயர்களுக்கு  சைத்னயா  மாதாவை அறிமுகப்படுத்துவது  அவசியமான ஒன்றாகும். கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் பைசாந்திய  அதாவது  இன்றைய  துருக்கி பேரரசின்  கிறிஸ்த்துவ மன்னன் ஜஸ்டீனியன்  தன் காதல் மனைவி  தியோடோராவை  அழைத்துக்கொண்டு பாரசீகத்தின் மீது  படை  எடுத்து  வந்தான். இந்த சிரியாவின் வறண்ட மலைப்பகுதிகள்   நிறைந்த  பகுதிக்கு  வந்தபோது  அவரது  படையினருக்கு தாகம்  அதிகரித்தது. மன்னன்  ஜஸ்டீனியன்  தன்  படை  வீரரை  எல்லா புறமும்  அனுப்பி  எங்கேனும்  தண்ணீர்  கிடைக்குமா என்று  தேடிவர  அனுப்பினான். தானும் ஒரு குதிரையில் தன் வேலை  பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு  போகையில்  ஒரு அழகிய மான் அவனுக்கு முன்னே தோன்றியது.
    இந்த  அழகிய மானை  வேட்டை  ஆட  விரும்பிய  மன்னன்  ஜஸ்டீனியன்  அதை  பின்  தொடர்ந்தான். அந்த மான்  இந்த  சைத்னயா மலைமீது  ஏறி அதன் உச்சிக்கே சென்றது. ஒரு இடத்தில்  அந்த  மான் நிலையாக  நின்றது. இந்த  சந்தர்ப்பதிற்காக  காத்துக்கொண்டிருந்த  மன்னன் ஜஸ்டீனியன்  அதை கொல்ல தன் வேலை எடுத்து  அதன்மீது  வீச குறிபார்த்தான். அப்போது அந்த மான்  ஒரு பெண்ணாக  உருமாறியது. அது வேறு யாரும் அல்ல. நம் தேவத்தாயார்தான். ஜஸ்டீனியன்  அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.
       தேவத்தாயார்  தன் திருவாய்  மலர்ந்து  பேசினார்கள். " ஜஸ்டீனியா. அப்படியே  நில். நாம் உன்னுடன் தனியாகப்பேச வேண்டுமென்பதற் காகத்தான்  உன்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்தேன். நாம் நிற்கும் இடம் மிகவும் புனிதமானதாகும். இந்த  இடத்தில் நீ  எமக்கு  ஒரு கோயில் கட்டித்தர  வேண்டும். நீ  போகும்  இடம்  அனைத்திலும்  நாம் உன்னோடிருந்து  உமக்கு  ஆசீர்  வழங்குவோம்.  நீ எங்கு சென்றாலும் வெற்றி உன்னுடையதே. சந்தோஷமாக போய்வா" என்று அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்கள். மாமன்னர் ஜஸ்டீனியன் மலைவிட்டு கீழே இறங்கி வந்தபோது  அவனது படைவீரர்கள்," மன்னர் பெருமானே... என்ன ஒரு அதிசயம்.இந்த மலையில்  ஒரு பகுதியில் நல்ல சுனை  ஒன்று காணப்படுகின்றது என்றனர்.
        மன்னர் ஜஸ்டீனியனும் தன் படை எடுப்பை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தன் நாட்டுத்தலைநகர்  இஸ்த்தான்புல்லுக்கு  திரும்பினார். ஆனால்  இந்த வெற்றிக்கு காரணமான  சைத்னயா மாதாவை  அவன் மறக்கவில்லை. தன் அரசாங்க பொறியாளர்களை  அனுப்பி  இந்த  சைத்னயா மலையில்  மாதாவின்  பெயரால்  ஒரு தேவாலயம்  அமைக்க  அனைத்து பொருள் உதவிகளையும் கொடுத்து அனுப்பினான். ஆனால் அவன் பொறியாளர்கள்  இந்த சைத்னயா  மலையை  மேற்பார்வையிட்டு  இந்த செங்குத்தான மலையில் தேவாலயம்  கட்டுவது சாத்தியம்  இல்லாத ஒரு செயல்  என்றனர்.
இதனால் விசனமுற்ற  ஜஸ்டீனியன்  அந்த  சைத்னயா மலையில் தேவாலயம்  கட்டும் முயற்சியை  விட்டுவிட்டான். ஆனால்  தேவத்தாயார் அவனை விடவிலை. மீண்டும் மன்னர் ஜஸ்டீனியனை அந்த சைத்னயா மலைக்கு அழைத்துச்சென்றார். அங்கே  மீண்டும் அவருக்கு தன்னைக் காண்பித்து அந்த மலைமீது தேவாலயம்  எப்படிக்கட்ட  வேண்டும் என்பது போல் ஒரு வரைபடத்தை  தன்  கைப்படவே  வரைந்து காண்பித்தார்கள். மன்னனின்  கடும் முயற்சியால்  இந்த  சைத்னயா  மலையின்மீது தேவத்தாயாருக்கு ஒரு பெரும்  தேவாலயமும் யாத்திரீர்கள்  தங்குமிடமும் கட்டப்பட்டது. இந்த சைத்னயா மாதாவின் திரு உருவப்படம் சுவிஷேஷகரான புனித லூக்காவால் வரையப்பட்டது. அது  சகாய மாதாவாக  கருதப்படுகின்றது. அவர்  தன்  கைப்படவே  வரைந்த  சகாயமாதா  படங்கள்  மொத்தம்  நான்கு.  அவற்றுள் ஒன்று  நம் சென்னையில்  தோமையார்  மலை [ பரங்கி மலை] யில்  அவர்  வேதசாட்ச்சியாக  வேலால்  குத்துப்பட்டு  இறந்த தேவாலயத்தில்  வைக்கப்பட்டுள்ளது.
      மற்றொன்று இந்த சைத்னயா மலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒன்று ருஸ்யாவில் உக்ரைனில் ருஸ்யாவின் பழமை ரீதி திருச்சபையினரிடம்  உள்ளது. இந்த சைத்னயா மாதாவின் புகழ்  உலகம்
எங்கும் பரவியுள்ளது. அங்கிருந்துகொண்டு அனுதினமும்  அவர்  செய்யும்  பல புதுமைகள்  கணக்கில்  அடங்காததும்  நம்ப முடியாததாகவும்  இருக்கும். இவற்றைப்பற்றி  நேயர்கள்  இன்டெர்னெட்டில் பார்த்து  தெரிந்து கொள்ளவும். மேலும் ஒரு ருசிகர செய்தி  இங்குள்ளது. இந்த சைத்னயா மாதா கோயிலிருந்து  சில கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால் அங்கே  காயீன் ஆபேல்  சமாதிகள்  இருகின்றது.
ஆனால்  இவை  இப்போது  முஸ்லீம்கள்  கையில்  உள்ளதால்  அந்த கல்லறைகள்  பெரும்  மசூதிகளாக  மாற்றப்பட்டுவிட்டது. ஆயினும் சிரியாவைப் பொருத்தவரை  கிறிஸ்த்துவர்களும் முஸ்லீம்களும்  இந்த மசூதிகளுக்கு  சென்று காயீன் ஆபேல் ஆகியோருக்கு  அஞ்சலி செலுத்துகின்றனர்.
  ஹப்பானும், தோமையாரும், அவர் சகோதரர் அடாய்யும் குதிரைகளில் பயணம் மேற்கொண்டனர். ஒருவழியாக  அவர்களுடைய  பயணம் சிரியாவைக்கடந்து  எடேசாவின்  மேற்கு எல்லைப்பகுதியை அடையவும்  குதிரை  வீரர்கள் சிலர் அவர்களை வழி மறிக்கவும் சரியக இருந்தது.
" ஐயா... தாங்கள் மூவரும் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள்.? எங்கள் எடேசா நாட்டுக்கு வருகை தரும் உங்களை வரவேற்கிறோம். எந்த நோக்கத்திற்காக நீங்கள்  மூவரும் எங்கள் நாட்டுக்கு  வந்திருக்கின்றீர்கள்.?" என்றனர் அந்த வீரர்கள்.
" வீரர்களே... எங்கள்  எஜமானரும்  எங்கள் ஆண்டவராகிய  யேசுநாதரின் கட்டளைப்படியே  நாங்கள் மூவரும் உங்கள்  எடேசா மன்னர்  அக்பார் ஒக்காமாவை  பார்க்க  வந்திருகின்றோம். போய்  உன்  அரசரிடம்  யூதர்களுடைய  அரசராகிய  யேசுநாதரின் அப்போஸ்த்தலர்கள்  தோமையும் அவர் சகோதரர் அடாய்யும்  எங்கள் எஜமானரான  தமிழ்நாட்டு  அரசரான கங்தப்பா ராசாவின்  அமைச்சருமான  ஹெப்பானும்  வந்திருப்பதாக  சொல். நாங்கள் ஒன்றும் சும்மா உங்கள் நாட்டுக்கு வரவில்லை. உங்கள்  அரசர் அக்பார் ஒக்காமாவின்  விஷேஷ அழைப்பின் பேரிலேயே வந்திருகின்றோம்." என்றார்  தோமையார்.
" ஐய்யா.... உங்களை தகுந்த முறையில் அழைத்துவர  எங்கள் நாட்டு எடேசா மாமன்னர் அக்பார் ஒக்காமா  எங்களுக்கு  ஏற்கனவே  அனுமதியும்  உத்திரவும் கொடுத்துள்ளார். நாங்களும் பல  மாதங்களாக  தங்கள்  வருகைக்காக காத்திருகின்றோம்.. வந்திருப்பது  தாங்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே  எங்களுக்கு  இத்தகைய  ஒரு விசாரணை  தேவையாய் இருந்தது,.சிரமதிற்கு மன்னிக்கவும் " என்று கூறி பலமாக  தன்னிடமிருந்த கொம்பை  ஊதினான். அந்தக்கொம்பின்  சப்த்தம் பல மைல் தொலைவிற்க்கு எதிரொலித்தது. காடு மலைகள் என பல முறைகள் அது  எதிரொலிக்கவே  அந்த சப்த்தம்  அரண்மணையிலும்  கேட்க்கப்பட்டது .. உடனே  அக்பர் ஒக்காமா  மிக்க மகிழ்ச்சியுடன்," ஆஹா... நான் பாக்கியவான். என் எஜமானும் என் ஆண்டவருமான யேசுநாதரின் அப்போஸ்த்தலர்களான  ஊழியர்கள்  என் அரண்மனைக்கு  விஜயம் செய்திருகின்றார்கள்.... என்  மக்களே  களிகூறுங்கள். வந்திருக்கும்  யேசுநாதரின்  ஊழியர்களுக்கு  வழி நெடுகிலும்
ஆனந்தமான  உற்சாகமான  வரவேற்புகொடுங்கள் " என்று கூறிக்கொண்டு  நகர வாசலை அடைந்தார்..தோமையாரையும் அவர் சகோதரர்  அடாய்யையும் பார்த்த மாத்திரத்தில் அவர்கள் காலில் விழுந்து  வணங்கினார். ஹெப்பானை மிகுந்த  மரியாதையுடன்  வரவேற்றார். அரண்மனை  வந்த அவர்களை  தகுந்த ஆசனத்தில் அமர்த்தி சம்பிரதாயமான  வரவேற்பு  அளித்து  தன் உரையை  ஆற்றினார் அக்பர்  ஒக்காமா.
" என் நாட்டு மக்களே...நம்  அழைப்பின் பேரில்  வந்திருக்கும்  என் ஆண்டவரின்  சீடர்களை  நாம்  வரவேற்ப்பதில்  நாம்  பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவர்களின் விஜயம்  நம் நாட்டு  மக்களிடையே  பெரும் மகிழ்ச்சியையும்  பெரும் சமாதானத்தையும்  கொண்டுவரும்  என்பதில் நமக்கு  ஐய்யமில்லை. நான்  ஏற்கனவே  என் ஆண்டவராம் கடவுளும்  என் இரட்ச்சகருமான  யேசுநாதருக்கு வாக்கு  கொடுத்தபடிக்கு  என் நாட்டை காணிக்கை  ஆக்குகிறேன். இனிமேல்  என் நாடு  இது  யேசுவின்  தேசம்  என்று  அழைக்கப்படுவதாக. நானும்  என் நாட்டு  மக்களும்  இனி கிறிஸ்த்துவின்  மக்கள்  என்று அழைக்கப்படுவோமாக. யேசுநதரை கடவுளாக  ஏற்றுக்கொண்ட  என் நாடு  எடேசாவே  உலகின் முதல் கிறிஸ்த்துவ  தேசம் என்று  அழைக்கப்படுவதாக...எனவே  யேசுநாதர்  எனக்கும் என் நாட்டு  மக்களுக்கும் அரசராக  இருந்து  அசீர்வழங்கி  என்றென்றும்  ஆட்சி புறிவாராக..இதற்கு ஆதாரமாக இதோ நம் யேசுவின்  அன்புசீடர்  தோமையார் இந்த  நாட்டை  யேசுநாதரின்  பெயரால் ஏற்றுக்கொள்ள  வேண்டுகிறேன்." என்று கூறி  தோமையாரை  அழைத்து வந்து  தன் அரியனையில்  ஏற்றி வைத்து  அவரது  மணி முடியை  அவரது  சிரசில்  மிக்க  பணிவுடன் ஏற்றிவைத்தார்.
தோமையாரும்  சம்பிரதாயமாக  அந்த  மணி முடியையும்  அவரது ஆட்ச்சியையும்  யேசுநாதரின்  பெயரால்  ஏற்றுக்கொண்டார். பின்  அவர் அக்பர் ஒக்காமை அவரது  அரியாசணத்தில்  அமரச்செய்து   அவரது சிரசில் அரருக்குறிய  மணிமுடியை  வைத்து  மீண்டும் அவரை அரசராக்கி  இனிமேல் அவர்  யேசுநாதரின்  பெயரால்  ஆண்டு வரவேண்டும்  என்று கேட்டுக் கொண்டார். அன்றைய  தினமே அரசர்  ஒக்காமா  தோமையார்  கையாலேயே திருமுழுக்கு  பெற்றுக்கொண்டார். அவரத்தொடர்ந்து  நாடு முழுவதும்  உள்ல அனைத்து பிரஜைகளும்  ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். தோமையாரும்  அவரது  சகோதரர் அடாய்யும்  அங்கு  பலமாத காலம்  தங்கி யேசுநாதர்  கட்டளையிட்டபடியே  மேலும்  பல காரியங்கள்  செய்துவந்தனர்.
இந்த நிலையில் தாமையாருக்கு  இந்தியா  செல்ல உத்திரவு யேசுநாதரிடமிருந்து  வந்தது. எனவே  தோமையார்  இந்தியா  புறப்படலானார். தன் சகோதரர் அடாய்யை  எடேசாவிலே  இருக்கச்சொல்லி
அந்த நாட்டு  மக்களுக்கு தேவ ஊழியத்தில் பயிற்சிகொடுக்க  அமர்த்திவிட்டு இந்தியா  செல்ல ஆயத்தமானார். தோமையார் தன் சகோதரனாகிய அடாய்யை  இப்போது பிறிந்து  சென்றவர்தான். பிற்பாடு அவர் தன் சகோதரரை  பார்த்ததாக  சரித்திரம் இல்லை.
தன் சகோதரர்  தோமையாரை  பிறிந்த அடாய்  எடேசாவிலிருந்து மெசப்போட்டோமியா, சிரியா, லெபனான்  ஆகிய  நாடுகளில்  வேத போதகம் செய்தார்  என்றும் மீண்டும்  எடேசா  வந்த  பின்னர்  ஒரு தேவாலயத்தில் பிரசங்கித்துக்கொண்டிருந்த போது  தன் தகப்பன்  அக்பாரின்  கொள்கை பிடிக்காத  மகன் ஒருவனால் இவர்  வெட்டிக்கொல்லப்பட்டு  வேத சாட்ச்சியாய் [ கி.பி.44ல்] மரித்தார் என்றும் அவரைப்பற்றிய ஒரு சரித்திரம் கூறுகின்றது. வேத சாட்சியான அடாய்  தோமையாரைப்போல் யேசுவின் அப்போஸ்த்தலராக  இல்லை என்றாலும்  யேசுவின்  ஊழியர்களான எழுபதின்மர்களுள் ஒருவராக கருதப்படுகின்றார்.
" இது நினிவே பட்டிணம் "
எடேசாவில் தன் அலுவல் முடிந்த  உடனே  நம் தோமையார் இந்தியாவுக்கான தம் பயணங்களை தொடரலானார். முதலாவது  அவர்  செல்ல வேண்டிய பயணம் அக்காலத்திய  அசீரிய தலை நகரான நினைவே பட்டிணமாகும். இந்த நினைவே  பட்டிணத்தைப்பற்றி  எல்லா கிறிஸ்த்துவ  மக்களும்  அறிந்திருக்க வேண்டியது  அவசியம். வேதகாலத்தில் இந்த நினைவே மக்கள் பெரும் அக்கிரமிகளாய் இருந்தபடியால் அவர்களை அழிக்க இஸ்ராயேல் தேவன் திருவுளம் கொண்டார். இருப்பினும் அவர்களை  நல்வழிப்படுத்த ஒரு சந்தர்பமாக  தம் தூதுவரான யோனாஸ் என்பவரை  அனுப்பினார்.
இந்த  மிலேச்சர்களுக்கு  ஆண்டவனின் வார்த்தையை  அறிவித்தால்  எங்கே அவர்கள்  கோபம் கொண்டு தன்னை கொண்றுவிடுவார்களோ என்று பயந்த யோனாஸ் தீர்க்கதரிசி தார்சியுஸ் என்னும் நாட்டுக்கு கப்பல் ஏறினார். இதனால்  கோபம் கொண்ட  ஆண்டவர்  கடல் கொந்தளிப்பை அனுப்பினார் .இதனால் யோனாஸ் தீர்க்கதரிசி  சென்ற கப்பல் நிலைதடுமாறியது. இந்த நிலையில் கப்பலை காப்பாற்ற  நினைத்த கப்பல் தலைவன்  இந்த கப்பலில் கடவுளுக்கு  ஆகாத ஒருவன் இருக்க வேண்டுமென்றும்  அவன் யார் என்று அறியவும்  சீட்டுபோட்டுப்பார்த்தான். அதில் யோனாஸ்  பெயர் இருக்கவே அவர் கப்பலில் இருந்து கடலில் தூக்கி எறியப்பட்டார். கடலில்  விழுந்த  அவரை  ஒரு பெரும்  திமிங்கலம்  விழுங்கியது. டமாஸ்க் [ தமஸ்க்கு ] கடற்கரைப்பகுதியில் அவரைக்கக்கிவிட்டு  பின்  இறந்தது. நினைவு  திரும்பிய அவர்  ஆண்டவரின் திருவுளத்தை  அறிந்து  மீண்டும் தைரியமாக  நினைவே பட்டிணத்தை அடைந்தார். அவர் சென்ற பாதையிலேயே  நம் தோமையாரும் ஹெப்பானும்  இப்போது பயணித்தார்கள்.
இவர்களோடு இப்போது புதிதாக ஒரு பயணியும் சேர்ந்துகொண்டார். தன்னுடைய பெயர் யோனாஸ் என்று அறிவித்து தன்னை அவர்களுடன் தன்னையும் வழித்துணையாக சேர்த்துக்கொள்ளுமாறு
கேட்டுக்கொண்டார்.
" ஐயா யோனாஸ் ... உம்முடைய  பெயர்  வேத காலத்தைய பெயர்  போல அல்லவா இருகின்றது. நீர் யார் ? எந்த ஊர்? " என்றார்  தோமையார்.
" ஐய்யா... என் பெயர் என் மூதாதையர்களின்  ஞாபகமாக எனக்கு சூட்டப்பட்டது. எங்களுடைய  மூதாதையர்கள்  ஜெருசலேமில் பெரும்  செல்வ செழிப்பில் வாழ்ந்தார்கள். ஆனால்  இஸ்ரேலியர்கள்  பாவ  வாழ்க்கை மேற்கொண்டதின் பலனாகவும்  அருவருப்புக்குறிய  அந்நிய  தேவர்களை கடவுளாக  வணங்கியதாலும்  இஸ்ராயேலின் தேவனுடைய  கோபத்திற்கு ஆளானபடியால் அசிரியாவிலிருந்து  வந்திருந்த கொடுங்கோலன் சென்னகெரிப்பின்  படையெடுப்பினால்  ஜெருசலேம்  அழிக்கப்பட்டு  பலரும் அடிமைகளாக  இந்த அசீரியாவுக்கு  கொண்டுவரப்பட்டனர். இப்படி வந்தவர்கள் தான் என் முன்னோர்கள். நானும்  இந்த நினைவே பட்டிணத்திலேயே  பிறந்து  வளர்ந்தேன். நான்  இன்னும்  தொலைதூரம் போகவேண்டியவன்  ஆதலால்  உங்களுடன்  சேர்ந்து  பயணம்  செய்ய விரும்புகிறேன்."
" சரி சரி... நல்லதாகப்போயிற்று. உங்களுக்கு  இந்த  நினைவே  பட்டிணம் பற்றி  தெரியுமானால் சொல்லுங்கள். "
" இந்த நினைவே பட்டிணம் தான் அசீரியப்பேரரசின் தலை நகரம். இந்த அசீரியர்கள் மிகவும் கொடூரமானவர்கள். அவர்கள் நெஞ்சிலும் செயலிலும் ஈரம்  என்பதே இருக்காது. நாவில் நயவஞ்சமும்,  செயலில் கொடூரமும் இருக்கும். இவர்கள் படை எடுக்கும் எந்த நாடும் அதன் உண்மையான சொரூபம் முதலாய் இல்லாதபடி  தீ வைத்தும் கோரதாண்டவம்  ஆடியும் அழிக்கப்பட்டுவிடும்.அந்த நாட்டின் பிரஜைகள் கதி அதோகதிதான்.அந்த நாட்டிற்கு நேர்ந்த கதியைப்பற்றி சொல்லக்கூட ஆட்க்கள் இல்லாதபடி அது நிரவப்பட்டுவிடும். ஆக மொத்தத்தில் இந்த அசீரீயர்கள் என்றாலே அழுத
பிள்ளையும் வாய்மூடிவிடும்."
"அப்படியா... இந்த அசீரியர்கள் என்பவர்கள் யார்...எங்கிருந்து வந்தவர்கள்?" என்றார் தோமையார்.
" ஐயா தோமையாரே.... நீர் வேதம் படித்ததில்லையோ?. ஆண்டவராகிய கடவுள் இந்த உலகைப்படைத்து  ஆதாம்  ஏவாளைப்படைத்தார்  என்றும் அவர்களுக்கு காயீன் , ஆபேல் என்றும் இருபிள்ளைகள் இருந்தார்கள் என்றும் அறிவீர் அல்லவா. இவர்களில் காயீன் தன் தம்பியின் மீதுள்ள  பொறாமையால்  அவனைக்கொண்றான். இதனால் கோபம் கொண்ட கடவுள் காயீனை சபித்து  அவனை காஸ்ப்பியன் கடலுக்குட்பட்ட  பகுதிகளுக்கு அனுப்பினார். அங்கு  அவனுக்கு சந்ததிகள் தோன்றனர். அவர்களில் பலர் ராட்ச்சதர்களாக மாறினர். இவர்களின் சந்ததியில் வந்தவர்தான் நோவாவும் அவர்  புதல்வர்களும். நோவாவின்  பேரர்களுள் ஒருவன் தான் நிர்மோத் என்னும் பெரும் வில்வீரன். இவனே இந்த அசீரிய பேரரசை தோற்றுவித்தான். இவனுடைய  வம்சாவளியில்  வந்தவர்கள்  மாய வித்தைகளிலும், சாத்தானுக்குறிய  கலைகளிலும் மிகுந்த  தேர்ச்சி பெற்றிருந்தனர். எனவே இவர்களுடைய  மாயவித்தைகளினாலும், அசகாய சூரத்தனத்தினாலும், கொடுமையான திடீர்த்தாக்குதலினாலும் இவர்களை வெல்லவோ  அல்லது எதிர்க்கவோ  யாரும் இல்லாத போனதால் இவர்கள் இந்த நினைவே நகரை தலை நகராக்கிக்கொண்டு மிகுந்த அசுரத்தனமான வாழ்க்கையை  வழ்ந்தனர்."
" இவர்கள் சரித்திரத்தில் எந்தெந்த நாடுகளின்மீது படை எடுத்தனர்" என்றார் ஹெப்பான்.
" ஐய்யா.... ரோமானியர்களின் கால அட்டவணைப்படி கிறிஸ்த்து பிறப்பதற்க்கு 745 ஆண்டுகளுக்கு முன் உலகையே தன் காலடியில் கொண்டுவரும் ஆசையால் மூன்றாம் திகிலாத் பிலேசார் என்பவன் தலைமையில் ஒரு பெரும்படை கிளம்பி  வடக்கு  இஸ்ராயேல் முழுவதையும்  கைப்பற்றி அங்கிருந்து  பெரும் கொள்ளை  பொருட்க்களுடனும்  பல ஆயிரம்  யூத அடிமைகளையும்  நினைவேக்கு கொண்டு வந்தான். அவனுக்குப்பின்னால் ஐந்தாம் சல்மனசார் என்பவனது உத்திரவின்பேரில் அவனது  தளபதி இரண்டாம்  சர்கோன் என்பவன் கி. மு. 722 ல் சமாரியா  முழுவதையும்
கைப்பற்றி  பெரும் அட்டூழியம் புறிந்தான். அவனுக்குப்பின்னால் சென்னாகெரிப்  என்னும் கொடுங்கோல்  மன்னன்  ஜெருசலேம் நகரை கைப்பற்றி  அதன் அரசர்  எசேக்கியாவை சிறைபிடித்து  அவனை அவமானப்படுத்தினான். மேலும் அசூர்பானிபால் என்னும்  மஹா கொடுமையான  அசீரிய  மாமன்னன்  லெபனான், தீப்ஸ் , எகிப்த்து மற்றும் எத்தியோப்பிய  பேரரசுகளை கொடுமையாக  நசுக்கி, தாக்கி  அவற்றை தரைமட்டம்  ஆக்கினான். இந்த அசீரியர்களைக்கண்ட  உலகம்  என்ன செய்வோம்  என்று  தவித்தது. இவர்களை வெல்ல யாருமே இல்லையா ?" என்று  கடவுளிடம் மன்றாடத்துவங்கியது. இவர்களின் மன்றாட்டைக்கேட்ட கடவுளும் மனமிறங்கி  இந்த அசீரியர்கள் மனம் மாறவில்லை என்றால் அவர்களை  கொடுமையாக தண்டிப்பேன் என்று வாக்குறுதி அளித்து யோனாஸ் தீர்க்கதரிசியை அனுப்பினார்.
      யோனாஸ்  தீர்க்கதரிசி ," இது ஆண்டவன் ஆணை..நீங்கள் மனம்மாறி உங்கள்  உள்ளங்களை  கடவுள்பால் எழுப்பாவிடில்  இன்னும்  நாற்பது  நாளீல்  கடவுள்  உங்களை  கொடுமையாக அழிக்கப்போவது  உறுதி  என்று பிரசங்கித்தார். யோனாஸ் தீர்க்கதரிசியின் போதனையினால் மனம் மாறிய நினைவே  மாமன்னன்  நாட்டுப்பிரஜைகள்  அனைவரும்  தபசு செய்ய  ஆணை பிறப்பித்தான்.
   அதன்படி தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் முதல் நாட்டை ஆளூம் அரசன் வரையும் மற்றும் விலங்குகள் கூட தபசு அனுசரிக்கும்படி மக்கள் அனைவரும் தலைமுதல் கால் வரையிலும் சாக்கு உடை உடுத்தி  உண்ணா நோன்பு இருந்து தபசு  அனுசரித்தனர். இதனால் மனம் மாறிய கடவுள்  இந்த நினைவே நகர மக்களூக்கு செய்வதாக  இருந்த  தண்டனைகளை  நிறுத்தினார். இந்த நினைவே  நகர மக்கள்  மகிழ்ந்து  நல் வாழ்வு மேற்கொண்டனர்."
" பிறகு எப்படி இந்த மாபெரும் நினைவே  பட்டிணம் அழிந்தது?" என்றார் ஹெப்பான்.
" ஐய்யா... எல்லாம்  நல்லபடியாகத்தான்  போய்க்கொண்டிருந்தது. யோனாஸ் தீர்க்கதரிசி  மறைந்து  நூறு ஆண்டுகள்  வரை மக்கள்  எல்லோரும்  அரசன் உட்ப்பட  எல்லாம்  நல்லவர்களாகத்தான்  வாழ்ந்து  வந்தார்கள். ஆனால் பிற்காலத்திய  மக்களுக்கு இந்த வாழ்க்கை முறை பிடிக்காமல் போனது மிகுந்த  துரதிர்ஸ்ட்டமானது. அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கையே  விரும்பி ஏற்றனர். மீண்டும் அசீரீய  பேரரசு அக்கிரம பேரரசாகிப்போயிற்று. இதனால் கோபமுற்ற கடவுள்  நகூம்  தீர்க்கதரிசியை அனுப்பினார். ஆனால் இந்த நினிவே  நகர  மக்கள்  அவரது  போதனைகளுக்கு  செவி கொடுக்காததினால்
அவர்  இந்த  நினிவே  நகர மக்களுக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபமும் மிகச்சரியாக  பலித்தது. அவரது சாபத்தால் இந்த அசீரியா  பேரரசு  தரை மட்டம்  ஆனது. இந்த மாபெரும் நினைவே  அரண்மனையும்  அதன் கோட்டைகளும்  அடுத்தடுத்த  தோல்விகளால்  தீவைத்து  கொளுத்தப்பட்டு மிகவும்  சிதிலமாகிப்போய்  கடைசியில்  இந்த  கொடுமையான பாலைவன மணற்புயலால் வெறும்  மண்மேடுகளாய்  மாறிப்போனது."
" அப்படியானால் நாம் அந்த புகழ்வாய்ந்த  நினைவே  நகர  கோட்டைகளையும் அதன் பலமான மதில் சுவர்களையும்  இனி காணவே முடியாதா? அவர்கள் எல்லாம்  எங்கே  மறைந்தன? " என்றார்  ஹப்பான்.
" ஐயா  ஹெப்பான்  அவர்களே..நீங்கள்  நிற்கிறீர்களே  இந்த  மணல் மேடுகள்...இவைகள்தான்  ஒருகாலத்தில்  நினைவே  கோட்டைச்சுவர்கள் இருந்த  இடம். கொடுங்கோலன்  சென்னகெரிப்பின்  காலத்தில்  இந்த புகழ்வாய்ந்த  நினைவே  பட்டிணத்தின்  கோட்டையின்  உயரம்  40 அடி. இந்த கோட்டை  சுவரின்  நீளம்  நகர்  முழுக்க  சுற்றளவு 17 மைல். நகரைசுற்றி 15 நுழை வாயில்  இருந்தது. கோட்டையின்  உட்புறமும்  வெளிப்புறமும் பூங்காக்களும், நீர் நிலைகளும்  நகரம்  முழுக்க  மக்களுக்கு  நீர்  வினியோக குழாய்களும்  பதித்து வைத்து  நாட்டையே  பெரும்  அழகாக அமைத்திருந்தான்  சென்னாகெரிப்.  ஆனால்  அனைத்தும்  இப்போது  இந்த மண்ணுக்குள்  மூழ்கிவிட்டது. அதுதான்  பெரும்  சோகம்."
இந்த கோட்டை  சுவர்களையும், அரண்மனைகளையும்  நீங்கள்  இனி சரித்திரத்தில்  காணவே  முடியாது."
" ஐய்யா... யோனாஸ் அவர்களே... இவைகள்  எப்படி  நிகழ்ந்தன. நகூம் தீர்க்கதரிசியின்  வாக்கு  அவ்வளவு  வல்லமையானதோ?" என்றார் ஹெப்பான்.
" ஐய்யா.. அவை  நகூம்  தீர்க்கதரிசியின்  வாக்குகள்  அல்ல. ஆனால் அவர் வாயிலிருந்து  வந்தது  கடவுள்  வார்த்தை. கடவுள்  ஒரு  வார்த்தையால்  இந்த  உலகை  படைக்கவில்லையா... அப்படி  இருக்கும்போது  அவரது  ஒரு வார்த்தை  இந்த  அகில  உலகத்தையே  அழிக்க  முடியாதா?"
" ஆம் ..ஆண்டவரின்  ஒரு வாக்கு போதும். உலகத்தை  அழிக்கவோ .. அல்லது ஆக்கவோ.. சரி... என்ன நடந்தது ? எப்படி  நடந்தது? என்று  எங்களுக்கு விளக்கமாக  கூறும் " என்றார்  ஹெப்பான்.
" ஐயா.... நகூம் தீர்க்கதரிசியின்  சில  வசங்களைக்கூறுகிறேன்  கேளும்
இந்த  நினிவே  பட்டிணத்தின்  கடைசி  நாட்களில்  நீரால்  சூழப்பட்டிருக்கும்.1-8.
இந்த  நினைவேப்பட்டிணத்தின்  கடைசி  நாட்களில்  அதன்  மக்கள் அனைவரும்  பெரும்  குடி வெறியில்  மூழ்கிகிடக்கும்போது  அது அழிக்கப்படும்.1-10.
இந்த  நினிவே  பட்டிணத்தின்  கடைசி  நாட்க்களில்  இந்த கோட்டைக்கதவுகளின்  இரும்பு  பிடிப்புகள்  தீயால்  அழிக்கப்படும்போது  இந்த நினிவே  நகரம் தாக்கப்படும்.3-13
இந்த  நினிவே  நகர்  மீண்டும்  எழும்பாதபடிக்கு  அழிக்கப்படும். அதன் காயங்கள்  மறுபடியும்  குணமாக்கப்படாது.3- 19-
பழுத்த  பழம் வாயில் வந்து  விழுவதுபோல்  இந்த நினிவே  பட்டிணத்தின் வீழ்ச்சியும்  அப்படியே  இருக்கும்.3-12. "
"அடடா... எப்பேர்ப்பட்ட  சாபம்.. இந்த  இடங்களை  எல்லாம்  காணூம் போது கடவுளின்  சாபம்  எவ்வளவு  பயங்கரமானது  என்று  நாங்கள்  உணருகிறோம். அவரது சாபம் எப்போது பலித்தது?" என்றார்  ஹெப்பான்.
" ஐய்யா...ஹெப்பான் அவர்களே...யேசுகிறிஸ்த்து  பிறப்பதற்கு 612 வருடங்களுக்கு  முன்  பாபிலோனியாவைச்சேர்ந்த  நபோபொலாசார் என்னும்  அரசன்  முன்னொரு காலத்தில்  இந்த  நினிவே பட்டிணத்திலிருந்து வந்து  தங்களை  சூசா  என்னுமிடத்தில்  போரிட்டுவென்று  தங்கள் பாபிலோனை  தரைமட்டம்  ஆக்கிய  இந்த  அசிரியர்களை பழிக்குப்பழி வாங்கவேண்டும்  என்று  பல ஆண்டுகள்  காத்திருந்து  தங்களுக்கு  உதவியாக மீதியர்களையும்,  ஸ்கைத்தியர்களையும்  கூட்டு  சேர்த்துக்கொண்டு  இந்த நினைவே  நகரை  முற்றுகை  இட்டான். அவனது  நோக்கம்  இரண்டு ஆண்டுகளாக நிறைவேறவில்லை. இந்த  நினிவே  மக்களுக்கு  தங்கள் முற்றுகை  எந்த  விதத்திலும்  எந்த விதமான  பாதிப்பையும் ஏற்பட்டுத்தவில்லை  என்று அறிந்த மன்னன்  நாபோபொல்சார்  மிகுந்த கோபம் கொண்டார். அப்போது  அவன்  காதில்  ஒரு  இனிமையான  செய்தி வந்து  விழுந்தது. அதாவது  நாகூம்  தீர்க்கதரிசி  கூறியபடி  இந்த  நினிவே நகரின்  கடைசி  நாட்க்களில்  வெள்ளத்தால்  சூழப்படும்   என்னும்  செய்தியே அது. இதில்  மன்னன்  நம்பிக்கை கொண்டான். அப்போது  மழைகாலம் ஆரம்பித்தது. பல நாட்க்கள்  பெய்த  மழையின்  காரணமாக  தைகிரீஸ்  நதி பெருக்கெடுத்து ஓடியது.
   நினிவேயின்  சரித்திரத்தில் இப்படியாக பல முறை நடந்திருந்தாலும்  இப்போது  ஏற்பட்ட  வெள்ளபெருக்கு  மிகவும்  கடுமையாக இருந்தது. இந்த நாளில்  நினெவே  நகர மன்னன்  ஒரு  திருவிழாவில்  மூழ்கியிருந்தான். இந்த திருவிழாவைக்கொண்டாட  அளவுக்கு  அதிகமாக மது அருந்தினான். தான் அருந்தியது  போதாது  என்று  தன் படைத்தளபதிகளுக்கும்  அரசாங்க உயரதிகாரிகளுக்கும்  மதுவை  அளவுக்கு  அதிகமாக  வழங்கியதால் அனைவரும்  நாட்டின்  வெளியே  கோட்டை மதிலுக்கு  வெளியே  என்ன நடக்கிறது  என்பதே தெரியாத  நிலையில்  மதுவினால் மதிமயங்கிக் கிடந்தனர். அன்று தான் நினிவே  நகருக்கு  ஆண்டவர்  குறித்திருந்த கடைசிநாள்  என்பதை  நினைவே  நகர மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தைகிரீஸ் நதி  அளவுக்கு  அதிகமாக  பெருக்கெடுத்து ஓடியதால்  நினிவே  நகர கிழக்குப்பகுதியில்  அமைந்திருந்த  கோட்டை மதிலின்  ஒருபகுதி  அசையத்துவங்கியது. தைகிரீஸ் நதியின்  வேகத்தால்  20 பர்லாங்க்  தூரத்திற்கு  கோட்டை மதில் வீழ்ந்தது. இப்போதுதான் நினைவே மன்னருக்கு  தன் நிலை  தெரிய  ஆரம்பித்தது.
ஆனால் எல்லாம்  அதற்க்குள்  நிறைவேறிவிட்டது. திறந்திருந்த  கிழக்கு மதிலின்  வழியாக  பாபிலோனிய  வீரர்கள் திபுதிபு வென நுழைந்தார்கள்.இனிமேல்  தங்கள் கதி அதோகதிதான் என்பதை அறிந்த
நினிவே  மன்னன் ஒரு பெரும் குழிவெட்டி  தன்  செல்வங்களை  எல்லாம் அதில் போட்டு  தன் மனைவி, மக்கள்  வைப்பாட்டிகள்  அனைவருடன்  சேர்ந்து  எதிரிகளின் கையில் வீழ்ந்து  மானபங்கப்பட்டு சாவதை விட இதுமேல்  என நினைத்து  அனைவருமாக  அந்த நெருப்புக்குழியில்  வீழ்ந்து மடிந்தனர். அரசன்  மடிந்துவிட்டான்  என்றறிந்த  அவன்  படைத்தளபதிகளும் மற்ற  வீரர்களும்  ஓட்டம்  பிடித்தனர். இந்த  நிலையில்  நினிவே  நகர மக்கள் எதிரியிடம்  சரணடைவதாக நினைத்து கோட்டைகதவுகளை திறந்துவிடனர். ஆனால் அதற்குள்ளாக  நினிவே  நகர  பதினைந்து இரும்பு  கோட்டைக்கதவுகளும்  தீயால் பொசுக்கப்பட்டு  உடைக்கப்பட்டுவிட்டது. நினைவே  நகர  ஊருக்குள்  புகுந்த பாபிலோனிய  வீரர்கள்  தங்களை  எதிர்க்க ஆளிள்ளாமையால் தங்களிடம் சரணாகதி  அடையவந்த  மக்களை கண்மூடித்தனமாக தாக்கினர். நகரில் யாரும் தப்பவில்லை. அசீரியர்கள்  யார் யாருக்கு என்னென்ன கொடுமைகள் செய்தார்களோ அந்த இரத்தப்பழிக்கு இப்போது  பழிவாங்கப்பட்டனர். நினிவே நகரம் பெரும் கொள்ளைப்பொருள் ஆனது. அதன் உச்சகட்டமாக நினிவே நகரமே தீ வைத்து கொளுத்தப்பட்டது. தங்கள் தாக்குதலை வெற்றிகரமாக  நடத்திய பாபிலோனியர்கள் திரும்பிசெல்கையில்  இந்த பெரும் பெருமை வாய்ந்த நினைவே பட்டிணம் பெரும் தீக்காடாக கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அதற்கு என்ன நடந்தது  என்று  சொல்லக்கூட யாரையும்  பாபிலோனியர்கள் விட்டுவைக்கவில்லை.
       அசூர்பானிபால்  என்னும்  அசீரியாவின்  கொடுங்கோல்  மன்னன் இஸ்ராயேலிலிருந்தும், எகிப்திலிருந்தும், எத்தியோப்பியாவிலிருந்தும் கொண்டு வந்திருந்த செல்வங்கள்  எல்லாம் இந்த  பாபிலோனியர்களால் கொள்ளை  அடிக்கப்பட்டன. தெய்வம்  நின்று கொல்லும்  என்பது  இப்படித்தான் போலும்" என்றா யோனாஸ்.
" அடேயப்பா... என்ன பயங்கரம்... இவ்வளவு  துல்லியமாக  இந்த  நினிவே நகருக்கு  நடக்கப்போகும்  என்பதை  நாகூம்  தீர்க்கதரிசி  எப்போது  சொன்னார்.? அந்த  தீர்க்கதரிசனங்களை தயவு செய்து  எனக்கு  கூறுங்கள்" என்றார்  ஹெப்பான்.
" ஐய்யா ஹெப்பான் அவர்களே.... நினிவே பட்டிணத்தின் அழிவு கி.மு.614ல் நடந்தது. இந்த  நினிவே நகரின்  அழிவுக்கு  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான்  அதாவது  கி.மு.612ல்  இத்தகைய  தீர்க்கதரிசனத்தை நாகூம் கூறியிருந்தார். அவரது  தீர்க்கதரிசனங்களில்  சிலவற்றைக்கேளும்.
" நினிவே," உன்னை  சிதறடிப்பவன்  உனக்கு  எதிராய்  வருகின்றான்.
இஸ்ராயேலின் மேன்மை  போலவே  யாக்கோபின்  மேன்மையை  ஆண்டவர் மீண்டும்  நிலை  நாட்டுகின்றார்.
கொள்ளைக்காரர்கள் அவர்களை  கொள்ளை அடித்தனர். அவர்களின் திராட்ச்சைக்கொடிகளையும்  அழித்துப்போட்டனர்.
எதிரியுடைய  வீரர்களின்  கேடையங்கள்  சிகப்பானவை. அவனுடைய  போர் வீரர்  செந்நிர  ஆடை உடுத்தியுள்ளனர்.
போர் அணியில் இயங்கும்  தேர்ப்படையிலிருந்து  தீப்பொறி  பறக்கின்றது. குதிரைகள்  போருக்கு  துடிக்கின்றன.
வெறிபிடித்தவனைப்போல் தேர்கள்  தெருக்களில்  ஓடுகின்றன. திறந்தவெளியில்  அவை  அங்குமிங்குமாய்  விரைகின்றன. தீப்பந்தங்களைப்போல் அவை சுடர்விடுகின்றன.
மின்னலைப்போல்  பாய்கின்றன. படைத்தலைவர்கள்  அழைக்கப் படுகின்றார்கள். அவர்கள்  செல்லும் போது  இடறுகின்றார்கள். கோட்டை மதில்  நோக்கி  விரைந்தோடுகின்றார்கள்.
காப்புக்கருவி  அமைத்தாயிற்று. ஆறுகளின் [ தைகிரீஸ் நதி] மதகுகள் திறந்துவிடப்பட்டன. அரண்மனை  இடிந்து  கரைந்தது. உடைத்துக்கொண்ட  நகர் போல்  ஆனது  நினைவே  நகர்.
வெள்ளியை  கொள்ளை அடியுங்கள். பொன்னை  கவர்ந்து கொள்ளுங்கள். கருவூலங்கள்  மிகப்பெரியவை. அங்குள்ள  விலை உயர்ந்த  பொருட்களுக்கு அளவே  இல்லை.
வெறுமை... பாழ்.... அழிவு... திகில் அனைவரையும் முற்றிலும்  ஆட்கொள்கிறது. முகங்கள்  எல்லாம்  வெளிறிப்போகின்றன. இதோ ... படைகளின்  ஆண்டவர்  கூறுகின்றார்.
உனக்கு எதிராக நான் எழும்புவேன்... உன் தேர்களை  சுட்டு சாம்பலாக்குவேன்...
இரத்தக்கரை  படிந்த நகருக்கு  ஐயோ கேடு. அங்கு  நிறைந்திருப்பதெல்லாம் பொய்களும்  கொள்ளைப்பொருட்க்களுமே..சூறையாடலுக்கு  முடிவே இல்லை..
சாட்டையடிகளின்  ஓசை... சக்கரங்களின்  கிறீச்சிடும் ஒலிகள்... தாவிப்பாயும் புரவிகள்...உருண்டோடும் தேர்கள்......
குதிரைவீரர்கள்  பாய்ந்து  தாக்குகின்றார்கள்...வாள்  மின்னுகின்றனது...ஈட்டி பளபளக்கிறது. வெட்டுண்டவர்கள்  கூட்டமாய்   கிடக்கின்றனர். பிணங்கள் குவிந்து கிடக்கின்றன. செத்தவர்களுக்கு  கணக்கே  இல்லை...
அந்தப்பிணங்களின்  மேல் மக்கள்  இடறி  விழுகின்றனர். அழகும்  கவர்ச்சியும் நிறைந்தவளாய், தன் வேசித்தங்ககளால்  மற்ற  வேற்றினத்தாரையும்  தன் மயக்கும்  கவர்ச்சியால் பல இனங்களையும் ஏமாற்றிய  அந்த  விலை மகளின் எண்ணற்ற  வேசித்தனங்களே  இதற்குக்காரணம்.
உன்னை  நோக்குவோர்  எல்லோரும்  உன்னிடமிருந்து  பின்வாங்கி நினைவே  பாழாய்ப்போனது... அவளுக்காக  புலாம்புவோர்  யாரேனும் உண்டோ   என்று  சொல்லுவார்கள்.
நைல் நதியின் கரை அருகில்  நீரால் சூழப்பட்ட கடலை அரணாகவும், தண்ணீரை  மதிலாகவும்  கொண்ட  தீப்ஸ் நகரைவிட  நீ [ நினிவே நகரம் ] சிறப்புற்று  இருந்தாயோ?
எத்தியோப்பாவும், எகிப்த்தும்  அந்த  நகருக்கு  வலிமையாய்  இருந்தன. அதன் வலிமைக்கோ எல்லையே  இல்லை. அதன் மக்கள்  சிறைபிடிக்கப்பட்டு அடிமைகளாய்  நாடு கடத்தப்பட்டனர்.
அதன்  குழந்தைகள்  தெருக்கள்தோரும் மோதி அடிக்கபட்டனர். அதன்  உயர் குடி மக்கள் மேல்  சீட்டுப்போடப்பட்டது. அதன்  பெரிய மனிதர்  அனைவரும் சங்கிலிகளால்  இறுகக்கட்டப்பட்டனர்.
நீயும்  குடி வெறியில் மயங்கிக்கிடப்பாய்.  உன் பகைவனிடமிருந்து  தப்புமாறு புகலிடம  தேடி அலைவாய். உன் அரண்கள் யாவும் முதலில்  பழுத்த கனிகள் நிறைந்த  அத்தி  மரங்களுக்கு ஒப்பானவை. அந்த மரங்களைப்பிடித்து உலுக்கும்போது  பழங்கள் தின்பதற்கு வாயில் விழும்..
உன் நாட்டு வாயில்கள்  பகைவர்களுக்காக  திறந்து கிடக்கின்றன. உன் தாழ்ப்பாள்கள்  நெருப்புக்கு  இறையாயின. நெருப்பு  உன்னை  விழுங்கும். வாளாள்  நீ வெட்டுண்டு மடிவாய்.
உன் காவல் வீரர்களும்  உன் அரசு அலுவலர்களும்  வெட்டுக்கிளிகளுக்கு ஒப்பானவர்கள். குளிர்ந்த  நாளில் அவை வேலிகளின் மேல் உட்கார்ந்துள்ளன. கதிரவன் எழுந்ததும் அவை பறந்தோடி விடுகின்றன.இப்படியே  உன் வீரர்களும். அசீரிய மன்னனே..உன்  ஆயர்கள் துயில் கொண்டனர். உன் படைத் தலைவர்கள்  உறக்கத்தில் ஆழ்ந்தனர். கூட்டிச்சேர்க்க  ஆளின்றி  உன் மக்கள்  மலைகளில் சிதறிப்போயினர். உன் காயத்திற்கு  மருந்தில்லை.
உன் புண் குணமாகாது. உன்னைப்பற்றிய  செய்தி கேட்க்கும்  யாவரும் கைகொட்டுவர். ஏனென்றால்  உன்  இடைவிடாத  கொடுமையால் துன்புறாதவர்  ஒருவரும்  இல்லை."
" அப்பப்பா... என்ன பயங்கரம்...சரி அந்த  தீர்க்கதரிசங்களைக்கூறிய  நாகூம் தீர்க்கதரிசியின்  கல்லறையும்  இங்குதானே  இருந்தது...அதேபோல  இந்த நினிவே  நகரைக்காப்பாற்ற  வந்த யோனாஸ் தீர்க்கதரிசியின் கல்லறையும் இந்த நினிவே பட்டிணத்தில் தானே  இருகின்றது  அவற்றிற்கு  என்ன ஆனது.?" என்றார்  தோமையார்.
" அப்படிக்கேளுங்கள். நாகூம் தீர்க்கதரிசியும்  யோனாஸ்  தீர்க்கதரிசியும் ஆண்டவரின்  தூதர்கள்  அல்லவா... எனவே ஆண்டவர்  இந்த நினிவே பட்டிணத்தின் அழிவினின்று  அவர்களுடைய   கல்லறைகளை காப்பாற்றியுள்ளார். இதோ  இந்த  நுழைவாயிலின் அடுத்த மண்மேட்டில்  ஒரு குன்று  தெரிகின்றதல்லவா.... அங்குதான் யோனாஸ்  தீர்க்கதரிசியின் கல்லறை  இருகின்றது..
  இந்த நினைவே  நகரின்  வெளியில் ஒரு சிறு கிராமம்  தெரிகின்றதல்லவா... அந்த கிராமத்தின் பெயர் அல் க்வாஸ். இந்த கிராமத்தில் தான்  நாகூம் தீர்க்கதரிசி  அடங்கி  இருகின்றார்.
  இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும்  யூதர்கள். மொத்தத்தில்  இது ஒரு யூதர்களின் குடியிருப்பு.. தோமையாரும் ஹெப்பானும் யோனாஸும் அந்த அல் க்வாஷ்  கிராமத்திற்க்கு சென்று ஆண்டவருடைய ஊழியனான நாகூம்  தீர்க்கதரிசியின் கல்லறைக்குச்சென்று அவருக்காக அஞ்சலி செலுத்தினர். பின் மூவரும் சேர்ந்து  வந்து  நினிவே பட்டிணத்தின்  ஒரு வாசலுக்கு எதிரான குன்றின்மேல் அமைந்துள்ள ஆண்டவரின்  ஊழியனாகிய யோனாஸ்  தீர்க்கதரிசியின்  கல்லறைக்கு சென்று  அஞ்சலி செலுத்தினர். அப்போது தோமையார்  நீண்டதொரு பெருமூச்சு விட்டார். அவரது கண்கள் கலங்கின. இதைக்கவனித்த ஹெப்பான்  இதன் காரணத்தை அறிய  முற்பட்டார்.
" தோமையாரே," தாங்கள் பெரும் விசனப்பட்டவர்  போலல்லவா காணப்படுகின்ரீர். தாங்கள் பெருமூச்சு விட்டதன் காரணம் நான் அறியலாமா?" என்றார்.
" என் எஜமானே... காரணம் ஒன்றும் பெரிதல்ல. இந்த மக்கள் என்றும்  நன்றி மறந்தவர்கள் தாம். தங்களின் முன்னோர்களுக்கு  இந்த  யோனாஸ் தீர்க்கதரிசி  எவ்வளவு  பெரும் தயையை ஆண்டவரிடமிருந்து  பெற்று தந்துள்ளார்  என்றறிந்த  மக்கள் அவருக்காக  இந்த  நினைவிடத்தை அமைத்திருகின்றனர் . ஆனால் எதிர்காலத்திய சந்ததியினர்  இவர் புகழ் மறந்து  இவரைக் கேவலப்படுத்துவர். ஒருகாலத்தில் இந்த நினைவிடம் தகர்க்கப்படும் " என்றார்.
[ இப்போது இந்த புகழ்வாய்ந்த யோனாஸ்  தீர்க்கதரிசியின் கல்லறை இன்றைய  ஈராக்கின் தலை நகர்  பாக்தாதுக்கு  வடகிழக்கில்  அமைந்துள்ள மோஸூல்  என்னும்  பட்டிணத்தில்  அமைந்திருக்கின்றது. இந்த மோஸூல் என்னும் பட்டிணத்தில்தான் ஆதாமின் மூன்றாம்  மகன்  சேத்தின்  கல்லறையும்  அமைந்திருகின்றது. தோமையார் காலத்தில் அவரால் மனம் திருப்பப்பட்ட பல கிறிஸ்த்துவ   குடும்பங்கள் காலம் காலமாய்  இந்த மோஸூல்  பட்டிணத்தில் வாழ்ந்து வந்தனர். யோனாஸ்  தீர்க்கதரிசியின்  கல்லறைமீது  அக்காலத்தில் ஒரு கிறிஸ்த்துவ  தேவாலயம் கட்டப்பட்டு காலம் காலமாய் இருந்து வந்தது. பல்லாண்டு காலத்திற்கு  பிறகு  இங்கு முஸ்லீம்கள் ஆட்ச்சி  வந்துவிட்ட  பிறகு இந்த தீர்க்கதரிசியின் கல்லறைமீது  கட்டப்பட்டிருந்த  தேவாலயம்  இடிக்கப்பட்டு  அதன் அஸ்திவாரம்  மீதே  ஒரு பெரும் மசூதியும் உயர்ந்த  ஒரு கோபுரமும் கட்டப்பட்டு முஸ்லீம்கள் வழிபாடு  செய்து வந்தனர். யோனாஸ் தீர்க்கதரிசி  யூதர்களுக்கு  மட்டும் அல்லாது  கிறிஸ்த்துவர்களாலும்  முஹம்மதியர்களாலும்  போற்றப்பட்டு வந்த  ஒரு மாபெரும் தீர்க்கதரிசியாவார். இதேபோல  ஆதாமின்  மூன்றாவது  மகனாகிய  சேத்தின் கல்லறையும்  இங்கிருப்பதால்  இவரது  நினைவுச்சினனமும்  ஆதி காலத்திலிருந்தே  கிறிஸ்த்துவர்களாலும் , யூதர்களாலும் , முஸ்லீம்களாலும் பெரும் மதிப்புமிக்க ஆலயமாக  கருதப்பட்டு வந்தது. ஆனால் காலம் மாறியது. ISIS என்னும் ஒரு  தீவிரவாத  முஸ்லீம் இயக்கம்  இங்கு தோன்றியதை  அடுத்து  இந்த நகரில் கிறிஸ்த்துவர்களோ  அல்லது  யூதர்களோ  இருக்கக் கூடாதெனவும்  அவர்கள்  நினைவுச்சின்னம் முதலாய்  இங்கு  இருக்கக் கூடாது எனவும் பிரகடனப்படுத்தப்பட்டதை  அடுத்து அங்கு தோன்றியது பெரும் வேத கலாபணை. சரித்திரத்தில்  எங்குமே  கேள்விப்பட்டிராதபடி  பெரும் துன்பம்  இங்குள்ள கிறிஸ்த்துவர்கள் மீது  கட்டவிழ்த்து விடப்பட்டது. இங்கிருந்த கிறிஸ்த்துவர்கள்  நாட்டை விட்டே  துரத்தப்பட்டனர். இங்கிருந்து வெளியேறாதவர்கள்  வாளுக்கு  இறையாயினர். கி.பி. 2014 ஜூலை 24
ஆம் தேதி யோனாஸ்  தீர்க்கதரிசியின்  கல்லறை  வெடிவைத்து தகர்க் கப்பட்டது. இதேபோல ஆதாமின் மூன்றாம்  மகன் சேத்தின் கல்லறையும் வெடிவைத்து  தகர்க்கப்பட்டது  உலக வரலாற்றில் பெரும் சோகமாகும்.]
இந்த நினைவே  பட்டிணத்தில் இனிமேல் தங்களுக்கு வேலை இல்லை என்றுணர்ந்த தோமையாரும் அவரது  எஜமானன்  ஹெப்பானும்  அந்த யோனாஸ்  என்னும்  பெயர்கொண்ட  வழிப்போக்கனும்  அடுத்து  கிளம்பினர் பாபிலோனுக்கு.
" இது பாபிலோன் "
அசீரியப்பேரசின் தலை நகரான  நினிவே  பட்டிணத்திலிருந்து  தென்மேற்கில் 250 மைல் தொலைவில் அமைந்துள்ளது  பாபிலோன் பேரரசு. இதன் தலைநகரம்  பாபிலோன். மாமன்னர்  நெபோபொலசாரும்  அவனது தந்தையுமான  நெபுக்கட்னெசாரும்  இந்த நகரத்தை கட்டி  அழகுபடுத்தினர். நெபுக்கட் நெஸார் தன் ஈரானிய  மனைவி  அம்ரிடிசுக்கு  பிறந்த  நாட்டு  சோகம் மறக்கும்படியாக  யூப்ரடீஸ்  நதிக்கரையில்  ஒரு அழகான தொங்குதோட்டம்  அமைத்து கொடுத்ததாக  சரித்திரம்  கூறுகின்றது.
உலக  சரித்திரத்தில் அன்று முதல்  இன்று வரையிலும் அதே பெயரில் நிலைத்திருக்கும்  பட்டிணங்கள்  பலவற்றுள்  பாபிலோனும்  ஒன்று. இந்த பெரும்புகழ்  வாய்ந்த பாபிலோனும் கடவுளின் பார்வையில் பெரும் பாவங்களைச்செய்த காரணத்தினல்  கடவுளால் சபிக்கப்பட்டு அழிந்தொழிந்தது. இந்த  பாபிலோன் வேதத்தில் பெரும் விலைமாதாக சித்தரிக்கப்பட்டிருந்தாள். இந்த நகரின் வீழ்ச்சியைப்பற்றி  யேசுநாதருக்கு முன்பாக  எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்  வாழ்ந்த  இசையா இறைவாக்கினரின்  சில  தீர்க்கதரிசனங்களை  கேட்ப்போம்.
" அரசுகளில்  சிறப்புமிகு கல்தேயரின்  மேன்மையும்  பெருமையுமான பாபீலோன்  கடவுள்  அழித்த சோதோம்  குமாராவைப்போல்  ஆகிவிடும். இனி எவரும்  அதில் ஒருபோதும்  குடியிருக்க  மாட்டார்.
அதுவும்  தலைமுறை தலைமுறையாக  குடியற்று  இருக்கும். அரேபியர் அங்கே  கூடாரம் அமைக்க மாட்டார். ஆயர்கள் தம் மந்தையை அங்கே இளைப்பாற  விடுவதில்லை. ஆனால் காட்டு விலங்குகள் அங்கே  படுத்துக்கிடக்கும். ஊளையிடும்  குள்ள நரிகள்  அவர்கள்  வீடுகளை  நிறப்பும். கோழிகள் அங்கே தங்கி  இருக்கும். வெள்ளாட்டுக்கிடாய்கள்  அங்கே துள்ளித்திரியும். அவர்கள்  கோட்டைகளில் ஓ நாய்கள்  அலறும். அரண்மனைகளில் குள்ள நரிகள்  ஊளையிடும்."
" அவர்களுக்கு  எதிராக  நான் கிளர்ந்தெழுவேன். பாபிலோனின்   பெயரையும் அங்கே  எஞ்சியிருப்போரையும்  வழி மரபினரையும் வழித்தோன்றல் களையும்  இல்லாதொழிப்பேன். அந்நாட்டை   முள்ளம்பன்றிகளின்  இடமாக்குவேன். சேறும்  சகதியும்  நிறைந்த  நீர் நிலையாக்குவேன். அழிவு  என்னும்  துடைப்பத்தால்  முற்றிலும்  துடைத்துவிடுவேன்."
இத்தகைய  கடும் சாபங்களை பெற்ற பாபிலோன்  மீதியர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டது. நாகூம்  தீர்க்கதரிசியால் சாபத்திற்குள்ளான  நினிவே பட்டிணம்  எழுப்பப்பட  காரணமாயிருந்த  நிர்மாத்  என்னும் அசகாய சூரனாலேயே   இந்த பாபிலோனும் கட்டி எழுப்பப்பட்டது. என்ன காரணதிற்காக நினிவே பட்டிணம் அழிக்கப்பட்டதோ  அதே  காரணத்திற்காகவே   இந்த பாபிலோன்  பட்டிணமும்  அழிக்கப்பட்டது.
வேத காலத்தில்  நோவா காலத்தில்  இந்த   உலகம் நீரால் அழிக்கப்பட்ட தல்லவா. அவ்வாறு  தாங்கள்  மீண்டும் அழிக்கப்படாதிருக்க  சுமேரிய  இன மக்கள் ஷினோர் [ இன்றைய பாக்தாத் இராக் ]என்னுமிடத்தில்  ஒரு  உயர்ந்த கோபுரம் [ பாபேல் கோபுரம் ] ஒன்றை  அமைத்தார்கள்.அவை  ஜிகுராத் என்றும் அழைக்கப்படுகின்றது. ஏறக்குறைய 8150 அடி உயரமும் அதற்கேற்ற  நீள அகலம் கொண்ட பெரும் வானுயர்ந்த கட்டிடமாகவும்  அதற்குள்ளாக  மக்கள் வசிப்பிடங்களும்  வணிக  வளாகமும் கொண்ட  அமைப்பாக  அதை உருவாக்கினர். கடவுளுக்கெதிராக  தங்களை   உயர்த்திக்கொண்ட  மக்களை கண்ணுற்ற  ஆண்டவர்  அக்கட்டிடம்  மீண்டும்  உயரே  எழும்பாதிருக்கும்படி அவர்களின்  பாஷையை  மாற்றவே  அந்த பெரும் கட்டிடம்  பாதியில்  நின்றது.
இதற்காக கடவுள் மெல்க்கிசதேக் என்னும் தேவ குருவை  இந்த பாபேல் கட்டுமானம்  நடக்கும் இடத்திற்கு  அனுப்பினார். அவர் யார்  எனத்தெரிந்தும் அந்த மக்கள் அவரை  மதிக்கவே  இல்லை.
தங்களின் அறிவுத்திறன் பற்றியும்  அவர்களின் வீரம் பற்றியும், அவர்களின் செல்வ செழிப்பை பற்றியும், மிகப்பெருமையாக அவரிடமே  பேசினார்கள். தேவ குரு கடவுளின் மாட்ச்சிமைக்காக இக்கட்டிடம்  கட்டப்பட்டால் கடவுளின்  ஆசீர்வாதம் இங்கே தங்கும்  எனவும் அவருக்கு எதிராக  கிளம்பும் யாவும்  அது  மனிதனானாலும் சரி  இராஜ்ஜியங்கள் ஆனாலும் சரி  அது கடவுளால் அழிக்கப்பட்டுவிடும்  என்றார். ஆனால் அந்த முறட்டு  இன மக்கள்," ஐய்யா  தேவ குருவே..நீர்  எங்களை  என்னவென்று நினைத்துக் கொண்டீர்...நாங்கள்  கட்டும்  இந்த பாபேல் கோபுரம்  மிகவும்  வலிமையானது. கடவுளால் கூட இதை அழிக்க  முடியாது. எங்கள்  அறிவுத்திறம்  அப்படி, எங்கள்  தொழில்  நுட்பம்  அப்படி . கடவுள்  எங்களை  நீரல் ஒருகாலம் அழித்தார்  அல்லவா... இனிமேல் அந்த மாதிரி எதுவும் நடக்காதபடி  மிகவும்  சாமார்த்தியமாக கட்டுகிறோம். இந்த கட்டிடம்  உலகம் உள்ளவரை  நீடித்திருக்கும்  என்றனர். தேவகுரு மெல்கிசாதேக்  மிகவும் வருத்த முற்றவராய்  அங்கிருந்து  வெளியேறினார். தேவகுருவுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் கடவுளுக்கு ஏற்படுத்தப்பட்டது போலானது. அதன்  பின்விளைவு உடனே  தெரிய ஆரம்பித்தது.
  எண்கோன வடிவிலான இந்த பாபேல் நகர கட்டிடம் மிகவும் உயரமானது மட்டும்  அல்ல. அதன்  வடிவமைப்பு  காண்போரை  மிகவும்  ஆச்சரியப்பட வைக்கும். முழு உயரத்தையும்  மேலே  ஏறிவர  உட்புறமல்லாது  மொத்த கட்டிடத்தின்  வெளிப்புறமாகவும்  ஏறிவரும்படி படிகட்டுகள்  அமைக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு மாடிக்கும்  சென்று வரவும்  அங்கே  தங்கவும் வீடுகளும் விடுதிகளும்  வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதைக்கட்டுவதற்கு யானைகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள் போன்ற அனத்து விலங்குகளும் பயன்படுத்தப்பட்டபடியால் இவைகள் தங்கவும்
தீவனம் கொள்ளவும், மனித மிருக கழிவுகளை அகற்றவும்  பலவிதமான அமைப்புகள்  ஏற்படுத்தப்பட்டிருந்தன. [ஏறக்குறை அமெரிக்காவின் இரட்டை கோபுங்களின் அமைப்பை கற்பனை செய்து  பாருங்கள். அவை  இரட்டை கோபுரங்கள்  ஆனால்  பாபேல் ஒற்றைக்கோபுரம்.] இந்த கட்டிட அமைப்பின் வினோதம் என்னவென்றால் காலையில் சூரியன் கிழக்கே உதிக்கும்போது  கட்டிடத்தின்  கிழக்குப்பகுதி  சூடேரும். அப்போது கட்டிடத்தின்  மேற்குப்பகுதி  குளிர்ந்திருக்கும். இதே  நிலையில் மாலையில் கட்டிடத்தின்  மேற்கு பகுதி  மிகவும் சூடாகும். ஆனால் கிழக்குப்பகுதி  குளிர்ந்து விடும்.
    ஆக இந்த  முழுகட்டிடத்தின் அமைப்பும் ஒரே நாளிள் மாறி மாறி குளிர்வதும் வெப்பமடைவதுமாக  இருப்பதால்  பிரச்சனை  அங்கிருந்து ஆரம்பித்தது.  மேலும் மொத்த கட்டிடத்தின் உட்பகுதியில் மொசைக் கற்கள் பாவப்பட்டிருந்ததால் சூரியனின்  வெப்பம்  உட்பகுதியிலும்  அதிகரித்தது. இத்தகைய  தட்ப்ப  வெப்ப  நிலையை  தாங்க  அக்காலத்திய  தொழில் நுட்பம் உதவிக்கு வரவில்லை. அங்கே  குடியிருந்த மக்கள்  வெளியிலும் தலைகாட்ட முடியவில்லை. வீட்டினுள்ளும் குடியிருக்க  முடியவில்லை. எனவே  அவர்கள்  பெரும் அவதிக்கு  ஆளாயினர். இந்த பிரம்மாண்டமான கட்டிடம் கட்ட பெரும் நிதி தேவை  அல்லவா. இதை  சமாளிக்க ஒரு இருபத்து ஐந்துவிதமான சமூக அமைப்பை  சேர்ந்தவர்களால் ஒரு குழுமம்  ஏற்படுத்தப்பட்டது.
இதில் நான் பெரியவன் நீ சிறியவன்...நான் உயிர்ந்தவன் ...நீ தாழ்ந்தவன் என்று பாகுபாடுகள்  உண்டானது. அடுத்து  ஒரு பெரும்  பிரச்சனை...ஒரு ஜாதிக்காரர் தாங்கள் அதிகம்  குடியிருக்கும்  பகுதியில் தங்கள்  ஜாதிப்பெயரை எழுதிக்கொண்டார்.. இதை பார்த்த மற்ற ஜாதிக்காரர்கள் ஆங்காங்கே தங்களின் ஆதிக்கம்  அதிகம்  இருக்கும் பகுதிகளில் தங்களின்  ஜாதிப்பெயரை எழுதிக்கொண்டனர்.
இந்த  பிரச்சனை  பெரும் பூதாகரமாக  எழுந்தது. இதனால் ஒருவரை  ஒருவர் திட்டிக்கொள்வதும்  அடித்துக்கொள்வதும்  வாடிக்கை  ஆயிற்று, இதனால் கட்டிடம்  கட்டுவது  பாதியில் நின்றது. பல மொழி  பேசிவந்த பல இன மக்களும் அப்போது  ஒரே  பாஷை  பேசி வந்தாலும்  இப்போது  பிரச்சனை என்றாகி விட்டபடியால் மீண்டும் அவரவர்  தத்தம் பாஷையில்  பேசிக்கொள்ளவே ஒருமொழி பாஷை  நின்று போனது. போதாததற்கு ஒரு ஜாதிக்காரர்  கட்டும் கட்டுமானத்திற்கு  மறு ஜாதிக்காரம்  பணமும் கொடுக்கவில்லை. தங்கள் ஜாதி ஆட்க்களையும்  வேலைக்கு அனுப்பவுமில்லை. இப்படியாக இந்த பெரும்  கட்டுமானம் மீண்டும்  தொடர்ந்து  கட்ட வாய்ப்பில்லாமல்  போனது. இந்த மாபெரும் கட்டுமானம் ஆரம்பித்து அப்போதைய  நிலை வரை கட்டிமுடிக்க  முப்பது  ஆண்டுகள்  ஓடிவிட்டன.
ஆனாலும் அந்தக்கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட வில்லை. கடவுளின் சாபத்தாலும், மக்களிடையே ஒற்றுமை இல்லாமையாலும், வேலை வாய்ப்பில்லாமல்  பிழைக்க  வழி  இல்லாமையாலும் மக்கள் சிதறிப் போயினர். இப்படியாக சிதறிப்போன ஒரு கூட்டத்தின் தலைவன் பெயர் ஹேபர். இவர்கள் பேசிவந்தது ஆதியில் கடவுள் ஆதாம் ஏவாளிடம் பேசிவந்த பாஷை. இதையே ஆதாம் ஏவாள்  துவங்கி  இயேசுநாதர் வரை  பேசிவந்த தேவ பாஷை. இந்த இனமே ஹேபரின் பெயராலேயே ஹீப்ரூ என்றானது. அவர்கள் பேசிவந்த  பாஷை  எபிரேயம்  என்றானது.
    மொத்தத்தில் மனிதர்களின்  திமிறும்  தற்பெருமையும்  அகம்பாவமும் கடவுளை  கோபத்துக்கு  ஆளாக்குகின்றன. அதன் விளைவாக  கடவுளின் சாபத்துக்கு  ஆளாகிய  இந்த பாபேல் கோபுரம் மண்ணில் வீழ்ந்தது. முப்பது வருட  மனித  மிருக உழைப்புகள், செல்வங்கள்  காலங்கள் அனைத்தும்  வீண் ஆயின.
        கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் இந்த பாபிலோனியாவை  ஆட்சி  செய்த மாமன்னர்  நெபுக்கட்னெசார்  இந்த கட்டிடத்தின் உச்சிப்பகுதியை  கட்டி முடித்து  உலக அதிசயமான  இந்த பாபேல் கோபுரத்தை  கட்டி முடித்த மாமன்னன்  என்று  தன் பெயரை உலக சரித்திரத்தில்  பதிவு செய்து கொண்டார். ஆனால் கடவுளின் சாபத்தினாலும் இயற்கையின்  சீற்றத்தாலும் இக்கட்டிடம் நிலை குலைய  ஆரம்பித்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டுவரை பாபேல் கோபுரத்தின்  ஒருசில  அடுக்கு மாடிவரை  தெரிந்ததாக  வரலாற்று ஆசிரியர்கள்  கூறுகின்றார்கள்.
இந்த  பிரம்மாண்டமான  கோபுரமும்  கடவுளின்  சாபத்திற்கு உள்ளானதினாலும். இயற்கையின் சீற்றத்தினாலும் காலப்போக்கில்  கீழே விழுந்து அழிந்து விட்டது. காரணம் இந்த உயர்ந்த கோபுரம் அமைக்க வேண்டுமானால்  அதற்கேற்றபடி அதன் அஸ்த்திவாரம்  பலமாக  இருக்க வேண்டுமல்லவா. ஆனாலும் அக்காலத்திய சுமேரியர்களின் கணக்கின்படியும் அப்போதிருந்த தொழில் நுட்பத்தின்படியும்  அஸ்த்திவாரம்  அமைக்கப்பட்டது. சுட்ட செங்கற்கள்  காலப்போக்கில்  விரிசல்விட  கட்டிடத்தின்  பலபகுதிகள் விரிசல் கண்டது. அதன் அஸ்த்திவாரம் காலப்போக்கில்  பலமிழந்ததால்
அவ்வளவு  பெரிய கட்டிடத்தை தாங்க  இயலாமல் கட்டிடம்  ஆங்காங்கே விரிசல் கண்டு ஒடிய ஆரம்பித்தது. மேலும்  போதாததற்கு  அலெக்ஸாண்டர் மாமன்னர்  இக்கட்டிடத்தை  இடித்துவிட்டு  வேறு  இடத்தில் கட்ட  உத்திரவு இட்டார். அதனாலும் இக்கட்டிடம்  இடிபட ஆரம்பித்தது. ஆனால் அலெக்ஸாண்டர்  இந்த  கட்டிடத்தை புதுப்பிக்கும்  முன்பே  இறந்துவிடவே இக்கட்டிடத்தை  இடிப்பதும் பாதியில் விடப்பட்டது. இன்று அதன் அஸ்த்திவாரம்  மட்டுமே தெரிகின்றது. ஆக பாபிலோன் பட்டிணமும் கடவுளின்  சாபத்தினால்  பீடிக்கப்பட்டு  இன்றுவரை  இசையாஸ் தீர்க்கதரிசியின்  தீர்க்கதரிசனங்கள்  கூறியபடியே  வீழ்ந்துபட்டது.
யுப்ரடீஸ்  நதியின் கிழக்கு கறைப்பகுதியில் பாபிலோன் அரண்மனையும் அதன் தொங்குதோட்டமும் மேற்குகறைப்பகுதியில் பாபேல் கோபுரமும் அமைந்திருந்தன. இன்றைய பாபிலோனின்  இடிபாடுகள் காண சகிக்க முடியாதபடி எல்லாமே  யுப்ரடீஸ்  நதியால் சூழப்பட்டு  நீருக்கடியில்  மூழ்கி வெறும்  சதுப்பு  நிலமாக மாறிவிட்டன. அன்று  வீழ்ந்த பாபிலோன் இன்றுவரை  எழவில்லை. இந்த  இடிபாடுகளின்  கற்கள்  முதலாய்  கடவுளின் சாபத்திற்கு ஆளானபடியால் யாரும் இந்த பாபிலோனின் பாபேல் கோபுரத்தின் கற்களையோ  அல்லது  அதன்  சபிக்கப்பட்ட  அரண்மனையின்  கற்களையோ பயன்படுத்துவதில்லை. எல்லாம் சாபம் நமக்கும் வந்துவிடும்  என்னும் பயம்தான்  காரணம். இக்கால  பாபிலோனில் சர்வாதிகாரியாக  இருந்த சதாம் ஹுசைன்  தன்னை இரண்டாம்  நெபுக்கட் நெசார் என்று பிரகடனப்படுத்திக் கொண்டான். எனவே தன் அரண்மனையை  இதே  இடத்தில்  கட்ட  சாபத்திற்கு ஆளான  இந்த சபிக்கப்பட்ட  பாபிலோன்  அரண்மனையின்  கற்களையே  உபயோகித்தான். இவ்வாறு கட்டப்பட்ட  தன் அரண்மனையை  தன் விருப்பப்பட்டபடி  பெரும் தங்க அரணாக மாற்றினான்.  ஆனால் சாபம்பிடித்த அந்த கற்கள் தங்கள் வேலையை காட்டின. சாதாம் ஹுசேன்  தன் நாட்டை இழந்தார் . அவரது  இரு மகன்களும்  அமெரிக்கர்களால்  கொல்லப்பட்டு விட்டனர்.  அவர்  நாட்டைக்கொள்ளையடித்து  சேகரித்து வைத்த செல்வம் அனைத்தும்  எதிரிகளால்  கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன.]
பாபிலோன்  வேத காலத்திலிருந்து பெரும் விலை மகளாக சித்தரிக்கப் படுகிறாள். பாபிலோன்  மாநகர்  விலைமகளிருக்கும்  மண்ணுலகின் அருவருப்புகள்  அனைத்துக்குமே  தாய்.
அப்பெண்  இறைமக்களின்  இரத்தத்தையும்   இயேசுவின்  சாட்ச்சிகளின் ரத்தத்தையும்  குடித்து  வெறிகொண்டவள்.
இதைபற்றிய  இறை வார்த்தைகள்  திருவெளிப்பாடல்களில் உள்ளது.18-2-8.
" வீழ்ந்தது... வீழ்ந்தது  பாபிலோன் மாநகர். அவள் பேய்களின்  உறைவிடமாக, அனைத்து  தீய  ஆவிகளின்  பதுங்கிடமாக, தூய்மையற்ற  பறவைகள் அனைத்தின்  புகலிடமாக, தூய்மையற்ற  வெறுக்கத்தக்க  விலங்குகளின் இருப்பிடமாக  மாறிவிட்டாள். அவ்விலைமகளின் காமவெறி என்னும்  மதுவை  எல்லா  நாட்டினரும்  குடித்தனர். மண்ணுலக  அரசர்கள்  அவளோடு பரதைமையில்  ஈடுபட்டனர். உலகின்  வணிகர்கள் அவளுடைய  வளங்களால் செல்வர்கள்  ஆனார்கள்.
என் மக்களே.. அந்நகரைவிட்டு  வெளியேறுங்கள். அவளுடைய  பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும்  அவளுக்கு  நேரிடும்  வாதைகளுக்கு உட்படாதிருக்கவும்  வெளியே  போய்விடுங்கள்.
அவளின் பாவங்கள் வானைத்தொடும் அளவுக்கு குவிந்துள்ளன. கடவுள் அவளின்  குற்றங்களை  நினைவில்  கொண்டுள்ளார். அவள்  உங்களை நடத்தியவாறே   நீங்களும்  அவளை  நடத்துங்கள்.
அவளுடைய  செயளுக்கு ஏற்ப இரட்டிப்பாக திருப்பிக்கொடுங்கள். அவள் உங்களுக்கு  கலந்து  கொடுத்த மதுவுக்கு  பதிலாக  இருமடங்கு கொடுங்கள். அவள்  தன்னையே  பெருமை படுத்தி  இன்பம்  தந்து  வாழ்ந்ததற்கு  ஏற்ப அவள்  வேதனையுற்று  துயரடைய  செய்யுங்கள். ஏனெனில்  நான்  அரசியாக வீற்றிருகிறேன், நான்  கைம்பெண்  அல்ல, நான்  ஒருபோதும்  துயருறேன் என்று அவள்  தன் உள்ளத்தில்  சொல்லிக்கொண்டாள். இதன் பொருட்டு  சாவு, துயரம், பஞ்சம்  ஆகிய  வாதைகள் ஒரே நாளீல் அவள் மீது வந்து விழும். நெருப்பு  அவளை  சுட்டெரித்துவிடும். ஏனெனில்  அவளுக்கு  தீர்ப்பு  வழங்கும் ஆண்டவராகிய  கடவுள் வலிமை வாய்ந்தவர்."
" ஐய்யா ஹெப்பான் அவர்களே, வேதம்  எவ்வளவு சரியாக  இந்த  மாநகருக்கு ஏற்படப்போகும் அழிவைப்பற்றி முன்கூட்டியே  கூறியிருக்கின்றது பார்த்தீர்களா?" என்றார்  தோமையார்.
" ஆம் ... ஆம்... வேதம் மிகச்சரியாகவே  இந்த மாநகரின் அழிவைப்பற்றி கூறியிருகின்றது. ஏனென்றால்  சொன்னது  கடவுள் அல்லவா " என்றார் ஹெப்பான். பிறகு  " ஐய்யா யோனாஸ்  அவர்களே... இந்த ஒற்றுமையை கவனிதீர்களா.? இந்த நினிவே நகரமும்  இந்த பாபிலோன் நகரமும் தங்களது வீழ்ச்சியில்  ஒரேமாதிரியகத்தான்  இருந்தன  அல்லவா.?." என்றார்
ஹெப்பான்.
" ஆம்  ஐய்யா...இந்த இரண்டு பெரும் நகரங்களும்  கடவுளின் சாபத்தினாலேயே  வீழ்ந்தன. அக்கிரமி  தன் அக்கிரமத்தினாலேயே  சாவான் என்பதை நீர் அறியவில்லையா? அப்படித்தான்  இதுவும்.  கடவுள்  எவ்வளவு நாளைக்குத்தான்  பொறுமையாய்  இருப்பார். அவரது  பொறுமைக்கும்  ஒரு எல்லை உண்டல்லவா. அவர் பொறுமை  எல்லை  மீறும்போது  இப்படித்தான் நிகழும்"
" கடவுளின்  சாபத்தினால் பீடிக்கப்பட்ட இந்த  இரு நகரங்களுமே     நீரால் சூழப்பட்ட பிறகே அழிவுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நினைவே மற்றும் பாபிலோன் ஆகிய  இரு நகரங்களின் கடைசி  நாளில் பெரும் விருந்தும் திருவிழாவும் கொண்டாடப்பட்டன.
இந்த  இரண்டு அழிவுற்ற  பட்டிணங்களின் கடைசி நாளில் மன்னன் முதல் மக்கள் வரை  குடிவெறியில் மூழ்கி  இருந்தனர்.
இந்த இரண்டு அழிவுற்ற  பட்டிணங்களின்  போர் வீரர்களும் போர் புறியாமல் ஓடிவிடனர். எஞ்சியிருந்த  சில வீரர்களும்  வாளுக்கு  இறையாக்கப்பட்டனர்.
இந்த  இரண்டு அழிவுற்ற  பட்டிணத்திலிருந்த  பொதுமக்களும்  சிறுவர் சிறுமிகளும்  அநியாயமான முறையில்  வெட்டிக்கொல்லப்பட்டனர்.
இரண்டு பட்டிணங்கள் முடிவும்  திடீரென  சடுதியில் முடிந்துவிட்டன. இரண்டு பட்டிணங்களும் கொள்ளையிட்ட பிறகு  தீயால் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த  இரண்டு பட்டிணங்களின் அழிவும் முற்காலத்தே  முன்மொழியப் பட்டுள்ளன. இந்த  இரண்டு  பட்டிணங்களையும் தோற்றுவித்தவர்  ஒருவரே. அவர்தான்  நிர்மோட் .
முதுபெரும் தந்தை நோவாவின் பேரன்களுள் ஒருவன். அடடா... எல்லாமே சர்வ நாசம் ஆகிவிட்டது." என்றார்  ஹெப்பான்.
" ஆம் என் எஜமானே... இந்த இரு நகரங்களாலும் அழிவுபட்ட எத்தனையோ நகரங்கள்  மீண்டும் தலை தூக்கிவிட்டன. ஆனால் அவற்றின்  அழிவுக்கு காரணமான  இந்த  இரு நகரங்களும் வீழ்ந்துபட்டன. ஆனால் அவை  மீண்டும் எழவே  இல்லை  என்பதுதான்  உண்மை. காரணம் அவற்றை  அழித்தது கடவுள் " என்றார்   தோமையார்.
இவர்கள் மூவரும் பேசிக்கொண்டு வரும் போதே தோமையார் " இதோ  இந்த சுவர் தான் கடவுளின் கை எழுத்தை  தாங்கியதோ " என்றார்.
அதற்கு ஹெப்பான் " ஐய்யா  தோமையாரே  எனக்கு  இதைப்பற்றி  கொஞ்சம் சொல்லுங்கள் " என்றார்.
" தானியேல் ஆகமத்தில் 5-அதிகாரம் முடிய இதைப்பற்றிய  செய்தி  உள்ளது. மாமன்னன்  நெபுக்கட்னெசார்  மன்னனின்  மகன்  நெபொபொலசார்  தன் அரண்மனையில்  ஆயிரம் பேருக்கு  விருந்து  ஒன்றை   ஏற்பாடு செய்தான். அதன்படி  தன் தந்தை  ஜெருசலேமிலிருந்து  கொண்டு வந்திருந்த கடவுளுக்குறிய  பொற்கிண்ணங்களை  கொண்டு வரச்செய்து  அவற்றில் மதுவை  ஊற்றி தன்  மனைவியருக்கும்  அவரது  வைப்பாட்டிகளுக்கும் மதுவை  ஊற்றிக்கொடுத்து  கடவுளுக்குரிய  பொற்கிண்ணங்களை தீட்டுப்படுத்தினார். அப்போது மன்னருடைய  அரண்மனையின்  சுவற்றில் மன்னன் காணும்படியாக  ஒரு கை வந்து  இனம்புறியாத  ஒரு பாஷையில் எதையோ  எழுதியது. இதைகண்டு  பயந்த மன்னன்  நெபொபொலொசார்  இந்த சுவற்றில் எழுதியது யாருடைய  கையாக இருக்கும்.அது பேயோ  அல்லது பிசாசோ என்று அலறினான்  மன்னன்  முதற்கொண்டு அரண்மனை  ஜோதிடர்கள்வரை  யாருக்கும் அது என்ன என்பது புறியவில்லை. அப்போது மஹா ராணியார்  தன் கணவரிடம் ," அரசே நம் அரண்மனையில்  தானியேல் என்னும் ஒரு பெரும் ஞானி இருகின்றார் . அவர் ஒருவேளை  இந்த எழுத்துக்களை  படித்து  பொருள் கூறலாம். எனவே  அவரை  அழைத்து  வாருங்கள் " என்றாள். அதன்படி தானியேல் அழைத்து வரப்பட்டார். அரண்மனையின் சுவற்றில் அந்த மாயக்கை ," மேனே மேனே, தேகேல், பார்சின் " என்று எழுதியிருந்தது . அதாவது மேனே  மேனே  என்றால் கடவுள் உமது  அரசின் நாட்க்களை  எண்ணி  வறையறுத்து  முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்  என்றும் தேகேல்  என்றால்  நீர் தராசில்  நிறுக்கப்பட்டீர், எடையில்  நீர் மிகவும் குறைந்துள்ளீர்  எனவும் பார்சின் என்றால்  உமது அரசு பிரிக்கப்பட்டு  மேதியருக்கும்  பாரசீகருக்கும்  கொடுக்கப்பட்டுள்ளது. என்று அர்த்தம் " என்றார்.
அதன்படியே  அன்றிரவே  பாரசீகத்திலிருந்து  வந்த மன்னன்  சைருஸ்  தனக்கு  துணையாக  மேதியர்களை  அழைத்துக்கொண்டு  வந்து  யூப்ரடீஸ் நதியை  திருப்பி விட்டான். வெளியே என்ன நடக்கின்றது என்று  அறியாத நெபுபொலோசார்  பெரும் விருந்திலும் களியாட்டத்திலும் மூழ்கியிருந்தான். அவன் அரண்மனையிலிருந்த படை வீரர்கள் முதலாய் மக்கள் அனைவரும் அரசனின் பெரும் விருந்தில் மூழ்கியிருந்த போதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. வெளியே பெரும் போர் மூண்டது. மன்னன்  சைரஸ்  கண்ணில் பட்ட  அனைவரையும்  வெட்டி வீழ்த்தினான். சற்று நேரத்தில் அரண்மனை பிடிபட்டது. கல்தேய அரசனாகிய  நெபுக்கட்னெசார்  மன்னனுடைய  மகன் நெபொபொலசார்  வெட்டி  கொலைசெய்யப்பட்டார். அதே  இரவில் பாபிலோன்  மேதியர்களாலும் பாரசீகத்தவர்களாலும்  கொள்ளையடிக்கப்பட்டு   பாபிலோன் நகரம்  தீக்கிறையானது. அத்துடன்  இந்த பாபிலோனிய  பேரரசு  வீழ்ந்தது வீழ்ந்ததுதான்." என்றார்  தோமையார்.
" ஆஹா ... அப்படியானால் இதோ  உயரே உயரே  ஏறிச்செல்லும்  இந்த கல் தாங்கிகள்தான் அன்றைய  பெரும் பேர்பெற்ற  பாபிலோனிய  தொங்கும் தோட்டமாகவும்  இருந்திருக்கவேண்டும் . இல்லையா?"
" ஆம். இந்தக்கல் தாங்கிகளின் அமைப்பை  பார்த்தால் அவைகள் பாபிலோனின்  தொங்கும் தோட்டம் அமைந்திருந்த அரண்மனைதான்  என்று நாம் முடிவுக்கு வரலாம் " என்றார் தோமையார்.
" ஐயா தோமையாரே... ஐய்யா  ஹெப்பான்  அவர்களே...இந்த  பாபிலோனில் இனிமேல் நான் வந்த வேலையை பார்க்க போக வேண்டும்... எனக்கு விடை கொடுங்கள்" என்றார்  யோனாஸ்.
" சரி ஐய்யா... நீர் உம் வேலையை  பார்க்கப்போகலாம்.. நீர்  எங்களோடு  வந்து இந்த  நினிவே, பாபிலோன்  நகரங்களைப்பற்றி விரிவாக  எடுத்து கூறியதற்கு நன்றி... சென்று வருக " என்று கூறி  யோனாஸுக்கு  விடை கொடுத்து அனுப்பினார்கள். அவர்கள்  பார்வையிலிருந்து  யோனஸ் மறைந்தார்.
" சரி.... நாம் இப்போது  எங்கே  போகிறோம்.?" என்றார்  ஹெப்பான்.
" அக்கா ஜூக்காவுக்கு " என்றார்  தோமையார்.
" அக்காஜுக்காவுக்கா...அது  என்ன  மாதிரியான  பட்டிணம். அங்கே  என்ன வேலை.?" என்றார்  ஹெப்பான்.
" பார்த்தீர்களா.... நாம் வந்த வேலையை  மறந்துவிட்டீர்களே... இந்த அக்காஜூக்கா  என்னும்  ஊரில் தான்  மூன்று ராஜாக்களில்  ஒருவரான மெல்கியோர்  வசித்துவருகின்றார். அவரை சந்தித்து  அவருக்கு  ஆசீர்கூறி அவருக்கு  ஞானஸ்நானம்  கொடுக்க  வேண்டுமென்பது  யேசுநாதரின் விருப்பம்." என்றார்  தோமையார். இந்த  அக்காஜூக்கா  என்னும் ஊரில்தான் மெல்கியோர்  என்னும்  அரசரின் கோட்டை  இருகின்றது . அங்கே  அவர் இருந்தால்  அவரை   சந்தித்து  சற்று  ஓய்வெடுத்துக்கொண்டு  நாம் வந்த வேலையை  பார்ப்போம்" என்றார்  தோமையார்.
   இந்த அக்காஜூக்கா என்னும்  பட்டிணத்தில்  இருந்த  உயர்ந்த அரண்மனையில்  இருந்த பால்கணியிலிருந்துதான்  மெல்கியோர்  யேசுநாதர் பிறந்த போது  தோன்றிய வால் நட்ச்சத்திரத்தை  பார்த்தார்  என்பதும்  இந்த அரண்மனையில்தான்  இந்தியாவிலிருந்து  வந்திருந்த  கஸ்பார்  என்னும் அரசர்  மெல்கியோரை சந்தித்தார்  என்பதும்  வரலாறு நமக்கு  கூறும்  உண்மை. ஆனால் அரசர் மெல்கியோர் அப்போது  அக்காஜூக்காவில்  இல்லை என்றும்  அவர் அப்போது தக்க்ஷ சீலம் சென்று ராஜ்ஜிய பரிபாலனம் செய்யவும் அவரது மகளுக்கு திருமணம் செய்யவும் சென்றிருகின்றார் என்றும்  அவருக்கு
தெரிவிக்கவே  அங்கே  அவர்கள்  இருவரும் சில நாள் தங்கி ஓய்வெடுத்து பின் தக்ஷசீலம்  புறப்பட்டனர். பிறகு பல நாள் பயணத்திற்குப்பிறகு  அவர்கள் கடற்கறைப்பபடிணமாகிய  தக்க்ஷ சீலம் [ இன்றைய கராச்சி ] வந்தடைந்தனர். இந்த  தக்க்ஷ சீலம் தான்  அந்த நாட்க்களின்  யேசுநாதரை  குழந்தையாக இருந்தபோது  அவரை காண வந்த மூன்று  ராஜாக்களில் ஒருவரான மெல்கியோர்  என்னும் மன்னருடைய ராஜ்ஜியத்தின்  தென்கோடி எல்லையாக  இருந்தது.     End of part 1. 







No comments:

Post a Comment