"ஆண்டவரே, தேவரீர் எங்கே போகிறீர்கள். ? [ DOMINE QUO VADIS ] "
இது நடந்தது கி.பி.64ல். ரோம் நகரில் அன்று அந்த அப்பியன் சாலையில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. ரோமைய மக்களின் மனதில் அச்சம் நிலவியது. என்ன செய்வோமோ என்று அவர்கள் பரிதவித்து நின்றார்கள். அந்த பயத்தினால் பலர் நகரைவிட்டு ஓடவும் செய்தார்கள். எற்கனவே ரோம் நகர் பற்றி எரிந்து தங்கள் உடமைகளை எல்லாம் இழந்த பொதுமக்கள்
இப்போது உயிரைவிடவும் தயாகராக இல்லை. ஆகவே கூடுமானவரை தங்கள் குழந்தை குட்டிகளுடனும் மூட்டை முடிச்சுகளுடனும் ஓட்டமும் நடையுமாகவும் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் விதி அவர்களை விடவில்லை. அவர்களை ஓட ஓட விரட்டியது. ரோமானிய ராணுவத்தால் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும்
ஊருக்குள் திரும்ப அனுப்பப்பட்டார்கள். அதாவது மீண்டும் அடித்து உதைத்து அனுப்பப்பட்டார்கள்.
ரோமை நகர் தீயால் எரிக்கப்பட்டதால் ஒரு விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கும் வரை யாரும் ஊரைவிட்டு வெளியேறக்கூடாது என்றுகாரணம்காட்டி அனைவரையும் கைது செய்தது . உண்மையில் என்னதான் நடந்தது என்பதற்கு இந்த சம்பவம் நடந்ததை நேரில் பார்த்த டாக்டிகஸ் என்னும் வாலிபன் எழுதிய
ஒரு கடிதம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது. அந்த கடிதம் சொல்லும் விபரம் இது.
" அன்று ஜுன் 16 ஆம் தேதி கி.பி.64 ஆம் வருடம் ரோமின் வத்திக்கான் குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள [CIRCUS MAXIMUS ] மரண விளையாட்டரங்கத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள ஏழை மக்களும் கிரிஸ்த்துவர்கள் எனப்படும் பாவப்பட்ட ஜென்மங்களும் அதிகம் வசித்துவந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீ ஏற்பட்டது. தீயை அணைக்க முயன்ற பலர் தடுக்கப்பட்டனர். இதையும் மீறி தீயை அணைக்க முற்பட்டவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். எனக்குத்தெரிந்த சில ரோமை ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் மாறுவேடத்தில் வந்து இந்த காரியத்தை செய்தனர். அணைந்து போன சில இடங்களும்கூட மீண்டும் தீப்பற்றி எரியத்துவங்கியது. சொல்லிவைத்தாற்போல் நகரத்தின் பல இடங்களிலும் தீ மளமளவென்று பரவத்துவங்கியது. ஒரு அளவுக்கும்மேல் தீயைக்கட்டுப்படுத்தமுடியாமல் போகவே ரோம் நகரமே தீ பற்றி எரியத்துவங்கியது. இவ்விதமாக தீ ஒரு
வாரகாலம் அணையாமல் எரிந்தது.
இன்றைய காலகட்டத்தில் ரோமை நகர் என்பது பதிநான்கு மாவட்டங்களைக்கொண்டது. ஆனால் தீ பரவாமல் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட மாவட்டங்கள் நான்கு மட்டுமே.
ரோமில் நீரோவின் அரண்மனையின் ஒரு பகுதிகூட தீயினால் நாசமாக்கப்பட்டது. இப்படி ஒரு கோரச்சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நீரோ மன்னன் ட்ராய் நகரம்
இப்படித்தான் எரிந்ததுபோலும் என்று சப்த்தமாகப்பாடிக்கொண்டு பிடில் வாசித்துக்கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன்.
அந்த மரண விளையாட்டரங்கம் நீள்வட்ட வடிவிலானது. அரசனின் குதிரைப்படை தேர்ப்படை இவற்றிற்கு வேகப்பரீட்ச்சை நடத்தவும் அவ்வப்போது தேர் மற்றும் ரதப்போட்டிகள் நடத்தவும் ராணுவ வீரர்களுக்கிடையே விளையாட்டுப்போட்டிகள் நடத்தவும் அடிமைகளின் மல்யுத்தம் வீரவிளையட்டுப்போட்டிகள் நடத்தவும் இந்த விளையாட்டரங்கம்
பயன்படுத்தப்பட்டது. [ரோம் நகரில் வட்ட வடிவிலான ஒரு மரண விளையாட்டரங்கமும் இப்போதும் உள்ளது. அது கொலோசியம் என்றழைக்கப்படுகின்றது. இது போன்ற பல கொலோசியங்கள் அக்காலத்தில் இத்தாலியில் பல இடங்களில் இருந்தன.]
ஆனால் ரோமில் வத்திக்கான் மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த நீள்வட்ட வடிவிலான மரண விளையாட்டரங்கம் ரோமை மன்னர்களுக்கான பிரத்தியேகமானது. அதன் ஒரு அறைவட்டவடிவிலான ஆரம்பப்பகுதியில் ஒரு நெடும் கல் நடுநாயகமாக மிகவும் கம்பீரமாக நின்றிருந்தது. இந்த விளையாட்டரங்கத்தின் வெளிப்புறத்தில்
அமைக்கப்பட்டிருந்த கடைவீதிகள் அனைத்தும் தீயினால் சாம்பலாகி இருந்தன. அரங்கத்தின் கூறைபோன்ற அமைப்பு கூடாரமான முறையில் இருந்தது. அது முற்றிலும் எரிந்து போனதால் அரங்கத்தின் உள் கட்டமைப்புகள் அனைத்தும் சாம்பலாகியது. எனவே அரங்கத்தின் உட்பகுதியில் தங்கி இருந்த வீரர்களும் அங்கிருந்த சிறையில் அடைபட்டிருந்த அடிமைகளும் மற்போர் வீரகளும் மற்ற சாதாரண விளையாட்டு வீரர்களும் கொடுமையாக நெருப்பினால் வெந்து மடிந்து போனார்கள்.
நடந்து முடிந்த காரியங்கள் அனைத்தையும் நான் கேள்விப்பட்டவரை இந்த தீ யாரோவால் வேண்டுமென்றே திட்டம்தீட்டி நடத்தி இருக்க வேண்டும். அது வேறு யாரும் அல்ல. மன்னர் நீரோவே இக்காரியத்தை செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தமே இல்லாத ஏழைக்கிரிஸ்த்துவர்களை அடித்து உதைத்து கட்டாயப்படுத்தி நாங்கள்தான் கொளுத்தினோம். நீரோமன்னருக்கு கிரிஸ்த்துவர்களை கண்டாலே பிடிக்காது. அதனால்தான் நாங்கள் கொளுத்தினோம் என்று வாக்குமூலம் கொடுப்பார்களா?.
மேலும் அங்கிருந்த கிரிஸ்த்துவ மக்களின் வசிப்பிடங்களை காலி செய்துவிட்டு அங்கு பிரம்மாண்டமான அரண்மனையோடு சேர்ந்த வணிகவளாகம் தான் கட்டுவார்களா ?"
மன்னர் நீரோ நல்லவறாக இருக்கும்பட்சத்தில் கிரிஸ்தவர்களின் நிலங்களைப்பிடுங்கி அங்கு தங்க மாளிகை எனப்படும் டோமுஸ் ஆரா கட்டிடம் கட்ட ஏன் அவ்வளவு ஆர்வம் காட்டவேண்டும்..இதற்க்கு அரசங்க பணம் தேவைப்பட்டதால் அதை செனட் ஏன் அங்கீகரிக்கவில்லை.?. என்ற ரீதியில் இக்கடிதம் அமைந்துள்ளது. இந்த பயங்கர தீ சம்பவம்
நடந்து முடிந்து மூன்று மாதங்களில் கிரிஸ்த்துவர்களுக்கு பிடித்தது சனியன். அது மிகவும் கோரமாக இருந்தது.
நடந்து முடிந்த ரோமை தீ விபத்தினால் இறந்தவர் எத்தனைபேர்...சேதமடைந்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று துல்லியமாக ஆராய முடியாமல் செனட் சபை திணறியது.
உயிர் சேதமும் பொருட்சேதமும் கணக்கிடப்படமுடியாத அளவில் இருந்தது. இதற்கான காரண கர்த்தா யார் என ரோமைய செனட் சபை கண்டறிய முற்பட்ட வேலையில் சுதாரித்துக் கொண்டான் நீரோ மன்னன். எங்கே இந்த பழி தன் மீது வந்துவிடுவோமோ என்ற அச்சம் தன்னை ஆட்க்கொள்ளவே அதிலிருந்து தப்பிக்க இந்த பழியை கிரிஸ்த்துவர்கள் மீது சுமத்தினான். சிலர் மீது போடப்பட்ட இப்பழி ஒட்டுமொத்த கிரிஸ்த்துவர்கள் மீதும் விழுந்தது. கிரிஸ்த்தவர்களின் ராப்போஜனமும் அப்பம் பிட்க்கும் சடங்கும் யேசுவின் திரு இரத்த சடங்கும் வேறு மாதிரியான முறையில் தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டு கிரிஸ்த்துவர்கள் குழந்தைகளின் ரத்தம் குடிப்பவர்கள்....நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்றேல்லாம் தவறாக
சித்தரிக்கப்பட்டார்கள்.
இதனால் கிரிஸ்த்துவர்கள் என்றாலேயே அஞ்சத்தக்கவர்கள், நம்பத்தகுந்தவர்கள் அல்லர். அரசியல் எதிரிகள் என்றபடி எல்லாம் அவர்கள் மீது பழி போடப்பட்டது. அதன் விளைவு..
கிரிஸ்த்துவர்கள் மீது மரண அடி விழுந்தது. உண்மையை கண்டுபிடிக்கின்றேன் பேர்வழி என்று கிரிஸ்த்துவர்களை பயங்கரமான ஆக்கினைகளுக்கு ஆட்படுத்தப்பட உத்திரவிட்டான்
மன்னன் நீரோ.
நீரோ மன்னன்பதவிக்கு வரவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டியவள் அவனுடைய தாயார் அகரிப்பினா தான். இதர்காக அவள் செய்த காரியம் முறைப்படி பட்டதுக்கு வரவேண்டிய அவன் மூத்த சகோதரன் ப்ரிட்டானிகஸை விஷம் வைத்து கொண்றதுதான். ஆனால் விஷயம் வெளியே தெரியாமலிருக்க நீரோ செய்த காரியம் தன் தாயாரை வாளால் ஓட
ஓட வெட்டிக்கொண்றதுதான். அவன் தன் தாயார் தன் அரசாங்க அலுவலிலும் தன் சுய வாழ்க்கையிலும் அடிக்கடி தலையிட்டதால் அவளைக்கொண்றதாக ஒரு கதை சொல்லப்படுகின்றது. நீரோ தன் பத்தொன்பதே வயது நிரம்பிய தன் மனைவி ஆக்டேவியா என்பவளை குழந்தை இல்லாத காரணம் காட்டி வெட்டிக்கொண்றான்.
இவளை இப்படிக்கொண்றான் என்றாள் இன்னொரு மனைவியான போப்பினா என்பவள் நிறைமாத கர்ப்பினியாக இருக்கும்போது அவளை வயிற்றில் எட்டி உதைக்க அவள் குறை பிரசவத்திலேயே இறந்தாள்.
பிற்பாடு அவள் சகோதரியை கல்யாணம் செய்துகொண்டான். அவனது நண்பர்கள் என்றில்லாமல் எதிரிகள் என்றில்லாமல் சந்தேகம் என்று வந்துவிட்டால் அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் கொல்லப்படவேண்டும் என்ற வெறிபிடித்து அலைந்துவந்தான் மன்னன் நீரோ. பெருந்தீனி உண்னும் பழக்கமுடையவன். சமயங்களில் அரசாங்க
விருந்துகளில் பகல் பொழுதில் விருந்துக்கு உட்கார்ந்தானால் இரவு முடியும் வரைகூட எழுந்து செல்லமாட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இந்த நேரத்தில்தான் நீரோவின் மகள் தோம்னியா என்பவள் புனித போத்தினா என்னும் ஒரு புனிதையால் மனம்திருப்பப்பட்டு கிரிஸ்தவளாக மாறினாள். அவள் மட்டுமல்ல . அவள் அரண்மனையிலிருந்த சேடிப்பெண்கள் அனைவரும் மற்றும் சிறைக்காவலர்கள் வரை கிரிஸ்த்துவர்களாக மாறி இருந்தனர். இந்த புனித போத்தினா என்னும் பெண் வேறு யாரும் அல்ல.
அன்று சமாரியாவில் யாக்கோபின் கிணற்றில் யேசுநாதருடன் சம்பாஷித்த தீனா என்னும் சமாரியப்பெண்ணை நேயர்கள் மறந்திருக்க முடியாது. யேசுநாதரால் மனம் மாறிய அவள் தன் தவறான வாழ்க்கையை விட்டு விட்டு புனிதையாக மாறி வேதபோதகம் செய்த காரணத்தால் ரோமுக்கு நீரோவின் அரண்மனையில் விசாரணைகாக வந்திருந்தாள்.
அவளுக்கு சிறைவாசம் கொடுக்கப்பட்டது. தினமும் அவளுடன் சேர்த்து அவள் குடும்பத்தினரான ஐந்து பெண்களையும் இரும்புத்தடிகளால் அவர்கள் கைகளையும் கால்களையும் உடைக்க வேண்டும் அதுவும் நீரோவின் மகள் தோம்னியா முன்னியில் நடைபெறவேண்டும் என்பது நீரோவின் ஆணை. அவ்வாறே தண்டனை அவர்களுக்கு தோம்னியா முன்னியில்
நடைபெறும். ஆனால் அன்றிரவே யேசுநாதர் அவர்களுக்கு தோன்றி அவர்கள் அனைவரையும் குணப்படுத்திவிடுவார். இப்படியாக பல நாட்க்கள் சேர்ந்தார்போல் நடைபெறவே தோம்னியா ஆச்சரியப்பட்டு யேசுநாதரைப்பற்றி அறிந்துகொண்டாள். அந்த சமாரியப்பெண் தீனா அவளை கிரிஸ்த்துவளாக மாற்றினாள். இந்த அதிசயத்தைப்பார்த்த அரண்மனையில்
இருந்த அத்தனை சேடிப்பெண்களும் யேசுநாதரால் ஆட்கொள்ளப்பட்டு கிரிஸ்த்துவர்களாக மாறினர்.
இதனால் கடுப்பாகிபோனான் மன்னன் நீரோ.. எனவே தன் மகள் என்றும் பாறாது அவளுடன் மனம்மாறிய தன் அரண்மனைப்பெண்கள் மற்றும் சிறைகாவலர்கள் உட்பட சுமார் நூறு பேர்களை நிர்வாணமாக்கி தன் அரண்மனை அந்தப்புறத்திலேயே சிலுவையில் அடித்ததும் அல்லாமல் உயிர்போகும் முன்பே அவர்கள் அனைவரையும் உயிரோடு கொளுத்தவும்
செய்தான். இத்தனை அக்கிரமங்களையும் தன்னுடைய நேரடி மேற்பார்வையிலேயே செய்தான்.
இதனால் மிகவும் வருந்தினால் புனித போதினா.. எப்படியாவது புத்தி சொல்லி நீரோ மன்னனை மனம்திருப்பப்பார்த்தாள் புனித போதினா என்னும் அந்த சமாரியப்பெண். ஆனால் சாத்தானை திருத்த முடியுமா... என்பதுபோல இவனை இனிமேலும் திருத்தமுடியாது என்று உணர்ந்த புனித போதினா நீரோ மன்னனை நேருக்கு நேராக சந்தித்து அவனை எச்சரித்தாள்..ஆண்டவனின் கோபதிற்கு ஆளாகாதே என்றாள்...ஆனால் நீரோவா மசிபவன்.. எனவே கோபப்பட்ட போதினா, " நீரோ...நீ மனிதனே அல்ல.. மிருகம்..
அதிலும் ரத்த வெறி பிடித்த மிருகம்... ஆண்டவனின் கோபம் உன் மீது எப்படி இறங்கும் என்று நீ கூடிய சீக்கிரமே புறிந்துகொள்வாய்..அப்போது உனக்கு புத்தி சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள்....உன் வாழ்நாள் எண்ணப்படுகின்றது " என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். ஒரு ரோமைய சக்கரவர்த்திக்கு முன்னால் பேசவே பயப்படுவர் மக்கள்... ஆனால் இந்த பெண் அவன் முகத்தில் காறி உமிழ்ந்ததும் அல்லாமல் பேய் பிடித்தாற்போல் கடகடவென்று நகைத்தாள் என்றாள் அவளுக்கு எவ்வளவு நெஞ்சுறம் இருந்திருக்க வேண்டும்..
அதற்கு அவளுக்கு கிடைத்தபரிசு அவளை தலைகீழாக ஒரு பாழும் கிணற்றில் தூக்கிப்போட்டார்கள்.. அவளுடைய எலும்புகள் எல்லாம் உடைந்து மூன்று நாள் கழித்து அந்த பாழும் கினற்றிலேயே மரித்தாள். சமாரியாவில் கிணற்றில் ஆரம்பித்த அவளது ஞான வாழ்க்கை ரோமில் பாழும் கிணற்றில் முடிந்தது.
ஒரு பெண் நம்மைப்பார்த்து எச்சரிப்பதும் அல்லாமல் தன்னை காறி உமிழ்ந்ததை நீரோ மன்னன் எப்படி ஏற்றுக்கொள்வான். ? அவன் வக்கிர புத்தி வேகுவாக வேலை செய்தது. இரு கிரிஸ்த்துவப்பெண்னுக்கு இவ்வளவு தைரியம் என்றால் இந்த கிரிஸ்த்துவ ஆண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்.... நம்முடைய ராஜ்ஜியத்தில் எத்தனைபேர் கிரிஸ்த்துவர்கள்..இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு நாள் நம்மை எதிர்த்தால் நம் கதி என்னவாகும்... ஆஹா....தவறு... தவறு... இவர்களை வளர விடக்கூடாது. இவர்கள் தலைதூக்கி விட்டால் அப்புறம் இவர்களை கட்டுப்படுத்தமுடியாது... எனவே இதைத்தடுக்க ஒரே வழி.....இவர்கள் அனைவரையும் நம் நாட்டிலிருந்து அழிக்க வேண்டும்... எனவே கிரிஸ்த்துவர்கள் மீது தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும்...என்று உத்திரவிட்டான் மன்னான் நீரோ.
இந்த நேரத்தில் தான் யேசுவின் தலைமை அப்போஸ்த்தலர் புனித பேதுரு எனப்படும் ராயப்பர் சிறைபிடிக்கப்படுவார் என்ற வதந்தி பரவியது. எனவே அவருடைய சிஸ்யர்கள் ராயப்பரை சந்தித்து ரோமுக்கு வெளியே தப்பிச்செல்லும்படி மிகவும் கேட்டுக்கொண்டார்கள். ராயப்பரின் வழிகாட்டுதல் அவர்களுக்கு மிகவும் இன்றி அமையாததாக இருப்பதால் அவர்
உயிர் வாழ்வது அவசியம் எனவும் திருச்சபையின் தலைவருக்கு யாதொரு அபாயமும் நேரிடாதபடி காப்பது தங்களது கடமை என்பதாலும் அவர் உடனே ரோமை விட்டு தப்பிச்செல்லும்படி மிகவும் கேட்டுக்கொள்ளப்பட்டார். எனவே ராயப்பரும் ரோமை விட்டு வெளியே செல்ல ஆயத்தமானார். இந்த வீயா அப்பீயா என்னும் சாலையில் அவர் வரும்போது யேசுநாதர் ஒரு சிலுவையோடு அவர் எதிரே வந்தார்.
" யேசுவின் பாதச்சுவடுகள்."
உடனே ராயப்பர் அவர் பாதம் பணிந்து " என் ஆண்டவரே, தேவரீரே ஸ்வாமி... தாங்கள் சிலுவையோடே எங்கே போகிறீர்கள் ?" என்றார்.
அப்போது யேசுநாதர், " என்ன செய்வது ராயப்பா...நீ இருந்து செய்ய வேண்டிய காரியத்தை நான் செய்ய வேண்டியதாக இருக்கின்றது. நீ பயந்தாங்கொள்ளியாக என் மக்களை விட்டுவிட்டு ஊரைவிட்டு ஓடுகின்றாய்...ஆனால் நான் அப்படி இருக்க முடியுமா..எனவேதான் நான் மறுபடியும் சிலுவையில் பாடுபட வத்திக்கான் செல்கிறேன்..நீ சென்று
பிழைத்துக்கொள்.. என்றார். ராயப்பருக்கு அப்படியே நெஞ்சில் முள் தைத்தது போல் ஆயிற்று. தன் பிழை உண்ர்ந்தார்..அப்போதுதான் அவர் கூறினார்..."ஆண்டவரே..நான் எப்படியாக மரணிக்கவேண்டுமென்று தேவர்ீர் எனக்கு உண்ர்த்திவிட்டீர்.. உம் சித்தப்படியே எனக்கு ஆகட்டும் ஸ்வாமி...நான் கோழை அல்ல" என்றார். " இருப்பினும் ஆண்டவரே,...இதெல்லாம்
எதற்காக....ஏன் இவ்வளவு பாடுகள்..நாம் யாருக்கு என்ன கெடுதல் செய்தோம் " என்றார்.
அதற்கு யேசுநாதர், " ராயப்பா...உனக்கு இன்னுமா புறியவில்லை...சிலுவையில் நாம் எவ்வளவோ பாடுகளை பட்டோமே...நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம்.?.கோதுமை மணி மண்ணில் வீழ்ந்து மடிந்தாலோழிய அது ஒன்றுக்கு நூறாக...ஆயிரமாக பலன் தறாது என்பதை நீ அறியவில்லையா..? அப்படித்தான் இதுவும் " என்றார்.
யேசுநாதர் ராயப்பரை சந்தித்த இடத்தில் இப்போதும் ஒரு ஆலயம் இருக்கின்றது. அது தான் கோ வாடிஸ் ஆலயம். அதாவது ஆண்டவரே எங்கே போகின்றீர். யேசுவின் பாதச்சுவடுகளை பளிங்குகல்லால் பிரதி எடுத்து வைத்து இருக்கின்றார்கள். இதன் மூலப்பிரதி இப்போதும் தூய செபஸ்த்தியார் ஆலயத்தில் இருக்கின்றது.
ராயப்பர் தன் குடும்பத்தினரோடு கைது செய்யப்பட்டு மமர்தியன் சிறையில் அடைக்கப்பட்டார். பூமிக்கும் கீழே காற்றுகூட நுழையமுடியாதபடி கட்டப்பட்ட சிறைச்சாலை அது. ஆனாலும் ராயப்பர் தன் கையால் தோண்டிய ஒரு நீறூற்றால் தினமும் அங்குள்ள கைதிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து பல சிறைக்கைதிகளை மனம்திருப்பினார். அந்த சிறைச்சாலையே ஒரு தேவாலயமாக மாறிவிட்டது. இதனால் மேலும் கடுப்பானான் நீரோ மன்னன்.
அங்குள்ள எல்லாக்கைதிகளுமா கிரிஸ்த்துவர்கள் ஆகிவிட்டார்கள்.. என்ன அநீதி இது. இவ்வளவு கடுமையான தண்டனைகளைப்பார்த்தும் இந்த மக்களுக்கு பயம் வரவில்லையா...
அல்லது தண்டனை போதாதா... இவர்களை நான் சும்மா விடப்போவதில்லை.. முதலில் அந்த கடவுளின் மனிதர் எனப்படும் பேதுருவையும் அவன் குடும்பத்தாரையும் கொல்லுங்கள் ...
அதைப்பார்த்தாவது இந்த மக்களுக்கு புத்தி வரட்டும்.. தண்டனை மிகவும் கடுமையாக இருக்கட்டும் என்றான் மன்னன் நீரோ.
அதன்படி புனித பேதுருவின் மனைவி ஃபெப்ரோனியா பலிகொடுக்கப்பட அழைத்துவரப்பட்டார். பேதுருவின் கண்கள் நீரால் நனைந்தன.. " என் இனியவளே.. என்மனைவியே. ..நீ என்னைவிட்டு முன்னே போகின்றாய்...பயப்படாதே,,,என் தேவனும் என் எஜமானனுமான யேசுநாதர் எப்போதும் உன் முன்னே பிரசன்னமாக இருப்பார்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் ஆண்மாவை அவர் பெற்றுக்கொண்டு உன்னை நித்திய பேரின்பத்திற்கு கூட்டிச்செல்வார்.. நான் நாளைக்கு உன்னை பரலோகத்தில் சந்திப்பேன்" என்று விடைகொடுத்து அனுப்பினார். பேதுருவின் மனைவி ஃபெப்ரோனியா சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்றும் தலை வெட்டி கொல்லப்பட்டார் என்றும் சில செய்திகள் சொல்லுகின்றன.
ராயப்பரின் மகள் பெத்ரேசியாவுக்கு சம்பவித்தது. ராயப்பரின் மகள் பெத்ரேசியா திருமணமாகமலேயே இருந்தார்.. அவரது அழகுக்கு ஆசைப்பட்டான் ரோமை இளவரசன் ஒருவன் ஆனால் அவனை திருமணம் செய்ய மறுத்து பட்டிணிப்போராட்டமே நடத்தினால் பெத்ரெசியா. இதற்காக ராயப்பர் அவளை உயர்ந்த ஒரு வீட்டில் யாரும் பார்க்கதபடி அவளை மறைத்து வைத்தார். யேசுநாதரோடு தன் தகப்பனுக்கும் தன் குடும்பத்தில் அனைவருக்கும் இருந்த பரிச்சயமும் பாசமும் அவளுக்கு இந்த உலகத்தின்மீது நட்டம் இல்லாது போயிற்று. சமையலில்
கெட்டிக்காரியான இவள் செராபி எனப்படும் வெரோணிக்கம்மாளோடு சேர்ந்து சமைத்த யேசுவின் ராப்போஜனம் யேசுவால் மிகுந்த பாராட்டைப்பெற்றது. இந்த உலக வாழ்கையிலும் திருமணத்திலும் பற்று இல்லாத அவள் நோன்பிருந்தே மரித்துப்போனாள் என்கிறது ஒரு சரித்திரம்.. இல்லை இல்லை... அவள் வேத சாட்சியாக மரித்தாள் என்கிறது ஒரு
சரிதை. அவளது கல்லரை வத்திகானில் இதே ராயப்பர் பேராலயத்தில் ஒரு பகுதியில் இருக்கின்றது. ஃப்ரான்ஸ் தேசத்தினரின் யாத்திரீகர்களுக்கான பாதுகாவளி என்னும் ஒரு பட்டம் அவளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாள் ராயப்பர் கொல்லப்பட சிறைக்கு வெளியே கூட்டிவரப்பட்டார். தன் மனைவி இறந்த இடத்திலேயே அவருக்கு சிலுவைச்சாவு தீர்மானிக்கப்பட்டது. அவரது விருப்பப்படியே அவர் தலை கீழாக சிலுவையில் அடிக்கப்பட்டார். உன் வாழ்நாளின் கடசிக்காலத்தில் நீ உன் கைகளை விரித்துவைத்துக்கொள்வாய். உன் விருப்பத்திற்கு மாறாக உன்னைகட்டி
இழுத்துச்செல்வர் என்று அன்று யேசுவால் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறியது. அதனால் ஏற்பட்ட மரணம் மிகவும் கொடுமயானது. காலிலிருந்து இரத்தம் யாவும் தலைக்குவந்துவிடும். தலையிலுள்ள ஒவ்வொரு ரத்தக்குழாயும் அதிக ரத்தம் காரணமாகவும் அவை மீண்டும் மேலே கால்களுக்கு செல்லமுடியாததாலும் அதிக அழுத்தம் காரணமாக
கண்களிலிருந்து மூளைவரை உள்ள ரத்தக்குழாய்கள் வெடிக்கும். அப்போது ஏற்ப்படும் வலியும் வேதனையும் சொல்லமுடியாதவையாக இருக்கும். ரத்தம் அனைத்தும் நெஞ்சில் தேங்குவதால் நுறை ஈரல் வீங்கி மூச்சு திணறல் ஏற்படும். மூளை கடைசி நிமிடம் வரை வேளை செய்வதால் உடலில் ஏற்பட்ட அனைத்து உபாதைகளையும் உணர்ந்து வேதனை சொல்ல முடியாத அளவு இருக்கும்.. இத்தகைய அனைத்து வேதனையையும் அனுபவித்த அந்த எழுபது வயது முதியவறான புனித பேதுரு என்னும் ராயப்பர் சிலுவையில் மரித்தார்.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தது அந்த எகிப்த்திய தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட நெடும்கல். இந்த எகிப்த்திய நெடும் கல் பல வேத சாட்சிகளின் ரத்தம் கண்டது.
அதற்கு வாய் இருந்தால் அது அவர்களின் பாடுகளைப்பற்றி கதைகதையாக சொல்லும். இந்த கல்லுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.
" வத்திக்கானின் ஜெயஸ்தம்பம் "
இன்றைக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக திருக்குடும்பம் எகிப்த்து தேசம் சென்றார்கள் அல்லவா... அப்போது அவர்கள் ஹீலியோப்போலிஸ் என்னும் நகரில்
தங்கினார்கள். அந்த நகரம் அவர்கள் காலத்திலேயே நல்ல நிலையில் இருந்தது. அங்கு எகிப்திய பாரோ மன்னர்கள் தங்கள் வெற்றியின் நினைவாக சுமார் நூற்று ஐம்பது அடி உயரமும்
நூற்றுப்பத்து டன் எடையும் உள்ள ஒரு நெடும் கல்லை தங்கள் வெற்றியின் அடையாளமாக நிருத்தி இருந்தார்கள். அது யேசுநாதரின் காலத்திற்கு ஆயிரத்துஐனூறு ஆண்டுகளுக்கு முன்பே நிலை நிருத்தப்பட்டிருந்தது. எகிப்த்திய பேரரசு ரோமானியர்களால் அகஸ்ட்டஸ் சீசரால் அடிமைப்படுத்தப்பட்டபிறகு காமக்கிழத்தன் காலிகுலா காலத்தில் இந்த நெடும் கல் கப்பல்மூலம் ரோமுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நெடும்கல்லை இந்த ச்ர்கஸ் மக்ஸிமஸ் என்னும் இந்த நீள் வட்ட மரண விளையாட்டரங்கத்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள்.இந்த
விளையாட்டரங்கம் அந்தந்த காலங்களில் உள்ள பேரரசர்களின் நினைவாக அவர்கள் பெயராலேயே அழைக்கப்படும். மன்னன் நீரோவின் காலத்தில் நீரோ விளையாட்டரங்கம் [CIRCUS NERO] என்றழைக்கப்பட்டது.
தேர்ப்போட்டிகள் அனைத்தும் இந்த நெடுங்கல்லை சுற்றியே ஓடிவர வேண்டும். எகிப்த்தை வெற்றிகண்டதன் நினைவாக அங்கிருந்து கொண்டுவரப்பட்ட இந்த நெடுங்கல்லை ரோமர்களின் ஜெயஸ்த்தம்பம் என்று அழைத்தனர். ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட பிற்பாடு அவரின் சாம்பலை ஒரு உருண்டைவடிவிலான ஒரு பாத்திரத்தில் வைத்து அதை இந்த
ஜெயஸ்த்தம்பத்தின் மேலே பொருத்திவைத்தனர்.
புனித பேதுரு எனப்படும் ராயப்பரின் மரணத்திற்குப்பின் அவரது சடலம் அவரது சீடர்களால் வத்திக்கான் மலைச்சரிவிலையே புதைக்கப்பட்டது. அந்த இடத்திலேயே எழுந்ததுதான் இன்றைய வத்திக்கான் எனப்படும் ராயப்பரின் தலைமைப்பீடம். புனித ராயப்பரின் கல்லறைமீதே கட்டப்பட்டதுதான் ராயப்பர் பேராலயம்.புனித.பேதுருவின் மரணத்திற்கும் ஆயிரக்கணக்கான கிரிஸ்த்துவர்களுக்கான கொடுமையான மரணத்திற்கும் சாட்ச்சியான அந்த நெடுங்கல் அப்படியே பெயர்த்து எடுத்துவரப்பட்டு இன்று புனித ராயப்பர்
தலைமைப்பீடத்தின் முன்பாக கம்பீரமாக நிற்கின்றது, அதன் ஒரு புறத்தில் இவ்வாறாக எழுதப்பட்டுள்ளது.
யேசுவே ஆண்டவர்... யேசுவே மெசியா...யேசுவே ரட்சகர்...யேசுவே கடவுள்.
யேசு காலங்களைப்பிறித்தவர்.... காலங்களைக்கடந்தவர்... இதை நினைவூட்டுவதுபோல இந்த வத்திக்கானின் ஜெய ஸ்தம்பம் காலம் காட்டும் கருவியாய் சூரிய கடிகாரமாய் இப்போதும்நிற்கிறது. அன்று ஜூலியஸ் சீசரின் அஸ்தி வைக்கப்பட்ட அந்த உருண்டைப்பாத்திரம் அகற்றப்பட்டு உலகத்துக்கே பேரரசராம் யேசுவின் சிலுவை அதற்குப்பதிலாய் இந்த
வத்திக்கானின் ஜெய ஸ்தம்பதின் மீது இப்போது பொருத்தப்பட்டுள்ளது. இந்த வத்திக்கான் ஜெயஸ்தம்பத்திற்க்கு வயது இப்போது சுமார் நான்காயிரம் ஆண்டுகள் என்றால் அது மிகையாகாது.
" ராயப்பா... நீ ராயாக [ பாறையாக ] இருக்கின்றாய்..இந்த பாறையின் மேல் என் திருச்சபையைக்கட்டுவேன்..நரகத்தின் வாசல் அதை மேற்கொள்ளாது..." என்ற யேசுவின் வசனம் இங்கு பலிக்கின்றது. எனவே இந்த வத்திக்கானின் ஜெயஸ்த்தம்பத்தின் ஒரு புறத்தில் பேய் ஓட்டும் சடங்குகான ஒரு ஜெபமும் பொறித்துவைக்கப்பட்டுள்ளது.
" இதோ யூதாவின் ராஜ சிங்கம்...எதிரிகளே ஓடிப்போங்கள் " என்பதற்கொப்ப நான்கு சிங்கங்கள் இந்த ஜெயஸ்தம்பத்தின் மூலைகளில் அவற்றின் வால்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டுள்ளபடி வடிவமைக்கப்பட்டுள்ளன.
இன்றைக்கும் நானூறுஆண்டுகளுக்கும் முன்பாக நிலை நிருத்தப்பட்ட இந்த வத்திக்கானின் ஜெயஸ்தம்பம் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். அது பல பேரரசுகளைப்பார்த்து விட்டது. ஆனால் அந்த பேரரசுகள் எல்லாம் இன்று பெயருக்கு மட்டுமே உள்ளன. ஆனால் ஆண்டவறாகிய யேசுவின் பேரரசுக்கு என்றும் அழிவில்லை. அது பேதுரு என்னும் பாறையின் மீது மிகவும் உறுதியாக ஆண்டவறாகிய யேசுவாலேயே கட்டப்பட்டுள்ளது. ஆண்டவறாகிய யேசுவின் ஆட்சிக்கு முடிவு ஏது.? அதற்கு முடிவு என்பதே இல்லை.
கொடுங்கோலன் நீரோ ரோம் செனட் சபையால் கொலை மற்றும் கொள்ளை குற்றம் சாட்டப்பட்டான். இவன் மனித குலதிற்கே விரோதி என்றும் முத்திரை குத்தப்பட்டான். இதற்கு பயந்த அவன் ஜுன் மாதம் ஒன்பதாம்தேதி கி.பி.68 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டான்.
அவன் காலத்தில் கிரிஸ்த்தவர்கள் பட்ட வேதனை வார்த்ததைகளில் சொல்ல முடியாது. அவர்கள் மிருகங்களுக்கு இறையாக போடப்பட்டனர்
உயிரோடு கொளுத்தபொப்பட்டனர்.. இரவு நேரங்களிலில் நீரோவின் அரண்மணைக்கு வெளியே வெளிச்சம் வர கிரிஸ்த்துவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். கோதுமை மணி
மண்ணில் மடிந்தால் ஒழிய அது ஒன்றுக்கு பத்தாக நூறாக பலன் தறாது என்பது யேசுவின் வாக்கு. வேத சாட்சிகளின் ரத்தம் கிரிஸ்த்துவத்தின் வித்து. அன்று அவர்கள் சிந்திய ரத்தம் இன்றும் நாளையும் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக பலன் தரும். நீரோ மன்னனுடன் அவனுடைய ஜுலியோ க்லாடியன் வம்சமும் முடிவுக்கு வந்தது.
கிரிஸ்த்துவர்களின் நிலங்களைப்பிடுங்கி நீரோ மன்னன் கட்டிய தங்க மாளிகையும் உயர்ந்த வளாகங்களும் வெகு விரைவிலேயே தகர்ந்து விழுந்தன. கொடுங்கோலன் நீரோவின் கல்லறையும் பழுதுபட்டு கேட்ப்பாரும் இல்லாமல் பராமரிப்பாளரும் இல்லாமல் சிதிலமாகிப்போய்விட்டது. ஆனால் அவனால் அழித்துவிடவேண்டும் என்று கொல்லப்பட்ட
கிரிஸ்த்துவர்களின் கல்லறைகள் பல கொண்ட வத்திக்கான் இன்று உலகப்புகழ் பெற்றுவிட்டது. காரணம் அதில் வாசம் செய்பவர் யேசுவே. யேசுவுகாக இறந்தோர் கல்லறைகள் மீது கட்டப்பட்ட உயிருள்ள நகரம் இது.
No comments:
Post a Comment