" வீரக்கன்னிகை புனித ஃபெப்ரோணியம்மாள் "
திருச்சி, மேலப்புதூரிலுள்ள ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் உட்
பகுதியில் வரையப்பட்டிருக்கும் பல வேத சாட்ச்சிகளின் சுவர் ஓவியங்கள்
எனக்குள் பெரும் பாதிப்பை
ஏற்படுத்தின. அதிலும் வீரக்கன்னிகை புனித ஃபெப்ரோணியம்மாள் சரிதையை
படிக்கும்போது எனக்கு படிக்க முடியாத அளவுக்கு கண்களில் கண்ணீர்
பெருகியது. கொடுங்கோலன்
தியோக்குலேசியன் காலத்தில் ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவுக்கு சாட்சியாய் விளங்கிய அந்த புனிதை வீரமாய் பேசிய பேச்சுகளும் அவர் அனுபவித்த பாடுகளும் உலகில் எந்தப்பெண்ணுமே அனுபவித்திருக்க முடியாது. அவரது பரிசுத்த வாழ்வும் அவர் அடைந்த வீர மரணமும் கன்னியாஸ்த்திரீகளுக்கு சிறந்த முன் மாதிரிகை.. அதனால் தான் ரோமன்
கத்தோலிக்க திருச்சபை அவரது திரு உருவச்சிலையை வத்திக்கான் பேராலயத்தின் மேல் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 140 புனிதர்களின் தூண் மாடங்களில் ஒன்றாக இவரையும் வைத்திருகின்றது. இனிமேல் கதைக்குச்செல்லலாம்..
கி.பி. 280...ரோம்...இந்தக்காலக்கட்டங்களில் ரோமை சாம்ராஜ்ஜியத்தின் அதிபதி தியோக்குலேசியன்..பிறப்பிலும் வளர்ப்பிலும் ஒரு கிறிஸ்த்துவனாக இருந்தாலும் சுத்தமான கோடாரிகாம்பாக மாறினான்.. பதவிகாக படைத்தவனை வெறுத்தான். சாத்தானின் கைப்பாவை ஆனான். அவனது ஆட்சியில் அவனால் உயிர் இழந்தோர் பல ஆயிரம்...தன் ஆட்சி
அதிகாரத்துக்குட்பட அனைத்து நாடுகளிலும் கிறிஸ்த்துவ மதத்தை தடை செய்தான்..மடாலயங்களை இடித்தான்..கன்னி மாடங்களியும் கன்னியர்களையும் சிதறடித்தான்..
இப்படி இருக்கையில் ஒர் நாள்.... ரோமுக்கு வெளியே ஒரு நகரத்தின் ஆளுநர் ஆகப்பதவி வகித்தார் அந்திமோ என்பவர். தன் ஐந்து வயது மகன் லிசிமாக்கை அழைத்து வாள் பயிற்சி அளிக்கையில் அடிமை ஒருவன் தவறுதலாக தன் கத்தியை தவறவிட்டான். அப்போது அந்திமோ தன் மகனிடம் " லிசிமாக்..கொல் அவனை..இதுதான் தக்க தருணம்..அவன் தலையில்
வெட்டு... ஒரே அடியில் தலை துண்டாக வேண்டும்..இதுதான் வீர விளையாட்டு..வெற்றியடைந்தவன் தோல்வி கண்டவனை கொல்ல வேண்டும் என்பது தான் விதி...மனம் தளர்ச்சி
கொள்ள்தே.. வீசு வாளை" என்றார்.. ஆனால் லிசிமோ அந்த அடிமை வீரன் தலையை வெட்டாமல் அவனுக்கு உயி பிச்சை அளித்து அவனை வெற்றி கண்டதன் அடையாளமாக
அவன் தலை மீது கத்தியை வைத்தார்..பின் அவனை தூக்கியும் விட்டார்.. இந்த நிகழ்வு தகப்பன் அந்திமோவுக்கு பெரும் கவலையாகப்போயிற்று.. விளையாட்டு முடிந்ததும் தன் மகனை அணைத்து முத்தமிட்டு ' மகனே லிசிமாக்..நீ ஏன் தோற்றவன் தலையை வெட்டவில்லை...நான் அவன் தலையை வெட்டச்சொன்னேனே என்றார்.. மகன் லிசிமாக் பவ்வியமாக
," அப்பா... தோற்றவன் நம் எதிரி அல்லவே..நம் அடிமை அல்லவா..மேலும் அவன் பெரும் போர் வீரன் அல்லவா..அவருடன் நான் நேர்மையாக போராடி இருந்தால் அவரை நான் வெல்ல முடியாது..இது விளையாட்டு..அவரும் கைத்தவறுதலாக என் பொருட்டல்லவா கத்தியை நழுவ விட்டார். அதற்கு ஏன் மரண தண்டனை கொடுக்க வேண்டும்..ஒரு மா வீரனை நான் இழக்க விரும்பவில்லை." என்றார்.
அந்திமோ, " மகனே லிசிமாக்..நீ என் சொற்படி கேட்கவில்லை. இது தவறு என்றும் குற்றம் என்றும் புறிந்து கொள். உன் வயதை முன்னிட்டும் நீ என் மகன் என்பதை முன்னிட்டும் நான் உன்னை மன்னிகிறேன்..ராணுவ முறைப்படி நான் அரசன்..நீ பிரஜை.. நீ எனக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்... முதலில் கீழ்ப்படிதல்..பிறகே உன் விருப்பம்... புறிந்ததா..
இனிமேல் இவ்விதம் செய்யாதே." என்றார்.
அன்றைய இரவில் தன் தாய் மடியில் உறங்கப்போகுமுன் லிசிமாக் அன்று காலையில் தன் வாள் பயிற்சியின் போது நடந்த நிகழ்சிகளை தாயிடன் விவரித்தான். அவன் தாயார் ரகசியத்தில் ஒரு கிரிஸ்த்துவள்... அவர் கூறினார், " என் அன்பு மகனே லிசிமாக்...ராணுவம் வேறு... வாழ்கை வேறு..நீ இளவரசனாய் இருபதால் உனக்கு ராணுவ பயிற்சி தேவை தான்..
நாளைக்கு ஒரு காலத்தில் அரசாளப்போகும் உனக்கு இத்தகைய பயிற்சிகள் தேவைதான்.. ஆனாலும் உன் மனதில் ஈரம் இருக்க வேண்டும். தவறு செய்வது மனித இயல்பு..உனக்கு மன்னிக்கும் நெஞ்சம் வேண்டும்... அப்போதுதான் நீ செய்யும் தவறுளை கடவுளும் மன்னிப்பார்..எந்த உயிரையும் அனாவசியமாகக்கொல்லாதே. விஷேஷமாக பெண்களையும்
வயோதிகர்களையும் மத குருமார்கள் கன்னிகைகளை தீண்டாதே.. அவர்களுக்கு நீ எந்த விதத்திலும் தொல்லையாய் இராதே...அனாதைகளையும் ஆதரவற்றவர்களையும் ஆதரிக்கும் அவர்களுக்கு.உன்னால் முடிந்த உதவி செய்..இதை உன் வாழ்நாள் முழுவதும் கடைபிடி" என்பதுபோன்ற புத்திமதிகளை தினம்தோரும் சொல்வார்..
இதே காலகட்டத்தில் மெசப்பட்டோமியாவின் வடக்கிலுள்ள நிபிசிஸ் பட்டிணத்தில் இருந்த கன்னிமாடமொன்றில் தலைவியாய் இருந்த பிரெய்யீன் என்பவரிடம் அவரது சகோதரன் தன் மனைவியுடனும் தன் இரண்டுவது குழந்தை ஃபெப்ரோணியாவையும் அழைத்துவந்து அவர் காலில் சாஸ்ட்டாங்கமாக வீழ்ந்துவணங்கினான்..சகோதரி...என்னை மன்னித்துவிடு..
எனக்கு பிழைக்க வழிதெரியவில்லை.. இந்த மலை நாட்டில் எங்களால் பிழைக்கமுடியவில்லை...நம் மதத்தை தடை செய்துள்ளதால் எங்கும் பிழைக்க வழி இல்லை..என் மனைவியையும் என் மகளையும் உன்னோடு வைத்துக்கொள்...நான் எங்காவது சென்று பிழைத்துக்கொள்கிறேன்.. இந்த ஒரு உதவியை மட்டும் செய்... கடவுளுக்கு கிருபை இருந்தால் வாழ்வில்
என்றாவது ஒருநாள் சந்திப்போம்" என்றான்... மடத்துத்தலைவி ப்ரெய்யீன் தன் சகோதரனை ஆதரவாக தட்டிக்கொடுத்து, " சகோதரா..மடத்து கட்டளைகள்படி நான் உன் மனைவியை இங்கு வைத்துக்கொள்ள முடியாது... இது கன்னி மாடம்...திருமணமாகாதவர்கள் மட்டும் இங்கு தங்காலாம்.. வேண்டுமானால் உன் மகள் ஃபெப்ரோணியாவை நான் வைத்துக்கொள்கிறேன்... கடவுள் உன்னோடு இருந்து உன்னை வழிநடத்துவார்.. போய் வா " என்று அனுப்பிவிட்டார்...
மேற்சொன்ன இரு சம்பவங்களும் நடந்து இருபது வருடங்களுக்குப்பின்னால்.....
கி.பி.303 ரோம்...மரணப்படுக்கையில் கிடந்தார் அந்திமோ..தன் மகன் லிசிமாக்கையும் தன் சகோதரன் செலினோவையும் அழைத்து, " செலினோ..உன்னை நம்பி என் மகன் லிசிமாக்கை உன்னிடம் ஒப்படைகிறேன்..நீ.. என் மகன் லிசிமாக்கை உன் மகனாகப்பாவித்து....என் ஸ்த்தானத்திலிருந்து என் மகனை பராமரித்துவர வேண்டும்.. நான் என் மகனுக்கு நம் செனட்டராக உள்ள போஸ்போர் என்பவரின் மகளை நிச்சயித்திருகின்றேன்...நான் இறந்த பிறகு தியோக்குலேசிய மஹா ராஜவிடம் என் மகனை அறிமுகப்படுத்தி என் பதவியை என் மகனுக்கு பெற்றுத்தர வேண்டும். ஏற்கனவே தியோக்குலேசிய மஹா ராஜாவிடம் இதுபற்றி பிரஸ்த்தாபித்திருகின்றேன்.. அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்..இதை எல்லாம் நீ எனக்காக செய்து முடிப்பாய் என எனக்கு சத்தியம் செய்து தரவேண்டும்... செய்வாயா?.என்றார்..
அவர் தமையன் செலினோ தன் சகோதரன் அந்திமோவின் கைகளைப்பிடித்துக்கொண்டு, " அண்ணா...நீங்கள் கவலைப்படவேண்டாம்...நீங்கள் கூறிய யாவையும் நான் அவசியம்
செய்வேன்... இது நம் குல தெய்வமான ஜுபிடர் மேல் ஆணை". என்றான்.
லிசிமாக்கின் தகப்பன் அந்திமோ தன் மகனை அழைத்து," மகனே லிசிமாக்... என் காலம் முடியப்போகின்றது... இனிமேல் உன் காலம் ஆரம்பமாகப்போகின்றது... நீ என் பெயரையையும் நம் குலப்பெருமையையும் காப்பாற்ற வேண்டும்... நான் உனக்கு அரசியலை என்னால் கூடுமானவரை சொல்லிக்கொடுத்திருகிறேன்...அவற்றை மறந்து விடாதே...இந்த
கிறிஸ்த்துவர்கள் சொல்வதுபோல மறப்போம்...மன்னிப்போம் எல்லாம் அரசியலுக்கு உதவாது...எவன் எதிராளி என்று தெரிந்தாலும் அவன் தூரத்திலிருக்கும்போதே கொண்று விடு.. இல்லை என்றால் நீ உன் நாட்டையும் இழந்து உன் குடும்பத்தையும் இழந்து உன்னையும் இழப்பதுதான் மிஞ்சும்...இந்த காரியங்களில் எல்லாம் என் தம்பி செலினோ கெட்டிக்காரன்.
அவன் இந்த உலகத்தையும் நாட்டையும் நன்றாகப்புறிந்தவன்...நீ அவரை என் ஸ்த்தானத்திலிருந்து போற்ற வேண்டும்... அவர் வாக்கை என் வாக்காக மதித்து நடக்க வேண்டும்.. தியோக்குலேசியா மஹாராஜாவுக்கு மனம் விரும்பும் வகையிலும் உன் சித்தப்பாவுக்கு விருப்பம் தரும் வகையிலும் நீ நடந்துகொள்ள வேண்டும்.. என்ன சரிதானே..அப்படி நடப்பாயா....
எனக்கு சத்தியம் செய்து கொடு" என்று கைகளை நீட்டினார்..மகன் லிசிமாக்கும் தன் தகப்பனிடம் அவ்வாறே செய்வதாக அவர்தம் தேவர்கள் ஆணையாக சத்தியம் செய்து கொடுத்தான். அடுத்த மூன்றாம் நாள் நம் இளவரசன் லிசிமாக்கின் தகப்பனார் அந்திமோ பரலோக பிராப்த்தி அடைந்தார்.
.ஈமக்காரியங்கள் எல்லாம் நல்ல விதமாக நடந்த பிறகு ஒரு நாள் தியோக்குலேசிய மஹாராஜா நம் இளவரசன் லிசிமாக்கையும் அவன் சித்தப்பன் செலினோவையும் நேரில் வரச்சொல்லி ஆள் அனுப்பினார்..சக்கரவர்தியின் பேட்டி ஆரம்பமாகியது.
" இளைஞனே, உன்பெயர் லிசிமாக்... சரிதானே...ஒருவிதத்தில் நீ உன் தந்தையின் ஜாடையில் இருகின்றாய்.. ஆனால் குணம்தான் உன் தாய்போல் என்று கேள்விபட்டேன்... உன் தாயார் சுத்த ஞான சூனியம்..பாவம் புண்ணியம் என்று எதையாவது பிதற்றிக்கொண்டே இருப்பாள்...ஆனால் நீ அப்படி இருக்க மாட்டாய் என்று நம்புகிறேன்... சரிதானே...
உனக்கு வழிகாட்ட உன் தகப்பனார் நல்ல, சரியான ஆளைத்தான் அமர்த்தி இருகிறார்...என்ன செலினோ... சரிதானே..." என்றார்.. இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த செலினோ சக்கரவர்த்தி தியோக்குலேசியனின் காலில் அப்படியே சாஸ்ட்டாந்தமாக விழுந்து " மஹாப்பிரபு..தங்கள் மனதில் நான் இருப்பது என் முன்னோர்கள் செய்த பாக்கியம் " என்றான்.
மீண்டும் சக்கரவர்த்தி தியோக்குலேசியன் பேசினார்..." லிசிமாக்...நான் உன் வீரத்தைப்பற்றியும் கேள்விப்பட்டேன்..கத்திச்சண்டையில் நீ பெரும் கில்லாடியாமே...ஒரு சுத்த வீரன் அப்படித்தான் இருக்க வேண்டும்...ஆனால் நீ உன் விரோதிகளை மன்னிப்பதுதான் நமக்கு ஆகாத குணம்..எதிரிகளை சுத்தமாக ஒழித்து விட வேண்டும்..அதுதான் நல்ல ஒரு
அரசியல்வாதிக்கு அழகு..இதை எல்லாம் உன் தந்தையார் உனக்கு சொல்லிக்கொடுக்கவில்லையா..பேசு லிசிமாக்... ஏதாவது என்னிடம் பேசு. நம்மிடம் பேச உனக்கு அச்சமா? " என்றார்
சக்கரவர்த்தி...அதற்கு செலினோ, " மன்னர் பெருமானே... தாங்கள் என் மகன் லிசிமாக்கை பற்றி கேள்விபட்டதெல்லாம் உண்மைதான்..அறியாப்பையன் அல்லவா... அதுதான் தங்களிடம் பேச அச்சப்படுகின்றான்." என்றான்..
அதற்கு சக்கரவர்த்தி, " உம்.. இருக்கட்டும் இருக்கட்டும்..அவன் பேச இஸ்டப்படும் நபர் நம் செனட்டர் போஸ்பொர்ஸிடமும் அவர் மகளிடமும் தான் போலும்" என்று பெரிதாக நகைத்தார். இந்த சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி செலினோ," மஹாப்பிரபு...தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை... செனட்டர் மகளைத்தான் லிசிமாக்குக்கு பேசி முடிவாகி இருகிறது..
தாங்கள் பெரிய மனது வைத்து இந்த சின்னன்சிறிசுகளை திருமணத்தில் சேர்த்து வைக்க வேண்டும்.. இதைத்தான் மறைந்த எனது சகோதரனும் லிசிமாக்கின் தகப்பனாரும் விரும்பினார். மஹாப்பிரபு தேவறீர் பெரிய மனது வைக்க வேண்டுகிறேன்" என்றான்.
அதற்கு சக்கரவர்த்தி," வைப்போம் செலினோ..வைப்போம் .இவர்களை சேர்த்து வைப்போம்... அதற்கு முன் என் காரியம் ஒன்றுநடைபெற வேண்டும்...அந்தியோக்கியாவில் நான் பட்ட அவமானம் சுத்தமாக துடைக்கப்பட வேண்டும்...பாரசீக பாஷா என்னை மதியாமல் போனதால் நாம் அவன் மீது படை எடுத்தோம்.... பல முறை தோல்வி கண்டோம்...
சில முறை வெற்றி கண்டோம்..கடைசியில் பணிந்தான் பாஷா..பெரும் அன்பளிப்புகளோடு என்னை சந்தித்து சமாதானம் ஆனான்.. இதில் என் மனம் திருப்த்தி அடையவில்லை. அந்தியோக்கியாவில் உள்ள ரோமைய தெய்வங்களிடம் குறி கேட்டோம்... அவை சொன்ன சில விஷயங்கள் எம்மை திடுக்கிட வைத்தன...யேசுவின் தலைமை அப்போஸ்த்தலரான
பேதுரு என்னும் இராயப்பர் அந்தியோயோக்கிவில்தான் முதன்முதலாக கிறிஸ்த்துவ தலைமை பீடத்தை ஸ்த்தாபித்தார்..அன்றுமுதல்தான் யேசுவின் சீடர்களுக்கும் அவர்தம் அடிவருடிகளுக்கும் கிரிஸ்த்துவர்கள் என்று பெயர் வரலாயிற்று. அன்றுமுதலிலிருந்து அந்தியோக்கியாவிலுள்ள நம் ரோமைய தெய்வங்கள் சக்தி இழந்து போயின. அப்போதெல்லாம் நாம் பாஷாவின் படையினரோடு தோல்வி கண்டோம்...ஆனால் நான் சுதாரித்துக்கொண்டேன்..கிறிஸ்த்துவர்களையும் அவர் தம் மடாலயங்களையும் கோவில்களையும் நாம் இடிக்கக்கட்டளை கொடுத்தோம் ... அவைகள் இடிக்கப்பட்டவுடன் நம் ரோமைய தெய்வங்கள் உயிர் பெற்றன. வலிமை கொண்டன...அப்போதெல்லாம் நாம் ஜெயித்தோம்.
போரின் முடிவில் பாரசீக பாஷா பணிந்தான்...சமாதானமானான்... ஆனால் இதனால் எனக்கு முழு வெற்றி கிடைக்கவில்லை...இந்த முழு வெற்றி அடையவும், முழு பாரசீகத்தையும் நம் ரோமைய சாம்ராஜியத்துடன் இணைக்கும் வரையும் எனக்கு தூக்கம் வறாது..அதற்குத்தகுதியான நபரை நான் தேடிக்கண்டுபிடிக்கும்போது தான் உம் பெயர் நம்முன் கொண்டு
வரப்பட்டது...நான் ஏற்கனவே உன் தகப்பனுக்கு வாக்கு கொடுத்தபடி அவர் ஸ்தானதில் உன்னை வைத்து உன்னை பாரசீகத்துக்கு அனுப்பப்போகிறேன்..அங்கு நம்முடைய பிரதிநிதியாக நீ போய் என் காரியங்களை நிறைவேற்றி இங்கு திரும்ப வா... எவ்வளவு விரைவில் என் அவமானத்தை துடைகிறாயோ அவ்வளவு விரைவில் உனக்கும் அந்த
போஸ்போருஸ் என்னும் செனட்டரின் மகளுக்கும் நானே முன்னின்று உங்கள் திருமணத்தை நிறைவேற்றி வைப்பேன்." என்றார்.
செலினோ உடனே," அரசே... மஹாப்பிரபு... தங்கள் சித்தத்தை நிறைவேற்றும் வரை நாங்கள் ஊன் உறக்கம் எதுவும் கொள்ளப்போவதில்லை... இருப்பினும்...இந்த வாலிப நெஞ்சங்களை வீனே காத்திருக்கவிட வேண்டாமே...தேவறீர் பெறிய மனது வைக்க வேண்டும்" என்றான்..சக்கரவர்த்தி தியோக்குலேசியனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது..
"செலினோ.. நான் சொன்ன காரியங்களை உடனே போய் பார்... வேண்டிய படைகளை திரட்டிக்கொண்டுபோ...அந்தியோக்கியாவிலிருந்து ஆரம்பி...சிரியாவை முழுவதும் அலசிப்பார்.. பாரசீக பாஷாவைவிட நான் கிறிஸ்த்துவர்களை மிகவும் வெறுகிறேன். கண்ணில் கண்ட கிறிஸ்த்துவர்கள் யாவரையும்... சாதாரண ஆள் முதல் குருக்கள் மதத்தலைவர்கள்...
கன்னிகாஸ்த்திரீகள் யாவரை சங்காரம் பண்ணு...கோயில்கள்... மடாலயங்கள் ...கன்னி மாடங்கள்... வீடுகள் யாவற்றையும் தகர்த்தெறி..கிழக்கில் நம் ரோமை ராஜ்ஜியத்தை முழுவதும்
ஸ்தாபித்துவிட்டு என்னிடம் வா...பிறாகு உன் காரியங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்...இது என் ஆணை...இனிமேல் என்னுடன் நீ பேச வேண்டியதில்லை" என்று கோபமாக விருட்டென்று உள்ளே போய்விட்டான்.. அவன் மனைவி பிரிஸ்க்கா கண்களில் நீர் தளும்ப அவனை வரவேற்று பழ ரசம் கொடுத்து சமாதானப்படுத்தினாள்.
செலினோ அரசாங்க ஆணையை சிரமேற்கொண்டு ஒரு பெரும்படையுடன் சிரியா நாடு சென்றான்..இளவரசன் லிசிமாக் ரோமின் ஆளுனர் என்ற பெயரோடு கப்பலில் அமர்ந்திருந்தான். அவனுடன் அவன் ஒன்று விட்ட சகோதரனும் நம்பிக்கைகுறிய பிரபுமாகிய பிரியாமு என்பவனை தன் படைத்தளபதியாகவும் கூட்டிச்சென்றான்..மேலும் தனக்கு
சிறுவயது முதலே மிகவும் பரிச்சயமான் அடிமையை தன்னுடைய மெய்காப்பாளனாக அமர்த்திக்கொண்டான். தன் சித்தப்பன் செலினோ நம் இளவரசன் ஏதாவது ஏடாகூடமாக செய்து தன் காரியத்தை கெடுத்துவிடாதபடிக்கு லிசிமாக்கையும் ஒற்றாடல் புறிய ஆட்களை அமர்த்தி இருந்தான்...ஆக மொத்தத்தில் அவன் சித்தப்பன் செலினோ தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா...நம் லிசிமாக் தன் தந்தைக்கு கொடுத்த வாக்கை முன்னிட்டு செலினோவை கட்டுப்படுத்தமுடியாமல் திணறினான்...அரசாங்க காரியங்களில் தன் பதவி அவர் சித்தப்பன் செலினோவுக்கு முன்னால் ஒன்றுமில்லை என்று உணர்ந்து கைகளைப்பிசைந்து கொண்டார்.
இருப்பினும் தான் தன் தாயின் வளர்ப்பின்படியும் அவருக்கு கொடுத்திருந்த வாக்கின்படியும் கிரிஸ்த்துவர்களை காப்பாற்றும்படிக்கு தன் சகோதரன் பிரிமுவிடம் சொல்லி ரகசியமாக ஆள் அனுப்பி கிரிஸ்த்துவர்களை தப்பி ஓடச்செய்தான்..விஷயம் தெரியாத கிறிஸ்த்துவர்கள் மாட்டிக்கொண்டால் அவர் கதி அதோகதி தான்..இப்படியாக சிரியா முழுவதிலும்
வேட்டையாடி பல்லாயிரக்கணக்கானோரை கொண்று குவித்ததால் சிரியாவில் தெருவெங்கும் கிறிஸ்த்துவர்களின் சடலங்களை அள்ளிப்போட ஆள் இன்றி அவற்றை நாய்களும் நரிகளும் தின்ற கொடுமை நிகழ்ந்தது. சிரியாவில் தன் வேட்டையை வெற்றிகரமாக நடத்திய செலினோ தன் படைகளை கிழக்காக அதாவது மெசபடோமியா என்றழைக்கப்படும்.
அன்றைய பாபிலோனுக்கு [இன்றைய ஈராக்] திருப்பினான். இந்த விஷயமும் ரகசியமாக பாபிலோனுக்கு தெரிவிக்கப்பட்டதால் நாடே காலியாகிவிட்டது.
செலினோவுக்கு தன்னுடைய திட்டங்களை வெளிப்படுத்தி...எதிராளிகளாகிய கிறிஸ்த்துவர்களை உஷார்படுத்தும் நபர் யார்.. தன்னுடனே இருக்கும் அந்த கருங்காலி யார் என்று கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியாமல் போயிற்று...
இந்த சூழ்நிலையில் பாபிலோனின் வடக்குப்பகுதியில் துருக்கியும் அர்மீனியாவும் கிழக்கில் பெர்சியாவும் இணையும் இடத்தில் உள்ள லிசிபி என்னும் ஊரில் உள்ள ஒரு கன்னிமாடத்தில்......
இந்த கன்னிமாடத்தின் தலைவி பிரையீனுக்கு தன் வயதை ஒத்த தோமாய் என்னும் பெயருடைய ஒத்தாசைத்தாயரும் மற்றும் ஐம்பது இளவயது கன்னிகைகளும் தன் பொருப்பில்இருக்கவே இத்தனை பேரின் தேவைகளையும் கவனிக்கவே நேரம் போதவில்லை அடிக்கடி அங்கலாய்த்துக்கொள்வார்..இந்த ஐம்பது பேரிலும் இரு கன்னிகைகளின் மீது நம் தலைவி பிரையீன் அவர்களுக்கு எப்போதுமே ஒரு கண் இருக்கும்..இந்த இரு கன்னிகைகளையும் மடத்துத்தலைவி தன் கண்களைப்போல் காத்துவந்தார்..ஆண்டவனின் லீலி மலர்த்தோட்டத்தில் ஐம்பது மலர்கள் இருந்தாலும் ஆண்டவனுக்கு உகந்த லீலி மலர்கள் என்று இந்த இரு கன்னிகளைப்பற்றி அடிக்கடி கூறுவார். அந்த இரு லீலி மலர்களும்
ப்ரோக்லா என்னும் இருபத்தைந்து வயது கன்னிகையும் ஃபெப்ரோணியா என்னும் இருபது வயது கன்னிகையும்...இந்த இருவரிலும் ஃபெப்ரோணியாவின் அழகு காண்போர் மனதை கவர்ந்திழுக்கும்..மற்ற கன்னிகா ஸ்த்ரீகள் நம் ஃபெப்ரோணியாவிடம் பேசுவதையும் பழகுவதையும் மிகவும் பெருமையாகக்கொண்டாடினர். அவரிடம் காணப்பட்ட அன்பும் பண்பும் உதார குணமும் யாரையும் தன் வயப்படுத்திவிடும்...இதனால் அந்த மடத்துத்தலைவி ஃபெப்ரோணியாவை அடிக்கடி தனிமைப்படுத்திவிடுவார்...அவரது அழகைக்கண்டு சபைத்தலைவி
பலமுறை பெருமைப்பட்டுக்கொண்டாலும் அந்த அழகே அவளுக்கு ஆபத்தாய் முடிந்துவிடுமோ என்றும் அவளது அழகால் அவளுக்கு திமிர் வந்து விடாதபடிக்கு அவளுக்கு அடிக்கடி ஞான வாசகம் படிக்கவும் அடிக்கடி ஒருசந்தி உபவாசம் இருக்கவும் கட்டளை கொடுப்பார்.. என்ன இருந்தாலும் தன் சகோதரன் மகள்...இரண்டு வயதுமுதல் தான் வளர்த்த பிள்ளை
இப்பேர்ப்பட்ட பேரழகியாக வளர்ந்திருப்பதைக்கண்டு" ஆண்டவா...இவள்பேரில் இரக்கமாய் இரும்...உமதன்பில் இவள் என்றும் நிலைத்திருக்க கிருபை செய்தருளும்" என்று அடிக்கடி மன்றாடுவார்.
இந்த மடத்துத்தலைவி ப்ரையீனுக்கு முன்னால் தலைவியாக இருந்தவர் ப்ளட்டோனியா என்பவர் கட்டளைப்படி பிரதி வெள்ளிக்கிழமைகள் ஆண்டவருக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் அந்த மடத்தில் எந்த கன்னிகைகளுக்கும் வேறு எந்த வேலையும் கொடுக்காமல் அன்று முழுவதும் ஞான வாசகம் படிக்க வேண்டும் என்பது அந்த சபையின் விதிகளில் ஒன்றாக இருந்தது. ஜெபிக்கும் வேளைகளையும் ஞான வாசகம் படிக்கும் வேளைகளியும் பகுதி பகுதியாக பிரித்துக்கொண்டு ஆட்கள் மாற்றி மாற்றி படிப்பார்கள்..
.ஆனால் நம் ஃபெப்ரோணியா படிக்க அரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.. அவளது குரலின் இனிமையும் படிக்கும் விதமும் நம்மை மோட்ச்சத்திற்கே கூட்டிச்செல்லும் பரவசத்தை ஏற்படுத்தும்....
இந்த புகழ் வெளி உலகத்துக்கும் எட்டியது...வெள்ளிகிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெண்களும் குழந்தைகளும் சகோதரி ஃபெப்ரோணியாவின் ஞான வாசகத்தைக்கேட்க்க இந்த மடத்துக்கு ஓடோடி வருவார்கள். என்னதான் வெளி ஆட்க்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே அனுமதி என்றாலும் நம் ஃபெப்ரோணியாவை
நேரில் பார்க்கவோ அல்லது பேசவோ யாருக்கும் அனிமதி மறுத்தார் அந்த மடத்தலைவி ப்ரையீன்...இதற்காக ஒரு திரைச்சீலைக்கு பின்னால் நின்றுகொண்டு ஞான வாசகம் படிக்க உத்திரவிட்டார். அப்படியும் அவர் புகழ் வெளி உலகிற்கு பரவியாதால் அவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசீர்பெற ஆசைப்பட்டார் ஒரு செனட்டர் மகளும் ஒரு செனட்டரை திருமணம்
செய்து ஆறு மாதங்களுக்குள் விதவையுமான ஹீரியா என்னும் ஒரு மாது. அவருக்கும் ஏறகுறைய நம் ஃபெப்ரோணியாவின் வயது தான் இருக்கும். அதற்குள் விதவை ஆகிவிட்டதால் ஹீரியாவுக்கு உலகம் வெறுத்துவிட்டது..

இத்தனைக்கும் இந்த விதவைப்பெண்
ஹீரியா ஒன்றும் கிறிஸ்த்துவள் அல்ல...அவள் பெற்றோரும் கிறிஸ்த்தவர்கள்
அல்ல...ஆனால் மகள் மேல்
உள்ள பாசத்தால் அவரை வேறொரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்ய முன்
வந்தனர்.. ஆனால் இந்த மறுமணத்திற்கு ஹீரியா ஒத்துக்கொள்ளவே இல்லை. தனக்கு
மனநிம்மதி
கிடைக்கவும் நம் ஃபெப்ரோணியாவைப்பார்த்தால் தன் மனதுக்கு ஆறுதலாக
இருக்கும் எனவும் நம்பி அந்த மடத்து தலைவி ப்ரையீனிடம் வந்து அவள்
பாதங்களில் வீழ்ந்தாள்..
தன் கதை முழுவதையும் சபைத்தலைவியிடம் கூறி தான் ஃபெப்ரோணியவை
பார்க்க தனக்கு அனுமதியளிக்கும்படி மிகவும் மன்றாடினாள்.. எனவே தலைவியும்
அனுமதி அளித்து
" ஹீரியா, நீ இப்படிப்போனால் ஃபெப்ரோணியா உன்னைப்பார்க்க மாட்டாள்..
எனவே இந்தா... இந்த கன்னிகா ஸ்திரீ உடுப்புடன் அவளைப்பார்..அப்போதுதான்
அவள் உன்னுடன்
பேசுவாள் என ஒரு கருப்பு அங்கியை அவளிடம் கொடுத்தார். ஹீரா அந்த
கருப்பு அங்கியை அணிந்த உடன் ஒரு பரவச நிலையை உணர்ந்தாள். இளம் கன்னிகைகள்
வாழும் கன்னியர்
இல்லத்தில் நம் ஃபெப்ரோணியாவை முதன்முதலாய் நேருக்கு நேர் சந்தித்தார். அப்சரஸ் போன்ற அழகுள்ள் ஒரு கன்னிகாஸ்திரீ தன்னை நோக்கி வருவதையும், மரியாதையின் நிமித்தம் அவர் தன் முன் மண்டியிட்டு வணங்குவது குறித்தும், இத்தகைய பழக்க வழக்கங்கள் தனக்கு புதிதானாலும், ஏதோ தெரிந்தவர்போல் அவரைத்தூக்கி நிறுத்தி, ஒருசகோதரி தன் சொந்த சகோதரியை கட்டி அணைப்பதுபோல் இறுகத்தழுவிக்கொண்டு ஆனந்தப்புளகாங்கிதம் அடைந்தார் ஹீரியா..இவர் நிச்சயம் போன ஜென்மத்தில் என் தங்கையாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினத்துக்கொண்டு, "ஃபெப்ரோணியா... என் சகோதரி " என்றாள்..இதே பரவசநிலையில் ஃபெப்ரோணியாவும்," ஆம் சகோதரி..நாம்
இந்த பிறவியிலும் சகோதரிகளே.. தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்" என்றாள்... ஹீரியா, " நான் வெகு தூரத்திலிருந்து வருகிறேன்...உன்னைப்பார்க்க வேண்டும் என்று தோன்றியது..
என் மடத்துத்தலைவியும் உத்திரவு கொடுத்துவிட்டார்களா..நான் வந்த வேலையும் சுலபமாக விரைவிலேயே முடிந்துவிட்டதால் உன்னைபார்க்க விரும்பி உத்தரவு பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்." என்றாள்..
இதற்குள் மாலை ஆராதணைக்கு மணி அடித்துவிட்டதால் எல்லோரும் கோயுலுக்குள் நுழைந்தார்கள். அடடா...ஆறாதனை என்றால் ஆறாதணை...அப்படியொரு ஆரதனை... ஆறாதனைப்பாடல்களும்...வாசகங்களும் இரவு ஆனதே தெரியாமல் போனது...இதை நினைவுபடுத்துவதுபோல் இரவு சாப்பாட்டுக்கு மணி அடிக்கவே பெயருக்கு சாப்பிட்டுவிட்டு கைகழுவி ஃபெப்ரோணியாவும் ஹீரியாவும் படுக்கப்போனார்கள்..ஆனால் இரவு முழுவதும் ஃபெப்ரேணியா ஞான வாசகம் படித்துக்கொண்டே இருந்தாள்... களைப்பு என்பதே
அவர்களுக்கு ஏற்படவே இல்லை..ஆஹா... மோட்ச்சம் என்பது இந்த மடத்துக்குள் அல்லவா இருக்கின்றது... நாம் தேடும் சொர்கம் இங்கே அல்லவா இருகின்றது...அடடா... நாமும் தான் வாழ்ந்திருகின்றேம் வாழ்க்கை... அடக்கண்றாவியே என்று தன் கடந்தகால வாழ்கையை நினைத்து பார்த்துக்கொண்டாள் ஹீரியா. விடிந்த பின்பும் இந்த இரு கன்னிகைகளும்...
பேசிக்கொண்டிருப்பதக்ண்ட மடத்துத்தலைவி ப்ரையீன் " அம்மா..நீங்கள் தூங்கவே இல்லையா...நல்ல பிள்ளைகள் நீங்கள்...உங்கள் சபைத்தலைவி தேடுவார்கள்..மீண்டும் இன்னொரு நாள் வாருங்கள்...இப்போது போய்வாருங்கள்" என்று ஹீராவை அன்போடு அனுப்பிவைத்துவிட்டார். ஆனால் ஹீராவுக்கு நம் ஃபெப்ரோணியாவை மறுபடியும் சந்திக்கும்
வாய்ப்பை இறைவன் கொடுக்கவே இல்லை...அன்று விடிந்த நாள் ஒரு கொடுமையான செய்தியுடன் விடிந்திருந்தது.
காலையில் அவசரமாக அழைப்புமணி அடிக்கவே " யாரது " என எட்டிப்பார்த்தார் தோல்மாய்...குருவானவர் ஒருவர் அங்கே நின்று கொண்டிருந்தார்..கதவு திறக்கப்படவே, " தோல்மாய்.. அவசர செய்தி...ரோமைய கவர்னர் லிசிமாக்கும் அவன் சித்தப்பன் செலினோவும் நாட்டைப்பிடித்துக்கொண்டார்கள்... சிரியா எங்கும் வேத கலாபணையில்
ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த இவர்கள் நம்மையும் கொல்ல வந்திருக்கிறர்கள்... உடனே மடத்தைக்காலி செய்துவிட்டு உயிர் பிழைக்க ஓடுங்கள் " என்று கூறிவிட்டு தலை தெறிக்க ஓடி மறைந்துபோனார்..இந்த செய்தி கேட்டு கன்னிமாடமே கிடுகிடுத்தது...சாவின்பயத்தில் அலறினர் கன்னிகள் பலர்..அப்போது காய்ச்சலாய் படுதிருந்தார் நம் ஃபெப்ரோணியா..
உயிர் பிழைத்துக்கொள்ள ஓடிப்போகலாமா என்று ஒரு கூட்டமும்... இல்லை... ஆண்டவறாகிய யேசுவுக்கு சாட்சிகளாய் மரிப்போம் என்று ஒரு கூட்டமும் கூடியது. அவர்களுக்குள் ஒரு முடிவு ஏற்பட்டு சகோதரி எத்தீரியா என்பவர் தலைமையில் மடத்துதலைவி ப்ரையீனிடம் வந்தார்கள்..சகோதரி எத்தீரியா," என்ன முடிவோடு இருகின்றீர்கள்" என்றார்.. அதற்கு
அவர் " அம்மா...எங்களுக்கு இந்த எதிரியாகிய சாத்தானை எதிர்க்க சக்தி இல்லை... நாங்கள் தலைமறைவாக செல்லலாம் என்று இருகின்றோம். இந்த மடத்தை மூடிவிட்டு வாருங்கள் அம்மா... இந்த வேத கலாபணை எல்லாம் முடிந்த பின் மீண்டும் வந்து இதே மடத்தில் நம் ஞான வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்" என்றார்..
அதற்கு தலைவி ப்ரையீன்" நான் கோழை அல்ல...உங்கள் விருப்பத்தை நான் தடை செய்ய விரும்பவில்லை...விருப்பமிருப்பவர்கள் போங்கள்...யேசுவுக்கு சாட்சிசொல்லி வேத சாட்ச்சியாக மரிக்க விரும்புபவர் இங்கே இருக்கலாம்...நான் யாரையும் கட்டாயபடுத்த விரும்பவில்லை... இதெல்லாம் தன்னிச்சையாக நடைபெற வேண்டிய விஷயங்கள்.." என்றார்.
" இருக்கலாம் அம்மா...உங்கள் வயதை முன்னிட்டு நீங்கள் அப்படிப்பேசலாம்...ஆனால் நம் மடத்தில் அழகுப்பதுமைகளாய் இருக்கும் ஐம்பது கன்னிகைகளை நினைத்துப்பாருங்கள்...அந்த ரோமை ராணுவத்தினர்கள் கையில் இவர்கள் அகப்பட்டால் இவர்கள்கதி என்னவாகும் தெரியுமா... அதை முன்னிட்டுத்தான் நான் இந்த முடிவை
எடுத்தேன். இதற்கு நீங்களும் உடன்படுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்" என்றார்..
" நீங்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் போங்கள்.. ஆனல் நான் என் இரு கண்கள் போல் வளர்த்த ப்ரோக்லாவும், ஃபெப்ரோணியாவும் என்னுடன் தான் இருப்பார்கள்..இறைவன் அவர்களைக்கைவிடார்..அவரது தோட்டத்தில் அவர்களைக்கொண்டு சேர்ப்பார் " என்றார்..அதுவரை ஆமாம்.. ஆமாம்.. என்று தன் தலைவிக்கு தலையாட்டிகொண்டு வந்திருந்த ப்ரோக்லா மாலை ஆனதும் ஃபெப்ரோணியாவிடம் தானும் மறைந்து வாழ செல்லப்போவதாக கூறினாள். அதிற்சியுற்றாள் ஃபெப்ரோணியா..." இப்படியாக தேர்ந்துகொள்ளப்பட்டவர்களும் நம்மைவிட்டு விலகிப்போவார்கள் " என்னும் மறை நூல் வாக்கு உண்மையாகிப்போனது.

அவரவர்களுக்கு உயிர் பெரிது. தனக்கென.வாழ்வு வசதி
என்று வரும்போது இப்படி எல்லாம்
நடக்கும்..இதுதான் உலக நியதி..மடத்துத்தலைவி ப்ரையீனுக்கு தலை
சுற்றிப்போனது..." ப்ரோக்லா " நீ கூடவா நம்மை
விட்டுப்போகிறாய்...கர்த்தரின் மேல் உனக்கு நம்பிக்கை
இல்லாமல் போனதெப்படி...உன்னை நான் மிகவும் எதிர்பார்த்திருந்தேனே" என்றார்.. ஆனால் ப்ரோக்லா " அம்மா... என்னை மன்னியுங்கள் " என்றாள்.பிறகு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மறைந்து போனாள்.இந்த உலகின் போக்கைக்கண்ட ப்ரையீன்," உண்மையில் நான் மடத்து தலைவி அல்ல...ஆனால் மடத்தலைவி " என்றார்.
அப்போது காய்ச்சலாய்ப்படுத்திருந்த நம் ஃபெப்ரோணியா எழுந்து வந்து , " அம்மா...யார் உங்களை விட்டுப்போனாலும் நான் உங்களை விட்டுப்போக மாட்டேன்... நான் யேசுவுக்காக என் கற்பை தத்தம் செய்துள்ள ஒரு கன்னிகை... நாம் ஒன்றாகவே வாழ்ந்தோம்... ஒன்றாகவே மரிப்போம்...ஒன்றாகவே பரலோகம் செல்வோம்" என்றாள்...அப்போது தோமாய்," அம்மா.. என்னையும் விட்டுவிடாமல் உங்களுடனே கூட்டிச்செல்லுங்கள்...நான் என்னம்மா பாவம் செய்தேன்.. என்னை மறந்து போனீர்களே " என்றார்..கன்னிகைகள் மூவரும் ஒன்றாக கடி
அணைத்துக்கொண்டு ஆனந்தக்கண்னீர் வடித்தார்கள். " அம்மா..நேற்று என்னை சந்திக்க வந்தார்களே ஒரு கன்னியாஸ்த்ரீ..அவர் யார் அம்மா.. அவரது அன்பு என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது...அவர் போகும்போது கடவுளுக்கு சித்தமானால் நாம் இருவரும் சேர்ந்து மரிப்போம்.. அத்தகைய ஒரு பாக்கியத்தை கடவுள் நமக்கு அருள வேண்டும் என்றார்" என்றார்
ஃபெப்ரோணியா..அதற்கு தலைவி " அடிப்பெண்னே அவள் அப்படியா சொன்னாள்... உண்மையில் அவள் கன்னிகையே அல்ல..வாழ்கையை வெறித்துப்போன ஒரு குடும்பப்பெண்தான் அவள். அவள் பெயர் ஹீரா..நம் செனட்டரின் மகள்.. கல்யாணம் ஆகி ஆறு மாதத்திலேயே விதவையாகிப்போனாள்..மீண்டும் அவளைத்திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் விரும்பினர். ஆனால் அவளுக்கு அதில் இஸ்ட்டம் இல்லை...மாறாக கடவுள் பக்த்தியில் சிறந்து விளங்கும் உன்னைப்பார்த்து உன்னிடம் ஆறுதல் தேடி வந்ததால் நானும் அனுமதித்தேன்..நமக்கும் அரசாங்கத்தில் பெரும் புள்ளிகளின் தயவு தேவை அல்லவா...ஆனால்...காலம்தான் மாறிப்போய்விட்டது...நேற்று வந்தவள் நம்மோடு சாகத்துணிகிறாள்... வாழ்நாள் முழுவதும் நம்மோடு வாழ்ந்தவள் அவசரமாக ஓடிப்போனாள்... என்ன விந்தையான உலகம் இது...இருக்கட்டும் இந்தப்பெண் ஹீரா மட்டில் கடவுள் என்ன தீர்மானம் செய்து
வைத்திருகின்றார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.. இல்லாவிட்டால் அவர் ஏன் இந்தப்பெண்ணை உன்னை சந்திக்க அனுப்புகிறார்..." என்றார்.
மேலும் தலைவி ஃபெப்ரோணியாவிடம், " மகளே ஃபெப்ரோணியா... உன்னை இரண்டு வயதுமுதல் உன்னைத்தூக்கி வளர்த்தவள் என்னும் முறையில் நான் சொல்லும் சில காரியங்களை நன்றாக மனதில் வைத்துக்கொள்...இந்த வாழ்க்கை நிலை இல்லாதது... பரலோக வாழ்வே நிலையானது...அனேகமாக நாளை நம் வாழ்வு முடிந்துவிடும் என்று
நினைக்கிறேன்.. காலம் நெருங்கிவிட்டது...இதற்கு முன்பு சிரியாவில் நடைபெற்ற ஒரு வேத கலாபனையில் பலர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் கொல்லப்பட்டார்கள்..
இவர்களில் லுபே மற்றும் லியோனிடா என்னும் இரு பெண்களும் அடக்கம்...லுபே தலைவெட்டிகொல்லப்பட்டாள். லியோனிடா தீயிலிட்டு பொசுக்கப்பட்டார்.. இவர்களோடு ஒரு தாயும் மகளும் கொல்லப்பட்டவிதம் குறிப்பிடத்தக்கது. பன்னிரெண்டு வயது பெண் எத்ரோபியா என்பவள் தன்னை அம்பால் எறிந்து கொல்லப்பட தீர்வை இடப்பட்டதும் நீதிபதி அந்தப்பெண்
எத்ரோபியவை நோக்கி " பெண்ணே எத்ரோபியா,,உயிர் பிழைக்க ஓடு " என்றதும் அவளும் அதை நம்பி ஓட ஆரம்பித்தாள்... அப்போது அவள் தாயார் தன் கைகளை பலமகத்தட்டி, " மகளே, எத்ரோபியா...நீ கோழையாய் ஓடி மரணிக்க வேண்டியதுதான் அவர்கள் விருப்பம் ..எனவே அதற்கு இடம்கொடாதபடிக்கு, துணிந்து, ஓடாமல்' தைரியமாக
உன் நெஞ்சைகாட்டி, வீர மரணம் அடைவாயாக" என்றாள்.. இதைக்கேட்ட எத்ரோபியா தைரியமாக தன்னை தாக்கவந்த வில்லாளிகளுக்கு தன் நெஞ்சைகாட்டி பல அம்புகளை வாங்கிக்கொண்டு வீர மரணம் அடைந்தாள்... தங்கள் நோக்கம் வீனாகிப்போனதால் வெறுத்துப்போன் நீதிபதி அவள் தாயாரையும் பிடித்து அவ்வாறே கொன்று தன் பழியை தீர்த்துக்கொண்டான்...
மகளே ஃபெப்ரோணியா...இப்போது ஒருவிதத்தில் நானும் அந்த வீரத்தாயின் மனநிலையில் தான் இருகின்றேன்..இப்படியாக அந்த இரவு முடியும் வரை அந்த மூன்று கன்னி கைகளும் பல காரியங்களைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தனர்.. கொடுமையான அடுத்த நாளும் விடிந்தது.
இந்த நாளில் நடக்கப்போகும் காரியங்களைபற்றி சூரியன் அறிந்திருந்தானோ என்னவோ அன்று அதிகாலையில் தோன்றிய அவனது செங்கதிர்களால் அடிவானமெல்லாம் செக்கசெவேர் என்று மாறி இருந்தது.. அரசாங்க வேலையை முன்னிட்டு தன்னை வந்து சந்தித்த சித்தப்பன் செலினோவைப்பார்த்த மாத்திரத்தில் இன்று இவன் எத்தனை
கிறிஸ்த்துவர்களின் உயிரை பறிக்கப்போகின்றானோ என்ற பார்வையில்," என்ன சித்தப்பா...இத்தனை அவசரம்?" என்றன் லிசிமாக்கு.

"அவசரம்தான்
லிசிமாக்...இந்த ஊரின் ஒரு
குன்றின்மேல் அமைந்துள்ள ஒரு கன்னிமாடத்தில் ஐம்பது பேருக்கும் குறையாத
கன்னிகாஸ்த்த்ரீகள் இருப்பதாக கேள்விப்பட்டேன்.. நீ போய் அவர்களை கைது
செய்து வா " இன்றே
அத்தனை பேருக்கும் சமாதி கட்டுகிறேன்.. விஷயம் ரகசியமக இருக்கட்டும்...யாரோ நமக்குள் இருக்கும் ஒரு கருங்காலி நம் திட்டங்களை எல்லாம் தவிடுபோடி ஆக்கிவிடுகின்றான்... அவன் மட்டும் என் கைகளில் கிடைக்கட்டும்.. அப்புறம் தெரியும் சேதி" என்றான்..லிசிமாக் ஒன்றும் தெரியாதவன் போல ஆகட்டும் சித்தப்பா..நானும் அந்த கருங்காலி யார் என்று
கண்டுபிடிக்கிறேன் என்றார்.
லிசிமாக்கு தன் நம்பிக்கைகுறிய தளபதியும் சகோதரனுமாகிய பிரியாமை அழைத்து ரகசியாமாக," சகோதரா...என்னைபற்றி நீ நன்கு அறிவாய்..நான் கிறிஸ்த்துவன் அல்ல என்றாலும் என் தாய் கிறிஸ்த்துவள்... அவருக்கு நான் கொடுத்த வாக்கின்படி பெண்களையும், குழந்தைகளையும், கன்னிகாஸ்த்ரீகளையும், மதப்பெரியோர்களையும் கொல்ல மாட்டேன் என்று
வாக்குக்கொடுத்திருகின்றேன்..அதற்கு இன்று சோதனை வந்திருகின்றது.. என் சார்பாக நீ போய் அந்த கன்னிகைகளை எதாவது சாக்குபோக்கு சொல்லி தப்பி ஓடச்செய்..இதையும் மீறி மாட்டிக்கொள்பவர்களின் தலை எழுத்துப்படி நடக்கட்டும். எச்சரிக்கை" என்றார்.
நம் ஃபெப்ரோணியாவும் அவளது தாயார் சகோதரிகளும் காலை வேளை பிராத்தனை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது வெளி வாசல் கதவுகளை இடித்துக்கொண்டு ஒரு பத்து அல்லது அதற்கும் மேற்பட்டோர் உருவிய கத்திகளோடும் தடிகளோடும் வந்து அனைவரையும் வெளியே வரச்சொன்னார்கள்.. ஒருவன் உள்ளே பாய்ந்துவந்து சபைத்தலைவியை வெட்ட கையை ஓங்கினான்.. அதற்குள் ஃபெப்ரோணியா, " கடவுள் மேல் ஆணை...இந்த வயோதிக தாய்மார்களை விட்டுவிடு.. என்னைகொல்... அவர்கள் என் தாய் போன்றவர்கள் " என்றாள்.
அதற்குள் ப்ரியாம் வந்து," நில் ...நீங்கள் அனைவரும் கன்னிமாடத்துக்கு வெளியே போய் நில்லுங்கள்... இவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார். பிறகுதான் பெப்ரோணிக்காவை பார்த்தார்...அவரது அழகில் மெய்மறந்த அவர்," கன்னிகையே, நீங்கள் அனைவரும் தப்பிப்போக ஏற்கனவே சொல்லி இருந்தேனே..ஏன் போகவில்லை?" என்றார்.
அதற்கு ஃபெப்ரோணியா," பிரபு...நாங்கள் எங்கள் தேவன் யேசுகிரிஸ்த்துவுக்கு சாட்ச்சிகளாய் மரிக்கும்படியாக இங்கேயே தங்கி விட்டோம்... மற்றவர்கள் தப்பிவிட்டனர்" என்றார்.. அதற்கு பிரியாம்," சகோதரி.. இது என்ன பைத்தியக்காரத்தனமான முடிவு..இப்போதும் காலம் ஒன்றும் தப்பிவிடவில்லை.. என் சகோதரனும் ஆளுனருமான லிசிமாக்கு எனக்கு கட்டளையிட்டபடி நான் உங்களை காப்பாற்றவே விரும்புகிறேன்.. உடனே கிளம்புங்கள்.. எனக்கு நேரமாகிறது..நான் காவலாளிகளுக்கு வேறு வேலை கொடுத்து அனுப்பிவிடுகிறேன்" என்றார். ஆனால் ஃபெப்ரோணியாவும் அவரது தாயார்கள் இருவரும் மறுத்துவிடவே அவர்களைக்கைது செய்வதை தவிர பிரியாமுக்கு வேறு வழி இல்லாமல் போயிற்று.
அரண்மனை வாயிலில்லிசிமாக்கும் அவரது சித்தப் செலினோவும் நின்றுகொண்டு மூன்றுபேர்மட்டும் கைதியாக கொண்டுவரப்பட்டிருப்பதைகண்டு "மற்றவர் எங்கே... அங்கே ஐம்பது
கன்னிகைகள் அல்லவா இருந்தார்கள் " என்றான் செலினோ. மஹாப்பிரபூ...நானும் அந்த கன்னிமாடங்களை சல்லடையாய் தேடிப்பார்த்துவிட்டேன்... அங்கே இந்த மூன்று பேரைத்தவிர
வேறு யாருமே இல்லை" என்றார் பிரியாம். " ஓ..அனைவரும் தப்பி ஓடிவிட்டார்களா... அதற்குள் உங்களுக்கு தகவலைச்சொன்னவன் யார்? பெண்ணே நீ பதில் சொல்" என்றான் செலினோ. ஃபெப்ரோணியா, " அரசே அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது " என்றாள். அப்போது தான் ஃபெப்ரோணியாவை முழுவதுமாகப்பார்த்தான் செலினோ.
"அடடா... அப்ஸரஸ்.. அடே செலினோ... நீ கொடுத்துவைத்தவன் தானடா.." என்று தன்னைபாராட்டிக்கொண்ட செலினோ " இருந்தும் என்ன செய்ய... வாலிபம் என்னைவிட்டுப் போயிற்றே...இயற்கை சதி செய்துவிட்டதே.. எனக்குமட்டும் இன்று வாலிபம் இருக்குமானால் " என்று தன்மீது பச்சாதபமும் பட்டுக்கொண்டன்..." சரி இந்த கிழவிகளை விட்டுவிடு...ஆனால் அவளை மட்டும் தனியே சிறையில் அடை.. வழக்கமான சடங்கு முறைகள் தயாராகட்டும்...திறந்த வெளி கலையரங்கம் தயாராகட்டும்... பார்வையாளர்கள் கூடட்டும்" என்றான்.
தன் சித்தப்பன் அந்தப்புறம் நகர்ந்ததும் லிசிமாக்கு தன் சகோதரனை அழைத்து, " நான் உனக்கு சொன்னதென்ன...நீ செய்துவந்திருப்பதென்ன.." என்றார். அதற்கு பிரியாம் " சகோதரா...நீர் சொன்னபடியே தான் செய்தேன்.. ஆனால் இந்த மூவரும் ஓடிப்போக மாட்டோம் என்றதால் எனக்கு இதைத்தவிர வேறுவழி தெரியவில்லை..இதில் என்குற்றம் ஒன்றுமில்லை" என்றார். லிசிமாக்கு சற்றே பெருமூச்செரிந்து " இனி அந்தப்பெண்ணை கடவுள் கூட காப்பாற்ற முடியாது" என்றார்.
" ஏன் ..நீர் உம் பதவியை உபயோகித்து அந்தப்பெண்ணை காப்பாற்றலாம் அல்லவா?" என்றார் பிரியாம்.
" எப்படி முடியும் பிரியாம்...கிரிஸ்த்துவர்களைகொல்லும் அதிகாரத்தோடுதான் நாம் இங்கே வந்திருகின்றோம்...நான் எப்படி சக்கரவர்த்தியின் ஆணையை மீற முடியும்...மேலும் என் தந்தையார் எனக்குப்பாதுகாப்பாய் என் சித்தப்பாவை நியமித்ததுமல்லாமல் அவரை என் ஸ்தானத்திலிருந்து மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதால் என்னால் என் சித்தப்பன் ஆணையை எப்படி மீற முடியும்...இந்த இரண்டு சக்திகளின் ஆதிக்கம் என் மீது இருப்பதால் என்னால் அந்தப்பெண்ணை காப்பாற்றவே முடியாது " என்று கூறினார் லிசிமாக்கு.
லிசிமக்கும் பிரியாமும் மேற்படி பேசிய பேச்சுகளை எல்லாம் ஒட்டுக்கேட்டிருந்த ஒருவன் அதை அப்படியே செலினோவிடம் சொல்ல எத்தனித்தான்... இவனையும் வேவு பார்த்தான் அடிமை வீரன்... அன்று இவனுக்குத்தான் உயிர் பிச்சை அளித்தார் சிறுவன் லிசிமாக்கு...இன்று அதற்கானபலனை திரும்ப அளித்தான் அந்த அடிமை வீரன்...ஒட்டுக்கேட்டவனை வாயைப்பொத்தி அப்படியே அலாக்காக அள்ளிக்கொண்டு போய் யாருமில்லாத இடத்தில் வைத்து கேள்வி கேட்டான் அந்த அடிமை வீரன்... ஆனால் அவன் பதில் சொல்ல முடியாமல்
ஏற்கனவே மூச்சடங்கிப்போய் இருந்தான்.
விசாரணை ஆரம்பமானது....சகோதரி ஃபெப்ரோணியா விசாரணைக்காக கொண்டுவரப்பட்டுள்ளாள் என்றதுமே ஊரே அரங்கத்தில் கூடியது...பல தாய்மார்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டும் அழுது புலம்பிகொண்டும் தங்களை யாரும் கிறிஸ்த்துவர்கள் என்று கண்டுகொள்ளாதபடி முக்காடிட்டு மூடி தங்களை மறைத்துக்கொண்டு அரங்கத்தில் அமர்ந்திருந்தர்கள். அருட்சகோதரி ஃபெப்ரோணியா ஏதோ பெரும் கொள்ளை குற்றம் புறிந்தவள் போல் கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு அரங்கத்தில் நடுவில் நிற்க வைக்கப்பட்டிருந்தார்...ஆளுனர் லிசிமாக்குடன் செலினோ வந்ததும் விசாரணை ஆரம்பமானது.

" ஜெயிக்கப்போவது யாரு. ?."
" பெண்ணே...உமது பெயர் என்ன.." பதில் இல்லை...
" பெண்ணே நான் உன்னத்தான் கேட்கிறேன்...உன் பெயர் என்ன?" மீண்டும் பதில் இல்லை. அப்போது லிசிமாக்கின் சித்தப்பன் செலினோ பெரும் கோபம் கொண்டு லிசிமாக் இவளிடம் இனிமேல் இப்படிப்பேசி பிரயோஜனம் இல்லை.. நீ எழுந்து அந்தப்புரம் போ... இவளை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றான். த்ன்னால் இனிமேல் எந்த காரியமும் ஆகப்போவதில்லை என்பதாலும் கிறிஸ்த்துவ பெண்களையோ குழந்தைகளையோ கன்னிகைகளையோ தான் கைதீண்டுவதில்லை என தன் தாய்க்குகொடுத்திருந்த வாக்கினாலும் இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக கருதி " சித்தப்பா... இனி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று எழுந்து சென்றார்.
அப்போது வானிலிருந்து ஒரு அழகிய வெண் புறா ஒன்று பறந்து வந்தது. அது சகோதரி ஃபெப்ரோணியாவை மூன்று முறை சுற்றிவந்து அவள் தோளில் அமர்ந்து பின் பறந்து சென்று விட்டது. அத்தகைய ஒரு வெண்புறாவை அந்தப்பகுதி வாழ் மக்கள் முன் பின் பார்த்ததே இல்லை.
இதைப்பார்த்த செலினோவின் முகம் பெரும் விகாரமடைந்தது.. அவன் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்தது..அவன் தோற்றமே பயங்கரமாக மாறிவிட்டதைக்கண்ட லிசிமாக்கு
" போர் ஆரம்பமாகிவிட்டது " என்றார். லிசிமாக்கை பின் தொடர்ந்து வந்த அவர் சகோதரன் பிரியாம் " சகோதரா...போரா... விசாரணைதானே ஆரம்பமாகி இருகிறது.. இதில் போர் எங்கிருந்து வந்தது" என்றார்..
" பிரியாம்..உனக்குத்தெரிந்தது அவ்வளவுதான்..இது உண்மைக்கும் பொய்க்கும் நடக்கும் போர்...நீதிக்கும் அநீதிக்கும் நடக்கும் போர். இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் நடக்கும் போர். உண்மையும் பொய்யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்..சுண்டிவிட்டால் நாணயம் ஒரு பக்கம் தான் விழும்..இப்போது விழப்போவது யார் என்பது தான் கேள்வி.." என்றார் லிசிமாக்கு.
" அண்ணா.. எனக்கு ஒன்றுமே புறியவில்லை... தயவு செய்து எனக்கு விளக்கமாக கூறுங்கள் " என்றார் பிரியாம்..
" தம்பி பிரியாம்... சற்று முன்னர் என் சித்தப்பனின் கண்களை கவனித்தாயா... அவை எவ்வளவு சிகப்பாய் நெருப்புத்துண்டம்போல் மாறிஇருந்ததை கவனித்தாயா... அதன்பின் அவர் முகம் எவ்வளவு விகாரமாய் மாறியதை கவனித்தாயா..அவை அவருடைய முகமோ கண்களோ அல்ல... அது அவர் வணங்கும் அங்காரகன் என்றும் அகோரகன் என்றும் பெயர் கொண்ட
செவ்வாய் கிரஹ தெய்வம். அந்த தெய்வம் பெரும் முன்கோபி..அந்த தெய்வம் அவரில் இறங்கிவிட்டது. அதே போல் அந்தப்பெண் ஃபெப்ரோணியா மீது அவள் வணங்கும் பரிசுத்த ஆவி என்னும் தெய்வம் இறங்கி இருக்கிறது . இப்போது நடப்பது இந்த இரு தெய்வங்களுக்கும் இடையே நடக்கப்போகும் பலப்பரீட்சை..யார் ஜெயிக்கப்போகின்றார் என்பது யுத்தத்தின்
முடிவில் தெரியும்..பாவம் ஃபெப்ரோணியா...இந்த இருபெரும் சக்திகளின் இடையே மாட்டிக்கொண்டு என்ன பாடு படப்போகிறாளோ" என்றார்.
செலினோ நீதிபதி ஆசனத்தில் அமர்ந்தான்..." பெண்னே நீ கன்னிகாஸ்த்ரீ ஆடையில் இருப்பதால் நானும் அதற்கான மரியாதை கொடுக்க வேண்டி இருகிறது.. மரியாதையை காப்பாற்றிக்கொள்வது உன் கையில்தான் இருகிறது. உன் பெயர் என்ன? பதில் சொல்."
" நான் ஒரு அப்பாவியான கிறிஸ்த்துவப்பெண்...நீர் கேட்பதால் நானும் பதில் சொல்கிறேன்.. எல்லோரும் என்னை ஃபெப்ரோணியா என்று அழைப்பார்கள் " என்றாள். அப்போது அவளது பேச்சு யாருக்கும்பயப்படாத தோரணையில் தெளிவாக இருந்தது.. அரங்கத்தில் கூடி இருந்த அனைவருக்கும் மிகத்தெளிவாக கேட்டது.
இத்தகைய ஒரு பதிலால் கடுப்பாகிப்போனான் செலினோ. " ஃபெப்ரோணியா..உன் பேச்சில் மரியாதை இருக்கட்டும். நீ அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குற்றவாளி..நீ பழகி வரும் கிறிஸ்த்துவம் தடை செய்யப்பட்ட ஒன்று... அதை நீ அறியாததும் அல்ல..அரசாங்க ஆணையை நீ ஏன் மதிக்கவில்லை.? இதற்கு என்ன தண்டனை தெரியுமா?" என்றான்.
ஃபெப்ரோணியா," அரசாங்கம் வரும் போகும்... அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.. எங்களைப்பொருத்தவரையில் யேசுவே கடவுள்.. அவர் ஒருவருக்கே தூபமும் ஆராதனையும்.உறித்தானது. நாட்டின் தலைவருக்கு அரசர் என்ற முறையில் அவருக்குறிய மரியாதையும் வணக்கமும் செலுத்த நான் கடமைபட்டுள்ளேன்.. ஆனால் அரசரை கடவுளாக
மதித்து அவருக்கும் ரோமைய தெய்வங்களான பொய்த்தேவர்களுக்கும், நாங்கள் தூபாராதனை செலுத்த மாட்டோம்.." என்றாள்..
செலெனோவுக்கு கோபம் கொஞ்சம் கொஞ்சமாக தலைக்கேறிவந்தது.." ஃபெப்ரோணியா... இப்போதும் உன்னை எனக்கு துன்பப்படுத்தி பார்க்க வேண்டும் என்னும் ஆசை கிடையாது. உண்மையில் நான் உனக்கு நன்மை செய்யவே விரும்புகின்றேன்...உனக்கென்ன அழகில்லையா...அறிவில்லையா...இந்த சின்ன வயதில் உனக்கு என்ன அவ்வளவு வெறுப்பு இந்த உலகின் மீது... இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பது உனக்குத்தெரியவில்லை.. வாழ்ந்து பார்த்தால் மட்டுமே அது புறியும்" என்றான்..
ஃபெப்ரோணியா," இந்த உலகத்தைப்பற்றி எனக்கு தெரியும்..கடவுள் படைத்த இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதும் தெரியும்..ஆக வேண்டியதைப்பற்ரி பேசும்" என்றாள்..
இத்தகைய பதிலால் அவமானப்பட்டான் செலினோ.. இருப்பினும் தன் முகத்தில் குறு நகையை தவழவிட்டு, " பெண்ணே, யேசுநாதர் இறந்து முன்னூறு ஆண்டுகள் ஆகிறது.. இன்னும் அவரையே நினைத்துக்கொண்டு அவருக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று வாழ்க்கையை வீணடிப்பது எந்த விதத்தில் நியாயம்.. இது சுத்த மடத்தனம் இல்லையா. பெண்ணே..இப்போதும் காரியம் கெட்டுவிடவில்லை. நீ சரி என்று சொல் நான் என் பையனுக்கு உன்னை கட்டி வைத்துவிடுகிறேன்...நீ மஹாராணி போல இந்த நாட்டை ஆளலாம்." என்றான்.
ஃபெப்ரோணியா," ஐய்யா...நீர் நாட்டை ஆளும் மஹாராஜாவாக இருக்கலாம்.. எவ்வளவு ஆசை வார்த்தைகள் கூறினாலும் நான் என் நாதரும் என் எஜமானனும் என் கடவுளுமான யேசுநாதரை மறுதளியேன்..நீர் என்ன மாய்மால வார்த்தைகள் கூறினாலும் எத்தனை முறை கேட்டாலும் என்பதில் இதுதான்" என்றாள்...
இதனால் வெகுண்ட செலினோ ," ஆஹ பெண்ணே நான் இத்தனை நேரம் உனக்கு மரியாதைகொடுத்து பேசியது நீ ஒரு கன்னிகா ஸ்த்ரீ என்பதற்காகத்தான்.. இனிமேல் உனக்கு மரியாதை கிடைக்காது. உன் யேசு நாதரை கைவிட்டுவிட்டு சீசருக்கும் நம் ரோமைய தெய்வங்களுக்கும் பலி கொடுத்து தூபாராதனை காட்டப்போகிறாயா? இல்லையா?" என்றான்.
ஃபெப்ரோணியா," என் பதிலை ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன்..நீர் உம் தண்டனையை நிறைவேற்றிக்கொள்ளலாம்" என்றாள்.
ஃபெப்ரோணியாவின் இத்தகைய பதிலால் மிகவும் வெகுண்டான் செலினோ." ஆ... ஃபெப்ரோணியா...நீ எனக்கே புத்தி சொல்கிறாயா...உன்ன செய்கிறேன் பார்..உன்னை பணிய வைக்காமல் விடமட்டேன்...உன்னை மனதாலும் உடலாலும் கொடும் தண்டனைகளால் வதைப்பேன்...மரியாதையாக எம் கடவுளை வணங்கு" என்றான்.
ஃபெப்ரோணியா" உனக்கு இஸ்ட்டமானதை செய்து கொள்.. என்னப்பணிய வைக்க உன்னால் முடியாது" என்றாள்...இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற செலினோ
" ஃபெப்ரோணியா...உன்னை இந்த அரங்கத்தில் இருக்கும் அத்தனை ஆயிரம் மக்கள் முன்னிலையில் அம்ம்ம்மணமாக அலைய வைப்பேன்... உன் மானத்தை வாங்குவேன்... உன் பெண்மையை சிதைப்பேன்...உன் உடலை சல்லடையாக சலிப்பேன்.. தீயால் சுட்டெறிப்பேன்...சம்மதமா? " என்று கொக்கரித்தான்...
" செலினோ...கடவுள் படைக்கும்போது அவர்களை ஆணும் பெண்ணுமாகத்தான் படைத்தார்...நிர்வாணமாகத்தான் படைத்தார்...இதப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை." என்றாள்.
செலினோவின் முகமும் கண்களும் ஜிவுஜிவு என்று சிவந்தன...அடேய்...இவளை அம்மணமாக்குங்கள்... இந்த அரங்கத்தை சுற்றிவரச்செய்யுங்கள் " என்றான்.
மதிப்பிகுறிய கன்னிகை ஃபெப்ரோணியா தன் மரியாதைக்குறிய பரிசுத்த குருத்துவ உடையைக்களைந்து நிர்வாணமாக்கப்பட்டாள்... அரங்கத்தை சுற்றிவரும்போது பொதுமக்கள் இந்த அக்கிரமத்தை காண விரும்பாமல் தத்தம் கண்களை மூடிக்கொண்டு " ஆளுனர் அவர்களை நோக்கி...வேண்டாம் வேண்டாம் ...இந்த புண்ணியவதியை அவமதிக்காதே..
பெண்மையை கேவலப்படுத்தாதே..அவள் உத்தம கன்னிகாஸ்த்ரீ..இந்த கொடுமையை நிறுத்து" என்று கூச்சலிட்டனர். இதகைய எதிர்ப்பை தன் அதிகாரத்துக்கு மக்கள் கொடுக்கும் அங்கீகாரம் என்று நினைத்து, " என்ன ஃபெப்ரோணியா... அவமானப்பட்டது போதுமா.. இல்லை இன்னும் வேண்டுமா? என்றான் அந்தக்கயவன்.
அதற்கு ஃபெப்ரோணியா," செலினோ...நான் எனக்கு கண்தெரிந்ததுமுதல் நேற்றுவரை எந்த ஆண் முகத்தையும் பார்த்ததில்லை..ஆனால் இன்று அத்தனை ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முன்பாக என்னை நிர்வாணமாக்கி என்னை அவமானப்படுத்தி விட்டதாக சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டாம்.. நீ என்னை அவமானப்படுத்தவில்லை.. பெண்மையை
அவமானப்படுத்திவிட்டாய்... உன் தாயும் ஒரு பெண்தான்..நீ உன் தாயையும், உன் தாரத்தையும், உன் மகளையுமே அவமானப்படுத்திவிட்டாய். கடவுளுக்கே மனவாட்டியாக தத்தம் செய்திருக்கும் என்னை அவர் கேட்டுக்கொள்ளட்டும் போ " என்றாள்.. இத்தகைய பதிலால் மேலும் அவமானப்பட்டுப்போனான் செலினோ.
" ஓ....உனக்கு தண்டணை போதவில்லை...அதனால்தான் இவ்வளவு திமிறாகப்பேசுகிறாயோ ...அடேய்...யாரங்கே..அந்த மரத்தூணில் இவளைகட்டி வைத்து அவள் தோலை சவுக்கால் அடித்து உறியுங்கள்.. அவள் பாதங்களில் தீயை மூட்டுங்கள்." என்றான்..யேசு நாதரை கற்றூணால் கட்டி அடித்ததுபோல நான்கு பேர் அவளை சாட்டையால் பலம் கொண்டமட்டும் அடித்து விளாசித்தள்ளினார்கள். ஒவ்வொரு அடிக்கும் சதைத்துகள்கள் தெரித்து கீழே விழுந்தன..ரத்தம் சீறிப்பாய்ந்து சிதறியது...கீழே மூட்டப்பட்ட நெருப்பினால்
அவள் கால் முதல் அடிவயிறு வரை சதை வெந்துபோனது.."
" நிறுத்து...நிறுத்து..அவளுக்கு பின்புறம் செய்தது போல முன்புறமும் செய்யுங்கள் " என்றான் அந்தக்கோழை . அவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டது.
" என்ன ஃபெப்ரோணியா...இப்போது என்ன சொல்கிறாய்..பணிந்து போகிறாாயா... அல்லது உயிரை விடப்போகிறாயா? "
அதற்கு ஃபெப்ரோணியா," உனக்கு நன்றி " என்றாள்..
செலினோ ஆச்சர்யமாக " நன்றி எதற்கு " என்றான்.
ஃபெப்ரோணியா," செலினோ...நாங்கள் தினமும் ஆண்டவறாகிய யேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிப்பது வழக்கம்...அதில் யேசு கற்றூணில் கட்டுண்டு அடிபடுவதையும் தியானிப்போம்... அவர் எவ்வளவு பாடுகள் பட்டார் என்பதை இப்போது எனக்குப்புறிய வைத்ததற்கு உனக்கு நான் நன்றி செலுத்துகிறேன்" என்றாள்.
இவ்வளவு வேதனைகளிலும் இவளால் எப்படி இப்படி நம்மை கேவலப்படுத்த முடிகிறது என்று வியந்தான் செலினோ..இருப்பினும் "ஆ..பெண்ணே உன் மன உறுதியை குலைகிறேன் பார் " என்று கூறி கூரானஇரும்பு ஆணிகளால் ஆன ஒரு பெரும் இரும்பு சீப்பால் அவள் தலை முதல் கால் வரை அழுத்தி இழுத்து அவள் தோலை உறித்தார்கள்..
[இதன் வேதனை எவ்வளவு இருந்திருக்கும் என்று நேயர்கள் உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன்]. இவ்வாறே அவளது முன் பக்கத்திலும் செய்ய ப்பட்டது.
" ஃபெப்ரோணியா... இப்போது எப்படி இருக்கிறது...வீணே அடம் பிடிக்காதே...உன் உயிரைக்காப்பாற்றிக்கொள்ளும் வழியைப்பார்..என்னிடம் நல்ல வைத்தியர்கள் இருக்கிறார்கள்" என்றான்.
அதற்கு ஃபெப்ரோணியா," அடே நிர்மூடா...உனக்கு இன்னுமா புரியவில்லை..இவ்வளவு வேதனைகளிலும் நான் பேசுவது என் யேசு நாதரின் அருளாலும் அவர்தம் பரிசுத்த ஆவியின் வல்லமையாலும்தான் என்பதை நீ முதலில் உணறு...உன் வைத்தியம் ஒன்றும் எனக்குத்தேவை இல்லை.. என் யேசுவே பரலோக வைத்தியர்...அவர் அருள் இருந்தால் போதும்.
செத்தவனும் உயிர் பிழைப்பான் " என்றாள். இந்த பதில் செலினோவை மேலும் வெறி கொள்ள வைத்தது...
" அடிப்பெண்ணே...நீயா எனக்கு புத்தி சொல்வது...உன் நாதன் பரலோக வைத்தியனா... இப்போது பார்க்கிறேன் அவர் என்ன செய்கிறார் என்று " என்று கூறி "அடேய்.. அவள் மார்பகங்களை அரிந்துவிடுங்கள்" என்றான் அந்த நிர்மூடன்.. உடனே ஒரு வைத்தியன் ஒரு கத்தியோடு அங்கு வந்தான்..ஃபெப்ரோணியாவின் வலதுபக்க மார்பை முதலில்
அறிந்தெடுத்தான்... அதை பொது மக்கள் முன்பாக காட்டி அதை தரையில் வீசினான்..அப்போது மக்கள் அனைவரும் கூடி அழுது "வேண்டாம் ஆளுனர் அவர்களே... இந்த சிறிய பெண்ணுக்கு இத்தனை கொடிய தண்டனை வேண்டாம்... வேண்டாம் என்று கதறினர்...அப்போதும் மனம் இரங்காத செலினோ " அடேய் வைத்தியா... அங்கே என்ன வேடிக்கை
அவளது இடது பக்க மார்பையும் அறுத்தெறி" என்றான்.. இந்த நேரத்தில் நம் ஃபெப்ரோணியா அதிகபட்ச பாடுகளை அனுபவித்தாள்.. ஆண்டவரே என் மேல் இரக்கம் வையும்..எனக்கு இப்பாடுகளைத்தாங்க வரம் தாரும் .. ஏழை என்னை கைவிடாதேயும் " என்று கதறி அழுது வேண்டினாள்.
அப்போது செலினோ," ஆ...இப்போதுதான் உனக்கு வலிக்கிறதா... இப்போது எங்கே போய்விட்டார் உன் யேசுநாதரும் அவர்தம் பரிசுத்தஆவியும்..." என்றான்.
அப்போது அரங்கத்தின் நடுவிலிருந்து துள்ளிகுதித்து ஓடிவந்தாள் ஹீரியா.." ஆளுநர் அவர்களே... உங்களுக்கு அதிகாரம் இருப்பதென்பதற்காக அதிகம் ஆட்டம் போட வேண்டாம்...எல்லோருக்கும் மேலாக ஆண்டவன் என்று ஒருவன் இருகின்றான்...அவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருகின்றான்... நீர் என்ன காரியம் செய்தீர்... ஒரு பெண் என்றும் பாராது இத்தனை பேர் முன்னிலையில் அவளை அம்மணமாக்கி அவள் மார்பகத்தைக்கொய்ய உனக்கு எப்படி மனம் வந்தது...நீயும் உன் தாயின் மார்பகத்தில் பால் உண்டு வளர்ந்தவன்தான் என்பது மறந்து போயிற்றா? அந்த மார்பகம் எத்தனை மகத்துவம் மிக்கது என்பதை உன் மனைவி உனக்கு சொல்லவில்லையா... தூ... நீயும் ஒரு மனிதனா ?
வெட்க்கம் இல்லை உனக்கு... உன்னை கேள்வி கேட்க்க ஆள் இல்லை என்ற நினைப்பா? என்று பொறிந்து தள்ளிவிட்டாள். ஒரு நிமிடம் திடுகிட்டுப்போனான் செலினோ.
இத்தனை பேர் முன்னிலையில் ஒரு சிறு பெண் அவமானப்படுத்திவிட்டாள் என்று உண்ர்ந்து கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் செலினோ. அதன் விளைவாக," யார் அங்கே பிடித்துக்கட்டுங்கள் இவளை... இவளையும் இந்த ஃபெப்ரோணியாவுடன் சேர்த்து கொன்றுபோடுகிறேன் " என்று கத்தினான். "அடிப்பெண்ணே நான் என் தலைவனும் அரசனுமான
தியோக்குலேசியனின் ஆணையைத்தான் நிறைவேற்றிக்கொண்டிருகின்றேன். என்னை கடமையை செய்ய விடாது தடுக்கும் உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று கத்தினான்..
அதற்கு ஹீரியா," அடப்போய்யா நீயும் உன் தியோக்குலேசியனும்.. நீங்கள் இந்த பூமியில் தோன்றும் அனைத்து மக்களிலும் சபிக்கப்பட்டவர்களாக இருப்பீர்களாக..நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் கருவான நேரம் முதல் சபிக்கப்பட்டதே..உங்களை நியாயமுள்ள கடவுள் தீர்வையிடட்டும்... அது எத்தனை கொடிதாக இருக்கும் என்பதை நீ அணு அணுவாக துடித்துதுடித்து
உணர்ந்து பார்த்து சாகக்கடவாய்" என்று மண்ணை வாறித்தூற்றினாள்..".கைது செய்து இந்தபெண்ணை என் முன்னே கொண்டுவாருங்கள்.. இவளது முடிவும் இந்த பெண் ஃபெப்ரொபெணியா போன்றே இருக்கட்டும் " என்றான் செலினோ.
ஆனால் ஹீரியா," மிக்க நன்றி ஆளுநர் அவர்களே.. மிக்க நன்றி.. இந்தப்பெண் ஃபெப்ரோணியாவுடன் மரிக்க நானும் சித்தமாக இருக்கிறேன்...ஃபெப்ரோணியா அன்று நான் ஆசைபட்டது இன்று நிறைவேறப்போகின்றது " என்றாள்.. இதற்குள் அரங்கத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு கலவரம் ஏற்படும் போல் ஒரு தோற்ற்றத்தை கவனித்தார் லிசிமாக்கு..
ஓடிவந்து தன் சித்தப்பன் செலினோவின் கைகளைப்படித்துக்கொண்டு," சித்தப்பா..அடக்கி வாசியுங்கள்...இந்தப்பெண் ஹீரியா பெரிய இடத்துப்பெண்... செனட்டரின் மகள்... அவள் கணவரும் ஒரு செனட்டர்.அவள் உறவினர் பலர்இப்போது அரசாங்கத்தில் பெரும் பதவியில் இருகிறார்கள்..இங்கே கலவரம் மூளும் அபாயம் இருகின்றது.. அந்தப்பெண் ஹீரியாவின் மேல்
கொண்ட பாசத்தால் இங்குள்ள அனைவருமே மரிக்கவும் சித்தமாகிவிடுவர்..இந்த ஊரே சுடுகாடாகிவிடும் .பிறகு நம் பதவிக்கு ஆபத்து..இவளை நாம் அப்புறம் கவனித்துக்கொள்ளலாம்...இப்போது ஆக வேண்டிய காரியத்தைப்பாருங்கள்...ஃபெப்ரோணியாவைப்பாருங்கள் " என்றார்..உண்மையில் ஹீரியாவை அவர் சித்தப்பன் செலினோவின்
கோபாக்கினையிலிருந்து காப்பாற்றவே அவர் இவ்விதம் கூறி ஹீரியாவை காப்பாற்றினார்.
"ஒருத்தியை பணியவைக்க தான்னால் முடியவில்ல...இப்போது மேலும் ஒரு சிறு பெண் தன்னை இத்தனை பேர் முன்னிலையிலும் அவமானப்படுத்திவிட்டாள்... இருக்கட்டும் இருக்கட்டும்.. இந்த ஊர் மக்களை நான் அப்புறம் கவனித்துக்கொள்கிறேன்" என்று தன் கோபம் அனைத்தையும் இப்போது ஃபெப்ரோணியாவின் மீது திருப்பினான் செலினோ.
" ஃபெப்ரோணியா... இப்போது என்ன சொல்கிறாய்...உன் நாதன் யேசு ஏன் இன்னும் வந்து உன்னைக்காப்பாற்ற வரவில்லை?" என்றான்..ஃபெப்ரோணியா, " என் நாதன் யேசு இதோ சொர்கத்தில் எனக்கான வேத சாட்சி முடியோடு எண்ணிறைந்த சம்மனசுகள் புடை சூழ காத்துக்கொண்டிருப்பதை நான் காண்கிறேன்...ஏன் என்னை வீனே காத்திருக்க வைத்துக்கொண்டு இருகிறாய்...தாமதிக்காதே...என்னை என் நாதனோடு விரைவிலேயே சேர்ப்பிப்பாயாக" என்றாள்... இத்தகைய வார்த்தைகளாய் வெறுப்புற்ற செலினோ," ஓஓஓஓ..உன் வாலிபமும் இளமையும் இவ்வேதனைகளை தாங்க வைக்கிறதோ அதை இப்போது நீக்குகிறேன் பார்" என்று அவள் வாயிலுள்ள பற்கள் அனைத்தையும் பிடுங்க உத்தரவிட்டான் அந்தப்படுபாவி..
வைத்தியன் ஒருவன் உதவியோடு அவள் முன் வரிசைப்பற்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டதால் பெரும் ரத்தக்கசிவு ஏற்படவே பரிதாபத்துக்குறிய நம் ஃபெப்ரொணியா மயங்கிச்சாய்ந்தாள்... அவளை மேலும் சித்திரவதை செய்து அவளை எப்படியாவது யேசுவை மறுதளிக்க வைத்துவிடவேண்டும் என்ற அவனதுதிட்டம் நிறை வேறாமல் போனால் தான் தோல்வியை அல்லவா தழுவ வேண்டும்.. அது தனக்கு சமுதாயத்தில் எவ்வளவு கெட்ட பெயர் ஏற்படுத்தும்...கூடாது..கூடாது...இவளை உயிரோடு வைத்து மேலும் சித்திரவதை செய்து தான் வெற்றியடைய வேண்டும் என்று கருதியதால், " அடேய் வைத்தியா... போதும் நிறுத்து..எத்தனை பற்கள் பிடுங்கினாய்?" என்றான் செலினோ..
" பதினேழு பற்கள் பிடுங்கி இருகிறேன் ஐய்யா...இவளுக்கு கூடிய சீகிரம் ஜன்னி காணும் அபாயம் இருகின்றது " என்றான் வைத்தியன்.
" அவள் ரத்தப்போக்கை நிறுத்து... அவள் மேலும் துன்பப்பட வேண்டும் ..இனி நானா அவளா என்று பார்த்துவிடுகிறேன்" என்றான் செலினோ. வைத்தியன் ஒரு சில மூலிகைகளை அவள் வாயில் வைத்து அவள் ரத்தபோக்கை நிறுத்தினான்..சிறிது நேர இடைவெளியில் செலினோ," ஃபெப்ரோணியா...உதுதான் நீ பேசும் கடைசிப்பேச்சாக இருக்கும்... மரியாதையாக உன் தோல்வியை ஒத்துக்கொள்..உன் யேசு நாதரை மறுதளி" என்றான்..ஆனால் ஃபெப்ரோணியா," என் நாதர் யேசு வாழ்த்தப்படுவாறாக.. என் யேசுவின் திருநாமமும் என்றென்றும் வாழ்த்தப்படுவதாக... ஆமென்" என்றாள்..உடனே ஆணை பிறந்தது..." அடேய் வைத்தியா..அவள் நாவை உடனே அறுத்துப்போடு." என்றான் அந்தப்படுபாவி.. வைத்தியனிடம்
தன் நாவை கூடியவரையிலும் நன்றாக நீட்டினாள் ஃபெப்ரோணியா...வைத்தியன் அதை மேலும் இழுத்து அவள் அடிநாக்குவரை அறுத்துப்போட்டான்...அப்போதே மயங்கிச்சாய்ந்தாள்
ஃபெப்ரோணியா... அரங்கில் கூடியிருந்த மக்கள் அனைவரும் கிரிஸ்த்துவர்... கிரிஸ்த்துவர் அல்லாதோர் என்று அனைவரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மேற்கொண்டு அந்த துக்ககரமான நிகழ்ச்சிகளைப்பார்க்க இயலாமல் அரங்கைவிட்டு வெளியேறினர்.இதனை தன் கொடும் புத்திக்கு விடப்பட்ட சவால் என்று நினைத்த செலினோ மேலும் அவளை
என்னவிதமான ஆக்கினையால் கொடுமைப்படுத்தலாம் என்று நினைத்தவனாக," அடேய் ..இவள் கைகள் இரண்டையும் கால்கள் இரண்டையும் வெட்டிப்போடுங்கள் " என்று உத்திரவிட்டான்.
ஒரு பெரும் பலகை ஒன்று கொண்டுவரப்பட்டு ஃபெப்ரோணியா அதன் மீது படுக்க வைக்கப்பட்டாள்...கைகளுக்குக்கீழ் ஒருகட்டைமுட்டுகொடுக்கப்பட்டது... கைகள் இரண்டும்
வெட்டப்பட்டன.. இடது காலுக்குக்கீழை ஒருகட்டை ஒன்று வைக்கப்பட்டது. கோடாரியை ஓங்கி வீசினான் ஒரு வீரன்..அனால் அது அவள் காலை வெட்ட வில்லை.. ஒன்று இரண்டு மூன்றுமுறை வீசியும் அவனால் ஃபெப்ரோணியவின் காலை வெட்டமுடியவில்லை..நான்காவது முறையும் வீசவே கால் துண்டானது...இவ்வளவு பாடுகளிலும் ஃபெப்ரோணியா தன்
வலது காலையும் வெட்டப்படுவதற்காக நீட்டிக்கொடுத்தாள்... கடைசியில் அதுவும் துண்டிக்கப்பட்டது.
ஃபெப்ரோணியோயாவின் இவ்வளவு பாடுகளையும் துக்கமயமாக பார்த்துக்கொண்டிருந்த லிசிமாக்குக்கு வேதனை அதிகரித்து இனிமேலும் பொறுக்க முடியாதெனவும் சற்று நேரமாவது ஃபெப்ரோணியாவுக்கு ஆறுதலாக ஓய்வு கொடுக்கவேண்டியும் தன் சித்தப்பனை அழைத்து," சித்தப்பா...போதும் வாருங்கள்.. அவள் பாட்டுக்கு துடிக்கட்டும்... நாம் அதற்குள் போய் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வரலாம்... எனக்கு பசிக்கிறது என்றான்...
ஆனால் செலினோ,' மகனே லிசிமாக்கு... எனக்கு பசிக்கவில்லை.. இந்த சின்ன சிறுக்கி என் பொருமையை எவ்வளவு சோதித்துவிட்டாள் பார்த்தாயா... என் ஆயுளில் இப்படி ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை...தியோக்குலேசியனின் மேல் ஆணை... இவளைக்கொல்லாமல் நான் வரப்போவதில்லை... நீ போய் சாப்பிடு.. நான் பிறகு வருகிறேன்" என்றான்.
இனிமேல் தன்னால் எதுவும் செய்வதிற்கில்லை என்றறிந்த லிசிமாக்கு " இவளை கடவுள் பார்த்துக்கொள்ளட்டும் ..இந்தப்பாதகனையும் கடவுள் பார்த்துக்கொள்ளட்டும்" என்றார்.
இனிமேலும் ஃபெப்ரோணியாவை பணிய வைக்க முடியாது என்றுணர்ந்த செலினோ கடைசியில் அவள் தலையையும் வெட்ட உத்தரவிட்டான்...வீரன் ஒருவன் வந்து அவள் தலைமுடிகள் அனைத்தையும் சேர்த்து கொத்தாகப்பிடித்துக்கொண்டு ஒரே வீச்சில் அவள் தலையை கொய்தான்...அரங்கத்தில் பார்த்துக்கொண்டிருந்த பல பெண்கள் இத்தகைய கோர முடிவை ஃபெப்ரோணியா அடைந்ததற்கு பெரிதும் துக்கப்பட்டு மார்பில் பிழை அறைந்துகொண்டார்கள்... பல பெண்கள் மூர்ச்சை ஆனார்கள்...பலர் செலினோவை சபித்து மண்னை வாறி தூற்றிச்சென்றனர்.
நல்லதோர் வீணை செய்தே அதை நலன் கெட புழுதியில் எறிவருண்டோ....ஃபெப்ரோணியா என்னும் அழகிய தேவதை...நாதனாம் யேசுவுக்கு மிகவும் உறியவள்..மிகவும் கோரமான மிகுந்த வேதனைமிகுந்த பாடுகளால் தன் பர்த்தாவகிய யேசுநாதருக்கு ராஜ விசுவாசத்துடன் சாட்ச்சியமளித்தாள்...அவள் கன்னிமாடத்தில் இருந்தவரை அழகிய வீனையாய் மீட்டிய பாடல்கள் எத்தனை...ஆனால் அந்த அழகிய வீணையின் தந்திகள் அறுபட்டு... சுரவரிசைப்பலகை வெட்டப்பட்டு... குடம் வெட்டப்பட்டு...கலைத்துப்போட்டாற்போல் நம் வீரக்கன்னிகை வெப்ரோணியாவும் தலை வேறாகவும்...கைகள் வேறாகவும்...கால்கள் வேறாகவும் பிறிக்கப்பட்டு அழகிய வீணையை வெட்டிக்கலைத்து போட்டாற்போல் அந்த அரங்கத்தில் கிடந்தாள்...ஆனாலும் அவள் முகம் அழகாகவே இருந்தது.. அது வானத்தைப்பார்த்தாற்போலவே இருந்தது..
நம் அழகிய ஃபெப்ரோணியா தலைவெட்டப்பட்டு இறந்துபோய்விட்டாள் என்று கேள்விப்பட்ட உடன் லிசிமாக்கு அரங்கத்துள் நுழைந்து பொதுமக்க்ள் யாவரும் அரங்கத்தில் நுழைந்து அவளது உடலை எடுத்துச்செல்லாதபடிக்கு மிகுந்த காவல் போட்டார்..
தன் தோல்வியை ஒத்துக்கொண்ட செலினோ ஃபெப்ரோணியா இறந்த உடன் வானத்தையே அன்னார்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்...பிறகு என்ன நினைத்துக்கொண்டானோ என்னவோ " கலிலேயனே கடைசியில் நீ என்னை வென்றுவிட்டாய்" என கத்தினான்....பிறகு மிருகம் போல் தன் உடலை வளைத்து வளைத்து என்னென்னொவோ செய்தான்..
அவன் கண்கள் மீண்டும் ரத்த சிகப்பாய் மாறின... முகம் கோரமாகியது.. அவனைக்காணவே மக்கள் அஞ்சினர்...பல மிருகம் போல் கத்தினான்... எருமைமாட்டைப்போல் கத்தினான்.
பலவிதமான மிருகங்களின் சப்பத்தங்களை எழுப்பிக்கொண்டு நீண்டு உயர்ந்த அந்த ரோமை அரண்மணையின் தூண்களில்" மடேர் மடேர் " என முட்டிக்கொண்டான்...அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் புறியவில்லை... அவனை யாரும் கேட்கவும் விரும்பவில்லை...அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் ஒன்றுதான்.. அதையே திரும்ப திரும்ப
சொல்லிக்கொண்டிருந்தான்... அதுதான் " கலிலேயனே... நீ என்னை ஜெயித்துவிட்டாய்" என்பது தான்...அவன் தூண்களில் முட்டிக்கொள்ளும்போது அவனை தடுப்பாரும் யாரும் இல்லை...கடைசியாக தன் பலம் அனைத்தையும் சேர்த்து " மடேர் " என்று முட்டவே அவன் தலை உடைந்து மூளை யாவும் வெளியே வந்து விழுந்தது..அவன் கண்கள் குத்திட்டு
நின்றன. மிகுந்த கோரமாக மரித்திருந்த அவனை யாருக்கும் காணவே சகிக்கவில்லை...
ஃபெப்ரோணியா இறந்த சிறிது நேரத்திலேயே கொடியவன் செலினோவும் இறந்தவிட்டான் என்பதை கேள்விப்பட்ட லிசிமாக்கு "ஆண்டவர் அவனை பழிவாங்கிவிட்டார்" என்று சப்த்தமாக கூறினார். பிறகு உரத்தகுரலில்," மக்களே நீங்கள் எந்த மதத்தவறாக இருந்தலும் பரவாயில்லை... முதலில் நம் ஃபெப்ரோணியாவை நல்ல விதமாக அடக்கம் செய்வோம்...மறைந்து வாழும் கிரிஸ்த்துவர்கள் யாவரும் வெளியே வாருங்கள்.. நான் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் தருகிறேன்... கொடியவன் செலினோ ஒழிந்தான்..மக்களே
வெளியே வாருங்கள்" என்றார்..
இத்தகைய ஒரு அறிவிப்பால் மறைந்து வாழ்ந்த கிறிஸ்த்துவர், கன்னிகைகள், குருக்கள், ஆண்டவர் என அனைவரும் தத்தம் மடாலயங்களுக்கு திரும்பினர்..
லிசிமாக்கு நன் வீரக்கன்னிகை ஃபெப்ரோணியாவின் அனைத்து உடல் பாகங்களையும் ஒன்று சேர்த்து அவன் ரத்தம்பட்ட மண்ணைக்கூட விடாது மிகவும் பவ்வியமாக அக்காஸியா என்னும் மரத்தால் ஆன ஒருஅழகிய பெட்டி செய்து அவள் வசித்த அந்த கன்னி மாடத்திற்க்கு அரசாங்க மரியாதையுடன் கொண்டு வந்தார்.. அவள் அடக்கதிற்கு ஏறாளமான மக்கள்
வந்திருந்தனர்.
அந்த மடத்துத்தலைவி ப்ரையீன் தன்னால் இரண்டுவயதுமுதல் அருமையாக வளர்க்கப்பட்ட மகள் போன்ற ஃபெப்ரோணியா இப்போது கொடுமையான பாடுகள் பல பட்டு யேசுவுக்கு சாட்சியாய் மரித்துபோய் இருந்த அவளின் உடலைப்பார்த்து," மகளே ஃபெப்ரோணியா...உன்னில் நான் பெருமை அடைகிறேன்... இனி யாரம்மா தினமும ஆண்டவருக்கு புகழ் பாடல்
பாடுவது...உன் குரல் வீணையிலும் அழகானேதே...இனி யார் அம்மா ஞான வாசகம் படிப்பது... யார் படித்தாலும் அது உனக்கு ஈ டாகுமா...நீ அமர்ந்த அந்த நாற்காலியில் இனி யார் அம்மா உட்காருவார்...என் மகளே ... என்னைவிட்டுப்போய்விட்டாயே அம்மா...ஃபெப்ரோணியா" என்று அழுது புலம்பித்தள்ளினார்..
ஒரு வழியாக வீரக்கன்னிகை ஃபெப்ரோணியாவின் திருவுடல் பூச்சிதமாக அந்த கன்னிமாடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. பிறகு சில வருடங்களுக்குபிறகு அந்த நிசிபி பட்டிணத்தில் ஒருதேவாலயம் கட்டப்பட்டு அந்தநகர ஆண்டவர் பெரும் திரளான மக்களுடனும் அந்த மடத்து கன்னியர்கள் பலருடனும் சேர்ந்து கல்லறையை தோண்டி எடுக்க
எத்தனிக்கையில் வானம் கிடுகிடுத்தது...பூமி அதிர்ச்சி ஏற்பட்டது... இடி இடித்து தன் கோபக்கண்டனத்தை காட்டியது.. யாரும் நம் ஃபெப்ரோணியாவின் கல்லறையை தோண்டக்கூடாதென அது உறுதியாக கூறிவிட்டது போல் இருந்தது. இருப்பினும் ஆண்டவரும் குருக்களும் கன்னிகைகளும் பொது மக்களும் பக்தி சிரத்தையோடு வேண்டிக்கொண்டதற்கு இணங்க இயற்க்கை தன் சீற்றத்தை நிறுத்திக்கொண்டது. கல்லறை தோண்டி அவரது சடலம் இருந்த அந்த அக்காஸியா மரத்தால் ஆன பெட்டி வெளியே
எடுக்கப்பட்டது.
ஆண்டவர் அந்தகன்னிமாடத்து தலைவி ப்ரையீனை அழைத்து," அம்மா...நீங்கள் தான் நம் ஃபெப்ரோணியாவை வளர்த்தவர்.ஆளாக்கியவர்...ஆகவே உங்களுக்குத்தான் நம்
ஃபெப்ரோணியவின் திரு உடலைத்தொட உரிமை உண்டு... நம் ஃபெப்ரோணியாவும் அதைத்தான் விரும்புவார்.. ஆகவே நீங்கள் ஃபெப்ரோணியாவின் அருளிக்கங்களை வெளியே எடுங்கள்" என்றார்... தலைவி ப்ரையீனும் ஃபெப்ரோணியாவின் திரு உடலை தொட்ட மாத்திரந்தில் அவள் கை அப்படியே நின்று போய்விட்டதை உண்ர்ந்தார்...அவர் கண்களில் கண்ணீர் பெருகின." மகளே ஃபெப்ரோணியா... உன் பெயர் விளங்குவதர்காகத்தானே அம்மா நம் வணக்கத்துக்குறிய ஆண்டவர் உன் பெயரில் ஒரு அழகிய தேவாலயம் கட்டி அதில் உன் திரு
உடலை வைக்க சித்தம் கொண்டார்..நீர் இப்படி உன்னை வளர்த்த என் கைகளை முடமாக்கலாமா?... என் செல்ல மகளே..நீ இப்படி செய்யலாகாது.. எனக்கு என் கைகளை மீண்டும் கொடு அம்மா.." என்று கண்ணீர் மல்க வேண்டினார்..அப்போது அவரது கரங்கள் மீண்டும் செயல்பட துடங்கின.. இந்த பேரதிசியத்தைக்கண்ட ஆண்டவர்," அம்மா.. நம் ஃபெப்ரோணியா
விடம் முழுவதும் அல்ல என்றாலும் அவள் தேவாலயத்தில் வைக்க ஏதாவது ஒரு அருளிக்கத்தை கேட்டு வாங்குங்கள் " என்றார். அப்போது ப்ரையீன்," அம்மா ஃபெப்ரோணியா.. . உன் முழு உடல் அல்ல என்றாலும் உன் உடலின் உறுப்புகளில் எதாவது ஒரு அருளிக்கமாக உன் ஆலயத்தில் வைக்க எனக்கு கொடுக்க வேண்டும்" என்றார்.. மடத்துத்தலைவியின் வேண்டுதல் கேட்க்கப்பட்டது. தலைவி ப்ரையீன் கரங்களில் கிடைத்தது ஃபெப்ரோணியாவின் ஒரு பல் மட்டுமே..இந்த அருளிக்கத்தை பல் போன்ற அமைப்புள்ள ஒரு பீங்கான் பாத்திரம் செய்து அதிலையே அந்த பல்லை வைத்து அந்த தேவாலயத்தில் அருளிக்கமாக வைத்தார்கள். .வேறு எந்த அருளிக்கத்தையும் அவள் எடுத்துச்செல்ல அனுமதிக்கவில்லை..
இதற்கு இடையில் ஃபெப்ரோணியாவின் தோழி அந்த செனட்டரின் மகள் ஹீரியா தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்தாள்.. தன் தங்க அணிகலன்கள் அனைத்தையும் உருக்கி அந்த அக்காஸியா மரத்தால் ஆன சாவுப்பெட்டியை தங்கத்தால்மூடி மீண்டும் அந்த கன்னிமடத்திலுள்ள கல்லறையிலேயே அடக்கம் செய்தனர்.
அடக்கம் எல்லாம் நல்ல விதமாகமுடிந்த பின்னர் இரவு ஜெபம் செய்யும் வேளையில் நம் ஃபெப்ரோணியா வழக்கமாக அமரும் அந்த நற்காலியில் ஃபெப்ரோணியா பெரும் ஜோதிப்பிழம்பாக
அமர்ந்திருக்கும்படியாக கண்டனர்... ஆனால் யாருக்கும் அவரிடம் பேசக்கூடிய தைரியம் வரவில்லை...ஆனால் அவளை வளர்த்த அந்த சபைத்தலைவி ப்ரையீன் அவர்கள்,"அம்மா...மகளே...ஃபெப்ரேணியா என்று சொல்லி அவரைக்கட்டிக்கொள்ளப்பார்த்தார்... ஆனால் அவள் சடுதியில் மறைந்துபோனாள்... பல காலங்களுக்குப்பிறகு நம்
ஃபெப்ரோணியாவுக்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டம் கொடுத்து கௌரவித்தது. மீண்டும் கி.பி. 363ல் அவரது சமாதி தோண்டி எடுக்கப்பட்டு அவரது அருளிக்கங்கள் கான்ஸ்டான்டி நேபிள்ஸ் கொண்டு செல்லப்பட்டது.. அவரது அருளிக்கங்கள் அவரது பக்தி முயற்சியை பரப்பும் விதமாக பல இடங்களுக்கும் பிறித்து கொண்டு செல்லப்பட்டது. இப்போது
நிசிபியிலுள்ள அவரது சமாதி காலியாகவே உள்ளது. இருப்பினும் அவரது வெட்டப்பட்ட கை ஒன்று புகைப்படமாக எனக்கு கிடைத்தது. . நம் புனிதை வீரக்கன்னிகை ஃபெப்ரோணியா வின் திருவிழா ஜுன் 25 [ கி.பி.304 ] அன்று கொண்டாடப்படுகிறது.
ஹீரியாவும் அவள் பெற்றோர் மற்றும் உறவினர் அனைவரும் ஞாஸ்நானம் பெற்று கிறிஸ்துவர்கள் ஆயினர். ஹீரியா தான் மீண்டும் மறுமணம் செய்துகொள்ள இஸ்ட்டப்படாமல் தன் தோழி ஃபெப்ரோணியாவின் வழியே சென்று கன்னிகா ஸ்த்ரீ ஆனாள்... அன்று ஃபெப்ரோணியாவை சந்திக்க அந்த மடத்துத்தலைவி கொடுத்த அதே உடை மீண்டும் அவளுக்கு
நிரந்தரமாக கொடுக்கப்பட்டது. ஃபெப்ரோணியாவின் இடத்தில் அமர்ந்து மீண்டும் ஞான வாசகம் படிக்க தகுதியான ஆளாக ஃபெப்ரோணியா தன் தோழி ஹீரியாவை தெரிந்துகொண்டாள் என மடத்துத்டலைவி பெருமையாய் கூறிக்கொண்டார்.
அந்த அரங்கத்தில் ஃபெப்ரோணியாவின் பாடுகளைக்கண்ட பெரும் திரளான மக்களும் கிரிஸ்த்துவர்கள் ஆயினர். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது ஒன்றுக்கு நூறு ஆக பலன் தறாது என்னும் வாக்கு உண்மையானது.
இந்த நிசிபிஸ் பட்டிணத்திலுள்ள புனித ஃபெப்ரோணியாவின் வாழ்க்கை வரலாற்றை அவருடன் வாழ்ந்த அந்த மடத்து உப தலைவி தோமாய் மிகச்சரியாய் எழுதிவைத்துள்ளதால் நமக்கும் அவரது வரலாற்றை அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த நிசிபிஸ் பட்டிணத்து அதிபதிபாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட லிசிமாக்கு அங்கு சமாதானத்தை நிலை நாட்டிவிட்டு தன் சகோதரனும் தளபதியுமான பிரியாமை அழைத்துக்கொண்டு அந்தக்கல்மலைகள் சூழ்ந்திருந்த ஒரு பாலைவனத்தின் நடுவே அமைந்திருந்த ஒரு மடாலயம் ஒன்றில் தங்கி அங்கே தவம் செய்துகொண்டிருந்த பல துறவிகளுடன்
ரகசியாமாக் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு அவர்களுக்கு தலைமுடி வழிக்கப்பட்டு துறவிகளுக்கான ஆடை கொடுக்கப்பட்டது.. அவர்கள் வந்த குதிரைகள் அனாதைகளாக அங்கே மேய்ந்துகொண்டிருந்தன.

No comments:
Post a Comment