Wednesday, November 27, 2013

" பைபிலோஸ் நகரின் சின்னக்கழுகு புனித அக்வீலினா "



" பைபிலோஸ் நகரின் சின்னக்கழுகு புனித அக்வீலினா "

      பறவைகளில் கழுகிற்கு ஒரு தனி இடம் உண்டு..பறவைகளில் அது ராஜா. அதன் கூறிய கண்களும், தெளிவான பார்வையும், தீர்க்கமான தாக்குதலும் தன் வெற்றிகரமான   வேட்டையை நடத்துவதில் அதற்கு நிகர் அதுவேதான். அதன் காரணமாக அது பழைய காலங்களில் ரோமை சாம்ராஜ்ஜியத்தின் சின்னமாகவும், இக்காலத்திலும் அமெரிக்காவின் ராஜ சின்னமாகவும் இருக்கின்றது. கழுகின் சின்னத்தை தாங்கிய பல நாடுகள் இன்றும் உண்டு. நம் புனிதை அக்வீலினாவுக்கு லத்தீன் மொழியில் சின்னக்கழுகு என்று பெயர்.
நம் புனிதை அக்வீலினா பிறந்த ஊர் பைபிலோஸ் எனப்படும் ஒரு கடற்கரைப்பட்டிணம்.
        பைபிலோஸ் எனப்படும் நகர் இன்றைய லெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுகப்பட்டிணம். இந்த நகரத்துக்கு கிறிஸ்த்து பிறப்பதற்கு முன் 7000 ஆண்டு வரலாறு இருப்பதால் உலகில்  நிலைத்து நிற்கும் மிகப்பழைய பல நாடுகளில் இந்த பைபிலோஸ் பட்டிணமும் ஒன்று..உண்மையில் இந்த லெபனானியர்கள் குடிபெயர்ந்து வந்தவர்களே.. வேத காலத்தில் பாபிலோனில்  இருந்த மிகப்பெரிய கட்டிடமான பாபேல் கோபுரம் கடவுளால் சபிக்கப்பட்டு மனிதர்கள் உலகின் பலபகுதிகளுக்கும் பிறிந்து சென்றார்கள் அல்லவா... அப்படி சென்றவர்களில் பலர்  செமிட்டிய இனத்தை சேர்ந்தவர்கள்...இந்த பைப்லோஸ் கடற்கரைப்பட்டிணத்தில் குடிபெயர்ந்தனர்..அங்கு நாகரீகம் வளர்ந்து புதிய பாஷையும் உருவாகியது... அப்படி ஆரம்பித்த  பாஷைதான் கிரேக்கம் எனப்பட்டது..அதன் அடிப்படை எழுத்துக்கள் ஆல்பாவும்,பீட்டாவும்,,, ஒமேகாவும்...தீட்டாவும் இந்த பைப்லோஸ் நகரிலேதான் உருவாகின..
       இந்த பொனிசியர்களுக்கு கடல் வாணிகத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்ததால் எகிப்த்து கார்த்தேஜ் எனப்படும் இறைய துனிஷியா போன்ற நாடுகள் வரை தங்கள் வியாபாரத்தை  பெருக்கினர். இறக்குமதியாக அந்தந்த நாடுகளிலிருந்து வாசனைதிரவியங்கள், மருந்து வகைகள் பாப்பிரோஸ் எனப்படும் ஒருவகை நாணல்கள் ஆகியற்றை தங்கள் நாடுகளுக்கு
கொண்டு வந்தனர்...இதற்கு தீர் சீதோன் போன்ற கடற்கரைப்பட்டிணங்கள் உதவின...எனவே அவை சிறந்த வியாபார கேந்திரமாக விளங்கின...ஆனால் இந்த பைப்லோஸ்   கடற்கரைப்பட்டிணமாக இருந்ததால் அது வியாபர கேந்திரமாகவும் மதம், கலை, மற்றும் கலாச்சார கேந்திரமாக விளங்கியது...பாப்பிரோஸ் எனப்படும் எகிப்த்திய நாணலிலிருந்து காகிதம்
செய்யப்படும் முறையை இந்த பொனிசீயர்கள் கண்டு பிடித்ததும் அனைத்து பிரிவுகளிலும் அதன் பயன்பாடு அதிகரித்தது...இப்படியாக வேத நூலான் பைபிள் இங்கிருந்துதான்  அதாவது இந்தபைப்லோஸ் நகரிலிருந்துதான் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது எனவும், வேத நூலான பைபில் எனப்படும் வார்த்தை இந்த பைப்லோஸ் என்னும் பெயரை ஒட்டியே
வைக்கப்பட்டதாகவும் ஒரு சரித்திரம் உண்டு. புனித மார்க் சுவிஷேகர் இந்த பைப்லோஸ் நகரின் முதல் ஆயராக கி.பி.44 முதல் 68 வரை பதவி வகித்தார்.
இந்த லெபனான் நாட்டினரை பழைய காலத்தில் பொனீசியர்கள் என்றழைத்தனர். உண்மையில் பொனீசியா என்று ஒரு நாடே இல்லை...ஆனாலும் சரித்திரத்தில் பொனீசியா   என்ற பெயர் நிலைத்துநின்றது..
         இது காரணப்பெயர் தான். கடல்வாழ் உயிரினங்களில் மெல்லுடலிகள் எனப்படும் ஒரு வகை நத்தைகளும், அக்டோபஸ் உயிரினங்களும் சிலவகை
சாயத்தை வெளிப்படுத்தும் தன்மைகளை கொண்டுள்ளன. செம்பழுப்பும் நீலமும் கலந்த நிறத்திலுள்ள அந்த வகை சாயங்களுக்கு பொனிஸ் எனப்பெயர் வந்தது. இவற்றை உருவாக்கும்  கலவை சேர்மானத்தை அக்கால லெபனானியர்கள் மிகவும் சாமார்த்தியமாக தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு அதிக காசு,பணம் சம்பாரித்தனர். இத்தகைய நிறமுள்ள சாயம்   அதிகவிலைக்கு விறக்கப்படதால் பெரும் பணக்காரர்களும் பிரபுக்களும் அரசர்களும் மட்டுமே வாங்கி அனுபவிக்க முடிந்தது.. ஒருவிதத்தில் இந்த நிறமுடைய துணிகளை பொது மக்கள்
உபயோகிக்கக்கூடாதென சில நாடுகளில் சட்டம் கூட இயற்றப்பட்டதாம்...
இந்த சாயத்தால் லெபனான் மிகவும் செழித்தது.. அக்காலத்திலேயே லெபனானியர் என்ற பெயர் மாற்றி பொனிசியர்கள் என்று அழைக்கப்பட்டனர்..காலம் செல்லச்செல்ல பொனிசியர்கள் ஆதிக்கம் மத்திய தரைக்கடல் நாடுகளில் பலவற்றில் ஆதிக்கம் செலுத்தியது...ஆனால் ரோமைய சாம்ராஜ்ஜியம் வலிமை பெற ஆரம்பித்ததும் பொனிசியர்களின் ஆதிக்கம் குறைந்தது கடைசியில் கி.மு. 70 களில் ரோமை சாம்ராஜ்ஜியத்துக்கு பொனீசியா அடிபணிந்ததால் ரோமர்களின் ஆதிக்கம் இந்த பொனிசியாவில் தோன்றி அவர்களின் நாகரீகமும்,   கலாச்சாரமும் இந்த பொனீசியர்கள் மீது திணிக்கப்பட்டன. போரில் ஜெயித்தவனுக்கு தோற்றவன் அடிமை என்னும் கருத்துபடி இந்த பொனீசியர்கள் எனப்பட்ட லெபனானியர்கள்
மீண்டும் தலை எடுக்காதபடிக்கும் தங்கள் அரசர்கள் மீதும் அவர்கள் வணங்கிவந்த தெய்வங்கள் மீதும் மீண்டும் பாசம் வந்துவிடாதபடிக்கும் ரோமையை ஆண்ட மன்னர்களையும்   அவர்கள் வணங்கிவந்த தெய்வங்களையும் மட்டுமே கும்பிடவேண்டும், தீபாராதனை காட்டவேண்டும் என்றும் நிர்பந்திக்கப்பட்டார்கள்...இதற்கு மறுப்பவர்கள் கொடுமையான முறையில்   கொல்லப்பட்டார்கள்.
     கி.பி.33ல் யேசுநாதர் மரித்தபிறகு அவருடைய சீடர்கள்," உலகமெங்கும் சென்று அனைத்து மக்களுக்கும் என் நற்செய்தியை அறிவியுங்கள்... அனைத்து மக்களையும் என்   சீடராக்குங்கள்" என்னும் யேசு நாதரின் அறிவுரைப்படி உலகின் பல நாடுகளுக்கும் சென்று யேசு கிறிஸ்த்துவை போதிக்கவே பலரும் இந்த கிறிஸ்த்துவ மதத்தை பின்பற்றினார்கள்.
         கி.பி.34ல் யேசுவின் தலைமை சீடர் புனித பேதுரு எனப்படும் ராயப்பர் இன்றைய தென் துருக்கியில் அமைந்துள்ள அந்தியோக்கியாவில் திருச்சபையை ஸ்தாபித்தர். அது முதல்   ஜெருசலேமிலிருந்து அந்தியோக்கியா செல்லும் வழியில் இந்த பைபிலோஸ் நகரம் இருக்கவே கடல்வழியாக வந்தாலும், தரை வழியாக சென்றாலும் இந்த பைபிலோஸ் பட்டிணத்தை   கடந்து தான் செல்லவேண்டும்...எனவே இந்த பைபிலோஸ்பட்டிணம் சிறந்த மத ஸ்தாபண இடமாக இருந்தது..இந்த பைப்லொஸ் பட்டிணத்தை கடந்து செல்லாத அபோஸ்த்தலர்களோ
அல்லது யேசுவின் சீடர்களோ இருக்க முடியாது என்னும் அளவிற்கு அது சிறந்து விளங்கியது. வெகு விரைவில் பைப்லோஸ் பட்டிணம் கிறிஸ்த்துவர்கள் நிரம்பப்பெற்ற ஒரு நகராக   விளங்கியது.
     ஆனால் ரோமார்களின் குடி உரிமை சட்டமும், மத மாற்ற தடைச்சட்டமும் அதன் ஆதிக்கத்திலிருந்த பல நாடுகளில் அமுலில் இருக்கவே கிறிஸ்த்துவ மதம் அந்தந்த நாடுகளில்  பரவமுடியாமல் தத்தளித்தது... காரணம் அதை ஏற்றுக்கொண்டவர்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட்டுஉயிரிழந்தார்கள்...இவர்கள் வேதத்துகாகவும், யேசுவுக்கு சாட்சிகளாகவும் ரத்தம்   சிந்தி இறந்ததால் வேத சாட்சிகள் என அழைக்கப்பட்டனர்.
       இப்படியாக கி.பி.280 களில் ரோமைய சக்கரவர்த்தியாக பதவிவகித்த தியோக்குலேசியன் என்னும் கொடுங்கோலன் காலத்தில்  அவன் சாம்ராஜ்ஜியத்தைச்சேர்ந்த பலா நாடுகளில் வாழ்ந்த கிரிஸ்த்துவர்களின் நிலைமை சொல்லொன்னா துயர் நிறைந்ததாக இருந்தது.. இந்த கால கட்டத்தில் பொனீசியாவைச்சேர்ந்த  பைபிலோஸ் நகரில் பிறந்து வளர்ந்தாள் ஒரூ பெண்..அவள் பெயர்தான் அக்வீலினா..
        கி.பி.281 ஆம் ஆண்டில் எத்தோல்மஸ் என்பவருக்கு கிறிஸ்த்தவ மகளாகப்பிறந்த நம் அக்வீலினா இயல்பிலேயே நல்ல முக அழகும் நல்ல ஆண்ம அழகும் அனைத்து   நற்குணங்களும் நிறையப்பேற்றவளாய் சொல்லப்போனால் நல்ல கிறிஸ்த்துவ மகளாக வளர்க்கப்பட்டள்...யேசுநாதரின் அன்பில் அளவிடமுடியாத நம்பிக்கையும் விசுவாசமும் ஒருங்கே  அமையப்பெற்றிருந்தவளுக்கு இயல்பிலேயே பரிசுத்தத்தனமும் அவளிடம் குடிகொண்டிருந்தது..ஐந்து வயதிலிருந்தே ஞான உபதேசத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததை கண்ட  பைபிலோஸ் நகர ஆண்டகை எவ்தாலியோஸ் என்பவருக்கு நம் அக்வீலினாவை மிகவும் பிடித்துப்போனது..இதனால் அவரே தன் நேரடிப்பார்வையில் அவளுக்கு ஞான உபதேசத்தை   கற்றுக்கொடுத்தார். இறை அன்பிலும் இறை ஞானத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றுவளர்ந்த நம் அக்வீலினா தான் கற்றுக்கொண்டதை தன் சக தோழிகளுக்கும், தோழர்களுக்கும்,   நண்பர்களுக்கும் தன்னை நட்ப்போடு நாடிவரும் யாவருக்கும் மிக எளிதாக கற்றுக்கொடுத்தாள். அவளது வயதை ஒத்த தோழிகளும் அவர்களது பெற்றோர்களும் நம்   அக்வீலினாவிடத்தில் காணப்பட்ட தெய்வீக தோற்றத்தைக்கண்டும் அவளிடம் விளங்கிய இறை ஞானத்தையும் கண்டும் மிகவும் மலைத்துப்போயினர். பிறந்தால் நம்
அக்வீலினாவைப்போல் நமக்கு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்று பல பெற்றோர் தன் பிள்ளைகளிடம் கூறி அவளது முன் மாதிரிகையை பின்பற்றி வாழச்சொல்வார்கள்.
     ஆனால்   இத்தகைய பாராட்டுகளை நம் அக்வீலினா ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.".நான் கடவுள் சொற்படி நடக்கிறேன்...இதில் ஆச்சரியப்பட என்ன இருகிறது " என்பாள்.  இப்படியாக அவள் பனிரெண்டு வயதுவரை வாழ்ந்தாள். இதற்குள்ளாக அவள் தன் வயதை ஒத்த பல இளைஞர்களையும் இளம் பெண்களையும் மனம் மாற்றினாள்..உண்மையான
கிறிஸ்த்துவ வாழ்வுக்கு அவர்களை அழைத்துச்சென்றாள். கிறிஸ்த்துவர்கள் என்றால் அவர்களை வேட்டையாடி சிறைபிடித்து கொடூரமாக கொல்லக்கூடிய அன்றைய நாளில் ஒரு சிறு   பெண் வேதத்திற்காக தன் உயிரை பணையம் வைக்க முன் வந்தாள்..அவளுக்குள் எரிந்த கிறிஸ்த்துவின் பிறர் அன்பு என்னும் புண்ணியம் தன் வயதை ஒத்த இளைஞர்கூட்டம்
அநியாயமாக தீயோனின் பிடியில் சிக்கி முடிவில்லா நரக வாழ்கைக்கு போகிறார்காளே என்ற அங்கலாய்ப்பு அவர்களை வழி நடத்த கடவுள் தன்னை தேர்ந்துகொண்டார்  என்று  நம்பவைத்தது..
    அவளுக்கு இயல்பிலே இருந்த அப்போஸ்த்தலர்களுக்கே உறித்தான தணியாத வேத போதக ஆர்வம் அவளை வழி நடத்தியது. இந்த ஆர்வமே அவளை வேதத்துக்காவும்   யேசுநாதருக்கு சாட்ச்சியாய் வாழவும் அவளை தூண்டியது. இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த நாட்டின் ஆளுனறாக பதவி வகித்த ஓல்சியன் என்பவரின் உறவுக்கார பையனை  நம் சிறுமி அக்வீலினா மனம் திருப்பினாள்...இதனால் அதிற்சியுற்றனர் அவனது பெற்றோர்..சப்த்தம் போடாமல் நம் அக்வீலினாவை ஆளுனர் ஓல்யூசியனிடம் போட்டுகொடுத்து
விட்டனர். அடுத்த நாளே அக்வீலினா சிறைபிடிக்கப்பட்டாள்.. விசாரணை ஆரம்பமானது..
          ஆளுனர் ஓல்யூசியன்," மகளே அக்வீலினா...நீயா இந்த காரியம் செய்தாய்..உன்னால் எப்படி முடிந்தது...உன் வயதுக்கு பல சிறுமிகளுக்கு உலகம் என்பதே என்னவென்றே  தெரியாதே...நீயா மத மாற்றம் செய்தாய்?.என்னால் நம்பவே முடியவில்லையே..எங்கிருந்து வந்தது உனக்கு இவ்வளவு தைரியம்...யார் சொல்லிகொடுத்து நீ இப்படி செய்தாய்?" என்றார்.
அதற்கு நம் சிறுமி அக்வீலினா," ஆளுனர் அவர்களே...நான் என் கடமையைதான் செய்தேன்...எனக்குள் இருக்கும் யேசுநாதரின் பற்றும் பாசமும் உலகுக்கு அவரை அறிமுகப்படுத்த  சொல்லியது...நான் அவர் என்ன செய்ய சொல்கிறாரோ அதைச்செய்கிறேன்..அவர் என்ன பேசச்சொல்கிறாறோ அதை பேசுகிறேன்..நானாக எதுவும் செய்வதுமில்லை..பேசுவதுமில்லை..
எனக்குள் இருக்கும் என் யேசுவே என்னிலிருந்து பேசுகிறார்..ஏனென்றால் வாழ்வது நான் அல்ல.. எனக்குள் யேசுவே வாழ்கிறார்" என்றார்.
       வாயடைத்துப்போனார் ஆளுனர் ஓல்யூசியன்.. எத்தனையோ பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கூட நீதிபதிக்கு முன்னால் கைகட்டி வாய்பொத்தி அடுத்தது என்ன கேள்வி   கேட்கப்படும்...என்ன பதில் பதில் நாம் சொல்வோம் என்று நிலை தடுமாறி பயத்தில் உளறிக்கொட்டும் இந்த நீதி மன்றத்தில் ஒரு இளம் சிறுமிக்கு இப்படியும் பேசு முடியுமோ...
          அதுவும் பயமே அறியாமல் வார்த்தைகள் தெள்ளத்தெளிவாக... கோர்வையாக... நிதானமாக...அடாடா.. இந்தப்பெண்ணால் இவ்வளவு தீர்க்கமக எப்படிபேச முடிகிறது என்று மிகுந்த ஆச்சரியபட்டார்.
இருப்பினும் நம் அக்வீலினாவின் மாசற்ற முகத்தைகண்டு மனம் இளகியவறாய்," பெண்ணே அக்வீலினா.. என் வயதுக்கும் உன் வயதுக்கும் உள்ள வித்தியாசம் உன்மேல் என்னை  பரிவுகொள்ள வைக்கிறது...இதுவரை நடந்ததெல்லாம் போகட்டும்...உன்னை நான் மன்னிகிறேன்...இருப்பினும் அரசாங்க கட்டளை என்று இருகிறதல்லவா...அதற்கு நீயும் நானும்
ரோமைய குடியுரிமையுள்ள மக்கள் அனைவரும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்...நீ உன் ராஜ விசுவாசத்தை காட்டும்பொருட்டு நம் ரோமைய மன்னர் தியோக்குலேசிய மஹாராஜவுக்கும்  நம் முன்னோர்கள் வணங்கிய ரோமைய தெய்வங்களுக்கும் தீபாராதணை காட்டி உன் வாழ்வை மீட்டுக்கொள்... இதைத்தவிர உன் உயிரைமீட்டுக்கொள்ள வேறு வழி இல்லை" என்றார்.
         அதற்கு நம் அக்வீலினா," ஆளுனர் அவர்களே...இதற்கு நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்..மன்னருக்கு உறிய மரியாதையை நான் கொடுக்க சித்தமாக இருகிறேன்... ஆனால்   மன்னரைக்கடவுளாக ஏற்று அவருக்கு தீபாறாதணை காட்ட மாட்டேன்...பிற தெய்வங்களை நான் ஆராதிக்க மாட்டேன்..கும்பிடவும் மட்டேன்.. அவைகளுக்கு பலிசெலுத்தவும்
மாட்டேன்.நான் கிறிஸ்த்துவளாகவே பிறந்தேன்...கிறிஸ்த்துவளாகவே வளர்ந்தேன்... கிறிஸ்த்துவுக்காக... கிறிஸ்த்துவளாகவே மடிவேன் " என்றாள். இந்த பதிலால் மிகவும் கடுப்பானார்   ஆளுநர்.
      " பெண்ணே அக்வீலினா...எங்கள் கடவுளை அவமதிக்காதே...எங்கள் மன்னரையும் அவமதிக்காதே...கொடும் தண்டனை காத்திருகிறது...உன் அறியாமையை முன்னிட்டும் உன்   வயதை முன்னிட்டும் உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன்...எங்கள் மன்னருக்கும் எங்கள் தெய்வத்திற்க்கும் தீபாராதனை காட்டி உன் உயிரை மீட்டுக்கொள்...வேண்டுமானால் நீ
நிதானித்து யோசனை செய்து எனக்கு பதில் சொல்ல சில நாள் அவகாசம் தருகிறேன்...நன்றாகப்பயன் படுத்திக்கொள். அதுவரை நீ சிறையிலேயே தங்கி இரு" என்றார்..
           உடனடியாகப்பேசினாள் அக்வீலினா," ஆளுநர் அவர்களே... தாங்கள் எத்தனை நாள் அவகாசம் கொடுத்தாலும் எனக்கு அது பயன்படாது. சர்வத்தையும் படைத்த கர்த்தா நாமே...  நம்மைத்தவிர வேறு கடவுள் உனக்கில்லாமல் போவதாக என்னும் கட்டளையை நான் ஒரு நாளும் மீறப்போவதில்லை.. நீர் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் என் கடவுளாள்
படைக்கப்பட்ட வெறும் உயிரில்லாத கோள்களே...அவற்றை வணங்குவதால் எந்த பிரையோஜனமும் ஏற்படப்போவதில்லை. மாறாக அது எம்கடவுளுக்கு துரோகமான செயல்..இந்த பாவ   துரோகத்தை நான் மனது பொருந்தி ஒருபோதும் செய்யப்போவதில்லை....நீர் உம் தண்டனையை நிறைவேற்றிக்கொள்ளலாம்...உம்முடைய பச்சாதாபம் எனக்கு தேவை இல்லை..
        நான் என் யேசுவுக்கு சாட்சியாய் உயிரையும் கொடுப்பேனே தவிர வேற்று தெய்வத்தை ஒரு நாளும் ஆராதிக்க மாட்டேன்...இது என் யேசுவின் மேல் ஆணை" என்றாள்.
         அதற்கு அளுநர் ஓல்யூசியன்," ஆஹா..பெண்ணே...நான் உன்னை சிறுமி என்று நினைத்து உன்மீது பரிதாபப்பட்டது பெரும் தவறு.. எல்லோரும் என் முகத்துக்கு நேர் நின்று பேசவே  பயப்படும் என்னை இத்தனைபேர் முன்னியிலும் அவமானப்படுத்திவிட்டாய்...நீ என்னை மட்டும் அவமானப்படுத்தவில்லை...என் மன்னர் தியோக்குலேசிய மஹாராஜாவையும் எம்   ரோமைய தெய்வங்களையும் அவமானப்படுத்திவிட்டாய்...இதற்க்குப்பரிகாரம்..உம்ம்..இவளை இழுத்துச்சென்று இவள் முகத்தை சிதையுங்கள் ..உயிரோடு இவள் தோலை உறியுங்கள்..  பழுக்கக்காய்ச்சிய இரும்பு கம்பியால் இவள் காதை துலையுங்கள்...நம்மிடம் சரணாகதி அடையும் வரை இவளை சித்திரவதை செய்யுங்கள்" என்றார்..
         அதற்கு அக்வீலினா," ஆளுநர் அவர்களே...இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை..நீர் என்னால் தாங்க முடியாத எந்த வேதனைகளையும் என்மீது சுமத்தினாலும் அவற்றை  தாங்கும் வல்லமையை என் யேசுநாதர் எனக்கு தந்தருள்வார்..நான் இறந்தாலும் உம்மிடம் சரணாகதி அடையப்போவதில்லை..நான் இறப்பினும் என்னை உயிர்க்க வல்லவர் என்
யேசுநாதர்... இந்த வேதனைகளாள் நானும் யேசுவுக்கு சாட்ச்சியாய் மரிப்பேன்...அவரோடு ஒரு நாள் மிகுந்த மகிமை பிரதாபத்தோடு நானும் உயிர்ப்பேன்... இதற்காகவே நானும்   ஆசைப்பட்டேன்.. அதை பரமன் எனக்கு தந்துவிட்டார் என்று நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்...யேசுவுக்கே புகழ்" என்றாள்...
       உடனடியாக தண்டனை நிறைவேற்றப்படவேண்டி கடற்கரையை ஒட்டிய அந்த ரோமர்களின் ஆம்ப்பித்தியேட்டர் எனப்படும் விளையாட்டரங்கம் கூட்டத்தால் நிறம்பி வழிந்தது.
     அரங்கத்தின் நடுவில் இருந்த ஒரு நெடு மரத்துடன் சேர்த்துக்கட்டப்பட்டாள் நம் அக்வீலினா..அத்தனை பேர் முன்னிலியிலும் அந்த பன்னிரெண்டு வயது சிறுமி   நிர்வாணமாக்கப்பட்டாள். அரங்கம் நிறைந்த சபையில் ஒரு வயதுவந்த பெண்னை மானபங்கம் செய்வதென்பது எவ்வளவு கொடுமையன செயல் என்பது உண்ர்ந்துபார்த்தால் மட்டுமே  புறியும்..ஒருவன் அக்வீலினாவின் முகத்திலேயே விடாமல் அடிமேல் அடியாய் அடித்துக்கொண்டிருந்தான். மற்ற இருவர் அவள் முன்னும் பின்னும் நின்றுகொண்டு சவுக்கு விளாரினால்  விளாசித்தள்ளினார்கள்...அந்த சவுக்கு விளரின் அடியால் அவள் சதைத்துணுக்குகள் காற்றில் பறந்தன.. ரத்தம் தெரித்து அடிப்பவர் முகத்தை நினைத்தது..
     இந்த கொடுமையான காட்சி யேசுநாதரை கற்றூணில் கட்டிவைத்து விளாசி அடித்ததை நினைவுகூர்ந்தது.. அக்வீலினாவின் முகத்திலேயே தொடர்ந்து அடித்ததால் அவள் முகம்  சிதைந்தது..இந்த நிலையில் அவளை அடிப்பதை நிறுத்திவிட்டு ஒருவன்," அட சின்ன சிறுக்கி...உனக்கு இவ்வளவு தைரியமா..நீதிபதியையா எதிர்த்துப்பேசினாய்... என்னது..உன்
யேசுநாதர் உன் வழியாய் பேசுகிறாரா...இப்போது பேசு பார்க்கலாம்...பாவம் இன்னும் கொஞ்ச நேரம்தானே பேசப்போகிறாய்...உன் யேசு நாதருக்கு தைரியம் இருந்தால் இப்போது என் முன்   வந்து இந்த தண்டனையிலிருந்தும் என்னிடமிருந்தும் உன்னைக்காப்பாற்றி கூட்டிப்போகச்சொல் பார்க்கலாம்..." என்றான்..
       அந்த நிலையிலும் நம் அக்வீலினா பேசினாள்," அடே நிர் மூடா...உனக்கு வேண்டுமானால் அவர் தெரியாமல் இருக்கலாம்... ஆனால் அவர் இப்போது என் கண் முன்னே   இருகின்றார்... என் வேதனைகளைத்தாங்கும் வல்லமையை அவர் எனக்குத்தந்திருகின்றார்...இதற்கு மேலும் வாதனைகள் வந்தாலும் என்னால் தாங்கிக்கொள்ள முடியும்" என்றாள்.
      இத்தகைய பதிலால் மிகுந்த கோபமுற்ற அவன் நெருப்பால் சிவக்கப்பழுத்த இரண்டு இரும்பு கம்பிகளை எடுத்துவந்தான்..".பெண்ணே என்ன சொன்னாய்...இதற்கு மேலும்   வாதனைகளை உன்னால் தாங்கக்கூடுமோ... இப்போது தாங்கு பார்க்கலாம்... இத்தோடு நீ தொலைந்தாய்" என்று அவள் காதுகள் இரண்டிலும் இரண்டு இரும்பு நெருப்புக்கம்பிகளை  பலம் கொண்ட மட்டும் அழுத்தி திருகி செலுத்தினார்கள். அவள் காதுகளிலும் மூக்கிலும் புகையும் ரத்தமும் சீறிக்கொண்டு வந்தன. அந்த அதீத உஷ்ணத்தால் நம் அக்வீலினாவின்   மூளை யாவும் உருகி முகத்திலிருந்த அத்தனை திறப்புகள் வழியாகவும் நீராய் வழிந்து ஓடின. நம் சின்னப்பெண் அக்வீலினா பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி வீழ்ந்தாள்..
    உள்ளூர்  வைத்தியன் வந்து அவள் நாடி நின்றுவிட்டதென அறிவித்தான்... இந்த பரிதாபமான காட்ச்சியைக்கண்ட ஆண்பெண் அனைவரும் மனது பொறுக்கமாட்டாதவர்களாய் தலையை  தாழ்த்திக்கொண்டு போனார்கள். நம் அக்வீலினா வேத சாட்ச்சியாய் மரித்த நாள் ஜூன்13 கிபி.293.
         ஆனாலும் இந்த் சின்னப்பென் அக்வீனாவை தன்னால் பணிய வைக்கமுடியவில்லையே என்று வருந்திய ஆளுனர் ஓல்யூசியன் அவள் மீது கொண்ட கோபம் சற்றும் அடங்காதவனாக  " இவளைக்கொண்டு போய் நகருக்கு வெளியே தூக்கி வீசுங்கள். அவள் பிணத்தை நாய்களும், நரிகளும், காக்கைகளும், வல்லூருகளும் தின்னட்டும்..அவளை யாரும் கல்லறையில்
அடக்கம் செய்யக்கூடாது ...இது என் கட்டளை: என தீர்மானமாக சொல்லிவிட்டு தன் இல்லம் நோக்கி சென்றார். அக்வீனாவின் உடல் அவ்வாறே நகருக்கு வெளியே கோட்டைக்கு வெளியே தூக்கி எறியப்பட்டது. அன்றைய இரவில் ஒரு சம்மனசானவர் அக்வீலினாவை எழுப்பினார்.." அக்வீலினா..எழுந்திரு...உன்னுடைய சாட்ச்சியத்தால் யேசுநாதருக்கு உகந்த
பிள்ளையாய் ஆனாய். ஆனால் இன்னும் உன்னால் ஆண்டவருக்கு சாட்ச்சியம் சொல்ல முடியும்... நீ போய் ஆளுநரை சந்தித்து பேசு ..அப்போது உன்னில் கடவுளின்வல்லமை   வெளிப்படும்...ஆளுனனின் எண்ணம் ஈடேறாது " என்றார்.
        உடனே எழுந்தாள் நம் அக்வீலினா... அவள் கோட்டையைக்கடந்து போவதற்கு ஏதுவாக கோட்டைகதவுகள் தானாக திறந்துகொண்டன...அரண்மனை வாசல்களும் ஆளுநரின்
மாளிகையும் தானாக திறந்து கொண்டன. அக்வீலினா ஆளுநர் ஓல்யூசியனை அவன் படுக்கை அறையில் சந்தித்து எழுப்பினாள்...அவளைக்கண்ட மாத்திரத்தில் " ஐய்யோ பேய்..  ஐய்யோ பிசாசு" என்று அலறினார்.. அப்போது அக்வீலினா " ஓல்யூசியா.. எல்லாம் முடிந்துவிட்டது...நீ தோற்றுவிட்டாய்... ஆண்டவர் என்னை எழுப்பிவிட்டார்...இப்போது பார்   உயிரோடு இருகிறேன்" என்றாள்..
தன்னால் கொல்லப்பட்டவள் மீண்டும் உயிரோடு வந்துள்ளதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...இருப்பினும் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, " அடே யாரங்கே  இவளை பிடித்து கட்டி சிறையில் போடுங்கள்... நாளைக்கு இவள் தலையை வாங்கிவிடுகிறேன்" என்றார். மீண்டும் அக்வீலினா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாள்..
அடுத்த நாள் அதிகாலையில் அவளது சிரசு வெட்டப்பட்டு கொல்லப்பட்டாள் என்கிறது ஒரு சரிதை... இல்லை.இல்லை.. விடிவதற்குள் ஆண்டவர் அவளை எடுத்துக்கொண்டார்..
       சிறைகாப்பாளன் எங்கே தன் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அவள் தலையை துண்டித்துவிட்டு, " தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது" என்று அவள் தலையைக்காண்பித்தான் என்றும் ஒரு கதை சொல்கிறது....எப்படி இருப்பினும் நம் சின்னக்கழுகு அக்வீலினா வேத சாட்ச்சியாக மரித்து ரகசியமாக ஊருக்கு வெளியே அடக்கம் செய்ய
பட்டாள்.
. பின்னர் வெகு காலம் கழித்து ஊருக்கு வெளியே அக்வீலினா புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவு சின்னமும் ஊருக்குள் அவள் இருந்த சிறைச்சாலையை ஒட்டி அவள் தலை   வெட்டப்பட்ட இடத்தில் ஒரு நினைவுச்சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அவள் சிறைச்சாலை ஒரு தேவாலயமாகவும் அவள் தலைவெட்டப்பட்ட இடம் தேவாலையத்தை
ஒட்டி இருந்ததால் அதையும் சேர்த்து ஒரு மாடமாக அமைத்து உள்ளார்கள். தற்போது இந்த கோவிலும் அவரது சமாதியும் லெபனானைச்சேர்ந்த மரோனியர் எனப்படும் சபை துறவிகளால்  பராமரிக்கப்படுகிறது.
           அக்கால முறைப்படி ரோமன் கத்தோலிக்க திருச்சபை மக்கள் விருப்பத்திற்கு இணங்க அக்வீலினாவுக்கு புனிதர் பட்டம் கொடுத்து கௌரவித்தது. தாய்மார்களின் கருவில் இருக்கும்   குழந்தைகள் முதல் இரண்டாம் கெட்டான் வயதுவரை உள்ள ஆண் பெண்களுக்கு இவர் பாதுகாவலி...இதை நம் புனிதை அக்வீலினாவே சொன்னாள்..இதை புனித அக்வீலினாவின்   புதுமையில் நடந்த ஒரு சிறிய நிகழ்வு மூலம் தெரியபடுத்தப்பட்டுள்ளது.
       இந்த பைப்லோஸ் நகருக்கு மாற்றலாகி வந்திருந்தனர் திரு ஜார்ஜும் திருமதி ஜார்ஜெட்டும். ஜார்ஜெட்டுக்கு அப்போது எட்டு மாத கர்ப்பம் இருந்தது.. அவளது கணவர் வேலையின்   நிமித்தம் ஐம்பது கி.மி. தொலைவிலுள்ள பெக்கா நகருக்கு சென்றிருந்தார். திடீரென திருமதி ஜார்ஜெட்டுக்கு இடுப்புவலி தாங்கமுடியாத அளவுக்கு வந்தது. அருகிலிருந்த பெண்களின்  உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அவளைப்பரிசோதித்த மருத்துவர் இந்த குழந்தை குறை மாதத்தில் பிறக்கப்போகிறது..என்றார். இதனால் ஜார்ஜெட் மிகுந்த   கவலை அடைந்தார்.. தன் கணவரை உடனே வரச்செய்தார். இதற்குள்ளாக ஐந்து மணி நேரம் கடந்துவிடவே அவள் மிகுந்த சோர்வுற்றாள். அவ்வளவு சோர்விலும் அவள் சகாய மாதாவை
நோக்கி மன்றாடினாள்..அம்மா... நான் என் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க விரும்பவில்லை.. முழுமாதமும் சுமந்தே பெற்றேடுக்க விரும்புகிறேன்... என் குழந்தைக்கு யாதொரு  துன்பமும் நேராதபடி என்னைக்காத்தருளும்..என் குழந்தையின் உயிருக்கு சேதம் ஏற்படும் பட்ச்சத்தில் என்னையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும்" என மன்றாடினார். அந்த களைப்பில்   இன்னமும் வலியோடு உறங்கிப்போனாள்... அப்போது அவள் கண்ட ஒரு கனவு....
   தன் வீட்டின் படுக்கை அறையில் இதற்குமுன் இருந்த யாரோ விட்டுச்சென்ற ஒரு பனிரெண்டு வயதுள்ள ஒரு பெண்ணின் படம்...உயிர் பெற்றுவந்தது." ஜார்ஜெட்  நீர் வேண்டிகொண்டதற்கிணங்க ஆண்டவறாம் யேசு என்னை உன்னிடம் அனுப்பி உள்ளார்.. கருவில்லுள்ள குழந்தை முதல் வாலிப வயதுடைய பிள்ளைகள் வரை நான்   பாதுகாவலி..நான் இதே பைப்லோஸ் நகரைச்சேர்ந்தவள் தான்.. உன் வீட்டின் அருகிலேயே நான் இருகிறேன்..நீர் தேடினால் என்னை காண்பீர்.. உம்முடைய தேவை என்ன?" என்றாள்.
அதற்கு ஜார்ஜெட்," அம்மா..நீர் சம்மனசானவரோ...உம்மிடமிருந்து வரும் கதிர்கள் யேசுவிடமிருந்து வருவதைபோல இருகின்றன... நான் என் குழந்தையை முழு மாதத்திற்கும் சுமந்து   நல்ல விதமாக பெற்றெடுக்க வேண்டும்..இந்த ஊரில் எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை" என்றார். அதற்கு நம் அக்வீலினா " பெண்னே .கவலையை விடும். நீர் முழுமாதமும் சுமந்து  குழந்தையை சுகமே பெற்றேடுப்பாய்...இனிமேல் இந்த பைப்ளோஸ் நகரில் நீர் தனியாக இருப்பதாக நினைக்கவேண்டாம்.. உமக்குத்துணையாக நான் இருப்பேன்" என்றுகூறி மறைந்து   போனாள்..அந்த நேரமே அவள் சுகம் பெற்றதை உணர்ந்தாள்.
       தன் வீட்டுக்கு வந்து தன்படுக்கை அறையிலிருந்த படத்தை எடுத்து அதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது ஒரு தாய் அவளை அழைத்துக்கொண்டு அடுத்த  தெருவிலிருந்த நம் புனிதையின் கல்லறையை காட்டினார்.. அதனுள்ளே நம் புனிதையின் படம் இருக்கக்க்ண்டு மண்டி இட்டு தன் நன்றியை தெரிவித்தார். குழந்தை நல்ல விதமாக  பிறந்து நம் புனிதை அக்வீலினாவின் தேவாலயம் அந்த ஊரில் புதிதாக கட்டப்படும்வரை காத்திருந்து அந்த கோயிலில் ஞாஸ்நானம் கொடுத்து அக்வீலினா என்னும் பெயரையே   அந்தக்குழந்தைக்கும் வைத்தார்கள்.
        கி.பி. மூன்றாம் நாட்டில் பைப்லோஸ் நகரில் வாழ்ந்து பாடுகள்பட்டு யேசுவுக்கு சாட்ச்சியாக மரித்த நம் அக்வீலினாவின் வாழ்க்கை சரிதை புனித ஜோசப் என்பவறால் எழுதப்பட்டு  இன்றளவும் லெபனான் மரோனியர்கள் எனப்படும் சபையை சேர்ந்தவர்களால் பராமரிக்கப்படுகிறது..ஏறக்குறைய பதினேழு நூற்றாண்டுகளாக மறக்கப்பட்ட இப்புனிதையின் சரிதை
இப்போது வெளிக்கொண்டுவரப்பட்டு மிகுந்த ஆடம்பரமாக லெபனானியர்களால் கொண்டாடப்பட்டுவருகின்றது. இதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை..உலகின் முடிவின்   கடைசிப்பகுதியில் இருக்கும் நம்மை முக்கியமாக குழந்தகள், வாலிபர்களை சாத்தான் குறிவைத்து தாக்க தன் நரகத்துப்பேய்கள் அனைத்தையும் அனுப்புகிறன். அதற்கு எதிறாக நம்
ஆண்டவறாம் யேசுவும் என்றோ எங்கோ வேத சாட்ச்சிகளாய் மரித்துப்போனவர்களை மீண்டும் உலகத்துக்கு அனுப்பி வாலிபர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கிறார். இனிமேல் நம்   அக்வீலினாவைப்போன்று சரித்திரத்தில் மறக்கப்பட்ட வேத சாட்சிகளை பலரை மீண்டும் காண்போம்.
லெபனானியர்கள் இப்புனிதையின் பெயரையே அவள் தலை வெட்டப்பட்ட ஆலயத்திலிருந்து முக்கிய வியாபார கேந்திரமான ஒரு சாலைக்கு புனித அக்வீலினா சாலை என   பெயர் சூட்டி வைத்திருகின்றார்கள். அவள் வேத சாட்சியாக மரித்தநாளான ஜூன் 13 அன்று பெரும் தேர் திருவிழா கொண்டாடப்ப்படும்.இளம் பிள்ளைகளும் வாலிப பிள்ளைகளும்
தங்கள் கற்புக்கு பாதுகாவலியான புனித அக்வீலினாவை மனமுருகி பிரார்த்தித்து கொள்கிறார்கள். தீவிரவாதம் மலிந்த இந்த நாட்டில்வாழும் அனைத்து மக்களுக்கும் தினமும் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதுபோல வாழ்கிறார்கள். வெடிகுண்டு வெடிக்கும் சப்த்தம் கேட்காத நாளே இல்லை என்பதுதான் அவர்கள் வாழ்க்கை..புனிதஅக்வீலினாதான் இவர்களை 
தினமும் காக்கிறர் என்று நம்புவோம்.

























No comments:

Post a Comment