Sunday, December 1, 2013

" வீர மங்கை புனித யூலேலியா "





                                  " வீர மங்கை புனித யூலேலியா "
       திருச்சி மேலப்புதூரில் அமைந்துள்ள புனித ஆரோக்கியமாதா ஆலயத்தின் மேல் விதானத்தத்தில் வரையப்பட்டிருக்கும் வேத சாட்ச்சிகளின் சரித்திரங்களில் புனித யூலேலியாவின்  வரலாரும் ஒன்று...நம் புனிதை யூலேலியா கி.பி. 290ல் ஸ்பெயின் நகரில் மெரிடா பட்டிணத்தில் பிறந்திருக்க வேண்டும். தன் பதின்மூன்றாம் வயதிலேயே வேத சாட்ச்சி பட்டம்
பெற்றார்.
       இந்த காலக்கட்டத்தில் தியோக்குலேசியன் என்னும் கொடுங்கோலன் ரோமைய சர்வாதிகாரியாக ஆண்டு வந்தான்.. இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை தன் ஒருவனால் ஆள  முடியாதென தனக்குக்கீழ் மூன்று உதவியாளர்களை சீசர்களாக அமர்த்திக்கொண்டான். இப்படியாக போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஃபிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளை மாக்சிமியன்   என்னும் சீசர் தியோக்குலேசியன் சார்பாக ஆண்டுவந்தான்..
தியோக்குலேசிய மன்னனின் கொடுமையான குடி உறிமைச்சட்டம் கிறிஸ்த்துவர்களையும் யூதர்களையும் மிகவும்   கொடுமையாக பாதித்தது.
      அதன்படி ரோமின் ஆதிக்கத்துக்குட்பட்ட அனைத்து நாடுகளிலும் வசிக்கும் குடிமக்கள் யாராக இருந்தாலும் சரி...எத்துனை வயதுடையவர்களாக இருந்தாலும் சரி... அவர்கள் ஆனா லும் பெண்ணாலும்... கட்டாயம் அந்தந்த கால கட்டங்களில் நாட்டை ஆளும் ரோமைய மன்னரை கடவுளாக ஏற்றும் அவர்கள் வணங்கிவரும் ரோமைய தெய்வங்களுக்கு தூபம் மற்றும்
தீபாறாதனை காட்டவும் வேண்டும். வருடாவருடம் இந்த சடங்கை புதுப்பித்துக்கொள்ளவேண்டும் ..அப்போதுதன் அவர்கள் ரோமைய குடியுறிமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்..
மறுப்பவர்கள் அவர் யாறாக இருந்தாலும். அவர் சமூகத்தில் எத்தகைய அந்தஸ்த்துடையவர்களாக இருந்தபோதிலும் அவர்தம் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொடுமையான  தண்டனைகள் மூலம் கொல்லப்படுவர். கிறிஸ்த்துவ மதம் தடை செய்யப்படுகிறது.கிறிஸ்த்துவ மக்கள் அருவருக்கத்தக்கவர்..அவர்கள் கொல்லப்படவேண்டும்..
        நம் புனிதை வாழ்ந்த ஸ்பெயின் தேசத்தில் இருந்த மெரிடா பட்டிணம் ரோமர்களின் காலனியாக இருந்ததால் இங்கும் இந்த குடியுறிமைச்சட்டம் அமுல் படுத்தப்பட்டு  கிறிஸ்த்துவர்கள்பலர் வேட்டை நாய்கள் போல துரத்தித்துரத்தி பிடிக்கப்பட்டு கொடுமையாய் கொல்லப்பட்டனர். பல கிறிஸ்த்துவர்கள் பரிதாபமாக ரகசியமாக வாழ்ந்தார்கள். அப்போது
சீசர் மாக்சிமியன் சார்பாக மெரிடா பட்டிணத்தை ஆண்ட ஆளுனன் கல்பூர்னினன் என்னும் மனித அரக்கன். இவன் மனதில் கொஞ்சம்கூட மனித தன்மை இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை எனலாம்.. அவ்வளவு கொடுங்கோலன் அவன். இவன் காலத்தில் கிறிஸ்த்துவர்கள் பட்டு துன்பம் கொஞ்சம் நஞ்சம் அல்ல...ஒருநாள்...
         நம் புனிதை யூலேலியா தன் தாயின் அரவணைப்பில் தன்னை மறந்திருந்தாள்...அவள் தாயார்.." மகளே யூலேலியா...உன்னைக்காணும் போது என்னுள்ளம் பெரும் உவகை  கொள்கிறது. என்னால் உன் ஆண்மாவைகாண முடியாது...ஆனால் உன் முக அழகைக்காண முடியும்... எவ்வளவு அழகான முகம் உன்னுடையது..ஆனால் மகளே...உன் அழகே உன்
உயிருக்கு எமனாகவந்துவிடுமோ என்றுதான் நான் பயப்படுகிறேன் அம்மா.." என்று கண்ணீர் சிந்தினாள்.
" அம்மா... என்ன பேசுகிறீர்கள் நீங்கள்...நீங்களா இப்படிப்பேசுவது...எனக்கு இறை நம்பிக்கையும், பரிசுத்த ஆவியின் வல்லமையயும் பற்றி தினம்தினம் புத்தியாக சொல்லிகொடுத்த நீங்களா அம்மா இப்படி பயப்படுவது..நீங்கள் என்னை ஒரு கோழையாக வளர்க்கவில்லையே அம்மா.. என்னை தைரியசாலியாக அல்லவா வளர்த்திருக்கிறீர்கள்..நீங்கள் நாளைய
பொழுதை பற்றி ஏன் கவலைப்படுகிறீகள்...நாளை நிச்சயமற்றது..அதை கடவுள் பார்த்துக்கொள்வார்..பின் நாம் ஏன் அம்மா வீனிலே கவலைப்படவேண்டும்..இன்றைய கவலை   இன்றைக்குப்போதுமானது. நாளைய கவலையை அதுவே பார்த்துக்கொள்ளும் என்று நீங்கள் வாசித்ததில்லையோ" என்றாள்..யூலேலியா.
" மகளே யூலேலியா..நீ எத்தனை சாமார்த்தியமாக என்னை மடக்கினாலும் என் தாயுள்ளம் உனக்கு புறியாது..இன்று ஏனோ என் உள்ளம் அமைதி அடையவில்லை..ரோமைய வம்சா   வழிவந்த நாம் இன்றில்லை நாளை ...நாளையும் இல்லை மறு நாள்.. விரைவிலேயே ஆளுனன் கல்பூசியன் நம்மை அழைத்து ரோமைய குடியுறிமையை புதுப்பிக்க அழைப்பான்..அப்போது   நாம் மறுத்தால் நாம் நிச்சயம் கொல்லப்படுவோம்...நானும் உன் தகப்பனாரும் கொல்லப்படுவதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை...ஆனால் ஆளுனன் முன்பாக நீ
நிற்க வைக்கப்படும்போது... அவன் உன்னைப்பார்த்தால்...உனக்கு ஏற்படப்போகும் கதிபற்றி ....நினைத்தாலே பயமாக இருக்கிறது மகளே.." என்று கேவிக்கேவி அழுதாள் அவள் தாயார்.
      அந்த நேரம் கதவு பலமாக தட்டப்பட்டது..கதவைத்திறந்தால் ரோமைய வீரர்கள்.." என்ன விஷயம்" என்றாள் யூலேலியாவின் தாயார். " அம்மா..நாளை காலை பத்து மணி அளவில்  நம் ரோமையர் அரங்கத்தில் நீங்கள்..உங்கள் கணவர்...உங்கள் மகள்...யாவரும் அவசியம் வந்து உங்கள் ரோமைய குடி உரிமையை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம்...மறுக்கும்பட்ச்சத்தில் நீங்கள் அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிற்கவைக்கப்படுவீர்கள் " என்றனர்..
யூலேலியாவின் தாய் தன் மகளை அர்த்தபுஷ்ட்டியுடன் பார்த்துக்கொண்டாள்.." மகளே..நான் சொன்னதுசரியாகப்போயிற்றா..பின்னால் வரும் துன்பம் முன்பே தன் சாயலைக்காட்டி விடும் என்பதை சரியாகத்தான் சொல்லி இருகிறார்கள் நம் முன்னோர்கள்" என்றார். " சரி...நீங்கள் போகலாம் " என்று வந்த வீரர்களை அனுப்பிவிட்டு " மகளே யூலேலியா...என் மனது   சொன்னது சரியாகத்தான் போய்விட்டது...இனிமேல் தாமதிப்பதில் பிரையோஜனமில்லை... உடனே கிளம்பு... பார்சிலோனாவில் என் சகோதரன் வீட்டுக்குபோய் பிழைத்துக்கொள்...   எங்களைப்பற்றி கவலைப்படாதே...ஆண்டவன் அருள் இருந்தால் நிச்சயம் நாம் பரலோகத்தில் மறுபடியும் சந்திப்போம்" என்று தன் அன்பு மகளை கட்டிப்பிடித்துக்கொண்டு அவள்  கண்ணத்தில் மாறி மாறி முத்தமிட்டு வழி அனுப்பிவைத்தாள்.
      யூலேலேயா," அம்மா...நான் உன்னிடத்தில் பிறந்தேன்...உன்னிடத்தில் வளர்ந்தேன்...உன்னோடு மரிக்கவே விரும்புகிறேன்...ஏன் என்னை பிறிக்கிறீர்கள்?" என்றாள்.
" மகளே யூலேலியா..வேத சாட்சி முடி அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது...அது நீடித்த கொடிய வேதனை தரும் மரணம்..உன் போன்ற சிறிய பெண்களுக்கு அது இன்னும்   கொடியது..பலபேர் முன்னிலையில் மானபங்கம் ஏற்படும்..அந்த மனவலி உடல்வலியைவிட அதிகமானது..இதெல்லாம் உனக்கு வேண்டாம்..நீ உடனே கிளம்பு" என்று
துரிதப்படுத்தினாள். மகள் யூலேலியாவும் தாய் சொற்ப்படி கீழ்படிந்து அந்த இரவே பயணப்பட்டாள். கொடுமையான அந்த நாளும் அடுத்த நாளாக விடிந்தது.
             அந்த ரோமர்களின் காலனி நாடான மெரிடா பட்டிணத்தின் ஆம்பிதியேட்டர் எனப்படும் அரங்கம் பார்வையாளர்களாலும் ரோமைய குடி உரிமையை புதிப்பிக்கவேண்டியும் சத்திய   பிரமாணம் எடுக்க வந்த பெரும் கூட்டத்தால் நிறம்பி வழிந்தது.. பல கிறிஸ்த்துவர்கள் குடும்பம்குடும்பமாக வந்து ரோமைய தேவர்களுக்கும் தூபாறாதணை காட்டி தங்கள் கடவுளுக்கு
துரோகம் செய்து தங்கள் உயிரையும் உடமையையும் காத்துக்கொண்டார்கள். அடுத்த முறையாக வந்தது யூலேலெயாவின் பெற்றோர் பெயர்.
அந்த நேரத்தில் ஆளுநன் கல்பூர்னினன் தன் உதவியாளர்களிடன் தன் மனக்குறையை தெரிவித்துக்கொண்டான்." இன்றைக்கு நாள் ஒன்றும் சரி இல்லை போலும்...இன்றைக்கு   ஒரு கிறிஸ்த்துவன் கூட தம் வேதத்தை மறுக்கவே இல்லையே...நம் ரோமைய தேவர்களுக்கு ரத்தப்பசி அடங்கும் படியாக ஒரு கிறிஸ்த்துவன் கூட இன்றில்லாமல் போனது துரதிஸ்ட்டம்
தான் போ" என்றான்...இந்த நேரத்தில் தான் யூலேலியாவின் பெற்றோர் முறை வந்தது.. " ஓ...நீங்கள் தான் யூலேலியாவின் தாய் மற்றும் தகப்பனா ... எங்கே உம் மகள் அந்தக்கட்டழகி யூலேலியா..உன் குடும்பத்தைப்பற்றிய அனைத்து விபரமும் நான் அறிவேன் " என்றான் அந்தக்கிழவன்.
       இந்த விசாரணையை எதிர்பார்த்திருந்த அந்த பெற்றோருக்கு மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று நேயர்களுக்கு இப்போது புறிந்திருக்கும். அவர்கள் பதில் ஏதும் பேசவில்லை..
" உங்களை நான் பிறகு விசாரித்துக்கொள்கிறேன்...முதலில் எனக்கு யூலேலியா வேண்டும்... எங்கே யூலேலியா ?" என்று கர்ச்சித்தான் அந்தக்கொடியவன். அப்போது யாரும்  எதிர் பாராதவிதமக " ஐய்யா ஆளுநர் அவர்களே நான் இங்கே இருகிறேன்" என்ற பதில் வந்தது.. அது வேறு யாரும் அல்ல...நம் யூலேலியாவே தான்..
" அடிப்பாவி மகளே... உன்னை யார் இங்கு வரச்சொன்னது...ஐய்யோ..இனி உன்னைக்கடவுள் கூட காப்பாற்றமுடியாதே...அடிப்பாவி..என் வயிறு பற்றி எரிகிறதே.. அம்மா. மகளே..  யூலேலியா... என் அம்மா இப்படிச்செய்தாய்... இந்த கொடுமையைகாணவா நான் இன்னும் உயிரோடு இருக்கவேண்டும்.. ஐயோ ஆண்டவா என் மகளைக்காப்பாற்று" என்று அழுதாள்
      அவள் தாயார். ஆனால் ஆண்டவர் அவளைக்காப்பாற்ற அல்ல...நரபலி கொடுக்க அல்லவா அவளை மீண்டும் அழைத்துவந்துவிட்டார் என்று அப்போது அவளுக்கு புறிந்திருக்க  நியாயமில்லை. ஆதலால் மூர்ச்சை அடைந்தாள். இவளையும் அவள் கணவனையும் சிறையில் போடு ..அவர்களை நான் பிறகு பார்த்துக்கொள்கிறேன்" என்றான்
ஆளுனன் கல்பூர்னினன்.
" பெண்னே யூலேலியா... வந்து சபையில் உன் சத்தியப்பிரமாணத்தைக்கூறு.. பிறகு உன் பெற்றோரிடம் வாங்கிக்கொள்கிறன்." என்றான் ஆளுநன். யூலேலியா சபையினர் முன் வந்து நின்றாள். அரங்கத்தில் அமைதி நிலவியது.
        யூலேலியா," ஆளுநர் அவர்களே...கடவுளுக்குறியதை கடவுளுக்கு கொடு...சீசருக்குறியதை சீசருக்கு கொடு என்று எம் பெருமான் யேசுநாதரின் கூற்று படி நான் மன்னருக்குறிய   மரியாதையை மன்னருக்கு கொடுக்க நான் ஒருபோதும் மறுக்கவில்லை.. ஆனல் மன்னரை கடவுளகவும் ரோமைய தெய்வங்களை என் கடவுளாகவும் ஏற்க நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள
மாட்டேன்..இது ஒரே கடவுளை விசுவாசிகிறேன் என்னும் எம்மதத்தின் விசுவாசப்பிரமாணத்திற்கு எதிரானது. வானத்தையும் பூமியையும் படைத்த சர்வசுரன் நாமே ...நம்மைத்தவிர   வேறு கடவுள் உனக்கில்லாமல் போவதாக என்னும் கட்டளைக்கும் எதிறானது... ஆகவே நான் நீர் சொல்லும் சத்திய பிரமாணம் எடுக்கப்போவதில்லை." என்றாள்.
" ஆஹா..பெண்ணே...நீ ஒரு கிறிஸ்த்துவளா?" என்றான் ஆளுநன் கல்பூர்னினன்.
" ஆம்...நான்..ஒருகிறிஸ்த்துவள் தான்... கிறிஸ்த்துவள் என்பதில் பெருமைப்பட்டுக்கொள்கிறேன்" என்றாள் யூலேலியா.
" ஆஹா யூலேலியா..நேற்று உன்னைப்பற்றி அறிய வந்ததுமே என் உள்ளம் பேருவகை கொண்டது. உன் அழகு என்னை வசப்படுத்திவிட்டது..கிறிஸ்த்துவம் சபிக்கப்பட்ட ஒன்று...
நம் சாம்ராஜ்ஜியத்தில் அதுதடை செய்யப்பட்ட ஒன்று...துன்பம் நிறைந்த வாழ்க்கையை நீ ஏன் தேர்ந்துகொண்டாய்?.. உனக்கு அழகில்லையா... அறிவில்லையா..அல்லது   அந்தஸ்த்துதான் இல்லையா... இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை... நீ மட்டும் சரி என்று சொல்...நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்..அல்லது..என்னை  பிடிக்கவில்லையா என் மக்களில் யாரையாவது திருமணம் செய்து கொள். வாழ்க்கை வசதிகளை உயர்த்திக்கொள்..நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்.. அதைவிடுத்து  ஏன் ராஜ துரோகத்தை கட்டிக்கோண்டு வாழ்கையை இழக்க வேண்டும்.. அரசாங்க தண்டனையை ஏன் ஏற்க வேண்டும்... இதோ பார் காலையில் இருந்து பல கிறிஸ்த்துவர்கள் வந்து தங்கள் குடும்பம் குடும்பமாக வந்து அரசருக்கும் அவர்தம் ரோமைய தெய்வங்களுக்கும் பலியிட்டு தங்கள் ரோமை குடி உரியையை புதுப்பித்துக்கொண்டு போய்விட்டர்கள்... அவர்கள்
என்ன முட்டாள்களா?...நான் உனக்கு நல்ல புத்திதானே சொல்கிறேன்..அதை விடுத்து தடை செய்யப்பட்ட அந்த கொடுமையான கிறிஸ்த்துவ மதத்த்தை ஏன் பின்பற்ற வேண்டும்.  அப்படி என்னதான் அந்த மதத்தில் இருகின்றது" என்றான் ஆளுநன் கல்பூர்னினன்.
" ஆளுநர் அவர்களே...ஆடை இல்லாத மக்களிடையே ஆடை கட்டியவன் பைத்தியக்காரன் என்பதுபோல உம்மக்களுக்கும் கிறிஸ்த்துவத்துக்கும் வெகு தூரம்...விபச்சாரத்தையும்,   மேட்டிமையையும், சிலைவழிபாடு செய்வதையும் பெருமையாகக்கொண்டாடும் உங்களுக்கு கற்புள்ளவனாக இரு..மனத்தாழ்ச்சியுள்ளவனாக இரு..உன் அயலானை அன்பு செய்
போன்றவற்றை. வலியுருத்தினால் அது ஏற்கமுடியாத விஷயமாகவே தெரியும்..இதைப்பற்றி உம்மிடம் இப்போது பேசி பயன் இல்லை..இனி ஆக வேண்டியதைப்பாரும் " என்றாள் யூலேலியா.
" யூலேலியா.. போதும் உன் பிரசங்கம்... முடிவாக என்ன சொல்லுகிறாய்...எம் அரசருக்கும் எம் தெய்வங்களுக்கும் தூபாறாதனை காட்டப்போகிறாயா ..இல்லையா?" என்று கர்ச்சித்தான்.
" இல்லை... என்னால் முடியாது. என் கடவுளுக்கு என்னால் துரோகம் செய்ய்ய முடியாது.. மாக்சிமியனுக்கோ..தியோக்குலேசியனுக்கோ அல்லது உம் தெய்வங்களுக்கோ தூபாறாதனை   காட்ட முடியாது" என்றாள்.
          யூலேலியாவின் அழவின் மேல் காமுற்ற ஆளுநன் கல்பூர்னினன் சற்றே தன் கோபத்தை அடக்கி தணிந்த குறளில்," பெண்னே, யூலேலியா...நீ சொல்லும் ஒரு வார்த்தையில் உன்   வாழ்வு முடிந்துவிடும்...எனக்கு உன்மேல் மிகுந்த பரிவு உண்டு.. என் பேச்சுக்கு எதிர் பேச்சு இங்கில்லை...நீ கஷ்ட்டப்படவே வேண்டாம்... மற்றவர்களுக்கு கூட தெரியாமல் உன் சுட்டு
விரலால் சும்மா ஒரு தடவை அந்த உப்பை தொட்டு அந்த குரு தெய்வத்தின் மீது வீசு.. அது போதும் எனக்கு.. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறன்.. உன்னை மன்னித்து உன்   பெற்றோரையும் விடுவிகிறேன்..எனக்காக... ஒரு முறை... ஒரே ஒரு முறை செய்...போதும்..நீ சட்டத்திற்கு கீழ்படிந்துவிட்டாய் என்று உன்னை விட்டுவிடுகிறேன்... என் குரு  தெய்வத்தின் மீது ஆணை" என்று நயவஞகமாக பேசினான் ஆளுநன்.
          ஆளுநனின் மன ஓட்டத்தை நன்றகப்புறிந்துகொண்டாள யூலேலியா. எனவே தன் பேச்சில் மரியாதையை விடுத்து, " அடே நயவஞ்சகப்பூனையே, உன் எண்ணம் எனக்கு   நன்றாகப்புறிந்து விட்டது..உன் பேச்சில் உள்ள விஷம் எனக்குத்தெரியாதென்றா நினைத்தாய்..வயதில் சிறியவள் தானே..ஆசை காட்டினால் வளைந்து போவாள்...அதட்டிப்பார்த்தால்   அடங்கிப்போவாள் என்றுதானே நினைத்தாய்..புல்லனே பொசுங்கல் அல்ல நான்..கற்பு, மானம், அன்பு, பண்பு,பாசம்,தெய்வபயம் என்னும் சீரிய குணங்களால் வளர்க்கப்பட்டவள் நான்..இந்த உலகத்தின் மீது பற்றுள்ளவளுக்கு வேண்டுமானல் நீ நினைப்பதுபோல் உலகம் இனிக்கும்..ஆனால் என்போல் இருக்கும் பெண்ணுக்கு இந்த உலகம் ஒரு குப்பை..உன்   தங்கமும், வெள்ளியும், வைரமும் வைடூரியமும் வெறும் உப்புக்கல். உன் ஆட்சி அதிகாரம் அனைத்தும் ஒரே நாளில் மாறிப்போகும்... அப்போது உன் ஆட்டமும் அடங்கிப்போகும்... உன் மரியாதையும் நாறிப்போகும்..இந்த உலகின் மாயை அனைத்தையும் நான் அறிவேன்.. எனக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி இனி என்ன நடக்கும் என்பதை எனக்கு மிக   நன்றாககூறிவிட்டார்.. நடத்திக்கொள் உன் நாடகத்தை. எனக்கு இந்த உயிரின் மீதும் ஆசை இல்லை...இந்த உலகின் மீதும் ஆசை இல்லை " என்றாள்..
அத்தோடு மட்டுமல்ல...அந்த ரோமைய தெய்வத்தின் பீடத்தை எட்டி ஒரு உதைவிட்டாள்.. அது பத்தடி பறந்து சென்று விழுந்தது. மேலும் அங்கிருந்த பூஜைக்குறிய   ரொட்டிகளையும் பழக்கூடைகளையும் தூக்கி வீசி எறிந்தாள்..இதனால் மிகுந்த கடுப்புற்றான் ஆளுநன் கல்பூர்னினன்.
" இந்த சின்ன சிறுக்கி இத்தனை பேர் முன்னிலையிலும் என் மானத்தை வாங்கிவிட்டாள்...இவள் மானத்தை நான் வாங்காமல் விடப்போவதில்லை... அடே யாரங்கே  பிடித்துக்கட்டுங்கள் இவளை..இதுவரை யாரும் அனுபவித்திராத கொடிய வேதனைகளை இவள் மீது சுமத்துங்கள் " என்றான் ஆளுநன் கல்பூஎனினன். அளுநனின் உத்திரவுப்படி  அத்தனை பேர் முன்னிலையிலும் யூலேலியா நிர்வாணமாக்கப்பட்டாள்..
அப்போது அவள் பேசியது," அடேய் கிழட்டுப்பூனையே.. கல்பூர்னினா...இப்போதே என்னை நன்றாகப்பார்த்துக்கொள்...ஆண்டவனுக்கு என் கற்பை தத்தம் செய்திருக்கும் என்னை   அனைவர் முன்னியிலும் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தி இருகிறாய்..இதை என் மணாளன் யேசு ஒருபோதும் மறக்கப்போவதுமில்லை...உன்னை மன்னிக்கப்போவதுமில்லை.
அப்பாவி கிறிஸ்த்துவ ஆண்களையும் அபலைப்பெண்களையும் உன் அதிகாரத்தை பயன்படுத்தி செய்த கொடுமைகளுக்கு அவர் உன்னையும் உன் சீசர் மாக்ஸிமியனையும், அரசன் தியோக்குலேசியனையும் என்ன பாடு படுத்துவார் என்பதை பொருத்திருந்து பார். ஒருநாள் வரும். அந்த நாளில் நான் மாட்ச்சியையில் உயிர்த்தெழுவேன்..ஆனால் நீயோ நித்திய
வீழ்ச்சிக்கு உயிர்த்தெழுவாய்.. அன்றைக்கு உன் வாழ்க்கை எவ்வளவு பரிதாபத்துக்குறியதாக இருக்கும் என்பதை நன்றாக நினைவில் கொள். மிக்க வந்தனம்... நாம் மீண்டும்   அந்த நாளில் சந்திக்கலாம்.. எனவேதான் நான் சொன்னேன்... இப்போதே என்னை நன்றாகப்பார்த்துக்கொள்... என் முகத்தை உன் மூளையில் நன்றாகப்பதிந்து கொள்" என்றாள்.
        யூலேலியாவின் இத்தகைய வார்த்தைகளால் மிகுந்த கோபமுற்ற கல்பூர்னினன்," ஏன் இன்னும் தாமதம் ..நடக்கட்டும் நடக்கட்டும்..என் குரு தெய்வத்துக்கு ரத்த தாகம் அதிகரித்து  விட்டது..வீனே காலதாமதம் வேண்டாம்" என்றான். ஒரு பெரும் உருளை வடிவமான பேரல் கொண்டு வரப்பட்டது, அதனுள்ளே கத்திகளும் கண்ணாடிச்சில்லுகளும்
பொருத்தப்பட்டிருந்தன. இந்த உருளையினுள் யூலேலியா இறக்கப்பட்டாள்...அந்த ராஜ வீதியின் மேடான பகுதியில் இருந்து உருட்டிவிடப்பட்டாள். கத்திகளும்   கண்னாடிச்சில்லுகளும் அவள் உடலை சின்னாபின்னமாக்கின. இன்றுவரை அந்த வீதி யூலேலியா உருண்ட வீதி எனப்பெயர் பெற்றுள்ளது..
     இந்த சித்திரவதையால் நம் யூலேலியா  அடைந்த பாடுகள் எப்படி இருந்திருக்கும் என்று எண்னிப்பார்ப்போமாக. இந்த சித்திரவதியினால் மனம் திருப்தி அடையாத ஆளுநன் கல்பூர்னினன், " அவள் விலா எலும்புகள் எல்லாம்   தெரியும்மட்டும் அவள் சதைப்பகுதிகளை இரும்பு ஊக்குகளாலும் குறடுகளாலும் கிழித்தெறியுங்கள் " என்றான். அவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டது.. அவளது விலா எலும்புகள்   யாவும் நன்றாகத்தெரியும் வரை சதைகள் கிழிக்கப்பட்டன..
      இதனாலும் திருப்தி அடையாத கல்பூர்னினன் அவள் மார்பகத்தை அறிய உத்திரவிட்டான். அத்தனைபேர் முன்னியிலேயும்   அவள் மார்பகம் அறிந்தெடுக்கப்பட்டது.. இதனால் ஏற்பட்ட வேதனையியால் யூலேலியா வாயிலிருந்து முனகல் சப்தத்தோடு பரிசுத்த ஆவியைப்பற்றிய பாடல்களும் யேசுவைப்பற்றிய   புகழ்ப்பாடல்கள் பலவும் கேட்கப்பட்டது..
      இதனால் மேலும் கோபமுற்றான் ஆளுநன் கல்பூர்னினன். "அவளுக்கு இந்த தண்டனை போதாது. அறிந்த அவள் மார்பகபகுதிகளை தீயை வைத்து பொசுக்குங்கள் " என்றான்.
       அவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்போதும் அவளிடமிருந்து வேதனைக்குறளான" ஐயோ...அம்மா...போன்ற வார்த்தைகள் வராததைக்கண்ட ஆளுநன் கல்பூர்னினன்  மிகுந்த எரிச்சலுற்று, " என்ன பெண் இவள்...இவளுக்கு எப்படி இவ்வளவு வேதனைகளையும் தாங்க முடிகிறது...ஆம் தாங்க முடியாத வேதனைதரும் ஒரு விஷயமுய்ம் இருகிறது..   ஆம் அது சிலுவை தண்டனைதான்...அடடா.. இவ்வளவு நேரத்தில் இதை செய்திருந்தால் இந்நேரம் அவள் கத்தி, கதறி, " ஐய்யா... என்னை இறக்கி விடு சாமி" என்று கதறிக்கதறி கேட்டிருப்பாளே என்று நினைத்து அவளை சிலுவையில் அடிக்க உத்திரவிட்டான் அந்தப்பாவி மகராஜன்.
         ஒரு பெரும் X வடிவ சிலுவை மரம் கொண்டு வரப்பட்டது.. யூலேலியா சிலுவையில் அடிக்கப்பட்டாள்... ஆனால் மாலை வரை ஆனதுதான் மிச்சம்.. அவள் வாயிலிருந்து ஒரு முக்கலோ முனகலோ வெளிவரவில்லை.
         இதனால் மேலும் கடுப்பான கல்பூர்னினன் அவளை சிலுவையிலிருந்து இறக்கி அவள் தலைமட்டும் தீவைத்து எரியும்படி செய்தான்..அவள்
தலை நன்றாகப்பற்றி எரிந்தது.. ஆனாலும் அவள் சாகவில்லை. இதைகண்ட பல சிப்பாய்கள் அங்கிருக்கப்பயந்து ஓட்டம்பிடித்தார்கள்..இறுதியாக யூலேலியாவை எப்படியும் கொன்றே   தீர்வது என்று துணிந்த கல்பூர்னினன் அவள் தலையை வெட்ட ஆணை கொடுத்தான். பற்றி எரியும் நெருப்போடு அவள் சிரசு வெட்டப்பட்டது. அவள் கழுத்திலிருந்து ஒரு வெண்புறா
வெளியேறியதை அங்கு பார்வையாளராக அமர்ந்திருந்த மக்கள் அனைவரும் பார்த்தார்கள்...
          யூலேலியாவின் உயிர் ஒரு வெண்புறாவடிவில் அவள் உடலிலிருந்து பறந்து பரலோகம்   சென்றதை பார்த்த மக்கள் அனைவரும் யூலேலியாவின் மீதும் அவள் வணங்கிவந்த யேசுவின் மீதும் மிக்க பற்று கொண்டு அப்போதே தங்கள் விசுவாசத்துக்கு சாட்ச்சியம் கூறினார்கள்.
. கோதுமை மணி மண்னில் விழுந்து மடிந்தால் ஒழிய அது ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக பலன் தறாது என்பதும் வேதசட்சிகளின் ரத்தம் திருச்சபையின் சொத்து என்பதும்  நிரூபணமாக்கப்பட்ட உண்மைகள்.
         தன் முயற்சியில் சற்றும் மனம்தளறாத விக்ரமாதித்தியனைப்போல இத்தனை பாடுகளிலும் அசைக்கமுடியாத யேசுவின் சாட்சியதிற்காக தன்
உயிரை கொடுத்த யூலேலியாவின் திரு உடலையும் நாசமாக்க விரும்பினான் ஆளுநன் கல்பூர்னினன். தலை வெட்டப்பட்டு நிவாணமாகக்கிடந்த நம் புனிதை யூலேலியாவின்   உடலை யாரும் எடுத்துச்சென்று புதைக்கக்கூடாது எனவும் அவற்றை காக்கைகளும் கழுகுகளும் நாய்களும் நரிகளும் கடித்துத்தின்று நாசமாக்கவேண்டும் என்றும் ஆணையிட்டான்..
ஆனால் ஆண்டவராம் யேசு அவள் திரு உடல் மட்டிலும் ஒரு புதுமையை செய்தார்..திடீரென இறங்கியது கடும் மூடுபனி. அவளைச்சுற்றிமட்டும் படர்ந்து ஒரு போர்வைபோல்   அவளை மூடிக்கொண்டது..இப்படியாக மூன்று நாள்மட்டும் அந்த மூடுபனி இருந்ததால் பொதுமக்கள் யாரும் அவள் நிர்வாண உடலை காணமுடியாதபடி ஆயிற்று.
     மேலும் அங்கிருந்த   புறாக்கூட்டம் தங்கள் அம்சமான புனிதை யூலேலியாவின் திரு உடலை யாரும் நெருங்காதபடிக்கு அவள் அருகில் வருபவரை கொத்தி விரட்டின.. மூன்று நாளைக்குப்பிறகு அவள்
திரு உடல் புதுமையாய் வெள்ளை வெளேர் என்று மாறி பரலோக ஜோதியுடன் பிரகாசித்தது..கிறிஸ்த்துவமக்கள் ரகசியமாக அவள் திரு உடலை எடுத்துச்சென்று கல்லறையில்   பூச்சிதமாக அடக்கம் செய்தனர்.
      யூலேலியாவின் திரு உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகுதான் மூடுபனி விலகியதால் ஆளுநன் கல்பூர்னினனுக்கு யூலேலியாவின் சடலம் காணாமல் போய்விட்டதாக  அறிவிக்கப்பட்டது... தங்கள் விசுவாசத்தை யூலேலியாவின் பாடுகளால் புதுப்பித்துக்கொண்ட கிறிஸ்த்வர்கள் அனேகர் யூலேலியாவின் வழியே பாடுகள் பலபட்டு யேசுவுக்கு   சாட்சிகளாய் மரித்து பரலோக பிராப்த்தி அடைந்தார்கள். அவர்களுள் யூலேலியாவின் தாய் தந்தையரும் அடக்கம். யூலேலியா தியாக தீபமாக மரித்தது ஃபெப்ருவரி பனிரெண்டு.. கி.பி.303.
       புனிதை யூலேலியாவின் சடலம் ஸ்பெயின் தேசத்திலுள்ள ஓவிடோ என்னும் பட்டிணத்தில் வைக்கப்படதாகவும் அங்கு அவருக்கு ஒரு பெரிய ஆலயம் உண்டனாது   என்றும் அங்கு அவரது திருவிழா டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படுகின்றது என்றும் ஒரு சரித்திரம் உண்டு. புனித யூலேலியாவின் அருளிக்கம் அடங்கிய கல்லறை தற்போது
பார்சிலோனாவில் ஒரு பெரும் அழகிய மிகவும் பிரம்மாண்டமான தேவாலயத்தில் வைக்கப்பட்டிருகின்றது. கி.பி. 633 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை நம்  யூலேலியாவுக்கு புனிதர் பட்டம் அளித்து அவரை கௌரவித்துள்ளது. பழமை கிழக்கு ரீதி திருச்சபையும் இவருக்கு புனிதர் பட்டம் அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.
ஏறாளமான புதுமைகள் நம் புனிதை யூலேலியாவின் பக்தி முயற்சியின் பேரில் நடை பெற்றுவருகிறது..புனித யூலேலியா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமீன்..




















No comments:

Post a Comment