Monday, December 9, 2013

" நாக தேவன் கோயிலும் நரகத்தின் வாயிலும் "




                 " நாக தேவன் கோயிலும் நரகத்தின் வாயிலும் "
     கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியில் தன் உதவியாளர் கொண்டு வந்து கொடுத்த இரண்டு கல் சிற்பங்களையும் பார்த்த அந்த கிரேக்க புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஸ்டிராபோவுக்கு தலை சுற்றிப்போனது... காரணம் இல்லாமல் இல்லை. இந்த பகுதி முழுக்க பாம்பு சிலைகள் நிறைய கிடைத்திருந்தாலும் இதைப்போன்ற பாம்பு சிற்பத்தை அவர் இதுவரை பார்த்ததே   இல்லை.. அது ஒரு பறவை நாகம் போன்ற சிலை.. ஓநாய் போன்ற தலையும் அதன் கூறிய பற்களும் நீண்டு விறிந்திருந்த இறக்கைகளும் பாம்பு உடலும், நான்கு கால்களும் கொண்ட   ஒரு பறவை நாக சிற்பம் அதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில்லை. மற்றும் ஒரு சிலை.. இது முற்றிலும் வித்தியாசமானது. மூன்றுதலை நாய்..அதன் கோர முகமும், கூறிய பற்களும்
காண்போரை அதிற்சிக்குள்ளாக்கும்.
       இந்த இரண்டு சிலைகளையும் கையில் வைத்திருந்த அந்த ஆராய்ச்சியாளருக்கு லேசாக மயக்கம் வந்தது. அவரின் முதுகுத்தண்டின் ஆரம்பம் முதல் கடைசிவரை சில்லென்றார்போல்  ஒரு உணர்வு ஏற்பட்டது. அவரது உள்ளங்கையிலிருந்து ஒரு நரம்பு புடைத்துக்கொண்டே வந்தது. வெகு விரைவில் அந்த புடைத்த நரம்பு மூளையை தாக்கவே அவர் தான் காண்பது
கனவா அல்லது நனவா என்னும் நிலைக்கு ஆளானார். அவர் கண்ட காட்சி இதுதான்.
      அவர் கையிலிருந்த அரக்கப்பாம்பு சிற்பம் உயிர் பெற்று எழுந்தது...உடனே அது விஸ்வ ரூபம் எடுத்தது. வாயில் நெருப்பை கக்கிக்கொண்டு வானில் பறந்தது. மயில் அகவும்   என்பதற்கொப்ப அதன் குறல் இருந்தது. அதன் குறலொலி உலகம் முழுக்க எதிரொலித்தது. அதன் குறலைக்கேட்ட மக்கள் யாவரும் பயத்தால் கண்களை மூடிக்கொண்டு தலை குப்புற
விழுந்து " எகித்னா...எங்களை ஒன்றும் செய்யாதே... எகித்னா...உனக்கு என்ன வேண்டும் ..அவசியம் அதை நான் தந்துவிடுகிறேன்..எகித்னா... எங்களை ஒன்றும் செய்து விடாதே"   என்று மன்றாடி அழுவார்கள். ஒரு வழியாக அந்த அரக்கப்பாம்பு தன் சுய ரூபம் எடுத்து தன் வசிப்பிடமான ஒரு குகைக்கோயிலை அடைந்தது. அந்த குகை வாயிலில் ஒரு மூன்றுதலை
நாய் காவல் காத்துக்கொண்டிருந்தது. இந்த வினோதமான இரண்டு விலங்குகளும் அதனதன் ஆசனத்தில் அமர்ந்தன. கோயில் பூசாரி வந்து மாடுகளையும், கன்றுகளையும் பலி கொடுப்பார். அவருக்கு சன்நதம் வரும்போதெல்லாம் ஊர் மக்கள் வந்து தங்கள் எதிர்காலம் பற்றி குறி கேட்ப்பர். பூஜாரி சொல்லும் குறிப்புகள் மிகச்சரியாக இருக்கும்.
   அழகிய மனைவியை வைத்திருப்பவன் வந்து குறிகேட்டால் தொலைந்தான் அவன். பூஜாரி அவளை அடைய என்னென்ன எத்தனங்கள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வான். அவள் மறுத்தால்   பூஜாரி அவள் மீது களங்கம் கற்பித்து அந்த தெய்வங்களுக்கு பலியாக அந்த குகையினுள் தூக்கிப்போடச்செய்வான். அந்த குகைக்குள் வீழ்ந்தவர்கள் உயிரோடு எழுந்ததாக சரித்திரம்   இல்லை. தங்கள் குறைகளைக்களையவும் தங்கள் எதிர்காலத்தை நல்ல விதமாக அமைத்துக்கொள்ளவும் இந்த பூஜாரிகளுக்கு அள்ளிள்ளிக்கொடுத்தே போண்டியாகப்போனவர்கள்
அதிகம்.
     ஒரு காலக்கட்டத்தில் " ஆண்டவா எங்களை இந்த அரக்கப்பாம்பின் தொல்லையிலிருந்தும் இந்த பாழாய்ப்போன பூஜாரிகளின் தொல்லயிலிருந்தும் எங்களைக்காப்பாற்ற யாராவது
வரமாட்டார்களா " என்று ஏங்கி ஏங்கி தங்கள் கரங்களை உயர்த்தி கத்தி கதறி அழுதர்கள்.
      காட்சி விலகியபின்னர் ஆராய்ச்சியாளர் ஸ்டிராபோவுக்கு இப்போது எல்லாம் புறிந்து போயிற்று. " ஓஹோ.. அந்த பறவை நாகப்பாம்பின் நரக வாசல் எனப்படும் ப்ளூடோனிக்யக்கோயில்   இதுவாகத்தான் இருக்க வேண்டும் " என்று உறுதி செய்து, பாழடைந்த அந்த பெரும் மண்டபத்தின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த குகையின் வாயிலை முகர்ந்து பார்த்தார். அதன்   முகப்பில் பெரும் புகை மண்டலம் இருந்தது.. சகிக்கமுடியாதபடி கந்தகத்தின் நெடி வீசியது. இதை உறுதிப்படுத்தும்படி தன்னிடமிருந்த சில பட்ச்சிகளை அதனுள்ளே போட்டார்..
    என்ன துரதிர்ஷ்ட்டம்.. உள்ளே பறந்துபோன அந்த பட்சிகள் பறக்கமுடியாமல் சிறகடித்து சிறகடித்து அதுவும் முடியாமல் போகவே பொத்து பொத்தென கீழே விழுந்து செத்தன.
" ஆம்... சரித்திரம் கூறும் நரக வாசல் எனப்படும் ப்ளூட்டோனியக்கோயில் இதுதான் என்றார்.
        இந்தக்கதை ஆரம்பிக்கும்போது கலிலேயாக்கடற்கரையில் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது. அது கி.பி. 30 ஆம் வருடம். யேசுநாதர் என்னும் ஒரு யூத ராபி செய்யும் அருங்குறிளும்  அற்புதங்களும் மக்கள் மத்தியில் பெரும் பேச்சாக இருந்தது....அவர் அப்போதுதான் ஜோனாவின் மகன் சீமோனையும் அவர் தம்பி ஆந்திரேயரையும் தன் அப்போஸ்த்தலர்களாக தெரிந்து  கொண்டிருந்தார். இவர்கள் பெத்சாயித்தா பட்டிணத்தை சேர்ந்தவர்கள்...இதே ஊரைச்சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர் வீட்டுப்பிள்ளையான ஒரு அழகிய வாலிபனும் யேசுநாதரைக்காண
கலிலேயாவுக்கு வந்திருந்தார். ஒரு முப்பது வயதைக்காட்டும் முகமும் அழகிய கண்களும் தீர்க்கமான நாசியும் இவர் எதற்கும் லேசில் மசிய மாட்டாதவர் என்னும் தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில் யேசு நாதர் " பிலிப்பே...என்னை பின்பற்றி வா" என்றார். யேசுநாதரின் வசீகரிக்கும் முகமும் கண்களும் பிலிப்பை ஏதோ செய்தன. பதில் ஏதும் பேசவில்லை  பிலிப்பு. அந்த நேரமே பிலிப்பு யேசுநாதரை தன் எஜமானறாக ஏற்றுக்கொண்டார்..இந்த அழைப்பு தனக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பூர்வ ஜென்ம பந்தம் என்று நம்பினார்.
      இந்த உறவால் பிலிப்பு தன் நண்பன் நாத்தானியேலை யேசுநாதருக்கு அறிமுகப்படுத்தவேண்டி அவரை சந்தித்தார்..அப்போது நாத்தானியேல் " நசரேத்தூரிலிருந்து நல்ல செய்தி ஏதேனும் வரக்கூடுமோ " என்றார்.. அதற்கு பிலிப்பு " வந்து பாரும் " என்றார். பிலிப்பும் நாத்தனியேலும் யேசுநாதரைப்பற்றி பலவிஷயங்கள் பேசினர். உண்மையில் நாத்தானியே யேசுவின்
பால்ய சினேகிதர். இருவரும் யேசுவை சந்தித்தபோது யேசுநாதர்," இதோ ஒரு உண்மையான இஸ்ராயேலன்.. இவரிடத்தில் குறையொன்றும் நாம் கண்டதில்லை" என்று கூறினார்.
அதற்கு நாத்தானியேல் ," யேசுவே நீவீர் எம்மை கண்டுகொண்டது எப்படி? " என்றார். அதற்கு யேசு நாதர்," நாத்தானியேல் ..நீர் அத்தி மரத்தடியில் பிலிப்புவிடம் பேசும்போதே நாம் உம்மை கண்டு கொண்டோம் " என்றார். யேசுநாதர் நாத்தானியேலையும் தம் அப்போஸ்த்தலராக தேர்ந்துகொண்டார். யேசுவும், நாத்தானியேல் என்னும் பார்த்தலோமியோவும், பிலிப்பும்
இணை பிரியா தோழராகினர். கூடுமானவரை இவர்கள் மூவருக்கும் ஒத்தவயதே இருக்கும். காலம் மிகவும் வேகமாக சுழன்றது.
    ஒரு முறை யேசுநாதர் தாக்பா என்னுமிடத்தில் மலைப்பிரசங்கம் செய்தார். யேசுநாதரின் பல பிரசங்கங்களில் இந்த மலைப்பிரசங்கம் மிகவும் புகழ் பெற்றது. இப்படி ஒரு பிரசங்கத்தை உலகில் எந்த நாட்டிலும் எந்த மஹானும் செய்ததில்லை..நேரம்போனது தெரியாமல் மக்கள் யேசுவின் பேச்சில் மயங்கியபடியே கேட்டுக்கொண்டிருந்தனர். பிரசங்கம் முடிந்ததும் மக்களுக்கு
பசி வந்தது..யேசு," பிலிப்புவே இந்த மக்களுக்கு உணவுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்ய முடியுமா" என்றார். அதற்க்கு பிலிப்பு " ஆண்டவரே,, இவ்வளவு மக்களுக்கு எங்கிருந்து உணவு  கொடுக்க முடியும்..இரண்டு நூறு தெனாரியத்துக்கு ரொட்டி வாங்கினாலும் அனைவருக்கும் கொடுத்து கட்டுபடி ஆகாதே..மேலும் இவ்வளவு பேருக்கு எங்குபோய் ரொட்டி வாங்க
முடியும்" என்றார்..இருப்பினும் யேசுநாதர் அத்தனை பேரையும் பந்தி அமரச்செய்து உணவு பரிமாற ஏற்பாடு செய்யச்சொன்னார். கூட்டத்திடில் ஒரு பையனிடத்தில் கிடைத்த ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து தன் பரமபிதாவிடம் வேண்டி அங்கிருந்த ஐந்தாயிரம் பேருக்கும் வயிறார உணவு பரிமாறினார். மற்ற அப்போஸ்த்தலர்களை
பார்க்கிலும் பிலிப்பு யேசுநாதரை அதிகம் கவனிப்பார். யேசுநாதர் ஒவ்வொரு புதுமையை செய்யும் போதும் அவர் கண்களையும் கைகளையும் உயர்த்தி தன் பரலோக பிதாவிடம் மன்றாடுவதும் அந்த புதுமை நிறைவேறியபின் தாம் அவருக்கு நன்றி கூறுவதையும் பிலிப்பு கவனிக்கத்தவறுவது இல்லை.
ஒரு முறை யேசுநாதர் தன் அப்போஸ்த்தலர்களை அழைத்து அவர்களுக்கு சகல உறுதிளையும் சக்திகளையும் கொடுத்து," நீங்கள் இருவர் இருவறாகச்சென்று என் பெயறால் சகல   மனிதருக்கும் போதியுங்கள்...நோயாளிகளை குணமாக்குங்கள்.. என் பெயரால் பேய்களை ஓட்டுங்கள்...என்னில் விசுவாசம் கொள்பவனுக்கு அனைத்தும் கிடைக்கும்...என் தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்.. அதாவது ஓ நாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல " என்றார். இந்த வார்த்தைகளிலும் யேசுநாதர் என் தந்தை
என்னை அனுப்பியதுப்போல என்கின்றார். ஒரு நாளைக்கு அவர் தந்தையைப்பற்றி அவரிடமே கேட்டுவிடவேண்டியது தான் என்று மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டார் பிலிப்பு.
அதற்கான ஒரு சந்தர்ப்பமும் ஒருநாள் வந்தது. தன் சந்தேகத்தை பிலிப்பு யேசுவிடம் கேட்டேவிட்டார்.
" ஆண்டவரே... தேவறீர் என்னை மன்னிக்க வேண்டும்...நீங்கள் இரவில் எங்களோடு தங்குவதே இல்லை... எங்கேயாவது தனிமையில் சென்று இரவு முழுவதும் ஜெபித்துக்கொண்டே  இருகின்றீர்...பகலிலும் உறங்குவதே இல்லை..சற்று நேரம் ஓய்வு கொள்வதோடு சரி...நீங்கள் யாரிடம் ஜெபிக்கிறீர்..என்றார்..யேசுநாதர் பிலிப்புவைக்கூர்ந்து நோக்கினார்.
" பிலிப்புவே ..நான் வான்வீட்டிலிருக்கும் என் பரம தந்தையிடமே ஜெபிக்கிறேன்..இரவில் நான் ஜெபிப்பது அடுத்த நாளைக்கான பிரசங்கம் மற்றும் புதுமையைக்குறித்தும் அதற்க்கு   வேண்டிய காரியங்களைக்குறித்தும் என் பரமபிதாவிடம் மன்றாடுவேன்.. அவர் சொல்வதையே நானும் சொல்வேன்... அவர் செய்யச்சொல்வதையே நானும் செய்வேன்" என்றார்.
இத்தகைய பதிலால் திருப்த்தியடையாத பிலிப்பு," ஆண்டவரே..தேவறீர் அடிக்கடி எம் தந்தை எம் தந்தை என்று கூறுகிறீர். ஆனால் ஒரு நாளும் அவரைகாட்டியதில்லை..ஆகவே  தேவறீர் எங்களுக்கு உம் பரலோக தந்தையை காட்டியருளும்" என்றார்.
யேசுநாதர்," பிலிப்புவே...நீர் கேட்பது என்னவென்று உனக்கு விளங்கவில்லை போலும்.. வானகத்திலுள்ள என் பரம தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருகின்றோம்..
என்னை அறிபவன் என் தந்தையை அறிவான்..என்னைப்பார்கிறவன் என் தந்தையை பார்க்கிறான்..எனக்கு செவி கொடுகிறவன் என் பரம தந்தையின் குரலுக்கு செவி கொடுக்கிறான்..இதில் என் தந்தையை காட்டு என்று நீ கேட்பது எப்படி? இவ்வளவு காலமும் என்னோடு பழகி இருந்தும் இதை நீ புறிந்துகொள்ளாதது எப்படி" என்று அவர் மீது சற்றே
கடிந்துகொண்டார். இருப்பினும் பிலிப்புவுக்கு யேசுவின் இந்த பதில் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அது எப்படி இவர் அவருக்குள்ளும்...அவர் இவருக்குள்ளும் எப்படி..
. எப்படி..என்று மண்டையைக்குடைந்துகொண்டார்.
 ஆனால் இதற்கான பதில் பிலிப்புவுக்கு அப்போது விளங்கவில்லை. யேசுநாதர் இறந்து அவரும் பரலோகம் சென்று பரிசுத்த
ஆவியானவர் தேவ தாயார் மீதும் அப்போஸ்த்தலர்கள் மீதும் இறங்கிவந்து அவருடைய ஏழு வரங்களான ஞான்ம்,புத்தி,வல்லமை,அறிவு, திடம்,பக்தி,தெய்வபயம் அனைத்தும்  கிடைத்தபிறகு, பிலிப்புவுக்கு என்றில்லை...அப்போஸ்த்தலர்கள் அனைவருக்கும் தமதிரித்துவத்தின் ரகசியம் அனைத்தும் புறிந்தது..மோட்ச்சம் என்பதும் உலகம் என்பதும் நரகம்
என்பதும் என்னவென்று புரிந்தது.. படைப்பின் சத்துவங்கள் அனைத்தும் புரிந்தது...உடல் என்பது என்ன... ஆன்மா என்பது என்ன என்று அனைத்தும் திட்டவட்டமாக புரிந்தன.
படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக.. மனுவைபடைத்தான் தன்னை வணங்க என்பதும் இந்த உலகமெல்லாம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஆகும் வரை இந்த   படைப்புகள் அனைத்தும் அதனதன் வேலைகளை செவ்வனே தொடரும் என்பதும் புரிந்தது..தன்னால் படைக்கபட்ட மனிதன் சாத்தானின் சோதனையால் தோல்வியுற்று நித்திய
வாழ்வை இழந்துபோனான் என்றாலும் பரலோக பிதா இந்த மனித ஜென்மத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் அவனுக்கு நித்திய வாழ்வுகொடுக்கும்பொருட்டு தன் ஒரே பேரான   மகனை இந்த உலகத்தை மீட்க அனுப்பினார் என்றும் அப்படிவந்தவர்தான் யேசு என்னும் பெயரில் வந்த இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் என்றும் புரிந்துகொண்டார்கள்..
அப்படி அவர் இந்த உலகத்துக்கு வர மனித சந்ததிக்கு பிறவாமால் மூன்றாம் ஆளாகிய பரிசுத்த ஆவி என்னும் சர்வேசுரனின் வல்லமையால் கன்னிமரியினின்று பிறந்தார் என்றும் புரிந்துகொண்டார்கள்...
    இனி இந்த உலகில் தங்கள் பணி யேசுகிறிஸ்த்துவை உலகம் முழுவதற்கும் அறிவிக்கவேண்டியதுதான் என்றும் உணர்ந்துகொண்டார்கள்..
இந்த சூழ்நிலையில் ஒருநாள் பிலிப்பு சமாரியாவில் வேதபோதக அலுவலை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் ஆண்டவரின் ஆவியால் நிரப்பப்பட்டு ஜெருசலேமிலிருந்து காசா செல்லும் ராஜ பாட்டையில் எத்தியோப்பியா நாட்டின் காந்தைஸ் ராணியின் ஒரு அமைச்சனை சந்திக்கச்சொன்னார். அந்நேரமே பிலிப்பு அந்த ராஜபாட்டையில் தோன்றினார். அந்த
வழியே தன் அலுவலை முடித்துவிட்டு தேவாலையத்தையும் பார்த்துவிட்டு தன் தாய் நாடு திரும்ப காசா பட்டிணம் திரும்பிக்கொண்டிருந்த அந்த எத்தியோப்பிய அமைச்சர்   இசையாஸ் தீர்க்கதரிசியின் 53ஆம் பகுதியின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுருளை வாசித்துக்கொண்டிருந்தார். சில இடங்களில் அதன் பொருள் அவருக்கு விளங்கவில்லை. இந்த
நேரத்தில் அங்கு வந்துகொண்டிருந்த பிலிப்பு இந்த எத்தியோபிய அமைச்சரை சந்தித்து பேசினார். அவரும் பிலிப்புவை வரவேற்று தன் அருகில் அமர்த்திக்கொண்டார்..
    பிலிப்பு இசையாஸ் தீர்க்கதரிசியின் வசனங்களில் யேசுநாதரின் பாடுகளைப்பற்றியும் அப்போது அவர் எப்படி இருந்தார் என்றும் அவர் எப்படி இறந்தார் என்பதுபற்றியும் தான் கண்டதும் கேட்டதும்   இசையாஸ் பாடல்களில் எப்படி நிறேவேறியது என்றும் விளக்கினார். இந்த விளக்கங்களில் திருப்தியடைந்த அந்த எத்தியோப்பியன்," பிலிப்புவே..இதோ இங்கே தண்னீர் இருகின்றது..  நான் ஞாஸ்நானம் பெறுவதில் தடை என்ன என்றார்...
      பிலிப்புவும் அவர் விரும்பியபடியே அவருக்கு அங்கேயே ஞானஸ்நானம் கொடுத்தார். அந்த எத்தியோபிய மந்திரியின் வழியாக எத்தியோப்பியாவில் கிறிஸ்த்துவம் பரவியது.
       அந்த எத்தியோப்பிய மந்திரி ஞாஸ்நானம் பெற்ற இடம் இன்னும் இருக்கின்றது. [கி.பி.724 முதல் 728] வரை இப்பகுதியை திரு யாத்திரை மேற்கொண்ட வில்லிபால்ட் என்பவர் எழுதிய   பாலஸ்த்தீன பயணக்கட்டுரையில் இந்த இடத்தப்பற்றி குறிப்பிடும்போது அங்கு ஒரு பழங்கால தேவாலயம் இருந்ததாகவும் அது அக்காலத்தில் புகழ்பெற்ற மடபா வரைபடத்தில்   இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இன்று அந்த இடம் பெய்த்சூர் என்னுமிடத்திற்கருகில் ஐன் அல் திர்வா என்னும் இடத்தில் இருகின்றது. இந்த பெய்த்சூர் என்னுமிடம்தான்  குழந்தை யேசுவை சந்திக்க வந்த மூன்று ராஜாக்கள் கடைசியாக தங்கிய இடம்..அன்று ராஜ பாட்டையாக இருந்த இடம் இன்று ஒத்தையடிப்பாதையாக மாறிவிட்டது.
        இப்படியாக இந்த உலகம் முழுமைக்கும் யார் யார் எங்கெங்கு போக வேண்டும் என்பதற்காக தங்களுக்குள்ளே சீட்டு போட்டார்கள். நம் பிலிப்புவுக்கும் நாத்தானியேல் என்னும்   பார்த்தலோமியோவுக்கும் ஸ்மிர்னா பட்டிணத்திற்குப்போகும்படி வந்தது. அப்போது பேதுரு என்னும் ராயப்பர் கூறினார் ," யேசுவில் இனிய என் சகோதரர்களே...இன்று பிறியும் நாம்
மீண்டும் இந்த உலக வழ்வில் சந்திக்கப்போவதே இல்லை...யேசு நம்மை நம்மில் இருந்து ஆட்சி செய்வாறாக...அன்று யேசுநாதர் நம்மிடம் கூறியதை சற்றே ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்...என் பரலோக தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்... அதாவது ஓநாய்களின் மத்தியில் ஆட்டுக்குட்டிகளைப்போல...இதே வார்த்தைகளையே நானும் உங்களுக்குச்சொல்கிறேன்...யேசு என்னை உங்களுக்குத்தலைவராக ஏற்படுத்தியதால் அவரின் ஆசீர்வாதத்தையே நானும் உங்களுக்கு கொடுகிறேன்..
       பிலிப்புவே...பார்த்தலோமியோவே.. நீங்கள் போகும் தேசம் என்னவென்று உங்களுக்குத்தெரியுமா?...கொடுமையான மிலேச்சர்களும் சிலைவழிபாடு செய்பவர்களும் மலிந்த நாடு அது.  யூதர்களுக்கு தலை நகர் ஜெருசலேம் என்றால் சாத்தானின் தலை நகர் ஸ்மிர்னாவாகும்...சாத்தானை அதன் நரகக் குகை வாயிலிலேயே சந்திக்க யேசு உங்களை   தேர்ந்தெடுத்திருகிறார்.. அவரின் வல்லமையால் நீங்கள் சாத்தானை வெல்வது உறுதி. யேசுவுக்கு சாட்சிகளாக நீங்கள் திகழ்வீர்களாக... சென்று வாருங்கள்.." என்று அவர்களை
கட்டித்தழுவி முத்தமிட்டு அனுப்பினார். இப்படியாகவே அனைத்து அப்போஸ்த்தலர்களும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பிரியாவிடைகொடுத்து பிரிந்தனர்.
                     " ஸ்மிர்ணா என்னும் ஒரு பெரும் பட்டிணம்."
யேசு கிறிஸ்த்து மனிதாவதாரமாக இவ்வுலகிற்கு வருவதற்கு 133 ஆண்டுகளுக்கு முன்னே ரோமர்கள் இந்த நாட்டை கபளீகரம் செய்துகொண்டார்கள். தங்கள் ஆதிக்கத்தை   நிலைநாட்ட தங்களின் தெய்வங்களையும் தேவர்களையும் பற்றிய கதைகளை அவர்கள் பரப்பினர். தங்களுடைய தெய்வங்களின் கோயில்களையும் அரண்மனைகளையும் மஹால்களையும் கட்டினர். இன்றைக்கு இந்த பட்டிணம் துருக்கி தேசத்தின் தென் மேற்கில் உள்ளது. இன்று ஸ்மிர்ணா என்னும் பெயர் மாறி இஸ்மீர் என்று அழைக்கப்படுகிறது. இந்த பட்டிணம் துருக்கி   தேசத்தின் ஒரு மாநிலமாக உள்ளது.. இந்த மாநிலத்தின் ஒரு மாவட்டம் தான் எப்பேசுஸ் என்னும் பட்டிணம்.
      யேசு கிறிஸ்த்துவின் மறைவுக்குப்பிறகு ஜெருசலேமில் வேத
கலாபணை ஆரம்பித்த பொழுது யேசுவின் பிரியமான சீடரும், சுவிஷேஷகரும்,அப்போஸ்த்தலர்களுள் ஒருவருமான புனித ஜான் என்னும் அருளப்பர் யேசுவின் தாயாறாகிய புனித மரியாளை தன்னுடன் அழைத்துக்கொண்டு இந்த எப்பேசு பட்டிணத்துக்குதான் வந்தார். தேவ தாயார் இந்த எப்பேசுப்பட்டிணத்தில்தான் கடைசிக்காலம் வரை வாழ்ந்து மரித்து
கல்லறையில் அடக்கம் செய்ய்யப்பட்டதாக ஒரு சரித்திரம் சொல்லுகிறது. இப்போதும் இந்த எப்பேசு பட்டிணத்தில் தேவதாயார் கடைசியாய் வாழ்ந்து மரித்த வீடு உள்ளது.
  ஆண்டவறாகிய யேசுநாதர் இதையும் ஒரு அர்த்தத்தோடுதான் செய்திருகிறார் என்று சொல்லத்தோன்றுகிறது. இந்த ஸ்மிர்ணாப்பட்டிணம் சாத்தானின் தலை நகராக உள்ளதால் அதை அடக்க அதன்
ஜென்ம விரோதியான மரியாளின் சமாதியும் இங்கிருப்பது மிகவும் பொருத்தமானதாகவே உள்ளது. ஆதி ஆகமத்தில் கடவுள் பாம்பை சபிக்கும்போது ," கன்னி கருத்தாங்கி ஆண்மகவை  பெற்றெடுப்பாள்.. அவள் உன் தலையை நசுக்குவாள்..ஆனால் நீயோ அவளை ஜெயிக்க முற்படுவாய்..அவள் குதிகாலை தீண்ட முற்படுவாய். ஆனால் அது உன்னால் முடியாது..." என்னும் வேத வாக்கியங்களை நினைவுக்கு கொண்டு வாருங்கள்..ஆக தேவ தாயார் அங்கிருக்கும் வரை சாத்தானின் கொட்டமனைத்தும் அடக்கப்பட்டுவிடும்..அவன் தலை
தூக்கும்போதெல்லாம் தேவ தாயாரானவள் அவன் தலை தூக்காதபடி அவனை மிதித்துக்கொண்ட இருப்பார். ஆக சாத்தானின் தலை நகர் இங்கிருக்கிறது... மேலே சொன்ன நாக தேவனின் கோயிலும் நரகத்தின் வாயிலும் எங்கிருகின்றது?. அது இந்த எஃபேசுப்பட்டிணத்திலிருந்து அடுத்த மாகாணமான பைஜீரியாவிலிருக்கின்றது. எப்பேசுப்பட்டிணத்திலிருந்து
250 மைல் தொலைவில் கிழக்கே சென்றால் அங்கே இருக்கின்றது இந்த நாக தேவன் கோவிலும் நரகத்தின் வாசலும்.. இங்குதான் வந்தார்கள் நம் அப்போஸ்த்தலர்களான   நாத்தானியேலும், பிலிப்பும்.
                    " நாக தேவன் கோவிலும் நரகத்தின் வாசலும் "
     " ஓப்பியோர்மே" என்னும் பெயர் இந்த பட்டிணத்திற்குறியது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் தாங்கள் வழிபடும் பாம்புதேவனுக்கு ஓப்பியோர்மே என்பது பெயர். இந்தப்பட்டிணத்தில்  அனேக பாம்புக்கோயில்கள் இருந்தாலும் இந்த ஓப்பியோர்மே என்னும் பாம்புக்கோயில் பிரசித்தி பெற்றது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. நெருப்பை கக்கும் அரக்கப்பாம்பு இந்த
கோயிலின் கருவறையிலே இருக்கும். எப்போதாவது தன் அரக்கத்தன்மையோடு நெருப்பைக்கக்கிக்கொண்டு விசுவ ரூபம் எடுத்து வெளிவரும்...கண்ணில் பட்டோரை   கடித்துக்குதரும்...பலரை உயிரோடு விழுங்கும். திரும்பிச்செல்லும்போது நரக வாசல் எனப்படும் புளூட்டோனியக்குகைக்கோயிலில் போய் மறையும்.. மக்களுக்கு இந்த அரக்கப்பாம்பின்   மீது இருந்த பயம் நம் நாத்தானியேலும் ஃபிலிப்பும் வரும்வரை இருந்தது.
        பிலிப்புவுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்தார்கள். அதில் இரண்டு பெண்பிள்ளைகள் திருமணமே செய்துகொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டார்கள். கடைசிப்பெண் திருமணம் ஆனவர்..அவரும் தன்னை தேவ ஊழியத்துக்கு ஒப்படைத்துவிட்டார். எஃபேசில் வாழ்ந்து வந்தார். பிலிப்பின் சகோதரி மீரியம்
என்பவரும் பிலிப்பின் கூடவே வந்து தன்னையும் தேவ ஊழியத்துக்கு அர்ப்பணித்திருந்தார். இவர்கள் ஒரு கூட்டணியாய் இந்த பாம்புப்பட்டிணமாகிய ஓப்பியோர்மே நகரில் வந்து தங்கி
தங்களின் வல்லமையான் பிரசங்கத்தினாலும் செய்த அருங்குறிகளாலும் பலர் யேசுவை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களிள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்தாக்கீஸ் என்பவர்.
      அவர் தன் மனைவி மக்கள் அனைவருடனும் யேசுவை ஏற்றுக்கொண்டார். தன் வீட்டிலேயே நம் அப்போஸ்த்தலர் நாத்தானியேல் பிலிப்பு அவர் பிள்ளைகள் அவர் சகோதரி மீரியம் அனைவரையும் தங்க வைத்துக்கொண்டார். அவர்களின் ஊழியத்துக்கான அனைத்து தேவைகளையும் ஸ்த்தாக்கீஸே கவனித்துக்கொண்டார். எனவே கடவுளின் ஆசீர்வாதம் அவர் மீதும்   அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் ஏறாளமாக கிடைத்தது. பிலிப்பும் நாத்தானியேலும் செய்த அரும்குறிகளில் ஒன்று இறந்த மனிதன் ஒருவரை உயிர்த்தெழ வைத்தது என்று
ஒரு சரித்திரக்குரிப்பு கூறுகிறது. இதனால் சாத்தான் மிகுந்த கோபம் கொண்டான். நாத்தானியேலையும் பிலிப்புவையும் பழிவாங்க தக்க சந்தர்பத்திர்காக காத்திருந்தான்.
    ஒரு நாள் இந்த ஓப்பியோர்மே நகர ஆளூனனின் மனைவி நக்னோறா என்பவள் பிலிப்பின் வல்லமையான பிரசங்கத்தைக்கேட்டாள். பிரசங்கம் முடிந்ததும் அவள் தன்னை பிலிப்புவிடமும் நாத்தனியேலிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டாள். " ஐய்யா..நான் ஒரு எபிரேயப்பெண்..என் தந்தையார் பேசும் எபிரேய பாஷையிலேயே நீர் பேசுவதால்
நான் உம்மை என் தந்தையாகவே பாவிகிறேன்..எனக்கு பார்வைக்கோளாறும் பெண்களுக்கே உண்டான பல சொல்லமுடியாத நோய்களும் எனக்கு உண்டு. தாங்கள் எனக்காக ஜெபித்து  என் நோயிலிருந்து விடுதலைதர முடியும் என நம்புகிறேன்... தேவறீர் என் மீது இரக்கம் வைக்க வேண்டுகிறேன்" என்றாள்..பிலிப்பும் நாத்தானியேலும் அவளுக்காக ஜெபிக்க அப்போதே
முற்றிலும் குணமடைந்தாள் நக்னோறா. அவள் அடைந்த மகழ்சிக்கு அளவே இல்லை.ஆனால் நக்னோறாவின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. தன் மனைவி நக்னோறா குணமடைந்தது அவள் கணவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..அதுவும் இரவில் அவள் தனிமையில் ஜெபிக்கும்போது அவள் இருந்த அறை முழுவதும் ஒளி வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதைக்கண்ட ஆளுனன் தன் மனைவி தான் வணங்கும் நாக தேவனை வழிபடாமல் யேசு என்னும் புதிய தெய்வத்தை வணங்குவதை அவனால் சகித்துக்கொள்ள
முடியவில்லை. "யேசுவை நீ கும்பிடக்கூடாது.. நம் முன்னோர்கள் வணங்கிவந்த ஒர்பியோமே என்னும் நாக தேவனையே வணங்க வேண்டும்" என்று அவளுக்கு ஆணை யிட்டான்.
     இதனால் நக்னாறா அடைந்த துன்பம் வார்த்தையில் அடங்காது. இருப்பினும் தைரியமாக தன் கணவனிடம், " இவ்வளவு காலமும் நான் நீர் வணங்கிவந்த நாக தேவனைத்தானே   வணங்கி வந்தேன்..அவனால் எனக்கு குணம் கிடைத்ததா...இல்லையே... யேசு என்னும் தேவன் தானே எனக்கு குணம் அளித்தார்... அவரைக்கும்பிடுவதில் என்ன தவறு இருக்க
முடியும்... வேண்டுமானால் நீர் என் சவாலை ஏற்றுக்கொள்ளும்...இதுவரை நான் என் கண்ணால் ஏற்பட்ட துன்பத்தை உனக்குத்தருகிறேன்...உன் நாக தேவன் உனக்கு குணம் கொடுகிறாறா பார்ப்போம்...நீர் குணமானல் நான் யேசு என்னும் தெய்வத்தை கும்பிடுவதை நிறுத்திக்கொள்கிறேன் " என்றாள். சவாலை ஏற்றுக்கொண்டான் அவள் கணவன்.
     அதன்படி அவன் கண்களில் புறை நோயை ஏற்படுத்தினார் யேசு கிறிஸ்த்து.. அவள் கணவனுக்கு நாளுக்கு நாள் பார்வை குறைந்துகொண்டே வந்தது. இதைக்கண்டு பயந்த அவன்  தன் மனைவி நக்னோறாவின் தலை முடியை பற்றி இழுத்துவந்து ஸ்த்தாக்கியாஸ் வீட்டு முன்பாக வந்து," அடேய் பிலிப்பு,, பார்த்தலோமியோ...உங்களுக்கு தைரியமிருந்தால்  நாங்கள் வணங்கும் எங்கள் பாம்பு தெய்வமான் ஓப்பியோர்மே முன்னிலையில் உங்கள் சாமார்த்தியத்தை காட்டுங்கள்..சவாலில் தோற்றவர் கொல்லப்படவேண்டும் .நீவிர் ஜெயித்தால்  நானும் என் நாட்டு மக்களும் யேசுகிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் நாக தேவன் உங்களைத்தின்னாமல் விடமாட்டார். சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது உயிரை
விடப்போகிறீர்களா?" என்றான். அப்போது பிலிப்பும் நாத்தானியேலும் தாங்கள் சவாலை ஏற்றுக்கொள்வதாகக்கூறினார்கள்.
   அடுத்த நாள் காலை அந்த ஓர்பியோமே எனப்படும் நாக தேவன் ஆலயத்தில் சவாலை ஏற்றுக்கொள்ள காத்திருந்தனர் பிலிப்பும் பார்த்தலோமியோவும்..நாக தேவனின் பூஜாரிகள்  பூஜையை ஆரம்பித்தார்கள்.." ஓ...நாக தேவா வருக...ஓ ...ஓர்ப்பியோமே வருக...ஓ .ஏகித்னா தேவனே வருக வருக... விரைந்து வருக..வருகவே வருக..." பாடிக்கொண்டும்  ஆடிக்கொண்டும் தங்கள் நாக தேவனை போட்டியில் கலந்துகொள்ள அழைத்தார்கள்... அப்போது வானம் இருண்டது...அந்த நாக தேவனின் ஆலயத்திலிருந்து கரும்புகை வெளிவந்தது.
நாக தேவனின் கோயில் பூஜாரி சந்நதம் வந்து அலறினான்.." இதோ எல்லாம் வல்ல ஓப்பியோர்மே தேவன் வருகிறார்...சக்தியுள்ள ஏகித்னா தேவன் வருகிறார்..அனைவரும் விழுந்து  ஆராதியுங்கள் " என்று உடல் எல்லாம் நடுங்க ஆடிக்கொண்டே வந்தார். கொஞ்ச நேரத்தில் அந்த ஆலயத்திலிருந்த அத்தனை பாம்பு சிலைகளும் உயிர் பெற்று அசைந்தன. பொத்து
பொத்தென்று அவை கீழே விழுந்து ஊர்ந்து வந்தன. இதக்கண்ட மக்கள் மிகுந்த அச்சத்தால் ஆட்பட்டு " ஏகித்னா...எங்களை மன்னியும்..உன் வல்லமை அறியாத எங்களை   மன்னியும்..நாங்கள் வழி தப்பி யேசு என்னும் பிற தெய்வத்தை ஏற்றுக்கொண்டது பெரும் தவறு என்று உணறுகிறோம்..எங்களை மன்னித்துக்க்கொள்...மன்னித்துக்கொள்.. "
என்று அலறினர்.
அந்த நாக தேவனின் ஊர் முழுக்க இருந்த அத்தனை கோயில்களிலும் இருந்த பாம்பு சிலைகள் உயிர் பெற்று எழுந்தன. அவை அனைத்தும் பெரும் திரளாக வந்து மக்களை விரட்டிக்கொண்டு வந்தன. அந்த ஊர் மக்கள் முழுவதும் சுமார் 20000 பேர் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று அனைவரும் ஒரே கோரசாக " நாக தேவா எங்களைக்காப்பாற்று " என்று கதறியபடியே தங்கள் கைகளை உயர்த்தியபடி சரணாகதியாக இந்த நாக தேவனின் பெரிய கோயிலை அடைந்தார்கள். அந்த பெரியகோயிலின் முன்னே நின்றிருந்த நம்
ஃபிலிப்பும், பார்த்தலோமியோவும் யாருக்கும் பயப்பட்டாதாகவும் தெரியவில்லை..எதற்கும் பயப்பட்டாதாகவும் தெரிய வில்லை..கண்களை மூடினால் அது பயத்தின் அடையாளம் என்று  எதிரிகள் நினைப்பார்கள் என்று அவர்கள் கண்களைக்கூட மூடவில்லை... ஆனால் அவர்கள் யேசுவின் மீது கொண்ட பக்த்தியின் அடையாளமக சற்றே கண்களை மூடி" ஆண்டவரே
இரக்கமாயிரும்.கிரிஸ்த்துவே இரக்கமாயிரும்.உன் அடியோர் மீது உம் கருணை கண்களை திருப்பியருளும்..இந்த சவால் எனக்கும் சாத்தானுக்கும் அல்ல ..உமக்கும் சாத்தானுக்கே உண்டானது...இனிமேல் இது என் காரியம் அல்ல..நீரே பார்த்துக்கொள்ளும்" என்றார்..
       அடுத்து துவங்கியது சாத்தானின் ஆட்டம்.. அந்த நாக தேவனின் கருவறையிலிருந்து சிற்பமாக இருந்த அரக்கப்பாம்பு உயிர் பெற்று எழுந்து வந்தது. கோயிலை விட்டு  வெளிவரும்போது ஆண்களும் பெண்களும் பூஜாரிகளும் சாமிவந்து ஆடினர்கள்... அவர்கள் எழுப்பிய பெரும் சப்த்தம் காண்பவர் அனைவருக்கும் பெரும்   திகிலூட்டின..குழந்தைகள்பயத்தால் வீர் வீர் என கத்திக்கதறினர். வெளியே வந்த அரக்கப்பாம்பாகிய ஓர்பியோமே, " யார் இந்த பரதேசிகள் ?" என்றான்..
அதற்கு கோயில் தலைமை பூஜாரி, " மஹாப்பிரபூ...இந்த பரதேசிகள் பாலஸ்த்தீனத்திலிருந்து வந்தவர்கள்...உங்கள் வல்லமை தெரியாமல் உங்களை சவாலுக்கு அழைத்தவர்கள்..
யேசு என்னும் அன்னிய தெய்வத்தை இங்கே வந்து பிரசங்கிக்கிறார்கள்... நம்முடைய மக்கள் பலரும் இந்த மூடர்களை நம்பி அந்த யேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டார்கள்..
உமது வல்லமையால் நீர் யார் என இந்த உலகத்துக்கு காட்டும். வழி தப்பிப்போன நம் மக்களுக்கும் இந்த பரதேசிகளுக்கும் நல்ல பாடம் கொடுத்தருளும். நீர் ஜெயித்து இந்த பரதேசிகளை யும் இங்கு கிறிஸ்த்துவர்களாக மாறிப்போனவர்களையும் விழுங்கிவிடும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றான்.
அதற்கு நாக தேவன்," அப்படியா...பூஜாரி....கவலைப்படாதே...நாம் இவர்கள் அனைவரையும் அழித்து சங்காரம் செய்துவிடுவோம்" என்று வானுக்கும் பூமிக்குமாக எழுந்து நின்றான்.
      அவனது விஸ்வ ரூபத்தைக்கண்ட மக்கள் அனைவரும் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டனர். அனைவரையும் திகில் ஆட்க்கொண்டது.
" அடேய் மனிதப்பதரே...என்னிடமா உன் வேலையைகாட்டுகிறாய்...உன்னை என்ன செய்கிறாறேன் பார் " என்றபடி தன் வாயைத்திறந்துகொண்டு பிலிப்புவின் முன் நின்றான்
     ஏகித்னா என்னும் தேவன். விஸ்வ ரூபமெடுத்திருந்த ஏகித்னாவின் வாய் திறக்க திறக்க அது ஒரு குகைபோல் தோன்றியது.. வாயில் கந்தக நாற்றம் சகிக்கமுடியாததாக இருந்தது.
திடீரென வானில் ஒரு பெரும் ஆரவாரம் கேட்டது. பெரும் இடிச்சத்தம் பளீீரென்னும் மா பெரும் மின்னலுடன் கேட்டது. வானில் அதிதூதறாகியா அர்ச். மிக்கேல் சம்மனசு தோன்றினார்.
" பிலிப்புவே...பார்த்தலோமியுவே...இவனுக்கு அஞ்சாதீர்கள். இவனை நான் பார்த்துக்கொள்கிறேன்... இவனிடமிருந்து வெளிப்படும் விஷமும் ஊரில் தோன்றியுள்ள பாம்புகளிடமிருந்து   வெளிப்படும் மூச்சுக்காற்றுகளும் பொது மக்களை தாக்கதபடி நான்கு திசைகளுக்கும் சேர்த்து ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவின் பெயறால் சிலுவை அடையாளம் இடுங்கள்". என்றார்
பிலிப்புவின் சகோதரி மீரியமும் பிலிப்புவின் பிள்ளைகள் மூவரும் அந்த பெரும் கூட்டத்தினரிடையே சென்று எல்லா திசைகளுக்கும் சேர்த்து ஆண்டவறாகிய யேசுவின் பெயறால்  சிலுவை அடையாளமிட்டனர். அவ்வளவுதான்..ஊர் மக்களைச்சுற்றியுள்ள எல்லா பாம்புகளும் புஸ் புஸ் என்று சீறித்தள்ளின..ஆனால் அவற்றால் நகரக்கூட முடியவில்லை.
" அடேய் ஏகித்னா... உன் சாமார்த்தியத்தை என்னிடம் காட்டு..உன்னைச்சுற்றி ஆண்டவறாகிய யேசுவின் பெயரால் சிலுவை அடையாளமிடப்பட்டுள்ளது...நீ எங்கும் நகரக்கூட முடியாது. வா... என்னிடம் வா..." என்றார் அதிதூதறான மிக்கேல் சம்மனசானவர். சாத்தானாகிய ஏகித்னா என்றும் ஓர்பியோமே என்றும் அழைக்கப்பட்ட அந்த அரக்கப்பாம்பு எழுந்து நின்றது. அதுவரை பல்லி போல தரையில் ஊர்ந்து வந்த அந்த அரக்கப்பாம்பு தன் பின்னங்கால்கள் இரண்டையும் தரையில் ஊன்றிக்கொண்டு மனிதர் போல் நின்றுகொண்டு அதிதூதர் மிக்கேல் சம்மனசானவரிடம் போரிட எழுந்தான். ஆரம்பித்தது உக்கிரமான போர்.
ஃபிலிப்பும், பார்த்தலோமியோவும் ஆண்டவறாகிய யேசுக்கிறிஸ்த்துவை நோக்கி மன்றாடினர். " சாந்த்தூஸ்... சாந்த்தூஸ்..சாந்த்தூஸ்...தோமினே தேயுஸ் சாபாவோத்" அதாவது
பரிசுத்தர்...பரிசுத்தர்..,பரிசுத்தர்..
மூவுலகின் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தர்...
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன..
உன்னதங்களில் ஓசான்னா....
ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர்பெற்றவர்...
உன்னதங்களிலே ஓசான்னா...என்னும் திருப்பாடலை பாடிக்கொண்டிருந்தனர்...அது காற்றில் நிறைந்து எங்கும் எதிரொலித்தது. அந்த போரினால் எகித்த்னா தேவன் என்னும்
அரக்கப்பாம்பு விடும் மூச்சுக்காற்று பெரும் விஷமாய் காற்று மண்டலத்தை நிறைத்தது. அது மேக மண்டலத்தை கரு நிறமாய் மாற்றியது. ஆனால் அதிதூதரின் நெருப்பு கத்தியிலிருந்த   ஒரு ஓளி வெள்ளம் வந்து அதன் விஷத்தை முறியடித்து காற்று மண்டலத்தை சுத்தமாக்கியது. உடனே காற்று மண்டலம் கரு நிறத்திலிருந்து தூய வெண்ணிறமாக மாறியது.
இவர்களுகிடையே நடந்த போர் மக்களுக்கு இடியாகவும் மின்னலாகவும் தோன்றியது.. அடிக்கடி வானம் கறு நிறமாகவும் மீண்டும் வெண்ணிறமாகவும் மாறி மாறி தோன்றியது.
நடக்கும் இந்த உக்கிரமான போரில் ஏகித்னா என்னும் பாம்பு அரக்கனுக்கு தோல்விக்கான அறிகுறி தோன்றியது. அவன் இறக்கைகள் இரண்டும் வெட்டப்பட்டு பூமியில் விழுந்தன..
இதன் வேதனையால் பெரும் கூச்சல் எழுப்பினான் ஏகித்னா. அவன் உடம்பில் பல வெட்டுக்காயங்கள் தோன்றின. ஆங்காங்கே ரத்தம் பீறிட்டுக் கொட்டியது. அந்த ரத்தம் பூமியின்மீது  அவன் கோயில்களின் மீது பெரும் நெருப்புத்துண்டங்களாக விழுந்ததால் அந்த கோயில்கள் தீப்பிடித்து எரிந்தன. கடைசியாக ஒரு பெரும் மரணக்கூச்சல் எழுந்தது.
அதிதூதராகிய அர்ச். மிக்கேல் சம்மனசானவர், " அடேய் ஏகித்னா...இந்தப்பெயரில்தானே எம் மக்களை வஞ்சித்துவந்தாய்..இன்றோடு தொலைந்தாயடா நீ" என்று அந்த அரக்கப்பாம்பு தேவனாகிய ஏகித்னாவின் நெஞ்சில் தன் நெருப்பு பட்டயத்தால் ஆழமாக சொருகினார். அவ்வளவு தான்...மரணக்கூச்சலிட்டு சாய்ந்தான் ஏகித்னா என்னும் நாக தேவன்.
ஏகித்னா தேவனின் மரணக்கூச்சல், கேட்டவர்கள் அனைவரின் காதுகளையும் செவிடாக்கியது. கடைசியில் செத்து வீழ்ந்தான் ஏகித்னா..அவன் தரையில் விழுந்த போது சாதாரண நாகப்பாம்பு போன்ற தோற்றத்தோடு விழுந்தான்..சற்று நேரத்தில் அந்த பாம்பு உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோனது.. அத்துடனா போயிற்று... நகரில் தோன்றி இருந்த
அத்தனை பாம்புகளும் காற்றில் கறைந்து போயின. நரக வாசல் எனப்படும் அந்த ப்ளூட்டோனியக்கோயிலில் இருந்த அந்த மூன்று தலை நாயும் மரித்துப்போய் காற்றில் கறைந்து போனது.
" வெற்றி... வெற்றி...ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவுக்கே வெற்றி..ஆண்டவறாகிய யேசுவின் திரு நாமம் வாழ்த்தப்படுவதாக " என்று மக்கள் அனைவரும் வாழ்த்தொலி எழுப்பி ஆண்டவறாகிய யேசுவின் வெற்றியை கொண்டாடினார்கள்.அந்த பாம்பு நகரின் மக்கள் எல்லோரும் யேசுவின் வல்லமையை புரிந்துகொண்டார்கள். இந்த நேரத்தில் ஊருக்கு வெகு தொலைவிலிருந்த ஒரு எரிமலை வெடித்து சிதறியது. பெரும் அக்கினி குழம்புகள் சீறிப்பாய்ந்து வெளி வந்தன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டான் ஆளுனன்.
   " என் நாட்டு மக்களே...இந்தப்பரதேசிகள் ஏதோ மாய வித்தைகள் செய்து நம் பாம்புக்கடவுளை கொண்றுவிட்டார்கள்... இதனால் வெறுப்புற்ற நம் ஏகித்னா தேவன் நம்மைப்பழிவாங்க  அவர் இருப்பிடமான எரிமலையை தூண்டி விட்டுள்ளார்.. எனவே இந்த பரதேசி சாமியார்களை அடித்தே கொல்லுங்கள்... இந்த நாட்டிலுள்ள கிறிஸ்த்துவர்களைக்கொல்லுங்கள்..
இவர்களுக்கு புகலிடம் அளித்த அந்த ஸ்த்தாக்கியையும் அவன் குடும்பத்தையும் தீ வைத்துக்கொளுத்துங்கள் " என்றான்.
ஆளுனனின் மனைவி நக்னோரா பதறியடித்து எழுந்தாள்..." இல்லை...இது அநியாயம்...சவாலில் நீர் தோற்றுவிட்டீர். அதன்படி நீர் கொல்லப்பட வேண்டும்..ஆனாலும் இப்போதும்   ஒன்றும் காலம் கடந்து போய்விடவில்லை...நான் பிலிப்புவிடம் கேட்டு உனக்கு உயிர் பிச்சை வாங்கித்தருகிறேன்... மன்னிப்புக்கேட்டுக்கொள்." என்றாள். அதற்க்கு ஆளுனன்
" அடியே பாதகி...நீ என்ன எனக்கு உயிர் பிச்சை வாங்கித்தருவது...நான் அல்லவா அவர்களுக்கு பிச்சை போட வேண்டும்" என்றவனாய் " மக்களே இந்த பரதேசி சாமியார் இருவரையும்  அவன் குடும்பத்தாரையும் பிடித்துக்கட்டுங்கள்.. உயிர் போகும் வரை கல்லால் அடியுங்கள்" என்றான். அதுவரை யேசுவுக்கே புகழ் என்று வாழ்த்திய மக்கள் நன்றி மறந்து " கொல்லுங்கள் பிலிப்பையும் பார்த்தலோமியுவையும் " என்றார்கள். உடனே ஆரம்பித்தது கலவரம். கலகக்காரர்கள் ஸ்த்தாக்கியாவின் வீட்டை சூறையாடினார்கள்.. வீட்டிற்கு தீ வைத்தார்கள். வீடு  தீயால் முற்றிலுமாக கொழுந்து விட்டு எரிந்தது.. இப்படியாக பல கிறிஸ்த்துவர்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டு தீக்கிறையாக்கப்பட்டது.
பார்த்தலோமியோவும் பிலிப்பும் கைதியாக்கப்பட்டு அந்த பாம்புதேவன் கோயிலின் தூண்களோடு சேர்த்து கட்டப்பட்டார்கள். பிலிப்புவின் சகோதரி மானபங்கம் செய்யப்பட்டார்.
ஆனால் கடவுள் அவள் மீது இரக்கம்கொண்டு ஒரு பெரும் அக்கினி ஜுவாலையை அவள் மீது அனுப்பி மக்கள் யாவருக்கும் அவளது நிர்வானம் தெரியாதபடி பாதுகாத்தார்.
இந்த துரதிஸ்ட்டமான சம்பவங்களாள் மிகவும் பரிதவித்துப்போனாள் ஆளுனனின் மனைவி நக்னோரா...அப்போது ஆளுநனுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன..இதனால்   மேலும் கல்நெஞ்சனானன் ஆளுநன்..." மக்களே இந்த இரண்டு பரதேசி சாமியார்களையும் கல்லால் எரிந்து கொல்லுங்கள் " என்றான்.. மக்கள் புத்தி இழந்து நன்றி மறந்து அவர்கள்
இருவர் மீதும் கல்லால் எரிய ஆரம்பித்தனர். இந்த அக்கிரமத்தைக்கண்ட நக்னோரா," ஆண்டவர் மீது ஆணை..நீதியுள்ள சர்வேசுரன் உனக்கு கொடுமையான தண்டனை வழங்கட்டும்...  ஏற்கனவே நீர் என்னிடம் தோற்றதால் என் கண் நோய் உனக்கு உண்டானது...இப்போது அது முற்றிலுமாக உன்னை பாதிக்கட்டும். இந்த அப்பாவி மனிதர்கள் மீது வீனே கொலைபழி   சுமத்துகிறாய்..இதை அவர்கள் தெய்வம் ஒருபோதும் மன்னிக்காது. இப்போதும் கேட்கிறேன். அவர்களை விடுதலை செய்" என்றாள்.
" அடப்பைத்தியக்காரி... இவர்களை விடுதலை செய்தால் என்ன நடக்கும் தெரியுமோ? சவாலில் நான் தோற்றதர்காக நான் சாக வேண்டும்..எனக்கு இதில் உடன்பாடு இல்லை..   நான் வாழ வேண்டும்.. அதற்க்கு அவர்கள் சாக வேண்டும்" என்றான்..
கடுமையான் கல் வீச்சால் அப்போஸ்த்தலர்களாகிய பிலிப்பும் பார்த்தலோமியோவும் படுகாயமடைந்தனர். அப்போது பிலிப்பு தன் நண்பர் பார்த்தலோமியோவிடம் தங்கள் நாட்டு தாய்   பாஷையான எபிரேயத்தில், " பார்த்தலோமியோ... நான் நம் நண்பர் ஜானை [சுவிஷேஷகறாகிய அருளப்பரை] காண விரும்புகிறேன்" என்றார்.
அப்போது ஆளுனன்," என் மக்களே கல்லால் அடிப்பதை நிறுத்துங்கள்.. நம் நாக தேவனை கொண்ற இவர்களுக்கு கொடுமையான சிலுவை சாவை கொடுப்போம்" என்றான்.
அவன் மனைவி நக்னோரா பரிதவித்து " வேண்டாம்... வேண்டாம்.. இது அநீதி.. இது அக்கிரமம்..இந்த புண்ணியவான்களின் மீது இரக்கம் வையுங்கள்.. அவர்களைக்கொல்லாதீர்க்ள் "  என்று கதறி அழுதாள்.. ஆனால் யாரும் அவள் பேச்சை காதுகொடுத்து கேட்ப்பதாக இல்லை. வெறிபிடித்த மக்கள் கூட்டம் அவர்கள் இருவர் மீதும் பாய்ந்தது.. அப்போஸ்த்தலர்களாகிய
பிலிப்பும் பார்த்தலோமியோவும் நிர்வானமாக்கப்பட்டார்கள். அவர்களைக்கட்டிவைத்து அடித்த அந்த கல் தூணில் தலைகீழாக வைத்து பெரும் ஆணிகளால் அவர்கள் காலைத்துளைத்து  தூணோடு பிணைத்தார்கள். அவர்களின் பாரம் தாங்கும் படியாக அவர்களின் இருபக்கத்துடைகளிலும் பெரும் இரும்பு ஊக்குகளை செலுத்தி அவற்றையும் தூணோடு பிணைத்தார்கள்,.
   இந்த சூழ்நிலையில் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் அந்த வழியே வந்தார் சுவிஷேகரான அருளப்பர். நகரின் மத்தியில் பெரும் அமளிக்கிடையே மூன்று பேர்   துன்புருத்தப்படுவதுகண்டு மனம் இளகியவறாய் அங்கிருந்த மக்களிடம் " இங்கு என்ன நடக்கிறது.. யார் இவர்கள்? என்று கேட்டார். அந்த அளவுக்கு அவர்கள் அடையாளம் காண முடியாதபடி அடிபட்டிருந்தனர். அந்த மக்கள், " ஐய்யா ..உம்மைப்பார்த்தால் ஊருக்கு புதிதாய் தோன்றுகிறது..இவர்கள் வேதம் போதிக்க வந்த பரதேசிகள்..ஒருவர் பெயர் பிலிப்பு.. மற்றவர் பெயர் பார்த்தலோமியோ.. அந்தப்பெண் பிலிப்பின் சகோதரி மீரியம்..இவர்கள் நாங்கள் வழிபட்டுவந்த பாம்பு தேவனாகிய ஏகித்னாவை கொன்று போட்டதால் நாங்கள் அவரை  கொல்லும்படிக்கு தூணோடுதூணாக அறைந்துள்ளோம் " என்றனர்.
   அதற்கு அருளப்பர்," உங்கள் ஏகித்னா தேவன் உண்மையில் சக்த்தி உள்ளவர் என்றால் இவர்களை அல்லவா  கொண்றிருக்க வேண்டும்... மாறாக இவர்கள் உங்கள் தெய்வத்தை கொண்றதனால் இவர்கள் வணங்கும் தெய்வம் அல்லவா சக்தி வாய்ந்தது...தோல்வியை ஒப்புக்கொள்ளாமல்  ஜெயித்தவர்களை கொல்வது எந்த விதத்தில் நியாயம்?" என்றார். இத்தகைய பதிலால் திடுகிட்ட மக்கள், " அடேய் ...நீயும் இவர்களில் ஒருவனா...பிடித்துக்கட்டுங்கள் இவனையும்... சிலுவைச்சாவுக்கு இவனையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றனர். இந்த வர்த்தமானங்களைக்கேட்ட பிலிப்பும் பார்த்தலோமேயும் பெரிதும் கலங்கினர். இதற்கு மேலும் பொறுக்கமாட்டாத
பிலிப்பு," மதியீனர்கேள்...உங்களை நாங்கள் இந்த பெரும் அரக்கப்பாம்பின் கொடுமையிலிருந்து காப்பாற்றியது பெரும் தவறு.. நன்றி கொன்ற மக்கள் நீங்கள்.." என்றார்.
     இந்த அக்கிரமத்தைக்காண சகிக்காத நக்னோரா," பிலிப்புவே இந்த நன்றி மறந்த மக்களை சபித்து நரக அக்கினியில் தள்ளும்...இதற்கெல்லாம் காரணமான என் கணவனை நீதியுள்ள  சர்வேசுரன் அவரை நித்திய நரகத்தின் அடி ஆழத்தில் புதைக்கட்டும். இந்த மக்கள் ஒருவரையும் விடாதபடி பூமி பிளந்து விழுங்கும்படி சபியும்...சபியும் " என்று வயிறெரிந்து கூறினாள்.
அப்போது ஒருவன் அருளப்பரை கயிற்றால் கட்டினான்... உடனே வந்தது கோபம் பிலிப்புவுக்கு... தன்னை மறந்தார்...தான் யேசுவின் அப்போஸ்த்தலன் என்பதையும் மறந்தார். தன் கண்முன்னே தன் சகோதரி மானபங்கப்படுத்தப்பட்டாள்...தன்சகோதரன்போன்ற அப்போஸ்த்தலன் பார்த்தலோமியோ தன்னோடு அடித்து நொறுக்கப்பட்டார்... தன் எஜமானனும்
கடவுளுமாகிய யேசுவின் இனிய சகோதரனும் யேசுவின் தாயாரை சுமார் பதினெட்டு ஆண்டுகாலம் தன்னோடு வைத்துக்காப்பாற்றியவருமான அருளப்பனையும் அல்லவா இப்போது கொல்லப்பார்கிறார்கள்...முடியாது...இதை நான் அனுமதிக்க முடியாது.....இந்தப்பாவிகளை நான் சபிக்கிறேன்...என்னுள்ளே வாசம் செய்யும் என் ரட்ச்சகரே யேசுநாதா...உம் பெயரால்  நான் இந்த மக்களை சபிகிறேன்.. பூமி பிளந்து இந்த மக்கள் நரக அக்கினியில் மூழ்கட்டும்" என்றார். அவ்வளவுதான்... இடியான இடி இடித்தது...பளீர் பளீர் என்னும் மின்னல்கள்
வானில் தோன்றி மறைந்தன..அவர்கள் இருந்த பூமி டமேல்...டமேல் என்று பிளந்தது.. அந்த நாகதேவன்கோயில் முதல் நரகத்தின் வாசல் வரை பூமி பிளந்தது...இந்த அதிற்ச்சியில்   நாகதேவன் கோயில் முதல் நரக வாசல் எனப்படும் ப்ளூடோனியக்கோயில் வரை அந்த நகரில் இருந்த அத்தனை ரோமர்களின் தெய்வங்களின் கோயில்களும் டமேர் டமேர் என்ற பெரும்
சப்த்தத்தோடு கீழே இடிந்து விழுந்தன. எதிரிகள் அத்தனை பேரும் நரக நெருப்பில் அமிழ்தப்பட்டார்கள்.. விதிவிலக்காக அந்த நாட்டிலிருந்த பரிசுத்தர்களும் பத்தினிப்பெண்களும்  அவர்கள் கரங்களில் இருந்த குழந்தைகளும் யாதொரு சேதமுமின்றி அவர்கள் நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தார்கள். மற்ற இடங்களிலெல்லாம் பூமி பிளந்து நரக நெருப்பு   தெரிந்தது.
    அந்த நெருப்பினூடே ஓங்கி அழும் மனித குரல்கள் கேட்டன...பிலிப்புவே பார்த்தலோமியுவே எங்களை மன்னியும் ...எங்களை மன்னியும்..அறியாமல் செய்த பிழை இது..  யேசுவின் வல்லமையை உணர்ந்திருந்தும் அவரை மதியாமலும் ஏற்றுக்கொள்ளாமலும் இருந்தோம்...இப்போது எங்கள் பிழை உணருகிறோம்... எங்களை மன்னித்தருளும்.. என்று  கதறி அழுதனர்..
      அந்த நாளில் 85 வயதைக்கடந்த பிலிப்பு தன் கோபத்தை அடக்காமல் அந்த அக்கிரமிகளை தண்டிக்கும்படியாக யேசுவின்பெயரால் சபித்து அவர்கள் அனைவரையும் நராக நெருப்பில்  போட்டது அவர் வயதுக்கும் அவரின் அப்போஸ்த்தலிக்க வாழ்க்கைக்கும் பொருந்தாத செயல் என்று அருளப்பர் கூறினார். " பிலிப்புவே...நம் யேசுநாதர் நமக்கு இப்படியா படிப்பினை
கற்பித்தார். தீமை செய்தவனுக்கு நீரும் தீமை செய்யலாமோ..உமக்கும் அவர்களுக்கும் இப்போது என்ன வித்தியாசம்.. தனக்கு தீமை செய்தவனுக்கும் நன்மையே செய் என்றல்லவா நம்   யேசு சொல்லி இருகிறார். என்ன இருந்தாலும் நீர் செய்தது தவறு.. எனவே நீர் மீண்டும் யேசுவிடம் கேட்டு அவர்கள் ஆனைவரையும் நரக நெருப்பினின்று விடுதலைசெய்யச்சொல்லும்.
இதை உம்மைத்தவிர வேறு யாரும் செய்ய முடியாது..உடனே ஆரம்பியும்... யேசுவிடம் மன்றாடும்" என்றார். பிலிப்பு தன் பிழை உணர்ந்தார்.. அவர் கண்களில் கண்னீர் கரகர வென்று   வழிந்தோடியது.
    அப்போது நக்னோரா " பிலிப்புவே, நீர் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யும்... ஆனால் என் கணவரை மட்டும் நீர் மன்னிக்கவோ விடுதலை செய்யவோ கூடவே கூடாது" என்றாள்.
பிலிப்பு உடனே தன் வேண்டுதலை ஆரம்பித்தார்..தன் பாவத்தையும் இந்த அக்கிரமிகள் பாவத்தையும் மன்னிக்க மிகவும் உருக்கமாக வேண்டினார். அப்போது யேசுநாதர் அவருக்குதரிசனம் கொடுத்து," பிலிப்புவே, நீர் உம் தவறுகளை உணரும் பட்சத்தில் நானும் உம் மீதும் இந்த மக்களின் மீதும் இரங்குகிரேன். இதோ அவர்களை நரக நெருப்பினின்று விடுவிகிறேன்
என்று கூறி தன் சிலுவையை நரகத்தில் இறக்கினார். அது சிலுவையாய் இறங்கி ஒரு பெரும் ஏணியாக மாறியது. அதைப்பிடித்துக்க்கொண்ட மக்கள் அதன்வழியாக மேலே ஏறி வந்தார்கள். ஆனால் அப்படி வெளியே வராத ஒரு மனிதரும் இருந்தார் அவர்தான் நக்னோராவின் கணவன்.
   .நரக நெருப்பிலிருந்து வெளி வந்த மக்கள் அனைவரும் யேசுவின்
வல்லமையால் பெரும் அக்கினிக்குழம்பிலிருந்து விடுதலை ஆனதினால் யேசுவைப்பற்றி புகழ் பாடல் பாடிக்கொண்டே வந்தார்கள்.
மீண்டும் யேசுநாதர்," பிலிப்புவே...உம்கோபம் நியாயமானது என்றாலும் நமக்கு அதில் உடன்பாடு இல்லை..நீர் எம்கட்டளையை மீறிவிட்டீர்...உமக்கு தீமை செய்தவர்களை நீர் மன்னித்திருக்க வேண்டும். அதைவிடுத்து நீர் அவர்களை சபித்தீர்... அப்போஸ்த்தலர்களுக்கு நாம் கொடுத்துள்ள உறுதிமொழியின்படி நீர் பூலோகத்தில் எதைக்கட்டுவாயோ அதை
நாமும் பரலோகத்தில் கட்டுவோம்...நீர் எதெல்லாம் பூலோகத்தில் கட்டவிழ்ப்பீறோ அதெல்லாம் நாமும் பரலோகத்தில் கட்டவிழ்ப்போம் என்ற நியதியின்படி நீர் கேட்டுக்கொண்டதற் கொப்ப நாமும் அவர்களை நரகத்தில் போட வேண்டியதாயிற்று. நீர் கேட்டுக்கொண்டதால் இப்போது நானும் அவர்களை நரகத்திலிருந்து விடுதலை செய்ய்ய வேண்டியதாய் இருகிறது.
உன் கோபத்தினால் நரகத்திற்கு போனவர்கள் தலைமுடி கூட கருகாமலும் கட்டிய துணிகூட தீயாமலும் அவர்கள் மேனி கூட பொசுங்காமலும் நாம் அவர்களைக்காத்தோம்..
இதற்கு தண்டனையாக நீர் இறந்து நாற்பது நாள் வரை உன் ஆன்மா பரலோகத்தில் நுழைய முடியாது. அந்த நாற்பது நாளும் முடிந்து அடுத்த நாள் நாம் உம்மை எம்மோடு சேர்த்துக்கொள்வோம்..நீர் மரித்து புதையுண்ட இடத்தில் ஒரு திராட்சை செடி ஒன்று முளைக்கும்... அதன் கணிகளைப்பறித்து சாறு பிழிந்து நாற்பது நாளும் பலிபூசை நிறைவேற்று..
உன்னோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கும் நம் அப்போஸ்த்தலன் பார்த்தலோமியோ அர்மீனியா சென்று அங்கு நம் காரியங்கள் முடிந்து வேத சாட்ச்சியாக மரிப்பார்...உன் சகோதரி மீரியம் ஜோர்டான் நாட்டுக்கு சென்று நமக்காக சாட்சியமாக மரிப்பாள்...உம் புதல்வியரும் உம்முடைய இடத்திலேயே அடங்குவர்...உமக்குப்பின் உம் சீடர் தாக்கீஸை ஆயறாக நியமி " என்று கூறி மறைந்து போனார்...
யேசுநாதர் கூறியபடி பார்த்தலோமியோ சிலுவையினின்று இறக்கப்பட்டார். பிலிப்பின் சகோதரி மீரியமும் விடுவிக்கப்பட்டர். ஆனால் மக்கள் யாவரையும் பிலிப்பு தன் அருகில் நெருங்கவோ தன்னை தொடவோ அனுமதிக்கவில்லை.. தன்னை விடுதலை செய்ய மக்கள் விரும்பியும் அவர் இது யேசுவின் சித்தம் என்று கூறி சிலுவையினின்று இறக்கிவிட அனுமதிக்கவே இல்லை...சிலுவையிலே அவர் ஆறு நாட்க்கள் துன்பப்பட்டார்..ஏழாம் நாள் அவர் இறந்தார். அவரை கல்லறையில் நல்லடக்கம் செய்தனர்...
   அவர் இறந்த மூன்றாம் நாள் அவர் கல்லறையிலிருந்து ஒரு திராட்ச்சை கொடி ஒன்று கிளம்பியது...தடதடவென்று வளர்ந்து கனிகள் பல தந்தது.. அதன் சாற்றைவைத்தே நாற்பது நாளும் பலிபூசை நடத்தப்பட்டது.
அவர் இறந்த நாற்பது இரவும் பகலும் மக்கள் அவர் மீது வைத்த அன்பினாலும் நம்பிக்கையினாலும் தூங்காமல் விழித்திருந்து ஜெபம் செய்தபடியே இருந்தார்கள்.
அவர் இறந்த நார்பத்தொன்றாம் நாள் பிலிப்பு பார்த்தலோமியோவுக்கு தோன்றி தான் யேசுவோடு கலந்துவிட்டதாகக்கூறி மறைந்து போனார்.
பிலிப்பின் மக்கள் இருவர் வயோதிகம் காரணமாக மரித்து தந்தை பிலிப்பு அடங்கிய இடத்திலேயே அடங்கினர். அவரது மூன்றாவது மகள் எப்பேஸு பட்டிணத்தில் மரித்தார்..
சுவிஷேகரான் புனித அருளப்பர் வெகு முதிர்ந்த வயதில் எப்பேஸு பட்டிணத்தில் காலமானார்.. அவரது க்ல்லறை இன்றும் எஃபேசு பட்டிணத்தில் இருகின்றது.
பிலிப்பின்இந்த மூன்று பிள்ளைகளின் கல்லறை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை... பிலிப்பு கூறியபடியே பார்த்தலோமியோ தாக்கீஸுக்கு அந்த பாம்புபட்டிணத்தின் முதல் ஆயறாக அபிஷேகம் செய்தார்.
பிலிப்புவின் காலத்துக்கு முன்பே ரோமர்கள் இந்த நாக தேவன் ஆலயத்தோடு பல தேவர்களின் கோயில்கலையும் கட்டி இருந்ததால் அந்த ஊர் உன்னத நகர் எனப்பெயர் பெற்றது .
அதாவது ஹீரியோபொலிஸ் எனப்பட்டது.. பிலிப்புவின் கல்லறை இந்த ஹீலியோபொலிஸ் என்னும் இடத்தில் இருப்பதாக இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல ஆயர்களும்  பல வரலாற்று ஆசிரியர்களும் எழுதி வைத்திருகின்றார்கள். இந்த ஹீலியோபொலிஸ் நகரில் இருந்த எரிமலைகள் வெடித்து அடங்கிய சம்பவங்கள் பல உண்டு..அப்படியாக ரோமர்கள்
காலத்திலேயே கொதிநீர் ஊற்றுகள் பல இருந்தது..அவை பல மருத்துவ குணங்களைக்கொண்டதாக நம்பப்பட்டுவந்தது. இப்போதும் சில இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் உள்ளன.
..அடுக்கடுக்கான மடிப்பு மலைகள் போல அழகழகான வெண்மை சுண்ணாம்பு படிவங்களில் இந்த சுடு தண்னீர் உற்றுகள் வழிந்தோடி அற்புதமான காட்சி அமைப்பாக மாறியுள்ளன.   அவை அனைத்தும் மருத்துவ குணமுடையதாகையால் ரோமர்கள் காலத்திலிருந்து இன்றுவரை இங்கு சுற்றுலாப்பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது..
இந்த இடம் இப்போது பம்முகலே என அழைக்கப்படுகிறது..
ரோமர்கள் காலத்திலிருந்து மத்திய தரைகடலிலிருந்து எஃபேசுஸ் பட்டிணம் துவங்கி துருக்கியின் தென் கிழக்கிலுள்ள அனதோலியா பட்டிணம் வரை ஒரு ராஜபாட்டை போடப்பட்டது.  அது இந்த பைரேஜியா பட்டிணத்திலுள்ள ஹீலியோபோலிஸ் பட்டிணம் வழியே தான் சென்றது...இப்போதும் இந்த சாலை நடை முறையில் உள்ளது. இந்த சாலை வாழியே தான் புனித
சின்னப்பர் தன் இரண்டாம் வேத போதக அலுவலை ஆரம்பித்தார். வியாபார நிமித்தமாக துருக்கியின் தென் மேற்கிலுள்ள எஃபேசுஸ் பட்டிணமும் அதன் தென் கிழகிலுள்ள   கடற்கறை நகரமான அனதோலியாவும் தரை வழியே இணைக்கப்பட்டதால் ராஜ்ஜிய விரிவாக்கமும் வாணிக விரிவாக்கமும் ரோமர்களுக்கு மிகுந்த லாபத்தை தரும் கேந்திரப்பட்டிணமாக
விளங்கியது. இதனாலும் கிரிஸ்த்துவ மதம் அந்தப்பகுதியில் வேகமாகப்பரவியது.
பிலிப்பின் மரணத்திற்குப்பிறகு இந்த ஹீரியோபோலிஸ் பட்டிணம் பரிசுத்தர்களின் பட்டிணம் எனப்பெயர் பெற்றது.. அவ்வளவு வேத சாட்ச்சிகள் பலகால கட்டங்களில் இங்கு   அடக்கம் செய்யப்பட்டு இருகிறார்கள். கி.பி. 8 ஆம் நூற்ராண்டுக்குப்பிறகு இயற்கையின் சீற்றத்தால் பூமி அதிர்ச்சி உண்டாகி மொத்த ஹீலியோபோலிஸ் நகரமும் அடியோடு வீழ்ந்து போனது. அதற்குப்பிறகு இந்த ஹீலியோபோலிஸ் பட்டிணம் தழைக்கவே இல்லை. இந்த ஹீலியோபோலிஸ் என்னும் பட்டிணத்து இடிபாடுகளை உலக பாரம்பரிய சின்னங்களைப்பாதுகாக்கும் யுனெஸ்கோ நிருவணம் தன் பொருப்பில் எடுத்துக்கொண்டது, ஒரு வருடத்துக்கு 15 லட்ச்ம் சுற்றுலாப்பயணிகள் இந்த பட்டிணத்தையும் அதிலுள்ள புனித
பிலிப்பு அப்பொஸ்த்தருடைய கல்லறைகோயிலையும் தரிசித்து செல்கிறார்கள்.
முதல் நூற்றாண்டிலிருந்து இன்று வரை புனித பிலிப்பின் பக்திமட்டும் கிறிஸ்த்துவர்கள் மத்தியில் குறையவே இல்லை. இப்போதும் புனித பிலிப்பின் அருளிக்கங்கள் ரோமில் வத்திக்கானில் அப்போஸ்த்தலர்களுக்கான தேவாலயத்தில் ஊள்ளது. புனித பிலிப்புவே எங்களுகாக வேண்டிகொள்ளும். ஆமீன்.

No comments:

Post a Comment