Wednesday, December 4, 2013

" தலை கொடுத்தான் தலைவன் "



                                  " தலை கொடுத்தான் தலைவன் "

          அந்த அழகிய ஏட்ரியாட்டிக்கடல் அன்று என்றுமில்லா அழகோடு காணப்பட்டது. நூற்றுக்கணக்கான நாவாய்களும் சிறு சிறு மீன் பிடி படகுகளும் அந்த ஓர்டாண்டோ கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஏதோ சொர்க்கபுரிக்கு நம்மை அழைத்துச்செல்லும் ஒரு உணர்வை நமக்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடலின்   ஆழத்தையும் அதனுள்ளே வாழும் நீவாழ் உயிரினங்களையும் நம் சாதாரண கண்களாளேயே காணமுடியும். அதிலும் ஒரு இரண்டுகாத தூரம் படகில் சென்று பார்த்தால் அடடா....  கடவுள் இந்த உலகை எவ்வளவு அழகாக படைத்துள்ளார் என்று அவரது சிருஷ்டியை நாம் பாராட்டாமலிருக்க முடியாது.
      இத்தாலிநாட்டின் தென் கிழக்கு பகுதியில் ஏட்ரியாடிக்கடலின் ஒரு துறை முகப்பட்டிணம்தான் ஓர்டாண்டோ..இந்த பட்டிணத்திற்கென்று ஒரு அழகிய கோட்டை உண்டு. அழகிய பெண், அழகிய வீடு, அழகிய கோட்டை, அழகிய நாடு இவை அனைத்தும் மற்றவரை சொந்தம் கொண்டாட வைக்கும். இப்படியாக இந்த ஓர்டாண்டோ என்னும் அழகிய பட்டிணத்தையும்
சொந்தம் கொண்டாட பலர் முயற்சித்ததன் விளைவு....இந்தக்கோட்டையும் பட்டிணமும் பலர்பேர்களின் கைகளில் மாறி மாறி கி.பி.553 ல் அன்றைய பைசாந்தியர்களின் [துருக்கி] கையில்   வீழ்ந்தது.அவர்கள் கையிலும் அது சில காலம்தான் இருந்தது. பிறகு சார்சேனியர்கள் கைக்கு மாறியது. பிறகு அரகோனியர்கள் கைக்கு மாறியது. தாங்கள் இழந்த கோட்டையையும் செல்வாக்கையும் மீண்டும் இந்த கோட்டையில் நிலை நாட்ட துருக்கியர் என்னும் பைசாந்தியர் கி.பி. 1480 ஆம் ஆண்டு இந்த ஓர்டாண்டோ கோட்டைக்கைப்பற்ற ஒரு நெடும் போராட்டம்   நடத்தினர்.
      திடீரென வந்த பைச்சாந்திய ராணுவம் சுமார் 15000 பேர் ஏறக்குறைய 150 கப்பல்களில் வந்து இந்த நகரை முற்றுகை இட்டனர். பெர்சியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள் அக்காலத்தில்   பெரும் சாதனை புறிந்தன...அதன் முன்னால் எந்தக்கோட்டையும் நிலை நிற்க முடியாது. இத்தகைய பீரங்கிகளால் தன் தாக்குதலை ஆரம்பித்தான் பைசாந்திய தளபதி அஹமத் பாஷா.
           அந்த கோட்டைக்குள் இருக்கும் நகர மக்களுக்கு ஒரு அறிக்கை விடுத்தான்." இந்த ஓர்டாண்டோ மக்களே.. உங்களுக்கு இன்று ஒரு நாள் அவகாசம் தருகிறேன்...உயிர்மீது ஆசை   இருப்பவகள் என்னிடம் வந்து சரணாகதி அடைந்தால் பொது மன்னிப்புதரப்படும்..மறுத்தால் அனைவரும் கொல்லப்படுவீர்கள்.. " இந்த அறிவிப்பை பொது மக்கள் யாரும் அவ்வளவு
பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை..காரணம் ராணுவ உதவி கேட்டு ஓர்டன்டொ மன்னர் ஃப்ரன்சிஸ் லார்கோ நேப்பிள் மன்னர் ஃபெர்டினண்டோ என்பவருக்கு செய்தி அனுப்பி இருகிறார். எப்படியும் உதவி வந்துவிடும். இந்த பைசாந்திய ராணுவம் விரட்டி அடிக்கப்படும் என்று நம்பினார்கள். ஆனால் காலம் செல்லச்செல்ல எந்த உதவியும் வந்ததாக தெரியவில்லை.
           தளபதி அஹ்மத் பாஷா முதலில் சம்பிரதாயமாக ஒரு வீரனை அனுபினார்.. ஆனல் கோட்டைக்குள் இருந்தவர்கள் அவன் தலையை வெட்டி அனுப்பினர்..மீண்டும் ஒரு வாரம் கழித்து   மேலும் ஒரு வீரனை அனுப்பினான்.. அவனை வில்லால் குத்தி கொண்றனர் கோட்டை வாசிகள். இதனால் மிகுந்த கோப வெறிகொண்டான் அஹ்மத் பாஷா.. தன் படை வீரர்களுக்கு   தாக்குதலுக்கான உத்திரவை கொடுத்தான்..உடனே ஆரம்பமானது போர். பயங்கரமான பீரங்கித்தாக்குதல் ஆரம்பமானது. ஓர்டாண்ட்டோ கோட்டைக்கதவுகள் தகர்க்கப்பட்டன.
        கோட்டை பல இடங்களில் விரிசல் கண்டது..மேலும் மேலும் பீரங்கியின் தாக்குதலில் விரிசல் கண்ட கோட்டைகள் தகர்ந்து விழுந்தன. இந்த வழிகளிள் புகுந்தது பைசாந்திய ராணுவம்.  அவர்களை உள்ளே வரவிடாமல் கோட்டைகளின் மீதிருந்து கொதிக்கும் சுடு தண்னீரையும் கொதிக்கும் எண்ணைகளையும் அவர்கள் மீது ஊற்றி எதிரியின் முன்னேற்றத்தை தடுத்தனர்   கோட்டையின் விசுவாச வீரர்கள்.. ஆனால் கோட்டையிலிருந்த பல வீரர்கள் சத்தம் போடாமல் காணாமல் போய் இருந்தனர்..வெறும் ஐம்பது பேர்தான் தீரமாகப்ப்போரிட்டனர்.ஆனால் அவர்கள் எவ்வளவு நேரம்தான் தாக்குப்பிடிக்கமுடியும்..15000 பைசாந்திய ராணுவ வீரர்கள் எங்கே. ஐம்பது விசுவாச வீரர்கள் எங்கே..கொஞ்ச நேரத்தில் ஓர்டாண்டோ கோட்டை வீழ்ந்தது.. அதன்பிறகு ஆரம்பித்தது அட்டூழியம்..
                                                     முதல் பலி.
             ஓர்டாண்ட்டோ கோட்டை வீழ்ந்தது என்ற சேதி கிடைத்ததுமே அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் அனைவரும் கோட்டையினுள் ஒன்று கூடியினர். எங்கும் தப்புவதற்கு வழி இல்லை என்ற   நிலையில் கோட்டையினுள் இருந்த பேராலயத்திற்குள் வந்தனர். அங்கே ஏற்கனவே ஆர்ச் பிஷெப் ஸ்டெப்பேனோ அகிரிகொலோவும் மன்னர் ப்ரான்சிசும் மற்றும் பிஷெப் ஸ்டெப்பினோ பென்டினெல்லியும் மற்றும் அனேக குருக்களும் கன்னியர்களும் தங்கள் குருத்துவ உடையுடனும் கையில் சிலுவையும் வைத்துக்கொண்டு தங்கள் விதிக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
மேலும் அனேக பொதுமக்கள் பேராலயத்தின் முன் ஒன்று கூடியிருந்தனர். அன்றைய நாள் ஆகஸ்ட் 11.கி.பி.1480.
       சூறாவளி என அங்கு தன் குதிரைப்படையினருடன் கோட்டையினுள்ளே வந்தான் பைசாந்திய தளபதி அஹ்மத் பாஷா. ஒரே கேள்விதான் கேட்டான்..
" உங்களில் எத்தனை பேர் முஸ்லிமாக மாறுகிறீர்கள்"..யாவரும் மறுத்தனர்..அடுத்தபடியாக கட்டளை பிறந்தது..." கொல்லுங்கள் இவர்களை"... அவ்வளவுதான்.. வணக்கத்துகுறிய ஆர்ச் பிஷெப் தன்   ஆண்டவர் உடையுடனே கோயிலின் பீடத்திலேயே தலை வெட்டிக்கொல்லப்பட்டார். அரசன்முதல் கோயிலிலிருந்த குருக்கள், கன்னியர் யாவரும் இருகூறாக வெட்டிக்கொல்லப்பட்டனர்.
          கோயிலுக்கு வெளியே இருந்த கூட்டத்தில் கிழவர்கள், கிழவிகள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் பிரிக்கப்பட்டனர். முடியாதவர்கள் என்றும் பத்துவயதுக்குட்பட்டகுழந்தைகள் அனைவரும் தயவு தாட்ச்சண்யம் இன்றி வெட்டி கொல்லப்பட்டனர். வயது பெண்கள், சிறியவயது ஆண்கள் அனைவரும் அலபேனியாவுக்கு அடிமைகளாய் விற்கப்பட்டனர்..
ஒரு சரித்திர ஆறாய்ச்சியாளரின் கணக்குபடி ஏறக்குறைய 12000 பேர் கொல்லப்பட்டதாகவும் 5000 பேர் அடிமைகளாக விறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
         இந்த அட்டூழியத்தையும்நியாயப்படுத்துகிறார் அக்காலத்தில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர் இபின் கேமால் என்பவர். அக்கலத்தில் வாழ்ந்த மற்ற சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நடந்த இந்த யுத்தம் ஒன்றும் வித்தியாசமானது இல்லை... எல்லா அரசாங்கமும் நடத்தும் யுத்தம்போன்றதே...மக்களுக்கு பயம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே அப்பாவி மக்கள் பலர் இந்த அளவு
கொல்லப்பட்டிருகிறார்கள் என்றும், எழுதி வைத்திருகிறார்கள்.

         இந்த நிலையில் 813 பேர் அடங்கிய திடகாத்திரமான ஆண்கள் தனியே பிறிக்கப்பட்டனர். தளபதி அஹ்மத் பாஷா இவர்களிடம் வந்தான்.
" உண்மையில் உங்களைக்கொல்ல எனக்கு இஸ்ட்டம் இல்லை..உங்களுக்கு உயிர் வேண்டுமானால் முஸ்லிமாக மாறுங்கள்...இல்லையேல் சாகுங்கள்... எது வேண்டும்?" என்றான்..
           அப்போது ஒரு தையல் தொழிலாளி அன்டோனியோ பிரிமால்டி என்பவர்," என் நண்பர்களே..இதுவே தக்க தருணம்...நம் ஆண்டவறாகிய யேசு நம்மை இரட்சிக்க தன் உயிர் தந்து  நம்மை மீட்டுள்ளார்.. அது போல நாமும் நம் ஆண்மாவை காக்கும்படியாகவும்...நம் விசுவாசத்தை காக்கும்படியாகவும்...ஆண்டவருக்கு சாட்ச்சியாக மரிப்போம்." என்றார். உடனே பலத்த ஆரவாரம் உண்டானது. பலரும் கைதட்டி தங்கள் ஆதரவை அண்டோனியோ பிரிமால்டிக்கு தெரிவிதார்கள். இதனால் கடுப்பாகிப்போனான் தளபதி அஹ்மத் பாஷா..
" இதில் யார் அன்டோணியோ பிரிமால்டி" என்றான்.
"அது நான் தான் ஐய்யா" என்றார் அண்டோனியோ.
" நீ தான் இந்தக்கூட்டத்துக்கு தலைவனோ"
" நான் இந்த கூட்டத்துக்கு தலைவன் இல்லை.. அப்படி ஒரு எண்னமும் எனக்கு இல்லை"
" பரவாயில்லை அண்டோனியோ..இந்த கூட்டத்துக்கு நீயே தலைவனாக இரு" என்றான் தளபதி அஹ்மத் பாஷா. " சரி..நீங்கள் அனைவரும் கிறிஸ்த்துவை விடுத்து முஸ்லிமாக மாறும்  எண்ணத்தில் இல்லை... அப்படித்தானே?"
" ஆமாம்..நாங்கள் யாரும் முஸ்லிமாக மாற மாட்டோம்... எங்கள் கடவுளை மறுதளிக்க மாட்டோம்...மாட்டோம்...மாட்டோம்" என்று ஒரே குறலாய் கத்தினார்கள்.
      தளபதி அஹ்மத் பாஷாவின் கண்கள் கோபத்தால் கோவைப்பழம் போல் சிவந்தன.. இவர்களைக்கொண்டுபோய் அந்த மலையின் உச்சியில் வெட்டிக்கொல்லுங்கள்" என்றான்.
           இந்த துயரமாக சம்பவம் நடந்தது ஆகஸ்ட் 14.கி.பி.1480. இந்த அண்டோனியோவுடன் 813 ஆண்களும் கைகளிலும் கால்களிலும் கழுத்திலும் விலங்குபூட்டி அருகில் இருந்த  மினெர்வா என்னும் குன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். முதலில் பெயர் சொல்லி அழைக்கப்பட்டது அண்டோனியோ பிரிமால்டி..அவர் தான் முதல் பலியானார். அவரது தலை
முதலில் வெட்டப்பட்டது. உயிரற்ற அவரது உடல் மட்டும் திடீரென எழுந்து நின்றது. அதில் தான் ஆண்டவர் ஒரு பெரும் புதுமை செய்தார். உயிரற்ற அந்த உடலை யாராலும் கீழே தள்ள  முடியவில்லை. பத்துபேர் சேர்ந்துகூட அந்த உடலை அசைக்கக்கூட முடியவில்லை..".சரி ..இந்த உடலை கீழே தள்ளும் முயற்சியை கைவிடுங்கள். செத்த அந்த உடல் கீழே விழாவிட்டால்
ஒன்றும் நஷ்டமாகப்போவது ஒன்றுமில்லை.. அடுத்தவனைக்கூப்பிடு " என்றான் பாஷா..
           தனக்கு முன்னே பலியான அண்டோனியோவை ஆண்டவர் எவ்வளவுதூரம் உயர்த்தியுள்ளார்   என்றும் ஆண்டவறாகிய யேசுவின் பிரசன்னம் அருகிலேயே உள்ளது என்றும் உணர்ந்த மற்றவர்கள் மனதில் புதிய உற்சாகம் அடைந்தவர்களாய் அவரவர் பெயர் வாசிக்க வாசிக்க
அடுத்தடுத்து தலை வெட்டுண்டார்கள். இப்படியாக அந்த 813 ஆவது நபர் சாகும்வரை அந்தோணியோவின் தலை இல்லாத உடல் நின்று கொண்டே இருந்தது.. அந்த கடைசி நபரும்   தலை வெட்டுண்டு மரித்தபிறகுதான் அண்டோனியோவின் உயிரற்ற சடலம் கீழே விழுந்தது.
            இந்த நிகழ்ச்சியால் பெரிதும் கவரப்பட்டான் ஒரு பைசாந்திய வீரன்.. ஓட்டமான் துருக்கி ராணுவத்தில் ஒரு பெரும் அதிகாரியாகப்பணியாற்றிய அந்த அதிகாரியின் பெயர் பெர்சாபீ   என்பதாகும்.      தான் உடனே ஒரு சாட்ச்சியம் அளித்தான்.. இந்த வெறியாட்டத்தில் தான் கலந்துகொண்டதற்காக வெட்க்கப்படுவதாகவும் யேசு கிறிஸ்த்துவை கடவுளாக
ஏற்றுக்கொள்வதாகவும் அறிவிதான். இதற்காக அவருக்கும் அப்போதே மரண தண்டனை வழங்கப்பட்டது. கிறிஸ்த்துவுக்கு சாட்ச்சியாக முஸ்லீமாக இருந்த ஒரு ராணுவ வீரரும்  தன்னுயிர் தந்தது வியப்பான ஒரு செய்திதான். இந்த வெறியாட்டமெல்லாம் நடத்தி இந்த ஓர்டாண்டோ நகரைக்கைப்பற்றிய துருக்கி ராணுவ்ம் அதிக நாள் தன் கையில் வைத்திருக்க   முடியவில்லை.    அடுத்த ஆண்டே கி.பி.1481ல் நேப்பில்ஸ் மன்னர் ஃபெர்டினண்டின் மகன் ஆரகோனைச்சேர்ந்த அல்ஃபோன்சோவிடம் தோற்று ஓர்டாண்டோவை பறிகொடுத்தது.
            பிறகு பல கால கட்டங்களில் பலமுறை இந்த ஓர்டாண்டோ நகரைக்கைப்பற்ற பைசந்திய ராணுவம் முயன்றும் கடைசிவரை அது முடியாமலேயே போயிற்று..
         அல்போண்சா பிரிமால்டியும் அந்த 813 நபர்களும் தலை வெட்டுண்டு இறந்த அந்த மினெர்வா மலைமீது அவர்களின் ஞாபகமாக அந்த குன்றுக்கு வேத சாட்ச்சிகளின் குன்று   என்று பெயர் பெற்றது. அக்டோபர் 13.கி.பி.1481. வேத சாட்ச்சிகளான அண்டோனியோ மற்றும் அந்த 813 பேரின் சடலங்களும் அந்த ஓர்டாண்டோ   பேராலயத்தில் புதைக்கப்பட்டன. அதுவரை அந்த சடலங்கள் கெடாமல் அழுகாமல் அப்படியே இருந்தன. இதுவும் ஒரு பெரும் புதுமையே. பிறகு பலகாலம் கழித்து அவர்களின் புனித
அருளிக்கப்பொருட்கள் பல பட்டிணங்களுக்கும் அனுப்பப்பட்டன. ஜூலை 5.கி.பி.2007ல் பரிசுத்த பிதா பாப்பு 16 ஆம் ஆசீர்வாதப்பர் இவர்களுக்கு புனிதர் பட்டத்திற்கான ஏற்பாடுகள்  செய்தார். மே 12.கி.பி. 2013 ல் பரிசுத்தபிதா பாப்பு ஃப்ரான்சிஸ் இவர்கள் அனைவருக்கும் புனிதர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.

No comments:

Post a Comment