Saturday, June 15, 2013

"வினை விதைத்தவனும் திணை விதைத்தவனும்"



"வினை விதைத்தவனும் திணை விதைத்தவனும்"

       சுவாமி ஏசு ராஜாவின் வாழ்க்கையில் பல அதிசய நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தாலும் அவை எல்லாமே விவிலியத்தில் சொல்லப்படவில்லை. எனக்குத்தெரிந்த சில ஸ்வாரஸ்யமான
நிகழ்வுகளை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஸ்வாமிக்கு அப்பொது வயது 33.அவரது வேத போதக அலுவலில் அவர் மிகத்தீவிரமாக ஈடுபட்டுகொண்டிருந்த நேரம் அது. அவர் தன்னுடைய அப்போஸ்தலர்களை அழைத்துக்கொண்டு தான் பிறந்த மண்ணைப் பார்க்க ஆவல் கொண்டு பெத்லஹேமுக்கு வந்தார்.அவரது காலத்தில் அவரது நாட்டில் அவரது காலடித்தடம் படாத இடமே இல்லை.அவர் வாழ்ந்த பல இடங்களுக்கும் அவர் பலமுறை சென்றிருந்தாலும் இந்த முறையே பெத்லஹேமுக்கு வருவது தன் வாழ்நாளில் கடைசி முறையாக இருக்குமென்று அவரது உள்மனதில் அவர் நன்றாகவே அறிந்திருந்தார். எனவே இந்த முறையில் பெத்லஹேமுக்கு வந்தபோது அவருக்கும் பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன.எல்லாம் அவன் செயல். பெத்லஹேமுக்கு நுழைகையில் வாழ்ந்துநொடித்த ஒருபெரியவரை பார்த்தார் யேசுநாதர். அவரும்யேசுநாதர் யார் என்று அறிந்துகொண்டவராய் தன்னால் இயன்றமட்டும் ஓடிச்சென்று அவரை எதிர்கொண்டு வரவேற்று அவர் காலில் விழுந்து " யேசுபெருமானே நீவீர் வாழ்க" என்று முகமன் கூறி வரவேற்றார். யேசுநாதரும் அவரை அள்ளி எடுத்து அணைத்து " ஐயா பெரியவரே, நீர் வாழ்க.இந்த தள்ளாத வயதிலும் உம் அன்பு எம்மை புல்லரியவைக்கின்றது. உம் அன்புக்கு நன்றி. பெத்லஹெய்மின் நுழைவாயிலில் உம் வீடு இருப்பதால் உம் வீட்டைத்தாண்டித்தானே யாவரும் ஊருக்குள் செல்லவேண்டும்.இந்த வரவேற்பு எல்லோருக்கும் கிடைத்தால் பயணிகள் யாவரும் உம்மை வாழ்த்துவார்களே என்றார்.அதற்கு அவர் " யேசுவே நான் என் நினைவு தெரிந்து என் குடும்ப வம்சாவழிகள் யாவரும் இபடியாகத்தான் செய்கிறொம். எங்கள் வீட்டைத்தாண்டித்தான் இந்த ஊருக்குள் யாவரும் செல்ல வேண்டியிருப்பதால் வெகு தொலைவிலிருந்துவரும் பயணிகள் யாவருமே என் வீட்டில்தான் தாகம் தணித்துச்செல்வர். இதை நாங்கள் பெரும் பேறாகக்கருதி என் காலம்வரை செய்துகொண்டுதான் இருக்கிறேன்.என் பிள்ளைகளும் இவ்வாறே செய்யவேண்டும் எனபழக்கப்படுத்தியிருக்கிறேன். தேவரீர் பெரியமனதுவைத்து என் வீட்டிற்குவந்து தாகம் தணித்துச்செல்ல மிகவும் வேண்டுகிறேன்". என்றார். ஆண்டவரும் மனம் உவந்து தன் சீடர்களுடன்.அவ்வீட்டிற்குள் வந்தார். அந்த வீடு பெரும் பேறு பெற்றது. அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் ஆண்டவர் யேசு ஏதோ தன்வீட்டிலிருப்பதைப்போன்று உணர்ந்தார். ஆண்டவர் யேசு பெரியவரை நோக்கி, ஐயா, தங்கள் மனைவி எங்கே? உங்கள் பிள்ளைகள் எங்கே?என்றார்.       அதற்குப்பெரியவர் நீண்ட பெருமூச்செறிந்து " யேசு பெருமானே என் பிள்ளைகள் வேலை விஷயமாக ஊருக்குள் போயிருக்கிறார்கள். என் மனைவியாதியின்நிமித்தம் வீட்டில் தனி அறையிலேயே இருக்கிறாள். விசேஷமாக அவள் ஆண்களைப்பார்க்க விரும்புவதில்லை. எல்லாம் அவள் திமிரால் வந்த வினை" என்றார்.யேசுநாதர் ஆச்சர்யமாக " என்ன வியாதி அவர்களுக்கு?" என்றார். பெரியவர் கூறினார் "பெரும்பாடு ஐயா பெரும்பாடு" என்றார். 32 வருடங்களாக அவளுக்கு இந்த உதிரப்போக்கு இருக்கிறது, பார்க்காத வைத்தியம் இல்லை. அவளுக்கு வைத்தியம்.பார்த்தே நாங்கள் வறியநிலைக்கு ஆளானோம்" என்றார்.
யேசுநாதர் மிகவும் வருத்தமுற்றவராய், "ஐயா, அவர்களைக்கூப்பிடுங்கள்" என்றார்.பெரியவர் உள்ளறைக்குச்சென்று தன் மனைவியை கைத்தாங்கலாக அழைத்துவந்தார்.
       அளவுக்குஅதிகமான இரத்தப்போக்கினால் அவள் மிகவும் மெலிந்து நடக்கவும் சக்தியற்றவளாய் கணவனின் துணையுடன் யேசுவின் பாதம்பணிந்தாள். சுவாமி அவள்மீது மிகவும் பரிவுகொண்டு "அம்மணி நீங்கள் குணம் பெறுவீர்களாக" என்றார். உடனே அவளுக்கு உதிரப்போக்கு குணமாகியது. அவள் அதிசயித்தாள். ஆனந்தக்கூத்தாடினாள். சுவாமியின் முகத்தை ஏறெடுத்து நோக்கினாள். அவள் கண்கள் ஆச்சர்யத்தினால் விரிந்தன." ஆம். ஆம். இதே கண்கள்தான். இதே முகம் தான்". என்றாள் மிக்க மகிழ்சியுடனே. அவள் கணவனுக்கு ஒன்றுமே புரியவில்லை."நீ இப்பொதுதானே யேசுவைப்பார்கிறாய். இதற்கு முன் யேசுவை நீ பார்த்தேயில்லையே" என்றார்..அதற்கு அவள் "ஆம். நான் இதற்குமுன் இவரைப்பார்த்தே  இல்லைதான். ஆனால் இவரது தாயாரைப்பார்திருக்கிறேன். அந்த மாதரசிக்குறிய அதே முகமும் அதே கண்களும் அதே தலைமுடியும்கூட இவருக்கும் இருக்கின்றன" என்றாள்.  " சுவாமி உங்களுக்கு நினைவில்லையா? இன்றைக்கு சுமார் 32 வருடங்களாக இருந்துவந்த இந்த பெரும்பாடு எனக்கு ஏன் ஏற்பட்டது தெரியுமா? எல்லாம் என் அகம்பாவதால் வந்த வினை என் திமிரால் வந்த வினை நீங்கள் மறந்திருக்கலாம்.ஆனால் நான் மறக்கவில்லை. அப்பா மகனே யேசுராஜா.நானும் உன் தாயாரும் ஒரே வயதுடையவர்கள்தான். இன்றைக்கு 32 வருடங்களுக்கு முன்பாக அன்று இதோ இருக்கிறாரே என் கணவர், அவரது வயதையொத்த அவரது பால்யசினேகிதர் யோசேப்பு என்ற பெரியவர் தன் இளவயது மனைவியை
என் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். அப்போது அந்த மாதரசி நிறைமாத கர்பிணியாக இருந்தார். அப்போது என் வீட்டில் ஏதோ விஷேஷம். அதிகமான கூட்டம் இருந்தது. மேலும் மக்கட்தொகை கணக்கெடுப்பிற்காக அதிதிகளாக வந்திருந்தவர்களும் அதிகம்பேர் இருந்தனர். அனைவரையும் நான் நன்றாகவே கவனித்தேன். இருப்பினும் எனது கணவரின் பால்ய
சினேகிதர் வந்திருக்கிறார் என்றதும் அவருக்கும் தனி அறை ஏற்பாடுசெய்துகொடுத்து அவர்களை கவனிக்க ஆட்களையும் ஏற்பாடு செய்துகொடுதேன். விருந்து முடிந்ததும் விருந்தினர் அனைவரும் சென்றபின் என் கணவருடன் அவரது நண்பரையும் அவரது மனைவியையும் மரியாதையின் நிமித்தம் சந்திக்கசென்றேன். அப்பப்பா.... அந்த மாதரசியின் முகசௌந்தர்யம் என்னை தடுமாற வைத்தது.
அவரது முகம் தெய்வீகமானது.அற்புதமான பேரழகானது. அவரைக்கண்டமாத்திரத்தில் அவரது காலடியில் வீழ்ந்தேன். அவரும் என்னை வாழ்த்தினார்.ஆசீர்வதித்தார். ஆனால் எனக்குள்  இருந்த தீய ஆவி எனக்குள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. என் கர்வமும் திமிரும் என் கண்முன்னே எழுந்தன. பெண்ணுக்குப்பெண்ணே அசரவைக்கும் பேரழகியான அந்த
மாதரசியை என் மனம் வெறுத்தது. எங்கே என் கணவர் என்னைவிட்டுவிட்டு அவர்பின்னே போய்விடுவாரோ என்று பயந்தேன். ஆகவே விடிந்ததும் அவர்களை வெளியேற்றுவதிலேயே  குறியாக இருந்தேன். மறுநாள் அவர்களை வெளியேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்த்தேன். அடுத்த நாள் அந்த மாதரசிக்கு பெத்லஹேமில் ஒரு குகையில் மாட்டுத்தொழுவத்தில்
ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக என் கணவர் கூாறினார்.   ஆனால் அந்தபெண்மணிமீது எனக்கிருந்த வர்மத்தினால் அவரையோ அவரது குழந்தையையோ அவரது   நண்பரையோ நான் பார்க்க விரும்பவில்லை. ஆனால் என் கணவர் அவர்களைப்பார்த்துவந்தார். நடந்துமுடிந்த என் செயல்களாள் என் கணவர் அடைந்த வருத்தம் வார்த்தையில் சொல்லி மாளாது" என்றார்.
     அடுத்து அவள் கணவர் பேசினார்." என் நண்பன் யோசேப்பு தன் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்வித்து பெயர் சூட்ட எனக்கு சொல்லியனுப்பினார். எனக்கு என் மனைவியுடன் சென்று பார்த்துவர ஆசைதான். ஆனால் அவள் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். நான் என் நிலையை யோசேப்பிடம் சொல்லி என்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
அவர் என்னை ஆதரவாக அணைத்துக்கொண்டு மீண்டும் என்னை தன் நண்பணாக ஏற்றுக்கொண்டார். யேசுபெருமானே சற்றுமுன்பு தாங்கள் என்னை அணைத்தபோது ஏற்பட்ட பரவசம் என் நண்பண் யோசேப்பு என்னை அணைப்பது போலவே ஏற்பட்டது.  பரிசுகள் கொடுத்து நண்பா யோசேப்பு உன் மகனை என்னிடம் சற்றுநேரம் கொடு என்றேன். அவரும்
மகிழ்வுடன் தன் மனைவியிடமிருந்து தன் குழந்தையை வாங்கி என்னிடம் கொடுதார். அப்பொது அந்த குழந்தை ஆடையின்றியிருந்தது.  என் கையிலேயே சிறுநீர் கழித்தது. நான் மிகுந்த பரவசமானேன்.அப்பொது நான் புதிதாய் வைத்திருந்த லினென் துணியினால் ஆன சிறிய துண்டினால் அந்த குழந்தையை சுற்றினேன்" என்றார். மீண்டும் அவர் மனைவி பேசினாள்." பிறகு என் வாழ்வில் விதி விளையாடியது. அந்த நாட்களில் நான் மிகுந்த அழகியாய் இருந்ததால் மிகுந்த கர்வமுள்ளவளாக மாறினேன். மிகுந்த திமிர் பிடித்தவளாக ஆனேன். யாரையும் மதிப்பதில்லை. எவரையும் எடுத்தெரிந்து பேசினேன். விளைவு?. என் செல்வம்.. என் சுற்றம்.. எல்லாம் என்னை விட்டுப்பிரிந்தது. யேசுவின் தாயாகிய மரியாளைப்பற்றி  உயர்வாக நினையாமல் எங்கே என் கணவர் என்னைவிட்டுவிட்டு அவர்பின்னே போய்விடுவாறோ என்று நினைத்த பாவத்திற்காக நீதியுள்ள ஆண்டவர் என்னை சபித்தார். பெரும்பாடு  என்னைப்பற்றிக்கொண்டது. என் வாழ்க்கையே சோகமாயிட்று. எனக்கு உலகமே வெறுத்துப்போயிற்று. ஐயா யேசு ராஜா தாங்கள் தங்கள் தாயார் முகம் பார்த்தும் தந்தையார் முகம் பார்த்தும்  என்னை தயவுசெய்து மன்னியுங்கள். இதோ நீங்களிப்பொது இருக்கும் இந்த அறையிலேயே உங்கள் தாயாரும் தந்தையாரும் தங்கியிருந்த்தார்கள்" என்றாள். ஸ்வாமி சற்றுநேரம்  மௌனமாயிருந்து அம்மணி, தாங்களும் தங்கள் கணவரும் என் தகப்பனாருக்கு பால்யசினேகிதர்கள் என்றுஅறியும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. என் தாயரையும் தந்தையாரையும் உங்கள் விருந்தினராக வைத்து கவனித்ததற்கு மிக்க நன்றி. ஐயா பெரியவரே, தாங்கள் என்னை குழந்தையாய் இருக்கையில் தூக்கிவைத்து கொஞ்சியதற்கும் நன்றி. இதற்கு நானும் உங்களுக்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டுமென்று கூறி தன் அங்கியில் கைவிட்டு ஒரு சிறிய துண்டை அவரிடம் கொடுத்தார். அது அந்த பெரியவர் அவருக்கு அவர் குழந்தையாய் இருக்கையில் கொடுத்த துண்டாகும். பெரியவர் அதிசயித்து ஸ்வாமி, தாங்கள் அதை உபயோகப்படுத்தவே இல்லையா? என்று கேட்டார்.    யேசுவும் அதற்க்கு மறுமொழியாக பெரியவரே இது அன்றிலிருந்து அப்படியே என்னிடமே இருக்கிறது என்றார். பெரியவர் அந்த துண்டை வாங்கி அப்படியே தன் கண்களிள் ஒற்றிக்கொண்டார்.
     யேசுநாதர் தன் நிர்வானத்தை மூட தான் குழந்தையாய் இருக்கையில் அந்த பெரியவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததுபோல அவருடைய மகனுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்.  அதாவது யேசுநாதர் சிலுவையில் நிர்வாணமாக அறையப்பட்டு உயிர்போகும் நிலையில் இருந்தார். தன் பரிசுத்த தாயார் முன்பாகவும் பரிசுத்த பெண்கள் பலர் முன்பாகவும் உலகத்தின்
முன்பாகவும் முழுநிர்வாணமாக வானுக்கும் பூமிக்கும் நடுவாக சிலுவையில் நின்றுகொண்டிருந்தார். அவரது பிறப்பு உறுப்பிலிருந்தும் புட்டங்களிலிிருந்தும் ஏற்கனவே பட்ட கசை  அடிகளாள் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. வலி ஒரு பக்கம் என்றால் அவமானம் ஒரு பக்கம். உயிர் போகும் வலியைவிட மானம் போகும் வலி ஒரு பக்கம். இதனால் அவரது  மனவலி மிகவும் அதிகமாயிற்று. அப்பொது அந்தப்பெரியவரின் ஒரு மகன் தான் புதிதாய் வாங்கி வந்திருந்த ஒரு பெரிய லினெந் துண்டை எடுதுக்கொண்டு கல்வாரிமலைமீது வேகமாய் ஏறிவந்துகொண்டிருந்தார். சுவாமி உயிர்போகும் நிலையில் கடைசியாய்ப்பார்த்தது தன் தாயாரைத்தான். .அதற்குமுன்பாக அந்த பெரியவரின் மகனைத்தான். பிறகு சுவாமி சிலுவையில் மரித்தார். அவர் மரித்தவுடனே இவர் யேசுவின் நிர்வாணத்தை அந்த சிலுவை மரத்தோடு சுற்றி மூடினார். அந்த பாக்கியம் அவருக்கு கிடைத்தது. பல வருடங்களுக்குப்பிறகு அவர் கிரிஸ்துவராக மாறி புனிதர் ஆனார்.
      பிறகு யேசுநாதர் தன் சீடர்களுடன் பெத்சூர் என்ற இடதிற்கு வந்தார். இந்த இடத்தில்தான் மூன்று ராஜாக்கள் சுவாமியைப்பார்க்க கடைசியாய் தங்கிய இடம்.இந்த  இடத்தில்தான் ஸ்வாமி குழந்தையாய் பிறந்தபோது ஆடு மேய்க்கும் இடையர்களும் வாழ்ந்தனர். அவர்களின் தலைவன் ,உப தலைவன் மற்றும் அவரவர் குடும்பங்களும் வாழ்ந்தன.
        சுவாமி கடைசிமுறையாய் இந்த ஊருக்கு வரும்போது அப்போதைய இடையர் கூட்டத்தலைவன் மற்றும் அவனது உறவினர்கள் பலரும் யேசுவைக்கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.  சுவாமி தன்னை குழந்தையாய் இருக்கும்போது வந்து சந்தித்த இடையர் தலைவன் சமாதிக்குச்சென்று அஞ்சலி செய்தார். அப்போது அங்கு ஒர் அதிசயம் நடந்து இருந்தது. கல்லரையை திறந்தபோது மூன்று வருடங்களுக்கு முன் இறந்து போயிருந்த அந்த இடையர் தலைவனின் சடலம் அழியாமலிருக்கக்கண்டனர். அப்போது சுமார் 45 வயது மதிக்கதக்க ஒருவன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தான். அவன் தன் வேலையை அப்படியே போட்டுவிட்டு யேசுவின் காலடியில் விழுந்து நமஸ்கரித்தான். யேசுவும் அவனை பரிவோடு எழுப்பி நலம் விசாரித்தார். அப்போது அவன் கூறினான். "யேசுவே தேவரீர் குழந்தையாய் அந்த பெத்லஹெய்ம் குகையில் தீனித்தொட்டியில் படுதிருந்தபோது தானும்10 வயது சிறுவனாக அவரை தன் தகப்பனாருடன் வந்து சந்தித்ததாக" நினைவுகூர்ந்தான். சுவாமி மிகவும் மகிழ்சியடைந்தார். யேசுவே தங்களுக்கு விருத்தசேதனம் செய்விக்கப்பட்டபோது தானும் அவ்விழாவில் கலந்துகொண்டதாகவும் அவரது தகப்பனார் யேசேப்பு தனக்கு ரொட்டிகளும் பழங்களும் உலர் பேரீட்சை பழங்களும் தேனும் இன்னும் பலவும் கொடுத்ததாகவும், மீண்டும் 3 ராஜக்கள் வந்து சென்றபோது தானும் அவன் தகப்பனாரும் அவர்களுக்கு சுமைதூக்கிகளாக உதவி செய்ததாகவும் அதனால் சந்தோஷமான அந்த 3 ராஜாக்களும் தனக்கும் தன் தகப்பனாருக்கும் சில தங்க க்காசுகளை கொடுத்ததாகவும் அவற்றை இன்றளவும் பத்திரப்ப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறி அந்த முக்கோணவடிவிலான தங்க காசுகளை அவரிடம் காண்பித்தான். யேசுநாதரும் மிகவும் ஸ்வாரஸ்யமாக இந்த கதையை கேட்கத்தொடங்கினார். மீண்டும் யேசுநாதரின் தாயாரும் தகப்பனாரும் இந்த விளைச்சள் நிலம் வழியே எகிப்த்துக்கு தப்பிச் செல்லும்போது ஏரோதின் ஆட்க்கள் அவர்களைப்பற்றி தன் தகப்பனாரிடம் விசாரித்ததாகவும் அதற்கு அவனது தகப்பனார் " நாங்கள் சோளம் விளைவிக்கும்போது ஒரு யூத வயோதிக தம்பதியரும் ஒரு கைக்குழந்தையும் இவ்வழியே வந்தார்கள். ஆனால் நீங்கள் இப்போது சோளம் அறுவடை நேரத்தில் வந்து விசாரிக்கிரீர்களே "என்று சொன்னபோது அந்தப்புதுமை நடந்தது. அன்று விதைக்கப்பட்ட அந்த சோளப்பயிர்கள் பார்க்கும்போதே தடதடவென்று வளர்ந்து அறுவடைக்கு தயாராய் நின்றது.  நாங்கள் அனைவரும் அதிசயித்துப் போனோம்." என்றான். யேசுநதரும் ஆர்வத்துடன் " பிறகு என்ன நடந்தது"? என்று ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார். அவன் கூறினான்  "யேசுவே,அன்றைய சேவகர்கள் "விதைப்பிற்கும் அறுவடைக்கும் ஆறு மாதம் இடைவெளி
நாம் தவறான ஆட்க்களை தேடுகிறோம் " யென்று பின்சென்றுவிட்டார்கள் என்று கூறினான்.யேசுநாதர் மகிழ்ந்து," நண்பா, உனக்கு என்ன வேண்டும்" என்றார். அவனும்" நண்பா யேசுவே எனக்கு உன் அன்பு எப்பொதும் வேண்டும், என் நிலம் நன்றாகத்தான் விளைகிறது.சோளம் தவிர வேறு எதுவும் விளைவதில்லை. நிலம் நிறைய கற்களாகவேஇருக்கிறது.எவ்வளவுமுயன்றும் வேலை.மாள முடியிவில்லை. இதுதான் கவலையாக இருக்கிறது" என்றான். யேசுவும் அந்த நிலத்தை ஆசீர்வதிக்கவே அந்த நிலத்திலிருந்த கற்கள் அனைத்தும்
பொடிப்பொடியாகி நல்ல மண்ணாக மாறியது. யேசுநாதர் ஆசீர்வாதம் பட்டாலே போதும். எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சமும் நல் நெஞ்சாக மாறிவிடும். இவனே தினை விதைத்தவன்.

       யேசுநாதர் தன் சீடர்களுடன் நல்ல வயலாக இருந்த ஒர் இடத்தில் பிரவேசித்தார். அந்த இடத்தின் சொந்தக்காரன் ஒரு கல் நெஞ்சன். அவனுக்கு யேசுநாதரைக் காண ஏனோ  பிடிக்கவில்லை.பிறவியிலேயே அவன் ஒரு தற்குறி. " நம் முன்னோர்கள் சொல்லாத எந்தக்கருத்தை யேசுநாதர் சொல்லிவிடப்போகிறார். அவர் தன்னை மெசியா என்றல்லவா சொல்லிக்
கொள்கிறார். இது தேவ தூஷணம் அல்லவா. இது தானே நமக்கு ஆகாத விஷயம். அவர் மட்டும் இந்தப்பக்கம் வரட்டும்.நன்றாக நான்கு கேள்விகள் கேட்காமல் அவரை விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்.அவனுக்கும் சுமார் 45 வயது இருக்கும்.அப்போது பார்துதான் யேசுநாதரும் அவன் வேலை செய்துகொண்டிருந்த நிலம் வந்து
கொண்டிருந்தார். அவனுக்கு கோபம் தலைக்குமேல் வந்துவிட்டது. தேவ தூஷணங்களைக்கக்கிக்கொண்டே யேசுவின் முன் வந்தான். "வாய்யா யேசு நாதா, நீ என்ன பெரிய மெசியா  என்ற நினைப்பா?" என்று ஏக வசனத்தில் அவரைத் திட்ட ஆரம்பித்துவிட்டான். யேசுநாதர் அவன் அறியமையை பெரிது படுத்தாமல் " நண்பா, உனக்கு என்ன வேண்டும்" என்றார்.
   அதற்கு அவன் " போய்யா உன் வேலையைப்பார்துக்கொண்டு போ. என்னை என்ன சபிக்கவா வந்தீர். உன் சாபம் எல்லாம் என்னிடம் ஒன்றும் பலிக்காது" என்று தூஷணம் கக்கினான்.
யேசுநாதரும் அமைதியாக" நண்பா,நீ என்ன செய்துகொண்டிருக்கிராய்?"என்றார். அவன் மிகுந்த கோபப்பட்டு "என்ன. பார்த்தால் தெரியவில்லையா?, விதைக்கறேன். ஐய்யா
விதைக்கிறேன். கற்களை விதைக்கிறேன்" என்று மிகவும் திமிறாகப்பேசினான். யேசுநாதரும் அமைதியாகச்சொன்னார். "உன் விருப்பப்படியே உனக்கு ஆகட்டும். விதை ஒன்று போட சுறை ஒன்று முளைக்காது. நீ கற்களைத்தானே விதைக்கிறாய். நீ கற்களையே அறுவடை செய்வாய்." என்று கூறி வருத்தத்துடன் சென்று விட்டார். அவ்வளவு தான். அவர் பார்வையிலிருந்து மறைந்த உடனே அவர் சொற்படியே ஆயிற்று. அவன் விதைத்த விதைகள் யாவும் கற்களாய் விளைந்தன. ஒன்றுக்கு நூறாய், ஆயிரமாய்,விளைந்தன. அவன் எதை விளைவித்தாலும் அவை அதே அளவுள்ள கற்களாகவே விளைந்ததால் அவன் நிலம் முழுக்க ஆழமாய் விளைந்து கொண்டே இருந்தது. அவன் விளை நிலம் முழுக்க கற்களாய் விளைந்ததால் விரைவிலேயேஅந்த நல்ல நிலம் யேசுவின் சாபத்தால் பாழ்பட்டுப்போய்விட்டது. எவ்வளவு பயங்கரம். அவன் நாடோடியாய் மாறினான். கடைசிவரை அவன் திருந்தவே இல்லை.
      யேசுநாதர் மேல் அவன் கொண்ட வர்மம் இன்னும் அதிகமாக ஆனது. யேசுநாதரை. எப்படியாவது பழி வாங்கிவிட வழி தேடினான். அவனுக்கும் ரோமானியர்களுக்கும் எப்படியோ பழக்கமாகி ஒரு சிப்பாயாக மாறினான். நாட்கள் பல சென்றன. அவனுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைதது. யேசுவை கசையால் அடிக்கும் ஆட்க்களிள் இவனும் ஒருவன் ஆனான். இப்போது அந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாய் பயன்படுதிக்கொண்டு தன் வர்மம் அனைதும் ஒன்றுகூட்டி அவரை அடிமேல் அடி அடித்தான். பிறகு முட்களாள் ஆன ஒரு முடியைப்பின்னி அவர் தலையில் சூடி யூதர்களின் ராஜாவே வாழ்க என்று ஒரு பிரம்பால் ஓங்கி அடித்தான். அவர் தலைமீது பட்ட. அந்த அடியில் ஒரு நீண்ட முள் யேசுவின் நெற்றியைக்கிழித்துக்கொண்டு அவரது கண்ணுக்கும் நாசிக்கும் இடையே "நச்" என்று இறங்கியது. கொடுமையான அடி அது. இந்த அடியால் பூலோகமே குலுங்கியது. பரலோகமும் கிடுகிடுத்தது,மோட்ச்ச வாசிகள் அனைகவும் ஸ்வாமிக்கு ஏற்பட்ட இந்த துன்பத்தைக்கண்டு கண்ணீர் சிந்தினர். இந்த அடியால் யேசுநாதர் பட்ட துண்பம் எப்பேற்பட்டது என்பதை வார்த்தையில் சொல்லி மாளாது.
       இந்த அடியினால் ஏற்பட்ட இரத்தப்பெருக்கு அவர் கண்களிள் இறங்கி அவரது வலது கண் ஒரு கோழி முட்டைஅளவு வீங்கிப்போய்விட்டது. கண் திறக்க முடியாத அளவு மூடிக்கொண்டது. தன் அடி அவர் சிரசில் சரியாகப்பட்டுவிட்டதா என்று சரிபார்க்க அவரது திரு முகத்தை தன் கைகளாள் திருப்பிப்பார்துக்கொண்டான். அவரது நெற்றியிலும்
கண்களிளும் குபு குபு என்று வழிந்த இரத்தசகதியைப்பார்தும் திருப்தியில்லாதவனாய் மீண்டும் வர்மம் அதிகமாகி அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். தன் பழி வாங்குதலை வெற்றிகரமாய் நிறைவேற்றிய திருப்தியில் தன் வீட்டிற்குச்சென்றான். எல்லாம் கொஞ்சம் கால அவகாசத்தில் முடிந்துவிட்டது. யேசுநாதர் இறந்தபின் இவன் நிலைமையும் மாறிவிட்டது.
      இவன் நிலை மட்டும் அல்ல அந்த நாட்டில் வாழ்ந்த பலரது நிலைமையும் மாறிவிட்டது. ஜெத்சமனி தோட்டத்திலிருந்து கல்வாரி மலையில் யேசு மரிக்கும்வரை யார் யார் யேசுநாதரை



தொட்டார்களோ அல்லது அடித்தார்களோ அவர்கள் அனைவரும் பிறகு யேசுவின் சாட்சிகளாய் மாறினர். அனைவரையும் யேசுநாதர் தடுத்தாட்க்கொண்டார். ஆனால் அவன் நிலம் மட்டும் மாறவே இல்லை. அது இன்றளவும் கல் விளைந்த பூமியாகவே, வினை விதைத்த பூமியாகவே நமக்கு சாட்சியமாக இன்றளவும் உள்ளது.

Thursday, June 13, 2013

" தூய பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா "










" தூய பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா "

     இவர்களை கார்த்தேஜ் நாட்டின் கிரிஸ்த்துவ வீராங்கணைகள் என்று சொல்லலாம்... அன்றைய கார்த்தேஜ் இன்றைய துனிஷியா என்றழைக்கப்படுகின்றது. இந்த துனிஷியா நாடு   ஆப்ரிக்கா கண்டத்தின் வட மத்திய பகுதியில் மத்திய தரைகடலின் ஒரத்தில் அமைந்துள்ள நாடுகளிள் ஒன்றாகும். மத்திய தரைகடலில் அமைந்துள்ள இத்தாலியைச்சேர்ந்த சிசிலி தீவை  நோக்கி தன் மூக்கை நீட்டினார்ப்போல் வடஆப்ரிக்க கண்டத்தில் மத்தியில் அமைந்துள்ள நாடு தான் இன்றைய துனிஷியா. எனவே மத்தியதரைகடலில் உள்ள சிசிலிக்கும் அன்றைய  கார்த்தேஜ் நாட்டிற்க்கும் கடல்வழித்தொடர்பு மிகவும் நெருக்கமாகவும் இருந்ததால் கடல்வழியே வியாபாரம் போக்குவரத்துகள் அதிகமாயின.
        பொனீஷியர்கள்...உண்மையில் பொனீஷியா என்று ஒரு நாடு கிடையாது.. வேத காலத்தில் மெசப்படோமியாவில் சுமேரியர்கள் இருந்தார்கள். பாபேல் கோபுரம் வீழ்ந்த பிற்பாடு அவர்கள்   பல திசைகளில் பல நாடுகளுக்குச்சென்று குடியேறினார்கள். இப்படி பல இனமாக மக்கள் பிறிந்தனர். அப்படிப்பிறிந்தவர்களில் ஒருவர் ஹேபர். இவர் பாலஸ்தீனம் எனப்படும் நாட்டிற்கு  குடியேறினர். அவர்மூலம் பரவிய பாஷை தான் ஹீப்ரூ.. அவர் மூலம் பரவிய இனம்தான் ஹீப்ரூக்கள்..இந்த ஹீப்ரூக்கள் பேசிய பாஷைதான் ஆதியிலே இருந்து பழக்கத்தில் இருந்து  வருகிறது. இந்த பாஷையில் தான் கடவுள் தன் மக்களுடன் பேசினார்..அதனால் இந்த பாஷை தேவனாகரி எனப்படுகின்றது.[ இந்தியாவிலும் இந்த பாஷை பல பகுதிகளில் பேசப்பட்டு  வந்தது.]. சுமேரியாவிலிருந்து கிளம்பியவர்களில் சிலர் செமிட்டியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இன்றைய லெபனானில் குடியேறினார்கள்..இவர்களும் பிறிந்து கானானியர்கள்  எனப்பட்டனர்.
       லெபனானியர்கள் கடல் வர்த்தகத்தில் கில்லாடிகள் ஆனார்கள். அந்த நாட்டில் விளைந்த ஈட்டி மரங்கள், தேக்கு மரங்கள், வாசனை திரவியங்கள், மருந்துப்பொருட்க்கள், திராட்சை  பழ ரசங்கள் கொட்டைகள் என்பன போன்ற பல பொருட்க்களாள் வெகு பணம் சம்பாரித்தார்கள். மத்திய தரைக்கடலின் ஓரத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் இவர்கள் வியாபாரம்
கொடிகட்டிப்பறந்தது. எகிப்த்தில் பல முக்கியமான பாரோ மன்னர்களின் சமாதிகளில் உள்ள உத்திரங்களும் அவர்தம் கோயில்களில் உள்ள உத்திரங்களூம் அவர்களுடைய   அரண்மனைகளில் உள்ள உத்திரங்கள் அனைத்தும் வாசனைமிகுந்த வைரம்பாய்ந்த மரங்கள். மர சாமாங்கள் அனைத்தும் இந்த லெபனான் நாட்டிலிருந்துதான் வந்தவை. எகிப்த்திய
பாரோ மன்னர் துத்தங்காமன் சமாதியில் ஊள்ள உத்திரங்களும் ஜோடனைப்பொருட்க்களும் நாற்காலிகளும் மேஜைகளும் இன்றளவும் வாசம் வீசுகின்றன... சாலமோன் மன்னர்கூட  தான் கட்டிய தேவாலயத்திற்கு தேவையான் மரங்களை லெபனானிலிருந்தே வரவழைத்தார்.
லெபனானின் கடல்பகுதியில் காணப்பட்ட ஒருவகை நத்தைகளிலிருந்து எடுக்கப்படும் சாயப்பொருளுக்கு பொனிஸ் என்று பெயர். இந்த சாயப்பொருளின் மூலப்பொருளைப்பற்றியோ  அதனுடைய கலவைகளின் சேர்மானம் பற்றியோ அக்காலத்தில் யாருக்கும் தெரியாது.. அவர்கள் அந்த தொழில் நுட்ப்பத்தை வெகு ரகசியமாக வைத்துக்கொண்டார்கள்..
         அது ஒருவிதமான கரும்சிகப்பு நிறமாகும்..இந்த சாயமேற்றப்பட்ட துணிகளுக்கு அக்காலத்தில் கிராக்கி அதிகம்.. அரசர்கள் மட்டுமே பயன்படுத்துமளவுக்கு அது விலை உயர்ந்ததாக   இருந்ததால் அது சட்டபூர்வமாகவே மாறியது. சாதாரண குடிமக்கள் அந்த நிற துணிகளைப்பயன்படுத்தக்கூடாது.
         ஆக பொனிஸ் என்ற வார்த்தையிலிருந்து அதை உற்பத்தி செய்யும் மக்களுக்கு பொனிசியர்கள் என்று பெயர் வந்தது. இவர்கள் வியாபார ஆதிக்கம் பிற்காலத்தில் அரசியல் ஆதிக்கம்  ஆயிற்று. இப்படியாக அன்றைய கார்த்தேஜ் நாடு பொனீசியர்கள் கையில் மாறியது.
                       ரோமர்கள் ஆதிக்கம்...
            .ரோமர்களின் சாம்ராஜ்ஜியம் விரிவடையத்துடங்கியது..அதனால் ரோமுக்கு கீழ் இருந்த சிசிலித்தீவுகளிலிருந்த பொனிசியர்களை முதல் புனிக் யுத்தத்தில் வெற்றிகண்டு அதையே  சாக்காக வைத்து கார்த்தேஜிலும் இரண்டாம் மூன்றாம் புனிக் யுத்தங்களில் கார்த்தேஜை முழுவதுமாக கைப்பற்றிக்கொண்டார்கள். இதற்கு ரோமர்கள் கொடுத்த   விலை அதிகம். கார்த்தேஜிய ராணுவத்தில் பழக்கப்படுத்தப்ட்ட ஆப்ரிக்க யானைகள் போரில் பயன்படுத்தப்பட்டன. இந்தவகை யானைகள் மிக மூர்க்கமானவைகள். ஆனால்   இந்திய யானைகளைப்போல் விசுவாசமானவைகள் அல்ல. தனக்கு ஆபத்து அல்லது துன்பம் என்று வரும்போது அவைகள் எஜமான் என்றும் பாராது. பகைவன் என்றும் பாராது..
        தன் எஜமானையும் திரும்பித்தாக்கும் குணம் கொண்டது. அத்தகைய நேரங்களில் அந்த யானைப்பாகன் தன் கையில் உள்ள வேலினால் அதன் மத்தகத்தைப்பிளந்து அந்த   மதம்பிடித்த யானையைக்கொன்று விடுவான். இல்லாவிடில் அந்த யானை தன் எஜமானனுக்கு விளைவிக்கும் சேதம் மிகவும் அதிகமாக இருக்கும். அது எதிரிக்கு மிகவும்
அனுகூலமாகிவிடும்
      மூன்றாம் புனிக் யுத்தம் ரோமர்களுக்கும் சரி கார்த்தேஜ் மக்களுக்கும் சரி வாழ்வா...சாவா... என்றபடி நடந்ததால் உயிர்ச்சேதம் இரு பக்கத்திலும் மிகவும் அதிகம்.   எனவே ரோமர்கள் கார்த்தஜை வேற்றிகண்ட பிறகு அந்த நாட்டு குடிமக்களை மிகவும் கொடுமையாய் நடத்தினர். கண்னில் தென்பட்ட ஆண்களை கண்ட இடத்தில்   வெட்டிப்போட்டனர். தெருத்தெருவாய்...வீடுவீடாய்ப்புகுந்து பெண்களை மானபங்கப்படுத்தினர்...ஆண்களையும் குழந்தைகளையும் கொண்றனர்... அல்லது அவர்களை   அடிமைப்படுத்தி கடலில் படகு செலுத்தவும் துடுப்பு வலிக்கவும் கொடும் வேலை வாங்கவும் பயன்படுத்தினர். [ பென் ஹர் படம் பார்த்தால் கப்பலில் துடுப்புவலிப்பவர் படும் பாடு   தெரியும். ] இந்த கார்த்தஜின் வெற்றியின் நினைவாக வெற்றித்தூண்கள் எனப்படும் ஜயஸ்தம்பங்களை நட்டார்கள். இந்த ஜயஸ்தம்பங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாய்   அறிவித்துள்ளது.
      ஒருவழியாக இந்த அக்கிரமங்கள் எல்லாம் ஒழிந்த பிற்பாடு இந்நகரை ரோமர்கள் தங்கள் சொந்த குடிமக்களைக்கொண்டு வந்து குடி அமைத்தினர். இப்படியாக பல நூற்றாண்டுகள்  கடந்தன. கிரிஸ்த்து பிறப்பதற்கு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ரோமையில் ஜூலியஸ் சீசர் பட்டத்திற்கு வந்தார்.. அவர் தன்னை முடிசூடா மன்னனாக அறிவித்துக்கொண்டார்.
ஆனால் ரோமை நாட்டு மக்கள் அவர் மேல் உள்ள பிரியத்தால் அவரை கடவுளாகவே பாவித்தனர். அரசாங்கமும் இதை சாக்காக வைத்துக்கொண்டு சீசரை அரசனாக மட்டுமின்றி  கடவுளாகவும் வணங்கவேண்டும் என்றும் அப்படிச்செய்ய மறுப்பவர்களை ராஜ துரோகம் சாட்டி கொடுமையாய் கொல்ல வேண்டும் எனவும் ஆணை வெளியிடப்பட்டது. இந்த ஆணை
ரோமை சாம்ராஜ்ஜியத்திற்குபட்ட அனைத்து நாடுகளிலும் அவசியம் பின்பற்றப்படவேண்டும் எனவும் அதற்கான அதிகாரம் அந்தந்த நாட்டை ஆளும் ரோமை ராஜப்பிரதிநிதிகளுக்கு  வழங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. கார்த்தேஜிலும் இந்த சட்டம் அமுல் படுத்தப்பட்டது.
       இந்த ரோமை அரசாங்க ஆணை கிரிஸ்த்துவர்கள் மத்தியிலும் யூதர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கர்த்தராகிய யேசு கிரிஸ்த்துவை அன்றி வேறு கடவுளை   நாங்கள் வழிபட மாட்டோம். சீசரை அரசராக ஏற்போம் ஆனால் கடவுளாக அவரை வழிபட மாட்டோம் என்று அரசாங்க ஆணையை எதிர்த்தார்கள். யூதர்கள் தங்கள் மூதாதையர்கள்
வணங்கிய இஸ்ராலிய கடவுளையன்றி வேறு கடவுளை வழிபட மாட்டோம் என்று யூதர்களும் இந்த அரசாங்க ஆணையை எதிர்த்தார்கள். ரோமை சாம்ராஜ்ஜியம் முழுவதும் இது   எதிரொலித்தது. எனவே ரோமை சம்ராஜ்ஜிய அதிபதி தன் ஆட்சிக்குட்பட்ட அனைத்து நாடுகளிலும் கிரிஸ்த்துவ மதமும் யூத மதமும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிதார்கள்.
         அதைத்தொடர்ந்து கார்த்தேஜிலும் வேத கலாபனை ஆரம்பித்தது.
கி.பி.202ல் ரோமையை ஆண்ட சக்கரவர்த்தி செப்டிமஸ் செவெருஸ் சிலையும் அவர்கள் தெய்வங்களான குரு என்னும்ஜுபிடர் மற்றும் அஸ்ட்டரோத் போன்று பல தெய்வச்சிலைகள்   கார்த்தேஜின் டவுன் ஹாலில் வைக்கப்பட்டன.
   கார்த்தேஜின் பிரஜைகள் அரசாங்க ஆணைப்படி குடும்பம் குடும்பமாக வந்து தங்கள் ராஜ விசுவாசத்தைக்காட்டவேண்டி அவைகளுக்கு வணக்கமும்
தூபாராதனையும் காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டனர். மறுத்தவர்கள் ஆக்கினைக்கு ஆட்படுத்தப்பட்டனர். இப்படியாக பெர்பேத்துவா குடும்பமும் வரவழைக்கப்பட்டனர். பிரச்சனை இங்கு ஆரம்பித்தது.
          பெர்பேத்துவா ரோமைய வம்ஸாவழியில் ஒரு உயர் குலத்தில் உதித்த பெண். இருபத்திரண்டு வயதான அவளுக்கு ஒருபால்குடி மறவா குழந்தையும் இருந்தது. அவளது தாயார்  கிரிஸ்துவர். ஆனால் தந்தை புறஜாதியார்.. கிரிஸ்த்துவை பின்பற்றாதவர். எனவே இந்த நாளிள் தன் மகளுக்கு என்ன நடக்கப்போகிறது என்று அவருக்கு மிக நன்றாகத்தெரிந்ததால்
அவர் மிகவும் கலக்க முற்றார்.எனவே அவர் கிரிஸ்த்துவை மிகவும் வெறுத்தார். மேலும் பெர்பேத்துவாவின் சகோதரன் சதுர்ஸும் கிரிஸ்த்துவை ஏற்றுக்கொண்டது அவருக்கு பெரும்  துன்பமானது. இந்த காலகட்டங்களில் பூர்வீக கிரிஸ்த்துவர்களைவிட புதிதாக மனம்மாறிய ஞானஸ்நானம் பெற காத்திருந்தவர்களின் நிலைதான் பெரும் மோசமாயிற்று.
       வேத விரோதிகளும் இப்படிப்பட்டவர்களையே குறிவைத்து பிடித்து ஆளுனர்களிடம் சேர்ப்பித்தனர்.   இப்படியாக பெர்பேத்துவா, அவள் அடிமைப்பெண் பெலிசித்தா மற்றும் ஆண் வேலைக்காரர் ரிவொகாட்டஸ், மற்றும் செகுண்டுலெஸ் மற்றும் பெர்பேத்துவாவின்   சகோதரர் சதுர்ஸ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு ஆளுனரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்கு முந்தின நாள் பெர்பேத்துவாவின் தகப்பனார் ரகசியமாக அவரை சிறையில்   சந்தித்தார். மகள்மேல் உள்ள பாச மிகுதியால், " மகளே... என் நேச மகளே.. பெர்பேத்துவா.. என் முதுமையை முன்னிட்டுக்கூட வேண்டாம்... உன் பால்குடி மறவாத உன் குழந்தையை  பார்...அதன்முகம் பார்த்து சொல்... நீ கிரிஸ்த்துவை விட்டுவிடுகிறேன் என்று சொல்...இன்றே உன்னை வெளியே கொண்டுவந்து விடுகிறேன்...இந்த வயதான காலத்தில்
எனக்கு இது எல்லாம் தேவையா...நீ இல்லாமல் நான் செத்துவிடுவேன் மகளே..எனக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்.. கிரிஸ்த்துவை விட்டுவிடு... அந்த மதம் மிகவும் கொடியது...   உலக இன்பங்களையும் மனித உறவுகளையும் பிறிக்கும் அந்த யேசு கிரிஸ்த்துவை விட்டுவிடு..." என்று அந்த பெரியவர் குமுறிக்குமுறி அழுதார்.
      ஆனால் பெர்பேத்துவா நிதானமாக கூறினாள், " அப்பா...நீங்கள் என்மேல் வைத்துள்ள பாச மிகுதியால் இவ்வாறு பேசுகிறீர்கள்...எனக்கு நீங்களோ என் குழந்தையோ ஒரு  பிரச்சனையே இல்லை..பிறப்பிப்பதும் இறக்கச்செய்வதும் ஆண்டவன் சித்தம்.. நீங்கள் யேசுவைப்பற்றி தெரிந்துகொண்டது தவறானது.. கிரிஸ்த்துவம் அன்பை போதிப்பது.. அதன்   நெறிமுறைகள் சுலபமானவை..நேர்மையானவை..இவற்றை அனுபவித்துப்பார்த்தால்தான் உணரமுடியும்..நான் யேசுவை தேர்ந்துகொள்ளவில்லை... யேசுதான் என்னை
தேர்ந்துகொண்டார் ...அவர் எனக்குள்ளாகவே இருக்கின்றார்... எனவே என்னால் அவரை மறுதளிக்கமுடியது...நீங்கள் போய்வாருங்கள்." என்றாள்..
அடுத்த நாள் விசாரணை ஆரம்பமானது.
            கார்தேஜின் ரோமை ஆளுனர் ஹிலாரியானுஸ் தன் அவையில் வீற்றிருந்தார்..முதலில் பெர்பேத்துவா அழைக்கப்பட்டாள். அப்போது அவளது தகப்பனார் அவளின் ஆண்   குழந்தையை அவளுக்கு தூக்கிக்காண்பித்து, ' மகளே..பெர்பேத்துவா...இக்குழந்தையை முன்னிட்டு யேசுவை மறுதலி.. ரோமை அதிபதிக்கு வணக்கமும் ஆராதனையும் செலுத்து"   என்றார்..
         விசாரணையின்போது அவள் தகப்பனார் குறுக்கிட்டது அவருக்குப்பிடிக்கவில்லை.. எனவே, " யாரது அங்கே...இந்தகிழவனை வெளியே துரத்தி நையப்புடையுங்கள் " என்றார்..
அந்தக்கிழவரை அப்படியே அலாக்காக தூக்கிவந்து வெளியே வைத்து கோலால் நையப்புடைத்தார்கள். அவர் அலறிய சப்த்தம் பெர்பேத்துவாவுக்கு மிக நன்றாகக்கேட்டது.. மிகுந்த  விசனமுற்றாள் பெர்பேத்துவா.
ஆளுனர் ஆரம்பித்தார், " சொல் பெர்பேத்துவா,... நம் சீசரை அரசனாகவும் கடவுளாகவும் ஆராதிப்பாயா ?.. நம் முன்னோர்களின் கடவுளான் ஜுபிடரையும் வீனஸையும்   ஆராதிப்பாயா?." என்றார். அதற்கு பெர்பேத்துவா " நான் சீசரை அரசராக ஏற்றுக்கொள்வேன்.. அதற்கான வணக்கமும் மரியாதையும் எனக்கு எப்போதும் உண்டு.. ஆனால் அவரை
நான் கடவுளாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்... வேறு கடவுளர்களுக்கு தூப ஆராதனையும் காட்ட மாட்டேன் " என்றாள்.
        ஆளுனர், " அப்படியானால் நீ ஒரு கிரிஸ்த்துவளோ ?" என்றார்.
பெர்பேத்துவா உடனடியாக, " ஆம். நான் ஒரு கிரிஸ்த்துவள் தான். " என்றாள்.
ஆளுனர் கோபமுற்று ," பெர்பேத்துவா,.... உன் குலப்பெருமையை முன்னிட்டும்... உன் வயோதிக தந்தையை முன்னிட்டும்... உன் குழந்தையை முன்னிட்டும்...உனக்கு ஒரு  வாய்ப்பு தருகின்றேன்...யேசு கிரிஸ்த்துவை விட்டுவிடுவதாக சத்தியம் செய்... நம் சீசரையும் நம் கடவுளர்களையும் அவமதிக்காதே.. உன் ராஜ விசுவாசத்தைக்காட்டு " என்றார்.
     அதற்கு பெர்பேத்துவா, " ஆளுனர் அவர்களே... நான் யேசுகிரிஸ்த்துவை மறுதலிக்க மாட்டேன்.. இது சத்தியம். " என்றாள்.
ஆளுனர் மிகுந்த கோபமுற்று, " பெர்பேத்துவா...நீ என்ன பேசுகிறாய்... யாரிடம் பேசுகிறாய் என்பதை மறந்துவிட்டாய்...இதற்கெல்லாம் என்ன தண்டனை தெரியுமா ?" என்றார்.
பெர்பேத்துவா, " ஆம்... தெரியும் " என்றாள்.
ஆளுனர் அன்றைய விசரணைக்காக வ்ந்திருந்த பெலிஸித்தம்மாள் மற்றும் முதலில் குறிப்பிட்ட மூன்று ஆண்களையும் விசாரிக்க அவர்களும் பெர்பேத்துவா கூறியபடியே   கூறினார்கள்.
ஆளுனர் உடனடியாகவே தீர்ப்பு கூறினார்..." உங்கள் மீது ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நம் சீசரையும் நம் கடவுளர்களையும் அவமதித்த  குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் கசையால் அடிப்பித்து மிருகங்களுகு இறையாகப்போட உத்திரவிடுகின்றேன்...பெலிஸித்தா தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதால்  அவள் குழந்தை பெற்ற பிறகு அவளுக்கும் இதே தண்டனை தரப்படுகின்றத்து.. நம் பேரரசரின் பிறந்த நாள் அடுத்தவாரம் வர இருப்பதால் அதைக்கொண்டாடும் வகையில்  அன்றைய தினத்தில் இவர்கள் தண்டனை நிறைவேற்ற உத்திரவிடுகின்றேன். அதுவரையில் அவர்கள் அனைவரையும் கடுங்காவலில் வைக்க உத்திரவிடுகின்றேன். "
               கொடும் சிறை....
    பெர்பேத்துவாவும் அவரது சகோதரர் சதுர்ஸும் பெலிசித்தம்மாவும் மற்றும் அவர்கள் ஆண் வேலைக்காரர்களும் பாதால சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் பெர்பேத்துவாவின்  தகப்பனாரும் ரகசிய உதவி குருக்களான தெர்ஸியுஸ் மற்றும் போம்பினுஸ் என்னும் இருவரும் புதென் என்னும் சிறைகாவலனை லஞ்சம் கொடுத்து கவனித்துக்கொண்டார்கள்.
உண்மையில் அந்த சிறைகாவலனும் ஒரு ரகசிய கிரிஸ்த்துவந்தான்..அவன் பெர்பேத்துவாவின் குழந்தைக்கு அவள் தண்டனைக்காலம் வரும்வரை பால் கொடுத்து  கவனித்துக்கொள்ளவும், அவர்கள் குடும்ப நண்பர்கள் அவர்களை சிறையில் ரகசியமாய் வந்து சந்திக்கவும் அனுமதி அளித்தான். அந்த சிறைகாவலனுக்கு பெர்பேத்துவாவின் மீது   அவ்வளவு மரியாதை இருந்தது. அவள் கடவுள் ஆசீர் பெற்றவள் என்றும் நம்பினான்.
      தண்டனைகாலம் வர இன்னும் மூன்று நாள் தான் இருந்தது. அப்போது பெர்பேத்துவாவின் சகோதரர் சதுர்ஸ் கூறியதாவது. " என் சகோதரி..கடவுள் உன்மட்டில் இருகின்றார்  என்பதை நான் விசுவசிக்கின்றேன்... உன் பக்திக்கு கடவுள் உனக்கு செவி மடுப்பார். எனவே நீ அவரிடம் நாம் விடுதலை ஆவோமா அல்லது சாவோமா.. சாவது என்றால் நாம்  எப்படி சாவோம் என்பதை எனக்கு ஆண்டவரிடம் கேட்டுச்செல் " என்றார். அதர்க்கு அவர், " நான் நாளை ஆண்டவரிடம் கேட்டு உனக்கு சொல்வேன் " என்றாள்.
            அப்போது பெலிசித்தாள் எஜமானி, " நீங்கள் எல்லோரும் என்னை விட்டுவிட்டு போகப்போகிறீர்களா?..நானும் உங்களோடே வர எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள் அம்மா...  நாம் அனைவரும் ஒன்றாகவே வாழ்ந்தோம்.. ஒன்றாகவே மரிப்போம்... ஒன்றாகவே பரலோகம் போவோம் அம்மா... என்மேல் இரக்கம் வைத்து தயவு செய்து எனக்காக மன்றாடுங்கள்..
எனக்கு வயிற்றில் எட்டு மாத குழந்தை இருப்பதால் எனக்கு உங்களுடன் வேத சாட்ச்சி முடி கிடைக்காமல் போய் விடுமோ என்று பயப்படுகிறேன் " என்று பெர்பேத்துவாவை   கட்டிக்கொண்டு அழுதாள். அனைவரும் பிரார்த்தனையில் ஈடு பட்டனர். அப்போது அவர்களின் வேண்டுதல் கேட்கப்பட்டதாக ஒரு அருங்குறி காட்டப்பட்டது. ஆம்.. அதிசயம்  எட்டுமாத கர்ப்பிணி பெலிசித்தாவுக்கு உடனடியாக பிரசவ வலி ஏற்பட்டது. சற்று நேரத்திற்குள் அவளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை குறைமாசமாக பிறந்தது. பிறந்த
குழந்தையை ஒரு கிரிஸ்த்துவ தம்பதியினர் தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொண்டனர். கடுமையான பிரசவ வலியினால் பெலிசித்தாள்.மிகவும் துயறுற்றாள்.. அப்போது சிறை அதிகாரி  புதென் கூறினார்..."பெலிஸித்தா..நீ இந்த வலிக்கே இவ்வளவு துன்பப்படுகின்றாயே.....நாளைக்கு மரண விளையாட்டரங்கத்தில் கொடிய விலங்குகளுக்கு உன்னை
இறையாகப்போடுவார்களே அப்போது நீ என்ன செய்யப்போகிறாய் ? என்றார்.. அதற்கு பெலிசித்தாள் " அதை கடவுள் பார்த்துக்கொள்வார்...எனென்றால் வாழ்வது நானல்ல...என்னில்  கிரிஸ்த்துதான் வாழ்கின்றார்... எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை." என்றாள். இந்த நேரத்தில் செகுண்டுலெஸ் என்னும் வேலையாள் இவர்களோடு வேத சாட்ச்சி முடி பெறாமல்
சிறையிலேயே மரித்தார்.
             அந்த இரவில் பெர்பேத்துவா ஒரு காட்சி ஒன்று கண்டாள். பழைய ஏற்பாட்டில் யாக்கோபு கண்ட ஏணிபோல் அது இருந்தது. அந்த ஏணி தங்கத்தால் செய்து பரலோகத்தையும்  பூலோகத்தையும் இணைத்தது. அந்த ஏணி மிகவும் குறுகலாக ஒருவர் மட்டும் ஏறும்படி இருந்தது. அந்த ஏணியின் இருபுறமும் இரும்பினால் செய்த பலவகையான ஈட்டி, வேல்,
கத்தி.குறடுகள், ஊக்குகள் போனறவை பொருத்திவைக்கப்பட்டிருந்தன. அஜாக்கிராதையாக ஏறும் எவரும் அவற்றால் சின்னபின்னமாக்கபடுவது உறுதி. ஏணியின் கால் பகுதியில்   ஒரு பெரும் ராஜநாகம் படமெடுத்து அந்த ஏணியில் யாரும் ஏறிவிடாதபடி காவல் காத்துக்கொண்டிருந்தது. அந்த ஏணியில் பெர்பேத்துவாவின் சகோதரன் சதுர்ஸ் மிக வேகமாக ஏறி
கடைசி படியில் கால் வைத்துக்கொண்டு " பெர்பேத்துவா...பார்த்து ஜாக்கிரதையாக மேலே ஏறிவா.. அந்த பெரிய பாம்பு  உன்னைக்கடித்துவிடாதபடி பார்த்துகொள்...நீ இங்கே வரும்வரை
நான் உனக்காக இங்கேயே காத்துக்கொண்டிருப்பேன் " என்றார்.. அதற்க்கு பெர்பேத்துவா, " சகோதரா...பயப்பட வேண்டாம்... கடவுள் மேல் ஆணையாக இந்த பாம்பு என்னை  ஒன்றும் செய்யாது..இதோ பார் நான் வருகிறேன் " என்று கூறியபடி அந்த ஏணியை அணுகினாள். உடனே அந்தப்பம்பு படுத்துக்கொள்ளவே பெர்பேத்துவா அதன் தலைமீதே
தன் காலை வைத்து ஏணியின் மீது ஏறினாள்...
       அந்த ஏணியின் உச்சி பரலோகத்தில் ஒரு அழகிய கிராமத்தில் இருந்தது... அங்கு ஏறாளமான கால் நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன. அங்கே ஒரு பெரியவர் நீண்ட தாடியுடன்  செம்மரி ஆடுகளிடமிருந்து பால் கறந்துகொண்டிருந்தார். அவளை திரும்பிப்பார்த்து, "  வா...மகளே..பெர்பேத்துவா...உன் வரவு நல் வரவாகுக... இதோ இந்த பாலைக்குடி " என்றர்.
     பெர்பேத்துவா தன் கைகள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு அந்த பாலை வாங்கிக்குடித்தாள்.. அது சொல்ல முடியாத இனிமையாயிருந்தது.. அப்போது அங்கிருந்த மற்றனைவரும்  " ஆமென் " என்றனர்.
அந்த சப்தத்தில் திடீரென கண் விழித்தாள் பெர்பேத்துவா..தன் நாவில் இன்னும் அந்த பாலின் இனிமையை அவள் உணர்ந்தாள்..அந்த இரவே தன் சகோதரன் சதுர்ஸை எழுப்பி,
" நாம் நாளைக்கு இந்த உலக வாழ்வை முடிக்கப்போகின்றோம்... நமக்கு பரலோகத்தில் வேத சாட்சி முடி காத்துக்கொண்டிருக்கின்றது" என்றாள்.
            " மரண விளையாட்டரங்கம்."
        இன்றைக்கும் பெர்பேத்துவா, பெலிசித்தாள், சதுர்ஸ், சதுராத்துஸ், ரிவோகாட்டஸ் ஆகிய ஐவரையும் கொண்ற அந்த மரண விளையாட்டரங்கம் இந்த கர்த்தேஜில் இருக்கின்றது.  இந்த விளையாட்டரங்கம் ஐந்த அடுக்கு பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கபட்டது. வட்டவடியான அந்த அரங்கத்தின் நடுவே ஒரு நெடும் கல் தூண் இன்றும்
உள்ளது. அதன் அருகே ஒரு நிலவரை. அதில் ஒரு பாதுகாப்பான அறை.. அடுத்தநாள் கொல்லப்படப்போகும் கைதிகள் அந்த அறையில்தான் தங்க வைக்கப்படுவார்கள். இந்த   அறையில் தான் பெர்பேத்துவாவும் பெலிஸித்தம்மாளும் மற்றும் அவள் சகோதரன் சதுர்ஸும், சதுர்னினும், ரிவோகாட்டஸும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
[ பலியாக்கப்படும் கைதிகளை அறிமுகப்படுத்தும்பொருட்டு அவர்கள் பெயரை சொல்லி அழைத்து பவனியாக வட்டவடிவில் சுற்றிவரச்செய்வார்கள். பலத்த கரகோஷங்களுடன்   அப்போதே ரசிகர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.. பிறகு மிருகங்களை பவனியாக கொண்டுவருவார்கள்..பிறகு அவைகளை கோபமூட்டுவதர்க்காக அவற்றை ஒன்றோடு  ஒன்றாக மோத விடுவார்கள். பிறகு கைதிகளை நடுவிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து வீரர்களை விட்டு கைதிகளை சாட்டையால் சுழற்றி அடி பிண்ணி எடுத்துவிடுவார்கள்.. அந்த   வெறியாட்டத்தில் குற்றவாளிகளின் ரத்தம் தெரிக்கும்.. இந்த ரத்த வாடைக்கு கொடிய வனவிலங்குகள் மோப்பம் பிடித்துக்கொண்டு சீறும்... சில கர்ஜிக்கும்.. அவற்றை அவிழ்த்து
விட்டால் அவ்வளவுதான்.. இதற்காகவே அந்த மிருகங்களை சில நேரம் பட்டினி போட்டு வைத்திருப்பர். குற்றவாளிகளை அந்த தூணிலிருந்து அவிழ்த்துவிட்டு மிருகங்களை   அவர்கள் மேல் ஏவி விடுவார்கள்.. பிறகு அவர்கள்கதி அதோ கதிதான். மிருகங்களிடமிருந்து தப்பிக்க கைதிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுவார்கள்..மிருகங்கள் அவர்களை
தாக்கி சின்னபின்னா படுத்தும்..அதைக்கண்டு ரசிகர்கள் சந்தோஷ மிகுதியால் வெறிகூச்சல் போடுவார்கள்.. இந்த சப்த்தத்தைக்கேட்க்கும்போது மிருகங்கள் இன்னும் கோபாவேசம்   கொண்டு வெறிகொண்டு தாக்க ஆரம்பிக்கும். இந்த பின்னனியை நினைவில்கொண்டு மேற்கொண்டு கதைக்குப்ப்போவோம் ]
           சீசரின் பிறந்த நாளில் நடக்கபோகும் கேளிக்கைகளை கண்டு ரஸிக்க ஏராளமான கூட்டம் இந்த மரண அரங்கத்தில் சேர்ந்தது. ஆளுனரும் பெரும்பொருப்பு வாய்ந்தவர்களும்   அவர்தம் இடத்தில் [பால்கணியில்] அமர்ந்திருந்தனர். ஆட்டம் ஆரம்பமாகியது. கைதிகளை அறிமுகப்படும்பொருட்டு அனைவரும் அரங்கத்தைச்சுற்றி வரச்செய்தார்கள். முதலில்   சதுர்ஸும் அவர் பிறகு சதுர்னினும், ரிவொகாட்டஸும் அவர்களுக்குப்பிறகு இடண்டு பெண்களான பெர்பேத்துவாவும் பெலிஸித்தம்மாவும் நடந்துவந்தார்க்ள்.
     அனைவரும் துனிக் துணியால் ஆன வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார்கள். குழந்தை பிறந்து மூன்று நாளே ஆகியிருந்த பெலிஸித்தாவுக்கு தாய்ப்பால் சுறந்துகொண்டே   இருந்தது. அது அவர் அனிந்திருந்த அங்கியை நனைத்தது. அந்த அரங்கத்திலிருந்த பலர் " யார் வருவது... அது பெர்பேத்துவாவும் பெலிசித்தம்மாவும் அவர் சகோதரர் சதுர்ஸுன்   அவர் வேலை ஆட்க்களும் தானே !
அடக்கடவுளே... இவர்களுக்கு ஏன் இந்தக்கஷ்டம்..அவர்கள் எப்பேர்பட்ட குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்.. அடடா.. .அவர்களுக்கா இந்த கதி... அடப்பாவமே என்று பலர்  வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை காட்டிக்கொண்டனர். ஆனல் பெர்பேத்துவாவும் பெலிசித்தம்மாளும் முகத்தில் கொஞ்சம் கூட கலவரத்தையோ,,,பயத்தையோ   காட்டவில்லை. ஏதோ தங்கள் சொந்த ஊரில் தாய் தகப்பனைக்காணப்போகும் ஒரு சந்தோஷத்தைக்காட்டினார்கள். ஆனால் இவற்றைப்பார்த்தவர்கள் தான் மிரண்டனர்..
     ஆளுனரின் பால்கணிக்கு கீழே அவர்கள் அனைவரும் வரும்போது சதுர்ஸ் " ஆளுனர் அவர்களே.. நீங்கள் தவறு செய்கிறீர்கள்.. ஒருபாவமும் அறியாத எங்களை வீணே கொலை  செய்கிறீர்கள்...இதெர்க்கெல்லாம் நீங்கள் ஆண்டவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் " என்றார்.. அதற்கு ஆளுனர் " இவர்களை சவுக்கால் அடியுங்கள் " என்றார்.
அவருக்குப்பாதுகாவலர்கள் அப்போதே அவர்கள் அனைவரையும் சவுக்கால் அடித்தனர். அரங்கை சுற்றிவந்ததும் அவர்கள் அனைவரையும் நடுத்தூணில் சேர்த்துக்கட்டி சவுக்கால்  வெளு வெளு என்று வெளுத்தனர். பெண்கள் இருவரையும் முகத்திலேயே அடித்தனர்.. அவர்கள் முகம் ரத்தக்களரி ஆனது.
அதர்க்குள் " அடிப்பதை நிறுத்துங்கள்.. அவர்கள் அடிவாங்கியே செத்துவிடப்போகிறார்கள்..அப்புறம் மிருகங்களுக்கு இறையாகப்போட முடியாமல் போய்விடும். அவர்களை  அவிழ்த்துவிட்டு மிருகங்களை திறந்துவிடுங்கள் " என்றார் ஆளுனர். ஒருவன் ஒரு பெரும் காட்டுப்பன்றியை சங்கிலி போட்டு கட்டியபடி அழைத்துவந்தான். முதலில் சதுர்ஸ் மீது
அந்த காட்டுப்பன்றியை ஏவி விட்டான்.. அது வெகு மூர்க்கமாக ஓடியது. அதைக்கட்டியிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு அந்த அரங்கத்தை சுற்றிவந்து வெறிகொண்டாற்போல்  சதுர்ஸை விட்டுவிட்டு அதை அழைத்துவந்தவன்மீது பாய்ந்து அவன் வயிற்றை குத்திக்கிழித்தது.. மூன்று நாட்களுக்குப்பிறகு அவன் செத்தான்.
   அடுத்துஒருபெரும் கரடியை சதுர்ஸ் மீது ஏவினர்.. அது அவரை முகர்ந்து பார்த்துவிட்டு மற்ற இரண்டு பேர் மீது பாய்ந்துவிட்டு ஓடிவிட்டது. அப்போது சிறைகாவலன் புதென்   பெர்பேத்துவாவின் சகோதரனாகிய சதுர்ஸைப்பர்த்து " இந்த முறை நீ தப்பிக்கமுடியாது... இந்த தடவை வரப்போவது ஒரு பெரும் சிருத்தை..இதர்காகவே அது இரண்டு நாட்க்களாக  பட்டினி போடப்பட்டுள்ளது என்றான்.. அதற்கு சதுர்ஸ்.." நான் விரும்பியதும் இதுவே...ஆண்டவரின் திருவுளமும் இதுவே." என்றார்.
       பாய்ந்து வந்த சிருத்தை சதுர்ஸை கடித்துக்குதறியது. போதாததற்கு அவர் கழுத்தின் பின்பகுதியில் கடித்து அவரை தரதர வென்று இழுத்துக்கொண்டு போய் சிறைகாவலன்   புதென் அருகில் போட்டுவிட்டு மற்றவர்களைத்தாக்க ஆரம்பித்தது. சதுர்னினும், ரிவோகாட்டஸும் கூட சிறுத்தையல் கடுமையாக தாக்கப்பட்டனர். சிருத்தை பெண்களான   பெர்பேத்துவாவையும் பெலிசித்தம்மாவையும் திரும்பிகூட பார்க்கவில்லை.. அவர்களைப்பொருத்தமட்டில் ஆண்டவன் சித்தம் வேறுமாதிரி இருந்தது. இந்த தருணத்தில் சதுர்ஸ்   சிறைகாவலனிடம் மெதுவாகப்பேசினார்... "புதென்.. இந்த கடும் பாடுகள் மற்றவர்கள் திருச்சபையின் சத்தியத்தில் நிலைபெற வேண்டும் எனபதற்காகவே... மனதில் திடம் கொள்...
என்னை மறவாதே..மீண்டும் சொர்கத்தில் சந்திப்போம்.. எங்கே உன் மோதிரம்... அதைக்கொடு நண்பா என்று கேட்டுவாங்கி தன் ரத்தத்தில் நினைத்துக்கொடுத்தார்.. அவன் அதை   வாங்கி தன் கண்களில் ஒற்றிக்கொண்டான். தன் வாழ்நாள் வரை அந்த மோதிரத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.
          ஆக சதுர்ஸ், சதுர்னின், ரிவோகாட்டஸ மூவரும் சிருத்தையால் குதறப்பட்டு ரத்த சகதியில் கிடந்தார்கள்..வேடிக்கை பார்க்கவந்தவர்கலில் ஒருவன்.." ஆஹா... என்ன காட்சி இது  ..பிரமாதம். இந்த மூன்று பேரும் ரத்த ஞானஸ்னானம் பெற்றுவிட்டார்களடா " என்று எகத்தாளமாகக்கூவினான்.. உண்மையில் இந்த வேத சாட்ச்சிகள் ஐந்து பேரும் அந்த முந்தைய
நாளில்தான் ஞானஸ்நானம் வாங்கி இருந்தனர்.
    அடுத்ததாகப்பெண்கள்..பெர்பேத்துவாவும் பெலிசித்தம்மாவும்..இந்த இரண்டு பெண்களும் எதர்க்கும் பயந்த மாதிரி தெரியவில்லை. பாய்ந்துவந்த அந்த முறட்டுக்காளையை  துணிவாகஎதிர்த்து நின்றார்கள்.. கொடூரமாக தாக்கியது அந்த முறட்டுக்காளை...இரண்டு பெண்களும் துவண்டு விழுந்தார்கள்..பெர்பேத்துவாவுக்கு முதுகில் விலா எலும்பு உடைந்தது.
இருப்பினும் மெதுவாக எழுந்து தரையில் உட்கார்ந்து தன் ஆடைகளை சரிசெய்துகொண்டு கலைந்திருந்த தன் கூந்தலை பின்னிக்கொண்டாள்.. வேத சாட்ச்சி முடி பெறப்போகும்  பெண்கள் கலைந்த கூந்தலாக இருக்கக்கூடாது என்பது மறபு. அவள் தரையில் ஊார்ந்தபடியே பெலிஸித்தாவை எழுப்பினாள். அம்மா... மாடு போய்விட்டது... . மெதுவாக எழுந்திரியுங்கள் என்றாள்..அப்போது நினைவுவந்த பெலிசித்தாள் " காளைமாடு ஏன் என்னை தாக்கவில்லை? என்றாள். அதற்கு பெர்பேத்துவா. .  . மாடு உங்களைக்குத்தி தூர விசிறியது உங்களுக்கு நினைவில்லையா? இதோ பாருங்கள் மாடு உங்களைக்குத்திய காயம்...இதோ உங்கள் கிழிந்த உடுப்பு. என்றாள்..ஒருவழியாக   பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு எழுந்து நின்றனர். இனிமேல் தாங்கள் உயிரோடிருப்பது இன்னும் சில நிடங்கள்தான் என்று உண்ர்ந்து பிறியாவிடையாக
ஒருவருக்கொருவர் அன்பினாலும் சமாதானத்தினாலும் முத்தமிட்டுக்கொண்டார்கள்.. உடனே எழுந்தது ஒரு பெரும் கூச்சல். " இதோ அவர்கள் இன்னும் சாக வில்லை... கொல்லுங்கள் அவர்களை"
       அடுத்த காட்ச்சியாக ஐந்து வீரர்கள் உருவிய கத்தியுடன் அரங்கினுள் நுழைந்தார்கள்...தரையில் குற்றுயிறாகக்கிடந்த சதுர்ஸ், சதுர்னின், ரிவோகாட்டஸ் ஆகிய மூவரையும்  இழுத்துக்கொண்டுவந்து நடுவிலிருந்த தூணோடு சேர்த்துகட்டினர். அந்த ஐந்து பேரையும் ஆளுக்கு ஒருவராக வெட்டிக்கொண்றனர். ஆனல் பெர்பேத்துவா முன்வந்தவன் போர்பயிற்சி
இல்லாதவன். அவன் அவளை கண்டபடி வெட்டினான்.. வெட்டு சரியாகப்படவில்லை.. அனாவசியமான வேதனையும் வலியும் தான் மிச்சமானது. முடிவாக பெர்பேத்துவா அவன்   வாளைப்பிடித்து தன் கழுத்தில் வைத்து " இப்போது குத்து" என்றாள்.. அவனும் தன் வலிமையான் கரத்தால் அந்த கத்தியை அவள் கழுத்தில் இறக்கினான். பெர்பேத்துவாவின்
ஆவி பிறிந்தது.
       அன்று பெர்பேத்துவாவின் காட்சிபடி முதலில் ஏணியில் ஏறியவர் அவள் சகோதரன் சதுர்ஸ்.. அவ்வாறே முதலில் இறந்தவர் சதுர்ஸ்.. கடைசியாய் இறந்தவர் பெர்பேத்துவா.
இந்த பெர்பேத்துவா,, பெலிஸித்தா..சதுர்ஸ்.. சதுர்னின்...ரிவொகாட்டஸ் ஆகியோர் இறந்ததும் அவர்கள் உடலை அவர்கள் பெற்றோர் பெற்றுக்கொண்டு தங்கள் சொந்த இடத்தில்   புதைத்தனர்.. பிற்பாடு அந்த இடத்தில் ஒரு தேவாலயம் ஒன்று கட்டினர்.. அந்த தேவாலயம் பசிலிக்கா மஜோரம் என்று இன்றுவரை அழைக்கப்படுகின்றது.. வெகு சாதாரணமாக
ஆயிரத்து எண்னூரு ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாலயம் இன்று பரிதாபமான நிலையில் இருக்கின்றது..இருபது அடி நிலவரைக்கு கீழே அவர்கள் ஐந்து பேருடைய கல்லரைகள்   உள்ளன. அந்த கல்லரைகளில் அவர்கள் பெயர்கள் பொறிக்கபட்டுள்ளன.

இப்போதும் மத்திய ஃப்ரன்ஸில் உள்ள வெர்ழோன் என்னும் ஊரில் நோத்திரிடொம் ஆலயத்தில் தூய பெர்பேத்துவாவின் சில எலும்புகளை அருளிக்கமாகக்கொண்ட ஒரு தேவாலயம் 

தூய பெர்பேத்துவாமற்றும் பெலிசித்தம்மவின் வேத சாட்சிமுடிபெற்ற திருவிழா மார்ச் மதம் 7 ஆம் தேதி வருகின்றது.
தூய பெர்பேத்துவா மற்றும் பெலிஸித்தம்மாளே எங்களுக்காக வேண்டிகொள்ளும்.


























இருகின்றது. அதிலுள்ள புனித பெர்பேத்துவாவின் சொரூபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

" தோணியப்பர் "








" தோணியப்பர் "

    நான் ஒரு முறை வேளாங்கண்ணி கோயிலுக்கு திருப்பயணம் சென்றபோது எனது நண்பர்களிள் ஒருவர் சீர்காழியில் ஒரு இந்துகோயிலுக்கு என்னை அழைத்துச்சென்றார். எனக்கும்  அந்த கோயிலைப்பார்க்க விருப்பம் இருந்தது. நான் கூடுமானவரை கலைச்சிறப்பு வாய்ந்த பல இந்து கோயில்களைப்பார்த்து இருக்கிறேன். அப்படியாக இந்த சீர்காழி கோயிலில்   விஷேசம் ஏதாவது இருந்தால் அதையும் பார்த்துவிடுவோமே என்று நானும் கோவிலுக்குள் சென்றேன். இந்த கோயிலில் தான் திருஞானசம்பந்தருக்கு பார்வதி தேவியார் ஞானப்பால்  கொடுத்து அந்த குழந்தையை ஆசீர்வதித்த இடம் என்றும் அது சம்பந்தமான கோயில் குளம் என்றும் பல இடங்களை எனக்கு என் நண்பன் காட்டினான். மேலும் இக்கோயிலின் கடவுள்  சிவபெருமான் என்றும் அவருக்கு தோணியப்பர் என்றும் சட்டநாதர் என்றும் பெயர் என்றும் கூறினார். எனக்கு தோணியப்பர் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று கேட்டேன்.அவர்
கூறிய கதை எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.
       அதவது பெரு ஊழிக்காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஒரு ஆணும் அவன் துணைவியும் ஒரு தோணியினால் உயிர் தப்பியதாகவும் அவர்கள் இந்த சீர்காழியில் தான்  தரைதட்டி வாழ்ந்து வந்ததாகவும் அதனால் இந்த கோயில் தெய்வத்திற்கு தோணியப்பர் என்று பெயர் வந்ததாகவும் கூறினார். இந்த நிகழ்வுபற்றிய ஒரு புடைப்பு சிற்பத்தையும் இந்த   கோயிலில் காட்டினார்கள்.அவர்கள் கூறிய அந்த பெரு வெள்ளம் ஏற்பட்ட காலம் ஏறக்குறைய நம் பழைய ஏற்பாட்டில் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் போன்றதே.
   இந்த சரித்திர நிகழ்வும் நோவாவின் பெட்டகம் போன்றதே என்னும் எண்ணம் என் மனதில் தோன்றியதும் எனக்கு நோவாவின் காலத்தில் என்ன நடந்தது என்று அறிய மிகவும்  ஆர்வம் ஏற்பட்டது. அது பற்றி திருகாட்சி வரம் பெற்ற அருட்சகோதரி காத்தரின் எம்மரிக் தன் ஞானதிருஷ்ட்டியில் கண்டு எழுதிய நோவாவின் காலத்தில் என்ன நடந்தது.   எப்படி நடந்தது என்று படிக்கப்படிக்க எனக்கு மிகுந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. இனி நம்முடைய தோணியப்பர் நோவாவைப்பார்ப்போம்.
      நோவாவைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது முன்னோர்களைப்பற்றிய ஒரு முன்னோட்டம் தேவைப்படுகின்றது. ஆதாமும் ஏவாளும் சொர்கபுரியிலிருந்து  வெளியேற்றப்பட்டபிறகு பூலோகத்தில் வாழத்துடங்கினர். அவர்களுக்கு காயீன் ஆபேல் என்று இரு மக்கள் பிறந்தனர். காயீன் மூத்தவன். ஆபேல் இளையவன். ஆபேல் கடவுளுக்கு  விருப்பப்பட்ட பிள்ளையாய் இருந்ததால் காயீனுக்கு தன் தம்பியின் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் அப்போது முறையே 150,, 140 வயது ஆகியிருந்தது. அவர்கள்  இருவருக்குமே பிள்ளைகள் என்றும் பேரப்பிள்ளைகள் என்றும் தனித்தனி குடும்பங்களும் இருந்தன. இந்த நிலையிலும் மூத்தவன் காயீனுக்கு தன் தம்பி ஆபேல் மீது பொறாமை   அதிகமாகி ஒருநாள் அவன் ஆலிவ் மலையில் தன் தம்பி மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தபோது ஒருபெரும் தடியால் அடித்துக்கொன்றான். இதனால் வெகுண்ட கடவுள் காயீனை
சபித்து தூர தேசத்திற்கு துரத்தினார். அவன் தன் மனைவி மக்களுடன் புரப்பட்டுச்சென்றான். காயீன் தன் தம்பிக்கு செய்த கொடும் செயலால் அவன் தன் மக்களாள் அடைந்த  அவமானம் கொஞ்சநஞ்சமல்ல. அனைவரும் அவனை வெறுத்தனர். கேவலப்படுத்தினர். இருப்பினும் தன் குல முதல்வன் என்ற முறையில் அவனை தலைவனாகவும் ஏற்றுக்கொண்டனர். காயீன் தான் வாழ்ந்த காஸ்பியன் கடல் பகுதியில் தன் மகன் ஏனோக்கின் பெயரால் ஒரு நகரை நிறுவினான். இந்த ஏனோக்கை ஆண்டவர் விரும்பியதால்
சொர்கத்திற்கு உயிரோடு எடுத்துக்கொண்டு போய்விட்டார்.[ இதே போல் எலியாஸ் தீர்க்கதரிசியையும் கடவுள் உயிரோடு எடுத்துக்கொண்டு போய்விட்டார். இவர்கள் இருவரும்  கடவுளின் ஆணைப்படி உலகம் முடியும் போது மீண்டும் இந்த உலகத்திற்கு கடவுளுக்கு சாட்சியாக வருவார்கள்]
காயீன் தன் தம்பிக்கு செய்த கொலைபாதகத்தால் இந்த பூமியும் அவனை வெறுத்தது. அவன் தொட்ட எதுவும் துலங்கவில்லை.விளைச்சலும் சரிவர அவனுக்கு கிடைக்கவில்லை.
    இதனால் வாழ்வில் வெறுப்புற்ற காயீன் கடவுளிடம் அழுது புலம்பினான். தன் கொடும் செயலுக்கு மன்னிப்பு வேண்டினான். கடவுள் அவன் மீது இரங்கி விளைச்சக்லை அவனுக்கு  கொடுத்தார். அதுவரை அவன் உயிவாழ சிலவகை மிருகங்களை கொன்று சாப்பிட அனுமதித்தார். இறைச்சி உண்ணும் பழக்கம் மனிதர்களிடையே இப்படித்தான் ஆரம்பித்தது.    கடைசிவரை காயீன் தன் தம்பிக்கு செய்த துரோகத்தால் பலராலும் அவமானப்படுத்தப்பட்டு வாழ்வில் வெறுப்புற்று மிகவும் துன்பமான முடிவை அடைந்தான்.
          மனிதரா..... அரக்கரா....ராட்சதர்களா....தேவகுமாரர்களா....
   காயீனின் மகன் ஏனோக்கின் வம்சாவழியில் வந்தவன் துபால்காயீன். இவனே பல அரும்பெரும் கலைகளின் தந்தை. இவனது வம்சாவழியில் வந்தவர்கள் உருவத்தில் பெரும்   ராட்சதர்கள் போல் விளங்கினார்கள். கடவுளால் சபிக்கப்பட்ட சாத்தான்கள்பல கடவுளின் அனுமதியின்பேரில் இவ்வுலகில் இந்த உலகம் முடியும்வரை சுற்றித்திரிந்து மனிதர்களை
சோதிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தன. அவைகள் இந்த கருங்கடல் பகுதியில் அக்காலத்தில் வாழ்ந்துவந்த காயீனின் சந்ததியினரை பீடித்துக்கொண்டு தங்களது மாய்மாலங்களை  செய்துவந்தன. ராட்சதர்கள் போல் உயர்ந்து வளர்ந்து வந்திருந்த துபால்காயினின் சந்ததியினர் இந்த சத்தான்களின் உதவியினால் மரங்களின் மேல் சரசரவென ஏறவும் மரத்திற்கு மரம்
தாவவும் மலைக்கு மலை தாவவும் சடுதியில் மறையவும் தாக்கவும் வல்லமை பெற்று விளங்கினர். மேலும் பில்லி சூனியம் மந்திரம் மாயம் போன்ற எல்லவிதமான தகிடுதத்தங்களும்  பித்தலாட்டங்களும் செய்து மக்களை அச்சுருத்திவந்தனர். ஆண்களின் நிலையைவிட பெண்களின் நிலை மிகவும் மோசமானது. பேய்களின் உதவியுடன் சகலவிதமான
துஸ்டத்தனங்களையும் வேசித்தனங்களையும் கொஞ்சமும் அருவருப்பில்லாமல் செய்துவந்தனர். ஆபாசமான நடனங்களும் அதற்குதகுந்த அசுசியானபாடல்களும்  பெரும் ராகமெடுத்துப்பாடி காண்போரை பாவத்தில் விழத்தாட்டினர். தங்களுக்குத்தோன்றியபடி எல்லாம் படங்கள் வரைந்து அதர்க்கு உருவமும் கொடுத்து அதையே கடவுள் என்று
அருவருப்பான சிலை வழிபாடு செய்து கடவுளின் கோபத்திற்கு ஆளாயினர். அதைவிட கொடுமை தங்கள் இஸ்டம் போல் படைத்துக்கொண்ட கடவுளர்களின் சிலைக்கு தலைச்சன்  ஆண் குழந்தைகளையும் மனவளம் குன்றிய மற்றும் அங்க ஈனமான குழந்தைகளையும் பலியாக இட்டனர். சாமிக்கு இரத்தப்பலி என்னும் சாக்கில் அக்கால  பில்லி சூனியக்காரர்களும் சூனியக்காரிகளும் தங்களுக்கு வேண்டாதவர்களையும் நரபலியாக கொண்றனர். மேலும் சாத்தான்களின் உதவியினால் மாயகண்ணாடிகளின் வழியே  தூர இடத்திலுள்ளவைகளைப்பார்த்து அவர்களின் மேல் திடீரென தாக்கி அவர்களை வெற்றிகொண்டு ஆண்களை அடிமைகளாக்கி பெண்களை வேசிகளாக்கி குழந்தைகளை பலி  கொடுத்து மஹா அக்கிரமங்களை செய்துவந்தார்கள். இந்த அக்கிரமத்தில்சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க உயர்ந்த கோட்டைகளையும் கட்டிக்கொண்டார்கள். தங்கள்
எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பெரிய பெரிய கட்டிடங்களையும் அரண்மணைகளையும் கட்டிக்கொண்டார்கள். அந்த அக்கிரமகாரர்களுக்கு புத்தி சொல்ல யாரும்
இல்லை. புத்தி சொன்னவர் கொல்லப்பட்டனர்.
       இந்த நிலையில் கடவுள் இந்த மனிதர்களை அழிக்க சித்தம் கொண்டார். இத்தகைய மனிதர்களிலும் நல்லவர் யாவரும் உண்டோ எனத்தேடினார். அவர் பார்வையில் ஏனோக்கின்   வம்சாவளியில் வந்த நோவா என்னும் மனிதர் தென்பட்டார். நோவா பார்த்துக்கொண்டிருகும்போதே ஒரு மேகத்தில் கடவுள் மனித உருவத்தில் அவருக்குத்தோன்றினார். நோவா  கடவுள் முன் முகம் குப்புற விழுந்து வணங்கினார். கடவுள் அவரிடம் தான் இந்த அரக்க குணம் கொண்ட மனிதர்களை அழிக்க சித்தம் கொண்டுள்ளதாகவும் பெரும் ஜலப்பிரளயம்  கொண்டு இந்த மிலேச்சர்களை அழிக்க விரும்புவதாகவும் அதனால் இந்த அபாயத்திலிருந்து நல்ல உள்ளம் கொண்ட மக்களை காக்கும்படிக்கு ஒரு பெரும் கப்பல் ஒன்று   செய்யும்படியும் குறிப்பிட்ட நாளில் தான் படைத்த எல்லாப்படைப்புகளையும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் சிலரையும் கப்பலில் ஏற்றி காப்பாற்றும்படியும் கூறினார்.
இதைகேட்ட நோவா மிகவும் மனம் வருந்தினார். அந்த பாவிகளான மக்களுக்காக அவர்களை மன்னிக்கும்படியும் மன்றாடினார். அவர் கடவுள் எப்படியும் இந்த மக்களை மன்னிப்பார்  என்ற நம்பிக்கையில் உடனே கப்பல் கட்ட ஆரம்பிக்கவில்லை. கடவுள் இரண்டாம்தடவையும் அவரை எச்சரித்தார். அப்போதும் நோவா காலம் தாழ்த்தினார். ஆனால் கடவுள் மூன்றாம்
தடவையும் எச்சரிக்கவே நோவா சுதாரித்துக்கொண்டு கப்பல் கட்டும் வேலையை ஆரம்பித்தார். இதற்காக அவர் தன் இருப்பிடத்தை சோரோஸ்ற்றும் என்னும் இடத்திற்கு   குடிபெயர்ந்தார்.அது ஒரு உயர்ந்த மலைமீது இருந்தது. கீழே பள்ளத்தாக்கில் ஊர் இருந்தது. கடவுளின் மூன்று முறை எக்சரிக்கைக்கும் இடைவெளியாக முப்பது ஆண்டுகள் கடந்து
விட்டதால் நோவே சேம், காம், எப்பேத்து என்னும் தன் மூன்று மக்களுடனும் கப்பல் கட்டும் வேலையை ஆரம்பித்துவிட்டார். அவர் ஏன் இப்படியோரு கப்பல் கட்டும் வேலையை  ஆரம்பித்துவிட்டார் என்று உள்ளூர் மக்கள் யாவருக்கும் தெரியாது. எனவே அந்த மிலேச்சர்கள் அவர்களை அடிக்கடி கிண்டலும் கேலியும் நையாண்டியும் செய்து சமயங்களில்  நையப்புடைத்தும் மகிழ்ந்தனர். கப்பல் கீழ்தலம் நடுத்தலம் மற்றும் மேல் தலம் என்று உயர்ந்துகொண்டே வந்தது.
       அப்போது ஒருநாள் மூன்று தேவர்கள் நோவாவை சந்திக்க வந்தார்கள். அவர்கள் நோவாவிடம் ஒரு பெட்டியைக்கொடுத்து அதை இந்த கப்பலில் பத்திரமாக வைக்கும்படி கூறி  மறைந்து போனார்கள் [மிகவும்பிற்காலத்தில் இந்த மூன்று தேவர்களும் மீண்டும் இந்த பூமியில் வந்து அபிரகாமை சந்தித்தனர்] நோவா அந்த பெட்டியைதிறந்துபார்த்தார். அதில்
ஒரு திராட்ச்சைக்கொத்துடன்கூடிய ஒரு கிளை ஒரு ஆப்பில் பழத்தில் செருகி வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு அழகிய கிண்ணம் தங்க நிறத்தில் பீடம் ஏதும் இல்லாமல் இரண்டு  கைப்பிடியுடனும் இருந்தது. அதில் ஒரு புறத்தில் படமெடுத்தாடும் ஒரு நாகப்பாம்பின் உருவமும் மறு புறத்தில் திராட்சைகணிகள் கொத்தாகவும் படம் வரையப்பட்டிருந்தன.
      நோவாவுக்கு அப்போது அந்த படங்களின் அர்த்தம் விளங்கவில்லை. மேலும் அந்தக்கிண்ணம் என்ன உலோகம் என்றும் தெரியவில்லை. மேலும் சிறிய அளவிலான் மூடியுடன் கூடிய  மூன்று தங்க சிமிழ்களும் இருந்தன. நோவே இவை யாவையும் மிகவும் பாதுகாபாக தன் வசம் வைத்துக்கொண்டார்.
       கடவுள் கட்டளையிட்டபடியே ஒரு கப்பல் கட்டும்பணியை மேற்கொண்ட நோவா முப்பது ஆண்டுகளாக அதர்க்கான தயாரிப்புகளை மேற்கொண்டார். மேலும் மூன்று   ஆண்டுகளில் அந்தப்பணியை முடித்தார்.இவ்விதமாகவே யேசுநாதரும் தன் வேதபோதக பணியை ஆரம்பிக்க முப்பது ஆண்டுகளாக தன்னை தயாரித்துக்கொண்டு மேலும் மூன்று  ஆண்டுகளில் தன் மீட்ப்புபணியை முடித்தார்.
         கப்பல் நல்லவிதமாக கட்டிமுடிக்கப்பட்டதும் நோவா நன்றிபலி ஒப்புகொடுத்தார். கடவுள் அவருக்குத்தோன்றி உலகின் நான்கு திசைகளின் சார்பாகவும் வடக்கு, தெற்கு,  கிழக்கு மேற்க்கு திசைகளிலிருந்தும் நடப்பன பறப்பன ஊர்வன போன்ற அனைத்து படைப்புகளின் மாதிரியாக ஆணும் பெண்னுமாக இரண்டிரண்டு ஜோடியாக குழலூதி அழைத்து
வரச்செய்தார், மிகவும் பெரிதான யானை, காண்டாமிருகம், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி போன்றவை கப்பலின் கீழ்பகுதியிலும் வனவிலங்குகளும் வீட்டு விலங்குகளும் தனிதனியே  பிரிக்கப்பட்டு நடுத்தலத்திலும் பாரமற்ற பறவைகள் போன்றவை மேல் தலத்திலும் வைக்கப்பட்டன.
    நோவாவின் மகன்களில் ஒருவன் எப்பொத்து. இவன் மகன் மோசொக்கு. இவனுக்கு தவறான வழியில் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் ஹோம். இவனுக்கும் இவன்  சுற்றத்தாருக்கும் பெருவெள்ளத்தால் ஏற்படும் அழிவை நினைத்த மோசோக்கு தன் ஒரு சகோதரனான துபாலிடம் தன் தவறை சொல்லி தன்னையும் தன் மகன் ஹோமையும்   தன் தகப்பன் நோவா சபிக்கமலும் கப்பலில் அனுமதிக்கும்படியும் பரிந்துறைக்க மிகவும் அழுது கேட்டுக்கொண்டான். துபாலும் தன் தந்தையிடம் எப்படியோ நயந்து பேசி ஹோம் தன்   மகன் என்று பொய் சொல்லி எப்படியோ நிலைமையை சமாளித்துக்கொண்டான். இப்படியாக புறவினத்தானாகா ஹோமும் கப்பலில் நுழைந்தான். அவனுக்கும் பலருக்கும் பால்  குடிக்கும்படியாக அக்காலத்தில் விளைந்துவந்த ஒருவிதமான விஷச்செடியும் கப்பலில் இடம்பெற்றது.     இவ்விதமாக அமுதும் விஷமும் ஒரே மன்னில் என்பதுபோல அந்த மூன்று
தேவர்கள் கொண்டுவந்திருந்த அமுதத்திற்கு ஒப்பான திராட்சைக்கொடியும் விஷத்திற்கொப்பான பால் கொடியும் இந்த பூமியில் வளரவேண்டி அந்தக்கப்பலில் சேர்ந்துகொண்டன.
       நோவாவின் மக்கள் மூன்று பேரும் அவர்தம் மக்கள் மூன்று பேரும் நோவாவின் மனைவியும் ஆக எட்டுபேர் மட்டுமே கப்பலில் அனுமதிக்கப்பட்டதாக புதிய ஏற்பாட்டில் இராயப்பரின்  மடலில் வாசிக்கலாம். ஆனால் தூளியில் போடப்பட்ட குழந்தைகள் முதல் என்பத்துஐந்து வயதுடையவர்கள் வரை மொத்தம் நூறு பேருக்கும் குறையாமல் அந்த கப்பலில் இருந்ததை   தன் திருக்காட்சியில் கடவுள் தனக்கு வெளிப்படுத்தியதாக சகோதரி காத்தரின் எம்மரிக் கூறுகின்றார்.
குறிபிட்ட நாளில் கடவுள் கப்பலின் அனைத்து வாயில்களையும் அடைக்க கட்டளையிட்டார். பிறகு நிகழ்ந்தது அந்த பயங்கரம்.வானத்தின் அனைத்து சத்துவங்களும்   அசைக்கப்பட்டன. பூமி கிடுகிடுத்தது. பாதாளத்தின் வாயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வானத்தில் இடி முழக்கம்   கேட்டுக்கொண்டே இருந்தது. கப்பலில் இருந்த வனவிலங்குகள் பயத்தால் பிளிறிக்கொண்டும் அலறிக்கொண்டும் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டன.
        அதுவரை நோவாவை பழித்துவந்தவர்கள் பயத்தால் நடுங்கினர். கொடுமையான மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கும் ஓடவும் முடியாது. எங்கும் ஒளியவும் முடியாது. கடவுளின்  தண்டனைத்தீர்ப்பு தங்கள் தலைமேல் பயங்கரமாக இறங்கியதை பாவிகள் உணர்ந்தார்கள். ஆனால் காலம் கடந்துவிட்டது. ஓடு.... ஓடு... மலைமேல் ஏறிப்போ என்னும் கூக்குரல்
பலர் வாயினின்று வந்தது. ஆனால் முடியவில்லை. அந்த கருங்கடல் நீரால் நிறம்பி வினாடிக்கு வினாடி உயர்ந்துகொண்டே அந்தது. மேலும் பலத்த அலை மேலெழுந்து கரை ஓரம்  தென்பட்ட யாவரையும் தன்னுள் இழுத்துப்போட்டுக்கொண்டது. பூலோகம் முழுவதும் கரும் மழைமேகத்தால் மூடிக்கொண்டதால் நடப்பது பகலா இரவா என்று அறியவே முடியாமற்
போனது. பளீர் பளீர் ர்ன்று அடித்த மின்னல்களின் ஒளி வெள்ளத்தில் கரைபுறண்டு ஓடும் வெள்ளப்பெருக்கில் அடியோடு சாய்ந்துவிழும் வானுயர்ந்த கட்டிடங்களும் கோட்டைகளும்  பொய்த்தேவர்களுக்கு எழுப்பிய கோயில்களும் தூள் தூளாகி பெருவெள்ளத்தில் கறைந்து போனது. ஆனால் இந்த நிகழ்வுகளைப்பர்க்க மனிதர்கள் யாவரும் உயிரோடு இருந்திருக்க
வாய்ப்பே இருந்திருக்க முடியாது. ஓயாமல் நிற்காமல் மழை நாற்பது இரவும் பகலும் பெய்துகொண்டே இருந்தது.
       ஒருவழியக கடவுள் வெள்ளப்பெருக்கை நிறுத்தினார். தரை காய்ந்ததும் கடவுளின் ஆணைகிடைத்து நோவாவும் அவர் மக்களும் கப்பலினின்று வெளியே வந்தனர். கடவுள்  மீண்டும் இந்த உலகை ஜலப்பிரளயத்தால் அழிப்பதில்லை என்று உறுதிகொடுத்து அதற்கு சாட்சியாக வானவில்லை ஏற்படுத்தினார். மீண்டும் உலகில் உயிர்கள் தோன்றின.
பயிர்பச்சைகள் செடி கொடிகள் மரங்கள் எல்லாம் செழித்துவளர்ந்து நல்லபலன் கொடுத்தன. தேவர்கள் மூவர் கொண்டுவந்துகொடுத்த திராட்சை செடியும் ஆப்பிளும் பலன்   கொடுத்தன.ஒருநாள் நோவா திராட்சை சாறு அதிகமாய் குடித்து தன் நிலை இழந்தான். இடுப்புத்துணி விலகியதுகூடத்தெரியாமல் போதையில் கிடந்தான். இதைக்கண்ட
அவர்மகன் காம் சற்றே நகைத்து தன் சகோதரர்களிடம் தன் தகப்பன் நிலைபற்றி கூறினான். அவர்கள் சேமும் எப்பொத்தும் தன் தகப்பனின் நிர்வானத்தை பார்க்காதபடிக்குவந்து   அவனை ஒரு போர்வையால் மூடினர்.
     போதை தெளிந்து எழுந்த நோவா நடந்தது அறிந்து கடும் சினம் கொண்டான். தன் நிர்வானத்தை கண்டு சிரித்த காமை கடுமையாக சபித்தான். தன் மற்ற சகோதரர்களுக்கு  காம் அடிமையாக சேவகம் செய்யவேண்டும் எனவும் அவர்கள் உறவினர்களோடு உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் கட்டளை இட்டான் இந்த சாபம் கடும் உஷ்ணமாக காம்  மீது இறங்கியது. அந்த உஷ்ணத்தால் அவன் முகம் கருகியது. நாளடைவில் முகத்திலிருந்த கருமை அவன் தேகம் முழுதும் பரவியது. அவன் முழுக்க முழுக்க கருமை நிறத்தவன்
ஆனான். நாளடைவில் அவன் சந்ததியினர் அனைவரும் கருமை நிறம் அடைந்தனர். இவ்விதமாகத்தான் உலகில் கருமை நிறமக்கள் தோண்றினர்.    உண்மையில் கடவுள் கருமை  நிறத்தில் எந்த மக்களையும் படைக்கவே இல்லை.
       நோவாவிடமிருந்த அந்த தேவர்கள் கொடுத்த கோப்பை அவர் இறந்ததும் அவர் மகன் சேம் வசம் வந்தது. சேம் வழியாக தந்தை ஆபிரகாம் வசம் வந்தது. அவரிடமிருந்தது   ஈசாக்கு வசம் வந்தது. அவரிடமிருந்து யாக்கோபு வசம் வந்தது. அவரிடமிருந்து அவர் மகன் யோசேப்பு வசம் வந்தது. பிறகு பலகாலம் கழித்து எருசலேம் கோயிலில் உடன்படிக்கைப் பேழையில் வந்தது. ஒருசம்மனசானவர் அதில் தேவ அமுதம் ஊற்றி தேவ தாயாராரின் தகப்பனாகிய சுவக்கீனுக்கு கொடுத்தார். அதில் பானம் பன்னியவர்கள் இதற்கு முன் தந்தை   அபிரகாம் மட்டுமே. அடுத்ததாக சுவக்கீன். அவருக்குப்பிறகு அவரது மகள் மேரியின் மகன் யேசுநாதர் மட்டுமே. யேசுநாதர் தன்னுடைய இராப்போஜனத்தின் போது   இந்த கோப்பையில் தான் திராட்சைப்பழ இரசத்தை தன் இரத்தமாக மாற்றினார். இந்தக்கோப்பை எருசலேம் தேவாலயத்திலிருந்து காணாமல் போய் பழம் பொருள் கடைக்குப்போனது.
இதைகண்ட அரிமத்தியா ஊராராகிய சூசைக்கண்டு அதை வாங்கி செராபீஸ் [பிற்காலத்தில் வெரோணிக்கா] என்னும் பெண்வசம் கொடுத்துவைத்திருந்தார். இவர் யேசுநாதருக்கு  மிகவும் நெருங்கிய உறவுக்காரி. பெரிய வியாழன் அன்று யேசுநாதருடன் இராப்போஜனம் தயாரிக்கும் பணியில் இவளும் இருந்ததால் இவள்வசம் இருந்த இந்தகோப்பையில் தான்  யேசுநாதர் திராட்சை இரசத்தை தன் இரத்தமாக மாற்றினார்.
           இராப்போஜனகுப்பியில் வரையப்பட்டிருந்த பாம்பு சாத்தானைக்குறிப்பதாகும். அவனது சோதனையால் தோற்றுப்போன ஆதாம் ஏவாள் செய்தபாவதோஷம் என்னும் விஷத்தை  முறிக்க யேசுநாதரின் இரத்தத்தால் மட்டுமே முடியும். எனவேதான் யேசுநாதர் திராட்சை இரசத்தை தன் ரத்தமாக இராப்போஜனத்தில் மாற்றினார். யேசுநாதர் திராட்சைக்கொடியின்   உவமையை சொன்ன இடமும் இங்குதான்."நானே திராட்சைச்செடி...நீங்கள் அதன் கொடிகள்...ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தல் அவர் மிகுந்த கனி தருவார்..என்னைவிட்டுப்பிறிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற பிரசங்கமும் இந்த இடத்திலையே நடந்தது. இந்த மஹாலில் பிற்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும்  என்று தெரிந்துதானோ என்னவோ தாவீது ராஜா இந்த மஹாலில் தூண்களின் இணைப்புகளில் திராட்சை செடிகளும் கொடிகளும் கொத்துக்கொத்தாய் பழங்களுமாய் இருக்கும்படியான
புடைப்பு சிற்பங்களை ஏற்படுத்திவைத்தார்.  இந்த மஹாலில் தான் தாவீது ராஜா உடன்படிக்கைபேழையை நெடுங்காலம் வைத்திருந்தார். இந்த மஹாலில் தான் தாவீது ராஜாவின்   சமாதியும் இருக்கின்றது. இந்த மஹாலின் மேல் மாடியில் தான் யேசுவின் உயிர்புக்குப்பிறகு பரிசுத்த ஆவியார் தேவ மாதாவின் மீதும் அப்போஸ்தலர்கள் மீதும் இறங்கி வந்தார்.
இத்தனை பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றது யேசுவின் இராப்போஜன மஹால். இதுதான் கடவுளின் சித்தம். இதை நிறை வேற்றவே அன்று நோவாவிடம் அந்த மூன்று   தேவ தூதர்களும் அந்த இரசக்குப்பியையும் திராட்சைக்கொடியையும் ஒப்படைத்தனர். யாவும் முன் குறிக்கப்பட்டவையே. முன் குறிக்கப்பட்டபடியே நடக்கவும் செய்யப்பட்டது.    இந்த இராப்போஜனத்திற்குப்பிறகு இந்த இரசக்குப்பி மீண்டும் காணாமல் போய்விட்டது. இராப்போஜனத்திற்கு இரண்டு அப்போஸ்த்தலர்களுக்கு ஒன்று வீதம் ஆறு இரசக்குப்பிகளும்   யேசுநாதருக்கு மட்டும் மேற்படி கூறப்பட்ட இரஸக்குப்பியும் பயன்படுத்தப்பட்டன. ஆறில் ஒரு இரசக்குப்பி தற்போது ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவில் உள்ள தேவாலயத்தில்
உள்ளது. மற்றவைபற்றி எனக்கு இன்னும் தெரியவில்லை.
    இந்த பெருவெள்ளம்பற்றிபழங்கால சுமேரியர்களின் கலை இலக்கியமான கில் காமேஷ் இவ்வாறு விவரிக்கிறது. அதாவது, என்லில் என்னும் கடவுள் இந்த உலக மக்களை  பூமியின் முகத்தினின்று அழிக்க விரும்புவதாகவும் இதை அறிந்துகொண்ட எங்கி என்னும் நல்ல கடவுள் அற்றஹாசிஸ் என்னும் சுமேர்ிய அரசினிடம் வரப்போகும்   பெருவெள்ளத்திலிருந்து அவனும் அவன் குடும்பத்தாரும் மற்றும் சகல ஜீவராசிகளுடனும் தப்பித்துச்செல்ல ஒரு பெரும் கப்பல் கட்டி அதில் தப்பிச்செல்ல உபாயம் சொன்னதாகவும்
அவ்வாறே அவர்கள் தப்பியதாகவும் கூறுகிறது. இந்த சரித்திரம் பற்றி நிப்பர் என்னும் பழங்கால ஆப்பு வடிவ எழுத்துகள் கொண்ட மண் பலகைகள் மூலம் அறியலாம். இந்த ஆப்பு வடிவ  எழுத்துக்கள் கொண்ட மண் படிவங்களின் காலம் சுமார் கி. மு. 1650.
           இந்த பெருவெள்ளம் பற்றி விஞ்ஞானம் கூறுவது என்ன?.
   சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன் நோவா காலத்திய மக்கள் கருங்கடல் பகுதியில்தான் வாழ்ந்துவந்தார்கள். அக்காலத்தில் கருங்கடல் நல்ல நீர் ஏரியாகத்தான் இருந்தது.   இயற்கையின் சீற்றத்தால் வடதுருவத்திலுள்ள பனிமலைகள் உருகவே உலகின் பெரும் சமுத்திரங்கள் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் மத்தியதரைக்கடலின் நீர்மட்டமும் உயர்ந்தது.
தயவு செய்து வரைபடத்தைப்பார்க்கவும்.துருக்கியையும் பல்கேரியாவையும் ஒரு குறுகிய நிலப்பரப்பு ஒரு ஜலசந்தி வழியே இணைக்கிறது. போஸ்போருஸ் என்ற தடுப்புப்பாறை அக்கால  கருங்கடல் ஏரியை பிரிக்கிறது. மத்தியதரைக்கடலின் அதிகரித்துவரும் நீர்மட்டத்தை தாக்குபிடிக்காத ஏஜியன் கடல் மர்மாரா கடலை வேகமாக நிரப்பியது. அந்த அழுத்தத்தை  தாக்குப்பிடிக்க முடியாத போஸ்போருஸ் தடுப்புப்பாறைகள் உடைந்ததால் அத்தனை வெள்ளமும் கருங்கடல் ஏரியை மிகவும் வேகமாக நிரப்பியது. இதன் வேகமும் தாக்கமும் எவ்வளவு   என்றால் நயாகரா நீர் வீழ்ச்சியைப்போல் 200 மடங்கு. இதனால் நல்ல நீர் ஏரியான கருங்கடல் ஏரி உப்பு நீர்க்கடலாக மாறியது. திடுதிப்பென ஏரி கடலானதால் ஏற்பட்ட பாதிப்பு எப்படி   இருக்கும் என்று நேயர்கள் உண்ர்ந்து கொள்ளலாம்.
     இந்த நோவா பயன் படுத்திய கப்பலை தற்போது கண்டுபிடுத்துள்ளதாக இன்டெர்னெட்டில் ஒரு விடியோ காட்சி விவரிக்கிறது. துருக்கியிலுள்ள அராரத் என்னும் பனிமலையில்  சுமார் 12000 அடி உயரத்தில் மரத்தால் ஆன ஒரு வீடு போன்ற அல்லது தெப்பம் போன்ற ஒன்றைக்கண்டு பிடித்துள்ளதாகவும் அதில் பல அறைகள் உள்ளதாகவும் அவர்கள்
பயன்படுத்திய தானியங்கள்கூட இன்னும் இருப்பதாககாட்டுகிறார்கள். இது 100% நிச்சயமாக நோவாவின் கப்பலே அன்றி வேறு ஏதாகவும் இங்கு இருக்க வாய்ப்புஇல்லை என்றும்

கூறுகிறார்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட சீன வேதபோதகர்கள்.

" தீர்ஸாக்கோட்டை "



" தீர்ஸாக்கோட்டை "
    சுவாமி யேசுராஜா இந்தப்பூஉலகில் மனிதாவதாரம் எடுத்து நசரேத்தூரில் வாழ்ந்து அவரது இந்தப்பூவுலகில் தகப்பனாக இருக்கப்பேறு பெற்ற யேசேப்பு மறைந்த பிற்பாடு   தன் தாயாரை அழைத்துக்கொண்டு கலிலேயாவிலுள்ள கப்பர் நஹூம் என்னும் ஊரில் வாழத்துடங்கினார். அங்கிருந்து தான் இந்தப் பூவுலகிற்கு வந்த வேலையாகிய வேத போதக அலுவலை துவங்கி தனக்கென அப்போஸ்த்தலர்களையும் சீடர்களையும் ஏற்படுத்திக்கொண்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு ஒரு முறை தான் வாழ்ந்தவீட்டையும்
ஊரையும் பார்க்க ஆசைப்பட்டு நஸரேத்தூர் வந்தார். நஸரேத்தூரிலுள்ள தேவாலயத்தில் அவர் பிரசங்கிக்க வந்த போது இசையாஸ் தீர்க்கதரிசியின் திருப்படல்கள் அடங்கிய ஒரு ஓலைச்சுருள் ஒன்று அவரிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓலைச்சுருளில் இசையாஸ் தீர்க்கதரிசியின் ஒரு தீர்க்கதரிசனப்பாடல் இருக்க யேசுநாதர் அந்தப்பாடலை படித்தார்.
அந்தப்பாடல் இவ்வாறாக இருந்தது.
" ஆண்டவரின் ஆவி என் மேல் உள்ளது.
ஏனெனில் அவர் எனக்கு அருட்பொழிவு செய்துள்ளார்.
ஏழைகளுக்கு நற்செய்தியை.அறிவிக்கவும்
சிறைபட்டோர் விடுதலை அடையவும்
பார்வையற்றோர் பார்வையடையவும்
ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்
அவர் என்னை அனுப்பிவுள்ளார்."
    பின்னர் யேசுநாதர் அந்த ஓலைச்சுருளை சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார்.தொழுகைக்கூடத்திலிருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கி   இருந்தன. அப்போது யேசுநாதர் அவர்களை நோக்கி " நீங்கள் கேட்ட மறை நூல் வாக்கு இன்று நிறைவேறிற்று " என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைகேட்டு வியப்புற்று
" இவர் நம் ஊர் தச்சன் யோசேப்பின் மகன் அல்லவா.. இவ்வளவு ஞானம் இவருக்கு எங்கிருந்து வந்தது...என்று கூறி அவர்மட்டில் இடறல் பட்டனர். அவர் அவர்களிடம் " நீங்கள் என்னிடம் மருத்துவரே நீர் உம்மையே குணமாக்கிக்கொள்ளும் எனக்கூறி " கப்பர்னாஹூமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விபட்டதை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும்
செய்யும்" என கண்டிப்பாகக்கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குக்கூறுகிறேன். இறைவாக்கினர் எவரும் தன் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளபடுவதில்லை. .மதிக்கப்படுவதும் இல்லை....உண்மையாகக்கூறுகின்றேன்.... எலியாவின் காலத்தில் மூன்றறை ஆண்டுகளாக வானம் பொய்த்தது. நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது.
அக்காலத்தில் இஸ்ராயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்... ஆனால் அவர்களுள் எவரிடமும் எலியாஸ் அனுப்பப்படவில்லை.....சீதோனைச்சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த
ஒரு கைம்பெண்ணிடமே அவர் அனுப்பப்பட்டார்.
     மேலும், இறைவக்கினர் எலியாவின் காலத்தில் இஸ்ராயேலாரிடையே தொழு நோயாளிகள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை...சிரியாவைச்சேர்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது " என்றார்.
     யேசுநாதர் தங்களை வார்த்தைகளில் தாக்குகிறார் என்று அறிந்த தொழுகைகூடத்தில் இருந்தவர்கள் பெரும் சீற்றம் கொண்டு எழுந்து அவரை ஊருக்கு வெளியே துரத்தி,  அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச்சென்றனர். ஆனால் அவர் அவர்களிடையே நடந்து சென்று மறைந்துபோனார். தேவ தாயாரும் இந்த மக்கள்
கூட்டத்தினரிடையே சென்று தன் மகனுக்கு என்ன ஆகியதோ என்று கதிகலங்கி தவித்துப்போனார்கள். அவர்கள் தவித்து நின்ற இடத்தில் இப்போதும் ஒரு மாதா சொரூபம்   அமைக்கப்பட்டுள்ளது. அதர்க்கு பயந்த மாதா என்று பெயர் . அந்த மலைக்கு " mount of precipice " என்றும் பெயர்.
தொழுகைகூடத்தில் யேசுநாதர் வாசித்த அந்த இசையாஸ் தீர்க்கதரிசியின் பாடலில் சிறைபட்டோர் விடுதலையடையவும்....ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்.... ஆண்டவர் என்னை அனுப்பினார் என்ற வரிகள் கவனிக்கத்தக்கவை. யேசுநாதர் பார்வை அற்றவருக்கு பார்வை அளித்தார் என்றும் ஏழைகளுக்கு நற்செய்தி அளித்தார் என்றும் நாம்
அறிவோம்... ஆனால் யேசுநதர் எந்த சிறைச்சாலைக்குச்சென்று யாரை விடுதலை செய்தார்....எந்த ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்தார் என்ற விபரங்கள் எனக்கு வெகு நாள் வரை தெரியாமலிருந்தது...அதன் விளைவாக நான் அறியவந்த நிகழ்வுகள் தான் தீர்ஸாக்கோட்டை.
     தீர்ஸா என்னும் வார்த்தைக்கு எபிரேய மொழியில் என் இனியவளே என்று பொருள். பழைய ஏற்பாட்டில் எண்னாகமம் [26: 33] மோயீசன் கட்டளையிட்டபடியே மாக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அதன்படி ஏபேர் மகன் செலேபுகாதுக்கு புதல்வர்கள் இல்லை. செலேபுகாதுக்கு ஐந்து புதல்வியர்கள் இருந்தார்கள். அவர்கள் பெயர்கள்.மக்லா...நோகா...ஓக்லா..
மில்கா.. திர்ஸா. தங்கள் தகப்பன் இறந்ததும் இந்த ஐந்து பெண்களும் தங்கள் தகப்பனின் சொத்துக்கு பாத்தியதை கோறினார்கள். மோயீசனும் அவர்களின் கோரிக்கையில் உள்ள   நியாயத்தை ஏற்றுக்கொண்டு ஆண்டவரிடம் கேட்டார். ஆண்டவரும் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் தகப்பனுக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் இந்த ஐந்து பெண்களுக்கும் சொத்தை பிறித்துக்கொடுத்தார்.. அன்றிலிருந்த எபிரேய பெண்களுக்கு அடித்தது அதிர்ஸ்ட்டம்.. தகப்பன் சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்னும் சட்டபூர்வமான உரிமை அன்றிலிருந்து அமுலுக்கு வந்தது. செலேபுகாதின் கடைசிப்பெண் தீர்ஸாவின் பெயரால் கிடைக்கப்பெற்ற அவள் தகப்பன் வழிவந்த நிலத்திலேயே இந்த கோட்டை அமைக்கப்பெற்று வந்ததால் இந்த கோட்டைக்கு தீர்ஸாக்கோட்டை என்று பெயர் வந்தது. இன்றுவரை அதே பெயராலேயே அழைக்கப்பட்டு வருகின்றது.
     தீர்ஸாக்கோட்டை வேத காலத்திலிருந்தே சமாரியாவில் இருக்கின்றது. பலப்பல அரசர்களின் கை மாறி மாறி அவரவர் காலங்களில் புதுப்பிக்கப்பட்டு பொலிவுடனே இருந்து  வந்திருக்கின்றது. இந்த தீர்ஸாப்பட்டிணம் ஒரு காலத்தில் கானானியர்களின் பெரும் படைக்கலனுள்ள கோட்டையாக இருந்தது. ஜோஷுவாவின் காலத்தில் அவர் கானானியர்களிடமிருந்து போரிட்டு இந்த கோட்டைக்கைப்பற்றிக்கொண்டார். அதன் பிறகு இந்த கோட்டை இஸ்ராயேலர்களின் கோட்டை ஆயிற்று. ஒரு காலத்தில் சாலமோன் கையில் போய் சேர்ந்தது. இந்த தீர்ஸாக்கோட்டையிலிருந்துதான் சாலமோன் ஞானியும் அரசரும் தான் ஜெருசலேமில் கட்டப்போகின்ற தேவாலயத்திற்கு தேவையான தங்கம் மற்றும் வெண்கலப்பாத்திரங்களை தயாரிக்கும் ஆயத்தங்களை செய்தார். இங்கிருந்து ஜொர்டான் சமவெளீயிலுள்ள சக்கோத்து என்னும் இடத்திலுள்ள களிமண் நிலப்பகுதியை
தேர்ந்தெடுத்து அவற்றை உருக்கி பாத்திரமாக செய்தார்..இந்த தீர்ஸாக்கோட்டை உள்ள இடம் சர்தபா என்று அழைக்கப்படுகின்றது. வேத காலத்தில் சார்தான் என்றும் அழைக்கப்பட்டது.
     சாலமோன் பேரரசருக்குப்பின் ஒன்றாக இருந்த நாடு அவர் மகன் ஜெரோபோயாம் காலத்தில் இரண்டாகப்பிரிக்கப்பட்டு கலிலேயாவும் சமாரியாவும் சேர்ந்த பகுதி இஸ்ராயேல் எனவும்  தென் பகுதியிலுள்ள ஜுதேயா தனி நாடாகவும் ஆயின. இஸ்ரேயலுக்கு தலை நகராக தீர்ஸாக்கோட்டை விளங்கியது..எலியாஸ் தீர்க்கதரிசியின் காலத்தில் இந்த கோட்டையில் குறிப்பிடும்படி இரண்டு சம்பவங்கள் நடைபெற்றன.
சிரியாவிலிருந்த வந்த பெனதாது என்பவன் இந்த கோட்டையை முற்றுகை இட்டான். மேலும் இஸ்ராயேல் கடவுளின் சாபத்தால் மழைவேறுபொய்த்தது. கடும் பஞ்சம் நிலவியது.
     பஞ்சம் எவ்வளவு கடுமையானது என்றால் பிள்ளையை பெற்றவள் தன் பிள்ளையை வெட்டி சமைத்து தின்றாள்..தீர்ஸாக்கோட்டையில் இருந்த அரசன் தன் பிழைபொறுக்குமாறு கடவுளிடம் வேண்டவே கடவுளும் மனமிரங்கி ஒருஅருள் வாக்கு எலியாஸ் தீர்க்கதரிசியின் மூலம் கூறினார். அடுத்த நாள் கோதுமை கலம் ஒன்று ஒரு ஷெக்கெலுக்கு கிடைக்கும்
என்றார். கோட்டைக்காவலன் இதை நம்ப மறுத்தான். எனவே அவனுக்கும் ஒரு அருள்வாக்கு அருளப்பட்டது. " மக்கள் எல்லோருக்கும் கோதுமை தேவையானது கிடைகும் ஆனால் அதைபெற நீ இருக்கமாட்டாய்" என்பதே.அந்த அருள் வாக்கு.
அன்று இரவே சிரியாவிலிருந்து வந்திருந்த பெனதாதின் படைவீரரிடையே பெரும் கலகம் ஏற்பட்டது. இஸ்ரேல் மன்னன் எகிப்த்திய படையினருடன் உடன்படிக்கை செய்துகொண்டு நம்மை எதிர்க்க வருகின்றான் என்று கேள்விபட்டு அவர்கள் கொண்டுவந்திருந்த படைகலங்களை எல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதை கேள்விப்பட்ட இஸ்ராயேல் மக்கள் பெனதாது அரசன் கொண்டுவந்திருந்த அனைத்தையும் கொள்ளை அடித்தனர். தானியங்களையும் கால்நடைகளையும் கொள்ளையடித்தனர்.
     தானியங்கள் கோதுமை கலம் ஒன்று ஒரு ஷெக்கல் என்று விற்றும் வாங்க ஆள் இல்லாமல் போயிற்று. சமவெளியில் என்ன நடக்கின்றது என்று எட்டிப்பார்த்தான் கோட்டைத்தலைவன். அவ்வளவுதான்.. கொள்ளையடிக்கும் ஆசையில் வந்த மக்கள் அவனை கீழேதள்ளி அவன் மீதேறிச்சென்ற காரணத்தால் அவன் மரித்துப்போனன். ஆக இறைவாக்கினர் எலியஸ் தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசனம் மிகச்சரியாய் நிறைவேறியது.
     பட்டும் புத்திவறாத சிரியா மன்னன் பெனதாது மீண்டும் இஸ்ராயேல் மீது படையேடுத்தான். இந்த முறை தோத்தாயீன் மீது படையெடுத்து கடும் முற்றுகையிட்டான். எலியாஸ் தீர்க்கதரிசி எதிரி அரசனின் திட்டங்களை இஸ்ராயேல் அரசனிடம் கூறி அவனை பல முறை காத்தார். இதனால் கடுப்பானான் பெனதாது. நம் திட்டங்களை எதிரி அரசனுக்கு
போட்டுக்கொடுப்பன் ஒருவன் நம்மிடையே இருகின்றான். அவன் யார்? என்று கடுமையக விசாரித்தான். அப்போது படைத்தலைவன் " அரசே, நம்மிடம் துரோகியோ ஒற்றனோ யாரும் இல்லை. எலியாஸ் என்னும் இறைவக்கினர் தோத்தாயீனில் இருகின்றார். அவர் நம் திட்டங்களை அவரது அரசினிடம் கூறிவிடுவதால் நம் திட்டங்கள் அனைத்தும் தோல்வி
அடைகின்றன. அவரை பிடித்துவிட்டால் நாம் ஜெயித்துவிடலாம் " என்றான். பெனதாதும் எலியாஸ் தீர்க்கதரிசியை பிடித்து வர அனுமதித்தான். அவன் படைவீரர்கள் வந்து எலியாஸ் தீர்க்கதரிசியை சூழ்ந்துகொண்டனர். அப்போது எலியாஸ் ஜெபிக்கவே வானினின்று இறங்கிவந்த ஒரு இடி அவரைப்பிடிக்கவந்திருந்த அனைவரின் கண்களையும் குருடாக்கியது.
அப்போது எலியஸ் கூறினார் " நீங்கள் வந்த இடமும் தவறு..சந்தித்த நபரும் தவறு... வாருங்கள்...நான் உங்களை சரியான இடத்திற்கு கொண்டு போவேன்." என்று சமாரியாவில் உள்ள இந்த தீர்ஸாக்கோட்டைக்கு அழைத்து வந்தார்.     நடந்த சேதி அறிந்த இஸ்ராயேல் மன்னன் கடும் கோபம் கொண்டான்.." இறைவாக்கினரே...நான் இவர்களை என்ன செய்ய வேண்டும்..இவர்கள் அனைவரையும் என் கையாலேயே வாளால் வெட்டிப்போடட்டுமா? " என்றான். அதர்க்கு எலியாஸ் இறைவாக்கினர் " வேண்டாம் அரசே, இதற்காகவா நான் இவர்களை இவ்வளவு தூரம் அழைத்துவந்தேன்... இவர்களை நல்ல விதமாய் கவனித்து விருந்தளி " என்றார். மன்னனும் அவ்வாறே செய்தான். எலியாஸ் தீர்கதரிசி அவர்கள் அனைவருக்கும் இறைவேண்டல் செய்து மீண்டும் பார்வை கொடுத்தார். சிரிய மன்னன் பெனதாது நடந்த விஷயங்களைக்கேள்விபட்டு அவமானமாக தன் நாடு திரும்பினான்.
     அதன் பிறகு அவன் மீண்டும் இஸ்ராயேல் மீது படையெடுத்து வரவில்லை.
இப்படியாக இந்த் தீர்ஸக்கோட்டை பல நூற்றாண்டுகளில் பலர் கைமாறி யேசுநாதர் காலத்தில் ஏரோதன் அந்திப்பாஸ் கையில் வந்தது. அவன் காலத்திலேயே கூட கோட்டையின் பல பகுதிகள் சிதிலமாகிப்போனதால் ஏரோதன் இந்தக்கோட்டையை இரண்டு பிரிவாக ஆக்கி ஒரு பிரிவை மருத்துவ மனையாகவும் ஒரு பகுதியை சிறைச்சாலையாகவும் ஆக்கினான்.
இந்த தீர்ஸாக்கோட்டையிலிருந்து ஊருக்கு வெளியே ஒருமணிநேர நடைப்பயணம் நடந்தால் அங்கும் ஒரு கோட்டை வரும். அது தான் லாஸரின் கோட்டை ஆகும். இந்த கோட்டையில் தான் யேசுநாதரும் தங்கி இருந்தார். அப்போது யேசுவின் சீடர்கள் யேசுநாதரிடம் இந்த தீர்ஸாக்கோட்டையில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பற்றிக்கூறி அங்குள்ள
பாவப்பட்ட மக்களை காக்கும்படி கூறினர். யேசுநாதரும் மனமிரங்கி அடுத்த நாள் அந்த கோட்டைக்கு விஜயம் செய்வதாகக்கூறினார்.
       யேசுநாதரின் தீர்ஸாக்கோட்டை விஜயத்தையோட்டி பெரும் சர்ச்சை எழுந்தது யூத பெரியோர்களின் மத்தியிலும் பரிசேயர்களின் மத்தியிலும் அரசாங்க அதிகாரிகளின் மத்தியிலும்.  எங்கே அவர் தங்களுடைய வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி தங்கள் மானத்தை கப்பலில் ஏற்றிவிடுவாரோ என்ற அச்சம்தான் காரணம். எனவே பலர் வெளியே
தலை காட்டாமலேயே வீட்டிலேயே அடைபட்டுக்கொண்டனர். அன்றைய காலகட்டத்தில் மதத்தை விமர்சனை செய்தவர்களும் ஏன் என்று கேள்வி கேட்டவர்களும் அரசாங்கத்தை விமர்சனை செய்தவர்களும் அரசாங்கத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்தவர்களும் அவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கேள்வி எதுவும்
கேட்காமல் பிடித்து அடக்குமுறைகொட்டிலில் அடைத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் இந்த தீர்ஸாக்கோட்டையிலும் நிறைய பேர் இருந்தார்கள்.
    அடக்குமுறைகொட்டில் இந்தக் கோட்டையின் நிலவறையில் இருந்தது. அங்கு உணவோ நீரோ வெளிச்சமோ எதுவும் கிடைக்காது. கேட்காமலேயே கிடைப்பது அடியும் உதையும் தான். அது தாரளமாகவே கிடைக்கும். அவர்களின் குற்றத்திற்கேற்ப தண்டனையும் இருக்கும். உயிரும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் இங்கிருந்து வெளிவரும் மனிதன் உயிருள்ள
பிணமாகத்தான் வெளியே வருவான். அவனால் எந்தப்பிரயோஜனமும் இருக்காது. பெரும்பாலும் அவனுக்கு பைத்தியம் பிடித்திருக்கும்.
சமதளமுள்ள சிறையில் பெரும்பாலும் சாதரணமான குற்றவாளிகள் அடைபட்டிருப்பார்கள். அவர்களுக்கு விலங்கு மாட்டிய கைகளிலும் கால்கலிலும் புண்கள் வந்து சீழ்பிடித்து சமயங்களில் புழுவும் வைத்திருக்கும். இவர்களை பார்க்கவரும் உறவினர்கள் சிறை அதிகாரிகளுக்கு ஏதாவது லஞ்சம் கொடுத்தால் குற்றவாளிக்கு தேவையானவை கொஞ்சம்
கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் கதி அதோகதி தான். இந்த தீர்ஸாக்கோட்டையின் மேல் தலம் பெண்களுக்கானது. ஆண்களின் நிலையைவிட பெண்களின் நிலை மஹா கேவலம்..சொல்லமுடியாத அருவருப்பானது. பல பெண்களின் உதிரப்போக்கிற்கு அது இயல்பானதானாலும் சரி அல்லது வியாதியினாலும் சரி சுகாதரம் என்பது மருந்துக்குக்கூட இல்லாத நிலையானது. இதனால் அப்பெண்கள் அடைந்த உடல் வேதனையும் மன வேதனையும் வார்த்தையில் சொல்லி முடியாது.
இந்த தீர்ஸாக்க்கோட்டையில் அடைபட்டிருந்த ஆண்களும் பெண்களும் முக்கால்வாசி மதத்தின் பெயராலும் அரசாங்கத்தின் பெயராலும் பழிவாங்கப்பட்டவர்கள் தான். வலியினலும் அவமானத்தினாலும் கோபத்தினாலும் அவர்கள் எழுப்பியகூச்சல் கோட்டையையும் தாண்டி வெளிவாசல்வரை கேட்டது. இந்த நேரத்தில்தான் யேசுநாதர் இந்தக்கோட்டையில் பிரவேசித்தார். கோட்டைகாவலன் ரோமையன்.      அவனுக்கும் இங்குள்ல நிலைமை புறிந்துதான் இருந்தது. இருப்பினும் யேசுநாதரிடம் பணிவாக நடந்துகொண்டான். அவன் யேசுநாதரை
அறிந்திருந்ததால் அவர் வழியாக இந்த பரிதாபத்துக்குறிய குற்றவாளிகளுக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரி என்று அவரை பல இடங்களுக்கும் சுற்றிகாண்பித்தான். அங்குள்ள குற்றவாளிகளின் நிலைகண்ட யேசுநாதர் மிகவும் வருந்தி கண் கலங்கினார்.
     அன்றையதினம் விடுதலையாகும் ஆண்கைதிகளும் பெண்கைதிகளும் யேசுவின் பாதம் பணிந்து தங்களுக்கு பாவ மன்னிப்பு வேண்டியும் நோய் நீங்கவும் வேண்டினர். யேசு அவர்களை அன்போடு ஆசீர்வதித்து நற்சுகம் அளித்தார். அவர்கள் ஊருக்குள் சென்று யேசுநாதர் தங்களுக்கு செய்த நலன்களை காண்பித்து சிறையில் உள்ள தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் வெளியே கொண்டுவர பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதர்க்குள்ளாக யேசுநாதர் சிறையில் வாடிய ஆண் பெண் அனைவரையும் குணமாக்கினார்.
     புத்திசுவாதீனம் அடைந்தோர் மீண்டும் தங்கள் பழைய நினைவு பெற்றனர். தங்களை மறந்துபோன பிள்ளைகளையும் உறவினர்களையும் நண்பர்களையும் கண்டுகொண்டனர்.
அசுத்த ஆவியினால் துன்புற்றவர்களையும் அந்த சிறைச்சாலையிலேயே குணமக்கினார்.
நிலவரையில் அடைபட்டிருந்த அந்த பாவப்பட்ட ஜென்மங்களையும் தொட்டு குணமாக்கி ஆறுதல்பல கூறினார். பலநாட்கள் வெளிச்சத்தையோ மனிதரையோ சாப்பாட்டையோ
காணாத அவர்கள் தங்களுக்கு சொர்க்கம் திறந்துவிட்டதாக நினைத்தார்கள். அந்த சிறை உயர் அதிகாரியும் ஒரு ரோமன். அவர் மூலமாக அரசாங்க உயர் அதிகாரிகளையும் யூதமத
உயர் அதிகாரிகளையும் சந்தித்து சட்டபூர்வமாக அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய ஏற்பாடுகள் செய்யபட்டன. இதற்காக அவர்கொடுத்த விலை மிகவும் அதிகம்.
முதலில் கடனாளியாகி கடன்கட்டமுடியாமல் சிறைசென்றவர்கள் கடனை வட்டியும் முதலுமாக செலுத்தவும், கைதியைப்பற்றிய எந்த குறிப்பும் இல்லாமலேயே சிறையில்
வாடுபவர்களுக்கு இரண்டுமடங்காகவும், மதம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக பழி வாங்கப்பட்டவர்களுக்கு நான்கு மடங்காகவும் ரொக்க ஜாமீன் செலுத்த யேசுநாதர்
ஒப்புக்கொண்டார். சட்டபூர்வமான நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்றன. முதலில் யேசுநாதர் தன் பையிலிருந்த தங்க காசுகளை கொடுத்தார். அவை ஒவ்வொருபுறமும்
மூன்று அங்குல நீளம் கொண்ட முக்கோண வடிவிலானது. ஆம் ...அந்த காசுகள் யேசு நாதருக்கு அவர் குழந்தையாய் இருக்கையில் அவரை சந்திக்க வந்த மூன்று ராஜாக்கள்
அவருக்கு காணிக்கையாய் கொடுத்தது. யேசுநாதர் அரசர் என்னும் கருத்திலேயே அவருக்கு கொடுக்கப்பட்டத்து. ஆக யேசுநாதர் அரசர் என்னும் அதிகாரத்திலேயே ஏரோதனால்
பழிவாங்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்தார்... குற்றவாளிகளை அரசன்தானே விடுதலை செய்ய முடியும். மீதமுள்ள குற்றவாளிகளை விடுதலை செய்ய லாசர் முன்வந்து
அதற்கான செலவை ஏற்றுக்கொண்டார். இதர்க்காக லாஸர் கொடுத்தவிலை மிகவும் அதிகம். ஆம்... லாஸர் தன் இளைய சகோதரியும் யேசு நாதரால் மனம்திருபட்டவளுமான மதலேன்
மரியாளுக்கு சொந்தமான மகதலாக்கோட்டையை விற்று அந்த கடனை அடைத்து அந்த கைதிகளை விடுதலையாக்கினார்..
இந்த தீர்ஸாக்கோட்டைக்கு அடுத்து இருந்த லாசரின் கோட்டையில் பல மாதங்களுக்குப்பிறகு மீண்டும் யேசு நாதர் தங்கி இருந்தார். அப்போது லாஸரின் தங்கை மார்த்தாள் வந்து
யேசுவின் பாதம் பணிந்தாள். யேசுநாதர் மார்த்தாவிடம் "அம்மணி, என் நண்பர் லாஸர் எப்படி இருக்கின்ரார் என்று நலம் விசாரித்தார்". அப்போது அவர் கண்ணீரோடு கூறினார், " ராபீ,
என் சகோதரரும் உம் நண்பரும் ஆன லாஸர் தற்போது கடும் நோய் கண்டுள்ளார். தாங்கள் வந்து பார்த்தீர்களானால் அவர் நலமடைவார்.. எனவே தாங்கள் அவசியம் பெதானியா
வரவேண்டுகிறேன்" என்றாள். அதர்க்கு யேசுநாதர் "சகோதரி நாம் அவசியம் பெதானியா வருவவோம்... லாஸரைக்குணமாக்குவோம்.. நீங்கள் சமாதானமாகப்போய் வரலாம் " என்று
அவருக்கு விடைகொடுத்து அனுப்பிவைத்தார்.
தன்னால் பழிவாங்கப்பட்ட பல அரசியல் மற்றும் மத சம்பந்தமான குற்றவாளிகளை யேசுநாதர் தீர்ஸாக்கோட்டையில் விடுவித்துவிட்டார் என்று கேள்விப்பட்ட ஏரோது மன்னன்
அந்திப்பாஸ் தீர்ஸாக்கோட்டை சிறைச்சாலை அதிகாரிகளை உண்டு இல்லை என ஆக்கிவிட்டான். ஆனால் சிறைச்சாலை உயர் அதிகாரியான ரோமன் அவனை ஒரே வார்த்தையில்
மடக்கினான். யேசு நாதரால் விடுவிக்கப்பட்ட சிறைக்கைதிகள் அனைவரும் சட்டபூர்வமாகவே விடுவிக்கப்பட்டுள்ளனர்...ஆட்சேபம் தெரிவித்தவர்களே
சமாதானமாகப்போய்விட்டனர்..தேவையானவர்களுக்கு தேவையான பணமும் ஜாமீனும் கொடுக்கப்பட்டுள்ளது..அனைத்தையும் சிறைச்சாலையின் விதிமுறைபடியே செய்யப்பட்டு
விடுதலை செய்யப்பட்டுள்ளது. இதில் நீர் என்மீது காய்வதற்கு ஒன்றும் இல்லை ". என்றான். எனவே ஏரோதனுக்கு மேலும் ஒன்றும் பேச முடியாமல் போய்விட்டது. இருப்பினும்
ஆத்திரமும் அவமானமும் அவனுக்கு மிதமிஞ்சிப்போய் அருகிலிருந்த தன் ஊழியக்காரனை தன் கால்களால் நன்றாக உதையோ உதை என்று உதைத்தான். அந்த ஊழியன் போட்ட
கூச்சல் சிறைச்சாலை முழுவதும் எதிரொலித்தது. மற்ற ஊழியர்கள் ஓடி ஒளிந்தனர்.




" ஓ... தீனா...எனப்படும் ஒரு சமாரியப்பெண் "










" ஓ... தீனா...எனப்படும் ஒரு சமாரியப்பெண் "
       எனது சொல்ல மறந்த கதைகளில் எனக்குப்பிடித்த ஒரு பைபிள் கதா பாத்திரம் தீனா எனப்படும் ஒரு சமாரியப்பெண்னைப்பற்றியது. சமாரியாவில் யாக்கோபின் கிணறு சரித்திரப் பிரசித்தம். இந்த கிணற்றடியில் தான் யேசுநாதர் இந்த சமாரியப்பெண்ணைப்பார்த்து " எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர்கொடு" என்றார். இந்த சமாரியப்பெண்னைப்பற்றிய சரித்திரம்
விவிலியத்தில் சொல்லப்படவில்லை... ஆனால் அவரது சரித்திரத்தைப்பற்றிய குறிப்புகள் எனக்கு கிடைத்ததும் எனது மனம் துள்ளிக்குதித்தது.. நான் அறிந்துகொண்ட இவரது வாழ்கையைப்பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமோ....எனவே நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன்...நீங்களும் கதைக்கு வருகின்றீர்களா?.
யேசுநாதரின் காலத்தில் யூதர்கள் சமாரியர்களிடம் பழுகுவதே கேவலம் என்று நினைத்தனர். அவர்களை யூதர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை.. காரணம் அவர்கள் தாழ்ந்த  ஜாதியாம்...இத்தனைக்கும் பூர்வீகத்தில் இந்த சமாரியர்களும் யூதர்களும் ஒரே இனமாக அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துவந்தவர்கள் தான். காலம் அவர்களை பிறித்துவிட்டது.
பேரரசர் சாலமோனின் காலத்திற்குப்பின் ஒன்றாக இருந்த அவரது தேசம் அவரது மகன் ஜெரோபோவாமால், இரண்டாகப்பிறிக்கப்பட்டது. கலிலேயவும் சமாரியாவையும் சேர்ந்த பகுதி இஸ்ராயேல் எனவும் யூதேயா பிரதேசம் தனி நாடாகவும் பிறிக்கப்பட்டது. இஸ்ராயேலுக் தலை நகர் சமாரியாவானது.. யூதேயாவுக்கு தலைநகர் ஜெருசலேம் என்றானது.
      சமாரியாவைச்சேர்ந்த இஸ்ராலேயர்கள் அவர்களின் மூதாதேயர்கள் வழிபட்ட கடவுளுக்கு துரோகம் செய்து பிறகடவுளர்களை வழிபட்ட காரணத்தால் அவர்கள் இஸ்ராயேலியர்களின் தேவனுடைய கோபத்திற்க்கு ஆளாகினர். அதன் காரணமாக அசிரியவிலிருந்துவந்த அரசன் சால்மனசார் கி.மு.722ல் இந்த இஸ்ரயேலரை வென்று அவர்களை அடிமையாக்கி தன்னுடைய நாட்டிற்கு கூட்டிச்சென்றான்..
    அங்கு அவர்கள் பல காலம் அடிமையாய் இருந்தனர். அந்த கால கட்டங்களில் அவர்கள் மற்ற இன மக்களுடன் கலந்தனர். பிற்காலத்தில் பாபிலோனியவை சைரஸ் என்னும் பாரசீக மன்னன் வெற்றிகண்டு இந்த யூத மக்களை அவர்களின் அடிமைய்த்தலையிலிருந்து விடுவித்து அவர்களை அவர்தம் சொந்த நாடாகிய ஜெருசலேம் போகச்செய்தான். ஜெருசலேம் வந்த
இஸ்ராயேல் மக்கள் உள்ளுர் யூத மக்களுடன் சேர்ந்து கொண்டு ஜெருசலேம் தேவாலயத்தை புணரமைக்க உதவ முன்வந்த போது அவர்கள் உதவியை உள்ளூர் யூதர்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை.
   காரணம் அவர்கள் வெளி நாட்டில் அசீரியாவிலிருந்த போது பல ஆண்டுகளாக பிற ஜாதியினருடன் கலந்துவிட்ட காரணத்தால் அவர்களின் சுத்த ஜாதித்தன்மை போய்விட்டதென்பதால் இவர்களை இரண்டாம் தர யூதர்களாய் நடத்தினர். இதனால் வெறுப்புற்ற இஸ்ராயேலர்கள் தங்களுக்கென ஒரு வழிபாட்டுத்தலத்தை சமாரியாவிலுள்ள கெரசிம்
மலையில் ஏற்படுத்திக்கொண்டனர். அதிலிருந்து அவர்கள் யூதர்களிடமிருந்து எல்லா விதத்திலும் விலகிவிட்டனர். யூதர்களும் இவர்களை தங்கள் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ள வில்லை. சமாரியர்களும் யூதர்கைள் மதிப்பதில்லை. ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக்கொண்டனர். சமாரியர்களைப்பார்க்கிலும் யூதர்கள் வசதியானவர்களாய் இருந்ததால்
இடைவெளி அவர்களுக்கிடையே இன்னும் அதிகமாய்ப்போய்விட்டது. யூதர்களுக்கு சமாரியர்களைப்பார்ப்பதே அருவருப்பானதால் அவர்களோடு எந்தவிதமான ஒட்டுறவும்   வைத்துக்கொள்வது கிடையாது. இந்த விதமான கால கட்டத்தில் ஒருநாள்.......
    அன்று யேசு நாதருக்கு காலை உணவுகூட சாப்பிட நேரமில்லை..சமாரியாவிலிருந்து அவருக்கு ஆண்ம இரட்சண்ய அலுவலை முன்னிட்டு அவர் ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருந்தார். பலமணி நேரம் கால் கடுக்க நடைப்பயணம் மேற்கொண்டதாலும் கடும் வெயிலினாலும் அவர் மிகுந்த சோர்வுற்றார். அப்போது நன்பகல் ஓன்னிரண்டுமணி
இருக்கும். அவர் கண்னில் பட்ட ஒரு இடம் பிதாப்பிதா யாக்கோபின் கிணறு.. சற்றே உயிர்ந்த ஒரு மலைப்பகுதியில் யாக்கோபின் கிணறு இருந்தது.    அவர்காலத்திலேயே அந்தக்கிணற்றை சுற்றி தங்கும் வசதி இருந்தது. அவர் காலத்திலேயே அந்த கிணறு மிகுந்த ஆழமாக இருந்தது. எனவே கிணற்றில் தண்ணீர் வற்றிப்போகாமலிருக்கவும் வெய்யிலுக்கு சற்றே இளைப்பாரவும் ஒரு வீடு போன்ற அமைப்பு அக்கிணற்றை சுற்றி இருந்தது. நடைமுறையில் தண்ணீர் எடுத்து முடித்தவுடம் அக்கிணற்றை ஒரு பெரும் பலகைக்கல்லால்
மூடிவிடுவது பழக்கத்தில் இருந்தது.
     யேசுநாதர் இந்த யாக்கோபின் கிணற்றிற்கு அருகில் வந்து தன் சீடர்களை அழைத்து தனக்கு உண்ண ஏதாவது வாங்கிவரக்கேட்டுக்கொண்டார். அவர்களும் அவரைத்தனியே  அங்கேயே விட்டுவிட்டு சமாரியாவுக்கு சென்றனர். அதர்க்குள் ஒருசில தோல் பையை தூக்கிக்கொண்டு ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தண்ணீர் பிடிக்க இந்த யாக்க்கோபின் கீணற்றுக்கு வந்தாள். கீழிருந்து பல அடி உயரம் ஏறிய பிறகு தான் அவளுக்கு ஒரு யூத ஆண் மகன் ஒருவர் அங்கு இருப்பது தெரிய வந்தது. திடுக்கிட்ட அவள் தன் முக்காட்டால் அவள் முகத்தை மூடி சற்றே நகர்ந்து கொண்டாள்.. அப்போதுதான் அவள் அங்கிருப்பது ஒரு யூத ராபி என்பதைப்புறிந்துகொண்டாள். அச்சம் மேலிட அவள் சற்றே
பின்வங்க முயற்சிக்கையில் யேசுநாதர் அவள் வருவதற்க்கு சற்றே நகர்ந்து " பெண்ணே எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடு.. எனக்குத்தாகமாக ருக்கின்றது என்றார்
   அவள், " ஐய்யா, தங்களைப்பர்க்கும்போது தாங்கள் ஒரு யூத ராபீயாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. தங்கள் உடையும் தோற்றமும் அவ்வாறுதான். இருகின்றது. தாங்கள் எம்போன்ற சமாரியர்களுடன் பழகுவதே கிடையாது.. அப்படியிருக்க நீவீர் சமாரியப்பெண்ணான என்னிடம் தண்ணீர் கேட்ப்பது எப்படி?..இது
தெய்வக்குற்றமல்லவா...மேலும் நாம் இருவரும் தனித்து இருந்து பேசுவதை மற்றவர்கள் பார்க்க நேர்ந்தால் நாம் இருவரும் கண்டனதிற்கு உள்ளாவோமே என்றாள்..அதர்க்கு யேசு நாதர்   " பெண்ணே தீனா... அதுதானே உன் பெயர். மனிதன் வாய் வழியே போகும் எதுவும் தீட்டாகாது...இன்று நான் இங்கு வந்ததே உன்னை [ சமாரியர்களை ] சந்திக்க வேண்டுமென்பதர்க்காகத்தான்..  ருக்கின்றது என்றார்இன்றுமுதல் இந்த சமாரியர்களுக்கும் இரட்ச்சன்யம் தர வேண்டுமென்பதர்காகத்தான்.. அதனால் தான் உன் மூலம் இந்த சமாரிய மக்களை சந்திக்க   விரும்புகின்றேன்... நீங்களும் அபிரகாம் பிள்ளைகள் தானே. மீட்ப்பு யூதர்கள் வழியாகத்தான் வர வேண்டி இருகின்றது..  சமாரியர்களும் ஆண்டவனின்  பிள்ளைகள் தான்... மீட்பு அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும். அதனால் தான் நான் உன்னைத்தேடி [ சமாரியர்களைத்தேடி ] வந்திருக்கின்றேன் " என்றார்.
    திக்கு முக்காடிப்போனாள் தீனா என்னும் அந்த சமாரியப்பெண்.." ஐய்யா போதகரே,, நீவீர் எதேதோ சொல்லுகின்றீர்.. இதெல்லாம் புறிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு புத்தி இல்லை. முன்போ, பின்போ பார்த்திராத என்னை பெயர் சொல்லி அழைக்கும்நீவீர் பெரும் யூத ராபி என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.. நீவீர் தாகமாய் இருப்பதாக சொல்லுகின்றீர்..உமக்கு
நீர் கொடுக்குமளவுக்கு எனக்கு தகுதியும் இல்லை.. கிணரும் வேறு ஆழமாக உள்ளது.. என்ன செய்வேன் நான். என்ற அவள் அருகிலிருந்த கயிற்றையும் வாளியையும் எடுத்து நீர்   இறைத்து யேசுவுக்கு கொடுத்தாள்.. யேசுநாதரும் அந்த நீரைப்பருகி தன் தாகம் தீர்த்தார். "நான் ஊருக்கு சென்று என் கணவனை அழைத்துவருகின்றேன். அதுவரை தேவரீர் இந்த கிணற்றுத்திட்டின் மேலேயே அமர்ந்திருங்கள் என்றாள். அதற்கு யேசுநாதர், " பெண்னே தீனா..நீ போய் உன் கணவனையும் அழைத்து வா.. ஆனால் இப்போது உன்னுடன்
வாழ்ந்துவருபவனும் உன் கணவன் அல்ல... சரிதானே " என்றார்...
      தீனாவுக்கு மயக்கம் வறாத குறைதான்..ஓ... தேவரீர் நிச்சயமாக மெசியாவாகத்தான் இருக்க முடியும்.. என் வாழ்நாளில் நடந்தவைகளை இவர் எப்படி மிகத்துள்ளியமாக புட்டுபுட்டு  வைக்கின்றார்.. அப்போது யேசுநாதர்.. " பெண்னே தீனா...உணக்குத்தாய் தந்தையர்கள் தமஸ்க்குநகரில் இருந்தனர்.. நீயும் அங்குதான் பிறந்தாய்.. உன்னுடன் பிறந்த சகோதரிகள்
ஐவர்.. உன் வளர்ப்புத்தாயால் உன் வாழ்வு கெட்டது.... உன் அழகு உன்னை ஏமாற்றியது..உன் தவறான சகவாசத்தால் உனக்கு காதலர்கள் பலர் என்றானார்கள். கணவர்கள் என்று ஐந்து பேர் உன்னுடன் இருந்தனர். உன்னை அடைய அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியால் இருவர் கொல்லப்பட்டனர்.. உனக்கு ஆண் பிள்ளைகள் இருவர் உள்ளனர். பெண்பிள்ளைகள்
ஐவரும் இருந்தனர்..தவறான உறவால் விளைந்த முத்துக்கள் அவர்கள். அந்தந்த கணவர்கள் தங்களுக்கெண்று பிறந்த குழந்தைகளை அவரவர் பொருப்பில் எடுத்துக்கொண்டனர்.
    . கடைசியில் இப்போது உன்னுடன் இருப்பவனுடன் நீ சேர்ந்து வாழ்ந்துவருகின்றாய்..இவனுடனும் உனக்குத்திருமணம் ஆகவில்லை... இந்த வாழ்க்கையை விட்டுவிடு. என் தாகம் தீர்த்த உனக்கு நான் கொடுக்கும் ஜீவ தண்ணீரை பெற்றுக்கொள்..இந்த கிணற்றுத்தண்ணீரை உட்கொள்ளும் எவனும் மீண்டும் தாகம் கொள்வான்...ஆனால் நான் கொடுக்கும் ஜீவ
தண்னீரை பெற்றுக்கொள்ளும் எவனும் மீண்டும் தாகம் கொள்ளான்" என்றார்.
அப்படியனால் போதகரே எனக்கு அத்தகைய ஜீவியத்தண்ணீரை கொடும். இந்த வெயிலில் இவ்வளவு உயரம் உள்ள இந்த மலையில் தினமும் நீருக்காக வந்துவந்து கால் கடுத்துப்போகின்றது" என்றாள்..அதற்கு யேசுநாதர்." அந்த ஜீவிய நீரைக்கொடுப்பவர் யார் என்று தெரிந்தால் நீயாகவே அவரிடம் கேட்டிருப்பாய்." என்றார். அதற்கு தீனா " போதகரே எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு சொல்லியபடி மெசியா வருவார்... அவர் வந்து எல்லவற்றையும் விளக்குவார்." என்றாள்..அப்போது யேசுநாதர் " அது நான்தான்" என்றார்..
யேசுவின் பார்வையிலிருந்து வந்த ஒரு ஒளிக்கீற்று அவள் மூளைவரை தாக்கியது. அப்போதே தீனா மனமாற்றம் அடைந்தாள். அந்த யாகோபின் கிணற்றடியிலேயே தீனாவுக்கு ஆண்மதாக நீரூற்று யேசுநாதரால் கொடுக்கப்பட்டது.. அவள் வாழ்வு தலை கீழாக மாறிப்போனது. தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு தவறானது என்று உணர்ந்தாள்.
    அவள் அப்போதே ஊருக்குள் ஓடிப்போனள்... தன் கணவன் முதல் தன் கண்ணில்பட்ட யாவருடனும் தான் யேசுநாதரைக்கண்டது முதல் அவரிடம் தான் மன மாற்றம் அடைந்தது வரை எல்லவற்ரையையும் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனள். தீனா தன் கணவனாக வாழ்ந்துவந்தவனை அழைத்துக்கொண்டு மீண்டும் யாக்கோபின் கிணற்றுக்கு வந்தாள். யேசுநாதர்
அவள் கணவனாக வாழ்ந்துவந்தவனுக்கு புத்தி சொல்லி அனுப்பினார்...அவன் சென்றவன் சென்றவன்தான்.. அவன் மீண்டும் தீனாவின் வாழ்க்கையில் திரும்பி வரவே இல்லை...
    இந்த நிலையில் ஊருக்குச்சென்ற யேசுநாதரின் சீடர்கள் திரும்பிவரும்போது யேசு நாதர் கிணற்றின் திட்டின் மீது அமர்ந்துகொண்டு ஒரு சமாரியப்பெண்ணுடன் அலவளாவிக்கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.. பெரும்பாடுபட்டு எங்கும் கிடைக்காத உணவை மிகுந்த கஸ்ட்டப்பட்டு வாங்கி வந்ததாக யேசுவிடம் கூறி உணவை கொடுத்தனர். ஆனால் யேசுநாதர் தனக்கு தாகமும் அடங்கிவிட்டது...பசியும் அடங்கிவிட்டது என்று கூறி அந்த உணவை ஏற்றுக்கொள்ளவில்லை. சீடர்களுக்கு மிகுந்த
ஆச்சர்யமாகப்போய்விட்டது. ஆனால் யாருக்கும் யேசுநாதரிடம் ஏன் பசி அடங்கிப்போய்விட்டது என்று கேட்க்கத்தான் தைரியமில்லை.. அதனால் எல்லோரும் அமைதி காத்தனர்.
     மனம் மாறிய தீனா தன் செல்வங்களை எல்லாம் விற்று யேசுவின் சீடர்களிடம் கொடுத்து விட்டாள்..யேசுவை விட்டு என்றும் நீங்காதபடி அவர் தாயாரின் பின்னாடியே எங்கும் இருக்கலானாள்... அவள் யேசுவின் பெண் சீடராக மாறிப்போனாள்..அதன் பிறகு அவள் செய்த முதல் வேலை தான் பெற்ற பிள்ளைகள் அனைவரையும் அவரவர் தகப்பனிடமிருந்து
மீட்டுக்கொண்டது தான் . தனக்குக்கிடைத்த ஞான வெளிச்சம் தன் குடும்பத்தில் தன் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள்.
     யேசுநாதரின் மறைவுக்குப்பின்னால் மாதாவுடனே அவரும் இருந்துகொண்டாள்..மாதா எஃபேசில் இறந்தபிறகு தீனா யேசுவின் பெண் சீடராக அவருக்கு சாட்ச்சியாக வேத போதக அலுவலை துவங்கினாள். ஆசியாமைனர் எனப்படும் இன்றைய துருக்கியிலிருந்து ஸ்மிர்னா எனப்படும் இன்றைய இஸ்மீர் என்னுமிடத்தில் ஆரம்பித்த அவரது வேதபோதக அலுவல் தன் தாய் நாடாகிய தமஸ்க்கு, பாலஸ்த்தீன், எகிப்த்து,துனிஷியாவரை பரவியது. இன்றைய துனிஷியா அன்றைய கார்த்தேஜ் எனப்படும்..
அங்கு ரோமை அரசாங்கம் கிரிஸ்த்துவ மத போதனைகளுக்கு தடை விதித்தது. எனவே தீனாவும் அவள் சகோதரிகளான ஐவரும் அவர் மகனும் மற்றும் அவரின்   பெண் சீடர்களான சுமார் நூறு பேர் கைது செய்ய்யப்பட்டு ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கப்பலிலும் பிறகு ரோமிலும் அவர்கள் அனுபவித்த கொடுமைகள் வார்த்தையில் சொல்லி முடியாது. தீனாவின் முதல் மகன் பெயர் விக்ட்டர்... இரண்டாம் மகன் ஜோஷியா.. இவர் ரோமை ராணுவத்தில் சேர்ந்து ஒருபெரும் படைப்பிரிவுக்கு தளபதி ஆனார்..அப்போது அவர் அன்றைய ஸ்மிர்னா என்னும் இன்றைய துருக்கியில் உள்ள இஸ்மீரில் பணியாற்றினார். காலம் இவர்களை ரோமை ராஜ்ஜியத்தில் ஒன்று சேர்த்தது.
ரோம் நகரில் நீரோ மன்னனின் ஆட்ச்சிகாலத்தில் வேத கலாபணை ஆரம்பித்தது.. நீரோ மன்னன் கிரிஸ்த்துவர்களை கொடுமையாய் நடத்தினான். கிரிஸ்துவர்கள் யேசுவை கைவிட்டுவிட்டு சீசரையும் ரோமர்கள் வணங்கிவந்த தெய்வங்களையும் கடவுளாக ஆராதிக்க வேண்டுமென சட்டமியற்றினான். மறுத்தவர்கள் மரண விளையாட்டரங்கத்தில்
கொடுமையாய் கொல்லப்பட்டனர்..இதன்படி தீனாவையும் அவள் பிள்ளைகள் அனைவரையும் விசாரணைக்காக நெரோவின் அரண்மனையில் கொண்டு வந்து நிறுத்தினர். இங்கு விதி பலமாய் விளையாடியது. இவர்களைக்கொண்டுவந்து நிருத்தியதே தீனாவின் இரண்டாவது மகன் ஜோஷியா தான்.. அவன் இஸ்மீரிலிருந்து மாற்றலாகி ரோமுக்கு வந்திருந்தான்.
    விசாரணைகக தன் தாயாரின் பெயரை " தீனா " என்று படித்ததுமே ஜோஷியாவுக்கு அது தனது தாயார்தான் என்று புறிந்துவிட்டது. தாயும் மகனும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆனல் இருவரும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை..அடுத்து " விக்ட்டர் ".." அனதோலியா " ..".போட்டா " ..."போட்டிடா "..." பரஸ்கேவா ".. ." கைரியாக்கி " அனைவரும் ஆஜர்.. இதைப்படித்த ஜோஷியாவுக்கு மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நாம் ஒருவாரு யூகித்துக்கொள்ளலாம்.
நீரோ கேட்டான்..." தீனா உன் குடும்பத்தில் இவ்வளவுதானா அல்லது இன்னும் இருக்கின்றார்களா ?"
தீனா கூறினாள், " எனக்கு இன்னும் ஒரு மகன் இருக்கின்றான்... ராணுவத்தில் வெளி நாட்டில் பணிபுரிவதாக நினைத்திருந்தேன்.."
நீரோ, " இப்போது அவன் எங்கு இருகின்றான்?."
தீனா, " அதைச்சொல்ல எனக்கு விருப்பமில்லை "
நீரோ, " இதோ பார் தீனா... நீ கிரிஸ்த்துவை போதித்தவள்.. உன் பிள்ளைகளும் கிரிஸ்த்துவை போதித்தவர்கள் தான்.. உண்மைச்சொல்ல வேண்டியது ஒவ்வொரு கிரிஸ்த்தவனின் கடமையகும்.. நீ என்னிடம் பொய் கூறத்தேவை இல்லை. உன் மற்ற மகன் எங்கே.. எனக்கு பதில் சொல்.."
இந்த நேரத்தில் தீனாவின் இரண்டாம் மகன் ஜோஷியா மனசாட்சி குத்துண்டவனாய் " அரசே அது நான் தான். என் தாய் என் சகோதரன் என் சகோதரிகள் ஐவர் என்று
எல்லோருமே வேத சாட்சி முடிபெற காத்திருக்கையில் நான் மட்டும் பயந்தாங்கொள்ளியாய் விலகி இருப்பது தேவையற்றது. நானும் என் குடும்பத்தினருடன் வேத சாட்சி முடி பெறுவேன்" என்று நீரோவிடம் சரணடைந்தான். மன்னன் நீரோ சிரித்துக்கொண்டான்.
" ஆஹா... என் ராணுவத்தில் கிரிஸ்த்துவர்கள்...அடேங்கப்பா.. எத்தனைபேர் என் ராணுவத்தில் புகுந்து எனக்கு எதிராக புரட்சி செய்து என்னைக்கொல்லப்
பார்க்கிறீர்கள்... மரியாதையாக உண்மையை சொல்லிவிடு." என்று கடும்கோபம் கொண்டு தன் ஆட்க்களிடம் அவனை ஒப்புவித்தான்..அன்று மாலைக்குள் ஜோஷியாவின் தலை அரசனிடம் கொண்டுவந்து காட்டப்பட்டது.. " அரசே நாங்கள் எவ்வளவோ இவனிடம் கேட்டுப்பார்த்துவிட்டோம்.. நம் ராணுவத்தில் எத்தனை பேர் கிரிஸ்த்துவர்கள் என்று இவன் சொல்லவே இல்லை. வேறு வழி இல்லாமல் உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டோம் " என்றனர். சரி இவன் சகோதரனையும் உடனே கதையை முடி. ..பெண்களை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றான் நீரோ மன்னன்.
     தீனாவையும் அவள் பெண்பிள்ளைகள் ஐவரையும் மற்றும் அவர்களோடு வந்த மற்ற பெண்கைதிகள் அனைவரையும் தினமும் இரும்புக்கழிகளாய் நைய்யப்புடைக்க வேண்டும்   எனவும் அது தன் மகள் தோம்னியா என்பவள் மேற்பார்வையில் நடைபெற வேண்டுமெனவும் ஆணையிடப்பட்டது. தினமும் இவர்கள் இந்த ஆக்கினைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
ஆனால் புதுமையாக அவர்கள் காயங்கள் அனைத்தும் அன்று இரவே ஆறிவிடும்.. அடுத்த நாள் அவர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவர். நீரோ மன்னனின் மகள்  இதைக்கண்டு மிகுந்த ஆச்சர்யப்பட்டாள்..இதன் காரணத்தை அறிய முற்பட்டவளுக்கு தீனா யேசுவைப்பற்றிய அனைத்துக்காரியங்களையும் அவளுக்கு உபதேசித்தாள்..
தீனா கூறிய யேசுநாதர் பற்றிய சரித்திரங்களாள் பெரிதும் கவரப்பட்டாள் நீரோவின் மகள் தோம்னியா. அவள் மட்டுமல்ல அந்த சிறைக்கூடத்தில் வாழ்ந்துவந்த கைதிகள் முதற்கொண்டு அரசாங்க ஊழியர் வரை அனைவரும் கிரிஸ்த்துவால் கவரப்பட்டனர்.. அந்த சிறைச்சாலை தேவாலயமாக மாறியது. எந்த நேரமும் ஜெபமும் ஆராதனையும் துதியுமாக கேட்டுகொண்டே இருந்தது. அதற்க்குமேலும் பொறுக்க முடியாத சிறைக்காவலன் நீரோவிடம் சிறையில் நடக்கும் யேசுவின் திரு நாம கீதங்களைப்பற்றியும் நீரோவின் மகள்  தோம்னியா அடைந்த மதம்மாற்றம் பற்றியும் எடுத்துச்சொன்னான்.
     அடங்காத கோபம் கொண்டான் மன்னன் நீரோ.. தன் மகள் என்றும் பாராது அனைவருக்கும் மரண தண்டனை கொடுத்தான். தீனாவுக்கு மட்டும் வேறு தண்டனை காத்திருந்தது. நீரோ முன்னிலையில் நிறுத்தப்பட்டாள் தீனா..மன்னன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.. " தீனா...கடைசியில் நீ என் குடும்பத்திலேயே உன் வேலையை காட்டிவிட்டாய் .
நான் என் மகள் என்றும் பாராது அவளுக்கும் மரண தண்டனை கொடுத்ததிலிருந்து நான் எவ்வளவு தூரம் இந்த கிரிஸ்த்துவர்களை வெறுக்கின்றேன் என்பதை நீயும் இந்த உலகமும் புறிந்துகொள்ள வேண்டும்..மற்றதைக்காட்டிலும் என் மகளை மதம் மாற்றிய குற்றத்திற்காக உனக்கு கொடுமையான தண்டனையை தரப்போகின்றேன். கடைசியாக நீ என்ன சொல்ல விரும்புகின்றாய்." என்றான் மன்னன் நீரோ. [ மகள் என்றும் பாரது....பெண்கள் என்றும் பாராது...அனைவரையும் நிர்வாணமாக சிலுவையில் அறைந்து கொண்றான் நீரோ மன்னன்.]
     " ஆம் அரசே,...சொல்வதர்க்கு ஒன்று இருக்கின்றது..நீ..மனிதனே அல்ல.. நீ ஒரு மனித மிருகம்... அதிலும் இரத்த வெறி பிடித்த மிருகம்.. ஒருபாவமும் அறியாத கிரிஸ்த்துவ மக்களை அநியாயமாக கொல்கிறாய்...ஆண்டவன் உனக்கு என்னமாதிரியான தண்டனை கொடுக்கப்போகின்றார் பார்...தூ...என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள்...பின் அடங்க மாட்டாத சிரிப்பு சிரித்தாள். இதனால் கடுப்பான நீரோ மன்னன் அவளை உடனே அருகில் உள்ள பாழும் கிணற்றில் தலைகீழாக தூக்கிப்போட சொன்னான். அவ்வாறே தீனாவுக்கு
கட்டளை நிறைவேற்றப்பட்டது. தீனாவின் ம்ண்டைபிளந்து உடல் எலும்புகள் பல உடைந்து உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஆனாலும் யேசுநாதர் அவளுக்குத்தோன்றி பிதா சுதன் பரிசுத்த ஆவி என்று மூன்று முறை ஆசீர்வதித்தார். மூன்றாம் நாள் அவள் உயிர் பிரிந்தது..
      யாக்கோபின் கிணற்றில் ஆரம்பித்த அவளின் ஞான வாழ்க்கை கிணற்றிலேயே முடிந்தது. ஆரம்பிக்கும்போதும் யேசுநாதர் அவள்கூடவே இருந்தார்..அவள் வாழ்க்கை முடியும்போதும் யேசுவின் பிரசன்னம் அவள் கூடவே இருந்தது. யேசுகிரிஸ்த்துவின் உயிர்ப்பிற்குப்பிறகு தீனாவும் அவள் பிள்ளைகள் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர். போதினி என்னும் பெயரும்  பெற்றாள் தீனா...அதாவது ஒளி அல்லது வெளிச்சம் என்பது அதற்க்குப்பெயர். ருஸ்ய பாஷையில் ஸ்வெட்லானா என்று அழைகின்றார்கள்..ஆக யேசுநாதரால் ஞான வெளிச்சம் பெற்ற
போதினி என்னும் தீனா என்னும் சமாரியபெண் மூலம் ஒட்டுமொத்த சமாரிய குலமுமே ஞான வெளிச்சம் பெற்றது.
    இப்போதும் சமாரியாவிலுள்ள இந்த யாக்கோபின் கிணறு நல்ல நீரைக்கொடுக்கின்றது. அந்த கிணற்றின் மேல், மேல் பகுதில் அழகான ஒரு தேவாலயம் அமைத்து அந்த தீனா என்னும் சமாரியப்பெண்ணின் பெயரைத்தாங்கிய ஆலயமாக தூய போதினி என்னும் ஆலயமாக வைத்து இருக்கின்றார்கள்.
      இந்த தீனா என்னும் சமாரியப்பெண் யேசுவுக்கே தாகம் தீர்த்தவள் ஆகையால் இவளது பக்தி முயற்சி மேலை நாடுகளில் பரவியது. மெஃஸிகோ நாட்டில் இந்த தீனாவின் திருவிழாவை மற்றவர்களுக்கு தாகம் தீர்க்கும் திருவிழாவாகக்கொண்டாடுகிறார்கள்.. தவக்கால நான்காம் ஞாயிறன்று தெருவில் வருவோர் போவோர் அனைவருக்கும் பழ ரஸம் கொடுத்து
தாகம் தீர்க்கும் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
..தூய போதினா என்னும் சமாரியப்பெண்ணே... எங்களுக்காக வேண்டிகொள்ளும்.















.