Saturday, June 1, 2013

அதோ எழுந்து வருகின்றவள் யார் ?



அதோ எழுந்து வருகின்றவள் யார்?

“சந்திரனைப்போல் அழகுள்ளவளாய், சூரியனைபோல் ஒளியுள்ளவளாய், பார்முனையில் அணிவகுத்து நிற்கும் படையைபோல் அக்சம்தருகிறவளாய், உதயகாலத்தைப்போல் அதோ எழுந்து வருகின்றவள் யார்?” என்ற கேள்வியே ஒரு செபமாய்மாறி தற்போது மரியன்னையின் சேனையினர் சொல்லும் சங்கிலிசெபமாய் நடைமுறையில் உள்ளது.
    இந்த செபம் எந்த மையக்கருத்தையொட்டி எழுதப்பட்டது என்ற விபரம் எனக்குத்தெரியாது.ஆனால் இந்த கேள்வியே ஒரு சங்கிலி செபமாய் மாறி மாதா பக்தர்களாள் சொல்லப்பட்டு வருகிறதள்ளவா? எனவே இந்த கேள்வியைக்கேட்டவர் யார்? இந்த கேள்வியின் பின்னனிதான் என்ன? ஓ…. அது ஒரு சரித்திர ஸ்வாரஸ்யமான நிகழ்ச்சி. இந்த கேள்வியைக்கேட்டவர் உலகமகா சக்கரவர்த்தி ரோமைராஜ பூபதி மஹா அகஸ்ட்டஸ் சீசர். கேள்வி கேட்கப்பட்ட நாள் அவரிலும் பெரிய உலகமகாச்சக்கரவர்த்தி யேசு கிருஸ்த்து பிறந்த அந்த அமைதி பொழியும் இரவில். இதற்கு மேல் உங்கள் பொறுமையை நான் சோதிக்க்க விரும்பவில்லை. சரி நேயர்களே, நாம் கதைக்குப்போவோமா?
     யேசுகிருஸ்த்து பிறந்த அந்த அமைதி பொழியும் இரவில் அவரது பிறப்பைப்பற்றிய நற்செய்தி முதன் முதலில் ஏழை எளியோர்க்கு அதுவும் ஆடு மாடு மேய்க்கும் எளிய குடும்பதைச் சேர்ந்த படிப்பறிவற்ற இடையர்களுக்கு சம்மனசுகளாள் ” உன்னதங்களிளே கடவுளுக்கு மாட்சிமை உண்டாவதாக.மன்னவர்களுக்கு அமைதி உண்டாவதாக” போன்ற முதல் கரொல் பாடல்களால் அறிவிக்கப்பட்டது. இந்த நற்செய்தி யேசு பிற்ந்த ப்ர்த்லஹெமில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. பலப்பல அரும்குறிகள் வானில் தோண்றின. அவரது வருகையை அறிவிக்கும் வால் நட்சத்திரம் தோன்றி உலகில் பேரரசர் பிறந்துள்ளார் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பை உலகம் முழுவதும் உல்ல வான சாஸ்த்திரிகள் கண்டு அவரவராது நாடுகளிள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். அன்று இரவு டிசம்பர் 24 ஆம்தேதி பேரரசர் அகஸ்டஸ் சீசருக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அடுத்த அதிகாலை நடைபெறயிருக்கும் குரு என்னும் ஜூபிடர் தெய்வத்திற்கு எழுப்பட்பட்ட ஒரு பேரதிசயமான கோயில் கும்பாபிஷேகதிற்கு ஆயத்தங்களை மேற்பார்வையிட்டபோது ஏதோ குறையிருபதாக அவரது உள் மனது கூறியது ஏனோ அவரது மனது அமைதியடையவில்லை. ” சரி, எதற்கும் மீண்டும் நேரிலேயே சென்று ஆய்வு செய்துவருவோம்” என்று உடனே அரசுருக்குறிய ஆடைகைள் அணிந்து இரதத்திலேறி புறப்பட்டுவிட்டார். குரு தேவன் ஜூபிடரின் சிலை ஒரு மிகப்பிரம்மாண்டமான பளிங்குச்சிலையாகும். ஒரே கல்லால் ஆன சுமார் 60 அடி உயரம் கொண்டது. ரோமைக்கு கிழக்கே உள்ள மலை உச்சியில் 23 மிகப்பிரம்மாண்டமான தூண்கள் தாங்கிநிற்க மேற்புரம் திறந்திறந்த பெரிய அரங்கின் உட்புறமாக அழகாக நின்றிருந்தது அந்த சிலை. எந்தக்குறையும் இல்லாமல் மிக்க அழகுடன் செதுக்கியிருந்தான் கிரேக்க சிற்பி. அரசரது திடீர் வருகையால் அந்த அரங்கமே அல்லோகல்லோகப்பட்டது. அரசரின் வருகையை எதிர்பாராத மந்திரிப்பிரதாணிகள், தளபதிகள், சிப்பாய்கள் அனைவரும் என்னவோ ஏதோவென்று கலங்கினார்கள். அரசரே நேரடியாக வந்து அந்த பிரம்மாண்டமான ஜுபிடரின் சிலையை உற்று உற்றுப்பார்த்தார். எந்தக்குறையும் தெரியவில்லை. தளபதியைப்பார்தப்பார்வையில் அவர்,” அரசே பாதுகாப்பில் எந்தக்குறையும் இல்லை” என்று பணிவாக பதில் அளித்தார். அப்பொதுதான் வானில் அந்த அறிய நிகழ்ச்சி ஆரம்பித்தது. ” உன்னதங்களிலே தேவனுக்கு மகிமை உண்டாவதாக”. என்னும் வானோர் பாடல் மிக மிக அழகாகவும் தெளிவாகவும் கேட்டது. தன் வாழ்நாளில் அரசர் சீசர் அப்படி ஒரு பாடலைக் கேட்டதில்லை. அவர்மட்டுமல்ல உலகில் எந்த ஒரு மானிடப்பிறவியும் முன் கேட்டறியாத பாடல் அது. மாட்சிமைமிக்க அர்த்தம் கொண்டது. அரசர் அகஸ்ட்டஸ் சீசர் மெய்மறந்தார் . அது மட்டுமல்ல. கிழக்கே கீழ் வானம் தொடங்கி மேற்கே அடிவானம் வரை மேகம் ஒளிர்ந்தது பல்லாயிரக்கணக்கான விண்மீண்கள் கூட்டம் கூட்டமாக வானில் வண்ணக்கோலங்கள் போட்டன.பிறகு அவைகள் வெளிர்நிறமாய் மாறி வெளிச்சம் வரவர பிரகாசமாக மாறி ஏதோ நாடக அரங்கம்போல் காட்சி அளித்தது. ஆனால் வானோர் பாடல் மட்டும் மிக மிக ரம்மியமாய் கேட்டுக்கொண்டேயிருந்தது. அரசர் அகஸ்டஸ் தன் கண்களை நம்ப முடுயாமல் தான் நினைவுடந்தான் இருக்கின்றோமா என்று அறிய தன்னை ஒரு முறை கிள்ளிப்பார்த்துக்கொண்டார். ” ஆம், ஆம். நினைவு நன்றாகத்தன் இருக்கிறது” என்று ஒரு முறை சொல்லியும் பார்த்துக்கொண்டர்.அப்படியானால் இது கனவு அல்ல, நனவு தான் என்று ஆமோதித்துக்கொள்ளவும் செய்தார். பிறகு மீண்டும் வானில் வண்ண ஜாலங்கள் தோன்றின.பலப்பல வாணவர் உருவங்கள் சிரிதும் பெரிதுமாய் தோன்றின. பெரும் பெரும் சம்மனசுகள் இறக்கை விரித்து பறப்பதுபோல் போன்றும் குழந்தைகள் இறக்கை முளைத்து பறப்பது போன்றும் காட்சிகள் தோன்றித்தோன்றி மறைந்தன. பிறகு ஒரே ஒளிப்பிரவாகம்.சம்மனசுகள் மறைந்து ஒரு அழகிய யுவதி அவள் கையில் ஒரு அழகிய ஆண் குழந்தையுடன் விஸ்வரூபமாய்த்தோன்றினாள்.கீழ் வானம் துவங்கி உச்சிவானம் மற்றும் அடி வானம்வரை அவரது திரு உருவம் தோன்றியது. “அவள் சூரியனை ஆடையாய் அணிந்திருந்தாள். அட… அவள் காலடியில் சந்திரன். அவள் சிரசைச்சுற்றி விண்மீண்கள். அவளது திருக்கரத்தில் அவளது ஆண் குழந்தை. அது என்ன ஒரு அழகிய ஆண் குழந்தை.அடடா…. இவர்களின் அழகைச்சொல்ல உலகில் எந்த ஒரு மொழியிலும் வார்த்தைகளே கிடையாது. தாயும் அழகு. பிள்ளையும் அழகு.மனித சரித்திரத்தில் இப்படியும் ஒருஅழகா? இந்ததேவதையின் அவதாரம் எந்தப்பரலோகத்தைச்சேர்ந்ததோ தெரியவில்லையே. நமக்கு மட்டும் இந்தப்ப்பெண் யார் என்று தெரிந்தால் இந்த குரு தேவன் ஜுபிடர் சிலைக்கு பதிலாக இந்தப்ப்பெண்மணியின் சிலையை பிரதிஸ்டை செய்துவிடுவோம். ஆனால் இந்தப்பெண்முகத்தை இதற்குமுன் பார்ததே இல்லையே. இந்த முகத்தை என்னவென்று வர்ணித்து அதை சிற்பியிடம் சொல்லி அந்தப்பெண்மனியின் சிலையை வடிக்கச்செய்யமுடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை” இவ்வாறாக அகஸ்டஸ் சீசர் எண்ணி எண்ணி மாய்ந்துபோனார். இருப்பினும் மீண்டும் மீண்டும் அந்த தாயையும் அவள் சேயையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே யிருந்தார் சீசர். அவர் பார்த்துக்கொண்டே இருக்கும்போதே அந்தக்காட்சி சிறிது சிறிதாய் மறைந்துகொண்டே வந்தது. கடைசியில் மறைந்தேபோய்விட்டது. மீண்டும் வானம் பழையபடி மாறி குளிர்ந்த காற்று வீசியதும் அரசருக்கு தன் உணர்வு வந்தது. அரசர் தன் பிரதாண்மந்திரியை அழைத்துக்கேட்டார் ” அந்தக்குழந்தையும் அந்தப்பெண்ணும் யார்?” என்று.” அரசே என்ன சொல்கின்றீர்கள்” என்று கேட்டார் மந்திரி. ” என்ன மந்திரி, வானில் தோன்றிய அந்த தெய்வீகப்பெண்ணையும் அந்தக்குழந்தையையும் நீங்கள் யாரும் பார்க்கவில்லையா?” என்றார் சீசர். மந்திரி பரிதாபமாக இவ்வாறக பதில் கூறினார். ” அரசே தாங்கள் வந்தது முதல் வானத்தையே அன்னார்ந்து பார்த்துக்கொண்டே இருந்தீர்கள். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் எங்களுக்குத்தான் ஒன்றுமே விளங்கவேயில்லை.” என்றார். அப்போதுதான் அரசருக்குப்புறிந்தது அந்தக்காட்சியைக்கண்டது தான் மட்டும் தானென்று. பிறகு ஏதோ சிந்தனையில் ஒரு உறுதியான முடிவு கண்டவராய் தளபதியைக்கூப்பிட்டார். தளபதி “அடியேன்” என்றார். அரசர் ” தளபதி, அந்த குரு தேவன் சிலையை உடைத்துவிடு” என்றார். “அரசே, அதற்கு அவசியம் இல்லாது போய்விட்டது. சற்று நேரத்திற்கு முன்பு வீசிய ஒரு அமானுஷ்யமான காற்றால் குரு தேவனின் சிலையும் அந்த மஹா மண்டபமும் டமார் டமார் என்ற சப்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கிவிட்டது. தாங்கள் ஏதெதோ பேசிக்கொண்டே வெகு தூரம் வந்துவிட்டீர்கள்.உங்களைப்பின்பற்றி நாங்களும் வந்துவிட்டதால் அனைவரும் தப்பித்தோம்” என்று கூறினார். பிரதம மந்திரி சீசரின் காலடியில் விழந்து ” அரசே, எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஏதோ நடக்ககூடாதது நடந்து விட்டது. ஏதோ தெய்வ குத்தம் போலும்” என்றார். அரசருக்கு ஒன்று புறிந்துவிட்டது. வானத்தில் அந்த தெய்வத்தாயும் சேயும் தோன்றிய அந்த நேரமே அந்த சிலையும் மஹா மண்டபமும் உடைந்து விழுந்து இருக்கவேண்டும் என்று கண்டு கொண்டார். அரசர் சீசருக்கு இந்த நிகழ்சி ஒரு துக்க காரியமாகவோ அல்லது துர்ச்சகுணமாகவோ தெரியவில்லை. அரசர் சீசர் தாம் விண்ணில் கண்ட காட்சியை தன் மந்திரிகளுக்கும் தளபதிக்கும் படைவீரர்களுக்கும் மிகவும் விபரமாகக்கூறினார். அந்த வர்ணனை பின்வரும் பாடலாய் மாறியது.
” சந்திரனைப்போல் அழகு வாய்ந்தவளாய் சூரியனைப்போல் ஒளிவுள்ளவளாய்
போர் முனையில் அணிவகுத்து நிற்கும் சேனையைப்போல்அச்சம் தருகிறவளாய்
உதயகாலத்தைப்போல் அதோ எழுந்து வருகின்றவள் யார்? “
   அடுத்தநாள் அரண்மனையில் ரோமைப்பேரரசர் அகஸ்டஸ் சீசர் தலைமையில் சபை கூடிற்று.மந்திரிப்ரதாணிகள் தளபதிகள், பிரபுக்கள், சீமாண்கள் மேலும் முக்கியப்பிரமுகர்கள் என அரசசபை களை கட்டி இருந்தது. அந்த நேரம் வீரன் ஒருவன் வந்து அரசரை வணங்கி நிற்க. அரசரின் கை அசைவில் அனுமதி கிடைக்க பிரதம மந்திரியிடம் அந்த ஒலையை ஒப்படைத்தான். ஓலையைப்படித்த மந்திரியின் மதி வதனம் புன்னகை பூக்க ஆரம்பித்தது.” ஓலையில் வந்துள்ள செய்தி நல்ல செய்திதான்போலும்” என்றர் சீசர். மந்திரி ” ஆம் அரசே ஓலையில் நல்ல செய்திதான் வந்திருக்கிறது .நேற்று இரவில் இடிந்து விழுந்த அந்த குருதேவனின் சிலையைப்பற்றிய ஒரு வர்தமானம் இதில் பதிவாகி இருக்கிறது. இதோ பாருங்கள்” என்றார். சீசரும் ஆச்சர்யம் அடைந்த்தவறாய் ” நல்லது,மந்திரியாரே, விஷயத்தை நீரே கூறும்” என்றார். “அரசே,தாங்கள் விண்ணில் கண்ட அந்த தெய்வத்தாயும் சேயும் வாழ்த்தபடுவார்களாக. அவர்களது திரு நாமமும் புகழகப்படுவதாக.தெய்வசங்கள்ப்பதால் உடைந்துபோன அந்த சிலையைப்பற்றிய கவலையை தாங்கள் விட்டுவிடுங்கள். தங்களுக்கு விருப்பம் இருந்தால் அந்த சிலையைப்பற்றிய வரலாற்றை கூறுகிறேன்” என்றார். அரசர் சீசர் மிகுந்த விருப்பத்துடன் அனுமதி அளித்தார். அந்த சிலையைப்பற்றிய விபரம் பின்வருமாறு. Image
    “அரசே, இது நடந்தது சுமார் 70 ஆண்டுகளுக்கும் முன்பாக.இந்த சிலையின் மூலக்கல் ஒரு அருமையான சலவைக்கள். இது க்ரேக்க நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை வடிக்க கைதேர்ந்த சிர்ப்பிகள் கிரேக்க நாட்டிலிருந்தே வரவழைக்கபட்டிருந்தனர். ஒரு நல்ல நாள் பார்த்து பூஜை புனஸ்க்காரங்கள் எல்லாம் நல்லபடியாக முடிந்து சிலை வடிக்க ஆரம்பித்தனர்.மிகுந்த அழகுள்ள சிற்ப்பமாக அது உருவாகி வந்தது. பல சிற்பிகள் ஒன்று சேர்ந்து சுமார் 60 அடி உயரம் உள்ள இந்த ஜுபிடர் சிலையை உருவாக்கி வந்தனர். மேலும் இதர்க்குத்தகுந்தார்ப்போல் ஒரு மஹா மண்டபம் 23 பெரிய தூண்கள் தாங்கி நிற்க மிகப்பிரண்டமாக உருவாக்கினர். அந்த மஹா மண்டபம் மிகுந்த கலையம்சத்துடன் ஒரு திறந்தவெளி அரங்கமாக அமைக்கப்பட்டது. ஆக இந்த குருதேவன் ஜுபிடரின் சிலை இந்த மஹா மண்டபத்தின் உட் பகுதியில் நிறுதப்பட்டு கிரேக்க யவண சிற்ப சாஸ்திரங்களுக்கு சவால் விடும்படியாக மிகப்பிரம்மாண்டமான ஒரு கலை அரங்கமாக உருவாக்கியிருந்தார்கள். ஒரு நல்ல நாளிள் இந்த குருதேவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய நாள்குறித்து அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. உங்களுக்கு முந்தைய ஜுலியஸ் சீசர் திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கினார். அந்த நாளிள் ஆயிரக்கணக்கான ஆடுகளும் மாடுகளும் குருதேவனுக்கு பலியாக கொடுக்கப்பட்டு இரத்த ஆறு ஓடிற்று. பல விதமான தங்க வைர ஆபரணங்கள் ஜுபிடர் தேவனுக்கு அணிவிக்கப்பட்டிருந்தன. அவைகள் அந்தப்பௌர்ணமி நிலவின் ஒளியிலும் தீவட்டிகளின் வெளிச்சதிலும் பெரும் நெருப்புத்துண்டங்களாய் ஜொலிஜொலித்தன. ஆயிட்று !முஹூர்த்த வேலை நெருங்கிற்று. தாறை தப்பட்டை துந்துபி மற்றும் எக்காள்ம் மேலும் பல விதமான வாத்தியங்களும் மந்திர முழக்கங்களும் ஏக காலத்தில் ஒங்கி ஒலித்தன கிரேக்க யவண நாட்டிய மங்கைகளின் கால்களில் கட்டியிருந்த சலங்கைகள் தாளத்திற்கு தக்கபபடி ஜல் ஜல் என்று குலுங்கிக்குலுங்கி ஆடியது இது பூலோகமா இல்லை இது இந்திர லோகமா என்று கேள்வியை எழுப்பியது. ஆனால் அவ்வேலையில் திடீரென ஒரு யூத்ப்பெண் குரல் நிறுத்து! நிறுத்து!. என்று அபஸ்வரமாக ஓங்கி ஒலித்தது. அவளுக்கு சந்தத்ம் வந்திருந்தது. அட முட்டாள் மக்களே. வரப்போகும் அழிவிற்கு.தப்பிக்கப்பாருங்கள். விரைவில் உடைந்து விழப்போகும் இந்த சிலைக்கு இத்தனை சிலவில் பூஜை புனஸ்க்கரம் தேவையா? எல்லாம் வீண் என்று முழங்கினாள். அவ்வளவுதான். அரங்கமே நிசப்தமானது. ஏதோ நடக்ககூடாதது நடந்துவிட்டது என்று மக்கள் அக்சப்பட்டனர். நடந்ததை அறிந்த தலைமை பூசாரி கோபத்தின் உச்சிக்கேசென்று விட்டார். பளார் பளார் என்று அந்தப்பெண்மனியின் கண்ணத்தில் மாற மாறி அறைந்தார். எங்கள் குலதெய்வம் ஜுபிடர். எங்களுக்கு அறிவிக்கததை புறவினத்தைச்சேர்ந்த இந்தப்பெண் என்னத்தை அறிவித்து விடப்போகிறள்.மக்களே இந்தக்குறிகாரியைக் கொல்லுங்கள் என்று உரக்க கத்தினார்.
   இந்தக்காலத்தைப்போலவே அந்தக்காலத்திலும் கோயில் பூஜாரிகளுக்கு அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கும் அதிகாரமும் இருந்தது. இருப்பினும் அரசாங்க அதிகாரிகள் குறி சொன்ன அந்த யூதப்பெண்ணை தனியே பாதுகாப்பாய் அழைத்துச்சென்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். இது பிற மதத்தவரின் சதியா அல்லது அரசாங்கதிற்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியா என்று அறிய முற்பட்டார்கள். அந்தப்பெண்மணியை விசாரணை என்ற பெயரில் மிகக்கடுமையாக அடித்து நொறுக்கித்தள்ளி விட்டார்கள்.”பெண்ணே,உன்னாள் தீர்க்க தரிசனம் கூறமுடியுமானால் இந்த குருதேவன் ஜுபிடரின் சிலை எப்போது உடைந்து விழும் என்று உறுதியாகக்கூறு என்று மீண்டும் மீண்டும் நையப்புடைத்தார்கள்.அந்த யூதப்பெண் மீண்டும் அவள் தெய்வத்திடம் அழுது புலம்பி மீளவும் தீர்க்கதரிசனம் கேட்டாள். அவள் வாயால் அவர்கள் தெய்வம் பேசிற்று.” அதாவது என்றைக்கு கன்னிப்பெண் ஒருத்தி ஆண் கலப்பின்றி ஆண் குழந்தை ஒன்றை பெற்றாள் என்று ரோமைராஜ பூபதிக்கு தெரிவிக்கப்படுமோ அன்றே இச்சிலை உடைந்து விழும்”. என்று பேசியது. இந்த வர்தமானங்களை எல்லாம் அரசாங்க அதிகாரிகள் தீர்க்கதரிசனம் கூரிய பெண்ணின் பெயர் உட்பட எழுதிவைத்திருக்கின்றார்கள். அது தான் இந்த ஓலை அரசே” என்றார். அரசர் சீசர் மிகுந்த ஆச்சர்யப்பட்டு ” மந்திரி, அந்த யூதப்பெண்ணின் பெயர் என்ன” என்று கேட்டார். “அரசே, தீர்க்கதரிசனம் கூறிய அந்த யூதப்பெண்ணின் பெயர் செல்சியா” என்றார்.அடுத்து அரசே சீசர் பேசினார். ” மந்திரி,வர்தமானங்களையும். காலச்சூல்நிலைகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது ” வானில் தோன்றிய அந்தப்பெண்மணி உண்மையில் மஹா பரிசுத்தவதி என்பதையும் அவள் ஆண்கலப்பில்லாமல் ஆண்குழந்தையொன்றைப்பெற்றுள்ளாள் என்பதையும் என்னாள் நம்ப முடிகின்றது. எனக்கு அந்த தெய்வீகப்பெண்ணைப்பற்றியும் அவள் ஆண்குழந்தையைப்பற்றியும் விபரமாக விரைவில் தெரிவிப்பாயாக” என்றார். ” அரசே, என்னால் கூடியமட்டும் விரைவில் உங்களுக்கு அவர்களைப்பற்றிய விபரங்களைக் கூறுவேன்” என்று சீசரிடமிருந்து விடைபெற்றார் அவருடைய அருமையான மதிமந்திரி.
  பின் குறிப்பு:- அரசர் அகஸ்ட்டஸ் சீசர் விரும்பியபடியே பிற்காலத்தில் கிரிஸ்துவர்கள் அந்த மலை உச்சியில் வீழ்ச்சிவுற்றிருந்த ஜுபிடரின் மஹா மண்டபம் இருந்த இடத்திலேயே அதே உயர்ந்த அந்த 23 தூண்களைக்கொண்டே மரியன்னைக்கு ஒரு மிகப்பெரிய அழகிய ஆலயம் அமைத்தார்கள்.அந்த கவின்மிகு ஆலயம் தூய மரியன்னைப்பேராலயம் என்னும் பெயர் பெற்றது. அனேக அதிசயங்களும் அற்புதங்களும் அங்கு நடைபெற்று வருகின்றன. கன்னிமரியின் பேராலயம் பார்க்கப்பார்க்க சலிக்காத பல அம்சங்களைக்கொண்டது. இங்கு ஒரு அழகிய நீரூற்றும் மந்திர சக்தி வாய்ந்த எண்ணை ஊற்றும் உள்ளது. பல வியாதிகள் இந்த மந்திரித்த எண்ணையால் குணமாகின்றன. ஆக, பேரரசர் அகஸ்ட்டஸ் சீசர்தான் யேசுநாதர் பிறந்த அன்றே அவரைப்பார்த்த முதல் மனிதர் என்னும் பட்டம் பெருகிறார். உலகமஹா சக்கரவர்தியை எங்கேயோ வேற்று நாட்டில் வேற்று கண்டத்தில் இருந்து கொண்டு அவரை சந்திக்கும் பேற்றை கடவுள் அகஸ்டஸ் சீசருக்குக்கொடுத்திருந்தார்.
     நேயர்கள் விரும்பினால் இன்னும் தொடருவேன் . உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன.

3 comments:

  1. இதனை நாம் முற்றாக நம்ப விரும்புகிறோம். தயவுசெய்து இதற்கான ஆதாரங்கள் எங்கே இருக்கின்றன என்பதை அறியத்தாருங்கள் மைக்கல் தொரைராஜ் அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. Dear reader ...the main theme of the story is taken from the boojk of THE LIFE OF MOTHER MARY writteen by the germanian augustian congregation rev sister CATHERINE EMMERICK. for any clarificqtions please contact me 8903841185. The same number is for whatsqpp also.

      Delete
  2. Dear reader. I am very glad to know that my stories are wide spread. The main theme of the story was taken from the book the life of mother mary written by a holy visionary and a nun CATHERINE EMMERICK from st augustinian congregation germany. Do not hesitate to contact me if neccessary for any clarifications. My cell no aswell as whats app no 8903841185

    ReplyDelete