Saturday, June 1, 2013

அதோ எழுந்து வருகின்றவள் யார் ? -- II


அதோ எழுந்து வருகின்றவள் யார்.?- II

“வந்தான் சந்திரமுகி “. வானில் கண்ட தாயையும் சேயையும் அகஸ்டஸ் சீசருக்கு என்றுமே மறக்க முடியவில்லை. அந்த மாதரசியினுடைய முகம் எத்துனை அழிய தோற்றமுடியது. எத்துனை மாட்சி உடையது. எத்தனை தடவை நினைத்தாலும் திரும்பத்திரும்ப தன் மனக்கண்ணில் அவர்கள் தோன்றிகொண்டே இருந்தார்கள். இந்த உலகில் உள்ள அழகிகள் எத்தனை பேர் இருந்தாலும்
இதுவரை பிறந்தவர் முதல் இனிமேல் பிறக்கப்போகிறவர் வரை அனைவரும் அனிவகுத்து நின்றாலும் இந்த தெய்வப்பெண்ணின் காலடிக்குகூட ஈடாக மாட்டார்கள்.  எவ்விதமான இந்த உலகில் உள்ள எந்த மொழியினாலும் அவள் அழகிய தோற்றத்தை வார்த்தையாலோ உருவத்தினாலோ வர்ணிக்கமுடியாது.அப்படியோரு அழகு இந்தப்பெண் தெய்வதிற்கு.
அவள் அழகுக்கு ஈடாக அவள் ஆண் குழந்தையும் இருந்ததது. இந்த மனித குலத்தின் அழகை எல்லாம் ஒன்றாக சேர்த்து வடித்துவைத்த சிற்பம் போல் இருந்தது அந்தக்குழந்தை.
     அந்தக்குழந்தையோ தன் சின்னன்சிறு கரங்கலை நீட்டி அரசரை வா, வா என்று அழைத்துக்கொண்டே இருந்தது. அரசருக்கு அந்த குழந்தையை அப்படியே அள்ளியெடுத்து கொஞ்சி மகிழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் முடியவில்லை. அந்தப்பெண்ணையும் அவள் குழந்தையையும் சீசரால் மறக்கமுடியவில்லை. மறக்கவும் விரும்பவில்லை.தூக்கம் மறந்தார்.
உணவை மறந்தார். அரசை மறந்தார். மக்களை மறந்தார். மனைவியை மறந்தார். தன்னையே மறக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அந்த தாயும் சேயும் அவரது நினைவில் வந்துகொண்டே இருந்தார்கள்
        ஒருநாள் அரசர் சீசர் பொறுக்க முடியாத ஆசையில் தன் பிரதான மந்திரியை அழைத்து ஒரு வேண்டுகோள் விடுத்தார். “மந்திரி !. அந்தப் பெண்ணும் குழந்தையும் யாரென்று கண்டுபிடி. நான் அவர்களை மீண்டும் காண விரும்புகிறேன். என்றார்”. ” அரசே, வானில் தாங்கள் கண்ட மாயக்காட்சியை வைத்து அவர்களை எப்படிக்கண்டு பிடிப்பது. இருப்பினும் தங்களுடைய ஆவலை அரசகட்டளையாக ஏற்று அவர்களை கண்டுபிடிப்பேன்.
        தாங்கள் சற்றே நித்திரைகொள்ளுங்கள். தாங்கள் உறங்கி பல நாட்கள் ஆகின்றன. தாங்கள் உணவருந்தியும் பல காலம் ஆகிற்று, அதனால் தங்களுடைய உடலும் மெலிந்துவிட்டது. எப்படியும் அந்த மாதரசியைப்பற்றிய செய்தியுடன் உங்களை மறுபடியும் சந்திப்பேன்” என்று கூறிச்சென்றார்.
     அவர் பதிலில் சற்றே திருப்தி அடைந்த அரசர் சீசர் பல நாட்களுக்குப்பின் நன்றாக உண்டு உறங்கினார்.அவரது கனவிலும் அந்த மாதரசியின் உருவமும் அவள் குழந்தையின்  முகமுமே கணவாக வந்தது.
       ஆனால் அது அவரை வருத்தாத கணவாக இருந்தது. அதுவரை அரசருக்கு மட்டுமே பிடித்திருந்த கவலையானது அடுத்து மந்திரிக்கு பிடித்துவிட்டது.
அவர் தன் அவையிலுள்ள கிரேக்க, ரோம,யவன, சோராஸ்டிர, அரபிய, யூத மந்திரவாதிகள் அனைவரையும் அழைத்தான்.சீசர் வானில் கண்ட காட்சிகளை தன்னால் கூடுமானவரை விவரித்து அந்த மாதரசியைப்பற்றிய விபரங்காளை கண்டு அறியும்படி கூறி, அரசருக்கு தகுந்த பதிலை அளிப்பவர்களுக்கு தக்க சன்மானமும் உயர்ந்த பதவிகளையும் பட்டங்களையும் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
     எனவே மேற்கூறப்பட்ட மந்திரவாதிகள் அனைவருக்குள்ளும் பலத்த போட்டி ஏற்பட்டது. இம்முயற்ச்சியில் ஈடுபட்ட பல மந்திரவாதிகள் தங்கள் ,முயர்ச்சி தோல்வியில் முடிவதைக்கண்டு போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்கள்.
  ஆனால் ஒரு சொராஸ்டிர மந்திர வாதிக்கு ஒரு குறிப்பு கிடைத்தது. அவன் தன் மந்திர சக்தியால் இரு பொல்லாத ஆவிகைள் வரவழைத்தான். அவர்கள் நாக்கொன் என்றும் தாக்கொன் என்றும் பேர் பெற்றவர்கள்.
      அவர்களிடம் அந்த மந்திரவாதி மன்னர் சீசர் வானில் கண்ட தாயையும் சேயையும் பற்றி கூறி அவர்களை பற்றிய விபரங்களை மேலும்கூறும்படி கேட்டார்.அந்த பொல்லாத ஆவிகள் பயங்கரமாக அலறியபடியே கூறினார்கள். ” இவர்கள் பற்றி எங்களாள் எந்த பதிலும் கூற முடியாது”. என்று. ” ஏன் முடியாது?”
” எங்களுக்கு உத்தரவு இல்லை.” ” அப்படியானால் யார் இதற்க்கு பதில் கூற முடியும் ” ” எங்களுக்குத்தெரிந்து பேயல் செபூவால் மட்டுமே கூற முடியும். இனி மேலும் எங்களைத்தொந்திரவு செய்யாமல் விட்டுவிடு.
உணக்குப்புண்ணியமாகப் போகட்டும்”என்று அலறியபடியே மேலும் பேசாதபடி தங்கள் வாயை இறுக மூடிக்கொண்டன.” சரி, கடைசியாய் ஒரு கேள்வி. பேயல்சேபூவை யார் அழைக்கமுடியும் என்று சொல்.
உன்னை மேலும் தொந்திரவு செய்யாமல் விட்டுவிடுகிறேன்” என்றான் மந்திரவாதி. பேசாஅமடந்தைகளான அந்த பொல்லாத தீய ஆவிகள் வாய் திறந்து ஒரு யூத மந்திரவாதியின் பெயரைச்சொல்லிவிட்டு மீண்டும் பேசா மடந்தைகள் ஆயின.
    அந்த மந்திரவாதி எப்படியோ தேடிக்கண்டுபிடித்துவிட்டான் அந்த யூத மந்திரவாதியை. அவனிடம் விஷயங்களை கேட்டறிந்த யூத மந்திரவாதி இவ்வாறு கூறினான். ” ஐய்யா, இது சாதாரண விஷயம் அல்ல. இது உங்கள் கற்பனைக்குகூட எட்டாத விஷயம்.   அத்தோடு இது ஆபத்தான விஷயமும் கூட. இது உன்னால் ஆகாது. இதுவரையிலான உன் முயற்ச்சிகளுக்கு இதோ உன் சன்மானம்.நீ விலகிக்கொள். நான் மற்றதை பார்துக்கொள்கிறேன்.
   உன் உதவி எனக்கு எப்பொதாவது தேவைபட்டால் அவசியம் உன்னை தொடர்பு கொள்வேன். இப்பொது என்னை அந்த மந்திரியிடம் அழைத்துச்செல்” என்றான். யூத மந்திரவாதியிடம் அந்த மதி மந்திரி பல விஷயங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். பிறகு அவர் ” விஷயம் எவ்வளவு பயங்கரமானது என நான் அறிகிறேன். இருப்பினும் பரவாயில்லை. இதில் என் உயிர் போனாலும் சரி. உன் உயிர் போனாலும் சரி. நான் மன்னர் சீசருக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். இது அரச கட்டளை. போய் நீ பூஜையை ஆரம்பி. இதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் உன் கதி அதோகதி தான்.
   சீசரைப்பற்றி உனக்கு தெரியும் அல்லவா? அவரை ஏமாற்ற நினைகாதே பிறகு உன் தலை உனக்கு தறிக்காது. எக்சரிக்கை !. உன் சன்மானம் பற்றி உனக்கு கவலை வேண்டாம்.   உனக்கு நான் உறுதி அளிகிறேன். இனி நீ உன் கரியங்களை ஆரம்பிக்கலாம்”. என்றர்..
யூத மந்திரவாதி இவ்வாறு கூறினான்.”மந்திரியாரே, இது எனக்கு தொழில் மேல் ஏற்பட்டுள்ள சவால்.  என் உயிர் மேலும் எனக்கு ஆசை உண்டு, பணத்தின் மீதும் எனக்கு ஆசை உண்டு. ஆனால் பின்விளைவுகளுக்கு நீர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். எங்கள் குலத்தில் பேர் பெற்ற மந்திரவாதியாய் இருந்த மூதாட்டி ஒருவருக்கும் இதே போன்று ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அது எங்கள் எல்லோருக்கும் பெரும் அக்சுறுத்தலாகவும் இருந்தது.
     சவுல் என்னும் இஸ்ரேலிய அரசன் சாமுவேல் என்னும் இற்ந்துபோன தீர்க்கதரிசியை உயிருடன் எழுப்பச்சொன்னார். அதன் பின் விளைவு என்ன தெரியுமா?. உயிருடன் எழுப்பப்பட்ட சாமுவேல் தீர்க்கதரிசி சவுல் மன்னரை சபித்தார்.    அதன் விளைவாக சவுல் மன்னர் போர் களத்தில் உயிர் துறந்தார். இவ்விதமே உங்களுக்கும் நடக்கலாம். ஒன்று நீவிர், அல்லது உம் சீசர் மரிக்கலாம். நான் பின் விளைவுகளைக்கூறி விட்டேன். எனவே எதற்கும் மன்னரை கேட்டு சொல்லுங்கள்.”
    மந்திரிக்கும் நிலைமை ஒருவாறு புறிந்தது. இருப்பினும் பூஜையை ஆரம்பிக்க சொன்னார். யூத மந்திரவாதியும் எழுந்தான். தனக்கு உதவிக்கு அந்த சோராஷ்டிர மந்திரவாதியையும் சேர்த்துக்கொண்டான்.
   ஆரவாரமாக ஆரம்பித்தது பூஜை. பலவிதமான மணி ஓசைகளும்
அழகிய பெண்டிற்களின் அலங்கோலமான நடன அசைவுகளுடனும் ஆடல் பாடல்களுடனும் பலவிதமான மந்திர உச்சாடணங்களுடனும் பார்க்கவே பயங்கரமாக ஆரம்பித்தது அந்த பூஜை.பலவிதமான எண்ணிக்கையில் ஆடுகளும் மாடுகளும் மற்றும் பறவைகளும் பலியாக வெட்டப்பட்டு ஓடிய ரத்தம் ஒரு போர்க்களம் போல காட்சி அளித்தது.நடனமாடிய பெண்கள்
மது மயக்கத்தில் அறை குறை ஆடைகளுடன் காம இச்சையைத் தூண்டும் விதமாக நடனமாடினர்.
   யாகத் தீ பயங்கரமாக தன் தீ நாக்குகளைக்காட்டியது. அதிலிருந்து உச்சகட்டமாக
“ஹே ஹே என்றும் ஹோ ஹோ என்றும் ஒஹ் ஒஹ் என்றும் ஒஹோ ஒஹோ வென்றும் பயங்கர கூச்சள்களுடனும் கோர உருவத்துடனும் எழுந்து வந்தது ஒரு பயங்கர ஆவி.
   அதைக்கண்டவர் பயத்தால் அலறினர். நடனமாடிய நங்கைகள் மூர்ச்சை அடைந்தனர். அங்கு இருக்க பயந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.எங்கும் பயங்கர அமைதி நிலவியது.சற்று நேரத்தில் பயங்கர அலரலுடன் கிளர்ந்தெழுந்த அந்த ஆவி ஒரு முறட்டு உருவமுள்ள பெண்ணாக மாறியது. ஆனல் பேசியது.
      ஆண் குரலில். யூத மந்திரவாதி பேசினான் ” ஆவிகளின் தலைவா, வணக்கம். வந்தது யாரோ? தாங்கள் தானே மஹா பிரபூ” என்றான். அந்த ஆவியும் கூறிற்று. ” ஆம் நான் தான் ” என்றது. ” மஹ பிரபூ, தாங்கள் பெயர் என்னவோ?” என்றான் மந்திரவாதி. அந்த ஆவி ஒரு பயங்கர எக்கால ஒலியுடன் கூறியது ” நான் தான் சந்திரமுகி.” ” தலைவா சந்திரமுகி பெண்பால் அல்லவா? தாங்கள் ஆண் ஆயிற்றே.  மேலும் தாங்கள் ஆவிகளின் தலைவரும் அல்லவா?” அதற்கு சந்திரமுகி கூறினான் ” அடேய் மடையா, ஆவிகள் உலகில் இது தான் நடைமுறை. ஆண்களை அழிக்க பெண் உருவம் எடுப்போம்.
பெண்களை அழிக்க ஆண் உருவம் எடுப்போம். சரி, விஷயத்துக்கு வா. எதற்காக என்னை அழைத்தாய்? தக்க காரணம் இல்லை என்றால் உனக்கு உன் உயிர் தப்பாது.” என்றான்.
          சந்திரமுகி சொன்ன சொன்ன சொர்ணக்கதைகள்
    ” என் எஜமானே, தாங்களை அழைக்க அடியேனுக்கு தகுந்த காரணம் உண்டு”. என்று கூறி மன்னர் அகஸ்ட்டஸ் சீசருக்கு நேடிட்ட காட்சிகளையும் அந்த தாயையும் சேயையும் பற்றிய விபரங்களை பெறுவதற்காகவே தாங்களை அழைத்தேன்”. என்றான். அதற்கு சொர்ணமுகி கூறியதாவது.”என்னை அழைக்க தகுந்த காரணம் நீ கூறியதால் உன்னை மன்னித்தோம்.
     நீ தப்பித்தாய். உனக்கு என் அபயம் உண்டாகட்டும்.என் எதிரியைப்பற்றி என்னிடமே கேட்கிறாய். அவர்களைப்பற்றிய விபரங்களை கூற வேண்டியது காலத்தின் கட்டாயம். மன்னர் சாலமோன் கூறியபடி
    எதர்க்கும் ஒரு காலம் உண்டு. 
இன்பத்திற்கு ஒரு காலம் என்றால் துன்பத்திற்கும் ஒரு காலம் உண்டு. சிரிப்பதற்கு ஒரு காலம் என்றால் அழுவதர்க்கும் ஒரு காலம் உண்டு. இப்பொழுது எங்களுக்கு இது கஷ்ட்ட காலமே. உங்கள் சீசருக்கு மட்டும் என்னவாம். அவருக்கும் இது கஷ்ட்ட காலம் தான்.” என்றது.” சரி.
    இதற்கு மேல் இதைப்பற்றி உன்னிடம் பேச முடியாது. போய் உன் மன்னரை அழைத்து வா ” என்றான் சந்திரமுகி. மந்திரி முதலில் பயந்தாலும் பிறகு சுதாரித்து,” நான் மன்னரின் பிரதான மந்திரி. நீவிர் என்னிடமே பேசலாமே” என்றார். ஆனால் சந்திரமுகி ” அடேய் மடையா !. என்னை யாரென்று நினைத்துக்கொண்டாய்.  நான் ஆவிகளின் அரசன் பேயேல்செபூ. நான் எனக்கு சமமானவர்களிடம் மட்டும் தான் பேசுவேன். இதற்கு முன் கடைசியாய் பேசியது சவுல் மன்னரிடம் தான் புறிகிரதா? போய் மன்னரை அழைத்துவா ” என்றான். மன்னர் சீசரிடம் மந்திரி நிலைமையை விளக்கினார்.
    அவர் கௌரவம் கருதி முதலில் மறுத்தாலும் தான் வின்னில் கண்ட தாயையும் சேயையும் பற்றி அறிய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததை பற்றி பிறகு ஒப்புக்கொண்டார். மீண்டும்  ஒரு நாள் நட்சத்திரம் பார்த்து பூஜையை ஆரம்பித்தார்கள்.
     ஆர்ப்பாட்டமாக எழுந்து வந்தான் சந்திரமுகி. சீசர் அதிசயத்தார். அவர்கள் உரையாடல் பின்வருமாரு அமைந்த்தது. ” சந்திரமுகி,என் பிரச்சனை உனக்குப்புறிகிறதா?. அந்த பேரழகியான தாயையும் சேயையும் நான் மீண்டும் காண விரும்புகிறேன்.உன்னால் அவர்களைக்காட்ட முடியுமா?.”
    ” அக்ஸ்ட்டஸ் சீசர்,நீ என்ன கேட்கிறாய் என்று உனக்குப்புறியவில்லை. அவள் என் குல எதிரி.! அவள் குழந்தை எங்கள் ஜென்ம பகைவன். என்னிடமே வந்து என் எதிரிகளைக்காட்ட சொல்கிறாய். ”
    “என்ன ! அவர்கள் உன் குல சத்ருக்களா?. ஆச்யர்யமாக அல்லவா இருக்கிறது. அவர்களப்பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே !.அவர்களைப்பற்றி நீ மேலும் கூறுவாயாக.”
  அரசே நான் அவர்களைப்பற்றி கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எல்லாம் காலம் செய்யும் கோலம். நீ அவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் எங்களைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.”
” ஆ. உன் சொந்த கதையைப்பற்றியோ சோக கதைப்பற்றியோ நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.முதலில் நீ அவர்களைப்பற்றி கூறு. எனக்கு வேறு வேலை நிறைய இருக்கிரது. உன் கதையைப்பற்றி பிறகு ஒரு நாள் சமயம் கிடைக்கும்போது தெரிந்து கொள்வோம்.”
   ” சீசர், முதலில் உனக்குப் பொருமை வேண்டும்.நீ அரசியல் தெரிந்தவன். முதலில் உனக்கு உன்னைப்பற்றி தெரிய வேண்டும். பிறகு உன் எதிரி யார் என்று தெரிந்திருக்க வேண்டும். 
உனக்கு உன் பலமும் தெரிந்து உன் பலவீனமும் என்ன என்று தெரிந்து பிறகு உன் எதிரியின் பலமும் தெரிந்து பலவீனமும் தெரிந்து அதற்கு தகுந்தாற்போல் வியூகம் அமைத்தால் போர்களத்தில் உனக்கு வெற்றி நிச்சயம்.
உனக்கு உன் பலமும் தெரியாது, பலகீனமும் தெரியாது. உன் எதிரியின் பலமும் தெரியாது, பலகீனமும் தெரியாமல் போர்களம் சென்றால் உனக்கு தோல்வி நிச்சயம். நீ அடி முட்டாள். உன் உயிரும் அல்லாது உன் ராஜியமும் பறி போய்விடும்.அரசியலில் இந்த பால பாடம் கூடவா உனக்கு தெரியாமல் போயிற்று.
   இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கில்லாடிகள். எதிரிகளை எங்கு அடிக்கவேண்டும் எப்பொது அடிக்க வேண்டும் என்பதில் எங்களை அடித்துக்கொள்ள இந்த ஈரேழு உலத்திலும் யாரும் கிடையாது. எனவே முதலில் எங்களை பற்றி தெரிந்து கொண்டால் தான் பிறகு நீ அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும்.”" சரி அப்படியானால் உங்களைப் பற்றி சுருக்கமாக சொல்”
                “ஆரம்பம் ஆனது மண்ணுக்குள்ளே”
     அடுத்த நாள் பூஜையில் ஆடம்பரமாக எழுந்துவந்தான் சந்திரமுகி. அதி காலையிலேயே சீசரும் அளவுக்கதிகமான ஆர்வாகக் கோலாறினால் கதை கேட்க அரசபையிலே தயாறாக  இருந்தார். அரசாங்க வேலையை எல்லம் ஒதுக்கி தள்ளி வைக்கப்பட்டன.அந்த தெய்வத் தாயையும் சேயையும் பற்றி அறிந்துகொள்ள அவருக்கு இருந்த ஆர்வம் சொல்லி மாளாது.
    எனவே நேரத்தை வீணடிக்காது சந்திரமுகி வந்தவுடன் சீசரே ஆரம்பித்துவிட்டார். ” சந்திரமுகி முதலில் அந்த மாதரசியைப்பற்றி ஆரம்பிக்கலாமே” என்றார். சந்திரரமுகி உடனே கடுப்பாகிப்போனான்.” அதற்குள் என்னைய்யா அவசரம். காலையில் ஏன் என் வயிட்றேரிச்சலை கொட்டிகொள்கிரீர். அமைதியாக நிதானமாக கதையைகேளும்.” கன்னி மேரியின் வரலாற்றை தன் வாயாலையே சொல்லவேண்டிய நிலைமை ஆகிவிட்டதை நினைத்து அவனுக்கு அவ்வளவு எறிச்சல்.ஒருவாறு கதையை ஆரம்பித்தான்.
       அரசே, தமிழ் நாட்டில் ஒரு கிரிஸ்துவ பழம் பாடல் உண்டு. அதாவது ” வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லா தாயே,
சந்தோஷமாகப்பாடி உம் தாழ்ப்பணியவே.
பூலோகம் தோன்றும் முன்னே ஓ பூரண தாயே
மேலோனின் உள்ளம் தன்னில் நீர் வீற்றிருந்தாயே”
“சீசர், இந்தப் பாடல் அமரத்துவம் வாய்ந்தது. நீ பார்த்த அந்தப்பெண் இந்த உலகம் அனைத்தும் கடவுள் படைக்குமுன்பே அவர் மனதில் வீற்றிருந்தவள். அவ்வளவு பேறு பெற்றவள் இந்தப்பெண்.இந்தப்பாடலை இயற்றிய புண்ணியவான் யாரோ? அவருக்கு பரம பிதாவின் . அனுக்கிரஹம் இருந்தாலன்றி இந்தக்கருத்துள்ள பாடலை எழுதி இருக்க முடியாது. இனி இந்தப் பெண்ணைப்பற்றி பிறகு சொல்கிறேன். முதலில் கடவுள் எவ்வாறு மனிதனைப் படைத்தார் என்று தெரிந்து கொள்” என்றான் சந்திரமுகி. எல்லோரும் கதை கேட்க ஆயத்தமானார்கள்.
     ” அன்றொரு நாள் பரலோகத்தில் பிதாவாகிய சர்வேசுரன் பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனிடமும் சுதனாகிய சர்வேசுரனிடமும் தான் உலகையும் மனிதனையும் படைக்கவிரும்புவதாகவும், அதுவும் மனிதனை தன் சாயலாக படைக்கப்போவதாகவும் அது பற்றி உங்கள் கருத்து என்ன” என்று கேட்டார். அதற்கு பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன், பிதாவைப்பார்த்து,
    “தேவரீரே சுவாமி,இப்படி ஒரு எண்ணம் தங்களுக்கு வேண்டாம்.ஏனெனில் நாம் படைக்கப்போகும் மனிதன் நன்றி கெட்டவனாகி நம்மை எதிர்ப்பான்” என்று தம் ஞானத்தால் உணர்ந்து கூறினார்.அப்பொழுது சுதனாகிய சர்வேசுரன், “பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா சுவாமி, தேவரீர் அவ்வாறு கூற வேண்டாம். நாம் பிதாவின் திருச்சித்தத்தை நிறைவேற்றுவோம்.  அவ்வாறு மனிதன் நன்றி கெட்டுப்போனால், நாம் சுதனாகிய சர்வேசுரன் மனிதாவதாரம் எடுத்து உலகத்திற்கு சென்று நம் ரத்தத்தினால் அவன் பாவங்களைக்கழுவி அவன் பாவங்களை மன்னித்து அவனை நம் மக்களாக பரம பிதாவிடம் ஒப்புக்கொடுப்போம்.” என்றார். அப்படி சுதனாகிய சர்வேசுரன் மனிதாவதாரம் எடுக்கும் பட்சத்தில் அவருக்கு ஒரு தாய் வேண்டுமல்லவா?
அதற்காக தம் பரிசுத்த தனத்திற்கு ஒரு சிறிதும் பங்கமில்லாமல் ஒரு தாயை அவர் தேர்ந்துகொண்டர்.அந்த பெண்ணை பிதாவாகிய சர்வேசுரன் தம் புத்திரியாக
ஏற்றுக்கொண்டார். பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் அந்த பெண்ணை தன் பத்தினியாக ஏற்றார்.
    இந்த மூவரின் பரிசுத்த கூட்டுறவில் தோன்றியவள் தான் இந்தப்பெண். இன்னும் கூட இந்த உலகமும் படைக்கப்பட்டிருக்கவில்லை, அந்த பரிசுத்த புண்ணியவதியும் படைக்கப்பட்டிருக்கவில்லை.
     அப்போது கடவுளுக்கு 12 விலாச சம்மனசுகளின் சேனை இருந்தது. ஒவ்வொரு விலாசம் என்பது அளவருக்கப்படாத கோடான கோடி எண்ணிக்கையால் ஆனது.அப்பொது எங்கள் 12 விலாச சேனைகளின் தலைவனாக இருந்தவர் பெயர் லூசிபர். அந்தக்காலத்தில் நாங்கள் எங்கள் அழகைப்பற்றியும் வலிமைபற்றியும் திறமைபற்றியும் மேன்மைபற்றியும் வசதிவாய்ப்புகள் பற்றியும் மிகுந்த கர்வம் கொண்டிருந்தோம்.
   ஒரு நாள் கடவுள் எங்களை அழைத்து அவரது மனித உலக படைப்பின் திட்டத்தை பற்றி அறிவித்தார்.அவளவு தான், லூசிபரும் அவனுடன் 3 விலாச சம்மனசுகளும் ” அவர் கடவுளே ஆயினும் அவர் மனிதாவதாரம் எடுத்தால் அவரும் சரீரமுள்ள நரனே ஆவார். அப்படியிருக்க அவர் எங்களிலும் தாழ்ந்த நிலைக்குப்போகும் பட்சத்தில் நாங்கள் எப்படி அவரை கடவுளாக ஆராதிக்க முடியும் ? ஏன் ஆராதிக்க வேண்டும்? ” என்று திமிர்த்தனமாய் நினைத்தது தான் தாமதம்.எங்கள் என்னங்களை புறிந்துகொண்ட எல்லாம் வல்ல கடவுள் எங்களை உடனே சபித்துவிட்டார்.
     எங்கள் அழைகையும் வலிமைகளையும் பதவி பட்டங்களையும் உடனே பறித்துவிட்டார். எங்களுக்கு பேய்கள் என்றும் சாத்தான்கள் என்றும் பெயர் வந்தது. கண்டவர் யாவரும் அருவருத்து பயந்து ஓடும் அவலட்சனமான விகார உருவங்கள் எங்களுக்கு ஏற்பட்டது. கடவுள் நீதமுள்ள 9 விலாச சம்மனசுகளின் சேனைக்கும் தலைவனாக மிக்கேல் என்னும் அதிதூதரை நியமித்தார்.
    எங்களிலும் சிலர் மித வாதிகளாகவும் பலர் தீவிரவாதிகளாகவும் இன்னும் சிலர் அதி தீவிரவாதிகளாகவும் இருந்தனர். தீவிரவாதிகளையும் அதி தீவிரவாதிகளையும் உடனே நரகத்தின் அடி ஆழத்தில் போட்டு புதைத்து வைத்து எக்காரணத்தையும் முன்னிட்டு வெளியே வரக்கூடாதென கடுமையான கட்டளை கொடுத்தார்.லூசிபரையும் அவன் தலபதிகளையும் நரகத்தின் அடி ஆழத்தில் போட்டு புதைத்து வைத்துள்ளார்.
     எங்களைப்போன்ற சாதாரணமான சாத்தான்கள் உடனே ஆண்டவர் பாதத்தில் விழுந்து கதறி அழுது எங்களை மன்னிக்கும்படி வேண்டினோம்.எங்கள் மேல் இரக்கம் கோண்ட ஆண்டவர் எங்களுக்கு நரக தண்டனை கொடுத்திருந்தாலும் உலகம் படைக்கப்பட்டு மீண்டும் முடியும் வரை இந்த உலகிலேயே கெட்ட ஆவிகளாய் சுற்றிதிரிய அனுமதித்தார்.
    பிறகு ஆண்டவராகிய கடவுள் எங்களிடம் கூறியதாவது.” நாம் படைக்கும் மனிதன் நமது சாயலாகப்படைக்கப்படுவதாலும், நமது மூச்சுக்காற்றால் படைக்கப்படுவதாலும் அவன் நம் மகன் எனப்படுவான்.அவனை சோதிக்க வேண்டியது உம்முடைய பொறுப்பு.அவனை தொடவோ சாகடிக்கவோ உங்களுக்கு உரிமை கிடையாது.” என்றார். ” என்றோம்.
    அப்படியானால் எங்கள் பழைய வல்லமையை கொடுங்கள்.நாங்கள் செய்யும் மாயா ஜாலங்களால் அவனை மயக்கி அவனை எங்கள் வசம் ஈற்போம்”என்றோம். கடவுள் தம் மக்கள் எனப்படும் மனிதர் மேல் நம்பிக்கை வைத்து எங்கள் சவாலை யேற்றுக்கொண்டு எங்களுக்கு பழைய வல்லமைகளை கொடுதார். அன்றிலிருந்து ஆரம்பாயிற்று எங்கள் ஆட்டமும் அரசாங்கமும்.இனிமேல் உலகத்திலெங்கும் எப்பொதும் எங்கள் ஆட்சி தான்.
    அவர் படைக்கப்போகும் மனிதர்களை கெடுத்து குட்டிசுவராக்கி அவனை
நரகத்தில் சேர்ப்பதுதான் எங்கள் வேலையே !.அரசர் சீசரும் மந்திரிபிரதானிகளும் இந்த கதைகளைக்கேட்டு கொண்டு வந்தார்கள்.பிறகு என்ன நடந்தது என்றார் அரசர்.
    ஆண்டவர் பிற்பாடு வானம், பூமி,சூரியன் சந்திரன் விண்மீன்கள் கோள்கள் போன்ற யாவற்றையும் படைத்து இந்த பூமி மற்றும் பிற உயிர்கள் யாவும் வசிக்க தகுந்ததாக தகுந்த  ஏற்பாடுகள் எல்லாம் செய்தபிறகு மனிதனை படைக்க ஆரம்பித்தார்.நாங்களும் கடவுள் இந்த உலகில் எவ்வாறு மனிதனை படைக்கப் பொகின்றார் என்று பார்க்க ஆவல் கொண்டு அவர் அருகில் சென்று பார்த்தோம்.
     இங்கு நாங்கள் ஒரு விஷயத்தை சொல்ல மறந்து போனோம். எந்த வினாடியில் நாங்கள் சபிக்கப்பட்டோமோ அந்த விநாடி முதல் கடவுளின்
திருமுக தரிசனத்தை பார்க்கும் பாக்கியத்தை சுத்தமாக இழந்து போனோம்.அவரது பிரசன்னத்தை மட்டுமே அறிய முடியும் ஆனால் அவரது திருமுகத்தை எங்களால் பார்க்கவே  முடியது.இந்த விழயத்தில் மனிதர்கள் பாக்யவான்கள்.
    இந்த பூமியில் ஏதேன் தோட்டத்தில் அப்போது பரலோகம் இறங்கியிருந்தது. கடவுள் இந்த ஏதேன் தோாட்டதில் ஒரு கடினமான பாறையை தொடவே அது இளகி களி மண் போல் ஆனது. அவர் அதை பிசைந்து மனித உருவம் கொடுத்து தம் மூச்சுக்காற்றை அவன் நாசியில் ஊதி அவனை உயிர்ப்பித்தார். ஆண்டவர் ஆதாமைப்படைத்துவிட்டார். இந்த பூமியில் மனித இனம் தோன்றிவிட்டது.அவன் மனித ஜென்மம் ஆயினும் கடவுலின் மகன் என்னும் பேறு பெற்றதால் அவன் ஒளி வீசினான்.
   அவன் முகம் ஜொலித்தது. அவன் கண்கள் ஒளியால் மின்னின. ஒளி வெள்ளம் அவன் வாய்க்குள்ளும் பற்களினூடும் புகுந்து வெளி வந்தன. அவன் கடவுளைப்பார்த்து மிகவும் பிரம்மித்தான்.
    ஒரு மகன் தன் தந்தையுடன் அன்பு கூர்வதுபோல் அவன் ஆண்டவரின் மேல் சாய்ந்தான்.ஆண்டவரும் தன் செல்லப்பில்லையை அழைத்துக்கொண்டு கடல்கலையும் ஆறுகளையும் ஏறிகளையும் மலைகலையும் சுற்றிக்காண்பித்தார். அடடா…!… இந்த உலகம் பாவமே இல்லாத போது எத்தனை அழகாக இருந்தது தெரியுமா?. இன்றைய உலகில் இன்று மிக மிக அழகான சொர்கத்துக்கு இணையான என்று சொல்லும்படியான இடம் கூட அவர் படைத்த அன்றைய நாட்களில் மிக சாதாரணமாகத்தான் இருந்தது.கடவுலுடைய படைப்பில் அவர் எல்லாம்மே நல்லதென்று கண்டார்.
    அத்தகைய நீல நிற கடல்கலையும் பச்சை நிற புல்வெளிகளையும் மலைகளையும் மரங்களையும் செடி கொடிகளையும் இன்றைய மனித தன் கற்பனையில் கூட காண முடியாது. அவை எல்லாம்மே பரிசுத்தமாய் ஒளிர்ந்தன. ஆண்டவராகிய கடவுள் தான் படைத்த எல்லா படைப்புகளையும் அவனுக்கு காண்பித்து வர அவன் அவைகளுக்கு தன் புத்திக்கு ஏற்றபடி
பெயர் வைத்து அழைதான்.
     எல்லா ஜீவராசிகளும் ஆதாமுக்கு நண்பர்கள் ஆயின. இன்றைய கொடிய விலங்குகள் கூட அன்றைக்கு புல் பூண்டுகள் உண்டு வாழ்ந்து நட்பு பாராட்டின.
பகை என்ற வார்தைக்கு அப்போது பொருள் கிடையாது.இருப்பினும் ஆதாமுக்கு ஏதோ குறை அவன் முகத்தில் தோன்றியது.
  எல்லாம் சரிதான். எல்லாம் நன்றாகத்தன் இருக்கிறது. ஆனால் யாரும் என் போல் இல்லையே, அது தானே கஷ்டமாக இருக்கிறது என்று மனதில் ஏங்கினான்.இந்த ஏக்கம் மனிதருக்குமட்டும் அன்று. உலகில் உள்ள எல்ல உயிரினங்களுக்கும் ஏற்ற துணை வேண்டும்.
  கடவுளுக்கு இது தெரியாதா என்ன?. எனவே அவர் ஆதாமின் ஏக்கத்தை புறிந்து கொண்டார். அவனுக்கு ஆழந்த் தூக்கம் வரச்செய்து அவன் வலப்பக்க விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து அதனால் ஏற்பட்ட குழியை சதையால் மூடினார்.
            “வந்தாளே மகராசி.”
    நாங்களும் கடவுளின் அருகில் சென்று அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தோம்.அவரது உள்ளங்கையில் ஒரு சிறிய கைக்கு அடக்கமான அளவில் ஆதாமின் விலா எலும்பு காணப்பட்டது. ஆண்டவராகிய கடவுள் தம் உள்ளங்கை அளவே உள்ள ஆதாமின் விலா எலும்பை அதே அளவுள்ள ஒரு பெண்ணாக படைத்துவிட்டார். பிறகு அந்தப்பெண்ணை தரையில் வைத்தார்.
  நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த சிறிய பெண் சட சட வெண்று வளர்ந்து ஆதாம் அளவுள்ள பெண்ணாக வளர்ந்து விட்டாள். ஆண்டவர் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு வந்து ஆதாமிடம் கொடுதார்.
      இந்த இடத்தில் சந்திரமுகி கதையை சற்று நேரம் நிறுத்தினான். அரசரும் மந்திரிப்பிரதானிகளும் ஒருவரை ஒருவர் அர்த்த புஷ்டியுடன் பார்த்துக்கொண்டனர். அரசர் கேட்டார், ” ச்ந்திரமுகி, பெண் என்றால் தான் கதையே ஸ்வாரஸ்யம் அடைகிறது இல்லையா? மேலும் ஆணும் பெண்ணும் நிர்வாணமாக என்றால் கதையே சூடு பறக்கும் இல்லையா?” என்றர்.
      உடனே மந்திரி ” சந்திரமுகி, எனக்கொரு சந்தேகம். கடவுள் ஆதாமையும் ஏவாலையும் நிர்வாணமாகத்தானே படைத்தார். அவர்களுக்கு தொப்புல் இருந்ததா?” என்றார். சீசர் சற்றே நகைத்துக்கொண்டார். சந்திரமுகிக்கும் நகைப்பு வந்தது. ” உங்கள் புத்தியும் நோக்கமும் எனக்கு நன்றாகவே புரிகிறது. உங்களுக்கு கதை கேட்க்கும்போதே சல்லாப உண்ர்ச்சி ஏற்படுகிறது என்றால் நேரில் பார்த்த எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று தானே நீங்கள் நினைக்கிறிர்கள் ?
      இங்கு நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாதிரியான சமாச்சாரங்கள் எல்லாம் உலகத்தில் வாழும் சரீரம் உள்ள மனிதன் மற்றும் சகலவிதமான ஜீவராசிகளுக்கு மட்டுமே.
  ஆண் மற்றும் பெண் இனக்கவர்ச்சி தேவையான ஒன்று. ஆண்டவன் இந்த உலகில் எல்லா படைப்புகளிலும் ஆண் பெண் என பேதங்களை வைத்திருப்பதாலேதான் அதன் அதன் வாரிசுகள் தோன்றுகின்றன.
இது ஆண்டவன் கட்டளையாகும் இந்த உலகம் முடியும் வரை இது தொடர வேண்டும். ஆணோ பெண்ணோ உடல்வுறவுக்கு தகுதி இல்லமல் போனால் அந்த பிறவி வீண். ஆனால் எங்களைப்போன்ற ஆவிகளுக்கும் சரி, சம்மனசுகளுக்கும்சரி.  சரீரம் இல்லாததினால் எங்களுக்குள் இனக்கவர்ச்சி கிடையாது. இவர்களைப்பொருத்தவரையில் இது தேவையும் அல்ல. ஆவிகளும் சம்மனசுகளும் ஒவ்வொன்றும் தனித்தனி படைப்புகளே. பரலோக ராஜ்ஜியத்தில் இனவிருத்தி இல்லை. எல்லாம் இந்த பூலோகத்தோடு சரி. பரலோகத்தில் அனைத்தும் ஆண்டவருடைய ஐக்கியத்தில் உள்ளதால் ஆண்டவரைத்தவிர வேறு சிந்தனையே இருக்காது.
எனவே ஆவிகளாகிய எங்களுக்கு இந்த ..ஊ..லலல்லலா… போன்ற சமச்சாரங்களும் கிடையாது. ஐ லவ் யூ சொன்னாலே பாடல்களும் கிடையாது.”.என்றான் சந்திரமுகி. அப்பொது தளபதி கேட்டார், ” அப்படியானால் அந்த தொப்புல் சமாசரம்?” சந்திரமுகி நகைத்து கூறினான் ,” அடே மடையா, தாய் வயிறினின்று பிறக்கும் உயிர்களுக்குதான் தொப்புல் இருக்கும்.”
   சற்று நேரம் நகைப்பினூடே சென்றது. அரசரும் ஆர்வம் தாங்க மாட்டாதவறாய்,” பிறகு என்ன நடந்தது?” அப்போது ஆதாம் அவன் குகையினின்று வெளியே வந்தான். ஏவாளைப் பார்த்தான். இவள் தன் விலாவிலிருந்து எடுக்கப்பட்டவள் என்று உணர்ந்து அவளுக்கு ஏவாள் என்று பெயர் இட்டான். அப்போது கூட ஆதாம் அவளை தொடவே இல்லை.
    அந்த பரலோக மாட்சியுடன் ஆண்டவருடன் சேர்ந்துகொண்டு ஒரே ஒளிப்பிரவாகமாகவே அவர்கள் தோன்றினர். அந்த ஏதேன் தோட்டம் அப்போது பரலோகமாகவே இருந்தது..
               “ஞானப் பழம்”
   கடவுள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தம்முடைய பரலோக மட்சிமையை எல்லாம் சுற்றி காண்பித்து வந்தார். அங்கு ஒரு அழகிய நீரோடை வந்தது. அத்னூடே அவர்கள் செல்லும் போது அது அழகிய பூங்காவுக்கு இட்டுசென்றது.
அங்கு அவர்கள் ஒரு வினோத மரத்தை பார்த்தார்கள். அதன் பழங்கள் மிகவும் வித்யாசமாக இருந்தன. ஒன்றை சுற்றி நான்கு என்ற வகையில் பழங்கள் கொத்துகொத்தாய் இருந்தன. ஏறக்குறைய அவைகள் ஆப்பில் பழம் போன்றும்,அல்லது சற்றே முந்திரி பழம் போன்றும் அடுக்கு அடுக்காயும் கொத்து கொத்தாகவும் தோன்றின.
      மேலும் அவைகள் அழகுள்ளதாகவும் சுவைத்துப் பார்க்கத்தோண்றும் ஆவலை தூண்டுவதாகவும் இருந்தன. ஒவ்வொரு பழமும் அத்திப்பழம் போன்று சதைபற்று மிகுந்ததவும் செவ்வரி ஒடிய கோடுகள் மேலிருந்து கீழாய் ஓடி ஒரே சென்னிரமாய் காட்சி அளித்தன. அம்மரத்தின் இலைகள் சின்னன்சிறியதாய் அடுக்கடுக்காய் நிறைந்து இருந்தன.அவைகள் காண்போரை கண் சிமிட்டி அழைப்பது போல் இர்ருந்தன.
     ஒவ்வொரு இலையும் பிரகாசமாய் மின்னிக்கொண்டிருந்தன. நடுமரம் ஏறக்குறைய பேரீட்சம் பழ மரப் பட்டைகள் போலவும் தூரத்திலிருந்து பார்க்கும்போது மரத்தின் பரந்து விரிந்திருந்த மேற் பகுதியும் குறுகி இருந்த அடிப்பகுதியும் சேர்த்து ஒரு பிரமிடை தலை கீழாய் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
    ஆண்டவர் அவர்களை அழைத்து,” இதோ பாருங்கள், இந்த மரம் நன்மை தீமை அறிவிக்கும் ஞானப்பழ மரம். நீங்கள் இந்த ஏதேன் தோட்டத்தில் எந்த மரத்தின் பழத்தையும் உண்ணலாம். ஆனால் இந்த ஞானப்பழத்தை மட்டும் உண்ணக்கூடாது.  மீறி உண்டால் நீங்கள் சாகவே சாவீர்கள்” என்றார். பிறகு ஆண்டவர் அவர்களை வேறு இடங்களுக்கு அழைத்துக்கொண்டு போனார். பிறகு ஆதாமையும் ஏவாளையும் தனியே விட்டுசென்றார். போகும் முன் எங்களை நோக்கி நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அர்த்த புஷ்டியான சைகை மூலம் தெரிவித்தார். இவ்வளவு போதாதா எங்களுக்கு. ஆண்டவராகிய கடவுள் அவர்களை சோதிக்க அனுமதித்துவிட்டார் என்று நாங்கள் புரிந்துகொண்டோம்.
” விபரீத விளையாட்டு.”
      இனிமேல் நாங்கள் எங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான். பாம்பாக மாறி எங்கள் தலைவன் வந்தான். அப்போது பாம்பு எப்படி இருந்தது தெரியுமா? இப்போது நாம் காணும் பாம்பின் உருவம் இருந்தாலும் வாலுக்கு அருகில் பல்லிக்கு இருப்பது போல் இரண்டு கால்கள் இருந்தன.
    இந்தப்பாம்பு ஆதாமுக்கு எவ்வளவு நெருங்கி வந்தாலும் அவனை மசிய வைக்க முடியவில்லை. ஏனெனில் அவனது மனது சதா ஆண்டவரையே நினைத்துக் கொண்டிருந்தது. அவன் மனது ஆண்டவரை எப்பொதும் நினைத்துக்கொண்டிருந்ததாலும் அவன் ஆண்டவரின் மூச்சிக்காற்றினால் நேரிடையாகப் படைக்கப்பட்டிருந்ததாலும் இனிமேல் இவனை சுற்றி பயன் இல்லை என்று பாம்பு அவனை விட்டுவிட்டு ஏவாளை சுற்றி வர ஆரம்பித்தது.
    ஏவாள் ஆதாமின் சரீரத்திலிருந்து படைக்கப்பட்டவள் ஆகையால் இவள் சரீர இச்சைக்கு ஆட்ப்படக்கூடியவள் என்று எண்ணி அவளையே சுற்றி சுற்றி வந்தது.
     அவளும் இந்த வினோதமான பிராணியாக இருந்த பாம்பைப்பார்த்து அதனுடன் பழகினாள். பாம்பு அவளை தனியே அந்த ஞானப்பழ மரத்தடிக்கு அழைத்து சென்றது.
    ” ஏவாள் இந்தப் பழம் எவ்வளவு இனிமையனது தெரியுமா? சாப்பிட்டுதான் பாரேன்.” என்றான். அதற்க்கு அவள் ” எனக்கும் தான் ஆசை . ஆனால் கடவுள் தான் அதை உண்ண கூடாது என்று கட்டளை இட்டுள்ளாரே” என்றாள் அவள். பாம்பு நகைத்தது.
   “அட மடப் பெண்ணே, அவர் ஏன் ஆப்படி கூறினார் தெரியுமா? நீ இதைத்தின்றால் நீங்களும் கடவுள் போல் ஆகி அவருக்குப் போட்டியாய் வந்து விடக்கூடாது அல்லவா? அதற்காகத்தான்.” என்றது பாம்பு. “அப்படியானால் நாமும் கடவுள் ஆகிவிடலாமா? அதைத்தின்றால் நாங்கள் சாகவே சாவோம் என்றல்லவா கடவுள் கூறி உள்ளார்” என்றாள் அவள்.
     ” அடிப்பெண்ணே , சாவதென்றால் என்னவென்று உனக்குத்தெரியுமா? அது என்ன ஒரு இனிமையான அனுபவம் தெரியுமா?” என்றது பாம்பு நயவஞ்சகமாக. ” அப்படியா சொல்கிறாய்.  அப்படியானால் அதை தின்று பார்த்துவிட வேண்டியதுதான்.” என்று ஆதாமை அழைத்து பாம்பு தனக்கு கூறிய எல்லாவற்றையும் கூறினாள். அவனோ ” அடிப்பெண்ணே,நமக்கு கடவுள் கொடுத்த கட்டளையை தவிற வேறு வார்த்தை கிடையாது.
  சாவு என்றால் என்னவென்று உனக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது.ஆகவே நமக்கு வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு” என்றான் ஆதாம். ” போங்க அன்பே, உங்களுக்கு ஒன்றுமே தெரியாது.சொன்னாலும் புரியாது.
      உங்களுக்கு என் மேல் அன்பே கிடையாது” என்று அவன் கழுத்தை கட்டிகொண்டள். அந்த ஸ்பரிசம் கூட ஆதாமை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் விடாப்பிடியாக மிகவும் பிடிவாதமாக இச்சைக்கு ஆட்பட்டு அப்பழத்தை உண்ண கையை நீட்டி பழத்தைப்பறிக்க எத்தனித்தாள். அதற்கு தோதாக பாம்பும் சரசர என்று மரத்தின் மீது ஏறி அந்த பழமுள்ள கிளையை அவள் கைக்கு எட்டும்படி செய்தது.
” வினாசகாலே விபரீத புத்தி.”
    அதாவது மனிதனுக்கு கெட்ட காலம் என்னும் நேரம் வரும்பொழுது அவனது புத்தியும் அதற்குத்தகுந்தாற் போல் விபரீதமாக வேலை செய்கிறது.விதி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.அவள் ஞானப்பழத்தை பறித்தாள்…. அவளும் உண்டாள்….. ஆதாமையும் உண்ண வைத்தாள்….. அவனும் உண்டான்….. அவ்வளவு தான்….வந்தது வினை….. விளைந்தது விபரீதம்…. வானம் கிடுகிடித்தது…
பூமி அதிர்ந்தது…. உலகை இருள் கவ்விற்று…. ஆதாமும் ஏவாளும் தங்கள் உணர்வில் உடலில் ஏதேதோ மாற்றங்களை உண்ர்ந்தார்கள் .தாங்கள் ஒவ்வொருவரையும் ஒரு மெல்லிய போர்வை போல் மூடி இருந்த ஒளி வெள்ளம் விலகிச்செல்வதையும் சில்லென்ற காற்றும் குளிர் காற்றாய் வீசுவதாகவும் உணர்ந்த்தார்கள்.
    எப்போதும் இல்லாத குளிர் இப்போது ஏன் வீசுகிறது? “ஆ ஆ இதோ என் சரீரம் என் கண்களுக்கு தெரிகிறது.அதோ என் ஏவாள். அவள் ஏன் சட்றும் வெட்க்கமில்லமல் முழு நிர்வாணமாக நிற்கிறாள்.என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லையே .!. ஐய்யோ …ஆண்டவா எனக்கும் என் மனைவிக்கும் என்னவாயிற்று…… நாங்கள் நிர்வாணிகள்…. அடக்கடவுளே நாங்கள் மோசம் போய்விட்டோம்.  இத்தனைக்காலமும் இல்லாத வெட்க்க உணர்வு இப்போது எப்படி வந்தது. ஆஆ…. நாங்கள் பரிசுத்தத்தை இழந்துவிட்டோம்.பாவம் செய்துவிட்டோம் ஆண்டவன் கட்டளையை மீறி விட்டோம். இதோ இத்தனை காலமாய் எத்தனை அன்பாய் பழகிய சிங்கம் புலி கரடி யாவும் பயங்கரமாய் முறைக்கிண்றனவே, சீறுகின்றனவே ஐயகோ நான் என்ன செய்வேன்,
    எல்லாம் அந்தப் பாம்பால் வந்த வினை. அடிப்பாவி…. சண்டாளி…. அந்த பழத்தை தின்ன வேண்டாம் என்று சொன்னேனே கேட்டாயா?அட என் பேச்சைத்தான் கேட்க்கவில்லை, கடவுள் கட்டளையை மீற எப்படி உனக்கு தைரியம் வந்தது? ஆஹா … நான் எப்பேற்பட்ட நிர்மூடன்.வருங்கால சந்ததிகள் என்னை கேவலமாகப் பேசுவார்களே” என்று ஓலமிட்டு அழுதான்.என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது. எல்லாம் முடிந்து விட்டது. பழம் தின்ன பாவம் அவர்களை இனி சும்மா விடாது.
” பயங்கரம் இனிமேல்”
” ஆதாம் என் அன்பே, என் மீது கோபம் வேண்டாம். அந்தப் பாம்பின் பேச்சைக்கேட்டு ஏமாந்து போனேன். என்னை மன்னித்துவிடு.” என்று ஓ….வென்று பெரும் குரலெடுத்து அழுதாள்…அழுதாள்…. அழுதுகொண்டே யிருந்தாள். பின்பு அவள், ” ஆதாம் என் அன்பே, என்னை மன்னிக்க மாட்டாயா, இந்த உலகில் நீயும் நானும் தானே இருக்கின்றோம், எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். எனக்கு ஒரே பயமாய் இருக்கிறது.” என்றுதன் கணவன் ஆதாமை கட்டிபிடித்துக்கொண்டு அழுதாள்.
    ஆதாமுக்கு வந்ததே கோபம் . அது ஆத்திரமாக வெடித்தது. “ஆஆ, ஐய்யோ, அடிப்பாவி சண்டாளி, உன்னால் எல்லாம் இழந்தேன், அந்த சாத்தான் தானே உன்னை ஏமாறினான், அந்த சாதானையே போய் கட்டிக்கொண்டு அழு, என் முகத்திலேயே விழிக்கதே போ” என்று அவளை தள்ளி விட்டான்.
     அவள் பெரும் குரளெடுத்து அழுது புலம்பினாள். பெண் புத்தி பின் புத்தி ஆயிற்று. இத்தனையும் பார்த்துக்கொண்டிருந்த சாத்தான் யேதுமே அறியாத அப்பாவி போல் நின்றுகொடிருந்தான்.
     அதைப்பார்த்த ஏவாள் அவனை பொறிந்துதள்ளி விட்டாள். ” ஏன் ஐய்யா சாத்தானே, நாங்கள் உனக்கு என்னையா பாவம் செய்தோம்? எங்களை இப்படி நீ ஏமாற்றலாமா? இது நியாயமா? “என்றாள். கட கட என்று சிரித்தான் லூசிபேர்.பயங்கர தோற்றமுள்ள அரக்கனாய் உரு மாறினான்.
    ஆதாமும் ஏவாளும் அலறினார்கள்.” பெண்ணே என்னைக்கண்டு பயமா? இதோ பார் … நன்றாகபார். ஒரு காலத்தில் என் அழகென்ன? அறிவென்னா ? ஆற்றலென்ன?நான் வாழ்ந்த வாழ்க்கை என்ன? ஐய்யோ … இன்று என் நிலையை பர்த்தாயா ?.. எல்லாம் போயிற்று. எல்லாம் போயிற்று.
    எங்கள் இன்ப வாழ்க்கை போயிற்று. எங்கள் சொர்க்கம் போயிற்று…இப்போது பார்…எங்கள் வாழ்க்கையே நரகமாயிற்று. எங்கள் உலகமும் நரகமாயிற்று…இதற்க்கெல்லாம் யார் காரணம்? யாரால் வந்த வினை? எல்லாம் உங்களால் வந்த வினை. நீ…. நீங்கள் காரணம். இந்த மனித ஜென்மங்கள் காரணம். ஆண்டாண்டு காலமாய் கோடானுகோடி காலமாய் யுகம் யுகமாய் கடவுளோடு நாங்கள் சகல சௌபாக்கியங்களையும் அனுபவித்து வந்த எங்களுக்கு இன்றைய நிலை என்ன என்று தெரியுமா உங்களுக்கு?.அவலட்சணம், அருவருப்பு, அசிங்கம், அசூசி, இத்யாதி ..முடிவில்லாத நெருப்பு.
   அதற்க்குப்பழி வாங்கத்தான் உங்களை கடவுளிடமிருந்து பிரித்து உங்கள் பிறவியை சேர்ந்த யாவரையும் எங்கள் இடத்திற்கு கூட்டிசெல்லத்தான் இதனை நாடகமும் நடத்தினேன். இப்போது புரிகிறதா நான் யாரென்று?” என்று வெறிக்கூச்சல் போட்டு சிரித்தான் லூசிபெர். மீண்டும் “இந்த உலகதில் நாங்கள் யாவரையும் நிம்மதியாய் இருக்க விடப்போவதிலை.
   அதற்காக நாங்கள் எல்லா மாய வித்தைகளையும் செய்வோம்.எங்கள் பேச்சை நம்பும் எவரும் உருப்படவே முடியாது.அந்தக்கடவுள் மட்டும் இந்த வுலகத்திற்கு மனிதாவதாரம் எடுத்து வரட்டும். அப்போது வைத்துக்கொள்கிறேன் என் கட்சேரியை.”. என்றான்.
    மீண்டும் லூசிபேர் பாம்பாக மாறினான் .” ஐய்யோ அத்தான், எனக்கு பயமாக இருக்கிறது” என்று ஆதாமின் மார்பின் மீது சாய்ந்து மயக்கமுற்றாள்.அதற்கு லூசிபேர் ” ஆஹா பெண்ணே அதற்குள் பயந்தால் எப்படி? பயங்கரம் இனிமேல்தானே இருக்கிறது” என்றான்.
” படைத்தவனே எடுத்துக்கொண்டாண்டி மானே வளர்த்தவனே பறித்துக்கொண்டாண்டி”
இதற்குள் மாலை ஆயிற்று.அந்தி சாயும் நேரத்தில் ஆண்டவராகிய கடவுள் ஏதேன் தோட்டத்திற்குள் வந்து, ” ஆதாம்… ஆதாம்” எனறு அழைத்தார்…
   எப்போதும் தகப்பனைகண்ட மகன் போல் துள்ளி வரும் ஆதாம் பதிலே பேசவில்லை. ” ஆதாம் என் முன்னே வா” என்றார் ஆண்டவர்.
அதற்க்கு ஆதாம் ” ஆண்டவரே, எனக்கு.பயமாய் இருக்கிறது”…என்றான்.
” ஏன் ?”
” நாங்கள் நிர்வாணிகளாய் இருக்கின்றோம். எங்களுக்கு வெட்க்கமாய் இருக்கிறது”,
” நீங்கள் நிர்வாணிகளாய் இருப்பதாக உங்களுக்கு சொன்னது யார்”?
“ஆண்டவரே, நாங்கள் பாவம் செய்தோம்.”
” ஆ ஹா…நாம் உங்களுக்கு விலக்கியிருந்த ஞானப்பழத்தை உண்டீர்களா?”
” ஆம் “
” ஏன் உண்டாய்”
” ஆண்டவரே, தேவரீர் எனக்கு மனைவியாய் கொடுத்த ஏவாள் என்னை ஏமாற்றி கொடுத்துவிட்டாள். நானும் உண்டு விட்டேன்.”
” ஏவாளே .. நீ ஏன் இவ்வாறு செய்தாய்?”
” ஆண்டவரே. அந்த நயவஞ்சகப் பாம்பு என்னை நன்றாக ஏமாற்றி விட்டது”.
    பிறகு அந்த பயங்கரம் ஏற்ப்பட்டது. ஆண்டவராகிய கடவுள் ,” நாம் செய்யாதே என்று கட்டளையாக கொடுத்ததை நீங்கள் செய்தீர்கள். ஆகவே நீங்கள் எமக்கு கீழ்ப்படியாமை என்னும் பாவம் செய்தீர்கள்.எனவே கீழ்படியாமை என்னும் பாவமே உலகில் தோன்றும் எல்லா பாவங்களுக்கும் ஆதார பாவமாய் இருக்கும்.” அவர் மேலும் கூரினார் .
     ” ஆதாமே, நீ நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைத்து உன் மனைவி மக்களைக் காக்கக்கடவாய்”என்றும் ஏவாளை நோக்கி” நீ பிள்ளை பெறும்போது நாம் உன்னை கைவிட்டுவிடுவோம். நீ வேதனையோடு பிள்ளை பெறுவாய்” என்றார்.
   பிறகு பாம்பைப்பார்த்து “ஆ பொல்லாத பாம்பே, இதற்க்கெல்லாம் காரணம் நீ !. .எனவே மனிதர் முதல் மிருகம் வரை எல்லவற்றாலும் நீ வெறுக்கப்படுவாய்.நீ உன் வாள் நாள் முழுவதும் உன் வயிற்ராலேயே ஊர்ந்து செல்வாய்.” என்றார்.மேலும் அவர்” ஆதாம் ஏவாள் நீங்கள் நாம் உங்களுக்கு கொடுத்த கட்டளையை மீறி நமக்கு எதிராகபாவம் செய்ததால் நீங்கள் இந்த மன்னிலையே வாழ்ந்து மடியுங்கள். மன்னிலிருந்து வந்த நீங்கள் மன்னுக்கே திரும்பி செல்வீர்கள்.  நோவும் சாவும் உங்களை ஆட்சி செய்யும்.” என்றார். செய்த தவறுக்கு ஆண்டவரின் நீதி அவர்கள் மேல் பயங்கரமாக இறங்கியது, ஆண்டவர் மிகுந்த கோபமுற்று,ஆதாமையும் ஏவாளையும் சொர்கபுரியிலிருந்து உடனே வெளியேற உத்திரவிட்டார்.
      அவ்வளவு தான் !…நெருப்பு ஜுவாலையுடன்கூடிய பட்டயத்தால் ஒரு சம்மனசுஅவர்களை ஓட ஓட விரட்டியது. பரலோகம் ஏதேன் தோட்டத்தை விட்டு மேலே கிளம்பியது.ஆதாம் எதை எதையோ பிடித்துக்கொண்டு தன்னை சொர்கத்திலேயே நிலை நிறுத்திக்கொள்ளப் பார்த்தான்.ஆனால் அவன் கையில் பிடிபட்டது ஒரு ஆலிவ் மரக் கொப்பு தான். அதுவும் உடைந்து அவன் கையோடு வந்துவிட்டது. பரலோகம் மேலேறி சென்றுகொண்டே இருந்தது. ஆனால் பரலோகத்திலிருந்து பூலோகத்துக்கு கொண்டுவர அனுமதிக்கப்பட்டது அந்த உடைந்து போன ஆலிவ் மரக்கொப்பு மட்டுமே.
    ஆதாமும் ஏவாளும் பூமியில் ” தொப்பென” விழுந்தார்கள். அவர்கள் எழுந்து பார்த்தபோது பரலோகம் சூரியனைவிட மிகத்தொலைவில் ஏறிபோய் இருந்தது.ஆதாம் கொண்டுவந்திருந்த அந்த ஆலிவ் மரக்கொப்பு பூமியில் நிலைனின்று விட்டது. [அந்த இடமே இன்றைய ஆலிவ் மலை.ஜெத்செமனித்தோட்டம் இங்கு தான் உள்ளது.இங்குதான் யேசு நாதர் காட்டிகொடுக்கபட்டார்.இதைப்பற்றிய கதை பிறகு சொல்வேண்] அதுவரை கதை கேட்டுவந்த அகஸ்டஸ் சீசர், ” அடடா… எவ்வளவு சோகம்.. எவ்வளவு சோகம்” என்றார்.” அதற்கு சந்திரமுகி” அரசே ..கதை கேட்ட உங்களுக்கே இவ்வளவு சோகம் என்றால் அதை அனுபவித்துப்பார்த்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எவ்வளவு துன்பம் ஏற்பட்டிருக்கும்.” என்றான். சோகம் விலகாத சீசர் ” பிறகு என்ன நடந்தது?” என்றார்.
“உலகே மாயம் வாழ்வே மாயம்”
     அன்று லூசிபேர் கூறியது போல் உலகின் பயங்கரம் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புறிய ஆரம்பித்தது. இந்த உலகில் பரலோக பாக்கியம் இருந்த வரை ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பசி ஏது? பட்டினி ஏது. தாகமேது ? துன்பமேது?
மனித உடலின் உபத்திரங்களும் உற்பாதங்களும் அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அந்த பாக்கியம் பறி போன பிறகு மேற் சொன்ன யாவும் ஒவ்வொன்றாகப் புறிய ஆரம்பித்தது. இன்பம் என்றால் என்ன, துன்பம் என்றால் என்ன என்று அனுபவம் உணர்த்தியது. பசியும் தாகமும் அவர்களை ஓட ஓட விரட்டியது எத்தனை முறை கூக்குரலிட்டு அழுதாலும் பயனில்லை.ஆண்டவரே, ஆண்டவரே போதும் …போதும்.. எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இயன்ற மட்டும் அழுதும் புலம்பியும் மயங்கி மயங்கி சாய்ந்தார்கள்.
     இனி எவ்வளவு அழுதும் பயனில்லை.புலம்பியும் பயனில்லை.மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.ஆனது ஆகிவிட்டது.ஆதாமும் தன் மனைவி ஏவாளை மன்னித்து ஏற்றுக்கொண்டான் எல்லாம் கொஞ்ச நேரம் தான்.
     பிறகு வலி வருத்தம் நோவு என்று வரும்போது அவளை நன்றாக திட்டிதீர்ப்பான். அவர்கள் பசி தாகத்திற்க்கு எதை எதையோ தின்றார்கள். எதை எதையோ குடித்தார்கள். எப்படியோ வாழ்ந்தார்கள். அவ்ர்கள் நிலை கண்ட ஆண்டவரும் அவர்கள் மேல் மனமிரங்கி அவர்களுக்கு வாழும் முறையை கற்றுகொடுத்தார் ஆண்டவர் பேசுவதை மட்டுமே கேட்க்கமுடியும் ஆனால் அவரைப் பார்க்கமுடியவில்லை ஒருநாள் ஆதாம் துன்பத்தின் எல்லைக்கே சென்று விட்டான்.பழைய எண்ணங்களை அவனால் எப்படி மறக்க முடியும்.இழந்ததை நினைத்து நினைத்து தன் தலையை தான் இருந்த இடத்திலிருந்த ஒரு பாறையில் முட்டிக்கொண்டு முட்டிக்கொண்டு அழுதான்.அவன் தலையைச்சுற்றி ரத்தக்காயங்கள் ஏற்பட்டு ரத்தம் திரளாக வழிந்த்தோட ஆரம்பித்தது.
      முகமெல்லாம் ரத்தமயமானது.” ஆண்டவரே எனக்கு உலக வாழ்க்கை சலித்துவிட்டது.என்னை ஏன் ஐயா படைத்தீர்.? அறியாமையால் செய்த குற்றத்திற்கு இவ்வளவு கொடும் தண்டனையா? என் மேல் இரக்கமாய் இரும். என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்”. என்றுமீண்டும் மீண்டும் தன் தலையை அந்தப் பாறையில்முட்டிக்கொண்டு அழுதான்.
   அவன் அழும் குரல் பரலோகம் மட்டும் கேட்டது.ஆண்டவர் மனம் இரங்கினார். அவரது மாயக்கரங்களாள் அவனை தொட்டு குணமாக்கினார்.அவனைத் தேற்றி ” மகனே ஆதாம் மனம் தெளிவாயாக.உன் கூக்குரலைக்கேட்டோம். அஞ்சாதே. உன்னை மீட்க்க உனக்கு ஒரு மீட்பரை நாம் அனுப்புவோம்.உன் சந்ததிவழியாய் பிறக்கப் போகும் ஒருகன்னிப் பெண் ஒருத்தி மனிதக்கலப்பில்லாமல் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுப்பாள். அவரே உன் மீட்பர். விரைவில் அவர் வருவார். ” என்றார். அந்த நேரமே ஆதாம் மனம் தெளிந்து மனதில்
உறுதி பெற்றான் [ ஆதாம். தன் தலையை முட்டிக்கொண்டு அழுத இடம் தான் பிற்காலத்தில் யேசு நாதர் இரத்த வேர்வை வியர்த்த இடம் ஆனது. இந்த இடத்தில் தான் ஆண்டவராகிய கடவுள் மனித சந்ததியை மீட்க உறுதி கொடுத்த இடம் ஆனது. இந்த இடத்தில் உள்ள தேவாலயம் the church of all nations என்று அழைக்கப்படுகின்றது.]
    பிற்பாடு ஆதாம் தன் வம்சத்தில் பிறக்கப்போகும் பெண் குழந்தை மூலம் தனக்கு இழந்த சொர்கம் கிடைக்கும் என்று எண்ணி தன் காலத்தை ஓட்டினான். ஆனால் அங்கும் விதி விளையாடியது. அவனுக்கு பிறந்தது எல்லாமே ஆண் குழந்தைகள். ஆணும் பெண்ணுமாகப் பிறந்தன.
   ஆனால் தனியாக ஒரு பெண் குழ்ந்தை கூட அவர்களுக்கு பிறக்கவே இல்லை. சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டான் சந்திரமுகி. மீண்டும் சீசர் கேட்டார்,
   “அது சரி, அந்தப்பாம்புக்கு என்னவானது?’ அதற்க்கு சந்திரமுகி,” அரசே, நீர் உண்மையிலேயே கதையை ஆர்வமுடந்தான் கேட்கிறீர். சரித்திரம் தெரிந்துகொள்ள உமக்குள்ள ஆர்வத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்.” என்றான். மீண்டும் சந்திரமுகி விட்ட இடத்திலிருந்து கதையை ஆரம்பித்தான்.” கடவுள் பாம்பை நீ உன் காலமெல்லாம் உன் வயிற்றில் ஊர்ந்து வாழ்வாயாக.
  நீ அந்தப் பெண் ஏவாளை ஏமாற்றியதால் அவள் வித்துக்கும் உன் வித்துக்கும் பகைமை ஏற்படுத்துவோம். அவள் வித்திலிருந்து தோன்றும் ஒரு கன்னிப்பெண் மூலம் அவளுக்கு ஆண் கலப்பில்லாமல் தோன்றும் ஒரு ஆண் குழந்தை வழியே உலகில் மீட்பு உண்டாகும்.உன்னால் அந்த கன்னிப்பெண்ணை வெற்றி கொள்ள முடியாது.அவள் உன் தலையை நசுக்குவாள். நீயோ அவள் குதி காலை தீண்ட முற்படுவாய்.ஆனாலும் உனக்கு தோல்வியே உண்டாகும்.” என்றார்.அவ்வாறே ஆயிற்று. பாம்பாகிய சாத்தான் தன் வலிமையை இழக்க ஆரம்பித்தான். அதுவரை பாம்பிற்கு இருந்த பின்னங்கால் இரண்டும் மறைய ஆரம்பித்தது.கடைசியில் அது மறைந்தே போய்விட்டது. ஆண்டவர் கூறியபடியே பாம்பு தன் வயிற்றால் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.[தற்கால விஞ்ஞானிகள் இந்த நிகழ்ச்சியை பரிணாம வளர்ச்சி என்கிறார்கள்]
    மீண்டும் பேசினான் சந்திரமுகி,” அரசே, இப்போது நீர் வின்னில் காட்சியாக கண்ட அந்தப் பெண்ணும் அவள் குழந்தையும் யார் என்று புறிகிறதா?’ என்றான்.சீசருக்கும் கதை புறிந்ததால் ” ஓ, ஆது இந்தப்பெண் தானோ, அப்படியானல் இந்தப்பெண் தான் ஆதாமின் வாரிசாக வந்த கன்னிப் பெண்ணோ?
   இந்த குழந்தை தான் ஆண்கலப்பில்லாமல் பிறந்த அந்த தெய்வீக குழந்தையோ? புறிகிறது. புறிகிறது. அப்படியானல் அந்த தெய்வீகமான் கன்னிப்பெண்ணை பற்றியும் அவளது தெய்வீகமான குழந்தை பற்றியும் மேலும் அறிய ஆவல் அதிகமாக இருக்கிறது .மேலும் கதை சொல்லவேண்டுகிறேன்”. மன்னர் அகஸ்டஸ் மேலும் ஒரு விளக்கம் கேட்டார். ” சந்திரமுகி, ஆதாமும் ஏவாளும் அந்த ஏதேன் தோட்டத்தில் பரலோக பேரின்பத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?” அதர்க்கு சந்திரமுகி ” ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.
    அதுதான் இல்லை !..அவர்கள் அந்த ஏதேன் தோட்டத்தில் பரலோக பேரின்பத்தில் திளைத்து வாழ்ந்ததெல்லாம் ஒரே ஒரு நாள் தான்.” என்றான்.” என்ன? ஒரே ஒரு நாள் தானா”..!… ஆசர்யப்பட்டார் சீசர் ஆம் அரசே சொன்னல் உங்களாள் நம்பமுடியாது தான் ஆனால் அது தான் உண்மை.ஆண்டவன் சன்னிதியில் ஒரு நிமிடம் என்பது ஒரு ஆயிரம் வருடங்களுக்கு சமம். ஆனால் அவர்கள் அத்துனைகாலம் பரலோக பாக்கியத்தில் வாழ்ந்துவிட்டால் பிறகு பூலோக வாழ்க்கையில் ஈடுபடுத்த அவர்களை ஏமாற்ற முடியாது.
    எனவே ஆதாமும் ஏவாளும் பரலோகத்தின் முழு இன்பத்தையும் அனுபவிக்கும் முன்பே அவர்களை பூலோக வாழ்கையில் ஈடுபடுத்த ஆண்டவர் சித்தம் கொண்டார். அதனால் தான் ஆதாமை காலையில் படைத்தார்.
மதியம் ஏவாளை படைத்தார். மாலை அவர்களை சபித்தார்.இரவுக்குள் அவர்கள் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டனர். என்றான்.
    சந்திரமுகி மீண்டும் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் தேவ தாயாரின் அமல உற்பவத்தைபற்றி விரிவாக கூற ஆரம்பித்தான், அந்த கதையை நான் கேட்டு உங்களுக்கு மூன்று ரோஜாக்கள் என்ற பெயரில் சொல்லப்போகிறேன்.

No comments:

Post a Comment