Thursday, June 13, 2013

" ஓ... தீனா...எனப்படும் ஒரு சமாரியப்பெண் "










" ஓ... தீனா...எனப்படும் ஒரு சமாரியப்பெண் "
       எனது சொல்ல மறந்த கதைகளில் எனக்குப்பிடித்த ஒரு பைபிள் கதா பாத்திரம் தீனா எனப்படும் ஒரு சமாரியப்பெண்னைப்பற்றியது. சமாரியாவில் யாக்கோபின் கிணறு சரித்திரப் பிரசித்தம். இந்த கிணற்றடியில் தான் யேசுநாதர் இந்த சமாரியப்பெண்ணைப்பார்த்து " எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர்கொடு" என்றார். இந்த சமாரியப்பெண்னைப்பற்றிய சரித்திரம்
விவிலியத்தில் சொல்லப்படவில்லை... ஆனால் அவரது சரித்திரத்தைப்பற்றிய குறிப்புகள் எனக்கு கிடைத்ததும் எனது மனம் துள்ளிக்குதித்தது.. நான் அறிந்துகொண்ட இவரது வாழ்கையைப்பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமோ....எனவே நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன்...நீங்களும் கதைக்கு வருகின்றீர்களா?.
யேசுநாதரின் காலத்தில் யூதர்கள் சமாரியர்களிடம் பழுகுவதே கேவலம் என்று நினைத்தனர். அவர்களை யூதர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை.. காரணம் அவர்கள் தாழ்ந்த  ஜாதியாம்...இத்தனைக்கும் பூர்வீகத்தில் இந்த சமாரியர்களும் யூதர்களும் ஒரே இனமாக அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துவந்தவர்கள் தான். காலம் அவர்களை பிறித்துவிட்டது.
பேரரசர் சாலமோனின் காலத்திற்குப்பின் ஒன்றாக இருந்த அவரது தேசம் அவரது மகன் ஜெரோபோவாமால், இரண்டாகப்பிறிக்கப்பட்டது. கலிலேயவும் சமாரியாவையும் சேர்ந்த பகுதி இஸ்ராயேல் எனவும் யூதேயா பிரதேசம் தனி நாடாகவும் பிறிக்கப்பட்டது. இஸ்ராயேலுக் தலை நகர் சமாரியாவானது.. யூதேயாவுக்கு தலைநகர் ஜெருசலேம் என்றானது.
      சமாரியாவைச்சேர்ந்த இஸ்ராலேயர்கள் அவர்களின் மூதாதேயர்கள் வழிபட்ட கடவுளுக்கு துரோகம் செய்து பிறகடவுளர்களை வழிபட்ட காரணத்தால் அவர்கள் இஸ்ராயேலியர்களின் தேவனுடைய கோபத்திற்க்கு ஆளாகினர். அதன் காரணமாக அசிரியவிலிருந்துவந்த அரசன் சால்மனசார் கி.மு.722ல் இந்த இஸ்ரயேலரை வென்று அவர்களை அடிமையாக்கி தன்னுடைய நாட்டிற்கு கூட்டிச்சென்றான்..
    அங்கு அவர்கள் பல காலம் அடிமையாய் இருந்தனர். அந்த கால கட்டங்களில் அவர்கள் மற்ற இன மக்களுடன் கலந்தனர். பிற்காலத்தில் பாபிலோனியவை சைரஸ் என்னும் பாரசீக மன்னன் வெற்றிகண்டு இந்த யூத மக்களை அவர்களின் அடிமைய்த்தலையிலிருந்து விடுவித்து அவர்களை அவர்தம் சொந்த நாடாகிய ஜெருசலேம் போகச்செய்தான். ஜெருசலேம் வந்த
இஸ்ராயேல் மக்கள் உள்ளுர் யூத மக்களுடன் சேர்ந்து கொண்டு ஜெருசலேம் தேவாலயத்தை புணரமைக்க உதவ முன்வந்த போது அவர்கள் உதவியை உள்ளூர் யூதர்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை.
   காரணம் அவர்கள் வெளி நாட்டில் அசீரியாவிலிருந்த போது பல ஆண்டுகளாக பிற ஜாதியினருடன் கலந்துவிட்ட காரணத்தால் அவர்களின் சுத்த ஜாதித்தன்மை போய்விட்டதென்பதால் இவர்களை இரண்டாம் தர யூதர்களாய் நடத்தினர். இதனால் வெறுப்புற்ற இஸ்ராயேலர்கள் தங்களுக்கென ஒரு வழிபாட்டுத்தலத்தை சமாரியாவிலுள்ள கெரசிம்
மலையில் ஏற்படுத்திக்கொண்டனர். அதிலிருந்து அவர்கள் யூதர்களிடமிருந்து எல்லா விதத்திலும் விலகிவிட்டனர். யூதர்களும் இவர்களை தங்கள் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ள வில்லை. சமாரியர்களும் யூதர்கைள் மதிப்பதில்லை. ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக்கொண்டனர். சமாரியர்களைப்பார்க்கிலும் யூதர்கள் வசதியானவர்களாய் இருந்ததால்
இடைவெளி அவர்களுக்கிடையே இன்னும் அதிகமாய்ப்போய்விட்டது. யூதர்களுக்கு சமாரியர்களைப்பார்ப்பதே அருவருப்பானதால் அவர்களோடு எந்தவிதமான ஒட்டுறவும்   வைத்துக்கொள்வது கிடையாது. இந்த விதமான கால கட்டத்தில் ஒருநாள்.......
    அன்று யேசு நாதருக்கு காலை உணவுகூட சாப்பிட நேரமில்லை..சமாரியாவிலிருந்து அவருக்கு ஆண்ம இரட்சண்ய அலுவலை முன்னிட்டு அவர் ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருந்தார். பலமணி நேரம் கால் கடுக்க நடைப்பயணம் மேற்கொண்டதாலும் கடும் வெயிலினாலும் அவர் மிகுந்த சோர்வுற்றார். அப்போது நன்பகல் ஓன்னிரண்டுமணி
இருக்கும். அவர் கண்னில் பட்ட ஒரு இடம் பிதாப்பிதா யாக்கோபின் கிணறு.. சற்றே உயிர்ந்த ஒரு மலைப்பகுதியில் யாக்கோபின் கிணறு இருந்தது.    அவர்காலத்திலேயே அந்தக்கிணற்றை சுற்றி தங்கும் வசதி இருந்தது. அவர் காலத்திலேயே அந்த கிணறு மிகுந்த ஆழமாக இருந்தது. எனவே கிணற்றில் தண்ணீர் வற்றிப்போகாமலிருக்கவும் வெய்யிலுக்கு சற்றே இளைப்பாரவும் ஒரு வீடு போன்ற அமைப்பு அக்கிணற்றை சுற்றி இருந்தது. நடைமுறையில் தண்ணீர் எடுத்து முடித்தவுடம் அக்கிணற்றை ஒரு பெரும் பலகைக்கல்லால்
மூடிவிடுவது பழக்கத்தில் இருந்தது.
     யேசுநாதர் இந்த யாக்கோபின் கிணற்றிற்கு அருகில் வந்து தன் சீடர்களை அழைத்து தனக்கு உண்ண ஏதாவது வாங்கிவரக்கேட்டுக்கொண்டார். அவர்களும் அவரைத்தனியே  அங்கேயே விட்டுவிட்டு சமாரியாவுக்கு சென்றனர். அதர்க்குள் ஒருசில தோல் பையை தூக்கிக்கொண்டு ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தண்ணீர் பிடிக்க இந்த யாக்க்கோபின் கீணற்றுக்கு வந்தாள். கீழிருந்து பல அடி உயரம் ஏறிய பிறகு தான் அவளுக்கு ஒரு யூத ஆண் மகன் ஒருவர் அங்கு இருப்பது தெரிய வந்தது. திடுக்கிட்ட அவள் தன் முக்காட்டால் அவள் முகத்தை மூடி சற்றே நகர்ந்து கொண்டாள்.. அப்போதுதான் அவள் அங்கிருப்பது ஒரு யூத ராபி என்பதைப்புறிந்துகொண்டாள். அச்சம் மேலிட அவள் சற்றே
பின்வங்க முயற்சிக்கையில் யேசுநாதர் அவள் வருவதற்க்கு சற்றே நகர்ந்து " பெண்ணே எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடு.. எனக்குத்தாகமாக ருக்கின்றது என்றார்
   அவள், " ஐய்யா, தங்களைப்பர்க்கும்போது தாங்கள் ஒரு யூத ராபீயாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. தங்கள் உடையும் தோற்றமும் அவ்வாறுதான். இருகின்றது. தாங்கள் எம்போன்ற சமாரியர்களுடன் பழகுவதே கிடையாது.. அப்படியிருக்க நீவீர் சமாரியப்பெண்ணான என்னிடம் தண்ணீர் கேட்ப்பது எப்படி?..இது
தெய்வக்குற்றமல்லவா...மேலும் நாம் இருவரும் தனித்து இருந்து பேசுவதை மற்றவர்கள் பார்க்க நேர்ந்தால் நாம் இருவரும் கண்டனதிற்கு உள்ளாவோமே என்றாள்..அதர்க்கு யேசு நாதர்   " பெண்ணே தீனா... அதுதானே உன் பெயர். மனிதன் வாய் வழியே போகும் எதுவும் தீட்டாகாது...இன்று நான் இங்கு வந்ததே உன்னை [ சமாரியர்களை ] சந்திக்க வேண்டுமென்பதர்க்காகத்தான்..  ருக்கின்றது என்றார்இன்றுமுதல் இந்த சமாரியர்களுக்கும் இரட்ச்சன்யம் தர வேண்டுமென்பதர்காகத்தான்.. அதனால் தான் உன் மூலம் இந்த சமாரிய மக்களை சந்திக்க   விரும்புகின்றேன்... நீங்களும் அபிரகாம் பிள்ளைகள் தானே. மீட்ப்பு யூதர்கள் வழியாகத்தான் வர வேண்டி இருகின்றது..  சமாரியர்களும் ஆண்டவனின்  பிள்ளைகள் தான்... மீட்பு அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும். அதனால் தான் நான் உன்னைத்தேடி [ சமாரியர்களைத்தேடி ] வந்திருக்கின்றேன் " என்றார்.
    திக்கு முக்காடிப்போனாள் தீனா என்னும் அந்த சமாரியப்பெண்.." ஐய்யா போதகரே,, நீவீர் எதேதோ சொல்லுகின்றீர்.. இதெல்லாம் புறிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு புத்தி இல்லை. முன்போ, பின்போ பார்த்திராத என்னை பெயர் சொல்லி அழைக்கும்நீவீர் பெரும் யூத ராபி என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.. நீவீர் தாகமாய் இருப்பதாக சொல்லுகின்றீர்..உமக்கு
நீர் கொடுக்குமளவுக்கு எனக்கு தகுதியும் இல்லை.. கிணரும் வேறு ஆழமாக உள்ளது.. என்ன செய்வேன் நான். என்ற அவள் அருகிலிருந்த கயிற்றையும் வாளியையும் எடுத்து நீர்   இறைத்து யேசுவுக்கு கொடுத்தாள்.. யேசுநாதரும் அந்த நீரைப்பருகி தன் தாகம் தீர்த்தார். "நான் ஊருக்கு சென்று என் கணவனை அழைத்துவருகின்றேன். அதுவரை தேவரீர் இந்த கிணற்றுத்திட்டின் மேலேயே அமர்ந்திருங்கள் என்றாள். அதற்கு யேசுநாதர், " பெண்னே தீனா..நீ போய் உன் கணவனையும் அழைத்து வா.. ஆனால் இப்போது உன்னுடன்
வாழ்ந்துவருபவனும் உன் கணவன் அல்ல... சரிதானே " என்றார்...
      தீனாவுக்கு மயக்கம் வறாத குறைதான்..ஓ... தேவரீர் நிச்சயமாக மெசியாவாகத்தான் இருக்க முடியும்.. என் வாழ்நாளில் நடந்தவைகளை இவர் எப்படி மிகத்துள்ளியமாக புட்டுபுட்டு  வைக்கின்றார்.. அப்போது யேசுநாதர்.. " பெண்னே தீனா...உணக்குத்தாய் தந்தையர்கள் தமஸ்க்குநகரில் இருந்தனர்.. நீயும் அங்குதான் பிறந்தாய்.. உன்னுடன் பிறந்த சகோதரிகள்
ஐவர்.. உன் வளர்ப்புத்தாயால் உன் வாழ்வு கெட்டது.... உன் அழகு உன்னை ஏமாற்றியது..உன் தவறான சகவாசத்தால் உனக்கு காதலர்கள் பலர் என்றானார்கள். கணவர்கள் என்று ஐந்து பேர் உன்னுடன் இருந்தனர். உன்னை அடைய அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியால் இருவர் கொல்லப்பட்டனர்.. உனக்கு ஆண் பிள்ளைகள் இருவர் உள்ளனர். பெண்பிள்ளைகள்
ஐவரும் இருந்தனர்..தவறான உறவால் விளைந்த முத்துக்கள் அவர்கள். அந்தந்த கணவர்கள் தங்களுக்கெண்று பிறந்த குழந்தைகளை அவரவர் பொருப்பில் எடுத்துக்கொண்டனர்.
    . கடைசியில் இப்போது உன்னுடன் இருப்பவனுடன் நீ சேர்ந்து வாழ்ந்துவருகின்றாய்..இவனுடனும் உனக்குத்திருமணம் ஆகவில்லை... இந்த வாழ்க்கையை விட்டுவிடு. என் தாகம் தீர்த்த உனக்கு நான் கொடுக்கும் ஜீவ தண்ணீரை பெற்றுக்கொள்..இந்த கிணற்றுத்தண்ணீரை உட்கொள்ளும் எவனும் மீண்டும் தாகம் கொள்வான்...ஆனால் நான் கொடுக்கும் ஜீவ
தண்னீரை பெற்றுக்கொள்ளும் எவனும் மீண்டும் தாகம் கொள்ளான்" என்றார்.
அப்படியனால் போதகரே எனக்கு அத்தகைய ஜீவியத்தண்ணீரை கொடும். இந்த வெயிலில் இவ்வளவு உயரம் உள்ள இந்த மலையில் தினமும் நீருக்காக வந்துவந்து கால் கடுத்துப்போகின்றது" என்றாள்..அதற்கு யேசுநாதர்." அந்த ஜீவிய நீரைக்கொடுப்பவர் யார் என்று தெரிந்தால் நீயாகவே அவரிடம் கேட்டிருப்பாய்." என்றார். அதற்கு தீனா " போதகரே எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு சொல்லியபடி மெசியா வருவார்... அவர் வந்து எல்லவற்றையும் விளக்குவார்." என்றாள்..அப்போது யேசுநாதர் " அது நான்தான்" என்றார்..
யேசுவின் பார்வையிலிருந்து வந்த ஒரு ஒளிக்கீற்று அவள் மூளைவரை தாக்கியது. அப்போதே தீனா மனமாற்றம் அடைந்தாள். அந்த யாகோபின் கிணற்றடியிலேயே தீனாவுக்கு ஆண்மதாக நீரூற்று யேசுநாதரால் கொடுக்கப்பட்டது.. அவள் வாழ்வு தலை கீழாக மாறிப்போனது. தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு தவறானது என்று உணர்ந்தாள்.
    அவள் அப்போதே ஊருக்குள் ஓடிப்போனள்... தன் கணவன் முதல் தன் கண்ணில்பட்ட யாவருடனும் தான் யேசுநாதரைக்கண்டது முதல் அவரிடம் தான் மன மாற்றம் அடைந்தது வரை எல்லவற்ரையையும் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனள். தீனா தன் கணவனாக வாழ்ந்துவந்தவனை அழைத்துக்கொண்டு மீண்டும் யாக்கோபின் கிணற்றுக்கு வந்தாள். யேசுநாதர்
அவள் கணவனாக வாழ்ந்துவந்தவனுக்கு புத்தி சொல்லி அனுப்பினார்...அவன் சென்றவன் சென்றவன்தான்.. அவன் மீண்டும் தீனாவின் வாழ்க்கையில் திரும்பி வரவே இல்லை...
    இந்த நிலையில் ஊருக்குச்சென்ற யேசுநாதரின் சீடர்கள் திரும்பிவரும்போது யேசு நாதர் கிணற்றின் திட்டின் மீது அமர்ந்துகொண்டு ஒரு சமாரியப்பெண்ணுடன் அலவளாவிக்கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.. பெரும்பாடுபட்டு எங்கும் கிடைக்காத உணவை மிகுந்த கஸ்ட்டப்பட்டு வாங்கி வந்ததாக யேசுவிடம் கூறி உணவை கொடுத்தனர். ஆனால் யேசுநாதர் தனக்கு தாகமும் அடங்கிவிட்டது...பசியும் அடங்கிவிட்டது என்று கூறி அந்த உணவை ஏற்றுக்கொள்ளவில்லை. சீடர்களுக்கு மிகுந்த
ஆச்சர்யமாகப்போய்விட்டது. ஆனால் யாருக்கும் யேசுநாதரிடம் ஏன் பசி அடங்கிப்போய்விட்டது என்று கேட்க்கத்தான் தைரியமில்லை.. அதனால் எல்லோரும் அமைதி காத்தனர்.
     மனம் மாறிய தீனா தன் செல்வங்களை எல்லாம் விற்று யேசுவின் சீடர்களிடம் கொடுத்து விட்டாள்..யேசுவை விட்டு என்றும் நீங்காதபடி அவர் தாயாரின் பின்னாடியே எங்கும் இருக்கலானாள்... அவள் யேசுவின் பெண் சீடராக மாறிப்போனாள்..அதன் பிறகு அவள் செய்த முதல் வேலை தான் பெற்ற பிள்ளைகள் அனைவரையும் அவரவர் தகப்பனிடமிருந்து
மீட்டுக்கொண்டது தான் . தனக்குக்கிடைத்த ஞான வெளிச்சம் தன் குடும்பத்தில் தன் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள்.
     யேசுநாதரின் மறைவுக்குப்பின்னால் மாதாவுடனே அவரும் இருந்துகொண்டாள்..மாதா எஃபேசில் இறந்தபிறகு தீனா யேசுவின் பெண் சீடராக அவருக்கு சாட்ச்சியாக வேத போதக அலுவலை துவங்கினாள். ஆசியாமைனர் எனப்படும் இன்றைய துருக்கியிலிருந்து ஸ்மிர்னா எனப்படும் இன்றைய இஸ்மீர் என்னுமிடத்தில் ஆரம்பித்த அவரது வேதபோதக அலுவல் தன் தாய் நாடாகிய தமஸ்க்கு, பாலஸ்த்தீன், எகிப்த்து,துனிஷியாவரை பரவியது. இன்றைய துனிஷியா அன்றைய கார்த்தேஜ் எனப்படும்..
அங்கு ரோமை அரசாங்கம் கிரிஸ்த்துவ மத போதனைகளுக்கு தடை விதித்தது. எனவே தீனாவும் அவள் சகோதரிகளான ஐவரும் அவர் மகனும் மற்றும் அவரின்   பெண் சீடர்களான சுமார் நூறு பேர் கைது செய்ய்யப்பட்டு ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கப்பலிலும் பிறகு ரோமிலும் அவர்கள் அனுபவித்த கொடுமைகள் வார்த்தையில் சொல்லி முடியாது. தீனாவின் முதல் மகன் பெயர் விக்ட்டர்... இரண்டாம் மகன் ஜோஷியா.. இவர் ரோமை ராணுவத்தில் சேர்ந்து ஒருபெரும் படைப்பிரிவுக்கு தளபதி ஆனார்..அப்போது அவர் அன்றைய ஸ்மிர்னா என்னும் இன்றைய துருக்கியில் உள்ள இஸ்மீரில் பணியாற்றினார். காலம் இவர்களை ரோமை ராஜ்ஜியத்தில் ஒன்று சேர்த்தது.
ரோம் நகரில் நீரோ மன்னனின் ஆட்ச்சிகாலத்தில் வேத கலாபணை ஆரம்பித்தது.. நீரோ மன்னன் கிரிஸ்த்துவர்களை கொடுமையாய் நடத்தினான். கிரிஸ்துவர்கள் யேசுவை கைவிட்டுவிட்டு சீசரையும் ரோமர்கள் வணங்கிவந்த தெய்வங்களையும் கடவுளாக ஆராதிக்க வேண்டுமென சட்டமியற்றினான். மறுத்தவர்கள் மரண விளையாட்டரங்கத்தில்
கொடுமையாய் கொல்லப்பட்டனர்..இதன்படி தீனாவையும் அவள் பிள்ளைகள் அனைவரையும் விசாரணைக்காக நெரோவின் அரண்மனையில் கொண்டு வந்து நிறுத்தினர். இங்கு விதி பலமாய் விளையாடியது. இவர்களைக்கொண்டுவந்து நிருத்தியதே தீனாவின் இரண்டாவது மகன் ஜோஷியா தான்.. அவன் இஸ்மீரிலிருந்து மாற்றலாகி ரோமுக்கு வந்திருந்தான்.
    விசாரணைகக தன் தாயாரின் பெயரை " தீனா " என்று படித்ததுமே ஜோஷியாவுக்கு அது தனது தாயார்தான் என்று புறிந்துவிட்டது. தாயும் மகனும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆனல் இருவரும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை..அடுத்து " விக்ட்டர் ".." அனதோலியா " ..".போட்டா " ..."போட்டிடா "..." பரஸ்கேவா ".. ." கைரியாக்கி " அனைவரும் ஆஜர்.. இதைப்படித்த ஜோஷியாவுக்கு மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நாம் ஒருவாரு யூகித்துக்கொள்ளலாம்.
நீரோ கேட்டான்..." தீனா உன் குடும்பத்தில் இவ்வளவுதானா அல்லது இன்னும் இருக்கின்றார்களா ?"
தீனா கூறினாள், " எனக்கு இன்னும் ஒரு மகன் இருக்கின்றான்... ராணுவத்தில் வெளி நாட்டில் பணிபுரிவதாக நினைத்திருந்தேன்.."
நீரோ, " இப்போது அவன் எங்கு இருகின்றான்?."
தீனா, " அதைச்சொல்ல எனக்கு விருப்பமில்லை "
நீரோ, " இதோ பார் தீனா... நீ கிரிஸ்த்துவை போதித்தவள்.. உன் பிள்ளைகளும் கிரிஸ்த்துவை போதித்தவர்கள் தான்.. உண்மைச்சொல்ல வேண்டியது ஒவ்வொரு கிரிஸ்த்தவனின் கடமையகும்.. நீ என்னிடம் பொய் கூறத்தேவை இல்லை. உன் மற்ற மகன் எங்கே.. எனக்கு பதில் சொல்.."
இந்த நேரத்தில் தீனாவின் இரண்டாம் மகன் ஜோஷியா மனசாட்சி குத்துண்டவனாய் " அரசே அது நான் தான். என் தாய் என் சகோதரன் என் சகோதரிகள் ஐவர் என்று
எல்லோருமே வேத சாட்சி முடிபெற காத்திருக்கையில் நான் மட்டும் பயந்தாங்கொள்ளியாய் விலகி இருப்பது தேவையற்றது. நானும் என் குடும்பத்தினருடன் வேத சாட்சி முடி பெறுவேன்" என்று நீரோவிடம் சரணடைந்தான். மன்னன் நீரோ சிரித்துக்கொண்டான்.
" ஆஹா... என் ராணுவத்தில் கிரிஸ்த்துவர்கள்...அடேங்கப்பா.. எத்தனைபேர் என் ராணுவத்தில் புகுந்து எனக்கு எதிராக புரட்சி செய்து என்னைக்கொல்லப்
பார்க்கிறீர்கள்... மரியாதையாக உண்மையை சொல்லிவிடு." என்று கடும்கோபம் கொண்டு தன் ஆட்க்களிடம் அவனை ஒப்புவித்தான்..அன்று மாலைக்குள் ஜோஷியாவின் தலை அரசனிடம் கொண்டுவந்து காட்டப்பட்டது.. " அரசே நாங்கள் எவ்வளவோ இவனிடம் கேட்டுப்பார்த்துவிட்டோம்.. நம் ராணுவத்தில் எத்தனை பேர் கிரிஸ்த்துவர்கள் என்று இவன் சொல்லவே இல்லை. வேறு வழி இல்லாமல் உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டோம் " என்றனர். சரி இவன் சகோதரனையும் உடனே கதையை முடி. ..பெண்களை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றான் நீரோ மன்னன்.
     தீனாவையும் அவள் பெண்பிள்ளைகள் ஐவரையும் மற்றும் அவர்களோடு வந்த மற்ற பெண்கைதிகள் அனைவரையும் தினமும் இரும்புக்கழிகளாய் நைய்யப்புடைக்க வேண்டும்   எனவும் அது தன் மகள் தோம்னியா என்பவள் மேற்பார்வையில் நடைபெற வேண்டுமெனவும் ஆணையிடப்பட்டது. தினமும் இவர்கள் இந்த ஆக்கினைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
ஆனால் புதுமையாக அவர்கள் காயங்கள் அனைத்தும் அன்று இரவே ஆறிவிடும்.. அடுத்த நாள் அவர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவர். நீரோ மன்னனின் மகள்  இதைக்கண்டு மிகுந்த ஆச்சர்யப்பட்டாள்..இதன் காரணத்தை அறிய முற்பட்டவளுக்கு தீனா யேசுவைப்பற்றிய அனைத்துக்காரியங்களையும் அவளுக்கு உபதேசித்தாள்..
தீனா கூறிய யேசுநாதர் பற்றிய சரித்திரங்களாள் பெரிதும் கவரப்பட்டாள் நீரோவின் மகள் தோம்னியா. அவள் மட்டுமல்ல அந்த சிறைக்கூடத்தில் வாழ்ந்துவந்த கைதிகள் முதற்கொண்டு அரசாங்க ஊழியர் வரை அனைவரும் கிரிஸ்த்துவால் கவரப்பட்டனர்.. அந்த சிறைச்சாலை தேவாலயமாக மாறியது. எந்த நேரமும் ஜெபமும் ஆராதனையும் துதியுமாக கேட்டுகொண்டே இருந்தது. அதற்க்குமேலும் பொறுக்க முடியாத சிறைக்காவலன் நீரோவிடம் சிறையில் நடக்கும் யேசுவின் திரு நாம கீதங்களைப்பற்றியும் நீரோவின் மகள்  தோம்னியா அடைந்த மதம்மாற்றம் பற்றியும் எடுத்துச்சொன்னான்.
     அடங்காத கோபம் கொண்டான் மன்னன் நீரோ.. தன் மகள் என்றும் பாராது அனைவருக்கும் மரண தண்டனை கொடுத்தான். தீனாவுக்கு மட்டும் வேறு தண்டனை காத்திருந்தது. நீரோ முன்னிலையில் நிறுத்தப்பட்டாள் தீனா..மன்னன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.. " தீனா...கடைசியில் நீ என் குடும்பத்திலேயே உன் வேலையை காட்டிவிட்டாய் .
நான் என் மகள் என்றும் பாராது அவளுக்கும் மரண தண்டனை கொடுத்ததிலிருந்து நான் எவ்வளவு தூரம் இந்த கிரிஸ்த்துவர்களை வெறுக்கின்றேன் என்பதை நீயும் இந்த உலகமும் புறிந்துகொள்ள வேண்டும்..மற்றதைக்காட்டிலும் என் மகளை மதம் மாற்றிய குற்றத்திற்காக உனக்கு கொடுமையான தண்டனையை தரப்போகின்றேன். கடைசியாக நீ என்ன சொல்ல விரும்புகின்றாய்." என்றான் மன்னன் நீரோ. [ மகள் என்றும் பாரது....பெண்கள் என்றும் பாராது...அனைவரையும் நிர்வாணமாக சிலுவையில் அறைந்து கொண்றான் நீரோ மன்னன்.]
     " ஆம் அரசே,...சொல்வதர்க்கு ஒன்று இருக்கின்றது..நீ..மனிதனே அல்ல.. நீ ஒரு மனித மிருகம்... அதிலும் இரத்த வெறி பிடித்த மிருகம்.. ஒருபாவமும் அறியாத கிரிஸ்த்துவ மக்களை அநியாயமாக கொல்கிறாய்...ஆண்டவன் உனக்கு என்னமாதிரியான தண்டனை கொடுக்கப்போகின்றார் பார்...தூ...என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள்...பின் அடங்க மாட்டாத சிரிப்பு சிரித்தாள். இதனால் கடுப்பான நீரோ மன்னன் அவளை உடனே அருகில் உள்ள பாழும் கிணற்றில் தலைகீழாக தூக்கிப்போட சொன்னான். அவ்வாறே தீனாவுக்கு
கட்டளை நிறைவேற்றப்பட்டது. தீனாவின் ம்ண்டைபிளந்து உடல் எலும்புகள் பல உடைந்து உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஆனாலும் யேசுநாதர் அவளுக்குத்தோன்றி பிதா சுதன் பரிசுத்த ஆவி என்று மூன்று முறை ஆசீர்வதித்தார். மூன்றாம் நாள் அவள் உயிர் பிரிந்தது..
      யாக்கோபின் கிணற்றில் ஆரம்பித்த அவளின் ஞான வாழ்க்கை கிணற்றிலேயே முடிந்தது. ஆரம்பிக்கும்போதும் யேசுநாதர் அவள்கூடவே இருந்தார்..அவள் வாழ்க்கை முடியும்போதும் யேசுவின் பிரசன்னம் அவள் கூடவே இருந்தது. யேசுகிரிஸ்த்துவின் உயிர்ப்பிற்குப்பிறகு தீனாவும் அவள் பிள்ளைகள் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர். போதினி என்னும் பெயரும்  பெற்றாள் தீனா...அதாவது ஒளி அல்லது வெளிச்சம் என்பது அதற்க்குப்பெயர். ருஸ்ய பாஷையில் ஸ்வெட்லானா என்று அழைகின்றார்கள்..ஆக யேசுநாதரால் ஞான வெளிச்சம் பெற்ற
போதினி என்னும் தீனா என்னும் சமாரியபெண் மூலம் ஒட்டுமொத்த சமாரிய குலமுமே ஞான வெளிச்சம் பெற்றது.
    இப்போதும் சமாரியாவிலுள்ள இந்த யாக்கோபின் கிணறு நல்ல நீரைக்கொடுக்கின்றது. அந்த கிணற்றின் மேல், மேல் பகுதில் அழகான ஒரு தேவாலயம் அமைத்து அந்த தீனா என்னும் சமாரியப்பெண்ணின் பெயரைத்தாங்கிய ஆலயமாக தூய போதினி என்னும் ஆலயமாக வைத்து இருக்கின்றார்கள்.
      இந்த தீனா என்னும் சமாரியப்பெண் யேசுவுக்கே தாகம் தீர்த்தவள் ஆகையால் இவளது பக்தி முயற்சி மேலை நாடுகளில் பரவியது. மெஃஸிகோ நாட்டில் இந்த தீனாவின் திருவிழாவை மற்றவர்களுக்கு தாகம் தீர்க்கும் திருவிழாவாகக்கொண்டாடுகிறார்கள்.. தவக்கால நான்காம் ஞாயிறன்று தெருவில் வருவோர் போவோர் அனைவருக்கும் பழ ரஸம் கொடுத்து
தாகம் தீர்க்கும் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
..தூய போதினா என்னும் சமாரியப்பெண்ணே... எங்களுக்காக வேண்டிகொள்ளும்.















.

No comments:

Post a Comment