அஞ்சாதே போலிகார்ப் !!!
ஏற்றுக்கொள்வதாக சத்திய பிரமாணம் கொடுக்க நிர்ப்பந்தித்தார்கள். அப்படி வணங்காதவர்களை வணங்க வைக்க ராஜ துரோக குற்றம் சாட்டி கொடுமையாக தண்டித்தார்கள்.
அதை மற்றவர்கள் கண்டு பயப்படவேண்டுமென்பதர்க்காக பொதுவில் அந்த தண்டனையை நிறைவேற்றினார்கள்..பெரும்பாலும் கிரிஸ்த்துவர்களை குறிவைத்து தாக்குவதற்கே இவைகள் பயன்படுத்தப்பட்டன. அவர்களது நோக்கம் பெரும்பாலும் அந்த கால கட்டங்களில் வேகமாகப்பரவி வந்த கிரிஸ்த்துவ மதத்தை நசுக்க வேண்டுமென்பதிலேயே குறியாக இருந்தது.
ரோமைக்கத்தோலிக்க திருச்சபையில் இப்படியும் ஒரு வேத சாட்சி.
எண்பத்தாறு வயதான இவர் சுவிஷேஷகரான தூய அருளப்பரின் சீடர். இவரால் மனம்திரும்பப்பட்ட பொலிகார்ப் அவர்காலத்தில் யேசுநாதரைக்கண்ட பல சீடர்களை நேரில் பார்த்து பேசி தன் விசுவாசத்தை உறுதிப்படுத்திக்கொண்டார். பின் துருக்கிக்கியில் உள்ள ஸ்மிர்னா என்னும்
பட்டிணத்தில் குருவாகவும் பின் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டு யேசுவுக்காக தன் உயிரை அர்ப்பணித்தார். இவர் காலத்தில் நடந்த வேத கலாபணையின் போது பல கிரிஸ்த்துவர்கள் வேத சாட்ச்சிகளாய் கொடும் வாதைப்பட்டு மரித்தார்கள். அவ்வாறு மரிப்பதை பெரும் பேறாகக்கருதினார்கள். ஆனால் எல்லோராலும் வேத சாட்ச்சிகளாய் மாற முடியாது.
ஆண்டவராகிய யேசு கிரிஸ்த்துவின் அனுக்கிரஹமும் பரிசுத்த ஆவியின் அனுக்கிரஹமும் பரம பிதாவின் அனுக்கிரஹமும் இருந்தாலன்றி யாரும் வேத சாட்சிமுடி பெறவும் முடியாது.
ஆசைப்பட்ட எல்லா கிரிஸ்த்தவர்களுக்கும் வேத சாட்சி முடி கிடைத்துவிடவில்லை. ஸ்மிர்னாவில் நடைபெற்ற வேதகலாபணையின் போது இவ்வாறு நடைபெற்றது. ெஜ்ர்மானிகஸ் என்னும் உயர்குலத்தில் பிறந்த முதியவர் கிரிஸ்த்துவுகாக தன் உயிரைவிட முடிவு செய்து அரங்கத்தில் நிறுத்தப்பட்டார். இவரது குலத்தை முன்னிட்டும் வயதை முன்னிட்டும் நியயாதிபதிகள் அவரை வேதத்தை மறுதலித்து கிரிஸ்துவை மறுதலித்து சீசருக்கு வணக்கமும் ஆராதனையும் காட்ட ஆசை வார்த்தைகள் பல காட்டினார்கள். ஆனால் பெரியவர் சற்றேனும் பின் வாங்கவில்லை. தன்னைக்கொல்ல வந்திருந்திருந்த கரடி, புலி, சிங்கம், சிறுத்தை போன்ற கொடிய விலங்குகளை கட்டி அணைத்துக்கொண்டார். ஆனால் அவருக்கான நேரம் இன்னும் அருளப்பாடாததால் அந்த கொடிய மிருகங்கள் அவரை ஒன்றும் செய்ய வில்லை. இந்தகொடிய விலங்குகள் அவரைக்கொன்று குடிக்கும் என்று அந்த
காட்ச்சியை கண்ணாரக்கண்டு ரசிக்கலாம் என்று காத்திருந்த கொடியவர் கூட்டம் ஹோ…..என்று கத்தினர்.
பிறகு இந்த முதியவருக்கான நேரம் ஆண்டவரால் அருளப்பட்டது. இந்த முதியவர் அந்த மிருகங்களுக்கு வேண்டுமென்றே கோபம் மூட்டினார். அப்போது அந்த மிருகங்கள் அந்த முதியவரை கொன்று தின்றன. அவர் வேத சாட்ச்சிமுடிபெற்றார். அவரோடு சேர்த்து மேலும் பலர் மிருகங்களுக்கு இறையாக்கப்பட்டு வேதசாட்சி முடி பெற்றனர். இந்த சூழ்நிலையில்
பைரேஜியாவைச்சேர்ந்த குவின்டஸ் என்பவர் தன்னோடே வேறு சிலரையையும் சேர்த்துக்கொண்டு தாங்களும் கிறிஸ்த்துவர்களே என்று வலியச்சென்று வேத சாட்ச்சிமுடிபெற விரும்பி தங்களை அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால் இந்த கொடிய விலங்குகளின் ஆக்கினைக்குப்பயந்தனர். இந்த சூழ்நிலையைப்பயன் படுத்திய வேத விரோதிகள் அவர்களுக்கு ஆசைவார்த்தைகள் பல கூறி சீசருக்கு வணக்கமும் ஆராதனையும் செய்யும்படி நிர்ப்பந்தித்தனர். அவர்களும் அவ்வாறே செய்து கிறிஸ்த்துவுக்கு துரோகமும் செய்து தங்கள் உயிரைக்காப்ப்ற்றிக்கொண்டனர். மேலும் பல கிரிஸ்த்துவர்களை இந்த கொடிய மிருகங்களுக்கு தீனியாகப்போடலாம் என்றால் அன்று வேறு கிரிஸ்த்துவர்கள் கிடைக்கவில்லை.
இதனால் பார்வையாளகளிடையே பெரும் அதிர்ப்த்தி உண்டானது. தங்கள் அதிர்ப்த்தியை இவ்வறாகக்கத்தி.” பொலிகார்ப் எங்கே?. பொலிகார்ப்பைக்கொண்டுவா…பொலிகார்ப்பைகொண்டுவா… கொண்டுவா “… என்று தெரியப்படுத்திக்கொண்டார்கள்.
பொலிகார்ப் அவருடைய காலத்தில் வல்லமையான பிரசங்கியார். அவருடைய வல்லமையன பிரசங்கத்தால் மனம்திரும்பியவர்கள் அனேகர். தனக்கு நேர்மையானதை சட்டென முகத்துக்கு நேரே பேசிவிடுவார். அவருடைய நேர்மையின் பொருட்டு அவர் யாருக்கும் பயந்ததில்லை. யேசுவின் கொடும் மரணம்பற்றியும் அவரது உயிர்ப்பைப்பற்றியும் அவரது வின்னேற்றம் பற்றியும் தவறான கருத்தைப்பரப்பும் யாவரையும்அவ்வாறு பேசும் நபர் யாராக இருந்தாலும் அவன் அந்திக்கிறிஸ்த்து என்றும் அவன் சாத்தானின் தலைச்சன் மகன் என்றும் கடுமையாக பேசி திருச்சபையின் விசுவாசத்தைக்காத்தார். இதனால் கடுப்பான வேத விரோதிகள் அவரைப்பழி வாங்க சந்தர்ப்பம் பார்த்தனர். தங்கள் அரசன் சீசாரைத்தவிர வேறு அரசன் தங்களுக்கு இல்லை எனவும் ஆனால் இந்த கிரிஸ்த்துவர்கள் தான் சீசரை வணங்கக்கூடாது… யேசுவையே தங்கள் அரசராகக்கருதவேண்டும் எனவும் யேசுவே கடவுள் என்றும்
அவரையே கடவுளாக வணங்க வேண்டுமெனவும் இவ்வாறு போதிக்கும் எந்த கிறிஸ்த்துவ பாதிரியார்களையும் அரசர் சீசரை வணங்காத ரிஸ்த்துவர்களையும் ஆக்கினைக்கு உட்படுத்தவேண்டும் எனவும் பெரும் கலகத்தில் ஈடுபட்டதால் ஸ்மிர்னாவில் வேத கலாபனை ஏற்பட்டது. இந்த மாதிரியான காலகட்டங்களில் திருச்சபையின் பெரும்பாலான சொத்துக்களும் கிரிஸ்த்துவர்களின் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
பொலிகார்ப்பின் சீடர்கள் அவரை இந்த கொடிய வேத கலாபனையினின்று தப்புவிக்க பெரிதும் முயன்றனர். ஆனால் பொலிகார்ப் ஒத்துக்கொள்ள வில்லை.இருப்பினும் தன் சீடர்களின் வேண்டுகோளுக்கிணங்க தலைமறைவானார். அப்போது அன்றைய இரவில் ஒரு கனவு ஒன்று கண்டார். அதாவது தன் தலைமாட்டிலிருந்த ஒரு தலையணை தீப்பற்றி எரிவதாகக்கண்டு
தனக்கு உயிரோடு கொளுத்தப்பட்டு மரணம் வரும் என்று கூறினார். அடுத்த நாள் அவர் தன் ஊழியக்காரன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டார். பாவம் அந்த ஊழியக்காரனைப் படுத்தியபாட்டில் அவனும் அவரைக்காட்டிக்கொடுக்க நேர்ந்தது.
அடுத்த நாள் அவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். சீசரை அரசராக ஏற்றுக்கொள்ள அவர் சம்மதித்தார் ஆனால் அரசனை ஆண்டவனாகக்கருதி அவருக்கு தூபம் காட்டிஆராதிக்க அவர் ஒப்புக்கொள்லவில்லை. யேசு ஒருவரே கடவுள் என்றும் அவருக்கே ஆராதனையும் மகிமையும் புகழ்ச்சியுமுண்டாகக்கடவது என்றும் சீசருக்கோ வேறு தெய்வங்களுக்கோ தான் தூபாராதனை காட்ட ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகக்கூறினார்… அப்போது அவர் முகம் ஒளிர்ந்ததை
வேத விரோதிகள் கண்டனர்.. அவரது வயதை முன்னிட்டும் அவரது அனுபவத்தை முன்னிட்டும் மன்னிப்பதாகவும் ஒரே ஒருமுறை சீசர்தான் கடவுள் என்று கூறுமாறும் மேலும் ” இதில் என்ன இருக்கிறது… எந்த நாட்டிலும் அரசன்தான் அந்நாட்டின் கடவுள்… அவருக்கு தூப ஆராதனை கட்டுவதில் என்ன தவறு இருக்கமுடியும் ” என்றால்லாம் பேசி அவரை சரிக்கட்ட முயன்று தோல்வியே கண்டனர். எனவே அவரை ஆக்கினைக்கு உட்படுத்த ஆணையிட்டனர்.. இந்த நேரத்தில் தான் வேத சாட்சிகளுக்கான மிருகங்களின் வாதை முடிந்திருந்தது.
பொலிகர்ப்பை ஒரு திறந்த வண்டியில் ஏற்றி கொலை அரங்கத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது வண்டியிலிருந்த கிரிஸ்த்துவன் ஒருவன் அவரை தப்பித்துச்செல்ல உதவினான்.ஆனால் பொலிகார்ப் உடன்படவில்லை. ஆனலும் மனசாட்ச்சியுள்ள அந்த கிரிஸ்த்துவன் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டி அவரை ஓடும் வண்டியிலிருந்து வெளியே தள்ளினான்.
ஓடும் வண்டியிலிருந்து வெளியே தொப்பென விழுந்தார் பொலிகார்ப். அதனால் அவர் கால் முட்டி விலகி நடக்கமுடியாமல் போயிற்று.. இருப்பினும் பொலிகார்ப் காலை இழுத்துக்கொண்டு இழுத்துக்கொண்டு.. தானே அந்த அரங்கத்தை அடைந்தார்.. அப்போதும் ஒருநீதிபதி கூறினார்..”.பொலிகார்ப் அவர்களே..உங்கள் வயதை முன்னிட்டு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன்.. வேதத்தை விட்டுவிடுங்கள்.. யேசுவை மறுதலியுங்கள்…உங்களுக்கு நான் உயிர் பிச்சை தருகின்றேன்.” அப்போது பொலிகார்ப் பின்வருமாறு பேசினார்.
” ஐய்யா நீதிபதி அவர்களே, நீங்கள் சொல்வதுபோல் என்னால் செய்ய முடியது.. முதலில் நான் சொல்வதைக்கேளுங்கள்…நான் ஒரு உண்மையான கிரிஸ்த்துவன்.. நான் யேசு கிரிஸ்த்துவையே கடவுளாகவும் என் ராஜாவாகவும் ஏற்றுக்கொண்டவன்.. சீசர் சாதாரண மானிடர்.. ரோமை சாம்ராஜியத்தின் அதிபதி என்ற முறையில் நான் அவரை மதிக்கிறேன்..ஆனால் சீசரின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் அவரை கடவுளாக ஏற்று மதித்து அவருக்கு தூப ஆராதனை செலுத்த வேண்டுமென்னும் சட்டத்தைதான் நானும் சரி…
க்ரிஸ்த்துவர்களும் சரி எதிர்கிறோம். உங்கள் சீசர் என்ன எங்கள் யேசுநாதர்போல் பாடுகள்பலபட்டு ரத்தமெல்லாம் சிந்தி சிலுவையில் மரித்தாரா ? அல்லது எங்கள் யேசுநாதர் போல் இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தாரா ?. இதர்க்குமேலும் விளக்கம் தேவையானால் ஒரு நாள் குறித்து என்னைப்பேச விடுங்கள்..அப்போது மேலும் நான் எங்கள் யேசுநாதரைப்பற்றி மேலும் விளக்குவேன். எனக்கு வயது எண்பத்தாறு ஆகின்றது.. இந்த வயதுவரை என் ஆண்டவரும் கடவுளுமான என் யேசுநாதர் எனக்கு ஒரு குறையும் வைத்தாதில்லை . ஒரு துன்பமும் எனக்கு இழைத்ததில்லை. அப்படி இருக்க நான் ஏன் அவரை மறுதலிக்க வேண்டும். அது என்னால் முடியவும் முடியாது. ஆனால் நான் நடக்கப்போகும் காரியங்கள்
அனைத்தையும் அறிவேன்.. நான் உயிரோடு கொளுத்தப்பட்டு மரிப்பேன் என்று மூன்றுநாட்களுக்கு முன்பே எனக்கு என் ஆண்டவராகிய யேசு கிரிஸ்த்து அறிவித்துவிட்டார். என்னை கொளுத்த்ப்போகும் இந்த உலக நெருப்பு ஒரு அறைமணி நேரமோ அல்லது ஒருமணி நேரமோ எரியும் பிறகு அணைந்துவிடும்..ஆனால் பொய் தேவர்களுக்கும் பேய்கடவுளுக்கும்
ஆராதனை செய்யும் உனக்கும் உன் அடியவர்களுக்கும் அவியாத நரக நெருப்பு காத்திருகிறது. அதிலிருந்து உன்னைக்காத்துக்கொள்ள ஆண்டவராகிய யேசுக்கிரிஸ்த்துவை சரணடைந்து உன் ஆண்மாவை காப்பாற்றிக்கொள்ளப்பார். இனிமேல் உன்னிடம்பேசிப்பயனில்லை… எனவே ஆக வேண்டிய காரியங்களைப்பாருங்கள் “. என்றார்.
அப்போது நீதிபதி ஆத்திரத்துடன் ” பொலிகார்ப்.. உன் பிரசங்கத்தை நீயே வைத்துக்கொள். உன்னை கொடிய மிருகங்களுக்கு இறையாகப்போடுகிறேன்.. உன் எஜமான் யேசுநாதர் சொன்ன தீர்க்கதரிசனத்தை பொய் ஆக்குகிறேன் பார்….அடேய்…யாரெங்கே …அந்த கொடிய காட்டு விலங்குகளை அவிழ்த்துவிடு.. அதன் கூண்டுகளை திறந்துவிடு” என்று ஆவேசமாகக்கத்தினார். அனால் அந்த வாயிற்க்காப்பாளன் பவ்வியமாக கூறினான், ” எஜமான்…அபயம்…காட்டுமிருகங்களுக்கு பசி அடங்கிவிட்டது.. இன்று அவைகள் ஏறாளமான கிரிஸ்த்துவர்களை கொன்று தின்றுவிட்டன… அவைகள் தற்போது ஓய்வு எடுக்கின்றன. அவைகளை திறந்து விட்டாலும் அவை யாரையும் கொல்லாது. அவற்றை இனிமேல் சீண்டினாலும் அவை கோபப்படாது. இன்றைய காட்சி முடிந்துவிட்டது ” என்றான். இதைக்கேட்ட மக்களும் நீதிபதியும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர் . “அந்த பொலிகார்ப்பை
உயிரோடு கொளுத்துங்கள்” என்றனர் . வேலையாள் ஒருவன் வந்து ஆணிகளால் அவரின் கைகளையும் கால்களையும் ஒரு மரத்தூணில் அறைய முன்வந்தான். ஆனால் பொலிகார்ப்” தேவையில்லை ஊழியனே…நான் இந்த இடத்திலிருந்து ஒரு அடி கூட முன்போ பின்போ நகர மாட்டேன்…என் வாயிலிருந்து வலியோ வேதனையோ முனகலோ வெளிவறாது… வேண்டுமானால்.நீ வந்ததர்க்கு அடையாளமாக அந்த சிறு கயிற்றால் என்னை பிணைத்துச்செல்.. சமாதானமாகப்போ ” என்றார்.. வந்தவன் கண்களில் நீர் பெருக அவரை
வணங்கிச்சென்றான்.
ஆயிற்று.. பொலிகர்ப்புக்கு வேத சாட்சிமுடி தயாறானது… பெரும் அக்கினிக்குண்டம் அவரை சூழ்ந்தது.. அப்போது பரலோகத்திலிருந்து ஒரு பெரும் குரலொலி இடிஎன ஒலித்தது,
” அஞ்சாதே பொலிகார்ப்..அஞ்சாதே….நாம் உன்னோடு இருக்கின்றோம்…. இந்த மக்களுக்கு நீர் யார் என்று காண்பி….நாம் இவர்களோடு சற்று நேரம் விளையாடுவோம் ” என்றது.
கேட்டது இடி அல்ல.. அது ஆண்டவரின் குரலொலி என்று அங்கிருந்த பலர் உணர்ந்து மனம் திரும்பினர்.. ஆனால் சாத்தானால் தூண்டப்ப்பட்டவர்கள் ஆஹா என்றும் ஓஓஓ என்றும் பேய்த்தனமாக குரலெலுப்பினர். அப்போது ஒரு பெரும் அதிசயம் நடந்தது. பொலிகார்ப்பை சூழ்ந்த பெரும் நெருப்பு கோவேசமாக அவர் மீது பாய்ந்தது. பொலிகார்ப் பரிசுத்த ஆவியினால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டிருந்தார். அவரது முகமும் திரேகம் முழுவதும் பொன் நிறமாக மாறி இருந்தது…இந்த காட்ச்சியைப்பார்த்த மக்கள் பலர் மார்பில் பிழை அறைந்து
கொண்டனர். அவருக்காக கண்ணீர் சிந்தி அழுதனர்.. தீயினால் இன்னும் சற்று நேரத்தில் மரணிக்கப்போகும் அந்த பொலிகார்ப் என்னும் வேத சாட்சிக்காக யேசுவிடம் மன்றாடினர்..
தீயினால் பொலிகார்ப் பற்றி எரிந்து மடிவான் என்று எதிர்பார்த்த வேத விரோதிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே அந்த ஊழியக்காரனை இன்னும் தீயை அதிகரிக்கும்படி ஏவினர். எவ்வளவு தீ எரிந்தும் தீ அவரை ஒன்றும் செய்யவில்லை… மாறாக தீயின் நடுவிலிருந்து தீ நாற்றம் வருவதர்க்கு பதிலாக சாம்பிறாணி வாசம் வந்தது.. பரலோக சுகந்தம் வீசியது.
இதைப்பார்த்த வேத விரோதிகளுக்கு இன்னும் கோபம் அதிகமானது. ” ஓ…பொலிகார்ப்பை தீ ஒன்றும் செய்யவில்லை… அடே..ஊழியக்காரா.. நீண்ட வேலினால் பொலிகர்ப்பை குத்து ” என்றனர். அவனும் ஒரு இருபது அடி நீளமான ஒரு வேலை தயாரித்து தீ நாக்குகளின் நடுவிலிருந்த பொலிகார்ப்பை குத்தினான்.. அவனது ஈட்டி பொலிகார்ப்பின் நெஞ்சின் நடுவில் குத்தி முதுகின் வழியே வெளி வந்தது.. அப்போது ஒரு வெண்புறா தீநாக்குகளின் வழியே வெளியே பறந்து சென்றது. அது பொலிகார்ப்பின் ஆண்மா. என்று சிலரும்.. இல்லை
இல்லை அந்த வெண்புறா பரிசுத்த ஆவியினுடையது. பொலிகொர்ப்பின் ஆவியோடு கலந்த பரிசுத்த ஆவி அவர் இறந்ததும் அவரைவிட்டு நீங்குகிறார் என்று பலரும் பலவாறு பேசிக்கொண்டனர். அவரது நெஞ்சினின்று புறப்பட்டுவந்த பொலிகார்ப்பின் இரத்தம் அந்த பெரும் நெருப்பை அணைத்தது.. அவரை எரித்த ஊழியக்காரன் கண்னீரோடே அவரது எரிந்துபோன எலும்புகளை பூச்சியமாக எடுத்து பராமரித்துவந்து பிற்கால கிரிஸ்ட்துவர்களிடம் ஒப்படைத்தான். பொலிகார்ப் வேத சாட்சியாக மரித்தது பிப்ரவரி 23 ஆம்தேதி கி.பி.156 ல்.
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்த்துவர்களுக்கு தலைமைப்பீடம் ரோமிலுள்ள வத்திக்கான் என்றால் அவர்களின் வேத விரோதிகளான சாத்தானின் தலைப்பீடம் துருக்கியிலுள்ள ஸ்மிர்னா வாகும். எனவேதான் ஆண்டவர் வேத விரோதிகளை சமாளிக்கவும் எதிர்க்கவும் பொலிகார்ப் போன்ற வேத சாட்ச்சிகளை அதிகமாக அனுப்புகிறார். அதாவது சிங்கத்தை அதன் குகை வாயிலிலேயே சந்திக்கப்போகும் சுத்த வீரனைப்போல..இப்பேர்ப்பட்ட வேத சாட்சிகளுக்காக மன்றாடுவது ஒவ்வொரு கிரிஸ்த்துவனின் கடமையாகும். ரோமங்கத்தோலிக்க
திருச்சபையும் கீழை ரீதி திருச்சபையும் மேலும் பல திருச்சபைகள் பொலிகார்புக்கு புனிதர் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளன.
தூய பொலிகார்ப் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
No comments:
Post a Comment