Monday, June 3, 2013

" ஆக்கூவில் பயங்கரம்"

" ஆக்கூவில் பயங்கரம்"

         அக்கூ என்பது பாலெஸ்தின நாட்டில்லுல்ல ஒரு துறைமுகப்பட்டிணம். அன்றும் அதற்கு அதே பெயர் தான். இன்றும் அதே பெயர் தான்.சமயங்களில் அக்ரி என்றும் மருவி அழைக்கப்படும். கி.பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த பல கிரிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் கன்னிமாடங்களின் இடிபாடுகளும் இங்கு நிறையவே இருந்தாலும்
அவற்றில் ஒரு கன்னி மாடத்தைச்சேர்ந்த பத்து கன்னிகைகளுக்கு நேர்ந்த கதி பற்றி 1699 ஆம் ஆண்டு அங்கே திருப்பயணம் மேற்கொண்ட பிரிட்டிஷ் ராணுவ டாக்டராகப் பணிபுறிந்த டாக்டர் ரிச்சர்டு பொகொகி கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.
      " நான் இங்கு பல தேவாலயங்களையும் கன்னி மாடங்களையும் இடிந்த நிலையில் கண்டேன். அவற்றில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கரமான துக்கமான சம்பவத்தை என் வழிகாட்டி எனக்கு விவரித்தபோது எனக்கு ஏற்ப்பட்ட துக்கம் வார்த்தையில் சொல்லிமுடியாது. இந்தப்பலஸ்த்தின நாடு பலமுறை பல அரசர்களின் கைகளில் மாறி மாறி வந்ததால் அவரவர் தத்தம் கைச்சேவையாய் பல அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அவற்றுல் பல இன்னும் ஆழியாத நினைவுச்சின்னங்களாக நின்று கொண்டு இருக்கின்றன. இந்தக்கன்னிமாடம் மே19, 1291 அன்று அன்றைய பைசாந்தியார் [இன்றைய துருக்கி] கைக்கு மாறியபோது அங்கு வந்த ராணுவ வீரர்களின்கைகளில்
தாங்கள் அகப்பட்டுக்கொண்டால் தங்கள் கதி அதோகதிதானென்று உணர்ந்த அந்த மடத்துத்தலைவி அந்த நிலையில் என்ன செய்யவேண்டும் என்ற முடிவுக்குவந்தார். அந்த முடிவு எப்பேற்பட்ட பயங்கரமான துணிச்சலானா முடிவு தெரியுமா ?" மேலே படியுங்கள். அவர் தன்கீழ் உள்ள மற்ற கன்னிகளை அழைத்து இவ்வாறு பிரசங்கம் செய்தார். "அன்புள்ள சகோதரிகளே,
“ நாம் நம் கற்பையும் வாழ்வையும் நம் ஆண்டவராகிய யேசுவுக்கே அற்பணித்து வாழ்ந்துவருவதாக சத்திய பிரமாணம் செய்துள்ளபடியால் இந்த பைசாந்திய ராணுவ வீரர்களின்  கைகளில் அகப்பட்டு கற்பிழந்து சீரழிந்துபோவதைவிட உன் கை உனக்கு இடறலாயிருந்தால் அதை வெட்டி எறி. உன் கண் உனக்கு இடறலாயிருந்தால் அதைப்பிடுங்கி எறி என்று நம் ஆண்டவர் யேசுக்கிரிஸ்த்து கூறியபடியே நாம் நம் முகத்தையும், பெண்மையையும் சிதைத்துப்போடுவோம். இதை நான் முன்னின்று செய்கிறேன். நீங்களும் என்னை பின் பற்றி செய்யுங்கள்" என்று தானே முன்மாதிரியாய் நின்று தன் காதுகள் இரண்டையும் உதடுகள் இரண்டையும் தன் கன்னங்கள் இரண்டையும் மேலும் தன் பெண்மைக்குறிய மார்பகங்கள் இரண்டையும் கத்தியால் அறுத்துப்போட்டார். இதைப்பார்த்த மற்ற கன்னிகைகளும் அவ்வாறே செய்து கொண்டனர்.
      இந்த நிகழ்ச்சியை நான் முதன்முதலில் படிக்கும்போது என் மயிற்கால்கள் எல்லாம் எனக்கு சிலிர்த்துப்போயிற்று. அடக்கடவுளே இப்படியும் நடக்குமோ... நடக்க முடியுமோ என்று நான் எவ்வளவோ நினைத்துப்பார்த்தாலும் நடந்தது உண்மை...அக்கன்னியர்கள் யேசுவின்மீது கொண்டிருந்த அளவுக்கதிகமான பற்று அவர்களை இவ்வாறு செய்யத்தூண்டியது.மேலும்  வேத வாக்கியங்கள் எவ்வளவு தீர்க்கமானவை... எவ்வளவு வலிமை வாய்ந்தவை...அவற்றை பின்பற்றுவது என்பது எவ்வளவு கடினம் என்று நாம் எவ்வளவு சாக்கு போக்கு  கூறிக்கொண்டாலும் பின்பற்றுபவர்கள் பின்பற்றிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதற்கு ஸ்வாமி அவ்வப்போது என்பித்துக்கொண்டுதான் இருக்கின்றார்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே சற்று நேரத்தில் அங்கு வந்த பைசாந்திய ராணுவ வீரர்கள் மிகுந்த ஆசையோடும் அவசரத்தோடும் அந்த கன்னிமாடத்தில் பிரவேசித்து அழகான  கன்னியர்களைக் கற்பழிக்கலாம் என்ற உள்ளே வந்து பார்த்த போது அவர்கள் மிகுந்த அதிற்சிக்கு ஆளானார்கள். உயிரோடு இருக்கும் எலும்புகூடுகளாய்...இரத்த சகதியில் மூழ்கி   திளைத்தவர்களாய்... பார்க்கவே பயங்கரம் வருவிப்பவர்களாய்...உயிருள்ள பசாசுகள்போலும் வலியாலும் வேதனையாலும் முக்கிக்கொண்டும் முனகிக்கொண்டும் அறறிக்கொண்டும் உயிரோடு வாழ்ந்துவரும் சவங்கள்போலும் இருந்த அந்த பத்து கன்னிகைகளின் நிலைகண்ட அந்த பைசாந்திய ரணுவ வீரர்கள் மிகவும் திடுக்கிட்டுப்போனார்கள்...போர்க்களத்தில்  அவர்கள் எவ்வளவோ சவங்களைப்பார்த்திருந்தும் அரண்டுபோகாத அவர்கள் இந்த பத்து கன்னியர்களின் நிலை கண்டு உலகையே வெறுத்துப்போனார்கள்.
பெண்கள் கூட்டத்தில் ராணுவம் புகுந்தால் என்ன ஆகும் என்று அவர்கள் புறிந்துகொண்ட காரணத்தால் தாங்கள் தியாக தீபமாய் இவ்வாறு தங்களை பலி ஆக்கிக்கொண்டார்கள் என்று உணர்ந்தார்கள். மேலும் கிரிஸ்த்துவமதத்தில் தற்கொலைக்கு இடமில்லை என்றும் அவர்கள் அறிந்திருந்ததால் இந்த பத்து கன்னியர்களும் தங்களுக்கு தங்களை அழித்துக்கொண்டு நல்லதொரு பாடம் கற்பித்துள்ளார்கள் என்ரு உண்ர்ந்தார்கள்.. எனவே அந்த ராணுவ வீரர்கள் இந்த பத்து கன்னியர்களின் மீது பரிதாபம் கொண்டு மேலும் அவர்களை அதிக நேரம் துன்பப்படாத படிக்கு அடுத்த வினடியில் அவர்கள் அனைவரையும் கண்டம்துண்டமாய் வெட்டிப்போட்டு ஒரு மாமிச குவியலாக போட்டுவிட்டுச்சென்றார்கள்.
இந்த பத்து கன்னியர்களின் சவங்கள் அழுகி பல காலம் எலும்புகூடுகளாக இருந்தது. ஆனால் நடந்த சம்பவங்களைக்கேள்விப்பட்ட யாத்திரீகர்கள் சத்தம்போடாமல் அவர்கள்  எலும்புகளை அருளிக்கமாக தூக்கிச்சென்றுவிட்டார்கள். மேலும் சிலுவைப்போர்கள்..உள்நாட்டுக்கலவரங்கள்...வேத கலாபனைகள் போன்ற காரணங்களால் இந்த கன்னிமாடத்தைப்பற்றியும் அங்கு தியாகதீபமாய் மறைந்து போன கன்னியைகளைப்பற்றியும் எதையும் அறிந்துகொள்ள முடியாமல் போயிற்று.
" உன் கண் உனக்கு இடலறாக இருந்தால் அதை பிடுங்கிஎறி,
உன் கை உனக்கு இடறலாக இருந்தால் அதை வெட்டிப்போடு," என்ற யேசுவின் வார்த்தைகள் உண்மையில் நடைமுறைக்கு சாத்தியமே என்பதற்கு மேலே சொல்லப்பட்ட சரித்திர நிகழ்ச்சி சான்றாகும்.





No comments:

Post a Comment