Tuesday, June 11, 2013

" சொல்ல மறந்த கதைகள்"




" சொல்ல மறந்த கதைகள்"

      " நான் கவிஞனுமில்லை...நல்ல ரசிகனுமில்லை...காதலென்னும் வாழ்க்கையில் நான் பொம்மையுமில்லை " கவிஞர் கண்ணதாசன்.. இந்தப்பாடல் யாருக்குப் பொருந்துகின்றதோ   இல்லையோ எனக்குப் பொருந்துவதாகவே நினைக்கின்றேன். நான் வேத ஆராய்ச்சியாளனும் இல்லை. சாமியாரும் இல்லை. பைபிளையோ .உலக நாடுகளின் சரித்திரங்களையோ நான்  கரைத்துக்குடித்தவனுமில்லை...
ஆனாலும் எனக்கு யேசுநாதரின் மேல் பக்தியும் பாசமும் அதிகம் உண்டு. எனக்கும் ஒரு சிறிய ஆசை ஏற்பட்டது. யேசு நாதரின் மரணத்திற்க்குப்பிற்பாடு அவர் பரலோகம்   சென்றடைந்த பிறகு அவரது அப்போஸ்த்தலர்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும் என்ன நடந்தது..அவர்களின் முடிவு எப்படி ஆனது..என்பது   பற்றி அறிந்துகொள்ள ஆவல் ஏற்பட்டது. அதன் விளைவாக எனக்கு கிடைத்த சில விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஆனால் எல்லாரையும் பற்றி இந்த   கதையில் குறிப்பிட முடியாது. எனக்குத்தெரிந்த சிலரைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறன்.
          "பெதானியாவைச்சேர்ந்த லாசர் "
     லாசரப்பொருத்தவரை அவர் யேசுவின் நண்பர் என்றே நமக்கு அறிமுகமாகின்றார். அவர் யார்? அவரது தாய் தந்தை யார்? அவர் துணைவியார் யார்? அவருடன் கூடப்பிறந்தவர்கள் யார்
யார் ? எத்தனை பேர் ? என்பன போன்ற விபரங்கள் வேதாகமத்தில் இல்லை.. மரிய மதலேனாளின் வாழ்கை வரலாறு என்னும் புத்தகமும் தேவ தாயாரின் வாழ்கைவரலாறு என்னும்   புத்தகமும் யேசுவின் வாழ்க்கைவரலாறு என்னும் புத்தகமும் யேசுவின் பாடுகள் என்னும் புத்தகமும் திருக்காட்சி வரம் பெற்ற அருட்சகோதரி புனித காத்தரின் எம்மரிக் என்னும்   கன்னிகா ஸ்திரியால் எழுதப்பட்டது. அதிலிருந்து பல ஸ்வாரஸ்யமான நிகழ்ச்சிகளை நாம் அறிந்துகொள்ள முடியும். அதிலிருந்து லாஸரின் குடும்பத்தைபற்றி சில தொகுப்புகள்........
      லாசரின் தந்தையார் பெயர் ஸாரா.. எகிப்த்திய வம்ஸாவழியில் ஓர் உயர் குடும்பத்திலிருந்த வந்த பெரும் தனவான். சிரியா நாட்டின் அரசவையில் ஒரு பெரும் பொருப்பை வகித்து   வந்தவர். மேலும் அவரது வீரத்தால் போர் முனையில் பெரும் வெற்றிகள் பல கண்டதால் அவர் ரோமானியர்களிடமிருந்து ஜெருசலேமிலும் கலிலேயாவிலும் பெரும் சொத்துக்களும் அரண்மனைகளும், கோட்டைகளும், வீடுகளுமாகப் பெற்றிருந்தார். போதாததர்க்கு அவர் மனைவி ஜிஸபெல் என்னும் எபிரேய பெண், பரிசேயர்கள் வம்சாவளியில் வந்தவள், தனக்கு   சீதனமாக பெரும் சொத்துக்களை கொண்டு வந்திருந்ததால் ஸாரா ஒரு இளவரசனைப்போல் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி மூலம் இஸ்ராயேல் கடவுளிடம் பெரும் பக்தி
கொண்டிருந்ததால் ஆண்டவரின் வருகைகாக காத்துக்கொண்டிருந்தார். அவருக்கென ஜெரிக்கோவில் ஒரு பெரும் அரண்மனை இருந்தது. அருகருகே சிறிதும் பெரிதுமாய் பல அரண்மனைகளும் அவருக்கு சொந்தமாக இருந்தது. இந்த அரண்மனைகளில் தச்சு தொழிழ்களை மேற்பார்வை இடவும் மராமத்து செய்யவும் யேசு நாதரின் தந்தை யோசேப்பு என்னும் சூசையப்பர் இந்த ஜெரிக்கோ அரண்மனையிலும் ஜெருசலேம் வீடுகளிலும் வரும்போதும் வேலை செய்யும்போதும் சாராவுக்கும் அவர் மனைவி ஜிசபெல்லுக்கும் பரிச்சயம் ஏற்பட்டது.  சூசையப்பரின் நேர்மையும் வேலைத்திரனும் அவரது கடவுள் பக்த்தியும் அவர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சூழ்நிலையில் சூசையப்பருக்கு திருமணமாகி சுவாமி யேசு நாதரும்  பிறந்து அவரை கோவிலில் காணிக்கையாக் ஒப்புக்கொடுக்கப்பட்ட அன்று லாஸரின் தகப்பனர் ஸாராவும் அவர் மனைவி ஜிஸபெல்லும் தேவாலயத்துக்கு வந்திருந்தனர். அங்கு   அவர்கள் தேவாலய பெரிய குரு சிமியோனின் வாழ்த்து மொழிகளையும் தீர்க்கதரிசனங்களையும் கேட்டபோழுது சூசையபரின் மகன்தான் பிறந்துவந்துள்ள மெசியா என்று அறிந்து
கொண்டார்கள். அதிலிருந்து ஸாரா சூசையப்பரின் பெருமையை உணர்ந்தவராய் அவரை உயர்வாகப்போற்றி மதித்து அவருக்குத்தேவையான அனைத்து உதவிகளையும் உவப்புடனே  செய்துவந்தார்.. இப்படியாக ஆரம்பித்த நட்பு ஸாரா காலம் துவங்கி யேசுநாதர் காலம் வரை லாஸர் குடும்பம் வரை தொடர்ந்தது. எனவேதான் லாஸர் மீது யேசுநாதர்
அவ்வளவு நட்பு கொண்டிருந்தார்.
         இந்த ஸாரா ஜிஸபெல் தம்பதியினருக்கு மொத்தம் பதினைந்து குழந்தைகள் பிறந்தன. அவற்றில் ஆறு குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்துவிட்டன. மீதமுள்ள குழந்தைகளில்  யேசுநாதர் காலத்தில் இருந்தவர் நான்கு பேர் மட்டுமே. லாஸர் மூத்தவர். அவருக்கு அடுத்தவள் இரண்டு வருட வயது வித்தியாசத்தில் மார்த்தா என்னும் பெண்.. அவளுக்கு அடுத்து
இளையவள் இரண்டு வயது வித்தியாசத்தில்.. பெயர் மரியாள்... அவளுக்கு அடுத்து ஐந்துவயது வித்தியசத்தில் ஒரு பெண். அவள் பெயரும் மரியாள்.[ இந்த மரியாள் என்னும் பெயர் நம்   ஊர் மாரியம்மாள் என்னும் பெயர் போல் ஏராளமான மரியாக்கள் அக்காலத்தில் இருந்தார்கள்] ஆனால் கடைசியில் நாம் பார்த்த கடைக்குட்டி மரியாள் மகதலா என்னும் ஊரிலுள்ள
அரண்மனையில் வசித்துவந்ததால் அவள் மதலேன் மரியாள் என்று அழைக்கபட்டாள்.
       தந்தை ஸாராவுக்குப்பிறகு லாஸருக்கு அத்தனை சொத்துக்களும் வந்து சேர்ந்தன. பெத்தானியில் தன் அரண்மனைக்கு அருகிளுள்ள இரு அரண்மனைகளில் ஒவொவ்ன்றிலுமாய்  தன் சகோதரிகளான மார்த்தாவுக்கு ஒன்றும் மரியளுக்கு ஒன்றுமாய் குடி அமர்த்தினார். மார்த்தாளின் திருமண வாழ்க்கையைபற்றி ஒன்றும் தெரியவில்லை.. ஆனால் அவள் தங்கை
மரியாளுக்கு நிச்சயமாக திருமணம் ஆகவில்லை..அதே போல் லாஸரின் திருமண வாழ்க்கையை பற்றியும் ஒன்றும் தெரியவில்லை.. அவருக்கு மனைவி மக்கள் இருந்தர்களா ஒன்றும்   அறியமுடியவில்லை. கடைகுட்டி மரியாளுக்கு மகதலாக்கோட்டை கிடைத்தது. தனது ஒன்பதாவது வயதிலிருந்தே தன் வளர்ப்புத்தாயாருடன் மகதலேன் மரியாள் இந்த கோட்டையில்  மிகவும் வசதியாக வசித்த்து வந்தா. தன் பெற்றோர்களின் அளவு கடந்த பக்தி அவளை வெறுப்படைய செய்தது. எப்போது பார்த்தாலும் ஜெபம் ...எப்போது பார்த்தாலும் தவம்..பசி..பட்டினி  நோன்பு இவைகள் அவளை மிகவும் சோர்வடைய வைத்ததால் கடவுள் பக்தி என்பது அவளிடம் சிறு வயது முதலே இல்லாமல் போய்விட்டிருந்தது. போதாததற்கு அவளது வளர்ப்புத்தாயார்  அவளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து... அவள் அழகை அதிகம் வர்ணித்து அவளுக்கு அவள் அழகைப்பற்றிய பெருமையை அதிகம் வளர்த்துவிட்டாள்..இது போதாதா ஒரு பெண்   கெடுவதர்க்கு..அழகும் காசும் பணமும் அவளை தீய வழிக்கு நடத்திச்சென்றன.
      ஆனால் இவளுக்கு நேர் எதிரான வாழ்க்கையை வாழ்ந்தாள் இவளின் மூத்த சகோதரி மரியாள்.. இவளுக்கு பேசாமடந்தை என்று ஒரு பட்டப்பெயரும் உண்டு. ஆனால் அவளுக்கு  பேசத்தெரியும்...வெளி மனிதர் யாரோடும் இவள் பேசுவதே இல்லை.. விஷேஷமாக இவள் ஆண்களிடம் பேசுவதே இல்லை..ஒரே குடும்பத்தில் இரு சகோதரிகள் ஒன்றுக்கொன்று நேர்
எதிரான குணம் கொண்டிருந்தனர். அமுதும் விஷமும் ஒரே மண்ணில் என்பது போல.. இந்த பேசாமடந்தை மரியாள் இரு ஆண்களிடம் மட்டுமே பேசி இருக்கின்றாள். ஒருவர் அவள்  மூத்த சகோதரன் லாஸர்.. மற்றவர் யேசுநாதர்..இந்த மரியாள் யேசுநாதராலேயே மிகவும் பாராட்டப்பட்டவள்.. ஆனால் இந்த மரியாள் பேசுவாள்.. செடி கொடிகளுடன்   பேசுவாள்...இயற்கையுடன் பேசுவாள்...வானில் வின்மீன்களுடன் பேசுவாள்...சூரிய சந்திரனுடன் பேசுவாள்..இதைப்பார்க்கும் யாவரும் அவளுக்கு சித்த பிரமையோ என்றுதான்   நினைப்பர். கடவுளின் படைப்புக்களுடன் பேசுவது என்பது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று.
யேசுநாதர் ஒரு முறை ஜெரிக்கோவில் உள்ள லாஸரின் அரண்மணைக்கு வந்திருந்த போது அவருக்கு பலத்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. விருந்து ஏற்பாடுகளை  மூத்தவள் கவனித்துக்கொண்டாள். ஆனால் இளையவளான மரியாள் ஆண்டவறாகிய யேசுவின் பாதம் பணிந்துகொண்டு அவர் சொல்லுமனைத்து வார்த்தைகளையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தாள். தனக்கு உதவிக்கு தன் தங்கை மரியாள் வறாததை கண்ட மார்த்தாள் ஆண்டவரிடம் " போதகரே, மரியாளை எனக்கு உதவிக்கு வரச்சொல்லுங்கள் " என்றாள். அதர்க்கு யேசு நாதர் " மார்த்தா... நீ அனேக காரியங்களைப்பற்றி வீனே கவலைப்பட்டுக்கொண்டு இருக்கின்றாய்.... ஆனால் மரியாள் தனக்குத்தேவையானவற்றில் [ ஆண்ம
காரியங்களிள் ] கவனமாக இருக்கின்றாள்.. என்று அவளது பக்தி முயற்சியைப்பற்றி பெரிதும் சிலாகித்தார்.
       இருப்பினும் லாஸர் தன் தங்கை மரியாளின் தனிமைபற்றியும் அவளது அளவுக்கதிகமான கடவுள் பக்தியைப்பற்றியும் கவலை பட்டவறாய் அவளை யேசுவிடம் கொண்டுவந்து  அவளிடம் குறை இருக்குமானால் அவளை குணப்படுத்தும்படிக்கு யேசுவை மிகவும் கேட்டுக்கொண்டார். யேசுவும் அவளிடம் பேசத்துவங்கினார். அப்போது மரியாள் யேசுவின் பாதம்
தொட்டு வணங்கி முத்தமிட்டாள்.. யேசு அவளை தடை செய்யவில்லை. அவளது கரம் பற்றி தூக்கி நிறுத்தினார். அவளது கண்கள் உயர்ந்து பரலோகத்தை பார்த்தன..அவள் கண்கள்  யேசுநாதர் யார் என்று கண்டு கொண்டன.. இதோ பரலோகத்திலிருந்து மனிதாவதாரமாக வந்திருக்கும் சுதனகிய சர்வேசுரன். பரலோக தந்தை தன் ஒரே மகனை இந்த உலகிற்கு அனுப்பி தன் குடிமக்களின் கடனை அடைத்து அவர்களை மீட்க சித்தம் கொண்டு உம்மை அனுப்பியுள்ளார்.. ஆனால் இந்த நன்றிகெட்ட குடிமக்கள் " சொத்துக்குறியவன் இதோ   வருகின்றார்.... வாருங்கள் அவரை கொன்று போடுவோம் " என்று அவரை கொண்று போட்டார்கள்.. மனுமகன் இதோ பாடுகள் பல பட்டு மரிக்கப்போகின்றார்.. இதோ அவர் சிலுவையில்
அறையப்பட்டு மரித்துவிட்டார்... இதோ அவர் உயிர்த்துவிட்டார்...மீண்டும் இந்த நன்றி கெட்ட மக்களை நடுத்தீர்க்க வருவார் என்று தீர்க்கதரிசனமாக யேசுவுக்கு பின்னால்   நடக்கப்போகும் நிந்தைகளையும் அவமானங்களையும் பாடுகளையும் அவரது உயிர்ப்பையும் உத்தானத்தையும் அவள் பைரிசுத்த ஆவியின் வல்லமையால் தீஎர்க்கதரிசனமாகக் கூறினாள்.
      மேலும் அவள் தன் மூத்த சகோதரன் லாஸருக்கும் தன் இளைய சகோதரி மக்தலேன் மரியளையும் பற்றியும் கூறிய தீர்க்கதரிசனம் இவ்வாறாக இருந்தது.  " இதோ என் சகோதன் இந்த உலகத்தை விட்டே போகிறான்... அடுத்த உலகத்தில் என்ன இருக்கின்றது என்று கூர்ந்து பார்க்கின்றான்... அவனது நண்பர்கள் அவன் இந்த   உலகத்திற்கு ஒரு போதும் திரும்பி வரப்போவ்தில்லை என்று கவலையோடு அழுகின்றார்கள்..ஆனால் மனுமகன் அவனை அவரது திராட்சைத்தோட்டத்தில் பணியாற்ற இந்த
உலகத்திற்கு திரும்பிவர அழைகின்றார்..".
         தன் இளைய சகோதரி மகதலேன் மரியாளைப்பற்றி இவ்வாறு தீர்க்கதரிசனம் கூறினாள்..  " ஓ மகதலேன்மரியாள்... என் சகோதரி.... நீ அந்த பயங்கரமான பாலைவனத்தில் ...அன்றைய இஸ்ராயேல் மக்கள் நடந்த பாலைவனத்தில் இருக்கின்றாய்....இருள் சூழ்ந்த   பாலை வனத்தில் இதர்க்கு முன் மனித இனமே காலடி தடம் படாத இடத்தில் இருக்கின்றாய்...ஆனாலும் மீண்டு வருவாய்.... மீண்டும் பாலைவனத்தில் உன் பாவங்களுக்காக
நீண்டகாலம் தவம் செய்கிறாய் "..
        பிறகு யேசுவும் பேசாமடந்தை மரியாளும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். தன் தங்கை மரியாள் யேசுவுடன் சர்வ சாதாரணமாக அளவளாவிக்கொண்டிருந்ததைக்கண்ட  லாஸர் மிகவும் மகிழ்சிக்கொண்டிருந்தார்.. தன் சகோதரி மரியாள் இனிமேல் இப்படியே எல்லோரிடமும் பேச முற்படுவாள் என்று நினைத்த லாஸருக்கு ஏமாற்றமே மிஞ்சியது..
     மரியாள் மீண்டும் பேசா மடந்தை ஆனாள்.. யேசுநாதர் அவரிடம் " நண்பா...மரியாளை அவள் போக்கிலேயே விட்டுவிடு.. அவளிடத்தில் குறை ஒன்றுமில்லை. அவளது ஆண்மா  இவ்வுலகத்தை சார்ந்தது இல்லை.. அது பரலோகத்தை சார்ந்தது..அதனாலேயே இவ்வுலக காரியங்கள் அவளிடமிருந்து எடுபட்டுவிட்டது. அவள் இன்னும் கொஞ்ச நாளே இந்த
உலகில் இருப்பாள் " என்றார்.
      சில நாட்க்களுக்குப்பின் யேசு நாதர் ஜெருசலேமில் தேவாலயத்தில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வியபாரம் செய்துகொண்டிருந்தவர்களை கடுமையாக தாக்கி  " என் ஆண்டவரின் கோவிலை கொள்ளைகூடாரம் ஆக்கினீரே என்றார். இதனால் கோபமுற்ற வியாபாரிகளும், கோயில் நிரிவாகிகளும் பரிசேயர்களும் யேசுவை கைது செய்து தாக்க  முயன்றார்கள்.. ஆனால் யேசு அவர்களிடமிருந்து மறைந்து போனார்.. என்வே அவர்கள் ஜெருசக்லேமில் தங்கிருந்த அவரது தாயாரையும் மற்றும் அவருடனிருந்த பல பெண்களையும்  கடுமையான வார்த்தைகளால் திட்டி ஊரைவிட்டு வெளியே செல்ல பணித்தர்கள்.. எனவே தேவ தாயாரும் அவருடன் இருந்த பரிசுத்த பெண்கள் பலரும் ஜெரிக்கோவிலுள்ள லாஸர்
அரண்மனை அடைந்தார்கள்.. அப்போது லாஸரின் இளைய சகோதரி பேசாமடந்தை மரியாள் கடும் நோய்வாய் பட்டிருந்தாள்.. யேசுவின் பாடுகளை அவள் தியானித்துக்கொண்டிருந்தாள்.
        அவளது ஆண்மா பரலோக பேரின்பத்தை ரசித்து பரவச நிலை அடைந்தது.. ஆனல் அவளது உடல் பின்னால் நடகப்போகும் யேசுவின் பாடுகளை உணர்ந்ததால் வலியும் வேதனையும்   அதிகமாகி ஜன்னி கண்டது. இதைகண்ட தேவ தாயார் அவளை தன் மடியில் கிடத்தி அவளுக்கு ஆறுதல் பல கூறினார்.. அப்போது பரலோக சுகந்தம் வீசியது... அந்த பரவச
நிலையிலேயே பேசாமடந்தை மரியாள் மரணித்தாள்... பாக்கியமான மரணத்தை அடைந்தாள்.. அந்த வீட்டிலேயே அவள் அடக்கம்பண்ணப்ட்டாள்.
இந்த பேசாமடந்தை மரியாளின் மரணத்திற்குபிறகு மார்த்தாவும் லாசரும் மகதலாக்கோட்டையிலிருந்த மதலேன் மரியாளை அனுகி யேசுநாதரிடம் அவளை அழைத்துச்சென்றனர்.
           யேசுநாதரும் அவளிடத்தில் பரிவுகொண்டு அவளிடமிருந்த கொடுமையான ஏழு பேய்களையும் அகற்றினார்..இந்த நிகழ்வு ஒன்றும் ஒரே நாளில் நடந்துவிடவில்லை..சிலவகை   பேய்களை இப்போதும் ஜோர்டான் நாட்டிலுள்ள கடாரா என்னும் இடத்திலும் சிலவகை பேய்களை பல நாள் கழித்து அசனோத் என்னுமிடத்திலும் அகற்றினார். ஆக இந்த அசனோத்
என்னுமிடத்தில் யேசுநாதர் நிகழ்த்திய பிரசங்கம் மிகவும் கடுமையாகவும் பயங்கரமகவும் இருந்தது..யேசுவின்மட்டில் இடறல் பட்ட பரிசேயரைப்பார்த்து அவர் " ஐய்யோ பெத்சாய்தா...
உனக்கு ஐய்யோ கேடு...ஐய்யோ கெரசிம் ...உனக்கும் ஐய்யோ கேடு...சாலமோனின் ஞானத்தைப்பற்றிகேள்விப்பட்ட தென்னாட்டு இளவரசி ஷேபா அவரைகாணவேண்டி இங்கு  வந்தார்... ஆனால்... சாலமோனிலும் பெரியவர் இதோ இங்கே உள்ளார்.. ஆனால் நீங்கள் கண்ணிருந்தும் குருடராய்...காதிருந்தும் செவிடராய் அவரை ஏற்றுக்கொள்ள
மனமில்லாமலிருக்கின்றீர்கள். இதனால் தென்னாட்டு இளவரசி வந்து உங்களை கண்டனம் செய்வாள் " என்றாள். அபோது அங்கிருந்த பல தாய்மார்களின் கைகளிருந்த பாலர்களும்  குழந்தைகளும் " நசரேத்தூர் யேசுவே வாழ்க...பரிசுத்த போதகரே வாழ்க... தாவீதின் மகனே வாழ்க...பரிசுத்த கடவுளின் மகனே வாழ்க " என்று ஆர்ப்பரித்தனர்.
        யேசுநாதரால் குணமடந்த மதலேன் மரியாள் யேசுவின் தயாரை சேர்ந்து சரணடைந்தாள்..அவரோடேதங்க விரும்பினாள்..ஆனால் சூழ்நிலை வேறு விதமாக அமைந்தது.  லாசருக்கு சொந்தமான ஒரு அரண்மனை சமாரியாவில் தீர்ஸாப்பட்டினத்தில் இருந்தது. தீர்சாப்பட்டிணத்திலிருந்த ஏரோதின் சிறைச்சாலையில் அடைபட்டிருந்த கைதிகளின்  நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்ததைக்கேள்விபட்ட யேசுநாதர் அந்த சிறைச்சாலைகுச்சென்று அங்கிருந்த கைதிகள் ஆண்..பெண் என்று பாகுபடின்றி அதற்குறிய  பிணைய தொகை செலுத்தி சட்டபூர்வமாக விடுதலை செய்தார். இந்த பிணைத்தொகைக்காக லாஸர் பொறுப்பேற்றுக்கொண்டார்.. அதன்விளைவாக மகதலாவில் மதலேன்மரியாள்    வசித்துவந்த மகதலாக்கோட்டையை விற்று கடனடைத்தார்.. இதனால் லாஸரின் தங்கை மகதலேன் மரியாள் லாஸருடன் பெத்தானி வந்து தன் இறந்துபோன மூத்த சகோதரி   பேசாமடந்தை மரியாளின் அரண்மனையில் தங்கினாள். இந்த பேசாமடந்தை மரியாளை உலகமும் திருச்சபையும் மறந்தே போயிற்று. இதற்க்கு பிறகு நடந்த அனைத்து காரியங்களிலும்  லாஸரின் குடும்பத்தை பொருத்தமட்டில் மூன்று பேர்தான்... அதாவது..லாஸர்.. மார்த்தா...மதலேன்மரியாள் என்னும் மரியாள். லாஸரின் மரணத்தின்போதுகூட மார்த்தாவுடன்   இருந்தவள் இந்த மதலேன் மரியாள் தான்.
                        லாஸரின் உயிர்ப்பு...
    . லாஸர் இறந்த நான்கு நாட்க்கள் வரை யேசு நாதரின் வருகைக்காக காத்திருந்த மார்த்தாளும் மகதலேன் மரியாளும் அவரது சடலத்தை அக்கால முறைப்படி மருந்திட்டும்   தைலமிட்டும் பாதுகாத்தனர். ஆனால் யேசு நாதர் வறாததால் ஏமாற்றம் அடைந்தனர்.. எனவே லாசரை முறைப்படி அடக்கம் செய்தனர். இந்த சமயத்தில் யேசுநாதர் தன் சீடர்கள்   சிலருடன் லாஸரின் அரண்மனைக்கு பெதானியாவுக்கு வந்தார். மார்த்தாள் அவரை முறைப்படி வரவேற்றாள். அப்போது மார்த்தாள் " ஆண்டவரே தேவரீர் மட்டும் இங்கிருந்திருந்தால்   என் சகோதரன் இறந்திருக்கமாட்டான் " என்றாள். அதர்க்கு யேசு நாதர், " உயிரும் உயிப்பும் நானே... என்னில் மறிப்பவன் இறப்பினும் வாழ்வான்... லாஸருக்கு வந்த காய்ச்சல்   மரணத்தில் முடியக்கூடியதல்ல... ஆனாலும் கடவுளின் வல்ல செயல்கள் அவனில் நிறைவேரும் பொருட்டே அவன் இறந்தான்... இந்த மரணமும் அவனுக்கு நல்லதே... உனக்கு   விசுவாசம் இருந்தால் கடவுளின் வல்ல செயல்களைக்காண்பாய் " என்றார்.. அதர்க்கு மகதலனே மரியாள், " ஆம் ஆண்டவரே... பொதுத்தீர்வை நாளில் அனைவரும் உயிர்த்தெழும் போது
அவனும் உயிர்ப்பான் என்று நம்புகிறேன் " என்றாள். பிறகு அனைவரும் அவனது கல்லரைக்கு சென்றனர். அன்று அவன் இறந்து எட்டாம் நாள்.
லாஸரின் கல்லரை....ஊருக்கு வெளியே ஒரு குகை.. அதன் கீழ் நிலவரை.. அதை அடைய பல படிகள்... கீழ்த்தலத்தில் அறை... அதன் நடுவே ஒரு கல்லரை... அதை ஒரு   நீண்ட கல் பலகையால் மூடி இருந்தனர்...அதற்குள் தான் லாஸர் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.. யேசு நாதர் லாஸரின் கல்லரைக்கு வந்திருகின்றர் என்று கேள்விப்பட்டதும்
ஊர் மக்கள் அவரைப்பார்க்க திரண்டனர்..மகதலேன் மரியாளும் மார்த்தாளும் கடைசிப்படிகளில் நின்று கொண்டனர். யேசு நாதரின் உத்திரவின்படி அவருடைய சீடர்கள் கல்லரையின்  கல்பலகையை திறந்தனர்.. அப்போது மார்த்தாள், " ஆண்டவரே, ஏற்கனவே அவன் இறந்து நான்கு நாட்களுக்கு மேல் ஆகிறது... நாற்றம் அடிக்குமே" என்றாள்.
       அப்போது யேசு நாதர் உரத்த குரலில், " லாஸரே வெளியே வா" என்றார்.. உடனே லாஸர் உயிர்த்தெழுந்தான்..காலை நீட்டியபடியே எழுந்து உட்கார்ந்தான்.. இதைக்கண்ட மக்கள்  பெரும் கூச்சலிட்டனர்..மார்த்தாளும் மகதலேன் மரியாளும் மயங்கி விழுந்தனர். அப்போஸ்த்தலர்கள் உயிர்த்த லாஸருக்கு முகத்தை மூடியிருந்த துணியை விலக்கினர்...மேலும்
லாஸரைக்கட்டியிருந்த கைக்கட்டு கால் கட்டுக்ளை அவிழ்த்தனர். லாஸர் எழுந்து நடந்தான்... தன் உடன்பிறந்த சகோதரிகளை கடந்து சென்றான்...அவன் சகோதரிகள் அவனை   இன்னும் செத்தவன் ஆவியாக வந்திருக்கின்றான் என்று அவனைத்தொடவே பயந்தனர்.. யேசுநாதர் அவனைப்பின் தொடர்ந்து அவனப்பற்றிக்கொண்டு வெளியே வந்தார்..
      அனைவரும் லாஸரின் அரண்மனைக்கு வந்தனர்.. வீட்டின் முற்றத்தில் வந்ததும் லாஸர் தன் நினைவு வரப்பெற்றவறாய் யேசுவின் முன்பாக சாஸ்ட்டாந்தமாக தெண்டனிட்டு  வணங்கினார்.. அதாவது தனக்கு குருப்பட்டம் அருளப்போகும் ஆயர் முன்பாக தெண்டனிட்டு குப்புறப்படுத்திருக்கும் குரு மாணவர்போல் அந்த காட்சி இருந்தது..
அப்போது யேசுநாதர். அவன் தலையைத்தொட்டு சற்றே நிமிர்த்தி அவன் முகத்தில் ஏழு முறை ஊதினார்...அப்போது லாஸரின் முகத்திலிருந்த அத்தனை திறப்புகளினின்றும்  அடர்த்தியான கரும்புகை வெளிபட்டது. அந்தக்கரும்புகையனது ஒரு உருவமாக அதாவது இறக்கைகொண்டு பறக்கும் ஒரு பறவை நாகமாக மாறி வெளியே பறந்து சென்று மறைந்தது.
இப்படியாக யேசுவால் உயிர்ப்பிக்கப்பட்ட லாஸர் இந்த உலகின் அனைத்து ஆசாபாசங்களினின்றும் விடுவிக்கப்பட்டார்.. யேசு நாதர் லாஸரின் மீது ஏழு முறை தன் மூச்சுக்காற்றை   ஊதினார் அல்லவா.... அப்போதே லாஸர் யேசுநாதரின் மூலமாக பரிசுத்த ஆவியாரின் ஏழு வல்லமைகளையும் ஆசீர்வாதமாக பெற்றுக்கொண்டார்.
      அப்போது யேசுநாதர் லாஸரிடம் கூறியது ," மகனே லாஸர்..நீ புதுப்பிறப்பு அடைந்துள்ளாய்... உன் தேவனாகிய ஆண்டவரின் திராட்சைத்தோட்டத்தில் பணியாற்ற நீ    அழைக்கபட்டுள்ளாய்..அனைத்தும் உனக்கு அருளப்பட்டுவிட்டது " என்றார்.
                     நான் ஒரு மட்பாண்டம்....
     உயிர்த்த லாஸருக்கு எல்லாமே புறிந்துவிட்டது.. தன் முன்பு உயிரோடு இருந்தவரை யேசுநாதர் தன்னை நண்பா என்றே அழைத்தார்..இப்போது தான் உயிர்த்தபிறகு தன்னை   மகனே என்று அழைகின்றார்.. ஏன்? அவர் இவ்வுலகத்திற்கு வந்திருக்கும் சுதனாகிய சர்வேஸ்வரன்.. இவராலேயே தனக்கு மீண்டும் உயிர் கிடைத்திருக்கின்றது. இனி நான்
இவ்வுலகத்திற்கு சொந்தமானவன் அல்ல..இனிமேல் தனக்கும் இந்த யேசுநாதருக்கும் உள்ள உறவு தகப்பன் மகன் உறவுதான்.. எனவே தான் யேசு நாதர் தன்னை இப்போது மகனே   என்று அழைத்தார் என்று உணர்ந்து கொண்டார்.
        தான் முதன்முதல் தன் தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் தான் மண்னிலிருந்தே வந்தவன் என்றும் தான் இரண்டாம் முறை உயிர்த்தபின்னும் தான் வந்த இடம் இந்த மண் தான்  என்றும் இந்த உலகத்தின் லட்ஷணம் என்ன... அதன் அழியும் தன்மை என்ன ....என்பது எல்லாம் அவருக்கு மிகவும் நன்றாகப் புறிந்ததால் அவர் தன்னை அதற்குப்பிறகு தான் ஒரு
மட்பாண்டம் என்றே தன்னை அழைத்துக்கொண்டார். ஒருமுறை சகோதரர் இருவர் சொத்து தகறாரால் அடிதடிபட்டு மண்டையை உடைத்துக்கொண்டு லாஸரிடம் நியாயம் கேட்க்க   வந்திருந்தனர். அப்போது லாஸர், " நீ ஒரு மண் கலையம். அவன் ஒரு மண்கலயம். ஆக இரண்டு மண் கலயங்கள் முட்டிக்கொண்டு உடைந்துபோய் விட்டன " என்றார்.
       சகோதரர்களுக்கு ஒன்றும் புறியவில்லை. அப்போது லாஸர் தன் இரு கைகளால் அவர்கள் இருவரின் தலைகளையையும் தொட்டார்.. அப்போது அங்கிருந்து வழித்த இரத்தம் வாசனை  மாறி மண் வாசனை வீசிற்றாம்.. சண்டை போட்டு வந்த சகோதரர் இருவரும் மனம் மாறி அவரின் சீடர் ஆனார்கள்.
                                       யேசு நாதரின் மரணம்....
       யேசு நாதரின் மரணம் ஒன்றும் திடுதிப்பென நடந்துவிட்ட ஒன்றல்ல.. அது பரம பிதாவின் சித்தப்படியே நடந்தது.. எல்லாம் அவர் சித்தப்படியே அனைத்தும் புள்ளிபோட்டாற்போல்  நிகழ்ந்தது.. எனவே யேசு நாதரும் அதர்கென தன்னை தயாரித்துக்கொண்டு தான் இருந்தார். மற்றவர்களையும் தயார்ப்படுத்தினார்.. அவரும் சிலுவையின் பாடுகளில் தன்
நிர்வாணத்தை வெளிக்காட்டதபடி தன்னை பரமபிதா காக்கவேண்டுமென பூங்காவனத்தில் தான் ரத்த வேர்வை வேர்க்கும்போது வேண்டிக்கொண்டார்.. ஆனால் அந்த வேண்டுதலும்  அவருக்கு மறுக்கப்பட்டது. இந்த உலக மக்கள் கற்புக்கு விரோதமான பாவங்களை செய்யும்போது அதர்க்கு பரிகாரமாக யேசு நாதர் நிர்வாணமக சிலுவையில் அறையப்படவேண்டுமென
அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் பரம பிதாவின் சித்தத்திற்கு பணிந்தார்.. யேசுநாதருக்கு தான் படப்போகும் பாடுகளைப்பற்றியோ... வலிகள் வேதனைகள் பற்றியோ  பெரும் விஷயமாகப்படவில்லை.. தான் சிலுவையில் முழு நிர்வாணமாக பாடுபடப்போகின்றோம் என்னும் நினைவும் அதனால் தனக்கு ஏற்ப்படப்போகும் அவமானமும் தான் அவரை
மிகவும் வருத்தியதாக ஒரு தகவல் உண்டு. எப்படியோ... அவரும் மரித்து கல்லரையில் அடக்கமும் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பிறகு பரலோகமும் சென்றுவிட்டர்.
          " இதர்க்குப்பிறகு லாஸரின் குடும்பத்தில் நடந்த விஷயங்கள்".
    யேசுநாதரின் மறைவுக்குப்பின் மரிய மதலேனாள் இந்த உலக வாழ்க்கையை வெறுத்துப்போனாள்... அவள் வாழ்ந்த வாழ்க்கை என்ன...திமிர் என்ன...அழகென்ன...அடடா...  எல்லாம் மறந்து போனது... மறைந்தும் போனது...இன்னுமும்கூட அரண்மனை வாசம் உண்டு.. இருந்து என்ன பிரையோஜனம்... தன் தலைவனும் எஜமானனும் தன் ஆண்டவனுமாகிய
யேசு நாதர் மறைந்துபோய் விட்ட பிறகு இது எல்லாம் இருந்தென்ன போய் என்ன...எல்லாம் வீண்...இருப்பினும் தன் தலைவனும் எஜமானனுமாகிய யேசு நாதர் அநியாயமாக அநீதியான  தீர்ப்பால் மரணமடைந்தார் என்னும் நினைப்பு வரும்போதெல்லாம் இதர்க்கு நியாயம் கேட்காமல் விடப்போவதில்லை என்று சபதம் எடுத்துக்கொண்டாள்..இதர்க்காக செராபீஸ் என்னும்
பெயருடைய [வெரோணிக்காள் என்று அழைக்கப்டும்] பெண்ணை துணைக்கு அழைத்துக்கொண்டு ரோம் நகர் சென்றாள். அப்போது ரோமை ஆட்சி செய்தவர் தீத்து ராஜா.. அப்போது  அவர் கடும் நோய்வாய் பட்டிருந்ததால் பல நாட்க்கள் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தாங்கள் அவரை சந்தித்தால் அவருடைய நோய் நீங்கும் என்று
கூறியதால் தீத்து ராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கபட்டது.  மன்னரும் அவர்கள் தன்னை வந்து சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று வினாவினார்..
       அப்போது மதலேன் மரியாள் தன் தலைவனும் தன் எஜமானர் யார் என்றும் எவ்வளவு வல்லமையான போதகர் என்றும் அவர் செய்த போதனைகள் சாதனைகள் அரும்குறிகள்   புதுமைகள் அனைத்தையும் கூறி போஞ்சி பிலாத்துவின் தவறான நீதியால் அவருக்கு நேரிட்ட கொடுமையான மரணம் பற்றியும் பிறகு அவரது வின்னேற்றம் பற்ரியும் மன்னரிடம்   விபரமாக எடுத்துறைத்தாள். பிறகு அதற்கு சாட்ச்சியாக வெறோணிக்கவையும் அவரிடமுள்ள யேசுநாதரின் முகம் பதித்த துண்டையும் காண்பித்தாள்.. மன்னர் தீத்து ராயன் மிகவும்  ஆச்சரியமடைந்தான். யேசு நாதரின் ரத்தக்கறைகள் அவரது உருவத்தை கட்டுகின்றனவே என்று முழுமனதாக நம்பினான்... மேலும் மன்னர் தீத்து ராயன் அந்த வெரோணிகாவின்
துண்டில் முகம் புதைக்கவே அவனைபீடித்திருந்த நோய் அனைத்தும் மன்னருக்கு உடனே நீங்கியது.. மன்னர் தீத்து ராயன் அடைந்த மகிழ்ச்ச்க்கு அளவே இல்லை..
                         இதே வேளையில் போஞ்சிபிலாத்து யேசுவைப்பற்றிய குற்றப்பத்திரிக்கையும் மரண அறிக்கையும் மன்னரிடம் வந்திருந்தது. அதில் போஞ்சிபிலாத்து இப்படி எழுதி இருந்தான்...  " யேசு நாதர் உண்மையில் குற்றமற்றவர்.. அவரிடத்தில் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை.. விஷேஷமாக கொலைக்கு ஏதுவான எந்த குற்றமும் காணவில்லை. இந்த யூத
குருமார்களின் வற்புறுத்தலின் பேரில் நான் அவருக்கு சிலுவை மரணம் தீர்ப்பிடவேண்டியதாயிற்று..அந்த யூத குருமார்கள் சீசரை முழுமனதாக தங்களின் அரசராக   ஏற்றுக்கொள்வதாக்வும் அவருக்கு தங்களின் முழு ஒத்துழைப்புதருவதகவும் ஒத்துக்கொண்டதன் பேரில் நான் யேசுவுக்கு சிலுவைச்சாவுக்கு தீர்வையை அளிக்கும்படி ஆயிற்று ."
        இந்த வர்த்தமானங்களால் திருப்தியடைந்த தீத்து ராயன் யேசு நாதரை அநியாயமாக தீர்ப்பளித்தது தவறு என்று ஒப்புக்கொண்டான்..அதர்கான ஆணையை தயாரித்து அவற்றை  போஞ்சி பிலாத்துவிடமும் அன்றைய தலைமை குருக்களிடமும் சேர்ப்பிக்க சொல்லி மரிய மதலேனாலையும் செராபீஸ் என்னும் வெரோனிக்கம்மாளையும் மீண்டும் ஜெருசலேம்
அனுப்பினார் ரோமை மாமன்னர் தீத்து ராயன். ரோமை சக்கரவர்த்தியிடமிருந்து வந்திருந்த ஆணையைக்கண்டதும் தலைமை குரு கைய்ப்பாஸும் போஞ்சிபிலாத்தும் வானத்திற்கும்  பூமிக்குமாக குதித்தனர்..
தலைமைகுரு கைப்பாஸ்,செராபீஸ் என்னும் வெரோனிக்காவை பழி வாங்க துடித்தார்.. அதற்கான காலத்தை எதிர்பார்த்தார்.. அப்போது யேசு நாதரைப்பற்றி யாரும் வாய் திறந்து   பேசக்கூடாது என்னும் கட்டளை பிறப்பித்தார்.. இதை காரணமாக வைத்துக்கொண்டு வெரோணிக்கம்மாளை சிறை பிடித்தார்.. பல கொடுமைகள் அவருக்கு அங்கு காத்திருந்தது.
விசாரணை என்னும் பெயரில் அவருக்கு உணவு மறுக்கப்பட்டது...கடைசியில் அவர் பட்டிணியாலேயே மரித்தார்.. இன்றும் அவரது கல்லறை யேசுநாதர் மூன்றாம் முறை சிலுவையோடு  குப்புற விழுந்தார் அல்லவா... அதன் நினைவாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் வெளிப்புறத்தில் உள்ளது.     அந்தக்காலத்தில் அது ஊருக்கு வெளியே இருந்தது. வெரோணிக்கம்மாளின்
மரணத்திற்குப்பின் மரிய மதலேனாள் இவ்வுலக வழ்க்கையை வெறுத்து மனிதர் யாரும் இல்லாத யூதேயா பலைவனத்திற்குப்போய் உணவோ தண்ணீரோ இல்லாத ஒரு தனி இடத்தில்  தவம் செய்யப்போய்விட்டாள்..அந்த இடம் ஒரு காலத்தில் இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள் அல்லவா அந்த பகுதியே தான். அந்த இடத்தில் அந்த யூதேயா
பாலை வனத்தில் மணல் இல்லாத வறண்ட நீண்ட மலைத்தொடர்கள் உள்ள பகுதியில் அவள் தவம் செய்த ஒரு குகை இன்றளவும் உள்ளது. இந்த குகையில் தான் ஸ்நாபக அருளப்பரும்  சில காலம் வசித்தார்...அவர் குழந்தையாய் இருக்கையில் பெரிய ஏரோதன் காலத்தில் யேசுநாதருக்காக மூன்று வயதுக்குள்ளான மாசற்ற குழந்தைகளை கொன்று குவித்தான்
அல்லவா.அப்போது எலிஸபெத்தம்மாள் ஸ்நாபக அருளப்பரை காப்பாற்ற ஒரு குகையில் ம்றையும் போது நடக்கப்போகும் கொடும் செயலினின்று தன் குடும்பத்தைக்காப்பற்ற அவர் கணவர்   சக்காரியாஸ் விரைவாக வந்தார். ஆனால் அங்கு விதி விளையாடியது.. அவரை துரத்திவந்த ஏரோதின் வீரர்கள் அவர் குகைக்குள் நுழையும் முன்பே அவரை வெட்டி சாய்த்தார்கள்.
எலிஸபெத்தம்மாள் கண் முன்பாகவே அவரது கணவர் வெட்டப்பட்டு துடிதுடித்து இறந்தார்.. கடவுளின் கட்டளைப்படி அந்த குகை அவர்களை மூடிக்கொண்டது. அபாயம் நீங்கியபிறகு  அந்த குகை மீண்டும் திறந்துகொண்டது. பிறகு எலிஸபெத்தம்மாள் தன் கணவரை அவர்கள் பாரம்பரியமான குடும்ப கல்லரையில் அடக்கம் செய்தார்கள்.     ஸாநாபகாருளப்பரும் பல   காலம் கழித்து தலை வெட்டப்பட்டு இறந்த பிற்பாடு அவரது திரு உடல் இந்த குடும்ப கல்லரையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.   இவ்வளவு பெருமைகளைக்கொண்ட அந்த குகையை தன் தவத்திற்காக மரிய மதலேனால் தேர்ந்து கொண்டாள். காலம் போவது தெரியாமல் தவமான தவம் செய்தாள்....
         இந்த நிலையில் லாசரின் தங்கை மார்த்தாவுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்.. தன் சகோதரி பேசாமடந்தை மரியாள் லாஸரைப்பற்றி கூறிய தீர்க்கதரிசனம் மிகச்சரியாக   நிறைவேறியதைக்கண்ட மார்த்தாள் தன் கடைசித்தங்கை மரியமதலேனாளும் தன் இறந்துபோன பேசாமடந்தை மரியாள் கூரிய தீர்க்கதரிசனப்படியே தவம் இருக்கப்போய்விட்டதை
அறிந்து மிகவும் விசனப்பட்டாள்..ஒரு விதத்தில் இது கடவுளின் திருவுளம் என்று மனதை தேற்றிக்கொண்டாள். இந்த கால கட்டத்தில் பல மக்கள்.புதிதாக மனம் திருப்பபட்டு  கிரிஸ்த்துவர்களாக ஞானஸ்நானம் பெற்றனர். இந்த எண்ணிக்கை மடமடவென்று அதிகரிக்கவே அவர்களை பராமரிக்கவும் ஏழை கிரிஸ்த்துவ ம்க்களை காக்கவும் பெரும் நிதிவுதவி  தேவைப்பட்டது. இந்த சமயத்தில் லாஸரின் பெரும் செல்வம் உதவியது. இது யூத சமய பெரும் குருக்களை உறுத்தியது. இந்த யேசு நாதரைப்பற்றி யாரும் வாய் திறக்கக்கூடாது என்று  தடையுத்திரவு போட்டும் எப்படி மக்கள் கிரிஸ்த்துவர்களாக மாறுகின்றார்கள் என்பது அவர்களுக்கு பெரும் வியப்பாக இருந்தது..
           இந்த சமயத்தில் மார்த்தவின் பங்கும் பெரும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. தன் பெரும் அரண்மனையை மதம்மாறிய ஏழைகிரிஸ்த்துவ மக்களுக்காக திறந்து வைத்து அவர்களுக்கு  அடைக்கலம் கொடுத்தார். யாரும் யாரையும் சார்ந்து வாழக்கூடது என்பதர்க்காக கல்வியும் பலவிதமான கைத்தொழில்களும் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்..இப்படித்தான் கிரிஸ்த்துவ  ஏழை மக்களுக்கு உதவும் ஸ்தாபனங்கள் தோன்றியது. இதனாலேயே இத்தகைய உதவும் கரங்கள் ஸ்தாபனங்களுக்கு இவர்தான் பாது காவலர் என்று திருச்சபை அறிவித்துள்ளது.
        ஆயிற்று.... கி.பி. 42 ஆம் ஆண்டில் ஜெருசலேமில் பெரும் வேத கலாபணை ஆரம்பித்தது. கிரிஸ்த்துவமக்கள் கொண்று குவிக்கபட்டார்கள்..அவர்களுக்கு ஆதரவு அளித்தவர்களும் கொடும் ஆக்கினைக்கு ஆட்படுத்தப்பட்டார்கள்...இந்த சமயத்தில் தான் ஸ்தேவான் என்னும் முடியப்பரும் சந்தியாகு எனப்படும் பெரிய யாகப்பரும் அவரது தம்பி முறையினரான சின்ன   யாகப்பரும் வேத சாட்ச்சியாக மரித்தனர்.    இதெற்கெல்லாம் காரணம் சவுல் என்னும் ஒரு யூத இளைஞன். யூத மத வெறி பிடித்து கிரிஸ்த்தவர்களை கொல்வதே தன் வாழ்நாளின்   லட்ச்சியம் என்று வெறிகொண்டு அலைந்தான்...இந்த சூழ்நிலையில் மரிய மதலேனாள் தன் தவம் கலைந்தாள். தன் சகோதரி மார்த்தாளின் இல்லத்திர்க்கு விரைந்தாள்.
லாஸரும் மார்த்தாளும் அவளை வரவேற்றனர்..அவர்களின் சந்தோஷம் அதிக காலம் நீடிக்கவில்லை.
       கிரிஸ்த்துவ மக்களுக்கு துணை நிற்ப்பவர்கள் என்னும் அட்டவணையில் லாஸரின் பெயர் அடிபட்டதால் சவுலின் கழுகுப்பார்வை லாஸரின் குடும்பத்தில் விழுந்தது. பிறகு பிரச்சனைக்கு  கேட்க்கவா வேண்டும்... திடீரென வந்தது ஒரு கும்பல்...வெறிபிடித்து கொள்ளையிட்டது லாஸரின் வீட்டை...லாஸர் , மர்த்தாள்,,மதலேன் மரியாள் மற்ரும் அவர்தம்
அரண்மனையிலிருந்த வேலையாட்க்கள், அடைக்கலம் கேட்டு வந்திருந்த கிரிஸ்த்துவர்கள் என கண்ணில் பட்ட அனைவரையும் அள்ளிச்சென்று துவம்ஸம் செய்தார்கள். முடிவாக   லாஸர், மார்த்தாள், மதலேன் மரியாள்,மாக்ஸிமின் என்னும் யேசுவின் சீடர், மார்ச்செல்லி என்னும் மார்த்தாளின் வேலைக்காரி, பேசாமடந்தை மரியாளின் சேடிப்பெண் என ஒரு
கூட்டத்தை நாடுகடத்த உத்திரவிடப்பட்டது.
        அனைவரையும் ஒரு கப்பலில் ஏற்றி மத்திய தரைக்கடலில் வெகு தூரம் கொண்டு சென்று அவர்கள் அனைவரையும் ஒரு சாதாரண படகில் இறக்கிவிட்டு அந்த படகை   செலுத்துவதற்கான துடுப்புகளையும் பிடுங்கிக்கொண்டு அவர்களை நிற்கதியாக கடலில் விட்டுச்சென்றர்கள். அந்த படகு அதன் போக்கிலேயே போய்க்கொண்டிருந்தது. இப்படி
எத்தனைகாலம் பயணித்தர்களோ தெரியவில்லை... அவர்கள் அனைவரும் மயங்கி படகிலேயே கிடந்தனர். ஒரு வழியாக படகு மார்செல் என்னும் இடத்தை அடைந்தது. அந்த இடம்   இன்றைய ஃப்ரான்ஸ் தேசத்தின் தென்பகுதியில் இருக்கின்றது. இந்த் மார்செல் என்னும் பட்டணத்தில் இருந்தபடியே இவர்கள் அங்கிருந்த மக்களுக்கு வேதம் போதித்தனர்.
இந்த பட்டிணத்தில் தான் லாஸர் முதல் மேற்றிறாணியார் [பிஷப்] ஆனார். இந்த ஊரிலிருந்து மார்த்தாள் தெரஸ்கோன் என்னும் ஊருக்கு வந்தாள். இங்கு அவருக்கு ஒரு ஆச்சர்யம்  காத்திருந்தது.
             " தெரெஸ்க்வு " என்னும் ஒரு டிராகன்.[ tarasque dragon]
    தெரெஸ்கோன் என்னும் பட்டிணத்தின் பெயரே ஒரு டிராகனின் பெயரால் வந்தது தான். ஒரு பெரும் எருதைப்போன்ற உயரமும் ஒரு குதிரைபோன்ற நீட்டமும் மீனைப்போன்ற  வயிரும் இடுப்புக்கீழ் ஒரு பாம்பைப்போல் வாலும், ஒரு ராட்சத சிங்கத்துக்குறிய முகமும் வாயில் கத்தியைப்போன்ற பற்றகளும் நீண்ட கொம்புகள் இரண்டும் இருபுறமும் இறக்கைகள்கொன்ட ஒரு அரக்கன் இந்த ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் அங்கிருந்த கருப்பு ஏரியிலும் அருகிலுள்ள அடர்ந்த காடுகளிலும் மறைந்து வாழ்ந்து அந்த வழியே
வருவோர் போவோர் அனைவரையும் கொன்று தின்று வந்தான். யாராலும் இந்த அரக்கனை கொல்ல முடியவில்லை. அருகிலேயே நெருங்க முடியவில்லை..இந்த விஷயம் கேள்விப்பட்ட  மார்த்தாள் தைரியமாக அந்த அரக்கனிடம் சென்றாள்.. யேசுவின் சிலுவையால் அவன் மீது சிலுவை அடையாளமிட்டாள். மேலும் அவன் மீது மந்திரித்த தீர்த்தத்தை வீசினாள். .
அவ்வளவுதான்... அந்த அரக்கன் பணிந்தான்..சாதாரண ஒரு பசு மாட்டைப்போல் படுத்துகொண்டான்.. உடனே அந்த ஊர் மக்கள் அந்த அரக்கன் மீது கொடும் வாள் கொண்டு   தாக்கிக்கொன்றனர்.. மக்கள் எல்லோரும் நிம்மதி அடைந்தார்கள்.. ஒரு பெண் இந்த கொடிய அரக்கனைக்கட்டிப்போட்டாள் என்றாள் அவள் தேவதையாகத்தான் இருக்கமுடியும் என்று  அவளைக்கொண்டாடினார்கள்...படிப்படியாக அவள் மீது நம்பிக்கை வைத்து யேசுவை பின் பற்றினார்கள். ஃபிரான்ஸ் தேசத்தில் இப்படியாகத்தான் கிரிஸ்த்துவ மதம் தோன்றியது. இந்த  ஊரில் இருந்தபடியே மார்த்தாள் திருச்சபைக்கு பல நல்ல காரிங்களை புறிந்தாள்.. இந்த ஊரிலேயே மரித்தாள்.
            இந்த தெரஸ்கோன் பட்டிணத்தில் உள்ள ஒரு கோயிலில் அவரது கல்லரை உள்ளது.[ collegiate of church of theresque ]  அடுத்து மதலேன் மரியாளுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்.
         லாசரும் மரிய மதலேனாலும் ப்ரொவென்ஸ் என்னுமிடத்திற்க்கு வ்ந்தார்கள். அங்கிருந்தபடியே தங்கள் வேத போதக அலுவலை ஆரம்பித்து பலரை மனம்திருப்பினார்கள். அங்கிருந்த  பாமே என்னும் மலையிலிருந்த ஒரு குகையில் மதலேனாள் மீண்டும் தவம் செய்யப்போனள். தவம் என்றால் தவம் அப்படி ஒரு தவம்.. இப்படியாக முப்பது வருடம் தவத்தினாலேயே
கழிந்தது. அவளது ஆடைகள் எல்லாம் நைந்துபோய் அவளது கூந்தலே அவளுக்கு ஆடையாக மாறியது. அவளுக்கு முடிவு காலம் வருவதை சம்மனசுக்கள் அவருக்கு தெரிவித்தனர்.  இதர்க்காக சம்மனசுக்கள் அவரை அலாகாக தூக்கி வந்து மலையடிவாரத்தில் அமைந்திருந்த அஃஸ் என்னும் ஊரில் மடாலயம் அமைந்திருந்த மாக்ஸிமஸ் என்னும் யேசுவின் சீடரிடம்
கொண்டுவந்து விட்டனர். அவர் மரிய மதலேனாளுக்கு கடைசி ஆயத்தங்களையெல்லாம் செய்து திவ்ய நர்கருணை கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் மதலனே மரியாள் அமைதியாக  இறந்து போனாள்..யேசுவின் அன்புக்குறிய தோழியும், அவரின் பெண் சிஷ்யைகளுக்கெல்லாம் தலைவியுமான மதலேன் மரியாள் மீழாத்துயிலில் ஆழ்ந்திருந்தாள்..அப்போது யேசுவின்  சீடரான மாக்ஸிமஸ் இரண்டு சம்மனசுகள் மதலேன் மரியாளின் ஆண்மாவை பரலோகத்துக்கு கைத்தாங்கலாக அழைத்துச்சென்றதைகண்டதாக அவரது சரித்திரத்தில் எழுதிவைத்து
இருக்கிறார்.. மரிய மதலேனாள் இறக்கும்போது அவருடைய வயது ஏறக்குறைய அறுபது இருக்கும்.
        மாக்ஸிமஸ் உடனே மரிய மதலேன் மரியாளின் திரு உடலை வில்லா லதா என்னுமிடத்தில் சகல மரியதைகளுடன் புதைத்து அதன் மீது ஒரு தேவாலயம் அமைத்துள்ளார்.   இப்போது இந்த இடம் சைன்ட் மாக்ஸிமின் என்றழைக்கப்படுகின்றது. கி.பி. 745 வரை அவரது திருவுடல் அங்கேயே இருந்தது. ஆனால் அதன் பிறகு ஃப்ரான்ஸ் தேசத்தின் மீது
சார்சேனியர்கள் என்னும் முறட்டு முஸ்லிம்களின் படை எடுப்பின் போது இந்த கோலுக்கு அபாயம் நேராதபடிக்கு இந்த கல்லரையை திறந்து மதலேன் மரியாளின் திரு உடலை எடுத்து   மீண்டும் வேறு இடத்தில் சகல குறிப்புகளையும் எழுதிவைத்து புதைத்துவிட்டார்கள். பிறகு கி.பி. 1279ல் லா சாந்தே பாமே என்னுமிடத்தில் தோமினிக்கன் கன்னியாஸ்திரிகளுக்கான
கன்னிமாடம் கட்டும்போது மீண்டும் புனித மரியமதலேனாளின் புனித கல்லரை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. கி.பி. 1822ல் புதிதான கல்லரைக்கோயில் கட்டப்பட்டு இன்றுவரை   உள்ளது. அவரது கபாலம் இந்த கோவிலில் அருளிக்கமாக உள்ளது. பல காலம் வரை அவரது கபாலத்தில் நெற்றிபொட்டில் ஒரு சிரிய சதைப்பகுதி இருந்ததாக ஒரு குறிப்பு இருந்தது.
அதாவது யேசுநாதர் உயிர்த்தபிறகு அவரை முதன் முதலில் சந்தித்தவர் இந்த மதலேன் மரியாள்தான். அப்போது அவர் யேசுவின்மீது கொண்டிருந்த பாச மிகுதியாள் யேசுநாதரை   கட்டிக்கொள்ளப்பார்த்தாள்.. அதற்க்கு யேசுநாதர் ," மரியே நீ இப்போது என்னை கட்டிக்கொள்ளவேண்டாம் ...நான் இன்னும் என் பரலோக தந்தையிடம் போகவில்லை " என்று  மரியாளை அவரது சிரசின் நெற்றிப் பொட்டில் கைவைத்து தடுத்தார். அவர் கைப்பட்ட நெற்றிப்பொட்டு சதைதான் பலகாலம் கெடாமல் இருந்ததாக ஒரு சரித்திரம் சொல்கிறது.
புனித மரிய மதலேனாளைப்பற்றி கிரேக்க திருச்சபை வேறு விதமாகக்கூறுகிறது.
       கி.பி. 42 ஆம் வருட வேத கலாபணையின் போது யேசுவின் தாயாரும் லாசரும் மார்த்தாவும் மகதலேன் மரியாளும் சுவிஷேஷகரான தூய அருளப்பருடன் எப்பேசு பட்டிணம்   வந்ததாகவும் மாதாவும் மரிய மதலேனாளும் அங்கேயே மரித்ததாகவும் எஃபெசுவில் புல்புல் மலையில் அமைந்துள்ள கிரிஸ்த்துவர்கள் குடி இருப்புகள் இருந்த இடத்தில் மரியமதலேனாள்  மற்றும் மார்த்தாள், கல்லரைகள் கூட அங்கேயே இருந்ததாகவும் கூறுகிறது. பிறகு இவர்கள் திருச்சரீரம் அருளிக்கமாக கி.பி. 886ல் கான்ஸ்டான்டி நேபிள்ல் பட்டிணத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பிறகு ஃப்ரான்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டாதாகவும் ஒரு சரித்திரம் கூறுகிறது.
        உயிர்த்த லாஸர் பிறகு இங்கிருந்து வேதபோதக அலுவலை முன்னிட்டு சைப்பிரஸ் தீவுகளிலுள்ள க்ரீட் தீவுகளின் லங்கார்னா என்னுமிடத்தில் வசித்து வேதபோதகம்  செய்துவந்ததாகவும் அங்கு அவர் தூய பாலை [சின்னப்பர்] சந்தித்ததாகவும் அவரால் பிஷப் ஆக திருநிலைப்படுத்ததாகவும் அங்கேயே தன்னுடைய எழுபதாம் வயதில் மரித்து அடக்கம்
செய்யபட்டதாகவும் ஒரு சரித்திரம் சொல்லுகிறது.
           ஆக இந்த தூய பவுல் என்னும் அடியார் தான் ஆண்டவனால் ஆட்கொள்ளப்படுவதர்க்கு முன் சவுலாக ஜெருசலேமில் வெறியாட்டம் போட்டவர். எந்த கொடியவரால் லாசரின்   குடும்பம் ப்ரான்ஸ் தேசம் சென்றதோ அதே கொடியவர் அருளாளராக மனம் மாறியபின்பு அவர் கையாலேயே லாஸர் பிஷப் ஆக திருநிலைப்படுத்தப்பட்டர் என்று அறியும்போது   ஆண்டவரின் செயல்கள் எப்பேர்ப்பட்டவை என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.  லங்கார்னா என்னுமிடத்தில் அமைந்துள்ள தூய லாஸரின் தேவாலத்தினுள் அவரது கல்லரை இன்றளவும் உள்ளது.
ஆண்டவர் எனக்கு இன்னும் அருள்கூர்ந்தால் இன்னும் சொல்ல மறந்த கதைகளை உங்களுக்கு சொல்வேன். ஆதாரம்... தூய மரிய மதலேன் வாழ்க்கை வரலாறு..ஆசிரியர் திருக்காட்சியாளர் அருட்திரு சகோதரி தூய கத்தரின் எம்மரிக்.

No comments:

Post a Comment