" தோணியப்பர் "
நான் ஒரு முறை வேளாங்கண்ணி கோயிலுக்கு திருப்பயணம் சென்றபோது எனது நண்பர்களிள் ஒருவர் சீர்காழியில் ஒரு இந்துகோயிலுக்கு என்னை அழைத்துச்சென்றார். எனக்கும் அந்த கோயிலைப்பார்க்க விருப்பம் இருந்தது. நான் கூடுமானவரை கலைச்சிறப்பு வாய்ந்த பல இந்து கோயில்களைப்பார்த்து இருக்கிறேன். அப்படியாக இந்த சீர்காழி கோயிலில் விஷேசம் ஏதாவது இருந்தால் அதையும் பார்த்துவிடுவோமே என்று நானும் கோவிலுக்குள் சென்றேன். இந்த கோயிலில் தான் திருஞானசம்பந்தருக்கு பார்வதி தேவியார் ஞானப்பால் கொடுத்து அந்த குழந்தையை ஆசீர்வதித்த இடம் என்றும் அது சம்பந்தமான கோயில் குளம் என்றும் பல இடங்களை எனக்கு என் நண்பன் காட்டினான். மேலும் இக்கோயிலின் கடவுள் சிவபெருமான் என்றும் அவருக்கு தோணியப்பர் என்றும் சட்டநாதர் என்றும் பெயர் என்றும் கூறினார். எனக்கு தோணியப்பர் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று கேட்டேன்.அவர்
கூறிய கதை எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.
அதவது பெரு ஊழிக்காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஒரு ஆணும் அவன் துணைவியும் ஒரு தோணியினால் உயிர் தப்பியதாகவும் அவர்கள் இந்த சீர்காழியில் தான் தரைதட்டி வாழ்ந்து வந்ததாகவும் அதனால் இந்த கோயில் தெய்வத்திற்கு தோணியப்பர் என்று பெயர் வந்ததாகவும் கூறினார். இந்த நிகழ்வுபற்றிய ஒரு புடைப்பு சிற்பத்தையும் இந்த கோயிலில் காட்டினார்கள்.அவர்கள் கூறிய அந்த பெரு வெள்ளம் ஏற்பட்ட காலம் ஏறக்குறைய நம் பழைய ஏற்பாட்டில் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் போன்றதே.
இந்த சரித்திர நிகழ்வும் நோவாவின் பெட்டகம் போன்றதே என்னும் எண்ணம் என் மனதில் தோன்றியதும் எனக்கு நோவாவின் காலத்தில் என்ன நடந்தது என்று அறிய மிகவும் ஆர்வம் ஏற்பட்டது. அது பற்றி திருகாட்சி வரம் பெற்ற அருட்சகோதரி காத்தரின் எம்மரிக் தன் ஞானதிருஷ்ட்டியில் கண்டு எழுதிய நோவாவின் காலத்தில் என்ன நடந்தது. எப்படி நடந்தது என்று படிக்கப்படிக்க எனக்கு மிகுந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. இனி நம்முடைய தோணியப்பர் நோவாவைப்பார்ப்போம்.
நோவாவைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது முன்னோர்களைப்பற்றிய ஒரு முன்னோட்டம் தேவைப்படுகின்றது. ஆதாமும் ஏவாளும் சொர்கபுரியிலிருந்து வெளியேற்றப்பட்டபிறகு பூலோகத்தில் வாழத்துடங்கினர். அவர்களுக்கு காயீன் ஆபேல் என்று இரு மக்கள் பிறந்தனர். காயீன் மூத்தவன். ஆபேல் இளையவன். ஆபேல் கடவுளுக்கு விருப்பப்பட்ட பிள்ளையாய் இருந்ததால் காயீனுக்கு தன் தம்பியின் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் அப்போது முறையே 150,, 140 வயது ஆகியிருந்தது. அவர்கள் இருவருக்குமே பிள்ளைகள் என்றும் பேரப்பிள்ளைகள் என்றும் தனித்தனி குடும்பங்களும் இருந்தன. இந்த நிலையிலும் மூத்தவன் காயீனுக்கு தன் தம்பி ஆபேல் மீது பொறாமை அதிகமாகி ஒருநாள் அவன் ஆலிவ் மலையில் தன் தம்பி மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தபோது ஒருபெரும் தடியால் அடித்துக்கொன்றான். இதனால் வெகுண்ட கடவுள் காயீனை
சபித்து தூர தேசத்திற்கு துரத்தினார். அவன் தன் மனைவி மக்களுடன் புரப்பட்டுச்சென்றான். காயீன் தன் தம்பிக்கு செய்த கொடும் செயலால் அவன் தன் மக்களாள் அடைந்த அவமானம் கொஞ்சநஞ்சமல்ல. அனைவரும் அவனை வெறுத்தனர். கேவலப்படுத்தினர். இருப்பினும் தன் குல முதல்வன் என்ற முறையில் அவனை தலைவனாகவும் ஏற்றுக்கொண்டனர். காயீன் தான் வாழ்ந்த காஸ்பியன் கடல் பகுதியில் தன் மகன் ஏனோக்கின் பெயரால் ஒரு நகரை நிறுவினான். இந்த ஏனோக்கை ஆண்டவர் விரும்பியதால்
சொர்கத்திற்கு உயிரோடு எடுத்துக்கொண்டு போய்விட்டார்.[ இதே போல் எலியாஸ் தீர்க்கதரிசியையும் கடவுள் உயிரோடு எடுத்துக்கொண்டு போய்விட்டார். இவர்கள் இருவரும் கடவுளின் ஆணைப்படி உலகம் முடியும் போது மீண்டும் இந்த உலகத்திற்கு கடவுளுக்கு சாட்சியாக வருவார்கள்]
காயீன் தன் தம்பிக்கு செய்த கொலைபாதகத்தால் இந்த பூமியும் அவனை வெறுத்தது. அவன் தொட்ட எதுவும் துலங்கவில்லை.விளைச்சலும் சரிவர அவனுக்கு கிடைக்கவில்லை.
இதனால் வாழ்வில் வெறுப்புற்ற காயீன் கடவுளிடம் அழுது புலம்பினான். தன் கொடும் செயலுக்கு மன்னிப்பு வேண்டினான். கடவுள் அவன் மீது இரங்கி விளைச்சக்லை அவனுக்கு கொடுத்தார். அதுவரை அவன் உயிவாழ சிலவகை மிருகங்களை கொன்று சாப்பிட அனுமதித்தார். இறைச்சி உண்ணும் பழக்கம் மனிதர்களிடையே இப்படித்தான் ஆரம்பித்தது. கடைசிவரை காயீன் தன் தம்பிக்கு செய்த துரோகத்தால் பலராலும் அவமானப்படுத்தப்பட்டு வாழ்வில் வெறுப்புற்று மிகவும் துன்பமான முடிவை அடைந்தான்.
மனிதரா..... அரக்கரா....ராட்சதர்களா....தேவகுமாரர்களா....
காயீனின் மகன் ஏனோக்கின் வம்சாவழியில் வந்தவன் துபால்காயீன். இவனே பல அரும்பெரும் கலைகளின் தந்தை. இவனது வம்சாவழியில் வந்தவர்கள் உருவத்தில் பெரும் ராட்சதர்கள் போல் விளங்கினார்கள். கடவுளால் சபிக்கப்பட்ட சாத்தான்கள்பல கடவுளின் அனுமதியின்பேரில் இவ்வுலகில் இந்த உலகம் முடியும்வரை சுற்றித்திரிந்து மனிதர்களை
சோதிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தன. அவைகள் இந்த கருங்கடல் பகுதியில் அக்காலத்தில் வாழ்ந்துவந்த காயீனின் சந்ததியினரை பீடித்துக்கொண்டு தங்களது மாய்மாலங்களை செய்துவந்தன. ராட்சதர்கள் போல் உயர்ந்து வளர்ந்து வந்திருந்த துபால்காயினின் சந்ததியினர் இந்த சத்தான்களின் உதவியினால் மரங்களின் மேல் சரசரவென ஏறவும் மரத்திற்கு மரம்
தாவவும் மலைக்கு மலை தாவவும் சடுதியில் மறையவும் தாக்கவும் வல்லமை பெற்று விளங்கினர். மேலும் பில்லி சூனியம் மந்திரம் மாயம் போன்ற எல்லவிதமான தகிடுதத்தங்களும் பித்தலாட்டங்களும் செய்து மக்களை அச்சுருத்திவந்தனர். ஆண்களின் நிலையைவிட பெண்களின் நிலை மிகவும் மோசமானது. பேய்களின் உதவியுடன் சகலவிதமான
துஸ்டத்தனங்களையும் வேசித்தனங்களையும் கொஞ்சமும் அருவருப்பில்லாமல் செய்துவந்தனர். ஆபாசமான நடனங்களும் அதற்குதகுந்த அசுசியானபாடல்களும் பெரும் ராகமெடுத்துப்பாடி காண்போரை பாவத்தில் விழத்தாட்டினர். தங்களுக்குத்தோன்றியபடி எல்லாம் படங்கள் வரைந்து அதர்க்கு உருவமும் கொடுத்து அதையே கடவுள் என்று
அருவருப்பான சிலை வழிபாடு செய்து கடவுளின் கோபத்திற்கு ஆளாயினர். அதைவிட கொடுமை தங்கள் இஸ்டம் போல் படைத்துக்கொண்ட கடவுளர்களின் சிலைக்கு தலைச்சன் ஆண் குழந்தைகளையும் மனவளம் குன்றிய மற்றும் அங்க ஈனமான குழந்தைகளையும் பலியாக இட்டனர். சாமிக்கு இரத்தப்பலி என்னும் சாக்கில் அக்கால பில்லி சூனியக்காரர்களும் சூனியக்காரிகளும் தங்களுக்கு வேண்டாதவர்களையும் நரபலியாக கொண்றனர். மேலும் சாத்தான்களின் உதவியினால் மாயகண்ணாடிகளின் வழியே தூர இடத்திலுள்ளவைகளைப்பார்த்து அவர்களின் மேல் திடீரென தாக்கி அவர்களை வெற்றிகொண்டு ஆண்களை அடிமைகளாக்கி பெண்களை வேசிகளாக்கி குழந்தைகளை பலி கொடுத்து மஹா அக்கிரமங்களை செய்துவந்தார்கள். இந்த அக்கிரமத்தில்சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க உயர்ந்த கோட்டைகளையும் கட்டிக்கொண்டார்கள். தங்கள்
எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பெரிய பெரிய கட்டிடங்களையும் அரண்மணைகளையும் கட்டிக்கொண்டார்கள். அந்த அக்கிரமகாரர்களுக்கு புத்தி சொல்ல யாரும்
இல்லை. புத்தி சொன்னவர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் கடவுள் இந்த மனிதர்களை அழிக்க சித்தம் கொண்டார். இத்தகைய மனிதர்களிலும் நல்லவர் யாவரும் உண்டோ எனத்தேடினார். அவர் பார்வையில் ஏனோக்கின் வம்சாவளியில் வந்த நோவா என்னும் மனிதர் தென்பட்டார். நோவா பார்த்துக்கொண்டிருகும்போதே ஒரு மேகத்தில் கடவுள் மனித உருவத்தில் அவருக்குத்தோன்றினார். நோவா கடவுள் முன் முகம் குப்புற விழுந்து வணங்கினார். கடவுள் அவரிடம் தான் இந்த அரக்க குணம் கொண்ட மனிதர்களை அழிக்க சித்தம் கொண்டுள்ளதாகவும் பெரும் ஜலப்பிரளயம் கொண்டு இந்த மிலேச்சர்களை அழிக்க விரும்புவதாகவும் அதனால் இந்த அபாயத்திலிருந்து நல்ல உள்ளம் கொண்ட மக்களை காக்கும்படிக்கு ஒரு பெரும் கப்பல் ஒன்று செய்யும்படியும் குறிப்பிட்ட நாளில் தான் படைத்த எல்லாப்படைப்புகளையும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் சிலரையும் கப்பலில் ஏற்றி காப்பாற்றும்படியும் கூறினார்.
இதைகேட்ட நோவா மிகவும் மனம் வருந்தினார். அந்த பாவிகளான மக்களுக்காக அவர்களை மன்னிக்கும்படியும் மன்றாடினார். அவர் கடவுள் எப்படியும் இந்த மக்களை மன்னிப்பார் என்ற நம்பிக்கையில் உடனே கப்பல் கட்ட ஆரம்பிக்கவில்லை. கடவுள் இரண்டாம்தடவையும் அவரை எச்சரித்தார். அப்போதும் நோவா காலம் தாழ்த்தினார். ஆனால் கடவுள் மூன்றாம்
தடவையும் எச்சரிக்கவே நோவா சுதாரித்துக்கொண்டு கப்பல் கட்டும் வேலையை ஆரம்பித்தார். இதற்காக அவர் தன் இருப்பிடத்தை சோரோஸ்ற்றும் என்னும் இடத்திற்கு குடிபெயர்ந்தார்.அது ஒரு உயர்ந்த மலைமீது இருந்தது. கீழே பள்ளத்தாக்கில் ஊர் இருந்தது. கடவுளின் மூன்று முறை எக்சரிக்கைக்கும் இடைவெளியாக முப்பது ஆண்டுகள் கடந்து
விட்டதால் நோவே சேம், காம், எப்பேத்து என்னும் தன் மூன்று மக்களுடனும் கப்பல் கட்டும் வேலையை ஆரம்பித்துவிட்டார். அவர் ஏன் இப்படியோரு கப்பல் கட்டும் வேலையை ஆரம்பித்துவிட்டார் என்று உள்ளூர் மக்கள் யாவருக்கும் தெரியாது. எனவே அந்த மிலேச்சர்கள் அவர்களை அடிக்கடி கிண்டலும் கேலியும் நையாண்டியும் செய்து சமயங்களில் நையப்புடைத்தும் மகிழ்ந்தனர். கப்பல் கீழ்தலம் நடுத்தலம் மற்றும் மேல் தலம் என்று உயர்ந்துகொண்டே வந்தது.
அப்போது ஒருநாள் மூன்று தேவர்கள் நோவாவை சந்திக்க வந்தார்கள். அவர்கள் நோவாவிடம் ஒரு பெட்டியைக்கொடுத்து அதை இந்த கப்பலில் பத்திரமாக வைக்கும்படி கூறி மறைந்து போனார்கள் [மிகவும்பிற்காலத்தில் இந்த மூன்று தேவர்களும் மீண்டும் இந்த பூமியில் வந்து அபிரகாமை சந்தித்தனர்] நோவா அந்த பெட்டியைதிறந்துபார்த்தார். அதில்
ஒரு திராட்ச்சைக்கொத்துடன்கூடிய ஒரு கிளை ஒரு ஆப்பில் பழத்தில் செருகி வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு அழகிய கிண்ணம் தங்க நிறத்தில் பீடம் ஏதும் இல்லாமல் இரண்டு கைப்பிடியுடனும் இருந்தது. அதில் ஒரு புறத்தில் படமெடுத்தாடும் ஒரு நாகப்பாம்பின் உருவமும் மறு புறத்தில் திராட்சைகணிகள் கொத்தாகவும் படம் வரையப்பட்டிருந்தன.
நோவாவுக்கு அப்போது அந்த படங்களின் அர்த்தம் விளங்கவில்லை. மேலும் அந்தக்கிண்ணம் என்ன உலோகம் என்றும் தெரியவில்லை. மேலும் சிறிய அளவிலான் மூடியுடன் கூடிய மூன்று தங்க சிமிழ்களும் இருந்தன. நோவே இவை யாவையும் மிகவும் பாதுகாபாக தன் வசம் வைத்துக்கொண்டார்.
கடவுள் கட்டளையிட்டபடியே ஒரு கப்பல் கட்டும்பணியை மேற்கொண்ட நோவா முப்பது ஆண்டுகளாக அதர்க்கான தயாரிப்புகளை மேற்கொண்டார். மேலும் மூன்று ஆண்டுகளில் அந்தப்பணியை முடித்தார்.இவ்விதமாகவே யேசுநாதரும் தன் வேதபோதக பணியை ஆரம்பிக்க முப்பது ஆண்டுகளாக தன்னை தயாரித்துக்கொண்டு மேலும் மூன்று ஆண்டுகளில் தன் மீட்ப்புபணியை முடித்தார்.
கப்பல் நல்லவிதமாக கட்டிமுடிக்கப்பட்டதும் நோவா நன்றிபலி ஒப்புகொடுத்தார். கடவுள் அவருக்குத்தோன்றி உலகின் நான்கு திசைகளின் சார்பாகவும் வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்க்கு திசைகளிலிருந்தும் நடப்பன பறப்பன ஊர்வன போன்ற அனைத்து படைப்புகளின் மாதிரியாக ஆணும் பெண்னுமாக இரண்டிரண்டு ஜோடியாக குழலூதி அழைத்து
வரச்செய்தார், மிகவும் பெரிதான யானை, காண்டாமிருகம், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி போன்றவை கப்பலின் கீழ்பகுதியிலும் வனவிலங்குகளும் வீட்டு விலங்குகளும் தனிதனியே பிரிக்கப்பட்டு நடுத்தலத்திலும் பாரமற்ற பறவைகள் போன்றவை மேல் தலத்திலும் வைக்கப்பட்டன.
நோவாவின் மகன்களில் ஒருவன் எப்பொத்து. இவன் மகன் மோசொக்கு. இவனுக்கு தவறான வழியில் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் ஹோம். இவனுக்கும் இவன் சுற்றத்தாருக்கும் பெருவெள்ளத்தால் ஏற்படும் அழிவை நினைத்த மோசோக்கு தன் ஒரு சகோதரனான துபாலிடம் தன் தவறை சொல்லி தன்னையும் தன் மகன் ஹோமையும் தன் தகப்பன் நோவா சபிக்கமலும் கப்பலில் அனுமதிக்கும்படியும் பரிந்துறைக்க மிகவும் அழுது கேட்டுக்கொண்டான். துபாலும் தன் தந்தையிடம் எப்படியோ நயந்து பேசி ஹோம் தன் மகன் என்று பொய் சொல்லி எப்படியோ நிலைமையை சமாளித்துக்கொண்டான். இப்படியாக புறவினத்தானாகா ஹோமும் கப்பலில் நுழைந்தான். அவனுக்கும் பலருக்கும் பால் குடிக்கும்படியாக அக்காலத்தில் விளைந்துவந்த ஒருவிதமான விஷச்செடியும் கப்பலில் இடம்பெற்றது. இவ்விதமாக அமுதும் விஷமும் ஒரே மன்னில் என்பதுபோல அந்த மூன்று
தேவர்கள் கொண்டுவந்திருந்த அமுதத்திற்கு ஒப்பான திராட்சைக்கொடியும் விஷத்திற்கொப்பான பால் கொடியும் இந்த பூமியில் வளரவேண்டி அந்தக்கப்பலில் சேர்ந்துகொண்டன.
நோவாவின் மக்கள் மூன்று பேரும் அவர்தம் மக்கள் மூன்று பேரும் நோவாவின் மனைவியும் ஆக எட்டுபேர் மட்டுமே கப்பலில் அனுமதிக்கப்பட்டதாக புதிய ஏற்பாட்டில் இராயப்பரின் மடலில் வாசிக்கலாம். ஆனால் தூளியில் போடப்பட்ட குழந்தைகள் முதல் என்பத்துஐந்து வயதுடையவர்கள் வரை மொத்தம் நூறு பேருக்கும் குறையாமல் அந்த கப்பலில் இருந்ததை தன் திருக்காட்சியில் கடவுள் தனக்கு வெளிப்படுத்தியதாக சகோதரி காத்தரின் எம்மரிக் கூறுகின்றார்.
குறிபிட்ட நாளில் கடவுள் கப்பலின் அனைத்து வாயில்களையும் அடைக்க கட்டளையிட்டார். பிறகு நிகழ்ந்தது அந்த பயங்கரம்.வானத்தின் அனைத்து சத்துவங்களும் அசைக்கப்பட்டன. பூமி கிடுகிடுத்தது. பாதாளத்தின் வாயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வானத்தில் இடி முழக்கம் கேட்டுக்கொண்டே இருந்தது. கப்பலில் இருந்த வனவிலங்குகள் பயத்தால் பிளிறிக்கொண்டும் அலறிக்கொண்டும் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டன.
அதுவரை நோவாவை பழித்துவந்தவர்கள் பயத்தால் நடுங்கினர். கொடுமையான மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கும் ஓடவும் முடியாது. எங்கும் ஒளியவும் முடியாது. கடவுளின் தண்டனைத்தீர்ப்பு தங்கள் தலைமேல் பயங்கரமாக இறங்கியதை பாவிகள் உணர்ந்தார்கள். ஆனால் காலம் கடந்துவிட்டது. ஓடு.... ஓடு... மலைமேல் ஏறிப்போ என்னும் கூக்குரல்
பலர் வாயினின்று வந்தது. ஆனால் முடியவில்லை. அந்த கருங்கடல் நீரால் நிறம்பி வினாடிக்கு வினாடி உயர்ந்துகொண்டே அந்தது. மேலும் பலத்த அலை மேலெழுந்து கரை ஓரம் தென்பட்ட யாவரையும் தன்னுள் இழுத்துப்போட்டுக்கொண்டது. பூலோகம் முழுவதும் கரும் மழைமேகத்தால் மூடிக்கொண்டதால் நடப்பது பகலா இரவா என்று அறியவே முடியாமற்
போனது. பளீர் பளீர் ர்ன்று அடித்த மின்னல்களின் ஒளி வெள்ளத்தில் கரைபுறண்டு ஓடும் வெள்ளப்பெருக்கில் அடியோடு சாய்ந்துவிழும் வானுயர்ந்த கட்டிடங்களும் கோட்டைகளும் பொய்த்தேவர்களுக்கு எழுப்பிய கோயில்களும் தூள் தூளாகி பெருவெள்ளத்தில் கறைந்து போனது. ஆனால் இந்த நிகழ்வுகளைப்பர்க்க மனிதர்கள் யாவரும் உயிரோடு இருந்திருக்க
வாய்ப்பே இருந்திருக்க முடியாது. ஓயாமல் நிற்காமல் மழை நாற்பது இரவும் பகலும் பெய்துகொண்டே இருந்தது.
ஒருவழியக கடவுள் வெள்ளப்பெருக்கை நிறுத்தினார். தரை காய்ந்ததும் கடவுளின் ஆணைகிடைத்து நோவாவும் அவர் மக்களும் கப்பலினின்று வெளியே வந்தனர். கடவுள் மீண்டும் இந்த உலகை ஜலப்பிரளயத்தால் அழிப்பதில்லை என்று உறுதிகொடுத்து அதற்கு சாட்சியாக வானவில்லை ஏற்படுத்தினார். மீண்டும் உலகில் உயிர்கள் தோன்றின.
பயிர்பச்சைகள் செடி கொடிகள் மரங்கள் எல்லாம் செழித்துவளர்ந்து நல்லபலன் கொடுத்தன. தேவர்கள் மூவர் கொண்டுவந்துகொடுத்த திராட்சை செடியும் ஆப்பிளும் பலன் கொடுத்தன.ஒருநாள் நோவா திராட்சை சாறு அதிகமாய் குடித்து தன் நிலை இழந்தான். இடுப்புத்துணி விலகியதுகூடத்தெரியாமல் போதையில் கிடந்தான். இதைக்கண்ட
அவர்மகன் காம் சற்றே நகைத்து தன் சகோதரர்களிடம் தன் தகப்பன் நிலைபற்றி கூறினான். அவர்கள் சேமும் எப்பொத்தும் தன் தகப்பனின் நிர்வானத்தை பார்க்காதபடிக்குவந்து அவனை ஒரு போர்வையால் மூடினர்.
போதை தெளிந்து எழுந்த நோவா நடந்தது அறிந்து கடும் சினம் கொண்டான். தன் நிர்வானத்தை கண்டு சிரித்த காமை கடுமையாக சபித்தான். தன் மற்ற சகோதரர்களுக்கு காம் அடிமையாக சேவகம் செய்யவேண்டும் எனவும் அவர்கள் உறவினர்களோடு உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் கட்டளை இட்டான் இந்த சாபம் கடும் உஷ்ணமாக காம் மீது இறங்கியது. அந்த உஷ்ணத்தால் அவன் முகம் கருகியது. நாளடைவில் முகத்திலிருந்த கருமை அவன் தேகம் முழுதும் பரவியது. அவன் முழுக்க முழுக்க கருமை நிறத்தவன்
ஆனான். நாளடைவில் அவன் சந்ததியினர் அனைவரும் கருமை நிறம் அடைந்தனர். இவ்விதமாகத்தான் உலகில் கருமை நிறமக்கள் தோண்றினர். உண்மையில் கடவுள் கருமை நிறத்தில் எந்த மக்களையும் படைக்கவே இல்லை.
நோவாவிடமிருந்த அந்த தேவர்கள் கொடுத்த கோப்பை அவர் இறந்ததும் அவர் மகன் சேம் வசம் வந்தது. சேம் வழியாக தந்தை ஆபிரகாம் வசம் வந்தது. அவரிடமிருந்தது ஈசாக்கு வசம் வந்தது. அவரிடமிருந்து யாக்கோபு வசம் வந்தது. அவரிடமிருந்து அவர் மகன் யோசேப்பு வசம் வந்தது. பிறகு பலகாலம் கழித்து எருசலேம் கோயிலில் உடன்படிக்கைப் பேழையில் வந்தது. ஒருசம்மனசானவர் அதில் தேவ அமுதம் ஊற்றி தேவ தாயாராரின் தகப்பனாகிய சுவக்கீனுக்கு கொடுத்தார். அதில் பானம் பன்னியவர்கள் இதற்கு முன் தந்தை அபிரகாம் மட்டுமே. அடுத்ததாக சுவக்கீன். அவருக்குப்பிறகு அவரது மகள் மேரியின் மகன் யேசுநாதர் மட்டுமே. யேசுநாதர் தன்னுடைய இராப்போஜனத்தின் போது இந்த கோப்பையில் தான் திராட்சைப்பழ இரசத்தை தன் இரத்தமாக மாற்றினார். இந்தக்கோப்பை எருசலேம் தேவாலயத்திலிருந்து காணாமல் போய் பழம் பொருள் கடைக்குப்போனது.
இதைகண்ட அரிமத்தியா ஊராராகிய சூசைக்கண்டு அதை வாங்கி செராபீஸ் [பிற்காலத்தில் வெரோணிக்கா] என்னும் பெண்வசம் கொடுத்துவைத்திருந்தார். இவர் யேசுநாதருக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரி. பெரிய வியாழன் அன்று யேசுநாதருடன் இராப்போஜனம் தயாரிக்கும் பணியில் இவளும் இருந்ததால் இவள்வசம் இருந்த இந்தகோப்பையில் தான் யேசுநாதர் திராட்சை இரசத்தை தன் இரத்தமாக மாற்றினார்.
இராப்போஜனகுப்பியில் வரையப்பட்டிருந்த பாம்பு சாத்தானைக்குறிப்பதாகும். அவனது சோதனையால் தோற்றுப்போன ஆதாம் ஏவாள் செய்தபாவதோஷம் என்னும் விஷத்தை முறிக்க யேசுநாதரின் இரத்தத்தால் மட்டுமே முடியும். எனவேதான் யேசுநாதர் திராட்சை இரசத்தை தன் ரத்தமாக இராப்போஜனத்தில் மாற்றினார். யேசுநாதர் திராட்சைக்கொடியின் உவமையை சொன்ன இடமும் இங்குதான்."நானே திராட்சைச்செடி...நீங்கள் அதன் கொடிகள்...ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தல் அவர் மிகுந்த கனி தருவார்..என்னைவிட்டுப்பிறிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற பிரசங்கமும் இந்த இடத்திலையே நடந்தது. இந்த மஹாலில் பிற்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தெரிந்துதானோ என்னவோ தாவீது ராஜா இந்த மஹாலில் தூண்களின் இணைப்புகளில் திராட்சை செடிகளும் கொடிகளும் கொத்துக்கொத்தாய் பழங்களுமாய் இருக்கும்படியான
புடைப்பு சிற்பங்களை ஏற்படுத்திவைத்தார். இந்த மஹாலில் தான் தாவீது ராஜா உடன்படிக்கைபேழையை நெடுங்காலம் வைத்திருந்தார். இந்த மஹாலில் தான் தாவீது ராஜாவின் சமாதியும் இருக்கின்றது. இந்த மஹாலின் மேல் மாடியில் தான் யேசுவின் உயிர்புக்குப்பிறகு பரிசுத்த ஆவியார் தேவ மாதாவின் மீதும் அப்போஸ்தலர்கள் மீதும் இறங்கி வந்தார்.
இத்தனை பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றது யேசுவின் இராப்போஜன மஹால். இதுதான் கடவுளின் சித்தம். இதை நிறை வேற்றவே அன்று நோவாவிடம் அந்த மூன்று தேவ தூதர்களும் அந்த இரசக்குப்பியையும் திராட்சைக்கொடியையும் ஒப்படைத்தனர். யாவும் முன் குறிக்கப்பட்டவையே. முன் குறிக்கப்பட்டபடியே நடக்கவும் செய்யப்பட்டது. இந்த இராப்போஜனத்திற்குப்பிறகு இந்த இரசக்குப்பி மீண்டும் காணாமல் போய்விட்டது. இராப்போஜனத்திற்கு இரண்டு அப்போஸ்த்தலர்களுக்கு ஒன்று வீதம் ஆறு இரசக்குப்பிகளும் யேசுநாதருக்கு மட்டும் மேற்படி கூறப்பட்ட இரஸக்குப்பியும் பயன்படுத்தப்பட்டன. ஆறில் ஒரு இரசக்குப்பி தற்போது ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவில் உள்ள தேவாலயத்தில்
உள்ளது. மற்றவைபற்றி எனக்கு இன்னும் தெரியவில்லை.
இந்த பெருவெள்ளம்பற்றிபழங்கால சுமேரியர்களின் கலை இலக்கியமான கில் காமேஷ் இவ்வாறு விவரிக்கிறது. அதாவது, என்லில் என்னும் கடவுள் இந்த உலக மக்களை பூமியின் முகத்தினின்று அழிக்க விரும்புவதாகவும் இதை அறிந்துகொண்ட எங்கி என்னும் நல்ல கடவுள் அற்றஹாசிஸ் என்னும் சுமேர்ிய அரசினிடம் வரப்போகும் பெருவெள்ளத்திலிருந்து அவனும் அவன் குடும்பத்தாரும் மற்றும் சகல ஜீவராசிகளுடனும் தப்பித்துச்செல்ல ஒரு பெரும் கப்பல் கட்டி அதில் தப்பிச்செல்ல உபாயம் சொன்னதாகவும்
அவ்வாறே அவர்கள் தப்பியதாகவும் கூறுகிறது. இந்த சரித்திரம் பற்றி நிப்பர் என்னும் பழங்கால ஆப்பு வடிவ எழுத்துகள் கொண்ட மண் பலகைகள் மூலம் அறியலாம். இந்த ஆப்பு வடிவ எழுத்துக்கள் கொண்ட மண் படிவங்களின் காலம் சுமார் கி. மு. 1650.
இந்த பெருவெள்ளம் பற்றி விஞ்ஞானம் கூறுவது என்ன?.
சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன் நோவா காலத்திய மக்கள் கருங்கடல் பகுதியில்தான் வாழ்ந்துவந்தார்கள். அக்காலத்தில் கருங்கடல் நல்ல நீர் ஏரியாகத்தான் இருந்தது. இயற்கையின் சீற்றத்தால் வடதுருவத்திலுள்ள பனிமலைகள் உருகவே உலகின் பெரும் சமுத்திரங்கள் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் மத்தியதரைக்கடலின் நீர்மட்டமும் உயர்ந்தது.
தயவு செய்து வரைபடத்தைப்பார்க்கவும்.துருக்கியையும் பல்கேரியாவையும் ஒரு குறுகிய நிலப்பரப்பு ஒரு ஜலசந்தி வழியே இணைக்கிறது. போஸ்போருஸ் என்ற தடுப்புப்பாறை அக்கால கருங்கடல் ஏரியை பிரிக்கிறது. மத்தியதரைக்கடலின் அதிகரித்துவரும் நீர்மட்டத்தை தாக்குபிடிக்காத ஏஜியன் கடல் மர்மாரா கடலை வேகமாக நிரப்பியது. அந்த அழுத்தத்தை தாக்குப்பிடிக்க முடியாத போஸ்போருஸ் தடுப்புப்பாறைகள் உடைந்ததால் அத்தனை வெள்ளமும் கருங்கடல் ஏரியை மிகவும் வேகமாக நிரப்பியது. இதன் வேகமும் தாக்கமும் எவ்வளவு என்றால் நயாகரா நீர் வீழ்ச்சியைப்போல் 200 மடங்கு. இதனால் நல்ல நீர் ஏரியான கருங்கடல் ஏரி உப்பு நீர்க்கடலாக மாறியது. திடுதிப்பென ஏரி கடலானதால் ஏற்பட்ட பாதிப்பு எப்படி இருக்கும் என்று நேயர்கள் உண்ர்ந்து கொள்ளலாம்.
இந்த நோவா பயன் படுத்திய கப்பலை தற்போது கண்டுபிடுத்துள்ளதாக இன்டெர்னெட்டில் ஒரு விடியோ காட்சி விவரிக்கிறது. துருக்கியிலுள்ள அராரத் என்னும் பனிமலையில் சுமார் 12000 அடி உயரத்தில் மரத்தால் ஆன ஒரு வீடு போன்ற அல்லது தெப்பம் போன்ற ஒன்றைக்கண்டு பிடித்துள்ளதாகவும் அதில் பல அறைகள் உள்ளதாகவும் அவர்கள்
பயன்படுத்திய தானியங்கள்கூட இன்னும் இருப்பதாககாட்டுகிறார்கள். இது 100% நிச்சயமாக நோவாவின் கப்பலே அன்றி வேறு ஏதாகவும் இங்கு இருக்க வாய்ப்புஇல்லை என்றும்
கூறுகிறார்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட சீன வேதபோதகர்கள்.
No comments:
Post a Comment