Monday, June 3, 2013

" ஆஹா... தோத்தாயீன் "




" ஆஹா... தோத்தாயீன் "

அடாடா..... இந்த தோத்தாயீன் என்னும் ஊருக்குத்தான் எத்தனை சிறப்புகள். எத்தனை சரித்திர நிகழ்வுகள்.. ஆதி காலத்தில் முதுபெரும் தந்தை யாக்கோபின் பிள்ளைகள்  தங்கள் கால் நடைகளை மேய்த்ததும் இங்குதான். யாக்கோபின் மகன் யோசேப்பு அடிமையாக விற்கபட்டதும் இங்குதான். அசிரியாவிலிருந்து வந்த கொடுங்கோலன் நெபுகட் நெசாரின்
தளபதி ஹோலிஃபெர்னசை தந்திரமாக கொன்ற யூதித் என்னும் வீரப்பெண்மணி வாழ்ந்ததும் இங்கு தான். சிரிய அரசன் படையெடுப்பின் போது தீர்க்கதரிசி எலிசேயுவுக்கு பின்னால்  ஆயிரக்கணக்கில் தீச்சுவாலையுடன் கூடிய பட்டயத்துடன் பாதுகாப்பாக வந்த தேவ தூதர்கள் தோன்றியதும் இங்கு தான். சிரிய மன்னன் பெனதாது இஸ்ரேல் மீது போர் தொடுத்து
நகரை முற்றுகை இட்டபோது மக்கள் பசி பட்டினியால் வாடினர். இதற்கெல்லாம் காரணம் எலிசெயு தீர்க்கதரிசிதான் என்று அவரைக்கொல்ல ஆணை இட்டதும் இந்த தோத்தாயீனில்  தான். ..யேசுவின் தாய் மரியாளுக்கும் சூசையப்பருக்கும் உறவினராகிய இசக்கார் என்னும் இனியவர் வாழ்ந்ததும் இங்கு தான். யேசுவுக்கு ஒரு அப்போஸ்தலராக வந்த  நம் சந்தேகத்தோமையார் யேசுவுக்கு அறிமுகம் ஆகியதும் இந்த ஊரில்தான். யேசுநாதர் தன்போதகத்தில் உங்கள் ஆடோ மாடோ ஓய்வு நாளில் குளத்தில் வீழ்ந்தால்   தூக்கிவிடாமலிருப்பீர்களோ என்று வினா எழுப்பியதும் இதே தோத்தாயீனிலுள்ள பெத்தூலியாவில் எரோதியனின் குளியல்கள் மற்றும் ரோமர்கள் குளியல்கள் எனப்படும் நீர்நிலையில் தான்.
       " அஞ்சாதே "...
யேசுநாதருக்கு அப்போது முழுமையாக பன்னிரெண்டு அப்போஸ்த்தலர்களும் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை. அப்போது சில நாட்க்களுக்கு முன்புதான் மீரோஸ் பட்டிணத்தில்   தோல் பதனிடும் தொழில் செய்துவந்த சிமியோன் என்பவரின் பலத்த சிபாரிசின் பேரில் இஸ்காரியோத்து என்னும் ஊரைச்சேர்ந்த யூதாஸ் என்னும் தன் மருமகன் உறவுள்ளவனை
யேசுநாதருக்கு அறிமுகம் செய்து வைத்து அவருடைய சீடராக ஏற்றுக்கொள்ள யேசுவிடம் மன்றாடினார் சிமியோன்.  யூதாஸைக்கண்ட மாத்திரத்தில் அவன் யார் என்று புறிந்துகொண்டார்  யேசுநாதர். அவர் முகத்தில் ஒரு குறுனகை ஒன்று பூத்தது. உடனே அவனை தன் சீடராக ஏற்றுக்கொள்ள சம்மதித்தார். இந்த நேரத்தில் தேவ தாயார் தன் ஆட்சேபனையை   தன் மகனிடம் தெரிவித்தார். மகனே யேசு....இந்த மனிதர் விஷயத்தில் நீர் மிகவும் எச்சரிகையாக இருக்க வேண்டுமென நான்கேட்டுக்கொள்கிறேன்.. அவன் பார்வையே சரி இல்லை.
அவன் நம்மிடம் ஏதோ எதிர்பார்த்துதான் வந்திருக்கின்றான். அவன் பார்வையில் ஏதோ உள்னோக்கம் இருப்பதாக தெரிகின்றது. அவன் உறவு நமக்கு வேண்டாம் என்று தன் அன்பு   மகனிடம் லேசாகவும் எச்சரிக்கையாகவும் கூறிக்கொண்டாள். அதற்கு யேசுநாதர்... அம்மா... உங்கள் கவலையை நாம் அறிவோம். நமக்கு அப்போஸ்தலர்களாக அனுப்புவது என்
வானகத்தந்தையே..அவர் சித்தப்படிதான் நான் நடந்துகொள்ளவேண்டும்....கவலையை விடுங்கள்..அவர் பொருட்டு நமக்கு மிகப்பெரும் காரியம் ஒன்று நடக்க வேண்டி இருகின்றது.
     அந்த காரியம் அவரைவிட்டால் வேறு யாராலும் செய்யவும் முடியாது.. இது கடவுள் காரியம்.. போய் நிம்மதியாக ஓய்வெடுங்கள் அம்மா என்று தன் தாயாருக்கு வாய்பூட்டு   போட்டுவிட்டார்.
    அந்த நீண்டு உயர்ந்த மலைகளினூடே நடந்து சென்றுகொண்டே இருந்த பொழுது கடிணமான பாதைகளைக்கடந்து இந்த தோத்தாயீன் சமவெளியை அடைந்தனர் யேசுநாதரும்  அவரது பரிவாரங்களும்..நடந்து வந்த களைப்பு நீங்க அங்கு நன்றாக விளைந்து முற்றியிருந்த சோளக்கதிர்களை பறித்து கொறித்துக்கொண்டே வந்தனர்.அதுதான்   குற்றமாகப்போய்விட்டது. நீரும் உம் சீடர்களும் சுத்தமில்லாமல் கைகளைகழுவாமல் உண்டது பாவமில்லையா.. இது சுத்த யூதர்கள் செய்யும் காரியமில்லையே என்றுபரிசேயர்களும்   சதுசேயர்களும் மிகவும் குறைபட்டுக்கொண்டார்கள்.      யேசுநாதர் சற்றே நகைத்துக்கொண்டார். மனிதன் வாய் வழியே போகும் எதுவும் அவனை தீட்டுப்படுத்தாது. மாறாக கண்வழியே
சென்று மனதைகெடுக்கும் காரியங்களே மனிதனை தீட்டுபடுத்தும் என்றார்.. அப்போது ஆண்டவரே இந்த மலை மீதுள்ள கோட்டையும் இந்த சமவெளியிலுள்ள சோளத்தோட்டமும்  காணும்போது இங்கு பழங்காலத்தில் ஏதோ சரித்திர நிகழ்சி நடந்திருப்பதாக தோன்றுகிறது. அது என்ன என்று அவரது சீடர்கள் கேட்டனர். அப்போது யேசுநாதர் சற்றே கண்களை மூடி
தியானித்தார். அவரது மனகண்ணில் இந்த சரித்திர நிகழ்ச்சி தோன்றி மறைந்தது.
         " நெபுகத்னெசார் '
இன்றைய இராக் அன்றைய பாபிலோன்.. வேத காலத்தில் அசீரியா....இந்நாட்டின் அரசன் நெபுகத்னெசார். அவன் பெயரைக்கேட்டால் அழுத பிள்ளையும் வாய் மூடும் .  அவன் காலத்தில் வரலாற்றில் மாபெரும் கொடுங்கோலனாக சித்தரிக்கப்பட்டவன்..இந்த அசீரியாவில் அவனை கடவுளாகக்கருதப்படவேண்டும் என்று ஆணை கூட பிறப்பிக்கப்பட்டது.
அவனை அரசனாகவோ கடவுளாகவோ ஏற்றுக்கொள்ளாதவரை கொண்று அந்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தினான். இப்படியாக கிழக்கே உள்ள நாடுகள் துவங்கி மேற்கே உள்ள  நாடுகள் மற்றும் வடக்கே துவங்கி தெற்கே உள்ள எகிப்து மற்றும் அரேபியா வரை தன் ஆதிக்கம் செலுத்தினான். அவனுக்குப்பணிய மறுத்து அவனை கடவுளக ஏற்றுக்கொள்ளாத
நாடுகளில் பாலஸ்தீனமும் ஒன்று. இதனால் அவனது கோப வெறி பாலஸ்தீனம் மீது திரும்பியது..
      அரசன் நெபுகத்னெசார் தன் நம்பிக்கைகுறிய படைத்தளபதியும் தனக்கு அடுத்த நிலையிலும் இருந்தவனாகிய ஹோலிஃபெர்னஸை அழைத்துக்கூறியதாவது.  "அனைத்துலகின் தலைவனாகிய மாமன்னர் நெபுகத்னெஸார் கூறுவதாவது.... நீ இங்கிருந்து உடனே புறப்பட்டுச்செல்லும். போரிடத்தயங்காத ஒரு லச்சத்து இருபதாயிரம் காலாட்  படையினரையும் பன்னிரண்டாயிரம் குதிரைப்படையினைரையும் கூட்டிக்கொள்ளும்...நான் கொடுத்த ஆணைக்கு மேற்கு நாட்டவருள் பணியாதவர்களை அவர்களுக்கு
எதிராகப்படை எடுத்துச்செல்லும். அவர்கள் நாடுகளை எல்லாம் எனக்கு அடிமை ஆக்கும்..அந்நாட்டின் நீர் நிலைகள்... ஆண்கள் பெண்கள் அவர்தம் செல்வங்கள் அனைத்தையும்  எனக்கு அடிமைப்படுத்தும்..பணிய மறுக்கும் எவருக்கும் இரக்கம் காட்ட வேண்டாம்...நீர் கைபற்றும் நாடெங்கும் அவர்களை கொலைக்கும் கொள்ளைக்கும் கையளித்து சங்காரம்
பண்ணும்...இது என் உயிர் மேல் ஆணை...என் அரசின் மேல் ஆணை...என் ஆற்றல் மேல் ஆணை...உன் தலைவனின் ஆணைகளில் எதனையும் நீர் மீறக்கூடாது.நான் உமக்கு  கட்டளையிட்டவாறே அவற்றை திண்ணமாய் செய்து முடியும்... காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல் புரியும்....    ஹொலிஃபெர்னஸ் ...சென்று வா... வெற்றியோடு திரும்ப வா " என்றான்
       தன் தலைவன் நெபுக்கத்னெஸார் தனக்கு ஆணையிட்டபடி தன் பெரும் படையினரை அழைத்துக்கொண்டு தன் தலைவனை மதியாத நாடுகள் அனைத்தையும் தன் தலைவன்  தனக்கு இட்ட கட்டளைபடியே சங்காரம் பண்ணினான்.. இவனது அக்கிரமம்பற்றிய செய்திகள் பல நாடுகளுக்கும் பரவின..பணிய மறுத்த பல நாடுகள் இவனது வீரம் பற்றியும்  அக்கிரமங்கள் பற்றியும் கேள்விப்பட்டு தானாகவே அவனை மாலைபோட்டும் நடணமாடியும் வரவேற்றன. பணிய மறுத்த நாடுகளில் கடைசியாக இருந்தது பாலஸ்தீனத்திலிருந்த  யூதேயாவும் சமாரியாவும் கலிலேயாவும் தான்... ஹோலிஃபெர்னெஸின் அகோரப்பார்வை யூதேயாவின் மீது திரும்பியது.
அசீரிய மன்னன் நெபுகத்னெசாரின் படைத்தலைவன் ஹோலிஃபெர்னெஸ் அவனுக்குப்பணிய மறுத்த வேற்றினத்தாருக்கு செய்த கொடுமைகளையெல்லாம் அதுவும் அவன் எவ்வாறு அவர்கள் தெய்வங்களையும் கோவில்களையும் சூறையாடி தகர்த்தெறிந்தான் என்பதையும் யூதேயவில் வாழுந்துவந்த இஸ்ராயேலர்கள் கேள்விப்பட்டனர். எனவே அவன் வருவதை அறிந்து  பெரிதும் அஞ்சினர்.    எருசலேமைக்குறித்தும் அவர்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோவிலைகுறித்தும் பெரிதும் கலங்கினர். அவர்கள் சமாரியா துவங்கி கலிலெய்யா வரை உள்ள உயர்ந்த   மலைகளை கைப்பற்றுமாறும் போருக்குத்தேவையான ஆயுதங்களையும் உணவு மற்றும் நீர் போன்ற முக்கியமான உயிர் வாழ் ஆதாரங்களை சேகரிக்குமாறும் மேலும் மலைமீதுள்ள   கோட்டைகளையும் அதன் மதில்களையும் பலப்படுத்துமாறும் ஒரு பெரும் போருக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அக்காலத்திய எருசலேமில் தலைமை குருவாய் இருந்த யோவாக்கீம் என்பவர் அனைத்து நாடுகளுக்கும் சுற்று மடல் அனுப்பினார். அதன்படியாக எல்லா மலைநாட்டின் மீதும் அமைந்துள்ள கோட்டைகளும்.
மதில்களும் பலப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டன.
            " பெத்தூலியா கோட்டை "
      இந்த பெத்தூலியாக்கோட்டை ஒரு உயர்ந்த மலைமீது அமைந்துள்ளது. கோட்டையை அடைவது மிகவும் சிரமமான காரியம். க்ீழிருந்து மேலாக மலை மேல் ஏறிச்செல்வதர்க்கு  ஒழுங்கான வழியேதும் இல்லை. சேர்ந்தாற்போல் இருவர்கூட செல்லும்படியாக சில இடங்களில் வழி இருக்காது. மலையின் மேல் ஊர் இருந்தது. பகைவர் வரும்போது மலைமேல்
இருந்துகொண்டு தாக்குவது மிகவும் எளிது. தண்ணீருக்கோ சாப்பாட்டிற்கோ வழி இருந்துவிட்டால் இந்த கோட்டையை எத்தனை நாள் முற்றுகை இட்டாலும் பிடிக்கமுடியானது.
       இப்படியாக கூடுமானவரை எல்லா மலைமேல் உள்ள கோட்டைகளும் பலப்படுத்தப்பட்டதைக்கண்டு ஹோலிஃபெர்னெஸ் கடும் சினம் கொண்டான். இந்த மக்களின் மதி நுட்பத்தையும்  முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் கண்டு அதிசயித்து,
" கானான் நாட்டு மக்களே எனக்கு பதில் சொல்லுங்கள்....
இந்த மலைநாட்டில் வாழும் மக்கள் யார்?...
இவர்கள் குடியிருகும் நாடுகள் யாவை ?...
இவர்கள் படைவீரர்கள் எத்தனை பேர்?...
இவர்களின் ஆற்றலும் வலிமையும் எதில் அடங்கும் ?..
.இவர்களின் மன்னன் யார் ?...
இவர்களின் கடவுளர் யார் ?..
இதுவரை என்னிடம் சரணடைந்த மேற்கு நாட்டு மக்களினின்று இவர்கள் மட்டும் வித்தியாசமாயிருப்பதெப்படி ?
இவர்களின் தலைவன் ஏன் இன்னும் என்னை வந்து சந்திக்கவில்லை ?
அவ்வளவு வீரமும் தைரியமும் இந்த மக்களுக்கு எப்படி வந்தது ?. என்று ஆத்திரத்தில் பொறிந்து தள்ளி விட்டான்..இந்த மலை நாட்டு மக்கள் தன்னை மதிக்கவில்லை என்ற  ஆத்திரம் ஒரு பக்கம்....நாம் பெயர் என்ன... நம் பராக்கிரமம் என்ன... நம் படைபலம் என்ன...இவ்வளவு இருந்தும் இந்த நகர மக்களோ அதன் தலைவனோ தன்னிடம் சரணாகதி  அடையாமல் போருக்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள் என்றால் இவர்கள் வீரம் எப்பேற்பட்டது என்று அவர்களை பாராட்டவும் செய்தான்.
      அப்போது அம்மோனியர் யாவருக்கும் தலைவராகிய அக்கியோர் என்பவர் ஹோலிஃபெர்னெஸை வணங்கி கூறியதாவது,
" என் தலைவரே, உம் பணியாளரின் வாயினின்று வரும் சொல்லை கேளும்...நான் இந்த மலைநாடில் வாழும் மக்களைப்பற்றி உண்மையை அறிவிப்பேன்..இந்த மக்கள் கல்தேயர்   மறபினர். கல்தேயா நாட்டில் வாழ்ந்த தங்கள் மூதாதயரின் தெய்வங்களை இவர்கள் வழிபட விரும்பாததால் ஒரு காலத்தில் மெசபடோமியாவில் குடியேறினார்கள். பின்பு தாங்கள்
தங்கி இருந்த மெசப்பட்டோமியாவைவிட்டுவிட்டு பிறகு கானன் நாட்டுக்கு செல்லுமாறு அவர்கள் வின்னக கடவுள் அவர்களுக்கு கூறவே அவர்களும் கானான் நாட்டில்  குடியேறினார்கள். பிறகு கானான் நாட்டில் கடும் பஞ்சம் நிலவியபோது அவர்கள் எகிப்தில் பஞ்சம் பிழைக்கப்போனார்கள். அங்கு அவர்கள் ஏறாளமாய் பெருகியதைகண்ட எகிப்த்திய  மன்னன் பரவோன் அவர்களை அடிமைகளாக்கி கடும் வாதை புறிந்தான்...எகிப்த்தில் பிரமிடுகள் கட்டவும் செங்கல் சூலைக்கு வேண்டிய செங்கல் தயாரிக்கவும் கடுமையாக வேலை   வாங்கி வதைத்தான்..அவர்கள் தங்கள் கடவுளை நோக்கி கூக்குறலிட்டனர்...அவர்கள் வேண்டுதலை அவர்கள் கடவுள் கேட்டார்...அவர்க்ளின் கடவுள் எகிப்தியரை தீராத கொள்ளை
நோயை அனுப்பி கடுமையாக தண்டித்தார்..எனவே எகிப்த்தியர் இந்த கானான் நாட்டு மக்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பியனுப்பினர்...அப்போது அவர்கள் கடவுள் அவர்கள்  காணும்படியாக செங்கடலைப்பிளந்து அவர்களை செங்கடலின் அக்கரை சேர்த்து காதேஸ் பார்னியா வழியாக அவர்களை நடத்திச்செல்ல அவர்கள் பாலை நிலத்தில் வாழ்ந்த மற்ற
நாட்டினரை விறட்டியடித்து அந்த நாடுகளை எல்லாம்  தங்களுடையதாக்கிக்கொண்டார்கள். யோர்தான் ஆற்றைகடந்து மலைநாடு முழுவதையும் தங்களுடையதாக்கிக்கொண்டார்கள்.
           அவர்கள் தங்களுகிடையே கடவுள் முன்னிலையில் பாவம் செய்யாதவரை வளமுடன் வாழ்ந்தர்கள்...ஆனால் அவர்கள் கடவுள் முன்னிலையில் பாவம் செய்தபோது அவர்கள் கடவுள்  அவர்களை மிகவும் கடுமையாக தண்டித்தார். இப்படியாகவே இந்த மக்களிடம் தவறு ஏதேனும் நாம் கண்டுபிடித்தால் அவர்கள் கடவுளுக்கு எதிராக அவர்கள் பாவம் செய்திருந்தால்  நாம் புறப்பட்டுச்சென்று இம்மக்களை போரில் முறியடிக்கும்படி அவர்கள் கடவுள் நம்மை அனுமதிப்பார்.. ஆனால் மாறாக இம்மக்கள் அவர்கள் கடவுளுக்கு முன்பாக பாவம் ஏதும் செய்யாத
பட்ச்ச்த்தில் நாம் அவர்களுடன் போரிட முற்பட்டால் அவர்கள் கடவுள் நம்மை கொல்வது உறுதி " என்றார்..அக்கியோரின் இந்த உரையைக்கேட்ட ஹோலிஃபெர்னெஸ் கடகட என்று  நகைத்தான். " ம்...நான் எத்தனையோ தெய்வங்களைப்பார்த்துவிட்டேன். இந்த இஸ்ரேலிய தெய்வம் ஒன்றுதான் பாக்கி... அதனையும் நான் பார்த்துவிடுகின்றேன்..கொம்பு முளைத்த
எத்தனையோ தெய்வங்களையும் நான் பார்த்திருக்கின்றேன்... இந்த இஸ்ரேலிய தெய்வத்திற்கும் எத்தனை கொம்பு இருக்கின்றது என்றும் நான் பார்த்துவிடுகின்றேன்" என்றான்.
     அக்கியோர் தன் தலைவனிடம் " அரசே, நீர் எத்தனை தெய்வங்களையும் பார்த்திருக்கலாம்... ஆனால் இந்த இஸ்ரேலிய தெய்வத்திடம் உம் பாச்சா பலிக்காது..உம் வார்த்தையில்  அந்த இஸ்ரேலிய தெய்வத்தைப்பற்றி மரியாதை இருக்கட்டும் " என்றார்.. இதனால் மிகவும் கோபாவேசமடைந்தான் ஹோலிஃபெர்னெஸ்... " அக்கியோரே...என்ன வார்த்தை பேசுகின்றீர்...
யாரிடம் பேசுகின்றீர் என்று மறந்து போயிற்றா உமக்கு... அந்த இஸ்ரேலிய மக்களும் அவர்கள் தெய்வமும் உமக்கு என்னகூலி கொடுத்து இப்படி பேச சொன்னார்கள்..இனிமேல் நீர்  என் முகத்தில் முழிக்காதீர்....அடே யார் அங்கே.. இந்த கிழவனை அந்த பெத்தூலியர்களிடம் ஒப்படை.. அவர்கள் இவனை கண்டம் துண்டமாய் வெட்டிபோடட்டும்...மீறி இவன் உயிர்
பிழைத்தால் நான் இந்த பெத்தூலியாக்கோட்டையே வெற்றி கண்ட பின்னர் இந்த கிழவனை என் கையாலேயே வெட்டிப்போடுவேன்... அடே அக்கியா... உனக்கு அவ்வளவு திமிர்   வந்துவிட்டதா. என் உப்பை தின்றுவிட்டு என் எதிரியைப்பற்றி என்னிடமே உயர்த்திப்பேச உனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது.. நன்றாக நினைவில் கொள்...
     என் தலைவன் நெபுக்கட்னெஸாரைத்தவிர உனக்கும் சரி எனக்கும் சரி.. இந்த மன்னுலகில் யாவருக்கும் ஒரே கடவுள் நெபுகத்தனஸார் தான். வாழ்க நெபுகட்னெஸார்... வளர்க அவர்தம்  புகழ் " என்றான்.
     எனவே அவர்கள் அக்கியோரைப்பிடித்து அவரை பெத்தூலியாவின் சமவெளியியைத்தாண்டி மலைநாட்டில் அவரை கட்டியபடி விட்டுச்சென்றார்கள். திரும்பிவரும்போது   பெத்தூலியாவின் நீறூற்றுக்களை அடைத்துப்போட்டனர். மேலும் சமவெளியில் விளைந்திருந்த பயிர்கள் அனைத்தையும் தீ வைத்து கொளுத்திச்சென்றார்கள். அவர்கள் சென்றபின்னர் மலைமீதிருந்த இஸ்ரேலிய மக்கள் அக்கியோரைகண்டு அவரை விடுவித்து நடந்த செய்தி அறிந்து அவரை பெறிதும் பாராட்டினர். ஹோலிஃபெர்னெஸின் முற்றுகையால் பெத்தூலியா வாழ்  மலைமக்கள் பெரிதும் துன்புற்றனர். மலைக்கு வர வேண்டிய தண்ணீர் குறைந்தது.. உணவும் தீர்ந்தது...அந்நகரத்துப்பெறியவர்களும் இளைஞரும் பெண்களும் குழந்தைகளும் நோன்பு  காத்தனர்..உள்ளம் தளர்ந்துபோன இஸ்ரேலியர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கதறினர். ஏனெனில் அவர்களை சூழ்ந்துகொண்டுள்ள பகைவர்களிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை. நாட்க்கள் செல்ல செல்ல கடினமான முற்றுகையின் காரணத்தால் தண்ணீரோ உணவோ இன்றி பெத்தூலியாவின் தெருக்களில் இளைஞர்களும் பெண்களும் தெருக்களிள்   மயங்கி விழுந்தார்கள் .ஆனாலும் ஆண்டவர் அருள்தான் இன்னும் கிடைக்கவில்லை..பசிதாகத்தால் பலர் மடிந்தனர். இதனால் மனம் வெறுப்புற்ற இஸ்ராயேல் பெரியவர்கள்  ஹோலிஃபெர்னெஸ்ஸிடம் சரணாகதி அடைய முன்வந்தார்கள். ஆயினும் கடவுளின் மேல் பக்தியுள்ள பல பெரியவர்கள் இன்னும் ஐந்து நாள் பொறுப்போம். அதற்குள் கடவுள் அருள்
ஏதாவது வழியில் வருமா என்று பார்ப்போம் என்றனர். இந்த வர்த்தமானங்களைப்பற்றிக்கேள்விபட்டாள் யூதப்பெண்னோருத்தி. அவள் பெயர் யூதித்து. பெரும் பணக்காரியும் மிகுந்த   நற்பெயரோடும் வாழ்ந்துவந்த ஒரு விதவை. அவளது இனத்தில் அவ்ளுக்கு மிகுந்த நற்பெயரும் மரியாதையும் உண்டு. அவள் நகரின் மூப்பர்களையும் குருக்களையும் சந்தித்து கடவுளை  பற்றிய நம்பிக்கை பொய்த்துப்போனது பற்றியும் சரணாகதி பற்றியும் தன் உள்ளக்குமுறளை வெளிப்படுத்தினார். ஆண்டவர் தம் மனதை மாற்றி குறித்த நாளுக்குள் நமக்கு உதவி   அளிக்காவிடில் இந்த நகரை நம் எதிரிகள் கையில் ஒப்புவிக்கப்போவதாக நீங்கள் உறுதி அளித்து கடவுள் மேல் ஆணையிட்டு இருகின்றீர்கள்...
     இன்று கடவுளை சோதிக்க நீங்கள் யார்? அவருடைய எண்ணங்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்.? நம் கடவுள் நம் முன்னோர்களை சோதித்தது போல நம்மையும்  சோதிக்கின்றார்.நம் முன்னோர்களை நெருப்பில் போட்டு புடம் போட்டதுபோல நம்மை புடமிடவில்லை..நம்மைபழிவாங்கவும் இல்லை...தனக்கு நெருக்கமாய் உள்ளோரை எச்சரிக்கும்  பொருட்டு நம்மை தண்டிக்கின்றர். இவ்வாறு கடவுளைப்பற்றி மேலும் பல நியாங்களை விவரமாக எடுத்துறைத்தாள். பின்னர் தனிமையில் தன் கடவுளகிய ஆண்டவரிடம்
தன் ஜெபத்தை துடங்கினாள்.. .
"என் மூதாதையர்கள் சிமியோனின் கடவுளாகிய் ஆண்டவரே, கைம்பெண்ணாகிய எனக்கு செவி சாய்த்தருளும்.நடந்தன, நடப்பன, நடக்கவிருப்பன அனைத்தையும் திட்டமிடுபவர்
நீரே....நீர் திட்டமிட்டவை எல்லாம் நிறைவேறின....இப்போது அசீரியர்கள் திரளான படையோடு வந்திருக்கின்றார்கள். தங்கள் குதிரைகளின் பொருட்டும், அவர்கள் வீரர்களின்  பொருட்டும் மிகுந்த இருமாப்பு கொண்டுள்ளார்கள். கேடயம், ஈட்டி, வில் கவண் இவற்றால் நம்பிக்கைகொண்டுள்ளார்கள். ஆனால் போர்களை முறியடிக்கும் ஆண்டவர் நீர் என்பதை   அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆண்டவர் என்பது உமது பெயர். உமது ஆற்றலால அவர்களது வலிமையை அடக்கிவிடும். உமது சினத்தால் அவர்களது திறமையை அடக்கிவிடும்.
    ஏனெனில் உமது திரு இடத்தை கறைபடுத்தவும் உமது மாட்சிமிகு பெயர் விளங்கும் பேழையை தீட்டுப்படுத்தவும் உமது பலி பீடத்தின் கொம்புகளை வாளால் நொறுக்கவும் அவர்கள்  திட்டமிட்டுள்ளார்கள்.அவர்களுடைய இறுமாப்பை உற்று நோக்கும். அவர்கள் தலைமீது உமது சினத்தை கொட்டும்..எனது திட்டத்தை செயல்படுத்த கைம்பெண்ணாகிய எனக்கு
வலிமை தாரும். அவர்களது செறுக்கை ஒரு பெண்னின் கைவன்மையால் நொறுக்கிவிடும். நீர் .தாழ்ந்தோரின் கடவுள். ஒடுக்கப்பட்டோரின் துணைவர். நலிவுற்றோரின் ஆதரவாளர்.
        கைவிடப்பட்டோரின் பாதுகாவலர்..நம்பிக்கையற்றோரின் மீட்ப்பர்..இஸ்ரேயலரின் உரிமைசொத்தாகிய இறைவா...விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே...என் மன்றாட்டுக்கு   பரிவோடு செவிசாய்த்தருளும். நீரே கடவுள் என்றும் எல்லா ஆற்றலும் வலிமையும் கொண்ட கடவுள் என்றும் இஸ்ரயேல் மக்களைப்பாதுகக்க உம்மைத்தவிர வேறு கடவுள் எவரும்   இல்லை எனவும் உம் மக்களினம் முழுவதும் அதன் எல்லா குலங்களும் அறியச்செய்யும் "..என்று தன் வேண்டுதலை முடித்துக்கொண்டாள்.
         யூதித்து தன் மனதில் ஒருதிட்டதை வகுத்துக்கொண்டவளாய் தன் தோழியை அழைத்தாள். தான் அணிந்திருந்த சாக்கு உடையை அகற்றி நன்றாககுளித்து தன்னை விலையுயர்ந்த  ஆடைகளாலும் அணிகலன்கலாலும் அலங்கரித்துக்கொண்டாள். தன்முகத்தை நன்றாக மையிட்டும் கேசங்களுக்கு எண்னை வார்த்தும் வாசனாதிரவியங்கலாலும்
அலங்கரித்துக்கொண்டாள். தன் பணிப்பெண்ணிடம் திராட்சை இரசம் நிறைந்த தோற்பையும், எண்ணை நிறைந்த குப்பியும், வறுத்த தானியம், உலர்ந்த பழங்கள், நல்ல அப்பங்கள்  ஆகியவற்றை சேர்த்துக்கட்டி தூக்கிகொண்டுவருமாறு அவளிடம் கொடுத்தாள். அவர்கள் இருவரும் இந்த சோளக்கொள்லை வழியே சென்று ஹோலிஃபெர்னெஸ்ஸை
சந்திக்கசென்றார்கள். இதோ நாம் நிற்கும் இந்த வழியாகத்தான் சென்றார்கள் என்றார் யேசுநாதர். அவருடைய சீடர்களும் ஆர்வமாக பிறகு என்ன நடந்தது என்று கேட்டார்கள்.
      யேசுநாதர் மீதிகதையை தொடரலானார்....
யூதித்தும் அவள் தோழியும் ஹோலிஃபெர்னெஸை சந்தித்து அவனை வணங்கினர். தாங்கள் நெபுக்கட்னெசாரின் படைத்தலைவருக்கு உதவி செய்ய வந்துள்ளதாகவும் , இந்த  இஸ்ராயேல் மக்கள் பாவம் செய்துள்ளதால் தங்கள் கடவுள் அவர்களை தண்டிப்பது உறுதி என்றும் அதிலிருந்து தப்பிக்க தாங்கள் ஹோலிஃபெர்னஸை சரணடைய வந்துள்ளதாகவும்
தலைவர் அனுமதி அளித்தால் ஹொலிஃபெர்னெஸ் இந்த இஸ்ராயேல் மக்களை எப்போது தாக்குவது சிறந்ததாக இருக்கும் என்று தான் தவமிருந்தும் நோன்பு இருந்தும் தங்கள்  கடவுளைக்கேட்டு சொல்வதாகவும் அதுவரை ஹொலிஃபெர்னெஸின் பாதுகாப்பில் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தாள்.. யூத்தின் முக அழகையும் சாதுர்யமான பேச்சையும்
மிகவும் நன்றாக ரசித்தான் ஹோலிஃபெர்னெஸ். அவள் மீது நம்பிக்கை கொண்டவனாக , " பெண்ணே துணிவு கொள்வாயாக, அனைத்துலகின் மன்னராகிய நெபுக்கட்னெசாருக்கு  பணிபுறிய வந்திருக்கும் யாவருக்கும் அபயம் உண்டு. இப்போதும் இந்த மலை வாழ் மக்கள் என்னை சரணடைந்திருந்தால் நான் அவர்கள் யாவருக்கும் ஒரு தீங்கும்
செய்திருக்கமாட்டேன். மாறாக அவர்கள் சரணடையவில்லை. ஆதலால் என் கோபம் அவர்கள் மேல் திரும்பியது. சரி நீ எத்தனை நாட்க்களில் உன் தெய்வத்தைக்கேட்டு எனக்கு  பதில் சொல்லப்போகின்றாய்? ... அதுவரை நீ என் கூடாரத்திலேயே தங்கலாம்... என் உணவையே உண்ணலாம்.. என்னுடனே குடிக்கலாம்.. நீ என்னுடைய மதிப்புமிக்க விருந்தாளி"
என்றான்." இல்லை எஜமான் ...அப்படி இல்லை.. நான் கொண்டுவந்த உணவுகளே எனக்குபோதும்.. அவைகள் தீருமுன்னே என் கடவுள் நான் என்ன செய்ய்ய வேண்டுமென  கூறிவிடுவார்..அப்புறம் உம் விருந்தையும் சுவைகின்றேன் ..என்னையே உமக்கு விருந்தாகவும் வைக்கின்றேன்... அதுவரை நானென் கடவுளை வழிபடவும் நோன்பிருக்கவும் இரவில்
என் மலை நாட்டிற்கு சென்றுவர எனக்கு அனுமதி வேண்டும்" என்றாள் யூதித்து.
      யூதித்தின் அழகு ஹோலிஃபெர்னெஸ்சை கிரங்க அடித்தது. பைத்தியம் பிடித்தவள் போல் ஆனான். அவள் மீது ஏற்பட்ட காதலால் அவளை அடைய என்ன விலை கொடுக்கவும்   சித்தமனான். அவழது அழகையும், சிறந்த ஞானத்தையும் அடிக்கடி சிலாகித்து இந்த உலகின் ஒரு முனை முதல் மறு முனைவரை இந்த யூதித்தைப்போல் ஒரு அழகும் ஞானமும்
உள்ள ஒரு பெண் இது வரை பிறந்ததும் இல்லை , இனிமேல் பிறக்கப்போவதும் இல்லை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டான். எனவே ஹோலிஃபெர்னெஸ் யூதித்தையும் அவள்  தோழியையும் எப்போதும் எங்கும் எந்த நேரத்திலும் பாதுகாப்பின்றி வெளியே சென்று வர அனுமதி அளித்தான். இவ்வாறு நான்கு நாட்க்கள் கடந்தன. எவ்வளவு நாட்க்களுக்குத்தான்
பொருமையாய் இருக்க முடியும். காலையில் அரும்பி.....பொழுதெல்லாம் போதாகி.....மாலையில் மலரும் அந்நோய்....அல்லவா அது.... இன்று எபடியும் யூதித்தை அடைந்தே தீர்வது  என்று கங்கணம் கட்டிக்கொண்டான் ஹோலிஃபெர்னெஸ்.. தன் அடியான் பகோவா என்னும் உயர் அலுவலரை அழைத்து, " பஹோவா...இன்று நீ சென்று யூதித்தையும்
அவள் தோழியையும் என்னோடு விருந்துகொண்டாட அரசாங்க முறைப்படி அழைத்து வா" என்றான்.. பகோவாவும் உடனே யூதித்தை அணுகி தன் தலைவன் தனக்கு இட்ட   கட்டளையைக்கூறி அவளை முறைப்படி விருந்துக்கு அழைத்தான். யூதித்துக்கு எல்லாம் புறிந்து விட்டது. தன்னுடைய நாடகத்தை இனிமேலும் தொடரமுடியாது என்று கண்டு
கொண்டவளாய் தன் தலைவன் சொற்படியே அரசாங்க விருந்துக்கு அவசியம் வருவதாக பதில் அளித்தாள். பிறகு தன் கூடாரத்தில் தனியே தன் வின்னக கடவுளிடம் தான் நினைத்து  வந்த காரியம் வெற்றிகரமாக நிறைவேற மனமுருகி வேண்டியபடியே ஆகவேண்டிய காரியங்களை மனதிற்குள் செயல்படுத்திப்பார்த்துக்கொண்டாள்.
       ஆயிற்று..... மாலை ஆயிற்று...ஹோலிஃபெர்னெஸுக்கு ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு யுகமாய்ப்போய்கொண்டிருந்தது. அதன் காரணமாக தன் ஊழியக்கரர்கள் மேலும்  படைத்தலைவர்கள் மேலும் காரணமின்றி எரிந்து எரிந்து விழுந்தான். அவனுடைய ஊழியக்காரர்கள் அவனுடைய எரிச்சலுக்குக்காரணம் யூதித்தின் விவகாரம் தான் என்று அறிந்து
அவரவர் நமட்டுசிரிப்பு சிரித்துக்கொண்டு தாங்களாகவே அவன் கூடாரத்திலிருந்து விலகிகொண்டார்கள்.. கூடார பாதுகாவலர் கூட தன் தலைவனின் பாதுகாப்பை  விட்டுச்செல்லும்படியாகவும் அடுத்த நாள் காலையில்வந்து பொறுப்பு ஏற்றுகொள்ளும்படியாகவும் அறிவுருத்தப்பட்டர்கள். யூதித்தும் ஹோலிஃபெர்னெஸும் தனிமையில்
விடப்பட்டார்கள். ஹோலிஃபெர்னெசுக்கு தலை கால் புறியவில்லை. யூதித்து... என் அன்பே.. இன்று என் ஆசை நிறைவேறப்போகின்றது.. என்னோடு மது அருந்தி களிபுற்றிரு..விடியும்   வரை என்னோடு சல்லாபமாய் இரு என்றான்.. அதர்க்கு யூதித்தும்.."ஆம் அன்பரே இன்று என் வாழ்வில் பொன்னாள் " என்றாள்.. தன் பணிப்பெண் சமைத்து கொண்டுவந்திருந்த
பதார்த்தங்களை அவனுக்கு பரிமாறி தன் கையாலேயே அவனுக்கு மதுவை புகட்டினாள்.. அவனுக்கு எவ்வளவு மது புகட்டினும் அவனுக்கு மதுவின் வெறிமட்டும் அடங்கவே இல்லை.
         வேதாகமம் இந்த நிகழ்ச்சியைப்பற்றி இவ்வாறாக கூறுகிறது....ஹோலிஃபெர்னெஸ் அவளிடம் தன் மனதைப்பறிகொடுத்து மட்டு மீறிக்குடித்தான்...அவன் பிறந்த நாள் முதல் அன்று
போல் அவன் என்றுமே குடித்ததில்லை....என்று. அதிகமாக குடித்ததால் ஹோலிஃபெர்னெஸ் மயக்கமுற்று விழுந்தான்.
        இந்த சூழ்நிலைகாகத்தான் காத்திருந்தாள் யூதித்து.. ஒரு கணம் தன் கண்களை மூடி ஜெபித்தாள்..."ஆண்டவரே..எல்லாம் வல்ல கடவுளே...எருசலேமின் மேன்மைகாகவும் உமது    மேன்மைகாகவும் இவ்வேலையில் நான் செய்யவிருப்பதை கண்ணோக்கும். உமது உரிமைச்சொத்தாகிய இஸ்ரேலுக்கு துணைபுரியும். எங்களுக்கு எழுந்துள்ள பகைவர்களை   அழிக்கும்படி நான் செய்த சூழ்ச்சியை செயல்படுத்த இதுவே தக்க தருணம் " என்று வேண்டினாள். அப்போது இஸ்ராயேலின் ஆண்டவர் யூதித்தின் மனதோடு பேசியதாவது. " மகளே  யூதித்து... அஞ்சாதே....மனதில் திடம் கொள்..இந்த காரியத்தை செயலாற்ற நாம் உன்னை தேர்ந்தெடுத்தோம்..நாம் உம்மோடு இருக்கின்றோம்..நீ செய்ய வேண்டிய காரியத்தை  விரைந்து செயலாற்று" என்றார். யூதித்து உடனே எழுந்தாள்...ஹோலிஃபெர்னெஸின் உடை வாளை உறுவி அவன் தலைமுடியைப்பற்றிக்கொண்டு அவன் கழுத்தை இருமுறை வெட்டி
அவன் தலையே தனியே பிறித்தாள். கீச்.. மூச்..என்று ஒரு சிறு சப்த்தம் கூட கேட்க்கவில்லை..யூதித்து வந்த காரியம் கண கச்சிதமாக முடிந்தது. அவன் தலையை ஒரு பையில்   வைத்து அவள் தோழியை தூக்கிவரும்படி செய்து யாதொரு பிரச்சனையுமும் இன்றி அந்த இரவே பெத்தொலியாவுக்கு திரும்பினர்.
     பெத்தூலியாவின் கோட்டைவாயிலில் நின்று "திறவுங்கள்...கோட்டை வாயிலை திறவுங்கள்.. நம் எதிரி ஹோலிஃபெர்னெஸ் ஒழிந்தான்... இதோ அவன் தலை." என்று தலையை  தன் கையை உயர்த்தியபடி கூவினாள். அவ்வளவுதான்.. அந்த மக்களுக்கு எங்கிருந்து தான் வந்ததோ அவ்வளவு தெம்பும் வீரமும். இஸ்ராயேலின் ஆண்டவர் போற்றப்படுவாறாக..
என்றனர். அங்கிருந்த பெண்கள் பலர் " மகளே யூதித்து..உன்னால் இஸ்ராயேல் பெருமை அடைந்துள்ளது..உனக்கு ஒன்றும் ஆகவில்லையே" என்றனர். யூதித்து மறுமொழியாக
" ஆண்டவர் மேல் ஆணை..நான் சென்ற பாதையில் என்னைகாப்பாற்றியவர் அவரே..என் முகத்தோற்றமே அவனை வஞ்சித்து அழித்தது. நான் கறைபடவோ இழிவுறவோ அவன்   என்னுடன்.பாவன் செய்யவவோ இல்லை " என்றாள்.
    அடுத்த நாள் அதிகாலையில் நகர மக்கள் மலைமீதிரங்கி அசீரியர்களுடன் போர்தொடுக்க பேரார்வத்துடன் வருவதைக்கண்ட அசீரிய வீரர்கள் தங்கள் தலைவனை எழுப்ப அவன்   பாசறைக்குள் சென்று பார்த்தபோது அங்கே ஹோலிஃபெர்னெஸ் தலையில்லா முண்டத்துடன் காணப்பட்டான்.. வீரர்கள் பெரும் திகிலுற்று தங்கள் ஆடைகளை கிழித்துக்கொண்டு
இனி இந்த இஸ்ரயேல் மக்களை ஜெயிக்கமுடியாது என்று எண்ணி ஓட்டம் பிடித்தனர் என்று யூதித்தின் வரலாற்றை யேசுநாதர் கூறி முடிக்கவும் ஊழியக்காரன் ஒருவன் வந்து   யேசுவின் பாதம் பணிந்துகொண்டு போதகரே " தாங்கள் உறவினறாகிய எங்கள் எஜமான் இஸக்காரும் அவர் தம் துணைவியும் தங்களையும் தங்கள் பரிவாரங்கைள்யும் தங்கள் வீட்டுக்கு
அழைத்துவரும்படி என்னை அனுப்பியுள்ளார்கள். தாங்கள் மனமுவந்து எங்கள் எஜமான் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரை கௌரவிக்க வேண்டுகின்றேன் " என்றான். அதற்கு  யேசுநாதர் " ஊழியக்காரனே..நன்று... உன் எஜமான் எங்கே ? என்னை அழைக்க அவர் ஏன் நேரில் வரவில்லை ? என்றார். அதற்கு அவன் " போதகரே.. என் எஜமான் மட்டும் இப்போது
நடக்கமுடியுமானால் அவரே நேரில் வந்து உங்களை அழைத்திருப்பார்.. ஆனால் அவர் இப்போது முடியாமல் படுத்திருக்கின்றார். எனவேதான் அவர்தம் துணைவியார் சலோமி அவர்கள்  தாங்கள் இந்த தோத்தாயீன் நகருக்கு வருவதை அறிந்து உங்களை வரவேற்க வீட்டில் காத்துக்கொண்டிருக்கின்றார் " என்றான்.. யேசுநாதர் அதற்கு ,மறுமொழியாக "        ஓ.. சலோமியின்  வீடு இதுதானோ.. அவளையும் அவரது கணவர் இஸக்காரையும் நான் நன்றாக அறிவேன். அவசியம் உங்கள் எஜமான் வீட்டிற்கு வருவேன்... இதய சுத்தியோடு அழைக்கும் யாதொரு
நண்பர் அழைப்பையும் நான் எப்போதும் ஏற்பேன் " என்றார்.
          " பெதூலியாவின் அழகிய நீறூற்றுகள் "
பெதூலிய மலைக்கோட்டையும் அதனடியில் அமைந்திருக்கும் ஒரு பெரும் ஏரியும் அழகிய நீறூற்றுகளும் வேத காலத்திலிருந்தே பிரசித்தம் பெற்றிருந்தது. இந்த ஏரிக்கான் நீர் ஆதாரம் மகதலாவிலிருந்து நதியாக வந்து விழுந்தது. [ மதலேன் மரியாள் கோட்டைகட்டி வசித்துவந்த அதே மகதாலும் என்ற ஊர் இன்றுவரை அதே பெயரில் அழைக்கப்படுகின்றது.]
யேசுநாதரின் காலத்தில் அந்த அழகிய நீறூற்றுகளைச்சுற்றி வசதிபடைத்தோர் தனித்தனி வில்லாக்கள் எஸ்டேட்டுகள் என்று தங்கள் வசதிக்கேற்றபடி அமைத்துக்கொண்டு   சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வந்தார்கள். ஆனால் ரோமர்கள் பாலஸ்த்தீனத்தை கைப்பற்றி அடிமைப்படுத்திய பின்பு இவ்விடத்தில் தங்களுக்கென ஒரு தனி இடத்தை   அமைத்துக்கொண்டு அந்த இடத்தில் மற்றவர் நுழைய முடியதபடி காவல்போட்டு அந்த இடத்தை ரோமர்கள் குடி இருப்புகள் என்று அழைத்துக்கொண்டனர்.
         இவ்விதமே ஏரோது அரசனும் தங்களுக்கென தனி இடம் அமைத்துக்கொண்டு ஏரொதிய நீறூறுகள் என்றும் ஏரோதியர் குடி இருப்புகள் என்றும் அமைத்துக்கொண்டு   தங்களுக்கென காவலும் போட்டுக்கொண்டனர். ஆக இந்த பெதூலிய நீறூற்றுகள் அந்த காலம் முதற்கொண்டு இந்தக்காலம் வரை ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
      இந்த இடத்தில் யேசுநாதர் தன் சீடர்களுடன் தங்கியபோது ஏறாளமான சுற்றுலாபயணிகளும் உள்ளூர் மக்களும் யேசுநாதரை தரிசிக்கவும் அவரது சொற்பொழிவு கேட்க்கவும்   அவரிடம் ஆசீர்வாதம் வாங்கவும் உடனே கூடினார்கள். யேசுநாதரின் அன்றைய பிரசங்கம் காணாமல் போன ஆட்டைப்பற்றியும், மெசியாவின் திருவருகைபற்றியும், அதர்க்கு ஆயத்தம்
செய்யும்படியும்..காலம் நிறைவுற்றதுபற்றியுமாய் இருந்தது. அவரது பிரசங்கத்தைக்கேட்ட மக்கள் மிகவும் பிரமிப்படைந்தனர். கடவுளின் அன்பு எப்பேற்பட்டது... தம் மக்களை மீட்க்க   அவர் தம்மை ஒரு நல்லாயனாக கற்பித்தது இதுவரை எந்த போதகரும் கூறாத விளக்கமாக அல்லவா இருக்கின்றது. என்று வியப்படைந்தவறாய் " போதகரே நாங்கள் நற்கதி பெற என்ன   செய்ய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு யேசுநாதர் மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். ஞானஸ்நானம் பெருங்கள்.. என்றார்..அப்போது ஒரு வாலிப ரோமன் வலிப்பின்மிகுதியால்   நீரூற்றில் வழுக்கி விழுந்தான். அருகிலிருந்தவர்கள் உடனே அவனை நீரினின்று வெளியே தூக்கி வந்து கறையில் போட்டார்கள். வாயில் நுறை தள்ளியது. வலிப்பினாலும் வாயில்
நுறையினாலும் தண்ணீரில் மூழ்கியதாலும் உயிருக்காகப்போராடினன்... அவனை அலாக்காக தூக்கிவந்து யேசுவிடம் கொண்டுவந்து சேர்த்தனர். யேசு அவனை தொட்டு   குணமாக்கினார். சோதனையாக அன்று ஓய்வு நாள்... இதே நாளில் யேசுநாதர் இவ்விடத்தில் உன்மத்தம் பிடித்திருந்தவர்களையும் அசுத்த ஆவி பிடித்திருந்த சிலரையும்   குணமாக்கினார். உடனே அங்கிருந்த பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இது தப்பாகப்போய்விட்டது.
யேசுநாதர் ஓய்வு நாளில் குணமாக்கியது குற்றம் என்றனர். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இருப்பதுபோல் யேசுநாதர் மீது எப்போது குற்றம் கண்டுபிடிக்கலாம்  எப்படி குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று காத்திருந்த அவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகச்சரியாய் அமைந்துவிட்டது.     பார்த்தார் யேசு நாதர். மீண்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
       "அன்பு மக்களே. இதோ இந்த அழகிய நீறூறுகளைப்பாருங்கள்...இந்த ஊற்றுகளைச்சுற்றி எத்தனை பேர் வசிக்கின்றார்கள்.   இதோ...இந்த கால்நடை மேய்க்கும் சிறுவனையும் அவன் பொருப்பில் விடப்பட்டிருக்கும் ஆடுகளையும் மாடுகளையும் பாருங்கள்.. இவற்றில் ஏதேனும் ஒரு ஆடோ மாடோ   இந்த நீர் நிலையில் தவறி விழுந்து உயிருக்குப்போராடுமானால் அவன் அன்றே அந்த அற்ப உயிரை காப்பாற்றாமல் இருப்பனா...அல்லது இன்று ஓய்வு நாள் ...ஓய்வு நாள் முடிந்தபின்  அடுத்தநாள் வந்து காப்பாற்றலாம் என்று இருப்பானா..அந்த அற்ப ஜீவன் தான் ஓய்வு நாள் முடியும் வரை உயிரோடு இருக்குமா...நீங்களே பதில் சொல்லுங்கள்..என்றார். அப்போது   அங்கிருந்த மக்கள் ஓய்வு நாளில் உயிரைகாப்பாற்றுவது நல்லதே.. காப்பாற்றியே ஆக வேண்டும்.. என்றனர். அதர்க்கு யேசுநாதர் " இதைத்தானே நான் செய்தேன்... நான் ஓய்வு நாளில்  இவனை குணமாக்கியது குற்றமா...நீங்களே இவர்களுக்கு பதில் கூறுங்கள் என்றார். உடனே மக்கள் அனைவரும் தத்தம் கைகளை உயர்த்தி யேசுநாதர் செய்தது நல்ல காரியமே...
அவர் குற்றம் ஒன்றும் செய்யவில்லை என்றனர். இப்போது யேசு நாதரின் மேல் குற்றம் சாட்டவந்த பரிசேயர்களின் நிலையும் சதுசேயர்களின் நிலையும் மிகவும் தர்ம சங்கடமாகிப்போயிற்று.
         அவர்கள் மெதுவாக ஒவ்வொருவராக நழுவிச்சென்றனர்.
யேசுவும் அவரது பரிவாரங்களும் மீண்டும் தங்கள் நடைப்பயணத்தை தொடர்ந்தனர். சமவெளியைத்தாண்டி தோத்தாயீனின் நகர எல்லைக்குள் வந்தார்கள். நகர வாயிலின் அருகில்   ஒரு மிகப்பழங்கால சிதிலமான ஒரு கட்டிடத்தைக்கண்டார்கள். அவருடையசீடர்களில் ஒருவர் , " ஆண்டவரே, இந்த பழங்கால கட்டிடம் என்னூறு ஆண்டு பழமை வாய்ந்தது என்றும்
ஆண்டவரின் அடியார் எலிசேயுவின் வீடு எனவும் மக்கள் பேசிகொள்கிறர்கள். இதைப்பற்றிய உண்மை நிகழ்வுதான் என்ன" என்று கேட்டனர். அப்போது யேசுநாதரின் மனக்கண்ணில்  பின்வரும் சரித்திர நிகழ்ச்சி ஒரு திரைப்படம்போல் ஓடியது.
       அப்போது இஸ்ராயேலை அண்ட மன்னன் ஜெரோபோயாம். அவன் ஆண்டவன் முன் அநீதியான காரிங்களைச்செய்தால் இஸ்ராயலர்களின் தேவனின் கோபத்துக்கு ஆளானன்.  இருப்பினும் ஆண்டவர் தன் அடியாறாகிய எலிசேயு என்பவரை அனுப்பி இஸ்ராயேலிய தேவனைதவிர வேறு தெய்வத்தை வணங்கக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை செய்தும்
மன்னனும் மக்களும் மீண்டும் மீண்டும் அதே தவறையே செய்தனர். எனவே இஸ்ராயேலர்கலின் தேவன் அந்நாட்டு மக்களையும் அதன் அரசனையும் கடும் பஞ்சத்தாலும் பட்டினியாலும்  வதைக்க சித்தம் கொண்டார்.. அதன் காரணமாக சிரியாவைச்சேர்ந்த பெனதாது என்னும் மன்னன் இஸ்ராயேல் மீது படையெடுத்து வந்து நகரை கடுமையாக முற்றுகை இட்டான்.
முற்றுகை பல மாதம் நீடித்ததால் நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. அந்த பஞ்சத்தைப்பற்றி வேதாகமம் இவ்வறு விவரிக்கின்றது.
      "எனவே சமாரியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாவின் எச்சம் கல்படி ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கும் அளவுக்கு  முற்றுகை கடினமானதாக் இருந்தது. இஸ்ரேலிய அரசன் நகர மதில் மேல் நடந்து வரும்போது ஒரு பெண், அரசே, என் தலைவரே என்னைக்காப்பாற்றும் " என்று கூக்குறலிட்டாள்.
      அதற்கு அவன்" ஆண்டவரே உன்னைக்காப்பாற்றவில்லையெனில் நான் எப்படி உன்னைக்காப்பாற்றுவது? களஞியத்திலிருந்தா ? ஆலையிலிருந்தா?" என்றான்.பின்னும் அரசன்   அவளிடம் " உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்," இதோ ஒருநாள் இந்தப்பெண் என்னை நோக்கி " இன்று நான் உண்பதற்கு உன் மகனைக்கொடு, நாளை   என் மகனைத்தின்போம்" என்றாள். அவ்வாறே நாங்கள் என் மகனை சமைத்து தின்றோம்....மறு நாள் நான் அவளிடம்," நாம் உண்ணும்படி உன் மகனைக்கொடு" என்றேன். ஆனால்  அவளோ தன் மகனை ஒளித்து வைத்து விட்டாள்". என்ரு சொன்னாள். அரசன் இவ்வார்த்தைகலைக்கேட்டவுடன் தன் ஆடைகளைக்கிழித்துக்கொண்டான். அவன் நகர மதில்
வழியாக நடந்து செல்கையில் தன் உடலின் மேல் கோணி ஆடை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர். அரசன், " நான் இன்றைக்குள் சாபாற்றின் மகன் எலிசேயுவின் தலையை  வெட்டாது விட்டால் கடவுள் என்னை இப்படியும் இதற்கு மேலும் தண்டிப்பாறாக" என்றான்.
      அரசன் சொல்லியபடி ஒரு கொலைகாரன் எலிசேயுவைததேடி இந்த தோத்தாயீன் நகருக்குள் வந்தான். இந்த விஷயம் ஆண்டவரின் அடியார் எலிசேயுவுக்கு ஆண்டவணால்  அறிவிக்கப்பட்டது. அந்த நகர மூப்பர்களுடன் இந்த வீட்டில் தான் தங்கி இருந்தார். அவர் தலையை வெட்டவந்த கொலை காரனுக்கு கண் குருடானது. அரசனின் மன மாற்றத்தால்
இஸ்ரேலிய தேவன் கோபம் தணியவே ஆண்டவர் அந்த முற்றுகையை விலஸ்க்கினார். சிரிய மன்னன் பெனதாது ஓட்டம் பிடித்தான். அவன் கொண்டுவந்திருந்த தாணியங்கள்   அனைத்தும் இஸ்ரேலியர் வசமாயின.. பஞ்சமும் முடிந்தது. ஆக அன்று எலிசேயு தங்கியிருந்த வீடு இதுதான் " என்றார் யேசு நாதர்.
          " இஸக்கார் என்னும் இனியவர்."
   இந்த தோத்தாயீன் என்னும் ஊரில் விரல் விட்டு என்னும் அளவில் வாழ்ந்துவந்த பெரும் பணக்காரர்களில் ஒருவர் தான் இஸக்கார் என்னும் ஒரு பெரியவர். மிகப்பெரும் வியாபாரி.  கானாஊர் கல்யாண மாப்பிள்ளை நாத்தானியேலின் மாமனார் இஸ்ராயேலும் இந்த தோத்தாயீனைச்சேர்ந்த இஸக்காரும் ஒரே தொழிலைச்செய்துவந்ததாலும் இருவருமே பெரும்
பணக்காரர்கள் ஆனதாலும் இருவருக்குமே நல்ல பரிச்சயம் இஎருந்தது. இதன் காரணமாக மாப்பிள்ளை நத்தானியேல் இஸக்காரைக்காண வந்திருந்தார். அப்போது அன்று ஓய்வு நாள்.
       நாத்தானியேல் அன்று யேசுநாதரைப்பற்றி இஸக்காரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் மனைவி சலோமி யேசுநாதர் தமக்கு உறவினர் என்று கூறியபோது மிகவும் ஆச்சர்யம்  அடைந்தார். அப்போது இஸக்கார் படுத்தபடுக்கையாய் இருந்தார்..காலம் போன காலத்தில் மூலம் வந்து குருக்கிட்டாற்போல.. என்பது அந்த வியாதி வந்து   அனுபவித்துப்பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் கொடுமை..நிற்காத உதிரப்போக்கினால் மனிதர் மிகவும் மெலிந்து போய்விட்டார். போதாததற்கு லக்குவான் என்னும் பாரிச வியாதி  வந்து அவரால் எழுந்துகூட நிற்ககூட முடியாமல் போயிற்று. இந்த மனிதருக்கு வந்த கொடுமை போல் வேறு யாருக்கும் வரக்கூடாது. இந்த நல்ல மனிதர் இஸக்காருக்கு ஒரு உடன்
பிறந்த தம்பி இருந்தார். அண்ணனும் தம்பியும் அக்கா தங்கை உறவுடைய பெண்களை மணந்தனர். தங்கையின் பெயர் சலோமி. வயது இருபத்துஐந்து இருக்கும். சிலகாலம்   நன்றாகத்தான் போயிற்று..இப்போது இஸக்காருக்கு வயது ஐம்பதை தாண்டி இருந்தது. திடீரென ஒரு நாள் அவர் மனைவி இறந்தாள்.. சோதனையாக இஸக்காரின் தம்பியும் திடீரென
இறந்தார்..இப்போது இஸக்காரும் தனிமரம் ஆனார்... அவர் தம்பிமனைவி சலோமியும் விதவை ஆனாள்... மூத்தவருக்கும் குழந்தை இல்லை... இளையவருக்கும் பிள்ளை இல்லை.
      இந்த இஸக்காருக்கும் அவர் தம்பிக்கும் திரளான சொத்துக்கள் இருந்தும் வாரிசு இல்லாமல் போனது பல பேர்களுக்கு கண்ணை உறுத்தியது...பிள்ளை இல்லாத சொத்து பொது  சொத்து என்பது போல இந்த கிழவன் இஸக்கார் எப்போது மண்டையைப்போடுவான்....அவன் மனைவியையும் அவர்கள் சொத்துக்களையும் நாம் பங்கு போட்டுக்கொள்வோம் என்று
ஊரில் இருந்த பழம் பெருச்சாளிகளான் கோயில் பூசாரிகளும் பரிசேயர்களும் சதுச்சேயர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது இஸக்கார் மனதில் ஒரு யோசனை உதித்தது.  அதை சலோமியிடம் வெளிப்படுத்தவும் செய்தார்..      அதன்படி இஸக்காரும் சலோமியும் கோவில் முறைப்படியும் யூதர் முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.. சலோமியை
திருமணம் செய்துகொண்ட சில நாட்களுக்குள்ளாகவே இஸக்கார் மூல நோயாலும் பாரிச வியாதியினாலும் பாதிகப்பட்டு படுத்த படுக்கையில் வீழ்ந்தார்.
        சலோமியின் திருமணமும் அவர் கணவர் வியாதியும் ஊரில் வாழ்ந்த மக்களின் முக்கிய விவாதப்பொருள் ஆனது. பலரும் பலவிதமாக பேசிக்கொண்டார்கள். இவர்களுக்குள்ளான  மிகப்பெரும் வயது வித்தியாசம் தான் இந்த வியாதிக்கு காரணம் என்றும் இது பொருந்தாத கல்யாணம் என்றும் ஆண்டவனுக்கே அடுக்காது என்றும் எவ்வளவுகெவ்வளவு
மோசமாகவும் கேவலமாகவும் பேசமுடியுமோ அவ்வளவுக்கவ்வளவு அசிங்கமாக பேசினார்கள்...தூற்றினர்கள்...சொத்துதங்களைவிட்டுப்போய்விட்டதே என்ற கவலைதான் அவர்களுக்கு.
                 " வந்தார் தோமையார். "
         இந்த சூழ்நிலையில் பெரும் வியாபாரி ஒருவர் தன் உடன் பிறந்த சகோதரருடனும் சகோதர உறவுடைய மேலும் இருவருடனும் மற்றும் பாதுகாவலர்கள் கூலியாட்க்கள் என்னும்   பலருடன் இஸக்காரின் வீட்டை அடைந்தார். வீட்டின் தலைவர் இஸக்கார் முடியாத பட்ச்சத்திலும் அவரை வரவேற்றார்..திதிமூ அவர்களே வருக வருக.. தங்கள் வரவு நல்வரவு ஆகுக..
எங்கிருந்து வருகின்றீர்கள் ?... தங்கள் வியாபாரம் எப்படிப்போகின்றது .என்றார். அதற்கு திதீமு என்னும் தோமையார்.. நண்பா..இஸக்கார்...தாங்கள் நிலை கண்டு நான் மிகவும்   வருந்துகிறேன்.. விரைவிலேயே நீவீர் குணமடைய நான் ப்ரார்த்திகிறேன்...வியாபாரம் நல்லபடியாகவே போய்கொண்டிருக்கின்றது. இப்போது கூட நான் கிலியாதிலிருந்து தான்
வருகின்றேன்..உமக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்ததகக்கேள்விப்பட்டேன்...உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல நம் ஆண்டவர் உமக்கு விரைவிலேயே பூரண சுகம்
தந்து புத்திர பாக்கியம் அருள நான் வாழ்த்துகிறேன்...இதோ அழகிய பட்டுத்துணிகளும்.. கம்பளங்களும்... வாசனா திரவியங்களும்...மருந்துகளும் உமக்காக வாங்கி   வந்திருகின்றேன்..நான் இங்கு சுமார் ஒரு மாத காலம் தங்கி கப்பல்கட்ட தேவையான் மரங்களை கொள்முதல் செய்ய விரும்புகிறேன்..உமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே?
என்றார்.   அடடே நண்பா,,, என்னை என்னவென்று நினைத்துக்கொண்டாய்?.. உம்போன்ற நண்பர்களும் வியாபாரிகளும் பயணிகளும் தங்கிச்செல்லவேண்டும் என்பதற்காகத்தானே   நான் இவ்வளவு பெரிய வீட்டைக்கட்டி வைத்துள்ளேன்..நன்றாகத்தங்கிக்கொள்ளலாம் உமது பரிவாரங்களுடன் என்றார்... அப்போது தெருவில் இவரதுவீட்டருகில்
ஒரு பெரும் கூட்டம் கூடியது.
              சதுர்னின் என்னும் ஒரு பெரியவர் " மக்களே வெளியே வாருங்கள்...நம்மிடியே ஒரு பெரும் தீர்க்கதரிசி தோன்றியுள்ளார்..இப்படி ஒரு போதகர் இந்நாள் வரை நம்மிடையே   தோன்றியதில்லை... வாருங்கள்... அவர்தம் போதகத்தை கேளுங்கள்..உங்களிடையே கடும் வியாதியஸ்த்தர் இருந்தால் அவசியம் கூட்டிவாருங்கள்.. அவர் குணமடைவது உறுதி. "
என்றார் .
      இஸக்காரின் மனைவி சலோமியும் அவள் தோழிகளும் பணிப்பெண்களும் யேசுவின் பாதம் பணிந்து "போதகரே உம் அடியார் இஸக்காரின் வீட்டிற்கு அவசியம் வந்து எங்களை  ஆசீர்வதிக்க வேண்டும் " என்றாள்..யேசுவும் அவள் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர் இல்லத்தில் பிரவேசித்தர். "அம்மணி உம் பணியாளர் நம்மிடம் வந்து அனைத்தையும் கூறினார்..
       எங்கே உம் கணவர் இஸக்கார்? என்றார் யேசு நாதர். உள் அறையில் படுத்திருந்த இஸக்கார் ஆண்டவராகிய யேசுவை வரவேற்க எழ முயர்ச்சித்தார்.. ஆனால் முடியவில்லை..  உடனே யேசுநாதர் " பரவாயில்லை பெரியவரே.. எழ வேண்டாம்.. இதோ நானே வருகின்றேன்".என்று அவர் அருகில் சென்று அமர்ந்து ஆறுதல் பல கூறினார்... இஸக்காருக்கு
கண்களில் நீர் கொப்பளித்தது." போதகரே.. உம்மை வரவேற்கவோ..உம் பாதம் கழுவி பணிவிடை செய்யவோ என்னால் முடியாமல் போயிற்று.. பொருத்தருளும் ஆண்டவரே "...என்றார்.
      யேசுநாதருக்கு அப்படியே உள்ளம் நெக்குருகிபோயிற்று இந்த பெரியவரும் அவர் மனைவி சலோமியும் தன்மீது வைத்த பாசத்தைகண்டு. பெரியவர் இஸக்கார் தன்மனதில் ஏதேதோ  நினைத்துக்கொண்டு பொங்கிப்பொங்கி அழலானார். பெரியவர் கூறினார் " போதகரே என் மனக்குறையை உம்மிடம் அல்லாமல் வேறு யாரிடமும் கூறி எந்த பயனும் இல்லை..இந்த
வயதான காலத்தில் எனக்குத்துணை வேண்டியும், என் சொத்துக்களுக்கு பாதுகாப்பு வேண்டியும், விதவையான இள வயதுடைய என் தம்பி மனவி சலோமிக்கு பாதுகாப்பு வேண்டியும்  எல்லாம் வல்ல நம் கடவுளை வேண்டி அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த சலோமியை நம் குல வழக்கப்படியும் தேவாலய முறைப்படியும் நான் திருமணம் செய்துகொண்டேன்.
   இது பலருக்கு வயிற்றேரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் நான் அடைந்த மன வேதனை எவ்வளவு என்று கடவுளுக்குத்தான் தெரியும்..போதாததற்கு காலம் போன காலத்தில் இந்த  மூல நோய் வேறு.. இரத்தப்போக்கும் சீழும் என்னை வேதனையில் ஆழ்த்துகின்றது.. இதுவும் போதாது என்று பக்க வாதம் வேறு.. நான் என்னப்பா செய்வேன்.. இந்த பொல்லாத மக்கள்
என் வயதான காலத்தில் இந்த இளவயதுடைய பெண்ணை திருமணம் செய்ததால்தான் எனக்கு இந்த வியாதி வந்தது என்று என் காதுபடவே பேசிக்கொள்வது நான் இறந்துபோவதே  எனக்கு நலமக இருக்குமென்று எண்னத்தோன்றுகிறது" என்று குமுறிகுமுறி அழுதார்..ஆண்டவராகிய யேசுவுக்கு மனம் பாகாய் உருகியது . அவர் இஸக்காரின் கையைப்பிடித்து
" பெரியவரே எழுந்திரும் " என்றார். அந்நேரமே பெரியவர் குணம் பெற்றார்...அவரது மூல நோயும் பாரிசமும் அவரை விட்டு நீங்கியது..பெரியவரும் சலோமியும் அடைந்த மகிழ்சிக்கு
அளவே இல்லை.. இருப்பினும் இந்த புதுமை அந்த நாள் மாலை வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
    பெரியவரும் யேசுவும் மனம்விட்டுப்பேசிக்கொண்டிருந்தனர். பெரியவர் இஸக்கார் லேவி இனத்தைச்சேர்ந்தவர் என்றும் யேசுவின் தாயாருக்கு தூரத்து உறவினர் என்றும்  மாதாவையும் சூசையப்பரையும் தான் நன்றாக அறிவார் என்றும் மாதா எப்ப்பேற்பட்ட மரியாதைகுறியவர் என்று அவர் திருமணத்தின் போது அவர் எப்படிபட்ட தெய்வீக அழகோடு  விளங்கினார் என்றும்தன்னுடைய இளமைக்கால நினைவுகளை யேசுவிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் மனைவி சலோமி கூறினாள் " ராபீ... ஒருவிதத்தில் நானும் உங்கள்  உறவினர் தான். தங்கள் தகப்பனர் சூசை எனக்கு தகப்பன் முறை ஆகிறது. சூசையின் தகப்பனாரும் எனக்கு தாத்தா முறையாகிறது. என் சிறு வயதில் அவரை தாத்தா ..தாத்தா
என்று கூறி அழைத்தது எனக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது. நாங்கள் தாவீதின் பாரம்பரியத்தில் வந்த ஏலா என்னும் அரசகுடும்பத்தைச்சேர்ந்தவர்கள்..
    ஒரு முறை உங்கள் தகப்பனார் சூசையப்பர் தன் இளவதுடைய மனைவி மரியாளை யூதேயாவிலுள்ள மலைநாட்டில் வாழ்ந்துவந்த சக்காரியாஸின் மனைவி எலிஸபெத்தம்மாளை  அவர் தம் முதுமையில் கருத்தாங்கியுள்ளார் என்று கேள்விப்பட்டு அவரை சந்திக்க வந்தார்கள் அல்லவா...அப்போது உங்கள் தாயும் தந்தையும் எங்கள் வீட்டில் தான் தங்கிசென்றார்கள்.
அப்போது யூதேயா முழுவதும் உங்கள் தாயாரையும் எலிஸ்பெதம்மாளையும் பற்றித்தான் ஒரே பேச்சாக இருந்தது.. உங்கள் தாயாரைப்பற்றியும் அவர்தம் மாசற்ற தெய்வீக  அழகைப்பற்றியும் பேசாதவர்கள் பாவம் செய்தவர்கள் என்று என் தகப்பனார் கூறித்தான் எனக்கு இவை எல்லாம் தெரியும்."என்றாள் சலோமி. அப்போது யேசுநாதர்.." சலோமி.. உனக்கு   ஒரு விஷயம் தெரியுமோ... என் பெற்றோர் உன் வீட்டிற்க்கு வந்து தங்கியபோது நீயும் பிறக்கவில்லை... நானும் பிறக்கவில்லை.. அப்போது நான் என் தாயார் வயிற்றில் கருவாக   இருந்தேன். என் தகப்பனார் உனக்கும் தகப்பனார் முறை ஆதலால் நீ எனக்கு சகோதரி முறை ஆகின்றாய் அல்லவா..என் பெற்றோருக்கும் எனக்கும் அன்று புகலிடம் கொடுத்ததற்கு
இன்று நான் உனக்கு நன்றி கூறுகின்றேன்...அன்று நான் பட்ட கடனை இன்று முப்பத்துஒரு ஆண்டுகள் கழித்து அடைத்துவிட்டேன்...அதுதான் உன் கணவனை குனப்படுத்தி  விட்டேன் அல்லவா.. இப்போது உனக்கு சந்தோஷம் தன்னே " என்றார். சலோமியின் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் ஆனந்தக்கடலில் மூழ்கினர்.
        அப்போது திதீமு என்னும் தோமையார் யேசுவின் பாதம் பணிந்து "ஆண்டவரே என் தேவனே ..என்னை உம் அடிமையாக ஏற்றுக்கொள்ளும். உம்மைகண்ட மாத்திரத்தில்   என்னுள்ளத்தில் ஒரு பெரும் மாற்றம் கண்டேன். நான் ஏதோ தங்களுடன் பூர்வ ஜென்ம உறவுகொண்டவன் போல் ஆனேன்..இந்த வினாடி முதல் எனக்கு உலகம் வெறுத்துவிட்டது.
இந்த உலகின் செல்வமெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது..இன்றே நான் அனைத்தையும் உதறிவிட்டேன். என் தம்பிகளே... இனிமேல் நான் உங்களுக்கு  சொந்தமில்லை . இந்த யேசுவே எனக்கு இனி எல்லாம்..என் சொத்துக்களை எல்லாம்... என் வியாபாரம் அனைத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்"..என்றார். அதர்கு அவர்கள்
      " அண்ணா... நீங்கள் இல்லாத இந்த உலகத்தில் எங்களுக்கு மட்டும் என்ன இருக்கின்றது ?..உங்களவிட்டுவிட்டு நாங்கள் யாரிடம் செல்வோம்.. எங்களுக்கு உங்கள் சொத்தும்  வேண்டாம் ஒன்றும் வேண்டாம்..நாங்களும் உம்மைப்பின் தொடர்வோம்..ராபீ எங்களையும் உம்மோடு சேர்த்துக்கொள்ளும்" என்றனர்.
     யேசு அப்போது தோமையை தொட்டு ஆதரவாய் அணைத்துக்கொண்டு " தோமையே ..நீ வருவாய் என்று எனக்கு நேற்றே எனக்கு தெரியும்..நீ பார்வைக்குத்தான் பெரிய ஆளாக  தெரிகின்றாயே தவிர உள்ளத்தில் நீ ஒரு குழந்தை..எஜமானுக்கு தன் வேலைகாரனைத்தெரியாதா? தகப்பன் தன் பிள்ளையை அறியாமலிருப்பானோ ? குடியானவன் தன் திராட்சைத்தோட்டத்தின் பழத்தின் சுவை அறியாமலிருப்பானோ... அதுபோல நானும் உன்னை அறிவேன்.. வா... நம் இராஜ்ஜியத்தில் நீயும் பங்கு பெருவாயாக " என்றார்.
         [இப்படியாக நம் தோமையார் ஆண்டவராகிய யேசுவுக்கு அப்போஸ்த்தலராக அமர்த்தப்பட்டதும் இந்த தோத்தாயேனில் தான். தோமையாரின் சகோதரர்கள் அவரை விட்டு நீங்காது
அவரோடே வாழ்ந்து அவர்களும் கிரிஸ்த்துவுகாக வாழ்ந்து மரித்தார்கள்]
மதிய உணவு முடிந்ததும் வீட்டின் வெளிப்பகுதியில் இருந்த ஒருநீரூற்றின் அருகில் அமர்ந்தார்கள். அப்போது ஒரு சீடர் போதகரே இந்த நீறூற்று எலிசேயு தீர்க்கதரிசியால்  ஆசீர்வதிக்கப்பட்டதாகும். அதைப்பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்..இங்கு என்ன நடந்தது என்றார்.. அப்போது யேசுநாதர் மனக்கண்ணில் என்னூறு ஆண்டுகளுக்கு முன் எலிசேயு
தீர்க்கதரிசியின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி படமாக ஓடியது.... .
       சிரியாவிலிருந்து வந்திருந்த ஒரு பெரும் கொள்ளைகூட்டம் இந்நகரை கொள்ளையடிக்க முகாமிட்டிருந்தனர். அப்போது எலிசேயு தீர்க்கதரிசி இந்த தோத்தாயேனில் தான் இருந்தார்   அவருடைய சீடர் இந்த பெரும் படையைப்பார்த்து பயந்து " ஆண்டவரே..இந்த படையினரிடமிருந்து நம்மை யார் காப்பாற்ற இயலும் என்று அலரினான்..   அதற்கு எலிசேயு ..    "அஞ்சாதே...உண்மையில் அவர்கள் நம்மைவிட எண்னிக்கையில் குறைந்தவரே..இதோ பார்.. என்று ஆண்டவரிடம் மன்றாட அண்டவரும் அவன்  கண்களைத்திறந்தார்.. அப்போது எண்ணிக்கையில் அடங்காத வானவர் கூட்டம் நெருப்புப்பட்டயத்துடன் அந்த தோத்தாயீன் மலைபிரதேசம் முழுவதும் காணப்பட்டனர்.
      இஸ்ரேலிய அரசன் சிரியாவிலிருந்துவந்திருந்த கொள்ளைகூட்டத்தினரை எதிர்த்தான். அப்போது அவனிடம் போதுமான படைபலம் இல்லை.. இந்நிலையில்   ஆண்டவரின் அடியவர் எலிசேயு தீர்கதரிசி அரசனிடம் எதிரியின் படைபலம் பற்றியும் அவர்கள் மறைவிடங்கள் பற்றியும் கூறி அரசனை காத்தார்.. இதனால் மனம் சலிப்புற்றான்   கொள்ளையர் தலைவன் " நம்மிடையே வேவு பார்க்கும் ஒரு துரோகி உள்ளான். அவன் இஸ்ரேலிய அரசனுக்கு நம்மைப்பற்றி உளவு கூறுகின்றான். அவன் யார் என்று கண்டுபிடித்து  என் கண் முன்னே நிறுத்துங்கள்." என்றான்.. அதற்கு, "அரசே, நம்மிடையே அப்படிப்பட்ட துரோகியான உளவாளி ஒருவர்கூட இல்லை..மாறாக எலிசேயு தீர்க்கதரிசி நம் எதிரி   அரசனுக்கு நம் எண்ணங்கள் யாவையும் வெளிப்படுத்திவிடுகின்றார்.. அவர் இருக்கும் வரை நம் எண்ணம் ஈடேராது." என்றனர்.
     அப்படியானால் அந்த எலிசேயு தீர்க்கதரிசியை கைது செய்து என்னிடம் இழுத்துவாருங்கள் என்றான் கொள்ளையர் தலைவன். ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் இந்த எலிசேயு   நீீரூற்றின் அருகிலேவந்து அங்கிருந்த எலிசேயு தீர்க்கதரிசியை கைது செய்ய வந்தார்கள். அப்போது எலிசேயு தீர்க்கதரிசி இந்த நீரில் தன் கைஅளவு எடுத்து வானை நோக்கி வீசி
ஆண்டவரிடம் ஜெபித்தார். அப்போது அந்த அதிசயம் நடந்தது. திடீரென ஒரு மின்னல் ஏற்பட்டது ... அதைத்தொடர்ந்து ஒரு கணத்த இடி இடித்தது. பளிச்சென ஏற்பட்ட  மின்னலால் அவரகைதுசெய்ய வந்திருந்த வீரர்கள் கண்கள் குருடாகின. அப்போது எலிசேயு தீர்க்கதரிசி கூறினார்.. ."        நண்பர்களே...நீங்கள் வந்த இடமும் தவறு.. சந்தித்த நபரும்
தவறு. உங்களை நான் சரியான இடத்திற்கும் சரியான நபரை சந்திப்பதற்கும் நான் அழைத்துச்செல்கிறேன்" என்று கூறி சமாரியாவிலிருந்த இஸ்ரேலிய அரசினிடம் கூட்டிச்சென்றார்.
      அங்கு சென்ற பின் அனைவருக்கும் பார்வைபெற ஆண்டவனை வேண்ட அவர்கள் அனைவருக்கும் மீண்டும் பார்வை கிடைத்தது.
தன் நாட்டிற்கு கொள்ளையடிக்கவந்த சிரியாவீரர்களைப்பார்த்ததும் இஸ்ரேலிய அரசன் கடும் கோபம் கொண்டான்." எலிசேயு தீர்க்கதரிசி அவர்களே இவர்களை நான் என்ன  செய்யட்டும்.. இவர்கள் அனைவரையும் வாளால் வெட்டி கொன்றுபோடவா" என்றான் .அதற்கு எலிசேயு.. வேண்டாம்.. அவர்களை கொல்லவேண்டாம்.. மாறாக அவர்களுக்கு  நல்ல விருந்தளி.. என்றார்.. அதன்படியே அவர்கள் அனைவருக்கும் பலமான விருந்து பரிமாறப்பட்டது. இஸ்ரேலிய அரசனின் உப்பைத்தின்ற நன்றிக்கு பதிலாக சிரியாவிலிருந்து  எந்த கொள்ளையரும் மீண்டும் இஸ்ராயேலுக்கு கொள்ளையடிக்க திரும்பி வரவே இல்லை.
      இந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் இந்த எலிசேயுவின் நீறூற்று. என்றார் யேசுநாதர்..மக்கள் அனைவரும் கூடியவுடன் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.. அன்றைய பிரசங்கம்  முதுபெரும் தந்தை அபிரகாமின் இரண்டாவதுதிருமணம் பற்றியதாக இருந்தது. தந்தை அபிரகாம் தன் முதல் மனைவி சாராள் இறந்தபிறகு கேதுரா என்ற பெண்னை மணம்முடித்தார்.
அவர் தன் முதுமையில் தான் மணம் முடித்தார்.. ஆண்டவன் சாட்சியாகவே யூத முறைப்படியே திருமணம் முடித்தார். கடவுள் மேல் நம்பிக்கை வைத்து ஆண்டவன் மேல் விசுவாசம்   வைத்து முறைப்படியே திருமணம் செய்துகொண்டார். என்றார்.. அப்போது பரிசேயர் சிலர் " இப்போது அவரைப்பற்றி ஏன் பேச வேண்டும்..அவர் முது பெரும் தந்தை அல்லவா அவரை  பற்றிப்பேச இப்போது என்ன அவசரம் வந்தது." என்றனர்..அப்போது யேசுநாதர் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து முதுமையில் திருமணம் செய்துகொண்ட பல முதுபெரும்  பிதாபிதாக்களைப்பற்றிகூறி... இந்த இஸக்கார் செய்துகொண்ட திருமணத்தப்பற்றியும் இணைத்துப்பேசி, இவர் செய்த தப்பு என்ன?...அவரும் ஆண்டவன் சாட்ச்சியாக அண்டவன்
திரு முன்னிலையில் ஆண்டவன் மீது நம்பிக்கைவைத்து... அவரின்மீது விசுவாசம் வைத்து முறைப்படியே திருமணம் செய்துகொண்டதை ஆட்சேபிக்க நீங்கள் யார்? இதைப்பற்றி  பிரஸ்தாபிக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது? இதன் உள் நோக்கம் என்ன ? ஆண்டவரின் அருளுக்கு அளவுகோல் வைக்க நீங்கள் யார் ? பொய்யர்களே...
அண்ணன் எப்போது சாவான் ..திண்னை எப்போது கிடைக்கும் என்று ஏங்கும் நீங்கள் இனியும் இத்தகைய பரிகாசங்களை விட்டுவிடுங்கள். ஊரான் சொத்துக்கும்   அவன் மனைவிக்கும் ஆசைபட்டு அதுகிடைக்காத பட்ச்சத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகளை அவர் மீது அள்ளி வீசுகிறீர்கள்...யேசுநாதர் இந்த பரிசேயர்களையும்  சதுசேயர்களையும் கடுமையாக ஒரு பிடி பிடிக்க அவரவர் துண்டைகானோம் ..துணியைக்காணோம் என்று ஓடினர். அவரது பிரசங்கத்தை ரஸித்த பல நல்ல பரிசேயர்கள்.." ஆமாம்.
இந்த யூத ராபி யேசு நாதர் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது. பிறகு ஏன் மற்றவர்கள் இவர்மீது சேற்றை வாரி இறைக்கின்றனர். வல்லமையான் இவரது போதகம் போல் நாம்  இதுவரை கேட்டதில்லையே... ராபீ.. எங்களை ஆசீர்வதியும் என்று அவர் பாதம் பணிந்து வேண்டினர்..
      ஆனால் வெளியறிச்சென்ற பரிசேயரில் சிலர் யேசுவைப்பற்றி மிகவும் அவதூறாய்ப்பேசினர்.. இந்த கலிலேய யூத ராபியைப்பற்றி எங்களுக்குத்தெரியாதா... இவர் தந்தை  ஒரு ஏழைத்தச்சன்...இந்த வாலிப வயதில் தன் விதவைத்தாயாரை நல்லபடியாக வைத்துக்காப்பாற்றாமல் அவரைத்தவிக்கவிட்டுவிட்டு ஊர் ஊராக சுற்றுகிறார் .. இவர் தான் இப்படி
என்றால் இவரின் சிஸ்யகோடிகள் இன்னும் மோசம்..சம்பாரித்து சாப்பிட துப்பில்லாமல் இந்த ராபியின் பின்னே சுற்றிக்கொண்டு சோம்பேரிகளாக அலைகிறார்கள்...
         இது எல்லாம் ஒரு பிழைப்பு. இந்த தோமையாருக்கு என்ன வந்தது.. அவருக்கு ஏன் இப்படி புத்தி போயிற்று... இருந்த சொத்தை எல்லாம் ஊருக்கு தானம் செய்துவிட்டு இந்த  கலிலேயன் பின்னே அல்லவா போய்விட்டார்.. இன்னும் கொஞ்சகாலம் தான் இப்படிப்போவார்.. பிறகு தன் தவறை உணர்ந்து தலையில் அடித்துக்கொண்டு மீண்டும் வியாபாரத்தை கவனிக்கப்போய்விடுவார்.. எலோருக்கும் பட்டால்தான் தெரியும்... என்று பேசிக்கொண்டே சென்றனர்.
      அதிலும் ஒரு பெரியவர்..போச்சே...போச்சே.ஆயிரம் பொன் போக்சே.ஆயிரம் பொன் போச்சே என்று நம் திருவிளையாடல் தருமிபோல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார்.  . இஸக்கரின் சொத்தும் அவர் இளவயது மனைவி சலோமியும் தன் கையை விட்டுப்போனதில் அவருக்கு மிகவும் வருத்தம். எல்லாம் இந்த கலிலேயனால் வந்த வினை..
அவர் மட்டும் அவனை குணப்படுத்தாமலிருந்தால் அந்த கிழவன் இஸக்கார் சீக்கிரமே செத்துப்போய் இருப்பான். நாமும் எதாவது தகிடுத்தத்தம் செய்த்து அவ்ன் சொத்தை   வலைத்துப்போட்டிருப்போம். அப்படியே அந்த சலோமியையும் கட்டியிருந்திருக்கலாம்... ஊம் ,எல்லாம் போச்சு.. எல்லாம் போச்சு..இந்த யேசு நாசமாகப்போக..  என் வயிற்றெரிச்சலைக்கட்டிக்கொண்டு அவர் நல்லாவே இருக்கமாட்டார் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டே போனார்.. அவர் வாயில் அடித்த அடியில் ஏற்கனவே
ஆடிக்கொண்டிருந்த பல் இரண்டும் உடைந்து விழ அதனால் ஏற்பட்ட வலியால் அவர் போட்ட.... ஆ ... என்ற அலறல் சப்த்தம் அந்த தோத்தாயீன் மலை எங்கும்
எதிரொலித்துக்கொண்டே இருந்தது.










No comments:

Post a Comment