Sunday, June 2, 2013

" தேவதை கண்ட தெய்வீக தரிசனம் "



" தேவதை கண்ட தெய்வீக தரிசனம் "

       அன்று எகிப்த்திய மன்னன் பாரோனின் அரண்மனை மேல் மாடி அரசவை பூஜாரிகளால் நிரம்பி வழிந்தது. வாசனை திரவியங்களாலும் அகில் மற்றும் தூபம் சாம்பிராணி புகைகளாலும் காண்போர் மனங்களில் பக்தி மணம் கமழ்ந்தது. அந்த மாடியின் மத்தியில் உயர்ந்ததோர் ஆசனத்தில் வீற்றிருந்தாள் பதின்மூன்று வயது அழகுப்பதுமை ஒருத்தி.
         இவள் மானிடப்பெண்ணோ அல்ல அப்ஸரசோ என்ற அழகுப்பெண் அவள்..அவள் மார்பில் எகிப்த்திய தெய்வங்களுக்கே உறித்தான தங்க நகைகள் அவளது அழகை மேலும் அதிகப்படுத்தின. அவள் சிரசில் சூடி இருந்த நாகப்பாம்பின் படமெடுத்தாடும் தங்கக்கிரீடம் அவள் சதாரண மானிடப்பெண் அல்ல. தங்கள் குல தெய்வம் ஐசிஸ்தான் என்று பறை சாற்றியது. அவள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் அரசன் முதல் பூஜாரிகள் வரை அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.
         திடீரென குலவை இட்டாள் சேடிப்பெண் ஒருத்தி. அடுத்த வினாடி பல பெண்களின் குலவை ஒலிகலால் அரண்மனையில் எதிரொலித்தது. அந்த தெய்வீகப்பெண்னின் கண்கள் பரவசத்தால் நிறைந்தது. பார்வை மங்கியது. கண்கள் பரலோகத்தைப்பர்ப்பதுபோல் மேலே சொருகிக்கொண்டன.. உடனே அமைதி நிலவியது.  தலைமை பூஜாரி பேசினார்..
     சொல் அம்மா சொல்....நீ என்ன காண்கிறாய். உன்னில் இப்போது ஐசிஸ் தேவதை இறங்கி இருக்கின்றது. அது நம் குல தெய்வம் அல்லவா.. சொல்..
நீ என்ன காண்கிறாய் ?"
அந்த தேவதை பேசினாள் " நான் ஐசிஸ்...நான் பல விஷயங்கள் காண்கின்றேன்......"
" அம்மா ...தயவு செய்து ஒவ்வொன்றாக கூறுவாயாக.."
" இதோ யூதாவிலிருந்து ஒரு சிங்கம் புறப்படக்காண்கிறேன்..
அது எகிப்த்திய சிங்காதனத்தில் ஏறி அமரக்காண்கிறேன்.
அது வேறு யாரும் அல்ல ...அவர் ஓசிரிஸ் தேவன் தான்....
எகிப்த்திய நாடு அவரால் காப்பாற்றப்படக்காண்கிறேன்..
பஞ்சம் பிழைக்கவந்த நாடோடிக்கூட்டம் பெரும்படையோடு எகிப்த்தை கொள்ளை அடித்து செல்லக்காண்கிறேன்...
எவராலும் வெல்ல முடியாத எபிரேய தேவன் நாணற்கடலை பிரிக்கக்காண்கிறேன்.
ராம்சே மன்னன் படையோடு கடலில் மடியக்காண்கிறேன்...
இதற்குமேல் என்னால் எதுவும் காண முடியவில்லை...வெண்பஞ்சுக்கூட்டம் என் கண்களை மறைக்கின்றது" ...
" அம்மா... இது எல்லாம் எப்போது நடக்கும் ? "
" அதற்கு கால தேவன் தான் பதில் சொல்ல வேண்டும்...என்னால் சொல்ல முடியாது..."
அவ்வளவுதான்... அவள் நன்றாகத்துயில் கொள்ள ஆரம்பித்தாள்.. இனி அவளிடம் எதுவும் கேட்டு பேசி பயன் இல்லை எனத்தெரிந்துகொண்டார் தலைமை பூஜாரி.
        அடுத்த நாள் அப்போதைய பாரோ மன்னனின் ஓர் உயர் அதிகாரியும் மெய்காப்பாளனுமான புத்திபாரின் மனைவி அந்த தெய்வீகப்பெண்ணை அழைத்து தன் அருகில் அமர்த்தி கொஞ்சும் மொழியில் பேசினாள்.
    " அசினத்...நேற்று குறி சொன்னாய் அல்லவா...உனக்கு ஏதேனும் இப்போது ஞாபகம் இருக்கின்றதா ? என்னிடம் சற்று விளக்கமாகப்பேசுவாயா? "
" அம்மா...எனக்கு பொய் பேசி பழக்கமில்லை...அது எனக்கு தேவையான விஷயமும் அல்ல..நான் இந்த எகிப்த்து நாடு போற்றும் பாரோனின் தலைமை அர்ச்சகர் மகள் அல்லவா..
    நம் எகிப்த்திய மக்கள் அரசர் மீதும் என் தந்தையின்மீதும் என்மீதும் எவ்வளவு நம்பிக்கை வைத்திருகின்றார்கள் என்பதும் எனக்கு நன்றாகத்தெரியும். அப்படி இருக்க எனக்கு  பொய் எதர்க்கு? நேற்றைய நினைவுகள் எனக்கு நன்றாகவே தெரியும் . உங்கள் சந்தேகங்களைக்கேளுங்கள்".
   " நன்று பெண்னே நன்று. யூதாவின் சிங்கம் எகிப்த்தின் சிங்காதனத்தில் ஏறி அமரக்கண்டேன் என்று சொன்னயே...அது நடக்கக்கூடிய விஷயமா... எனக்கு நம்பிக்கை இல்லை.  ஆண்டாண்டுகாலமாய்... காலம் காலமாய்...எகிப்த்திய வம்சாவளியைத்தவிர வேற்றுஇன மக்கள் அந்த சிங்காதனத்தில் அமர முடியுமா? "
     " முடியும் அம்மா...முடியும்.. இது தெய்வ சித்தம்... இதை யாராலும் தடுக்க முடியாது."
    " அசினத்.. என்னிடம் ஒரு விஷயத்தைப்பற்றி விளக்கமாகக்கூறு...அந்த யூதாவின் சிங்கம் ஓசிரிஸ் தேவன் தான் என்று கூறினாய் அல்லவா.."
" ஆமாம்"
" அப்படியானால் நீ அவரைக்கண்டிருக்க வேண்டும்.. அப்படித்தானே?"
" ஆமாம்"
" அப்படியானால்... நம் எகிப்த்திய புராணங்களின்படி அந்த ஓசிரிஸ் தேவன் ஐசிஸ் தேவதையைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் ".
நீ தானே அந்த ஐசிஸ் தேவதை ".
" அம்மா...நான் அவரை கனவில்தான் கண்டதாக ஞாபகம்..கனவை மெய் என்று நினைத்து அவதிப்பட எனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கின்றது?"
" இல்லை அசினத்..நீ கனவில் கண்டதாகக்கூறுவது என்னைப்பொருத்தமட்டில் அது பொய்யாகத்தான் இருக்கவேண்டும்..நீ தரிசனத்தில் பார்த்தவரை நிஜத்தில் பார்த்தது  போலத்தான் எனக்குத்தோன்றுகிறது.. அந்த தரிசனத்திலும் உன் முகம் வெட்க்கமுறுவதை நான் கவனித்தேன்".
" இருக்கலாம் அம்மா...இது தான் தெய்வ சங்கல்ப்பம் என்றால் அதை நான் தடுக்க விரும்பவில்லை".
" நீ உண்மை பேசிதைப்பற்றி நான் சந்தோஷப்படுகின்றேன். அது சரி.. அந்த யூதசிங்கம் எப்போது எகிப்த்து வரும்...வருமா.. அல்லது வந்து விட்டதா?"
" அம்மா.. நீங்கள் இப்படிப்பேசுவது எனக்கு நாணமாக இருக்கின்றது.. அந்த யூதசிங்கம் தற்போது எகிப்த்தில் தான் இருக்கின்றது. நான் அவரைப்பார்த்துவிட்டேன். "
" சரி... நீ கண்ட காட்ச்சிகளைப்பற்றி விவரமாக் எழுதி வை..பிறகு அவற்றை நான் படித்து தெரிந்துகொள்கிறேன்"
அசினத் என்னும் அந்த தேவதை தான் கண்ட தரிசனங்களை சித்திர எழுத்தாக எழுதி வைத்தாள்...ஆனால் கால வெள்லத்தில் அவை அடித்துச்செல்லப்பட்டு வேறு கதையாக  பிற்கால எழுத்தாளர்களாள் தங்களது கற்பனை எல்லாம் சேர்த்து எழுதியதால் எகிப்த்தியரின் சரித்திரமே மாறிப்போனது.
      பிதாப்பிதா யாக்கோபின் மகன் யோசேப்பு எகிப்த்திய வியாபாரிகளால் விலைக்கு வாங்கப்பட்டு [ " இதோ யூதாவிலிருந்து ஒரு சிங்கம் புறப்படக்காண்கிறேன்..  தரிசனம் நிறைவேறியது]..
எகிப்த்திய மன்னனின் உயர் அதிகாரி புத்திபாரால் விலைக்கு வாங்கப்பட்டு அவரது வீட்டில் அடிமையாக வேலை வாங்கப்பட்டார். அப்போது யோசேபுக்கு வயது பதினேழு.   அழகிய முகமும் மெலிந்த உடலும் மிகுந்தபுத்திக்கூர்மையும் உடைய யோசேப்பை பார்த்தவுடனேயே பிடித்துப்போய்விட்டது புத்திபாரின் மனைவிக்கு. ஆரம்பத்தில் தன் வயதையும்   அவர் வயதையும் முன்னிட்டு அவரிடத்தில் அவளுக்கு ஈர்ப்பு ஒன்றும் ஏற்ப்படவில்லை.  ஆனால் காலம் செல்லச்செல்ல அவளுக்கும் அவரிடத்தில் சோதனையாக ஈர்ப்பு ஏற்பட்டது. தன் வயதையும் மீறி தன் நிலை தடுமாறி யோசேப்பை எப்படியாவது தன் வலையில்
விழத்தாட்டப்பார்த்தாள் புத்திபாரின் மனைவி. அதற்கேற்றாற்போல் ஒரு நாள் அமைந்தது. தன் கணவன் ஒரு நாள் அலுவல் நிமித்தம் வெளியே சென்றிருந்த போது அவள் துணிந்து  யோசேப்பை உறவுக்கு அழைத்தாள். தன் நிலையைப்பற்றி யோசேப்புக்கு நன்றாகத்தெரியும். அவர் கடவுளுக்கும் அரசனுக்கும் பயந்தவனாக பாவத்திற்கு பயந்து மறுத்தான்.
     தன் முயற்சி தோல்வியுற்றதால் வெட்க்கப்பட்ட அரசி யோசேப்பை பழி வாங்க நினைத்து அவன் விட்டுச்சென்ற மேலாடையை சாட்சியாக வைத்து யோசேப்பு யாரும் இல்லாத  நேரத்தில் தன்னை மானபங்கப்படுத்த முயற்சித்தான் என்று அவன் மீது பழிபோட்டு அவனை சிறையில் தள்ளினாள். தன்னை நல்லவளாக கணவன் முன்னால்  காட்டிக்கொண்டாள்.
      கடவுளும் காலமும் சரியாகத்தான் வேலை செய்கின்றார்கள். மனிதர்கள் தான் அப்படி இல்லை. அல்லது கடவுளின் காரியங்களில் அவ்வளவாக அக்கறைகொள்ளாமல் அவற்றை  அலட்ச்சியம் செய்கின்றார்கள். பிறகு அவற்றின் பின் விளைவுகளை அனுபவித்தபின்பு அடடா இப்படி ஆகிவிட்டதே என்று அங்கலாய்க்கின்றார்கள். பிறகு கடவுலின் மேல் குறை கூறுகின்றார்கள்.
இப்படியகத்தான் ஒரு நாள் தான் ஆராயாமல் யோசேப்பு என்னும் ஒரு வாலிபனை ராஜ துரோகம் சாட்டப்பட்டவர்களுக்கு உறித்தான சிறையில் போட்டதை பாரவோன்  மன்னனின் மெய்காவல் படைத்தலைவன் புத்திபார் மறந்தே போனான். அதை நினைவு படுத்தும்படியான ஒரு நிகழ்வு நடந்தது.
ஒரு நாள் இரவு மன்னர் பரவோனுக்கு தூக்கம் கலையும்படியான ஒரு கனவு வந்தது. மன்னர் உடனே உறக்கம் கலைந்து எழுந்தார்.
     அதாவது கனவில் மாமன்னர் பரவோன் நையில் நதியின் கரையில் உலாவிக்கொண்டிருந்தார். அப்போது ஏழு அழகிய திடகாத்திரமான வளமான பசுக்கள் அந்த நைல் நதியிலிருந்து  வெளி வந்தன. சற்று நேரத்தில் மீண்டும் அதே நைல் நதியிலிருந்து ஏழு மெலிந்த வலிமையற்ற பசுக்கள் வெளியே வந்து அந்த ஏழு அழகிய வலிமையான பசுக்களை   விழுங்கிவிட்டன. மன்னர் பரவோன் கனவில்தான் இக்காட்சிகளை கண்டார் என்றாலும்.மிகவும் மிரண்டுதான் போனார். இது கனவுதான் என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர்  மீண்டும் உறங்கப்போனார். மீண்டும் அதே இரவில் வேறு கனவு கண்டார்.
       அதாவது மன்னர் பாரவோன் அதே நையில் நதிக்கறையில் உலாவிக்கொண்டிருந்தார். அப்போது அந்த நையில் நதியிலிருந்து ஏழு வளமான அழகிய செழுமையன நெற்கதிர்கள்  வெளியே வந்தன. பிறகு மீண்டும் அதே நையில் நதியிலிருந்து ஏழு காய்ந்த சாவியாகிப்போன பதர்களான நெற்கட்டுகள் வெளியே வந்து அந்த வளமையான நெற்கட்டுகளை
விழுங்கிவிட்டன. மன்னர் திடுக்கிட்டு எழுந்தார். தான் கண்ட இரு ஒரே மாதிரியான கனவுகளின் பொருட்டு மிகவும் துன்புற்றார். அதன் பிறகு அவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை.
       இதே இரவில் சிறையில் வாடிய நம் பிதாப்பிதாவின் மகன் யோசேப்புக்கும் உறக்கம் பிடிக்கவில்லை. அப்பேது மிகுந்த பிரகாசத்துடன் ஒரு வானதூதர் அவர் முன் தோன்றினார்.  " யோசேப்பு உமக்கு சமாதானம் உண்டாகட்டும். உம் தகப்பனாறாகிய யாக்கோபுடன் போரிட்டவர் நாமே.அவருக்கு இஸ்ராயேல் என்று பெயரிட்டவரும் நாமே...   அவரிடமிருந்த கடவுளின் அருளுயிரை எடுத்துக்கொண்டவரும் நாமே..இதோ அவற்றை நாம் உமக்குத்தருகின்றோம்..பெற்றுக்கொள்வாயாக...காலம் நிறைவுற்று உள்ளது. நீர்   மேன்மை பெரும் காலம் வந்துள்ளது.  உம்மால் இஸ்ராயேல் சந்ததி வளம் பெரும்..எகிப்தும் வளம் பெரும்..உம் காலத்திற்க்குப்பிறகு இந்த ஆண்டவனின் அருளுயிர் உம்மிடமிருந்து  எடுபட்டு தகுதியனவரிடம் போய் சேரும்.. இஸ்ராயலரின் தேவன் வாழ்த்தப்படுவாராக..இதோ ஆண்டவரின் அருளுயிரை பெற்றுக்கொள்வீராக " என்றார்.
       உடனே யோசேப்பு அந்த சம்மனசானவரின் முன்னே மண்டியிட்டர். வானதூதர் அவர் தலை மீதும் அடிவயிற்றின் மீதும் கைவைத்து மீண்டும் அவரது வலது தோல்   பட்டையினின்றும் இடது தோல் பட்டையினின்றும் கையைவைத்து அவரை ஆசீர்வதிக்கவே ஆண்டவனின் அருளுயிர் அவர் உடலில் இறங்கியது. அது அவர் வலது புறமிருந்த பின்   முதுகின் விலா எலும்பில் நிலைபெறவே அந்த இடம் சற்றே வீங்கியது. அன்றிலிிருந்து அவரை எதிர்க்க வல்லமையுள்ளவன் எவனும் இல்லை. வீரமும் சாமார்த்தியமும் மிகுந்த  ஞானமும் அவரை ஆட்கொண்டன.
      அடுத்த நாள் பரவோன் மன்னன் தன் அரசவையைக்கூட்டி தன் கனவை விவரித்து அதற்கு தக்க பதில் கொடுப்பவருக்கு தகுந்த சன்மானம் கொடுப்பதாக அறிவித்தான். ஆனால்  அங்கிருந்த யாவருக்கும் மதிமந்திரிகள் உட்பட யாவருக்கும் அக்கனவின் பொருள் கூற முடியவில்லை. அப்போது மன்னருக்கு மதுக்கிண்ணம் பரிமாருபவன் பவ்வியமக அரசனிடம்
பணிந்து தான் முன்னர் சிறையிலிருக்கும்போது தனக்கு ஏற்பட்ட கனவின் பொருளை கூறிய யோசேப்பைப்பற்றி கூறினான்.
     அதாவது எகிப்திய மன்னர் பாரவோனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்ல முயற்சித்ததாக தன்னையும் தலைமை சமையற்காரனையும் மன்னர் சிறையில் வைத்தார்.  அப்போது சிறையில் தானும் சமையற்காரனும் ஒரே இரவில் வேறு வேறு கனவுகண்டதாகவும் அதில் தான் கண்ட கனவில் தன் தலைமீதுள்ள கூடையில் மூன்று   திராட்ச்சைக்கொடிகள் இருந்ததாகவும் அவைகள் பூத்து காய்த்த்ததாகவும் தான் அவற்றைப்பிழிந்து மீண்டும் மன்னருக்கு மதுவாக கொடுத்ததாகவும் கனவு கண்டதாகக்கூறினான்.
         யோசேப்பு அதற்கு " மூன்று திராட்ச்சைக்கொடிகளும்
மூன்று நாட்க்களைக்குறிக்கும். அதன் பிறகு மன்னர் உன்னை மன்னித்து மீண்டும் உன்னை அதே பதவியில் அமர்த்துவார். நீ நன்றாக இருக்கும் நாளில் என்னை மறவாதே.   அரசரிடம் சொல்லி என்னை இச்சிறையிலிருந்து விடுவி " என்றார். அவர் சொன்ன கனவின் பொருள்படியே எனக்கு ஆயிற்று. மேலும் சமயற்காரன்  கனவின் படி அவன் தலையில் மூன்று அப்பக்கூடைகள் இருந்தன . அவற்றில் பலவகையான அப்பங்கள் இருந்தன. அப்போது காகங்கள் வந்து அவன் தலை மீதிருந்த  அப்பக்கூடையில் இருந்த அப்பங்களை கொத்தித்தின்றன..
    அதற்கு யோசேப்பின் பொருள் இப்படி இருந்தது. அதன்படி மூன்று கூடைகள் மூன்று நாட்களை குறிக்கும்.அடுத்த நாள்   மன்னன் உன் தலையை வெட்டுவான். காகங்கள் வந்து உன் உடலைத்தின்னும் என்றார்.. அவ்வாறே அவனுக்கு நடந்தது. அவர் பொருள் கூறியபடியே எனக்கும் நடந்தது.
ஆகவே மன்னா உங்கள் கனவின் பொருளை விளக்க அவனை விட்டால் வேறு ஆள் கிடைக்கமாட்டான். இது உறுதி" என்றான்.
      மதுக்கிண்ணம் பரிமாறுபவனுக்கும் சமயர்காரனுக்கும் நேரிட்ட கனவையும் அவர்களுக்கு நேரிட்ட கதியையும் கண்ட பரவோன் மன்னன் யோசேப்பை உடனே சிறையிலிருந்து   விடுவித்தார். யோசேப்புக்கு முடி வெட்டி அழகாக உடைவுடுத்தி அவரை அரண்மனைக்கு கொண்டு வந்தார்கள். .
மன்னர் பாரவோன் தான் கண்ட கனவை விரிவாகக்கூறினார். அதற்கு யோசேப்பு ," மன்னா...கடவுள் உம் மீதும் உம் மக்களின் மீதும் கொண்டுள்ள அன்பினால்தான் ஒரே   பொருள்படும் இரு வேறு வேறு கனவுகள் மூலம் உமக்கு வரப்போகும் எதிர்காலத்தைப்பற்றி உறுதியாக அறிவித்துள்ளார்.        அதன்படி ஏழு கொழுத்த பசுக்களும் ஏழு செழித்த   நெற்கதிர்களும் எகிப்த்திற்கு கொடுக்கப்படும் ஏழு வளமையான காலங்களாகும். இக்காலத்தில் பயிர்கள் நல்ல விளைச்சலைத்தரும். ஏழு மெலிந்த பசுக்களும் ஏழு காய்ந்த
நெற்கதிர்களும் ஏழு ஆண்டு கடுமையான பஞ்சகாலங்களை குறிக்கும். இக்காலத்தில் எகிப்திலும் அதன் சுற்றுப்புற நாடுகளிலும் கடுமையான பஞ்சம் உண்டாகும் ..
       எந்த பயிரும் முளைக்கவோ காய்க்கவோ நடக்காது. ஏழு வளமையான காலங்களுக்குப்பிறகு ஏழு பஞ்சமான காலம் வரும் ஆகையால் வளமையான காலத்தில் தேவையான  உணவுப்பொருகளை சேமித்து அவற்றைக்கொண்டு பின் வரும் பஞ்சகாலத்தை சமாளித்துக்கொள்ளக்கடவாய். அதற்குத்தகுந்த தகுதியும் திறமையுமான ஆட்களைக்கொண்டு   உன் நிர்வாகத்தை மேம்படுத்திக்கொள் " என்றார்.
    பிறகு மன்னர் பரவோனும் அவர் மதி மந்திரிகளும் கூடி ஒரு முடிவுக்கு வந்தார்கள். பாரவோன் " வாலிபனே.. உன்பெயர் யோசேப்பு என்று அறிகிறேன்.. உன்னைப்பெற்றவர்களுக்கு  என் வாழ்த்துக்களும் நன்றியும் உறித்தாகுக. எங்களைப்பொருத்தவரையில் நீர் சொன்ன காரியங்களுக்கு தகுதியான ஆள் நீர்தான் என்பது தெளிவு. எங்கள் எகிப்த்திய தெய்வம்
ஓரிசுஸ் உம் உருவில் இங்கு நடமாடுவதாகவே நாங்கள் உணருகிறோம்..எம்மையும் எம் நாட்டு மக்களையும் எம் தெய்வம் ஓரிசுஸ் காப்பாறாக..உம்மை என் பிரதிநிதியாக நியமிக்கிறோம்.
என்று தன் கையில் இருந்த மோதிரத்தைக்கழற்றி யோசேபுக்கு அணிவித்தார். தன் இரண்டாம் தேரில் அவரை அமரவைத்து நாடு முழுவதும் அவரை வலம் வரச்செய்தார். மேலும் அவர்  " யோசேப்பிடம் போங்கள்...யோசேப்புக்கு முழந்தால் இடுங்கள். அவர் சொல்வதை செய்யுங்கள் " என்று ஏவலரை கட்டியம் கூறச்செய்தார்.. மேலும் அவர் " பாரவோன் ஆகிய நான்
கூறுகிறேன்...உமது ஒப்புதலின்றி எகிப்து நாடெங்கும் எவனும் கையையோ... காலையோ.. கோலையோ உயர்த்தக்கூடாது...உம் பெயர் இனிமேல் யோசேப்பு அல்ல. இனி நீவீர்  சாபனத்துபனேகா என்று அழைக்கப்படுவீர். " என்றார்.
    இவ்விதமாக பிதாப்பிதா யாக்கோபின் மகன் யோசேப்பு அடிமைத்தளை நீங்கி பாரவோன் மன்னனுக்கு அடுத்தபடியாக அரியாசனம் அமர்ந்தார். [ அது எகிப்த்திய சிங்காதனத்தில் ஏறி   அமரக்காண்கிறேன். தரிசனம் நிறைவேறியது.. அவருக்கு எகிப்திய அரச பாரம்பரிய செங்கோல் கொடுக்கப்பட்டது. சீறிப்படமெடுத்தாடும் எகிப்திய பாரம்பரிய அரசசின்னமாகிய  நாகப்பாம்பின் உருவம் பொருத்திய மணிமுடியும் சூடப்பட்டது. எகிப்திய மக்கள் அவரை தங்கள் குல தெய்வமான ஓசிரியுஸ் மனிதாவதாரமாக வந்திருக்கின்றார் என்றே நம்பி அவரை
வணங்கினார்கள். அது வேறு யாரும் அல்ல ...அவர் ஓசிரிஸ் தேவன் தான்... தரிசனம் நிறைவேறியது..
       . தன்னால் சிறைக்கு அனுப்பப்பட்ட யோசேப்பு இப்போது அரசர் பாரவோனுக்கு அடுத்தவர் என்னும் பட்டத்துக்கு வந்துள்ளார் என்று அறிந்த புத்திபாரின் மனைவி பெரிதும்  அதிர்ச்சியுற்றாள். அவரை தனிமையில் சந்தித்து தன் நடத்தைக்கு மிகவும் வருத்தம் தெரிவித்து தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டாள். யோசேப்பும் மிகவும்
பெரும்தன்மையோடு அவளை மன்னித்தார். அதிலிருந்து புத்திபாரின் மனைவியின் நிலைமை அடியோடு மாறிப்போயிற்று.. எப்போதும் ஜெபம் தவம் என்று   தன் வாழ்க்கயையை மாற்றி அமைத்துக்கொண்டு ஒரு சந்நியாசினி போல் மாறிப்போய்விட்டாள். அன்று அந்த தெய்வப்பெண் அசினத் சொன்னதின் ஒரு பகுதி பலித்தது   கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டாள்.
" அவள் என் மகள் அல்ல"
     ஒருநாள் நம் யோசேப்பு ஏதோ அலுவல் நிமித்தம் தலைமை பூஜாரியின் வீட்டுக்குச்சென்றார். அப்போது அவர் மகள் அசினத் அவரை வரவேற்க ஓடோடி வந்தாள். அப்போது  அவள் உள் மனது " இதோ உம் கணவன்" என்று கூறியது. உடனே அசினத் தன் இரு கரங்களையும் விரித்துக்கொண்டு யோசேப்பை அணைத்துக்கொள்ளப்பார்த்தாள். அதே நேரத்தில்
யோசேப்பின் உள் மனது " இதோ உன் மனைவி " என்றது. ஆனால் யோசேப்பு கண்னியமான முறையில் அவளை விலக்கி நகர்ந்துகொண்டார். இதனால் அசினத் அடைந்த நாணமும்  அவமானமும் வார்த்தையில் சொல்லி முடியாது. உடனே உள் அறைக்குசென்று தான் அவ்வாறு நடந்துகொள்ளுமளவுக்கு நாணமின்றிப்போனதெப்படி? .
    அவர் தன்னைப்புறிந்துகொண்டு விலகிச்சென்றது அவர் எப்பேற்பட்ட மாமனிதராக இருக்கவேண்டும்.. அவர் தன்னைப்பற்றி என்ன நினைப்பார் என்று தன்னையே கடிந்துகொண்டு  அழுதாள் அழுதாள் அப்படி அழுதாள்.. ஆனால் அவளைத்தேற்றத்தான் அப்போது யாரும் இருக்கவில்லை.
யோசேப்பும் அவள் உள் மனது "இதோ உன் கணவன்" என்று கூறியதாலேயே அவள் தன்னை அணைத்துக்கொள்ளப்பார்த்தாள்..என்று அவள் செய்கையின்
நியாயத்தைப்புறிந்துகொண்டு தன் மனதிலும் தான் " இதோ உன் மனைவி " என்ற குறல் கேட்டது. ஏதோ பூர்வீகத்தில் தனக்கும் அவளுக்கும் கணவன் மனைவி பந்தம்   இருந்திருக்கும் என்று நினைத்தவறாய் அவளை பெண் கேட்க அவள் தகப்பனிடம் விரைந்து சென்றார்.
     இதர்குள்ளாக பாரவோனின் மகனும் அசினத்தைப்பெண்கேட்க தன் தகப்பனை அணுகினான். மன்னன் பரோனும் அசினத்தின் தகப்பனை அணுகினான்.  அப்போது அசினத்தின் தகப்பன் பாரோனிடம் " அரசே, என் எஜமானே...நான் சொல்கிறன் என்று என்னை தப்பாக நினைக்க வேண்டாம்.. தயவு செய்து என்னை மன்னியுங்கள்.  பார் போற்றும் மன்னர் பாரவோன் என் மகளை பெண் கேட்டு வந்திருப்பது எனக்கு மிகுந்த கௌரவம் ஆகும்... ஆனால் மன்னருக்கு நான் என் மகளைத்தரமுடியாமைக்கு நான் மிகவும்
வருந்துகிறேன்...காரணம் ..." அசினத்...நான் பெற்ற மகளுமல்ல...அவளுக்கு நான் தந்தையும் அல்ல..." என்றார்..மன்னரும் மற்றவர்களும் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை
      மன்னர் பாரவோன்," என்ன சொல்லுகிறாய் போத்திபெறா...அசினத் உன் மகள் இல்லையா? என் மகனுக்கு உன் பெண்ணை கொடுக்க மனதில்லையானால் இதில் எனக்கு இஷ்டம்   இல்லை என்றே சொல்லிவிடலாம்.. நான் உன்னை வற்புறுத்தப்போவதில்லை... அதை விடுத்து நீ பெற்ற மகளை அவள் எனக்குப்பிறக்கவில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம்   இல்லை..இது நியாயமும் இல்லை..உனக்கு ஆறு பெண் பிள்ளைகள் என்று எனக்குத்தெரியும்" என்றார்.
     தலைமை பூஜாரி போத்திபெறா." அரசே என்னை மன்னியுங்கள்..என்னை நம்புங்கள்..நான் உண்மையைத்தான் சொல்லுகிறேன்...அசினத் எனக்குப்பிறவாத மகள்... இதுதான்  உண்மை..இந்த உண்மை உங்கள் தலைமைக்காப்பளர் புத்திபாரின் மனைவிக்கும் தெரியும்..வேண்டுமானால் அவரிடம் கூட கேட்டுப்பாருங்கள்." என்று கண்ணில் நீர் ஒழுக கூறினார்.
அரசர் பாரவோன், " புத்திபார்... என்ன இது.. உண்மையைச்சொல்.. என்ன நடந்தது ?. " என்றார்.
      புத்திபாரின் மனைவி " அரசே தலைமை பூஜாரி போத்திபெறா சொல்வது உண்மைதான்...அசினத் எகிப்த்திய ரத்தத்துக்குப்பிறந்தவள் அல்ல..அவள் ஒரு எபிரேயப்பெண் " என்றாள்.
       அரசர் பாரவோன் " பெண்ணே,... விபரமாகச்செல் " என்றார்.
புத்திபாரின் மனைவி கூறினாள், " அரசே, இது நடந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும்..அப்போது நானும் என் தோழிகளும் செங்கடலில் நீராடி களிப்புற்றிருந்தோம்.  அப்போது ஐந்தே வயது நிரம்பி இருந்த ஒரு எபிரேயப்பெண் இரு தாதியரோடு அழுதுகொண்டிருந்தாள். நான் அவர்களிடம் இதுபற்றி விசாரிக்கையில் இந்த எபிரேயப்ப்பெண்ணின்
உயிருக்கு ஆபத்திருப்பதாக அவளது தாத்தா கூறி செங்கடல் சென்று அவளை பராமரித்துக்கொள்ளுங்கள் என்று பெரும் செல்வம் கொடுத்து அனுப்பியதாகவும் அந்த செல்வங்களை  கள்வர் அபகரித்துக்கொண்டதாகவும் இப்போது என்ன செய்வது என்று தடுமாறுவதாகவும் கூறியதால் அவர்களை தன் பொருப்பில் ஏற்று தன் அரண்மனையில் வைத்து  பாதுகாத்ததாகவும் தலைமை அர்ச்சகருக்கு அப்போது பிள்ளைகள் இல்லாததால் அவர்வசம் கொடுத்து வளர்த்ததாகவும் அவரும் அவளை தன் மகள் போல் வளர்த்ததாகவும் இந்த பெண்  அசினத் வந்த வேளை நல்ல வேளையானதால் அவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள் பிறந்ததாகவும் அந்த ஐந்து பெண்பிள்ளைகளும் அசினத்துக்கு தங்கைக்கு தங்கையாகவும்
தோழிக்குத்தோழியாகவும் வளர்ந்ததார்கள் " என்று கூாறினாள்.
      தலைமை அர்ச்ச்கர் போத்திபெறா " அரசே, நான் சொல்கின்றேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்.. நம் நாட்டை உங்கள் சார்பாக ஆண்டுவரும் யோசேப்பும் அசினத்தை  பெண் கேட்டிருக்கின்றார்..அவரும் ஒரு எபிரேயர் தான்...அசினத்தும் ஒரு எபிரேயப்பெண்தான்..  யோசேப்பு நம் குல தெய்வம் ஓசெரியுஸ் அவதரமானால் இந்த அசினத் ஐரிஸ்   தேவதையின் அவதாரம் என நான் பலமுறை அறிந்திருக்கின்றேன்.. எனவே இந்தப்பெண் அசினத் உங்கள் மகனுக்கு ஏற்றவள் அல்ல என்பது என் கருத்து. மேலும் அசினத் என் மகள்   போன்றவள் அல்லவா... அவள் மனதையும் நான் அறிவேன்...எனவே தாங்கள் பெரும் மனது வைத்து அசினத்தை யோசேப்புக்கு மணமுடித்து தர வேண்டும் " என்றார்.
     நிலைமையை உணர்ந்துகொண்ட மாமன்னர் பாரவோன் ஒரு நல்ல நாளில் யோசேப்புக்கும் அசினத்துக்கும் திருமணம் செய்து வைத்தார்.
யோசேப்பு அசினத்தின் திருமண பரிசாக பரோனின் மனைவி ஒரு தங்கக்கிண்னத்தை பரிசாக அளித்தார். அது ஒரு வினோதமான தங்கக்கிண்னமாகும். அதற்கு   இரு கைப்பிடிகள் உண்டு. அடிப்பீடம் இல்லை. அந்த தங்கக்கிண்னத்தின் ஒரு புறம் சீறிப்படமெடுத்தாடும் ஒரு நாகப்பாம்பின் உருவமும் மறு புறம் திராட்ச்சைக்கனிகள் ஒரு  கொத்தாகவும் தத்ரூபமாக புடைபுச்சித்திரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த பாம்பும் திராட்ச்சைக்கொத்துகளும் என்ன கருத்துக்காக வடிவமைக்கப்பட்டிருந்தன என்பதுபற்றி  அக்காலத்தில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
       யோசேப்பு கூறியபடியே எகிப்த்தில் வளமான ஏழு ஆண்டுகள் ஆரம்பித்தது. யோசேப்பு மிகுந்த முன் யோசனையுடனும் ஆண்டவரின் வழிகாட்டுதலுடனும் நன்கு விளைந்திருந்த  தானியங்களை களஞ்சியத்தில் சேர்த்தார். அவர் கட்டிய மிகுந்த தொழில் நுட்ப்பத்துடன் கூடிய களஞ்சியம் இப்போதும் உள்ளது. இதற்காக இரனூறு அடிகளுக்கும் அதிகமான
பல அடுக்குகளைக்கொண்ட அடுக்குமாடிபோன்ற களஞ்சியத்தை தகுந்த ஏறும் இறங்கும் வழி வைத்து கட்டினார். மேலும் அதிக வெப்பத்தினால் தானியங்கள் தீய்ந்துபோகாமலிருக்க  நைல்நதி நீரை குழாய்கள் மூலம் இந்த ஆழமான நிலவறைக்குள் கொடுவந்து அந்த நிலவறைமுழுவதும் குளிர்பதன அறை ஆக்கினார்
     அக்காலத்தில் இந்த முறை குளிர்பதன வசதி  எகிப்தியர் அறியாதது. இன்றுவரை இந்த நிலவரை கட்டிட நிபுணர்களுக்கு ஒரு ஆச்சர்யமான விஷயம்தான். இதை யோசேப்பு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்தார்.  மேலும் அக்காலத்தில் எகிப்தியர் இப்போதைய கலப்பை போன்ற அமைப்பை அறியாதிருந்தனர். ஆனால் இந்த விஷயத்தில் யோசேப்பு கில்லாடி. எனவே எகிப்தில் நவீன   கலப்பையால் நிலத்தை உழுது விளைச்சலை பெருக்கும் வழிமுறையை கற்பித்தார். இததகைய புதுப்புது உபாயங்களால் எகிப்து அமோகமாய் செழித்தது. எனவேதான் எகிப்தியமக்கள்
தங்கள் குலதெய்வம் ஓரிசுஸ் தான் மனிதாவதாரமாக யோசேப்பின் உருவத்தில் வந்திருப்பதாக நம்பி அவர் மீது பெரும் மதிப்புகொண்டு பிற்காலத்தில் அவர்களுடைய தெய்வம்  ஓரிசுஸ் ஆக வணங்கினர்கள்..        எகிப்த்திய நாடு அவரால் காப்பாற்றப்படக்காண்கிறேன்...தரிசனம் நிறைவேறியது..
    இந்த கால கட்டங்களில் அசினத்தும் சும்மா இருக்கவில்லை. தான் அறிந்த தையல், எம்பராய்டரி, லேஸ் வேலைகள், சமயல், மருத்துவம், சரித்திரம், பூகோலம், வேத சாஸ்த்திரம்,   வான சாஸ்த்திரம் ஆகியவற்றை தன் வயதையொத்த அரண்மனைப்பெண்களுக்கும் வெளி எகிப்திய பெண்களுக்கும் சொல்லிக்கொடுத்தாள். வரப்போகும் கடுமையான பஞ்ச   காலத்தை சமாளிக்கும் உபாயங்களையும் சொல்லிக்கொடுத்தாள். மேலும் கடவுளர்களூக்கு பலி கொடுத்த மிருகங்கள் பறவைகளின் மாமிசங்களை பக்குவமாக சமைப்பதின்   முறைகளையும் விளக்கினாள். இத்தகைய வழி முறைகள் எகிப்தியர்கள் அறியாதது. இத்தகைய நல்லாசிரியையாக அசினத் விளங்கியதால் அவள் எபிரேயர்களிடமும்   எகிப்த்தியர்களிடம் பெரும் மதிப்பையும் மரியாதையும் பெற்றிருந்தாள்.
      ஆயிற்று... வளமையான காலங்கள் மாறி ஏழு பஞ்சகாலம் ஆரம்பித்தது. பஞ்சம் மிகக்கடுமையாக இருந்தது. அது எகிப்துமட்டுமல்லாமல் கானான் வரையும் பரவியது. கானானில்  யோசேபின் தகப்பன் பிதாப்பிதா யாக்கோபு தன் பிள்ளைகளில் சிலரை எகிப்துக்கு அனுப்பி தானியங்கள் வாங்கி வர அனுப்பினார்.    சிக்கேமில் தங்களால் அடிமையாய் விற்கப்பட்ட
தன் சகோதரன்தான் எகிப்தின் ராஜாவாக இருப்பதை அறியாத அவரது சகோதரர்கள் யோசேப்பின் காலில் விழுந்தர்கள். ஆனால் யோசேப்பு அவர்களை யார் என அவர்களைப்பார்த்த   மாத்திரத்தில் கண்டுகொண்டார். ஆனாலும் தன்னை யார் என அவர்களுக்கு வெளிப்படுத்திக்கொள்ளாமல் அவர்களுக்குத்தேவையான தானியங்களைக்கொடுத்து அனுப்பி மீண்டும்
தானியம் வாங்க வரும்போது அவர்களது குடும்பத்தில் உள்ள கடைசி தம்பியையும் கூட்டிவ்ர வேண்டுமெனவும் அப்போதுதான் தானியங்களை கொடுக்கமுடியும் என்று கண்டிப்பாக  சொல்லி அனுப்பினார். எனவே அவரது சகோதரர்கள் அடுத்தமுறை எகிப்துக்கு வரும்போது யோசேப்பின் சொந்த உடன்பிறந்த சகோதரன் பெஞ்சமீனையும் கூட்டிவந்து அவரது
காலில் மீண்டும் விழுந்தனர்.
        இம்முறை யோசேப்பு மீண்டும் தன் தம்பி பெஞ்சமீனை அவர்களுடன் கானான் அனுப்பாமல் தன்னுடனே வைத்துக்கொள்ள விரும்பி அவனது தானிய மூட்டையில் தன்   திருமணபரிசாக மன்னர் பாரவோன்மனைவி கொடுத்த அந்த தங்க கிண்னத்தை ரகசியமாக போட்டு அனுப்பினார். எனவே அவர்கள் நகர காவலரிடம் சோதனையின்போது   மாட்டிக்கொண்டனர். அரசனின் த்ங்கக்கிண்னத்தை திருடிய குற்றத்துக்காக அனைவரையும் சிறைபிடித்தனர். மீண்டும் யோசேப்பு தலையிட்டு பெஞ்சமீன் தன் அடிமையாய்   இருக்கட்டும் . மேலும் அவனைவிடுத்து மற்றவர் கானான் சென்று அவர்களுடைய தகப்பனையும் எகிப்த்துக்கு அழைத்து வந்தால் பெஞ்சமீனை விடுதலை செய்வோம் என்று   அவர்களை அனுப்பிவைத்தார்.
     எனவே அவனது சகோதரர்கள் அனைவரும் கானான் சென்று மீண்டும் தங்கள் தந்தை யாக்கோபை அழைத்துகொண்டு எகிப்து வந்தனர்.
அப்போதுதான் யோசேப்பு தன்னை யார் என்று காட்டிக்கொண்டார். பிறிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்தது. பெஞ்ச்மீனை மீட்க்க உதவிய அந்த தங்கக்கிண்ணத்தை யோசேப்பு  மீண்டும் தன்வசம் வைத்துக்கொண்டார். தன் தந்தையாரை தன் அலுவல் நிமித்தம் ஒருநாள் பயண தூரத்தில் உள்ள அரண்மனையில் வைத்துக்கொண்டார். இதற்குள்ளாக   யோசேப்புக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்திருந்தனர். மூத்தமகன்பெயர் மனாசே என்றும் இளையமகன் எப்பிராயீம் என்றும் அவர்களுக்குப்பெயர்.     யோசேப்புக்கு தன் தந்தை யாக்கோபின் முன்கோபம் பற்றி நன்றாகத்தெரியும். எனவே கிழவன் எங்கே கோபம்கொண்டு தன்னையும் தன்மனைவி மற்றும் பிள்ளைகளை யாவரையும் எதற்காகவாவது   கோபம்கொண்டு சாபம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் வெகுநாள் அவர்களை தன் தந்தையிடம் அறிமுகப்படுத்தவே இல்லை.. இதுவும் யாக்கோபுவுக்கு  புறிந்தே இருந்தது. இருந்தாலும் தந்தையின்பாசம் அவரை வாய்விட்டே கேட்க வைத்துவிட்டது.
      " மகனே யோசேப்பு...என் கோபத்தால் எங்கே உன் மனைவி மக்களை நான் சபித்துவிடுவேனோ என்று பயந்து தானே நீ அவர்களை என்னிடம் அழைத்துவரவில்லை... பயப்படாதே..  நான் அவர்களுக்கு ஆசி வழங்குவேனே தவிர ஒரு போதும் சாபம் கொடுக்க மாட்டேன்...போய் அவர்களை அழைத்துவா " என்றார்..எனவே யோசேப்பும் வேறு வழி இல்லாமல் அவர்களை  அழைத்துவந்து முதலில் தன் மனைவி அசினத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது யாக்கோபூ " அசினத் உன்பெயரோ...நல்லது.. நீ நீடூழி என்றும் கணவனுடனும்  பிள்ளைகளுடனும் வாழ்வாயாக " என்றார்.     பின் ஏதோ சிந்தனையில் " மகளே அசினத்.. ஒரு விஷயம் சொன்னால் நீ ஆச்சர்யம் அடைவாய்...ஒருகாலத்தில் எனக்கும் உன்   வயதை உடைய ஒரு பேத்தி இருந்தாள்.. சொன்னால் நீ நம்ப மாட்டாய்...அவளுக்கும் உன்னுடைய பெயர் அசினத் தான். அவளுக்கு இந்த பெயரை வைத்ததே நான்
தான்..ஏறக்குறைய அவள் உன் ஜாடையாகத்தான் இருந்தாள். ஆனால் காலமும் விதியும் அவளை என்னிடமிருந்து பிறித்துவிட்டது. அந்த பாவத்தை செய்ததும் நான் தான்..என்று  யாக்கோபு அந்த தள்ளாத வயதிலும் கண்னீர்விட்டு அழுதார்.
       யோசேப்பு மிகுந்த ஆச்சர்யம் அடைந்தவறாய் " அப்பா.. என்னப்பா சொல்கிறீர்கள்.. உங்கள் பேத்தியை பிரித்தது நீங்களா..உங்களுக்கு எப்படியப்பா இப்படியோரு காரியம் செய்ய  மனது வந்தது. அப்படிச்செய்ய்ய வேண்டிய அவசியம் என்ன? சொல்லுங்கள் அப்பா " என்றார். யாக்கோபூ நடந்ததை விவரித்தார்.
    " மகனே யோசேப்பு... அன்றொரு நாள் என் முதல்மனைவி லீயாவுகுப்பிறந்த தீனா என்னும் என் மகள் தன் தோழிகளுடன் நான் புதிதாக வாங்கி இருந்த நிலம் சிக்கேமில்   இருந்ததல்லவா... அந்த நாட்டு மக்களை காணவிரும்பி சில பெண்களை துணைக்கு அழைத்துக்கொண்டு சிக்கேமுக்கு சென்றாள். அக்காலத்தில் அவளது அழகுக்கு ஈடான  பெண்கள் சிக்கேமில் இல்லை.    அவள் அழகில் காமுற்ற சிக்கேம் இளவரசன் அவளைத்தூக்கிக்கொண்டுபோய் கற்பழித்தான். ஆனாலும் அவள் மீதிருந்த காதலால் தன் தந்தை
ஆமோரையும் ஊரிலுள்ள பெரியமனிதர் சிலரையும் அழைத்துக்கொண்டுவந்து தீனாவை பெண்கேட்டான். ஆனாலும் உன் சகோதரர்கள் மிகுந்த கோபமுற்று அவர்களை பழிவாங்கும்
எண்னத்தில் " நாங்கள் எபிரேயர்கள்.. வேற்று இனத்தாருடன் பெண் கொள்வதும் இல்லை..கொடுப்பதும் இல்லை...ஆனாலும் இப்பிரச்சனையில் சுமூகமாக முடிவெடுக்க வேண்டி  நாங்களும் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்கின்றோம். நாங்கள் விருத்தசேதனம் செய்பவர்கள்.. எனவே நீங்களும் எங்களைப்போல் விருத்த சேதனம் செய்துகொண்டால் நீங்கள்
எங்கள் இனமாவீர்கள். அப்போது நாங்களும் நீங்களுமாக கலந்துகொண்டு பெண் கொடுத்துக்கொள்ளலாம் மற்றும் பெண் எடுத்துக்கொள்லலாம்." என்று நயவஞ்சகமாய் பேசினர்.
      சிக்கேமியரும் ஒத்துக்கொண்டு ஊருக்கு வெளியே சிக்கேம் நாட்டிலுள்ள எல்லா ஆண்களும் கூடி விருத்தசேதனம் செய்துகொண்டனர். அவர்களுக்குள் இந்தவிதமான பழக்கம்  இல்லையாதலால் அதற்கு தகுந்த மருத்துவம் செய்ய தெரியவில்லை. எனவே புண்கள் ஆறாமல் மிகுந்த வலியுடன் சிரமபட்டனர்.. இத்தகைய சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த உன்   சகோதரர்கள் நிறைய ஆட்களுடன் சென்று நோயுற்றிருந்த ஆண்கள் அனைவரையும் வெட்டிக்கொண்றனர். உன் சகோதரி தீனாவை கற்ப்பழித்தவனையும் வெட்டிக்கொண்றனர்.
      என்ன ஒரு கோழைத்தனமான செயல் இது. இதுவா வீரம்.. இனிமேல் இந்த இஸ்ராயேல் மக்களை யார் நம்புவார் ? இந்த இஸ்ராயேல் மக்களின் வீரம் மற்ற புற ஜாதிக்காரர்களால்  இனி இழிவாகப்பேசப்படும்.. நம் இஸ்ராயேல் மக்களின் சத்தியம் காற்றில் பறந்ததால் நம் சத்தியத்தை இனி உலகம் நம்பாது. இது விஷயத்தில் நான் என் பிள்ளைகளை மிகவும் கடிந்து
கொண்டேன். என்ன சொல்லி என்ன செய்வது... எல்லாம் நடந்து முடிந்து விட்டது. விஷயம் அத்தோடு முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை.
      என் மகள் தீனாவுக்கு அந்த சிக்கேமியனால் ஏற்பட்ட மானபங்கத்தால் அந்த ஒருநாள் கூட்டுறவிலேயே அவள் கரு உண்டானாள். இது பற்றி அறியவந்த அவள் மாமன்களாகிய   உன் சகோதரர்கள் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்கள்.. அவள் குழந்தை பெற்றெடுக்கும்வரை காத்திருந்தார்கள்.. குழந்தையும் பிறந்தது. அது பெண் குழந்தை. அது தாயை
அப்படியே அச்சு அசலாக உறித்தெடுத்தார்ப்போல் அவ்வளவு அழகாக இருந்தது. ஆனாலும் அக்குழந்தையை கொன்றே தீர வேண்டும் என்ற வெறியோடு அலைந்தார்கள் அவள்  சகோதரர்கள்.
    என் மகள் தீனாவும் தன் சகோதரர்களின் காலைக்கட்டிக்கொண்டு தன் குழந்தைக்கு உயிர் பிச்சை கேட்டாள். ஒரு பாவமும் அறியாத அந்த பச்சைகுழந்தைக்கு   உயிர் பிச்சைகேட்டாள். ஆனால் பாவிகள் அவளுக்கு கருணை காட்டவில்லை. அந்த சின்னஞ்சிறிய சிசுவை கொல்ல பலமுறை முயற்சித்தார்கள். அப்போதுதான் நான் ஒரு முடிவுக்கு  வரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன். என் மகள் தீனா வேண்டுமென்றா கற்பிழந்தாள்..எவனோ செய்த பிழைக்கு என்மகள் என்ன செய்வாள்..அல்லது அந்தக்குழந்தைதான்  என்ன செய்யும். எனக்கு என் மகளைவிட என் பேத்தியின் மீது பாசம் அதிகமாயிற்று. அவள் அழகி என்றால் ஒரு அழகி அப்படியோரு அழகி..அது மட்டுமல்ல. அவளது அடிவயிற்றில்  ஒரு மச்சம்.. அது என்ன ஒரு வினோதமானது தெரியுமா? இதயம்போன்ற ஒரு கடற்சிப்பி நடுவில் ஒரு குழந்தை. அதன் ஒரு கையில் உள்ள ஒரு தட்டில் மூன்று முற்றிய
சோளக்கதிர்கள் உறித்த நிலையிலும் மற்ற கையில் ஒரு தட்டில் திராட்ச்சைப்பழங்களை கொத்தித்தின்னும் புறாவும் இருந்தது. எனவே இந்தக்குழந்தை பெரும் ராஜ்ஜியம் ஆளும்   அம்சத்தோடு பிறந்துள்ளதாக நான் உணர்ந்தேன். ரகசியமாக அதற்கு அசினத் என்னும் பெயர் வைத்தேன்.. ரகசியமாகவே அந்தக்குழந்தையும் அவள் தாய் தீனாவையும் ஐந்து வயது
வரை வளர்த்துவந்தேன். ஆனாலும் இந்த நாடகத்தை அதிக காலம் நடத்த முடியவில்லை. ஒருநாள் தீனாவும் அசினத்தும் காற்று வாங்க ஊருக்கு வெளியே வரவே அவர்களை என்   மற்ற பிள்ளைகள் பார்த்துவிட்டார்காள்.     அப்போதைக்கு அவர்களை காப்பாற்றிவிட்டேன். ஆனால் இனிமேல் அவர்களை காலம் முழுவதும் என்னால் காப்பாற்றமுடியாது என்று
உணர்ந்தேன்.
     எனவே வேறு வழி இல்லாமல் இரு தாதிப்பெண்களுக்கு தங்கக்காசுகளை ஒரு மூட்டையாகக்கட்டி அவர்களிடம் கொடுத்து செங்கடலுக்கு அப்பால் கொண்டுபோய் குழந்தையுடன்  வாழக்கடவீர்கள் என்று அனுப்பிவிட்டேன்.. அதற்குப்பின் அவர்கள் என்ன ஆனார்களோ என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது." என்றார்.
       இதுவரை கதைகேட்டுவந்த அசினத தன் இதயத்து உணர்ச்சிகளை அடக்கமாட்டதாளாய் பாசமிகுதியால் " தாத்தா உங்கள் பேத்தி அசினத் நான்தான் தாத்தா. நீங்கள் சொன்ன   அத்தனை மச்சக்குரிகளும் எனக்கு அடி வயிற்றில் இருக்கின்றன. இதை உங்கள் மகனும் என் கணவனுமானவர் அறிவார்" என்று ஓங்கி அழுதாள். பிரிந்தவர் கூடினால் பேசவும்
வேண்டுமோ.. தாத்தா யாக்கோபூ தன் பேத்தியை அணைத்துக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டார். அப்போது யோசேப்பு " அப்பா...நான் என் சகோதரி தீனாவின் மகளையா கட்டி   இருக்கின்றேன். நம் இஸ்ராயேல்தேவன் நமக்கு எவ்வளவு நல்ல வல்ல செயல்கள் செய்திருக்கின்றார்.. இஸ்ராயேல் தேவன் வாழ்த்தப்பெருவாறாக " என்றார்.
       அப்போது யாக்கோபூ " மகனே யோசேப்பு, சிக்கேமில் உன்னை ஒரு கொடும் மிருகம் அடித்துக்கொண்று தின்றுவிட்டது என்று உன் சகோதரர்கள் கதைகட்டிவிட்டபோது என்னால் அதை நம்பவும் முடியவில்லை...நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..காரணம் உன் மேலாடையில் ரத்தம்படிந்திருந்ததால் நான் நம்பினேன்.. ஆனலும் எனக்கு ஒரு நம்பிக்கை
ஆழ்மனதில் இருந்தது. நீ பிறந்ததுமுதல் உன் மார்பில் இருந்த மச்சம் உனக்கு நினைவிருக்கின்றதா...ஒரு திராட்ச்சைக்கொத்து போன்ற பெரும் மச்சம் உன் வலப்பக்க மார்பில் பரவி இருந்தது.
     நீ என்றைகாவது ஒருநாள் இந்த பார் போற்றும் அரசன் ஆவாய் என்பது அப்போதே என் கணிப்பாய் இருந்தது. இப்போது யாவும் நிறைவேறியதாகக்காண்கின்றேன். உன்   மக்களைகூப்பிடு. நான் அவர்களை ஆசீர்வதிப்பேன்" என்றார். பின் யாக்கோபு தான் இறந்துபோனால் தன் உடலை இந்த எகிப்த்தியர் பூமியில் புதைக்காமல் தன் தாய், தகப்பனார், மற்றும்
தாத்தா, பாட்டி இவர்களோடு புதைக்கும்படியும் அதற்காக தன் மகன் யோசேப்பிடம் சத்தியமும் வாங்கிக்கொண்டு இறந்துபோனார்.
     யோசேப்புக்கும் அசினத்துக்கும் மொத்தம் பதினெட்டு பிள்ளைகள் பிறந்தனர். அவற்றுள் சிலர் இரட்டைபிள்ளைகள்.. யோசேப்பு இறக்கும்முன் மூன்று வருடங்களுக்குப்முன்  அசினெத் இறந்தாள்.. அவளது உடலை பாடம் செய்து வைத்தார்கள். யோசேப்பு இறந்ததும் அவரது உடலையும் பாடம் செய்து தங்கப்பெட்டியில் வைத்தார்கள். யாக்கோபைப்போலவே
யோசேப்பும் தான் இறந்த பின் தன் உடலை தன் முன்னோர்களுடன் புதைக்கவேண்டும் என்று தன் பிள்ளைகளிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்தார். அவரது சமாதி இன்றும்   ஹெப்ரோனிலும் சமாரியாவிலுள்ள சிக்கேமில் நெபுலஸிலும் இருக்கின்றது.
        எகிப்த்தில் யோசேப்பின் உடலை பாடம் செய்யும் போது அவரது முதுகெலும்பிலிருந்த ஆண்டவனின் அருளுயிர் பற்றி அந்த எகிப்தியருக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே அந்த  அருளுயிரோடு அவரது எலும்புகள் பாடம் செய்யப்பட்டன. யோசெப்பு இறந்து நானூறு ஆண்டுகளுக்குப்பிறகு இந்த யோசேப்பின் மம்மிக்கு வேலை வந்தது.
    எகிப்த்தில் யோசேப்புக்குப்பிறகு அவரது குடும்பத்தினர் மற்றும் சந்ததியினர் ஏறாளமாக பலுகிப்பெருகினர். அங்கு வளமான வாழ்வு வாழ்ந்தனர் . அவர்களுடைய அபரிமிதமான  வளர்ச்சிகண்டு எகிப்தியர் கலக்கமடைந்தனர். எங்கே இந்த எபிரேயர் திடீரென கிளர்ச்சி செய்து அரசைக்கவிழ்த்து நாட்டைக்கைப்பற்றிக்கொள்வார்களோ என்ற அச்சம் அவர்களை
ஆட்டிப்படைத்தது. இந்த சமயத்தில் வானத்தில் தூமகேது ஒன்று தோன்றியது. நாட்டிற்க்கு பெரும் அபாயம் ஏற்ப்படப்போகின்றது என்று கோயில் அர்ச்சகர்கள் அரசன் ராம்சே என்னும்   பரவோனிடம் போட்டுக்கொடுத்தனர். எனவே அரசன் ஒரே இரவில் அத்தனை எபிரேயரையும் ஒரே உத்திரவில் அடிமையாக மாற்றினான். பெரும் கட்டிட நிர்மான வேலைகளை அந்த
எபிரேய அடிமைகளை வைத்து கட்டி முடித்தனர். இந்த காலகட்டத்தில் எபிரேயர்கள் பட்ட அவஸ்த்தைகள் வார்த்தையில் சொல்லி மாளாது. இவ்வாறாக சுமார் நானூறு ஆண்டுகள் ஓடின. இவர்கள் கூக்குரலைக்கேட்ட இஸ்றாயேல் தேவனும் மனம் இறங்கினார். தன் இஸ்ராயேல் மக்களை பாரவோனின் அடிமைத்தலையிலிருந்து மீட்க்க சித்தம் கொண்டார்.
          " நதியிலிருந்து வந்தவன் "
எகிப்தில் இஸ்ராயேல் மக்கள் அபரிமிதமாகப்பிறக்கவே இவர்களைக்கட்டுப்படுத்த அப்போதைய பாரவோன் மன்னன் ஒரு கடுமையான கட்டளை பிறப்பித்தான்.
   இஸ்ராயேலருக்குப்பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைத்தும் கொல்லப்பட வேண்டும் என்னும் கடுமையான சட்டம் தான் அது.இதனால் எகிப்த்தில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள்  உடனடியாகக்கொல்லப்பட்டனர். அந்த கால கட்டத்தில் ஒரு தாய் அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அதைக்கொல்ல மனமில்லாமல் ஒரு கூடையில் வைத்து துணியால்
சுற்றி நைல் நதியில் விட்டாள். அக்குழந்தை பாராவோன் மகள் குளிக்கும் படித்துறைக்கு வந்தது. பாரவோன் மகள் இந்த கூடையை பற்றி அதைத்திறந்து பார்க்கையில்   அதனுள்ளே அழகிய எபிரேய ஆண் குழந்தை இருக்கக்கண்டு தானே வளர்க்க விரும்பினாள். அக்குழந்தை நதியிலிருந்து வந்தவன் என்பதால் அக்குழந்தைக்கு   மோசே என்று பெயரிட்டாள்.
      இதே கால கட்டத்தில் பரவோ ராஜாவுக்கு யூதப்பெண் ஒருத்தி மனைவியானாள். அவள் வழியாக பாரவோனுக்கு ஒரு மகள் பிறந்தாள். அவள் பெயர் செகோலா என்பதாகும்.  இந்த செகோலாவுக்கு தன் பிறப்பு பற்றியும் தெரியும். மோசேயின் பிறப்பு பற்றியும் தெரியும். அவள் வழியாக இஸ்ரேலிய ரத்தம் ஓடியதால் இஸ்ரேலிய தேவன் அவளுக்கு அபரிமிதமான
ஆசீர் வழங்கினார். அவளுக்கு பிறவியிலேயே நெற்றியில் ஒரு புடைப்பு இருந்ததால் தரிசனங்கள் காணும் பாக்கியம் பெற்றிருந்தாள். பிற்காலத்தில் இவள் ஒரு பென் தீர்க்கதரிசினியாக   கருதப்பட்டாள். அவள் பாரவோனின் மகள் ஆதலாள் எகிப்திய மக்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தாள். அவள் வழியாக அப்போது எகிப்தில் வாழ்ந்த இஸ்ராயேல்
மக்களுக்கு பாரவோனின் பார்வையில் தயை கிடைத்தது.
        எப்போது எகிப்திய மக்களுக்கு இஸ்ரேலியர்கள் ஆகாமல் போய்விட்டார்களோ அன்றிலிருந்து அவர்களுக்கு பிடித்தது சனியன்.நானூரு ஆண்டுகளுக்கு முன் தங்களை ஆண்ட  யோசேப்பும் அசினத்தும் தங்கள் தெய்வங்களான ஐசிஸ் மற்றும் ஓரிசுஸ் என்று போற்றி வணங்கியதெல்லாம் அவர்களுக்கு மறந்துவிட்டது. எனவே இஸ்ரேலியர்களுக்கு தங்கள்
மூதாதைகளான யோசேப்பின் நினைவும் அசினத்தின் நினைவும் இருக்ககூடாதென யோசேப்பின் மம்மிக்கூட்டைத்திறந்து அவரது பல எலும்புகலை திருடிக்கொண்டு போய்விட்டனர்.
        இந்த விஷயம் தெரிய வந்த இஸ்ரேலியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. மிகுந்த கலக்கம் அடைந்தனர்.  இந்த காலகட்டத்தில் மோசேயிக்கு தன் பிறப்பின் ரகசியம் தெரிந்தது.. தான் ஒரு இஸ்ரேலன் என்று தெரிந்ததும் தன் இனத்தைச்சேர்ந்த ஒரு அடிமையை எகிப்தியன் அடிப்பதை
கண்ட மோசே உடனே அந்த எகிப்திய மேலதிகாரியை அடித்தே கொன்று புதைத்தார். ஆனால் ரகசியத்தில் செய்தது அம்பலத்துக்கு வந்தது. இந்த கொலைப்பழியிலிருந்து தப்பிக்க   மோசே மிதியானுக்கு ஓடினார். அங்கே ஜெத்ரோ என்னும் தனவானின் மகளான செப்போரா என்பவளை மணந்தார்.      சீனாய் மலையில் தூவா என்னும் பள்ளத்தாக்கில் தன் ஆடுகளை
மேய்க்கும்போது இஸ்ரேலியர்கலின் தேவன் ஒரு எரியும் முட்புதரில் காட்சிக்கொடுத்து தன் இன மக்களான இஸ்ரேலியரை எகிப்தில் பாரவோனின் அடிமைத்தலையிலிருந்து மீட்டு  அவர்களுக்கு கொடுப்பதாகச்சொல்லியிருந்த கானான் தேசத்திற்கு அழைத்து செல்ல இவரைப்பணித்தார். எனவே மோசே மீண்டும் எகிப்த்துக்கு வந்தார்.
எகிப்திய பாரோ மன்னன் தன் அடிமைகளாய் இருந்த இஸ்ராயேல் மக்களை விடுவிக்க அவ்வளவு லேசில் மசியவில்லை. கடவுள் எகிப்த்திய மக்களுக்கு பத்துவிதமான கொடிய   வாதைகளை அனுப்பினார். இவற்றால் எகிப்தியர் அடைந்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசியாக மிகக்கொடும் வாதை அனுப்பினார். அது எகிப்திய அரசன் துவங்கி சாதாரண   குடிமகன் வரை அவர்களுக்குப்பிறந்த தலைச்சன் ஆண் மகன் அனைவரும் கொல்லப்பட்டதுதான். இதனால் மிரண்டுபோன் பாரவோன் முதல் அவன் பிரஜைகள் அனைவரும்   இந்த சனியன் பிடித்த இஸ்ராயேல் ம்க்கள் அனைவரும் நம்மைவிட்டு தொலைந்து போகட்டும். இவர்கள் போவதுதான் நமக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது என்றனர்.
       பாரோமன்னன் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்திரவு கொடுத்துவிட்டான் என்றதும் இஸ்ராயேல் மக்கள் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை. அப்பாடி... நானூறு வருட  அடிமை வாழ்க்கை முடிந்து விட்டது. இனி நமக்கு சுதந்திரம்... நம்முடைய சொந்த நாட்டுக்குப்போகப்போகிறோம் என்று ஒரே உற்சாகம்... ஒரே சந்தோஷம்தான் போங்கள்.
      மோசேயுக்கு தங்கள் முன்னோரான் யாக்கோபு அவர்மகன் யோசேப்பு ஆகியோரின் எலும்புகளை தங்கள் சொந்த நாடான கானுக்கு கொண்டு சென்று அங்கே அவர்கள் முன்னோரோடு  புதைக்கவேண்டுமென இஸ்ராயேல் பெரியோர்கள் கூறும்போது யோசேப்பிடமிருந்த ஆண்டவனின் அருளுயிர் பற்றியும் அவர்களில் சிலருக்கு தெரிந்திருந்ததால் யோசேப்பின்
மம்மிகூடு இருக்குமிடம் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. யோசேப்பு அரசருக்குரிய பட்டதிலிருக்கும்போதே இறந்ததால் அவரது மம்மிக்கூடு ஒரு ரகசிய இடத்தில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.       பாரவோனின் மகளான செகோலா அந்த மம்மிக்கூடு இருக்கும் இடத்தை அறிந்திருந்தாள். அப்போது பழைய மெம்பிஸ் மற்றும் கெச்சுர் இடையே
நைல் நதி ஓடியது. இந்த நைல்நதிக்கு மேலாக ஒரு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. பாலத்தின் அக்கறையில் ஒரு பாதாள அறையில் பழைய காலத்திய பல மம்மிகூடுகள் அவர் அவர்   பெயருடன் நின்று கொண்டிருந்தன. யோசேப்பின் மம்மிக்கூடு ஒரு தங்க முலாம் பூசப்பட்ட உலோகப்பெட்டியில் இருந்தது. அதைத்திறந்து பார்க்கையில் யோசேப்பின் பல எலும்புகள்  திருடு போய் இருந்தன. அவர் மார்புக்கூட்டின் பின் விலா எலும்பு வீங்கி இருக்கக்கண்டார் மோசே, அவர் அதைத்தொடவே அது நுணுங்கி அதனுள் இருந்த ஆண்டவனின் அருளுயிர்  பசைபோல வெளிப்பட்டது. மோசே அதை தன்கையில் தாங்கிக்கொள்ள செகோலா அதைப்பெற்றுக்கொண்டு தன் பட்டுத்துணியால் அதை மூடிக்கொண்டு தன் கண்களில்   ஒற்றிக்கொண்டாள். அதை மிகவும் பக்தி சிரத்தையுடன் தன்னோடே கொண்டுசென்றாள்.
      யோசெப்பின் மற்ற எலும்புகளோடு அசினத்தின் எலும்புகளையும் மோசேவும் அவருடைய ஆட்க்களும் மிகவும் பக்தி சிரத்தையுடன் தங்களுடன் எடுத்துச்சென்றனர். இவ்வாறே   தந்தை யாக்கோபின் எலும்புகளையும் தங்களோடு எடுத்துக்கொண்டனர். ஒரு பெரும் தங்கபேழையில் தந்தை யாக்கோபு அவர்மகன் யோசேப்பு அவர் மனைவி அசினத் ஆகியோரின்
எலும்புகளையும் யோசேப்பின் தங்க மணிமுடி செங்கோல் தங்கக்கோப்பைகள் தட்டுகள் மற்றும் யோசெப்புக்கு திருமணப்பரிசாக மன்னர் பரவோனின் மனைவி அவருக்குக்கொடுத்த   அந்த தங்கக்கிண்ணம் ஆகியவை அந்த தங்கப்பெட்டியில் வைக்கப்பட்டு கானான் தேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
[ இந்த தங்கக்கிண்ணம் பல கால கட்டங்களில் பலர் கைமாறி யேசுநாதர் காலத்தில் அரிமத்தியா சூசையிடம் சென்றது. அவர் அதை செராபி என்னும் பெயருடைய வெரோணிக்காவிடம்  கொடுத்திருந்தார்.யேசுவின் ராப்போஜனத்தன்று யேசுநாதர் இந்தக்கிண்ணத்தில்தான் திராட்சை ரசத்தை தன் ரத்தமாக மாற்றினார். இந்த தங்கக்கிண்ணத்தில் ஒரு புறம் ராஜநாகம்
படமெடுத்தாடுவது போன்றும் மறு புறம் திராட்ச்சைகனிகள் கொத்தாக இருப்பது போன்றும் புடைப்புச்சித்திரம் இருந்தது. அதாவது பாம்பு சாத்தானைக்குறிக்கும். அது கடித்தால்   மரணம். சாத்தானால் ஆண்மாவை சாகடித்தவர்களுக்கு மருத்துவம் என்ன ? அதற்கு மாற்று மருந்து யேசுவின் ரத்தம் தான் ஒரே வழி. எனவேதான் யேசுநாதர் திராட்சை ரசத்தை
அந்த இராப்போஜன இரவில் தன் ரத்தமாக மாற்றி பாவத்தால் இறந்த நம் ஆண்மாவுக்கு மாற்று மருந்தாக அந்த இறந்த ஆண்மா உயிர் பெற வழிவகை செய்தார்.
     அன்றைய ராப்போஜனத்தில் யேசுநாதர் தவிர மற்ற பனிரெண்டு அப்போஸ்த்தலர்களுக்கும் இருவருக்கு ஒன்றாக ஆறு தங்கக்குப்பிகள் பரிமாறப்பட்டன. அவற்றில் ஒன்று தற்போது   ஸ்பெயின் தேசத்திலுள்ள பார்சிலோனா தேவாலயத்தில் உள்ளது. மற்ற ரசக்குப்பிகள் எங்குபோனது என்பதுபற்றி தெரியவில்லை. யேசுநாதர் உபயோகித்த தங்க இரஸக்குப்பி
உடன்படிக்கைப்பெட்டியில் உள்ளதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது. அதைப்பற்றிபிறகு எழுதுவேன்.]
     ஆயிற்று...விடுதலைப்பயண ஏற்பாடுகள் மள மள என்று ஆரம்பம் ஆனது. மோசே தன் இஸ்ராயேல் மக்களிடம் இந்த எகிப்திய மக்களிடம் " நீங்கள் அடிமையாய் இருந்தபோது  உங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நஸ்ட்ட ஈடாக உங்களுக்குத்தேவையான பொருட்களை இப்போதே போய் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.. அது நீங்கள் போய் வாழும் கானான்
நாட்டில் வாழ்க்கைக்கு அது மிகவும் உதவியாக இருக்கும். எகிப்தியரும் கொடுத்தே ஆக வேண்டும். " என்றார். இஸ்ராயேலரும் அவ்வாறே எகிப்த்தியமக்களிடம் தங்களுக்கு   வேண்டியதை கேட்டு வாங்கிக்கொண்டார்கள். எகிப்தியோரும் இம் மக்கள் நம்மை விட்டுச்சென்றால் போதும். இவர்களால் நாம் பட்ட வேதனைகளும் போதும். சோதனைகளும்   போதும். இந்த சனியன்கள் நம்மை விட்டுச்சென்றால் போதும். என்று அவர்கள் கேட்டதங்க நகைகள், தங்கக்காசுகள், தங்க பாத்திரபண்டங்கள், தங்க விக்கிரகங்கள்,கால்நடைகள்,
துணிமணிகள், ஆடம்பரப்பொருட்க்கள் போன்றவற்றை பிடுங்காத குறையாக அள்ளிச்சென்றார்கள். ஏறக்குறைய இருபது லட்ச்சம் பேர் இவ்வாறு புறப்பட்டதால்   எகிப்து நகரமே கொள்ளையிட்டாற்போல் ஆயிற்று.. அன்று அந்த தெய்வப்பெண் அசினத் கண்ட தரிசனத்தின் ஒருபகுதி..பஞ்சம் பிழைக்கவந்த நாடோடிக்கூட்டம் பெரும்படையோடு
எகிப்த்தை கொள்ளை அடித்து செல்லக்காண்கிறேன். தரிசனம் நிறைவேறியது.
       பாரோனின் மகளான செகோலா அவர்களை கண்ணீருடன் வழி அனுப்பிவைத்தாள். யோசேப்பின் கடவுளின் அருளுயிரும் யோசெப்பின் எலும்புகலும் கடந்த நானூறு   ஆண்டுகளாக எகிப்திலிருந்தவரை ஆண்டவனின் ஆசீர்வாதம் அவர்களுடனே இருந்தது . இன்று அது தன் நாட்டைவிட்டு புறப்பட்டு போகின்றது. இனிமேல் ஆண்டவனின்
ஆசீர்வாதம் நம்மிடம் இருக்காது. இனி இந்த எகிப்து தேசத்தை யார் காப்பாற்றுவார்? அத்தோடா போயிற்று... தன் அருமை மகளை மோயீசனின் சகோதரன் ஆரோனுக்கு திருமணம்   செய்து கொடுத்திருக்கின்றேன். இன்று நான் அவளையும் பிறிய வேண்டியதாயிற்றே என்று கண்ணீர் விட்டு அழுதாள்.
       மோசேயின் தலைமையில் விடுதலைப்பயணம் ஒரு வழியாக துவங்கிவிட்டது. இந்த மக்கள்கூட்டம் எங்கெங்கு செல்கின்றது என்பதை பாரோவின் வீரர்கள் அரசனுக்கு  அறிவித்தபடி இருந்தார்கள்.மோசேயின் கைத்தடி ஒரு வைரம்பாய்ந்த நாணற்கழியாகும். அதன் கீழ்க்கணுவின் உள்ளே யோசேப்பின் ஒரு எலும்பை வைத்து அதை ஒரு  இரும்புக்கவ்வையால் மூடி இருந்தார். அந்த கழியின் தலைப்பகுதியில் ஒரு கைப்பிடி பொருத்தி இருந்தார். இந்த கைத்தடியால் மோசே பல அதிசயங்களைச்செய்தார்.
    இந்தக்கழிதான் பாரோ மன்னனுக்கும் முன்பாக பாம்பாக மாறியது. பெரிய கடினமான பாறையில் மோசே அடிக்கவே நல்ல தண்ணீர் வர வழைத்தது.
மோசேயின் தலைமையில் மக்கள் சீனாய் பாலைவனத்தில் தென் கிழக்காக பயணித்தார்கள். இதுகண்ட பாரவோன் ராம்சே ஆச்சர்யம் அடைந்தான்." மோசே கூறியபடி பார்த்தால்  கானான் தேசத்துக்கு வடகிழக்காகத்தானே பயணிக்க வேண்டும். இவர்கள் ஏன் தென் கிழக்காக பயணிக்கிறார்கள்... இந்த மோசே பெரும் முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்.
     இந்த முட்டாள் தலைவனை நம்பி இந்த முட்டாள் இஸ்ரேலிய மக்களும் அவன் பின்னே போகின்றார்கள்... நல்ல தலைவனும் நல்ல மக்களும்... போகட்டும் போகட்டும்...அந்த சீனாய்  பாலைவ்னத்தில் கட்டுவிரியன் பாம்புகளும் நட்டுவாக்காளி தேள்களும் அவர்களை வரவேற்கட்டும்..அதையும் மீறி அங்குள்ள அமலேக்கியர்களிடம் சிக்கிக்கொண்டு அனைவரும்  மடிவது உறுதி. என் வேலை சுலபமாகப்போகிறது." என்றான்.
      ஒருவழியாக மோசே தன் மக்களை அழைத்துக்கொண்டு மிக்டால் என்னும் கடற்கரைக்கு வந்தார். இங்கு எகிப்த்தியரின் எல்லைக்கோட்டை இன்றளவும் இருக்கின்றது.  இதைஅடுத்து இருப்பது யாம் சுப் என எபிரேபிய பாஷையில் அழைக்கப்படும் நாணற்கடல்.[reed sea]. இதுவே பிற்காலத்தில் [red sea] ஆக மாறியதாக ஒரு தகவல் உண்டு.
     இன்று இந்த செங்கடல் பகுதி அக்காபா ஜலசந்தி என்றழைக்கப்படுகின்றது. இந்த பகுதியில் உயர்ந்த மலைகளும் பள்ளத்தாக்குகளும் உண்டு. இந்த செங்கடலின் மறு கறை  மிதியான். இது இன்றையா சவுதி அரேபியாவில் இருக்கின்றது. இங்கு இக்கடலின் அகலம் பதினெட்டு கி.மி.
     இந்த காலகட்டத்தில் எகிப்தில் வேலைக்கு ஆட்கள் இல்லாததாலும், அடிமைகளை வேலை வாங்கி சுகவாசிகளாகிவிட்டதாலும் எகிப்தியரின் பாடு மிகவும் சொல்ல  முடியாததாக ஆகி விட்டது. மேலும் இந்த இஸ்ராயேலர்கள் தங்கள் தேவர்களின் சிலைகளையும் தங்கப்பாத்திரங்களையும் பொருட்க்களையும் கொள்ளை அடித்துச்சென்றதால் மிகுந்த
கோபமுற்று மீண்டும் அவர்களை அடிமைப்படுத்த வேண்டி பாரோனிடம் முறையிடவே மன்னனும் இஸ்ராயேலியர் மீது பெரும்படை எடுத்து வந்தான். பாரவோன் சேனை மிக்டாலில்  களமிறங்கியது. ஒரு பக்கம் கொடும் எகிப்த்திய சேனை... மறுபுறம் செங்கடல்... இரண்டுக்கும் நடுவே இஸ்ராயேலியர். மிகுந்த அச்சத்தோடு மோசேயை வேண்டி
     "இந்த எகிப்த்தியரிடமிருந்து எங்களை நீர் எப்படிகாப்பீர் ?" என்றனர்.
அப்போது மோசே " மக்களே... அச்சப்பட வேண்டாம்...ஆண்டவருடைய பலத்த கைவண்மையை இப்போது நீங்கள் காணப்போகிறீர்கள்..இன்று நீங்கள் காணும் இந்த எகிப்த்தியரை  மீண்டும் உங்கள் வாழ்நாளில் காணவேமாட்டீர்கள்..இதோ பாருங்கள்" என்றார். அப்போது வானில் ஒரு பெரும் தீச்சுவாலை ஒன்று தோன்றியது. அது சுழன்று சுழன்று இரு
மலைகளுக்கும் நடுவில் ஒரு நெருப்புத்தூணாக நின்றுகொண்டு எகிப்த்தியரையும் இஸ்ரேலியரையும் ஒன்று சேராதபடி நடுவில் நின்றுகொண்டது.
     அப்போது மோசே தன் கோலை கடலுக்கும் மேலே நீட்டவே கடல் இரண்டாகப்பிறிந்தது. கடவுள் அந்த செங்கடலை ஒரேடியாக " டர்" என்று பிரித்துவிடவில்லை..ஒரு ஆப்பு நீரை  பிரித்தார்ப்போல் பிளவு ஏற்படுத்திக்கொண்டே போனது. மிகவும் சரிவாக இல்லாமல் சிருவர் முதல் பெரியோர் வரை சுலபமாக இறங்கிச்செல்லும் அளவியலேயே அந்த் சாய்தளம்  கடலில் ஏற்பட்டது. கடலில் ஏற்பட்ட சாலை போன்ற ஒரு அமைப்பு தொன்னூரு அடி அகலம் இருந்தது. இந்த சாலைபோன்ற அமைப்பின் இருபுறமும் கடல்நீர் பெரும் சுவர் போல்  எழும்பி இருந்தது.[ எவராலும் வெல்ல முடியாத எபிரேய தேவன் நாணற்கடலை பிரிக்கக்காண்கிறேன். அவள் கண்ட தரிசனத்தின் ஒருபகுதி நிறைவேறியது.]

     அதன் உயரம் நூறு அடியாகும். கடலில் ஏற்பட்ட சாலையை விடுத்து அதன் இருபுறமும் கடலின் ஆழம் சுமார் இரண்டாயிரம் அடி. இத்தகைய ஒரு இடத்தைத்தான்  கடவுள் தேர்ந்தெடுத்து அந்த இஸ்ரேலிய மக்களை இங்கு வரச்செய்தார். செங்கடலின் அக்கறையில் பல மிதக்கும் தீவுகள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் அறைமணினேர   நடைப்பயண தூரத்தில் இருந்தன. அந்த தீவுகளில் பலவிதமான பழமரங்கள் விலங்குகள் இருந்தன.
இந்த தயாரிப்பு இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. முதலில் மோசேவும் அவருடன் சுமார் ஐம்பது பெரியோர்களும் கடலில் இறங்கினர். அதை அடுத்து இஸ்றேலிய மக்கள் இறங்கினர்.  இதர்க்கும் முன்பாக எகிப்தியருக்கும் இஸ்றேலியருக்கும் நடுவில் இருந்த அந்த நெருப்புத்தூண் கடலில் மோசேக்கு முன்பாக சென்றது. மீண்டும் இரண்டாகப்பிறிந்து
கடலின் இந்த பக்கத்திலும் அந்தபக்கத்திலும் வெளிச்சம் வரும்படி இரண்டாகப்பிறிந்தது. ஆக கடலின் அந்த உயர்ந்த கடற்சுவருக்கு இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொன்றாக  இரண்டு நெருப்புத்தூணாக சுழன்று சுழன்று எரிந்து இரவை பகலாக்கின..
       எகிப்தியரின் பகுதியில் பெரும் இருள் கவ்வியது. போதாததற்கு வெண்பஞ்சுபோன்ற மேகம் அவர்கள் கண்னை மறைத்ததால் அவர்களுக்கு எதிரே என்ன நடக்கின்றது என்றே  தெரியவில்லை.
    இஸ்ரேலியர்கள் தங்கள் நடுவில் யோசேப்பின் எலும்புகள் அடங்கிய தங்கப்பேழையை சுமந்து சென்றானர்.. கடலின் பிளவு மோசேயுக்கு முன்னால் விலகிச்சென்றுகொண்டே   இருந்தது. அந்த மிதக்கும் தீவுகளுக்குள் கடல் பிளக்காமல் விலகியே சென்றது. அந்த தீவுகளிலிருக்கும் மரம் கொடி செடி போன்றவற்றை மக்கள் பார்க்கும் வண்ணம் அந்த   நெருப்புத்தூண்கள் இன்னும் சற்ரே உயரே எழும்பி அதிகம் வெளிச்சம் பரப்பின. இஸ்ராயேல் மக்க்ள் அந்த தீவுகளிலிருந்த பழங்கள், காய்கள், விதைகள், கிழங்குகள், பறவைகள்,  மிருகங்களைப்பிடித்து சேகரித்துக்கொண்டனர். இல்லாவிட்டால் அடுத்த நாள் அக்கறையில் அவர்கள் உணவு உண்ன எதுவுமே இருக்காது.
      பின்னேவரும் எகிப்திய சேனைகளைக்கண்டு பயந்ததால் அனைவரும் விரைவாகவே நடந்தனர். ஆக இக்கரைக்கும் அக்கரைக்குமான பதினெட்டு கிலோ மீட்டர் தூரத்தையும்   ஆண்டவன் கொடுத்த தைரியத்தால் மூன்றே ம்ணி நேரத்தில் கடந்தனர். மற்றபடி இந்த தூரத்தைக்கடக்க வேண்டுமானால் சுமார் ஒன்பது மணி நேரம் வேண்டும்.
     ஒரு வழியாக மோசேவும் அவர் இஸ்ராயேல் மக்களும் இரவு மூன்று மணி அளவில்அக்கரை போய் சேர்ந்ததும் மறு கரையிலிருந்த எகிப்த்தியரின் கண் திறக்கப்பட்டது.   பஞ்சு போன்ற மேகம் விலகியது. அவர்கள் பார்க்கும்போது அக்கரையின் சமீபத்தில் இஸ்ராயேலிய்ர்கள் கரை ஏறுவது தெரிந்தது. எனவே தங்கள் குதிரைபூட்டிய தேர்களை விரைவாக   செலுத்தினர். பார்வோன் மன்னனும் தன் தேரை காற்றினும் விரைவாக செலுத்திவந்தான். இந்த இஸ்ரேலியர்களாள் நமக்கு எவ்வளவு கஸ்டங்களும் நஸ்ட்டங்களும் வந்தன.
மீண்டும் அவர்களை என் அடிமை ஆக்குவேன். இழந்த எம் செல்வங்களை அவர்களிடமிருந்து பிடுங்கிக்கொள்வோம் என்ற எண்னத்துடம் எல்லா குதிரை வீரர்களும் தங்களால்   எவ்வளவு விரைவாக செலுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக செலுத்தினர். அவர்கள் வேகத்தால் செங்கடலின் பாதி தூரத்தைக்கடந்துவிட்டார்கள்.
     அப்போது இஸ்ராயேல் தேவன் எகிப்தியரின் தேர் சக்கரங்கள் தரையில் பதிந்துபோகும்படி செய்தார். இதனால் பல தேர் சக்கரங்கள் தரையில் பதியவே குதிரைகளும் தேர்வீரர்களும்   தலைகுப்புற விழுந்தார்கள். இந்த நேரத்தில் மோசே தன் கோலை கடல் மீது நீட்டவே பிரிந்த கடல் ஒன்று சேர்ந்தது. அந்த மாபெரும் சுவர் போல் இருபுறமும் சீறிக்கொண்டு நின்றிருந்த
கடல் தொபீரென சரிந்து அந்த எகிப்தியரின் படைமீது விழுந்து அவர்களை சுருட்டி மூழ்கடித்தது. பாரவோன் மன்னனும் மடிந்தான்.
அவன் படைவீரர்களும் குதிரைகளும் மடிந்தனர். ராம்சே மன்னன் படையோடு கடலில் மடியக்கண்டேன்.... அவள் கண்ட தரிசனம் நிறைவேறியது.
      இரண்டாக பிரிந்திருந்த அந்த பெரும் நெருப்புத்தூண்கள் மீண்டும் ஒன்றாக இணைந்து மறைந்தே போயிற்று.  அக்கரை சென்றிருந்த இஸ்றாயேலியர் தங்களை மாபெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றியதற்கு நன்றியாக ஒரு கல் பீடம் அமைத்து பெரும் நன்றிப்பலி ஒப்புக்கொடுத்தனர். இங்கு
மோசேயின் தமக்கை மீரியம் பாடிய பாடல் உலகப்பிரசித்தி பெற்றது.
      " ஆண்டவர் மண்புடன் புகழ் பெற்றார்.. எனவே அவரை போற்றிடுவோம்...
குதிரை வீரனைகுதிரையுடன் கவிழ்த்து கடலில் போட்டாரே....."
    தேவதை கண்ட தரிசனம் அனைத்தும் மிகத்துல்லியமாக நிறை வேறியது. ஆணால் காலம் தான் மிக அதிகமானது. அதனால் தான் அவள் இது எல்லாம் எப்போது நிறைவேரும்  என்று கேட்டதற்கு இதற்கு காலதேவன் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினாள். ஒருக்கால் அந்த தேவதைக்கு காலத்தின் அளவு தெரிந்திருந்ததோ என்னமோ.

பின் குறிப்பு : மோசேயால் கைபற்றப்பட்ட யோசேப்பின் அருளுயிரானது விடுதலைப்பயணத்தின்போது ஆண்டவருடைய உடன்படிகைப்பெட்டகத்தில் வைக்கப்பட்டது.
பிற்காலத்தில் யேசுவின் தாயாறாகிய மரியாளின் அமல உற்பவத்திற்கு ஏதுவாக அவருடைய தாயார் அன்னம்மாளும் தகப்பனாகிய சுவக்கீனும் கடவுளின் சன்னதியில் ஜெருசலேம்  தேவாலயத்தில் சுத்திகரிக்கும்படியாக வந்தபோது சுவக்கீன் மட்டும் தேவாலய குருக்களால் கடவுளின் சன்னதிக்கு அழைத்துசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு சம்மனசானவரால்
இந்த கடவுளின் அருளுயிர் கொடுக்கப்பட்டது. பிறகு யேசுநாதரின் மனிதாவதாரம் வந்துவிட்ட பிறகு இந்த அருளுயிருக்கு தேவை இல்லாமல் போய்விட்டது. யேசுவே அந்த அருளுயிர்.
    யேசுவின் ரத்தம் நம்மோடு கலந்துவிட்டதால் அந்த அருளுயிர் நமக்குள்ளும் இருக்கின்றது.
செங்கடல் பிரிந்த நிகழ்ச்சிக்கு சாட்சியாக அந்த தேர்களின் சக்கரங்களும் தேர்களும் மனித மற்றும் குதிரைகளின் எலும்புகளும் இன்றளவும் இந்த அக்காபா ஜலசந்தியில் உள்ள  கடல் சலையில் சிதறிக்கிடக்கின்றன. மேலும் இந்த நிகழ்ச்சியில் இறந்த எகிப்த்திய பாரோ மன்னினின் சடலம் இன்றளவும் மனிதரால் பாடம் செய்யப்படாமல் கடவுளால் பாடம்
செய்யப்பட்டு இன்றளவும் கெய்ரோ அரும் காட்ச்சியகத்தில் நாம் காணும்படி அந்த செங்கடல் பிரிந்த நிகழ்ச்சிக்கு சான்றாய் உள்ளது.










No comments:

Post a Comment