Thursday, June 6, 2013

" சதி மலை."











" சதி மலை."
      சரியாகத்தான் சொன்னார் கட்டபொம்மு ராஜா, " அமுதும் விஷமும் ஒரே மண்ணில் என்று. ஜெருசலேமில் இருக்கும் ஒலிவ மலையின் ஒரு புறம் ஜெருசலேம் தேவாலயத்தை  பார்த்தபடி இருக்கும் அதன் மறுபுறம் பல சதிகளைக்கண்டது. அத்னாலேயே அது சதிமலை என்று அழைக்கப்படுகின்றது. இந்த சதி மலையில் தான் யூதாஸ் என்னும் யேசுவின் சீடன்  யேசுவை காட்டிக்கொடுக்க முன் வந்தான். அவரது இரத்தத்திற்கு முப்பது வெள்ளிக்காசு என விலை குறிக்கப்பட்டதும் இங்கு தான்..அதர்க்கான உடன்படிக்கை செய்து கொண்டதும்   இங்கு தான். இதற்கெல்லாம் காரண கர்த்தாவான கைபாஸ் என்னும் யூதர்களின் தலைமை குரு வசித்து வந்ததும் இந்த மலையில் தான். கடைசியாக யேசுவுக்கு சிலுவைசாவுக்கு
உட்படுத்திய பின்னர் யூதாஸ் தற்கொலை செய்துகொண்டதும் இங்குதான். யூதாஸ் நினைத்தது ஒன்று... ஆனால் நடந்தது ஒன்று. யேசுநாதர் அவருக்கு ஆபத்துவரும் பல சமயங்களில்   மறைந்து போய் தப்பிவிடுவார்...இந்த முறையும் அவர் தப்பிவிடுவார். பிறகு அவர் காலில் கையில் எப்படியாவது விழுந்து பாவ மன்னிப்பு கேட்டுக்கொண்டு மீண்டும் அவர்து சீடராக
ஆகிவிடலாம்..பிறகு அவர் இந்த ஜெருசலேமில் தன் ஆட்சியை ஸாதபித்தபின்னர் நாமும் அவரின் சீடர் என்ற முறையில் ஒரு பெரும் பதவியை அடைந்து மீதிக்காலத்தைஓட்டிக்கொள்ளலாம்....இப்போதைக்குக்காரியம் ஆகட்டும் என்றுதான் அவரை முப்பது வெள்ளிக்காசுக்கு காட்டிக்கொடுத்தான்.. ஆனால் காரியம் மிஞ்சிப்போய் யேசுவை
உண்மையிலேயே சிலுவைச்சாவுக்கு உட்ப்படுத்திவிட்டார்கள் என்று அறிய வந்ததுமே அவன் மனம் உடைந்து அவநம்பிக்கைக்கு ஆட்பட்டான் . அதன் விளைவாக தான் எப்பேற்பட்ட
தவறு செய்துவிட்டோம்....மாசற்ற இரத்தத்தை காட்டிக்கொடுத்துவிட்டோமே என்று அதிகமான மன உளைச்சலுக்கு ஆட்பட்டு தன் இடுப்புக்கயிற்றால் தூக்கு மாட்டிக்கொண்டான்.
ஆனால் என்ன பரிதாபம்... ஏழு கிளைகளைக்கொண்ட அந்த மரத்தின் ஒருகிளை அவன் பாரம் தாங்காது உடைந்து அவன் தலை குப்புற கீழே விழவும் அவன் வயிறு ஒரு பாறையின்
மீது விழவும் சரியாக இருக்கவே....அவன் வயிறு கிழிந்து குடல் குந்தாணிகள் யாவும் வெளியே வந்துவிட்டது. இப்படியாக யூதாஸ் யேசுவைக்காட்டிக்கொடுத்துவிட்டு யேசுநாதர்
சிலுவையில் மரிக்குமுன்னமே இவன் அவலமாக மரித்துப்போனான்.
யூதாஸ் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் அந்த முப்பது வெள்ளிக்காசுகளை தேவாலயத்தில் வீசி எறிந்துவிட்டுச்சென்றான்.. கோவில் நிர்வாகிகள் அந்த காசை வைத்து   யேசுவின் ரத்தத்துக்காக கொடுத்த விலை அந்த காசுகள் என்று அதை தேவாலய உண்டியலில் போடாமல் குயவன் நிலத்தை வாங்கினார்கள். அது ரத்த நிலம் [ akladaama] என்று
இன்றளவும் அழைக்கப்படுகின்றது. ரியல் எஸ்டேட் தொழில் அதிகம் பெருத்துவிட்ட இக்காலத்தில் இந்த அக்லதாமா எனப்படும் ரத்த நிலத்தை சுற்றி எவ்வளவோ   அடுக்கு மாடி வீடுகள் பெருகி விட்ட இக்காலத்தில் இந்த நிலத்தை மட்டும் இன்றளவும் நெருங்க யாருக்கும் இன்னும் தைரியம் வரவில்லை. அது இன்று வரை யாருக்கும்   விலை போகாமல் அப்படியே யேசுநாதர் காலத்தில் இருந்தபடியே இன்றளவும் இருக்கின்றது. அந்த அக்லதாமா என்னும் குயவன் நிலம் இதே சதிமலையில் கைப்பாஸ் வீட்டின்
எதிர்புறம் இருக்கின்றது.
    இந்த ஒலிவ மலையின் ஒருபுறம் அமுது என்றால் அதன் மறுபுறம் விஷம். அவ்வளவு சதிவேலைகள் இங்கு நடந்திருக்கின்றன. யேசுவின் மரணம் ஏதோ யூதாஸினால் மட்டுமே  நடந்திருப்பதாக நாம் நினைத்தால் அது தவறு.. இதர்க்கான விதை பேரரசர் சாலமோன் காலத்திலேயே நடப்பட்டுவிட்டது. அதை நட்டவர் சாலமோன் தான்.ஆனால் தான் என்ன செய்கின்றோம்... அதன் பின் விளைவுகள் என்னென்ன...என்பதை அவர் கவனிக்கத்தவறி விட்டார்.. " என்மகன் சாலமோனைப்போல் ஞானத்தில் சிறந்தவன் இந்த உலகத்தில்
இதற்குமுன் ஒருவன் பிறந்ததுமில்லை...இனி ஒருவன் பிறக்கப்போவதுமில்லை " என்று ஆண்டவராலேயே பெரிதும் பாராட்டப்பட்டவர்தான் சாலமோன் பேரரசர்.
சாலமோன் பேரரசர் பட்டதிற்கு வந்து பல காலம் எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அவரது கஜானா நிரம்பி வழிந்தது. தன் தந்தை தாவீது மஹாராஜாவுக்கு வாக்கு   கொடுத்தபடியே சாலமோன் ராஜாவும் தன் குல தெய்வமான இஸ்ராயேல் தேவனுக்கு மிகவும் உகந்த பிள்ளையாகத்தான் நடந்து வந்தார். ஆனால் ஆட்சியும் அதிகாரமும் செல்வமும்
அவரது கண்களை மறைத்தது. விஷேஷமாக அழகிய பெண்கள் அவர் கண்களை மிகவும் உறுத்தினர். இந்த விஷயத்தில் அவரும் ஒரு சாதாரணமான ஆண்தான்.
   இந்த விஷயத்தைப்பொருத்தமட்டில் அரசனும் ஒன்றுதான்....ஆண்டியும் ஒன்றுதான்... சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் நல்லவர் அல்லர்.....
பேரரசர் சாலமோனுக்கு இஸ்ராயேல் தேவன் மூன்று காரியங்களை தவிர்க்க சொன்னார்.
முதலாவது சாலமோன் பிற இன, அல்லது பிற நாட்டு,பெண்களை திருமணம் செய்யலாகாது எனவும் தன் இனமான எபிரேய பெண்களை எத்தனை வேண்டுமானாலும் திருமணம்   செய்துகொள்ள தடை இல்லை எனவும்
இரண்டாவது தன் இனத்தை ஆள்பவர் சேனைகளின் தேவனாகிய ஆண்டவர் தாமே என்பதால் சாலமோன் தனக்கென போர்படை குதிரைப்படை என எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும்
மூன்றாவது சாலமோன் தனக்கென கோட்டைகளையோ, அரண்மனைகளோ கட்டக்கூடாது எனவும் கட்டளை கொடுத்திருந்தார்.
    ஆனால் சாலமோன் இந்த மூன்று காரியங்களையும் மீறினார். என்ன செய்வது. எல்லாம் ஆதாம் செய்த பாவத்தால் வந்த வினை. அந்த பாவம் சும்மா விடுமா? இந்த ஞானப்பழத்தை உண்ணாதே என்று கடவுள் கட்டளை இட்டிருந்தும் அதை மீறி உண்டார்கள் அல்லவா... அந்த பாவம் நம் எல்லோரையும் பிடித்தாட்டுகின்றது. சாலமோன் மட்டும் என்ன
விதி விலக்கா ?அவரும் கடவுளின் கட்டளையை மீறினார்.
தன் கண்ணுக்கும் மனதுக்கும் பிடித்தவள் யாராக இருந்தலும் அவளை திருமணம் செய்துகொண்டார். அதன் பின் விளைவு பதினான்கு தலைமுறைகளுக்குப்பின் யேசுநாதரின்  இரத்தத்தை காவு கேட்டது. இந்த கதை நேயர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்... ஆனால் அது உண்மை. இது எப்படி நடந்தது என்று பின் வரும் கதை நமக்கு சொல்லும்.
     பேரரசர் சாலமோன் தன் தந்தை தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே இஸ்ராயேல் தேவனுக்கு உலகப்பிரசித்திபெற்ற தேவாலயத்தை கட்டினார். அதாவது கிரிஸ்த்து பிறப்பதற்கு   966 வருடங்களுக்கு முன் ஏப்ரல் மாதம் பதினேழாம் தேதி இந்த மிகப்பெரும் தேவாலயம் கட்ட அடித்தலம் இடப்பட்டது. அப்போது சாலமோன் பட்டத்துக்கு வந்து நான்கு வருடங்கள்
தான் ஆகி இருந்தது. இந்த மிகப்பெரும் கட்டிடத்திற்கு தலைமை பொறியாளனாக லெபனானிலிருந்து வந்திருந்தான் ஹுராமாபி என்பவன். இவனை நம்பியே அந்த மாபெரும்   திருக்கோவில் கட்டிட அமைப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவனுக்குக்கீழ் யோசேப்பு என்னும் வாலிபன் உதவியாளனாக அமர்த்தப்பட்டிருந்தான். அவனிடமிருந்த வேலைத்திறமையை
கண்ட சாலமோன் அவனுக்கு மற்றவர்களைவிட இருமடங்கு சம்பளமும் அவனக்குத்தேவையான சகலவிதமான சம்பத்துக்களையும் கொடுத்துவந்தார்.
இப்படி இருக்கையில் இந்த யோசேப்பு என்னும் வாலிபனை ஒரு பேய் பிடித்துக்கொண்டது. அவன் தினம் தினம் மெலிந்துகொண்டே வந்தான். வேலையில் அவனால் திறமையாக
வேலை செய்ய முடியவில்லை. இதை கவனித்த சாலமோன் அவனை அழைத்து அவனிடம் தோன்றிய மாற்றத்திற்கு காரணம் கேட்டார். அவனும் அழுதுகொண்டே ," அரசே,,..நான்  தேவாலயத்தில் வேலை செய்யும் வரை எனக்கு எந்தப்பிரச்சனையும் இருப்பதில்லை. அனால் மாலை ஆனதும் வேலை முடிந்ததும் நான் வீட்டிற்கு திரும்பிச்செல்லும் போது ஒரு பேய்
என்னை பிடித்துக்கொள்கிறது. என் சம்பளத்தில் பாதியை பிடுங்கிக்கொள்கிறது. எனக்கான சாப்பாட்டு சமாச்சாரங்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொள்கிறது. கடைசியிஎல் என்   கட்டை விரலைப்பிடித்து இரத்தத்தை உறுஞ்சி பின் என்னை விட்டுப்போய்விடுகின்றது. இவ்வாறு தினமும் நடப்பதால் நான் தினமும் மெலிந்து வருகின்றேன். வேலையிலும்
திறமையாக வேலை செய்ய முடியவில்லை" என்றான். இந்த யோசேப்புக்கு நேர்ந்த விபரீதத்தைக்கேட்ட சாலமோன் மிகவும் விசனமுற்றார். இருப்பினும் தேவாலயத்தின்   கருவரைப்பகுதியில் நுழைந்து சேனைகளின் தேவனாகிய ஆண்டவரிடம் முறையிட்டார். அப்போது ஒரு பெரும் ஒளிவெள்ளத்துடன் அதிதூதராகிய மிக்கேல் சம்மனசானவர் தோன்றி
," சாலமோன், உன் வேண்டுதல் கேட்க்கப்பட்டது. இதோ ஆண்டவருடைய முத்திரை மோதிரம். இதில் ஆண்டவரின் பரிசுத்த நாமம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவரின் திருநாமம்
வாழ்த்தப்படுவதாக. இதை நீர் அணிந்துகொள்ளவும்.. இந்த முத்திரை மோதிரத்தால் எந்த விதமான ஆவிகளும் உமக்கு அடங்கும். இதை வைத்து தேவாலயம் கட்ட  தேவையானவற்றையும் எந்த விதமான உதவிகளையும் நீர் யாவரிடமிருந்தும் பெறலாம் " என்றார். சாலமோன் அந்த மோதிரத்தை பெற்றுக்கொண்டதும் அதிதூதர் மிக்கேல்   சம்மனசானவர் மறைந்துபோனார்.
     சாலமோன் யோசேப்பை அழைத்து அவன் கையில் அந்த முத்திரை மோதிரத்தைக்கொடுத்து, " யோசேப்பு, உன்னை அந்த பேய் பிடிக்கவரும்போது தயங்காமல் அதன் மார்பில்   இந்த மோதிரத்தால் குத்து. பிறகு மன்னர் சாலமோனை சந்திக்க உனக்கு உத்திரவிடப்படுகின்றது " என்று கூறி பின்னே திரும்பிப்பார்க்காமல் உடனே என்னிடம் ஓடிவா " என்றார்.
    அவனும் அவ்வாறே செய்தான். அப்போது சாத்தான்," யோசேப்பு...ஏன் இப்படி எனக்கு செய்தாய்..என்னிடம் கேட்டிருந்தால் இந்த உலகத்து செல்வங்கள் தங்கம் வெள்ளி அனைத்தையும் உனக்கு தயங்காமல் கொடுத்திருப்பேனே.. என்னை இப்படி சாலமோனிடம் மாட்டிவிட்டாயே " என்று அலறியபடியே அவன் பின்னே வந்தது. யோசேப்பு   அந்த கடவுளின் முத்திரை மோதிரத்தை சாலமோனிடம் கொடுத்தான்.
சாலமோன் " அசுத்த ஆவியே நீ யார்? எங்கிருந்து வருபவன் ? உன் பெயர் என்ன? யாரால்மட்டும் நீ கட்டப்படுவாய் ? உண்மையை மறைக்காமல் நீ கூறுவாயாக" என்றார்.
" சாலமோன் அரசே நான் ஓர்னாயிஸ் என்று அழைக்கப்படுபவன்..காம தேவன் என்றும் அழைக்கப்படுபவன்..நான் நீரிலும் வாழ்பவன் நிலத்திலும் வாழ்பவன். வான் வெளியிலும்  சஞ்சரிப்பவன். கன்னி ராசி எனக்குப்பிடித்தமான இடம். நான் ஆண்..பெண்...யாவரிடத்திலும் காம இச்சைகளைத்தூண்டுவேன். எந்த வடிவிலும் வருவேன்... வல்லூறாக வானத்தில்   சஞ்சரிப்பேன். சிங்கமாகவும் வடிவெடுப்பேன். என்னை வெல்லக்கூடியவன் இந்த உலகத்தில் ஒருவனுமில்லை. நானும் ஒருகாலத்தில் பரலோகத்தில் தேவனுக்கு முன்பாக அதிதூதராக   இருந்தவன் தான்.". என்றான் ஓர்னாசிஸ்.
" உன்னை வெல்லக்கூடியவன் நான் சாலமோன் இந்த உலகத்தில்தான் இருகின்றன்.. உண்மையைச்சொல்....யாரால் நீ கட்டப்படுவாய் ?"
ஓ... சாலமோன்...என்னைகட்டக்கூடியவர் அதிதூதர்.யூரியேல்.."
" ஓர்னாசிஸ்.. அதிதூதர் யூரியேல் பெயரால் நான் சொல்லுகின்றேன்...என் தேவாலயத்திற்கு தேவையான கருங்கற்களை கெதரோன் பள்ளத்தாக்கிலிருந்து கொண்டுவா...மேலும் உன் தலைவன் பேயேல் செபுவை நான் கட்டளையிட்டு அழைத்ததாகக்கூறி அழைத்துவா " என்றார் சாலமோன். ஓர்னாசிஸ் போய் சாலமோன் தனக்கு கட்டளையிட்டபடியே பேய்களின்
தலைவன் பேயில்செபூவை அழைத்து வந்தான். பிறகு கல் உடைக்கும்படி கெதரோன் கல் குவாரிகளுக்குச்சென்றான்..
.மீண்டும் நீ யார் போன்ற அதே கேள்விகள். பேயேல்செபூ பேசினான்.
" அரசே சாலமோன், அதிகாரம் உன் கையில் என்று அதிகம் துள்ளாதே...உன் ஆட்சிக்காலம் இன்னும் கொஞ்ச காலம் தான்.. அதற்குள் ஆட்டம்போடாதே..உன்னிடம் நான் பேசவிரும்பவில்லை..ஏதோ காலத்தின் கட்டாயம்...நீ எல்லாம் என்னை கேள்வி கேட்க துணிகிறாய்". என்றான்.
உடனே சாலமோன் தன் முத்திரை மோதிரத்தால் அவன் நெஞ்சின்மீது ஒரு குத்து குத்தினார்..ஏதோ நெருப்பு ஈட்டியால் குத்துண்டவன் போல அலறிச்சாய்ந்தான் பேயேல் சேபூ..
" சாலமோன்...என்னை தொந்தரவு செய்யாதே..உனக்கு என்னவேண்டும் கேள்.. செய்கிறேன்" என்றான் பேயேல் செபூ.
" அப்படி வா வழிக்கு...உன் அதிகாரத்தில் இருக்கும் மற்ற பேய்களை எனக்கு அறிமுகப்படுத்து... முதலில் பெண் பேய்கள் இருந்தால் அவற்றில் ஒன்றை எனக்கு அறிமுகம்
செய்துவை." என்றார் சாலமோன்.
அப்போது ஒரு அழகிய பெண் ஒருத்தி தோன்றினாள். அழகு என்றால் எப்படி இருக்கும் என்பதற்கு இலக்கணம் அவள். அவள் மனித உருவில் இருந்தாலும் கால்கள் ஒரு குதிரைக்கு
இருப்பன போல் இருந்தன. அதிசயப்பட்டுப்போனார் சாலமோன். பிறகு நீ யார் என்பது போன்ற கேள்விகள். அந்த பெண்பேய் கூறியதாவது.
" அரசே என்பெயர் ஓனாஸ்கெலிஸ்...இந்த பூமியில் குகைகளிலும், மலைமுகடுகளிலும் வசிப்பவள்.. ஆகாய வெளியில் கப்ரிக்கான் எனப்படும் ஆட்டு ராசியில் நான் எப்போதும்
இருப்பேன். கருப்பு மோட்ச்சம் எனப்படும் இடத்திலிருந்து நான் வந்தேன்..ஆவியாக வந்த நான் இந்த பெண் உருவமெடுத்து ஆண்களை மயக்குவேன்..இதுவே எனக்கு இடப்படும்
கட்டளை. இது தெரியாத ஆண்கள் என் வழியாக சோரம் போகிறார்கள்." என்றது. பிறகு சாலமோன் அவள் சக்திகளை அடக்கி காலைமுதல்மாலைவரைமற்றும் இரவும் பகலும்
சணல் கயிறுகளை செய்யும்படிக்கு உத்திரவிட்டார்.. இந்த கயிறுகள் தேவாலயத்திற்கு கற்களையும் மரங்களையும் தூக்கிவர பெரிதும் உதவின. அடுத்தபடியக வந்தவன் ஒரு ஆவி.
[ நேயர்கள் இவன் பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நல்லது.] மீண்டும் சாலமோன் இவனிடம் வழக்கமான கேள்விகளைக்கேட்கலானார்.
" அசுத்த ஆவியே.. உன் பெயர் என்ன?... நீ எங்கிருந்து வருகின்றாய்? " சாலமோன்.
" என் பெயரைக்கேட்க்கும் நீ யார் ?" என்றது அசுத்த ஆவி.
எறிச்சலுற்றார் சாலமோன்..தன் முத்திரை மோதிரத்தைக்காட்டி " இது என்னவென்று தெரிகின்றதா...ஒழுங்காக பதில் சொல்ல வில்லை என்றால் நான் உன்னை கடுமையாக
தண்டிப்பேன். மரியாதையாக உண்மையை சொல்... நீ யார்?"
" சாலமோன் நீ ஒரு நரன்... நான் யார் தெரியுமா ... இந்த பூமியில் நான் ஒரு பெண்வழியாகப்பிறந்திருந்தாலும் உண்மையில் என் தந்தையார் ஒரு சம்மனசு. நான் வானத்தில்
சஞ்சரிப்பவன் . என்னை பெரும் கரடி என்று அழைப்பர்... எனக்கென ஒரு நட்சத்திரக்கூட்டமே இருக்கின்றது. இதர்க்குமேல் என்னிடம் எதையும் கேட்காதே.. உனக்கு பதில் சொல்ல
வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் வானத்தில் வசிப்பவன் தேவலோகத்தை சேர்ந்தவன்.. நீ நரன்.. இந்த பூலோகத்தைச்சேர்ந்தவன்.. நீ என்னிலும் கீழானவன்.. என் தகுதிக்கும்
உன் தகுதிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.. உன்னிடம் இதுவரை பேசியதே உனக்குப்பெருமை...இத்தோடு நிறுத்திக்கொள்." என்றது அசுத்த ஆவி.
பெரும் கோபம் கொண்டார் அரசர் சாலமோன்.." அசுத்த ஆவியே நீ என்னிடம் பேசித்தான் ஆக வேண்டும்.. உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கடவுள் தனக்கு கொடுத்திருந்த முத்திரை மோதிரத்தால் அவனை குத்தப்பார்க்கையில் பெரும் கூச்சலிட்டு மன்னரிடம் பேசினான் அசுத்த ஆவி.
" பொறு சாலமோன்..பொறு..அதர்க்குள் கோபம் கொண்டால் எப்படி...பேசுவோம்... உனக்கு என்ன வேண்டும்?. என் பெயர் அஸ்மோதியுஸ்..சதிச்செயல் தான் என் தொழில். மக்கள் மத்தியில் மடமையை ஏற்படுத்துவேன்..விஷேஷமாக புது மணத்தம்பதியினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்துவேன்....குடும்பங்களை பிறிப்பேன்..என் சொல்படி கேட்ப்பவர்களை சிலகாலம் சந்தோஷமாக இருக்கவிட்டு பின் அவர்களை பலகாலம் வதைப்பேன். இதை அறியாத மக்கள் என்னை தெய்வமாக கும்பிடுகின்றார்கள். நீ கூடப்பார்... இப்போது என்னை வதைக்கின்றாய்.. உன் ஆட்சி இன்னும் சிலகாலம் தான். உனக்கு கடவுள் கொடுத்த இந்த முத்திரை மோதிரம் உன்னிடம் இருக்கும் வரை தான் நீ என்னை அடக்கி வைத்திருக்க
முடியும் .இந்த முத்திரை மோதிரத்தை நீ கூடிய சீக்கிரமே இழப்பாய்.. அப்புறம் நீ என் காலடியில்தான் மீண்டும் விழுவாய்.. இது எல்லாம் இன்னும் கூடிய சீக்கிரம் நடக்கத்தான்
போகிறது. நீ வேண்டுமானால் பார்.. நான் சொன்னபடி நடக்கிறதா இல்லையா என்று நீயும் பார்க்கத்தான் போகின்றாய்" என்றான் அஸ்த்திராகஸ்.
கடும் கோபம் கொண்டார் அரசர் சாலமோன். " உன்னை அடக்கும் அதிதூதர் யார் என்று சொல்?" என்றார்.
என்னை அடக்கும் வல்லமை அதிதூதர் ரப்பேல் சம்மனசுக்கு மட்டுமே உண்டு.. மேலும் எனக்கு யூப்ரட்டீஸ் டைகிரீஸ் நதியில் வாழும் தட்டை மீன் மற்றும் பூனைமீன் என்றாலும் பயம்.  இப்படித்தான் நான் வேத காலத்தில் ஒரு நாள் கணவனாக வந்த தோபியாஸ் என்னும் வாலிபனுக்கு வழித்துணையாக வந்த ரப்பேல் அந்த மீன்களின் ஈரலை எடுத்து எறித்தபோது  நான் பீடித்திருந்த பெண்னின் நாசி வழியே பாம்பு ரூபத்தில் வெளியேறிய என்னை ரப்பேல் சம்மனசானவர் அடக்கி என்னை மீண்டும் வான்வெளிக்கே துறத்தினார். இப்போது நீ   என்னை என்ன செய்யப்போகின்றாய் ?" என்றான் அஸ்மோதியுஸ். சாலமோனும் அதிதூதர் ரப்பேல் சம்மனசானவர் செய்ததுபோலவே அந்த மீன்களின் ஈரலிலிருந்து எடுக்கப்பட்ட
என்னையால் தீபமேற்றி அஸ்மோதியுஸை அடக்கினார்.. பின் அவனை ஒரு வல்லூறாக மாற்றி தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். விதி இங்கிருந்து வேலை செய்தது.
பிறகு பல அசுத்த ஆவிகளை வரவழைத்து அவற்றை அடக்கி தேவாலயத்திற்க்குத்தேவையான பலவற்றை அவற்றை வைத்தே நிறைவேற்றிக்கொண்டார். சாலமோன் அறியாத பேய்கள்
இல்லை.. கடவுள் தந்த முத்திரை மோதிரத்தால் அவர் மிகப்பெரும் உலகமகா மோடிமஸ்த்தான் ஆனார். பில்லி சூனியங்கள் வைப்பது...எடுப்பது எல்லாம் அவருக்கு அத்துபடி.
நரகத்துபேய்கள் அனைத்தும் அவருக்கு அடங்கின. ஆனால் அடங்க மறுத்த ஒருவனும் இருந்தான்.
அவன்தான் பேய்களின் தலைவன் பேயேல் செபூ.. சாலமோன் தன் முத்திரை மோதிரத்தைக்காட்டி, " பேயேல்சேபூ, உண்மையைச்சொல் நீ யாரிடம் அடங்கிப்போவாய்?" என்றார்.
பேயேல்சேபூ," நான் எம்மானுவேல் என்பவரிடம் மட்டுமே அடங்கிப்போவேன். அவர் எலோயீ என்பவரின் மகன்." என்றான்..பிறகு சாலமோன் தன் முத்திரை மோதிரத்தை அவன் மீது
பாய்ச்ச அவன் அடங்கிப்போனான்... இருப்பினும் கோபாவேசமாக " சாலமோன், நீ இப்போது என்னை அடக்கிவிட்டாய் ...ஆனால் தற்காலிகமாக... ஒருகாலம் வரும்... அப்போது .எம்மானுவேல் மனித அவதாரமாக இந்த பூமியில் வருவார்.. அப்போது அவர் என்னிடம் மாட்டிக்கொண்டு என்ன பாடு படப்போகிறார் பார்... ஆணைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒருகாலம் வரும்.. இது உலக நியதி...அப்போது வைத்துக்கொள்கிறேன் பார் என் கச்சேரியை ... அப்போது நீ இருக்க மாட்டாய்.. ஆனல் நான் இருப்பேன்." என்றான்.
" பேயேல் செபூ... இனி நீ ஒரு வார்த்தை கூட பேச உனக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது " என்றார் சாலமோன்.
" வந்தாள் ஷேபா என்னும் தென்னாட்டு மஹா ராணி "
காலம் மிக வேகமாக கடந்து போனது.. பேரராசர் சாலமோனின் ஞானம் உலகின் மறு முனை வரை மிகவும் உயர்வாக பேசப்பட்டது. எத்தியோப்பாவிலிருந்து வந்திருந்த பெரும் வியாபாரியும் சாலமோனுக்கு எத்தியோப்பியாவின் தூதுவருமாகப்பணியாற்றிய தாம்பரின் என்பவர் மூலமாக சாலமோனின் ஞானத்தைப்பற்றியும் அவர் கட்டிய உலகப்புகழ் வாய்ந்த தேவாலயத்தைப்பற்றியும் கேட்டுக்கேட்டு மாய்ந்து போனள் எத்தியோப்பாவைச்சேர்ந்த ஷேபா என்னும் நாட்டின் இளவரசி. அவள் பெயர் மக்கேதா. இன்னும் திருமணம் ஆகவில்லை.
     இதர்க்குள்ளாக சாலமோன் மஹாராஜாவுக்கு எழுனூறு கட்டிய மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தார்கள். இந்த நிலையில் சாலமோன் மஹராஜா எகிப்த்தைச்சேர்ந்த  பாரரோன் சக்கரவர்த்தியின் மகளை திருமணம் செய்திருந்தார். அந்த எகிப்த்திய மனைவி தான் ஜெருசலேமில் சாலமோனின் மற்ற மனைவிகளுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை   என்றும் தன் தகுதிக்கேற்ப தனி அரண்மனையில்தான் இருப்பேன் என்று அடம் பிடித்ததால் மன்னர் சாலமோன் மில்லோ என்ற இடத்தில் தனி இடத்தில் தனி அரண்மனையில்
குடித்தனம் வைத்தார். மன்னர் சாலமோனுக்கு இந்த ஆயிரம் பெண்களின் பிரச்சனையை தீர்க்கவே நேரம் இருந்திராது. எப்படித்தான் சமாளித்தாரோ புண்ணியவான்..
    அஸ்மோதியுஸ் என்னும் கழுகு சாலமோனுக்குப்பலகாலம் அடங்கி நல்ல ஊழியனாக செயல்பட்டதால் சாலமோனும் அதை நல்ல விதமாகவே வைத்திருந்தார். ஆனால் விதி அன்று   வேலை செய்தது. சாலமோன் அஸ்மோதியுஸ் என்னும் கழுகை பயன்படுத்தி இந்த உலகின் கடைசி வரை சென்று பார்க்க விரும்பினார். எனவே அஸ்மோதியுஸை அழைத்து
அதற்கான ஆணை பிறப்பித்தார். அஸ்மோதியுஸும் தன் சிறகை விறித்து அவரை தன் கழுத்துப்பகுதியில் அமர்த்திக்கொண்டு வானில் பறந்தது.
" அஸ்மோதியுஸ் இவ்வளவுதான் உன் வேகமோ " என்றார் சாலமோன். " அரசே, எனக்கு பலகாலமாக பலம் குறைந்துவிட்டது. இன்னும் வேகம் வேண்டுமானால் எனக்கு பழைய பலம்  வேண்டும். சிறிது நேரத்திற்கு உங்கள் முத்திரை மோதிரத்தை என்னிடம் கொடுங்கள். என் பலம் திரும்பியதும் நீங்கள் திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள் " என்றது.
    அதன்மீது நம்பிக்கைகொண்ட சாலமோன் அதனிடம் தன் முத்திரை மோதிரத்தைகொடுத்தார். அவ்வளவுதான்.. அஸ்மோதியுஸ் விஸ்வரூபம் எடுத்தான். அவனின் ஒரு இறக்கை வானத்திற்க்கும் மறு இறக்கை பூமிக்குமாக விறிந்தது. மிகுந்த வேகமெடுத்தான் அஸ்த்திமோதியுஸ். அவன் ஜோர்டானுக்கு மேல் பறக்கையில் மிகவும் சாய்வாகப்பறக்கவே சாலமோன்
கீழே விழுந்தார். கீழே விழுந்தவரை தூக்கிச்செல்லாமல் தன் இறக்கைகளை திருப்பிக்கொண்டு மீண்டும் இஸ்ராயேலுக்கு பறந்தது. அங்கு போகும் வழியில் கடலில் சாலமோனின்   முத்திரை மோதிரத்தை போட்டுச்சென்றது.
அஸ்மோதியுஸ் என்னும் கழுகு மீண்டும் தன் பழைய உருவை எடுத்து, " சாலமோன், என்னை யார் என்று நினைத்துக்கொண்டாய்... உன் வாழ்க்கை அந்த ஜொர்டான்   பாலைவனத்திலேயே முடிந்துவிடும்... இனிமேல் ஜெருசலேமுக்கு நான் தான் ராஜா.. ஆஹாஹா" என்று வாய்விட்டு சிரித்தான். பின் தன் பழைய உருவை மாற்றி சாலமோன்   உருவமெடுத்து அவரின் அரியணையில் அமர்ந்தான்.
    இந்த நிலையில் சாலமோன் மிகுந்த கஸ்டப்பட்டு நடையாய் நடந்து அம்மோன் நகரை அடைந்தார். பசியும் தாகமும் அவரை வாட்டி வதைத்தது. அப்போது ஒரு சமையர்காரன்   அவரை வேலைக்கு வைத்துக்கொண்டான். அம்மான் நகர ராஜாவின் சமயலறையில் அவருக்கு எடுபிடி வேலை. எப்பேற்பட்ட சக்கரவர்த்தியும் விதி மாறிப்போனால் கூஜாதான் என்பதை
அவர் புறிந்துகொண்டார்.. முத்திரை மோதிரம் பறிபோன பிறகு சாலமோன் அரசரின் சக்திகள் யாவும் மறைந்துபோனது. இப்போது அவர் மிகச்சாதாரண மனிதர். அவர் தன்னைப்பற்றி  யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. சொன்னாலும் யாரும் நம்பவும் போவதில்லை..எனவே தனக்கு காலம் வரும்வரை காத்திருப்பதைத்தவிர வேறு வழி இல்லை என்று
புறிந்துகொண்டு அமைதியாக ஒரு நல்ல சந்தர்ப்பதிற்காக காத்திருந்தார்.
ஒருநாள் தலைமை சமையல்காரருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போய்விட்டதால் சாலமோன் சமைக்க நேரிட்டது. அவருக்குத்தான் எல்லாக்கலைகளுமே அத்துபடி ஆயிற்றே.
எனவே மனிதர் சமையலில் மனிதர் புகுந்து விளையாடிவிட்டார். இப்படி ஒரு சுவை மிகுந்த உணவை அந்த அம்மான் நாடு மன்னர் சாப்பிட்டதேயில்லை. அவர் மகளும் சாப்பிட்டதே
இல்லை. எனவே இருவருமாக சேர்ந்துவந்து சமயல்காரணாக இருந்த சாலமோனை பாராட்டினர்.. அந்த அரசரின் மகள் சாலமோனை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே
இருந்தாள். சாலமோனும் இவளை கவனிக்கத்தவறவில்லை.. அவருக்கு மன்மதக்கலையைப்பற்றி சொல்லிக்கொடுக்கவா வேண்டும்.
. கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்றே அர்த்தம்.
பிறகு அவர்கள் தனிமையில் அடிக்கடி சந்தித்துக்கொள்ளவே விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்தது.. அம்மான் நாட்டு மன்னர் கடும் கோபம் கொண்டார். தன் மகள் போயும் போயும் ஒரு சமயல் காரனையா விரும்பவேண்டும்.. அடக்கடவுளே.. இது என்னடா சோதனை என்று தலையில் அடித்துக்கொண்டார். அம்மான் நட்டு மன்னருக்கு தன்னிடம் சமயல்காரனாக
வேலை பார்ப்பது பேரரசர் சாலமோன் என்று தெரிந்திருக்க நியாயமில்லை. ரகசியமாக இந்த சமயர்க்காரனையும் தன் மகளையும் கொண்றுபோட உத்திரவிட்டார். இது விஷயம் தெரிந்ததும் சாலமோனும் மன்னர் மகளும் இரவோடு இரவாக தப்பி ஓடினர். அருகில் உள்ள ஒரு ஊரில் மாறுவேடத்தில் தங்கி சாப்பட்டிற்காக ஒரு மீனை விலைக்கு வாங்கி தன் வீட்டில் வைத்து
அதை வெட்டி அறுத்துப்பார்க்கையில் அதன் வயிற்றில் தன்னுடைய கடவுள் கொடுத்த முத்திரை மோதிரம் இருக்கக்கண்டு சாலமோன் அலவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்.. தன் பழைய
சக்திகளை மீண்டும் அடைந்தார். மீண்டும் ஜெருசலேம் வந்து அஸ்த்திமோதியுஸை கடுமையாக வதைத்து மீண்டும் அதன் சக்திகள் அனைத்தையும் அடக்கி அதன் பழைய வடிவமான
கழுகின் உருவிலையே தன்னுடன் வைத்துக்கொண்டார்.
இப்படியாக அவர் கட்டிய ஒவ்வொரு மனைவிக்கும் ஒவ்வொரு கதை உண்டு.
சாலமோன் வேண்டாம் என்றாலும் விதி அவரை விடுவதே இல்லை... இப்படியாக ஒரு நாள் எத்தியோப்பாவிலிருந்து ஷேபா என்னும் மஹாராணி சாலமோனின் ஞானத்தைப்பற்றி  கேள்விப்பட்டு தன் பரிவாரங்களுடன் ஜெருசலேம் வந்தார். இந்த மஹாராணி திருமணம் ஆகாதவர் என்று கேள்விபட்டதுமே மன்னர் சாலமோனுக்கு வலது கண் துடித்தது.
இந்த ஷேபா நாட்டு ராணியின் நிஜப்பெயர் மெக்கெதா.. இந்த மெக்கேதா மஹாராணிக்கு அரசர் சாலமோன் அளித்த வரவேற்பு உலகப்பிரசித்தம். அதேபோல் மக்கேதா அரசர்  சாலமோனுக்கு கொண்டுவந்திருந்த அன்பளிப்புகளும் உலகப்பிரசித்தம்.. அதில் ஒரு விஷேஷம் என்னவென்றால் மஹாராணி கொண்டுவந்த விலங்குகளில் கருங்குரங்கு ஒன்றும்
இருந்தது. மன்னர் சாலமோன் தான் அரசர் என்பதையும் மறந்து அந்த குரங்கு செய்யும் சேஸ்ட்டைகளில் மெய்மறந்து விளையாடினார். இந்த ஷேபா ராணியைக்கண்ட மாத்திரத்தில்  மற்ற அந்தப்புறத்து ராணிகளுக்கு வயிற்றில் புளியைக்கறைத்தது.
      ஷேபா நட்டு மஹா ராணியான மெக்கேதா அரசரின் அரண்மனையில் ஆடம்பரமாக வரவேற்கப்பட்டதும் அவர்களுடைய விருந்தோம்பலும் பழம்கதை ஆயிற்று. அரசி  மெக்கேதா அரசர் சாலமோனின் மேதா விலாசத்தை நேரில் கண்டாள்.. அரசர் சாலமோனைப்பற்றி தான் கேள்விப்பட்டதெல்லாம் எவ்வளவு உண்மை என நேரிலே தெரிந்து கொண்டாள்.
சால்மோன் கட்டிய தேவாலயத்தை நேரில் பார்த்து மிகவும் வியந்து போனாள்..இந்த வியப்பாலும் தன்னுடைய ஞானத்தாலும் இந்த சாலமோனுடைய தேவனே உண்மையான தேவன்
என்றும் தானும் தன் தேசத்தவர்களும் கும்பிடும் சூரியனும் சந்திரனும் அவருடைய படைப்புக்களே என்றும் உணர்ந்து அவர்களுடைய இஸ்ராயேல் தேவனை தங்களுடைய தேவனாக
ஏற்றுக்கொண்டாள். இப்படி இருக்கையில் ஒரு நாள் சாலமோன் ஷேபா மஹாராணியான மக்கெதாவுக்கு பெரும் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.
அந்த இரவு உணவுக்கு ராணி மட்டுமே அழைக்கப்படிருந்தாள். சாலமோன் தன் சமயர்காரணிடம் கண்ணடித்து தாகம் ஏற்படும்படியான விருந்து தடபுடலாக் இருக்கும்படி ஏற்பாடு  செய்துவைத்தார். சாலமோனும் மஹாராணி மெக்கேதாவும் தனிமையில் விடப்பட்டனர். அப்போது அரசர் சாலமோன் மஹாராணி தாங்கள் என் அரண்மனையில் தங்கலாம்.. உங்களை
நான் எந்த வித்தத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன். என் அறையில் உள்ள எந்த பொருளையும் தாங்கள் என் அனுமதி இல்லாமல் உபயோகிக்கக்கூடாது. என்றார்.. மஹாராணி  அவர் கூறும் கூற்றுக்கு உள் அர்த்தம் புறியாமல் " அரசே, நான் தாங்களிடம் எதையும் கேட்க்கவும் போவதில்லை... உங்கள் அனுமதி இல்லாமல் எதையும் தொடப்போவதும் இல்லை.
உங்களுடைய தேசத்தில் உள்ள தங்கம், வைரம் போல் என் தேசத்திலும் ஏறாளம் உண்டு..நான் இதற்காகவா ஆசைப்படுவேன்..இல்லை...இல்லை..என்றாள். இருப்பினும் சாலமோன்
அப்படி இல்லை இளவரசி.. காலம் ..நேரம் என்று வந்து விட்டால் யாவருக்கும் சோதனை வருவது இயல்புதான்.. எனவே நாம் ஒரு உடன்படிக்கை செய்து கொள்வோம்.. நான் தோற்றுவிட்டால் உம் கட்டளை எதுவாயினும் அதை நிறைவேற்றவேண்டும்... நீர் தோற்றுவிட்டாள்... என் கட்டளையை நிறைவேற்ற வேண்டும்... என்ன சரிதானே? என்றார்.
வரப்போகும் விபரீதம் தெரியாமல் அரசி மேக்கேதாவும் ஒத்துக்கொண்டாள்...சில மணி நேரத்தில் அரசி உறங்கப்போனாள். அப்போது அவளுக்கு மிகுந்த தாகம் எடுத்தது. எவ்வளவு அடக்கியும் அவளுக்கு தாகம் அதிகரித்ததே தவிர குறையவே இல்லை. அரசரும் தூங்கிக்கொண்டு இருக்கின்றார்.. என்ன செய்வது. சரி அவசரத்துக்குப்பாவமில்லை... என்று எழுந்து சென்று அரசரின் தலை மாட்டிலுள்ள தங்க கிண்ணத்திலுள்ள நீரை எடுத்துப்பருகலானாள். இந்த சந்தர்ப்பத்துக்காகத்தானே காத்திருந்தார் சாலமோன். சடாலேன   அரசி மெக்கேதாவின் கைகளைப்பற்றிகொண்டார்        மன்னர் சாலமோன். "அரசி மெக்கேதா நீங்கள் உடன்படிக்கையை மீறிவிட்டீர்கள். என் அனுமதி இல்லாமல் என் பொருளை
திருடிவிட்டீர்கள் " என்றார்.  பதறிப்போனள் ஷேபா ராணியான மெக்கேதா.. அரசே , தவறாக நினைக்காதீர்கள்... நான் திருட வரவில்லை. எனக்கு தாக மெடுத்தது. தண்னீர் குடிக்கவே நான் இந்த   கிண்ணத்தை எடுத்தேன்.. என்னை நம்புங்கள்." என்று அழுதாள். ஆனால் சாலமோன் விடவில்லை.. அரசி... தண்ணீரைபோல் விலை உயர்ந்த பொருள் இந்த உலகத்தில்
ஏதேனும் உண்டா. .எத்தியோப்பவிலிருந்து பல பாலைவனங்களை கடந்து என் நாட்டுக்கு வந்திருக்கும் உனக்கு தண்னீரின் மகத்துவம் எப்படிப்பட்டது என்று தெரியதா...  அழுதுகூச்சல் போடுவதால் எந்த பிரையோஜனமும் இல்லை.விஷயம் வெளியே தெரிந்தால் உமக்குத்தான் அசிங்கம்.. பேசாமல் நம் உடன்படிக்கையை நிறைவேற்று. தோல்வியை   ஒத்துக்கொள்" என்றார்  மன்னர் சாலமோன். .இளவரசி ஷேபா ," அரசே, நான் என்ன செய்ய வேண்டும் " என்று அப்பாவியாகக்கேட்டாள். அதற்கு சாலமோன் " என் மஞ்சத்தில் நிறைய
இடமிருக்கின்றது " என்று கண்ணடித்தார்.. அதற்கு மெக்கேதா " அரசே நான் கன்னி... என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் " என்றாள். அதர்கு சாலமோனும் உடன்பட்டார். அந்த மஞ்சத்தில் இருக்கும்போது சாலமோன் ஒரு கனவு கண்டார்..அதிகாலையில் உதித்த சூரியன் ஜெருசலேம் மீது சற்று நேரம் நின்றபிறகு தென் திசை நகர்ந்து சென்று
எத்தியோப்பாவின் மீது நின்று அங்கேயே நின்றுகொண்டது. அது மீண்டும் யூதேயாவுக்கு வரவே இல்லை. சாலமோனும் அந்த சூரியன் யூதேயாவுக்கு திரும்பிவரும் என்று பல நாள்
எதிர்பார்த்தார்.. அனால் இஸ்ராயேலின் பிரகாசம் அன்றிலிருந்து மங்கிப்போனது.. ஆனால் எத்தியோப்பா வளர்ந்து செழித்தது. ஆம் அந்த ஒருநாள் கூட்டுறவிலேயே ஷேபா என்னும்   எத்தியோப்பிய மஹாராணி கருவுற்றாள். சாலமோனின் வாரிசு அவள் வயிற்றில் ஞான சூரியனாய் உதித்து வளர்ந்தது.[அந்த குழந்தைக்கு இப்னா ஹக்கிம் என்று பெயரிட்டாள்
மெக்கேதா.]
   அரசர் சாலமோன் தன் காதல் மனைவி ஷேபா நாட்டு இளவரசியை அவள் தாய் நாட்டுக்கு வழி அனுப்பி வைக்கையில் தன் கடவுள் தனக்கு கொடுத்த முத்திரை மோதிரத்தை   அவளுக்கு அணிவித்து, " மஹாராணி... உனக்கு என் வாரிசு நேர்ந்தால் அவனை என் நாட்டுக்கு இந்த முத்திரை மோதிரத்தை கொடுத்து அனுப்பி வை.. நான் அவனை என் மகனாக  அங்கீகரித்து அவனை என் நாட்டுக்கு பட்டத்து ராஜாவாக முடி சூட்டுவேன்... இது என் கடவுள் மேல் ஆணை " என்றார். ஷேபா மஹாராணியும் தன் தாய் நாடான எத்தியோப்பியா
சென்றாள்.
    இருபது ஆண்டுகள் கழித்து ஷேபா நாட்டு ராணி மெக்கேதோ தன் மகனை இந்த சாலமோனின் முத்திரை மோதிரத்துடன் அனுப்பிவைத்தாள். அவன் எக்காரணம் கொண்டும்   இஸ்ராயேலில் தங்கிவிடக்கூடாதென்றும்.. அந்த நாட்டில் எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளக்கூடாதெனவும், மீண்டும் எத்தியோபவுக்கு வந்து அரசனாக  முடி சூடிக்கொள்ள வேண்டு மெனவும் சத்தியம் வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தாள். இஸ்ராயேல் வந்த இப்னா ஹக்கிம் தன் தந்தை சாலமோனைபார்த்து இஸ்ராயேலின்
இளவரசனாக முடிசூடிக்கொண்டான். தன் தகப்பன் கையால் இரண்டாம் தாவீது எனவும் பட்டம் பெற்றுக்கொண்டான். அவரின் முத்திரை மோதிரத்தை அவரிடமே   திருப்பிக்கொடுத்துவிட்டு தன் தாய் நாடு சென்றான்...அங்கு மெனெலெக் என்று தன் அரச பெயரை சூடிக்கொண்டான்...மெனெலெக் இஸ்ராயேலிடமிருந்து திரும்பிச்செல்கையில்   இஸ்ரேலியர்களின் தெய்வம் உறைவிடமான வாக்குத்தத்ததின் பெட்டியை அந்த புகழ்பெற்ற ஜெருசலெம் தேவாலயத்திலிருந்து திருடிக்கொண்டு போய்விட்டான்..
அன்றிலிருந்து இஸ்ராயேல் கீர்த்தி மங்கிப்போனது. சாலமோன் கண்ட கனவு அச்சரம் தவறாமல் பலித்தது.
      மன்னர் சாலமோனுக்கு வயது அறுபதை நெருங்கியது.அந்தப்புற ராணிகளில் மிகுந்த அழகிகளான ஜோர்டானிய, அம்மானிய, கானானிய, எகிப்த்திய மஹாராணிகள்   அரசர் சாலமோனிடம் விஷேஷ அந்தஸ்த்தப்பெற்றுக்கொண்டு அவரை எபோதும் தங்களோடே வைத்துக்கொள்ள விரும்பி அவர் மீது பாசத்தை அளவுக்கு அதிகமாகவே பொழிந்தனர்.
    இதனால் அரசர் சாலமோன் மிகவும் மதி மயங்கிப்போனார். எவ்வளவுதான் ஞானியானாலும் பெண்களுக்கு முன்னால் எந்த ஆண்களும் தடுமாறி நிலை குலைந்துதான் போகிறார்கள்.
இந்த மனித உடல் இப்படியாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் இன்பத்தை வா.. வா..என்கின்றது.. ஆனால் ஆண்மா பாவமே போ..போ..எங்கின்றது. இந்த உடலுக்கும்   மனதென்னும் ஆண்மாவுக்கும் இடையே இந்த மனிதகள் பலர் படும் பாடு வார்த்தையில் சொல்லி முடியாது. இந்த மாதிரியான சமயங்களில் உடல் பெரும்பாலும் வெற்றி கொண்டுவிடும்.
ஆண்மா பெரும்பாலும் தோற்று விடும்.
    இப்படியாகத்தான் சாலமோனும் அவர்தம் அழகு மனைவியரின் வஞ்சகப்புகழ்ச்சியால் மதிமயங்கி அவர்கள் குல தெய்வங்களுக்கு தூப ஆராதனை காட்டினார். எந்த துர்தேவதைகளை தன் கடவுள் கொடுத்த மோதிரத்தால் அடிமைப்படுத்தி கட்டிவைத்திருந்தாரோ அந்த துர்தேவதைகள் மீண்டும் பலம்பெற்றன. மீண்டும் விடுதலை பெற்றன.
அன்று பேயேல்செபூவும், அஸ்த்திராகசும் கூறிய வாக்கு உண்மையாயிற்று. யாவும் பெண்களால் வந்த வினை. சாத்தான் செய்த சதி. மீண்டும் தங்களுக்கு சரியான ஒரு தங்குமிடம்   வேண்டி இந்த சதிமலையின் சரிவுகளில் தங்களுக்கென தனித்தனி மாடங்களை அமைத்துக்கொண்டன. அன்று அவைகள் சொல்லியபடியே சாலமோன் பேரரசர் தன் அடிமைகளிடமே
சரணடைந்தார்.
    என்ன ஒரு பரிதாபம். இப்படியோரு நிலை வரவேகூடாதென்றுதான் அன்று கடவுள் சாலமோனுக்கு பிற ஜாதி அல்லது பிற தேச பெண்கள நீ கண்டிப்பாக திருமணம் செய்யவே   கூடாதென கண்டிபானதொரு கட்டளை கொடுத்திருந்தார். ஆனல் எல்லாம் முடிந்துவிட்டது...சாலமோனுக்கு தலை சுழன்றது. படுத்த படுக்கையில் வீழ்ந்தார்.
     இந்த மனிதர்கள் செய்யும் தவறுகள் கடவுளை எவ்வளவு தூரத்துக்கு வ்ருத்தத்தை ஏற்படுத்துகின்றன என்றும் கடவுளும் எவ்வளவு காலம்தான் பொருமையாய் இருக்க முடியும்   என்றும் யேசுநாதர் இந்த மக்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்பினார். அதன் விளைவாக இந்த ஜெருசலேம் நகருக்கு என்னென்ன பாதிப்புகளும் கஷட்டங்களும் வரும் என்பதை
உனர்த்தவிரும்பினார். தனக்கு நேரப்போகும் கதியும் முடிவும் அவருக்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தன. எனவே இந்த ஒலிவ மலைச்சரிவில் ஒரு இடத்திலிருந்து ஜெருசலேம் நகர்  தேவாலயம் முழுவதும்படியான இடத்தில் நின்றுகொண்டு, " ஜெருசலேமே...ஜெருசலேமே.. உனக்கு ஐய்யோ கேடு...கோழி தன் குஞ்சுகளை தன் செட்டைக்குள் வைத்துக்கொள்வதுபோலே நானும் உன்னைப்பாதுகாக்க விரும்பினேன். ஆனால் நீயோ நான் உன்னைக்காக்கும்படியாக அனுப்பிய தீர்க்கதரிசிகளை எல்லாம் கொண்றாய்..
.என்னையும் அதே போல் தான் செய்வாய்.." என்று ஜெருசலேமை அழுதுகொண்டே சபித்தார். பிற்கால கிரிஸ்த்துவர்கள் இந்த இடத்தில் ஆண்டவர் அழுதார் [DOMINUS FLEVETI] என்னும் ஒரு கண்ணீர் வடிவ கோவிலை கட்டி இருக்கிறார்கள். ஆண்டவர் சொல்லியபடியே ஆயிற்று. யேசுநாதர் மரித்து பரலோகம் சென்று முப்பத்தாறு ஆண்டுகளுக்குப்பிறகு
அதாவது கி.பி. 70 களில் ரோமிலிருந்து வந்த தீத்து [TITUS] ராயன் இந்த யூதர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்து ஜெருசலேமை எப்பக்கமும் சூழ்ந்துகொண்டு நெருப்பினால் வதைத்தான்..
     பெரும் கூக்குரல் ஜெருசலேமை சூழ்ந்தது. மக்கள் பலர் கொல்லப்பட்டனர். குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் என்று யாரும் தப்பிக்கவில்லை.. அனைவரையும்.... கண்ணில்பட்ட   யாவரையும் சங்காரம் பண்ணினான் தீத்து ராயன். மேலும் இம்மக்கள் மீண்டும் தலை எடுக்காதபடிக்கு வீடுகள் அரண்மனைகள், கோட்டைகள், பெரும் மதில் சுவர்கள் என்று
அனைத்தையும் இடித்து பெரும் சேதம் விளைவித்தான்.
அப்போது ஒரு வீரன் " அரசே, யேசுநாதர் என்னும் ஒரு யூத ராபீ இந்த ஜெருசலேம் நகரைப்பற்றி ஒரு தீர்க்க தரிசனம் கூறி இருக்கின்றார். அதாவது இந்த ஜெருசலேம் நகரில்   கல்லின் மேல் கல் நில்லாது என்று.. இப்போது நாம் அந்த வாக்கு பலிக்கிறதா என்று பார்போம்" என்றான். தீத்து ராயனும் சம்மதிக்கவே அவர்களால் தேவாலயத்தின் மதில் சுவர் ஒன்று
இடிக்கபட்டு கீழே விழத்தாட்டப்பட்டது. அதுவரையிலும் எந்த பிரச்ச்னையும் எழ வில்லை.. அனால் யேசுநாதரின் தீர்க்கதரிசனம் எந்த அளவு பலிக்கும் என்பதை சோதிக்க நினைத்து அந்த இடிக்கப்பட்ட கல்லை மீண்டும் அதன் பழைய இடத்தில் வைக்க முயற்சிக்கையில் வானம் இருண்டது. டமேர் என்னும் ஒரு இடிச்சத்தம் காதைப்பிளந்தது. அந்த இடியால்
அந்தக்கல் மீண்டும் கீழே விழுந்தது. ஜெருசலேம் நகரே இருளில் மூழ்கியது. ஏதோ விபரீதம் நடக்க இருப்பது போல் வானத்துப்பட்சிகளும் தெருவில் திரியும் நாய்களும் பூனைகளும்   அமைதிகொள்ளாமல் தவித்து திரிந்தன. நரிகள் ஊளையிட்டன.. காகம் கறைந்தன. பகலே இரவாயிற்று. வின்னில் நிலா தெரிந்தது. நட்ச்சட்திரக்கூட்டங்களும் தெரிந்தன..பலமணி
நேரம் இருள் சூழ்ந்து மீண்டும் பகலானது. இந்த அதிசயத்தைக்கண்ட தீத்து ராயன் " ஆம், யேசுநாதர் என்னும் யூத ராபி சொன்னது சரிதான்.. அவரது வாக்குக்கு இன்றளவும் வல்லமை உள்ளது" என்றான்.
          பிறகு தீத்து ராயன் இந்த ஜெருசலேம் நகருக்கு தான் வந்த காரியம் முடிந்தது என்று நினைத்து நகரைக்கொள்ளை அடித்தான். ஜெருசலேம் தேவாலயத்தின் ஏழு தூபக்கால்களையும்  கண்னில் பட்ட தேவாலயத்தில் இருந்த சாலமோனால் கட்ட அரும் பெரும் தங்கப்பொக்கிஷங்களையும் தேவாலயத்தின் மதிப்புமிக்க கடவுளுக்குறியதான தங்கப்பொருட்க்கள்
அனைத்தையும் கொள்ளையிட்டு தன்னுடைய நாட்டுக்கு அள்ளிச்சென்றான். மேலும் அந்நகரில் இருந்த மிச்சம் மீதி ஆண்களையும் பெண்களையும் அடிமையாக பிடித்துச்சென்றான்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் தன் ஞானக்கண்களாள் பார்த்தார் பேரரசர் சாலமோன். யேசுநாதரின் சாபம் எந்த அளவுக்கு வல்லமையானது என்பதையும் அவர் உணர்ந்தவராய்
" ஆண்டவரே என் தேவனே, எம்மானுவேலே... என்மேல் இரக்கம் வையும் ...என் மக்கள் மேல் இரக்கம் வையும்... என் மக்களை தயவு செய்து சபிக்காதீர்.. என் நாட்டையும் சபிக்கதீர்...
இது உம் நாடு.. இம் மக்கள் உம் மக்கள்...இம் மக்கள் உம் சொந்த மக்கள் அல்லவா.. தேவரீர் இவ்வளவு கோபப்படலாமா..
.அடே தீத்து... என் மக்களை வதைக்காதே... நான் ஆசையாய்
கட்டிய தேவாலயத்தை இடிக்காதே... ஆண்டவனுக்குறிய பூஜைக்குறிய பரிசுத்த பொருட்க்களை தொடாதே.. அடே தீத்து.. உன் தீட்டுபடிந்த கைகளாள் தேவாலயத்தின் பரிசுத்த பொருட்க்களை தீண்டாதே.. அவை உனக்கு சாபமாகத்திரும்பும். என் மக்களை விட்டுவிட்டு உன் நாட்டுக்கு திரும்பப்போ" என்று கத்தினார். ஆனால் அவர் அருகில் நின்றிருந்த   அவர் மனைவிகள் பலருக்கு அவர் என்ன பேசுகின்றார் எனறே புறியவில்லை... அரசே அரசே...எங்களைப்பாருங்கள் ... உங்கள் உடம்பு நெருப்பாக சுடுகின்றது. அரண்மனை   வைத்தியரைக்கூப்பிடுங்கள்" என்றனர்..வைத்தியர் வந்து மன்னருக்கு வைத்தியம் செய்து அவரை தனியே விட்டு அவருக்கு ஓய்வளிக்கும்படி கூறினார். ஆனால் அவருடைய எந்த   பத்தினியும் அவரைவிட்டு விலகுவ்தாக இல்லை.. சற்று நகர்ந்தால் வேறு ஒருத்தி அந்த இடத்தை பிடித்துக்கொள்வாள்..என்ன செய்வது..சற்று குணமானதும் மன்னர் சாலமோன் எழுந்து அமர்ந்தார்.
     அவரின் கழுதைகட்டிக்கொண்டாள் ஒருத்தி.. அவரை பின்னால் கட்டிக்கொண்டால் இன்னொருத்தி..இவ்வாறே அவரது முன்னும் பின்னும் அவரது ஆசை பத்தினிகள் புடை சூழ  சற்று தூரம் நடந்தார்.. அப்போது அவர் கண்ட ஒரு காட்சியாவது..
    யேசுவின் இராப்போஜனம் அப்போதுதான் முடிந்திருந்தது. யூதாஸ் என்னும் அவருடைய சீடன் அவரைக்காட்டிக்கொடுக்க கிளம்பினான். அப்போது யேசு நாதர் அவனை அழைத்து  நண்பா...நீ செய்ய நினைத்திருக்கும் காரியத்தை விரைந்து செயலாற்று " என்று அவனை அனுப்பிவைத்தார். அப்போது அவனுள் சாத்தான் புகுந்தது. ஒன்றல்ல.. இரண்டல்ல... மூன்று  சாத்தான்கள் அவனை பீடித்துக்கொண்டன. ஒன்று அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டும் அவன் மீது தொங்கிக்கொண்டும் அவனை முன்புறமாக இழுத்துக்கொண்டும் மற்றது
யூதாசின் பின்புறமாக அவனைக்கட்டிக்கொண்டும் அவன்மீது தொங்கிக்கொண்டும் அவனை முன்புறமாக தள்ளிக்கொண்டும்சென்றன. இன்னும் ஒரு சாத்தான் அவர்களுக்கு
முன்பாக அந்தர்பல்டி அடித்துக்கொண்டும் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் சென்றன. இந்த நிலையில் யூதாசின் நிலை மன்னர் சலமோனின் நிலையை
ஒத்திருந்தது. அந்த நிலையிலும் மன்னர் சாலமோன், " வேண்டாம் யூதாஸ்....எம்மானுவேலை காட்டிக்கொடுக்காதே...அந்த பாவம் உனக்கு வேண்டாம் ...அப்பறம் நீ நாசமாகப்போவாய்.
. முடிவில்லாத நரகம் உனக்கு காத்திருக்கிறது.. போ உன் வீட்டுக்கு...அந்த சதி மலைக்குப்போகாதே.." என்று குளறிகுளறிப்பேசினார்... ஆனால் அந்த பட்டமகிஷிகள் அவரை
விடுவதாய் இல்லை.
அந்த மூன்று சாத்தான்களும்.யூதாசை சதிமலைக்கு இழுத்துச்சென்றதுபோல் மன்னர் சாலமோனும் தன் பிற இன பத்தினிகளால் அந்த சதிமலைக்கு அழைத்துச்செல்லபட்டார்.
இந்த நிலையில் மன்னர் சாலமோன் என்றல்ல... எந்த ஆண்மக்னும் பேரழகிகளான பெண்களின் ஸ்பரிசத்தால் கவர்ந்திழுத்து அணைக்கப்படும்போது ஆண்களின் மதி வேலை
செய்வதில்லை. அந்த இன்பதிற்காக என்ன மாதிரியான கேவலத்திற்க்கும் ஆண் தன்னை அடகு வைக்கின்றான். இப்படியாக மன்னர் சாலமோனும் தன்நிலை மறந்து தன் பிற இன  பத்தினிகளின் ஸ்பரிசத்தால் மதிமயங்கிப்போய் தன் இஸ்ராயேல் தேவனை அடகு வைத்து தன்னால் அடக்கிவைக்கப்பட்டு அடிமையாக்கிவைக்கப்பட்டிருந்த துர்தெய்வங்களுக்கு
தூப ஆராதனை காட்டி தன் குல தெய்வமான இஸ்றாயேல் தெய்வத்தின் சாபத்திற்கு ஆளானார். இதனால் விடுதலையான அந்த துர்தெய்வங்கள் யேசு நாதரை பழிவாங்க சுமார் ஆயிரம்  ஆண்டுகள் இந்த சதிமலையில் காத்துக்கொண்டிருந்தன.
     மன்னர் சாலமோன் தன் படுக்கையில் சாய்ந்து கொண்டிருந்தார்.. அவருக்கு அப்போது அவருக்கு மேல் மூச்சு வாங்கியது. தன் தளபதி பென்னையாவை அழைத்து,
" பென்னையா... நீ எனக்கு ஒரு உதவி செய்வாயா ?" என்றார். தளபதி தன் கண்களின் நீர் திரண்டபடி, " அரசே என் எஜமானே...தேவரீர் எனக்கு ஆணை இடுங்கள்..மஹாபிரபூ"   என்றான்.. அப்போது மன்னர் சாலமோன் ," எனக்குத்தெரியும் பென்னைய்யா.. எனக்குத்தெரியும்... என் அதிகாரமெல்லாம் இந்த படுக்கை அறைவரைதான் என்று எனக்கு   நன்றாகத்தெரியும். என் ஞானம் எல்லாம் என்னைவிட்டுப்போய் அஞ்ஞானம் என்னை பற்றிக்கொண்டபின்பு என் மனைவியருள் பலருக்கு நான் கேலிப்பொருள் ஆனேன்...என்ன   செய்வது.. விதி அப்படி வேலை செய்துவிட்டது...எல்லாம் நான் செய்த பாவத்தால் வ்ந்த வினைகள்...நான் என் தேவனுக்கு துரோகம் செய்துவிட்டேன்.. அவரின் சாபத்துக்கு   ஆளாகிவிட்டேன்.நான் செய்த பாவ துரோகம் என் கடவுளை எவ்வளவு தூரம் பாடாய்படுத்தப்போகின்றது என்பதையும் நான் அறிவேன்...நீ எனக்கு ஒரு சத்தியம் செய்...
நான் சொவதுபோல் எல்லாம் செய்யவேண்டும்.. செய்வாயா... எனக்கு சத்தியம் செய்" என்றார்.
" என் ஆண்டவனே என் எஜமானே... என்னை ஏனைய்யா சோதிக்கின்றீர்..ஸ்வாமி... அடிமை எனக்கு தேவரீர் காலால் உத்திரவிட்டால் நான் என் சிரசால் நிறைவேற்றுவேன்... இது சத்தியம்" என்றான் தளபதி.
" பென்னைய்யா... உன் ராஜ விசுவாசம் நான் அறியாததல்ல...ஆயினும் அன்று அந்த எத்தியோப்பிய ஷேபா நாட்டு ராணி மெக்கேதாவை உனக்கு நினைவிருக்கின்றதா...
அவள் வழியாய் எனக்குப்பிறந்த என் மகன் இப்னா ஹக்கீம் என்னும் வாலிபனை நீ மறந்துவிட்டயோ...அவன் அப்படியே என்னை அக்சாக என்னைப்போல் இருந்தான்.. மறந்துவிட்டயா... ஏன் என்னிடம் பதில் ஏதும் பேசாமல் இருந்துவிட்டாய் பென்னைய்யா? " என்றார் மன்னர் சாலமோன்.
" என் எஜமானே... ஸ்வாமி... நான் உங்கள் மகன் இப்னா ஹக்கீமை மறப்பேனோ... தாங்கள் அவருக்கு இரண்டாம் தாவீது என்று அவருக்கு இஸ்ராயேலின் இளவரசுப்பட்டம் கட்டியதையும் எப்படி மறப்பேன்..." என்றான் தளபதி பென்னைய்யா.
" எல்லாம் சரிதான்... அனால் என் மகன் என்று சொல்லப்பட்ட இரண்டாம் தாவீது செய்த காரியம் மன்னிக்கக்கூடியதா..என் இஸ்ராயேல் தேவன் வசித்துவந்த   உடன்படிக்கைப்பெட்டகத்தை அவன் திருடிக்கொண்டுபோனதை நான் எப்படி மன்னிக்கமுடியும்..இதனால் நான் பட்ட துன்பம் எப்பேற்பட்டது என்று உனக்குத்தெரியுமா..
இதற்கெல்லாம் காரணம் என் மூத்த மகன் இப்னாஹக்கீமும் தேவாலய தலைமை குருவான ஸாதோக்கின் மகன் அசாரியாவும் தான் காரணம். அதனால்தான் என் மகன் என்று  கூடப்பார்க்காமல் அவனை மட்டும் கைதுசெய்யும்படியும் மற்றவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் கண்ட இடத்தில் கண்டம் துண்டமாக வெட்டிப்போடும்படியும் உனக்கு உத்திரவு
கொடுத்தேனே...என் உத்திரவுக்கு நீ ஏன் கீழ்படியவில்லை...அவர்கள் அனைவரையும் நீ தப்பிக்கவிட்டுவிட்டாய்...அந்த மாதிரியாக இந்த முறையும் நீ கோட்டைவிட்டுவிட மாட்டாய் என்பது என்ன நிச்சயம்...அதனால்தான் நான் உன்னிடம் சத்தியம் கேட்கிறேன்" என்றார் சாலமோன்.
" அரசே,...தங்கள் மகன் இப்னாஹக்கீம் தன் தாய் நாட்டிலிருந்து[ எத்தியோப்பியாவிலிருந்து] இங்குவந்து மீண்டும் தன் தாய் நாட்டுக்கு திரும்பிச்சென்று இப்போது பதினோறு ஆண்டுகள் ஆகின்றது. இந்த பதினோறு ஆண்டுகளில் நம் இஸ்ராயேல் தேவனுக்கு அங்கிருக்கப்பிடிக்கவில்லை என்றால் அவர் மீண்டும் நம் ஜெருசலேம் தேவாலாயத்திற்கு வந்திருக்க
மாட்டாறோ....இது கடவுளின் காரியம்..அங்கிருப்பதுதான் அவருக்குப்பிடித்தமான இடம் என்றால் அவர் மீண்டும் எப்படி ஜெருசலேம் வருவார்...அவருடைய சம்மதம் இல்லாமல்  அவரை எப்படி தங்கள் மகன் தூக்கிச்செல்ல முடியும்..அவருக்கு சம்மதம் இல்லை என்றால் அவர் பெட்டகத்தை தொட்ட மாத்திரத்தில் தங்கள் மகன் இறந்திருக்க மாட்டாறோ...
அரசே இந்த பதினோரு ஆண்டுகளாக நான் மறைத்துவைத்த ஒரு ரகசியத்தை தங்களிடம் கூற எனக்கு உத்திரவிடுங்கள்" என்றான் தளபதி பென்னையா.
" பென்னையா...என்னைய்யா சொல்கிறாய்...என்னிடம் ஒரு ரகசியத்தை மறைத்தாயோ...அதை உடனே கூறுவாயாக " என்றார்.மன்னர் சாலமோன்.
"அரசே.தங்கள் மகனை கைது செய்யவும் மற்றவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் கண்டம் துண்டமாய் வெட்டிப்போடும்படியாகவும் தாங்கள் எனக்கு உத்திரவு கொடுத்ததும் நானும் என் ஆட்க்களை அழைத்துக்கொண்டு தங்கள் மகன் இப்னாஹக்கீமை கைது செய்ய விரைந்தேன். தங்கள் மகனும் அவரது ஆட்க்களும் அந்த புனிதமான உடன்படிக்கை பெட்டகத்தை மறைத்து எடுத்துக்கொண்டு ஒரு பெரும் திரளாக அணிவகுத்து நின்றதை கண்டேன்.. அப்போது வானில் ஒரு அதிசயம் நடந்தது..அதிதூதரான் புனித மிக்கேல்
சம்மனசானவர் என் கண்முன்னே தோன்றினார்...பென்னைய்யா..நில்...யார்மீதும் உன் கையை நீட்டாதே...அவர்கள் எம் பாதுகாப்பில் இருக்கின்றார்கள்..என்றார்.. உடனே நான் அவர் முன்னே முகம்குப்புற விழுந்து என் ஆண்டவரே... நான் என் அரசனும் என் எஜமானனுமான சாலமோன் பேரரசரின் ஆணையை நிறைவேற்ற வேண்டாமோ என்றேன்.. அவர் உன் அரசன் சாலமோனிடம் இது இஸ்ராயேல் ஆண்டவரின் திருவுளம் என்று கூறுவாயாக என்று கூறி தன் நீண்ட இறக்கைகளை விறித்து அவர்கள் அனைவரையும் மூடினார். பின்
அவர்கள் என் கண்முன்னே வான்வெளியில் ஒரு பனைமர உயரத்தில் பறந்து சென்றதை பார்த்தேன்...அவர்கள் எகிப்த்தின் வடமுனை துவங்கி தென் முனைவரை வானில்
சென்றதையும் அப்போது அவர்கள் நிழல் நைல் நதியின் ஓரத்தில் அமைந்திருந்த எகிப்த்திய தெய்வங்களின் கோயில்களின் மீது பட்டதும் அந்த கோயில்களும், அந்த கோயில்களுக்கு சொந்தமான நெடும் கற்களும் கீழே இடிந்து விழுந்தன. அந்த கோயில்களில் இருந்த எகிப்த்திய தெய்வங்கள் பெரும் ஓலமிட்டு அழுதுகொண்டு பாலவனத்திற்கு ஓடி மறைந்தன
என்றும் எனக்கு நம் எகிப்த்திய தூதர்கள் மூலம் எனக்கு செய்திவந்தது. மேலும் அதிதூதரான புனித மிக்கேல் சம்மனசானவர் அவர்கள் அனைவரையும் எத்தியோப்பியவின் வடமேற்க்கு எல்லையில் இறக்கிவிட்டதாகவும் அங்கிருந்து ஷேபா மஹாராணியார் தன் மகனையும் தங்கள் உடன்படிக்கை பெட்டகத்தியும் மிகவும் ஆடம்பரமாக தன் தலைநகரான அக்ஸூமுக்கு
[ axum ] அழைத்துச்சென்றதாகவும் நம் எத்தியோப்பிய தூதர் எனக்கு தெரிவித்தார்..[ அந்த உடன்படிக்கைபெட்டகம் இன்று வரை எத்தியோப்பியாவில் இந்த அக்ஸூமில் உள்ள தூய மரியாள் தேவாலயத்தில் உள்ளது. ஆனால் பொதுமக்கள் யாருக்கும் அவர்கள் சமுதாயத்தில் உலகில் யாராக இருந்தாலும் அதைப்பார்க்க அனுமதி இல்லை ]
      ஆனால் அன்றைய நிலையில் நீங்கள் இருந்த மன நிலையில் நான் அதை மறைத்து அவர்கள் ரகசியமாக நம் தென் எல்லையில் அமைந்திருக்கும் செங்கடல் துறைமுகமான எதோமில்  நிலைகொண்டிருந்த எத்தியோப்பிய கப்பற்படைகப்பல்கள் மூலமாக தப்பிவிட்டார்கள்...துறைமுக அதிகாரி தங்கள் இப்னஹக்கீமை ராஜ மரியாதையுடன் வழி அனுப்பிவிட்டார் என்று
நான் உங்களிடம் கூற நேர்ந்தது.ஆனால் உண்மையில் அவர்கள் நம் மேற்க்கு கடல் துறைமுகம் காஸாப்பட்டிணம் வழியேதான் அவர்களை மிக்கேல் அதிதூதர் அவர்களை   வான் வெளியே அழைத்துச்சென்றார்..நடந்த காரியங்கள் அனைத்தும் கடவுள் காரியம் என்பதால் எனக்கு பிரச்சனை இல்லாமல் கடவுள் காப்பாற்றினார்.. என்னை மன்னிக்கவேண்டும்
மஹாப்பிரபூ" என்று தளபதி கண்ணீர் விட்டு அழுதார். மன்னர் சாலமோன் நடந்த காரியங்கள் அனைத்தையும் அறிந்து இது கடவுள் செயல் என்று உணர்ந்து அவரை மன்னித்தார்.
அப்போது அதிதூதரான கப்ரியேல் சம்மனசானவர் மன்னர் சலமோனுக்குத்தோன்றி " சாலமோன்...உன் தந்தை தாவீதுக்கு கொடுத்த வாக்கை முன்னிட்டும் உம் பிதாப்பிதாவாகிய அபிராகாமுக்கும் அவர் மகன் ஈசக்கு அவர் மகன் யாக்கோபுவை முன்னிட்டும் தான் கொடுத்திருந்த வாக்குறுதியை முன்னிட்டும் இன்று உன்னை மன்னித்திருக்கின்றார். இனிமுதல் உன் வாழ்நாள் எண்ணப்படுகின்றது. ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தையும் விரைந்து செயலாற்று" என்று கூறி அவர் காலைத்தொட்டார்.     உடனே பலம் பெற்றார் சாலமோன்.
அப்போது தலைமைகுருவாக இருந்த சாதோக்கு உடனே வரவழைக்கப்பட்டார்.. தன் இரண்டாம் மகன் ரெஹொபோயாம் என்பவனுக்கு உடனே அபிஷேகம் பண்ண ஏற்பாடு   செய்தார். அவன் சற்றே விந்திவிந்தி நடப்பவன்...தன் பட்டத்து குதிரையை வரவழைத்து தன் மகனை அதில் ஏற்றி நகரை வலம் வரச்செய்தார் மன்னர் சாலமோன்..பிறகு தன் தளபதி
பென்னையாவை அழைத்து தன் இறந்த பிறகு என்ன காரியங்கள் எல்லாம் எப்படிச்செய்ய வேண்டும் என்பன கூறி அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார்.
      மீண்டும் தன் மஞ்சத்தில் சாய்ந்தார்...அவர் வாய் தன் தகப்பன் தாவீது ராஜா பாடிய ஒரு பாடலை பாடியது..ஆண்டவரே தேவரீர் எம் குறைகளைப்பாரட்டி எம்மீது கோபம் கொள்வீராயின்   உம் திருமுன் நிற்கக்கூடியவன் யார்?...ஆனால் உம்மிடம் மன்னிப்பு உள்ளதால் பயபக்தியுடனே உம் தாழ்பணிந்தேன்..பிறகு அவர் மனம் பல சிந்தனையில் மூழ்கியது.. அப்போது
அவர் வாய் இவ்வாறு முனுமுனுத்தது..அவரது கண்களில் கண்ணீர் ஆறாகப்பெருகி இருந்தது.  " எல்லாம் வீண்... இந்த உலகத்தில் எல்லாமே வீண்... வீணிலும் வீண்..." அவர் விழிகள் தன்னால் மூடிக்கொண்டன. தன் பட்டத்து குதிரையில் நகர் வலம் வந்து மீண்டும் தன் அரண்மனை வந்த ரெஹோபோவாம் தன் தந்தையிடம் ஆசீர் வாங்க அவர் முன் குணிந்தான்..ஆனல் மன்னர்...பேரரசர்... சாலமோன் மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்ததை அவன் அப்போது  அறிந்திருக்கவில்லை...
    மன்னர் சாலமோன் மறைந்ததும் அவரது உடல் ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்யபட்டது. அவரது உடல் அவர் தந்தை தாவீது மஹாராவின் கல்லரையிலேயே அடக்கம்   செய்யப்பட்டது. தளபதி பென்னைய்யா தன் எஜமானும் பேரரசருமான சாலமோனுக்கு கொடுத்த சத்தியத்தின்படி பெரும் செல்வங்கள் தங்கம் வெள்ளி நகைகள் பாத்திரங்கள் கோப்பைகள் காசுகள் வைரம் வைடூரியம் என்று அனைத்திலும் திரள் திரளாக குவியல் குவியலாக கொட்டபட்டு பெரும் புதையாலாக அவருடைய விஷேஷமான கல்லரையில்
வைக்கப்பட்டன. சாலமோனின் முத்திரை மோதிரத்தால் அவை சீல் செய்யப்பட்டு கொடும் பேய்களால் காவல்காக்கப்படுகின்றன.. சாலமோனின் முத்திரை மோதிரம் மீண்டும் அவர் கையிலேயே அணிவிக்கப்பட்டு அவரோடே அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. அது மீண்டும் வேறு யார் கையிலும் சேராதபடிக்கு அவரது சமாதி யார் கண்னிலும் படாதபடிக்கு
அதைக்காக்கும் பூதங்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. இது கதை அல்ல நிஜம் என்றும் சொல்லப்படுகின்றது.
     ஒரு முறை ஏரோது மஹாராஜா ஜெருசலேம் கோட்டை சுவரை புதுப்பிக்கும்போது ஒரு குழிக்குள் விழுந்தார். அந்த குழி அவரையும் அவரோடு விழுந்தவரையும் ஒரு பாதாள அறைக்கு
இட்டுச்சென்றது. அங்கே அவர் கண்ட ஒரு காட்ச்சி அனைவரையும் திடுக்கிட வைத்தது. பெரும் தங்கப்புதையலுக்கு நடுவே மன்னர் தாவீது கல்லரையும் மன்னர் சாலமோன்
கல்லரையும் இருக்கக்கண்டாகள். அப்போது பெரும் கூச்சலிட்டுக்கொண்டு பல பேய்கள் " ஓடுங்கள்... ஓடுங்கள்.. உயிர் பிழைக்க ஓடுங்கள் " என்றும் இங்கு கண்டவைகள் பற்றி   யாரிடமும் வாய் திறந்து பேசக்கூடாது எனவும் பேசினால் தலை சிதறி சாவீர்கள் கேட்டதாககூறினார்கள். எல்லோரும் தலை தெரித்து ஓடினர்கள் சிலர் கல் தடுமாறி விழுந்தார்கள்..
அப்படி விழுந்தவர்கள் அகால மரணமடைந்தார்கள். என்று ஒரு கதை சொல்கின்றது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஜெருசலேம் புணிதப்பயணம் வந்திருந்த பிஷப் அக்குல்ட் என்னும் ஆங்கிலேயர் தன் நாட் குறிப்பில் இவ்வாறு எழுதி இருகின்றார்.
     இங்கு சீயோன் நகரில் பராமரிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த கட்டிடத்தொழிலாளி இருவர் தவறுதலாக ஒரு குழியில் விழுந்தனர்..அவர்களுக்கும் அரசர் ஏரோதுக்கு நேர்ந்தது போலவே
நடந்தது. அவர்கள் பலவிதமாக பிதற்றிக்கொண்டிருந்ததாக தான் கேள்விப்பட்டு தான் அவர்களை எவ்வளவோ கேட்டும் அவர்களிடமிருந்து சாலமோனின் கல்லரையையும் அவர்தம்
புதையலைப்பற்றியும் தன்னால் எதுவுமே அறிந்து கொள்ளமுடியவில்லை என்றும் அந்த அளவுக்கு அவர்கள் பேய்களால் பயமுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் எழுதுகின்றார்..இவ்விதமே  தூய பிரான்சிஸ்க்கு துறவிகள் இருவருக்கு நேர்ந்த அனுபவமும் இருந்ததாகவும அவர்களும் பேரரசர் சாலமோனின் கல்லறைபற்றி ஏதும் வாய் திறக்க மறுத்துவிட்டதாகவும் அவர்கள்  சபை தலைவர் கேட்ட கேள்விகளுக்கு கூட இவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு. இதனால் தான் பேரரசர் சாலமோனின் கல்லரை இதுவரை கண்டுபிடிக்கப்படமுடியவில்லை. அது உலக மஹா ரகசியம்.






























No comments:

Post a Comment