Monday, June 3, 2013

" தேவ மாதவின் திருக்கல்யாண மோதிரம் "

" தேவ மாதவின் திருக்கல்யாண மோதிரம் "
   
      


தேவமாதாவின் திருக்கல்யாண மோதிரம்
தேவமாதாவின் திருக்கல்யாண மோதிரம்
இந்த சரித்திர நிகழ்வு நடந்தது கி.பி.966ல். ரனோ¢யுஸ் என்னும் அந்த தங்க நகை வியாபரிக்கு தனக்கு கிடைத்த இந்த மோதிரம் பிற்காலத்தில் பெரும் பொக்கிஷமாக மாறப்போகிறது என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தன் எஜமானியும் எத்ரூரியாவ் கோமகன் ஹியூகோவின் மனைவியுமான யூதித்தின் கட்டளைப்படி அவருக்கு வேண்டிய அழகிய தங்க நகைகளையும் அழகிய கலைப்பொருட்களையும் வாங்க ரோமுக்கு வந்தபோது ஜெருசலேமிலிருந்து வந்திருந்த ஒரு கலைபொருள் வியாபாரியை சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்ன ஒரு பொருளைப்பற்றிய நம்பகத்தன்மை அப்போது அவருக்கில்லாமல் போனாலும் எதற்கும் இருக்கட்டும் என்று அதை வாங்கிக்கொண்டார். அதுதான் தேவமாதாவின் திருக்கல்யாண மோதிரம்..
    இந்த கலைப்பொருளை தன்னுடைய பல கலைப்பொருளுடன் ஒரு பழைய பெட்டியில் போட்டு தன் வீட்டின் ஒரு பகுதியில் போட்டு வைத்திருந்தார். சுமார் ஒரு பத்து வருடம் கழித்து தன்னுடைய மகன் திடீரென இறக்க நோரிட்டது. அவனைப்புதைக்க கல்லறைக்கு கொண்டு செல்லும்பொழுது திடீரென அவன் உயிர் பெற்று எழுந்தான். இதைப்பார்த்த மக்கள் அனைவரும் பயத்தாலும் ஆச்சர்யத்தாலும் பெரும் கூச்சல் எழுப்பினர். உயிர்த்தெழுந்தவன் தன்னுடைய தந்தையை அழைத்தான்.
   "
அப்பா... நான் மோட்ச்சத்தில் மிகவும் வணக்கத்துக்குறிய நம் தேவ மாதாவை பார்த்தேன். அவர் தன்னுடைய திருக்கல்யாண மோதிரத்தை எனக்கு அடையாளம் காட்டி அது நம் வீட்டிலுள்ள ஒரு பெரும் பழைய பெட்டியில் இருப்பதையும் எனக்கு காட்டினார்.. அவர் தன்னுடைய திருக்கல்யாண மோதிரம் மக்கள் அனைவருக்கும் காட்டப்படவேண்டும் என்று விரும்புவதால் தாங்கள் அதை இங்குள்ள திருச்சபை
அதிகாரிகளிடம் ஒப்படையுங்கள். இப்போது அதை எனக்கு கொண்டுவந்து காட்டுங்கள். நான் அதை முத்தி செய்ய வேண்டும் " என்றான்.
   தந்தை ரனோரியுஸ் தான் காண்பது கனவா அல்லது நனவா என்பதை உணர வெகு நேரம் பிடித்தது. இது உண்மைதான் என்றறிந்த அவர் உடனே அந்த பழைய பெட்டியை திறந்து அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டுவந்து அவனிடம் கொடுத்தார். அவன் அந்த மோதிரத்தை ஆவலுடன் பெற்றுக்கொண்டு அதை ஆசைதீர முத்திசெய்து அவரிடமே திரும்ப கொடுத்தான். அவனது தந்தையும் அந்த மோதிரத்தின் நம்பகத்தன்மையை அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டு அப்போதிருந்த திருச்சபை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக வாக்களித்தார். சற்று நேரத்தில் அவர் மகன் மீண்டும் இறந்தான். அன்றே அவன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்.. இப்படியாக தேவமாதா தன் திருக்கல்யாண மோதிரத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை கொடுக்க ஒரு பெரும் புதுமையை செய்தாதால்  அந்த மோதிரம் உலகப்புகழ் பெற்றது.
   அன்றிலிருந்து தேவமாதாவின் திருக்கல்யாண மோதிரத்தை பார்க்கும் மக்கள் அனைவரும் பெரும் பேறு பெற்றனர். பலப்பல அதிசயங்களும் அற்புதங்களும் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்தது..கி.பி. 1488 லிருந்து இந்த மோதிரம் மத்திய இத்தாலியில் பெரூஜியா என்னும் ¡¢ல் உள்ள புனித லாரன்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளதுஅந்த தேவாலயதில் உள்ள அழகிய பீடத்தில் தேவமாதாவின் அழகிய திரு உருவம் அவரது திருமண உடையுடன் இருப்பது போல வடிமைக்கப்பட்டுள்ளது. அந்த தேவாலயம் மாதாவின் திருமண மோதிரத்தைக்கொண்டிருப்பதால் மாதாவின் பீடத்தை சுற்றி மோதிர வடிவமைப்பிலேயே சிறந்த வேலைப்பாடுகள் கொண்டதாக தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.இதைக்காண கண் கோடி வேண்டும். ஆனாலும் மாதாவின்
அழகுக்கு முன்னால் இவை யாவும் ஒன்றும் இல்லை.
   அண்ட சராசரங்களையும் ஒரே வார்த்தையில் படைத்த தேவாதி தேவனுக்கு தன் மனிதாவதாரத்தில் தனக்கென ஒரு தாயை படைத்துக்கொள்ள சித்தம் கொண்டதல் தன் மனதுக்கு பிடித்தபடி அழகும் அன்பும் தெய்வநம்பிக்கையும் விசுவசமும் நிறையப்பெற்ற ஒரு தாயாக அவரைப்படைத்து இந்த உலகிற்கு அனுப்பிவைத்தார்.
தேவ தாயாரின் திருக்கல்யாணத்தின் போது சூசையப்பரால் அவருக்கு அணிவிக்கப்பட்ட அந்த மோதிரமானது என்ன மாதிரியான உலோகத்தால் ஆனது. அது உலோகமா இல்லை அலோகமா .இல்லை தங்கமா அல்லது வைரமா அல்லது என்னமாதிரியான கல் என்று இன்றையவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மோதிரமானது யாரால் செய்யப்பட்டது. இல்லை எங்கு தான் வாங்கப்பட்டது. இந்த மாதிரியான மோதிரத்தை வாங்கும் அளவிற்கு சூசையப்பருக்கு வசதி இருந்ததா அல்லது இந்தக்கல் அவரது தாவீது ராஜ வம்சத்திலிருந்து வந்த மூதாதையர்களுடைய பாரம்பரிய சொத்தா…அல்லது தேவதாயாரின் தாயர் அன்னம்மாள் தன் மருமகன் சூசையப்பருக்கு கொடுத்ததா என்ற விபரங்கள் தெரியவில்லை.
   மேலும் இந்தக்கல் மோதிரத்தில் பொறித்துள்ள எழுத்துக்கள் என்ன பாஷை.. என்ன சொல்லுகின்றன என்ற விபரமும் யாருக்கும் தெரியவில்லை இந்த இஸ்ராயேல் தேசம் உருவாகும்போது மெல்கிசெதேக் என்னும் தேவ குருவினால் அவர் போட்ட அஸ்திவாரப்படியே தேவாலயமும் மிகவும் பிற்காலத்தில் யேசுநாதர் ஞானஸ்நனம் பெற்ற இடமும் அமைந்ததாகவும் அந்த இடங்களில் அவர் மிகவும் விலை உயர்ந்த
கற்களால் அடித்தலமிட்டதாகவும் இந்த மோதிரமும் அப்படியொரு கல்லால் ஆனதோ என்றும் சில கருத்துகள் உள்ளன. [ தற்காலத்தில் இந்த மோதிரம் மிகவும் விலை உயர்ந்த கிறிஸ்டல் என்னும் ஸ்படிக கல்லால் ஆனது என்கின்றனர்.] எது எப்படியோ இந்த மோதிரக்கல் தேவ சித்தப்படியே உருவாக்கப்பட்டது. தேவ சித்தப்படியே தேவமாதாவுக்கும் சூசையப்பருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதை யாராலும் மறுக்க முடியாது.. ஆனால் இந்தக்கல்யாணத்தில் தேவ தாயாருக்கும் சூசையப்பருக்கும் உண்மையில் விருப்பம் இருந்ததா என்றால் அதுதான் இல்லை. ஆயினும் தேவ கட்டளைக்கும் தேவ சித்தத்துக்கும் கீழ்படிந்து இந்த திருக்கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள்.. அவர்கள் கல்யாணம் எப்படித்தான் நடந்தது.?
     அந்த நாளில் தலைமைகுருவாயிருந்த அந்த முதியவருக்கு நடக்ககக்கூட முடியாத அளவுக்கு வயது முதிர்ந்திருந்தது. எனவே அவரை நார்க்காலியோடே சேர்த்து தூக்கிக்கொண்டுபோய் தேவாலயத்தின் கருவறைக்குள் கொண்டு போய் வைத்தார்கள். அன்றைய திருவாசகமாக ஏசாயாவின் திரு ஓலைகள் அவருக்கு கொடுக்கப்பட்டன.
   பெரியவர் தன் நிலை மறந்தார். அவரது கைகள் தானாக நகர்ந்தன. அவரது ஆட்காட்டி விரல் குறிப்பிட்ட ஒரு வாசகத்தில் நிலை நின்றது. அந்த வாசகம் இதுதான்  ”ஈஸாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்.  அதன் வேர்களினின்று கிளை ஒன்று வளர்ந்து கனி தரும். ஆண்டவரின் ஆவி அவர் மேல் தங்கி இருக்கும்
     அந்த முதியவரான தலைமை குருவுக்கு எல்லாம் புறிந்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காத்திருந்த ஆண்டவனின் வருகை இதோ சமீபத்தில் இருக்கின்றது. ஆகவே மக்களே களி கூறுங்கள்.. மீட்ப்பு நெருங்கிவிட்டது.. அதுவும் என் காலத்திலேயே நடக்கும் என்று எண்ணும்போது என் ஆன்மா ஆனந்தக்களி கூறுகின்றது என்றார்..இதைகேட்ட இறைமக்கள் அனைவரும் மகிழ்சிப்பெரு வெள்ளத்தால் ஆனந்தக்கூத்தாடினார்கள்..
     இந்த செய்தி தேவாலயத்தின் கன்னிமாடத்தில் வசித்துவந்த அனைத்து பெண்களுக்கும் அறிவிக்கப்பட்டது. தான் வரப்போகும் மீட்ப்பருக்கு தாய் ஆக வேண்டும் என்ற ஆசையால் பலகாலம் திருமணமே வேண்டாமென்று வாழ்ந்துவந்த பெண்கள் பலருக்கு வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது. இப்படியோரு எண்ணத்தில் வாழ்ந்துகொண்டு தன் கற்பை  கடவுளுக்கே ஒப்புக்கொடுத்து திருமணமே வேண்டாமென்று அந்த கன்னிமாடத்தில் வாழ்ந்துவந்த கன்னிப்பெண் ஒருத்தி தான் மரியாள். தவத்திரு சுவக்கீன்அன்னம்மாளுக்கு மகளாகப்பிறந்து ஐந்து வயதிலையே ஜெருசலேம் தேவாலயத்திலேயே ஒப்புகொடுக்கப்பட்டு தவமான தவம் செய்து கடவுளின் அன்புமகளாக வளர்க்கப்பட்டவள் தான் மரியாள். ஆனால் தேவாலத்தின் சட்டப்படி பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால் தேவாலயத்தை விட்டு வெளியேற்றப்பட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
   எனவே அன்றைய தலைமை குரு மரியாளின் தாயாருக்கு ஆள் அனுப்பி வந்து பிள்ளையைக்கூட்டிப்போக சொன்னார். அன்று மரியாளோடு சேர்த்து ஏழு பெண்பிள்ளைகள் வெளியேற்றப்பட்டார்கள். ஆனல் பாவம் அந்த ஏழு பெண்களுக்கும் தாய் தகப்பன் என்று யாரும் இல்லாததால் அன்னம்மாளே அவர்களுக்கு பெற்றோராகப் பொறுப்பேற்றார்.
சரி வந்ததுதான் வந்துவிட்டாய்  உன் மகளுக்கும் பதினான்கு வயதாகிறது
உன் மகளுக்கு தகுந்த வரனாகப்பார்த்து திருமணத்தை நடத்திவிடு என்று அந்த தலைமைகுரு கூறியதற்கேற்ப மாதாவுக்கு சுயம்வரம் ஏற்பாடு நடத்தப்பட்டது. தாவீதின் கோத்திரத்திலிருந்து தகுதியான வரன்கள் தேவாலயத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். ஒரு விதத்தத்தில் இது தேவ கட்டளையாகக்கூட கருதப்பட்டது. மரியாளும் நல்ல முறையில் அலங்கரிக்கப்பட்டு மணமுடிக்க வந்திருக்கும் மாப்பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.
    மரியாளின் அழகும் சாந்தமுகமும் ஒரு இளம் வாலிபனை தடுமாற வைத்தது. அவன் பெயர் அகாபஸ். பெரும் செல்வந்தன்.. ஒருவிதத்தில் இளவரசன். தன் அழகுக்கும் மரியாளின் அழகுக்கும் சரிப்பட்டு வரும் தன் வசதிக்கும் அவள் தாயார் அன்னம்மாளின் வசதிக்கும் கூட ஒத்துப்போகும் தன் வயதுக்கும் அவர் வயதுக்கும் கூட சரியாய் இருக்கும். ஏன் மெசியா நம் வழியாய் பிறக்கக்கூடது.. இருக்கலாம்
அப்படியும் இருக்கலாம்.  இந்த சுயம்வரத்தில் மரியாள் தனக்குத்தான் மாலை இடப்போகின்றாள். இங்கு வந்திருக்கும் மூஞ்சிகளைப்பார்த்தால் என் அளவுக்கு வாலிபமும் அழகும் அறிவும் செல்வமும் வேறு யாருக்கும் இருப்பதாகத்தெரியவில்லை. இதோ மரியாள் கூட என்னைத்தான் பார்க்கின்றாள்.. அடே அகாபஸ்ஸ நீ கொடுத்துவைத்தவன் தானடா என்று தனக்குள் தானே மெச்சிக்கொண்டான்.. அவனுக்கு நேரம் போகப்போகஇருப்புக்கொள்ளவில்லை. ஏன் இந்த கிழக்குருக்கள் வீனே கால தாமதம் செய்கின்றார்கள்.. என்று சலித்துக்கொண்டான்.
   மரியாளும் இந்த வாலிபனைப்பார்த்தாள்.. . இவன் அழகன். பெரும் செல்வந்தன்.. இளம் வாலிபன்.. இவனைத்திருமணம் செய்துகொண்டால் இவன் நம்மை கற்போடு இருக்கவிடமட்டான்.  எனக்குத்தான் திருமணம் வேண்டாம் என்று சொன்னேனே.. பிறகு ஏன் இந்த வீண் வேலைகள். நான் என் கற்பை கடவுளுக்கே ஒப்புக்கொடுத்துள்ளதால் நான் யாரையுமே திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை. அதிலும் இந்த வாலிபனை எனக்கு காணவே பிடிக்கவில்லை.. ஆண்டவர் ஏன் என்னை சோதிக்கின்றார்.. என்னை
இந்த சுயம்வரத்திலிருந்து காப்பாற்றும் என்று அழுது வேண்டிக்கொண்டார்..
   இந்த நேரத்தில் அந்த தலைமை குருவுக்கு தேவ கட்டளை ஒன்று அருளப்பட்டது. அவர் கண்கள் மூடி இருந்தன. தன் கண்களைத்திறந்த அவர் வந்திருந்த வரன்கள் அனைவர்கள் கையிலும் தலா ஒரு சுக்குபோல் காய்ந்த நாணல் குச்சியை கொடுத்து அவற்றின் மீது தத்தம் பெயர்களை எழுதிக்கொடுக்கச்சொன்னார். அவரவர்பெயர்களைத்தாங்கிய அந்த குச்சிகள் தேவாலயத்தின் கருவறைக்குள் வைக்கப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு சாம்பிராணிப்புகையும் எழுப்பப்பட்டு வேண்டுதல் ஆரம்பமானது. வேண்டுதல் முடிந்ததும் ஏற்கனவே தேவ கட்டளை முன்னறிவித்தபடி அந்த காய்ந்த நாணற்குச்சிகள் எதனிலும் பூ தோன்றியுள்ளதா என பார்க்கும்போது அந்த குச்சுகளில் எதனிலும் பூ ஒன்றும் தோன்றவில்லை .. எனவே அனைத்து வரன்களும் நிராகரிக்கப்படுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டனர்.
    அவ்வளவுதான். அந்த செல்வந்தனான வாலிபன் அகாபஸ் மிகுந்த வருத்தமடைந்தான்..தன் எண்ணங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதை அறிந்து கடும் சீற்றம் அடைந்தான்.. அந்த நாணற்குச்சியை இரண்டாக ஒடித்து வீசினான். பைத்தியம் பிடித்தாற்போல் ஜெருசலேம் நகர வீதிகளில் ஓடினான்.  இந்த நிகழ்ச்சியை ஓவிய மாமேதை ரபேல் தன்னுடைய ஓவியத்தில் மிக அழகாக வரைந்துள்ளார்.] முடிவில் தன் எண்ணம் கடவுள் எண்ணத்திற்கு முறணானது என்று எண்ணி தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டான்.. கார்மேல் மலைக்குச்சென்று அங்கு தவம் செய்துவந்த எலியாஸ் தீர்கதரிசியின் சீடர்களுள் ஒருவர் ஆனார்
   அந்த தலைமைகுருவுக்கு இந்த சுயம்வரம் நின்று போனதில் வருத்தம் இல்லை.. தாவீதின் கோத்திரத்தில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் நபர்கள் யார்யார் என்று தேடச்சொன்னார். அப்படி அகப்பட்டவர்தான் நம் மஹாப்பிதாப்பிதா சூசையப்பர். தேவ கட்டளை பறந்தது. தேவ கட்டளைக்கு கீழ்படிந்தார் சூசையப்பர்.. ஜெருசலேம் தேவாலயத்திற்கு வந்தார்.. மரியாளுக்கு அறிமுகம்
செய்துவைக்கப்பட்டார்..
   மரியாள் மனதில் இப்படியோரு எண்ணம் உதித்தது. இவர் பெரியவர். உத்தமர். இவரை திருமணம் செய்துகொண்டால் நம் கற்புக்கு பங்கம் வராது.. இருப்பினும் ஆண்டவரே திருமணம் என்னும் பந்தத்திலிருந்து தேவரீர் என்னைகாப்பீறாக என்று கண்னீர் மல்க வேண்டினார்.
  இதே மாதிரியான எண்ணம் சூசையப்பருக்கும் ஏற்பட்டது. ” இவள் அழகுள்ளவள்.  யுவதி. பெரும் பணக்காரக்குடும்பம். நான் மிகுந்த ஏழை.  வாலிபபிராயம் கடந்தவன்.  இப்போதே ஐம்பதொன்பது வயது ஆகிறது. என் குடும்பத்திற்கும் அவள் குடும்பத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது..நான் திருமணமே வேண்டாம் என்று வாழ்ந்து என் கற்பை கடவுளுக்கே ஒப்புக்கொடுத்து வாழ்ந்து வருகின்றேன். எனக்கு
எதற்கு குடும்ப வாழ்க்கை..ஆண்டவர் ஏன் என்னை சோதிக்கின்றார்.. ஆண்டவா என்னை இந்த திருமண பந்தத்திலிருந்து காப்பாற்றும் “..என்று அவரும் வேண்டிக்கொண்டே இருந்தார்..
     அதீதமான வேண்டுதலால் மரியாளின் கண்ணீர் அதிகமாயிற்று.. சற்றே முகம் துடைக்கவும் தண்ணீர் அருந்தவும் அவர் தேவாலயத்தின் வெளியில் இருந்த நீறூற்றுக்கு சென்றார்.
   அப்போது ஒரு சம்மனசானவர் மரியாளுக்குத்தோன்றி’                                       ‘ மரியே உமக்கு சமாதானம் ‘‘  என்று வாழ்த்து கூறினார். மேலும் ஆண்டவரின் திருவுளத்தை அவருக்கு கூறி இந்த கல்யாணத்தின் மூலம் அவரது கற்புக்கு பங்கம் வராது எனவும் தேவ சித்தப்படி இந்த உத்தமரை நீர் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறி மறைந்து போனார்.
   தலைமைகுரு சூசையப்பரின் கையில் ஒரு காய்ந்த நாணற்குச்சியை கொடுத்து அவர் பெயரை அதில் எழுதச்சொன்னார். சூசையின் பெயர் எழுதப்பட்ட அந்த நாணர்குச்சி தேவாலயத்தின் கருவரையில் வைக்கப்பட்டு வழக்கப்படியே வேண்டுதல் ஆரம்பமானது. வேண்டுதல் முடிந்ததும் அந்த நணற்குச்சியில் தளிர்கள் தோன்றிமலர்களூம் பூத்திருக்கக்கண்டனர். மேலும் ஒரு வெண்புறா ஒன்று வானத்திலிருந்து இறங்கி வந்து சூசையின் நாணற்குச்சியின் மீது அமர்ந்தது. அப்போது சூசையின் முகம் ஒரு வினாடி ஒளிர்ந்தது.  மேலும் அந்த வெண்புறா சூசையப்பரின் தோளில் அமர்ந்து அவரது திருக்கண்னங்களை தன் அலகால் வருடிக்கொடுத்தது.
   அந்த தலைமைகுரு.”.வாழ்த்துக்கள் சூசை.. உனக்கு வாழ்த்துக்கள்.. இந்த மரியாளை மணமுடிக்க கடவுளாலேயே நீர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றீர்..நீர் பேறு பெற்றவர்.. உம்முடைய பதில் என்ன” ? என்றார்..
  அப்போதும் சூசை தயங்காமல் பதில் கூறினார்..”ஐய்யா தலைமை குரு அவர்களே.. எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டமே இல்லை. தேவ கட்டளைக்கு கீழ்படியவே நான் இங்கு வந்தேன்.. மேலும் நான் வாழ் நாள் முழுவதும் கலியாணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்து வருவதாக கடவுளுக்கு சத்திய பிரமாணம் செய்து இருக்கின்றேன்..எனக்குவயதும் ஐம்பத்தொன்பது ஆகிறது. வாலிபப்பிராயம் கடந்துவிட்டது. அந்தப்பெண் மரியாளைப்பாருங்கள்.. அவள் இளம் வயதுடையவள்.
என் வயதுக்கும் அவள் வயதுக்கும் எப்படிபொருந்தும்.  இது நியாயமே இல்லை.. எனக்கு வேண்டாம் இந்தக்கல்யாணம். . தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்..வேறு நல்ல வரனாகப்பார்த்து அந்தப்பெண்னுக்கு மணம் முடித்து வையுங்கள்என்று மன்றாடத்துடங்கினார் சூசையப்பர்..
   அந்தப்பெரியவருக்கு வந்ததே கோபம்.. ” சூசை…என்ன நினைத்து என்ன பேசுகின்றாய் நீ.. யாரிடம் பேசுகின்றாய் தெரியுமா..இஸ்ராயேல் தேவ சந்நிதியில் அன்றாடம் பணிபுறியும் தலைமை தேவ ஊழியனிடம் என்பதை நீ மறந்து போனாயோ? நடப்பது அனைத்தும் தேவ காரியம் என்பதை மறந்து போனாயோ? தேவ கட்டளையை நிறைவேற்றுவதுதான் ஒரு நல்ல இஸ்ராயேலனின் முதல் கடமை என்பதை மறந்துபோனாயோ ? தேவ கட்டளைப்படிதான் நீ வந்திருப்பதாக கூறியது பொய்யா? முதலில் நீ தேவ கட்டளைக்கு கீழ்படிவதாகக்கூறியது உண்மையானால் மரியாளைத்திருமணம் செய்துகொள்வதும் தேவ கட்டளைதான்.. இப்போது நீ என்ன சொல்லுகின்றாய் ? என்றார்..
  .
அவ்வளவுதன் சூசையபர்.. தேவ கட்டளைக்கு கீழ்படிந்து மரியாளைத திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்தார்.. இவ்விதமே மரியாளிடமும் கேட்கப்பட்டது. மரியாளும் தான் தேவ கட்டளைக்கும் தேவ சித்ததிற்கும் கீழ்படிந்து சூசையப்பரை திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்தார்.
  எனவே அந்த தலைமைகுரு சூசையின் சம்மதத்தையும் மரியாளின் சம்மதத்தையும் கேட்டறிந்த பிறகு சூசையப்பர்தான் மரியாளின் கணவர். இது தேவ சித்தம் என்று கூறி சூசையை மரியாளின் தாய் அன்னம்மாளிடம் ஒப்படைத்தார். ஒரு நல்ல நாளில் சூசைக்கும் மரியாளுக்கும் திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அது ஒரு ஏழு அல்லது எட்டு நாள் திருவிழாவாக நடந்தது. ஜெருசலேமில் சீயோன் நகரில் அந்த ஆட்டுக்கிடா குளம் எனப்படும் பெத்சாய்தா குளத்தருகே அமைந்துள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் இந்த வைபோகம் நடந்தது.
    இந்தக்கல்யாண மண்டபம் பல சரித்திர நிகழ்வுகளை கண்டது. மரியாள் ஐந்து வயதில் ஜெருசலேம் தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புகொடுக்க வந்த போது சுவக்கீன் அன்னம்மாள் மரியாள் அனைவரும் தங்கியது இந்த மண்டபத்தில் தான். திருச்சபையின் பாரம்பரியம் மரியாள் இந்த வீட்டில் தான் பிறந்தாள் என்று கூறுகின்றது. மரியாளுக்கு யேசு பிறந்ததும் கோவிலில் காணிக்கையாக
ஒப்புகொடுக்கப்பட்ட போதும் இந்த வீட்டில் தான் தங்கினார்கள். பிறகு அன்னம்மாள் இந்த மண்டபத்தை தனக்காக வாங்கிக்கொண்டார்.]
  திருமண நாளில் சூசையப்பரும் மரியாளும் அந்த ஜெருசலேம் தேவாலயத்தில் வீற்றிருந்தபோது அந்த முதியவரான தலைமைகுரு இருவரது கைகளையும்சேர்த்துவைத்து ஆசீர்வதித்தார். ஒரு கூர்மையான ஊசியால் மணமக்கள் விரல்களில் குத்தி ஒரு சொட்டு இரத்தம் வரவிட்டு திராட்சை இரஸத்தில் கலந்துகொடுத்தார். பிறகு சூசையபர் தேவ மாதாவுக்கு திருமண மோதிரத்தை அணிவித்தார். அத்துடன் திருமணம் முடிந்தது.
    மரியாளுக்கும் சூசையப்பருக்கும் நடந்த கல்யாணத்தின் போது விருந்து பலமாக இருந்தது. ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டன. இந்த சாப்பாடு பற்றியும் மரியாள்அணிந்திருந்த உடை அலங்காரங்கள் பற்றியும் மக்கள் பலகாலம் பேசிகொண்டிருந்தனர். மரியாளின் திருமண ஆடை அலங்காரம் அவரது தாயார் அன்னம்மாளின் செல்வத்தையும் அவரது தாராள மனத்தையும் பறை சாற்றியது.
சூசையப்பரும் தன் சக்திகேற்றார் போல நல்ல ஆடையை திருமணத்தின்போது அணிந்திருந்தார். மாதாவின் உடை அலங்காரத்தையும் சூசையப்பரின் உடைஅலங்காரத்தையும் படத்தை பார்த்தே அறிந்துகொள்ளலாம். மாதாவின் கையில் தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலும் அதன் உச்சியில் ஒரு விளக்கும் எரியும் வண்னம் இருந்தது. தங்கக்கிரீடம் முத்துக்களாலும் விலை உயர்ந்த கற்கலாலும்
செய்யப்பட்டிருந்தது. உடைகளில் சுத்த தங்க ஜரிகை வேலைப்படுகள் எங்கும் பரவி இருந்தது.
  அவரது சிகை அலங்காரம் காண்போரை வியக்கவைத்தது. அன்று மாதாவின் அழகை வார்த்தையால் வர்ணிக்கமுடியாது. அவரது கேசம் செம்பொன் நிறத்தில் ஒளிர்ந்தது. [அவரது திருமகன் யேசு நாதருக்கும் இதே செம்பொன் நிறத்தில்தான் கேசம் இருந்தது.] மரியாளின் கேசம் பல பின்னல்களால் பிறிக்கப்பட்டு வெண்பட்டுத்துணியால் செய்யப்பட்ட பின்னல் வேலைப்பாடுகலால் ஆன முத்துக்களால் கோர்க்கப்பட்ட ஒரு முக்காடால் சூழப்பட்டிருந்தது.
திருமண வைபோகங்கள் நல்ல விதமாய் முடிந்த பின்னர் சூசையப்பர் தன் காரியங்களைப்பார்க்க தன் சொந்த ஊரான பெத்லகேம் சென்றுவிட்டார். மாதாவும் அவரது தாய் அன்னம்மாளும் தன் குடும்பத்தினரோடு தங்கள் ஊரான செப்போரிசுக்கு சென்றார்கள். பின்பு நஸரேத்து சென்று மாதாவுக்கு தனி வீடு பார்த்து குடித்தனம் வைத்தார்கள். அப்போதுதான் சூசையப்பரும் பெத்லஹேமிலிருந்து
நஸரேத்தூர் வந்திருந்தார். அங்கு தான் ஒரு சிறிய குன்றில் அமைந்திருந்த ஒரு குகையில் அவருடைய தச்சுப்பட்டரை இருந்தது. அவர்களது திருமண வாழ்க்கையும் ஆரம்பமானது.
     தேவ மாதாவுக்கும் சூசையப்பருக்கும் நடந்த திருமண விழாவை பல திருச்சபைகள் பல நாடுகளில் வெவ்வேறான தேதிகளில் கொண்டாடி வருகின்றன. ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஜனவரி 23 ஆம் தேதி கொண்டாடுகின்றது.
கி.பி.1488.ல் விந்துரஸ் என்னும் ஒரு ஜெர்மானிய குருவானவர் இந்த மோதிரத்தை களவாடிச்சென்று தன்னுடைய நாட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் தேவதாயார் இதனை விரும்பவில்லை. அதனால் அந்த விந்துரஸ் என்னும் குருவானவருக்கு பயங்கர காட்ச்சிகளும் தன்னை சுற்றி  இனம்புறியாத இருட்டும் சூழ்ந்துவருவதைக்கண்ட அவர் பயந்து மீண்டும் பெரூஜியா வந்து அந்த மோதிரத்தை இந்த கோயிலின் உய்ர் அதிகாரிகளிடமும் அந்த நகர உயர் அதிகாரிகளிடமும் சரணடைந்து ஒப்படைத்தார். அன்றிலிருந்து அவரைப்பீடித்திருந்த இருளும் இருட்டும் விலகின.
   ஆகவே அந்த பெரூஜியா நகர மக்கள் இந்தமோதிரம் கிடைத்த நாள் அவர்கள் நாட்டின் வழக்கப்படி தேவமாதாவும் சூசையப்பரும் மணமுடித்த திருவிழாவான ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடுகின்றார்கள். இந்த பெரும் திருவிழாவை முன்னிட்டு தேவ தாயா¡¢ன் திருமண மோதிரம் பொதுமக்கள் பார்வையிடும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை பெரும் ஆடம்பரமாக திறந்து வைக்கப்படும்.
  அந்த நாட்களில் இந்த கோயிலுக்கு மக்கள் கூட்டம் மிக அதிக அளவில் வந்து இந்த மோதிரத்தை தரிசித்து செல்லும். . திருமணமான தம்பதிகள் இங்கு வந்து தங்கள் திருமண வார்த்தைப்பாட்டை புதுப்பித்து  செல்லுகின்றனர். திருமணம் வேண்டும் பெண்கள் தங்களுக்கு திருமணம் நல்லவிதமாக நடக்க வேண்டுதல் வைத்து செல்லுகின்றனர்...
.
மற்றைய நாட்க்களில் இந்த மோதிரம் புனித லாசர் தேவாலயத்தின் கருவூலத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்..
தேவதாயாரின் திருமண மோதிரத்தை காணும் நம் கண்களும் பேறு பெற்றவைகளே.


































No comments:

Post a Comment