Monday, June 3, 2013

"கல்யாணமாம் கல்யாணம் கானாவூர் கல்யாணம்"



"கல்யாணமாம் கல்யாணம் கானாவூர் கல்யாணம்"

      யேசுநாதர் செய்த முதல் புதுமை தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அற்புதம். இந்த அற்புதம் நிகழ்த்திய இடம் தான் கானாவூர் என்னுமிடத்தில் நடந்த திருமணம். அதனால்  மட்டுமல்ல... இந்த திருமண வைபோகத்தில் தான் யேசுநாதர் தன்னை யார் என்று வெளிப்படுத்தியதாலேயே தனிசிறப்பு பெற்றது. ஆம்....இதுவரை அவர் தான் நிகழ்த்திய  போதனைகளில் இந்த உலகை மீட்க்க மனுமகன் வருவார் என்றும் மீட்ப்பர் வந்துவிட்டார் என்றும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வந்த அவர் இந்த திருமணத்தில் தான்
தன்னை மெசியவாக அறிவித்துக்கொண்டார். இதனாலையே தான் இந்த நிகழ்சி வேதாகமத்தில் தனிசிறப்பு பெற்றது.
      யேசுநாதரின் பால்ய ஸ்னேகிதர்களில் ஒருவர்தான் நாத்தானியேல். சிறுவயதில் ஒருமுறை நாத்தானியேல் யேசுநாதரிடம் மோயீசன் காலத்தில் கடவுள் நைல் நதி நீர்   அனைத்தையும் ரத்தமயமாய் மாற்றிய அதிசயத்தை பற்றிய விளக்கம் கேட்டார். அதற்கு யேசுநாதர் "நாத்தானியேல், இந்த அண்ட சராசரங்களையும் படைத்து காத்து..ஆண்டு  நடத்திவரும் எல்லாம் வல்ல உன் தேவனாகிய கடவுளுக்கு இது ஆகாத காரியமோ ? நைல் நதியை ரத்தமாக்கிய அவர் உன் விஷயத்தில் தண்ணீரை திராட்சை ரசமாகவும்
மாற்றுவார். நீ வேண்டுமானால் பார்....உன் திருமண விழாவில் அது நடக்கும். அப்போது நானும் அங்கிருப்பேன்" என்றார். இந்த நிகழ்ச்சி நாத்தானியேலின் மனத்தில்   ஆழப்பதிந்துவிட்டது, அப்போது யேசுநாதருக்கு பன்னிரெண்டு வயது. அவர் காணாமல் போய் மீண்டும் தேவாலயத்தில் கண்ட நினைவாக அவ்ரது பாட்டியார் அன்னம்மாள் ஒரு   பெரும் விருந்து ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது தான் யேசுநாதருக்கும் நாத்தானியேலுக்கும் மேற்படி சம்பாஷணை நடந்தது.
     யேசுநாதர் தன் வேத போதக அலுவலில் மிகவும் மூழ்கி இருந்த நேரம் அது. அதனால் அவர் தன் தாயாரை விட்டு அடிக்கடி பிரிந்து செல்ல வேண்டி இருந்தது. அவர் அடிக்கடி  தன் தாயாரை தனியே விட்டுசெல்வது அவரது உறவினிரிடையே ஒரு கசப்பை ஏற்படுத்தி இருந்தது. " என்ன மனிதர் இவர். வயது முப்பது ஆகிறது. தன் தாயாரை இப்படி தனியே  விட்டுவிட்டு எங்கு தான் போகிறார்?.கொஞ்சம் பொறுப்பாக இருக்க வேண்டாமோ? இவர் வயதில் உள்ள பிள்ளைகள் எல்லாம் குடும்பம் குட்டி என்று ஆகிவிடவில்லைய்யா?    அவரின்   பால்ய ஸ்நேகிதன் நாத்தானியேலுக்கு கூட திருமணம் கூடிவிட்டது. இருந்தாலும் மேரி தன் மகன் யேசுவுக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்க கூடாது. அவரது தகப்பனார்  யோசேப்பு மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இப்படி விட்டுஇருப்பரா என்ன " என்று மேரியின் காது பட பேசக்கொண்டார்கள். இது தேவ மாதாவுக்கு மிகவும் வருத்தம் அளித்தது.
எனவே தேவ தாயாரானவள் தன் மகனுக்கு கானாவூரில் நடைபெறவுள்ள நாத்தானியேலின் கல்யாணத்திற்கு அவசியம் வந்து அவர்களை ஆசீர்வதிக்க வேண்டி ஆள் மேல் ஆளாக  அனுப்பிக்கொண்டிருந்தாள். ஒருவழியாக அவர்களும் யேசுநாதரை கண்டுபிடித்து விஷயத்தை தெரிவித்தார்கள். அதர்க்கு யேசுநாதர் தான் இந்த கல்யாணத்திற்கு அவசியம்
வருவதாகவும் தக்க சமயத்தில் அங்கிருப்பதாவும் தன் சீடர்களுடன் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடு செய்யும் படியும் கூறி அவர்களை தன் தாயாரிடம் அனுப்பிவைத்தார்.
       இந்த இடத்தில் நான் உங்களுக்கு மாப்பிள்ளையையும் பெண்னையும் அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. மாப்பிள்ளை நாத்தானியேல். மணப்பெண்ணின் தகப்பனார்   பெயர் இஸ்ராயேல். பெத்லஹேமில் மாதரசி ரூத்தின் வழி வந்தவர். பெரும் பணக்காரர். ஏற்றுமதி இறக்குமதி அவரது தொழில். மத்திய தரைக்கடலிலிருந்து கலிலேயாக்கடல் வரை
மற்றும் நகரத்தின் பல பகுதிகளுக்கும் சரக்குபோக்கு வரத்து அவரைபோன்று ஒரு சிலரிடம் மட்டுமே இருந்ததால் பணம் காசுக்குப் பஞ்சமேயில்லை. அவ்வளவுபெரும் பணக்காரர்   அவர். இந்தக்கானா ஊர் வாசிகளிள் பெரும்பாலோர் இவரிடத்தில் தான் வேலை செய்துவந்தனர்.
நாத்தானியேல் வாழ்ந்தது சுத்தமான பரிசுத்தமான வாழ்க்கை.இதனால் தான் யேசுநாதர் நாத்தானியேலைப்பற்றி கூறுகிறார் " இதோ ஒரு சுத்தமான இஸ்ராயேலன். இவரிடத்தில்  நான் ஒரு குற்றமும் காணவில்லை" என்று. நாத்தானியேலும் இதே கானாவூரைச்சேர்ந்தவர் தான். இவரது வீடு இந்த கல்யாணமண்டபத்தின் பின் தெருவில் உள்ளது. இப்போதும்
இந்த வீட்டைகாண சாவி இந்த கானாவூர் கலியாணவீட்டில் கிடைக்கும்.
மணப்பெண்ணின் பெயர் தெரியவில்லை. தாயார் சற்றே விந்தி விந்தி நடப்பவர். மற்றவர்களை பற்றிக்கொண்டு நடப்பார். இவர் பெயரும் தெரியவில்லை.   . இவர்கள் மாதாவின் உறவினர்கள் என்று மட்டும் தெரிகிறது. ஆக இந்த திருமணத்தை நடத்தியது தேவ தாயாரின் தாயாரான அன்னம்மாளின் உடன்பிறந்த இளைய சகோதரி  சோபியின் மகள் இந்த மணப்பெண்ணுக்கு தாயாராக இருக்க அமர்த்தப்பட்டார். தேவ தயாரின் பராமரிப்பில் இந்த திருமணம் கூடியது. திருமணநாளுக்கு மூன்று நாட்க்களுக்கு  முன்பாகவே யேசுநாதர் தன் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்துவிட்டார். அப்போது யேசுநாதருக்கு அப்போஸ்தலர்கள் என்று அவர் யாரையும் இன்னமும் தேர்ந்தெடுக்கவில்லை.
       ஆனால் சீடர்கள் பலர் இருந்தனர். ஏறக்குறைய இருபத்து ஐந்து பேர் அப்போதே அவருடன் இருந்தார்கள்.இவர்களுடன் சிறப்பு விருந்தினராக லாசரும் அவர் சகோதரி மார்த்தாவும் கூட  யேசுவோடு வந்திருந்தார்கள். லாசர் யார் ?அவர் ஏப்பேற்பட்ட பிரபு வம்சத்தைச்சேர்ந்தவர் என்று பெண்ணின் தகப்பனார் அறிய வந்த போது மிகுந்த ஆச்சயர்யமுற்ற அவர் லாசரையும்
மார்த்தாவையும் விழுந்து விழுந்து கவனித்தார். யேசுவுக்கும் லாசருக்கும் அவர்களது பரிவரங்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கானாவூர் கல்யாணமண்டபம்   தக்கவிதமாய் ஜோடிக்கப்பட்டிருந்தது. கல்யாணமண்டபத்தின் எதிரே ஒரு தேவாலயம் இருந்தது. அதில் மூன்று யூத குருக்கள் பணியற்றினர்.
        தேவாலயத்திலிருந்து கல்யாணமண்டபம் வரை தோரணங்கள் அழகாக கட்டப்பட்டிருந்தன. பெண்வீட்டார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை தாங்களாகவே   எடுத்துக் கொண்டார்கள். செராபி என்னும் ஒரு பெண் எலிஸபெத்தம்மாளின் உறவினர். அவர் கணவர் ஒபேது. இவர் ஜெருஸ்லேம் தேவாலயத்தில் தலைமைசங்க உறுப்பினர்  இவர்கள் ஜெருசலேமில் வாழ்ந்து வந்தனர். யேசுநாதர் தன் பனிரெண்டாம் வயதில் காணாமல் போய் அவர்கள் பெற்றோர் அவரை ஜெருசலேம் தேவாலயத்தில் மூன்று நாட்க்கள் கழித்து
கண்டார்கள் அல்லவா. அந்த மூன்று நாளும் அவரைப்பராமரித்து வந்தது இந்த செராபி தான். இவரே பிற்காலத்தில் வெரோணிக்கா ஆனார். இவரது மகனும்கூட இவர்களோடு இந்த   கானாவூர் திருமணத்திற்கு வந்திருந்தார். பலவிதமான மலர்கள், காய்கனிகள் தேன் மற்றும் மாவுப்பொருட்க்களை இவர்பொருப்பில் விடப்பட்டதால் அவர் அனைத்தையும்
ஜெருசலேமிலிருந்தே கொண்டுவந்திருந்தார்.
       யேசுநாதர் தன் பொருப்பில் மதுபானங்களை வினியோகிக்கும் பொருப்பையும் விருந்திற்குத்தேவையான பறவைகள் பட்சிகளையும் அனைத்தையும் தன்பொருப்பில் எடுத்துக்கொண்டார். தேவ தாயார் விருந்தினர்களை வரவேற்கவும் உபசரிக்கவும் பொருப்பேற்றார். ஆயிற்று. .கல்யாண நாள் அன்று காலை ஒன்பது மணி அளவில் கல்யாண
ஊர்வலம் ஆரம்பமானது. அப்ஸரஸ் போல் மணமகள் ஜோடிக்கப்பட்டு மாதாவிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவளுக்கு செய்யப்பட்டிருந்த ஜோடனைகள் மாதாவின் திருமண   ஒப்பனைபோல் அமைந்திருந்தது.
முதலில் இன்னிசை இசைக்கும் சிறுவர் குழுவினர், பிறகு பத்துவயதுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர், பிறகு வயதுக்கு வந்த பையன்கள் மற்றும் பெண்கள், பிறகு திருமணம்  ஆகிய ஆண்கள் பெண்கள் கடைசியில் மணமக்கள் என்று கல்யாண ஊர்வலம் ஆரம்பமாகி கடைசியில் தேவாலயத்தில் முடிந்தது. தேவாலயத்தில் திருமண சடங்குகள் ஆரம்பமானது.
     ஒரு வயோதிக யூத குருமார் ஒருவர் மணமகனின் மோதிர விரலில் ஒரு குண்டூசியால் குத்தி ஒரு சொட்டு ரத்தமும்,அதேபோல் மணமகளின் மோதிரவிரலில் ஒரு சொட்டு ரத்தமும்  எடுத்து ஒரு மதுக்கிண்ணத்தில் மதுவை ஊற்றி அதில் இந்த இருவரின் ரத்தத்துளிகளையும் கலந்து அவர்கள் இருவரையும் குடிக்கக்கொடுத்தார். மற்ற சடங்குகளும் முடிந்ததும்
மீண்டும் கல்யாண ஊர்வலம் கிளம்பி கல்யாண மண்டபத்தை அடைந்தது.
கல்யாணமண்டபத்தில் மணமக்களுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.வேடிக்கைகள் வினோதங்கள் பரிசுகள் பாராட்டுகள் எல்லாம் முடிந்து தடபுடலாக விருந்து  ஆரம்பமானது. பரிமாறப்பட்ட மது மிக உயர்ந்த ரகமானதால் முதல் சுற்றிலேயே காலியாகிவிட்டது. மாதாவுக்கு உடனேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. மாதாவின் முகம் உடனே   வாடிவிட்டது. இந்த விஷயதிற்கு யேசுநாதர் தானே பொறுப்பு எனவே தன் மகனிடம் உடனே விறைந்துவந்து மகனே ரசம் தீர்ந்துவிட்டது என்றார். யேசுநாதர் " மாதே....என் நேரம்   இன்னும் வரவில்லையே " என்றார். ஏற்கனவே வாடியிருந்த மாதாவின் திருமுகம் மீண்டும் வாடியது. தன் மகன் தன்னைப்பார்த்து யரோ ஒருவர் போல மாதே என்றல்லவா கூறினார்.
     இதற்கு என்ன அர்த்தம்.....இருக்கட்டும் அவர் என் மகன் ... காரணமில்லாமல் அவர் இப்படி பேச மாட்டார்...காரணத்தை பிறகு அறியலாம் .... இப்போது காரியம் முடியட்டும் என்று  வேலை ஆட்க்களை அனுப்பி யேசு சொல்வதை செய்யுங்கள் என்றார்.
    யேசு அவர்களிடம் வெளியில் இருந்த ஆறு கல் ஜாடிகளில் சுத்தமான நீரால் கழுவி நிரப்புங்கள் என்றார். அவர்களும் அவ்வாரே செய்தனர். அந்த ஜாடிகள் ஒவ்வொன்றும்   ஆறு குடம் தண்ணீர் பிடிக்கும். ஒவ்வொரு குடமும் இன்றைய கணக்குபடி பதினைந்து லிட்டர் தண்ணீர் பிடிக்கும். ஆக ஆறு கல் ஜாடிகளிலும் உள்ள தண்ணீரின் அளவு ஐனூற்று  நாற்பது லிட்டர். திருமணத்திற்கு வந்திருந்த மொத்த விருந்தினர் குறைந்தது நானூறு பேர். யேசுநாதர் மீண்டும் எழுந்து வந்து தன் பரலோக தந்தையிடம் மன்றாடினார்.: "பிதாவே உம்   திருமகன் மாட்சி பெறவேண்டிய நேரம் வந்துவிட்டது. உம்மால் நானும் எம்மால் நீரும் மாட்சி பெற வேண்டும் ஆசீர்வதிப்பீராக....ஆமீன்.என்று கூறி " இதைக்கொண்டுபோய் பந்தி  விசாகரனிடம் சேர்ப்பியுங்கள்" என்றார்.பந்தி விசாகரன் அந்த ரசத்தை சுவைத்தபின்" ஆஹா,... என்ன ருசி....எல்லோரும் முதலில் நல்ல ரசத்தை பரிமாரியபின் அடுத்து தரம் குறைந்த  ரசத்தை பரிமாறுவர். ஆனால் நல்ல ரசத்தை இதுவரை ஏன் வைத்திருந்தீர்? என்றான் அவன் வூழியர்கள் தாங்கள் தண்ணீர் கொண்டுவந்து அந்த ஆறு கல் ஜாடிகளில் நிரப்பியதாக  சத்தியமே செய்தார்கள். பந்தி விசாகரன் குழம்பிப்போனான். சற்று நேரத்தில் இந்த விஷயம் கசமுச என்று பரவ ஆரம்பித்தது.
    அதற்குள்ளாக யேசுநாதர் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். ஆதாம் ஏவாள் தொடங்கி திருமணத்தின் நோக்கம் அதன் புனிதம் என்று  பேசிக்கொண்டேபோனார். முடிவில்   தானே மெசியா என்றதும் அத்தனைகூட்டமும் வாயடைத்து நின்றது. திருமண விழாவிற்க்கு வந்திருந்த பரிசேயர் மற்றும் சதுசேயர் அனைவரும் அவர் தன்னை எப்படி மெசியா என்று
சொல்லலாம் என்று அவர் மட்டில் இடறல் பட்டனர்.இந்த நேரத்தில் யேசுநாதர் செய்த மற்றோரு காரியம் அனைத்தையும் தூக்கியடிப்பதாக இருந்தது.
யேசுநாதர் மணமக்களை ஆசீர்வதித்து அவர்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒன்றாக பழம் ஒன்று கொடுத்தார். அந்தப்பழம் ஆதாம் ஏவாள் உண்ட அந்த ஞானப்பழம் போலவே   இருந்தது.இப்படி ஒருபழத்தை நம் முன்னோர்கள் கூட கண்டதில்லை. இந்த பழத்தைப்பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தால் மூழ்கினர். யேசுநாதர் எங்கிருந்து இந்தப்பழத்தை  கொண்டுவந்திருக்கிறார்.நம் நாட்டில் இதுபோல் ஒரு பழத்தை யாரும் கண்டதே இல்லையே என்று ஆச்சர்யப்பட்டார்கள். மணமக்கள் இந்த பழத்தை உண்ட உடனேயே வலிப்பு வந்தது  போல் துடித்து மயங்கி விழுந்தனர். அவர்கள் முகத்திலுள்ள அத்தனை திறப்புகள் வழியாகவும் அடர்த்தியான கரும்புகை வெளிப்பட்டது. மண மக்களுக்கு ஏற்பட்ட நிலையைகண்ட  அனைவரும் பதறியடித்து செய்வது அறியது திகைத்தனர். தேவ மாதா கூட செய்வது அறியாது திகைத்து தன் மகனை உற்று நோக்கினாள்.யேசுநாதர் அனைவரையும் அமைதியாய்
இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
      மணமக்கள் சுய நினைவு பெற்றனர்.ஆனால் அவர்கள் முகம் ஊடுருவிப்பார்க்கும் வண்ணமாய் மாறி ஒருவிதமான தெய்வீக தோற்றம் கொண்டிருந்தனர். மண மக்களின்  பெற்றோர்கூட தாங்கள் காண்பது கனவா அல்லது நனவா என்பதுபோல் அசைவற்று நின்றனர். அங்கிருந்த பரிசேயரும் சதுசேயரும் கூட யேசுவை பகைப்பதைவிட்டு மேலும் என்ன
நடக்கப்போகிரதோ என்று பயந்தனர்.நாத்தானியெல் யேசுவின் பாதம் பணிந்து கொண்டு தான் தன் நிலையை உணறுவதாகவும் தன் மனைவி சம்மதித்தால் ஒரு மூன்று வருட காலம்  கடும் தவம் செய்தபின் மீண்டும் குடும்ப வாழ்க்கை மேற்கொள்வதாகவும் கூறினார். அதர்க்கு யேசு நாதர் கூறினார்,"    நாத்தானியேல், நான் அன்றே உனக்குச்சொல்லவில்லையா...நைல்
நதி நீரை ரத்தமாக்கிய உன் தேவனாகிய ஆண்டவருக்கு தண்ணீரை திராட்சை ரசமக்குவது பெரிதான காரியமோ? உன் திருமணத்தன்று இது நடக்கும். அப்போது நானும்   அங்கிருப்பேன் என்றதை மறந்து போனாயோ? என்றார். அப்போது நாத்தானியேல் "உணறுகிறேன் சுவாமி, நம்புகிறேன் என்றார். அப்போது யேசுநாதர் மீண்டும் கூறினார், " நாத்தானியேல், நீ பேறு பெற்றவன். இன்னும் சொல்லுகிறேன்....நீ இதைவிட இன்னும் பெரும் காரியங்களைப்பார்ப்பாய். இன்று தண்ணீரை திராட்சை ரசமாக்கிய தேவன் ஒரு நாள் திராட்சை   ரசத்தை தன் ரத்தமாக மாற்றுவார்... அதையும் நீயும் காண்பாய்....அப்போது நானும் அங்கிருப்பேன் என்றார்.அப்போது நத்தானியேல் ஆண்டவரை நோக்கி" இருப்பினும் ஆண்டவரே
நான் என் தவ வாழ்கையை கை விடுவதாக இல்லை என்றார். மணமகளும் இவ்வாரே கூறினார். ஆண்டவராகிய யேசுவும் மண் மக்களை ஆசீர்வத்தித்து பின் தெருவிலுள்ள  மாப்பிள்ளை நாத்தனியேல் வீட்டிற்க்கு அழைத்துச்சென்று அவர்கள் குடித்தனம் அமர்த்திவிட்டு மீண்டும் கல்யாண மண்டபம் வந்தார்.      அங்கு அவருக்கென்றே சில பிரச்சனைகள்   காத்துக்கொண்டிருந்தன.
         கல்யாண மண்டபத்தில் கலாட்டா வேண்டாம் என்பது போல அதுவரை காத்துக்கொண்டிருந்த பரிசேயர்களும் சதுசேயர்களும் யேசு நாதர் வந்துவிட்டார் என்றதும் எழுந்து கச்சை  கட்டிக்கொண்டு வந்துவிட்டர்கள்.யேசு எப்படி தன்னை மெசியா என்று அழைக்கலாம், இவர் ஒரு தச்சன் மகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே, பிறகு இவர் எப்படி  தன்னை மெசியா என்று அழைத்துக்கொண்டார்....என்று பிலு பிலு என்று பிடித்துக்கொண்டார்கள்.அப்போது ஆண்டவா ... என்னைகாப்பற்று...என்ற ஒரு பலத்த சப்த்தம்  கேட்டது. யேசுநாதரும் அந்த சப்தத்தை கேட்டார்..கண்களை மூடி பிரார்த்திக்கலானார்.அப்போது உயர்ந்த கோபுரத்தின் மீது வேலை செய்து கொண்டிருந்த ஒருவன் அங்கிருந்து
கீழே விழுந்தான். அப்போது அவன் போட்ட சப்தம்தான் அது. அவன் கை கால்கள் அனைத்தும் முறிந்திருந்தன. முதுகெலும்பும் முறிந்திருந்தது.அவனை பரிசோதித்த உள்ளூர்   மருத்துவர் அவன் உயிர் பிழைப்பது முடியாது. இன்னும் சற்று நேரத்தில் அவன் இறந்துவிடுவான். ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள் என்றான். அதர்க்குள் தண்ணீரை திராட்சை  ரசமாக யேசுநாதர் கானாவூர்கல்யாணத்தில் மாற்றிய அற்புதம் இங்குவரை பரவியதால் அவனை தூக்கிகொண்டு இந்த கானாவூர் கல்யாண மண்டபதிற்கு வந்தார்கள். அந்த உள்ளூர்  மருத்துவனும் அவர்களோடு வந்திருந்தான். யேசுநாதர் அவனைத்தொட்டு அப்போதே முற்றிலுமாக அவனை குனமாக்கினார்.அவன் யேசுவின் பாதம் பணிந்து" ஆண்டவரே என்னை  காப்பற்றும் என்றுதான் விழுந்தேன்...நீர் என்னைக்காப்பாற்றிவிட்டீர்...நீரே ஆண்டவர்...என்னைபொருத்தமட்டில் நீரே கடவுள்....நன்றி ஆண்டவரே " என்று கூறினான்.
        அவனைப்பரிசோதித மருத்துவன் கண்களில் கண்ணீர் திரளாகப்பெருக்கெடுத்து ஓடியது. அவனும் யேசுவின் பாதம் பணிந்து தன்னை அவரோடு ஐக்கியப்படுத்திக்கொண்டான்.  அவன் மட்டுமல்ல... அன்று ஆண்டவரால் ஆசீர்வதிக்கபட்ட திராட்சை ரசத்தை குடித்த யாவரும் மனமாற்றம் அடைந்தனர். யேசுவை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர்.
விழயம் இத்தோடு நிற்கவில்லை. அசுத்த ஆவி பீடிக்கப்பட்டிருந்த ஒருவனை சங்கிலியால் கட்டி ஒரு பெரும் கல்லோடு பிணைத்துகட்டிப்போட்டிருந்தனர். யேசு அவனை உடனே   அசுத்த ஆவியின் பிடியிலிருந்து விடுவித்தார். பிறகு ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த பெரும்பாடு என்னும் நோயிலிருந்து விடுவித்தார். இவ்வராக இந்த கானாவூர் கல்யானத்தன்றே
ஏழு பெரும் அற்புதங்களைச்செய்தார். இதைக்கண்ட பரிசேயர்கள் பலரும் சதுசேயர்கள் பலரும் மனமாற்றம் அடைந்தனர். யேசுவை மெசியாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் யேசுவை  மெசியாவாக ஏற்றுக்கொள்ளாத பலர் அவர்மேல் இன்னும் அதிக வர்மம் கொண்டு பற்களை நற நற என்று அவரை நினைக்கும் போதெல்லாம் கடித்துக்கொண்டே இருந்தனர்.
     சரி... கல்யாணம் நல்ல விதமாக முடிந்துவிட்டது. கல்யாண மண்டபத்தை காலி செய்ய வேண்டும். கணக்கு வழக்குகள் எல்லாம் முடிக்க வேண்டும் என்று யேசு நாதர் வந்தபோது  அங்கு அவருக்கு ஒரு ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. கணக்கு வழக்குகள் யாவும் பைசா சுத்தமாக யேசுவின் பெயரால் முடிக்கப்பட்டிருந்தன. யேசு யார் இதை செய்தது என்று
கேட்டார். அவர்கள் அங்கே நெடு நெடு என்று உயரமாய் மெல்லிதான தோற்றம் கொண்ட ஒருவரைக்காட்டினார்கள். பெத்தானியாவைச்சேர்ந்த லாசர் தன் முகத்தில் புன்னகை தவழ  நின்றுகொண்டிருந்தார். ஆண்டவராகிய யேசுவின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.
[பின் குறிப்பு]
யேசுநாதர் தன் தாயாரை இந்த கானாவூர் கல்யாண விருந்தின் போது " மாதே" அல்லது "பெண்ணே" அல்லது "ஸ்த்ரீயே" என்று அழைக்க தகுந்த காரணம் உண்டு. இதே   வாத்தையை தன் சிலுவைச் சாவுக்கு முண்பாகவும் பிரயோகித்தார். இரண்டிற்கும் ஒரே காரணம் தான். தான் இந்த உலகத்திற்கு தன் பிதாவினால் அனுப்பப்பட்ட இரண்டாமாளாகிய  சுதனாகிய சர்வேசுரன். அன்று ஒருநாள் ஆதாம் ஏவாளுக்கு கொடுத்த வாக்கின்படி ஒரு ரட்சகரை அனுப்புவோம். அவர் வழியாகவே உலகில் மீட்பு உண்டாகும்.ஆக இந்த உலக
ரட்சகரின் தாயாக இருக்க படைக்கப்பட்ட பெண் தான் நீ. உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகைமை உண்டாக்குவோம் என்று கூறப்பட்டது உம்மைபற்றித்தான்.
     ஆக அந்தப்பெண் நீர் தான் என்ற அர்த்தத்தில் தான் யேசுநாதர் தன்னை இரண்டாமாளாகிய சுதனாகிய சர்வேசுரனாகக்கருதி தன் நேச தாயாரை " மாதே" என்று அழைத்தார்.

No comments:

Post a Comment