Thursday, June 13, 2013

" தூய பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா "










" தூய பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா "

     இவர்களை கார்த்தேஜ் நாட்டின் கிரிஸ்த்துவ வீராங்கணைகள் என்று சொல்லலாம்... அன்றைய கார்த்தேஜ் இன்றைய துனிஷியா என்றழைக்கப்படுகின்றது. இந்த துனிஷியா நாடு   ஆப்ரிக்கா கண்டத்தின் வட மத்திய பகுதியில் மத்திய தரைகடலின் ஒரத்தில் அமைந்துள்ள நாடுகளிள் ஒன்றாகும். மத்திய தரைகடலில் அமைந்துள்ள இத்தாலியைச்சேர்ந்த சிசிலி தீவை  நோக்கி தன் மூக்கை நீட்டினார்ப்போல் வடஆப்ரிக்க கண்டத்தில் மத்தியில் அமைந்துள்ள நாடு தான் இன்றைய துனிஷியா. எனவே மத்தியதரைகடலில் உள்ள சிசிலிக்கும் அன்றைய  கார்த்தேஜ் நாட்டிற்க்கும் கடல்வழித்தொடர்பு மிகவும் நெருக்கமாகவும் இருந்ததால் கடல்வழியே வியாபாரம் போக்குவரத்துகள் அதிகமாயின.
        பொனீஷியர்கள்...உண்மையில் பொனீஷியா என்று ஒரு நாடு கிடையாது.. வேத காலத்தில் மெசப்படோமியாவில் சுமேரியர்கள் இருந்தார்கள். பாபேல் கோபுரம் வீழ்ந்த பிற்பாடு அவர்கள்   பல திசைகளில் பல நாடுகளுக்குச்சென்று குடியேறினார்கள். இப்படி பல இனமாக மக்கள் பிறிந்தனர். அப்படிப்பிறிந்தவர்களில் ஒருவர் ஹேபர். இவர் பாலஸ்தீனம் எனப்படும் நாட்டிற்கு  குடியேறினர். அவர்மூலம் பரவிய பாஷை தான் ஹீப்ரூ.. அவர் மூலம் பரவிய இனம்தான் ஹீப்ரூக்கள்..இந்த ஹீப்ரூக்கள் பேசிய பாஷைதான் ஆதியிலே இருந்து பழக்கத்தில் இருந்து  வருகிறது. இந்த பாஷையில் தான் கடவுள் தன் மக்களுடன் பேசினார்..அதனால் இந்த பாஷை தேவனாகரி எனப்படுகின்றது.[ இந்தியாவிலும் இந்த பாஷை பல பகுதிகளில் பேசப்பட்டு  வந்தது.]. சுமேரியாவிலிருந்து கிளம்பியவர்களில் சிலர் செமிட்டியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இன்றைய லெபனானில் குடியேறினார்கள்..இவர்களும் பிறிந்து கானானியர்கள்  எனப்பட்டனர்.
       லெபனானியர்கள் கடல் வர்த்தகத்தில் கில்லாடிகள் ஆனார்கள். அந்த நாட்டில் விளைந்த ஈட்டி மரங்கள், தேக்கு மரங்கள், வாசனை திரவியங்கள், மருந்துப்பொருட்க்கள், திராட்சை  பழ ரசங்கள் கொட்டைகள் என்பன போன்ற பல பொருட்க்களாள் வெகு பணம் சம்பாரித்தார்கள். மத்திய தரைக்கடலின் ஓரத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் இவர்கள் வியாபாரம்
கொடிகட்டிப்பறந்தது. எகிப்த்தில் பல முக்கியமான பாரோ மன்னர்களின் சமாதிகளில் உள்ள உத்திரங்களும் அவர்தம் கோயில்களில் உள்ள உத்திரங்களூம் அவர்களுடைய   அரண்மனைகளில் உள்ள உத்திரங்கள் அனைத்தும் வாசனைமிகுந்த வைரம்பாய்ந்த மரங்கள். மர சாமாங்கள் அனைத்தும் இந்த லெபனான் நாட்டிலிருந்துதான் வந்தவை. எகிப்த்திய
பாரோ மன்னர் துத்தங்காமன் சமாதியில் ஊள்ள உத்திரங்களும் ஜோடனைப்பொருட்க்களும் நாற்காலிகளும் மேஜைகளும் இன்றளவும் வாசம் வீசுகின்றன... சாலமோன் மன்னர்கூட  தான் கட்டிய தேவாலயத்திற்கு தேவையான் மரங்களை லெபனானிலிருந்தே வரவழைத்தார்.
லெபனானின் கடல்பகுதியில் காணப்பட்ட ஒருவகை நத்தைகளிலிருந்து எடுக்கப்படும் சாயப்பொருளுக்கு பொனிஸ் என்று பெயர். இந்த சாயப்பொருளின் மூலப்பொருளைப்பற்றியோ  அதனுடைய கலவைகளின் சேர்மானம் பற்றியோ அக்காலத்தில் யாருக்கும் தெரியாது.. அவர்கள் அந்த தொழில் நுட்ப்பத்தை வெகு ரகசியமாக வைத்துக்கொண்டார்கள்..
         அது ஒருவிதமான கரும்சிகப்பு நிறமாகும்..இந்த சாயமேற்றப்பட்ட துணிகளுக்கு அக்காலத்தில் கிராக்கி அதிகம்.. அரசர்கள் மட்டுமே பயன்படுத்துமளவுக்கு அது விலை உயர்ந்ததாக   இருந்ததால் அது சட்டபூர்வமாகவே மாறியது. சாதாரண குடிமக்கள் அந்த நிற துணிகளைப்பயன்படுத்தக்கூடாது.
         ஆக பொனிஸ் என்ற வார்த்தையிலிருந்து அதை உற்பத்தி செய்யும் மக்களுக்கு பொனிசியர்கள் என்று பெயர் வந்தது. இவர்கள் வியாபார ஆதிக்கம் பிற்காலத்தில் அரசியல் ஆதிக்கம்  ஆயிற்று. இப்படியாக அன்றைய கார்த்தேஜ் நாடு பொனீசியர்கள் கையில் மாறியது.
                       ரோமர்கள் ஆதிக்கம்...
            .ரோமர்களின் சாம்ராஜ்ஜியம் விரிவடையத்துடங்கியது..அதனால் ரோமுக்கு கீழ் இருந்த சிசிலித்தீவுகளிலிருந்த பொனிசியர்களை முதல் புனிக் யுத்தத்தில் வெற்றிகண்டு அதையே  சாக்காக வைத்து கார்த்தேஜிலும் இரண்டாம் மூன்றாம் புனிக் யுத்தங்களில் கார்த்தேஜை முழுவதுமாக கைப்பற்றிக்கொண்டார்கள். இதற்கு ரோமர்கள் கொடுத்த   விலை அதிகம். கார்த்தேஜிய ராணுவத்தில் பழக்கப்படுத்தப்ட்ட ஆப்ரிக்க யானைகள் போரில் பயன்படுத்தப்பட்டன. இந்தவகை யானைகள் மிக மூர்க்கமானவைகள். ஆனால்   இந்திய யானைகளைப்போல் விசுவாசமானவைகள் அல்ல. தனக்கு ஆபத்து அல்லது துன்பம் என்று வரும்போது அவைகள் எஜமான் என்றும் பாராது. பகைவன் என்றும் பாராது..
        தன் எஜமானையும் திரும்பித்தாக்கும் குணம் கொண்டது. அத்தகைய நேரங்களில் அந்த யானைப்பாகன் தன் கையில் உள்ள வேலினால் அதன் மத்தகத்தைப்பிளந்து அந்த   மதம்பிடித்த யானையைக்கொன்று விடுவான். இல்லாவிடில் அந்த யானை தன் எஜமானனுக்கு விளைவிக்கும் சேதம் மிகவும் அதிகமாக இருக்கும். அது எதிரிக்கு மிகவும்
அனுகூலமாகிவிடும்
      மூன்றாம் புனிக் யுத்தம் ரோமர்களுக்கும் சரி கார்த்தேஜ் மக்களுக்கும் சரி வாழ்வா...சாவா... என்றபடி நடந்ததால் உயிர்ச்சேதம் இரு பக்கத்திலும் மிகவும் அதிகம்.   எனவே ரோமர்கள் கார்த்தஜை வேற்றிகண்ட பிறகு அந்த நாட்டு குடிமக்களை மிகவும் கொடுமையாய் நடத்தினர். கண்னில் தென்பட்ட ஆண்களை கண்ட இடத்தில்   வெட்டிப்போட்டனர். தெருத்தெருவாய்...வீடுவீடாய்ப்புகுந்து பெண்களை மானபங்கப்படுத்தினர்...ஆண்களையும் குழந்தைகளையும் கொண்றனர்... அல்லது அவர்களை   அடிமைப்படுத்தி கடலில் படகு செலுத்தவும் துடுப்பு வலிக்கவும் கொடும் வேலை வாங்கவும் பயன்படுத்தினர். [ பென் ஹர் படம் பார்த்தால் கப்பலில் துடுப்புவலிப்பவர் படும் பாடு   தெரியும். ] இந்த கார்த்தஜின் வெற்றியின் நினைவாக வெற்றித்தூண்கள் எனப்படும் ஜயஸ்தம்பங்களை நட்டார்கள். இந்த ஜயஸ்தம்பங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாய்   அறிவித்துள்ளது.
      ஒருவழியாக இந்த அக்கிரமங்கள் எல்லாம் ஒழிந்த பிற்பாடு இந்நகரை ரோமர்கள் தங்கள் சொந்த குடிமக்களைக்கொண்டு வந்து குடி அமைத்தினர். இப்படியாக பல நூற்றாண்டுகள்  கடந்தன. கிரிஸ்த்து பிறப்பதற்கு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ரோமையில் ஜூலியஸ் சீசர் பட்டத்திற்கு வந்தார்.. அவர் தன்னை முடிசூடா மன்னனாக அறிவித்துக்கொண்டார்.
ஆனால் ரோமை நாட்டு மக்கள் அவர் மேல் உள்ள பிரியத்தால் அவரை கடவுளாகவே பாவித்தனர். அரசாங்கமும் இதை சாக்காக வைத்துக்கொண்டு சீசரை அரசனாக மட்டுமின்றி  கடவுளாகவும் வணங்கவேண்டும் என்றும் அப்படிச்செய்ய மறுப்பவர்களை ராஜ துரோகம் சாட்டி கொடுமையாய் கொல்ல வேண்டும் எனவும் ஆணை வெளியிடப்பட்டது. இந்த ஆணை
ரோமை சாம்ராஜ்ஜியத்திற்குபட்ட அனைத்து நாடுகளிலும் அவசியம் பின்பற்றப்படவேண்டும் எனவும் அதற்கான அதிகாரம் அந்தந்த நாட்டை ஆளும் ரோமை ராஜப்பிரதிநிதிகளுக்கு  வழங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. கார்த்தேஜிலும் இந்த சட்டம் அமுல் படுத்தப்பட்டது.
       இந்த ரோமை அரசாங்க ஆணை கிரிஸ்த்துவர்கள் மத்தியிலும் யூதர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கர்த்தராகிய யேசு கிரிஸ்த்துவை அன்றி வேறு கடவுளை   நாங்கள் வழிபட மாட்டோம். சீசரை அரசராக ஏற்போம் ஆனால் கடவுளாக அவரை வழிபட மாட்டோம் என்று அரசாங்க ஆணையை எதிர்த்தார்கள். யூதர்கள் தங்கள் மூதாதையர்கள்
வணங்கிய இஸ்ராலிய கடவுளையன்றி வேறு கடவுளை வழிபட மாட்டோம் என்று யூதர்களும் இந்த அரசாங்க ஆணையை எதிர்த்தார்கள். ரோமை சாம்ராஜ்ஜியம் முழுவதும் இது   எதிரொலித்தது. எனவே ரோமை சம்ராஜ்ஜிய அதிபதி தன் ஆட்சிக்குட்பட்ட அனைத்து நாடுகளிலும் கிரிஸ்த்துவ மதமும் யூத மதமும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிதார்கள்.
         அதைத்தொடர்ந்து கார்த்தேஜிலும் வேத கலாபனை ஆரம்பித்தது.
கி.பி.202ல் ரோமையை ஆண்ட சக்கரவர்த்தி செப்டிமஸ் செவெருஸ் சிலையும் அவர்கள் தெய்வங்களான குரு என்னும்ஜுபிடர் மற்றும் அஸ்ட்டரோத் போன்று பல தெய்வச்சிலைகள்   கார்த்தேஜின் டவுன் ஹாலில் வைக்கப்பட்டன.
   கார்த்தேஜின் பிரஜைகள் அரசாங்க ஆணைப்படி குடும்பம் குடும்பமாக வந்து தங்கள் ராஜ விசுவாசத்தைக்காட்டவேண்டி அவைகளுக்கு வணக்கமும்
தூபாராதனையும் காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டனர். மறுத்தவர்கள் ஆக்கினைக்கு ஆட்படுத்தப்பட்டனர். இப்படியாக பெர்பேத்துவா குடும்பமும் வரவழைக்கப்பட்டனர். பிரச்சனை இங்கு ஆரம்பித்தது.
          பெர்பேத்துவா ரோமைய வம்ஸாவழியில் ஒரு உயர் குலத்தில் உதித்த பெண். இருபத்திரண்டு வயதான அவளுக்கு ஒருபால்குடி மறவா குழந்தையும் இருந்தது. அவளது தாயார்  கிரிஸ்துவர். ஆனால் தந்தை புறஜாதியார்.. கிரிஸ்த்துவை பின்பற்றாதவர். எனவே இந்த நாளிள் தன் மகளுக்கு என்ன நடக்கப்போகிறது என்று அவருக்கு மிக நன்றாகத்தெரிந்ததால்
அவர் மிகவும் கலக்க முற்றார்.எனவே அவர் கிரிஸ்த்துவை மிகவும் வெறுத்தார். மேலும் பெர்பேத்துவாவின் சகோதரன் சதுர்ஸும் கிரிஸ்த்துவை ஏற்றுக்கொண்டது அவருக்கு பெரும்  துன்பமானது. இந்த காலகட்டங்களில் பூர்வீக கிரிஸ்த்துவர்களைவிட புதிதாக மனம்மாறிய ஞானஸ்நானம் பெற காத்திருந்தவர்களின் நிலைதான் பெரும் மோசமாயிற்று.
       வேத விரோதிகளும் இப்படிப்பட்டவர்களையே குறிவைத்து பிடித்து ஆளுனர்களிடம் சேர்ப்பித்தனர்.   இப்படியாக பெர்பேத்துவா, அவள் அடிமைப்பெண் பெலிசித்தா மற்றும் ஆண் வேலைக்காரர் ரிவொகாட்டஸ், மற்றும் செகுண்டுலெஸ் மற்றும் பெர்பேத்துவாவின்   சகோதரர் சதுர்ஸ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு ஆளுனரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்கு முந்தின நாள் பெர்பேத்துவாவின் தகப்பனார் ரகசியமாக அவரை சிறையில்   சந்தித்தார். மகள்மேல் உள்ள பாச மிகுதியால், " மகளே... என் நேச மகளே.. பெர்பேத்துவா.. என் முதுமையை முன்னிட்டுக்கூட வேண்டாம்... உன் பால்குடி மறவாத உன் குழந்தையை  பார்...அதன்முகம் பார்த்து சொல்... நீ கிரிஸ்த்துவை விட்டுவிடுகிறேன் என்று சொல்...இன்றே உன்னை வெளியே கொண்டுவந்து விடுகிறேன்...இந்த வயதான காலத்தில்
எனக்கு இது எல்லாம் தேவையா...நீ இல்லாமல் நான் செத்துவிடுவேன் மகளே..எனக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்.. கிரிஸ்த்துவை விட்டுவிடு... அந்த மதம் மிகவும் கொடியது...   உலக இன்பங்களையும் மனித உறவுகளையும் பிறிக்கும் அந்த யேசு கிரிஸ்த்துவை விட்டுவிடு..." என்று அந்த பெரியவர் குமுறிக்குமுறி அழுதார்.
      ஆனால் பெர்பேத்துவா நிதானமாக கூறினாள், " அப்பா...நீங்கள் என்மேல் வைத்துள்ள பாச மிகுதியால் இவ்வாறு பேசுகிறீர்கள்...எனக்கு நீங்களோ என் குழந்தையோ ஒரு  பிரச்சனையே இல்லை..பிறப்பிப்பதும் இறக்கச்செய்வதும் ஆண்டவன் சித்தம்.. நீங்கள் யேசுவைப்பற்றி தெரிந்துகொண்டது தவறானது.. கிரிஸ்த்துவம் அன்பை போதிப்பது.. அதன்   நெறிமுறைகள் சுலபமானவை..நேர்மையானவை..இவற்றை அனுபவித்துப்பார்த்தால்தான் உணரமுடியும்..நான் யேசுவை தேர்ந்துகொள்ளவில்லை... யேசுதான் என்னை
தேர்ந்துகொண்டார் ...அவர் எனக்குள்ளாகவே இருக்கின்றார்... எனவே என்னால் அவரை மறுதளிக்கமுடியது...நீங்கள் போய்வாருங்கள்." என்றாள்..
அடுத்த நாள் விசாரணை ஆரம்பமானது.
            கார்தேஜின் ரோமை ஆளுனர் ஹிலாரியானுஸ் தன் அவையில் வீற்றிருந்தார்..முதலில் பெர்பேத்துவா அழைக்கப்பட்டாள். அப்போது அவளது தகப்பனார் அவளின் ஆண்   குழந்தையை அவளுக்கு தூக்கிக்காண்பித்து, ' மகளே..பெர்பேத்துவா...இக்குழந்தையை முன்னிட்டு யேசுவை மறுதலி.. ரோமை அதிபதிக்கு வணக்கமும் ஆராதனையும் செலுத்து"   என்றார்..
         விசாரணையின்போது அவள் தகப்பனார் குறுக்கிட்டது அவருக்குப்பிடிக்கவில்லை.. எனவே, " யாரது அங்கே...இந்தகிழவனை வெளியே துரத்தி நையப்புடையுங்கள் " என்றார்..
அந்தக்கிழவரை அப்படியே அலாக்காக தூக்கிவந்து வெளியே வைத்து கோலால் நையப்புடைத்தார்கள். அவர் அலறிய சப்த்தம் பெர்பேத்துவாவுக்கு மிக நன்றாகக்கேட்டது.. மிகுந்த  விசனமுற்றாள் பெர்பேத்துவா.
ஆளுனர் ஆரம்பித்தார், " சொல் பெர்பேத்துவா,... நம் சீசரை அரசனாகவும் கடவுளாகவும் ஆராதிப்பாயா ?.. நம் முன்னோர்களின் கடவுளான் ஜுபிடரையும் வீனஸையும்   ஆராதிப்பாயா?." என்றார். அதற்கு பெர்பேத்துவா " நான் சீசரை அரசராக ஏற்றுக்கொள்வேன்.. அதற்கான வணக்கமும் மரியாதையும் எனக்கு எப்போதும் உண்டு.. ஆனால் அவரை
நான் கடவுளாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்... வேறு கடவுளர்களுக்கு தூப ஆராதனையும் காட்ட மாட்டேன் " என்றாள்.
        ஆளுனர், " அப்படியானால் நீ ஒரு கிரிஸ்த்துவளோ ?" என்றார்.
பெர்பேத்துவா உடனடியாக, " ஆம். நான் ஒரு கிரிஸ்த்துவள் தான். " என்றாள்.
ஆளுனர் கோபமுற்று ," பெர்பேத்துவா,.... உன் குலப்பெருமையை முன்னிட்டும்... உன் வயோதிக தந்தையை முன்னிட்டும்... உன் குழந்தையை முன்னிட்டும்...உனக்கு ஒரு  வாய்ப்பு தருகின்றேன்...யேசு கிரிஸ்த்துவை விட்டுவிடுவதாக சத்தியம் செய்... நம் சீசரையும் நம் கடவுளர்களையும் அவமதிக்காதே.. உன் ராஜ விசுவாசத்தைக்காட்டு " என்றார்.
     அதற்கு பெர்பேத்துவா, " ஆளுனர் அவர்களே... நான் யேசுகிரிஸ்த்துவை மறுதலிக்க மாட்டேன்.. இது சத்தியம். " என்றாள்.
ஆளுனர் மிகுந்த கோபமுற்று, " பெர்பேத்துவா...நீ என்ன பேசுகிறாய்... யாரிடம் பேசுகிறாய் என்பதை மறந்துவிட்டாய்...இதற்கெல்லாம் என்ன தண்டனை தெரியுமா ?" என்றார்.
பெர்பேத்துவா, " ஆம்... தெரியும் " என்றாள்.
ஆளுனர் அன்றைய விசரணைக்காக வ்ந்திருந்த பெலிஸித்தம்மாள் மற்றும் முதலில் குறிப்பிட்ட மூன்று ஆண்களையும் விசாரிக்க அவர்களும் பெர்பேத்துவா கூறியபடியே   கூறினார்கள்.
ஆளுனர் உடனடியாகவே தீர்ப்பு கூறினார்..." உங்கள் மீது ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நம் சீசரையும் நம் கடவுளர்களையும் அவமதித்த  குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் கசையால் அடிப்பித்து மிருகங்களுகு இறையாகப்போட உத்திரவிடுகின்றேன்...பெலிஸித்தா தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதால்  அவள் குழந்தை பெற்ற பிறகு அவளுக்கும் இதே தண்டனை தரப்படுகின்றத்து.. நம் பேரரசரின் பிறந்த நாள் அடுத்தவாரம் வர இருப்பதால் அதைக்கொண்டாடும் வகையில்  அன்றைய தினத்தில் இவர்கள் தண்டனை நிறைவேற்ற உத்திரவிடுகின்றேன். அதுவரையில் அவர்கள் அனைவரையும் கடுங்காவலில் வைக்க உத்திரவிடுகின்றேன். "
               கொடும் சிறை....
    பெர்பேத்துவாவும் அவரது சகோதரர் சதுர்ஸும் பெலிசித்தம்மாவும் மற்றும் அவர்கள் ஆண் வேலைக்காரர்களும் பாதால சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் பெர்பேத்துவாவின்  தகப்பனாரும் ரகசிய உதவி குருக்களான தெர்ஸியுஸ் மற்றும் போம்பினுஸ் என்னும் இருவரும் புதென் என்னும் சிறைகாவலனை லஞ்சம் கொடுத்து கவனித்துக்கொண்டார்கள்.
உண்மையில் அந்த சிறைகாவலனும் ஒரு ரகசிய கிரிஸ்த்துவந்தான்..அவன் பெர்பேத்துவாவின் குழந்தைக்கு அவள் தண்டனைக்காலம் வரும்வரை பால் கொடுத்து  கவனித்துக்கொள்ளவும், அவர்கள் குடும்ப நண்பர்கள் அவர்களை சிறையில் ரகசியமாய் வந்து சந்திக்கவும் அனுமதி அளித்தான். அந்த சிறைகாவலனுக்கு பெர்பேத்துவாவின் மீது   அவ்வளவு மரியாதை இருந்தது. அவள் கடவுள் ஆசீர் பெற்றவள் என்றும் நம்பினான்.
      தண்டனைகாலம் வர இன்னும் மூன்று நாள் தான் இருந்தது. அப்போது பெர்பேத்துவாவின் சகோதரர் சதுர்ஸ் கூறியதாவது. " என் சகோதரி..கடவுள் உன்மட்டில் இருகின்றார்  என்பதை நான் விசுவசிக்கின்றேன்... உன் பக்திக்கு கடவுள் உனக்கு செவி மடுப்பார். எனவே நீ அவரிடம் நாம் விடுதலை ஆவோமா அல்லது சாவோமா.. சாவது என்றால் நாம்  எப்படி சாவோம் என்பதை எனக்கு ஆண்டவரிடம் கேட்டுச்செல் " என்றார். அதர்க்கு அவர், " நான் நாளை ஆண்டவரிடம் கேட்டு உனக்கு சொல்வேன் " என்றாள்.
            அப்போது பெலிசித்தாள் எஜமானி, " நீங்கள் எல்லோரும் என்னை விட்டுவிட்டு போகப்போகிறீர்களா?..நானும் உங்களோடே வர எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள் அம்மா...  நாம் அனைவரும் ஒன்றாகவே வாழ்ந்தோம்.. ஒன்றாகவே மரிப்போம்... ஒன்றாகவே பரலோகம் போவோம் அம்மா... என்மேல் இரக்கம் வைத்து தயவு செய்து எனக்காக மன்றாடுங்கள்..
எனக்கு வயிற்றில் எட்டு மாத குழந்தை இருப்பதால் எனக்கு உங்களுடன் வேத சாட்ச்சி முடி கிடைக்காமல் போய் விடுமோ என்று பயப்படுகிறேன் " என்று பெர்பேத்துவாவை   கட்டிக்கொண்டு அழுதாள். அனைவரும் பிரார்த்தனையில் ஈடு பட்டனர். அப்போது அவர்களின் வேண்டுதல் கேட்கப்பட்டதாக ஒரு அருங்குறி காட்டப்பட்டது. ஆம்.. அதிசயம்  எட்டுமாத கர்ப்பிணி பெலிசித்தாவுக்கு உடனடியாக பிரசவ வலி ஏற்பட்டது. சற்று நேரத்திற்குள் அவளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை குறைமாசமாக பிறந்தது. பிறந்த
குழந்தையை ஒரு கிரிஸ்த்துவ தம்பதியினர் தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொண்டனர். கடுமையான பிரசவ வலியினால் பெலிசித்தாள்.மிகவும் துயறுற்றாள்.. அப்போது சிறை அதிகாரி  புதென் கூறினார்..."பெலிஸித்தா..நீ இந்த வலிக்கே இவ்வளவு துன்பப்படுகின்றாயே.....நாளைக்கு மரண விளையாட்டரங்கத்தில் கொடிய விலங்குகளுக்கு உன்னை
இறையாகப்போடுவார்களே அப்போது நீ என்ன செய்யப்போகிறாய் ? என்றார்.. அதற்கு பெலிசித்தாள் " அதை கடவுள் பார்த்துக்கொள்வார்...எனென்றால் வாழ்வது நானல்ல...என்னில்  கிரிஸ்த்துதான் வாழ்கின்றார்... எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை." என்றாள். இந்த நேரத்தில் செகுண்டுலெஸ் என்னும் வேலையாள் இவர்களோடு வேத சாட்ச்சி முடி பெறாமல்
சிறையிலேயே மரித்தார்.
             அந்த இரவில் பெர்பேத்துவா ஒரு காட்சி ஒன்று கண்டாள். பழைய ஏற்பாட்டில் யாக்கோபு கண்ட ஏணிபோல் அது இருந்தது. அந்த ஏணி தங்கத்தால் செய்து பரலோகத்தையும்  பூலோகத்தையும் இணைத்தது. அந்த ஏணி மிகவும் குறுகலாக ஒருவர் மட்டும் ஏறும்படி இருந்தது. அந்த ஏணியின் இருபுறமும் இரும்பினால் செய்த பலவகையான ஈட்டி, வேல்,
கத்தி.குறடுகள், ஊக்குகள் போனறவை பொருத்திவைக்கப்பட்டிருந்தன. அஜாக்கிராதையாக ஏறும் எவரும் அவற்றால் சின்னபின்னமாக்கபடுவது உறுதி. ஏணியின் கால் பகுதியில்   ஒரு பெரும் ராஜநாகம் படமெடுத்து அந்த ஏணியில் யாரும் ஏறிவிடாதபடி காவல் காத்துக்கொண்டிருந்தது. அந்த ஏணியில் பெர்பேத்துவாவின் சகோதரன் சதுர்ஸ் மிக வேகமாக ஏறி
கடைசி படியில் கால் வைத்துக்கொண்டு " பெர்பேத்துவா...பார்த்து ஜாக்கிரதையாக மேலே ஏறிவா.. அந்த பெரிய பாம்பு  உன்னைக்கடித்துவிடாதபடி பார்த்துகொள்...நீ இங்கே வரும்வரை
நான் உனக்காக இங்கேயே காத்துக்கொண்டிருப்பேன் " என்றார்.. அதற்க்கு பெர்பேத்துவா, " சகோதரா...பயப்பட வேண்டாம்... கடவுள் மேல் ஆணையாக இந்த பாம்பு என்னை  ஒன்றும் செய்யாது..இதோ பார் நான் வருகிறேன் " என்று கூறியபடி அந்த ஏணியை அணுகினாள். உடனே அந்தப்பம்பு படுத்துக்கொள்ளவே பெர்பேத்துவா அதன் தலைமீதே
தன் காலை வைத்து ஏணியின் மீது ஏறினாள்...
       அந்த ஏணியின் உச்சி பரலோகத்தில் ஒரு அழகிய கிராமத்தில் இருந்தது... அங்கு ஏறாளமான கால் நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன. அங்கே ஒரு பெரியவர் நீண்ட தாடியுடன்  செம்மரி ஆடுகளிடமிருந்து பால் கறந்துகொண்டிருந்தார். அவளை திரும்பிப்பார்த்து, "  வா...மகளே..பெர்பேத்துவா...உன் வரவு நல் வரவாகுக... இதோ இந்த பாலைக்குடி " என்றர்.
     பெர்பேத்துவா தன் கைகள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு அந்த பாலை வாங்கிக்குடித்தாள்.. அது சொல்ல முடியாத இனிமையாயிருந்தது.. அப்போது அங்கிருந்த மற்றனைவரும்  " ஆமென் " என்றனர்.
அந்த சப்தத்தில் திடீரென கண் விழித்தாள் பெர்பேத்துவா..தன் நாவில் இன்னும் அந்த பாலின் இனிமையை அவள் உணர்ந்தாள்..அந்த இரவே தன் சகோதரன் சதுர்ஸை எழுப்பி,
" நாம் நாளைக்கு இந்த உலக வாழ்வை முடிக்கப்போகின்றோம்... நமக்கு பரலோகத்தில் வேத சாட்சி முடி காத்துக்கொண்டிருக்கின்றது" என்றாள்.
            " மரண விளையாட்டரங்கம்."
        இன்றைக்கும் பெர்பேத்துவா, பெலிசித்தாள், சதுர்ஸ், சதுராத்துஸ், ரிவோகாட்டஸ் ஆகிய ஐவரையும் கொண்ற அந்த மரண விளையாட்டரங்கம் இந்த கர்த்தேஜில் இருக்கின்றது.  இந்த விளையாட்டரங்கம் ஐந்த அடுக்கு பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கபட்டது. வட்டவடியான அந்த அரங்கத்தின் நடுவே ஒரு நெடும் கல் தூண் இன்றும்
உள்ளது. அதன் அருகே ஒரு நிலவரை. அதில் ஒரு பாதுகாப்பான அறை.. அடுத்தநாள் கொல்லப்படப்போகும் கைதிகள் அந்த அறையில்தான் தங்க வைக்கப்படுவார்கள். இந்த   அறையில் தான் பெர்பேத்துவாவும் பெலிஸித்தம்மாளும் மற்றும் அவள் சகோதரன் சதுர்ஸும், சதுர்னினும், ரிவோகாட்டஸும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
[ பலியாக்கப்படும் கைதிகளை அறிமுகப்படுத்தும்பொருட்டு அவர்கள் பெயரை சொல்லி அழைத்து பவனியாக வட்டவடிவில் சுற்றிவரச்செய்வார்கள். பலத்த கரகோஷங்களுடன்   அப்போதே ரசிகர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.. பிறகு மிருகங்களை பவனியாக கொண்டுவருவார்கள்..பிறகு அவைகளை கோபமூட்டுவதர்க்காக அவற்றை ஒன்றோடு  ஒன்றாக மோத விடுவார்கள். பிறகு கைதிகளை நடுவிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து வீரர்களை விட்டு கைதிகளை சாட்டையால் சுழற்றி அடி பிண்ணி எடுத்துவிடுவார்கள்.. அந்த   வெறியாட்டத்தில் குற்றவாளிகளின் ரத்தம் தெரிக்கும்.. இந்த ரத்த வாடைக்கு கொடிய வனவிலங்குகள் மோப்பம் பிடித்துக்கொண்டு சீறும்... சில கர்ஜிக்கும்.. அவற்றை அவிழ்த்து
விட்டால் அவ்வளவுதான்.. இதற்காகவே அந்த மிருகங்களை சில நேரம் பட்டினி போட்டு வைத்திருப்பர். குற்றவாளிகளை அந்த தூணிலிருந்து அவிழ்த்துவிட்டு மிருகங்களை   அவர்கள் மேல் ஏவி விடுவார்கள்.. பிறகு அவர்கள்கதி அதோ கதிதான். மிருகங்களிடமிருந்து தப்பிக்க கைதிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுவார்கள்..மிருகங்கள் அவர்களை
தாக்கி சின்னபின்னா படுத்தும்..அதைக்கண்டு ரசிகர்கள் சந்தோஷ மிகுதியால் வெறிகூச்சல் போடுவார்கள்.. இந்த சப்த்தத்தைக்கேட்க்கும்போது மிருகங்கள் இன்னும் கோபாவேசம்   கொண்டு வெறிகொண்டு தாக்க ஆரம்பிக்கும். இந்த பின்னனியை நினைவில்கொண்டு மேற்கொண்டு கதைக்குப்ப்போவோம் ]
           சீசரின் பிறந்த நாளில் நடக்கபோகும் கேளிக்கைகளை கண்டு ரஸிக்க ஏராளமான கூட்டம் இந்த மரண அரங்கத்தில் சேர்ந்தது. ஆளுனரும் பெரும்பொருப்பு வாய்ந்தவர்களும்   அவர்தம் இடத்தில் [பால்கணியில்] அமர்ந்திருந்தனர். ஆட்டம் ஆரம்பமாகியது. கைதிகளை அறிமுகப்படும்பொருட்டு அனைவரும் அரங்கத்தைச்சுற்றி வரச்செய்தார்கள். முதலில்   சதுர்ஸும் அவர் பிறகு சதுர்னினும், ரிவொகாட்டஸும் அவர்களுக்குப்பிறகு இடண்டு பெண்களான பெர்பேத்துவாவும் பெலிஸித்தம்மாவும் நடந்துவந்தார்க்ள்.
     அனைவரும் துனிக் துணியால் ஆன வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார்கள். குழந்தை பிறந்து மூன்று நாளே ஆகியிருந்த பெலிஸித்தாவுக்கு தாய்ப்பால் சுறந்துகொண்டே   இருந்தது. அது அவர் அனிந்திருந்த அங்கியை நனைத்தது. அந்த அரங்கத்திலிருந்த பலர் " யார் வருவது... அது பெர்பேத்துவாவும் பெலிசித்தம்மாவும் அவர் சகோதரர் சதுர்ஸுன்   அவர் வேலை ஆட்க்களும் தானே !
அடக்கடவுளே... இவர்களுக்கு ஏன் இந்தக்கஷ்டம்..அவர்கள் எப்பேர்பட்ட குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்.. அடடா.. .அவர்களுக்கா இந்த கதி... அடப்பாவமே என்று பலர்  வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை காட்டிக்கொண்டனர். ஆனல் பெர்பேத்துவாவும் பெலிசித்தம்மாளும் முகத்தில் கொஞ்சம் கூட கலவரத்தையோ,,,பயத்தையோ   காட்டவில்லை. ஏதோ தங்கள் சொந்த ஊரில் தாய் தகப்பனைக்காணப்போகும் ஒரு சந்தோஷத்தைக்காட்டினார்கள். ஆனால் இவற்றைப்பார்த்தவர்கள் தான் மிரண்டனர்..
     ஆளுனரின் பால்கணிக்கு கீழே அவர்கள் அனைவரும் வரும்போது சதுர்ஸ் " ஆளுனர் அவர்களே.. நீங்கள் தவறு செய்கிறீர்கள்.. ஒருபாவமும் அறியாத எங்களை வீணே கொலை  செய்கிறீர்கள்...இதெர்க்கெல்லாம் நீங்கள் ஆண்டவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் " என்றார்.. அதற்கு ஆளுனர் " இவர்களை சவுக்கால் அடியுங்கள் " என்றார்.
அவருக்குப்பாதுகாவலர்கள் அப்போதே அவர்கள் அனைவரையும் சவுக்கால் அடித்தனர். அரங்கை சுற்றிவந்ததும் அவர்கள் அனைவரையும் நடுத்தூணில் சேர்த்துக்கட்டி சவுக்கால்  வெளு வெளு என்று வெளுத்தனர். பெண்கள் இருவரையும் முகத்திலேயே அடித்தனர்.. அவர்கள் முகம் ரத்தக்களரி ஆனது.
அதர்க்குள் " அடிப்பதை நிறுத்துங்கள்.. அவர்கள் அடிவாங்கியே செத்துவிடப்போகிறார்கள்..அப்புறம் மிருகங்களுக்கு இறையாகப்போட முடியாமல் போய்விடும். அவர்களை  அவிழ்த்துவிட்டு மிருகங்களை திறந்துவிடுங்கள் " என்றார் ஆளுனர். ஒருவன் ஒரு பெரும் காட்டுப்பன்றியை சங்கிலி போட்டு கட்டியபடி அழைத்துவந்தான். முதலில் சதுர்ஸ் மீது
அந்த காட்டுப்பன்றியை ஏவி விட்டான்.. அது வெகு மூர்க்கமாக ஓடியது. அதைக்கட்டியிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு அந்த அரங்கத்தை சுற்றிவந்து வெறிகொண்டாற்போல்  சதுர்ஸை விட்டுவிட்டு அதை அழைத்துவந்தவன்மீது பாய்ந்து அவன் வயிற்றை குத்திக்கிழித்தது.. மூன்று நாட்களுக்குப்பிறகு அவன் செத்தான்.
   அடுத்துஒருபெரும் கரடியை சதுர்ஸ் மீது ஏவினர்.. அது அவரை முகர்ந்து பார்த்துவிட்டு மற்ற இரண்டு பேர் மீது பாய்ந்துவிட்டு ஓடிவிட்டது. அப்போது சிறைகாவலன் புதென்   பெர்பேத்துவாவின் சகோதரனாகிய சதுர்ஸைப்பர்த்து " இந்த முறை நீ தப்பிக்கமுடியாது... இந்த தடவை வரப்போவது ஒரு பெரும் சிருத்தை..இதர்காகவே அது இரண்டு நாட்க்களாக  பட்டினி போடப்பட்டுள்ளது என்றான்.. அதற்கு சதுர்ஸ்.." நான் விரும்பியதும் இதுவே...ஆண்டவரின் திருவுளமும் இதுவே." என்றார்.
       பாய்ந்து வந்த சிருத்தை சதுர்ஸை கடித்துக்குதறியது. போதாததற்கு அவர் கழுத்தின் பின்பகுதியில் கடித்து அவரை தரதர வென்று இழுத்துக்கொண்டு போய் சிறைகாவலன்   புதென் அருகில் போட்டுவிட்டு மற்றவர்களைத்தாக்க ஆரம்பித்தது. சதுர்னினும், ரிவோகாட்டஸும் கூட சிறுத்தையல் கடுமையாக தாக்கப்பட்டனர். சிருத்தை பெண்களான   பெர்பேத்துவாவையும் பெலிசித்தம்மாவையும் திரும்பிகூட பார்க்கவில்லை.. அவர்களைப்பொருத்தமட்டில் ஆண்டவன் சித்தம் வேறுமாதிரி இருந்தது. இந்த தருணத்தில் சதுர்ஸ்   சிறைகாவலனிடம் மெதுவாகப்பேசினார்... "புதென்.. இந்த கடும் பாடுகள் மற்றவர்கள் திருச்சபையின் சத்தியத்தில் நிலைபெற வேண்டும் எனபதற்காகவே... மனதில் திடம் கொள்...
என்னை மறவாதே..மீண்டும் சொர்கத்தில் சந்திப்போம்.. எங்கே உன் மோதிரம்... அதைக்கொடு நண்பா என்று கேட்டுவாங்கி தன் ரத்தத்தில் நினைத்துக்கொடுத்தார்.. அவன் அதை   வாங்கி தன் கண்களில் ஒற்றிக்கொண்டான். தன் வாழ்நாள் வரை அந்த மோதிரத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.
          ஆக சதுர்ஸ், சதுர்னின், ரிவோகாட்டஸ மூவரும் சிருத்தையால் குதறப்பட்டு ரத்த சகதியில் கிடந்தார்கள்..வேடிக்கை பார்க்கவந்தவர்கலில் ஒருவன்.." ஆஹா... என்ன காட்சி இது  ..பிரமாதம். இந்த மூன்று பேரும் ரத்த ஞானஸ்னானம் பெற்றுவிட்டார்களடா " என்று எகத்தாளமாகக்கூவினான்.. உண்மையில் இந்த வேத சாட்ச்சிகள் ஐந்து பேரும் அந்த முந்தைய
நாளில்தான் ஞானஸ்நானம் வாங்கி இருந்தனர்.
    அடுத்ததாகப்பெண்கள்..பெர்பேத்துவாவும் பெலிசித்தம்மாவும்..இந்த இரண்டு பெண்களும் எதர்க்கும் பயந்த மாதிரி தெரியவில்லை. பாய்ந்துவந்த அந்த முறட்டுக்காளையை  துணிவாகஎதிர்த்து நின்றார்கள்.. கொடூரமாக தாக்கியது அந்த முறட்டுக்காளை...இரண்டு பெண்களும் துவண்டு விழுந்தார்கள்..பெர்பேத்துவாவுக்கு முதுகில் விலா எலும்பு உடைந்தது.
இருப்பினும் மெதுவாக எழுந்து தரையில் உட்கார்ந்து தன் ஆடைகளை சரிசெய்துகொண்டு கலைந்திருந்த தன் கூந்தலை பின்னிக்கொண்டாள்.. வேத சாட்ச்சி முடி பெறப்போகும்  பெண்கள் கலைந்த கூந்தலாக இருக்கக்கூடாது என்பது மறபு. அவள் தரையில் ஊார்ந்தபடியே பெலிஸித்தாவை எழுப்பினாள். அம்மா... மாடு போய்விட்டது... . மெதுவாக எழுந்திரியுங்கள் என்றாள்..அப்போது நினைவுவந்த பெலிசித்தாள் " காளைமாடு ஏன் என்னை தாக்கவில்லை? என்றாள். அதற்கு பெர்பேத்துவா. .  . மாடு உங்களைக்குத்தி தூர விசிறியது உங்களுக்கு நினைவில்லையா? இதோ பாருங்கள் மாடு உங்களைக்குத்திய காயம்...இதோ உங்கள் கிழிந்த உடுப்பு. என்றாள்..ஒருவழியாக   பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு எழுந்து நின்றனர். இனிமேல் தாங்கள் உயிரோடிருப்பது இன்னும் சில நிடங்கள்தான் என்று உண்ர்ந்து பிறியாவிடையாக
ஒருவருக்கொருவர் அன்பினாலும் சமாதானத்தினாலும் முத்தமிட்டுக்கொண்டார்கள்.. உடனே எழுந்தது ஒரு பெரும் கூச்சல். " இதோ அவர்கள் இன்னும் சாக வில்லை... கொல்லுங்கள் அவர்களை"
       அடுத்த காட்ச்சியாக ஐந்து வீரர்கள் உருவிய கத்தியுடன் அரங்கினுள் நுழைந்தார்கள்...தரையில் குற்றுயிறாகக்கிடந்த சதுர்ஸ், சதுர்னின், ரிவோகாட்டஸ் ஆகிய மூவரையும்  இழுத்துக்கொண்டுவந்து நடுவிலிருந்த தூணோடு சேர்த்துகட்டினர். அந்த ஐந்து பேரையும் ஆளுக்கு ஒருவராக வெட்டிக்கொண்றனர். ஆனல் பெர்பேத்துவா முன்வந்தவன் போர்பயிற்சி
இல்லாதவன். அவன் அவளை கண்டபடி வெட்டினான்.. வெட்டு சரியாகப்படவில்லை.. அனாவசியமான வேதனையும் வலியும் தான் மிச்சமானது. முடிவாக பெர்பேத்துவா அவன்   வாளைப்பிடித்து தன் கழுத்தில் வைத்து " இப்போது குத்து" என்றாள்.. அவனும் தன் வலிமையான் கரத்தால் அந்த கத்தியை அவள் கழுத்தில் இறக்கினான். பெர்பேத்துவாவின்
ஆவி பிறிந்தது.
       அன்று பெர்பேத்துவாவின் காட்சிபடி முதலில் ஏணியில் ஏறியவர் அவள் சகோதரன் சதுர்ஸ்.. அவ்வாறே முதலில் இறந்தவர் சதுர்ஸ்.. கடைசியாய் இறந்தவர் பெர்பேத்துவா.
இந்த பெர்பேத்துவா,, பெலிஸித்தா..சதுர்ஸ்.. சதுர்னின்...ரிவொகாட்டஸ் ஆகியோர் இறந்ததும் அவர்கள் உடலை அவர்கள் பெற்றோர் பெற்றுக்கொண்டு தங்கள் சொந்த இடத்தில்   புதைத்தனர்.. பிற்பாடு அந்த இடத்தில் ஒரு தேவாலயம் ஒன்று கட்டினர்.. அந்த தேவாலயம் பசிலிக்கா மஜோரம் என்று இன்றுவரை அழைக்கப்படுகின்றது.. வெகு சாதாரணமாக
ஆயிரத்து எண்னூரு ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாலயம் இன்று பரிதாபமான நிலையில் இருக்கின்றது..இருபது அடி நிலவரைக்கு கீழே அவர்கள் ஐந்து பேருடைய கல்லரைகள்   உள்ளன. அந்த கல்லரைகளில் அவர்கள் பெயர்கள் பொறிக்கபட்டுள்ளன.

இப்போதும் மத்திய ஃப்ரன்ஸில் உள்ள வெர்ழோன் என்னும் ஊரில் நோத்திரிடொம் ஆலயத்தில் தூய பெர்பேத்துவாவின் சில எலும்புகளை அருளிக்கமாகக்கொண்ட ஒரு தேவாலயம் 

தூய பெர்பேத்துவாமற்றும் பெலிசித்தம்மவின் வேத சாட்சிமுடிபெற்ற திருவிழா மார்ச் மதம் 7 ஆம் தேதி வருகின்றது.
தூய பெர்பேத்துவா மற்றும் பெலிஸித்தம்மாளே எங்களுக்காக வேண்டிகொள்ளும்.


























இருகின்றது. அதிலுள்ள புனித பெர்பேத்துவாவின் சொரூபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment