Wednesday, June 5, 2013

ஓ...... சான்ட்டாரெம்....



ஓ...... சான்ட்டாரெம்....
      செயின்ட் ஐரீன் என்பதே நாளடைவில் சான்ட்டாரெம் என்று மாறிவிட்டது. செயின்ட் ஐரீன் என்று பல புனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்றாலும் ஒரே மாதிரியான முடிவையும்   வாழ்வையும் வாழ்ந்து காட்டிய இரு புனிதைகளைப்பற்றி நான் உங்களிடையே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றென். இன்றைய போர்த்துக்கள் நாட்டில் பாத்திமா புதுமை விளங்கிய
நகரிலிருந்து ஏறக்குறைய 35 கி.மி. தொலைவில் ஸ்பெயின் நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் திருத்தலம் தான் சான்டாரெம். இந்த ஊரில் வாழ்ந்து கற்பைக்காப்பாறிக்  கொள்ள தன் இன்னுயிர் தந்து வேத சாட்சி முடிபெற்ற ஒரு இளம்நங்கையின் பெயர் தான் ஐரீன்.
    போர்த்துக்கிசிய புராணங்களின்படி நம்முடைய ஐரீன் என்னும் கன்னிப்பென் கி.பி..7. ஆம் நூற்றாண்டில் பாத்திமா நகருக்கருகில் தோமர் நகரில் ஒரு பெரும் பிரபு வம்சத்தை  சேர்ந்த பெற்றோர்ககளுக்கு பிறந்ததாகவும் அவளுக்கு இயல்பாகவே உலக நாட்டங்களில் ஆர்வம் இல்லை என்றும் உலக இரட்சகராம் யேசுநாதர் மீது மிகுந்த நாட்டம்
கொண்டு வழ்ந்துவந்தாகவும் தெரிகின்றது. இத்தகைய நற்குணங்களால் கவரப்பட்ட அவரது மாமன் சீலியோ என்பவர் ரெமெஜியோ என்னும் வயதான துறவி ஒருவரை அவளுக்கு  ஆன்ம குருவாக நியமித்தார். ஆனால் அந்த ஆன்ம குருவுக்கு குணம் போதவில்லை. அவரே இந்த பெண்ணுக்கு வில்லனாக மாறினார்.
    ஒருநாள் நம் ஐரீனுக்கு உடல் நலம் குன்றியது. எனவே அருகிலுள்ள மடத்து கன்னிகா ஸ்த்திரீகளின் பராமரிப்பில் சேர்த்துவிடப்பட்டர். இந்தப்பெண்னுக்கு உடல் நலம்   சரியில்லை என்று கேள்விப்பட்ட அந்த நகரத்து கவர்னர் தன் மகன் பிரிட்டால்டோ என்பவரையும் தன்னுடனே அழைத்துக்கொண்டு ஐரீனை பார்க்க வந்தார். ஐரீனைப்பார்க்க   வந்திருந்த பிரிட்டால்டோவிற்கு ஐரீனைக்கண்ட மாத்திரத்தில் காதல் ஜுரம் பற்றிக்கொண்டது. ஐரீனுக்கு ஜுரம் சரியானவுடன் ஒரு நாள் அவள் கோவிலுக்கு தனியாக வரும்போது
சந்தித்து தன் மனத்திலுள்ள காதலை வெளிப்படுத்தி தன்னைக்கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று மிகவும் கேட்டுக்கோன்டான். ஆனால் ஐரீன் அவன் காதலை மிகவும்   நாகரீகமான முறையில் மறுத்து தன் கற்ப்பை யேசுவுக்கே அர்ப்பணித்துவிட்டதாகவும் அதனால் தன்னை மறந்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ள   வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டாள். பிரிட்டால்டோவும் உயர்குடியில் பிறந்தவனாதலால் அவள் கூற்றை ஏற்றுக்கொண்டு என்றாவது ஒருநாள் அவள் திருமணம் செய்துகொள்ள  முடிவெடுத்தால் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனவும் வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளகூடாது எனவும் இது விஷயமாக அவள் தனக்கு சத்தியம்  செய்து கொடுக்க வேண்டுமென்றும் அவளிடம் சத்தியம் வாங்கிக்கொண்டான். ஐரீனும் நடக்கவே முடியாத அந்த திருமணத்திற்காக தனக்கு திருமணம் என்று செய்ய வரும்போது   அவனையே திருமணம் செய்துகொள்வதாக சத்தியம் செய்து கொடுத்தாள். அந்த நேரத்தில் அவனிடமிருந்து தப்பித்துக்கொண்டால் சரி..     இந்த சூழ்நிலையில் அவரது   ஆண்மகுருவுக்கு கடும் சோதனை வந்தது. மெதுவாக அவர் ஐரீனை நெருங்கினார். அவரது தகாத எண்ணத்தை உடனே அறிந்துகொண்டள் ஐரீன். கடவுளிடம் தன்னை  இந்த கிழட்டுப்பூனைத் துறவியிடமிருந்து காப்பாற்றும்படியாக மன்றாடிக்கொண்டே வெளியே ஓடினாள்....தன் தகாத எண்ணத்தை ஐரீன் அறிந்துகொண்டாள் என்று உணர்ந்த
அந்த ஆண்மகுரு நல்லவர்போல் நடித்து அவளை நம்பவைத்து தங்களுடைய விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ளவேண்டுமென அவளை வற்புறுத்தி தேனீரில் ஒருவிதமன   விஷத்தைகலந்து கொடுத்துவிட்டார். ஐரீன் பெரிய இடத்துப்பெண். தன்னைப்பற்றி இவள் வெளியே சொல்லி தன் பெயரைக்கெடுத்துவிட்டால் தன் கதி என்னவகும் என்பது  அந்த கிழத்துறவிக்கு மிகவும் நன்றாகவே தெரிந்திருந்திருந்தது. எனவே சத்தம்போடாமல் ஐரீன் கதையை முடித்துவிட திட்டமிட்டர். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை.
        விஷம் மெதுவகவே வேலை செய்தது.  ஐரீனுக்கு வாந்தியும் வயிற்றுவலியும் அடிக்கடி ஏற்பட்டது. வயிறு புண்ணாகி வீங்கிவிட்டது. இந்திலை ஏற்பட்டதும் அந்த கிழத்துறவி ஐரீனுக்கு பாடம் சொல்லிகொடுப்பதை  நிறுத்திவிட்டு அவளைப்பற்றி வதந்திபரப்ப ஆரம்பித்தார். ஐரீனுக்கு தகாத உறவின் மூலம் கர்ப்பம் உண்டாகிவிட்டதாகவும் அவள் பிரிட்டால்டோவுக்கு துரோகம்
இழைத்துவிட்டதாகவும் அதனால்தான் ஐரீனுக்கு பாடம் சொல்லிக்கப்போகவில்லை எனவும் ஊர் முழுக்க கதை கட்டி விட்டார். இந்த கதையைக்கேட்ட பிரிட்டால்டோவுக்கு   கோபம் பொத்துக்கொண்டுவந்தது. அந்தப்பெண் ஐரீன் தனக்கு துரோகம் செய்துவிட்டாள்....தனக்கு கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டால் என்று தன் தந்தையிடம் போய் அழுதான்.
அவன் தந்தையும் நியாயம் அநியாயம் என்று எதையும் யோசிக்காமல் தன் மகனுக்கு துரோகம் செய்த அந்தப்பெண் ஐரீனை உடனே கொல்லும்படி உத்திரவிட்டார்.
    அப்போது ஐரீன் தனக்கு வரப்போகும் அபாயம் என்ன என்று அறியாமல் அந்த நபாவோ நதிக்கரையோரம் உலாவிக்கொண்டே ஜெபம் செய்து கொண்டிருந்தாள். அவள் பின்னே  வந்துகொண்டிருந்த இரு சிப்பாய்கள் அவ்ளை வெட்டிக்கொண்றனர். பிற்பாடு அவள் உடலை அந்த நபாவோ நதியில் வீசிச்சென்றுவிட்டனர். அந்த இரவிலே ஐரீன் தன் தாய்மாமன்
சீலியோவுக்குத்தோன்றி நடந்த உண்மைகளை அவரிடம் கூறி இப்போதும் தன் சடலம் அந்த நபாவோ நதியில் இருப்பதாகக்கூறி மறைந்து போனாள்.
அடுத்த நாள் கவர்னரும் அவரதுமகன் ப்ரிட்டல்டோவும் அடைந்த மனவேதனை கொஞ்ச நஞ்சமல்ல. கறைபுரண்டு ஓடும் நபாவோ நதியில் ஆட்க்களைவிட்டு ஐரீனின் சடலத்தை  தேடச்சொன்னார்கள். ஆனால் ஐரீனின் சடலம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.. ஆனால் யாரும் எதிர்பாரத ஒரு அற்புதம் அப்போது நிகழ்ந்தது.அந்த நபாவோ நதி இரண்டாகப்பிளந்தது. ஐரீனின் சடலம் இருக்கும் இடம் தெளிவகத்தெரிந்தது. பலரும் நதியில் இறங்கி ஐரீனின் சடலத்தை தொட்டுத்தூக்கிக்கொண்டுபோய் நதிக்கறையோரம்  வைத்து அங்கே ஐரீனுகாக ஒரு சமாதி எழுப்பப்பார்த்தார்கள். ஆனால் ஐரீனின் சடலத்தை யாராலும் நகர்த்தக்கூட முடியவில்லை. பிரிட்டால்டோ கூட அவளது சடலத்தை
தூக்கிச்செல்லப்பார்த்தான். ஆனால் அவனாலும் முடியவில்லை. எனவே அவள் நினைவாக ஐரீனின் ஒரு கற்றைமுடியை அவளது அருளிக்கமாக எடுத்துச்சென்றான்.
          அப்போது யாரும் எதிர்பாறாதபடி ஒரு சம்பவம் நடந்தது. பரலோகத்திலிருந்து இறங்கிவந்த பல சம்மனசுகள் ஐரீனுக்காக சலவைக்கற்கலால் ஆன ஒரு கல்லறை எழுப்பி அவளை அதிலே புதைத்தனர். மீண்டும் நதி பழையபடி ஓடியது. அவளது கல்லறையும் நீரில் மூழ்கி யாரும் காணாதபடி மறைந்தது. அந்த நபாவோ நதிக்கறையில் ஐரீனுகாக ஒரு ஆலயம்  எழுப்பினான் பிரிட்டால்டோ. அந்த ஆலயத்தில் அவருடைய அந்த கற்றைமுடியை அருளிக்கமாக வைத்தார்கள். அந்த ஆலயம் இன்றளவும் உள்ளது அதிலிருந்து எஸ்கலாபிஸ்
என்ற ஊரின் பெயரும் செயின்ட் ஐரீன் என்று மாறியது. பிற்பாடு நாளடைவில் சான்டாரெம் என்று மாறிவிட்டது.
       இந்த சான்ட்டாரெம் என்ற ஊரில் நமது ஆண்டவராகிய யேசு கிரிஸ்த்து மேலும் ஒரு அற்புத்தத்தை செய்துள்ளார். திவ்ய நற்கருணையில் அவர் உண்மையாகவே அப்பமாகவும்
சரீரமாகவும் இரத்தமாகவும் இருக்கின்றார் என்பதை நானும் நீங்களும் நம்பும்படியாக அவர் செய்த பெரிய அற்புதம் இது.
இந்த அற்புதம் நடந்தது கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில். தன் கணவனின் வன்முறைகளாலும் துரோகத்தாலும் பல வழிகளிலும் சித்திரவதைப்பட்ட ஒரு ஏழைப்பெண்
அவனைத்திருத்த எல்லா வழிகளிலும் முயன்று தோல்வியே கண்டாள். அதில் கடைகி முயற்சியாக ஒரு யூத பில்லி சூனியக்காரியை அனுகினாள். தன் கணவனால் தனக்கு ஏற்பட்ட
துன்பங்களை அவளிடம் கூறி தன் பிரச்ச்னைகளிலிருந்து வெளிவரும் வழியைக்கேட்டாள். அந்த சூனியக்காரியும் அவள் கணவன் அவள் காலைச்சுற்றியே வர வைக்கிறேன் என்றும்
அதற்கு சன்மானமாக கிரிஸ்த்துவர்கள் உட்கொள்ளும் திவ்ய நற்கருணையை அவளிடம் கொண்டுவந்து தர வேண்டும் எனவும் கூறினாள். அந்த ஏழைப்பெண்ணும் இந்த   சன்மானதிற்கு உடன்பட்டாள். என்ன செய்தாலாவது தன் கணவன் தன் பின்னாடியே சுற்றிவர வேண்டும் என்பது அவளது ஆவல்.
இதற்காக அவள் அந்த ஊர் தேவாலயமான தூய முடியப்பர் ஆலயத்திற்குச்சென்று....கிரிஸ்த்துவர்கள் வாங்கி உட்கொள்ளும் அந்த அப்பத்தை கொஞ்சமும் பயமின்றி வாயில்   வாங்கி பிறகு யாரும் அறியாமல் அதை வாயிலிருந்து எடுத்து தன் முக்காட்டில் மறைத்துக்கொண்டு தன் இடத்தில் உட்கார்ந்தாள். அப்போதுதான் அந்த பேரதிசயம் நிகழ்ந்தது.
    அவள் காதோரம் மறைத்து வைத்திருந்த அந்த அப்பமானது ரத்தம் கசிய ஆரம்பித்தது. நேரம் செல்லச்செல்ல அதிகம் அதிகமாய் இரத்தம் கசிய ஆரம்பித்தது. அவள் அருகிலிருந்த  மற்றவர்கள் அவள் காதிலிருந்து வடியும் இரத்தத்திற்கு காரணம் கேட்டார்கள். அதற்கு அவ்ள் தன் காதில் புண் இருப்பதாகவும் அதனாலையே இரத்தம் வடிவதாகவும் கூறினாள்.
இதற்குப்பிறகு அவளுக்கு பயம் பீடித்துக்கொண்டது. நிற்காமல் சொறியும் இரத்தத்தினால் மிகுந்த திகில் கொண்ட அவள் அந்த சூனியக்காரியின் வீட்டிற்குகூட செல்லாமல்  தன் வீட்டிற்குச்சென்று தன்வீட்டிலுள்ள ஒரு பழம்மரப்பெட்டியைக்காலி செய்து அதில் அந்த துணியுடன் மறைத்துவைத்துள்ள அப்பத்தை அந்தப்பெட்டியில் வைத்து மூடி
தூங்கப்போய்விட்டாள். வெகு தாமதமாக தன் வீட்டிற்கு வந்த கணவன் தன் வீட்டில் ஏதோ விவரிக்கமுடியாத பாஷையில் தெய்வீகப்பாடல்களும் மிகுந்த வெளிச்சமும்  தன் வீட்டில் தோன்றுவதாக தன் மனைவியிடம் கூறி அதன் காரணம் கேட்டான். அவளும் எழுந்து பார்க்கும்போது அந்த பெட்டி திறந்திருக்கக்கண்டு வான தூதர்கள் அந்த அப்பத்தை
உயர்த்திப்பிடித்தபடி பாடல்கள்பல பாடுவதையும் நற்க்ருணை ஆராதணை நடைபெறுவதையும் கண்டார்கள். அவர்கள் அதிசயித்து அந்த நேரமே அந்த தூய முடியப்பர் ஆலய பங்கு  குருவிடம் நடந்ததை கூறினார்கள்.
     அந்த ஆலய பங்குகுருவும் மற்ற குருக்களும் வந்து பார்த்து மிகவும் அதிசயப்பட்டு அந்த வீட்டிலிருந்த நற்கருணையை எடுத்துச்சென்று தங்கள் ஆலயத்தில் பத்திரமாக வைத்துக்  கொண்டார்கள். அந்த அப்பமானது பாதி அப்பமாகவும் பாதி சரீரமாகவும் மாறி அந்த சரீரத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தேவாலத்தில் வைத்தவுடம் இரத்தம் கசிவது
நின்றுபோனது. இந்தப்புதுமையைக்கேள்விப்பட்ட அந்த யூத பில்லி சூனியக்காரி பயத்தினால் இறந்துபோனாள். அந்த யூதப்பெண்ணும் அவள் கணவனும் கிரிஸ்த்துவர்கள் ஆனர்கள்.
தங்கள் வாழ்கையை நல்லவிதமாக மாற்றிக்கொண்டார்கள்.
அந்த முடியப்பர் ஆலய பங்கு குரு அந்த தெய்வீக நற்கருணைக்கு தேன் மெழுவர்த்தியினால் ஆன ஒரு கூட்டில் இந்த பாதி அப்பமும் பாதி சரீரமுமான அப்பத்தை
வைத்திருந்தார். ஒருநாள் பொதுமக்கள் பார்வைக்காக இந்த நற்கருணையை திறந்து பார்த்தபொழுது அந்த மெழுவர்திக்கூடு பல சில்லுகளாய் உடைந்து வேறு ஒரு கண்ணாடிபோன்ற
குடுவையால் மற்றப்பட்டிருந்ததைக்கண்டு மிகவும் அதிசயித்து இதுவும் கடவுள் செயலே என்று அறிக்கையிட்டனர்.
இந்த அதிசய அப்பம் நிகழ்ந்த வருடம்1247 ஆம் அண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள். பிற்பாடு இந்த புதுமை நிகழ்ந்த புனித முடியப்பர் ஆலயம் யேசுவின் திரு அப்பக்கோவில் [The church of the holy eucharist] என்று பெயர் மாற்றப்பட்டது.இந்த திரு அப்பக்கோயிலை முதன்முதலில் கண்டு வணங்கி ஆராதித்துச்சென்ற முதல் அரசாங்கப்பிறஜை  தூய இசபெல்லா என்னும் பெயர்கொண்ட அரசிதான்..அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி1295 ஆம் வருடம் இது நடந்ததாகவும் அந்த திவ்ய நற்கருணை சிமிழை கோவிலைச்சுற்றி
ஆடம்பரமான முறையில் பவணி வந்ததாகவும் சரித்திரம் கூறுகின்றது.
இப்போதும் புனித சந்தியாகப்பர் பேராலயத்திற்கு திருப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் இந்த சன்டாரெம் நகரில் அமைந்திருக்கும் இந்த புனித அப்பக்கோயிலுக்கும் தவறாமல்சென்று திவ்ய நற்கருணை ஆண்டவரை வழிபட்டு வருகின்றார்கள். அந்த அப்பத்தில் பாதி அப்பமாகவும் பாதி சரீரமாகவும் இன்றளவும் அந்த அப்பம் காட்சி அளிக்கிறது.

லெஸ்வோஸ் நகரைச்சேர்ந்த புனித ஐரீன்.[Saint irene of lesvos ]
இன்றைய துருக்கியின் வட மேற்கில் அமைந்துள்ள ஒரு பழமையன நகரம்தான் லெஸ்வோஸ். இந்த நகர மக்களுக்கு ஏன் இந்த திருப்பயணம் மேற்கொள்கிறோம் ...அங்கு யார்   யாருக்காக வேண்டுகிறோம் என்றே தெரியாமல் சுமார் 500 வருடங்களாக திருப்பயணம் மேற்கொண்டு வந்தார்கள். அவர்களுக்குத்தெரிந்ததெல்லாம் இந்த இடத்தில் துருக்கி ராணுவ வீரர்கள் அந்தப்பழமையான் பாழடைந்த மடாலயத்தில் வாழ்ந்துவந்த பல துறவிகளை வெட்டிக்கொண்றார்கள். அவர்கள் சமாதிகள் அங்கே உள்ளன என்ற நோக்கத்தில்தான்
அங்கு திருப்பயணம் மேற்கொண்டு வந்தார்கள்.
ஜுலை 3 அம் தேதி 1959 ஆம் ஆண்டு இந்த பழைய மடாலயத்தில் ஒரு தேவாலயம் கட்ட முயர்ச்சிக்கும் போது தூய ரபேல் மற்றும் அவருடைய சீடர் நிக்கோலாஸ் மற்றும்
தூய ஐரீன் ஆகியோருடைய சமாதிகளும் அவர்களுடைய திருப்பண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அன்றைய இரவிலே அந்த லெஸ்வொஸ் நகர மக்களுக்கு தூய ஐரீன் கட்சிதந்து
தன் வரலாாறைக்கூறியதாலேயே அந்த மூன்று புனிதர்களுக்கும் மற்றும் பல துறவிகளுக்கும் என்ன நடந்தது என்பது வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.
         தூய ஐரீனுக்கு அப்போது வயது 12.அவருடைய தாயார் பெயர் மரியா..தந்தையார் பெயர் பாசில். அவர் அந்த லெஸ்வோஸ் நகர மேயராகப்பணியாற்றி வந்தார்.. திடீரென்று ஒரு  நாள் துருக்கிய ராணுவ வீரர்கள் மதக்கலவரத்தை தூண்டினார்கள். அந்நகரில் தெர்மி நதிக்கரையில் அமைந்துள்ள தூய தியோடொகொஸ் மடாலயத்தில் வாழ்ந்துவந்த பல துறவிகளை  வெட்டிக்கொண்றார்கள். இதை அறிந்த ஐரீனின் தந்தை பாசில் மடத்தலைவர் ரபேல் என்பவரை எச்சரிக்கச்சென்றார். ஆனால் அதர்க்குள் காரியம் மிஞ்சிவிட்டது. ஏற்கனவே தந்தை
ரபேல் கொல்லப்பட்டுவிட்டார். அவரது உதவியாளர் நிக்கோலாஸும் கொல்லப்பட்டுவிட்டார். இப்போது ஐரீனின் தந்தை பாசில் ராணுவத்தினரிடையே மாட்டிகொண்டார். அவரது
மனைவி மரியாவும் மகள் ஐரீனும் கைது செய்யப்பட்டனர். பெற்றோரின் முன்னால் மகள் ஐரீன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார். யேசுநாதரையும் அவரது வேதத்தையும்  விட்டுவிட்டால் கற்போடு வசதியாக வாழலாம் என்று ஆசைகாட்டினார்கள். ஐரீன் எதர்க்கும் மசியவில்லை.. யேசுநாதரே என் ஆண்டவர். என் கற்பு அவருக்கே சொந்தம் என்று  வீர முழக்கமிட்டாள். இது அந்த துருக்கிய ராணுவ வீரர்களுக்கு மிகுந்த கோபம் மூட்டியது. இவள் 12 வயது சிறுமி தானே. கொஞ்சம் சித்திரவதை செய்தாலேயே இவள் இணங்கி
விடுவாள் என்று தப்பு கணக்கு போட்டார்கள். அதற்காக அவளது கையில் ஒன்றை அவளது பெற்றோர் காணும்போதே வெட்டினார்கள். அப்போதும் அவள் வேதத்தை கைவிட  மறுத்தாள். இவள் சரிப்பட்டு வரமாட்டாள் என்று மேலும் ஆக்கினைக்கு உட்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஐரீன் அவள் பெற்றோர் காணூம்படியாக ஒரு பெரும்  களிமண்ணால் செய்யப்பட்ட அடுப்பில் ஒரு பெரும் பானையில் அவளை நிற்க வைத்து உயிரோடு கொளுத்தினார்கள். அவள் இறந்தபிறகு அவளது பெற்றோர் சிரச்சேதம்
செய்யப்பட்டனர். இவர்களோடு எளினி என்னும் 15 வயதே நிரம்பிய அவளது சகோதரன் உறவுள்ள ஒருவரும் சிரச்சேதம் செய்யப்பட்டார். மற்றும் தியோடர் என்னும் ஒரு கிராமிய  ஆசிரியர் ஒருவரும் சிரச்சேதம் செய்யபட்டார். இப்படியாக ஐரீனுடைய எல்லா குடும்ப உறுப்பினர்களும் வேத சாட்சி முடி பெற்றனர்.
கீழை ரீதி திருச்சபை தூய ஐரீன், தூய ரபேல் மற்றும் தூய நிக்கொலாஸ் ஆகியோருடைய மறைந்த நாளாக ஏப்ரில் 9 1463 ஆண்டு என்று கொண்டாடுகின்றது.
















No comments:

Post a Comment